Search This Blog

5.3.14

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?-கி.வீரமணி

உண்மையான மதச் சார்பற்ற அணியை திராவிடர் கழகம் ஆதரிக்கும்
கடலூரில் தமிழர் தலைவர் பேட்டி
கடலூர், மார்ச் 4- நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் உண்மையான மதச் சார்பற்ற அணியைத் திராவிடர் கழகம் ஆதரிக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் உலகம் நிதி வழங்கும் விழாவிற்காக 2..3.2014 அன்று கடலூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், தமிழர் தலைவரின் பதில்களும் வருமாறு:

டிஸ்னி வேர்ல்டுபோல் பெரியார் உலகம்!

தந்தை பெரியாரின் புகழைப் போற்றும் வகையில், 95 அடி உயரமுள்ள சிலையும், 40 அடி உயர பீடமும் சேர்த்து 135 அடி உயரத்தில், திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில், 30 ஏக்கரில் பெரியார் உலகம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் பெரியார் அவர்களுடைய பெருமையை, அந்தப் பகுதியில், பெரியார் அவர்களால் ஏற்பட்ட சமூகப் புரட்சி, அதனுடைய தாக்கம் இவைகளையெல்லாம் விளக்குகின்ற வகையில், காட்சிகளாக உருவகப்படுத்தி, அவைகளை மிகச் சிறப்பாக, இன்றைய தலைமுறையினரும், இனி வரக்கூடிய தலைமுறை யினரும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஏற்பாட்டினைச் செய்து, அதனை ஒரு பெரிய திட்டமாக வகுத்து, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் அமையக்கூடிய அந்தத் திட்டத்திற்கு ஏற்பாடு களை செய்து, அதில் பொதுமக்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக, கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி அன்று, தஞ்சையில், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நிதியை முதற்கட்டமாக 1005 பவுனை, தளபதி ஸ்டாலின், திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி ஆகியோர் முன்னிலையில், சிறப்பான முறையில், என்னிடம் அளித்தார்கள். அதற்கு அடுத்தகட்டமாக, வருகின்ற மார்ச் 10 ஆம் நாள் அன்னை மணியம்மையார் அவர்களுடைய பிறந்த நாள் விழா சென்னை மதுரவாயலில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக, அந்தந்த மண்டலங்கள் சார்பாக, பிரச்சாரக் கூட்டமும் நடைபெறுகிறது. நேற்று திருச்சி மண்டலம் கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இங்கே வந்திருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு பவுனுக்கான தொகையை வழங்கவேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கு மேலும் வழங்குபவர்களின் பெயர்களை எல்லாம் அந்தப் பெரியார் உலகத்திலே பதிவு செய்யப்படும் என்று முடிவெடுத்து, அதற்காக கழகத் தோழர்களுடைய அந்த முயற்சியாக, இன்றைக்குக் கடலூரில் தங்கம் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
பெரியார் அவர்களுடைய தொண்டு, எப்படிப்பட்ட பெரிய மாறுதல்களை, சமூகப் புரட்சியை, அமைதிப் புரட்சியாக உருவாக்கியது என்பதற்காக இந்த ஏற்பாடுகள்.  எப்படி டிஸ்னி வேர்ல்டு என்பது இருக்கிறதோ, அதுபோல், பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின், பெரியாருடைய தாக்கங்கள், அறிவியல் மனப்பான்மைக்கு பெரியார் அவர்கள் எப்படி பாடுபட்டார்கள். மூடநம்பிக்கையினால் நம்முடைய நாட்டில் ஏற்படுகின்ற கேடுகள், தாக்கங்கள் எப்படிப்பட்டவை? என்பதையெல்லாம் வலியுறுத்தவும், பெரிய அளவில் பகுத்தறிவு நூலகம் அங்கே அமையவும், குழந்தைகளுக்கான நல்ல அறிவுறுத்தல் பகுதியும் அங்கே இருக்கக்கூடிய வாய்ப்புகளையும், நவீன தொழில் நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி, சிறப்பாக செய்வதற்குரிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரவர்கள் அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆகவே, இந்தப் பணி என்பது, உடனடியாக முதற்கட்டம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக முடியும். அடுத்தடுத்து இரண்டு, மூன்று கட்டங்களாகப் பிரித்து, மிகப்பெரிய அளவிற்கு, டிஸ்னி வேர்ல்டு என்பது எப்படி ஒரு புதுமை உலகமாக, அறிவியல் ரீதியாக இருக்கிறதோ, அதுபோல, பெரியார் உலகம் என்பது ஒரு புதிய திட்டமாக மேலும் விரிவடைந்து செய்ய இருக்கிறோம். அது சம்பந்தமாகத்தான் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தக் கடலூர் மாநகரத்திற்கு வரக்கூடிய வாய்ப்பினை தோழர்கள் அளித்திருக் கிறார்கள். செய்தியாளர்களாகிய உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

பெரியாருடைய தொண்டு, எதற்காக அந்தப் பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன என்பதையெல்லாம் விளக்கி, தேரடித் தெருவில் நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதச்சார்பற்ற கூட்டணியைத்தான் திராவிடர் கழகம் ஆதரிக்கும்

தேர்தல் கூட்டணிபற்றி...

தேர்தல் கூட்டணியில் இடம்பெறுகின்ற இயக்கம்; ஆதரிக் கின்ற இயக்கமாக திராவிடர் கழகம் இருந்தாலும், தேர்தல் கூட்டணியில் இடம்பெறக்கூடிய ஒரு அரசியல் கட்சியல்ல;   இது ஒரு இயக்கம்; தாய்க்கழகம்; வெளிப்படையாக எங்களுடைய நிலைப்பாட்டினைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். மதச்சார் பற்ற, சமூகநீதியில் உறுதியான நம்பிக்கையுள்ள கூட்டணியாக இருக்கக்கூடிய  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலை மையில் இருக்கக்கூடிய கூட்டணியைத்தான், வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதில், திராவிடர் கழகம் உறுதியாக இருக்கிறது. காரணம், இன்றைய சூழலில், மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தவேண்டுமானால், அகில இந்திய அளவில், நிச்சயமாக அதற்குரிய வாய்ப்புகள் இந்த அணியின்மூலமாகத்தான் இருக்கும் என்பது உறுதியான ஒன்று. ஆகவே, இப்பொழுது இன்னும் அணிகள் எல்லாம் உருவாக வில்லை; தேர்தலில் கூட்டணி சேருவதில், இன்னும் யார் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று இன்னும் உறுதியாக்கப்பட வில்லை; இறுதியாக்கப்படவில்லை. உறுதியுமில்லை; இறுதியு மில்லை. இந்தச் சூழ்நிலையில் நான் அதிகமாக கருத்துகளைச் சொல்லவிரும்பவில்லை. எங்களுடைய இந்தச் பிரச்சினையில் நிலைப்பாட்டினைப் பொறுத்தவரையில், மதச்சார்பற்ற கூட்டணி யைத்தான் திராவிடர் கழகம் ஆதரிக்கும். மதச்சார்பற்ற கூட்டணி என்று சொல்கின்ற நேரத்தில், அது தோற்றத்திற்கு மதச்சார்பற்ற கூட்டணியாகவும், தேர்தலுக்கு முன் மதச்சார்பற்ற கூட்டணி யாகவும் இருக்கக்கூடிய கூட்டணியாக இருந்து, தேர்தலுக்குப் பின்னாலே தன்னுடைய வண்ணத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய, நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளக்கூடிய கூட்டணியாய் இருப்பதை ஆதரித்து ஏமாறமாட்டோம்.

எங்களுக்கு நிரந்தர நண்பர்களும் உண்டு; நிரந்தர எதிரிகளும் உண்டு!

அ.தி.மு.க. நிலைப்பாடு மாறியிருக்கிறார்களா?

தாராளமாக, அந்த அம்மையார் எத்தனையோ முறை மாறியிருக்கிறார்கள்.
என்னுடைய வாழ்நாளில், இனிமேல் நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டேன்; இது உறுதி. இந்தத் தவறை நான் மீண்டும் செய்யமாட்டேன் என்று சென்னை கடற்கரையில் அவர்கள் பேசிய பேச்சு புத்தகமாக வந்திருக்கிறது.

ஆனால், மறுபடியும் அவர்கள் பா.ஜ.க.வோடு சேர்ந்தார்கள்; பொதுவாக அரசியல் கட்சி நண்பர்கள், அரசியலில் நிரந்தர நண்பர்களும், இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதை வசதியான சுலோகத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்கள். எங்களைப் பொறுத்தவரையில், சமுதாய இயக்கத்தைப் பொறுத்தவரையில், எங்களுக்குக் கொள்கையைப் பொறுத்து நிரந்தர எதிரிகள் உண்டு; நிரந்தர நண்பர்கள் உண்டு.

யார் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் நிரந்தர நண்பர்கள்; யார் இந்தக் கொள்கைக்கு விரோதிகளாக இருக்கிறார்களோ, அவர்கள் நிரந்தர எதிரிகள். நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் கிடையாது.

காங்கிரஸ் இயக்கம்கூட மதச்சார்பற்ற தன்மையில்தான் வருகிறார்களா?

தேசிய கட்சிகளான காங்கிரஸ் - பா.ஜ.க.  கட்சிகளில் மதச்சார்பற்ற தன்மை என்று சொல்லக்கூடிய நிலையில், நீங்கள் சொல்வது ஓரளவு உண்மை என்று சொன்னாலும்கூட, தமிழ்நாட்டினுடைய நலன்கள்; தமிழர்களுடைய நலன்கள் பல செய்திகளில், குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினை; மனிதநேய பிரச்சினைகள். அண்மையில் நடைபெற்று இருக்கக்கூடிய தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதுபோன்ற மனிதநேய அடிப்படை; தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும், மற்ற பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசினு டைய நிலைப்பாடு என்பது, தமிழ்நாட்டினுடைய, தமிழர்களுடைய நலனுக்கு மாறாகச் சென்றுகொண்டிருக்கின்ற  காரணத்தினால், இன்றைய காலகட்டத்தில், அதனை ஏற்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல; மக்களே அதற்குத் தயாராக இல்லை.

ஒருவேளை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

யூகங்களை வைத்து நான் எப்பொழுதுமே பதில் சொல்வதில்லை. ஏற்பட்டால், அப்பொழுது பதில் சொல்கிறேன். யூகங்களுக்குப் பதில் சொல்லமாட்டேன்.

விமானத்தின்மூலமாக தமிழகக் கடற்பகுதிகளைக் கண்காணிப்போம் என்று இலங்கை அமைச்சர்  கூறியிருப்பதுபற்றி...?

வருகின்ற 5 ஆம் தேதி அன்று மனித உரிமை விசாரணை நடக்கவிருக்கின்ற சூழலில், தெளிவாக டெசோ மூலமாகவும், திராவிடர் கழகம் டெசோ ஒரு அங்கம் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும். டெசோ மூலமாக, மற்ற ஒத்த கருத்துள்ளவர்கள் மூலமாகவும் வலியுறுத்துகின்ற ஒரு போக்கு என்னவென்றால், போர்க்குற்றவாளியான இலங்கையின்மீது, ஒரு சர்வதேச விசாரணை - சுதந்திரமான விசாரணை நடைபெறவேண்டும். அதற்குக் குறிப்பாக, அமெரிக்கா கொண்டுவருகின்ற தீர்மானத்தை, இந்தியா ஆதரிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதைவிட முக்கியம், ஈழத் தமிழர்கள் என்பவர்கள், தொப்புள்கொடி உறவுள்ளவர்கள். அந்த இனம் அழிக்கப்படக்கூடிய அளவிற்கு வந்து, 90 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் என்று அந்த அய்.நா. அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்ற சூழலில், ஒரு தனித் தீர்வு வரவேண்டும். இலங்கையில் ராஜபக்சே ஆட்சி  இருக்கின்ற வரையில், தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையோ மற்றவையோ கிடைக்காது. அதற்கு உதாரணம், தேர்தல்மூலமாக வந்தால், நாங்கள் ஜனநாயகத்தை ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கின்ற வடக்கு மாகாணத்திற்கு, கிழக்கு மாகாணத்திற்கு எந்தவித அதிகாரத்தையும் கொடுக்காமல், சும்மா ஒரு பொம்மை அரசாங்கமாகக் காட்டுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதின் காரணமாக, அவர்கள் மனம் நொந்து, வெந்து சொல்லக்கூடிய கட்டம் இருக்கிறது.

ஆகவே, அங்கு நியாயம் இருக்காது; ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது.
ராஜபக்சே தமிழர்களிடம் நடந்துகொள்வதைவிட கொடுமையானதாகும்

15 பேர்களுக்கு மீண்டும் மரண தண்டனை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டிருக்கிறதே மத்திய அரசு, அதனைப்பற்றி...?

மத்திய அரசின் நிலைப்பாடு; மனிதநேயத்திற்கும் விரோத மானது; நியாயத்திற்கும் விரோதமானது; ஏற்புடையதும் அல்ல.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது இருக்கிறதே, மிகப்பெரிய நியாயத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி. ஆகவே, 23 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு மனுவின்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையே,  மனித உரிமை பறிக்கப்பட்டிருக்கிறதே, மனித உரிமை, வாழும் உரிமை எனக்கு, அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறதே என்று, பாதிக்கப்பட்டவர்கள் அங்கே சென்றிருக்கிறபொழுது, அதற்குச் சரியான முடிவை உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது.

அதை மீண்டும் குழப்பி, அல்லது தங்களுடைய விருப்பத்தை அதில் திணிக்கவேண்டும் என்பதற்காக, மூன்று நீதிபதிகளுடைய விசாரணை சரியில்லை; அய்ந்து நீதிபதிகளுடைய விசாரணை தேவை என்று சொல்கிறார்கள்.

இன்னும் அதிகமாக சட்ட ரீதியாக எங்களால் சொல்ல முடியும் என்று சொன்னாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், நானும் வழக்குரைஞர் என்கிற முறையில், அதற்குள்ளே போக விரும்பவில்லை.

அதனைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் நிலைப்பாடு நியாயத்திற்கும் விரோதமானது - அதைவிட மனிதாபிமானத்திற்கு விரோதமானது; கடைசியாக தமிழினத்திற்கும் விரோதமானது. அதைக்கூட தள்ளி விடலாம்; தமிழினப் பார்வைகூட வேண்டாம் - உடனே சாவனிசம் என்று சொல்லிவிடுவார்கள்.  அதுகூட தேவையில்லை. மத்திய அரசின் நிலைப்பாடு மனிதநேயத்திற்கே விரோதமானது.

பொதுவாக ஒன்று உண்டு; தூக்குத் தண்டனை கைதியை, தூக்கில் போடும்பொழுது, அந்தக் கயிறு அறுந்து விழுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; மறுபடியும் இன்னொருமுறை தூக்கில் போடமாட்டார்கள். இது நீண்ட காலமாக இருக்கக்கூடிய மரபாகும். அதுபோல், ஒரு தீர்ப்பு கொடுத்து; தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்று சொன்ன பிறகு, இல்லை இல்லை, மறுபடியும் அவர்களைத் தூக்கில்தான் தொங்கவிட வேண்டும் என்று கேட்பது இருக்கிறதே, இது ராஜபக்சே தமிழர்களிடம் நடந்துகொள்வதைவிட கொடுமையானதாகும்.

தீட்சிதர்களுக்கு சிதம்பரம் கோவில் உரியதல்ல என்பதற்கு ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன

சிதம்பரம் கோவில் பிரச்சினையில் தமிழக அரசின் நிலை குறித்து...?

வெளிப்படையாக இன்றைய அரசு; அ.தி.மு.க. அரசு, தீட்சிதர் அரசாக ஆகியிருக்கிறது - சிதம்பரம் கோவிலைப் பொறுத்த வரையில். ஏற்கெனவே அவர்களுக்குள்ளே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. எல்லாமே திட்டமிட்ட காரியங்களாக நடந்திருக்கிறது. வழக்கில் எதிர் வழக் காடிகள்  தங்களுடைய கருத்துகள் சரியாகக் கேட்கப்படவில்லை என்பதைவிடக் கொடுமை - யார் அந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டுமோ - அத்தகைய தமிழக அரசு இருக்கிறதே - அது முழுக்க முழுக்க தீட்சிதர்களுக்காக அப்படியே விட்டுக் கொடுத் ததைப்போல ஆகிவிட்டது. இதைவிட, ஒரு உத்தரவினைப் போட்டு, நாங்கள் திருப்பிக் கொடுக்கிறோம் என்று சொல்லி யிருக்கலாம். ஆகவே, நிச்சயமாக அவர்கள் தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். மீண்டும் மக்களுடைய எண்ணம் நிறை வேறக்கூடிய நாள் வரும். வரலாறு திரும்பும். அப்படி திரும்புகின்ற நாள் கொஞ்ச தொலைவில் இருக்கிறது. ஏனென்றால், நீண்ட காலமாக இந்தப் பணி என்பது சிதம்பரத்தில் இருக்கின்ற மக்களுடைய பணி மட்டுமல்ல; சிதம்பரம் கோவிலில் எந்தவிதமான கோளாறும் இல்லாமல்தான் இந்து அறநிலைய பாதுகாப்புத் துறை செயல்பட்டது. இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நிர்வாகத்தில் எந்தவித கோளாறும் சொல்ல முடியாது.

இரண்டாவதாக, தீட்சிதர்களுக்கு சிதம்பரம் கோவில் உரியதல்ல என்பதற்கு ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதனை எதையுமே உச்சநீதிமன்றம் பார்க்கத் தவறி - ஒரு தவறான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்தத் தீர்ப்பு  வருவதற்கு உடந்தையாக இருந்தது தமிழக அரசு - அ.தி.மு.க. அரசு அதற்குத் துணை போனது பெரிய குற்றமாகும்.

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை...

மூன்று நாள்களில் விடுதலை செய்வோம் என்று தமிழக அரசு அறிவித்ததைப்பற்றி...?

தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்பது இருக்கிறதே அது சட்டப்படி தவறல்ல. ஒன்றே ஒன்று அதில் - அவசர முடிவிற்கும், விரைந்த முடிவிற்கும் வித்தியாசம் உண்டு. கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில், அவருடைய நிர்வாகத்தில் எப்படி ஒரு நீண்ட காலமாக இருக்கின்ற மரபு - அவர் கடைப் பிடித்து வந்தது - Quick Decision என்று சொல்லக்கூடிய விரைந்த முடிவு எடுக்கக்கூடியவராக இருந்தார். Hasty Decision என்று சொல்லக்கூடிய அவசர முடிவினை அவர் எடுத்ததில்லை.

இந்த அம்மையாரைப் பொறுத்தவரையில் Procedure Lapsl என்று சொல்லக்கூடிய அளவில், மிக வேகமாக, அதிதீவிரமாக, மற்றவர்கள் செய்யாதவற்றையெல்லாம் நான் செய்துவிட்டேன் என்று காட்டக்கூடிய வகையில், மற்ற சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்கூட சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுதான் இப்பொழுது இந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மேலும் உள்ளே செல்ல விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரசோடு கூட்டணி சேருவதற்கு  ஏன் தயங்குகிறார்கள்?

கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பகுதியல்ல என்று மத்திய அரசாங்கம் சொல்லியிருப்பதுபற்றி...

மத்திய அரசாங்கம், அதனுடைய அதிகாரிகள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்கு எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு இது. இராமநாதபுரம் அரசருக்குக் கச்சத்தீவு உரியது என்பதை தெளிவாக District Gazetteer என்று  நீண்ட காலத்திற்கு முன் வெளியிட்டிருப்பதிலேயே மிகத் தெளிவாக, கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ராஜாவிற்கு உரியது என்கிற வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அங்கே இருக்கின்ற அதிகாரிகள், அந்த அபிடவிட் போட்டவர்கள் யாரும் அதனைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொன்னால்,  தமிழ்நாட்டில் காங்கிரசோடு கூட்டணி சேருவதற்கு  ஏன் தயங்குகிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதுமே!

தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

மக்களின் மனநிலை இருக்கிறதே, அது இப்பொழுது எப்படி இருக்கிறது -  அடுத்தபடி எப்படி இருக்கிறது என்பதைவிட, நான் சொன்ன விஷயத்தில் மக்கள் மனநிலை வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது - ஈழப் பிரச்சினைகளில் மற்றவைகளில். ஆனால், தேர்தலைப் பொறுத்தவரையில், too early என்று சொல்லக்கூடிய அளவில், ஏனென்றால், தேர்தல் வருவதற்கு கடைசி ஒரு வாரத்திற்கு முன்புகூட தலைகீழ் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புண்டு. அது எதார்த்தமான உண்மையுமாகும். ஆகவேதான், இந்தத் தேர்தல் கணிப்புகள் இருக்கிறது பாருங்கள்; அது தேர்தல் கணிப்புகள் அல்ல; தேர்தல் திணிப்புகளாகும்.

பெரியார் உலகம் திறப்பு விழா என்பது இந்திய அளவில் இருக்குமா?

இந்திய அளவில் இல்லை; உலக அளவில் இருக்கும். ஏனென்றால், பெரியார் உலகம் - பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு உலகளாவிய நிலையில் இருக்கின்றன.

சிங்கப்பூர், மலேசியாவிற்கு நிகழ்ச்சிக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே பெரியார் உலகத்தைப்பற்றி சொன்னவுடன், ஏராளமான தோழர்கள் நன்கொடை கொடுத்தார்கள்.

அதேபோல், பெரியார் பன்னாட்டமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. அண்மையில் மகாராட்டிர அமைச்சர் முஜ்புல் அவர்களுக்கு சமூகநீதி விருது கொடுக்கின்ற நேரத்தில், அந்த விருதிற்கான ஒரு லட்சம் பணத்தினை, பெரியார் உலகத்திற்கே நிதியாக அளித்தார். ஆகவே, அந்தத் திறப்பு விழா என்பது பெரிய அளவில் இருக்கும்.

உலகத் தலைவர்கள் எல்லாம் திறப்பு விழாவிற்கு வருவார்களா?

நிச்சயமாக வருவார்கள்! ஏனென்றால் அது International Affair ஆக இருக்கும். அதற்குரிய வாய்ப்புகள் இருக்கும். உலகத்தினுடைய சாதனைகளில், இது ஒரு சரித்திர சாதனையாக இருக்கவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். இதுவரையில், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ஒத்துழைக்கிறார்கள். எங்களுக்கு எல்லா கட்சிக்காரர்களும் நிதி கொடுக்கிறார்கள்; யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவரவர்களும் எங்களுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

                       ----------------------------”விடுதலை” 4-3-2014

9 comments:

தமிழ் ஓவியா said...


தலைவிதி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலை விதி.

- (86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்

Read more: http://viduthalai.in/page-2/76351.html#ixzz2v2xgQcHR

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு - 6


- குடந்தை கருணா

தினமும், மோடி தனது சுய விளம் பரத்திற்காக, குஜராத் அரசின் பணத் தில், இந்தியாவிலுள்ள அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரங்களாக தந்து கொண்டிருக் கிறார்.

பெண்கள் முன் னேற்றம், மேம்பாடு இவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறதாம்?

இன்றைய பத்திரிகையில், குஜராத் தில் சிறந்த நிர்வாகம் தரும் மோடி, நாடு முழுவதும் அதனை தர இருக்கிறாராம்.

அரசின் மதம், முதலில் இந்தியாவாம், அரசின் புனித நூல், அரசியல் சட்டமாம்;

அரசின் ஒரே ஈடுபாடு, தேச பக்தி தானாம், அரசின் ஒரே அதிகாரம், மக்கள் தானாம்;

அரசின் ஒரே வழிபாடு, 125 கோடி இந்திய மக்களின் நல்வாழ்வு தானாம்; அரசின் ஒரே கடமை, கூட்டு முயற்சியாம், அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சியாம். சொல்கிறார், மோடி, யார்?

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி தன்னை, இந்து தேசியவாதி என வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட மோடி தான் இந்தியா முதலில் என்கிறார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட வைத்து, அப்பாவி பெண்களை சூறையாடுவதற்கு வழி வகை செய்த மாயா கோட்னானியை தனது அரசில் அமைச்சராக அமர்த்தி, பாதுகாத்தவர் சொல்கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

நடு ரோட்டில், கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே கருவாக இருந்த உயிரைக் கொன்று, அந்த பெண்ணையும் கொன்ற, பாபு பஜ்ரங் கியை பாதுகாத்த மோடி சொல் கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

இந்து மதம் தான் இந்தியாவின் மதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்,எஸ்-இன் சேவகன் என வெளிப்படையாக கூறிக்கொள்ளும் மோடி சொல்கிறார், அரசின் மதம், இந்தியா தான் என்று.

மனு சாஸ்திரம் தான் புனித நூல் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரின் ஆத்மார்த்த ஊழியன் மோடி சொல்கிறார், அரசின் புனித நூல் அரசியலமைப்பு சட்டம் தான் என்று.

தனது மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க்ளுக்கு எந்த வித நல திட்டங்களும் செய்யாமல், அவர்களது நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி சொல்கிறார், அரசின் கடமை, அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்று. ஒரு முடிவோடு, மோடி களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய பொய் சொன்னாலும், ஊடகங்கள் அதனைக் கண்டு கொள்ளாது; ஆனால், மக்களும் அப்படி இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/76371.html#ixzz2v2xr9uzv

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம் பிஜேபி முதலில் மன்னிப்பு - பிறகு பல்டி!

மும்பை, மார்ச்.4- குஜராத் கலவரம் பாஜக வால் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சில நாட்களுக்குமுன்பாக தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தலைவர் ராஜ்நாத் மன்னிப்பை பாஜக மறுத்துள்ளது. குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்புக் கோரத் தேவை இல்லை என்றார். மேலும், பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதிகளில் காங்கிரசு மன்னிப்பு கேட் குமா? என்றார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, குஜராத் மாநிலத்தில் பாஜக நல்ல நிர்வாகத்தை அளித்துள்ளது. இதில் மத சார்பின்மை யைக் காட்டிலும் திறமையான நிர் வாகத்தை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக கருதுகிறது.

பாஜக நல்ல நிர்வாகத் துடன் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தேச ஒற்றுமை ஆகிய வற்றை மற்ற எதையும்விட மதிப் புள்ளதாகக் கருதுகிறது. மற்ற கட்சிகள் நல்ல நிர்வாகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மத சார்பின்மை என்கிற பெய ரில் அரசியல் செய்து வருகின்றன.

மதசார்பின்மை என்று கூறிக் கொள்ளும் மற்ற கட்சிகள் மக்களிடையே மத சார்பின்மை என்கிற போதையை ஊட்டிவிட்டு நல்ல நிர்வாகம், வளர்ச் சிப்பணிகள் மக்களை எட்டாமல் செய்துவிட்டன.

பாஜகவுக்கு நல்ல நிர்வாகம், மத சார்பின்மையும் முக்கியமானவையே. மத சார்பின்மை பேசும் மற்ற கட்சிகள் ஆட்சியில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்று எதுவுமே இல்லை. மத சார்பின்மை என்பது எத்தனையோ கொள்கை களில் ஒன்று. அது மட்டுமே கொள்கை அல்ல என்றார். பாஜக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமே இல்லை என்ற முக்தார் அப்பாஸ் நக்வி பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதி களில் காங்கிரசு கட்சி மன்னிப்பு கோருமா என் றும் கேட்டார்.

பாஜகவை நோக்கி மகாராட்டிரத் திலிருந்து ராம்தாஸ் அத்வாலே, பீகாரி லிருந்து ராம்விலாஸ் பஸ் வான், உத்தரப் பிரதேசத் திலிருந்து உதித் ராஜ் ஆகிய முக்கியத் தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் மூவரும் எப்படி வரமுடியும்? என்று கேட் டார். காங்கிரசார் தோல்வி பயத்தில் நிதான மிழந்து மோடியைப் பற்றிப் பேசி வருகின்றனர் என்று நக்வி கூறினார். முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டே கூறும்போது ஜாதி, மதம் என்கிற குறுகிய பாதை பாஜகவுக்கு இல்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76356.html#ixzz2v2y3JjUT

தமிழ் ஓவியா said...


கடவுளை மற - மனிதனை நினை! கடவுள்களைக் காப்பாற்ற அரசின் முயற்சிகள்!

சென்னை, மார்ச் 4- சிலைத் திருட்டைத் தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள 5 லட்சம் சிலைகளையும் படம் எடுக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறையினருக்கு காவல் துறையினர் அறிவுரை வழங் கியுள்ளனர்.

இது குறித்து பொருளா தார தடுப்புப் பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி. பிலிப், சிலை தடுப்புப் பிரிவு டி.அய்.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு சென்னையில் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கோயில் களில் மொத்தம் 28 சிலைகள் திருடு போயுள்ளன. இவற் றில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வரத ராஜ பெருமாள் கோயிலில் திருடு போன விநாயகர் சிலை மட்டும் மீட்கப்பட் டுள்ளது. எஞ்சியுள்ள 27 சிலை களும் வெளிநாடு களில் உள்ள அருங்காட்சி யகங்களிலும், கலைப் பொருள் சேகரிப் போரிடமும் உள்ளன. அவற்றை தற் போது மீட்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக அந்தந்த நாட்டு அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

முதல் கட்டமாக அமெ ரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து 3 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சி யகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் புரந்தான் கிரா மம் பிரகதீஸ்வரர் கோயி லில் திருடப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள நடராஜர் சிலையையும், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள விருத்தாசலம் விருதகிரீஸ் வரர் கோயிலில் திருடப் பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் மீட்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைத் திருட்டு கும்பலின் தலைவ ராக செயல்பட்ட சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவ ருடைய கூட்டாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக் காவில் 3 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், எதிர் காலத்தில் சிலைத் திருட்டை தடுக்கும் வகையில் தமிழ கத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இருக்கும் 45 ஆயிரம் கோயில்களில் உள்ள சுமார் 5 லட்சம் சிலைகளின் நிழற் படங்களை எடுக்க வலி யுறுத்தியுள்ளோம்.

இதே போல உலோக சிலைகளின் பின்புறம் கோயில், ஊர், தமிழக அர சுக்குச் சொந்தமானது என எழுத வேண்டுமென அற நிலையத்துறையிடம் தெரி வித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

(குறிப்பு: சில ஓட்டல் களில் தம்ளர்களில்.. இது இந்த... ஓட்டலில் திருடப் பட்டது என்று எழுதி இருக் கும் அல்லவா - அதுதான் இங்கும் நினைவிற்கு வருகிறது. என்னே கடவுள் சக்தி!)

Read more: http://viduthalai.in/e-paper/76338.html#ixzz2v2yPij1U

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தை கொண்டு வந்தாவது

காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நமக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கலைஞர் தலைமையில் 'டெசோ' அமைப்பு கேட்டுக்கொண்டபடி, இப்போதாவது (காலந்தாழ்ந்தாவது) இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது கட்சியை காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை - சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர் மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும்.
உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக்கொண்டபடி செய்திருக்கவேண்டும்; இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

சென்னை
5.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76399.html#ixzz2v8tXS4bT

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/76429.html#ixzz2v8u0Parv

தமிழ் ஓவியா said...


மத்திய ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க. என்ன செய்தது?காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தி.மு.க.வை நோக்கி சில வினாக்களை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்ததே - தமிழ்நாட்டு மக்களுக்கு எதைச் சாதித்துக் கொடுத்தார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின்மீது குற்றப்பத்திரிகை படிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அதனைக் குற்றமாகவும் கருத முடியாது.

அதேநேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக தி.மு.க. மத்தியில் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், 150 ஆண்டுகளுக்குமேலாக எதிர்பார்க்கப்பட்ட அரிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

இத்திட்டத்திற்கான செலவு ரூ.2427 கோடி. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று செல்வி ஜெய லலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

பி.ஜே.பி.கூட ராமன் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, இந்தத் திட்டமே கூடாது என்று அடம்பிடிக்கிறார்! உச்ச நீதிமன்றத்திலும் வழக்கைத் தொடுத்துள்ளார். இவ் வளவுக்கும் பல தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதும் இதே ஜெயலலிதா அம்மையார்தான் - அ.இ.அ.தி.மு.க.தான்!

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் அரசியல் பலன் தி.மு.க.விற்குச் சென்றுவிடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் முதல மைச்சர் தமிழ்நாட்டுக்கு - தி.மு.க. முயற்சியால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையே செயல்படுத்தத் தடையாக இருக்கிறார் என்பதுதானே உண்மை.

இந்தக் கேள்வியை எழுப்பும்முன்பாக, சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒன்று அவர் கண் முன்னால் நின்று மிரட்டியே இருக்கும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்கவே முடியாது.

இன்னொரு முக்கிய திட்டம் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம்வரையிலான பறக்கும் பாலம் அமைப்பு என்பது.

19 கிலோ மீட்டர் நீளம் உடைய இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்துத் திசையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகக் கன ரக வாகனங் களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்ததாக இருக்கும். சென்னை துறைமுகத்திலிருந்து பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். போக்குவரத்துத் துறை மேம்பாட்டால், பொருளாதார வளர்ச்சியும் அதனூடே பயணம் செய்கிறதென்று பொருள்.

1500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இதுவரை 900 கோடி ரூபாய் செல வழிக்கவும்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத் தையும் செயல்படுத்தக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இடைக்காலத் தடையும் பெற்றார்.

ஒப்பந்தக்காரரோ நான் செலவழித்துள்ள 900 கோடி ரூபாயை நட்ட ஈடாகத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டுள்ளார்.

திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் முதல்வர்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ் நாட்டுக்குத் திட்டங்கள் வருவதை இருகரம் கூப்பி வரவேற்கவேண்டுமே தவிர, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை முடக்கலாமா? இதனைத்தானே தமிழக முதலமைச்சர் செய்துகொண்டு இருக்கிறார்.

நாட்டு நலன் முக்கியமல்ல - அரசியல் இலாபம் இன்னொரு கட்சிக்குப் போய்விடக் கூடாது என்று நினைத்துச் செயல்படுவதற்கா ஒரு முதலமைச்சர்?

தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டதற்காக ஒவ் வொன்றையும் உருக்குலைப்பு வேலையில் ஒரு முதலமைச்சர் ஈடுபடலாமா?

புதிய சட்டமன்றக் கட்டடமாக இருந்தாலும் சரி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமாக இருந்தாலும் சரி, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டமாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்பதற்காக, அவற்றை உருக்குலைக்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நினைத்தால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது அரசியலில் பாலபாடமாகும்.

அதிகாரத்தில் இருக்கும்பொழுது, பல உண்மைகள் கண்களை மறைக்கலாம் - பாடம் படித்ததற்குப் பிறகுதான் காலங்கடந்து ஞானோதயம் பிறக்கும் என்பதைத் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/76433.html#ixzz2v8uZaMS2

தமிழ் ஓவியா said...


மாணவர்களும் - பேராசிரியர்களும் எழுப்பிய வினாக்களுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார்


நிகழ்ச்சியில் கேள்வி நேரம் இருந்தது. அதில் மாணவர்களும், ஆசிரியர் களும் கேள்விகள் எழுப் பினர்.

1. ஜாதி இல்லை என்று பேசினீர்கள். சான்றிதழ்களில் ஏன் ஜாதி கேட்கிறார்கள்? என ஒரு மாணவி கேட்க, அரங்கம் நிறைய கைத் தட் டினார்கள்.

எந்த ஜாதியைக் கூறி கல்வி மறுக்கப்பட்டதோ, அதே ஜாதியை முன் வைத்தே நாம் கல்வி பெறத் தொடங் கினோம். அம்மை நோயை ஒழிக்க, அதே அம்மைக் கிரு மியைப் பயன்படுத்துகிறது மருத்துவ உலகம். குணப் படுத்தும் மருந்தில் கூட, கொஞ்சம் விசம் இருக்கிறது. இடஒதுக்கீடு வேண்டியே சான்றிதழில் ஜாதியின் பயன் பாடு இருக்கிறது. இது எவ் வளவு காலத்திற்கு? எல்லோ ருக்கும் எல்லாமும் கிடைக்கும் வரை! இன்னும் எளிதாய் சொல்வதானால், புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதுவரை நாம் மாற்றுப் பாதையில் செல்கிறோம். எவ்வளவு காலம் மாற்றுப் பாதை என்று கேட்டால், பாலம் முடியும் வரை எனத் தமிழர் தலை வர் பதில் கூறியபோது மீண் டும் அரங்கம் அதிர்ந்தது. (முதல் அதிர்வுக்கும், பிந் தையதிற்கும் வித்தியாசம் தெரிந்தது)

2. ஜாதி தமிழ்ச் சொல்லா?

இல்லை! ஆரியம் வந்த பிறகு வந்தது. ஜாதி ஏற்பாடு, மனித ஏற்பாடு என்றால் நாம் கேள்வி கேட்போம். எனவே அது கடவுள் ஏற் பாடு என்று சொல்லிவிட் டார்கள். கடவுள் என்ற பிறகு நாம் கேள்வி கேட்போமா?

3. மதிப்பெண்கள் குறை வாய் இருந்தும், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஏன் அதிக சலுகை?

விருந்து நடைபெறு கிறது. பசியால் துடித்து, ஏப்பம் விடுகிறார் ஒருவர். சாப்பாடு முடித்து, செரிமா னம் ஆகாமல் ஏப்பம் விடு கிறார் இன்னொருவர். நாம் யாரைச் சாப்பிட அழைப் பது? குத்துச் சண்டை வீரர் ஒருவருடன் என்னை மோத விடுங்கள். யார் வெல்வார்? நானும், அவரும் சமம் ஆக முடியுமா? நல்ல திடகாத்திர மான ஒருவரும், மாற்றுத் திறனாளியும் சமப் போட்டி யாளர்கள் ஆவார்களா? எனவே சமம் என்பதும், தகுதி, திறமை என்பதும் இங்கு தவ றாகப் பேசப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-4/76444.html#ixzz2v8vVVnnx

தமிழ் ஓவியா said...


இருதய நோய் மாரடைப்பைத் தவிர்க்க இதோ ஒரு எளிய வழி!

- வாழ்வியல் சிந்தனைகள்


உலகின் மிகப் பெரிய உயிர்க் கொல்லிகளில் முக்கியமானது இருதய நோய் - மாரடைப்பு.
முன்பெல்லாம் முதிய வயதினரை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த இந்த இதய நோய், இளம் வயதினரை யெல்லாம்கூட தாக்கிடும் பேரபாயம் நாளுக்கு நாள் மலிந்து வருகிறது.

அதற்கு ஒரு முக்கிய காரணம் இளையவர்கள் கண்டபடி; வேக உணவுகள் (Fast Foods) என்ற பெய ரில் விற்கப்படும் இறைச்சி உணவு களை வரைமுறையின்றி சாப்பிட்டு, தம் உடலில் கொழுப்பை ஏற்றிக் கொள்வதுதான்; அது திடீர் மாரடைப் பில் கொண்டு போய் நிறுத்துகிறது.

பொதுவாக ஆட்டிறைச்சி, சில வகையான கோழி இறைச்சி, மாட்டி றைச்சி, பன்றி இறைச்சி, போன்றவை கொழுப்பை மிக அதிகமாக நம் உடலில் சேர்த்து விடுகின்றன. எனவே கூடுமான வரை, மாமிச உணவுப் பழக்கம் உடையோர் அவைகளுக்குப் பதில், மீன் உணவை அதிகம் சாப்பிடு வது உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, கொழுப்பு சத்து அதிகம் ஏற்பட்டு மார டைப்பு நோய்க்கு மிகப் பெரிய தடுப் பானாகவும் உதவுகிறது!

உலகம் முழுவதிலுள்ள டாக்டர்கள் உணவு ஆலோசகர்கள் மீன் சாப்பிடுங் கள் என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்.

ஏன் என்பதற்கு இன்றைய செய்தித் தாளில் (தீக்கதிரில்) வெளி வந்துள்ள ஒரு செய்தி சிறந்த விளக்கமாக அமைந்துள்ள தால் அதனை அப்படியே தருகிறோம்.

மீன் இருதய நோயைத் தடுக்கும்

ஜப்பானியர்கள் மீனையும், மீன் எண்ணெய்களையும் அதிகமாக உண்ணு வதால் அவர்கள் இருதய நோயால் துன்புறுவதில்லை. எனவே அவர்களை உலகின் இதரபகுதியினரும் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை கூறத் தொடங்கியுள்ளனர்.

இருதயத்தில் இருந்து ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனியில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதால் உருவாகும் நோய்கள் அமெரிக்க மக்களோடு ஒப்பிடுகையில் ஜப்பானியரிடம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக பொது சுகாதார பட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். கடல் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் தமனிகளில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதை குறைக் கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிட்ஸ்பர்க் ஆய்வாளர்கள், ஜப்பான், ஹவாய், பிலடெல்பியா ஆய்வாளர் களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஐந்தாண் டுகளாக 500 பேரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அவர்களின் இருதய ஆரோக்கியத்தை இவர்கள் தொடர்ந்து பரிசீலித்து வந்தனர். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற இதயத்தை தாக்கக்கூடிய காரணிகளான பழக்கமுள்ளவர்களின் ரத்தக்கொழுப்பு, சர்க்கரை, ஆகியவற்றுக்காக சோதித்து வந்தனர். இந்த சோதனைகளின் பல னாக அமெரிக்கர்கள் ஜப்பானியர்களை விட மூன்று மடங்கு அதிகமாக தமனி ரத்தக்குழாய் கால்சியம் உப்புகள் படிதலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டு பிடித்துள்ளனர். அத்துடன், கடல் வழியாகப் பெறப் பட்ட ஒமேகா-3 கொழுப்புஅமிலத்தின் அளவு வெள் ளையரைக் காட்டிலும் ஜப்பானியரின் ரத்தத்தில் நூறு விழுக் காடு அதிகரித் திருப்பதையும் அவர்கள் கண்டுள்ளனர்.

ஓமோகா- 3 என்ற மாத்திரைகள் இப்போது எங்கும் கிடைக்கிறது. வாங்கி குறைந்தது ஒன்றிரண்டை காலை உணவு, மதிய உணவு இரவு உணவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/76470.html#ixzz2vEZGTc24