Search This Blog

17.3.14

கம்பனுக்கு சிபார்சா? தமிழர் நாகரிகம் பொருந்தக் கம்பர் பாடினாரா? ஒரு சவால்!

கம்பனுக்கு சிபார்சா?

கம்பர் பாடிய இராமாயணத்தில் மக்கள் இராமனைக் கடவுளாகக் கருத வேண்டும் என்கின்ற கருத்துடனே வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி, இராமனைப் பற்றிக் கூறியுள்ள பல ஆபாசங்களையும் அயோக்கியத்தனங் களையும் மறைத்து இராமனையும் அவனுக்கு அனுகூலமாய் இருந்தவர் களையும் மேன்மைப்படுத்தியும் கம்பர் பாடியதன் பயனாகவே ஆரிய இராமனைத் தமிழர்கள் கடவுளாகக் கருதும் படிச் செய்து விட்டார்.
அதனால் தமிழர் ஆரியத் திற்கு அடிமையாக வேண்டியதாக ஏற் பட்டது என்பது சுயமரியாதைக்காரர் கம் பர்மீதும் கம்ப இராமாயணத்தின்மீதும் சுமத்தும் குற்றச்சாட்டாகும்.

அனுபவ அறிவுக்குப் பதில் சொல்லட்டுமே

இதற்குச் சிபார்சுக்கு வரும் சைவப் பண்டிதர்கள் சொல்லும் சமாதானம் பலவற்றுள் தலையாயது என்னவெனில், கம்பன் தமிழ்மகன் ஆனதால் அந்த இராமாயணத்தைத்தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்றும் அதிலுள்ள நீதிகள் தமிழருக்குப் பயன்பட வேண்டும் என்றும் கருதி வால்மீகி கூறியவற்றை மாற்றித் தமிழர்களின் கொள்கைகளைப் புகுத்தி அரிய கற்பனைகளுடன் பாடி கம்பராமாயணத்தை அருங்கலையாக ஆக்கியிருக்கிறார் என்பதாகும்.
சுயமரியாதைக் காரர்கள் படித்த பெரிய பண்டிதர்கள் அல்ல என்பதை வாதத்துக்கு ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள். சகலத்தை யும் நடுநிலை நின்று ஆழமாய்ப் பார்ப் பவர்கள்.

பண்டித அறிவாளிகள், பண்டி தர்கள் முதலிய யாவரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவடைந்தவர்கள் - அந்த அனுபவ அறிவைக் கொண்டே அவர்கள் எதைப்பற்றியும் பேசுகிறார்கள். கம்பருக்கு சிபார்சுக்கு வருகிறவர்கள் எவரும் அந்த அனுபவ அறிவுக்குப் பதில் சொன்னால் போதும்.

கவலையற்ற கம்பன்

கம்பர் தமிழர் நாகரிகத்திற்கேற்ப பல உண்மைகளை வால்மீகியின் கூற்றுக்கு மாறாகத் திருத்தி இருக்கிறார் என்று சிபார்சுக்காரர் செப்புகிறார்கள்.

உதாரணமாக,  வால்மீகியானவர், சீதையை இராவணன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி  மடியில் வைத்து  பூமி யோடு, பெயர்த்து கொண்டு போனான் என்று சொல்லி யிருக்கிறார். இதைக் கம்பன் மாற்றி, சீதையைப் பன்னகசாலையோடு தூக்கிக் கொண்டு போனான் என்று சொல்லு கிறார்.
இப்படிக் கம்பர் சொன்னதற்குக் காரணம் சீதையை கடவுள் தன்மையு டையவளாக ஆக்க வேண்டும் என்கின்ற ஆவலினாலேயே அல்லாமல், தமிழர் நாகரிகத்தை ஒட்டி அல்ல என்பது சுய மரியாதைக்காரரின் கூற்று.

இதற்கு ஆதாரம் வேண்டின் கம்பர் எங்கும் தமிழரைப் பற்றியோ, தமிழர் நாகரிகத்தைப் பற்றியோ கவலை கொண்டி ருக்கவில்லை என்பதோடு ஆரியரைப் புகழ்வதும், அவர்களது எதிரிகளை இகழ்வதுமான கொள்கையுடன் தான் இராமாயணம் முழுதும் பாடி இருக்கிறார்.

கம்பர் தமிழர் நாகரிகத்தைப்பற்றி கவலை கொண்டிருப்பாரானால், சூர்ப் பனகை விஷயத்தில் பாடி இருப்பது நியாயமாகுமா?

வால்மீகியும் கம்பனும்

வால்மீகி சூர்ப்பனகையை இராமன் உத்திரவுப்படி இலக்குவன் மூக்கையும் காதையும் அறுத்தான். என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கம்பரோ இலக்குவன் தானாகவே ஓடிப் போய், சூர்ப்பனகையின் தலை மயிரைப் பிடித்து, கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே எட்டி உதைத்து, உடை வாளை உருவி காது, மூக்கு, இரு முலைகளின் நுனிக் காம்புகள் ஆகியவைகளை அறுத்துச் சினம் ஆறி மயிரை விட்டான்.

அதாவது, சில்லோதியைச் செங்கை யிற்றிரு குறப்பற்றி.. ஒல்வயிற்றுதைத் தொளி கிளர் சுற்றுவாளுருவி என்றும்,

மூக்குங்காதும் வெம் முரண்முலைக் கண்களு முறையாற் போக்கி  போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான் என்றும் பாடியிருக்கிறார்.

இதுதான் தமிழர் நாகரிகமா? இதுதான் தமிழர் ஒழுக்கம் வழக்கம் ஆகியவை களுக்கு ஏற்ற வண்ணம் பாடினதா? என்று கேட்கிறேன்.

இதுவா நாகரிகம்?

மற்றும் ஆரம்பத்தில் இராமன் இலக்குவனை அழைத்து,
லக்ஷ்மணா துஷ்டர்களோடு விளை யாட வேண்டாம். சூர்ப்பனகையை அங்க பங்கம் செய்துவிடு என்று சொன் னான் என்றும் அதன்மீது இலக்ஷ்மணன் அவளு டைய மூக்கினையும் காதுகளையும் அறுத் தான் என்றும் வால்மீகியில் இருக்கிறது.

கம்பர் இராமன் சொன்னதை மறைத்து சூர்ப்பனகையை இழிவுபடுத்த எண்ணி, இலக்ஷ்மணன் அவளது மயிரைப் பிடித்து கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே (அதாவது பெண் குறியில்) எட்டி உதைத்து சுருள் வாளை உருவி காதுகளையும் மூக்கினையும், மூலைக் கண்களையும் ஒழுங்காக அறுத் தான். அறுத்த பிறகே இலக்ஷ்மணனுக்குக் கோபந் தணிந்து அவளது மயிரை விட்டான் என்று கூறி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

இதற்குப் பெயர் தமிழர் நாகரிகமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருத்தமற்ற பொருள்

மேலும் இந்தக் கவியினால் கம்பருக்கு பொருள் பொருந்தப் பாடும் ஆற்றலில் குற்றம் சேருவதையும் பாருங்கள். கம்ப சித்திரம் என்னும் பேரால் இப்போது பலர் நமக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களது அபூர்வமதியை என்ன வென்பது?

கம்பனது கவிகளில் அநேக குற்றம் குறைகள் இருக்கின்றன. அவைகளைப் பின்னால் விளக்குவோம். ஆனால் மேற் கண்ட கவியில் உள்ள குற்றம் என்ன வெனில்,

சூர்ப்பனகையின் தலை மயிரைக் கையில் (திருகுற) சுற்றுப் போட்டுப் பிடித்து உதைத்து பிறகு சுருள் வாளை உருவிய போது, சூர்ப்பனகை துடிக்கா மலும் திமிறாமலும் பிணம் போல் இருந்திருப்பாளா? அப்படி இருக்க.
அடுத்த கவியில்,

ஊக்கித் தாங்கிவிண்படர் வெம்மென்றுருத் தெழு வாளை
மூக்கையும் காதையும் முலைக் கண் களையும் முறையாக போக்க முடியுமா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

இலக்குவனுக்கு ஒரு கையில் சுற்றுப் போட்ட அவளது மயிர், மற்ற ஒரு கையில் சுருள் வாள். அது சமயம் சூர்ப்பனகை தள்ளி எழும்பிக் கொண்டு இருக்கிறாள். இந்த அவசரத்தில் முரண் முலைக் கண்களை குறிபார்த்து முறையாக அறுக்க முடியுமா?

எனவே இது ஆத்திரத்தில் புத்தி  சுவாதீனமில்லாமல் பாடியதே அல்லாமல் பொருந்தபாடியதல்ல என்பது எவருக்கும் விளங்கும்.

கவிக் குற்றம் பற்றி நமக்குக் கவலை யில்லை. அதைப் பற்றிப் பேச நமக்குத் தகுதியும் இல்லை. ஆகவே அதை கம்பசித்திரக்காரருக்கு விட்டு விடுவோம்.
தமிழர் நாகரிகம் பொருந்தக் கம்பர் பாடினார் என்கிறவர்களுக்கு இந்த சவாலை விடுகிறோம்.

-------------------------------------- தந்தை பெரியார் - "உண்மை" 14.2.1973

30 comments:

தமிழ் ஓவியா said...
தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/77095-2014-03-17-11-12-55.html#ixzz2wGt9TQ4h

தமிழ் ஓவியா said...

இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் போர்க்குற்றம்: சுதந்திரமான விசாரணை, தொடர் நடவடிக்கை தேவை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;

இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து...


சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.

மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து...

இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

தமிழ் ஓவியா said...

பாதாமை பயமில்லாமல் சாப்பிடலாம்

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு.

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளே வனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்...

இதயத் துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கெனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை அய்ந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப்போனால், பாதாம் எடுக்காத வர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமே கூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக் கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2M4zhw

தமிழ் ஓவியா said...

தலைவலிக்கு கை வைத்தியம்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலை வலி குறையும்.

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றி யில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படி யென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலை வலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற் றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2qaCzU

தமிழ் ஓவியா said...

வைட்டமின் சி நிறைந்த நெல்லி!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக் கனியில் உள்ளது.

இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்ற வற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2wGzJf

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் தொழிலாளர்மீது முறையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு! தமிழர் தலைவர் கண்டனம்!


நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அறப் போரில், அங்குள்ள பாதுகாப் புப் படையினர், தேவை யின்றி, துப்பாக்கிச் சூடு நடத்திய தினால், ராஜா என்ற ஒரு தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக் கும், மிகுந்த துயரத்திற்கும் உரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துப்பாக்கிச் சூடு என்பதை எந்தக் கட்டத்தில் தவிர்க்க இயலாத நிலையில், நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம், காவல் படைகளுக்குப் போதிய பயிற்சியை அளிக்க மத்திய மாநில அரசுகள் தவறக் கூடாது.

அதீதமாக தமது அதிகார எல்லை தாண்டி நடந்து கொண்ட காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணை கொடுத்தவர் யார்? ஆணை யில்லாமலே தன்னிச்சையாக இப்படி நடந்து கொண்டாரா என்பது போன்ற பல கோணத்தில் அரசுகள், சுதந்தரமான நீதி விசாரணை நடத்தி, மனித உயிர்கள் விலை மதிப் பற்றவை என்பதை உணர்த்த வேண்டும்.

பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு தேவை!

டெல்லி போன்ற பெரு நகரங்களில்கூட பெருங்கூட்டத்தைக் கலைக்க, நீர்ப் பீய்ச்சி அடிப்பது, வானத்தை நோக்கி மேலே சுட்டு கூட்டத்தைக் கலைய வைப்பது போன்ற சில முறைகள் பின்பற்றப் படுகிறபோது, இங்கே இப்படி நிகழ் வுகளா? எனவே இதற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க ஆய்வு நடத்தி, புதிய வழிகாட்டும் நெறி முறைகளை காவல் துறையினருக்கு உணர்த்த வேண்டும்.

உயிர் இழந்தவருக்கு சுமார் 10 லட்ச ரூபாய் இழப் பீடாகத் தர வேண்டியதும் மனிதாபிமானமாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்18.3.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/77151.html#ixzz2wMjVXLbj

தமிழ் ஓவியா said...


மக்களவைத் தேர்தலில் பல்வேறு கோணல்கள்!பிரதமரைச் சந்தித்ததுண்டா?

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது என்று முதல் அமைச்சர் கேட்கிறார். அவர் முதல் அமைச்சராகி மூன்றாண் டுகள் ஆனதே தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்களோடு, ஒரே ஒரு முறையாவது பிரதமரைச் சந்தித்ததுண்டா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் இந்திய யூனியன் முசுலிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்.

சபாஷ், சரியான கேள்வி தான் ஆனாலும் தன்னை விட பெரியவரா பிரதமர் என்ற மனப் பான்மை உடையவரிடம் இது போன்ற கேள் வியைக் கேட்கலாமா?

தீக்குளியல்!

பிஜேபி கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் பா.ம.க.வுக்குத் தான் ஒதுக்கப்பட வேண் டும் என்று பா.ம.க. தொண்டர்கள் குமுறுகின் றனராம்.

உணர்ச்சி வயப்பட்ட பா.ம.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருப்பூர் தங் களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதற்காக தேமு திக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலோடு பலரும் அரசியலே வேண்டாம் என்று தீக்குளிக்கப் போவது மட்டும் உண்மை!

தா.பா. கண்டுபிடிப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா முன்னெடுத்த நிலைக்கு மாறாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தடம் புரண் டிருக்கிறார்.

எந்த கூட்டங்களிலும், பா.ஜ.க.,வைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று சி.பி.அய். செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

அம்மையாரைத் தெரிந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக் கிறதோ!

யார் சிங்கம்? யார் நரி?

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு 99.5 சதவிகிதம் முடிந்து விட்டது என்று பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இராமாயணமோ?

13 நாள்கள் உட் கார்ந்து உட்கார்ந்து முந் திரிப் பருப்பைத் தின்று கொண்டு பேசியே தீர்த் தார்கள் - இதுவும் ஒரு கின்னஸ் சாதனையே!

தருமபுரியில் பா.ம.க. நிறுவனர் தனது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களை வேட்பாளராக அறிமுகப்படுத்திப் பேசியபோது சிங்கங்கள் நரிகளி டம் போய் பிச்சை கேட்காது என்று திரு வாய் மலர்ந்தருளியுள்ளார். இதில் யார் சிங்கம்? யார் நரி? பி.ஜே.பி.க்குத் தான் வெளிச்சம்!

திருவாளர் மன வியாதி!

காந்தியார் பெயரால் கட்சியைத் தொடங்கிய மணியான மனிதர், ஒரு கூட் டணியை உருவாக்குவதற்காக தண்டால் பஸ்கி எல்லாம் எடுத்தார்.

காந்தியின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டவர் காந்தியைக் கொன்ற - கட்சிதான் உத்தம மானது என்று கண்டுபிடித்த கொலம்பசு இவர்.

கடைவிரித்தேன் கொள்வாரில்லை - கட்டிக் கொண்டேன் என்று வள்ளலார் சொன்னது போல, மன உளைச்சல் காரணமாக பிஜேபி கூட்ட ணிக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவது இல்லை என்று முடிவு செய்து விட்டாராம்.

ஆகா, எவ்வளவுப் பெரிய நஷ்டம்! யாருக்கு?

Read more: http://viduthalai.in/e-paper/77150.html#ixzz2wMjpAoKr

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையைக் கலக் காமல் பிஜேபியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது பிஜேபிக்கோ, ஆர்.எஸ்.எசுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழி வகுக்கும் என்று ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சி வளர்ச் சிக்காக பி.ஜே.பி.க்கு அனுப்பப்பட்ட அத்வானியே ரத்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். நாட்டாண்மை செய்கிறது. 4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக்காட்சி அலை வரிசையில் ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.

கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட்கண்ட்ரோ லாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி...

சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்? ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?

கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரகர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும் திறமை யையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பி.ஜே.பி.க்கு, ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண்டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளைச் செய்வார்கள். அதே போல தமிழ்நாட்டுப் பிஜேபிக்கு எங்கள் தகுதி வாய்ந்த இல. கணேசனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி கூறினாரே!

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் பிஜேபி ஆட்சி யில் இருந்தபோது அரசாங்கத்தின் இரகசியங்கள் எல்லாம்கூட ஆர்.எஸ்.எசுக்கு அறிவிக்கப்பட்டன - இராணுவ இரகசியம் உட்பட!

1999 மே 11,13 ஆகிய இந்நாட்களில் மத்திய பிஜேபி கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக மிக முக்கிய மான இரகசியம் இது! குடியரசு தலைவருக்குக்கூட முதல் நாள்தான் தெரிவிக்கப்படும் என்றால் - இது எவ்வளவு உண்மையான பரமரகசியம் என்பது வெளிப்படை!

ஆனால் என்ன நடந்தது? பொக்ரானில் அணு குண்டு வெடித்த அதே நாளில் - நேரத்தில் ஆர்.எஸ். எஸின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் அணு ஆயுத இந்தியா என்ற தலைப்பில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை முன்னிறுத்தி சிறப்புக் கட்டு ரையே வெளியிட்டது என்றால் இதன் பொருள் என்ன?

குடியரசு தலைவருக்குத் தெரிவதற்கு முன்பே ஆர்.எஸ்.எசுக்குத் தெரிகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - இரகசியத்தை பாதுகாக்கத் தவறிய ஆட்சி பிஜேபி ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, பிஜேபிக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாக ஆர்.எஸ்.எசுக்கு வாக்களிப்பதாகத் தான் பொருள்.

ஆர்.எஸ்.எஸின் குணம், மணம் எத்தகையது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனவே வாக்காளர்ப் பெரு மக்களே உஷார்! உஷார்!! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ளாதீர்!

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்


மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண் டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக் கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள்.

- (விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/77157.html#ixzz2wMklOwLv

தமிழ் ஓவியா said...


அணியா? பிணியா?

தற்போது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, தமிழ் நாட்டில் அமைக்கப்படும் பாஜக கூட்டணி, இதுவரை நாம் பார்த்திராத விசித்திரமான கூட்டணியாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்த வரையில், கூட்டணி என்று சொல்லி, காம்ரேடுகளிடம் பூச்செண்டு வாங்கி, அவர்கள் காதில் வைத்து அனுப் பியது. திமுகவில், விடுதலை சிறுத் தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், ஒரு நாளிலேயே அதனைச் சரிசெய்து, அனைத்துக் கட்சிகளுக்கும், இடம் ஒதுக்கி, வேட்பாளர்களும் அறிவிக் கப்பட்டு, பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ஆறு மாதங் களுக்கு முன்னரே, பிரதமர் வேட் பாளர் என பாஜகவால் அறிவிக்கப் பட்ட மோடி , இரண்டுமுறை தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதல், மோடி அலை என்று கூறி, எல்லாக் கட்சிகளும், பாஜக பின்னால் இருப் பது போல் ஒரு மாயையை உரு வாக்கினார்கள். தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியாக பேச்சு வார்த்தை நடத்தியது பாஜக. வைகோவின் மதிமுக முதலில் வந்தது. ஏற்கெனவே பத்து தொகுதி களில் வேட்பாளர்களை அறிவித்த பாமகவும் கூட்டணிப் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டது.

அறிவிக்கப்பட்ட பத்து தொகுதி களில் வேட்பாளரையும் களத்தில் இறக்கிவிட்டு, அந்த தொகுதிகள் பற்றி எந்த பேச்சும் இருக்கக்கூடாது என்று, இதுவரை யாரும் பார்த்திராத புதிய நிபந்தனையோடு, பாமக பேச்சு வார்த்தையில் இறங்கியது. தேமுதிகவின் கேப்டன், அவர் பங்குக்கு, எல்லோரையும் சந்தித்து, இறுதியாக பாஜகவையும் சந்தித்தார். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது என்று சொல்லிய நிலையில், கேப்டன், வேட்பாளர்களை அறிவிக் காமலே, பிரச்சாரம் தொடங்குகிறார். தொகுதிக்குச் சென்று அங்கே வேட்பாளரை அறிவிக்கிறார். அந்த தொகுதி, கூட்டணியில் இருப்பதாகக் கூறும் இன்னொரு கட்சியும் கேட் கிறது என்று தெரிந்தும், அந்த தொகு திக்கும் வேட்பாளரை அறிவிக்கிறார். புதுச்சேரிக்கு உள்ள ஒரே தொகு திக்கு, அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியான என்.ஆர். காங் கிரஸ் வேட்பாளரைத் தானாகவே அறிவித்துவிட்டது.

அந்த கட்சியும், பாஜக அணியில் உள்ளது என்கிறார் கள். பாமகவும் அங்கே வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்லிவிட்டது. கள்ளக்குறிச்சியில், தேமுதிக, பாமக இருவருமே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற் கொண் டுள்ளனர். பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், தினமும், காலையும், மாலையும், இன்னும் ஒரிரு நாள்களில் பேச்சு வார்த்தை முடிந்து விடும் என்று பிழையில்லாமல் சொல்லி வந்தார். இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இத்தகைய விசித்திர மான கூட்டணியை தமிழகம் முதன் முதலாக சந்திக்கிறது. அணியா, பிணியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77161.html#ixzz2wMlQRNWB

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை - 18.3.2014பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலி யில் உள்நாட்டுப் போர் ஒன் றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழி லாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்கு மார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெய் வேலி இரண்டாவது சுரங்கத் தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழி லாளர்கள் காயமடைந்துள் ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் அடித்து நொறுக்கிய தில், 20 மோட்டார் சைக் கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட் டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது. தொழிலாளர் கள் தாக்கப்பட்டதைக் கண் டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறு வனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்ற தாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப் பட்டதாகவும் பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச் சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாக வோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை.

காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்ப வங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங் காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும். துப்பாக் கிச் சூட்டில் இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசி னால் இதுவரை அறிவிக்கப் படவில்லை. உடனடி அரசு நிர் வாகத்தில் இருப்போர் நெய் வேலியில் அமைதி திரும்பு வதற்கும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதல மைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக் கணக்கான காவலரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத் தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்து கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/77170.html#ixzz2wMluJ85l

தமிழ் ஓவியா said...


காசநோயை ஒழிக்க புதிய திட்டம்


ஊட்டி, மார்ச் 18- தமிழ கம் உட்பட, 16 மாநிலங் களில், காசநோயை கட்டுப் படுத்த, அரசு மற்றும் தனி யார், கூட்டு முயற்சியில், புதிய திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலத்தில், டி.பி., அல்லது டியூபர்குளோசிஸ் என, அழைக்கப்படும், காச நோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்த, இரு நாள் கருத்தரங்கு, ஊட்டியில் நடந்தது.


இதில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர், காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர் களில், 30 லட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்து கொள்வ தில்லை. மொத்த காசநோ யாளிகள் எண்ணிக்கையில், 5இல் 1 பங்கு பேர், இந்தி யாவில் உள்ளனர். தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயை குணப்படுத்த முடியும். தனியார் மருத்து வர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் விவரத்தை, அரசு, காசநோய் பிரிவுக்கு தெரியப்படுத்துவது இல் லை. இதனால், காச நோ யாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை எடுத்து கொண் டவர்கள் விவரம், துல்லி யமாக இல்லை. காச நோயை கண்டறிய, சளி பரிசோதனை தான் முக் கியம். ஆனால், பல தனியார் மருத்துவர்கள், எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். எனவே, அரசு துறையுடன், தனியார் டாக்டர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் பரிசோதனை, சிகிச்சை வழங் கு வதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டம், தமி ழகம், ஆந்திரா, கருநாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. நோ யாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம், இலவசமாகவே வழங்கப் படும்.
காசநோயாளிகள் குறித்த தகவலை, அரசு காசநோய் பிரிவிற்கு தெரியப்படுத்தாத மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அறிக்கை அனுப் புவது, தற்காலிக பணிநீக்கம் செய்வது, பணி நீக்கம் செய் வது போன்ற, ஒழுங்கு நட வடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்தாண்டுக்குள், புதிய காசநோயாளிகள் உருவாகக் கூடாது; 2050இல், காசநோ யாளி களே இல்லை என்ற நிலையை இலக்காக கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/77173.html#ixzz2wMmAoGzV

தமிழ் ஓவியா said...


கல்கியின் பார்வையில் அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியோ, வளர்ச்சி!


தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011 இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2013 இல் இதன் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துவிட்டது.

வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012 இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2009 இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2013 இல் பதினைந்தாக உயர்ந்துவிட்டது..

சரி... பொருளாதாரத்துக்கு வருவோம்.

விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்டக் கமிஷன் கூறுகிறது.

தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது14 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

- கல்கி 16.3.2014, பக்கம் 11

- தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை எடுத்துக்காட்டிப் பேசினார், 16.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77179.html#ixzz2wSAdgoSO

தமிழ் ஓவியா said...


தேர்தல் கோண(ங்)ல்கள்


பயன்படுத்திக் கொள்ளலாம்!

இந்தியா முழுமையும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 1593; அதில் தமிழ்நாட்டில் மட்டும் 138 கட்சிகளாம். வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக் கிக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற வழி தெரிகிறது!வைகோவின் சரி! சரி!

சென்னையில் நடைபெற்ற மதி முக கட்சிக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் சிந்திய முத்துக்கள். பி.ஜே.பி. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அதில் ம.தி.மு.க. வும் இடம்பெறும். (மாண்புமிகு வைகோ என்று அழைக்கப்பட்டால், மகிழ்ச்சிதான் - நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!).

ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒன்பது தொகுதிகள் கேட்டோம்! அவர் களும் தருவதாகச் சொன்னார்கள். திடீரென்று எட்டு தொகுதிதான் தர முடியும் என்றார்கள். சரி! என்றேன். பின்னர் ஒரு நாள் ராம்ஜெத்மலானி போன் செய்து என்னிடம் நீங்கள் ஒரு தொகுதியை விட்டுத் தரவேண்டும் மோடியே இதை உங்களிடம் சொல் லச் சொன்னார் என்றார்.

மோடியே சொல்கிறாரா, சரி! சரி! என்றேன்.

இப்பொழுது ஏழு தொகுதிகள் உறுதியாகிவிட்டன.

சரி!, சரி! எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.

மோடியே நேராகத் தொடர்பு கொண்டு பேசினால், மேலும் இடங் களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி!

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்படி சரி என்று சொல்லியிருந் தால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கலாமே! அ.இ. அ.தி.மு.க.வு டன் சேர்ந்து அநியாயத்துக்குத் தோல்வி கண்டதுதான் மிச்சம்! சரி! சரி! என்று இப்படி 2011 தேர்தலில் தேர்தலுக்கே முழுக்குப் போடவேண்டிய நிலையும் ஏற் பட்டு இருக்காதே!
இந்துத்துவாவின் காந்தத்துக்கு வைகோவைப் பொறுத்தவரையில்

சக்தி அதிகம்தான். அது சரி, நமக்கு ஏன் வீண்வம்பு?

ரூ.50 ஆயிரம் ரூ.50 லட்சம் ஆனது!

2009 இல் நடக்கவிருந்த மக்கள வைத் தேர்தலில் கல்லக்குறிச்சிக்குப் பிரச்சாரம் செய்ய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சென்றபோது, ஹெலிகாப்டர் இறங்க ஹெலி பேடுக்கு ரூ.50 ஆயிரம் செலவாம் - இந்த முறை அதே ஊருக்கு அவர் சென்றபோது ஆகியுள்ள செலவு ரூ.50 லட்சமாம்.

வேட்பாளர் மனு தாக்கல் செய் யும்வரை ஆகும் செலவெல்லாம் கட்சியைச் சேர்ந்ததாம் - அதற்குப் பிறகு ஆகும் செலவு வேட்பாளரைச் சார்ந்ததாம்.

அதற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை இதனால்தான் அவசர அவசரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சிக்கியது...

பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங் கிரசில் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உறவினரான கருணா சுக்லாவின் வாக்குமூலம்: மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தனி நபர் களின் பிடியில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார். எல்லோருடைய சிண்டும் ஆர்.எஸ்.எஸிடம் சிக்கி இருக்கிறது என்பது அதைவிட உண்மையாயிற்றே!

இந்தி - ஓட்டா?

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி போடுவது இந்தி மொழி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெறு வதற்கே என்று கூறியுள்ளார் பி.ஜே. பி.யின் தேசிய பொதுச்செயலாளர் அனந்த்குமார்.

அப்படி என்றால், இந்தியை ஏற்றுக்கொள்ளாத தென் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக மோடிக்கு பட்டை நாமம் சாத்து வார்கள் என்று பொருள்.

மண் சோறு மகாத்மியம்!

திருச்சிராப்பள்ளியில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதற்குப் பிறகு, ரயில்வே ஜங்சன் வழிவிடு முருகா (டிராபிக் போலீசோ?) கோவிலுக்கு முன் மண் சோறு சாப்பிட்டுவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்களாம் - இதற்குப் பெயர்தான் இரட்டை வேடம் என்பது!

பெரியார் சிலைக்கு மாலை போட்டதால், வழிவிடு முருகனுக்குச் சக்தியிருந்தால் அ.தி.மு.க. வேட்பா ளரைத் தோற்கடித்துவிட மாட்டாரா?

அண்ணன் என்னடா - தம்பி என்னடா?

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் சார்பில் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து அவர் தம்பி பவன்கல்யாண் (இவரும் நடிகரே!) அவசர அவசரமாக ஒரு கட்சியைத் தொடங்கி, பி.ஜே.பி. அணியுடன் கூட் டணி சேர்ந்து, அண்ணனை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அண்ணன் என்னடா - தம்பி என் னடா - இந்த அரசியல் கும்ப மேளாவில்!பதில் இல்லையே - ஏன்?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அவர்கள் பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிப்பதில்லையே, ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. (தோழர் தா.பாண்டியன்கூட குறிப்பிட்டுள் ளார்) இதுவரை ஜெயலலிதா இதற் குப் பதில் அளிக்காதது ஏன்? மவுனம் காப்பது ஏன்?

மவுனம் சம்மதத்துக்கு அடை யாளம் - பி.ஜே.பி.யோடு ரகசிய கூட்டு இருக்கிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் ரகசியம்!

Read more: http://viduthalai.in/e-paper/77177.html#ixzz2wSApk2Bz

தமிழ் ஓவியா said...


நாத்திகம் தோன்றக் காரணம்


எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ, அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.

_ (குடிஅரசு, 21.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/77189.html#ixzz2wSB3jOrP

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தின்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணம், காணாமற்போனதாம்!

அகமதாபாத் மார்ச் 19- பத்தாண்டுக்கும் மேலாகிவிட்ட 2002 குஜராத் கலவரத் தின்போது மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதால் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அந்த ஆவணம் மறைக்கப்பட்டுள்ள தான தகவலைத் தேசிய சிறுபான்மை யருக்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையருக்கான ஆணையத்தின் செயலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சரிதா ஜே.தாஸ். குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் 2002 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி பரிந்துரைத்திருந்தார்.
இவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆவ ணம் மாயமாகிவிட்ட தகவலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தான் பரிந்துரை செய்த அந்த அறிக்கையினை மாற்றிவிட்டு, முக்கிய மான குற்றச்சாட்டுகளையும் நீக்கி உள்ள னர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறு பான்மை யருக்கான ஆணையம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் கள் அரைகுறையாக இருப்பதாகக் கருதி, தற்போது காணாமற்போன ஆவணத்தை யும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்து தொலைக் காட்சி செய்திகளில் மோடி தன் இதயமே நொறுங்கிவிட்டதாகக் கூறியதைக் கேட்ட போது ஆச்சரியமானேன். என் கடமையை சரிவர செய்யவில்லையோ என வேதனைக் குள்ளானேன் என்று கூறினார். சரிதா ஜே.தாஸ் அளித்த குஜராத் கலவரம் குறித்த விமரிசன அறிக்கை ஆவணங்களிலிருந்து மாயமானது மீண்டும் முறையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆணை யத்தை அணுகினேன் என்றார்.

கடந்த சூலை மாதத்தில் மோராய்ட் டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், எந்த இடத்தில் தவறானவை நடந்தாலும், இயற்கையாகவே வருத்தம் தான் ஏற்படும். இந்திய உச்சநீதிமன்றம் இன்று உலகிலேயே நல்ல நீதிமன்றமாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த சிறப் புப் புலனாய்வுக்குழு மிக உயர்ந்த, மிகச் சிறப்பான அலுவலர்களைக் கொண்டு இயங்கியது. அந்தபுலனாய்வுக் குழு அறிக்கையும் வந்தது. அந்த அறிக்கையில் நான் பரிசுத்தமானவன் என்று இருந்தது. நாம் ஓட்டுநராக, அல்லது பின் இருக்கை யில் உட்கார்ந்து இருக்கும்போது, நாய்க் குட்டி சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் வருத்தப்படுவோமா இல்லையா? அது போல்தான் இதுவும். நான் முதலமைச்ச ராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் ஒரு மனிதத்தன்மை உள்ளவன். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், இயற் கையாகவே வருத்தப்படுவேன் -இவ் வாறு ராய்ட்டர் செய்தி நிறுவனத் திடம் மோடி கூறினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்றைய ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபிபுல் லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு சரிதா ஜே.தாஸ் எழுப்பும் பிரச்சினை வந்துள்ளது. ஆவணங்கள் தொடக்கத்தில் கண்டறியப்பட வில்லை. அப்படியே கிடைத்தாலும், அதில் சரிதா ஜே.தாஸ் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தர்லோச்சன் சிங் ஆவணம் இருந்தது. சரிதா ஜே.தாஸ் சமர்ப்பித்ததில் முழுமையாக திருத்தப்பட்டு இருந்தது. அதில் மாயமான தகவல்கள்குறித்து நான் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என் கிறார் ஹபிபுல்லாஹ். தேசிய சிறுபான் மையர் ஆணையத்தில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை துணைத்தலைவராக இருந்தார். தேசிய ஜனநாயக முன்னணி 2004 இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஆணையத்தின் தலைவராக தர்லோச்சன் நியமிக்கப்ட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதரவுடன் அரியானாவுக்கான மாநிலங்களவை உறுப்பினரானார். இவர் கோத்ரா சம்ப வம் தானாகவே நிகழ்ந்த சம்பவமாகக் கூறுகிறார். குஜராத் அரசே தானாகவே சிறுபான்மை ஆணையத்தின்மூலம் உண்மைஅறியும் குழுவை அமைத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 137பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் அகமதாபாத் நகரில் அதி காலையிலேயே வன்முறை ஏற்பட்டது என்று தர்லோச்சன் சிங் தெரிவித்தார். 2014 இல் மோடி பிரதமராக வருவார் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான இடங்களைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரசுக் கட்சி மத்தியில் நிலையான, மதசார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது.

நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட், புதுடில்லி, 14.3.2014

Read more: http://viduthalai.in/page-2/77192.html#ixzz2wSBRHY1E

தமிழ் ஓவியா said...


WHOM DO YOU VOTE FOR? யாருக்கு உங்கள் வாக்கு?


Rights of individuals had been completely suppressed during the Emergency Period of 1975-76, the darkest period in the Independent India.

DMK strongly opposed Emergency and for doing that, its government was dismissed by the Central Government. Its leaders including M.K.Stalin, the present Treasurer of DMK, were arrested under MISA.
AIADMK did not oppose Emergency for fear of arrest and supported Emergency.

Please think, who will guard our rights? DMK who sacrificed it’s government in safeguarding our rights or AIADMK, that supported emergency.

VOTE FOR DMK ALLIANCE.

சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமாக கருதப்படும் அவசர கால சட்டம் 1975-1976 இல் இருந்த நேரத் தில், தனி மனித உரிமை முற்றிலுமாக தடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், தமிழகத் தில் ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான திமுக, அவசர நிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், அதிமுக, கைது பயத்தின் காரணமாக அவசர நிலைப் பிரகட னத்தை எதிர்க்கவில்லை; ஆதரித்தது.

யார் நமது உரிமையை பாது காப்பார்கள்? ஆட்சியே போனாலும் பரவா யில்லை; மக்களின் உரிமைகள் முக்கி யம் என நினைத்த திமுகவா? அல்லது நமது உரிமை போனாலும் பரவாயில்லை என சட்டத்தை ஆதரித்த அதிமுகவா? நமது உரிமையைப் பாதுகாத் திட்ட திமுக அணிக்கு வாக்களிப்பீர்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77194.html#ixzz2wSBamWmD

தமிழ் ஓவியா said...


மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!

27.2.2002 புதன் அன்று காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!

முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.

நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!

கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,

ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?

இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?

சிந்தியுங்கள் வாக்காளர்களே!

- சர்ச்லைட்

Read more: http://viduthalai.in/e-paper/77249.html#ixzz2wYEBCAaq

தமிழ் ஓவியா said...


அம்மா உணவகத்தில் ஆபத்தான அம்...மாவு!


100 டன் கோதுமை மாவு அழிக்கப்படுகிறது!

சென்னை, மார்ச்.20- அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் மலிவு உணவால் ஆபத்து என்ற தகவல் வெளி வந்துள்ளது.

ஆய்வின் முடிவில் 100 டன் கோதுமை மாவு அழிக்கப் படுகிறதாம்....

தமிழக அரசின்சார்பில் நடத்தப்படும் அம்மா உண வகங்களில் சப்பாத்தி மாலை 6 மணி முதல் 9 மணிவரை ரூ.3க்கு இரு சப்பாத்திகள் பருப்புக் கடை சலுடன் வழங்கப்படு கின்றன . 203 அம்மா உண வகங்களில் ஓர் உணவ கத்தில் சப்பாத்தி விற்பனை இரண்டாயிரம் வரை ஆனது. தற்போது மளமளவென விற்பனை சரிந்துள்ளது.

திருவொற்றியூர், மாதவ ரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 30ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை யிலிருந்து 20ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆகியுள்ளது.

விற்பனைக் குறைவால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வரும் பொதுமக்கள் சப்பாத்திகள் கசப்பது குறித்து உணவ கங்களில் பணிபுரியும் பெண்களிடம் தொடர்ச்சி யாக புகார்களைத் தெரி வித்தவண்ணம் உள்ளனர்.

கோதுமைமாவே அப்படித் தான் எங்களுக்கு வழங்கப் படுகிறது என்றுதான் ஊழி யர்களால் பொதுமக்களி டம் கூற முடிந்தது.

ஆனா லும், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சப்பாத்திகள் கசப்பதற்கான காரணம் குறித்து அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சப் பாத்தி மிகவும் கசப்பாக இருந்ததால் பொதுமக்கள் சப்பாத்திகளை வாங்குவ தில்லை என்று தெரிய வந்தது.

உணவுப்பொருள் வழங்கு துறைமூலம் பெறப்படும் கோதுமையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே கோதுமை மாவாக அரைத்ததால் சப்பாத்தி களில் கசப்புத்தன்மை ஏற் பட்டதாக தெரிய வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் சப்பாத்திக்கு பயன் படுத்தப்பட்ட கோதுமை மாவை பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வில் அம் மாவுப்பொருள் உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற தாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் சான்று அளிக் கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் கிலோ கோதுமை மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து 100 டன் கோதுமை மாவை அழிக்க உத்தர விட்டுள்ளனர்.

குறிப்பு: பல நாடு களில் மைதா தடை செய் யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77251.html#ixzz2wYEQZfOj

தமிழ் ஓவியா said...


உருக்கம், உறுதி , உழைப்பு!

நேற்றைய விடுதலையில் மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவரின் உருக்கமான நன்றி அறிக்கை நம்மில் பலரை நெகிழ வைத்துள்ளது. நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தமிழ் உணர்வாளர்களின் சார்பில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.

அய்யா! உங்களின் நன்றி எதிர் பார்க்காத, அயராத, கடுமையான உழைப்பை அருகில் இருந்து கண்டோர் மயக்கமடைகின்றோம். உங்கள் உடலை நீங்கள் இவ்வளவு வருத்திக் கொள்வது எங்களில் பலரை வேதனை அடையவும், எங்களில் பலருக்கு அதில் ஒரு பங்குகூட நாம் உழைப்பைத் தர முடியவில்லையே என்ற ஏக்கத்தையுந் தருகின்றது.

வெளியிலிருந்து பார்ப்போருக்கு உங்கள் வேன் (பயண ஊர்தி) பெரிதாகத் தெரியும். அதிலே உங்க ளுடன் பயணம் செய்தவர்களுக்குத் தான் தெரியும், அதன் குலுக்கலிலும், உலுக்கலிலும் நீங்கள் எப்படித் தான் உறங்குவீர்களோ, எழுதுவீர்களோ, ஆங்காங்கே நிறுத்தி உண்பதும், அந்தச் சின்னக் கழிவறையிலே நீங்கள் உள்ளே சென்று வெளியில் வரும் வரை விழுந்து அடிபட்டுவிடக் கூடாதே என்ற பரிதவிப்பும்.

எத்தனையோ சோதனைகளையும், எங்களை யெல்லாம் உலுக்கும் வேதனைகளையுந் துரோகங் களையும் தாங்கள் அமைதியுடனும் நெஞ்சுறுதி யுடனும் கையாள்வதைப் பார்த்து வியந்துள்ளோம். எல்லாம் பெரியாரின் சிந்தனைகளும், மூளையும் என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள்.

கல்வி நிறுவனங்களும்,மருத்துவ மனைகளும், மற்ற தொண்டு நிறுவனங்களும் மற்றவர்களுக்குப் பெரியவையாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்கு அவை தீராத தலைவலிகள். கையில் பணமே இல்லாமல் தொண்டர்களின் நம்பிகையையே மூல தனமாகக் கொண்டு அவை உருவானவை என்பது உலகத்தார்க்குத் தெரியாது.நம்பிப் பணம் கொடுத்த வங்கிகட்கு ஒரு தவணை கூடத் தவறாது திருப்பி செலுத்தியுள்ள வேறு அறக்கட்டளை இருக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன்.

ஒரு மணித் துளியையும் வீணாக்காது நமது அறிவு ஆசான் அய்யா போலவே படிப்பதும், எழுதுவதும், பேசுவதுமே உங்கள் வாழ்க்கை! அய்யா அவர்கள் மரத்தடியில் அமர்ந்து எழுதினார், நீங்கள் ஓடும் வேனில் எழுதுகின்றீர்கள் !

தங்களிடம் எப்படியாவது குறை கண்டு விட வேண்டும் என்று அலைவோர்க்குத் தான் ஏமாற்றம்! இப்படி அப்பழுக்கற்ற பொது வாழ்வு தந்தை பெரியாரைத் தாங்கள் உள் வாங்கியுள்ள ஆழமே !

உங்களின் கடுமையான உழைப்பிற்கும், விரைவில் சிந்தித்துச் செயல் படும் திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல், ஆனால் உங்களுக்காகவே உழைக்க உறுதி கொண்டுள்ள கருஞ்சட்டைப் படை உண்மை யிலேயே உலகில் வேறு எங்கும் காண முடியாத விந்தை தான். எள் என்றால் எண்ணெயாகத் துடிப் புடன் செயல்படுவோர் அவர்களின் திறமை முழு வதையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் உழைப்பே உங்கள் பலம். அந்த பலத்திற்கு ஈடோ, இணையோ கிடையாது.அது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும், அந்த மகிழ்ச்சிக்கு இணை வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதைப் பல முறை சொல்லியிருக்கின்றீர்கள். பணமோ, பதவியோ எதுவுமே அதற்கு ஈடாகாது.

கழகத் தோழர்களின் இன்ப துன்பங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வதே மனித நேயத்தின் மாண்பு. அதில் நாங்கள் அடையும் மகிழ்ச்சியும், ஆறுதலும் வெளிப் படுத்த இயலாதது. தங்களைக் கண் இமை போல காத்து, தனது வாழ்வின் இன்பங்களைத் தங்களைத் துணை யாக ஏற்றுக் கொண்ட நாள் முதல் துறந்து,செல்வத்தில் வளர்ந்ததை மறந்து இன்று உங்களுடன் இரவு பகலாக அலையும் அண்ணியார்க்கு எவ்வாறு நன்றி சொல்ல முடியும் ?

கொள்கையில் சில நேரம் ஒத்துக் கொள்ளாத வர்கள் கூட உங்கள் குணத்தையும், எளிமையையும், அடக்கத்தையும், சிந்தனைத் திறத்தையும் போற்றிப் பாராட்டியுள்ளமை அனைவரும் அறிந்ததே.

தந்தை பெரியாரின் உழைப்பில், தங்கள் உழைப் பில் வாழ்வு பெற்றோர், வெற்றி பெற்றோர் தமிழி னத்திற்குத் தாங்கள் ஆற்றும் பணியைப் பாராட்டி மகிழ்கின்றார்கள். அடுத்த நூற்றான்டு பெரியார் நூற்றாண்டு, அதற்கு ஆவன செய்வோம். வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !

- சோம.இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/77259.html#ixzz2wYEZdDuj

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் பார்வையில்...


நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதில் தனக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் எல்.கே. அத்வானி. பா.ஜ.க. ஒன் மேன் ஷோவை நடத்துகிறது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாக கட்சிக் கூட்டத்திலே குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒரு தனி மனிதரை மட்டுமே ஏன் முன்னிறுத்த வேண்டும்? மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை பிரச்சாரத் தில் ஏன் முன்னிறுத்தவில்லை? என்று சீறியிருக்கிறார். வழக்கம்போல் அத்வானியின் கேள்விகளுக்கு பாஸ் சொல்லி விட்டுக் கலைந்திருக்கிறது பா.ஜ.க. தலைவர் கள் கூட்டம். ஏன்னா, இப்போ பாஸ் அவர் இல்லையே!

- ஆனந்தவிகடன் 19.3.2014 பக்.37

Read more: http://viduthalai.in/e-paper/77260.html#ixzz2wYFXXsBM

தமிழ் ஓவியா said...


அற்பங்களா நம் வாழ்வை இழக்கச் செய்வது?


அண்மையில் செய்தி ஊடகங் களில் வெளி வந்த இரண்டு நிகழ்வுகள், நம் நெஞ்சை மிகவும் உலுக்கின. இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய நிலையில், மக்கள் அவற்றை அனுப வித்து மகிழும் வாய்ப்புள்ள ஒரு புதிய கால கட்டம்!

ஆனால் பல நேரங்களில், மனி தர்கள் தங்களுக்குள்ள ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைப் பயன் படுத்தி, சிந்தித்து வாழாமல், மனிதத்தை அற்பங்களுக்காக தங்களை இழந்து விடும் பரிதாபத்திற்கு ஆளாகிறார்களே என்ற வேதனை - சமூக நல் வாழ்வை விரும்பும் நம்மைப் போன்றவர்களை வேதனையடையச் செய்கிறது.
பெங்களூருவில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்துத் திருமணம்; நிச்சயிக்கப் பட்டு நடைபெற வேண்டிய முதல் நாள் ஒரு ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பெண் வீட்டுக் காரர்கள். அழைப்பாளர்கள் உட்பட பலரும் வந்திருந்த நிலையில், அவ் விருந்தில் கோழிப் புலவு - சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

உடனே மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்து ஆட்டுக் கறி புலவு - (மட்டன் பிரியாணி) தான் பரிமாற வேண்டும்; காரணம் இந்த கோழிப் புலவு விலை குறைந்தது - மலிவானது. என்று கூச்சலிட்டு ரகளை செய்தனர்; மணமகள் வீட்டாரோ அய்யா எங்கள் சக்திக்கு இதைத் தான் செய்ய இயலும்; அதிக செலவாகும் - மட்டன் பிரியாணியை ஆட்டிறைச்சி புலவைப் போட முடியாது என்று கெஞ்சிப் பார்த்தனராம். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஒப்பவில்லை; வந்த விருந்தினர் எவ்வளவோ சமாதானம் கூறி ஒரு சுமூக நிலையை ஏற்படுத்த முயன் றனராம். அது வெற்றியடையாமல் நிச்சயிக் கப்பட்ட திருமணமே நின்று போனதாம்!

அப்பெண்ணின் மன நிலை, பெற் றோர்களின் துன்பம் எப்படி இருந் திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க விடவில்லை அர்த்தமில்லா வீண் ஆடம் பர வளர்ச்சி. என்னே கொடுமை!

படாடோபம், வறட்டுக் கவுரவம் என்பதற்காக ஒரு திருமணமே நின்று போவதா? அற்பங்களாக வாழ்விணை யர்களின் வாழ்வு நீர்மேல் எழுதிய எழுத்தாகி விட்டதே!
திருமணமே நின்று போனதே!

இதுஒருபுறம், இதைவிட அற்பமான மற்றொரு நிகழ்வு; ஒரு மாணவியின் உயிரையே பறித்து விட்டது!

தேர்வு நேரத்தில் ஏனம்மா இப்படி தொலைக்காட்சி (டி.வி.) யைப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டுள்ளாய்? படியம்மா என்று பெற்றோர்கள் கூறினார் களாம்; தொலைக்காட்சி பெட்டியை மூடி விட்டார்களாம்!

உடனே ஆத்திரம் கொண்ட அந்த மாணவி உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்!

என்னே கொடுமை! என்னே அறி யாமை! மனித உயிர்களும், உறவுகளும் எவ்வளவு அற்பத்திலும் அற்பமான காரணங்களுக்காக இழக்கப்படுகின்றன.


எண்ணிப் பாருங்கள்! அறிவு ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில், உணர்ச்சி கள் மேலோங்கியதன் தீய விளைவு அல்லவா இவை?

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)

ஒருவன் தன் மனத்தை அதுசெல்லக் கருதிய இடத்திற்கெல்லாம் செல்ல விடாமல், அதனைத் தீய வழியினின்றும் நீக்கி, நல் வழியின் பால் செலுத்துவதே அறிவுடைமையாகும்.

அறிவைக்கூட அது செல்லும் போக்கில் செல்ல விடாமல் கடிவாளம் போட்டு, சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்கிறபோது

வெறும் உணர்ச்சிகளின் வெள்ளத் தால் அற்பத்திலும் அற்ப - சொற்ப - காரணங்களால், உயிரும், வாழ்வில் திருப்பங்களைத் தரக் கூடிய திருமணம் போன்றவையும் நின்று போகலாமா?

படித்தால் மட்டும் போதுமா? பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? பண்புகளை வளர்க்க வேண்டாமா?

எண்ணுங்கள் மனதில் விடை எழுதுங்கள்.
--------------veramani
Read more: http://viduthalai.in/page-2/77264.html#ixzz2wYFtMJin

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரைப்போல தொண்டு செய்து பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர்: பேராசிரியர் க.அன்பழகன்


தாம்பரம், மார்ச் 20- தமிழக மக்களுக்கு தொண்டு செய்து தந்தை பெரியாரை போல பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர் என தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்தார்.

திருப்பெரும்புதூர் நாடா ளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

தி.மு.க தமிழக மக்க ளுக்கு வரலாற்றில் இடம் பெறும் வகையில் தொண் டாற்றி வருகிறது. அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் தலைமையிலான காலம் வரை 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.

ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் குறை தீர்க்க, ஏழைகளின் கண்ணீரை துடைக்க, விலைவாசி ஏற் றத்தைக் குறைக்க, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண் டிய திட்டங்களை தொடங்கி நிறைவேற்றிட சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க இந்த நாட்டில் ஆட்சி நடத்தியது.

இந்தியாவிலேயே கலை ஞர் மூத்த அரசியல்வாதி. தொண்டு செய்வதற்கே பிறந் தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தந்தை பெரி யாரை சொல்வதை போல தொண்டு செய்து பழுத்த பழ மாக இருப்பவர் கலைஞர்.

தமிழகத்திற்குப் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். ஆட்சி நிர்வாகத்தில் சிறப் பாக செயல்பட்டவர். ஆனால் ஜெயலலிதா, தமி ழக திட்டங்களை நிறை வேற்ற விடாமல் இடையூறு செய்து வருகிறார்.

தமிழ கத்தில் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற விடா மல் தடுத்து வருகிறார். சென்னை துறைமுக பறக் கும் சாலை திட்டத்தை எதிர்க் கிறார். இப்படி எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை செயல்பட விடாமல் ஆட்சி நடத்துகிறார்.

கலைஞரின் கை ஓங்க தி.மு.க வெற்றி பெற திருப் பெரும்புதூர் தொகுதியில் ஜெகத்ரட்சகனை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற செய்யுங் கள். - இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-5/77243.html#ixzz2wYH9Zwww

தமிழ் ஓவியா said...

உலகின் ஆழமான கடல் பகுதி எது?உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் வடக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ள மரியானா அகழி ஆகும்.

எவ்வளவு ஆழம் ?

31,614 அடிகள் அதாவது 9,636 மீட்டர் என்று 1872-1876 இல் சேலஞ்சர் ஆய்வுப்பயணத்தின் போது அறிவிக்கப்பட்டது. பின்னர் சேலஞ்சர் இரண்டாவது பயணத்தின்போது எதிரிலொலி மானியை பயன்படுத்தி துல்லியமாக அளந்து 10,900 மீட்டர்கள், 35,760 அடிகள் என அறிவிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் வித்தியாசு எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

ஜப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த விவரங்கள் இதுவரை மனிதன் அறிவுக்கு உட்பட்டு கண்டுபிடித்ததே ஆகும்.

கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனாலோ, அவன் கண்டுபிடித்த உபகரணங்களாலோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் குறைவதாலும் ஏற்படும் பாதிப்புக்களை களைய இன்னும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHUL5J0

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

தண்ணீர் அருந்தாமல் அதிகநாள்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !

பண்டகா பிக்மா என்ற வகை மீன் தான் மனிதன் உலகில் கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.

ஆறு விநாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ் நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHaPqrC

தமிழ் ஓவியா said...


வந்தாரய்யா விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்றவுட னேயே அன்றாடம் நகைச்சுவைத் துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமே - வயிறு குலுங்கச் சிரிக்கலாமே என்று பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இன்று முதல் இலவசமாக அவை கிடைக்கும் என்கிற வகையில் அவரின் திருவாய் உதிர்த்த சமாச் சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

பா.ஜ.க. அணி மதச்சார்புள்ளது போலவும், தி.மு.க. அணிதான் மதச்சார் பற்ற அணி போலவும் பேசி வருகின்ற னர். உண்மையில் மதச்சார்பு, மதச்சார் பற்றது என்பது குறித்தெல்லாம் எனக்குச் சரியாக விளக்கம் புரியவில்லை. இருந் தாலும், முஸ்லிம் அமைப்புகளைக் கூடவே வைத்துக்கொண்டு, தி.மு.க. எப்படி மதச் சார்புபற்றி பேசுகிறது? என்ற கேள்வியை யும் எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் அமைப்புகள் நாங்கள் ஒரு முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கப் போகி றோம் என்று சொல்லவில்லை; ஆனால், விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ள பி.ஜே.பி. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் (வாரணாசியில் நரேந்திர மோடி, 20.12.2013) என்று பேசியுள்ளாரே - இதற்குப் பெயர்தான் மதச்சார்பு என்று பெயர்.

ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகி யோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பி.ஜே.பி.யின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசினாரே - இதற்குப் பெயர்தான் மதவாதம் என்று பெயர்.

இந்த அரிச்சுவடியைக்கூட நாம் கற்றுக் கொடுக்கவேண்டியள்ளது.

சரி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இதே விஜயகாந்த் என்ன சொன்னார்?

கேள்வி: அயோத்தியில் பாபர் மசூ தியை இடித்ததுபற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜயகாந்த்: காட்டுமிராண்டித்தனம் - அநாகரிகமான செயல். டாக்டர் கலைஞர் சொன்னது மாதிரி... ஆதிகாலத்துக்கு திரும்பிப் போயிட்டது போல் இருக்கு!

நம் நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சி னைகள் இருக்கு சார். அதையெல்லாம் தீர்க்கிறதை விட்டுவிட்டு, அவசர அவசர மாக தகராறு பண்ணி ராமர் கோவில் கட்டுவதுதான் முக்கியமா?

உதாரணத்துக்கு பாருங்க, வடநாட்டில் வெள்ளம், தென்னாட்டில் தண்ணீர் பஞ்சம்; இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாரதீய ஜனதா கட்சிக்காரங்க பாடுபட்டி ருந்தா பாராட்டலாம். வடக்கே ஓடுற கங்கையை கடலில் வீணாக கலக்கிற தண்ணியை தெற்கே திருப்பி விடுறதுக்கு ஒரு கரசேவா நடத்தியிருந்தாங்கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதுக்கு ஒரு கரசேவை நடத்தியிருந்தாங் கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சி னைகள் இருக்கு - அதுக்கு ஒரு கரசேவா செஞ்சிருந்தா உத்தமம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு ராமர் கோவில் கட்டினா, வெள்ளச் சேதத்தை தடுத்திட முடியுமா?

தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமா? இல்லே... நாட்டுக்குத்தான் சுபீட்சம் வந்திடுமா?

என்று சொன்னவர்தான் விஜயகாந்த். பி.ஜே.பி.யின் மதவாதத்தைக் கண்டித்தவர்தான்.

எந்தப் பத்திரிகையில்?

அவர் சம்பந்தப்பட்ட சினிமா இதழ்தான் - அதன் பெயர் ஹீரோ (1993, ஜனவரி).

அதில்தான் இப்படி பேட்டி கொடுத்துள் ளார். அந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் பா.ஜ.க. அணி மதச் சார்புள்ளது போல வும், தி.மு.க. அணிதான் மதச்சார்பற்ற அணி போலவும் பேசி வருகின்றன என்று குறிப் பிட்டுள்ளார்.

இதற்குப் பெயர்தான் சந்தர்ப்பவாதம் என்பது...

Read more: http://viduthalai.in/page-5/77253.html#ixzz2wYIIm3gy

தமிழ் ஓவியா said...

மோடியாவது - பிரதமராவது! மொய்லி மொத்து

பெங்களூரு, மார்ச் 20- நடைபெற இருக்கும் நாடா ளுமன்ற மக்களவைத் தேர் தலில் பா.ஜ. கட்சி பெரிதாக நம்பியிருக்கும் நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சிக்க பல்லாபூர் தொகுதியில் 2 ஆம் முறையாக காங்கிரஸ் சார்பாக வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார். பெங் களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:

நரேந்திர மோடி பிரதம ராக வருவார் என்று பா.ஜ.க. நம்புகிறதே என கேட்கிறீர்கள். நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது. வாஜ்பாய் காலத் தில் 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் பாஜக கூட் டணி வைத்திருந்தது.

அப் போது உடன் இருந்த முக்கிய கட்சிகள் தற்போது பா.ஜ.க.வை புறக்கணித்து விட்டன. அங்கு நிதிஷ் குமாரோ, மம்தா பானர் ஜியோ இல்லை. தமிழகத் திலும் பா.ஜ.க. கூட்ட ணியை ஜெயலலிதா புறக் கணித்துவிட்டார்.

ஒரு இடம் கூட கிடைக்காது

நரேந்திர மோடி ஒரு தரப்பினரின் அடையாள மாக பா.ஜ.க.வால் காட் டப்படுகிறார். அவர் வாஜ் பாயை போல் வரமுடி யாது. அவர்களுக்கு கேர ளாவில் ஒரு இடம்கூட கிடைக் கப் போவதில்லை.

ஆந்திராவில் அவர்கள் கூட் டணி அமைத்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்டம் கண் டுள்ளது. கர்நாடகாவிலோ 4 இடங்களுக்கு மேல் பெறவே முடியாது. அவர் களுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று வீரப்ப மொய்லி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-5/77250.html#ixzz2wYIWnYAv