Search This Blog

5.3.14

பகத்சிங் புரட்சி வீரனா? வன்முறையாளனா?


பகத்சிங் ஒரு புரட்சி வீரன் - அவனை வன்முறையாளன் என்று சித்தரிப்பவர் கள் சீக்குப் பிடித்த நெஞ்சினர்.

1929 ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று நாடாளு மன்றத்தில் பகத்சிங்கும், அவரது நண்பன் பி.கே.தத் ஆகியோர் வீசிய வெடி குண்டுகூட அங்கிருந்த மனிதர்களை நோக்கியல்ல.

செவிடர்களுக்குச் சத்தம் போட்டுத் தெரி விக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தான் கூறினார்கள். வெடிகுண்டை வீசி விட்டு ஓடி ஒளிய வில்லை அந்த மாவீரர்கள்!

இன்குலாப் ஜிந்தா பாத்!, பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் ஒழிக!, உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! என்றுதான் முழக்கமிட்டனர்.

பகத்சிங்கைக் கைது செய்ய வந்தபோது என்ன நடந்தது? கைது செய்ய வந்த சார்ஜண்ட் டெர்ரி இதோ கூறுகிறான்:

நான் பகத்சிங்கிட மிருந்து துப்பாக்கியைப் பறித்துக்கொள்ளும்போது அதை என்மீது குறி வைக்க வில்லை; துப்பாக்கியை ஒரு விளையாட்டுப் பொருளைப் போலப் பிடித்திருந்தான் என்றுதான் கூறினான்.
 
லாகூர் தசராவில் வெடி குண்டு வீசினர் என்று வீண்பழி சுமத்தப்பட்டது அவர்கள் மீது. அந்தச் சதி வழக்கு நாடெங்கும் பேசப்பட்டது. பகத்சிங்கும் அவர்தம் தோழர்களும் சிறையில் இருந்தபோது அன்றைய பெருந்தலைவர்களாகப் பேசப்பட்ட மோதிலால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் சிறை யில் சென்று பார்த்து வந்தனர்.

புரட்சி என்பது இரத்த வெறி கொண்ட மோத லாகத்தான் இருக்கவேண் டுமென்ற கட்டாயம் இல்லை. தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வ தற்கும் அதில் இடம் இல்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடும் அல்ல; புரட்சி என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையா கக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றப்படவேண் டும் என்று நாங்கள் கூறுகி றோம் என்கிறான் அந்த மாவீரன் பகத்சிங்.
நாங்கள் போர்க் கைதி களே அதனால் தூக்கிலிடப் படுவதற்குப் பதிலாக நாங் கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று மரணத் தில்கூட ஒரு வீரம் தொனிக்க வேண்டும் என்று கருதிய மாவீரன் அவன்.

பகத்சிங் தனது கொள்கையை நிறைவேற்றக் கையாண்ட முறையில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நமது புத்திக்குத் தோன்றிய போதிலும், அவருடைய கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக் காலும் துணிய மாட்டோம்.

அதுவேதான் உலகின் சாந்த நிலைக் கொள்கையாகும். நாம் பகத்சிங்கை உண்மை யான மனிதர் என்று சொல்லுவோம் என்று குடிஅரசு, 29.3.1931 தலையங்கத்தில் குறிப்பிட்டார் தந்தை பெரியார்.

பாகிஸ்தானிலிருந்து ஒரு நல்ல சேதி வெளிவந்துள் ளது. பகத்சிங் வீடு, பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ளது. அம் மாவீரன் பிறந்த வீட்டைச் சீரமைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு ரூ.8 கோடியை அளித்துள்ளது.

------------------- மயிலாடன்  அவர்கள் 5-6-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/76429.html#ixzz2v8u0Parv

தமிழ் ஓவியா said...


மத்திய ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க. என்ன செய்தது?



காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தி.மு.க.வை நோக்கி சில வினாக்களை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்ததே - தமிழ்நாட்டு மக்களுக்கு எதைச் சாதித்துக் கொடுத்தார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின்மீது குற்றப்பத்திரிகை படிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அதனைக் குற்றமாகவும் கருத முடியாது.

அதேநேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக தி.மு.க. மத்தியில் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், 150 ஆண்டுகளுக்குமேலாக எதிர்பார்க்கப்பட்ட அரிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

இத்திட்டத்திற்கான செலவு ரூ.2427 கோடி. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று செல்வி ஜெய லலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

பி.ஜே.பி.கூட ராமன் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, இந்தத் திட்டமே கூடாது என்று அடம்பிடிக்கிறார்! உச்ச நீதிமன்றத்திலும் வழக்கைத் தொடுத்துள்ளார். இவ் வளவுக்கும் பல தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதும் இதே ஜெயலலிதா அம்மையார்தான் - அ.இ.அ.தி.மு.க.தான்!

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் அரசியல் பலன் தி.மு.க.விற்குச் சென்றுவிடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் முதல மைச்சர் தமிழ்நாட்டுக்கு - தி.மு.க. முயற்சியால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையே செயல்படுத்தத் தடையாக இருக்கிறார் என்பதுதானே உண்மை.

இந்தக் கேள்வியை எழுப்பும்முன்பாக, சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒன்று அவர் கண் முன்னால் நின்று மிரட்டியே இருக்கும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்கவே முடியாது.

இன்னொரு முக்கிய திட்டம் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம்வரையிலான பறக்கும் பாலம் அமைப்பு என்பது.

19 கிலோ மீட்டர் நீளம் உடைய இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்துத் திசையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகக் கன ரக வாகனங் களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்ததாக இருக்கும். சென்னை துறைமுகத்திலிருந்து பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். போக்குவரத்துத் துறை மேம்பாட்டால், பொருளாதார வளர்ச்சியும் அதனூடே பயணம் செய்கிறதென்று பொருள்.

1500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இதுவரை 900 கோடி ரூபாய் செல வழிக்கவும்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத் தையும் செயல்படுத்தக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இடைக்காலத் தடையும் பெற்றார்.

ஒப்பந்தக்காரரோ நான் செலவழித்துள்ள 900 கோடி ரூபாயை நட்ட ஈடாகத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டுள்ளார்.

திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் முதல்வர்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ் நாட்டுக்குத் திட்டங்கள் வருவதை இருகரம் கூப்பி வரவேற்கவேண்டுமே தவிர, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை முடக்கலாமா? இதனைத்தானே தமிழக முதலமைச்சர் செய்துகொண்டு இருக்கிறார்.

நாட்டு நலன் முக்கியமல்ல - அரசியல் இலாபம் இன்னொரு கட்சிக்குப் போய்விடக் கூடாது என்று நினைத்துச் செயல்படுவதற்கா ஒரு முதலமைச்சர்?

தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டதற்காக ஒவ் வொன்றையும் உருக்குலைப்பு வேலையில் ஒரு முதலமைச்சர் ஈடுபடலாமா?

புதிய சட்டமன்றக் கட்டடமாக இருந்தாலும் சரி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமாக இருந்தாலும் சரி, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டமாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்பதற்காக, அவற்றை உருக்குலைக்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நினைத்தால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது அரசியலில் பாலபாடமாகும்.

அதிகாரத்தில் இருக்கும்பொழுது, பல உண்மைகள் கண்களை மறைக்கலாம் - பாடம் படித்ததற்குப் பிறகுதான் காலங்கடந்து ஞானோதயம் பிறக்கும் என்பதைத் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/76433.html#ixzz2v8uZaMS2

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு-7


- குடந்தை கருணா

குஜராத்தில் அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி (INCLUSIVE GROWTH) இருப்பது போலவும், அதன் அனுபவம் மூலம் நாட்டிற்கே அந்த அனுபவத்தை தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், மோடி விளம்பரம் தருகிறாரே; அது உண்மையா? கடந்த பத்து ஆண்டுகளில், குஜ ராத்தில், நகர்ப்புற மக்கள் தான், அர சின் திட்டங்களால் பயன் அடைந் துள்ளனர். கிராமப்புற மக்கள் வறு மையில் தான் உள்ளனர். அதனால் தான், மனித வளர்ச்சிக் குறியீட்டில், குஜராத் 11 ஆவது நிலையில் பின் தங்கி உள்ளது. 2011 ஆம் கணக் கெடுப்பின்படி, குஜராத் கிராமங் களில், பதினோரு லட்சம் வீடுகளில், ஒன்பது லட்சம் வீடுகளுக்கு இன்ன மும் மின் வசதி இல்லை; கல்வி வசதியிலும், கிராமங்கள் பின்னோக் கியே இருக்கின்றன.

இதில், தலித்துகளும், ஆதிவாசி களுமே, அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர். குஜராத்தில் பழங்குடி மக் களில் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 65 விழுக்காடு குழந் தைகள் எடை குறைந்துள்ளனர்.

இந்திய நாடு முழுமைக்குமான விகிதம் 54.5 விழுக்காடு என்றால், குஜராத்தில் 65 விழுக்காடு. அதே போன்று, பழங்குடி இன குழந்தை கள் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். நூறு நாள் வேலை திட்டத்தில், இந்தியா முழு மைக்கும், 23 சதவிகிதம் தலித்துகள் பயன் அடைகின்றனர் என்றால், குஜ ராத்தில், வெறும் 8 விழுக்காடுதான், தலித்துகள் பங்கேற்க முடிகிறது. அதனால் தான், மோடியின் வெற்றி, நகர்ப்புறங்களில் அதிகமாகவும் கிரா மங்களில் குறைவாகவும் உள்ளது.

குஜராத்தின் முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்குமான முன்னேற் றம் என்பதாக இல்லாத ஒரு விசித்திர வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி, கிரா மங்களைச் சென்றடையவில்லை என்பதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் புறக்கணிக்கக் கூடிய வளர்ச்சி என்பதும் தான், அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டும் உண்மை என்பதை, பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளரும், லண்டனில் உள்ள இந்தியக்கழகத்தில், இந்திய அரசியல், சமூகத்துறையின் பேராசி ரியருமான கிறிஸ்டப் ஜாப்ரிலெட் ஆதாரங்களுடன் கட்டுரை வடித்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என முந் தைய பாஜக ஆட்சியில் சொல்லப் பட்டதற்கும், தற்போது குஜராத் மிளிர்கிறது என மோடி புளுகுவதற் கும் பெரிய வேறுபாடு இருப்ப தாகத் தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76443.html#ixzz2v8unX2jv

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையின் வித்து எனும் தலைப்பில் சூழியம் கூட்டத்தில் விவாதம்


திராவிடர் கழகத்தின் விழுதான சூழியத்தின் கூட் டம் 27.2.2014 அன்று மாலை 5 மணிக்கு சென்னை, பெரி யார் திடலில் சூழ்வலர் புலவர் மா.நன்னன் அவர் களின் தலைமையி லும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன் னிலையிலும் நடைபெற்றது.

செயலாளர் கலி.பூங் குன்றன் சூழ்வார்கள் வீ.கும ரேசன், கோ.கருணாநிதி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, வளர்தொழில் க. செயகிருட்டிணன், சூழியர் கள் பொறியாளர் வ.சுந்தர ராஜூலு, கோ.ஒளிவண்ணன், பிரின்ஸ் என்னாரெசு பெரி யார், மஞ்சை வசந்தன், டெய்சி மணியம்மை, இரா. தமிழ்ச் செல்வன், பொறி யாளர் கோவிந்தராசன், திரா விடப் புரட்சி சி.செங்குட்டு வன், சூழியத்தில் நிரந்தர சிறப்பு அழைப்பாளர் திரா விடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் பங்கு கொண்டனர்.

கடந்த கூட்டத்தில் (26.1.2014) அறிவித்தபடி மூடநம்பிக்கையின் வித்து என்னும் தலைப்பில் தோழர் கள் மஞ்சை வசந்தன் கோ. ஒளிவண்ணன், பொறியா ளர்கள் வ.சுந்தரராஜூலு, கோவிந்தராசன் மற்றும் வீ.குமரேசன், வழக்குரை ஞர் ஆ.வீரமர்த்தினி, டெய்சி மணியம்மை, திராவிடப் புரட்சி, சி.செங்குட்டுவன் ஆகியோர் கட்டுரைகளை அளித்தனர். அவற்றின் அடிப் படையில் விவாதங்கள் நடத் தப்பட்டன. அவை மிகச் சிறப்பாக, கருத்தூட்டமாக அமைந்திருந்தன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறைவாக கருத்து களை எடுத்து வைத்தார்.

அடுத்த கூட்டம் 22.3.2014 அன்று மாலை 5 மணிக்கு சென்னை, பெரியார் திட லில் நடைபெறும். அடுத்த கூட்டத்தின் தலைப்பு, மூடநம்பிக்கையின் வேர் என்று அறிவிக்கப்பட்டது.

சூழியத்தின் (திராவிடர் கழகம்) பெயரில் வங்கிக் கணக்கொன்று சென்னை பெரியார் திடலில் இயங் கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொடங்குவது என்றும் அதனை சூழியத் தின் செயலாளர் நிர்வகிப் பார் எனவும் தீர்மானிக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/76401.html#ixzz2v8wCirj6

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும். - (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/76467.html#ixzz2vEYurI3C

தமிழ் ஓவியா said...


இருதய நோய் மாரடைப்பைத் தவிர்க்க இதோ ஒரு எளிய வழி!

- வாழ்வியல் சிந்தனைகள்


உலகின் மிகப் பெரிய உயிர்க் கொல்லிகளில் முக்கியமானது இருதய நோய் - மாரடைப்பு.
முன்பெல்லாம் முதிய வயதினரை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த இந்த இதய நோய், இளம் வயதினரை யெல்லாம்கூட தாக்கிடும் பேரபாயம் நாளுக்கு நாள் மலிந்து வருகிறது.

அதற்கு ஒரு முக்கிய காரணம் இளையவர்கள் கண்டபடி; வேக உணவுகள் (Fast Foods) என்ற பெய ரில் விற்கப்படும் இறைச்சி உணவு களை வரைமுறையின்றி சாப்பிட்டு, தம் உடலில் கொழுப்பை ஏற்றிக் கொள்வதுதான்; அது திடீர் மாரடைப் பில் கொண்டு போய் நிறுத்துகிறது.

பொதுவாக ஆட்டிறைச்சி, சில வகையான கோழி இறைச்சி, மாட்டி றைச்சி, பன்றி இறைச்சி, போன்றவை கொழுப்பை மிக அதிகமாக நம் உடலில் சேர்த்து விடுகின்றன. எனவே கூடுமான வரை, மாமிச உணவுப் பழக்கம் உடையோர் அவைகளுக்குப் பதில், மீன் உணவை அதிகம் சாப்பிடு வது உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, கொழுப்பு சத்து அதிகம் ஏற்பட்டு மார டைப்பு நோய்க்கு மிகப் பெரிய தடுப் பானாகவும் உதவுகிறது!

உலகம் முழுவதிலுள்ள டாக்டர்கள் உணவு ஆலோசகர்கள் மீன் சாப்பிடுங் கள் என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்.

ஏன் என்பதற்கு இன்றைய செய்தித் தாளில் (தீக்கதிரில்) வெளி வந்துள்ள ஒரு செய்தி சிறந்த விளக்கமாக அமைந்துள்ள தால் அதனை அப்படியே தருகிறோம்.

மீன் இருதய நோயைத் தடுக்கும்

ஜப்பானியர்கள் மீனையும், மீன் எண்ணெய்களையும் அதிகமாக உண்ணு வதால் அவர்கள் இருதய நோயால் துன்புறுவதில்லை. எனவே அவர்களை உலகின் இதரபகுதியினரும் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை கூறத் தொடங்கியுள்ளனர்.

இருதயத்தில் இருந்து ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனியில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதால் உருவாகும் நோய்கள் அமெரிக்க மக்களோடு ஒப்பிடுகையில் ஜப்பானியரிடம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக பொது சுகாதார பட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். கடல் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் தமனிகளில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதை குறைக் கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிட்ஸ்பர்க் ஆய்வாளர்கள், ஜப்பான், ஹவாய், பிலடெல்பியா ஆய்வாளர் களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஐந்தாண் டுகளாக 500 பேரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அவர்களின் இருதய ஆரோக்கியத்தை இவர்கள் தொடர்ந்து பரிசீலித்து வந்தனர். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற இதயத்தை தாக்கக்கூடிய காரணிகளான பழக்கமுள்ளவர்களின் ரத்தக்கொழுப்பு, சர்க்கரை, ஆகியவற்றுக்காக சோதித்து வந்தனர். இந்த சோதனைகளின் பல னாக அமெரிக்கர்கள் ஜப்பானியர்களை விட மூன்று மடங்கு அதிகமாக தமனி ரத்தக்குழாய் கால்சியம் உப்புகள் படிதலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டு பிடித்துள்ளனர். அத்துடன், கடல் வழியாகப் பெறப் பட்ட ஒமேகா-3 கொழுப்புஅமிலத்தின் அளவு வெள் ளையரைக் காட்டிலும் ஜப்பானியரின் ரத்தத்தில் நூறு விழுக் காடு அதிகரித் திருப்பதையும் அவர்கள் கண்டுள்ளனர்.

ஓமோகா- 3 என்ற மாத்திரைகள் இப்போது எங்கும் கிடைக்கிறது. வாங்கி குறைந்தது ஒன்றிரண்டை காலை உணவு, மதிய உணவு இரவு உணவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/76470.html#ixzz2vEZGTc24

தமிழ் ஓவியா said...


மன்னிப்பா?


நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்து இருந்தால், மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என அண்மையில் முஸ்லீம் மக்களி டையே உரையாற்றிய பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். காலையில் பேசிய தனது பேச்சுக்கு, அன்று மாலையே விளக்க மும் அளித்தார். அதாவது, தனது மன் னிப்பு பற்றிய பேச்சு, குஜராத் கலவ ரத்தை ஒட்டி சொல்லப்படவில்லை என்றும், பொதுவாக சொன்னதாகவும் கூறினார். ராமன் அங்கே தான் பிறந் தான் எனக் கூறி, நானூறு ஆண்டுகால பாபர் மஜ்ஜித்தை இடித்துத் தரை மட்டம் ஆக்கிவிட்டு, அதன் தொடர்ச்சி யாக நாடு முழுவதும் அப்பாவி சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத் துகள் சூறையாடப்பட்டன.

இத்தகைய கலவரத்தை பாஜகவும், சங் பரிவாரும் செய்தது தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? 2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைச் சாக்காக வைத்து, ஏறத்தாழ இரண்டா யிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற் கும், அந்த மாநிலத்தில் அவர்கள் வாழ்வதற்குப் பயந்து ஓடுவதற்கும், மோடி தலைமையிலான அரசு செய்த அரசு பயங்கரவாதம் தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? பிப்ரவரி 2007-இல் ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த சம்ஜாயுதா விரைவு ரயில், குண்டு வெடிப்புக் குள்ளாகி, நமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 68 பேர் பலி யானார்கள்.

அந்த குண்டு வெடிப்புக்கு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனச் சொல்லப்பட்டு, அதில் இராணுவ அதிகாரி பிரசாந்த் சிரீகாந்த் புரோகித் ஈடுபட்டதை, சுவாமி அசீதானந்த் வாக்குமூலமும் அளித்தாரே; இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? செப்டம்பர் 2008-இல், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் எட்டு பேர் இறந்தனர். சாத்விக்கும், ராணுவ வீரர் புரோகித்திற்கும் இதில் தொடர்பு உண்டு என்று வழக்கு நடைபெறு கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆசியுடன் தான் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றதாக சுவாமி அசீதானந்த் பேட்டி அளித்து, அது அண்மையில் கேரவான் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே. இந்த கலவரங்கள் எல்லாம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? குற்றங்களுக்குத் தீர்வு தண் டனையா அல்லது மன்னிப்பா? மன் னிப்பு தருவதற்கு, இந்திய குற்றவியல் சட்டம் தேவாலயம் அல்ல, ராஜ்நாத் சிங். அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் கூட்டணியில் சேர்த்திட நீங்கள் மெனக்கெடும், கேப்டனுக்கு மன் னிப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜ்நாத்சிங்? அவர் காதில் விழுந்தால், உங்களை மன்னிக்கவே மாட்டார்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/76478.html#ixzz2vEZVB8Gt