Search This Blog

11.4.10

பார்ப்பனக் குசும்புதான் குலக்கல்வித் திட்டம்

குலக்கல்வித் திட்டத்துக்கு இன்றும் ஆதரவா?


சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் ஒரு எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்கள் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் என்றார் தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் புகழப் பெற்ற டாக்டர் டி.எம். நாயர்.

11.4.1952 இல் கொல்லைப்புறம் வழியாக சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவசர அவசரமாக புதிய கல்வித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

புதிய கல்வித் திட்டம் என்பது வேறு ஒன்றும் அல்ல; இந்துமத வேத அமைப்பு முறையான வருணாசிரமக் கல்வித் திட்டம். அரை நேரம் படிக்க வேண்டும். அரை நேரம் அவரவர்கள் அப்பன் தொழிலைச் செய்யவேண்டும் என்பதுதான். உடல் முழுவதும் மூளை உடையவர் என்று பார்ப்பனர்களால் தூக்கி நிறுத்தப்படும் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) பார்ப்பனக் குசும்புதான் இந்தக் கல்வித்திட்டம் என்பது.

மக்களுக்குச் சரியாகப் புரியும் வண்ணம் அதனை அறிமுகப்படுத்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும். மக்கள் மொழியில் பேசிய பெரியாரால்தானே மக்கள் மத்தியில் வெற்றிக் கொடியைப் பறக்கவிட முடிந்தது!

குலக்கல்வித் திட்டம் என்று ஆச்சாரியாரின் புதிய கல்வித் திட்டத்திற்கு நாமகரணம் சூட்டினார் பகுத்தறிவுச் சூரியனான தந்தை பெரியார்.

கடும் போராட்டத்தை உருவாக்கினார். தமிழ் மண்ணே கந்தகப் பூமியாக, எரிமலைக் குழம்பாகக் கொதித்துக் கிளம்பியது.

குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணித்ததோடு அல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார்.

1938இல் சென்னை மாகாணத்தின் பிரதமராக இதே ஆச்சாரியார் வந்த-போதுகூட 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய மகானுபவர் அவர்.

எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே பார்ப்பனர்களின் மனுதர்மம்.

ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தால் அவாள் தர்மத்தை நிலை நிறுத்தத்தானே பாடுபடுவார்?

தருமம் கெட்டுப் போனால் அதர்மத் தினாலாவது அதைத் தடுக்க முயலுவது ஒரு தருமமாகும் என்று சென்னை கோகலே மண்டபத்தில் (15.2.1964) பேசியவராயிற்றே இதே ஆச்சாரியார் (சுதேசமித்திரன் 16.2.1964)

அவர் சொல்லும் அந்தத் தர்மம் என்பது குலதர்மம்தான் வேதத் தர்மம் தான் வருணாசிரமத் தர்மம் தான் என்பது பார்ப்பனர் தர்மம்பற்றி புரிந்து கொண்டவர்கள் தீர்க்கமாகவே அறிவார்கள்.

இரண்டு முறை (1938லும் 1952லும்) ஆச்சாரியார் முதல்வராக வந்த நிலையில் செய்தது பஞ்சமர், சூத்திரர் என்ற பார்ப்பனர் அல்லாதாரின் கல்விக் கண்களைக் குரூரமாகக் குத்தியதுதான். அவாளின் தர்மத்தைக் குலதர்மத்தைக் காப்பாற்றிட, அவர்கள் அதர்மத்தை, ஆயுதத்தை எடுத்துப் போராட முன் வருவார்களேயானால், அந்த மனுதர்மத்தை ஒழித்துக் கட்ட மனிதத் தர்மத்தை நிலை நாட்ட நாம் ஆயுதம் தாங்கினால் என்ன குற்றம்?

தந்தை பெரியார் ஆணையிட்டார் கருஞ்சட்டைத் தோழர்களே, தயாராக இருங்கள்! தயாராக இருங்கள்!!

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்க மறுத்தால் நாள் குறிப்பிடுகிறேன்! பெட்ரோல் தீப்பந்தத்தோடு தயாராக இருங்கள்; தயாராக இருங்கள். நாள் குறிப்பிடுகிறேன். அப்பொழுது அக்ரகாரத்துக்குத் தீ வையுங்கள்! என்று அபாய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்பார் தந்தை பெரியார்.If you Lick him he will Kick you; If you Kick him, he will lick you என்றார் டாக்டர் டி.எம். நாயர்.

கடைசியில் ஆம், அதுதான் நடந்தது. எனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஆச்சாரியார் முதல் அமைச்சர் நாற்காலியிலிருந்து ஓட்டம் பிடித்தார்.

இந்த உண்மை இந்த நாட்டில் உள்ள 70 வயது ஆனவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். மற்றபடி தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தவர்களுக்கும், பட்டவர்த்தனமாகவே புரியும்.

ஆனால் 58 ஆண்டுகளுக்குப் பிறகும் பார்ப்பனர்கள் ஆச்சாரியாரின்அந்தக் குலக்கல்விக்கு வக்காலத்து வாங்க முன் வருகிறார்கள்; ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியல்ல; தொழிற்கல்வி என்று துணிச்சலாக எழுதுகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி உணர்வும், இனவெறியும் எவ்வளவு டிகிரியில் இருக்கின்றன என்பதை எளிதில் உணரலாம்.

தினமலர் வாரமலரில் (4.4.2010) கேள்வி ஒன்றுக்குப் பதில் என்ன தெரியுமா?

கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட, ஏதாவது கைத் தொழில் கற்று தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு, ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத்தொழில் ஒன்றை கற்று தொழில் செய்யலாமே... தினமலர் அந்துமணியின் பதில் இதோ:

கற்று தருவதைவிட - என்பதைவிட, கற்றுத் தருவதுடன் நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம் (படித்து, கேட்டு தெரிந்து கொண்டதால், ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிட கட்சிகள், குய்யோமுறையோ எனக் கத்தி பைசா பெறாத காரணங்களையும், ஜாதிவெறியையும் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி, மாலையில் தொழிற்கல்வி) தொடர விடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்!

(தினமலர் வாரமலர், அந்துமணி பதில்கள் ஏப்ரல் 4, 2010 பக்கம் 10)

ஏதோ தினமலர் மட்டும்தான் இப்படி கூறுகிறது என்று கருத வேண்டாம்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 28 ஆண்டுகளுக்குப்பிறகு (1980 ஜூலை) கல்கி என்ன எழுதியது தெரியுமா?

ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும் ஆசிரியர் களையும் வைத்துக்கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது.

தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது என்றால் அவாளின் இரத்தத்தில் சூடேறிக் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வைத் தமிழர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

தினமலரும், கல்கியும் மட்டுமா? இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பெருந் தலைவர் யார் தெரியுமா? அவர்தான் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் துக்ளக்கில் (15.7.1988) எழுதுகிறார். ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் என்று எழுதினாரே!

யானை, கவட்டுத்தனமாக வஞ்சனையைத் தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் என்ற பேச்சு வழக்கில் உண்டு, அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை வஞ்சனையை அடக்கி வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் சதுராடும்போது அந்த நஞ்சைப் படமெடுத்துக் கொத்தித் தீர்ப்பார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதாதா?

ஆச்சாரியாரின் கல்வி புதிய கல்வித் திட்டத்திற்குக் குலக் கல்வித் திட்டம் என்று என்று பெயர் சூட்டி மக்கள் மத்தியிலே அடையாளம் காட்டியது தந்தை பெரியாராக இருக்கலாம்.

மக்கள் மத்தியில் போராட்ட உணர்வுத் தீயை மூண்டு எழச் செய்ததற்கு அவர் மூலவராக இருந்திருக்கலாம்.

அதே நேரத்தில் பார்ப்பனர்களின் இந்து ஏடும், மெயில் ஏடும்கூட ஆச்சாரியாரின் கல்வித் திட்டத்தைக் கண்டித்து எழுதிற்றே, அதற்கு என்ன உள்நோக்கத்தை கூறப் போகிறார்கள்?

பள்ளி வேளைக்குப் பிறகு எந்தப் பையனும் ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை என முன்கூறிய கூற்றை சி. ராஜகோபாலாச்சாரியார் மறுத்துவிட்டாலும், சர்க்கார் வெளியிட்டிருக்கும் புத்தகத்தில் அதே நிலைமை இருந்துவர அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 6 லிருந்து 11 வயதான பிள்ளைகள் ஒரு தொழிலைக் கற்க வேண்டும் அல்லது அத்தொழிலின் நடைமுறைகளை அவசியம் கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய கட்டாய முறை அவசியமற்றது. அதே சமயத்தில் தீமை பயக்கவல்லது.

மற்றவர்கள் செய்யும் வேலைகளைப் பார்ப்பதில்கூட இளஞ்சிறார்கள் களைப்படைந்து விடுகின்றனர். அவர்களுக்கு வேண்டிதெல்லாம் அதிக நேர விளையாட்டு. அந்த விளையாட்டுகளைச் சரியானபடி விளையாட ஏற்ற உதவி (மெயில் ஏடு -_ 29.7.1953).

மெயில் ஏடு திராவிடக் கட்சியின் தினசரியா?

மெயில் ஏடு மட்டுமல்ல இந்து ஏடும்கூட ஆச்சாரியாரின் கல்வித் திட்டத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறதே!

எந்த நாட்டிலும் இந்த விசித்திரக் கல்வி முறை கிடையாது. தொழிலாளர்கள் வசம் மூன்று மணி நேரம் ஒப்படைக்கப்படும் பிள்ளைகள் கட்டுக் கடங்காமல் பாழாகி விடுவார்கள்.

இதன்மூலம் கிராமாந்தர ஆரம்ப ஆசிரியர்கள் வாரத்தில் ஆறு நாள் தினம் ஆறு மணி நேரம் வேலை செய்ய வேண்டி ஏற்படும். இது தாங்க முடியாத சிரமம். கல்வி போதிப்பதைவிடத் தொல்லையான வேலையே கிடையாது.

ஆசிரியர்கள் மேற்பார்வையில்லாமல் படிக்கும் குழந்தைகள் சோம்பேறிகளாகி விடுவார்கள்.

முதலில் சில நாட்களுக்குத்தான் தொழில் துறைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு கோலி விளையாடப் போய் விடுவார்கள்.

இத்திட்டத்துக்குப் போதுமான தொழிலாளர்களே கிராமங்களில் கிடைக்க மாட்டார்கள்.

தொழிலாளிகளின் கருவிகளோடு விளையாடிக் கொண்டும், அவனது மூலப் பொருள்களை வீணாக்கிக்கொண்டும் இருப்பது சிறுவர்களுக்கு உற்சாகமாக இருக்கலாம்; ஆனால் கடுமையான உழைப்பின் மூலமாகத்தான் எந்தத் தொழிலையும் கற்றுக்கொள்ள முடியும். 5 முதல் 9 வயது வரையிலுள்ள இளஞ் சிறுவர்களைக் கடுமையாக உழைக்கச் செய்வது நீதியா?

கிராமப் பகுதிகளில் விவசாயத்தைத் தவிர, வேறு எந்தத் தொழிலிலும் அதிகமான பிள்ளைகள் பயிற்சி பெற முடியாது. விவசாயத் தொழிலோ 100 க்கு 90 பங்கு இயந்திரம் போல் மூளைக்கு வேலை தராமல் செய்யப்படும் தொழிலாகும்.

நல்ல படிப்பு, அதாவது கிராமத்துக்கு வெளியே உள்ள நவீன படிப்பு மீதுதான் எல்லாக் கிராமவாசிகளுக்கும் ஆசையிருக்கிறது. இத்திட்டம் உருப்படப் போவதில்லை (தி இந்து 4.7.1953) என்று இந்து தலையங்கம் தீட்டியுள்ளதே தினமலரும் கல்கியும், துக்ளக்கும் இந்துவின் இந்தத் தலையங்கத்திற்குப் பதிலடி கொடுக்க வைத்திருக்கும் சரக்குகள் என்ன?

ஏதோ பெரியாரும் திராவிடக் கட்சிகளும் பைசா பெறாத காரணங்களையும், ஜாதி வெறியையும் தூண்டிவிட்டு ராஜாஜியின் அருமையான தொழிற்கல்வித் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் செய்து விட்டனர் என்று அக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகும் வக்காலத்து வாங்கி எழுதுகிறார்களே, இந்து ஏடு என்ன திராவிடக் கட்சியின் ஏடா? பார்ப்பனக்கு எதிரான ஜாதி வெறியைத் தூண்டும் பத்திரிகையா? ஒன்று மட்டுமே விளங்குகிறது.

ஆச்சாரியார் இரண்டு முறை சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் இந்த இரண்டு முறையும்கூட வாய்தா காலம் (ஆட்சிக்காலம்) வரை ஆட்சி செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் திராவிடக் கட்சிகள், பெரியார்தானே என்ற கோபம், கொந்தளிக்கும் ஆத்திரம் அவர்களை இன்றுவரை உலுக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்துகொள்ள உறுதி கொள்ள மேலும் நமக்குக் கிடைக்கும் அத்தாட்சிகள் இவை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.


-------------------மின்சாரம் அவர்கள் 10-4-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

5 comments:

ttpian said...

anthumani maamaa velai paarkkalaam

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஜெகதீசன் said...

இதே போன்ற கருத்துடன், ராஜாஜி ஜால்ராவாக 2 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பதிவுக்கு நான் இட்ட பதில்:
http://jegadeesangurusamy.blogspot.com/2007/11/blog-post.html

மாடல மறையோன் said...

ராஜாஜி சொன்னா ரைட்டுதான்.

அல்லாரும் ஏசி ரூமிலே உக்காந்து வேளைபார்க்கனும்னூ ஆசைப்பட்டா, ஆரு ரோடு போட்றது, கக்கூஸ் கழுவுறது, வயக்காட்டு வேலைப்பார்க்கிரது, கூலி வேல பாக்கிறது?

என்ன நாஞ் சொலது?

வர்டா.

நம்பி said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

ராஜாஜி சொன்னா ரைட்டுதான்.

அல்லாரும் ஏசி ரூமிலே உக்காந்து வேளைபார்க்கனும்னூ ஆசைப்பட்டா, ஆரு ரோடு போட்றது, கக்கூஸ் கழுவுறது, வயக்காட்டு வேலைப்பார்க்கிரது, கூலி வேல பாக்கிறது?

என்ன நாஞ் சொலது?

வர்டா.
April 12, 2010 1:50 PM //

யாரு பார்ப்பனன் தான் இதையெல்லாம் செய்யப்போறான்...இதான் ரைட்டு...
எப்புடி...?