Search This Blog

1.3.12

ராஜபக்சேமீது மனித உரிமை மீறல்-இந்தியா என்ன செய்யப் போகிறது?


ஜெனிவாவில் மார்ச் 3 ஆம் வாரம் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேமீது மனித உரிமை மீறல் - போர்க் குற்ற தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தத் தீர்மானத்தை எப்படியும் தோற்கடித்து தன் நெற்றியில் மனிதாபிமான பட்டையைத் தீட்டிக் கொள்ள ராஜபக்சே கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ராஜபக்சேவுக்குரிய தண்டனையைக் கொடுப்பதன் மூலமாகத்தான் 21 ஆம் நூற்றாண்டின் மரியாதையே அடங்கி இருக்கிறது.

தேர்தலில் முரண்பட்ட கட்சிகளையெல்லாம் கூட்டணியில் இணைத்துக்கொண்டு செயல்படுவதுபோல, அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்பதற்காக கம்யூனிஸ்டு நாடுகள் ராஜபக்சேவைத் தூக்கிச் சுமக்க ஆசைப்பட்டால், அதைவிட அருவருப்பான செயல் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு ஆயுதங்களை வாரி வழங்கிக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்ட சீனா, ருசிய நாடுகள் ஜெனிவாவில் கொண்டுவரப்பட உள்ள கண்டனத் தீர்மானத்தை எதிர்ப்பார்களேயானால், இந்நாடுகளுக்கு அவமானம் மட்டுமல்ல - கம்யூனிசம் என்னும் உயர்ந்த சித்தாந்தம், உலக மக்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கம்யூனிஸ்டு நாடுகளே கம்யூனிசத்தின் கோட்பாடுகளைக் காயடிக்கும் ஒரு வேலையில் இறங்கி விட்டதாகப் பொருள்படும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது.

ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா துணை போய்விட்டது என்கிற அழுத்தமான குற்றச்சாற்றிலிருந்து வெளிவர முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டு இருக்கும் இந்தியா, ஜெனிவா தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியிலும் மரியாதையை இழக்க நேரிடும், எச்சரிக்கை!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்; இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்கள் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஓச்சா அமைப்பின் கணிப்புகள் கூறுகின்றன. எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் கதி என்ன?
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரா சூசை அடிகளார், சேவியர் சூலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரங்களை அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவிடமே (LLRC) தெரிவித்தனரே!

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை மறைப்பதன்மூலம் உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப் பார்க்கிறது இலங்கையின் பாசிச அரசு!

விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை ஒருவரைக்கூட கொல்லாமல் (With Zero Civilian Casuality) அனைவரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் ராஜபக்சே புளுகுவார்?

அய்.நா. அமைத்த மூவர் குழு ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தள்ளுபடி செய்ததே!

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவரின் குழு தனது ஆய்வறிக்கையை அய்.நா.வின் பான்-கீ-மூனிடம் அளித்தது. அதனை யோக்கியமான சிங்கள அரசு நிராகரிக்கிறதாம் - நண்டை நரியிடம் கொடுத்தால் என்னவாகும்?

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அதிபர் ராஜபக்சேமீது விசாரணை நடத்தப்படவேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பது முக்கிய தீர்மானம் (26.5.2009).

அந்த மனிதநேய - மனித உரிமைத் தீர்மானத்தைத் தோள்தட்டி முன்னின்று தோற்கடித்ததில் முதல் பரிசு இந்தியாவுக்கே!

பன்னாட்டு நீதிமன்றத்தின்முன் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தைக் கூட நடத்தியதுண்டே! (28.4.2011)

இவ்வளவுக்குப் பிறகும் ஜெனிவா தீர்மானத்தின்மீது யார் பக்கம் நிற்பது என்பதில் மனிதநேயம், மனித உரிமை இவற்றுக்கு எதிராக இந்தியா - இலங்கையின் பக்கம் நிற்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல - உலக மக்கள் மத்தியில் குனிந்துவிட்ட இந்தியாவின் தலை நிமிரவே நிமிராது!

இதுகுறித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவாகவே அறிக்கையின்மூலம் கேட்டுக் கொண்டதையும் (21.2.2012) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 29-2-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

அய்.நா. தீர்மானம் இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது கலைஞரின் கருத்து வரவேற்கத்தக்கது தமிழர் தலைவர் அறிக்கை


திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க் குற்றத் தீர்மானத்தை நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும் என்ற தலைப்பில் சென்னை விடுதலையில் 21.2.2012 அன்று நாம் தான் முதன்முதலில் விரிவான அறிக்கையாக எழுதியிருந்தோம்.

நமது அறிக்கையில், நமது அறிக்கையில், இனப்படுகொலைக் கும், வரலாறு காணாத வன்கொடுமைகளுக்கும், தமிழின அழிப்பும் செய்து இன்னமும் முள் வேலிகள் முற்றாக அகற்றப்படாது, அரசியல் தீர்வு காண்போம் என்பதை நீர் எழுத்துக் களாக்கி, ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டுள்ள சிங்கள ஹிட்லர் ராஜபக்சே அர சினைக் காப்பாற்ற இந்தியா முனையப் போகிறதா? இந்திய அரசு அதனை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காப்பாற்றும் வேலைகளில் ராஜதந்திர போர்வையைப் போர்த்திக் கொண்டு ஈடுபட்டுவிடக் கூடாது என்று இந்திய அரசை எச்சரித்திருந்தோம்.

பளிச்சென்று நியாயத்தின் பக்கம், நீதியின் பக்கம், மனித உரிமையின் பக்கம் நிற்க இந்தியா முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந் தோம்.

இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத் தின்மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக் கூடாது என்று கலைஞர் வலியுறுத்தியுள்ளார். கலைஞர் அவர்களின் அறிக்கை வரவேற்கத்தக்கது.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 29-2-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர்மானம் இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது


சென்னை, பிப். 29- போர்க் குற்ற நடவடிக் கைக்காக இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர் மானம் கொண்டு வரு கிறது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் களை இனியும் அனு மதிக்கக்கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசா ரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலி யுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27.2.2012 அன்று தொடங்கிய அய்.நா. மனித உரிமை ஆணை யக் கூட்டத்தில், அமெ ரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்துள்ளதாக வும், இந்தத் தீர்மானத் தின் மீது நடைபெற விருக்கும் வாக்கெடுப் பில் இலங்கைக்கு இந் தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச் சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்ப தாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங் கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலை மையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தி லேயே முதல் தீர்மான மாக பின்வருமாறு நிறை வேற்றப்பட்டது என் பதை நினைவுகூர்ந்திட விரும்புகிறேன் :-

தாக்குதல் உறுதி

இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங் களுக்காக அய்க்கிய நாடு கள் அமைப்பின் வாயி லாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசார ணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர் கள் மீது நடத்திய கண் மூடித்தனமான தாக்கு தலை உறுதி செய்திருக் கிறது. அரசை எதிர்க் கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடு மைப் படுத்தப்பட்டதற் கும், மனித உரிமை மீறல் களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள் ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப்புலி களுக்கு எதிரான போரின் இறுதிக் கட் டத்தில் 40 ஆயிரத்துக் கும் அதிகமான அப் பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பாலி யல் பலாத்காரம் செய் யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி அய்.நா. குழு பரிந்துரைத்துள்ள வாறு பன்னாட்டு விசா ரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என் றும், போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இதயமற் றோர் பாணியில் விமர் சனம் செய்துள்ளோர், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்து வதோடு, அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்பதை மீண்டும் வலி யுறுத்திக் கூறிட விரும்புகிறேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். 29-2-2012

தமிழ் ஓவியா said...

2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!


கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க்குற்றத் தீர்மானம்

நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும்

இல்லையேல் 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும்

தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!


வரும் 27 ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சிங்கள வெறியன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள போர்க்குற்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் வரும் (பிப்ரவரி) 27 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறவிருக்கிறது.

போர்க்குற்றவாளியாக இலங்கை ராஜபக்சேவை அரசு அறிவிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற விருக்கும் நிலையில், (மத்திய) நமது இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கவேண்டும்? இருக்கப் போகிறது என்பது பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்களின் ஊகங்களாக ஒருபுறம் இருக்கிறது.

அதைவிட இனப்படுகொலைக்கும், வரலாறு காணாத வன்கொடுமைகளுக்கும், தமிழின அழிப்பும் செய்து இன்னமும் முள்வேலிகள் முற்றாக அகற்றப்படாது, அரசியல் தீர்வு காண்போம் என்பதை நீர் எழுத்துக் களாக்கி, ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டுள்ள சிங்கள ஹிட்லர் ராஜபக்சே அரசினைக் காப்பாற்ற இந்தியா முனையப் போகிறதா? காலங்காலமாகச் சுமந்த கறையை கழுவிட ஏற்படவிருக்கும் வாய்ப்பை நழுவவிடப் போகிறதா என்பதே இங்குள்ள தமிழர்கள், உலகத்தின் பன்னாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையை மதிக்கும் மனிதநேயர்கள் அனைவரது நியாயமான கவலையாகவும், கேள்வியாகவும் எழுந்துள்ளன.

பழைய பல்லவியைக் கைவிடுக!

இப்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்திய அரசு எடுத்தால், உடனே அதற்கு ஆதரவாக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும் வந்து நிற்கும். முழுக்கவே அவர்தம் குடைக்குள் - பாதுகாப்புத் தேடி - இலங்கை அரசு புகுந்துகொண்டு இந்திய எதிர்ப்பாளராக வெளிப்படையாக மாறிவிடும் என்ற பழைய பல்லவியையே - ஏதோ இராஜதந்திரத்தில் ஒரு புதுக்கண்டுபிடிப்பு என்பதுபோல - பாடப் போகிறதா இந்திய மத்திய அரசு என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இன்று அனைவர் முன்னிலையிலும் எழுந்து நிற்கின்றது!

ஏற்கெனவே இந்த மனித உரிமைகள் மீறல், இராணுவத்தின் அத்துமீறல், ராஜபக்சே அரசுகளின் மனித உரிமைகள் பறிப்பு, அழிப்புப்பற்றி முன்பு எப்போதும் கவலை கொள்ளாது, அமெரிக்கா, அய்ரோப்பிய யூனி யனின் பற்பல நாடுகளும், அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினர் தந்த உண்மை விளக்க அறிக்கை - தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கள் பார்வையை மனிதநேயத்துடன் செலுத்த முன்வந்துள்ளன!

தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு!

அந்த நாடுகள் - அரசுகளுக்கெல்லாம் இல்லாத தொப்புள்கொடி உறவு பந்தபாசம் தமிழர்களை தன்னகத்தே கொண்டு இந்திய கூட்டாட்சிக்கு உண்டே!

தமிழ் ஓவியா said...

இதற்கு முன்னரே அந்தப் பொறுப்பை உணர்ந்திருந் தால், தற்போது மனித உரிமையாளர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் - உலகத் தமிழர்கள் - இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசு நம்மைக் காப்பாற்றிடும், இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திடும் என்று எண்ணி ஏமாந்த - இன்று நம்பிக்கை இழந்த மக்களாகி நமக்குச் சாபம் தரும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ள இலங்கைவாழ் ஈழத் தமிழர்களின் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் - ரத்தக் கண்ணீர் கரை உடைந்த வெள்ளமாகப் பெருகிடும் நிலையும், இன்னமும் வைத்துள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை இந்திய அரசு தி.மு.க.வைப் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய அய்க்கிய முன்னணி அரசு வலுப்படுத்தப் போகிறதா? அல்லது இழக்கப் போகிறதா?

நாம் மேலே சுட்டிய பழைய பூச்சாண்டியையே (அதாவது இலங்கை சீனா பக்கம் போய்விடும் என்பது போன்ற அதீதக் கற்பனையையே வாதமாகக்) கூறி தனது கடமையை, பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடக் கூடாது.

இன்றுள்ள பன்னாட்டு அரங்கில் இந்தியா போன்ற முன்னேறி வரும் நாட்டினை நேரிடையாகப் பகைத்துக் கொள்ளும் நிலையை அவ்வளவு எளிதாக எந்த அரசும் எடுத்துவிட முடியாது!

நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும் இந்தியா

ஒரு சுண்டைக் காய் நாட்டைக் கூட, இன்று எந்த வல்லரசு நாடும் எதுவும் செய்துவிட முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், ஏனோ அறிவு ஜீவிகளான இராஜதந்திரவாதிகளின் பார்வைக்கு மட்டும் இது பளிச்சென்று தெரியாமல் மறைந்துவிடுகிறது!

அமெரிக்கா முதல் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் மற்ற மனித உரிமையாளர்களும் இலங்கையின்மீது போர்க் குற்றம் சுமத்தும்போது, இந்திய அரசு அதனை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காப்பாற்றும் வேலைகளில், ராஜதந்திர போர்வையைப் போர்த்திக் கொண்டு ஈடுபட்டுவிடக் கூடாது.

பளிச்சென்று நியாயத்தின் பக்கம், நீதியின் பக்கம், மனித உரிமையின் பக்கம் நிற்க முன்வரவேண்டும்.

ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பழியைத் துடைத்துக் கொள்ள இந்திய அரசுக்கு 27 ஆம் தேதி கூட்டம் ஜெனிவாவில் நடப்பது ஒரு அரிய வாய்ப்பு. அதில் துணிவுடன் மனித உரிமையின் பக்கம் நிற்க முன்வரவேண்டும் மத்திய அரசு.

2014 தேர்தல் - எச்சரிக்கை!

இன்றேல், தீராத பழி இறுகுவது மட்டுமல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தை சந்திக்கவும் தயாராகிவிட வேண்டும்.


கி. வீரமணி
தலைவர்
21.2.2012 திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?ஜெனீவாவில் இம்மாத மூன்றாம் வாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேமீது - போர்க் குற்ற தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ளது.

இந்தத் தீர்மானத்தை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ராஜபக்சே மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்போர் - ஆதரிப்போர் வரலாற்றில் என்றென்றைக்கும் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ பேசப்படுவர் என்பதில் அய்யமில்லை.
பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டு, இராணுவத்தின் வாக்குறுதியை நம்பி அந்த வட்டத்திற்குள் அடைக்கலம் புகுந்த மக்களையே சுட்டுக் கொன்ற கேவலமான மனிதகுல விரோத அரசும் - இராணுவமும் இலங்கைக்கு மட்டுமே உரித்தானவை!

மருத்துவமனைகள்மீதும் இளஞ்சிறார்கள் தங்கியிருந்த விடுதிகள்மீதும் குண்டுமாரி பொழிந்து பன்னாட்டுச் சட்டத் திட்டங்களுக்கு விரோதமாக நடந்து கொண்ட கேடு கெட்ட அரசும் இலங்கையே.

இப்படிப்பட்ட ஓர் அரசு கண்டிக்கப்படவில்லை; அரசின் அதிபர் தண்டிக்கப்படவில்லையென்றால், உலகம் காட்டு விலங்காண்டித் திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது என்றுதான் பொருள்படும்.

உலகில் உள்ள நாடுகள் - குழுக்களாக அணி சேர்ந்துள்ளதன் அடிப்படையில் எரிந்த கட்சி எரியாத கட்சி என்ற தோரணையில் பிரிந்து செயல்படுமே யானால் - அதைவிடக் கேவலம் ஒன்று இருக்கவே முடியாது.

இவ்விடயத்தில் இலங்கை தண்டிக்கவோ, கண்டிக்கவோபடவில்லையானால் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலைக்குத்தான் பல நாடுகளும் தள்ளப்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகள், இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை வலுவாகப் பதிவு செய்து விட்டன. முதல் அமைச்சரும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மற்ற நாட்டு மக்களைவிட இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அக்கறையும், கூடுதல் உணர்ச்சியும் உண்டு. காரணம் ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர். அந்த வகையில் இந்தியாவுக்கு இதில் கூடுதல் கடமையுணர்ச்சி இருக்கிறது.

உலகில் எந்த இன மக்கள் பாதிப்புக்கு ஆளானாலும் அந்த இனத்துக்கான, நாட்டுக்கான அரசுகள் கண்டனத்தை, எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது யதார்த்தமாகும்.

திபேத் பிரச்சினையில் திபேத் மக்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களை சீனா கைது செய்தது என்றவுடன், அமெரிக்கா எச்சரித்தது; அதன் விளைவு சீனாவில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அந்த உணர்வு இந்தியாவுக்கு இருக்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்ப் பார்ப்பதில் தவறு இல்லை.

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் தானே இதுவரையிலும்கூட தமிழ்நாடும் - தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினையில் இனப்படுகொலையாளி ராஜபக் சேவுக்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் வேறு மாதிரியாகச் சிந்திக்குமானால், அதன் முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்று பொருள்.

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பறி கொடுத்த காங்கிரஸ், தமிழர் விரோத நடவடிக்கைகளின் காரணமாக நோஞ்சான் பிள்ளையாகத் தவழ்ந்து கொண்டு கிடக்கிறது. இந்த வாய்ப்பையும் குறைந்த பட்சம் மனிதநேய உணர்வோடு காங்கிரஸ் அணுக வில்லையென்றால், என்றென்றைக்குமே எழுந்திட முடியாத பரிதாப நிலைக்குத்தான் தள்ளப்படும்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதனை மிகத் தெளிவாக விடுதலையின் அறிக்கைமூலம் (21.2.2012) தெரிவித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் உணர்வை இந்த வகையில் பிரதமருக் கும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்திக் கும் திட்டவட்டமாகத் தெரிவிப்பார்களாக! ஏனெனில் தமிழ்நாட்டில் கட்சி நடத்த வேண்டியவர்கள் இவர்கள் தானே? --”விடுதலை”தலையங்கம் 1-3-2012

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி ஆளும் மத்திய பிரதேசத்தில் அவல நிலை பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியுமாம்! ஏழு பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் நடக்க வேண்டுமாம்!


மு.கண்ணன்
- நமது சிறப்புச் செய்தியாளர் - புதுக்கோட்டை,

மார்ச் 1- பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் சமூக அவல நிலைப் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. பார்ப்பனர்கள் மட்டும் தான் படிக்க முடியுமாம்.

சமீபத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் உள்ள கடைவீதிகள் மக்கள் கூடுமிடங் களில் அதிரடியாய் இரும்படிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. என்ன ஏது என்று உற்றுப் பார்த்தால் அங்கே திடீரென்று முளைத்திருக்கும் கொல்லுப் பட்டறை. அந்தக் கொல்லுப் பட்டரையில் நீண்ட இரும்பு ராடுகளைத் துண்டுகளாக்கி கோடாரிகள் வாச்சாத்துகள், களைக்கொட்டுகள் போன்ற இரும்புக் கருவிகளை மக்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமாய் வாங்கிச் செல்கிறார்கள்.

திடீர்க் கொல்லுப் பட்டறைகள்

ஆர்வமாய் வாங்குவதற்குக் காரணம் ஒரு கருவியை வடிவமைக்கவோ சரிசெய்யவோ வேண்டும் என்றால், கொல்லுப்பட்டறையில் மாதக் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை. இவர்கள் அப்படியல்ல. அதனால் விவசாயிகளுக்கோ பொதுமக்களுக்கோ கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் உடனே கிடைத்து விடுகிறது. பேரத்திற்கு வேலையில்லை. கிலோ ஒன்று ரூபாய் 150. எந்தக் கருவியை எடுத்தாலும் அதன் எடையைப் பார்த்துக் காசு கொடுத்து வாங்கிவிடுகிறார்கள்.

அவ்வாறு திடீர்க் கொல்லுப்பட்டறை போட் டிருக்கும் அவர்கள் குஜராத்திலிருந்து வந்திருப்பவர் கள். நரசிங்கபுரம், போபால், சாகர், குணால் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 2500-பேர் தமிழகத்திற்கு வந்து பலஊர்களிலும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்கள்.

அவர்களில் பலரிடமும் இந்தி தெரிந்த நண்பர் களின் உதவியோடு பேசியபோது 'நாங்கள் மன்னர் ராணாபிரதாப் சிங் வம்சா வழியினர். மன்னர் பரம்பரையில் வந்த நாங்கள் இப்போது ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகிறோம். ஏற்கெனவே வறட்சி யால் தாக்குதலுக்குள்ளாகி இருந்த போபால் விஷவாயுத் தாக்குதலுக்குப் பின் அங்கிருந்த மக்களின் வாழ்க்கை நிலை மாறிப்போய் விட்டது. அங்கிருந்த மக்கள் அங்கேயும் வாழமுடியவில்லை. அங்கிருந் தும் வெளியேறி எங்கே போய் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே கிடக்க வேண்டிய நிலை. போபால் சம்பவத்திற்குப் பின் விவ சாய நிலங்கள் பெரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப் புக்குள்ளாகி விட்டது. அபகரித்துக் கொண்டு விட்டார்கள். சாதாரண மக்கள் வசிக்க முடியாத நிலை. அதற்காக நாங்கள் திருடவோ கொள்ளை யடிக்கவோ போக முடியாது.

மன்னர் பரம்பரை?

மன்னர் பரம்பரையில் வந்தாலும் எங்கள் முன்னோர்கள் மன்னருக்கு போர்க்கருவிகள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் இருந்திருக்கிறார் கள். இப்போது போர்க்கருவிகளா தயாரிக்க முடியும்? அதனால் விவசாயக் கருவிகள் தயாரித்து விற்று வருகிறோம். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, சட்டீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம் என்று ஊர் ஊராகப் போய்த் தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களில் இரும்பு ராடுகளை விலைக்கு வாங்கி வந்து அறுத்து துருத்தி கொண்டு விவசாயக் கருவிகளாகவும் கோடரி போன்றவையும் உருவாக்கி விற்கிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம். இதுபோல் ஆண்டில் எட்டு மாதங்கள் ஊர் சுற்றுகிறோம். நான்கு மாதங்கள் ஊரில் போய் தங்கி விடுகிறோம்.

ஏழு பார்ப்பனர்கள்

எங்கள் இனத்தில் யாரும் எளிதில் விரும்பித் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவ்வாறு ஒருவருக்கொருவர் விருப்பம் இருந்தால் பெரிய வர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்வோம். அவ்வாறு திருமணம் செய்து கொள்வது எங்கள் சொந்த ஊரில் வைத்து மட்டும்தான். ராமன் பெருமாள், சிவன், காளியம்மன் போன்ற தெய்வங் களை வணங்குகிறோம். திருமணத் தின்போது ஏழு பிராமணர்களை வைத்துத் தான் திருமணம் செய்ய வேண்டும். ஒருவர் குறைந் தாலும் எங்கள் இனத்தில் ஒத்துக் கொள்ள மாட் டார்கள். வீட்டுக்குப் பெரியவராக குடும்பத்தில் அப்பாவோ அண்ணனோதான் இருப் பார்கள். அவர்களில் ஒருவர் சொல்வதைத் தான் கேட்டுக் கொள்வோம். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்ப உறுப் பினர்கள் எப்பொழுதும் இருக்க மாட் டோம். அவர்கள் சம்மதமில்லாமல் எந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் திருமணமே தடைப்பட்டுப் போய் விடும். மீறித் திருமணம் செய்து கொண்டால் சாதியி லிருந்து விலக்கி வைத்து விடுவோம். நாங்கள் செய்யும் இந்தத் தொழிலை எந்த இடத்திலும் செய்ய முடியாது என்றார்கள்.
படிப்பு உயர் ஜாதியினருக்கே!

தமிழ் ஓவியா said...

மேலும், கல்வி குறித்துக் கேட்டபோது 'எங்கள் தொழிலுக்குக் கல்வி எதற்கு என்று விட்டு விட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று விட்டு விட்டோம். எங்கள் அரசாங்கம் எங்களுக்குக் கல்வி கற்றுத் தருவதில்லை. அரசுப் பள்ளிகள் ஏதாவது ஓர் ஊரில் இருக்கும். அங்கு போய்ப் பார்த்தால் உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக் கும், பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொடுப் பார்கள். எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்ய வேண் டும். அல்லது தனியார் கல்வி நிறுவனங் களைத் தேடிப் போயாக வேண்டும். இரும்படித்துப் பிழைக்கிற நாங்கள் கல்விக்குச் செலவு செய்ய எங்கே போவது? அதனால் கணக்குகள் தெரியுமளவிற்கு குடும்பத்தில் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் போதும். உயர் கல்வி கற்று நாங்கள் ஆட்சிக்கா வரப்போ கிறோம்.
பிழைக்கப் போகிற இடத்தில் மொழி தெரியாத எங்களுக்கு எந்தச் சிக்கலும் சிரமமும் வந்து விடக் கூடாது என்பதற்காக, நாங்கள் தங்கியிருக்கும் இந்தக் கூடாரங்களை விட்டு எந்த இடத்திலும் தங்க மாட்டோம். அருகில் யாராவது எதையாவது திருடி விட்டு பழியை எங்கள் மீது போட்டு விடக் கூடாது என்பதால் மிகவும் நேர்மையாக நடந்து கொள் வோம். அதேபோல் எங்கள் வீட்டுப் பெண்களுக்கும் மற்றவர்களால் எந்தவித தொந்தரவும் வந்து விடக் கூடாது என்பதால் பாதுகாப்பாக இருந்து கொள் வோம். இரும்படிக்கும் இந்தத் தொழிலில் ஆண் களை விட அதிக தைரியமாக சம்மட்டி கொண்டு அடிப்பதில் பெண்கள்தான். அவர்கள்தான் எங்கள் தெய்வம் என்கிறார்கள். இந்துக்கள் என்று சொன் னாலும் தங்கியிருக்கும் ஊரில் உள்ள ஒரு இஸ்லா மியரை அழைத்து வந்து அவர்கள் வேதம் ஓதி அறுத்துக் கொடுக்கும் கோழிக்கறியை மட்டும் எப்போதாவது ஒரு முறை அசைவமாக சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். மற்றபடி கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டிதான் அவர்களின் உணவு.

தமிழ்நாட்டைப் பாரீர்!

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் என்ன செய்திருக் கிறது என்பதை அறியாமல் தான் கற்ற கல்வியால் தான் கற்கவும் அரசுப் பணிகளில் அமரவும் முடிந்திருக் கிறது என்று எண்ணிக் கொண்டும் அதையே சொல்லிக்கொண்டும் இருக்கும் அதிமே தாவிகள் இந்த மக்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் நரிக்குறவர் தொடங்கி மனித மலம் அள்ளிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணி செய்யும் நம் தமிழக மக்களின் நிலை எங்கே? மன்னர் பரம்பரையில் வந்தும் பிழைக்கவும் வழியில் லாமல் கல்வியும் உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் நிரந்தரமாக வசிக்கவும் முடியாமல் ஊர் ஊராகச் சுற்றி வரும் மக்களின் நிலையையும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும். எந்த இடத்திலும் தங்க மாட்டோம். ஊர் சுற்றுவதுதான் எங்கள் வேலை என்று சுற்றித்திரிந்த நரிக்குறவர் களையும் கான்கிரீட் வீடுகளில் தங்க வைத்தது கலைஞர் காலத்து அரசாங்கம். தமிழக அளவில் என்றாலும் இந்திய அளவில் என்றாலும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு என்று அனைத்து சலுகை களையும் உரிமைகளையும் மக்களுக்குக் கிடைக்கவும், அதனைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் உரிமை களுக்காகப் போராடவும் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளவும் போராடக் கற்றுக் கொடுத் தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் தமிழகத்தில் இருந்ததாலும் அவரது தாக்கத்தாலும் இன்றைக்கு திராவிடப் பகுதிகள் முன்னேறியிருக்கின்றன. ஆனால் வட மாநிலத்தில் உள்ள மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இரும்படிக்கும் மன்னர் பரம்பரையே சாட்சி. 1-3-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


அந்தக் கழுதை எங்கே?

செய்தி: என்கவுன் டரில் வங்கிக் கொள் ளையர்கள் கொல்லப் பட்டது - மனித உரி மைன்னு எல்லாரும் பேசுறாங்களே தவிர கழுதை உரிமைன்னு யாராவது சொல்றாங் களா? (கழுதை பேசுவது போல் கார்ட்டூன்) - துக்ளக் கார்ட்டூன் 7.3.2012

சிந்தனை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொல்லப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் பட்டதற்கு இந்த விஷயத்தில் சங்கராச்சாரியாருக்கு அநீதி நடந்துவிட்டது என்று திருவாளர் சோ சொன்னாரே - அப்பொழுது அந்தக் கழுதை இதுபோல பேசவில்லையே ஏன் - பேசா விரதமோ! 1-3-2012

தமிழ் ஓவியா said...

இந்திய அரசே, இலங்கைக்கு எதிராக செயல்படுக! சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


சென்னையில் மார்ச் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 6ஆம் தேதியன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம்; விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தான் எங்களது இராணுவ நடவடிக்கை என்று பாசாங்கு வேஷக் குரல் கொடுத்துக் கொண்டே, அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாம் குடிமக்களான தமிழர்களின் வாழ்வுரிமையை அறவே நசுக்கியது கொடுங்கோலன் சிங்கள இராஜபக்சே ஆட்சி!

மருத்துவமனைகள், பள்ளிகள்மீதுகூட குண்டு வீச்சு!

இளந்தளிர்களான பச்சைக் குழந்தைகளைப் பராமரிக்கும் கூடமான செஞ்சோலை முதல், மக்களின் வழிபாட்டு நிலையங்களான சர்ச், பள்ளி வாசல்கள் மீதும், கல்விக்கூடங்கள்மீதும் (சர்வதேச நியதிக்கு முற்றிலும் விரோதமாக) மருத்துவமனை உள்பட பலவற்றின்மீதும் சொந்த நாட்டின் மக்கள்மீதே குண்டுவீசிய கொடுமை உலக வரலாறு காணாத ஒன்றாகும்.

அங்கு கடைசிக் கட்டத்தில் நடந்த போரில், ஈழத் தமிழர்கள் - 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை. 25 ஆயிரம் குழந்தைகள் - அந்தோ - ஆதரவற்றவர்களாகி விட்டனர்!

அதற்கு இரண்டரை ஆண்டுகளுக்குமுன் சிங்கள இராணுவத்தினரால் கடத்தப்பட்ட சுமார் 12 ஆயிரம் பெண்களையும் காணவில்லை.

இன்னும் எத்தனையோ இரத்த ஆற்று வெள்ளத்திலும், கண்ணீர்க் கடலிலும் மனிதநேயம் படைத்தோரை நீந்த வைக்கும் கோரத் தாண்டவ சோக சுனாமிகள்!

அய்.நா. அறிக்கை என்ன கூறுகிறது?

அய்.நா. பொதுச் செயலாளர் அமைத்த குழு (கமிட்டி) கொடுத்த அறிக்கையில், இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் போர்க் குற்றங்களை ஏராளம் புரிந்துள்ளது இராஜபக்சே அரசு - ஹிட்லரையும் மிஞ்சிய கொடுங்கோல் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னமும் இலங்கையில் ஈழப் பகுதியில் முள்வேலிகள் அகற்றப்படவில்லை; வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் குடியிருந்த - அவர்களுக்குச் சொந்தக் காணிகளையெல்லாம் சிங்கள குடியேற்றங்களாக மாற்றிட ராஜபக்சே அரசு - மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக - செய்து கொண்டே உள்ளது - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்!

மத்திய அரசின் கடமை என்ன?

ஜெனிவாவில் கூடும் அய்.நா. உலக அமைப்பின் விசாரணைக்குமுன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவிருக்கும் இலங்கை அரசைக் கண்டித்து, தண்டிக்க உலகத்தின் மனிதாபிமான முறையில் - அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் முனையும்போது, தொப்புள் கொடி உறவுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியின் கடமை என்ன?

வழமைபோல் இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நியாயத்தின் பக்கம், நீதியின்பக்கம், நேர்மையோடு நின்று மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என்று காட்டப் போகிறதா? என்பதே இப்போதுள்ள அவசர அவசிய கேள்வியாகும்!

தி.மு.க. - அ.தி.மு.க. ஒரே நிலை!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் தலைவரான முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கையைக் கண்டிக்க வேண்டும்; காப்பாற்ற முனையக் கூடாது - மத்திய அரசு என்று நேற்று உறுதியான அறிக்கையைத் தந்து விட்டார்! வரவேற்கிறோம் நாம்.

மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களும் அதற்கு முதல் நாள் உறுதிபட மத்திய அரசு இலங்கையைக் காப்பாற்ற முனையக் கூடாது இப்பிரச்சினையில் என்று வலியுறுத்திக் கூறி விட்டார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒன்றைத் தவிர, (அதில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களும்கூட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கே கேடு என்ற உணர்வினைத்தான் கொண்டுள்ளனர்) மற்ற அத்துணைக் கட்சிகளும் - இடதுசாரிகள் உள்பட இதில் ஒரே கருத்துடன் மத்திய அரசினை வற்புறுத்துகின்றனர்!

மார்ச்சு 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் 21.2.2012 அன்றே விரிவான அறிக்கையைத் தந்துள்ளோம்!

இதனை வலியுறுத்திட சென்னையில் பனகல் மாளிகை அருகில் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி செவ்வாயன்று (6.3.2012) மத்திய அரசை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில் மத்திய அரசு இலங்கை அரசினைக் காப்பாற்ற முனைந்தால், இனி காங்கிரஸை எவராலும் இங்கு காப்பாற்றப்பட முடியாது என்பது சுவர் எழுத்துக்களாக பளிச்செனத் தெரியும் உண்மையாகும்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 2-3-2012

தமிழ் ஓவியா said...

மூக்கு ஒற்றுமை


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தொப்புள் கொடி உறவுள்ள தமிழகத் தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று, ஆட்சி பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கடமை என்ன? வளமை போல இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என காட்டப்போகிறதா?

டவுட் தனபாலு: அப்படியே இன்னொரு கேள்வியும் கேளுங்களேன். தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று மத்திய ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தி.மு.க. என்ன செய்யப்போகிறது? வளமை போல் இலங்கையைப் காப்பாற்றப்போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனித நேயத்தை மறக்கமாட்டோம் என காட்டப் போகிறதா? - தினமலர் 4-3-2012

திராவிடர் கழகம் சொல்வது இருக்கட்டும். (அது எப்பொழுதுமே தெளிவாகக் கூறி வந்துள்ளது.) தி.மு.க. என்ன செய்யப் போகிறது என்பதும் இன்னொரு புறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினையில் தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் என்ன செய்ய விருப்பதாக உத்தேசம்?

இலங்கை அரசு இப்பிரச்சினையில் தண்டிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? பார்ப்பனக் கும்பலின் நிலைப்பாடு என்ன?

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சு.சாமி சொன்னது பற்றி டவுட் தனபாலுகள் கண்டு கொண்டதா? இது போன்ற விஷயங்களில் எல்லாம் டவுட் தனபாலுக்கு சந்தேகமே வராது. ஏனென்றால் சந்தேகமே இல்லாமல் பார்ப்பனர்களுக்கும், சிங்கள இனத்துக்கும் ரத்த உறவு உண்டே! ஜெயவர்த்தனே அப்படிக் கூறியதுண்டே! (மூக்கு ஒற்றுமை!)
---"விடுதலை” 4-3-2012