Search This Blog

2.3.12

திருஞான சம்பந்தனின் யோக்கியதைதான் என்ன?


சென்னையில் இன்று தேவாரம் பாடிய சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தனுக்கு விழா எடுக்கப்படுகிறது. சோலை சுந்தரப் பெருமாள் என்பார் திருஞான சம்பந்தனை இழிவு படுத்தி தாண்டவபுரம் என்ற நூல் ஒன்றை எழுதி விட்டாராம். இதனை எதிர்த்து அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்பார்களே அந்த அடிப்படை யில் இந்த விழா நடை பெற உள்ளதாம்.

சபாஷ்! இப்படியல்லவா மீசையை(?) முறுக்கிக் கொண்டு கோதாவுக்குள் குதிக்க வேண்டும்?

இந்த சைவர்களின் முழு முதற் கடவுளான சிவன் தாருகாவனத்து ரிஷிகளின் பத்தினிப் பெண்களை கற்பழித்தான் என்றும், அதனால் ஆத்திரப்பட்ட ரிஷிகள் சாபமிட அதன் காரணமாக சிவனின் ஆண் குறி அறுந்து விழுந்ததாகவும், அதனை பார்வதிதேவியார் தன் குறியால் தாங்கிப் பிடித்ததாகவும், அந்த அடையாளத்தைத் தான் சிவலிங்கம் என்று உருவகப்படுத்தி, ஊர் எங்கும் கோவில் கட்டி, இந்த அருவருப்பான - ஆபாசமான உருவத்தினை விழுந்து விழுந்து பக்தர்கள் கும்பிட்டுத் தொலைக்கிறார்களே - இது எங்கள் முழு முதற் கடவுளான சிவனை இழிவுபடுத்துவதாகும் என்பதால் சிவபுராணங்களையும், லிங்க புராணங் களையும் கொளுத்தும் போராட்டத்தில் குதிக்க வேண்டாமா? (இல்லை. இது உயிர்களின் தத்துவம் என்று கில்ட்டு அடித்து வியாபாரம் செய்யப் போகிறார்களா?)

இந்தத் திருஞான சம்பந்தனின் யோக்கியதைதான் என்ன?


மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!


என்று திருஞானசம் பந்தன் பாடியிருக்கிறானே - சமணர், பவுத்தர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரியுமாறு மதுரையில் வீற்றிருக்கும் சிவனுக்கு விண்ணைப்பம் போட்டு அருள் வேண்டுகிறாரே - இந்த யோக்கிய சிரோன் மணியை யாரோ ஒருவர் இழிவுபடுத்திப் புத்தகம் போட்டு விட்டார் என்று புலம்புவானேன்?

எலும்பைப் பெண்ணாக்கியவர் - தேவாரப் பாட்டால் திருஞான சம்பந்தன் என்று பீற்றிக் கொள்பவர்கள், அந்தத் திருஞான சம்பந்தனுக்கு விண்ணப்பம் போடுவது தானே!

பாண்டிய மன்னனின் வெப்பு நோயை திருஞான சம்பந்தனின் திருநீறு குணமாக்கியது என்றெல்லாம் கதை அளப்பவர்கள். இந்த விடயத்தில் திருஞான சம்பந்தனுக்காக அடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு அலைவானேன்?! -

--------------மயிலாடன் அவர்கள் 2-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

மதத்தின் பெயரால் விபச்சாரம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் வில்பர். இவர் மனைவி மேரி கெலன்ட்ரெஸி இவர்கள் இருவரும் எகிப்து நாட்டில் பழைமையான மதம் ஒன்றை சேர்ந்தவர்கள். வில்பர் தன் மனைவி ஒரு பெண் சாமியார் என்றும், பாவத்தை தீர்க்கும் மந்திர சக்தி அவளிடம் இருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் அந்த தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பக்தர்கள் உருவானார்கள். இந்த பக்தர்கள், மேரிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடைகள் கொடுத்தனர். இவர்களில் அதிக நன்கொடை கொடுத்த ஆண்களுடன் மேரி செக்ஸ் தொடர்பு கொண்டால் அந்த ஆண்களின் பாவம் நீங்கி விடும் என இத்தம்பதிகள் பிரச்சாரம் செய்தனர். இதனால் ஏராளமான ஆண்கள் தினமும் மேரியிடம் வந்து ஏராளமான பரிசுகளை கொடுத்து, தாங்கள் ஏராளமாக பாவம் செய்துள்ளதாக கூறி அவளிடம் செக்ஸ் உறவு கொண்டு பாவ மன்னிப்பு பெற்றனர். ஆனால் இதை ஊர்மக்கள் காவல்துறையிடம் புகார் செய்தனர். விபச்சார சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட மேரி பின்வரும்படி கூறினார். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையாகவே அவர்களது நன்கொடைகளை நினைக்கிறேன். அவர்களது பாவத்தை போக்க அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி என்மதம் சொல்லுகிறது அதனால் இதுவரை சுமார் இரண்டாயிரம் ஆண்களிடம் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளேன் 2-3-2012

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!


தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போது தான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்

- டாக்டர் கலேல்கர்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம் 123

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாதக் கருத்து சேலம் ர.ஒந்தாட்சி


கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக்கலவாதக் கருத்தும் (நைராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கலவாதசருக்கத்தில் காணலாம்.

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங் களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)

இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென் பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள் ளலாம். 2-3-2012

தமிழ் ஓவியா said...

கூனி ஏன்?


ராமாயண இதிகாசப்படி கோசலையை தசரதன் மணம் செய்து கொண்ட போது அவளுக்குச் செவிலியாக வந்த சுமத்திரை யையும் தசரதன் பெண்டாடினான். அவளையும் மனைவியாக ஏற்றான். அதன் காரணமாகவே கேகயன் தன் மகள் கைகேயியை தசரதனுக்கு மணம் செய்து வைத்து அனுப்பிய காலை, தசரதன் புத்தியை உணர்ந்து தெளிந்து மூதாட்டியான கூனியான மந்தரையை அனுப்பி வைத்தான் என்பதை ராமாயணப் பிரியர்கள் அறி வார்களா?
- பூசோ

Unknown said...

இப்போ என்ன சொல்லவறீங்க இந்து மதம் அப்படின்னு சொல்லுது சரி உங்க தானை தலைவர் அய்யாவும் பெண்கள் ரெண்டு புருஷன் கல்யாணம் பண்ணிகொங்க ஆணுக்கொரு நியாயம் பெண்ணுகொரு நியாயமான்னு கேட்டாரே அது சரியா அது சரின்னா உங்க அம்மாவுக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு வைங்க, உங்க அக்கா தங்கைக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு வைங்க அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணுங்க உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு இந்து மதத்தை பார்த்து பழிக்கறீங்க

maniajith007 said...

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60612289&edition_id=20061228&format=html