Search This Blog

11.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 34


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

- ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி


இராமன் திரும்பிப் பார்த்துத் தசரதனும் கோச லையும் பைத்தியம் பிடித்தவர்களைப் போலத் தள்ளாடிக் கொண்டு தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்தான். உடனே தேரை விரைவாகச் செலுத்தச் சொன்னான். கோசலை கதறிக் கொண்டு ஓடிவருவதை இராமன் அடிக்கடி பார்த்தான். தசரதன், தேரை நிறுத்து எனக்கட்டளையிட்டான். சுமந்திரனுக்கு இன்னது செய்வதெனத் தெரியவில்லை. இராமன் அதைப் பார்த்து, சுமந்திரா நான் கூறுமாறு தேரை விரைவாக ஓட்டும். பிறகு அரசரைப் பார்க்கும்போது, உங்கள் வார்த்தை காதில் விழவில்லை என்று சொல்லும். அது பொய்யல்லவா என்றால், இந்தத் துக்கத்தை என்னால் பொறுக்கமுடியாது என்றான். அந்தப்புரத்தாரும் நகரத் தாரும் இராமனை வலம் வந்து திரும்பினார்கள். தேரைச் சுமந்திரன் விரைவாகச் செலுத்தினான். மந்திரிகள், சுகமாகத் திரும்பிவர வேண்டுமென்று நாம் விரும்புகிறவனை வெகு தூரம் பின் தொடரலாகாது என்று தசரதனிடம் கூறினர். அவன் அதன்படி உடல் தளர்ந்து இராமனைப் பார்த்தபடியே தன் மனைவியருடன் நின்று கொண்டிருந்தான். பெண் களெல்லாம் இராமனைத் துரத்திய நம் அரசர் எவ்வளவு அறிவில்லாதவர் என்று புலம்பினார்கள்.

இராமனைக் கண்டிப்பாகக் கோசலை தடுக்காததால், தாய்மாரைப் பிள்ளைகள் வெறுத்தனர். கோசலையின் சொல்லை இராமன் தட்டிச் சென்றதால், தாய்மார் பிள்ளை களை வெறுத்தனர். கைகேயியைப் பார்த்துக் கோசலை போன்ற பெண்கள் தம் கணவரை வெறுத்தனர். பரதனைப் பார்த்து உடன் பிறந்தோர் தம்முன் அன்பை மறந்தனர்.

தேராலுண்டாகும் புழுதியடங்கும் வரை தசரதன் அவ்விடத்திலிருந்து தன் கண்களை எடுக்கவேயில்லை. புழுதி மறைந்ததும் அவன் அங்கேயே கீழே விழுந்தான். கோசலை வலப்புறத்தில் நின்று அவனைத் தூக்கினாள். கைகேயி இடப்புறத்தில் வாளாநின்றாள். அப்போது தசரதன் கைகேயியைப் பார்த்து, அடி, பாதகி! நீ என்னைத் தொடாதே, என் முன்நில்லாதே, நீ எனக்கு மனைவியில்லை. பரதன் இந்த அரசைப் பெற்று மகிழ்ந்தால், அந்த மஹாபாவி எனக்குச் செய்யும் உத்தர கிரியைகள் என்னைச் சேர வேண்டாம் என்று கோபத்துடன் கூறினான். பின் கோசலை அவனுடைய புழுதி படிந்த உடலைத் தூக்கியெடுத்து மெல்ல மெல்ல அரண்மனைக்கு அழைத்துப் போனாள். போகும்போது மன்னன் தேர்ச் சுவடுகளை அடிக்கடி திரும்பித் திரும்பி உற்றுப் பார்த்துக்கொண்டே, நல்ல சந்தனங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலுடன் சுகமான தலையணைகளின் மேல் சாய்ந்து கொண்டு அழகு வாய்ந்த வேலைக்காரிகள் விசிறிபோடத் தூங்கிய இராமன் இன்றிரவு எந்தக் கட்டிலில் படுப்பான்? இராமனில்லாமல் ஒரு நொடியாவது என்னால் பிழைக்க முடியாது என்று புலம்பிக் கொண்டு தன் மனைவியருடன் பிணத்தைக் கொளுத்தி விட்டு நீராடி வீட்டிற்குத் திரும்பி வருகிறவர்களைப் போல நகரத்திற்குட் புகுந்தான். அரண்மனையையடைந்த தசரதன், இராமன் தாயான கோசலையின் வீட்டிற்கு என்னைச் சீக்கிரத்தில் கொண்டு போய் விடுங்கள். அதைத்தவிர வேறிடத்தில் இருந்தால் என் ஏக்கம் தணியாது என்றான். உடனே வழிகாட்டுகிறவர்கள் அவனை அங்கே அழைத்துப் போய்க் காவலிருந்தனர். எங்கோபோய்க் கட்டிலில் படுத்துக்கொண்ட பின்னரும் அவன் புலம்பினான். இரவில் தசரதன் கோசலையைப் பார்த்து, எனக்குக் கண் ஒளி அற்றது. நீ இருக்குமிடம் நன்றாகத் தெரியவில்லை. உன் கையால் என்னை நன்றாகத் தொடு. இராமனுடன் காட்டிற்குப்போன கண்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவனைப் பார்க்கப் போனவை திரும்பி வருமா? அவனைப் பார்க்கும் நல்வினை எனக்கில்லாமல் போனதுமன்றி அவனைப் பெற்ற உள்னைப் பார்க்கவும் என் கண்களால் முடியவில்லை. அதனால் என் கண்கள் போயின. இராமனைப் பார்க்காமல் தவிக்கும் எனக்கு அவனைப் பெற்ற உன்னைத் தொட்டால் அந்தத் தாபம் நீங்கும். இராமனைப் பார்க்கா விட்டாலும், அவனுடைய தாயான உன்னைப் பார்த்துப் பேசித் தொடுவதால் அதற்குச் சமமான சுகம் கிடைக்கும், இராமனுக்கு அறியாத்தனத்தால் ஏதோ தீமை செய்துவிட்டேனென்று என்னை மன்னித்துக் கைகளால் அன்புடன் தொடு என்று புலம்பினான்.


கோசலையோ, இராமனைக் கெடுத்த கைகேயி இனி மேல் என்ன வருத்த ஆரம்பிப்பாள். பரதன் நாடாள வேண்டுமானால் இராமன் காடேகவேண்டும்? பரதனுக்கு அவனால் கெடுதி நேருமென்றால் இராமனைப் பரதனுக் கடிமையாயிருக்கும்படி செய்கிறேன். பரதன் அடிமை யாகிய இராமனுக்கு உணவு கொடுக்கும் சிரமமில்லாமல் அவனை இவ்வூரில் வீடுவீடாகப் பிச்சையெடுத்துப் பிழைக்கும்படி சொல்லுகிறேன். இராமனைத் திரும்பப் பார்ப்பேனா? இருபத்தைந்து வயதுள்ளவனாகிய இராமன் எப்போது திரும்பி வருவான்? என்று கதறினாள். சுமித்திரை அவளை நோக்கி, அம்மா வருந்தாதே; இராமன் திரும்பி வருவதற்குள் பரதனுடைய அதிகாரம் பலப்பட்டுவிடும். அப்போது இராமனுக்கு நாடு கிடைக் காதே எனில், இராமனுடைய அம்புக்கு முன் யார்தான் நிற்பர்? அப்படிப்பட்டவனுக்கு இந்தப்பூமியை அடைவது ஒரு பொருட்டா? இராமன் காட்டிலிருந்து திரும்பிவந்து ஒரு நொடியில் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்வான். இராமன் முடிசூடுவதை உன் கண்குளிரக் காண்பாய்; கவலைப்படாதே என்று தேற்றினாள். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

இராமனைத் தசரதன், தன்னை விலக்கி அரசாளும்படி தூண்டுகிறான். முன்னரும் இராமன் என் சொற்படிக் கேளாமல் முடிசூடிக்கொள்வானேல் அது எனக்கு மிகவும் விருப்பமான செயலாகும் என்கிறான். இவையெல்லாம் தசரதனுடைய இழிகுணத்தையே காட்டும்.

சுமந்திரன் அரசனுக்குக் கைகேயினிடத்தில் பற்றுதல் ஒழிந்தது என்பதைத் தெரிந்துகொண்டு தகாத முறையிற் கண்டித்துப் பேசுகிறான். இது அவனுடைய தாழ்ந்த குணத்தையே உணர்த்தும். இதை அரசன் முதலியோரும் கேட்டிருப்பது மிகவும் விந்தையே. தசரதனும் வசிட்டனும் பலவிதமாக வாயடி அடித்தாவது கைகேயியின் புத்தியைக் கலக்கிக் தங்கள் எண்ணத்தைச் சாதிக்கலாமென நினைத்து, களஞ்சியங்களும் சேனைகளும் இராமனுடன் போகட்டும், இல்லையேல் நாங்களும் அவனுடன் போவோம் என்கின்றனர். கைகேயி இதற்கு இடங்கொடாதபோது தசரதன், நீ அரசைக் கேட்டாயேயொழிய களங்சியங் களையும் சேனைகளையும் சேர்த்துக் கேட்டனையா? என்று கடாவுகிறான். இவ்விடத்து மொழிபெயர்ப்பாளராகிய சீனிவாசய்யங்கார் குறிக்கும் குறிப்பு கவனிக்கத்தக்கது. அது வருமாறு:- ராஜ்யமென்றால் அதில் சகல அங்கங்களும் கூடினவென்பதைத் தசரதர் அறியாதவர்போல வாயடி அடிப்பது ஆச்சரியமே!

அறிவில்லாதவனாகிய வசிட்டன் இதற்கும் கேவலமாக நடந்து கொள்கிறான். அவன், இராமன் வேண்டுமானால் காட்டுக்குப் போகட்டும்; அவன், மனைவி சீதை அரசா ளட்டும் என்கிறான். இவ்விடத்தும் மொழி பெயர்ப்பாளர்  அய்யங்காரது குறிப்பு கவனிக்கத்தக்கது. அது வருமாறு:- இராஜ்யத்தைப் பரதனே ஆளவேண்டுமென்பதே கைகேயி பெற்ற வரமென்பதை இவர் ஏன் மறந்தார்?

தசரதன் கைகேயியை மணக்குமுன் செய்து கொடுத்த சத்தியத்தை அறிந்த சுமந்திரன், வசிட்டன் முதலியோர் அரசனைத் தடுக்காதிருந்ததோடு, தெய்வாதீனமாக வேறு விதத்தில் தற்செயலாய் உண்மையறியாது நாட்டைப் பெற முனைந்து நின்ற கைகேயியைக் கண்டித்தது அவர் களுடைய அற்பக் குணத்தையே காட்டும். இவ் வசிட்டனை மிகச் சிறந்த முனிவனென் கின்றனரே! உண்மை, உண்மை! அயோக்கியத்தனத்திலும் பொய்ம் மையுடைமையிலும் இவ்வசிட்டன் மிகச்சிறந்தவனே! இனியாவது உலகம் இவ்வசிட்டன் மிகச்சிறந்தவனே! இனியாவது உலகம் இவ்வசிட்டனை முழு அயோக்கிய னென்றுணருமா? இவ்விடத்து அதாவது அயோத்தியா காண்டம் முப்பத்தேழாம் சருக்க ஈற்றில் (பக்கம் 163) மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய் யங்கார் குறித்துள்ள செய்தி மிகவும் ஊன்றிக் கவனிக் கத்தக்கது. இதனை நண்பர்களனைவரும் கவனித்துப் படித்தால் உண்மையறி வார்களாக! அக்கூற்று வருமாறு:- கைகேயியை விவாகம் செய்தபொழுது அவளுக்குப் பிறக்கும் புத்திரனுக்கே இராஜ்யம் கிடைக்க வேண்டு மென்று அவளுடைய பிதா தசரதனிடத்தில் உறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். இது இராமனுக்கும், வசிட்டருக்கும், சுமந்திரர், சித்தார்த்தர் முதலிய மந்திரி களுக்கும் தெரிந்த விஷயமே. இது முதலாவது பாத்தியம். அரசன் வரங்களைக் கொடுத்தது இரண்டாவது பாத்தியம், எதைக் கேட்டாலும் கொடுப்பதாய் அரசன் மறுபடியும் பிரமாணம் செய்தது மூன்றாவது பாத்தியம். இராமனும் அப்படியே செய்தது நான்காவது பாத்தியம். ஆகையால் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய அரசன் ஏற்பாடு

----------------------------- தொடரும்  "விடுதலை” 10-10-2014

68 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நந்தி?

சிவன் சந்நிதிக்கு எதிரே நந்தி இருப்பது எதற்காம்? சிவனையும் உமாதேவியையும் தரிசிக் கப் பக்தர்கள் இவரிடம் அனுமதி பெற வேண் டுமாம்.

ஜீவாத்மா பரமாத் மாவை தரிசிக்க குறுக்கே ஏன் நந்தி? என்று பக்தர் களின் சாபத்திற்கு ஆளாக மாட்டாரா இந்த நந்தி?

Read more: http://viduthalai.in/e-paper/89000.html#ixzz3FnKJM8pw

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

அய்ந்து ஆண்டுகளாக நீரிழவு நோயாளியா நீங்கள்? கண்களில் நரம்புத் திரை பாதிப்புக்கு உள்ளாகும். 20 ஆண்டு நீரிழிவு நோயா ளியா நீங்கள்? 100 சதவீதம் இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளாவீர்கள்! எச்சரிக்கை!

விஞ்ஞானியின் அறிவுரை

மாணவர்கள் அறிவியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ள அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராம மூர்த்தி ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

(இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடுகள் முதலில் ராசி பலன் போடுவதை நிறுத்துமா?)

என்ன நியாயமோ!

இதய நோய், நீரிழிவு நோய்கள் உட்பட 108 உயிர் காக்கும் மருந்துகளில் விலைக் கட்டுப்பாடு முறையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது. உச்சநீதி மன்றத்தில் அரசின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

(கங்கையை சுத்தப்படுத்து வதுதானே இந்த ஆட்சிக்கு முக்கியம்?)

தங்கமே தங்கம்!

2008இல் தங்கத்தின் மீதான முதலீட்டில் கிடைத்த லாபம் 25.95 சதவீதம்; 2009இல் - 22.77 சதவீதம்; 2010இல் - 23.28 சதவீதம்; 2011இல் - 32.12 சதவீதம்; 2012இல் வீழ்ச்சி (12.49 சதவீதம்).

Read more: http://viduthalai.in/e-paper/89005.html#ixzz3FnKTKlij

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சொர்க்கம்

செய்தி: இந்தியப் பொருளா தாரத்தைப் புரிந்து கொண்ட வர் மகாத்மா காந்தி மட்டுமே!
- ஆர்.எஸ்.எஸ். ஆலோசகர் எஸ். குருமூர்த்தி

சிந்தனை: ஆமாம் அவரை சரியாகப் புரிந்து கொண்ட தால்தான் ஆர்.எஸ்.எஸ். அவரை சொர்க்கத்திற்கு(?) அனுப்பி வைத்தது.

Read more: http://viduthalai.in/e-paper/89005.html#ixzz3FnKYYhR5

தமிழ் ஓவியா said...

30 ஆயிரம் தொழிலாளர்களின் நிலைக்குப் பரிகாரம் என்ன?

சென்னைக்கு அருகே சிறீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை கடந்த 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இங்கு, 8,500 நிரந்தர ஊழியர்களும், 6,000 பயிற்சியாளர்களும், 6,000 ஒப்பந்தத் தொழி லாளர்களும் பணியாற்றி வந்தனர். இதனுடைய சார்பு நிறுவனமான பாக்ஸ்கான், பெரலஸ் (லைட் ஆன் மொபைல்) ஆகியவற்றில் சுமார் 7,000 பேர் பணியாற் றினர். இதில், லைட் ஆன் மொபைல் நிறுவனத்தை கடந்த 2 ஆண்டுகளாக கைவிட்டது. இதனால், அந்நிறுவனம் வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தன்னை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், மிகப்பெரிய மென்பொருள் நிறுவன மான மைக்ரோ சாப்ட் நிறுவனம், உலகமெங்கும் உள்ள நோக்கியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதேபோல், இந்தியாவிலுள்ள நோக்கியா இந்தியா லிட் நிறுவனத்தையும் வாங்கியது. ஒரு நிறுவனத்தை மற்றொருவருக்கு விற்றாலோ அல்லது வேறு நிறுவனம் வாங்கினாலோ இந்திய கம்பெனி சட்டத்தின் அனுமதி பெற வேண்டும். கம்பெனி லா போர்டு, மத்திய, மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ஒரு நிறுவனத்தை விற்கவோ, வாங்கவோ இயலாது.

ஆனால், விற்று முடிந்தவுடன் பொறுப்பேற்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம், நோக்கியா செலுத்த வேண்டிய வரிப் பாக்கியை நீங்கள் செலுத்த வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை நிராகரித்தது. இதனால், நோக்கி யாவிடம் இந்த பிரச்சினையை தீர்த்து கொடுத்தால்தான் இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தை ஏற்றுக் கொள்வோம் என இந்திய நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் கைவிட்டது.

மைக்ரோ சாப்ட் - நோக்கியா ஒப்பந்தப்படி உலகளவில் கைப்பேசி தயாரிக்கும் உரிமம் நோக்கியா நிறுவனத்திற்கு கிடையாது. இதனால், இந்திய நோக்கியா நிறுவனம், இதனை சார்ந்த இதர நிறுவனங்களில் பணிபுரியும் 27,000 தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது. நோக்கியா நிறுவனம், மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடியும் வரை மைக்ரோ சாப்ட் கம் பெனிக்கு ஒப்பந்த முறையில் கைப்பேசி தயாரிக்கும் நிறுவனமாக வைத்துக் கொள்வதாக நோக்கியாவை ஏற்றுக் கொண்டது.

ஆனால், நோக்கியா நிறுவனம் இந்தியாவிலுள்ள தன் நிறுவனத்தை மூட முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலில் வாக்களிக்கும் வரை அமைதி காக்க வைக்கப்பட்டது. தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஒப்பந்த தொழிலாளர்கள் 10,000 பேரை முதல் வாரத்திலும், அடுத்த வாரத்தில் பயிற்சி யாளர்கள் 6,000 பேரையும் வெளியேற்றின. ஒட்டு மொத்தமாக 30,000 தொழிலாளர்கள் சந்தடியின்றி சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து காலி செய்யப்பட்டு விட்டார்கள்.

மேக் இன் இந்தியா என்று எந்த வாயால் பிரதமர் அமெரிக்கா செல்லும் முன் அறிவித்தாரோ அந்த வார்த்தை மறையும் முன்னே 30,000 மக்கள் தங்கள் குடும்பத்துடன் தத்தளிக்கப் போகின்றனர்.

30 ஆயிரம் மக்கள் பிரச்சினைமீது மாநில, மத்திய அரசுகள் உரிய கவனம் செலுத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் முந்தைய அரசும் சரி, இன்றைய அரசும் சரி பந்தயக் குதிரைகள்தான். ஆனால், நடைமுறை விளைவுகள் எல்லாம் வேறு மாதிரியாகத்தான் உள்ளன. 13 நாட்களே ஆட்சியில் இருந்த வாஜ்பேயி தலைமையிலான மத்திய அரசு என்ரான் என்னும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டது.

மகாராட்டிய மாநிலத்தில் மின் உற்பத்தி செய்ய என்ரான் நிறுவனத்துக்கு உரிமை அளிக்கப்பட்டது. 2001இல் அந்த நிறுவனம் மூடப்பட்டது என்பதெல்லாம் பழைய கதை. என்ரான் நிறுவனத்தின் தலைமை நிருவாகி ஜெஃபரிஸ்கில் லிங்க் செய்த ஊழல் குற்றத்துக்காக அமெரிக்க நீதிமன்றத்தால் 24 ஆண்டு கள் 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையைச் சொல்லப் போனால் தனியார் நிறுவனங்களைவிட பொதுத்துறை நிறுவனங்கள்தான் சிறப்பாகச் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காக இந்திய அரசு கொட்டிக் கொடுக்கும் சலுகைகள் வசதிகள், விதி விலக்குகள் கொஞ்ச நஞ்சமல்ல; இருந்தாலும் என்ன பயன்?

நோக்கியாவை நம்பிய 30 ஆயிரம் குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கப் போகின்றனவே. ஏற்கெனவே வேலை வாய்ப்பின்மை என்னும் எரிமலை தன் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், 30 ஆயிரம் பேர் வேலை இழப்பு என்றால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

மத்திய அரசு வாய் ஜாலம் காட்டாமல் காரியத்தில் தன் கைத் திறனைக் காட்ட வேண்டும் என்பதே வெகு மக்களின் எதிர்ப் பார்ப்பு!

Read more: http://viduthalai.in/page-2/89013.html#ixzz3FnKmIKKO

தமிழ் ஓவியா said...

இதுக்கு பேர்தான், வாயாலேயே வடை சுடறதுன்னு சொல்றது!

- குடந்தை கருணா

நம்ம மோடி ஆட்சிலே, எல்லாமே, வித்தியாசமாத்தான் இருக்குது. நிறைய பேசுறார் இந்த மனுசன். ஊர் ஊரா, நாடு நாடா, போய் பேசுறார். காந்தி பிறந்த நாளைன்னைக்கு, நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கிட்டு போய் எப்படி குப்பையை கூட்டறதுன்னு ஒரு கிளாஸ் எல்லோருக்கும் எடுத்தார். அன்னைக்கே, எல்லோரும் இனிமே, கதர் துணியை வாங்குங்க. அப்படி வாங்குனா, ஒரு ஏழைக்கு உதவுற மாதிரி இருக்கும்னு சொன்னாரு. எல்லோரும், ஆகா, எப்படி பாருங்க, நம்ம பிரதமர். ஏழைக்கு எப்படி உதவலாம்னு சொல்றாரு பாருங்க.

இதுக்கு முன்னாடி யாராச்சும் சொல்லியிருக்காங்களான்னு கேட்டாங்க. ஆனா, நம்ம மோடி போடற டிரஸ் இருக்கே, அது கதரா? அப்படின்னு நாம கேட்கக் கூடாது.

அவருக்கு எப்படி டிசைன் டிசைனா டிரஸ் தைக்கறதுன்னு வெளி நாட்டிலிருந்து ஆட்கள் வந்துல்ல, யோசனை சொல்றாங்க. அவரு ஒரு நாள் போட்டுக்குற டிரஸ் இருக்கே, அதுலே, நம்ம ரெண்டு, மூணு, குடும்பம், ஒரு வருஷத்துக்கு, மளிகை சாமான், தாராளமாக வாங்கலாம். அம்புட்டு, சீப்பா, நம்ம பிரதமர் டிரஸ் போடறார்.

அப்புறம், இப்ப தேர்தல் கால மாச்சே. மகாராஷ்டிராவில் பேசுறார். என்னை பிரதமர்னு நினைக்காதீங்க. நான் சேவகன். சாதாரண மக்களுக் காக பாடுபடுற சேவகன். அப்படின் னுட்டார்.

அமெரிக்காவிலே என்ன பேசி னார். அங்கே உள்ள வட நாட்டு குஜராத்திகள், இன்னும் அந்த கூட்டத்துக்கு போன, விவரம் தெரியாத நம்மூர் ஆள்கள் மத்தியிலே பேசினார். என்கிட்டே, பெரிய திட்டம் ஏதாவது இருக் கான்னு கேட்கிறாங்க. நான் சொன் னேன், என்கிட்டே, சின்ன சின்ன திட்டம்தான் இருக்கு. ஆனா பெரிய விளைவு ஏற்படுத்தும்னு பேசினார். கையை தட்டுனான் பாரு, நம்ம ஆளு. அங்க அமெரிக்காவிலே தட் டுனது. இங்கே வரைக்கு கேட்டுச்சு.

ஆகா, இப்படி சாதாரண மக்களுக்குன்னே, பிறந்த ஒரு மனு சனைத்தான்யா நாம தேடிக்கிட்டு இருந்தோம்னு நினைச்சோம்.

வந்தார்யா, அமெரிக்கா போயிட்டு. இப்ப வர பண்டிகைக்கு, எல்லோரும் இருக்குற இடத்திலே கொண்டாடினா சரியா வராதுன்னு, மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு, குடும்பத்தோட ஊர்லே போய் பட்டாசு கொளுத்தலாம்னு கிளம்ப லாம்னு நெனெச்சு, ரயில் டிக்கெட்டை பார்த்தா, அது துறந்த அன்னைக்கே முடிஞ்சிடிச்சுன்னுட்டான். சரி, எப்படியும் சிறப்பு ரயில் உடுவாங் கான்னு நம்மாளு பார்த்துக்கிட்டே இருந்தான்.

மோடியுன் அறிவிச்சார்லே. அது ஸ்பெசல் ரயில் இல்லை. பிரிமியம் ரயில்னு பேரை மாத்தினார். உடனே, நம்மாளு, பாருய்யா, நமக் காக ஆறு ரயிலை தமிழ் நாட்டிலே விட்டாரய்யா. அப்படின்னு, நம்ம தமிழிசையும், ராகவனும் கோரஸ் வேற பாடுனாங்க.

ஆனா, நேரா நம்மாள் டிக்கெட் எடுக்க போய் காலையிலேயே நின்னான். கவுன்டர்கிட்ட போனா, அந்தாள் சொல்றாரு. அய்யா, இங்கே கிடையாது. ஆன்லைன்லே தான் பண்ணனும்னுட்டார். சரின்னு, ஆன்லைன்ல பண்றதுக்கு, இண் டெர்னெட் செண்டர்லே பணத்தை கட்டி, டிக்கெட் எடுக்கலாம்னா, எல் லாரும் ஏற்கனவே, மயக்கம் போட்டு கிடக்கிறாங்க. என்னய்யான்னு கேட்டா, எல்லாம், டிக்கெட் கட் டணத்தை பார்த்து மயக்கம் போட்டாங்கறார், கடைக்காரார்.

அப்படி என்னதான் கட்ட ணம்னு பார்த்தா, சென்னையிலி ருந்து கோயம்புத்தூருக்கு, சாதார ணமா மூன்றாவது ஏசி கட்டணம் ரூ.800 தான். ஆனா, நம்ம சேவகர் மோடி விட்ட பிரிமியம் ரயில்லே, வெறும் ரூ.3032 ஒன்லி. அப்புறம், மயக்கம் என்ன, மாரடப்புல்ல வரனும்.

இதுலே வேடிக்கை என் னான்னா, நம்மாளு ஊருக்கு, தனியா போகலை, குடும்பத்தோட வேற போகனும். என்னாச்சு, ஒரு வழிக்கே, ஆளுக்கு ரூ.3032 வச்சா, நாலு பேரு போறதுக்கு, ரூ. 12000 ஒன்லி. அப்புறம் திரும்புறதுக்கு, மறுபடியும், ரூ. 12000 கிடைச்சா உண்டு. ஆக, ரூ. 24000 கொடுத்தா, கோயம்புத்தூர் நாலு பேர் சொகுசா, பிரிமியம் ரயில்லே போகலாம். நீங்க, முன்கூட்டியே, விமானத்துலே ஒருமணி நேரத்துலே போகனும்னு டிக்கெட் வாங்கியி ருந்தா, ஆளுக்கு, ரூ.1900 கொடுத்தா, போகலாம். அப்ப, போய்ட்டு வர நாலு பேருக்கு, ரூ.16000 தான் வரும். தனியா கார் எடுத்து போனாலே, போய்ட்டு வர ரூ.12000 தான் வரும்.

இருந்தாலும், நம்ம மோடி, அதான் சேவகர் மோடி விட்ட பிரிமியம் ரயில் மாதிரி வருமா? இதுக்கே, நாம பயந்தா எப்படி? இன் னும் புல்லட் ரயில் இருக்கு. அதுலே இன்னும் ஸ்பெசல் எல்லாம் இருக்கு. ஆக, பேசுறது ஒன்னு, நடக்கிறது ஒன்னு. இதுக்கு பேர் தான், வாயாலே வடை சுடறது.

உங்களுக்கு வேணுமா?

Read more: http://viduthalai.in/page-2/89026.html#ixzz3FnL2FVed

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானியும்-பார்ப்பானும்!


ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மை யானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!! உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLOcNmL

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி!

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLVZZCy

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரின் கணிப்பு!

தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக் கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுதுதான் தீண்டாமை ஒழிந்ததாக கருதமுடியும்.

-காகா கலேல்கார்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்

Read more: http://viduthalai.in/page-7/89027.html#ixzz3FnLbb4oa

தமிழ் ஓவியா said...

லிங்க லீலை!

ஆடல் காணீரோ கூடல் மாநகரில் என்றும் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும் நேயமுடன் மானிடப் பிறவிகட்கு எடுத்துரைத்த சிவனென்றும் ஆத்தீகர்களாலே புகழப்படுகின்ற பரமசிவனின் இலிங்க லீலைகள் பலவுண்டு.

ஆண்டு பன்னிரண்டு உருண்டோடி ஆண்டவன் லீலைகளை அகிலத்திற்கு மீண்டும் விளக்கிட மகாமகம் வருகிறது. மாசியிலே மகம் வரும். மனிதர்களுக்கு மதம் எப்போதும் பிடித்திருக்கும்.

மகாமகத்திற்கு ஆத்திகர்கள் சென்று மூடத்தனத்தால் மூத்திரங்கலந்த புனித நீரை பக்திப் பரவசத்தால் பருகிவிடுவர். ஆனால், அரசு அலுவலர்களோ லிங்கமும் அய்ந்து தலைபாம்பும் கொண்ட டாலர் விற்பனையில் ஆர்வங் காட்டியுள்ளனர்.

கண்டனக் கணைகள் துளைக்கின்ற நேரத்தில் இலிங்கத்தின் லீலைகளையும் அரவத்தின் உவமைகளையும் எடுத்தியம்புவது சாலப்பொருத்தம் என்றே கருதுகிறோம்.

பூமியும், நிலவும் சூரியனுக்கு நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது என்று அறிவியல் கூறுகிறது. ஆத்திகம் பேசுகிறவர்களும் அறிவியலைச் சொல்ல வேண்டிய காலம். பாம்பு பகலவனைக் கவ்விக் கொள்கிறது என்று பழைமைப் புராணம் பாடுகிறது.

அந்தப் புராணத்திற்கு முன்னோடும், பிரபுலிங்க லீலை க்காட்சி இதோ படித்தின்புறுங்கள்.

பாம்பு பகலவனைக் கவ்விக் கொண்டதை போல, பரந்து கிடக்கின்ற மறைவிடத்தை குளிர் சாந்தினைப் பூசியும், முத்துப்போன்ற பற்களாலும், கொலை செய் வேலைப் போன்ற புருவத்தையும் கொண்ட கோடி இந்திராணிகள் வாழ்த்துரை வழங்கினர் என பொருள் லீலையைக் காட்டி நிற்கும் லிங்க லீலையில் சொல்லப்படும் பாம்பின் படம் டாலரில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பாடலை படிக்கவும்:

அரவு கவ்விய கதிரெனப் பட்டசாந் தாற்றி பரவை அல்குல்வென் முத்துவாள் நகைக்கொலை - பயில்வில்
புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று மருவி அம்பிகை மருங்குநின் றசைந்தனர் மன்னோ.

பிரபுங்க லீலை, பக்.23

முனிவனின் மனைவியைப் பெண்டாள நினைத்த சிவபெருமானின் லிங்கம் (ஆண்குறி) இற்று விழக்கடவது என்று முக்காலமும் உணரும் முனிவன் கூறினானாம். மனைவியைக் கூடுவதற்கு முன் அந்த முனிவனால் தன்னுடைய ஞானக் கண்ணால் காணமுடியவில்லையே!

அதுதான் போகட்டும் அந்த லிங்கம் அறுந்து விழும்போது பூமாதேவி தாங்க முடியாமல் தவிப்பாளே என்று பார்வதி தேவி பாய்ந்து தன்னுடைய பெண்ணுறுப்பைக் காட்டி ஏந்திக் கொண்டாளாம். அந்த லிங்கம்தான் டாலர் வடிவில் விற்கப்படுகிறது.

அருவியை, அழகை, மலரை மாலைக் காலத்து கோலஞ் செய் காட்சியை, இன்னோரன்ன இயற்கை யைப் புகழ்ந்த புலவர்கள் ஆண்டவனின் ஆண்குறியையும் அழகுபட அதன் வடிவம் அது ஆற்றியிருக்கும் அருஞ் செயல் லீலைகள் அத்தனையையும் பித்தர்களாகமாறி பிதற்றியிருக்கிறார்கள்.

அவைகளிலே லிங்கத்தின் லீலைகளைப் பாடி மகிழும் சிவப் பிரகாச சுவாமிகள் அருளிய பிரபுலிங்க லீலையைப் பாருங்கள். வீரசைவ மரபில் தோன்றி லிங்கத்தின் ஆறு உருவங்களையும் அழகுபடக் கூறுகிறார்.

1. ஆசாரலிங்கம், 2. குருலிங்கம், 3. சிவலிங்கம், 4. சங்கமலிங்கம், 5. பிரசாத லிங்கம், 6. மகாலிங்கம்.

ஒவ்வொரு லிங்கத்திற்கும் சிறப்புக்கள் உண்டு. அன்றியும் பணிகளும் வெவ்வேறானவை. பாடல் இதோ:

பங்க வளற்று வழிமாற்றி ஒருநல்

வழியைப் பகர்வார் போல் தங்கள் மதியிற்

பலபிதற்றுஞ் சமய ருரைகள் தமை நீக்கி

அங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென்

றருளும் வீரசைவ சிங்க நிலைத்த

அருட்சென்ன வசவன் திருத்தாள்சிரத்தணிவாம்

பிரபுலிங்க லீலை, பக்.5

பொழிப்புரையைத் தருகிறோம்.

குற்றம் பொருந்திய சேற்று வழியை நீக்கி தங்களின் அறிவால் அங்கங்களின் நிலையை இத்தன்மையது என்றும், அதில் இலிங்கங்களின் நிலைமை இத்தன்மையது என்றும் எடுத்துக்கூறிய வீரசைவ வழியிற்சிங்கம்போல் சிறந்தவன் என்று காப்புச் செய்யுளில் கூறுகிறார்.

அந்த இலிங்கங்கள் செய்த லீலைகளை ஏடுகளில் எழுதிக் காட்டி முட்டாளாக்கியது போதாது என்று மகாமக டாலர் உருவில் உலாவந்து கொண்டிருக்கிறது.

ஆறுலிங்கம் மட்டுமா? வைத்தியலிங்கம், பூரணலிங்கம், சங்கரலிங்கம், ஆத்மலிங்கம், அமிர்தலிங்கம், தருமலிங்கம் என்று எத்தனையோ லிங்கங்கள் உலாவருகின்ற ஞானம் செறிந்த பூமி. குகைகளிலே வாழ்ந்து இலைதழைகளைத் தின்று இச்சைக்கு வால்கா முதல் கங்கைவரை என்ற நூலிலே குறிப்பிடுவதைப் போல வாழ்ந்த காட்டு மிராண்டிகளை விட மகாமகப் பித்தர்கள் எந்த வகையிலே சிறந்தவர்கள்.

ஆகையால் தான் தந்தை பெரியார் அவர்கள் கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி, திரி, தரு திசையும்
வறிது நிலையிய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இளைத்தென் போரும் உளரே (புறம்)
புறமும் உண்டு. புராணமும் உண்டு. இருக்கலாமா?

தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page-7/89032.html#ixzz3FnLjs0qc

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர் களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnLteemg

தமிழ் ஓவியா said...

கடவுள்களின் தலை எழுத்து!

முருகனும் - கணபதியும்: (பிரமனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும் ஆறுமுகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்கு தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு?

பிரமன்: மைந்தர்காள்! உங்களுக்குத் தானா அந்த கஷ்டம்? என்னைப் பாருங்கள் - நான்கு தலைகளும் எட்டுக் கைகளுமாக நானுந்தான்.... என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து!

- திராவிட நாடு 17.3.1946

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnM14EJd

தமிழ் ஓவியா said...

புத்தர் அறிவுரைகள்

இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசையை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

Read more: http://viduthalai.in/page-7/89029.html#ixzz3FnM7NBQj

தமிழ் ஓவியா said...

மைலீஸ்வரர்


நமது பிரச்சாரம் இல்லா திருந்தால் மைல் கல்லுக் குப் பொட்டு வைத்து, பூமாலை சாத்தி மைலீஸ் வரன் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்; வண்டியில் செல்லும் செங்கல் செங்குத்தாக விழுந்தால் அதற்கும் பொட்டு வைத்து, பூமாலை சாத்தி செங்கலீசு வரன் என்ற நாமகரணம் சாத்தி விடுவார்கள் என்று சுயமரியாதைக்காரர்கள், திராவிடர் கழகத்தினர் கூட் டங்களில் சொல்லுவ துண்டு.
என்ன வெட்கக்கேடு தெரியுமா?

விருத்தாசலத் தையடுத்த சின்னவடவாடியில் நெடுஞ்சாலைத் துறை யினர் மைல் கல்லுக்கு மாலை அணிவித்து ஆயுத பூஜையன்று கும்பிட்டுத் தண்டனம் போட்டுள் ளனர்.

திராவிடர் கழக மாண வரணித் துணைச் செயலா ளர் தோழர் இளந்திரையன் படத்தோடு இந்தத் தக வலைத் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தில் என்ன கடவுள்களுக்குப் பஞ்சமா?

கோயில்களுக்குத்தான் குறைச்சலா? தடுக்கி விழுந் தால் கோயில்கள் தானே! மரங்களும், கற்களும், மலைகளும், ஆறுகளும் கோயில்கள் தானே தெய்வத் திருத்தலங்கள் தானே?

இவ்வளவு இருந் தும் இன்னும் ஆற்றாமை அடங்கவில்லையா?

பக்தி யின் ஆத்திர வெறி தீர வில்லையா?

அன்பே சிவம் என்பதும், கண்ணுக்குத் தெரியாதவன், அய்ம்புலன் களுக்கும் சிக்காதவன் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன், ஓங்கி உலகளந்த உத்தமன், உருவமற்றவன் என்று கொட்டியளப்ப தெல்லாம் வெறும் புரூடா தானா?

கடவுள்பற்றிய இந்த இலக்கணத்தில் உண்மை யான நம்பிக்கை இருக் குமேயானால் மைல் கல்லைக் கட்டிக் கொண்டு அழுவார்களா இந்தப் பக்த கே(கோ)டிகள்?

கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், ஜம்புகர் நரிக் கும், அகஸ்தியர் குடத்துக் கும், மாண்டவ்யர் தவளைக் கும், காங்கேயர் கழுதைக் கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக் கும் பிறந்தனர் என்று எழுதி வைத்திருக்கும் இந்து மதத்தில் இன்னும் என்னென்ன வெட்கக் கேடுகள்தான், விவஸ்தை சிறிதும் அற்ற ஆபாசங்கள் தான் அம்பலத்தில் ஏறுமோ, யார் கண்டது?

விவேகானந்தர் இங்கி லாந்தில் மாக்ஸ் முல்ல ருடன் தர்க்கம் செய்கை யில், முல்லர் இந்து மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரை ஈரல் எரிந்து விடும் என்றாரே, அதுதான் நினைவிற்கு வருகிறது.

இவ்வளவு அறிவியல் செவ்வாய்கோள் வரை நீண்ட இந்தக் கால கட்டத் திலும் மைல் கல்லுக்குப் படித்தவர்கள் பூஜை போடுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை எதைக் கொண்டு சாத்துவதோ!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88946.html#ixzz3FnMO0tps

தமிழ் ஓவியா said...

அதிமுக ஆட்சிக்கு ஆபத்தை அதிமுகவினரே உருவாக்கலாமா?

பெங்களூரு தீர்ப்புகள்மீது ஆவேசப்பட வேண்டாம்!
இனி சட்டப்படியான நடவடிக்கைகளே பிரச்சினைக்குத் தீர்வு!

அதிமுக ஆட்சிக்கு ஆபத்தை அதிமுகவினரே உருவாக்கலாமா?
வன்முறைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்க!

காவல்துறை செயலிழந்ததாக இருக்கக் கூடாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் காலங்கருதிய அறிக்கை

பெங்களூரு தீர்ப்புகள்மீது ஆவேசப்பட வேண்டாம்! இனி சட்டப்படியான நடவடிக்கைகளே பிரச்சினைக்குத் தீர்வு!

நீதிமன்ற தீர்ப்பை மதித்து, அடுத்த கட்டமாக உச்சநீதி மன்றத்தைச் சட்ட ரீதியாக அணுகுவதுதான் தீர்வே தவிர, வீண் கலவரங்களில் ஈடுபடுவதும் அதனை ஆட்சியும், காவல்துறையும் அனுமதிப்பதும் ஆட்சிக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் - உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி விசாரித்த தனி நீதிமன்றம் அதன் நீதிபதி மைக்கேல் டி. குன்கா அவர்கள், ஜெயலலிதாமீதான ஊழல் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய தீர்ப்பில் (27.9.2014) அவருக்கு 4 ஆண்டுகள் வெறுங்காவல் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்;

அவருடன் சேர்ந்துள்ள அவரது தோழிகள், முன்னாள் வளர்ப்பு மகன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு வெறுங் காவல் சிறைத் தண்டனை 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தீர்ப்பின்படி, அவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இருக்கும் பரப்பன அக்கிரஹாரம் என்ற பகுதியில் உள்ள சிறைச் சாலையில், ஏற்கெனவே பா.ஜ.க. முதல் அமைச் சராக இருந்து ஊழல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட எடியூரப்பா வைக்கப்பட்ட அதே அறையில் வைக்கப் பட்டுள்ளார்.

பெரிய வழக்குரைஞர்கள் குழு

முன்னாள் முதல்வரை உடனடியாக சிறையிலிருந்து பிணையில் வெளியே எடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய வழக்குரைஞர்கள் குழுவே, ராம்ஜெத்மலானி என்ற பிரபல வழக்குரைஞர் தலைமையில் ஏற்பாடுகளை மேற் கொண்டனர்!

இடையில் குறுக்கிட்ட இயல்பான விடுமுறை காலத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அந்நாளில் - விடுமுறை கால உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரத்தினகலா அம்மையாரிடம் கொணர்ந்து வாதாடினர்; அவர் முக்கிய வழக்கு என்பதால் இதனைத் தாம் விசாரித்து ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைப்பதோ இயலாத ஒன்று என்று கூறி, வழமைபோல், விடுமுறை முடிந்து உயர்நீதிமன்றம் திறக்கப்படும் போதுள்ள நீதிபதி விசாரிக்கட்டும் என்று கூறி தள்ளுபடி செய்து விட்டார்.

அதன்படி 7.10.2014 கருநாடக உயர்நீதிமன்றத்தில், ஜஸ்டீஸ் திரு சந்திரசேகரா அவர்களால் இந்த ஜாமீன் மனுக்களும், தண்டனை நிறுத்தி வைப்புகளும் விசாரிக்கப் பட்டன.

அதில்கூட, முறைப்படி 73 அயிட்டங்கள் இருந்த நிலையில், அதை அவசரமாக முறைப்படி காத்திராமல் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வற்புறுத்தினர் அதிமுக வழக்குரைஞர்கள், தண்டனை பெற்றோர் சார்பில்.

அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழமைபோல் வரிசைக் கிரமமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி அக்கோரிக்கையை நிராகரித்து விட்டார் நீதிபதி

அரசு வழக்குரைஞர் சொன்னது...

தமிழ் ஓவியா said...

அதன்பிறகு பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி ஒரு மணி நேரத்திற்கு மேலும், மற்றவர்கள் சார்பில் வழக்குரைஞர் அமித்தேசாய் முற்பகலிலும், இடை வேளைக்குப் பின்னர் பிராசியூஷன் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானிசிங் காலையில் ஜாமீன் மனுக்களை எதிர்த்து வாதாடியவர், இறுதியில் பிற்பகலில் ஜாமீனில் விடுவதற்கு தமக்கு மறுப்பு ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார்!

அவசரப்படலாமா?

இதனால் தீர்ப்பே தங்களுக்குச் சாதகமாக வெளிவந்து விட்டது என்று அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்து, மகிழ்ச்சி - பட்டாசு வெடி, ஆட்டம் பாட்டம் போட்ட நிலையில் - சுமார் 3.30 மணிக்கு தனது தீர்ப்பைக் கூறிய நீதிபதி சந்திரசேகரா இம்மனுக்கள்அனைத்தையும் நிராகரிப்பதாக தீர்ப்புக் கூறியது - அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது!

அத்தீர்ப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியும், லாலுபிரசாத் அவர்கள் 10 மாதம் சிறையில் இருந்தபிறகே அவரை உச்சநீதிமன்றம் ஜாமீனில் வெளியே விடத் தீர்ப்பளித்தது என்றும் - மனித உரிமை இதன் மூலம் வெகுவாக மீறிய ஊழல் வழக்கு இது; இதில் அவசரம் காட்டி ஜாமீனில் விட ஏதும் இல்லை என்றும் கூறி, உச்சநீதிமன்றமே முடிவு செய்யும் என்பதாகத் தீர்ப்பு எழுதி விட்டார்.

தேவையானது சட்டப் பூர்வ நடவடிக்கைகளே!

அடுத்த கட்டம் உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பின்மீது மேல் முறையீடுதான்.

அங்கேயும் உடனடியான அவசரம் காட்டினாலும், அது பயனளிக்குமா என்பதை நன்கு சிந்தித்து - ஆவேசம் கொள்ளாமல், அறிவுப்பூர்வ நடவடிக்கை - சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் மட்டுமே இனி ஈடுபட வேண்டுமே தவிர, மற்றபடி பேருந்துகளில் கல்லெறிதல், பொது மக் களுக்கு இடையூறு செய்தல், கல்வி நிலையங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நிர்ப்பந்தம், ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, இவைகளை அறவே கையாளாமல் நிறுத்த வேண்டும்.

முதல் அமைச்சர் என்ன செய்ய வேண்டும்?

முதல் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்தின் அறிக்கை வெறும் அறிக்கையாகவே இல்லாமல், சட்ட செயல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகளையும் அவர்கள்அதிமுகவினராயினும், சமூக விரோதிகளானாலும் காவல்துறை தயவு தாட்சண்ய மின்றிக் கைது செய்து, தொடர் நடவடிக்கைகள்மூலம் சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட முன்வர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் உள்துறை இந்திய அரசியல் சட்டத்தின் 365ஆம் பிரிவின்படி தாக்கீதுகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை இங்கே பரவலாக உள்ளது. (356 அல்ல; 365ஆம் பிரிவின்படி).

வன்முறைகள், காலித்தனங்கள், மூலமாக பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், கல்விப்பணிகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

இங்குள்ள கர்நாடக மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் அல்லது அச்சுறுத்திடும் பொறுப்பற்ற சுவரொட்டிகளை ஒட்டுவோர்மீது (பெயரே உள்ள நிலையில்) உடனடியாக கைது, வழக்கு நடவடிக்கை காவல்துறையால் மேற் கொள்ளப்பட வேண்டும்.

கர்நாடக மாநில முதல் அமைச்சர் திரு. சித்தராமய்யா கூறியபடி இதில் அவரது அரசின் பங்கு ஏதும் இல்லை; உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடத்தப்பட்டுள்ள செயல்களே!

கருநாடகத்துக்காரர்கள் - தமிழர்கள் என்ற பிரச்சினையை உருவாக்கலாமா?

அங்கும் தமிழர்கள் ஏராளம் உள்ள நிலையில், இப்படி ஒரு கொதி நிலையை இங்குள்ள சிலர் பொறுப்பற்று உருவாக்கினால், அது எங்கே போய் முடியும்?

நீதிபதி குன்காவைக் கண்டித்து அருவருக்கத்தக்க வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள், பேனர்களை வைப்பவர்கள்மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?

இவைகளால் சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்குத்தான் மேலும் சிக்கல் உண்டாகக் கூடும் என்பதை நாம் 5.10.2014 எழுதிய அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளோம்.

கெட்ட பெயரைத் தேடிக் கொள்ள வேண்டாம் காவல்துறை

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆட்டங்காணும் நிலையை அக்கட்சியினரே உண்டாக்குவது விந்தையிலும் விந்தை!

காவல்துறை செயலிழந்தாகவோ, அல்லது பொய் வழக்கைப் பதிவு செய்வதாகவோ செயல்பட்டு அதன் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/88949.html#ixzz3FnMciUdm

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நமஹ

சமஸ்கிருதத்தில் மமஹ என்றால் என்னுடை யது என்று பொருள். அதோடு நமமஹ என்றால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டா கும். நமமஹ என்பதுதான் நமஹ என்றானதாம். எல் லாம் கடவுளுக்கே சொந்த மானது - நமக்கென்று ஏதும் கிடையாது என்பதை விளக் கவே இந்த நமஹவாம்.

அப்படி என்றால் அந்தக் கடவுளுக்குச் சொந்தமான பொருள்கள் அழிகின்றனவே தீயால், வெள்ளத் தால் - நில நடுக்கத்தால் - அந்த அழிவிலிருந்து அந்தப் பொருள்களைக் காக்க அந்தக் கடவுள் தவறுவது ஏன்?

Read more: http://viduthalai.in/page1/88955.html#ixzz3FnMpEV00

தமிழ் ஓவியா said...

கண்டுபிடித்து விட்டார்களய்யா - கண்டுபிடித்து விட்டார்களய்யா!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது. ஜெயலலிதாமீது தொடரப் பட்ட பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்த தற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், கோயில் கருவறை சுவாமி சிலைகளை போட்டோ எடுக்க ஜெயலலிதா அரசு உத்தர விட்டதே முக்கிய காரணம் என்கிறார்கள்.

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 600-க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றின் கருவறையில் உள்ள மூலவர் சிலைகளை போட்டோ எடுத்து அனுப்பும்படி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட, கருவறையில் உள்ள சிலைகள் போட்டோ எடுக்கப்பட்டன. அதே நேரம், ஆகம விதிப்படி இதுபோன்று படம் எடுக்கக் கூடாது.

தெய்வத்தின் உக்கிரம் காரணமாக தோஷம் தாக்கும் என அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு உத்தரவை மீற முடியாது எனக் கூறி கோயில் செயல் அதிகாரிகள், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர் அளவிலான அதிகாரிகள் கருவறையில் உள்ள சுவாமி சிலைகள், உற்சவர், புராதன பொருட்கள், வீதி உலா செல்லும் வாகனங்கள் ஆகியவற்றைத் தனித் தனியாக போட்டோ எடுத்து, அதன் விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிக மான கோயில்களில் இருந்து போட்டோ மற்றும் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோயில் கருவறையில் இருக்கும் சிலையை அர்ச்சகர்கள் அல்லாத யாரும் தொடக்கூடாது என்று கூறப் படும் நிலையில், சுவாமி சிலைகளை போட்டோ எடுக்க ஜெயலலிதா அரசு உத்தரவிட்டதால்தான் இப்போது அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்று சிவாச்சாரியார்கள் மற்றும் அறநிலையத்துறை அதி காரிகள் பேச ஆரம்பித்திருக் கிறார்களாம் எப்படி? (தினமலர் (வேலூர் பதிப்பு) நாள் 30.9.2014)

தகவல்: கு. பஞ்சாட்சரம், திருவண்ணாமலை

அது சரி, எத்தனை வழிபாடுகள், எத்தனை யாகங்கள் இவை எல்லாம் கை கொடுக்காதது ஏன் என்று சிந்திக்க வேண்டாமா!

இந்தக் கோயில் சிலைகள் கடத்தப் படுகின்றனவே -_ அப்பொழுது எங்குப் போனது இந்தக் கடவுள் சக்தி?

Read more: http://viduthalai.in/page1/88947.html#ixzz3FnN0dWyu

தமிழ் ஓவியா said...

இயற்கைத் தடைகள்


நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page1/88940.html#ixzz3FnNOo0kA

தமிழ் ஓவியா said...

புத்தகத்தின் மூலம் புத்தகம் பெறுவோம்!

புத்தகங்களை வாசிப்பதின் மூலம் புத்தகம் பெறுவோம் என்றால் - புதிய - புத்தாக்கச் சிந்தனைகளை ஊற் றெடுக்கச் செய்யும் - உள்ளத்தைப் பெறுவோம் என்றே பொருள்!

வாழ்க்கையில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கிட, அதனால் உயர்ந்திட புத்தகங்கள் போன்ற நல்லா சான்களை வேறு எங்கும் காணவே முடியாது.

சிறு வயதில் - நம்பிஞ்சுகளுக்கும் கூட புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தையும், பக்குவத்தையும் நாம் உருவாக்கி விட்டு விடுவோமேயானால் அதைவிட அவர்களுக்கு நாம் தரும் அறிவுச் செல்வச் சேர்ப்புக்கான வழி முறை வேறு எதுவும் இல்லை!

புத்தக நேயர்கள் பல வகை! சிலர் புத்தகங்கள் என்றாலே யோசிப்பார்கள்!

சிலர் புத்தகங்களை வாசிப்பார்கள்!

சிலர் புத்தகங்களை சுவாசிப்பார்கள்!

சில புத்தகக்காதலர்களோ நல்ல புத்தகங்களை யாசிப்பார்கள்!

நீங்கள் இதில் எந்த வகை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

மற்றவகைக் காதல்கூட ஒரு கட்டத்தில் கசக்கும் - எல்லா நேரங் களிலும் இனிக்காது! புத்தகக் காதலோ, படிக்கப் படிக்க மேலும் இன்ப ஊற்றாகவே மனதுக்குள் அமையும்.

நம் வாழ்வில் பல திருப்பங்களும் முன்னேற்றங்களும் கூட ஏற்பட பெரு வாய்ப்பு உண்டு.

புத்தகப் படிப்பைப்பற்றி நாம் பின்பற்றும் 4 முக்கிய விதிகள் என்ன தெரியுமா?

தமிழ் ஓவியா said...

1. சரியான புத்தகத்தைத் தேர்வு செய்தல்

நாம் படிக்க விரும்பும் புத்தகம் நல்ல புத்தகம் தானா? பயனுறு புத்தகம் தானா என்று அறிந்து, அதனைத் தேர்வு செய்து படிப்பதே முக்கியம். புத்தகம் என்ற பெயரால் குப்பைக் கூளங்கள், ஆபாசக் குவியல்கள், மலிவான உணர்ச்சி களுக்குத் தீனி போடும் தீவனம் என்ற தீமைகள் - இத்தியாதி புத்தகங்களைப் படிப் பதிலும் படிக்கா மையே நன்று!

கல்லாத பேர் களே நல்லவர்கள் என்று தாயுமானவர் பாடினாரே அவ்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. அப்பொல்லாத புத்தகங்களைப் படித்து, இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் பாழடித்து, மூளையில் விஷச் சத்தை (Toxity) ஏற்றிக் கொள்ளலாமா?

2. அமைதியான சூழலைத் தேர்வு செய்தல்

வாசிக்கும் புத்தகங்களை முழுமையாக உள்வாங்கி மனதில் பதிய வைக்க முக்கியத் தேவை எது தெரியுமா? அமைதி யான, ஏன் நிசப்தம் நிலவும் - ஆரவாரம் இல்லாத இடமாக அது அமையின் அது முழுப் பயன் விளைவிக்கும்.

நம் வீட்டில்கூட அறையை அமைதி கொழிக்கும் ஓர் அறையாகவே அமைத்து, அதில் சென்று அமர்ந்து படித்தால் நல்ல கருத்துக்களை உடனடியாக நம்முள் நாம் வாங்கி செரித்துக் கொண்டு, அறிவுப் பயிர் வளர்ச்சிக்கு ஆக்கப் பூர்வமாக உதவிய வர்களாவோம் நாம்!

தமிழ் ஓவியா said...

என்னைப் பொருத்த வரையில் நான் படிக்கும் போதோ, எழுதும்போதோ, சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது; அது மட்டுமா? யாராவது நண்பர்கள் எதிரிலோ, பக்கத்திலோ வந்து நின்றோ, அமர்ந்தோ இருந்தாலும் நான் அறியாமலேயே எழுத்துப் பணியிலோ, படித்துச் சுவைப்பதிலோ என்னையே மறந்தவனாகி விடுவதுண்டு!

இது என்பலமா - பலகீனமா? அறியேன்!

இப்போது நமது இளைய தலைமுறையினர் காதில் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டே பாடத்தை படிக்கும் வினோதப் போக்கு விரும்பத்தக்கதே இல்லை.

இரண்டில் ஒன்றை மட்டுமே செய்வதே சாலச் சிறந்தது. இரண்டிற்கும் அதன்மூலம் சரியான நீதி வழங்க முடியாது இல்லையா!?

3. சுவையான வகையில் படிக்கத் துவங்குகள்!

சிலர் புத்தகங்களை எடுத்துப் படிக்க சில பக்கங்களைப் புரட்டும்போதே, கொட்டாவிவிடுவர்.. சில மணித்துளிகளில் குறட்டைச் சத்தம் பிறக்கும்!

திருக்குறளார் முனுசாமி அவர்கள் நகைச்சுவைப் பேச்சாளர் என்பதை முதியோர் அறிவர். அவர் சொன்னார்; ஒருவர் அவரிடம் சொன்னாராம். அய்யா நீங்கள் சொன்ன திருக்குறள் புத்தகத்தை தினமும் எடுக்கிறேன். படுக்குமுன் படிக்கத் துவங்கியதுடன் என்னமா தூக்கம் வருகிறது தெரியுங்களா? ரொம்ப நன்றி என்றாராம்.

அதற்கு திருக்குறளார் அடப்பாவி இதற்காடா வள்ளுவர் கஷ்டப்பட்டு 1330 குறள்பாக்களை எழுதினார். ஏ, தாழ்ந்த தமிழனே! என்று தலையில் அடித்துக் கொண்டேன் என்றார்!

வேறு சிலருக்கு ஆவல் இருக்கும்; படிக்கத் துவங்கி, வண்டிக்கு ஸ்டார்ட் டிங் டிரபிள் (Starting trouble) முதலில் மக்கர் செய்யும்; அதனைப் பக்குவமாக சுவையான நகைச்சுவை - குறுங்கதைகளைக் கொடுத்து வயப்படுத்தினால், பிறகு, வண்டி வேகமாக ஓடத் துவங்கும்!

4. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்க!

பணத்தைச் சேமித்தல் எவ்வகை முக்கியமோ, எதிர்கால வாழ்வுக்கு அது போலவே நேரத்தைச் சேமிப்பது - அதில் அன்றாடம் சிறிது நேரம் - படுக்குமுன் புத்தகம் படித்தல் - பிறகு உறங்குவது என்ற பழக்கத்தை ஏற் படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

காலை நடைப்பயிற்சி - உடற் பயிற்சி போல, இரவில் - உறங்குமுன் அறிவை விரிவு செய்து அகண்டமாக் கும் இந்த அறிவுப் பயிற்சி - சாணை தீட்டும் வாய்ப்பு வாழ்வில் ஒளியேற்ற - உயர அவசியம் தேவை!

பல வீடுகளில் பூசை அறைதான் உள்ளது; புத்தக அறைகள் இருப்ப தில்லை. அறியாமை இருட்டைப் போக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்ச அவசியம் தேவை புத்தக அறைகள். வீட்டில் இடமில்லையே என்றால் குறைந்த பட்சம் ஒரு புத்தக அலமாரியாவது இருக்கட்டும்; அதுதான் நல்ல குடும்ப விளக்கு!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page1/88942.html#ixzz3FnNWmcJA

தமிழ் ஓவியா said...

சட்டம் தெரிஞ்ச மேதைகளே, சொல்லுங்கய்யா சொல்லுங்க


சொத்துக்குவிப்பு வழக்கில், சொத்துக்கள் வாங்கப்பட்டதை எல்லாம், சந்தை விலையில் மதிப்பு எப்படி போடலாம்? அப்படின்னு ஒரு வாதத்தை, ஜாமீன் தொடர்பாக வழக்குரைஞர் ஒருவர் கேட்கிறாராம், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில்.
ஆகா, பேஷ்.பேஷ். சந்தை மதிப்பில் சொத்தினை மதிப்பிட்டது தவறு.

ஆனால், தணிக்கையாளர் ஒருவர், இந்த மாதிரி வித்திருந்தா ரூ.176000 கோடி கிடைச்சிருக்கும்னு, ஒரு குத்துமதிப்பா சொன்னது ரைட்டா? அதை வைச்சுக்கிட்டு, இங்க ரெண்டு எலெக்சனே நடந்திடுச்சே. அது சரியா?

இன்னமும், இப்ப தண்டனை கொடுத்த வழக்கை விட்டுவிட்டு, இன்னும் முடியாத, வாய்தா வாங்காம நடக்கிற வழக்கிலே என்ன மாதிரி தண்டனை வரும்னு இப்பவே யூகம் பண்றது சரியா? ,

சட்டம் தெரிஞ்ச மேதைகளே, சொல்லுங்கய்யா சொல்லுங்க

-குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/88945.html#ixzz3FnNlRR00

தமிழ் ஓவியா said...

வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!

பிற இதழிலிருந்து....

வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!

கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம் தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது சில பத்தாண்டு களுக்கு முன்னர்தான். அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமா னம் வைத்தோ கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள், வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

பதில் இல்லாத கேள்விகள் வேலை இல்லாத வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நிற் கிறார்கள் முதல் தலைமுறை ஆசிரியர் கள். மறுபுறம், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளும் திணறிவருகின்றன.

தமிழ் ஓவியா said...

தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் (என்.சி.டி.இ.) தெளிவற்ற வழிகாட்டுதலே இந்தச் சிக்கலுக்கு அடிப்படைக் கார ணம். இந்தச் சூழலில் சில கேள்விகள் எழுகின்றன. ஆசிரியராகப் பணிபுரிய அடிப்படைத் தகுதியான கல்வியியல் பட்டயம்/ பட்டம் பெற்ற ஒருவருக்கு, தகுதித் தேர்வு தேவையா? தேவை யென்றால் என்ன காரணம்? அந்தப் படிப்புகளில் போதிய பயிற்சி வழங்கப் படவில்லை என்று என்.சி.டி.இ கருது கிறதா? கணிதத்தில் பட்டம் பெற்ற ஒரு வரை, அறிவியலில் பட்டம் பெற்ற ஒரு வர் எழுதும் அதே 30 கேள்விகளுக்குப் பதில் எழுதச் சொல்வது சரிதானா என்ற கேள்வியே இல்லாமல் ஒரு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது ஏன்? பல குழப்பங்களுடன் வெளியான என்.சி.டி.இ-யின் வழிகாட்டுதலில், பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம் என்றும் ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் தெளி வற்ற பிரிவுகள் இருக்கின்றன. இவை குறித்து விளக்கம் கோராமலேயே தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப் பட்டது. அதனால்தான், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மிகுந்த குழப்பத்துடன் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. தகுதித் தேர்வு தகுதிப்படுத்தவா, வேலைவாய்ப்பு வழங் கவா? என்ற தெளிவு நீதிமன்றங்களுக் குக்கூட ஏற்படவில்லை.

தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு

தமிழ் ஓவியா said...

ஆசிரியராகப் பணியாற்ற மேற் கொள்ளப்படும் தொழிற்பயிற்சிதான் கல்வியியல் பட்டயம்/ பட்டம். இந்தத் தகுதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படும் தகுதித் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை என்றால், தன் வாழ்வாதாரத்துக்காக எந்தத் தொழிலை மேற்கொள்ள பயிற்சி எடுத்துக்கொண் டாரோ அந்தத் தொழிலை மேற் கொள்ள முடியாமல் போய்விடும். இது ஒருவரின் வாழ்வாதாரத்தையே பறிப்ப தாகும். வாழ்வாதாரத்துக்கான எந்தத் தேர்விலும் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. சட்டம் தொடங்கி, வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தும் அரசாணை வரை மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பளிக்கப்பட்டது. எனி னும், தமிழ்நாடு அரசு மதிப்பெண் தளர்வு வழங்காததால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இதுதொடர்பாக தேசிய ஆதி திராவிடர் ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதன்பின் மறு ஆய்வும் நடத்தப்பட் டது. சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறி வித்தார். இந்த வரலாறு தெரியாமலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டது? ஒரு தொழி லைச் செய்யவே கூடாது என்று பின் தள்ளப்பட்ட ஒரு பிரிவினருக்கு, அந்தத் தொழிலை மேற்கொள்ள வழங்கப்படும் முன்னுரிமைகள்தான் இட ஒதுக்கீடும் அதற்கான மதிப்பெண் தளர்வும். மதிப் பெண் தளர்வை ரத்துசெய்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது. கூடுதல் மதிப்பின் குழப்பம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலு வலகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மேற் கொள்ளப்பட்டது. அதை மாற்றி, போட்டித் தேர்வு நடத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. இவை எவற்றிலும் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு களில் பெற்ற மதிப்பெண்களுக்கு கூடுதல் மதிப்பு(வெயிட்டேஜ்) வழங்கப் பட்டது கிடையாது. வழக்கு ஒன்றில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அரசு ஒரு குழு அமைத்திருப்பதாகவும், அந்தக் குழு தரும் பரிந்துரையின் அடிப் படையில் பணி நியமனம் மேற்கொள் வதாகவும் கூறியிருந்தார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றம் 29.04.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் இந்தக் குழுவின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித் திருந்தது.

ஒரே நாளில் ஆந்திர, மேற்கு வங்க மாநில நடைமுறைகளைப் பின் பற்றி தமிழ்நாட்டுக்கு ஒரு நடைமுறை வகுக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையின் சாதக, பாதக அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்யவில்லை என்று குறிப்பிட்டி ருந்தது. மேலும், வேறு அறிவியல்பூர் வமான வகையில் கூடுதல் மதிப்பு அளித்து, பணி நியமனம் மேற்கொள் ளலாம் என்பதை அரசு ஆராய்ந்து விரைவில் முடிவெடுக்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இவ்வாறான கருத்துகள் நீதிமன் றத்தால் வெளியிடப்பட்ட பிறகும் முழு மையான மறு ஆய்வு மேற்கொள்ளா மல் அடுக்குமுறைக்குப் பதிலாக ஒவ் வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்ட அடுத்த அரசாணை வெளி யிடப்பட்டது. எழுத்தறிவற்ற குடும்பச் சூழலில் பிறந்து போராடி, ப்ளஸ்-டூ முடிக்கும் மாணவர்களில் பலர் முதலில் தேர்ச்சி பெறத் தவறி, அதற்குப் பின் தேர்ச்சி பெற்று, தன் அறிவை விரிவு படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் பல நிலை களில் பணியாற்றிவருகின்றனர்.

தன் தகுதியை மேம்படுத்திக் கொண்ட ஒருவரை, அவர் ப்ளஸ்-டூவில் குறைந்த மதிப்பெண் எடுத்தார் என்ற காரணத்துக்காக வேலைவாய்ப் பில் பின்னுக்குத் தள்ளுவது நியாயமற்ற நடைமுறை. 2012 இல் தொடங்கி முற் றுப்பெறாமல் தொடர்ந்துகொண்டி ருக்கும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர அரசு ஏன் முயற்சிக்க வில்லை? வெயிட்டேஜ் என்பது நால் வர் குழு உருவாக்கமே தவிர, அமைச் சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல. எனவே, மதிப்பெண் தளர்வு வழங்குதல், வெயிட்டேஜ் முறையைக் கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை உரிய முறையில் அரசு பரிசீலிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் தளர்வு வழங்கி, பணி நிய மனத்தில் பதிவு, மூப்பு மற்றும் வயது ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து பணி நியமனங்களை மேற்கொள்வது மட்டுமே இந்தச் சிக்கலைச் சுமூகமாகத் தீர்க்க வழி செய்யும்.

- தொடர்புக்கு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை. tnpcommonschool@gmail.com

நன்றி: தி இந்து (தமிழ்), 8.10.2014

Read more: http://viduthalai.in/page1/88903.html#ixzz3FnOdlADD

தமிழ் ஓவியா said...

என்.எல்.சி. போராட்டம்!

பொதுத் துறை நிறுவனங்களில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், போபால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளன.

இருப்பினும், நீண்ட நாள்களாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்த மறுத்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம் நிர்வாகம் ஏதாவது ஒரு வாக்குறுதி கொடுக்கிறது, பணியாளர்களும் அதை நம்பி வேலைக்குத் திரும்புகின்றனர். ஆனால், பணியாளர்கள் வேலைக்குத் திரும்பியதும் மீண்டும் நிர்வாகம் ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தை அப்படியே மூடி வைத்துவிடுகிறது.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் நீண்டகால ஒப்பந்தப் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் சம்பள விகிதத்தில் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. இதனால், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 35 நாள்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது. என்.எல்.சி. நிறுவனத்தின் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளை குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானது ஆகும்.

தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மறியல் அறப்போர் நடத்திய 2,000 ஒப்பந்தத் தொழிலாளர் கள் கைது செய்யப்பட்டனர். காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் அவர்களின் பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் என்ன கொடுமையென்றால் 13 ஆயிரம் தொழி லாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிவதுதான்.

20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பொருளாதாரப் பயன்களின்றி வெளியேறினர்; அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டு இருந்தால் நல்ல அளவுக்கு ஒரு தொகையைப் பெற்று இருப்பார்கள்.

பொதுத் துறை நிறுவனங்கள் என்று வரும்பொழுது தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய் என்பது போல பல பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழி லாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர். இரயில்வேயில் அவ்வாறு நடந்திருக்கிறது. அரித்துவாரில் உள்ள பெல் நிறுவனத்திலும் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் அதே பெல் நிறுவனம் திருவெறும் பூரில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து வதில்லை. உயர்நீதிமன்றம் (மதுரை) தீர்ப்பு வழங்கியும்கூட அதனைச் செயல்படுத்த திருவெறும்பூர் பெல் நிறுவனம்முன் வரவில்லை.

தமிழ் ஓவியா said...

ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினையில் மத்திய அரசு பொதுவாக குறிப்பிட்ட ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களை நிரந்தரப் படுத்துவது தொடர்பாக ஒரு கொள்கை முடிவினை ஏன் எடுக்கக்கூடாது?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளனவே!

இதில் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், தமிழ்நாடு அரசு - 35 நாள்களாக நடைபெற்றுவரும் இந்த வேலை நிறுத்தம்பற்றிக் கவனம் செலுத்தாததுதான். தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி.யில் வேலை நிறுத்தம் நடந்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிட்டு சுமூக முடிவை எடுத்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதுமட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சியில் மின்வாரியம், தமிழ்நாடு காகித ஆலை முதலிய நிறுவனங்களில் பணி யாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

35 நாள்களாக தொடர் வேலை நிறுத்தம் நடந்து வந்தும் மத்திய பி.ஜே.பி. அரசு இதனைக் கண்டுகொள்ளாதது - அதன் நிர்வாகத் திறனுக்கான அத்தாட்சிதான் போலும்!

இது ஏதோ குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் பிரச்சினை என்று கருதிவிட முடியாது; நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தென் மாநிலங்களுக்கே மின்சாரத்தை வழங்கக்கூடிய ஒரு நிறுவனம். அதிலுள்ள தொழிலாளர்களின் பிரச்சினை என்பது - பொது மக்கள் பிரச்சினைதான்; அதன் காரணமாகத்தான் நெய்வேலி சுற்று வட்டாரத்தில் வாழும் பொதுமக்களும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் நவரத்தினம் என்று சொல்லப்படும் பட்டியலில் இடம்பெற்று கோடிக்கணக்கான இலாபத்தைக் கொண்டுவந்து குவிக்கிறது. இந்த இலாப ஈட்டில் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்புக்கும் முக்கிய பங்கு உண்டே!

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்தலும் மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1970 இன்படி தொடர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றினால், அவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படவேண்டும்.

சட்டத்தையும் மதிப்பதில்லை; நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பதில்லை என்றால், அதற்காகக் கடுமையான விலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்க நேரும் என்று எச்சரிக்கின்றோம்.

நெய்வேலியில் நடைபெறும் போராட்டத்திற்குத் திராவிடர் தொழிலாளர் கழகம் தன் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது

Read more: http://viduthalai.in/page1/88902.html#ixzz3FnOojJKl

தமிழ் ஓவியா said...

பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?

பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.

கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,

பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.

இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.

கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/88905.html#ixzz3FnOxIgvJ

தமிழ் ஓவியா said...

முதலாளிகளின் பின்பலம்


அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)

Read more: http://viduthalai.in/page1/88901.html#ixzz3FnP6OqFM

தமிழ் ஓவியா said...

பயன்படவேண்டும்

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண் டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.

(விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page1/88858.html#ixzz3FnPbgFia

தமிழ் ஓவியா said...

பெரியாரின் நகைச்சுவை கருத்தரங்கம்

மதுரை, அக். 7_ 14.9.2014, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடு தலை வாசகர் வட்டத் தின் சார்பாக 21ஆவது சொற்பொழிவு விடுதலை வாசகர் வட்டத்தின் தலை வர், பணிநிறைவு பெற்ற நீதிபதி பொ.நடராசன் தலைமையில் நடைபெற் றது. கூட்டத்திற்கு வந்தி ருந்தோரை இரா.அழகு பாண்டி வரவேற்றார். ''பெரியார் பேழை'' என்ற தலைப்பில் பகுத்தறிவா ளர் கழகத்தைச் சார்ந்த சடகோபன் உரையாற்று கையில் தந்தை பெரியார் அவர்கள் தமழ்நாட்டின் மாலைநேர ஆசிரியர் என்று கூறி பெரியார் அவர்கள் இசைக்கு என்ன இலக்கணம் இருக்க வேண் டும் என்பதை விவரித்தி ருக்கிறார் என்றும், இசை யில் மொழியின் இனிமை முக்கியம் என்பதை வலி யுறுத்தியதோடு அந்த மொழியில் பொருளோடு இருக்க வேண்டும் என் றும் அது சமுதாயத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார் என்றும் விளக்கவுரை அளித்தார்.

விடுதலை இம்மாத சிந்தனை என்ற தலைப் பில் பேசிய பணிநிறைவு கல்வி அலுவலர் ச.பால்ராசு பேசுகையில்:_ இம்மாதம் வெளிவந்த தலையங்கங் களின் தொகுப்பினை எடுத் துரைத்தார். அதோடு மீனவர் பிரச்சினையில் சுப்ரமணிய சாமி தலையி டுவதற்கு யார் அதிகா ரத்தை கொடுத்தது என் பது பற்றி விடுதலையில் வந்த அறிக்கைகளை வளக்கி பேசினார். வெளியுறவுத் துறை யில் தொடர்ந்து பார்ப்ப னர்களே அதிகாரிகளாக இருந்ததால் இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு தவறான வழி காட்டுதலை கூறி தமிழர் களுக்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொள்ள வைத்தனர் என்பதை தெளிவுபட விளக்கி பேசினார். பேச்சாளரை அறிமுகம் செய்து அ.பழ னிச்சாமி (அஞ்சல் ஆயுள் காப்பீடு களப்பணி அலு வலர்) பேசினார். இறுதியில் ''பெரியாரின் நகைச்சுவை'' என்ற தலைப் பில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உரையாற் றினார். அவரது உரையில் தநதை பெரியார் அவர்க ளின் எழுத்திலும், பேச்சி லும் நகைச்சுவை கலந்த கருத்துகளே அதிகம் இடம் பெற்றன என்பதை அழகாக தொகுத்து வழங் கினார். அவருடைய உவ மைகளும் ஒப்பீடுகளும் சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது.

இறுதியில் விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் அ.முருகானந்தம் நன் றியுரை கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88873.html#ixzz3FnPyUtMp

தமிழ் ஓவியா said...

மதமும் - பக்தியும் படுத்தும் பாட்டைப் பாரீர்!

ஆந்திரா : கோவில் விழாவில் சிறுவன் பலி! பக்தர்கள் பெருங்காயம்!

நகரி, அக். 6 ஆந்திர மாநிலம் கர் னூல் மாவட்டம் தேவரக்கட்டு கிராமத் தில் மாலமல் பேலஸ்வரி தாயார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வன்னி உற்சவம் நடைபெறும்.

கிராம மக்கள் இரு பிரிவாக பிரிந்து தடி மற்றும் தீப்பந்தங்களுடன் மோதிக் கொள்வதே இந்த விழாவின் சிறப்பம்சமாகும். இதில் வெற்றி பெறும் கிராமத்தில் கோவில் உற்சவர் 1 ஆண்டு பூஜைக்கு வழங்கப்படும். இந்த வினோத திருவிழா நேற்று நடந்தது.

மாலமல்லேஸ்வரி தாயார், பால மல்லேஸ்வரர் சாமி பல்லக்கில் எடுத்து வந்தனர். நீரணி, நீரணிக்க தண்டா, கொத்தப்பேட்டை ஆகிய கிராம மக்கள் ஒரு புறமும், மீலேகால், நித்ர வட்டி, அரிசரா, அரிக்கே தண்டா உள் ளிட்ட பல கிராம மக்கள் மறுபுறமுமாக விழாவில் திரண்டு நின்றனர்.

திடீரென அவர்கள் ஒருவரை யொருவர் தடியால் அடித்தும், தீப்பந் தங்களால் தாக்கியும் மோதிக் கொண் டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி மகேஷ் என்ற 10 வயது சிறுவன் மிதிபட்டு பலியானான். 68 பேர் பெருங்காயம் அடைந்தனர். இத னால் நிலைமை விபரீதமானது.

விழாவையொட்டி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அவர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் தடியடி நடத்தி பக்தர்களை விரட் டினர். வழக்கமாக சாதாரணமாக தடி யால் அடித்துக் கொள்ளும் பக்தர்கள் இந்த முறை கல்வீச்சிலும், தீப்பந்தங் களை வீசியும் மோதிக் கொண்டார்கள். அதுவே விபரீத முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது என்பது காவல் துறையினர் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமிரா மூலம் கல்வீசியவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத் துவர்கள் தெரிவித்தனர்.

வைஷ்ண தேவியின் ஆசி?

ஜம்மு, அக்.6- வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்த லங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ் ணவ தேவி ஆலயமும் ஒன்றாகும்.

கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 5200 அடிகள் உயரத் தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் பக் தர்கள், அன்னை வைஷ்ணவி தேவியின் அருள் வேண்டி வருகின்றனர்.

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவி லுக்குப் பிறகு மிகவும் அதிகமாக பக்தர் கள் திரளாக வந்து இறைவனை வழி படும் இடங்களில் ஜம்மு வைஷ்ணவி தேவி ஆலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வ தற்காக வந்த சிலர் கத்ரா என்ற இடத் தில் இருந்த மலயடிவார முகாமில் தங்கியிருந்தனர். அவர்களில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அஷோக் பாபா என்பவர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். களக்காட்டில் தசரா விழாவில் மேளக்காரர் மீது தாக்குதல் களக்காடு, அக்.6 களக்காட்டில் தசரா விழாவையொட்டி நேற்று முன்தினம் சத்திய வாகீஸ்வரர் கோவில் முன்பு அப்பகுதியை சேர்ந்த கோவில் களின் சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செண்டை மேளம் வாசிப்பதற்காக அம்பை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுதன் (22) மற்றும் அவரது குழுவினர் வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (25) மற்றும் 10 பேர் , சுதனிடம் நீ சரியாக மேளம் வாசிக்க வில்லை என்று கூறி அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே வெங்க டேஷ் உள்பட 10 பேரும் சேர்ந்து சுதனை சர மாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இது குறித்த புகாரின் பேரில் களக் காடு காவல்துறையினர் விசா ரணை நடத்தி 11 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page1/88802.html#ixzz3FnQS2C46

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சொல்லுவது பிஜேபி

செய்தி: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா ஆட்சியில் அம்மாநிலம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
- பி.ஜே.பி.

சிந்தனை: ஆர்.எஸ்.எஸின் தீவிரவாதத்தையும் கடந்த பயங்கரவாதத்தைவிடவா? இதன் அடிப்படை அணுகு முறையே வன்முறைதானே! பாபர் மசூதி இடிப்பு ஒன்று போதாதா? இந்துக் கடவுள்களின் கையில் ஆயுதங்கள் இருப்பதன் பொருள் என்ன?

Read more: http://viduthalai.in/page1/88801.html#ixzz3FnQaLEHJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உம்மிடம் அடைக் கலம் புகுவோர் அனை வரும் மகிழ்வர். அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப் பரிப்பர். நீர் அவர்களைப் பாதுகாப்பீர்! உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
- திருப்பாடல் 4:3

அன்றாடம் உம்மை (கடவுளை) அண்டி கோவில்களைச் சுற்றிக் கூடிக் கிடப்பவர்கள் பிச்சைக்காரர்கள்தாம்! அடைக்கலம் புகுவோர் நிலை இதுதானே?

Read more: http://viduthalai.in/page1/88796.html#ixzz3FnQlj94S

தமிழ் ஓவியா said...

உலகத் தாய்மொழிகள் நாள்
6-10-2014

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் மொழி, உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டது நம் உயிரினும் மேலான தமிழ் மொழியை ,இந்த உலகம் இருக்கும் வரை வாழ வைக்க வேண்டும். இதை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாய் கொள்ள வேண்டும் . இன்று முதல் பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, தமிழ் சொற்களை பயன்படுத்த உறுதி ஏற்போம்!

நமது தாய்மொழியான தமிழ் இன்று இந்துத்துவ மனநிலை கொண்ட ஆட்சியா ளர்களால் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தொலைக்காட்சியில் இதுகாறும் இந்தி விளம்பரங்களை தமிழாக்கம் செய்து ஒளிபரப்பி வந்த வர்கள். இன்று நேரடியாக எந்த ஒரு விளக்கமும் இன்றி இந்தியில், ஒளிபரப்பி வருகிறார்கள். அவர்கள் எண்ணம் தெளிவாகத்தெரிகிறது அதாவது 2016-ஆம் ஆண்டிற்குள் இந்தியை தமி ழகத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். மொழிக்கலப்பு ஏற்பட்டு விட்டால் எளிதில் மக்களைக் குழப்பி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டமாகத்தான் தொடர்ந்து சமஸ்கிருதவாரம், இந்தி வளர்ச்சி அமைப்பு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் நிலையில் கட்டாயம் இந்தி கற்றல், மற்றும் குரு உத்சவ் போன்றவை. அதே போல் விளம்பரங்களில் எல்லாம் இந்தி மொழிச் சொற்களை அப்படியே தமிழில் மாற்றி எழுதும் போக்கும் தற்போது மிகவும் அதிகரித்து விட்டது, சமீபத்தில் வந்த பாரத் சுவச்சா அப்யான் என்ற புரியாத ஒன்று ஒருபக்கத்திற்கு விளம்பரமாக வந்திருந்தது, அதில் இந்தி மொழிச் சொற்கள் அனைத்தும் தமிழில் அச்சாகி இருந்தன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழனின் காலத்தில் அவனால் ஆதரிக் கப்பட்ட பார்ப்பனர்கள் தமிழ் மொழிச் சொற்களில் வடமொழியை எழுதிவந் தார்கள். அதனால் தான் பெரியார் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கும் வரை இன்று நாம் பெருமையுடன் கூறும் வணக்கம் வழக்கில் இருந்து அழிந்து, நமஸ்காரமாகி இருந்தது. இப்போதும் கூட கிராமங்களில் நமஸ்காரம் சாமி என்று சொல்லும் வழக்கம் இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். மீண்டும் பார்ப் பனர்களின் ஆதிக்கம் நமது தாய் மொழியைச் சிதைக்கும் வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து வருகிறது. ஆனால் நாம் இதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தமிழில் பேசுவ தற்கும், எழுதுவதற்கும் நிறைய வெட்கப் பட்டு தாய்மொழியில் பேசுவதை, எழுதுவதை தவிர்த்து வருகிறோம்.
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷ்ய நாடு தமிழைக் கொண் டாடுகிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லாவா? அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளனர். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷ்யத்திலும், இரண் டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும்,உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழை விட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்பட் டாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு

தமிழ்மொழியில் தங்கள் நாட்டு அதிபர் மாளிகையின் பெயரை எழுதிய தற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழர் களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.
"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை.அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை. இந்த ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை.இலக்கியம், வரலாற்றுச் செழுமை பெற்ற மொழிகளை ஆராய்ந் தோம். எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி" தென்பட்டது. அந்த மொழி யைச்சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதியுள்ளோம் என்கின்றனர். உலகத் தாய்மொழி நாளில் நாம் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையளிப்போம் முடிந்தவரை எளிமையான வடமொழிக் கலப்பில்லாத தூய தமிழிலேயே பேசுவோம்.

Read more: http://viduthalai.in/page1/88806.html#ixzz3FnQyiMAQ

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர்களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமா யணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page1/88803.html#ixzz3FnR8GNA7

தமிழ் ஓவியா said...

நாக்பூரின் காகபட்டருக்கு இல்லாத அதிகாரமா?

- குடந்தை கருணா

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி நாள் என உரையாற் றினார். ஆர்.எஸ்.எஸின் துவக்க நாளும் இது தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அதன் தலைவர் உரையாற்றுவது உண்டு. அது ஒரு செய்தியாக மறு நாள் செய்தித்தாளில் வரும்; சில தொலைக்காட்சிகளிலும் சில நொடிகள் அல்லது ஒரு நிமிடம் செய்தியாக ஒளிபரப்பியதும் உண்டு.

ஆனால் இந்த ஆண்டு, மோகன் பகவத்தின் முழு உரையும் நேரடி ஒளிபரப்பாக அரசுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பபட்டுள்ளது. அரசின் இயந்திரம், ஆர்.எஸ்.எஸி-ன் பிரச்சாரத்திற்கு துணைபோவதாக எதிர்கட்சிகள்கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், மோகன் பகவத்தின் நிகழ்ச்சி ஒரு முக்கிய நிகழ்ச்சி என்பதால் ஒளிபரப்பி னோம் என அரசுத் தொலைக் காட்சியில் இயக்குநர் பதிலளித் துள்ளார். இயக்குநரின் பதில் முட்டாள்தனமானது என சி.பி.எம். தலைவர் பிருந்தா காரத் கண்டித் துள்ளார்.

ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச் சாரகராக இருந்து அமெரிக்காவிற்கு மூன்று முறை பிரச்சாரத்திற்கு சென்று வந்தவர்தான் இன்றைக்கு பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி.
ஆகவே, அவரது ஆட்சியில் அவரது தலைவருக்கு இல்லாத உரிமையா? அல்லது அதிகாரமா? அரசுத் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியதோடு விட்டு விட்டாரே; அதனையும் தாண்டி, அனைத்து பள்ளிக்குழந்தைகளும், அனைத்து அரசுப் பணியாளர்களும் இந்த நேரடி ஒளிபரப்பை கேட்க வேண்டும் என உத்தரவிடாமல் விட்டாரே என நாம் மகிழ்ச்சி அடைந்து கொள்வதைத் தவிர வேறு வழி?

இதைவிட மிக முக்கியம், மோகன் பகவத் பேச்சில் மூன்று முக்கிய செய்திகள் கூறியதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்று, இந்த நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து உண்மையையும், அகிம்சை யையும் போதித்ததாம். இந்த தேச எண்ணத்திற்குக் காரணம் ஹிந்துத்துவா என்கிறார் மோகன் பகவத். ஆக இந்த நாட்டில் மன் னர்களிடையே சண்டை நடந்தது; மக்களிடையே பிறவி பேதம் இருந்தது எல்லாம் பொய் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

இரண்டு, இப்போது பதவி ஏற்றுள்ள மோடி அரசு, இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் தங்களது தொலைநோக்குப் பார்வையாலும், அனுபவத்தாலும் சொன்ன செய்திகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சரி. யார் அந்த தலைவர்கள், லோகமான்ய பாலகங்காதரத் திலகர், வீர சவர்க்கார், குரு கோல்வார்க்கர், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா இவர்களோடு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார். லோகியாவாதிகளும், அம்பேத்கரிஸ்டுகளும் கவலைப்பட வேண்டும். பெரியாரும், ஜோதிராவ் பூலேயும் இவரிடமிருந்து தப்பித்து விட்டனர். சவர்க்காரும், கோல் வால்கரும் அகண்ட பாரதம் உருவாகிட வேண்டும், சிறுபான்மை யினர் தங்களது அடையாளத்தை இழந்து ஹிந்து மதக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற பாசிச சிந்தாந்தத்தை கூறியவர்கள்.

மூன்றாவது, இதுதான். மிக முக்கியமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டிலும், கேரளாவிலும், புனிதப்போர் எனப்படும் தீவிரவாத நடவடிக்கை கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக, தமிழ் நாட்டில் காலூன்ற, தீவிரவாதம் என்ற பெயரைச் சொல்லி, மத்திய அரசின் உளவுத்துறை பாஜக காலூன்ற வழிவகை செய்கிறது என்பதை மோகன் பகவத்தின் உரை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

தமிழகம் என்றைக்கும் வன் முறையை ஓர் ஆயுதமாக பயன் படுத்தவில்லை; காரணம் இது பெரியார் பிறந்த மண்.

ஆனால், இன்று, மோகன் பகவத் பேச்சை நம்பி, மோடி செயல்படு வாரானால், வரலாறு விட்டுச்சென்ற செய்தி நமக்கு நினைவுக்கு வருகிறது. சூத்திர மன்னன் மராட்டிய சிவாஜி, ஆட்சியில் அமர்ந்ததும், காசியி லிருந்து காகபட்டர் வருகை தந்து, சிவாஜிக்கு உபதேசம் செய்ததன் விளைவு, சிவாஜியின் பேரரசு வீழ்ந்ததுதான் வரலாறு. அதே போல், இன்றைய நவீன காகபட்டராக இருக்கும் நாக்பூர் மோகன் பகவாத் பேச்சை கேட்டு மோடி செயல்பட் டால், அவருக்கும் சிவாஜிக்கு ஏற் பட்ட நிலைமைதான் நிச்சயம் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/88812.html#ixzz3FnRGvgzc

தமிழ் ஓவியா said...

முப்பது வயதிலேயே முதுகுவலி!

புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகுவலி வரும். ஆல் கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. ஆரோக்கியத்தை இழந்து 30 வயதுக்குள்ளேயே மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எக்கச்சக்கம்.

இந்த ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கணினிக்கு முன்னால் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.

எலும்பு மற்றும் முடநீக்கு இயல் நிபுணர் சு.ரமேஷ் பாபு இது குறித்து விரிவாகப் கூறுகிறார்: கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி, வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக முதுகைப் பிரிக்கலாம். இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும் முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.

கழுத்து வலி ஏன் வருகிறது?

கழுத்துப் பகுதியில் மொத்தம் 7 எலும்புகள் இருக் கின்றன. இந்த எலும்புகளின் இருபுறமும் சவ்வுகளும் சின்னச் சின்ன இணைப்புகளும் இருக்கின்றன. இதில், உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதுதான் சவ்வுகளின் வேலை. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சவ்வில் அழுத்தம் ஏற்பட்டு கழுத்து வலி வரலாம்.

சவ்வில் அழுத்தம் அதிகமாவதால் சவ்வு விலகி அருகில் இருக்கும் நரம்புகளைத் தொடும். இதனால் கைகளிலும் வலி ஏற்பட்டு மரத்துப் போவது, பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு கைகளில் தோன்றும்.

தவிர்ப்பது எப்படி?

படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலை யணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடு முதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

அடிமுதுகுப் பகுதியில் வரும் வலி ஏன்?

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் சவ்வு தேய்மானம் அடைந்து இடம்மாறும். சவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும். இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.

எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் உள்வாங்கிக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீன மடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதி யிலேயே அமரவேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழு தடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.

முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதுகுவலி வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக புற்று நோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!

Read more: http://viduthalai.in/page1/88783.html#ixzz3FnRwRbmS

தமிழ் ஓவியா said...

காது குடையலாமா?


அடிக்கடி காதை சுத்தம் செய்வதும் பிரச்சினை தான்... சுத்தம் செய்யாமலே விட்டு வைத் திருந்தாலும் சிக்கல்தான்!

உடலில் ஏற்படும் அழுக்கு, வியர்வை, துர்நாற்றத்தைப் போக்கி, சுறுசுறுப்பாகச் செயல்படுவதற் காகவே நாள்தோறும் குளிக்கிறோம். அதேபோன்று, நமது காதின் வெளிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் மெழுகு சுரப்பதையும் சுத்தம் செய்யவேண்டும். அப்படி சுரக்கும் மெழுகுகூட ஒரு வகையில், நம் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.

உண்மையில் காதில் பரவும் பாக்டீரியா மற்றும் காளான்களை மெழுகு அழிக்கிறது. கிருமிகள் அதிகரிக் காமல் தடுக்கும் ஒரு வகை மருந்தாக மெழுகு இருக்கிறது. சிலருக்கு காதில் அதிகமாக மெழுகு சேரும். அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்கள். சிலர் நாள்தோறும் காதில் ஏற்படும் மெழுகை ஒரு வேலையாகவே சுத்தம் செய்வார்கள். இது நன்மையா? தீமையா? எப்படிச் சுத்தம் செய்வது?

நாள்தோறும் நாம் காதில் சுரக்கும் மெழுகை சுத்தம் செய்வதனால் மட்டும் மெழுகு குறையாது. அதற்காக காதை சுத்தம் செய்யாமல் இருப்பதனாலும் பிரச்சினைகள் உருவாகும். மெழுகை சுத்தம் செய்யாமல் இருப்பவர் களுக்கு, என்றைக்காவது ஒருநாள் முக்கியமான இடத்தில் இருக்கும் போதுதான் காதில் பயங்கரமாக முணுமுணு என அரிப்பு கிளம்பும்.

அப்போது, கையில் எது கிடைக்கிறதோ, அதைக் கொண்டு காதை சுத்தம் செய்வார்கள். ஊக்கு, கொண்டை ஊசி, தீக்குச்சியின் கீழ்ப்பகுதி, பென்சிலின் அடிப்பகுதி என பலவற்றையும் காதில் போட்டு குடைவார்கள். இதுபோன்ற பொருள்கள் நடுக்காது வரை நுழைவதால், காயங்கள் ஏற்பட்டு தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.

காதுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி பொறுமையாகவும், மென்மையாகவும் சுத்தம் செய்யவேண்டும். தினமும் குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், டவல் அல்லது கைக்குட்டையின் நுனியை வைத்து சுத்தம் செய்யலாம். அது குளிக்கும்போது காதினுள் செல்லும் தண்ணீரை வெளியே கொண்டு வரும். பாதுகாப்பான முறையில் தரமான பட்ஸ் கொண்டு தேவையான போது சுத்தம் செய்வதே நல்லது.

காதில் வலி, சீழ் வடிவது, இரைச்சலாக இருப்பது, காது சரியாக கேட்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏதும் இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page1/88786.html#ixzz3FnS5xgTu

தமிழ் ஓவியா said...

இரவில் நன்றாக தூங்க...

தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது நாள்தோறும் வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செய்துவிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைவரும் படித்து கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்குவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.

அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது , ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிப்பதற்குள் உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாக இருக்கும்னு, நினைக்கிறீங்களா? வேறு ஒன்றுமில்லை, குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிப்பதற்குள் தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக் கொண்டி ருந்தாலும்கூட தூக்கம் வராது.

ஆனால், இப்போது, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள்பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருள்களையும் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.

செர்ரி பழங்கள்: மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் இந்த செர்ரிப் பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்

வாழைப்பழம்: இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் நிறைய இருக்கு. இது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமிமோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது.

மூளைக்குள்ளே சென்று 5 எச்.டி.பி. என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 எச்.டி.பி.யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்: நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிறது டோஸ்டுக்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஓட்ஸ் மீல்: ஓட்ஸ் கஞ்சி என்று சொல்லுவாங்களே அதைத் தான் அமெரிக்காவில் ஓட்ஸ் மீல்சொல் சொல்லுவார்கள்.

கதகதப்பான பால்: உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்றைக்கு பார்த்ததில் மேற்கண்ட நான்கு உணவுகளும் புதிதானது. பால் மட்டும் பழையதுதான்.

Read more: http://viduthalai.in/page1/88782.html#ixzz3FnSEZ4hB

தமிழ் ஓவியா said...

பெரியார்மேளா

பெரும்பான்மை மக்களாய் ஒன்றிணைவோம்! பெரியாரின் கனவை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வாக திருப்பூர், ராயபுரம், ஒய் டபிள்யூ.சி.ஏ அருகில் மாலை 5.30 மணிக்கு கலையரங்கு, கருத்தரங்கு பொது அரங்கு என மூன்று பிரிவுகளாக பெரியார் மேளா எனும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

தமிழர் தலைவர் சிறப்புரை

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது எழுச்சியுரையில் குறிப்பிட்டதாவது:-

திருப்பூரில் ஒரு அத்தியாயம் படைக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் கான்சிராம் அவர்கள் கொள்கையுடனும், இலட்சியத்துடனும், உறுதியுடனும் இருந்த அம்மையார் மாயாவதி அவர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். உத்தரபிரதேசத்தில் பெரியார் மேளா மிகப்பெரிய அளவுக்கு நடத்தப்பட்டது. எந்த நேரத்தில் எந்தத் தலைவரை அடை யாளப்படுத்த முடியுமோ! அந்த வகையில் அங்கு செய்தார்கள். அது இந்தியாவை உலுக்கிற்று. அதிலிருந்து பார்ப்பனர்களால் மீளமுடியாத சூழல் அதே போன்ற நிலைமை உருவாக்க கால்கோள் விழா நடத்தியிருக்கிறீர்கள். 1000 இளைஞர்களை கொள்கைவாதிகளாக உருவாக்கி அவர்களை பயிற்சி பெறச்செய்தால் மிகப்பெரிய மாற்றம் வரும்.

பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அரசியலில் அம்பேத்கர் பங்கு கொண்டார். அதை தவிர இருவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரு கருத்து சம அளவினாலானவையே. இரு தலைவர்களும் சமுதாய புரட்சிக்கான அறிவாயுதத்தை தூக்கக்கூடிய புரட்சியை, வழிமுறைகளைக் கொடுத்தார்கள். 5 பேரை இவ்விருவரும் அடையாளம் காட்டினார்கள் 1) ஜோதி பாபூலே 2) சாகு மகராஜ் 3) நாராயணகுரு 4) கன்சிராம் 5) மாயாவதி இதில் ஜோதி பாபூலே அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இவ்வுணர்வுக்கு அடிப்படையான பண்பாட்டுப் புரட்சியை உருவாக்கினார். அதுவும் ஈரோட்டுப் பாதையும் ஒன்று தான்.

கான்சிராம் அவர்களைப் பற்றி LEADERSHIP OF DALID என்ற நூலில் பத்ரிநாராயணன் என்பவர் 40 ஆவது பக்கத்தில் சொல்கிறார். அவர் இந்தியா முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு இரும்புப் பெட்டியை கொண்டு போவார். அதில் பாபாசாகேப், பீம்ராவ் அம்பேத்கர், ஜோதி பாபூலே, தந்தை பெரியார் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் படங்களை எடுத்துச்சென்று இவர்கள் தான் இந்தியாவில் புரட்சியை உருவாக்கியவர்கள்.

இவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடையே எடுத்துக் கூறுவார். எந்தக்கிளர்ச்சி சம்பந்தப்பட்ட விசயமாக இருந் தாலும் தமிழகத்தை பொறுத்த அளவிலே திராவிடர் கழகத்தை கேட்டு கருத்துப்பெறாமல் கன்சிராம் அவர்களும் சரி அம்மையார் அவர்களும் சரி முடிவெடுத்ததே கிடையாது. ஆட்சியை பற்றிக் கவலைப்படாமல் பெரியாரை மக்களிடையே அடையாளம் காட்டினால் அது மிகப்பலன் தரும் என்று கன்சிராம் அவர்களே சொல்வார்கள்.

அவ்வாறே மாயாவதி அவர்களும் அறை கூவல் விடுத்து பயணம் செய்தார்கள். தலைவர்களின் பிறந்த நாளை தத்துவ ரீதியாக கொண் டாடினார்கள். உத்தரபிரதேசத்தில் அதாவது கும்பமேளா நடத்திய இடத்தில் பெரியார் மேளாவை நடத்திக் காட்டிய பெருமை பகுஜன் சமாஜ் கட்சிக்கு உண்டு.

பெரியார் மேளாவில், தந்தை பெரியார், டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், கான்சிராம் ஆகியோரின் படங்களுக்குத் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் (4.10.2014).

எல்லா ரயில்களும் லக்னோவை நோக்கி அணிவகுக்க திராவிடர் கழக சார்பில் நாங்களும் பெரியார் மேளாவுக்கு சென்றோம். அதற்காக கன்சிராம் அவர்களையும், அம்மையார் மாயாவதி அவர் களையும் திருச்சிக்கு வரவழைத்து பெரிய பாராட்டு விழாவை நடத்திய இயக்கம் திராவிடர் கழகம்.

ஜெய் பீம் என்றாலும், அம்பேத்கர் வாழ்க! என்றாலும் தந்தை பெரியார் வாழ்க! என்றாலும் அர்த்தம் ஒன்று தான்.

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும் சமுதாயம் நோக்கி நடக்கட்டும் இவ்வையம், வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/88805.html#ixzz3FnSULUuO

தமிழ் ஓவியா said...

விரும்பத் தகாத சுவரொட்டிகள், போராட்டங்கள், வன்முறைகள் மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்!

அ.இ.அ.தி.மு.க. தலைமையே முன்வந்து கட்சியினருக்கு அறிவுரை கூறினால் தலைமைக்கும் - கட்சிக்கும் - ஆட்சிக்கும் பயன் ஏற்படும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் உருக்கமான அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியரின் உருக்கமான அறிக்கை

ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து அ.இ.அ.தி.மு.க. தலைமையே முன் வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினால், தலைமைக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக்கூடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.

சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்!

அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் - பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.

நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை - குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.

அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு - உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.

அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்!

இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!

இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!

எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்!

மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!

நாம் இப்படி எழுதுவது அக்கட்சியினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்விளைவுகளும்தான் மிஞ்சும்.

யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!

அரசியல் பார்வை இல்லை!

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.

அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
5.10.2014

Read more: http://viduthalai.in/page1/88747.html#ixzz3FnSqem00

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/page1/88749.html#ixzz3FnSzwAeF

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத்

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88762.html#ixzz3FnT9Y3dw

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனமது செம்மை?

மனமது செம்மையா னால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிறார் களே,

அப்படியென்றால் மந்திரம் ஜெபிப்பவர் களும், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்பவர்களும் மனமது செம்மை இல்லாதவர்கள் - அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/e-paper/89060.html#ixzz3FqguYcUc

தமிழ் ஓவியா said...

உலகிலே பலப்பல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசும் நாவலரையும் நான் அறிவேன்.
நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால் அவர் களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணர வேண்டுகிறேன்

விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கச் செய்தார் சாக்ரடீஸ்! உலகம் உணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ! வைதீகத்தின் மடமையை வாட்டினார் வால்டேர்! மக்கள் மன்றத் திற்கு மதிப்புத் தர வேண்டுமென்றார் ரூஸோ!

வேதப் புத்தகத்தை விற்று விபச்சார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிப் ஜிவிங்லி, மார்டின் லூதர் போன்றோர்!

அடிமைகளை விடுவித்தார் ஆபிர காம் லிங்கன்! முதலாளிகளின் கொடு மையை எடுத்துரைத்தார் காரல் மார்க்ஸ்! அதற்காகப் போராடினார் லெனின்!

சீனரின் சிறுமதியைப் போக்கினார் சன்யாட் சென்! துருக்கியரின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால் பாட்சா! இறைவன் பெயரைச் சொல்லி ஏழையை வஞ்சித்தவரைச் சந்தி சிரிக்க வைத்தார் இங்கர்சால்! பேதைமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா!

வாழ்க்கையில் வாட்டம், வேதனை, வறுமையின் கொடுமை, வஞ்சகத்தின் ஆட்சி - இவைகளிருப்பதைப் படம் பிடித் துக் காட்டினர் கோர்க்கி, டால் டாவஸ்கி, சிங்கனோ போன்றவர்கள்!

இவர்களும் இன்னும் எண்ணற்றவர் களும் தோன்றி தொல்லைப்பட்டு, தூற்றப்பட்டு, கொடுமைக்கு ஆளாகி மனித சமூகத்தின் மறுமலர்ச்சிக் கொள்கைகளை, புதுகோட்பாடுகளை எவர்க்கும், எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறி பாமரனுக்காகப் போராடியதனால் - இன்று பல்வேறு நாடுகளிலே மக்களின் மனம் விடுதலை பெற்றது; அடிமை மனப்பான்மை அகன்றது. அதனால் அங்கு ஒரு நாட்டை, இன்னோர் நாடு அடக்க முடியவில்லை! அடக்கினால் எரிமலை கக்குகிறது; மக்கள் மனம் எனும் கடல் பொங்கி வழிகிறது. புரட்சிப் புயல் வீசுகிறது! அதன் முன்பு எந்தக் கொடியவனாலும் நிற்க முடியவில்லை. இங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து எடுத்துக் கூறி எதிர்த்தவர் பெரியார் ஒருவர் தானே!

எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதரின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுவது வாடிக்கை.

---------தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் அண்ணா

தமிழ் ஓவியா said...

பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்தார் வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன்


கொழும்பு, அக்.11-- தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் கடல் வளத்தை பாது காத்ததாக மீனவர்களி டையே வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச் சர் டெனிஸ்வரன் தெரி வித்துள்ளார்.

வல்வெட்டித்துறை கிழக்கு அய்க்கிய மீனவர் கள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை யளித்த போது அவர் இவ்வாறு கூறி யுள்ளார்.

கைத்தடியில் உள்ள வடக்கு மாகாண சபைக்கு எதிரில் மீன வர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், தமக்கு ரோலர் படகு களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண் டும் எனக் கோரி அமைச் சர் டெனிஸ்வரனிடம் மனுவை அளித்தனர்.

ரோலர் படகுகள் காரண மாக வடக்கின் கடல் வளம் அழிந்து போகும் என்பதால், அதற்கு அனு மதி வழங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் அமைச்சர் டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/89057.html#ixzz3FqhbhRHV

தமிழ் ஓவியா said...

மனிதன்பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.

- (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/89067.html#ixzz3FqhoYStd

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸ் முதல் பெரியார் வரைபெரியார், சாதிய அமைப்பு, மத அமைப்பு, மூடநம்பிக்கை நொறுக்கப்பட வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தோடு வாழ்ந்து செயல்பட்டார்கள். அதில் மக்கள் திருந்துவதில் சில கோளாறினால் வெறி கொண்டு சிலை உடைப்பு, அவமரியாதை செய்தார்கள். நம் மக்கள் ஏக்கத்தோடு உளறிய செயல்பாடுகள் மக்கள் என்றும் நல்லவைகளை ஏற்றுக் கொண்டதில்லை எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சொல்லியபடி நடந்ததில்லை அதைத்தான் பட்டுக்கோட்டையார்

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனை ஞானிகளும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாம் தான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க

மனிதர்கள் நடவடிக்கையால் எல்லோ ரும் மனம் நொந்துதான் செத்த கதை. சாத்திர சம்பிரதாயங்களை மாற்ற முடிய வில்லை அதன் விளைவு பிராமணியம் கொடி கட்டிப் பறக்கிறது. பிராமணீய மனிதர்களும் ஒழுக்கக் கேடானவர்களாக மாறி விட்டனர். இன்னமும் சொர்க்கம், நரகம் என்று பேசி அத்தனையும் தலை விதிப்படி தான் நடக்கும் என்று புலம்பித்திரிவதைப் பார்க்கின்றோம்.

படித்த மக்களிடம், ஜாதி, மத உணர்வு, மூடநம்பிக்கைகள் கூடி விட்டதின் காரண மாக, இயற்கையை நேசிக்க முடியவில்லை. எந்த கஷ்டத்தையும் கடவுள் காப்பாற்ற வில்லை. காப்பாற்றாத கடவுளைக் கூவி அழைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

காலையிலிருந்து எல்லா மதத்தின் வழிபாட்டு இடங்களில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சாக்ரட்டீஸ் காலத்திலிருந்து, பெரியார் ஜீவா காலம் வரை எத்தைனயோ முழக் கங்கள்!

நாட்டில் இடதுசாரி இயக்கம், அதன் தலைவர் தொண்டர்கள்கூட அதைக் கடைப்பிடிக்காத நிலைமை. மனிதன் மனிதனாக வேண்டுமென்றால் நல்ல மனித சிந்தனை, மனிதப் பண்பு என்று ஏற்படப் போகிறது? இப்படி ஒரு அரசியல் அமைப் பிற்கு விடுதலை தேவைதானா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இன்றைய இளை ஞர்கள் தெளிவு பெற வேண்டும் கல்வி அமைப்பும் விஞ்ஞானத்தை போதித்து அஞ்ஞானத்தை ஒதுக்க வேண்டும்.

- இரா. சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

Read more: http://viduthalai.in/page-2/89074.html#ixzz3FqiPMGQo

தமிழ் ஓவியா said...

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரவப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.

இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.

போதாக் குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணியென்னும் கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வலமாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவ தாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது. பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.

போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண் ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணு வதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக் கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவ தற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லுவதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவதாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமூகத்தையும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 29-03-1931

Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqiqiRqn

தமிழ் ஓவியா said...

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்

சீக்கிரத்தில் இந்தியச் சட்டசபை கலையப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் 10ஆம் தேதி உப தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது

இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக்கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிருபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1.02.1931 குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம் அப்போது சிலருக்கு அதுஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரஸ்காரர்களுக்குச் சமீபத்தில் நடந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வதானால், சட்டசபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர, வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஆதலால் இந்த ஒப்பந்தமோ அல்லது இந்த அபிப்பிராயம் தொக்கி இருப்பதான குறிகளோ, ராஜிய சம்பாஷணையில் கலந்திருக்க வேண்டுமென்று நாம் யூகிக்க பல வழிகளிலும் இடம் மேற்படுகின்றது.

ஆனால், காங்கிரஸ்காரர்களுக்குத் தங்களுக்கு வெற்றி ஏற்படுவது நிச்சயம் என்கின்ற தைரியமில்லாவிட்டால் கராச்சி காங்கிரஸ் சட்டசபைப் பிரவேசத்தை ஒரு சமயம் மறுத்து விட்டாலும், மறுத்துவிடக்கூடும். ஆகையால் எதுவும் கராச்சி காங்கிரசில்தான் முடிவு பெறலாம்.

ஆனாலும், அதுவரை அடுத்த தேர்தலுக்குச் செய்யப்பட வேண்டிய முஸ்தீப்புகளில் ஒன்றாகக் கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும் அங்குமிங்குமாக தலை நீட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். ஆனால் தீண்டாமை விலக்கு விஷயமாக மாத்திரம் எதுவும் தலைகாட்டப்பட மாட்டாது.

ஏனெனில், தீண்டாமை விஷயம் பேசினாலோ, அதற்காக மறியல் முதலியவைகள் துவக்கப் பட்டாலோ ஓட்டுக்கிடைப்பது கஷ்டமான காரியமாகி விடுமாதலால், அது கிணற்றில் போடப்பட்ட கல்லுபோல் பேசாமல் இருந்து கொண்டு இருக்கும். ஆதலால், இப்போது சட்டசபைகளில் இருப்பவர்கள் கூட, தீண்டாமை சம்பந்தமாகப் பேச பயப்படுவதுடன், ஜவுளி மறியலுக்கும், கள்ளு மறியலுக்கும் கூட தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டாலும் கொள்ளுவார்கள்.

தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சட்டசபை அங்கத்தினர்கள் கூட அடுத்த தடவை தேர்தலின் மூலம் சட்ட சபைக்கு வரவேண்டியவர்களாக இருப்பதால் அவர்களுக்கும் கூட தீண்டாமைக் கொடுமையைப்பற்றிப் பேசுவது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில், ஒன்று தீண்டாமை யைக் கடிந்து பேசுகின்ற வர்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போகும்.

இரண்டு, தீண்டாமை ஒழிந்து விட்டால் தீண்டாதவர்களின் பெயரால் இப்போது சிலருக்குக் கிடைத்து வரும் சௌகரியங்கள் பிறகு கிடைக்காமல் போகலாம். ஆகவே இரண்டு காரணங்களால் அவர்களும் பயப்படுவார்கள்.

ஆகவே இந்தக் காரணங்களால் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பை நாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரசினால் பொதுமக்களுக்குப் பயன் உண்டு என்பதையும் அந்தக் காரணத்தால்தான் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கின்றது என்பதையும் மாத்திரம் தான் நாம் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பிறத்தியாரையும் நம்பச் செய்யமுடியவில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 15.03.1931

Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3FqizwETO

தமிழ் ஓவியா said...

ருஷியாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்

உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில், நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து அவர்களுக்குக் கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்.

எங்கள் தேசத்தில் கல்வி கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. உங்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். தேக பலம், கல்வி இவை இல்லாதவர்களையும், உபயோகித்துக் கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த்தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தியையும் நம்பிக்கையையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்.

விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாய் இருக்கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்றதென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்.

இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இதைத் தவிர மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது மதம், செல்வ நிலை. சமுக வாழ்வு ஆகிய விஷயங் களில் உங்களினின்று மாறுபட்டவர்கள் இடம் கோபியாமல் விவசாயிகளைக் கல்வி மூலம் திருத்த முயற்சிப்பது போல் இவர்களையும் கல்வி மூலம் திருத்தும்படியான முறையை அனுஷ்டிக்க வேண்டாமா? என்றும் சொன்னாராம்.

இதை மாத்திரம் நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மதப்பித்தர்களையும், செல்வச் செருக்கர்களையும், சமூக வாழ்வில் உயர்தனம் பெற்ற அனுபவக்காரர்களையும் நல்லவார்த்தையாலோ, பிரச்சாரத்தாலே, கல்வியாலோ திருத்துவதென்பது சுலபமான காரியம் என்பது நாம் கருதவில்லை. இவர்களுக்கு ருஷியக்காரர் செய்யும் ஏற்பாடுகள் தான் பொருத்தமானது என்பது நமது அபிப்பிராயம்.

ஆகவே, எல்லா விஷயத்திலும் ருஷிய அரசாங்க சீர்திருத்த முறை மேலானது என்றே சொல்லுவோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931

Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3Fqj6OSIA

தமிழ் ஓவியா said...

எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை


எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?

போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?

போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.

போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு நழுவி விடுகிறார்.)

எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 05.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89095.html#ixzz3FqjDNh6X

தமிழ் ஓவியா said...

நல்வாழ்வு வாழ்வதென்பதற்கும் சுக வாழ்க்கை அடைவதென்பதற்கும் வாழ்க் கைத் தரம் உயர வேண்டும் என்பதற்கும் ஆசைப்படுவதில் மனிதனுக்குக் குறிப்பிட்ட எல்லையே கிடையாது. நேற்று அடைந்த தைவிட இன்று ஒரு படி அதிகச் சுகம் கண்டால் இன்னமும் இதைவிட அதிகச் சுகம் காண வேண்டுமென்று முயற்சிப்பான்.

இப்படியே படிப்படியாக நாளுக்கு நாள் தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற எண்ணத்திலேயே கவலை கொள்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாது. தான் சாகும்வரை இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். அதனால் கவலை அழியாது.

- தந்தை பெரியார் பொன்மொழி

Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqjRRn1j

தமிழ் ஓவியா said...

அடடா... என்ன... சாமர்த்தியம்!


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பாக ஏடுகள் வெளியிடும் தளுக்கும், குலுக்கும் அடடா, சொல்லி முடியாது.

ஒரு மாலை ஏடு எழுதுகிறது (ஜெயலலிதாவுக்குச் சாதகமாக) ................................... என்று பிரபல சட்ட வல்லுநர் கூறினார்.

ஏன் அந்த நீதிபதியின் சட்ட வல்லுநரின் பெயரைச் சொல்லுவதில் என்ன சுளுக்கு?

அப்படி ஒருவர் சொல்லியிருந்தால்தானே அவர் பெயரைச் சொல்ல முடியும்.

பத்திரிகைகாரர்களின் ஆசையையே குதிரையாக்கி சவாரி செய்து பார்க்கிறார்கள், அவ்வளவுதான்!

துக்ளக்கை எடுத்துக் கொள்வோம்.

கோர்ட் வளாகத்தில் கண் கலங்கியபடி இருந்த மூத்த அமைச்சர்களைப் பார்த்து, இப்படி கோழை போல அழாதீர்கள்; சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும். சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்று கூறியதோடு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், பழைய அமைச்சர்களே நீடிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

7 ஆம் தேதி மனு தள்ளி வைக்கப்பட்டது என்ற செய்தி தெரிய வந்த பிறகும், ஜெயலலிதா வருந்தவில்லை என்று சொல்கிறார், உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்.

பார்த்தீர்களா... பார்த்தீர்களா...?

தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது என்றும், சொல்கிறார் உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்....

இந்த வெற்று வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா?

இந்தச் சாமர்த்தியம் அவாளையன்றி வேறு யாருக்கு வரும்?

Read more: http://viduthalai.in/page-8/89086.html#ixzz3FqjhNM1P

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கராச்சாரி அவதார ரகசியம்


ஆதிசங்கராச்சாரி ஏன் இவ்வுல கில் அவதரித்தார்? அவர் அவதரித்த தன் உள்நோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரமசிவனே காதோடு காதாக தனது ஒய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்டவாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.

கலியுகத்திலுண்டாகும் பக்தர் களுடைய சரித்திரத்தைச் சுருக்க மாகச் சொல்லுகின்றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக்கொள்ளத் தக்கது. ஒருவர்க்குஞ் சொல்லத்தக்கது அன்று. அம்பிகையே! பாவகர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற்கலியுகத்தில் எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்குவேன் மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல் வேன், கேட்பாயாக!

இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் ... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்ப வர்கள்; வேதபோதக வாக்கியங் களுக்கு மாறுபாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்; பெரிய சாத்திரங்களால் அத்வை தத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர் களாகிய இவர்களால், குல ஆசா ரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.

அப்போது அவர்களைக் கரை யேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற் றில் சங்கரர் என்னும் திருநாம முடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்.
(சங்கர திக்கு விஜய காவிய வசனம் நூல், பக்கம் 2) - மருதவாணன் புரிகிறதா சூட்சமம்?

Read more: http://viduthalai.in/page3/89116.html#ixzz3FqkP4UmI

தமிழ் ஓவியா said...

ஜவஹர்லாலும் சமதர்மமும்

பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால், தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்குப் பதிலாக, நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அதாவது, தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமுகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்லவென்றும், ஆனால், நாளா வட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார். மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-05-1936 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 காலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும். இதை அறியாமல், அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள் தனமேயாகும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 31.05.1936

Read more: http://viduthalai.in/page5/89119.html#ixzz3Fql3NF7N

தமிழ் ஓவியா said...

காந்தியாரும் ஹிட்லரும்

ஹிட்லர் முடிவெய்திவிட்டதாக வெளிவந்த சேதி உறுதியாக்கப் பட்டு விட்டது. இது பொது உடைமைக்கு வெற்றி என்று கருதப்பட வேண்டும். ஹிட்லர் காந்தியாரைப் போலவே ஒரு பைத்தியக்காரக் கொள்கையை மேற்போட்டுக் கொண்டவர். அதாவது 1930 இல் தமிழ்நாட்டில் பொது உடைமைக் கொள்கை நல்ல முறையில் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும்போது காந்தியார் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்துவிட்டு அந்தப்படி ஆரம்பித்ததற்குக் காரணமாக.
நான் இந்த சத்தியாகிரகம் ஆரம்பிக்காமல் இருந்தால் நாட்டில் பொதுவுடைமைக் கிளர்ச்சி வலுத்து மக்களுடைய சமாதானமும் பாதுகாப்பும் பாழ்பட்டு விடும் என்று கூறினார்.

பாவம்! பரிதாபத்திற்குரிய ஹிட்லரும் அதுபோலவே.

பொது உடைமைப்பேயில் இருந்து உலகத்தைக் காப்பாற்றவே இந்தப் போரைத் துவக்கி இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே வந்தார். இவர்கள் இப்படிச் சொன்னதின் பயனாக இந்திய முதலாளிகள், பிரபுக்கள், இவர்களுக்கு சமமான வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்கள் ஆகியவர்களின் உதவியாலும் ஆதரவாலும் காந்தியார் அபரி மிதமான செல்வமும், போகமும், விளம்பரமும் செல்வாக்கும் பெற்றார். வெறிகொண்டவரின் சர்வாதிகாரம் போல் தன் வாயில் இருந்துவந்த வார்த்தைகள் எல்லாம், கையில் இருந்துவந்த எழுத்துக்கள் எல்லாம் அசரீரி வாக்குப்போல் ஏராளமான மக்கள் கருதும்படியான தன்மையும் பெற்றார். அதுபோலவே ஹிட்லரும் ஜெர்மன் மக்களுக்கு விளங்கினார்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 5.5.1945

Read more: http://viduthalai.in/page7/89122.html#ixzz3FqlLT4F5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


பிறர் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வதே ஒழுக்க நெறியாகும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே.

மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை, என்பது சம அனுபவம் (சமவாய்ப்பு) என்பதாகும்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.

பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்

மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.


Read more: http://viduthalai.in/page7/89123.html#ixzz3FqlSgqNM

தமிழ் ஓவியா said...

பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை

பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)
ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FqlprUpB

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.


Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3Fqlzl6uI

தமிழ் ஓவியா said...

ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?


- குடந்தை கருணா

கேள்வி: ஸ்லீப்பர் செல்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?

கிளிமூக்கு அரக்கன் பதில்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தமிழகத்தில் வர்ணபேதம், மனுதர்மம், மதம், ஜாதி போன்றவற்றை வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. ஆனால் பெரியார் காலத்தில் அவற்றை எல்லாம் வெளிப்படையாக முன்னெடுத்த ராஜாஜி தமிழகத்தில் அரசியல் செல்வாக்கற்றுப் போனதை நினைவில் கொள்க. ஆக பெரியாருக்குப் பிறகு தமிழக வெகுஜன மக்களை என்ன செய்தும் கூட மனுதர்ம மக்களாக மாற்ற முடியவில்லை. பற்றாக்குறைக்கு வெளிப்படையாக பஜகோவிந்த பெருமைகளைப் பேசினால் அருவருப்பாக வேறு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் பஜகோவிந்தங்கள் வேறு வழியே இல்லாமல் கையில் எடுத்ததுதான் ஸ்லீப்பர் செல் தாக்குதல்.

இந்த ஸ்லீப்பர் செல் பஜகோவிந்தங்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. எந்த கட்சிக்காரராகவும் தங்களை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சேஷாத்ரி, ஷர்மா, ஸ்வாமி, பாண்டே போன்ற கிரந்தப் பெயர்களை தங்கள் பெயருடன் மறக்காமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். பதிப்பகம், பத்திரிக்கை, இணையதளங்கள் நடத்துவார்கள்.

மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆட்சி யாளர்களை தூக்கிப்பிடிப்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஆனால் தங்களை நடுநிலையாளர் களாக வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் பேசுவார்கள். சினிமா பேசுவார்கள். ஷங்கரைப் புகழ்வார்கள்; பாலாவை புகழ்வார்கள் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய அறிஞர் உண்டா என்பார்கள்? சிந்து பைரவிக்கு பின்னர் தான் இளையராஜா இசைக் கலைஞர் ஆனார் என்று புகழ்வார்கள். வட மொழி கிரந்தத்தை வலியுறுத்திக் கொண்டே தமிழ் இலக்கணம் கூட எழுதுவார்கள். திடீரென அறிஞர் அண்ணா சொக்கத்தங்கம் என புகழ்வார்கள். திமுக , திராவிட இயக்கத்தையே குலைத்துவிட்டது என வருந்துவது போல் பேசிவிட்டு ஆர்.எஸ்.எசுக்குக் கொடி பிடிப்பார்கள். காவிப்பண்டாரங்கள் உயிரோடு கொளுத்த விரும்பிய காமராசரை புகழ்வார்கள். இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக கல்வியில் வேண்டும் என்பார்கள், விவரம் புரியாமல் நீங்களும் கைத்தட்டுவீர்கள்.

சாமானியர்களுடன் சாமானியராக இருக்கும் இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், பேச்சு வாக்கில் விபி சிங் என்று சொல்லிப்பாருங்கள். அலறுவார்கள். அலறலை அதிகப்படுத்த உங்களுக்குப் பெரியாரை பிடிக்கும் என்றும் சொல்லுங்கள். சமகாலத்தில் ஜீவா படம் பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள்.

இவ்வகை ஸ்லீப்பர் செல்கள், திமுக- _ அதிமுக என வந்தால் அதிமுகவையும், அதிமுக- _ பாஜக என வந்தால் பாஜகவையும் முழுமூச்சாக ஆதரிப்பார்கள்.

இந்த ஸ்லீப்பர் செல்களின் சிறப்பம்சம் நம் ஆட்களையே நமக்கெதிராக பேச வைத்து நம்மை செல்லரிக்க வைப்பதுதான் . திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறைக்கு அதன் எதிரிகள் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் எதிரிலேயே இருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஸ்லீப்பர் செல்கள் நம்மிடையே கலந்து, நமக்காகவே பேசுவது போல நடித்து, அவர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றவர்கள்.

ஸ்லீப்பர் செல்களை புறந்தள்ளுவதும் சுலபம் தான். பெரியாரின் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு விழிப்பாக இருந்தால் சமூகவியல் உரிமை மீறல் தாக்குதல்களில் இருந்து நான் தப்பித்ததைப் போல நீங்களும் தப்பிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page-2/89163.html#ixzz3Fz45EIkp

தமிழ் ஓவியா said...


நாட்டுக்குத் தேவை இந்துத்துவா கல்வி முறையாம்!

ஆர்ப்பரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

புதுடில்லி, அக்.12-_ இந்துத்துவம் என்பது இந்தியர்களின் உரிமையே! யார் ஏற்றுக் கொண்டா லும், மறுத்தாலும் இந்தி யாவில் உள்ள அனை வரும் இந்துத்துவத்திற்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தான்; உடனடியாக இந்துத்துவா கல்வி முறையைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மோகன் பகவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த இந் துத்துவ என்சைகிளோ பீடியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத் தில் பேசிய மோகன் பகவத் மீண்டும் இந்தியர் கள் இந்துக்கள் என்ற பிரச் சினையைக் கிளப்பியுள்ளார். 10.10.2014 அன்று தனி யார் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய மோகன்பகவத் இந்தியா வில் உள்ள மக்கள் அனை வரும் இந்துத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்,

இது அவர்களின் உரிமை, ஏதோ ஒரு காலத்தில் அந்நிய மதத்தவரின் கொடுமைக்கு ஆட்பட்டு நமது மக்கள் பிற மதங் களை பின்பற்றத் துவங் கினர். இருப்பினும் அவர்கள் இந்துக்களே, இந்துக்கள் என்பதற்கு ஏன் பலர் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். எனத் தெரியவில்லை. இந்துமத வரலாற்றின் வேரை அனைவரும் அறிந்து கொள்ள வேண் டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும். தற் போதுள்ள கல்விமுறை யில் இந்துத்துவத்தின் மதிப்பு காணாமல் போய் விட்டது. இது நம்மை பல நூறு ஆண்டுகளாக ஆண்ட அந்நிய ஆட்சியா ளர்களினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.

இந்துத் துவத்தை வளர்க்க வேண் டுமானால், முதலில் மாணவ மாணவியர்களி டம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இளைய வயதினரிடையே நமது இந்துத்துவத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க இதை விட எளிதான வேறு வழி இருப்பதாகத் தெரிய வில்லை. அந்நிய மதங்கள் கல்வி என்ற போர்வை யில் தான் அவர்களது மதத்தை நமது நாட்டில் பரப்பியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது பாடத் திட்டத் தில் நமது இதிகாசங்கள், மற்றும் மகாபுருஷர்களின் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கற்பதன் மூலம் எதிர் காலத் தலைமுறைகள் சிறந்த முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள், நமது அரசு இந்துத்துவக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.

இந்துத்துவக் கல்வி முறையை உலக நாடுகள் பல மறைமுகமாக நடை முறைப்படுத்தி வரு கின்றன. ஆனால் அக் கல்வி முறை தோன்றிய நமது நாட்டில் அது அழியும் நிலையில் உள் ளது. இருப்பினும் தற் போது பாரம்பரிய கல்வி அமைப்புகள் ஒரு சில அந்தக் கல்வி முறையை இன்றளவும் காப்பாற்றி வருகின்றன.

விரைவில் நாடுமுழுவதும் அக்கல்வி முறை நடைமுறைப்படுத் தப்படும் என்று மோகன் பகவத் கூறினார். மேலும், இந்துத்துவம் குறித்த உலகப் பார்வை யில் இதுவரை எழுதி வரும் பொய்யான கருத் துக்களை மறுத்து புதிய பதிப்புகளை இந்துத்துவ என்சைக்ளோ பீடியா விரைவில் கொண்டுவர முன் வர வேண்டும், இதன் மூலம் மீண்டும் இந்துத்துவம் புத்து ணர்ச்சி பெறும் என்றும் கூறினார். இக்கூட்டத்தில் பரமார்த்த நிகிகேதன் ஆசிரமத் தலைவர் சித் தானந்த சரஸ்வதி, மற்றும் பல் வேறு மடக் கல்வி நிறுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89167.html#ixzz3Fz4KWOXW

தமிழ் ஓவியா said...

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்


இந்தியக் குடிமக்கள்

மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/89149.html#ixzz3Fz4lcsn9

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு


கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!

Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது


சி.கார்த்திகா (3 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் இளைஞர் நீதி குழுமத் தலைவர்), ஏ.ஆனந்த ஜெரார்டு (சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இயக்குநர் சி.வி.சுப்பிரமணியம், பி.பாத்திமாராஜ் (இயக்குநர், சைல்டு லைன், நோடல் நிறுவன செட் இண்டியா), எம்.தவமணி (இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்),

டி.மலர்வாலண்டினா (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதி), எஸ்.ஞானராஜ் (சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), எஸ்.சுவேதா, எஸ்.முகிலா (முதலாம் ஆண்டு மாணவிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), தஞ்சை, அக்.12_பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மனித நேய கழகம், இலவச சட்ட ஆலோசனை மய்யம், சைல்டுலைன் நோடல் நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு இணைந்து வளர் இளம் பெண்களின் மேம்பாடு: வன்முறை சுழற்சிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தல் என்ற கருத்தை மய்யமாக கொண்டு சர்வதேச பெண்குழந்தைகள் நாள் விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சுவேதா வரவேற்புரையாற்ற, சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் தவமணி தலைமை வகித்தார். அவர் தமதுரையில், குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தி யார்த்திக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இது மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்றார். இதுபோல் பெண் குழந்தைகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைத்து சமுதாயத்தில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும் என்றார். தஞ்சை மாவட்ட 3 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரும் இளைஞர் நீதி குழுமத் தலைவர் மாண்பமை நீதிபதி கார்த்திகா சிறப்புரையாற்றினார்.

அவர் தமதுரையில், பெண்குழந்தைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்ற லையும், ஆளுமை திறனையும் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும் என்றும், வளர்ந்து வரும் நவீன பொருள்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று கூறினார். அதனையடுத்து மாவட்ட சட்டப்பணி கள் ஆணை குழு செயலாளர் / சார்பு நீதிபதி மலர்வலண்டினா கருத்துரையாற் றினார்.

அவர் தமதுரையில், பெண்கள் குழந்தைகள் நல்ல நண் பர்களுடைய தொடர்பை வைத்துக்கொள் வதன்மூலம் அவர்களுக்கு வரும் பிரச் சினையை எளிதில் அவர்களால் எதிர் கொள்ள முடியும் என்றார். வளர் இளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்றும் பெண் குழந்தைகள் வளர் இளம் பருவத்தில் கல்வியறிவில் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு அறிவில் சிறந்து நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சைல்டுலைன் இணை நிறுவன செட் இன்டியா இயக்குநர் பாத்திமாராஜ் வாழ்த் துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மற்றும் நிருவாக மய்ய இயக்குநர் சுப்பிரமணியன், பல்கலைக் கழக இலவச சட்ட உதவி மய்ய ஆலோ சகர் விஜயலஷ்மி மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி யாக பல்கலைக்கழக பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி முகிலா நன்றி யுரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/89134.html#ixzz3Fz5B4YFo