Search This Blog

2.4.10

காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் சம்பாதித்த 80 லட்சம்

கடவுள் மறுப்பை முறையாக செய்த ஒரே நபர்
காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் தான்...!

வேதாரண்யம் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் விரிவான விளக்கவுரை

கடவுள் மறுப்பை முறையாக செய்த ஒரே ஒரு நபர் காஞ்சிபுரம் கோவில் தேவநாதன் அர்ச்சகர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு ரையாற்றினார்.

வேதாரண்யத்தில் 14.3.2010 அன்று நடைபெற்ற அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் கொள்கையைக் கேட்க காதை மூடியவர்கள்

ஒரு காலத்திலே பெரியார் கொள்கையைக் கேட்பதற்கே காதை மூடியவர்கள், கதவை சாத்தியவர்கள். இப்படிப்பட்ட நிலை எல்லாம் இன்றைக்கு மாறியிருக்கின்றதென்றால் என்ன காரணம் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் சிலையாக நிற்கிறார். அவருடைய சீலங்கள் வெற்றி பெறுகிறது என்பதற்கு வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை.

அண்மையிலே ஆனந்தா படுகின்ற பாடு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். நாங்கள் ஆயிரம் கடவுள் மறுப்புக் கூட்டங்களை நடத்தினாலும், நாங்கள் அய்ந்தாயிரம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை நடத்தினாலும், அவர் செய்திருக்கிற தொண்டின் மூலமாக கடவுள் இல்லை என்பதைக் காட்டியிருக்கின்றார். (கைதட்டல்).

நம்முடைய தொலைக்காட்சிகள் பல நேரங்களில் இப்படிப்பட்ட நல்ல செயல்களுக்கும் பயன்படு கின்றன என்பதற்கு அடையாளமாகத்தான் அவருடைய அரிய காட்சிகள் எல்லாம் படத்திலே வந்தன.

ஆன்மிகப் போர்வைக்குள் ஓநாய்!

இந்த நிலை வெளியே தெரிந்தவுடனே அவருடைய சீடர்கள் எல்லாம் ஒரே நாளில் மாறினார்கள் என்ற செய்திகளெல்லாம் வந்ததல்லவா? அப்பொழுதுதான் பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும், என்று தந்தை பெரியார் சொன்னாரே அந்தக் கருத்து தெளிவாக ஆனது.

பல பேருக்கு அப்பொழுதான் தெரிந்தது. ஆன்மிகப் போர்வைக்குள்ளே ஓநாய் ஒளிந்திருக்கிறது என்று. அது தியானம் என்ற பெயராலே, யோகா என்ற பெயராலே நம்முடைய இளைஞர்களை ஈர்க்கிறது. நாமும்கூட மூச்சுப் பயிற்சி நல்லதுதானே என்று நினைக்கின்றோம். உள்ளபடியே மூச்சுப்பயிற்சி யோகா என்று சொல்லக்கூடிய உடற்பயிற்சி இவைகள் எல்லாம் ஆரம்பத்திலே மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலே திராவிடர்களுடைய கலைகளாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பதற்கு சிற்பங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

ஆதாரத்தோடு சொல்லுகின்றோம். அதையும் வெளிநாட்டுக்காரர்களே ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது நேரடியாக சாமியார்கள் என்றால் யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. காரணம் சங்கராச்சாரியார் பட்டபாடு. அவர் இன்னமும் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கின்ற நிலைமாறி இன்றைக்கு என்ன சூழ்நிலை?

அஞ்ஞானம் என்பது போய் விஞ்ஞானம் என்பது வளர்ந்தது. அஞ்ஞானம் என்பது பொய் ஞானம் சாமியார்களுடைய அசிங்க செயல்கள், ஊழல்கள் அரங்கேற்றப்பட்டு அதை வெளி உலகத்திற்குக் காட்டக்கூடிய அளவுக்கு வந்தவுடனே ஒவ்வொரு உண்மையாக விளங்குகிறது.

கடவுள் மறுப்பை முறையாக செய்த தேவநாதன்!

கடவுள் மறுப்பு வாசகத்தை சிலையிலே பொறித்திருக்கிறார்களே என்று நினைக்கலாம். வேறு ஒன்றும் வேண்டாம். இந்த சிலையில் பொறித்ததை விட கடவுள் மறுப்பை ரொம்ப முறையாக செய்து கொண்டிருந்தவர் யார் என்றால் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன். அவர் கருவறைக்குள் செய்திட்ட காட்சிகள் சொல்லி முடியாது.

நம்மவர்கள் கோவிலுக்குள் போனால் தீட்டாகிவிட்டது

நம்மவர்கள் கோவிலுக்குள் போனால் தீட்டாகிவிட்டது என்று சொல்லுகிறார்கள் அர்ச்சகர்கள். இன்னமும் அதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். சட்டம் நிறைவேறியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்திலே இன்னமும் வழக்கு இருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடாது என்று. சிலை வடிப்பது நம்மாள், கோயிலைக் கட்டியவன் நம்மாள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்?

இதே தஞ்சை பெரிய கோவிலைப் போய் பார்க்கிறார்கள். பெரிய கோவில், சிற்பக் கலை, கட்டடக் கலை என்று பெருமைபடக்கூடிய அந்த கோவிலைக் கட்டியவன் ராஜராஜன்தானே!

ராஜராஜன் பரம்பரை உள்ளே போக முடியவில்லை!

அந்த ராஜராஜன் பரம்பரை உள்ளே போக முடிகிறதா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல அழகாக ஒரு வேலையை கலைஞர் செய்தார். அவர் எப்பொழுதும் கெட்டிக்காரத்தனமாக செய்வார்.

ராஜராஜனுடைய சிலையை வெளியிலே வைத்தார். ஏனென்றால் உள்ளே போவதற்கு அனுமதி இல்லை. இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு கிடையாது.

கோவிலைக் கட்டியவன் ராஜராஜனாக இருந்தாலும் உள்ளே போக முடியாது. கோவிலைக் கட்டினாலும் வெளியேதான் நிற்க முடியும்.

ராஜராஜனுக்கே இந்தக் கதி என்றால் சாதாரண ஆளுக்கு என்ன கதி என்பதை எண்ணிப் பாருங்கள். தஞ்சை பெரிய கோவிலுக்குள் இன்னமும் நம்மவர்கள் போக முடியாது.

ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆகலாம். ஆதிதிராவிடர் அய்க்கோர்ட் ஜட்ஜாகலாம். ஆனால் அதே ஆதி திராவிடர் தோழன் யார் அந்த கல்லை உடைத்தானோ யார் அந்த கல்லை சுமந்தானோ, யார் அந்த சிலையை வடித்தானோ அந்த சகோதரன் உள்ளே போகக்கூடாது. பக்திக்காக என்று சொல்லி நந்தனார் கதையை இன்னமும் நடத்திக் கொண்டி ருக்கின்றான்.

பூநூல் போட்டாலும் நந்தனுக்கு உள்ளே இடமில்லை

நந்தன் உள்ளே போய் நெருப்பிலே இறங்கி மூழ்கிவிட்டு உயர்ஜாதியாகி பிறகு பூநூல் போட்டு உள்ளே போனபொழுது நந்தா உள்ளே வா என்று நடராஜ பெருமாள் அழைக்கவில்லை. மாறாக நந்தியே விலகியிரு என்று கதை இருக்கிறதே தவிர, நடராஜ பெருமான் உள்ளே அழைக்கவில்லையென்று சொன்னால் அதனுடைய தத்துவம் என்ன? தீண்டாமையை என்றென்றைக்கும் நிலைநாட்டுவது என்பதுதானே அர்த்தம்? கலைஞர் ஆட்சியில் நல்ல சூழல்

இன்றைக்கு அதை அப்படியே மாற்றிக்காட்டக் கூடிய ஒரு நல்ல சூழல் கலைஞர் ஆட்சியிலே வந்து கொண்டிருக்கிறது. எனவேதான் தந்தை பெரியாருடைய கொள்கைகள் வெற்றி பெற்று வருகின்றன. காஞ்சிபுரம் கோவிலை நிருவாகம் செய்யக் கூடிய சில நண்பர்கள் சொன்னார்கள். அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். எங்களை மாதிரி நாத்திகர்கள் அல்லர். கடவுள் மறுப்பாளர்கள் அல்லர்.

அவர் சொன்னார் அய்யா, நீங்களெல்லாம் சொல்லுவது எவ்வளவு நியாயம் என்பது தெரிய வரும். சம்பளம் கொடுப்பதே நான் தான். அந்த அர்ச்சகர் இந்த வேலை பண்ணிவிட்டான் பாருங்கள். எங்களுக்குத் தெரியாதுங்க. இந்த மாதிரி முழு செய்தி எல்லாம் உங்களுக்குத்தான் தெரியும் என்று சொன்னோம்.

தேவநாதன் சம்பாதித்தது ரூ.80 லட்சம்

அவர் சொன்னார் அந்த அர்ச்சகர் இந்த வேலை செய்ததோடு மட்டுமல்ல, பணம் ரூ.80 லட்சம் சம்பாதித்திருக்கிறான் என்பதையும் சொன்னார். ஏங்க 80 லட்சம் ரூபாய் எப்படிங்க சம்பாதிக்க முடியும்? என்று கேட்டோம்.

அசிங்கமாக நடப்பதற்கு கடவுள் சிலைக்குப் பின்னாலே பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று சொன்னாலும் கூட, இந்தக் காட்சிகளை எல்லாம் அந்த அர்ச்சகர் வீடியோ எடுத்து அதைத்தான் வளைகுடா நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் அனுப்பியிருக்கிறான். அந்த படங்களை எல்லாம் அவன் பணமாக்கி விட்டான் என்று சொன்னார்.

அவனுக்குப் பணம்-நமக்குப் பாடம்

அவன் பணமாக்கினான். நமக்கெல்லாம் அதுதான் பாடம். நமக்கெல்லாம் நல்ல பாடத்தை சொல்லிக்கொடுத்த தலைவர்தான் தந்தை பெரியார், அவர்தான் சிலையாக இங்கே நிற்கின்றார்.

இரண்டு சங்கதிகளை நான் உங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். இன்று காலையில் வந்த ஒரு செய்தி. நித்யானந்தா ஒரு சாதாரண ஆள், திருவண்ணாமலையில் இருக்கக் கூடிய ஆள். அவன் பாலிடெக்னிக் படித்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

கருப்புச்சட்டைக்கும், கதர்சட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்னார். ஒன்றும் இல்லை. காவிச்சாயத்தை சட்டையில் ஏற்றிக்கொண்டால் வருமானமே தனி. வேறொன்றுமே தேவையில்லை.

காவி அணிந்தால் வருமானமே தனி

இன்னும் கேட்டால் முழுக்காவி போட்டால் அதற்கு ஒரு வருமானம், பாதிகாவி போட்டு உடம்பைக் காட்டினால் அதற்கு ஒரு வருமானம். திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ராஜசேகரன் என்று பெயர். நித்யானந்தா என்று தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டான்.

வேட்டி இல்லாமல் கோவணம் கட்டிக்கொண்டு வந்தால் அவர் ஒரு வட நாட்டுச் சாமியார். கும்பமேளாவிலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். அவர்களிடமும் நம்மாள் பிள்ளை வரத்திற்கு அனுப்புகிறார்கள்.

இது எவ்வளவு பெரிய மூடத்தனத்தின் முடைநாற்றம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். இன்னமும் இந்த இயக்கம் தேவைப்படுகிறது. இன்னமும் பகுத்தறிவு கொள்கைப் பிரச்சாரம் தேவைப்படுகிறது என்பதுதான் மிக முக்கியம்.

அதெல்லாம் கிராஃபிக்ஸ்ங்க....!

நம்மாள்களிடம் மறுத்தால் இப்படியும் பேசுவதற்கு சில பேர் இருப்பார்கள். அதெல்லாம் கிராஃபிக்ஸ்ங்க. அதெல்லாம் உண்மை இல்லீங்க. அவர் அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால் ஆதாரங்கள் மறுக்க முடியாத அளவுக்கு வந்து சேர்ந்தன.

இன்று காலையில் வந்த பத்திரிகையைப் படித்தேன். சாமியார் நித்யானந்தாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். என்னுடைய பக்தி என்று ஆரம்பிக்கின்றார். அந்த நடிகையின் பெயரைச் சொன்னால் அசிங்கம். எங்கள் தகுதிக்கு குறைச்சல், விளக்கி சொல்வதற்கே சங்கடம்.

ஆபரேசன் தியேட்டருக்குள் நுழைந்தவருக்கு எப்படி அசிங்கம் கிடையாதோ, அதே மாதிரி நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரபலமான நடிகை ஒரு பக்தை. நாங்கள் சினிமாவுக்குச் செல்வதில்லை. அதனால் எந்த நடிகையும் எங்களுக்குத் தெரியாது.

என் பக்தை எனக்கு சேவை செய்தார்

அந்த நடிகையின் பெயரை விட்டு விட்டுப் படிக்கின்றேன். எனது பக்தை எனக்கு சேவை செய்தார். என்ன அழகான சேவை பார்த்தீர்களா? ரொம்ப பேர் சேவை செய்திருக்கிறார்கள். சேவை என்கிற வார்த்தையையே இவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டார்கள்.

அதுதான் என் உருவம். நான் மறுக்கவில்லை. என்னுடன்தான் அந்த பக்தை இருந்தார். அடிக்கடி இந்த மாதிரி சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல, நித்யானந்தா பேட்டி கொடுத் திருக்கிறார். நான் கிருஷ்ணன் அவதாரம். அவர்கள் எல்லாம் கோபிகாள், என்று சொல்லுகின்றார்.

இதற்கப்புறமும் நம்மாள் கடவுளைக் கும்பிட்டால் நம்மை எவ்வளவு பெரிய பரிசோனைக்கு ஆளாக்கிக்கொள்ள வேண்டியவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னொரு செய்தியைப் படித்தேன். ஆசிரம சங்கடங்களைப் படிக்கின்றபொழுது இந்த சமுதாயம் எப்படியிருக்கிறது. பகுத்தறிவுக் கொள்கை, தந்தை பெரியார் அவர்களுடைய மனிதநேய சிந்தனை எப்படிப்பயன்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாக இந்த செய்தியைப் பாருங்கள்.

நிர்வாணக் கலை

நிர்வாணக் கலை என்ற தலைப்பைப் பார்த்தவுடனே இது கடவுளைப் பற்றியதா? எதைப் பற்றியது என்று பார்த்தேன். இன்றைக்கு வந்திருக்கக் கூடிய ஏட்டில் ஒரு கட்டுரை. மும்பையில் வசிக்கக் கூடிய ஒரு பெண். அவருடைய பெயரைப் போட்டிருக்கின்றார்கள்.

தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக நூறு ரூபாய்க்காக, தன்னுடைய வெற்றுடம்பை வெளிக்காட்டும் பெண்மணி; தாய்மார்கள் மன்னிக்க வேண்டும். சாதாரணமாக எந்தப் பெண்ணும் இதற்குத் தயாராக மாட்டார்கள்.

ஆனால் மரத்துப் போன உணர்வு ஏற்பட்டது போல வந்து தினமும் நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கான நிலை வறுமை, வேறு வழி இல்லை. நூறு ரூபாய் சம்பாதிப்பதற்காக காலம் காலமாக எதை அவர்கள் இழக்க மாட்டார்களோ, அதையே இழந்தார்கள்.

வெட்கம், கூச்சம், நாணம் இவைகளைப் பற்றியே கவலைப்படவில்லை.

----------------தொடரும்....”விடுதலை” 1-4-2010

2 comments:

பனித்துளி சங்கர் said...

உண்மைதான் இன்னும் இந்த நிலை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது .
பகிர்வுக்கு நன்றி !

jebam said...

nallathu