Search This Blog

9.3.14

உலக மகளிர் நாளில் பெரியார்தம் சிந்தனைகள்


உலகம் முழுவதும் மார்ச்சு 8ஆம் நாள் உலக மகளிர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதனை வெறும் சம்பிர தாயமாக அனுசரிப்பதால் எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை. மக்களைப் பொறுத்தவரையில் இதுபோல நாள்களை வெறும் எந்திரத் தன்மையில்தான் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். எந்த நோக்கத்துக்காக இத்தகு நாள்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது அல்லவா முக்கியம்?

இந்த நாளில் சில மகளிரை அழைத்துப் பாராட்டுவது - முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவளிப்பது, உடைகள் வழங்குவது போன்றவை எல்லாம் போதுமான வையல்ல! இன்று மகளிர்க்கு என்ன பிரச்சினை? அது எங்கிருந்து வெடித்துக் கிளம்புகிறது? இதற்குத் தீர்வு என்ன என்பது போன்ற உரத்த சிந்தனைகள் தேவை.

இதற்காக வேறு இடங்களில் போய்த் தேடிக் கொண்டி ருக்கத் தேவையில்லை; தந்தை பெரியார் சிந்தனைகளை திறந்த மனத்தோடு அசைப் போட்டுப் பார்க்க வேண்டும் மகளிர் உரிமை என்று வரும் போது தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு இன்னொருவர் சிந்தித்தார் என்று சொல்லவே முடியாது.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள் தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (குடிஅரசு 16.5.1935) 

என்று குறிப்பிட்டுள்ளார் தந்தை பெரியார். இதில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும் மிக முக்கியமானது.

பெண்கள் உரிமைக்காக எத்தனையோ சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்தகு சட்டங்களைக் கொண்டு வருவதற்கேகூட பெரும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியிருந்தன என்பதும் உண்மையாகும். அப்படி அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்படும் சட்டங்கள்கூட காகித அளவில் தான் இருக்கின்றனவே தவிர அவை எழுந்து நடமாடுவதில்லை. முதலில் பெண்கள் மத்தியில் எழுச்சி என்பது முக்கியமானது; முதன்மையானது; பெண்கள் என்றாலே அவர்கள் மெல்லியலார்; பலகீனமானவர்கள் என்ற எண்ணத்தின் வேர் பெண்களின் மூளையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் அடிப்பது  என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் என்று சொன்ன பெண்ணுரிமைப் பெரும் போராளியான பெரியார், பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியவை பற்றியும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலியவை களைச் சொல்லிக் கொடுத்து ஓர் ஆண் பிள்ளைகளுக்கு உள்ள பலம். தைரியம், உணர்ச்சி ஆகியவைகளை பெண்களுக்கு உண்டாக்கச் செய்ய வேண்டும் (குடிஅரசு - 26.4.1931) 

என்று வலியுறுத்தியுள்ளார். இதன் அடி வேரில் இருப்பது - பெண்கள் பலகீனமானவர்கள் என்ற மனப் பான்மையைச் சுத்தமாகத் துடைத்து எறிவதுதான்.

அச்சம். மடம், நாணம், பயிர்ப்பு தான் பெண்களுக் கான அணிகலன் என்று சொல்லிச் சொல்லி, அப்படி இருந்தால் தான் அவர்கள் பெருமைக்கு உரியவர்கள் பண்பாட்டுக்குரியவர்கள், ஒழுக்கம் உடையவர்கள் என்ற போதையை ஏற்றி ஏற்றி, அந்த வட்டத்தைத் தாண்டி அவர்கள் வெளியேறவே முடியாதவர்களான மன நோயாளிகளாக ஆக்கப்பட்டனர் என்பதுதானே உண்மை.

பயிர்ப்பு என்ற சொல்லுக்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி என்ன பொருள் கூறுகிறது? அசுத்தம், மகடூஉக் குணநான்கி னொன்று அருவருப்பு என்று பொருள் கூறுகிறது. பெண்ணென்றால் அசுத்தமாக இருக்க வேண்டும்; அருவருப்பாக இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதை இங்கன்றி வேறு எங்கு போய்த்தான் தேட முடியும்?

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமண மேடைகளைப் பெண்கள் உரிமை முழக்கத்திற்கான களமாகப் பயன்படுத்திக் கொண்டார். சுயமரியாதைத் திருமண மேடைகளில் அவர் எடுத்து வைத்த கருத்துகள் யோசனைகள் பிற்காலத்தில் மத்திய மாநில அரசுகளின் சட்டங்களாகவே இயற்றப்பட்டுள்ளன என்பது சாதாரண மானதல்ல!

1928இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்தியச் சீர்திருத்தக்காரர்கள்  மாநாட்டிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப் பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் எத்தகைய தொலைநோக்கு!

தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். மத்திய அரசும் இப்பொழுது அத்தகைய சட்டமும் இயற்றியுள்ளது.

பெண் கல்வி என்பது முதன்மையானது, பெண்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது; உத்தியோகங்களில் பெண்களின் எண்ணிக்கையும் பெருகியே வருகிறது. பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது.

எல்லாம் சரிதான் இன்னும் பெண்கள் ஆண்களின் அடக்கு முறைக்கு ஆளாகிறார்களே - திருமணம் என்று வந்து விட்டால் பெண்ணின் தரப்பிலிருந்து வரதட்சணை கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறதே - பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களே - இவையெல்லாம் இப்பொழுது பெண்களின் முன்னிற்கும் மிக முக்கியப் பிரச்சினைகளாக எழுந்து நிற்கின்றன.

இதற்குத் தீர்வுதான் என்ன? கல்வி முறையில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டாக வேண்டும். ஆண் - பெண் பேதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்ற மனப்பான்மை சிறு வயதிலேயே வளர்த்து எடுக்கப்பட வேண்டும். 

பெயர்களிலும் உடையிலும்கூட ஆண் - பெண்கள் பேதம் தேவையில்லை என்று தந்தை பெரியார் கூறும் கூர்மையான ஆழமான கருத்தின் அவசியம் உணரப்பட வேண்டும். ஒரு கட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னதைப் போலவே குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் தற்காப்புக்காகத் துப்பாக்கி கொடுப்பதில் தவறு இல்லை.

மகளிர் காவல் நிலையமாக இருந்தாலும் எந்த அளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டன என்பது மிக முக்கிய வினாவாகும். பறக்கும் படை ஒன்று மாநில அரசால் உருவாக்கப்பட்டு, பெண்களே முற்றிலும் அதில் இடம் பெறச் செய்து, அந்தந்த இடத்திலேயே குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கும்  அளவுக்கு ஏற்பாடுகள் செய்வது கூடத் தவறு இல்லை. உலக மகளிர் நாளில் பெரியார் வழி உரத்த சிந்தனைகள் வெடித்துக் கிளம்பட்டும்!
                   -------------------------------"விடுதலை” தலையங்கம் 8-3-2014
Read more: http://viduthalai.in/page-2/76644.html#ixzz2vPzpMBev

114 comments:

தமிழ் ஓவியா said...


நம் அன்னை வாழியவே!

அன்னை பிறந்தது
மார்ச்சுப் பத்து
சின்ன வயதில் - அவரைப்
பிடித்ததோ பெரியார் பித்து!
இறப்புக் கோட்டினைத்
தொடும் வரையிலும்
அவரைவிட்டுக்
குறையவில்லை
அந்தச் சத்து!

அம்மா என்று அய்யா
அவர்தம் அம்மாவை
அழைத்ததை நாம்
கேட்டோமில்லை
அம்மா அம்மா என்று
ஆயிரம் முறை
நாளொன்றுக்கு - நம்
அம்மாவை அய்யா
அழைத்ததைக்
கேட்டவர்கள் நாம்!
இந்தப் பேறு
இந்தத் தாய்க்குக்
கிடைத்ததைவிட
வேறு என்ன வேண்டும்?

தந்தையென்று தமிழர்
அழைத்தனர் அய்யாவை!
அந்த அய்யாவோ
அம்மா என்று அழைத்தார்
அன்னை மணியம்மையை!
உண்மை தானே!

கூப்பிட்டால் வந்துவிடுவார்
கொடுத்தால்
சாப்பிட்டு விடுவார்!
இந்த இரண்டிலும்
இவர் குழந்தைதான்
என்று எவ்வளவு
அழகாக அய்யாவைப்
படம் பிடித்தார்
இந்த அன்னையார்!

அடம் பிடித்தாலும்
அந்தக் குழந்தையைக்
குளிப்பாட்டியதும்
ஆடை உடுத்தியதும்
அந்த குழந்தையின் நாக்கு
ருசிக்கு அலைந்தாலும்
அதனை அதட்டி அடக்கி
உருட்டி மிரட்டி
ஒத்துக் கொள்ளும்
உணவை மட்டுமே ஊட்டி
அந்தக் குழந்தையின்
உயிர் என்னும் கிளி
கூட்டை விட்டுப்
பறக்காது பாதுகாத்த
தாய்ப் பறவையன்றோ -
அந்தத் தகத் தகாய
தாய்க் காவியம்! ஆனாலும்
தொண்ணூறைத்
தாண்டி - அந்தத்
தொண்டுப் பழத்தைத்
தோள் கொடுத்துத்
தாங்கிய தாயே!
உன் உடல் நலத்தை
ஏன் தொலைத்தாய்?
அறுபதைத் தொடுமுன்பே
அறுபட்டுப்
பறந்தது ஏன்?

நீங்கள் ஆளாக்கிய
அருமை மகன்
காப்பான் நாட்டை
கழகத்தை என்ற தைரியத்தாலா?
அய்யா போட்ட கணக்கும்
அம்மா வைத்த
கணிப்பும்
துல்லியமானதே!
துல்லியமானதே!

எண்பத்தொன்றிலும்
எண்ணூறு மைல் வேகத்தில்
ஓடுது ஓடுது
இந்த வண்டி!
இறப்பையும் முத்தமிட
இலட்சோப லட்ச
லட்சிய வீரர்கள்
தோள் மலைதூக்கி
எழுந்து விட்டார்!

அலாரம் அடித்து
அடித்து
எங்களை எழுப்பும்
மணி அம்மை!
எங்கள்
குருதியோட்டக்
காற்றில் கலந்தார்!
வீரமுறுக்கேற்ற
இன்னொரு மணியையும்
எங்களுக்கு
அளித்துச் சென்றார்
என்பதே உண்மை!

இலக்கை அடையாது
நில்லாது இந்தவண்டி!
எல்லாம் அய்யா
அம்மாபோட்ட
அஸ்திவாரம் - அச்சாணி!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/76583.html#ixzz2vQ1Ewkar

தமிழ் ஓவியா said...


மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்! புகழ் பெற்ற குடிமக்கள் அறிக்கை

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வையும் அதன் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியையும் படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என வாக்காளர்களைப் பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக் கூடாது எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கை யில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும்.

எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத் திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு:

அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச் சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய் வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).- சமரசம் 1-15 மார்ச் 2014

Read more: http://viduthalai.in/page2/76584.html#ixzz2vQ1SSgfR

தமிழ் ஓவியா said...


பற்களை பராமரிப்பது சுலபம்

ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக் காட்டும் பற்களை பாதுகாப்பது அவசி யம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்போது தான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை, மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.

பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்கு களை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும் பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர் டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட் களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவை தவிர ஆண்டிற்கு ஒரு முறை பற்களை பல் மருத்துவரின் ஆலோசனைப்படி சுத்தம் செய்வது அவசியம்.

பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சினை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரல் பிரச்சினை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ் வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார் களோ, அவ்வளவு துர்நாற்றம் வீசாது. பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.

சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும். இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின் நிறம் மாறும் என்பதால் எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம் என்று சொல்லும் மருத்துவர் தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.

செய்யக்கூடியவை: தினமும் காலை யும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப்பொருட்களை 'பிளாஸ்' கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம். பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவு களையும் சாப்பிடுவது நல்லது.

எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப் பிரச் சினை இருந்தால் அதற்கு பல் சொத்தை யும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை: கடினமான உணவுப்பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக்கூடாது. கடைவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவுகளை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.

பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ் டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.

தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை பிளாஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப் பளிப்பது அவசியம்.

Read more: http://viduthalai.in/page3/76588.html#ixzz2vQ21OpQZ

தமிழ் ஓவியா said...


சொன்னார்கள்மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியின் விளைவே. - கிரீட்டா பாமர்

உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி உன் சிந்தனையின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது.
- மார்க்கஸ் அருலியஸ்

எவனிடத்தில் நினைப்பதற்குத் தவறில்லையோ, மறப்பதற்குக் காயங்கள் இல்லையோ, யாருடைய தூய இதயத்தில் மற்றவர்களைப் பற்றிய கெட்ட எண்ணம் வேர் பிடித்து வளர இடமில்லையோ அவன் இன்ப வாழ்வுக்கு உரியவனாவான்.
- ஜேம்ஸ் அலன்

மனித இனத்தின் மாற்றம்பற்றி ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்; யாருமே தன்னுடைய மாற்றம் பற்றி நினைப்பதில்லை. - டால்ஸ்டாய்

சொல்வதை இரண்டு முறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, மனிதர்கள் இரண்டு கண்களோடும், ஒரு நாக்கோடும் பிறக்கிறார்கள். - சார்லஸ் கோல்டன்

வெறுப்பை வெறுப்பினால் நிறுத்த முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும். இதுதான் நிலைத்த விதி. - புத்தர்

அமைதியாக வைக்கப்படும் எல்லா உண்மைகளும் விஷமாக மாறிவிடும். - நீட்சே

சீட்டாட்டத்தில் மிகப் பெரிய திறமை, எப்பொழுது சீட்டைக் கழிப்பது என்பதைத் தெரிவதுதான். - பால்தசார் கிரேசியன்

நயநாகரிகச் செயல் என்பது விலையே பெறாது. இருந்தும் மற்ற தேவைகளைவிட அதை பெற்றிருப்ப வர்களுக்கு அது மிகப் பெரிய பங்கை அளிக்கிறது.

ஒரு இடுகாட்டைச் சுற்றி வேலி இருப்பது முட்டாள்தனமானது. அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாது, வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்ப மாட்டார்கள். - ஆர்தர் பிரிஸ்பேனே

தனிமை நம்மை நமக்கே கடுமை யானவர்களாக்குகிறது, மற்றவர்களிடம் நம்மை மென்மையானவர்களாக்கு கிறது. - நீட்சே

நேர்மையானவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும் இருங்கள், கடுமையான உழைப்பு பிரார்த்தனைக்குச் சமமானது. - லால்பகதூர் சாஸ்திரி

அறிவுத் தேவையைவிட, கவன மின்மை அதிகத் தீங்கைச் செய்கிறது.

- பிராங்ளின்

Read more: http://viduthalai.in/page4/76589.html#ixzz2vQ2K7AVQ

தமிழ் ஓவியா said...


இதுதான் ஆர்.எஸ்..எஸின் ஒழுக்கம்!


பெண்ணுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த முன்னாள் பாரதிய ஜனதா அமைச்சர் தற்கொலை முயற்சி. ஆர் எஸ் எஸ் காரன் திருமணம் செய்ய மாட்டான் என்று கூறி திருமணப்பதிவை தவிர்த்தார். பெண்ணுடன் வைத்திருந்த மறைமுக தொடர்பு அம்பலமானதால் கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் எஸ்.ஏ ராமதாஸ் மைசூரிலுள்ள விருந்தினர் மாளிகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்ட தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 54 வயதான ராமதாசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தனது பதவிக்காலத்தில் மைசூரில் உள்ள ஒரு அரசு அதிகாரியிடம் திருமண ஆசை காட்டி கள்ளத்தனமாக தாலிகட்டி வாழ்ந் துள்ளார். அந்தப்பெண் தனது திரும ணத்தை பதிவு செய்யக்கூறிய போது பணம் கொடுத்து தன்னை மறந்து விடும் படி கூறினார். இது குறித்து அந்த விதவைப்பெண் பிரேம் குமாரி(பெங்களூரில்) பத்திரிகை யாளர் சந்திப்பில் தனக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையேயான உறவு பற்றி கூறினார். மேலும் அவர்கள் இடையே நடந்த போன் உரையாடல்கள் போன்ற வற்றையும் சான்றாக முன்வைத்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்த மறுநாள் முன்னாள் அமைச்சர் ராமதாஸ் தற் கொலைக்கு முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு ஒரு ஆங்கில நாளிதழுக்கு அந்தப் பெண் (பிரேம்குமாரி) மனநிலை சரியில் லாதவர் என்றும் அந்தப்பெண் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.

இது மாத்திரமே எனக்குத்தெரியும் மற்றபடி அவர் கொடுக் கும் சான்றுகள் அனைத்தும் போலி யானவை என்று கூறினார். ராமதாசுடன் பழகிய விதவைப் பெண் ணான பிரேம்குமாரி (30) இதுபற்றி கூறு கையில், ராமதாசை எனக்கு அய்ந்து ஆண்டுகளாக தெரியும். கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தவர் கடந்த நவம்பர் மாதம் மைசூரில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மங்கள் சூத்திரம்(தாலி) கட்டினார். அதன் பிறகு நான் திருமணத்தை பதிவு செய் வோம் என்று கூறிய போது அது என்னால் முடியாது ஏனென் றால் நான் ஆர் எஸ் எஸ் காரன், என்று கூறிவிட்டார். அதன் பிறகு என்னை விலக்கி வைக்க முயற்சித்தார்.

நான் பல முறை அவரிடம் திருமணம் குறித்து வற் புறுத்தினேன். இறுதியாக அவர் ஒரு கோடியே 75 லட்சம் தருவதாகவும் தன்னை விட்டு விலகி விடுமாறும் கூறினார். மேலும் தன்னுடன் எடுத்த புகைப் படம் வீடியோ அனைத்தையும் அழித்து விடுமாறும் கூறினார். மேலும் உரையா டல்கள் அடங்கிய வீடியோ காட்சிகளை ஊடகங்களில் வெளியிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்றும், ஊடகங்களில் பேசுவதை நிறுத்தாவிட்டால் விஷம் குடித்து விடுவதாகவும் செல்போனில் மிரட்டினார் என்றார். இதற்கு முன்னதாக நான் பணிபுரியும் அரசு அலுவலக உயரதிகாரி மூலமாகவும் என்னை மிரட் டினார் என்றும் தன்னுடைய பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறினார். கர்நாடகாவில் முதல் பா.ஜனதா அரசின் மருத்துவத் துறை அமைச்சராக பதவி வகித்த ராமதாஸ், 2013 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்விய டைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பெண்களுக்கான ஆசாரே சமூக சேவை மய்யம் ஒன்றை மைசூர் நகரில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/76590.html#ixzz2vQ2XNz2E

தமிழ் ஓவியா said...


இவர்கள் பார்ப்பனர்கள்!


சமுதாயத் துறையிலும், அரசியல் துறையிலும், மொழித் துறையிலும், பண்பாட்டுக் கலாச்சாரத் துறையிலும் பார்ப்பனர்தம் அட்டகாசமும் கொடுமை களுமே ஒரு காலத்தில் மிகுந்திருந்தது கண்கூடு. சாகக் கிடந்த சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டு முகத்தான் ஆரியப் பார்ப்பனப் புரட்டுப் புல்லர்கள் தமிழ் மொழிக்கு இழைத்த தீங்கினையும், கேட்டினையும், கொடுமைகளையும், தமிழ்க் கொள்கை களைக் களவாடிச் சென்ற கயமைமிகு பேடித்தனத்தையும் கண்டுணர்ந்த அறிஞர் கள் தந்தை பெரியாரின் தன்னேரில்லாப் பேருழைப்பின் விளைவால் கிளர்ந்தெ ழுந்தனர்.

தந்தை பெரியார் சொன்னால் குதிக் கின்றீர். இவர்கள் கூற்றுக்கு என்ன சொல்கிறீர்?

ஆம்! அவர்கள்தம் உள்ளத்துப் பொங் கிய உணர்ச்சி மிகு கருத்துக்களை இதோ கேளுங்கள்...

.... எனினும், அவர்தம் செல்வாக்கின் பயனாய் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் மொழி பிறந்ததென்றும், தமிழ்மொழியி லுள்ள பல சொற்கள் ஆரிய மொழியின் சொற்களிலுள்ள முதனிலைகளைக் கொண்டே பிறந்தனவென்றும், தமிழர் ஆரியரிடமிருந்தே நாகரிகம் கடவுட் கொள்கைகள் பிற எல்லாம் கடன் வாங்கிக் கொண்டனர் என்றும் பிறவாறும் கூறித் தமிழைத் தனித் தியங்க வல்ல மொழி என்பதைத் தமிழ்மொழி வல்லாரும் மறந்து விடும்படிச் செய்து விட்டனர்.

மொ.அ.துரை அரங்கசாமி எழுதிய பண்டைத் தமிழ்நெறி என்னும் நூலில் பக்கம்.3

இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத் தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர் புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற் குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப் படியோ செய்து வைப்பர்.

மறைமலை அடிகள் எழுதிய வேளாளர் நாகரிகம் என்னும் நூலில் பக்கம் 21

பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ்மொழி குன்றுதற்கும் தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் காரணமாயிருந் தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பிராமண ராலும், 14ஆம் நூற்றாண்டில் மகமதியரா லும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல் களைச் சிதைவுபடுத்தினர்.

தமிழ் நூல்களை எடுத்து சமஸ் கிருதத்தில் மொழி பெயர்த்து பல கேடு செய்திருக்கின்றனர்.

ந.சி. கந்தையா (பிள்ளை) எழுதிய தமிழர் சரித்திரம் என்னும் நூலில் பக்கம் 221-222.

தமிழரசர்களிடம் அமைச்சர்களென வும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

வி.கோ. சூரிய நாராயண சாஸ்த்திரி என்னும் பரிதிமால் கலைஞர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் பக்கம் 27.

திராவிட மக்கள் பொருள்களுக்கும், கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர் கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச் சொற்களல்ல. ஆராய்ச்சியில் சமஸ்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை என்று புலப்படுதல் கூடும்.

ந.சி. கந்தையா (பிள்ளை) எழுதிய தமிழ் இந்தியா என்னும் நூலில் பக்கம் 39

- தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன்

Read more: http://viduthalai.in/page4/76591.html#ixzz2vQ2h3ZZE

தமிழ் ஓவியா said...


மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு புரட்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் வசிப்பவர் கவுரவ் சிறீவாஸ்தவ், தனியார் அலுவலகத் தில் பணிபுரிந்து பிறகு சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வந்தவர். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு கை கால் மற்றும் இடுப்பிற்கு கீழ் உள்ள அனைத்துப் பாகங்களும் செயலிழந்து சக்கர நாற்கா லியே வாழ்க்கையாகிப்போனது. தன்னு டைய எந்த வாழ்க்கையில் இனி திரு மணமே நடக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்த சிறீவாஸ்தவாவின் வாழ்க்கையில் தனியார் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகவும் பிஸியோ தெராபிஸ்டாகவும் பணிபுரியும் சவிதா என் பவரின் மூலம் வாழ்க்கை வசந்தமானது. சிறீவாஸ்தவாவிற்கு பிஸியோ தெராபி பயிற்சிகொடுக்க நல்ல ஒரு நபரைத் தேடிகொண்டிருந்த போது சவிதா அறிமுக மானார். ஆரம்பத்தில் நட்பு முறையில் பழகிய சவிதா இறுதியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு சிறீவாஸ்தவாவுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து மணமகன் கூறும் போது 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் என்னுடைய முதுகெலும்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு என்னுடைய முடமான வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இருக்காது என்ற முடிவிலேயே நான் வாழ்ந்து வந்தேன். சவிதாவின் அன்பை முதலில் நான் காதலாக நினைக்கவில்லை, நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந் தோம். திடீரென ஒருநாள் சவிதா தன்னு டைய காதலை என்னிடம் தெரிவித்தார். நான் முதலில் அவருக்கு என்னுடைய நிலையை சொல்லி காதலை தவிர்த்து வந்தேன் ஆனால் அவர் உறுதியாக இருந்தார். எங்கள் வீட்டில் வந்து தன்னுடைய முடிவை தெரிவிக்கும் வரை சென்றுவிட்டார். அதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது அவர்கள் எனது ஊனம் மற்றும் எங்கள் சாதி என பல்வேறு காரணங்களை கூறி எங்கள் காதலை ஏற்க வில்லை. சவிதாவும் தன்னுடைய காதலில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்த 12 வருடங்களில் நானே சில முறை அவரிடம் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் உங்களு டைய வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர் கள் என்று கூட கூறிவிட்டேன். ஆனால் அவர் உறுதியாக இருந்து இன்று அனைவரின் ஒப்புதலுடன் என் மனைவியாக இருக்கிறார் என்றார். சவிதா இந்த திருமணம் பற்றி கூறும் போது ஆரம்பத்தில் ஒரு செவிலியராகத்தான் நான் அவருக்கு சேவை செய்து வந்தேன். ஆனால் அவருடன் பழகப்பழக இவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு துணை வேண் டும் அதுவும் அவரை நன்கு புரிந்து வாழும் ஒரு துணை அது இல்லாமல் அவரால் ஒரு நாளைக்கூட கழிப்பது கடினம். இந்த ஒரு மனிதாபமான மனநிலை எனக்குள் அவர் மீதான காதலை உரு வாக்கிவிட்டது. ஆரம்பத்தில் பல கேள் விகள் எனக்குள்ளே கேட்டுக்கொண் டேன். என்னுடைய பல நண்பர்களின் வாழ்க்கை அனைத்தும் என் கண் முன் வந்தது. அதே நேரத்தில் சிறீவாஸ்தவா வின் முகமும் என் மனக்கண்ணில் தோன் றியது. இறுதியில் நான் சிறீவாஸ்தவா வையே வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முடிவே என் மனதில் நின்றது. அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை, எனது வீட்டில் இது பற்றி கூறிய உடனேயே பலத்த எதிர்ப்பு உருவாகியது, அவர்கள் போட்ட தடைகள் ஒன்று இரண்டல்ல முதலில் அவரின் ஊனம் பற்றி கூறி தடைசெய்தார்கள். அடுத்து சாதி அவர்கள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி, அதன் பிறகு சாதகம் சிறீவாஸ்த வாவின் சாதகத்தில் செவ்வாய் தோசம். இப்படி பல விதங்களில் தடைகளா கவே இருந்தது, 12 வருடங்கள் காத்திருந் தோம், இறுதியில் எங்கள் வீட்டாரின் அனுமதியும் கிடைத்தது, இருப்பினும் எனக்கு எங்கள் வீட்டாரின் மீது நம்பிக் கையில்லை ஆகையால் அவர்கள் சம் மதம் தெரிவித்த மறுநாளே 17 பிப்ரவரி இந்தூர் நீதிமன்றத்தில் அவரது மற்றும் எனது நண்பர்கள் சூழ திருமணம் செய்து பதிவு செய்துகொண்டோம். அதன் பிறகு இன்று (22.02.14) அன்று வீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டோம் என்றார். இந்த திருமணம் குறித்து மணப் பெண்ணின் தந்தை கூறும்போது எனது மகளின் தியாக உணர்வை நான் மதிக் கிறேன், நாங்கள் அவளுக்காகவும் அவளின் நல்ல எதிர்காலத்திற்காகவும் தான் சிறீவாஸ்தவாவிற்கான திருமணத் தைத் தடுத்து வந்தோம், ஆனால் அவளின் உறுதியான முடிவின் முன்பு எங்களின் வறட்டு கவுரவம் தோற்று விட்டது. அவள் நல்ல வாழ்க்கையை அமைத்துவிட்டாள் என்ற மன நிம்மதி இப்போது ஏற்பட்டு விட்டது என்றார்.

Read more: http://viduthalai.in/page5/76592.html#ixzz2vQ2xSxX5

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் திரட்டு

இன வாழ்வு

நான் பேசுவதற்கு இனவாழ்வு என்கிற தலைப்பைக் கொடுத்திருக் கிறீர்கள். தமிழினத்தைப் பற்றிப் பேசுவது எனக்கு ஆர்வம் தரும் இலட்சியமாக இருக்கிறது;
நாட்டில் அதற்குத் தேவையும் இருக்கிறது. நமது தமிழினம் இன்றைக்குத் தாழ்வுற்றுக் கிடக்கிறது. இந்நேரத்தில் தமிழினத்தின் மேன்மைக்காகப் பாடு பட்ட பெருமக்களின் உழைப்பையெல் லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1943 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, மும்மொழி வல்லுநர் மறைமலை அடிகளார், தமிழும் தமிழரும் என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்போது நான் அங்கு மாணவனாக இருந்தேன் மறை மலை அடிகளாரிடம் அங்கிருந்த பேராசிரி யர் சிலர் கேட்டனர். அடிகளார் அவர்களே,

தாங்கள் இங்கே பெரியபுராணத்தைப் பற்றிப் பேசலாமே; சங்கத்தமிழ் இலக் கியத்தின் சிறப்புகளைப்பற்றி எல்லாம் பேசலாமே! என்று.

அதற்கு மறைமலை அடிகளார் சொன் னார். இது போன்ற இலக்கியங்களைப் பற்றி எல்லாம் பேசுவதற்குப் புலவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தமிழரைப் பற்றிப் பேசுவதற்குத்தான் பலர் இல்லை. எனவேதான் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் என்றார்.

தமிழன் என்னும் உணர்வில்லாமை!

தமிழ்மொழி - தமிழ் இனத்தின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக்காட்டித் தமிழனுடைய பெருமைகளைப்பற்றி எத் தனையோ அறிஞர்கள் பல மேடைகளில் உரையாற்றி இருக்கிறார்கள். தமிழ் மொழி வல்லுநர் பா.வே.மாணிக்க நாயக்கர், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள், சட்ட விரிவுரையாளர் என்று பாராட் டுப்பெற்ற கா.சுப்பிரமணியபிள்ளை, மறைமலை அடிகளார், நாவலர் சோம சுந்தர பாரதியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க., டாக்டர் அ.சிதம்பரநாதனார், டாக்டர் மு.வ., டாக்டர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், டாக்டர் மா.இராசமாணிக்கனார் முதலி யோர் தமது வாழ்நாள் எல்லாம் உரை யாற்றி இருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர்களுடைய உழைப் புக்குப் பின்னரும், தமிழ் மொழியின் உரிமை வளர்ந்துள்ளதா? தமிழினம் உயர்ந் துள்ளதா? என்பதை எண்ணிப் பார்க்கும் போது நமது உள்ளம் கவல்கின்றது. (சிங்க இளைஞனே சிலிர்த்து எழு! இனமானப்

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் பெருந்தகை டாக்டர் க.அன்பழகனார், எம்.ஏ. அவர்களின் நூலில், பக்கம் 114)

தமிழ் அண்ணல் மறுக்கிறார்

ஒரு வெறுப்புணர்ச்சியில், கற்பனை யாக நாகசாமி எழுதுகிறார். அவருடைய கூற்றுகளில் சில வருமாறு:

தமிழ் தனித்த நிலையில் வளர்ந்து செவ்வியல் தகுதிகளை அடையவில்லை.

காலந்தோறும் வடமொழி, கிரந்தம் ஆகிய இரு மொழிகளிலும் இருந்து படிப் படியாகக் கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் தகுதியைப் பெற்றது.

காலந்தோறும் வடமொழி, கிரந்தம் ஆகிய இரு மொழிகளிலும் இருந்து, படிப்படியாகக் கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் தகுதியைப் பெற்றது.

இந்திய மாநில மொழிகளைப் போல, தமிழும் ஒரு மாநில, வட்டார மொழியே. ஆனால் இது கடன் பெறுவதில் முந்திக் கொண்டது. விரைந்து கடன் பெற்றதுடன் அவ்வாறு பெற்றதைத் தனதாக்கிக் கொண் டது. சங்கப் பாடல்கள் அகத்திணை, புறத் திணைப் பாடல்கள் எல்லாம் தமிழ் மண் ணில் கிளைத்து, வளர்ந்தவை அல்ல.

அவை நாட்டியம், நடனம் என ஆடல் பாடல்களுக்கு எனக் கற்பனையாக எழுதப்பட்டவை. கலித்தொகை முழு வதும் நடனப் பாடல்களே. தமிழில் அகக் கூத்து, புறக்கூத்து என வரும். இக்கூத்து ஆடல்களுக்குப் பாடல்கள் வேண்டும்.

இவ்வாறு கூத்து, ஆடல்களுக்கு என எழுதப்பட்ட கற்பனைகளே அகம், புறம் எனப்பட்டன. ஐந்து நிலப்பாகுபாடு என்பது முற்றிலும் கற்பனை.

நாடகம், நாட்டியத்தில் திரைச் சீலை களில், அவ்வப்பாடலுக்கேற்ற ஆடலின் சுவையை மிகுவிக்கும் வகையில், பின்னணி வரையப்படும்.

அவ்வாறு அகப்பாடல்களுக்குச் சுவையை மிகுவிக்க, பின்னணியாகப் புனையப்பட்டவையே நிலப்பாகுபாடுகள்.

ஒரு நாவலை, சிறு கதையைக் கற் பனையாகக் கதைகட்டி எழுதுவது போலவே, பாடப்பட்டவை, செவ்வியல் சார்ந்த அகப்புறப்பாடல்கள்.


தமிழ் ஓவியா said...

அகக்கூத்து, புறக்கூத்து என்று சிலப் பதிகார அரும்பத உரையாசிரியரும் அடி யார்க்கு நல்லாரும் திரும்பத் திரும்பக்கூறுவர். அவ்வாறு வளர்ந்தவையே அகத்திணையும் புறத்திணையும்.

ஜிலீவீ ரீரீமீ லீணீ லீமீ ணீஸீரீணீனீ நீறீணீவீயீவீநீணீவீஷீஸீ வீஸீஷீ கிளீணீனீ ணீஸீபீ ஜீக்ஷீணீனீ ஷ்ணீ னீணீவீஸீறீஹ் வீஸீமீஸீபீமீபீ யீஷீக்ஷீ பீணீஸீநீமீ.
கி நீலீ ஷீஸீரீ ணீக்ஷீமீ ணீபீணீஜீமீபீ ணீ பீணீஸீநீமீ. லீமீஹ் ஸீமீமீபீ ஸீஷீ தீமீ மீனீதீமீறீறீவீலீமீபீ ணீஸீபீ ணீக்ஷீமீ ஸீஷீ ணீ க்ஷீமீநீவீணீவீஷீஸீ ஷீயீ யீணீநீஷீக்ஷீவீணீறீ மீஸ்மீஸீ, தீ னீ தீமீ நீஷீஸீவீபீமீக்ஷீமீபீ நீக்ஷீமீணீவீஸ்மீ ஜீஷீமீனீ ணீஸீபீ ஸீஷீ லீவீஷீக்ஷீவீநீணீறீ க்ஷீமீஸீபீமீக்ஷீவீஸீரீ.
அய்ந்திணை என்பது மிகப்பெரிய திரைச் சீலையாகப் பயன்பட்டதாம்...
நாகசாமி நூலில் எழுதியிருப்பதைப் படித்து வயிற்றெரிச்சலுடன்.

(திருமிகு முனைவர் மூதறிஞர் தமிழண்ணல் நூலில் 42ஆம் பக்கம்)

தேவர்கள் என்றால்...

தேவர்கள் என்றால் மேலான சக்தியுள் ளவர்கள் கடவுள்கள் - தேவர்கள் என்றால், பார்ப்பான் என்று பொருள்.

பார்ப்பானும் கடவுளும் ஒன்று.

அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து வந்துள்ளார், மகா விஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந் தார் என்றால் அசுரர்களாகிய தமிழர்கள், தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக்கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதா ரம்தான் இராமன், கிருஷ்ணன், எல்லாம்!

அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான் என்கிறார் இராஜாஜி!

மிகத்துணிவோடு மனுதருமம் நிலைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்த மான சங்கங்கள், சாதிச் சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும் நம் முடைய மக்களுக்கு உழைக்கும் படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல் லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன் படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லு கிறார், நான்தான் வேதகால இராமன். மனு தர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை என்று!

அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட் டுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் பார்ப்பனர்கள். அங்குப் போனால் ஏதா வது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாக கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால், நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப்பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும்.

அந்தப் பக்கம் ராஜாஜி, இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்குப் போனாலும் போகிற பக்கமெல் லாம் என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார்.

நானும் அதைப்பற்றித்தான் பேசுகி றேன். என்னுடைய கருத்து நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களு டைய கருத்து மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது

இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக் காகப் பாடுபடுகிறார், யாருடைய முன் னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

தமிழ் ஓவியா said...


நம்முடைய மக்கள் சமுதாயத் துறையி லும். அறிவுத் துறையிலும் மட்டுமல் லாது, மதத்துறையிலும், கடவுள் துறையி லும், மனிதத்தன்மை பெற வேண்டும்
இந்தச் சி.ஆர். (ராஜாஜி) மட்டுமல்ல பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்துமாக்கள், இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுபவர்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள். அல்லது பாடுபடுபவர் கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள்.

(பெரியார் களஞ்சியம் தொகுதி 14, பக்கம் 137)

ஆகஸ்டுப் போராட்டம்

மத்திய அரசு தென்னக ரயில்வே நிலை யங்களில், இந்தி எழுத்தில் பெயர்களை எழுதத் தலைப்பட்டபோது இந்தி எழுத்து (பெயர்) அழிப்புப் போராட்டம் தொடங் கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு திங்களில் நடந்த அந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் ஆகப் பல்லாயிரக்கணக்கில் ஈடுபட்டனர்.

அப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியத்தைக் குறித்துத் தந்தை பெரியார் 5.8.54-இல் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் இந்தப் பகுதி அவரது குமுறும் உள்ளத்தை நமக்கு உணர்த்தும். ஆகஸ்டு கிளர்ச்சியில் உன் பங்கென்ன?

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஸ்டெஷ னில் (ரயில்வே நிலையத்தில்) உள்ள இந்திப் பெயரை அழிக்க நீ தெரிந்தெடுத் திருக்கிறாய்? நீ திராவிடன் அல்லது சென்னை ராஜ்யத்தான் அல்லது தமிழ்நாட் டான் என்பதைச் சந்தேகமற உணரு கிறாயா? உன் நாட்டு மொழி (தேசமொழி) தமிழ் என்பதையும், நீ தமிழன் என்பதை யும் உணருகிறாயா? அப்படியானால் உன் கடமை என்ன?

இந்தி மெல்ல, மெல்ல உன் நாட்டில் உன் படுக்கை அறையில் புகுந்து கொண் டது. இந்தி படிக்காதவனுக்குப் பாஸ் (தேர்வு) இல்லை.

இந்தி படிக்காதவனுக்கு உத்தியோகம் (வேலை) இல்லை. இந்தி தெரியாதவனுக் குப் பார்லிமெண்டில் இடம் இல்லை (மதிப்பு இல்லை) தெரியாவிட்டால் வெளியே போ! என்கிற நிலை வந்து விட்டது. இந்த நிலையில் உன் கடமை என்ன?

உன் நாட்டிற்கு, உன் மொழிக்குத் துரோகம் செய்து, வடவனுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பது திராவிடன் பண்பா? இல்லையென்றால், இந்தி ஒழிக என்று (முழங்கியவாறு) தாரில் புருசை நனைத்து இந்திப் பெயரை அழி! அழி! அழி!

அவ்வாறு இந்திப் பெயர் (எழுத்து) அழிப்பில் ஈடுபடும் தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களல்லவா?

அவ்வாறு நிறுத்தப்பட்டவர்கள் - எப்படிப்பட்ட வாக்குமூலத்தைத் தர வேண்டும் என்றும் பெரியார் அறிவித் தார்கள். அந்த வாக்குமூலம் இது: நான் குற்றவாளியல்ல திராவிட நாட்டில் (தென் னாடு) இந்தியை அரசியல் மொழியா கவோ, தேசிய மொழியாகவோ, உத்தி யோக மொழியாகவோ, யூனியன் சர்க்கார் புகுத்துவதையும் நடைமுறையில் கொண்டு வருவதையும் திராவிட (தமிழ்) மக்களாகிய நாங்கள் விரும்பவில்லை என்பதையும் எங்கள் விருப்பத்துக்கு.

(பெரியார் களஞ்சியம் தொகுதி 14, பக்கம் 137)

க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/76595.html#ixzz2vQ3Woxp8

தமிழ் ஓவியா said...


இன்னுமா மதி மயக்கம்?

1. ஆரியர் சூழ்ச்சி: ஆரியர்கள் என் றைக்கு இந்த நாட்டில் காலெடுத்து வைத் தார்களோ, அன்று முதல் தமிழையும் - தமிழரின் கலையையும், கலாச்சாரத்தை யும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி கடந்த 2500 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- மறைமலையடிகள் (இந்தி எதிர்ப்பு மாநாடு 17.7.1948).

2. இந்து மதம்: இந்து தர்மத்தையும் மதத்தையும் ஒதுக்கித் தள்ள வேண்டும்; இந்து மதத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அவை தாழ்த்தப்பட்டவர் களை பணக்காரர்களின் அடிமைகளாக் குகின்றன. இந்து மதமே ஓர் பிணம் போன்றது.
- பசவலிங்கப்பா (கர்நாடகம்)

3. யார் குரங்குகள்? தென் இந்தியாவில் இருந்த மக்களே தாம் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- சுவாமி விவேகானந்தர், சொற்பொழிவு - இராமாயணம் என்னும் தலைப்பில் பக்.587, 589.

4. வெட்கக்கேடானது: பகுத்தறிவுள்ள மனிதன் இந்த 20ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் - ஏற்றுக் கொண்டும் நடப்பது மனித சமுதாயத்திற்கு மிக மிக வெட்கக் கேடான காரியமாகும்.
- பெரியார் ஈ.வெ.ரா.

5. கோயில் பற்றிய கருத்து: கோயில் என்பது திருடர்கள் தங்குமிடம் (ஏசு); கோயில் என்பது விபசார விடுதி (- காந்தியார்); கடவுள், மோட்சம், நரகம் என்பவை பிள்ளை விளையாட்டு (- இராமலிங்க அடிகள்).

6. கடவுள் தேவையில்லை: உலகில் துன்பத்தையும் பாவத்தையும் ஒரு கடவுள் உண்டாக்குமானால், அப்படிப்பட்ட கடவுள் நமது வணக்கத்திற்கு உரியதன்று -புத்தர்

7. சிந்தனைக்கு: திராவிடர்கள் கீழ் நிலைக்குப் போன காரணம் பார்ப்பனர் களின் ஆதிக்கமே (சாண்டர்ஸ் விதர் ஏசியா நூல்); திராவிடத்தில் இருள் சூழக் காரணம் ஆரியமே (கால்டுவெல் - விதர் ஏசியா நூல்); இந்தியாவின் சீர்கேட்டிற் குக் காரணம் பார்ப்பனர்தான் (- காரல் மார்க்ஸ் லண்டன், நியூயார்க் டெயிலி டிரிபியூன் இதழ் 10.6.1853) வெளியீடு).

8. இராவணனைப் பற்றி. வங்க ராமாயணத்தில், லங்காவதார சூத்திரர் என்ற நூலில், இராவணன் திராவிட மன்னன் என்றும், புத்த நெறியினன் என் றும், பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற அறி வியல் தத்துவவாதி என்றும் காணப்படு கிறது. - ஈ.வெ.ரா.

9. பார்ப்பனர்கள்பற்றி.. பார்ப்பனர் களின் இழி குணங்களைப்பற்றி முழுமை யும் வர்ணிப்பதற்கு எனது பேனா மறுக்கிறது
- அபேடூபே இந்துக்களின் பழக்க வழக்கம் பக்.306

10. இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை. நாம் அனைவரும் ஆரிய மதத் தைச் சேர்ந்தவர்களல்ல. இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர், நமக்கு, அந்நியர் கொடுத்ததேயாகும். ஆரியர்கள். ஆரியப் பழக்க வழக்கத்தை அனுசரிக்கிற வர்கள் ஆரியர்களேயாவார்கள். கண்டவர்களை யெல்லாம் ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்டதானது. ஆரிய மதத்தின் பல வீனமேயாகும்.

- திவான்பகதூர் வி. பாஷியம் அய்யங்கார் (8.12.1940ல் சென்னை, திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு தலைமைப் பிரசங்கம்

11. நட்ட கல்லும் பேசுமோ! நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே - சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்!

- சிவவாக்கியர்

தமிழ் ஓவியா said...


இதற்குப் பெயர் தான் திராவிடர் கழகம் என்பது...


சிவகங்கை நகர் திராவிடர் கழகத் தலைவர் அ.மகேந்திரராசன். இவர் கடந்த 6.2.2014 அன்று சிவகங்கை நகரில் உள்ள சத்திய சீமான் திருமண மண்டபத்தில் நவ நீதகுமார் - பாலசுப்புலெட்சுமி ஆகியோ ரின் திருமண விழாவிற்குச் சென்றிருந்தார். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மண்ட பத்தில் ஒரே பரபரப்பு. என்னவென்றால் மணமகனின் மைத்துனர் (மலேசியாவி லிருந்து வந்திருந்தவர்) வெங்கடேஸ்வரன் என்பர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க கைச் சங்கிலி தொலைந்து போய்விட்டது என்பதாகும். மணமகனின் தாயார் மாரியம்மாள் என்பவர் நமது நகர் கழக தலைவர் அ.மகேந்திரராசனிடம் வந்து நகை தொலைந்துவிட்ட விவரத்தை சொல்லி திருமணத்திற்கு அபசகுனமான தடைபோல வந்துவிட்டதாகவும் கூறி மிகவும் வேதனைப்பட்டுள் ளார். அ.மகேந்திரராசன் அவர்கள் 30 ஆண்டுகள் காவல்துறையில் பணி புரிந்து, அதில் 13 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த அம்மாவிற்கு ஆறுத லும், தைரியமும் கூறி திருமணத்தை முடியுங்கள் விசாரித்து நகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியுள்ளார். ஒலி பெருக்கியில் விவரம் கூறி நகையைக் கண்டெடுத் தவர்கள் திரும்ப ஒப்படைக் குமாறு கோரியும், தனிப் பட்ட முறையிலும் ஒவ் வொருவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாக நகையை எடுத்தவர் அ.மகேந்திரரா சனிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். நகையை பெற்றுக்கொண்ட நமது நகர் கழக தலைவர் நகையை தவறவிட்ட வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து நகையின் அடையாளம் கூறச்சொல்லி அது சரியாக இருந்ததை தெரிந்துகொண்டு அதன் பின் பொதுமக்களின் கரவொலி யுடன் நகையை ஒப்படைத்தார். மணமகன் வீட்டார் அவருக்கும், இந்த நிகழ்வில் உடன் இருந்த சிவகங்கை தீண்டாமை ஒழிப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டிக்கும் பயனாடைகள் அணிவித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்ட மூத்த சுயமரி யாதைச் சுடரொளிகள் சண்முகநாதன், என்.ஆர்.சாமி ஆகியோரின் வழிகாட்டு தலின்படி மாணவப் பருவத்திலேயே நமது இயக்கத்தில் தொண்டாற்றிவரும் அ.மகேந்திரராசனை சிவகங்கை நகர் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Read more: http://viduthalai.in/page7/76619.html#ixzz2vQ4Qpn9H

தமிழ் ஓவியா said...


பல்லி என்ன பன்மொழிப் புலவரா?

மாற்றுக் கருத்துடைய அறிஞர்களை மதித்து வரவேற்கும் பண்பு இக்காலத்தில் அருகி வருகின்றது. மாநகர் மன்றங்கள் இவர்களை வரவேற்க மறுக்கின்றன. பல் கலைக் கழகங்கள் பாராமுகம் காட்டு கின்றன. இவற்றையெல்லாம் மீறி எவரா வது வரவேற்புக் கொடுத்துவிட்டால் அவர் கள் மீது அடக்குமுறைகள் பாய்கின்றன.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம்முடைய புரட்சிக்கருத்துக்களைப் பரப்பி வந்த நேரத்தில் அதிகாரவர்க்கம் அதிர்ச்சிய டைந்து போயிற்று; பழைமையைப் பற்றி நின்றவர்கள், பார்ப்பனர்கள், அவர் தம் அடிவருடிகள் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு உறைந்து போனார்கள். என்றாலும் தமிழ்நாட்டில் பல நகராட்சி மன்றங்கள் அவருக்கு வரவேற்பளித்து அவரைப் பெருமைப்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் அக் காலத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. அவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு வழங்கிய முதல் நகராட்சி மன்றம் ஈரோட்டு நகராட்சி மன்றம் தான்! எவ்வளவு பொருத்த முடையது என்பதை எண்ணி ஆசிரியர் பெருமிதம் கொள்கிறார்.

இன்று பல்கலைக் கழகங்கள் பெரி யாரைப் பாராட்டுகின்றன; ஆய்வு செய் கின்றன. தமிழர் தலைவரை அழைத்துச் சொற்பொழிவாற்றுமாறு வேண்டுகின் றன. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கின்றன. இன்று அவரே ஒரு பல்கலைக் கழகத்தின் வேந்தர்! காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என் பதை எண்ணி நாம் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர் களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருது வழங்கப்பட்டது. விருதினை வழங்கிய டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்கள், ஓர் அழகிய கவிதை வடிவிலான வாழ்த்து மடலை வாசித்தளித்தார். அதில் சில பகுதிகள் வருமாறு:-

மூச்சில் தமிழ்; பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை; தெளிவான பார்வை
சமூகநீதிக் காவலர்; எங்கள் அன்பு ஆசிரியர்
கடலூரின் கருத்துக்கனல்; என்றும்
அடங்காத எழுத்துப் புனல்
அதிகாரம் பேசும் பூமியில் அரிதாரம் பூசாத மனிதர்
உண்மை உரைத்துப் புதிய
உலகம் செய்யும் போராளி!
அகில உலகில் முதல்முதலாய்ப்
பாவையருக்குத் தொழில் நுட்பக் கல்லூரி
கண்ட கல்விக் காவலர்,
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம்பதித்து நடப்பவன் மாமனிதன்!

இவ்வாறு அந்த வரவேற்பிதழில் டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் ஆசிரி யரைப் பாராட்டி மகிழ்கின்றார். கோவை கே.ஜி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிக் கலையரங்கில் பாராட்டு விழா; டாக்டர் பக்த வத்சலம் மிகுந்த நகைச்சுவை உணர்வு படைத்தவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற அன்பு கொண்டவர் சமூக உணர்வு கொண்ட மருத்துவர்.

கடைசியில் தமிழர் தலைவர், பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்ல வருகின்றார். தமிழறிந்த மலையாள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்று கலந்து அமர்ந்திருந்தனர். தமிழர் தலைவரின் உரையைக் கேட்க அரங்கம் நிரம்பி யிருந்தது. தமிழர் தலைவர் அவர்களுக்கு மாணவர்களிடையே பேசுவதென்றால் பெருமகிழ்ச்சியாயிற்றே!

அழகு மிகுந்த இந்த அரிய கலைக் கூடத்தில் கல்வி பயில வந்துள்ள இருபால் மாணவர்களே, உங்கள் வாழ்க்கை மூடநம்பிக்கையில்லாத வாழ்க்கையாக விளங்க வேண்டும். மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்ற சமூகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சகுனத் தடைகளும், சடங்குகளும் மக்கள் வாழ் வைச் சீரழித்துக் கொண்டுள்ளன. காலை யில் வெள்ளைச் சேலையைப் பார்த்து விட்டால், போகிற வேலை உருப்படாது என்று திரும்பிப் போய்விடுகிறான். பூனை குறுக்கே போனால் அஞ்சித் திரும்பி விடுகிறான். பல்லி சொன்னால் பயப்படு கிறான்; பல்லிக்கு எத்தனை அறிவு என்று கேட்டால் தெரியாது; ஆனால் பல்லிக்குப் பயப்படுகிறான்; பல்லி என்ன பன் மொழிப்புலவரா? என்று ஆசிரியர் கேட் டதும் மாணவர் கையொலி அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.

விழா முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பல்லி என்ன பன்மொழிப் புலவரா? என்று கேட்டுக் கொண்டு சிரித்தபடியே, மறக்க முடியாத வாசகம் என்று ஆசிரியரைப் பாராட்டி மகிழ்ந்தனர். டாக்டர் பக்தவத்சலம் அவர்கள், எங்கள் மாணவர்கள் இத்தகையசொற்பொழிவை அறிவார்ந்த சொற்பொழிவை - இது போன்ற சொற்பொழிவை இதுவரை கேட் டதில்லை என்றார் புன்முறுவலோடு!

Read more: http://viduthalai.in/page8/76622.html#ixzz2vQ4vqDwh

தமிழ் ஓவியா said...


இது என்ன கூத்து? பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்!


ஆனைமலை அருகே சோமந்துறை சித்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர்களுக்கான பாத பூஜை விழா நடந்தது.

தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். மாணவர்கள் பெற்றோர்களை மதிக்கவும், பெற்றோர்களிடம் அன்பு செலுத்தவும், தெய்வமாக வழிபட வேண்டியவர்கள் என்பதை உணர்த்த இவ்விழா நடந்தது.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களின் பாதங்களைக் கழுவி, ஆசீர்வாதம் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். பெற்றோர்களை மதிப்பது என்பது பாத பூஜை செய்வதன் மூலம் அல்ல! - மனதளவில் இருக்க வேண்டிய ஒன்று - சடங்குகள்மூலம் நிலை நிறுத்தப் பார்ப்பது போலித்தனமானது - ஒரு வகையான மூடநம்பிக்கையும்கூட!

யார் காலிலும் யாரும் விழுவது என்பதெல்லாம் அசல் பிற்போக்குத்தனமானது பிள்ளைகளுக்கு நல்ல வழியைச் சொல்லிக் கொடுப்பீர் ஆசிரியர்களே!

பாத பூஜை என்பதெல்லாம் சுகாதாரக் கேடும்கூட - இது தடுக்கப்பட வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/76640.html#ixzz2vQ5Opdmr

தமிழ் ஓவியா said...


முடியாது

மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/76643.html#ixzz2vQ5gsa1c

தமிழ் ஓவியா said...


அங்கும் - இங்கும் - எங்கும் பெண்ணுரிமைக் குரல்


ஆண் சாமியார்களை எதிர்த்து
பெண் சாமியார்கள் புதிய அமைப்பு!


அலகாபாத்.மார்ச்.8- துறவு பூண்ட பின்னரும்கூட பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்சாமியார்கள் பெண்களுக்காக அகாடா என்கிற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.

இந்துமதம் என்றாலே ஆணுக்கு பெண் அடங்கித்தான் இருக்க வேண் டும் என்கிற நடைமுறை இயல்பாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் கோயில்களுக்கு உள்ளே வருவது என்பதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

துறவு பூண்ட பெண்களுக்கும் இதே நிலைதான். ஆனாலும், பொறுத்தது போதும் என்கிற மனநிலைக்கு பெண் களில் துறவுபூண்ட சாமியாரிணிகள் வந்து விட்டனர் போலும்.

அலகாபாத் கங்கைக் கரையில் கூடும் ஆண் சாமியார்கள் போலவே, பெண் சாமியாரிணிகள் பூஜைகள் மற்றும் இந்து மதச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
பெண் சாது மகந்த் திரிகல் பவந்தா என்பவர் பெண்களுக்கான அகாடா என்கிற புதிய அமைப்பு குறித்து கூறும் போது:

இதுவரை சாதுக்களுக்கான குழுக்கள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்துமே ஆண்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. ஆகவே, பெண்களுக்கான அமைப்பாக அகாடா தொடங்கப் படுகிறது.

இந்துத்துவ வரலாற்றில் அனைத்துப் பெண்களையும் இணைக்கின்ற முதல் அமைப்பு அகாடா என்று நம்புகிறேன். இந்து மதத்தில் முதல் அகாடா ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. சமயப் பாதுகாப்புக்காக எட்டாம் நூற்றாண்டில் ஏற்படுத்தினார். தற்போது பெண் களுக்காக அகாடா தொடங்கப்படுகிறது.

ஆண் சாமியார்களால் பெண் சாமி யார்களும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி உள்ளது. காலத்திற்கு பொருந் தாத பழக்கங்களை பெண்கள்மீது திணிக்கிறார்கள்.
இந்து சாத்திரங்களில் பெண்கள் அகாடா ஏற்படுத்தக்கூடாது என்று எங் கும் இல்லை. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவதன்முலம் நாங்கள் ஆண் களிடமிருந்து விமரிசனத்தை எதிர் நோக்க வேண்டி வரும். பெண் சாமி யார்கள் மடங்களின் தலைமைப் பொறுப்பை எட்டும்வகையில் எழுந்து விட்டோம். ஆதிக்கத்திலிருந்து விடு படும்வரை அகாடா தொடர்ந்து தன் பணிகளை பெண்களுக்காக செய்யும்.

ஆண்கள் மட்டுமே மடங்கள் போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும்வரை பெண்கள் மதிப்புக்குரிய பொறுப்புக்கு வரமுடியாது. பெண்களில் சாதுவாக, குறிப்பாக விதவைப் பெண்கள் சாது வாக வரமுடியுமா என்பதே கேள்விக் குரியதுதான்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமான ஆண், பெண் சாதுக்கள் வருவார்கள். நாசிக்கில் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் அகாடா பங்கேற் கிறது என்று அகாடா அமைப்பைச் சேர்ந்த மகந்த் திரிகல் பவந்தா குறிப் பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/76646.html#ixzz2vQ6HAubg

தமிழ் ஓவியா said...


கல்லக்குறிச்சியில் ஒரு பணி நிறைவு விழா


ஆசிரியருக்குக் கடிதம் >>>

கல்லக்குறிச்சியில் ஒரு பணி நிறைவு விழா

இனிய நண்பர், கழகப் பொருளாளர் ஜி.எஸ்.க்குப் பிறகும் கல்லக்குறிச்சி எழுச் சியுடன் இருக்கிறது என மெய்ப்பித்தது நண்பர் சுந்தரராஜன் அவர்கள் பணி நிறைவுப் பாராட்டு.

பேசியவர் அனைவரும் சுந்தரராஜனது வெற்றி வாழ்க்கைக்கு மூலம் அவரது அசைவிலா பெரியார் கொள்கைப் பற்று தான் என்றார். குறிப்பாக நண்பர் வழக்கறிஞர் வேங்கடபதி அவர்கள் நாம் பெற்றுள்ள அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் பெரியார் என நிறுவினார்.

இன்று திராவிடர் கழகத்தில் தங்கள் வல, இட கரங்களாகத் திகழும் கவிஞர் அவர்களும் முனைவர் அவர்களும் மிக குறைந்த நேரத்தில் பெரியாரின் நெடிய சிந்தனைகளை தந்தனர்.

கவிஞர் பூங்குன்றன் அவர்கள் அன்றைய வயதும் இன்றைய வயதும் அம்மை, காலரா அனைத்தும் ஒழிந்ததும் அவை வியக்க மொழிந்தார்.

தங்குதடை இல்லா முனைவர் சந்திர சேகரன் அவர்கள் தங்குதடையில்லா ஓட்டப்பேச்சால் நிகழ்ச்சியை திராவிடர் கழக மாநாடாக்கினார்.

இருவர் பேச்சாலும் மோடி வருகை ஆபத்தும், மறு சூறாவளி வரும் எனும் எச்சரிக்கையும் உணர்த்தப்பட்டது.

நீங்கள் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பீர்கள்.

குறிப்பாக கல்லக்குறிச்சியின் நிகழ் நாள் பொறுப்பாளர்கள் நேரடியாக தங்களிடமும், ஜி.எஸ். அவர்களிடமும் நேரடி பயிற்சி பெற்றவர்கள். நன்கு பத்தியத்துடன் இயக்கி வருகிறார்கள் எனும் செய்தியை நீங்கள் மறு பதிவு செய்வதில் மகிழ்கிறேன். அந்நிகழ்ச்சியில் பணி நிறைவு காணும் சுந்தரராஜனைப் பாராட்டிய எனது கவிதையை உங்கள் பார்வைக்கு அனுப்பு வதில் மகிழ்கிறேன்.

சோராது நித்தம் பொதிகையில், செய்தியில் வாருங்கள், தமிழ் நலம் என் றால் அங்கு தலைவர் வீரமணி அவர்கள் முன்நிற்பார் என்பதை நாடு நினைக்க வையுங்கள்.

வாழ்க பெரியாரின் சிந்தனைகள்
தொடர்க ஆசிரியர் அரும்பணி

- ஆராவமுதன், கல்லக்குறிச்சி

Read more: http://viduthalai.in/page-2/76647.html#ixzz2vQ6bYTah

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள்: கலைஞர் வாழ்த்துகிறார்

மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் உலக மகளிர் நாள் விழா 8-3-2014 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலை களில் பணிபுரிந்த ஆயிரக் கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலிய வற்றை வலியுறுத்திக் கிளர்ந் தெழுந்து போராடத் தொடங் கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள் என ஆண்டு தோறும் உலகெங்கும் கடைப் பிடிக்கப்பட்டு, மகளிர் மேம் பாடு குறித்த விழிப்புணர் வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை பெண்கள், ஆண் களுக்கு இணையாகக் கல்வி, பொருளாதார, அரசியல், சமூக நிலைகளில் முன்னேற்றங் கள் கண்டிட தேவையான பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டங்களை உருவாக் கிச் செயல்படுத்திய பெரு மை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப் பேற்ற காலங்களில் பெண் களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் பல; அதா வது, 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திரு மண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி!

பெண்கள் 10ஆம் வகுப் பேனும் படிப்பதை ஊக்கப் படுத்திட வேண்டும் எனும் உணர்வோடு 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண் களின் திருமணங்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது கழக ஆட்சி. ஆனால், 2001 இல் பொறுப்பேற்ற அ.தி. மு.க. அரசு முடக்கி வைத் திருந்த இத்திட்டத்தின் நிதி உதவியை 2006இல் பொறுப் பேற்ற கழக அரசு 15,000 ரூபாய் என்றும், 2008இல் 20,000 ரூபாய் என்றும், 2010 இல் 25,000 என்றும் படிப் படியாக உயர்த்தி கிராமப் புறங்களைச் சேர்ந்த இலட் சக்கணக்கான பெண்கள் பயன்பெற வழிவகுத்தது கழக ஆட்சி!

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு வித வை மகளிர் மறுமண நிதி யுதவித் திட்டத்தை 1975இல் தொடங்கி, இளம் விதவை மகளிரின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது கழக ஆட்சி!

மேலும், அஞ்சுகம் அம் மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண் களுக்கான திருமண நிதி யுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திரு மண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவி யையும் படிப்படியாக 25,000 ரூபாய் வரை உயர்த்தி, இலட் சக்கணக்கான ஏழை மகளிர் நலம்பெற வழிவகுத்தது கழக ஆட்சி!

தமிழ் ஓவியா said...


ஆதிதிராவிட பெண் களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தியது கழக ஆட்சி!

கிராமப்புற மகளிர்க்கு மகப்பேறு உதவிகள் எந்த நேரமும் கிடைத்திடும் வண் ணம் அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் கூடு தல் மருத்துவர்களும், செவி லியர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேர மருத்துவச் சேவையை உருவாக்கியது கழக ஆட்சி!

கிராமப்புற ஏழை மகளிர் கல்லூரிப் படிப்பைத் தொடர் வதற்கு வசதியாக 1969ஆம் ஆண்டில், பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலே யே அரசு சார்பில் கலை, அறி வியல் கல்லூரிகள் பலவற் றைத் தொடங்கியது கழக ஆட்சி!

ஏழை மகளிர் பட்டப் படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ. ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத் திட்டத்தின் பயன்களை 2008 முதல் முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக் கான ஏழை மகளிர் உயர்கல்வி பெற ஆவன செய்தது கழக ஆட்சி!

பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு நிலையான களம் அமைக் கும்வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் 1973இல் இந்தியாவிலேயே முதன்முறையாகக் காவல் துறையில் மகளிரை பணி நியமனம் செய்து; இன்று காவல்துறையில் உயர் பதவி கள் பெற்றுப் பல்லாயிரக் கணக்கில் பெண்கள் பணி புரிவதற்கு வித்திட்டது கழக ஆட்சி.

ஏழை விதவைப் பெண் களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத் தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல் படுத்தியது கழக ஆட்சி! விதவைப் பெண்களுக் கும், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட 1998இல் ஆணையிட்டு நடை முறைப்படுத்தியது கழக ஆட்சி!

தருமபுரியில் 1989ஆம் ஆண்டில் மகளிர் திட்டத் தைத் தொடங்கி அதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் தோன் றிடவும், அவற்றின் வாயி லாகக் கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்திடவும் வழிவகுத்தது கழக ஆட்சி!

1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பூவிற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட் படப் பல்வேறு சிறு வணி கங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன் களை மேம்படுத்தியது கழக ஆட்சி!

அரசுத் துறைகளில் பெண் களுக்கு முப்பது விழுக்காடு இடஒதுக்கீட்டினை 1990ஆம் ஆண்டில் வழங்கிட சட்டம் கண்டு; இன்று தமிழக அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பெருவாரியாகப் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியது கழக ஆட்சி!

பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என 1997இல் ஆணையிட்டது கழக ஆட்சி!

தமிழ் ஓவியா said...

சமூக நிலைகளில் பெண் களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்ப தனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக 1990இல் பெண் களுக்குப் பரம்பரைத் சொத் தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி!
அரசின் தொழில்மனை கள் ஒதுக்கீட்டில் பெண் களுக்கு 10 விழுக்காடு மனை களை ஒதுக்கிட வகை செய்து, பெண்கள் தொழில் முனைவோராகிட ஊக்கம் தந்தது கழக ஆட்சி!

திருக்கோவில்களின் அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் கண்டது கழக ஆட்சி!

1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப் பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண் கள் ஊட்டச்சத்து உட்கொள் ளவும், வேலைக்குச் செல்ல முடியாமையால் அவர் களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிக்கட்ட வும், அவர்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண் டில் நடைமுறைப்படுத் தியது கழக ஆட்சி!

50 வயது கடந்தும் திரு மணம் ஆகாமல் வறுமை யில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத் தை அறிமுகப்படுத்தியது கழக ஆட்சி.

இந்தியாவிலேயே முதல் முறையாக 1996ஆம் ஆண் டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து; கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று ஜன நாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது கழக ஆட்சி.

இவையல்லாமல் ஏழைத் தாய்மார்களின் இதயம் குளிர ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியது கழக ஆட்சி!

ஏழைத்தாய்மார்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங் கியது கழக ஆட்சி!

ஏழைத்தாய்மார்களின் உடல்நலம் காத்திட எரிவாயு இணைப்புடன் இலவச எரி வாயு அடுப்புகளை வழங் கியது கழக ஆட்சி!

இப்படிப் பல்வேறு வகையிலும் மகளிர் சமுதா யம் கல்வி, அறிவியல், அரசி யல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு; அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை கழக ஆட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் திற்கும் உண்டு என்பதனை இவ்வேளையில் நினைவு படுத்துகிறேன்.

இன்றைய ஆட்சியில் விளம்பரத்திற்காக, வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு ஊரையும், உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே, அதுபோல் அல்லாமல் நடு நிலைமையுடன், சிந்திப் போர் அனைவரும், உணர்ந்து மகிழ்ந்து போற்றும் வகை யில், கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக அரசு மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களை யும், திட்டங்களையும் நிறை வேற்றி நடைமுறைப்படுத்தி யதன் விளைவாகத் தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங்களிலும், எல் லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயன டைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை ஊரும், உலகமும் கண்டு உவந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி; மகளிர் தின நல்வாழ்த்து களைத் தமிழக மகளிர் சமுதாயம் முழுமைக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்!

Read more: http://viduthalai.in/page-3/76649.html#ixzz2vQ6qjyXX

தமிழ் ஓவியா said...

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

130 நூல்களை எழுதிய பேராசிரியர் ந.சுப்பிரமணியன்பற்றி பல்கலைக் கழகங்கள் ஆய்வரங்கங்களை நடத்திடவேண்டும்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழைக்குள், அவர் தலைப்பகுதியில் ஒருபுறம் அவருடைய மறைந்த துணைவியார் படமும், மறுபுறம் நானும், என்னுடைய இணையர் இருக்கின்ற படமும் வைக்கப்பட்டிருந்தது.


சென்னை, மார்ச் 8- 130 ஆய்வு நூல்களை எழுதியவர், சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலை வராக இருந்து பணியாற்றியவர் பேராசிரியர் முனைவர் ந.சுப்பிரமணியன் அவர்களுடைய படைப்புகள் குறித்து ஆய்வரங்கங்களைப் பல்கலைக் கழகங்கள் நடத்தவேண் டும் என்றார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்குத் தலைமை ஏற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.2.2014 அன்று சென்னை பல்கலைக் கழகம் பரிதிமாற் கலைஞர் வளாகத்தில் - பவள விழாக் கலையரங்கில் - தமிழ் இலக்கியத் துறையின் சார்பில் பேராசிரியர் க.ந.சுப்பிர மணியன் அறக்கட்டளை சொற்பொழிவில் தலைமை வகித்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அந்த அடிப்படையை மிக விளக்கமாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார். நீங்கள் இந்த நூலினை வாங்கிப் படிக்கவேண்டும்.

பேராசிரியரிடம் விவாதம் செய்துகொண்டிருக்கும் பொழுது சொல்வார்;

என்னுடைய கருத்தை உலகம் ஏற்றுக்கொள்ளாது; உலகத்தார் நினைப்பது வேறு; நான் உலகத்தோடு ஒட்டல், ஒழுகல் இல்லாதவன்; அதனால் நான் மாறுபட்டவன் என்று சொன்னார்.

அதற்கு என்ன உதாரணம் என்று சொல்கிறபொழுது, ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.

காந்தியார் தியாகியா?

என்னுடைய பக்கத்தில் இருந்தவர் வானொலி நண்பர்; இன்னொரு நண்பரும்கூட இருந்தார்.

காந்தி தியாகியா? என்று கேட்டார்.

நாங்கள் பதில் சொல்லவில்லை.

கோட்சே சுட்டதினால்தானே அவர் இறந்தார். 125 ஆண்டுகள் வாழவேண்டும் என்று காந்தி அறிவித்தாரே என்று சொன்னோம்.

சரி, ஆசைப்பட்டார்; அது எப்படி தியாகி ஆவார்? அவர் சென்றுகொண்டே இருந்தார்; டக்கென்று ஒருத்தன் சுட்டான்; சுட்டதும் அவர் இறந்துவிட்டார். காந்தி தியாகம் செய்யவில்லை. அது விபத்து! யார் தியாகி என்று சொன் னால், சாக்ரட்டீஸ் தியாகி. எப்படியென்றால், நீ உன் கொள் கையை மாற்றிக்கொள்ளவேண்டும்; இல்லையென்றால், விஷத்தைக் குடித்துச் சாகவேண்டும் என்று சொன்னவுடன்,
கொள்கையை மாற்றிக் கொண்டிருந்தால், தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருப்பார்.

சாக்ரட்டீஸ்தான் தியாகி!

கொள்கையை மாற்றிக் கொள்ளமாட்டேன்; விஷத்தை வேண்டுமானால் சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னார் பாருங்கள், சாக்ரட்டீஸ்; அவர் தான் தியாகி.

காந்தி - சாக்ரட்டீஸ் இரண்டு பேரில் யார் தியாகி என்றால், நான் சாக்ரட்டீஸ்தான் தியாகி என்பேன்.

இதனை வெளியில் சொன்னால், கல்லால் அடிப்பான்; காந்தியைக் குறை சொல்கிறான் என்று சொல்வார்கள்; நான் தான் அறையினுள் உட்கார்ந்துகொண்டு சொல்கிறேனே, என்னுடைய உலகமே வேறு என்று சொல்வார்.

உண்மையைச் சொன்னால், இன்றைக்கு ஏற்றுக்கொள் ளாது இந்த உலகம்; ஆகவே உண்மைக்குப் போராடுவது என்பது சாதாரண செய்தியல்ல என்று சொல்வார்.

இன்னொரு பாகம் எழுதுங்கள் என்று சொன்னோம்

இரண்டாவது, அவருடைய பாரம்பரியத்தில், தன் வரலாற்றினை எழுதியிருக்கிறார். இங்கே அதனை வைத் திருக்கிறார்கள். அது பழைய பதிப்பு. ஒரு காலகட்டத்தில் தன் வரலாற்றை எழுதுவதை நிறுத்திவிட்டார்.

நானும், என்னுடைய இணையரும் கேட்டோம்; அய்யா நீங்கள் இதோடு நிறுத்திவிடாதீர்கள்; அதற்குப் பிறகு உங்களுடைய உணர்வுகள்பற்றி, மற்றவை பற்றி இன்னொரு பாகம் எழுதுங்கள் என்று சொன்னோம்.

சரி, நீங்கள் கேட்கிறீர்கள்; நான் எழுதுகிறேன் என்று சொல்லி, சில சிந்தனைகளையெல்லாம் சேர்த்திருக்கிறார்.

அவருடைய தந்தையார் பலராமய்யரைப்பற்றி....

என் வரலாறு என்பதில், நான் என்ற தலைப்பில் அவர் சொல்லும்பொழுது, அவருடைய வாழ்க்கை வர லாற்றினை, குடும்பத்தினைப்பற்றி சொல்லும்பொழுது, அவருடைய தந்தையார் பலராமய்யர். அவர் ஒரு தமிழாசிரியர். ஆங்கிலப் புலமையிலும், தமிழ் சங்க இலக்கியங்களிலும் சிறந்து விளங்கியவர். இவரிடம் டாக்டர் அழகப்ப செட்டியார் போன்றவர்கள் எல்லாம் மாணவராக இருந்திருக்கிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பணியாற்றி இருக்கிறார். இவருக்குச் சுயமரியாதை என்பது இயல்பானது. காரைக் குடியில் ஆசிரியராக இருந்தபொழுது ஒரு நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...


அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவர் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக் கூடத்திற்கு வந்துகூட மாணவர்களிடையே பேசினார். அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட, அவரைக் கண்டு தரிசித்தனர். ஆனால், என் தந்தையார் மட்டும் போகவில்லை. பிறகு சில நாள்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச் சாரியாரைக் கண்டு தரிசித்துவிட்டு வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணிதேசிகருக்கு அய்யரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:

தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர். அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலே தான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடித்துப் போஜனம் ஆனபின் தான் தமிழில் பேசுவார் களாம். ஆதலால், அரிய தமிழை அநாதரவு செய்கிறவர் களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்? என்றார்.

மற்றவர்கள் என்றால், இதனைப் பதிவு செய்ய மாட்டார்கள். துணிந்து பேராசிரியர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.

வித்வான் டாக்டர் ந.சுப்பிரமணியன் அவர்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி

அதேபோல், கோவை வானொலி பேட்டியில் சங்கப் பலகை என்ற நிகழ்ச்சியில், வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 9 மணியிலிருந்து 9.30 மணிவரை மொத்தம் ஆறு பகுதிகளாக ஒலிபரப்பான வித்வான் டாக்டர் ந.சுப்பிர மணியன் அவர்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி இப் பொழுது நூல் வடிவம் பெற்றுள்ளது.

இந்த உரத்த சிந்தனை என்கிற தலைப்பில் அந்த நூல் வெளிவந்திருக்கிறது. பல்வேறு செய்திகளில், அவருடைய கருத்து தனித்தன்மையாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான சான்றாகும்.

அதேபோல், பாரதியாரைப்பற்றி அவருடைய கருத்து தனித்தன்மையாக இருக்கும்; மற்றவர்கள் சொல்வதற்குத் தயங்குகின்ற கருத்தினை அவர் சொல்வார்.

தாகூருக்கு நேர்மாறானவர் பாரதியார்!

அரசியலைப்பற்றி பாடாமல், தன்னுடைய வாழ்க்கை யைப்பற்றி பாடாமல் வேறு கருத்துகளைப்பற்றி பாரதியார் என்ன பாடியிருக்கிறார்?

கடவுளைக் காளியாக வைத்து, ஒரு பயங்கரமான உருவத்தைக் கொடுத்து, அதாவது அமைதிக்கு நேர்மாறான எல்லாவற்றையும் அவர் செய்துகொண்டுள்ளார். தாகூர் எப்படி அமைதியே உருவாக இருந்தாரோ, அதற்கு நேர்மாறாக இருந்தார் பாரதி.

இப்படி சொல்லக்கூடியவர்கள் யாராவது இருப்பார் களா?

திருக்குறள் கட்டுரைகள் என்று அவர் எழுதியிருக்கிறார். எனக்குக் கையொப்பமிட்டு கொடுத்திருக்கிறார். அவரு டைய நூல்களில் பெரும் பகுதியைப் பெற்றிருக்கிறேன்; சில பகுதிகளைக் கற்றிருக்கிறேன். எல்லாவற்றையும் கற்றிருக்கிறேன் என்று சொல்ல முடியாது. அதேபோல், எல்லாவற்றிலும் உடன்பாடு என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அவரிடம் மாறுபட்ட கருத்தினை சொன்னால், வரவேற்பார்.

தமிழ் ஓவியா said...

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொன் றையும் அவர்கள் மிக ஆழமான இலக்கிய செய்திகள், வரலாற்றுப் பார்வையோடு எழுதுபவர்.

தலைசிறந்த அறிவுக்கருவூல செவ்வியாளர் விருது

தன் வரலாற்றின் தொடர்ச்சியாக அவர் எழுதும் பொழுது, என் காலம் என்ற 17 ஆவது கட்டுரையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே (19.9.2008) சென்னையில் உள்ள திராவிடர் கழகத் தலைவரான திரு.கி.வீரமணி அவர்கள், அவர்தம் குடும்பத்தாரோடு என்னுடைய நெருங்கிய உண்மையான நண்பரானார். எனக்கு நண்பர் களே சிலர்தான்; அவர்களிலும் உண்மையான நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் திரு.வீரமணி அவர்கள் முக் கியமானவர். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு வருகிறவர். எனது இரண்டு நூல்களை அவர் செலவில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவர்தான், தஞ்சையில் நிறுவியுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில், என்னை பல சான்றோர்களின் முன்னிலையில், ஒரு தனி நிகழ்ச்சியில், தலைசிறந்த அறிவுக்கருவூல செவ்வி யாளர் என்று விருது அளித்து கவுரவித்தார். இது 2008 செப்டம்பர் திங்களில் நிகழ்ந்தது என்று எழுதியிருக்கிறார்.

‘‘Psycho Biography of C.Subramania Bharati’’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி, அவருடைய மகன் சுந்தரேசனிடம் கொடுத்து, நீ வீரமணி அவர்கள் வீட்டிற்குச் செல்; அங்கு அவருடைய இணையர் இருப்பார்; நான் கொடுத்தேன் என்று சொல்லி கொடுத்துவிட்டு, என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்; இல்லையென்றால், பார்க்கவேண்டும் என்று சொல் என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய மகன் சுந்தரேசன் அவர்களும் என்னு டைய இணையரிடம் கொடுத்துவிட்டார்.

அந்த ஆங்கில புத்தகத்தில் Dedicated to Mrs. Mohana Veeramani, a model representative of respected woman hood என்று போட்டிருக்கிறார்.

கொள்கை ரீதியாக எங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வர்; ஆனால், அவர் பழகுகின்ற தன்மையும், அவர்கள் எப்படி எடை போட்டு நண்பர்களிடம் பழகினார் என்ப தற்கும் இப்படி ஏராளமான செய்திகளைச் சொல்லலாம்.

ஆய்வரங்கங்களைப் பல்கலைக்கழகங்கள் நடத்தவேண்டும்

பேராசிரியர் அவர்கள் 130 நூல்களை எழுதியிருக்கிறார். அந்த நூல்களைப்பற்றி ஆய்வரங்கங்களைப் பல்கலைக் கழகங்கள் நடத்தவேண்டும். அதனை மிகவும் சிறப்பாக செய்யவேண்டும்.

நம் நாட்டில் நூலகங்களுக்கு எப்படி புத்தகங்கள் வாங் குவார்கள் என்பது இங்கே எதிரில் அமர்ந்திருப்பவர் களுக்கு நன்றாகவே தெரியும்.

எல்லோரும் புத்தகங்களை அச்சடித்து, அச்சடித்து கட்டி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், அதற்குரிய முறைகளை எல்லோராலும் செய்ய முடியவில்லை.
ஆனால், அதனைப்பற்றி அவர் கவலைப்படாமல், நிறைய நூல்களை அச்சடித்து அச்சடித்து வைத்திருக் கிறார்கள், அவருடைய வீட்டில்.

தமிழ் ஓவியா said...

கூடுமான வரையில், எங்களுடைய விற்பனைக் கூடத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் வைப்பதற்குக்கூட நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.

பேராசிரியர் அவர்களுக்கு சனாதனத்தில் பெரிய நம் பிக்கை கிடையாது. நட்புக்குத்தான் மரியாதை கொடுத்தார்; மனிதநேயத்திற்குத்தான் மரியாதை கொடுத்தார். ஜாதிக்கு மரியாதை கொடுக்கவில்லை; மதத்திற்கு மரியாதை கொடுக்கவில்லை. உண்மைக்கு மரியாதை கொடுத்தார்; அன்புள்ளவராக இருந்தார்.
ஒரு நாள் திடீரென்று அவருடைய மகன் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, அய்யா கால மாகிவிட்டார் என்று சொன்னார்.

உடனே நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டோம். அவர் இறந்ததைவிட, இன்னொரு அதிர்ச்சி எங்களுக்கு அங்கே காத்திருந்தது.

24 மணிநேரம்கூட காத்திருக்கமாட்டார்கள்

நம்முடைய வீட்டில் யாராவது இறந்தால், வீட்டிற்குள் வைத்து இறுதி மரியாதை செலுத்துவார்கள். ஆனால், பார்ப்பனர்கள் வீட்டில் யாராவது இறந்தால், அது, தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் வைத்துவிடுவார்கள். 24 மணிநேரம்கூட காத்தி ருக்கமாட்டார்கள்; சீக்கிரமாக பாடையில் வைத்து வேக வேகமாகக் கொண்டு போய், அதனை எரியூட்டவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கலாச்சாரம். இறந்து போனால், அது டெட் பாடி; அவ்வளவுதானே தவிர, அதற்குமேல் ஒன்றும் கிடையாது.

பேராசிரியர் அவர்களையும் அதேமாதிரிதான் வீட்டிற்கு வெளியே வைத்திருப்பார்கள் என்று நினைத்தோம். நாங்கள் பேராசிரியர் வீட்டிற்குச் சென்றதும், அங்கே வியப்பு என்னவென்றால்,

அவர் எப்பொழுதும் உட்கார்ந்திருக்கும் அறையில், ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில் அவருடைய உடல் இருந்தது. நாங்கள் மாலையை வைக்கச் சென்றபொழுது நாங்கள் கண்ட காட்சி எங்களை வியக்க வைத்தது.
பேராசிரியருடைய துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பேராசிரியரின் விருப்பப்படி...

பேராசிரியருடைய மகன் சுந்தரேசன் அவர்கள் என்னிடம் சொன்னார்,

எங்கள் அப்பா என்னிடம், நான் இறந்தால் இந்த மாதிரி முறையில்தான் செய்யவேண்டும் என்று சொல்லி யிருக்கிறார். மற்றவர்களைப்பற்றி கவலைப்படாதே என்று சொல்லியிருக்கிறார். அவருடைய விருப்பப்படிதான் நாங்கள் இப்பொழுது செய்திருக்கிறோம் என்று சொன்னார்.

அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழைக் குள், அவர் தலைப்பகுதியில் ஒருபுறம் அவருடைய மறைந்த துணைவியார் படமும், மறுபுறம் நானும், என் னுடைய இணையர் இருக்கின்ற படமும் வைக்கப் பட்டிருந்தது.

கடைசியாக என்னுடன் அவர்கள் இருந்தார்கள் என்ற எண்ணம் வரவேண்டும் என்று சொன்னாராம் பேராசிரியர்.

இப்பொழுது நினைத்தாலும் உணர்வுப்பூர்வமாக இருக்கக்கூடிய ஒரு செய்தி அது.
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நட்பு என்பதற்கு ஒரு எல்லை உண்டா? அந்த உண்மையான நண்பர்கள் என்று சொல்கிறபொழுது, அவருடைய நினைவு வாழ்க, வளர்க! அவருடைய சிந்தனைகள் உலகை ஆள்க! நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/76653.html#ixzz2vQ7QEXo5

தமிழ் ஓவியா said...

இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா?

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது; பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத் திருக்கிறாராம் - துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.

கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண் களும் கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதிதிராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே! பெண்ணே! என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத் தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்குத் தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம்.

-குடிஅரசு-கட்டுரை-12.02.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ88ENRO

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

- குடிஅரசு - 12.02.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8Evp6z

தமிழ் ஓவியா said...

திரு.சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்தும் நன்றியுரையும்

கனவான்களே, சில உபச்சாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி இவருக்குக் கிடைத்ததற்கு திரு. பி.டி. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேக மில்லை.

உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திர பாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டு களையும் கெடுத்துவிடும் எனக் கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன்.

அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு மென்றாவது கருதிக்கொண்டு ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.

ஏனெனில், அது முடியாத காரியம், ஒரு சமயம் முடியாத தாயிருந்தாலும் அது யோக்கியமான மனிதனின் காரிய மாகாது ஒரு சமயம் யோக்கியமான மனிதனுக்கும் சாத்தியப் படுமானாலும் அதனால் நன்மையை விட கெடுதியே அதிகமாகும். மக்களில் பலதிறமுண்டு யோக்கியனும் அயோக்கியனும் உண்டு.

இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது. ஆதலால் அடியோடு கஷ்டப் படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் சுகப்படு பவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும் குற்றமில்லை.

நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறு பவர்களை பாராட்டுகிற பழக்கமில்லை - ஆனால் திரு. நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிலும் அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில் வதைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும் ஏற்பட கொடுமை யை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது அனு கூலமானதென்றும் அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார் என்றும் நம்பி அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மையை உத் தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில் இவர்களைப் பாராட்டுகின்றேன்.

என்றும் திரு. நாடார் அந்தத் துறையில் உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண் யமோ பயமோ சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த கணமே அந்த வேலையை இராஜினாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 25.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8PF9vk

தமிழ் ஓவியா said...

பெரியார் பொன்மொழி!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இனஉணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமையைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின்றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBhvF7p

தமிழ் ஓவியா said...

நேரு அறிக்கையும் மகமதலியும்

மௌலானா மகமதலி இந்தியாவுக்கு வந்ததுதான் தாமதம். உடனே நேரு அறிக்கையின் மேல் வெடிகுண்டு ஒன்று போட்டுவிட்டார். நேரு அறிக்கையைப் பின்பற்றினால் இந்தியாவுக்கு வரப்போவது சுயராஜ்யமல்ல, இந்து மகாசபை இராஜ்யமேயாகும் என்று மௌலானா மகமதலி கூறுகின்றார்.

தேசியப் பத்திரிகைகள் என்ற பார்ப்பனப் பத்திரிகைகள் மவுலானா கூறுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் மனமுவந்து ஒப்புக் கொள்ளுகின்றோம். நேரு அறிக் கைப்படி நாளை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் கொடுத்து விடுவார்களானால், இந்தியாவிற்கு பார்ப்பன இராஜ்யம் வந்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் நேரு திட்டத்தின்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், வகுப்புவாரித் தேர்தல்கள் என்ற பாது காப்புகள் கிடையாது. ஆகையால் தாழ்த்தப்பட்ட வகுப்பார், ஒடுக்கப்பட்ட வகுப்பார், கொடுமை செய்யப்பட்ட வகுப்பார், சிறுபான்மை வகுப்பார் எல்லாம் பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியின் கீழ் நசுங்க வேண்டியதே.

பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற காலத்திலேயே சில வகுப்பார், தெருக்களில் நடக்க முடியவில்லை, குளங்களிலும், கிணறுகளிலும், தண்ணீர் எடுக்க முடியவில்லை, எங்குப் பார்த்தாலும் சாதி வித்தியாசம் தலை விரித்தாடுகிறது என்றால், பிரிட்டிஷ் அரசாங்கம் போய் நேரு அறிக்கைப்படி இந்து மகாசபையின் ராஜ்யம் வந்துவிட்டால் என்ன அக் கிரமங்கள் நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அப் போது இராம இராஜ்யத்தில் நடந்த அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும்.

பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது. அவ்வாறு படித்தால் தூக்கில் போடவேண்டும் என்ற சட்டம் மதத்தின்பெயரால் ஏற்பட்டுவிடும். அம்மட்டோ! மனுதர்ம சாத்திரங்களிலுள்ள அநீதிகளெல்லாம் கிரிமினல் சட்டங்களாகவும், சிவில் சட்டங்களாகவும் மாறிவிடும். நம் பாடோ! ஐயோ திண்டாட்டந்தான்.

நேரு திட்டத்தால் இவ்வளவு கேடுகள் நேருமென்பதை அறிந்துதான் நாம் அவ்வறிக்கையைப் பிறந்தது முதல் கண்டித்து வருகின்றோம். மகமதலியும் அதனாற்றான் கண்டிக்கின்றார்.

இந்தியா பல மதத்தார், பல சாதியார் நிரம்பிய நாடு! ஒரு மதம், ஒரு சாதி, மற்றொரு மதம், மற்றொரு சாதியை நம்புவது கிடையாது. வகுப்புத் துவேஷம் எங்கும் தாண்டவமாடு கின்றது. இந்நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாரித் தேர்தலும் இல்லை என்று நேரு அறிக்கை சொல்லுமானால், அவ்வறிக்கையை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்? அதை யார் ஆதரிக்கப் போகிறார்கள்!

எத் தனை சர்வ கட்சி மகாநாடுகள் என்று நேரு மகாநாடுகளைக் கூட்டினாலும், எத்தனை காந்திகளும், பெசண்டுகளும் நேரு அறிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போதிலும், எழுதிய போதிலும் நேரு அறிக்கையை எவரும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம்.

நாம் நேரு அறிக்கையைக் கண்டித்தமையால் நம்மைச் சர்க்கார் தாசர்க ளென்று பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர் களின் கூலிகளும் எழுதுகின்றன; இன்னும் எழுதுகின்றன. இப்போது மவுலானா மகமதலி கண்டித்துவிட்டார்! எனவே, மவுலானாவையும் நம் கட்சியில் சேர்த்து விடுவார்கள். நமக்குக் கொண்டாட்டமே.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBoz4r2

தமிழ் ஓவியா said...

இடதுசாரிகளை அதிமுக தலைமை அவமதித்தது வருந்தத்தக்கது! - கி.வீரமணி

இடதுசாரிகளை அதிமுக தலைமை அவமதித்தது வருந்தத்தக்கது!

கொள்கை ரீதியாக இடதுசாரிகளுக்கு

உடன்பாடானது - திமுக தலைமையிலான கூட்டணியே!

இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் நல்லதோர் முடிவு எடுக்க அரிய வாய்ப்பு! அ.இ.அ.தி.மு.க. தலைமை 5 ஆண்டுகள் உடனிருந்த இடதுசாரிகளை அவமதித்து வெளியேற்றி விட்டது; இந்த நிலையில் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் தனியே நிற்பது என்ற முடிவினைக் கைவிட்டு, கொள்கை ரீதியாக உடன்பாடுடைய திமுக தலைமையிலான அணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெறுவதுபற்றி சிந்திக்க வேண்டும் என்று தோழமை உணர்வுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து, இடதுசாரிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பார்வோடு பிளாக் ஆகியவை வெளியேறி விட்டன; நேற்று (6.3.2014) இரு கட்சித் தலைமைகளின் ஒப்புதலோடு அறிவித்து விட்டனர்.

அகில இந்தியாவிற்கு மேல், அகில உலகக் கட்சிகளாக இருக்கின்ற இடதுசாரிக் கட்சிகளான இரு கம்யூனிஸ்டு கட்சிகளும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதன் மூலம், அவர்தம் சுயமரியாதை வெகுவாகக் காப்பாற்றப்பட்டுள்ளது.

கூட்டணி என்றால் பொருள் என்ன?

கூட்டணி என்றால் ஒரு டீம் (Team) போன்றது. அதில் சேர்ந்தபிறகு நான் என்பதற்கு இடமின்றி நாம் ‘We என்ற பொதுமைக்கே இடமும், பெருமையும் உண்டு.

அதிமுக கூட்டணி என்பதைவிட தொகுதி உடன்பாடு என்பதே சரியான சொல்லாக்கமாக இருக்க முடியும்; என்றாலும் கூட்டணிக் கட்சிகளை அதற்குத் தலைமை தாங்கும் தலைமை பெரியண்ணன் மனப்பான்மையோடு கூட இல்லை- எஜமானத்துவ மனோ நிலையில் அலட்சியப்படுத்தி நடத்திய முறை கண்டு இடதுசாரிகளும் தாங்க முடியாத, எல்லை தாண்டிய சகிப்புத் தன்மையோடுதான் பொறுத்துக் கொண்டு இது நாள் வரை இருந்தனர்!

அகில இந்திய கட்சிகளான அவ்விரு கட்சிகளின் தலைவர்களையே காக்க வைத்து, (அவர்களுக்கும்கூட சகிப்புத் தன்மையைப் போதிப்பதுபோல) - பிறகு சந்திப்பு நடத்தி உறுதி செய்யப்பட்டு, போட்டோவுக்கு கைகோர்க்கப்பட்ட பிறகு, அவர்களுக்குரிய மரியாதையை அத்தலைமை வழங்காதது மட்டுமின்றி, பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே - புதுவை உட்பட 40 தொகுதிகளுக்கும் தமது கட்சியின் வேட்பாளர்களையே அனைத்துத் தொகுதிகளுக்கும் அறிவித்து, கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு, பிரச்சாரத்தை ஆரம்பிக்கச் சொல்லி விட்டது அண்ணா பெயரில் உள்ள கட்சி! 15 நாள்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் கூறினார்; பாண்டவர்கள் பொறுத்து கடைசியாகக் கேட்ட கதைபோல நாங்கள் பொறுத்திருந்தோம் என்றார் தோழர் தா. பாண்டியன் அவர்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

இடம் எத்தனை தருகிறார்கள் என்பதைவிட, அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்பட்டார்கள் என்பது தேசிய கட்சிகளுக்கு அவமானம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் கேட்ட தொகுதிகளையே குறிவைத்து அதிமுக பொதுச் செயலாளர் அத்தொகுதியில் விரைந்து தேர்தல் பிரச்சாரம் நடத்தி, அதன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற கொடுமையும் ஆகும்.

கொடுக்க முடியாத போதோ அல்லது அவர்கள் கேட்டதைவிட குறைத்து தொகுதிகளைத் தரும் போதோகூட, அவர்களை அழைத்து கவுரவமாக தங்கள் சூழ்நிலைகளை அவர்களுக்கு விளக்கி, மிகுந்த நயத்தக்க நாகரிகத்துடன் அவர்களை சம ஈவில் நடத்துவது ஒரு தலைமைக்கு முக்கியமானது அல்லவா! தலைவர் கலைஞர் அப்படித்தான் செய்வார்.

தமிழ் ஓவியா said...

மென்மையான அணுகுமுறைகள்

ஆனால் நமது தோழர்கள் அ.தி.மு.க. தலைமையால் அவ்வாறு நடத்தப்படாமல் இறுதிவரை அவர்களை அழைத்துக்கூட காரண காரிய விளக்கத்துடன் தக்க விளக்கத்தை அளிக்கவில்லையே!

ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள், இவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து வந்துள்ளனர்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மதுரவாயல் திட்டம் போன்ற திட்டங்கள், மக்கள் நலப் பணியாளர்கள் வயிற்றில் அடித்து சுமார் 100 பேர்களுக்கு மேல் அந்த ஏழை - எளிய குடும்பங்களில் வறுமை, சாவுக்கு ஆளான பரிதாபங்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் காட்டிய பிடிவாதம், இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளிய நிலைப்பாடு - சமூக நீதி சரிவுகள் பற்றி சட்ட மன்றத்தில்கூட மவுனம் காத்த அல்லது மென்மை காட்டிய பண்பு இவைகளுக்கெல்லாம் அ.தி.மு.க. கூட்டணி காட்டும் மரியாதை இவ்வளவு தானா என்று மனம் குமுறி இறுதியில் முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவினை இப்போது காலம் தந்த பாடத்தால் - காலந்தாழ்ந்தாவது எடுத்துள்ளார்கள். ஏற்கெனவே இதுபோன்ற அலட்சியத்தால் மனிதநேயக் கட்சி, புதிய தமிழகம் வெளியேறின!

மார்க்சியம் மலிவான சரக்கல்ல!

மார்க்சியம் அவ்வளவு மலிவான சரக்கல்ல; சுயமரியாதை அதைவிட மிக இன்றியமையாத எல்லோருக்குமான பொதுச் சொத்து - மனித மாண்பு! அய்ந்து ஆண்டுகள் பல வகைகளில் அஇஅதிமுகவுக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார்கள் வேறு வழியின்றி வெளியேறி உள்ளார்கள்; பொதுவானவர்களும், அக்கொள்கையை நேசிக்கும் தோழமை உணர்வாளர்களான நம்மைப் போன்றவர்களும் வரவேற்க வேண்டிய முடிவு அவர்கள் இப்பொழுது எடுத்துள்ள முடிவு.

தனித்துப் போட்டியிடுவது உகந்ததல்ல!

அடுத்த கட்டமாக, அவர்கள் இருவரும் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவு, அவர்களது கட்சியின் முழு உரிமை என்ற போதிலும், இன்றுள்ள நாட்டின் அரசியல் சூழலில் - மதவெறி, ஜாதி வெறி, முதலாளித்துவ பன்னாட்டுப் பகாசுரத் திமிங்கலங்களின் பணச் செருக்கின பகிரங்கத் திருவிளையாடல்கள் தேர்தல் களத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், மதச் சார்பற்ற லட்சியம், சமூகநீதி, சமதர்மம், பொதுத் துறை நிறுவனங்களின் பலத்தைப் பெருக்கி. ஏழை - எளிய வறுமைக் கோட்டு மக்களுக்கு வாழ்வில் புதுயுகத்தை உருவாக்குதல் போன்ற கண்ணோட்டத்தில் மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியை அமைக்க தங்கள் பங்களிப்பைச் செய்யும் வண்ணம் அவர்களது முடிவு அமைய வேண்டும் என்பதே முக்கியமாகும்!

யார் வரக் கூடாது என்பதே முக்கியம்!

இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் வர வேண்டுமென்பதைவிட மத்தியில் ஆட்சியில் யார் வரக் கூடாது என்பதே முக்கியம்; தேர்தலுக்கு முன்னே ஒரு நிலைப்பாடு; பின்னே வேறு ஒரு நேர் எதிரான நிலைப்பாடு என்று இருப்பவர்களை ஒதுக்கி, பின்னாலும் ஒரு ஜனநாயக முற்போக்கு மதச் சார்பற்ற அரசு அமைவதுதானே காலத்தின் தேவை - ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் தாகம்?

கொள்கை ரீதியான உறவு - திமுக கூட்டணியே!

இதற்கு உதவிடும் வகையில் இடதுசாரித் தோழர்கள் சங்கடப்படாமல், கொள்கை ரீதியாக மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி இவைகளை முன்னிறுத்தும் அணி தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியோடு இருப்பதுதான், கொள்கை ரீதியான பொருத்தமாகும்; அதுபற்றி யோசிக்க வேண்டும்.

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. இது அவர்களுக்குக் கொள்கை ரீதியான தோழமை உணர்வுள்ள வருண எதிர்ப்பு, வர்க்கப் போராட்டம் இரண்டிலும் ஒத்த கருத்துள்ள இயக்கமான திராவிடர் கழகத்தின் தனிப்பட்ட கருத்து!

நம்மை (திராவிடர் கழகத்தை)ப் பொறுத்தவரை கூட்டணியில் இடம் பெறாத ஆனால் அதே நேரத்தில் - கொள்கை லட்சிய உணர்வுகளை முன்னிறுத்தி, திமுக தலைமையிலான மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வலுவாக ஆதரிக்கின்ற ஒரு முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட முக்கிய சமுதாய அமைப்பு என்ற நிலையில் கொள்கை உணர்வால் இந்த யோசனையை அவர்களுக்கு மிகுந்த தோழமையுடன் முன் வைக்கிறோம். தோழர்கள் சிந்திப்பார்களாக.கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
7.3.2014

Read more: http://viduthalai.in/page1/76513.html#ixzz2vQCPZ9Zw

தமிழ் ஓவியா said...


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டில் ஜெயலலிதாவின் உண்மை நிலை என்ன?


கேள்வி :- முஸ்லீம்களுக்கு இட ஒதுக் கீட்டினை அதிகப்படுத்துவது குறித்து அவர் களின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்கு அனுப்பி வைத்திருப்பதாக முதல மைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு. கழக ஆட்சிதான்.அந்த சதவிகிதத்தை அதிகப் படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்தக் கோப்பினை உட னடியாக வரவழைத்து ஆணை பிறப் பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார். முஸ்லீம் களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஜெய லலிதா 2004ஆம் ஆண்டு என்ன சொன் னார் தெரியுமா? முஸ்லீம்களுக்கு ஆந்திராவில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர் தலின்போது இவ்வாறு வாக்குறுதி கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு ஜெய லலிதா அளித்த பதில் - இல்லையே, அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே? என்பது தான்.அதுமாத்திரமல்ல; செய்தியாளர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து, சிறு பான்மை சமுதாயமான முஸ்லீம் சமு தாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டதற்கு, முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல.

கிறிஸ்த வர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், ஜெயின்கள் இருக் கிறார்கள், புத்த மதத்தினர் இருக் கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர் களும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். முஸ்லீம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்தவர் களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறு பான்மையினரும் கேட்பார்கள்.

எனவே இவ்வாறு செய்வது இய லாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கெ னவே பல சலுகைகளை அனுப வித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூ கத்தினர் அந்தச் சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வில்லை என்று கூறினார். இந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது. குறிப்பாக அம்மை யாரின் நம்பிக்கைக் குரிய தினத்தந்தி நாளேட்டில் 23-7-2004 அன்று பக்கம் 3இல் வெளி வந் திருக்கிறது.

- கலைஞர் பதில்கள்
(முரசொலி 7.3.2014 முதல் பக்கம்)

Read more: http://viduthalai.in/page1/76543.html#ixzz2vQCYl0EB

தமிழ் ஓவியா said...


செய்திக் கொத்துகள்

பக்தீ!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. 3 லட்சம் பேர் பங்கேற்பு என்று வண்ணப் படத்தோடு வெளியிட்ட தினமணி ஒன்றைத் திட்ட மிட்டு மறைத்தது ஏனோ?

நடைபெற்ற தீ மிதியில் பக்தர்கள் விழுந்து காயப்பட் டனர் என்பதுதான் தின மணியில் மறைக்கப்பட்ட செய்தி; தொலைக்காட்சிகள் பக்தர்கள் காயம் பட்ட சேதியை ஒளிபரப்பினவே! பக்தி காயப்பட்டால் பார்ப் பான் வீட்டு அடுப்பு எரியாதே!

மூடநம்பிக்கை!

மூடநம்பிக்கைக்கு ஓர் அளவேயில்லையா? திண்டிவனம் பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் அந்த அர சியல்வாதி பிறகு சோபிக்க மாட்டார் என்கிற ஒரு மூட நம்பிக்கை இருக்கிறதாம். திண்டிவனத்தில் மேம்பா லத்தை உருவாக்கிய, மத்திய அமைச்சர் வெங்கட்ராமனும் செஞ்சி ராமச்சந்திரனும் அவ்வாறு ஜொலிக்கா மல் போய் விட்டார்களாம்.

புற்று நோயைவிட மூட நம்பிக்கை மிக மிக மோச மானது என்பதில் அய்யமில்லை. திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணியேசெய்யப்படக் கூடாதா? திண்டிவனத்தின் மீது தனிப்பட்ட முறையில் அதிருப்தி கொண்ட ஆசாமி யாரோ கிளம்பி விட்டிருக்க லாம்.

தேவைதான்!

பொது மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சி ஆட்டோ ஓட்டு நர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் - வர வேற்கத்தக்கது - தேவை யானது! பேரம் பேசுவது - ஒருமையில் பேசுவது - இன் னோரன்ன நிகழ்வுகள் அன் றாடம் நடைபெறும் காட்சி கள். மக்களின் தோழர்கள் ஓட்டுநர்கள் என்ற நிலை உருவானால் நாட்டுக்கே பெருமை சேர்க்கக் கூடிய தாக இருக்குமே!

மோடிக்கு மொத்து!

அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்குத் தான் குஜ ராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி வளர்ச்சியின் நாய கனாக இருக்கிறார் என்கி றார் ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் கேஜ்ரிவால்.

இடதுசாரிகளுக்கு திருமா. அழைப்பு

மதவாத சக்திகள் ஆட் சிப் பீடம் வருவதைத் தடுக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிகள் திமுக கூட் டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச் சித் தமிழர் தொல் திருமா வளவன் நேற்றைய செய்தி யாளர்கள் கூட்டத்தில்...

Read more: http://viduthalai.in/page1/76538.html#ixzz2vQChQtIp

தமிழ் ஓவியா said...


கூட்டணியில் இடதுசாரிகள் கலைஞர் பேட்டி


செய்தியாளர்: இடதுசாரி கட்சிகளுக்கு கூட்டணியில் சேருவது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் அழைப்பு விடப்படுமா?

கலைஞர்: அழைப்பு விடுக்கக் கூடாது என்று நான் எண்ண வில்லை. அவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம். (முரசொலி- 7.3.2014)

Read more: http://viduthalai.in/page1/76540.html#ixzz2vQCpptFL

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க நியமனம்


அவ்வை நடராசனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மத்திய செம்மொழி நிறுவனத் தின் துணைத் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள அவ்வை நடராசன் அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி. ஆற்றல் மிக்க தமிழ் அறிஞரான ஒருவர் தக்க பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பொருத்த மானது - வரவேற்கத்தக்கது என்றும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

Read more: http://viduthalai.in/page1/76541.html#ixzz2vQD3EpKK

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/page1/76544.html#ixzz2vQDHT7eS

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் பார்வையில்.... அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

தேர்தல் களத்தில்:

பிற ஏடுகளிலிருந்து....

ஆனந்தவிகடன் பார்வையில்....
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை


ஆல் இன் ஆல் அம்மா... சொல்வதெல்லாம் சும்மா? என்ற தலைப்பில் ப. திருமாவேலனின் ஆதார பூர்வக் கட்டுரை...

அது என்ன அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையா அல்லது அம்மா அருள் வாக்கா?

இந்தியா முழுமைக்குமான சர்வரோக நிவாரணிபோல ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் ஜெயலலிதா.

தமிழ் ஓவியா said...


தனக்குப் 'பிடித்தது - பிடிக்காதது, தான் இதுவரை 'எதிர்த்தது - எதிர்க்காதது, 'சொன்னது - சொல்லாதது அனைத்தையும் சேர்த்துக் குழைத்து சுண்டவைத்து ஒரு ஸ்பெஷல் சூப் தயாரித்துவிட்டார்.

இனி... இந்தியாவுக்கு காங்கிரஸும் தேவை இல்லை; கம்யூனிஸ்ட்களும் அவசியம் இல்லை. தி.மு.க-வும் வேண்டாம்; ம.தி.மு.க-வும் வேண்டாம்.

தமிழர் இயக்கங்களும் தேவை இல்லை; பி.ஜே.பி-க்கும் ஆம் ஆத்மி-க்கும் இனி வேலையே இல்லை... என்று சொல்லும் அளவுக்கு எல்லாக் கட்சிக் கொள்கை களையும் கபளீகரம் செய்துவிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்காக ஜெய லலிதா விரித்திருக்கும் இந்த மாயக் கம்பளம், மயக்கம் தருகிறது. முதலில் தலை சுற்றவைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் எடுத் திருக்கும் உறுதி.

2008-09-ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகா சமுத்திரத்தை மூழ்கடித்தபோது, 'ஈழம் என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. 'ஈழத் தமிழர்கள் போரில் கொல் லப்படுகிறார்களே? என்று ஜெயலலிதா விடம் (18.1.2009) கேட்கப்பட்டபோது, 'அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல்ரீதியில் அலுவல்ரீதியில் சொல் லப்படுகிறது என்று வியாக்கியான வகுப்பு எடுத்தவர்.

'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல.

ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள், வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத் திக் கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

'மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தபோது, தி.மு.க. அதைத் தட்டிக்கேட்கவில்லை என்று தேர்தல் அறிக்கையில் இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, 'இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவ தற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதல மைச்சரான கருணாநிதி புரிந்து கொள் ளாதது விந்தையாக உள்ளது (16.10.2008) என்றும் சொன்னவர். 'போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப் பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தார்.

சிங்களப் பத்திரிகைகள், முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்தபோதுதான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் போட்டன.

தமிழ் ஓவியா said...

கொடூரம் கூடியது; தேர்தல் நெருங்கியது. தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஜெ., ஈழத் தாய் வேடம் இட்டார். கருணாநிதிக்கு எதிர் மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால், அதனைக் கையில் எடுத்தார்.

ஆட்சியும் மாறியது. ஈழத்துக்கு ஆதர வான தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டன.

தூக்கு விவகாரத்தில்கூட, 'மாநில அரசால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று முதல் நாள் சட்டமன்றத் தில் சொல்லிவிட்டு (29.8.2011), செங்கொடி தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு அரங்கேறுவதைப் பார்த்தும், உயர் நீதிமன்றம் தடை கொடுக்கத் தயார் ஆகிவிட்டதை அறிந்தும் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

தமிழ் ஓவியா said...

இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் வேகத்தில் நிற்கிறார்.

'விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட நானே காரணம் என்று பெருமைப்பட்டவர், 'பிரபாகரனைக் கைதுசெய்ய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டவர், கிட்னி செயல்படாத நிலையில் மரணப்படுக்கை யில்கூட பாலசிங்கம் தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்றவர், இப்போது ஈழத் தமிழர்கள் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தகைய தீர்மானங்களை அரங்கேற்று கிறார் என்பதை நம்ப எவரும் இல்லை.

ஆனால், கடல்கடந்த மக்களைக் கருவறுக்க காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகள், இங்குள்ள தமிழர்களின் உதிரத் தில் அனலாகத் தகித்துவருவதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய, ஈழம்தான் ஒரே வழி என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்திருக்கிறார்.

காங்கிரஸுடன் சண்டை போட கடல் சோகம் என்றால், பா.ஜ.க-வுடன் மல்லுக் கட்ட மதவாதம். ஜெயலலிதா பேச ஆரம் பித்துள்ள மதச்சார்பின்மை என்ற வார்த் தைதான் இந்த அறிக்கை நடிப்பின் உச்சம்.

பல நூறு ஆண்டு கால மத சகிப்புத் தன்மைக்கு பாபர் மசூதி இடிப்பின் மூலமாக பங்கம் வந்தபோது, தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், கரசேவையை (23.11.92) ஆதரித்துப் பேசியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. 'ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் எங்கே போய் கட்டுவது? என்றும் (29.7.2003) கேட்டவர். இன்றைக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக, 'ராமர் பாலத்தை இடிக்கலாமா? இந்துக்களின் மனதைப் புண்படுத்தலாமா? என்று (26.7.2008) கேட்டுக்கொண்டும் இருப்பவர்.

ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டம் உருவாக்கப்படுகிறதா என்பது இருக்கட்டும், 'சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்துவிட்டு சல்லிக்காசு கூட பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்று 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், 'சேது சமுத்திரத் திட் டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறை வேற்ற வைப்போம் என்று 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை யிலும், 'சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிவைக்க தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் தவறிவிட்டன என்று 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் சொன்ன ஜெயலலிதா, இப்போது மௌனமாகி விட்டு மதச்சார்பின்மை பேசுகிறார்.

மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்து, ஆடு, கோழி வெட்டக்கூட கோயில்களில் தடைபோடும் அளவுக்குப் போன ஜெயலலிதா, இன்று மதச்சார் பின்மை பேசுவது, கிளம்பி எழும் மோடி அலையில் மூழ்கி சிறுபான்மை வாக்கு களை அள்ளத்தான்.

தமிழ் ஓவியா said...

ஆம் ஆத்மிகூட ஜெயலலிதாவை ஆட்டுவிப்பதற்கு அடையாளம்தான், கறுப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கவலைப்படுவது, வெளிநாடுகளில் முடங்கிக்கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர ஆவன செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளி நாட்டில் என்ன, கணக்குக் காட்டாமல் தமிழகத்துக்கு உள்ளேயே முடக்கப் பட்டுக் கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர கடந்த இரண்டு ஆண்டு காலத்தை ஜெயலலிதா பயன்படுத்தி இருக்கலாம்.


ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரும் ஜெயலலிதா, லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட இதுவரை தூக்கிப் போட வில்லை. பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கை துணிச்சலாக எதிர்கொண்டு, என்ன தீர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என்று இருந்திருந்தால், சிந்துபாத்துக்குப் போட்டியாக அந்த வழக்கு மாறியி ருக்காது.

ஊழல் பற்றிப் பேச அண்ணா ஹஜாரேவுக்கு அடுத்த தகுதிகூட அவருக்கு வந்திருக்கக்கூடும். பொதுத் துறை நிறுவனப் பங்குகளைத் தனியா ருக்கு விற்கவே கூடாது என்பதில் ஜெய லலிதா காட்டும் உறுதியைப் பார்த்து, கம்யூனிஸ்ட்கள் விக்கித்து நிற்பார்கள். மாநில நலனுக்குக் குந்தகம் இல்லாத வெளியுறவுக் கொள்கையைக் கேட்டு, ம.தி.மு.க-வினர் மலைத்துப் போயிருப் பார்கள். சிறுபான்மையினர் நலன்களைப் பார்த்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கிறுகிறுத்துப்போயிருப்பார்கள்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு என்பது மத்திய தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத் துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது இளைஞர்களை உற்சாகப்படுத்து கிறது. எல்லாமே சரிதான்!

இவற்றை தமிழ் நாட்டில் செய்துகாட்டுவதற்கு உங்களுக் குத் தடங்கலாக இருந்தது, இருப்பது எது? எவ்வளவு பெரிய மாளிகை கட்டுவதற்கு முன்பும், முதலில் அதேபோன்ற மாதிரி ஒன்றை உருவாக்குவார்கள். அப்படி உங்கள் கையில் கிடைத்த வாய்ப்புதான் இந்தியப் பிரதமருக்கு முன்னால், தமிழக முதல்வர் என்ற மகுடம். ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்றாவது முறையாக உங்களுக்கு வாய்த்துள்ளது. ஆனால், முன்மாதிரித் தமிழகமாக முகிழ்க்கவைக்க முடியாமல் தடுத்தது எது?

இந்தக் கேள்விகள் மூலமாகக் கிடைக் கும் பதிலால்தான், உங்கள் மீதான நம் பிக்கை பலப்படும். மிக எளிமையான, ஆனால் மனம் கரையவைக்கும் ஓர் உதாரணம்...

'மாற்றுத் திறனாளிகள் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ அனுமதிக் கப்பட வேண்டும் என்பதில் அ.இ.அ.தி. மு.க. உறுதியாக உள்ளது என்று கூறியி ருப்பதுதான். பட்டப்பகலில் மொட்டை வெயிலில் மாற்றுத் திறனாளிகளான பார்வையற்றவர்களை ஒரு வார காலம், தினந்தோறும் பலவந்தமாக இழுத்துப் போன போலீஸ்காரர்களில் ஒரே ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுத்த தாகத் தகவல் இல்லை. கண் பார்வையற்ற வர்களை சென்னைக்கு வெளியே கொண்டுசென்று இருட்டில் விட்டுவிட்டுத் திரும்பிய மனிதாபிமான காவல் துறை அதிகாரிகளுக்கு அடுத்த சுதந்திர தினத் தில் மெடல் அணிவிக்கப்படலாம்.

மொத்த அறிக்கையில் ரணம் ஏற்படுத் திய வரிகள் இவைதான்.

ஒருவேளை...

ஓட்டுப் போடும் மொத்த வாக்காளர் களையும் மாற்றுத் திறனாளிகளாக நினைத்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருப்பார்களோ?

- நன்றி: ஆனந்த விகடன் 12.3.2014

Read more: http://viduthalai.in/page1/76548.html#ixzz2vQDQ8M9R

தமிழ் ஓவியா said...


சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுக்குப்பின் மாணவராய் மாறிய பேராசிரியர் ந.சுப்பிரமணியன்


சென்னை, மார்ச் 7- பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் புகழுடன் விளங்கி, ஓய்வுக்குப் பின் மாணவராகவே தன்னை ஆக்கிக்கொண்டு படித்தவர் - எழுதியவர் பேரா சிரியர் டாக்டர் ந.சுப்பிரமணியன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.2.2014 அன்று சென்னை பல்கலைக் கழகம் பரிதிமாற் கலைஞர் வளாகத்தில் - பவள விழாக் கலையரங்கில் - தமிழ் இலக்கியத் துறையின் சார்பில் பேராசிரியர் க.ந.சுப்பிர மணியன் அறக்கட்டளை சொற்பொழிவில் தலைமை வகித்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அவரது உரை வருமாறு:

இருவருடைய நட்பு என்பது மற்றவர்களால் விசித்திரமாகப் பார்க்கப்பட்ட ஒன்றாகும்

பேராசிரியர் ந.சுப்பிரமணியம் அவர்கள், 99 வயது வரையில் இருந்து, வருகின்ற ஜூன் மாதம் நூற்றாண்டு விழாவினை நடத்தவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் நீண்ட நம்பிக்கையோடு இருந்தோம். 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதி லிருந்து அவர்கள் மீள்வார்களா என்ற அளவில் இருந்த காலகட்டம்; ஆனால், அதிலிருந்து அவர்கள் மீண்டு, வெளியே வந்து, எஞ்சிய வாழ்நாள் முழுவதும், படிப்பு, எழுத்து, எப்பொழுதாவது எங்களைப் போன்ற நண்பர் களோடு உரையாடுதல் - இவைகளைத் தம் வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொண்ட ஒரு அற்புதமான தனித்த சிந்தனையாளர். அவருடைய சிந்தனை என்பது, துணிவு, தனித்தன்மை, யாருக்கும் அஞ்சாது கருத்துகளை வெளி யிடக்கூடிய ஆற்றல் இவைகளெல்லாம் உண்டு. பழகு வதற்கு மிகவும் இனிமையானவர். எல்லாவற்றையும்விட எங்கள் இருவருடைய நட்பு என்பது இருக்கிறதே, மற்றவர்களால் விசித்திரமாகப் பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

எங்களுடைய புத்தக நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்; நாங்களே அதனை வாங்கிக்கொள்கிறோம்

காரணம், பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள், பிறப்பால் பார்ப்பனர். பல ஊர்களில், பல பொறுப்புகளில் இருந்தவர். அவர் பேரா சிரியராக இருந்த காலகட்டத்தில் எல்லாம் எனக்கு தெரியாது; மதுரை பல்கலைக் கழகத்தில் இருந்து ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் அவர் ஆங் கிலத்தில் எழுதிய Brahmin in Tamil Nadu என்கிற ஆங்கிலத்தில் அவர் எழுதிய வரலாற்று நூலினை, நான் முதல் முறையாக வாங்கிப் பார்த்தபொழுது, மிகவும் வியப்பாக இருந்தது; பல்வேறு செய்திகளை ஆழமாக, அதேநேரத்தில், தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாமல், தான் சார்ந்த ஜாதியோ, குலமோ, பண்பாடோ குறுக்கிட முடியாத அளவிற்கு, அந்நூலினை அவ்வளவு ஆழமாக அவர் எழுதியிருந்தது, எனக்கு அவர்கள்மீது ஒரு எல்லையற்ற மதிப்பினை உருவாக் கிற்று. இவ்வளவு மிகச் சிறந்தவரைப் பார்ப்பதற்கு, சந்திப்பதற்கு அந்த புத்தகம்தான் இணைப்புப் பாலமாக அமைந்தது. அந்த நூலினை நான் வாங்கி, பலருக்கும் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் விசா ரிக்கின்றபொழுது, அவருடைய மகன் சுந்தரேசன் அவர்கள்தான் அவருக்குத் துணையாக இருக்கிறார். அந்த வகையில், அவர் எழுதுவதையெல்லாம் சொந்தப் பதிப்பகத்தில் பதிப்பிக்கிறார்கள். அந்த வகையில் நான் அவரைத் தொடர்பு கொண்டு அந்த நூலினைப்பற்றி கேட்டபொழுது, 200 புத்தகத்திற்குமேல் இருக்கிறது; அதனை யாரும் வாங்கவில்லை என்று சொன்னார். உடனே நான் சொன்னேன், எங்களுடைய புத்தக நிலையத்திற்கு நீங்கள் அனுப்பிவிடுங்கள்; நாங்களே அதனை வாங்கிக் கொள்கிறோம்; பல நண்பர்களுக்கும் அந்த நூலினை கொடுப்போம் என்றேன்.

புத்-அகமாகத்தான் இருந்தது அந்த வீடு!


தமிழ் ஓவியா said...

அதற்குப் பிறகு பேராசிரியர் சுப்பிரமணியன் எழுதிய பல நூல்களைப் படித்தபொழுது, எனக்கு இன்னும் வியப்பாக இருந்தது. அதன்மூலமாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். முதலில் அவர் மகன்மூலம்தான் தொடர்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தான் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டபொழுது, நான் குடும்பத்தோடு சென்று சந்தித்தேன்.

அவர் முதலாவதாக தன்னுடைய கொடும் நோயி லிருந்து விடுபட்டு, (அவருடைய வாழ்விணையர் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார்) தன்னந்தனிய ராக உட்கார்ந்துகொண்டிருந்தார். அறை முழுவதும் புத்தகங்கள்; மாடியிலுள்ள அறையிலும் புத்தகங்கள்; சமையல் அறையைத் தவிர மற்ற அறைகளில் எல்லாம் புத்தகங்கள்தான் நிறைந்திருந்தன. புத்-அகமாகத்தான் இருந்தது அந்த வீடு முழுவதும்.

தமிழ் ஓவியா said...

அவர் ஒரு அறிவு ஊற்று

எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்த தோழர் நடராசன் என்பவர், என்னுடன் வந்தபொழுது அவருக்கு அறிமுகம்; அவர் உடுமலைப்பேட்டையில் வசிக்கக்கூடியவர். எனவே, அவருக்கு நண்பர்கள் யாரும் கிடையாது; தோழர் நடராசன் அவர்கள், பேராசிரியர் சுப்பிரமணியன் அவர் களோடு உரையாடிக்கொண்டிருப்பார். அவர் எனக்கும் தகவல் கொடுப்பார். நாங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது நானும், என்னுடைய வாழ்விணை யரும் மற்றும் தோழர்களுடன் செல்வோம். பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந் தால், நேரம் போவதே தெரியாது. பல செய்திகளைக் கேள்விகளாகக் கேட்போம். அது ஒரு அறிவு ஊற்று மாதிரி.

அதுமட்டுமல்ல, தனித்தன்மையான சிந்தனையாளர் அவர். அவரோடு நான் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் அந்தப் பகுதி மக்களும், மற்ற தோழர்களும் - இவருடைய கொள்கை என்ன? அவருடைய கொள்கை என்ன? இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறார்களா என்று வியந்து போவார்கள். நாங்கள் அதனைப்பற்றி கவலைப்பட்டது கிடையாது.

அண்ணா அவர்கள், வ.ரா. அவர்களைப்பற்றி சொல் கின்றநேரத்தில், அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் என்று சொல்வார். தந்தை பெரியார் அவர்களிடத்தில், வ.ரா.வுக்கு மிகவும் அளவு கடந்த மரியாதை. தமிழ்நாட்டுப் பெரியார் கள் என்கிற புத்தகத்தில், வ.ரா. அவர்கள், அய்யாவைப் பற்றி எழுதியிருக்கின்ற வார்த்தைகள் - வாக்கியங்கள் என்றைக்கும் மறக்க முடியாத வார்த்தைகள். மண்ணை மணந்த மணாளர் என்கிற சொல்லை அவர் பயன் படுத்தியிருப்பார்.

எந்தவித சந்தேகங்களுக்கும், விளக்கங்கள் அளிப்பார்கள்

அதேபோல, என்.சுப்பிரமணியன் அவர்களும். அந்த வகையில், அவர்களுடைய வாழ்வு என்பது, யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாததாகும். குறிப்பாக, இளைஞர்கள் அவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றால், அதோடு அவர்கள் வேறு ஏதாவது பணிக்குச் செல்வார்கள்; பெயரப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கலாம்; அல்லது சுற்றுலா செல்லலாம்; எப்பொழுதாவது ஒன்று, இரண்டு நூல்களை எழுதலாம். இப்படித்தான் சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால், நம்முடைய பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்கள், பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, அதற்குப் பிறகு மாணவராக மாறிவிட்டார். இலக்கியத் துறையாக இருந்தாலும், ஆங்கிலத் துறையாக இருந் தாலும், வரலாற்றுத் துறையாக இருந்தாலும் எந்தவித சந்தேகங்களுக்கும், அவர் விளக்கங்கள் அளிப்பார்.

அவருடைய 99 ஆண்டுகால வாழ்க்கையில், கடைசி யாக ஒரு சில மாதங்கள்தான் அவர் எழுதுவதை நிறுத் தினார். ஓராண்டுக்கு முன்பு, தன்னுடைய தன் வரலாறு என்கிற ஒரு பகுதியை அவர் எழுதிய காலகட்டங்களில் அதைப்பற்றி அவர் சொல்லும்பொழுது, என்னுடைய வாழ்விணையர் அவர்களும், நானும் பாடம் கேட்கும் மாணவர்கள்போல உட்கார்ந்திருந்தோம்.

உங்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவோம்! என்று சொன்னோம்

நாங்கள் ஒரு கேள்வியை கேட்டோம்; அப்பொழுது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். நான் இந்த உலகத்தை விட்டுத் தள்ளியிருக்கிறேன். எனக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தமில்லை. நான் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன். முதல் மணி அடித்தாகிவிட்டது; இரண்டாவது மணி எப்பொழுது அடிக்கும் என்று காத்திருக்கிறேன் என்று சொல்வார்.

நாங்கள் உடனே, இல்லை, இல்லை உங்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவோம்; இன்றைக்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என்று சொன்னோம்.

லண்டன் பல்கலைக் கழகத்தில்...

இப்பொழுதெல்லாம் 80 வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. பல பேருக்கு, பலரை அடையாளம் தெரியாமல் போகிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள் 99 வயதிலும் அவருடைய நினைவாற்றல் இருக்கிறதே, ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் if you don’t use it; we will loose it என்பது கூட பயன்படுத்திக் கொண்டே இருந்தால்தான், கூர்மையாக இருக்கும். அவருடைய 98 ஆவது வயதில், அவர் ஒரு புத்தகத்தை மொழி பெயர்த்துத் தந்ததை நாங்கள் புத்தகமாக வெளியிட்டோம். வேறு யாராவது மொழி பெயர்த்தால், அவ்வளவு சரியாக வராது - சிக்கலான ஆங்கிலம் அது. ஆகவே, நானே அதனை மொழி பெயர்த்துத் தருகிறேன் என்று சொன்னார் பேராசிரியர். அந்த நூலின் பெயர் The Hindu Tripod நீலகண்ட சாஸ்திரி அவர்கள் இங்கே இருந்தபொழுது, இவரிடம் ஒரு கட்டுரையை கேட்டிருக்கிறார். இந்தக் கட்டுரையினுடைய கருத்தை, ஆங்கிலத் துறையில் இருந்த ஜே.டங்கன் எம்.டெர்ரெட் என்று சொல்லக்கூடிய அந்தக் கீழைநாட்டு சட்டப் பேராசிரியர் லண்டன் பல்கலைக் கழகத்தில், அவர் அக்கட்டுரையைப் படித்துவிட்டு, இக்கட்டுரை இன்னும் விரிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்ன வுடனே, அக்கட்டுரையை விரிவாகவே எழுதிக் கொடுத் திருக்கிறார், அவ்வளவு சிறப்பானது.

தமிழ் ஓவியா said...

அக்கட்டுரையை அவரே மொழி பெயர்க்கவேண்டும் என்று சொன்னேன்.

யாரும் செய்யாத வேலையை செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்!

உடனே பேராசிரியர் அவர்கள், நான் சில புத்தகங்களை இந்து பத்திரிகைக்கு அனுப்புவேன்; அது மதிப்புரையில் கூட வெளிவராது. ஏனென்றால், அதனை செரிமானம் செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆனால், நான் அதனைப்பற்றி கவலைப்படாமல் என்னுடைய கருத்தி னைச் சொல்கிறேன். நான் இதனை மொழி பெயர்த்தால் கூட, யார் இதனை வெளியிடப் போகிறார்கள் என்றார்.

யார் வெளியிடாவிட்டாலும், நாங்கள் வெளியிடு கிறோம் அய்யா, நீங்கள் மொழி பெயர்த்துக் கொடுங்கள்; யாரும் செய்யாத வேலையை செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்.

இந்து முக்காலி என்று எழுதினார்கள். இந்த புத்தகம் இங்கே கிடைக்கும். அதன் தமிழாக்கத்தையும் அவர்தான் செய்தார். உண்மை விளக்கும் பகுப்பாகும் என்று பெயரிட்டு, அதனை நாங்கள் வெளியிட்டோம்.

அதில் மிகச் சிறப்பாக மூன்று, நான்கு செய்திகளை மிக ஆழமாக சொல்லும்பொழுது எப்படி சொல்கிறார் என்பதை பாருங்கள்: மக்களிடையே தோன்றும் பிணக்கு கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு, ஒரு தவிர்க்க முடியாத அறிவு யாதெனில், விஞ்ஞான ரீதியானதும், பொதுநோக்குடையதுமான கல்வியே ஆகும்.

மூன்று கூறுகள் எவை?

ஒரு வாக்கியம் என்றால், எப்படி அழகாக, எவ்வளவு ஆழமாக இருக்கிறது பாருங்கள்; சிந்தனை; இதுபோன்று வரிசையான கருத்துகள். மறுக்க முடியாத கருத்துகள். அந்தக் கருத்துகளை தத்துவ ரீதியாக, ஒரு பாடமாக வைக்கக்கூடிய அளவிற்கு, அவ்வளவு சிறப்பான செய்திகளை, மூன்று கூறுகள் எவை என்பதையெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்துத்துவத்தினுடைய ஆதாரமான மூன்று நிறு வனங்கள் அடிப்படையானவை என்று சொல்லி, அந்த மூன்று நிறுவனங்கள் - இந்து முக்காலி என்று ஏன் பெயர் வைத்தோம் என்று சொல்லும்பொழுது,

இந்த மூன்றும் அகற்றப்பட்டால், இந்துத்துவத்தின் தன்மையே மாறிவிடும். அந்த மூன்று என்ன

வென்றால், ஜாதி வேறுபாடுகள்; கூட்டுக் குடும்பம்; கர்மா, மறுபிறவி.

அவர்களிலும் உண்மையான நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் திரு.வீரமணி அவர்கள் முக்கியமானவர். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு வருகிறவர். எனது இரண்டு நூல்களை அவர் செலவில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவர்தான், தஞ்சையில் நிறுவியுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில், என்னை பல சான்றோர்களின் முன்னிலையில், ஒரு தனி நிகழ்ச்சியில், தலைசிறந்த அறிவுக்கருவூல செவ்வியாளர் என்று விருது அளித்து கவுரவித்தார். இது 2008 செப்டம்பர் திங்களில் நிகழ்ந்தது என்று எழுதியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

ஞளலஉடி க்ஷடிபசயயீல டிக ஊ.ளுரசெயஅயயை க்ஷாயசயவ என்ற ஒரு புத்தகத்தை எழுதி, அவருடைய மகன் சுந்தரேசனிடம் கொடுத்து, நீ வீரமணி அவர்கள் வீட்டிற்குச் செல்; அங்கு அவருடைய இணையர் இருப்பார்; நான் கொடுத்தேன் என்று சொல்லி கொடுத்துவிட்டு, என்னைத் தொடர்புகொள்ளச் சொல்; இல்லையென்றால், பார்க்கவேண்டும் என்று சொல் என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய மகன் சுந்தரேசன் அவர்களும் என்னுடைய இணையரிடம் கொடுத்துவிட்டார்.

அந்த ஆங்கில புத்தகத்தில் னுநனஉயவநன வடி ஆசள. ஆடியயே ஏநநசயஅய, ய அடினநட சநயீசநளநவேயவஎந டிக சநயீநஉவநன றடிஅய டிடின என்று போட்டிருக்கிறார்.

கொள்கை ரீதியாக எங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர்; ஆனால், அவர் பழகுகின்ற தன்மையும், அவர்கள் எப்படி எடை போட்டு நண்பர்களிடம் பழகினார் என்பதற்கும் ஏராளமான செய்திகளை சொல்லலாம்.

ஆய்வரங்கங்களைப் பல்கலைக்கழகங்கள் நடத்தவேண்டும்

பேராசிரியர் அவர்கள் 130 நூல்களை எழுதியிருக்கிறார். அந்த நூல்களைப்பற்றி ஆய்வரங்கங்களைப் பல்கலைக்கழகங்கள் நடத்தவேண்டும். அதனை மிகவும் சிறப்பாக செய்யவேண்டும்.

klநம் நாட்டில் நூலகங்களுக்கு எப்படி புத்தகங்கள் வாங்குவார்கள் என்பது இங்கே எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எல்லோரும் புத்தகங்களை அச்சடித்து, அச்சடித்து கட்டி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், அதற்குரிய முறைகளை எல்லோராலும் செய்ய முடியவில்லை.
ஆனால், அதனைப்பற்றி அவர் கவலைப்படாமல், நிறைய நூல்களை அச்சடித்து அச்சடித்து வைத்திருக்கிறார்கள், அவருடைய வீட்டில்.

கூடுமான வரையில் நாங்கள், எங்களுடைய விற்பனைக் கூடத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் வைப்பதற்குக்கூட நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.

பேராசிரியர் அவர்களுக்கு சனாதனத்தில் பெரிய நம்பிக்கை கிடையாது. நட்புக்குத்தான் மரியாதை கொடுத்தார்; மனிதநேயத்திற்குத்தான் மரியாதை கொடுத்தார். ஜாதிக்கு மரியாதை கொடுக்கவில்லை; மதத்திற்கு மரியாதை கொடுக்கவில்லை. உண்மைக்கு மரியாதை கொடுத்தார்; அன்புள்ளவராக இருந்தார்.

ஒரு நாள் திடீரென்று அவருடைய மகன் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, அய்யா காலமாகிவிட்டார் என்று சொன்னார்.

உடனே நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டோம். அவர் இறந்ததைவிட, இன்னொரு அதிர்ச்சி எங்களுக்கு அங்கே காத்திருந்தது.

24 மணிநேரம்கூட காத்திருக்கமாட்டார்கள்

நம்முடைய வீட்டில் யாராவது இறந்தால், வீட்டிற்குள் வைத்து இறுதி மரியாதை செலுத்துவார்கள். ஆனால், பார்ப்பனர்கள் வீட்டில் யாராவது இறந்தால், அது, தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் வைத்துவிடுவார்கள். 24 மணிநேரம்கூட காத்திருக்கமாட்டார்கள்; சீக்கிரமாக பாடையில் வைத்து வேக வேகமாகக் கொண்டு போய், அதனை எரியூட்டவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கலாச்சாரம். இறந்துபோனால், அது டெட் பாடி; அவ்வளவுதானே தவிர, அதற்குமேல் ஒன்றும் கிடையாது.

பேராசிரியர் அவர்களையும் அதேமாதிரிதான் வீட்டிற்கு வெளியே வைத்திருப்பார்கள் என்று நினைத்தோம். நாங்கள் பேராசிரியர் வீட்டிற்குச் சென்றதும், அங்கே வியப்பு என்னவென்றால்,

அவர் எப்பொழுதும் உட்கார்ந்திருக்கும் அறையில், ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில் அவருடைய உடல் இருந்தது. நாங்கள் மாலையை வைக்கச் சென்றபொழுது நாங்கள் கண்ட காட்சி எங்களை வியக்க வைத்தது.

பேராசிரியருடைய துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பேராசிரியரின் விருப்பப்படி...

பேராசிரியருடைய மகன் சுந்தரேசன் அவர்கள் என்னிடம் சொன்னார்,

எங்கள் அப்பா என்னிடம், நான் இறந்தால் இந்த மாதிரி முறையில்தான் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மற்றவர்களைப்பற்றி கவலைப்படாதே என்று சொல்லியிருக்கிறார். அவருடைய விருப்பப்படிதான் நாங்கள் இப்பொழுது செய்திருக்கிறோம் என்று சொன்னார்.

அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழைக்குள், அவர் தலைப்பகுதியில் ஒருபுறம் அவருடைய மறைந்த துணைவியார் படமும், மறுபுறம் நானும், என்னுடைய இணையர் இருக்கின்ற படமும் வைக்கப்பட்டிருந்தது.

கடைசியாக என்னுடன் அவர்கள் இருந்தார்கள் என்ற எண்ணம் வரவேண்டும் என்று சொன்னாராம் பேராசிரியர்.

இப்பொழுது நினைத்தாலும் உணர்வுப்பூர்வமாக இருக்கக்கூடிய ஒரு செய்தி அது.

இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நட்பு என்பதற்கு ஒரு எல்லை உண்டா? அந்த உண்மையான நண்பர்கள் என்று சொல்கிறபொழுது, அவருடைய நினைவு வாழ்க, வளர்க! அவருடைய சிந்தனைகள் உலகை ஆள்க!
நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/76525.html#ixzz2vQDu2J4N

தமிழ் ஓவியா said...


நமது நோக்கம்


ஏழையாயிருப்பதும், செல்வனாயிருப்பதும் கடவுள் செயல் என்கின்ற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத்தன்மையின் கொடுமை களையும், புரட்டு களையும் தெளிவுப்படுத்தி விடுவதும், அதுபோலவே அரசாங்கமும், கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி,

ஜனங்கள் எல்லாரையும் சமமாய் நடத்தும் சமதர்ம ஆட்சி தான் நிலை பெற வேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பது. இதற்கு இடையூறாக வரும் சமயக்காரனையோ, பண்டிதனை யோ, பணக் காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியை யோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதே நமது நோக்கமாகும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு, 25.5.1930)

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFFNdI3

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்தி வாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.திராவிடர் என்போர் யார்? திராவிடர் என்றால் பிறவியிலேயே பிறக்கும் போதே ஏற்படும் இனப்பெயர்தான். திராவிடர் என்பது ஜாதியல்ல; பிறவி ஆகும்.

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFUn2Ya

தமிழ் ஓவியா said...

அரசுக்கு மதம் உண்டா?

- கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வோம் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அப்படி ஒரு அரசியல் கட்சி உள்ளதா? அதன் பெயர் என்ன?

பதில்: இருக்கிறதே என் கற்பனையில்! அதன் பெயர் உன்னத இந்தியர் கட்சி! எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்பைத்தான் மதச்சார்பற்ற என்கிறோம். அப்படி தாங்கள் ---இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் வோட்டு வங்கி அரசியல் இதைப் பொய்யாக்கிவிடுகிறது. பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள அறிக்கை.- (கல்கி 16.2.2014 பக்கம் 44)

எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்புதான் மதச்சார்பின்மை - என்று கூறும் விளக்கமே தவறானது.

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான். செக்குலர் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்குத்தான் தமிழில் மதச்சார்பின்மை என்று கூறப்படுகிறது.

செக்குலர் என்ற சொல் ஆங்கில மொழியிலிருந்து வந்ததுதானே _ அப்படி இருக்கும் ஆங்கில மூலச் சொல்லின் பொருளை அந்த ஆங்கில மொழியில்தானே காண வேண்டும், தேட வேண்டும்.

இதுகுறித்துத் தந்தை பெரியார் கூறும் கருத்து விவேகமானது.

செக்குலர் _ மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?

தமிழ் ஓவியா said...

செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்யானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?

அந்தச் சொல்லும்கூட அரசாங்கக் காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்லவில்லையே! என்றார் தந்தை பெரியார்.

செக்குலரிசம் குறித்த தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து தனித்தன்மையானது. உண்மையின் தன்மையை ஆராதிப்பதாகும்.

அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.

எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க _ குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.

தமிழ் ஓவியா said...

ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித்துள்ள தீர்ப்புகளில் _ அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஓர் ஆட்சி _ மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ _ ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.

சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு _ கலாச்சார மேம்பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.

அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் _ அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு _ அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.

அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகிவிடுகிறது.

அரசியல் சட்டம் மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்கவில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காலம் வரை_ இதை யாரும் மாற்றிவிட முடியாது _ இவ்வாறு ஆறு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994)

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்தை தீக்கதிர் தமிழில் வெளியிட்டு இருந்தது. (7.10.2012)

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்று கூறினாரே.

மதத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் மதச்சார்பின்மை என்பதன் பொருள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கல்கி கூட்டங்கள், சங்பரிவார் கூட்டங்கள் அரசு என்பது எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வது என்று பாடப் பேதம் செய்வதன் விஷமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் மதச்சார்பின்மைக்குப் புது விளக்கத்தையே அருள்வாக்காகக் கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை என்று விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம். (சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் மோடி) _ இது மோடியின் அறியாமைக்கான முகவரியே!

மோடியை விட்டுத் தள்ளுவோம். ஜென்டில்மேன் வாஜ்பேயி இருக்கிறாரே _ அவர் மட்டும் என்ன வாழுகிறதாம்?

பூனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜியின் 325ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்?

MR. VAJPAYEE SAID, CHATRAPATHI WAS SECULAR TO THE TRUE SENSE AS AGAINST TODAY’S “DISTORTED SECULARISM” FOR HE PAID EQUAL RESPECT TO ALL RELIGIONS AND NEVER DISCRIMINATED ON THE GROUND OF RELIGION. - (The Hindu 27.6.1998 page 8)
சத்ரபதி சிவாஜி இப்போதுள்ள உருக்குலைக்கப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கையைப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்கவில்லை, எல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார் என்றவர்தானே வாஜ்பேயி. உண்மை என்னவென்றால், பார்ப்பனர்களுக்குப் பாதம் பணிந்து சொத்தையெல்லாம் இழந்து பரதேசி ஆனவர்தான் சிவாஜி. அதனால்தான் சிவாஜியை மதச்சார்பற்றவர் என்று தூக்கி உச்சி மோந்துள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

தமிழ் ஓவியா said...

இப்பொழுது கூறப்பட்டு வரும் மதச் சார்பின்மை என்பது உருக்குலைக்கப்பட்ட (DISTORTED) ஒன்றாம். (இந்தச் சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்துதான் பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) பிரதமராக இருக்கக்கூடியவர் உள்ளத்தில் அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனுதர்ம வேர் அல்லவா குடிகொண்டு இருக்கிறது.

காரணம், வாஜ்பேயியாக இருந்தாலும் அவர் இந்துத்துவ மத அடிப்படைவாதி என்பதுதான்.

மும்பையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.ஜே.பி உறுப்பினர் ராம் கட்சே.

1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், விசுவஹிந்து பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த சாத்வி ரித்தாம்ப்ரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குக் கேட்டனர். அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. (15.4.1994). அத்தீர்ப்பை வழங்கியவர் அகர்வால் ஆவார்.

2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுபுழா மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப்.டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே)உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும்கூட. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர்.

தமிழ் ஓவியா said...

இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம்.இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்ட சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.

மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்தவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.

இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் தீர்ப்பை அளித்தார். (31.10.2006) அந்தத் தீர்ப்பில், மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார்; எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில்கூட போட்டியிடும் வேட்பாளர்கள் மதச் சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டியவர்கள். எந்த மதத்தைச் சார்ந்ததாகவும் கூறிப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றுள்ள நிலையில், மதச்சார்பின்மைக்கு கல்கிகளும், பி.ஜே.பி., சங்பரிவார்க் கூட்டமும் கூறும் விளக்கம் தவறானது - தந்தை பெரியார் கூறும் கருத்தே சரியானது என்பதும் விளங்கவில்லையா?

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) ஆணை

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் (கிளை) உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

இந்தக் கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரைப் புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். - (தீர்ப்பு 17.3.2010)

தமிழ் ஓவியா said...

இந்துத்துவ வலையில் சிக்கிய மீன்


ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் இருக்கிறார். அவர் முதலில் தி என்ற பயிற்சியாளரிடம் 10 மாதம் பயிற்சி பெறுகிறார். பங்கு பெறும் ஆட்டங்களில் எல்லாம் நாலும் ஆறுமாக, சதமும், இரட்டை சதமுமாக அடிக்கிறார்.

பத்து மாதங்கள் கழித்து பயிற்சியாளர் மாறி விடுகிறார். ஆ என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது அந்த மட்டையாளர் ஆறு, நான்கு எல்லாம் அடிக்க முடியாமல், முட்டையும், 1 ஓட்டமுமாக ஒரு ஆட்டத்தில் 10 ஓட்டங்களைக்கூட அடிக்கத் திணறுகிறார். இப்படியாக 8 மாதங்கள் போய்விடுகிறது. அதன் பிறகு கி என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது மட்டையாளர் படிப்படியாக முன்னேறுகிறார். 20, 30 என்று அடித்தவர், இரு மாதங்கள் கழித்து மெதுவாக 50 வரை அடித்துள்ளார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இப்பொழுது, சிறந்த பயிற்சியாளர் யார்? மோசமான பயிற்சியாளர் யார்?

*******

இந்தக் கேள்விகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். சிறிது வரலாறு படித்துவிட்டு மீண்டும் இதற்கு வருவோம்.

*******

தமிழகத்தைப் பொருத்தவரை, பல ஆண்ட பரம்பரைகள் உள்ளனர். ஏறத்தாழ அனைத்து ஜாதியினருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசாண்டு உள்ளனர். பிற நேரங்களில் அவர்கள் நிலை அடிமையாக இருந்துள்ளது.

இதில் நெய்தல் நில கடல்சார் சமூக மக்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இவர்களும் ஒரு காலத்தில் அரசாண்டவர்கள் தான். சங்க கால பாண்டிய மன்னர்கள் நெய்தல் நில கடல் சார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் தலைநகரங்கள் கடலின் ஓரம் இருந்ததாலேயே அவை கடற்கோள்களினால் அழிய நேரிட்டது.

தமிழ் ஓவியா said...

சங்க காலத்திலும், அதன் பிறகு களப்பிரர் காலம் வரையிலும் நெய்தல் நில கடல் சார் சமூகத்தினர் பல வேலைகளைச் செய்து வந்தனர். சிலர் கலங்களைக் கட்டுபவர்களாக இருந்துள்ளனர் (Ship builders).

சிலர் அந்தக் கலங்களை ஓட்டுபவர்களாகவும், பாய்மரத்தைப் பயன்படுத்துபவர்கள் (sailors) மற்றும் வானைப் பார்த்து வழி காட்டுபவர்கள் (navigators). சிலர், அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்களாகவும் (businessmen), சிலர் அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாகவும் (navy), சிலர் சிறு படகுகளில் சென்று மீன் பிடிப்பவர்களாகவும் (fishermen), சிலர் முத்துக் குளிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் (pearl divers).

களப்பிரர் காலம் வரை மிகவும் சிறப்பாக இருந்த இந்த நெய்தல் நில மக்களுக்கு அதன் பிறகு சோழர் காலத்தில் வந்த, தமிழர்களின் வாழ்வைச் சீரழித்த, தமிழர்களின் கல்வியைத் தடுத்த, அவர்களின் ஒற்றுமையைக் கெடுத்த ஆரிய மதங்களால் இறக்கம் வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் பல சமூகங்களைப் போலவே இந்தச் சமூகமும் அடிமை சமூகமாகவே இருந்தது.

பிராமணர் தவிர மற்ற சமூகத்தினரைப் பலவாறாகப் பிரித்து, பிராமணர் தவிர மற்ற சமூகத்தினர்களின் ஒற்றுமையைக் குலைத்து, பிராமணர்களை மட்டும் முன்னிறுத்தும் ஆரியம் நெய்தல் நில கடல் சார் சமூகத்தையும் பிரித்தது. கலங்களைக் கட்டுபவர்களில் பலர் இசுலாம் மதத்தைத் தழுவி மரைக்காயர் ஆகிவிட்டனர்.

அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் செட்டியார்களாக மாறிவிட்டனர். (கோவலன், செட்டியார் தான். அதாவது, கடல்சார் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அந்தக் காலத்தில் வந்த கடல்கோளினால் புகார் அழிந்தது. அதில் தப்பிப் பிழைத்த செட்டியார்கள் பயந்து கடலிலிருந்து உட்புறமாக வந்து சிவகங்கையில் தங்கினார்கள். ஆனால், நீரைப் பார்த்த பயம் மட்டும் போகவில்லை. செட்டி நாடு வந்தாலும், வீடுகளை 5 அல்லது 6 அடி உயரமாகவே கட்டினார்கள்! இன்றளவும் செட்டிநாட்டில் வீடுகள் உயரமாக இருப்பதன் காரணம் அவர்களுக்கு புகாரில் ஏற்பட்ட கடற்கோள் பாதிப்பினால் வந்த பயமே).

அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாக இருந்தவர்களில் சிலர், பிற மருதம் மற்றும் பாலை நில போர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அதில் குதிரை வீரர்கள் இராவுத்தர் ஆயினர்.

இன்றளவும், கடற்கரையோர இசுலாமிய சமூக மக்களும், மீன்பிடித் தொழில் செய்பவர்களும், சில இடங்களில் மாமன், மச்சான் உறவு முறை கொண்டாடுவதன் பின்ணனி இதுதான்.

பிற சமூகத்தினர் கல்வி கற்கத் தடை செய்த ஆரியம் நெய்தல் நில கடல்சார் சமூகத்தினரின் அரிய வானியல் அறிவையும், அவர்களின் பிற நுட்பங்களையும் பறித்துக் கொண்டது, பலனற்றதாக்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வெறும் பாய்மரம் மற்றும் விண்மீன்களின் துனை கொண்டு ஆப்பிரிக்காவைச் சுற்றி உரோமபுரிக்கும், யவனத்திற்கும் சென்று வாணிபம் செய்த ஒரு சமூகத்தின் அறிவும், திறமையும் ஆரியத்தால் அழிந்தன. எத்தனை ஏகலைவர்களின் கட்டை விரல்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதற்குக் கணக்குக் கிடையாது.

ஆரியம் அவர்களுக்கு கல்வியை முற்றிலும் மறுத்தது.

மிகுந்த செல்வச் செழிப்பாக இருந்த நெய்தல் நில மக்களை அடிமையாக்கி _ ஏழையாக்கி, அவர்களிடமிருந்த கப்பல் கட்டும் தொழில், பாய்மரம் செலுத்துதல், வழி காட்டுதல், வியாபாரம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பிரித்து அவர்களைக் கல்வி அறிவு அற்றவர்களாக ஆக்கி அவர்களை மீன் பிடிக்க மற்றும் முத்துக் குளிக்க மட்டும் அடிமையாக ஆக்கியது சோழர் காலத்தில் தமிழகத்திற்குள் வந்த ஆரியமே.

இதே போல் மருத நில மக்களும் பாதிக்கப்பட்டனர்.

கல்வியிலும் தத்துவத்திலும் தரை வழி வாணிபத்திலும் பள்ளிக்கூடங்களை நடத்துவதிலும் சிறந்து விளங்கிய சமணர்களில் பலரைக் கழுவில் ஏற்றி, பிறரை சாணார் என்று சொல்லி அந்தச் சமூகப் பெண்கள் மேல் சட்டை அணிய தடை விதித்தது. அவர்களை, பனை ஏற மட்டுமே சுருக்கியதும் ஆரியமே.

இது போல் தமிழகத்தின் எந்தத் தொல் சமூகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் அவர்களின் வாழ்வைச் சீரழித்தது ஆரியம் என்று அறிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

பத்தாம் நூற்றாண்டிலிருந்து மீன்பிடிப்பவர்களாகவும், முத்து குளிப்பவர்களாகவும் (மீனவர்கள், பரவர், பரதவர், முக்குவர்) மட்டுமே மாறி விட்ட நெய்தல் நில மக்களும் பனை ஏறுபவர்களாகவே மாற்றப்பட்டு, பெண்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய தடை விதிக்கப்பட்ட (நாடார், சாணார்) மருத நில மக்களும் அடுத்த பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையிலேயே இருக்க வேண்டி வந்தது.

அவர்களுக்கு விமோசனம் அய்ரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க வந்த போர்த்துகிசீயர்களாலும், ஆங்கிலேயர்களாலுமே வந்தது.

அவர்கள் வந்த பிறகே இந்தச் சமூகங்கள் மீண்டும் கல்வி பெற முடிந்தது. போர்த்துகீசியர் கொண்டு வந்த கத்தோலிக்க மதத்திலும், ஆங்கிலேயர் கொண்டு வந்த கிறித்தவ மதத்திலும் யார் வேண்டுமானாலும் சாமியார், குருக்கள், ஆயர் ஆகலாம்.

அனைவரும் தேவாலயத்தின் உள்ளே சென்று கும்பிடலாம். தேவாலயத்தின் உள்ளே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்.

அனைவரும் நற்கருணை வாங்கலாம் போன்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் பல நூற்றாண்டு அடிமைப்பட்டிருந்த சமூகங்களுக்கு விடிவெள்ளியாய் திகழ்ந்தன.

போர்த்துகீசியர் வருகையால் நெய்தல் நில மக்கள் தங்களின் கப்பல் சார் பணிகளை மீண்டும் பெற்றனர். (அதில் சிலர் மேசைக்காரர்கள் என்று ஆனது தனிக் கதை). திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் அளவிற்கு ஆங்கிலேயர் வருகையால் கல்விக்கூடங்கள் பெற்றது.

சென்னை மாகாண ஆளுநரின் நேரடித் தலையீட்டினால் உயர் ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுதான் சுருக்கமான வரலாறு. அதாவது, திராவிட ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த சமூகங்கள் எல்லாம் ஆரிய ஆட்சியில் அடிமையாக, கல்வி மறுக்கப்பட்டும், பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டும், பலவாறாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் பல தொழில்கள் பறிக்கப்பட்டுச் சீரழிந்து கொண்டிருந்த போது, அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த கிறித்தவ மதத்தினால் கல்வி பெற்று ஆடை அணிய உரிமை பெற்று தொழில் செய்ய உரிமை பெற்று சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்கள்.

***********

இப்பொழுது மீண்டும் நாம் முதலில் பார்த்த கிரிக்கெட் கேள்விகளுக்கு வருவோம்.

சிறந்த பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் தி மோசமான பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் ஆ சரிதானே.

இப்பொழுது ஒருவர் கிரிக்கெட் குறித்து கட்டுரை எழுதுகிறார்.

அவர் என்ன மோசடி செய்கிறார் என்றால், தி என்ற ஒரு பயிற்சியாளர் இருந்ததை முற்றிலும் இருட்டடிப்புச் செய்து விடுகிறார். முதலில் பெற்ற சதங்களுக்குக் காரணம் ஆ என்று திரித்துப் பொய் கூறுகிறார். (அதாவது தியின் சாதனைகளை மறைத்து) இடையில் பெற்ற 0 ஓட்டங்களுக்குக் காரணம் கி என்று திரித்து அடுத்த பொய் கூறுகிறார் (அதாவது ஆ செய்த மோசடி வேலைகளை மறைத்து).

இப்பொழுது இந்தக் கட்டுரையாளர் ஆவின் ஆதரவாளர் தியின் மற்றும் கியின் எதிர்ப்பாளர் என்று கண்டு கொள்ள முடிகிறதல்லவா?

*******

இப்பொழுது நெய்தல் நிலத்திற்கு மீண்டும் வரலாம். நெய்தல் குறித்த கதை எழுதும் ஒருவர் களப்பிரர் காலம் வரை அந்தச் சமூகம் இருந்த உயர்வுகளைக் கூறி, ஆனால் களப்பிரர் என்பதை மறைத்து, அந்த உயர்வுகளுக்குக் காரணம் இந்து மதம் என்று பொய் கூறி இந்து மதத்தினால் இந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கூறலாம். அந்தப் பாதிப்புகளுக்கு எல்லாம் காரணம் கிறித்தவம் என்ற அடுத்த பொய் கூறுகிறார். அதாவது, களப்பிரர்களின் சாதனைகளை மறுக்கிறார். களப்பிரர்களின் சாதனைகளை எல்லாம் இந்து மதத்தின் சாதனைகளாகப் பொய் கூறுகிறார்.

ஆரியத்தின் துரோகங்களை மறைக்கிறார். அந்தத் துரோகங்களை, அந்த மக்கள் விரோதச் செயல்களை எல்லாம் செய்தது கிறித்தவம் என்று பொய் கூறுகிறார்.

கிறித்தவத்தின் சாதனைகளை மறைக்கிறார்.

இப்படிப்பட்டவரை இந்துத்துவ எழுத்தாளர் என்று கூறினால் அதில் என்ன பிழை? அவர் சாகித்திய அகாடமி விருது வாங்கினால் என்ன, வாங்காவிட்டால் என்ன?

- கிளிமூக்கு அரக்கன் (முகநூலில்

தமிழ் ஓவியா said...

இந்துத்துவாவின் தந்திர வலை ஒடுக்கப்பட்டோரே எச்சரிக்கை!


15.2.2014 நாளிட்ட மதுரை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள 7 கலம் செய்தியின் தலைப்பு “RSS Aims for Bigger Role in Electoral என்பதாகும். அதாவது, வரும் (நாடாளுமன்ற) பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் மிகப் பெரிய பங்காற்றும் கடமையைக் கையில் எடுத்துள்ளது என்பதாகும்.

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதிய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.

நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா கொள்கையை அப்பட்டமாகக் கடைப்பிடிப்பதில் சற்றும்கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே -_ பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் _- இணையதளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப்தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மையான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத்துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படையாகவே இறங்கி விட்டது! அந்தந்த மாநிலங்களில் பதவிப் பசி கொண்டவர்களை - புகலிடம் தேடியவர்களையெல்லாம் தங்களது அணிக்கு அழைத்துக் கொள்ள, பணபலம், பத்திரிகைப் பலம், இனபலம் எல்லாவற்றையும் _- சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி, களத்தில் நேரிடையாகவே ஒரு யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டது!
எனவே, இப்போது நரேந்திர மோடி என்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏவி விடும் மன்மத அம்பு என்பதை நாடும் மதச் சார்பற்ற, சமதர்மக் கொள்கையில், பாசிசம் அல்லாத ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலுவோர் மிகக் கவனமாக வரும் பொதுத் தேர்தலை அணுக வேண்டியவர்களாவர். மேற்சொல்லப்பட்ட (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) செய்தியின் முக்கிய சாராம்சத்தை அப்படியே தருகிறோம்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் மோகன்பகத் அவர்கள் தலைமையில் வாரணாசியில், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடிய ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத் (அதிகமான எம்.பி.களைக் கொண்ட மாநிலம்)திற்குப் பொறுப்பான பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பேயி, அமைப்புச் செயலாளர் ராதேஷ் ஜெயின், கட்சித் தேர்தல் பொறுப்பாளர் (குஜராத்தில் மோடியை வெற்றி பெறச் செய்த) அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் தனது தேர்தல் பணிக்கான திட்டங்களை முன் வைத்துள்ளார்.

1. பிரதமர் வேட்பாளர் எப்படி ஹிந்துத்துவா கொள்கையில் ஊறித் திளைத்தவரான மோடியையே தேர்ந்தெடுத்துள்ளோமோ, அதே போல் அக்கொள்கையில் வேரூன்றியவர்களையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக இந்தஅணி சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.

2. இப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நல்ல பெயரையும், பொது மக்கள் மத்தியில் மதிப்பையும் கொண்ட கேள்வி கேட்கப்பட முடியாத தகுதியான வேட்பாளராகவும் அமைதல் வேண்டும்.

3. பா.ஜ.க.வுக்குச் சொல்லப்பட்ட கருத்து என்னவென்றால், ஆணைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸால் தரப்பட்டால் அதை அப்படியே கட்சி (பா.ஜ.க.) அமைப்பு பின்பற்றியாக வேண்டும்.

4. அவ்வமைப்புகள் கிராமாந்திரங்களிலும் இறங்கி ஆதரவாளர்களான வாக்காளர்களை ஒன்று திரட்ட ஆவன செய்ய முன்வர வேண்டும்.

5. மற்ற இடங்களில் தெரிகின்ற மோடி அலை எப்படி 2014-இல் வீசுகிறதோ, அதை உ.பி.யில் 80 இடங்கள் உள்ள மாநிலத்தில் வீச வைக்கத் தேவையான அத்தனை உத்திகளையும் கையாளத் தயங்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டோர், தலித் என்ற தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கத் தேவையான அத்துணை முயற்சிகளையும் செய்யத் தவறக் கூடாது. இதற்காக தனித்தனி மாநாடுகளை ஆங்காங்கே நடத்திட வேண்டும்; சமூக சீர்திருத்தவாதியான கான்சிராம் பெயரில் நிகழ்ச்சிகளை உ.பி.யில் கவுதம சவுத்ரி என்பவர் நடத்தியதுபோல் நடத்த வேண்டும். பாபு ஜெகஜீவன்ராம் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு, இந்தத் தேர்தல் பயணத்தை சளைக்காது பா.ஜ.க. நடத்திட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு அதிகம் (அங்கே) இல்லை என்றாலும், பிரதமர் வேட்பாளரான மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்பதை சதா விடாமல் எங்கும் தொடர்ந்து பிரச்சாரத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இவைதான் ஆர்.எஸ்.எஸ்., _- பிஜேபி சேர்ந்து எடுத்துள்ள முடிவுகளும், வியூகங்களும் ஆகும்.

தமிழ் ஓவியா said...

அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிப்படையான பிரகடனம்தான் இவை. லால்கிஷன் அத்வானி போன்ற மூத்த தலைவரைப் புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கக்கூடிய ஒன்றாகும் இந்தப் பிரகடனம்.

அ) சில வருடங்களுக்குமுன் அத்வானி ஒருமுறை தனது குமுறலை வெளிப்படையாகவே வெளியிட்டார். பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற ரீதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல; பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி சுதந்திரமாக இயங்கும் தன்மை ஏற்பட வேண்டும் என்றும் கூறினார்.

அன்று முதலே அவர் பல வகையிலும் புறந்தள்ளப்பட்டு வரும் தலைவரானார்; ஜின்னாவைப் பாராட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தே விலகும்படி ஆக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் எல்.கே. அத்வானி இவ்வாறு குறிப்பிட்டார்:

ஆர்.எஸ்.எஸின் அனுமதியில்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தை இந்நிகழ்ச்சி (அத்வானி கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்ச்சி) வலுப்படுத்தி விட்டது. நாம் கொண்டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால் பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது.

ஓர் நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நற்தோற்றத்தைக் குறைத்துவிடும் என்பதுபற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும்; மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்குவதற்கு ஆர்.எஸ்.எசும், பி.ஜே.பி.யும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார் எல்.கே. அத்வானி (தி இந்து 8.10.2013).

மோடியைக் காட்டினால்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் சமூக நீதியாளர்களின் வாக்குகளைப் பறிக்க ஏதுவாகும் என்கிற வியூகத்தில், அத்வானியை முன்னிலைப்படுத்தினால் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் அடைய முடியாது என்பதும் அதன் உத்தி _- வியூகம் என்பது இதன் மூலம் புரிகிறது அல்லவா? இதுவரை ஒளிந்திருந்து பி.ஜே.பி.யை வழி நடத்திய ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முக்காட்டைக் கலைத்துவிட்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்து மாயமானாக செயல்படத் துடிக்கிறது.
இதனைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புரிந்துகொண்டு, ஹிந்துத்துவா கூட்டத்தின் தந்திர வலையில் சிக்காமல், வீறுகொண்டு எழ வேண்டும்; பி.ஜே.பி.யின் வியூகத்தை முறியடிக்க மதச்சார்பின்மைச் சக்திகள் ஒன்று திரண்டு பிஜேபிக்கு எதிரான சரியான வியூகங்களை வகுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் இப்போது பா.ஜ.க. அணியை எதிர்ப்பதாகக் காட்டி பிறகு அவருடன் சேரும் அணியையும் சரியாக அடையாளம் கண்டு, ஏமாறாமல் புறந்தள்ளி, உண்மையான மதச் சார்பற்ற அணியை அடையாளம் காண வேண்டும்.

- கி.வீரமணி
ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...


எல்லாமே அந்த அம்மாதானே...!


என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன். - விடுதலை 15.10.1962இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக _ என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் _ வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன்.

இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள். - விடுதலை 13.2.1963

(அன்னை மணியம்மையார் பற்றி தந்தை பெரியார் கூறியவை)

தமிழ் ஓவியா said...

கருத்து
கருத்து

Print
Email

மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்ட தீர்ப்பு, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டுவதாக அர்த்தம் அல்ல. கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் விளக்கிக் கூற முடியாத தேவையற்ற காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். மரண தண்டனைக் கைதிக்கும் கருணை காட்டும்படி கோருவதற்கு உரிமை உண்டு. அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியல் சட்டக் கடமையாகும்.

- பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழ் ஓவியா said...

ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதிய பார்வை கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கையின் சுழற்சியை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு குழந்தையின் தந்தையையும் தாயையும் பிணைத்து வைத்திருக்கும் பசை என்பதைப் புரிந்துகொண்டால் அற்ப மாயைகளை நம்பி ஒரு ஆணோ பெண்ணோ தவறான வழியில் செல்ல மாட்டார்கள்.

இந்திர விழா போன்ற பெயர்களில் காதலர் தினம் தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. காதலைக் கொச்சையாகப் பார்ப்பதும் அழகாக _ கம்பீர மாகப் பார்ப்பதும் நமது பார்வையில்தான் உள்ளது.

- ஷாலினி, மனநல மருத்துவர்

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பன்னாட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும். அதற்கான கருத்துகளை அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ முன்மொழிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது குறித்து சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த 2 தீர்மானங்களை இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.

- விஸ்வநாதன் ருத்ரகுமாரன்,
நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர்காதலிப்பவர்களைத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறவர்கள் திருமணம் என்பதைத் தாலி கட்டிக்கொள்ளும் சடங்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு தாலி என்பது தமிழ்க் கலாச்சாரம் கிடையாது என்பது தெரிவதில்லை. - சந்தியா, எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...

கருப்பு வண்ணம் புரட்சி எண்ணம்...


- ப. கல்யாணசுந்தரம்

அந்த நள்ளிரவு நேரத்திலும் கிருபாவால் உறங்க முடியவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தாள். சுற்றிச்சுற்றி வரும் கடந்தகால எண்ண அலைகளிலிருந்து அவளால் விடுபடமுடியவில்லை.

அருகில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அம்மா கைகளால் தட்டி, தான் உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளிரிலும் கிருபாவுக்கு வியர்த்தது. இடதுகையைக் கன்னத்தில் வைத்து ஒருக்களித்துக் கண்களை மூடினாள். உடல் கசகசத்தது. மனம் அதைவிடக் கசந்தது.

ஏதோ ஒன்றை இழந்தது போலவும், அதை மீட்க என்னசெய்வது என்பது போலவும் கற்பனையும் கனவாயும், சிறிது அச்சமாயும் இருந்தது அவளுக்கு.

மின்விளக்கைப் போட்டுவிட்டு, தண்ணீர் குடிக்க எண்ணினாள். தண்ணீர் குடிக்க ஏனோ முடியாமலும், உறக்கம் வரப் பிடிக்காமலும், எழுந்து ஓசைப்படாமல் வெளியில் வந்து நடைக்கதவைத் திறந்து, தெருவைப் பார்த்தபடி நின்றுகொண்டாள்.

தெரு நிசப்தமாயும், வெறிச்சோடியும் கிடந்தது. அருகில் உள்ள மின்கம்ப விளக்கைச் சுற்றி வட்டமாக, சில்வண்டுப் பூச்சிகள் கும்மியடித்துப் பாடிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியதால் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

கடந்தகால எண்ண வட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு, பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தாள்.

... புதிதாகக் கல்லூரி திறந்து இரண்டு மாதமானாலும் இன்னும் கிருபாவுக்கு, எல்லாமே ஒருவித அச்சமாக இருந்தது. தன் அண்ணனின் நண்பனான சேகரும் அக்கல்லூரியில் சேர்ந்திருந்தான். அவனை ஒரு தேநீர்க்கடையில் கிருபாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான் அண்ணன்.

சேகர் மிகவும் சுறுசுறுப்பானவன். படிப்பில் கெட்டி. தன் வகுப்பிற்கு அடுத்த வகுப்பில் படிப்பவன். உயரமும், பருமனும் இல்லாத கச்சிதமான உடல்வாகு உள்ளவன். அடிக்கடி கண்சிமிட்டிப் பேசும் அவனை யாருக்கும் பிடிக்கும்.

காதலில் நம்பிக்கையில்லாத கிருபாவைத் தன் புன்னகையாலும், அன்பான உபசரிப்பாலும் கட்டிப் போட்டு, அவனை எப்போது பார்ப்போம்? பேசுவோம்? என்று நினைக்க வைத்துவிட்டான் சேகர்.

ஒருநாள்...

கல்லூரி திடீரென்று வேலைநிறுத்தம் செய்தபோது, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தனர். கிருபாவும், சேகரும் ஒரு அய்ஸ்கிரீம் கடையில் எதிரெதிரே அமர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தனர்.

கிருபா! இந்த புளுலைட் கலர் சுடிதார் உனக்கு மிகவும் எடுப்பா இருக்கு. ஆனால், அந்த ஒற்றை வளையலும், கர்சிப்பும் நல்லா இல்லே. அதும் லைட் கலரில் இருந்தா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

அப்படியா...? சிறிது நாணத்துடன் சொன்னாள். உனக்குப் பிடிச்சிருந்தா அந்தக் கலரிலேயே எனக்கு வாங்கித் தர்றியா?

ஓ... தாராளமாக. இப்பவே வா.! நம்ப லேடீஸ் சாய்ஸ்ல உனக்காக இன்னொரு டிரஸ் எல்லாமே, எனக்குப் பிடிச்சதா வாங்கித்தர்றேன்!

இருவரும் போனார்கள். அவனுக்கு விருப்பமானதையே அவளுக்கு வாங்கிக் கொடுத்தான். அன்று முழுதும், அவள் மனதில் சேகர் முழு ஆக்கிரமிப்பில் இருந்தான். அவனுக்குப் பிடித்தமானதாகவே அவள் உடையணிய, சாப்பிட, உண்டு உறங்க எத்தனிக்கும்போது, கிருபாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தனக்காக எல்லாமே வாங்கித் தருகிறானே என்று. இனி அவனின் விருப்பப்படியே நடக்க உறுதிபூண்டுவிட்டாள். எல்லாம் காதல் மயக்கந்தானே!

மற்றொரு நாள் சேகர், அவள் காதில் கிசுகிசுத்தான். கிருபா...! எனக்குப் பிடித்த உன் உதடுகள், எனக்குப் பிடித்த இந்த விரல்கள், எனக்குப் பிடித்த சங்குக் கழுத்து...

தமிழ் ஓவியா said...

எனக்குப் பிடித்த உன்...

போதும்... போதும்! இனிமே நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்! அவன் வாயைப் பொத்தி _ சிரித்தாள் கிருபா.

எனக்குப் பிடித்ததைத்தான், நீ சாப்பிட்டே... உடை உடுத்தியிருக்கே. நீ, என்னோட மட்டுந்தான் அதிகம் பேசணும், மற்ற யாரிடத்திலும் என்னைக் கேட்டுத்தான் பேசணும் தெரியுதா?

இது என்ன சர்வாதிகாரமாயிருக்கு? என் குடும்பத்தினர் கூடவாவது பேசலாமா?

அதுகூட... ஒரு வரையறை வேணும் கிருபா! நான் அனுமதிச்சா மட்டும்! கண்டிப்புடனும், அன்புடனும் கன்னத்தில் தட்டிச் சொன்னான் சேகர்.

எம்மேலே உனக்கு அவ்வளவு காதலா? என்னால நம்பவே முடியல! எனக்கு.. உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குடா!

அவனது ஆசையும், விருப்பமும் காதலாய் அதேசமயம் அடிமை விலங்காய் பூட்டிவிடும் கொடூரம் அவளுக்குப் புரிய சில நாட்களாயிற்று. கனவு கலைந்தது!

வானம் இடியொன்றை இடித்து மழை வருமெனக் கட்டியங்கூறியது. அந்த நினைவிலிருந்து மீண்டாள் கிருபா. சில மின்னலுக்குப் பிறகு தூறல் போட்டது. நடைக்கதவைச் சாத்திவிட்டு வீட்டிற்குள் சென்றாள். எப்போது உறங்கிப் போனோம் என்றே தெரியாத அளவுக்கு உறங்கிப் போனாள்.

தூங்கி எழுந்து பார்த்தபோது, உலகம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. காலை வெயில் சுள்ளென்று வந்தது. ஒன்பதரைக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

அவசரஅவசரமாகச் சமையல்செய்து, அம்மாவிற்குச் சாப்பாடு கொடுத்து விட்டு, குளித்து, உடை மாற்றிக்கொண்டு, டிபன் பாக்ஸை எடுத்து கைப்பையில் போட்டு, செருப்பை மாட்டும்போது...

தமிழ் ஓவியா said...


அந்த பிளாஸ்டிக் செருப்பின் மேல்வார் அறுந்து போவேன் என்று பயமுறுத்தியது! சரி. சமாளித்துக் கொள்ளலாம் என்று காலில் மாட்டிக் கொண்டாள் கிருபா. தற்போது எம்.ஏ. முடித்துவிட்டு, ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் யு.கே.ஜி. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் தாமதமானாலும் திட்டிவிடுவார் அந்தப் பள்ளியின் தாளாளர். எனவே, வேகவேகமாகப் பேருந்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள் கிருபா. அறுந்துபோக இருந்த அந்தச் செருப்பைப் பார்த்ததும் கடந்த காலத்தில் கல்லூரியில் நடந்த அந்த நிகழ்வு ஒரு மின்னல்போல் பின்னோக்கியது.

அன்று கல்லூரிமுன்... மாலை 4 மணி இருக்கும்... மாணவர்கள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அவளுடைய வகுப்புத் தோழன் அமல்ராஜ், அவள் செல்பேசிக்கு ஒரு குறுந்தகவல் (S.M.S) அனுப்பியிருந்தான். அதைப் படித்தபோது அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

அந்தக் குறுந்தகவலில்..

உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு என்னைப் பிடித்தது என்றால் ஆமாம் என்று மட்டும் பதிவு செய்யுங்கள்! என்று வந்தது.

அப்போது, அமல்ராஜ், தன் காதலன் சேகர் இன்னபிற மாணவர்களும் வந்து கொண்டிருந்தனர். அமல்ராஜைப் பார்த்ததும், வேகமாக அவன் முன் சென்றாள் கிருபா. கீழே குனிந்து தன் செருப்பைக் கழற்றி, என்ன தைரியமிருந்தா, எனக்கு அய் லவ் யூன்னு எஸ்.எம்.எஸ். பண்ணியிருப்பே? ஆத்திரத்தில் அவனை அடிக்க எத்தனிக்கும் வேளையில், அவளது மாணவியர்த் தோழிகள் அவளைப் பிடித்து அழைத்துப் போனார்கள்.

கிருபாவைப் பார்த்து சேகர், தன் கட்டை விரலை உயர்த்தி சபாஷ்! அப்படித்தான் சொல்லவேண்டும் என்பதுபோல சைகை காட்டிப் புன்னகைத்தான்.

மாலை வானம்போல சிவந்த கிருபாவின் முகம் சேகரைப் பார்த்ததும் குளிர்ந்தது!
எஸ்.எம்.எஸ். அனுப்பிய அந்த அமல்ராஜின் முகம் அவமானத்தில் கருமேகம்போல் இருண்டது.

பேருந்து குலுங்கி, அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் எனச் சொல்லியது. அன்றைக்கு நிகழ்ந்த அந்த நினைவுகள் மறைந்து போனது. பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்தச் செருப்பு, கல்லூரி நிகழ்வு துண்டித்துப் போனது. பள்ளியை நோக்கி கிருபா விரைந்தபோது மணி 9.30.

தமிழ் ஓவியா said...

மதியம் 1 மணி...

பள்ளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மதியச் சாப்பாடு முடித்து, ஆசிரியர் ஓய்வறையில் ஓய்வெடுக்கப் போனாள் கிருபா. ஒரு குழந்தை, இன்னொரு குழந்தையைக் கன்னத்தில் அடித்துவிட... அடிவாங்கிய குழந்தை, அவளிடம் புகார் செய்துகொண்டிருந்தது. பாழாய்ப் போன அந்தக் கல்லூரி நினைவுகள் வந்தது! அவள்முன் காட்சியாய் விரிந்தது!

கல்லூரியில் ஒரு நாள்...!

தனக்கு வேண்டிய புராஜெக்ட் நோட்டினை அமல்ராஜிடம் வாங்கி எழுதுவதற்காக, கிருபா கேட்க, அதை அமல்ராஜ் அவளிடம் கொடுக்க _ இந்நிகழ்வைத் தன் காதலன் சேகர் பார்த்துவிட்டு ஓடிவந்து, கிருபாவின் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டான்.

மாணவ மாணவியர் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிருபாவின் நிலைகண்டு வருந்தினர். கிருபாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நோட்டு வாங்கியதற்கா நம்மை அடிப்பது? அதைத் தன்னிடம் வாங்காமல் அமல்ராஜிடம் கேட்டதனாலும், அமல்ராஜிடம் பேசக்கூடாது என்று சொல்லியிருந்ததைக் கேட்காமல் பேசியதும், சேகரின் பொறாமையினாலும் தனக்கே உரியவள், அடுத்தவனிடம் எப்படிப் பழகலாம் என்ற ஆணாதிக்க சிந்தனையாலும் அவ்வாறு அடித்தான் என்பதை நினைக்க, நினைக்க கிருபாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

அன்று, மௌனமாக வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

ஒருவாரம் சேகரிடம் பேசவில்லை. எத்தனையோ முறை செல்பேசியில் அழைத்தபோதும் அவனைக் கிருபா தவிர்த்து வந்தாள்.
அன்று... திங்கட்கிழமை!

அவளுக்குப் பிடித்த கருப்பு வண்ணச் சுடிதாரும், வெள்ளைத் துப்பட்டாவும் அணிந்து கல்லூரிக்கு வந்தாள். அதைக் கண்ணுற்ற சேகர், கிருபாவிடம் மிகவும் சினத்துடன் கேட்டான்.

ஏன்டி எனக்குப் பிடிக்காத கலர்ல உடை அணிந்துவந்தே? என்று எல்லோர் முன்னிலையிலும் அவளை ஓங்கிக் கன்னத்தில் அறைந்து விட்டான். அவளுக்கு அவனிடமிருந்த கொஞ்சநஞ்ச உறவும், அன்பும் காதலும் நீர்த்துப் போனதில் வியப்பேதுமில்லை.

பெண் என்றால் கேவலமா? ஆண்களின் அடிமையா? ஆணின் விருப்பப்படியேதான் நடை, உடை, பாவனை, உணவு, விருப்பு, வெறுப்பு எல்லாமே இருக்கணுமா? ஆண் எஜமான், பெண் அடிமையா? காதல் எனும் போர்வையில், ஆசையென்ற மாயையில் ஆணாதிக்கம் செலுத்தும் அனைத்து வடிவங்களும் பெண்களை அடிமைப்படுத்தும் செயல்தானோ? ஆண் விருப்பத்தை காலங்காலமாய் பூர்த்திசெய்யும் போகப் பொருள்தானா? உணர்வும், உரிமையும் இல்லாத மரக்கட்டையா? எதற்காக இப்படிப்பட்ட ஆண்களைக் காதலித்துத் தொலைக்க வேண்டும்? ஆணும் பெண்ணும் சமமாக நடத்தும், சமவுரிமை அளிக்கும் மனிதர்களை நாம் மதிக்க வேண்டும். நட்பாக அல்லது காதலித்துக் கருத்தொருமித்துப் பழக வேண்டும்.

சிறுவயதில் தந்தைக்கு அடிமை; பின் கணவனுக்கு அடிமை; பிறகு மகனுக்கு அடிமை! இத்தகைய இந்துத்துவ பெண்ணடிமைத்தனப் பிற்போக்குக் கருத்தாக்கம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலுமா? இதைப் புரிய வேண்டுமானால் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்னும் நூலை வாங்கிப் படியுங்கள்! அறிவு தெளியுங்கள்! என்று கருப்புச் சட்டையணிந்த இளைஞரொருவர், கிருபா வந்த பேருந்தினுள் பரப்புரை செய்துகொண்டிருந்தார்.

அந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது அவளுக்கு! ஒருமுறையல்ல... அய்ந்துமுறை அந்நூலைப் படித்து மனம் தெளிந்தாள். ஆணாதிக்கம் கொண்ட சமூகம் பெண்களுக்கு இழைக்கும் அநீதியையும், அடிமைத்தனத்தையும் மீட்டெடுக்க பெண்ணுக்கான சகல உரிமைகளையும் பெற _ பெண்களே போராடிப் பெற வேண்டிய உத்வேகத்தை அவளுக்கு அளித்தது அந்நூல்!

சேகரிடம் சென்று கோபமாகச் சொன்னாள் கிருபா.

இனிமேல்... எங்கிட்ட எந்தப் பழக்கமும் வச்சுக்காதே! நான் உனக்குக் கொத்தடிமையில்லை. பொண்ணுங்கன்னா உங்களுக்கு அவ்வளவுக் கீழ்த்தரமாப் போயிருச்சா? உன்னைப் போல ஆணாதிக்கச் சிந்தனையுள்ள காதல் எனக்குத் தேவையில்லை! ஆவேசமாகப் பேசிவிட்டு அமல்ராஜிடம் வந்தாள்.

அமல்! என்னை மன்னிச்சுருங்க! அன்னைக்கு ஒரு நாள் உங்களை அவமானப்படுத்தியதற்காக மீண்டும் மன்னிக்கணும்! அந்த ப்ராஜெக்ட் நோட்டைக் கொடுங்கள்! நான் எழுதிவிட்டு, நாளை மறுநாள் கொடுத்து விடுகிறேன்.

நோட்டைக் கொடுத்தான் அமல்ராஜ்.

நன்றி! என்று கூறிவிட்டு வாங்கிக் கொண்டாள் கிருபா. அமல்ராஜ் அவளைத் திரும்பிப் பார்த்தான். கருப்பு வண்ண உடையணிந்த அவளுக்குள் இப்படியொரு சிவப்பு எண்ணங்களா என்று வியந்து போனான்.

டொய்ங்...! டொய்ங்....!

பள்ளி மணி பிற்பகல் நேரத்தைக் கிருபாவிற்கு நினைவூட்டியது. கடந்தகாலக் கல்லூரி நினைவுகளிலிருந்து அவள் மீண்டுவர சிறிதுநேரம் ஆனது!

தமிழ் ஓவியா said...

கொடுமை ...


வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது முதலாளிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு 528 வழக்குகளுடன் தமிழகம் முதலிடத்திலும் 506 வழக்குகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும் 412 வழக்குகளுடன் கர்நாடகாவும் கேரளாவும் அடுத்த இடங்களிலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 2012ஆம் ஆண்டு முதலிடத்திலிருந்த ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


பெரியாரின் தொலைநோக்கு

சீனாவில் 40 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஒரு குழந்தைத் திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்பது நாம் அறிந்ததுதான்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டு வந்து இது சாத்தியமாகி இருக்கிறதே, அது எப்படி? 1970களில் அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று பரப்புரை செய்தார்கள். ஆனால், சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே குடும்பக் கட்டுபாடு குறித்துப் பேசிவிட்டார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வில்லை என்றால் நாடு சிக்கலில் உழலும்; வறுமை தாண்டவமாடும் என்பது பெரியாரின் தொலைநோக்கு. அதனால் அவர் திருமண வீடுகளில் பேசும்போது, மணமக்கள் உடனே பிள்ளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; 5 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்; பின்னர் ஒன்றோ, இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அப்போது எல்லா மதவாதிகளும், பிள்ளைப் பேறு என்பது கடவுள் அளிப்பது. அதனைத் தடுப்பதா எனக் குதித்தனர். ஆனால், கடவுளையே கடாசி எறிந்த பெரியார், பிள்ளை கொடுக்கும் கடவுள், கூடவே அதனைக் காப்பாற்ற ரெண்டு மாட்டையும் கன்றையும் அல்லவா தந்திருக்க வேண்டும்? வசதி வாய்ப்பைத் தரவில்லையே, ஏன்? அப்படித்தராதவன் பொறுப்பானவனா? என்று கேள்வி எழுப்பினார். தன் தோழர்களுக்கு அவர் வழங்கும் முக்கியமான அறிவுரையும் இரு குழந்தைகள் போதும் என்பதுதான்.

பல்லாண்டுகள் தமிழ் மண்ணில் பெரியார் செய்த பிரச்சாரத்தால் அரசின் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இரு குழந்தைகள் திட்டம் இப்போது ஒரு குழந்தைத் திட்டம் என்றாகி, நாமே குழந்தைகள்; நமக்கேன் குழந்தைகள்? என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

சீனாவில் கணக்கெடுத்தது போல இங்கும் கணக்கெடுத்தால் பலகோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது தெரியவரும்.

குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பின்னும்கூட பசியும் பட்டினியும் வறுமையும் இருக்கும் நிலையை நாம் காண்கிறோம். இன்னும் இலவச அரிசி கொடுக்க வேண்டிய நிலை. இத்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால்...? எல்லாம் கடவுள் செயல் என்ற நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே...!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

ஜாதியிம் பெயரால் . . .
ஜாதியிம் பெயரால் . . .

Print
Email

வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர்.

உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ்,

காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது. எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும்போது மிகவும் கவனமாக நீதிமன்றம் இருக்க வேண்டும். இருக்கின்ற பிரச்சினையை அதிகப்படுத்தக் கூடாது. ஒரே கோத்திர திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காதல், கத்திரிக்காய் எல்லாம் கூடாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய நினைக்கும் ஜோடிகள் எங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கிறோம் என்று பேசியுள்ளார்.

வடமாநில அரசாங்கங்கள் காப் பஞ்சாயத்துகளை ஆதரிக்கின்றன. அண்மையில், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு, அரியானா மாநில முதல் அமைச்சர் பூபிந்தர் சிங், காப் பஞ்சாயத்துகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கூடாது. அவை சமூக சேவையாற்றி வருகின்றன என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.

தமிழ் ஓவியா said...

திரும்பத் திரும்ப பேசுற நீ...


அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.

ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.

இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.

குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.

மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.

தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.

- முகநூலில் கோ.கருணாநிதி

தமிழ் ஓவியா said...

நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற மன்றல் - 2014


நம்மால் முடியாதது யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் எனும் தமிழர் தலைவர் சொல் வாக்குக்கேற்ப மிக எழுச்சியுடன் சிறப்பாக நடந்தேறியது மன்றல் 2014.

தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்து தொண்டாற்றும் வாய்ப்பு அமைய தன்னை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்ட அன்னை மணியம்மையாரால் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக தன் பணியை விளம்பரமின்றி செய்து கொண்டிருக்கிறது. எதையும் நவீன காலத்திற்கேற்ப மாற்றி இன்னும் வெகு மக்களைக் கவரும் விதத்தில் தந்தை பெரியாரின் இலட்சியங்களைக் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் செயலாற்றும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஆக்கத்தில் விளைந்த மன்றல் எனும் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா மீண்டும் சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் 23.2.2014 அன்று நடைபெற்றது.

குறுகிய கால ஏற்பாட்டிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தது அய்யாவின் குறிக்கோளாகிய ஜாதி ஒழிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் நிலை உருவாகும் நாள் வெகு காலத்தில் இல்லை என்பதை உணர்த்தியது.

ஜாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் என அனைத்துப் பிரிவிலும் ஜாதியை மறுத்த நிகழ்வில் பங்கெடுத்தோர் மொத்தம் 172 பேர். இது மட்டுமல்லாமல் போனமுறை நடந்த சென்னை மன்றலில் கலந்து கொண்டோரும் (62 பேர்) இதில் கலந்து கொண்டனர். வந்திருந்த மணமுறிவு பெற்றோர் பலரிடம் பேசியபோது ஜாதகம், நேரம், காலம் பார்த்து எங்களுக்குத் திருமணம் செய்தார்களே தவிர எங்களுக்கு ஏற்றவர்களா என்று நாங்கள் தேர்ந்தெடுக்க உரிமையில்லாமல் குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டும், அவர்களுடைய அன்புக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு _ வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்று மீண்டும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சோகத்துடன் சொல்லியபோது, 20, 25, 30 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்கின்ற காலமெல்லாம் இணக்கமாக வாழவேண்டிய இணையரைத் தெரிவு செய்யும் பொறுப்பை, சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்காமல் காலங்காலமாய் பழமை உணர்வு மாறாமல் இருக்கும் குடும்பத்தினரின் பாச உணர்வால் பிடித்துக்கொடுக்கும் பொருளாக பெண்கள் இருக்கும் நிலையை உணரும்பொழுது, மன்றலின் அவசியமும் இன்னும் அதிக வேகத்துடன் செயல்படுத்த வேண்டிய தேவையும் பெரியார் தொண்டர்களுக்கு இருக்கிறது என்பதை மனதில் ஏற்க வேண்டியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

காலை 11 மணிக்குத் தொடங்கிய மன்றல் நிகழ்ச்சிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் திருமகள் தலைமையேற்றார். கி.தளபதிராஜ் வரவேற்புரையாற்றிட முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுகவுரை நிகழ்த்திய பிறகு வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் தந்திட்ட தொடக்க உரையில், தமிழ்நாட்டுக்கு இது தேவையான நிகழ்ச்சியாகும். தந்தை பெரியார் சிந்தித்த ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயச் சிந்தனைகளையெல்லாம் இந்த மன்றல் நிகழ்ச்சிகள் மூலம் நடத்திக் காட்டும் சமுதாயத்துக்கு ஏற்றம் தரும் புரட்சி இது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மூடர்கூடம் என்கிற சிறந்த திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் நவீன் அவர்கள், நான் ஜாதி, மதங்களை மறுத்துத் திருமணம் செய்து, குழந்தைக்குத் தமிழில் (தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பது என்பதையே சிறப்பு என்று சொல்லும் அளவில் இருக்கிறது.) பெயர் வைத்துள்ளேன். ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்ய நினைக்கும் எங்கெங்கோ உள்ளவர்களுக்கெல்லாம் சரியான வழியைக் காட்டும் உற்ற துணையாகவும் ஊக்கம் அளிப்பதுமாகவும் மன்றல் சிறப்பாகப் பணியாற்றுகிறது என்று மகிழ்வுரை நிகழ்த்தினார்.

அதன்பின் அரங்கில் அமர்ந்திருந்த இணைதேடும் பெண்களும், ஆண்களும் தங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். அவர்களைத் தேர்ந்தெடுத்து மேடைக்கு அழைக்கும் பணியை முனைவர் அதிரடி அன்பழகன் எப்பொழுதும் போலவே கலகலப்பாக அனைவரும் இரசிக்கும்வண்ணம் கி.தளபதிராஜ் அவர்கள் உதவியுடன் செய்தார்.

மேடைக்கு வந்த ஒவ்வொருவரையும் பெரியார் களத்தின் தலைவர் இறைவி அவர்கள் அரங்கில் உள்ள அனைவரும் தெளிவாகக் கேட்டு உணரும்படி நேர்காணலைச் சிறப்பாக நடத்தினார்.

நேர்காணலுக்கு இடையே அரங்கிற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், ஒரு ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தார். இது காதல் திருமணம் என்பது கூடுதல் செய்தி. விருதுநகர் நடுவப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபனும், காளியம்மாளும் அடுத்தடுத்த தெருவை, வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் தெருக்களில் பார்வையால் பேசி, படபடக்கும் மனங்களோடு பேசி பிறகு துணிவு பெற்று வாய்மொழியால் பேசி மனங்கள் புரிந்துகொண்ட மணம் புரிவதற்கு ஜாதி தடையாக இருப்பதால் தயங்கியவர்கள் மன்றல் விளம்பரத்தைப் பார்த்து இந்த மன்றத்திற்குள் வந்துவிட்டார்கள்.

திருமணத் தகுதிகள் அனைத்தும் உள்ள உங்களை அரவணைப்பது எங்கள் கடமை என்ற முறையில் ஜாதி மறுப்பு காதல் திருமணத்தை திராவிடர் கழகத் தலைவர் மணமக்களை உறுதிமொழி கூறச்சொல்லி மாலைகள் போடவைத்து மிகச் சிறப்பாக சிக்கனமாக அரங்கு நிறைந்த மக்கள் வாழ்த்துகளோடு நடத்தி வைத்தார். ஜாதி என்பது ஒரு கற்பனை. மூளையில் மாட்டப்பட்ட விலங்கு. நிறையப் பேர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இங்கு பலரும் தங்களுக்கான தேவையை மேடையில் அறிவிக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு பெண், தான் எம்.இ. படித்துள்ளதாகவும், கடவுள் மறுப்பாளராக எனக்குத் துணை வேண்டும் என அறிவித்தாரே, இதுதான் பெரியாருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜாதி, மதம், ஜாதகம் என வாழ்க்கையைச் சோகமாக்குகிற எந்த ஒன்றையும் அனுமதிக்காதீர்கள். ஜாதி பார்ப்பது குறைந்து நல்ல மனிதராக இருந்தால் போதும் என்ற நிலை வந்துள்ளது. இது அதிகரிக்க வேண்டும். செவ்வாயில் குடியேறும் நிலையில் இன்னும் செவ்வாய் தோசம் என்கிறார்கள். உடற்கூறு பொருத்தம்தான் தேவையானது என்று கூறி, கிராமத்தில் இருந்து வந்து திருமணம் செய்த நீங்கள் எளிமையாக, சிக்கனமாக, விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்காணல் மாலைவரை தொடர்ந்தது. இடையிடையே இதற்கு முன் நடந்த மன்றல் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் பயனாய் திருமணம் முடித்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான மண வாழ்க்கையையும் இதற்கான முயற்சியை எடுப்பதற்கு மன்றல்தான் தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் தங்களுடைய தற்போதைய வாழ்க்கை அனுபவங்களைச் சொன்ன விதம், மண வாழ்க்கையைத் தேடிவந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்தது.

இவர்களுக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன் அவர்கள் தனது குடும்பத்தின் சார்பாக ஊக்கப்பரிசாக குக்கர்களை வழங்கினார்.

இந்த மன்றலில் கலந்துகொண்ட 14 பேர் (7+7) தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக அறிவித்தார்கள். அவர்களில் ஒரு இணை மாற்றுத் திறனாளிகளாவர். அவர்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னது தந்தை பெரியாரின் மனிதநேயத் தொண்டுக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது.

- இசையின்பன்

தமிழ் ஓவியா said...

படைப்புத் தத்துவமா? பரிணாம வளர்ச்சியா?

- மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

1831 -- பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.

பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

பீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.

பீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்!

தனது 16ஆவது வயதில் உயிரியல் சம்பந்தமாக ஆய்வுக்கட்டுரை எழுதத் தொடங்கிய டார்வின் _ தனது 72ஆவது வயதில் தன்னுடைய கடைசி நூலாக _ மண் புழுக்களைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதில் மண்புழுக்கள் பூமியின் கீழிருந்து மேற்பரப்பிற்கு நிலத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன! இதன் மூலம் 60 ஆண்டுகளில் ஓர் அடி அளவிற்கான நில அடுக்கை (Layer) ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்து வெளியிட்டார். இந்த உண்மையைக் கண்டறிய மண்புழுக்களைப் பற்றி சுமார் 42 ஆண்டுக்காலம் ஆராய்ச்சி செய்திருந்தார் டார்வின்!

1831 முதல் 1836 வரையிலான அவரது பீகிள் கப்பல் பயணம் தொடங்கி _ 1859இல் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியீடு தொடர்ந்து _ 1882இல் அவர் இறக்கும் வரையிலான 73 ஆண்டுக்கால டார்வினின் வாழ்க்கைப் பயணம் சலிப்பே இல்லாத இடையறாத அறிவியல் ஆய்வுப் பயணம்!

பீகிள் கப்பல் பயணத்தின்போது தென் அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக் பெருங்கடலில் உள்ள கோலேபோகோ தீவுகளில் அவர் பார்த்த கடல் ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகள்தான் இயற்கைத் தேர்வு (Natural Selection) குறித்த கோட்பாடுகளை டார்வின் மனதில் உருவகப்படுத்தின! இதன்படி, உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றன. இப்படி சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதி யானவை வாழ்கின்றன _ தகுதியற்றவை சாகின்றன என்று கண்டறிந்தார்.

அதேபோல உயிரினங்களில் சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் மாறுதல்கள் காரணமாக அவற்றின் சில உறுப்புகள் பயனற்ற நிலையில் காலப்போக்கில் எச்சங்களாகி (Vestiges) விடுகின்றன என்று கண்டறிந்த டார்வின், அதற்கு உதாரணமாக ஆண் உயிரினங்களின் பால் சுரப்பிகள் பயனின்றி எச்சமாகி விட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

டார்வின் தனது நூலில் உயிரினங்களின் தோற்றம் குறித்த பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. உயிரினங்களின் தாழ் நிலையிலிருந்து உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது. இப்படித்தான் மனிதனின் தோற்றம் (Homosapiens) ஏற்பட்டது! பரிணாம வளர்ச்சியில் மாற்றம் _ தேர்வு _ விருத்தி என்ற படிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பரிணாம வளர்ச்சி என்பது நீண்டகால இடைவெளியில் நிகழ்வது என்ற டார்வினின் கருத்துக்குச் சான்றாக கொரில்லாவையும், சிம்பன்சியையுமே எடுத்துக் கொள்ளலாம்! 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாவிலிருந்து உயிரியல் ரீதியாக கொஞ்சமே வேறுபடும் சிம்பன்சி இனம் பரிணாம வளர்ச்சியில் தோன்ற காலம் எடுத்துக்கொண்ட இடைவெளி சுமார் 25 லட்சம் ஆண்டுகள்!

460 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றிய பூமியில் _ சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் உயிரினம் சைனா பைட்டா போன்ற பாசி இனம்தான்! அதற்குப் பின் பல்வேறு தாவர இனங்கள் _ நீர் வாழ் உயிரினங்கள் _ நிலநீர் வாழ்வன _ ஊர்வன _ பறப்பன _ பாலூட்டிகள் என ஒரு பெரும் சங்கிலித் தொடராக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன!

தமிழ் ஓவியா said...


நிலநீர் வாழ்வன _ ஊர்வன உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக (Conjuction) ஆமை, முதலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்! அதேபோல ஊர்வன உயிரினம் _ பறப்பனவாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக பறக்கும் பல்லியைக் (Flying Lizard) குறிப்பிடலாம்! பறப்பன _ பாலூட்டிகளாக பரிணாமம் பெற இடைப்பட்ட உயிரினமாக வவ்வால்களைக் குறிப்பிடலாம்! அவை பறக்கவும் செய்யும் _ பாலூட்டவும் செய்யும்! இவற்றையெல்லாம் சார்லஸ் டார்வின் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார்!

26லு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6லு கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன (Mass Extinction) டைனோசர்கள் இந்தப் பூமியில் 20 கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன! அவை வாழ்ந்த காலத்தில் பறவைகளும், பெரிய பாலூட்டிகளும் அதிக அளவில் தோன்றியிருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை! இவையெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர் காலத்துக்குப் பின், அண்மையில் கண்டறியப்பட்ட ஆராய்ச்சியின் பாற்பட்ட உண்மைகள்!

சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வால் குரங்குகள் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாக்கள் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிம்பன்சிகள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எபிலிஸ் _ 17லு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ் என்ற ஆதிமனிதன் _ அதற்குப் பின்னால் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் எனும் மனிதர்களாகிய நாம்! இதுதான் பரிணாம வளர்ச்சியில் உயிரியல் ரீதியாக நம்முடைய வரலாறு!

தமிழ் ஓவியா said...

டார்வின் கண்டறிந்து சொன்ன பரிணாம வளர்ச்சித் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை! அவர் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு அய்ரோப்பாவில் பாராளுமன்ற ஜனநாயக முறைகள் முகிழ்த்த காலகட்டம் என்பதால் _ உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட அறிஞர் புருனோவுக்கு நேர்ந்த கதி _ இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்கள் குருடாக்கப்பட்ட அறிஞர் கலிலியோவுக்கு நேர்ந்த கதி _ அறிஞர் டார்வினுக்கு ஏற்படவில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம்! நாம் வாழும் இந்த உலகம் _ மனிதன், தாவர, மிருக ஜீவராசிகள் எல்லாவற்றையும் ஆண்டவன் 6 நாட்களில் படைத்தான் என்று சொன்ன கிறித்துவ மதம் தொடங்கி உலகில் உள்ள எல்லா மதங்களும் போதித்து வரும் படைப்புத் தத்துவத்திற்கு (Creationism) நேர் எதிராக அமைந்த புரட்சிதான் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சித் தத்துவம்(Evolution Theory).

துன்பமும் துயரமும் இயற்கைச் சீற்றங்களும் நிறைந்த தனது 5 ஆண்டுகால கடற்பயணத்தின் முடிவில் சார்லஸ் டார்வின் கூறுகிறார், இயற்கை அப்படியொன்றும் எளிமையாகக் கையாளக் கூடியதாக இல்லை! பரந்து கிடக்கும் உயிரினங்கள் (Distribution) தெய்வீகப் படைப்பு என்ற கருத்திற்கு ஏற்றதாக இல்லை என்று! அவர் கண்டறிந்த இயற்கைத் தேர்வு (Natural Selection)கோட்பாடுதான் தெய்வீகப் படைப்பு கோட்பாட்டைவிட சிறந்தது என்பதற்கு உதாரணமாக கடந்த பல தலைமுறைகளாக மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றத்தைச் சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

இரு தோடுடைய சிப்பியின் அழகிய இணைப்பு _ உயிரினங்களின் விதவிதமான பல்வேறு வகைகள் _ இவற்றில் பரிணாம வளர்ச்சியின்றி _ வேறெந்த படைப்பு வடிவமைப்பும் இல்லை என்றே தெளிவாகத் தெரிகிறது என்று தனது அந்திமக்காலத்தில் டார்வின் ஆணித்தரமாக அறிவித்தார்!

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள்தான் படைத்தார் என்று வாதிட்டு _ டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராகக் கிளம்பிய கடவுள் படைப்புவாதிகளில் முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த ஒரு முழுமையான உயிரமைப்பு பிரபஞ்சம். இவற்றுக்கு ஒரு கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

டார்வினின் சமகாலத்தில் வாழ்ந்த ஸ்காட்லாந்தைச் சார்ந்த டேவிட் ஹியூம் _ பேலீயின் வாதத்திற்குப் பதிலடியாக, மனிதனைப் படைத்த உயர்ந்த வடிவமைப்பாளர் கடவுள் என்றால், அவரைப் படைத்த வடிவமைப்பாளர் யார்? என்ற கேள்வி முடிவுறாது போய்க் கொண்டேயிருக்கும் என்றுரைத்தார்.

டார்வினின் காலத்துக்குப் பின்னாலும் இந்தத் தத்துவப் போர் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது!

கடவுள் படைப்புத் தத்துவத்துக்கு ஆதரவாக டார்வினின் கொள்கையை மறுப்பவர்கள் இன்றும் மிகப் பெரும்பான்மையாகவே இருக்கிறார்கள்!

1989இல் வெளிவந்த “Of Pandas and People” என்ற நூலில் மைக்கேல் பெஹெ என்ற அறிவியலாளர் தன் யூக முடிவாக குறைக்கப்பட முடியாத சிக்கல்களைக் (Irreducible complexities) கொண்ட உயிரினங்களையும் அவற்றின் உறுப்புகளையும் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் - அதாவது கடவுள்தான் படைத்திருக்க முடியும். டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி முறையில் உருவாகியிருக்க முடியாது என்று அறிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் _ விஞ்ஞான உலகத்தில் _ குறிப்பாக உயிரியலில் மகத்தான சாதனையாகவும் _ பெரும் புரட்சியாகவும் விளங்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு நவீன விஞ்ஞானத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! ஆனால் உலகத்திலுள்ள கடவுள் படைப்பு வாதத்தின் தீவிர ஆதரவாளர்கள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் இன்றளவிலும் டார்வினின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு நில்லாமல் _ அந்த அறிவியல் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்க எத்தனிக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்!

அண்மையில் 2005இல் இது சம்பந்தமாக ஒரு வழக்கு அமெரிக்காவில் நடைபெற்றது! டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு _ மதவாத அடிப்படையிலான (Human Intelligent Design) “ அறிவார்ந்த கடவுள் படைப்பு என்ற கோட்பாடே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு! அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூட, மதவாதிகளுக்கு ஆதரவாகத்தான் அணி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

அந்த வழக்கின் முடிவில் நீதிபதி, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் விஞ்ஞானப்பூர்வமானது _ அதைப் பாடத்தில் இருந்து நீக்க முடியாது! என்று தீர்ப்பளித்தார் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி!

டார்வினின் மனைவி எம்மா டார்வின் கிறித்தவ மதத்தில் ஊறிப்போனவர்! திருமணத்திற்குப் பிறகு கணவன்_மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளைப் பரிமாற்றம் செய்தே வாழ்க்கை நடத்தினர்! ஆனால், காலப்போக்கில் தமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களாலும் _ அறிவியல் உண்மைகளின் தாக்கத்தாலும், சார்லஸ் டார்வின் கடவுள் நம்பிக்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்.

நீண்ட காலம் கணவனோடு நல்லதொரு இல்லறம் நடத்திய எம்மா டார்வின் அவரிடமே சொன்னது இது! _ நீங்கள் நியாய உணர்வுடன் செயல்படுகிறீர்கள்! உண்மையை அறியவும் _ உலகுக்கு அறிவிக்கவும் அக்கறையுடன் ஆர்வம் கொண்டு இருக்கிறீர்கள்! அதற்காக சதாசர்வகாலமும் முயற்சிக்கிறீர்கள்! காரணம், நீங்கள் நேர்மையானவர் _ தவறாக எதையும் செய்ய மாட்டீர்கள்!

தனது கண்டுபிடிப்புகளை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக வெளியிட்ட டார்வினின் நேர்மையும் _ அவர் மனித குலத்துக்கு அர்ப்பணித்த பரிணாம வளர்ச்சித் தத்துவமும் என்றும் வாழும்!

(9.2.2014 - சார்லஸ் டார்வினின் 205ஆவது பிறந்த நாள்.)

தமிழ் ஓவியா said...

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை!


*புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும், அப்படிச் செலவு செய்வதற்கும் அழகுப்படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். அப்படி ஏதாவது பயன்உள்ள அழைப்பிதழைத் தருவார்களா என்றால் அதுவும் இல்லை.

இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் புதுக்கோட்டை நண்பா அறக்கட்டளையின் பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். இவ்வாண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழை, பயன் முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்புக் காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்! என்கிறார் பிரகாஷ்.

இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது, நண்பா அறக்கட்டளையில் அவருடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

- ச.பிரின்சு

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை எது?
- சு.அறிவுக்கரசு

ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்ட மன்னர்களின் வாரிசு எனப்படும் கரண்சிங் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் மதச்சார்பின்மை என்னும் செயல் பற்றிச் சில கருத்துகளைக் கூறியுள்ளார். SECULAR எனும் இங்கிலீஷ் சொல், இங்கிலாந்து நாட்டின் மன்னர் எட்டாம் ஹென்றி என்பவர் ஆறாம் முறையாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதை முன்னிட்டு முந்தைய திருமணத்தை ரத்து செய்திட அனுமதி கிடைக்காததால் அவர் பிரிந்து போய் நாங்கள் செக்யுலர், ஆகவே சர்ச் (கிறித்தவ வழிபாட்டிடம்/மதத் தலைமை) தனி என்று அறிவித்துவிட்டார். அது இந்திய நாட்டுக்குப் பொருந்தாது, இங்கே அந்த மாதிரியான சர்ச் கிடையாது என்கிறார்.

ஆறாம் முறையாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது விவாகரத்துக் கிடைக்கவில்லை என்கிறார். முன்னதாக அய்ந்து திருமணங்களிலிருந்து விவாகரத்துப் பெற்றாரா? பெற்றிருந்தால், ஆறாம் திருமணத்திற்கு மட்டும் ஏன் விவாகரத்துக் கிடைக்கவில்லை? அவர் பதில் கூறவில்லை. அய்ந்து திருமணத்தையும் ரத்து செய்யாமலே அவர் ஆறாம் திருமணத்தைச் செய்து கொண்டாரா? இதற்கும் அவர் பேட்டியில் விளக்கம் இல்லை.

ஆனால் வரலாற்றில் அறிந்தவரை, அவரது விவாகரத்துக்குக் கிறித்தவ மதத் தலைவரான போப் அனுமதி தரவில்லை. காரணம், அந்த மதத்தில், அது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட முடிச்சு. அதனை மனிதன் அவிழ்க்கவோ, அறுக்கவோ அனுமதியில்லை. இதைக்காட்டி போப் (சர்ச்) மறுத்தார். அரசர் அதனை ஏற்க மறுத்து, அவராகவே விவாகரத்துக் கொடுத்துவிட்டு, மறுமணம் செய்து கொண்டார். அரசரது தொடர் நடவடிக்கைகளும் சர்ச்சுக்கு எதிர்ப்பாகவே அமைக்கப்பட்டன. அரச பீடத்தை மதபீடம் எதிர்க்கக் கூடாது, அரசு தனி, மதம் தனி என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் கொள்கை செக்யுலர் என்று சொல்லப்பட்டது.

அரசரைப் பின்பற்றியவர்கள் கிறித்தவ மதத்தில் எதிர்ப்பாளர் (புரோட்டஸ்டன்ட்) என்று அழைக்கப்பட்டனர் என்பதுதான் வரலாற்றுப் பதிவுகள்.

தமிழ் ஓவியா said...


அரசு தனி, மதம் தனி என்பதையோ அரசுச் செயல்பாடுகளில் மதம் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதையோ, ஏற்றுக் கொள்ள மனமில்லாத கரண்சிங், இங்கிலாந்து மன்னரைக் கொச்சைப்படுத்திடும் கெட்ட எண்ணத்தில் அவர் ஆறாம் திருமணத்தை ரத்து செய்யக் கேட்டார் என்கிறார்! பந்தை அடிக்காமல் ஆட்டக்காரனை அடிக்கும் அல்பத்தனம்!

இவர் யார்? காஷ்மீர் பகுதியை ஆண்ட ஹரிசிங் என்பாரின் மகன்! ஹரிசிங் என்பார் யார்? பம்பாயில் குடியிருந்த இந்து மன்னர். காஷ்மீரிலோ, ஜம்முவிலோ இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதைவிட பம்பாய் நகரின் குதிரைப் பந்தய மைதானங்களில் குதிரைகள் ஓடுவதைப் பார்த்துப் பரவசப்பட்டுப் பணம் கட்டித் தோற்றுப் போகும் அசுவ பரிபாலனம்தான் அவருக்கு மிகவும் பிடித்தது. காஷ்மீர் பகுதி அவரது நாடு என்பதைவிட அவரது சொத்து என்றே கூறவேண்டும். மன்னர் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே என்று கூறத்தக்க மாதிரியில் ஆட்சி நடத்திய அரச பரம்பரைக்காரர் அல்லவே!

பாட்டன் சம்பாதித்த சொத்தை ஆண்டு அனுபவித்து வந்தவர்தான் ஹரிசிங்! அவரது பாட்டன் குலாப் சிங். ஒரு சாதாரண ஆள். தெளிவாகச் சொன்னால், சராசரி மனிதனைக் காட்டிலும் கீழான ஆள். காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சமூகத்தில் என்ன மரியாதை? அந்த மரியாதையைப் பெறவேண்டிய ஆள் குலாப்சிங். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பஞ்சாப், காஷ்மீர் பகுதியை ஆண்ட சீக்கியருக்கும் நடந்த யுத்தத்தின்போது, சீக்கியருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு உளவுகள் சொல்லி, போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற உதவி செய்தவர். காட்டிக்கொடுத்த காரியத்தைச் செய்தவருக்குக் கிடைத்த சன்மானம்தான் காஷ்மீர் நிலப்பரப்பு. வெள்ளையர் கொடுத்த பணம் (அன்றைய நிலையில்) 75 லட்ச ரூபாய். ஆண்டுதோறும் ஒரு குதிரை, 12 செம்மறி ஆடுகள் (இவற்றில் 6 ஆண் 6 பெண் ஆடுகள்) மேய்த்துக்கொண்டும் வளர்த்துக் கொண்டும் பழைய பரம்பரைப் பண்பாட்டைக் காப்பாற்றிட! இதன்னியில் காஷ்மீர் சால்வைகள் 3 செட். ஆடு மேய்க்கக் கம்பளிப் போர்வை வேண்டும் அல்லவா? அதற்காக ஆண்டுதோறும்! இவர்தான் காஷ்மீர் மகாராஜா! அந்தப் பரம்பரைதான் பேட்டி தந்தவர்!

தமிழ் ஓவியா said...

ஆள் அப்படிப்பட்டவர் என்பதற்காக அவரது சொற்களை அலட்சியப்படுத்தவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் ஹென்றி செக்யுலர் எனக் கூறியபோது எந்த எண்ணத்தில் கூறப்பட்டதோ, அது 1866ஆம் ஆண்டில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. ஜியார்ஜ் ஜேகப் ஹொலியோக் (GEORGE JACOB HOLYOAKE) என்பார் லண்டன் நகரில் செக்யுலர் சங்கம் (SECULAR SOCIETY) என்ற ஒன்றைத் தொடங்கினார். செக்யுலம் (SECULUM) எனும் லத்தீன் சொல்லிலிருந்து உருவான இங்கிலீஷ் சொல் செக்யுலர். அதன் தன்மைகள் இன்னின்ன என்பதை அவர் விளக்கினார்.

1. பொதுக் கல்வியிலிருந்து மதம் பிரிக்கப்படல்.

2. ஆட்சியிலிருந்து மதம் விலக்கப்படல்.

3. அறம், ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து மதம் அகற்றப்படல்.

செக்யுலர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட லிபரேட்டர் (LIBERATOR) எனும் ஏட்டின் ஆசிரியர் ஆஸ்திரேலிய சுயசிந்தனை (FREE THOUGHT மாநாட்டில் பேசும்போது சொன்ன கருத்து இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 15.2.1885இல் மாநாடு நடந்த சேதி ஏட்டில் வெளிவந்துள்ளது. செக்யுலரிசம் பற்றிப் பேசும்போது அது ஏதோ 1866இல் வந்த தத்துவம் என்பதாகக் கொள்ளக்கூடாது.

இங்கிலீஷ் மொழியில் உள்ள PROFANE (புரோஃபேன்) எனும் சொல் இதே பொருளைத் தரக்கூடியதாக உள்ளது என்றார். FANE அல்லது FANUM எனும் சொல் வழிபடும் இடம் பற்றிக் குறிப்பது. சர்ச், கோவில் என்பதைப் போன்ற இடங்களைக் குறிப்பது. PRO என்றால் முன்னால் (கோவிலின் முன்னால்) என்று இங்கு பொருள்படும். ஆக PROFANE என்றால் கோவிலுக்கு முன்னால், கோவிலுக்கு வெளியே, கோவிலுக்கு அப்பால் என்று ஆகும். ஆகவே, கோவிலுக்கு உள்ளே இருப்பது புனிதம், கோவிலுக்கு வெளியே இருப்பது புனிதமற்றது என்று பொருள்படுகிறது. கோவிலுக்கு உள் இருப்பது சமயம் சார்ந்தது, கோவிலுக்கு வெளியே இருப்பது சமயம் சார்பற்றது என்று ஆகிறது. எனவேதான், PROFANE என்றால் புனிதமற்றது என்றோ சமயச் சார்பற்றது என்றோ பொருள் கூறப்படுகிறது. ஏறக்குறைய செக்யுலர் என்பதுவும் அதுவேதான்! எனவே செக்யுலர் என்பது அண்மைக்காலச் சொல் அல்ல, பழமையான தத்துவத்திற்கான சொல்லே என்றார்.

தமிழ் ஓவியா said...

இங்கிலீஷ் தற்காலத்திய மொழி. லத்தீன் பழமையான செம்மொழி. அந்த மொழிச் சொல்லான செக்யுலம் என்பதுதான் செக்யுலர் எனும் இங்கிலீஷ் சொல்லுக்கு மூலம் என்பதால், தத்துவமும் பழமையானதே!

எனவே, கரண்சிங் சொல்வதைப் போல, எட்டாம் ஹென்றி கூறியது அல்ல! லத்தீன் மொழிக்கு வயது எத்தனை ஆயிரம் ஆண்டுகளோ, அத்தனை ஆயிரம் ஆண்டுப் பழமையானது அந்தத் தத்துவமும்!

தமிழ் ஓவியா said...

உலக இயக்கத்தில், மனித வாழ்வில், வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வகையில் அமைந்துள்ளவை பற்றியவை செக்யுலர் என்றுதான் எல்லா இங்கிலீஷ் அகராதிகளும் அர்த்தம் எழுதுகின்றன. அப்படியென்றால் என்ன? பரலோக வாழ்க்கையை அல்லாமல் இகலோக வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது! ஆனால் மதம் இகலோக வாழ்க்கைக்கு தூசு அளவுகூட மரியாதை கொடுக்காமல் பரலோக வாழ்க்கை பற்றியே பேசுகிறது. எந்த மதமானாலும் இதே பல்லவிதான்! அதனைப் பிரித்து, விலக்கி, அகற்றி இந்த உலக வாழ்க்கை பற்றிப் பேசுவதுதான் மதச்சார்பற்ற தன்மை! சமுதாயத்திற்குத் தேவையானவற்றைச் செய்து தருவதுதான் அரசின் கடமை. இந்தக் கடமையில் மதம் குறுக்கிட்டு, பரலோக சாம்ராஜ்யம் காத்திருக்கிறது, ஆகவே இங்கே உனக்கு எதுவும் வேண்டாம் என்று கூற அனுமதிக்கலாமா? அனுமதிக்க மறுப்பதுதான் மதச்சார்பின்மை!

உலகம், உயிர்கள் போன்றவை மலர்ந்த விதம், வளர்ந்த விதம், வளர்ச்சித் தன்மை போன்றவற்றைக் கற்பித்து அறிவைச் செழுமைப்படுத்த வேண்டியது கல்வியின் நோக்கம்! அந்த விஞ்ஞானத்தைப் போதிக்காமல், படைத்தானே, உலகத்தை ஆண்டவன் படைத்தானே என்கிற விஞ்ஞான விரோதக் கல்வியைப் (மதத்தை) பிரிப்பதுதான் செக்யுலரிசம்! தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மனித சமுதாயத்திற்குத் தந்திருக்கும் நிலையில், அதனை ஊக்குவித்திடும் வகையில் அறிவியல் கல்விதானே அவசியம்? அதனைவிடுத்து ஆவது ஒன்றும் நம்மால் இல்லை என்று தேங்கிக்கிடக்க வைத்திடும் கல்வியைப் பிரிப்பது முக்கியமும் அவசியமும் அல்லவா?

மானுட சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் எதுவும் அறமல்ல. அத்தகைய கேடுகளைச் செய்வது ஒழுக்கமல்ல. எவை அறம், எது ஒழுக்கம் என்பதைத் தேர்ந்து, தெளிந்து, தெரிவு செய்வதுதான் மனிதனின் பகுத்தறிவு. அதனைப் பயன்படுத்தி _ இருப்பதைச் சீர்தூக்கி, செய்வதை எடைபோட்டு, சமூகத்தின் எந்தப் பிரிவும் பாதிக்கப்படக் கூடாதவற்றைச் செய்வதுதான் ஒழுக்கம். இப்படிப்பட்ட ஆய்வுக்கே வாய்ப்புத் தராமல், மத நூல்களில் எழுதப்பட்டிருப்பனவற்றை அப்படியே நம்பு, அப்படியே கடைப்பிடி, ஆராய்ச்சிக்கு இடம் தரக்கூடாது என்று வற்புறுத்தும் மதம் எப்படி ஒழுக்கத்தை வளர்க்கும்? மதங்கள் ஒழுக்கத்தை வளர்க்கவில்லை என்பதால்தான், அதனை அகற்றி, பகுத்து அறியும் தன்மையை ஊக்கப்படுத்துவதுதான் செக்யுலரிசம்.

தமிழ் ஓவியா said...

மதம் மக்களுக்குச் செய்ததுதான் என்ன? 700 கோடி மக்களுக்கும் உணவு, உடை, தேவைப் பொருள்கள், வசதிக்கு உபகரணங்கள் என்று எல்லாவற்றையும் ஆக்கி அளிப்பது அறிவியல் கல்விதானே தவிர, மதக்கல்வி அல்லவே! மதம் தேவை என்பவர்களும் இத்தனையையும் அனுபவித்துக் கொண்டே, மதம் பற்றிப் பேசிப் பொழுதைப் போக்குகிறார்கள். அவர்களது மதமோ, கடவுளோ இவற்றைத் தரவில்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையைப் பரப்பவும் மக்கள் கடவுளை மறந்துவிடாமல் இருக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் மதம். அந்த மதங்கள் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. மாறாக, மனிதர்கள் தாம் கடவுளையும் மதத்தையும் பற்றிக் கவலைப்பட்டு மாய்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை தனி மனிதனைப் பொருத்தது. ஆனால் ஒழுக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பொருத்தது. ஒழுக்கம் கெட்டுப்போனால் சமுதாயமே சீரழிந்துபோகும். அந்த நிலையில் நம்பிக்கையாளர்கள் தன்னலவாதிகள்!

நம்பிக்கையற்றவர்கள் பொதுநலம் விரும்பிகள்! எது தேவை? தன்னலமா? பொதுநலமா? தனிமனிதன், (இல்லாத) மறுஉலகம் போவதா? எல்லா மனிதர்களும் கண்காணும் உலகில் வசதியாக வாழும் நிலையை ஏற்படுத்துவதா? எது தேவை?

தமிழ் ஓவியா said...

இந்தச் சிந்தனையின் முடிவுதான் செக்யுலரிசம்! செக்யுலம் எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருளோ, இந்த உலகம் என்பதுதான்!

கரண்சிங், இத்தத்துவம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிறார். சர்வதர்ம சம்பவ என்பதுதான் செக்யுலரிசமாம். அப்படித்தான் அவர் கருதுகிறாராம். வேதாந்த முடிவுகள்தான் இந்து மதமாம். இது உலகளாவியதாம்! (UNIVERSAL) எல்லா மதங்களையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பதுதான் செக்யுலரிசம் என்கிறார் இந்த மேதாவி! சரியா? ஒரு கடவுள் மட்டுமே என்கிறது இசுலாம், கிறித்தவம், யூதம், சீக்கியம் போன்றவை. கோடிக்கணக்கான கடவுள்கள் என்கிறது இந்துமதம். இரண்டும் எப்படிச் சமமாகும்?

கடவுளே இல்லை என்கிறது ஜைனம்! கடவுள் பற்றிய கவலை மனிதனுக்கு வேண்டாம் என்கிறது பவுத்தம். முந்தையவற்றோடு இவை இரண்டையும் எப்படிச் சமமாகக் கருதமுடியும்?

உருவமற்ற கடவுள் என்கின்றன இசுலாமும் மற்றவையும்! இந்து மதமோ, ஒருமுகம், பல முகங்கள், இரு கைகள், 12 கைகள் என்றெல்லாம் உருவம் அமைத்து பொம்மைகளை வைத்துள்ளது. எப்படி ஒரே மாதிரிப் பாவிக்க முடியும்?

பிறப்பு, இறப்பு அற்று, விருப்பு, வெறுப்பு அற்ற கடவுள் என்கிறது இசுலாமும் தொடர்புடைய ஏனைய மதங்களும்! பிறந்து, இறந்து, மனைவி, வைப்பாட்டி என வாழ்ந்து சகல கெட்ட குணங்களோடும் தீய பழக்க வழக்கங்களோடும் இந்துக் கடவுள்கள் இருக்கின்றன. இரண்டையும் எப்படி ஒரே மாதிரிப் பாவிக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

ஆகவேதான், அவரவர் மதத்தின்படி அவரவர் வாழ்க்கையை நடத்தட்டும், எவர் கொள்கையையும் சாராத நிலையில் ஆட்சி நடக்கட்டும்! கல்வி கற்பிக்கப்படட்டும்! அறஞ்சார்ந்த ஒழுக்கங்களை மக்கள் பின்பற்றட்டும்! சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் மானுடம் செல்லட்டும் என்பதுதான் செக்யுலரிசம்! மதம் கடவுள் தனிமனிதன் தொடர்புடையது! ஆட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை. கல்விக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஒழுக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. இதுதான் செக்யுலரிசம்!
கரண்சிங் இதைத் தெரிந்தவர் என்றாலும் குழப்புகிறார்! காரணம், அவர் விரும்பும் இந்துயிசம்! வேறெங்கும் போக வேண்டாம். காஷ்மீர் பெருநிலப் பகுதியையே எடுத்துக் கொள்வோம். காட்டிக் கொடுத்ததற்காக சன்மானமாகப் பெற்ற இடம் அது. ஆனால் அவரின் தாத்தா குலாப்சிங் தோற்றுவித்த ராஜ்யம் என உண்மையை மறைக்கிறார். 84 ஆயிரம் சதுரமைல் இருந்த பரப்பு இப்போது 42 ஆயிரம் சதுரமைல் பரப்பாக _ பாதியாகக் குறைந்து உள்ளது. மீதிப்பாதி பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இருக்கிறது. இங்கு இருக்கும் பகுதியில் 1. காஷ்மீர் முசுலிம்கள் பகுதி, 2. ஜம்மு பார்ப்பன இந்துப் பகுதி, 3. லடாக் பவுத்தர் பகுதி. முதன்மையாக மூன்று மதங்கள். மூன்று விதக் கலாச்சாரங்கள். மொழிகள் தனித்தனி. உணவு தனித்தனி. கலாச்சாரங்கள் தனித்தனி. உடைகள் தனித்தனி. அரசியல்கூடத் தனித்தனிதான்.

தமிழ் ஓவியா said...


அவரவர்க்குரியவற்றை அவரவர்கள் கடைப்பிடிக்கட்டும், அரசு அதில் தலையிடக் கூடாது. தலையிடும்போதுதான் தகராறு வருகிறது. ஆளுநர் இந்துவாக இருந்ததால் ஏற்படுத்தப்பட்ட இந்துயிசத் திணிப்புதானே, ஜம்முப் பகுதிப் பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறிய நிலை ஏற்பட்டதற்குக் காரணம்! இசுலாமிய முதலமைச்சர் இருந்தாலும் இந்துக்கள் அமர்நாத் போகக் கூடாது என தன் கொள்கையைப் புகுத்தாததால்தானே வெளிமாநில இந்துக்களும் இன்றைக்கும் குகையில் பனிலிங்கத்தைப் பார்க்கப் போகிறார்கள்!

எனவே, ஆட்சியாளர்கள் மதத்தை மனதில் கொண்டு ஆளக்கூடாது. நியுட்ரலாக (NEUTRAL) ஆளவேண்டும். அதுதான் செக்யுலரிசம்!

இந்த அறிவார்ந்த கொள்கை இங்கிலாந்து நாட்டில் பேசப்பட்டபோது, 12 ஆண்டுகளிலேயே இந்தியாவில் பேசப்பட்டது. 1866இல் இங்கிலாந்தில் பேசினார்கள். தமிழ்நாட்டில் சென்னையில் 1878இல் பேசினர். பகுத்தறிவாளர் (RATIONALIST) என்று லண்டன் பகுத்தறிவு நூல் சங்கம் (RATIONALIST PRESS ASSOCIATION) ஏடு நடத்தியது.

இங்கே இந்து சுயசிந்தனையாளர் யூனியன் (THE HINDU FREE THOUGHT UNION) சென்னையில் தொடங்கப்பட்டது. தத்துவ விசாரிணி எனும் தமிழ் ஏடு 1878இல் தொடங்கப்பட்டது. வார ஏடு. பின்னர் 1882இல் தத்துவ விவேசினி எனப் பெயர் மாற்றப்பட்டது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் THE THINKER (சிந்தனையாளர்) எனும் இங்கிலிஷ் ஏடும் நடத்தப்பட்டது.

கரண்சிங் காங்கிரசுக்காரர் எனக் கருதப்படுகிறார். அவரது கட்சியை 1885இல் ஆங்கிலேயர் ஒருவர்தான் தொடங்கி வைத்தார். செக்யுலரிசம் தமிழ்நாட்டில் எவர் தூண்டுதலும் இல்லாமலேயே தோன்றிவிட்டது. காங்கிரசுக்கு 7 ஆண்டுகள் முன்னாலேயே தொடங்கப்பட்டுவிட்டது.

பொது ஆண்டு 1600 (கி.பி.)இல்தான் பகுத்தறிவின் பெருமை உலகுக்கு உணர்த்தப்பட்டது, AGE OF REASON எனப்படும் பகுத்தறிவின் காலம் என உலகம் அந்த ஆண்டைச் சிறப்பிக்கிறது. எனவே, அந்த ஆண்டிலிருந்து அறிவியல் காலம் தொடங்குவதாகக் கணக்கிடப்பட வேண்டும் என முடிவாகியது. அப்போதும் தற்போதும் கி.பி. என்பதை இங்கிலீஷில் A.D. (ANNO DOMINI) என்று அழைப்பதைப் போல அறிவியல் ஆண்டினை A.S. (ANNO SCIENTIOE) என்று அழைக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆண்டு 1884. இந்த ஆண்டினைச் சுருக்கமாக 84 என்று எழுதுவதைப்போல, பேசுவதைப் போல அறிவியல் ஆண்டையும் 84 என்றே அழைக்கலாம் என்று விளக்கினர். 1884க்கு 1600 + 284 = 1884 என்பதால் 84 என்றே அழைத்தனர்.

இந்நிலையில் 13.2.1887இல் இந்து சுயசிந்தனையாளர் சங்கத்தின் பெயர் சென்னை லவுகிக சங்கம் (MADRAS SECULAR SOCIETY) என மாற்றப்பட்டது. இந்துமதம் சாராதவர்களும் சங்கத்தில் சேரும் பொருட்டு இப்பெயர் மாற்றம். தத்துவ விவேசினி ஏடு வாராந்திர ஆங்கிலோ திராவிட சுயக்கியான பத்திரிகை என விளம்பரம் செய்யப்பட்டு வெளிவரத் தொடங்கியது. எல்லா மத மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆக, பகுத்தறிவு பரப்பப்பட வேண்டும் என்கிற உணர்வு உலகில் லண்டனில் ஏற்பட்டது என்றால் உடனடியாக அது எதிரொலிக்கப்பட்ட இடமாகத் தமிழ்நாடும் சென்னை நகரும் இருந்தன. வங்கம் முதலில் விழித்துக்கொள்ளும் என்று அவர்கள் பெருமை பேசிக் கொண்டது உண்டு.

இந்து மதத்தையும் வேதங்களையும் கட்டி அழுவதற்கும், கிருஷ்ணன் எனும் கடவுளின் முறைதவறிய ஒழுக்கக்கேடான தன்மையை நாட்டின் பக்தி மார்க்கமாக மாற்றியமைக்கும் அவர்கள் முன் உரிமை கொண்டாடிப் போகலாம். ஆனால் அறிவுலகில், அறிவியல் உலகில், நாத்திகத்தில், வேதமறுப்பில், கடவுள், மத எதிர்ப்பில் தமிழ்நாடுதான் பாரம்பரியப் பெருமை கொண்டது. இந்து மதத்தின் ஆணிவேர் எனப்படும் நான்கு வர்ணப் பாகுபாட்டுக்கு எதிர்ப்பாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுந்து நின்றது தமிழ்நாடுதான். மானுடர்கள் எங்கிருந்தாலும் ஒன்றே என ஓங்கிக் குரல் எழுப்பி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழங்கியதும் தமிழ்நாடுதான்.

அதேவேளையில் அன்றும் இன்றும் பகுத்தறிவு நாத்திகத் தலைநகரும் சென்னைதான்! பெரியார் திடல்தான்!

தமிழ் ஓவியா said...

மதத்தின் பெயரால்...

கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா.

உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் பாத்திமா. முத்துக்கிருஷ்ணன் உண்மையை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

பேருந்து கிளம்பி 5 நிமிடத்தில் 10, 15 இருசக்கர வாகனங்களில் வந்தோர் பேருந்தை மறித்து உள்ளே ஏறி, இஸ்லாம் மார்க்கத்தைக் கெடுக்குறயா? விபச்சாரம் செய்யப் போறயா என்று மிகவும் கேவலமாகப் பேசி அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே போட்டுள்ளனர்.

தன் அண்ணனுக்குத் தகவல் சொன்ன பாத்திமா, பேருந்தை விட்டு இறங்காதே என ஓட்டுநர் சொல்லியதைப் பொருட்படுத்தாமல், மற்ற பயணிகள் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து கீழே இறங்கிவிட்டார்.

சுற்றி நின்று தகாதபடி பேசிய 50 பேரைச் சமாளித்து, காவல் துறையினர் வரும்வரை எங்கேயும் போகாதே என்று செல்பேசியில் தனது அண்ணன் சொல்லியபடி அங்கேயே இருந்து சமாளித்துள்ளார்.

காவல்துறையினர் வந்ததும், கொஞ்சம் தள்ளியிருந்த மருந்துக் கடைக்குச் சென்று புகார் எழுத ஆரம்பித்தபோது முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வந்து மருந்துக் கடைக்காரரை மிரட்ட, காவல் நிலையத்திற்கே சென்று புகார் எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வந்த ஜமாத் தலைவர், ஒரு முஸ்லிம் பொண்ணு காவல் நிலையத்திற்கெல்லாம் வரக்கூடாது என்றதும் ஒரு முஸ்லிம் பெண்ணை விபச்சாரினு சொல்லலாமா? கைநீட்டி அடிக்க வரலாமா என்றதும், அவங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்றோம், புகார் வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் தனது அண்ணனுடன் காவல் நிலையம் சென்றவரிடம் செருப்பால வேனும்னாலும் அடி, வழக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

எதற்கும் பிடி கொடுக்காத அனிஸ் பாத்திமா, அவர் சார்ந்துள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் சார்பு இயக்கங்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்து அமைப்புகள்அணி திரண்டதால், மதக்கலவரம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று நினைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாலும், நடந்த நிகழ்வினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் கொடுமை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட பாத்திமாவைப் போல் துணிந்து அனைவரும் வீறுகொண்டு எழவேண்டும்.

நன்றி: நக்கீரன், பிப்.19-21, 2014

தமிழ் ஓவியா said...

லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்


- நீட்சே

இயல்பியல் மற்றும் பிரபஞ்சவியல் அறிவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல அறிவியல் கோட்பாடுகளைக் கண்டுபிடித்து வெளியிட்ட லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்(Lawrence Maxwell Krauss) என்ற அமெரிக்க நாட்டு அறிவியல் பேரறிஞர் 1954 மே 27 அன்று பிறந்தவர் ஆவார்.

பூமி மற்றும் விண்வெளி ஆய்வுப் பயண கல்வி நிறுவனத்தின் நிறுவனப் பேராசிரியராகவும், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் உயிர்த் தோற்ற ஆய்வு பற்றிய செயல்திட்ட இயக்குநராகவும் இருந்தவர் அவர். இவர் எழுதி வெளியிட்டுள்ள, அதிக பிரதிகள் விற்பனையான அறிவியல் நூல்கள் பலவற்றில் நட்சத்திரங்களின் இயக்கம் பற்றிய இயல்பியல்(The Physics of Star Trek) மற்றும் வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம் (A Universe from Nothing) என்ற இரு நூல்களும் அறிவியல் உலகில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவையாகும். பொதுமக்கள் அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், சோதனைகளால் மெய்ப்பிக்கப்பட்ட உறுதியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொதுநலக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும், பரவலான ஆழ்ந்த அறிவியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதையும், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து இன்றி அறிவியல் அடிப்படையிலான நம்பிக்கை கொண்டிருப்பதையும் வலியுறுத்திய அவர், மதம், கடவுள் பற்றிய மூடநம்பிக்கைகள் மனித இனத்தின் மீது ஏற்படுத்தும் தீய பாதிப்புகளைக் குறைப்பதற்காக வெகுவாகப் பாடுபட்டார்.

நியூயார்க் நகரில் பிறந்த இவர் தனது இளமைப் பருவத்தை டொரன்டோ, ஒன்டாரியோ, கனடா போன்ற இடங்களில் கழித்தவர். ஒட்டாவா மாகாண கார்லடன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயல்பியல் பாடங்களில் முதல்பிரிவில் தேர்ச்சி பெற்று 1977ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1982இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப அறிவியல் கழகம் இவருக்கு இயல்பியலில் ஆய்வு முனைவர் பட்டம் வழங்கியது.

கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இயல்பியல் துறைத் தலைவராக 1993 முதல் 2005 வரை இவர் இருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் தலைவர் எட்வர்ட் எம்.ஹன்ட்ரட் என்பவர் மீதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஆண்டர்சன் மீதும் இவர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பெரும் ஆதரவுடன் நிறைவேறின என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேசிய ஊடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட இவர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தலையங்கங்களையும் எழுதியுள்ளார். டார்வினின் உயிர்த் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு எதிரான கடவுளே அறிவான படைப்பாளர் (Intelligent Design) என்ற கோட்பாட்டைப் பள்ளிகளில் போதிப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த இவர், 2004ஆம் ஆண்டில் ஓஹியோ மாகாண கல்விக் குழுவின் முன் விசாரணைக்குச் சென்றது முதல், இவரது புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.

2008 அமரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தில் அறிவியல் கொள்கைக் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அறிவியலாளர் கூட்டமைப்பின் இயக்குநர் குழுவிற்கு இவர் 2010ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிரபஞ்சவியல், பிரபஞ்சஇயல்பியல் மற்றும் இயல்பியல் ஆய்வுக் கழகத்தின் பகுதிநேரப் பேராசிரியர் பணியை இவர் ஒப்புக் கொண்டார்.

வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம்: ஏதுமில்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருக்கிறது என்று கூறப்படுவது ஏன்? (A Universe from Nothing : Why There is Something Rather than Nothing) என்ற இவரது நூல், புகழ்பெற்ற கடவுள் என்னும் பொய் (God’s Delusion)) என்ற நூலை எழுதிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) அவர்களின் பின்னுரையுடன் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திலேயே அதிக பிரதிகள் விற்பனையான நூல் என்ற பெருமையைப் பெற்ற இந்நூல் இதுவரை 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

தீவிர நாத்திகரும், புகழ் பெற்ற எழுத்தாளருமான கிறிஸ்டொபர் ஹிச்சன்ஸ் அவர்களின் முன்னுரையுடன் இந்நூல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது: ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால், அந்த உரை எழுதும் பணி முற்றுப் பெறாமல் போனது. 2013ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்நூலின் மலிவுப் பதிப்பு புதிய முன்னுரையுடனும், ஹிக்ஸ் பாசன் துகள் பற்றிய இவரது கேள்வி பதில் பகுதியுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஜூலையில் நியூஸ் வீக் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரபஞ்சப் பெருவெடிப்பு எவ்வாறு ஏற்பட்டு இருக்கக்கூடும் என்பதை ஹிக்ஸ் துகள் கோட்பாட்டினால் விளக்க முடியும் என்று இவர் தெரிவித்துள்ளார். இயல்பியல் அறிவியல் துறையிலேயே அதிகமாகப் பணியாற்றியுள்ள இவர் அத்துறையில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார். பிரபஞ்சத்தின் பெரும் அளவிலான அடர்த்தியும், ஆற்றலும் (mass and energy) வெற்றிடத்தில்தான் அடங்கியுள்ளது என்று முதன் முதலாகக் கூறிய இயல்பியலாளர்களில் இவரும் ஒருவர். வெற்றிடத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்று தனது வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம் என்ற நூலில் குறிப்பிட்டிருந்தது போன்ற ஒரு மாதிரியை இவர் உருவாக்கினார்.

தீவிர நாத்திகரான இவர் Hamza Tzortzis and William Lane Craig போன்ற மதத் தலைவர்கள், இறையியலாளர்களுடன் பல விவாதங்களை மேற்கொண்டுள்ளார். Tzortzis உடனான அத்தகைய ஒரு விவாதத்தின்போது, பார்வையாளர்களில் இருந்த ஆண்களையும், பெண்களையும் தனித் தனியாக உட்காரச் செய்திருந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளாத இவர், அவர்கள் ஒன்றாக உட்கார வைக்கப்படும் வரை விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்து அதன்படியே இருந்தார். விவாத ஏற்பாட்டாளர்கள் அவரது வேண்டுகோளை ஏற்று ஆண்கள் பெண்களை ஒன்றாக உட்கார வைத்த பிறகே அவர் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.

நம்பிக்கையற்றவர்கள் (unbelievers) என்ற ஒரு முழுநீள செய்திப் படம் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். இப்படத்தில் இவரும் பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்சும் ஒன்றாக உலகம் முழுவதும் சுற்றி வந்து அறிவியல் மற்றும் பகுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மதம் மற்றும் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் வெளிப்படையாக மக்களிடம் பேசி பிரச்சாரம் செய்வது போலவும் Stephen Hawking, Ayaan Hirsi Ali, Sam Hams, Cameron Diaz போன்ற பிரபல கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களை நேர்முகம் காண்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

மக்களால் நன்கு அறியப்பட்டுள்ள நுண்ணறிவாளர் (Public Intellectual) என்று Scientific American பத்திரிகையால் குறிப்பிடப்பட்டுள்ள, தற்போது உயிருடன் இருக்கும் ஒரு சில இயல்பியலாளர்களில் லாரன்சும் ஒருவராவார். The American Physics Society, The American Association of Physics Teachers and The American Institute of Physics என்ற அமெரிக்காவின் மூன்று முக்கிய பெரும் இயல்பியல் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் விருதுகள் பெற்ற ஒரே இயல்பியலாளர் இவர் மட்டுமே. அமெரிக்கப் பொதுக் கல்வித் துறையில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பெரும் பங்காற்றியதற்காக தேசிய கல்விக் கழக பொதுச் சேவைப் பதக்கம் 2012ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 2011 டிசம்பரில் சென்டர் ஃபார் என்குயரி (Centre for Inquiry) அமைப்பின் இயக்குநர் குழுவிற்கு வாக்கு அளிக்க இயலாத மதிப்புறு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார்.

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

சுழல்-எந்திரி’ ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்!


- வி.சி.வில்வம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986, 87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின் தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல் மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல; படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆற்றல்கள் குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ் நடத்துகிறார்கள்.

சமூகச் சிந்தனையுடன் அவ்விதழ் தமிழ்நாடு முழுக்க வலம் வருகிறது. இதில் பெரு மகிழ்ச்சி ஒன்றும் இருக்கிறது. ஆசிரியர்களின் வழித்தடத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களும் இதழ் நடத்துகிறார்கள்.

ஒரு பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் தனித்தனியாக இதழ்கள் நடத்துகிறார்களா? நம்ப முடியவில்லையே! என நீங்கள் எண்ணினால், நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், அந்த நம்பிக்கையை அப்பள்ளியின் தலைமையாசிரியர் அள்ளிக் கொடுக்கிறார். இன்னும் சொன்னால், தந்தை பெரியாரின் சிந்தனையை ஒட்டிய பாதையில் அவர்களின் பயணம் இருக்கிறது.

சுழல் மாத இதழ்

வேலை நாளின் ஒரு பொழுதில் நாம் பள்ளிக்குச் செல்கிறோம். எல்லோரிடமும் பேச வேண்டும் என நாம் கோரியபோது, தலைமையாசிரியர் முகமலர்ந்து அனுமதிக்கிறார். சுழல் மாத இதழின் பொறுப்பாளர்களைச் சந்திக்கிறோம். நாங்கள் இதழ் தொடங்கி 20 மாதங்கள் முடிந்துவிட்டன. பள்ளி முடிந்து ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது சுழலத் தொடங்கியது எங்கள் சுழல்.

தமிழ்நாடு முழுக்க 1000 பிரதிகள் அனுப்புகிறோம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் முக்கியமல்ல என்பது எங்கள் கருத்து. சுழல் இதழில் மாணவர் அரங்கம் வைத்திருக்கிறோம். அதில் அவர்கள் எழுதுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு நிறைய இதழ்கள் மற்றும் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறோம். எந்த ஒன்றையும் நாங்கள் திணிக்க விரும்பவில்லை. தாமே இச்சமூகத்தை உணர்ந்து, தாமே ஒரு கருத்தை உருவாக்கி, தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ளும் ஒரு சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

தமிழ் ஓவியா said...

கண்டுபிடிக்கும் கலை

வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் எனும் அமைப்பு இப்பள்ளியில் செயல்படுகிறது. அதில் மாணவர்களுடன் நாங்கள் ஒன்று சேர்வோம். அங்கு அவர்கள் கவிதை வாசிப்பார்கள் , ஓவியம் வரைவார்கள், தாங்கள் வாசித்த படைப்புகள் குறித்து விமர்சனம் செய்வார்கள். ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஒரு வாரம் விழா எடுப்போம். அங்கு எங்கள் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடிப்போம். அது அவர்களின் திறன்களை மேலும் வளர்த்தெடுக்க எங்களுக்கு உதவும். இவ்வாறான செயல்பாட்டில், எங்கள் மாணவர்கள் வாசித்த கவிதைகளை மொட்டுகளின் வாசம் எனத் தலைப்பிட்டு ஒரு நூலாகக் கொண்டு வந்தோம். தமிழ்நாட்டில் வெளியாகும் பிற இதழ்கள், புதிய நூல்கள், நாவல்கள் எனக் கேட்டு, கேட்டு வாசிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

உயர் எண்ணம் உருவாக்கல்

மொழி வள ஆய்வு மையம் என ஒரு கூடம் எங்கள் பள்ளியில் உள்ளது. அங்கு நல்ல பேச்சுகளை ஒளிபரப்புவோம். அதையும் அவர்கள் தொடர்ந்து கேட்டு, வளர்கிறார்கள். அதேபோல சுபம் எனும் அமைப்பு உள்ளது.

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்காக மாணவர்கள் என்பது அதன் தத்துவம். தினமும் உண்டியல் ஏந்தி வகுப்புகள் தோறும் செல்வார்கள். தங்களால் முடிந்த காசுகளை மாணவர்கள் அளிப்பார்கள். அப்பணம் வாய்ப்பில்லாத மாணவர்களுக்குச் செலவழிக்கப்படும். சக மனிதருக்குப் பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்பதைச் சுபம் அமைப்பின் மூலம் உணர்த்தியுள்ளோம். மேற்சொன்ன அத்தனை நிகழ்வுகளுக்கும் பின்னால் எங்களின் தலைமையாசிரியர் யாகு அவர்கள் இருக்கிறார்கள். சிறந்த மாணவர்களை உருவாக்குவது மட்டும் அவர்களின் பணியல்ல, அதைவிடச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதும் அவர்களின் பணியாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம், என ஆசிரியர்கள் கூறி முடித்தார்கள். சக ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய தலைமையாசிரியர் என்ன சொல்கிறார்? பெரியார் தந்த பாடமல்ல; பாடமே பெரியார்! சந்தியாகு எனும் பெயரை யாகு என மாற்றிக் கொண்டேன். பர்மாவில் இருந்து 1960 இல் தமிழகம் வந்தது எங்கள் குடும்பம்.

தமிழ் ஓவியா said...

புனேயில் உள்ள இறையியல் தத்துவக் கல்லூரியில் (சேசு சபை) பயிற்சி மேற்கொண்டேன். ஏதாவது ஒரு தத்துவத்தை விரும்பிப் படிக்கலாம் என்ற போது, நான் பெரியாரைப் படித்தேன். நான் வாசித்து முடித்த நிறைய பெரியார் புத்தகங்கள், இன்னும் புனே இறையியல் கல்லூரியில் உள்ளது. துறவறம் என்பது அனைத்தும் சேர்ந்தது என்றே நான் நினைக்கிறேன். பழையது பேசுவது மட்டுமே என் நோக்கமல்ல. கலை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமாக இருப்பேன். இசை குறித்துப் பேசுவேன், சினிமா விமர்சனம் செய்வேன், நேற்றைய அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பேன். விளையாட்டு எனக்குப் பிடித்த ஒன்று. ஜெபம் செய்ய நேரமானாலும், மாலை நேரங்களில் விளையாடாமல் இருந்ததில்லை. எல்லா விளையாட்டிலும் நான் இருப்பேன். சுறுசுறுப்பாய் இருப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம். அதனாலே எனக்கு நோய்கள் வருவதில்லை. மாத்திரை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை. எனக்குப் பிடிக்காத ஒரே விளையாட்டு கிரிக்கெட். அதை அறவே வெறுக்கிறேன்.

கிளிப்பிள்ளை மாணவர்கள்

என் மாணவர்களிடம் நான் சமூகக் கருத்துகள் பேசுவேன். மாணவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், நடக்க வேண்டும், ஓட வேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் போதாது. இன்றைக்கு 9 ஆம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்கிறார்கள். இது ஆசிரியர்கள், மாணவர்கள் இருவரின் வளர்ச்சிக்கும் தடை. மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆசிரியர்களின் நிலை மாற வேண்டும். வெறும் சதைப் பிண்டமான, கிளிப்பிள்ளை மாணவர்கள் நமக்குத் தேவையில்லை. இயல்பான, ஆற்றல் கொண்ட தலைமுறையை உருவாக்குவது நம் கடமை.

மனித உறவு முக்கியம்

புத்தகம் வாசிப்பதில் குறைவு ஏற்பட்டாலும், மனிதர்களை வாசிப்பதில் குறைவு இருக்கக் கூடாது என எண்ணுவேன். மாணவர்களுடன் நல்ல உறவு வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஆசிரியர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் செல்வேன். விழாக்கள் நிறைய ஏற்பாடு செய்வேன். அது உறவுகளை வளர்க்கும் என்பது என் நம்பிக்கை. ஓரியூர் என்ற கிராமத்தில், 1991 இல் நான் முதன்முதலில் வகுப்பு எடுத்த 58 மாணவர்களுடன் இன்றும் நட்பில் இருக்கிறேன்.

அவர்களுடன் சேர்ந்து என்னாலான சமூக சேவைகளைச் செய்து வருகிறேன்.

பெரியாரின் தாக்கம்

உடல் ஊனமுற்ற ஒரு இளைஞர், சக்கர நாற்காலியில் எங்கள் பள்ளிக்கு வந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன் அந்த இளைஞரைப் பேசச் சொன்னேன். எங்கள் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நாங்கள் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பையாகச் சேர்ந்துள்ள தாள்களை (paper), விடுதி மாணவர்கள் மூலம் சேகரிக்கச் சொன்னேன். ஆண்டு இறுதியில் அதை விற்று, சிறப்பான பொங்கல் விழா எடுத்தோம். அதேபோல சக மாணவனுக்கு உதவவும், அவனை நேசிக்கவும் சுபம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி. அந்த வேலையைச் செய்வதோடு, ஆசிரியர்களை முடுக்கிவிடுவதையும் முக்கியக் கடமையாக நினைக்கிறேன். முடிவு செய்துவிட்டால், செய்தே தீருவது என் இயல்பு. இப்போது இல்லாவிட்டால் எப்போது ? என்பது நான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி.

ஒட்டு மொத்தத் தமிழரின் ஆளுமையையும் நிமிர்த்தி வைத்த பெரியாரின் தாக்கம், எனக்குள்ளும் இருக்கிறது என்பது, என் செயல்களின் பின்புலமாக இருக்கலாம். ஆசிரியர்கள், தலைமையாசிரியர் சந்திப்புக்குப் பின்னர் மாணவர்களைச் சந்திக்கிறோம். சமூகமே எந்திரி இதழின் ஆசிரியர் சி.சேதுராஜா, துணையாசிரியர் சு.மணிகண்டன். இவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள். பேனா முனை இதழின் ஆசிரியர் இ.ஆரோக்கிய மார்சலின், துணையாசிரியர் கா.விமல். இவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் வாழ்வதற்கு ஏதாவது பொருள் வேண்டும், நம் பயணம் சமூகம் நோக்கி இருக்க வேண்டும் என எங்கள் ஆசிரியர்கள் கூறுவார்கள். அவர்களின் சுழல் இதழைத் தொடர்ந்து வாசித்தோம். பின்னர் நாமே ஏன் நடத்தக் கூடாது என யோசித்து, இதழைத் தொடங்கி விட்டோம்.

மாதம் 100 புத்தகங்கள் தயார் செய்கிறோம். மாணவர்கள் நாங்களே செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆசிரியர் குழுவில் 10 பேர் இருக்கிறோம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், பாராட்டும் எங்களை வழி நடத்துகிறது என்கிறார்கள் மாணவர்கள்.

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்பின் சாயம் வெளுக்கிறது


- குடந்தை கருணா

தேர்தல் வருகிறது என்றால், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, மிகப் பெரிய கொண்டாட்டம் தான். அதுவும், சமூகநீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கை களை முன் வைக்கும், கட்சிகளை, பின்னுக்குத் தள்ளி, கருத்துக் கணிப்பு என்கிற பெய ரில், கருத்துத் திணிப்பை உருவாக்குவதில், இந்த பார்ப்பன ஊடகங் களுக்கு கொள்ளை பிரியம்.

சிஎன்என் அய்பிஎன் ஊடகம், கருத்துக் கணிப்பை, பதினைந்து நாட்களுக்குள், இரண்டு முறை வெளியிட் டுள்ளது. எந்த அளவுக்கு, முரண்பாட்டோடு செய்தி களை வெளியிடுகிறார்கள் என்பதற்குச் சிறந்த எடுத் துக்காட்டு.

சனவரி 21, 2014 அன்று வெளிவந்த கருத்துத் திணிப்பில், திமுக அணிக்கு 7-13 இடங்கள் தான் கிடைக்கும்; திமுகவின் வாக்கு சதவிகிதம் 17 விழுக் காடு என்பதால், இந்த குறைவான இடங்கள் என காரணம் சொன்னது சிஎன்என். அதிமுக அணிக்கு 15-23 இடங்களும், காங்கிரசுக்கு 1-5 இடங் களும், மற்ற கட்சிகள் (அதாவது பாஜக அணி) 4-10 இடங்களும் கிடைக்கும் என தகவல் தந்தது.

அதிமுகவின் வாக்கு விகிதம் 30 விழுக்காடு என்றும், 2009-ல் 2 விழுக்காடு பெற்ற பிஜேபி, 16 விழுக்காடு வாக்கு பெறும் என்று ஜோக் அடித்தது சிஎன்என் அய்பிஎன்,. இதைவிடக் கொடுமை, விஜயகாந்