இதுதான் வால்மீகி இராமாயணம்
அயோத்தியா காண்டம்
அயோத்தியா காண்டம்
எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி
தை இராமனிடம் பேசும் பேச்சுகளிலிருந்து
அவன் அவளை அய்யுற்றது போலக் காண்கிறது. அதனால் அவன் அவள் மனத்தை அறியப்
பரதனைப்பற்றிக் கூறினான் என்றும் கொள் ளலாம். இவனுக்கு அய்யம் அடிக்கடி
நிகழ்வதுண்டு போலும். இவ்வையமே சீதையைத் தீப்புகச்சொல்லு மாறும், பின்னர்
வண்ணான் பேச்சைக் கேட்டுக் காட்டுக்கனுப்புமாறும் இராமனைத்
தூண்டியதுமாகும்.
நீ என்னுடன் வனத்தில் வாழவேண்டுமென்று
முன்னமே தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறான். இந்த
இடத்தில் நமது மொழி பெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் எழுதியுள்ள குறிப்பு
சிந்திக்கத்தக்கது. அது வருமாறு: (பக்கம் 133) இது இராமனுக்கு எப்படித்
தெரியுமென்று விளங்கவில்லை. தெரிந்திருந்தால் சீதையை அழைத்துப் போக ஏன் தடை
செய்ய வேண்டும்?
இராமனிடத்தில் பிச்சை வாங்கத் திரிசடன்
என்ற ஓர் ஏழைப் பார்ப்பனன் வருகிறானென்கிற இடத்தில் பக்கம் 141-இல் நமது
சீனிவாசய்யங்கார் எழுதியிருக்கும் குறிப்பும் கவனிக்கத் தக்கது. அது
வருமாறு: தசரதர் நீதி தவறாமல் எல்லாக்குடிகளும் மகிழும்படி அரசாட்சி செய்து
வரும்பொழுது, இப்படியிருப்பதற்குக் காரணம் தெரியவில்லை இராமன் ஏன் இந்தத்
திரிசடனைக் கவனிக்கவில்லை இனிக்கம்பர் புரட்டைக் கவனிப்போம்.
சீதையைப் பார்க்க இராமன் வந்தபோது, குடை
யின்றி, கவரியின்றி, முடியின்றி வருவதென்னே எனச் சீதை கவன்று வினாவினள் என
வால்மீகி கூறியதைக் கம்பர், அவன் கோசலையைப் பார்க்க வந்தபோதே கூறுகிறார்.
கோசலை இராமனைக் கண்டவுடனே, வாக்குத் தவறாத உன் தந்தை உனக்கு முடிபுனைவார்!
என மகிழ்ந்து கூறியதாக வால்மீகி கூறக்கம்பரோ, இடையூறுண்டோ நெடுமுடி புனைதற்
கென்றாள் எனக்கூறுகிறார். இதனால் கோசலை இருந்த நிலை யையே கம்பர் மாற்றிக்
கூறுகிறார்.
கம்பருடைய நோக்கமெல்லாம் இராமனையும்
தசரதனையும் கோசலையையும் நல்லவர்களாகக் காட்ட வேண்டுமென்பதே. அதற்காகக்
கதைப் போக்கையே மாற்றுகிறார். இராமன் கோசலையிடம் பரதன் முடி புனைவதையும்
தான் காடேக வேண்டியதையும் ஏக காலத்திலே கூறினான் என வால்மீகி கூறக்கம்பர்,
முதலில் பரதன் நாடாள நேர்ந்ததென இராமன் கூறினானெனவும், பின்னரே மெதுவாகத்
தான் காடேகுவதைக் கூறினானெனவும் கூறுகிறார். இத்துடன் அமையாது தமது அறிவு
வன்மையால் கோசலை மிகவும் நல்லவள் என்பதைக் காட்டிக் கொண்டே போகிறார்.
இராமன் பரதன் நாடாளப் போகிறானென்றவுடன்,
முறைமையன்றென்ப தொன்றுண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்
குறைவிலன் எனக்கூறினள் நால்வர்க்கும்
மறுவிலன் பினில் வேற்றுமை மாற்றினாள்
என்று பின்னரு மன்னவ னேவிய
தன்றென்னாமை மகனே உனக்கறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்
தொன்றி வாழுதி ஊழிபல என்றாள்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்
குறைவிலன் எனக்கூறினள் நால்வர்க்கும்
மறுவிலன் பினில் வேற்றுமை மாற்றினாள்
என்று பின்னரு மன்னவ னேவிய
தன்றென்னாமை மகனே உனக்கறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்
தொன்றி வாழுதி ஊழிபல என்றாள்
என்ற கவிகளைக் கம்பர் பாடுகிறார்.
இவ்விதமாக உண்மையில் கோசலை கூறியிருப்பாளேல், அவள் மிகவும்
தூயமனத்தினளென்பதற்கு அய்யமென்? வால்மீகி கூறும் காமியும்
சுயநலமிக்கவளுமாகிய கோசலையை இவ்வாறு மிகத்தூயவளாகப் புரட்டிக்
காட்டுகின்றாரே கம்பர், இவராலேயே தமிழ் மக்கள் அறிவு கெட்டது. ஆரியர் தமது
வீரனாகிய இராமனைத் தெய்வம் போலக் காட்ட முயன்றதிலும், தமது பார்ப்பன மதத்தை
நிலைநாட்ட முயன்றதிலும் அதிகமான பயனைத் தந்ததாகும் இக்கோடரிக்காம்பாகிய
கம்பர் புரட்டு. இனிமேலும் தமிழ் மக்கள் இப்புரட்டில் மயங்காது
உண்மையுணர்வாராக! அய்யோ, இக்கம்பரது அறிவும் கவித்திறமையும் இவ்வாறு தமது
தமிழ்க்குலத்தை வேரறுக்க முயன்ற ஆரிய வீரன் கதையைப் பாடித்தமது இனத்தையே
ஏமாற்றுவதில் பயனாயினவே; கோசலை நினைத்து வருந்தியதெல்லாம் தன் சக்களத்திகள்
கொடுமைகளையே என வால்மீகி கூறக் கம்பர், அவற்றைப் பற்றி ஒரு சொல்லேனும்
கூறினாரல்லர்.
கோசலை தன் மகன் மனப்படி இசைந்து அவனை
வழியனுப்புமாறு பார்ப்பானை அழைத்துச் செய்த ஓமம் முதலிய செயல்களையெல்லாம்
கம்பர் கூறாது, அவள் பரதன் நாடாளட்டும் இராமன் காடேகாவண்ணம் மன்னனிடம்
வேண்டப் போகிறேனென்று அங்கே விரைந்தேகுவதாகக் கூறுகிறார். இராமன் சுமத்திரை
அரண்மனையை அடைந்ததாக வால்மீகி கூறவே யில்லை. கம்பரோ, இராமன் கோசலையைத்
தொழுது சுமத்திரை வீட்டை நோக்கிப் போனான் என்றதுடன், இராமன் செயல்களை
நிறுத்திக் கொண்டு கோசலை செயல்களை விவரிக்கிறார். இப்போக்கு வால்மீகிக்கு
முற்றிலும் மாறுபட்டதே.
கோசலை தசரதனை அடைந்து புலம்பினதாகவும்,
அங்கே வசிட்ட முனிவன் வந்து தசரதனைத் தேற்றிய தாகவும், தசரதன் வசிட்டனை
நோக்கிக் கைகேயியின் மனத்தை மாற்றி இராமனுக்கு முடி சூட்டுமாறு
வேண்டியதாகவும், முனிவன் கைகேயியைத் தன் மனத்தை மாற்றிக் கொள்ளும்படி
வேண்டியதாகவும், கைகேயி இராமன் காடேகானேல் உடனே மடிவே னென்று கூறியதாகவும்,
முனிவன் அவளை இகழ்ந் துரைத்ததாகவும் கம்பர் கூறிவிட்டுப் பின் தசரதன்
முனிவனை நோக்கிப் பின்வருமாறு கூறுவதாகக் கூறுகிறார்.
இன்னே பலவும் பகர்வான்
இரங்காதாளை நோக்கிச்
சொன்னேன் இன்றே
இவளென் தாரமல்லள் துறந்தேன்
மன்னே யாவான் வருமப்
பரதன் றனையும் மகனென்
றுன்னேன் முனிவா
அவனுமாகான் உரிமைக் கென்றான்
இரங்காதாளை நோக்கிச்
சொன்னேன் இன்றே
இவளென் தாரமல்லள் துறந்தேன்
மன்னே யாவான் வருமப்
பரதன் றனையும் மகனென்
றுன்னேன் முனிவா
அவனுமாகான் உரிமைக் கென்றான்
இது வால்மீகி கூற்றுக்கு மாறுபட்டது.
வால்மீகி அயோத்தியா காண்டம் பன்னிரண்டாம் சருக்கத்தில், இராமனைக்
காட்டுக்கனுப்புவது பரதனுக்கு இஷ்ட மானால் நான் இறந்த பிறகு அந்தப் பாவி
என் உத்தரகிரியைகளைச் செய்ய வேண்டாம் என்றும், சருக்கம் பதினான்கில், இந்த
அபிஷேகத்தை நீ தடுத்தால் மகா பாவியான நீயும் உன் மகனும் எனக்குத் தர்ப்பணம்
முதலிய உத்தரகிரியைகளைச் செய்ய வேண்டாம் என்றும் தசரதன் கைகேயியை நோக்கிக்
கூறுவதாகக் கூறுகிறார். இது அவனுடைய உண்மை மனப்பான்மையன்று.
இப்பேச்சுகளெல்லாம் கைகே யியை அச்சுறுத்தித் தன் வழிப்படுத்தவே கூறிய
வனாவான். பின் சருக்கம் 42இல் இராமன் காடேகும் போது பின் தொடர்ந்த தசரதன்
தளர்ந்து, நீ என் மனைவியல்லள். பரதன் இந்த அரசைப் பெற்று மகிழ்ந்தால் அந்த
மகா பாவி எனக்குச் செய்யும் உத்தர கிரியைகள் எனக்குச் சேரவேண்டா என்று
கடிகிறான். இக்கூற்று வசிட்டன் முதலியவருக்குத் தெரியாது; கோசலை அறிவாள்.
மேலும் பரதன் தசரதனுக்கு நெருப்பு மூட்டுகிறா னென்றும், அவனே உத்தரகிரி
யைகளை யெல்லாம் செய்கிறான் என்றும், பின்னரும் இராமனைப் பரதன்
சந்தித்தபோது, நானும் சத்துருக்கனும் உத்தரகிரியைகளைச் செய்து விட்டோம்
என்று கூறியதாகவும் வால்மீகி தெளிவாக எழுதுகிறார்.
இதற்கு முற்றிலும் மாறுபாடாகக் கம்பர்
இச்சொல் லைத் தசரதன் வசிட்டனிடம் கூறியதாகவும், அதனால் உத்தரகிரியைகள்
செய்யத்துணிந்த பரதனை இச்செய்தி கூறி முனிவர் தடுத்துவிட்டதாகவும், அதனால்
பரதன் கீழே விழுந்து புலம்பினானெனவும் கதையையே மாற்றி விட்டார். இதனால்
செய்திகளையெல்லாம் மறைத்து, அவனை ஓர் பாவியாகக் காட்டுகிறார். என்னே
இக்கம்பர் தம் தீய மதி! இவ்வாறு மாற்றிப் பரதனை யாவரும் இகழுமாறு செய்ததால்
இவர் என்ன பயன் பெற்றார்?
இவ்வுண்மையையறிந்தால், இப்புன்மதிக் கம்பரை
அறிவுடையார் வெறுக்காமலிருக்க முடியுமா? இவர்கள் எவ்வளவு நயமோடு
திகழ்ந்தாலென்? புல்லிய கதையில் பொய்ம்மையாக அமைந்து இன்கவியாயினும்,
அவ்வின் கவி யாது பயன் தருவதாகும்? பயனில் சொற்களைப் பாராட்டிப் பாடிய
இக்கம்பர் தம் புல்லவிருந்தவாறென்னே! தன் மாயக் கருத்தின் தடிப்பே இது
போலும்! செந்தமிழ்நாட்டுச் சீரிய கதைகள் இப்பொய்ம்மையாளர் கண்முன் தோன்றில
போலும்! இவர் கவித்திறம் இவர் வாக்குப்போலவே புல்லரிடை யுகுத்தமுதேயும்
போலும்!
நிற்க, பின்னர்க் கோசலை, மன்னனிடம் குற்றமில்லை யென அறிந்து, இராமனைக் காக்க வேண்டினளெனவும், தசரதன் இராமனை நினைத்து புலம்பியதாகவும், முனிவன் தான் இராமனை வனமேகாமல் தடுப்பதாகக் கூறியதாகவும், மன்னன் மயங்கி தான் முன் வேட்டையாடச் சென்றபோது ஒரு முனி மகனைத் தவறுதலாகக் கொன்றதையறிந்த குருடராகிய முனிவர், அவனைப் பிள்ளைகளைப் பிரிந்து புத்திரசோகத்தால் சாவானெனச் சபித்ததாகவும், அதனால் இராமனைப் பிரிந்து தான் கட்டாயம் சாகப்போவதாகவும் கூறின னெனவும் கம்பர் கூறுகிறார். இச்சாப வரலாற்றைத் தசரதன் சாகும்போது கூறுவதாக வால்மீகி எழுதுகிறார். இதன் உண்மையை அச் சமயத்தில் ஆராய்வோம்.
123 comments:
தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட மூத்த திறமையான வழக்குரைஞர்களை நியமித்திடுக
தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட மூத்த திறமையான வழக்குரைஞர்களை நியமித்திடுக
உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறச் செய்திட வேண்டும்
இடஒதுக்கீட்டின் அளவை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரம் தேவை!
மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டுகோள்!
சென்னை, செப்.30- தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கிட்டினைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த திறமையான வழக்கறிஞர் களை நியமித்து வாதாடி வெற்றி பெறச் செய்ய வேண் டும் என்று திராவிடர் கழகம் இன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்துவரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னைப் பெரியார் திடலில் 30.9.2014 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
1980 ஆம் ஆண்டுமுதல் 34 ஆண்டுகாலமாக அரசு ஆணையின் மூலமாகவும், 1994 ஆம் ஆண்டுமுதல் 20 ஆண்டுகாலமாக சட்ட ரீதியாகவும் (76 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாது காப்பு) தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
1992 இல் மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில், மத்திய அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்தபோது, அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் (இந்திரா - சகானி வழக்கில்) பொதுவாக 50 விழுக் காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மிகக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தாலும், பல நியாயமான காரணங்களால் கூடுதலாகவும் தரப்படலாம் என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்துவரும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், கடந்த 22.9.2014 அன்று உச்சநீதி மன்றம் இது தொடர்பாக தமிழ்நாடு அரசை விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மக்கள் தொகை யில் பிற்படுத்தப்பட்டோர் சதவிகிதம் 73.5 என்றும், தாழ்த்தப்பட்டோர் சதவிகிதம் 22.16 என்றும், பழங்குடியினர் ஒரு சதவிகிதம் என்றும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்டம் செயல்படுத்தும் துறை (NSS 62nd Round Survey results 2004-2005 - Ministry of Statistics Program Implementation - New Delhi) அறிக்கை கூறுகின்றது.
இந்த வலுவான, நியாயமான காரணங்களின் அடிப் படையில், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை திறமையான மூத்த வழக்குரைஞர்களை நியமித்து, உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி, அரும்பாடுபட்டு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டுமாய் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் ஒருமனதாக வலியுறுத் துகிறது!
தீர்மானம் 2:
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி என்பது சிறப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத் திலும் சமூகநீதி என்பது வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டுக் காணப்படும் நிலையில், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் எத்தனை சதவிகிதம் அளிக்கப்படலாம் என்று முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும், குறிப்பாக தமிழ்நாடு அரசு தமிழ் நாடு சட்டப்பேரவையில் இது குறித்துத் தீர்மானம் ஒன்றை அவசர அவசியம் கருதி நிறைவேற்ற வேண்டுமாய் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
இடஒதுக்கீடுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதால் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு ஒரு மனதாக ஒப்புக் கொண்டபடி, அகில இந்திய அளவில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதனை விரைந்து முடிக்குமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
சமூகநீதியின் அவசியத்தையும், இட ஒதுக்கீடுபற்றிய தெளிவான கருத்துகளையும், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான பின்னணிகளையும், வரலாற்றை யும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்வது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பு
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத் தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங் களைத் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசு சிறந்த மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடப்பட வேண்டும்.
உங்களைப் போன்ற பத்திரிகை மூலம் இதற்கான செய்தி களை வெளியிடுவதே பிரச்சாரத்தின் துவக்கமாக அமையும்.
இது தொடர்பாக தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறும். இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய் தமிழ கத்தில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
இக்கூட்டத்திற்கு வராதவர்கள் எதிர்ப்பவர்கள் அல்ல! சில சூழ்நிலைகளால் வராமல் இருந்திருக்கலாம்.
தமிழகத்தில் இடஒதுக்கீட்டு பிரச்சினையில் யாரும் எதிர்ப்பாளர்கள் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ead more: http://viduthalai.in/e-paper/88450.html#ixzz3EqrayXMe
வழிகாட்டும் கருநாடகா கணவனை இழந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்
மங்களூரு, செப்.30- கருநாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி சிறீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தாழ்த்தப் பட்ட இனப் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டனர்.
நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங் களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர் களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: http://viduthalai.in/e-paper/88463.html#ixzz3Eqs00vJf
அம்பத்தூரில் தமிழர் தலைவர் கொடுத்த முக்கிய செய்தி!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. அதுபற்றி பல்வேறு விமர்சனங் கள் நாட்டில் துள்ளிக் குதித்துக் கொண்டுள்ளன. பிணை வேண்டுதல், தண்டனையை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்டவை தொடரத்தான் செய்யும்.
அமைதி காத்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் உகந்த ஆரோக்கியமான போக் காக இருக்க முடியும். அளவுக்கு மீறிய வகையில் தீர்ப்புக்கு விரோதமாக ஆளும் கட்சியினர் நடந்து கொள்வது ஆரோக்கியமானதல்ல என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
சட்டப்படியான திசையில் புதிய முதல் அமைச்சரும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டு விட்டனர்.
இனி ஆட்சி என்ற முறையில் அதன் கடமையைச் செய்ய வேண்டும்; மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியதுதான் முறையானதாக இருக்க முடியும்; இதற்கிடையில் சுப்பிரமணிய சாமி போன்ற விதூஷகர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று தி.மு.க. வையும் இழுத்து 2ஜி வழக்குப் பற்றியெல்லாம் பேசுகின்றனர்.
2ஜி மீதான வழக்கும், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் ஒன்றல்ல; முதலில் அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்து அடிக்கவில்லை - நேர்மையாக சந்திக்கின்றனர்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு இருக்க வேண்டும் - நிலைக்க வேண்டும் என்பதுதான் கொள்ளை ஆசை. அது நிறைவேறாத பட்சத்தில் ஓ. பன்னீர்செல்வம் போன்ற பிற்படுத்தப்பட்டவர் கையில் முதல்வர் பதவி சென்றிருப்பது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது - சீரணிக்கவும் முடியாது.
இந்த நிலையில் பார்ப்பனர்களும், பார்ப்பனக் கட்சியான பாரதீய ஜனதாவும் ஒரு யுக்தியை வகுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்; எனவே, இந்தத் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பாரதீய ஜனதாதான் என்கிற வகையில் பிரச்சாரம் செய்வது, அந்த எண்ணத்தை மக்களிடம் ஊன்றுவதுதான் அவர்களின் யுக்தியாகும். பி.ஜே.பி. ஏதோ ஊழலில்லாத ஒன்று போலவும் காட்ட முனைகின்றனர்.
நிலக்கரி ஊழல் என்பது பிஜேபி ஆட்சிக் காலத்திலேயே துவங்கப்பட்டுள்ளது என்ற உண்மையும் வெளிச்சத் துக்கு வந்து விட்டதே!
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில், தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, இடைத் தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரிப்பது என்று சில அரசியல் கட்சிகள் எடுத்த மிகப் பெரிய தவறான முடிவால், அதிமுகவுக்கு எதிரான கட்சி பிஜேபி என்பது போலவும், அதன் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று காட்டுவதன் மூலமும் தமிழ்நாட்டில் மாற்று சக்தி பா.ஜ.க. என்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கும் வேலையில் - தந்திரத்தில், காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை சென்னை அம்பத்தூரில் நேற்று (29.9.2014) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அம்பலப்படுத்தினார்.
அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மூத்த அரசியல்வாதியான கலைஞர் அவர்கள் நுட்பமாக இதனைப் புரிந்து கொண்டு இருப்பார் என்பதில் அய்யமில்லை.
பி.ஜே.பி.யைப் பொறுத்த வரை அசல் இந்துத்துவா மதவாத கட்சி என்பதை பல நேரங்களில் மிகத் தெளி வாகவே கலைஞர் அவர்கள் அறிவிக்கத் தவறிய தில்லை.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர் ஒருவரை பா.ஜ.க. தம் கட்சிப் பக்கம் இழுத்திட பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அந்த நடிகரை வீட்டுக்கே சென்று சந்தித்ததெல்லாம் நாடு அறியும்.
இந்தியாவிலேயே பிஜேபிக்கு அடித்தளம் இல் லாது, பரிதவிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பது வெளிப் படை! எப்படியாவது, எந்த விலை கொடுத்தாவது இங்கே டெபாசிட் வாங்கும் அளவுக்காவது முளையிட வேண்டும் என்று ஊசி முனையில் தவம் இருந்து பார்க்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டாலும், தமிழ் மண் ணுக்கே உரித்தான மதச் சார்பின்மையை அறிவார்கள் - உணர் வார்கள். தந்தை பெரியார் அவர்களின் அளப்பரிய இந்தத் தொண்டின்மீது மிகுந்த மதிப் புள்ளவர்களே பெரும்பாலும்!
அரசியல் போட்டியின் காரணமாக இந்த இடத்தில் சமரசம் செய்து கொள்வது தங்கள் கால்களைத் தாங்களே வெட்டிக் கொள்வதற்குச் சமமாகி விடும். ஏற்கெனவே ஏதோ ஒரு வகையில் இதில் தவறு செய்தவர்கள், மத்தியில் இப்போது ஆட்சியில் உள்ள பிஜேபியின் இந்து மதவாத குரூரப் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் அறிவிக்கின்ற திட்டங்களையும், பார்ப்பன சமஸ்கிருதத்திற்கும் அதன் குட்டியான இந்தி மொழிக்கும் அளித்து வரும் அத்துமீறிய நடவடிக்கை களையும் கண்ணெதிரே பளிச்சென்று கண்ட பிறகும், குரங்கு ஆப்பம் பிரித்த கதையாக பிஜேபியிடம் அரசியலைக் கொண்டு சேர்த்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஒரு முக்கிய செய்தியை (Message) அம்பத்தூரில் நேற்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கொடுத்துள்ளார்.
தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாத திராவிடர் கழகந்தான் இதனைச் சொல்ல முடியும் - சுட்டிக் காட் டவும் முடியும்! அசைப் போட்டுப் பாருங்கள் புரியும்!
Read more: http://viduthalai.in/page-2/88468.html#ixzz3EqsNAUri
சிந்தனா சக்தியற்றவன்
தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான். - (விடுதலை, 2.6.1970)
Read more: http://viduthalai.in/page-2/88464.html#ixzz3EqsWJLpe
பெரியார் ஊர்வலமும், விநாயகர் ஊர்வலமும் - வெற்றி யாருக்கு?
ஆசிரியருக்குக் கடிதம் >>>
பெரியார் ஊர்வலமும், விநாயகர் ஊர்வலமும் - வெற்றி யாருக்கு?
இந்த சாமி தான் (பெரியார் படத்தை பார்த்து) நம்ம சாதிக்காரங்களை, உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டது என்று சொல்லி ஆதிதிராவிடப் பெண்கள் பெரியார் படத்தை தொட்டு வணங்கினர் என்கிற செய்தி என் காதில் விழுந்தபோது என் கண்கள் குளமாகின. இதுவே பெரியார் ஊர்வலத்திற்கு கிடைத்த வெற்றி தானே!
தங்களின் (திராவிடர் கழகத் தலைவர்) அன்புக் கட்டளைக்கிணங்க, தமிழ்நா டெங்கும் தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் உருவப்பட ஊர்வலத்தை செப் டம்பர் 17, 2014 இல் கழகக் கண்மணிகள் நடத்திய கண்கொள்ளாக்காட்சிகள் அனை வரையும் திக்குமுக்காடச் செய்துள்ளன.
மேட்டூர் மாவட்டம் ஓமலூர் உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தி லிருந்து காலை 10.00 மணியளவில் பழனி.புள்ளையண்ணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) தலைமையில் புறப்பட்ட ஊர்வலம் 50 கி.மீ.சுற்றளவில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஊர்களில் கொடியேற்றப்பட்டு, அய்யாவின் படத் துக்கு மலர்மாலை அணிவித்து, சாக்லெட் - மிட்டாய்கள் வழங்கப்பட்டன.
இரு சக்கர வாகனங்களில் தொண் டர்கள் கழகக்கொடியுடன் அணிவகுத்து வந்த காட்சிகளும், பின்னால் கருப்புநிற மகிழுந்துவிலிருந்து - சேலம் மண்டலத் தலைவர் சி.சுப்பிரமணியன் அவர்கள் வழிநடத்திய பாங்கும், தளபதியாக முன் னால் வழிநடத்திச் சென்ற சவுந்திரராஜன் மற்றம் மாவட்டத் தலைவர் க.கிருட்டிண மூர்த்தி ஆகியோரின் பணிகளும் பாராட் டத்தக்கன.
தனிவாகனத்தில், பெரியார் நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சியும் இருபக்கமும் கழகக் கொடிகள் அமைக்கப்பட்டிருந்த விதமும் - காண்போரை மிகவும் கவர்ந்தன. நமக்குப் பின்னாலே இந்த மக்கள் திருந்தி இருக் கிறார்களா, பகுத்தறிவாளர்களாக மாறி இருக் கிறார்களா? என்று பார்வையிட பெரியார் வந்தது போல் நமது எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படமாக வருகிறாரா... இல்லையில்லை பாடம் புகட்ட வருகிறார். அறிவுக்கெட்ட மூடர்களே நீங்கள் இன்னமும் திருந்தவில்லையா? உங்கள் விநாயகர் ஊர்வலத்தில் ஒழுக்கம் இருக்கிறதா? கட்டுப்பாடு இருக்கிறதா? என்று எண்ணிப்பாருங்கள். உங்கள் யோக்கியதையை, நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் இல்லையா? எண்ணிப்பாருங்கள்.
பெரியார் ஊர்வலம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் ஊர்வலம். உயர் எண்ணங்களை மலரச்செய்யும் ஊர்வலம். ஊர் மெச்சத்தகுந்த ஊர்வலம்.
விநாயகர் ஊர்வலத்தின் யோக் கியதையை ஒரு நாள் செய்தியிலே மக்கள் தெரிந்து கொண்டார்கள். பெரியார் ஊர்வலத்தில் மோதலோ, சாதலோ இல்லை.
விநாயகர் ஊர்வலத்தைப் பற்றிய ஒரு நாள் செய்தி 1.9.2014 தினகரன் சேலம் பதிப்பு. பக்கம்-15இல் தலைப்புச் செய்தி, மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட் டியில் 1800 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் காவிரி ஆற்றில் கோலாகலம்.
அரைப்பக்கச் செய்திகளுக்குப் பிறகு கீழே, சோகம் - விநாயகர் சிலையைக் கரைக்க வந்தபோது திடீரென 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். பிறகு 4 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. சேலம் ஜாகீர் அம்மா பாளையம் கட்டிட தொழிலாளி அண்ணாமலை (45) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதந்தது. அவர் யார்? எந்த ஊர் எனத் தெரியவில்லை...
அடுத்த செய்தி: மேச்சேரி அருகே, சிலை கரைக்கச் சென்ற - கோபியின் 7 வயது மகன் சுஜித் - 2ஆம் வகுப்பு மாணவன் - மாயம். தண்ணீரில் மூழ்கினானா? அல்லது வேறு வண்டியில் ஏறிச்சென்றானா? போலீசார் விசாரணை
பக்கம் 17: மேட்டூர், செப். 1 விநாயகர் சிலை கரைக்கச் சென்றபோது டெம்போ - லாரி மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி - 4 பேர் படுகாயம்.
பக்கம் 16: ஓமலூர், செப். 1, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மல்லகவுண் டனூர் ஏரியில் விநாயகர் சிலை கரைக்க சென்றபோது கல்லூரி மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி.
பக்கம் 18: வாழப்பாடி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் 24 பேர் மீது வழக்கு. 3 பேர் படுகாயம். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
இப்படி விநாயக ஊர்வலத்தில் - நாளும் பல சோகங்கள் இருப்பினும் நாளும் பல மூடத்தனங்களின் அரங்கேற்றம். அமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி - தலைமை யிலே ஆவணி பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடி நாயக்கன் பட்டியில் சக்தி விநாயகர், சின்னமாரியம்மன் கோயில் கும்பாபிசேக விழா (தினகர 1.9.2014)
தொண்டர்கள் ஊர்வலத்தின் முடிவில் பெரியார் (படம்) பத்திரமாக ஊர்போய்ச் சேர்ந்தார். ஆனால் பிள்ளையாரோ - பக்தர் களாலேயே அடித்து நொறுக்கப்பட்டார். ஆற்றிலே பிடித்து தள்ளப்பட்டார். பாவம் - பிள்ளையார் எதிர்க்க சக்தியில்லாமல் ஆற்றிலே மூழ்கிப் போனார்.
மூடநம்பிக்கை முறியடிக்கப் புறப்பட்டு விட்டார் பெரியார். இனி ஆண்டுதோறும் தொடரட்டும் பெரியாரின் ஊர்வலங்கள். விநாயகர் வீழ்ந்து போனார். வெற்றி யாருக்கு? அறிவுலக ஆசான் தந்தை பெரி யாருக்கே! வாழ்க பெரியார்!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர், தி.க. மேட்டூர்
Read more: http://viduthalai.in/page-2/88473.html#ixzz3EqsfnFi3
பெரியார் தொண்டரை இழப்பது ஒரு விஞ்ஞானியை இழப்பதற்கு சமம்
ஆசிரியர் கூத்தன் போன்ற தளபதிகளை இழந்திருக்கிறோம்
பெரியார் தொண்டரை இழப்பது ஒரு விஞ்ஞானியை இழப்பதற்கு சமம்
கூத்தன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் நினைவுரை
கல்லக்குறிச்சி, செப். 30- ஆசிரியர் கூத்தன் போன்ற தளபதிகளை இழந்திருக்கிறோம் பெரியார் தொண்டரை இழப்பது ஒரு விஞ்ஞானியை இழப்பதற்கு சமம் என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
கல்லகுறிச்சியை அடுத்த வடக்குநந்தலில் உள்ள ஆசிரியர் கூத்தன் அவர்களது இல்லத்தில் 11.9.2014 அன்று காலை 11.30 மணிக்கு கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் ஆசிரியர் மறைந்த அ.கூத்தன் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அ.கூத்தனின் நினைவுகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சா.பாஸ்கர் தலைமை ஏற்று உரையாற் றினார். தமிழக இடைநிலை ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க.சி.இளம்பரிதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த அரிகரன், கல்லை நகரத் தலைவர் சுந்தர்ராசன், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் மு.கண்ணன், முன்னாள் பெருந்தலைவர் வெங்கடாசலம், மருத்துவர் குமார் (பெரியார் மருத்துவர் அணி), ஆகியோரது நினைவேந்தல் உரைக்கு பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மறைந்த அ.கூத்தன் நினைவைப் போற்றும் வகையில் உரையாற்றினார்.
முன்னதாக, மறைந்த ஆசிரியர் கூத்தன் உருவப் படத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். கச்சிராபாளையம், வடக்குனந்தல் பகுதியில் ஏராளமான தோழர்கள் திரண்டிருந்து தமிழர் தலைவரை அழைத்து சென்றதும், நிகழ்ச்சி அரங்கில் ஊர்ப் பொது மக்கள் ஏராளமான பேர் திரண்டிருந்ததும் அ.கூத்தனுக்கும், கழகத்திற்கும் உள்ள மரியாதையையும் உணர முடிந்தது. மானமிகு ஆசிரியர் கூத்தன் அவர்களுடைய படத் திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:-
மாவட்டத் தலைவர் சுயமரியாதை வீரர் கூத்தன் அவர்களுடைய இழப்பினால் ஏற்படுகின்ற துன்பம், துயரம், வேதனை இவைகளையெல்லாம் இன்னமும் தாங் கொணாது அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரியார் கூத்தன் அவர்களுடைய வாழ்விணையர் அவர்களே, அவர்களுடைய அன்புச்செல்வங்களான தமிழரசன், சுமதி, தமிழ்மணி, மஞ்சு, தமிழரசி, பெயரப் பிள்ளைகள் ஓவியா, பிரபாகரன் ஆகிய நம் குடும்பத்து உறுப்பினர் பெருமக்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிதில் யாருக்கும் ஆறுதல் கூற முடியாத மிகப்பெரிய பேரிழப்பு நம்முடைய கூத்தன் அவர்களுடைய இழப்பு. இங்கே சந்திரசேகரன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, கொஞ்சம்கூட நாங்கள் அதற்குத் தயாராக இல்லை. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதை மாவட்டச் செயலாளர் நம்முடைய பாஸ்கரன் அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தெரிவித்தவுடனேயே, நான் அவரிடத்தில் இரண்டொருமுறை உடல்நலத்தைப்பற்றி விசாரித்தபொழுது, அவருடைய உடல்நலக் குறைவுபற்றி சொன்னவுடன் என்னால் நம்ப முடியவில்லை. காரணம், ஆசிரியர் விக்கிரவாண்டி தண்டபாணி அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வில் இறுதியாகக் கலந்துகொண்டார். அப்பொழுதுகூட அவர் வழக்கம்போல் இருந்தார். ஒன்றும் தெரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இல்லை.
அதற்குப் பிறகு அவருடைய உடல்நலக் குறைவுபற்றி நான் கேள்விப்பட்டவுடன், கோவைக்குச் சென்றிருக்கிறார், அங்கே அவர் மருத்துவமனையில் உடல்நலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்விணையர் அம்மா அவர்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார் என்ற தகவல்களை பொதுச்செயலாளர் மற்றும் சிலர் என்னிடம் சொன்னார்கள். அதுபோலவே, நம்முடைய பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களும், கூத்தனுடைய உடல்நலம்பற்றி என்னிடம் நேரில் சொன்னார்கள்.
எங்களுக்கே அது மிகப்பெரிய தாக்குதல் என்றால், அவருடைய குடும்பத்திற்குச் சொல்லவேண்டுமா? அப்பொழுதுதான் நான் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனேன். உடனடியாக அவருக்கு, ஒரு வாரத்திற்கு உள்ளாக, மறுபடியும் ஒரு கருத்தை, ஒரு மருத்துவ ஆய்வை, சென்னையில் இருக்கக்கூடிய, மருத்துவர்களை வரவழைத்து, அவரைப்பற்றிய அந்த அறிக்கைகளை காட்டி இரண்டாவது கருத்தை நாம் கேட்கவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில், பேரிடி போல இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. மிகப்பெரிய தாக்குதல் அது எங்களுக்கு. இயக்கத்திற்கும் அது மிகப்பெரிய தாக்குதல். எங்களுக்கே அது மிகப்பெரிய தாக்குதல் என்றால், அவருடைய குடும்பத்திற்குச் சொல்லவேண்டுமா? குறிப்பாக, அவருடைய வாழ்விணையர், அவருடைய செல்வங்கள் ஆகியோர் எப்படி தாங்கி இருப்பார்கள் என்பதை நினைத்து, நினைத்து நான் மிகுந்த வேதனைப் பட்டேன்.
வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்
கூத்தன் அவர்கள், ஒரு லட்சியத் தொண்டர். எல்லாக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு, எல்லா ஜாதி மதங்களுக்கும் அப்பாற்பட்டு, ஒரு பொதுநலத் தொண்டர், ஒரு நல்லாசிரியர், ஒரு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர் எப்படியெல்லாம் இருப்பார் என்பதற்கு உதாரணம் சொல்வதானால், அவர் கூத்தனைப் போல் இருப்பார் என்று சொல்வது ஒன்றே போதும் என்ற அளவில் அவ்வளவு தெளிவானவர்.
இங்கே நம்முடைய பாஸ்கரன் அவர்கள் சொல்லிய தைப்போல, அவர் எதற்கும் மறுப்புச் சொல்ல மாட்டார்; யாரையும் முகங்கோண பேசமாட்டார்; மறைந்த பொருளாளர் சாமிதுரை அவர்களிடம், உங்களுக்கு இல்லை என்று சொல்லியே பழக்கம் கிடையாதா? யாரிடமும் முடியாது என்று சொல்லவே மாட்டீர்களா? எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டே இருக்கிறீர் களே? எல்லாவற்றையும் உங்களால் சாதிக்க முடியுமா? என்று நான் கேட்பேன்.
அதனால் என்னங்க; ஏங்க, அவர்களைத் தொந்தரவு படுத்தவேண்டும்; எதற்காக அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டும் என்று சொல்வார்.
அவருடைய நேரடி வாரிசு மாதிரி கூத்தன் அவர்கள் இருந்தார். கூத்தன் அவர்களும் யாரையும் சங்கடப்படுத்த மாட்டார். அதேநேரத்தில், ஒப்படைக்கப்பட்ட பணிகளை அவர் கடைசிவரையில் செய்வார். இங்கே குமார் சொல்லியதைப்போல, கடைசி வரையில் அவருக்குப் பெரியார் 1000 தான் முக்கியமே தவிர, உடல்நிலை இரண்டாம்பட்சம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார் என்றால், இவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்; இப்படிப்பட்டவர்கள்தான் லட்சியத் தொண்டர்கள். இயக்கத்தையும், கொள்கையையும் முன்னாலே வைத்து, தங்களை பின்னாலே தள்ளிக்கொள்ளக்கூடியவர்கள். அப்படிப்பட்ட ஒரு அரிய தோழரை நாம் இழந்திருக் கிறோம் என்று சொன்னால், அது எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாகும்.
உற்சாகமாக பணி செய்யும்பொழுது உடலைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை
அதிலும் குறிப்பாக, அண்மைக்காலத்தில், பல வயதான வர்கள் மறைவு என்றால் துன்பத்திலும்கூட சற்று ஆறுதல் அடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இதுபோன்று நாம் தயாராக இல்லாத ஒரு இழப்பை, ஒரு மறைவை நம்மால் எதிர்கொள்ளக்கூடிய நிலை என்று சொன்னால், அதுதான் தாங்கொணாத அதிர்ச்சியை உருவாக்குகிறது. அந்த வகையில் கூத்தன் அவர்களுடைய மறைவு, எளிதில் செரிமானம் செய்துகொள்ள முடியாத ஒரு அதிர்ச்சிக்குரிய மறைவாகும். ஆனால், என்ன செய்வது? நாம் பகுத்தறிவு வாதிகள். அந்த வகையில், அண்மைக்காலத்தில் பார்த்தீர் களேயானால், இங்கேயும் சரி, மும்பை போன்ற பகுதி களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, படத் திறப்புகள், வீர வணக்கம் செலுத்தக் கூடிய நிகழ்ச்சிகள் இவைகளுக் கெல்லாம் செல்லும்பொழுது, மிகப்பெரிய அளவிற்கு வேதனை எம்மைத் தாக்குகிறது; கடுமையாக உழைப்பது என்பது வேறு. உற்சாகமாக பணி செய்யும்பொழுது உடலைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
ஆனால், நோய் வந்தால்கூட எதிர்க்கலாம், எதிர்கொள் ளலாம் என்கிற துணிவு இருக்கிறது. ஆனால், நம்மோடு படையில் இருந்த தளபதிகள், நேற்று இருந்தார்; இன்றைக்கு இல்லை என்று நினைக்கும்பொழுது, அதுவும் களத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், மிகப்பெரிய அளவிற்கு எதிரிகள் திரண்டிருக்கின்ற நேரத்தில், நல்ல தளபதிகளை ஒரு போர்ப் படைத் தலைவன் இழக்கக்கூடாது, அதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், அண்மைக்காலத்தில் ஒவ்வொரு பெரியார் தொண்டர்களுடைய மறைவும், ஒரு விஞ்ஞானி யினுடைய மறைவு என்பது மட்டுமல்ல, ஒரு போர்த் தளபதியினுடைய மறைவு என்பது மட்டுமல்ல, ஈடு செய்ய முடியாத இழப்பு என்று நினைக்கும்பொழுது, என்னதான் இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்தாலும்கூட, அவர்கள் பக்குவமாகி, அவர்கள் இவர் அளவிற்கு, இவரைப் போன்று முதிர்ச்சி பெறவேண்டிய அளவிற்கு ஆகவேண்டும் என்று சொன்னால், அது எளிதில் நடக்காது. அதற்குரிய கால அவகாசம் தேவை. ஒவ்வொருவரும் ஒரு கூத்தனாக மாறவேண்டும்!
அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நேரத்தில், ஒன்றை நாம் முடிவு செய்துகொள்வதோடு மட்டுமல்ல, அதனை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் நாங்கள் ஆசைப்படுகிறோம். அது என்னவென்றால், இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னால் மட்டும் போதாது; அந்த இழப்பை சரிக் கட்டவேண்டுமா? இல்லையா? நம்மோடு இருந்தவர்கள், அனுபவப்பட்ட வர்கள் குறையும்போது, அந்த அனுபவத்தையும் சேர்த்து நாம் அந்தப் பணிகளைப் பல மடங்கு செய்யவேண்டும். முன்பு ஒரு மடங்கு செய்தால், இப்பொழுது பன்மடங்கு செய்யவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வருகிறது. எனக்கு வருகின்ற அதே எண்ணத்தை உங்களிடம் நான் முன்வைக்க விரும்புகிறேன். எனவே, தோழர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, ஒவ்வொருவரும் ஒரு கூத்தனாக மாறவேண்டும். ஒவ்வொருவரும் கூத்தன் அவர்கள் இல்லை என்கிற குறைபாட்டை வைக்கக்கூடாது. அவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, இந்தக் கொள்கையாக இருந்தாலும் சரி, இந்த இயக்கமாக இருந்தாலும் சரி, நாம் முன்பைவிட, இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக உழைக்கவேண்டும்.
வருமானத்தில்கூட ஒரு இழப்பு ஏற்பட்டால் என்ன செய்வோம்; அந்த இழப்பைச் சரிக்கட்ட கூடுதலாக உழைப்போம். அதுபோல், இயக்கத்தினுடைய தொண்டிலும் கூட, இயக்கத் தோழர்கள், இயக்கத்திலே பணி புரியக் கூடியவர்கள் பல மடங்கு உழைக்கவேண்டும் என்பதுதான், கூத்தன் படத்திறப்பில் நாம் பெறவேண்டிய ஒரு பாடம், படிப்பினை. அதுதான் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில், மிகுந்த ஒரு பொறுப்புணர்ச்சியோடு கூடிய ஒரு சிந்தனையாகும்.
பெரியார் உலகத்திற்காக நன்கொடை ஆகவே, அவரைப் பொறுத்தவரை செம்மையாக, ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய வாழ்விணை யரான அம்மையார் அவர்களையும், அவருடைய மகளையும், அருமைத் தோழர் சுப்பராயன் இல்ல மணவிழா விற்கு நான் வந்திருந்தபொழுது பார்த்தேன் - அம்மையார் அவர்கள்தான் பெரியார் உலகத்திற்காக நன்கொடை கொடுத்தார். அப்பொழுதுதான் அம்மையாரை அறிமுகப் படுத்தி வைத்தார். அப்பொழுதுதான் நான் அவருடைய மகளையும் பார்த்தேன். என்னுடன் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
நான் அவருடைய நினைவைப் போற்றுகின்ற நேரத்தில், நாம் பகுத்தறிவுவாதிகளாக இருக்கின்ற காரணத்தினால், நடந்ததையே நினைத்து நாம் வேதனைப்பட்டுக்கொண்டு, துன்பப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது. அருமைச் சகோதரியார் பழனியம்மாள் அவர்களுக்கு, அவருடைய செல்வங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால், நீங்கள் இந்த ஆசிரியர் பணியிலும் சரி, இயக்கப் பணியிலும் சரி, நீங்கள் அதிகமான அளவிற்கு, கூத்தன் அவர்களைப் போல, கொள்கை ரீதியாக நீங்கள் உழைக்க முயலுங்கள். அதன்மூலமாக உங்கள் துயரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் துன்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறப்பதற்கு முயலுங்கள். மற்றவர்களோடு இணைந்து எந்த அளவிற்கு உங்களுக்கு வாய்ப்பு, வசதி இடம்பெறுமோ, அந்த அளவிற்கு இயக்கத் தொண்டு செய்யவேண்டும். இது வெறும் பணியல்ல; இது தொண்டு. கூத்தன் அவர்கள் எல்லாப் பகுதி மக்களாலும் நேசிக்கப் படுகிறார் என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்? அவருடைய தொண்டறம்; அவருடைய தொண்டு மனப் பான்மை; கட்டுப்பாடாக கொள்கையைப் பின்பற்றுவது. ஆகவேதான் அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
வாழ்நாள் போராளி கூத்தன்
அதுமட்டுமல்ல, குறிப்பாக அம்மையார் அவர்களையும், அவருடைய குடும்பத்துச் செல்வங்களையும், உறுப்பினர் களையும் நேரில் சந்தித்து நன்றி செலுத்தி, மரியாதை தெரிவித்து ஆறுதல் கூறவேண்டும் என்பதற்காகவே நான் வந்திருக்கிறேன். காரணம் என்னவென்றால், தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்; பல குடும்பங்களில், நம்முடைய தோழர்கள் மிகத் தீவிரமாகக் கொள்கையைப் பரப்பக்கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல உணர்வு பூர்வமாக நடக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில், கூத்தன் அவர்களைப் போல எந்தப் போராட்டத்தையும் தவிர்க்காமல் பங்கேற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் மறைந்தார்கள் என்று சொன்னால், அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்திற்கே சம்பந்தமில்லாத சில பேர், உள்ளே வந்து நுழைந்துகொண்டு, அந்தச் சடங்கு செய்யவேண்டும்; இந்தச் சடங்கு செய்யவேண்டும்; இந்தச் நாமம் போடவேண்டும் என்று சொல்லி அய்ஜாக் செய்வதுபோல, கடைசி நேரத்தில் செய்வார்கள். ஏனென்றால், எல்லோரும் துயரத்தில் இருப்பார்கள், அந்த நேரத்தில் அவர்களை திசை திருப்புவார்கள். அதற்கு இடந்தராமல், கூத்தன் அவர்கள் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தார்களோ, அதே மரியாதையோடு நீங்கள் செய்தீர்களே இதற்கு இந்த இயக்கம் என்றென்றைக்கும் உங்களுக்குத் தலை வணங்குகிறது. உங்களுக்கு நன்றி காட்டுகிறது. இந்தக் கொள்கையினுடைய சிறப்பை நீங்கள் தலைதாழாமல் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள். அவர்மீது போர்த்தப்பட்ட கொடி என்பதிருக்கிறதே, அது சாதாரண மானதல்ல; அவருடைய கொள்கை இருக்கிறதே, அதுதான் அவருடைய மூச்சுக்காற்று, அவரைப் பொறுத்தவரையில். அப்படிப்பட்டவருடைய கொள்கை தொடர்கிறது என்றுதான் இந்தக் குடும்பத்தில் அருமைச் செல்வங்கள் தமிழரசன் ஆனாலும், தமிழ்மணி ஆனாலும், தமிழரசி ஆனாலும், அவருடைய பெயரப் பிள்ளைகள் ஆனாலும், அடுத்தடுத்த தலைமுறைகள் பெரியாரின் பெருங்குடும்பம் இந்தக் குடும்பம் என்ற பெருமையோடு இருக்கிறது. இன்றைக்குப் பொருளாளர் சாமிதுரை இல்லை; ஆனால், அந்த இடத்தில் அவருடைய செல்வங்கள் அந்தப் பணியை இன்னமும் சிறப்பாக செய்வதற்குத் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
கூத்தன் அவர்கள் குடும்பத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் செவ்வனவே செய்திருக்கிறார்.
எனவே, நீங்கள் கூத்தன் குடும்பம் என்று சொன்னால், அது பெரியாரின் பெருங்குடும்பத்தினுடைய ஒரு பகுதி என்ற பெருமை அவர் காலத்தில் எப்படி இருந்ததோ, அதேநிலையை, நீங்கள் அவருடைய பெயரப் பிள்ளைகள் காலத்திற்கும் கொண்டு செலுத்துங்கள், அதுதான் அவருக்கு நாம் காட்டுகின்ற மரியாதை. உண்மையான மரியாதை. சிறந்த வீரவணக்கமாக இருக்க முடியும்.
கூத்தன் அவர்களுடைய நினைவாக
புற்றுநோய் ஆய்வு முகாம்
தொண்டின்மூலமாக வாழுகிறவர்கள். மறைவதில்லை என்று சொல்கின்ற இந்த நேரத்தில், இந்தப் பகுதிக்கு மருத்துவர் அணிக்கு நம்முடைய மருத்துவர் குமார் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார். பெரியார் மருத்துவர் அணியின் சார்பாக, நடமாடும் புற்றுநோய் ஆய்வு முகாம் நடைபெறுகிறது. அந்த முகாமை, இந்தப் பகுதியில், கூத்தன் அவர்களுடைய நினைவாகச் செய்வதற்கு, மருத்துவர்கள் அணியும், நம்முடைய கழகத் தோழர்களும் போதிய முயற்சி எடுத்து, தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி செய்வதிருக்கிறதே, அது பல பேருக்குத் தொண்டாற்றுவதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக ஆகும். அதற்குரிய ஏற்பாடுகளை, தோழர்கள் குமார் அவர்களும், பாஸ்கர் அவர்களும் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இணைந்து சிறப்பாக செய்யவேண்டும் என்ற வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். அதனை செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.
அடுத்தபடியாக, வடக்குநந்தல், கச்சிராபாளையம் பகுதிகள் நீண்ட காலமாக நம்முடைய இயக்கத்திற்கு அடித்தளமானது. பல தோழர்கள் தங்களை இன்னார் மகன், இன்னார் மகன் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நேரத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் வரும்பொழுது சொல்லிக்கொண்டு வந்தேன், முதன்முறையாக, நான் வடக்குநந்தல், கச்சிரா பாளையம் பகுதிக்கு எப்பொழுது வந்தேன் என்றால், உங்களுக்கு வியப்பாக இருக்கும் 1945 ஆம் ஆண்டு வந்து மேஜையின்மீது ஏறி நின்று நான் உரையாற்றி இருக்கிறேன் என்பதை சொன்னபொழுது வியப்பாகக் கேட்டனர்.
பொருளாளர் மறைந்தவுடன், கூத்தன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை
இந்தப் பகுதி ஒரு தெளிவான பகுதியாகும். எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் குடும்பம் போல இருக்கக்கூடிய உணர்வு படைத்தவர்கள். பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று ஏராளமானவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான இந்தப் பகுதி, என்றென்றைக்கும் நாம் நினைவில் நிறுத்தவேண்டிய ஒரு பகுதி. பொருளாளர் மறைந்தவுடன், கூத்தன் அவர்கள் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை, வைப்பு நிதியாக இருந்தார்.
காரணம், பொருளாளர் அவர்களிடம் சொல்வோம், அவர் கூத்தன் அவர்களிடம் சொல்வார். அது கண்டிப்பாக சரியாக நடந்துவிடும். அதுபோலத்தான், கூத்தன் அவர்கள் எந்தக் காரியத்தையும் முன்நின்று செய்வார். அதே உணர்வுக்குக் கொஞ்சம்கூட குறைவில்லாமல், இயக்கத் தோழர்கள் கூட்டுமுயற்சியாக அதனைச் செய்யவேண்டும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கூத்தன் நினைவாக பெரியார் படிப்பகம்
இந்தப் பகுதியில் பெரியார் படிப்பகம் ஒன்று உருவாக வேண்டும். காரணம், எல்லா பகுதிகளிலும் பெரியார் படிப்பகம் உருவாகும்பொழுது, ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் கூத்தன் நினைவாக, பெரியார் படிப்பகம் என்பதை இந்தப் பகுதியிலேயே நம்முடைய தோழர்கள், ஆசிரியர்கள் முயற்சி எடுத்து உருவாக்கவேண்டும்.
எல்லாவிடங்களிலும் படிப்பகங்கள் நிறைய தேவை. அதன்மூலமாகத்தான், நம்முடைய கொள்கைகள், கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆகவே, அதற்குத் தோழர்கள் கூட்டு முயற்சி எடுத்து, கலந்து சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதை அன்போடும், உறுதியோடும் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
புதிய தலைவராக சுப்பராயன்
அடுத்தபடியாக, நம்முடைய கூத்தன் அவர்கள் சிறப்பான நிலையில் பணியாற்றினார்கள். கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவராக நம்முடைய அருமைத் தோழர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கராபுரம் சுப்பராயன் அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். அவர் மற்ற கழகத் தோழர்களோடு கலந்து எப்படியெல்லாம் பணியாற்றவேண்டுமோ அப்படி செம்மையாகப் பணியாற்ற வேண்டும். அதேபோல, ஆசிரியர் கூத்தன் அவர்களு டைய வாழ்விணையரான அருமை சகோதரியார் பழனி யம்மாள் அவர்கள் மகளிரணியில் பொறுப்பேற்று அவர் களும் தன்னுடைய தொண்டைத் தொடரவேண்டும் என்று அன்போடு கேட்டு, உங்கள் அனைவருக்கும் கூத்தன் நினைவு போற்றுகிறோம் என்று சொல்லி, பெரியார் வாழ்க, பகுத்தறிவு வளர்க என்று கூறி முடிக்கிறேன், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
படத்திறப்பில் பங்கேற்றோர்
மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர், பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், உரத்தநாடு குணசேகரன், மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன், ஆத்தூர் வானவில், சந்திரன், அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் திருவண்ணா மலை பஞ்சாட்சரம், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சுப்பராயன், செஞ்சி கோபண்ணா, உளுந்தூர்பேட்டை முத்து, சிவகங்கை திருக்கோயிலூர் பாலன், மாவட்ட துணைத் தலைவர் மு.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ச.சுந்தரராசன், நகரச் செயலாளர் புலவர் பெரியார் நேசன், நகரத் தி.க. தலைவர் முத்துச்சாமி, நல்.இராமலிங்கம், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, பாலசண்முகம், பெரியார் செல்வம், எழிலரசன், முருகன், ஆறுமுகம், தர்மதுரை, புலவர் சயராமன், நல்லமுத்து, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.வெங்கடாசலம் (வழக் குரைஞர்), முன்னாள் ஒ.தி.மு.க. பெருந்தலைவர் சு. அருணாசலம், மதிமுக க.நடராசன், செல்வம், தண்டபாணி, இராமானுஜம், பொன்னுசாமி, கோ.சா.குமார் (மாநில மருத்துவரணிச் செயலாளர்) மற்றும் ஏராளமான பொதுமக்கள், வணிகத் தோழர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தது.
Read more: http://viduthalai.in/page-4/88475.html#ixzz3EqswFfz2
மோடி மகிமை !
மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.
மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.
மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான் மிகுதி. "இந்தியா"வையேக் காணோம். பெரிய மனதுடன் வந்திருந்த இஸ்லாமியத் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஏமாற்றம் அவர்களது முகங்களில் என்று சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் வரலாற்றைப் புகழ்ந்தவர் இந்தியரில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் கூடச் சரி சமமாகப் படிப்புக் கொடுத்ததே கிருத்துவக் கல்விக்கூடங்கள்தானே. அதை மறைக்க முடியுமா?
அமெரிக்காவின் பணம் வேண்டும், தொழில் வேண்டும் ஆனால் இந்துத்துவாதான் இந்தியா என்று சொல்லி இந்தியாவை விற்றுக் கொண்டுள்ள மோடி மகிமை எடுபடுமா? இந்தியா "இந்துஸ்தான்" என்றால் அமெரிக்கா "கிருஸ்துஸ்தான்" என்பதுதான் உண்மை. பணம் எவ்வளவு தூரம் பாயும் என்பது தெரிந்து விடும். மோடிக்கு வரலாறு காணாத கூட்டம் என்று இந்திய இதழ்கள், இணைய மக்கள் சொன்னாலும், பல இருக்கைகள் காலியாகவே உள்ளன.... கடந்த ஒரு வாரமாக என்று சொல்லி சொல்லி வேறு...!!!
இதோ நிழற் படம்.... பாரத் மாதாகீ ஜே!!!
Read more: http://viduthalai.in/page-8/88476.html#ixzz3EqtiT8Cb
செய்தியும் சிந்தனையும்
அக்டோபர் 2
செய்தி: காந்தியார் பிறந்த நாளில் தூய்மையான இந் தியா என்ற திட்ட அறிவிப்புக் காக காந்தியார் பிறந்த நாள் (அக்டோபர் 2) விடுமுறை ரத்து!
சிந்தனை: காந்தியார் பிறந்த நாளுக்கு விடுமுறையும் ரத்து செய்ததாக இருக்கும் - திட் டத்தையும் அறிமுகப்படுத்திய தாகவும் இருக்கும் - ஒரே கல்லால் இரண்டு காய் எப்படி (ஆர்.எஸ்.எஸ்.) தந்திரம்?
Read more: http://viduthalai.in/page-8/88484.html#ixzz3Eqttmsuf
பீகார் முதலமைச்சருக்கே தீண்டாமைக்கொடுமைகள்: தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை!
சென்னை, செப். 30_- பீகார் முதலமைச்சருக்கே தீண் டாமைக் கொடுமையா, தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று (30.9.2014) அறிக்கை விடுத் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:_
பீகார் மாநிலத்தில் தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்குச் சான்றாக பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி விளங்குகிறார். அவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனக்கு நேர்ந்த அவ மானத்தைக் குறிப்பிட்டு வேதனைப்பட்டிருக்கிறார்.
அதாவது, பீகார் மாநிலத் தில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில்போது மதுபானி மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குச் சென்ற தாகவும் கோவிலைவிட்டு அவர் வெளியேறிய பின் னர் அந்தக் கோவிலின் நிர் வாகத்தினர் கோவிலைக் கழுவி சுத்தம் செய்ததாக வும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் சாதி எவ் வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதா ரண மக்கள் கிராமப்புறங் களில் எத்தகைய சாதிக் கொடுமைகளுக்கு உள்ளா கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில் களில் மட்டும்தான் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகி யுள்ளது. அதுவும் பெரு நகரங்களில் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் காண முடிகிறது.
நகர்ப்புறங்களி லும் கிராமப்புறங்களிலும் உள்ள பெரும்பான்மை யான கோவில்கள் சாதிய வாதிகளின் கட்டுப்பாட்டி லேயே இயங்கிவருகின்றன. அக்கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவே முடியாத நிலை உள்ளது. கோவில் விழாக் களில்கூட தலித்துகள் கலந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு சாதிக் கொடுமைகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் நிலவுகின்றன. பீகார் முதலமைச்சர் தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சில மாதங்கள் கழித்து வெளிப்படையாகப் பேசியி ருக்கிறார்.
அதனால், தற் போது இது வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது. ஆனால், அன்றாடம் கிரா மப் புறங்களில் நடக்கும் குறிப்பாக, கோவில்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத் திற்கு வருவதேயில்லை. இந்திய நாடு விடுதலை பெற்று சுமார் 67 ஆண்டு களை எட்டியுள்ள நிலையி லும் சாதிக் கொடுமை களை இன்னும் கட்டுப் படுத்த இயலவில்லை என்பதே வெட்கக்கேடான ஒன்றாகும்.
ஊழலுக்கு எதிராகவும் வறுமைக்கு எதிராகவும் போராடும் மனித உரிமை ஆர்வலர் கள், பிற சனநாயகச் சக் திகள் சாதிக்கொடுமைக ளுக்கு எதிராகப் போரா டத் தயங்குவது ஏனென்று விளங்கவில்லை. சாதியத் திற்கு எதிராகவும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சனநாயகச் சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மைய, மாநில அரசுகள் வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத் தைத் தீவிரமாக நடை முறைப்படுத்தவேண்டும்.
இந்தியாவில் சாதியவா திகளின் பிடியில் உள்ள கோவில்கள் அனைத்தை யும் அரசுடைமையாக்க வேண்டும். கோவில் மட்டு மின்றி கோவில் சொத்துக் கள் யாவற்றையும் அரசு டைமை ஆக்குவது கோவில் களில் சாதிக் கொடுமை களைக் கட்டுப்படுத்துவ தற்கு வழிவகுக்கும்.
எனவே, மைய, மாநில அரசுகள் பீகார் முதல்வருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடு மையை கவனத்தில் கொண்டு தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. பீகார் முதல் வருக்கு எதிரான தீண்டா மைப்போக்கை கடைப் பிடித்த சாதியவாதிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
Read more: http://viduthalai.in/page-8/88478.html#ixzz3Equ1zsmj
பதவி இழப்பார்களா பா.ஜ.க. அமைச்சர்கள்?
- மின்சாரம்
கிரிமினல் வழக்குகளில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடியாது. மேல்முறையீடு செய் தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அரசியலில் நேர்மை குறைந்து, வன்முறையும், ஊழலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கும்படியும், தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்தும்படியும் வலியுறுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட் டியிடும் தகுதியை இழக்கின்றனர்.
தண் டனைக் காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதி நிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)ல் கூறப்பட் டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக்கும் எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங் களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற்குள் மேல் நீதிமன்றங்களில் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)ல் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட் டுள்ள இந்த முரண்பாடான சலுகையை சட்டத் திருத்தம் மூலம் நீக்கும்படியும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி களின் பதவியை உடனடியாக பறிக்கும் படியும் மத்திய அரசை தேர்தல் ஆணை யம் கூறி வருகிறது. ஆனால், அரசியலில் தங்களுக்கு வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கு இந்த சட்ட திருத்தத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி, அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக்குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லாவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4),ல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளை பதவியில் நீடிக்க அனுமதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகிவிடும். மேலும், தண்டனை விதிக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனுமதிப்பது, அரசியல் சட்டத் துக்கு விரோதமானது.
எனவே, நீதிமன்றங் களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரினர். நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடியாது. தண்டனை விதிக்கப் பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப்புக்கு முன்பாக தண்டனை பெற்று, மேல்முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கும், கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்க்கப் போனால் மத்திய அமைச்சர வையைச் சேர்ந்தவர்களின் கெதி என்ன? என்பது முக்கிய கேள்வியாகும். இதோ அந்தப் பட்டியல்:
பிரதமர் நரேந்திர மோடி - குஜராத் கலவரவழக்கு முதல் மனைவி பெயரை மறைத்தது, மற்றும் வாக்குச்சாவடியில் தேர்தல் சின்னத்தை விதிமுறையை மீறிக் காண்பித்தது தொடர்பான பல்வேறு வழக்குகள் 1. ராஜ்நாத் சிங் - பாபர் மசூதி இடிப்பு வழக்கு
2. அருண் ஜேட்லி - நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு(குஜராத் போலி என் கவுன்டர் வழக்கில் தலையீடு)
3. சுஷ்மா ஸ்வராஜ் - பாபரி மசூதி இடிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு)
4. வெங்கய்ய நாயுடு - அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் சட்ட விரோத நில ஆக்ர மிப்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு
5. நிதின் கட்கரி - 134 135 143, 341, 186, 448, 506 ,188 வரியேய்ப்பு, தொழிற்துறை நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றுதல், மற்றும் போலியான தகவலில் வங்கிக்கடன் வாங்கியது, (தனது கார் ஓட்டுநர் தோட்ட பாராமரிப்பாளர் பெயரில் கூட கம்பெனி பதிவு செய்து வைத்துள்ளார், நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தை தனது அலுவலக முகவரியாக கொடுத்துள்ளார்.) இவருக்கு 7 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.
6. மேனகா காந்தி - 394, 506 பிரிவின் கீழ் வழக்கு.
7. கல்ராஜ் மிஸ்ரா - 120 பி, 153, 153 எ, 153பி, 147, 148, 149, 436, 395, 302 போன்ற பிரிவுகளில் வழக்கு
8. நஜ்மா ஹெப்துல்லா - அரசு அதி காரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தது,
9. ஆனந்த் குமார் - ஊழல் வழக்கு இவர் பல குற்ற வழக்குகளுக்கு ஆளானவர்.
10. ரவிசங்கர் பிரசாத் - வன்முறையைத் தூண்டியதாக வழக்கு
11. உமா பாரதி - இவர் தான் குற்ற வாளிகள் பெயர் லிஸ்டில் முதலிடம் இவர் மீது 61 கடுமையான வழக்குகள், 12 பொதுக்குற்றவழக்கு, மற்றும் 108 சாதாரன குற்றவழக்கு 12. அசோக் கஜபதி ராஜூ - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மற்றும் கலவரத்திற்கு தூண்டுகோலாகப் பேசியது, 13. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - கணவர் மனைவி இருவர் மீது குற்ற வழக்கு உள்ளது. 14. நரேந்திர சிங் தோமர் - இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு கடுமையான குற்றவழக்குகள் ஆகும்
15. ஜூவல் ஓரம் - 143, 341, 283, 341 பிரிவுகளில் வழக்கு.
16. ஹர்ஷ வர்த்தன்- 147, 149, 186, 323, 325, 332, 353, 427 போன்ற பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17. ஸ்மிருதி இரானி - போலியான தகவல்கொடுத்த வழக்கு, டில்லி நாடாளு மன்றக் காவல் நிலையம் வழக்கு நிலு வையில் உள்ளது. 18. ராதா மோகன் சிங் - கணவன் மனைவி இருவர் மீதும் சேவை நிறுவனத் தில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு
19. தாவர்சந்த் கெலாட்- ஊழல் வழக்கு குவாலியர் காவல்நிலையம் (சிறைவாசி யாக இருந்தவர்)
20. சதானந்த கவுடா - எடியூரப்பா ஊழல் வழக்கில் இவருக்கும் பங்கு உண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கேபினெட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், 21. ஜெனரல் வி.கே.சிங் 185, 353, 147, 148, 149, 34 பிரிவுகளில் வழக்கு.
மேற்கண்ட இ.பி.கோ.படி அமைச்சர் களின் மீது குற்றவியல் வழக்கு உள்ளது. 59 பாஜக எம்பிகள் மீது பயங்கர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஆட் கடத்தல், கலவரத்திற்கு திட்டமிடுதல், மற்றும் கலவரத்தை தூண்டுதல் என பல் வேறு வழக்குகள், இந்த வழக்கு எல்லாம் சரியான படி நடந்தால் ஆயுள் தண்டனை முதல் கடுமை யான கடுங்காவல் வரை கிடைக்கும்.
என்ன நடக்கப் போகிறது? நாடே எதிர்ப்பார்க்கிறது.
Read more: http://viduthalai.in/page-1/88308.html#ixzz3EquHZthI
சென்னை மாகாணம் முதல் சட்டசபை - சாதனைகள்
- மா.பால்ராசேந்திரம்
ஒரு காலத்தில் உன்னதமான நிலையில் வாழ்ந்து, உலகிலே உயரிய இடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக் காலத்தில் எத்தரின் பிடியில் சிக்கிய தால் சீரழிந்து போன நாடு திராவிட நாடு என்பார் அண்ணா. அந்நாட்டின் பெருமையை, திராவிடரின் உரிமையை நிலைநாட்டிடக் கிடைத்த அரிய வாய்ப்பாக, 1919-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி இந்தியச் சட்ட சபைக்கும், மாகாணச் சட்டசபைக்கும் 1920 நவம்பரில் அறிவிக்கப்பட்டது தான் பொதுத்தேர்தல்.
சென்னை மாகாணச் சபைக்கான மொத்த இடங்கள் 127. பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவோர் 65 பேர். அதில் 28 இடங்கள் பார்ப்பனரல்லா தார்க்கு என ஒதுக்கி 14 இடங்களே தந்தனர். மீதியைப் பொது இடங்கள் என்றனர். முஸ்லிம் 13 பேர், கிறித்தவர் 5 பேர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், பல்கலைக்கழகம் தலா ஒருவர், ஜமீன்தார் 6 பேர், அய்ரோப்பிய வர்த் தகர் 4 பேர், இந்திய வர்த்தகர் 2 பேர் எனத் தனித்தொகுதி மூலம் 33 பேர் தேர்வு செய்யப்படுவர். மீதி 29 பேர் கவர்னரால் நியமிக்கப்படுவார்.
இந்நாடு பொதுமக்கள் சிறையே
எவரும் நிகரென்ற பொதுவுரிமைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
புரட்சிக்கவிஞரின் கூற்றுக்கேற்பப் பெரும்பான்மை மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. சொத்து உள்ளவர், வரி செலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோர் மட்டுமே வாக்களிக்க உரிமை படைத்தோராய் அறிவிக்கப்பட் டது. அமையவிருக்கும் புதிய சட்ட சபையே பெண்கள் வாக்குரிமை பற்றி முடிவு செய்யும். சட்டசபைக் காலம் 3 ஆண்டுகள். கவர்னர், இக்காலத்திற்குள் சபையைக் கலைக்கலாம்; 5 ஆண்டு காலமாக நீடிக்கவும் செய்யலாம். சபைத் தலைவரை முதல் நான்காண்டுகள் அவரே நியமிப்பார். துணைத் தலைவர், உறுப்பினர்களால் தேர்வு செய்யப் படுவார். சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்க, தீர்மானம் கொண்டு வர, ஒத்தி வைப்புத் தீர்மானம் முன்மொழிய, மசோதா கொண்டுவர உரிமைகள் தரப்பட்டன. வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள் விற்கும்
சந்தையா நம்நாடு?
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ!
புரட்சிக் கவிஞரின் புரட்சி வரி களுக்கேற்பத் தமிழர் சமுதாயத்திற்கு இடப்பட்ட ஆரியசனாதன விலங் கினைத் தகர்த்தெறிய நீதிக்கட்சித் தேர்தல் களத்தில் இறங்கியது. காங்கிரசு, தேர்தலைப் புறக்கணித்தது. எனினும், பார்ப்பனரின் வெற்றிக்குப் பாடுபட்டது. அண்ணல் காந்தியோ அரசியல் சீர் திருத்தத்தையே ஏற்க மறுத்து ஒத் துழையாமை இயக்கத்தை அறிவித்தார்.
பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி ஆளவேண்டும்
ஆரியத்தை அடையாளங் கண்டு புதுவைக்குயில் பாடிய வரிகள். திரா விடர் அடிமைத்தளைத் தெறித்திடுமோ! பார்ப்பனர் நிலை இறங்கிடுமோவென அஞ்சிய ஹோம்ரூல் கட்சி வேட்பாளர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் சென்னைத் தேர்தல் கூட்டத்தில் துப்பாக்கியைக் காட்டிச் சுட்டு விடுவேன் என மிரட் டினார். தேர்தல் கள முதல் வன்முறை யாளரும் அவரே. அணில் தள்ளியா தென்னை சாயும்? எதிர்ப்பைப் புறந்தள்ளி நடந்து முடிந்த தேர்தலில் நீதிக்கட்சியில் சர்.பிட்டி.தணிகாசலச் செட்டியார் 4996 வாக்குகளும், ஓ.தணிகாசலச் செட்டியார் 4127 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். பார்ப்பனர் ஹோம்ரூல் இயக்கத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும், டாக்டர் யூ.இராமராவும் முறையே 4933, 4408 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றனர். சர்.சி.பி.ரா. உறுப்பினர் பதவியை விடுத்து அட்வகேட் ஜெனரலாகக் கவர்னரால் முடி சூட்டிக் கொண்டார். தேர்தல் செலவை நாட்டில் முதன் முதல் வீணடித்த பெருமைக்குரியவ ரானார். தோற்றுப்போன நீதிக் கட்சியின் தோற்றுநர் சிகரம் டாக்டர் சி.நடேசனார் இடைத்தேர்தலில் வென்று 1921 மார்ச் 5 இல் சபை உறுப்பினரானார்.
நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இடங் களை வென்றது. நியமன உறுப்பினர் 18 பேர் ஆதரவாளராக வந்தனர். 81 பேரைக் கொண்ட கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயரைக் கவர்னர் லார்டு வெலிங்டன் ஆட்சி அமைக்க அழைத்தார். அவரோ, பொன்னு வைக்கிற இடத்தில் பூவை வைத்தாற் போலப் பெருந்தன்மையோடு தென் னார்க்காடு மாவட்டச் சட்டசபைத் தொகுதியில் வென்ற கடலூர் வழக் கறிஞர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரைத் தலைமையேற்கச் செய்து முதல் அமைச்சர் ஆக்கினார். பி.ராமராய நிங்கார் (பனகல் அரசர்), வழக்கறிஞர் சர்.கே.வி.ரெட்டிநாயுடு இருவரும் அமைச்சர்களாயினர். கவர்னரால் சர்.பி.ராஜகோபாலச்சாரி சட்டசபைத் தலைவராகவும், சர்.கே.சீனிவாச அய்யங்கார் நிர்வாகக்குழு அய்வரில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டனர். சபைத்துணைத் தலைவராகத் திவான்பகதூர் கேசவப்பிள்ளை தேர் வானார். சட்டசபைச் செயலாளர்களாக சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், சர்.ஏ.ராமசாமி முதலியாரும், பாரிஸ்டர்.தங்கவேலுப் பிள்ளையும் பொறுப்பேற்றார்கள். நோய்வாய்ப்பட்ட முதல் அமைச்சர் 1921 திசம்பரில் காலமானார். பனாகல் அரசர் முதல் அமைச்சர் ஆனார். சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும், ஒரிசா பெர்காம்பூர்க்காரர் ஏ.பி.பாத்ரோவும் அமைச்சர்களாயினர். தமிழர் நாடாம் சென்னை, பிறமொழி பேசுவோரின் தலைமையிடமாகியது. சட்டசபையில் தமிழர் இல்லை; தெலுங்கர்களே என்ற மனக்குறை நீதிக்கட்சியினரிடம் இருந்தது.
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி!
என எண்ணும்படிக் குறைவிளக்கித் திராவிடர் சமுதாய இன்னல் களைந்தனர் நம் தலைவர்கள்.
அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமென முதல் அமைச்சர் 1921 ஆகஸ்டு 16இல் முதல் ஆணை பிறப் பித்தார். அதிகாரிகளோ ஆணையைக் கிடப்பில் போட்டனர்.
கல்வி, கண்ணென்ப வாழும் உயிர்க்கு அல்லவா!
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
ஏழுமையும் ஏமாப்பு உடைத்து
தலைமுறைகளை வாழ வைத்திடும் கல்வியை நல்கிடும் அரசுக் கல்லூரிகள் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தன. அதனால் தமிழ் மாணவர் சேர்க்கை ஒடுக்கப்பட்டது. கல்லூரிதோறும் தேர்வுக் குழுக்களை அமைத்துத் தமிழர் மாணவர்களைச் சேர்ப்பிக்கச் செய்த பெருமை கல்வியமைச்சர் ஏ.பி.பாத் ரோவையே சாரும். அதற்கு முன்பு இன்டர்மீடியட் வகுப்பில் பார்ப்பனர் மாணவர் 1260 பேரும், பார்ப்பனரல் லாதார் மாணவர் 640 பேரும், பி.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 469 பேரும், அல்லாதார் 133 பேரும், எம்.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 157 பேரும், அல்லாதார் 20 பேரும், ஆசிரியர் பயிற்சி (எல்.டி) வகுப்பில் பார்ப்பனர் 1-4 பேரும், அல் லாதார் 11 பேரும் சேர்க்கப்பட்டார் களென்றால் பார்ப்பனரின் இழி குணத்தைக் காணமுடியுமே!
கொடியோர் பஞ்சமர் என்று
கூடப் பிறந்தோர்க்கிவர்
கடும்பேர் வைத்திட்டாரடி
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பஞ்சமர், பள்ளர், பறையர் என்னும் இழிபெயரால் அழைக்கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என அழைத்திட டாக்டர் சி.நடேசனார் கொடுத்திட்ட விண்ணப்பத்தின் கீழ் 1922 மார்ச் 25 அன்று முறையான அரசு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
தங்களால் தான் உலகம் இருக்கிறது. தங்களால் தான் மக்கள் வாழ முடி கிறது. மனித சமுதாயக்கூட்டு வாழ்க் கைக்குத் தாங்களே அஸ்திவாரமான வர்கள் என்பதை உணர வேண்டும் எனத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல நீதிக்கட்சியினர் ஆணைகள் பிறப்பித்துத் தங்கள் ஆட்சியால் திராவிடத் தமிழர்களைப் பெருமைக்குள்ளாக்கினர்.
15.01.1024 ஆணை எண் 116 / சட்டம் மற்றும் பொதுத்துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர்க்குப் பணி உயர்வு, உயர்பதவி நியமனங்கள் செய் யப்பட்டன. வீட்டு மனைகள், குடியி ருப்புகள், பள்ளிகள் ஏற்பாடு செய்யப் பட்டன. பள்ளிகளில் தடை ஏற்படின் புதிய ஏற்பாடும் செய்யப்பட்டன.
கோவை மாவட்ட வலையர், குறவர் குற்றப்பரம்பரையிலிருந்து மீட்க 25 நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
மீனவர் நலன் காக்கவும், கள்ளர் சமூக முன்னேற்றம் காணவும் லேபர் கமிசன் அமைக்கப்பட்டன.
மருத்துவப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவிநிதி அளிக்கப் பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலை நாட்ட ஆண்டுதோறும் அறிக்கை கேட்டுப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கட்டணம் நீக்கப்பட்டது.
கல்லூரி, உயர்நிலைப்பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்க்கு அரைச் சம்பளம் கட்டினால் போதுமெனச் சலுகை வழங்கப்பட்டது. எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல், குறள்படி, சமூக அமைப்பை எப்படி மாற்றியமைக்கின் றோமோ, எப்படி உடைத்தெறிகின் றோமோ அதைப்பொறுத்தே அரசிய லும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும் எனும் அய்யாவின் கருத்திற்கிணங்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது. மயிரைக் கட்டி மலையை இழுத்தது போல் நீதிக்கட்சியின் முதல் சட்டசபை நமக் காக வழங்கிய சமூக நீதிச்சாதனைகளுக் காகப் பாராட்டுவோம் என்றும்.
Read more: http://viduthalai.in/page2/88314.html#ixzz3Equz3BTj
சும்மா ஆடுமா சோ குடுமி?
கே: ஆசிரியர் தினம் குரு உத்ஸவ் என்று பெயர் மாற் றப்படுவதை வரவேற்கிறீர்களா? தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரி வித்துள்ளனவே
ப: ஏதோ இதற்கு முன்பு ஆசிரியர் தினத்திற்கு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் என்ற பெயர் இருந்தது போலவும், இப்போதுதான் நாடு முழுவதும் இருந்த அந்தத் தமிழ்ப் பெயர் மாறி, ஸம்ஸ்கிருதப் பெயர் வந்து விட்டதைப் போலவும், இது பெரும் சதி என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதற்கு முன்பு இதே ஆசிரியர் தினத்திற்கு ஷிக்ஷக் திவஸ் என்கிற பெயர் இருந்திருக்கிறது. அதற்கு குரு உத்ஸவ் எவ்வளவோ மேல், தமிழில் குருவும் சரி, உத்ஸவமும் சரி, எல்லோரும் அறிந்த வார்த்தைகள்தான். இந்தப் பெயரை வைப்ப தால் தமிழுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று, இந்தப் பெயர் மாற்றம் என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள். இதில் எல்லாம் கவனம் செலுத்தவே வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. (துக்ளக் 17.9.2014 பக்கம் 8.9)
புரிகிறதா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது; சொல்லு வதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் ஒப்புக்காக சில சொற்கள்.
இந்தப் பெயர் மாற்றம் எல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள் என்று பெரிய மேதாவி போல உதார்!
கடைசியில் சொன்ன அந்த ஒரே வார்த்தையைச் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே?
இந்த மகா யோக்கியர்தான் கோயிலுக்குள் வழிபாடு தமிழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் அவரின் பதில் என்ன தெரியுமா?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ் கிருத துதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் இதே சோ. ராமசாமி தான் துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமாகத் தீட்டினார் என்பது நினைவிருக்கட்டும்!
பிரச்சினையே தமிழில் வழிபாட்டுக்கு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும் பொழுது ஆழ்வார்களும், நாயன்மார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற பிரச்சினை எங்கே வந்தது?
வழிபடுவதற்குத் தமிழிலேயே இருக்கும் பொழுது அர்ச்சனை பாட்டே! என்ற ஆதாரம் இருக்கும் பொழுது ஸம்ஸ்கிருதம் எங்கே வந்து குதித்தது? ஸம்ஸ்கிருதமே இல்லாவிட்டால் - அந்த ஒலிக்கே வாய்ப்பு இல்லாவிட்டால் சாமிகள் எல்லாம் வெறும் சோற்றாலடித்த பிண்டங்களாகத்தான் இருக்குமா?
தமிழ் ஒலிக்குச் சக்தியில்லை - ஸம்ஸ்கிருத ஒலிக்குத்தான் சக்தி என்ற இந்த சோ அய்யர் எப்படி கண்டுபிடித்தாராம்? என்னென்ன சோதனைகளைச் செய்து இந்தப் பூணூல் திருமேனி என்ற கொலம்பஸ் இதைக் கண்டுபிடித்தார். கடவுள் என்றால் ஓசைக்கும் ஒலிக்கும் மயங்கக் கூடியவர்தானா? ஸம்ஸ்கிருத ஒலிதான் எனக்குப் பிரீதி என்று சோவி டம் வந்து மயிலை கற்பகாம்பாள் இரவு நேரத்தில்வந்து சொன்னாளா?
பார்ப்பன மொழியான ஸம்ஸ்கிருதத்துக்காக எதை எதையோ சுற்றி வளைத்துச் சொல்லி, உளறி வக்காலத்து வாங்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழித் துவேஷி என்கிறது; விழித்திருக்கும் போதே விளையாடும் இந்த விஷமிகளிடம் எச்சரிக்கை தேவை!
Read more: http://viduthalai.in/page3/88331.html#ixzz3EqvGBruk
பார்ப்பனர் சூழ்ச்சியே சாதிப் பிரிவுகள் மறைமறையடிகளின் ஆராய்ச்சி உரை
இவ் ஆரியப் பார்ப்பனர் ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர் கட்குள் பல்வேறு சமயப்பிரிவு, சாதிப்பிரிவுகளை உண்டாக்கி அவ் வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே. தத்தம் சாதியே உயர்ந்த தென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை. கண்ணன் கதை. கந்தன் கதை. விநாயகன் கதை, காளி கதை முத லிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம், முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கை யால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.
- அறிவுரைக் கொத்து
Read more: http://viduthalai.in/page3/88390.html#ixzz3EqvNuMKA
நம்பிக்கையை காயப்படுத்தலாமா?
பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவிலுக்கு போறாங்க! அதை உங்களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா?
நாத்திகம் பேசுறவங்க இந்து மதத் தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ் லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?
உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன? கோவில் நுழைவுப் போராட் டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் என்ன ?
நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க!
அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ? -
இப்படிப்பட்ட கேள்விகளை சாதா ரண பாமரன் கேட்டால் பரவாயில்லை; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்வி களை மெத்தப் படித்தவர்கள் முக நூலிலும் இணையதளத்திலும் குயுக்தி யாகக் கேட்கும் போது சற்று வேதனை யாக இருப்பினும் அறிவியல் ரீதியாக நாம் பயணம் செய்யவேண்டியது நெடுந்தூரம் எனப் புரிகிறது . மறுபக்கம் இந்தக்கேள்விகளுக்கு நாம் பொறுமை மயாகப் பதில் சொல்லியாக வேண்டும் . வேறு வழியில்லை .
பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவி லுக்கு போறாங்க! அதை உங் களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா?
இந்த வாதமே தனிமனித உரி மையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் . என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள். ஆனால் நான் பகுத்தறிவாளன். கம் யூனிஸ்ட். பெற்றோரை மதிப்பது வேறு; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை. அதை நான் விட்டுக் கொடுக்க வில்லை. என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு. மனைவி கணவனை நேசிப்பது வேறு; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந் தனை, சுய உரிமை எல்லாம் உண்டு. வேடிக்கை என்ன தெரியுமா முற் போக்காளர்கள் மனைவியின் சுய சிந்தனையை சுய உரிமையை மதிக் கிறார்கள். ஆனால் மதம் பெண்களுக்கு சுயம் இல்லை என மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதி ரொலியே மேலே உள்ள கேள்வி. ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கை யுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள். யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது. திணிப்புக்கு தலைவணங்குப வராகவும் இருக்கக்கூடாது .
குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக் கலாம். பயிற்றுவிக்கலாம். ஆனால், ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையில் சமரசம் செய்யவும் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் தேவை.
நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?
ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை. இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறித்துவ மதமே விமர்சனத்துக்குள் ளாகி இருக்கும். சமீபத்தில் இணையத் தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் அந்தந்த நாட் டில் பெரும்பான்மையோரின் மத நம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பி யுள்ளன.
இதுவே இஸ்லாமிய நாடு களிலும் உள்ள நிலை. வலைத் தளத் தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம். பெரும்பாலும் அங்கெல் லாம் இந்து புராணங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங் களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம். அவர்கள் பட்டியல் தருவ தானால் ஏராளம் பக்கங்கள் தேவை.
போய்த் தேடுங்கள் உண்மை அறிய லாம். இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறித்துவச் சூழலில் பிறந்தவர். பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்கினார். அவர் பிறந்த சூழல் அப்படி அதே சமயம் இங்கர்சாலின் நான் ஏன் கிறித்துவனல்ல என்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன்?, நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கை களையும் கேள்விக்குள்ளாக்கினார். ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல் பிறப் பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு. மாறாக பிற மதத்தை விமர்சிக்கப்புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழி கோலிவிடக் கூடுமல்லவா?
உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக் கென்ன? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
இது மதநம்பிக்கை சார்ந்த பிரச் சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச் சனை. நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே , கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும் உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம்? கடவுள் எல்லொருக்கும் பொது என்பது பொய்யா? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக் கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல் லோரையும் படைத்தாரா? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா?
உண் மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார்? இப்படி பிறர் உரிமையை மறுப்ப வரல்லவா? உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே, உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா?
உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே!
நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பார்க்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துவிட்டதே! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக் கோங்க!
பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தது சரியா, தவறா ? இது நீண்ட நாட்களாக நடக்கும் விவாதம். அவர் காலத்தில் புரையோடிப்போன சமூ கத்தை சீர்திருத்த சில அதிரடி நடவடிக்கைகள் அவருக்குத் தேவைப் பட்டது. சுயநலத்துக்காகவோ, கலவ ரத்தைத் தூண்டி பதவி நாற்காலியை பிடிப்பதற்காகவோ எந்த வழிபாட்டு தலத்தையும் அவர் இடிக்கவில்லை. அவர் பிள்ளையார் சிலை உடைத்த தால் இன்று மூலைக்கு மூலை பிள்ளை யார் சிலை வரவில்லை; மாறாக பிள் ளையார் சதுர்த்தி ஒரு மதவெறி அரசியல் செயல்பாடாக மாற்றப் பட்டதன் பின்னணியில்தான் பிள்ளை யார் சிலை பெருக்கம் என்பதறிக! மனித வரலாற்றில் மதம் எப்போது வந்தது? கடவுள் எப்போது வந்தது? இன்னும் பல கடவுள்கள் பல மதங்கள் என பிரிந்து மோதுவது ஏன்? இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முயன்றால் அதற்கான விடை சமூக அறிவியலில்தான் கிடைக்கும். அம்மை நோய்க்கும் பிளேக் நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட கடவுள் தான் காரணம் என எத்தனை நூற் றாண்டுகளாக மனிதகுலம் நம்பி வந்தது. அந்நோய் ஒழிக்கப்பட்டது சுமார் இருநூறாண்டுகளுக்குள்தானே! அதுபோல் அறிவியல் உண்மைகளை சமூகம் ஏற்க பல்லாண்டாகலாம். எவ்வளவு காலம் என்பது முக்கிய மில்லை.
எவ்வளவு பேர் ஏற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. இது விழிப் புணர்வுக்கான தொடர் போராட்டமே! மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதற்கு அறியாமை ஒரு காரணமெனில் சமூகச்சூழல் இன்னொரு காரணம். அறிவியல் ஒளி பரவப் பரவ அறியாமை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியிருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
இதனால் மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் என வறட்டு நாத்திகவாதிகள்போல் கூறலாமோ. கூடாது. காரணம் சமூக ஏற்ற தாழ்வும் வறுமையும் கையறு நிலையும் மக்களை மேலும் மேலும் கடவுள் நம்பிக்கையின் பக்கம் தள்ளுகின்றன. ஆகவேதான் மதம் அபின் என்று சொன்ன மார்க்ஸ் அது இதயமற்றவர்களின் இதயமாக ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது என்கிற உண்மையையும் சுட்டிக்காட்டினார். ஆக, சமூக ஏற்ற தாழ்வுக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்று படுத்துவதன் மூலமே அவர்களை சரியான பாதைக்குத் திருப்ப முடியும். வெறும் போராட்டம் மட்டுமே சாதித் துவிடாது. இடைவிடாது தத்துவமும் அறிவியல் போதனையும் இணையும் போதுதான் நீடித்த பலன் கிட்டும் .
அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதைப் புண் படுத்தலாமா ?
எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது. காயப்படுத்துவதும் கூடாது; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன? உண்மையைச் சொல் வதும்; அறிவியலாய் கேள்வி எழுப்பு வதும் காயப்படுத்துவதாகுமா ? ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது. அதை எதிர்த்து முறியடிக் காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா? அன்று நர பலியை கேள்வி கேட்ட போது மத நம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டார்கள்.
தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறினார்கள். உடன்கட்டை ஏறுவது மத நம் பிக்கையாக இருந்தது; அதனை எதிர்த்தபோது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர். ஆயினும் விடாது போரா டியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது. இன்னும் சதிமாதா கி ஜே என்போரை விமர்சனம் செய் வது எப்படிக் காயப்படுத்துவதாகும்? தேவதாசி முறை ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல. உலகம் தட்டையல்ல உருண்டை; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரி யனைத்தான் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது; உடலில் எலும்புகள் இத்தனை; சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது, சூரியனின் பிரதி பலிப்பே; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர். மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் (சமூக வலைத் தளத்தில் உரையாடும் வசதி உட்பட) இல்லாமல் போயிருக்குமே!
மனித குல வளர்ச்சிக்கு முன்னேற் றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும்? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் ரீதியான கேள்விகளை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? ஆத்திகம் ஒரு சாரார் உரிமை எனில், நாத்திகம் இன் னொரு சாரார் உரிமை. இதை ஏற்க மறுப்பது ஏன்? இந்தியச் சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த இந்திய நாத்திகம் எனும் நூல் உரக்கப் பேசும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் சாடிச்சாடி கேள்வி கேட்டு கேள்வி கேட்டு பெறப் பட்ட முன்னேற்றம்தான் ; நாத்திகரும் ஆத்திகரும் - அனைவரும் அனுபவிக் கும் அனைத்துமாகும். இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில் சாமான்ய சள என்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை.
ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும். இந்த குயுக்தியை அவர்கள் நிராகரிப்பர். மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான். ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட் டாயமாகிவிட்ட்து. எல்லா விமர் சனங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு; அதே நேரம் மார்க்சிய விமர்சனம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல, சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும். அதனைத் தொடர்ந்து செய்வோம். யாரையும் காயப்படுத்த அல்ல; விழிப் புணர்வுக்காக சமூக சமத்துவத்துக்காக சமூக நீதிக்காக சமூக முன்னேற்றத் துக்காக.
- சு.பொ.அகத்தியலிங்கம்
(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)
Read more: http://viduthalai.in/page4/88332.html#ixzz3EqvkxMgo
சோவின் பார்வையில் டெசோ
கே: கருணாநிதி தலைமையில் சமீபத்தில் நடந்த டெஸோ அவசரக் கூட்டம் பற்றி...?
ப: எத்தனையோ லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்களில் எல்லாம் ஏதேதோ கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றை எல்லாம்பற்றி நாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன? பொழுது போக்குச் சங்கங்கள் பொழுதைப் போக்குகின்றன. அவ்வளவுதான். துக்ளக் 17.9.2014 பக்கம் 13)
ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என்பதைப் பார்த்தீர்களா?
ஏதோ, கலைஞர், டெசோ என்று வார்த்தைகளோடு நின்றுவிடாதீர்கள். இவற்றை பார்ப்பனக் கூட்டம் எப்படிப் பார்க்கிறது என்பதுதான் முக்கியம்!
இந்த டெசோதான் அதனுடைய முறையான செயல்பாடுகளால்தான் ஒரு கட்டத்தில் இந்திய அரசை இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவுக் குரலைக் கொடுக்கச் செய்தது? இன்னொரு கட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைபற்றி பன்னாட்டு விசாரணையை நடத்திட அய்.நா. உத்தரவிட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் சென்னையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்தியதும் இந்த டெசோ தான் (முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வயிற்றில் புளியைக் கரைத்ததற்குக் காரணமாக இருந்ததும் இந்த டெசோதான்) அப்படிப்பட்ட டெசோ பார்ப்பனர்களின் பார்வையில் ரோட்டரி கிளப்பாம்! ஏனிந்த கிண்டல் கேலி தெரியுமா?
அவாளின் ஆத்திரம் அந்த அளவுக்கு அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது என்று பொருள். உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்து விட்டால் பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று கருதுகிறார்கள். ஏனெனில் தங்களுக்கென்று சொல்லிக் கொள்ள இயலாத நாடற்ற கும்பல் அல்லவா அது!
Read more: http://viduthalai.in/page4/88333.html#ixzz3EqwQOshT
இந்தக் கல்லு குழந்தை பெற்றது என்றால் உங்க ஆளுங்க நம்புவாங்கடா
பக்தி நிறைந்த எனது அன்னை தந்தை இருவரும் சிறீரங்கம் கோவில் சித்திரை மாதத் திருவிழாவிற்கு தனக்கு வேண்டிய ஊரார்களுடன் செல்வார்கள். ரெங்கநாதரை வேண்டியதால் தான் நான் பிறந்தேன் என நம்பி என்னை விடாமல் அங்கு அழைத்துச் செல்வார்கள். விளையாட்டுத் தேர் வாங்கித் தரும்படி கேட்டு அடம் பிடித்தேன். பல்லில் ரத்தம் வரும் அளவில் பலமாக அடித்து விட்டார் அப்பா.
பேருந்திலும் கட்டை வண்டியிலும் சுமந்து கொண்டு போன பச்சரிசியை ராமசாமி கோவிலில் பார்ப்பனர்களிடம் கொடுத்து சமைப்பதற்கு ரூபாயும் கொடுப்பார் அப்பா. சமைத்து அவர்கள் இருபது பேர் அளவில் சுவைத்து சப்புக்கொட்டி சாப்பிடும்போது ஒன்று இரண்டு ரூபாய் என இலையில் வைப்பார். இதை பல ஆண்டுகளாக பார்த்துள்ளேன். ஒரு ஆள் சாப்பிடக் கூடிய அளவில் சோறு, 10 வடை, அரைப் படி பாயசத்தை அவரின் நண்பர் வீட்டில் தங்கி இருக்கும் எங்களுக்கு கொண்டு வந்து அப்பா பிரசாதமென கொடுப்பார்.
ஒரு முறை நார்த்தாமலை கோவி லுக்கு மொட்டையடித்து கரும்பு தொட்டி கட்டி தூக்கிச் சென்றது நினைவுக்கு வருகிறது. என்னை தொட்டிலில் இருந்து விடுவித்து அர்ச்சனை செய்யச் சென்று விட்டார்கள். புத்தகக் கடையில் அண்ணா எழுதிய வண்டிக்காரன் மகன் புத்தகம் வாங்கினேன். வழக்கம்போல் சீரங்கம் சென்றோம் அங்கு அண்ணா எழுதிய கபோதி புரக்காதல் புத்தகம் வாங் கினேன். மறு ஆண்டும் வழக்கம் போலவே சீரங்கம் சென்றோம். அனை வரும் அர்ச்சனை செய்யச் சென்றார்கள் நான் பெரியார் மாளிகைக்குச் சென்றேன். பழைய கட்டடம் முகப்பின் ஒரு திண்டு அதில் அய்யா உட்கார்ந்து ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரத்தில் நீங்க யாரு என்னவேணும் எனக் கேட்டார். அப்பா அம்மா எல்லாரும் சீரங்கத்திலே சாமி கும் பிடுறாங்க.; நான் அய்யாவைப் பார்க்க வந்தேன் என்றேன். தேடுவாங்களே ரொம்ப நேரமாச்சே என்றார். புத்தகக் கடை பக்கம் போயிருப்பேன்னு இருப் பாங்க தேடமாட்டாங்க அய்யா என்று சொல்லிவிட்டு கும்பிட்டு வணக்கம் சொல்லிவிட்டு சீரங்கத்திற்கு அவர்களி டம் சென்றேன். (இந்த நிகழ்ச்சி ஆலங்குடியில் அய்யாவை பார்த்த பிறகுதான்)
1954ஆம் ஆண்டு துரைராசு நாயக்கர் ஏற்பாட்டில் ஆலங்குடியில் தந்தை பெரியார் கூட்டத்தில் அவருடைய அறிவுரையை அவர் பின்னால் நெருங்கி நின்று, கவனமாகக் கேட்டேன். பகுத் தறிவுக் கருத்து என்னும் ஊசி மருந்தை மூளையில் பாய்ச்சி விட்டார். அது சுறு சுறுப்பாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. அப்போது வயது 19. 1956 சித் திரை வந்தவுடன் மூட்டை முடிச்சோடு சீரங்கம் சென்றோம். அங்கு சண்முக வேலாயுதம் நடத்திய ஈரோட்டுப் பாதை பேப்பரை கடையில் வாங்கினேன்.
சக்கரத்தாழ்வார் கோவிலில் எல்லோரும் உட்கார்ந்தோம். இரவு 10 மணி ஒரேயொரு ஒளி குறைந்த குண்டு பல்பு வெளிச்சம் மட்டும் தான் இங்கு இருக்கக் கூடியது போங்க போங்க என இரு பார்ப்பனர்கள் சத்தம் போட்டார் கள். எல்லோரும் நேர் கிழக்கு நோக்கி ராமசாமி கோவிலுக்கு போய் விட்டார்கள். நான் அந்த ஈரோட்டுப் பாதை பேப்பரை படித்துக் கொண்டிருந்தேன்.
அவாளெல்லாம் போய்ட்டா நீயேன் போகலை? போ, போ, போறியா? இல்லே போலீசுலே சொல்லட்டுமா என சத்தம் போட்டார்கள். நீங்க போய் சொல் றீங்களா இல்ல நான் பொய், போலீசு கிட்டே சொல்லட்டுமா? என்றேன். அவர்கள் குனிந்து பார்த்து ஈரோட்டுப் பாதை படிக்கிறீயா ஈரோட்டுப் பாதை என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
படித்த பின் பெற்றோரிடம் சென் றேன். அடுத்த நாள் வழக்கம்போல அரிசி கொடுத்து அப்பா தட்சிணை எல்லாம் கொடுத்துவிட்டு தேர் பார்க்க அழைத் தார்கள் நான் போகவில்லை. அவர்கள் சென்று விட்டார்கள் எல்லா பார்ப்பனர் களும் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு விசிறியினால் வீசிக் கொண்டு இருந் தார்கள். படிக்காதவர்கள் கொடுப்பதை தட்சணை வைப்பதை இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லலாமே நீங்கள் எல்லோரும் படிச்சவங்கதானே சார் என்றேன். நீங்க எல்லாம் கொடுக்க இருக்கிங்கோ நாங்க எல்லாம் சாப்பிட இருக்கமடா என்றார்கள். நான் மரியாதையா பேசுறேன். ஆனா நீங்க அடாபுடான்னு பேசுறீங்களே என்றேன்.
நீ யார் மகன் என்றார்கள். கண்டியர் மகன் என்றேன் கண்டியர் மகனா இப்படிப் பேசுவது மற்றொருவர் டேய் நாங்க இந்தக் கல்லு குழந்தை பெத்துருக்குன்னு சொன்னாக்கூட உங்க ஆளுங்க நம்புவாங்கடா என்றார்.
அது பெரியார் பிறப்பதற்கு முன்பு பெரியார் பிறந்த பிறகு நம்ப மாட்டார்கள் என்றேன். ஆளாளுக்கு பேசினார்கள். நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். தேர் பார்த்து விட்டு திரும்பி வந்தார்கள் பிராமணர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று அப் பாவும் மற்றவர்களும் என்னைத் திட்டி னார்கள். என்னை சமாதானம் செய்ய தேர் பார்க்க அழைத்துச் சென்றார்கள். மறுபடியும் அதே இடத்திற்குவரும் போது அப்பாவை பார்ப்பனர்கள் தூண்டி விட்டார்கள். மறுபடியும் தகராறு ஆனது. என்னை அழைத்துக் கொண்டு ஊருக்கு உடனே புறப்பட்டு விட்டார்கள். மறு ஆண்டு சித்திரைக்கு நான் வர மாட்டேன் என்றேன் நீ வரவே வேண்டாம் என்று அப்பா சொன்னார். நான் 1956ஆம் ஆண்டோ நான் கோவி லுக்கு செல்வது முற்றுப் புள்ளியானது.
- பெ. இராவணன்
மண்டல தி.க. தலைவர் அறந்தாங்கி மாவட்டம்
Read more: http://viduthalai.in/page7/88394.html#ixzz3EqxHyhRq
செவ்வாய் பற்றிய ஒரு குறிப்பு
சூரியனில் இருந்து 4 ஆவதாக உள்ள பூமியை விட சிறிய கோள்
சூரியனின் உயிர் வளையத்தில் செவ்வாய் இருப்பதால் இங்கு ஒரு காலத்தில் நீரோட்டம் இருந்ததுள்ள தாகவும் ஆனால் உயிர்கள் இருந்ததா என்ற உறுதியான சான்று இன்றுவரை கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோளும் பூமியைப் போலவே கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்குள் சூரியனைச் சுற்றிவருகிறது.
இக்கோளில் தண்ணீர் மாத்திரம் இல்லை. தண்ணீர் திரவநிலையில் இருப்பின் இக்கோளில் தாவரங்கள் வளர 80 விழுக்காடு வாய்ப்பு உள்ளது. இதன் துருவங்களில் கார்பன் டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் உள்ளது. (Dry Ice).
செவ்வாய்க்கோள் பற்றி சுமேரிய, எகிப்திய ஏடுகளில் குறிப்புகள் உள்ளது. தொலைநோக்கிமூலம் செவ்வாயை முதல் முதலாக ஆராய்ந்த அறிவியல் அறிஞர் கலிலியோ
செவ்வாய் பற்றி தன்னுடைய 12-ஆவது வயதில் ஆய்வுக்கட்டுரை எழுதி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியிட்டவர் எட்வின் ஹப்பிள் இவர் பிற்காலத்தில் பிரபல வான் இயற்பியல் ஆய்வாள ராகத் திகழ்ந்தார். இன்று விண்வெளி யில் அமைந்திருக்கும் தொலை நோக்கிக்கு ஹப்பிள் என்ற இவருடைய பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. செவ்வாயில் ஒலிம்பஸ் என்ற மலை நமது எவரெஸ்ட் சிகரத்தை விட 22 மடங்கு உயரமானதாகும்.
செவ்வாயில் ஏற்பட்ட பருவமாற்றத் தால் நீர் ஆவியாகிவிட்டது. செவ்வா யின் தரைத்தளம் பலகோடி ஆண்டு களாக ஈரப்பதமாக இருந்ததால் தரை யில் உள்ள இரும்புடன் வினைபுரிந்து இரும்பாக்ஸைடாக மாறிவிட்டது. இதுதான் செவ்வாய் சிகப்பு வண்ணத் தில் தெரியக் காரணமாகும். செவ்வாயில் தரைக்கு அடியில் நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா கூறினாலும். அது அமிலத்தன்மையுடன் கூடியதாக இருக்ககூடும் என்றும், அந்த நீரினால் உயிரினங்களுக்கு எந்த ஒரு பயனு மிருக்காது என்று அமெரிக்க வானியல் நிபுனர்கள் கூறுகின்றனர். இது வரை 11 செயற்கைக்கோள்கள் செவ்வாய் வட்டப்பாதையில் சுற்றி வரு கிறது. அவை செவ்வாய் ரெகொனன் சசி (Mars Reconnaissance Orbiter), செவ் வாய் (Mars Odyssey),செவ்வாய் எக்ஸ் பிரஸ் (Mars Express).
மரைனர் 9. , வைகிங் 1 மற்றும் 2, செவ்வாய் 3 செவ்வாய் 4 நேற்று முன் தினம் செவ்வாய் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட மார்ஸ் மாவன், மற்றும் இந்தியாவின் செவ்வாய் வட்டப்பாதை ஆய்வுக்கலன் (MOM-Mars Orbiter Mission) .
அமெரிக்கா 2019-ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் ஒன்றை 2004 ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்து வரு கிறது. 80 விழுக்காடு முடிந்துவிட்ட இந்த ஆய்வின் படி 2019-ஆம் ஆண்டு ஜூலை 2 அமெரிக்க தினத்தன்று 3 பேர் கொண்ட குழு செவ்வாயை நோக்கி பயணிக்கும். இவர்களுக்கு உணவிற்காக விண்வெளி ஓடத்திலேயே பயிரிடும் முறையை சோதனை ஓட்டமாக செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்.
Read more: http://viduthalai.in/page8/88396.html#ixzz3EqxcqeZk
ஜாதி ஒழிய பார்ப்பனர் ஒழிய வேண்டும் விஞ்ஞானியின் கூற்று
இன்றைய சமுதாய அமைப்பில் பார்ப்பனர் களுக்கு இருந்துவரும் உயர்ந்த நிலை மதத்தின் பேரால் அவர்கள் அனு பவித்துவரும் உயர்நிலை தகர்த்தெறியப் படாத வரையில் இந்தியாவி லிருந்து இந்த ஜாதி முறையை ஒழிக்க முடி யாது. மதச்சடங்குகளில் பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தனி உரிமை ஒழிக்கப்பட வேண்டும்
- டாக்டர் அய்யப்பன்
(10.1.1958 இல் சென்னை விஞ்ஞானிகள் மாநாட்டுச் சொற்பொழிவு)
Read more: http://viduthalai.in/page8/88397.html#ixzz3EqxqzE8N
இழந்த மூக்கு திரும்பியது
இன்றைய ஆன்மிகம்?
இழந்த மூக்கு திரும்பியது
குரு பகவானை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் நியமனம் செய்த தலம் நாகப் பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம். ஒரு முறை ஈசனை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அதில் பிரம்மனும் சரஸ் வதியும் கலந்து கொண் டனர். அதனால் கோபம் கொண்ட ஈசனின் அம்சமான வீரபத்திரர், பிரம்மனை தலையில் குட்டியும் சரஸ்வதி தேவியின் மூக்கை அறுத்தும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
தனக்கு ஏற்பட்ட அங்கக் குறைபாடு நீங்க வேண்டும் என சரஸ்வதி தேவி தவம் இருந்து தன் இழந்த மூக்கைத் திரும்பப் பெற்ற தலம் இந்த பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயமாம்.
கடவுள்களுக்குள் ஆணவம், தன் முனைப்பு சண்டை சச்சரவு என்றால் இது எந்த வகையில் ஒழுக்கமானது? சிந்திப்பீர்.
Read more: http://viduthalai.in/page1/88441.html#ixzz3EqyAOkM3
பார்ப்பானே வெளியேறு
பார்ப்பானே வெளியேறு பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)
Read more: http://viduthalai.in/page1/88422.html#ixzz3EqyQ9Z80
தேவை அமைதி!
தமிழக முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.இ.அ.தி.மு.க.வே இந்தக் காரியத்தில் ஈடுபடுவது தான் ஆச்சரியமானது.
இந்த வன்முறைகள்மூலம் சட்டம் - ஒழுங்கு அறவே கெட்டு விட்டது என்ற நிலை எழும்போது, அது ஆட்சிக்குத்தானே கெட்ட பெயர். இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.வே - அதிமுக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்ற நிலைதானே விஞ்சும்.
ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்களே அது இதுதானா? திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உருவப் பொம்மைகளை எரிப்பது நாகரிகம் தானா?
இதில் இன்னொன்றையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆளும் கட்சியே நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் ஆட்சி பிறப்பிக்கும் சட்டங்களைக் குடிமக்கள் எப்படி மதிப்பார்கள்?
ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்ட ரீதியாக விசாலமான வழிமுறைகள் தாராளமாக இருக்கும்போது அதனைக் கைவிட்டு விட்டு, இத்தகைய வன்முறைகளில் இறங்குவது தீர்வுக்கு வழியாகுமா?
நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய வழிமுறைகளைக் கையாளுவதற்கு ஆளும் கட்சியே வழிகாட்டலாமா?
இதற்கு முன்பேகூட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல்வழக்கில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தருமபுரியில், வேளாண் கல்லூரிப் பேருந்தை எரித்ததால் மூன்று பெண்கள் கொடூரமான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அஇஅதிமுகவை சேர்ந்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டதே நினைவில்லையா?
இப்பொழுதுகூட அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்க சொத்து அல்லவா!
பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து நட்ட ஈடு வசூலிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை இந்த ஆட்சி தானே கொண்டு வந்தது! இந்தச் சட்டத்தின்படி பா.ம.க. நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று இவ்வாட்சி உத்தர விடவில்லையா? (அதனை எதிர்த்த பா.ம.க. நீதிமன்றம் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது)
பிரதமராக இருந்த இந்திராகாந்திகூட கைது செய்யப்பட்டதுண்டு, கலைஞர் போன்றவர்களும் கைது செய்யப்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடாததோடு, சம்பந்தப்பட்ட தலைவர்களும், யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது என்று பொறுப்புணர்ச்சியோடு அறிக்கைகள் வெளியிடப்பட்டதுண்டே!
தந்தை பெரியார் அனுபவிக்காத சிறை வாசமா? அவர்களாவது கொள்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள். சிறை செல்லுமுன் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கை கொடுப்பார் தந்தை பெரியார்.
ஆனால், ஜெயலலிதா அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்பது கொள்கை, இலட்சியங்களை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்துக்காக அளிக்கப்பட்ட தண்டனையல்ல; எந்தக் காரணத்துக்காக இந்த தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும்.
மோடியைப்பற்றி குற்றம் சொல்லும்பொழுது, அவர்மீது எந்தத் தண்டனையையும் எந்த நீதிமன்றமும் அளிக்கவில்லையே என்று வக்காலத்துப் போட்டுக் கருத்துத் தெரிவிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையால் அவருக்குப் பின்னடைவு அல்ல - நாட்டுக்குத்தான் பின்னடைவு என்று கருத்துச் சொல்லுகிறாரே. ஏனிந்த இரட்டை அளவுகோல்? இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்கு என்ன பெயர்!?
காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு என்றாலும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கிறார் என்றால் இவாளைப்பற்றித் தெரிந்து கொள்ள இதுதான் சரியான தருணமும் - சந்தர்ப்பமுமாகும்.
வன்முறை என்பது இருமுனை கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா; அந்த அண்ணா பெயரில் கட்சி நடத்துகின்றவர்கள் இதனைத் தெரிந்து, வைத்திருக்க வேண்டாமா?
சட்டமறுப்பு இயக்கம் நடந்த காலத்திலும், வெள்ளையனே வெளியேறு என்று சொல்லப்பட்ட காலத்திலும்கூட, வன்முறைகளை காங்கிரஸ்காரர்கள் கையாண்டபோதுகூட கடுமையாகக் கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தைப் பெயர்த்த போது, தண்டவாளத்துக்குக் கீழா சுதந்திரம் இருக்கிறது? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியவரும் - அவரே!
அ.இ.அ.தி.மு.க. இப்பொழுது செய்ததற்காக அல்ல - இதனை யார் செய்திருந்தாலும் - திராவிடர் கழகம் கண்டிக்கவே செய்யும் - திராவிடர் கழகத் தலைவர் கண்டித்துக் கருத்தைத் தெரிவிக்கவே செய்வார்.
சில தொலைக்காட்சி அரங்கங்களில் சில அறிவு ஜீவிகள் உட்கார்ந்து கொண்டு மக்கள் கொந்தளித்து எழுந்தார்கள்! என்று எல்லாம் கருத்துச் சொல்லுவது ஆபத்தானது; எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதற்கு ஒப்பாகும். ஊடகங்கள் வன்முறைகளை அடக்கவேண்டுமே தவிர, தூபம் போடக் கூடாது.
இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் ஆட்சி என்பது இல்லாமல் இருந்தது போன்ற நிலைதான் - இனி மேலாவது சட்டம், ஒழுங்கு நிலையைச் சரிபடுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு!
Read more: http://viduthalai.in/page1/88423.html#ixzz3EqyYUFCf
குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்
பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.
இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!
கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.
பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.
பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.
இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.
வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.
எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.
Read more: http://viduthalai.in/page1/88401.html#ixzz3EqzAluey
ஒவ்வாமையை விரட்டும் சீரகம், புதினா
அலர்ஜி என்பது வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவது ஆகும். இது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்.
உடலில் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். ஒவ்வாமையால் உடம் பில் கொப்பளம்போல் உருவாகும். அது வெடித்து புண் ணாகி அரிப்பு ஏற்பட்டு சீழ் உருவாகி காய்ச்சல் ஏற்படும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் ஒவ்வாமை ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபின் இ என்ற எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்கிறது.
இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்பு தன்மை மிகுந்த பொருள்கள் உருவாகின்றன. இதுபோன்ற வேதிப் பொருள்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற ஒவ்வாமைக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வீட்டில் உள்ள தூசில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் தூசில் நுண்ணுயிரிகள் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள்கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவை வாயில் வைத்தவுடன் கூசும்.
முகச்சுளிப்பு கூட ஏற்படும். சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்பட லாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் பிரச்சினை எற்படும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும். ஒவ் வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவை பாதிப்படையும்.
வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள் அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தை சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்யும். முட்டை, பால், வேர்க்கடலை, கோதுமை, பாதாம் பருப்பு, மீன், நத்தை வகை போன்றவை 90 சதவீதம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை போன்றவைகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.
மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருள்களில் இவ்வகை புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லெட்டுகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.
பாதுகாப்பு முறைகள்
தூசு, பூக்களின் மகரந்த தூளினால் ஒவ்வாமை ஏற்படு பவர்கள் வெளியில் செல்லும்போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லலாம். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் தூய்மையான முறையில் பயன்படுத்தவேண்டும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வாரம் ஒருமுறை சோப்பு போட்டு குளிப் பாட்டவும். வீட்டுக்கு வெளியே வைத்து அவற்றை பராமரிக் கலாம். முக்கியமாக படுக்கை அறையில் அனுமதிக்கக் கூடாது.
நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் ஒவ்வாமை வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே துணியை துவைத்த பின் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வாமை பிரச்சினை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருள்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாள்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இதன் மூலம் மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும்.
சில சிப்ஸ் வகைகள், சீன உணவு வகைகளில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமைக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை தவிர்ப்பதன்மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன்மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
Read more: http://viduthalai.in/page1/88402.html#ixzz3EqzSt1Po
மக்களின் நம்பிக்கையை பெறும் ஆட்சியை நடத்தத் தவறிவிட்டார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கருத்து
பெங்களூரு, செப் 29_ நாட்டை வழிநடத்தி செல் லும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஆட்சி நடத்தினால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். அதில் ஜெயலலிதா தவறி விட்டதாக பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தெரிவித்தார்.
1,200 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது ஜெயலலிதாவை பார்த்து 1,200 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வாசித்த அவர் கூறியதாவது:
குற்றவாளிகள் மீதான குற்றத்தை உறுதி செய்து கூறியுள்ளதில், அரசு தரப்பில் உங்கள்மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது, அனைத்தும் உண்மை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. உங்கள்மீது ரூ.66 கோடியே 44 லட்சத்து, 73 ஆயிரத்து 573 ரூபாய் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அதற் கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு களும் உறுதி செய்யப்பட்டன.
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளது
அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து நிரபராதி என்று நிரூபிக்கத் தவறி விட்டதுடன், அதற்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் சமர்ப்பிக்க வில்லை. உங்கள்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ரூ.66.44 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ரூ.9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 மட்டும் உங்கள் வருமானம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த தொகையில் உங்கள் வருமானத் தொகை போக மீதமுள்ள ரூ.56 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 479 தொகைக்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் காட்டவில்லை. இது தொடர்பாக உங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே உங்களை குற்றவாளி என்று இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
எந்தெந்த பிரிவுகளின்கீழ்?
ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2), 13(1)(இ) அடிப் படையில் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. அதற்கான இந்தப் பிரிவின் கீழ் உங் களுக்கு 4 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் (அய்பிசி) பிரிவு 120 (பி)ன் கீழ் உங்கள் மீது கூறியுள்ள கூட்டு சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கும் உரிய ஆதா ரங்கள் அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் 2, 3, 4 ஆவது குற்றவாளிகளுடன் இணைந்து நிறுவனங்களில் உங்கள் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 போக மீதித் தொகையை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளீர்கள்.
உங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள வாதங்கள் திருப்திகரமாக இல்லை
இதை மறுத்து உங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள வாதங்கள் திருப்திகரமாக இல்லை. எனவே அய்பிசி 120 (பி) பிரிவின் கீழ் உங்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. உங்களுடன் சேர்ந்து 2 ஆவது குற்றவாளியான சசிகலா, 3 ஆவது குற்ற வாளியான சுதாகரன், 4 ஆவது குற்றவாளியான இள வரசி ஆகியோரும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது.
பொது ஊழியர் எப்படி செயல்படவேண்டும்!
பொது ஊழியர் மற்றவர்களுக்கு முன்னுதாரண மாக இருக்கவேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பில் பொது ஊழியர் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.
பெற்றோர் நல்லவராக இருந்தால்தான் பிள்ளை நல்லவனாக இருப்பான், ஆசிரியர் நேர்மையாக இருந்தால்தான் மாணவர் நல்லவனாக சிறந்தவனாக திகழ்வான், தொழிற்சங்கத் தலைவர் கடமை தவறாமல் செயல்பட்டால், தொழிலாளர்கள் சிறப்பாக இருப் பார்கள்.
அதுபோல் நாட்டை ஆட்சி செய்யும் அதி காரத்தில் இருப்பவர்கள் நீதிக்கு பயந்தும், நேர்மை யாகவும், கடமை உணர்வுடனும், விருப்பு, வெறுப்பு இல்லாமல், உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையில்தான் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறார்கள். ஆனால், அய்பிசி 109 பிரிவுபடி நீங்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள் ளீர்கள்.
50 சதவிகித தண்டனையே!
இந்தக் குற்றச்சாட்டும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொறுப் புள்ள பொது ஊழியர் இதுபோன்ற குற்றங்களை செய்வதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண் டனைதான் தரப்பட வேண்டும். இருப்பினும் உங்களுக்கு 50 சதவீத தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவிலான குற்றச்சாட்டில் 2, 3, 4 ஆவது குற்றவாளிகளுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page1/88414.html#ixzz3EqzkHIpI
அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் பகுத்தறிவுப் பகலவனின் 136 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
நியூயார்க், செப்.29_ அமெரிக்காவின் கனெக் டிக்கட் மாநிலத்தின் ஃபார்மிங்டன் நகரில் பகுத் தறிவுப் பகலவன் அய்யா தந்தை பெரியார் அவர் களின் 136- ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் செப்டம்பர் 28 ஆம் நாள் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழாவில் கனெக்டிக்கட் மாநிலம் மட்டு மின்றி அதன் அண்டை மாநிலங்களி லிருந்தும் 30_க்கும் மேற்பட்ட பெரியார் தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மருத்துவர் சோம.இளங்கோவன்
விழாவில் கலந்து கொண்டவர்களை பிரபு இராமகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் விழா விற்கு வந்திருந்தவர்களை வாழ்த்தியும், இன்றைய தமிழர்களின் உயர்நிலைக்குத் தந்தை பெரியார் அவர்களின் பணி எவ்வாறு மிக முக்கிய பங்காற் றியது என்பது குறித்தும் உரையாற்றினார்.
இன் றைய உலகில் தந்தை பெரியாரின் கொள்கைத் தேவையும், அதனை இன்றைய இளைஞர்கள் எடுத்துச்செல்ல வேண்டிய முறைகளையும் மருத் துவர் சோம. இளங்கோவன் விளக்கிப் பேசினார்.
அமெரிக்கத் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் சாக்ரடீசு (60 ஆண்டுகளுக்கும் முன்னர் அவரது பெற்றோர் மணவிழா தந்தை பெரியார் தலை மையில் நடந்தது குறிப்பிடத்தக்கது) ஆரம்பகால அமெரிக்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தோம்; இன்று அமெரிக்கா முழுதும் அதுவும் உங்களைப்போன்ற இளைய தலைமுறையைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வடைகின்றோம் என்றார்.
மருத்துவர் சரோஜா இளங்கோவன்
அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் அய்யா பெரியாரின் பெண்ணடிமை குறித்த கருத்துகளையும், இன்றைய பெண்கள் அய் யாவின் வாழ்வியலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அலெக்சாண்டர் லாரன்சு, கிறித்துவ மதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அய்யா பெரியாரின் கொள்கைகளை எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்றும், மதத்திலிருந்து வெளியேறிய பிறகு தனது வாழ்க்கை இன்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பெரியார் தொண்டர்கள் கார்த்திகேய பிரபு, பெரியார் அவர்களின் கொள்கைத் திண்மை குறித் தும், அது எவ்வாறு தமிழ்ச் சமூகத்தை முன்னேற் றியது என்றும், கார்த்திகேயன் தெய்வீகராசன் தந்தை பெரி யாரின் சிக்கன வாழ்வு இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏன் தேவை என்றும்,
இணைய இதழ் ஆசிரியர்
ராஜாராம் (திண்ணை, இணைய இதழ் ஆசி ரியர்) தந்தை பெரியார் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியாவின் பல மாநிலங்களையும், உலக நாடுகளையும் ஒப்பிட்டும் பேசினார். விழாவில் பங்கு கொண்ட பேராசிரியர் ராஜேந் திரன் (புலவர் அய்யா இமயவரம்பனின் உறவினர்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்வில் பெரியார் கொள்கைகளால் ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றிப் பேசினர். விழாவில் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் அவர்களின் நூல்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டன.
வினாடி-வினா நிகழ்ச்சி
இவ்விழாவில் பெரியார் சிந்தனைச் சோலை யிலிருந்து வினாடி_வினா நிகழ்வும் நடைபெற்றது. பல கருத்துகள் விளக்கப்பட்டன. பலர் பெரியாரின் பன்முகங்களைப் புதிதாக அறிந்து கொண்டதாகக் கூறினர்.
விழாவில் பங்கு கொண்டவர்களுக்கு சந்திரா பிரபு நன்றி தெரிவித்தவுடன், இரவு உணவுடன் விழா சிறப்பாக முடிவுற்றது.
- செய்தி: கார்த்திகேயன் தெய்வீகராசன்
Read more: http://viduthalai.in/page1/88421.html#ixzz3Eqzukvxn
பொது அமைதியும், பொது மக்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் - கி.வீரமணி
ஜெயலலிதாமீதான 18 ஆண்டு வழக்கு முடிவுக்கு வந்தது!
தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வகை நியாயம்?
காவல்துறை முன்னெச்சரிக்கையாக ஏன் நடந்து கொள்ளவில்லை?
பொது அமைதியும், பொது மக்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முக்கிய அறிக்கை
தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, ஆளும் அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறைகளில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது; பொது அமைதியும் பொது மக்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (27.9.2014) காலை வரை இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்மீதும், அவரது தோழிகள், முன்னாள் வளர்ப்பு மகன் ஆகிய மூவர் மீதும், கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு (ஊழல் செய்ததாக) வழக்கின் தீர்ப்பு - கர்நாடக மாநில பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதனுடைய நீதிபதி மைக்கேல் ஜான் குன்ஹா அவர்களால் வழங்கப் பட்டுள்ளது!
மாரத்தான் வழக்கு
18 ஆண்டுகள், 160 ‘வாய்தாக்கள், 259 அரசு சாட்சிகள் 99, தற்காப்பு - குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சாட்சிகள் 1,066 ஆதாரத் தடயங்கள், 2,341 எக்சிபிட்ஸ் இவைகளைக் கொண்டு, சென்னையில் 8 ஆண்டுகளும், கர்நாடகத்திற்கு மாற்றப்பட்ட பின்பு அங்கே 10 ஆண்டுகள் தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு என்ற மாரத்தான் வழக்கு ஒரு வகையாக முடிவுக்கு வந்து, அதிர்ச்சி தரும் தீர்ப்பின்மூலம், முதல்அமைச்சரான ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றப் பதவி, முதல்வர் பதவி, 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பு, 4 ஆண்டு கால சிறை, 100 கோடி ரூபாய் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு; வழக்கில் தொடர்புடைய குவிக்கப்பட்ட சொத்துக்களின் அட்டாச்மெண்ட் - இப்படி தண்டனைகளை ஊழல் ஒழிப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கிரிமினல் செக்ஷன்கள் ஆகியவற்றின்கீழ் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பெங்களூரு சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதன்மீது மேல் முறையீட்டினை கர்நாடக உயர்நீதி மன்றம், பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்திலும் செய்ய தண்டிக்கப்பட்டோருக்கு உரிமையும், வாய்ப்பும் உண்டு என்பது சட்டப்படியான நிலைமையாகும்.
என்னென்ன விசித்திரங்கள்!
மாரத்தான் வழக்காக 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசித்திரங்களில் குறிப்பிட்டத்தக்கவை எவை என்றால்,
எண்ணற்ற வாய்தாக்கள் ஒருபுறம், மறுபுறம் காலதாமதக் கண்ணோட்டத்தில் வழக்கின் மேல் முறையீடு - உச்சநீதி மன்றம் வரையில் என்ற சட்டக் கண்ணாமூச்சும், அதைவிட இதுவரை கேள்விப்பட்டிராத, தன்னை விசாரிக்கும் நீதிபதியாக குறிப்பிட்டவரே தொடர, நீதிமன்றத்தின் மூலமே குற்றம் சாற்றப்பட்டவரே கோரிக்கை வைத்து, உச்சநீதிமன்றமும் அதை அனுமதித்ததும், அதை விட வியப்பும் வேடிக்கையும் கலந்த ஒன்று, - தனக்கு எதிராக வழக்கு நடத்தும் பிராசிக்யூட்டராக குறிப்பிட்ட இன்னாரே தொடர வேண்டும், அவரை மாற்றக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே மனு போட்டு வெற்றி பெற்றதும் இதுவரை எந்த வழக்கிலும் காணாத புதுமை யிலும் புதுமை!
விலை மதிப்பில்லா நீதிபதி!
இவையெல்லாம் தாண்டி, இறுதியில் இப்படி ஒரு தீர்ப்பு - மயக்கமில்லா நீதிபதிகளும், விலை மதிப்பில்லாத கண்ணைக் கட்டிய நீதி தேவதையின் சரியான வார்ப்படம் போன்ற நீதிபதிகளும் நாட்டில் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார். நீதித்துறை என்ற ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் இன்னமும் பலமாக உள்ளது; அதே நேரத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை வீண் போக வில்லை என்பதையும் காட்டுவதாக, நாடே அதிசயத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ள வரலாற்றுத் தீர்ப்பாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
1240 பக்கங்கள் எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பில், இதுவரை வெளிவந்த செய்திப்படி, அந்நீதிபதி நடுநிலை தவறாமல் அதே நேரத்தில் ஜனநாயகத்தின் மாண்பினைக் காத்திடும் வண்ணம் தனது தீர்ப்பினை அளித்தார் என்றே கூற வேண்டும்; சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்றும், அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் அளவுக்குமீறிய நாணயத்தோடு இருக்க வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய வகையிலும் நீதிபதி தனது தீர்ப்பை அளித்துள்ளது தெரிய வருகிறது.
ஏற்படக் கூடிய அரசியல் விளைவுகள்!
இதனால் ஏற்படக் கூடிய அரசியல் விளைவுகள் தமிழ்நாட்டில் உடனடியாகவும், தொலைநோக்குடனும் பல உள்ளன. முதலாவதாக, அம்மையார் வகித்த முதல் அமைச்சர் பதவிக்கு ஒருவர் அக்கட்சியிலிருந்து (அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர்களால்) தேர்வாகி ஆட்சியை அமைத்திட வேண்டியது அவசர, அவசியக் கடமையாகும்.
ஜெயலலிதாவின் தலைமைதான் இன்னமும் அக்கட்சிக்கு உள்ளது. கட்டுப்பாடு உள்ள அவரது சட்ட மன்ற உறுப்பினர்கள் தலைமையின் நம்பிக்கைக்குரிய ஒருவரை இன்றோ, நாளையோ தேர்வு செய்து ஆட்சி அமைக்கக்கூடும்; அதில் எந்த சிக்கலும் இருக்காது - காரணம் பெரும்பான்மை உள்ளது அக்கட்சிக்கு.
கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்
இந்நிலையில் நேற்று தண்டனை அறிவிக்கும் முன்பும் - குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோதும் - தமிழ் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட் டங்கள், ரகளைகள், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எவ் வளவு சீர்குலைந்து விட்டன என்பதை வெட்டச் வெளிச்சமாக்கியது.
செய்தியாளர்களின் பணி என்பது செய்தி சேகரித்து அளிப்பதே; அந்தக் கடமையைச் செய்யும் அவர்களைத் தாக்குவது, அப்பாவிப் பொது மக்கள்மீது கல்லெறிவது , பேருந்து எரிப்பு, பயணிகளுக்கு மிகப் பெரிய ஆபத் தல்லவா! பொதுச் சொத்து சேதம் செய்யப்படுவதை யெல்லாம் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த நிலையிலேயே நடைபெற்று உள்ளது.
தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியதே! கலைஞர் மற்றும் தலைவர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள் முன்பு ரகளைகளையெல்லாம் எப்படி காவல்துறை அனுமதித்தது?
காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்?
இப்படி ஒரு முக்கிய தீர்ப்பு வருகின்ற நிலையில், தீர்ப்பு யாருக்குச் சார்பாக எதிராக - வந்தாலும், அதன் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்த்து, போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா? கொடி அணி வகுப்பு, கலவரங்களைத் தடுக்கும் காவல் படைப் பிரிவு - இவைகளைத் திட்டமிட்டு சட்டம், ஒழுங்கு காப்பாற்றப் பட்டு, பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டாமா? அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரும் நிலையில், அவமானம் அவர்களுக்கு அல்லவா? பொறுப்புணர்வு இருந்திருக்க வேண்டாமா?
இந்த நிலையில் ஆளுநர் அழைத்து கூட்டம் போட்டார் என்பது ஓரளவு ஆறுதல் என்றாலும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது; எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகச் செய்தியாளர் களுக்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்தாக வேண்டும்.
தண்டிக்கப்பட்டவர்கள் சட்டப்படி மேல் முறையீட்டைச் செய்து தங்களுக்குப் பரிகாரம் தேடுவதுதான் ஜனநாயகத் தில் முறையே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (Free for all) என்ற நிலையை உருவாக்கிடக் கூடாது!
அறிவுடைமையல்ல!
இப்படி எதிர் வன்முறை நடத்தினால்தான் தங்களுக்கு கட்சியில் எதிர் காலத்தில் பதவிகள் வாய்ப்பு ஏற்படும் என்ற மலிவு வித்தைகளில் இறங்கி தங்களைத் தாழ்த்தி, தங்கள் அரசுக்கும் நெருக்கடியை உருவாக்கிக் கொள்ளுவது அறிவுடைமையாகாது.
பொது மக்களின் கடமை!
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதனை எதிர்த்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது மிகவும் தவறான, ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும். நாட்டில் அமைதி நிலவிட, பொதுச் சொத்துகள் காப்பாற்றப்பட, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட, பொது மக்களும் விழிப்பாக இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/page1/88344.html#ixzz3Er0CtPua
செய்தியும் சிந்தனையும்
புரிகிறதோ!
செய்தி: நவராத்திரியை முன்னிட்டு தி இந்து சுண் டல் போட்டி நடத்துகிறது. அட்டகாசமான பரிசுகள் காத்திருக்கின்றன. - தி இந்து அறிவிப்பு
சிந்தனை: பார்ப்பான் உயிர் அவன் கடவுளிடத்திலும் மதத்திலும்தான் இருக்கிறது என்பதைத் தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது புரிகிறதா?
Read more: http://viduthalai.in/page1/88345.html#ixzz3Er0nfhH5
தினமணியின் வயிற்றுப்போக்கு?
- குடந்தை கருணா
இன்றைய எல்லா பத்திரிகைகளும், சொத்துக் குவிப்பு வழக்கின் செய்திகளை வெளியிட்டுள்ளன. சில பத்திரிகைகள், அரசியல் சாதக, பாதகத்தை வெளியிட்டுள்ளன.
ஆனால், தினமணியில் முதல் பக்கத்தில் கார்ட்டூன் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 65 கோடிக்கு 4 ஆண்டு தண்டனைன்னா, ரூ.1.76,000 கோடிக்கு எவ்வளவு ஆண்டுன்னு கணக்கு போட்டு, சந்தோஷம் அடைகிறது. என்னே ஒரு பார்ப்பன வன்மம்.
65 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு என்பது தனது வருமானத்திற்கு மீறிய சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனையாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது.
2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1,76,000 கோடி இழப்பு என்று தானே, வினோத் ராய் தனது தணிக்கை அறிக்கையில் கூறி இருந்தார். அதுவும் ஒரு ஒப்பீட்டு முறையில் அந்த கணக்கை தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் ரூ.1,76,000 கோடி ஊழல் என்று எங்கேயும் கூறாதபோது, தினமணி வைத்திய நாதனுக்கு மட்டும் அது எப்படி ஊழலாக தெரிகிறது.
அரசியல் கட்சிகள் தங்களது அரசியலுக்காக, அப்படி ஊழல் என்ற வார்த்தையை சொல் கிறார்கள் என்றால், தினமணியும் அந்த வகையில் சேர்ந்ததா? என்பதை முதலில் வைத்தியநாதன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், தான் ஒரு அரசியல் கட்சிக்கான பத்திரிகை என்பதை யாவது சொல்ல வேண்டும்.
ரூ.1,76,000 கோடிக்கான இழப்பு சம்பந்தமான வழக்கில், இதுவரை, எங்கேயாவது, நீதிமன்றமோ, வழக்கை எடுத்துச் செல்லும் சிபிஅய் நிறுவனமோ கண்டுபிடித்திருக்கிறதா? இதுவரை இந்த வழக்குக்காக கைதாகி தற்போது பிணையில் வழக்கை வாதாடிக் கொண்டிருக்கும் ஆ.ராசாவிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏதேனும் நிரூபணம் ஆகியிருக்கிறதா? இவற்றிற் கெல்லாம் தினமணி வைத்தியநாதன் பதில் சொல்லவேண்டும்.
2ஜி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்; தங்களுக்கு எல்லாவித வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வாய்தா வாங்காமல் வழக்கை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும், பதினெட்டு ஆண்டுகள் வழக்கை பல வழிகளிலும் இழுத்தடித்துக் கொண்டிருந்தவர்களும் ஒன்றா? தினமணி வைத்தியநாதன் பதில் சொல்ல வேண்டும்.
அலுவலகப் பணியில் தன்னிடம் வரும் கோப்புகளை அரசின் கொள்கைகள் சார்ந்து முடி வெடுத்து, அதன் அடிப்படையில் தணிக்கையாளர் அரசுக்கு இழப்பு என அறிக்கை தருவது 2ஜி வழக் கில் மட்டுமல்ல; பல துறைகளிலும் நடந்துள்ளது. நடந்து வருகிறது. நாளையும் வரும்
குஜராத்தில் மோடி ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் காரணமாக ரூ.5,000 கோடி இழப்பு என இதே தணிக்கைத்துறை அறிக்கை அளித்ததே; அது இழப்பா? ஊழலா?
ரூ.1 ஊதியம் பெற்று வந்தவரிடம் ரூ.65 கோடிக்கு சொத்து குவிந்ததை, கண்டுபிடித்து, அந்த சொத்துகளின் பட்டியலை வெளியிட்டது நீதி மன்றம். அது முறைகேடாக சம்பாதித்தது என உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், ரூ.1,76,000 கோடி இழப்பு என்று சொல்லப்படும் வழக்கில், தீர்ப்பு வரட்டும். அதுவரை தினமணி வைத்தியநாதன் பொறுமை காட்டலாம்; அல்லது அது ஊழல் என்றால், விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யட்டும். அதில் விளக்கம் தர பலர் தயாராக இருக்கிறார்கள்.
அதைவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையை வேறு ஒரு சம்பந்தமில்லாத வழக்கோடு முடிச்சுபோடுவது, தினமணி வைத்திய நாதனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள உள்ள பீதியையும் வயிற்றில் ஏற்பட்டுள்ள பேதியையும் காட்டுகிறது.
அய்ராவதம் மகாதேவன், சம்பந்தம் போன்ற சிறந்த ஆசிரியர்களை கொண்டு இயங்கிய அன்றைய தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்ற கொள்கை பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.
ஆனால், தேகம் முழுவதும் பார்ப்பன வன்மத்தை கொண்டுள்ள ஒருவரின் எழுத்தில் நாளும் பொய் யான செய்தியை வெளியிடும் இன்றைய தினமணிக்கு, அது பொருந்தாது என்பது மட்டுமல்ல; நேர் எதிராக கொண்டதாகத் தான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
Read more: http://viduthalai.in/page1/88359.html#ixzz3Er1F7iLo
முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
சென்னை, செப்.28_ ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர் கள் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அவை வருமாறு:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்
தீர்ப்பை தீர்ப்பாகத் தான் பார்க்கவேண்டும். தீர்ப்பின் மீது விமர்சனம் என்பது இருக்கக்கூடாது. எனவே தமிழகத்தில் இது தொடர்பாக நடைபெறு கிற வன்முறைச்சம்பவங் கள் சாதாரணமாக பொதுமக்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து அதனை கைவிடவேண் டும் என கேட்டுக்கொள் கிறேன்.
சட்டம்_ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழக காவல் துறைக்கு உண்டு. எனவே காவல்துறை தனது கட மையை செய்யும் என நம்புகிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கவேண் டும் தவறு செய்தால் தண்டணையை அனுப வித்தே தீரவேண்டும் என்ற இயற்கையின் நிய தியை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு தமி ழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.
அதோடு மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பையட்டி அ.தி.மு.க.வினர் நடத்தும் போன்ற வன்முறை சம் பவங்களை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
சொத்துக்குவிப்பு வழக் கில் தாமதமாக தீர்ப் பளிக்கப்பட்டிருந்தாலும் நீதி தரம் குறையாமல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டி ருக்கும் நம்பிக்கை பெரு மளவில் அதிகரித்திருக் கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப் பவர்களுக்கு இந்த தண் டனை சரியான பாடமாக அமையும்.
சொத்து வழக்கில் நீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வினரின் வன் முறையும், அதற்கு துணை போகும் காவல்துறையி னரின் செயல்பாடுகளும் கடுமையாக கண்டிக்கத் தக்கவை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத் திற்கு வலுசேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கருதுகிறது. இத்தீர்ப்பை யொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம் _ ஒழுங்கை நிலைநாட்ட வும், அமைதியை பாது காக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா வர லாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக் கின்றார்.
தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறை யீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர். கடைகளை உடைத்து நொறுக்கினர்.
பேருந்துகள் வாகனங் களைத் தாக்கித் தீவைத் துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற் படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர்.
இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதி யும் நிகழ்ந்தது. குற்றங் களுக்குத் துணைபோனது.
முதலமைச்சர்தான் சிறை சென்றாரே தவிர, அரசு நிர்வாகம் என்பது அதிகாரிகளால் இயக்கப் படுவதாகும். காவல்துறை யினர் சட்டத்தின் பணி யாளர்கள், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய வர்கள். 2001 ஆம் ஆண் டில் இதுபோல ஜெயல லிதாவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்தபோது, தரும புரியில் பேருந்தில் பய ணித்த கல்லூரி மாணவி கள் மூவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
அன்று நடந்த வன் முறைக் கொடுமையைக் கருத்தில் கொண்டு அண்ணா தி.மு.க. வினர் பாடம் கற்றார்களா? இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத் தியதா? என்றால் அதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதலமைச்சர், பெங்களூரு நீதிமன்றத் தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்கவேண்டும் என்று தன் கட்சியின ருக்கு அறிவுறுத்தவேண் டிய கடமையைச் செய்யத் தவறினார்.
அதற்கு மாறாக, அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான கட்சித் தொண் டர்கள் பெங்களூருவில் வந்து குவிவதற்கு, அவருக் குத் தெரிந்தே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டன.
இன்றைக்கும் தமிழ கத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பேருந்துப் போக்குவரத்து இல்லை. ஞாயிற்றுக் கிழமையில் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படும் கடைகளும் அச்சத்தால் மூடிக்கிடக் கின்றன.
பொதுமக்களின் உயி ருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண் டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றி லும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத் துக்கு ஆதரவாகச் செயல் பட்டது.
அதனால்தான் நேற்று பகலில் தமிழகம் முழுவதிலும் மின்சார விநியோகம் தடை செய் யப்பட்டது. பொது மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல், தொலைக் காட்சி ஊடகங்களின் தொடர்பு துண்டிக்கப்பட் டது. இது ஜனநாயகத் துக்கு மிகவும் ஆபத்தான சூழல் ஆகும்.
இதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதி மன்றமே ஆணையிட்டது. இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் அச்சத் தைப் போக்குகின்ற விதத் தில் வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, மறு மலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார் பில் கண்டனத்தைத் தெரி விக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page1/88362.html#ixzz3Er1iM6bk
ரூ.66 கோடி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை ரூ.100 கோடி அபராதம்; உடனடி சிறையில் அடைப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை வளாகம்
பெங்களூரு, செப்.28_ வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு நான்காண்டுகள் சிறைத் தண்ட னையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று (27.9.2014) தீர்ப் பளித்துள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ருக்கும் தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதோடு முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் களையும் பறிமுதல் செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து 4 பேரும் சிறை வளாகத் திலேயே கைது செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
1991_1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்தை மீறி ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசாமி புகார் செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப் பட்டது. சிறை வளாகத்தில் நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 6 மணிமுதல் நீதிமன்றம் அமைந்துள்ள பெங் களூரு பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.
முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் நேற்று காலை 8.57 மணியளவில் போயஸ் தோட்டத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து 9.25மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
பிரசாதம்
மைசூர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட கோவில் களிலிருந்து முதல்வருக்குப் பிரசாதம் அளிக்கப்பட்டது. பயபக்தியோடு ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா.
பின் சாலை வழியாகப் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் காலை 9.45 மணிக்கு சிறை வளா கத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு வந்தார். சுதாகரன் முன்னதாக தனி காரில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
காலை 10.40 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக பகல் 11.20 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதி, அங்கிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு 4 பேரும், நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று பதில் அளித்தனர்.
அதனையடுத்து பகல் ஒரு மணிக்கு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒரு மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது.
அப்போது வழக்கின் முதல் குற்றவாளியான ஜெய லலிதாவிற்கு குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ள 3 பிரிவு களின் மீதும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்ட னையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது.
ரூ.100 கோடியை செலுத்தத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரி வித்தார்.
பின்னர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகி யோருக்கு 3 பிரிவுகளின் கீழும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அப ராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஜெயலலிதாவிற்கு வழக்கில் பறிமுதல் செய் யப்பட்ட 64 கோடியே 44 லட்சம் போக மீதித் தொகையை செலுத்தினால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் தண்டனையை குறைக்கக் கோரியும், அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்களுக்கு பதிலளித்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதிடும்போது, தண்டனையை எந்த சூழ்நிலையிலும் குறைக்கக்கூடாது என்று தெரிவித்தார். அதையடுத்து 4 பேரும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பின்னர் மாலை 4 மணியளவில் ஜெயலலிதா உள் ளிட்ட 4 பேரிடமும் 1,240 பக்கங்களை கொண்ட தீர்ப்பின் நகலை நீதிமன்ற ஊழியர்கள் அளித்தனர்.
அதில் 4 பேரும் கையொப்பமிட்டனர். பின்னர் ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹா சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
பரிசோதனைக்கு பிறகு மாலை 5.20 மணிக்கு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன் பின் வெளியே வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங் கூறியதாவது:
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) மற்றும் 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109_ன் கீழும், 120_ன் கீழும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணையின் அடிப் படையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயல லிதாவுக்கு 3 பிரிவுகளிலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளின் கீழ் மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சாதாரண சிறையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட் டுள்ளது.
இந்த வழக்கிற்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கருநாடக அரசுக்கு தரவேண்டும். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறைச்சாலையை மாற்றக் கோரியோ, மருத்துவ வசதிக் கோரியோ எந்தச் சிறப்புச் சலுகை கோரியோ மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை.
அது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அவர் கள் மேல்முறையீடு செய்யவேண்டுமானால் கருநாடகா உயர்நீதிமன்றத்தை அணுகலாம். ஜெயலலிதா பதவி இழப்புத் தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு பவானி சிங் கூறினார்.
Read more: http://viduthalai.in/page1/88356.html#ixzz3Er2BBkFu
சி.பா.ஆதித்தனார் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை!
தமிழர் தலைவர் பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது:
தமிழ் இன உணர்வோடு மிகப்பெரிய ஒரு சாதனையாக தன்னுடைய ஏடுகள்மூலம் குறிப்பாக தினத்தந்தியின் மூலம் மிகப்பெரிய ஒரு வரலாற்றையே உருவாக்கியவர். தந்தை பெரியாரால் மிகவும் மதிக்கப்பட்டவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்தத் துறையிலே நிகழ்த்திய சாதனையை இன்னமும்கூட யாராலும் முறியடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட அவர் ஒரு தனித்த ஒரு அத்தியாயத்தையே படைத்தார். தமிழர்களால் ஏடுகள் நடத்த முடியும். அதுவும் மற்றவர்களுடன் போட்டி போட்டு சிறப்பாக நடத்த முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அந்த பாரம்பரியத்தில் சிவந்தி அவர்களும், அவருக்குப்பின் அவர்களுடைய பாரம்பரியமான பிள்ளைகளும் நடத்துவது பாராட்டப்படவேண்டியது. எனவே, ஆதித்தனார் மறையவில்லை. வாழ்கிறார். -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/page1/88290.html#ixzz3Er2Wj75W
இன்றைய ஆன்மிகம்?
நவராத்திரி
நவராத்திரி - மூன்றாம் நாளான இன்று நான்கு வயது குழந்தையை அலங் கரித்து இந்திராணியாகப் பாவித்துப் பூஜிக்க எதிரி கள் விலகுவார்களாம்!
அப்படியா? நமது இராணுவ அமைச்சரை முதலில் இதனைச் செய்யச் சொல்லுங்கள். சீனா, பாகிஸ்தான் நாடுகள் படைகள் மூலம் அடிக்கடி நமது எல்லைகளில் தொல்லைகள் கொடுக்கும் எதிரிகள் அல்லவா? அவர்கள் விலகி ஓடிவிட இவ்வளவு சுலபமான வழி இருக்கிறதே!
Read more: http://viduthalai.in/page1/88293.html#ixzz3Er2euV00
திருப்பதி குடையெனும் பெயரால் பகற்கொள்ளை!
கடவுள், மதம், பக்தி, பண்டிகை என்றால் எதையும் நம்பித் தொலைக்கும் அளவில் புத்தி நாசமாய்க் கெட்டுத் தொலைகிறது. மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கரைத்துக் குடித்தால் தட்சணை கொடுத்து குடிப்பதில்லையா? பூசாரி வாயில் கக்கும் வாழைப் பழத்தை குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக பெண் தன் வாயைப் பூசாரியின் வாயில் வைத்துப் பழத்தை உறிஞ்சி இழுக்கவில்லையா?
எந்த காலத்திலோ எந்த ஒரு பைத்தியக்காரனோ செய்தது - பிற்காலத்தில் பண்டிகைகளாக, கோயில் உத்சவங்களாக மாறுவதில்லையா?
திருப்பதி குடை என்ற பெயரால் சென்னையின் போக்குவரத்தையே நிலை குலைய வைக்கிறார்களே. இது என்ன கொடுமை!
சிந்தாதரிப் பேட்டையைச் சேர்ந்த ஒரு தெலுங்கர் நேர்த்திக் கடனுக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சாதாரன நிகழ்ச்சி இன்று சென்னை நகர ஒருநாள் போக்குவரத்தையே சீர்குலைக்கும் ஒன்றாக மாற்றிவிட்டது. சிந்தாதிரிப்பேட்டையில்(அன்று சின்னத்தறிப் பேட்டை) ஆந்திராவில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு குடும்பம் நேர்த்திக்கடனுக்காக திருப்பதி பிரம்மோற் சவத்தின் போது குடை செய்து தருவதை வழக்கமாக கொண்டு இருந்தது. அவர்கள் செய்யும் குடை அழகிய வண்ணத்தில் வித்தியாசமாக இருப்பதால் அப்போது அவர்கள் குடை சுமந்து செல்லும் போது வழிப் போக்கர்கள் பார்த்து வியப்பது வழக்கம். அவர்களின் அடுத்த தலைமுறை இதையே ஒரு விழாவாக செய்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் உண்டியல் வசூலிக்க கூட்டம் கூட்டி பிரபலப்படுத்த எண்ணினார்கள். அதனால் அன்றைய சென்னை எல்லையான யானைகவுனியைத் தாண்டும் முன் குடையை பார்க்க வாருங்கள் என தண்டோரா போடப்படும். குடை செல்லும் போது வழியில் உள்ள சில தெலுங்கு பேசும் மக்கள் குடை கொண்டு செல்பவர் களிடம் தங்களின் வேண்டுதலுக்காக பணம் மற்றும் காணிக்கைப் பொருட்களைத் தருவார்கள்.
இதுவே கவுனி தாண்டும் நிகழ்ச்சியாக பிரபலமாகிவிட்டது. பொதுவாக மூங்கிலில் கூடை முடையும் நபர்கள் கூடைப்பின்ன மூங்கிலை கிழிக்கும் போது அதைக் கீழே தட்டி அதனுள் இருக்கும் பூச்சிகளை விரட்டி விடுவார்கள், இது மூங்கில் கூடைப் பின்னும் மக்களின் மனித நேயம். ஆனால் கடவுளுக்கு என குடை செய்யப் பயன்படும் மூங்கிலில் உள்ள பூச்சி, வண்டுகளை தீயில் இட்டு கொன்றுவிடுகிறார்கள். அதாவது மூங்கிலை கொண்டுவந்து துண்டங்களாக்கி அதன் மீது வேப் பெண்ணெய் தடவி சூடுபடுத்துவார்கள், இதனால் மூங்கில் விரைவில் சூடாகி பூச்சிகள் செத்துவிடும், மூங்கிலும் எரியாமல் இருக்கும். கதை 1: யானைகவுனியில் உள்ள செட்டியார் ஒரு வரிடம் திருமால் கடன் வாங்கிவிடுகிறார். அந்தக் கடனை திருப்பித் தரும்வரை நான் இந்த இடத்தில் நிற்கமாட்டேன் என்று உறுதிசெய்கிறாராம் பெருமாள். ஆகையால் யானைக்கவுனிப் பகுதியில் குடை நிற்காமல் ஓடிவிடுமாம். நின்றால் கடன்காரன் பிடுங்கி விடுவானாம். அட கடன்காரக் கடவுளே!
கதை 2: இக்குடை சைவ வைணவ ஒற்றுமைக்காக பயன்படுத்தப்படுவதாம் இந்தக்குடையில் வடகலை நாமம், தென்கலை நாமம் இரண்டும் இடப்படுகிறதாம், கருட சேவையைப் பார்க்க சிவன் தனது மனைவி யுடனும் முருகன் தனது வாகனம் மயில் மற்றும் வள்ளிதெய்வானையுடனும் இந்தக் குடையில் வந்து தங்கிவிடுகிறார்களாம்.
இதில் கடுகத்தனை அளவுக்காவது புத்திக்கு இடம் இருக்கிறதா? பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்க அடிகள் கடைசிக் காலத்தில் சொன்னது எவ்வளவு சரியானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திருப்பதிக் குடையில் ஒரு யுக்தி என்ன தெரியுமா! ஒரு மூட்டை தேங்காயைக் கொண்டு வருகிறார்கள். தேங்காய் முழுவதும் மஞ்சள் தடவி இது தெய்வாம்சம் பொருந்தியது என்று பிரச்சாரம் செய்து, ஒரு மூட்டை தேங்காய்களையும் ஏலம் கூறுகிறார்கள்.
60 ஆயிரம் ரூபாய் அளவுக்குக்கூட ஏலம் போவதுண்டு. சென்னை பாரிமுனையில் தொடங்கி இந்தத் திருப்பதிக் கொடை கந்தசாமி கோயில் வழியாக சந்து பொந்துகளில் எல் லாம் இந்தப் பகல் கொள்ளை நிரம்பி வழிகிறது. ஏழு மலையானே நாமக் கடவுள்! அந்தக் கடவுளின் பெயரால் பக்தர்களுக்கு குழைத்து நாமம் போட்டு பட்டப் பகலில் ஜேப்படி நடக்கிறதே - இதனை அரசு கண்டு கொள் ளாதது ஏன்? பக்தி என்றால் அதற்குத் தனி உரிமமோ!
Read more: http://viduthalai.in/page1/88294.html#ixzz3Er2rJuZZ
ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்
வடமாகாணத்தில் சுயராஜ்யத்திற்காக என்று செய்யப்படும் சத்யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ய சூழ்ச்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வர்ணாசிரம சுயராஜ்ய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும்,
மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்க முடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்பதாகவும்,
பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிறுத்துபவர்களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக் காரர் ராஜ்ஜியமாகிய பட்டப்பகலில் இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வர்ணாசிரம சுயராஜ்ய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம்.
குடிஅரசு - செய்திக் கட்டுரை - 04.01.1931
Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3SJhp6
சண்டமாருதம்
கோட்டையூரிலிருந்து வெளிவரும் சண்டமாருதம் என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ. பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கு ஏற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதேயாகும்.
அதன் ஆசிரியரான திரு.அ. பொன்னம்பலனாரைப் பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். எந்நேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலை பூண்டு தேவார, திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல் களைக் கண்களில் நீர் ஒழுக தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசையோடு பாடிப்பாடி சைவப் பிரச்சாரம் செய்தவர்.
பூவாளூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர்களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப்பட்டவர் சுயமரியாதையில் திரும்பி சண்ட மாருதம் போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே சண்டமாருதம் என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே, தமிழ்மக்கள் சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.
அதன் வருட சந்தா ரூ. 3-0-0
வெளிநாட்டு சந்தா ரூ. 4-0-0
விலாசம்: சண்டமாருதம், ஆபிஸ், கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.
குடிஅரசு - கட்டுரை - 04.01.1931
Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3a4IYa
மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-
மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.
இவைகளின் வாக னத்தில் தேரில் நெருப்பு பிடிக் கின்றது. அச்சு ஒடிகின்றது. இவை களின் பயனாய் பலர் சாகின் றார்கள். மூடர்களே! இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலி யவைகள் இருக்கின்றதாக நினைக் கின்றீர்கள்? உங்களிலும் மூடர் கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல் லுங்கள்.
இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..
மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.
பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)
மூடர் : கடவுளைப் படைப் பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.
பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தன மாகும்.
மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 04.01.1931
Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3hs1a0
மௌலான முகம்மதலி
மௌலான முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லு பவர்களில் அவரும் ஒருவர், ஏழை மக்களை ஏமாற்றி பணக்காரர்களும், படித்தவர்களும் அனுபவிக்கும் போக்கிய மாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போதுமே பிடிக்காது.
தேசியப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவேகிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்க மாட்டார்.
அவர் ஈரோட்டிற்கு வந்திருந்த போது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றது அதாவது,
நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன். என்று சொன்னார்.
சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மையென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும், கவலைப் படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டுபிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.
அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர். தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளைக்கட்டிவிட்டும் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்று கூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணமுடையவர். இவ்வருங் குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.
குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11.01.1931
Read more: http://viduthalai.in/page1/88312.html#ixzz3Er3zDKRL
இன்றைய ஆன்மிகம்?
அதர்மம்
கிருஷ்ணன் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாம். உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப் பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளு டன் அவதரிப்பாராம்.
சரி... இப்பொழுது அதர்மம் தலைதூக்கவில் லையா? கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங் களும் தலைதூக்கி நிற் கின்றனவே! கிருஷ்ணன் ஏன் இவற்றை நிக்ரகம் செய்ய அவதாரம் எடுக்க வில்லை? அப்படி ஒருவன் இருந்தால் அல்லவா வரு வான்?
Read more: http://viduthalai.in/page1/88265.html#ixzz3Er4Jd6bN
என்ன செய்யப் போகிறது அய்.நா.?
இனப்படுகொலையாளி ராஜபக்சேவை இன்னும் எந்தெந்த வகையிலும், முறைகளிலும் கண்டனம் தெரிவித்தாலும், அது முழுமை பெற்றது ஆகாது; நேற்று தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது; அய்.நா. அலுவலகமுன் அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அய்.நா.வில் ராஜபக்சே பேசி இருக்கிறார் - ஆணவம் குறையவில்லை - புத்தி கொள் முதல் பெற்றதாகவும் தெரியவில்லை.
மகாமகா மனித குல விரோதி ராஜபக்சே! இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும் சரி; ராஜீவ்காந்தியும் சரி இலங்கையில் நடத்தப்பட்டது இனப்படுகொலையே (நிமீஸீஷீநீவீபீமீ) என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளனர். மனித உரிமை ஆணையத்தின் இயக்குநராக இருந்த நவநீதம்பிள்ளையும் தெரிவித்துள்ளார். அய்.நா. அமைத்த இந்தோனேசிய அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில் அமைக்கப்பட்ட விசா ரணைக் குழுவும் இலங்கையில் நடைபெற்ற யுத்தநெறி முறைகளைத் தலைக்குப்புறக் கவிழ்த்த இனப்படு கொலைபற்றி அறிக்கையை அளித்து விட்டது. ஒற்றை வரியில் ராஜபக்சே அந்த அறிக்கையை அறவே நிராகரிப்பதாகக் கூறி விட்டார்.
ஜெனிவாவின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் பிரகடனப்படுத்தி விட்டார். (மத்திய பிஜேபி அரசும் அதே முறையை எடுத்தது மகாவெட்கக் கேடு!)
இதற்குமுன் சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. அய்.நா. அதிகாரிகளையும் அனு மதிக்கவில்லை. உலகம் ஒப்புக் கொண்ட செஞ்சிலுவை சங்கத்திற்கும்கூட அதன் பணியைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதுண்டு.
மருத்துவமனைகள், பெற்றோர்களை இழந்த இளஞ் சிறார்கள் தங்கியிருந்த செஞ்சோலை என்னும் விடுதிகூட தரைமட்டமாக்கப்பட்டு அங்குத் தங்கி யிருந்த இளங் குருத்துக்கள் கொன்று குவிக்கப்பட்டன.
பாதுகாப்புப் பகுதி என்று கூறிய இலங்கை இராணுவத்தின் வாக்கை நம்பி, அங்கு வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொத்துக் குண்டுகளை வீசிக் கொல்லப்பட்டனர். சமாதானத்துக்காக வெள்ளைக் கொடியை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
13 ஆயிரம் தமிழ் ஈழ இளைஞர்கள் முகாம்களி லிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, மிகக் குரூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அய்.நா.வின் இலங்கைத் தூதரான பாலித்த கோ கொன்னா சொன்னார்: தனி முகாம்களில் 13 ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். மேலும் பல முகாம்களில் 10 ஆயிரம் புலிகள் இருக்கக்கூடும். அவர்களை அடையாளம் கண்டு அழிப்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறவில்லையா?
மாவீரன் பிரபாகரனின் மகன் என்ற காரணத்துக்காக பாலச்சந்திரனை மாபாதகர்கள் நெஞ்சில் குண்டு பாய்ச்சிக் கொன்று வெறியாட்டம் போட்டனரே!
உலகில் இதற்கு முன் நடைபெற்ற அதிகபட்ச அத்துமீறல்கள் என்ற பட்டியலில் கண்டிப்பாக ஈழத் தீவில் சிங்கள வெறியர்கள் இராணுவத்தின் துணை கொண்டு தமிழர்கள் அழிக்கப்பட்டதும் இடம் பெறும் என்பதில் அய்யமில்லை. இவ்வளவுக் கொடிய மனிதகுல விரோதிக்குத் தண்டனை கொடுக்க முடியவில்லை என்றால் அய்.நா. மன்றம் என்ற ஒன்று எதற்கு? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
ஈராக்கில் அடிகிரைப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவத்தால் ஈராக்கியர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அமெரிக்காவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கொடுமைக்குக் காரணமாக இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருவருக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லையா?
செர்பிய இனம் அல்லாதவர்களை இனப்படு கொலை செய்ததற்காக செர்பிய நாட்டின் ஆட்சித் தலைவராக இருந்த மிலோசேவிக் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வில்லையா? தண்டனை வழங்கப்படு முன்னரே சிறையில் அவர் மரணம் அடைந்துவிட்டார்! சூடான் குடியரசுத் தலைவர் ஓமர் அல் பகீர் நீதி விசார ணைக்கு உட்படுத்தப்படவில்லையா?
இவர்களைவிட சிங்கள இனவெறியன் - பாசிஸ்ட் ராஜபக்சே எந்த வகையில் தகுதி குறைந்த பேர் வழி?
பிரேசில் நாட்டில் சாவோபவுலோ நகரில் உள்ள சிறைச்சாலையில் 10 ஆயிரம் கைதிகள் உள்ளனர். 1962 அக்டோபர் 2 அன்று சிறைக் கைதிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இரு கைதிகளுக் கிடையே நடைபெற்ற வாய்த் தகராறு பெரும் - கலவரமாக உருவெடுத்தது; கலவரத்தை அடக்க காவல்துறை சிறைச்சாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. 111 பேர் பலியானார்கள்! 20 ஆண்டுகள் விசாரணை நடந்தது. 52 கைதிகள் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் கண்மூடித்தனமான துப் பாக்கிச் சூடுதான் என்று கூறி, அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய 25 காவல்துறையினருக்கு 624 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு விசாரணையில் (மொத்தம் நான்கு விசாரணை) 13 கைதிகள் உயிரிழப்புக்குக் காரணமாகவிருந்த 23 காவல்துறையினருக்கு 156 ஆண்டுத் தண்டனை விதிக்கப்பட்டதே!
இவர்களோடு ஒப்பிடும்பொழுது, ஓர் இனத்தையே பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத் துக்காக பல்லாயிரக்கணக்கான மண்ணுக்குரிய ஈழ மக்களை படுகொலை செய்தும், இன்னும் வெறி அடங் காமல் ஆட்டம் போடும் இலங்கை அதிபருக்கு எத் தனை 624 ஆண்டுகள் தண்டனையை அளிக்க வேண்டும்? என்ன செய்யப் போகிறது அய்.நா? உலகமே எதிர்பார்க்கிறது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் மத்தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான அரசின் இரட்டை வேடப் போக்கினை வெகு நாட்களுக்குத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ராஜபக்சே மீதான கோபம் - மறைமுகமாக அவரைக் காப்பாற்ற நினைக்கும் எந்த அரசுமீதும் திரும்பும் என்று எச்சரிக்கின்றோம்.
Read more: http://viduthalai.in/page1/88272.html#ixzz3Er4TiTiA
பார்ப்பனரும் அல்லாதாரும்
ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)
Read more: http://viduthalai.in/page1/88271.html#ixzz3Er4fB3ZM
தூக்கமும் மருந்துதான் - மறவாதீர்!
போதிய தூக்கம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பெறுவது மிக மிக அவசியம். உடல் நலத்திற்கும் உள்ள வளத்திற்கும் உணவு- சத்துணவு - எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும்கூட!
தூக்கமின்மை என்பதும், மிகக் குறைந்த அளவே ஒருவர் தூங்குகிறார் என்பதும் விரும்பத்தகாத ஒன்று - உடல் நலக் கண்ணோட்டத்தில்!
செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் போதிய தூக்கம் - உணவு, தூய காற்று, ஓய்வு, இளைப்பாறுதல் போலவே மிகவும் இன்றியமையாதது.
மிகக் குறைந்த வயதுள்ள குழந்தைகள் அதிக நேரம் தூங்க வேண்டும். வயது ஏற, ஏற இதன் கால அளவுதானே சுருங்கி, ஓர் ஒழுங்கான கட்டுக்குள் வரும்! (7 மணி - 8 மணி நேரம்).
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்து எழுந்து விடுவது என்ற பழக்கம், வழக்கமாகிவிட, உடம்பு என்ற கடிகாரம் அதனை வகைப்படுத்திக் கொள்ள தானே முயன்று வெற்றி பெற்று விடுகிறது!
உடலின் மூளை மற்ற அவய வங்கள் எல்லாம் இந்த உடற் கடிகாரம் சொன்னபடி கேட்க முன்வருவது இயற்கைக் கூறுகளின் அதிசயங்களில் ஒன்று.
அளவோடு தூங்கி எழுவது என்பது உழைப்பவர்களுக்கு ஒரு வகை புத்துணர்வைத் தரும் அரிய மாமருந்தாகும்.
நாளும் திட்டமிட்ட பணிகள், உடற்பயிற்சி, போதிய நடைப்பயிற்சி, இரவில் படுக்குமுன் தொலைக்காட்சி பார்க்காமல், ஏதாவது விரும்பும் ஓர் நூலின் சில பக்கங்களையாவது படித்து, துயில் கொள்ளச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இயற்கை யாகவே தூக்கம் நம் கண்களைத்தானே வந்து தழுவும்.
இரவில் போதிய உணவை எடுத்துக் கொள்ளத்தவறும் போதோ, அல்லது பல்வேறு, மனதை அலைக்கழிக்கும் பிரச்சினைகள் உள்ளத்தை உலுக்கும் போதோ, எளிதில் தூக்கம் வராது; அப்போது உடனே இரவு எத்தனை மணியானாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை எடுத்து உங்கள் கண்களில் தூக்கம் வந்து அசத்தும் வரை படித்துக் கொண்டே இருங்கள்; மனமும், வேறு திசையில் செனறு மன உளைச்சலைத் தவிர்க்க உதவிடக் கூடும்.
விளக்குகள் அணைக்கப்பட்டு, இருட்டு வந்துவிடும்போது, நமது மூளை முற்றிலும் வேறு வகையாக - அதாவது நாம் விழித்திருந்து வேலை பார்க்கும் போது இருந்த முறைக்கு மாறாக - இயங்குமாம்.
இரவில் நீரோன் என்பவை ஓர் குழுவாகி, இராணுவப் படை எப்படி அணிவகுத்து அதன் பணி முடிக்க அணியமாகிறதோ அதுபோலத் தயாராகி விடுகிறது, மின்காந்த அலைகளும், நமது மூளையை மிக அருமையான மென்மை யான வகையில் லேசாக தழுவுவது போன்று அலையால் வருடிக் கொடுத்து இதமான சுகத்தை உருவாக்குவதால், ஒரு வகை புதுவகை சக்தியைத் தந்து, தூக்கத்தின் மூலம் புதியதோர் வலி மையைச் சுட்டி அண்மையில் இணையத் தில் ஓர் கட்டுரை வந்துள்ளது!
மதியம் பகல் உணவுக்குப்பின், ஒரு பூனைத் தூக்கம் ஷிவீமீணீ (சியெஸ்டா) லேசாகப் போட்டால், அந்த சிறிய இளைப்பாறுதல் மூலம் மேலும் மற்றைய நேரப் பணிகளில் நமக்குத் தெளிவும், தெம்பும் ஏற்படக் கூடும். குறிப்பாக வயது முதிர்ந்த மூத்த குடி மக்களான பெரிய வர்களுக்கு இது எப்போதும் நல்லது.
டெல்லியில் 92 வயதுக்கு மேலும் மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் - முதுபெரும் தலைவர் - தோழர் அர்கிஷண்சிங் சுர்ஜித் அவர்கள் எவ்வளவு பணிகள் இருந்தாலும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை தூக்கம் - ஓய்வைத் தவறவே மாட்டாராம்.
தொலைப்பேசியை அணைத்து விடுவார் ரிசீவரை எடுத்துக் கீழே - மணியடிக்க வாய்ப்பில்லாமல் - வைத்து விடுவாராம்.
பல முறை சந்திக்க விரும்பிய எங்கள் இருவருக்கும் நேரம் வாய்ப் பாக அமையாமலேயே இருந்து வந்தது.
ஒரு நாள் டில்லியில் நான் இருந்த போது அவர் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்து நேரம் கொடுத்தார்; நான் விமானத்திற்கு வர வேண்டி இருந் ததைச் சொன்னேன் அப்படியானால் 2 மணிக்கு வாருங்கள் என்றார்; மற்ற தோழர்கள் வியப்படைந்தனர்.
அவர் 2 மணிக்கா தந்தாரா? யாருக் குமே அந்த நேரத்தை ஒதுக்க மாட்டாரே என்றனர். விதிக்கு விலக்காக நான் உங்களைச் சந்திக் கவே என் வழமையான தூக்க நேரத்தைச் சற்று தள்ளி வைத்தேன். நான் நன்றி கூற, பேசி எவ்வளவு விரைவில் உரையாடலை முடித்துக் கொள்ளும். அந்த முயற்சியை இங்கிதத்தோடு செய்தேன். அவர் அதைப் புரிந்து கொண்டு, நான் இன்று பெரியாருக்காக எனது ஓய்வை, தூக்கத்தைத் தள்ளி வைத்துள்ளேன்.
அதுபற்றி கவலைப்படாமல் நீங்கள் என்னிடம் பேசிவிடை பெறலாம்; தயங்க வேண்டாம் என்று கூறி, எத்தகைய பெருந்தகையாளர் கொள்கை உணர்வு படைத்த புரட்சி வீரர் என்பதை நிரூபித்தார்!
எனவே, தூக்கம் அனைவருக்கும் பொது உடைமைதானே! ஏழை களுக்கே அது பெரிதும் தனி உடைமை; பணக்கார முதலாளிகளை அது அவ்வளவு எளிதாக நெருங்குவ தில்லை! முதலாளித்துவத்திற்கும் தூக்கத்திற்கும் அத்தகைய விசித்திர உறவு - இல்லையா?
- கி.வீரமணி
Read more: http://viduthalai.in/page1/88273.html#ixzz3Er4myAQS
நீர் பொங்குமாம்!
12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.
தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.
மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.
அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?
ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.
இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.
- தந்தை பெரியார்
எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.
- தந்தைபெரியார்
Read more: http://viduthalai.in/page1/88254.html#ixzz3Er5KKF00
திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.
சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.
மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஆத்திகத்தின் மோசடி வேலை
ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.
காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.
எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-
காமத்தைப் பரப்பும் கருவி
அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?
இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.
கருங்குழற் செவ்வாய்
வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)
எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.
எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!
-தஞ்சை ஆடலரசன்
Read more: http://viduthalai.in/page1/88253.html#ixzz3Er5U8sPl
மகாமகத்தின் வரலாறு
ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார்.
அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார்.
அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு.
அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேம புஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.
முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.
அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.
இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்?
இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?
(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)
Read more: http://viduthalai.in/page1/88252.html#ixzz3Er5dDqm4
தீண்டாமை நோய்!
பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி, மது மானி மாவட்டம் மகா சிவன் கோவிலுக்குள் சென்று வந்ததால், கோவில் தீட்டாகிவிட்டது - சன்னிதானம் தீட்டாகி விட்டது - கர்ப்பக்கிரகம் தீட்டாகி விட்டது என்று கூறி, கோவிலை இழுத்து மூடி கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து கழுவி, சிறப்பு யாகங்கள் செய்து சுத்தி கரித்த பிறகே கோவிலைப் பொதுமக்களுக்குத் திறந்து விட்டுள்ளனர்.
ஒரு முதலமைச்ச ருக்கே இந்த நிலை! அர்த்த முள்ள இந்து மதத்தின் அழுக்கு நிறைந்த அர்த்தம் இதுதான்!
தீண்டாமை அதிகாரப் பூர்வமாக கோவிலுக்குள் - அதன் கருவறைக்குள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக் கிறது என்பது இப்பொழுது புரிகிறதா? தந்தை பெரி யார் கோவில் கர்ப்பக்கிரகப் போராட்டத்தை அறிவித் ததன் அடிப்படை இப் பொழுது விளங்குகிறதா?
இதில் கைவைத்தால் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் இந்தத் தீண் டாமை இருள் பஞ்சாய்ப் பறந்துவிடுமே!
கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அதிகாரியாக (அய்.ஜி.) இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுச் சென்ற பிறகு, அவர் பயன்படுத்திய அறை, மேசை, நாற்காலி, அலுவலகக் கார் ஆகிய வற்றின்மீது பசுவின் சாணி யைக் கரைத்து ஊற்றி சுத்திகரித்தனர்.
இதனை இந்த அதி காரியே மனம் நொந்து சொன்ன சேதி தினமணி யில் வெளிவந்தது (8.4.2011).
நான் தலித் சமுதாயத் தைச் சேர்ந்தவன் ஆகை யால், இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டுள்ளனர். இது மனித உரிமைகளை யும் குடிமக்கள் சுதந்திரத் தையும் மீறுவதாகும். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக் கைகள் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
இந்த வழக்கைப் பதிவு செய்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி என்.திலகர் சம் பந்தப்பட்ட துறை ஆணை யருக்குத் தாக்கீது ஒன்றைப் பிறப்பித்தார். புகார் தொடர் பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட் டும் இவ்வாறு செய்யப்பட வில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்கு தலாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. அர சில் உயர்பதவி வகித்த வருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன வென்று சொல்லுவது? என்றும் அவர் கூறினார்.
பெரியாரியலை சமு தாயம் புரிந்து, பெரியாரி யலை உள்வாங்கச் செய் வது ஒன்றே முடிவான தீர்வு என்பதைக் கருத வேண்டும் - அடுத்து செயல் படுத்தவும் வேண்டும் - புரிகிறதா?
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/88501.html#ixzz3EttAFLWO
இன்றைய ஆன்மிகம்?
நவராத்திரி - ஏழாம் நாளான இன்று 8 வயது சிறுமியை சாம்பவி அம்மனாகப் பாவித்து வழி பட்டால், புருசன் - பெண் ஜாதிக்குள் அன்யோன் யம் ஏற்படுமாம்.
அப்படியானால், குடும்ப நீதிமன்றத்தை இழுத்து மூடிவிடலாம் - அப்படித்தானே?
Read more: http://viduthalai.in/e-paper/88511.html#ixzz3Ettdb127
ஆன்மிகத் தலைநகரமாக ஆக்குவார்களாம்!
உத்தரப்பிரதேசத்தில் கோமதி நதியைச் சுத்தப்படுத்தும் பணியின் தொடக்க விழாவில் பங்குகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவை உலகின் ஆன்மிகத் தலைநகராக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார்!
ஆமாம், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோவிலைக் கட்டி இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் கொடுத்துள்ள பெயர்தான் இந்த ஆன்மிகம்!
இதுதான் கல்வியா?
நாய்க்கூண்டில் நான்கு வயது குழந்தை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 4 வயது குழந்தையை நாய்க் கூண்டில் பள்ளி ஆசிரியை அடைத்தாராம். அந்தக் குழந்தை செய்த தவறு என்ன? அடுத்த குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்ததாம்.
அந்தப் பள்ளியை கேரள அரசு இழுத்து மூடிவிட்டது.
இந்த ஆசிரியை அதிக மதிப்பெண் பெற்று பணியில் சேர்ந்தாலும், சேர்ந்திருக்கக்கூடும்;
இப்பொழுது தகுதியெல்லாம் வெறும் மார்க்தானே!
Read more: http://viduthalai.in/e-paper/88504.html#ixzz3EttypMLc
சமூக ஒற்றுமை
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியமாகும்.
_ (குடிஅரசு, 3.3.1929)
Read more: http://viduthalai.in/page-2/88512.html#ixzz3EtuXYIEn
வாழ்வியல் சிந்தனை
அய்யா,
தங்களது வாழ்வியல் சிந்தனைகள் மூன்றாம்பாகம் படித்தேன். வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதை அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான நூல்.
மனித சமூகத்திற்கு எழுதப்பட்ட சிறப்பான நல்ல நூல். இந்த நூலைப் படித்து மனநிறைவு அடைந்தேன்.
இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் துலாக்கோல் போல சமநிலையுடன் மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்ச் சியாகவே மனிதன் வாழலாம் என்று முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது,
நான் சிறு வயதில் கஷ்டப்படும் காலத்தில் தமிழ்வாணனின் துணிவே துணை என்ற தலைப்பில் கற்கண்டு நூலைப் படிப்பேன். துன்பம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்த வன். அதுமட்டுமல்ல, ஏவிஎம் மெய் யப்பச் செட்டியார் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லைக் கேட்டிருக்கிறேன்.
என்னுடைய சிறு முன்னேற்றத்தி லும் வாழ்வியல் சிந்தனையின் பெரும் பங்கு எனக்கு உண்டு என்பது தெளிவு. பார்த்தேன்; படித்தேன்; சிந்தித்தேன். படிக்கப் படிக்க தேன்போல் இனிமை யாகத் தித்தித்தது. பகுத்தறிவுப் பணிக்கு என் இனிய வாழ்த்துகள். நன்றி!
- ம.ச.நாராயணன்
Read more: http://viduthalai.in/page-2/88517.html#ixzz3EtvRClDI
ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு
இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.
அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.
ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார். அய்யய்யோ... ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.
இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.
இந்தியப் பெண்களின் நிலை
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2012இல் 706 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013இல் 1,636ஆக உயர்ந்துள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொல்றாங்க...
2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது.
இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வந்து சேருவார்கள்.
- சந்திரஹாசன், ஈழ அகதிகள் மறுவாழ்வு இயக்கம்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங் கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே, 13ஆவது சட்டத் திருத்தத் தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகாரப் பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக, இந்தியாவிடமும் அய்.நா.சபையிடமும் இலங்கை அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.
- இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்.
திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.
- கவிஞர் சல்மா
மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய்துகொள்ளலாம் இண்டியானாவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
அமெரிக்காவில் இண்டியானா பகுதியில் மனிதநேய அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு முன்பாக அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதவையாக இருந்துள்ளன.
அப்படி மாற்றமுடியாத சட்டத்தை சிகாகோவை மய்யமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஏழாம் சர்க்குயூட் நீதிமன்றம், மனித நேயர்களுக்கான திருமண உரிமையை கடவுள் நம்பாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, மறுப்பது என்பது அரசியலமைப்பு முதல் விதி கூறுகின்ற மத ரீதியிலான சுதந்திரம் குறித்த உரிமைகளை மறுப்பதாக ஆகிவிடும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டின் சட்டத்தின்படி இண்டியானாவில் திருமணங்கள் மதரீதியில் உடையணிந்தவர் (மதக்குரு) நடத்திட வேண்டும் அல்லது அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்று உள்ளது. மனுதாரரான மனிதநேயர் வாதிடும்போது, மனிதநேயர்களின் திருமண உரிமையை மறுப்பது என்பது தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும். மதரீதியில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்ததாக ஆகிவிடும் என்று கூறினார்.
மனிதநேயரான ரேபா போயிட் உட்டன் கூறும்போது, நீதிமன்றம் தேவையான உரிமையைப் பெற்றுள்ளது என்றார். மதச் சார்பற்ற மணமகன் என்று மனுதாரருக்குச் சான்றளிக்கும் அவர் மேலும் கூறும்போது, ஒருவர் நாத்திகராகவோ, கடவுளை நம்புவதில் அய்யம் உள்ளவராகவோ, மனிதநேயராகவோ அல்லது மதரீதியிலான திருமணத்தைச் செய்ய விரும்பாதவராகவோ இருந்தாலும் தற்போது, இதுபோன்ற அற்புதமான நேரங்களில் தங்களுடைய கவுரவத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் நடைபெறும் விழாக்களையும் மகிழ்வாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று உட்டன் கூறியுள்ளார்.
புளோரிடா, மெய்ன் மற்றும் தெற்குக் கரோலினா ஆகிய பகுதிகளில் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றபின், மனிதநேயர்களுக்கு அலுவல்ரீதியாக திருமணம் செய்வதற்கு அனுமதி உள்ளது. அதுபோன்றே இண்டியானாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோல் இரண்டு டசன் மக்கள் மனிதநேயர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
மனிதநேயர்களுக்கான அமைப்பின் விசாரணை மய்யத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அதன் தலைவராக உள்ள ரொனால்ட் ஏ. லிண்ட்சே கூறும்போது, அனைத்து மதச் சார்பற்ற அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்க முடியாத அளவில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் வேகமாக நம்பிக்கையாளர்களாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பாரபட்சமாக நடத்தப்படுவதாலும், மதரீதியில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது என்று கூறினார்.
வடக்கு கரோலினாவிலும் திருமணச் சட்டங்கள் சவாலாகத்தான் உள்ளன. திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டப்படியான திருமண உரிமைச் சான்று (Legal Marriage Licence) பெற்றிருக்க வேண்டும் என்று யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் பாஸ்டர்கள் என்கிற மதக் குழுவினர் அரசு கேட்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வருகின்றனர். வடக்குக் கரோலினாவில் ஓரினத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணச் சடங்குகளை நிறைவேற்றக்கூடிய பாதிரிகள்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்தப் பாதிரிகளும், மற்றவர்களும் அவர்களின் நம்பிக்கைப்படி ஓரினத் திருமணங்களையும் நடத்திட வலியுறுத்தி வருகின்றனராம்.
நன்றி: வாஷிங்டன் போஸ்ட், 14.7.2014
மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!
தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!
கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!
அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!
மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!
எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!
மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.
இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!
நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!
வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!
புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?
ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ்- _ கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!
மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித்துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!
பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர் விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!
இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையைத் திரை போட்டு மூடி, கதவைச் சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?
உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!
யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!
யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!
எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!
- கி.வீரமணி, ஆசிரியர்
வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!
எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.
திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.
கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.
அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.
ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?
-ஆர்.டி. மூர்த்தி, திருச்சி
பெரியாராம் பேரண்டம்!
இருளை வெடிவைத்துப்
பிளந்த எரிமலை!
இன உணர்வை ஏற்றிய தீபம்!
ஆயிரங் காலத்து
அடிமைச் சேவகத்தை
அடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்!
ஆணவச் சிரிப்பின்
அடங்கா ஆரியத்தை
அக்னிச் சிரிப்பால்
அழித்திட்ட அரிமா!
பிறவிப் பேத
சமுத்திரக் காட்டை
அறிவுப் புனலால்
உறிஞ்சிய அகழி!
எங்கே எங்கே
ஏற்றத் தாழ்வென்று
முகவரி தேடி
மோதிய வேழம்!
மதமாம் யானையை
சம் ஹாரம் செய்து
மன்பதை காத்திட்ட
மானுட மீட்பர்!
அமைதித் தேன்குழல் தென்றல் காற்றை
வையத்து வாயினில்
ஊட்டிய செவிலி!
யாரிந்த மானுடர்?
ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த
பெரியாராம் பேரண்டம்!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
தலைவர்கள் போற்றும் தலைவர்!
கொள்கைக் குன்றம்
இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.
- முத்தமிழறிஞர் கலைஞர்
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்
பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.
- அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)
நீதிமன்றின்...
நோபல் பரிசு
பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.
- நீதிபதி பி.வேணுகோபால்
பதவியை விரும்பாத தலைவர்
அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.
- நீதிபதி ஏ.வரதராசன்
பெரியார் இல்லை என்று சொன்னால்...
பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.
- நீதிபதி எஸ்.மோகன்
ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
- நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்
தன் அறிவை முன்வைத்து...
கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!
- நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)
விநாயகனின் மர்ம விளையாட்டுகள்
கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;
நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?
சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;
திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?
2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.
எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;
ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.
100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.
அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.
சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?
கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.
ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?
- வே.மதிமாறன்
பெரியார் வாழ்வில்....
நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்
தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?
பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.
நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
- இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)
இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
- பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)
கடவுள் மறுப்பு மட்டுமல்ல
1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.
- இறைவி
நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி
பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.
கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.
அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில் தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.
இதழ்களின் பார்வையில்...
தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.
- தினத்தந்தி 31.12.2008
தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
- தினகரன் 4.1.2009
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.
- தினமணி 5.1.2009
வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- தீக்கதிர் 18.1.2009
பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!
- ஆனந்த விகடன் 14.1.2009
ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.
- புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009
பெரியாரைப் பின்பற்றுவோம்!
பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.
ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!
பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.
அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.
அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!
அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.
அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.
அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!
புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!
தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.
எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!
ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.
பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.
ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.
பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.
அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.
வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.
பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.
பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!
அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail
மில்டனின் சொல்லாற்றல்
லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.
இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.
பயன்படவேண்டும்
சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும். - (விடுதலை, 2.7.1962)
Read more: http://viduthalai.in/page-2/88577.html#ixzz3F2ipuo9E
இன்றைய ஆன்மிகம்?
பல்லி
என் நண்பர் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பார்த்துப் பார்த்து 6 மாதங்களாக கஷ்டப்பட்டு மிக அழகான வீட்டைக் கட்டினார். மிகச் சிறப்பாக திறப்பு விழா செய்தார். 5 லட்சம் செலவு செய்தால் கூட அப்படி ஒரு அம்ச மான வீட்டை கட்ட முடியாது. இருந்தாலும் குடும்பத்தோடு குடிபோன வர் 6 மாதங்களில் கட்டிய வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார். காரணம், ஒரு பல்லிகூட வீட்டில் இல்லையாம். பல்லி இருந்தால்தான் வீட்டில் லட்சுமி இருப்பாள். பல்லி இல்லாத வீடு பாழ டைந்த வீடு என்றார். இந்தக் காலத்தில் இப்படியுமா மனிதர்கள்? ஒரு வார மலரில் இப்படி ஒரு பெட்டிச் செய்தி.
அதெல்லாம் சரி, அந்த லட்சுமியான பல்லி சமையலில் விழுந்து, அதனைச் சாப்பிட்டிருந்தால் நேர டியாக பரலோகம் தானே!
Read more: http://viduthalai.in/e-paper/88560.html#ixzz3F2jeZXfa
இன்றைய ஆன்மிகம்?
உல்டாவா?
கோவில்= கோ+இறை வன். இல் - இல்லம்; அதா வது இறைவன் தங்கும் இடம் என்று பொருள். ஆலயம் என்ற சொல் லுக்கு ஆன்மா லயிக்கும் இடம் என்று பொருள். கடவுள் என்றாலும் இதே பொருள் உண்டு. கட என் றால் கடந்தவர் என்று அர்த் தம். உள் என்றால் உள்ளம் என்று பொருள். கடவுள் என்பவர் உள்ளத்தையும் கடந்தவர் என்று பொருளா கும் என்கிறது ஓர் ஆன் மிக இதழ் (19.8.2014).
உள்ளத்தையும் கடந்த வர் கடவுள் என்றால், உள்ளமே கோவில்; அதில் உறைபவன்தான் இறை வன் என்று சொல்லுவ தெல்லாம் உல்டா தானா?
Read more: http://viduthalai.in/page1/88146.html#ixzz3F2kA4Ueg
மூன்று பேய்கள் - அய்ந்து நோய்கள்!
நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று. அவை 1. கடவுள், மதம், சாஸ்திரம் 2.ஜாதி 3.ஜனநாயகம்.
நம்மை அரித்துவரும் நோய்கள் அய்ந்து. அவை 1. பார்ப்பான் 2.பத்திரிகை 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5. சினிமா
Read more: http://viduthalai.in/page1/88147.html#ixzz3F2kL1XYy
திரிபுரா முதல்வரும் எச்சரிக்கிறார்!
மதச்சார்பற்ற இந்தியாவை ஹிந்து மக்கள் தேசமாக்க முயற்சிக்கிறது - மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. என்று நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார். இவர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர் (மார்க்சிஸ்டு) என்பதால் இப்படிக் கூறுகிறார் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது.
பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக்கொண்டு கடந்த 16 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் கூட இந்த நான்கு மாதங்களில் இதே கருத்துக்கு வந்துள்ளன என்பதும் கண்கூடு!
பிரதமர் நரேந்திர மோடியே ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர் என்பதும் தெரிந்த ஒன்றே! ஆர்.எஸ்.எஸ். தலைமை கிழித்த கோட்டைத் தாண்ட முடியாது; கொஞ்சம் அய்யப்பாடு ஏற்பட்டால்கூட பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவார் மோடி.
மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சியில் இருந்தபோது ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் அய்க்கியமானாலும், ஆர்.எஸ்.எஸ். பிடி யிலிருந்து விலக முடியாது - அதன் தொடர்பை அறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி, ஜனதா அமைச்சர வையிலிருந்து வெளியேறியவர்கள் ஆயிற்றே! ஜனதாவிலும் உறுப்பினர், ஆர்.எஸ்.எஸிலும் உறுப்பினர் என்கிற இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மதுலிமாயி போன்றவர்களும், ஜனதா தலைவர் களும் அறுதியிட்டுக் கூறிய நிலையில், அமைச்சர் பதவிகளைவிட ஆர்.எஸ்.எஸ்.தான் முக்கியம் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டவர்கள் ஆயிற்றே!
இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டால்தான் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யின் சிண்டு ஆர்.எஸ். எஸின் சர்சங்க் சலாக்கின் (தலைவரின்) கையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
சித்தாந்தத்தை வகுப்பது ஆர்.எஸ்.எஸ். என்பதால், அதன் கை மேலோங்கி நிற்கிறது. அந்த முறையில் இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினாலும், அதற்குமேல் எவரும் வாய் திறக்க முடியாத நிலை!
நரேந்திர மோடியைப் பொறுத்தவரை தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொன்னவர்தானே! இவற்றை யெல்லாம் கவனமாகக் கணக்கில் கொண்டால் திரிபுரா முதலமைச்சர் கூறுவதன் உண்மையின் அருமை புரியும்.
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மதவாதம் மதம் பிடித்த யானையாக தறிகெட்டு ஆட்டம் போடுகிறது. உத்தரப்பிரதேசத்தை மதக்கலவரப் பூமியாக மாற்றிவிட்டது.
இப்பொழுது லவ்ஜிகாத் என்ற ஒன்றை ஆர்.எஸ். எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கிளப்பி விட்டு இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, மத மாற்றம் செய்வதாகப் புரளியைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்விளைவை ஏற்படுத்தி, பி.ஜே.பி.யை மண்ணைக் கவ்வச் செய்த பிறகும் புத்திக் கொள்முதல் பெற்றதாகத் தெரியவில்லை.
சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவிற்கு வந்தார் அல்லவா - அப்பொழுதும் ஒரு கூத்து பி.ஜே.பி. ஆட்சியால் அரங்கேற்றப்பட்டது; அது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சீன அதிபர் வந்தபோது அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் விடுதியில் (ஓட்டல்) பணியாற்றி வந்த வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சீன அதிபர் தங்கி இருந்த நாளில் வேலைக்கு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் பணியாற்றியவர்கள் இந்து தோற்றத்துடன் சீன அதிபரை வரவேற்றனராம். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாம்.
இதுகுறித்து அசாம் முதலமைச்சர் தருண் கோகய் கடுமையாக தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த உத்தரவு வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்ப தாகும். எங்களை நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா? அல்லது இந்தியாவின் குடிமக்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? இது எந்த வகையில் சரி? என்ற அர்த்தமுள்ள வினாவை சுயமரியாதையுடன் எழுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வர, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளதாம்.
எப்படி இருக்கிறது நிலைமை? நான்கு மாதங்களுக் குள்ளேயே இப்படி தலைவிரி கோலமாக இந்துத்துவா ஆட்சியாக ஆட்டம் போடுகிறது என்றால், இன்னும் சொச்சகாலம் எப்படிக் கழியும் என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது.
மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமைப் பலத்தால்தான் இந்த ஆபத்தை முறியடிக்க முடியும்.
Read more: http://viduthalai.in/page1/88148.html#ixzz3F2kULiK3
இன்றைய ஆன்மிகம்?
அம்பிகை
அம்பிகையாகிய அன்னையை நவராத்திரி காலத்தில் தியானிப்பதால் வழிபடுவதால் சகல பாவங்களும் நிவர்த்தி யாகும், சிறப்பும் மேன் மையும் ஏற்படும் என்பது அய்தீகமாம்.
கடந்த வருடம் இதே நவராத்திரியில் அம்பி கையை வழிபட்டவர் களுக்கு என்னென்ன பாவங்கள் நீங்கின? என் னென்ன மேன்மைகள் சிறப்புகள் வரவுகள் அமைந்தன என்று எந்தப் பக்தராலாவது கணக்குப் போட்டுச் சொல்ல முடி யுமா? நேரமும், பொரு ளும் பூஜைக்காக செல வழிக்கப்பட்டதைத் தவிர கண்ட பலன் என்னவாம்?
Read more: http://viduthalai.in/page1/88108.html#ixzz3F2ktvWO5
பதில் கூறட்டுமே!
செண்பகக் காட்டிலும் (தினைப்புனத்து) பரண்மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளி யின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளை யும், வளையல்களை அணிந்த புதுமூங்கில் அனைய தோள் களையும், சந்திரனை ஒத்த (குளிர்ந்த) ஒளி வீசும் முக மென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும் இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம்( நாத நாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகு வாய்ந்த தம்பலப்பூச்சி (இந்திரகோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்தர சாபம் (இந்திரவில் - வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு குழைகளைத் தூக் குகின்ற காதணியும், இந்த்ர நீலம் (நீலோற்பவ மலர்) போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி மகிழ்ந்த பெருமாளே வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல. ஆனால் எழுதுவ தற்கு அரிதான வள்ளியின், இந்தளாம்ருத வசனத்தை யும் எழுதினார் என்கிறார் அருணகிரிநாதர். இது முருகன் திறத்தைக் காட்டு கிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர் என் கிறார் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளை. முருகன் வள்ளியின் உரு வத்தை சித்திரம் தீட்டி யதைப் போல திருப்புகழ் வெள்ளி விழா மலரின் (திருப்புகழ் வைபவம்) அட் டையில் ஓர் அற்புதமான ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
திருப்புகழ் வெள்ளி விழா மலர் இணையதளம்
கடவுளைக் கற்பித்தவர் கள் எப்படியெல்லாம் தங்கள் கை வண்ணங்களைக் காட் டுகிறார்கள். முருகக் கடவுள் ஓவியராம். வள்ளியின் அங் கங்களை எல்லாம் அப் படியே தீட்டினாராம்.
முருகனாகட்டும், சிவனா கட்டும், விநாயகனாகட்டும், பார்வதியாகட்டும், லட்சுமி யாகட்டும், சரஸ்வதியாகட் டும், விஷ்ணுவாகட்டும், பிரம் மாவாகட்டும், ராமனாகட் டும், கிருஷ்ணனாகட்டும் இவர்களையெல்லாம் நேரில் பார்த்தவர்கள் யார்? படம் பிடித்தவர்கள் யார்?
மணிவர்மா என்ற ஓவி யரும் கொண்டையராஜ் போன்ற ஓவியரும் இல்லா விட்டால் இந்தக் கடவுள் களின் உருவங்கள் யாருக்குத் தெரியும்?
உண்மையிலேயே இந்தக் கடவுள்களைப் படைத்த பிரம்மாக்கள் இந்த ஓவியர்கள் தாம்.
பிரபல சிற்பியான கணபதி ஸ்தபதி அவர்கள் கல்கி இதழுக்கு ஒரு முறை பேட்டி அளித்தார்!
ஒரு கடவுள் சிலையை வடிக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ருபமா ஒரு கல்லில் அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்பட றீங்க?
நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பதான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்க தானே! எங்கக்கிட்ட அப்படி என்னதான் விந்தை இருக் குன்னு தெரிஞ்சுக்க வேண் டாமா? (கல்கி 11.6.2006)
இப்படி சொல்லியிருப்ப வர் சாதாரணமானவர் அல்லர்! எத்தனையோ கடவுள் சிலைகளை உரு வாக்கிக் கொடுத்த மிகப் பெரிய சிற்பி!
டாண்டாண் என்று கேள்வி கேட்கிறாரே!
கல்லைக் கடவுள் என்று கும் பிடும் பக்த சிரோன்மணி களும், தினமணிகளும் பதில் கூறட்டுமே பார்க்கலாம்!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/88067.html#ixzz3F2m4Tz8Y
சிறிதும் இராது
பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.
- (விடுதலை, 10.6.1968)
Read more: http://viduthalai.in/page1/88056.html#ixzz3F2mRHbih
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?
வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.
உடல் வெப்பக் கடுப்பு அகல...
பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு...
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும் வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
உடல் அயர்வும் வலியும் நீங்க
அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.
குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
Read more: http://viduthalai.in/page1/88076.html#ixzz3F2n0G9jw