Search This Blog

3.3.12

திராவிடர் இயக்கம் -2


பார்ப்பனர்களும், அவர்களின் தொங்குசதைகளும், தங்களிடத்தில் உள்ள ஊடகங்களின் வலிமையினால், திராவிடர்கள் என்று சொல்லுவதே உண்மையல்ல. அது ஒரு மாயை ஆங்கிலேயர்களால், கிறிஸ்துவர்களால் கட்டி விடப்பட்ட பொய்ச் சரக்கு என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

திராவிடர்கள் என்பது போலியானது என்றால் ஆரியர்கள் என்பவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ். குருநாதராகிய கோல்வால்கர், தான் எழுதிய BUNCH OF THOUGHTS எனும் நூலில் என்ன கூறுகிறார்?

நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம்; நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று குறிப்பிட்டுள்ளாரே - இதற்கு என்ன பதில்?

விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவராக இருந்த அசோக் சிங்கால் என்பவர் சென்னையிலேயே பேசவில்லையா?

கடவுள் தந்த சனாதன தருமமே இந்துக்களின் அரசியல் சட்டம். ஆரியர்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று பேசினாரே (சென்னை 26.9.1993).

இவர்களுக்குத் தேவைப்பட்டால், ஆரியர்கள் என்று தங்களைப் பெருமிதமாகக் கூறிக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் வரலாற்றின் அடிப்படையில் நம்மை நாம் திராவிடர்கள் என்றால் திரிபுவாதம் என்று திசை திரும்புவார்கள்.

காரணம் - திராவிடர்கள் என்று வருகிறபோது ஆரியர்களுக்கு எதிரானவர்கள்! ஆரிய கலாச் சாரத்துக்கு எதிரானது திராவிடர் கலாச்சாரம் என்ற உணர்வு பீறிட்டுக் கிளம்பி விடுமே என்ற ஆத்திரம் தான்.

அந்த எதிர்ப்புணர்வு தானே தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனர்களின் ஆணவத்தையும், ஆதிக் கத்தையும் ஒடுக்கியது.

பார்ப்பன எதிர்ப்புணர்வு தான் என்னைப் பகுத்தறிவுவாதியாக ஆக்கியது என்று தந்தை பெரியார் கூறியுள்ளது இந்த இடத்தில் நோக்கத் தக்கது (விடுதலை 5.3.1969)


ஆரியர் - திராவிடர் கலப்பு ஏற்பட்டுவிட்டது; இப்பொழுது இந்தப் பிரச்சினை தேவையா என்று மேதாவித்தனமாக சிலர் பேசுவதுண்டு.

நடைமுறையை நோக்கும் பொழுது பார்ப்பனர்கள் நம்மோடு இணைந்த இனமாக இல்லையே!

அவர்கள் உயர் ஜாதிக்காரர்கள் என்பதைவிட நம்மை சூத்திரர்கள் என்று இறுக்கி வைப்பதில் தானே கவனம் செலுத்துகிறார்கள்.

ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்று சொல்லி பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே இதன் பொருள் என்ன?

இன்றைக்கும் தங்கள் தாய்மொழியென சமஸ் கிருதத்தைக் கருதுகிறார்களே தவிர, தமிழை ஏற்றுக் கொள்வதில்லையே!

தமிழ் செம்மொழியென்றால் கேலி செய்கிறார்களே? தமிழிலே தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

கோவில்களில் வழிபாட்டு மொழியென்றாலும் சரி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தாலும் சரி, அவற்றை மூடத்தனமாக எதிர்ப்பதோடு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்குகிறார்களே இவ்வளவையும் நடைமுறையில் செய்து கொண்டே, இப்பொழு தெல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை எங்கே இருக்கிறது என்று கேட் கிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்களையும், அவர்களால் திணிக்கப்பட்ட பார்ப்பனீயத்தையும் கடுமையாக எதிர்த்ததால் தானே இன்றைய தினம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் பார்ப்பனர் அல்லாத மக்கள் உரிமையையும், எழுச்சியையும் பெற்றனர்.

இன்னும், பிராமணர் சங்கம் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் பார்ப்பனர்களைப்பற்றிப் பேசுவது குற்றம் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். எச்சரிக்கை!

------------------"விடுதலை” தலையங்கம் 3-3-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

இதோ சுருக்கு வழி - கு(கி)றுக்கு வழி?!!


பொது ஜனங்களே, மகா ஜனங்களே, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளா? கவலைப்படாதீர்கள்!

கஷ்டப்பட்டு சம்பாதிக்கா தீர்கள்; முயற்சி செய்து முன் னேற நினைக்காதீர்கள்.

திட்டங்கள் தீட்டி தீர்வு காண முயற்சிக்காதீர்கள்.;

பெரிய செலவு இல்லை - மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.

இதோ ஒரு சுருக்கு வழி- கு(கி)றுக்கு வழி.

சொத்து வழக்கா? குடும்பத்தில் பாகப் பிரச்னையா? தம்பதிகளுக்குள் விவாக ரத்து பிரச்னையா?

இவற்றிலிருந்து விடுபட ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடையுங்கள்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்யும் வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்புக் கிடைத்த பின் வடை மாலை சாத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் நஷ்டமா?

கவலைப்படாதீர்கள். லட்சுமி குபேரருக்கு நவ நிதிகளை வாரி வழங்கியவர் சிவ பெருமான். அவருக் குரிய பிரதோஷ நாளில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

- தினமலர் ஆன்மீக மலர் பரதநாட்டியம் கற்கவேண்டுமா?

பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டுமா? இசைக் கருவிகளை மீட்டிட ஆசையா? கல்விக் கடாட்சம் கிட்ட வேண்டுமா?

இதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? இதோ ஓர் எளிய வழி இருக்கவே இருக் கிறது. நாம் ஏதாவது மந்திர உபதேசமோ, குரு உபதேசமோ பெறுவதென்றால் அதை மாசி மகத்தன்று வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரம் பளிச்சென்று சித்தியாகும். நல்ல பலனைக் கொடுக்கும்.

அதே போல புதிதாக பரதநாட்டியம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, கணினி போன்ற கலை கல்விப் பிரிவுகளை மாசி மக நாளன்று தொடங்குவது மிகவும் விசேஷமாம். ஏனெனில் சிவபெருமானுக்கே முருகப் பெரு மான் பிரணவ உபதேசம் செய்த நன்னாள் இது. - தினகரன் ஜோதிட சிறப்பு மலர்)

ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?

உங்களுக்கு சொர்க்கமும், ரொக்கமும் கிடைக்க வேண்டுமா? இதற்காக சிரமப்பட வேண்டாம்.

ஏகாதசியன்று சொர்க்க வாசலில் நுழைந்து வாருங்கள். - தினத்தந்தி ஜோதிடம்

கையில காசு வாயில தோசை

இவ்வளவு கு(கி)றுக்கு வழிகள், சுருக்கு வழிகள் இருக்கும் பொழுது அரசாங்கம் எதற் காக? சட்டங்கள் எதற்காக? திட்டங்கள்தான் எதற்காக?

குறிப்பு: இப்படி வெளியிடுகிற இதழ்களின் முதலாளிகளோ, கூலி எழுத்தாளர்களோ இவற்றை மட்டுமே நம்பி வேறு எதையும் செய் யாமல் பூஜிக்கிறார்களா? புத்தியைப் பயன் படுத்திப் பார்க்கவும்.

- கருஞ்சட்டை- 3-3-2012

தமிழ் ஓவியா said...

தஞ்சை மண்ணே, வணக்கம்! - மின்சாரம்


தஞ்சை மண்ணே, வணக்கம், வணக்கம்! நீ அழைத்த போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஓடோடி வந்திருக் கிறார்கள், கருஞ்சட்டைக் குடும்பங்கள் கடல் அலைகளாக ஆர்ப்பரித்து வந் திருக்கின்றன.

அன்று (1957 மார்ச்சு 3இல்) எடைக்கு எடை வெள்ளி ரூபாய்களை அளித்து அரிமா பெரியாரின் படை வரிசையைக் காட்டினாய்.

அய்யாவின் சீடருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்து (1.1-2.-1998) அறிவு ஆசான் தந்தை பெரியார் உருவாக்கிச் சென்ற அடித்தளத்தின் வலிமையை அவனிக்கே உணர்த்தினாய்.

சுயமரியாதை இயக்கத்தின் பொன் விழாவை எவ்வளவு புளகாங்கிதத்துடன் நடத்திக் காட்டினாய்.

பேராசான் பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும் நடத்திக் காட்டி, இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இன வரலாற்றிலே எப்பொழுதுமே பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறாய்.

உம் பெருமையை உலகப் பெரியார் எடை போட்டுச் சொன்ன பிறகு, அதற்குமேல் யார் என்ன கூறமுடியும்?

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல, நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத்திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள்ளது. எதைச் சொல்கிறேனோ, எதை எதிர் பார்க்கிறேனோ, அதைத் தமிழ் நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்.

தமிழ் ஓவியா said...

- தஞ்சையில் தமக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்ட விழாவில் (3-.11.-1957) தந்தை பெரியார் குறிப்பிட்டதுதான் மேலே காணப்படுவது.

இப்போது விடுதலை சந்தா வழங்கிய திலும் தஞ்சை மாவட்டம் முதல் இடத் தைப் பெற்றது. (நிதி என்ற அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதல்நிலை பெற்றாலும் கூட...)

6-.6.-1964 நாளிட்ட விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட முக்கிய மான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் பத்திரிகை நண்பர் வீரமணி அவர்களின் ஏகபோக நிர்வாகத் தின் கீழ் நல்ல நிலையில், நஷ்டமில்லா நிலையில் வாழ்ந்து வரவேண்டுமானால் இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட் டத்தையே நம்பி இருக்கிறேன். ஓர் ஆண்டுக்குள் மேலும் 5000 சந்தாக்கள் பெருகி ஆக வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

அப்பொழுது கூட விடுதலைக்கு சந்தா சேர்ப்பதில் தஞ்சை மாவட்டத்தையே பெரிதும் நம்பி இருப்பதாகக் குறிப்பிட் டுள்ளாரே - கொள்கைக் கோமான்.

அத்தகு தஞ்சையிலே வரும் மார்ச்சு 11 அன்று விடுதலைக்குச் சந்தா வழங்கும் விழாவும், சந்தா அதிகம் வழங்கி யோருக்குப் பாராட்டு விழாவும் நடப்பது மிகமிகப் பொருத்தமானதே!

தோழர்களே! மாவட்டம் ஒன்றுக்கு ஓராயிரம் சந்தாக்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது,

கடந்த அய்யா நினைவு நாளன்று (24.-12.-2011) சென்னையில் விடுதலை சந்தாக் களை மாவட்ட வாரியாக அளித்து மகிழ்ந்தனர். அந்த நிகழ்ச்சி சாதனை சரித்திரமாக, கருஞ்சட்டைக் குடும்பங் களின் உற்சாக வெள்ளமாக கரை புரண்ட விழாவாக நடைபெற்றது.
அப்பொழுது விடுதலை சந்தாக்களை வழங்கிய மாவட்டக் கழகப் பொறுப்பா ளர்கள் முதல் தவணையாக என்றுதான் சொல்லிக் கொடுத்தனர்.

அவர்களின் இலக்குகளை நிறை வேற்றி முடிக்கும் வகையில் தஞ்சையில் மார்ச் 11 இல் நடக்க இருக்கும் விழாவில் சந்தாக்களைக் குவிப்பீர்கள் என்று கழகத் தலைவர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டும் இருக்கிறார்.

50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தால் என் ஆயுளும் நீளும் என்று திருச்சி பொதுக்குழுவிலே நம் தலைவர் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள். அதற்கு மேலும் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

ஆறு கோடி தமிழர்கள் வாழும் நாட் டிலே 50 ஆயிரம் சந்தாக்கள் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லையே!

புதிய சந்தாதாரர்கள் நமக்குக் கிடைத்து இருக்கிறார்கள் என்றால் இதன் பொருள் புதிய வாசகர்கள் விடுதலைக் குக் கிடைத்திருக்கிறார்கள் என்பதே!

புதிய புதிய வீடுகளுக்கு நம் தந்தை பெரியார் நுழைந்திருக்கிறார். அவர்களின் புரட்சிக் கருத்துக்களின் பிரவாகம் நடந் திருக்கிறது. இதன் பலன் இன்னும் சில மாதங்களில் தெரியப் போகிறது. இப்பொ ழுதே சிலர் வெளிப்படையாக மனந் திறந்து மடல் எழுத ஆரம்பித்து விட்டனர்.

மார்ச் 10, 11 ஆகிய இரு நாள் பெரு விழாக்களையும், தஞ்சை மாவட்டத் துக்கே உரித்தான நேர்த்தியில் எடுத்துக் காட்ட தோழர்கள் தயாராகிவிட்டனர். அது சரித்திரம் படைக்கும் என்பது எழுதி வைக்கப்பட்ட சாசனமாகும்.

அதே நேரத்தில் அந்த இரு நாள் விழா என்னும் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறக்கக் கூடிய கொடி ஒன்று இருக் கிறது. அதுதான் விடுதலைக்கான வைப்பு நிதி! அய்யா நினைவு நாளில் சென் னையில் நாம் எடுத்த முடிவுதானே அது! அதை நினைவூட்டவும் வேண்டுமோ?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று நாக்கில் நரம்பின்றிப் பேசும் நன்றி கெட் டவர்களுக்கு சவுக்கடி என்பது இத் தகைய செயல்கள் மூலம் கொடுப்போம்.

திராவிடரா?அது யார்? எங்கே இருக்கிறார்கள்? என்று திரிபுவாதம் பேசும் திரிநூல் கூட்டத்தின் ஆதிக்கத் திரியில் வைக்கும் தீயாகவும் அது இருக்கும்.

தோழர்களே, தோழர்களே! ஒரு மூச்சுப்பிடியுங்கள் - முடியும் உங்களால்! சாதித்துவிட்ட முகமலர்ச்சியோடு வாருங்கள். முகமலர்ந்து கொடி அசைத்து வரவேற்பார் நமது தலைவர்! சந்திப்போம்! சந்திப்போம்!! 3-3-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரைப்பற்றி இரணியன் திட்டம்

இரணியன் சொல்கிறான்; ஓ, தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள்! தாமதியாமல் அப்படிச் செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் பூமிக்குச் சென்று தபசு, யாகம், அத்யாயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள்! பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானம் விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது. அதனால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரம மக்களுக்குரிய தர்மங்கள் அனுஷ்டிக்கப்படு கிறதோ அத்தேசத்திற்குச் சென்று அக்னியை வைத்துக் கொளுத்துங்கள்; நாசம் செய்யுங்கள்! என்றான்.

அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர், அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண்வெட்டியை எடுத்துக் கோவில் களையும் பிரகாரங்களையும் பிளந்தார்கள். சிலர் ஜ்வலிக்கும் கொள்ளிகள் கொண்டு அவர்களுடைய வீடுகளையும் கொளுத்தினார்கள். இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியிலிருந்து மறைந்து சஞ்சரித்தார்கள்.

பாகவதம் 7ஆவது ஸ்காந்தம் 2ஆவது அத்தியாயம், இஞ்சிக் கொல்லை பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரியார் மொழி பெயர்ப்பு: புரோகிர சிவ் அச்சுக் கூடப் பதிப்பு, பக்கம் 715-716ஆம் பக்கம்.

தமிழ் ஓவியா said...

மூக்கு ஒற்றுமை


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தொப்புள் கொடி உறவுள்ள தமிழகத் தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று, ஆட்சி பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கடமை என்ன? வளமை போல இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என காட்டப்போகிறதா?

டவுட் தனபாலு: அப்படியே இன்னொரு கேள்வியும் கேளுங்களேன். தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று மத்திய ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தி.மு.க. என்ன செய்யப்போகிறது? வளமை போல் இலங்கையைப் காப்பாற்றப்போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனித நேயத்தை மறக்கமாட்டோம் என காட்டப் போகிறதா? - தினமலர் 4-3-2012

திராவிடர் கழகம் சொல்வது இருக்கட்டும். (அது எப்பொழுதுமே தெளிவாகக் கூறி வந்துள்ளது.) தி.மு.க. என்ன செய்யப் போகிறது என்பதும் இன்னொரு புறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினையில் தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் என்ன செய்ய விருப்பதாக உத்தேசம்?

இலங்கை அரசு இப்பிரச்சினையில் தண்டிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? பார்ப்பனக் கும்பலின் நிலைப்பாடு என்ன?

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சு.சாமி சொன்னது பற்றி டவுட் தனபாலுகள் கண்டு கொண்டதா? இது போன்ற விஷயங்களில் எல்லாம் டவுட் தனபாலுக்கு சந்தேகமே வராது. ஏனென்றால் சந்தேகமே இல்லாமல் பார்ப்பனர்களுக்கும், சிங்கள இனத்துக்கும் ரத்த உறவு உண்டே! ஜெயவர்த்தனே அப்படிக் கூறியதுண்டே! (மூக்கு ஒற்றுமை!)
---"விடுதலை” 4-3-2012