இது
நாம் கொடுத்த தலைப்பு அல்ல; தனியார் தொலைக்காட்சி ஒன்று கொடுத்த தலைப்பு!
இந்த அலசலில் பங்கேற்றவர்கள் நான்கு பேர்; மதிமாறன், பர்வீன் சுல்தானா,
லேனா தமிழ்வாணன், சீனிவாச சாஸ்திரி.
திருவாளர் சீனிவாச சாஸ்திரியைப் பொறுத்த
வரையில் தொடக்கம்முதல் கடைசிவரை புராணம், இதிகாசம், சாஸ்திரம், பகவான்
கிருஷ்ணன் என்ற கோட்டுக்குள்ளேயே நின்று குஸ்தி போட்டார்.
ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வியைத் தூக்கிப்
போட்டார். இப்படியெல்லாம் சொல்லுகிறீர்களே, நீங்கள் சொல்லுகிற இந்த
அய்தீகம், புராணம் இவற்றின் அடிப்படையில் இவற்றை நம்பும் அடிப்படையில்தான்
தீபாவளி கொண்டாடப்படு கிறதா? என்ற கேள்விக்கு சாஸ்திரிவாளிடம் ஒழுங்கான
பதில் இல்லை. (அவர் என்ன செய்வார்? பாவம் சட்டியிலிருந்தால் அல்லவா
கரண்டியில் வரும்).
நீங்கள் சொல்லும் புராணங்களையெல்லாம்,
நீங்கள் ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லுவதில்லை? என்ற கேள்விக்கு
சாஸ்திரிவாள் சொன்ன பதில்தான் சரியான ஜோக்!
நாங்கள் சொன்னா யார் கேட்பாள்? என்றாரே பார்க்கலாம்.
ஒரு துணியை வெட்டி தைத்து சட்டையாய்ப்
போடக்கூடாது என்று சாஸ்திரத்தில் இருக்கு... என்று சொன்னவர், நானேகூட அதைப்
பின்பற்றாமல், முழுக்கை சட்டையைப் போட்டுக்கிட்டுதான் வந்திருக்கேன் என்று
சேம் சைடு கோல் அடித்தார்.
மதிமாறன் அடிப்படையில் கை வைத்தார். இந்தப் பண்டிகைகள் எல்லாம் வருணாசிரமத்தின் அடிப்படையில் புனையப்பட்டவைதான்.
எந்த மக்கள் பெரும்பான்மையாக இருந்து
தீபாவளியைக் கொண்டாடுகிறார்களோ, அந்த மக்களையே இழிவுபடுத்துவதுதான் இந்தத்
தீபாவளி என்று ஒரு சுளுக்குக் குத்துப் போட்டார்.
இராவணனைக் கொன்றதற்கும், வாலியைக்
கொன்றதற்கும், சூர்ப்ப நகையை மானபங்கப்படுத் தியதற்கும் ஒரு லாஜிக்
இருக்கு. சம்புகனை ராமன் பச்சைப் படுகொலை செய்ததற்கு என்ன நியாயம் இருக்கு?
பச்சையான வருணாசிரமக் கண்ணோட்டம் தானே இந்தப் படுகொலையின் பின்னணி என்று
பிடரியில் ஒரு தாக்குத் தாக்கினார்.
கடன் வாங்கியாவது இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் அவலம் ஏழைத் தொழிலாளிக்கு.
ஒரு நாள் கூத்துக்காக ஓராண்டு உழைப்பு விரயம்! போனஸ் வேறு தீபாவளிக்குக் கிடைத்து விடுகிறது. டாஸ்மாக் அதனைக் கறந்துவிடப் போகிறது.
அறிவு ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் கேடான பண்டிகை தீபாவளி.
தொழிலாளர் தினமான மே தினத்துக்கு இந்தப் போனசைத் தரக்கூடாதா? தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலுக்கு அளிக்கக்கூடாதா?
கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பரங்கள்
நுகர் வோர் கலாச்சாரத்தை ஊக்குவித்து ஓட்டாண்டிகளின் கைகளில் இருக்கிற நாலு
காசையும் பிடுங்கிட ஒரு பண்டிகை தேவையா? என்று பொறுமையாக சரவெடி
வெடித்தார் (தீபாவளியல்லவா!).
இந்தப் பட்டாசுகளால் சுற்றுச்சூழல்
கேடாவதும், ஒரே நாளில் அளவுக்கு மீறிய பலகாரங்களைச் செய்து அந்த ஒரே நாளில்
தின்று தீர்த்து உடலைக் கெடுத்துக் கொள்ளவும்வேண்டுமா? என்ற அறிவார்ந்த
வேட்டுகளையும் போட்டார் தோழர் மதிமாறன்.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா, தீபாவளி
என்பது பிசினஸின் மய்யப் புள்ளியாகிவிட்டது. வீட்டில் இப்பொழுது யார்
பலகாரங்களைச் செய்கிறார்கள்? தீபாவளிக்குப் பல நாள்களுக்கு முன்பாகவே
ஸ்வீட் விளம்பரங்கள்! கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும்
இனிப்புகள்தான் நம் வீட்டில்.
பிள்ளைகள் மருதாணி போட்டுக் கொள்வார்களே,
அந்தக் கலாச்சாரம் எங்கே? எங்கே? வடநாட்டுக் காரன் வைத்திருக்கும்
கடைகளுக்குச் சென்று கடைகளில் டிராயிங் - இதுதான் நம் கலாச்சாரமா?
ஒரு நாள் கூத்துக்கு வீண் ஆரவாரமும், செலவும் தான் கண்ட பலன் என்று பொரிந்து தள்ளினார்.
கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன்,
சுற்றி வளைத்துப் பேசினார். என்னதான் என்றாலும், அது ஒரு விழாக்
கொண்டாட்டம், மகிழ்ச்சி, தீபாவளி என்றால் ஓர் எதிர்பார்ப்பு.
நான்கூட நினைத்தேன், நமது தமிழர் விழா
பொங்கல்தானே! தீபாவளியை இப்படி கொண்டாடு கிறார்களே என்று நினைப்பதுண்டு
என்று சொன்னார் (அந்த நினைப்பு சரியானதே, அதோடு நின்றிருந்தால் கொஞ்சம்
கைதட்டிப் பாராட்டலாம்) நாமெல்லாம் தேசியவாதிகள் அல்லவா? அதனால்தான் தேசிய
விழாவாக இருக்கும் தீபாவளியைக் கொண்டாடு கிறோம்.
பண்டிகை என்பது ஒரு மலர்மாலை போல. அதனைப் பூ வேறு, நார் வேறு என்று பிய்த்துப் போட்டுவிடலாமா? என்று தத்துவம் பேச முயன்றார்.
தேசியத் திருவிழா என்றாரே! இந்தியா என்பது ஒரு தேசம் அல்லவே! ஒரே தேசம் இருந்தால்தானே ஒரே தேசியம் இருக்கும்.
பல இனம், பல மொழி, பல பண்பாடுகள் நிறைந்த
இந்தியா என்ற ஒரு துணைக் கண்டத்திற்கு எப்படி ஒரு பண்டிகை தேசியத் தன்மை
கொண்டதாக இருக்க முடியும்?
வடநாட்டில் தீபாவளியன்று தீப விளக்குகளின் வரிசை என்றால் தமிழ்நாட்டில், கார்த்திகையில்தான் தீப விளக்குகள்; தீபவாளியில் கிடையாதே!
கேரளாவில் ஓணம்தான் முக்கிய விழா - தீபாவளிக்கு மவுசு கிடையாதே!
சமணர்கள் வர்த்தமானர் மறைந்த நாளைத்தானே தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.
அதுவும் தீபாவளி தமிழ்நாட்டில்
திணிக்கப்பட்டது; நானூறு ஆண்டுகளுக்குமுன் நாயக்க மன்னர்கள் ஆட்சியில்தானே
என்கிற ஏராளமான கேள்விகள் உண்டு.
400 ஆண்டு தீபாவளியில் கீதை அருளிய பகவான் கிருஷ்ணன் எங்கு வந்தான்?
கடைசியாக சீனிவாச சாஸ்திரிவாளுக்கு
ஒன்றுண்டு. வீட்டில் பாத்ரூமில் குளித்துவிட்டு, கங்காஸ்நானம் ஆயிற்றா?
என்று கேட்கிறீரே, இது நியாயமா? அப்பட்டமான சாஸ்திர மீறல் அல்லவா!
----------------------------------"விடுதலை” 22-10-2014
18 comments:
தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!
மது விற்பனையில் முதலிடம்! றீகடன் வாங்கி செலவழிப்பதில் முதலிடம் றீவிபத்துகளுக்கோ பஞ்சமில்லை
தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!
சென்னை, அக்.22-_ தீபாவளிப் பண்டிகை அறி வுக்குப் பொருத்தமான தல்ல என்பது மட்டுமல்ல; சகல விதத்திலும் மக்களுக் குக் கேடானது என்பதே உண்மையாகும்.
மது
நாள் ஒன்றுக்கு மது விற்பனை சராசரியாக ரூ.65 கோடி. சனி, ஞாயிறு களில் விற்பனையோ ரூ.90 கோடி. தீபாவளியிலே ரூ.150 கோடி.
ஹி.... ஹி... மதமும் பண் டிகையும் ஒழுக்கத்தை வளர்க்கிறதாம். இப்படி சொல்லுகின்ற ஆன்மிக வாதிகளை நினைத்தால் வாயால் சிரிக்க முடிய வில்லையே!
விவசாயிகளுக்கு தலைவலி
அய்ப்பசி அடை மழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப்படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போது தான் சம்பா நடவுக்குச் செலவு செய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செல வினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை பயிரி டுவது இல்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டு வைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண் டிக்குக் கொண்டு சென் றால், தீபாவளி நெருக் கடியை ஆதாயமாக விலை குறைத்துக் கேட் பார்கள்.
ஒரு தீபாவளியின் போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டி யிருந்தது. கடைத் தெரு வில் விவசாயிகளின் குமுறல் துணிமணி, பல காரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட் டேன்னு சொல்லுமா? இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக் கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.
- தி இந்து (தமிழ்) 22.10.2014
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdDB9GC
85% சதவீத மக்கள் விரும்பவில்லை
தீபாவளியை கடன் வாங்கி கொண்டாட 85 சதவீதம் பேர் விரும்ப வில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டா டப்பட்டாலும், அதன் பின்னணியில் குடும்பப் பொருளாதாரம் முதுகெ லும்பாக உள்ளது. வரு மானத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையில் செலவு செய்யும் குடும்பம்தான் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனாலும் தீபாவளி போன்ற பண் டிகை தினங்களில் செல வுகள் எப்போதுமே கை தாண்டி செல்லுவது வழக்கமானதுதான். இதில் நடுத்தர மக்கள் நிலை பரிதாபமானது.
-தினத்தந்தி 22.102014
எண்ணூர்
தீபாவளி மூடப்பண்டி கையால் பட்டாசு வெடித் துக் கொண்டாடியதால் நேற்று (21.10.2014) இரவு சென்னை எண்ணூர் பெரிய காசி கோயில் குப் பத்தில் ஒரு குடிசைமீது ராக்கெட் வெடி பட்ட தால் அந்த குடிசை எரிந்து சாம்பலானது.
மேற்கு தாம்பரம்
மேற்குத் தாம்பரம் காந்தி சாலையில் மாடி ஒன்றில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் ராக்கெட் வெடிபட்ட தால் எரிந்து சாம்பலா னது. மேலும் நேற்று இரவு மட்டும் தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித் ததில் ஏற்பட்ட காயத் தால் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொருக்குபேட்டை
இன்று (22.10.2014) காலை சென்னை கொருக் குப்பேட்டையில் பட் டாசு வெடித்ததில் ஒரு குடிசை எரிந்தது. அதே போன்று வியாசர்பாடியில் ஒரு குடிசையும், புது வண்ணை ஜீவா நகர் மாடியில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் பட்டாசு தீ பட்டு எரிந் தது. மந்தவெளி செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துகள் குறித்த தகவல்கள் வந்ததும் தீய ணைப்பு வீரர்கள் உடன டியாகச் சம்பவ இடத் திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தால் இன்றும் மட்டும் சென்னையில் 8 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdTlhhB
மின்கம்பி அறுந்து விழுந்ததில்
மாமனார், மருமகன் மரணம்
ராமநாதபுரம் மாவட் டம், ராமேஸ்வரம் மார்க் கெட் தெருவை சேர்ந் தவர் சிதம்பரம் (45). மீன வர். இவரது மகள் கவி தாவுக்கும் (18), கோவில் பட்டியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்தது. முருகன் சென்னை அம்பத்தூரில் இரும்புக் கடை வைத் துள்ளார். தலை தீபா வளியை கொண்டாடுவ தற்காக மனைவி கவிதா வுடன் 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந் தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிதம்பரம், மருமகன் முருகனை அழைத்துக் கொண்டு பட்டாசு வாங் குவதற்காக வெளியே சென்றார். பட்டாசுகளை வாங்கி கொண்டு இரு வரும் மார்க்கெட் தெரு வில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலை யோரத்தில் இருந்த மின் கம்பத்திலிருந்து அறுந்து தொங்கிய கம்பி, காற்றில் அசைந்து எதிர்பாராத விதமாக இவர்கள் மீது விழுந்தது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரு வரும் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர் கள் மின்சாரத்தை துண் டித்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய் தனர். ராமேஸ்வரம் கோயில் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைத் தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் மருமக னும், மாமனாரும் உயிரி ழந்த சம்பவம் அப் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-தினத்தந்தி 22.102014
பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; எம்.பி.ஏ. மாணவர் பலி!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் கடற்கரையோரத் தலை நகரான மசூலிப்பட்டினத் தில் உள்ள பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலை அலகில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் எம். பி.ஏ. பயிலும் மாணவர் ஒருவர் பலியானார்.
பலியான ஜோகி கிரண்(23) என்ற அந்த மாணவருடன் இந்த விபத்தில் சிக்கி காய மடைந்த ஜோகி லட்சுமி, ஜோகி துளசி ஆகியோர் பயங்கர தீக்காயங்களுடன் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப் பட்ட வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
பட்டாசுக் கடைகளில் பயங்கர தீ விபத்து
தலைநகர் டில்லிக்கு அருகே உள்ள பரிதாபாத் தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடை மார்க் கெட்டில் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த 230க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் எரிந்து சாம்ப லாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதி முழுவதுமே, புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீபாவளியையொட்டி, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள என்ஐ.டி. பகுதியில் அமைந்துள்ள தசரா மைதானத்தில் சுமார் 230_க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவில் திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. அதில் அங்கிருந்த பட் டாசுகள் வெடித்து சிதறின. இதனால் தீ மள மளவென்று மற்ற கடைகளுக்கும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அங்கு அமைக்கப்பட்டி ருந்த 230-_க்கும் மேற்பட்ட கடைகளும் தீயில் கருகின.
தீ விபத்து ஏற்பட்ட தைப் பார்த்ததும், பட் டாசுகள் வாங்க வந்திருந்த மக்களும், வியாபாரிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 3 பேர் தீக் காயங்களுடன் அரு கில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதி புகை மண்டல மாக இருப்பதால், தீயில் யாராவது சிக்கியுள்ளனரா என்ற விவரம் தெரிய வில்லை. தீயை முழுவது மாக அணைத்தப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdfYtzg
ஜீவா
இயக்குநர் சுசீந்திரன் ஜீவா என்ற திரைப்படம் மூலம் கிரிக்கெட்டில் பார்ப் பனர்கள் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறப்பதைத் தோலுரித்துக் காட்டினார். இன்னும் சொல்லப் போனால் தோளில் கையைப் போட்டு முதுகில் பூணூல் தொங்குகிறதா என்று தேடிய காட்சி - திரை யரங்கையே அதிர வைக் கக் கூடிய வகையில் கை தட்டல் இடியை ஏற் படுத்தியது.
இந்தியக் கிரிக்கெட் வாரியம் என்பது ஒரு பணம் காய்ச்சி மரம்! ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் பணப் புழக்கம்.
கிரிக்கெட் வாரியத் தில் ஆரம்பிக்கும் பூணூல் ஆதிக்கம் விளை யாட்டுக்காரர்களைத் தேர்வு செய்வது வரை நீண்டு கொண்டே போகும்.
கிரிக்கெட் விளை யாட்டுக் குழுவில் இடம் பெற்றாலே போதும் - அதற்கப்புறம் கோடி யிலே புரள வேண்டியது தான்; ஆண்டு சம்பளம் ஒரு பக்கம்; ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இலட்சக் கணக்கில் வருவாய்; அதுவும் உள்ளூரில் ஆடி னால் ஒரு ரேட், வெளி நாடுகளில் ஆடினால் இன்னொரு ரேட்!
ஆட்டத்தில் விளை யாடாமலேயே 12 ஆவது 13ஆவது ஆளாக இருந் தாலும் (Substitute) ஆடி யவர்களுக்கு என்ன சம் பளமோ, அதே தொகை இவர்களின் சட்டைப் பையிலும் திணித்து விடு வார்கள்.
இவை அல்லாமல் 4 ஓட்டம் அடித்தால் அதற் கொரு பரிசுத் தொகை; ஆறு ஆட்டம் (Sixer) அடித்தால் அதற்கொரு தொகை ஆட்ட நாயக னாக (Man of the Match)வந்தால் அதற்கொரு காசோலை.
கிரிக்கெட்டுக்காரர் என்றால் விளம்பரங்கள் வந்து குவியும்; அரசின் சலுகைகள், வருமான வரி சலுகை இத்தியாதி - இத்தியாதி.
பார்ப்பனர்களின் இந்தக் கிரிக்கெட் பகற் கொள்ளையை ஜீவா படம் தோலுரித்து விட்ட தாம் துக்ளக் அய்யர்வா ளுக்கு ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது.
ஜீவா படத்தில் கூறப் பட்ட கிரிக்கெட் மீதான குற்றப் பத்திரிகையைப் பற்றி அவரால் ஒன்றும் விமர்சிக்க முடியவில்லை; காரணம் உண்மையைத் தானே போட்டு உடைத்து இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்
அதனால் துக்ளக் என்ன செய்தது? திரைக் கதை சரியல்லை, நிகழ்ச்சி கள் கதையோடு ஒட்ட வில்லை, பாட்டு சரி யில்லை; ரிதம் சரியில்லை என்று மோடி ராகம் வாசிக்கிறது துக்ளக்.
ஆக ஜீவாவின் வெற்றி இதில்தான் இருக் கிறது. உண்மையை உடைத்துச் சொல்லி பார்ப்பன வட்டாரத்தில் குருதிக் கொதிப்பை ஏற் படுத்தியதுதான் இப்படத் தின் வெற்றியின் நறுக் கான நற்சான்றிதழ்!
- மயிலாடன்
Read more: http://www.viduthalai.in/e-paper/89744.html#ixzz3GsdwB7Kg
கேழ்வரகில் நெய் வடிகிறது கேளுங்கள்! கேளுங்கள்!
ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்றிரவு சிறப்புச் செய்தி என்று ஒன்றை அவிழ்த்து விட்டது.
கருநாடகாவில் ஹாசனம்பா என்று ஒரு கோயிலாம்! ஆண்டுக்குப் பத்து நாட்கள் மட்டும் - தீபாவளியை ஒட்டித் திறக்கப்படுமாம் - வழிபாடு நடக்குமாம்!
இந்தக் கோயிலுக்கு ஒரு விசேஷம்! இந்த ஆண்டு ஏற்றி வைக்கப்படும் விளக்கு அடுத்த ஆண்டுவரை எரியுமாம் - இந்த ஆண்டு அணிவிக்கப்படும் மாலைகள் அடுத்த ஆண்டு வரை காய்ந்து போகாமல் இருக்குமாம்.
சவாலை ஏற்கப் பகுத்தறிவாளர்கள் தயார் - பக்திமான்கள் நிரூபிக்கத் தயார் தானா? அறிவியல் கொடுத்த ஒரு சாதனத்தை இப்படி சாக்கடையாக்கு கிறார்களே - என் சொல்ல!
Read more: http://www.viduthalai.in/e-paper/89754.html#ixzz3GseGxpgC
வாடிகனில் போப் பரிந்துரைகளை கத்தோலிக்க ஆயர்கள் ஏற்க மறுப்பு
வத்திகான், அக்.22- கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகள் ரீதியான நிலைப்பாடுகளில் மாற்றம் கோரி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வத்திக்கான் ஆயர்களின் உயர் பேரவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் கத்தோலிக்க ஒருபால் உறவுக் காரர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
போப்பின் பரிந்துரைகளுக்கு ஆயர்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை. ஒருபால் உறவுக்கார்கள், விவாகரத்தின் பின்னர் மறுமணம் புரிபவர்கள் உள்ளிட்ட தரப்பின ரையும் அங்கீகரிக்கும் விதத்தில் கத்தோலிக்கத் திருச் சபையின் நிலைப்பாடுகள் அமையவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த முன்வரைவு- ஆவணம் வலியுறுத்தியிருந்தது.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காத ஆயர்களின் உயர் பேரவை, குறித்த ஆவணத்தை மீள மாற்றியமைத்துள்ளது. இருந்தாலும், ஒருபால் உறவுக்காரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படு வது தவிர்க்கப்படவேண்டும் என்று இறுதி ஆவணம் கூறியுள்ளது.
போப் பிரான்சிஸ் அளித்த அனைத்து பரிந்துரை களுக்கும், ஆயர்களிடமிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.
நவீனகால அணுகுமுறைகளுக்கு ஏற்ப கத்தோலிக் கத் திருச்சபையின் போதனைகள் அமைய வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே போப் பிரான்சிஸ் தம்முடைய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
ஆனாலும், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் கத்தோலிக்கர்கள் எடுக்கும் ஒழுக்கம் சார்ந்த தெரிவுகளுக்கு திருச்சபை மதிப்பளிக்க வேண்டும் என்கின்ற மாற்றத்திற்கு மட்டும் ஆயர் களின் உயர் பேரவை ஏற்றுக்கொண்டது.
Read more: http://viduthalai.in/page-8/89748.html#ixzz3GsfXtoe4
சபாஷ் பொலிவியா!
கடந்த வாரம் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஈ.வோ. மொராஸிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இது உலகிலேயே அதிக நிதி சேமிப்புக் கொண்ட நாடாக ஒளிர்கிறது! பெண்கள் உயர்வு வியக்க வைக்கிறது. நாடாளு மன்றத்தில் 28% செனட்டில் 47% அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்கள் கொடி கட்டி ஆளுகின்றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/89752.html#ixzz3GsfuNdyq
இலங்கையில் பார்ப்பன அர்ச்சகர் கைது!
கொழும்பு, அக்.24- இலங்கையில் உள்ள சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலின் உதவி குருக் களாக உள்ள பார்ப்பனர் இலங்கைக் காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டார். முன்னேஸ்வரம் கோவிலின் உட்பிரகாரத் தில் அமைந்திருந்த பூஜை மண்டபத்தை இடித்துக் கட்டியதால் கைது செய் யப்பட்டுள்ளார். முதன் மையான அர்ச்சகராக உள்ள பார்ப்பனர் தலை மறைவாகிவிட்டார்.
முன்னேஸ்வரம் கோவில் சுமார் 2300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். தற் போதுள்ள கட்டடம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பராக்கிரமபாகு என் கிற மன்னன் கட்டியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கட் டடத்தின் பழமைகருதி 2009ஆம் ஆண்டு முதல் இக்கோவிலை தொல் பொருள் துறையின் தன் னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. எனவே, அங்கு எவ்வித மான மாற்றம் செய்வதாக இருந்தாலும், தொல் பொருள் துறை அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் தொல் பொருள் துறையின் முன் அனுமதியின்றி கோவில் உள்பகுதியில் இருந்த பூஜை மண்டபத்தை இடித்து, அதனைப் புதுப் பிக்க முயன்றதான குற்றச் சாட்டில் சந்தேக குற்ற வாளியாக கோவிலின் உதவி குருக்கள் சர்வேஸ் வரய்யர் பத்மநாப குருக் கள் என்கிற பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள் ளார். கோவிலின் பிரதம குருக்களான பார்ப்பனர் தலைமறைவாகிவிட்டார். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தொல் பொருள் துறையின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.
Read more: http://viduthalai.in/e-paper/89858.html#ixzz3H3tEOZVW
குடியைக் கெடுக்கிறது!
குடிகுடியைக் கெடுக்கும் என்பது ஏதோ வெறும் வார்த்தை சோடனையல்ல.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக்கில் பணிபுரிந்த 2500 ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் 30 -40 வயதுக் கிடையே உள்ளவர்கள்தாம் - படித்த பட்டதாரி இளை ஞர்கள் இவர்கள்.
மரணம் அடைந்த 2500 பேர்களுடன் முடிந்து விடு கிறதா இந்தக் குடி?
2500 பெண்கள் துணை வரை இழந்தனர், 5000 குழந் தைகள் தந்தையை இழந் துள்ளனர். டாஸ்மாக்களில் பணியாற்றும் 30 ஆயிரம் பேர்களில் சரிப் பாதிப் பேர் குடியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளாம்!
Read more: http://viduthalai.in/e-paper/89857.html#ixzz3H3tWi6VG
பெயர்கள் மாறுகின்றன
மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்துத்துவா சார்பில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. டிசம்பர் 31 வாஜ்பேயி பிறந்த நாளாம். மத்திய ஊரக வீடு கட்டும் திட்டத்திற்கு வாஜ்பேயி பெயரும் சூட்டப்பட உள்ளதாம்.
ரூ.15 லட்சம் என்று வருமோ?
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி கூறினார். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் ராஜ்நாத்சிங். நாட்கள் 150 ஓடி விட்டன. நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் காத்தி ருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் ரூ.15 லட்சத்தை எதிர் பார்த்து தான்.
- அஜய்மக்கான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
அடுத்த ஓர் அபாய அறிவிப்பு
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முறை பொறுப்பு ஏற்றவுடன் அவசர அவசரமாக மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வுகளை அறிவித்தது அல்லவா!
இப்பொழுது டிசம்பர் இறுதிக்குள் ஆவின்பால் விலையை 30 சதவீதம் உயர்த்திடத் திட்டமாம்.
Read more: http://viduthalai.in/e-paper/89859.html#ixzz3H3tmj7GG
அறிவுப் பிரச்சாரம்
மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)
Read more: http://viduthalai.in/page-2/89841.html#ixzz3H3tzDV3o
மழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?
மின் ஆய்வுத்துறை விளக்கம்
சென்னை, அக்.24: மழைக் காலத்தில் மின்சாரத்தை பாதுகாப் பாக கையாளுவது எப்படி என்பது குறித்து மின் ஆய்வுதுறை விளக்க மளித்துள்ளது. தமிழ்நாடு அரசு மின்ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், எதிர்வரும் காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்கள் சேதம், மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பு ஏற்படக்கூடும். இதுபோன்ற நேரங்களில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும், அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தை பயன் படுத்தும் போது மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் பொது மக்களிடம் விழிப் புணர்வு அவசியமாகும். மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழி முறைகள்:
அய்எஸ்அய் முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த மின் சாதனங்களை உடனே மாற்றிவிடுங்கள்.
வீடுகளில் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதனை குழந் தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்கவும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் ஒயரிங்குகளை சோதனை செய்து மாற்றி கொள்ள வேண்டும்.
குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சை பொருத்துவதை தவிர்க்கவும்.
சுவரில் ஒயரிங் செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆணி அடிக்க கூடாது.
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. விளம்பர பலகைகள் வைக்க கூடாது.
அறுந்து விழுந்த மின் கம்பிகளின் அருகில் செல்லாதீர்கள். உடனடி யாக மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளி லும் நிற்க கூடாது.
இடி அல்லது மின்னலின் போது தொலைக்காட்சி மிக்சி, கிரைண் டர், கணிணி, தொலைப்பேசி பயன்படுத்த கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/page-2/89848.html#ixzz3H3uaeuQY
கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?
(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.
(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட் சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ் தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின் றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரிய வில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3vSmp8C
மனு தர்ம முரண்பாடு
சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.
(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)
படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான். (மனு, அத்தி.3, சு.17)
13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மை யினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.
பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது.
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vs2wEr
பார்ப்பனர் மதம் - தர்மம்
பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப் படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.
பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாது காப்பாகத்தான் ஆகி விட்டது
- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w0gf36
சரக்கு கேடு; டப்பி அழகு!
பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப் பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.
- புரட்சிக்கவிஞர்
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w8WoBq
லாலாலஜபதி கூறுகிறார்!
சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது.
நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.
-லாலாலஜபதிராய்
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wHohMC
இருமுடி மகிமை!
அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.
சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?
அப்பா: பையன் இருமுடியோட அய்யப்பன் கோயி லுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டிருக்கான்பா?
- பெரியார் வளவன், திருத்தணி.
Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wR7vy5
Post a Comment