Search This Blog

18.3.14

பெரியார் பார்வையில் நாகரிகம்

நாகரிகம் - தந்தை பெரியார்

நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் இவை மாறுபட்டிருக்கிறது என்று கூற முடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க் கொண்டிருக்கிறது.

நம்முடைய பெண்கள் முன்பு பெரும்பாலும் ரவிக்கை அணிவதில்லை. அணிவதிலும் பல்வேறு மாறுபாடுகளை, முறை மாற்றிக் கொண்டே வருவதைக் காண்கிறோம். மேல்நாட்டிலும் பெண்கள் தெருக்கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். இடை சிறுத்துக் காணும்படி தொம்பைக் கூடுபோன்ற பாவாடையுடன் கூடிய கவுன்கள் அணிந்து வந்தார்கள். பணக்காரப் பெண்கள் தங்கள் நீண்ட அங்கிகளை பின்னால் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணியாட்களை நியமித்துக் கொண்டிருந்தனர். அது அக்காலத்திய நாகரிமாகத் தோன்றியது இன்றோ ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண்கள் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். இதையும் நாகரிகம் என்றுதான் கருதுகிறோம்.

நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும்பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்று பற்றுக்களை விட்டுவிட்டு சுயேச்சையாகச் சீர் தூக்கிப் பார்த்தால்தான் நன்றாக விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.

***.

நாகரிகம் என்பது நிலைமைக்கும், தேசத்திற்கும் காலப்போக்குக்கும் தக்கவாறு விளங்குவதாகும். மாறிக் கொண்டே வருவதாகும். காலதேச வர்த்தமான பழக்கத்தையொட்டி நாகரிகம் காணப்படுகிறது. காலப் பேச்சானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும், புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டீர்கள். எது நாகரிகமென்று கருதுகிறோமோ, அது பெருத்த அஜீரணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கிறது.

ஒரு விஷயமானது, வாய்ப்பேச்சு சாமர்த்தியத்தினால் செலாவணியாகி விடக் கூடும். அது மெய்யோபொய்யோ, சரியோதப்போ எப்படியும் இருக்கலாம். வருங்காலத்தில் உடல் உழைப்புக் குறைத்து வரும் நிலையேற்பட்டே தீரும். அதுவே நாகரிகமாகக் கருதப்படும்.

நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? பல கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடையக் கூடும்.

நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால், இன்றோ அவைகளை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன்வந்து விட்டோம்.

***

தோழர்களே, நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது, நாம் அனுபவ முதிர்ச்சியால் முற்போக்கு ஆகிக் கொண்டு, வந்து கொண்டேயிருக்கிறோம் என்பதாகும். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம்.
உதாரணமாக, வியாபாரிகளை மக்கள் சமூகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியினரென்றும், லேவா தேவிக்காரர்களை மனித சமூக நாச கர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கிறோம்.

***

நம்மிடையேயுள்ள ஜாதி அபிமானம், சொந்தக்காரர்கள் என்ற அபிமானம், மொழிப் பற்று, தேசப்பற்று எல்லாம் நம் அறிவை மழுங்கச் செய்கின்றன. இந்த அபிமானம், - பற்று எல்லாம்  தொலையாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் சரியான முடிவு காண்பது அரிது. நமது முடிவு நியாயமானது, சரியானது என்று கொள்ள முடியாது.

காந்தியார் மேனாடு சென்றபோது பிடிவாதமாக முழங்கால் அளவுக்கு ஒரே ஆடையணிந்திருந்தார். நன்கு ஆடையணியாமல் குளிரில் விறைத்துப் போகும்படி (கேவலம் இந்திய தர்மம் என்ற எண்ணத்துக்கா) இங்கிலாந்தில் கஷ்ட வாசம் செய்தார். இது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? அறிவுக்கு ஒத்த செய்கையெனச் சொல்ல முடியுமா? எல்லோரையும் அவ்வாறு இருக்கச் செய்ய முடியுமா? செய்தாலும் சரியாகுமா?
உலகில் புதிய புதிய எண்ணங்களும், செய்கைகளும் மலர்ந்த வண்ணம் உள்ளன. நிகழுகின்றன. நீங்களும் காலப் போக்கில் உரிய பலனை வீணாக்காமல் அனுபவிக்கத் தவறக் கூடாது. பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு சிந்தித்து ஜன சமுதாய நன்மை எது என்று தேடி அதற்காகப் பாடுபட முன்வாருங்கள். உங்களுடைய இந்த முயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு மெய்வருத்தக் கூலி தரும் என்பதை உணர்ந்து சொல்லியும், செய்தும் வருகிறார்கள். ஆகவே, நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு மக்களின் விடுதலைக்கு ஆன வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட முன்வர வேண்டும்.

தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும். நாகரிகம் சமுதாயத்தின் பொதுவான முன்னேற்ற நிலை என்று கொள்க. இது கால விஞ்ஞான அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் முன்னேறிக் கொண்டும் மாறுபட்டுக் கொண்டும் இருப்பதாகும். மக்கள் வாழ்க்கை இன்பமயமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.

-------------------------------1933-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இந்தியாவில் காணப்படும் இன்றைய நாகரிகம் என்ற பொருள் பற்றி ஆற்றிய உரையிலிருந்து- விடுதலை 9.2.1964

90 comments:

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (4)

சனி, 15 மார்ச் 2014 18:39


தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; தி.மு.க.வின் மூதாதையர்தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச்சு 30,31 ஆகிய நாள்களில் நடைபெற்ற தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றியது.

அம்மாநாட்டின் 8(அ) ஆவது தீர்மானம் வருமாறு:

எல்லாப் பழமையான மொழிகளைப் போல, பழமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல திறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழியென ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!!

- முன்மொழிந்தவர்: ஜே.பி. நல்லுசாமிபிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை; வழி மொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர் எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஆதரித்தவர்; திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி நிறைவேற்றிய அத்தீர்மானம் - அதன்வழித் தோன்றலான திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு பின்னால் செயல்பாட்டுக்கு வந்தது.

இதனைப் பொறுக்க மாட்டாத அ.இ.அ.தி.மு.க. அரசு செம்மொழிப் பூங்காவைக் கூட சீரழித்த கீழ்மையை என்னென்று சொல்வது! புரட்சிக் கவிஞர் பெயரால் உருவாக்கப்பட்ட நூலகத்தைத் துவம்சம் செய்ததை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பகீர் என்றாகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழி மேம் பாட்டுக்கான ஆக்க ரீதியான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

தமிழ் மொழிக் கொள்கை தமிழ் ஆட்சி மொழி என்ற தலைப்பில் தன் திட்டத்தை அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்குரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழுக்கு மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் உள்ள தாய் மொழிக்கும் சேர்த்து தி.மு.க. குரல் கொடுத்திருப்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. இந்தப் பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு கருத்து மிக முக்கியமானதாகும். மத்திய அரசுப் பணிகளுக்கும்; மத்திய பணியாளர் வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளையும் இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர் முகத் தேர்வு களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் அவசியமானதாகும். மத்திய பணியாளர் தேர்வில் (Staff Selection Commission) மெட்ரிக் அளவில் மட்டுமே மாநில மொழிகளில் எழுத முடியும். பட்டதாரி களுக்கான தேர்வில் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோடிட்டுக் காட்டத் தக்கதாகும்.

சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து முதல் அமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தது போலவே மானமிகு கலைஞர் அவர்கள் அனைத்து மாநில மொழிகளுக்குமான மொழி உரிமைக்கான கொடியை உயர்த்தியுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் மொழிச் சிக்கலுக்கு நியாயமான அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி என்னும் தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள 34ஆவது அம்சம் மிகவும் குறிப்பிட்டத்தக்க ஒன்றாகும்.

செம்மொழியான நமது தாய்மொழி தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக (Co-Official Language) பிரகடனப்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் - நிறுவனங்கள் - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டுமென்றும்; இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343 ஆவது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றும் மத்திய அரசை தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. நமது தமிழின வரலாற்றில் நமது அன்னை மொழிக்கான அங்கீகாரம் சட்டப்படி நிலை நிறுத்தும் பான்மையதாகும்.

தமிழ் ஓவியா said...

இது ஒன்றும் புதியதோ - நடைமுறைப்படுத்தப்பட இயலாததோ அல்ல! உலகில் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அலுவல் மொழிகள் நடைமுறையில் உள்ளனவே!

மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் அவை எந்த மாநிலத்தில் இயங்குகின்றனவோ - அந்த மாநிலத்து மக்களோடு தொடர்பு கொண்டதுதானே! அம்மாநிலத்து மக்களின் மொழியில் அவை இயங்கினால்தானே உண்மையான மக்கள் தொடர்பு கொண்டதாக இருக்க முடியும். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்பட வேண்டும் என்று திமுக மத்திய அரசை வலியுறுத்தும் என்பது இன்னொன்று.

நமது வழக்குரைஞர் நமக்காக எப்படி வாதாடுகிறார் - என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தராமல் வழக்காடிகளைப் பரிதவிக்க விடுவது எவ்வகையில் நியாயமாக இருக்க முடியும்? அது ஒரு வகையான உரிமை மறுப்பும்கூட!

நாட்டு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, நதிகள் இணைப்பு என்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு வளர்ச்சித் தொடர்பான அத்தனையும் உள்ளடக்கிய ஒரு ஆவணம் - சாசனமே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.

தமிழ்நாட்டு மக்கள் இதன் அருமைப் பெருமைகளை உணர்ந்து தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்து நாட்டில் நல்லதோர் திருப்பத்தை உருவாக்கிட உதயசூரியன் அணியை வெற்றி பெறச் செய்வார்களாக!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள நூறு அம்சங் களும் ஒரு நூற்றாண்டுக்கான வரைவுத் திட்டம் என்றால் மிகையாகாது. கரும்புத் தின்னக் கூலியா? இதனைப் பயன்படுத்திக் கொள்ள நம் தமிழர்கள் தயங்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/77020----4.html#ixzz2wGsyOidB

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/77095-2014-03-17-11-12-55.html#ixzz2wGt9TQ4h

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகப் பொதுக் குழு வழிகாட்டுகிறது!

தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று (16.3.2014) நடைபெற்றது. கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இரண்டாவது தீர்மானம், நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அது அரசியல் கட்சியல்ல; அதே நேரத்தில் அரசியல் எக்கேடு கெட்டால் என்ன? நாசமாய்ப் போகட்டும் என்று பாராமுகத்துடன் திராவிடர் கழகம் இருக்காது. யார் ஆட்சிக்கு வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்பதை மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு எப்பொழுதுமே உண்டு.

பல முதல் அமைச்சர்களை ஆட்சியில் அமர வைத்தவர் தந்தை பெரியார். முதலமைச்சரைப் பதவியை விட்டு வெளியேறுமாறு செய்த நிலைகள்கூட ஏற்பட்டதுண்டு.

ஆட்சியில் அமர்பவர்கள் தந்தைபெரியார் வகுத்த திராவிடர் கழகக் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொள்வார்களேயானால் அந்தநிலை - பார்ப்பனர் அல்லாத பெரு மக்களுக்கு எதிரானதாகவே தமிழர்களால் கருதப்படும்! காரணம் திராவிடர் கழகக் கொள்கை என்பது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களான இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக் கான சமூக நீதியை ஆணி வேராகக் கொண்டதாகும்.

ஓர் ஆட்சியை ஆதரிப்பதும் - எதிர்ப்பதும் இந்த அடிப்படையில் தான்; காரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியத்தின் வருணாசிரமத்தால், பார்ப்பனீயத் தின் சனாதனத்தால் இந்த நாட்டில் உள்ள பெரும் பான்மை மக்களான சூத்திர பஞ்ச மக்கள் பிறப்பின் அடிப்படையிலே இழிவானவர்களாக அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக, கல்வி வாய்ப்புகள் அளிக்கப்படாத மக்களாக ஆக்கப்பட்டனர்.

இந்த அடிப்படையைத் தகர்த்துத் தலை கீழ்ப் புரட்சியை நடத்தும் ஓர் இயக்கத்தைத்தான் தந்தை பெரியார் கண்டார்.

அதில் தந்தை பெரியாரின் இந்த இயக்கம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது; தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்ட இந்த மாற்றத்தின் விளைவுகள் தமிழ்நாட்டையும் கடந்து, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலித்தது.

இதுகுறித்து, பிரபல பொருளாதார மேதை அசோக் மேத்தா சொன்ன கருத்து குறிப்பிடத்தக்கதாகும்.

தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்மீது உயர் ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து, சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அதில் வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள். தமிழகத்தில் நடந்துள்ள இத்தகைய மாற்றித்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள். விவசாயிகள்தான்; அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட் டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 16.9.1977) என்று பிரபல பொருளாதார மேதை அசோக் மேத்தா குறிப்பிட்டதை இந்த இடத்தில் அசை போட்டுப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். இந்த நிலையைத் தகர்த்து விட வேண்டும்; மீண்டும் பிறப்பின் அடிப்படையில் நிலை நாட்டப்பட்டு வந்த வருண தர்மத்தை, குல தருமத்தை, மனுதர்மத்தைப் பறக்கவிட வேண்டும் என்று தீய நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் கருவி பி.ஜே.பி. என்பதாகும்.

மேம்போக்காக இதுவும் ஓர் அரசியல் கட்சி தானே என்று நினைத்து விடுவோமேயானால், அந்த இடத்திலேயே நம் மக்கள் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொண்டவர்கள் ஆவார்கள்! ஹிந்துத்துவா என்று அவர்கள் சொல்லுவதன் அடிப்படை அம்சம் இதுதான். இது வரைப் பின்னணியில் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ். என்னும் நச்சு வேர், இப்பொழுது மிக வெளிப்படையாக தனது கொடூரமான தலையைக் (ஹிரீறீஹ் பிமீணீபீ) காட்டத் தொடங்கி விட்டது.

பிரதமர் அத்வானியா - நரேந்திரமோடியா? என்ற உள்கட்சிப் பிரச்சினை வந்த போது அத்வானியை அடக்கி மோடியை முன் நிறுத்திய அங்குசம் எது?

ஆர்.எஸ்.எஸ். தானே? அரசியலுக்கும் ஆர்.எஸ். எசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று சொல்லி வருவதெல்லாம் - வெறும் ஏமாற்று வேலை என்பது இதன் மூலம் விளங்கிவிடவில்லையா?

ஆர்.எஸ்.எஸின் நோக்கமென்ன? ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் பீகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் வெளிப்படையாகக் கூறியது எடுத்துக்காட்டத்தக்கதாகும்.

இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸின் நோக்கம் (தினமணி 22.7.2013).

தமிழ் ஓவியா said...

இந்த இந்துத்துவா என்ற மனுதர்மம் மீண்டும் பார்ப்பனீயத்தின் காலடியில் பெரும்பான்மை மக்களைப் பணிய வைக்கும் தீய சூழ்ச்சியாகும்.

இந்த நிலையில் மதவாத சக்தியை, தஞ்சை திராவிடர் கழகப் பொதுக் குழு அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மதவாத- ஜாதியவாதத்தை முற்றிலும் முறியடிக்க தி.மு.க.தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்க - என்ற வழிகாட்டுதலை - தேவையான முன்னேற்றப் பாதையை - சூரிய ஒளியை திராவிடர் கழகப் பொதுக் குழு பொது மக்களுக்கு வழங்கியுள்ளது.

குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு சிறுபான்மையருக்கும்கூட பி.ஜே.பி. சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை சிறு பான்மை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற தமிழர் தலைவரின் செய்தி - மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...

1 கலவரம் 2 படங்கள் 12 ஆண்டுகள்

கடந்த நூற்றாண்டின் உலக வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளுக்கு ஒருசில படங்களே அடையாளமாகத் திகழ்கின்றன. அந்தப் படங்கள் உலகம் முழுக்க அந்நிகழ்வின் தீவிரத்தை எடுத்துப் பேச வைத்தன.

வியட்நாம் போரில் நாபாம் குண்டுவீச்சின் கொடுமையை உணர்த்திய ஓடிவரும் ஒரு நிர்வாணச் சிறுமியின் படம், சூடான் பஞ்சத்தைப் புரியவைத்த செத்துக் கொண்டிருந்த குழந்தையைத் தின்னத் தயாராக இருந்த வல்லூறின் படம், ஆப்கன் மீதான போர்களினால் இடம் பெயர்ந்த ஒரு பெண்ணின் மிரட்சியைக் கண்கள் மூலமே பதிய வைத்த படம் என்று பெரிய பட்டியலே உண்டு.தமிழ் ஓவியா said...


அப்படியொரு முக்கிய நிகழ்வாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், மதவெறியின் கோரத்தால் ஒரு கலவரம் அரங்கேற்றப்பட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத்தில் 2002ஆம் ஆண்டு அன்றைய மாநில அரசின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட அந்த மாபெரும் வன்முறையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். உயிருடன் கொளுத்துங்கள்; கொல்லுங்கள்; வெறியாட்டம் நடத்துங்கள்; மூன்று நாள் காவல்துறை உங்களை ஒன்றும் செய்யாது என்று காவிகள் கொடுத்த சமிக்ஞை பல மிருகங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. வாய்ப்புகளே மிருகங்களை வெளிப்பட வைக்கிறது என்ற வகையில் சில மனிதர்களிடமிருந்த மிருகமும் வெளிப்பட்டது. காவல்துறை கையைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது.

எனினும், ஊடகங்களில் செய்திகளும் சில படங்களும் வெளியாயின. அவற்றில் இரண்டு படங்கள் குஜராத் வன்முறை வெறியாட்டத்தின் இரண்டு உச்சங்களைக் காட்டின. அவையிரண்டும் குஜராத் கலவரத்தின் அடையாளங்களாக ஆயின. இரண்டு படங்களில் இரண்டு முகங்கள்; இரண்டு முகங்களிலும் இருவேறு உணர்ச்சிகள்!

உச்சத்திலிருந்த கொலை வெறியுடன் ஒரு முகம். அச்சத்திலிருந்து கைகூப்பியபடி மற்றொரு முகம். ஒரு கலவரத்தின் இரு எல்லைகளையும் பதிவு செய்த இரண்டு முகங்களின் படங்கள். இருவேறு புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்டவை.

கலவரத்தின் முதல் நாள்: பிப்ரவரி 28, 2002, ஷா நகர், அகமதாபாத்

நெற்றியில் கட்டிய காவி ரிப்பனுடன் இறுக்கி மூடிய இடது கையையும், இரும்புத் தடியேந்திய வலது கையையும் விரித்துத் தூக்கியபடி முன்னே வருகிறார் ஒருவர். மடித்து விடப்பட்ட முழுக்கை கருப்பு டிசர்ட்டு, அதை உள் அமுக்கி இன் செய்து பெல்டு கட்டி நிறுத்தப்பட்டுள்ள காக்கி கால்சட்டை. இவை எல்லாவற்றையும் தாண்டி, நம் கவனத்தை ஈர்ப்பது வாய்பிளந்து வெறிக் கூச்சலிடும் அந்த முகமும் அந்தக் கண்களும்!

அந்த வெறிக்கூச்சலில் அடங்கியிருப்பவை இஸ்லாமியருக்கெதிரான வெறுப்பு வாசகங்கள்! வாசகங்கள் மட்டுமல்ல, செயல்களும்! பின்னணியில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு மட்டுமல்ல... எண்ணற்ற இஸ்லாமியர் கடைகளைக் கொளுத்திவிட்டு வந்த நெருப்பின் மீதம் இவரால் வழிநடத்தப்பட்ட கும்பலின் கைகளில் பந்தமாக இருக்கிறது. அகமதாபாத்தின் ஷாநகரில் வசிக்கும் இஸ்லாமியர் வீடுகளுக்குத் தீயிட்டவையும் அந்தப் பந்தங்கள்தான்.

அசோக் மோச்சி _ இதுதான் அந்த நபரின் பெயர். பஜ்ரங் தளத் தொண்டர். பா.ஜ.க., விஷ்வ ஹிந்துபரிசத் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களோடு நெருக்கம். குஜராத் கலவரத்தின் அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிட்ட இந்தப் படத்தை எடுத்தவர், அப்போது ஏ.எஃப்.பி என்ற பிரெஞ்சு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி தற்போது மும்பை மிர்ரரில் பணியாற்றும் செபாஸ்டின் டிசோசா.

2002 பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த கரசேவகர்கள் முஸ்லிம் களால் எரித்துக் கொல்லப் பட்டதாகத் தகவல் வந்தது. (பின்னாளில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் அந்தப் பெட்டியின் உள்ளிருந்து தான் தீ பரவியதற்கான வாய்ப்பிருப்பதாக அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தின.) தீவிரவாதிகள் இச்செயலைச் செய்திருப்பார்கள் என்றார் மோடி. மறுநாள் காலை முதல் களம் இறங்கினார்கள் காவிகள். அகமதாபாத்தில் கலவரம் தொடங்கியது. கார்களைக் கொளுத்திக் கொண்டும், எதிர்ப்பட்டோரைக் குத்திக் கொண்டும் ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. தொலைவில் வந்த அந்தக் கும்பலை ஒருவன் வழிநடத்திக் கொண்டு வந்தான். நான் வந்த வாகனத்தின் ஓட்டுநர் பயந்துவிட்டான். வழியில் இருந்த தடுப்புகளில் ஏறித் தாண்டி வந்த அந்த மனிதனைத் தொலைவில் நின்றபடி 300 மி.மீ. லென்சில் சில படங்கள் எடுத்தேன். அப்போது அவன் யாரென்று தெரியாது எனக்கு!

உங்களை நோக்கி வரும் அந்த நபர், உங்கள் கேமராவையும் உங்களையும் பார்த்து விட்டாரா? என்ற கேள்விக்கு, இல்லை நான் தொலைவில் நின்றபடி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவன் முழக்கமிட்டபடி முன்னேறிக் கொண்டிருந்தான் என்கிறார் டிசோசா.

தமிழ் ஓவியா said...


யாரும் சாட்சி சொல்ல வராததால் 2002-இல் அசோக் மோச்சி மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. தொடர்ந்து பலரின் வற்புறுத்தலால், பிரிவு 435 மற்றும் 436-ன் படி 2007-_ல் தொடங்கிய வழக்கும் சாட்சி இல்லாததால் 2008-_ல் மூடப்பட்டு அவன் விடுதலை செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றின் உரிமையாளரான பெட்டிக் கடைக்காரர் முகமது உசைன் என்பவர் சாட்சியளிக்க வந்தவர்களில் ஒருவர். அவர் சொல்லும்போது, ஒவ்வொரு முறையும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றேன். எல்லா நேரமும் அங்கே கூச்சலும் குழப்பமும் தான். சாட்சி சொல்வோர் வந்திருந்தாலும், வரவில்லை என்றே சொல்வார்கள்.

2002இ-ல் மோச்சி ஒரு லோக்கல் தண்டல்காரர் போல சிறு சிறு கடைகளிடமிருந்து மாமூல் வசூல் செய்வார். பி.ஜே.பி, வி.ஹெச்.பி, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் மோச்சியின் வழக்கில் நிறைய உதவினார்கள் என்கிறார்.

எனினும், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் மோச்சி மீதான வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, உயர் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கலவரத்தின் இரண்டாம் நாள்: மார்ச் 1, 2002, பாபு நகர், அகமதாபாத்

அதே கலவரத்தில் இன்னொரு ஒளிப்படச் செய்தியாளர். பெயர் அர்கோ டத்தா, ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். ராணுவ வாகனத்தில் இருந்தபடி நகரை வலம் வந்து கொண்டிருந்தார். நகர் முழுக்கவும் கலவரக் காடாகியிருந்த சூழலில், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்த வாகனம் சுற்றிக் கொண்டிருந்தது. கேஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தமும், புகையும் சுற்றிச் சுற்றிக் கவனத்தை ஈர்க்கின்றன. இரைந்துகிடந்த கற்களுக்கு மத்தியில் சாலையில் பயணிக்கிறது அந்த வாகனம்.

கூட்டம் கூட்டமாக கையில் ஆயுதங்களுடனும் தீப்பந்தங்களுடனும் ஆங்காங்கே கும்பல்! கண்ணில் படும் இஸ்லாமியர் கடைகளையும், வீடுகளையும் தாக்கியபடியும் கொளுத்தியபடியும் நகர்கிறது. இவ்வளவுக்கும் அது எங்கிருந்தோ வந்த கும்பல் அல்ல. அந்தப் பகுதியைச் சார்ந்ததாகவே தோன்றுகிறது. பலர் தங்கள் வீடுகளிலிருந்து இந்தக் கோரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ராணுவ வாகனம் கடந்து சென்ற ஒரு வீட்டின் வாயிலில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல் அர்கோ டத்தாவின் கண்ணில் படுகிறது. முதல் மாடியின் பால்கனியில் நின்றபடி கையைக் கூப்பிக் கண்ணீர் வடிக்கும் ஒரு முகத்தைச் சட்சட்டென சில படங்கள் எடுக்கிறார் அவர்.

நீங்கள் அவரைச் சென்று காப்பாற்றுங்கள் என்று கத்துகிறார் அர்கோ. ராணுவத்தின் உதவி கேட்டுக் கைகூப்பிய அந்த நபர் குத்புதின் அன்சாரி. அன்று இராணுவம் அந்த வீட்டிலிருந்தோரைக் காக்கிறது, மறுநாள் அன்சாரியின் அந்தப் படம் பத்திரிகைகளில் வெளிவருகிறது. உலகம் முழுக்கப் பிரபலமாகிறது. குஜராத் கலவரத்தின் அடையாளமாகிறது.

தமிழ் ஓவியா said...

ஆடி முடித்த காவிகள் அழித்து ஓய்ந்தபின் கலவரம் குறைகிறது. முதல்நாள்

கலவரத்திலும், இரண்டாம் நாள் வீடு தீவைப்பிலும் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு குடும்பத்துடன் நிவாரண முகாமில் இருந்த அன்சாரிக்கு இந்தப் படம் குறித்து தெரியாது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெளிநாட்டுச் செய்தியாளர் அன்சாரியின் படம் வெளியாகியிருந்த ஒரு பத்திரிகையுடன் அன்சாரியைத் தேடிக் கொண்டிருக்கிறார். அன்சாரி யின் வாழ்க்கை மேலும் மாறத் தொடங்குகிறது. அடையாளமற்று இருந்த அன்சாரி இப்போது குஜராத் கலவரத்தின் அடையாளம். இதனால் பணியிடங்களிலிருந்து விலக்கப்படுவதும், தானாக விலகி ஓடுவதும், அடையாளம் காணும் பத்திரிகையாளர்களால் தொடர்ந்து தேடப்படுவதுமாக குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவின் மாலேகான், கொல்கத்தா, குஜராத்தின் பிற பகுதிகள் என அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் அன்சாரி.

இதற்கிடையில் குத்புதின் அன்சாரியைப் பிடித்துவந்து குஜராத் அரசுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லும் படியும், தற்போது தன் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக பத்திரிகைகளில் தெரிவிக்கும்படியும் நெருக்கடிகள் வருகின்றன. அதற்கென உரிய கூலியைத் தரவும் தயாராக இருக்கிறார்கள். எனினும், அன்சாரி அவற்றை மறுக்கிறார். 29 வயதில் கண்ணீருடன் கைகூப்பி மன்றாடிய ஓர் எளிய தையல் கலைஞரான அன்சாரி, பிறகு குஜராத் திரும்பி அதே பழைய பகுதியில் குடியேறுகிறார். வெளியான அந்தப் படத்தால் பிரச்சினைகளைச் சந்தித்திருந்தார் அன்சாரி. எனினும், பத்து ஆண்டு களுக்குப் பிறகு அதை எடுத்த ஒளிப்படச் செய்தியாளர் அர்கோ டத்தா தன்னைச் சந்தித்தபோது அதற்காக அவர் கோபிக்கவில்லை. உங்கள் பணியை நீங்கள் செய்தீர்கள். உண்மையில் உங்களால்தான் பிழைத்தோம். அதன் பின் நடந்தவற்றில் சில மனிதநேயர்களையும் சந்தித்தேன். சில பிரச்சினையையும் எதிர்கொண்டேன் என்பது உண்மைதான் என்றார்.

தமிழ் ஓவியா said...

ஏன் அப்பா அப்போது அழுதாய்? என்று இப்போது அந்தப் படத்தைப் பார்த்துக் கேட்கும் தன் குழந்தைகளிடம் இந்துக்கள் நம்மைத் தாக்க வந்தார்கள் என்று பதில் சொல்லவில்லை அன்சாரி. நாளை அவர்களுக்கே அது தெரியவரலாம். எனினும், அவர்களிடம் வெறுப்பை வளர்க்கத் தான் விரும்பவில்லை என்கிறார்.

காலம் உருண்டோடுகிறது. குஜராத் வன்முறை நடந்து 12 ஆண்டுகள் கழித்து, கேரளாவின் கண்ணூர் அருகில் ஒரு நிகழ்ச்சி. அதில் சிறப்பு விருந்தினர்கள் இருவர். ஒருவர் உருவிய ஆயுதத்தோடு காவியும், தாடியுமாக படங்களில் தோன்றிய அசோக் மோச்சி. இப்போது தாடி மீசை மழித்து, முழுக்கைச் சட்டையில் பாந்தமாகத் தோன்றுகிறார். மற்றொருவர் குத்புதின் அன்சாரி.

அசோக் மோச்சி தனது கையில் இருந்த பாட்டிலிலிருந்து சிறிது தண்ணீரை குத்புதீன் அன்சாரிக்கு வழங்குகிறார். தண்ணீரைக் குடிக்கும்போதே அன்சாரி தன் கையில் இருந்த பன்னீர்ப்பூவை மோச்சியிடம் கொடுக்கிறார். குஜராத்தில் இனப்படுகொலை அரங்கேறிய பூமியில் இருந்து வந்த இவர்கள் இருவரும் ஒரு தாய் மக்களாக -_- சகோதரர்களாக அன்பைப் பரிமாறிக் கொண்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கரகோஷம் எழுப்பினர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் 18 கலை - இலக்கிய அமைப்புகள் கூட்டாக குஜராத் இனப்படுகொலையின் 12 ஆண்டு என்ற தலைப்பில் 2014 மார்ச் 3 அன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில்தான் இவர்கள் இருவரும் சந்தித்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நான் வந்திருப்பதை அறிந்து ஏராளமானோர் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். யார் இந்து, யார் முஸ்லிம் என்று என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

கேரள மக்களிடம் கொண்டுள்ள அன்பினால்தான் இந்த மேடைக்கு வெள்ளை முண்டு உடுத்தி வந்திருக்கிறேன். குஜராத்திலிருந்து ஓடியபோது மேற்குவங்கத்திலும் என்மீது அன்பு காட்டப்பட்டது. கேரளத்தின் இந்தத் தொடக்கம் இந்தியாவில் மாற்றத்திற்கான கதவைத் திறக்கட்டும். குஜராத்தை இப்போது அடக்கிஒடுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்திருப்பது நரேந்திர மோடி டில்லி செல்வதற்காகத்தான். அன்று தெருவில் கொலைக் கூச்சலிட்ட அசோக் மோச்சி மீது எனக்கு இதயம் நிறைந்த அன்பு மட்டுமே உள்ளது.

அவர்கள் இவரைப் பயன்படுத்தினார்கள் என்று கூறிய அன்சாரி, முதலில், மனிதன் என்ற கடமையை நிறைவேற்றுங்கள். அதன்பின்னர் கீதையையும் குர்ஆனையும் திறங்கள் என்ற கவிதை வரிகளை உச்சரித்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.

மோச்சி பேசத் தொடங்கியபோது, மோடியின் குஜராத்தில் இருந்து அல்ல, மகாத்மா காந்தியின் குஜராத்தில் இருந்துதான் நான் வருகிறேன். உங்களுடன் பேசுவதற்கு எனக்கு மொழி தெரியாது. ஆனால், மனிதநேயத்தின் மொழிக்கு சுருதி தேவையில்லை. குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்று டமாரம் அடிக்கப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வளர்ச்சி எதுவும் இல்லை என்பதற்கு நான் இப்போதும் தெருவில் செருப்புத் தைப்பவனாக வாழ்ந்து கொண்டிருப்பதே எடுத்துக்காட்டாகும். பணம் இல்லாததால் திருமணம் கூட செய்யவில்லை என்று மோச்சி கூறினார்.

நான் குத்புதின் அன்சாரி என்ற நூல் வெளியிடப்பட்டது. ஹை ப்ரீத் ஜஹான் கீ ரித் சதா என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள். அன்பே பண்பாடாக இருக்கும் இடத்தில் என்ற அந்தப் பாடலின் பொருள் அங்கு இருந்தவர்களுக்குப் புரியவில்லையென்றாலும், இவர்கள் இருவரின் இணைப்பும் பூங்கொத்தைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வும் நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டின.

வெறியையும், அச்சத்தையும் வெளிப்படுத்திய இவ்விரு முகங்களும் அன்பை வெளிப்படுத்திய ஒரு படத்தைக் கண்டுவிட்டோம். ஆனால், இந்த இரு முகங்களையும் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது அந்தக் கலவரத்திற்குக் காரணமான முகம். அந்த முகத்தில் அமைதியையும், அன்பையும் நம்மால் ஒருபோதும் பார்க்கமுடியவில்லை. அது முகமூடி அணிந்துகொண்டு இந்தியாவின் ஒற்றை முகமாகத் துடித்துக் கொண்டு, துருத்திக் கொண்டு நிற்கிறது. அந்த முகம் இதே போன்ற வெறியும், அச்சமும் கொண்ட கோடிக்கணக்கான முகங்களை உருவாக்கக் கூடியது என்ற எச்சரிக்கை தான் இப்போது அவசியம்!

- சமா. இளவரசன்

தமிழ் ஓவியா said...

அது அந்தக் காலம்!


மதிய உணவுக்காக அரிசி கலைந்து கொண்டிருந்தாள் மருதாயி. தொலைபேசி அலறல் கேட்டு கையிலிருந்ததை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தாள்.

அதை எடுத்துக் காதில் வைத்ததும் யாருங்க பேசுறது என்றாள்.

நீங்க பொன்னியோட அம்மாதானே? கேட்டது ஒரு பெண் குரல்.

ஆமா...

பள்ளிக்கூடத்துல இருந்து உங்க மகளோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்

சொல்லுங்கம்மா. அவளுக்குச் சரியா படிப்பு வரலையா... ராவெல்லாம் புத்தகமும்

கையுமாத்தானே இருக்கா என்றாள் பதட்டத்துடன்.

அதுக்கில்லே. உங்க மக, ஏஜ் அட்டன் பண்ணியிருக்கா...

எனக்குப் புரியும்படி சொன்னிங்கன்னா தேவலை

அப்படியா, உங்க மக வயசுக்கு வந்திட்டா. வந்து கூட்டிட்டுப் போங்க

புரியுதும்மா. என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். சந்தோசம்மா. அவளோட அப்பா ஆபீசுல இருக்காரு. அவருக்கே பேசிடுங்க. அந்த நம்பரெல்லாம் பொன்னிக்குத் தெரியும். தயவு பண்ணி.. என்று இழுத்தாள் அவசரமும் ஆர்வமும் பொங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மருதாயி _ அழகய்யா இணையருக்கு ஒரே மகள் பொன்னி. பிறந்தது, வளர்ந்தது, மணம் முடித்தது எல்லாம் புதுப்பட்டி கிராமம்தான். நகராட்சியில் கடைநிலை ஊழியர் வேலை கிடைக்க அழகய்யாவின் குடும்பம் நகருக்கு இடம் பெயர்ந்தது.

அவனது கடும் முயற்சியும், அனுபவமும், அறிவும் கைகொடுக்க எழுத்தர் பதவி அவனைத்தேடி வந்தது. மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பொன்னி எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதுதான் அவள் ஆளான செய்தி வந்தது. அவள் பருவமடைந்துவிட்ட செய்தி அறிந்ததும் ஒரு தாய்க்கே உரிய பூரிப்பு அவள் முகத்தில்! அழகய்யாவுக்கும் செய்தி எட்டியது.

பொன்னி படு சுறுசுறுப்பு. படிப்பிலும் அப்படியே. அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு உதவும் கரங்களும் அவளுடையதுதான். வாசலைப் பெருக்கி, சாணி தெளித்து, கோலம் போட்டு அழகு பார்த்தபின் பாடப் புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். சைக்கிள் மிதித்து பள்ளிக்கூடம் போய்வரப் பழகியிருந்தாள். தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தபோது அழகய்யா வகுப்பு நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அழகய்யா வந்திருப்பது தெரிந்ததும் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த வகுப்பு ஆசிரியை, அதை நிறுத்திவிட்டு அங்கே வந்தார். ஆசிரியையும் அழகய்யாவும் சில நொடிகள் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

விரைவில் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள் தந்தையும் மகளும்.

வீட்டு வாசலில் மருதாயி காத்திருக்க இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். ஓடிவந்து மகளைக் கட்டிக் கொண்டாள். பொன்னியின் நடையில் வழக்கமான துள்ளல் இல்லை. நடை தளர்ந்திருந்தது. அதிர்விலிருந்து மீண்டவள்போல் களைத்திருந்தாள். கிராமத்துப் பழக்கப்படி சொந்தங்களுக்குச் சொல்லியாக வேண்டும். முக்கிய நிகழ்வாகக் கொண்டாடுவார்கள்.

தமிழ் ஓவியா said...


கையில் காசு இருக்கிறதோ இல்லையோ, கடன் பட்டாவது பருவச் சடங்குகளை நடத்திடத் துடிப்பார்கள். அதுவும் மாமன் மச்சான் உறவு முறைகள் பெருகிப் போயிருந்தால் கேட்கவே வேண்டாம். தடபுடலுக்குக் குறைச்சல் இருக்காது. சீர் செனத்தியைக் குறிவைத்து புனித நீராட்டு விழா பத்திரிகை அடித்து ஊரைக் கூட்டி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

கொட்டு மேளத்தோடு வீட்டு வாசலில் வந்து நிற்கும் சொந்தங்கள், சீர் சுமந்து வரும் உறவுகள், கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளை ஊர்முழுக்கக் கட்டி அலற வைத்து உறங்கவிடாத நட்புகள்! இன்னும் இன்னும்...

மலர்ந்து வந்த மகளுக்கு அடுத்து ஆக வேண்டியது பற்றிய சிந்தனை தாயின் மனதில் திரைப்படம் போல் ஓடிக் கொண்டிருந்தது. சோர்ந்திருந்த பொன்னியைக் குளியலறைப் பக்கம் அழைத்துப் போனாள். அங்கிருந்து அவள் வெளிவந்தபோது மாற்றுடையில் தோன்றினாள். யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. அறையின் கதவைத் திறந்து போனவள் ஓர் ஓரமாய்ப் படுத்துக் கொண்டாள். மருதாயி முகத்தை ஏறிட்டபடி உட்கார்ந்திருந்தான் அழகய்யா. நீங்க உங்க வேலையப் பாருங்க. விடிஞ்சு பேசிக்கலாம் என்றாள் அவள்.

புலர்ந்தும் புலராத வைகைப் பொழுது. கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. எங்கோ உறங்கிக் கிடந்த பறவைகள் அங்குமிங்குமாய் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தன. வாசல் பெருக்கும் வேலையை மருதாயி செய்து கொண்டிருந்தாள். வீட்டைக் கடந்து போகிறவர்களுக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் மூக்கு வியர்க்க இதுபோதுமே!

என்ன மருதி பொன்னி என்ன பண்றா? என்றாள் பக்கத்து வீட்டுப் பரிமளா அவள் வீட்டைப் பெருக்கிக் கொண்டே.

எல்லாம் நல்ல காரியந்தேன். பொன்னி உட்கார்ந்துட்டா. இன்னிக்கிச் சாயந்திரம் தலைக்குத் தண்ணி ஊத்தணும் என்றாள் கோலம் போட்டுக்கொண்டே. தெரு விளக்குகள் அத்தனையும் எரிய ஒரு சுவிட்சைப் போட்டால் போதுமே. அதுதான் நடந்தது. சிறிது நேரத்தில் அந்தத் தெரு மகளிர் அணி அங்கே வந்து நின்றது. சிறுமிகள் மூதாட்டிகள் இதில் அடக்கம். அவ்வளவு பெரிய அதிசயமா இது என்று ஆராய்ந்துகொண்டிருக்க அங்கு வந்து போகிறவர்கள் யாருக்கும் நேரமும் இல்லை. வழக்கமும் இல்லை போலும்.

தமிழ் ஓவியா said...

மாலைப்பொழுது கடந்து மின் விளக்குகள் ஒளிரத் தொடங்கின. வெளியே போய் விட்டு வந்த அழகய்யா உடைகளைக் களைந்து கைலிக்கு மாறியிருந்தான். அம்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே உறங்கிப் போனாள் பொன்னி. சுவர்க் கடிகாரம் இரவு பத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. புரட்டிக் கொண்டிருந்த வார இதழ் ஒன்றை மூடி வைத்துவிட்டு கொட்டாவி விட்டபடி படுக்கை விரித்தான் அழகய்யா. அவனருகில் வந்து நின்ற மருதாயி அதுக்குள்ள என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கு என்றாள். தன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் அருகில் உட்கார்ந்தவள் பொன்னி படுத்துறங்கும் அறை சாத்தப்பட்டிருக்கிறதா என்று நோட்டம் விட்டபின் மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

போன மாசம் கிராமத்துல இருந்து அண்ணன் வந்திருந்தப்போ... பொன்னி வயசுக்கு வந்துட்டா சொல்லிவிட மறந்துடாதேனு சொல்லிட்டுப் போச்சு...

தாய் மாமனாச்சே. சொன்னாப் போகுது...

என்ன இப்படி சப்புனு சொல்லிட்டீங்க. உடனே சொல்லியிருக்க வேணாமா? மாமன் சீர் வேண்டாமா?

தாய் மாமனைக் கண்டிப்பா அழைக்கத்தான் வேணும். பூப்பு நீராட்டு விழான்னு பத்திரிகை அடிக்கணும். ஊர் ஊருக்கு உறவுகளைத் தேடிக் கொடுக்கணும். கடா வெட்டி கறிச்சோறு போட்டு விருந்து வேடிக்கையெல்லாம் வைக்கணும். இதெல்லாம் வேணுமா? வெட்டி வேலையாப் படலையா? எத்தனை பொண்ணுங்க படிக்கப் போகுது? பள்ளிப் படிப்பு காலேஜ் படிப்பு, உத்தியோகம்னு போய்க்கிட்டே இருக்குதுக. நீ சொல்ற மாதிரி சடங்கு சம்பிரதாயம்னு ஆரம்பிச்சோம்னா ஊர் முழுக்க அதுதான் நடந்துக்கிட்டிருக்கும்...

என்ன சொல்றீங்க. எனக்கு எதுவுமே வௌங்கலே...

நல்லதாப் போச்சு. வௌங்காமலே போகட்டும். உங்க அண்ணே சும்மா வரமாட்டாரு. என் பையனுக்கு இப்பவே பருசம் போடணும். நிச்சயதார்த்தம் எப்ப வச்சுக்கலாம்? வர்ற வைகாசியில வச்சுக்கலாமானு கேட்பாரு.

தமிழ் ஓவியா said...

ஒத்தக்கால்ல நிப்பாரு....!

கேக்கட்டுமே. அதுல என்னங்க தப்பு? மாமனுக்கு இல்லாத பாத்யதையா?

மாமன்மார்களுக்கு அப்படி ஒரு உரிமையை யார் கொடுத்தாங்களோ? போகட்டும். நமக்கு இருக்கிறது ஒரே பொன்ணு. அதோட விருப்பம் என்னன்னு தெரியணும். அதுபத்திச் சிந்திக்கிற வயசும் இது இல்லே. எல்லா வீட்டுப் பிள்ளைகளும் படிக்குதுங்க. இதுவரையிலும் எல்லா வகுப்பிலேயும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டு வர்ற நம்ம பொன்னியும் படிக்கட்டுமே. நாம ஏன் குறுக்கே நிக்கணும்?
அண்ணன் கோவிச்சுக்க மாட்டாரா?

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இதோ பாரு. நீ தெரிஞ்சுக்கணுங்கிறதுக்காக ஒன்னு சொல்றேன். உலகத்துல எந்த நாட்டுலேயும் இதைப் பெரிசு பண்ணுவது இல்லே. ஊருக்கெல்லாம் தெரியட்டும்னு தமுக்கு அடிக்கிறதும் இல்லே. சீர் செனத்திக்கு ஆசைப்பட்டுக் காத்துக் கிடக்கிறதும் இல்லே. பல் இல்லாம பிறந்த பிள்ளைக்கு பல் முளைக்குது. தரையில தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை நடக்க ஆரம்பிக்குது. பேசுது. எழுதுது. வயசு ஆக ஆக கருப்பா இருக்குற தலை முடி வெளுத்துப் போகுது. இதையெல்லாம் கொண்டாடிக்கிட்டா இருக்கோம்? மொட்டை போட, காது குத்த, வளையல் போடன்னு எதுக்கெடுத்தாலும் வெட்டிச் செலவு பண்ணிக்கிட்டே அலையணுமா? அறிவு வளர்ச்சியில்லாத அந்தக் காலத்துல பொண்ணுக வயசுக்கு வர்றதைப் பெரிய விசயமா எடுத்துக்கிறதுக்கு மூடத்தனம் மட்டும் காரணம் இல்லே. அவசரமும் காரணம். உனக்குச் சொன்னா புரியாது
நான் படிக்காதவதான். எனக்குப் புரியறமாதிரி சொல்லப்படாதா?

தமிழ் ஓவியா said...


நம்ம கலியாணத்தப்ப உனக்கு வயசு என்ன?

தலையைச் சொறிந்தபடி யோசித்து பதினெட்டுனு சொன்னாங்க என்றாள். எனக்கு 25. இது பரவாயில்லே. ஆனா அந்தக் காலத்துல என்ன நடந்ததுனு தெரியுமா? குழந்தைத் திருமணம். பெண் குழந்தைக்கு அஞ்சு வயசு. பையனுக்கு அதே வயசும் அதுக்கு மேலே ஒன்னுரெண்டு இருந்தாலே போதும். கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. பெண் குழந்தையச் சிங்காரிச்சு உட்காரவச்சு, பொடியனை மாப்பிள்ளைக் கோலத்துல நிறுத்தி, கையில தாலியக் கொடுத்துக் கட்டச் சொல்லுவாங்க.

ஏதோ விளையாட்டாக்கும்னு குழந்தைங்க ரெண்டும் நினைச்சுக்கும்...

இது என்ன கன்றாவியா இருக்கு...

இனிமே சொல்லப் போறதையும் கவனமாக் கேளு. அப்பல்லாம் படிப்பும் இல்லே. பள்ளிக்கூடங்களும் இல்லே. அதுக பாட்டுக்கு விளையாடிக்கிட்டுத் திரியுங்க. பொண்ணு வளர்ந்து வயசுக்கு வந்துட்டான்னு வையி. அன்னிக்கி ராத்திரியே மாப்பிள்ளைப் பையனைக் கூட்டி வந்து சாந்தி முகூர்த்தம்னு சொல்லி முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணிருவாங்க. அறைக்குள்ளே தள்ளிக் கதவைப் பூட்டிருவாங்க. குழந்தைத் திருமணத்தைத் தடை செய்த பிறகுதான் அது சன்னஞ் சன்னமா குறைஞ்சுது. இப்பவும் தெரிஞ்சும் தெரியாமலும் நடக்குது. மைனர் பொண்ணுனு வெளியிலே தெரிஞ்சா அதிகாரிக வருவாங்க. போலீஸ் வரும். கல்யாணம் நின்னு போகும்...

பெத்தவங்க ஒத்திருந்துதானே நடத்துறாங்க?

நீ பேப்பர் படிக்கிறதில்லே. நம்ம பொண்ணு படிக்கிற பள்ளிக்கூடத்துலேயே போன மாசம் நடந்திருக்கு. அந்த டீச்சர் சொன்னாங்க. 9ஆம் வகுப்புப் படிச்சிக்கிட்டிருந்த பிள்ளைய 40 வயசு மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்க ரகசியமா வேலை நடந்திருக்கு. விசயம் கலெக்டர் வரைக்குப் போயி கல்யாணம் நின்னுபோச்சு. கல்யாணம் நின்னுபோனா பரவாயில்லே. படிப்பு நின்னு போச்சேங்கிற ஏக்கத்துல அந்தப் பொண்ணு கிணத்துல குதிச்சிருக்கு. இப்போ அந்தப் பொண்ணு ஆஸ்பத்திரியில...

இப்படியும் நடக்குமா? என்ன இருந்தாலும் பழகிப்போனத, பழைய வழக்கத்தை எப்படிங்க மறக்கிறது? தாய்மாமன், உறவு, உரிமைன்னு சொல்லி கூடப் பிறந்தவன் வந்து நின்னா யாருங்க பதில் சொல்றது? சொந்தம் விட்டுப் போயிறக் கூடாதுல்ல

அத என்கிட்ட விடு. நான் பக்குவமாச் சொல்லி மைத்துனருக்குப் புரிய வைக்கிறேன். புருசன் செத்துப்போனா கூடவே பெண்டாட்டியையும் சேர்த்து எரிச்சுருவாங்க. உயிரோட. இப்ப முடியுமா? அப்பன் வெட்டுன கிணறுங்கிறதுக்காக உப்புத் தண்ணியக் குடிக்க முடியுமானு பெரியார் கேட்டாருன்னு ஒரு போடு போட்டா அடங்கிப் போவாரு. சொந்தம் விட்டுப் போகவும் கூடாது. கெட்டுப்போகவும் கூடாது. அதுக்குப் பெண்ணோட கல்வியும், சுதந்திரமும் அவசியம்.

உங்க பாடு என் அண்ணன் பாடு என்று அவள் சொல்லிமுடிக்கும்போது எதிர்பாராத ஒன்று நடந்தது. அறைக்கதவு திறந்தது. தூங்கிக் கொண்டிருந்த பொன்னி வெளியே வந்தாள். நீங்க பேசிக்கிட்டிருந்ததெல்லாம் என் காதுலேயும் விழுந்துச்சு. விடிஞ்சதும் நான் பள்ளிக்கூடம் போயாகணும் என்றாள் அழுத்தமாக.

நிச்சயம் நீ படிக்கத்தான் போறே. அந்தப் பொறுப்பு எங்களுடையது என்றான் அழகய்யா அன்பொழுக.

நாளைக்கே போகணும்...

திங்கக் கிழமை போலாம்மா. ஏன்னா நாளைக்கு ஞாயித்துக் கிழமை என்று குடும்பத் தலைவன் சொன்னதும் எழுந்த குபீர் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் போர்க்குற்றம்: சுதந்திரமான விசாரணை, தொடர் நடவடிக்கை தேவை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;

இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து...


சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.

மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து...

இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

தமிழ் ஓவியா said...

தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்


தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)

தமிழ் ஓவியா said...

இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.

அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

தமிழ் ஓவியா said...

நாத்திக அறிவியலாளர் - பால் நர்ஸ்

- நீட்சே

இங்கிலாந்து நாட்டு மரபணுயியலாளரும், செல்உயிரியலாளருமான சர் பால் மேக்சைம் நர்ஸ் (Sir Paul Maxime Nurse) என்ற அறிவியலாளர் 1949 ஜனவரி 25 ஆம் தேதியன்று பிறந்தவர். லேலேன்ட் எச். ஹார்ட்வெல் (Leland H. Hartwell) மற்றும் ஆர். திமோதி ஹன்டு (R. Timothy Hunt) ஆகியோருடன் இணைத்து உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2001ஆம் ஆண்டில் நர்ஸூக்கு வழங்கப்பட்டது. உடலின் செல் சுழற்சியில் செல்களைப் பகுத்துப் பெருக்கும் செயலைக் கட்டுப்படுத்தும் புரத மூலக் கூறுகளைக் கண்டு பிடித்ததற்காக இந்த நோபல் பரிசு இம்மூவருக்கும் வழங்கப்பட்டது.

மய்யக் கரு உள்ள செல்கள் பிரிந்து பெருக்கமடையும் நடைமுறையின் நிலைகள் (G1-Growth) வளர்ச்சி, (S- synthesis) கூட்டிணைப்பு, (G2- growth) வளர்ச்சி, (M- mitosis) பிரிந்து பெருகுதல் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் Cyclin மற்றும் cyclin dependent kinase என்ற இரண்டு புரதங்கள் இருப்பதை இவர்கள் மூவரும் கண்டுபிடித்தனர். இந்த புரதங்கள் சோதனைப்புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணம் ஒரு செல் சரியாகப் பிரிகிறதா என்பதை அவை சோதனை செய்து சரிபார்க்கின்றன. அந்த செல் சரியாகப் பிரியவில்லை என்றால் அதனைச் சரி செய்ய மற்ற புரதங்கள் முயல்கின்றன. அவற்றின் முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால் சரியாகப் பிரியாத அந்த செல் அழிக்கப்பட்டு விடுகிறது. ஒரு செல் சரியாகப் பிரியாமலும், அதே நேரத்தில் அழிக்கப்படாமலும் இருக்குமானால் புற்று நோயையும் மற்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்த அதனால் இயலும்.

ஈஸ்டில் ஆராய்ச்சி செய்த நர்ஸ் cdc2 என்ற மரபணுவை அடையாளம் கண்டார். செல்களின் நிலை மாற்றத்தில் G1 நிலையில் இருந்து S நிலைக்கு மாற்றம் பெறுவதை இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. செல் பிரியும்போது, மரபணுப் பெருக்கம், G2 வளர்ச்சி மற்றும் M பிரிந்து பெருகும் நிலை மாற்றத்துக்கான தயாரிப்பின்போது செல் வளர்ச்சி அடைகிறது. இதனை ஒத்த மரபணுவான CDK1 மனித உடல்களில் இருப்பதாகவும் நர்ஸ் கண்டுபிடித்தார். இத்தகைய மரபணுக்கள் பாஸ்பேட் குழுக்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் இந்த cyclin dependent kinase செயல்படவைக்கச் செய்யவும், செயல்பட விடாமல் நிறுத்தவும் செய்கின்றன.

நர்ஸ் தற்போது ராயல் சொசைட்டியின் தலைவராகவும், பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடூட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இயக்குநராகவும் இருக்கிறார். பொது நிகழ்ச்சிகளின் போது அறிவியலைப் பற்றி அறிவியலாளர்கள் பேச வேண்டும் என்று கூறும் இவர், ஜோதிடம், வாஸ்து போன்ற போலி அறிவியல் கோட்பாடுகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து அறிவியலாளர்கள் சவால் விட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

தமிழ் ஓவியா said...

ஆல்பர்ட்டன் லியோன் பூங்கா பள்ளியிலும், பின்னர் மாணவர்களுக்கான ஹார்ரோ கவுன்டி பள்ளியிலும் நர்ஸ் கல்வி பயின்றார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், கிழக்கு ஆங்கிலா பல்கலைக்கழகத்தின் உயிரியல் கல்வி நிறுவனத்தில் 1973இல் தனது ஆராய்ச்சி முனைவர் PhD பட்டம் பெற்றார். 1973 முதல் 1979 வரை அடுத்த 6 ஆண்டு காலமும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் முர்டோத் மிச்சிசன் (Laboratory of Murdoch Mitchison) சோதனைச் சாலையில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகான தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

ஈஸ்டில் இருக்கும் cdc2 என்ற மரபணுவை 1976 இல் நர்ஸ் அடையாளம் கண்டார். G1 நிலையிலிருந்து S நிலைக்கும், G2 நிலையிலிருந்து M நிலைக்கும் மாறும் செல் சுழற்சி நடைமுறையை இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. மனித உடலில் இருக்கும் Cdk1 என்ற ஒத்திசைவான (homologous) மரபணுவை 1987இல் நர்ஸ் அடையாளம் கண்டார். இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1984இல் நர்ஸ் பணியில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜி துறையின் இருக்கையை 1988இல் அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் 1993இல் ஆராய்ச்சி இயக்குநர் பணிக்கு பழைய புற்று நோய் ஆய்வு நிறுவனத்துக்கே அவர் திரும்பினார். 1996 இல் அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் என்ற நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டார்.

2002இல் இந்நிறுவனத்தின் பெயர் இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு நிறுவனம் என்று மாற்றம் பெற்றது. 2003இல் நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் தலைவராக ஆன இவர் தனது செல் சுழற்சி ஆய்வினைத் தொடர்ந்து செய்து வந்தார். இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மய்யத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலராக நர்ஸ் 2010 ஜூலை 15 அன்று அறிவிக்கப்பட்டார். மார்டின் ரீசுக்குப் பிறகு 2010இல் ராயல் சொசைட்டியின் தலைவர் பொறுப்புக்கு நர்ஸ் வந்தார்.

இயற்கைத் தேர்வு, மனிதக் கருவில் இருந்து எடுத்து மேற்கொள்ளப்படும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மனிதத் தோற்ற வளர்ச்சி பருவமாற்றம் ஆகியவைகளைப் பள்ளிகளில் போதிப்பதை எதிர்த்து வந்த, அமெரிக்க அதிபர் தேர்தல் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரை நர்ஸ் கண்டித்து விமர்சித்தார். உண்மை நிலையையும், தங்கள் கருத்துகளையும் முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக அறிவியலாளர்கள் மீதும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் இவ்வாறு நடப்பதைக் கண்டு தான் பேரதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.

கோட்பாட்டை விட்டுவிட்டு, வெற்றுக் கூச்சல் மூலம் அறிவியல் விவாதத்தை அரசியல் விவாதம் போலக் கருதி மேற்கொள்வது முதல் பிரச்சினை; பள்ளிகளில் அறிவியல் கற்பிக்கும் நிலை அடுத்த பிரச்சினை. இங்கிலாந்து நாட்டுப் பள்ளிகளில், குறிப்பாக மதப் பள்ளிகளில் அறிவியல் பற்றி எவ்வாறு விவாதிப்பது என்பது கற்பிக்கப்படுவதில்லை என்று அவர் கூறுகிறார்.

ஆதாரங்கள், சோதனைகள், அணுகுமுறையில் நிலைத்தன்மை, கோட்பாடுகளைப் பற்றி அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் தருவதால், நம்பத்தகுந்த முறையில் அறிவை உருவாக்க இயன்றது அறிவியல் நடைமுறை மட்டுமே என்பதை நாம் வலியுறுத்தவேண்டும் என்று அவர் எழுதுகிறார்.

குறுகிய மனப்பான்மை, மூடநம்பிக்கை, போலி அறிவியல்கள் ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டும் பொறுப்பும் கடமையும் அறிவியல் தலைவர்களுக்கு உள்ளன என்று நர்ஸ் கூறுகிறார். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் மடமையை வெளிப்படுத்தி எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். தனது தன்வரலாற்றில் நர்ஸ் கூறுகிறார்: பல ஆண்டு காலத்தில் சிறிது சிறிதாக மதநம்பிக்கையிலிருந்து விடுபட்டு வந்துவிட்ட நான் இன்று ஒரு நாத்திகனாக, மிகச் சரியாகக் கூறுவதானால், கடவுள் கருத்து மறுப்பாளனாக இருக்கிறேன்.

நோபல் பரிசு மட்டுமன்றி நர்ஸ் பல்வேறுபட்ட விருதுகளையும், கவுரவத்தையும் பெற்றவர் ஆவார். 1998 இல் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கு இவர் ஆல்பர்ட் லாஸ்கர் விருதும், 1999 இல் நைட் பட்டமும், 2002 இல் பிரஞ்சு லெஜியன் ஆஃப் ஹானர் பட்டமும், 2005 இல் கோப்லி பதக்கமும் இவருக்கு அளிக்கப்பட்டன. அமெரிக்க கலை மற்றும் கல்வி அகடமியின் அயல்நாட்டு மதிப்புறு உறுப்பினர் என்ற உயரிய மரியாதை 2006 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

அறிவியல், பொறியியல் பிரச்சார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். அவரது அடிப்படை ஆராய்ச்சிக்காக ஹோப் பண்ட்ஸ் அவார்ட் ஆஃப் எக்சலன்ஸ் 2007 இல் இவருக்கு வழங்கப்பட்டது. உலக கலாச்சார கவுன்சில் இவருக்கு 2013 ஆம் ஆண்டில் அறிவியலுக்கான ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் உலக விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இவர் பல பல்கலைக்கழகங்களிலிருந்தும் பல மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்


நெடிய இருள் கப்பியறை
முகங்கள்தான்
நூற்றாண்டுகளில்
எங்களுடையது.

எச்சில்துப்பிக் கொள்ள
மொந்தையும்
தெருப்பெருக்கி தீட்டுக்கழிக்க
கந்தையும் தவிர
எம்முண்ணோருக்கு
மறுக்கப்பட்டன உடைகள்.

மாராப்பு பறிக்கப்பட்ட
மார்புகளோடு
அலைந்து எம்பெண்களின்
யோனிகளைத்தவிர
மற்றெல்லாமே தீட்டாய்தெரிந்தன
நூற்றாண்டுகளுக்கு.

செவிகளில் ஊற்றப்பட்டது
உறைந்த ஈயத்தை எடுத்து
ஆயதம் தயாரிக்கத் தெரியாத எம்மவர்க்கு
நூற்றாண்டுகளில் கடைசி நிமிடங்களில் கூட
சரஸ்வதி பாய்விரிக்கவில்லை.

ஊர்களுக்கு ஓர வெளியில்
மாடறுத்து பறைசெய்த எம்மவர்
கத்திகளுக்கு கழுத்தறுக்கத் தெரியாதபோது
நூற்றாண்டுகள் தோறும்
கட்டுகளே கைகள்.

உழுதலுக்கு வந்தபோது
ஆண்டைகளால் விசறியடிக்கப்பட்ட
பருக்கைக் கூலிகளைப் பொறுக்க
குனிந்து
மோத தெரியாத எம்மனோர் தலைகளில்
நூற்றாண்டுகள் பாரங்கள் கவிழ்ந்தன
எழ முடியாமல்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில்
சில திமிறல்கள் ஒளிக்கீறல்களாக
உருவெடுத்தப்போது-அதையும்
அபகரித்தனர் அவர்கள்

சேரிகள் காலனிகளாயின
எம்மக்கள் அரிஜனங்களாக்கப்பட்டோர்கள்.

சைவம் நந்தனையும்
வைணவம் சம்பூகனையும்

ஆரியமும்
காந்தியமும்
எம்மையும் எடுத்து தின்று செரித்து
சாம்பலாக்கின.

முந்தின நூற்றாண்டுகளில்
ஆரியப் பார்ப்பான
இந்துத்துவ நெருப்பில்
தன்விலாவினை எரித்து
கிடைத்த
வெம்மையில்
மனிதம் செய்தார்கள்
எமது
அண்ணல் அம்பேத்காரும்
அய்யா தந்தைபெரியாரும்.

முடியவில்லை ஆனாலும்
நூற்றாண்டுகளின் சதி.

வெண்மணி
விழுப்புரம்
முதுகளத்தூர்
கொடியான்குளம்
மேலவளவு...........
...............
..........
தாமிரபரணி
சிதம்பரம்

...............
..........தரும்புரி......
......

இன்னும்....
இருபதாம் நூற்றாண்டும்
இணையற்றதே எம்மக்களின்
உயிர்குடிப்பதில்.

எம்முகங்களின் மீது படிவுற்ற
ஒவ்வோரு நூற்றாண்டின்
இருள் படிமங்களையும்

எமது தமிழ்தேசத்தந்தை
பெரியாரின்
கொள்கை ஏற்பதோலுடும்..
மாமேதை அண்ணலின்
அறிவொளியோடும்

அறுத்தெடுத்து
அறுத்தெடுத்து
நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்
வரும் ஆண்டிலிருந்து....!!!!

- செந்தில்நாதன்

தமிழ் ஓவியா said...

புதுமை இலக்கியப் பூங்கா வைரம்


- நாஞ்சில் கி.மனோகரன்

அடங்காப்பிடாரி! போகிற போக்கைப் பார்! கொஞ்சமாவது மானம் ஈனமிருக்கிறதா? தறுதலை!

பேச்சைப் பார்!... குறும்புக்காரி! எதற்கெடுத்தாலும் வாதிடுகிறாள்! அடக்கமற்றவள்! துடுக்குக்காரி!

நடக்கிற நடையைப் பார்! அடேயப்பா! தலை வானத்தையே இடித்துத் தூளாக்கிவிடும் போலிருக்கே! பெண்ணுக்கேற்ற பண்பே அற்ற பேய்!

சேரிக்குப் போகிறாள்; சாக்கடையிலே புரளும் குழந்தைகளைத் தோளிலே தூக்கிப் போட்டுக் கொள்ளுகிறாள்; அங்கேயேகூடச் சாப்பிடுகிறாள்! செச்சே! சமூகத்திற்கே லாயக்கற்றவள்!

படித்ததனாலே வந்த கேடு இது! அவளைச் சொல்ல என்ன இருக்கிறது! காதகி... கல்லூரியிலே படித்த தோஷம்! தடித்த தோல்! உள்ளமோ கடுகத்தனை!

ஊருக்கு உபதேசம் செய்ய வந்து விட்டாளாம் ஊதாரி!... இவளை முதலிலே திருத்திக் கொள்ளட்டும்! நாலு பெண்களைப்போல மஞ்சள் குளித்து, குங்குமம் தொட்டு, அடங்கி ஒடுங்கி, வீட்டிலே அடைபட்டுக் கிடக்கக்கூடாதோ? பெண்கள் வீட்டிலே இருப்பதுவரைதான் சிறப்பு! வெளியே வந்துவிட்டாலே போச்சு; அத்தனையும் போச்சு!

சடையைப் பார், சதிராடுகிறது! நடையைப் பார், குதிரை மாதிரி! உடையைப் பார், உள்ளெல்லாம் தெரிகிறது! என்ன கொடுமை அய்யா இது! இவளுக்கு நல்ல படிப்பினைக் கொடுக்க வேண்டும் _ இல்லாவிட்டால் இந்த ஊர் மானமே காற்றிலே பறந்துவிடும்!

- மேலே பொறித்திருப்பவைகள், தோழியர் சந்திராவுக்குச் சமுதாயத்தின் ஒரு பகுதி வழங்கிய வாழ்த்துரை!

அவள் படிப்பை முடித்துவிட்டுப் புரையோடிப்போன சமூகத்தைத் திருத்திச் செப்பனிடத் தன்னை ஒப்புவித்தாள்.

சேரி _ நகரத்தைக் களங்கப்படுத்தும் அந்தப் பகுதி _ வாழ்வின் ஆதாரத்திலே பற்றிய புற்றுநோய் எனத் துணிந்தாள்!

அழுக்கு _ அதன் அபாயத்தை எடுத்துச் சொல்லி, புற அழுக்கைவிட மன அழுக்கு உருவாக்கும் ஆபத்தை விளக்கிக் கூறுவாள்.

தமிழ் ஓவியா said...

முடைநாற்றச் சுடுகாடாக உருமாறிவிட்ட சமுதாயத்திற்கு உணர்ச்சிமிக்க பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறித் திருத்துவாள். அம்மை நோயால் அவதிப்படும்போது, மாரியம்மனை அழைப்பதை நிறுத்தினாள்; மருத்துவர் வரவழைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாள்.

காலணாவுக்கும் காளிக்கும் இருந்த நேரடித் தொடர்பைத் துண்டித்தாள்.

பரிகாரத்திற்கு காளிகோயில் பக்கம் திரும்பிய கண்களை ஆஸ்பத்திரிப் பக்கம் திருப்பினாள்.

இழிந்தவர்கள் நாம் எனும் மனப்பான்மையைச் சிறுகச் சிறுக அந்தப் பகுதியிலே மாற்றினாள்.

சந்திரா, இப்போது சேரிவாழ் மக்களின் இதய பீடத்தில் இடம் பிடித்துக் கொண்டவள்!

அந்தப் பகுதியைப் பாழாக்கி வந்த மதுவரக்கனை அறவே விரட்டினாள். ஒரு நாள் மக்கள் அனைவரையும் திரட்டி, மதுவரக்கனைப்போல் பிரம்மாண்டமான உருவம் ஒன்றைச் செய்து, நடுத்தெருவிலே நிறுத்தி வைத்து, முதன்முதலில் தீயிட்டாள். அந்தச் சேரியின் ஒவ்வொரு மனிதரும் அதற்கு எண்ணெய் வார்த்தனர்!

சந்திராவின் சேவை சர்க்காரின் சிரமத்தைக் குறைத்தது. ஆட்சியாளர்கள் பாராட்டினர்; அதிகாரிகள் வரவேற்றனர். சந்திரா பாராட்டைப் பெற்றாள்; பதக்கம்கூட பெற்றாள்.

அந்தச் சேரியிலே அவள் முயற்சியால் ஒரு பாடசாலை, வாசகசாலை, இரவுப் பள்ளிக்கூடம் _ இவை தோன்றின.

அவள் பெற்ற பதக்கம்கூட அதோ அந்த வாசகசாலையிலே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஊரிலே அவளைத் தெரியாதவர்களில்லை. பல நிகழ்ச்சிகளிலே அவள் பங்கு பெறுகிறாள். அரசாங்கக் கமிட்டியிலே இடம் பெறுகிறாள். பத்திரிகையாளர்கள் கட்டுரைகள் கேட்கின்றனர். அனுபவத்தைக் கூறக் கோருகிறார்கள். புகைப்படங்கள் தின, மாத இதழ்களிலே இடம் பெறுகின்றன. ஆசிரியர் _ சந்திரா உரையாடல், கற்பனை உரையாடல் _ இவை போன்ற சுவையூட்டும் நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன.

சந்திரா சமூக சேவகி _ நாடறிந்த நங்கை இப்போது. அவள் பட்டதாரி! வயதோ இருபத்தி நான்கு; ஆனால் கன்னிப்பெண்!

தமிழ் ஓவியா said...

பருவத் துடிப்பிற்கும், கடமை உணர்ச்சிகளுக்கும் இடையே அவளது வாழ்வு இழைந்தோடிக் கொண்டிருக்கிறது.

நேரத்தில் பெரும் பகுதியை சமூகத்தின் சேவைகளுக்கே சொந்தமாக்கிய சந்திராவுக்கு தன்னைப் பற்றிய நினைப்பு எப்போதாவது வரும்!

மண வாழ்வு! மனப்பூர்வமாக அவள் மறுக்கத் தயாரில்லை; வேண்டும்தான்! என்ன காரணத்தாலோ அதை ஒரு பிரச்சினையாக்க அவள் விரும்பவில்லை.

ஆனால், மணவாழ்வு சமூக சேவையிலே ஈடுபட்டிருக்கும் அவள் உறுதியைத் தகர்த்துவிடும் என்றால் மணத்தைவிட அவளுக்கு மரணம்மேல் என்று கருதுகிறாள்.

சந்தர்ப்பங்கள் சில வேளைகளில் சபலங்களைச் சந்திக்கழைத்துவிடும். ஆரம்பத்திலே எழும் பலகீனங்கள் சந்தித்த சிறிது நேரத்திலே பறந்து விடும்! அவள் இதயம் வைரமாகும் _ வார்த்தைகள் வீசிடும் ஒளிக் கற்றைகளாகும்.
என்றாலும் அவள் பெண்!

சமூக சேவகி சந்திரா _ துணிச்சலும் கொள்கைத் திட்பமும் கொண்டவள் _ உண்மை.

ஆனால் வெறும் சந்திரா _ உணர்ச்சிப் பின்னல்களால் உருவான ஆடை!

சமூக சேவகி சந்திராவும், வெறும் சந்திராவும் பலமுறை மோதியிருக்கிறார்கள்!

வெறும் சந்திரா _ உணர்ச்சிகளும், வேட்கைகளும், பருவத்தாகமும், தசை உணர்வும் கொண்டவள் _ அவள் மணம் செய்து கொள்ளட்டும்.

சமூக சேவகி சந்திரா _ சேவையிலே, கடமையிலே களிப்பைக் காணட்டும்!

* * *

அன்று அந்த ஊரிலே ஒரு பெரிய விழா! பலதுறைப்பட்ட தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். அங்கே சந்திரா பேசச் செல்லுகிறாள்! மகத்தான அந்தக் கூட்டம் மாநாட்டை நினைவுபடுத்தும், கூடிக்கிடந்த மக்களோ ஒன்றுசேர முடியாத தலைவர்களை ஒருங்கு சேர்த்த இசைவாணனுக்கு தங்கள் நன்றியை விழிகளாலே மலர்ந்த இதயங்களாலே தெரிவிக்கின்றனர்.

அந்தக் கூட்டத்தின் நோக்கம், உலகைச் சுற்றி இசையாலே உலகத்தைக் கவர்ந்த இசைவாணனுக்குப் பாராட்டுதல் தெரிவிப்பது!

இசைவாணன் கட்சி வேற்றுமைகளை _ ஜாதி, நிற பேதங்களைக் கடந்தவன்.

அத்தனைக் கட்சிக்காரர்களுக்கும் அவன் பொதுக் கலைஞன்! எனவே அவன் நாட்டின் பொதுச் சொத்து!

பேசிய தலைவர்கள் எல்லாம் இசைவாணனை எவரஸ்ட் சிகரத்தில் கொண்டு நிறுத்தினர்!

இசைவாணன் பாராட்டு விழாவில் பங்கு பெற்றிடும் நல்வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி! விழாவிலே எல்லோரும் பாராட்டினர்! நானும் பாராட்டுகிறேன்! அதோடு வேலை முடிந்துவிடவில்லை _ இந்த விழாவிலே ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முரண்பட்ட கட்சித் தலைவர்கள் இங்கே இணைந்தனர்! கட்சி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட பெரும்பகுதி ஒன்று இருக்கிறதென்ற உண்மையை இதன்மூலம் நாடறிந்து கொள்வதற்கு இந்த விழா பயன்படட்டும்! அந்தப் பகுதியிலே அனைவரும் கூடிட முடியும் _ விகாரமின்றி விவாதிக்க முடியும் - பல கேள்விகளுக்கு விடை காண முடியும்.

இங்கே கூடியுள்ள கட்சித் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் அந்தப் பகுதிக்கு விரையுங்கள் என்று அன்பழைப்பு விடுவதுதான் இந்த விழாவிலே என் நோக்கமாகும்!

தமிழ் ஓவியா said...


சந்திரா பேசியதும் விண்ணதிரும் கையொலிகள் வானைப் பிளந்தன _ தோழியர் சந்திராவின் கருத்துக்கு இத்தனை வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. யாரும் தொடாத கருத்தைத் தொட்டாள்! தொட்ட கருத்துகள் கூடிய மக்களின் உள்ளங்களிலே பட்டன; படிந்தன! பரவசமடைந்து விட்டவர்கள் பாராட்டினர்; கையொலி செய்தனர்!

சந்திரா, தன்னை அறியாமலே வளருகிறாள்! மாநாட்டிலே அவள் பேசிய பேச்சுகள், அடுத்த நாள் தின இதழ்களிலே முதலிடம் பெற்றன! அவளது எத்தனையோ வகையான புகைப்படங்கள் பத்திரிகைகளுக்கு சிறப்பூட்டுகின்றன!

* * *
காலை எட்டு மணி! வீட்டிலே பல குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தந்து கொண்டிருந்தாள் சந்திரா! வெளியிலே யாரோ நின்று அவளை அழைத்தார் _ மாநாட்டிலே பங்கேற்ற ஒருவர், அவளைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்தார். வந்தவரை வரவேற்றாள் _ உட்கார வைத்துத் தேநீர் அளித்தாள். குழந்தைகள் விடை பெற்றுச் சென்றன!

எனது பாராட்டுதல்களை நேரிலே தெரிவித்துச் செல்லுவதற்காக வந்தேன். பெற்றுக் கொள்ளுங்கள்! _ வந்தவர் சிரித்தார்!

மெத்த மகிழ்ச்சி! அப்படி நானொன்றும் பிரமாதமாகப் பேசிவிடவில்லையே! _ சந்திரா இயற்கை உணர்ச்சிக்கு உருவம் கொடுத்தாள்!

தாங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்...? _ உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், வந்தவரிடம் பொங்கியெழுந்தது!

பட்டத்திற்கும், பண்பிற்கும் ரொம்பத் தொடர்புண்டு என்பதிலே நம்பிக்கையற்றவள் நான்!

அப்படி முடிவு கட்டிவிடலாமா? நான் எம்.ஏ. படித்திருக்கிறேன். நீங்கள்?....

தமிழ் ஓவியா said...

நான் பி.ஏ. படித்தவள்! அதை ஒரு பெரும் சாதனையாக நான் நம்புவதில்லை. பட்டம் சமூக அந்தஸ்தை உருவாக்கப் பயன்படும் ஒரு கருவியாக அமைவதை நான் விரும்புவதில்லை _ படித்த படிப்பும், பெற்ற பட்டமும் நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற கருத்துள்ளவள் நான்!

ஏன்; நானும்கூட அப்படித்தான்! அரசியல் கட்சியிலே பணியாற்றுகிறேன்.... நாட்டுக்காகத் தொண்டாற்றுகிறேன்... ம்... உங்களுக்குத் திருமணமாயிற்றா? _ வந்தவர் சுமந்து வந்த பாரத்தைக் கீழே இறக்கி வைத்தார்! சந்திராவின் இதயத்திலே பெரியதோர் பாரம் ஏறிற்று! நடுங்கி விட்டாள்!

இல்லை _ சந்திரா பதில் கூறினாள்!

உத்தேச முண்டா? _ வந்தவர் பல்லைக் காட்டினார்.

இல்லை என்று சொல்லுவதற்கில்லை! _ சந்திராவின் முகம் நாணத்தால் சிவப்பேறியது!

நான்கூடத் திருமணமாகாதவன்தான்! _ வந்தவர் தன்னிலையைத் தெளிவுபடுத்திப் புதுநிலையை உருவாக்க ஆவல் காட்டினார்!

சந்திரா பதில் பேசவில்லை! தலை நிமிர்ந்து கருத்துகளைப் பேசும் அவள் இப்போது பெருவிரலை நோக்கிக் கவிழ்ந்திருந்தாள்! ஆசா பாசங்களுக்கு உட்பட்ட அந்தப் பெண் நால்வகைப் பண்புகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டாள்! பெண்மை, அவளிடம் ரகசியமாகப் பெருமை பேசுகிறது _ ஒரு பெரியதோர் நெருக்கடியில் சிக்கிவிட்ட உணர்ச்சியில் உட்கார்ந்திருக்கிறாள்!

ஆசைகாட்டி அவளை அழைக்கும் தாம்பத்திய உலகம் முன்னே நிற்கிறது!

தமிழ் ஓவியா said...

ஏன் பேசாமல் இருந்துவிட்டீர்கள்? _ வந்தவர் அமைதியை உடைத்தார்!

ஏறெடுத்துப் பார்த்தாள் _ ஏறு நடைக்காரனோ தோளுயர்த்தி நின்றான்!

விழிகள் சந்தித்தன!
என் பெயர் மோகன்!
என் பெயர் சந்திரா!

மோகன் சந்திராவின் பக்கம் நெருங்கிக் கரம் பற்றினான்; அவள் எட்டி நின்றாள்!

மோகன் _ பொது வாழ்வு பயங்கரமானது! ஊர்ந்தால் பறக்கிறதென்பார்கள்! பறந்தால் பாய்கிறதென்பார்கள்! இல்லாததை இருக்கிறதென்பார்கள்! எண்ணாததை நிலைநாட்டுவார்கள்! கற்பனைக் கட்டுக் கதையிலே இந்த நாடு ருசி கண்டிருக்கிறது! நாட்டின் அந்தப் பசிக்கு நாம் இரையாகக் கூடாது! அமைதியான என்னுடைய இதய நீரோடையில் கல்லெறிந்து விட்டீர்கள் _ தவறில்லை _ நான் உங்களை விரும்புகிறேன் _நீங்களும் என்னை விரும்புகிறீர்கள்!... இரண்டு பேரையும் தடைபடுத்த சக்திகள் ஏதும் இல்லை! இன்றைக்கென்றால் இன்றைக்கு! நாளையென்றால் நாளை _ மண மன்றம் நம்மை ஒன்று சேர்க்கட்டும்! இடையே இந்த இடைவெளி இருக்கட்டும்!

மோகன் கற்சிலைபோல் நின்று கொண்டிருந்தான்!

ஏன் அமைதியாகி விட்டீர்கள்? _ சந்திரா மோகனைக் கேட்டாள்! கேள்வியிலே குறும்பு குழைந்தது.

அமைதியா?.... _ பேச்சை முடிக்கவில்லை மோகன்.

புயலைக் கிளப்பி விட்டேனா?... _ சந்திரா முடித்தாள்.

நாளை சந்திக்கிறேன்....! _ மோகன் விடை பெற்றுத் திரும்பி விட்டான்.

* * *

தினந்தோறும் மோகன் வீட்டிற்கு வர ஆரம்பித்தான். பேசிக் கொண்டிருப்பான் _ எழுந்து போவான் _ சந்திராவுக்கு வேதனை அதிகரித்தது! முடிவற்ற நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன! முடிவோடு வருவான் என்று காத்திருந்த சந்திராவுக்கு ஏமாற்றம்! கேட்டுவிட அன்றைக்குத் தயாரானாள்!

மிஸ் சந்திரா! நீங்கள் பிருந்தாவனம் பார்த்திருக்கிறீர்களா? _ கேட்டுக் கொண்டே வந்தான் மோகன்!

இல்லை...! _ சந்திரனின் குரலிலே பசுமையில்லை.

உங்களை அழைத்துச் செல்லலாமென்றிருக்கிறேன் _ என்று மோகன் தன் ஆசையை வெளியிட்டான்!

நான் கன்னிப் பெண்!... கண்டவர்களோடு வெளியே செல்வதற்கில்லை!

நான் என்ன கண்டவனா? _ மோகன் கேட்டான்.

நீங்கள் என் கொண்டவரா? _ சந்திரா இடைமறித்தாள்.

கொண்டவன்தான் கூட்டிச் செல்ல முடியுமா? மோகன் இளித்தான்.

விபரீதமாகப் பேசுகிறீர்கள்! நான் மானத்தோடு வாழ விரும்புபவள்! அதற்காக சாகவும் துணிந்தவள்!

பொது வாழ்விலே மானம் மண்ணாங்கட்டி எல்லாம் எங்கே சந்திரா வாழுகிறது? _ கூறிக்கொண்டே அவள் கையை எட்டிப் பிடித்தான்!

சந்திரா அதிர்ந்து போனாள்! அவள் முகம் செவ்வானத்தைச் சவாலுக்கழைத்தது!
மிஸ்டர் மோகன்! மரியாதையாக வெளியே போங்கள்!

பொது வாழ்க்கையிலேயே மானத்திற்கிடமில்லை என்று உரைத்த முதல் மனிதரும் கடைசி மனிதரும் நீங்களாக இருக்கட்டும். மலர்ந்த என் ஆசை கருகிப் போய்விடட்டும். மோகன் பொது வாழ்வு வழுக்கு நிலம்! அதிலே நடைபோட ஒழுக்கமென்ற ஊன்றுகோல் தேவை. அதை வீசியெறியத் துணிகிறீர்கள்! அதனாலே ஆபத்து உங்களுக்கு மட்டுமல்ல; உங்களை நம்புபவர்களுக்கும்தான்!

பெண் இழுத்த இழுப்பிற்கு வளையும் ரப்பர் துண்டல்ல! வைரம்! அதிலே ஒளியும் உண்டு; உறுதியும் உண்டு! ஏன்; சாகடிக்கும் சக்தியுமுண்டு!... திருந்துங்கள்; உங்களின் தங்கை என்ற முறையில் நான் தரும் அறிவுரை இதுதான்! கண்ணீரைத் துடைக்க வேண்டிய நீங்கள், கண்ணீரைப் பெருக்க வழிகோல வேண்டாம். சென்று வாருங்கள்...!

_ மோகனின் கவிழ்ந்த தலை நிமிரவில்லை. வெளியேறி விட்டான்!

உலகம் பொல்லாதது! சந்திரா எப்படி சந்தேகத்திற்குரியவளானாள்? நற்பண்புமிக்கவளை _ பாதையிலே வழியூன்றி நடப்பவளை _ நடத்தை கெட்டவள் என்று சொல்ல எவனுக்குத் தைரியம் வரும்?

மோகன் இலட்சியவாதியாம்! அரசியல் கட்சியிலே அங்கமாம்! இல்லை... வெறும் குப்பைமேடு!

சந்திராவின் அறிவாற்றல் அவனை அவளிடமிழுத்தது! வந்தான்; வந்தவன் அவளைத் தடம்பெயர்க்க விழைந்தான். அவள் மணமாலை கேட்டாள் _ அவனோ பண்பிற்கு மரணவோலை நீட்டத் தயாரானான்! சந்திரா சமுதாயத்தின் புண்ணுக்கு மருந்து அளித்த புண்ணியவதி _ வெறுக்கப்படுகிறாள், பிற்போக்காளர்களால்! பாராட்டப்படுகிறாள் வளரும் உலகத்தால்!

பிற்போக்குலகம் அவளுக்கு வாழ்வளிக்கக் கூடாதென்கிறது! வளருமுலகமோ ஆசை காட்டுகிறது; ஆனால் வாழ்வளிக்க வரமாட்டேன் என்கிறது! என்ன நியாயம்! சந்திராவின் இதயம் வெந்து, நொந்தது.

சந்திரா _ இரண்டு உலகத்திற்கும் இடையே சிக்கி விட்ட புள்ளிமான்!

ஒரு உலகு அவளைத் துரத்துகிறது! இன்னொரு உலகு அவளைத் துதிக்கிறது!

ஆனால் இரண்டுலகும் அவளைக் கைகொடுத்துக் காக்க மறுக்கிறது!

சந்திரா சமூக சேவகி!.. இன்றைக்கு அவள் தொண்டைத் திருமணம் புரிந்து கொண்டாள்! பிற்போக்கு சமூகத்தின் கண்களுக்கு அவள் வாழாவெட்டி! ஆர்ப்பாட்டமாக, இலட்சியத்தை உதட்டளவில் பேசும் உலகத்திற்கோ அவள் வாழத் தெரியாதவள்! தூய்மையான சேவைகளின் உலகத்திற்கோ அவள் பெண் தெய்வம்!

நன்றி: முரசொலி பொங்கல் மலர்-1959

தமிழ் ஓவியா said...திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில் கி.மனோகரன் அவர்கள் தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர். மூன்று முறை தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் நான்குமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும் பணியாற்றியவர்

தமிழ் ஓவியா said...

வடவர்களின் தமிழின எதிர்ப்பின் தொடக்கம் எது?


- சரவணா இராஜேந்திரன்

இராஜீவ்காந்தி மரணம் தொடர்பான வழக்கு நிலவரங்களில் தமிழர்களுக்கு எதிராக வரிந்துகட்டி வடக்குத் தலைவர்கள் எல்லோரும் ஓரணியில் நிற்பது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை.

உண்மையில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட எதிர்ப்பு என்று கிளம்பி இருப்பவர்களும் கவனிக்க வேண்டிய ஒன்று.

1. தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள் _ஜவகர்லால் நேரு

2. ஆரிய திராவிடப் போராட்டமே ராம_-ராவண யுத்தம்- _ஹென்றி ஸ்மித்; ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது _-ரமேசு சந்திரதத்:

3. ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்- _பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை:

4. ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும் _-சி. ஜே. வர்க்கி:

தமிழ் ஓவியா said...

5. ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் _நூல்-: ஷோஷி சந்திரதத்:

6. திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்- _ சி.பி. காவெல்:

7. நாராயணன் என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது- _சந்திரசேகர பாவலர்: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனைக் கொன்றான் _ராவ்சாகிப் திமேசு: இராமாயணக் கதை மாந்தர்களில் திராவிட இனத்தின் தலைவனான இராவணனை திராவிடன் என்றும், குரங்குகள் என்றும் (குரங்கில் இருந்து மனிதர்கள் வந்ததைக் கருத்தில் கொண்டு மூத்தகுடி மக்களைக் குரங்காகக் காண்பித்து உள்ளார்கள். அவர்களுக்கு உள்ளாகவே தங்களுக்கு உதவுபவர்களை விபீடணன், சுக்ரீவன் என காண்பித்து கதையைத் திரித்து இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இதற்கு முக்கியக் காரணம், இந்தியா முழுவதும் ஆதிக்குடிகள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க கடுமையாகப் போராடிக்கொண்டு இருந்தனர். சிறுகச் சிறுக பிளவை உண்டு செய்து அதன் மூலம் ஒற்றுமையைச் சிதைத்து பிரிவினை வாதத்திற்கு வித்திட்டது பார்ப்பனியம். இராமாயணம் என்னும் மூலம் புகுத்தப்பட்ட பிரிவினை தான் சுமார் இரண்டாயிரம் நூற்றாண்டாக வடக்கு தெற்கு கலாச்சார பிரிவு மாத்திரமல்லாமல் இந்த மண்ணின் மூத்த குடிகள் மதிக்கவேண்டிய அல்ல என்ற ஒரு மனநிலைக்கு மாற்றிவிட்டனர். இதன் தொடர்ச்சி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் தெற்கின் மீதான விரோதப்பார்வை அதிகரித்தது. பார்ப்பனர்களால் முகலாயர் ஆட்சியின் இறுதிவரை தெற்கே மதரீதியாக பிளவினை ஏற்படுத்த முடியவில்லை. 1892 முதல் சுதந்திரம் அடையும் வரை மதக்கலவரம் வட இந்தியாவை நாசம் செய்ததை வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஆங்கிலேய ஆட்சியில் இராணுவச் சிப்பாயாகப் பணிபுரிந்த பக்ருதீன் என்பவர் பி.பி.சி தொலைக்காட்சிக்காக அளித்த பேட்டியில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் இந்து முஸ்லீம்களிடையே நடந்த கலவரத்தின் போது முஸ்லீம் தலையை வெட்டி வந்தால் ஒரு மூட்டை தானியம் தருவதாக அறிவித்திருந்ததையும், அதே நேரத்தில் ஒரு இந்துவைக் கொலை செய்தால் நிலம் தருவதாகவும் தண்டோரோ போட்ட கொடுமையை தன்னுடைய பேட்டியில் பதிந்திருந்தார்.

மதக்கலவரங்களும் வடக்கு அரசியலும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் ஆரம்பித்தது முதலே வடக்கில் மதக்கலவரங்களும் உருவாகிவிட்டது. இதற்கு இரண்டு உலகப்போரினால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக பிரிட்டீஸ் அரசு காலனி நாடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்தது. இந்தியாவும் சுதந்திரம் அடையும் என்ற நிலைக்கு வந்த பிறகு பார்ப்பனியம் மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவருவதற்கு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதற்காகவே மதக்கலவரங்களின் மூலம் சிறுபான்மையினரைப் பயமுறுத்தி சுதந்திரத்திற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் தென்னகம் இந்தப் போக்கிற்கு எதிராக மத நல்லிணக்கத்தைக் காத்து வந்தது. சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையின் காரணமாக அய்தராபாத் நிஜாம் தன்னுடைய ஆளுமைப் பகுதியை இந்திய அரசுடன் இணைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் சிப்பாய்க் கலகம் என்ற ஒன்றை மீண்டும் மீண்டும் கூறி தென்னகத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையே சண்டை மூட்டப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், தெற்கு மத நல்லிணக்க விவகாரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவதில்லை, உள் விவகாரங்களில் எந்தப் பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தே வந்தனர். இதற்கு உதாரணம் திருப்பரங்குன்றம் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றின் மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பிரபல இந்து தலங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காணப்பாடாத ஒன்றாகும்.
சைவ வைணவ வளர்ச்சிக்கு முன்பு தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். முக்கியமாக வேதகாலத்தில் பெண்கள் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. ஆனால் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாக்களை தெள்ளிய இலக்கிய நயத்துடன் பாடியுள்ளனர். அவ்வையார், காக்கைப்பாடினியார், நக்கண்ணையார், பாரி மகளிர், ஒக்கூர் மாசாத்தியர் போன்றோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும், தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர் முதல் தான் பெற்ற கல்வியறிவை தமிழுக்கு எதிராகப் பயன்படுத்திய கம்பர் வரை கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மீண்டும் கல்வியில் தொய்வு ஏற்பட்டது. இதற்குக் காரணம் வேத காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம சட்டமாகும். இதனால் தமிழகம் பல நூற்றாண்டுகளாக கல்வியறிவு பெறமுடியாமல் போய்விட்டது. 16-ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி மீண்டும் சாமானியர்களைச் சென்றடைந்தது. இதில் புனித சவேரியாரின் கல்விப்பணி நினைவுக்கூறத்தக்கதாகும். இதை மதமாற்றம் என்று கூறினாலும் மதம் பாராமல் கல்வி என்பது தென் இந்தியாவின் அனைத்துப் பகுதிக்கும் சென்றடைந்தது.

தமிழ் ஓவியா said...

கல்வி என்பது எந்த வகையிலும் சாமானியர்களைச் சென்றடையக்கூடாது என்ற நிலைப்பாட்டால்தான் பார்ப்பனியம் தன்னுடைய ஆளுமையைப் பல நூற்றாண்டுகளாக கையில் வைத்திருந்தது. இவ்வாறு வேதகாலத்தில் அடக்கி வைக்கப்பட்ட கல்வியறிவு மீண்டும் 17ஆம் நூற்றாண்டு முதல் சாமானியர்களுக்கு உரிமையானது. வடக்கில் சிலருக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இந்த அச்சம் ஒரு கடுமையான பகைமையாக கொண்டு வளர்ந்து கொண்டு வந்தது. இது சாமானியருக்குத் தெரியாத ஒன்றாக தெரியாவிட்டாலும், உள்ளூர எரிமலைக்குழம்பு போல் கொதித்துக்கொண்டிருந்தது. பெரியாரின் பார்வை மாற காரணமாக இருந்த பார்ப்பனியம்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் உள்ளூர இருந்த இந்தப் பகைமை உணர்வை மதப்பிரிவினை, சாதிப்பிரிவினைகள் மூலம் மக்கள் மத்தியில் எளிமையாக மறைத்து விட்டனர். வடக்கில் தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் உள்ளார்ந்த பகைமைப்போக்கை ஒருவர் மட்டும் ஊன்றிக் கவனித்து வந்தார். அவர் தான் தந்தை பெரியார் பார்ப்பனியம் இன்றும் பெரியார் கொள்கைகள் மீது கொண்டிருக்கும் கடுமையான பகைமைக்குக் காரணம், சுமார் ஆயிரத்தி அய்நூறு ஆண்டுகளாக வளர்த்து வந்த பிரிவினைப் பகைமையை பாதாளத்தில் தள்ளி மூடிவிட்டாரே! என்ற ஒரு வெறுப்புதான். பார்ப்பனியம் மீண்டும் பிரிவினைவாதப் பகைமையை வெளிக்கொண்டு வருவார்கள் என பெரியா சிந்தித்ததன் விளைவு. அவர் தனி நாட்டுத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் நிலைமை அந்த அளவு போகவில்லை என உறுதி செய்த பிறகு தன்னுடைய நிலைப்பாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காந்தி வர்ணாசிரம தர்மத்தை தன்னுடைய உடலில் ஒரு பாகமாக நினைத்தார். எந்த இராமாயணம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகக் கிளம்பியதோ அந்த இராமாயன நாயகனான இராமரின் பெயரால் இராம ராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சபதமெழுப்பி பார்ப்பனியத்திற்குக் குடைபிடித்தார். தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தமிழர் நலம் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆதரவு தரவில்லை. இதற்கு உதாரணமாக சேரன்மாதேவி குருகுலப்பிரச்சனையில் ஏதோ தனிப்பட்ட பகைமைக்காக ஒரு சிலர் உ.வே.சுவாமிநாத அய்யருக்கு எதிராக புறப்படுகின்றனர், என்றார்.

தமிழ் ஓவியா said...

மேலும் வைக்கம் போராட்டத்தின் போது அதை முற்றிலும் எதிர்த்தார். பிறகு அதன் தீவிரம் காரணமாக பிற மதத்தவர் அந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிக்கை விட்டார். ஆனால் தந்தை பெரியாரின் கடுமையான போராட்டத்தால் வெற்றிபெற்ற வைக்கம் போராட்டத்தைப் பற்றி தன்னுடைய நூலில் ஒரு இடத்தில் கூட பெரியார் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் தீண்டாமைக் கொள்கை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இப்போது நமது நோக்கம் எல்லாம் சுதந்திரம் அதன் பிறகு இது குறித்து பேசித் தீர்க்கலாம் என்ற பதிலே அவரிடமிருந்து கிடைத்தது. மேலும் சுதந்திரப் போராட்டத்தில் தெற்கின் பங்கை முற்றிலும் மறைத்து தெற்குத் தலைவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர் என்ற மாயையைப் பரப்பிவிட்டார். காந்தியாருக்கு முன்பே தமிழக மண்ணில் சுதந்திரப் போராளியாக மாறி பெரும் இன்னல்களை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் செய்த தியாகத்தை வரலாற்றில் இருந்தே மறைத்த பெருமை காந்தியாரையும் அவருக்குப் பின் நின்ற பார்ப்பனிய சிந்தனை கொண்டவர்களையும்தான் சாரும்.

தொட்டுத்தொடரும் வன்மப் பாரம்பரியம்

இன்றும் இவர்களின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பது இலங்கை விவகாரம், காவிரி, முல்லைபெரியார் போன்றவற்றிலும் தெரியவந்தது. இதுவரை ஆழமாக இலைமறை காய்போல் இருந்துவந்த பிரிவினை வாதம் இன்று மீண்டும் மெல்ல வெளியே வர ஆரம்பித்து விட்டது. இராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று விட்டார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நீதிமன்றமே தெரிவித்து இருந்தும் ஒட்டு மொத்த வடக்குத் தலைவர்களும் ஏதோ தமிழ்நாடே தீவிரவாத மக்கள் வாழும் நாடாக இந்தியா முழுவதும் ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லுவது பச்சை பாசிச சித்தாந்தமே ஆகும்.

வடநாட்டுக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, இந்துத்துவக் கும்பலான பாரதிய ஜனதாவும் 7 தமிழர்களின் தூக்குக்கு ஆதரவாக இருக்கிறது. மூவர் தூக்கை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, எழுவரை விடுதலை செய்த தமிழக அரசின் முடிவு பற்றியோ கருத்துக் கூறுவதை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தவிர்க்கிறார். அருண் ஜேட்லி எதிர்க்கிறார். ஆனால், தமிழ்நாட்டு பாஜக தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தலை மனதில் வைத்து ஆதரிக்கிறார்.

வடநாட்டுக் கட்சிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் அனைத்தையும் ஒருசேரக் கண்டிக்கிறார்கள். காந்தி கொலையாளிகளுக்குச் சிம்மாசனம் போட ஊதுகுழலாக இருக்கும் ஊடகங்கள், ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தூக்கில் போடத் தூண்டுகின்றன.

ஆக, வடவர்களின் எண்ணம் அன்றும் இன்றும் தமிழர்களுக்கு எதிராகவே இருப்பதற்கு ஆதிநாள் தொட்டு ஊட்டப்பட்ட வெறுப்புணர்வே ஆகும். இதற்கு அவர்களின் இராமாயணமும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நாம் ஒற்றுமையையே விரும்புகிறோம். பிரிவினை என்பது முடிந்துபோன ஒன்று ஆனால் ஒற்றுமையாக எங்களுக்கு அடிமையாக இருங்கள் என்று சிலர் தங்களின் நன்மைகளுக்காக கூறி இந்திய மக்களிடம் தமிழர்களைப்பற்றி ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்கள் என்றால் அதனை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தமிழகத்தில் உருவாகும் என்பது திண்ணம்.

தமிழ் ஓவியா said...

நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தல் - ஓர் அலசல்! தமிழர் தலைவர் தரும் எண் வகைக் கருத்தாக்கங்கள்


கழகமும் - இளைஞர்களும்

சமூக நீதியின் நிலை

பி.ஜே.பி.யும் - அ.தி.மு.க.வும்

அ.இ.அ.தி.மு.க.வின் சாதனை என்ன?

காங்கிரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குக்
காரணம் என்ன?

மூன்றாவது அணி என்னாயிற்று?

மக்களின் கடமை என்ன?

இவற்றை விளக்கி தஞ்சை - திராவிடர் கழகப் பொதுக் குழு, செய்தியாளர்கள் கூட்டம், பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எடுத்துக் கூறிய கருத்துக்களின் திரட்டு.


கழகமும் - இளைஞர்களும்

(1). நாம் அரசியல் கட்சி அல்ல - தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்ல என்றாலும் நாட்டை யார் ஆள வேண்டும்? யார் ஆளக் கூடாது என்று அடையாளம் காட்டுவதும் வழிகாட்டுவதும் திராவிடர் கழகத்தின் கடமையாகும். தந்தை பெரியார் காலந்தொட்டு இதுதான் நமது அணுகுமுறை.

ஆச்சாரியார் - ராஜாஜி சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார்; அரை நேரம் படித்தால் போதும். அரை நேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டார்.

அன்றைக்கு திராவிடர் கழகம் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்ததன் காரணமாக ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது.

அந்தக் குலக் கல்வித் திட்டம் மட்டும் செயல்பட்டு இருந்தால் நம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பார்பபனர் அல்லாதமக்கள் கல்வி வாய்ப்பைப் பெற்று இருக்க முடியுமா? நம் மக்களில் இந்த அளவு எண்ணிக்கையில் டாக்டர்களைப் பார்க்க முடியுமா? பொறியாளர்களைக் காண முடியுமா? நம் வழக்குரைஞர்கள் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறார்களே - பேராசிரியர்களாக வந்துள்ளார் களே. இதற்கெல்லாம் இங்குக் கூடியிருக்கின்றீர்களே, கருஞ் சட்டைத் தோழர்களே நீங்கள் தானே காரணம் - உங்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்த கழகத் தோழர்களின் தியாகம் தானே காரணம்? இல்லை என்று கூற முடியுமா?

தமிழ் ஓவியா said...


பொதுவாக கட்டடத்தின் அஸ்திவாரம் கண்ணுக்குத் தெரியாதுதான்; அது பூமிக்குள் புதைந்து கிடக்கும் - அத்தகையவர்கள் தான் நாம் - திராவிடர் கழகம்.

மண்டல் குழு பரிந்துரை வரை நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றால் காரணம் நமது கழகத் தோழர்களின் உழைப்பும், கட்டுப்பாடாகப் பணியாற்றும் அந்தப் பண்புதான்.

இன்றைய தலைமுறையினர்க்கு நம் இயக்கத்தின் தியாகங்கள் தெரிவில்லை. அதைக் குறையாகக் கூறுவதைவிட, அவர்களுக்கு நாம் அவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

நம் இயக்கத்தில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழிலாளர் அணிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இணையங்களில், கணினிகளில் நம் இளைஞர்கள் காலங்களைக் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். தாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்ததற்காகப் பாடுபட்ட தலைவர் யார்? கழகம் எது? தொண்டர்கள் யார்? என்பனவற்றையெல்லாம் இணையங்களின் மூலம் பரப்பிட வேண்டும். நம் இளைஞர்கள் மாணவர்கள் அதற்கான பயிற்சியைப் பெற வேண்டும். அப்படிப் பயிற்சி கொடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
பயிற்சி பெற்றவர்கள், ஏற்கெனவே அதனை அறிந்த நம் தோழர்கள் முகநூல், டுவிட்டர் போன்ற தளங்களில் நம் கொள்கைகள் செயல்களை தந்தைபெரியார் சிந்தனை களைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்ட மேடையில் தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார் (16.3.2014).

சமூக நீதியின் நிலை

(2). சமூக நீதி என்று வருகிறபோது இன்றைக்குத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலை என்ன?

மண்டல் குழுப் பரிந்துரையை சமூகநீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அறிவித்த காரணத்தால், அதுவரை வி.பி. சிங் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டனர்.

அந்த பி.ஜே.பி. தான் இப்பொழுது நம்மிடம் வாக்கு கேட்க வருகிறது. அந்தக் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவர் சஞ்சய்பஸ்வான் என்பவர் தெரிவித் துள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு பொருளாதார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க., ஆட்சிக்கு வந் தால் உரிய சட்டம் கொண்டு வரும் என்று குறிப் பிட்டுள்ளார்.

இதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டி லும் பொருளாதார அளவுகோலைத் திணிக்க பி.ஜே.பி. திட்டமிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதியில் கை வைக்கும் பி.ஜே.பி.யை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதில் அய்யமில்லை.

பி.ஜே.பி. மட்டுமல்ல; அ.தி.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் இடஒதுக்கீடு பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது?

சமூக நீதி என்பது சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் 20 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். அவர்கள் 1979இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைத் திணித்தபோது திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துப் போராடியது; அதன் காரணமாக அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர்.

தமிழ் ஓவியா said...

அதே அடிப்படையில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவைக் கொண்டு வந்துள்ள பி.ஜே.பி. அ.இ.அ.தி.மு.க.வை தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.
பிஜேபியும் - அஇஅதிமுகவும்

(3) இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸின் ஏடீம் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸின் பி டீம் அ.இ.அ.தி.மு.க. என்பதை மறந்து விடாதீர்கள்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்கூட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் எந்த ஓர் இடத்திலும் பிஜேபியைத் தாக்கிக் கூடப் பேச வேண்டாம்- விமர்சனமே செய்வதில்லையே - ஏன்? இதன் பின்னணி என்ன? தேர்தலுக்குப் பின் அவர்கள் இணைந்து கொள்வார்கள் - எப்பொழுதுமே பி.ஜே.பி.க்குள் ஒளிந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் ஹிடன்அஜண்டா உண்டு.

அ.இ.அ.தி.மு.க. சாதனை என்ன?

(4) அ.இ.அ.தி.மு.க.வின் சாதனை என்ன என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை; அவாள் வட்டாரத்தைச் சேர்ந்த கல்கியே வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால் புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரியாக இருக்கிறது; தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011இல் 677 பாலியல் வன்புணர்வுகள் (கற்பழிப்பு) பதிவு செய்யப்பட்டன. 2009இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள் 2013இல் பதினைந்தாக உயர்ந்து விட்டன... சரி... பொருளாதாரத்துக்கு வருவோம். விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்ட கமிஷன் கூறுகிறது. தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம்; இப்போது பதினான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பொருளாதாரம் உள்ளிட்ட பல துறை வளர்ச்சிகளின் குறியீடாக இருந்தும் (ஜி.டி.பி.) மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய அளவில் இருப்பதைவிட தமிழகத்தில் குறைவாக உள்ளது 16.3.2014 நாளிட்ட கல்கி ஏடே இதனைக் கூறுகிறதே கல்கி என்ன திராவிடர் கழக ஏடா? சட்டம் ஒழுங்கைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். நாளொரு மேனியும் கொலை - கொலை - கொலைதான். ஆளும் கட்சியின் பிரமுகர்களே படுகொலை செய்யப்படுகின்றனரே - அதுவும் பட்டப் பகலிலேயே!

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டுக் காவல்துறை என்பது திறமையற்ற ஒன்றா? ஸ்காட்லாந்து யாடுக்கு அடுத்தபடியாக திறமை வாய்ந்த ஒன்றாயிற்றே! இருந்தும் ஏன் சட்ட - ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது? இடையே ஏதோ பிரச்சினை இருக்கிறது - அதிகாரத் தலையீடு இருக்கிறது என்று தானே கருதப்பட வேண்டிய நிலை!

ஈழத் தமிழர்பற்றிய நிலை என்ன?

(5) இதைப்பற்றிகூட நாங்கள் சொல்லுவதைவிட அவர்களின் ஆனந்த விகடனில் இருந்தே எடுத்துக் காட்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் இந்த மாயக் கம்பளம், மயக்கம் தருகிறது. முதலில் தலை சுற்றவைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் எடுத் திருக்கும் உறுதி. 2008-09-ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகா சமுத்திரத்தை மூழ்கடித்தபோது, 'ஈழம் என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. 'ஈழத் தமிழர்கள் போரில் கொல் லப்படுகிறார்களே? என்று ஜெயலலிதா விடம் (18.1.2009) கேட்கப்பட்டபோது, 'அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல்ரீதியில் அலுவல்ரீதியில் சொல் லப்படுகிறது என்று வியாக்கியான வகுப்பு எடுத்தவர்.

'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள், வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத் திக் கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தபோது, தி.மு.க. அதைத் தட்டிக்கேட்கவில்லை என்று தேர்தல் அறிக்கையில் இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, 'இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவ தற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதல மைச்சரான கருணாநிதி புரிந்து கொள் ளாதது விந்தையாக உள்ளது (16.10.2008) என்றும் சொன்னவர். 'போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப் பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தார் என்று நாம் சொல்லுவதல்ல - அக்கிரகாரத்தின் (ஆனந்த விகடன் இதழ் 12.3.2014)

ஈழத் தமிழர் பிரச்சினையில்முதல்வர் ஜெயலலிதா அப்பொழுது நடந்து கொண்டார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இதே தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது யார்? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? சிறைக்குத்தான் போனார்கள்.

காங்கிரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குக் காரணம் என்ன?

(6) இன்றைக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் என்ன? ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்காத நிலை. தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாற்ற நிலை, விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியது தான் இந்த நிலைக்குக் காரணமாகும். தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள சுய மதிப்பீடு செய்து கொள்ள முன்வர வேண்டும் காங்கிரஸ்.

மூன்றாவது அணி என்னாயிற்று?

(7) மூன்றாவது அணி என்பது எப்பொழுதோ கருச்சிதைவாகி விட்டதை முதலிலேயே சொன்னவர்கள் நாம்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.பி. பரதன் இப்பொழுது கூறுகிறார்; தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணி என்று நாங்கள் சொன்னது - முயற்சி மிகப் பெரிய தவறு என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டாரே!

மக்களின் கடமையென்ன?

(8) மதவெறி, ஜாதி வெறி ஆட்சிகள் ஆட்சியில் வராமல் தடுக்கவும், சமூக நீதிக்கு எதிரான சக்திகளை வீழ்த்தவும்; தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்படவும், தி.மு.க. ஆட்சி செய்த திட்டங்கள் என்பதற்காக முடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் காழ்ப்புணர்வு அரசியலுக்கு முடிவு கட்டவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 2004இல் தமிழ்நாடு அரசு அளித்த அதே தீர்ப்பை 2014லும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/77082.html#ixzz2wGyWAf8o

தமிழ் ஓவியா said...

மக்களவைத் தேர்தலில் பல்வேறு கோணல்கள்!


மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் போட்டி?

வாரணாசி தொகுதி மக்கள் விரும்பினால், மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால் கூறியுள்ளார். பெங் களூரு சுதந்திர பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக என்னை போட்டியிட செய்ய ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. நானும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். ஆனால், அத்தொகுதி மக் களின் கருத்தை கேட்டுதான் இதில் இறுதி முடிவு எடுக்கப் படும். வரும் 23ஆம் தேதி வாரணாசியில் கட்சி சார்பில் மாநாடு நடத்தி, மக்களின் விருப்பத்தை கேட்டு தெரிந்து கொள்ள உள்ளேன். அவர்கள் என்ன கூறினாலும் அதை கேட்க தயாராக உள்ளேன்.

அரசியலில் ஆம் ஆத் மிக்கு பணமோ, அதிகாரமோ தேவையில்லை. நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ய வந்துள்ளோம். நரேந் திர மோடி வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்தும் அதாவது இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. அப்படி செய்தால் மோடி குஜராத்துக்கு மட்டுமே பொருத்தமானவர். ஒட்டு மொத்த தேசத்துக்கும் அவர் பொருந்தமாட்டார் என்றாகி விடும். நமக்கு தேவை தைரிய மான ஒரு பிரதமர்தான். இரு தொகுதிகளில் போட்டியிட் டால் மோடிக்கு தைரியம் இல்லை என்றாகிவிடும். இவ் வாறு கெஜ்ரிவால் பேசினார்.

மோடிக்கு வாரணாசி அரசியல் புதைக்குழி - லாலு

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியை தேர்ந் தெடுத்த நரேந்திர மோடிக்கு அது அரசியல் புதைக்குழி என்று லாலு பிரசாத் கிண்ட லாக கூறியுள்ளார்.

பாட்னாவில், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாரணாசியை பற்றி நரேந்திர மோடி என்ன நினைத்து இருக்கிறார்?. வாரணாசி மத சார்பற்ற தொகுதி. எனவே மோடி அங்கு தோல்வி அடைவது உறுதி. இதுதான் மோடிக்கு அரசியல் புதைக்குழி என்பது நன்கு தெரிகிறது. நரேந்திர மோடி எதற்காக அவரது சொந்த மாநிலத்தை விட்டு வாரணாசிக்கு ஓடிவந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்?. தேர்தலில் போட்டியிட பா.ஜ தலைவர்கள் தொகுதி கிடைக்காமல் சண்டையிட்டு வருவது மிகவும் நகைச் சுவையாக உள்ளது. போட்டி யிட வாய்ப்பு கிடைத்தவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த தொகுதியில் நிற்பது என்று அங்கும் இங்கும் தேடி ஓடுகின்றனர். இவர் களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...

குஷராத் கலவரம் மோடி குற்றமற்றவர் அல்ல: ராகுல்

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) கூறியது பற்றி கருத்து தெரிவித்த ராகுல், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை பற்றி நிபுணர்கள் பல கேள்விகளை எழுப்பியுள் ளனர். எஸ்.அய்.டியின் செயல் பாடு குறித்து பல குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை கீழ்நீதிமன்றங்கள் மட் டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. குஜராத் கலவரத்தில் மோடி யின் பொறுப்பு குறித்து இன் னும் விசாரிக்கப்பட வேண்டி யுள்ளது. அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதாக கூறுவது முன் கூட்டியே தெரி விக்கப்படும் கருத்து.

ராஜ்நாத் சிங் உருவபொம்மை எரிப்பு உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக முன்னாள் மாநில தலைவர் பிரதாப் ஷாகிக்கு வாய்ப்பு அளிக்காத தால் அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி யின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் உருவபொம்மையை எரித்தனர். மாநிலத்தின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தியோ ரியா மக்களவைத் தொகுதி யில் போட்டியிட பிரதாப் ஷாகி விருப்ப மனு அளித் திருந்தார். பாஜக சனிக் கிழமை வெளியிட்ட வேட் பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

அதைத்தொடர்ந்து பதார்டேவா பஜாரில் ஷாகி யின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக கோஷமிட்டபடி அவரது உருவபொம்மையை எரித் தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மோடியால் கடன் சுமை அதிகரிப்பு - சித்தராமையா

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் நாட்டின் கடன் சுமை பல மடங்கு அதிகரிக் கும் என கருநாடக முதல் வரும், காங்கிரஸ் தலைவரு மான சித்தராமைய்யா தெரி வித்துள்ளார். கர்நாடகாவில் கட்சியின் பிரச்சார கூட்டத் தில் பேசிய அவர், குஜராத்தில் மோடி முதல்வ ரான பிறகு தான் வளர்ச்சி இல்லாமல் போனது; ஊழல் அதிகரித்தது; மோடியால் குஜராத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது; கடன் சுமையில் வளர்ச்சி பெற்றதை தான் மோடி வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார்?. இவ்வாறு சித்தராமையா பேசி உள்ளார்.

மோடிமீது ராம்தேவ் தாக்கு

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டின் உயர் பதவிக்கு வரும் வெறி யில் உள்ளார் எனவும், ஆனால் அது பற்றி கேட்டால் தான் அவ்வாறு நினைக்கவில்லை என கூறுகிறார் . இவ்வாறு யோகாகுரு ராம்தேவ் குற்றம் சாட்டி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77086.html#ixzz2wGz814vT

தமிழ் ஓவியா said...


தஞ்சை என்றால் தஞ்சைதான்!


தஞ்சையிலே பொதுக் குழு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் மறு வார்த்தை சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டனர். இப்பொழுதுதான் கடந்த டிசம்பர் 2இல் மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்தினார்கள் என்றாலும் எப்பொழுது சொன்னாலும் சிறிதும் தயங்காமல் சிறப்பாக செய்து முடிப்பது தஞ்சை மாவட்டக் கழகம் - தஞ்சை என்றால் தஞ்சைதானே! (பலத்த கரவொலி). (16.3.2014)

விடுதலைச் சந்தா: 67 விடுதலை சந்தாக்களுக்கான தொகையான ரூ.35 ஆயிரத்தை விடுதலை ஆசிரியர், கழகத் தலைவர் அவர்களிடம் பொதுக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொறுப்பாளர்கள் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர்.

Read more: http://viduthalai.in/e-paper/77087.html#ixzz2wGzLt2i5

தமிழ் ஓவியா said...

ஜனநாயக நாட்டில் 21 ஆம் நூற்றாண்டிலும், ஜாதி அடக்குமுறை 60 ஆண்டுகாலம் வாக்களிக்க முடியாத அருந்ததியின மக்கள்தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் நத்தமேடு என்னும் கிராமம். இக்கிராமத்தைச் சுற்றி சற்று பெரிய கிராமங்களாக மோட்டாங்குறிச்சியும், பெத்தானூர் கிராமம் என மூன்று கிராமங்களும் ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாக உள்ளது.

இம்மூன்று கிராமங்களிலும் சத்திரியர் என்று சொல்லிக் கொள்ளும் சமூக மக்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். தாழ்த்தப்பட்ட அருந்த தியர் சமூக மக்கள் 10 சதவிகிதத்தினர் வசிக்கிறார்கள். 150 குடும்பங்கள், 115 குடும்ப அட்டைகள், 800 க்கும் சற்றேறக் குறைய மக்கள் எண்ணிக்கையில் வாக் காளர்கள். தாழ்த்தப்பட்ட, தொடப்படாத, தீண்டப்படாத, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வரும் இவர்களது வாழ்வானது கேள்விக்குரியது. ஆண் டாண்டு காலமாக அங்கு பெரும்பான் மையினராக வசித்துவரும் ஜாதியினரால் இவர்கள் படும் அல்லல், துன்பம், துயரம் சொல்ல முடியாதது, எழுத முடியாதது. அந்த அளவுக்கு அம்மக்கள் 21 ஆம் நூற் றாண்டிலும் அடிமையிலும் அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தனைக்கும் காரணம் நான் மேல் ஜாதி, நீ, கீழ்ஜாதி என்ற பேத நிலையே.

21 ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திர மாக வாக்களிக்க முடியவில்லை என்ற ஏக்கமாகத்தான் இவர்களது குரல் ஒலிக் கிறது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியவில்லை என் பதை அறிந்து தனி வாக்குச்சாவடி வேண் டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்ததை அடுத்து தமிழக அரசுக்கு இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் ஓவியா said...

அதைப்பற்றி செய்தி சேகரிக்க நத்தமேடு கிராமத்திற்கு சென்றபோது அருந்ததியின சமூக மக்கள் அவ்வளவு எளிதாக எதையும் நம்மிடம் சொல்ல முன்வரவில்லை. அவ்வளவு கொடுமை, அவ்வளவு அச்சம். அவ்வளவு அடக்கு முறையே காரணம் என்பதை அறிய முடிந்தது, அதில் துடிப்புள்ள இளைஞர் கள் சிலர் அழைத்துச்சென்று அமர வைத்து அவர்களிடம் தான் வாக்குசாவடி அமைக்க விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்று கூறி நம்முன் நேர் நிறுத்தினார்கள்.

இதோ அக்கிராம மக்கள் கொட்டிய உள்ளக்குமுறல்: சிறுபான்மை சமூகமாக வாழும் எங்கள் மீது இவ்வூர் ஜாதிய ஆதிக்கவாதிகள் காலங்காலமாக பல அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறை களையும் இன்றுவரை மீது திணித்து வருகிறார்கள்.

இதுவரை எங்களுக்கு தெரிந்த 60 ஆண்டு காலமாக நாங்கள் சுதந்திரமாக ஓட்டுப்போட முடியவில்லை. வாக்கு சாவடிக்குள் நுழைந்தால் உங்கள் ஓட்டு கள் எல்லாம் ஏற்கெனவே போட்டு விட் டார்கள் என்று துரத்திவிடுவார்கள். ஒரு சிலர் அதையும் மீறி உள்ளே சென்றால் வந்ததிற்கு கையில் மையை வைத்துக் கொண்டு போ என்று மையை வைத்து அனுப்பிவிடுவார்கள். ஒரு சில நேரங் களில் ஓட்டு போடும் இடத்தில் எல்லாம் சூழ்ந்து நின்றுகொண்டு அவர்களின் ஜாதிகட்சியின் சின்னத்திற்கு மட்டும் ஓட்டு போடு இல்லை என்றால் உதை விழும் என்று சூழ்ந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் சொல்லும் ஜாதிகட்சியின் சின்னத்திற்கு ஓட்டுப்போட வேண்டிய தாகிவிடும். இரண்டொரு முறை வாக்கு போடுமிடத்தில் ஓரிருவர் மீறி அரசியல் கட்சி சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு விட்டார்கள். அவ்வளவுதான் ஓட்டுப் போட்டவர்களை அடித்து உதைத்து விரட்டி விட்டார்கள். இதைப்பார்த்து பார்த்து பயந்தே பழக்கப்பட்ட எங்கள் சமூக மக்கள் வாக்களிக்கவே போவ தில்லை.

தமிழ் ஓவியா said...


அதோடு நின்றுவிட்டதா அந்த கொடுமை? 2009 ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் திமுக எம்.பி தாமரைச் செல்வன் வெற்றிபெற்று நன்றி தெரிவிக்க வந்தார் அவரிடம் எங்கள் கொடுமை களை கூறி விண்ணப்பம் கொடுத்தோம். அவர் ஊரைத்தாண்டி இருப்பார் அவ்வ ளவுதான் ஊரில் நுழைந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை எல்லாம் அடித்து சூறையாடினார்கள்.

அருந்ததியின மக்கள் எல்லாம் ஊரைக் காலி செய்துவிட்டு அருகே உள்ள சுரங்கப்பட்டி கிராமத்தில் அகதி களாக தஞ்சம் புகுந்தோம் அதன் பிறகு முல்லைவேந்தன் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அன்றைக்கு ஒரே கோரிக்கையை மட்டும் அவரிடம் வைத் தோம். அவ்வூரில் எங்களால் வாழமுடி யாது எனவே வேறு இடத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கி கொடுங்கள் என்று கேட் டோம். இனிமேல் அதுபோல நடக்காது. அரசுக்குசொல்லி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று உறுதி அளித்தார். அதனை நம்பி 3 நாள் பள்ளிகளில் அகதி களாக இருந்த நாங்கள் ஊர்திரும்பி னோம். ஆனால் இன்றுவரை வாழ்க்கை நிலை மாறவில்லை.

ரேசன் கடையில் வரிசையில் நின்றால் அவர்கள் மீது உடலோ, துணியோ, பட்டால்கூட சக்கிலிப்பையன் வந்து உரசி நிக்கிறான் என்று பிடித்து அடிப் பார்கள். பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்தில் எங்கள் பிள்ளைகள் எளிதாக விளையாட முடியாது, விளை யாட சென்றால் நாங்கள் விளையாடி முடித்த பின்தான் விளையாட ணும் அதுவரை ஓரங்கட்டு, போ என்று விரட்டுவார்கள்.

எங்கள் குடியிருப்பு பகுதியில் இறந்தவர்களை அவர்களின் குடியிருப்பு வழியாகத்தான் பொது சாலையில் எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத் துச் செல்லும்போது அவர்கள் ஊரைத் தாண்டிதான் மேளம் அடிக்க முடியும்.

அதேபோல எங்கள் பக்கம் சாவு நடந்துவிட்டால் அந்த நேரத்தில் அவர்கள் பண்டிகை திருவிழா நடத்தி னால் அவ்வளவுதான். அவர்கள் சாமி ஊர்வலம் போன பின்புதான் நாங்கள் பிணத்தை தூக்கிச் செல்ல வேண்டும். அதுவரை காத்துக்கிடக்க வேண்டியது தான்.

எங்களுக்கு ஒதுக்குபுறமாக சுடுகாடு இருக்கிறது, அதைச்சுற்றி உள்ள உயர் ஜாதியினர் ஒன்று சேர்ந்து புதைக்கவே இடம் இல்லாத அளவுக்கு செய்துவிட் டார்கள். சுடுகாட்டிற்கு செல்லும் வழி ஒருவரின் பட்டா நிலமாக உள்ளதுஎன்று கூறி பிணம் எடுத்துச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் தகராறு செய் கிறார்கள். குடிநீர் கூட எங்களுக்கு சரிவரக் கிடைப்பத்தில்லை.
அடிக்கடி ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி இரவில் நான்கு பக்கங்களி லிருந்தும் வீடுகளின் மீது கல் எறிவார்கள் பயந்து ஒளிந்து கொள்வோம். இந்த கொடுமைகளோடு இல்லாது இன்னும் சொல்ல முடியாத எழுத முடியாத அளவுக்கு கொடுமைகளை தினம் தினம் அனுபவித்து வருகிறோம்.

2009 ஆம் ஆண்டு எங்களின் அவல நிலையை அறிந்து ஆதித் தமிழர் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர் அதியமான் எங்களை பார்த்து செல்ல காரில் கொடி கட்டிக் கொண்டு வந்து விட்டார் உடனே ஆதிக்க ஜாதியினர் ஒன்று கூடி தடி, கல் முதலியவற்றைக் கொண்டு காரை அடித்து கொடியை உடைத்தார்கள். அதன் பிறகு அவரை ஒரு வீட்டில் மறைத்து வைத்திருந்தோம். காவல்துறையில் தகவல் கூறி எஸ்.பியாக இருந்த சுதாகர் வந்து அவர்களை விரட்டி அதியமானுக்கு பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்தார்.

இதுபோல பல கொடுமைகளை நாங்கள் அனுபவித்து விட்டோம் இனி அனுபவிப்பதற்கு ஒன்றுமேயில்லை.

நாங்கள் சொல்லியதை நீங்கள் எழுதி னால் கூட எங்களுக்கு ஆபத்துதான் என்று பயந்து கொண்டே பேசினார்கள்.

நாங்கள் ஜனநாயக நாட்டில் சுதந் திரமாக வாக்களிக்க வேண்டுமென்றால் அரசும், மக்கள் தலைவர்களும், நீதி மன்றமும் தான் வாக்குச்சாவடி அமைத் துத் தரவேண்டும். சுடுகாட்டிற்கு வழி பாதை ஏற்படுத்தித் தர வேண்டும். குடிநீர் பிரச்சினையைப் போக்க வேண்டும். மொத்தத்தில் மனிதர்களாக எங்களையும் வாழவைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர் துயரத்துடன்.

அதோடு 60 ஆண்டுகளில் எந்த அதிகாரியும் எங்கள் குடியிருப்பு தேடி வந்து இதுவரையில் எதனையும் விசாரிக்கவில்லை, தீர்வுகாணவில்லை. ஆனால் கடந்த வாரம் மாவட்ட ஆட்சி யர் விவேகானந்தன் மற்றும் வட்டாட்சி யர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் விசாரித்து சுடுகாடுவரை நடந்தே சென்று பார்த்தனர் என்பது எங்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் இந்த அப் பாவிப் பொதுமக்கள்.

தகவல்: தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செய்தியாளர்)

Read more: http://viduthalai.in/page-2/77094.html#ixzz2wH0vFkjW

தமிழ் ஓவியா said...


கோயபல்ஸ் யார்? நானா? ஜெயலலிதாவா? (கலைஞர் கடிதம்)


உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயல லிதா தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்கு கருணா நிதி மட்டுமே சொந்தம் கொண் டாடுவது எந்தவிதத்தி லும் நியாயம் இல்லைஎன்றும் தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இடஒதுக் கீட்டிற்கு வித்திட்டதேதான் தான் என்றும் பேசியிருக் கிறார். அவருக்கு நான் பதில் கூறுவதைவிட, முஸ்லிம் களுக்காகஅன்றாடம் பணியாற்றிக் கொண்டிருக் கும் இந்தியயூனியன் முஸ் லிம் லீக் கட்சி யின் தலைவர், அண்ணாவின் நெருங்கிய நண்பர், பேராசிரியர் காதர் மொய்தீன் அவர் களும், மனிதநேயமக்கள்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வரும், கடந்தமுறை ஜெய லலிதாவுடன் தோழமைக் கொண்டுஅந்தக் கட்சி வெற்றி பெறமாநிலம் முழு வதும் சுற்றி பாடுபட்டவரு மான ஜவாஹிருல்லா அவர் களும் என்ன சொன்னார்கள் என்பதைக் குறிப்பிட்டாலே, முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடுவழங்கியது, தி.மு. கழகஆட்சியா, ஜெயலலி தாவா என்பதுதெளிவாகி விடும் அல்லவா?


தமிழ் ஓவியா said...

பேராசிரியர் காதர் மொய் தீன் அவர்கள் 10.3.2014 அன்று அவர்கள் கட்சியின் தேசிய அரசியல் ஆலோ சனைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, முஸ்லிம்க ளுக்கு தனிஇடஒதுக்கீடு வழங்கியது தான்தான் என்று கூறி தமிழக முதல்வர் ஜெய லலிதா உண்மைக்கு மாறான தகவலைக் கூறி வருகிறார். இது அப்பட்டமான வர லாற்றுப் புரட்டு. முஸ்லிம் களுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியதும், இந்த இடஒதுக்கீடு வழங்கு வதற்குக் காரணமாக இருந்த பிற்பட்டோர் பட்டியலில் லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா உள்ளிட்டவர் களைச் சேர்த்ததும், தி.மு.க. தலைவர் கலைஞர்தான் என் பது வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்சமூக, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பதற்குப் பதிலாக பொருளாதாரத்தில் பிற்பட்ட வர்கள்என்றுஇடம் பெறச் செய்துள்ள தன் மூலம் பா.ஜ.க.வின் கொள்கையை ஜெயலலிதா அப்படியே பின் பற்றுகிறார். எனவே அவரது கூற்றைமுஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் ஏற்காது என்று தெரிவித்திருக்கிறார்.

திரு. ஜவாஹிருல்லா அவர்களோ, நேற்றைய தினம், தி.மு.கழக ஆட்சியில் தான் முஸ்லிம் களுக்கு 3.5 சத விகித இடஒதுக்கீடு கொடுக் கப் பட்டது. இதைமேலும் அதிகரிக்கவேண்டும் என்றுசட்டமன்றத்தில் நான் பலமுறைபேசியும், அ.தி. மு.க. அரசுகண்டு கொள்ள வில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினோம் என்றுசொல்வதற்கு அ.தி. மு.க.வுக்கு அருகதை இல்லை என்றுகூறியிருக் கிறார்.

ஜெயலலிதா எவ்வ ளவு பெரியபித்தலாட்டக் காரர் என்பதற்கு இஸ்லாமிய சமுதாயத்தின் இந்தஇரண்டு பெரியவர்கள்கூறியிருக்கும் உண்மைபோதுமா? போதாதா?

தப்பித்துக் கொள்வதற் காக இப்போதுஜெயலலிதா தான் மேற்கொண்டஒரு நட வடிக்கையால் தான் முஸ் லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்ததுஎன்றுசொல்கிறார். தாலிகட்டியவனுக்கு மனைவி சொந்தமேதவிர, அவளைபெண் பார்த்து விட்டுப் போனவன் எல் லாம், தனக்குத்தான் அவள் சொந்தம் என்றுகூறினால் ஊரிலேஉள்ளவர்கள்எல்லாம் உதைக்கவந்துவிடுவார்கள்!

தமிழ் ஓவியா said...


மேலும் ஜெயலலிதா, தூத்துக்குடியில்பேசும் போது அ.தி.மு.க. ஒரு போதும் கரசேவைக்கு ஆட் களை அனுப்பியதே இல்லை என்று கூறி தப்பிக்கப் பார்த் திருக்கிறார். ஜெயலலிதா வுக்கும், கரசேவைக்கும் உள்ளதொடர்பு பற்றியும், அவர் அப்போது எவ்வாறு நடந்துகொண்டார் என்பது பற்றியும் தமிழ்நாட்டு மக்க ளுக்குத் தெரியாதாஎன்ன?

தினமணி நாளிதழ் 24-11-1992இல் வெளியிட்ட செய் திக்குதலைப்பு என்ன தெரி யுமா? கரசேவை: ஜெய லலிதா வலியுறுத்தல் என்ப தாகும். அந்தச் செய்தியில், ஜெயலலிதா டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுமன்றக் கூட்டத்தில் தமிழக முதல மைச்சர் என்றமுறையில் ஜெயலலிதாவின் பேச்சு வெளியாகியுள்ளது. அந்தப் பேச்சில், அரசியல் சட்டத்தி ன்படி, பெரும்பான்மையின ருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரி மைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூகஅமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்திச் செயல்படுவது சிறுபான்மை யினருக்குஏற்றதுஅல்ல. பெரும் பான்மையினரும், அவர்களுடையஉரிமைகளை சிறு பான்மையினரைப் போல் அனுபவிக்க அனும திக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில்இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி, கட்டுமானப் பணியை நிறை வேற்ற அனுமதிப்பதாகும். உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ளஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவித மான சட்டச் சூழலை உரு வாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசுகை யகப்படுத்திய இடத்தில், கரசேவையோ அல்லது வேறுவிதநடவடிக் கையோ மேற்கொள்வது கடினமாக் கப்பட்டுள்ளது. அந்த இடத் தில் கட்டுமானத்துக்கு தடை இல்லைஎன்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டு மானப் பணிக்குத் தடையாக உள்ளசட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையானநட வடிக் கைகளை மத்திய அரசும் உத்தரப்பிரதேச அர சும் மேற்கொண்டாகவேண் டும். கரசேவை நடை பெறு வதற்கு பொருத்தமான சூழ்நிலையைஉருவாக்கத் தேவையானமுடிவை இந்ததேசிய ஒருமைப்பாட் டுக்குழு எடுக்கவேண்டியுள் ளது. கரசேவையை அனு மதிக்கும்படி நீதிமன்றங் களைஅணுகத் தேவையான எல்லாநடவடிக் கைகளும் எடுக்கப்படவேண்டும். மிகவும் சுருக்கமாக என்னு டையவேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத் திய இடத்தில்கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றுபேசி, ஏடு களில்எல்லாம் அப்போதே வெளிவந்திருக்கிறது என்றால், முழுப் பூசணிக் காயைஇலைச் சோற்றிலே மறைப்பது போலதற் போது தூத்துக்குடியில்போய், அ.தி.மு.க. ஒருபோதும் கர சேவைக்கு ஆட்களை அனுப் பியது இல்லைஎன்றுபேசி னால், மக்கள் நம்பிவிடுவார் களாஎன்ன? தினமணியில் மட்டுமல்ல;

1.1.1993தேதிய ஃப்ரண்ட் லைன் ஆங்கில இதழில்,“I am aware that the Supreme Court directions to the Uttar Pradesh Government and the pendency of the cases in the High Court have created a legal situation making it difficult for the KarSewa” v‹W«; “This august body will, therefore, have to take a decision on creating a congenial atmosphere for the conduct of the KarSewa. All steps will have to be taken to move the Courts to permit KarSewa”

என்றும் அப்போது செய்தி வெளியிட்டதுகூட இட்டுக் கட்டியகதையா? ஜெயலலிதாகூறுவாரா?

முதலமைச்சர் ஜெயல லிதா இந்தியஒருமைப்பாட் டுக் குழு கூட்டத்திலே பேசியதை, தமிழ்நாடுவிசுவ இந்து பரிசத் சார்பாக ஒட் டப்பட்டிருந்தசுவரொட்டி யில், தேசியஒருமைப்பாட் டுக் குழு கூட்டத்தில் அயோத் திகர சேவைக்கு ஆதரவாகப் பேசிகோடிக் கணக்கான இந் துக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழகமுதல்வர் மாண்பு மிகு செல்விஜெயல லிதா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! என்று அச்சடிக் கப்பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


அதுமாத்திரமல்ல; டைம்ஸ் ஆப் இந்தியா ஆங் கிலநாளேட்டில், 1992 டிசம் பர் 3ஆம் தேதியன்று, கர சேவைநடைபெற்றஉத்தரப் பிரதேசமாநில விசுவ இந்து பரிசத் அமைப்பின் செய லாளரானகுலாப் சிங் பரிகார் என்பவர் அளித்தபேட்டியி லேயே அயோத்தியில் நடை பெறும் கரசேவைக்கு ஆயி ரத்துக்கும் மேற்பட்ட அ.தி. மு.க. வினரை தமிழக முதல் வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார். மேலும் கர சேவைக்குரிய பலஉதவிக ளைச் செய்வதாகஉறுதியும் அளித்துள்ளார் என்று கூறி செய்திவந்ததே, அப் போதே ஜெயலலிதாதுள்ளிக் குதித்து, அந்தச் செய்தியில் உண்மை யில்லை, நான் கரசேவைக்கு ஆள் அனுப்ப வில்லை என்று எந்தப் பத்திரிகையிலே மறுப் புக் கூறினார்? சொல்லத் தயாரா? அப்போதுஅந்தச் செய்தியைபாராட்டாகஎடுத் துக் கொண் டவர், தற்போது முஸ்லிம்களின் வாக்குக்காக கரசேவைக்கு ஆள் அனுப்ப வில்லை என்று சொன்னால் இஸ்லாமியர்கள் நம்பிவிடு வார்களாஎன்ன? இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு கிளைத் தலைவர், மறைந்தஏ.கே.ஏ. அப்துல் சமத் அவர்கள் அயோத்தியில் நடைபெற்ற கரசேவை யில் அ.தி.மு.க. தொண்டர்களும் கலந்துகொண்டனர் என்று அப்போதே குற்றஞ் சாட்டிய போது, ஜெயலலிதா அதை மறுத்தாரா?

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியர்களை ஜெயலலிதா என்ன பாடு படுத்துகிறார் என்பதற்கு, பாவம் இஸ்லாமிய சமுதா யத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி, தி.மு. கழக ஆட்சியிலே ஒரு முக் கிய பொறுப்பிலேஇருந்தார் என்பதற்காக, அவரைப் படுத்துகின்ற பாட்டைத் தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வில்லையாஎன்ன? இவர்கள் ஆட்சிக்கு வந்தநாளிலிருந்து மூன்றாண்டுகாலமாகஅவர் பணிநீக்கத்திலே வைக்கப் பட்டு, இன்னும் சொல்லப் போனால், அவர் சென்னைக் குக் கூடவரக் கூடாது, ராமேஸ்வரம்-மண்டபத்தி லேயே தங்கி இருக்க வேண்டு மென்று இந்த ஆட்சி யினர் ஆணைபிறப்பித்திருக்கும் தகவல் தமிழ்நாட்டு முஸ் லிம்களுக்குத் தெரியாதா என்ன? ஆனால் தி.மு. கழக ஆட்சியிலே இந்த அதிகா ரிக்கு பெரிய பொறுப்பு அளித்ததுமாத்திரமல்ல; உலகத் தமிழ்மாநாட்டிற்கு ஒருதனி அதிகாரியாக திற மையான அதிகாரியை நிய மிக்க வேண்டுமென்று என் னிடம் கோப்புவந்தபோது அலாவுதீன் என்ற மூத்த அதி காரியைத்தான் அந்தப் பதவியிலேநியமித்தேன். நல்ல வேளையாக அந்த அதிகாரி தற்போது ஓய்வு பெற்று விட்டார். இல்லா விட்டால்அவரும் பழிவாங் கப்படக் கூடும்.

தமிழகமக்களிடம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத் தில்தான் இராமர் கோயில் கட்ட வேண்டுமென்று இலட் சக்கணக்கான கையெழுத்துக் களைவாங்கி பா.ஜ.க. வினர் தமிழக ஆளுநரிடம் அப் போதுகொடுத்தபோது, அந்த மனுவிலேஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். முருகானந்தம், ரமேஷ், பன்னீர்செல்வம், கோவிந்தராஜ் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பதாக அப்போதுபா.ஜ.க. சார்பிலே அறிவித்தபோது, இன்று என்னைமறுக்கும் ஜெய லலிதா அப்போதுஅதை மறுக்கவில்லையே? இப்படி யெல்லாம் பேசி, இஸ்லா மியர்களைஏமாற்றி விட முடியுமாஎன்ன?

இன்று ஜெயலலிதாவின் பேச்சை கொட்டை எழுத் துக்களில்வெளியிட்டிருக்கும் தினத் தந்தி, தனது 23.7.2004 இதழில் இதே ஜெயலலி தாவின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி இதோ :-

செய்தியாளர்:- சிறு பான்மை சமுதாயமான இஸ் லாமியர்களுக்கு இடஒதுக் கீடு கொடுப்பது பற்றி உங்கள்கருத்துஎன்ன?

ஜெயலலிதா :- முஸ் லிம்கள்மட்டும் சிறு பான் மையினர் அல்ல. கிறித்தவர் கள் இருக் கிறார்கள், பார்சி கள் இருக்கிறார்கள், புத்த மதத் தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்முஸ்லிம்கள், கிறித்தவர்கள்சமமாக இருக் கிறார்கள். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடுஅளித்தால், நாளை கிறித்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். எனவே இவ்வாறு செய்வது இயலாதஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப் படையில் அவர்கள் ஏற் கனவே பலசலுகைகளை அனுபவித்துவருகிறார்கள். பெரும்பான்மை சமூகத் தினர் அந்தச் சலுகைகள் எல்லாம் அனுபவிக்க வில்லை. ஏற்கனவே சலு கைகளைஅனுபவித்துவரும் சிறுபான்மை சமுதாயத்தின ருக்குமேலும் சலுகைகளை வழங்கமுடியாது என்று இதே ஜெயலலிதா சொன்னாரா இல்லையா? இதையும் மறுக் கிறாரா? இப்போது கூறுங் கள், தமிழ் நாட்டின் கோய பல்ஸ் யார் என்று?நானா? ஜெயலலி தாவா? அன்புள்ள,

மு.க.
நன்றி: முரசொலி, 17.3.2014

Read more: http://viduthalai.in/page-3/77109.html#ixzz2wH1OzfRf

தமிழ் ஓவியா said...


இதய அடைப்பை சரிசெய்யும் வெள்ளைப் பூண்டு

வெள்ளைப்பூண்டு உடல் வெப்பத்தை அதிகப் படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக் கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும்.

நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த் துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள செலி னீயம் என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப் படுத்தும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க: நன்றாக உறங்க வேண்டும். மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்தக் கூடாது.

தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்ற வற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.

மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கி விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2E1bPf

தமிழ் ஓவியா said...

பாதாமை பயமில்லாமல் சாப்பிடலாம்

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு.

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளே வனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்...

இதயத் துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கெனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை அய்ந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப்போனால், பாதாம் எடுக்காத வர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமே கூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக் கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2M4zhw

தமிழ் ஓவியா said...


வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க


நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது.

இதனை தான் சித்த மருத்து வர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட் களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.

பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத் தையும் கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத் துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.

தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சினைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2ho41j

தமிழ் ஓவியா said...

தலைவலிக்கு கை வைத்தியம்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலை வலி குறையும்.

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றி யில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படி யென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலை வலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற் றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2qaCzU

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் தொழிலாளர்மீது முறையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு! தமிழர் தலைவர் கண்டனம்!


நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அறப் போரில், அங்குள்ள பாதுகாப் புப் படையினர், தேவை யின்றி, துப்பாக்கிச் சூடு நடத்திய தினால், ராஜா என்ற ஒரு தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக் கும், மிகுந்த துயரத்திற்கும் உரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துப்பாக்கிச் சூடு என்பதை எந்தக் கட்டத்தில் தவிர்க்க இயலாத நிலையில், நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம், காவல் படைகளுக்குப் போதிய பயிற்சியை அளிக்க மத்திய மாநில அரசுகள் தவறக் கூடாது.

அதீதமாக தமது அதிகார எல்லை தாண்டி நடந்து கொண்ட காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணை கொடுத்தவர் யார்? ஆணை யில்லாமலே தன்னிச்சையாக இப்படி நடந்து கொண்டாரா என்பது போன்ற பல கோணத்தில் அரசுகள், சுதந்தரமான நீதி விசாரணை நடத்தி, மனித உயிர்கள் விலை மதிப் பற்றவை என்பதை உணர்த்த வேண்டும்.

பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு தேவை!

டெல்லி போன்ற பெரு நகரங்களில்கூட பெருங்கூட்டத்தைக் கலைக்க, நீர்ப் பீய்ச்சி அடிப்பது, வானத்தை நோக்கி மேலே சுட்டு கூட்டத்தைக் கலைய வைப்பது போன்ற சில முறைகள் பின்பற்றப் படுகிறபோது, இங்கே இப்படி நிகழ் வுகளா? எனவே இதற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க ஆய்வு நடத்தி, புதிய வழிகாட்டும் நெறி முறைகளை காவல் துறையினருக்கு உணர்த்த வேண்டும்.

உயிர் இழந்தவருக்கு சுமார் 10 லட்ச ரூபாய் இழப் பீடாகத் தர வேண்டியதும் மனிதாபிமானமாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்18.3.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/77151.html#ixzz2wMjVXLbj

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டரில் சிக்குகிறார் மோடியின் நண்பர் அமித்ஷா சி.பி.அய். அழைப்பாணை!


அகமதாபாத், மார்ச் 18- போலி என் கவுண்டர் வழக் கில் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடியின் அதி முக்கியமான நண்ப ரும், குஜராத் மாநில முன் னாள் உள்துறை அமைச் சரும், உத்தரப்பிரதேசத்தில் நடக்க இருக்கும் தேர்த லுக்கான பி.ஜே.பி.யின் மோடியின் பொறுப்பாளரு மான அமித்ஷா சிக்கியுள் ளார். சி.பி.அய். சிறப்பு நீதி மன்றம் அவருக்கு அழைப் பாணை விடுத்துள்ளது.

15-6-2004-இல் குஜராத் தில் இஷ்ராத் ஜஹான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக் மற்றும் இரு வர் குஜராத் காவல்துறை யினரால் பொது இடத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். பிரனேஷ்பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை அளித்த முறையீட்டின்பேரில் சி.பி. அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. இரண்டு குற்றப் பத்திரிகைகள் சி.பி.அய். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும் குஜராத் முதல்வருக்கு நெருக்க மானவரும், முன்னாள் உள் துறை அமைச்சருமாகிய அமித்ஷா மற்றும் அப் போது பணியிலிருந்த அகமதாபாத் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் இருவரையும் நீதிமன்றத் தில் நிறுத்தி குற்ற விசா ரணையைத் தொடர வேண் டும் என்று மனுதாரராகிய கோபிநாத் பிள்ளை கோரி யுள்ளார். போலி என்கவுண் டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோருக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதா கோபி தாக்கீது அனுப்பி உள்ளார். மேலும், இவ்வழக்கு விசாரணை மார்ச் 26ஆம்தேதி நடை பெற உள்ளது.

இவ்வழக்கில் தொடர் புடைய முன்னாள் உள் துறை அமைச்சர் அமித்ஷா குறித்து போதுமான ஆதா ரங்கள் இருப்பதாக புல னாய்வுத் தகவல்கள் கூறு கின்றன. அய்.பி.எஸ். அதிகாரி கிரிஷ் சிங்கால் மற்றும் மற்ற காவல் துறை அதிகாரிகள் பரத் பட்டேல், டி.எச்.கோஸ்வாமி ஆகி யோர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களில் போலி என் கவுண்டரில் அமித்ஷாவின் பங்களிப்பு குறித்து கூறி யுள்ளனர். ஜி.எல்.சிங்கால் போலி என்கவுண்டருக்கு முதல்வர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷா வும் உத்தரவிட்டனர் என் பதை தெளிவாகவே கூறி யுள்ளார். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நட வடிக்கையில் அரசு இருப்ப தாகக் கூறப்பட்டு போலி என்கவுண்டர் நடைபெற்ற தாக சிறையிலடைக்கப் பட்ட அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா எழுத்து மூலம் கூறியுள்ளார். மேலும், அவர் அதில் குறிப்பிடும் போது அதிகாரிகளும், குற்றப்பிரிவினரும் 2002 முதல் 2007வரை அரசின் தீவிரவாத ஒழிப்புக் கொள் கையின்பேரால் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுத் தப்பட்டனர் என்கிறார்.

முன்னாள் இந்திய புல னாய்வுத் துறையின் முன் னாள் இயக்குநர் ராஜிந்தர் குமார் வன்சாராவிடம் முதல்வரிடம் பேசுமாறு கூறியபோது பாதுகாப்பான தாதி, கலி தாதி எல்லோரும் அறிந்தது என்னவெனில் மாநகர குற்றப்பிரிவைச் சேர்ந்த அனைவரையும் முதல்வர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நன்கு தெரிந் தவர்கள்தான் என்றார். சிங் கால் கூறும்போது தன்னு டைய அழுத்தமான எதிர்ப் பையும் மீறி அந்தப் பெண்ணை தீவிரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுவிட்டனர் என்றார். ராஜிந்தர் குமார், வன்சாரா, அமித்ஷா ஆகியோரிடை யேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு கள் உள்ளன. சூன் மாதத் தில் 18 தொலைபேசி அழைப்புகள் அமித் ஷா, வன்சாராவுடன் பேசுவது பதிவாகி உள்ளன. அந்த பதிவுகள் நேரிடையான சாட்சிகளாகவே உள்ளன.

மனுதாரரான கோபி நாத்பிள்ளையின் வழக் குரைஞர் ஷம்ஷாத் பதான் நீதிமன்றத்தில் தன்வாதத் தில் அமித் ஷா, ராஜிந்தர் குமார், வன்சாரா ஆகியோ ருக்கிடையே போலி என் கவுண்டர் திட்ட மிட்டது தொடங்கி செயலை முடித் ததுவரை உள்ள தொடர்பு களுக்கு ஆதாரம் உள்ளது என்று கூறினார். என்கவுண்டர் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ர வரி 5ஆம் தேதி அன்றுதான் இரண்டாம் குற்றப்பத்திரி கையை சி.பி.அய். தாக்கல் செய்து, அதில் ராஜிந்தர் முக்கியப் பங்காற்றியவர் என்று கூறி உள்ளது. துஷார் மிட்டல், எம்.கே.சின்கா, ராஜீவ் வெங்கெடே ஆகிய மூன்று அய்.பி. அதிகாரி களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. முதல் குற்றப்பத்திரிகை யில் போலி என்கவுண்டர் என்று பெயரிட்டு, குஜராத் காவல்துறை அய்.பி. அதி காரிகளுடன் இணைந்து செயல் பட்டதாகக் கூறி உள்ளது.

அய்.பி.எஸ் அதிகாரி களான டி.ஜி.வன்சாரா, பி.பி.பாண்டே, கிரிஷ் சிங் கால் ஆகியோரைப் பெய ருடன் குறிப்பிட்டுவிட்டு பின்பு பேரட், என்.கே. அமீன், ஜே.ஜி.பார்மர், அனாஜ் சவுத்ரி ஆகியோ ரையும் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77145.html#ixzz2wMjfWfHU

தமிழ் ஓவியா said...


மக்களவைத் தேர்தலில் பல்வேறு கோணல்கள்!பிரதமரைச் சந்தித்ததுண்டா?

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது என்று முதல் அமைச்சர் கேட்கிறார். அவர் முதல் அமைச்சராகி மூன்றாண் டுகள் ஆனதே தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்களோடு, ஒரே ஒரு முறையாவது பிரதமரைச் சந்தித்ததுண்டா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் இந்திய யூனியன் முசுலிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்.

சபாஷ், சரியான கேள்வி தான் ஆனாலும் தன்னை விட பெரியவரா பிரதமர் என்ற மனப் பான்மை உடையவரிடம் இது போன்ற கேள் வியைக் கேட்கலாமா?

தீக்குளியல்!

பிஜேபி கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் பா.ம.க.வுக்குத் தான் ஒதுக்கப்பட வேண் டும் என்று பா.ம.க. தொண்டர்கள் குமுறுகின் றனராம்.

உணர்ச்சி வயப்பட்ட பா.ம.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருப்பூர் தங் களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதற்காக தேமு திக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலோடு பலரும் அரசியலே வேண்டாம் என்று தீக்குளிக்கப் போவது மட்டும் உண்மை!

தா.பா. கண்டுபிடிப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா முன்னெடுத்த நிலைக்கு மாறாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தடம் புரண் டிருக்கிறார்.

எந்த கூட்டங்களிலும், பா.ஜ.க.,வைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று சி.பி.அய். செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

அம்மையாரைத் தெரிந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக் கிறதோ!

யார் சிங்கம்? யார் நரி?

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு 99.5 சதவிகிதம் முடிந்து விட்டது என்று பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இராமாயணமோ?

13 நாள்கள் உட் கார்ந்து உட்கார்ந்து முந் திரிப் பருப்பைத் தின்று கொண்டு பேசியே தீர்த் தார்கள் - இதுவும் ஒரு கின்னஸ் சாதனையே!

தருமபுரியில் பா.ம.க. நிறுவனர் தனது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களை வேட்பாளராக அறிமுகப்படுத்திப் பேசியபோது சிங்கங்கள் நரிகளி டம் போய் பிச்சை கேட்காது என்று திரு வாய் மலர்ந்தருளியுள்ளார். இதில் யார் சிங்கம்? யார் நரி? பி.ஜே.பி.க்குத் தான் வெளிச்சம்!

திருவாளர் மன வியாதி!

காந்தியார் பெயரால் கட்சியைத் தொடங்கிய மணியான மனிதர், ஒரு கூட் டணியை உருவாக்குவதற்காக தண்டால் பஸ்கி எல்லாம் எடுத்தார்.

காந்தியின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டவர் காந்தியைக் கொன்ற - கட்சிதான் உத்தம மானது என்று கண்டுபிடித்த கொலம்பசு இவர்.

கடைவிரித்தேன் கொள்வாரில்லை - கட்டிக் கொண்டேன் என்று வள்ளலார் சொன்னது போல, மன உளைச்சல் காரணமாக பிஜேபி கூட்ட ணிக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவது இல்லை என்று முடிவு செய்து விட்டாராம்.

ஆகா, எவ்வளவுப் பெரிய நஷ்டம்! யாருக்கு?

Read more: http://viduthalai.in/e-paper/77150.html#ixzz2wMjpAoKr

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

தமிழ் ஓவியா said...

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையைக் கலக் காமல் பிஜேபியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது பிஜேபிக்கோ, ஆர்.எஸ்.எசுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழி வகுக்கும் என்று ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சி வளர்ச் சிக்காக பி.ஜே.பி.க்கு அனுப்பப்பட்ட அத்வானியே ரத்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். நாட்டாண்மை செய்கிறது. 4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக்காட்சி அலை வரிசையில் ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.

கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட்கண்ட்ரோ லாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி...

சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்? ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?

கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரகர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும் திறமை யையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பி.ஜே.பி.க்கு, ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண்டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளைச் செய்வார்கள். அதே போல தமிழ்நாட்டுப் பிஜேபிக்கு எங்கள் தகுதி வாய்ந்த இல. கணேசனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி கூறினாரே!

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் பிஜேபி ஆட்சி யில் இருந்தபோது அரசாங்கத்தின் இரகசியங்கள் எல்லாம்கூட ஆர்.எஸ்.எசுக்கு அறிவிக்கப்பட்டன - இராணுவ இரகசியம் உட்பட!

1999 மே 11,13 ஆகிய இந்நாட்களில் மத்திய பிஜேபி கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக மிக முக்கிய மான இரகசியம் இது! குடியரசு தலைவருக்குக்கூட முதல் நாள்தான் தெரிவிக்கப்படும் என்றால் - இது எவ்வளவு உண்மையான பரமரகசியம் என்பது வெளிப்படை!

ஆனால் என்ன நடந்தது? பொக்ரானில் அணு குண்டு வெடித்த அதே நாளில் - நேரத்தில் ஆர்.எஸ். எஸின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் அணு ஆயுத இந்தியா என்ற தலைப்பில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை முன்னிறுத்தி சிறப்புக் கட்டு ரையே வெளியிட்டது என்றால் இதன் பொருள் என்ன?

குடியரசு தலைவருக்குத் தெரிவதற்கு முன்பே ஆர்.எஸ்.எசுக்குத் தெரிகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - இரகசியத்தை பாதுகாக்கத் தவறிய ஆட்சி பிஜேபி ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, பிஜேபிக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாக ஆர்.எஸ்.எசுக்கு வாக்களிப்பதாகத் தான் பொருள்.

ஆர்.எஸ்.எஸின் குணம், மணம் எத்தகையது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனவே வாக்காளர்ப் பெரு மக்களே உஷார்! உஷார்!! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ளாதீர்!

தமிழ் ஓவியா said...


அணியா? பிணியா?

தற்போது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, தமிழ் நாட்டில் அமைக்கப்படும் பாஜக கூட்டணி, இதுவரை நாம் பார்த்திராத விசித்திரமான கூட்டணியாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்த வரையில், கூட்டணி என்று சொல்லி, காம்ரேடுகளிடம் பூச்செண்டு வாங்கி, அவர்கள் காதில் வைத்து அனுப் பியது. திமுகவில், விடுதலை சிறுத் தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், ஒரு நாளிலேயே அதனைச் சரிசெய்து, அனைத்துக் கட்சிகளுக்கும், இடம் ஒதுக்கி, வேட்பாளர்களும் அறிவிக் கப்பட்டு, பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ஆறு மாதங் களுக்கு முன்னரே, பிரதமர் வேட் பாளர் என பாஜகவால் அறிவிக்கப் பட்ட மோடி , இரண்டுமுறை தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதல், மோடி அலை என்று கூறி, எல்லாக் கட்சிகளும், பாஜக பின்னால் இருப் பது போல் ஒரு மாயையை உரு வாக்கினார்கள். தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியாக பேச்சு வார்த்தை நடத்தியது பாஜக. வைகோவின் மதிமுக முதலில் வந்தது. ஏற்கெனவே பத்து தொகுதி களில் வேட்பாளர்களை அறிவித்த பாமகவும் கூட்டணிப் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டது.

அறிவிக்கப்பட்ட பத்து தொகுதி களில் வேட்பாளரையும் களத்தில் இறக்கிவிட்டு, அந்த தொகுதிகள் பற்றி எந்த பேச்சும் இருக்கக்கூடாது என்று, இதுவரை யாரும் பார்த்திராத புதிய நிபந்தனையோடு, பாமக பேச்சு வார்த்தையில் இறங்கியது. தேமுதிகவின் கேப்டன், அவர் பங்குக்கு, எல்லோரையும் சந்தித்து, இறுதியாக பாஜகவையும் சந்தித்தார். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது என்று சொல்லிய நிலையில், கேப்டன், வேட்பாளர்களை அறிவிக் காமலே, பிரச்சாரம் தொடங்குகிறார். தொகுதிக்குச் சென்று அங்கே வேட்பாளரை அறிவிக்கிறார். அந்த தொகுதி, கூட்டணியில் இருப்பதாகக் கூறும் இன்னொரு கட்சியும் கேட் கிறது என்று தெரிந்தும், அந்த தொகு திக்கும் வேட்பாளரை அறிவிக்கிறார். புதுச்சேரிக்கு உள்ள ஒரே தொகு திக்கு, அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியான என்.ஆர். காங் கிரஸ் வேட்பாளரைத் தானாகவே அறிவித்துவிட்டது.

அந்த கட்சியும், பாஜக அணியில் உள்ளது என்கிறார் கள். பாமகவும் அங்கே வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்லிவிட்டது. கள்ளக்குறிச்சியில், தேமுதிக, பாமக இருவருமே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற் கொண் டுள்ளனர். பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், தினமும், காலையும், மாலையும், இன்னும் ஒரிரு நாள்களில் பேச்சு வார்த்தை முடிந்து விடும் என்று பிழையில்லாமல் சொல்லி வந்தார். இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இத்தகைய விசித்திர மான கூட்டணியை தமிழகம் முதன் முதலாக சந்திக்கிறது. அணியா, பிணியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77161.html#ixzz2wMlQRNWB

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் தொலைக்காட்சிப் பேட்டி பற்றி...


14.3.2014 அன்று கலைஞர் டி.வி.யில் நீங்கள் கூறிய செய்திகள், பெரியார் அவர்கள் சாதனைகளின் வெளிப்பாடு என்று நாங்கள் கருதுகிறோம்.

நீங்கள் கூறியபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான எனது உறவினர், வயது 55, படிக்காதவர், கை நாட்டு. ஆனால் அவர் மகன் இன்று அமெரிக்காவில். எனது உறவினருக்கு தன் மகன் என்ன வேலை செய்கிறார் என்று சொல்லத் தெரியாது. அமெரிக்க கம்பெனியின் பெயரும் சொல்லத் தெரியாது. ஆனால் இன்று வாட்ஸ் அப்பில் அமெரிக்கா வில் உள்ள மகனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

எங்களுக்கு மிக நெருக்கமான மற்றுமொரு தாழ்த்தப் பட்ட நண்பர் இன்று ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி.

ஏன் இதை சொல்கிறோம் என்றால், ஒரு வேளை ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்து இருந்தால் இன்றும் நாம் சூத்திரர்களாக இருந்து அவாளுக்கு அடி வருடிகளாக இருந்திருப்போம். எனவே எங்களுக்கு வழிகாட்டிய புகழ் தந்தை பெரியாருக்கே உரியது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப முயற்சி செய்யுங்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவாவுக்கு ஒரே பதில், பெரியாரித்துவா என்பதே.

ஆர்.எஸ்.எஸ்.இன் மத வெறி தமிழகத்தில் வளராமல் தடுக்க ஆவன செய்யுங்கள்.

உங்கள் சகோதரிகள்
(பெயரை வெளிப்படுத்தவில்லை)

Read more: http://viduthalai.in/page-2/77160.html#ixzz2wMlfnupJ

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை - 18.3.2014பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலி யில் உள்நாட்டுப் போர் ஒன் றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழி லாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்கு மார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெய் வேலி இரண்டாவது சுரங்கத் தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழி லாளர்கள் காயமடைந்துள் ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் அடித்து நொறுக்கிய தில், 20 மோட்டார் சைக் கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட் டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது. தொழிலாளர் கள் தாக்கப்பட்டதைக் கண் டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறு வனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்ற தாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப் பட்டதாகவும் பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச் சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாக வோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை.

காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்ப வங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங் காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும். துப்பாக் கிச் சூட்டில் இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசி னால் இதுவரை அறிவிக்கப் படவில்லை. உடனடி அரசு நிர் வாகத்தில் இருப்போர் நெய் வேலியில் அமைதி திரும்பு வதற்கும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதல மைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக் கணக்கான காவலரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத் தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்து கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/77170.html#ixzz2wMluJ85l

தமிழ் ஓவியா said...


காசநோயை ஒழிக்க புதிய திட்டம்


ஊட்டி, மார்ச் 18- தமிழ கம் உட்பட, 16 மாநிலங் களில், காசநோயை கட்டுப் படுத்த, அரசு மற்றும் தனி யார், கூட்டு முயற்சியில், புதிய திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலத்தில், டி.பி., அல்லது டியூபர்குளோசிஸ் என, அழைக்கப்படும், காச நோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்த, இரு நாள் கருத்தரங்கு, ஊட்டியில் நடந்தது.


இதில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர், காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர் களில், 30 லட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்து கொள்வ தில்லை. மொத்த காசநோ யாளிகள் எண்ணிக்கையில், 5இல் 1 பங்கு பேர், இந்தி யாவில் உள்ளனர். தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயை குணப்படுத்த முடியும். தனியார் மருத்து வர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் விவரத்தை, அரசு, காசநோய் பிரிவுக்கு தெரியப்படுத்துவது இல் லை. இதனால், காச நோ யாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை எடுத்து கொண் டவர்கள் விவரம், துல்லி யமாக இல்லை. காச நோயை கண்டறிய, சளி பரிசோதனை தான் முக் கியம். ஆனால், பல தனியார் மருத்துவர்கள், எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். எனவே, அரசு துறையுடன், தனியார் டாக்டர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் பரிசோதனை, சிகிச்சை வழங் கு வதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டம், தமி ழகம், ஆந்திரா, கருநாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. நோ யாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம், இலவசமாகவே வழங்கப் படும்.
காசநோயாளிகள் குறித்த தகவலை, அரசு காசநோய் பிரிவிற்கு தெரியப்படுத்தாத மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அறிக்கை அனுப் புவது, தற்காலிக பணிநீக்கம் செய்வது, பணி நீக்கம் செய் வது போன்ற, ஒழுங்கு நட வடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்தாண்டுக்குள், புதிய காசநோயாளிகள் உருவாகக் கூடாது; 2050இல், காசநோ யாளி களே இல்லை என்ற நிலையை இலக்காக கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/77173.html#ixzz2wMmAoGzV

தமிழ் ஓவியா said...


கல்கியின் பார்வையில் அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியோ, வளர்ச்சி!


தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011 இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2013 இல் இதன் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துவிட்டது.

வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012 இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2009 இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2013 இல் பதினைந்தாக உயர்ந்துவிட்டது..

சரி... பொருளாதாரத்துக்கு வருவோம்.

விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்டக் கமிஷன் கூறுகிறது.

தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது14 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

- கல்கி 16.3.2014, பக்கம் 11

- தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை எடுத்துக்காட்டிப் பேசினார், 16.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77179.html#ixzz2wSAdgoSO

தமிழ் ஓவியா said...


தேர்தல் கோண(ங்)ல்கள்


பயன்படுத்திக் கொள்ளலாம்!

இந்தியா முழுமையும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 1593; அதில் தமிழ்நாட்டில் மட்டும் 138 கட்சிகளாம். வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக் கிக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற வழி தெரிகிறது!வைகோவின் சரி! சரி!

சென்னையில் நடைபெற்ற மதி முக கட்சிக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் சிந்திய முத்துக்கள். பி.ஜே.பி. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அதில் ம.தி.மு.க. வும் இடம்பெறும். (மாண்புமிகு வைகோ என்று அழைக்கப்பட்டால், மகிழ்ச்சிதான் - நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!).

ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒன்பது தொகுதிகள் கேட்டோம்! அவர் களும் தருவதாகச் சொன்னார்கள். திடீரென்று எட்டு தொகுதிதான் தர முடியும் என்றார்கள். சரி! என்றேன். பின்னர் ஒரு நாள் ராம்ஜெத்மலானி போன் செய்து என்னிடம் நீங்கள் ஒரு தொகுதியை விட்டுத் தரவேண்டும் மோடியே இதை உங்களிடம் சொல் லச் சொன்னார் என்றார்.

மோடியே சொல்கிறாரா, சரி! சரி! என்றேன்.

இப்பொழுது ஏழு தொகுதிகள் உறுதியாகிவிட்டன.

சரி!, சரி! எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.

மோடியே நேராகத் தொடர்பு கொண்டு பேசினால், மேலும் இடங் களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி!

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்படி சரி என்று சொல்லியிருந் தால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கலாமே! அ.இ. அ.தி.மு.க.வு டன் சேர்ந்து அநியாயத்துக்குத் தோல்வி கண்டதுதான் மிச்சம்! சரி! சரி! என்று இப்படி 2011 தேர்தலில் தேர்தலுக்கே முழுக்குப் போடவேண்டிய நிலையும் ஏற் பட்டு இருக்காதே!
இந்துத்துவாவின் காந்தத்துக்கு வைகோவைப் பொறுத்தவரையில்

சக்தி அதிகம்தான். அது சரி, நமக்கு ஏன் வீண்வம்பு?

ரூ.50 ஆயிரம் ரூ.50 லட்சம் ஆனது!

2009 இல் நடக்கவிருந்த மக்கள வைத் தேர்தலில் கல்லக்குறிச்சிக்குப் பிரச்சாரம் செய்ய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சென்றபோது, ஹெலிகாப்டர் இறங்க ஹெலி பேடுக்கு ரூ.50 ஆயிரம் செலவாம் - இந்த முறை அதே ஊருக்கு அவர் சென்றபோது ஆகியுள்ள செலவு ரூ.50 லட்சமாம்.

வேட்பாளர் மனு தாக்கல் செய் யும்வரை ஆகும் செலவெல்லாம் கட்சியைச் சேர்ந்ததாம் - அதற்குப் பிறகு ஆகும் செலவு வேட்பாளரைச் சார்ந்ததாம்.

அதற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை இதனால்தான் அவசர அவசரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சிக்கியது...

பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங் கிரசில் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உறவினரான கருணா சுக்லாவின் வாக்குமூலம்: மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தனி நபர் களின் பிடியில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார். எல்லோருடைய சிண்டும் ஆர்.எஸ்.எஸிடம் சிக்கி இருக்கிறது என்பது அதைவிட உண்மையாயிற்றே!

இந்தி - ஓட்டா?

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி போடுவது இந்தி மொழி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெறு வதற்கே என்று கூறியுள்ளார் பி.ஜே. பி.யின் தேசிய பொதுச்செயலாளர் அனந்த்குமார்.

அப்படி என்றால், இந்தியை ஏற்றுக்கொள்ளாத தென் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக மோடிக்கு பட்டை நாமம் சாத்து வார்கள் என்று பொருள்.

மண் சோறு மகாத்மியம்!

திருச்சிராப்பள்ளியில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதற்குப் பிறகு, ரயில்வே ஜங்சன் வழிவிடு முருகா (டிராபிக் போலீசோ?) கோவிலுக்கு முன் மண் சோறு சாப்பிட்டுவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்களாம் - இதற்குப் பெயர்தான் இரட்டை வேடம் என்பது!

பெரியார் சிலைக்கு மாலை போட்டதால், வழிவிடு முருகனுக்குச் சக்தியிருந்தால் அ.தி.மு.க. வேட்பா ளரைத் தோற்கடித்துவிட மாட்டாரா?

அண்ணன் என்னடா - தம்பி என்னடா?

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் சார்பில் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து அவர் தம்பி பவன்கல்யாண் (இவரும் நடிகரே!) அவசர அவசரமாக ஒரு கட்சியைத் தொடங்கி, பி.ஜே.பி. அணியுடன் கூட் டணி சேர்ந்து, அண்ணனை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அண்ணன் என்னடா - தம்பி என் னடா - இந்த அரசியல் கும்ப மேளாவில்!பதில் இல்லையே - ஏன்?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அவர்கள் பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிப்பதில்லையே, ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. (தோழர் தா.பாண்டியன்கூட குறிப்பிட்டுள் ளார்) இதுவரை ஜெயலலிதா இதற் குப் பதில் அளிக்காதது ஏன்? மவுனம் காப்பது ஏன்?

மவுனம் சம்மதத்துக்கு அடை யாளம் - பி.ஜே.பி.யோடு ரகசிய கூட்டு இருக்கிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் ரகசியம்!

Read more: http://viduthalai.in/e-paper/77177.html#ixzz2wSApk2Bz

தமிழ் ஓவியா said...


நாத்திகம் தோன்றக் காரணம்


எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ, அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.

_ (குடிஅரசு, 21.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/77189.html#ixzz2wSB3jOrP

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தின்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணம், காணாமற்போனதாம்!

அகமதாபாத் மார்ச் 19- பத்தாண்டுக்கும் மேலாகிவிட்ட 2002 குஜராத் கலவரத் தின்போது மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதால் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அந்த ஆவணம் மறைக்கப்பட்டுள்ள தான தகவலைத் தேசிய சிறுபான்மை யருக்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையருக்கான ஆணையத்தின் செயலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சரிதா ஜே.தாஸ். குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் 2002 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி பரிந்துரைத்திருந்தார்.
இவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆவ ணம் மாயமாகிவிட்ட தகவலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தான் பரிந்துரை செய்த அந்த அறிக்கையினை மாற்றிவிட்டு, முக்கிய மான குற்றச்சாட்டுகளையும் நீக்கி உள்ள னர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறு பான்மை யருக்கான ஆணையம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் கள் அரைகுறையாக இருப்பதாகக் கருதி, தற்போது காணாமற்போன ஆவணத்தை யும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்து தொலைக் காட்சி செய்திகளில் மோடி தன் இதயமே நொறுங்கிவிட்டதாகக் கூறியதைக் கேட்ட போது ஆச்சரியமானேன். என் கடமையை சரிவர செய்யவில்லையோ என வேதனைக் குள்ளானேன் என்று கூறினார். சரிதா ஜே.தாஸ் அளித்த குஜராத் கலவரம் குறித்த விமரிசன அறிக்கை ஆவணங்களிலிருந்து மாயமானது மீண்டும் முறையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆணை யத்தை அணுகினேன் என்றார்.

கடந்த சூலை மாதத்தில் மோராய்ட் டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், எந்த இடத்தில் தவறானவை நடந்தாலும், இயற்கையாகவே வருத்தம் தான் ஏற்படும். இந்திய உச்சநீதிமன்றம் இன்று உலகிலேயே நல்ல நீதிமன்றமாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த சிறப் புப் புலனாய்வுக்குழு மிக உயர்ந்த, மிகச் சிறப்பான அலுவலர்களைக் கொண்டு இயங்கியது. அந்தபுலனாய்வுக் குழு அறிக்கையும் வந்தது. அந்த அறிக்கையில் நான் பரிசுத்தமானவன் என்று இருந்தது. நாம் ஓட்டுநராக, அல்லது பின் இருக்கை யில் உட்கார்ந்து இருக்கும்போது, நாய்க் குட்டி சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் வருத்தப்படுவோமா இல்லையா? அது போல்தான் இதுவும். நான் முதலமைச்ச ராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் ஒரு மனிதத்தன்மை உள்ளவன். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், இயற் கையாகவே வருத்தப்படுவேன் -இவ் வாறு ராய்ட்டர் செய்தி நிறுவனத் திடம் மோடி கூறினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்றைய ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபிபுல் லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு சரிதா ஜே.தாஸ் எழுப்பும் பிரச்சினை வந்துள்ளது. ஆவணங்கள் தொடக்கத்தில் கண்டறியப்பட வில்லை. அப்படியே கிடைத்தாலும், அதில் சரிதா ஜே.தாஸ் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தர்லோச்சன் சிங் ஆவணம் இருந்தது. சரிதா ஜே.தாஸ் சமர்ப்பித்ததில் முழுமையாக திருத்தப்பட்டு இருந்தது. அதில் மாயமான தகவல்கள்குறித்து நான் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என் கிறார் ஹபிபுல்லாஹ். தேசிய சிறுபான் மையர் ஆணையத்தில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை துணைத்தலைவராக இருந்தார். தேசிய ஜனநாயக முன்னணி 2004 இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஆணையத்தின் தலைவராக தர்லோச்சன் நியமிக்கப்ட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதரவுடன் அரியானாவுக்கான மாநிலங்களவை உறுப்பினரானார். இவர் கோத்ரா சம்ப வம் தானாகவே நிகழ்ந்த சம்பவமாகக் கூறுகிறார். குஜராத் அரசே தானாகவே சிறுபான்மை ஆணையத்தின்மூலம் உண்மைஅறியும் குழுவை அமைத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 137பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் அகமதாபாத் நகரில் அதி காலையிலேயே வன்முறை ஏற்பட்டது என்று தர்லோச்சன் சிங் தெரிவித்தார். 2014 இல் மோடி பிரதமராக வருவார் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான இடங்களைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரசுக் கட்சி மத்தியில் நிலையான, மதசார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது.

நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட், புதுடில்லி, 14.3.2014

Read more: http://viduthalai.in/page-2/77192.html#ixzz2wSBRHY1E

தமிழ் ஓவியா said...


WHOM DO YOU VOTE FOR? யாருக்கு உங்கள் வாக்கு?


Rights of individuals had been completely suppressed during the Emergency Period of 1975-76, the darkest period in the Independent India.

DMK strongly opposed Emergency and for doing that, its government was dismissed by the Central Government. Its leaders including M.K.Stalin, the present Treasurer of DMK, were arrested under MISA.
AIADMK did not oppose Emergency for fear of arrest and supported Emergency.

Please think, who will guard our rights? DMK who sacrificed it’s government in safeguarding our rights or AIADMK, that supported emergency.

VOTE FOR DMK ALLIANCE.

சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமாக கருதப்படும் அவசர கால சட்டம் 1975-1976 இல் இருந்த நேரத் தில், தனி மனித உரிமை முற்றிலுமாக தடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், தமிழகத் தில் ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான திமுக, அவசர நிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், அதிமுக, கைது பயத்தின் காரணமாக அவசர நிலைப் பிரகட னத்தை எதிர்க்கவில்லை; ஆதரித்தது.

யார் நமது உரிமையை பாது காப்பார்கள்? ஆட்சியே போனாலும் பரவா யில்லை; மக்களின் உரிமைகள் முக்கி யம் என நினைத்த திமுகவா? அல்லது நமது உரிமை போனாலும் பரவாயில்லை என சட்டத்தை ஆதரித்த அதிமுகவா? நமது உரிமையைப் பாதுகாத் திட்ட திமுக அணிக்கு வாக்களிப்பீர்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77194.html#ixzz2wSBamWmD

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. - தீண்டாமை!

பிகார் முசாபர்பூரில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார மேடையில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் இருப் பதா என்று நான்கு பூமி கார் உயர் ஜாதியினரும், பா.ஜ.க.வின் பார்ப்பனத் தலைவர்களும் மேடையில் ஏறாமல் புறக்கணித்துள்ளனர் என்கிற விவரம் வெளியே வந்துள்ளது. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட் டத்தில் மோடி பேசும்போது தாழ்த்தப்பட்ட தலைவர் களே பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கள் என்று பெருமைப்படக் கூறினர்.

ஆனால், நடை முறையில் பா.ஜ.க.வினரின் செயல்பாடுகள் ஜாதி ஆதிக்க வெறியிலிருந்து அவர்கள் மீளவில்லை என் பதையே உணர்த்துகிறது.

மோடி பங்கேற்ற முதல் கூட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் பங்கேற்கிறார் என்றதுமே ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் நோக்கில் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணித் துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவர் சி.பி.தாக்கூர் கூறும்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வர முடியாமல் இருந்திருக்கலாம் என் கிறார். பிகார் மாநிலத் துணை அவைத் தலைவர் அமரேந்திர பிசாத் சிங், கிரிராஜ்சிங், அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் தெளிவாகவே பா.ஜ.க. ராம் விலாஸ் பஸ்வானு டனான கூட்டணியை எதிர்த்துப் போராடுகிறோம் என்கிறார்கள்.

ஏன் இந்த நிலை? பி.ஜே.பி. என்ற கட்சி ஓர் இந்துமதவாதக் கட்சி. அது வர்ணாசிரமத்தை ஜாதியை - தீண்டாமையை ஆதரிக் கக் கூடிய கட்சி அவர் களின் காஞ்சி பெரிய வாளான - மறைந்த சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மிக வும் வெளிப்படையாக தீண் டாமை க்ஷேமகரமா னது என்று சொன்னவர் (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங் கள் - இரண்டாம் பாகம்).

அதே சங்கராச்சாரியார் 16.10.1927 அன்று பாலக்காட் டில் மாட்டுக் கொட்டகை யில் காந்தியாரை வைத்துச் சந்தித்தார் அப்பொழுது அந்த மூத்த பெரியவாள் என்ன சொன்னார்? ஹரி ஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும் பழைய வழக் கங்களையும் நம்பி இருப் பவர்கள் நாட்டில் பெரும் பாலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியி ருக்கிறது என்றும் ஸ்வா மிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் (தமிழ்நாட் டில் காந்தி - பக்கம் 575, 576).

அங்குக்கூடப் போக வேண்டாம். இதே நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் தில் என்ன நடக்கிறது? போலியோ சொட்டு மருந்து அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக் குழந்தைகள் அறவே புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஒரு கிராமத்துத் தண் ணீர்த் தொட்டியில் எழுதப் பட்ட வாசகம் என்ன தெரியுமா? ஜாதிவாரியாக நேரம்.காலை 9 மணி முதல் 10 மணி வரை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதி படேல் இனத்தவர் மட்டும்.

காலை 10 மணி முதல் 12 மணி (மதியம்) வரை பர் வாதா வங்கிரிஸ் மற்றும் குறும்பர். நண்பகல் 12 (மதியம்) முதல் ஒரு மணி வரை தலித் இனத்தவர். மோடி கூறும் ஹிந்து ராஜ்யம் வந் தால் இதுதான் நிலைமை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77247.html#ixzz2wYDp6P00

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வுக்கு தடையாக உள்ள தென்னிந்தியா! டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு!

சென்னை.மார்ச்.20- தேசிய ஜனநாயகக் கூட் டணி வெற்றி பெறுவற்கு தென்னிந்தியாவின் பங் களிப்பு வேண்டும் என்று தடையாக உள்ள தென் னகம் என்கிற தலைப் பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் தீட்டி உள்ளது. (18.3.2014)

நாடாளுமன்றத் தேர் தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மானம் காக் கப்பட வேண்டுமானால், தென்னிந்தியாவில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பாஜக அளவுகடந்து மோடியை முன்னிறுத்தி இருந்தாலும், தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கம் ஏதும் ஏற்படவில்லை. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர் நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு 129 உறுப்பினர்கள் செல்கின்ற னர். 2009இல் கர்நாடகாவில் 19 இடங் களை பெற்றதைத் தவிர தென்னிந்தியாவில் தனக்கான இடத்தைப் பதிவு செய்யத் தவறி உள்ளது. பாஜக காலூன்ற முடியாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பில் உள்ளது.

1998, 1999 தேர்தல்களில் கர்நாடகா, ஆந்திரப்பிரதே சம், தமிழ்நாடு ஆகிய மாநி லங்களிலிருந்து மொத்த மாக 18 இடங்களையே பெற்றதை பாஜக நினை வில் கொள்ள வேண்டும். பிறகு, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரு பெரிய மாநிலங்களில் சக்தி வாய்ந்த கூட்டணி அமைத் ததால் 81 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற் றது. அதேபோல் திரும்ப வும் 2014ஆம் ஆண்டிலும் பாஜக எதிர்பார்க்கிறது. இருந்தாலும், ஆர்வத்துடன் திறனுள்ள கூட்டணியை பாஜக அண்மைக் காலத்தில் அமைத்ததாகத் தெரிய வில்லை. கேரளாவில் உறுதி யான எதிர்ப்புள்ள இரு அணிகளிடையே உடைத் துக்கொண்டு வருவது பா.ஜ.க.வால் முடியாத ஒன்றாகும். அதேபோல் தமிழக அரசியலில் போற் றிப் பின்பற்றப்படக் கூடிய மாநிலக்கட்சிகள் போல, ஆந்திராவும் அதேநிலையை அடைந்துவருகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளிடம் சில இடங்களில் போட்டி அதிகமாக இருக்கக்கூடிய அளவிலான கூட்டணியை உருவாக்க முயன்றுள்ளது எனலாம். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி யின் அங்கத்தினர்களாக வைகோவின் மதிமுக , எஸ்.ராமதாசின் பாமக முன் கூட்டியே இருந்தாலும், நடி கர் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியை கூட்டணிக்குள் பா.ஜ.க., இழுத்துவந்துள் ளது. எப்படி இருந்தாலும், பல அணிகள் மோதுவதால் தமிழ்நாட்டிலிருந்து பாஜக வுக்கு இறுதிமுடிவு பற்றி யார் வேண்டுமானாலும் கணித்துவிடலாம். எல்லைகளைக் கடந்து ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் கட்சி, டிஆர்எஸ் ஆகியோர் நேருக் குநேர் ஆந்திரப்பிரிவினைப் பிரச்சினையில் சந்தித்துக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். அக்கட்சியினரி டையே பாஜக தன்னை சரிப்படுத்திக்கொண்டு, கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களி லும், பாஜக தனக்கான போதிய இடங்களைப் பெற முடியாது.

பாஜக விரும்புவது என்னவென்றால், சிக்கலான நேரத்தில் அதிகமான நாடா ளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளவர்களை நண் பர்களாகக் கொள்வது என் பதுதான். தமிழ்நாட்டில் பாஜக வுக்கு பெரிய நம்பிக்கை எப்படிப்பார்த்தாலும் அதி முக தலைமையிலான ஜெய லலிதாதான்.

இடதுசாரிகளிடம் அவர் ஆடிய ஆட்டம், தற்போது அவரை மட்டுமே சார்ந்து வெற்றிபெறமுடியும் என் பதுதான். ஜெயலலிதா, தன் தேர்தல் பிரச்சாரத்தில் காங் கிரசு மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்து தாக் குகிறார். ஆனால், பாஜக வையோ, பாஜகவின் மறை முக பிரதமர் வேட்பாளர் மோடியையோ விமர்சிப் பது இல்லை.

தெலுகு தேசம், டிஆர் எஸ் உடனிருந்து, தமிழகக் கூட்டணி கைக்கொடுத்தால் மட்டுமே தேசிய ஜனநாய கக் கூட்டணியால் தென்னிந் தியாவில் உள்ள அதற்கான தடைகளை அகற்ற முடியும்.

- டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் 18-3-2014

Read more: http://viduthalai.in/e-paper/77248.html#ixzz2wYE1D9x2

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் பார்வையில்...


நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதில் தனக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் எல்.கே. அத்வானி. பா.ஜ.க. ஒன் மேன் ஷோவை நடத்துகிறது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாக கட்சிக் கூட்டத்திலே குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒரு தனி மனிதரை மட்டுமே ஏன் முன்னிறுத்த வேண்டும்? மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை பிரச்சாரத் தில் ஏன் முன்னிறுத்தவில்லை? என்று சீறியிருக்கிறார். வழக்கம்போல் அத்வானியின் கேள்விகளுக்கு பாஸ் சொல்லி விட்டுக் கலைந்திருக்கிறது பா.ஜ.க. தலைவர் கள் கூட்டம். ஏன்னா, இப்போ பாஸ் அவர் இல்லையே!

- ஆனந்தவிகடன் 19.3.2014 பக்.37

Read more: http://viduthalai.in/e-paper/77260.html#ixzz2wYFXXsBM

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரைப்போல தொண்டு செய்து பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர்: பேராசிரியர் க.அன்பழகன்


தாம்பரம், மார்ச் 20- தமிழக மக்களுக்கு தொண்டு செய்து தந்தை பெரியாரை போல பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர் என தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்தார்.

திருப்பெரும்புதூர் நாடா ளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

தி.மு.க தமிழக மக்க ளுக்கு வரலாற்றில் இடம் பெறும் வகையில் தொண் டாற்றி வருகிறது. அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் தலைமையிலான காலம் வரை 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.

ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் குறை தீர்க்க, ஏழைகளின் கண்ணீரை துடைக்க, விலைவாசி ஏற் றத்தைக் குறைக்க, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண் டிய திட்டங்களை தொடங்கி நிறைவேற்றிட சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க இந்த நாட்டில் ஆட்சி நடத்தியது.

இந்தியாவிலேயே கலை ஞர் மூத்த அரசியல்வாதி. தொண்டு செய்வதற்கே பிறந் தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தந்தை பெரி யாரை சொல்வதை போல தொண்டு செய்து பழுத்த பழ மாக இருப்பவர் கலைஞர்.

தமிழகத்திற்குப் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். ஆட்சி நிர்வாகத்தில் சிறப் பாக செயல்பட்டவர். ஆனால் ஜெயலலிதா, தமி ழக திட்டங்களை நிறை வேற்ற விடாமல் இடையூறு செய்து வருகிறார்.

தமிழ கத்தில் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற விடா மல் தடுத்து வருகிறார். சென்னை துறைமுக பறக் கும் சாலை திட்டத்தை எதிர்க் கிறார். இப்படி எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை செயல்பட விடாமல் ஆட்சி நடத்துகிறார்.

கலைஞரின் கை ஓங்க தி.மு.க வெற்றி பெற திருப் பெரும்புதூர் தொகுதியில் ஜெகத்ரட்சகனை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற செய்யுங் கள். - இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-5/77243.html#ixzz2wYH9Zwww

தமிழ் ஓவியா said...

உலகின் ஆழமான கடல் பகுதி எது?உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் வடக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ள மரியானா அகழி ஆகும்.

எவ்வளவு ஆழம் ?

31,614 அடிகள் அதாவது 9,636 மீட்டர் என்று 1872-1876 இல் சேலஞ்சர் ஆய்வுப்பயணத்தின் போது அறிவிக்கப்பட்டது. பின்னர் சேலஞ்சர் இரண்டாவது பயணத்தின்போது எதிரிலொலி மானியை பயன்படுத்தி துல்லியமாக அளந்து 10,900 மீட்டர்கள், 35,760 அடிகள் என அறிவிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் வித்தியாசு எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

ஜப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த விவரங்கள் இதுவரை மனிதன் அறிவுக்கு உட்பட்டு கண்டுபிடித்ததே ஆகும்.

கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனாலோ, அவன் கண்டுபிடித்த உபகரணங்களாலோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் குறைவதாலும் ஏற்படும் பாதிப்புக்களை களைய இன்னும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHUL5J0

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

தண்ணீர் அருந்தாமல் அதிகநாள்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !

பண்டகா பிக்மா என்ற வகை மீன் தான் மனிதன் உலகில் கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.

ஆறு விநாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ் நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHaPqrC

தமிழ் ஓவியா said...


பத்திரிகையாளர்களைத் தாக்குவதா? விடுதலை ஆசிரியர் கண்டனம்!


காஞ்சிபுரத்தில் 19.3.2014 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையை மறைத்து போக்குவரத்தையே திருப்பிவிட ஆணையிட்ட நிலையில், அதை உடனே செய்யாமல் தாமதித்த தால் ஆத்திரம் கொண்ட டாக்டர் மைத்திரேயன் எம்.பி., ஒரு நாற்காலியைப்போட்டு நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளை செய்ததை படம் எடுத்த தினமணி புகைப்படக் கலைஞர், கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட அ.தி.மு.க.வின்மீது புகார்கள் கொடுக்கப்பட்ட பின்பும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் தத்தம் கடமையைச் செய்கையில், அதற்காக ஆத்திரப் படுவது, அவர்களைத் தாக்குவது என்பது ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல; சர்வாதிகாரிகள், பாசிஸ்ட் ஆட்சியில்தான் அப்படி நடைபெறும். கண்டும் காணாததுபோல் அரசோ, காவல்துறையோ இருக்கக் கூடாது.

உடனே இதற்குப் பரிகாரம் தேடிட, நடவடிக்கை எடுக்க அனைத்துப் பத்திரிகையாளர்களும், ஊடகங் களும் குரல் கொடுத்து, தவறு செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.

கி.வீரமணி
ஆசிரியர்
விடுதலைசென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77321.html#ixzz2we3kE01Q

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!


பிரபல ஆங்கில எழுத் தாளரும் பத்திரிகையாளரு மான குஷ்வந்த்சிங் அவர்கள் தனது 99ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகப் பெரிய இழப்பாகும்! நிறை வாழ்வு வாழ்ந்த அவர் 100 ஆண்டை எட்டாமல் போய் விட்டாரே!

நம் நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்; நகைச்சுவை கலந்த எழுத்தாளர். ஏராளமான ஆங்கில புத்தகங்களை 2013 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 2013இல் தனது சுய சரிதையை எழுதியவர். அவரே ஒரு திறந்த புத்தகம். எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும்திறந்த உள்ளத்தவர். மதச் சார்பற்ற அரசு (Secular) நடைபெற வேண்டும் என்று விரும்பியவர். தன்னை ஒரு கடவுளைப்பற்றிய கவலைப்படாத வன் (Agnostic) என்று பிரகடனப்படுத்தியவர்!

2003ல் - 2004 பொதுத் தேர்தலுக்குமுன்பு, குஜராத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா, மதவெறியின் ஓங்கிய குரல் - இவை கண்டு மனம் வெதும்பி, (‘The end of India’)
இனிமேல் இந்தியா இருக்காது;

இந்தியா எனும் நாட்டையே காணாமற் போகக் கூடிய அளவில் நாட்டின் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மத வெறி அமைப்புகள் செயல்பட்டன; குஜராத் 2002-இல் இன அழிப்பு சிறுபான்மை இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சிறந்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்

சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77314.html#ixzz2we3tSsnt

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சரின் பொருந்தாக் குற்றச்சாற்று!

மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த குரல் கொடுக்காதது ஏன்? - என்ற வினாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் படித்து வருகிறார் தமிழ்நாடு முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரு மான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

பெரியார் பிறந்த மண் என்பதால் சமூகநீதியை -இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தந்திரத்தில் அம்மையார் பேசி இருக்கிறார்.

சமூக நீதிப் பிரச்சினையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே எந்தக் கட்சிக்கு இதில் அக்கறை அதிகம் என்பது வெகு எளிதாகவே புரிந்து விடும். அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 20,21) சமூக நீதி என்னும் தலைப்பில் ஒப்புக்குச் சப்பாணியாக வெறும் 15 வரிகள் சம்பிரதாயமான முறையில் அச்சிடப்பட்டுள்ளன.

இன்றைக்கு 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையான அளவில் செய்யப்படாததற்கு தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அம்மையார் பேசி வருகிறாரே - உண்மையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு இதில் அக்கறை இருக்குமேயானால் தனது தேர்தல் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிட்டு 27 சதவீதம் முழுமையாகக் கிடைத்திட நாங்கள் பாடுபடுவோம் என்று குறிப்பிடாதது ஏன்?

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 24ஆம் பக்கத்தில் 16ஆவது வரிசையில், பிற்படுத்தப்பட்டோ ருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமை யாக அமல்படுத்துதல் என்னும் தலைப்பின்கீழ் 27 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் ஏ.பி.சி.டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரியதாகும் என்று குறிப்பிட்டு 27 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்பப்படாத பின்னடைவுப் பணிகளை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளதை - தி.மு.க.வின் அக்கறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர 27 சதவிகிதம் கிடைத்திட ஏன் குரல் கொடுக்கவில்லைஎன்று குற்றம் சுமத்துவது பிரச்சனையைத் திசை திருப்புவது ஆகும்.

இன்னொரு கேள்வியை அவரை நோக்கித் திருப்பிக் கேட்க முடியுமே! அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் கவன ஈர்ப்பைக் கொண்டு வந்ததுண்டா? இதற்காகக் குரல் கொடுத்ததுண்டா - கருத்துத் தெரி வித்ததுண்டா? பிரதமரைச் சந்தித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் எழுத்துப் பூர்வமாக வலியுறுத்தியதுண்டா என்று திருப்பிக் கேள்வி கேட்டால் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வார்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மற்ற மாநிலங் களில் எல்லாம் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்குத் தனித் தனியே மதிப்பெண்களில் தளர்வு அளிக்கப்பட்டு இருந்தும், மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டும் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தும், அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி ஏறிந்து விட்டு, உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயித்து, காலம் காலமாக இந்தப் பெரியார் மண் பின்பற்றி வந்த சமூக நீதியின் ஆணி வேரை வெட்டும் பார்ப்பன வேலையில் இறங்கியது யார்!?

கடுமையான அறிக்கைகள், கூட்டங்கள் போராட் டங்களை நடத்திய பிறகு தகுதி மதிப்பெண்களில் அய்ந்தை மட்டும் குறைத்து அதுவும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்க்கு மட்டும் பொருந்தும்; 2012இல் எழுதியவருக்குப் பொருந்தாது என்று ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து அப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சமூக நீதியைப் பற்றி வாய்த் திறக்கலாமா?

அதே போல சென்னை அரசினர்த் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டப் பேரவைக் கட்டடத்தை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையைத் தொடங்குவதாகக் கூறி, 83 பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று அறிவித்தது எந்த ஆட்சி? இதற்குமுன் எந்த ஆட்சி யிலும் இப்படி இட ஒதுக்கீடு கிடையவே கிடையாது என்று அறிவித்து அரசு விளம்பரம் வெளியிட்ட துண்டா?

கடுமையான எதிர்ப்புக்கு பிறகு, போராட்டத்திற்குப் பிறகு தானே அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இறங்கி வந்தது?

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் என்று கூறப்பட்டுள்ளதே - இதைவிட இடஒதுக்கீடுத் தத்துவத் தின் ஆணி வேரிலேயே வெடிகுண்டு வீசும் வேலை வேறு உண்டா?

எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல் அமைச்சர் அம்மையார் தி.மு.க.வை நோக்கி சமூக நீதிபற்றி விரல் நீட்டுகிறார்?

கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிய ஆசைப்பட வேண்டாமே!

Read more: http://viduthalai.in/page-2/77298.html#ixzz2we4UlP6y

தமிழ் ஓவியா said...


Time to Make a Difference? - மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?


Time to Make a Difference?

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?

- குடந்தை கருணா

TIme to Make a Difference?

If there is so called ‘Modi wave’, why then Modi contests from two constituencies?

Modi is contesting from Vadodara of Gujarat. Fine. Only last week, BJP tipped his name for Varanasi and pushed out Murali Manohar Joshi, from that constituency against his wishes.

I have questions to Modi. But, Modi never dares to answer others’ questions so far. Hence my questions are directed to BJP.

1. You had been claiming and boasting all through these days, that there is Modi wave across the globe (not alone in India), why then you had fielded Modi for two constituencies?

2. If incidentally or accidentally, Modi wins from both constituencies, which constituency he will prefer to hold, Varanasi or Vadodara?

3. If people of these two con stituencies direct this question to Modi, what will be his honest reply?

4. Will BJP or Modi can boldly inform in advance about this?

5. Suppose, Modi prefers to hold Vadodara and resign from Varanasi, why then Joshi should be pushed to Kanpur? Joshi could have contested from Varanasi or instead Modi can contest from Kanpur also, because, even if he wins, he is going to resign?

Hope BJP will provide a honest reply. Yes, it is time to make a difference.

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்? மோடி அலை என்பது உண்மையா னால், மோடி எதற்காக இரண்டு தொகு திகளில் போட்டியிட வேண்டும்?

குஜராத் வதோதரா தொகுதியிலி ருந்து மோடி போட்டியிடுவார் என பிஜேபி அறிவித்துள்ளது. நல்லது. போன வாரம், பிஜேபி வெளியிட்ட பட்டியலில் மோடி உத்தர பிரதேசம் வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவித்தது.

அந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூருக்குத் தள்ளிவிட்டு, மோடியை அறிவித்தது. மோடிக்கு ஒரு கேள்வி. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஆகவே பாஜகவிற்கு நமது கேள்வி.

1. மோடி அலை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீசுவதாக இத்தனை நாள்களும் பிதற்றிக்கொண்டிருந்தீர்களே, பின் ஏன் மோடியை இரண்டு தொகுதிக ளில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்?

2. எதேச்சையாகவோ, விபரீத மாகவோ, மோடி இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்? வதோதராவா அல்லது வாரணாசியா?

3. அந்த இரண்டு தொகுதிகளின் மக்களும், மோடியிடம் இந்தக் கேள் வியைக் கேட்டால், மோடியின் நாணய மான பதில் என்னவாக இருக்கும்?

4. இதற்கான பதிலை, மக்களிடம் தைரியமாக பாஜக சொல்லுமா? அல்லது மோடிதான் சொல்வாரா?

5. தனது மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியைத் தக்க வைத் துக் கொள்ள மோடி முடிவெடுத்து, வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டால், பின் எதற்காக, ஜோஷியை ஏன் கான்பூர் தொகுதிக்கு விரட்டி விட்டு, மோடியை நிறுத்த வேண்டும்? பேசாமல், ஜோஷியை, வாரணாசி தொகுதியில் நிறுத்தி, மோடியை கான்பூர் தொகுதி யில் நிறுத்தியிருக்கலாமே? வெற்றி பெற்றால் கூட, பதவி விலகல் செய் வது என்றால் எந்த தொகுதியாக இருந்தால் என்ன?

பாஜகவிடமிருந்து நேர்மையான பதில் வரும் என எதிர்பார்ப்போம். ஆம், மாற்றத்தை உருவாக்குவ தற்கான தருணமல்லவா?

Read more: http://viduthalai.in/page-2/77311.html#ixzz2we52R5sq

தமிழ் ஓவியா said...


நாணயத்தில் மதச் சின்னங்கள்: ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்


புதுடில்லி, மார்ச் 21- மத்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் மதச் சின் னங்களை பொறிக்கப்பட் டிருப்பது குறித்து விளக்க மளிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாண யத்தில் தஞ்சை பெரிய கோவில் படம் பொறிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாண யங்களில் வைஷ்ணவி தேவி சிலை பொறிக்கப்பட் டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி நீதிமன் றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்யப்பட்டது.

அதில், நாணயங்களில் மதச் சின்னங்களை பொறிப்பது மதச் சார்பின்மைக்கு எதி ரானது. எனவே, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படி இந் திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/77308.html#ixzz2we64P7La

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னது என்ன?

தர்மசாலா, மார்ச் 21-ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக்கம் என கூறிய படேலுக்கு, மோடி சிலை வைப்பதன் மூலம் அவர் படேலின் வரலாறு மற்றும் கருத்துக்களை படிக்கவில்லை எனத் தெரிகிறது என இமாச்சலப் பிரதேசத்தில் ராகுல் பேசினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தர்ம சாலாவில் பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக் கம், அது நாட்டை அழித்துவிடும் எனக் கூறினார் சர்தார் வல்லபாய் படேல். அவ ருக்கு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் வளர்ந்த பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிலை அமைப்பதுதான் வேடிக்கை. இதிலிருந்து படேலின் வரலாறு மற்றும் கருத்துகளை மோடி படிக்கவில்லை எனத் தெரிகிறது.

மத, ஜாதி மற்றும் பகுதி ரீதியாக மக்களை பிரித்து விரோத அரசியலை பா.ஜ நடத்துகிறது.

நம்நாட்டில் மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போராட்டமாக உள்ளது. ஏழைகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர் களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என எதிர்கட்சி நினைக்கிறது. அவர்களி டம் ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை.

- இவ்வாறு ராகுல் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/77309.html#ixzz2we6Dobxa

தமிழ் ஓவியா said...


உதிர்ந்த மலர்கள்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

கடவுள் ஒருவர் உண்டு. அவர் உலகத்தையும் அதில் உள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி, அவற்றின் நடவடிக் கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன்னிச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங் களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு, பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்டதாகும். புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி என்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை என்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்குப் பெரும் விரோதிகளாவார்கள்.

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.

நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து, நானும் சுயமரியாதைக்காரன்தான்; என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது;

புராணங்கள் எல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாச மென்றும் பேசி, மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் புராண பிரச்சாரத்தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால், பண்டிதர்களைக் கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6XH5tC

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துளிகள்!

மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்
- மண்டெய்ன்

எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.
- ஹென்றிஜேம்ஸ்

மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம் நாமே தேடிக் கொள்ளும் வறுமை.
- சாக்ரட்டீஸ்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6rXVez

தமிழ் ஓவியா said...


அண்ணாவுரை


அயல்நாட்டான் கண்டு பிடித்தான் அச்சு இயந்திரம்; அதன் உதவியால் நீ பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாய். அவன் கண்டுபிடித்தான் ரயில் வண்டி; அதில் ஏறிக் கொண்டு உனது புரட்டு அற்புதம் நடைபெற்ற ஸ்தலங்களுக்கு செல்கிறாய்!

அவன் கண்டுபிடித்தான் வானொலி; அதிலே உன் பஜனையைப் பாட வைத்து மகிழ்கிறாய்! இவ்வளவு பூஜை செய்யும் நீ எதையாவது புதிய பொருள்களைப் பயனுள்ள வகையில் கண்டுபிடித்தாயா? யோசித்து பார்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7d5FeA

தமிழ் ஓவியா said...

அய்யாவுரை

ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும், வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை.

பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.

பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7lPyrO

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

மனிதன் கல்லால் ஆன தெய்வமும் அல்ல: இயற்கைக்கு அப்பால் ஓர் அடி கூட எடுத்து வைக்காத மிருகமும் அல்ல.

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்துக்கோ, உப தேசத்துக்கு எளிதாகவும், நடைமுறைக்குக் கடினமாகவும் உள்ள உயிரில்லாத தத்துவ ஞானத்துக்கோ, தன் கனவிலே உதித்த கற்பனைகளைப் பிறர் மண்டையிலே ஏற்றி பளுவை உண்டாக்கும் மகாத்துமாவுக்கோ, பண்டி தனுக்கோ, புத்தகத்துக்கோ அல்லது வேறு எவருக்கோ அவன் அடிமை அல்ல.

தகவல்: காட்டூர் தம்பு

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7rsreu

தமிழ் ஓவியா said...

புத்தரின் குறிக்கோள்

மனிதர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுவது புத்தருடைய முதல் குறிக்கோளாக இருந்தது.

அவன் உண்மையை கண்டறிய - சுதந்திர உணர்ச்சி யோடு செல்லச் செய்ய வேண்டும் என்பது அவருடைய இரண்டாவது குறிக்கோளாக இருந்தது.

எதையும் பகுத் தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொல்லக் கூடிய மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பது புத்தருடைய மூன்றாவது குறிக் கோளாக இருந்தது.

- புத்தா தம்மா என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7yzkTl

தமிழ் ஓவியா said...

ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட் களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.

போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.

- மாக்ஸிம் கார்க்கி

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we86Q7HR