Search This Blog

11.10.14

எதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும்- பெரியார்

எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை


எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?


போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.


எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?


போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.


எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?


போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.


போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?


எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.


போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்


எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?


போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.


எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?


போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.


எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.


போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)


எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.


                      ----------------------------"தந்தைபெரியார் - “குடிஅரசு” - கற்பனை உரையாடல் - 05.04.1931

10 comments:

தமிழ் ஓவியா said...

ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?


- குடந்தை கருணா

கேள்வி: ஸ்லீப்பர் செல்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?

கிளிமூக்கு அரக்கன் பதில்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தமிழகத்தில் வர்ணபேதம், மனுதர்மம், மதம், ஜாதி போன்றவற்றை வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. ஆனால் பெரியார் காலத்தில் அவற்றை எல்லாம் வெளிப்படையாக முன்னெடுத்த ராஜாஜி தமிழகத்தில் அரசியல் செல்வாக்கற்றுப் போனதை நினைவில் கொள்க. ஆக பெரியாருக்குப் பிறகு தமிழக வெகுஜன மக்களை என்ன செய்தும் கூட மனுதர்ம மக்களாக மாற்ற முடியவில்லை. பற்றாக்குறைக்கு வெளிப்படையாக பஜகோவிந்த பெருமைகளைப் பேசினால் அருவருப்பாக வேறு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் பஜகோவிந்தங்கள் வேறு வழியே இல்லாமல் கையில் எடுத்ததுதான் ஸ்லீப்பர் செல் தாக்குதல்.

இந்த ஸ்லீப்பர் செல் பஜகோவிந்தங்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. எந்த கட்சிக்காரராகவும் தங்களை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சேஷாத்ரி, ஷர்மா, ஸ்வாமி, பாண்டே போன்ற கிரந்தப் பெயர்களை தங்கள் பெயருடன் மறக்காமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். பதிப்பகம், பத்திரிக்கை, இணையதளங்கள் நடத்துவார்கள்.

மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆட்சி யாளர்களை தூக்கிப்பிடிப்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஆனால் தங்களை நடுநிலையாளர் களாக வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் பேசுவார்கள். சினிமா பேசுவார்கள். ஷங்கரைப் புகழ்வார்கள்; பாலாவை புகழ்வார்கள் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய அறிஞர் உண்டா என்பார்கள்? சிந்து பைரவிக்கு பின்னர் தான் இளையராஜா இசைக் கலைஞர் ஆனார் என்று புகழ்வார்கள். வட மொழி கிரந்தத்தை வலியுறுத்திக் கொண்டே தமிழ் இலக்கணம் கூட எழுதுவார்கள். திடீரென அறிஞர் அண்ணா சொக்கத்தங்கம் என புகழ்வார்கள். திமுக , திராவிட இயக்கத்தையே குலைத்துவிட்டது என வருந்துவது போல் பேசிவிட்டு ஆர்.எஸ்.எசுக்குக் கொடி பிடிப்பார்கள். காவிப்பண்டாரங்கள் உயிரோடு கொளுத்த விரும்பிய காமராசரை புகழ்வார்கள். இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக கல்வியில் வேண்டும் என்பார்கள், விவரம் புரியாமல் நீங்களும் கைத்தட்டுவீர்கள்.

சாமானியர்களுடன் சாமானியராக இருக்கும் இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், பேச்சு வாக்கில் விபி சிங் என்று சொல்லிப்பாருங்கள். அலறுவார்கள். அலறலை அதிகப்படுத்த உங்களுக்குப் பெரியாரை பிடிக்கும் என்றும் சொல்லுங்கள். சமகாலத்தில் ஜீவா படம் பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள்.

இவ்வகை ஸ்லீப்பர் செல்கள், திமுக- _ அதிமுக என வந்தால் அதிமுகவையும், அதிமுக- _ பாஜக என வந்தால் பாஜகவையும் முழுமூச்சாக ஆதரிப்பார்கள்.

இந்த ஸ்லீப்பர் செல்களின் சிறப்பம்சம் நம் ஆட்களையே நமக்கெதிராக பேச வைத்து நம்மை செல்லரிக்க வைப்பதுதான் . திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறைக்கு அதன் எதிரிகள் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் எதிரிலேயே இருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஸ்லீப்பர் செல்கள் நம்மிடையே கலந்து, நமக்காகவே பேசுவது போல நடித்து, அவர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றவர்கள்.

ஸ்லீப்பர் செல்களை புறந்தள்ளுவதும் சுலபம் தான். பெரியாரின் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு விழிப்பாக இருந்தால் சமூகவியல் உரிமை மீறல் தாக்குதல்களில் இருந்து நான் தப்பித்ததைப் போல நீங்களும் தப்பிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page-2/89163.html#ixzz3Fz45EIkp

தமிழ் ஓவியா said...

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்


இந்தியக் குடிமக்கள்

மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/89149.html#ixzz3Fz4lcsn9

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு


கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!

Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது


சி.கார்த்திகா (3 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் இளைஞர் நீதி குழுமத் தலைவர்), ஏ.ஆனந்த ஜெரார்டு (சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இயக்குநர் சி.வி.சுப்பிரமணியம், பி.பாத்திமாராஜ் (இயக்குநர், சைல்டு லைன், நோடல் நிறுவன செட் இண்டியா), எம்.தவமணி (இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்),

டி.மலர்வாலண்டினா (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதி), எஸ்.ஞானராஜ் (சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), எஸ்.சுவேதா, எஸ்.முகிலா (முதலாம் ஆண்டு மாணவிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), தஞ்சை, அக்.12_பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மனித நேய கழகம், இலவச சட்ட ஆலோசனை மய்யம், சைல்டுலைன் நோடல் நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு இணைந்து வளர் இளம் பெண்களின் மேம்பாடு: வன்முறை சுழற்சிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தல் என்ற கருத்தை மய்யமாக கொண்டு சர்வதேச பெண்குழந்தைகள் நாள் விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சுவேதா வரவேற்புரையாற்ற, சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் தவமணி தலைமை வகித்தார். அவர் தமதுரையில், குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தி யார்த்திக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இது மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்றார். இதுபோல் பெண் குழந்தைகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைத்து சமுதாயத்தில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும் என்றார். தஞ்சை மாவட்ட 3 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரும் இளைஞர் நீதி குழுமத் தலைவர் மாண்பமை நீதிபதி கார்த்திகா சிறப்புரையாற்றினார்.

அவர் தமதுரையில், பெண்குழந்தைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்ற லையும், ஆளுமை திறனையும் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும் என்றும், வளர்ந்து வரும் நவீன பொருள்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று கூறினார். அதனையடுத்து மாவட்ட சட்டப்பணி கள் ஆணை குழு செயலாளர் / சார்பு நீதிபதி மலர்வலண்டினா கருத்துரையாற் றினார்.

அவர் தமதுரையில், பெண்கள் குழந்தைகள் நல்ல நண் பர்களுடைய தொடர்பை வைத்துக்கொள் வதன்மூலம் அவர்களுக்கு வரும் பிரச் சினையை எளிதில் அவர்களால் எதிர் கொள்ள முடியும் என்றார். வளர் இளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்றும் பெண் குழந்தைகள் வளர் இளம் பருவத்தில் கல்வியறிவில் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு அறிவில் சிறந்து நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சைல்டுலைன் இணை நிறுவன செட் இன்டியா இயக்குநர் பாத்திமாராஜ் வாழ்த் துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மற்றும் நிருவாக மய்ய இயக்குநர் சுப்பிரமணியன், பல்கலைக் கழக இலவச சட்ட உதவி மய்ய ஆலோ சகர் விஜயலஷ்மி மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி யாக பல்கலைக்கழக பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி முகிலா நன்றி யுரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/89134.html#ixzz3Fz5B4YFo

தமிழ் ஓவியா said...

" பெரியார்ஒரு கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்லோகம்

பூஜை நேரத்தில் மட்டுமல்ல; வீட்டில் சமைக்கும்போதுகூட ஸ்லோகங்களைச் சொல் லிக் கொண்டே வேலை செய்யலாமாம் - இதனால் பலன் கிடைக்குமாம்.

அது சரி, பிள்ளைகள் பாடம் படிக்கும் பொழுது எப்படி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? சமைக்கும் போது ஸ்லோகம் சொல் லிக் கொண்டிருந்தால் கவனம் தப்பி உப்பும், காரமும் அதிகமாகி மருத் துவமனையில் சேர வேண்டியதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/89212.html#ixzz3G4tccVQM

தமிழ் ஓவியா said...

அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவனுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/89191.html#ixzz3G4uUPAcE

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக் கூடாது.

அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள் ளுங்கள்.

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்குச் சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89193.html#ixzz3G4vCG9cI

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குணம் நிறைந்த முருங்கைக் கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக் குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணி லடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். இனிமேல் தவற விடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/89186.html#ixzz3G4vW1H7c

தமிழ் ஓவியா said...

அயோத்திபற்றி ஜெயேந்திர சரசுவதி முசுலிம் மதகுருவுடன் பேச்சுவார்த்தையாம்!


லக்னோ, அக்.13- அயோத்திப் பிரச்சினை குறித்து முசு லிம் மத குருவுடன் ஜெயேந்திர சரசுவதி சந்தித்துப் பேசி யுள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி 11.10.2014 சனிக்கிழமை அன்று அகில இந்திய முசுலிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செய லாளர் காலித் ரஷீத் ஃபிராங்கி மஹாலி என்பவரை சந் தித்துள்ளார்.

சந்திப்பின்போது அயோத்திப் பிரச்சினை யான ராமஜென்ம பூமி மற்றும் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பேயி வேண்டுகோளின்படி முசுலிம் அமைப்பினருடன் ஜெயேந்திர சரசுவதியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட வேண்டும்

மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினையாக இருப்பதால் இரண்டு மதத்தவரிடையே பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெயேந்திர சரசுவதி கூறி யுள்ளார்.

மஹாலி கூறும்போது, ஜெயேந்திர சரசுவதி புதிதாக பேசவேண்டும் என்று கேட்டு தொடங்கி உள்ளார். மேலும், அமைதியான முறையில் பிரச்சினையின்மீது சுமுகத்தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறினார். முதலில் இந்து, முசுலிம்களிடையே நம்பகத்தன்மையை உரிய அளவில் ஏற்படுத்தவேண்டிய தேவை உள்ளது என்று கூறும் மஹாலி, ஜெயேந்திர சரசுவதியிடம் கூறும்போது, தயவு செய்து வெளிப்படையாக மக்களிடம் பேசுங்கள்.

லவ் ஜிகாத், பசுவைக் கொல்வது, மதரசா என்றெல்லாம் பலவாறாக தவறானவைகளை பிரச்சாரம் செய்து வரு வதால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. நீங்கள் உயர்ந்த அளவில் மதிக்கப்படும் மதச் சின்னமாக இருக் கிறீர்கள், உங்கள் வார்த்தைகளை மக்கள் கேட்பார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று ஜெயேந்திர சரசுவதியிடம், மஹாலி கூறி உள்ளார்.

ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தனி அறையில் இரண்டுபேரும் மொழி பெயர்ப்பாளர்களின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஜெயேந்திரசரசுவதி, மஹாலியிடம், தாம் இசுலாம்மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். மஹாலியின் உரையாடல்களை உருது கவிஞர் அல்லாமா இக்பால், கடவுள் ராமன்குறித்து புகழ்ந்து கூறும்போது, இந்துக்களின் இமாம் என்று கூறியுள்ளார். ராமச்சந்திரன் ஜியை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். பிற மதங்களையும், மதக்குருக்களையும், மதக்கடவுள்களையும் மதிக்கும்படி இசுலாம் கூறியுள்ளது என்றார்.

அயோத்திப் பிரச்சினையில் 30.9.2010 அன்று கூறப் பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரு தரப்பிலும் ஏற்க வில்லை. சட்ட நடைமுறைகளையும் இருதரப்பினரும் ஏற்கவில்லை. சட்டப்படியான தீர்வு அதிக காலம் எடுக்கும் மற்றும் இரு தரப்புத் தலைவர்களும் நீதிமன்றத்துக்கு வெளியே தேவையான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கருதினார்கள்.

முசுலிம் (AIMPLB) தலைவர் மவ்லானா ராபெ ஹசன் நட்வியை 2002ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஜெயேந்திர சரசுவதி சந்தித்துள்ளார். அப்போது பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்ட அனுமதிக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் இருக்கும் நிலை மாறாமல் இருக்கவேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பும் இந்துக்கள் மற்றும் முசுலிம்களால் மதிக்கப்படவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தை ஓராண்டாக தொடர்ந்தது. ஆனால், ஜெயேந்திர சரசுவதியின் திட்டத்தை ஏற்க முடியாது என்று ஜெயேந்திர சரசுவதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

1500 சதுர மீட்டர் பரப்பளவுகொண்டுள்ள அயோத்தியா நிலப்பகுதியை மூன்று பாகங்களாகப் பிரிக்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்புக் கூறியது.

Read more: http://viduthalai.in/page-8/89213.html#ixzz3G4vfvIFK