Search This Blog

22.10.14

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

தீபாவளி தமிழர்க்கு உரியதா?



தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப் படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர் மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக் காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.  

   
     --------------------------------------தமிழறிஞர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை) நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62

*****************************************************************************************
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக் கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத் திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழா வாகக் கொண்டாடப்பட்டதை நிக் கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட் டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்தி களுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

  ------------------------------பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
 *************************************************************************************
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி


 
வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங் குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதா யிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக் களாலும் கொண்டாடப்பட்டு வருவதா யிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபா வளித் திருநாள் கொண்டாடப்படுவதா யிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகா சுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று. 

---------------------------------------சைவப் பெரியார் மறைமலை அடிகள் நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201

 ********************************************************************************


அகராதிக் குறிப்பில்


இரண்யாட்சன்: இவன் கதா பாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலி யோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேத வராக (பன்றி)வுருக் கொண்டு கொம் பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக்கருத்து பூமி உருண்டை என்னும் அறி வியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக் கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக் கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்ட தால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

-----------------------------------சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார் - நூல்: அபிதான சிந்தாமணி

 **********************************************************************************

சமண சமயப் பண்டிகையே தீபாவளி
 
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழு வதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டி ருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத் திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந் திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்த போது மகாவீரர் இயற்கை எய்தி இருப் பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்திய படியால் தீபாவளி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிற தன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதை களைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண் டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப் படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங் குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகா சுரன் கதை. 

                              ----------------------------------கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80

 ***************************************************************************************

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத் திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங் களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப் பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜ ராத்திகள் முதலியோர் இன்றும் தீபா வளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும். 

-----------------------------டாக்டர் மா.இராசமாணிக்கனார்நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும் பக்கம்: 33, 34

 *****************************************************************************************
-----------------தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன் -"விடுதலை” 21-10-2014

12 comments:

தமிழ் ஓவியா said...

தீபாவளி கவிதை

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...

பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!


தலித்துகள், சூத்திரர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறிய

பூரிசங்கராச்சாரியைக் கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு!

டில்லியில் பூரிசங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு!

பூரிசங்கராச்சாரியாரின் ஜாதி வெறிப் பேச்சை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஆளுநரும் வரவேற்றுள்ளார்


ராஞ்சி, அக்.21-_ தாழ்த் தப்பட்டவர்களும், சூத்தி ரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச் சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டன - _ போராட் டக்காரர்கள் பூரி சங்கராச் சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.

கோவில் என்பது தூய் மையாக இருக்கவேண்டிய ஓர் இடமாகும் இங்கு தூய்மைப்பணியாளர்களுக்கு என்ன வேலை,? வர்ணாஷ் ரமம் கூறியத்தை தெளி வாகப் பின்பற்றவேண்டும் என்று பூரி சங்கராச் சாரியார் பேசி உள்ளார்.

ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்க ராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதை யில் 16-ஆவது அத்தியா யத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத் தின் நன்மைக்காக உரு வாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர் களுக்கான பணியைச் செய் வதே சிறப்பான ஒன்றாகும், இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார் கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.

அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவி லுக்குள் நுழையலாம்? வர் ணாஷ்ரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடி யும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவி லுக்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிர தேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறிய தாவது சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்தி ரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறி யிருந்தார்.

சங்கராச்சாரியாரின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரி வித்த நிலையில் ஞாயிறு (19.10.14) தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தர விட்டது. பல்வேறு அமைப்புகள் கண்டனம் பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப் பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக் கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்சாரி யாருக்கு கண்டனம் தெரி வித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கிழக்கு டில்லியின் பல்வேறு சமூக அமைப் பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச் சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் சங்க ராச்சாரியாரை உடன டியாகக் கைது செய்யச் சொல்லி சாலைமறியலில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மிகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழி லாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும் போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்) மற்றும் அரசியல் துறையில் பல் வேறு உயர் பொறுப் புகளில் இருக்கும் தலித் துகளை மிகவும் கீழ்த் தரமாக தூயமையற்றவர்கள் என்று கூறிய சங்கராச் சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக் கிறோம்.

அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என்ற செய்தி வருகிறது. சமூகத் தில் ஒருவர் தீண் டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரிய வில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ள வர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப் பாட்டத்தின் போது அனல் கக்கப் பேசினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/89677.html#ixzz3GppEJj28

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வறுமைக்கோடு

தீபாவளியன்று குத்து விளக்கில் ஒருமுகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன், இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகங் கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம், நான்கு முகங்கள் ஏற்றி வைத் தால் பசு போன்ற செல் வம், அய்ந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வப் பெருக்கம்; ஒரு முகம் ஏற்றி வைத்தால் கிழக் கைப்பார்த்து விளக்கை வைக்க வேண்டுமாம்.

ஏன் ஆறுமுகம் வைத் தால் இன்னும் கூடுத லாகப் பலன் கிடைக் காதா? குத்து விளக்கு என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் செல்வச் செழிப்போடு வாழ்கிறார் களே - குத்து விளக்கை ஏற்றி வைத்து நம் மக்கள் கண்ட பலன் வறுமைக் கோடுதானே?

Read more: http://viduthalai.in/e-paper/89684.html#ixzz3GppNxAB5

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

Read more: http://viduthalai.in/page-2/89685.html#ixzz3GppheY3s

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது!


பிரபல வழக்குரைஞர் ராஜீவ் தவான் விமர்சனம்


புதுடில்லி, அக். 21- சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கியிருப்பது, பாரபட்சமானது என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகளும், கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும் உடல்நலத்தை காரணம் காட்டி, மேல்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் கோரி ஜாமீன் பெற முடியுமா என்று ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு, ஏன் ஜாமீன் வழங்கியது என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், டெய்லி மெயில் என்ற நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:- இந்தக் குற்றத்திற்காக, ஜெயலலிதா 18 ஆண்டுகளாக ஜாமீன்தான் பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சுமார் ஓராண்டுக்குப் பிறகும், தேசிய லோக் தளக் கட்சியின் தலைவர் சவுதாலா, இரண்டு மாதங் களுக்குப் பிறகும்தான் ஜாமீன் பெற்றனர் என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஓராண்டு சிறையில் இருக்க நேர்ந்தது என்றும், சத்யம் நிறுவனத்தின் அதிபர் மூன்றாண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக ஜாமீனா?

ஆனால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 21 நாள்களிலேயே ஜாமீன் வழங்கப்பட் டிருப்பது நீதித்துறையின் ஆச்சரியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேல்முறையீட்டிற்கான தயாரிப்பு வேலை களை செய்வதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப் படவேண்டும் என்று அவரது வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டிருக்கிறார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றிருக்குமானால், இதேபோல கொலைக் குற்றவாளிகள், கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும், மேல்முறையீட்டுக்கான தயாரிப்புகளை செய்வதற்கு ஜாமீன் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தீர்ப்பில் குறை இருப்பதாக பாலி நாரிமன் கூறிய வாதமும் அடிப்படையற்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ள தவான், குற்றவாளிஎன்ற தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது என ஜெயலலிதாவின் வழக்குரைஞர் வாதாடியிருப்ப தையும் சுட்டிக் காட்டியுள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து மட்டுமே ஜாமீன் பெற்றிருப்பதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்பது சாத்திய மற்றது என்றும், அப்படி தேர்தல் நேரத்தில் தீர்ப்பையும் நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா நீதிமன்றத்தை அணு கினால் தற்போதைய வாதம் அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும் தவான் கூறியுள்ளார். இதற்கு முன்னரும்கூட, தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், எந்த வழக்கிலும் இவ்வளவு விரைவாக 21 நாள் களில் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை என்றும் வழக்குரைஞர் தவான் தெரிவித்துள்ளார்.

அரசை ஆட்டுவிப்பார் ஜெயலலிதா!

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஜாமீன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறதோ என பொதுமக்களை எண்ணத் தூண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நின்று ஜெயலலிதா தமிழக அரசை ஆட்டுவிப்பதற்கும்தான் இது உதவும் என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு என பொதுவான நெறி முறைகள் இல்லை என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன், ஏழை, எளியோருக்கு எதிரான பாரபட்சம் என்றும் ராஜீவ் தவான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89700.html#ixzz3GprdTyG2

தமிழ் ஓவியா said...

தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!


மது விற்பனையில் முதலிடம்! றீகடன் வாங்கி செலவழிப்பதில் முதலிடம் றீவிபத்துகளுக்கோ பஞ்சமில்லை

தீபாவளிப் பண்டிகை என்பது இதுதான்!

சென்னை, அக்.22-_ தீபாவளிப் பண்டிகை அறி வுக்குப் பொருத்தமான தல்ல என்பது மட்டுமல்ல; சகல விதத்திலும் மக்களுக் குக் கேடானது என்பதே உண்மையாகும்.

மது

நாள் ஒன்றுக்கு மது விற்பனை சராசரியாக ரூ.65 கோடி. சனி, ஞாயிறு களில் விற்பனையோ ரூ.90 கோடி. தீபாவளியிலே ரூ.150 கோடி.

ஹி.... ஹி... மதமும் பண் டிகையும் ஒழுக்கத்தை வளர்க்கிறதாம். இப்படி சொல்லுகின்ற ஆன்மிக வாதிகளை நினைத்தால் வாயால் சிரிக்க முடிய வில்லையே!

விவசாயிகளுக்கு தலைவலி

அய்ப்பசி அடை மழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப்படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போது தான் சம்பா நடவுக்குச் செலவு செய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செல வினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை பயிரி டுவது இல்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டு வைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண் டிக்குக் கொண்டு சென் றால், தீபாவளி நெருக் கடியை ஆதாயமாக விலை குறைத்துக் கேட் பார்கள்.

ஒரு தீபாவளியின் போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டி யிருந்தது. கடைத் தெரு வில் விவசாயிகளின் குமுறல் துணிமணி, பல காரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட் டேன்னு சொல்லுமா? இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக் கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.
- தி இந்து (தமிழ்) 22.10.2014

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdDB9GC

தமிழ் ஓவியா said...

85% சதவீத மக்கள் விரும்பவில்லை

தீபாவளியை கடன் வாங்கி கொண்டாட 85 சதவீதம் பேர் விரும்ப வில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டா டப்பட்டாலும், அதன் பின்னணியில் குடும்பப் பொருளாதாரம் முதுகெ லும்பாக உள்ளது. வரு மானத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையில் செலவு செய்யும் குடும்பம்தான் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனாலும் தீபாவளி போன்ற பண் டிகை தினங்களில் செல வுகள் எப்போதுமே கை தாண்டி செல்லுவது வழக்கமானதுதான். இதில் நடுத்தர மக்கள் நிலை பரிதாபமானது.
-தினத்தந்தி 22.102014

எண்ணூர்

தீபாவளி மூடப்பண்டி கையால் பட்டாசு வெடித் துக் கொண்டாடியதால் நேற்று (21.10.2014) இரவு சென்னை எண்ணூர் பெரிய காசி கோயில் குப் பத்தில் ஒரு குடிசைமீது ராக்கெட் வெடி பட்ட தால் அந்த குடிசை எரிந்து சாம்பலானது.

மேற்கு தாம்பரம்

மேற்குத் தாம்பரம் காந்தி சாலையில் மாடி ஒன்றில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் ராக்கெட் வெடிபட்ட தால் எரிந்து சாம்பலா னது. மேலும் நேற்று இரவு மட்டும் தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித் ததில் ஏற்பட்ட காயத் தால் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொருக்குபேட்டை

இன்று (22.10.2014) காலை சென்னை கொருக் குப்பேட்டையில் பட் டாசு வெடித்ததில் ஒரு குடிசை எரிந்தது. அதே போன்று வியாசர்பாடியில் ஒரு குடிசையும், புது வண்ணை ஜீவா நகர் மாடியில் போடப்பட்டி ருந்த கொட்டகையில் பட்டாசு தீ பட்டு எரிந் தது. மந்தவெளி செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துகள் குறித்த தகவல்கள் வந்ததும் தீய ணைப்பு வீரர்கள் உடன டியாகச் சம்பவ இடத் திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தால் இன்றும் மட்டும் சென்னையில் 8 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdTlhhB

தமிழ் ஓவியா said...

மின்கம்பி அறுந்து விழுந்ததில்
மாமனார், மருமகன் மரணம்

ராமநாதபுரம் மாவட் டம், ராமேஸ்வரம் மார்க் கெட் தெருவை சேர்ந் தவர் சிதம்பரம் (45). மீன வர். இவரது மகள் கவி தாவுக்கும் (18), கோவில் பட்டியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்தது. முருகன் சென்னை அம்பத்தூரில் இரும்புக் கடை வைத் துள்ளார். தலை தீபா வளியை கொண்டாடுவ தற்காக மனைவி கவிதா வுடன் 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந் தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிதம்பரம், மருமகன் முருகனை அழைத்துக் கொண்டு பட்டாசு வாங் குவதற்காக வெளியே சென்றார். பட்டாசுகளை வாங்கி கொண்டு இரு வரும் மார்க்கெட் தெரு வில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலை யோரத்தில் இருந்த மின் கம்பத்திலிருந்து அறுந்து தொங்கிய கம்பி, காற்றில் அசைந்து எதிர்பாராத விதமாக இவர்கள் மீது விழுந்தது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரு வரும் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர் கள் மின்சாரத்தை துண் டித்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய் தனர். ராமேஸ்வரம் கோயில் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைத் தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் மருமக னும், மாமனாரும் உயிரி ழந்த சம்பவம் அப் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-தினத்தந்தி 22.102014

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; எம்.பி.ஏ. மாணவர் பலி!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் கடற்கரையோரத் தலை நகரான மசூலிப்பட்டினத் தில் உள்ள பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலை அலகில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் எம். பி.ஏ. பயிலும் மாணவர் ஒருவர் பலியானார்.

பலியான ஜோகி கிரண்(23) என்ற அந்த மாணவருடன் இந்த விபத்தில் சிக்கி காய மடைந்த ஜோகி லட்சுமி, ஜோகி துளசி ஆகியோர் பயங்கர தீக்காயங்களுடன் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப் பட்ட வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

பட்டாசுக் கடைகளில் பயங்கர தீ விபத்து

தலைநகர் டில்லிக்கு அருகே உள்ள பரிதாபாத் தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடை மார்க் கெட்டில் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த 230க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் எரிந்து சாம்ப லாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதி முழுவதுமே, புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீபாவளியையொட்டி, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள என்ஐ.டி. பகுதியில் அமைந்துள்ள தசரா மைதானத்தில் சுமார் 230_க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவில் திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. அதில் அங்கிருந்த பட் டாசுகள் வெடித்து சிதறின. இதனால் தீ மள மளவென்று மற்ற கடைகளுக்கும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அங்கு அமைக்கப்பட்டி ருந்த 230-_க்கும் மேற்பட்ட கடைகளும் தீயில் கருகின.

தீ விபத்து ஏற்பட்ட தைப் பார்த்ததும், பட் டாசுகள் வாங்க வந்திருந்த மக்களும், வியாபாரிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 3 பேர் தீக் காயங்களுடன் அரு கில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதி புகை மண்டல மாக இருப்பதால், தீயில் யாராவது சிக்கியுள்ளனரா என்ற விவரம் தெரிய வில்லை. தீயை முழுவது மாக அணைத்தப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/89746.html#ixzz3GsdfYtzg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தீபாவளி

தீபாவளியன்று நீரில் கங்கையும், எண் ணெயில் மகாலட்சுமியும், புதுத்துணியில் பார்வதி யின் அம்சமும், விளக் கில் விஷ்ணுவும், பட் டாசில் சிவனும், உணவில் அன்னபூரணியும், தீபா வளி லேகியத்தில் பிரம் மாவும், புதுக்கணக்கில் சரஸ்வதியும், பலகாரங் களில் தேவர்களும் நிறைந்து நம்மை மகிழ் விக்கிறார்களாம்!

கடவுள்களா சூப்பர் மார்க்கெட் அயிட் டங்களா? மற்ற நாள்களில் எல்லாம் இவர்கள் எங்கே குடியிருப்பார்களாம்? சரி, இத்தனைக் கடவுள்கள் குடியிருக்கும் தீபாவ ளியை எத்தனை ஆண்டு களாகக் கொண்டாடி யிருக்கிறார்கள் - இந்த மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வளமை என்ன? 29.5 சதவீத வறுமைக் கோடுதானே?

Read more: http://www.viduthalai.in/e-paper/89747.html#ixzz3Gse5KwQT

தமிழ் ஓவியா said...

பிஜேபி மனப்பால் குடிக்க வேண்டாம்!


நடந்து முடிந்த மகாராட்டிரம், அரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிஜேபி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரியானாவில் அறுதிப் பெரும்பான்மையை எட்டியுள்ளது; மகாராட்டி ரத்தில் அந்த நிலை கிட்டவில்லை; என்றாலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிஜேபிக்கு உண்டு.

மகாராட்டிரத்தில் பிஜேபி பெற்ற வாக்குகளின் சதவீதம் 28; இந்தளவு குறைந்த விகிதத்தில் வாக்கு களைப் பெற்ற கட்சி ஆட்சியை அமைக்கிறது. அரியானாவில் 33 சதவீதம் பெற்று ஆட்சியை அமைக்கிறது.

50 சதவீதமோ, அதற்கு மேலோ வாக்குகளைப் பெற்று இருந்தால், அந்த வெற்றி ஜனநாயக ரீதியானது என்று ஒப்புக் கொள்ளலாம்; ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பலகீனமே ஆட்சி அமைக்கும் பலமாக இருக்கிறது என்பது விசித்திரமே!

விகிதாசாரத் தேர்தல் முறையே சரியானது என்று அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக் கூறு கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிஜேபிக்கும் இதே நிலைதான். மட்டத்தில் உசத்தி என்கிற வாய்ப்புதான் பிஜேபிக்கு! மகாராட்டிரம், அரியானா மாநிலங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் 15 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்து விட்டதால் மக்கள் மத்தியில் மாற்றம் என்ற தாகம் ஏற்படுவது இயல்பே!
பிஜேபிக்கு என்ன வாய்ப்பு என்றால் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அது இருப்பதுதான்; நியாயமாக இடதுசாரிகள் அந்த இடத்தைப் பிடித் திருக்க வேண்டும். அந்த நிலை எட்டப்படாததால், மதவாத பிஜேபிக்குக் கொண்டாட்டமாகி விட்டது.

அரியானாவிலும், மகாராட்டிரத்திலும் வெற்றி பெற்றவர்களில் கிரிமினல்கள் அதிகம். அதில் முதல் இடம் பிஜேபிக்கும் சிவசேனாவுக்கும்தான்! ஆள் பலம், பண பலம்; கிரிமினல்தனம் வெற்றிக்குத் துணை போனது வெட்கக் கேடே!

பிஜேபிகூட தேர்தல் நேரத்தில் என்ன தந்திரம் செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; அவர்கள் மதவாத அரசியல் என்னும் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு நாட்டில் விலைவாசி உயர்ந்து விட்டது; ஊழல் பெருகி விட்டது; நாங்கள் வந்தால் விலைவாசியைக் குறைப்போம்; ஊழலை ஒழிப்போம் என்று நீட்டி முழங்குவதை மக்கள் நம்பும்படியான ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிநாட்டுக் கொள்கையிலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடு இருக்கிறது? இன்னும் போகப் போக பிஜேபி ஆட்சியின் இலட்சணம் அம்பலத்திற்கு வரும் பொழுது இந்த உண்மையை வாக்காளர்கள் அப்பட்டமாகவே புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படத்தான் போகிறது.

பல மாநிலங்கள், பல இன மக்கள், பல மொழியினர், பல பண்பாடுகளைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமாகும்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் பிஜேபி என்ற இந்து மதவெறி கொண்ட ஓர் ஆட்சி நீடிக்க முடியாது வேண்டுமானால் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; அப்படி விடுபடும் நிலை அதற்கு ஏற்படப் போவதில்லை; காரணம் அதன் லகான், சிண்டு ஆர்.எஸ்.எஸிடம் இருக்கிறது.

அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது, யுனிஃபார்ம் சிவில்கோட், காஷ்மீருக்குரிய சிறப்புத் தகுதிகள் நீக்கம் இவற்றைச் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் சாட்டையைச் சுழற்றும் போதுதான் மோடியின் முகவிலாசம் தெரியப் போகிறது.

இந்த மூன்றிலும் கை வைக்குமானால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை இந்தியாவை ஆளும் மத்திய அரசே ஏற்படுத்தியதாகி விடும். குஜராத் மாநிலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை யினரை வேட்டையாடிய அனுபவம் மோடிக்கு உண்டு என்று சிலர் நினைக்கலாம்.

இன்று வரைகூட அந்தக் கறையை முற்றிலுமாகக் கழுவிக் கொள்ள படாதபாடுதான் பட்டுக் கொண் டுள்ளார் மோடி! இந்த நிலையில் 125 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திட முன் வருமா? அப்படி செய்தால் அதை விட தற்கொலை ஒன்று இருக்க முடியுமா? அடுத்து வரும் காலம் பிஜேபிக்கு சோதனை நிறைந்ததாக இருக்கப் போகிறது.

செய்தி ஊடகங்கள் கார்பரேட்டுகளின் கைகளிலும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலும் இருக்கிற காரணத்தால் அந்தத் துணையோடு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அது மனப்பால் குடிக்கும் ஒரு பரிதாப நிலையே!

Read more: http://viduthalai.in/page-2/89730.html#ixzz3Gseq0MBl

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவுக்கு ஆதரவு... ராஜபக்சேவுக்கு விருது!

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கண்டன அறிக்கை

சென்னை, அக்.22_ ராஜபக் சேவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கக் கூறும் சு.சாமிக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில், நான் காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுச் சிறையில் இருந்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிணையில் வெளிவந்துள்ளார். பெங் களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த ஜெயலலிதாவை, தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் சிலர் விமான நிலையத்தில் வரவேற்ற மரபு மீறல்கள் நடந்துள்ளன.

மத்திய அமைச்சரின் அதனைவிடப் பெருங் கொடுமை யாக, மத்திய இணை அமைச்சராக உள்ள மேனகா காந்தி, ஜெயலலி தாவை வரவேற்றும், ஆறுதல் கூறியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன்னுடைய ஆதரவு அவருக்கு என்றும் உண்டு என்று உறுதி அளித்திருக்கிறார். மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறுவது பல் வேறு சந்தேகங்களுக்கு இடமளிக் கிறது.

ஜெயலலிதாவின் வழக்கு மேல் முறையீட்டுக்குச் செல்ல இருக்கும் வேளையில், உயர் நீதிமன்றங்களில் நீங்கள் விடுதலையாகி வந்துவிடு வீர்கள் என்று ஓர் அமைச்சர் நம் பிக்கை தெரிவிப்பதும், எந்த உதவியும் செய்யத் தயார் என்று கூறுவதும் வெறும் மரபு மீறல் மட்டுமன்று, சட்டத்திற்கும் புறம்பானது. மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் அறிக்கையைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கடுமையாகக் கண்டிக்கிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் முக்கியமானவர்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும், சுப்பிரமணியசாமி, லட்சக்கணக்கான தமிழ் உறவுகளைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேனகா காந்தியின் அறிக்கை லஞ்சம் ஊழலுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால், சுப்பிரமணியசாமியின் அறிக்கை தமிழர்களுக்கும், தமிழின உணர்வுக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானதாக உள்ளது. இருவர் மீதும் பாரதீய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ் வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றால், பா.ஜ.க.வின் நிலைப்பாடே அதுதான் என்று உறு திப்படும். ஒட்டுமொத்த தமிழினத்தின் கண்டனத்திற்கு உள்ளாகும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/89734.html#ixzz3GsfBzMfv

தமிழ் ஓவியா said...

சபாஷ் பொலிவியா!


கடந்த வாரம் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஈ.வோ. மொராஸிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இது உலகிலேயே அதிக நிதி சேமிப்புக் கொண்ட நாடாக ஒளிர்கிறது! பெண்கள் உயர்வு வியக்க வைக்கிறது. நாடாளு மன்றத்தில் 28% செனட்டில் 47% அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்கள் கொடி கட்டி ஆளுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89752.html#ixzz3GsfuNdyq