Search This Blog

3.4.10

பெரியார் பாடத்தை வைக்கக்கூடாதா?



பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சென்னை பெரியார் திடலில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தில் வருணாசிரம தர்மத்தை வேரறுத்த தந்தை பெரியார் பற்றிய பாடம் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா இந்துக்கள் நிறைந்த நாடு. அவர்கள்தான் பெரும்பான்மையான மக்கள். வருணாசிரமத்தை வேரறுக்க பாடுபட்ட பெரியார் என்று கூறியிருப்பதன் மூலம் இந்து மதத்தை வேரறுக்கப் பெரியார் பாடுபட்டார் என்பதை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்பது நற் பண்புகளையும், நல்ல சிந்தனைகளையும், நாட்டுப் பற்றையும் மாணவர்களிடையே வளர்ப்பதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தை வெறுப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்கள் மத்தியில் விஷக் கருத்துகளைப் பரப்ப இந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் பாடத் திட்டம் அமலுக்கு வருவதைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும்.

-என்று பா.ஜ.க. மாநிலத் தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்து மதம் என்பது வருண தர்மத்தைக் காப்பாற்றக் கூடியதுதான். எனவே வருணாசிரமம் என்னும் ஜாதி முறையில் கை வைக்கக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக ஒப்புக் கொள்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் தப்பித் தவறி பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் உள்ளவர்கள் பா.ஜ.க. தலைவரின் இந்த அறிக்கையைப் படித்த பிறகாவது அந்த அமைப்புகளில் இன்னும் தொடருவது அவமானகரமானது; பிற்போக்குத்தனமானது என்பதை உணரவேண்டும். உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

பிறப்பின் அடிப்படையில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பிரம்மாவின் நெற்றியில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி. நீ தீண்டத்தகாதவன், அருகில் வராதே தூரப் போ என்று கூறும் ஒரு மதம் தான் இந்து மதம் என்றும். அதனைக் காப்பாற்றத்தான் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவாரங்கள் இருக்கின்றன என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகிவிட்டது.

இந்த உண்மையை ஒப்புக் கொண்டதற்காக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை பாராட்டலாமோ என்று கூடத் தோன்றுகிறது.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கு உரியவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வருணாசிரமத்தை வேரறுக்கும் கொள்கைக்கு கை தூக்குவார்களே தவிர, ஆதரவு காட்டுவார்களே தவிர, ஜாதிக்கு ஜமக்காளம் விரிக்கும் வேலையில் இறங்கமாட்டார்கள். ஜாதி அமைப்புகளை புறங்கால் பிடரியில் பட விரட்டியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமத்துவத்தை, சகோதரத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பிரித்துப் பேதப்படுத்தி, வெறுப்பை விளைவிக்கும் விஷவித்துக்களை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கக் கூடாது.

இதன் மூலம்தான் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளைத் தூண்ட முடியும். மாணவர்களுக்குத் தேவை சகோதரத்துவமே தவிர, சண்டையிடத் தூண்டும் ஜாதி சழக்குகள் அல்ல.

வருணாசிரமம் என்பது அன்று (1952 இல்) ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஆகும். அதுதான் மீண்டும் வரவேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் விரும்புகிறாரா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் இதற்கு ஆசைப்படலாமா? அவர் என்ன செய்வார்? அவர் சேர்ந்த கட்சி அப்படி! அதற்காகப் பரிதாபப் படவேண்டியதுதான்.

சமச்சீர் கல்வி என்பதிலேயே சமத்துவ மணம் இருக்கிறது. அதனை எதிர்த்தால் அதனை ஒட்டு மொத்த தமிழர்கள் முறியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.


-------------------- “விடுதலை” தலையங்கம் 3-4-2010

2 comments:

Unknown said...

நண்பரே உண்மையான உணர்வான மனிதனாக நீர் இருந்தால் உன்னால் (இறைவனை தெரியாத உனக்கு எதற்கு மரியாதை) கிருத்துவ முஸ்லிம் மத தவறுகளை சொல்ல mudiuma நிறை குறைகள் மதத்தில் இல்லை மனிதனின் பழக்கவழக்கத்தில் அவ்வாறு குறை சொல்ல முடியாத மனிதனா நீ... நீயும் காம உணர்வும் கருத்த மனமும் கொண்ட சாதாரண அல்ல அல்ல கொடூர எண்ணம் கொண்டவன் உன்னை நீ முதலில் திருத்து உன்னில் உள்ள குறை உன் ஒவ்வொரு பதிவிலும் வெளிவருகிறது ஆண்மை இல்லாதவன் எப்படி காமம் என்பது பெரும் கொடுஞ்செயல் என பழிப்பானோ அது போலத்தான் எதையோ இழந்தவன் போல் உள்ளது உனது படைப்பு கண்டிப்பாக நீ என் கருத்துகளை இங்கு வெளியுடுவாய் என்ற நம்பிக்கை இல்லை ஆனாலும் நீயாவது படிப்பாய் என்கின்ற எண்ணத்தில்தான் எழுதுகிறேன் நீ திருந்து உன்னிடம் நிறைய குறை இருக்கிறது தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அதை களைய செய் நீ ஹிந்து மதத்தை குறை கூறுவதால் அது ஒன்றும் உலகை விட்டு போய்விட போவதில்லை வீணாக எத்தனையோ நல உள்ளங்களின் மத நம்பிக்கையில் உணர்வில் விஷம் கலக்க நினைக்காதே உன் அழிவை நீயாக தேடாதே ......

தமிழ் ஓவியா said...

//கிருத்துவ முஸ்லிம் மத தவறுகளை சொல்ல mudiuma //

தமிழ் ஓவியா வலைப்பூவில் இது குறித்தெல்லாம் தெளிவாக பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

//நிறை குறைகள் மதத்தில் இல்லை//

அப்படியா

ஒருவன் கர்ப்பகிரகத்துக்குள் மணி ஆட்டுவதும், இன்னொருவன் கோவிலுக்குள்ளேயே போக முடியாத சூழல் இருக்கிறதே. பல ஆண்டுகாலப் பிரச்சினையை கடவுளும் சரி செய்ய முடியவில்லை, மதமும் சரி செய்ய முடியவில்லை ஏன்?

//உன்னிடம் நிறைய குறை இருக்கிறது தாழ்வு மனப்பான்மை இருக்கிறது//

எனக்கு மேல் எவனும் இல்லை.எனக்கு கீழ் எவனும் இல்லை என்ற புரிதல் எனக்கு உண்டு


செத்துப்போன காஞ்சி சங்கராச்சாரி முதல் கடைசி சவுண்டிப் பார்ப்பான் வரை சொல்லும் ஹிந்து என்றால் என்ன? யார்? என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக அறிந்து வைத்துள்ளேன் subash


//மத நம்பிக்கையில் உணர்வில் விஷம் கலக்க நினைக்காதே உன் அழிவை நீயாக தேடாதே ......//

உன் நம்பிக்கையை உன் அளவில் வைத்திருந்தால் யாரும் குறை சொல்ல முடியாது. உன் நம்பிக்கை என்று தெருவுக்கு வரும் போது குறை மட்டுமல்ல தேவைப்படின் அதைப்போக்க வேண்டியது நல்ல மனிதனின் கடமை.

அந்த வகையில் எங்களது பிரச்சாரப் பணி தொடரும்.

சாபமோ மிரட்டலோ எங்களிடம் எடுபடாது. எதையும் எங்கேயும் எப்போதும் சந்திக்கத் தயார் subash