Search This Blog

2.3.14

காலித்தனம் காங்கிரஸ் காப்பிரைட்டா?

காலித்தனம்  காங்கிரஸ் "காப்பிரைட்டா?"

"கோடீசுர" சோஷியலிஸ்டும் அகில இந்திய காங்கரஸ் தலைவருமான பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியர்களின் சிவில் உரிமைகளைப் காப்பாற்ற ஒரு சங்கம் கண்டிருக்கிறார். அதற்கு ஆள் சேர்க்கும் பொருட்டு இந்தியா முழுதுமுள்ள பல திறப்பட்ட அபிப்பிராயமுடைய தலைவர்களுக்கெல்லாம் அரசியல் வாதிகட்கெல்லாம் அவர் விண்ணப்பங்கள் அனுப்பினார். மகாகனம் ஸர். டெஜ்பகதூர் சாப்ரு, பம்பாய் ஸர். கவாஸ்ஜி ஜிஹாங்கீர், சென்னை ஸர். பி. சிவசாமி அய்யர் போன்ற பிரபலஸ்தர்கள் சோஷியலிஸ்டு பண்டிதரின் சிவில் உரிமைப் பாதுகாப்பு சங்கத்தில் சேர முடியாதென்று தக்க காரணங் களுடன் கண்டிப்பாக விடையளித்து விட்டார்கள்.

சட்டமறுப்புக் காலத்தில் மக்களின் சிவில் உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட காங்கரஸ் கூட்டத்தின் தலைவராயிருக்கும் பண்டித ஜவஹர்லால் சிவில் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் ஏற்படுத்தியிருப்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அந்தச் சங்கத்தை ஸ்தாபித்த பண்டித ஜவஹர்லாலின் போக்கோ அவரது சங்க நோக்கத்துக்கு முரணானதாகவே இருக்கிறது. லக்ஷ்மணபுரியில் பாய்பரமானந்தர் ஒரு பிரசங்கம் செய்தபோது சட்ட மறுப்புக் காலத்தில் காங்கரஸ்காரர் ஒழுக்கங்கெட்ட பெண்களை அரசியல் போரில் ஈடுபடுத்தியதாகக் கூறினாராம். அவ்வளவுதான், அதற்கப்புறம் அவரால் பேசமுடியவில்லை. காங்கிரஸ்காரர் கலாட்டாச் செய்து கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்.

அப்பால் அவர் சில இடங்களில் பேச முயன்றபோதும் பல காங்கரஸ்வாலாக்கள் அநாவசியமான கேள்விகள் கேட்டுத் தொல்லை விளைத்தார்களாம். பாய்பரமானந்தர் கூறிய அவமதிப்பான மொழிகளை வாபீஸ் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். பாய்பரமானந்தர் இணங்கவில்லை. தாம் அபாண்டமாக எதையும் சொல்லவில்லையென்றும் தாம் சொன்னதை நிரூபிக்கத் தயாராயிருப்பதாயும் அவர் மார்தட்டிக் கூறினாராம். கூட்டத்தைக் கலைப்பதிலும் கலாட்டாச் செய்வதிலும் சமத்தர்களான காங்கரஸ்வாலாக்கள் இப்பொழுதும் பாய்பரமானந்தருக்குத் தொல்லை விளைவித்துக்கொண்டுதானிருக் கிறார்களாம். இவ்விஷயத்தை பண்டித ஜவஹர்லால் பார்வைக்கு கொண்டு வந்தபோது கூட்டத்தில் கேள்விகள் கேட்கவும் தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் யாவருக்கும் உரிமையுண்டென்று "சிவில் உரிமை பக்தர்" ஆன பண்டித ஜவஹர்லால் கூறிவிட்டாராம்.

சென்ற மாதம் 28ந்தேதி புனாவில் லிபரல் கட்சியாரின் தேர்தல் பிரசாரம் ஆரம்பமாயிற்று. அப்பிரசார விழா ஆரம்பத்துக்காக பம்பாய் தலைவர் ஸர். கவரஸ்ஜி ஜிஹாங்கீரும் சென்றிருந்தார். கூட்டத்தை ஆரம்பித்து வைக்கும்போது காங்கரஸ் தேர்தல் பிரசார அறிக்கையைக் கண்டித்துப்பேசி, பண்டித ஜவஹர்லால் காங்கரசால் கெட்டுப்போன பிள்ளை என்று குறிப்பிட்டாராம். உடனே அழுகல் முட்டைகள் வீசப்பட்டனவாம். காகிதப்பந்துகள் எறியப்பட்டனவாம். யாரோ மின்சார விளக்குகளையும் அவித்து விட்டார்களாம். கடைசியில் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததாம். கூட்டத்தில் பேச நினைத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.

இச்செய்திகளை காங்கரஸ் பத்திரிகைகள் மிகப் பாராட்டி கொட்டை எழுத்துக்களில் பிரமாதமாகப் பிரசுரம் செய்திருக்கின்றன. தென்னிந்தியாவிலும் இம்மாதிரிக் கலாட்டாக்கள் நடப்பதுண்டு. தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டித்தலைவர் தோழர் சத்தியமூர்த்தி பிரசன்னமாயிருந்த சேலம் காங்கரஸ் கூட்டத்தில் சுயமரியாதைத் தொண்டர் தோழர் சித்தையன் தாக்கப்பட்டதை தென்னாட்டார் அறிந்திருப்பார்கள். நாமக்கல் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டின்போது காங்கரஸ்காரர்கள் ஒரு கழுதையை அலங்கரித்து ஊர்வலம் நடத்தியதையும் அப்பால் காங்கரஸ்காரர்களில் சிலர் மகாநாட்டு நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கழுதையை மீட்டுக் கொண்டு போனதையும் நமது வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும்.

காங்கரஸ் கூட்டங்களில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசுவதும் அவன் இவன் என ஒருமைப் பதங்களைப் பிரயோகம் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டங்களில் காங்கரஸ்காரர் கல்லெறிவதும் கலாட்டாச் செய்வதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இவ்விஷயங்களை கவனித்தால் காங்கரஸ்காரர்களுக்குத்தான் பொதுக் கூட்டங்களில் பேசவும் பிரசாரம் செய்யவும் உரிமை யுண்டென்றும் ஏனைய கட்சியாருக்கு பேசவோ பிரசாரம் செய்யவோ உரிமையில்லை யென்றும் காங்கரஸ்காரர் எண்ணிக்கொண்டு இருப்பதுபோல் தோற்றுகிறது.

புனாக் கூட்டத்தில் பேசிய சர். கவாஸ்ஜி ஜிஹாங்கீர் ஒரு மிதவாதி. அரசியல் அனுபவம் உடைய ஒரு பழைய தலைவர். சோஷியலிஸ்டுக் கொள்கைகள் அவருக்குப் பிடிக்காதிருக்கலாம். எனவே சோஷியலிஸ்டு பிரசாரம் செய்யும் பண்டித ஜவஹர்லாலைக் கண்டித்து பேசினார். மிதவாதிகளைக் கண்டிக்க காங்கரஸ்காரருக்கு உரிமையுண்டானால் அபேதவாதிகளையோ காங்கிரஸ்காரர்களையோ கண்டிக்க மிதவாதிகளுக்கு உரிமையில்லையா! ஜவஹர்லாலைக் கண்டித்துப் பேசிய சர். கவாஸ்ஜி ஜிஹாங்கீர் சபா யோக்கியமல்லாத வாக்கியங்களையும் பிரயோகம் செய்யவில்லை. ஜவஹர்லால் காங்கரசால் கெட்டுப்போன பிள்ளை என்றாராம். இது ஒரு ஏச்சாகுமா? ஆட்சேபகரமான பதமாகுமா?

மிதவாதிகள் கூட்டத்தில் காங்கரஸ்காரருக்குப் பல்லாண்டு பாட வேண்டுமென்பது காங்கரஸ்காரர் விருப்பமா? தம்தம் கட்சி நோக்கங்களை விளக்கவும் எதிர்க்கட்சியார் திட்டங்களிலுள்ள ஊழல்களை எடுத்துக் காட்டவுமே ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரசாரக் கூட்டம் கூட்டுகிறது. எனவே ஒரு கட்சி கூட்டும் பிரசாரக் கூட்டத்தை ஏனைய கட்சிகள் கலைப்பது மரியாதையாகுமா? யோக்கியப் பொறுப்பாகுமா?

இந்தியர்களுடைய பேச்சு சுதந்தரம், கூட்டச் சுதந்தரம் முதலிய சர்வ சுதந்தரங்களுக்குமாகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ்காரர் இவ்வாறு அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளலாமா? காங்கரஸ் பெரிய ஸ்தாபனம், பழைய ஸ்தாபனம் என்று கூறப்படுவதினால் காலித்தனம் செய்ய காங்கரசுக்குத்தான் உரிமையுண்டென்பது காங்கரஸ்காரர் கருத்தா? இந்த அயோக்கியத்தனங்களைத் தடுக்க தேச மகாஜனங்களும் சர்க்காரும் தேவையான ஏற்பாடுகள் செய்யாவிட்டால் அரசியல் வாழ்வே சுவையற்றதாகிவிடும் பயனற்றதாகிவிடும். காலிகள் கூலிகள் கை வலுத்துவிடும்.

----------------------------- தந்தைபெரியார் --”குடி அரசு”  கட்டுரை 06.09.1936

20 comments:

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சிந்திக்குமா?

இன்றைக்கு 16 ஆண்டு களுக்கு முன் குமுதம் வார இதழில் (2.7.1998) ஒரு சுவை யான அம்சம்.

ஒரு கைரேகை படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த ரேகைக்கு உரியவர் எப் படிப்பட்டவர்? என்ற கேள் வியை எழுப்பி- அடுத்த வாரம் காண்க என்ற அறிவிப்பும் இருந்தது. நான்கு பிரபலமான சோதிடர்களிடம் அந்தக் கைரேகையும் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொரு வகையில் தங்கள் கை வரிசையைக் காட்டினர்.

ஒருவர் சொன்னார். இவர் கையில் உள்ளதைக் கொடுக்கக் கூடியவர்; கைநீட்டிக் கேட்க மாட்டார் - வைராக்கியமான ஆள் என்று கூறியிருந்தார். இப்படி நான்கு சோதிடர்களும் வெவ்வேறு வகையில் ஜாதகம் கணித்தனர்.

கடைசியில் குமுதம் இதழே உண்மைக் குட்டை உடைத்து விட்டது.

அந்தக் கைரேகைக்கு உண்மையிலே சொந்தக் காரர் யார் தெரியுமா? குமுதம் தான் வெளியிட்டது.

பிச்சைக்காரர் ஒருவரின் கைரேகை அது; எந்த ஒரு சோதிடரும் அது பிச்சைக்காரரின் ரேகை என்று சொல்லவில்லை. கை நீட்டி வாங்க மாட்டார் என்றாரே ஒரு சோதிடர் - உண்மை என்னவென்றால் அதற்கு நேர் எதிராக கைநீட்டி வாங்கக் கூடிய பிச்சைக்காரர் அவர்! இப்பொழுது நினைத்தாலும் விலா நோகச் சிரிப்பை வரவழைக்க கூடியது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் சொல்லிக் கொடுக்கப் போவதாக அறிவிக் கப்பட்டுள்ளதே

அதில் கைரேகை சோதிடம், கிளிசோதிடம், தாயம் உருட்டும் சோதிடம் போன்ற வகையறாக் களும் இடம் பெறுமா?

மக்களின் வாழ்க்கைக் கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர் காலத்தைக் கணிக்க முடி யும் என்றும் கூறப்படுவ தற்கு எந்தவிதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொது மக்களிடையே மூடத் தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்கு கிறது. இந்தச் சோதிடத்தில் ஏமாற்றுக்கு எதிர் காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டு தி ஹுமனிஸ்ட் ஏட்டின் சிறப்பி தழிலே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுள் 18 பேர் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (தினமணி 4.9.1975)

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் திருந்துமா? சோதிடப் பாடத் திட்டத்தைக் கைவிடுமா? எங்கே பார்ப்போம்!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/76239.html#ixzz2urAjO6e0

தமிழ் ஓவியா said...


அலைப்பேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?


சென்னை.மார்ச்.2- அலைப்பேசி பயன்படுத்து வோருக்கு வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால் ஏற்கெனவே அலைப்பேசியின் தொடர் புகள் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தால் அழைப் பவர் பெயர் திரையில் தெரியும். பதிவு இல்லாமல் இருந்தால் வெறுமனே அழைப்பவரின் எண் மட்டுமே தெரியும்.

அலைபேசியைப் பயன் படுத்துவோர் ட்ரூ காலர் (True Caller) என்கிற அழைப் பவர்களின் பெயரைக் காட் டும் நவீன வசதியை தர விறக்கம் செய்துகொண் டால் வரும் அழைப்பாளர் களின் பெயர், அவர் அலைப் பேசியில் இல்லாவிட்டா லும் திரையில் அழைப்ப வர் பெயர் தெரியும்.

இது தான் ட்ரூ காலர் வசதி ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றுப்பெயர் கொடுத்து பதிவு செய் திருப்பார்கள். அப்படி தனிப்பட்ட விஷய மாக உள்ள அனைத்தும் பொதுப் படை ஆகிவிடும் நிலை ட்ரூ காலர் மூலம் ஏற்பட்டு விடும். ஒருவர் தம்முடைய அலைப்பேசி யில் பெயர் பதிவு இல்லாத வர் அழைக் கும்போது புரிந்து கொள்ள முடியாமலும் திண் டாடும் நிலையும் ஏற்படுகிறது.

இதில், தனிப்பட்ட முறையில் உள்ளவை பொது வாகும்போது செல்லப் பெயர், புனைப்பெயர் என்று இருப்பவை பொது வாகி விடுவதால் தனிப்பட் டவர்களின் தனிமை, சுதந் திரம் அபகரித்துப் பறிபோ கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76237.html#ixzz2urBJrr6n

தமிழ் ஓவியா said...


சாக்லெட் சாப்பிடுவீர்!

லண்டன், மார்ச் 2- டார்க் சாக்லெட்டுகள் சாப் பிடுவது இதயத்தின் ஆரோக் கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந் துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றம் நுண்ணூட் டக் கழகம் மற்றும் வாகெ னிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டனர். அதில், டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரிய வந்தது.

டார்க் சாக்லெட்டு களைச் சாப்பிடுவது, தமனி களின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத் தத்தின் வெள்ளை அணுக் கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது,

தமனிகளின் விரைப்புத் தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும் தன் மையும் தமனி வீக்கத்துக் குக் காரணமாக அமை கின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆய்வில் ஈடுபட்ட டைடெரிக் எஸ்ஸெர் கூறி யதாவது: டார்க் சாக்லெட் டுகளில் உள்ள பிளாவனல் கள் உணவு அருந்தும் தூண் டலை நிறுத்துகின்றன. இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கிய மானவைதான் என்றார்.

நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண் டனர். அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற் கண்ட முடிவுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/76238.html#ixzz2urBWgwIi

தமிழ் ஓவியா said...


கேலி நாயகர்!

உப்பு சத்தியாக்கிரகத்தில் வ.உ.சி. பங்கேற்றார் என்று சொல்லி, பெரும் கேலிக்கு ஆளானவர் - நரேந்திர மோடி. அலெக்சாண்டர் தட்சசீலம் வரை படையெடுத்து வந்தார் அங்கு விரட்டியடிக்கப்பட்டார்.

என்று கூறி பரிகாசத்துக்கு ஆளான வரும் அவரே! (கங்கையைத் தாண்டி வராதவர் அலெக்சாண்டர் என்பது தான் உண்மை வரலாறு) சந்திரகுப்தர் குப்தர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வசமாகச் சிக்கிக் கொண்டார். (உண்மையிலே அவர் மவுரிய வம்சத்தைச் சேர்ந்தவர்) இப் பொழுது என்னவென்றால் பகத்சிங் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறி சிரிப்பாய் சிரிக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urBmtRc7

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவில் நாத்திகர் என்பதால் மறுப்பா!

சாண்டியாகோ, மார்ச்.2- கலிபோர்னியாவில் வசிக் கும் பெண்மணி ஒருவ ருக்கு அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்தில் சான்றளிக்கும் அலு வலர்கள் அப்பெண்மணி நாத்திகர் என்பதால் குடி உரிமைச் சான்று அளிக்க மறுத்துள்ளனர். இச்சம் பவம் மனித உரிமை அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்ரியானா ரேமிரேஸ் என்பவர் தன்னை ஒரு மத மறுப்பாளராக குடிஉரிமை கோரும் படிவத்தில் குறிப் பிட்டுள்ளார். இதனால், மதமறுப்பாளரான அவர் அமெரிக்காவின் பாதுகாப் புக்காக சட்டப்படி ஆயுதம் ஏந்த மறுத்துள்ளார் என்று கூறி, அவர் குடி உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க மனித நேய அமைப்பு தன்னை இவ்வழக்கில் இணைத்துக்கொண்டு அப் பெண்மணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது.

அமெரிக்க குடி உரிமை சான்று கோரும் படிவத்தில் நாட்டுக்காக ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தால் அதற் கான உறுதியை அளிக்க வேண்டும் என்று உள்ளதாம். ஒரு பெண்ணாக வயது 30களின் மத்தியில்தான் ஆயுதம் ஏந்தி ஒருவரைக் கொல்வதை எதிர்த்து வந் துள்ளதாகவும், க்யூ 36-38 வரையில் படிவத்தில் வெறுமனே ஆம் என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், நீதியை, மனி தரைக் கொல்வதை மிகக் கடுமையாக எதிர்த்து வந் துள்ளேன். அப்படி இருக் கும்போது அதுபோன்ற உறுதியை தன்னால் அளிக்க முடியாது என்று நீதிமன்றத் தில் விளக்கமாகத் தெரிவித் துள்ளார். இந்நிலையில் அமெ ரிக்க மனித நேய அமைப்பு இவ்வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்துள்ளது.

அப் பெண்மணி மதமறுப் பாளர், மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்ப தால் குடி உரிமை மறுப்பது அரசமைப்புக்கு எதி ரானது என்றும் அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்திற்கு ஏ.எச்.ஏ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76235.html#ixzz2urByKjMM

தமிழ் ஓவியா said...


அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!

ஜெனிவா, மார்ச் 2- அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்குகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார, மொழி, மத ரீதியாக சம உரிமை வழங் கப்படவில்லை. ஆகவே தமிழர்கள் தனி நாடு கேட்டு போராடத் தொடங்கினார் கள். இதில், முன்னணியில் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். இவர்கள் தமிழர் களுக்காக தனியாக ஒரு அர சாங்கத்தையே நடத்தி வந்தார் கள். ஆனால், இவர்களை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு முத்திரை குத்தியது.

பிற நாடுகளிலும் இதைப் பரப்பியது. அதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கண் டத்து நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தன.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, தகர்த்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு அரசாங்கத் திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெரும்பாலான இயக்கங்களை அமெரிக் காவும், பிற மேலை நாடு களும் தீவிரவாத இயக்கங் களாக பார்க்கத் தொடங்கின. அதன் விளைவாகத்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தடை விதிக்கப் பட்டது.

நிதி திரட்டவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண் டும் என அய்ரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண் டுள்ளது. புலிகளுக்கு எதி ரான தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வரு கின்றது. இதுபற்றி விரை வில் உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது.

இத்தாலி நீதிமன்றமும்...

இதே போல் இத்தாலி நீதிமன்றமும் விடுதலைப் புலிகளை, ஒருவிடுதலை இயக்கத்தினராக அறிவித் துள்ளது. இத்தாலி நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நேப் போலி என்ற நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

விடுதலைப்புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக் காகப் போராடி வந்துள் ளார்கள். அவர்கள் தனி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி ஆட்சியை நடத்தி வந்துள் ளார்கள்.

கல்வி, நிதி, நீதி, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் நடத்தி வந்துள் ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் ஜெனிவா சாசனப்படி, ஒரு விடுதலை இயக்கமாகவே கருத வேண்டும்.

பயங்கரவாதிகளாக பார்க்க முடியாது. ஆகவே இத்தாலி தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள்மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் விசாரித்தார்கள்.

இவர்கள் நேப்போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே, இத்தாலி நாட்டி லும் விடுதலைப்புலிகளுக் கான தடை நீங்கவுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76234.html#ixzz2urC8INbF

தமிழ் ஓவியா said...

ஆனந்த சுதந்திரம்

சென்னை மாநகரில் உள்ள 57 மாநகராட்சிப் பள்ளி களில் 25 ஆயிரம் மாண வர்களுக்குக் குடிநீர்க் குழாய் 157 மட்டுமே உள்ளனவாம். 67 ஆண்டு சுதந்திரத்தில் மாணவர்களுக்கு குடிநீர் அளிப் பதில்கூட இந்த அவலம்! இதை விட வேறு குடி நீர் தான் நாட்டில் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCMHxNf

தமிழ் ஓவியா said...

பா.ம.க.வின் பரிதாபம்

மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் மத்தியில் 5 ஆண்டுக் காலம் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சாதித்தவை பற்றி (சாதனை மனிதன் அன்புமணி ராமதாஸ் - பக்கம் 28) ஒரு பிரசுரம் வெளியிடப்படுகிறதாம் - வெளி யிடுபவர் யார் தெரியுமா?

கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அடையாளங் காட்டப்படுபவரும், ஆர்.எஸ்.எஸ். ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்திதான் அவர்! பெரியாரை யும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டே ஜாதி வாதத்தையும், மதவாத ஆர். எஸ்.எசையும் இணைத்தும் இரட் டைக் குதிரையின்மீது ஒரே நேரத்தில் வேறு யாரால்தான் சவாரி செய்ய முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCWYRIV

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தி.க. நிலைப்பாடு?

பதில்: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பல கட்சிகள் கூட்டணி பற்றிய தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள். திமுக கலைஞர் அவர்களுடைய ஆற்றல்மிகு தலைமையிலே மத சார்பற்றக் கூட்டணியை முற்போக்கு சிந்தனையோடு ஒத்த கருத்து உள்ளவர்களை அழைத்து திருச்சியில் திமுக மாநாடு நடத்தினார்கள். திருச்சியிலே கூடிய மாநாடு வரலாறு படைத்தது. தலைவர்கள் கொள்கைரீதியாக இந்த கூட்டணிக்கு வந்திருக்கிறார்கள்.

இன்றைக்குத் தேவை ஜாதியவாதமோ, மதவாதமோ அல்ல. மாறாக ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் ஜாதியற்ற, மதவெறியற்ற, மனித நேயம் இருக்கக்கூடிய கூட்டணியை உருவாக்கவேண்டும் என்பதுதான். மத்தியிலே தேர்தலுக்குப்பிறகு அமையக்கூடிய ஒரு ஆட்சி என்பது உண்மையாக அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூகநீதியை மய்யமாகக் கொண்ட,

மனித நேய ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே திமுக தலைமையிலே கூட்டணி நிச்சயமாகக் கொள்கைக் கூட்டணி, தெளிவான இலட்சியத்தோடு, நல்ல அணுகுமுறையோடு அவர்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையிலே தாய்க்கழகமாய் இருக்கும் திராவிடர் கழகம் அவர்களை ஆதரிப்பது வெறும் ஆட்சிக்காக அல்ல, ஒரு சமுதாயத்தின் மீட்சிக்காக என்ற எண்ணத்தோடு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

- கரூர் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDdmjA6

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

கரூர் 01-03-2014 சனிக் கிழமை அன்று உலகத்தி லேயே அதிக உயரமான தந்தை பெரியார் பேருருவ வெண்கல சிலை திருச்சி சிறுகனூரில் வைக்க திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் கரூர் சுபாஜ் திடலில் தமிழர் தலைவரிடம் நிதிய ளிப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நிதியைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவ ரது உரையில்:-

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர் தனிச் சிந்த னையாளர் தந்தை பெரி யார், அவரது ஒப்புயர்வற்ற தொண்டு எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை மனி தனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக்கூடது என் றிருந்த ஜாதிக்கொடுமையை எதிர்த்து அதனை ஒழித்தார். சரசுவதி என்ற கடவுள் இருந்த இந்த நாட்டில் யாரும் படிக்கவில்லை, சூத்திரன் படித்தால் நாக்கை அறுத் தெறி என்ற நிலையை மாற்றி அனைவரையும் படிக்க வைத்தது திராவிடர் இயக்கம் ஜாதி வெறியை, மதவெறியை ஊட்டி மக்களை ஏமாற்றி வாக்குப்பெற மதவாத, ஜாதிய சக்திகள் முயல்கின் றன, மக்கள் ஏமாறக்கூடாது,

வருகின்ற தேர்தலைப் பற்றி நினைப்பதைவிட, வரு கின்ற தலைமுறையினரைப் பற்றி கவலைப்படுகின்ற இயக்கம், நம்பிக்கை என்ற மத அடிப்படையை வைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடைபோட்டு சேது சமுத் திரம் கூடாது அது ராமன் கட் டிய பாலம் என்று வளர்ச் சிக்கு முட்டுக்கட்டை போடு கிறவர்கள் யார்? 2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்ட சேது சமுத் திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவர்கள், எம்.ஜி. ஆருக்கு எதிராக, அவரது கொள்கைக்கு எதிராக செயல் படுகிறவர்கள் யார்? என் பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மயக்க பிஸ்கட்டு களுக்கு மக்கள் ஏமாறக் கூடாது என்று தமது உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDuwi5A

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்

ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

- (விடுதலை,18.1.1951

Read more: http://viduthalai.in/page-2/76302.html#ixzz2uwwqi9EB

தமிழ் ஓவியா said...


வி.கே. சிங் ஓர் எச்சரிக்கை!வயது மோசடியில் சிக்கிய இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்த வி.கே. சிங் பி.ஜே.பி.யில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் ஓய்வுக்குப் பின் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்தார் என்றால் கடந்த காலத்தில் பெரிய பொறுப்பில் இருந்தபோது அறிவு நாணயமாக எப்படி நடந்து கொண்டு இருப்பார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் வெளிநாட்டுத் தூதர் அலுவலகங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். காரர்களைத் தட்டிப் பார்த்து நியமித்ததுண்டு.

பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்களாகப் பார்த்து நியமிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டதுண்டு.

இந்திய வரலாற்றுக் கழகம் (Indian Council for Historical Research) முற்றிலும் காவிமயமாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அவர்களுள் கே.எஸ். லால், பி.பி. லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று எழுதியவர்கள்.

பேராசிரியர் சுமித் சர்க்கார் பேராசிரியர் கே.எம். பணிக்கர் உறுப்பினர் செயலாளர் டி.கே.வி. சுப்பிரமணியம் முதலிய புகழ் பெற்ற 12 வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய் வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டனர். இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (டெல்லி) எம். சோந்தி நியமிக்கப்பட்டார். இப்படியாக ஒருநீண்ட பட்டியலே உண்டு.

இந்தியாவின் கப்பற்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அவர்களே இராணுவத்தில் நடைபெற் றுள்ள ஊடுருவலை அம்பலப்படுத்தவில்லையா?

பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் மட்ட இராணுவ தளபதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்த - மிக மோசமான ஆபத்தான நடை முறைகளை உருவாக்கியது வாஜ்பேயி தலைமையிலிருந்த பி.ஜே.பி. ஆட்சி. ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது அந்த மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருந்த (SSP) டி.பி. ராய் என்பவர் பிறகு பிஜேபியில் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பதவிகளில் (Executive Posts) அமர்த்தப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கேசுபாய் முதல் அமைச்சராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் (2000 ஆண்டு பிப்ரவரியில்) என்று அறிவித்தார். அதற்கு பிரதமர் வாஜ்பேயியும் சரிதான் என்று வக்காலத்தும் வாங்கினாரே!
மாலேகான் குண்டுவெடிப்பில்கூட இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வெடி மருந்து பயன்பட்டதாக செய்தி வரவில்லையா?

அந்தக் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான சிறீகாந்த் புரோகித் என்பவர் யார்? இராணு வத்தில் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தவராயிற்றே. மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் என்றால், இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவி நிற்கும் ஆபத்தின் எல்லை என்ன என்பது விளங்காமற் போகாது.
முன்னாள் இராணுவத் தளபதியே (வி.கே. சிங்) பி.ஜே.பி.யில் இணைந்தார் என்பதை வைத்து இந்திய இராணுவத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாவாதிகளை வெளியேற்றும் அவசியமான வேலையில் மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/76303.html#ixzz2uwx1ayF7

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு - 5

- குடந்தை கருணா

நேற்று உ.பி. தலை நகர் லக்னோவில் பேசிய நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், குஜ ராத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என பேசினார்.

இது உண்மையா? 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் பற்றிய விவ ரத்தை, நாடாளுமன்றத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் வெளியிட்டார். குஜராத் மாநிலம், மிக அமைதி மாநிலமாக உள்ளது என மோடியும் பிஜேபியும் கூறி வந்தாலும், மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக் கையில், வகுப்பு கலவரத்தில், பீகார் மாநிலத்தையும் மிஞ்சிய நிலையில், குஜராத் அய்ந்தாவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2012 ஆம் ஆண்டில் 57 வகுப்பு கலவரங்கள் நடை பெற்று, அய்ந்து பேர் இறந்துள்ளனர்; 2013 ஆம் ஆண்டில் 61 வகுப்பு கலவரங்கள் நடைபெற்று ஏழு பேர் இறந்துள்ளனர்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப் பெரிய இன அழிப்பு என்பதை மறைத்து, மோடி யும் பிஜேபியும் பேசுவது, எத்தகைய பாசிச மனம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த கலவரங்களில் பாதிக்கப் பட்டோருக்கு, இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை; ஏறத்தாழ 20000 சிறு தொழில் செய்யும் மக்கள் கல வரம் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத் அரசு அந்த மக்களுக்கு எந்தவித இழப்பீடும் இன்றுவரை தர வில்லை.
இந்த லட்சணத்தில், மற்ற மாநிலங்களில் பேசும் மோடி, ஏதோ தனது ஆட்சியில் குஜராத்தில் தேனா றும், பாலாறும் ஓடுவது போலவும், மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ்வது போலவும் பொய் மூட் டைகளை தினமும் அவிழ்த்து விடு கிறார்.

. இதனை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், மக்களை தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட ஊடகங்கள், அதற்கு மாறாக, மோடி யின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதையும், கருத்துக் கணிப்பு என்கிற பெயரில், திட்டமிட்டு, மோடியை உயர்த்திப் பிடிப்பதை யும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது உரிமையின் விலை, விழிப்புணர்வே.

Read more: http://viduthalai.in/page-2/76308.html#ixzz2uwxCQftP

தமிழ் ஓவியா said...


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் கொடுக்கப்பட்ட கடிதம்

பெறுநர்:
துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

அன்புடையீர், வணக்கம்.

தஞ்சாவூர் - தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தி.இந்து (தமிழ்) நாளேட்டில் (24.2.2014). ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.

அதில் பட்டயம் (ஓராண்டு) Diploma எனும் தலைப்பின் கீழ் சோதிடவியல் கற்பிக்கப்படுவது பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது.

அறிவியலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒரு பல்கலைக்கழக விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

சோதிடம் என்பது அறிவியல் அல்ல; அது ஒரு போலி (Pseodo Science) விஞ்ஞானமாகும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்றவர்களே இவ்வாறு தெளிவாகவே கூறியுள்ளனர்.

1975 ஆம் ஆண்டில் 18 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கீழ்க்கண்ட கூட்டறிக்கையினை கையொப்பம் இட்டு வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ள கருத்து வருமாறு:

மக்களின் வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொதுமக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்தச் சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிக்கையி

ல் 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டிருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)

மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) எனும்பிரிவில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமைகள் என்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், மற்றும், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அரசு உதவியோடு அங்கீகாரத்தோடு நடத்தப்படும் தமிழ்ப்பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சோதிடம் என்ற விஞ்ஞானத்திற்கு எதிரான பாடத்தைப் பயிற்றுவிப்பது சரியல்ல என்று நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று கருதுகிறோம். அரசமைப்பு சட்டத்தின் ஷரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற முறையிலும், மக்கள் மத்தியிலே மூட நம்பிக்கை எந்த விதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை அறிவியல் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு எடுத்துச் சொல்லி, மக்களை அறிவார்ந்த பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மூச்சாகக் கொண்டு செயல்படும் திராவிடர் கழகமும், அதன் அணியான திராவிடர் மாணவர் கழகமும் - இன்று தஞ்சாவூரில், ரயில் நிலையம் அருகில் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படவுள்ள சோதிடத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறவழி முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன் முடிவில் இந்த மனுவை தங்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும், அறிவார்ந்த முடிவுக்குமாக தங்களிடம் அளித்துள்ளோம். சோதிடப் பாடத் திட்டத்தை தமிழ்ப் பல்கலைக் கழகப் (தஞ்சாவூர்) பாடத்திட்டத்திலிருந்து அறவே நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

(கலி.பூங்குன்றன்) (பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார்) (சி.அமர்சிங்)
துணைத் தலைவர் மாநில மாணவரணி செயலாளர் திராவிடர்கழக தலைவர்
திராவிடர் கழகம் திராவிடர் கழகம் தஞ்சாவூர் மாவட்டம்

இணைப்பு:

1) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை
(விடுதலை27.2.2014)

2) விடுதலை ஏட்டின் இரண்டு நாள் தலையங்கங்கள் (26.2.2014, 27.2.2014)

3) விடுதலை ஏட்டின் முதல் பக்கக் கட்டுரை (விடுதலை 2.3.2014)

Read more: http://viduthalai.in/page-4/76332.html#ixzz2uwxYtVQ3

தமிழ் ஓவியா said...


வடலூரில் அறிவு இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

வடலூர் ஜோதி நகரில் 2.3.2014 அன்று காலை 11.15 மணிக்கு திராவிடர் கழக மகளிரணி மண்டலச் செய லாளர் இரமாபிரபா ஜோசப் பின் புதிய இல்லமான அறிவு இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் சிலை

அறிவு இல்லத்தின் வளா கத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் எழுதுவது போல் உள்ள சிலையினை பலத்த ஒலி முழக்கங்களுக் கிடையே இல்லத்தினர் ரமா பிரபா ஜோசப், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் ஆகியோரின் முன்னி லையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

இல்லத்திறப்பு

ரமாபிரபா - ஜோசப் அவர்களின் புதிய இல்ல மான அறிவு இல்லத்தினை க.பார்வதி, மோகனா வீர மணி, திருமகள், வெற்றி செல்வி, கு.தங்கமணி ஆகி யோரின் முன்னிலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் கழகக் கொடியினை கழகச் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ஏற்றி வைத்தார்.

இல்லத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தலைமை வகித்து ரமா பிரபா ஜோசப் ஆகி யோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நிகழ் வினையும், கடுமையான உழைப்பால் வாழ்வில் சிறிது சிறிதாக உயர்ந்து பெரி யார் கொள்கையால் வெற்றி பெற்றதையும் எடுத்து கூறி னார். அனைவரையும் வர வேற்று தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி உரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், நெய் வேலி செயராமன், வடலூர் பேரூராட்சி தலைவர் சந் துரு, நகர திமுக செயலாளர் ராமலிங்கம், தாய் தொண்டு நிறுவன மய்ய நிறுவனர் ராசி.ஜெகதீஸ்வரன், மனித உரிமைகள் கழக தலைவர் காமராஜ், கடலூர் தண்ட பாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், கவுன்சிலர் தமிழ்செல்வன், கழக பேச் சாளர் இராவணன், மண்டல செயலாளர் இரா.பன்னீர் செல்வம், மண்டல தலைவர் சிவ.வீரமணி, திருச்சி மண் டல செயலாளர் காமராஜ், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் நெய் வேலி ஞானசேகரன், தே. எடிசன் ராசா, கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக் குமார், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, ஏபிஜே மனோரஞ்சிதம் ஆகி யோரது வாழ்த்துரைக்குப் பின்னர் இரமாபிரபா - ஜோசப் இணையருக்கு தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணி வித்தார். திருமதி மோகனா வீரமணி அவர்கள், கழக நூல்களை வழங்கினார். நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்றினார்.

ஜோசப் நன்றி கூறினார். சி.மணி வேல், கருணாமூர்த்தி, இந் திரஜித், தருமலிங்கம், சிதம் பரம் செல்வரத்தினம், செல் சேகர், இரா.முத்தையன், ஏ.திருநாவுக்கரசு, க.சேகர், ச.பாஸ்கர், கடலூர் செயக் குமார் (ப.க.)

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

மக்களிடம் எளிதாக பழ கக் கூடியவர்கள், அன்புடன், பண்புடன், நடந்து கொள் ளக் கூடியவர்ள் திரா விடர் கழகத்தினர் - இரமா பிரபா அனைவரிடம் பழ கிய காரணத்தால் இங்கே ஏராளமானோர் கட்சியை கடந்து பங்கேற்றுள்ளனர். மகளிரணியில் தீவிர செயல் பாடு மிக்கவர். சீரிய கொள் கையாளர் - ரமாபிரபா ஜோசப்பை பல ஆண்டு களாக தெரியும். ரமாவைக் காட்டிலும் அவர் கணவர் ஜோசப் மிகுந்த பாராட்டுக் குரியவர். இவரின் உழைப் பின் வளர்ச்சியை இந்த இல்லம் காட்டுகிறது. அறிவு இல்லம் கழக தோழர்க ளுக்கு வரவேற்பு இல்ல மாக இருக்கும். அழகு கலை நிலையம் நடத்தினாலும் எல்லோரையும் ஈர்க்கக் கூடிய வகையிலே தொழிலை சிறப்பாக செய்து வருபவர், பெரியார் காண விரும்பிய புரட்சி பெண் வரிசையில் கழக மகளிர் உள்ளனர் என மேலும் பல்வேறு கருத்து களை எடுத்துக் கூறினார்.

வடலூர் முழுவதும் ஏராளமான கழகக் கொடி கள் கட்டப்பட்டு, விளம்பர பதாகைகளும், தமிழர் தலைவர் உருவம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் சாலை யில் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

Read more: http://viduthalai.in/page-4/76326.html#ixzz2uwyAef8A

தமிழ் ஓவியா said...


முஸ்லீம் ராஷ்டீரிய மஞ்ச்


திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய விடுதலையில் ஒரு முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

முஸ்லீம் ராஷ்டீரிய மஞ்ச் என்ற ஓர் அமைப்பினை பிஜேபி தொடங்கியுள்ளது. இதனுடைய நோக்கம் என்ன? பின்னணியில் உள்ள தந்திரம் என்ன? என்பதைச் சரியான நேரத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தியா முழுமையும் மதச் சார்பற்ற சக்திகளும், சிறுபான்மையின மக்களும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திரமோடிக்கு எதிராகப் பெரும் அலைகளாகக் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

இந்த நிலையில், எந்தத் தந்திரத்தைச் செய்தாவது, எந்த வித்தையைக் காட்டியாவது, எந்த வேடமணிந்தாவது சிறுபான்மை மக்களை வளைத்துத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்று படாதபாடு படுகின்றனர். அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பரிதாபமாகவும் இருக்கிறது. பிஜேபியினர் குடலைக் கிழித்துக் காட்டினா லும் சரி, அதனை சிறுபான்மை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் நேரடி நடவடிக்கைகள் மூலமே இந்திய வரலாறு காணாத மதவெறிக் கலவரம் நடத்தப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்துத்துவா வெறியர்களின் தாக்குதலுக்குத் தப்பவேயில்லை.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் குத்தி, அந்தச் சிசுவை வெளியில் எடுத்து நெருப்பில் வீசி எறிந்து குதியாட்டம் போட்டனர் ஹிந்துத்துவா வெறியர்கள் மோடி ஆட்சியில்.

நரோடாபாடியா எனும் இடத்தில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை வகித்தவர் - மோடி ஆட்சியில் அமைச்சராகவிருந்த மாயாபென் கோட்னானி என்பவர்; இவர் ஒரு டாக்டராம்; மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராம். அவரின் தலைமையில் அரசுஅதிகார வலிமையோடு நடத்தப்பட்ட மிகப் பெரிய இனப்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள்; அதில் 35 குழந்தைகள்.

மறுபடியும் நினைவூட்டுகிறோம் - ஒரு டாக்டர், ஒரு பெண் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவருக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை 28 ஆண்டுகள்; ஏதோ ஒரு அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகக் கருத முடியுமா? மோடிதானே முதல் அமைச்சர்; அவருக்குப் பொறுப்பே இல்லை என்று கதறுகிறார்களே ஏற்க முடியுமா?

இதில் என்ன கொடுமை என்றால், அந்தப் பெண் அமைச்சரைக் காப்பாற்றிட முதல் அமைச்சர் மோடி பலவகையான முயற்சிகளையும் மேற்கொண்டார். காப்பாற்ற முடியாத அளவுக்கு அதிக சிக்கல்கள்!

குஜராத் கலவரத்தின் போது 287 பேர் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் 286 பேர் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள், மற்றொருவர் சீக்கியர். மதக் கலவரத்தை முன்னின்று நடத்திய ஒரே ஒரு ஹிந்துத்துவாவாதிகூட இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேயில்லை.

சிறுபான்மை மக்களை தாஜா செய்வதற்காக முஸ்லீம் மக்களின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த போது ஒரு முஸ்லீம் பிரமுகர் கொடுத்த தொப்பியை அணிந்து கொள்ள அப்போதுகூட மறுத்தவர்தான் நரேந்திரமோடி என்பதை நினைவூட்டுகிறோம்.

2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு டெல்லியிலே அத்வானி என்ன செய்தார்? முஸ்லீம் பெண்களின் மாநாட்டைக் கூட்டினார். அதில் என்ன பேசினார் அத்வானி, தெரியுமா?

முஸ்லீம்களில் எத்தனை சதவிகிதம்பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்க்காமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் உதவி செய்வோம் - பாதுகாப்பு அளிப்போம் (தினகரன் 14.7.2008 பக்கம்7) என்று எல்.கே. அத்வானி பேசிடவில்லையா? ஆனாலும் இஸ்லாமிய மக்கள் அத்வானி விரித்த வலையில் சிக்கவில்லை.

அத்வானி பின்பற்றிய அதே முறையைத் தான் இப்பொழுதும் மோடி செய்துள்ளார். முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் என்ற அமைப்பைத் தொடங்கியிருப்பதும் இதே அடிப்படையில்தான். இஸ்லாமிய மக்களுக்குத் தெரியாதா? குஜராத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் கூட பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படவில்லையே!

சிறுபான்மை மக்கள் ஏமாளிகள் அல்ல - நிச்சயம் மோடியின் பிரதமர் கனவைக் கருச் சிதைவு செய்யச் செய்வதில் சிறுபான்மை மக்கள் பங்கு மகத்தானதாக இருக்கப் போகிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும். திராவிடர் கழகத் தலைவரின் நேற்றைய அறிக்கை மிக மிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page-2/76354.html#ixzz2v2xMclFa

தமிழ் ஓவியா said...


தலைவிதி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலை விதி.

- (86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்

Read more: http://viduthalai.in/page-2/76351.html#ixzz2v2xgQcHR

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு - 6


- குடந்தை கருணா

தினமும், மோடி தனது சுய விளம் பரத்திற்காக, குஜராத் அரசின் பணத் தில், இந்தியாவிலுள்ள அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரங்களாக தந்து கொண்டிருக் கிறார்.

பெண்கள் முன் னேற்றம், மேம்பாடு இவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறதாம்?

இன்றைய பத்திரிகையில், குஜராத் தில் சிறந்த நிர்வாகம் தரும் மோடி, நாடு முழுவதும் அதனை தர இருக்கிறாராம்.

அரசின் மதம், முதலில் இந்தியாவாம், அரசின் புனித நூல், அரசியல் சட்டமாம்;

அரசின் ஒரே ஈடுபாடு, தேச பக்தி தானாம், அரசின் ஒரே அதிகாரம், மக்கள் தானாம்;

அரசின் ஒரே வழிபாடு, 125 கோடி இந்திய மக்களின் நல்வாழ்வு தானாம்; அரசின் ஒரே கடமை, கூட்டு முயற்சியாம், அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சியாம். சொல்கிறார், மோடி, யார்?

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி தன்னை, இந்து தேசியவாதி என வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட மோடி தான் இந்தியா முதலில் என்கிறார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட வைத்து, அப்பாவி பெண்களை சூறையாடுவதற்கு வழி வகை செய்த மாயா கோட்னானியை தனது அரசில் அமைச்சராக அமர்த்தி, பாதுகாத்தவர் சொல்கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

நடு ரோட்டில், கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே கருவாக இருந்த உயிரைக் கொன்று, அந்த பெண்ணையும் கொன்ற, பாபு பஜ்ரங் கியை பாதுகாத்த மோடி சொல் கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

இந்து மதம் தான் இந்தியாவின் மதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்,எஸ்-இன் சேவகன் என வெளிப்படையாக கூறிக்கொள்ளும் மோடி சொல்கிறார், அரசின் மதம், இந்தியா தான் என்று.

மனு சாஸ்திரம் தான் புனித நூல் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரின் ஆத்மார்த்த ஊழியன் மோடி சொல்கிறார், அரசின் புனித நூல் அரசியலமைப்பு சட்டம் தான் என்று.

தனது மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க்ளுக்கு எந்த வித நல திட்டங்களும் செய்யாமல், அவர்களது நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி சொல்கிறார், அரசின் கடமை, அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்று. ஒரு முடிவோடு, மோடி களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய பொய் சொன்னாலும், ஊடகங்கள் அதனைக் கண்டு கொள்ளாது; ஆனால், மக்களும் அப்படி இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/76371.html#ixzz2v2xr9uzv

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம் பிஜேபி முதலில் மன்னிப்பு - பிறகு பல்டி!

மும்பை, மார்ச்.4- குஜராத் கலவரம் பாஜக வால் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சில நாட்களுக்குமுன்பாக தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தலைவர் ராஜ்நாத் மன்னிப்பை பாஜக மறுத்துள்ளது. குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்புக் கோரத் தேவை இல்லை என்றார். மேலும், பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதிகளில் காங்கிரசு மன்னிப்பு கேட் குமா? என்றார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, குஜராத் மாநிலத்தில் பாஜக நல்ல நிர்வாகத்தை அளித்துள்ளது. இதில் மத சார்பின்மை யைக் காட்டிலும் திறமையான நிர் வாகத்தை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக கருதுகிறது.

பாஜக நல்ல நிர்வாகத் துடன் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தேச ஒற்றுமை ஆகிய வற்றை மற்ற எதையும்விட மதிப் புள்ளதாகக் கருதுகிறது. மற்ற கட்சிகள் நல்ல நிர்வாகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மத சார்பின்மை என்கிற பெய ரில் அரசியல் செய்து வருகின்றன.

மதசார்பின்மை என்று கூறிக் கொள்ளும் மற்ற கட்சிகள் மக்களிடையே மத சார்பின்மை என்கிற போதையை ஊட்டிவிட்டு நல்ல நிர்வாகம், வளர்ச் சிப்பணிகள் மக்களை எட்டாமல் செய்துவிட்டன.

பாஜகவுக்கு நல்ல நிர்வாகம், மத சார்பின்மையும் முக்கியமானவையே. மத சார்பின்மை பேசும் மற்ற கட்சிகள் ஆட்சியில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்று எதுவுமே இல்லை. மத சார்பின்மை என்பது எத்தனையோ கொள்கை களில் ஒன்று. அது மட்டுமே கொள்கை அல்ல என்றார். பாஜக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமே இல்லை என்ற முக்தார் அப்பாஸ் நக்வி பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதி களில் காங்கிரசு கட்சி மன்னிப்பு கோருமா என் றும் கேட்டார்.

பாஜகவை நோக்கி மகாராட்டிரத் திலிருந்து ராம்தாஸ் அத்வாலே, பீகாரி லிருந்து ராம்விலாஸ் பஸ் வான், உத்தரப் பிரதேசத் திலிருந்து உதித் ராஜ் ஆகிய முக்கியத் தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் மூவரும் எப்படி வரமுடியும்? என்று கேட் டார். காங்கிரசார் தோல்வி பயத்தில் நிதான மிழந்து மோடியைப் பற்றிப் பேசி வருகின்றனர் என்று நக்வி கூறினார். முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டே கூறும்போது ஜாதி, மதம் என்கிற குறுகிய பாதை பாஜகவுக்கு இல்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76356.html#ixzz2v2y3JjUT

தமிழ் ஓவியா said...


கடவுளை மற - மனிதனை நினை! கடவுள்களைக் காப்பாற்ற அரசின் முயற்சிகள்!

சென்னை, மார்ச் 4- சிலைத் திருட்டைத் தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள 5 லட்சம் சிலைகளையும் படம் எடுக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறையினருக்கு காவல் துறையினர் அறிவுரை வழங் கியுள்ளனர்.

இது குறித்து பொருளா தார தடுப்புப் பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி. பிலிப், சிலை தடுப்புப் பிரிவு டி.அய்.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு சென்னையில் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கோயில் களில் மொத்தம் 28 சிலைகள் திருடு போயுள்ளன. இவற் றில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வரத ராஜ பெருமாள் கோயிலில் திருடு போன விநாயகர் சிலை மட்டும் மீட்கப்பட் டுள்ளது. எஞ்சியுள்ள 27 சிலை களும் வெளிநாடு களில் உள்ள அருங்காட்சி யகங்களிலும், கலைப் பொருள் சேகரிப் போரிடமும் உள்ளன. அவற்றை தற் போது மீட்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக அந்தந்த நாட்டு அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

முதல் கட்டமாக அமெ ரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து 3 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சி யகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் புரந்தான் கிரா மம் பிரகதீஸ்வரர் கோயி லில் திருடப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள நடராஜர் சிலையையும், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள விருத்தாசலம் விருதகிரீஸ் வரர் கோயிலில் திருடப் பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் மீட்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைத் திருட்டு கும்பலின் தலைவ ராக செயல்பட்ட சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவ ருடைய கூட்டாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக் காவில் 3 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், எதிர் காலத்தில் சிலைத் திருட்டை தடுக்கும் வகையில் தமிழ கத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இருக்கும் 45 ஆயிரம் கோயில்களில் உள்ள சுமார் 5 லட்சம் சிலைகளின் நிழற் படங்களை எடுக்க வலி யுறுத்தியுள்ளோம்.

இதே போல உலோக சிலைகளின் பின்புறம் கோயில், ஊர், தமிழக அர சுக்குச் சொந்தமானது என எழுத வேண்டுமென அற நிலையத்துறையிடம் தெரி வித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

(குறிப்பு: சில ஓட்டல் களில் தம்ளர்களில்.. இது இந்த... ஓட்டலில் திருடப் பட்டது என்று எழுதி இருக் கும் அல்லவா - அதுதான் இங்கும் நினைவிற்கு வருகிறது. என்னே கடவுள் சக்தி!)

Read more: http://viduthalai.in/e-paper/76338.html#ixzz2v2yPij1U