மீண்டும் பழைய குப்பையா?
நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை அடிப்படையாகக் கொண்ட சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.
ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும் சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.
தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை (supliments) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத்தக்கதுமாகும்.
இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப் பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தனமாக கூசாது எழுதித் தொலைக்கின்றன.
12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும் ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும் கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள் என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல் வானியல் விடுக்கும் வினா இதுதான்:
கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது?
ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன என்றெல்லாம் மனிதர்களுக்குத் தவறான முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக் கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில் நிறுத்தவேண்டாமா?
சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக் கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?
மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல் இது வேறு என்னவாம்?
விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும். இது ஓர் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது தவறல்ல!
குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின், அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.
தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக் குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
-------------------------" விடுதலை” தலையங்கம் 12-4-2010
16 comments:
சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்றால் “மானமிகு தலைவர் கலைஞர்” பெயரில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஊருக்குதான் உபதேசம். மீசைக்கும் ஆசை கூலுக்கும் ஆசை.
விடுதலையில் எழுதுகிறார்கள்.தி.க சார்பில் வீரமணி ஏன் வழக்குத் தொடரக்கூடாது.சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவது சட்ட விரோதம் என்று நீதிமன்றத்தில் வாதிடுவாரா.வழக்குத் தொடருங்கள் பார்க்கலாம்.நீதிமன்றத்தில் உங்களது முட்டாள்த்தனமான வாதம் தோற்றுவிடும் என்ற அச்சமா.
புகைப் பிடிப்பது சட்டப்படி தப்பு என்ற ஆணை உள்ளது. ஆனாலும் ஒரு சிலர் புகைப்பிடிக்கிறார்கள். அது போல் தான் நண்பர்களே இந்த சித்திரை முதல் நாள் கொண்டாட்டமும்.
ஹெல்மெட் அணிவது நமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அது போல் நமது பண்பாட்டைக் காப்பாற்றிகொள்ள ஆரியப் பண்பாடான சித்திரை முதல் நாளை கொண்டாடாமல் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்.
imsai.
2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்
2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்
//சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று//
நீங்கள் சொல்வது சரி என்றால் ஏற்கனேவே இருந்த தமிழ் மாதத்தின் பெயரையும் நீக்கி விடலாமே . அதை யார் ஏற்படுத்தியது . இது தமிழார் மறு மலர்ச்சி கிடையாது . திருவள்ளுவர் தினம் என்று சொல்லப்படும் நாளில திருவள்ளுவர் பிறந்தார்.
///கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது?///
ஆம் அறிவியல் இதை NORTH ,SOUTH LUNAR NODES என்று அழைக்கிறது.இதுவும் சூரிய சந்திர கிரகனங்களுக்கு காரணமாகிறது.(மேலும் கிரகம் வேறு,PLANET என்பது வேறு.)கீழே உள்ள சுட்டியைப் படியுங்கள் புரியும்.
http://en.wikipedia.org/wiki/Lunar_node
http://www.astrologyclub.org/articles/nodes/nodes.htm
//சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்றால் “மானமிகு தலைவர் கலைஞர்” பெயரில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஊருக்குதான் உபதேசம். மீசைக்கும் ஆசை கூலுக்கும் ஆசை.//
தொலைக்காட்சி வர்த்தகம் சார்ந்தது. சித்திரையையும் விரும்புகிறவர்களும் பார்க்கிறார்கள், தை முதல் நாளை கொண்டாடுபவர்களும் பார்க்கிறார்கள் அனைவருக்கும் அன்று விடுமுறை. இதை அனைத்து தொலைக்காட்சியினரும் ஒளிபரப்ப மாட்டேன் என்று முடிவெடுத்தால் மட்டுமே நிறுத்த முடியும். இல்லாவாட்டால் இந்த தொலைக்காட்சிக்கான வர்த்தகம் நின்றுவிடும். அப்புறம் அதை நடத்தியும் பிரயோஜனமும் இல்லை. அங்கு பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாது. ஆனால் புத்தாண்டு என்று அறிவிப்பதில்லை வருகின்ற 14ஆம் தேதி விடுமுறைத் தினத்தன்று என்றே ஒளிபரப்பப்படுகிறது. படிப்படியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. தொலைக்காட்சி பார்த்துவிட்டுத்தானே இந்த கருத்தும் தெரிவிக்கப்படுகிறதே இதனால் தாங்களே புறக்கணிக்கவில்லையே. இதில் ஒளிபரப்பவில்லை என்றால் அனைவரும் வேறு தொலைக்காட்சியை நாடிச்சென்று விடுவார்கள் என்ற வணிக பயத்தினால் இது மாதிரி யுக்தியை கையாளலாம்.
//நீதிமன்றத்தில் முட்டாள்தனமான வாதம் தோற்றுவிடும்//
முட்டாள்தனமான சித்திரை கொண்டாட்டத்தை ஆதரிக்கும் வாதம் தோற்கின்றதோ இல்லையோ?
தை முதல் நாள் கொண்டாடக்கூடாது என்ற வாதமும் நீதிமன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே தோற்றுவிடும். வேண்டுமானல் வழக்கு போடலாம்.
சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வேண்டும் என்று யார் போராடினார்கள்? இந்த அபத்தம் அடுத்த ஆட்சியில் மாற்றப்பட்டால்? ஏன் தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும்? சென்னை பின்னாளில் உருவானது தானே? வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரை/திருச்சி/தஞ்சை அல்லது ஈரோடு நகர்களில் ஏதோவொன்றுக்கு மாற்றி விடலாமே?
புத்தாண்டை தை முதல் நாள் கொண்டாட விரும்புவர்கள் அன்று புத்தாண்டை கொண்டாட்டும்.சித்திரை முதல் நாள் கொண்டாட விரும்புவர்கள் அன்று புத்தாண்டை கொண்டாடட்டும்.
’புகைப் பிடிப்பது சட்டப்படி தப்பு என்ற ஆணை உள்ளது. ஆனாலும் ஒரு சிலர் புகைப்பிடிக்கிறார்கள். அது போல் தான் நண்பர்களே இந்த சித்திரை முதல் நாள் கொண்டாட்டமும்’
சித்திரை முதல் நாள் கொண்டாடுவது குற்றம் என்று எழுதியவருக்கு தைரியமிருந்தால் வழக்கு தொடரட்டும்.பொது இடத்தில் புகைபிடிப்பது குற்றம்,அதை தண்டிக்க சட்டம் உண்டு.சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை எந்த சட்டம் குற்றம் என்று சொல்லி, தண்டனை இது என்று குறிப்பிடுகிறது. விளக்குவீர்களா.இந்திய அரசியல் சட்டம்தான் இந்தியாவில் செல்லுபடியாகும்.வீரமணி & கோவின் பெரியாரிய புரட்டல்கள் அல்ல. அரசியல் சட்டம் தந்த மத உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் எங்களுக்கு உண்டு. அதை நீக்க உங்களாலும் முடியாது,
வீரமணியாலும் முடியாது.
மக்கள் ஆதரவில்லாத, தான் தோன்றித்தனமான உத்தரவு ஒரு நல்ல கேலிக் கூத்து !!
//சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வேண்டும் என்று யார் போராடினார்கள்? //
போராடுவதற்குத்தான் நாங்க இருக்கிறோமே...நீங்க போராடலே என்றால் யாருமே போராட மாட்டாங்களா...?
//சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை எந்த சட்டம் குற்றம் என்று சொல்லி, தண்டனை இது என்று குறிப்பிடுகிறது. //
தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாட சட்டமும் இருக்கிறது...ஆதரவும் இருக்கிறது...அரசு விடுமுறையும் இருக்கிறது. (அனைத்து அலுவலகங்களுக்கும்)...இதைவிட என்ன வேண்டும். எங்களுக்கு அது தான் வேண்டும். விவசாயிக்கு உழைப்பவனுக்கு அது தானே வேண்டும்.
நாங்க கொண்டாடுவதை யாருமே தடுக்க முடியாதே!
//Blogger சங்குமணி said...
மக்கள் ஆதரவில்லாத, தான் தோன்றித்தனமான உத்தரவு ஒரு நல்ல கேலிக் கூத்து !!
April 15, 2010 1:25 PM//
யார் இணையத்தில் இருக்கும் மேதாவித் தன மக்களா..? என்ன இங்கிருந்துகொண்டே மக்கள் ஆதரவையெல்லாம் அவ்வளவு தீர்க்கமாக கணிக்கிறீர்களே...அவ்வளவு அப்பாடக்கரா...உளவுத்துறை கெட்டது போங்கோ...
//Blogger Anantha said...
2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்
April 13, 2010 6:24 AM//
இதான் ஆரியம்...பார்ப்பனம்..அப்புறம் என்ன பிரிக்கறாங்கோ...பிரிக்கறாங்கோ...எப்படி எதை சொல்லிட்டு... எதை முடிச்சு போடற பார்... இதற்கு பெயர் தான் ஆரியம். கடைசியில கிடைச்சது...என்னது வெறும் தோளில போடற துண்டு தான்....கோவணம், ஜட்டி, அன்ட..டாராயர் தெரிஞ்சிருந்தா அதையும் வைச்சிருப்பாங்க...? ஹி ஹி என்ன ஆளுங்கப்பா....
Post a Comment