Search This Blog

12.3.14

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு!

புரட்சி

“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்.

அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் “புரட்சி”யை புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை.

நமது முதலாளிவர்க்க ஆக்ஷியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை” அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்” என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது “புரட்சி”யானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவரவேண்டி யதாகிவிட்டது.

இதன் காரணமாய் “புரட்சி” எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம். எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம். ஆனால் சுயமரியாதை புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும் வரை ஒரு க்ஷணமும் ஓய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி.

காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும் மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று வியக்தமாக எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.

மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி.

மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.

மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.

மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல்.

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.

மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி 

என்கின்ற முடிவின்பேரிலேயே “புரட்சி” தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

ஆதலால் மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டுபிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சி யடைகின்றோம்.

சோம்பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக் கருதி சுயமரியாதை இயக்கப் போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர்களுடையவும் ஆதரவு நம் “புரட்சி”க்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே “புரட்சி” தோன்றியிருக்கிறது.

ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினி யாயும் சமூக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே “புரட்சி” எதிர்பார்த்து நிற்கிறது.

வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல.

அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை.

சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது.

அது உயிருள்ளவரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும்.

ஆதலால் “புரட்சி”யில், ஆர்வமுள்ள மக்கள் “புரட்சியை” ஆதரிக்க வேண்டுகிறோம்.

------------------------------------ தந்தைபெரியார் “புரட்சி” - தலையங்கம் - 26.11.1933

40 comments:

தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியா? தளர்ச்சியா? தமிழர் தலைவர் கேள்வி

அ.இ.அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் நோக்கமாக மூன்று அறிவிக் கப்பட்டுள்ளன.

1) அமைதி, 2) வளம், 3) வளர்ச்சி

இவற்றில் வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்று பார்ப்போம்!

குறிப்பாக சேது சமுத் திரத் திட்டம் 150 ஆண்டு காலமாக தமிழர்கள் கனவு காணும் திட்டம்; கடைசி யில் அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசில் அந் தத் திட்டம் செயல்பாட் டுக்கு வந்தது. ரூ.2427 கோடி இதற்காக ஒதுக்கப் பட்டு பெரும்பாலான அளவில் பணிகள் நடை பெற்றுள்ள சூழலில், தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கியுள்ளார்.

அண்ணாவின் கொள் கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்; ராமன் பாலத்தை இடித்து இந்துக் களின் மனதைப் புண் படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத் தக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்து, இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று கூறுகிறார். பாரதீய ஜனதா கட்சிகூட ராமன் பாலம் அல்லாத வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறுகிறது. நமது முதல் அமைச்சரோ திட்டம் அறவே கூடாது என்கிறார்.

அதே நேரத்தில் அதே அ.இ.அ.தி.மு.க. இதற்கு முன் மூன்று தேர்தல் அறிக் கைகளில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து என்ன கூறி இருக்கிறது?

1999ஆம்ஆண்டு நடை பெற்ற தேர்தலின் போது அ.இ.அ.தி.மு.க. வெளி யிட்ட தேர்தல் அறிக்கை பக்கம் மூன்றில் என்ன கூறப்பட்டு இருந்தது?

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப் படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் உரையில் கூறி விட்டு, ஒரு சல்லிக் காசுகூட அதற்கென நிதி ஒதுக்காது ஏமாற்று நாடகம் நன்றாக நடத்தினார் என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.

2001 மே 10 இல் நடை பெற்ற தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி. முக. என்ன கூறி இருந்தது?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத் திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங் கையைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டி யுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத் திரத் திட்டம். இத்திட்டத் தின்படி ராமேஸ்வரத்திற் கும், இலங்கையின் தலை மன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்கு வரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.

சேது சமுத்திரத் திட் டத்தால் நம் நாடு மட்டும் அல்ல. தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன டையும்; வாணிபமும் தொழி லும் பெருகும்; அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந் நியச் செலாவணி அதிகம் கிடைக்கும்; கப்பலின் பயணத் தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொரு ளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்; குறிப்பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற் பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்புப் பெருகும்; தூத் துக்குடி துறைமுகம் சர்வ தேச அளவில் விரிவடை யும்; சுற்றுலா வளர்ச்சி யடையும்.

இன்ன பிற நன்மை களைத் தர இருக்கும் இத் திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை கழக அரசு வெகுவாக உணர்ந்தி ருக்கிறது. நிதி நெருக்க டியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட் டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது.

தமிழ் ஓவியா said...

இப்போது ராமன் பாலம் என்று கூறி, அதனை இடிப்பது இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் என்ற கூறி உச்சநீதிமன்றம் வரை சென்று ஒப்பாரி வைக்கும் ஜெயலலிதா அம்மையார் 2001 தேர்தல் அறிக்கையில் வெறும் மணல்மேடுகள் என்று எழு தியிருப்பதைக் கவனிக்கவும்.

அதோடு மட்டுமல்ல.

2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் (பக்.33) அ.இ.அ.தி.மு.க. குறிப்பிட்டு இருந்ததென்ன?

தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்த தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றவிருக் கும். சேது சமுத்திர திட்டத் தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட் சியில் அமைச்சர் பொறுப் பில் இருந்த தி.மு.க., ம.தி. மு.க., பா.ம.க., கட்சிகள் தவறி விட்டன.

இதை நாடு நன்கு அறியும். இத்திட் டத்திற்குப் போதிய நிதி யினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசைக் கழகம் வலியுறுத்தும் என்று 2004 மக்களவைத் தேர் தலுக்கான தேர்தல் அறிக் கையில் அ.இ.அ.தி.மு.க. குறிப்பிட்டு இருந்ததே!

சேது சமுத்திரத் திட்டம் என்பது என்ன? அதனால் ஏற்படும் பயன் என்ன? என்றெல்லாம் தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்டிருந்த அ.இ.அ.தி. மு.க. அதன் பொதுச் செய லாளர், முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவற்றிற்கு முற்றிலும் முர ணாக அரசியல் காழ்ப் புணர்ச்சியின் காரணமாக திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கியுள்ளார் என்றால் - இதுதான் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் முக்கியமாகக் கூறும் வளர்ச்சிக்கான அடையாள மா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இது வளர்ச்சியல்ல - தளர்ச்சியே!

மதுரவாயல் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையிலிருந்து (10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76768.html#ixzz2vhUpFl8V

தமிழ் ஓவியா said...

நாங்கள் சொன்னால் அது அக்மார்க் முத்திரை

திராவிடர் கழகம் ஒன்றும் தேர்தல் கூட்டணிக் கட்சியல்ல. யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று அடையாளம் காட்டும் தகுதி கருஞ் சட்டைக்கு உண்டு. காவலுக்குக் கெட்டிக்காரன் கறுப்புச் சட்டைக்காரனாயிற்றே!

எதையும் மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து நல்ல முடிவை மக்களுக்குத் தெரிவிப்பவர்கள்; நாங்கள் சொன்னால் அது அக்மார்க் முத்திரை. தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் இருக்கும் பொத்தானை அழுத்துங்கள் - அதன் மூலம் நாட்டுக்கே வெளிச்சம் கிடைக்கும் - அதே போல அதன் தோழமைக் கட்சி களுக்குரிய சின்னங்களின் பொத்தானை அழுத்தி வெற்றிப் பெறச் செய்வீர்!

- மதுரவாயல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76768.html#ixzz2vhV0bJhw

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நமோ நமோ பஜனை பாட முடியாது மோடிக்கு மோகன் பகவத் எச்சரிக்கை!


டில்லி, மார்ச்.11- ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப் பின் தலைவர் மோகன் பக வத் அந்த அமைப்பின ருக்கு விடுத்துள்ள எச்சரிக் கையில் பாஜகவை ஆதரித் துப் பணியாற்றும் ஆர். எஸ்.எஸ். தன் எல்லையைக் கடந்து பணிபுரிவதாகவும், நமோ பஜனை பாடுவது அந்த அமைப்பின் பணி யல்ல என்றும் எச்சரித்துள் ளார். இதன்மூலம் பாஜகவின் கொள்கைகளை முடிவு செய்வது ஆர்.எஸ்.எஸ். என் பதும், மோடியை ஆதரித்து முழுவீச்சுடன் ஆர்.எஸ். எஸ். களமிறங்கி பணிபுரிந் துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் ஞாயி றன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதி சபாக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப் போது பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரும், பாஜகவின் பொதுச்செயலாளருமாகிய ராம்லால் ஆகியோரும் அந் தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசும் போது குறிப்பிட்டதாவது:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியலில் இல்லை. நம் முடைய வேலையும் நமோ பஜனை பாடுவது இல்லை. நமக்கான இலட்சியத்துக் காகவே நாம் பணிபுரிய வேண்டும். இடைவெளி விட்டு பணியாற்றுவது தற் போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது.

இன்றைய நாளில் அடுத்த அரசை யார் அமைக் கிறார்கள் என்பதைவிட, மிகப்பெரிய கேள்வி யார் அடுத்த அரசை அமைத்து விடக்கூடாது என்பதில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/76776.html#ixzz2vhVBHGzZ

தமிழ் ஓவியா said...


வளமா? வறட்சியா?


இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த மதுரவாயல் சம்பந்தப் பட்ட ஒரு வளர்ச்சித் திட்டம் - துறைமுகத்தி லிருந்து மதுரவாயல்வரையிலான பறக்கும் பாலமாகும். ரூ.1800 கோடி மதிப்பிலான திட்டம் இது. தி.மு.க.வின் முயற்சியால் அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்களும் இருந்தமை யால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

இந்தத் திட்டத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் உயர்நீதிமன்றம் சென்றார். அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற திட்டங்களை முடக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், அதோடவாவது தடை செய்யும் முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது இந்த அரசு.

சென்னை மதுரவாயல் பகுதி திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வேலுச்சாமி ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசின் தலையில் ஓங்கிக் குட்டி வளர்ச்சித் திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு முடக்கக்கூடாது என்று கூறிவிட்டதே!

இதற்கு முன்பே பிரதமர், அரசு செயலாளர் ஒருவரை இத்திட்டம் குறித்துப் பேச தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தத் திட் டத்தை நிறைவேற்றிட மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரிய பிறகும், அதற்கு உடன்படத் தயாராக இல்லை.

தாம்பரம் இராவணன் நிறுவனத்தின் சார்பில் மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்ட மாணவரணி தலைவர் சிவசாமி ஆகியோர் ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

மத்திய அரசு மாநில அரசு திட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றஞ் சொன்ன நிலைமை போய், மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்ற அவலம் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது.

1800 கோடி ரூபாயில் முடியவேண்டிய இந்தத் திட்டம், காலதாமதத்தால், மேலும் 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. 400 கோடி ரூபாய் என்றால், யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப் பணம்தானே வீணாகிறது.

இந்தத் திட்டத்தால் இந்த ஊரான மதுர வாயல் உலகெங்கும் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பாலம் என்ற பெருமைக்குரியது; 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகள் விரைந்து செல்லவும் - சரக்குகள் வந்து சேர வும் பெரிதும் பயன்படக்கூடியது. அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி என்பதோடு வளம் என்று கூறப் பட்டுள்ளதே - அப்படி ஒருபக்கம் கூறிவிட்டு, நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய இந்தத் திட் டத்தை முடக்குவது வளத்துக்கு அறிகுறியா? வறட்சிக்கு அறிகுறியா?

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/page-8/76766.html#ixzz2vhVPEfhu

தமிழ் ஓவியா said...

மதுரவாயல் கொடுத்த வெளிச்சம்!

சென்னையை அடுத்த மதுரவாயலில் அன்னை மணியம்மையார் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் பெரியார் உலகம் நிதியளிப்பு விழாப் பொதுக் கூட்டம் நேற்று மாலை ஆவடி மாவட்டக் கழகச் செயலாளர் பா. தென்னரசு தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை - நிறைவுரையாற்றினார்.

மதுரவாயல் எனும் பகுதி இப்பொழுது சென்னைப் பெரு நகரத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். அண்மைக் காலத்தில் மிக பெரிய அளவில் வளர்ச்சி பெற்ற பகுதியாக வளர்ந்தோங்கி நிற்கிறது. கல்வி நிறுவனங்களும், சிறு சிறு தொழிலகங்களும் பொங்கி வழிந்து புதுப்பொலிவை வழங்கியுள்ளன.

இந்தப் பகுதியில் திராவிடர் கழகப் பிரச்சாரம் எட்டவில்லை என்று தான் பொதுவாகச் சொல்ல வேண்டும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இராணு வப் புரவி வேகம் போல அந்த வட்டாரத்தில் கழகம் பெரும் பாய்ச்சலாக வளர்ந்தோங்கி வருகிறது. அருமை யான இளைஞர் குழாம் இயக்கத்திற்குக் கிடைத்துள்ளது.

கழக இளைஞர்களின் பாசறை போல காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன; அதன் விளைவு மேலும் இளைஞர்களை, தொழிலாளர்களை கழகத்தின் பால் ஈர்த்துக் கொண்டுள்ளது. தமிழர் தலைவரை எப்படியும் மதுரவாயலுக்கு அழைத்துப் பெரிய அளவில் பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற அவர்களின் பேரவா நேற்று பூர்த்தியாகி விட்டது. கழகத் தோழர்களுக்கோ மட்டமற்ற மகிழ்ச்சி - பொது மக்கள் மத்தியிலே மிகப் பெரிய வரவேற்பு! கூட்ட நிகழ்ச்சிக்காக நன்கொடையைத் திரட்டச் சென்றபொழுது முகம் சுளிக்காமல் முகமலர்ந்து வழங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


நம்முடைய கழகத் தோழர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உள் வாங்கிக் கொள்ள மக்கள் தயாராகத் தானிருக்கிறார்கள்! அரசியல் மீது அதிருப்தி கொண்ட வர்கள்கூட சமுதாய இயக்கமான திராவிடர் கழகத்தின்மீது அளப்பரிய பற்றும், மதிப்பும் கொண்டுள்ளனர். இந்த இயக்கம் பரவ வேண்டும்; பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு காவல்துறை அதிகாரி கூறியதைக் கழகத் தோழர்கள் கூறினர். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் பரவினால்தான். பெரியார் கொள்கைகளை உள் வாங்கச் செய்வதன் மூலம்தான் மாணவர்களை இளைஞர்களை ஒழுங்கும், கட்டுப்பாடும் நிறைந்த இடத்திற்கு அழைத்து வர முடியும் என்று சொன்ன கருத்து உண்மைதானே! நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலையை அறிந்தவர்கள் காவல்துறையினர் அல்லவா - அந்த அனுபவத்தில் சொல்லப்பட்ட செம்மையான கருத்தாக இதனைக் கொள்ள வேண்டும்.

பெரியார் உலகத்திற்கும் கட்சிகளைக் கடந்து நிதி வழங்கிட ஆர்வம் காட்டுவது மன நிறைவைத் தருகிறது. தமிழர் தலைவரை அழைத்து நடத்தும் சிறப்புப் பொதுக் கூட்டம் என்பதால் ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாகவே இருந்தன. இளைஞர்களின் இயல்பான ஆர்வப் பெருக்கையும் காண முடிந்தது. 16ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க. அறிவித்த அதே நாளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது - கூடுதல் எதிர் பார்ப்பைப் பொது மக்களிடம் ஏற்படுத்தியது என்பதும் உண்மைதான். அதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது மக்களும், வணிகப் பெரு மக்களும், தொழி லாளர்களும், பெண்களும் பெரும் அளவில் திரண்டு கழகத் தலைவரின் உரையைச் செவி மடுத்தனர்.

தமிழர் தலைவர் பின்பற்றிய அந்தப் பண்பாடு அனைவரையும் கவர்ந்தது. தேர்தல் நேரம் என்பதால் 10 மணிக்குள் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டுமே! எனவே 45 நிமிடங்கள் உரையாற்றி 9.50 மணிக்கெல்லாம் உரையை முடித்த கழகத் தலைவர் நன்றியுரை கூற வந்த கழகத் தோழரை ஒரு நிமிடத்தில் அதனை முடிக்கச் செய்தார். ஒலி பெருக்கியை நிறுத்திவிட்டு, கூட்டம் நடத்த ஒத்துழைத்த தோழர்களுக்கெல்லாம் கூட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்ட நேர்த்தியை காவல்துறையினரும், பொது மக்களும், குறிப்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பார்த்துத்தானே இருப்பார்கள்.

ஓர் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்றால் அது திராவிடர் கழகத்தவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் நினைக்கும் அளவுக்கு - மதிக்கும் அளவுக்கு நமது கழகத் தோழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமது தலைவர் அவர்கள் பாடம் நடத்தியிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. ஒரு வகுப்பு என்பது கூட பொதுவாக 40 மணித் துளிகள் தானே. அந்த நேர அளவுதான் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் எனும் உளவியல் காரணமாகக்கூட அது இருக்க லாம் அதனைத்தான் கழகத் தலைவர் கடைப் பிடித்தாரோ!

பொதுக் கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்துகள் முக்கியமானவை 1) அன்னை மணியம்மையாரின் கொள்கை உறுதி - எளிமை - தியாகம் - தலைமைப் பண்பு இவற்றைப் படம் பிடித்துக் காட்டினார். 2) மனிதன் என்றால் பகுத்தறிவுவாதி - அது மனிதனிடம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக நடந்து கொள்ள வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக குருவி ஒரே மாதிரியாகத்தானே கூடு கட்டுகிறது - மனிதன் அப்படி அல்லவே - வீடு கட்டுவதில் கூட எவ்வளவு வளர்ச்சி என்பதை எளிமையாகப் பகுத்தறிவின் பரிணாமத்தை விளக்கினார்.

3) நடக்க இருக்கும் தேர்தலில் திமுக அணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதைக் காரண காரியத்துடன் விளக்கினார்; அதே நேரத்தில் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி திராவிட இயக்கக் கொள்கைக்கு விரோதமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் வளர்ச்சித் திட்டங்களை முடக்கி வருவதையும் குறிப்பாக சேத சமுத்திரத் திட்டம் பற்றியும் ஆவணங்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார். நாட்டில் இருள் விலகி வெளிச்சம் பரவிட, உதய சூரியன் சின்னம் உள்ள பொத்தானை அழுத்துவீர் என்று தலைவர் சொன்னது - மதுரவாயலுக்கு மட்டுமல்ல; தமிழ்நாடு முழுமைக்கும்தான். மதுரவாயல் நிகழ்ச்சியை மகத்தான வகையில் நடத்திக் காட்டிய தோழர்களுக்கு மீண்டும் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்.

Read more: http://viduthalai.in/page-2/76781.html#ixzz2vhVny8gR

தமிழ் ஓவியா said...


மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைபிடிக்கக் கூடியவன் எவனோ, அவனைத் தான் மனிதன் என்று கூற முடியும்.

- (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/76780.html#ixzz2vhVy5nez

தமிழ் ஓவியா said...


நலந்தானா? நலந்தானா?


தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் என்ற யூனியன் பிரதேசம் - ஆகியவைகள் உள்ள 14,227 பேர்களிடம் ஒரு உடல் நலம் பற்றிய மருத்துவ ஆய்வு சர்வே மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் என்ற அமைப்பு மேற் கொண்டது.
அதன் ஆய்வறிக்கையில் காணும் முக்கிய தகவல்கள் நம்மில் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்யக் கூடிய வைகளாக உள்ளன.

54.4 சதவிகிதத்தினர் அங்குள்ள மக்கள் தொகையில் எவ்வித உடலு ழைப்போ, உடல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டோ வாழ்வதில்லை என்று கண்டறிந்து உள்ளனராம். என்னே கொடுமை!

டாக்டர்ஆர்.என். அஞ்சனா என்பவர் தலைமையில் இந்த- சர்க்கரை நோய் ஆய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி அவர்கள் கண்டறிந்த உண்மைகள் (பெட்டி செய்தியில் காண்க). ‘Journal of Behavioural Nutrition and Physical Activity‘ என்ற ஆய்வு ஏட்டில் வெளியாகியுள்ள இத்தகவல் களில் பெரும்பாலானவர்கள் - தொலைக்காட்சி பார்ப்பதிலேயே - அமர்ந்து நல்ல உருளைக்கிழங்கு போண்டாக்கள் போல ஆகி, சர்க்கரை நோய்க்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து நோயாளிகள் என்ற மிகப் பெரிய படையில் நாளும் சேர்ந்து கொண்டே உள்ளனர்!

குறைந்தபட்சம் 20 மணித் துளிகள் கூடவா நடக்க, ஓட, உடற்பயிற்சி செய்ய ஒதுக்கிடக் கூடாது?

நோய் தாக்கிய பிறகு நாம் டாக்டர் களிடம் சென்று மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்ற வீணே காலத்தையும், பணத்தையும் செலவழித்து அவதிப்படுவதைவிட, நாம் நாளும் அரைமணி நேரம் குறைந்த பயிற்சியான - பாதுகாப்பான பயிற்சியான நடை பயிற்சியை(Walking) அல்லது சிறு வேக ஒட்ட நடைப்பயிற்சி (Jogging) செய் யலாமே! எது இவர்களுக்கு நல்லது என்ற யோசனை வேண்டாமா?

நடைப்பயிற்சியை நாளும் செய்ய என்ன கட்டணமா செலவா? ஒன்றும் தேவைப்படாதே! கிராமப்புற மக்கள் உடல் உழைப்பை நாளும் செய்வதால் அவர்கள், நகர்ப்புற மக்களைவிட (ஒப்பீட்டு அளவில்) சிறப்பாக இந்த உடல் உழைப்பு - அதனால் சுறுசுறுப் புடன் இயங்கும் - தன்மை உடைய வர்களாக உள்ளனர்!

நாளும் எழுந்து காலைக் கடன் களை முடித்து, உடன் நடைப்பயிற் சியை செய்து பிறகு அன்றாடப் பணியை நாம் மேற்கொள்ள முயலும் போது, நமது மனம் சுமையற்றதாக, பசுமையான உணர்வின் குடியிருப்பாக அமையும் வாய்ப்பிருக்கிறது!

எனவே, இருபாலரும் இந்த நடைப்பயிற்சியை ஒதுக்காதீர்கள்! ஒழுங்காகச் செய்து தேவையற்ற மருத் துவச் செலவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்!

பிறகு நாம் அடுத்தவர்களைப் பார்த்து நலந்தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று பெருமிதத்துடன் விசாரித்து நல்லதோர் வாழ்வு பெற முடியுமே!

Read more: http://viduthalai.in/page-2/76783.html#ixzz2vhWBFcua

தமிழ் ஓவியா said...


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை - திராவிட இயக்கச் சித்தாந்தங்களின் பெட்டகம்!


தமிழ் உட்பட மத்திய ஆட்சி மொழி மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்போம் 100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை - திராவிட இயக்கச் சித்தாந்தங்களின் பெட்டகம்!

* மகளிர்க்கு அதிகாரம்
* தனியார் துறையில் இடஒதுக்கீடு
* 50 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு
*கூட்டாட்சி முறை

சென்னை, மார்ச் 11- நூறு அம்சங்களைக் கொண்ட திராவிடர் இயக்கச் சித்தாந்தங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையினை தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று (11.3.2014) வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை

2014 திராவிடமுன்னேற்றக் கழகம்

1. முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தென்னகத்தில் கண்மூடிக் கிடந்த திராவிட மக்கள் கண்திறக்கத் துணை யாக 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனார் தொடங்கிய மதராஸ் அய்க்கிய லீக் (Madras United League) அமைப்பும், கல் லூரியில் படிக்கச் சேர்ந்த திராவிட மாணவர்கள் தங்கிப் பயில திராவிட மாணவர் விடுதியும் (Dravidian Students’ Hostel;

பின்னர் 1916ல் திராவிடர் உரிமைக் குரல் எழுப்ப சர்.பிட்டி.தியாக ராயரும் டாக்டர் நாயரும் டாக்டர் நடேச னாரும் இணைந்து உருவாக்கிய தென்னிந்திய நல வுரிமைச் சங்கமான நீதிக்கட்சியும்;

தொடர்ந்து தேசிய இயக்கத்தில் நிலவிய உயர் வகுப்பார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமும்,1938இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் எழுச்சி பெற்ற தமிழர்களின் தலைவராக உயர்ந்த தந்தை பெரியார் அவர்களின் தலைமையினாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனை யாற்றலாலும் உருக் கொண்ட இனஉணர்வு காரணமாக, 1944இல் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உருப் பெற்ற திராவிடர் கழகமும் என நுறு ஆண்டுகளைக் கடந்த ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமை காக்கவும், தந்தை பெரியாரின் குறிக்கோளை எய்திடவும், தேவைப்பட்ட தொரு ஜனநாயக இயக்கமாக 1949இல் அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே திராவிட முன் னேற்றக் கழகம்.

கடந்த 65 ஆண்டுகளாக, மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உரிமைகளைக் காத்து, சாதி, சமயப் பகை நீங்கிய சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் பாடுபட்டு வருவதோடு, தமிழ் இன, மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாத்திட ஓயாது பணியாற்றி வருவது திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ் ஓவியா said...


கொள்கைகளும் இலட்சியங்களும் பிரவாகம் எடுத்து - தடம் பிறழாமல், பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியாக தி.மு.கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி, 1969ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநில அரசியலில் மட்டு மன்றி, இந்திய அரசியலிலும் ஜனநாயக நெறிகளைக் காத்திடவும், இந்தியா ஒரு வலுவான பொருளாதார அமைப்பினைப் பெற்றிடவும், சாதி,சமய பேதமற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடவும், உலக அளவில் நமது நாட்டின் மதிப்பினை உயர்த்திடவும் தலைவர் கலைஞர் அவர்களின் ஈடு இணையற்ற தலைமையில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றி வருகிறது தி.மு.கழகம்.

இந்தப் பேரியக்கத்தை உருவாக்கி, ஆல் போல் தழைக்க வைத்து, மக்களின் வற்றாத பேரன்பைப் பெறச் செய்த, தலைவனாக, ஆசானாக, வழிகாட்டியாக விளங்கி, இன்று வங்கக் கடற்கரை ஓரம், நீடுதுயில் கொண் டிருக்கும் பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடம் நோக்கித் தொழுது,

ஆட்சியில் அமர்ந்துள்ள காலத்தில், மக்கள் நலனே தம் நலனெனக் கருதித் தீட்டிச் செயல்படுத்தப்படும் திட்டங் களால் மக்கள் மகிழ்ந்து பாராட்டும் நிலையில் இருந் தாலும்; எதிர்க்கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியின் அடக்குமுறை, அதிகார வேட்டை, அராஜகம், காரணம் இல்லாமல் நள்ளிரவில் தலைவர் வீட்டிலேயே புகுந்து தாக்குதல், சட்ட துஷ்பிரயோகம் ஆகியவைகட்கு ஆட் பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தாலும், எல்லா நிலையிலும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று பணியாற்றும் தி.மு.கழகத்தை; புயல் நடுவிலும் அகல் விளக்கின் சுடர் அணையாமல், காக்கும் கரங்களைப் போல, கழகத்தைப் பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி கூறி இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறோம். 36 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, நம் மொழி, இனம், பண்பாட்டின்மீது நடைபெற்றுவரும் நீண்டகாலப் படையெடுப்புகளை அம்பலப்படுத்தி, ஆதிக்கசக்தியினை முறியடித்திடத் தொய்வில்லாமல் தொடர்ந்த முயற்சியில், தனது கடைசிநாள்வரை ஒரு போராளியாய்த் திகழ்ந்தவரும்; அதே உணர்வோடு வளரும் நாடுகளின் உரிமைகள் பறிபோகாமல் அவற்றை சியாட்டில் மற்றும் தோகா உலக வர்த்தக மாநாடுகளில் பாதுகாத்துத் தந்தவரும்; உயர்ந்த அரசியல், பொருளியல், சமூகச் சிந்தனையாளராகத் திகழ்ந்து, இலட்சியக் கதிராக விளங்கிக் கொண்டிருந்தவரும்; நம் நெஞ்சில் என் றென்றும் நிறைந்து வாழும் முரசொலிமாறன் அவர்கள் இதுகாறும் தயாரித்து அளித்த தேர்தல் அறிக்கைகளில் முழங்கிய இலட்சியக் கனவுகளையும் நோக்கங்களையும் எதிரொலித்திடும் வண்ணமே இந்தத் தேர்தல் அறிக் கையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.கழகத்தின் சாதனைகள்:

1990ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சியிலே தான், கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தியதன் காரணமாக, சமூக நீதிக் காவலர், திரு. வி.பி. சிங் அவர் களால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது; காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; மாநிலங்களிடை மன்றமும் அப் போது தான் உருவானது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா அவர் களின் திருப்பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் திருப் பெயரும் சூட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 1996ல் ஐக்கிய முன்னணி அரசிலும் 1999ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் தி.மு. கழகம் பங்கு பெற்று, மத்தியில் நிலையான ஆட்சி யை நிறுவுவதற்கும், கழகத்தின் அடிப்படைக் கொள் கைகளான சமத்துவம், சமூக நீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி, மொழி உரிமை, வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கின்றது. தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசில் கழகம் பங்கேற் றிருந்த காலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்துதல் - அரசிய லமைப்புச் சட்டப் பிரிவு 370அய் நீக்குதல் போன்ற சிறுபான் மைச் சமூகத்தினரின் நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தடுத்ததோடு, அயோத்திப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் 2004ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று 2013ஆம் ஆண்டு வரை அமைச் சரவையிலும் இடம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் கழகம் ஆற்றியுள்ள பணிகள் குறிப் பிடத் தக்கவை ஆகும். மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகப் பணியாற்றிய முரசொலி மாறன் அவர்கள் தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், இந்திய வேளாண்மையைப் பாதுகாக்கப் பல மணிநேரம் தன்னுடைய கருத்துக்களை விரிவாக எடுத்து வைத்த பாங்கினை உலக நாடுகளே பாராட்டின.

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களை அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரம் பிரித்து, மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிறுவனங் களை நவரத்னா என்று அறிவித்ததோடு, ஏனைய பொதுத் துறை நிறு வனங்களின் செயல்திறனை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரிதும் பாராட்டைப் பெற்றவையாகும்.

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின் அடிப் படையில் உருவான அறிவுசார் சொத்துரிமை வாரியத்தின் தலைமை அலுவலகத்தைச் சென்னையில் நிறுவச் செய்த பெருமையும் அவரையே சாரும்.

2004ஆம் ஆண்டு தொடங்கி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கழக அமைச்சர்களின் முயற்சியால் பல்வேறு வகைகளில் தமிழகம் நன்மை அடைந்திருக்கிறது.

* தமிழ், செம்மொழி என்ற பிரகடனம்; சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய அரசு நிறுவனம்.

* 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேதுசமுத்திரத் திட்டம். ர் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் - 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில் 3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு, மிகப் பிரம்மாண்டமான போக்குவரத்து மேம் பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்.

* சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம்.

* 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம்.

* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு.

* 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடக்கம்.

* 640 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறை முகத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம்.

* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம். தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

* 1828 கோடி ரூபாய்ச் செலவில் தமிழகத்தில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

* சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

* திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

* சென்னைக்கருகில் 244 கோடி ரூபாய்ச் செலவில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்,

* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்,

* கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்,

* திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்

* ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய மையங்கள்.

* சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என். எஸ்.ஜி.) தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு.

* நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

தமிழ் ஓவியா said...


* பொடா சட்டம் ரத்து.

* இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான மூன்றாம் தலைமுறை தகவல் தொழில் நுட்பத் திட்டம் (3.ஜி).

* அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர் வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர் வாகத் திட்டம் அறிமுகம்; (National E.Goverence Programme)

* 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

* மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்.

* மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு.

* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன். இந்திய அஞ்சல் துறையை நவீன மயமாக்கி, பல்நோக்கு பயன்பாட்டோடு 15,000 அஞ்சல் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட அம்புத் திட்டம் (Project Arrow) தமிழகத்தில் இத்திட்டத் தின்கீழ் 300 அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.

இவ்வாறு தி.மு.கழகம் மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான பணிகளை ஆற்றியதோடு, கழகத்தின் அடிப்படை கொள்கைகளுக்காகக் குரல் கொடுக்கவும் தயங்கியதில்லை.

3. கூட்டாட்சி முறை (FEDERALISM)

அந்த வகையில், முழுமையானதும் உண்மை யானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதும் (Wholsome and genuine Federalism with complete autonomy for the States), அதற்கேற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதும் தி.மு.கழகத்தின் கொள்கையாகும். இதன் அடிப்படையில் 1974ஆம் ஆண்டிலேயே இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை தி.மு.க. நிறைவேற்றியிருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, எந்தக் கூட்டாட்சி அரசியலமைப்பிலும் இல்லாத வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356 பிரிவு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது. அந்தப் பிரிவு, அறவே நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும்.

மாறிவரும் உலகப் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அனைத்து உரிமைகளோடு செயல்படவும், மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறவும், தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடும்.

4. மதச் சார்பின்மை (SECULARISM)

அரசின் மதச் சார்பற்ற தன்மைதான், இந்தியாவில் வாழும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்து வைத் திருக்கும் உறுதியான பிணைப்பாகும். இதனடிப் படையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை யில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை கொள்கையை மீறாத வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள உரிமைகளின் படி எந்த மதத்தையும் கடைப்பிடிப்பதற்கும், சுதந் திரமாகப் பரப்புவதற்கும் பொதுநலனுக்கு ஒப்ப வளர்ப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு என்பதில் கழகம் இன்று போல் என்றும் உறுதியாக இருக்கும்.அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத உரிமை உள் ளிட்ட இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதி ரானது என்பதனால், அத்தகைய சட்டம் எந்த வடிவிலும் நிறை வேற்றப்படக் கூடாது என்பதில் கழகம் உறுதி கொண்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

மதவெறி காரணமாக எந்த மதத்தைச் சார்ந்தவர் களாலும், எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற் படுமானால் அதனை முறியடிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக் குத் துணை நின்று காப்பாற்றவும், தி.மு.க. தயங்காது.

5. சமூக நீதி (SOCIAL JUSTICE)

சாதீய ஏற்றத்தாழ்வுகளை நீக்கச் சமூக நிலையிலும் மற்றும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும் வேலைவாய்ப்பும் வழங் கிடுவதற்கு உருவான சமூகநீதி இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தி.மு.கழகம் பங்கேற்றிருந்த திரு.வி.பி.சிங் தலைமை யிலான தேசிய முன்னணி அரசில் அதுவரை மாநில அளவில் இருந்த இடஒதுக்கீடு முறை, தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் மத்திய அரசிலும் மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப் படுத்தப்படுகிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சியாகும். ஆனால், இதுகுறித்த உச்சநீதி மன்றத் தீர்ப்பால் சமூக நீதிக் கொள்கை முழு மையடைவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி இடஒதுக்கீடு அதிகபட்சம் அய்ம்பது சத விகிதம்தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப் பட்டோரில் பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் (Creamy layer) என்று கருதப்படுவோர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத்திருத்தம் கொண்டுவர தி.மு.க. வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய தாழ்த்தப் பட்டோர் நல ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது போல, அனைத்து அதிகாரங்களையும், தேசிய பிற் படுத்தப்பட்டோர் ஆணை யத்துக்கும் வழங்கிட உரிய அரசிலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள தி.மு.கழகம் வலி யுறுத்தும்.

மேலும், தமிழகத்தில் தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைச் சகம் கண்டதைப் போல, மத்திய அரசிலும் தனி அமைச் சகம் உருவாக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக் கைக்கேற்ப இடஒதுக்கீட்டு விகிதாசாரத்தை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதோடு, அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மாநில அரசு மேற் கொண்டுள்ள விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தி.மு.கழகம் வற்புறுத்தும்.
மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங் களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆனால், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறை பின் பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகும். எனவே உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிப்பதற்கு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15 மற்றும் 16ல் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு முரணாக எவ்வித மாறுதல் செய்வதையும் திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. மேலும், பொருளாதார நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15 மற்றும் 16க்கு ஏற்புடையதல்ல. எனவே, அவ்வப்போது மாறுபடும் தன்மையுடைய பொருளாதார நியதிகளை (ணிநீஷீஸீஷீனீவீநீ சிக்ஷீவீமீக்ஷீவீணீ) அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்வது, சமூக நீதி கோட்பாட்டிற்கு மாறுபட்டதாகையால், அதனை தி.மு.க. தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, அவற்றின் செயல்பாடுகளை ஒட்டுமொத்த நலன் (Holistic Welfare) பேணும் வகையில் செம்மைப்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.

தமிழ் ஓவியா said...


6.வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு

பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது மிகமிகக் குறைவானதாகும். மேலும், பொதுத் துறை நிறுவனங்கள், படிப் படியாக தனியார் மய மாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டாயம் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி வழங்கு வது மட்டுமே சமூக நீதியின் நியாய மான, முழுமையான வெளிப்பாடாகும். இத்தகைய இட ஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க அய்க்கிய குடியரசில் கியீயீவீக்ஷீனீணீவீஸ்மீ ணீநீவீஷீஸீ நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

7. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு (Caste-based Census)

தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோரை மட்டும் கணக்கெடுப்பு நடத்தியது. வறுமைக் கோட்டிற்கான அளவுகோல் அடிக்கடி மாறக் கூடியது. எனவே, முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக எடுத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.
8. மகளிருக்கு அதிகாரம் (WOMEN EMPOWERMENT)

மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் பட்ட போதிலும் இதுவரை விவாதித்து நிறை வேற்றப்படவில்லை. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நாடாளு மன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்கள் அதிக அளவில் இடம்பெற தி.மு.கழகம் பாடுபடும். 1989-90இல் தி.மு. கழக அரசு அமைந்த போது, குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 12 ஆயிரத் திற்குக் குறைவாக உள்ள மாணவிகளுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க ஆணையிடப்பட்டது. மீண்டும் 1996இல் கழக அரசு அமைந்தவுடன் ஆண்டு வருமானம் 12 ஆயிரம் ரூபாய் என்பது 24 ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதைப் போல, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளுக்கு அகில இந்திய அளவில், அவர் களுடைய ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, கல்லூரிப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க தி.மு.கழகம் முயற்சி மேற்கொள்ளும். ஆதிதிராவிட - பழங்குடி இன - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட- வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களின் உடல்நலம் பேண ஊட்டச்சத்தினை (Nutritional Status) மேம் படுத்துவதற்குத் தனி சுகாதாரத் திட்டம் உருவாவதற்கு தி.மு.கழகம் பாடுபடும்.

தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டதைப் போல, பெண்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் சமீபகாலங்களில் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் மகளிர் பாதுகாப்புக்கான உரிய சட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தி, இச்செயல்களில் ஈடுபடு வோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தந்திட தி.மு.கழகம் பாடுபடும்.



நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்

அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம்

சுயமரியாதை, சமத்துவம் குலுங்கும் கருவூலம்


9. குழந்தைகள் நலன் (CHILD WELFARE)
குழந்தைத் தொழிலாளர் முறைகளும் , சுமங்கலித் திட்டமும் தடை செய்யப்பட வேண்டும். 1986ல் கொண்டு வரப்பட்ட குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் தில் தேவையான திருத்தம் செய்திட தி.மு.கழகம் வலியுறுத்தும். வளர் இளம் பருவத்தினருக்கு (12-18 வயதினருக்கு) கல்வி, நல்வாழ்வு, ஊட்டச் சத்து, உடற்கல்வி, வன்முறை-சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் தொழிற் பயிற்சி குறித்து சிறப் புக் கொள்கை மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும். போதுமான அளவு நிதிவளம், பொருள்வளம் மற்றும் மனித வளங் களை ஒதுக்கீடு செய்து குழந்தைகளின் உரிமை களை உறுதி செய்ய வேண்டும். அதற்காக, மத்திய நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் 10 விழுக்காடு நிதியினை, குழந்தை உரிமைகளுக்கும், நலனுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண் டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...



10. மாற்றுத் திறனாளிகள் (Differently Abled)

தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு உடல் ஊனமுற்றோருக்கென்று ஒரு தனித் துறையை உருவாக்கியதோடு, அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை உணர்ந்து, அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அறிவித்தது. மேலும், அவர்களுக்குப் பல்வேறு வகைச் சிறப்பு சலுகைகள் வழங்கிட ஏதுவாக, தனியாக நலவாரியமும் உருவாக்கியது. மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், பல அரசுத் துறைகளும் - பொது நிறுவனங்களும் இந்த இடஒதுக்கீட்டினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். போக்குவரத்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மாற்றுத் திறனா ளிகள் சிரமமின்றி வந்து போக வசதியாக, அனைத்து பொது இடங் களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

11. அரவாணிகள் (Transgenders)

இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித் திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாக செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அர வாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

12. முதியோர் நலன்

2020இல் உலகில் 1000 மில்லியன் முதியோர் இருப்பர் என்றும், அதில் இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் முதியோர் இருப்பர் என்றும், உலகச் சுகாதார நிறுவனம் கணித்து அறிவித்துள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள இந்தப் புள்ளி விவரத்தைக் கருத்தில் கொண்டு, முதியோர் நலன் முழுமையாகப் பேணப்படும் வகையில் புதிய கொள்கை ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம். முதியோருக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு, பராமரிப்பு உதவிகள், மருத்துவப் பாதுகாப்பு போன்றவற்றை தங்குதடையின்றி வழங்குவதற்கேற்ப முதியோர் கொள்கை வகுக்கப்படுவதை உறுதி செய்வோம்.

13. அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self-respect Marriage Act)

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச்சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதை திருமணச் சட்டம் 1968ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்து திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற் கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

14. சிறுபான்மையோர் நலன் (MINORITIES WELFARE)

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர் கிறித்தவ மதத்திற்கு மாறும் போது, அவர்கள் சமூக தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பழங்குடியினராகவும் கருதப்படுவது தொடர்ந்தாலும் அவர்கள் இதுவரை பெற்று வந்த தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அமைத்த நீதியரசர் சச்சார் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனக் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டவர் களாகவும், பழங்குடி யினராகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

அதுபோலவே, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை ஏற்று, சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். மேலும், சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பட்டி யலின சாதியினருக்கு இருப்பது போல் சிறப்பு உட்கூறு திட்டம் (Special Component Plan) இஸ்லாமியர்களின் பொரு ளாதார மேம்பாட்டுக்கென நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தி.மு.கழகம் வலியுறுத்தும். அத்துடன், சிறுபான்மையினருக் கான 15 அம்சத் திட்டத்தில், மொத்த திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப் படும் தொகை 19 விழுக்காடாக உயர்த்தப்பட வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய தடா, பொடா போன்ற சட்டங்கள் ஆளுங்கட்சியால், அரசியல்வாதிகள் மீதும் - சில குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் ஏவிவிடப்பட்டு வந்திருக் கின்றன. இந்நிலையை புரிந்து மேற்கண்ட சட்டங்கள் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்(Unlawful Activities [prevention] Act) 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

15. அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

1989ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத் தப்பட்டோருக்கு தனி இடஒ துக்கீடு செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்திட வேண்டுமென இந்திரா சவ்கானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

16. பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்

தமிழ் ஓவியா said...


தலைவர் கலைஞர் அவர்களின் தீவிர முயற்சியின் காரண மாக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் ஆட்சியில் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங் கப்பட்டது. ஆண்டுகள் 17 ஆன பின்பும், இன்று வரை பிற்படுத் தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

எனவே மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

17. தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவித் தொகையளிக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டிலும், ஏனைய பல மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. இடஒதுக்கீடு கொள்கையின் வழியாக ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் பயன்பெற்று வந்தாலும், இச்சமூகத்தினரில் ஒரு பிரிவினர் கல்வி மற்றும் சமுதாய நிலைகளில் மிகமிக பின்தங்கியோராக உள் ளனர். இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தபோது எடுத்த பெரும் முயற்சியால் தாழ்த்தப் பட்ட பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அருந்த தியினருக்கு தனியாக 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் மிகப் பின்தங்கியோரை இனம் கண்டறிந்து, தமிழ்நாட்டில் அருந்ததி யினருக்கு வழங்கிய தனி இடஒதுக்கீடு போன்று வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும். மத்திய அரசு வேலைகளுக்கான நேர்காணலுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பயணச் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

18. தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு வசதி

1971ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் அமைத்து, நகரங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எளிய மக்களுக்குப் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.

1996இல் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது, முதல் முறையாக, அனைத்து சமூகப் பிரிவினரும் இணைந்து வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டன. பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஒன்றிய, வட்டார அளவில் விரிவுபடுத்தப் பட்டது.

மேற்கூறிய திட்டங்களில் விடுபட்டுப்போன ஊர்ப்புறங்களில் குடிசைகளிலே வாழ்ந்து வருகின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் தரமான வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டுமென்று உறுதியாக தி.மு.க. வலியுறுத்தும். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு தற்போது 1 இலட்சம் என்று உள்ளதை ரூ. 3 இலட்சம் வரை உயர்த்தித் தந்திடுவதற்கான முயற்சிகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும்.

19. நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்துச் சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்று கூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இந்தியச் சுதந்திரப் பொன் விழாவையொட்டி, 1997ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டமாம், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 145 சமத்துவபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவ புரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம்.

20. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோர் நியமனம்

தமிழ் ஓவியா said...

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியின மக்கள் போதுமான அளவில் இடம்பெற வில்லை யெனில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் விதத்தில் தரவரிசையினைத் தவிர்த்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதி காத்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

21. நெசவாளர் நலன் (WEAVERS WELFARE)

நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான விசைத்தறி தொழிலுக்கு வசூலிக்கப்படும் கலால் வரி அகற்றுதல். சிட்டா நூல் மீதான வரி மற்றும் சர் சார்ஜ் குறைத்தல். பருத்திநூல் ஏற்றுமதி அளவினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன்மீது விதிக்கப்படும் கலால் வரியைக் குறைத்தல். பருத்தி மற்றும் கழிவுப்பஞ்சு இறக்குமதிமீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வையை நீக்குதல். காஞ்சிபுரத்தில் பாரம்பரிய கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் மையம் உருவாக்குதல்.

பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்திடவும்; அந்த நெசவாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் தவும் நடவடிக்கை மேற்கொள்ளுதல். ஆகிய பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துபேசி சுமுகத்தீர்வு கண்டு நெசவாளர்கட்கு உரிய பாதுகாப்பு அளிக்க தி.மு.கழகம் பாடுபடும்.

22. புலம்பெயர்ந்தோர் நலன்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்குவதற்கும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்திய தூதரகங்களில் ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட மத்திய அரசை வலியுறுத்துவோம். வெளிநாடுகளில் வசித்துவரும் இலட்சக்கணக் கான தமிழர்களின், ஜனநாயக - பொருளாதார உரிமைகளையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்காக இயங்கும் வேலை வாய்ப்பு நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்து, அவற்றின் பணி களைக் கண்காணிப்பதற்கு அமைப்பு ஒன் றினை உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

23. அயல்நாட்டு தூதர்களாக தமிழர்கள் நியமனம்

தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியத் தூதர்களாக தகுதி வாய்ந்த தமிழர்களே நியமிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

24. சேது சமுத்திரத் திட்டம்

அறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக அ.தி.மு.க. அரசின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வழியில் தொடரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் தென்தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்; எரிபொருள் மீதமாகும்.

தமிழ் ஓவியா said...

ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே பெரிய அளவில் வளமும் நன்மையும் கிடைக்கும். தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு; தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு, அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லையென்று, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு, திட்டத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்திலேயே மனு தாக்கல் செய்திருப்பது; தென்மாவட்டங் களின் தொழில், பொருளாதார வளர்ச்சி, மற்றும் வேலைவாய்ப்பை முடக்கி தமிழர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். பிற்போக்குச் சக்திகளின் முயற்சி களை முறியடித்து, 75 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் தாமதமாகி வரும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல் படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழ கம் 1967ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

25. இரண்டாவது விண்கல ஏவுதளம்

இந்திய வானியல் துறையின் இஸ்ரோ அமைப்பு தனது இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிவித்திருக்கிறது. புதிய ஏவுதளம் அமைப்பதற் கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப் பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்பு கோணத்திலும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள திருநெல் வேலி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இந்த ஏவுதளம் அமைக் கப்பட வேண்டுமென்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும். ஏவப்படும் செயற்கைக் கோளின் எடையின் அடிப்படை யிலும் - ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லும் தூரம் மற்றும் செலவினங்கள் அடிப்படையிலும் - குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைவது விண்கலன்களை ஏவும் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் என்பதாலும்; தென்தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், குலசேகரப்பட்டி னத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைத்திட தி.மு. கழகம் தொடர்ந்து வற்புறுத்தும்.

இந்திய வான்வெளி - திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம்

(Indian Space – Liquid Propulsion Systems Centre)

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய வான் வெளி - திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம் அமைத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். இம்மையத்தை அமைப்பதன் மூலம் இம்மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். நமது நாட்டில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை தொடர்பான நிபுணத்துவம் மிக்கவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை யிலேயே இருக்கிறார்கள். விமானங்கள் வடிவமைப்பு, ஹெலி காப்டர் வடிவமைப்பு, அதிவேக விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில் நுட்ப ஆய்வுகள் ஆகியவை சார்ந்த படிப்புகளுக்கு திரவ உந்து விசை தொழில் நுட்ப மையம் தகுதி வாய்ந்த ஒரு சிறப்பு நிறுவனமாக இருக்கும் என்பதாலும், இந் நிறுவனம் ஏற்படுத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதாலும், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம் அமைத்திட தி.மு.கழகம் பாடுபடும்.

தமிழ் ஓவியா said...

26. கச்சத் தீவு (Katcha Theevu)

இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட கச்சத் தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளுமன்றத்தில் முறைப்படி விவா திக்கப்பட்டோ, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டோ, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்பதால் அது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டுமென்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச்செய்து கச்சத் தீவினை மீட்கும் முயற்சியில் தி.மு.கழகம் தீவிரமாக ஈடுபடும்.

27. ஈழத் தமிழர் பிரச்சினை (Eelam Tamils’ Issue)

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து ஐ.நா. மனித உரி மைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ் ஓவியா said...

இதே காரணங்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ (TAMIL EELAM SUPPORTER’S ORGANI SATION) அமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசிற்கும் ஐ.நா. மன்றத்திற்கும் அதன் பிரதான உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது. கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தில் அமெரிக்காவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நிறை வேற்றப்பட்டது. எனவே இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும், நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திட தொடர் முயற்சிகளை தி.மு. கழகம் மேற்கொள்ளும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு வதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக் கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத் தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களி டையில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர் களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது அரசியல் சட்டத் திருத் தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத் திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு - வேளாண்மை மற்றும் வீடுகள் ஆகியவற்றை இழந்த ஈழத் தமிழர்களுக்கு மீள் குடியேற்றமும், இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் பொருளாதார உதவிகள் முறையாக அவர்களுக்குச் சென்றடையவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத்தும். மேலும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அடிப்படை மற்றும் உயர்கல்வி வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்றும்; தமிழ்ப் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழர் வழிபாட்டுத் தலங்கள் முதலியவற்றை பாதுகாத்திடவும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

1984ஆம் ஆண்டு முதலே தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் பல்வேறு இடங்களில் அரசால் அமைக்கப் பட்டிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் விருப்பத்திற்கேற்ப மறு குடியமர்த்தி அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக வாழ வழி வகை செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

(தொடரும்)



தேசிய கட்சியில் இல்லாத கூட்டணி
எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது
தேர்தல் அறிக்கை வெளியிட்டு கலைஞர் பேட்டி


சென்னை, மார்ச் 11-- வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது என இன்று (11.3.2014) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களி டம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.

இன்று (11.3.2014) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 2014 நாடாளுமன்றத்தில் தேர்தலுக்கான தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கை செய்தியாளர்க ளிடையே வெளியிட்டு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- உங்கள் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று இடதுசாரிகள் தெரிவித்திருக்கிறார்களே?

கலைஞர் :- அதைப் பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- ஜெயலலிதா தன்னைப் பிரதமராக முயற்சி செய்வதால், தமிழ்நாட்டு மக்கள் அவருக்குத்தான் வாக்களிப் பார்கள் என்று சொல்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- அவர்கள் முயற்சி செய்வதும் தெரியாது; தமிழ் நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பார்கள் என்பதும் தெரியாது!

செய்தியாளர் :- பா.ஜ.க. சார்பாக புதிய கூட்டணி தமிழ் நாட்டில் உருவாகியிருக்கிறது. அது திராவிடக் கட்சிகளுக்கு எந்த அளவிற்கு சாதக பாதகங்களை ஏற்படுத்தும்?

கலைஞர் :- ஏற்கெனவே எப்படி அமைந்ததோ, அப்படித் தான் இப்போதும் அமையும்.

செய்தியாளர்:- பா.ஜ.க. தலைவராக மோடி அவர்களை முன்னிறுத்தி அவர் தான் பிரதமர் என்று கூறிப் பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ராகுல் காந்திதான் பிரதமர் என்று பிரச்சாரம் செய்து. திராவிட முன்னேற்றக் கழகம் பிரதமராக யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும்?

கலைஞர் :- இவர்கள் அல்லாத ஒருவரை!

செய்தியாளர் :- தி.மு.க. வேட்பாளர் ஒருவரை எதிர்த்து தஞ்சையில், புதுக்கோட்டையில் கொடும்பாவி எரித்ததைப் பற்றி? கலைஞர் :- அதைப் பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- அய்யா, தமிழகத்தில் இந்த முறை பல முனை போட்டி நடைபெறவிருக் கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- மக்களுக்கு நல்லது தான்!

செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?

கலைஞர் :- இவைகள் எல்லாம் உங்களு டைய யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால் நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடு கிறீர்கள் என்று எனக்குத் தெரிய வில்லை.

செய்தியாளர் :- உங்கள் தேர்தல் அறிக்கையில் 100 தலைப்புகளில் மிக விரிவாக அனைத்துத் தரப்பினரின் பிரச்சினையையும் உள்ளடக்கி வெளி யிட்டிருக்கிறீர்களே?

கலைஞர் :- நன்றி.

செய்தியாளர் :- இளைஞர்களுக்கு 30 சதவிகிதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். ஆனால் 30 சதவிகிதம் தரப்பட வில்லை என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- இப்போது 30 சதவிகிதத்திற்கு மேலாகவே இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப் பட்டுள்ளது. செய்தியாளர் :- உங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர் :- எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேறு யாரையும் எதிர்பார்க்கவில்லை. எனவே எந்தக் கட்சியினர் வருவார்கள் என்று காத்திருக்க வில்லை. செய்தியாளர் :- இந்தத் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறீர்கள். இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?

கலைஞர் :- எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது.

Read more: http://viduthalai.in/page-3/76794.html#ixzz2vhWen0AG

தமிழ் ஓவியா said...

முதல் விண்வெளிப் பெண் கல்பனா சாவ்லா

1961 ஜூலை 1... அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. அரசாங்கப் பள்ளியில் படித்தார். அப்போது ஜெ.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்த கல்பனாவுக்கும் அதே ஆர்வம் வந்தது.

பள்ளிப்படிப்பு முடித்தவுடன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பில் (விமான ஊர்தியியல்) சேர்ந்தார் கல்பனா. பொறியியல் பட்டம் பெற்றவுடன் உயர் படிப்புக் காக அமெரிக்கா சென்றார்.

ஜேன் பியர் ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. 1983ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண் டனர். அடுத்த ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார் கல் பனா. அவருடைய ஆர்வமும் உழைப்பும் தீவிரமாகின. மேலும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றார்.

1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் டாக்டர் பட்டம் வாங்கினார். நாசாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் விமானம், க்ளைடர்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கவும் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். 1995இல் விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார் கல்பனா.

அடுத்த ஆண்டே அவருடைய கனவு, லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் எஸ்டிஎஸ் - 87 இல் பயணம் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழுவில் 6 விண் வெளி வீரர்கள் இருந்தனர்.

1997 நவம்பர் 19 அன்று கொலம்பியா விண்வெளி ஓடம் கிளம்பியது. 15 நாள்கள், 16 மணி நேரங்கள், 35 நிமிடங்கள் இந்தப் பயணம் நீடித்தது. டிசம்பர் 5 அன்று பத்திரமாக பூமியை வந்தடைந்தது. இந்தப் பயணத்தில் பல பரி சோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்யப் பட்டிருந்தன. கல்பனாவின் புகழ் எங்கும் பரவியது. 2003இல் கல்ப னாவுக்கு ஒரு வாய்ப்பு.

எஸ்டிஎஸ் - 107 கொலம்பியா ஓடம் ஜனவரி 16 அன்று புறப்பட்டது. இதுவும் 15 நாள்கள், 22 மணி நேரங்கள், 20 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியை நோக்கித் திரும்பியது. ஆனால்... பிப்ரவரி 1 அன்று விண் வெளி ஓடம் வெடித்துச் சிதறியதில் கல்பனாவின் உயிர் பிரிந்தது.

40 வயதில் மறைந்து போன கல்பனா, தன் வாழ் நாளில் 31 நாட்களை விண்வெளியில் செலவிட்டிருக்கிறார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYhXYlO

தமிழ் ஓவியா said...


கணினியை விஞ்சிய சகுந்தலா தேவி


அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார் சகுந்தலா!

1929 நவம்பர் 4 அன்று பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. சகுந்தலாவின் தந்தை, சர்க்கஸில் வேலை செய்தார். சீட்டுக் கட்டுகளை வைத்து அவர் பல்வேறு நினைவுத் திறன் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். மூன்றே வயதான சகுந்தலாவுக்கும் ஆர்வம் வந்தது. அப்பாவிடம் சீட்டுக் கணிதத்தைக் கற்றுக்கொண்டார்.

அவற்றைச் செயல் படுத்திக் காட்டினார். அவருடைய கணிதத் திறமையைக் கண்டு, ஊக்குவித்தார் தந்தை. 6 வயதில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறமைகளை, மைசூரு பல்கலைக்கழகத்தில் செய்து காட்டும் வாய்ப்பு கிடைத்தது. மிக வேகமாகவும் எளிதாகவும் கணிதப் புதிர்களை விடுவிக்கும் சகுந்த லாவைப் பார்த்து, எல் லோரும் வியந்து போனார்கள்.

8 வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மற்றொரு முறை தன் திறமைகளை நிகழ்த்திக் காட்டினார் சகுந்தலா. மழலை மேதை என்று கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மேடைகளில் தன்னுடைய திறமை களை உலகம் அறியச் செய்துகொண்டிருந்தார். மின்னல் வேக கணிதத்தையும், நினைவுத்திறனையும் கண்டு பிரமிக் காதவர்களே இல்லை. 1973ஆம் ஆண்டு பிபிசி தொலைக் காட்சியில் பங்கேற்றார். கணிதத்தில் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சட்டென பதில் அளித்தார்.

அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். 1977ஆம் ஆண்டு 201 என்ற எண்ணின் 23ஆவது மூலத்தை 50 நொடிகளில் கண்டறிந்தார். அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார்! இப்படி சகுந்தலா தேவிக்கும் கணினிக்குமான போட்டிகள் பல நடைபெற்றன. கணினியை விஞ்சினார் சகுந்தலா. 1982ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

கணிதம், கணிதத்தில் மேஜிக் என்று எப்பொழுதும் எண்களுடனே வாழ்ந்தார். கணிதம் தொடர்பான பல புத்தகங்களையும் எழுதினார். மனித கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி 2013 ஏப்ரல் 21 அன்று உடல்நலக் குறைவால் மறைந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYrNhzl

தமிழ் ஓவியா said...


களப்பலியான காளைகள்!


1937 ஆகஸ்டு 27இல் இந்தியைப் புகுத்துவது பற்றி அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அறி வித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்துவ தற்கே முதற் கட்டமாக இந்தியைக் கொண்டு வருகி றேன். என்று அவரை அறி யாமலேயே சென்னை இலயோலா கல்லூரியிலே பேசினார். ஆம் பூனைக் குட்டி வெளியில் வந்தது!

தந்தை பெரியார் தலைமை தாங்கினர், தமிழர் கள் எல்லாருமே கட்சி களைக் கடந்து ஜாதி, மதம் பிணக்குகளைத் துறந்து, தலைவர் பெரியார் தலைமை யிலே ஒன்று திரண்டனர்.

ஆம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டின் கீழ் தமிழர் கள் அணி வகுக்கும் நிலையை ஏற்படுத்தியது! தமிழ் மொழியின் பற்றுக் கரை புரண்டு ஓடியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு ஏற்க வெளியூர்களிலி ருந்து எல்லாம் தோழர்கள் திரண்டு வந்தனர் தலைநகர் நோக்கி. விடுதலை ஏடு ஓர் அழைப்பைக் கொடுத்தது எப்படி? இந்தி எதிர்ப்புச் சத்தி யாக்கிரகம் செய்ய ஒப்புக் கொண்டு, விடுதலையில் பெயர்களை வெளியிட்ட தொண்டர்களில் தங்கள் சொந்தச் செலவில், உடுப் புக்களோடு ரயில் சார்ஜும் கொடுத்து வரக்கூடிய வசதியுள்ளவர்கள் உடனே புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர வேண்டியது - என்பதுதான் விடுதலை யின் அந்த அழைப்பு. (எத்தகைய வித்தியாசம்!)

குடந்தையிலிருந்து அப்படி வந்து சேர்ந்தவர் தான் தாளமுத்து என்ற வீரன்! சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட் நீதிபதி மாதவராய் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இப் படியே விட்டு விட்டால் ஊருக்குப் போய் விடு கிறீர்களா? என்று கேட்டார் நீதிபதி! வில்லிலிருந்து புறப் பட்ட அம்பு போல் பதில் வந்தது - அந்தப் புற நானூற்று வீரனிடமிருந்து. இல்லை முடியாது! என்று. விளைவு நான்கு மாதக் கடுஞ்காவல் தண்டனை. அந்தோ அம்மாவீரன் சிறையிலேயே நோய் வாய்ப்பட்டு வீர மர ணத்தை முத்தமிட்டான்!

இன்னொரு தோழன் சென்னையைச் சேர்ந்த அருமை நடராஜன், அவ் வீரனுக்கோ ஆறு மாதக் கடுஞ்காவல் தண் டனை! அம்மாவீரனும் சிறையிலே மாண்டான். படிப்பறிவு இல்லாத ஹரி ஜன் - ஆதலால் மாண்டான் என்று மமதையோடு சட்ட சபையில் பேசினார் பார்ப் பனரான ராஜாஜி.

நடராஜன் இரங்கல் கூட் டத்தில் தளபதி அண்ணா பேசினார் விடுதலைபெற்ற தமிழகத்தில் தலைவர் பெரி யாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும் என்றாரே!

சென்னை எழும்பூரில் செம்மாந்து நிற்கும் பெரு நகர வளர்ச்சித் திட்ட (MMDA) மாளிகைக்கு தாளமுத்து நடராஜன் என்று பெயர் சூட்டித் திறந்து வைத்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்! (14.4.1989). - மயிலாடன்

குறிப்பு: இன்று தாள முத்து மறைந்தநாள் (1939).

Read more: http://viduthalai.in/e-paper/76808.html#ixzz2vnME5b3h

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.க்குள் எங்கு பார்த்தாலும் குடுமிப் பிடிச் சண்டை

பிரதமர் கனவு மூழ்கும் கப்பலாகி விட்டது

தி எக்னாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு

புதுடில்லி, மார்ச் 12- பாரதீய ஜனதா கட்சிக்குள் எங்குப் பார்த்தாலும் உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.

தேநீர்க் கடை விவாதம் (சண்டை) கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக் கிறது. பாரதீய ஜனதா கட்சி யின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமை யின் முடிவில் மிகவும் அதி ருப்தியில் உள்ளார்.

முரளிமனோகர் ஜோஷி யின் நாடாளுமன்ற தொகு தியான வாரணாசிமீது பார தீய ஜனதாவின் பிரதம ருக்கான வேட்பாளர் கண் வைத்துள்ளார். தொடக்கம் முதலே இந்த தகவல் முரளி மனோகர் ஜோஷிக்குத் தெரியவந்தாலும் அதை தலைமை தமக்கான தொகு தியை அவருக்கு ஒப்புக் கொள்ளாது என்று நினைத்து வந்தார். ஆனால் இறுதியில் வாரணாசித் தொகுதியை நரேந்திரமோடிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு முரளிமனோகர் ஜோஷி தள்ளப்பட்டார். இதனால் விரக்தியடைந்த ஜோஷி கட்சியின் தலை மைக்குக் கட்டுப்படுவேன் என்று கூறினாலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் கூறிய தாவது: தற்போதைய அரசியல் சூழலில் பாரதீய ஜனதா தலைமை கட்சிக்கும், கட்சியின் பிரதம அமைச்சர் பதவி வேட்பாளராக இருக் கும் மோடிக்கும் பாதகம் ஏற்படும் முடிவை கட்சி எடுக்காது என்று நினைக் கிறேன் என்றார்.

சில நாட்களாகவே பார தீய ஜனதா கட்சியில் உட்கட்சிப்பூசல்கள் மெல்ல மெல்ல உருவாகிவிட்டன. முக்கியமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற ஒரு வருக்காக பொதுக்கூட்டங் களில் இரண்டாம் பட்ச நப ர்களாக நடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜோஷி போர்க் கொடி!

முரளிமனோகர் ஜோஷி யைப் பொறுத்தவரை பார தீய ஜனதா கட்சியின் முக் கியத்தூண்களின் ஒருவராக இருந்து வருகிறார். வார ணாசி தொகுதியில் தொடர்ந்து பாரதீய ஜனதா சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருகிறார். இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்து கடந்த இரண்டு முறை வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்திய நரேந்திர மோடி வேறு எங்கும் நின்று பரிசோதனை செய்து பார்ப் பதைவிட பாதுகாப்பான வாரணாசித்தொகுதியில் நிற்பதே தற்போது நல்லது என்று நினைத்துத் தலைமை யிடம் கூறினார். தலைமை யும் தற்போது உள்ள அரசி யல் அழுத்தததின் காரண மாக நரேந்திரமோடி இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிடும் முடிவை ஒப்புக்கொண்டு முரளி மனோகர் ஜோஷியிடம் தெரிவித்துள்ளது, .

தலைமையிடத்தில் பொது விவாதம் வைக்கவில்லை

தமிழ் ஓவியா said...

முரளி மனோகர் ஜோஷி யின் தொகுதியில் நரேந்திர மோடி போட்டி இடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான சுஸ்மா சுவராஜ், அத்வானி மற்றும் லால்ஜிடண்டன் போன்ற வர்களிடம் விவாதிக்க வில்லை, இதனால் கட்சித் தலைமையில் பெருத்த பிளவு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. நரேந்திர மோடி பிரதம ராக கட்சித் தலைமை அறி வித்ததில் இருந்தே மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் புறக்கணிக் கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மோடி யின் தொகுதித் தேர்வு பிரச்சனையும் சேர்ந்து கொள்ள, தலைமையில் பிளவு கூடிக் கொண்டே வருகிறது.

தற்போது நாடு முழு வதும் ஏற்பட்டுள்ள அரசி யல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முக்கியமாக பாஸ்வானுடனான கூட் டணியில் எந்த மூத்த தலை வர்களின் ஆலோசனையை யும் பெறவில்லை, அதே போல் தொகுதிப்பங்கீட்டி லும் மூத்த தலைவர்களின் கருத்து புறக்கணிக்கப்பட் டது. தற்போது பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ நாத் சிங் தலையாட்டி பொம் மையாக மாறிவிட்டார்.

கர்நாடகாவில் எடியூ ரப்பா கட்சியில் இணைந்த விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் சமூகவளை தளத் தில் அதிருப்தி தெரிவித் துள்ளார். சுஷ்மா சுவராஜ் நேரடி யாகவே பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜநாத் சிங் மீது குற்றம் சுமத்த ஆரம் பித்து விட்டார். சமூக வளை தளத்தில் கட்சித்தலைவர் என்பவர் அனைத்து உறுப் பினர்களையும் ஒரேமாதிரி யாக பாவிக்கவேண்டும் என்று மறைமுகமாக ராஜ நாத் சிங்கைக் குறிப்பிட் டுள்ளார், மாநிலத்தில் குடுமிப் பிடிச்சண்டை பாரதீய ஜனதா தேர்தல் வேலை ஆரம்பித்ததில் இருந்தே மாநிலங்களிலும் உட்கட்சிச் சண்டை தீவிர மாக துவங்கிவிட்டது.

சிவசேனா பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் மராட் டிய மாநில துணைப் பிரதமராக இருந்த கோபி நாத் முண்டே மற்றும் கட் சியின் முன்னாள் தலை வரும் ஆர்.எஸ்.எஸ்சுக்குப் பிரியமான நிதின் கட்கரியும் தற்போது பொது மேடை யிலேயே சண்டையிட ஆரம் பித்து விட்டனர். குறிப்பாக மராட்டிய பாரதீய ஜனதா கட்சி கிழக்கு மேற்கு என இரண்டு பிரி வாக பிரிந்து அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். நிதின் கட் கரி மீது வருமானவரித்துறை குற்றம் சாட்டியதில் இருந்தே அவரை கட்சியின் முக்கிய பதவியில் நீடிக்கவிடாது கோபிநாத் முண்டே தலை மைக்கு அடிக்கடி கடிதம் எழுதி மிரட்டிவந்தார். இந்த சூழ்நிலையில் தான் நிதின் கட்கரிக்கு பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பதவி மீண் டும் கிடைக்காமல் ராஜநாத் சிங்கின் கையில் சென்றது, இதனால் கோபிநாத் முண்டே மீது கடுங்கோபத்தில் இருந்த நிதின் கட்கரி மராட்டிய மாநில பாரதீய ஜனதா வேட் பாளர் தேர்வில் கைவைத் தார். கோபிநாத் முண்டே யின் ஆதரவாளர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து தனக்கு ஆதர வானவர்களின் பெயர்களை மாத்திரமே அதிகம் பரிந் துரை செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் முண்டே தலைமைக்கு எச்சரிக்கை விடும் தொனியில் கடிதம் எழுதியுள்ளார். ஆகையால் மராட்டிய மாநில வேட்பா ளர்கள் அறிமுகமாவது சிக்கலில் உள்ளது,

எடியூரப்பா ஒரு பிரச்சினை!

அதே போல் பிரிந்து சென்று மீண்டும் கட்சியில் இணைந்த எடியூரப்பா அனைத்துத் தரப்பிலும் கட்சியினரிடம் தனது அதி காரத்தை காட்டி வருகிறார். இது பாரதீய ஜனதா கர் நாடகத் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது, கட்சித் தலைமையை மதிக்காமல் கட்சியை விட்டு விலகி புதுக்கட்சி ஆரம் பித்து அது போணியாகாமல் மீண்டும் திரும்பி கட்சிக்கு வந்தவருக்கு மோடி முக் கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன் காரண மாக எடியூரப்பா தலைக் கனம் பிடித்து அலைகிறார். கட்சிக்காக சிரமமான காலத்திலும் ஒன்றாக நின்று பாடுபட்ட நாங்கள் தற் போது கட்சிக்கு வேண்டாத வர்களாக ஆகிவிட்டோம், எங்களின் ஆலோசனை களை யாரும் ஏற்பதில்லை என்று கர்நாடகா பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கெனவே பஸ்வானு டனான கூட்டணி குறித்து பிகார் மாநில பாரதீய ஜன தாவின் முக்கிய தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த நிலையில் தற்போது மெல்ல மாநிலம் முழுவதும் உட் கட்சிப் பூசல் அதிக அளவில் பெருகியுள்ளது.

இது தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிகரிக் கும் என்றே தெரிகிறது. ஆட்சிக்கனவில் மிதந்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கப்பல் தற்போது உட்கட்சி சண்டை காரண மாக மெல்ல மெல்ல மூழ் கிக்கொண்டு இருக்கிறது.

(தி எக்னாமிக் டைம்ஸ் 10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76809.html#ixzz2vnMTygV6

தமிழ் ஓவியா said...


மோடிக்கு குட்டு!!


- குடந்தை கருணா

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைவர்களிடையே கடும் சச்சரவு ஏற்பட்டுள்ளது. மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கிறார். இப்போது மோடி அந்த தொகுதியை கேட்பதால், ஜோஷி ஆத்திரம் அடைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இத் தகைய முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் மக் களவைத் தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜ், ஜோஷிக்கு ஆதரவாக உள்ளார்.

ஏற்கனவே, குஜராத்தில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெறும் காந்தி நகர் தொகுதியில் மோடி தான் நிற் பதற்கு முயற்சி செய்து, அத்வானியின் கடும் எதிர்ப்பால், அது நிறுத்தப் பட்டது.

இப்போது, வாரணாசி தொகுதி யில், ஜோஷியை விரட்டி விட்டு தான் நிற்கலாம் என முடிவு செய்திருப்ப தற்குக் காரணம், அங்கே ஆர். எஸ்.எஸ். மோடிக்கு ஆதரவாக ஏற் கனவே பிரச்சாரம் துவக்கிவிட்டது.

இந்நிலையில், தனது டிவிட்டரில், மோடிக்கு நாடு முழுவதும் அலை வீசுகிறது என்றால், எதற்காக, வார ணாசி தொகுதிதான் தனக்கு வேண் டும் என ஏன் கேட்க வேண்டும்; மற்ற தலைவர்களும், அவரவர் தொகுதியிலேயே போட்டியிட லாமே? என கேள்வி எழுப்பி உள்ளார் சுஸ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை மூன்று பட்டி யல் வெளியிடப்பட்டது. ஆனால், மோடி எந்த தொகுதி என இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மோடிக்கு அலை வீசுவதாக ஊடகங் கள் சொல்கின்றன. மோடிக்கு அலை ஒன்றும் வீச வில்லை; மோடி தான் அலைந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்கள்.

ஆசிரியர் வீரமணியின் இந்த பேச்சை, வழிமொழிவது போல் இருக்கிறது பாஜகவின் மூத்த தலை வர் சுஸ்மா சுவராஜின் கருத்து.

Read more: http://viduthalai.in/page-2/76819.html#ixzz2vnMxPPf6

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்

அத்வானியின் அருள்வாக்கு!

வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு 182-க்கும் அதிக மான இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

- எல்.கே.அத்வானி

பெரும்பான்மை கிடைக்கும் - ஆட்சியைப் பிடிப்போம் என்று பீலா விடும் பி.ஜே.பி.யினருக்கு இது அர்ப்பணம்!

பாஷ்யம்

நமோ நமோ கோஷத்தை எழுப்பவேண்டா மென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பணியாற்ற மாட்டார்கள் என்ற ரீதியில்தான் கருத்துத் தெரி வித்தார்.

- மன்மோகன் வைத்யா, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர்

அய்யோ பாவம்! ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை பாஷ்யங்களைச் சொல்ல புதிய பாஷ்ய கர்த்தாக்கள் புறப்பட்டுள்ளனர் போலும்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு சலசலப்பை ஏற் படுத்தியது உண்மைதான். அதனைச் சமாளிக்கத்தான் இந்த உதார்களோ!

சோதிடமா?

அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தி.மு.க.விலோ தொண்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

- தா.மோ.அன்பரசன், மேனாள் அமைச்சர்

தேர்தலில் நிற்கும் அ.தி.மு.க.வினர் ஜாதகத் தோடு வரவேண்டும் என்று கடந்த தேர்தலில் அ.தி. மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.

சாயம் வெளுக்கும்!

ஹோலிப் பண்டிகைக்கு உத்தரப்பிரதேசம் தயா ராகிக் கொண்டிருக்கிறது. ராகுல் வண்ணப் பொடி, மோடி வண்ணப் பொடி என்று வியாபாரம் நடக் கிறதாம். இதில் யார் சாயம் வெளுக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

மோடி காமிக்ஸ்!

டில்லியில் உள்ள ஒரு பதிப்பகம், மோடி காமிக்ஸ் என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டு, காசு சம் பாதிக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
பொதுவாக மோடி என்றாலே ஒரு காமிக் என்ற நிலைதானே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் பிறந்த காந்தியாரின் முழுப் பெயரைக்கூடத் தெரிந்து வைத்திராத குஜராத் முதலமைச்சராயிற்றே மோடி!

பில்லி - சூன்யம்

பா.ம.க.விலிருந்து பிரிந்து சென்ற ஒரு கட்சியின் பிரமுகர் சந்திரசேகரன் என்பவர் சிறீபெரும்புதூரை யடுத்த சிவன்தாங்கல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உள்ளூர் பா.ம.க. பெண் ஒருவர், சந்திரசேகரன் வீட்டுக்குள் எலுமிச்சம் பழத்தையும், தகடையும் வீசியுள்ளார்.

பில்லி - சூன்யம் வைக்கப்பட்டதாகப் பயந்து மந்திரவாதிகளை அழைத்து இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளாராம்! (அரசியல் எப்படியெல்லாம் போகிறது பார்த்தீர்களா?) மூடநம்பிக்கைக் குழியில் விழுந்தால் ஒரு லட்சம் என்ன எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் நட்டம்தான். மூட நம்பிக்கைவாதிகளை விரட்டு வதும் எதிரிகளுக்கு எளிதுதானே!

மண் குதிரையோ!

டில்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி யும், அன்னா அசாரேயும் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந் தது. கூட்டத்தில் அசாரே பங்கேற்காத நிலையில், மம்தா மட்டுமே பங்கேற்றார்.

அசாரே, ஏன் வரவில்லை? என்று தமக்குத் தெரியவில்லை என்றார் மம்தா. இவ்வளவுக்கும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே, அன்னா அசாரே அவர்களின் ஆதரவாளர்கள்தானாம்.

எப்படி இருக்கிறது? அன்னா அசாரேயுடன் கைகோர்த்த கெஜ்ரிவால், அந்த விளம்பரத்தை - ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டார். பரிதாபத் திற்குரிய காந்திக் குல்லாய் அசாரேயோ ஏமாற்றத்தில் இருக்கிறார். அவரை நம்பிய மம்தாவுக்கு அனு தாபங்கள்!

பஸ்வான் பரிதாபம்

மதச்சார்பின்மை என்பது தேர்தல் தந்திரம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார் லோக்ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான். மதச்சார்பின் மைக்கு விரோதமான மதவாதக் கட்சி என்று கூறி, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து பஸ்வான் வெளியேறினாரே - அதுகூட தேர்தல் தந்திரம்தானா? பி.ஜே.பி. கூறுவதை அட்சரம் பிறழாமல் சொல்லுகிறாரே!

சமூகநீதி என்று பார்த்தாலும் பி.ஜே.பி.யின் நிலைப் பாடு என்ன என்று பஸ்வானுக்குத் தெரியாதா? வி.பி.சிங் ஆட்சியை ஏன் அவர்கள் கவிழ்த்தார்கள்.

பஸ்வான் - புதைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு விட்டார் - இந்தக் கறையிலிருந்து மீண்டும் மக்கள் மதிப்பென்னும் கரையைத் தொடுவது அவ்வளவு எளிதல்ல!

Read more: http://viduthalai.in/e-paper/76841.html#ixzz2vtNCuF8f

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் சிறப்பு நிகழ்வு!


நாளை (14.3.2014) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சிறப்பு விருந்தினர் பகுதியில் விடியலே வா! என்ற நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்றத் தேர்தல் 2014, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்வு ஒளிபரப்பாகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/76840.html#ixzz2vtNQWy6b

தமிழ் ஓவியா said...


பிற இதழிலிருந்து....! ஆர்.எஸ்.எஸ். நாடகம் எடுபடாது!


ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்து ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங் அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்றும் தங்களுக்கும் அரசி யலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவ்வப்போது பம்மாத்து செய்யும். ஆனால் ஆர்எஸ்எஸ் வரலாற்றை அறிந்த வர் அறிவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமே பாஜக என்பதை பாஜக வின் ஒவ்வொரு அசைவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினாலேயே தீர்மானிக்கப்படு கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் கனவில் மிதந்து கொண்டிருந்த எல்.கே. அத்வானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை முன் மொழிந்து முடிவாக் கியது ஆர்எஸ்எஸ் தான்.

இதனால் ஆத் திரமடைந்த அத்வானி அக்கட்சியிலி ருந்தே விலக முயன்றார். அவரை அழைத்து கண்டித்து கட்சியில் தொடருமாறு அறி வுறுத்தியதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். பாஜகவில் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடியை தீர்ப்பதும் அந்த அமைப்பே.

இந்த நிலையில் ஏதோ நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம். பிரச்சனைகளை முன்னிறுத்த வேண் டும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் மோகன்பகவத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டினுடைய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மதவெறி. ஒன் றாக வாழும் மக்களிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டு அவர்களை மோத விடும் இழிசெயலை செய்துவரும் அமைப்புகளில் முதலிடம் வகிப்பது ஆர்எஸ்எஸ்தான். இந்த லட்சணத்தில் மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசப் போகிறார்களாம்.

மோடியை ஒரு விற்பனைப் பொருள் போல விளம்பரப்படுத்த பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் நியமிக்கப்பட் டுள்ளன.

இதுதவிர பல்வேறு ஊட கங்களை வாடகைக்கு அமர்த்தி மோடி அலை வீசுகிறது, கரையைக் கடந்து விட்டது என்றெல்லாம் கதைகட்டி விடு கிறார்கள். ஆனால், இந்தக் கதைகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே கூட புளித்துப்போய்விட்டது போலும்.

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு ரகசிய அமைப்பாகவே கட்டமைத்துள்ளது. ஆயுதப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாஜக வின் பிரதான தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். பாஜகவுக்கு அந்தரங்க ஆலோசனை வழங்குவது அவர்களே. ஆனால் தேர்தல் வந்தவுடன், தன்னை ஒரு சுயேச்சையான அமைப்புபோல காட்டிக்கொள்ள முயல் கிறார்கள். இது பலிக்காது.

மிக முக்கிய கடமை

சிறுபான்மை மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிற, கேடுகெட்ட சாதிய வர்ணாசிரம முறையை நிலைப் படுத்த விரும்புகிற, கலவரங்களின் மூலம் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று கருதுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதிதான் பாஜக. நாடு விடுதலை பெற்றவுடன் மக்கள் ஒற்று மைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை படுகொலை செய்ததும் இவர்களது சித்தாந்தமே ஆகும்.

ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி பாஜக ஆட்சி நடத்தினால் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலே நடை முறைப்படுத்தப்படும். பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் ஆர் எஸ்எஸ் அமைப்பை பின்னுக்குத்தள்ளுவது தேசத் தின் இன்றைய மிக முக்கிய கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர் தலையங்கம், 13.3.2014

Read more: http://viduthalai.in/page-2/76845.html#ixzz2vtNhGbdY

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (2)

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று - எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.

ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76844.html#ixzz2vtOErLGX

தமிழ் ஓவியா said...


சபாஷ் - தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு


- குடந்தை கருணா

சமூக நீதி, மதசார்பின்மை, கூட் டாட்சி தத்துவம், மொழி நலன் இவை, திராவிடர் இயக்கத்தின் அடித் தள கொள்கை. அதன் அடிப்படை யில் தேர்தல் அறிக்கை உள்ளது.

1. தனியார் துறையில் இட ஒதுக்கீடு

2. முழுமையான ஜாதி வாரி கணக் கெடுப்பு. அதன் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பங்கீட்டை அறிந்து, அதன்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம்.

4. அந்தந்த மாநில அரசே, இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயம் செய்திட அதிகாரம்.

5. சேது சமுத்திரத் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

6. ஈழத் தமிழர் பிரச்சினை

7. சுயமரியாதைத் திருமண சட் டத்தை அகில இந்திய அளவில் நிறைவேற்றிட வேண்டும்.

8. பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு.

9. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு.

10. முதியோருக்குப் பாதுகாப் பான மருத்துவ வசதி.

11.மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு.

12. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

13. தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக திமுக பாடுபடும்.

14. அனைத்து மத்திய அரசின் தேர்வுகளும், தமிழில் எழுதிட ஆணை.

மதச் சார்பற்ற அரசு மத்தியில் அமைந்திட திமுக உறுதி. இந்தியாவை வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உரு வாக்கிட திமுக பாடுபடும்.

Read more: http://viduthalai.in/page-2/76848.html#ixzz2vtP6DI1T