Search This Blog

2.10.14

காந்தியார் பிறந்த நாள் -காமராசர் மறைவு நாள்



அக்டோபர் 2 என்கிறபோது காந்தியார் பிறந்த நாள்; அவரது சீடரான காமராசர் அவர்களின் மறைவு நாள்.


இந்த இருவரும் காங்கிரஸ்காரர்கள்தான் என்றாலும் ஒரு கட்டத்தில் இந்துமத வெறியர்களால், ஆரியப் பார்ப்பனர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர்கள்!
காந்தியார் இந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டவர் என்றால் காமராசர் இந்தச் சக்திகளால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டவர்.


காந்தியார் கொல்லப்பட்டது குறித்து தந்தை பெரியார் வெளியிட்ட கருத்து மிகவும் முக்கியமானது.


இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947-இல்; காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948-இல் அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மத சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947-இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948இல். அதாவது, அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டவர் காந்தி.


இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படா விட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது சாதாரணமானதல்ல.


இதைக் குறியீடாகக் கொண்டே இந்தியாவுக்குக் காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்குக்கூட ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் காந்தியார்மீது கடும் அதிருப்தி கொண்டவர்கள்தாம்.


நரேந்திரமோடிகூட குஜராத்தில் பிறந்த காந்தி யாருக்குச் சிலை எழுப்ப விரும்பவில்லை. இந்துத்துவா அபிமானியாக இருந்த வல்லபாய் படேலுக்குத் தான் சிலை எடுக்கத் துடிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக சங்பரிவார்க் கூட்டம் வரிந்து கட்டிக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டால், காந்தியாரை ஏன் கொன்றனர் என்ற சூட்சுமத்தையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்!


பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீடாகத்தர வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தியதையும் இந்து முசுலிம் கலவரத்தின்போது சிறுபான்மை மக்கள் பக்கம் காந்தியார் நின்றார் என்பதையும் கவனத்தில் கொண் டால் பார்ப்பன இந்துத்துவ சக்திகளால் காந்தியார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன என்பது விளங்காமற் போகாது.

காமராசர் அவர்களைப் பொறுத்தவரை ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்க சக்தியை எதிர்ப்பதில் தீவிரத்தைக் காட்டத் தொடங்கினார்.


தந்தை பெரியார் அவர்களின் மறுபதிப்பாக சமூக நீதிக்கு ஆதரவாக எடுப்பான குரலைக் கொடுத்தார். சமூக நீதிக்கு எதிராக தோள் தட்டிய பார்ப்பனர்களை நேரிடையாகவே சாடினார்.

பறையன் டாக்டர் ஆனான், ஊசி போட்டான் எந்த பிள்ளை செத்தது? பறையன் என்ஜினியர் ஆனான், பாலம் கட்டினான் எந்தப் பாலம் இடிந்தது?  என்று பார்ப்பனர்களைப் பார்த்து நேருக்கு நேர் கேட்கும் அளவுக்கு காமராசர் உச்சத்திற்கே சென்றார்.


என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்தி வாரத்தையே நொறுக்கிடுவேன்! என்கிற அளவுக்குக் காமராசர் தீப்பொறியாய் எழுந்து நின்றார்!

இன்னொரு கால கட்டத்தில் பசுவதைத் தடை கோரிய இந்துத்துவவாதிகளின் கண்களுக்கு காமராசர் உறுத்தலாக இருந்தார். காமராசரை விட்டு வைக்கக் கூடாதென்று ஒரு பட்டப் பகலிலே இந்தியாவின் தலைநகரிலே காமராசரை உயிரோடு கொளுத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களும், ஜன சங்கத்தினரும், இந்து மகா சபைக்காரர்களும், நிர்வாணச் சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் ஓரணியாய்த் திரண்டு எழுந்தனர்; மயிரிழையில் உயிர் பிழைத்தார் பச்சைத் தமிழர் காமராசர்.

காந்தியாரின் உயிரைக்குடித்த - காமராசரின் உயிரைக் குடிக்க முனைந்த சக்திகள்தான் இன்றைய தினம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளன.

நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக்கொள்பவர்தான் இந்தியாவின் பிரதமர்! இந்தியாவில் வாழக் கூடியவர்கள் அத்தனைப் பேரும் இந்துக்களே என்று சொல்லக் கூடிய ஆர்.எஸ்.எஸின் தலைவர்தான் - அந்த மோகன் பகவத்துதான் ஆட்சியை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி!


இந்த நிலையில் அக்டோபர் இரண்டாம் நாளில்  - இந்துத்துவாவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட சக்திகள் கம்பீரமாக  எழ உறுதி கொள்ள வேண்டும். இரு தலை வர்களுக்கும் மாலை சாத்துவதோடு முடங்கி விடக் கூடாது!  

மதச்சார்பின்மை என்பதை வெறும் மேலோட் டமாகப் பார்க்கக் கூடாது; இந்த ஆயுதம் - அறிவாயுதம் சமத்துவ ஆயுதம் - இதனைக் கூர் தீட்டியாக வேண்டும்.


மதச் சார்பின்மை என்பதை சிறுபான்மையினருக்கு ஆதரவானது என்றும் பெரும்பான்மையான இந்துக் களுக்கு எதிரானது என்பதுபோலவும் பூதாகரமாகக் காட்ட முயலுகின்றனர். உண்மை என்னவென்றால் இவர்கள்கூறும் இந்த இந்துப் பெரும்பான்மை என்ப தில், பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும்  பிறவியில் இழிந்தவர்கள், நாலாஞ் ஜாதி மக்கள் ஆவார்கள்- காலங்காலமாக எல்லா வகைகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். இவர்கள் எழுச்சி பெற்றால் அது பார்ப்பன ஆதி பத்தியத்தின் அஸ்திவாரத்தை நொறுக்கித் தள்ளி விடும்.


இந்தநிலையில் இந்தப் பெரும் பான்மை மக்கள் தங்களுக்கு எதிராக வந்துவிடக் கூடாது என்ற நிலையில் அவர்களுக்கு இந்து என்று பட்டம், சூட்டி நமக்கு எதிரானவர்கள் சிறுபான்மையினர் - முஸ் லிம்கள் என்று திசை திருப்புவதைக் கவனிக்கத் தவறக் கூடாது!


இதற்குத் தேவை தந்தை பெரியார் அவர்களின் ஈரோட்டுப் பார்வை! அக்டோபர் 2இல் இத்திசையில் அசை போடுவோம் செயல்படுவோம்! வாழ்க பெரியார்!

              -----------------------”விடுதலை” தலையங்கம் 2-10-2014

51 comments:

தமிழ் ஓவியா said...

இன்று காமராசர் நினைவு நாள் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த வீரர்


- முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், தி.க.

இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தபோது, பைத்தியக் காரத் திட்டம் என்று தமது கருத்தினை வெளிப்படுத்தியவர் காமராசர். இந்தத் திட்டத்தை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை என சூளுரைத்தவர் காமராசர். சங்கரரும், இராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடுவதற்கு முன்பு மற்றவர்களிடம் கலந்து கொண்டா வெளி யிட்டார்கள்? என விதண்டாவாதம் பேசி தாம் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை நியாயப்படுத்தி இராஜகோ பாலாச்சாரியாரை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே துணிந்து குரல்கொடுக்க உந்து சக்தியாக திகழ்ந் தவர் காமராசர்.

தந்தை பெரியாரின் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு செயல்பாட்டால் குல்லூகப் பட்டரின் கொடிய கல்வி முறை ஒழிந்தது என்பது வரலாறு. அரை நேரம் படிப்பு, அரைநேரம் அவரவர் குலத்தொழில் என்ற பார்ப்பனரல்லாதோர் கழுத்தில் விழுந்த கத்தி அகற்றப்பட்டது. அதுமட் டுமல்ல முதலமைச்சர் இராஜகோபாலாச் சாரி அமர்ந்திருந்த இடத்தில் காமராசரை அமர வைத்தார். தந்தை பெரியார் என்பது நிதர்சனமானது. ஆம்! இராஜகோபாலாச் சாரியாரின் தனி மனித தேவையற்ற பிடிவாதம் வரலாற்றையே திசை திருப்பி விட்டது. முதல்வர் பொறுப்பிலிருந்து இராஜகோபாலாச்சாரி அகன்றார். மக்கள் தலைவர் காமராசர் அப்பொறுப்பில் அமர்ந்தார். காரணமானவர் பெரியார்!

குடியாத்தம் இடைத்தேர்தலில் நின்றார் - வென்றார் என் பெருமைக் குரியவரானார் பெருந்தலைவர் காமராசர். கருஞ்சட்டைப் படையினரின் தேர்தல் பணி காமராசருக்குப் பெருவெற்றியை ஈட்டித்தந்தது, தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல மைச்சராக கோலோச்சினார் காமராசர்! தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியை அவரது ஆட்சியில் கண்டது.

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித்திட்டம் ஒழிக்கப்பட்டது. அவரால் மூடப்பெற்ற பள்ளிக்கூடங்கள் மூவாயிரம் என்றால்... திறக்கப்பெற்ற கல்விச்சாலைகளோ பல்லாயிரம்! கல்வி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.


தமிழ் ஓவியா said...

இராஜகோபாலாச்சாரியார் முதல மைச்சராக இருந்தபேது அவனவன் அப்பன்தொழிலைச் செய்து கொள்ள வேண்டும். மீதி நேரம் ஆடு, மாடு மேய்க்கவும், கக்கூஸ் சுத்தம் செய்யவும் போ என்று வர்ணாசிரமக்கல்வித் திட் டத்தைப் புகுத்தினார். மூவாயிரம் பள்ளிக் கூடங்களை மூடினார். ஆயிரம் உயர் நிலைப்பள்ளிகளைத் திறக்கும் திட்டத் தையும் ரத்து செய்து இனிமேல் புதிதாக உயர்நிலைப் பள்ளிக்கூடங்களைத் திறக் கவே வேண்டாம் என்று உததரவும் போட்டார். ஆனால் காமராசர் முதல்வராக வந்ததும் இராஜகோபாலாச்சாரியாரின் வர்ணாசிரமக் கல்வித்திட்டத்தை ரத்து செய்தார். மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்து ஏராளமான தமிழ்ப் பிள்ளைகள் புதிதாகப் பள்ளியில் சேர்ந்து படிக்க வழிசெய்தார். அதைப் பதி னொன்றாம் வகுப்பு வரை விஸ்தரிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார் என்று தந்தை பெரியாரின் நெஞ் சார்ந்த பாராட்டு தலையும் பெற்றார காம ராசர்.

கல்விப்புரட்சி

ஆச்சாரியாரால் மூடிய பள்ளிகள் திறக்கப்பட்ட துடன் 14000 புதிய பள்ளி களைத் திறந்தார்.

1600 தொடக்கப்பள்ளிகள் என்ற நிலையை மாற்றி 30000 ஆக வளர்த்த துடன் படிப்போர் எண்ணிக்கையை 48 லட்சமாய் உயர்த்தினார் 16 லட்சம் பேர் களுக்கும் பகல் உணவு கிடைத்திடவும் வகை செய்தார்.

650 உயர்நிலைப் பள்ளிகள் என்ற நிலையை 2200 உயர்நிலைப்பள்ளிகளாக உயரச் செய்தார். 3.86 லட்சம் என்ற மாணவர் எண்ணிக்கையை 33 லட்சமாக ஆக்கினார்.இலவசக்கல்வி, இலவச மதிய உணவு என்பதையும் தாண்டி சீருடைத் திட் டத்தையும் செயல் படுத்தினார்.

பள்ளிச் சீரமைப்பு இயக்கம் மூலம் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தி பல கோடி ரூபாய் கல்வி உபகரணங்கள், பள்ளித் தேவைப் பொருட்கள் பொது மக்களிடம் இருந்து பெற்று மாணவர் நலன் நாடினார். 133 மாநாடுகள் நடத்தப் பட்டு ஆறரை கோடி ரூபாய் தொகை யாகவும், கல்வி சாதனங்களாகவும் திரட்டினார்.

அந்தக் காலச் சூழலில் எழுத்தறி வின்மையைப் போக்கிடவும், குழந்தை களின் பசியைப் போக்கிடவும் காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம் ஒரு புரட்சி இயக்கம் என்றே பேசப் பட்டது. அரசுக் கலைக்கல்லூரிகளின் எண் ணிக்கை பெருகியது உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் உருவாக்கப் பட்டன. பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக்கல்வி என்பது அப்போது பெரும் சாதனை

தமிழ் ஓவியா said...

நாம் பெறாத கல்வியை...

கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும், திறமையும், வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்! அவர்கள் சிறந்த மனிதர்களாக வாழ்வார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக்கூடம் இல்லாதபோது எப்படி எழுத்தறிவைப் பெறமுடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கும் வகை செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெறவேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும். காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக்காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர் களின் வயிறு காய்ந்து இருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்?

இந்த நாட்டில் ஏழைகள் மலிந் திருப்பது எல்லாருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும்.

தமிழ் ஓவியா said...

அன்னதானம் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை புதியதல்ல, இதுவரை நம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவளித் தோம். இப்போது பள்ளிக்கூடத்திற்கு வரும் பிள்ளைகளுக்கு - ஏழைப் பிள்ளைகளுக்கு உணவளிக்கச் சொல் கிறோம். இவ்விதம் செய்தால் அவர் களின் உயிர்காத்த புண்ணியம் கிடைக் கும் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் புண்ணியமும் வந்து சேரும். இதை உணர்ந்துதான் இப்பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி அண்டை அயலார்கூட தாங்களாகவே முன்வந்து பகலுணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முன் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட் டுவதுடன் வாழ்த்தவும் செய்கிறேன். எல்லாருடைய கண்களைத் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப்போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத் திற்குப் பிச்சையெடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் - உள்ளத்தை உருக்கிடும், உலுக்கிடும் கல்வி வள்ளல் காமராசரின் இந்த பேச்சு அவரின் கல்விச் சாதனைக்கு மக்களின் பேராதரவைப் பெற்றுத் தந்தது. கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது. கல்வியில்லா வீடு இருண்ட வீடு என்றார் புரட்சிக்கவிஞர். அதற்கு விடை கொடுத்து வெளிச்சத்தை தந்தார் காமராசர்.

காமராசரைப் போற்றிய பெரியார் மொழிகள்

காமராசர் பதவிக்கு வந்த பின்னர் பல அணைக்கட்டுகளைக் கட்டியுள்ளார். மேலும் பல குளங்கள், ஏரிகள், வாய்க் கால்களை ஏற்படுத்தி அதன் காரணமாக 6.5 லட்சம் ஏக்கர் பொட்டல்காடுகளை நஞ்சை நிலமாக மாற்றி விளைச்சலை அதிகப்படுத்தி உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உள்ளார். தமிழ் மக்களுக்கு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் இந்தியாவிலேயே முன்னி லையில் இருப்பது காமராசர் ஆட்சி நடத்தும் தமிழ்நாடுதான்.

இந்தியா பூராவிலும் இருபதினாயிரம் கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதில் 11500 மின்வசதிபெற்ற கிராமங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன

கல்வித்துறையில் நாம் காமராசரால் பெற்ற நன்மைகள் கணக்கிலடங்காதவை. இன்று முப்பதினாயிரம் பள்ளிக் கூடங் கள்உள்ளன. ஏழைப் பிள் ளைகளுக்குப் பதினொன்றாம் வகுப்புவரை இலவசக் கல்வி, ஒரு வேளை சோறுபோட்டு துணியும் கொடுத்துப் பிள்ளை களைப் படிக்க வைக்கிறார்.

காமராசர் முதலமைச்சாரக வந்த பின்னர்தான் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் பாதிப்பேர் தமிழர்கள் உள்ளனர். இது எந்தக் காலத்திலும் இல்லாத முன்னேற்ற மாகும். உயர்நீதி மன்றம் தோன்றிய நாளிலிருந்து ஓமந் தூரார் காலம் வரை ஒரு தமிழன் கூட நீதிபதியாக இருந்ததில்லை. காமராசர் முதல் அமைச்சராக ஆன பின்னர் நிலமை தலைகீழாக மாறிவிட்டதே!

இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்ப வர்களில் பாதிப்பேர் தமிழர்களாக இருக்கிறார்களே! அரசாங்கத்தில் பல துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் தமிழர்களே அதிகமாக உள்ளனரே! அய்.ஜி ஒரு தமிழர், ஆணையர் ஒரு தமிழர், கல்வி இலாகா இயக்குநர் ஒரு தமிழர் இவ்வாறு 20 - 25 துறை தலைமைப் பொறுப்பில் எல்லாம் தமிழர்களே உள்ளனர்.

இப்படி எந்தக்காலத்தில் நடந்தது? நீதிக்கட்சி இந்த நாட்டை ஆண்ட போதுகூட கிடையாதே! இப்படி தலைமை உத்தியோகத்தில் தமிழர்களாக இருப்ப தினால், அந்த அந்த துறைகளில் வேலை செய்யும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக் கின்றனர். உத்தியோக உயர்வு முதலிய வற்றுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

காமராசர் இவ்விதம் கல்வித்துறையில் நன்மைகள் செய்து வருகின்றார் என்றால், அதில் நம் வீட்டுப்பிள்ளை குட்டிகள் தானே படித்து பயன் பெறுகிறார்கள்! நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பேர்களாக உள்ள நம் சமுதாயத்தின் பிள்ளை குட்டிகள்தானே அதனால் முன்னுக்கு வருகிறார்கள். உத்தியோகத் துறையில் செய்து வரும்படியான நன்மைகள் எல்லாம் தமிழர் சமுதாயத்தின் நன் மையைக் கருதித்தானே!

(இன்று காமராசர் நினைவு நாள் (1975)

Read more: http://viduthalai.in/page-2/88582.html#ixzz3F2iPSe3h

தமிழ் ஓவியா said...

பயன்படவேண்டும்

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும். - (விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page-2/88577.html#ixzz3F2ipuo9E

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள் (1)



சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!

சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,

என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)

பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!

மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.

இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.

அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.

இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!

நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.

இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.

தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.

அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.

அதுபற்றி நாளை எழு துகிறேன்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/88581.html#ixzz3F2j1uwWX

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பல்லி

என் நண்பர் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பார்த்துப் பார்த்து 6 மாதங்களாக கஷ்டப்பட்டு மிக அழகான வீட்டைக் கட்டினார். மிகச் சிறப்பாக திறப்பு விழா செய்தார். 5 லட்சம் செலவு செய்தால் கூட அப்படி ஒரு அம்ச மான வீட்டை கட்ட முடியாது. இருந்தாலும் குடும்பத்தோடு குடிபோன வர் 6 மாதங்களில் கட்டிய வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார். காரணம், ஒரு பல்லிகூட வீட்டில் இல்லையாம். பல்லி இருந்தால்தான் வீட்டில் லட்சுமி இருப்பாள். பல்லி இல்லாத வீடு பாழ டைந்த வீடு என்றார். இந்தக் காலத்தில் இப்படியுமா மனிதர்கள்? ஒரு வார மலரில் இப்படி ஒரு பெட்டிச் செய்தி.

அதெல்லாம் சரி, அந்த லட்சுமியான பல்லி சமையலில் விழுந்து, அதனைச் சாப்பிட்டிருந்தால் நேர டியாக பரலோகம் தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88560.html#ixzz3F2jeZXfa

தமிழ் ஓவியா said...

நவகண்டம்


தி தமிழ் இந்து ஏட்டில் (21.9.2014, பக்கம் 11) விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு என்ற தலைப் பில் ஒரு தகவல்:

வரலாற்று ஆய்வாள ரும், எழுத்தாளருமான இரா.முருக வேள் எழுதியிருக் கும் மிளிர்கல் வரலாற்று நாவலில் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து உயிர்த் தியாகம் செய்பவர் களைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம்: 200 ஆண்டு களுக்கு முன்புவரை தமிழ் சமூகத்தில் சுயபலிகள் இருந் தன. மன்னர் உடல்நலம் பெறு வதற்கு, போரில் வெற்றி பெறு வதற்கு மற்றும் ஊர்ப் பொது நன்மைக்கு இது போன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி, மரத்திலோ, ஒரு கம்பத் திலோ இணைத்து கட்டி விடுவார் கள். பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த குழந்தை களும், பெண்களுமே பலி யிடப்பட்டனர் என்றார் என்று தமிழ் இந்து ஏட் டில் செய்தி வெளிவந்துள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து கொள்வதற்கு அரிகண்டம் என்று பெயர். நவகண்டம்/அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனை வரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடை வாளும், மார்பில் கவசமும் தரித்து, போர் வீரன்போல் போர்க் கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்குப் பூஜை முடித்து பின்பு, தனது இடது கையி னால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட் டிக் கொண்டு இறப்பார்களாம்.

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள்!

1. வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படு கிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக் கையில் நவகண்டம் கொடுக் கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அர சனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவ கண்டம் கொடுக்கப்பட்டது.

3.நோயினால் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல், வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண் டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்குள்ளாகும் போது, அவ்வாறு சாகாமல் அரசின் அனுமதியுடன் நவ கண்டம் கொடுத்துக்கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க் காயத் தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்கவேண்டிய கடமை கள் ஏதும் இருக்குமாயின், தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக் கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப்பெரிய அவமானத்தை பெற்ற பின், அதற்குமேல் வாழ விரும் பாமல், சாக விரும்புகிறான். ஆனால், கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத் துக் கொள்வது.

பிற்காலத்தில் கோவில் கட்டுவதற்கு, தடைப்பட்ட தேரோட்டத்தை நடத்துவது உள்பட்ட காரணங்களுக்காக வும் மேல்ஜாதிக்காரர்களால் கீழ்ஜாதிக்காரர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் நவகண்டம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தப்பட்டார்கள்; இதில், கீழ்ஜாதிப் பெண்களும், குழந் தைகளும் கூட விதிவிலக்கு இல்லையாம்.

என்ன கொடுமையடா இது! கொடூரமான மூட நம் பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அதற்குக்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கா ரர்கள்தான் கிடைத்தார்களா?
நவகண்டம்/அரிகண்டம் என்ற சொற்களைப் பார்க்கும் பொழுது, இவை தமிழ்ச் சொற் கள் அல்ல. இது அயல்வழி ஆரிய ஆதிக்கத் திணிப் பாகவே தோன்றுகிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88140.html#ixzz3F2jxtcOc

தமிழ் ஓவியா said...

மூன்று பேய்கள் - அய்ந்து நோய்கள்!


நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று. அவை 1. கடவுள், மதம், சாஸ்திரம் 2.ஜாதி 3.ஜனநாயகம்.

நம்மை அரித்துவரும் நோய்கள் அய்ந்து. அவை 1. பார்ப்பான் 2.பத்திரிகை 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5. சினிமா

Read more: http://viduthalai.in/page1/88147.html#ixzz3F2kL1XYy

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அம்பிகை

அம்பிகையாகிய அன்னையை நவராத்திரி காலத்தில் தியானிப்பதால் வழிபடுவதால் சகல பாவங்களும் நிவர்த்தி யாகும், சிறப்பும் மேன் மையும் ஏற்படும் என்பது அய்தீகமாம்.
கடந்த வருடம் இதே நவராத்திரியில் அம்பி கையை வழிபட்டவர் களுக்கு என்னென்ன பாவங்கள் நீங்கின? என் னென்ன மேன்மைகள் சிறப்புகள் வரவுகள் அமைந்தன என்று எந்தப் பக்தராலாவது கணக்குப் போட்டுச் சொல்ல முடி யுமா? நேரமும், பொரு ளும் பூஜைக்காக செல வழிக்கப்பட்டதைத் தவிர கண்ட பலன் என்னவாம்?

Read more: http://viduthalai.in/page1/88108.html#ixzz3F2ktvWO5

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/88110.html#ixzz3F2l6Oep9

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவராத்திரி

நவராத்திரியில் சந்தனக் காப்பு செய்து பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால் திரு மணமாகாத பெண்க ளுக்கு திருமண யோகம் கிட்டுமாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் இருந்தால் திருமண யோகம் கிட்டாதா? இதன் மூலம் ஆண்கள் நவராத் திரியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிகிறது.

Read more: http://viduthalai.in/page1/88075.html#ixzz3F2mCBFVq

தமிழ் ஓவியா said...

சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page1/88056.html#ixzz3F2mRHbih

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கட்டும்! 25 கறுப்பு தினம்!


செப்டம்பர் 25ஆம் தேதி நினைவிருக்கிறதா? அன்றுதான் இனப்படுகொலையாளன் இலங்கை அதிபர் ராஜபக்சே அய்.நா. மன்றத்தில் உரை நிகழ்த்தப் போகிறாராம்!

அப்படி என்னதான் உரை நிகழ்த்த முடியும்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை அதற்காகப் போராடிய உண்மையான வீரர்களை வன்முறையா ளர்கள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி - அத்தகையவர்களை ஒழித்துக் கட்டினோம் என்று மார்தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன் இப்படித்தான் அவர் கூறியிருக்கிறார்; இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நடமாடும் பார்ப்பன ஊடகங்களும் இதனைத்தானே வாந்தி எடுத்துக் கொண்டுள்ளன.

இன்னொரு பொய்யையும் கொட்டி அளப்பார். ஈழத் தமிழர்களின் மறு வழ்வுக்காக இலங்கை அரசு ஏராளம் செய்து கொண்டுள்ளது. இதில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம் என்று கொட்டி அளப்பார். சார்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் மேலும் அதிகாரத் தொனியில் பேசுவார்.

இவை எப்படியோ இருந்து தொலைக்கட்டும்; ஈழத் தமிழர் படுகொலையின்போது அய்.நா. தன் கட மையைச் செய்யவில்லை என்று அய்.நா.வின் செய லாளர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாரா இல் லையா? அதற்குக் கழுவாயாக அய்.நா.வின் இனப்படுகொலையாளர் பேசுவதைத் தடுத்திருக்கலாம்.

ராஜபக்சேவைத் தடுப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு, உண்டு! இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன்ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மீன் சூக்கா ஆகியோர் கொண்ட மூவர் குழு ஈழத்தில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைபற்றி அறிக்கையை அய்.நா.வின் செயலாளரிடம் அளித்ததே (13.4.2011).

அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஒரே வரியில் சொன்னவர் தானே இலங்கை அதிபர் ராஜபக்சே? இது அய்.நா.வுக்குத் தெரியாதா? இதைவிட அய்.நா.வை எப்படித்தான் அவமதிக்க முடியும்?

இரண்டாவதாக ஜெனிவா - மனித உரிமை ஆணையம் அமைத்த சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவே முடியாது என்று இலங்கை அதிபர் கூறிவிடவில்லையா?

இந்த அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு இலங்கை அதிபர் அய்.நா.வில் பேசத் தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்ன? உலக நாடுகளின் அமைப்பான அய்.நா.வுக் கென்று ஒரு மரியாதை கிடையாதா?

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் 28.8.2014 அன்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீதான மீறல்கள் குறித்து விசாரணை செய்ய அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை 25.9.2014 அன்று தொடங்கும் அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக் சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதி நிதியையோ, அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் அய்.நா.வைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டதோடு இதனை வலியுறுத்தும் வகையில் இம்மாதம் 3ஆம் தேதி டெசோவின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டதே!

ஜனநாயக ரீதியாக இந்த வேண்டுகோளை அய்.நா. தன் செவியில் போட்டுக் கொள்ளவில்லை; இந்திய அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உரிய வகையில் எந்த அசைவையும் காட்டவில்லை.

அடுத்த கட்டமாக டெசோவின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அய்.நா.வில் கொடுங் கோலன் - இனப்படுகொலையாளன் ராஜபக்சே உரையாற்றும் அந்த நாளில் (செப்டம்பர் 25இல்) கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புச் சின்னம் அணிந்தும், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றியும் அதிருப்தியைக் காட்ட வேண்டும் என்ற வேண்டு கோளினை விடுத்தார்கள் (16.9.2014) அதனை வரவேற்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் மானமிகு தொல். திருமாவளவனும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல; ஒட்டு மொத்த மான தமிழர்களின் பிரச்சினை; இன்னும் சொல்லப் போனால் மனித உரிமைப் பிரச்சினையாகும்.

25ஆம் தேதி எங்கெங்கும் கறுப்புச் சின்னங்கள் அலை மோதட்டும்! கட்சிகளைக் கடந்து ஒட்டு மொத்த தமிழர்களும் ஓரணியில் நின்று இந்த உணர்வை வெளிப்படுத்துவோம்.

இந்தக் கறுப்புத் தினம் வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் வகையில் தமிழினப் பெருங்குடி மக்களே வெளியில் வாருங்கள்! கறுப்புக் கொடியேற்றுங்கள்!! கறுப்புடை அணியுங்கள் - குறைந்தபட்சம் கறுப்புச் சின்னத்தையாவது அணியுங்கள் - இதுகாலத்தின் குரல்!

Read more: http://viduthalai.in/page1/88059.html#ixzz3F2mb9pLh

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குண மாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை வாதம் மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம் ஆகிய வற்றைப் போக்கும்.

சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட செரிமான மின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும். ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும். ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்ற வற்றையும் கட்டுப்படுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page1/88077.html#ixzz3F2nBuAtH

தமிழ் ஓவியா said...

அட, அண்டப்புளுகு தினமலரே!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?

வெளியிட்டது - ஆனால், விஷமமாக!

இதோ தினமலர்....

நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.

பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:

கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!

தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?

இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;

என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?

கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?

தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/88079.html#ixzz3F2nQsAnV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மந்திரம்

மனமது செம்மை யானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்கின்றனரே ஆன்மிக வாதிகள் - அப்படியா னால் மந்திரம் ஜெபிப் பவர்கள் எல்லாம் மனமது செம்மையாகாதவர்கள் தானே? சரி இவர்கள் நம்பும், ஜெபிக்கும் கட வுள்களே கொலை, விபச் சாரம் போன்ற ஆசாபா சங்களை உடையவர் களாகத் தானே எழுதி வைத்துள்ளனர்?

கடவுளுக்கே மனமது செம்மையாக இல்லையே!

Read more: http://viduthalai.in/page1/88014.html#ixzz3F2nx5ZPQ

தமிழ் ஓவியா said...

பெரியார் அய்யா பரவாயில்லையே!

திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் களுள் ஒருவரான டி.ஆர்.பாலு அவர்களைச் சந்தித்து உடல் நலம் பேணிட பரிந்துரைத்த பின்னர், மும்பை பிரிச் கேண்டி மருத்துவமனையிலிருந்து கிளம்பிய தமிழர் தலைவர் வாகனப் பயண நேரத்தில் உடன் பயணித்த இயக்கப் பொறுப்பாளர்களுடன், கடந்த காலங்களில் மும்பை நகருக்கு வந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட்ட நாள்களை நினைவு கூர்ந்தார். தோழர் சு.குமணராசன் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா 1979 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பொழுது அதில் தமிழர் தலைவர், திராவிடர் இயக்க முன்னோடித் தலைவருள் ஒருவரும் மேனாள் நாடாளு மன்ற உறுப்பினருமான ஏ.வி.பி. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டதை எடுத்துச் சொன்னார். அந்நாளில் மும்பைக்கு தந்தை பெரியார், இயக்க நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் பொழுதெல்லாம், தோழர்களின் இல்லத்தில் தங்கி, அவர்கள் ஏற்பாட்டில் சமைக்கப்பட்ட உணவினை அருந்தி மகிழ்வது வழக்கம். தந்தை பெரியாரது மறைவிற்குப் பின்னர் தமிழர் தலைவரும் அதே வழக்கத்தினைக் கைக் கொண்டார்.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்த வேளையில், உணவருந்த தனியார் உணவகத்திற்குச் செல்லலாமே! என ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் கூறிய வேளையில், உணவகத்திற்கு ஏன் செல்லவேண்டும் தோழர்கள் ஏற்பாடு செய்து சமைத்த உணவினையே அருந்தலாமே! என தமிழர் தலைவர் பதிலுரைத்த நிலையில், பெரியார் அய்யா பரவாயில்லையே! என அன்பு கலந்த மனநிலையினை ஏ.வி.பி.ஆசைத்தம்பி வெளிப் படுத்தினார். சிக்கனம் என்பது பெரியார் இயக்கத்தவரின் தனித்துவப் பண்பாடு, என தமிழர் தலைவர் கூறியது உடன் பயணித்த தோழர்களின் கவனத்தை - கருத்தை ஈர்த்தது.

Read more: http://viduthalai.in/page1/88040.html#ixzz3F2oicDfq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அழகே அழகு!

கடவுள்களில் வித்தி யாசமாக யானை முகம் உடையவர் விநாயகர். இவருக்கு சுகமன் என்று பெயர் உண்டு. இதற்கு நல்ல முகத்தை உடை யவர் என்று பொருளாம் - ஆன்மிக இதழ் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

சிரிக்காதீர்! ஆன்மிகத்தில் எதுவுமே அனர்த்தம் தான் விநாயகன் அழகன் என்றால் பக்தர்கள் வீட் டில் விநாயகர் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவார்களா?

Read more: http://viduthalai.in/page1/87975.html#ixzz3F2pFrk00

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...


மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page1/87986.html#ixzz3F2pZmmcy

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2psDiNy

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று!

மதாசாரியார்கள், குருக்கள், இறைவன் புதல்வர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள். அவர்களில் பலர் தொழில் செய்வதில்லை; கைத் தொழில் செய்யவில்லை.

பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காக பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களை படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், என்றும் துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள். -ராபர்ட் இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2pzEai6

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2q6Gi57

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2qHsH4K

தமிழ் ஓவியா said...

வடமொழியில் சிபாரிசா?

தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒருசாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர், குயில், புதுச்சேரி, 12.8.1958

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qRjsGr

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ் வில் ஒருவன் பெற்றி

ருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படு கிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான் றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qZHm6Q

தமிழ் ஓவியா said...

இந்தி திணிப்பு வேண்டாமே!

பிற இதழிலிருந்து

இந்தி திணிப்பு வேண்டாமே!


இந்தி திணிப்பு என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த மண்ணில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இன்று, நேற்றல்ல, 1937ம் ஆண்டே தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்தியை கட் டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பொங்கி எழுந்தார். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போராட்டத் தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறையில் உயிரிழந்தனர். 1,198 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட் டத்தின் விளைவாக காங்கிரஸ் அர சாங்கம் ராஜினாமா செய்தது. அப்போது கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபு இந்த உத்தரவை திரும்பப்பெற்றார். அன்று பெரியார் ஏற்றிவைத்த இந்தி எதிர்ப்பு உணர்வு, இன்றும் தமிழர்கள் நெஞ்சங்களில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தி திணிப்பில் பலமுறை முயன்று தோல்வி அடைந்த மத்திய அரசாங்கம், மீண்டும் 1965ம் ஆண்டில் ஜனவரி 26ந் தேதி குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த தமிழ்நாடே போர்க்களம் ஆகியது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் மாபெரும் போராட்டமாக தொடங்கி அவரும், மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிரொலியாக சி.பா.ஆதித்தனார் பாது காப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவையில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டமாக பற்றி எரிந்தது. 18 நாட்கள் நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 63 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கும், அன்று முதல் தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி, மாறி ஆட்சிக்கு வருவதற்கும் வித்திட்டது, இந்த இந்தி திணிப்பு முயற்சிதான். அதன்பிறகும் தொடர்ந்து இந்த முயற்சி கள் தலையெடுத்த நேரத்தில் எல்லாம் கிள்ளி எறியப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழிபேசும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆட்சியில் இந்தி திணிப்பு இருக்காது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், இந்தி அவரையும் கையில் எடுத்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசாங்க அதிகாரிகள் டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அலுவல் ரீதியான உத் தரவுகளை தெரிவிக்கும்போது ஆங்கிலத் தோடு, இந்தியையும் பயன்படுத்த வேண் டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், இல்லை, இல்லை இது இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டது. சமூக வலைத்தளங்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு என தனியாக இல்லையே, இது எப்படி சரியாக இருக்கும் என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இப்போது திடீரென பட்டப்படிப்பு களில் இந்தியும், ஆங்கிலமும் முக்கிய பாடமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக் கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. இது மட்டுமல்லாமல், ரெயில்வே துறை, பொது காப்பீட்டுத்துறை போன்ற வற்றின் மத்திய அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்கவேண்டும், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி யில் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திடீரென நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், 85 முதல் 90 சதவீதம் வரை மக்கள் இந்தி தங்கள் தாய்மொழி இல்லையென்றா லும், அந்த மொழியை புரிந்து கொள் வார்கள் என கூறி, ஏதோ ஒரு முயற் சிக்கு அச்சாரமிட்டு இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய், இந்தி உள்பட அனைத்து மொழிகளும் அந்த தாய்க்கு பிறந்த சகோதரிகள் என கூறியிருக்கிறார். ஒரு வாதத்துக்காக அவர் சொல்வதை ஏற்றுக் கொண் டாலும், எல்லா மொழிகளும் சகோ தரிகள் என்ற நிலையில், ஒரு சகோதரி யான இந்திக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது சரியா?, நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நேரத்தில், இந்தி திணிப்பு வேண்டாமே!

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 17.9.2014

Read more: http://viduthalai.in/page1/87937.html#ixzz3F2rFE19Q

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

செவ்வாய்க் கிழமைக் குத் தனிச் சிறப்பு உண்டு. செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தி திதியும் சேர்ந்தால் அது சாபங் களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும் என்கிறது ஓர் இதழ்.

இது உண்மையானால் செவ்வாயில் கல்யாணம் முதலிய நல்ல காரியங் களைச் செய்யத் தயங்கு வது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/88627.html#ixzz3F8MpBPwO

தமிழ் ஓவியா said...

பெண்கள் உடை:
சர்ச்சையில் சிக்கிய யேசுதாஸ்!

திருவனந்தபுரம், அக்.3- பெண்கள் ஜீன்ஸ் அணி வது குறித்து பிரபல பாடகர் யேசுதாஸ் தெரி வித்த கருத்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள் ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசா ரத்திற்கு எதிரானது என்றார். பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொந் தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் யேசுதாஸ் கூறி யுள்ளார். எளிமை மற்றும் உயர் பண்புகளை கொண்ட இந்தியாவின் கலாசாரம், ஜீன்ஸ் அணி வதன் மூலம் சீர்கெடுவ தாகவும் யேசுதாஸ் தெரி வித்தார். யேசுதாஸின் இந்த கருத்துகளுக்கு கேரள மகிளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதனை கண் டித்து திருவனந்தபுரத்தில் பேரணியும் நடைபெற்றது. யேசுதாஸின் கருத்துகள் ஏற்கதக்கதல்ல என்றும், பெண்களின் சுதந்திரத் திற்கு எதிரான என்றும் மகிளா காங்கிரஸ் தலை வர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார். அனைத்து இந்தியர்களாலும் மதிக்கப் படும் ஒரு பாடகர் பெண் களின் உடை குறித்து இவ்வாறு கருத்து கூறுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/88626.html#ixzz3F8N7BBpT

தமிழ் ஓவியா said...

எதிர்க்காமல்...

மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது. - (விடுதலை, 5.11.1967)

Read more: http://viduthalai.in/page-2/88653.html#ixzz3F8Nbhksx

தமிழ் ஓவியா said...

ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108 யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8OwmSlJ

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8P5lml1

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!

எழுத்துரு அளவு தீண்டாமை என்பது சமயம் சம்பந் தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத் தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்.

- டாக்டர் கலேல்கர், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன் பக்கம் 123

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8PCY7BM

தமிழ் ஓவியா said...

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!

பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய

தாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PUJ6dO

தமிழ் ஓவியா said...

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88644.html#ixzz3F8PcNbv1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி பெரியார்! உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்புரை



சென்னை, செப்.17- பெரியார் சிலை அமைப் பதற்கு இடம் ஒதுக்கித்தர மறுக்கும் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மகாத்மா காந்தி போல் பெரியார் போற்றப் பட வேண்டியவர் என்று கூறியுள்ளது.

சுயமரியாதை இயக்கத் தின் தலைவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ.இராமசாமி மகாத்மா காந்தியைப் போன்று போற் றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தின் அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.

தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தக்கருத்து வெளி யாகி உள்ளது பொருத்த மானதாக உள்ளது.

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகில் கூத் தப்பார் என்கிற இடத்தில் தந்தை பெரியார் சிலை அமைப்பது குறித்த வழக் கில் நீதிபதி எஸ்.நாகமுத்து கூறும்போது பெரியார் தமிழ்நாட்டின் மகாத்மா காந்தி என்று அழைக்கப்பட வேண்டிய உயர்ந்த தலை வராவார்.

ஈ.வெ.இராமசாமி அன்போடு பெரியார் என்று அழைக்கப்படுபவர். சமூக நீதிக்காக தம் வாழ் நாளில் புரட்சிகரமாகப் போராடி வந்தவர்.

ஜாதி யற்ற சமுதாயத்தை அமைப்பது, பெண்கள் அதிகாரம் பெறுவது ஆகிய அவரது கொள்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87882.html#ixzz3F8QcG5tw

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்

அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்

தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்

சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

Read more: http://viduthalai.in/page1/87892.html#ixzz3F8RxMiuq

தமிழ் ஓவியா said...

தாய்மையையும் விஞ்சி


தாய்மையையும் விஞ்சிய தகைமையாய்,
தலைமைப் பண்பின் இலக்கணமாய்,
மன்பதைக்கு கலங்கரையாய்,
மனித நேய பேரொளியாய்,
தன்மானச் சுடரொளியாய்,
தகத்தகாய சூரியனாய்,
சூத்திரர்கள் காவலராய்,
சுரந்து நிற்கும் சிந்தை ஊற்றாய்,
பகுத்தறிவு கருவறையாய்,
பகைவருக்கு நெருப்பறையாய்,
உணர்வெழுப்பும் ஓங்காரமாய்,
ஓய்வறியா உயிர்நதியாய்,
சாதி ஒழிப்பின் அடையாளமாய்,
சமத்துவத்தின் ஆர்ப்பரிப்பாய்,
பெறற்கரிய பெட்டகமாய்,
பெண்ணுரிமை போராளியாய்,
வெண்தாடி வேங்கையாய்,
வீறு கொண்ட எரி மலையாய்,
வாழ்ந்திட்ட வைக்கம் வீரர், தந்தை பெரியார்,
தந்தையின் தடத்திலே தமிழர் தலைவர்!
தமிழர் தலைவர் கரம் கோர்ப்போம்!
தந்தை பெரியார் புகழ் சேர்ப்போம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி (தி.க.மாநில பொதுச்செயலாளர்)

Read more: http://viduthalai.in/page1/87915.html#ixzz3F8UWSSjO

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி எப்படி?


இந்தி திணிப்பு என்பதில் காங்கிரஸ் ஆட்சிகூட இலை மறை காய் மறையாக இருந்து வந்துள்ளது. இந்தி யாவிலேயே தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் மட்டுமே கலாச்சார ஆதிக்க எதிர்ப்பில் முன்னணி எரி மலையாக என்றும் எழுந்து நிற்கக் கூடியது!

இந்தி என்பது ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பின் ஒரு கூர்முனையாகும்; இந்தியில் இலக்கியம் என்று மெச்சத் தகுந்ததாக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும் நூல் துளசிதாசரின் இராமாயணமாகும்.

துளசிதாசரின் இராமா யணம் என்ன கூறுகிறது? இதோ இராமன் பேசுகிறான்:

பிராமணர்களை வெறுப் போர் என்னால் விரும்பப்பட மாட்டார்கள். பிராமணர் களின் செல்வாக்கிற்குட்பட்டு இருக்கின்ற பிர்மாவும், சிவனும், பிற கடவுளரும் பிராம்மணர்களை விசுவாசத் துடன் வழிபடுகின்றனர்.

பிராமணன் ஒருவன் சாபம் கொடுத்தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற் களைப் பேசினாலும்கூட அந்தப் பிராமணன் வழிபடத் தக்கவன்.

இந்தவுலகில் ஒருவன் செய்யத்தக்க நற்செயல் ஒன்றே ஒன்றுதான். அந்த நற்செயல் என்பது பிரா மணர்கள், ரிஷிகள் முனிவர் களின் பாதங்களை வணங்கு வதுதான். அவ்வாறு செய் தால் கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று இராமன் கூறுவதாக துளசி தாசரின் இராமாயணம் கூறுகிறது.

இதனைத்தான் இந்தி யைப் படிப்பதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகி றோம் என்று சுட்டிக் காட்டினார் தந்தை பெரியார்.

1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தையும், மனு தர்ம சாஸ்திரத்தையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எனவே இந்தி மொழி என்றாலும், அதன் தாயான சமஸ்கிருதம் என்றாலும் அவை பரப்புவதெல்லாம் வருணாசிரம நோய்களைத் தான், பார்ப்பன ஆதிபத்தி யத்தைத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்துத்துவாவை வலியுறுத்தும், இந்து ராம ராஜ்யத்தை உண்டாக்குவ தாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சிப் பீடம் ஏறிய பி.ஜே.பி. ஆட்சி இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் ஆச்சரியப்படுவ தற்கு என்ன இருக்கிறது?

அய்.நா.விலேயே பிரதமர் நரேந்திரமோடி இந்தியில் பிளந்து கட்டப் போகிறார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீட்டி முழங்குகிறார். வாஜ்பேயி கூட அய்.நா.வில் இந்தியில் தான் பேசினார் என்றெல் லாம் கூடக் கூறியுள்ளார்.

இதுபற்றிய ஒரு தகவல் குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் வாஜ்பேயி குறித்து அறிஞர் அண்ணா சொன்ன தகவல் அது.

ஜன சங்கத்தைச் சேர்ந்த வாஜ்பேயி என்னும் உறுப் பினர் ஆங்கிலத்தில் நன் றாகப் பேசக் கூடியவர் அவர் மாநிலங்களவையில் பேசும் போதெல்லாம் இந்தியி லேயே பேசுகிறார். அவரிடம் நான் நண்பர் என்ற முறை யில் கேட்டேன்.

நீங்கள் பேசுவதையெல்லாம் நாங் கள் புரிந்து கொள்ள வேண் டாமா? ஆங்கிலத்தில் பேசக் கூடாதா? என்று. அதற்கு அவர் நான் வெளியில் வந் ததும் உங்களுக்கு ஆங்கிலத் தில் விளக்கிச் சொல்லு கிறேன். உள்ளே இந்தியில் தான் பேசுவேன் என்றார்.

இங்குள்ளவர்களுக்கு இது இந்தி வெறியாகப்பட வில்லை. போலீஸ் ஸ்டே ஷனை காவல்நிலையம் என்று சொன்னால் தமிழ் வெறியாகப்படுகிறது என்றார் அண்ணா.(சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவை 1963-64-இல் வெளியிட்ட சிறப்பு மலரில்).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/87835.html#ixzz3F8YulAcS

தமிழ் ஓவியா said...

வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page1/87831.html#ixzz3F8ZNEGbk

தமிழ் ஓவியா said...

வேட்பாளரை கடவுள் கைவிட்டதால், சென்னை உயர்நீதி மன்றத்தில் சரண்!


"ஜனநாயகம் என்பது காலிகள் நாயகம்" என்ற தந்தை பெரியாரின் பொன் மொழியை மெய்ப்பிக்கும் வகையிலும், 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற கதைப்பை பொய்ப்பிக்கும் வகையிலும் ஒரு நிகழ்வு மதுரையில் நடைபெற்றுள்ளதை நமது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான்.

விவரம் வருமாறு:- மதுரை மாநகராட்சி தேர்தலில் 85-ஆவது வட்டத்திற்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வைச் சேர்ந்த அரிகரசுதன் விண்ணப்பித் திருந்தார். விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மதுரையில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோவி லில் பயபக்தியுடன் "சாமி" கும்பிட்டு விட்டு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பித்தார். ஆனால் நடந்ததோ பயங்கரமான

அதிர்ச்சி! அவர் வேட்பாளர் மனு வைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் அ.தி.மு.க. வேட்பாளர் லதா போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் உதவி தேர்தல் அதிகாரி அறிவித்து அதற்கான சான்றிதழையும் அளித்து விட்டார்.. "தான், மனுவைத் திரும்பப் பெற்றதைப்போல, போலி மனுவைத் தயாரித்து, அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாகவும் . எனவே தனக்கு நீதி வழங்க வேண்டு மெனக் கேட்டும் "சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உதவித் தேர்தல் அதிகாரி கதவைப் பூட்டி விட்டு ஆணையாளர் அறையில் ஒளிந்து கொண்டதாகவும் தனது மனுவில் குறிப் பிட்டுள்ளார். நீதியரசர் திரு டி.எஸ். சிவஞானம் வழக்கை விசாரித்து வருகிறார்.

ஜனநாயகம் எப்படிக் கேலிக் கூத்தாகிறது என்பதை, தந்தை பெரியார் அவர்கள் காலிகள் நாயகம் என்று உரைத்தது, இப்பொது மக்களுக்கு உறைக்கும்!

அது சரி! வழக்குத் தொடர்ந்தவர், "இம்மையில் நன்மை தருவார்" கடவுள் தன்னை ஏமாற்றியதையும் மனுவில் குறிப்பிட்டு அவர் மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தால் வரவேற்கலாம்! . கட வுளையும், நம்பிக்கையையும் மட்டுமே பேசும் பா.ஜ.க.வும் கடவுளைக் கைகழுவி, விட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டது நல்லதொரு திருப்பமே!

- தி.ப.பெரியாரடியான்,
தூத்துக்குடி

Read more: http://viduthalai.in/page1/87829.html#ixzz3F8ZVYAYu

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87803.html#ixzz3F8Zx7LBT

தமிழ் ஓவியா said...

அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87808.html#ixzz3F8a90RvX

தமிழ் ஓவியா said...

பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/87810.html#ixzz3F8aXpbjg

தமிழ் ஓவியா said...

அறிவியல் பார்வை இல்லாவிட்டால் குத்துக்கல்லும் குழந்தை பெறும்


சில நாட்களுக்குமுன் நாசா அனுப்பிய விடியோ என்ற பெயரில் போலியான வீடியோ ஒன்று யூ டியூப் மூலம் சில விசமிகளால் பரப்பபட்டது அதில் நிலவில் மனிதர் ஒருவர் நடக்கிறார் அவரது நிழல் படிந்துள்ளது, இதுவேற்று கிரகமனிதராக இருக்கலாமா? நாசா ஏன இதை மறுக்கிறது என்றெல்லாம் பல்வேறு கேள்விகளோடு சுமார் 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த விடியோ படமும் ஏதோ ஒரு உருவமும் காட்டப்படுகிறது. இந்த வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது உண்மையா பொய்யா என்ற ஆய்வு இருக்கட்டும்; முதலில் நிலவின் மீது எப்படி நிழல் விழும் என்ற கேள்வி யாருக்காவது எழுந்ததுண்டா. நமது பூமி போல் நிலவில் சூரிய ஒளிவிழுவதில்லை. அதே போல் நமது பூமியும் சூரியனின் ஒளியை நிலவில் பிரதிபலிப்பதில்லை. எப்போதும் இருட்டான ஒரு பகுதியில் அப்படியே ஒருவர் நடந்தாலும் நிழல் எப்படி விழும் என்பது இந்த விடியோவை ஒளிபரப்பிய விசமிகளும் இதனை உண்மை என்று நம்பி உலகம் முழுவதும் பரப்பிவரும் அறிவிலிகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/page4/88671.html#ixzz3FAkhmckg

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்க!


கழிவறைக்குச் சென்று திரும்புகிறோம். கைப்பிடியைப் பிடித்து இழுத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ செல்கிறோம். கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைப்பிடியில் ஒட்டிக் கொள்ளும். கதவைத் திறக்கும் இன்னொருவர் கைகளில் கிருமிகள் பயணத்தைத் தொடரும். அதிகம் பேர் வேலை செய்யும் அலுவலகங்களில், யார், எந்த அளவுக்குக் கையைச் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கழிவறை என்றில்லை. பேருந்தின் நாம் இறுகப் பற்றும் இடங்களில் உள்ள கிருமிகள் வீடு வரை, அலுவலகம் வரை வந்து விடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க இப்போது கதவுகளில் பொருத்த ஒரு புதுவிதமான கைப்பிடி Pull Clean என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கைப்பிடியின் உள் பகுதியில் கிருமியை அழிக்கும் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும்போது கைப்பிடியின் கீழ்ப்பகுதியை அழுத்தினால் கைப்பிடியின் உள்ளிருந்து அந்த கிருமியை அழிக்கும் பொருள் கைகளுக்கு வரும். அதை இரு உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் போதுமானது. கிருமிகள் அழிந்துவிடும்.
(தினமணி கதிர் 28.9.2014)

Read more: http://viduthalai.in/page5/88674.html#ixzz3FAl5ZfbG

தமிழ் ஓவியா said...

திராட்சை


எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்ட மின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.

பொதுவாக சரியாகப் பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர் கள் கருப்பு திராட்சை எனப்படும்
பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த தீர்வாகும்.

மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சைச் சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டி ருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். திராட்சைச் சாற்றை தினமும் அருந்தினால் இந்தத் தொல்லைகள் நீங்கும்.


Read more: http://viduthalai.in/page5/88675.html#ixzz3FAlS5E1w

தமிழ் ஓவியா said...

ஆனந்த லீலை

ஆண்டுக்கு ஆண்டு ஆண்டவனுக்கு
திருமணம் செய்திடும் பக்தனே! உன்
அருமை மகளுக்கு திருமணத்தை
நீயும் செய்ய நினைத்தாயா?
தேங்காய் உடைக்கும்
ஸ்டாண்டுகளாய் - இளைஞர்கள்
தலைகள் ஆகிப்போச்சு
மூளை என்பது மென்மையான
ஜெல்லி பாகம் அல்லவா?
மூளை கலங்கிப் போகாதா?
முயற்சியின் செயல்களே
வெற்றி பெறும்
உன்னை நீயே நம்பாமல்
எல்லாம் அவன் செயல்
என்கின்றாய்.
உன் செயல் இன்றி
ஒரு செயலும் இல்லை - என்பதை
உணர்ந்திடுவாய்.. அறிந்திடுவாய்...
பெரியார் சொன்ன கருத்துக்களை
சிந்தித்து நீயும் ஏற்றுக் கொண்டால்
விரயச் செலவைத் தவிர்த்திடலாமே!
வாழ்வில் வளமை பெற்றிடலாமா!
கடவுளே துணை என்பதெல்லாம்
கையா லாகாதவனுக்கே என்றிடுவோம்
கடின உழைப்பு ஒன்று மட்டுமே
ஆனந்த அலையை கொடுத்திடுமே
சாமியார்கள் பின்னே சென்றிட்டால்
ஆனந்த லீலைகள் பிறந்திடுமே
பரபரப்பாய் செய்திகளும்
செய்தித்தாளில் வந்திடுமே
அறிக! அறிக!! அறிந்திடுக!!!

- சு. ஆறுமுகம், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page6/88677.html#ixzz3FAm2I3wC

தமிழ் ஓவியா said...

கேட்பவன் கேணையன் என்றால்...

அபிராமி பட்டர் என்பவருடைய ஊர் திருக்கடவூர். இவர் தேவி வழி பாட்டில் சிறந்தவர்.

ஒரு முறை தஞ்சை சரபோஜி மன்னனர் ஆலயம் வந்தபோது, அதைக் கவனிக்காமல் அபிராமி பட்டர் மட்டும் தேவியை மனதில் இருத்தி தியானம் செய்துகொண்டிருந்தார். மகாராஜா அவரிடம் இன்று திதி என்ன என்று கேட்டார். அதற்கு அபிராமி பட்டர் பவுர்ணமி திதி என்று கூறி விட்டார்.

ஆனால், அன்றைய தினம் அமா வாசை திதியாகும். இதனால் கோப மடைந்த மகாராசா அதை நிரூபிக்க முடியுமா, என்று கேட்டார். அம்மா வாசையை பவுர்ணமி என்று கூறியதை வாதிக்கும் பொருட்டு, அபிராமி பட்டரும் முடியும் என்றார்.

பிறகு உமாதேவியைப் பிரார்த்தித்துக் கீழே வெட்டி குழியிலே நெருப்பு எரிய விட்டு மேலே தூக்கிய நூறுவடம் கொண்ட உறிஒன்றிலே ஏறினார். அபிராமி அருளவில்லை என்றால் இந்த நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்றார்.

இவ்வாறு கூறி அபிராமி அம்மைமீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கினார். அவ்வாறு பாடுகையில் ஒரு பாடல் முடிவில் ஒரு வடமாக உறியின் ஒவ்வொரு வடத்தையும் அறுத்தார்.

பாடல் முடிய தேவியும் வெளிப் பட்டாள். அவள் தன்னுடைய காது தோடுகளுள் ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீசினாள். அந்த தோடு நிலவாக மாறி பவுணர்மி போல காட்சி அளித்தது. இதனால் தேவியின் அருளைப் பாராட்டி மற்ற பாடல் களையும் பாடி முடித்தார் அபிராமி பட்டர்.
இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை பாராயணம் செய்பவர் களுக்கு பக்தியும் சித்தியும் கைவரப் பெறும் என்பது உறுதி.

கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்ல மாட்டானா?

இவ்வளவு அபத்தமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவற்றை விற்றுப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page7/88679.html#ixzz3FAmEKezG

தமிழ் ஓவியா said...

பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை


பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)
ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FAmcWf9C

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.


Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3FAmno73Y