Search This Blog

15.3.12

யோகா - நோய்களைக் குணப்படுத்துமா?


அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், இன்று, நாட்டில் பரவலாக, பொருள் தெரிந்தோ தெரியாமலோ பேசப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது.

யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது;

கற்பக விருட்சம், காமதேனு போன்று கேட்டதெல்லாம் தரும் தெய்வீகக் கொடை. வரம் தரும் தேவருலகத்து உயர்பொருள் என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருவது.

ஏதோ, ஏதோ, ஏதோ - ஒரு மயக்கம்!
யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மத மடமைச் சரக்கல்ல.

அறிவியல் நெறிப்படி நல்ல உடற் பயிற்சி;

உலகியல் சார்ந்தது; - என்றெல் லாம் கருதப்பட்டு வருகிறது.

கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது.

யோகா என்ற சொல்லில் - கருத் தில் ஏதோ, ஏதோ, ஏதோ ஒரு மயக் கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்துவிட்டது.

அது, எப்படி, எப்படி, எப்படி வந்தது எனக்கும் என்று சொல்லும் படியான - இல்லை பாடும்படியான ஒரு மாயம் இன்றைக்கு மக்களி டையே பரவிவிட்டது; பரவி வருகிறது.

மாயவலையில் மாட்டியவர்கள்!

பெரும் பெரும் அரசியல் தலைவர்கள்; பேராசிரியப் பெருமக்கள்; அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models) திரையுலக விண்மீன்கள் - யோகாவில் ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால் இந்த யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை என்றும் விளம்பரப்பட்டு வருகிறது.

இப்படியும் ஒரு மாயையா?

இந்த யோகா, ஆரிய மாயை போன்று ஒருவகை மாயைதான்! யோக()மாயைதான்!
ஆத்மாக்களின் அய்க்கியமாம்!

பண்டைய இந்(திய)துத் தத்துவச் சிந்தனைகள் ஆறில் (ஷட்தர்சனம்) யோகா ஒன்று.

இதன் நிறுவுநர் பதஞ்சலி முனிவர் ஆவார்.

இது பல மர்மங்கள் கொண்டுள்ள படியால் இதனை வெளிப்படையாக ஆய்வு செய்யவோ விவாதிக்கவோ கூடாது என மர்மயோகிகளால் கூறப்பட்டது.

யோகா என்ற வடசொல்லின் பொருள் இணைவது என்பது. எதனோடு எது இணைவது?

உயிர் இறையோடு இணைவது.

அதாவது,

ஜீவாத்மா பரமாத்மா வோடு அய்க்கியமாவது; ஒன்று படுவது என்பது பதஞ்சலியாரின் கருத்து.

எட்டை எட்டுவது

இந்த யோகம், எட்டு படிநிலைகள் (Stages) கொண்டது.

அவை:

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தியானம், சமாதி.

இது அஷ்டாங்க யோகா எனப்படும்.

இதன் பின்புலம் என்ன?

யோகா பற்றிய ஆய்வுக்கு நீண்ட தொரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.

1914இல்,விவேகாநந்த அடிகளார், யோகம் என்பதன் அற்புத ஆற்றல் பற்றி யோகா என்ற நூலை எழுதினார்.

1926இல் வி.ஜி.ரிலே என்பவர் இதன் பெருமை பற்றிய நூலினை எழுதி னார்.

பிறகு, சுவாமி பிரணாபநந்த சரஸ்வதி என்பவர் யோக ஆற்றல் பற்றிச் சிறுகதைகள் அடங்கிய, ஓர் யோகியின் தன்வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.

பின்னர், இதைப் பற்றி நூல்கள் பல, பல் துறை வல்லுநர்கள் எனப்படுப வர்களால் எழுதப்பட்டன.

இப்படியும் ஏமாற்று வேலைகள்!

இளைஞர்கள், யோகப் பயிற்சி செய்கிறார்கள் என்று சில காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப் படுகின்றன.

உண்மையில் அவை யோகா அல்ல.

ஆசனம் எனப்படும் உடற்பயிற்சி கள், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சிகள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.

மோசடியான வாக்குறுதிகள் தரப்படுகின்றனர்.

பயன்படுத்தப்படும் படாடோப வார்த்தைகள்

மாயவித்தைக்காரர்கள் (Magicians) பயன் படுத்துவது போல படாடோப, பகட்டான, அலங்கார, ஆரவாரமான வார்த்தை ஜாலங்களை இந்த யோகீஸ்வரர்கள் பயன்படுத்திப் பெரிதாக விளம்பரம் செய்வர்.

சண்டப்பிரசண்டம்:

இந்த யோகிகள் யோகாவால் தங்களுக்கு அற்புத ஆற்றல்கள் உள்ளனவாகத் தம்பட்டம் அடிப்பர்; சண்டப் பிரசண்டம் செய்வர்.

இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுதல்;

உடலின் தன்னியக்க உறுப்பு (Autonomous organs) மண்டலத்தினைக் கட்டுப்படுத்துதல்;

நாடி ஓட்டத்தை நிறுத்திக் காட்டல்;

அந்தரத்தில் மிதத்தல் (Levitation) முதலானவை அவர்கள் பீற்றிக் கொள்ளும் சில அற்புத சண்டப் பிரசண்டங்கள் ஆகும்.

முகத் திரைகள் கிழிபட்டன:

இவையெல்லாம் ஏமாற்று - தந்திர வேலைகள் என்று பொய்ப்பித்துக் காட்டப்பட்டன.

டாக்டர் ஆபிரகாம் டி.கோவூர், பி.பிரேமாநந்தா முதலிய பகுத்தறிவுப் புலனாய்வுப் பேரறிவாளர்கள் இதயத் துடிப்பை 10-20 நொடிகள் நிறுத்திக் காட்டியுள்ளனர்.

நாடித்துடிப்பை ஒரு நொடிக்கு மேலாகவும் தந்திரங்களால் நிறுத்திக் காட்டியுள்ளனர்.

இவற்றின் மூலம் யோகிகள் எனப்படுவோரின் முகத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்தனர்.

முடியவில்லையே!

1959இல், அனைத்து நாட்டு உடலியல் மருத்துவ அறிவியல் காங்கிரசின் 25 ஆவது கூட்டத்தில் புதுடில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இத்தகைய ஏமாற்று யோகிகளின் தம்பட்ட விளம்பரங் களை அறிவியல் ஆய்வு வழி யோகி களின் செயல்களைப் பொய்ப்பித்துக் காட்டியது.

இதயத் துடிப்பின் நிறுத்தத்தை இந்த அமைப்பிலுள்ள பகுத்தறி வாளர்களின் முன் இந்த யோகீந் திரர்கள் மெய்ப்பித்துக் காட்ட முடியாமல் விழித்தனர்.

1974 இல், பண்டைய - இடைக்கால இந்தியா வின் மருத்துவ - அறிவியல் மெய் யியல் கருத்துருக்கள் (The Science of Medicines and Philosophiecal concepts in Ancient and Medievial India) என்னும் தலைப்பிலான நூல் வெளியிடப் பட்டது.

இதனை எழுதியவர், உடற் கூற்றியல் துறைத் தலை வரும், பேராசிரியரும், டீனும் (Dean) ஆன டாக்டர் என்.எச்.கேஸ்வானி அவர்கள். (Prof. N.H.Keswani, Dean and Professor and HoD of Anatomy).

பெரிதும் முயன்ற பிரேமானந்தா:

இந்த யோக, ஏமாற்றுப் பித்தலாட் டங்களை விளக்கி உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும், NESTC விருது பெற்றவரும் ஆன பி.பிரேமானந்தா அறிவியலும் அருஞ்செயல் (Science Versus Miracles) என்னும் நூலை வெளியிட்டார்.

நோய்கள் குணமாகுமாமே! யோகப்பிரதாபங்ளின் முடி மணியாக விளம்பரப்படுத்துவது, யோகா நோய்களை குணப்படுத்தும் பேராற்றல் கொண்டது என்பதாகும்.

இந்தக் கருத்து,

அறிவியல் அடிப்படையற்ற மிக மிகத் தவறான தகவலாகும்.

அறிந்திருக்கவில்லை!

1673இல், அந்தோணி வான்லூவன்ஹாக் அவர்கள், நுண் பெருக்காடி (Microscope)
கருவி, கண்டுபிடிப்பதற்கு முன், உடலுக்குள் நுண்ணுயிரிகள் Micro-organisms) இருக்கின்றன என்றோ, அவைதாம் நோய்கள் உண்டாகக் காரணம் என்றோ மாந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை.

பாபமாம்! சாபமாம்!!

நுண்பெருக்காடி கண்டு பிடிப்பதற்கு முன் நோய்கள் மக்களின் பாபங்களாலும் கடவுள்கள் - கடவு ளச்சிகளின் சாபங்களாலும்தான் ஏற்படுகின்றன என்பதான மூட நம்பிக்கையினைக் கொண்டிருந்தனர் மக்கள்.

பதஞ்சலியின் காலத்திலும், இதே கண்ணோட்டம்தான் இருந்தது.

அறிவியல் மனப்பான்மை:

மனித உடலில் நோய்கள் உண் டாக எத்தனையோ காரணங்கள் உள்ளன.

நுண்ணுயிரிகளின் தொற்றுதல்; சுரப்பிகளின் உயர் அல்லது குறைந்த செயல்பாடுகள்; உயிர்ச்சத்துகளின் (Vitamines) குறைபாடுகள் முதலியவையே நோய்கள் உண்டாகக் காரணங்கள்.

நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சை பெற, மனத உடலியல் (ßysiology) நோய்கள் (Diseases), மருந்துகளின் வேதியியல் பகுப்பாய்வு (Chemical analysis of medicines) பற்றிய அறிவியல் மனப் பான்மையும் அறிவும் உள்ளவர் களாக மக்கள் இருப்பது மிகமிக இன்றியமையாதது ஆகும்.

வேண்டும் விழிப்புணர்வு:

நோயாளிகள் மட்டுமா?

மருத்துவ சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூட இயற்கை பற்றிய பரந்த அறிவு படைத்தவர்களாக இருத்தல் வேண்டும்.

அப்படி இல்லாத மருத்துவர்கள் அம்பக் அல்லது போலியாக நடிக்கும் மருத்துவர்கள் (Quacks) ஆவார்கள்.

எத்தனை நாள்கள்தான் ஏமாற்றுவார்கள்?

நோய்களை யோகாவால் குணப் படுத்துவோம் என்று சொல்லும் யோகிகள் சிலர் 50 வயதுக் குள்ளாகவே, குருதி அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புத் தன்மை முதலான நோய்களால் இறந்து போயுள்ளனரே!

ஏன்? ஏன் ?

யோகாவால், தங்கள் நோய்களையே குணப் படுத்திக் கொள்ள இயலாத இந்த யோகீஸ்வரர்கள் - இராஜயோகிகள் எப்படிப் பிறருடைய நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று உரிமை கொண்டாட முடியும்?

இது ஏமாற்று - எத்து வேலை யல்லவா?

ஏய்த்துப் பிழைக்கும் பேர் வழிகளான இவர்கள் எத்தனை நாள்கள்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?

எதற்கு ஆற்றல் இருக்கிறது?

கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு இந்த யோக சுவாமிகள் எல்லாம் யோகாவின் பெயரால், பசு மூத்திரம், பசுச் சாணம், மூலிகை மருந்துகள் இவற்றினை விற்பனை செய்கிறார்களே!

யோகா மூலம் அனைத்து நோய்களும் குணமாகும் என்பவர்கள் எதற்காக இவற்றைத் தரவேண்டும்?

பேராற்றல் வாய்ந்தது யோகாவா? பசுமூத்திரம், பசுச்சாணி, மூலி கைகளா?

இத்தகு வினாக்களைப் படித்த பெருமக்கள் இந்த யோகிகளைக் கேட்கவேண்டும். கேட்கவேண்டாமா?

இல்லையென்றால், ஏமாறச் சொன்னது நானா?

என்மீது கோபம் ஏனா? என்று அத்தகைய யோகாக்காரர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்களா?

படித்துப் பார்க்கலாமே?

இந்த நோய்களைக் குணப்படுத் துவதாகச் சொல்லப் படும் பித்த லாட்டங்களை மேலும் அறிந்து பயன்பெற, 26, 27-12-2009 நாள்களில் சென்னை, பெரியார் திடலில் நடந்த இந்தியப் பகுத்தறிவாளர் கழகங் களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்டு மலரினைப் படித்துப் பார்க்கலாம்.

ஏமாற வேண்டாமே?

யோகா பற்றிய விளம்பரங்களும் யோகிகளின் ஏமாற்று வேலை களையும் அம்பலப்படுத்தும் செய்தி களை யெல்லாம் அறிந்து மக்கள் ஏமாறாமல் இருப்பதே மக்களின் இன்றியமையாப் பொறுப்புணர்ச் சியாகும்!

--------------பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் 3-3-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

இரத்தக் கண்ணீர்!


குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் இப்பொ ழுது தான் நடக்கிறதா? இதற்கு முன்பும் நடந் துள்ளதே என்று, அம் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கூறியுள் ளதன் மூலம், இவர் ஆட்சியில் மதக் கல வரங்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

என்னதான் சாமர்த் தியம் காட்டினாலும் சிறு மழை பெய்தால்கூட சாயம் வெளுத்துப் போய் விடுமே!

பெரிய பெரிய அதி காரிகளே காவல்துறை குஜராத்தில் நடந்தது என்ன என்பதை செதிர் காயாக உடைத்துக் காட்டி விட்டனரே!

உண்மையைக் கூறிய தற்காக காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் மோடி ஆட்சியிலே சிறைக்குச் செல்ல வேண் டியதாயிற்று. மாநிலக் காவல்துறை அதிகா ரிக்கு எதிராக ஒரு கான்ஸ்டேபிளிடம் புகார் மனு வாங்கி அம்மாநில அதிகாரியைச் சிறையில் தள்ளும் அளவுக்குக் கீழ்த்தரமான இந்த மோடிக்கு மூடிபோட்டுக் காட்டி மோகனராகம் பாடும் சோ ராமசாமி அய்யர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இன்னொரு தகவல்: .கோத்ரா நிகழ்வுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம் களுக்கு எதிரான கல வரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பானுமி யான் சி.பி.அய். அதிகாரி ஆர்.கே. ராகவன் தலை மையிலான சிறப்புப் புல னாய்வுக் குழுவின் முன் தெரிவித்த தகவல் நெற் றிப் பொட்டில் குண்டு பாய்ச்சுவது போன்றதே!

வெறியாட்டத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட என் பேத்தி ஒரு மாற்றுத் திறனாளி! அவரிடம் நான் என்ன சொல்லக்கூடும்!

தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் திட்ட மிட்டு, கூட்டுக் கும்ப லாகத் திட்டமிட்ட வகை யில் செயல்பட்ட கும்பல் தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்து வந்த எங் களை, எங்கள் சொந்த நிலங்களிலிருந்து பறித்து வெளியேற்றினார்கள். அப்படிப்பட்டவர்கள் சுதந்திர மனிதர்களாக மகிழ்ச்சியோடு நடமாடிக் கொண்டுள்ளனரே - அவர்களைப் பற்றியா மாற்றுத் திறனாளியான என் பேத்தியிடம் சொல்ல முடியும்? என்ற அந்த வார்த்தைகளில்தான் எத்துணை எத்துணை கொந்தளிப்புகளும் துய ரங்களும்! ரத்தக் கண் ணீர் வடிக்கின்றனவே!

இதற்கெல்லாம் சூத் திரதாரியான தாமோதர தாஸ் நரேந்திர மோடி. இந்தியாவுக்கே பிரதமர் ஆக வேண்டுமாம். ஆமாம், இந்தியா சுடு காடாக வேண்டும் என்ற அளப்பரிய ஆசை இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!

- மயிலாடன் 15-3-2012

.

தமிழ் ஓவியா said...

இலங்கைமீதான அமெரிக்கத் தீர்மானம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்


தி.மு.க. - வெளி நடப்பு, அ.தி.மு.க. - நகல் கிழிப்பு



புதுடில்லி, மார்ச் 15- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இந்தியா எடுத் துள்ள முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பும், கண்டன மும், தெரிவிக்கப்பட் டது.

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் ஒரு ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்பிக் கூறியதாவது:

எனது நண்பர்கள் முற்றிலும் குழப்பமான நிலையில் இருப்பது போல் தெரிகிறது. நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை மூலமாக பிரச்சினை விளக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. என்ன பிரச் சினை? பிரச்சினை அமெரிக்கா முன் வைத் துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தொடர்பானது.

இன்றைக்கு அவை நடவடிக்கைகள் இலங் கையின் நிலைமை பற்றிய அறிக்கை அளிப் பதாகும். தமிழில் ஒரு முதுமொழி உண்டு. பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட் டைப் பாக்கு என்ன விலை? என்று சொல் கிறார். அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா முன் மொழிந்துள்ள தீர்மா னத்துக்கு ஆதரவு குறித்து அமைச்சரிடமி ருந்து அறிக்கையைக் கேட்டால் அவர் இலங் கையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த் தல் போன்றவை குறித்து அறிக்கையுடன் வந்துள் ளார். நாங்கள் பல முறை கேட்டுவிட்டோம்.

இதற்கு மேல் டி.ஆர். பாலு மற்றும் எவரும் பேச அனுமதிக்கப் படாததால் வெளி யுறவுத் துறை அமைச்சர் அறிக்கையை சமர்ப்பித் தார்.

இறுதியாக இந்த அவையில் கூறப்பட் டுள்ள கருத்துக்கள், உணர்வுகள் ஆகிய வற்றை அரசு மனதில் இறுத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அரசு இந்த அவைக்குத் தெரிவிக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று முடித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர்.

தமிழ் ஓவியா said...

இதை அடுத்து டி.ஆர்.பாலு இலங் கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை கள் மீறல் குறித்து அரசு தீவிரமாக இல்லை என்று வருந்துகிறேன். நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து நாடா ளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப் பித்த பிறகு அதன்மீது நடைபெற்ற விவாதத் தில் கலந்து கொண்ட தி.மு.கழக உறுப்பினர் கனிமொழி பேசிய தாவது:

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அதன் முடிவில் பொறுப்பு நிர்ணயம் கிடைக்கும் என்று நாம் நம்புவதாகவும் அமைச் சர் அறிக்கையில் கூறி யுள்ளார். அவர்களது கூற்றுகள் மற்றும் சமரச கமிஷனின் அறிக்கை இலங்கை அரசு எந்தப் போர்க் குற்றங்களையும் செய்யவில்லை என்று கூறுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட 40,000 அப்பாவி குடி மக்கள் கொல்லப்பட்ட தில் இலங்கை அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்றுஅது கூறுகிறது. இலங்கை அரசுக்கு இந்தக் குற் றங்கள் எதிலும் பாத் திரம் இல்லை என்று அது மன்னிக்கிறது. பின்னர் இலங்கை அரசு பற்றி இந்த உறுதியும் நம்பிக்கையும் எங் கிருந்து வருகிறது?

அடுத்து நாம் நமது அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலை யிட முடியாது என்று கூறுகிறோம். ஆனால் 1971 வங்கதேசப் போரில் இந்தியா வகித்த பங்கு பற்றி நமக்குத் தெரியும். உலகம் முழுவதற்கும் தெரியும்.

நமது பிரதமர் தென்னாப்பிரிக்கா, சென்றிருந்தபோது பெருமையுடன் அறிவித் தார்.

எங்களது விடு தலைக்கு முன்பே 1946ஆம் ஆண்டில் நாங்கள் நிறவெறிக் கொள்கையை அய்க்கிய நாடுகள் அமைப்பில் ஒரு பிரச்சினையாக எடுத்தோம். 2009 ஜனவரி 9 அன்று அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் (பாலஸ்தீனில்) காசா பகுதியில் இஸ்ரேலால் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் அத்துமீற லுக்கு எதிராக தீர்மா னம் கொண்டு வரப் பட்டபோது இந்தியா ஆதரித்தது என்று பெருமையுடன் பிரதமர் பிரகடனம் செய்தார். எனவே இலங்கையி லுள்ள தமிழர்கள் என்று வரும்போது தென் இந்தியா மற்றும் தமிழ் நாடு மக்களின் உணர்வு கள் என்று வரும்போது நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்?

நாங்கள் வேறெதுவும் கோரவில்லை. இலங்கை யில் நடைபெற்றுள்ள மனித உரிமை அத்து மீறல்கள் பற்றிய விசா ரணையை இந்திய அரசு ஆதரிக்கிறதா என்று மட்டும்தான் நாங்கள் கேட்கிறோம்.

இதுபோன்ற அறிக் கையை எங்களால் ஏற் றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.

இன்னும் சொல்லப் போனால் தமிழர் என்ற உணர்வையும் கடந்து இதில் மனித உரிமை இருக்கிறது என்பது முக்கியமானது என்றார்.

திமுகவைச் சார்ந்து திருச்சி சிவா பேசும் போது கூறியதாவது:

இலங்கை அரசு சொல்லிக் கொண்டிருக் கும் தகவல்களையே அமைச்சரும் அறிக்கை யில் கூறுகிறார். இலங்கை அரசின் அறிக்கை போலவே உள்ளது.

சொன்னதையே திரும் பத் திரும்ப சொல்லு கின்ற ஜெராக்ஸ் காப்பி போல உள்ளது அமைச் சர் அறிக்கை வரலாற்று பூர்வ நட்புறவுக்கு தமி ழர்களின் உயிர்கள்தான் விலையா? இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க உறவு தேவை என்பதற் காக தமிழக மீனவர்கள் பலியாக வேண்டுமா? தமிழர்களின் உணர்வு களை மத்திய அரசு துச்சமாக மதிக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் விரும்பத் தகாதவையாக இருக் கும்.

இந்தியா எடுத்திருக்க வேண்டிய முயற்சியை பிற நாடுகள் எடுத்துள் ளன. இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் இந்தியா இதற்கு குறைவாக வேறு எதுவும் எங்களை சமா தானப்படுத்தி விடாது. அதையும் செய்ய மறுத் தால், இதன் விளைவுகள் எதிர்காலத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.

கிருஷ்ணா தன் உரையை நிறைவு செய்த வுடன் அதிமுக எம்.பி.க் கள் அமைச்சரின் அறிக் கையை கிழித்தனர். கிழித்ததை சபைத் தலை வர் இருக்கைமுன் வீசி விட்டு வெளியேறினர். 15-3-2012

தமிழ் ஓவியா said...

இந்திய அரசின் முடிவு - தமிழர்களுக்கு எதிரான துரோகம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி


சென்னை, மார்ச் 15- நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறிய கருத்து தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்றார் கலைஞர். சென்னையில் செய்தி யாளர்களிடம் (14.3.2012) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறியதாவது:-

செய்தியாளர் :- இன்று நாடாளுமன்றத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில், இலங்கைப் பிரச்சினையில் கருத் துக்களை எடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி யும், திருச்சி சிவாவும் பேசியிருக்கிறார்கள். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது அண்டை நாடான இலங்கைக்கு எதிராக, முடிவெடுக்க மாட்டோம் என்று கூறியிருக் கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழர்களுக்குத் துரோகம்

கலைஞர்:- திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் பேசியதை சுட்டிக்காட்டி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், திருச்சி சிவாவும் மாநிலங்களவையில் பேசும்போது, ``அண்டை நாடுகளுக்கு எதிராக முடிவெடுக்க மாட்டோம் என்றால்; பங்களாதேஷ் பிரச்சினையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், (மத்திய அரசினர்) பதில் சொன்ன தாகத் தெரிய வில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லா விட்டால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக தி.மு.க. அதைக் கருதும்.

செய்தியாளர்:- இந்திய அரசு அப்படி முடி வெடுத்தால், மத்திய அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?

கலைஞர்:- அது நான் ஒருவன் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியதல்ல; அதைப் பற்றி நாங்கள் எங்கள் செயற்குழுவில் கலந்தாலோசித்து முடி வெடுப்போம்.

செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் நீங்கள் நாளை பேசவுள்ள மேடையை அகற்ற வேண்டுமென்று போலீஸ் தரப்பில் சொல்லியிருக்கிறார்களே?

கலைஞர்:- அதெல்லாம் சிறிய விஷயங்கள். உள்ளூர் அ.தி.மு.க. தோழர்கள் ஈடுபட்டு செய்கின்ற காரியங்கள். அதை நாங்கள் பெரிதாக கருதவில்லை.

செய்தியாளர்:- தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு அங்கே எப்படி உள்ளது?

கலைஞர்:- தேர்தல் ஆணையம் அங்கே ஓரவஞ் சகமாக செயல்படுகிறது என்று புகார்கள் வரு கின்றன. செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் 32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு பல்வேறு வாக்குறு திகளை வாக்காளர்களுக்கு அளித்து வருகிறார்கள். இது எந்த அளவிற்கு தேர்தலை பாதிக்கும்?

கலைஞர் :- இதைப் பற்றியெல்லாம் அறி வார்ந்த ஆசிரியர்களை கொண்ட பத்திரிகைகள் விமர்சனம் செய்து எழுத வேண்டும்.

செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?

கலைஞர்:- நடைபெற வேண்டும். செய்தியாளர்:- தேர்தல் நியாயமாக நடைபெற் றால் - தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?

கலைஞர்:- தேர்தல் நியாயமாக நடை பெற்றால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு உறுதி.

செய்தியாளர்:- இரயில்வே பட்ஜெட் டில் கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ளதே?

கலைஞர்:- தமிழகத்தில் பேருந்துக் கட்ட ணத்தை உயர்த்தியதைப் போல - மத்திய அரசு ரயில்வேயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி யிருக்கிறது. கட்டண உயர்வு என்றாலே, சாதாரண ஏழை மக்களை பாதிக்கக் கூடியது தான். கட்டணங் கள் மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தால் அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஒரே வரியில் கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எப்படி, என்ன காரணத் தால் ஏற்றியிருக் கிறார்கள், எப்படியெல்லாம் ஏற்றியிருக்கிறார்கள், அதன் நிறை குறை என்ன என்பதைப் பற்றி யெல்லாம் யோசிக்க வேண்டும். கழகத்தின் கருத்தை கனிமொழியும் - சிவாவும் எதிரொலித்திருக்கிறார்கள்!

செய்தியாளர்:- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா பேசியது சரியாக இல்லையே?

கலைஞர்:- அதைப் பற்றி கனிமொழி, மாநி லங்களவையில் இன்று பேசியது தி.மு.க. வின் கருத்தாக அமைந்திருக்கிறது. திருச்சி சிவாவும் கழகத்தின் கருத்தை எதிரொலித் திருக்கிறார்.

செய்தியாளர்:- சங்கரன்கோவில் தேர்தல் முடிவு தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி?

கலைஞர்:- நல்லதை நினைப்போம். - இவ்வாறுகலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.15-3-2012