Search This Blog

20.4.10

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்த்த வைகுண்ட சாமிகள்


வைகுண்ட சாமிகள்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெருமகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப்பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?

---------- மயிலாடன் அவர்கள் 20-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Vipasana said...

சென்னை மணலியில் மட்டுமல்ல ... திருச்செந்தூர் கடற்கரையோர கட்டிடம் ஒன்றிலும் (கோவில்னு சொல்லணுமோ ?) முத்து குட்டி கடவுளாகவே வழிபடப் படுகிறார் ...

சித்தார்த்தனுக்கு அன்று நிகழ்ந்தது முத்து குட்டிக்கு இன்று நிகழ்ந்திருக்கிறது ...

எந்த ஆன்மீக சீர்திருத்தவாதிகளின் சீர்திருத்தங்களும் சில பத்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை ...

ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய நினைப்பது பேதைமை என்பதை தான் வரலாறு நமக்கு தொடர்ந்து அறிவுறித்தியவாறே இருக்கிறது ...

மானுடத்திற்கு தேவைப்படுவது ஆன்மீக சீர்திருத்தங்களோ களைஎடுப்புகளோ அல்ல ; உடனடி தேவை ஆன்மீக துடைத்தொழிப்பே !

uma said...

இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."

இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .

இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .

தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .

உமா.கா ,திருவனந்தபுரம்