Search This Blog

23.10.14

கோயிலில் பாராயணம் படிப்பதில் பார்ப்பனருக்கு மட்டுமே அனுமதியா!

காஞ்சியும் - கடலூரும் 
கோயிலில் பாராயணம் படிப்பதில் பார்ப்பனருக்கு மட்டுமே அனுமதி என்கிற மனித உரிமை பறிக்கும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி உள்ளன.


காஞ்சிபுரத்தில் உள்ள மணவாள மாமுனி சன்னதி யில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாட பார்ப்பனர் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பிரசாதம் கொடுப்பதிலும் பாரபட்சம் - பார்ப்பனர் களுக்கு கோயில் சன்னதியிலும் மற்றவர்களுக்கு வெளியிலும் வைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மணவாள மாமுனி சன்னதியில் பாராயணம் பாட முயன்ற மாதவன் என்பவருக்கு பார்ப்பனர் அல்லாதவர் என்கிற காரணத்தால் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. தகவல் அறிந்த மனித உரிமை ஆர்வ லர்கள், தோழர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று முழங்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பிஜேபி உள்ளிட்ட இந்துத் துவாவாதிகளுக்கு இவற்றை சமர்ப்பிக்கின்றோம்.


பார்ப்பனராவது, திராவிடராவது என்று விதண்டா வாதம் பேசும் வேடிக்கை மனிதர்களும் இந்த இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.


இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் ஆணி வேர் என்பது வருணாசிரமம் தானே? பிறப்பு முதல் இறப்பு வரை அந்த வருணம் துரத்தித் துரத்தி அடிக்கவில் லையா? மனிதன் சாகிறான்! ஆனால், அவனைப் பீடித்த ஜாதி சாவதில்லை என்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அது நூற்றுக்கு நூறு கடைந்தெடுத்த தெற்றென விளங்கும்  உண்மை என்பதை மறுக்கத்தான் முடியுமா?


அனைத்து உயிர்களுக்கும் கடவுள்தான் தந்தை,  தாய் என்று பேசுவதிலும், உபந்யாசம் செய்வதிலும் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுகின்றதா?


கடவுளுக்கே பூணூல் போட்டு விட்டார்களே - அதற்குப் பின் எடுத்துச் சொல்ல என்ன இருக்கிறது?


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிராமணா தீனம்
பிராமண மம தேவதா
என்கிறது இருக்கு வேதம்.


இதன் பொருள்: இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை;  எனவே பிராமணர்கள்தான் கடவுள் - அவர்களையே தொழ வேண்டும் என்கின்றன ஆரியப் பார்ப்பன வேதங்கள்.


அதனை இந்த 2014லும் கட்டிக் காக்க  பார்ப்பனர்கள் முயல்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியே கடலூர், காஞ்சிபுரம் நிகழ்ச்சிகள்.

 
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஓதக் கூடாது என்று பார்ப்பனர்கள் தடை விதிக்கிறார்களே - இந்தத் தமிழ்த் தேசிய வியாதிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழி என்பது சட்ட ரீதியாக இருந்தாலும், எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக் குறியே.


ஒரே மதத்துக்குள் எத்தனைப் பிளவுகள் - பேதங்கள்! இதே காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு  வடகலை நாமம் போடுவதா? 
தென்கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை ஏற்பட்டு, வெள்ளைக் காரர்கள் ஆட்சிக் காலத்தில் பிரிவியூ கவுன்சில் வரை கொண்டு செல்லப்பட்டதே!


இந்து மதத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமேயானால் தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரை பூணூல்களின் ஆவேசமும், ஆதிக்கமும், அட்டகாசமும், அடியாள்தனமும் கொடி கட்டிப் பறந்து கொண்டுதானிருக்கும்.


தந்தை பெரியார் அவர்களின் 136ஆம் ஆண்டாகிய இவ்வாண்டில் இதற்கொரு முடிவு கிடைக்கும் வகையில் திராவிடர் கழகம் உரிய முயற்சியை எடுப்பது குறித்து இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தியாக (17.9.2014) திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதை நோக்கி விரை வோம்! வாழ்க பெரியார்!

                                 --------------------------”விடுதலை” தலையங்கம் 23-10-2014

11 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீராடினால்...

மயிலாடுதுறையில் அய்ப்பசி மாதத்தில் 30 நாட்களில் காவிரி தீர்த் தத்தில் துலாக் கட்டத்தில் நீராடுவார்கள் பாவங் களும், நோய்களும் பறந் தோடி விடும். கங்கையும், யமுனையும் கூட தங் களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள துலாக் கட்டத்துக்கு வந்து காவிரி யில் மூழ்கி எழுவார்கள். முடவன் ஒருவன் 30 நாள் முடிந்து மறுநாள் வந்தா னாம். மூழ்குவதற்கு தாமதமாக வந்த தனக்குக் கெதி மோட்சம் வேண்டி இறைவனிடம் மன்றாடி னானாம். இறைவன் முட வன் முன்தோன்றி கார்த் திகை முதல் நாளில் நீராடு உனக்கு அருள் செய் வோம் என்றானாம். அதன்படி முடவன் நீராட முடம் நீங்கியதாம். அது முதல் இந்நாளுக்கு முட முழுக்கு என்று பெயராம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் முடவர்கள் நீராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். எந்த முடவனுக்கு முடம் நீங்கியது?

ஆன்மிகம் என்றாலே அண்டப் புளுகு ஆகா யப் புளுகுதானா!

Read more: http://viduthalai.in/e-paper/89865.html#ixzz3H3t2ZXwK

தமிழ் ஓவியா said...

குடியைக் கெடுக்கிறது!குடிகுடியைக் கெடுக்கும் என்பது ஏதோ வெறும் வார்த்தை சோடனையல்ல.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக்கில் பணிபுரிந்த 2500 ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் 30 -40 வயதுக் கிடையே உள்ளவர்கள்தாம் - படித்த பட்டதாரி இளை ஞர்கள் இவர்கள்.

மரணம் அடைந்த 2500 பேர்களுடன் முடிந்து விடு கிறதா இந்தக் குடி?

2500 பெண்கள் துணை வரை இழந்தனர், 5000 குழந் தைகள் தந்தையை இழந் துள்ளனர். டாஸ்மாக்களில் பணியாற்றும் 30 ஆயிரம் பேர்களில் சரிப் பாதிப் பேர் குடியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளாம்!

Read more: http://viduthalai.in/e-paper/89857.html#ixzz3H3tWi6VG

தமிழ் ஓவியா said...

பெயர்கள் மாறுகின்றன

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்துத்துவா சார்பில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. டிசம்பர் 31 வாஜ்பேயி பிறந்த நாளாம். மத்திய ஊரக வீடு கட்டும் திட்டத்திற்கு வாஜ்பேயி பெயரும் சூட்டப்பட உள்ளதாம்.

ரூ.15 லட்சம் என்று வருமோ?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி கூறினார். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் ராஜ்நாத்சிங். நாட்கள் 150 ஓடி விட்டன. நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் காத்தி ருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் ரூ.15 லட்சத்தை எதிர் பார்த்து தான்.

- அஜய்மக்கான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

அடுத்த ஓர் அபாய அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முறை பொறுப்பு ஏற்றவுடன் அவசர அவசரமாக மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வுகளை அறிவித்தது அல்லவா!
இப்பொழுது டிசம்பர் இறுதிக்குள் ஆவின்பால் விலையை 30 சதவீதம் உயர்த்திடத் திட்டமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/89859.html#ixzz3H3tmj7GG

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட் சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ் தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின் றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரிய வில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3vSmp8C

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்லாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாப னங்கள், சகல விதமான மத சங்கங்கள் ஆகிய அனைத் தும் தொழிலாளர் வர்க் கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவு வரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3va5462

தமிழ் ஓவியா said...

படக்காட்சியில் காமச்சுவை!

காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக் காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.

கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.

விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.

அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.

பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.

கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தைத் தமிழ் மண்ணில் விதைத்தனர்.

பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப் பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே.

ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வரு கின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்கு வதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.

ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள்.

ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான்.

பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!

பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.

பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(பிரபு லிங்கலீலை, பக்கம். 67)

- தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vhytOL

தமிழ் ஓவியா said...

மனு தர்ம முரண்பாடு

சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான். (மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மை யினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vs2wEr

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப் படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாது காப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w0gf36

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப் பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3w8WoBq

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது.

நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wHohMC

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.

சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய்யப்பன் கோயி லுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டிருக்கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wR7vy5