Search This Blog

14.3.14

மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்!-பெரியார்

மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்

தலைவரர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களைத் தூண்டிவிட்டுக் கேள்விகள் கேட்கும்படி செய்துவிட்டார். நான் வம்புச் சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி ஓட முடியு ம்? உங்கள் சந்தேகத்தை யெல்லாம் தீர்க்கக்கூடிய தீரனல்லநான். எனக்குத் தோன்றியதை, நான் சரியென்று கருதியதைச் சொல்லுகின்றேன். உங்களுக்குச் சரி என்று பட்டதை ஒப்புக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னை ஒரு மகாத்மா என்றோ, மனிதத் தன்மைக்கு மீறிய சக்தி உடையவ னென்றோ கருதி ஒன்றையும் கேட்டு விடாதீர்கள். சாதாரணமான மனிதன் என்று கருதி நான் சொன்னவற்றில் உங்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் கேளுங்கள். எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். சரி தப்பு என்றுகூட என்னிடம் சொல்லாதீர்கள். உங்களுக்குத் தோன்றியபடி நினைத்துக் கொள்ளுங்கள். திருந்துங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் பேசுபவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு என்பதில் நான் சந்தேகப்படவில்லை.
நண்பர்களே! முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகின்றேன். அதாவது, சாப்பாட்டு ஜகைக்குப் போகும் வழியில் என்னைப்பற்றியும் என் மனைவியைப்பற்றியும் சுவர்களில் கண்டபடி யெல்லாம் எழுதி இருந்தது. மற்றும் சிலரைப்பற்றியும் எழுதி இருந்தது.
பதிலுக்குப் பதில் எழுதும் முறையிலோ என்னமோ மற்றும் சிலரைப்பற்றியும் எழுதி இருக்கக் கண்டேன். தவிர, தலைவர் திரு.குப்புசாமி அவர்களிடம் யாரோ ஒருவர் நாங்கள் ஜாதியைக் கெடுக்கின்றோம் என்றும் சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பெண்களைப் பறையருக்குக் கொடுப்பார்களா? என்றும் கேட்டார்களாம். அதற்கும் பதில் சொல்லுங்கள் என்றார்.
நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப் பூர்த்தியாய்ச் சொல்லுகின்றேன். என்ன வென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ, கூப்பிடுவதைவிட கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும், மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகின்றேன்.
ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூடஜனங்கள் சொல்லிக் கொள்ளவே, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜித்துவோ, தேரில் வைத்து இருக்கவோ, கோவிலில் என்பேரில் விக்கிரகம் செய்து பூசை உற்சவம் செய்யவோ நான் கருத வில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே, என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே, எனது நண்பர்கள் ஆவார்கள் எனது கொள்கைகளுக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.
                                                                    * * * *
எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடையவேண்டாம் என்றே கருதுகின்றேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடையவேண்டாம். எதையும் நம்பவேண்டாம். நான் கூறுபவை-களை வெகு ஜாக்கிரதையாய் அலசிப் பார்க்கவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். 

ஆகையால், நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும். உதாரணமாக, இன்றைய கீதை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுப்படுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச்சொன்ன மனிதனை இன்னான் என்றே உணர முடியாமல் பகவான் சொன்னார் என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவே-தான் புராணங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்-படுகின்றன.
ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப்பெற - வேண்டுமானால், நான் அயோக்கியனாகவும், திருடனாகவும் கருதும்படியாகப் பிரச்சாரம் செய்பவர்கள் உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்.
தூத்துக்குடியில் சுமார் 20,30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால், இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப்போய்விட்டது என்றும் இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.
இராமசாமி பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன் பெற்று இருந்தால் இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்படவேண்டும்.
ஆகவே, அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெறவேண்டுமென்று கருதி இருந்தாலும், நானே எனக்குத்தீங்கு தேடிக் கொண்டவனேயாவேன், அது எப்படியோ போகட்டும்.
ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம். ஆம். ஆக்கமுயற்சிக்கின்றோம். அதில் சந்தேக மில்லை. ஆனால், சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும். அதற்குத் தடை செய்கின்றவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். எங்கள் பெண்களைப் பறையனுக்குக் கொடுப்போமா? என்று கேட்கப்படுகின்றது.
இது ஒரு அறிவீனமான கேள்வி, அல்லது அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில், எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்யப் போகின்றோமே யொழிய, எங்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடு-கின்றவர்கள் அல்ல, பெண்களை ஒரு சாமானாகக் கருதி, ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக்-கின்றோம்.
நண்பர்களே! நாங்கள் ஆதிதிராவிடர்களைப்பற்றி பேசும் போது பார்ப்பனர்கள் மனவருத்த மடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால், பார்ப்பனரல்லாதார் மனவருத்த-மடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள்தனமும், மானமற்ற-தன்மையுமேயாகும். ஏனெனில், நமது சமூகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100க்கு 3வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன், (அடிமை) ஆதிதிராவிடன் (பறையன்) என்கின்ற பட்டமில்லாமல் வேறு எந்தப் பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா? இருக்கின்றார்களா? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள். சூத்திரன் என்கின்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்குச் சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தமிருக்குமா? என்று கேட்கின்றேன்.
பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதினீர்-களேயானால் நீங்கள் வடிகட்டின- முட்டாள்களேயாவீர்கள்.
மற்றும், பேசப்போனால் பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை யென்றும், அது கீழ் ஜாதி யென்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால், அதாவது சீக்கிரத்தில் மறைந்து விடக்கூடும், உங்கள் சூத்திரப் பட்டத்திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கோவில் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி, அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது.
ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந்திருந்தால் நீங்கள் ஜாதி ஒன்றாக்குகின்றீர்களே என்று நம்மைக் கேட்டிருக்கமாட்டார்கள்.

ஆகவே, ஆதி திராவிடர் நன்மையைக்கோரிப் பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சிகளும், ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.
------------------------------------தந்தைபெரியார்- ”குடிஅரசு” 11.10.1931

48 comments:

தமிழ் ஓவியா said...


வீரப்பன் கூட்டாளிகள்மீதான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தின் நாடு போற்றும் நல்ல தீர்ப்பு!

தமிழர் தலைவர் அறிக்கை

வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்ததை எதிர்த்து மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு என்று பாராட்டுத் தெரிவித்துள் ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

முன்பு வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன் ஆகிய நான்கு பேரும் (தூக்குத் தண்டனை விதித்திருந்த நிலையில் அந்நான்கு பேரும்) தாங்கள் நிரபராதிகள் என்றும், வேண்டுமென்றே தங்களை வழக்கில் காவல் துறை இணைத்துவிட்டது என்றும் வாதாடினர்.

அதன்பின்னரும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது. அதை வைத்து குடியரசுத் தலைவருக்கு - அதாவது மத்திய அரசுக்கு - தங்களுக்குக் கருணை காட்டவேண்டுமென்று கருணை மனுமூலம், சட்டப்படி தண்டனை பெற்றோர் வேண்டிக்கொண்டனர்.

அந்த மனுமீது உடனடியாக பதில் அளிக்கப்படா மலேயே சுமார் 9 ஆண்டுகளுக்கும்மேலாக கிடப்பில் போடப்பட்டு, பிறகே நிராகரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு (மூன்று நீதிபதிகளைக் கொண்டது) வட நாட்டில் இப்படி ஒரு வழக்கில் கருணை மனு காலதாம தமான நிலையில், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் - அதாவது அநீதியேயாகும் என்ற கருத்தை - நியா யத்தை உள்ளடக்கி, அவர்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கொடுத்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகியது!

அந்த அடிப்படையிலேயே இவர்களுக்கும் இவர்களை யொத்து 13 ஆண்டுகளுக்கும்மேலாக மறுக்கப்பட்ட நீதியின் கோணலைச் சரி செய்யும் வகையில், ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர்தம் கருணை மனு நிராகரிப்புப்பற்றிய உச்சநீதிமன்ற வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு சொல்ல உரிமை இல்லையா?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை மாற்றத்தை எதிர்த்து மத்திய அரசு, சீராய்வு மனுவை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, வாதாடியது.

அக்கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திற்குத் தீர்ப்புச் சொல்லும் உரிமை இல்லை என்பதாக வாதாடியது மத்திய அரசு!

அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வீரப்பன் கூட்டாளிகளான நால்வருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, தவறு என்ற மத்திய அரசின் வாதத்தில் வலிமையோ, பசையோ இல்லை என்று கூறி, மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

நாடு போற்றும் நல்ல தீர்ப்பே!

மறுக்கப்பட்ட நீதிக்கு மனிதநேயத்துடன் சரியான பரிகாரத்தைத் தந்த இந்தத் தீர்ப்பு, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு. இதனை வரவேற்கிறோம்.

சென்னை
13.3.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/76843.html#ixzz2vtN26NWc

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் சிறப்பு நிகழ்வு!


நாளை (14.3.2014) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சிறப்பு விருந்தினர் பகுதியில் விடியலே வா! என்ற நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்றத் தேர்தல் 2014, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்வு ஒளிபரப்பாகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/76840.html#ixzz2vtNQWy6b

தமிழ் ஓவியா said...


பிற இதழிலிருந்து....! ஆர்.எஸ்.எஸ். நாடகம் எடுபடாது!


ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்து ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங் அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்றும் தங்களுக்கும் அரசி யலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவ்வப்போது பம்மாத்து செய்யும். ஆனால் ஆர்எஸ்எஸ் வரலாற்றை அறிந்த வர் அறிவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமே பாஜக என்பதை பாஜக வின் ஒவ்வொரு அசைவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினாலேயே தீர்மானிக்கப்படு கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் கனவில் மிதந்து கொண்டிருந்த எல்.கே. அத்வானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை முன் மொழிந்து முடிவாக் கியது ஆர்எஸ்எஸ் தான்.

இதனால் ஆத் திரமடைந்த அத்வானி அக்கட்சியிலி ருந்தே விலக முயன்றார். அவரை அழைத்து கண்டித்து கட்சியில் தொடருமாறு அறி வுறுத்தியதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். பாஜகவில் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடியை தீர்ப்பதும் அந்த அமைப்பே.

இந்த நிலையில் ஏதோ நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம். பிரச்சனைகளை முன்னிறுத்த வேண் டும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் மோகன்பகவத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டினுடைய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மதவெறி. ஒன் றாக வாழும் மக்களிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டு அவர்களை மோத விடும் இழிசெயலை செய்துவரும் அமைப்புகளில் முதலிடம் வகிப்பது ஆர்எஸ்எஸ்தான். இந்த லட்சணத்தில் மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசப் போகிறார்களாம்.

மோடியை ஒரு விற்பனைப் பொருள் போல விளம்பரப்படுத்த பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் நியமிக்கப்பட் டுள்ளன.

இதுதவிர பல்வேறு ஊட கங்களை வாடகைக்கு அமர்த்தி மோடி அலை வீசுகிறது, கரையைக் கடந்து விட்டது என்றெல்லாம் கதைகட்டி விடு கிறார்கள். ஆனால், இந்தக் கதைகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே கூட புளித்துப்போய்விட்டது போலும்.

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு ரகசிய அமைப்பாகவே கட்டமைத்துள்ளது. ஆயுதப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாஜக வின் பிரதான தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். பாஜகவுக்கு அந்தரங்க ஆலோசனை வழங்குவது அவர்களே. ஆனால் தேர்தல் வந்தவுடன், தன்னை ஒரு சுயேச்சையான அமைப்புபோல காட்டிக்கொள்ள முயல் கிறார்கள். இது பலிக்காது.

மிக முக்கிய கடமை

சிறுபான்மை மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிற, கேடுகெட்ட சாதிய வர்ணாசிரம முறையை நிலைப் படுத்த விரும்புகிற, கலவரங்களின் மூலம் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று கருதுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதிதான் பாஜக. நாடு விடுதலை பெற்றவுடன் மக்கள் ஒற்று மைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை படுகொலை செய்ததும் இவர்களது சித்தாந்தமே ஆகும்.

ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி பாஜக ஆட்சி நடத்தினால் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலே நடை முறைப்படுத்தப்படும். பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் ஆர் எஸ்எஸ் அமைப்பை பின்னுக்குத்தள்ளுவது தேசத் தின் இன்றைய மிக முக்கிய கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர் தலையங்கம், 13.3.2014

Read more: http://viduthalai.in/page-2/76845.html#ixzz2vtNhGbdY

தமிழ் ஓவியா said...


வகுப்புவாதம் ஒழியாது


வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை.

(குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/76842.html#ixzz2vtNsdiLA

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (1)

நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி திமுக வெளியிட்டுள்ள நூறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை என்பது வரலாற்றுப் பெட்டகம்!

அரசியலில் ஈடுபடும் ஒரு திராவிட இயக்கம் - தன் விழுமிய வேர்களை மறந்து விடாமல், அதன் சித்தாந்தங்கள் - கோட்பாடுகளின் அடிப்படையில் இதைவிடச் சிறப்பாகத் தீட்டப்பட முடியாது என்று கூறும் வகையில், இந்தத் தேர்தல் அறிக்கை செப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் அறிக்கையின் முன்னுரையே - நூறு அம்சத் திட்டத்தின் முகப்படாமாக - முத்திரையடியாக ஜொலிக்கிறது!

1912இல் டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட மதராஸ் அய்க்கிய லீக் (விணீபீக்ஷீணீ ஹிஸீவீமீபீ லிமீணீரீமீ) தொடங்கி - ஒரு நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றுப் பொன் வரிகளால் நெய்யப்பட்ட ஒரு பொக்கிசமாக இது பளபளக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதுதான் சூரியனுக்கும், கருகிய இலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் எல்லை என்ன என்பது விளங்கும்.

திராவிட இயக்கத்தைப்பற்றியோ அதன் நோக் கத்தைப் பற்றியோ, அது கடந்து வந்த அந்த அரிமா நடைபற்றியோ, அதன் ஒப்பற்ற தலைவர்களின் ஆளுமை குறித்தோ மருந்துக்குக்கூட அ.இ.அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நுண்ணாடியை வைத்துத் தேடினாலும் கிடைக்கப் பெறவில்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! அ.இ.அ.தி. மு.க.வுக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களுக்கும் எந்த வகையிலும் ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என்று தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாகவே இது அமைந்து விட்டதல்லவா!

தமிழ் ஓவியா said...


தேர்தல் அறிக்கை என்பதைக்கூட மறந்து விட்டு, அதில்கூட தி.மு.க. தலைவரை பக்கத்துப் பக்கம் வசைபாடும் போக்கு அக்கட்சியின் தரத்தை விளக்கும் தன்னிலை விளக்கமாகும். அண்ணாவின் படத்தை அட்டையில் போட்டால் போதுமா? அவர் வற்புறுத்திய கண்ணியம் என்பதும் கடைச் சரக்காகி விட்டதே!

அதே நேரத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டுள்ளதை அவசியம் கருதி நாகரிகமாகவே சுட்டிக் காட்டியுள்ள கண்ணியத்தையும், நனி நாகரிகத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது. அப்பொழுதுகூட கட்சியின் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை என்பது அடிக் கோடிட்டுப் படிக்கத் தகுந்ததாகும்.

ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை! ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!

நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்று எதிர்பார்க்கப்படும் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்த சேது சமுத்திரத் திட்டம் இந்தத் தேர்தல் அறிக்கையில் காணாமற் போன மர்மம் என்ன? இப்பொழுது அக்கட்சி எடுத்துள்ள முடி வையாவது அறிவித்திருக்கலாமே! அப்படிச் செய்வது தானே அறிவு நாணயமாகவும் இருக்க முடியும்?

ஏனிந்த இரட்டை வேடம்? குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தொடுத்துள்ள வழக்கு - இந்த தேர்தலில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்புச் சுனாமியை - பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

தி.மு.க.வும் - அதன் தோழமைக் கட்சிகளும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறும் - பிரச்சாரத்தில் அ.தி.மு.க. அரசின் இந்த மன்னிக்கவே முடியாத துரோகத்தைத் தோலுரித்துத் தோரணமாகத் தொங்க விட வேண்டும்.

இந்த எதிர்ப்பை எதிர் கொள்ள இயலாமல் அ.இ.அ.தி.மு.க. அணி திணற வேண்டும். சேது சமுத் திரத் திட்டம் என்னால்தான் வந்தது என்று மார்தட்டிக் கொண்ட மறுமலர்ச்சி தி.மு.க.வின் திடீர்ப் பல்டியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மதுரவாயலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (10.3.2014) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிக் கொடுத்து விட்டார்.

ஓர் ஆட்சி என்பது வளர்ச்சிக்கா? தளர்ச்சிக்கா? வளத்திற்கா? வறட்சிக்கா? என்று எழுப்பிய வினாவும், அதற்காக அவர் எடுத்து வைத்த ஆவண ரீதியான ஆதாரங்களும் நடக்க இருக்கும் தேர்தலில் முக்கிய இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் உலா வரும் உத்தமக் கதாநாயகனாக இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை. தேர்தல் அறிக்கையினைத் தயாரித்த குழுவினர்க்கு நாம் மட்டுமல்ல; அதனைப் படிக்கும் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் வாக்காளரும் பாராட்டுவர் என்பதில் அய்யமில்லை.

வெல்லட்டும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி!

Read more: http://viduthalai.in/page-2/76815----1.html#ixzz2vtO4cL4k

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (2)

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று - எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.

ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76844.html#ixzz2vtOErLGX

தமிழ் ஓவியா said...

300 நிழல் தரும் மரங்களை வெட்டிய அதிகாரிகள் கோவில்களை அகற்றாதது ஏன்?

தருமபுரி, மார்ச் 13- இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 2013 ஆம் ஆண்டில் 14,175 பேர் சாலை விபத்து களில் இறந்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன.

இதற்கு சாலை விதியை பின்பற்றா ததே காரணம் ஏன்று கூறினாலும் கூட, சாலையில் ஆக்கிரமிப்புகளும், சாலை பராமரிப்பும், சாலை கட்டமைப்பும் சரிவர இல்லாததே முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

750-க்கும் மேற்பட்டவர்கள்

அந்த வகையில் தருமபுரி மாவட்டத் தில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 750-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் இறந்துள்ளனர். விபத்திற்குக் காரணமாக இருப்பது சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் செய்யாமல் இருப் பதே காரணமாக இருக்கிறது.

20.12.2013 ஆம் ஆண்டு தருமபுரி குண்டலப்பட்டி பிரிவு சாலையிருந்து நல்லம்பள்ளி சேசம்பட்டி இணைப்பு சாலை வரை, தருமபுரி நகர பகுதி வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில் மிக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை அறிந்து 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு 8.5 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்ய அரசு நிதி ஒதுக்கியது.

12 கிலோ மீட்டர் தூர சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் அகற்றப்பட்டு 15 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றது.

ஆனால் 12 கிலோ மீட்டர் சாலையில் உள்ள கோவில்கள் சாலையின் நடுவே அகற்றப்படாமல் ஆக்கிரமித்து அப்ப டியே உள்ளது. குறிப்பாக இலக்கியம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மூன்று கோவில்களும், நீச்சல்குளம் அருகே ஒரு கோவிலும், அதியமான் கோட்டையில் ஒரு கோவிலும் சாலையிலேயே உள்ளது.

தமிழ் ஓவியா said...

அந்த இடத்தில் 10 மீட்டர் சாலையைக் கூட அகலப்படுத்தாமல் பழைய சாலை யின் அகலத்திற்கே குறுகிய சாலையா கவே ஊள்ளது. கோவிலை அகற்றாமல் சாலையின் அகலத்தை குறைத்து ஒதுக்கி விட்டு சாலை போட்டுள்ளார்கள். இத னால் அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மக்கள் தலைவர்களின் சிலைகளை அகற்றினர்

ஆனால், அதியமான் கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தாக கூறி மக்கள் தலைவர்களான தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை எல்லாம் அகற்றி விட்டனர்.

ஆனால் அங்குள்ள கோவில் மட்டும் சாலையை மறித்து நிற்கிறது. அதேபோல் பொம்மிடிகடத்தூர் சாலை யில் ரேகடஅள்ளி அருகே புற்றுக்கோயில் ஒன்றும் அகற்றப்படாமல் போக்குவரத் திற்கு இடையூறாக அக்கிரமித்து நிற்கிறது.

இந்த நிமிடம் வரையிலும் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் அக்கோவில் களை அகற்றாமல் விட்டு வைத்திருக் கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அனைத்து மக்களும் கொடுக்கும் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தமது சொந்த மத நம்பிக் கையை அனைவருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.

அரசின் ஆணைகள் அவமதிக்கப்படுகின்றன. விதிகள் மீறப்படுகின்றன. இத்தகைய அதிகாரிகளை அரசு கண்டிப்பதுடன் தண்டிக்கவும் வேண்டுமென்று சமூகத் தில் அக்கறை உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

அரசு ஆணை 7553/66

அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்திலோ எந்த மதக் கடவுளுக்கும் படங்கள் வைப்பதோ கோவில் கட்டுவதோ கூடாது என்று 7553/66 இல் அரசாணை உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை யோரம் உள்ள கோவில்களையும், நீதி மன்ற நுழைவாயிலில் எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவிலையும் அகற்றக் கோரி மனுதாக்கல் செய்தனர். அகற்ற கூடாது ஏன்றும் சிலர் பதில் மனுதாக்கல் செய்தனர்.

ஆனால் 11.02.2014 ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் அக்கினிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து கூறிய தீர்ப்பில் கோவில், மசூதி, தேவாலயம், ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரிமை உள்ளது.

ஆனால், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படும் வகையில் கோவில் கட்டக் கூடாது. மத ரீதியான கட்டடங்களை பொது இடத்தில் கட்ட உரிமை இல்லை. எனவே சாலையோரம் உள்ள அனைத்து கோவில்களையும் இடிக்க உத்தரவிடு வதுடன், இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தாத மாநகராட்சி அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய் யப்பட வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர் நினைவாக கட்டிய கோவிலை 12 ஆம் தேதிக்குள் இடித்துவிட்டு அதன் அறிக் கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய் யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அகற்றாமல் இருப்பதேன்?

உயர்நீதிமன்றமே தெளிவாக ஆணை பிறப்பித்த நிலையிலும் தருமபுரி நெடுஞ் சாலையை ஆக்கிரமித்துள்ள கோவிலை அதிகாரிகள் அகற்றாமல் இருப்பதேன்?

300-க்கும் மேற்பட்ட நிழல்தந்த மரங் களை வெட்டியதற்கு பயன்படுத்திய சட்டம், 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அக்கிரமிப்பை அகற்றியதற்குப் பயன்பட்ட ஆணை, இந்தக் கோவில் களை மட்டும் அகற்ற பயன்படவில் லையா அதிகாரிகளுக்கு?

பொதுமக்களுக்கும், போக்குவரத் திற்கும் இடையூறாக எது தடையாக இருந் தாலும் அவற்றை அகற்ற வேண்டும் என்பதே அரசின் சட்டம், நீதிமன்ற ஆணை.

அவற்றை தருமபுரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மதிப்பார்களா? செயல் படுத்துவார்களா? என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்.

செய்தி- படம்:
அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செய்தியாளர், தருமபுரி.

Read more: http://viduthalai.in/page-2/76847.html#ixzz2vtOvx5Jf

தமிழ் ஓவியா said...


சபாஷ் - தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு


- குடந்தை கருணா

சமூக நீதி, மதசார்பின்மை, கூட் டாட்சி தத்துவம், மொழி நலன் இவை, திராவிடர் இயக்கத்தின் அடித் தள கொள்கை. அதன் அடிப்படை யில் தேர்தல் அறிக்கை உள்ளது.

1. தனியார் துறையில் இட ஒதுக்கீடு

2. முழுமையான ஜாதி வாரி கணக் கெடுப்பு. அதன் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பங்கீட்டை அறிந்து, அதன்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம்.

4. அந்தந்த மாநில அரசே, இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயம் செய்திட அதிகாரம்.

5. சேது சமுத்திரத் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

6. ஈழத் தமிழர் பிரச்சினை

7. சுயமரியாதைத் திருமண சட் டத்தை அகில இந்திய அளவில் நிறைவேற்றிட வேண்டும்.

8. பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு.

9. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு.

10. முதியோருக்குப் பாதுகாப் பான மருத்துவ வசதி.

11.மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு.

12. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

13. தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக திமுக பாடுபடும்.

14. அனைத்து மத்திய அரசின் தேர்வுகளும், தமிழில் எழுதிட ஆணை.

மதச் சார்பற்ற அரசு மத்தியில் அமைந்திட திமுக உறுதி. இந்தியாவை வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உரு வாக்கிட திமுக பாடுபடும்.

Read more: http://viduthalai.in/page-2/76848.html#ixzz2vtP6DI1T

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்குமுறைக் குழு உடனடியாக காலவறையறைக்குள் அமைய வற்புறுத்துவோம்!


விவசாயத்தைப் பாதுகாக்கும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

பொன்மலையில் ரயில் பெட்டிச் தொழிற்சாலை
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்

81. பெருநகர விரைவு ரயில் திட்டம்

திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரம் வரை புதிய இரயில் பாதையை முதற்கட்டமாக அமைத்து, பின்னர் புதுச்சேரி வரை நீட்டிக்கவும்; தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய ஊர்களிலும் விரைவு ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கிடவும் முயற்சிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

82. மாற்றுத் திறனாளிக்கென தனி ரயில் பெட்டிகள்

மாற்றுத் திறனாளிகள் எவ்வித இடையூறுமின்றி ரயில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கென 50 பிரேத்யேகப் படுக்கைகள் கொண்ட தனி ரயில் பெட்டி ஒன்று, ஒவ்வொரு ரயிலிலும் இணைக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...


83. இரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்

இரயில்வே துறையில் தொடர்புள்ள பணியாளர்கள், பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள் ஆகிய பல்வேறு ரயில்வே துறைகளுக்கான தொழில்நுட்ப உயர்கல்வி பெற ஏதுவாக பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்ற இரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒன்றினை தமிழகத்தில் அமைத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

84. திருச்சி பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை

தமிழகத்தின் மையப் பகுதியாகவும் - இரயில்வே துறைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காலி இடமும் - மனித வளமும் - போதிய கட்டுமான வசதிகளும் அமைந்துள்ள திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையின் திறன் முழுவதையும் சரக்கு ரயில் பெட்டி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டால், இப்பணியினை தனியாருடன் தயாரிப்பு ஒப்பந்தம் செய்திடும் அவசியம் இருக்காது.
இதனை ரயில்வே துறையே செயல்படுத்தினால், தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாவதோடு, ரயில்வே துறையில் ஒரு மைல்கல் திட்டமாக இது அமைந்திடும். எனவே, திருச்சி, பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

85. இராயபுரத்தில் புதிய ரயில் முனையம்

சென்னையின் மிகப் பழமை வாய்ந்த இராயபுரம் ரயில் நிலையம் இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், மற்றுமோர் ரயில் முனையமாக, சென்னை இராயபுரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற சென்னை மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 2012ஆம் ஆண்டு இரயில்வே நிதிநிலை அறிக்கையில், இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பின்னர், முறையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, சென்னை இராயபுரம் ரயில்நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றுவதற்கு தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...


86. நாகர்கோவில் - திருநெல்வேலி மாவட்ட ரயில்வழித் தடங்களை மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும்.

தற்போது திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ரயில் வழித் தடங்களை மதுரை ரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இணைக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தற்போது ஒரு சில துறைகளில் மட்டும் நடைமுறையில் இருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அனைத்துப் பிரிவிலும் உள்ள ரயில்வே தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

87. இரயில்வே தொழிலாளர்கள் ஓய்வூதியம்

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் உள்ள பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்திருப்பதைப் போல, இரவு பகலாக இந்திய மக்களுக்காகப் பணியாற்றி வரும் ரயில்வே தொழிலாளர்களுக்கு இப்புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

88. விமானப் போக்குவரத்து

தூத்துக்குடி, சேலம் ஆகிய மாநகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் போதிய வசதியில்லாமலும் - விமானங்கள் இரவில் இறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாமலும் உள்ளன. தூத்துக்குடி மாநகரம் தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகிவரும் மாநகரங்களில் ஒன்றாகும். எனவே, இந்த இரண்டு விமான நிலையங்களையும் மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தி.மு.கழகம் வலி யுறுத்தும்.

89. விமான தொழில்நுட்ப பல்கலைக் கழகம்

பெருகி வரும் விமான போக்குவரத்துத் துறை தொடர்புடைய தொழில்நுட்ப உயர்கல்வியைப் பெறுவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் குறிப்பாக திருப்பெரும்புதூரில் விமான தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகம் ஒன்றினை அமைத்திட விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட தி.மு.கழகம் பாடுபடும்.

90. நீர்வழிப் போக்குவரத்து (பறக்கும் கப்பல் திட்டம்)

ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தமிழக கிழக்குக் கடற்கரை பகுதியில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சி காணவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்துத் திட்டமான பறக்கும் கப்பல் திட்டத்தை செயல்படுத்த; சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், நாகப்பட்டினம், கோடியக்கரை, இராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களில் படகுத் துறைகளை ஏற்படுத்தவும்; இதற்கெனத் தனிவாரியம் அமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சென்னையிலிருந்து அந்தமானுக்குச் சென்று வரும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தி.மு.கழகம் வலியுறுத்தும்.

91. புதிய பாம்பன் பாலம்

பாம்பன் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரும்புத் தூண்கள் அனைத்தும், அதனுடைய முழுதிறனை இழந்துவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் புதிய பாலம் அமைத்திடும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பாம்பன் பகுதியில் புதிய பாலம் ஒன்று அமைக்க வேண்டும் எனவும்; அப்போது செறிவூட்டப்பட்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் உத்திரங்கள் அமைத்தால், எப்போதும் கடல் நீரால் அரிப்பு ஏற்படாமல், துருப்பிடிக்காமல் நீண்டகாலம் உறுதித் தன்மையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் என்பதால், அதற்கு உரிய திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

92. கொள்ளிடத்தில் நவீன புதிய பாலம்

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கீழணைப் பாலம் மிகவும் பழுதடைந்து, அவ்வப் போது குறைந்த கால சீரமைப்புப் பணிகள் நடைபெற்று தற்காலிகப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தப் பாலத்திற்குப் பதிலாக, நிகழ்காலத்திலும் - எதிர்காலத்திலும் நடைபெற்றிடும் வாகனப் போக்குவரத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, புதிய பாலம் அமைத்திட தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

93. நீர்ப்பாசனம்

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்ட அளவினை 1979ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 152 அடியாக உயர்த்திட, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றிட இந்திய அரசை வலியுறுத்துவோம்.

94. காவிரி நதிநீர்ப் பங்கீடு

தமிழகத்திற்கும் - கர்நாடகத்திற்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் சட்டப்படி தொடர்ந்து நீடிக்கக் கூடிய ஒன்று என்றாலும், 1974ஆம் ஆண்டோடு அந்த ஒப்பந்தம் முடிந்துவிடும் என்கின்ற அந்த நிலைப்பாட்டை கர்நாடக அரசு பிடிவாதமாக மேற்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகளை பாதுகாத்திட தி.மு.கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1971ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்று, தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு; 1990ஆம் ஆண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், காவிரி நடுவர் மன்றம் தேவை என்று இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து, 2-6-1990 அன்று திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 28-7-1990 அன்று நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கழக ஆட்சியின் கோரிக் கையை ஏற்று, 25-6-1991 அன்று நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 5-2-2007 அன்று தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி நடைபெற்றபோது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் காவிரி நதிநீரை, விவசாயத்திற்குத் தேவையான அளவு, உரிய காலத்தில் பெற்றுப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப்படி நிறைவேற்ற அமைக்க வேண்டிய காவிரி - மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இவைகளை உடனடியாக ஒரு காலவரையறைக்குள் அமைக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

தமிழ் ஓவியா said...

95. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்

தமிழகத்தைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின்கீழ் ஏற்கனவே கேரள மாநிலத்தோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் சில அணைகள் கட்டப்பட வேண்டியுள்ளன. அதில் முக்கியமான அணை, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மேல்நீராறு ஆற்றின் தண்ணீரை நேரடியாக குழாய் அமைத்து, திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வரும் திட்டமாகும். தமிழ்நாட்டிற்குள்ளேயே நிறைவேற்றப்பட வேண்டிய இத்திட்டத்தை நிறைவேற்றினால், மேற்சொன்ன மூன்று மாவட்டங்களில் உள்ள 4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நன்கு பாசன வசதி பெறும். ஆனால், கேரள அரசு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இடமலையாறு திட்டத்தை கடந்த 40 ஆண்டுகாலமாக முடிக்காமலேயே, காலதாமதம் செய்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் பெறுவார்கள். எனவே மத்திய அரசு உலக வங்கியின் நிதிஉதவியோடு இத்திட்டத்தை நிறைவேற்றிட தி.மு.கழகம் பாடுபடும்.

96. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

உலகம் வெப்பமயமாகி வருவதால், ஐ.நா. அமைப்பும், மத்திய அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காடுகளை விரிவாக்கிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல ஆயிரங்கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு செயல் திட்டங்கள், மத்திய அரசு, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன; மானிய உதவியும் அளிக்கப்படுகிறது.

வளர்ச்சித் திட்டங்களின் அவசியம் கருதி, திட்டங்களை அமல்படுத்தும் அதேவேளையில், அத்திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல் சட்டங்கள் அமைந்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

திருப்பூர், ஈரோடு, கரூர், வேலூர் பகுதிகளில் சாயப்பட்டறை, தோல் பதனிடுதல் மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு கடலில் சென்று கலந்திடும் வகையில் ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த தி.மு.க. வலியுறுத்தும்.

97. முன்னாள் இராணுவத்தினர் நலன்

நமது நாட்டினைப் பாதுகாப்பதற்குத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்திய இராணுவத்தினர். தங்களுடைய பணிக்காலத்தில் கொட்டும் மழையிலும், கடும் பனியிலும், காடுமேடுகளிலும் சிரமப்பட்டுவிட்டு, ஓய்வுபெறும் காலத்திலாவது அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ நினைக்கும் முன்னாள் இராணுவத்தினரின் நல்வாழ்வுக்கு உரிய வழிவகை காண்பது நமது கடமையாகும்.

தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 5 இலட்சம் முன்னாள் இராணுவத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நல்வாழ்வுக்கென தமிழகத்தில் தமிழ்நாடு முன்னாள் இராணுவத்தினர் கழகம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தக் கழகத்தை நிர்வகிப்பதற்கு அரசு அதிகாரிகளைத் தவிர்த்து, முன்னாள் இராணுவத்தினரையே நியமிக்க வேண்டும் என மத்திய அரசு நியமித்த கே.பி.சிங் தேவ் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதோடு; ஒரு பதவி நிலைக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம், தகுதி மற்றும் திறன் அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசுத் துறைகளில் பணி நியமனம், அரசுத் துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களின் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் நியமனம் போன்றவற்றை முன்னாள் ராணுவத்தினர் நலன் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக நடைமுறைப்படுத்த தி.மு.க.பாடுபடும்.

98. தென்மண்டல எரிவாயுத் தொகுப்பு

கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கழகம் வலியுறுத்தி வருகிற தென்மண்டல இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்பு விரைவில் உருவாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக குஜராத் மாநிலம் தாஹெஜ் துறைமுகத்தில் இறக்குமதி யாகும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) வைக் குழாய் மூலம் தென்மாநில மண்டலத்துக்குக் கொண்டுவந்து வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

99. நிரந்தரப் பொருட்காட்சி வளாகம்

பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில் ஒரு நிரந்தரப் பொருட்காட்சி மற்றும் வணிக வளாகத்தை உருவாக்கிட முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் ஓவியா said...

100.காப்பிடங்கள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் சாலை ஓரத்திலே வேலையற்ற துகள்; வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்; அது தான் காலக்குறி என்று எழுதிய எச்சரிக்கை வரிகளை மன திலே கொண்டு, வீடற்றவர்களாக சாலைகளில் உறங்கும் மக்க ளுக்கு உதவிடும் வகையில் காப்பிடங்கள் அமைத்திட முன்னோ டித் திட்டம் உருவாவதற்கு தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்ளும். திராவிட முன்னேற்றக் கழக அணியின் சார்பில் தமிழகத் திலே போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தத் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் வளத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுப்பதற்காக குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து பாடுபடுவார்கள் என்ற உறுதியை வழங்கு கிறோம்.

சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் எனும் வாக்குறுதி; என்றைக்குமே தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் வெறும் சொல் அலங்காரமாக இருந்த தில்லை என்பதை கழக அரசால் நிறைவேற்றப்பட்ட சாத னைச் சரித்திரத்தின் மூலம் நடைமுறையில் உணர்ந்துள்ள தமிழ்ப் பெருங்குடி மக்கள்; கழகத்தின்பால் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் நாடாளுமன்றப் பணிகளை ஆற்றிடுவோம் என்ற உறுதியை இந்த அறிக்கையின் மூலம் தி.மு.க. அளிக்கிறது. எனவே உங்களுக்காக உழைப்பதற்கு எங்களுக்கு உத்திர விடுங்கள் என்று வேண்டுகிறோம். மதச்சார்பற்ற நல்லரசு அமைப்போம்!

மதங்களுக்கிடையே நல்லிணக்கம் பேணுவோம்!

சமூகநீதி காப்போம் ! சமத்துவம் வளர்ப்போம்!

ஜனநாயகம் தழைத்திடப் பாடுபடுவோம்!

என்ற முற்போக்கு முழக்கங்களோடு

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

Read more: http://viduthalai.in/page-3/76874.html#ixzz2vtR2VKs9

தமிழ் ஓவியா said...


மோடி நமோ! நமோ!! எல்லாத் திசைகளிலிருந்தும் மொத்துகள்!


புதுடில்லி, மார்ச் 13- பி.ஜே. பி.யின் பிரதமருக்கான வேட் பாளர் மோடிமீது எல்லாத் திசைகளிலிருந்தும் கண்டனங் கள் வெடித்துக் கிளம்பியுள் ளன.

ராகுல் காந்தி

ஏழைகளிடமிருந்து நிலத்தைப் பறிக்கும் மோடி போன்ற காவலாளிகள் நாட் டுக்கு தேவையே இல்லை என குஜராத்தில் நடந்த பிரச் சார கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

பாஜ வேட்பாளர் நரேந் திர மோடி தனது பிரச்சார கூட்டங்களில் ஆளும் காங் கிரஸ் அரசு, ஊழல் அரசு என் றும், தான் பிரதமராக வந் தால் ஊழலை ஒழித்து நாட் டின் காவலனாக சேவை செய் வேன் என்று பேசி வருகிறார்.

இதற்கு பதிலடி தந்துள் ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள ராகுல், கேதா மாவட் டம் பலசினோர் நகரில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சார பேரணியில் பேசியதாவது:
அரசியல் தலைவர்களில் 2 வகை உண்டு. ஒன்று, காந்தி யின் கொள்கைகளை பின் பற்றுபவர்கள். மற்றொரு வகை, ஹிட்லர் போன்ற அராஜகவாதிகள். அப்படிப் பட்டவர்கள் தான் எல்லாமே தன்னால் நடந்தது, தன்னால் நடந்து கொண்டிருக்கிறது என்று பெருமை பேசிக் கொள்வார்கள்.

ஆங்கிலேயர்கள், தங் களை காவலாளி என்று கூறி இந்தியாவில் நுழைந்து நாட்டை அபகரித்தார்கள். அந்த மாதிரியான மற்றொரு காவலாளி நமக்கு தேவை யில்லை. காவலாளி என்று சொல்லிக் கொள்பவர்கள் குஜராத்தில் செய்தது என்ன? லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்து, தொழிற் சாலையாக மாற்றியிருக்கி றார்கள்.

நிலத்தை அபகரிப்பவர் காவலாளியா? இதற்கு பெயர் திருட்டு. இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுல் மறைமுகமாக மோடியை ஹிட்லருடன் ஒப் பிட்டு பேசியிருப்பது சர்ச் சையைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

ஹிட்லருடன் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒப் பிட்டுப்பேசியது சரியானதே என்று காங்கிரஸ் கூறியுள் ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஷ் வாலா கூறுகையில், 2002ஆம் ஆண்டு வன்செயலின் போது மூவாயிரம் பேரை திட்ட மிட்டு படுகொலை செய்த ஒரு மனிதரை ஹிட்லருடன் ஒப்பிடுவது சரியான ஒன்றே. இந்த வழக்கில் மோடி அமைச்சரவையைச் சேர்ந்த மாயாபென் கோட்னானி தண்டிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் ஓவியா said...


நிதீஷ்குமார்

எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது நரேந்திர மோடியின் அராஜகம் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகிலேயே உயரமா னது எவரெஸ்ட் சிகரம் என்று கூறுவார்கள்.

ஆனால் நரேந்திர மோடி யின் அராஜகமும் அட்டகாச மும் அந்த சிகரத்தைவிட உயரமானதுஎன்றார். மோடி யின் கடந்த கால செயல்பாடு கள் அவருடைய தற்போதைய பேச்சுக்களை கவனிக்கும் யாரும், அவர் அராஜகத்தின் உச்சத்தை தொட்டவர் என் பதை புரிந்துகொள்ள முடியும் என்று அவர்கூறினார்.

பிரத மர் ஆவதற்கு முன்பே அவர் பிரதமர் போல நினைத்துக் கொண்டு திரிகிறார் என்றும் மோடி மீது தாக்குதல் தொடுத்தார் நிதிஷ் குமார். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என்னிடம் சுயமரியாதை மட் டுமே உள்ளது.

அராஜகம் இல்லை என்று நிதிஷ்குமார் கூறினார். நிதிஷ் குமார் அராஜகமாக நடந்து கொள்வதாக மோடி செவ் வாயன்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகை யில் பேட்டியளித்த நிதிஷ் குமார், மோடி உடலில் ஒவ் வொரு இஞ்ச்சிலும் அராஜ கம் உள்ளது என்றார்.பொய் சொல்வதில் மோடியை யாரும் மிஞ்ச முடியாது. குஜராத் வளர்ச்சியடைந்து விட்டதாக அவர் கூறும்பொய்கள் சற் றும் உண்மைக்கலப்பில்லா தது என்றும் நிதிஷ் குமார் கூறினார்.

பிற்படுத்தப்பட்ட பகுதி யான பிகாரையும் வளர்ச்சி யடைந்த கடற்கரை பகுதி யான குஜராத்தையும் ஒப்பிடு வது தவறானது என்று அவர் குறிப்பிட்டார்.சச்சார்குழு அறிக்கையில் குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நிலை மிகவும் அவலமாக உள்ளது என்றும், அதே நேரத்தில் பிகாரில் அவர்களது நிலை மேம்பட்ட நிலையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வீரபத்ர சிங் (இமாச்சலப் பிரதேச முதல் அமைச்சர்)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இமாச்சல பிர தேசத்தின் முதல் அமைச்சரு மான வீரபத்ர சிங் டெல்லி யில் அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

குஜராத் ஏற்கனவே வளர்ச் சியடைந்த மாநிலம். எனவே அம்மாநில வளர்ச்சிக்காக மோடி உரிமை கோர முடி யாது. இயல்பான இவ்வளர்ச் சியை மோடி வித்தை என்று ஊடகங்கள் பூதாகரப்படுத்தி வருகின்றன. அனைவரும் கூறுவது போல் இங்கு மோடி அலை எதுவும் வீசவில்லை. இது மின்னணு ஊடகங்களி னால் மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். மோடி ஒன்றும் சூப்பர் மேன் கிடையாது.

மோடியை விட பிரதமர் பதவி வேட்பாளர் பதவிக்கு பா.ஜ.க மூத்த தலைவர்கள் அதிகமானோர் உள்ளனர். நான் அத்வானியை குறிப் பிட்டு சொல்லவில்லை. இத் தேர்தலில் எங்களது கட்சி பிரச்சாரத்தை சிறிது காலதாம தமாக தான் தொடங்கியது. ஆனால் போட்டியின் தொடக் கத்தில் முடிவு தெரியாது. போட்டியின் உச்சகட்டத்தில் எங்களது கட்சி வெற்றி பெறும்.

குஜராத்தை முன்மாதிரி மாநிலமாக முன்னிறுத்தி மாடி பிரச்சாரம் செய்து வரு கிறார். ஆனால் குஜராத் மாநி லத்திற்கு என்ன முன்மாதிரி என்று மோடி கூற முடியுமா? வளர்ச்சியடைந்த மாநிலங் களில் அதுவும் ஒன்று. ஆனால், பல மாநிலங்களைவிட பின் தங்கி உள்ளது.

1947ல் இந்தியா விடு தலை பெற்றதில் இருந்து இந்நாட்டிற்கு தனது சிறப் பான பங்களிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நல்கியுள்ளது. காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு ராகுல் காந்தி மற்றும் பிரி யங்கா காந்தி ஆகிய இருவ ருமே பொருத்தமானவர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விக்ரொலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தாவது :-

கடந்த ஆண்டு முதலே நாட்டில் மோடி அலை வீசுவ தாக கூறப்படுகிறது. நான் உத்தரபிரதேசத்திற்கு சென் றேன். ஹரியானாவுக்கும் சென்றேன். இப்போது மும் பைக்கு வந்திருக்கிறேன். எங் கேயும் மோடி அலை வீசுவ தாக தெரியவில்லை.

மக்களின் அதிருப்தி அலையே எங்கும் வீசுகிறது. காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க.வை கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். நாட்டில் நேர்மையான அரசியலை கொண்டு வர முடிவு செய்து விட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத் துள்ளார்கள்.

சில ஊடகங்கள் மக்க ளவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என தவ றான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதே ஊடகங்கள் தான் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் 4-5 சீட்கள் மட்டுமே பெறமுடியும் என்றன. ஆனால் 28 சீட்டுகளை நாங்கள் பெற் றோம்.

மக்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, நரேந்திர மோடி, கபில் சிபல், நிதின் கட்கரி, எடியூரப்பாவை தோற் கடிக்க தயாராகி விட்டனர். இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அதிசயம் நடக் கும். - இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/76868.html#ixzz2vtRiSh7g

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


என்ன அளவுகோல்?

அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி வழங்கலாம்; ஆனால் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது. நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கினாலும் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்று தமிழகத் தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

கட்சி நிர்வாகிகளா? பொது மக்களா? என்பதற்கு என்ன அளவுகோலை வைத்துள்ளார்களோ தெரிய வில்லை; தண்ணீர்ப் பாட்டில் வாங்கினாலும் அது தேர்தல் கணக்கில் சேருமா? என்று தெரியவில்லை. தண்ணியிலும் பல வகை உண்டே!

மோடியின் கைத்தடி பேசுது

கேள்வி: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் ஞான தேசிகன்?

பதில்: அவர் முன் மொழிந்ததை நான் வழி மொழிகிறேன். - துக்ளக் 19.3.2014,பக்கம் 9

பி.ஜே.பி.யின் மோடி தான் பிரதமராக வர வேண் டும் என்று ஊசி முனையில் தவம் இருக்கும் சோவின் கருத்து இது. ஒருவனைத் தெரிந்து கொள்வதற்கு அவன் நண்பன் யார் என்று காட்டுங்கள் என்பது பொதுவான பழமொழி.

கூட்டுக் கம்பெனி அதிபர்கள்

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவன், கிருஷ்ணகிரி தொழிலதிபர் மஞ்சுநாத், ஒசூர் தொழிலதிபர் அசோக் நாராயணன் ஆகியோர் பி.ஜே.பி.யில் இணைந்தனர். பிஜேபி என்பதே கார்ப்பரேட் கம்பெனி தொழிலதிபர் களின் கூடாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமே! பிஜேபி என்றாலே உயர் ஜாதி - பணக்காரர்களின் கூட்டுக் கம்பெனி லிமிடெட் என்பது இன்னும் புரியவில்லையா?

ஜோஷி புலம்பல்!

உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதி பா.ஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் சொந்த தொகுதியாகும். இங்கு, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்டால், உ.பி மற்றும் அண்டை மாநிலமான பீகாரில் செல்வாக்கு அதிகரிக்கும் என பா.ஜ தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் வார ணாசியில் மீண்டும் போட்டியிடுவதில் பிடிவாதமாக உள்ளார் ஜோஷி. அதை விட்டுக் கொடுக்கும்படி ஜோஷியை பா.ஜ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோபத்தை வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத் தினார் முரளி மனோகர் ஜோஷி. பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பாராட்டு விழா வாரணாசியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜோஷி பேசுகையில், இந்தியாவில் பிறந்தது, பிரயாக் மற்றும் காசி போன்ற இடங்களில் வாழ்ந்தது என் நல்ல வாய்ப்பு. ஆனால் நான் செய்த பாவம் என்னை அரசியலிலும், நாடாளுமன்றத்திலும் இருக்க வைத்து விட்டது.

நாடு முழுவதும் ஒரு அலை வீசுகிறது. அது உங்களுக்கு தெரியுமோ... தெரியாதோ... ஆனால் கடவுள் விஸ்வ நாத்துக்கு எல்லாம் தெரியும் என சிரித்தபடி கூறினார் ஜோஷி. வாரணாசியை விட்டுக் கொடுக்கும் படி பா.ஜ தலைவர்கள் வலியுறுத்துவதால் ஏற்பட்ட மனவேத னையை, முரளி மனோகர் ஜோஷி இசை விழாவில் இப்படி கொட்டித் தீர்த்து விட்டார் என கூறப்படுகிறது. எல்லாம் காசி விசுவநாதர் பார்த்துக் கொள்வார் என்று மூலையில் ஒடுங்கிக் கிடப்பதுதானே யார் தடுத்தது?

புலம்புகிறார் சோ

பா.ஜ.க. உட்கட்சிப் பூசல் ஓயவில்லையோ என்று கருதும்படியாகவே, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தலைமைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள் அமைந் துள்ளன. இவர்களைப் போன்ற முக்கியஸ்தர்கள் தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன விதங்களில் மோடிக்குத் தொல்லைகள் தரப் போகிறார்களோ! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று விட்டால் கட்சிக்குள் யார் யாரிடம் இருந்து, என்னென்ன தொந்தரவுகள் தலைதூக்குமோ? கட்டுப்பாடு சீர்குலைவு அக்கட்சிக்கு நல்லதல்ல.
- துக்ளக் 19.3.2014

சு...மூ...க....ம்!

பா.ஜ.க. கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்கிறது - நடக்கிறது என்று பராக்குப்பாடுகிறார் திருவாளர் இல. கணேசன்! ஆனால் நடப்பது என்ன? ஒரே தொகுதியை பல கூட்டணிக் கட்சிகள் கேட்கும் விசித்திரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பா.ம.க.வின் பிடிவாதத்தால் தொகுதி பங்கீட்டில் இழுபறி என்று தினத்தந்தி கூறுகிறது. நல்ல சு...மூ...க...ம் நல்ல ச...மூ....க....ம்!

இடதுசா....ரி!

மதவாத எதிர்ப்பை இடதுசாரிகள் முன்னெடுத்துப் பேசுகின்றனர். சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத் கென்னடி என்பவர் தலைமையிலான புதிய மார்க்ஸிஸ்டு கட்சி வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரிக்குமாம். மார்க்ஸிசத்தை எந்தப் பள்ளியில் இவர் படித்தார் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/76890.html#ixzz2vzD0pdqZ

தமிழ் ஓவியா said...


செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970

Read more: http://viduthalai.in/page-2/76898.html#ixzz2vzDScqTW

தமிழ் ஓவியா said...


மே. ஜெர்மனி கிண்டல் செய்கிறது!


சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் பெரும் பஞ்சம். அப்பொழுது மேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்று இந்தியாவைக் கிண்டல் செய்து எழுதி இருந்தது. பஞ்சமோ பஞ்சம் என்று இந்திய மக்கள் தவிக் கிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் கூட எலியைக் கடவு ளாகக் கருதி, அதற்கு உணவுப் பண்டங்களை வைத்து படைக்கிறார்களே! என்று எழுதி இருந்தது.

கட்டுரையுடன் மட்டும் நிற்கவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எடாவா என்ற இடத்தில் உள்ள எலிச் சாமி கோயிலில் எலிக்குப் படையல் போடுவதை அப்படியே படம் பிடித்தும் போட்டு விட்டது.

இதைக் கண்டதும் நமது நாட்டு வைதீகப் புலிகள் ஓலமிட்டன. மதவாதிகள் மனம் புண்படுவதாக மூக்கால் அழுதன. நாட்டு உறவையே துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கூடக் கூறினர். இந்தியாவின் வெளி விவகார இலாகா மேற்கு ஜெர்மனியில் உள்ள நமது தூதுவர் மூலம் அந்நாட்டு அரசை விளக்கமும் கேட்கச் செய்தது.

ஆனால், அந்தப் பத்திரிகையோ, நாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை; மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிவிட்டது. அதற்கு பிறகு இந்தச் செய்தி உண்மையா என்று கண்டறிய உ.பி மாநிலம் எடாவா மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது. அவரும் அது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றும் கொடுத்தார்.

உயர்ந்த ரக தானியத்திலும், நெய்யிலும் பண்டங்கள் செய்யப்படுவதாக ஜெர்மனி பத்திரிகை கூறுவது தவறு. சாதாரண ரகத் தானியத்தையும், டால்டாவையுமே பயன்படுத்துகிறார்கள். வெள்ளித் தட்டிலே தின்பண்டங்களைப் படைக் கிறார்கள் என்பதும் தவறு; பித்தளைத் தட்டிலேதான் படைக்கிறார்கள்! என்று அந்த அறிக்கையிலே கூறப்பட்டு இருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzEwZJ9u

தமிழ் ஓவியா said...

காட்டுமிராண்டி ஏன்?

நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.

இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.

நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFEP1tJ

தமிழ் ஓவியா said...

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFSIHVs

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு ஏன்?


மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்கிறார்களே, அது ஏன் தெரியுமா? மனிதன் செத்தவுடன், அவன் உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம், செடி, கொடிகளில் ஒளிந்து இருக்குமாம், அது உயிருள்ள மற்ற மனிதர்களையும் தொந்தரவு செய்யுமாம்.

அதற்காகத் தான் இந்தத் தாரை, தப்பட்டை முழக்கங்களாம். சத்தத்தைத் கேட்டு, அந்த ஆன்மா ஓடு ஓடு என்று ஓடிவிடுமாம்! இப்படி ஒரு மூட நம்பிக்கை.

சரி, நமக்கு ஒரு சந்தேகம். பார்ப்பனன் வீட்டில் எழவு விழுந்தால் இத்தகைய சத்தங்கள் இல்லாமல், அடுத்த வீட்டுக்குக் கூட தெரியாமல் தூக்கிக் கொண்டு போகி றார்களே - அவாள் ஆத்மா மட்டும் பக்கத்தில் ஒளிந்து கொண்டு தொந்தரவு செய்யாதா?

செத்தும், நம் மக்கள் செலவு செய்து, கடன்பட்டு அல்லல் பட வேண்டும் என்று எவ்வளவு நயவஞ் சகமாக இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFdZoDZ

தமிழ் ஓவியா said...

ஒரு எடுத்துக்காட்டு!

19.6.1977 தேதிய ஆனந்த விகடனில் 77ஆம் பக்கத்தில், கம்ப்யூட்டரைத் தோற்கடித்த கணித மேதை! என்ற தலைப்பிட்டு இந்தியா டுடே என்ற ஏட்டில் வந்த கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

கணித மேதை சகுந்தலாதேவி அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள உலகிலேயே மிக வேகமாகக் கணக்குப் போடும் கம்ப்யூட்டர் ஒன்றை போட்டியில் தோற்கடித்து, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோயின் என்ற பட்டப் பெயருடன் திரும்பியிருக்கிறார்.

சகுந்தலாதேவி ஏன் தன்னுடைய கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை? நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: கணவனும் மனைவியும் உண்மையிலேயே சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

சாதாரணமாக திருமணமானதற்குக் அடையாளமான அணிகலன்களைக் கூட நான் அணிவதில்லை. இதைப் படித்த பிறகாகிலும் பெண்கள் ஆண்களுக்கு தாம் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, தாலி கட்டிக் கொள்ளும் பழக்கத்தினை வெறுத்து ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.

-கிருஷ்ணவேணி, (தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டவர்) பண்ருட்டி

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFmJckY

தமிழ் ஓவியா said...

நேருவின் எதிரிகள்!

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் இறந்த பிறகு எனக்கு மதச்சடங்குகளுடன் அடக்கம் செய்யக் கூடாது என்று நேரு தனது உயிலில் கூறியிருப்பது தெரிந்ததே. அப்படி இருந்தும் அவர் இறந்த பிறகு மதானுச் சாரங்களுடன் மதச் சடங்குகள் செய்யப்பட்டுத் தான் அவர் எரிக்கப்பட்டார்.

நேருவின் விருப்பத்திற்கு எதிராக இப்படி நடந்ததற்கு இந்திராகாந்தியும், அன்றைய உள்துறை அமைச்சர் நந்தாவும் தான் காரணம் என்று நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த எம்.ஓ. மத்தாய் தெரிவித்துள்ளார்.

நேரு மறைவதற்கு முன்னர் நேருவின் சாவை முறியடித்து அவர் ஆயுள் நீள்வதற்காக 4,25,000 முறை ஆயுள் நீடிப்பு மந்திரங்கள் ஓதப்பட்டதாக நந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நேருவின் தங்கை திருமதி விஜயலட்சுமி பண்டிட் எதிர்ப்பு தெரிவித்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் என்று மத்தாய் தெரிவித்திருக்கிறார்.

தகவல்: நேருவிற்குப் பிறகு இந்தியா என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFwEHoA

தமிழ் ஓவியா said...

மத விபச்சாரம்

ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.

பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzG9rdlR

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சாந்தா இராமமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் குன் னூர் டாக்டர் இரா.கவுதமன் (பெரியார் மருத் துவர் அணி பொறுப்பாளர்) அவர்களின் அன் னையாரும், கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அவர்களின் மாமியா ருமான சுயமரியாதைச் சுடரொளி மானமிகு திருமதி சாந்தா இராமமூர்த்தி அவர்கள் (வயது 82) குன்னூரில் இன்று (14.3.2014) விடியற் காலை 4.30 மணியளவில் டாக்டர் கவுதமன் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பது மிகவும் துன்பத்திற்கும், துயரத்திற்குமுரியது ஆகும்!

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் வழியில் கொள்கை வாழ்வு வாழ்ந்தவர் அம்மா சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

மாநாடுகள், போராட்டங்கள் எல்லாவற் றிலும் கலந்துகொண்டு உயிர் மூச்சடங்கும் நிலையிலும் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து காட்டியவர் மறைந்த கொள்கைப் பற்றாளர் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் என்ற அறக்கட்டளைக்குச் சொந்த மான தருமபுரி பெரியார் மன்றம் - தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் அயரா உழைப்பால் உருவானதாகும். அந்த மன்றத் தின் மேற்பார்வை பொறுப்பாளராக இருந்து, நாணயமாக கணக்குகளைத் தவறாமல் தலைமைக்கு அனுப்பி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அம்மையார் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு கமிட்டி, மாநாடு, இயக்க நிகழ்வுகள் எது நடந்தாலும் குடும்பத்தாரோடு - தனது தளர்ந்த உடல் நிலையிலும் கலந்து கொள்ளத் தவறாதவர்.

அவரை கடைசியாக நேரில் அரூர் திரு மணத்திற்கு 3.2.2014 அன்று சென்ற பொழுது தருமபுரியில் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புப் பெற்ற நிலையில், இப்படி அலைகிறீர்களே உங்கள் உடல்நிலை என்னாகும்? என்று உரிமையுடனும், அன்புடனும் கடிந்து கொண்டவர்.

அவரது அருமைச் செல்வங்கள் மகன் டாக்டர் கவுதமன்-மருமகள் டாக்டர் பிறைநுதல்செல்வி, மகள் மலர்விழி-மருமகன் பழனியப்பன், மகன் டாக்டர் புகழேந்தி-மருமகள் மீனாட்சி, மூத்த மகள் மல்லி, பெயரப் பிள்ளைகள் அனைவரும் அவரை மிகவும் நன்றாகக் கவனித்து உடல்நலம் காக்க கடைசி வரை பாடுபட்டது, ஒரு சிறந்த குடும்பத்தின் கடமை உணர்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கானதோர் எடுத்துக்காட்டாகும்!

அவரது மறைவால் வாடிடும் அவரது குடும்பத்தினர், அவரது சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டு, அவரது சிறந்த கொள்கை வாழ்வுக்கும், தொண்டுக்கும் நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கி றோம்.

சென்னை
14.3.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

குறிப்பு: நாளை (15.3.2014) மதியம் ஒரு மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதி நிகழ்ச்சியில் கழகத் தலைவர் பங் கேற்பார்.

Read more: http://viduthalai.in/page-8/76936.html#ixzz2vzGoeXsg

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தில் பெண்கள் நிலை?


1. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத்தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

3. இந்த உலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதினால்தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள். - மனு 2-213.

4. பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே. - பாரதம் அனுசான்ய பருவம்

5. பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவை எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. - பாரதம் 43-22.

6. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது - மனு 9-15

7. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவதஸ்கந்தம் 4-14-42

Read more: http://viduthalai.in/page2/76953.html#ixzz2w55Ze23e

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதி களையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங் களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம்.

1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?
நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங் களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்கா விட்டால், கல்யாணத்துக்கு வரச் சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் இவை.

2. From Address மாற்றி மின்னஞ் சல் அனுப்புவது எப்படி?
மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ் சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப ண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இவை.

3. To, Cc, Bcc என்ன வித்தியாசம்?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் அய்டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc – என்ன வித்தியாசம் என்பதாகும்.

4. Gmail ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பா லான பயனர்கள் பயன்படுத்தும் இமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail /ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.

5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?
நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களி டம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படிGmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு ஆகும்.

6. Attach செய்ய முடியாத File-களை Attach செய்வது எப்படி?

நண்பர்களுக்கு ஏதேனும் File -களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவாகும்.

7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர் கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத் திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக் கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு.

இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை கிநீநீமீ செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக் கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் இது.

8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பல வற்றின் அர்த்தம் தெரியாமல் இருப் போம். அதே ஜிமெயில் முழுவ தையும் தமிழில் மாற்ற முடிந்தால்? இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.

9. ஜிமெயிலில் Undo Time Limit - அய் அதிகரிப்பது எப்படி?
ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படு கிறது. அதே போல ஒரு மின்னஞ் சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit – அய் எப்படி அதிகரிப் பது என்ற பதிவுதான் இது.

Read more: http://viduthalai.in/page3/76957.html#ixzz2w55mo3g6

தமிழ் ஓவியா said...


வேதங்களில் திராவிடர் ஒழிப்பு!


(வேத காலத்தில் ஆரிய - திராவிடப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பதற்கு வேதங்களே தக்க சான்றாகும். வேதங்களுக்குக் காலம் இல்லை; கடவுள் அருளியது என்பதெல்லாம் அசல் பார்ப் பனக் கட்டுக் கதைகள் என்பது அதில் வரும் குறிப்புக்களைப் பார்க்கும் எவருக் கும் புரியும். ஆரியர்கள் படையெடுத்து வந்த பிறகு தான் அவை தொகுக்கப்பட்ட ஆரிய நூல்கள் என்பது சிந்திக்கும் எவருக்கும் தெளிவாய்த் தெரியும்.

அவ்வேதங்களில் திராவிட மக்களை, பூர்வீகக் குடிகளை அவர்கள் எவ்வாறு அழித்தனர், ஒழித்தனர் என்பது கீழ்வரும் சுலோகங்கள் மூலம் எளிதில் விளங்கும் என்பதால் அவற்றை இங்கே திரட்டித் தருகிறோம்.

ஓ, உலகம் போற்றும் இந்திரனே, ஸுஷ்வருவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயி ரத்துத் தொண்ணூற்றியொன்பது படை களையும் நீ உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர் களுக்கு உதவி புரிந்தாய்.

(ரிக்வேதம், மண்டலம் 1 மந்திரம் 53, சுலோகம் 9)

ஆரிய அரசன் தாபிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ! இந்திரனே! எமனுலகுக்கு அனுப்பினாய்!

(ரிக் வேதம், மண்டலம் 4, மந்திரம் 30, சுலோகம் 21).

ஓ, தீரனான இந்திரனே, உன் வலை பிரம்மாண்டமானது; ஆயிரக்கணக்கான வர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலு டையது; ஒன்று, பத்து, நூறு,ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் நூற்றுக்கணக்கான, லட்சக்க ணக்கானவர்களைக் கொன்றாயே!

(அதர்வண வேதம், காண்டம் 8, மந்திரம் 8, சுலோகம் 7).

ஓ, இந்திரனே! ஸோமனே! ராட்சசர் களை எரி! எரி!! நசுக்கு! நசுக்கு!! இருண்ட வனாந்திரங்களில் ஒன்று, பத்து, நூறாய்ப் பெருகி வருகிற அந்த அசுரக் கூட்டங் களை அடக்கு! அடக்கு!! சின்னா பின்னப் படுத்து; மடையர்களை அக்கினி ஜ்வாலை யால் சுட்டுப் பொசுக்கு! சித்திரவதை செய்! துண்டு துண்டாக வெட்டு!

(இது ரிக்வேதம் 7ஆவது மண்டலம், 104வது மந்திரம், சுலோகம் 8).

ஓ, இந்திரனே! ஸோமனே அந்த அசுரக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையே உருவானவர்களை அக்கினி குண்டத்தில் வைத்து நீர்ப்பானையில் வேக வைப்பது போல் அவித்துக் கொல்! பிராமண துரோகிகளான அந்தப் பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி ஹிம்சிப்பாயாக!

(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 1).

ஓ இந்திரனே! ஓ, ஸோமனே! வான மண்டலத்திலிருந்து கொடிய ஆயுதங் களைக் கீழே சொரிவீர்களாக; பூமியிலி ருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! பிரதி தினமும் பெருகிவரும் ராட்சசக் கூட்டங் களை எதிர்ப்பதற்காக மலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான அக்கினி யாஸ்திரங்கள் தோன்றும்படி அருள்புரிவீர்களாக!

அசுரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசுக்க! பிற்கால சந்ததிகள் அழிக! பூமி தேவி அசுரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்!

(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 4).

Read more: http://viduthalai.in/page3/76956.html#ixzz2w55xRWCi

தமிழ் ஓவியா said...


டாக்டர் முத்துலட்சுமியை அய்யர் ஆக்கி மகிழும் பார்ப்பன ஏடுகள்

பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்து போராடி அதை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் முத்துலட்சுமி.

அப்போது தேவதாசி முறையை ஆதரித் தும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையா கொண்டு வந்த மசோதாவை எதிர்த்தும் காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி அய்யர்,
மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது.

பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக் கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும். என்றார்.

அப்படியானால், இனி அந்த புனித மான வேலையை உங்கள் சமூகப் பெண் களை வைத்துச் செய்து கொள்ளுங்கள் என்று பணிவோடு பதிலடி கொடுத்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

ஆனால், இன்றைக்கு தினமணி, தினகரன் உட்பட பல பார்ப்பன பத்திரி கைகள், இந்த செய்திகளையும் பெரி யாரின் அரசியலில் அவரின் பங்களிப் பையும் இருட்டடிப்பு செய்து அவரின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அவரை ஒரு பார்ப்பனராக சித்திரிக் கிறார்கள்.

பெரியார் வழியாக அவர் அரசியல் அறிவு பெற்றதினால்தான் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டம், தேவதாசி எதிர்ப்பு மசோதா, தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர் வுப் போராட்டம் முதலியவற்றை சிறப் பாக செய்தார்.

பார்ப்பனர்களோ, டாக்டர் முத்து லட்சுமியின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அழுத்திச் சொல்கிறார்கள்.

ஆனால், டாக்டர் முத்துலட்சுமி திரும ணத்திற்கு முன்பும் பின்பும் தன் பெய ருக்கு பின் அய்யர் என்று போட்டுக் கொள்ளவில்லை. அதை இழிவாக கருதிய அவர்தான், தன் கணவருக்கு பின்னால் இருந்த ரெட்டி என்கிற பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.

ஜாதி படிநிலையில் அய்யர் என்பதே உயர்ந்தது. ரெட்டி ஒரு சூத்திர ஜாதி.

ஆனால், அய்யரை விட ரெட்டியை அவர் உயர்வாக அல்லது மரியாதையாக கருதியதற்கான காரணம் புரிய வேண்டு மானால் அவரின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இசைவேளாளர் சமூகத்தை, தேவதாசி சமூகமாக நடத்திய பார்ப்பனக் கும்பல், இசைவேளாளர் சமூகத்திலிருந்து வந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை பார்ப்பனராக சித்தரிக்கிறது,

இந்த நாட்டுக்காக பாடுபட்ட பார்ப் பன சமூக முற்போக்காளர்கள் வரிசை யில் கணக்கு வைத்துக் கொண்டு பார்ப் பனீயத்தின் சதியை மறைக்க முயற்சிக் கிறது. அவர் தன்னை பார்ப்பனராக உணர்ந்திருந்தால், சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து, உங்கள் சமூகப் பெண்களை வைத்துச் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் பேச வேண்டும்?

அது மட்டுமல்ல அவர் பார்ப்பனராக இருந்திருந்தால், பெண் விடுதலைக் குறித் தும் பெண் கல்வி குறித்தும் தீவிரமாக எழுதிய பாரதி, 1912 ஆண்டே இந்தியா வின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி குறித்து பாராட்டி பக்கம் பக்கமாக எழுதியிருப் பாரா? ஆனால், உலகத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த நம் மஹாகவியோ, உள்ளுர் பெண்ணின் அகில இந்திய சாதனை குறித்து, ஒரே ஒரு வார்த்தைகூட எழுதவில்லை.

- வே.மதிமாறன்

Read more: http://viduthalai.in/page4/76958.html#ixzz2w56DtS1M

தமிழ் ஓவியா said...


மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹாலிவுட் நடிகர் சாட்டை!

ஹாலிவுட் நடிகராகிய கிறிஸ் ஓடவ்ட் மதம் குறித்து கூறும்போது, மதமானது பிறரைத் தாக்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி கொண்டதாகும் என்றார்.

பிரைய்ட்ஸ்மெய்ட்ஸ் படத்தின் நாயகன் கிறிஸ் ஓடவ்ட் அவருடைய நாத் திகக் கண்ணோட்டத்தில் இவ்வாறு கூறு கிறார். ஆனாலும், அவருடைய இளமைக் காலங்களில் குறைந்த சுதந்திரத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார்.

இப்போது மதக்கோட்பாடுகள் மனிதனின் வளர்ச்சியை முடக்குகின்றன. வெள்ளை மாளிகையிலிருந்து அவர் இனத் தைச் சேர்ந்த கிறித்துவ மதவாதிகளைத் திருப்திபடுத்த எல்லைகளைக் கடந்து கிறித்துவத்தின் மீதான செயலைச் செய்வ தாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாமீது குற்றம் சாட்டுகிறார். கிறிஸ் ஓடவ்ட் மதம் சொல்லும் இயற்கைக்கு மேலானதாக சொல்லப்படும் கடவுள் மீதான நம்பிக் கையை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

கிறிஸ் ஓடவ்ட் பிரிட்டிஷ் ஜிக்யூ என்கிற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: என் வாழ்நாளில் மற்ற வர் விருப்பத்தினுள் நுழைவதில்லை என்று இருந்துள்ளேன். மற்றவர் நம்பு கின்ற உரிமையை மதிக்கிறேன். கால ஓட் டத்தில் மதக்கருத்துக்களின் அழுத்தங் களால் சுதந்திர சிந்தனை குறைவதாகக் கருதுகிறேன்.

மதக்கருத்துக்கள் உலகைப் பாழ்படுத்துவதைப் பார்த்துக் கொண்டி ருக்க முடியாது, மற்றவர்களும் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதத்தால் இனவெறி ஏற்படும்போது, திருப்பு முனையாக அது தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.

இயற்கைக்கு மேலான தென்கிற மதக் கருத்துகள் பைத்தியக் காரத்தனமானவை என்று கூற அனுமதிக் கா விட்டால் அனைவரையும் பைத்தியக் காரர்களாக ஆக்குகிறார்கள் என்றுதான் பொருள். மத நம்பிக்கையாளரை, கடவுள் நம்பிக்கை உள்ளவரை அமெரிக்க அதிப ராக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆவி உல கில் மனிதன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆவி உலகிற்கே போகட்டும்! பராக் ஒபாமா கடவுள்மீது நம்பிக்கை உள்ளவ ராக எந்தவகையிலும் நான் கருதவில்லை. இவ்வாறு ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஓடவ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/76959.html#ixzz2w56P2uUM

தமிழ் ஓவியா said...


சொன்னார்கள்

நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந் தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன முள் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை.
- எமிலி போஸ்ட்

மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பா னேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது.
- கார்டினல் நியூமென்

பிரச்சினைகள் என்பது முன்னேற் றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வரா தீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்

ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்

நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி

பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம்.
- டாவெநன்ட்

எப்படிப் படிப்பது என்பதைத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும், தன் னுடைய சக்தியால், தன்னையே பெரிதாக்கிக் கொள்ள, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வழிகளைப் பெருக் கிக் கொள்ள தன்னுடைய வாழ்க் கையை முழுமையானதாக, முக்கியத் துவமும் மகிழ்ச்சியும் உடையதாக ஆக்க முடிபவனாகிறான்.
- ஆல்டுவஸ் ஹக்ஸ்லி

அதிக எச்சரிக்கையுள்ளவன் சிறிய அளவே நிறைவேற்றுவான்.

@@@@@@@@@

வெற்றி என்பது காலந்தவறாமை, திட்ப நுட்பம் என்ற இரண்டு மிக எளி மையான பெற்றோர்களின் குழந்தை.
- லாங்பெல்லோ

கடமை என்ற அடித்தளத்தின் மேல் குடிகொண்டுள்ள ஒரு புன்முறுவல். உலகத்திலேயே மிகவும் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாகும்.
- ஜே.டி. ராக்பெல்லர்

மகிழ்ச்சிக்கு வழி மற்றவர்களை மகிழ்ச்சியுடைய வர்களக்குவது. இறந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம் ஒரு குறைபாடற்ற நல்ல நிகழ்காலத்தை அழிக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page4/76960.html#ixzz2w56XHCz4

தமிழ் ஓவியா said...


சாக்ரட்டீஸின் பொன் மொழிகள்


தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையைப் பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையைப் பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடுவோமா?

ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயற்கையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது

விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களைச் செய்திருக்கிறபோது நாமும் தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடு கிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது.

தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமாக செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இவை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page5/76961.html#ixzz2w56yo66H

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு என்பது

பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற வினாவிற்கு ஓரிரு சொற்களில் பொருள் கூறுவது கடினமான செயலேயாகும்.

அச்சொல்லுக்குரிய பொருளாக அகராதிகள் கூறும் பொருள்கள் சில பின்வருமாறு அமைந்துள்ளன.

பகுத்தறிவு எனப்படுவது பொருட் களின் / நிகழ்வுகளின் / கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற் றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வ மான புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப் பொருளை அல்லது உண்மையைக் கண் டறிவதே... என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.

திருவள்ளுவர் அறிவு என்பதற்கு விளக்கம் கூறும் போது,

எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என்றும்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355)
என்றும் அறிவுக்கு விளக்கம் கூறுகிறார்.

அவர் அறிவுக்குக் கூறும் இவ்விளக் கம் பகுத்தறிவுக்கும் பொருந்துவது போலவே உள்ளது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது.

அறிவு என்றாலே பகுத்தறிவு என்று தான் பொருள். அதிகப்படியான அறிவைப் பயன்படுத்துகிற செலுத்துகிற முறையே பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள் என்றதொரு விளக்கமும் காணப்படுகிறது.

நம்மால் நம்ப இயலாதவற்றை மூடநம்பிக்கை எனப் பெயரிட்டு அம்மூட நம்பிக்கைகளைப் புறம் தள்ளுவதே பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தருகிறது இன்னொரு வலைத்தளம்.

பகுத்தறிவு என்பது காரண காரியங் களை மனத்திற்கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்.

உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு என்கிறது கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.

பகுத்தறியும் திறன், நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்வதை அடிப்படை யாகக் கொண்ட முறை என்கிறது மற்றோர் அகராதி.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பகுத்தறிவு சிந்தனைகள் செவ்வியல் படைப்புகளில் (உயர்திரு இரா.தாமோதரன் (அறவேந்தன்) அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு நூலில் 96 ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57QcTdt

தமிழ் ஓவியா said...

தமிழன் யார்? பகுத்தறிவுத் திறன் இழந்ததேன்

உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல்நாட்டு மக்களும், சீன, சப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறைகண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் - தென்னாட்டுத் திராவிட மக்கள் - கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலை தாழ்ந்து கிடக்கின்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு,

அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழி கண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழின் திறன் கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் திருக்குறள் என்னும் பொது அறம் விளக்கும் நூல் வடிவு பெறக்கண்டு, பண்பாட்டின் உயர் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று உலகுகண்டு, தென்னகத்தின் கிழக்கிலும், மேற்கிலும் அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகளின் துறைமுகங்களில் தமிழர் தம் வாணிகக் கலங்களின் கொடிகள் பறக்கக்கண்டு, இணையின்றி வாழ்ந்த இனந்தான், படிப்படியாய்ச் சரிந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தும் திறன் இழந்து அல்லலுற்று நிற்கின்றது இடைக்காலம் முதலாக.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் நூலில் 69 ஆம் பக்கத்தில்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57Wvx3j

தமிழ் ஓவியா said...

இலட்சியப் பெண் வளர்ந்த விதம்

1917 நீதிக்கட்சி அரசியல் பார்ப்பனரை ஒரு பொழுதும் நம்பாதீர்கள் - (சர்)பிட்டி தியாகராயர்

1926 சுயமரியாதை இயக்கம் புரோகி தப் பார்ப்பனரைப் பணியாதீர் - ஈ.வெ. இராமசாமி

1937 இந்தி எதிர்ப்பு இயக்கம் பார்ப் பனர் மொழிகளை (இந்தி, சமஸ்கிருதம்) ஏற்காதீர் - மறைமலை அடிகளார்

1939 நாட்டுப் பிரிவினை இயக்கம் ஆரியர் ஆட்சி, கலை, மொழி, நாகரிகம் எதற்கும் இடம் கொடாதீர் - சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

1944 திராவிடர் கழகம் ஆரியம் (வைதி கம்) ஆபத்து மிக்கது அரசியல், சமூக வியல், பொருளியல், வாழ்வியல் ஆகிய அனைத்திலிருந்தும் அதனை ஒழித்துக் கட்டுங்கள் - பெரியார் ஈ.வெ.இராமசாமி

1949 திராவிட முன்னேற்றக் கழகம் ஆரியமே (வர்ணாஸ்ரம வைதிகம்) பாசிசத்தின் பிறப்பிடம் வளர்ந்து வரும் ஆரிய பாசிச ஆட்சியிலிருந்து விடுபட வாழ்வு பெற திராவிட நாடு திராவிட ருக்கே என்பதை நிலைநாட்டுங்கள்.

- அறிஞர் அண்ணாதுரை (இனமானப் பேராசிரியப் டாக்டர் அன்பழகன் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம், பக்கம் 15)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57djztS

தமிழ் ஓவியா said...

சுப்ரபாதம்

சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக் கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா? இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார்; இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டி ருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா. ஆனால்... நாமோ றீஷீரீவீநீ இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.

இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வா ரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது.

ஆனாலும், சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...

(இந்து மதம் எங்கே போகிறது? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - பக்கம் 243)

தொகுப்பு: க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57kWkrd

தமிழ் ஓவியா said...


தி.மு.க. - அதிமுக தேர்தல் அறிக்கைபற்றிய கருத்தென்ன?


கேள்வி: வேத வகுப்புகளை இன்றும்கூட நடத்திக் கொண்டு இருக்கிறார்களே? - சு. சிவலிங்கம், ஜாபர்கான்பேட்டை, சென்னை

பதில்: பார்ப்பனீயத்தின் வேரைப் பாதுகாப்பதுதானே அவா ளின் முதல் கவலை. அதனால் நடத்திக் கொண்டுள்ளார்கள்!

கேள்வி: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்? - அ. அய்ன்ஸ்டின், போரூர்

பதில்: உண்மையான நீரோட்டம் - தி.மு.க. தேர்தல் அறிக்கை. கானல் நீரோட்டம் - அ.தி.மு.க.வின் அறிக்கை.

கேள்வி : காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்றால் ஏன் கோபம் வருகிறது அவர்களுக்கு? - பா. துக்காராம், அவினாசி

பதில்: உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் பலருக்கு என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?

கேள்வி: பிள்ளையார் என்ற கடவுளை எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
- வி. முருகேசுவரி, வேலூர்

பதில்: எதுவும் கற்பனை என்கிறபோது அதை யார் எப்படியும் பயன்படுத்தலாமே!
சில பிள்ளையார் - திருமணம் ஆகாதவர்; சில பிள்ளையார் - திருமணம் ஆனவர்
இத்தியாதி! இத்தியாதி!

கேள்வி: யாராலும் அழைக்கப்படாத விருந்தாளியாக தமிழ்நாடு காங்கிரஸ் ஆனதுபற்றி... - பி. மதிவாணன், சென்னை-112

பதில்: அவர்கள் குறிப்பாக காங்கிரஸ் மேலிடம் சிந்தித்து, செய்த அல்லது செய்து வரும் தவறுகளுக்குப் பரிகாரம் - கழுவாய் - தேடிட முன் வந்தால் சரி!

கேள்வி: பி.ஜே.பி. தே.மு.தி.க. - பா.ம.க. ம.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டாலும் தேர்தலில் ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன் - தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - துரை. பாண்டியன், அச்சிறுபாக்கம்

பதில்: இயல்புக்கு ஒருவருக்கொருவர் எதிரும் புதிரும் என்பதால் என்னதான் ரிங்க்மாஸ்டர் இருந்தாலும், இயல்பை மாற்றிக் கொள்ள முடியுமா - அத்தகையவர்களால்?

கேள்வி: ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கேட் கும் போது நாமும் நாத்திகர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டால் என்ன? - எஸ். நல்லபெருமாள், வடசேரி

பதில்: நாத்திகர்கள் ஏற்கெனவே தனிமையாக்கப் படுத்தப்பட்டுள்ளதால் தனி இடஒதுக்கீடே தேவையில்லை!

கேள்வி: மோடி பிரதமராக வேண்டும்; இல்லாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற சோவின் கூற்று, எதனைக்காட்டுகிறது? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அவருடைய உள் ஆசை, வெளி ஆசை இரண்டையும் காட்டுகிறது!

கேள்வி: இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி உணவு பொருட்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளாரே? (பழங்கள், காய்கறிகள் மட்டுமே ரூ.13,309 கோடி அளவு பாழாகிறதாம்).

பதில்: அதைவிட அபிஷேகம் கல்லுக்கு என்ற முறையில் பாழாகும் பால், பழங்கள், காய்கறிகள் பற்றியும் சேர்த்தால் பல கோடி (தஞ்சை பெரிய கோயிலிலேயே ஆண்டுதோறும் பாழடிக்கப்படும் கணக்கும் சேர்த்தால்) எவ்வளவோ வரும்!
சட்டப்படி இவை குற்றமாக்கப்படல் வேண்டும்.

கேள்வி: பன்றிமீது வாகனம் மோதி விபத்தானால் தரித்திரம் என்கிறார்களே? வாகனத்தைக்கூட விற்று விடுகிறார்களே - பன்றி என்ன அவ்வளவு மோசமான மிருகமா? - தி. இரமணன், த.பேட்டை, சென்னை-81

பதில்: என்னங்க.. இப்படி கேட்கிறீங்க? அது வராக அவதாரமாயிற்றே! ஸ்ரீமான் ஸ்ரீஜத் மகாவிஷ்ணு அல்லவா பண்ணி ஆக மாறியுள்ளார்?

அதெப்படி கடவுள் அபசகுனமாவார்? (அட அறிவுக் கொழுந்து பக்தர்களே!)

Read more: http://viduthalai.in/page8/76966.html#ixzz2w57w8umD

தமிழ் ஓவியா said...

அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?

தினமலரில் இன்று ஒரு அக்கம் பக்கம் செய்தி: மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி பி.ஜே.பி. சார்பில் நெருங்கிய பிரமுகர்களுக்கு டில்லியில் விருந்தொன்று அளிக்கப்பட்டது. அத்வானியும் அங்கு வந்தார்.

தனக்கென ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்து யாருடனும் பேசாமல் தட்டிலிருந்த இனிப்புகளை சுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரமுகர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானியோ ஜிலேபி சாப்பிட அழைத்தனர்! அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.

அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஜிலேபி டேஸ்ட் நன்றாக இருக்கிறதா எனக் கேளுங்கள் அதற்குப் பதில் சொல்லுகிறேன் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டாம்! (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) என்று கூறியுள்ளார் அத்வானி!

அங்கு ஜிலேபி என்றால் தமிழ்நாட்டில் என்னவென்றால் தன்னிடம் கூட்டுச் சேர வந்துள்ள சில கட்சிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு!).

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 14.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w591z98I

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

(விடுதலை, 10.8.1961

Read more: http://viduthalai.in/page-2/77016.html#ixzz2w59cjV3P

தமிழ் ஓவியா said...


அத்வானிக்கு ஜிலேபி

- குடந்தை கருணா

சமீபத்தில் புது தில்லியில் பாஜக சார்பில், முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்வானி தாமதமாக கலந்து கொண்டாலும், விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்து, அங்கே வைக்கப்பட்ட ஜிலேபியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அரசியல் குறித்த கேள்விகளுக்கு, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரி யாது; ஜிலேபி சுவையாக இருக்கிறதா என்று வேண்டுமானால் கேளுங்கள்; சொல்கிறேன்.

என்னை ஜிலேபி சாப் பிடத்தான் வரச் சொன்னார்கள் என அத்வானி கூறியதாக நேற்றைய செய் தித்தாள் ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. யார் இந்த அத்வானி; சென்ற தேர்தல்களில், வாஜ்பாய் என்பவர் விகாஸ் புருஷர் அதாவது வளர்ச்சி மனிதர் என்றும், அத்வானி என்பவர் லோக் புருஷர் அதாவது இரும்பு மனிதர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

அத்தகைய அத்வானிக்கு, இன்றைய பாஜகவில் தரப்படும் மரியாதை இவ்வளவு தான். கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் சீராமுலுவை மீண்டும் பாஜகவில் சேர்ப்பதற்கு, சுஸ்மா சுவராஜ், தெரி வித்த தனது கடுமையான எதிர்ப்பை யும் மீறி, சீராமுலு பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடமிருந்து வாரணாசி தொகுதியைக் கைப்பற்றி மோடிக்கு தருவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை சுஸ்மா சுவராஜூம், முரளி மனோகர் ஜோஷியும் தெரிவித் துள்ளனர்.

பாஜகவின் அரசியல் நடவடிக் கைகளில் ஆர்.எஸ்.எஸின் தலை யீட்டை அத்வானி விரும்பவில்லை என்கிற நிலையில் தான், அவர், கட்சி யில் முக்கியத்துவம் இழக்கக் காரண மாகி விட்டது. ஜிலேபி ருசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் தற்போதைய கருவியாக செயல்படும் மோடியை எதிர்க்கும் சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஸி, இருவரும், அத் வானியை அடுத்து, ஜிலேபி சாப் பிடும் நிலைக்கு விரைவில் தள்ளப் படலாம்.

Read more: http://viduthalai.in/page-2/77019.html#ixzz2w5A6uVIi

தமிழ் ஓவியா said...


தம்பட்டம் மேயோக்கள் - சித்திரபுத்திரன்

ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப் பனியம் இருக்குவரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும விரையும் விஷ்ணு புராண மும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.

சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர்களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும்.

2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும். கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமுமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும்,

குடிக்கப் பாலில்லாத குழந் தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் தொத்திக் கொண் டும் எலிக் குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலையிலும் பாம்புப்புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாதக் குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும்,

குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேத பாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிலிகள் மிகுந் திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர் களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச்சாரிகளாக விட்டுக் கொண்டிருக்குமட்டும், அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும்,

மனி தனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும் மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்கா விலிருந்தும்,

ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொலபொலவென கலகல வெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும், பண்டிதர்களும் உணர்வ தோடு பார்ப்பனர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும் தேசத் தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.

- குடிஅரசு - கட்டுரை - 09.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76985.html#ixzz2w5CeIPCI

தமிழ் ஓவியா said...


இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள்.

இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.

தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்து வதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.

இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.

நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.

இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/76986.html#ixzz2w5Cnz1zi

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!


தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டு மென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.

அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரி யாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு, எம். கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத் தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரிகின்றது.

தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும்.

பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகல் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர் களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்.

இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது. தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76987.html#ixzz2w5CwnkrO

தமிழ் ஓவியா said...


மோகம் விடயத்தில் மோடிக்குச் சிக்கல்!


காந்திநகர், மார்ச் 15- குஜ ராத்தில் கட்டடப் பொறியியல் வல்லுநரான இளம்பெண் ணைக் கண்காணித்த புகாரில் தற்காலிக பணிநீக்கம் செய் யப்பட்டவர் அய்.பி.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் மீதுஆறு குற்ற வழக்குகள் உள்ளன.

பயனில்லாமல் போனது

சட்டவிரோத செயலான இளம்பெண்ணைக் கண் காணித்த இவ்வழக்கில் குஜ ராத் முதலமைச்சர் மோடி யின் தொடர்பு குறித்து மோடிமீது பிரதீப் சர்மா காந்திநகர் 7ஆம் செக்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ள தாகத் தெரிகிறது. ஆனாலும், பிரதீப் சர்மா காவல்நிலை யத்தில் அளிக்கப்படும் புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறி குஜராத் மாநிலக் காவல் துறைத் தலைவர் பி.சி.தாக்கூர்,

காந்திநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷரத் சிங்கால் ஆகியோரிடம் வழக் குப்பதிவு செய்ய உத்தரவிடு மாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, அவர் குஜராத் உயர்நீதிமன் றத்தில் மோடி மீதான வழக்கைப் பதிவு செய்ய இது குறித்து அவர் வழக் குரைஞர் கூறும்போது, பிரதீப் சர்மாவின் புகார்மீது வழக் குப்பதிவு செய்ய காவல் துறை மறுத்துள்ள தால், அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளது என் றார்.

நவம்பர் 26 இல்

ஓர் அய்.ஏ.எஸ். அலு வலர் மோடியையும், அந்த இளம்பெண்ணை யும் நெருக்கமாக அறிந்த வர் என்பதாலேயே பாஜக அரசால் பாதிப்புக்குள்ளா னார். இளம் பெண் சட்ட விரோதமாகக் கண்காணிக் கப்பட்ட விவகாரம் குறித்து குஜராத் அரசு நவம்பர் 26 இல் இரு நபர் விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி சுக்னாபென் பட் என்பவர் தலைமையில் அமைத்தது. இன்னமும் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-5/76996.html#ixzz2w5DRVjeD