Search This Blog

7.3.14

ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?-பெரியார்1. அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.

2. அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

3. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

4. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.

5. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர் களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

6, அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத் தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகிய வைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

-------------------- தந்தைபெரியார் - "புரட்சி" - பெட்டிச் செய்தி - 17.12.1933

41 comments:

தமிழ் ஓவியா said...


இந்திய மக்களை மதச் சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம்!


ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர் கலைஞர் வழிகாட்டும் உரை!

சென்னை, மார்ச் 6 - மதச் சார்பற்ற தன்மையை முன்னெடுத்துச் செல்லு வோம் என்றார் தி.மு.க. தலைவரும், ஜனநாயக முற் போக்குக் கூட்டணியின் தலைவருமான கலைஞர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (5.3.2014) நடைபெற்ற கூட் டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, முதலில் நம்முடைய இந்தக் கூட் டணிக்கு பெயர் ஒன்றைச் சூட்டி விட்டு, என் பேச் சைத் தொடங்கலாம் என்று கருதுகிறேன். இந்தக் கூட் டணியை நாம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று அழைப்போமாக! (கைதட்டல்)

காலையிலிருந்து இது வரை நம்முடைய கூட் டணிக் கட்சிகளிலே இடம் பெற்றுள்ள தலைவர் களும், நிறைவாக தமிழர் தலைவர் தளபதி அவர் களும் இங்கே உரையாற் றியிருக்கிறார்கள். எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து களைப் பற்றிய விவாதங் களில் நான் ஈடுபட விரும் பவில்லை. ஆனால் இங்கே முன் வைத்துள்ள அனைத் துக் கருத்துக் களையும் ஆராய்ந்து, தெளிந்து அதன் படி நடவடிக்கை மேற் கொள்ள என்னால் இயன்ற எல்லா விதமான முயற்சி களையும் எடுப்பேன் என்ற உறுதியை முதற்கண் உங் களுக்கெல்லாம் தெரி வித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி!


தமிழ் ஓவியா said...

நீங்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு ஜன நாயக முற்போக்குக் கூட் டணி என்று பெயர் சூட் டப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலும், நாங்கள் மதிக் கப்பட வேண்டுமென்று ஒரு சில கருத்துகள் இங்கே கூறப்பட்டன; மாவட்ட அளவிலே மாத்திரமல்ல, ஒன்றிய அளவிலே கூட உங்களுடைய கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற் பாடுகளை நானே முன் னின்று செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துக் கொள் கிறேன். (கைதட்டல்) அதற்கான அறிவுரை களை வெகு விரைவில் ஒரு சில நாட்களிலேயே, மாவட்டச் செயலாளர்களுடைய கூட் டம் கூட்டப் பட்டு, அவர் கள் மூலமாக அந்த அறி வுரை வழங்கப்படும். மாவட்ட அளவிலே, தோழமைக் கட்சியின் தலைவர்கள், முன்னணியி னர், அவரவர்களின் வசதிப் படி, வாய்ப்புப்படி நிகழ்ச் சிகளுக்கு அழைக்கப்படு வார்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக் கும் ஒருவர் பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு, அவர் வாயிலாக அந்தத் தொகுதி நிலவரங்களை அறியவும், தேர்தல் பணி களை விரைந்து செய்து முடிக்கவும் இந்தக் கூட் டணிக் கட்சிகளின் தலைமை நிலையம் அன்றாடம் தன் னுடைய பணிகளை முடுக்கி விடும், கண்ணும் கருத்துமாக அதிலே இருக் கும் என்று நான் தெரி வித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சி களும், அதாவது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், ஆங்காங்குள்ள நிலவரங் களை எவ்வழியில் எங் களுக்குத் தெரிவிக்க முடி யுமோ, அவ்வழியில் தெரி விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டணியிலே உள்ளவர் களை ஒரு சில இடங்களில் மதிக்காத சூழ்நிலை இருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டது. அது நான் உணராத ஒன்றல்ல.

தமிழ் ஓவியா said...

உணர்ந்திருக்கிறேன். உணர்ந்து கழகத்தின் மற்ற செயல்வீரர்கள் மூலமாக அவர்களுக்கு வலியுறுத்தி யிருக்கிறேன். அவர்களைத் திருத்திக் கொள்ளுமாறும் செய்திருக்கிறேன். அது தொடரும். இது ஏதோ தேர்தலுக்காக மாத்திரம் தான் தொடரும் என்றல்ல. என்றைக்கும், எந்த நிலை யிலும் நாமெல்லாம் இங்கே ஒன்றாக அமர்ந்து கருத்துகளைச் சொல்கின்ற நேரத்திலே மாத்திரமல்ல, எல்லா நேரங்களிலும் உங் களை நான் மதித்துப் பழக் கப்பட்டவன். எதிரியானா லும் அவர்களிடத்திலே அன் போடும், நட்புணர்வோ டும் நடக்கக் கற்றவன். அந்தப் பாடத்தை எனக்குக் கற்பித்த பெரியவர்கள் பெரியாரும், அறிஞர் அண் ணாவும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண் டிய அவசியமில்லை. நம் முடைய தளபதி வீரமணி அவர்கள் சொன்னதைப் போல, உடல் நிலை சரி யில்லாத நிலையில், எல்லா இடங்களுக்கும் நான் நேரில் வந்து பிரச்சாரம் செய்வதற்கு இயலாவிட் டாலும் கூட, எந்த வழி யாகப் பிரச்சாரம் செய்யப் பட வேண்டுமோ, அந்த வழியாகப் பிரச்சாரங்களை யெல்லாம் நான் இடை விடாது செய்வேன். என் றென்றும் அந்தப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் (கைதட்டல்) என் பதை நான் இந்த நேரத்தில் உறுதியாகக் கூறக் கட மைப்பட்டிருக்கிறேன்.

பெரியார் கற்றுத் தந்த பண்பாடு

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில், பெரியார் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடம், பிறரை மதிப்பது, பிறருக்கு மரியாதை செலுத் துவது என்பதாகும். அந்தப் பாடத்தை அழுத்தந்தி ருத்தமாக எங்கள் மனதிலே பதிய வைத்தவர் பேரறி ஞர் அண்ணா அவர்களாவார். எனவே பெரியார் வழியில், அண்ணா வழியில் மாற்றுக் கட்சியினரை மதிக்கக் கற்றுக் கொண்டுள்ள நாங்கள், இந்தச் சூழ் நிலையிலும் உங்களை மதிக்கத் தவற மாட்டோம், தொடர்ந்து இந்த மரியாதை கடைப்பிடிக்கப்படும் என் பதையும் நான் உறுதிபட மீண்டும் மீண்டும் உங் களுக்கு நினைவுபடுத்துகிறேன். - கலைஞர் உரையிலிருந்து...

தமிழ் ஓவியா said...


நம்முடைய பிரச் சாரங்களில் நம்முடைய கருத்துகள் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாம் மேடைகளிலே மக்களைச் சந்திக்கின்ற காரணத் தால், நாடாளுமன்றத்திலே பெரும்பான்மை பெறு வது யார்? மதச் சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா அல்லவா என்பதற்கான அந்த வாதத்தை மாத்திரம் எடுத்து வைத்து, அதிலே யாரையும் மட்டம் தட் டாமல், யாருடைய மதிப் புக்கும் குறைவு ஏற்படா மல், நம்முடைய கூட் டணிக் கட்சியினர் தொடர்ந்து காப்பாற்றி வருகின்ற நயத் தகு நாகரிகம் அணுவள வும் சிந்தாமல் சிதறாமல் - நேர்மையாக, நாணயமாக, நலிவுற்ற மக்களுக்காகத் தான் இந்த இயக்கம், இந் தக் கூட்டணி, அவர்களைக் கரையேற்றுவதற்காகத் தான் இந்த அமைப்பு என் பதை தேர்தல் நடை பெறுகின்ற இந்த நேரத்தில் மாத்திரமல்ல, என்றென் றும் தொடர்ந்து தமிழ் நாட்டு மக்களுக்காக, இந் திய நாட்டு மக்களுக்காக நம்முடைய உழைப்பும், நம்முடைய செயலும் இருந்திட வேண்டுமென்ற உறுதியோடு பாடுபட வேண்டும்.

வெறும் தேர்தல் பணிக்கான கூட்டமல்ல!

இந்தக் கூட்டம் கூட, வெறும் தேர்தல் பணிகளை எப்படி ஆற்றுவது என்பதற் காகக் கூட்டப்பட்ட கூட் டம் என்று யாரும் கருதிக் கொள்ளாமல், எதிர் காலத்தில் தமிழகத்திலும், இந்தியாவிலும் நாம் ஆற்ற வேண்டிய பெரும் பணி - அதற்கு அச்சாரப் பணியாக இந்தக் கூட்டம் நடைபெறு கிறது என்ற அந்த உணர் வோடு நீங்கள் எல்லாம் இந்த அணியிலே ஒத்து ழைக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். சிறு சிறு குறைபாடுகள், சிறு சிறு மனக் கஷ்டங்கள் வரும், ஆனால் அப்படி வருவதை நம்முடைய

உறுதியால், கொண்டுள்ள கொள்கைப் பற்றால் போக்கிக் கொண்டு, இந்தியா பலம் கொண்ட நாடாகவும், அதிலே தமிழகம் எல்லா உரிமை களையும் பெற்ற நாடாகவும் விளங்குவதற்கு உங் களுடைய அருமையான கருத்துகளை யெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லி யிருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டு, நானும் நீங்கள் எடுத்துச் சொன்ன அந்த வழியிலே - ஏதோ இந்தக் கூட்டணியின் தலைவர் என்ற அந்த இறு மாப்போடு அல்ல - உங்களால் பணிக்கப்பட்டிருக்கி றேன், உங்களால் அனுமதிக்கப்பட் டிருக்கிறேன், உங்களால் கட்டளை யிடப்பட்டிருக்கிறேன், உங்களால் உத்தர விடப்பட்டிருக்கிறேன் என்ற அந்த ஒரு மரியாதை போதும் என்ற அளவில் நீங்கள் இன்று காலையிலிருந்து இதுவரையில், இவ்வளவு நேரம் காட்டியுள்ள அருமையான நயத்தகு நாகரிகத்திற்கும், அரிய உரைகளுக்கும் இந்த இயக்கம் அதிலும் குறிப்பாக இந்த இயக்கம் சார்ந்துள்ள இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்குரிய கருத்துகளை யெல்லாம் செயல்படுத்த எங்களால் இயன்ற அனைத்தும் செய்வோம் என்ற உறுதியை உங்களுக்கு அளித்து, இந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு இன்றைக்கு நாம் கொடி யேற்றுவோம், அந்தக் கொடி உயரப் பறக்கட்டும், பறக்கின்ற அந்தக் கொடி நிழலில் தமிழ் நாட்டு மக்களை மாத்திரமல்ல, இந்திய நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம் என்ற அந்த உறுதியைத் தெரிவித்து, இந்த அளவில் நான் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன் - தற் காலிகமாக இன்றைக்கு! ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், என் உடல் நிலை இதற்கு மேல் இடம் தரவில்லை, உடலை விடக் குரல் என்னுடன் ஒத் துழைக்கவில்லை. அது ஒத்துழைப்ப தற்குச் சரி செய்து கொண்டு மீண்டும் உங்களை யெல்லாம் சந்திப்பேன் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/76461.html#ixzz2vEY5CUjp

தமிழ் ஓவியா said...

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் குரல்!

தி.மு.க. தலைமையில் தேர்தலில் போட்டியிடும் அணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியின் முக்கியமான விழுமிய முழக்கம் என்பது மதச் சார்பற்ற தன்மையேயாகும்.

இந்தக் காலக் கட்டத்தில் இதனை முதன்மை படுத்துவதற்கு நியாயமான ஆழமான காரணங்கள் மிக்குண்டு. குறிப்பாக பிஜேபியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள திருவாளர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி என்பவர் தன்னை ஓர் இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

இவர் குஜராத் மாநிலத்தில், முதல் அமைச்சராக இருந்தபோது 2002இல், மிகப் பெரிய வன்முறையை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள்மீது ஏவி விட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட மாபெரும் கொடுமை நிகழ்த்தப்பட்டது.

அமைச்சர்களே காவல்துறை கண்ட்ரோல் அறையிலி ருந்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தனர். சங்பரிவார்க் கும்பலும், மலைவாழ் மக்களும் களத்தில் இறக்கி விடப்பட்டு, காக்கி உடை காவல்துறையின் மேற்பார்வையில் இந்த இனப்படுகொலை திட்டமிட்ட வகையில் காட்டு விலங்காண்டித் தன்மையில் அரங்கேற்றப்பட்டது.

நியாயமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர் அந்த மாநில முதல் அமைச்சரான நரேந்திர மோடிதான். அவர் பொறுப்பேற்காததோடு மட்டுமல்ல; வருத்தம் கூடத் தெரிவிக்கத் தயாராகவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று, இரண்டாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை காரில் செல்லும் போது அடிபடும் நாய்க்குக் காட்டும் அனுதாபத்தை ஒப்பிட்டுக் கருத்துச் சொல்கிறார்.

தமிழ் ஓவியா said...

அகில இந்திய பிஜே.பி.யின் தலைவர் ராஜ்நாத் சிங் காலம் கடந்து, குஜராத் கலவரத்துக்காக வருத்தம் தெரிவிக்க முன் வந்த நிலையில், அவ்வாறு வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை என்று கட்சியின் வட்டாரம் அறிவித்து விட்டது.

உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த போது தான் அயோத்தியில் 450 ஆண்டு காலம் வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஒரிசா மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் பி.ஜே.பி. இடம் பெற்றிருந்த நிலையில், அம்மாநிலத்தில் கிறித்தவர் களுக்கு எதிராக வன்முறை ஏவி விடப்பட்டு நூற்றுக் கணக்கான கிறித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் உள்ள ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர அனுமதிக்கலாமா? அதுவும் குஜராத்தில் முதல் அமைச்சராகவிருந்த, முஸ்லிம்கள் கொன்று குவிக்கப் படுவதற்குக் காரணமாக இருந்த நரேந்திர மோடி, பிரதமராக வர வாய்ப்புக் கதவைத் திறந்து விடலாமா? என்பதுதான் நாட்டு மக்கள் மத்தியில் இன்றைக்குக் கிளர்ந்து எழ வேண்டிய மிக முக்கியமான வினாவாகும்.

இந்த அடிப்படையில்தான் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மதச் சார்பற்ற ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளது.

சரி, மோடி தான் மதவெறியர் - மதச் சார்பானவர் அதனை எதிர்ப்பது சரியாக இருக்கலாம்; மூன்றாவது அணி என்பது மதச் சார்பற்ற அணி தானே என்ற கேள்வி எழலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்த வரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட மதச் சார்பற்றவர் அல்லர். அதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமானது.

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் திட்டமான தென் மாவட்டங்களை வளங் கொழிக்கச் செய்யும் ரூ.2487 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் சென்று முடக்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்?

இராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்கிறார்.

இராமன் என்ற பெயர் ஓர் இதிகாசத்தில் கற்பனை பாத்திரம். தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களே இதனைக் கூறியுள்ளார்கள். பாலம் என்ற ஒன்று கிடையாது, வெறும் மணல் திட்டுதான் என்று கடற்சார் பொறியாளர் களே கூட அறுதியிட்டுக் கூறியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க, ராமன் பாலம் என்று பிஜேபியோடு சேர்ந்து கொண்டு சுருதிப் பேதம் இல்லாமல் ராகம் வாசிக்கும் ஜெயலலிதா அவர்கள் எப்படி மதச் சார்பற்றவர் ஆவார்? இராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்றவர் (29.7.2003) தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் (23.11.1992)அயோத்தியில் கர சேவைக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா அவர்கள்.

இந்த நிலையில் பிஜேபியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்த கூட்டணியாக இருந்தாலும் சரி மதவாத எதிர்ப்பை முன்னிலைப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனவே திமுக தலைமையிலான ஜனநாயக முற் போக்குக் கூட்டணி மதவாதத்தை எதிர்ப்போம் - மதச் சார்பற்ற ஆட்சியை அமைப்போம் என்று முழக்கத்தோடு கிளம்பி இருப்பது மிகவும் சரியானதே! இன்னும் சொல்லப் போனால் இந்தக் குரல் இந்தியா முழுமையுமே ஒலிக்கப்பட வேண்டியதே!

Read more: http://viduthalai.in/page-2/76468.html#ixzz2vEYSl3aE

தமிழ் ஓவியா said...


இருதய நோய் மாரடைப்பைத் தவிர்க்க இதோ ஒரு எளிய வழி!

- வாழ்வியல் சிந்தனைகள்


உலகின் மிகப் பெரிய உயிர்க் கொல்லிகளில் முக்கியமானது இருதய நோய் - மாரடைப்பு.
முன்பெல்லாம் முதிய வயதினரை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த இந்த இதய நோய், இளம் வயதினரை யெல்லாம்கூட தாக்கிடும் பேரபாயம் நாளுக்கு நாள் மலிந்து வருகிறது.

அதற்கு ஒரு முக்கிய காரணம் இளையவர்கள் கண்டபடி; வேக உணவுகள் (Fast Foods) என்ற பெய ரில் விற்கப்படும் இறைச்சி உணவு களை வரைமுறையின்றி சாப்பிட்டு, தம் உடலில் கொழுப்பை ஏற்றிக் கொள்வதுதான்; அது திடீர் மாரடைப் பில் கொண்டு போய் நிறுத்துகிறது.

பொதுவாக ஆட்டிறைச்சி, சில வகையான கோழி இறைச்சி, மாட்டி றைச்சி, பன்றி இறைச்சி, போன்றவை கொழுப்பை மிக அதிகமாக நம் உடலில் சேர்த்து விடுகின்றன. எனவே கூடுமான வரை, மாமிச உணவுப் பழக்கம் உடையோர் அவைகளுக்குப் பதில், மீன் உணவை அதிகம் சாப்பிடு வது உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, கொழுப்பு சத்து அதிகம் ஏற்பட்டு மார டைப்பு நோய்க்கு மிகப் பெரிய தடுப் பானாகவும் உதவுகிறது!

உலகம் முழுவதிலுள்ள டாக்டர்கள் உணவு ஆலோசகர்கள் மீன் சாப்பிடுங் கள் என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்.

ஏன் என்பதற்கு இன்றைய செய்தித் தாளில் (தீக்கதிரில்) வெளி வந்துள்ள ஒரு செய்தி சிறந்த விளக்கமாக அமைந்துள்ள தால் அதனை அப்படியே தருகிறோம்.

மீன் இருதய நோயைத் தடுக்கும்

ஜப்பானியர்கள் மீனையும், மீன் எண்ணெய்களையும் அதிகமாக உண்ணு வதால் அவர்கள் இருதய நோயால் துன்புறுவதில்லை. எனவே அவர்களை உலகின் இதரபகுதியினரும் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை கூறத் தொடங்கியுள்ளனர்.

இருதயத்தில் இருந்து ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனியில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதால் உருவாகும் நோய்கள் அமெரிக்க மக்களோடு ஒப்பிடுகையில் ஜப்பானியரிடம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக பொது சுகாதார பட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். கடல் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் தமனிகளில் கால்சியம் சார்ந்த உப்புகள் படிவதை குறைக் கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிட்ஸ்பர்க் ஆய்வாளர்கள், ஜப்பான், ஹவாய், பிலடெல்பியா ஆய்வாளர் களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஐந்தாண் டுகளாக 500 பேரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அவர்களின் இருதய ஆரோக்கியத்தை இவர்கள் தொடர்ந்து பரிசீலித்து வந்தனர். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற இதயத்தை தாக்கக்கூடிய காரணிகளான பழக்கமுள்ளவர்களின் ரத்தக்கொழுப்பு, சர்க்கரை, ஆகியவற்றுக்காக சோதித்து வந்தனர். இந்த சோதனைகளின் பல னாக அமெரிக்கர்கள் ஜப்பானியர்களை விட மூன்று மடங்கு அதிகமாக தமனி ரத்தக்குழாய் கால்சியம் உப்புகள் படிதலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டு பிடித்துள்ளனர். அத்துடன், கடல் வழியாகப் பெறப் பட்ட ஒமேகா-3 கொழுப்புஅமிலத்தின் அளவு வெள் ளையரைக் காட்டிலும் ஜப்பானியரின் ரத்தத்தில் நூறு விழுக் காடு அதிகரித் திருப்பதையும் அவர்கள் கண்டுள்ளனர்.

ஓமோகா- 3 என்ற மாத்திரைகள் இப்போது எங்கும் கிடைக்கிறது. வாங்கி குறைந்தது ஒன்றிரண்டை காலை உணவு, மதிய உணவு இரவு உணவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/76470.html#ixzz2vEZGTc24

தமிழ் ஓவியா said...


நம் அன்னை வாழியவே!

அன்னை பிறந்தது
மார்ச்சுப் பத்து
சின்ன வயதில் - அவரைப்
பிடித்ததோ பெரியார் பித்து!
இறப்புக் கோட்டினைத்
தொடும் வரையிலும்
அவரைவிட்டுக்
குறையவில்லை
அந்தச் சத்து!

அம்மா என்று அய்யா
அவர்தம் அம்மாவை
அழைத்ததை நாம்
கேட்டோமில்லை
அம்மா அம்மா என்று
ஆயிரம் முறை
நாளொன்றுக்கு - நம்
அம்மாவை அய்யா
அழைத்ததைக்
கேட்டவர்கள் நாம்!
இந்தப் பேறு
இந்தத் தாய்க்குக்
கிடைத்ததைவிட
வேறு என்ன வேண்டும்?

தந்தையென்று தமிழர்
அழைத்தனர் அய்யாவை!
அந்த அய்யாவோ
அம்மா என்று அழைத்தார்
அன்னை மணியம்மையை!
உண்மை தானே!

கூப்பிட்டால் வந்துவிடுவார்
கொடுத்தால்
சாப்பிட்டு விடுவார்!
இந்த இரண்டிலும்
இவர் குழந்தைதான்
என்று எவ்வளவு
அழகாக அய்யாவைப்
படம் பிடித்தார்
இந்த அன்னையார்!

அடம் பிடித்தாலும்
அந்தக் குழந்தையைக்
குளிப்பாட்டியதும்
ஆடை உடுத்தியதும்
அந்த குழந்தையின் நாக்கு
ருசிக்கு அலைந்தாலும்
அதனை அதட்டி அடக்கி
உருட்டி மிரட்டி
ஒத்துக் கொள்ளும்
உணவை மட்டுமே ஊட்டி
அந்தக் குழந்தையின்
உயிர் என்னும் கிளி
கூட்டை விட்டுப்
பறக்காது பாதுகாத்த
தாய்ப் பறவையன்றோ -
அந்தத் தகத் தகாய
தாய்க் காவியம்! ஆனாலும்
தொண்ணூறைத்
தாண்டி - அந்தத்
தொண்டுப் பழத்தைத்
தோள் கொடுத்துத்
தாங்கிய தாயே!
உன் உடல் நலத்தை
ஏன் தொலைத்தாய்?
அறுபதைத் தொடுமுன்பே
அறுபட்டுப்
பறந்தது ஏன்?

நீங்கள் ஆளாக்கிய
அருமை மகன்
காப்பான் நாட்டை
கழகத்தை என்ற தைரியத்தாலா?
அய்யா போட்ட கணக்கும்
அம்மா வைத்த
கணிப்பும்
துல்லியமானதே!
துல்லியமானதே!

எண்பத்தொன்றிலும்
எண்ணூறு மைல் வேகத்தில்
ஓடுது ஓடுது
இந்த வண்டி!
இறப்பையும் முத்தமிட
இலட்சோப லட்ச
லட்சிய வீரர்கள்
தோள் மலைதூக்கி
எழுந்து விட்டார்!

அலாரம் அடித்து
அடித்து
எங்களை எழுப்பும்
மணி அம்மை!
எங்கள்
குருதியோட்டக்
காற்றில் கலந்தார்!
வீரமுறுக்கேற்ற
இன்னொரு மணியையும்
எங்களுக்கு
அளித்துச் சென்றார்
என்பதே உண்மை!

இலக்கை அடையாது
நில்லாது இந்தவண்டி!
எல்லாம் அய்யா
அம்மாபோட்ட
அஸ்திவாரம் - அச்சாணி!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/76583.html#ixzz2vQ1Ewkar

தமிழ் ஓவியா said...


மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்! புகழ் பெற்ற குடிமக்கள் அறிக்கை

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வையும் அதன் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியையும் படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என வாக்காளர்களைப் பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக் கூடாது எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கை யில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும்.

எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத் திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு:

அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச் சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய் வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).- சமரசம் 1-15 மார்ச் 2014

Read more: http://viduthalai.in/page2/76584.html#ixzz2vQ1SSgfR

தமிழ் ஓவியா said...


குறும்பாஇந்தியா..
நாணயமில்லா
நாடாய் போயிற்று!
ஒரு
காசு
இரு
காசு
மூன்று
காசு
அய்ந்து
காசு
பத்து
காசு
இருபது
காசு
இருபத்தைந்து
காசு
வரையில்...
நாணயமில்லையே
புழக்கத்தில்..!!

***
நாட்டிலுள்ள
கட்சிகளெல்லாம்
மரங்கள்போல..
அந்த
மரத்துக்குமரம்
தாவுகின்ற
குரங்குகள்போல
சில
அரசியல்வாதிகள்!

***
காசு பணம்
வருமான்னு
ராசி பலன்
பார்க்காதே..!
உழை...
உழைத்து..
முன்னேறு!!

***
எளியவனை
வலியவன்
தாக்குகிறான்
இறைவன்
என்ன பண்ணிக்
கொண்டிருக்கிறான்?
இதுவும் அவன் செயலோ?- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/76586.html#ixzz2vQ1ccGi5

தமிழ் ஓவியா said...


Word Web – மிக அருமையான இலவச அகராதி(Dictionary)

பகிர்வதிலே வளர்ச்சி யுண்டாம் – பகிராவிடில்
தனியாவர்த்தனம் செய்வாய் காண்
என்று வள்ளுவர் இன்றிருந்தால் ஒரு குறள் எழுதியிருப்பார் பகிர்வதில் உள்ள மேன்மையைப் பற்றி. தொழில்நுட்ப அறிவினைத் தாய்மொழியாம் தமிழில் பகிர்வதில் ஆர்வமும் உயர்ந்த நோக்கமும் கொண்ட கற்போம் தளத்திற்கு முதலில் ஞானபூமியின் நன்றிகள்.

இப்பதிவில் இலவச ஆங்கில அகராதி மென்பொருள் பற்றிப் பார்ப்போம்.
*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி
“அந்த ஆளு ஏதோ சொன்னாண்டா, புரியலை, என்னமோ “பாராடாக்ஸிகல்” னு.நான் எதுக்குடா இங்கிலீஷ் மருந்து பேரெல்லாம் மீட்டிங்ல சொல்றான்னு யோசிச்சேன். அப்புறம் டிக்ஷனரியப் பார்த்தா தான் எனக்கு அர்த்தமே தெரிஞ்சது” என்றோ ஒரு விஷயத்தைப் பற்றி இணையத்திலோ அல்லது கணிணியிலோ படிக்கும் போது அர்த்தம் புரியாத ஆங்கில வார்த்தைகள் நம்மை வேகமாக போய்க் கொண்டிருக்கும் ரோடில் குறுக்கே மெதுவாக தம் குடும்பத்துடன் க்ராஸ் செய்யும் ப்ரேக் இன்ஸ்பெக்டர் (எருமை மாடுக்கு இப்படி ஒரு பெயர் உண்டு) என்ன பாடு படுத்துவாரோ அதே போல உணர்வைக் கொடுத்து விடும். மேற்கொண்டு படிக்க ஆவலாயிருப்போம், ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் தான் மேலே படிப்பது புரியும். இந்த மாதிரி அவஸ்தை.
அமிதாப் பச்சன் ஒரு படத்தில் சொல்வார் “திஸ் இங்கிலீஷ் இஸ் எ வெரி ஃபன்னி லேங்வேஜ்” என்று. நம் ரஜினிகாந்த் அவர்கள் “ஐ கேன் வாக் இங்கிலீஷ், டாக் இங்கிலீஷ்” என்பார். அர்த்தம் புரியாமல் போனாலோ மானம் போய்விடும். புத்தக வடிவில் இருக்கும் அகராதிகளைப் புரட்ட நேரமில்லாத அகராதிகளாகிவிட்ட நமக்கு இன்றைய காலத்தின் வேகத்தோடு ஓடக்கூடிய ஒரு அகராதி மென்பொருள் தேவை. எல்லாவற்றிற்கும் மென்பொருளைத் தேடத் தொடங்கி விட்டோம். ஆனால் பயனுள்ளவைக்கு என்றுமே தமிழர்கள் தம் ஆதரவைத் தெரிவிக்கத் தயங்கியதில்லை. அந்த வரிசையில் வருவது தான் வேர்ட் வெப். இதுவும் ஒரு இலவச மென்பொருள் தான். ஆனால் மதிப்பில், பயன்பாட்டில் அதி உயர்ந்தது.
தரவிறக்கப் பாதை – http://www.wordweb.info/
இதன் முகப்பு
இதிலுள்ள சிறப்பம்சம் ஹாட் கீ என்பது. அதாவது, வேர்ட் வெப் உங்கள் கணிணியின் டாஸ்க் பார் (இது டாஸ்மாக் என்று தெரிவதானால் நான் பொறுப்பில்லை) உள்ள இடத்தில் வலதோரமாய் சமர்த்தாய் அமர்ந்திருக்கும். இதன் ஆப்ஷன்ஸ் மெனுவில் ஹாட்கீ யில் உங்கள் வசதிக்கேற்ப ஒன்றிற்கு மேற்பட்ட விசைகளை தேர்வு செய்து கொள்ளலாம் . (உ.ம் Alt + W).ஆல்ட் மற்றும் டபிள்யு விசையை சேர்த்து அழுத்துகையில் வேர்ட் வெப் தோன்றும்.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்று பாருங்கள்.
மேலே இண்டர்வியூ என்ற வார்த்தைக்கு நடுவில் உள்ளது கர்ஸர். இதன் அர்த்தம் தெரிய வேண்டுமாயின் Alt + W அழுத்தினால் போதும். வேர்ட்வெப்தோன்றிஅர்த்தம்காட்டும்.மேலும் இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்பதையும் ஒலிபெருக்கி ஐகானை அழுத்தினால் காட்டும். வார்த்தை இல்லாவிடில் அதன் மாற்று சொற்களைக் காட்டுவதோடு இணையத்திலும் தேடுவதற்கு உதவும்.
மேலும் உங்களுக்கு தேவையான ஆங்கில வகையைத் தேர்வு செய்யலாம். அமெரிக்கா, யூரோப், கனடா, ஆசியா, இந்த மாதிரி. இதைப் Preferences இல் தேர்வு செய்யலாம். இதில் வார்த்தையின் அர்த்தம் தவிர தேடிய வார்த்தையின் இலக்கண சம்பந்தப் பட்டவைகளையும் காட்டுவது கூடுதல் போனஸ்.
வேறொரு அகராதியை ஏற்கனவே நிறுவியிருந்தால் அதையும் கண்டு பிடிப்பதில் வேர்ட் வெப் உதவும். இவையெல்லாமே Options / Preferences இவற்றில் கண்டு கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக இதை நிறுவி, வார்த்தைகளின் பொருளைக் கண்டு கொள்ள நமக்குத் தேவையானவை ஹாட் கீ தேர்வு செய்வது மட்டுமே.
நண்பர்களே, இலவசமாய்க் கிடைப்பவைகளில் தரமிருக்காது என்பது வேர்ட் வெப் விஷயத்தில் சரி இல்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும் நமக்குத் தெரிந்ததை மற்றவருடன் பகிர்வதில் இருக்கும் திருப்தி எதிலும் இல்லை என்பதும் தோன்றுகிறது. இது காறும் படித்தமைக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page3/76587.html#ixzz2vQ1rIa4Z

தமிழ் ஓவியா said...


பற்களை பராமரிப்பது சுலபம்

ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக் காட்டும் பற்களை பாதுகாப்பது அவசி யம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்போது தான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை, மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.

பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்கு களை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும் பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர் டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட் களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவை தவிர ஆண்டிற்கு ஒரு முறை பற்களை பல் மருத்துவரின் ஆலோசனைப்படி சுத்தம் செய்வது அவசியம்.

பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சினை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரல் பிரச்சினை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ் வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார் களோ, அவ்வளவு துர்நாற்றம் வீசாது. பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.

சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும். இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின் நிறம் மாறும் என்பதால் எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம் என்று சொல்லும் மருத்துவர் தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.

செய்யக்கூடியவை: தினமும் காலை யும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப்பொருட்களை 'பிளாஸ்' கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம். பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவு களையும் சாப்பிடுவது நல்லது.

எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப் பிரச் சினை இருந்தால் அதற்கு பல் சொத்தை யும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை: கடினமான உணவுப்பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக்கூடாது. கடைவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவுகளை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.

பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ் டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.

தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை பிளாஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப் பளிப்பது அவசியம்.

Read more: http://viduthalai.in/page3/76588.html#ixzz2vQ21OpQZ

தமிழ் ஓவியா said...


சொன்னார்கள்மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியின் விளைவே. - கிரீட்டா பாமர்

உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி உன் சிந்தனையின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது.
- மார்க்கஸ் அருலியஸ்

எவனிடத்தில் நினைப்பதற்குத் தவறில்லையோ, மறப்பதற்குக் காயங்கள் இல்லையோ, யாருடைய தூய இதயத்தில் மற்றவர்களைப் பற்றிய கெட்ட எண்ணம் வேர் பிடித்து வளர இடமில்லையோ அவன் இன்ப வாழ்வுக்கு உரியவனாவான்.
- ஜேம்ஸ் அலன்

மனித இனத்தின் மாற்றம்பற்றி ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்; யாருமே தன்னுடைய மாற்றம் பற்றி நினைப்பதில்லை. - டால்ஸ்டாய்

சொல்வதை இரண்டு முறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, மனிதர்கள் இரண்டு கண்களோடும், ஒரு நாக்கோடும் பிறக்கிறார்கள். - சார்லஸ் கோல்டன்

வெறுப்பை வெறுப்பினால் நிறுத்த முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும். இதுதான் நிலைத்த விதி. - புத்தர்

அமைதியாக வைக்கப்படும் எல்லா உண்மைகளும் விஷமாக மாறிவிடும். - நீட்சே

சீட்டாட்டத்தில் மிகப் பெரிய திறமை, எப்பொழுது சீட்டைக் கழிப்பது என்பதைத் தெரிவதுதான். - பால்தசார் கிரேசியன்

நயநாகரிகச் செயல் என்பது விலையே பெறாது. இருந்தும் மற்ற தேவைகளைவிட அதை பெற்றிருப்ப வர்களுக்கு அது மிகப் பெரிய பங்கை அளிக்கிறது.

ஒரு இடுகாட்டைச் சுற்றி வேலி இருப்பது முட்டாள்தனமானது. அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாது, வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்ப மாட்டார்கள். - ஆர்தர் பிரிஸ்பேனே

தனிமை நம்மை நமக்கே கடுமை யானவர்களாக்குகிறது, மற்றவர்களிடம் நம்மை மென்மையானவர்களாக்கு கிறது. - நீட்சே

நேர்மையானவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும் இருங்கள், கடுமையான உழைப்பு பிரார்த்தனைக்குச் சமமானது. - லால்பகதூர் சாஸ்திரி

அறிவுத் தேவையைவிட, கவன மின்மை அதிகத் தீங்கைச் செய்கிறது.

- பிராங்ளின்

Read more: http://viduthalai.in/page4/76589.html#ixzz2vQ2K7AVQ

தமிழ் ஓவியா said...


இதுதான் ஆர்.எஸ்..எஸின் ஒழுக்கம்!


பெண்ணுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த முன்னாள் பாரதிய ஜனதா அமைச்சர் தற்கொலை முயற்சி. ஆர் எஸ் எஸ் காரன் திருமணம் செய்ய மாட்டான் என்று கூறி திருமணப்பதிவை தவிர்த்தார். பெண்ணுடன் வைத்திருந்த மறைமுக தொடர்பு அம்பலமானதால் கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் எஸ்.ஏ ராமதாஸ் மைசூரிலுள்ள விருந்தினர் மாளிகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்ட தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 54 வயதான ராமதாசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தனது பதவிக்காலத்தில் மைசூரில் உள்ள ஒரு அரசு அதிகாரியிடம் திருமண ஆசை காட்டி கள்ளத்தனமாக தாலிகட்டி வாழ்ந் துள்ளார். அந்தப்பெண் தனது திரும ணத்தை பதிவு செய்யக்கூறிய போது பணம் கொடுத்து தன்னை மறந்து விடும் படி கூறினார். இது குறித்து அந்த விதவைப்பெண் பிரேம் குமாரி(பெங்களூரில்) பத்திரிகை யாளர் சந்திப்பில் தனக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையேயான உறவு பற்றி கூறினார். மேலும் அவர்கள் இடையே நடந்த போன் உரையாடல்கள் போன்ற வற்றையும் சான்றாக முன்வைத்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்த மறுநாள் முன்னாள் அமைச்சர் ராமதாஸ் தற் கொலைக்கு முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு ஒரு ஆங்கில நாளிதழுக்கு அந்தப் பெண் (பிரேம்குமாரி) மனநிலை சரியில் லாதவர் என்றும் அந்தப்பெண் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.

இது மாத்திரமே எனக்குத்தெரியும் மற்றபடி அவர் கொடுக் கும் சான்றுகள் அனைத்தும் போலி யானவை என்று கூறினார். ராமதாசுடன் பழகிய விதவைப் பெண் ணான பிரேம்குமாரி (30) இதுபற்றி கூறு கையில், ராமதாசை எனக்கு அய்ந்து ஆண்டுகளாக தெரியும். கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தவர் கடந்த நவம்பர் மாதம் மைசூரில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மங்கள் சூத்திரம்(தாலி) கட்டினார். அதன் பிறகு நான் திருமணத்தை பதிவு செய் வோம் என்று கூறிய போது அது என்னால் முடியாது ஏனென் றால் நான் ஆர் எஸ் எஸ் காரன், என்று கூறிவிட்டார். அதன் பிறகு என்னை விலக்கி வைக்க முயற்சித்தார்.

நான் பல முறை அவரிடம் திருமணம் குறித்து வற் புறுத்தினேன். இறுதியாக அவர் ஒரு கோடியே 75 லட்சம் தருவதாகவும் தன்னை விட்டு விலகி விடுமாறும் கூறினார். மேலும் தன்னுடன் எடுத்த புகைப் படம் வீடியோ அனைத்தையும் அழித்து விடுமாறும் கூறினார். மேலும் உரையா டல்கள் அடங்கிய வீடியோ காட்சிகளை ஊடகங்களில் வெளியிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்றும், ஊடகங்களில் பேசுவதை நிறுத்தாவிட்டால் விஷம் குடித்து விடுவதாகவும் செல்போனில் மிரட்டினார் என்றார். இதற்கு முன்னதாக நான் பணிபுரியும் அரசு அலுவலக உயரதிகாரி மூலமாகவும் என்னை மிரட் டினார் என்றும் தன்னுடைய பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறினார். கர்நாடகாவில் முதல் பா.ஜனதா அரசின் மருத்துவத் துறை அமைச்சராக பதவி வகித்த ராமதாஸ், 2013 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்விய டைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பெண்களுக்கான ஆசாரே சமூக சேவை மய்யம் ஒன்றை மைசூர் நகரில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/76590.html#ixzz2vQ2XNz2E

தமிழ் ஓவியா said...


மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு புரட்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் வசிப்பவர் கவுரவ் சிறீவாஸ்தவ், தனியார் அலுவலகத் தில் பணிபுரிந்து பிறகு சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வந்தவர். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு கை கால் மற்றும் இடுப்பிற்கு கீழ் உள்ள அனைத்துப் பாகங்களும் செயலிழந்து சக்கர நாற்கா லியே வாழ்க்கையாகிப்போனது. தன்னு டைய எந்த வாழ்க்கையில் இனி திரு மணமே நடக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்த சிறீவாஸ்தவாவின் வாழ்க்கையில் தனியார் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகவும் பிஸியோ தெராபிஸ்டாகவும் பணிபுரியும் சவிதா என் பவரின் மூலம் வாழ்க்கை வசந்தமானது. சிறீவாஸ்தவாவிற்கு பிஸியோ தெராபி பயிற்சிகொடுக்க நல்ல ஒரு நபரைத் தேடிகொண்டிருந்த போது சவிதா அறிமுக மானார். ஆரம்பத்தில் நட்பு முறையில் பழகிய சவிதா இறுதியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு சிறீவாஸ்தவாவுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து மணமகன் கூறும் போது 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் என்னுடைய முதுகெலும்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு என்னுடைய முடமான வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இருக்காது என்ற முடிவிலேயே நான் வாழ்ந்து வந்தேன். சவிதாவின் அன்பை முதலில் நான் காதலாக நினைக்கவில்லை, நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந் தோம். திடீரென ஒருநாள் சவிதா தன்னு டைய காதலை என்னிடம் தெரிவித்தார். நான் முதலில் அவருக்கு என்னுடைய நிலையை சொல்லி காதலை தவிர்த்து வந்தேன் ஆனால் அவர் உறுதியாக இருந்தார். எங்கள் வீட்டில் வந்து தன்னுடைய முடிவை தெரிவிக்கும் வரை சென்றுவிட்டார். அதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது அவர்கள் எனது ஊனம் மற்றும் எங்கள் சாதி என பல்வேறு காரணங்களை கூறி எங்கள் காதலை ஏற்க வில்லை. சவிதாவும் தன்னுடைய காதலில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்த 12 வருடங்களில் நானே சில முறை அவரிடம் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் உங்களு டைய வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர் கள் என்று கூட கூறிவிட்டேன். ஆனால் அவர் உறுதியாக இருந்து இன்று அனைவரின் ஒப்புதலுடன் என் மனைவியாக இருக்கிறார் என்றார். சவிதா இந்த திருமணம் பற்றி கூறும் போது ஆரம்பத்தில் ஒரு செவிலியராகத்தான் நான் அவருக்கு சேவை செய்து வந்தேன். ஆனால் அவருடன் பழகப்பழக இவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு துணை வேண் டும் அதுவும் அவரை நன்கு புரிந்து வாழும் ஒரு துணை அது இல்லாமல் அவரால் ஒரு நாளைக்கூட கழிப்பது கடினம். இந்த ஒரு மனிதாபமான மனநிலை எனக்குள் அவர் மீதான காதலை உரு வாக்கிவிட்டது. ஆரம்பத்தில் பல கேள் விகள் எனக்குள்ளே கேட்டுக்கொண் டேன். என்னுடைய பல நண்பர்களின் வாழ்க்கை அனைத்தும் என் கண் முன் வந்தது. அதே நேரத்தில் சிறீவாஸ்தவா வின் முகமும் என் மனக்கண்ணில் தோன் றியது. இறுதியில் நான் சிறீவாஸ்தவா வையே வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முடிவே என் மனதில் நின்றது. அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை, எனது வீட்டில் இது பற்றி கூறிய உடனேயே பலத்த எதிர்ப்பு உருவாகியது, அவர்கள் போட்ட தடைகள் ஒன்று இரண்டல்ல முதலில் அவரின் ஊனம் பற்றி கூறி தடைசெய்தார்கள். அடுத்து சாதி அவர்கள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி, அதன் பிறகு சாதகம் சிறீவாஸ்த வாவின் சாதகத்தில் செவ்வாய் தோசம். இப்படி பல விதங்களில் தடைகளா கவே இருந்தது, 12 வருடங்கள் காத்திருந் தோம், இறுதியில் எங்கள் வீட்டாரின் அனுமதியும் கிடைத்தது, இருப்பினும் எனக்கு எங்கள் வீட்டாரின் மீது நம்பிக் கையில்லை ஆகையால் அவர்கள் சம் மதம் தெரிவித்த மறுநாளே 17 பிப்ரவரி இந்தூர் நீதிமன்றத்தில் அவரது மற்றும் எனது நண்பர்கள் சூழ திருமணம் செய்து பதிவு செய்துகொண்டோம். அதன் பிறகு இன்று (22.02.14) அன்று வீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டோம் என்றார். இந்த திருமணம் குறித்து மணப் பெண்ணின் தந்தை கூறும்போது எனது மகளின் தியாக உணர்வை நான் மதிக் கிறேன், நாங்கள் அவளுக்காகவும் அவளின் நல்ல எதிர்காலத்திற்காகவும் தான் சிறீவாஸ்தவாவிற்கான திருமணத் தைத் தடுத்து வந்தோம், ஆனால் அவளின் உறுதியான முடிவின் முன்பு எங்களின் வறட்டு கவுரவம் தோற்று விட்டது. அவள் நல்ல வாழ்க்கையை அமைத்துவிட்டாள் என்ற மன நிம்மதி இப்போது ஏற்பட்டு விட்டது என்றார்.

Read more: http://viduthalai.in/page5/76592.html#ixzz2vQ2xSxX5

தமிழ் ஓவியா said...


இன்னுமா மதி மயக்கம்?

1. ஆரியர் சூழ்ச்சி: ஆரியர்கள் என் றைக்கு இந்த நாட்டில் காலெடுத்து வைத் தார்களோ, அன்று முதல் தமிழையும் - தமிழரின் கலையையும், கலாச்சாரத்தை யும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி கடந்த 2500 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- மறைமலையடிகள் (இந்தி எதிர்ப்பு மாநாடு 17.7.1948).

2. இந்து மதம்: இந்து தர்மத்தையும் மதத்தையும் ஒதுக்கித் தள்ள வேண்டும்; இந்து மதத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அவை தாழ்த்தப்பட்டவர் களை பணக்காரர்களின் அடிமைகளாக் குகின்றன. இந்து மதமே ஓர் பிணம் போன்றது.
- பசவலிங்கப்பா (கர்நாடகம்)

3. யார் குரங்குகள்? தென் இந்தியாவில் இருந்த மக்களே தாம் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- சுவாமி விவேகானந்தர், சொற்பொழிவு - இராமாயணம் என்னும் தலைப்பில் பக்.587, 589.

4. வெட்கக்கேடானது: பகுத்தறிவுள்ள மனிதன் இந்த 20ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் - ஏற்றுக் கொண்டும் நடப்பது மனித சமுதாயத்திற்கு மிக மிக வெட்கக் கேடான காரியமாகும்.
- பெரியார் ஈ.வெ.ரா.

5. கோயில் பற்றிய கருத்து: கோயில் என்பது திருடர்கள் தங்குமிடம் (ஏசு); கோயில் என்பது விபசார விடுதி (- காந்தியார்); கடவுள், மோட்சம், நரகம் என்பவை பிள்ளை விளையாட்டு (- இராமலிங்க அடிகள்).

6. கடவுள் தேவையில்லை: உலகில் துன்பத்தையும் பாவத்தையும் ஒரு கடவுள் உண்டாக்குமானால், அப்படிப்பட்ட கடவுள் நமது வணக்கத்திற்கு உரியதன்று -புத்தர்

7. சிந்தனைக்கு: திராவிடர்கள் கீழ் நிலைக்குப் போன காரணம் பார்ப்பனர் களின் ஆதிக்கமே (சாண்டர்ஸ் விதர் ஏசியா நூல்); திராவிடத்தில் இருள் சூழக் காரணம் ஆரியமே (கால்டுவெல் - விதர் ஏசியா நூல்); இந்தியாவின் சீர்கேட்டிற் குக் காரணம் பார்ப்பனர்தான் (- காரல் மார்க்ஸ் லண்டன், நியூயார்க் டெயிலி டிரிபியூன் இதழ் 10.6.1853) வெளியீடு).

8. இராவணனைப் பற்றி. வங்க ராமாயணத்தில், லங்காவதார சூத்திரர் என்ற நூலில், இராவணன் திராவிட மன்னன் என்றும், புத்த நெறியினன் என் றும், பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற அறி வியல் தத்துவவாதி என்றும் காணப்படு கிறது. - ஈ.வெ.ரா.

9. பார்ப்பனர்கள்பற்றி.. பார்ப்பனர் களின் இழி குணங்களைப்பற்றி முழுமை யும் வர்ணிப்பதற்கு எனது பேனா மறுக்கிறது
- அபேடூபே இந்துக்களின் பழக்க வழக்கம் பக்.306

10. இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை. நாம் அனைவரும் ஆரிய மதத் தைச் சேர்ந்தவர்களல்ல. இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர், நமக்கு, அந்நியர் கொடுத்ததேயாகும். ஆரியர்கள். ஆரியப் பழக்க வழக்கத்தை அனுசரிக்கிற வர்கள் ஆரியர்களேயாவார்கள். கண்டவர்களை யெல்லாம் ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்டதானது. ஆரிய மதத்தின் பல வீனமேயாகும்.

- திவான்பகதூர் வி. பாஷியம் அய்யங்கார் (8.12.1940ல் சென்னை, திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு தலைமைப் பிரசங்கம்

11. நட்ட கல்லும் பேசுமோ! நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே - சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்!

- சிவவாக்கியர்

தமிழ் ஓவியா said...


இதற்குப் பெயர் தான் திராவிடர் கழகம் என்பது...


சிவகங்கை நகர் திராவிடர் கழகத் தலைவர் அ.மகேந்திரராசன். இவர் கடந்த 6.2.2014 அன்று சிவகங்கை நகரில் உள்ள சத்திய சீமான் திருமண மண்டபத்தில் நவ நீதகுமார் - பாலசுப்புலெட்சுமி ஆகியோ ரின் திருமண விழாவிற்குச் சென்றிருந்தார். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மண்ட பத்தில் ஒரே பரபரப்பு. என்னவென்றால் மணமகனின் மைத்துனர் (மலேசியாவி லிருந்து வந்திருந்தவர்) வெங்கடேஸ்வரன் என்பர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க கைச் சங்கிலி தொலைந்து போய்விட்டது என்பதாகும். மணமகனின் தாயார் மாரியம்மாள் என்பவர் நமது நகர் கழக தலைவர் அ.மகேந்திரராசனிடம் வந்து நகை தொலைந்துவிட்ட விவரத்தை சொல்லி திருமணத்திற்கு அபசகுனமான தடைபோல வந்துவிட்டதாகவும் கூறி மிகவும் வேதனைப்பட்டுள் ளார். அ.மகேந்திரராசன் அவர்கள் 30 ஆண்டுகள் காவல்துறையில் பணி புரிந்து, அதில் 13 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த அம்மாவிற்கு ஆறுத லும், தைரியமும் கூறி திருமணத்தை முடியுங்கள் விசாரித்து நகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியுள்ளார். ஒலி பெருக்கியில் விவரம் கூறி நகையைக் கண்டெடுத் தவர்கள் திரும்ப ஒப்படைக் குமாறு கோரியும், தனிப் பட்ட முறையிலும் ஒவ் வொருவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாக நகையை எடுத்தவர் அ.மகேந்திரரா சனிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். நகையை பெற்றுக்கொண்ட நமது நகர் கழக தலைவர் நகையை தவறவிட்ட வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து நகையின் அடையாளம் கூறச்சொல்லி அது சரியாக இருந்ததை தெரிந்துகொண்டு அதன் பின் பொதுமக்களின் கரவொலி யுடன் நகையை ஒப்படைத்தார். மணமகன் வீட்டார் அவருக்கும், இந்த நிகழ்வில் உடன் இருந்த சிவகங்கை தீண்டாமை ஒழிப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டிக்கும் பயனாடைகள் அணிவித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்ட மூத்த சுயமரி யாதைச் சுடரொளிகள் சண்முகநாதன், என்.ஆர்.சாமி ஆகியோரின் வழிகாட்டு தலின்படி மாணவப் பருவத்திலேயே நமது இயக்கத்தில் தொண்டாற்றிவரும் அ.மகேந்திரராசனை சிவகங்கை நகர் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Read more: http://viduthalai.in/page7/76619.html#ixzz2vQ4Qpn9H

தமிழ் ஓவியா said...


பல்லி என்ன பன்மொழிப் புலவரா?

மாற்றுக் கருத்துடைய அறிஞர்களை மதித்து வரவேற்கும் பண்பு இக்காலத்தில் அருகி வருகின்றது. மாநகர் மன்றங்கள் இவர்களை வரவேற்க மறுக்கின்றன. பல் கலைக் கழகங்கள் பாராமுகம் காட்டு கின்றன. இவற்றையெல்லாம் மீறி எவரா வது வரவேற்புக் கொடுத்துவிட்டால் அவர் கள் மீது அடக்குமுறைகள் பாய்கின்றன.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம்முடைய புரட்சிக்கருத்துக்களைப் பரப்பி வந்த நேரத்தில் அதிகாரவர்க்கம் அதிர்ச்சிய டைந்து போயிற்று; பழைமையைப் பற்றி நின்றவர்கள், பார்ப்பனர்கள், அவர் தம் அடிவருடிகள் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு உறைந்து போனார்கள். என்றாலும் தமிழ்நாட்டில் பல நகராட்சி மன்றங்கள் அவருக்கு வரவேற்பளித்து அவரைப் பெருமைப்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் அக் காலத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. அவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு வழங்கிய முதல் நகராட்சி மன்றம் ஈரோட்டு நகராட்சி மன்றம் தான்! எவ்வளவு பொருத்த முடையது என்பதை எண்ணி ஆசிரியர் பெருமிதம் கொள்கிறார்.

இன்று பல்கலைக் கழகங்கள் பெரி யாரைப் பாராட்டுகின்றன; ஆய்வு செய் கின்றன. தமிழர் தலைவரை அழைத்துச் சொற்பொழிவாற்றுமாறு வேண்டுகின் றன. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கின்றன. இன்று அவரே ஒரு பல்கலைக் கழகத்தின் வேந்தர்! காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என் பதை எண்ணி நாம் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர் களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருது வழங்கப்பட்டது. விருதினை வழங்கிய டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்கள், ஓர் அழகிய கவிதை வடிவிலான வாழ்த்து மடலை வாசித்தளித்தார். அதில் சில பகுதிகள் வருமாறு:-

மூச்சில் தமிழ்; பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை; தெளிவான பார்வை
சமூகநீதிக் காவலர்; எங்கள் அன்பு ஆசிரியர்
கடலூரின் கருத்துக்கனல்; என்றும்
அடங்காத எழுத்துப் புனல்
அதிகாரம் பேசும் பூமியில் அரிதாரம் பூசாத மனிதர்
உண்மை உரைத்துப் புதிய
உலகம் செய்யும் போராளி!
அகில உலகில் முதல்முதலாய்ப்
பாவையருக்குத் தொழில் நுட்பக் கல்லூரி
கண்ட கல்விக் காவலர்,
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம்பதித்து நடப்பவன் மாமனிதன்!

இவ்வாறு அந்த வரவேற்பிதழில் டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் ஆசிரி யரைப் பாராட்டி மகிழ்கின்றார். கோவை கே.ஜி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிக் கலையரங்கில் பாராட்டு விழா; டாக்டர் பக்த வத்சலம் மிகுந்த நகைச்சுவை உணர்வு படைத்தவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற அன்பு கொண்டவர் சமூக உணர்வு கொண்ட மருத்துவர்.

கடைசியில் தமிழர் தலைவர், பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்ல வருகின்றார். தமிழறிந்த மலையாள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்று கலந்து அமர்ந்திருந்தனர். தமிழர் தலைவரின் உரையைக் கேட்க அரங்கம் நிரம்பி யிருந்தது. தமிழர் தலைவர் அவர்களுக்கு மாணவர்களிடையே பேசுவதென்றால் பெருமகிழ்ச்சியாயிற்றே!

அழகு மிகுந்த இந்த அரிய கலைக் கூடத்தில் கல்வி பயில வந்துள்ள இருபால் மாணவர்களே, உங்கள் வாழ்க்கை மூடநம்பிக்கையில்லாத வாழ்க்கையாக விளங்க வேண்டும். மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்ற சமூகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சகுனத் தடைகளும், சடங்குகளும் மக்கள் வாழ் வைச் சீரழித்துக் கொண்டுள்ளன. காலை யில் வெள்ளைச் சேலையைப் பார்த்து விட்டால், போகிற வேலை உருப்படாது என்று திரும்பிப் போய்விடுகிறான். பூனை குறுக்கே போனால் அஞ்சித் திரும்பி விடுகிறான். பல்லி சொன்னால் பயப்படு கிறான்; பல்லிக்கு எத்தனை அறிவு என்று கேட்டால் தெரியாது; ஆனால் பல்லிக்குப் பயப்படுகிறான்; பல்லி என்ன பன் மொழிப்புலவரா? என்று ஆசிரியர் கேட் டதும் மாணவர் கையொலி அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.

விழா முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பல்லி என்ன பன்மொழிப் புலவரா? என்று கேட்டுக் கொண்டு சிரித்தபடியே, மறக்க முடியாத வாசகம் என்று ஆசிரியரைப் பாராட்டி மகிழ்ந்தனர். டாக்டர் பக்தவத்சலம் அவர்கள், எங்கள் மாணவர்கள் இத்தகையசொற்பொழிவை அறிவார்ந்த சொற்பொழிவை - இது போன்ற சொற்பொழிவை இதுவரை கேட் டதில்லை என்றார் புன்முறுவலோடு!

Read more: http://viduthalai.in/page8/76622.html#ixzz2vQ4vqDwh

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் மார்ச் - 8 எண்ணித் துணிக! எழுச்சி பெறுக!! தமிழர் தலைவர் அறிக்கை

இன்று (8.3.2014) உலக மகளிர் தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று மார்ச் 8 - உலக மகளிர் நாள்! உலகெங்கும் உள்ள பெண்கள் தம் உரிமைகளைப்பற்றி ஆய்வு செய்து கணக்கெடுக்கும் நாள்! மகளிர் பெற்றுள்ள உரிமைகளைக் கண்டு ஆண் இனம் - மனிதநேயத்தோடு எண்ணிப் பார்க்கும் நாளாகவும் இதனை அணுகுவதும் இன்றைய தேவை!

மண்ணுக்கும் கேடாய் மதிக்கப் பட்ட பெண் ணினம் இன்று விண்ணிலும் பறக்கும் ஆற்றலைப் பெற்று உயர்ந்துள்ளது என்பது உலக அளவில் உண்மைதான்.

என்றாலும், எம் நாட்டில்... எண்ணிப் பாருங்கள்

முதலில் பிறக்குமுன்பே (பெண்) இனப் படுகொலை நிகழ்த்துவதிலிருந்து தப்பிப் பிழைத்து கருவாகியபின் உருவாகி உருள வேண்டும். பிறந்த பின்பும் இன்னமும் இரண்டாந்தர நிலையில் வாழும் அவலம். உழைப்பு! உழைப்பு! கூலி பெறாத உழைப்பு.

படித்த பெண்கள் இன்று எங்கணும்! மடமையை இடித்த பெண்கள் எங்கணும் உண் மையே, என்றாலும் அவர்களுக்குத் தனித்த அடையாளம் எளிதில் கிடைக் கிறதா?
மானிடத்தின் சரி பகுதிக்கு இதுதானா பரிசு?

ஆணின் மேற்பார்வை முகவரி தானே! இன்றும் பெண்ணுக்கு இதைவிட அவலம் வேறு உண்டா? இது என்றும் உணரா வண்ணம் அவர்களுக்கும் போதைப் பொருள்கள் நகை நட்டு; அணிமணிகள், அலங்கார பொம்மை களாக்கி உலவ விட்டுள்ள நிலை!

பிள்ளை பெறும் இயந்திரங்கள் என்ற சுமக்கும் வேதனையை அவர்கள் மறக்க அடுத்த போதைப் பொருள் தாய்மையின் தன்னிகரற்ற சிறப்பு - என்று கவிதை மாலைகள் மூலம் அவர்கள் எப்போதும் தயார் நிலையில்!

படித்தாலும் சமையல் இயந்திரங்களாகவும் அலுவலக வேலை இயந்திரங்களாகவும் இயந்திரகதியில் எப்போதும்! இவரும் சம்பாதித்து இருவர் கையிலும் நிறைய என்ற அடுத்த போதை மாத்திரை படிக்காத பெண்ணாக இருந்தால் பாதிச் சுமை; படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணோ குடும்ப பாரம் அலுவலகப் பொறுப்பு என்ற இரட்டைகளின் சுமை தாங்கி; பல இல்லங்களில் மணம் வேறு; மனம் வேறு என்றாலும் சகிப்புத் தன்மை, குமுறவும் கூடாத கட்டுப்பாட்டின் இறுக்கம்!

இவைகளுக்கிடையில், அந்த அடிமை விலங்கொடிக்க தந்தை பெரியார் கண்ட புரட்சிப் பெண் முழங்கினால் அந்த முழக்கத்தைக் கண்டு வெறுக்கும் வெகுண்டெழுந்தான் பிள்ளைகள்! எத்தனை! எத்தனை!!

பெண் ஒரு புதிர் என்ற சொல் எப்போதோ கேட்ட குரல். ஆனால் உண்மையில் நம் பெண்கள் வாழ்க்கையைப் போல புரியாத புதிர், நிமிராத வளைவு, நிறைவடையாத உரிமைப் போர் இன்னமும் இங்கே!

உரிமை பெறுவதுகூட சலுகையைப் போல் என்ற உணர்வுடன்தான்! இன்றும் வாழும் பரிதாப நிலை!

நுகத்தடியைத் தேடும் மாடுகளுக்குக் கூட முட்ட உரிமை உண்டு.

ஆனால் ஆறறிவு படைத்த மனித குல பாதி என்ற போலிப் பெருமை பெற்ற பெண், தன் குரலை உயர்த்திப் பேசக்கூட இன்னமும் போராட வேண்டிய நிலையே உள்ளது என்பதே உண்மை! பெரியாரின் சமத்துவபுரமும், சுயமரியாதை பாதையும் தான் ஒரே தீர்வுக்கான விடை எண்ணித் துணிக எம் தோழிகளே! எழுச்சியும் ஏற்றமும் பெறுக!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
8.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76631.html#ixzz2vQ5E8Nv5

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

- குடிஅரசு - 12.02.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8Evp6z

தமிழ் ஓவியா said...

திரு.சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்தும் நன்றியுரையும்

கனவான்களே, சில உபச்சாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி இவருக்குக் கிடைத்ததற்கு திரு. பி.டி. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேக மில்லை.

உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திர பாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டு களையும் கெடுத்துவிடும் எனக் கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன்.

அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு மென்றாவது கருதிக்கொண்டு ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.

ஏனெனில், அது முடியாத காரியம், ஒரு சமயம் முடியாத தாயிருந்தாலும் அது யோக்கியமான மனிதனின் காரிய மாகாது ஒரு சமயம் யோக்கியமான மனிதனுக்கும் சாத்தியப் படுமானாலும் அதனால் நன்மையை விட கெடுதியே அதிகமாகும். மக்களில் பலதிறமுண்டு யோக்கியனும் அயோக்கியனும் உண்டு.

இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது. ஆதலால் அடியோடு கஷ்டப் படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் சுகப்படு பவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும் குற்றமில்லை.

நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறு பவர்களை பாராட்டுகிற பழக்கமில்லை - ஆனால் திரு. நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிலும் அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில் வதைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும் ஏற்பட கொடுமை யை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது அனு கூலமானதென்றும் அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார் என்றும் நம்பி அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மையை உத் தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில் இவர்களைப் பாராட்டுகின்றேன்.

என்றும் திரு. நாடார் அந்தத் துறையில் உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண் யமோ பயமோ சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த கணமே அந்த வேலையை இராஜினாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 25.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8PF9vk

தமிழ் ஓவியா said...

பெரியார் பொன்மொழி!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இனஉணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமையைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின்றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBhvF7p

தமிழ் ஓவியா said...

நேரு அறிக்கையும் மகமதலியும்

மௌலானா மகமதலி இந்தியாவுக்கு வந்ததுதான் தாமதம். உடனே நேரு அறிக்கையின் மேல் வெடிகுண்டு ஒன்று போட்டுவிட்டார். நேரு அறிக்கையைப் பின்பற்றினால் இந்தியாவுக்கு வரப்போவது சுயராஜ்யமல்ல, இந்து மகாசபை இராஜ்யமேயாகும் என்று மௌலானா மகமதலி கூறுகின்றார்.

தேசியப் பத்திரிகைகள் என்ற பார்ப்பனப் பத்திரிகைகள் மவுலானா கூறுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் மனமுவந்து ஒப்புக் கொள்ளுகின்றோம். நேரு அறிக் கைப்படி நாளை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் கொடுத்து விடுவார்களானால், இந்தியாவிற்கு பார்ப்பன இராஜ்யம் வந்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் நேரு திட்டத்தின்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், வகுப்புவாரித் தேர்தல்கள் என்ற பாது காப்புகள் கிடையாது. ஆகையால் தாழ்த்தப்பட்ட வகுப்பார், ஒடுக்கப்பட்ட வகுப்பார், கொடுமை செய்யப்பட்ட வகுப்பார், சிறுபான்மை வகுப்பார் எல்லாம் பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியின் கீழ் நசுங்க வேண்டியதே.

பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற காலத்திலேயே சில வகுப்பார், தெருக்களில் நடக்க முடியவில்லை, குளங்களிலும், கிணறுகளிலும், தண்ணீர் எடுக்க முடியவில்லை, எங்குப் பார்த்தாலும் சாதி வித்தியாசம் தலை விரித்தாடுகிறது என்றால், பிரிட்டிஷ் அரசாங்கம் போய் நேரு அறிக்கைப்படி இந்து மகாசபையின் ராஜ்யம் வந்துவிட்டால் என்ன அக் கிரமங்கள் நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அப் போது இராம இராஜ்யத்தில் நடந்த அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும்.

பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது. அவ்வாறு படித்தால் தூக்கில் போடவேண்டும் என்ற சட்டம் மதத்தின்பெயரால் ஏற்பட்டுவிடும். அம்மட்டோ! மனுதர்ம சாத்திரங்களிலுள்ள அநீதிகளெல்லாம் கிரிமினல் சட்டங்களாகவும், சிவில் சட்டங்களாகவும் மாறிவிடும். நம் பாடோ! ஐயோ திண்டாட்டந்தான்.

நேரு திட்டத்தால் இவ்வளவு கேடுகள் நேருமென்பதை அறிந்துதான் நாம் அவ்வறிக்கையைப் பிறந்தது முதல் கண்டித்து வருகின்றோம். மகமதலியும் அதனாற்றான் கண்டிக்கின்றார்.

இந்தியா பல மதத்தார், பல சாதியார் நிரம்பிய நாடு! ஒரு மதம், ஒரு சாதி, மற்றொரு மதம், மற்றொரு சாதியை நம்புவது கிடையாது. வகுப்புத் துவேஷம் எங்கும் தாண்டவமாடு கின்றது. இந்நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாரித் தேர்தலும் இல்லை என்று நேரு அறிக்கை சொல்லுமானால், அவ்வறிக்கையை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்? அதை யார் ஆதரிக்கப் போகிறார்கள்!

எத் தனை சர்வ கட்சி மகாநாடுகள் என்று நேரு மகாநாடுகளைக் கூட்டினாலும், எத்தனை காந்திகளும், பெசண்டுகளும் நேரு அறிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போதிலும், எழுதிய போதிலும் நேரு அறிக்கையை எவரும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம்.

நாம் நேரு அறிக்கையைக் கண்டித்தமையால் நம்மைச் சர்க்கார் தாசர்க ளென்று பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர் களின் கூலிகளும் எழுதுகின்றன; இன்னும் எழுதுகின்றன. இப்போது மவுலானா மகமதலி கண்டித்துவிட்டார்! எனவே, மவுலானாவையும் நம் கட்சியில் சேர்த்து விடுவார்கள். நமக்குக் கொண்டாட்டமே.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBoz4r2

தமிழ் ஓவியா said...


செய்திக் கொத்துகள்

பக்தீ!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. 3 லட்சம் பேர் பங்கேற்பு என்று வண்ணப் படத்தோடு வெளியிட்ட தினமணி ஒன்றைத் திட்ட மிட்டு மறைத்தது ஏனோ?

நடைபெற்ற தீ மிதியில் பக்தர்கள் விழுந்து காயப்பட் டனர் என்பதுதான் தின மணியில் மறைக்கப்பட்ட செய்தி; தொலைக்காட்சிகள் பக்தர்கள் காயம் பட்ட சேதியை ஒளிபரப்பினவே! பக்தி காயப்பட்டால் பார்ப் பான் வீட்டு அடுப்பு எரியாதே!

மூடநம்பிக்கை!

மூடநம்பிக்கைக்கு ஓர் அளவேயில்லையா? திண்டிவனம் பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் அந்த அர சியல்வாதி பிறகு சோபிக்க மாட்டார் என்கிற ஒரு மூட நம்பிக்கை இருக்கிறதாம். திண்டிவனத்தில் மேம்பா லத்தை உருவாக்கிய, மத்திய அமைச்சர் வெங்கட்ராமனும் செஞ்சி ராமச்சந்திரனும் அவ்வாறு ஜொலிக்கா மல் போய் விட்டார்களாம்.

புற்று நோயைவிட மூட நம்பிக்கை மிக மிக மோச மானது என்பதில் அய்யமில்லை. திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணியேசெய்யப்படக் கூடாதா? திண்டிவனத்தின் மீது தனிப்பட்ட முறையில் அதிருப்தி கொண்ட ஆசாமி யாரோ கிளம்பி விட்டிருக்க லாம்.

தேவைதான்!

பொது மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சி ஆட்டோ ஓட்டு நர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் - வர வேற்கத்தக்கது - தேவை யானது! பேரம் பேசுவது - ஒருமையில் பேசுவது - இன் னோரன்ன நிகழ்வுகள் அன் றாடம் நடைபெறும் காட்சி கள். மக்களின் தோழர்கள் ஓட்டுநர்கள் என்ற நிலை உருவானால் நாட்டுக்கே பெருமை சேர்க்கக் கூடிய தாக இருக்குமே!

மோடிக்கு மொத்து!

அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்குத் தான் குஜ ராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி வளர்ச்சியின் நாய கனாக இருக்கிறார் என்கி றார் ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் கேஜ்ரிவால்.

இடதுசாரிகளுக்கு திருமா. அழைப்பு

மதவாத சக்திகள் ஆட் சிப் பீடம் வருவதைத் தடுக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிகள் திமுக கூட் டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச் சித் தமிழர் தொல் திருமா வளவன் நேற்றைய செய்தி யாளர்கள் கூட்டத்தில்...

Read more: http://viduthalai.in/page1/76538.html#ixzz2vQChQtIp

தமிழ் ஓவியா said...


கூட்டணியில் இடதுசாரிகள் கலைஞர் பேட்டி


செய்தியாளர்: இடதுசாரி கட்சிகளுக்கு கூட்டணியில் சேருவது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் அழைப்பு விடப்படுமா?

கலைஞர்: அழைப்பு விடுக்கக் கூடாது என்று நான் எண்ண வில்லை. அவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம். (முரசொலி- 7.3.2014)

Read more: http://viduthalai.in/page1/76540.html#ixzz2vQCpptFL

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க நியமனம்


அவ்வை நடராசனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மத்திய செம்மொழி நிறுவனத் தின் துணைத் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள அவ்வை நடராசன் அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி. ஆற்றல் மிக்க தமிழ் அறிஞரான ஒருவர் தக்க பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பொருத்த மானது - வரவேற்கத்தக்கது என்றும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

Read more: http://viduthalai.in/page1/76541.html#ixzz2vQD3EpKK

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/page1/76544.html#ixzz2vQDHT7eS

தமிழ் ஓவியா said...


நமது நோக்கம்


ஏழையாயிருப்பதும், செல்வனாயிருப்பதும் கடவுள் செயல் என்கின்ற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத்தன்மையின் கொடுமை களையும், புரட்டு களையும் தெளிவுப்படுத்தி விடுவதும், அதுபோலவே அரசாங்கமும், கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி,

ஜனங்கள் எல்லாரையும் சமமாய் நடத்தும் சமதர்ம ஆட்சி தான் நிலை பெற வேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பது. இதற்கு இடையூறாக வரும் சமயக்காரனையோ, பண்டிதனை யோ, பணக் காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியை யோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதே நமது நோக்கமாகும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு, 25.5.1930)

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFFNdI3

தமிழ் ஓவியா said...

ரோஷமற்ற சூத்திரச்சிகள்

சாணியை சந்தனம் என்றால் ஒத்துக் கொள்ளாமல், எப்படி சந்தனம் ஆகும் என்று சிந்திக்கும் மனிதன் கல்லைக் கடவுள் என்று கூறுவதை எப்படி கல் கடவுளாகும் என்று சிந்திக்க மறுக்கின்றானே!ஒரு பெண்ணைப்பார்த்து தேவடியாள் மகளே என்று ஒருவன் கூறினால் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு அடிக்க முற்படுவாள் பெண்.

அப்படிப்பட்ட பெண்ணை சூத்திரச்சி என்று கூறினால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகள் என்று அழைக் கின்றானே என்று எந்தப் பெண்ணும் ஆத்திரப்பட மாட்டேன் என்கிறார்களே!

(7.7.1972 அன்று பெரம்பலூர் வட்டம், பூலாம்பாடி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFOGeyJ

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்தி வாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.திராவிடர் என்போர் யார்? திராவிடர் என்றால் பிறவியிலேயே பிறக்கும் போதே ஏற்படும் இனப்பெயர்தான். திராவிடர் என்பது ஜாதியல்ல; பிறவி ஆகும்.

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFUn2Ya

தமிழ் ஓவியா said...

மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் மகிமைமிக்கது; தெய்வீக சக்தி வாய்ந்தது; தெய்வங்களை வசீகரிப்பது ; அவர்தம் அருளை வாங்கித் தருவது; மோட்சத்துக்கு அனுப்புவது ; மக்களை மயக்குவது ; ஆக்கலும் அழித்தலும் வல்லது என்றெல் லாம் சொல்லுகிறார்களே, இவை உண்மையா? பொய்மை என்கிறார் பார்ப்பனரான தொல்காப்பியரே!மந்திரம் என்றால் பொருளற்ற சொல்லடுக்கு, அச்சுறுத்தல் ஒலி என்கிறார். இவர் தமது இலக்கணமான தொல்காப்பியத்தில்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழிதானே மந்திரம் என்ப

(தொல்-பொருளியல் 174)

பேச்சில் வல்லவர்கள், கட்டளையிடும் (அச்சுறுத்தும் ஒலியில்), சொல் விளைக்கும் மறைவான பொருள் கொண்ட - பொருள் விளக்கமற்ற அடுக்குச் சொற்களே மந்திரம் என்பர் என்கிறார். விளக்கவுரையாளர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டும் குறிப்பிடுகிறார்.

திரிதிர சுவாகா கன்றுகொண்டு கறவையும் வந்திக்க சுவாகா இதனை மேலளவில் நோக்கும் போது பொருள் விளக்கமில்லை.

கன்றுகொண்டு என்பதற்குப் பதில், கன்று கொன்று எனக் கொள்ள வேண்டுமா? இப்படிக் கொண்டால் இது ஒரு சாவு, இழப்பு, சாபமந்திரமாகிறது. எதிரியின் கால்நடைகளை ஒழிக்கவும் என்பதே இதன் கருப் பொருள். அதாவது, தேவதையே! கன்றைக் கொன்று பசுவும் பால் கறக்காதுவற்ற அடித்து விடு என்பதே இதன் தெளிபொருள்.

இப்படி சொன்னதால் கன்று செத்ததா, பசு வறண்டதா என்ற விளக்கம் தரப்படவில்லை. எனவே, இது வெறும் அச்சுறுத்தல் சொல்லடுக்கே. பெண்கள் சூத்திரத்தால் நாசமாகப் போக என்பது போன்று வெற்றுக் குரல் ஒலியே.

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ

என்றுதான் முறையிட்டார் பக்தப் புலவரும். தந்திரம் செய் என்றாரேயன்றி, மந்திரம் போடு என்று கேட்க வில்லை. இதிலிருந்தே மந்திரத்தின் பயனின்மை வெள்ளி டைமலை.

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFcRhIt

தமிழ் ஓவியா said...


எல்லாமே அந்த அம்மாதானே...!


என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன். - விடுதலை 15.10.1962இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக _ என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் _ வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன்.

இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள். - விடுதலை 13.2.1963

(அன்னை மணியம்மையார் பற்றி தந்தை பெரியார் கூறியவை)

தமிழ் ஓவியா said...

கருத்து


மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்ட தீர்ப்பு, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டுவதாக அர்த்தம் அல்ல. கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் விளக்கிக் கூற முடியாத தேவையற்ற காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். மரண தண்டனைக் கைதிக்கும் கருணை காட்டும்படி கோருவதற்கு உரிமை உண்டு. அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியல் சட்டக் கடமையாகும்.

- பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழ் ஓவியா said...

ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதிய பார்வை கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கையின் சுழற்சியை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு குழந்தையின் தந்தையையும் தாயையும் பிணைத்து வைத்திருக்கும் பசை என்பதைப் புரிந்துகொண்டால் அற்ப மாயைகளை நம்பி ஒரு ஆணோ பெண்ணோ தவறான வழியில் செல்ல மாட்டார்கள்.

இந்திர விழா போன்ற பெயர்களில் காதலர் தினம் தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. காதலைக் கொச்சையாகப் பார்ப்பதும் அழகாக _ கம்பீர மாகப் பார்ப்பதும் நமது பார்வையில்தான் உள்ளது.

- ஷாலினி, மனநல மருத்துவர்

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பன்னாட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும். அதற்கான கருத்துகளை அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ முன்மொழிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது குறித்து சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த 2 தீர்மானங்களை இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.

- விஸ்வநாதன் ருத்ரகுமாரன்,
நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர்காதலிப்பவர்களைத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறவர்கள் திருமணம் என்பதைத் தாலி கட்டிக்கொள்ளும் சடங்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு தாலி என்பது தமிழ்க் கலாச்சாரம் கிடையாது என்பது தெரிவதில்லை. - சந்தியா, எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...

கொடுமை ...


வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது முதலாளிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு 528 வழக்குகளுடன் தமிழகம் முதலிடத்திலும் 506 வழக்குகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும் 412 வழக்குகளுடன் கர்நாடகாவும் கேரளாவும் அடுத்த இடங்களிலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 2012ஆம் ஆண்டு முதலிடத்திலிருந்த ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


பெரியாரின் தொலைநோக்கு

சீனாவில் 40 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஒரு குழந்தைத் திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்பது நாம் அறிந்ததுதான்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டு வந்து இது சாத்தியமாகி இருக்கிறதே, அது எப்படி? 1970களில் அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று பரப்புரை செய்தார்கள். ஆனால், சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே குடும்பக் கட்டுபாடு குறித்துப் பேசிவிட்டார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வில்லை என்றால் நாடு சிக்கலில் உழலும்; வறுமை தாண்டவமாடும் என்பது பெரியாரின் தொலைநோக்கு. அதனால் அவர் திருமண வீடுகளில் பேசும்போது, மணமக்கள் உடனே பிள்ளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; 5 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்; பின்னர் ஒன்றோ, இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அப்போது எல்லா மதவாதிகளும், பிள்ளைப் பேறு என்பது கடவுள் அளிப்பது. அதனைத் தடுப்பதா எனக் குதித்தனர். ஆனால், கடவுளையே கடாசி எறிந்த பெரியார், பிள்ளை கொடுக்கும் கடவுள், கூடவே அதனைக் காப்பாற்ற ரெண்டு மாட்டையும் கன்றையும் அல்லவா தந்திருக்க வேண்டும்? வசதி வாய்ப்பைத் தரவில்லையே, ஏன்? அப்படித்தராதவன் பொறுப்பானவனா? என்று கேள்வி எழுப்பினார். தன் தோழர்களுக்கு அவர் வழங்கும் முக்கியமான அறிவுரையும் இரு குழந்தைகள் போதும் என்பதுதான்.

பல்லாண்டுகள் தமிழ் மண்ணில் பெரியார் செய்த பிரச்சாரத்தால் அரசின் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இரு குழந்தைகள் திட்டம் இப்போது ஒரு குழந்தைத் திட்டம் என்றாகி, நாமே குழந்தைகள்; நமக்கேன் குழந்தைகள்? என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

சீனாவில் கணக்கெடுத்தது போல இங்கும் கணக்கெடுத்தால் பலகோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது தெரியவரும்.

குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பின்னும்கூட பசியும் பட்டினியும் வறுமையும் இருக்கும் நிலையை நாம் காண்கிறோம். இன்னும் இலவச அரிசி கொடுக்க வேண்டிய நிலை. இத்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால்...? எல்லாம் கடவுள் செயல் என்ற நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே...!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

ஜாதியிம் பெயரால் . . .


வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர்.

உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ்,

காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது. எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும்போது மிகவும் கவனமாக நீதிமன்றம் இருக்க வேண்டும். இருக்கின்ற பிரச்சினையை அதிகப்படுத்தக் கூடாது. ஒரே கோத்திர திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காதல், கத்திரிக்காய் எல்லாம் கூடாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய நினைக்கும் ஜோடிகள் எங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கிறோம் என்று பேசியுள்ளார்.

வடமாநில அரசாங்கங்கள் காப் பஞ்சாயத்துகளை ஆதரிக்கின்றன. அண்மையில், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு, அரியானா மாநில முதல் அமைச்சர் பூபிந்தர் சிங், காப் பஞ்சாயத்துகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கூடாது. அவை சமூக சேவையாற்றி வருகின்றன என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.

தமிழ் ஓவியா said...

திரும்பத் திரும்ப பேசுற நீ...


அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.

ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.

இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.

குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.

மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.

தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.

- முகநூலில் கோ.கருணாநிதி

தமிழ் ஓவியா said...

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை!


*புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும், அப்படிச் செலவு செய்வதற்கும் அழகுப்படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். அப்படி ஏதாவது பயன்உள்ள அழைப்பிதழைத் தருவார்களா என்றால் அதுவும் இல்லை.

இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் புதுக்கோட்டை நண்பா அறக்கட்டளையின் பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். இவ்வாண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழை, பயன் முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்புக் காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்! என்கிறார் பிரகாஷ்.

இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது, நண்பா அறக்கட்டளையில் அவருடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

- ச.பிரின்சு

தமிழ் ஓவியா said...

மதத்தின் பெயரால்...

கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா.

உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் பாத்திமா. முத்துக்கிருஷ்ணன் உண்மையை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

பேருந்து கிளம்பி 5 நிமிடத்தில் 10, 15 இருசக்கர வாகனங்களில் வந்தோர் பேருந்தை மறித்து உள்ளே ஏறி, இஸ்லாம் மார்க்கத்தைக் கெடுக்குறயா? விபச்சாரம் செய்யப் போறயா என்று மிகவும் கேவலமாகப் பேசி அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே போட்டுள்ளனர்.

தன் அண்ணனுக்குத் தகவல் சொன்ன பாத்திமா, பேருந்தை விட்டு இறங்காதே என ஓட்டுநர் சொல்லியதைப் பொருட்படுத்தாமல், மற்ற பயணிகள் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து கீழே இறங்கிவிட்டார்.

சுற்றி நின்று தகாதபடி பேசிய 50 பேரைச் சமாளித்து, காவல் துறையினர் வரும்வரை எங்கேயும் போகாதே என்று செல்பேசியில் தனது அண்ணன் சொல்லியபடி அங்கேயே இருந்து சமாளித்துள்ளார்.

காவல்துறையினர் வந்ததும், கொஞ்சம் தள்ளியிருந்த மருந்துக் கடைக்குச் சென்று புகார் எழுத ஆரம்பித்தபோது முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வந்து மருந்துக் கடைக்காரரை மிரட்ட, காவல் நிலையத்திற்கே சென்று புகார் எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வந்த ஜமாத் தலைவர், ஒரு முஸ்லிம் பொண்ணு காவல் நிலையத்திற்கெல்லாம் வரக்கூடாது என்றதும் ஒரு முஸ்லிம் பெண்ணை விபச்சாரினு சொல்லலாமா? கைநீட்டி அடிக்க வரலாமா என்றதும், அவங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்றோம், புகார் வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் தனது அண்ணனுடன் காவல் நிலையம் சென்றவரிடம் செருப்பால வேனும்னாலும் அடி, வழக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

எதற்கும் பிடி கொடுக்காத அனிஸ் பாத்திமா, அவர் சார்ந்துள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் சார்பு இயக்கங்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்து அமைப்புகள்அணி திரண்டதால், மதக்கலவரம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று நினைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாலும், நடந்த நிகழ்வினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் கொடுமை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட பாத்திமாவைப் போல் துணிந்து அனைவரும் வீறுகொண்டு எழவேண்டும்.

நன்றி: நக்கீரன், பிப்.19-21, 2014