Search This Blog

22.3.14

சோ எனும் அரசியல் புரோக்கர்! - சிங்கங்கள் நரிகளான கதைதெரியுமா?


திருவிளையாடல் புராணத்தில் மதுரையில் மந்திரியாக இருந்த மாணிக்கவாசக அய்யர் குதிரை வாங்கக் கொடுத்த அரசு பணத்தை, அதற்குச் செலவிடாமல் கோயில் கட்டுவதற்குச் செலவிட்டாராம்!

அரசு பணத்தைத் திசை திருப்பிச் செலவழித்து விட்டு, பிறகு அதற்கு ஏதேதோ சமாதானம் சொல்லும் இன்றைய பல நடப்புக்களுக்கு முன்னோடியே மதுரை மாணிக்கவாசக அய்யர்தான் போலும்!

குதிரை எங்கே என்று மன்னர் கேட்டால் என்ன சொல்வது என்பதற்காக, இவர் திகைத்து, ஆண்ட வனை வேண்ட, அவரும் இந்தத் தவறுக்கு உடந்தை (Abettor) ஆகி , காட்டில் இருந்த நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றி, அந்த ராஜ்யத்தில் சேர்த்தார் என்ற ஒரு கதை உண்டு - அதற்கு நரியைப் பரியாக்கிய கதை என்றே பெயர்.

(பல திருவிளையாடல்களில் மதுரை சொக்கநாத சுவாமி செய்த திருவிளையாடல்களை வடமொழியிற் கூறியபடி தமிழில் பரஞ்சோதி முனிவரால் 65 படலங்கள் அடங்கிய 3363 விருத்தங்களால் ஆன இந்த நூலில் 59வது திருவிளையாடல் அரசனுக் கஞ்சிய வாதவூரார் பொருட்டு நரிகளைப் பரியாக்கிய கதை என்ற பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு புருடாக்களின் தொகுப்பு அது).

ஆனால் தற்போதைய தேர்தல் அரசியலில் தமிழ்நாட்டில் புதிய அரசியல் திருவிளையாடற் புராணம் அரங்கேறியுள்ளது!

முன்பு போல் அல்லாமல் இப்போது சிங்கங்கள் எல்லாம் சிறு நரிகளாக மாறி, அசிங்கமான காட்சிகளைக் காட்டி(ல்) உலா வருகின்றன!

கூட்டணி என்ற பெயரில் இங்கு நடைபெற்ற சீட்டணி அரசியலில், மிரட்டல் படலத்தின் உச்சக் கட்டத்திற்கே மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சென்று தர்மபுரியில் கர்ஜித்தார்!

சிங்கங்கள் சிறுநரிகளிடம் பிச்சை கேட்பதா? சிங்கங்கள் ஒரு போதும் பணியாது என்று வீரவசனம் பேசினார்; தனது கட்சி சேலம் வேட்பாளரைக்கூட போடா போய் நில் சேலத்திலேயே என்று பாசத்துடன் ஒருமையில் கூறி ஏவினார். அவரும் அதை உண்மை என்றே நம்பி சேலம் தெருக்களில் துண்டறிக்கை தந்து, வாக்காளர் முகவாய்க் கட்டைகளையெல்லாம் தடவி வாக்குச் சேகரித்தார்!

என்றாலும் நாள் ஏற, ஏற, வடக்கின் புதிய எஜமானர்கள் வந்து, கெடு வைத்தார்கள் மருத்துவருக்கு.

இவரோ கொடுத்த தொகுதிகளை பேசாமல் வாங்கிக் கொண்டு, சிறுநரிகள்  கூட்டத்தோடு சங்கமம் ஆகி விட்டார்.

இனி கர்ஜனைக்கு இடமே கிடையாது; சிங்கங்கள் சிறுநரிகளாக மாறினால், ஊளைதானே இட முடியும்?

அட பரிதாபமே! தமிழ்நாட்டில் எப்படியாவது கணக்குத் திறக்க ஒற்றைக் காலில் நின்றோ, அல்லது சிரசாசனம் போட்டோ  காட்டில் சுதந்தரமாக உலாவிய சிங்கங்களையெல்லாம் பிடித்துக் கொண்டு வந்து சிறுநரிகளாக்கி அரசியல் சர்க்கஸ் நடத்த ஆயத்தமாகி விட்டது பா.ஜ.க. என்ற புதிய ரிங் மாஸ்டர்.

இனிமேல் சர்க்கஸ் காட்சி நேரம் தவிர மற்ற மற்ற நேரங்களில்  கூண்டில்தான் இந்த மாஜி சிங்கங்கள் அடைந்து கிடக்க வேண்டும்.
மற்றொரு மாஜி சிங்கம்? கொடுத்ததை வாங்கிக் கொண்டு அகோரப் பதவிப் பசியைத் தீர்த்துக் கொண்டு விருந்து மகிழ்ச்சி என்னும் திருவிளையாடலில் உள்ளது!

இந்த உதாரணத்தை உதிர்த்த மருத்துவர் அய்யாவுக்கு தமிழ் மக்கள் நிச்சயம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

பா.ஜ.க.வின் தலைமையில் அமைந்து முரண் சர்க்கஸ் கூடாரத்தில் இருப்பவை சிங்கங்கள் அல்ல; சிறுநரிகள்தான் என்று உணர்த்தி விட்டனர்.

பலே... பலே... அப்படியாவது மாம்பழச் சின்னத் தைத் தக்க வைக்க முடிந்தால் சரி; மத்தியில் தனது இளவரசுக்கு மகுடம் வந்தால் சரி!

இவரை நம்பி வந்த சமுதாயக் கூட்டணி என்ற ஜாதிக் காரர்களும் இந்த சர்க்கஸை டிக்கெட் வாங்காமல் இலவச அனுமதியுடன்  பார்த்து ரசிப்பார்கள் போலும்!

இன்னொரு நரி, இடமா, வலமா? என்று முடிவு செய்ய முடியாமல் கடைசியாக எப்படியோ ஏலம் கேட்டு பாய்ந்துவிட்டது!

வளர்க புதிய தமிழக அரசியல் திருவிளையாடல்கள்! தேன் குடித்த நரிகள் கதை இது!

தேசியக் கட்சிகளோடோ திராவிடக் கட்சிக ளோடோ இனி கூட்டே கிடையாது என்ற வெற்றிலை, சூடம்  சாம்பிராணி சத்தியம் வாக்கு எல்லாம் அதோ காற்றில் பறப்பது தெரியவில்லையா?

நரிகளிடம் நாட்டோர் எப்படி விழிப்போடு இருக்க வேண்டுமோ, அப்படி இருப்பது அவசர அவசியம் இல்லையா?

--------------------- ஊசி மிளகாய்  அவர்கள் “விடுதலை”-21-03-2014 இதழில் எழுதிய கட்டுரை
***********************************************************************************
 
இதோ சோ எனும் அரசியல் புரோக்கர்!
 

இடதுசாரிகளை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்பற்றியெல்லாம் கார்ட்டூன் போட மனம் வரவில்லை திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளுக்கு.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் போயும், போயும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து அவமானப்படுத்தப்பட்டு விட்டார்களே.

ராமன் பாலம் என்று சொல்லி, தமிழ்நாட்டின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டத்தை முடக்கும் மதவாத ஜெயலலிதா அவர்களின் அ.இ.அ.தி. மு.க.வோடு கூட்டுச் சேர்வதைவிட தி.மு.க. கூட்டணியில் சேர்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற கொள்கை பார்வையோடு அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழகத் தலைவர். வேண்டுகோள் விடுத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  - இதில் கிண்டல் - கேலிக்கு எங்கே இடம் இருக்கிறது?
சோ ஓர் அரசியல் புரோக்கர் - அந்தக் கண்ணோட்டம்தான் அடுத்தவர்கள்மீதும் போலும்.

நாம் ஏதோ கொச்சைப்படுத்தி எழுதுகிறோம் என்று யாரும் கருதவேண்டாம்!
ஆனந்தவிகடனுக்கு (1.2.2012) சோ அளித்த பேட்டியில் புரோக்கர் என்று அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்.  13 நாள் பிரதமராக இருந்த வாஜ்பேயியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டபோது, தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரிடம் இதே சோ ஓடோடி வந்தார் - ஏன் தெரியுமா?
அரசியல் புரோக்கராக ஓடி வந்த அவர், வாஜ்பேயிக்கு ஆதரவு கொடுத்தால், ஜி.கே. மூப்பனார் அவர்களுக்குத் துணைப் பிரதமர் பதவி வாங்கித் தருவதாக புரோக்கர் வேலை செய்ததை சோவே ஒப்புக்கொண்டிருக்கிறாரே! (குமுதம், 7.8.2013, பக்கம் 87).

அதுமட்டுமா!

1979 இல் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சவுந்தரபாண்டியனை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூறினார் என்பதற்காக உளவு பார்த்ததும் இதே சோ அய்யர்தான்.

இந்த யோக்கிய  சிகாமணிதான் கொள்கை உணர்வோடு இடதுசாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கழகத் தலைவரைப்பற்றி நையாண்டிப் படம் போடுகிறார்.

கூரையில் ஏறிக்கொண்டு கொள்ளியைச் சுழற்றவேண்டாம் சோ கூட்டம்.

                                    -------------------------“விடுதலை”-21-03-2014
Read more: http://viduthalai.in/page-8/77310.html#ixzz2we1ppZui

58 comments:

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!


பிரபல ஆங்கில எழுத் தாளரும் பத்திரிகையாளரு மான குஷ்வந்த்சிங் அவர்கள் தனது 99ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகப் பெரிய இழப்பாகும்! நிறை வாழ்வு வாழ்ந்த அவர் 100 ஆண்டை எட்டாமல் போய் விட்டாரே!

நம் நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்; நகைச்சுவை கலந்த எழுத்தாளர். ஏராளமான ஆங்கில புத்தகங்களை 2013 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 2013இல் தனது சுய சரிதையை எழுதியவர். அவரே ஒரு திறந்த புத்தகம். எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும்திறந்த உள்ளத்தவர். மதச் சார்பற்ற அரசு (Secular) நடைபெற வேண்டும் என்று விரும்பியவர். தன்னை ஒரு கடவுளைப்பற்றிய கவலைப்படாத வன் (Agnostic) என்று பிரகடனப்படுத்தியவர்!

2003ல் - 2004 பொதுத் தேர்தலுக்குமுன்பு, குஜராத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா, மதவெறியின் ஓங்கிய குரல் - இவை கண்டு மனம் வெதும்பி, (‘The end of India’)
இனிமேல் இந்தியா இருக்காது;

இந்தியா எனும் நாட்டையே காணாமற் போகக் கூடிய அளவில் நாட்டின் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மத வெறி அமைப்புகள் செயல்பட்டன; குஜராத் 2002-இல் இன அழிப்பு சிறுபான்மை இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சிறந்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்

சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77314.html#ixzz2we3tSsnt

தமிழ் ஓவியா said...

பெரியார் எனும் மாபெரும் சக்தியால் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி!


வடநாட்டிலும் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்ச்சி பெற திராவிடர் இயக்கம் தேவை!

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு புதுடில்லி, மார்ச் 21- பெரியார் எனும் மாபெரும் சக்தியால் தென்னகத்தில் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி பெற்றது. வடநாட்டிலும் அந்நிலை உருவாகிட திராவிடர் இயக்கம் தேவை என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு ஆய்வின் அடிப்படையில் படம் பிடித்துள்ளது.

1917-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் மாகாண மாநாடு என்ற பெயரில் பிரபல ஆங்கில தினசரி ஒன்றில் விளம்பரம் வந்தது. அதில் மதராஸ் மாகாணத்தில் இருந்து கலந்துகொள்ளவந்த பார்ப் பன பிரதிநிதிகளின் கண் களில் கலக்கம் காணப்பட் டது. கொல்கத்தாவில் உள்ள தமிழ் பார்ப்பனர் நடத்தும் தஞ்சாவூர் மீல்ஸ் ஹவுஸ் என்ற உணவு விடுதியில் தமிழகத்தில் இருந்து வந்த பார்ப்பன பிரதிநிதிகள் சி.எஸ். நர சிம்மாச்சாரி தலைமையில் தமிழகத்தில் பார்ப்பனர் களின் ஆதிக்கம் வலுவி ழந்து வருவதையும் தெற்கே பார்ப்பனர் அல்லாத மாற்று சக்தி பலம் வாய்ந்ததாக மாறிக்கொண்டு வருவது பற்றி கவலையுடன் விவா தித்தனர். இந்தியாவில் முதல் முறையாக பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற இரண்டு பிரிவு அரசி யல் உருவாகிக்கொண்டு இருந்தது, கொல்கத்தா காங் கிரஸ் மாநாட்டில் இதன் தாக்கம் வெளிப்படத் துவங்கியது.

தமிழ் ஓவியா said...

1892 முதல் 1909 வரை..

1892 முதல் 1909 வரை காங்கிரசில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே 50விழுக்காடு அதிகமாக இருந்தது; இது 1920 களில் 19 விழுக்காடு குறைய ஆரம்பித்தது. சுதந் திரம் அடைய சிலவருடம் இருக்கும் வரை வடக்கு மாநிலங்களில் 9 விழுக்காடு இருந்த பார்ப்பனர்கள் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர். இந்த காலகட் டத்தில் மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் பிகார் மாநிலத்தில் ஜகஜீவன் ராம் போன்றோர் தங்களது சமு தாய மக்களிடையே பெரும் அரசியல் விழிப்புணர்ச்சி யைக் கொண்டு வந்தார் கள். இந்த நிலையில் இஸ் லாமியர்களும் அரசியல் விழிப்புணர்ச்சி பெற ஆரம்பித்தார்கள். பாபு ஜெகஜீவன்ராமின் பார்ப்பனர் அல்லாத இயக் கம் வலுப்பெற முடியாத நிலையில் உயர்சாதியினர் அந்த இடைவெளியை பிடித்துக்கொண்டனர்.

பார்ப்பனர்களின் ஆதிக்கம் காங்கிரசில் மாத்திரமல் லாது மாற்றுக் கட்சியாக உருவெடுத்த பொதுவு டமைக் கட்சிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருகத் துவங்கியது. பிறகு பொதுவுடமைக் கட்சி களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சுதந்திரத்திற்குப் பிறகு குறையத்துவங் கியது. இன்றைய நிலையில் பொதுவுடமை கட்சிகளின் 4 முக்கிய பொறுப்புகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதை அரசியல் விமர் சகர்கள் சுட்டிக்காட்டியுள் ளனர். பெரியார் எனும் மாபெரும் சக்தி
ஆனால் தெற்கே பார்ப் பனர் அல்லாத மாற்று அணி பெரியார் என்னும் மாபெரும் சக்தி மூலம் வளர்ந்துகொண்டு இருந் தது. இந்தத் தாக்கம் தற் போதைய ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடக மாநி லத்தில் பார்ப்பனர் அல் லாத இயக்கம் பிறகு திரா விட இயக்கமாக மாறி, காங் கிரஸ் மற்றும் பார்ப் பனர்களின் எந்த ஒரு இயக்கத்திற்கு பெருத்த தடையாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கில் சரியான அளவில் பார்ப்பனர் எதிர்ப்பு இயக் கம் வலுப்பெறாத நிலை யில் உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கம் மீண்டும் வளர்ச் சியடையத் துவங்கியது. இன்று பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநி லங்களில் எல்லாக்கட்சியி லும் பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு ஆதவராக செயல்படும் உயர்சாதிக் கட்சியினரின் ஆதிக்கம் உள்ளது. இன்று மெல்ல மெல்ல மாநில முதல்வர் கள் பார்ப்பனர்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநி லங்களில் பார்ப்பனர்கள் குறைந்த அளவில் இருந் தாலும் பார்ப்பனர்களின் ஆளுமை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மமதாபானர்ஜி, போன்ற நேரடி பார்ப்பன முதல்வர்கள் போல் இந் தியா முழுவதும் பல மாநி லத்தில் உள்ளனர்,

அதே போல் நரேந்திரமோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே போன் றோர் பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறியுள் ளனர். இந்தியா அரசியல் களத்தில் அவ்வப்போது பெருத்த மாற்றம் ஏற்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கம் சரிவடையப்போகும் நேரத்தில் எல்லாம் பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை நிலை நிறுத்த எந்த விதத்திலாவது முயன்று கொண்டு இருப்பார்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் விஜய்பகுகுணா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அந்த இடத்தில் பார்ப்பனர் ஒருவரை முதல்வராக வர தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையில் மூத்த பார்ப்பன பெண் அரசியல்வாதி பிரபலப் பத்திரிக்கையாளர் மூலம் இறங்கினார்.

மாற்றம் பெற்று வரும் அரசியல் களத்தில் பார்ப் பனர் அல்லாத அரசியல் சக்திகள் முன்னேற்றம் பெற்று வந்தாலும், பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை இழக்கத் தயாராக இல்லை, சமூகநீதிக்களத் தில் எந்தவிதத்திலும் முன் னேற்றம் கண்டுவிடக் கூடாது என்று முனைப் போடு அரசியல் களத்தில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர். பார்ப்பனர் களின் ஆதிக்கம் குறைந்து வரும் இதுபோன்ற சூழ லில் திராவிட இயக்கம் போன்று வலுவான இயக் கம் இந்தியாவெங்கும் உரு வாகும் சூழலில் இந்தி யாவில் சமூகநீதி மலர்ந்து சமத்துவம் ஏற்படுவது உறுதி.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.3.2014 பக்.11)

Read more: http://viduthalai.in/e-paper/77316.html#ixzz2we45XcvP

தமிழ் ஓவியா said...


பரிதாபமே காரணம்

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கிற உணர்ச்சிக்கோ, பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே!
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/77297.html#ixzz2we4KL638

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சரின் பொருந்தாக் குற்றச்சாற்று!

மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த குரல் கொடுக்காதது ஏன்? - என்ற வினாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் படித்து வருகிறார் தமிழ்நாடு முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரு மான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

பெரியார் பிறந்த மண் என்பதால் சமூகநீதியை -இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தந்திரத்தில் அம்மையார் பேசி இருக்கிறார்.

சமூக நீதிப் பிரச்சினையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே எந்தக் கட்சிக்கு இதில் அக்கறை அதிகம் என்பது வெகு எளிதாகவே புரிந்து விடும். அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 20,21) சமூக நீதி என்னும் தலைப்பில் ஒப்புக்குச் சப்பாணியாக வெறும் 15 வரிகள் சம்பிரதாயமான முறையில் அச்சிடப்பட்டுள்ளன.

இன்றைக்கு 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையான அளவில் செய்யப்படாததற்கு தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அம்மையார் பேசி வருகிறாரே - உண்மையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு இதில் அக்கறை இருக்குமேயானால் தனது தேர்தல் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிட்டு 27 சதவீதம் முழுமையாகக் கிடைத்திட நாங்கள் பாடுபடுவோம் என்று குறிப்பிடாதது ஏன்?

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 24ஆம் பக்கத்தில் 16ஆவது வரிசையில், பிற்படுத்தப்பட்டோ ருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமை யாக அமல்படுத்துதல் என்னும் தலைப்பின்கீழ் 27 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் ஏ.பி.சி.டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரியதாகும் என்று குறிப்பிட்டு 27 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்பப்படாத பின்னடைவுப் பணிகளை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளதை - தி.மு.க.வின் அக்கறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர 27 சதவிகிதம் கிடைத்திட ஏன் குரல் கொடுக்கவில்லைஎன்று குற்றம் சுமத்துவது பிரச்சனையைத் திசை திருப்புவது ஆகும்.

இன்னொரு கேள்வியை அவரை நோக்கித் திருப்பிக் கேட்க முடியுமே! அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் கவன ஈர்ப்பைக் கொண்டு வந்ததுண்டா? இதற்காகக் குரல் கொடுத்ததுண்டா - கருத்துத் தெரி வித்ததுண்டா? பிரதமரைச் சந்தித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் எழுத்துப் பூர்வமாக வலியுறுத்தியதுண்டா என்று திருப்பிக் கேள்வி கேட்டால் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வார்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மற்ற மாநிலங் களில் எல்லாம் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்குத் தனித் தனியே மதிப்பெண்களில் தளர்வு அளிக்கப்பட்டு இருந்தும், மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டும் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தும், அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி ஏறிந்து விட்டு, உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயித்து, காலம் காலமாக இந்தப் பெரியார் மண் பின்பற்றி வந்த சமூக நீதியின் ஆணி வேரை வெட்டும் பார்ப்பன வேலையில் இறங்கியது யார்!?

கடுமையான அறிக்கைகள், கூட்டங்கள் போராட் டங்களை நடத்திய பிறகு தகுதி மதிப்பெண்களில் அய்ந்தை மட்டும் குறைத்து அதுவும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்க்கு மட்டும் பொருந்தும்; 2012இல் எழுதியவருக்குப் பொருந்தாது என்று ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து அப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சமூக நீதியைப் பற்றி வாய்த் திறக்கலாமா?

அதே போல சென்னை அரசினர்த் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டப் பேரவைக் கட்டடத்தை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையைத் தொடங்குவதாகக் கூறி, 83 பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று அறிவித்தது எந்த ஆட்சி? இதற்குமுன் எந்த ஆட்சி யிலும் இப்படி இட ஒதுக்கீடு கிடையவே கிடையாது என்று அறிவித்து அரசு விளம்பரம் வெளியிட்ட துண்டா?

கடுமையான எதிர்ப்புக்கு பிறகு, போராட்டத்திற்குப் பிறகு தானே அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இறங்கி வந்தது?

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் என்று கூறப்பட்டுள்ளதே - இதைவிட இடஒதுக்கீடுத் தத்துவத் தின் ஆணி வேரிலேயே வெடிகுண்டு வீசும் வேலை வேறு உண்டா?

எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல் அமைச்சர் அம்மையார் தி.மு.க.வை நோக்கி சமூக நீதிபற்றி விரல் நீட்டுகிறார்?

கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிய ஆசைப்பட வேண்டாமே!

Read more: http://viduthalai.in/page-2/77298.html#ixzz2we4UlP6y

தமிழ் ஓவியா said...


சுட்டும் திசையில்.....

- நீரோடை

அண்மையில் ஒரு புத்தக்கத்தை வாங்குவதற்குமுன் அதன் அணிந் துரையைப் பார்த்தேன். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏறத்தாழ 14 பக்கங்கள் அந்தப் புத்தகத் திற்கு அணிந்துரை வழங்கியிருந்தார்கள். ஆசிரியர் அவர்களின் அணிந்துரை இத்தனைப் பக்கங்கள் அமைந்த புத்தகம் வேறு ஏதும் நான் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தபின்புதான் அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமும் ஆய்வும் எனக்குப் புரிந்தது, அந்தப் புத்தகத்தின் தலைப்பு "சாதி முறையைத் தகர்க்க இயலுமா? என்னும் புத்தகம் .விழிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர் டி.ஞானையா.

அகில இந்திய அளவில் மிகப்பெரிய தொழிற்சங்கப்பொறுப்பில் இருந்தவர். இந்தியாவின் மூலை முடுக் கெல்லாம், அனைத்துப் பகுதிகளுக்கும் தொழிற்சங்கப்பணிகளுக்காக சென்று பணியாற்றியவர். எவர் படித்தாலும், ஏன் பார்ப்பனரே படித்தாலும் இந்தச்சாதி முறை என்பது எவ்வளவு கொடுமையானது, எப்படி இந்தச்சாதி முறை உருவாக்கப்பட்டது, எப்படி இந்தச்சாதி முறை நிலை நிறுத்தப் பட்டது, இன்றைக்கும் கூட அது ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது, சாதி இன்னும் உயிரோடு இருப்பதற்கு என்ன காரணம், எப்படிப்பட்ட மன நிலை பார்ப் பனர்களால் உருவாக்கப்பட்டது, அது ஏன் இன்னும் அனைத்து மக்களிடமும் படிந்து இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்தப்புத்தகம் அமைந்துள்ளது.

இந்தபுத்தகத்தில் மொத்தம் 11 இயல்கள் உள்ளன. முதல் இயலான 'வர்ண தர்மா வின் இறை இயலும் சட்டமும் ' என்னும் பகுதி வட இந்தியாவை பார்ப்பனியம் எப்படி ஆட்கொண்டது என்பதனை விவரிக்கின்றது.தங்கள் இனத்தின் நலத்திற்காக எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைப் பயன்படுத்தினார்கள் ? சூத்திரருக்கான தண்டனையை எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர் ஆட்சிகளில் நிறைவேற்றினார்கள்? மனுவின் கால எல்லை போன்றவற்றை மிகப்புகழ் அடைந்த வரலாற்று ஆசிரியர்கள் டாக்டர் கொசம்பி, ரோமிலா தார்பர், ஆர்.எஸ்.சர்மா, சுவிரா ஜெய்ஸ்வால் போன்றவர்களின் ஆய்வுகளை மேற் கோள் காட்டி இந்த நூலின் ஆசிரியர் நிறுவுகின்றார். இராமனும் , கிருஷ்ணனும் எப்படிக் கடவளாக்கப்பட்டனர், அவர் களின் உண்மையான பாத்திரப்படைப்பு என்ன என்பதனை அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகள் கொண்டு விளக்குகின்றார்.


தமிழ் ஓவியா said...

வட நாட்டை ஆக்கிரமித்த பார்ப் பனர்கள் எப்படி தெற்கு நோக்கி நகர்ந் தார்கள், நிலை கொண்டார்கள் என்ப தனை 'தெற்கு நோக்கிப் படர்ந்த பிரா மணியம் ' என்னும் இயல் விளக்குகிறது. . இஸ்லாமியர்களின் படையெடுப்பும், ஆட்சியும் எவ்வாறு சூத்திரர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட்டது வட இந்தியாவில் என்பதனை மூன்றாவது இயலும், பார்ப்பனர்கள் இந்து மதம் ஒரு சகிப்புத்தன்மை உள்ள மதம் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அன்று முதல் இன்று வரை சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வு, பார்ப்பனர்களின் தலைமை என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படை என்பதனை ' சாதியத்தைக் கைவிடாத நவீன இந்து மதம் ' என்னும் இயலும் விவரிக்கின்றன. சமூக நீதித் தத்துவத்தின் முன்னோடி களான' ஜோதிராவ் புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிங்கார வேலர் போன்றவர்களைப் பற்றிய விரிவான தகவல்களையும், போராட்டத்தையும் தன்னுடைய நோக்கில் மிகச் சிறப் பாகவே இந்த நூலாசிரியர் விவரித்துள்ளார். தமிழ்த்தேசத்தில் பகுத்தறிவுவாதம என்னும் பிரிவில் தமிழருக்கும் பார்ப் பனர்களுக்குமான வேற்றுமை, திருக் குறளுக்கும் கீதைக்கும் உள்ள வேற்றுமை போன்றவற்றை விவரித்துள்ளார். 'திருப் பித் தாக்குதல் ' என்னும் வழிமுறை எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியது என்பதையும், அமெரிக்காவில் கறுப்பர்கள் இருந்த நிலையும் இன்று அவர்கள் அடைந்த மாற்றமும், ஏன் இந்தியாவில் ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்பதனையும் ஒப்பீட்டு அளவில் விளக்குகின்றார். இந்தியாவில் வர்க்கம் என்ற பார்வையால், கம்யூனிஸ் டுகள் அம்பேத்கருக்கும் , பெரியாருக்கும் எதிராக நின்ற கொடுமையை விமர்சிக் கின்றார். சொந்த சாதியிலேயே திருமணம் முடிக்கும் அகமண முறை சட்டப்படி குற்றம் என ஆக்கப்படவேண்டும் என்ப தனை வலியுறுத்துகின்றார் தன் புத்த கத்தில்.

திராவிடர் கழக்த்தைப் பொறுத்த அளவில் தந்தை பெரியார் அவர்கள் சாதியை ஒழிப்பதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என உழைத்தார்கள், தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத் தின் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜாதியை ஒழிப்பதற்கான பல்வேறு நடைமுறைத் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத் திக் கொண்டுள்ளார்கள்.குறிப்பாக 'மன்றல்' என்ற நிகழ்வின் மூலம் சாதி மறுப்பு,விதவை மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை மக்கள் மத்தியில் பெரு நகரங்களில் ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிக் கொண்டுள்ளார்கள். திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களும் மற்ற தோழர் களும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு மக்கள் மனதில் மாபெரும் மாற்றத்திற் கான முன் நிகழ்வாகத் திகழ்கிறது எனப் பல பத்திரிகைகள் பாராட்டுகின்றன.

திராவிடர் கழகம் போர் வீரர்களுக்கு முன்னால் போகும் தூசுப் படையைப் போல எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவார்கள். முன்னாள் செல்லும் தூசுப் படை வீரர்கள் கண்ணி வெடிகளில் சிக்கி உயிரிழக்கக்கூடும் , மற்ற துயரங்களையும் அடையக் கூடும் . ஆனால் பின்னால் வரும் படை வீரர்கள் எதிரிகளை முறியடிக்க, தடைகளின்றி நடந்து செல்ல, வெற்றிக் கனியைச் சுவைக்க வித்திடுபவர்கள் தூசுப் படையைச் சேர்ந்தவர்கள்தான்.

ஜாதியை வைத்து. மதத்தை வைத்து அரசியல் செய்யலாம், ஓட்டு வாங்கலாம், ஆண்டாணடு காலமாக அடக்கப்பட்டு கிடந்தவர்களை மீண்டும் அப்படி ஆக்கி விடலாம் எனக் கனவு கண்டு சிலர் தேர்தல் நேரத்து காய்களை நகர்த்தி கொண்டிருக்கின்றார்கள்.

வரும் தேர்தலை மட்டுமல்ல வரப்போகும் தலை முறை பற்றியும் கவலைப் படும் இயக்கம் திராவிடர் கழகம்.அதன் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அவர் சுட்டும் திசையில் வாக்கு சேகரிப்போம், பரம்பரைப் பகைவர்களின் கருத்துக்களை கருத்துக்களால் சந்தித்து, உண்மைகளைச் சொல்லி வாக்குச் சேகரிப்போம்.

Read more: http://viduthalai.in/page-2/77301.html#ixzz2we4gts9V

தமிழ் ஓவியா said...


Time to Make a Difference? - மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?


Time to Make a Difference?

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?

- குடந்தை கருணா

TIme to Make a Difference?

If there is so called ‘Modi wave’, why then Modi contests from two constituencies?

Modi is contesting from Vadodara of Gujarat. Fine. Only last week, BJP tipped his name for Varanasi and pushed out Murali Manohar Joshi, from that constituency against his wishes.

I have questions to Modi. But, Modi never dares to answer others’ questions so far. Hence my questions are directed to BJP.

1. You had been claiming and boasting all through these days, that there is Modi wave across the globe (not alone in India), why then you had fielded Modi for two constituencies?

2. If incidentally or accidentally, Modi wins from both constituencies, which constituency he will prefer to hold, Varanasi or Vadodara?

3. If people of these two con stituencies direct this question to Modi, what will be his honest reply?

4. Will BJP or Modi can boldly inform in advance about this?

5. Suppose, Modi prefers to hold Vadodara and resign from Varanasi, why then Joshi should be pushed to Kanpur? Joshi could have contested from Varanasi or instead Modi can contest from Kanpur also, because, even if he wins, he is going to resign?

Hope BJP will provide a honest reply. Yes, it is time to make a difference.

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்? மோடி அலை என்பது உண்மையா னால், மோடி எதற்காக இரண்டு தொகு திகளில் போட்டியிட வேண்டும்?

குஜராத் வதோதரா தொகுதியிலி ருந்து மோடி போட்டியிடுவார் என பிஜேபி அறிவித்துள்ளது. நல்லது. போன வாரம், பிஜேபி வெளியிட்ட பட்டியலில் மோடி உத்தர பிரதேசம் வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவித்தது.

அந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூருக்குத் தள்ளிவிட்டு, மோடியை அறிவித்தது. மோடிக்கு ஒரு கேள்வி. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஆகவே பாஜகவிற்கு நமது கேள்வி.

1. மோடி அலை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீசுவதாக இத்தனை நாள்களும் பிதற்றிக்கொண்டிருந்தீர்களே, பின் ஏன் மோடியை இரண்டு தொகுதிக ளில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்?

2. எதேச்சையாகவோ, விபரீத மாகவோ, மோடி இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்? வதோதராவா அல்லது வாரணாசியா?

3. அந்த இரண்டு தொகுதிகளின் மக்களும், மோடியிடம் இந்தக் கேள் வியைக் கேட்டால், மோடியின் நாணய மான பதில் என்னவாக இருக்கும்?

4. இதற்கான பதிலை, மக்களிடம் தைரியமாக பாஜக சொல்லுமா? அல்லது மோடிதான் சொல்வாரா?

5. தனது மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியைத் தக்க வைத் துக் கொள்ள மோடி முடிவெடுத்து, வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டால், பின் எதற்காக, ஜோஷியை ஏன் கான்பூர் தொகுதிக்கு விரட்டி விட்டு, மோடியை நிறுத்த வேண்டும்? பேசாமல், ஜோஷியை, வாரணாசி தொகுதியில் நிறுத்தி, மோடியை கான்பூர் தொகுதி யில் நிறுத்தியிருக்கலாமே? வெற்றி பெற்றால் கூட, பதவி விலகல் செய் வது என்றால் எந்த தொகுதியாக இருந்தால் என்ன?

பாஜகவிடமிருந்து நேர்மையான பதில் வரும் என எதிர்பார்ப்போம். ஆம், மாற்றத்தை உருவாக்குவ தற்கான தருணமல்லவா?

Read more: http://viduthalai.in/page-2/77311.html#ixzz2we52R5sq

தமிழ் ஓவியா said...


பட்டியல் தருகிறேன்; பரப்பிடுக! கலைஞர் கடிதம்


உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று ஒரு பட்டியலை ஊருக்கு ஊர் தொடர்ந்து சொல்லி வருவதைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்க ளுக்காகச் செய்த சாதனைகளில் ஒருசில வற்றைப்பட்டியலிட வேண்டிய கடமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளேன்.

இது சாதனைகளின் சுருக்கமே தவிர, முழுப் பட்டியல் அல்ல.

22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவீதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவீதம்; 2007-2008இல் 5 சதவீதம்; 2008-2009இல் 4 சதவீதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி ரத்து; 2006க்குப் பின் இதுவரை 36 இலட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 838 கோடியே 6 இலட்சம் ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011இல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; ர் மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;

கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006இல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி; ர் நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப் பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு; வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத் தினால் கடன் ரத்து;

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்;

369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்;

கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006இல் 61.17 இலட்சம் டன்; 2008-2009இல் 71.01 இலட்சம் டன்; 2009-2010இல் 84.29 இலட்சம் டன் என உயர்வு. ர் விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத் தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப் பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, குறுசிறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும்; பெரும் விவசாயிகளுக்கு பம்ப்செட்டு களில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின்மோட்டார்களும் 5 ஆண்டு களில் மாற்றி அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது

1 இலட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர் களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 இலட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயி களுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 இலட்சம் பம்ப் செட்டுகளுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 35 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங் களில் 2 கோடியே 13 இலட்சத்து 55 ஆயிரத்து 884 உறுப்பினர்கள் சேர்ப்பு; 21 இலட்சத்து 41 ஆயிரத்து 692 அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1011 கோடியே 62 இலட்சத்து 81 ஆயிரத்து 687 ரூபாய் உதவித் தொகை;

தென்னை விவசாயிகளின் நலன்களை மேம்படுத்திட திரு. ச. ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நல வாரியம் அமைப்பு;

3742 கோடியே 42 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 72 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 இலட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

661 கோடி ரூபாய்ச் செலவில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட் டுள்ளன; 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயி கள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்;

8 இலட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்; காமராஜர் பிறந்த நாளில் கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில், கல்வி விழா;

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவி யருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்;சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;

படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரி கள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 இலட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;

ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து ஒற்றைச் சாளர முறையில் தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர் களுக்குக் கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து செய்யப்பட்டு முதலாண்டில் 67 ஆயிரத்து 405 மாணவ மாணவியரும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை யில் 10 ஆயிரத்து 750 மாணவ மாணவியரும் பயன்; பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வெகுவாகக் குறைக்கப்பட்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்;


தமிழ் ஓவியா said...

2006க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணா மலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்; ர் மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின் படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள். ர் பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமெனச் சட்டம்;

நூறாண்டுக் கனவை நனவாக்கிச் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு. ர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

தஞ்சையில் 2010 செப்டம்பரில் மாமன்னர் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா. ர் அருந்தமிழ்ச் சான்றோர் 113 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 7 கோடியே 61 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை;

நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1.9.2006 முதல் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப் பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற் றுள்ளனர். இவர்களில், தற்போது 5 ஆயிரத்து 41 கலைஞர்கள் நிதியுதவி பெறுகின்றனர்.

தமிழறிஞர்கள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 999 தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப் படியும், 528 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.

எல்லைக் காவலர்கள் 339 பேருக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப்படியும், 166 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 2000 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.

4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப் பட்டுள்ளன;

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங் களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 இலட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதியுதவி;

தமிழ் ஓவியா said...

ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 25 இலட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 இலட்சம் ரூபாய் நிதியுதவி; ர் 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை;

வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத் துவ முகாம்களில் ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங் களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005-2006இல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009-2010இல் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சி;

சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 இலட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007இல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008இல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 15.9.2008இல் தொடங்கப்பட்ட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடை முறை; 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்; ர் அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

ர் இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உடற்பரிசோதனை செய்யும், நலமான தமிழகம் திட்டம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம்.

ர் ஏறத்தாழ 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற் சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற் சாலைகள் திறப்பு;

ர் 4 இலட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது;

ர் ஏறத்தாழ 5 இலட்சத்து 9 ஆயிரத்து 336 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங் களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளன; ர் புதுப்பிக்கத் தவறிய 2 இலட்சத்து 70 ஆயிரம் இளை ஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்துப் பயன்; ர் ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைமாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006 இல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 இலட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ர் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி களுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த் தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;

ர் 1989இல் தருமபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய்.

ர் 2,549 கோடி ரூபாய்ச் செலவில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்;

ர் அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 280 கோடி ரூபாய்ச் செலவில் 561 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்; நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 இலட்சம் ரூபாய்ச் செலவில் அடிப் படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன; ர் மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

ர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு 2006-2007இல் 8 விழுக்காடு; அதாவது 2112 கோடி ரூபாய்; 2007-2008இல் 9 விழுக்காடு; அதாவது 2734 கோடி ரூபாய்; 2008-2009இல் 9 விழுக்காடு; அதாவது 2959 கோடி ரூபாய்; 2009-2010இல் 9.5 விழுக்காடு; அதாவது 3316 கோடி ரூபாய்; 2010-2011இல் 10 விழுக்காடு என மேலும் உயர்த்தி, 4030 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ர் 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலை களில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன;

ர் 4 ஆயிரத்து 945 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு வழித் தடச் சாலைகள் இடைவெளித் தடங் களாகவும்; 2611 கிலோ மீட்டர் ஒரு வழித் தடச் சாலைகள் இருவழித் தடங்களாகவும்; 168 கிலோ மீட்டர் நீள இருவழித் தடச் சாலைகள் பல வழித் தடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ர் மாநில நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்த இயலாத 32 கிலோ மீட்டர் தவிர ஒரு வழித் தடச்சாலைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 11 ஆயிரத்து 219 கிலோமீட்டர் நீளச் சாலைகள் மேம்படுத் தப்பட்டுள்ளன.

ர் தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டுள்ளன; ர் தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ் சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன;

தமிழ் ஓவியா said...


ர் தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை; ர் ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

ர் அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;

தருமபுரி மாவட்டத்தில் அரூர்-புதிய கோட்டம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம்; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்; திருவள்ளூர் மாவட்டம் மாதவரம்; கரூர் மாவட்டம் தரகம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு கடவூர்; கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி; வேலூர் மாவட்டம் ஆம்பூர்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டணம் உயர்த்தப் படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 3000 புதிய பேருந்துகள்; ர் இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 179 கோடி ரூபாய்ச் செலவில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் 15.9.2010இல் திறப்பு; ர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத் திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு; புதிய சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகம் திறந்து சாதனை; ர் 100 கோடி ரூபாய்ச் செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா;

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய்ச் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 24.11.2010இல் திறப்பு;

தமிழ் ஓவியா said...


சென்னை மாநகர் குடிநீர்ப் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 31.7.2010இல் திறப்பு;

மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்; உருவாகி வருகிறது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;

1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

630 கோடி ரூபாய்ச் செலவில், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;

சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பறக்கும் சாலைத் திட்டம்; பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு வேகமாக உருவாகி வருகிறது.

மத சுதந்திரம் பேண - கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;

மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந் துரைகள் நடைமுறை;

2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்; டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக் கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 இலட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை 1.8.2010 முதல் நடைமுறை;

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 இலட்சம் ஆசிரியர்கள் பயன்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப் படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கிட ஆணை;

21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டு களில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டம் இவ்வாண்டில் நடைமுறை. நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 இலட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, 15.8.2010 முதல் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது வரை 77 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு; 60 ஆயிரத்து 486 வீடு களுக்குப் பயனாளிகள் குடிபுகுந்துள்ளனர்.

மேலும் 12 இலட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக மேலும் 3 இலட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டப் படுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2 இலட்சத்து 98 ஆயிரத்து 162 வீடுகள் கட்டு வதற்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. உடன்பிறப்பே, கழக ஆட்சியில் ஐந்தாண்டு களில் நிறை வேற்றப்பட்ட சாதனைகளின் தலைப்புகளை மட்டுமே இங்கே திரட்டித் தந்துள்ளேன். இந்தச் சாதனைகள் அனைத்துமே அறி விப்புகளாக இல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து தரப்பட்டவை என்பதை நீயும் அறிவாய்; அதனை அவர்களும் அறிவார்கள். இந்தத் தேர்தல் நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அ.தி.மு.க. அரசு என்னென்ன சாதனைகளைச் செய்தது என்பதை முதலமைச்சரே ஊருக்கு ஊர் எடுத்துச் சொல்லி வருகின்ற நேரத்தில், இந்தப் பட்டியலையும் நீயும் துண்டு அறிக்கைகளாகத் தயாரித்து வாக்காளர் களிடம் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டிய கடமையையும் செய்வாய் என்ற நம்பிக்கையோடு இந்தப் பட்டியலை இங்கே எழுதியுள்ளேன்.

அன்புள்ள,

மு.க.
(முரசொலி, 21.3.2014)

Read more: http://viduthalai.in/page-3/77342.html#ixzz2we5LO6Zj

தமிழ் ஓவியா said...


நாணயத்தில் மதச் சின்னங்கள்: ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்


புதுடில்லி, மார்ச் 21- மத்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் மதச் சின் னங்களை பொறிக்கப்பட் டிருப்பது குறித்து விளக்க மளிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாண யத்தில் தஞ்சை பெரிய கோவில் படம் பொறிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாண யங்களில் வைஷ்ணவி தேவி சிலை பொறிக்கப்பட் டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி நீதிமன் றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்யப்பட்டது.

அதில், நாணயங்களில் மதச் சின்னங்களை பொறிப்பது மதச் சார்பின்மைக்கு எதி ரானது. எனவே, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படி இந் திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/77308.html#ixzz2we64P7La

தமிழ் ஓவியா said...


உதிர்ந்த மலர்கள்!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

கடவுள் ஒருவர் உண்டு. அவர் உலகத்தையும் அதில் உள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி, அவற்றின் நடவடிக் கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன்னிச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங் களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு, பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்டதாகும். புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி என்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை என்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்குப் பெரும் விரோதிகளாவார்கள்.

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.

நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து, நானும் சுயமரியாதைக்காரன்தான்; என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது;

புராணங்கள் எல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாச மென்றும் பேசி, மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் புராண பிரச்சாரத்தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால், பண்டிதர்களைக் கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6XH5tC

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துளிகள்!

மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்
- மண்டெய்ன்

எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.
- ஹென்றிஜேம்ஸ்

மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம் நாமே தேடிக் கொள்ளும் வறுமை.
- சாக்ரட்டீஸ்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6rXVez

தமிழ் ஓவியா said...


அண்ணாவுரை


அயல்நாட்டான் கண்டு பிடித்தான் அச்சு இயந்திரம்; அதன் உதவியால் நீ பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாய். அவன் கண்டுபிடித்தான் ரயில் வண்டி; அதில் ஏறிக் கொண்டு உனது புரட்டு அற்புதம் நடைபெற்ற ஸ்தலங்களுக்கு செல்கிறாய்!

அவன் கண்டுபிடித்தான் வானொலி; அதிலே உன் பஜனையைப் பாட வைத்து மகிழ்கிறாய்! இவ்வளவு பூஜை செய்யும் நீ எதையாவது புதிய பொருள்களைப் பயனுள்ள வகையில் கண்டுபிடித்தாயா? யோசித்து பார்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7d5FeA

தமிழ் ஓவியா said...

அய்யாவுரை

ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும், வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை.

பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.

பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7lPyrO

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

மனிதன் கல்லால் ஆன தெய்வமும் அல்ல: இயற்கைக்கு அப்பால் ஓர் அடி கூட எடுத்து வைக்காத மிருகமும் அல்ல.

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்துக்கோ, உப தேசத்துக்கு எளிதாகவும், நடைமுறைக்குக் கடினமாகவும் உள்ள உயிரில்லாத தத்துவ ஞானத்துக்கோ, தன் கனவிலே உதித்த கற்பனைகளைப் பிறர் மண்டையிலே ஏற்றி பளுவை உண்டாக்கும் மகாத்துமாவுக்கோ, பண்டி தனுக்கோ, புத்தகத்துக்கோ அல்லது வேறு எவருக்கோ அவன் அடிமை அல்ல.

தகவல்: காட்டூர் தம்பு

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7rsreu

தமிழ் ஓவியா said...

ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட் களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.

போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.

- மாக்ஸிம் கார்க்கி

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we86Q7HR

தமிழ் ஓவியா said...


அமெரிக்க நாத்திகர் சங்கத்தின் பார்வையில்..... அவர்கள் எதை நம்புகிறார்கள்?

மத நிறுவனங்களுக்கு வரிவிலக்குகூடாது: சிலர் சர்ச்சுக்கு (கோவிலுக்கு) செல்வதால் வரிச்சுமையை மற்றவர்களும் சுமக்கக் கூடாது. சர்ச்சுகளுக்கு மானி யம் வழங்குவது என்பது அரசிலமைப்பை மீறும் செயலாகும். அரசும், சர்ச்சும் பிரித்தே பார்க்கப்பட வேண் டும். குழந்தைகள் புறக் கணிப்பு, குழந்தைகள் பாதிப்பு, கருக் கலைப்பு உள்ளிட்டவைகளுக்கும் மதமே பொறுப்பாகும்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைக்கு விரோதமான திட்டமிட்ட செயலை மதம் செய்கிறது. இதனால், குழந்தைகள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் இதனால் ஏற்படுகிறது.

இணைந்து வாழும் முறையை மதம் எதிர்க்கக் கூடாது: திருமணம், திருமண முறிவு ஆகிய உறவுகளின்மீதான சட்டங் கள் தனிநபர் விருப்பங்களைப் பொறுத்தே அமைய வேண்டும். மதமோ, அரசோ தனிப்பட்டவர்கள் உரிமைகளை நிர்ணயிக்க கூடாது. தனி நபர் தனித்த சுதந் திரம் என்பது அதுதான்.

மதம் பெண்ணிய சிந்தனைக்கு எதி ரானது : சம உரிமைக்கு முதன்மையான எதிர்ப்பே மதம், மதவாதிகளிடமிருந்து தான் வருகிறது. பெண்ணாக இருப்பவர் ஆணுக்கு கீழ்ப்படிபவராக இருக்க வேண்டும். சமத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன் மதத்துக்கு கட்டுப்பட வேண்டும். எந்த மத அமைப்பாக இருந் தாலும் பெண் நிலை ஆணுக்குக் கீழே தான் உள்ளது.

மதம் அறிவியலுக்கு எதிரானது: மதக்கருத்துக்கள் அறிவியல் முறையில் சரிபார்க் கக் கூடாது. ஆகவே, அறிவியல் மதத்துக்கு எதிரானது. கிருத் துவம் சொல்வதுபோல் பூமி ஆறாயிரம் ஆண்டுகள் காலத் தியது இல்லை என்று அறிவியல் நிரூபித்துள்ளது. கன்னித்தன்மை மாறாமல் பிறப்பு மற்றும் சாத்தியமில்லை. சர்ச் பரப்பிய வற்றால் ஏற்படும் விளைவுகளுக்கும், மனிதனின் கேள்விகளுக்கு அதிகமான விளக்கங்கள் சொல்லவும், அனை வரையும் அறிவியல் பாதைக்கு மீட்டு வரவேண்டும்.

மதம் வாழ்வுக்கு எதிரானது : எல்லாவற்றையும்விட மிகவும் முக்கிய மானது உங்கள் வாழ்க்கைக்கு எதிரான கருத்துக்களை மதத்தின்மூலம் மோசமாக திணித்துவிட்டது. வாழ்வு முக்கியமானது அன்று என சர்ச் கூறுகிறது. வாழ்வுக்குப் பின் என்பதை முதன்மையாக, மதிப் புக்கு உரியதாக்கிவிடுகிறது. உலகும், நம் வாழ்வும் குறைத்து மதிப்பிடப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. நம் முயற்சிகள் அனைத்தும் முடிவில்லாத ஏதோ ஒன்றைத் தாங்குவதாகவே அமைந்து விடுகிறது.

நாத்திகம் மட்டுமே உண்மை விடுதலையை வழங்கும்: வாழ்வென்று நாம் தெரிந்திருப்பது நம்மிடமுள்ள எல்லாம் கடைசிவரை நம்பிக்கையில் தள்ளப்பட்டுள்ளது. இந்த வாழ்வானது அற்புதமானது, முழுமையாக வாழ வேண்டியது என்று தெரிந்து கொண்டீர் களானால், நீங்கள் எங்களில் ஒருவராவீர். சமூகத்தைப்பற்றிய படப்பிடிப்பில் 22.5மில்லியன் நபர்கள் அமெரிக்க அய்க்கியத்தில் நாத்திகர்களாக உள்ளனர். இறப்பின் அச்சத்தில் வாழ்வை செல விடுபவர்களாக இல்லாதவர்கள் யாரோ அவர்களே உண்மையான விடுதலையை அடைபவர்களாவார்கள். அதுவே, மனதின் விடுதலை.

ஆதாரம்: (http://atheismexposed.tripod.com/atheist_agenda.htm)

Read more: http://viduthalai.in/page3/77358.html#ixzz2wjy8zv13

தமிழ் ஓவியா said...


அரசு விடுதியிலிருந்து பைபிள் அகற்றம்


அரசு பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டிருந்த கிடியான் பைபிளை அகற்ற அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: அயோவா உட்பட 20ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மதத்திலிருந்து விடுதலை என்கிற அமைப்பு மதக்கருத்துகள் மக் களிடம் திணிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
அரசு விடுதியில் பைபிளா?

அயோவா அரசு பல்கலைக்கழகம் நடத்திவரும் மெமோரியல் யூனியன் கெஸ்ட் விடுதியில் உள்ள அறைகளில் பைபிள் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது குறித்து அந்த அமைப்பின் சார்பில் பாட் ரிக் சி.எலியோட் விடுதி இயக்குநருக்கு மெயில்மூலம்எச்சரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. புகாரில் அரசியலமைப்புக்கு (முதல் ஷரத்தில் கூறப்பட்டுள்ள அரசும், மதமும் பிரிந்து இருக்க வேண்டும்) விரோதமாக அரசு விடுதியில் பைபிள் புத்தகத்தை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

அவ்விடுதியில் வாடிக்கையாளர்களாக 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கை அற்றவர்களாகவும், 27 விழுக்காட்டினர் கிறித்துவம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாகவும், கிடியான் பைபிள் புத்தகத்தை அறையில் வைப்பதன்மூலம் அவர்களிடம் (கிறித்து வத்தை) மதத்தைத் திணிப்பதாகும். இதேபோல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் லோயல் கெஸ்ட் விடுதியிலி ருந்தும் இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆகவே, எழுத்து மூலம் அரசமைப்புக்கு விரோதமாக உள்ள இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை எதிர்பார்க்கிறோம் என்று மெயிலில் தெரிவித்திருந்தார்.

அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அனி லவுரி கெய்லர் அம்மையார் ஊடகங் களில் இப்பிரச்சினை குறித்த வினாக் களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விடுதி இயக்குநர் ரிச்சர்ட் எஸ். ரெனால்ட்ஸ் அவ் விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலி ருந்தும் பைபிள் புத்தகங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77363.html#ixzz2wjzSfYgh

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க


இலங்கையை இந்தியாவோடு இணைக் கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண் டும். சு.சாமி (1-5-2000)

தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி ( 3-5-2000)

சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே கிருஷ்ணமூர்த்தி (பாஜக, துணைத் தலைவர்) தில்லியில் (6-5-2000)

திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சி களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிரமோத் மகாஜன் ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)

அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் (22-5-2000)

இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப் படும் ராமதாஸ் (2-6-2000)

நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச் சினையை தீர்க்க உதவி புரியும். திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், (2-6-2000)

இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். சு.சாமி (2-6-2000)

செக்கோஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் (4-6-2000)

இந்திய அரசு தன்னுடைய நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. (5-6-2000) பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரி யாது. அப்படியே, கோரிக்கை வைக்கப் பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. - வெங்கையா நாயுடு (11-5-2000)

புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டி ருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)

அவர்கள் தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப் பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)

நான் இந்துத்வ சக்திகளை எதிர்க் கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல் வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங் கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச் சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004) 8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌ காத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...

"புலிகளைத் தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மய்ய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."
யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகை யிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச் சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது

இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்

ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...

காவிகளுக்குக் காவி சாமரம் வீசிக் கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழம் பற்றி பேசுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்.

- மகிழ்நன் பா.ம

Read more: http://viduthalai.in/page4/77365.html#ixzz2wjzmFr6X

தமிழ் ஓவியா said...


ஏழுமலையான் கருணை

பக்தி ஸ்தலம் திருமலையில் தொடர்ந்து 6ஆம் நாளாக காட்டுத் தீயாம். செம் மரங்கள், சந்தன மரங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து விட்டனவாம். தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடுகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானத் தால் அரக்கோணம் அய்.என்.எஸ். இராஜாளி கடற்படை மற்றும் விசாகப் பட்டினம் கடற்படை வீரர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றனர். பக்தர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால் நமக்கு ஒன்று புரியவில்லை. திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதி என்ன ஆனார்? தம் பக்தர்களுக்கு சோத னையாக உள்ள அந்த நெருப்பை அணைப் பதற்கு அவர் ஏன் முயற்சி செய்யாம லிருக்கிறார்? இந்த மாதிரி நாம் கேள்வி கேட்டால் இப்படி சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். அதாவது பகவான் ஏதோ குறையைக் கண்டுபிடித்திருக்கிறார், அதனால்தான் தன் உக்கிரத்தைக் காட்ட அக்னியை ஏவி விட்டிருக்கிறார் என்று.

அப்படியானால் கடவுளின் உக்கிரம் தணியும் வரை எரியவிட வேண்டியது தானே. அதை கஷ்டப்பட்டு அணைக்கப் போய் லார்ட் வெங்கியின் கோபத்திற்கு ஆளாவானேன்? சிறிது நாட்களுக்கு முன் னால் சிறுத்தை புலியை நடமாடவிட்டு பக்தர்களை பயம் காட்டி வைத்தார். இப்பொழுது தீயை மலைப் பகுதி முழு வதும் கொழுந்து விட்டு எரியச் செய் கிறார். ஒரு வேளை பக்தர்கள் தன்னைத் தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்க வில்லையோ என்னவோ?

செம்மரங்களும், சந்தன மரங்களும் விலை மதிப்பில்லாதவை. அவை அழிந்து கொண்டிருக்கின்றன. காட்டில் உள்ள உயிரினங்கள் எல்லாம் பற்றி எரிகின்ற நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை. ஆனால் நாம் குடும்பத்தோடு காசு பணத்தை கடன் வாங்கி சென்று மொட்டையடித்து ஏழுமலையான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஏழுமலையானே! உன்னை தாங்கும் மலைகள் எரிந்து கொண்டிருக் கிறது அப்பனே! பக்தர்களை மொட்டை யடிப்பது பத்தாதென்று மலைகளையும் மொட்டையாக்குகிறாயே!

ஏழுமலையானே! உன் கருணையே கருணை!

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page4/77367.html#ixzz2wk0INMKz

தமிழ் ஓவியா said...


கடவுளை வணங்குபவர்கள் யார்? காட்டுமிராண்டிகள்! - தந்தை பெரியார்


கமுதி- ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா வில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத் தாண்டி வேட மணிந்து, புதன் கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர் (படம்).

அதிகாலையில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள சகதியை அள்ளி எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். பின்னர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்று வலம் வருகின்றனர். சுமார் 2 மணி நேரம் சகதி பூசிய நிலையில் வலம் வந்து இந்த விசித்திர சேத்தாண்டி வேடம் என்ற நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அம்மை உள்ளிட்ட தோல் நோய்கள் விரைவில் குணமடைய வேண்டி பக்தர்கள் இந்த விசித்திர சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

உடம்பில் சகதி பூசி சுமார் 2 மணி நேரம் வலம் வரும்போது, உடலில் உள்ள கெட்ட நீர் உறிஞ்சப்பட்டு, உடல் நலம் பெறுவதோடு, குளிர்ச்சியும் பெறுகிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப் படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77368.html#ixzz2wk0Qkvi2

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்புதான் - ஒப்புதல் வாக்குமூலம்


- ஊசி மிளகாய்

ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வெளி யிடும் தேர்தல் கணிப்புகள்பற்றி நாம் நீண்ட கால மாகவே, கூறி வருவது அவை உண்மையான மக்களின் கருத்துக் கணிப்புகள் அல்ல; மாறாக, கருத்துத் திணிப்புகள் தான் என்பதாகும்!

இது ஒரு நல்ல மோசடி வியாபாரமாக மாறி விட்டது! சார்பு நிலை எடுத்து வெளியிடும் ஏடுகள், தொலைக்காட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டித் தருகின்றன என்பதை கல்கி வார ஏட்டின் (23 மார்ச் 2014) 33-ஆம் பக்கத்தில் - கருத்துத் திணிப்புக்கள் என்ற தலைப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவலைக் கீழே தருகிறோம்:

கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவையா என்று ஏற்கெனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் அம்பலமாகி விட்டன. பணத்துக்காக முடிவுகளை மாற்றிக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் சொல்லுவோம் என்று பதினோரு நிறுவனங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன.

இதில், இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்தும் சி - ஓட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த சி - ஓட்டர் நிறுவனம் மூன்றிலிருந்து அய்ந்து சதவிகிதம் வரை புள்ளி விவர முடிவை மாற்றிச் சொல்லி, குறிப்பிட்ட கட்சிக்குக் கூடுதல் இடம் கிடைக்கும் என்று காட்டத் தயார் என்று ஒப்புக் கொண்டதாம். இது கருத்துக் கணிப்பா? திணிப்பா?

இதே போல் தான் 2ஜி அலைக்கற்றைப் பிரச் சினையை (திட்டமிட்டே) திமுகவுக்கு எதிராக கிளப்பின சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்; ராசா, ஏகபோக கொள்ளை லாபக் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்காமல், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைத் தொடர்பு வசதியைச் செய்ய முன் வந்த கம்பெனிகளுக்கெல்லாம் பிரித்துத் தந்து, பெரிய திமிங்கலங்களைப் பாதிப்பு அடையச் செய்தார்,

அதனால் தொலைக்காட்சியில் பயங்கர ஊழல் பலூனை ஏராளமாகக் காற்றடைத்துப் பறக்க விட்டு, இன்றளவும் தேர்தல் முதலீடாக பல கட்சிகள் கொண்டுள்ளன!

காரிருள் சூரியனை மறைத்ததுபோல் உண்மை களை மறைக்க இந்த பிரச்சார உத்தியை சுயலாபங் களுக்காகப் பயன்படுத்துகின்றன - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/77380.html#ixzz2wk168mNo

தமிழ் ஓவியா said...


பிடி - வாதம்!

பிடி - வாதம்!

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம..க.வும் இருக்கிறது - புதுச்சேரி என்.ஆர். காங் கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டது. ஆனால் பா.ம.க.வும், புதுச்சேரியில் போட்டிப் போடுகிறது. கேட்டால் பிஜேபி தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குத் தான் - புதுவைக்குச் செல் லாது என்று கறாராக - பிடிவாதமாகக் கூறி விட் டார் மருத்துவர் ராமதாசு.

தாடிக்கொரு சீயக்காய் - தலைக்கொரு சீயக்காயோ!

பிடிவாதம் என்கிறது தினமணி. பிடி எனக்கு வாதம் உனக்கு என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கே பெப்பே! கொடுத்து விட் டதே! பா.ம.க.வாழ்க அண்ணா நாமம்!

லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆனால், வேலூர் மாநகர, மாவட்ட மாணவர் கள் 2000 பேர் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட சபதம்! வாழ்க அண்ணா நாமம்!

ஓ, திருப்பதி ஏழுமலை யானே நாமக் கடவுள்தானே!


தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்

அதிமுக ஆட்சியில் அவதிப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை தஞ்சை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் வருமாறு:

1) பூமிநாதன் - மயிலாடுதுறை
2) ராஜாங்கம் - கீவளூர்
3) செல்வராஜ் - கீழையூர்
4) சக்ரவர்த்தி - பூலமேடு
5) அப்துல் ரகீம் - திருத்துறைப்பூண்டி
6) சிறீதர் - அபிவிருத்தீஸ்வரம்
7) கோபாலகிருஷ்ணன் - கொற்கை
8) முருகையன் - மாப்படுகை
9) செல்வராஜ் - மஹிலி
10) சாமியப்பன் - நாகூர்
11) சக்திவேல் - கடம்பங்குடி
12) இடும்பையன் - பிராந்தியன் கரை
13) சீனிவாசன் - குரும்பல்.
வாகன சோதனை

தமிழகத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத் தும் வகையில், ரயில் மற் றும் இரு சக்கர வாகனங் களிலும் பறக்கும் படை யினர், துணை ராணுவப் படை உதவியுடன் சோதனை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திக் கூறினார்.


அந்தமானில் நிலநடுக்கம்

புதுடில்லி, மார்ச் 22- அந்தமான் மற்றும் நிக் கோபர் தீவுகளில், நேற்று மாலை, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவானது. "இந்த நில நடுக்கத்தால், "சுனாமி' ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், கடலோர பகுதி களில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77381.html#ixzz2wk1GJWpz

தமிழ் ஓவியா said...


சந்தர்ப்பவாத கூட்டணியா? கொள்கைக் கூட்டணியா?


- குடந்தை கருணா

தமிழ் நாட்டில், பாஜக அணியில், மதிமுக, பாமக, தேதிமுக, கொமுக தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ராஜ் நாத் சிங் அறிவித் துள்ளார். தமிழ் நாட்டில், இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் சேர்ந்துள்ள தேதி முக, பாமக இரண்டும், கூட்டணியில் சேர்வதற்கு முதல் நிமிடம் வரை, ஒருவரை ஒருவர் சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரே அணியில் சேர்த்திடும் ஒரே புள்ளி; ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஆசை யைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

இவையெல்லாம் மக்கள் கருத வாய்ப்பில்லை என இரு கட்சியும் நினைக்கின்றன.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அதுவும் பாஜக அணி; அதன் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் பட்டுள்ளார். பாஜக அணியில் உள்ள பாமகவும் புதுச்சேரியில் வேட் பாளரை நிறுத்த என்ன கொள்கை இதில் இருக்கிறது என்றெல்லாம் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையா?

பாஜக தனது தேர்தல் அறிக்கைக் காக மக்களின் கருத்துக்களை கேட்பதாகக்கூறி, ஒரு இணைய தளத் தையும் உருவாக்கியது. அக்டோபர் 2013-இல் பாஜக வெளியிட்ட செய்தி யில், மக்கள் கருத்துக்களையும் பரி சீலித்து, தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்திடுவோம் என அறிவித்தது. அத்துடன் இன்னொரு செய்தியும் பாஜக கூறியது. அதாவது தங்களின் அடிப்படைக் கொள்கையான, ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டுவது, காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு தகுதி தரும் 370 பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் தகுதி போன்ற கொள்கைகள், எந்த சூழ் நிலையிலும் பாஜக கைவிடாது என பாஜக அறிவித்துள்ளது. (தி இந்து 19.10.2013).

இப்போது தமிழ் நாட்டில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சி களுக்கு ஏதேனும் பொதுத் திட்டம் உண்டா?

பாஜக கூறிய அவர்களின் அடிப்படைக் கொள்கையான ராமர் கோவில், 370 பிரிவு ரத்து, பொது சிவில் சட்டம் இதை ஏற்றுக் கொள் கிறார்களா?

நாணயமான பதிலை, விஜய காந்த், ராமதாஸ், வைகோ இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/77385.html#ixzz2wk1f0jcA

தமிழ் ஓவியா said...


மற்ற மக்கள்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


இந்துமத தத்துவம்

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர் களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண் டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்து சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம். இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3EsPv5

தமிழ் ஓவியா said...


திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட் படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3Tqfus

தமிழ் ஓவியா said...

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற் கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங்களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கின தைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மன வருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவை களுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரி களின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டிருப்ப தாகவும் தெரியவருகின்றது. ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரை களும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்க மிருக்கிறதா? தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில் வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர் களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக் காவது தொழிலாளர் களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரி யாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3auQIo

தமிழ் ஓவியா said...


தேர்தல் வினோதங்கள்


சுயேச்சையாகப் போட்டியிடும் மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் தன் கணவர் கதிர் ரானாவை எதிர்த்து அவரின் மனைவி ஷாகிதா பேகம் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறார்.

விசாரணை நாடகம்!

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச் சர் சம்பத் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாற் றின்மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஓர் அமைச்சரை ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் உண்மையின் அடிப்படை யில் அந்த அறிக்கைதான் இருக்குமா?
இது ஒரு விசாரணை நாடகமே!

துடைப்பம்

மும்பையில் சாலையைத் துடைப்பத் தால் சுத்தப்படுத்தினார்கள். துடைப்பத் தைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மீராசன்யால்.

ஆளுநராகத் தயாராவீர்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமரானால், இங்குள்ள அனைவரும் ஆளுநராக பல்வேறு மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார் கள்.

- பாலகங்கா, முன்னாள் எம்.பி., அ.இ.அ.தி.மு.க.
(தினமணி, 21.3.2014, பக்கம் 7)

வெற்றிக்காக ஜோசியம் கேட்கும் வேட்பாளர்கள்

பெர்ஹாம்பூர், மார்ச் 22-வெற்றிக்காக ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்கும் வேட்பாளர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிகமாகிவிட்டனர். இதில் கட்சி வேறு பாடு இல்லாமல் வரிசையில் நிற்பதால், ஜோசியர்கள் அனைவரும் ஆலோசனை கூறுவதில் மிகவும் பிசியாக உள்ளனர்.

பெர்ஹாம்பூர் தொகுதி, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சியாப்ட்நாயக் கூறும் போது, எனக்கு எப்போதும் வெள்ளிக் கிழமைதான் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்று ஜோசியர் கூறியுள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள் ளேன். கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

எல்லாம் ஜோசியர்களின் ஆலோசனைப் படியே செய்து வருகிறேன். இப்போதும், அவர்களது ஆலோசனைப்படி வெள்ளிக் கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, கஞ்சம் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் பாக்பன் கந்தாயத் கூறும்போது, ஜோசியரின் ஆலோசனைப்படி, அவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கோபால்பூர் தொகுதி யின் வேட்பாளராக கந்தாயத்தை காங் கிரஸ் அறிவித்துள்ளது. கோபால்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிப்ஹுதி ஜெனாவும், தேர்தல் தொடர் பாக ஜோசியர்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார். அவர்கள் கூறியபடி, தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளரான அலி கிசோர் பட்நாயக் மட்டும் முற்றிலும் மாறாக உள்ளார். அவர் கூறும்போது, நான் எப்போதும் ஜோசி யத்தை நம்புவது இல்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு நல்ல நாள்தான். நான் எனது வேட்பு மனுவை பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியோ தேர்தல் நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் ஜோசியர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/page-5/77413.html#ixzz2wk43vIyN

தமிழ் ஓவியா said...


கல்கியின் சாதுர்யம்!


கேள்வி: கூட்டணியிலிருந்து பிரிந்து விட்ட கம்யூனிஸ்டுகள்பற்றி ஜெ. ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே?

பதில்: அ.தி.மு.க. தலைமை இது குறித்து பேசாதிருப்பதே இத்தனை ஆண்டுகள் கொண்டிருந்த நட்புக்கு அழகு. காரணம், சொல்லப் புகுந்தால், வீண் வருத்தங்களே அதிகரிக்கும். கூட்டணி முறிவுபற்றி கம்யூ னிஸ்டுகளும் அதிகம் வார்த்தைகள் உதிர்க் காமல், கண்ணியம் காப்பது மெச்சத் தகுந்தது.
(கல்கி, 23.3.2014, பக்கம் 38)

கல்கியின் இந்தப் பதிலில் ஜெவைக் காப்பாற்றும் இனவாதம் இருக்கிறதே தவிர, நாணயமான அரசியல் இல்லை.

அகில இந்திய இடதுசாரித் தலைவர்கள் சென்னை வந்து ஜெ அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தும், முதல்வரைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டது எத்தகைய அரசியல் மற்றும் மனிதப் பண்பு? கல்கிக்கே வெளிச்சம்!

அந்த மூத்த தலைவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏற்றிருக்கும் தியாகத் தழும்புகள் - அனுபவங்களுக்குமுன் செல்வி ஜெயலலிதா எம்மாத்திரம்!

இரண்டாவதாக இடதுசாரிகளின் மூத்த தலைவர்களான ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, பிரகாஷ் காரத் ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெ அவர்களைச் சந்தித்து, கூட்டணி பற்றி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக செல்வி ஜெயலலிதா கையொப்பமிட்டு அறிவித் தாரே - அதன்படி நாணயமாக நடந்துகொண்டாரா? இவ்வளவும் நடந்த பிறகு, சி.பி.எம். அலுவல கத்துக்கு அ.இ. அ.தி.மு.க.வின் தூதராகச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நண்பர்களாகப் பிரிவோம் என்று சொன்னதும், சி.பி.அய்.க்கோ தொலைப் பேசி மூலமாக இதே கருத்தைச் சொன்னதும் தான் கல்கி கூறும் ஜெயலலிதா கடைப்பிடித்த அழகா?

கூட்டணி ஏன் வைத்தோம் - ஏன் பிரிந் தோம்? என்று வெளிப்படையாகக் கூறுவது தானே அறிவு நாணயமான அரசியல்? இது என்ன இரு நபர்களுக்கிடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளா?

ஜெயின் பக்கத்தில் எது தவறோ அதையே அழகாகக் காட்ட முயற்சிக்கும் கல்கியின் ரத்த பாசம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு மேலும் விளக்கம் தேவைப்படாது.
இடதுசாரிகளைப்பற்றி ஜெ அம்மையார் பேசாத பேச்சா? தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறும் அளவுக்குச் சென் றவர்தானே ஜெயலலிதா! இப்பொழுதென்ன அழகு வந்து குதித்துவிட்டது?

கண்ணியம் காத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கல்கி புகழாரம் சூட்டுகிறது. சூடாக அவர்கள் கிளப்பாமல் விட்டார்களே அதுவரை ஜெக்கு இலாபம் என்கிற ஆசையோடு கல்கியால் சொல்லப்பட்டது இது.

அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண் டியன் அரசியல் ரீதியாகவே ஜெமீது பாணத்தை ஏவியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குமுன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா, முன் னெடுத்த நிலைக்கு மாறாக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப் பாட்டிலிருந்து தடம் புரண்டிருக்கிறார். எந்தக் கூட்டத்திலும் பா.ஜ.க.வைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று தோழர் தா.பா. கூறியள்ளார்.

இதே கருத்தை வேறு சொற்களில் உச்சரித் துள்ளார் சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன்.

நமக்கு ஆச்சரியம் என்னவென்றால், இந்த இடதுசாரிகள் ஜெவைப்பற்றி இப்பொழுதுதான் புதிதாகப் புரிந்துகொண்டுள்ளார்களா?

எப்பொழுது ஜெ மதச்சார்பற்றவராக இருந் திருக்கிறார்? 1000 அ.தி.மு.க.வினர் அயோத்தி யில் முகாம் என்று, பெட்டிச் செய்தி போட்டதே தீக்கதிர் (7.12.1992) மறந்து போய்விட்டதா?

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத் தினால் இந்துக்களின் மனம் புண்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்து இருப்பதையும் இடது சாரிகள் அறியமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-5/77411.html#ixzz2wk4FOfql

தமிழ் ஓவியா said...


நடக்கப் போவது அழகுப் போட்டியா!


அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்?

செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம்.

அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை.

எண்ணார்!

புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ!

Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சார பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை மனித உரிமை ஆணையம் உத்தரவு


புதுடில்லி, மார்ச் 23- மக் களவைத் தேர்தல் பிரச்சார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், வாக்குசேக ரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட் சியினரும், வேட்பாளர் களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநி யோகம், முழக்கமிடுவது போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின் றனர்.

சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட் சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர் தல் பிரச்சாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரச்சாரங்களில் பயன்படுத் திக் கொள்வது சர்வசாதா ரணமாக நடக்கிறது.

படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய் தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர் களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத் திடம் புகார் ஒன்றை அளித் தார். இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண் டும். இது தொடர்பாக என் னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவ னேஸ்வரில் அளித்த பேட்டியில், சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரச் சார பணிகளில் ஈடுபடுத்து கின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப் பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரி யது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/77472.html#ixzz2wpd4wLXe

தமிழ் ஓவியா said...


கூடா நட்பு கேடா முடியும்!


பி.ஜே.பி. அணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வும் - பா.ம.க வும் எப்படி இடம் பெறமுடியும் என்ற கேள்வி எல்லாத் தரப்பிலும் கேட்கப்பட்டது; அப்படியே இடம் பெற்றாலும் அவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும் என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கு வெகு நாட்கள் கூடத்தேவைப் படவில்லை. இடைப்பட்ட இரண்டே நாளில் உடைசல் ஏற்பட்டு விட்டது. பா.ம.க வின் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்ட சேலம், கல்லக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களும், தொண்டர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அத் தொகுதிகள் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன.

கொந்தளித்து விட்டனர் பா.ம.க தோழர்கள்.

அதன் விளைவு எந்த உச்சத்தில் உஷ்ண மூச்சு வெளியேறுகிறது தெரியுமா?

மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களின் குமுறலைத் தாங்க முடியாமல், கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தைலாபுரம் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார்.

புதுச்சேரியிலும் பிரச்சினை! என்.ஆர். காங்கிரசிற்கு அத்தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் (பி.ஜே.பி) ஒதுக்கப்பட்டா யிற்று. பா.ம.க வும் அங்கு வேட்பாளரை அறிவித்து விட்டது.

கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் - புதுச்சேரி வேறு மாநிலம் - அது இங்கு செல்லாது என்று மீசை முறுக்கி எழுந்து விட்டனர் பாட்டாளிகள்.

எந்த விலை கொடுத்தேனும், கட்சிக்கு சேதாரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கூட் டணி பலத்துடன் தருமபுரியில் போட்டியிட்டு, தான் மட்டுமாவது பெற்றிபெற்று மத்தியில் அமைச்சராகியே தீருவேன் என்பதில் எரி மலையாகத் தகித்து நிற்கிறார் - டாக்டர் அய்யா வின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

விஜயகாந்த் - டாக்டர் அன்புமணி ராமதாசு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி நிற்கும் படத்தைப் பார்த்து புழுங்குகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒட்டுமா(ங்)கனி? என்று இரு பொருளில் தலைப்பைக் கொடுத்து தினமணி மூக்கைச் சொரிந்துவிடுகிற நிலைமை!

தேமுதிக தலைவர் - விஜயகாந்த் பற்றி பா.ம.க வினர் செய்த விமர்சனம் விண்ணையும் தாண்டி வெடி மருந்து வீச்சாக அல்லவா நெடி ஏறியது!

டாக்டர் ராமதாஸ் ஆனந்தவிகடனுக்கு (1.8.2012) அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?

சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சினு ஒரு கட்சி. ஆனா அந்தக்கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான பொறுப்பும் கிடையாது, அந்த தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கை யுமே இல்லாத கட்சி அது.

இருபத்தி நாலு மணிநேரமும் ஏதோ ஒரு மெதப்பிலயே இருக்கிற ஒருத்தர் ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா அப்புறம் அது விளங்குமா? என்று தேமுதிக தலைவரின் தனிப்பட்ட பழக்கத் தைக்கூட சுட்டிக்காட்டி சூடான வார்த்தை களைப் பரிமாறினார் மருத்துவர்.

இந்த நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருந்தால் எப்படி விளங்கும்? ஒருவர் காலை இன்னொருவர் வாருவார் என்பது தான் நடக்கப் போகிறது.

இது என்ன... இன்னும் இருக்குது - வேடிக் கையெல்லாம் - பார்க்கத்தானே போகிறோம்!

Read more: http://viduthalai.in/page-8/77453.html#ixzz2wpeUAmLp

தமிழ் ஓவியா said...


ஊழலை ஒழிக்கும் இலட்சணத்தைப் பாரீர்!

பல ஊழல் புகார்களில் சிக்கிய பாபாராம்தேவுடன் மோடி

புதுடில்லி, மார்ச் 24- ஊழலை ஒழிக்கப் புறப் பட்டுள்ளார் மோடி என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம்; மோடி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்டியே தீருவார் என்று பல கட்சி கள் (தமிழ்நாடு உட்பட) அவ ரோடு கூட்டும் சேர்ந்துள் ளன. உண்மை நிலை என்ன? யோகா குரு பாபாராம்தேவ் என்ற சாமியாரிடம் டில்லி யிலே பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளர் நரேந் திர மோடி கொஞ்சிக் குலவு கிறார். யார் இந்த ராமதேவ் இதோ ஒரு நீண்ட பட்டியல்.

நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்று ராம் தேவ் பாபா மும்பையில் பத்திரிக்கை யாளர் சந்திப்பில் கூறினார்.

நரேந்திர மோடியை ஆதரிக்கும் பாபாவின் யோக்கியதை கடந்த வருடம் வந்த செய்திகள் மாத்திரம் ராம் தேவ் பாபாவின் மீது வருமான வரிஏய்ப்பு, அயல் நாடுகளில் உள்ள சொத் துக்கள் குறித்த விவரங்களை மறைத் தல், தக்க அனுமதி யின்றி பலரை வெளிநாடு கூட்டி சென்றது போன்ற வழக்குகள் உள்ளன. இவர்மீது உத்தரா கண்ட் மாநிலத்தில் பல இடங்களை ஆக்ரமித்த குற்றச்சாட்டு உள்ளது, இவரது பதஞ்சலி மருத்துவ நிறுவனத்தின் மீது மஹ ராஷ்டிரா, ஹரியானா மற் றும் உத்தராகண்ட் மாநி லத்தில் நிலங்களை அப கரித்த குற்றச்சாட்டும் உள்ளது. ஹரித்துவாரில் 2 ஏக்கர் நிலத்தை வன்முறை யாக அபகரித்து திவ்ய யோகா மந்திர் என்ற பெய ரில் போலிப்பத்திரம் தயார் செய்தது (நவம்பர் 29, 2013 பி.டி.அய்) ராம் தேவ்பாபா வின் பதஞ்சலி யோகா ஆயூர்வேதக் கல்லூரியில் தங்கி இருந்த 18 வயது மாணவி மர்மமான முறை யில் காணாமல் போனார் இது குறித்த வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நவம் பர் 23 2013) பி.டி.அய். பாபா ராம் தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு சுமார் 20 முதல் 25 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை ஆணையர் ஆர் ஆர் சிங் தெரிவித்தார் (அக்டோ பர் 4. 2013) பி.டி.அய். யோகா பயிற்சி என்ற பெயரில் நாடெங்கும் நடத் தப்பட்ட முகாம் மூலம் ரூ 5 கோடிவரை வருமானம் பெற்று அதை அரசிடம் இருந்து மறைத்து வரி ஏய்ப்பு செய்தது. ராம் தேவ்பாபாவின் சகோதரன் ராம்பரத் தேவ் மீது ஆட்கடத்தல் வழக்கு அக்டோபர் 22. 2013 (டெக் கான் குரானிகள் செய்தி)

மேலும் சில சாதனைகள்!

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற வழக்கில் பாபாராம்தே வின் செயலாளர் பால கிருஷ்ணன் மீது சி.பி.அய் வழக்கு, இவர் மீது வெளி நாடுகளுக்கு ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக் கும் உள்ளது. 2009-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் சுமார் 200 கோடி மதிப் புள்ள (2மில்லியன் பிரிட் டன் பவுண்ட்) உள்ள ஒரு தீவை 2009 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார் (Glasgow, யூகே டைம்ஸ் September 28, 2009.) இந்த தகவல் பத்திரிக் கையில் வெளியான உடன் 2011 ஆம் ஆண்டு இங்கி லாந்தைச் சேர்ந்த ஒரு பக்தை தனக்கு தானமாக வழங்கியதாகவும் அதை உலக நலனுக்காக மாத் திரம் பயன்படுத்துவதாக வும் தனக்கு சொந்தமான எந்த ஒரு காரியத்தையும் அந்தத் தீவில் செய்ய வில்லை என்று புளுகுமூட் டையை அவிழ்த்துவிட்டார். (June 1, 2011 ஹிந் துஸ்தான் டைம்ஸ், மும்பை பதிப்பு)

இவ்வளவு பராக்கிர மங்கள் செய்த சாமியா ருக்கு ஆபத்பாந்தவனாக மோடி இல்லாமல் வேறு யார் இருக்கமுடியும் ஆகை யால் தான் இவருக்கு மோடி பிரதமராக வேண் டும் என்ற ஆவல் இருக் கிறது, இந்து முன்னணி செய்தி நிறுவனங்கள் பல இவரின் ஸ்பான்சரில் தான் இயங்குகிறது, ஆகையால் மோடி மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசி னால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சேனல் களிலும் நேரடி ஒளிபரப்பு மாத்திரமின்றி அன்றும் முழுவதும் அது பற்றிய செய்திகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/77487.html#ixzz2wvpXZu00

தமிழ் ஓவியா said...


பரிதாபத்திற்குரிய வைகோ


பரிதாபத்திற்குரிய வைகோ

பி.ஜே.பியுடன் ஏன் கூட்டு என்றால் ஈழம் பெறு வதற்காக என்றார் வைகோ- பி.ஜே.பி.யின் முக்கிய தலை வரான வெங்கையா நாயு டுவோ - தனியீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக்கு வந்தே கூறி விட்டார்.

மதிமுக தேர்தல் அறிக் கையில் இந்திய அய்க்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக பி.ஜே.பி. தலை வர் பொன். ராதாகிருஷ் ணன் அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அப்படி மாற்றம் விரும்பி னால் பாரதம் என்றுதான் மாற்ற வேண்டும் என்று கூறி விட்டாரே! இதற்குப் பெயர் தான் வேற்றுமையுள் ஒற் றுமையோ!

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpmyHT1

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp

தமிழ் ஓவியா said...

மோடியின் ஆட்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு

குஜராத்தில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. 2011ஆம் ஆண்டில் 6382 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டில் தற்கொலைகள் 7110 ஆக அதாவது 11.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் பதிவுகள் வாரியம் இந்தியாவில் விபத்து மரணங் களும், தற்கொலைகளும் - 2012 என்ற தலைப்பிடப் பட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அகமதாபாத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அது சுட்டிக்காட்டுகிறது. குஜராத்தின் வளர்ச்சி விகிதமும் இதுதான் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில் 470 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது கவலை தரும் விஷயமாகும். ராஜ்கோட் நகரம் தற் கொலைகளின் தலைநகரமாக திகழ்கிறது. இந்தியா வில் தற்கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அங்கு நடந்த மரணங்களில் 30.5 விழுக்காடு தற்கொலை மரணங்களாகும்.குஜராத்தில் தற் கொலை செய்து கொண்டவர்களில் நாற்பது விழுக் காட்டினர் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். இங்கும் அகமதாபாத் முன்னுக்கு நிற்கிறது. அங்கு 44 விழுக்காடு தற்கொலை மரணங்கள் இளை ஞர்கள் மத்தியில் நடந்தவை.

Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvq62poi

தமிழ் ஓவியா said...

குஜராத் - மோடி ஆட்சியில்

விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு!

தானே.மார்ச்.24- குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத் துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை யும் காவல்துறை தேடி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvqEA8PS

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம் - ஜெயலலிதாவின் முரண்பாடு


கலைஞர் அம்பலப்படுத்துகிறார்

சென்னை, மார்ச் 24- திமுகவிற்கு ஒரு கொள் கையும் கிடையாது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் பேசிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு சேது சமுத்திரத் திட்டம் என்பதில் அவர் எப்படியெல்லாம் முரண் பட்டு நிற்கிறார் என்பதை விளக்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகி றேன். 2001 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில், சேது சமுத் திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடை யும். வாணிபமும் தொழி லும் பெருகும். அந்நிய முத லீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமா கும். ஏற்றுமதி, இறக்குமதி அதி கரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக் களின் வாழ்க்கைத்தரம் மேம் படும்.

வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அள வில் விரிவடையும். சுற் றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத் தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக் காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத் திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதி யைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொன் னார்கள்.

அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப் பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை யில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக் கும் சேது சமுத்திரத் திட் டத்தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற் குப் போதிய நிதியினை உட னடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலி யுறுத்தும் என்று சொன் னார்கள். தற்போது வெளி யிட்டுள்ள அ.தி.மு.க. அறிக் கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறி விப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப் பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக் குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா!

அன்று செழிக்க வைக்கும் திட்ட மாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா?

Read more: http://viduthalai.in/e-paper/77488.html#ixzz2wvqMlYqD

தமிழ் ஓவியா said...


உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள்


சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார்.

கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது.

அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc

தமிழ் ஓவியா said...


கலைஞர் மாடல் என்பதே சரி!

சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது.

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும்.

பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும்.

கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்!

அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது

எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது.

சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா?

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம்.

முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125.

கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது!

மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77494.html#ixzz2wvr5Hgog

தமிழ் ஓவியா said...


தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அவசியம்நேற்று 23.3.2014 வெளியான தீக்கதிர் நாளேட்டின் இணைப்பாக வரும் வண்ணக்கதிரில் வெளிவந்த ஒரு சிறப்பான செய்தியை வாசக நேயர்களுக்காக அப்படியே தருகி றோம்:

அவுரங்காபாத்தில் மகாத்மா காந்தி மிஷன் அறக்கட்டளை மருத்துவ மனையில் ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர் (41, வயது) சர்தார் சஞ்சித் சிங். 2014 பிப்ரவரி 2ஆம் தேதி, பணியில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி, மயக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்பட்டது. பரிசோதித்தபோது அவ ருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளும் கொடுக்கப் பட்டன.

அவசரப் பிரிவில் சேர்க்கப் படும்பொழுது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மிகவும் குறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இதயம் துடிப்பதும், நாடி துடிப்பும் நின்று விட்டது. இசிஜி திரையில் இதயம் செயலற்று விட்டதற்கான நேர் கோடு சமிக்ஞையே வந்தது. உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியாக பேசர் நுழைக்கப்பட்டது. அப்பொழுதும் இதயம் துடிக்காததால் செயற்கையான முறையை கையாண்டனர். மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 100 முறைக்கு செயற்கையான முயற்சிவிட்டு விட்டு மேற்கொள்ளப்பட்டது. 11/2 மணி நேர முயற்சிக்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 4 நாள் களில் அவருக்கு முழு நினைவு திரும்பி யது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. மூளையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிசயிக்கும் வகையில் விரைவாக முழு குணம் அடைந்தார்.

மருத்துவப்படி 90 நிமிடம் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தது எப்படி?

அவருடைய இளம் வயதும் அவருக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக கருதப் படுகிறது. அதைவிடவும் மருத்துவர்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற் கொண்டதும் இந்த அரிய நிகழ்வுக்கு மற்றொரு காரணமாகும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பழக்கங்களைப் பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கிய மானது என்பதையும் விடா முயற்சியுள்ள மருத்துவர்கள் அமைவது எவ்வளவு அருமையானது என்பதையுமே இது காட்டுகிறது.

இதிலிருந்து மனிதர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன அல்லவா!

நம் வாழ்வில் நாம் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகக் கூடாது.

சில நல்ல நண்பர்கள்கூட நண்பர் களின் சகவாசதோஷத்தின் காரணமாக, புகைப்பிடித்தல், மது குடித்தல் - இதை ஒரு வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பழக்கம் என்று தவறான பழக்கத்தில் ஈடுபடுதல், மகளிரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளுதல், அதைப் பெருமையாகப் பேசி தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட் டால், பின்னால் அது நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகும்போது உதவி செய்யக்கூட வாய்ப்பிருக்காது என்ப தால் உங்கள் வாழ்வைப் பாதுகாக்கவா வது தனி மனித ஒழுக்கம் தேவை! தேவை!!

தீய பழக்கங்களைப் புறந்தள்ளுவீர்!

Read more: http://viduthalai.in/page-2/77501.html#ixzz2wvrEaNqP

தமிழ் ஓவியா said...


கூட்டணி அல்ல; சீட்டணிநேற்று சென்னையில் பேசிய, பாஜகவின் மூத்த தலைவர் வெங் கையா, தனி ஈழம் என்பதை பாஜக ஏற்கவில்லை; ஒன்றுபட்ட இலங்கை யில் தமிழ் மக்களுக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள 13-ஆவது திருத்தத்தின்படி, நடவ டிக்கை பாஜக வற்புறுத்தும் என ஓங்கி ஒலித்து விட்டார். கூடங்குளம் மின் உலையை மூடுவதற்கு பாஜக ஆதரவு இல்லை என்றும் சொல்லி விட்டார். இதற்கு முதல் நாள் தான், மதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் ஈழம் மலர வற்புறுத்துவோம் எனக் கூறப்பட்டுள் ளது. வைகோவை பொறுத்தவரை, தமிழ் ஈழப் பிரச்சினையை முன்னி றுத்தி அரசியல் நடத்துகிறார்.

அதன் அடிப்படையில் தான் காங்கிரசையும், திமுகவையும் விமர்சிக்கிறார். அண் மையில் புதுடில்லியில் மோடி பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கையிலும் ஈழத் தமிழர்களின் பிரச் சினையைப் பற்றி பேசினார்.

ஆனால், மோடி அது குறித்து ஒன்றும் பதில் தரவில்லை என்பது வேறு செய்தி. தங்கள் கட்சியில் முதன்மை விஷயமாகக் கருதப்படும், தமிழ் ஈழம் என்பதை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்வதற்கு, வைகோவிற்கு எது தடையாக இருக்கிறது? பாஜக தமிழ் ஈழப்பிரச்சினையில், காங்கிரசு என்ன நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தான், பாஜகவிற்கும். அய்.நா. மன்றத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத் தில், திமுக கோரிக்கை வைத்து வாதாடிய போது, பாஜகவின் சார்பில் யஸ்வந்த் சின்கா என்ன சொன்னார்? அப்படி எல்லாம் ஒரு நாட்டிற்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர முடியாது என நெத்தியில் அடித்தாற்போல் சொன்னாரே?

இப்போது, பாஜக கூட்டணி, மோடி பிரதமர் என குதூகலமிடும், வைகோ, தனது முதன்மைப் பிரச் சினையாகக் கருதும் ஈழப் பிரச்சினை யில், காங்கிரசின் அதே நிலைப் பாட்டைக் கொண்டுள்ள பாஜகவிடம், ஈழப் பிரச்சினையில் ஆதரவு தந்தால் தான் கூட்டு சேருவோம் என சொல் லியிருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல், பாஜக வந்தால் ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று சொல்வது, யாரை ஏமாற்ற? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் சொன்னது போல், இவர்கள் அணி, கூட்டணி அல்ல; வெறும் சீட் டணி தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, தக்க பாடம் அளிப்பார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77507.html#ixzz2wvrdRefj

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது.

இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm

தமிழ் ஓவியா said...


ஒரே கல்லால் இரு காய்கள்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாவை நோக்கி எண்டிசையி லிருந்தும் ஓர் கணை ஏவப்படுகிறது.

எல்லோரையும் சகட்டுமேனிக்கு, தரக் குறைவாக - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கும் அம்மை யார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடியைப்பற்றியோ ஒரே ஒரு வரி கூட மருந்துக்காகவாவது விமர்சிக்காதது ஏன்? என்ற வினாக்கணைகள்தான் அவை.

திராவிடர் கழகத் தலைவரோ, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களோ வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கடைசி நேரம் வரை கூட்டணிக்காக அளவு கடந்த சகிப்புத் தன்மை யுடன் நடந்து கொண்ட இடதுசாரிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில் அவர்களும் இந்த வினாவை எழுப்பி வருகிறார்கள்!

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன், இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு)யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வினாக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இவற்றிற்குப் பிறகும்கூட அம்மையார் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்பதன் பொருள் என்ன? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்றுதான் பொருள்.

இந்த நிலையைக் கணக்கில் கொண்டால் வாக்காளர் கள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை மதவாதத்தை எதிர்ப்பது என்பது மட்டும் தான். அப்படிச் சொல்லும் பொழுது ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்து வதுபோல மதவாத எதிர்ப்பு என்று சொன்னாலே அது பி.ஜே.பி. அணிக்கும் பொருந்தும் அ.இ.அ.தி.மு.க.வுக் கும் பொருந்தும்.

ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரே பிரச்சினை - எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது- மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கமே போதுமானதாகும். பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இதில் பிரித்து பார்ப்பதற்கு இடம் இல்லை.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்து பேசியவர் (23.11.1992) தானே இவர். இந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்டுள் ளதே. ஃப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்டுள்ளதே. டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறி இருக்கிறதே!

அப்பொழுது மறுக்காமல் இப்பொழுது மறுப்பது அசல் சந்தர்ப்பவாதம் தானே! மக்களுக்கு இதை நினை வூட்டுவதுதான் நமது கடமை.

அதோடு விட்டாரா? அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்ன சொன்னார்? ஆமாம்; ஆதரிக்கிறேன் இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால், வேறு எங்கே கட்ட முடியும்? (29.7.2003) என்று பதில் சொன்னவர் தானே?

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர் பார்க்கும் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியிலும் பங்கேற்ற திமுக முயற்சியின் காரணமாக, கப்பல் துறை அமைச்சராகவிருந்த ஆற்றல்மிகு செயல் வீரர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் இருந்த நிலையில் (ரூ.2427 கோடித்திட்டம்) அத்திட்டத்தில் பெரும் பகுதி முடிந்து , இந்நாளில் கப்பல் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா, என்ன காரணம் சொல்லித் தடுத்துள்ளார்? ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன? ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் - ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லும் பி.ஜே.பி.க்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு?

இந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் (Secular State) காப்பாற்றும் வகையில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 120 கோடி எண்ணிக் கையில் வாழும் இந்திய மக்கள் நல்லிணக்கத்துடன், சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் நல்வாழ்வு வாழ வகை செய்யும் - மதச்சார்பின்மையை வீழ்த்தத் துடிக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியான பி.ஜே.பி. அணி, அ.இ.அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர் வாக்காளர்ப் பெரு மக்களே!

Read more: http://viduthalai.in/page-2/77541.html#ixzz2x1jmbPUL

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்!

சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன?

திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்?

அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம்.

1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை...

2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்..

3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு ..

4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்...

இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்!

கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது.

கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே!

- ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு

பாஞ்ச் ஜன்யா என்கிற அரசியல் செய்தித்தாளை, ஆர்.எஸ்.எஸ். புதுடில்லி யில் மீண்டும் துவக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். நேரிடை யாக இந்தத் தேர்தலை மோடியை வைத்து நடத்து கிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொள் ளட்டும்.


வெற்றி யார் கையில்?

எல்லோரும் தேர்தல் வெற்றிபற்றி பேசிக் கொண்டு இருக்கையில் சினிமா ரசிகர்களுக்கோ வேறு கவலை.

ரஜினியின் கோச்சடையான் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர் கள் திருப்பதிக்குப் பாத யாத்திரையாம்! படத்தின் வெற்றி அதன் சிறப்புகளால் அல்ல; ஏழு மலையான் அருள் பாலித்தால்தான் வெற்றியாம்! ரஜினியின் திறமையை இப்படியா அவமதிக்க வேண்டும்?


மூன்று வழக்குகள்

ஆளும் அ.இ.அ.தி. மு.க.வின் மீது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று முதல் அமைச்சர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மின் கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடியதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/77546.html#ixzz2x1kpju85

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள்


புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார்.

ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை.

வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம்.

வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார்.

- (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்)

Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn

தமிழ் ஓவியா said...


நடப்பது எமர்ஜன்சியா?

இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது.

இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங்.

ஊடகங்களின் போக்கு

அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன.

- தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014)

கருப்புக்கொடி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர்.

இனம் இனத்தோடு...

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது..

தயார்! தயார்!!

தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj

தமிழ் ஓவியா said...


பாஜகவை நோக்கிப் பாயும் அம்புகள்

ஜஸ்வந்த்சிங் தாக்கு

பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அவர் விரும்பிய படி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படா தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து இந் நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ் வந்த்சிங் வேட்பு மனு தாக்கல் செய் துள்ளார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் முன் னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங். செய்தியாளர் களிடம் கூறியதாவது;

சித்தாந்தங்களுக்கு பெயர் போன தனது கட்சி, இப்போது போலிகளின் வசம் போய் விட்டதாக விமர்சித்தார்.இபோது பாரதீய ஜனதா இரண்டு வகையாக உள்ளது ஒன்று உண்மையானது மற்றொன்று போலியானது என்று கூறினார்.

இது ஒரு நமோ நாடகம் என்றும் இது பாஜகவை அழிவு பாதையில் இட்டு செல்லும் என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எந்த தலைவரும் ஏன் கட்சியில் இருந்து விலகி உள்ளீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லை என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி மக்களிடம் தொடர்புகள் வைத்து கொள்ளவில்லை அது ஒரு பகுதியாகதான் உள்ளது என்று ஐஸ்வந்த் சிங் கூறினார்.

பிருந்தா காரத் தொடுப்பு

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி, உண்மையில் தோல்வி அச்சத்தின் உச்சத்தில் நிற்கிறது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

பாஜகவின் தோல்விபயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதன் நடவடிக்கை களில் இருந்தே பளிச்சென தெரிய வருகிறது. அக்கட்சி தனது சொந்த மூத்த தலைவர்களை ஏமாற்றி தெருவில் நிற்கச் செய்கிறது. ஆனால் முசாபர் நகரில் முஸ்லிம் மக்க ளை கொன்றுகுவிக்க காரணமான வன்முறைக் குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறது;

குஜ ராத்தில் போலி என்கவுண்ட்டர் படு கொலை வழக்கில் குற்றவாளியான அமித் ஷாவையும், மங்களூரில் பெண் களை இழிவுபடுத்தி வெறித்தாக்குதல் நடத்திய மதவெறியன் பிரமோத் முத்தலிக் போன்றவர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்கிறது என்று பிருந்தா காரத் கடுமையாக சாடினார்.

குறிப்பாக பாஜகவின் மதவெறி நடவடிக்கைகள் குறித்தும், குஜராத் மாநிலத்தில் மோடி முன்வைக்கும் வளர்ச்சி யாருக்கானது என்பது குறித்தும் ஏராளமான உண்மை விவரங்களோடு உருவாகியுள்ள இந்த பிரசுரங் களை திங்களன்று கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சி யின்போது கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அருண்மேத்தாவும் கலந்து கொண்டு செய்தியாளர் களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறு கையில், மோடியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பிரச்சாரம் செய்கிற குஜராத் மாடல் என்பது ஏழைத் தொழிலாளர்களை அப்பட்டமாகச் சுரண்டுகிற கொடூரமான மாடல்; குஜராத் உழைப்பாளி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக செலவு செய்கிற தொகை மிகமிகக்குறைவாக மாறியிருக்கிறது;

ஊட்டச்சத்தின்மை நாட்டிலேயே அதிகமாக நிலவுகிற மாநிலம் குஜராத்; பள்ளிகளிலிருந்து குழந்தைகள் மிக அதிகமாக இடைநின்றி யிருக்கும் மாநிலமும் குஜ ராத்; நாட்டிலேயே கல்விக்கும் சுகாதாரத்திற்கும் குறைவான தொகை யை செலவழித் திருப்பதும் மோடியின் குஜராத் என்று அம்பலப்படுத் தினார்.

முன்னதாக பிரசுரங்களை வெளியிட்டுப் பேசிய பிருந்தா காரத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இந்த சிறு நூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் புள்ளிவிபரங் களும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங் களே என்று தெளிவு படுத்தினார்.

மோடியின் குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது மட்டுமேயன்றி எளிய மக்களுக்கானது அல்ல என்றும் பிருந்தா காரத் விமர்சித்தார்.

ஒமர் அப்துல்லா

பிஜேபி மேலிடம் ஜஸ்வந்த் சிங் போன்ற, ஜென்டில்மேன்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் குண்டர்கள், ஊழல் பேர்வழிகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது எந்த மாதிரியான அரசியல் என்று எனக்குப் புரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-8/77580.html#ixzz2x1mT0BBI