Search This Blog

11.10.14

ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!!பார்ப்பனக் கொள்ளையைக் கேட்பார் உண்டோ!திரைப்படம் பார்ப்பவர்கள் ஜீவா என்னும் திரைப்படத்தைப் பார்த்திடப் பரிந்துரைக்கின்றோம். என்ன, விடுதலை திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லுகிறதா என்று புருவத்தை உயர்த்த வேண்டாம்!


படமே பார்ப்பதில்லை என்றால், அது வேறு; படம் பார்ப்பவர்களாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும்.


கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல - சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட!


ஜீவா என்ற கதாநாயகனை உருவாக்கி, அவனுக்குக் கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவிற்குத் திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காததற்குக் காரணம் என்ன? ரஞ்சி  டிராஃபி என்பது என்ன? அதில் இடம் பிடிப்பது யார்? தேர்வு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பதை சும்மா புரட்டிப் புரட்டி எடுத்துள்ளார்.


தமிழ்நாட்டிலிருந்து 16 பேர் இந்திய அணிக்கு இதுவரை சென்றுள்ளனர் என்றால் அதில் 14 பேர் பார்த்தசாரதி இனத்தைச் (பார்ப்பனர்களைத்தான் அப்படி சொல்லுகிறார்) சேர்ந்தவர்கள் தான்.


ஒரு காட்சி! கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவரான பார்த்தசாரதி அய்யங்கார் ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத சிறந்த விளையாட்டுக்காரை முதுகில் தட்டிக் கொடுப்பது போல எதையோ துழாவுவார்! வேறு ஒன்றுமில்லை. அவன் முதுகில் பூணூல் தட்டுப்படுகிறதா என்று பார்ப்ப தற்குத்தான் அந்த வேலை.
ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டுக்காரரின் நண்பன் - அவனும் மிகச்சிறந்த விளையாட்டு வீரன்! பந்தயத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி கல் நெஞ்சங் களையும் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும்.


இந்த விவரங்கள் எல்லாம் புரியாமல் நமது தமிழின இளைஞர்கள் இந்தப் பாழாய்ப் போன பார்ப்பன விளையாட்டின் ரசிகர்களாக மாறி இருப்பதன் அவலத்தை என்ன சொல்ல!


கிராமப்புறங்களிலும், வயல்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் இடம் பெற்ற தமிழர்களின் உண்மையான வீர விளை யாட்டான சடுகுடு (கபடி) இருந்த இடம் தெரியவில்லை; அந்த இடத்தை இந்தச் சோம்பேறி   - பார்ப்பனீய கிரிக்கெட் பிடித் துக் கொண்டு விட்டதே!கிரிக்கெட்டைப் புறந்தள்ளி தமிழர் களின் வீர விளையாட்டைப் புதுப்பிப்போம்!


தந்தை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இதனை முன்னெடுத்துச் செல்லுகிறது!


கிரிக்கெட் என்பது பதினோரு முட்டாள் கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள் கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் என்றார் அறிஞர் பெர்னாட்சா.


போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்  பொழுது எந்த விளையாட்டிலாவது, பார்வையாளர்களுக்கு ஆட்டோ கிராபிஃல் விளையாட்டு வீரர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப் பார்களா? கிரிக்கெட்டில்தான் இந்தக் கூத்தைப் பார்க்கலாம்.


ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பந்து வீசுபவன் ஒருவன், ஓடுபவர் இருவர், துரத்துபவன் ஒருவன்; மற்றவர்கள் பேன் குத்திக் கொண்டு இருப்பார்கள். இந்திய அணி, இந்திய அணி என்று  நமது இளைஞர்கள் கூறும் மட்டைப் பந்து குழுவிற்கும் இந்தியாவிற்கும் முற்றிலும் தொடர்பில்லை.


விளையாட்டை ஒருவகை வியாபார மாக்கி லாபம் பார்க்கும் கம்பெனிதான் பி சி சி அய்; இதன் கீழ் வருவது தான் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் என்னும் டிஎன்சிஎ; அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அது ஆரம்பித்த காலமான 1938ல் எப்படி தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்ததோ அதே நிலையில் தான் இருக்கிறது இன்று வரை! தமிழக அணியில் இடம் பெற விளையாடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது, காலில்  காலணிகளில் கயிறு இருக்கிறதோ இல்லையோ, உடலில் தோளில் இருந்து இடுப்புவரை உருண்டோடும் குறுக்கு கயிறான பூணூல் இருந்தே ஆகவேண்டும். இதுவரை தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடியவர்கள் மொத்தம் 21 பேர் இதில் எத்தனை பேர் என்ன சாதியினர் என்று பார்த்தோம் என்றால் அத்தனையும் அய்யர், அய்யங்காராகவே இருப்பார்கள். இதில் அய்யர்களை விட அய்யங்கார்களே அதாவது பார்த்தசாரதிகளும் சேஷாத்ரி களுமே அதிகமாக இருப்பார்கள். வைஷ்ணவத்தைப் பின்பற்றும் அய்யங்கார்களின் ஆதிக்கமே இங்கு அதிகம்.


இந்த 21 பேரில் இரண்டு பேர் தான் அய்யர் அல்லது அய்யங்கார் இல்லாத வர்கள். சரி அப்படியென்றால் மற்ற சாதி யினர்  விளையாடுவதில்லையா என்று கேட்டால் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது எவ்வளவு நன்றாக விளையாடினாலும், பாராட்டு என்ற பெயரில் முதுகைத் தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுக்கப்படும்.


உதாரணமாக அனிருத் முன்னாள்  இந்தியக் கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தின் மகன், வருங்கால விளையாட்டு வீரர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பப்பட்டார் இந்தியா சார்பாக;  அப்பொழுது தேர்வுக் குழு உறுப்பினாராக இருந்தவர் ஸ்ரீகாந்த், இதைக் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்ட பொழுது   தேர்வுக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீகாந்தைக் காப்பாற்றினார்கள்.    ஆனால், அவர் சாதித்துக் கிழித்தது என்னவாம்? அனிருத் மட்டைப்பந்து விளையாட்டில் இன்றளவும் திறமையற்ற வராகத்தான் இருக்கிறார்.


ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்  பூணூல்காரர்களாகவே இருப் பார்கள். மற்றவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ரஞ்சிப் போட்டிகளுக்கு அனுப்ப மாட்டார்கள், அப்படியும் திறமையை நிரூபித்து ஒரு சிலர் வந்தால் அவர்களை அணியில் எடுத்துக் கொள் வார்கள் ஆனால் ரஞ்சிக் கோப்பை போட் டிகள் அனைத்திலும் அனுமதிக்காமல் பார்வையாளர்கள் பகுதியிலேயே (ஷிதீவீமீ) அமர வைக்கப்படுவார்கள், ஆண் டிற்கு இரண்டு போட்டிகளில் அனுமதிக் கப்பட்டாலே அது அதிகம். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் பொழுது இங்கே நடக்கும் முதல் டிவிசன் லீக் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் இருப்பார்கள். அடுத்த ஆண்டு ரஞ்சி அணி தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக ரன் அடிக்கவில்லை என்று போட் டிகளில் விளையாடாமலேயே தேர்வுக் குழுவினரால்  தோற்கடிக்கப்படுகின்றனர், இப்படி பலரின் வாழ்க்கையைக் குதறியிருக் கிறார்கள்.


பி.கே.தர்மா என்ற தமிழக வீரர் தனது 14 வயதில் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மிக வேகமாக முதல் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாடியவர்; பி.கே. தர்மா  இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், லட்சுமி பதி பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத பொழுது தமிழகத்துக்கு விளையாடினார். ஆனால், அதற்குப் பிறகு நிலையாக தமிழக அணியில் இவரை வைத்துக் கொள்ள வில்லை. இரண்டு ஆண்டிற்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்; அதுவும் காலையில் ஒரு போட்டியில் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்; இவரின் தற்கொலைக்குக் காதல் என்று கிளப்பி விட்டார்கள்; ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை, 21 வயதில் ஒரு அருமையான விளையாட்டு வீரர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.


சடகோபன் ரமேஷ் மற்றும் திருக் குமரன் என்ற கென்னி இருவரும் சம காலத்தில் விளையாடியவர்கள் 1999 ஜனவரியில் சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு 2001 செப்டம்பர் வரையில் இருந்தார். இவர் என்ன விளையாடினார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் 1999 நவம் பரில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டவர் தான் திருக்குமரன். 

ஆனால் 2000 ஜூனுக்குப் பிறகு திரும்பவும் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்படவில்லை; அவருக்கான விளை யாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தமிழகத்திற்காக 2007ஆம் ஆண்டு வரை விளையாடிவிட்டு அதாவது ஆடாமல் தோற்றுவிட்டு, தனது ஓய்வை அறிவித்து விலகினார்.


இவரின் திறமையை உணர்ந்து அமெரிக்கா தனது தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.  ரஞ்சிக்கோப் பைக்கான 14 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 10 பேர் பார்ப்பனர்களே! ஆனால் ஒரே ஒரு மகிழ்ச்சி, முதன் முதலாக இரண்டு கிறித்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். ஆமாம் தமிழ்நாடு மட்டைப்பந்து விளை யாட்டில் சாதியம் பார்ப்பது மட்டுமில்லை; மதமும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது, தமிழ்நாட்டில் இருந்து இஸ்லாமி யர்களோ கிறித்துவர்களோ இது வரை இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட தில்லை.


இப்படி மிகச்சிறந்த பூணூல் ஆதிக்க அணியாக இருக்கும் தமிழ்நாடு மட்டைப் பந்து விளையாட்டுக் குழு 1935ல் இருந்து நடக்கும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது, ஆனால் தமிழக அணி இது வரை இரண்டு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. 1987-88ஆம் ஆண்டு போட்டியில் தான் கடைசியாக ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு பூணூல் அணி கைப்பற்றியது; அதற்குப் பிறகு 26 ஆண்டுகளாக பூணூல் அணி கோப்பைக் கனவு மட்டுமே கண்டு கொண்டுள்ளது.


மும்பை அதிகபட்சமாக 40 முறை கோப் பையைக் கைப்பற்றியுள்ளது மட்டைப்பந்து விளையாட்டைப் பொறுத்த வரை மும்பை, டில்லி, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு அணி உள்ளது ஆனால் ராஜஸ்தானிடம் எல்லாம் மரண அடி வாங்கி ஓடி வந்தது தான் பூணூல் அணியின் வரலாறு.

இந்திய அணியிலும் பார்ப்பனீயம் காப்பாற்றப்பட்டாலும் அவ்வப்பொழுது கபில்தேவ், அசாருதீன், தோனி போன்றவர் களால் பார்ப்பனீயம் உடைக்கப்படுகிறது. கபில், தோனி தலைமையில்தான் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.


தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் தனது கால்களை ஆழமாகவும் நல்ல அகல மாகவும் வேரூன்றி நிற்கிறது, இதை வேருடன் கெல்லி எறிய வேண்டிய தேவை உள்ளது.


நிறவெறியைப் பாவித்த தென் னாப்பிரிக்க அணி சர்வதேச மட்டைப்பந்து
விளையாட்டுடிலிருந்து ஒதுக்கப்பட்டது போல் இந்தியாவும் ஒதுக்கப்பட வேண்டும். இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் கிரிக் கெட்டிலும் கறுப்பர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஜிம்பாவே மட்டைப்பந்து விளையாட்டு அணியில் இருப்பது போல் இடஒதுக்கீடு முறை தமிழ் நாடு மட்டைப்பந்து விளையாட்டு வாரியத் திலும் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனீயம் பெரு வாரியான இளைஞர்களின் விளையாட்டுப் போதையைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விடும்!பார்ப்பனக் கொள்ளையைக் கேட்பார் உண்டோ!

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்கு பிசிசிஅய் ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டு சம்பள விபரம்:


பிசிசிஅய் தனக்கு ஒப்பந்தமான அணிகளை 3 பிரிவாக பிரித்துள்ளது. ஒன்று எ குழுமம், பி குழுமம், சி குழுமம்  ஏ குழுமத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுத்து இணைக்கப்படுவார்கள் இவர்களுக்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏ குழுமம் 9 பேர் 1 கோடி ரூபாய் ஆண்டிற்குப் பெறுகின்றனர்

சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ஜாகிர்கான், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், சுரேஸ் ரயினா, யுவராஜ் சிங், வீராத் கோலி, அஸ்வின் பி குழுமத்தில் 50 லட்சம் ஆண்டிற்குப் பெறுகிறார்கள்


ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரகயான் ஓஜா, ரோஹித் சர்மா,சித்தேஷ்வர் பூஜாரா, அஜின்கியா ரஹனே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்


சி குழுமத்தில் 35 லட்சம் ஆண்டிற்கு  பெறும் வீரர்கள்


ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாஃப் படேல் அபிமன்யூ மிதுன் எம் விஜய் சேகர் தவான், விரித்திமன் சாஹா, பர்திவ் படேல், மனோஜ் திவாரி, எஸ் பத்திரிநாத், பியூஸ் சாவலா, தினேஷ் குமார், யுசூப் பதான், பிரவீன் குமார், எல் பாலாஜி  சச்சின் டெண்டுல்கர் 2012 ஆண்டு வருமானம் 129,024,000 (சுமார் ரூ.13 கோடி)


டெஸ்ட் மேட்ச் 7 லட்சம் உள்ளூர் போட்டிகளுக்கு; 12 முதல் 15 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு.


ஒரு நாள் போட்டிக்கு 4 லட்சம் உள்ளூர் விளையாட்டுகளுக்கு;  8 முதல் 10 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு


20-20 போட்டிக்கு 2 லட்சம் உள்ளூர்; 5 முதல் 8 லட்சம் வெளியூர் போட்டிக்கு   .

இதில் விளம்பரதாரர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு மற்றும் பி சி சி அய் அறிவிக்கும் சிறப்புப் பரிசுகள் என சேர்த்தால் முன்னணி வீரர்களுக்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை ; டெஸ்ட் போட்டி 12 முதல் 15 லட்சம் வரை ; ஒரு நாள் போட்டிகளில் 10 லட்சம் 20-20 போட்டிகளில் கிடைக்கும்


உள்ளூர் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகளில் விளையாடும் வீர்ர்களுக்கு  1,8 லட்சம் பி.சி.சி.அய் வழங்கும்


வெளிநாடு செல்லும் குரூப் பி மற்றும் டி அணி வீர்ர்களுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஊதியமாக கொடுக்கப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளையாட்டுத் திறனிற்கேற்ப ஊக்கத்தொகை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை தரப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளம்பரதாரர் நேரடியாக எந்த தொகையும் விளையாட்டுப் போட்டியின் போது வழங்க அனுமதியில்லை.


******************************************************************************************
------------------------- மின்சாரம் அவர்கள் 11-10-2014 “விடுத்லை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...

உலகிலே பலப்பல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசும் நாவலரையும் நான் அறிவேன்.
நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால் அவர் களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணர வேண்டுகிறேன்

விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கச் செய்தார் சாக்ரடீஸ்! உலகம் உணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ! வைதீகத்தின் மடமையை வாட்டினார் வால்டேர்! மக்கள் மன்றத் திற்கு மதிப்புத் தர வேண்டுமென்றார் ரூஸோ!

வேதப் புத்தகத்தை விற்று விபச்சார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிப் ஜிவிங்லி, மார்டின் லூதர் போன்றோர்!

அடிமைகளை விடுவித்தார் ஆபிர காம் லிங்கன்! முதலாளிகளின் கொடு மையை எடுத்துரைத்தார் காரல் மார்க்ஸ்! அதற்காகப் போராடினார் லெனின்!

சீனரின் சிறுமதியைப் போக்கினார் சன்யாட் சென்! துருக்கியரின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால் பாட்சா! இறைவன் பெயரைச் சொல்லி ஏழையை வஞ்சித்தவரைச் சந்தி சிரிக்க வைத்தார் இங்கர்சால்! பேதைமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா!

வாழ்க்கையில் வாட்டம், வேதனை, வறுமையின் கொடுமை, வஞ்சகத்தின் ஆட்சி - இவைகளிருப்பதைப் படம் பிடித் துக் காட்டினர் கோர்க்கி, டால் டாவஸ்கி, சிங்கனோ போன்றவர்கள்!

இவர்களும் இன்னும் எண்ணற்றவர் களும் தோன்றி தொல்லைப்பட்டு, தூற்றப்பட்டு, கொடுமைக்கு ஆளாகி மனித சமூகத்தின் மறுமலர்ச்சிக் கொள்கைகளை, புதுகோட்பாடுகளை எவர்க்கும், எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறி பாமரனுக்காகப் போராடியதனால் - இன்று பல்வேறு நாடுகளிலே மக்களின் மனம் விடுதலை பெற்றது; அடிமை மனப்பான்மை அகன்றது. அதனால் அங்கு ஒரு நாட்டை, இன்னோர் நாடு அடக்க முடியவில்லை! அடக்கினால் எரிமலை கக்குகிறது; மக்கள் மனம் எனும் கடல் பொங்கி வழிகிறது. புரட்சிப் புயல் வீசுகிறது! அதன் முன்பு எந்தக் கொடியவனாலும் நிற்க முடியவில்லை. இங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து எடுத்துக் கூறி எதிர்த்தவர் பெரியார் ஒருவர் தானே!

எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதரின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுவது வாடிக்கை.

---------தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் அண்ணா

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனமது செம்மை?

மனமது செம்மையா னால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிறார் களே,

அப்படியென்றால் மந்திரம் ஜெபிப்பவர் களும், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்பவர்களும் மனமது செம்மை இல்லாதவர்கள் - அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/e-paper/89060.html#ixzz3FqguYcUc

தமிழ் ஓவியா said...

மதவாதத்துக்கு மரண அடி -
மலாலாவுக்கு நோபல் பரிசு!

குழந்தைகள் நல உரிமைகளுக்காக பாடுபட்ட கைலாஷ் சத்யார்த்திக்கும் நோபல் பரிசு

நார்வே, அக்.11-_ பழமைவாதிகளை எதிர்த்து பெண் கல்விக்காக பாடு பட்ட சிறுமி மலாலா வுக்கும், குழந்தைகள் நல உரிமைக்காகப் பாடுபட்ட கைலாஷ் சத்யார்த்தி ஆகி யோருக்கு உலகத்தின் மிக உயரிய வெகுமதியான அனுமதிக்கான நோபல் பரிசு இணைந்தளிக்கப் படுகிறது.

மலாலாவின் பிறந்த இடம் ஸ்வாத் பள்ளத் தாக்குப் பகுதியில் அமைந்த மிங்கோரா வாகும். ஸ்வாத் என்பது பார்சிமொழியில் சுவை என்று பொருள். ஸ்வாத் பள்ளத்தாக்கில் விளை யும் பாசுமதி அரிசி மிக வும் சுவை மிகுந்தது. இந்த அரிசியின் சுவையின் பெய ரால் இப்பகுதி ஸ்வாத் என்று பெயர் பெற்றது. 1990 களுக்குப் பிறகு தாலிபான்களின் ஆதிக் கம் பெற்ற பிறகு இப்பகுதி உலகின் பார்வையில் இருந்து மறைந்து விட் டது.

தாலிபான்கள் பழமைவாதிகளாகையால் இங்கு கல்வி என்பது பெண்களுக்குத் தடை செய்யப்பட்டன. பொழுது போக்குச் சாதனம், மற்றும் பத்திரிகைகள் என அனைத் தும் தடைசெய்யப்பட்டது. பாகிஸ்தானில் ஜனநாய கம் பேருக்குத்தான் இருந் ததே தவிர அங்கு உள்ள எல்லா மாநிலங்களிலும் பழமைவாதிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது. தடையை உடைத்த மலாலா பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாட் பகுதியின் மிங் கோரா என்னும் ஊரில் பிறந்தவர். மலாலா யூசுப் சாயின் தந்தை கவிஞர் ஜியாவுதீன் யூசுப்சாய் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் தனது தந்தை யின் உதவியுடன் உருது மொழியில் பிபிசி இணைய தளத்தில் பாகிஸ்தானில் பெண்குழந்தைகள் கல்வி பற்றி தொடர்ந்து எழுதி வந்தார் அவ்விணைய தளத்தில் இருந்து ஒரு பகுதி:

நேற்றிரவு இராணுவ ஹெலிகாப்டர்களும், தாலிபான்களும் நிறைந்த ஒரு கொடுமையான கனவு கண்டேன். ஸ்வாட் பள் ளத்தாக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடங் கிய காலத்திலிருந்து இப்படி கனவுகள் எனக்கு வருகின்றன. அம்மா செய்துவைத்த காலை உணவை முடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினேன். பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு தாலிபான் கள் தடை விதித்திருப் பதால் எனக்கு பள்ளிக் குச் செல்ல பயம் இருந் தது. 27 பேரில் 13 பேர் தான் பள்ளிக்கு வந்திருந் தனர்.

தாலிபான்களின் தடையால் மாணவர் களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தடைக்குப் பின் னர் எனது மூன்று தோழி கள் தங்கள் குடும்பத் துடன் பெஷாவருக்கும், லாகூருக்கும் ராவல்பிண் டிக்கும் குடிபெயர்ந்து விட்டார்கள்.

வீட்டிலி ருந்து பள்ளிக்குச் செல் லும் வழியில், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவர் கத்தும் குரல் கேட்டது. நான் எனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு, பின்னால் அவர் என்னைத் தொடர் கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியளிக் கும் விதமாக, அவர் யாருடனோ செல்பேசி யில் பேசி, அவரை மிரட் டிக் கொண்டிருந்தார். இப்படித் தொடங்குகிறது மலாலாவின் இணைய தளப்பதிவு. இவரது பதிவு உலகம் முழுவதும் மிகவும் பிரபல மடைந்தது. பாகிஸ்தானி லும் பெண் கல்விக்கான குரல் எழும்பத்துவங்கியது. பாகிஸ்தானின் பெண் குழந்தைகளின் கல்வி பற்றி எழுதியமைக்காக இவர் அக்டோபர் 8 2012 அன்று பழமைவாதிகளால் சுடப்பட்டார். தாலிபான் பழமைவாதி களால் சுடப் பட்ட மலாலா தனது சுய சரிதையில் எழுதியதாவது, சம்பவத்தன்று நான் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை மறித்து, உங்களில் யார் மலாலா எனக் கேட்டார்.

யாரும் வாயைத் திறந்து பதில் சொல்லாத போதும், சில சிறுமிகள் மட்டும் என்னை தலையை திரும்பி பார்த் தார்கள். அத்தோடு, அந்த மாணவிகள் கூட்டத்தி லேயே நான் மட்டும் தான் முகத்திற்கு முக்காடி டாமல் இருந்தேன். உடனடியாக தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த் தினார்

அந்த மனிதர். வண்டிகளில் இருந்த மாணவிகளில் சிலர் பயத்தில் கத்தினார்கள். நான் எனது அருகில் இருந்த தோழியின் கை களைப் பிடித்து பிசைந்த தாக எனது தோழி பின்னர் தெரிவித்தார். மேலும், என்னை நோக்கி அந்த நபர் மூன்று முறை சுட்டதாகவும் எனது தோழிகள் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

காதில் ரத்தம் வடிய நான் அருகில் இருந்த தோழி மீது சாய்ந்தேன்.அடுத்து வந்த சில குண்டுகள் அரு கில் இருந்த சிறுமிகள் மீது பட்டதாகவும், என்னைச் சுடும் போது துப்பாக்கி ஏந்தியவரின் கைகள் நடுங்கியதாகவும் தோழிகள் தெரிவித்தனர்.'

14 வயது சிறுமியை துப்பாக்கியால் கொல்லத் துணிந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிய டையச் செய்தது, அக் டோபர் 8 ஆம் தேதி சுடப்பட்ட சம்பவம் மறுநாள் அதிகாலை உலகப் பத்திரிகைகளின் தலைப்புச்செய்தியானது.

முதலுதவிக்குப் பிறகு லண்டனில் உள்ள விக் டோரியா மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைய ளிக்கப்பட்டது. சுமார் 3 மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் இனி பெண் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடுவதே என்னுடைய முக்கிய குறிக் கோள் என்று உலகம் முழு வதும் பெண்குழந்தைக் கல்விக்காக பிரச்சாரம் செய்தார்.

2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆம் பிறந்தநாள் அன்று அய்க்கிய நாடுகள் சபையைத் தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வை அய்க்கிய நாடுகள் " மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும். அதே ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இறுதியில் 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யாத்திரி யுடன் இணைந்து பெறுகிறார்.

கைலாஷ் சத்யார்த்தி

குழந்தைகள் நலஉரிமைகளுக்காக பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளதாக நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு. இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளன.

குடும்பத்தினருடன் இணைந்து

இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புதுடில்லியில் வாழ்ந்து வருகிறார்.

இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்காமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் இலட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கைலாஷ் சத்யார்த்தி பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட் டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.குழந் தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப் பட்டுள்ளது ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்" என கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/89058.html#ixzz3FqhHNQka

தமிழ் ஓவியா said...

மனிதன்பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.

- (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/89067.html#ixzz3FqhoYStd

தமிழ் ஓவியா said...

புத்த - இந்து அமைதி மண்டலமாம்!

இந்தியாவில் உள்ள அடிப்படைவாத (திஸீபீணீனீமீஸீணீறீவீ) அமைப்பான ஆர்.எஸ்.எஸின் நச்சுக் கொடுக்கு இலங்கை - மியான்மா வரை நீண்டு கொண்டுள்ளது; புதிய மத வெறிக் கூட்டணி ஒன்று உருவாகிறது.

இலங்கையில் புத்தபல சேனா - என்ற ஓர் அமைப்பு உள்ளது. இது இலங்கையில் முசுலீம் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முசுலீம் களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டதை அனைவரும் அறிவர்.

இவர்களோடு மியான்மாவில் உள்ள புத்தவெறி அமைப்பும் கை கோர்த்துள்ளது. மியான்மாவிலிருந்து இலங்கை புத்த பலசேனாவின் தலைவர் காலகோடா அத்தோ ஞான ஸரா தேராவை - மியான்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராகப் பெரும் யுத்தத்தை நடத்தி வரும் அஷின் ஷரது அண்மையில் சந்தித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., இலங்கை மற்றும் மியான்மாவில் உள்ள புத்த மத வெறி அமைப்புகள் ஒன்று சேர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் புத்த இந்து அமைதி மண்டலம் (Buddhist - Hindu Peace Zone) ஒன்றை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டமாம்.

இலங்கைத் தீவை சிங்களத் தேசம் என்று அறிவிக்க வேண்டும்; ஸ்ரீலங்கா என்னும் பெயரை நீக்க வேண்டும். இலங்கையில் புத்தக் கலாசாரம் மட்டுமே இருக்க வேண்டும், மற்ற மதத்தவர்களும் சிங்கள புத்தக் கலாச்சாரத்தையே பின்பற்றி ஒழுக வேண்டும் என்று அச்சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை - மியான்மாவைச் சேர்ந்த இந்தப் புத்த மத வெறியர்கள் விரைவில் இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவரைச் சந்திக்க உள்ளார்களாம். இந்தியாவை இந்து நாடு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சொல்லுவதால் அவரையும் சந்திக்க இருக்கிறார்களாம்.

இலங்கையில் மாகாண உரிமையைக் கோரக் கூடாது, 13ஆம் திருத்தத்தை வலியுறுத்தக் கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் அச்சந்திப்பில் வலி யுறுத்துவார்களாம்.

புத்த மதத்திற்கும், இந்து மதத்திற்கும் ஜிஹாதிகளால் (முஸ்லீம்களால்) ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.

தமிழ் ஓவியா said...

அடிப்படை மதவாதிகள் எத்தகைய மூர்க்கக் குணம் கொண்டவர்களாக திமிர் பிடித்துத் தலைகளைத் தூக்குகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் - அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பது போலவும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் இங்கிலாந்துக்காரர்கள் என்பது போலவும், இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே என்று அரசு வானொலியிலேயே அதிகாரப் பூர்வமாக அறிவித்து விட்டார்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்த அடிப்படை மதவாத வெறிப் பேச்சினை உச்சி மோந்து வரவேற்று இருக்கிறார் இந்தியாவின் பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி! நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட்டு என்றும் பிரகடனப் படுத்தியவராயிற்றே இந்தியப் பிரதமர்.

இத்தகு சூழ்நிலையில் மூன்று நாடுகளைச் சேர்ந்த அடிப்படை மதவாத சக்திகள் ஆயுத எழுத்துக்கள் போல கைகோர்த்துள்ளதை தென் கிழக்கு ஆசிய நாடுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது -கூடாது!

இந்துக்கள் முஸ்லீம்களை எதிர்ப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்துத்துவாவாதி களும் - பவுத்தர்களும் கைகோர்ப்பதுதான் வியப்பானது மட்டுமல்ல விபரீதமானது. இந்த ஹிந்துத்துவாவை எதிர்த்துதானே - பிறவியில் பேதம் வளர்க்கும் இந்த வருணாசிரம ஹிந்து மதத்தை எதிர்த்து தானே அரச குலத்தில் உதித்த ராஜகுமாரன் அரண்மனை சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, பராரியாகப் புறப்பட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து, ஹிந்து மதத்தின் ஆணி வேரைச் சுட்டுப் பொசுக்கினார்.

பசுவைக் கொன்று யாகம் நடத்தி மோட்சம் போக முடியுமானால், உன் தந்தையைக் கொன்று யாகம் நடத்தி மோட்சம் போவது தானே! என்று அறிவார்ந்த வினாவை எழுப்பிய புத்தர் எங்கே? அவர் நிறுவிய அந்த அறிவு மார்க்கம் எங்கே? அறநெறி அன்பு மார்க்கம் எங்கே!

முசுலீம்களையும், தமிழர்களையும் படுகொலை செய்து புதுநெறி புகன்ற புத்தரின் சிலைக்கு ரத்தாபிஷேகம் செய்யும் இந்தப் புத்த மத வெறியர்கள் எங்கே? மார்க்கத்தை மதமாக்கிய வெறியர்களின் விபரீத புத்தியால் அல்லவா இந்தக் கேடு கெட்ட நிலை!

குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதும், மதங் களையே பின்பற்றாததும் தனி மனிதனின் உரிமையைச் சார்ந்தது அல்லவா!

இதில் என் மதம் தான் உன் மதமாக இருக்க முடியும் என்று உறுமுவது அறிவின் பாற்பட்டதா?

அறிவுதாகம் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமை - மனித நேயம் பேசுவோர்களுக்கும் அதிக வேலை இருக்கிறது.

வெறும் அரசியல் கூட்டணிக்காக பிஜேபியை நத்தும் அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவே, இப்பொழுதே!

உண்மையான புத்தநெறியும் தந்தை பெரியார் அவர்களின் அறிவு சீலமும், அண்ணல் அம்பேத்கரின் அழுத்தமான கருத்துக்களும் மிகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் அவற்றை வெகு மக்கள் மத்தி யில் கொண்டு சேர்ப்பது, கருத்து ரீதியாக அவர்களை விழிப் புணர்வு கொள்ளச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

Read more: http://viduthalai.in/page-2/89068.html#ixzz3FqhxVkLh

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸ் முதல் பெரியார் வரைபெரியார், சாதிய அமைப்பு, மத அமைப்பு, மூடநம்பிக்கை நொறுக்கப்பட வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தோடு வாழ்ந்து செயல்பட்டார்கள். அதில் மக்கள் திருந்துவதில் சில கோளாறினால் வெறி கொண்டு சிலை உடைப்பு, அவமரியாதை செய்தார்கள். நம் மக்கள் ஏக்கத்தோடு உளறிய செயல்பாடுகள் மக்கள் என்றும் நல்லவைகளை ஏற்றுக் கொண்டதில்லை எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சொல்லியபடி நடந்ததில்லை அதைத்தான் பட்டுக்கோட்டையார்

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனை ஞானிகளும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாம் தான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க

மனிதர்கள் நடவடிக்கையால் எல்லோ ரும் மனம் நொந்துதான் செத்த கதை. சாத்திர சம்பிரதாயங்களை மாற்ற முடிய வில்லை அதன் விளைவு பிராமணியம் கொடி கட்டிப் பறக்கிறது. பிராமணீய மனிதர்களும் ஒழுக்கக் கேடானவர்களாக மாறி விட்டனர். இன்னமும் சொர்க்கம், நரகம் என்று பேசி அத்தனையும் தலை விதிப்படி தான் நடக்கும் என்று புலம்பித்திரிவதைப் பார்க்கின்றோம்.

படித்த மக்களிடம், ஜாதி, மத உணர்வு, மூடநம்பிக்கைகள் கூடி விட்டதின் காரண மாக, இயற்கையை நேசிக்க முடியவில்லை. எந்த கஷ்டத்தையும் கடவுள் காப்பாற்ற வில்லை. காப்பாற்றாத கடவுளைக் கூவி அழைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

காலையிலிருந்து எல்லா மதத்தின் வழிபாட்டு இடங்களில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சாக்ரட்டீஸ் காலத்திலிருந்து, பெரியார் ஜீவா காலம் வரை எத்தைனயோ முழக் கங்கள்!

நாட்டில் இடதுசாரி இயக்கம், அதன் தலைவர் தொண்டர்கள்கூட அதைக் கடைப்பிடிக்காத நிலைமை. மனிதன் மனிதனாக வேண்டுமென்றால் நல்ல மனித சிந்தனை, மனிதப் பண்பு என்று ஏற்படப் போகிறது? இப்படி ஒரு அரசியல் அமைப் பிற்கு விடுதலை தேவைதானா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இன்றைய இளை ஞர்கள் தெளிவு பெற வேண்டும் கல்வி அமைப்பும் விஞ்ஞானத்தை போதித்து அஞ்ஞானத்தை ஒதுக்க வேண்டும்.

- இரா. சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

Read more: http://viduthalai.in/page-2/89074.html#ixzz3FqiPMGQo

தமிழ் ஓவியா said...

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரவப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.

இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.

போதாக் குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணியென்னும் கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வலமாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவ தாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது. பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.

போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண் ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணு வதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக் கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவ தற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லுவதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவதாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமூகத்தையும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 29-03-1931

Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqiqiRqn

தமிழ் ஓவியா said...

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்

சீக்கிரத்தில் இந்தியச் சட்டசபை கலையப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் 10ஆம் தேதி உப தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது

இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக்கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிருபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1.02.1931 குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம் அப்போது சிலருக்கு அதுஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரஸ்காரர்களுக்குச் சமீபத்தில் நடந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வதானால், சட்டசபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர, வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஆதலால் இந்த ஒப்பந்தமோ அல்லது இந்த அபிப்பிராயம் தொக்கி இருப்பதான குறிகளோ, ராஜிய சம்பாஷணையில் கலந்திருக்க வேண்டுமென்று நாம் யூகிக்க பல வழிகளிலும் இடம் மேற்படுகின்றது.

ஆனால், காங்கிரஸ்காரர்களுக்குத் தங்களுக்கு வெற்றி ஏற்படுவது நிச்சயம் என்கின்ற தைரியமில்லாவிட்டால் கராச்சி காங்கிரஸ் சட்டசபைப் பிரவேசத்தை ஒரு சமயம் மறுத்து விட்டாலும், மறுத்துவிடக்கூடும். ஆகையால் எதுவும் கராச்சி காங்கிரசில்தான் முடிவு பெறலாம்.

ஆனாலும், அதுவரை அடுத்த தேர்தலுக்குச் செய்யப்பட வேண்டிய முஸ்தீப்புகளில் ஒன்றாகக் கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும் அங்குமிங்குமாக தலை நீட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். ஆனால் தீண்டாமை விலக்கு விஷயமாக மாத்திரம் எதுவும் தலைகாட்டப்பட மாட்டாது.

ஏனெனில், தீண்டாமை விஷயம் பேசினாலோ, அதற்காக மறியல் முதலியவைகள் துவக்கப் பட்டாலோ ஓட்டுக்கிடைப்பது கஷ்டமான காரியமாகி விடுமாதலால், அது கிணற்றில் போடப்பட்ட கல்லுபோல் பேசாமல் இருந்து கொண்டு இருக்கும். ஆதலால், இப்போது சட்டசபைகளில் இருப்பவர்கள் கூட, தீண்டாமை சம்பந்தமாகப் பேச பயப்படுவதுடன், ஜவுளி மறியலுக்கும், கள்ளு மறியலுக்கும் கூட தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டாலும் கொள்ளுவார்கள்.

தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சட்டசபை அங்கத்தினர்கள் கூட அடுத்த தடவை தேர்தலின் மூலம் சட்ட சபைக்கு வரவேண்டியவர்களாக இருப்பதால் அவர்களுக்கும் கூட தீண்டாமைக் கொடுமையைப்பற்றிப் பேசுவது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில், ஒன்று தீண்டாமை யைக் கடிந்து பேசுகின்ற வர்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போகும்.

இரண்டு, தீண்டாமை ஒழிந்து விட்டால் தீண்டாதவர்களின் பெயரால் இப்போது சிலருக்குக் கிடைத்து வரும் சௌகரியங்கள் பிறகு கிடைக்காமல் போகலாம். ஆகவே இரண்டு காரணங்களால் அவர்களும் பயப்படுவார்கள்.

ஆகவே இந்தக் காரணங்களால் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பை நாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரசினால் பொதுமக்களுக்குப் பயன் உண்டு என்பதையும் அந்தக் காரணத்தால்தான் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கின்றது என்பதையும் மாத்திரம் தான் நாம் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பிறத்தியாரையும் நம்பச் செய்யமுடியவில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 15.03.1931

Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3FqizwETO

தமிழ் ஓவியா said...

ருஷியாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்

உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில், நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து அவர்களுக்குக் கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்.

எங்கள் தேசத்தில் கல்வி கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. உங்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். தேக பலம், கல்வி இவை இல்லாதவர்களையும், உபயோகித்துக் கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த்தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தியையும் நம்பிக்கையையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்.

விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாய் இருக்கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்றதென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்.

இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இதைத் தவிர மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது மதம், செல்வ நிலை. சமுக வாழ்வு ஆகிய விஷயங் களில் உங்களினின்று மாறுபட்டவர்கள் இடம் கோபியாமல் விவசாயிகளைக் கல்வி மூலம் திருத்த முயற்சிப்பது போல் இவர்களையும் கல்வி மூலம் திருத்தும்படியான முறையை அனுஷ்டிக்க வேண்டாமா? என்றும் சொன்னாராம்.

இதை மாத்திரம் நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மதப்பித்தர்களையும், செல்வச் செருக்கர்களையும், சமூக வாழ்வில் உயர்தனம் பெற்ற அனுபவக்காரர்களையும் நல்லவார்த்தையாலோ, பிரச்சாரத்தாலே, கல்வியாலோ திருத்துவதென்பது சுலபமான காரியம் என்பது நாம் கருதவில்லை. இவர்களுக்கு ருஷியக்காரர் செய்யும் ஏற்பாடுகள் தான் பொருத்தமானது என்பது நமது அபிப்பிராயம்.

ஆகவே, எல்லா விஷயத்திலும் ருஷிய அரசாங்க சீர்திருத்த முறை மேலானது என்றே சொல்லுவோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931

Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3Fqj6OSIA

தமிழ் ஓவியா said...

எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை


எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?

போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?

போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.

போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு நழுவி விடுகிறார்.)

எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 05.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89095.html#ixzz3FqjDNh6X

தமிழ் ஓவியா said...

நல்வாழ்வு வாழ்வதென்பதற்கும் சுக வாழ்க்கை அடைவதென்பதற்கும் வாழ்க் கைத் தரம் உயர வேண்டும் என்பதற்கும் ஆசைப்படுவதில் மனிதனுக்குக் குறிப்பிட்ட எல்லையே கிடையாது. நேற்று அடைந்த தைவிட இன்று ஒரு படி அதிகச் சுகம் கண்டால் இன்னமும் இதைவிட அதிகச் சுகம் காண வேண்டுமென்று முயற்சிப்பான்.

இப்படியே படிப்படியாக நாளுக்கு நாள் தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற எண்ணத்திலேயே கவலை கொள்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாது. தான் சாகும்வரை இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். அதனால் கவலை அழியாது.

- தந்தை பெரியார் பொன்மொழி

Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqjRRn1j

தமிழ் ஓவியா said...

அடடா... என்ன... சாமர்த்தியம்!


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பாக ஏடுகள் வெளியிடும் தளுக்கும், குலுக்கும் அடடா, சொல்லி முடியாது.

ஒரு மாலை ஏடு எழுதுகிறது (ஜெயலலிதாவுக்குச் சாதகமாக) ................................... என்று பிரபல சட்ட வல்லுநர் கூறினார்.

ஏன் அந்த நீதிபதியின் சட்ட வல்லுநரின் பெயரைச் சொல்லுவதில் என்ன சுளுக்கு?

அப்படி ஒருவர் சொல்லியிருந்தால்தானே அவர் பெயரைச் சொல்ல முடியும்.

பத்திரிகைகாரர்களின் ஆசையையே குதிரையாக்கி சவாரி செய்து பார்க்கிறார்கள், அவ்வளவுதான்!

துக்ளக்கை எடுத்துக் கொள்வோம்.

கோர்ட் வளாகத்தில் கண் கலங்கியபடி இருந்த மூத்த அமைச்சர்களைப் பார்த்து, இப்படி கோழை போல அழாதீர்கள்; சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும். சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்று கூறியதோடு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், பழைய அமைச்சர்களே நீடிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

7 ஆம் தேதி மனு தள்ளி வைக்கப்பட்டது என்ற செய்தி தெரிய வந்த பிறகும், ஜெயலலிதா வருந்தவில்லை என்று சொல்கிறார், உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்.

பார்த்தீர்களா... பார்த்தீர்களா...?

தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது என்றும், சொல்கிறார் உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்....

இந்த வெற்று வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா?

இந்தச் சாமர்த்தியம் அவாளையன்றி வேறு யாருக்கு வரும்?

Read more: http://viduthalai.in/page-8/89086.html#ixzz3FqjhNM1P

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையும் - அளிக்கப்பட்ட தீர்ப்பும்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வின் சொத்துக் குவிப்பு வழக்கும் - அது கடந்து வந்த பாதையும்பற்றி ஒரு கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

சு.சாமி வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி!

ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுநரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கருநாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச்செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கருநாடகத் துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.

இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313 இன் கீழ், ஜெயலலிதா, சசி கலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட் டுள்ளன.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அறிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கருநாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவித்தார்.

பிறகு செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991_1996 பதவிக் காலத்தில் வருமா னத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.

மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதையடுத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை காவல்துறை யினர் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நடத்தியே அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.


தமிழ் ஓவியா said...

பின்னர் ஒரு மணிநேரம் கழித்து முதலமைச்சர் ஜெயலலிதாவை, துணை காவல்துறை ஆணையர்கள் ரோகினி, சதீஸ் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச்சென்றனர். அங் குள்ள மருத்துவமனையில் ஜெய லலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயலலிதா வும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து விட்டார்.

18 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப் பட்டு வந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு முடிவிற்கு வந்தது.

குற்றவாளி என தண்டனை அளிக்கப்பட்டதால், ஜெயலலிதாவால் பத்தாண்டு காலத்திற்குத் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி. மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் தி.மு.க. தலைவர் கலைஞர், சு.சாமி உருவ பொம்மைகளை அ.தி.மு.க.வினர் கொளுத்தினர்.

தமிழகக் காவல்துறையினரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக, சென்னை ராயப்பேட் டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 28 ஆம் தேதி பிற்பகல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை 4.30 மணிவரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பின்னர் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சியின் தலைவராக (முதலமைச்சர்) ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பிறகு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ரோசய் யாவை சந்தித்தனர்.
அப்போது, எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுத்ததற்கான தீர்மானத்தையும், ஒரு கடிதத்தையும் ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங் கினார். அத்துடன் புதிய அமைச்சரவை பட்டியலையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைக்க அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக 29 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவி யேற்றுக்கொண்டனர்.

ஜெயலலிதா ஜாமீன் மனு

தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாமீன் கோரும் மனு 30 ஆம் தேதி கருநாடக விடுமுறை கால நீதிமன்ற நீதிபதியான ரத்னகலா அவர்களிடம் வழக்கு வந்தது. அவர் அந்த வழக்கினை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அவசர வழக்காக கருதி ஜாமீன் மனுவை விசாரிக்கவேண்டும் என்று மீண்டும் ஜெயலலிதா சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மறுநாள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ரத்தினகலா, நீதி நலன் கருதி இந்த மனுவை உயர்நீதிமன் றத்தில் வழக்கமான அமர்வு (ரெகுலர் பெஞ்ச்) விசாரிப்பதுதான் நல்லது என்ற கருதுகிறேன். அதனால் இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் வழக்கமான அமர் வுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என்றார். ஜாமீன் வழங்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஜாமீன் மனு மீதான விசாரணையை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தர விட்டார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க விடுமுறை கால நீதிபதி மறுத் ததை தொடர்ந்து அ.தி.மு.க. வழக்குரை ஞர்கள் கருநாடக உயர்நீதிமன்றப் பதிவாளர் தேசாயை சந்தித்து, ஜாமீன் கோரும் ஜெயலலிதாவின் மனுவை, உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.

ஆனால் ராம் ஜெத்மலானியின் அறி வுறுத்தலின் பேரில் பின்னர் அவர்கள் அந்த மனுவை திரும்பப் பெற்றனர்.

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர், திரைத்துறையினர் என்று பட்டினிப் போராட்டங்களும், பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

14 நாள்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உள் ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை கருநாடக உயர்நீதிமன்றத்தில் அக்டோ பர் 7 ஆம் தேதி நடைபெற்றது.

ஜெயலலிதா தரப்பில் ராம்ஜெத் மலானி ஆஜரானார். அரசு தரப்பு வழக் குரைஞராக பவானி சிங் ஆஜரானார்.

7 ஆம் தேதி காலைவரை ஜெயலலி தாவின் ஜாமீனுக்கு ஆட்சேபித்த அரசு வழக்குரைஞர் பவானிசிங், உணவு இடைவேளைக்குப் பிறகு ஜெய லலிதாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று பல்டி அடித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசேகரா அவர்கள், 4 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்த அரசு தரப்பு இப் பொழுது நிபந்தனை வழங்க ஆட் சேபனை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு விரும்பினா லும் ஊழலின் தீவிரத்தை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கக்

Read more: http://viduthalai.in/page2/89115.html#ixzz3FqkCCv8P

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கராச்சாரி அவதார ரகசியம்


ஆதிசங்கராச்சாரி ஏன் இவ்வுல கில் அவதரித்தார்? அவர் அவதரித்த தன் உள்நோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரமசிவனே காதோடு காதாக தனது ஒய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்டவாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.

கலியுகத்திலுண்டாகும் பக்தர் களுடைய சரித்திரத்தைச் சுருக்க மாகச் சொல்லுகின்றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக்கொள்ளத் தக்கது. ஒருவர்க்குஞ் சொல்லத்தக்கது அன்று. அம்பிகையே! பாவகர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற்கலியுகத்தில் எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்குவேன் மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல் வேன், கேட்பாயாக!

இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் ... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்ப வர்கள்; வேதபோதக வாக்கியங் களுக்கு மாறுபாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்; பெரிய சாத்திரங்களால் அத்வை தத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர் களாகிய இவர்களால், குல ஆசா ரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.

அப்போது அவர்களைக் கரை யேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற் றில் சங்கரர் என்னும் திருநாம முடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்.
(சங்கர திக்கு விஜய காவிய வசனம் நூல், பக்கம் 2) - மருதவாணன் புரிகிறதா சூட்சமம்?

Read more: http://viduthalai.in/page3/89116.html#ixzz3FqkP4UmI

தமிழ் ஓவியா said...

சாவுக்கு இசைக்க மாட்டோம் சாராயம் குடிக்க மாட்டோம் புத்தர் பறை இசை நடனப்பயிற்சி மணிமாறன் தகவல்

புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் பறைஇசை குறித்து மாணவ மாணவியருக்குப் பயிற்சி நடந்து வருகிறது. தசரா விடுமுறையை முன்னிட்டு மாணவ மாணவியர் உறவினர் வீடுகள் சுற்றுலா என்று கிளம்பியிருக்க புதுக்கோட்டையில் பறை இசைப்பயிற்சி நடந்து வருகிறது. புதுக்கோட்டையை அடுத்த வயலோகம் கிறிஸ்துராஜா இயற்கைப் பண்ணையில் நடந்த பயிற்சியை தமிழகம் மட்டு மல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சி நடத்துவதோடு சென்னையில் புத்தர் பறை இசை நடனப் பயிற்சி மய்யம் வைத்து நடத்தி வரும் மணி மாறன் மூன்று நாள் பயிற்சி அளித்தார்.


பயிற்சி பற்றிக் கூறும்போது இப்போது தசரா விடுமுறையை மாணவ மாணவியர் ஏதாவதொரு வகையில் பயனுள்ளதாகக் கழிப்பார்கள். புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் உள்ள மாணவ மாணவியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாகப் பேருந்து வசதிகள் நிறுத்தப்பட்டதால் மாணவ மாணவியர் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.


தமிழ் ஓவியா said...

பறை என்பது ஏதோ ஒரு குறிப் பிட்ட இனத்தவர் கையாளும் ஒரு இசைக்கருவி என்பது போல் ஆகிவிட்டது. அதிலும் சாவு வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சாவுக்கு இசைக்கும் ஒரு கருவி என்றே அனைவராலும் பார்க்கப் பட்டு வருகிறது. ஆனால் பறையைப் பொறுத்த மட்டிலும் துவக்க காலத்தில் மனிதர்கள் விலங்குகளை ஒலிஎழுப்பி விரட்டுவதற்கும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்கள்.


அதே போல் மன்னர் காலத்தில் யானையின் மீதமர்ந்து மன்னரின் ஆணையைத் தெரிவிப்பதற்குப் பயன் படுத்தினார்கள். பறை இசைக் கலைஞர் களுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. இப்போது சாவு வீட்டுக் கலைஞர்கள் என்பது போலும் தாழ்த்தப்பட்டவர் களின் இசைக்கருவி என்பது போலும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தாழ்த்தப் பட்டவர்களிலும் வெட்டியான் வேலை செய்பவர்கள் போல் கீழமை வேலை செய்பவர்களின் கருவி என்கிற நிலையில் பார்க்கப்படுகிறது. அது தவறு. அதனால்தான் சாவுக்கு இசைக்க மாட்டோம் சாராயம் குடிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் பறை இசைக்கருவியை எடுத்து இசைத்து ஒலித்து வருகிறோம். பயிற்சிக்கு முன்பே சொல்லி விடுகிறோம். உறுதிமொழி எடுக்கச் செய்கிறோம். அதன்படி நடந்து கொள்பவர்களுக்கு பொருளாதார வசதி உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.


சாவு வீட்டுக்குச் சென்று பறை யடித்துதான் சாப்பிடுகிறோம் என்று சொல்வதெல்லாம் தவறு. மற்ற நாட்களில் வேறு வேலைகள் செய்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால் சாவு வீடுகளில் பறையடிக்கச் செல்வதும் அவர்களை அப்படிச் செய்யவைப்பதும் வேறு நோக்கம். அதாவது சாதீய நோக்கமாகும். அவர் களை அப்படித்தான் நடத்த வேண்டும் என்கிற நோக்கில் உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களால் பறையடிக்கச் செய்யப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதே போல் அவர்கள் சாராயம் குடிப்பவர்களாக மாற்றப்படுகிறாரகள். அதெல்லாமே மற்றவர்களை அடிமைப்படுத்தும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண் டும். நாங்கள் பறையடிக்கச் செய்வதை விட பறைஇசை நடனப் பயிற்சியளிக்கி றோம். பறை இசையில் 65-க்கும் அதிகமான அடவுகள் இருந்திருக் கின்றன. அவற்றை முறையாகப் பின் பற்றி வராததால் இருபதுக்கும் குறை வாகத்தான் இப்போது கடைப்பிடித்து வரப்படுகிறது. அதை அதிகமாக்க வேண்டும் என்பதோடு பறை அடிப்ப வர்களுக்கு அத்துடன் இன்றைய கீபோர்டு வயலின் முதல் அனைத்துக் கருவிகளையும் இசைக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுதான் கலையை வளர்க்கும் உண்மையான நோக்கமாகவும் இசை வளர்க்கும் ஆர்வ மாகவும் இருக்க முடியும். மண்ணின் கலைகளை மாற்று ஊடகமாக்க வேண்டும்.


தேவராட்டம் என்றொரு கலை இருக்கிறது. அதைக் கேள்விப்படும் போது அது தேவர் இன மக்களால் இசைக்கப்படும் என்பது போல் ஒரு தோற்றம் தெரியும். ஆனால் காட்டு நாயக்கர் இன மக்களால்தான் இசைக் கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. அதைப் பெருமையாகப் பேசுபவர்கள் பறை என்றால் பறையர்கள் ஆதி திராவிடர்கள் அவர்களிலும் வெட்டி யான் வேலை செய்பவர்கள் இசைக்கும் கருவி என்று பார்ப்பதால்தான் இதைக் கொஞ்சம் மரியாதைக் குறைவாகப் பார்க்கிறாரகள். ஒடுக்கப்பட்டவர்களின் கருவி எனப் பார்க்கப் பட்டு வந்தது. தந்தை பெரியார் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் வருகைக்குப் பின்தான் பறை இசைப்பவர்கள் உயர்வாகப் பார்க்கப் படுகிறார்கள்..

தமிழ் ஓவியா said...

பறை இசை என்பது தாயின் கரு வறைவரையில் உள்ள குழந்தையையும் கேட்கச் செய்யும். அதை இசைக்கும் கலைஞர்கள் வியர்வையில் குளித்து விடுவார்கள். நாடி நரம்புகளை முறுக்கேற்றும் வகையில் அமைந் திருக்கும். இது தமிழர்களுக்கே உரிய கலை என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். காரணம் ஆங்காங்கே மற்ற மாநிலங்களில் உள்ள கலைகளும் இதைப்போல் இருக்கும். இசைக்கருவி யின் வடிவம் மாறியிருக்கும். ஆனால் உழைக்கும் மக்களின் கைகளால் அந்தக் கருவிகள் வாசிக்கும்போதுதான் உண்மை வெளிவரும்.


பறைக்கருவி இசைக்கும்போது கென்யா மக்கள் அதை வரவேற்கி றார்கள். மலேசியாவில் சத்தத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஜெர்மனியிலோ மெலிதான இசைக் கருவிகளைக் கேட்டுப் பழகிப் போன வர்கள் என்பதால் சத்தமே வேண்டாம் என்கிறார்கள். அப்படி நாட்டுக்கு நாடு தேசத்திற்குத் தேசம் வேறுபடும் இசை ரசனையானது எந்த மக்களுக்கு ஒன்றிப் போகிறது என்பதைப் பார்த்தாலே தெரியும் பறை இசைக்கருவி யாருக்குச் சொந்தம் என்று. இன்றைக்கும் தமிழ்ப்படங்களில் பறை இசைக்கு என்று தனித்துவம் இருக்கிறது. அதைக் கொண்டு மற்றவர்கள்தான் முடிவுக்கு வரவேண்டும். தவிர நான் சொல்வ தென்றால் பறை இசையைக் கேட்கும் தமிழர்கள் யாருக்கும் ரத்தத்தில் முறுக்கேறும் வல்லமையைத் தரவல் லது. அதை இப்போது மற்றவர்களை விட மாணவ மாணவியர் கற்றுக் கொள்வதற்கு சாதி, மதம், இனம் வேறு பாடில்லாமல் என்னிடம் நாடி வரு கிறார்கள். இப்போதும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நடக்கும் ஆண்டுப் பயிற்சிக்கு மூட்டை தூக்குபவர்களில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை 54 -பேர் வந்து கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சாவுக்கு இசைக்க மாட்டோம் சாராயம் குடிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியுடன் சொல்லித் தருகிறேன். அவர்கள் கலை, கலைஞர்கள் கருத் தியல் என்கிற நிலையில் வளர்கிறார் கள். தமிழக அரசும் கல்வித்துறையும் முன்னெடுத்து இதை மாணவ மாணவியருக்குக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். சில பள்ளிகளில் இசை என்றால் கர்நாடக சங்கீதம் கற்றுத் தருவது மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டு இசை ஆசிரியர் களை நியமிக்கிறார்கள். அவர்களுக்கு கர்நாடக சங்கீதமும் தெரிவதில்லை மக்களின் கலைகளும் தெரிவதில்லை. அதனால் மாணவ மாணவியருக்கு கலை பற்றி அறிந்து கொள்ள முடியாத நட்டம் ஏற்பட்டு விடுகிறது. எனக்கு தமிழக அரசு கலைச்சுடர்மணி விருதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருதி னையும் வழங்கிக் கவுரவித்திருக்கின்றன. அதே போல் பறை இசையில் சிறந்த வர்களுக்கு விருதுகள் வழங்கி னால்தான் கலையும் வளரும் கலைஞர் களும் வளர்வார்கள் என்றார்.


தகவல்: கண்ணன், புதுக்கோட்டை

Read more: http://viduthalai.in/page4/89117.html#ixzz3FqkcsdAD

தமிழ் ஓவியா said...

காசை இறைத்தும் மாசு நீங்காக் கங்கை

- மா.பால்ராசேந்திரம்

கங்கையாற்றைப் புனித ஆறாய் மாற்றிட வேண்டி டில்லியில் அமைக்கின்ற ஒவ்வொரு நடுவணரசும் செலவிடும் பணம் கங்கையாற்று நீரிலேயே கரைந்து போகின்ற காட்சியைக் காலங்காலமாய் நாம் கண்டு வருகிற கண் கொல்லும் காட்சியாகும். ஆமாம் கண்ணீர் உகுத்துப் பசி... பசி... பசியென்று கதறிடும் பல்லாயிரம் மக்கள் வதிந்து வாழும் நாட்டில் பணத்தையள்ளி நீரில் கரைத்திடும் செயல் கண்டு களித்திடவா முடியும்? காணாதே இக்காட்சியினை எனக்காணும் கண்களை இறுகமூடிக் கொல்லும் வினைதானே புரிய முடியும். இத்தனையாண்டுகளாகக் கங்கையில் கொட்டிய மக்கள் பணத்தால் கங்கை புனிதம் பெற்றதா? இனிவருங்காலங் களிலாவது புனிதம் பெறக் கங்கைக்கு இயலுமா? புனிதமடைவதென்பதைக் கங்கையில் நடத்தி முடித்திடுவாரா? அய்யம் தான், ஏன்?

கங்கை, புண்ணிய நதியுருவானவள், வெண்ணிறமுடையவள், வலக்கையில் கருநெய்தலும், இடக்கையில் பூர்ண கும்பமும், முதலை வாகனமும் உடை யவள் என்ற உவமைகளோடு சிறப் பித்து விட்டிருந்தால் கங்கை புனித மாகிவிடும். ஆனால் கங்கையைத் தேவி யாய், தெய்வமாய் உருவகித்ததோடு, உருகி வணங்கியதால் உருப்படாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

கள்ளொடு காமம் கலந்து கரைவாங்கும்
வெள்ளம் தரும் இப் புனல்

பரிபாடலில் கரும்பிள்ளைப் பூதனார், வெள்ளப்பெருக்கில் இழுத்து வரப்படும் மலர்களின் மதுவினால் நீராடிய மகளிரும் ஆடவரும் காமம் கொண்டுகளித்து மகிழ்ந்தனர் வையை யாற்றில் என்று கூறுவார். தமிழராய் ஆரியத்தின் வயப்படாதவராய் நின்று நிலை பெற்றிருந்தால் திராவிடர் நாட்டு (இந்தியா) ஆறுகளுக்குக் கேடே வந்தி ருக்காது.

எவராலும் கட்டப்படாத, கட்டு மானத்திற்குரிய அடிப்படைக் கூறுகள் எதுவுமில்லாத மணல் திட்டுகளையே பாலமென்று புளுகி, இதிகாசக்கதையின் கதாநாயகனாம் ராமன்தான் அதனைக் கட்டினானென்ற கட்டுக்கதையை மக்களிடையே உருட்டிவிட்டனரே பார்ப்பனச் சோம்பேறிகள்.

தமிழ் ஓவியா said...

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின் எனும் வள்ளுவர் வாக்கிற்கியைய, பன்னலம் நல்கிடும் பயன்மரமாய் விளங்கி உலகிற்கே அருங்கொடையாய்க் கிடைக்கவிருந்த சேதுக்கால்வாய்த் திட்டத்தையே தடுத்து நிறுத்தியதோடு, வேண்டிக் கேட்போரைத் தலையை எடுத்திடுவோமெனக் கூவிடும் காவிக்கூட்டத்தார், கங்கைநீரைப் புனிதப்படுத்திட முனைவோரெவரையும் அனுமதித்திடுவாரா?

தமிழ் ஓவியா said...


கங்கை பற்றி அபிதான சிந்தாமணி கூறுகிறது, உலகத்து ஆறுகள் போன்று இயற்கை தந்த கொடையல்ல கங்கை யாறு. பார்வதிதேவியார் விளையாட் டாகத் தன் பதியாம் சிவமூர்த்தியின் கண் களை மூடிய பொழுது அம்மை யாரின் நகத்தில் பிறந்தவளாம் கங்காதேவி.

கவற்சி பெரிதுற்றுரைப்போர் கண்ணும்
பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணும்

நகைப்புத்தான் தோன்றும் என்பது தொல்காப்பிய விரிவுரை இங்கும் நமக்குச் சிரிப்புத்தான் வருகிறது. அந்தக் கங்கையை எடுத்துத்தான் சிவன் தன் சிரசிற்தரித்துக்கொண்டான். ஆறாய், நீராய் இருந்தால் எப்படி எடுத்துச் சூடியிருக்க முடியும்? அங்கிருந்துதான் கங்கை தன் நீரைப் பெருக்கித்தந்து கொண்டிருக்கிறாள். இதனை மாற்றி உலகியல்பிற்கேற்ப எழுதிட முற் பட்டாலல்லவா கங்கையாறாய், ஓர் இயற்கைப் பொருளாய்க் கங்கையைக் கொள்ள முடியும். அதற்கு ஒப்புவரா காவிக்கூட்டத்தார்? அதுமட்டுமன்று, பிதுர்கள் நற்கதியடையப் பகீரதன் தவம் செய்து சிவனால் தன் சடையிலிருந்து ஒரு துளியாய்க் கங்கையைப் பூமிக்குத் தரப்பட்டவள் என்று எழுதிவைத்துப் பெருமை கொள்கின்றனரே! தலையில் கட்டியாக இருந்து வீங்கிப் பழுத்து உடைந்தால் சீழ்தானே வழியும்? உழைத்துக் களைத்தவன் நெற்றியி லிருந்து வியர்வை, துளியாகச் சொட்ட லாம். சராசரி மனிதனைப் போன்ற உறவாளிகளில் ஒருவனின் தலையிலி ருந்து ஆறு பெருகியோடி வருகிற தென்பதைச் செவ்வாய்க்கோள் ஆய்வில் இறங்கிய காலத்திலும் மனிதன் நம்பு கிறானென்றால் அவனை நினைத்து பெரியார் தொண்டர்கள்தான் வேதனை கொள்ள வேண்டியுள்ளது.

கங்கை வழிந்தோடி வரும் வழியில் சந்து முனியின் ஆசிரமம் வழி வருதலையறிந்த முனிவர் கோபித்து அதனை மறைத்ததால், முனிவரின் காதின் வழியே நீர்ப்பெருக்கி நடந்திடச் செய்தவளாம் கங்காதேவி. அய்யா சொல்வார், வைதிகர்கள் அபிப்பிரா யத்தை அலட்சியம் செய்தால்தான் சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் என்று. அதுதானே உண்மை. சந்தமாமா கதைகளை விஞ்சிய காட்சியாகக்கூட இருக்கலாம். ஆனால் அதனை மெய்யென்றல்லவா நம்பி வீணாகிக் கிடக்கின்றனர். மேனாட்டார் எள்ளி நகையாடிட மாட்டாரா? என்ற எண் ணம் சிறிது கூட இன்றி அண்டப் புளுகைக் கொட்டி வஞ்சித்து வாழ்கின்றனரே வைதீக ஆரியர்.

கங்கையில் எவ்வளவு காலம் ஒருவனுடைய (அஸ்தி) சாம்பல் விழுந்து கிடக்கிறதோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத்தில் இருப்பான். கங்கையில் கரைக்கப்பட்ட சாம்பலுக்குரியோர் எவர் இன்று சுவர்க்கத்தில் இருக்கிறா ரெனக்கூறுவாரா? சுவர்க்க, நரகமென் பதே, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற பொய்ம்மைக் கருத் தாய் உள்ளதே!

இன்றும் கூட செத்துப் போகின் றவரின் பிணத்தை நீண்ட கங்கை யாற்றின் கரைகளில் எரியூட்டி, எரித்துச் சாம்பலாக்கின்ற காலை, அஸ்திகளுடன் குடுவைக்குள் பொன் நாணயம் வைத்துக் கங்கையில் எறிவர். அதனை மூழ்கி எடுக்கும் கூட்டத்தார் ஆங்கே பலருண்டு. உடல் உறுப்புகளை வெட்டியெடுத்தோ, முழு உடலையுமோ ஆற்றுநீரில் வீசிவிடுவதால் புண்ணியம் பலகோடி கிடைக்குமென்று நீரைப் பாழாக்குவோரைத் தடுத்திடத் திருவா ளர் மோடியால் இயலுமா? தானாகத் தவறை உணர்ந்து திருந்திடும் கூட்டமா வைதீகக் கூட்டம்?
தர்ப்பணம், திதி, திவசம், என்ற பெயரில் தூக்கியெறியப்படும் வேண் டாப் பொருள்களின் குவியல்கள் எத் தனை ஆயிரம் டன்கள் ஆற்றில் சேர்க் கப்படுகின்றன! அதனை நிறுத்திடச் செய்தாலல்லவா புனிதமாகும் கங்கை. இந்துதர்மவாதிகள் சம்மதிப்பாரா?

நல்ல இமயம் நலங்கொழிக்கும் கங்கைநதி
செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவதென்றோ? உயர்வதென்றோ?

என்பார் புரட்சிக் கவிஞர். கங்கை, நீரை உள்ளடக்கிய ஆறாய், இமயமலை யிலுள்ள அரித்வாரம் எனும் இடத்தி லிருந்து, பூமியை (நிலப்பகுதியை) நோக்கி வருகிறதென்பதை உணர்ந்திடு வாரேயாயின் கங்கை புனிதமாகவிடும். கங்கை, ஆறு, ஊற்றுநீர், மழைநீர், பனிநீர் எனக்கொண்டு செயல்பட்டால் ஒருக்கால் கங்கைக்கு விடிவுகாலம் ஏற்படலாம். இந்துத்துவத்தின் பாசாணம் பிடித்த மூடக்கதைகளுக்கும், கட்டுகளுக்கும் மெய்ச் சாயம் பூசி நம்பிடும் பயித்தி யக்காரத்தனங்களுக்குச் சமுதாயத்திலிருந்து விடை கொடுக்க முன்வருவா ரேயாயின் நிச்சயமாகக் கங்கை என்ன, இந்திய ஆறுகளெல் லாமே புனிதமாக, ஓடிவரும் வழியில் எங்கும் அள்ளிப் பருகிடும் ஆனந்த நிலையை அகிலமே பெறலாம்.

Read more: http://viduthalai.in/page5/89118.html#ixzz3FqkreWDm

தமிழ் ஓவியா said...

காந்தியாரும் ஹிட்லரும்

ஹிட்லர் முடிவெய்திவிட்டதாக வெளிவந்த சேதி உறுதியாக்கப் பட்டு விட்டது. இது பொது உடைமைக்கு வெற்றி என்று கருதப்பட வேண்டும். ஹிட்லர் காந்தியாரைப் போலவே ஒரு பைத்தியக்காரக் கொள்கையை மேற்போட்டுக் கொண்டவர். அதாவது 1930 இல் தமிழ்நாட்டில் பொது உடைமைக் கொள்கை நல்ல முறையில் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும்போது காந்தியார் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்துவிட்டு அந்தப்படி ஆரம்பித்ததற்குக் காரணமாக.
நான் இந்த சத்தியாகிரகம் ஆரம்பிக்காமல் இருந்தால் நாட்டில் பொதுவுடைமைக் கிளர்ச்சி வலுத்து மக்களுடைய சமாதானமும் பாதுகாப்பும் பாழ்பட்டு விடும் என்று கூறினார்.

பாவம்! பரிதாபத்திற்குரிய ஹிட்லரும் அதுபோலவே.

பொது உடைமைப்பேயில் இருந்து உலகத்தைக் காப்பாற்றவே இந்தப் போரைத் துவக்கி இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே வந்தார். இவர்கள் இப்படிச் சொன்னதின் பயனாக இந்திய முதலாளிகள், பிரபுக்கள், இவர்களுக்கு சமமான வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்கள் ஆகியவர்களின் உதவியாலும் ஆதரவாலும் காந்தியார் அபரி மிதமான செல்வமும், போகமும், விளம்பரமும் செல்வாக்கும் பெற்றார். வெறிகொண்டவரின் சர்வாதிகாரம் போல் தன் வாயில் இருந்துவந்த வார்த்தைகள் எல்லாம், கையில் இருந்துவந்த எழுத்துக்கள் எல்லாம் அசரீரி வாக்குப்போல் ஏராளமான மக்கள் கருதும்படியான தன்மையும் பெற்றார். அதுபோலவே ஹிட்லரும் ஜெர்மன் மக்களுக்கு விளங்கினார்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 5.5.1945

Read more: http://viduthalai.in/page7/89122.html#ixzz3FqlLT4F5

தமிழ் ஓவியா said...

ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?


- குடந்தை கருணா

கேள்வி: ஸ்லீப்பர் செல்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?

கிளிமூக்கு அரக்கன் பதில்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தமிழகத்தில் வர்ணபேதம், மனுதர்மம், மதம், ஜாதி போன்றவற்றை வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. ஆனால் பெரியார் காலத்தில் அவற்றை எல்லாம் வெளிப்படையாக முன்னெடுத்த ராஜாஜி தமிழகத்தில் அரசியல் செல்வாக்கற்றுப் போனதை நினைவில் கொள்க. ஆக பெரியாருக்குப் பிறகு தமிழக வெகுஜன மக்களை என்ன செய்தும் கூட மனுதர்ம மக்களாக மாற்ற முடியவில்லை. பற்றாக்குறைக்கு வெளிப்படையாக பஜகோவிந்த பெருமைகளைப் பேசினால் அருவருப்பாக வேறு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் பஜகோவிந்தங்கள் வேறு வழியே இல்லாமல் கையில் எடுத்ததுதான் ஸ்லீப்பர் செல் தாக்குதல்.

இந்த ஸ்லீப்பர் செல் பஜகோவிந்தங்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. எந்த கட்சிக்காரராகவும் தங்களை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சேஷாத்ரி, ஷர்மா, ஸ்வாமி, பாண்டே போன்ற கிரந்தப் பெயர்களை தங்கள் பெயருடன் மறக்காமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். பதிப்பகம், பத்திரிக்கை, இணையதளங்கள் நடத்துவார்கள்.

மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆட்சி யாளர்களை தூக்கிப்பிடிப்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஆனால் தங்களை நடுநிலையாளர் களாக வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் பேசுவார்கள். சினிமா பேசுவார்கள். ஷங்கரைப் புகழ்வார்கள்; பாலாவை புகழ்வார்கள் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய அறிஞர் உண்டா என்பார்கள்? சிந்து பைரவிக்கு பின்னர் தான் இளையராஜா இசைக் கலைஞர் ஆனார் என்று புகழ்வார்கள். வட மொழி கிரந்தத்தை வலியுறுத்திக் கொண்டே தமிழ் இலக்கணம் கூட எழுதுவார்கள். திடீரென அறிஞர் அண்ணா சொக்கத்தங்கம் என புகழ்வார்கள். திமுக , திராவிட இயக்கத்தையே குலைத்துவிட்டது என வருந்துவது போல் பேசிவிட்டு ஆர்.எஸ்.எசுக்குக் கொடி பிடிப்பார்கள். காவிப்பண்டாரங்கள் உயிரோடு கொளுத்த விரும்பிய காமராசரை புகழ்வார்கள். இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக கல்வியில் வேண்டும் என்பார்கள், விவரம் புரியாமல் நீங்களும் கைத்தட்டுவீர்கள்.

சாமானியர்களுடன் சாமானியராக இருக்கும் இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், பேச்சு வாக்கில் விபி சிங் என்று சொல்லிப்பாருங்கள். அலறுவார்கள். அலறலை அதிகப்படுத்த உங்களுக்குப் பெரியாரை பிடிக்கும் என்றும் சொல்லுங்கள். சமகாலத்தில் ஜீவா படம் பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள்.

இவ்வகை ஸ்லீப்பர் செல்கள், திமுக- _ அதிமுக என வந்தால் அதிமுகவையும், அதிமுக- _ பாஜக என வந்தால் பாஜகவையும் முழுமூச்சாக ஆதரிப்பார்கள்.

இந்த ஸ்லீப்பர் செல்களின் சிறப்பம்சம் நம் ஆட்களையே நமக்கெதிராக பேச வைத்து நம்மை செல்லரிக்க வைப்பதுதான் . திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறைக்கு அதன் எதிரிகள் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் எதிரிலேயே இருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஸ்லீப்பர் செல்கள் நம்மிடையே கலந்து, நமக்காகவே பேசுவது போல நடித்து, அவர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றவர்கள்.

ஸ்லீப்பர் செல்களை புறந்தள்ளுவதும் சுலபம் தான். பெரியாரின் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு விழிப்பாக இருந்தால் சமூகவியல் உரிமை மீறல் தாக்குதல்களில் இருந்து நான் தப்பித்ததைப் போல நீங்களும் தப்பிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page-2/89163.html#ixzz3Fz45EIkp

தமிழ் ஓவியா said...

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்


இந்தியக் குடிமக்கள்

மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/89149.html#ixzz3Fz4lcsn9

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு


கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!

Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது


சி.கார்த்திகா (3 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் இளைஞர் நீதி குழுமத் தலைவர்), ஏ.ஆனந்த ஜெரார்டு (சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இயக்குநர் சி.வி.சுப்பிரமணியம், பி.பாத்திமாராஜ் (இயக்குநர், சைல்டு லைன், நோடல் நிறுவன செட் இண்டியா), எம்.தவமணி (இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்),

டி.மலர்வாலண்டினா (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதி), எஸ்.ஞானராஜ் (சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), எஸ்.சுவேதா, எஸ்.முகிலா (முதலாம் ஆண்டு மாணவிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), தஞ்சை, அக்.12_பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மனித நேய கழகம், இலவச சட்ட ஆலோசனை மய்யம், சைல்டுலைன் நோடல் நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு இணைந்து வளர் இளம் பெண்களின் மேம்பாடு: வன்முறை சுழற்சிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தல் என்ற கருத்தை மய்யமாக கொண்டு சர்வதேச பெண்குழந்தைகள் நாள் விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சுவேதா வரவேற்புரையாற்ற, சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் தவமணி தலைமை வகித்தார். அவர் தமதுரையில், குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தி யார்த்திக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இது மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்றார். இதுபோல் பெண் குழந்தைகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைத்து சமுதாயத்தில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும் என்றார். தஞ்சை மாவட்ட 3 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரும் இளைஞர் நீதி குழுமத் தலைவர் மாண்பமை நீதிபதி கார்த்திகா சிறப்புரையாற்றினார்.

அவர் தமதுரையில், பெண்குழந்தைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்ற லையும், ஆளுமை திறனையும் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும் என்றும், வளர்ந்து வரும் நவீன பொருள்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று கூறினார். அதனையடுத்து மாவட்ட சட்டப்பணி கள் ஆணை குழு செயலாளர் / சார்பு நீதிபதி மலர்வலண்டினா கருத்துரையாற் றினார்.

அவர் தமதுரையில், பெண்கள் குழந்தைகள் நல்ல நண் பர்களுடைய தொடர்பை வைத்துக்கொள் வதன்மூலம் அவர்களுக்கு வரும் பிரச் சினையை எளிதில் அவர்களால் எதிர் கொள்ள முடியும் என்றார். வளர் இளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்றும் பெண் குழந்தைகள் வளர் இளம் பருவத்தில் கல்வியறிவில் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு அறிவில் சிறந்து நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சைல்டுலைன் இணை நிறுவன செட் இன்டியா இயக்குநர் பாத்திமாராஜ் வாழ்த் துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மற்றும் நிருவாக மய்ய இயக்குநர் சுப்பிரமணியன், பல்கலைக் கழக இலவச சட்ட உதவி மய்ய ஆலோ சகர் விஜயலஷ்மி மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி யாக பல்கலைக்கழக பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி முகிலா நன்றி யுரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/89134.html#ixzz3Fz5B4YFo