Search This Blog

14.3.12

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு -3

இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சாரமாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.

இவற்றுள் ஆரியக் கலாச்சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்றுபவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.

சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.

திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.

இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா? இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக்கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா? எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது? ஆறுகள் இல்லையா? இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகையில் கோதாவரியுண்டு, கிருஷ்ணாவுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்? உலோகங்கள் இல்லையா? கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை? அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா? கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன? மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா? எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.

இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா? அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா? எங்களுக்கு முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ? இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.

எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே? அது சாத்யமா? யோசித்துப் பார்த்தார்களா? வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா? அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா? எங்கே இருக்கிறது ஒற்று மையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு? இவர்கள் கூறும் இந்தி யாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?

------------ முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்அவர்கள் 14-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

நியூமரலாஜியா?


சீனா - இந்தியா யுத்தம் நடந்தபோது ராஜகோபாலாச்சாரியார் இந்தியத் தரப்பில் செத்த வர்கள் எத்தனைப் பேர் என்று கேட்டார். பொதுவாக யுத்த களத்தில் இப்படியெல்லாம் கேட் கக் கூடாது - உண் மையும் வெளியில் வராது.

அதிக எண்ணிக்கையில் மடிந்தனர் என்ற தகவல் இராணுவத்தினர் மத்தி யிலும், பொது மக்கள் மத்தியிலும் சில பாதிப் புகளை ஏற்படுத்தும். ஆனால் அரசியல் வித்த கர் ஆயிற்றே. ராஜாஜி அவருக்குத் தெரியாதா என்று பலரும் வாயை மூடிக் கிடந்தனர்.

ஆச்சாரியார் அவ் வாறு கேட்ட தருணத்தில் மயிலாடுதுறை வட்டம் குத்தாலம் பொதுக் கூட் டத்தில் பேசிய தந்தை பெரியார் ஆச்சாரியாரின் முகத்திரையை கிழித்தது போல பதிலடி கொடுத் தார். ஆச்சாரியார் இப்படிக் கேட்பது அவாளுக்கே உரிய புரோகிதப் புத்தி!

எத்தனைப் பேர் இந்திய தரப்பில் செத் தனர் என்ற விவரம் தெரிந்தால் அந்த வீட் டுக்கெல்லாம் திதி கொடுக்க புரோகிதப் பார்ப்பனர்கள் போக லாம் அல்லவா! அந்தப் பார்ப்பன புரோகித சுரண்டல் புத்தியோடு தான் ஆச்சாரியார் விவரம் கேட்கிறார் என்று மண்டையில் அடித்ததுபோல் கூறி னார் தந்தை பெரியார்.

அதுபோல தினமலருக்கு எது கிடைத்தாலும் அவாள் புத்தி சோதிடம், நியூமராலஜி போன்ற முட்டாள் தனத்தையே சுற்றிச் சுற்றி வரும். 13ஆம் எண் ஆகாது என்பார் கள்; திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வீட்டு எண் என்ன தெரியுமா? 13. இப்பொ ழுதுதான் புதிய எண் மாற்றப்பட்டது.

தினமலரே, உன் திரிக்கும் திரிநூல் வேலை எங்களிடம் வேண்டாம். 14-3-2012

தமிழ் ஓவியா said...

கேரளம் வழிகாட்டுகிறது - பாராட்டி வரவேற்கத்தக்கது!

கோவில்களில் 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு அர்ச்சகர் பணிகள்!

தமிழ்நாடு அரசு பின்பற்றுமா?

திருவனந்தபுரம், மார்ச் 14- கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சத விகிதம் இடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நியமித்துள்ளது.

கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராக வேண்டும் என்றார் தந்தை பெரியார். தீண்டாமையை எதிர்த்துத் தந்தை பெரியார் நடத்திய வைக்கம் கேரளாவில்தான் உள்ளது. அங்கு மறுபடியும் சமூகப் புரட்சிக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் சத்தம் இல்லாமல் ஒரு மவுன கலாச்சாரப் புரட்சி ஒன்றை திருவாங்கூர் தேவஸ் தானம் தொடங்கி வைத்துள்ளது என்று கூட இதனை சொல்லலாம் என சமூக விமர்சகர்கள் கருதுகின்றனர். இனி கேரள கோவில்களில் புதிய மாறுதலைப் பார்க்கலாம்.

திருவாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லா தோரை கொண்டு நிரப்ப முடிவு செய்தது. திருவாங் கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு அம்மாநிலத்தில் 2,000த்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியிடங் களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதற்கான நேர் காணல்களும் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டன. இதில் 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லா தோர் ஆவர் என தேவஸ்தான போர்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். ஜாதி தடை இல்லை என்ற அறிவிப்பின் கீழ் சமஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதியை பெற்ற அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், மலையாளி இந்து மதத்தைச் சார்ந்த பாரம்பரிய நடவடிக்கைகள் குறித்த அறிவுடைய வராகவும் விண்ணப்பத்தாரர்கள் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என ஆல்வாய் தாந்திரிக நித்யா பீடா பொதுச்செயலாளர் கிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

இது வெறும் பதவி மட்டுமல்ல; புனிதமான சேவையும் ஆகும். வெறும் சமஸ்கிருத மந்திரங்களை மட்டும் தெரிந்திருந்தால் மட்டும் போதாது என ஒரு சில தரப்பில் இருந்து எதிர்ப்பை இந்த அறிவிப்பு சந்தித்த போதிலும் கூட அம்மாநிலம் முழுவதும் பெருவாரியான மக்களிடம் இருந்து வரவேற்பையே பெற்றுள்ளது என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுமா? நாடே எதிர்பார்க்கிறது. 14-3-2012

தமிழ் ஓவியா said...

அப்படி போடுவீர் ஜெயேந்திரரே!

செய்தி: நல்ல காரியங்கள் செய்வதன் மூல மும், கடவுள் பக்திமூலமும் கர்ம பலனிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
- காஞ்சி சங்கராச்சாரி, (காமகோடி, மார்ச் 2012, பக்கம் 2)

சிந்தனை: வேலூர் சிறையில் 61 நாள்கள் கம்பி எண்ணினீரே - அது கர்ம பலன்தானோ! அப்படிச் சொல்லித் தப்பிக்கலாம் என்ற நினைப்போ!

இப்போது கோவில் கோவில்களாக அலைந்து கும்பாபிஷேகம் செய்வதெல் லாம் கொலை வழக்கிலிருந்து தப்பிக்கத் தானோ!
அது சரி, நீதிபதியிடம் பேசினீர்களே, அது எந்தப் பலன்? 14-3-2012

தமிழ் ஓவியா said...

வீண்பழி சுமக்கவேண்டாம் இந்தியா!


இங்கிலாந்து நாட்டின் அலைவரிசை 4- 14.11.2011 அன்று ஒளிபரப்பிய தகவல்கள் உலக மக்களின் ரத்த ஓட்டத்தை உறையச் செய்தது. விடுதலைப் போராளி களின் உடைகள் களையப்பட்டு, கைகளும், கண்களும் கட்டப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை இப்பொழுது நினைத்தாலும் பார்த்தவர்களை நிலைகுலையச் செய்யும்!

இராணுவத்தின் கைகளில் சிக்கிய தமிழினத்துப் பெண்கள் எப்படியெல்லாம் குதறப்பட்டார்கள் என்பது அப்பப்பா, சொல்லுந்தரமன்று!

கொத்துக் கொத்தாகப் பச்சிளம் குழந்தைகள் சிதறிக் கிடந்த காட்சியைக் கண்டோர் கதறி அழும் நிலைதான்! அதே இங்கிலாந்தின் 4 ஆம் அலைவரிசை வரும் வியாழனன்று விடியற்காலை மேலும் சில குரூரக்காட்சி களை ஒளிபரப்ப உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அய்.நா.வின் மனித உரிமைக் குழுவிடம், இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் உட்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது - உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இலங்கை மட்டுமல்ல - அதன் மனித விரோத நடவடிக்கைகளுக்கு நடை பாவாடை விரிக்கும் நாடுகள் மத்தியிலும் பல அலைகளை எழுப்பிவிட்டன.

இதற்குப் பிறகும்கூட இந்திய அரசு நடந்துகொண்டு வரும் போக்கு - என்றென்றைக்கும் உலக நாடுகள் மத்தியில் கவுரவத்தை இழக்கும் நிலைக்குத்தான் இழுத்துச் செல்லும்.

இந்தியா எடுக்கும் முடிவால் இலங்கையில் அரசுக்கும், தமிழர்களுக்குமிடையே மோதல் போக்கை உருவாக்கி விடக்கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதாம். அப்படியென்றால் எந்த ஒரு நாடும் சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்கலாம் - மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கலாம். இந்தியா அதனைக் கண்டுகொள்ளாதோ! அப்படியென்றால், அய்.நா. மன்றம் என்ற ஒரு அமைப்பு எதற்கு? பேன் குத்தவா?

தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு சென்றதே - நினைவில் இல்லையா?

கிழக்குப் பாகிஸ்தானுக்கும், மேற்குப் பாகிஸ்தானுக் கும் பிரச்சினை என்றால், இந்தியா ஏன் அதில் போய் மூக்கை நுழைக்க வேண்டும்?

தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் பேசினாரே நினைவிருக்கிறதா? கிழக்குப் பாகிஸ்தானுக்கு, முக்தி வாஹினிப் படையை அனுப்பி பங்களாதேசத்தை உருவாக்கியதுபோல இலங்கையிலும் நடக்கும் என்று எதிர்பார்த்தோம் என்று பேசினாரே. (25.8.2011).

ஆனால், இந்தியா ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நடந்துகொண்டு வருகிறது? ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நாடாளு மன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஷைலேந்திரகுமார் ஆகியோர் தாக்கீது கொடுத்திருந்தனர். அது மக்களவையில் 11.8.2011 அன்று விவாதிக்கப்படவும் இருந்தது. நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப் பட்டும் இருந்தது. அதன் நகல் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கவும் பட்டது. ஆனால், திடீரென்று அதில் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

என்ன திருத்தம்?

இலங்கைத் தமிழர்களை இராணுவம் கொன்றது குறித்து அய்.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் பாக விவாதிக்கப்படும் என்பதைத் தலைகீழாக மாற்றித் திருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத் துக்கு இந்திய அரசு வழங்கிய நிவாரணம் குறித்து விவாதிப்பது என்று திருத்தப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்ட போது ஆளும் கட்சித் தரப்பில் தலைகுனிய நேரிட்டதே!

உறுப்பினர்கள் கொடுத்த தலைப்பை மாற்ற யாருக்கு அதிகாரம் உண்டு?

ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், இந்திய அரசின் நிலைப்பாடு இந்த வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள தி.மு.க., மாநிலத்தில் ஆளும் கட்சி-ஆட்சி, இடதுசாரிகள், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகள், திரா விடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள், இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. இப்படி இத்தனை அமைப்புகளும் ஒரு கருத்தைச் சொல்லும் போது, காங்கிரஸ் மட்டும் மனித விரோத செயலில் ஈடு படுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா?

வரும் மக்களவைத் தேர்தலில் இது அரசியலாக்கப் படும்பொழுது காங்கிரசின் நிலைமை என்ன?

எச்சரிக்கின்றோம்!

தஞ்சை மாநாட்டிலும் (11.3.2012) இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நினைவூட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்து வீசிய திமுக எம்பிக்கள்!

டெல்லி: இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துப் படித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்று திமுக ஆவேசமாக கூறியுள்ளது.

ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இலங்கைககு எதிரான ஐநா மனித உரிமை ஆணைய நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார். முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருந்தது அந்த அறிக்கை.

அதற்குப் பின்னர் திமுக சார்பில் திருச்சி சிவா பேசுகையில், கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை விவகாரம் தொடர்பாக எப்போது அறிக்கை வாசித்தாலும், அது இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வந்து படிப்பது போலவே இருக்கிறது. இப்போதும் அப்படி ஒரு அறிக்கையைத்தான் அவர் வாசித்துள்ளார்.

இலங்கையுடன் நமக்கு வரலாற்று ரீதியான உறவு உள்ளது, நட்பு உள்ளது என்கிறார். அந்த உறவுதான் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேரின் உயிரை எடுத்துள்ளது. நமது தமீழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் மாண்டு போகச் செய்து வருகிறது. தொடர்ந்து நமது மீனவர்களை இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த உறவு வரலாற்றுப் பூர்வமானது, நட்பு ரீதியானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படியே நீங்கள் கூறிக் கொண்டிருந்தால், இலங்கையில் இந்தியாவுக்கு ஆதரவான அத்தனை தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டு விடுவார்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள் குவிந்து விடுவார்கள். இது இந்தியாவுக்கு நல்லதல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பல காலமாக எங்களது சகோதரர்களை கொன்று குவித்து வரும் ஒரு நாட்டுடன் நாம் எப்படி வரலாற்றுப் பூர்வமான உறவை பராமரிக்க முடியும், நட்பாக இருக்க முடியும். எனவே இனியும் அப்படிச் சொல்லாதீர்கள்.

கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா தயவு செய்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிவா.

அறிக்கையை கிழித்து திமுக வெளிநடப்பு

முன்னதாக எஸ்.எம்.கிருஷ்ணா தனது அறிக்கையைப் படித்து விட்டு உட்கார்ந்தபோது திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து கிருஷ்ணாவின் உப்புச்சப்பில்லாத பதிலைக் கண்டித்து குரல் கொடுத்தனர். அவர்களை அமருமாறு துணைத் தலைவர் ரஹ்மான் கான் கோரினார். ஆனால் கிருஷ்ணாவின் பதில் குறித்து கடுமையாக விமர்சித்த திமுக உறுப்பினர்கள், அவரின் உரை நகலைக் கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர்.

அதிமுகவும் வெளிநடப்பு

அதேபோல அதிமுக உறுப்பினர்களும் எஸ்.எம்.கிருஷ்ணா பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
---http://tamil.oneindia.in/news/2012/03/14/india-dmk-slams-s-m-krishna-tores-his-speech-copy-in-rs-aid0091.html

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா!

டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசபாவை உலுக்கியது. இன்று காலை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையைப் படித்தார்.

அவரது அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகளை நீளமாக பட்டியலிட்டுப் பேசிய கிருஷ்ணா, தனது அறிக்கையின் இறுதியில், நாம் எந்த முடிவாக இருந்தாலும் அது இலங்கையுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார். தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.

கிருஷ்ணாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.

ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது என்றார் கிருஷ்ணா.

இது போக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் கிருஷ்ணா வாசித்தார். அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, ஆதரிக்குமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
------http://tamil.oneindia.in/news/2012/03/14/india-centre-spell-its-stand-on-us-backed-resolution-aid0091.html