Search This Blog

29.3.14

ஈழத்தமிழர்களுக்கு மற்றொருமுறை துரோகம்!காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது!!


  • ஈழத் தமிழர்களுக்கு மற்றொரு முறை துரோகம்!
  • ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்தது இந்திய அரசு!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு  தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமாக பல்லாயிரக்கணக்கான தமிழர் களைக் கொன்று குவித்தது.  இலங்கை அரசு! உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மாத்திரம் அல்ல; மனிதநேயம் உள்ளவர்களை, மனித உரிமை பேணுப வர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தம்!

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தத்தை நடத்திய கொடுமை! யுத்தம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகும்கூட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்.

உலகம் முழுவதும் இதனை எதிர்த்துக் கடுமையாக குரல்கள் வெடித்துக் கிளம்பின. தமிழ்நாட்டிலும் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். பல்வேறு அமைப்புகளும் அவரவர்களுக்குத் தோன்றிய முறைகளில் போராட்டங் களை நடத்தின என்றாலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு மீண்டும் முகிழ்த் தெழுந்து இந்தப் பிரச்சினையில் உலகத் தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

டெசோ மாநாட்டின் பெரும் தாக்கம்!

குறிப்பாக சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் காப்பு மாநாடு (12.8.2012) ஏற்படுத்திய உணர்ச்சி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தப் பிரச்சினையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல்வேறு  நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பங்கு கொண்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தனர் அம்மாநாட்டில்.

டெசோ தீர்மானங்கள் அய்.நா.வில்

அம்மாநாட்டுத் தீர்மானங்கள் பிரதமரிடம் நேரில் அளிக்கப்பட்டன. அய்.நா.வுக்கும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிற்கும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் நேரில் சென்று தீர்மானங்களின் நோக்கத்தை விளக்கினர்.
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களையும் சந்தித்து டெசோ மாநாட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு ஆதரவு கோரினோம்.

ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் பட்டது

டெசோ தீர்மானங்கள்

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் முக்கியமானவை:
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையங்கள்  (Safety Zones)  என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும்கூட குண்டுகள் வீசப்பட்ட குரூரம், கொடூரம் உலகில் வேறெந்தப் போரிலும் நடைபெற்றிராத அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும். அந்தப் போர்க் குற்றங்கள் வெளியு லகுக்குத் தெரிந்து விடாமல் தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. இத்தகவல்கள் அனைத்தையும் அய்.நா. அவைப் பொதுச் செயலாளர் பான் கீமூன் அவர்களால் அமைக்கப் பெற்ற இந்தோனேசி யாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 2011 ஏப்ரலில் பான்கீமூன் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும் அங்கு நடந்த போர்க் குற்றங்களை ஆராய்வதற்கும் சுயேச்சையான சர்வதேசக் குழு அமைக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து நிற்கும் உலகத் தமிழனம் உரத்த குரலில் நீதிகோரும் கட்டத்திற்கு இன்று வந்துள்ளது.

அன்றைய டெசோ தீர்மானம் - இன்றைய அமெரிக்கத் தீர்மானம்

அய்.நா. அவையிலும் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது என்னும் 2012 ஆகஸ்டு 12இல் சென்னையில் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் வேறு சொற்களில்  இப்பொழுது அமெரிக்காவால் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டது. (25.3.2014).

மனித உரிமையின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் கடந்த 26ஆம் தேதி தனது அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார்.

வாக்கெடுப்பில் 35 நாடுகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் 23 நாடுகள் அந்தத் தீர்மானத்தை ஆதரித் துள்ளன. 12 நாடுகள் எதிர்த்துள்ளன. 

தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த 12 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்பது வெட்கப்படத்தக்கது -கண்டிக்கத்தக்கதுமாகும்.
புறக்கணித்தது என்று சொல்லப்பட்டாலும், இது இலங் கையின் போர்க் குற்றங்களுக்குத் துணை போனதாகவே பொருள்படும்.

தி.மு.க.வின் அழுத்தத்தால்..

2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு அவர்களால் கொண்டு வரப்பட்ட (7.2.2013) தீர்மானத்தின்மீது பல மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சரின் பதில் திருப்தி இல்லாத நிலையில் வெளி நடப்புச் செய்தார்கள் திமுக தோழர்கள்.

கலைஞரைத் தேடி வந்த அமைச்சர்கள்

தி.மு.க. முக்கிய முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம்  ஆகியோர் கலைஞரைச் சந்திக்க ஓடோடி வந்தார்கள்.  டெசோவின் நிலைப்பாடு உறுதி யாகத் தெரிவிக்கப்பட்டது -

இவ்வளவு முயற்சிக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்யத்தான் முடிந்தது. ஆனாலும் அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந்தது என்பதுதான் வருத்தத்திற்குரியது!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது

முக்கியமான முடிவை எடுத்து தி.மு.க.   தலைவர் கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட அறிக்கையினை வெளி யிட்டார்கள்.

அய்.நா. மன்றத்திலும், அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்திலும், நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்டு இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இனவுணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது

எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக அமெரிக்காவின்  வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்ய வில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்ட நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக் கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அமைச்சரவையிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகிக் கொள்கிறது - என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார் (19.3.2013).

அன்று வங்காள தேசத்தில் தலையிடவில்லையா?

இலங்கை விஷயத்தில் சர்வதேச விசாரணையைக் கோருவது இன்னொரு நாட்டு உள்விவகாரத்தில் தலை யிடுவதாகும் என்று இப்பொழுது இதோபதேசம் செய்யும் இந்தியா - அன்று பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சி னையில்  தலையிட்டு தானே ஒரு வங்கதேசத்தை உரு வாக்கிக் கொடுத்தது என்பதை வசதியாக மறந்து விட்டார்களா?

பிரதமர் இந்திராகாந்தி என்ன சொன்னார்?

2011 ஜூலை 25 ஒரு முக்கியமான நாள்! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் மருமகளும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் வங்கதேசத்துக்கு தலைநகர மான டாக்காவுக்குச் சென்றார் - எதற்காகத் தெரியுமா?

ஸ்வதீனாடா சம்மனோனா (Swadhinata Samanona)  என்ற வங்கதேசத்தின் மிகப் பெரிய விருதினைப் பெறுவதற்குத்தான் சென்றார்.

அந்த விருது எதற்காக அளிக்கப்பட்டது? வங்க தேசத்தைப் பெறுவதற்கு அன்றைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி பேருதவி புரிந்ததற்காக அவரின் சார்பில் சோனியா பெற்று வந்தாரே!
இன்னொரு ந;டான பாகிஸ்தான் நாட்டின் பிரச்சினையில் மூக்கை நுழைத்தபோது - அது இன்னொரு நாட்டு உள்விவகாரமாகத் தெரியவில்லையோ? இலங்கை யில் தமிழினம் அழிக்கப்படுவதில் (Genocide) தலையிட் டால் மட்டும் இன்னொரு நாட்டு உள் விவகாரத்தில் தலை யிட்டதாகுமா? இது என்ன சந்தர்ப்பவாத ஞானோதயம்!

இனப்படுகொலை எங்கு நடந்தாலும் இன்னொரு நாடு தலையிடலாம் என்று அய்.நா.வின் ஜெனோசைடு கன்வென்சன் 1949 கூறவில்லையா? இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்று நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதை (16.8.1983) நினைவுபடுத்திக் கொண்டால், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடலாமா கூடாதா என்பதற்கான விடை கிடைக்கும்.

அந்தோ காங்கிரசே!

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வருவதில்லை, அடிச் சுவடே இல்லாமல் போய் விடுவது  என்று முடிவுரையை எழுதிக் கொண்டு விட்டதே!

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று சொன்னாலே தேசீயத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நினைக்குமட்டும் - அக்கட்சி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமானது என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டதே! இது கல்லின் மேல் எழுத்தே!

---------------------  கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் சென்னை 28.3.2014

50 comments:

தமிழ் ஓவியா said...

ஊழலுக்கும், கொலை குற்றத்திற்கும்கூட நிறம் உண்டு

- சர்ச்லைட்

வர்ண தருமம் இன்னமும் கொடிகட்டிப்பறக்கும் இந்த பாரத புண்ணிய பூமியில் கொலைக்குற்றம் , ஊழல் குற்றச்சாற்று - லஞ்சம் இவைகளுக்குக்கூட நிறம் உண்டு. நிற பேதமும் அதற்கேற்ற நீதி நியாயங் களும் உண்டு. என்ன அதிசயமான அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறீர்களா?

ஒப்பனை இல்லாத உண்மைகளை இதோ உங்கள் முன் வைக்கிறோம்.

கூர்ந்து காண்போம் தேர்ந்து சிந்தியுங்கள்.

2 ஜி அலைக்கற்றை என்ற ஸ்பெக்ட்ரம் என்பதில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு - ஆ. இராசா திமுக ஊழல் என்று திட்டமிட்டே பழியும் குற்றமும் சுமத்தி சம்பந்தப்பட்ட அமைச்சரை மட்டும் குற்றம் சுமத்தி, ஏற்படாத வெறும் அனுமான (கற்பனை) இழப்புத் தொகைளை அவரவர்கள் சக்திக்கேற்ப கூறி ஊழல் குற்றத்தை சுமத்தி அவரை ராசாவை சுமார் 1 ஆண்டுக்கு மேலாக (குற்றவியல் சட்டத்தின் நடைமுறைக்கே மாறுபட்ட) சிறையில் இருக்கும்படி Trially Media செய்தி ஊடகங்களே நீதிவிசாரணை மன்றங்களாக்கி கொண்டு, இன்னமும் கொயபெல்ஸ் பாணியில் ராசா - 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆ.இராசா மட்டுமல்ல, கனிமொழி அவர்களும் கூட அவர் பெயர் கலைஞர் டி.வி நிர்வாகத்தில் இருக்கிறது என்பதை வைத்தே ஆறு மாதத்திற்கு மேல் டில்லி சிறையில் ஜாமின் மறுக்கப்பட்டு வைக்கப்பட்டார்.

சி.பி.அய்.தனி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; அதனை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்!

தமிழ் ஓவியா said...

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா MCI என்ற மருத்துவ கவுன்சிலின் மிகவும் சக்திவாய்ந்தவராக பல ஆண்டு காலம் திகழ்ந்து, பல மருத்துவக்கல்லூரிகள் (தனியார் அரசு எல்லாவற்றுக்கும்) அங்கீகாரம் அளிக்கும் தனிக்காட்டு இராசாவாக இருந்து பலகோடிக்கணக்கில் லஞ்சம், தங்கக் கடவுள்கள் (திருப்பதி வெங்கடாஜலபதிக்கே போட்டியாக) வாங்கி சேர்த்ததாக பத்திரிகைகளில் வந்து சி.பி.அய் சார்பாக கைது செய்யப்பட்ட கேத்தன் தேசாய் (இவர் மண்டல் கமிஷன் மாணவர் போராட்டத்தில் டில்லியில் பிரபலமாகி பிறகு படிப்படியாக உள்ளே நுழைந்தவர் என்றுக் கூறப்படுகிறது) மீது ஏடுகளில் செய்தி வெளியிட்டனவே அவர் கைதாகி எத்தனை நாள் சிறையில் இருந்தார்?

எப்படியோ வெளியாகி, குஜராத் மோடி தயவில் ஒரு மருத்துவக் கல்லூரி தலைவராகி (ஊழல் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையிலும்) மருத்துவக் கவுன்சிலை மீண்டும் நுழைந்து பழைய செல்வாக்கோடு உலவும் ராஜ பாட்டையில் நடைபோடுகிறார்?

பூணூல் திருமேனி நிறம் சிவப்போ, மஞ்சளோ எப்படி இருப்பினும் தனிச் சலுகை! கருப்பு நிற இராஜாக்களுக்கு செய்யாத அனுமான நட்டத்திற்கு சிறை, தண்டனை Etc

பீகார் மாட்டுத்தீவன வழக்கு ஊழலை விசாரிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தவரே முதல்வராக இருந்த லாலுபிரசாத்,

அவருக்கு முன் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா என்ற (காங்கிரஸ்) பார்ப்பனர்.

லாலுவையும் கைது செய்து உள்ளே அடைத்த போது, இருவரும் ஜாமீன் கோரியபோது, ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு பீகாரில் உடன் பெயில் - லாலுவுக்கு ஜெயில்! பிறகு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றே (பெயில்) ஜாமின் கிடைத்தது காரணம் - இவரது நிறம் வேறு!

ஜெகநாத் மிஸ்ரா நிறம் வேறு!!

பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் படுகொலை - சாட்சியங்கள் (அப்ரூவர் உட்பட) எல்லாம் பிறழ் சாட்சியங்களாக்கப்பட்டு கொலைக்குற்றத்திலிருந்து செஷன்ஸ் கோர்ட் விடுதலை! மற்ற வழக்குகள் அவசரமாக அப்பீலுக்கே செல்லும் அரசு - இப்போது ஏதோ அட்ஜஸ்மென்ட் காரணமோ, என்னவோ மவுனமாக ஊறுகாய் ஜாடியில் அப்பீல் யோசனை ஊறிக் கொண்டி ருக்கிறது!

மற்ற பல வழக்குகளில் உடனே மை உலரு முன்னர், அப்பீல்; அதற்குக் காரணம் சங்கராச்சாரியார் நிறம் வேறு; மற்ற சூத்திராள் நிறம் வேறு!

கொலையிலும் எப்படி மனுதர்மத்தில் தண்டனை தருவதில் பார்ப்பன நிறத்திற்கு சிகை(மயிர்)ச் சேதம், சூத்திர நிறத்திற்கு சிரச்சேதம் - தூக்கு என்பது கண்முன் உள்ள காட்சி அல்லவா? கிரிக்கெட்டில் அய்.பி.எல். சூதாட்டம் அகில உலகப் பிரசித்திப் பெற்றது!

இதில் BCCI தலைவர் ஸ்ரீமான் சீனுவாச அய்யர் எவ்வளவு ஊழலில் ஈடு பட்டார் என்பதைப் படித்து அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று உச்சநீதி மன்ற நீதி அமர்வு ஆணை பிறப்பித்தும் அவர் நகரவில்லை; உச்சநீதிமன்றமே தலைவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

என்றாலும் ஊடகங்கள் கப்சிப் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய தவறிய வழக்கில் சமாத்காரமாக. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தான் ஒரு ரூபாய் சம்பளத்தை முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் (91 முதல் 95 ஆண்டுகள் வரை) பெற்றதனால், வருமானம் வேறு ஏதும் இல்லாததால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல நினைத்துக் கொண்டு வருமான வரி தகவல் (I.T. Returns) தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அப்படிக் கூறியவருக்கு எப்படி இத்தனைக் கோடி அளவுக்கு அதிகமான சொத்துக் குவிப்பு ஏற்பட்டது என்ற வழக்கு தொடரப்பட்டது, பலமுறை வாய்தா வாங்கப்பட்ட அந்த வழக்கில் பெங்களூ ருவில் கடைசியாக அவரே விரும்பிய பப்ளிக்பிராசிக்யூட்டர் - அரசு வழக் குரைஞர் பவானிசிங் அவர்களே எடுத்து வைத்த வாதத்தில் கீழ்க்கண்ட சொத்து விவரம் 3 நாள்களாகக் கூறியது முரசொலி ஏட்டில் வந்தது!

ஏன் பிரபல நாளேடுகள் அதனை மறைத்தன? வெளியிடதாதது நியாய மான பத்திரிக்கா தர்மமா?

இந்த விவரங்களை கலைஞர் அவர்களே சென்னைக் கூட்டத்தில் (26.3.2014) சுட்டிக் காட்டினார்.

ஆ. இராசா ஊழல்பற்றி இந்த அம் மையார் மேடைதோறும் முழங்கினாரே,

அதைப் பிரசுரிக்கும் ஏடுகள் இந்த நீதிமன்றச் செய்தியை ஏன் மறைத்தனர் காரணம்? அம்மையாரின் நிறம் (சிவப்பு) பஞ்சம இராசாவின் நிறம் கறுப்பு என்பதால் தானே!

இப்படி எத்தனையோ கூறலாம், ஒரு பானை சோற்றுக்கு இந்த சில பருக் கைகள் உதாரணம்.

சிவப்பு வண்ணம் - நிழலில் அமர் வோர் கறுப்பு வண்ணம் - வெயிலில் உழைப்போர்!

இன்றும் ஊழல், லஞ்சம், கொலைக் குற்றச்சாற்றுகள் நிறம்! நிறம்! நிறபேதம்! அந்தோ, பரந்த பாரத தேசமே!

Read more: http://viduthalai.in/e-paper/77745.html#ixzz2xIyeTLS5

தமிழ் ஓவியா said...

இரு முக்கிய நூல்கள்

நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்த வரை - மதவாதத்தின் பயங்கரம் நாட்டைச் சூழ்ந்து எரித்து விடக் கூடாது என்ற கவலை மதச்சார்பற்ற சக்திகளின் முக்கிய எண்ணமாக இருந்து வருகிறது. அதுவும் குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் உதாரண மாநிலமாக ஆக்கிய அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு, பதவி உயர்வு கொடுப் பது போல இந்தியத் துணைக் கண்டத்தின் பிரதமராக ஆக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நாட்டின் பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் கம்பெனி களும், உயர் ஜாதி ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றன.

பண முதலைகளும், உயர் ஜாதிக்காரர்களும் எப்பொழுதும் மதவாததத்தின் பக்கமே தான் இருப்பார்கள் என்பது உளவியல் ரீதியானதாகும்.

ஹிந்து மதவாதம் எவ்வளவுக்கொடியது என்பதை 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பின்போதும் 2002இல் கோத்ராவை மய்யப்படுத்தி குஜராத் மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையின் போதும் இந்தியா கண்டது;
அந்த நிலை இந்தியா முழுமையும் அரங்கேற்றப்பட வேண்டும் என்பதுதான் சங்பரிவார் கும்பலின் திட்டம். மேலும் நாடு தழுவிய அளவில் பல வன்முறை நிகழ்வு களுக்கு ஹிந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் உள்துறையிடம் வலுவாக உள்ளன. இந்த நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியத்தில் அவர்கள் இருக் கிறார்கள்; இந்தத் தேர்தலை ஏதோ அய்ந்தாண்டு களுக்கு ஒரு முறை வரும் வழக்கமான பொதுத் தேர்தலாகப் பொது மக்கள் கருதி அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இதனை அரசியல் கட்சிகளால் முழுமை யாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல முடியாது.

அரசியல் கட்சியல்லாத தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகத்தால் மட்டுமே இந்தத் திசையில் முழுமையான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும்; மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியும். பொதுவாக தேர்தலின்போது திராவிடர் கழகம் மேற் கொள்ளும் கடமை பிரச்சாரமாகும்.

யார் வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லுவதில் திராவிடர் கழகத்திற்கு நிகர் திராவிடர் கழகமே.

ஒவ்வொரு தேர்தலின் போதும் கொள்கை தொடர்பாகவும், தேர்தலில் போட்டியிடும் அரசமைப்புக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்தும், கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் செயல்பட்டன? எப்படியெல்லாம் முரண்பட்டன.

வாக்குறுதிகளைத் தவற விட்டன, என்பதையெல்லாம் பட்டியலிட்டு மக்களின் மறதியைக் கலைத்து, உண் மையை அறியச் செய்யும் வகையில் நூல்களை வெளியிடுவது வழக்கம்.

அதேபோல இந்தத் தேர்தலிலும் இரு நூல்களை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

1) மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியை ஆதரிக்க வேண்டும் - ஏன்?

தமிழ் ஓவியா said...

2) 16ஆவது மக்களவைத் தேர்தல் வாக்காளர்களே சிந்திப்பீர்! (ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்) எனும் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இரு நூல்களும் சேர்த்தே ரூபாய் 20 தான். ஏராள மான தகவல்களின் கொள்கலன்களாக இந்நூல்கள் விளங்குகின்றன. 16ஆவது மக்களவைத் தேர்தல் வாக்காளர்களே சிந்திப்பீர்! என்ற நூலில் கீழ்க்கண்ட முக்கிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

16ஆவது மக்களவைத் தேர்தலில் மக்களின் கடமை என்ன? அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம் பெற்றிருந்த திமுக.வின் நலத் திட்டங்கள் - சாதனைகள் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் யார்?
அ.இ.அ.தி.மு.க. அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? மதச் சார்பின்மைபற்றி முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? பிஜேபிக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்? யார் இந்த மோடி? குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா? எனும் தலைப்புகளில் அரிய தகவல்கள் குடிகொண்டுள்ளன.

அதேபோலவே திமுக அணியை ஆதரிக்க வேண்டும் ஏன்? எனும் நூலில்....

ஆர்.எஸ்.எஸ். இந்த நூலில் வெளிப்படையாகக் களத்தில் இறங்குவதன் பின்னணி என்ன? மோடி ஏன் முன் நிறுத்தப்படுகிறார்? அவரை இயக்கும் அமைப்பு எது? மாலேகான் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸின் குண்டு வெடிப்பு வன்முறைகள், ராமன் கோயில் கட்டுவது குறித்து மோடியின் நிலைப்பாடு என்ன? ஜெயலலிதாவின் கருத்தென்ன?

காந்தியார் கொலையின் பின்னணியில் இருந்த வர்கள் எவர்? சேதுக் கால்வாய்த் திட்டம், மதுரவாயல் துறைமுக விரைவு மேம்பாலத் திட்டம் முடக்கப்பட்டது யாரால்? என்ற வினாக்களுக்கெல்லாம் விரிவான விடை கிடைக்கும்.

நமது கடமை மக்களை விழிப்படையச் செய்வதே! அந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் இதன் மூலம் செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இவ்விரு நூல்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கழகப் பொறுப்பாளர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொய்ப் பிரச்சாரங்களை வசீகரமான முறையில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி மக்களிடம் செல் வார்கள் - அந்தச் சூழ்ச்சி வலைகளில் வாக்காளர்கள் விழுந்து விடாமல் தடுக்கும் ஆற்றல் இந்த இரு நூல்களுக்கும் உண்டு. நூல்களின் ஆதிக்கம் அறுபட இந்நூல்கள் தேவை!

எனவே இந்த அறிவார்ந்த பணியில் ஈடுபடுவீர்! அறியாமையை அகற்றுவோம்! அறிவொளியைப் பரப்புவோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/77717.html#ixzz2xIzmuSfv

தமிழ் ஓவியா said...

இராமலக்குமி சண்முகநாதன் - மகளிருக்கு வழிகாட்டி வாழையடி வாழையான கொள்கைக் குடும்பம் இது!


இராமலக்குமி சண்முகநாதன் - மகளிருக்கு வழிகாட்டி வாழையடி வாழையான கொள்கைக் குடும்பம் இது!

தமிழர் தலைவரின் இயக்கம் சார்ந்த கொள்கைவுரை


சிவகங்கை, மார்ச் 28- மறைந்த இராமலக்குமி சண்முகநாதன் அவர்கள் மகளிர்க்குத் தலைசிறந்த வழிகாட்டி. இந்தக் குடும்பம் பல தலைமுறைகளாக இயக்க வழிவந்த சிறந்த குடும்பம் என்று பாராட்டினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.2.2014 அன்று சிவகங்கையில் நடைபெற்ற படத்திறப்பு விழா வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் நினைவேந்தல் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு, இந்தக் கொள்கையினு டைய பயன் என்ன என்பதை விளங்காதவர்களுக்கும் விளங்க வைக்கக் கூடிய அரிய பணியை செய்துகொண்டிருக்கக்கூடிய பொறியாளர், மேனாள் தலைமைப் பொறியாளர், பல சர்க்கரை ஆலைகளையெல்லாம் இவருடைய அறிவும், ஆற்றலும்தான் தமிழகத்தில் நிறுவியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்த பொறியாளர் இயக்கப் பொதுக்குழு உறுப்பினரும், முதுபெரும் பெரியார் தொண்டர் மானமிகு எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியம் அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்களே, கழகப் பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார் அவர்களே, குணசேகரன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து அவர்களே,

தன்னுடைய பதவி காலத்தில், இந்த நகர மன்றத்தில் வரவேற்பு கொடுத்து, ஒரு காலத்தில் செருப்புத் தோரணம் கட்டிய ஊரிலே, அன்று நகர மன்றமே தந்தை பெரியாரை வரவேற்றது என்ற பெருமைக்குரிய வாய்பபையெல்லாம் உருவாக்கிக் காட்டிய, சீரிய பகுத்தறிவாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை வீரர் அய்யா சாத்தய்யா அவர்களே,

அதேபோன்று, திராவிடர் கழகத்தினுடைய சட்டத்துறை துணைத் தலைவர் மேனாள் மாவட்ட நீதிபதி நடராசன் அவர்களே,


தமிழ் ஓவியா said...

குருதிக் குடும்பம் என்ற முறையில்...

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற சிவகங்கை மாவட்டத் தலைவர் சுப்பையா அவர்களே, மாவட்டச் செயலாளர் தனபாலன் அவர்களே, காரைக்குடி மாவட்டத் தலைவர் அரங்க சாமி அவர்களே, என்னாரெசு பிராட்லா அவர்களே, ஒருங் கிணைப்பாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சாமி. திராவிடமணி அவர்களே, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெயராமன் அவர்களே, செயலாளர் முருகேசன் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி அவர்களே, செயலாளர் வீரப்பன் அவர்களே, அறந்தாங்கி மண்டல பொறுப்பாளர் இராவணன் அவர்களே மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, இந்தக் குடும்பத்தின் அம்மா இராமலக்குமி சண்முகநாதனார் அவர்களை இழந்த நிலையில், இயக்கத்திற்குப் பொது வாழ்க்கைக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும்கூட, நேரிடையாக அந்த இழப்புக்கு ஆளாகி இருக்கக் கூடியவர்கள், நம்முடைய சட்டத்துறைச் செயலாளரும், சீரிய வழக்குரைஞராகவும் இருக்கக்கூடிய இன்பலாதன் அவர்கள், அதேபோல், அவருடைய சகோதரியார் தோழியர் பேராசிரியர் தேம்பாவணி அவர்கள், இன்பலாதன் அவர்களுடைய வாழ்விணையர் டாக்டர் மலர்க் கண்ணி அவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் டாக்டர் ராஜராஜன், டாக்டர் தேம்பாவணி ஆனாலும், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ஆனாலும், நேரிடையான இழப்புக்கு ஆளானவர்கள் குருதிக் குடும்பம் என்ற முறையில்.

அதேபோல், அவருடைய இழப்பை அதிகமாக உணர்ந்து சங்கடப்படக்கூடியவர்கள், துன்பமும், துயரமும் பெறக்கூடிய வர்கள் என்றால், கொள்கைக் குடும்பத்தினர் - அதுதான் இயக்கக் குடும்பத்தினர்.

துணிந்து முடிவெடுப்பார்கள்!

அம்மா இராமலக்குமி சண்முகநாதனார் அவர்களைப்பற்றி நிறைய சொல்லலாம், நேரத்தின் நெருக்கடியின் காரணமாக சில செய்திகளை மட்டும் சொல்கிறேன். இங்கே மிக அருமையாக கற்பூரசுந்தரபாண்டியன் அய்.ஏ.எஸ். அவர்கள் சொன்னார், அந்த அம்மா எப்படி துணிந்து முடிவெடுப்பார்கள் என்பதைப்பற்றி சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

அந்த அம்மா மிகப்பெரிய வீராங்கனை! எதையும் துணிந்து முடிவெடுப்பார்கள். பேசும்பொழுது தயக்கம் காட்டியதே கிடையாது - அது எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும். நாங்கள் எல்லாம் பெரியார் மேளாவிற்காக தனி ரயிலில் லக்னோவிற்குச் சென்றோம்.

அப்பொழுது அங்கே கான்ஷிராம், மாயாவதி ஆகியோர் எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய அறிவுரை இருக்கிறதே, அது அனுபவ முத்திரை படைத்ததாகும்

மாயாவதி அவர்களைச் சந்தித்த இந்த அம்மையார் அவர்களிடம் உரையாடினார். இந்த அம்மையாரை அவர்கள் மேடையில் அமர்த்தினார்கள். இந்த அம்மையார் எதற்கும் தயங்க மாட்டார்கள். அதுவும் ராமச்சந்திரனார் மகள் என்கிற முத்திரை இருக்கிறது பாருங்கள், அது தனி குடும்ப முத்திரையாகும். மகளிரணிக்கு தோன்றாத் துணையாக இருந்தார்கள். இங்கே மகளிரணித் தோழியர்கள் வந்திருக்கிறார்கள். கட்டுப்பாடு என்பதற்கு, அய்யா சண்முகநாதன் அவர்கள் ஒரு பெரிய தத்துவ கர்த்தர். எங்களுக்கு ஒரு பெரிய தோன்றாத் துணையாக விளங் கியவர். அவருடைய மறைவின்பொழுது அப்பொழுது சொன் னேன், எங்களைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு என்று. ஏனென்றால், சில சிக்கலான காலகட்டத்தில், அய்யா அவர்கள் மறைந்த பிறகு, அம்மா இருந்த காலத்தில், அய்யா சண்முகநாதன் அவர்களுடைய அறிவுரை இருக்கிறதே, அது அனுபவ முத்திரை படைத்ததாகும்.

மிக ஆழமான சில கருத்து களைச் சொல்லுவார்கள். அந்தக் கருத்துரையை அம்மா அவர்கள் கேட்டு, அதன்படி நடந்த சில சம்பவங்களும் உண்டு. அதன் பிறகு, அம்மாவின் மறைவிற்குப் பிறகு, அவர் சில அறிவுரைகளை சொல்வார், இப்படி செய்தால், சிறப்பாக இருக்கும் என்று. ஆனால், அதேநேரத்தில், மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது, குடும்பம் குடும்பமாக மகளிரணியில் இருப் பார்கள். சில குடும்பங்களில் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள். இந்தக் குடும்பம் அப்படியல்ல. அன்றைய தலைமுறை தொடங்கி, இங்கு நான் கவிஞரிடம் சொன்னேன், வெளிநாட்டில் எல்லாம் ஒரு நல்ல முறையை கையாளுகிறார்கள்; பேமினி ட்ரி குடும்ப வரலாற்றினைபற்றி போட்டிருப்பார்கள். ராமச்சந்திரனார் அவர் களுடைய காலத்திலிருந்து இந்தக் குடும்பத்தினர் அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய வரலாற்றினை பாதுகாத்து வருகிறார்கள்.

எங்களிடம் அவர்களுடைய ஜாதகமும் கிடையாது; அவர்களுடைய பெயரும் தெரியாது

பல குடும்பங்களில், நம் தமிழர்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், தாத்தா வரைக்கும்தான் பெயர் தெரியும். தாத்தாவுக்கு அப்பா பெயர் என்ன? என்றும், தாத்தாவுக்கு தாத்தா பெயர் என்ன? என்று யாரையாவது கேட்டால், அய்யோ அது எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் அவர்களுடைய ஜாதகமும் கிடையாது; அவர்களுடைய பெயரும் தெரியாது என்று சொல்கின்ற அளவில்தான் இருக்கும்.

ஆனால், நம் நாட்டுப் படிப்பில் பார்த்தீர்களேயானால், விக்டோரியா மகாராணி அதற்கு முன்பிருந்து, எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அதனை மனப்பாடமாகப் படிக்கச் சொல்லி யிருப்பார்கள். அதேபோல், ஒன்றாவது சந்திரகுப்தர், இரண்டாவது சந்திரகுப்தர், மூன்றாவது சந்திரகுப்தர் இப்படிப்பட்டவைகளை சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

நம் சொந்தக் குடும்பத்தினைப் பார்த்தீர்களேயானால், அதுவும் இந்தக் குடும்பத்தினுடைய வரலாறும், தமிழகத்தினுடைய மறுமலர்ச்சி வரலாறும் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பம், ராமச்சந்திரனார் அவர்களுடைய குடும்பம்.

இரட்டைக் குழந்தைகள் எப்படிப் பிறந்தார்கள்?

தமிழ் ஓவியா said...

அம்மா அவர்கள், அவர்களுடைய மகள் என்கிற பெருமை மிகப்பெரிய பெருமையாகும். இங்கே இன்பலாதன் அவர்கள் சொன்ன பிறகுதான், இரட்டைக் குழந்தைகள் எப்படிப் பிறந்தார்கள் என்கிற செய்திகள் எங்களுக்குத் தெரியும். இந்த மாதிரி செய்திகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பாக எழுதி வைக்கவேண்டும்.

பெண் என்றால், அடக்கம் வேண்டும், ஒடுக்கம் வேண்டும் என்று ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள் அன்றைய காலகட்டத்தில். இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைக்கு பெண்கள் இப்படி வருகிறார்கள் என்பது சாதாரணம் - காலம் மாறிவிட்டது. ஆனால், அன்றைய காலகட்டத்தில், யாராக இருந்தாலும் சரி, அது கலெக் டராக இருந்தாலும் சரி, ‘I am Ramalakmi Sanmuganathan’ என்று சொல்வார்கள்.

அவ்வளவு துணிச்சலாக இருக்கக்கூடியவர்கள். அப்படி இருந்தாலும், இயக்கம், பொறுப்பு என்று சொன்னால், தந்தை பெரியாரிடத்தில், அவரை உபசரிப்பதில், அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில், அவர்கள் எல்லாம் மறைந்த பிறகு, எங்களைப் போன்றவர்களிடத்தில், அவர்களைவிட வயது குறைந்தவர்களிடத்தில் - ஆனால், அம்மையார் அவர்கள் வயதையோ, மற்றவைகளையோ அவர்கள் நினைப்பதில்லை. ராணுவத்தில் எப்படி வயது குறைந்த ஒரு ராணுவத் தளபதியைகூட வயது முதிந்தவர்கள் மதிப்பார்கள் என்பதற்கு அடையாளமாக - நாங்கள் வரும்பொழுது, எங்களைப் பார்க்க வரும்பொழுது, குறிப்பாக என்னை பார்க்க வரும்பொழுது, வேறு புடவை அவர்கள் கட்டியிருந்தாலும், என்னைப் பார்க்க வரும்பொழுது கறுப்புப் புடவையைக் கட்டிக்கொண்டுதான் வந்து பார்ப்பார்கள். தலைவரைப் பார்க்க வரும்பொழுது, இயக்கத்தில் இருக்கின்ற நான், தலைவரைப் பார்க்க வரும்பொழுது கறுப்புடை அணிந்துதான் வரவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. இந்த மாதிரியான ஒரு கட்டுப்பாடு, அம்மையார் அவர்களுடைய வயதிற்கு நான் அவர்களின் பிள்ளை மாதிரி; அது பெரிய விஷயமல்ல. என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் பார்ப்பார்கள்.

ஜாதி பட்டத்தை விடுகிறோம் என்று போட்ட தீர்மானத்தை, இவர்தான் முன்மொழிந்தார்!

இந்தக் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்றால், ராமச்சந்திரனார் அவர்களைப் பார்க்கின்ற வாய்ப்போ, வயதோ எங்களுக்கு இல்லை. ஆனால், அவர்கள் உருவாக்கிய வித்து இருக்கிறது பாருங்கள், செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டின் வரலாறு என்னவென்றால், ஜாதி பட்டத்தை விடுகிறோம் என்று போட்ட தீர்மானத்தை, இவர்தான் முன்மொழிந்தார்.

அவர் ஆனாலும், அவருடைய சகோதரர்களானாலும், அய்யா ராமசுப்பிரமணியன் அவர்களானாலும், அதேபோல, அவர்களுடைய தந்தையார் ராசசேகரன் அவர்களானாலும், சத்தியேந்திரன் அவர்களானாலும், அவர்கள் எல்லாம் பார்த்துப் பழகக்கூடிய, அய்யாவிடத்தில் அவர்கள் எப்படி மரியாதை காட்டினார்கள். தந்தை பெரியார் அவர்கள் எப்படி இந்தக் குடும்பத்தின்மீது வாஞ்சையாகவும், அன்பாகவும் இருந்தார்கள்!

பல இடங்களில் பார்த்தீர்களேயானால், இந்தக் குடும்பத்த வர்கள் பரவி, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தினுடைய விளைவு, கல்வியினுடைய வாய்ப்புகள் நிறைய வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், நீதியரசர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். சர்வீஸ் கமிஷன் சேர்மேனாக அய்யா அவர்கள் இருந்தார்கள். இன் றைக்கு அவர்களுடைய தன்மை என்னவென்றால், அய்யா ராமசுப்பிரமணியம் அவர்களைப்போல நேர்மை, அவருடைய இன உணர்வு இதற்கு சமமாக ஒருவரைப் பார்க்க முடியாது. அதற்குக் காரணம், அவருடைய தந்தையாரிடத்தில் படித்த பாடம்தான்.

தமிழ் ஓவியா said...

அவருடைய மகளை இங்கே பார்த்தோம். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அய்யா கடைசியாக மருத்துவமனையில் இருக்கிறார். அந்த நேரத்தில்கூட விடுதலையைப் படிக்கவேண்டும் என்று, இந்தப் பாப்பா படிக்கும்; விடுதலை தலையங்கத்தைப் படி என்பார்; இந்தப் பாப்பாவும் படிக்கும்.

மாநாட்டிற்கு அரசு அதிகாரிகளாக இருக்கிறவர்கள் யாரும் வரக்கூடாது

தந்தை பெரியார் மாநாடு நடத்தினார். அப்பொழுது அய்யா சொன்னார், இந்த மாநாட்டிற்கு அரசு அதிகாரிகளாக இருக்கிற வர்கள் யாரும் வரக்கூடாது என்று சொல்லுங்கள்; ஏனென்றால், அந்த மாநாட்டில் சிக்கலான தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறேன். அதிகாரிகளாக இருக்கிறவர்கள் வழக்கமாக எல்லா மாநாட்டிற்கும் வருவார்கள். மாநாடு முடியும் நேரத்தில், தந்தை பெரியார் அவர்களை சந்தித்துவிட்டுத்தான் செல்வார்கள். அப் பொழுதுதான் அய்யாவிற்கு இவர்கள் மாநாட்டிற்கு வந்திருக் கிறார்கள் என்பது தெரியும். எங்களைப் போன்றவர்களுக்கு முன்பே தெரியும். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அய்யா அவர்கள் வருவார்கள்.

ஒருமுறை இவருடைய கொள்கை உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு, சர்வீஸ் கமிஷன் சேர்மனாக இருக்கிறார் அவர். அந்த மாநாட்டிற்கு அதிகாரிகள் வரக்கூடாது என்று அய்யா சொல்லி யிருந்தார், ஆனால், இவர் தலைப்பாகை கட்டிக்கொண்டு அந்த மாநாட்டிற்கு வந்திருந்தார். மாநாடு முடியும்பொழுது, அய்யா அவர்களை சந்தித்தார், உடனே அய்யா அவர்கள், நீங்கள் ஏன் வந்தீர்கள் - நான்தான் அரசு அதிகாரிகள் வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேனே என்று கேட்டார். ஆக, இப்படிப்பட்ட உணர்வுகள் சாதாரணமானதல்ல.

நெருக்கடி காலத்தில், இந்தக் கொள்கைக்காகவே அவருடைய பதவிக்குத் தொந்தரவு ஏற்பட்டது

அதேபோல, அண்ணன் ராசசேகரன் அவர்கள், சத்தியேந் திரனைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. நெருக்கடி காலத்தில், இந்தக் கொள்கைக்காகவே அவருடைய பதவிக்குத் தொந்தரவு ஏற்பட்டது - இது எல்லோருக்கும் தெரியும்.

அதேபோல், நண்பர் குருசாமி அவர்களானாலும், வரிசையாக ஒவ்வொருவரைப்பற்றியும் ஏராளமாக எங்களுக்குச் சொல்லத் தெரியும்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், கண்ணதாசன் அவர்கள், அன்னை நாகம்மையாரைப்பற்றி எழுதிய ஒரு குறிப்புக்காக, நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப் பொழுது எங்களை 15 நாள் ரிமாண்டில் வைத்தார்கள். என்னுடன் 200 தோழர்கள் சிறைச்சாலையில் இருந்தார்கள். எங்களுடைய ரிமாண்டை நீட்டிப்பதற்காக எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள், எந்தக் காரணமும் சொல்லாமல், இன்னும் 15 நாள் ரிமாண்டை நீட்டிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சொல்கிறார். ஆனால், நீதிபதி அவர்கள், இல்லை, இல்லை என்னால் அதனை ஒப்புக்கொள்ள முடியாது; 15 நாள் ரிமாண்டை நீட்டிப்பதற்கு நீங்கள் ஆதாரம் காட்டவில்லை. இப்பொழுதுள்ள ரிமாண்டே அவர்களுக்கு அதிகம். அதனால் எல்லோரையும் நான் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி சொன்னார்.

இன்னும் 15 நாள் சிறைச்சாலையில் இருந்தால், ஓய்வாகவும் இருக்கும், நிறைய படித்துக் கொண்டிருப்போம், அரசாங்க செலவில், பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருப்போம் சிறைச்சாலையில்.

ஆனால், நீதிபதி அவர்கள் ரிமாண்டை நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

நீதிபதி யார் என்று கேட்டேன் நான்.

இவருடைய பெயர் குருசாமி என்று சொன்னார்கள். ஆனால், அப்பொழுது எனக்கு அவரைத் தெரியாது.

நீதிபதி தீர்ப்பு எழுதும்பொழுது அதில் என்ன எழுதியிருந்தார் என்றால், இந்திரா காந்தி வழக்கு என்பதில், காரணம் இல்லாமல் ரிமாண்டை நீட்டிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்; அதனால் இவர்களின் ரிமாண்டை நீட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை; ஆதலால் இவர்களை விடுதலை செய்கிறேன் என்று எழுதியிருந்தார்.

காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில்...

தமிழ் ஓவியா said...

இந்தக் குடும்பத்தின் காரணமாக பயிற்சி பெற்று, அதன் மூலமாக அவர்கள் பொறுப்புக்கு வந்து, அவர்களே இந்த வழக்குகளையும் சந்தித்த பல செய்திகள் உண்டு.

இங்கே நம்முடைய சாமி.திராவிடமணி உரையாற்றும்பொழுது சொன்னார், கற்பூரசுந்தரபாண்டியன் அவர்கள் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர். நம்முடைய தோழர்களுக்கு சிந்திக்கக் கூட மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு எல்லாம் சிந்திக்கிறார்கள்; மாவட்ட ஆட்சித் தலைவரைத் தாண்டி, அவர் பல படிக் கட்டுகளைத் தாண்டித்தான் இருந்தார்கள்.

ஆக, காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமு தாயத்தில், இவர்களுடைய உழைப்பினால் வாய்ப்பு அத்தனையும் வந்தது.

அவர்கள் எல்லாம் தி.மு.க.விற்குச் சென்ற காலகட்டத்தில்கூட, அய்யா சண்முகநாதன் அவர்களும், அவருடைய துணைவியார், இன்றைக்கு அவருடைய பிள்ளைகள் இன்பலாதன் அவர்களா னாலும், அவருடைய வாழ்விணையர் ஆனாலும், அவர்களு டைய பிள்ளைகள் ஆனாலும் இந்தக் கொள்கையில் மிகத் தெளிவாக உள்ளனர்.

எல்லா மாணவர்களுக்கும் ஈர்ப்பு தி.மு.க.வில்தான்!

அதேபோல நம்முடைய பாலசுப்பிரமணியம் அவர்கள், நாங்கள் படிக்கின்ற காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் படித்தவர்; நாங்கள் பொருளாதாரத் துறையில் படித்தவர்கள். திராவிட மாணவர் கழகம் என்று சொன்னால், அதில் குறைவானவர்கள்தான் இருந்தார்கள். ஏனென்றால், எல்லா மாணவர்களுக்கும் ஈர்ப்பு தி.மு.க.வில்தான் இருக்குமே தவிர, பெரியார் பக்கம் ஈர்ப்பு இருப்பது மிகவும் குறைவு. நாங்கள் இருந்தபொழுது மூன்று, நான்கு பேர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தோம். ஆனால், அப்படிப்பட்ட நிலையில், மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் பாலசுப்பிரமணியம் அவர்கள் இருப்பார்கள்.

இங்கே ஒரு சம்பவம் நடந்தது. அம்மா அவர்கள் ஒரு புதிய வீடு கட்டி, அதன் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் சண்முகநாதன் அவர்கள், அம்மா அவர்கள் அதில் உறுப்பினர். அந்த வகையில், இன்பலாதன் வழக்குரைஞர், மாணவர் கழகம் மற்ற அமைப்புகளில் இருக்கிறார். அவருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு பேரும் வாழ்விணையர்போல் அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்

அந்த வீடு திறப்பு விழாவிற்கு வந்தவுடன், சண்முகநாதன் அவர்கள் இந்த மாவட்டத்திற்குத் தலைவர். மாவட்டச் செயலாளர் யார் என்றால், அப்பொழுது காரைக்குடி இணைந்திருந்த ராமநாத புரத்திற்கு என்.ஆர்.சாமி அவர்கள் செயலாளர். இந்த இரண்டு பேரும் இரட்டையர்களாக இருப்பார்கள். தலைவர் என்ன சொல்கிறாரோ, செயலாளர் செய்வார். செயலாளர் என்ன சொல்கிறாரோ அதனைத் தலைவர் செய்வார். இரண்டு பேரும் வாழ்விணையர்போல் அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்.

நான் இயக்கத்தில் பொறுப்பு ஏற்றவுடன், திருச்சியில் ஒரு கமிட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அந்தக் கமிட்டியில் நான் உரையாற்றும்பொழுது, இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும்; அடுத்தடுத்த தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்று உரையாற்றினேன்.

நான் அப்படி உரையாற்றியவுடன், இந்த இரட்டையர்கள் எழுந்து, எங்கள் இரண்டு பேர்களுடைய பிள்ளைகளையும், நாங்கள் இருக்கின்ற பொறுப்பிற்கு நீங்கள் போட்டுக்கொள்ளலாம். தாராளமாக நாங்கள் விலகிக் கொள்கிறோம். தலைவராக இன்ப லாதன்; செயலாளராக சாமி.திராவிடமணி என்று சொன்னார்கள்.

அந்தப் பொறுப்புகளுக்கும் அவர்களுடைய மகன்கள் வந்துவிட்டார்கள்.

அறக்கட்டளையின் பொறுப்பாளராக அய்யா சண்முகநாதன் அவர்கள் இருந்திருக்கிறார் - எங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். வீடு திறப்பு விழாவினை மிகவும் வித்தியாசமாக நடத்தினார்கள்!

வீடு திறப்பு விழாவிற்கு எங்களை அழைத்தவுடன், நாங்கள் வந்தோம். வீடு திறப்பு விழாவினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடத்துவார்கள்; ஆனால், அய்யா அவர்களும், அம்மா அவர்களும் அந்த வீடு திறப்பு விழாவினை மிகவும் வித்தியாசமாக நடத்தினார்கள்.

அது என்னவென்றால், நம்முடைய ராஜராஜன் அவர்கள் அப்பொழுது மிகவும் சிறுபிள்ளையாக இருந்தார். இப்பொழுது டாக்டராகி, திருமணமும் ஆகிவிட்டது. அதேபோல், தேம்பாவணி அவர்களும் சிறுபிள்ளைகளாக இருந்தனர். இருபது ஆண்டு களுக்கு மேலாக இருக்கும். எனக்கு இன்னும் அந்த உருவம்தான் ஞாபகத்தில் இருக்கிறது. எப்பொழுதும் சிறுபிள்ளைகளாக பார்த்த உருவத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த நினைவு என்னுடைய மனதில் பசுமையாக இருக்கிறது

தமிழ் ஓவியா said...

அய்யா சண்முகநாதன் அவர்கள் பெயரப் பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, இந்த வீடு திறப்பு விழாவை ஒரு மாற்றமாக செய்யவேண்டும் என்றார். வீடு திறப்பு விழாவை யொட்டி எங்களுடைய அடுத்த வாரிசாக இவர்கள் இரண்டு பேரையும் உங்களிடம், இயக்கத்திற்காக ஒப்படைக்கிறேன் என்று என்னிடம் கொடுத்தார். இன்னும் அந்த நினைவு என்னுடைய மனதில் பசுமையாக இருக்கிறது. வேறு எங்கும், எந்த இயக்கத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறாது.

அரசியலில் வேண்டுமானால் விமர்சனம் வரலாம் - ஆக, இவருடைய பிள்ளைகள், பெயரப் பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்று. திராவிட இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொண்டவரின் பிள்ளைகள் கோயிலுக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள்; மூட நம்பிக்கை கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றால்தான், இந்தக் கொள்கைக்கு ஒரு படி குறைவே தவிர, ஆனால், இந்தக் கொள்கைகளில் அவரைவிட, அவர் பிள்ளைகள், பெயரப் பிள்ளைகள் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்றால், இது வாக்குரிமையில் மிகக் கட்டாயமாக வற்புறுத்தப்படவேண்டிய வாக்குரிமையே தவிர இது தவிர்க்கப்படக்கூடியது அல்ல. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் ஓவியா said...

அந்த அடிப்படையில், இந்தக் குடும்பம் கொள்கைக் குடும்பமாக முழுக்கமுழுக்க திகழ்ந்து கொண்டிருக்கிறது - பல தலைமுறையாக.

அம்மா அவர்களுடைய பணி, மகளிரணியினருக்கு வழிகாட்டியாகவும்...

ஆகவேதான், கட்டாயமாக இந்தக் குடும்பத்தினுடைய பாரம்பரியப் பெருமைகள்; அதேபோல், வழிவழியாக வந்திருக் கிறவர்கள் எத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நன்மைகள் - இவை அத்தனையும் வருங்காலத் தலைமுறையினருக்கும், சமுதாய மாற்றங்கள் திராவிட இயக்கத்தினால், நீதிக்கட்சியினால், சுயமரியாதை இயக்கத்தினால் எப்படி ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும் தெளிவாக வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கவேண்டும்.

அந்த வகையில், அம்மா அவர்களுடைய பணி, மகளிரணி யினருக்கு வழிகாட்டியாகவும், அதேநேரத்தில், இந்த ஊரில், எது எது பொதுத் தொண்டறமோ அவை அத்தனையும் செய்தார்கள், நேரிடையாக.

தமிழ் ஓவியா said...

தொண்டறம் என்பது மிக முக்கியம். வாழ்க்கையில் இல்லறம் மட்டும் முக்கியமல்ல.

எனவே, அந்த வகையில், கடைசியாக இங்கே நல்ல பணியை இன்றைக்குச் செய்திருக்கிறார்கள்.

நீத்தார் நினைவு நாள் சிந்தனைகள் அவருடைய இந்த நினைவைப் போற்றுகின்ற நிகழ்ச்சியில், நினைவேந்தல் நிகழ்வில், நீத்தார் நினைவு நாள் சிந்தனைகள் என்று தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துரைகள் அடங்கிய, அற்புதமான ஒரு கருவூல நூலை எல்லோருக்கும் வழங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் அந்த நூலின் 27 ஆம் பக்கத்தில், மனிதன் தனக்கென்று பெரும் பொருளைச் சேர்த்து வைத்தால், தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால், மற்றவர்களின் நலனுக்கென்று, சிறிதளவு மதிப்புள்ள பொருளை விட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். எனவே, மனிதன் தன்னலத்திற்கு என்று புகழைத் தேடுவதற்குச் செய்யும் முயற்சி அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை; பிறர் நலத்திற்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.

இதுதான் பொதுநலம்; அதற்குப் பெயர்தான் தொண்டறம் என்று பெயர். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்.

திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளமாட்டார்

இந்தியாவினுடைய மக்கள் தொகை 112 கோடி என்று சொன்னால், திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளமாட்டார். அவர்களில் யார் உயிரோடு இருக்கிறவர்கள் என்று கேட்பார்.

இந்த உயிரோடு இருக்கிறவர்கள் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றால், அவர் ஒரு அடையாளம் வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே கருதி, யார் அந்தத் துயரத்தைத் துடைப்பதற்குத் தயாராக இருக்கிறானோ, அவன் மட்டும்தான் வாழ்கின்ற மனிதன்; மற்றவர்கள் எல்லாம் செத்தாருள் வைக்கப்படும் என்று சொல்வார்.

அதேமாதிரி, மற்றவர்களுக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் பணம் சம்பாதிக்கவேண்டும்; பதவிக்குப் போகவேண்டும்; புகழ் சம்பாதிக்கவேண்டும் என்பதெல்லாம் மனித இயல்பு.

இந்தக் குடும்பம் வெறும் இல்லறம் நடத்திய குடும்பம் அல்ல; அம்மா அவர்களுடைய நினைவை நாம் போற்றுகிறோம்; பலரும் பாராட்டுகிறார்கள். நம்முடைய கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்கூட, பெரியாருடைய தொண்டறத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியாருடைய கொள்கையை செரிமானம் செய்துகொள்ள முடியாதவர்கள்கூட, பெரியாருடைய தொண்டறத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் அய்யா சொன்னார், கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், மனிதனை நினை! என்று சொன்னார்.

மனிதனை நினை என்று சொல்லும்பொழுது, அவர்களுக்கு கல்வியைக் கொடுப்பதற்கு உழையுங்கள்! சமூகநீதிக்கு உழை யுங்கள்! அவர்களுடைய அடிமைத்தனத்தைப் போக்குவதற்கு, அவர்களுடைய சமத்துவமின்மையைப் போக்குவதற்கு உழைக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

எனவேதான், மிகப்பெரிய அளவிற்கு ஒரு நல்ல குடும்பம்; ஒரு கொள்கைப் பல்கலைக் கழகமாக இந்தக் குடும்பம் வளர்ந்திருக்கிறது.

இலவசமாக மருத்துவப் பரிசோதனை

இவர்களுடைய நினைவேந்தலை அற்புதமாக, தொண்டறமாக செய்யவேண்டும் என்பதற்காகத்தான், நாம் படத்திறப்போடு மட்டும் நிறுத்திவிடவில்லை. பெரியார் மருத்துவ அணி மருத்துவர்களைப் பாராட்டவேண்டும். அதுபோலவே, இங்கே இருக்கின்ற லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், மற்ற அமைப்புகள் இதைச் சார்ந்த சிவகங்கை மருத்துவர்களும் ஒத்துழைத்து, அவர்களும் நம்முடைய வேண்டுகோளுக்கிணங்க இன்றைக்கு இங்கே வந்து, ஒரு நல்ல மருத்துவ முகாம் - பல்துறை மருத்துவர்கள் இலவசமாக மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொள்கைச் சுடரை அணையாது காப்பாற்றுங்கள்!

எனவே, ஒவ்வொருவருடைய பிறந்த நாள் என்று சொல்லும்பொழுது அல்லது அவர்களுடைய மறைந்த நாள் என்று சொல்லும்பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும், சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்ற பணிகளையும் செய்து, அந்தத் தொண்டறத்தை சிறப்பாகச் செய்யவேண்டும். அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் நிறைந்த வாழ்வாக வாழ்ந்தார்கள். பிறருக்கு வழிகாட்டினார்கள். தன் னுடைய பிள்ளைகளைப் பெயரக் குழந்தைகளை வழிவழியாக வருகிறவர்களையெல்லாம் இந்தக் கொள்கைச் சுடரை அணையாது காப்பாற்றுங்கள்; அதன்மூலம் புதியதோர் உலகு செய்யுங்கள் என்று காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர் களுடைய நினைவு என்றும் மறையாது. என்றென்றைக்கும் புதுப்புது வடிவத்திலே உருவாக்கிக் காட்டும். அந்தத் தலைவர்கள் உருவாக்கிய இந்தப் பாரம்பரியமிக்கக் குடும்பம் இந்தக் குடும்பத்தினுடைய புகழ் ஒளி என்றைக்கும் மங்காது - சிறப்பாக இருக்கும் என்று சொல்லி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், வணக்கம்! நன்றி!!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வாழ்க அம்மையாரின் புகழ்!!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/77704.html#ixzz2xJ0Canpr

தமிழ் ஓவியா said...

பூனைச் சகுனம்!

மூடநம்பிக்கைகளில் குரங்குப் பிடியாக இருப்பவர் சாம்பசிவம் அவர் வீட்டை விட்டு எங்கேனும் வெளியே புறப்பட்டு விட்டாரென்றால், பூனைச் சகுனம் பார்த்துக் கொண்டுதான் போவார்.வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதோ, தெருவில் நடந்து செல்லும் போதோ பூனை குறுக்கே போய்விட்டால் போதும் - அடுத்த அடி வைக்காமல் - போகவேண்டிய காரியத்துக்குப் போகாமல் அப்படியே வீடு திரும்பி விடுவார். மறுநாள்தான் குறிப்பிட்ட காரியத்திற்குப் போவார்.

அடுத்த வாரம் தீபாவளி, நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள் ளைகளுக்கும், மகளுக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும். சாம்பசிவத்தின் கையில் சல்லிக் காசுக் கூட இல்லை. தமது நண்பரின் ஜவுளிக்கடையில் கடன் சொல்லி, துணிமணிகள் எடுத்து வரலாமென்று கடையை நோக்கிச் செல்கிறார் சாம்பசிவம்.

கடனுக்கு ஜவுளி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதை பதைப்பு அவர் மனத்தில். இந்த லட்சணத்தில் பூனை வேறு வந்து குறுக்கே பாய்ந்து விடுகிறதோ என்ற பயமும் சேர்ந்து விட, துவண்ட நடையுடன் சென்று கொண்டி ருக்கிறார்.

சீ! சனியன்! பயந்தபடியே நடந்து விட்டது - கறுத்த பூனை - பாவம்! சாம்பசிவத்தின் காலுக்கு முன்னால் எவ்வளவு இளக்காரமாக குறுக்கே பாய்ந்து செல்கிறது.... சாம்பசிவத்துக்கு மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது!

சிலையாக நின்றவரின் கண்ணுக்கு முன்னால் - பத்தடி தூரத்தில் தெருவுக்கு நடுவே பளிச்சிட்டுத் தெரிகிறதே - அது என்ன? நூறு ரூபாய் முழுநோட்டு! யாரோ ஒரு துரதிருஷ்டக்காரன் போட்டுவிட்டுப் போனது போலிருக்கு! அவர் மனதில் ராக்கெட் வேகத்தில் ஒரு போராட்டம் ஒரு வாரத்தில் தீபாவளிப் பண்டிகை... துணிமணிப் பிரச்சினை...

அடுத்து மின்னல் போன்று மனதில் ஒரு உந்துதல் பூனை குறுக்கிட்டால் ஒரு அடிகூட எடுத்து வைக்காத சாம்பசிவம், இப்போது பல அடிகள் எடுத்து வைத்துவிட்டார் - அந்த நூறு ரூபாய் நோட்டை நோக்கி!

- எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத் - 5

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1xnVZv

தமிழ் ஓவியா said...


போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது: இந்தியா புறக்கணிப்பு


ஜெனீவா, மார்ச் 28- இலங் கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான அப்பாவித் தமி ழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசா ரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு உலக நாடு களும் வற்புறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர் பாக இலங்கைக்கு எதிராக ஜெனீவா நகரில் உள்ள, 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெ ரிக்கா ஏற்கெனவே தொடர்ச் சியாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறை வேறின.


தமிழ் ஓவியா said...

இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டில் போர் முடி வுற்ற போதிலும் அங்கு இது வரை மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது என் றும், இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற் றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி அய்.நா.மனித உரிமை கவுன் சிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா புதி தாக ஒரு வரைவு தீர்மா னத்தை கடந்த செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தது. இங்கிலாந்து, மான்டி னெக்ரோ, மாசிடோனியா, மொரீஷியஸ் ஆகிய நாடு களுடன் சேர்ந்து இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.

இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், அது தொடர்பாக நடைபெற்ற குற்றங்கள் ஆகியவை பற்றி சுதந்திர மான விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப் பட்டு இருந்தது.

இந்த நிலையில், இலங் கைக்கு நேரில் சென்று விசா ரணை நடத்திய அய்.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை நேற்று முன் தினம் கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை யிலும், இலங்கையில் நடை பெற்ற போர்க்குற்றங்கள் பற்றி நம்பத்தகுந்த சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ் ஓவியா said...

ஆனால் அய்.நா. மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தர தூதர் ரவிநாத ஆர்யசிங்கா இதை நிராகரித்தார்.

இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு எதிரான அமெ ரிக்க தீர்மானத்தின்மீது உறுப்பு நாடுகளின் விவாதம் நடைபெற்றது.

அப்போது இந்த தீர்மா னத்தை இலங்கை கடுமை யாக எதிர்த்தது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் உறுப்பினர்கள் நவி பிள் ளையின் அறிக்கையை கடு மையாக விமர்சித்து பேசி னார்கள். ஆனால் அமெ ரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளின் உறுப்பினர்கள் நவி பிள்ளை யின் அறிக்கையையும், அமெரிக்க தீர்மானத்தையும் ஆதரித்து பேசினார்கள்.

உறுப்பினர்களின் விவா தத்துக்கு பின் நேற்று அமெ ரிக்க தீர்மானத்தின்மீது வாக் கெடுப்பு நடைபெற்றது.

தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட 23 நாடு களின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர். தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா, வெனி சூலா, பெலாரஸ், ஜிம் பாப்வே உள்ளிட்ட 12 நாடு களின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர்.

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக் கணித்தன.

இதனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் 11 வாக்குகள் வித் தியாசத்தில் நிறைவேறியது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கெனவே கொண்டு வந்த தீர்மானங்களை, இந்தியா ஆதரித்து ஓட்டுப்போட்டது.

ஆனால் இந்தத் தடவை அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க் கவும் இல்லை. அதேசம யம் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இது இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கையா கவே கருதப்படுகிறது.

ஓட்டெடுப்பை புறக் கணித்தது ஏன்? என்பது குறித்து ஜெனீவாவில் உள்ள அய்.நா.மனித உரிமை கவுன் சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திலீப் சின்கா கூறியதாவது:-

இலங்கைக்கு எதிராக இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டிலும் அதன்பிறகு தொடர்ச்சியாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளிலும் கொண்டு வரப்பட்ட தீர்மா னங்களைப் போல் அல்லா மல், இப்போது கொண்டு வந்த தீர்மானத்தில் அங்கு நடந்த மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை அறிய சர்வதேச அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது அந்த நாட்டுக்கு அறி வுறுத்தல் செய்யப்படுவதா கவும், அந்த நாட்டின் இறை யாண்மையை பற்றி குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளது.

ஒரு நாட்டில் மனித உரி மைகளை பாதுகாக்க திறந்த மனதுடனும், ஒத்துழைப்பு டனும், ஆக்கபூர்வமான விசாரணையை மேற் கொள்ள வேண்டும். அப் படி அல்லாமல் வெளியே இருந்து நடத்தப்படும் விசாரணை ஆக்கபூர்வமான பயனுள்ள அணுகுமுறை யாக இருக்காது என்று முந்தைய அய்.நா. பொதுச் சபை தீர்மானங்களில் கூறப் பட்டு இருக்கிறது.

இலங்கையில் நடை பெற்ற போர் முடிவுக்கு வந்ததன் மூலம் அந்த நாட் டில் உள்ள பிரச்சினைக்குத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர சியல் தீர்வு காண்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர்ப்படிப்பினை குழு வழங்கிய பரிந்துரைகளை உரிய காலத்தில் ஆக்கபூர்வ மாக நிறைவேற்ற வேண் டும் என்றும் விரும்புகி றோம். - இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.

இலங்கையில் நடை பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அய்.நா.மனித உரிமை கவுன்சில் 2009 ஆம் ஆண்டிலும், பின்னர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு களிலும், அதன்பிறகு தற் போதும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது.

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத் தக் கோரும் தீர்மானம் தற் போது நிறைவேறி இருப் பதால், இலங்கைக்கு நெருக் கடி முற்றி இருக்கிறது. அதாவது, மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிப்ப தற்காக சர்வதேச விசாரணை குழு அமைக்க அய்.நா. மனித உரிமை கவுன்சிலு டன் இலங்கை ஒத்துழைத்து செயல்பட வேண்டிய கட் டாய நிலை ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/77727.html#ixzz2xJ2C7POP

தமிழ் ஓவியா said...


எம் குலக் கொழுந்து நீ

நாளொன்பது ஆண்டுகட்கு முன் - அந்த
நாளென்பது எதிரிகளின் காலம் நீ அன்று
அம்மாவிடம் பெற்றது பொறுப்பு அல்ல பெரு நெருப்பு . அது
அணைந்து போகாமல் இருப்பது கொள்கையோடு நீ
இணைந்து போவதால் தான் - எதிரிகள்
அணைத்து விடாமலிருக்க
அனைத்து தமிழரையும்
ஒன்றிணைத்து அவர்தம் நலம்
ஒன்றினையே நினைக்கிறாய் !

உனக்கு
இரண்டகம் செய்தவர்களும்
இரண்டு-அகம் கொண்டவர்களும்
பிழைத்துக் கொண்டார்கள் - ஆனால்
நிலைத்து நிற்கவில்லை !

உன்னை
ஒழிக்க நினைப்பவனும் ஒலிக்கச் சொல்லுவான்
தமிழர் தலைவர்
நீதானென்று !

ஆத்திரங் கொண்டு இருப்பவர் கூட உன்
சூத்திரங் கண்டு சுருங்கி போவார்கள்
உண்மை உணர்ந்து நெருங்குவார் - பின்னர்
உன்-மை எழுதும் சாசனம் தான்
தமிழர் உயர்ந்தமரும் ஆசனம் என்றுணருவார்.

தவறுகள் நடந்தால்
இடித்துரைக்கும் உன்னிடம்
படித்துறையின் ஆனைத் தலைமுதல்
படித்த-துரையின் ஆணையர் தலை வரை
உருளுமென்பது உண்மை.

அன்று
பெஞ்சில் ஏறிநின்று பேசி - இன்றெங்கள்
நெஞ்சில் நிறைந்தவன்.

பெரியவர் முதல்
வறியவர் வரை யாரையும்
எழுந்து வணங்கும் - எம்குல
கொழுந்து நீ !

தமிழர்மேல் நீ
தொடர்-பற்று வைத்ததால்தான்
தொடர்பற்று இருந்தோரெல்லாம்
திரும்பி உன்னிடம்
விரும்பி வருகிறாரகள் !

கழகத்தின்
விலாசம் கேட்டால் - நீ
விசாலமாய் எழுப்பிய கொள்கை
வளாகங்கள் கை காட்டும் !

அதற்காக நீ பட்ட கடனை
அடைத்து விட்டாய் ! உனக்கு
நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது !
உன் பாதை எமக்கு பெருமை
உன் உழைப்புக்கு முன்
எல்லாமே வெறுமை !

- பொறியாளர் த.சண்முக வடிவேல் பி.இ., தஞ்சாவூர்

Read more: http://viduthalai.in/page4/77764.html#ixzz2xP3wz9jO

தமிழ் ஓவியா said...


நினைவுத்திறனை அதிகரிக்கும் இஞ்சி


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page4/77766.html#ixzz2xP4SHpIo

தமிழ் ஓவியா said...


இந்த ஆண்டுக்கான மதச்சார்பின்மை விருது பெறுகிறார் மலாலா


அனைத்துப் பெண்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துவருபவர் பாகிஸ்தான் பள்ளிச் சிறுமியான மலாலா. இவர் பாகிஸ்தானில் பள்ளிமீது தாலிபான் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உலகுக்கே அவர் குரல் ஒலிக்குமாறு செய்தவர். இதனால், துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்தது. மலாலா குண்டுக் காயமடைந்தபோது, அவர் மதக் கருத்துக்களுக்கு எதிராக இருந்ததால்தான் சுடப்பட்டார் என்று தாலிபான்கள் தெரிவித்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் இலண்டனில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த பின்னரும் தன் கொள்கையிலிருந்து, பெண்களுக்கு கல்வியின் அவசியத்தைக் கூறுவதி லிருந்து பின்வாங்காமல் மத அடிப்படை வாதிகளுக்கு பெரும் சவாலாக இருக் கிறார்.

இதனால், 2013ஆம் ஆண்டு மலாலாவின் 16ஆம் ஆண்டு பிறந்த நாளான சூலை மாதம் 12ஆம் நாளை அய்.நா. சபை மலாலா தினம் என்றே அறிவித்தது. உலகெங்கும் மலாலா நாள் பெண்குழந்தைகள் கல்விக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. மலாலாவைக் கவுரவிக்கும் பொருட்டு, இங்கிலாந்தை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு மலாலாவை இந்த ஆண்டுக்கான மதச் சார்பின்மை விருதுக்கு உரியவராக அறிவித்து அவ் விருதை மலாலாவுக்கு அளிக்கிறது.

இதற்கான அறிவிப்பை தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருது அளிக்கப் படுவதன் மூலம் பெண்களின் கல்வி விழிப்புணர்வு, மதச் சார்பின்மைக்கான விருதின் நோக்கத்தின்படி அனைவருக் கும் கல்வி, அதிலும் குறிப்பாக பெண் களுக்கு சம அளவிலான கல்வி அளிப்பது என்பதே மதச்சார்பின்மைக்குரிய ஒன் றாகக் கூறப்பட்டு, அதன்படி அவ்விருது மலாலாவுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து பணத்தில் ஏழாயிரம் பவுண் டுக்கான தொகையினை விருதுடன் வழங்குகிறது. பெண்கள் திட்ட நிதியாக இது பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென் றால் நான் ஒரு பெண் என்கிற தலைப்பி லான பிரச்சாரம்மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும், சிறப்பாக வாழ வும், கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மலாலாவுக்கு இவ்விருதைப் பரிந் துரைத்துள்ள தேசிய மதச் சார்பின்மைக் கான அமைப்பு பெண்கள் கல்விப் பிரச் சாரத்தை ஆதரித்ததால், முரட்டுத்தனமான இசுலாமிய மதவெறி அமைப்பின் வன் முறையை எதிர்கொண்டவர் மலாலா என்கிறது.

தேசிய மதச்சார்பின்மைக்கான அமைப் பின் தலைவர் டெர்ரி சாண்டர்சன் கூறும் போது, இங்கிலாந்தின் பெண்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பிரச்சாரத்தில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, நாங்கள் இவ்விருதை வழங்க உற்சாகத்துடன் வழங்க முடிகிறது. கல்விக்காக அனைத்து தரப்பினரையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே விழித் தெழச் செய்துள்ளார். மலாலாவின் நம்ப முடியாத எழுச்சியால் முக்கியமாக கவுரப் படுத்த வேண்டும். மதச்சார்பின்மை என்பது எப்போதுமே மதத்தின் பேரால் ஆதிக்கம், அடக்குமுறைகளைக் கடந்த, மனித உரிமைகளுக்கானதாகும். உலகெங் கும் ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறு பான்மையருக்கான நம்பிக்கையை ஏற் படுத்துவதே மதச் சார்பின்மையாகும் என்றார்.

மதசார்பின்மையை ஊக்கப்படுத்த 1937ல் ஜான் என்பவரால் இவ்விருது தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இவ் விருதை அவர் மகன் டெப்பி லாங்டன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/77767.html#ixzz2xP4rwdY8

தமிழ் ஓவியா said...


வித்தியாசமான விழா

மும்பை தாராவி பகுதியில் சினேகா என்கிற அமைப்பு பெண்கள் மற்றும் குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் பழைய சேலைகள், புதிய கலை நுட்பங் களுடன் புதுப்பிக்கப்பட்டு மறு பயன் பாட்டிற்கு வைக்கப்படுகிறது. இதற்கான விழா கலா கோடா விழா 2014 என்கிற பெயரில் நடைபெறுகிறது. டில்லி மருத்துவ மாணவி நிர்பயா 2012 நினைவாக 2013இல் பத்துப் பெண் களுடன் கூடிய அமைப்புதான் சினேகா. இதை வழிநடத்துபவர் சுசி விக்கெரி. இவர் ஆடைகள் வடிவமைப்பு நிபுணர் ஆவார். இவருடன் பேஷன் டிசைனரான நிக்கா பெல்ட்மேன் இணைந்து டிசினேகா அமைப்பை வழிநடத்துகின்றார்.

பழைய சேலைகளை சேர்த்து பெண்கள்மீதான பாலியல் வன்முறை எதிர்ப்பு சொற்களுடனும், அதற்கான சின்னங்களுடனும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆடை யும் புகழ் பெற்ற கலை, கலாச்சார, சமூக மற்றும் மத நம்பிக்கை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும்வகையிலும் வடிவமைக் கப்படுகின்றது. பெண்களை முடக்காதே, பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர் களை முடக்கு என்கிறவகையிலான சொற்களுடன் சேலைகள் வடிவமைக் கப்படுகின்றன.

இது போன்ற சொற்கள் அடங்கிய மறுபயன்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், தாராவி தெருக்களில் இருப் பதை மனசி சவந்த் நிழற் படங்கள் எடுத்து தள்ளியுள்ளார். பேஷன் ஷோக்களில் இந்த ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு சொற்கள் மட்டுமே பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் செய்கின்றனர். அமைச் சர் ஒருவர் சொன்னதுபோல் வண்ணங் களைத் தீட்டிக்கொள்ளும் பொம்மை களாக இருக்க விரும்பாமல் முகமூடிகளை அணிந்து வந்த பெண்கள், சிறுவர் பாது காப்பு குறித்த கலை நுட்பங்களுடன்கூடிய சொற்கள் அடங்கிய ஆடைகளை பிரபலப்படுத்துகின்றனர்

Read more: http://viduthalai.in/page4/77768.html#ixzz2xP51m0AY

தமிழ் ஓவியா said...

ஓர் ஆய்வாளர் பார்வையில்....

கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் நுழைந்த ஆரியம் இன்று வரை தலை விரித்தாடுகின்றது.

இடையில் பெரியார் வந்தார். சீர்தி ருத்தங்கள் செய்தார். ஆரியத்திற்குத் தொய்வு. அவர் மறைந்துவிட்டார். தமிழர்கள் திருந்தவில்லை. இனி இந்தியா என்று உருப்படுமோ?

எல்லாவற்றையும் மனு அடிப்படையிலே பார்க்கின்றனர். நீதிமன்ற மாகட்டும், அரசு அலுவலகங்களா கட்டும். ஆரியக் கூத்து ஓய்ந்த பாடில்லை. என்றுதான் நல்ல காலம் விடியுமோ?

- பேரா. பிச்சை தமிழியல்துறை
காந்தி கிராமம், திண்டுக்கல்

பி.கு: முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான (26.2.2014) கலந் துரையாடலின்போது கூறக் கேட்டவர்.

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5udqzQ

தமிழ் ஓவியா said...


தனி பாலினம்

வாக்காளர்ப் பட்டியலில் திரு நங்கைகள் தங்களைத் தனிபாலினம் என்று குறிப்பிட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP64ZYbk

தமிழ் ஓவியா said...


குறும்பா

கடவுளைத்
திட்டினால்....
மனிதனுக்கேன்
பொத்துக் கிட்டு
வருதுகோபம்?
கடவுளையே..
உருவாக்கியவன்
மனிதன் என்பதால்!
நாமனைவரும்
கடவுளின்
குழந்தைகளில்லை!
கடவுள்கள் தான்...
மனிதனின் குழந்தைகள்

***
இல்லாத தொன்றை (கடவுள்)
இருக்குன்னு சொன்னால்
ஒத்துக் கொள்வான்...
ஆன்மிகவாதி...!
அது பெரியவர் சொன்னால்
பெருமாள் சொன்ன மாதிரியாம்
சரி...!
இல்லாத ஒன்றை
இல்லையென்றே சொன்னால்...?
ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே
அதுவும் பெரியவர் (பெரியார்)
சொன்னால் பெருமாள்
சொன்ன மாதிரிதானே??!

***
மனிதனுக்கே...
வயதாக ஆக..
சக்தி குறையுது...!
கல்லுக் கடவுளுக்கு
காலங் காலமாய்
சக்தி எப்படியிருக்கும்
நிரந்தரமாய்??
- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77772.html#ixzz2xP6EnLfz

தமிழ் ஓவியா said...


எல்லாம் கடவுள் செயலா?
1. மனிதன், மான், ஆடு, மாடு, பறவைகளை அடித்துப் பச்சையாகச் சாப்பிட்டான்.
2. துணியில்லாத வாய் பேசாத மிருகமாக வாழ்ந்தான்.
3. கலவி செய்து குட்டிகள் போட்டான். 4. மலம் கழித்தான்.
5. மூத்திரமிட்டுக் குடித்தான். 6. நோய்வந்து தீர்வைக் கண்டான்.
7. கிணற்றில் தவறி விழுந்து நீச்சலடித்து மேலே வந்தான்.
8. கீழே விழுந்து கைகால் ஓடிந்து நொண்டியானான்.
9. வாழ வழி அறியாதவன், தற்கொலை செய்து கொள்ளுகிறான்.
10. கோயில் சென்று விபத்தில் சாகிறான்.
11. கொலை, கொள்ளை அடிப்பதும், பொய்யும் புரட்டும் செய்கிறான்.
12. சிலை செய்வது, கோயில் கட்டுவது, தூபம் போடுவது, படையலிட்டு ஆடு, கோழிகளைப் பலியிட்டு சாப்பிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் குளம் சென்று கோரிக்கை வைப்பது.

இவை எல்லாம் கடவுள் செயலா?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/77775.html#ixzz2xP6Q8wq1

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையைப் பரப்புவதா? அமிதாப்பச்சன் படத்துக்கு எதிர்ப்பு

டில்லி, மார்ச் 29- மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தின்கீழ் அமிதாப் பச்சன் நடித்துள்ள தொலைக் காட்சி விளம்பரப் படத் தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலை யத்தில் ஹேமந்த் பாட்டீல் என்பவர் புகார் கொடுத் துள்ளார்.

சிறுவர்கள் அருந்தும் ஊக்க பானத்துக்கான விளம் பரத்தில் அமிதாப்பச்சன் பேய் வேடத்தில் நடித் திருப்பதன்மீது உடனடி நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதி பதி சீதா குல்கர்னி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமிதாப் பச்சன் ஏற்கெ னவே பூட்நாத் என்கிற பேய் படத்தில் நல்லது செய்கிற பூதமாக நடித்தி ருப்பார். அதேபோல் மீண்டும் அடுத்த மாதத்தில் பூட்நாத் ரிடர்ன்ஸ் அதாவது மீண்டும் பூட்நாத் என்கிற படம் வெளியாக உள்ளது. இதனிடையே தொலைக் காட்சி விளம்பரப் படத்தில் பூதமாக நடித்துள்ளார். இது குறித்து, வழக்கு தொடுத் துள்ள பாட்டீல் கூறும் போது, இந்த விளம்பரம் பேய், ஆவி மற்றும் அவற் றின் அற்புதங்கள் என்பன வற்றை திணிப்பதாகும். மூட நம்பிக்கையையும், ஆதிக்க மனப்பான்மையை யும் பரப்பும் நோக்கில் உள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் புகாரைப் பெற மறுத்தனர். ஆகவே, நீதிமன்றத்தை நாட வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இந்த விளம்பரம் குறித்து எவ் விதத்திலும் பொறுப்பேற்காமல் தொலைக்காட்சியில் விளம் பரத்தை வணிக நோக்கில் ஊக்க பான நிறுவனம் ஒளிபரப்பி உள்ளது என்று கூறினார். இவ்வழக்கு விசார ணையை நீதிபதி சீதா குல் கர்னி அடுத்த மாதம் 18ஆம் தேதியில் வைத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77800.html#ixzz2xP89p8XV

தமிழ் ஓவியா said...

ஒப்புதல் வாக்கு மூலமோ!

நாட்டில் ஊழல் செய்யாதவர் யார்? எந்தப் பணிக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் வாங்காதவர் யார்? என்ற கேள்வியை திருவாரூர் பொதுக் கூட்டத் தில் காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல் போன்ஸ் கேட்டுள்ளார். நல்ல கேள்விதான் ஒப்புதல் வாக்கு மூலமோ!

மன்னிப்பு இல்லை

திமுகவிடம் பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இதற்கு என்ன பொருள்?

ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தமிழக மீனவர்கள் பிரச்சினை காங்கிரஸ் அர சாங்கம் நடந்து கொள்ளும் போக்கை தமிழர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்ற பொருள்! மக்களவைத் தேர்தல் கொடுக்கும் சரியான பாடத்திற்குப் பிற காவது திருந்துவார்களா என்று பார்ப்போம். குறிப்பு: ஜெனிவா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே - அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுவாரா ஞானதேசிகன்?

Read more: http://viduthalai.in/e-paper/77807.html#ixzz2xP8MYUJl

தமிழ் ஓவியா said...


இனமான பேராசிரியரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களை இன்று காலை 11.30 மணி அளவில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து, இயக்கம் அண்மையில் வெளியிட்ட நூல்களை அளித்தார். நூல்களைப் பெற்றுக் கொண்ட இனமானப் பேராசிரியர் அவர்கள் அடுத்து ஒரு நூற்றாண்டுக்குத் தேவையானதை நீங்கள் செய்து வருகிறீர்கள் என மனந் திறந்து பாராட்டினார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை - 29.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77806.html#ixzz2xP8YPtRm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் புறந்தள்ளி

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு

வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் காங்கிரஸ் தொடர்ந்து, அவர்களுக்கும் அவர்களது தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கும், உலக மனிதநேய, மனித உரிமைப் போராளிகளின் உணர்வுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக் குழு மூலம் விசாரணை ந;டத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக புறக்கணிக்கிறோம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இராஜபக்ஷே அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளது; காங்கிரசின் கை ரத்தக் கறை படிந்த கையாகவே ஆக்கிக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையா?

1. இதைவிட வேதனையும் வெட்கக் கேடானதுமான செய்தி நமக்கு வேறில்லை. கேட்டால் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகுமாம்! அப்படியானால் இதற்குமுன் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டார்களே (அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் இன்றளவும் என்ற போதிலும்) அது தலையீடு அல்லவா?

2. அந்த நாட்டிற்கு அமைதிப்படை (IPKF) என்ற பெயரால் நம் நாட்டு இராணுவத்தை அங்கே அனுப்பி, இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கை நிலைப் பாட்டிற்கே முற்றிலும் எதிரான நிலையை எடுத்து, மிகப் பெரிய அவமானத்துடன் திரும்பியதன் மூலம் நமது பெருமைமிக்க இராணுவத்திற்கு அவப் பெயர் ஏற்பட வில்லையா?

சிங்கள இராணுவக்காரன் ராஜீவ் உயிருக்குக் குறி வைக்கவில்லையா?

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட கையெழுத்திடச் சென்ற நம் நாட்டுப் பிரதமர் இராஜீவ்காந்தி (Guard of Honour) இலங்கை இராணுவ மரியாதையைப் பெற சென்றபோது விஜயமுனி விஜயந்த ரொஹன்ன டிசில்வா என்ற சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் பிரதமர் ராஜீவை அடித்துக் கொல்ல முயன்றபோது, அனிச்சையாக அவர் குனிந்ததால் தப்பித்தார் என்ற நிலையில், பிறகு அதே சிங்களவன் தேர்தலில் நிற்கவில்லையா?

இதைவிட இந்திய இறையாண்மையைக் கேவலப் படுத்திய அசிங்கம் வேறு உண்டா? அப்படிப்பட்ட சிங்கள அரசுக்குத் துணை போகலாமா?

இதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக மறந்து விட்டது போலும்!

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்தவர்களுக்கு மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்

90,000 தமிழச்சிகள் வாழ்விழந்து, விதவை நிலைக்குத் தள்ளப்பட்டனரே! பல லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையை - அது (No Fire Zone) துப்பாக்கி குண்டு பொழியாத பாதுகாப்பான பகுதி என்று அப்பாவி (ஈழ) தமிழ்க்குடிகளை நம்ப வைத்து, ஒன்று திரட்டி, ஒரே முகாமுக்குள் நிறுத்தி, கொத்துக் குண்டுகளைப் போட்டு குழந்தைகள், முதலியவர்களைக் கொன்றதை போர் நடந்தால் இப்படி அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜமே என்று முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் அம்மையார் கூறியதுபோல, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்தும் வகையில்தானே ஜெனிவாவில் வாக்களிக்க மறுக்கப்பட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலை தமிழகத்துத் தேர்தலில் ஏற்படப் போகிறது சில நாள்களில் - மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்சென்னை
29.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77794.html#ixzz2xP8oFgDN

தமிழ் ஓவியா said...


சொன்னது யாராம்?


தந்தை பெரியாரும், பேரறி ஞர் அண்ணாவும், எம்.ஜி. ஆரும் தமக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின்மீது அபரிமிதமான பாசமும், நம்பிக்கையும் வைத்த தலை வர்கள் அவர்களது புனித மான அந்த வழிகாட்டு தலைத்தான் நானும் பின் பற்றிக் கொண்டிருக்கிறேன்.

- முதல் அமைச்சர் புரட்சி தலைவி அம்மா (Dr. நமது எம்.ஜி.ஆர். 27.3.2014 பக்.3)

அடேயப்பா - பாருங்கய்யா! தந்தை பெரியார் கொள்கையையும், அறிஞர் அண்ணாவின் கோட்பாடு களையும் மண்சோற்றில் போட்டுப் புதைத்து விட்டு, யாக நெருப்பில் போட்டுக் கொளுத்தி விட்டு, அவர் களின் பெயர்களை உச்சரிப் பதற்கு உண்மையிலே தைரியம் தான் வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/77790.html#ixzz2xP8xvKBp

தமிழ் ஓவியா said...


அறிவு நாணயம் இல்லை

கேள்வி: அரசியல் சட்டம் 376, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க., தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே?

சோ ராமசாமி: இந்தச் சர்ச்சைக்குரிய பிரச் சினைகளைப் பற்றி பா.ஜ.க. பல முறை சொல்லி யிருக்கிறது. பா.ஜ.க., தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கை எடுப்போம் என்றும்; கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்துப் பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க. நிலைப்பாடு. (கல்கி 30.3.2014 பக்.26).

இதன்பொருள் என்ன? பெரும்பான்மை பெறுகிறதா? கூட்டணி ஆட்சி நடத்துகிறதா? என்பது அல்ல பிரச்சினை. இந்த மூன்று கொள்கைககளும் பா.ஜ.க.வின் கொள்கை என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

272 விஷன் என்று சொல்லித்தானே புறப்பட் டுள்ளனர். பெரும்பான்மை பெற வேண்டும் என்று தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத் தோடுதான் போட்டியிடுகிறார்களா?

பெரும்பான்மை பெற்றதாக வைத்துக் கொண்டாலும் அந்த வெற்றியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கும், சக்தியும் மிக முக்கியமானதுதானே!

இந்த மூன்றிலும் உடன்பாடு இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது. அந்தப் பலத்தால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது; பெற்றுக் கொண்ட பிறகு மேற்கண்ட கொள்கைகளை நிறைவேற்றுவது என்றால் இதில் அறிவு நாணயம் கொஞ்சமேனும் இருக்கிறதா? ஏமாற்றும் தந்திரம் தானே புதைந்து கிடக்கிறது!

பிஜேபி விரும்பும் இந்த மூன்றையும் கூட்டணிக் கட்சிகள் விரும்பாத நிலையில், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு விட்டு, அவர்கள் விரும் பாதவற்றை நிறைவேற்றுவது அசல் மோசடியல்லாமல் வேறு என்னவாம்?

பா.ஜ.க.வினரின் இந்தத் திட்டம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்; இப்படிப் பதில் சொல்லும் திருவாளர் சோ ராமசாமி இது பற்றி என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? இந்த மூன்றிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் பெரும்பான்மை பெற்றால் இவற்றை நிறைவேற்றத்தான் செய்வோம் - எனவே இந்த எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர்கள் மட்டும் எங்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று கூட்டணி சேருமுன் நிபந்தனையாக பிஜேபி வைக்க முன் வர வேண்டாமா? அப்படி முன் வைப்பதுதானே அறிவு நாணயமானது என்று கருத முடியும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்; பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.க.வாக இருக்கட்டும்; பா.ம.க., மதிமுக வாகட்டும் பா.ஜ.க.வின் இந்த ஏற்பாட்டை, திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஏதாவது உறுதி மொழியைத்தான் பெற்றுள் ளார்களா? பெறவில்லை என்றால் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

அப்படி செய்யவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

எங்களுக்குப் பதவி தான் முக்கியம்! கொள்கை யாவது மண்ணாங் கட்டியாவது, என்பதுதான் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரும் கட்சிகளின் நிலைப்பாடு என்பது நிர்வாணமாகத் தெரிந்து விடவில்லையா?

இப்படி ஒரு கூட்டுக் களவாணி நடைபெற்று வருவதை வாக்காளர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பி.ஜே.பி.க்கு மட்டும்தான் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருத வேண்டாம்; பிஜேபியோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை வாக்காளர்ப் பெரு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவுப் பெரிய சதியை பி.ஜே.பி.யும் அதனோடு கைகோக்கும் கட்சிகளும் மறைத்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடத் திட்டமிட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால், இந்தக் கூட்டுச் சதிகாரர்களுக்குச் சரியான பாடம் புகட்டிட நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/77814.html#ixzz2xP9JVRSD

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


சென்னை, மார்ச் 29- ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/77820.html#ixzz2xP9lg9mE

தமிழ் ஓவியா said...


வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் படத்திறப்பு விழாவின் போது ஆற்றிய உரை

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும், இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும், நான் நினைக்கவில்லை!

ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும் எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன்.

எனது தொண்டில் உள்ள இடையறாத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைபவங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும், சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.

நாம் பிரவாகமான எதிர்வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரைமறைவிலும் சூழ்ச்சி களுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலை கொடுக்கத் தயாராயிருங்கள்.

நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்தச் சமயத்தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(4,5-1-29 நாட்களில் ராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூட்டிய மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPF1ixu5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணை யாக இனத்தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகியவர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணு கின்றவர்கள் இருக்கின்றார்கள்.

நாள் முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக்கூட கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப்பார் என்றால் நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFIn4SY

தமிழ் ஓவியா said...


சந்தேகம்


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங் களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத் தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலு கின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத் தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்ப னர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனிய மானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக் களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கிட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப் பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக் கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்த வர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFS55VJ

தமிழ் ஓவியா said...

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாடு

மகாநாட்டைத் திறந்து வைத்து சில வார்த்தைகள்:-

சகோதரி சகோதரர்களே, நமது நண்பரும் சகோதரரு மான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்தப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.

எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல்நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும்.

உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந் திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதை யும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது.

எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசியத் தலைவனோ மதத்தலைவனோ பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மை யான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக் கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப் பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக் கின்றது.

கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால் தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தி யப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப் பூர்வமாக நம்பி இருக்கின்றேன்.

அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகுசீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFh1Wok

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!
மாற்று அணியல்ல, ஏமாற்று அணியே பிஜேபி!
மக்களே பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்து விடாதீர்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குத் தமிழக வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள் - இவற்றில் காங்கிரசுக்கும், பி.ஜே. பி.க்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது - உண்மைக்கு மாறான பிரச்சாரத்தைக் கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி ஒன்றுக்கு மற்றொன்று பெரிதும் மாறுபட் டவை அல்ல. ஒரே குட்டையில் ஊறிடும் மட்டைகளே!

கூர்த்த மதியோடும் நுண்ணிய பார்வையோடும் பார்க்கும் எவருக்கும் புரியும்.

சகோதரர் வைகோ அவர்களின் (மதிமுக) தேர்தல் அறிக்கை!

பதவிப் பசியால் துவண்டு, துடித்து, பா.ஜ.க., வீசிய வலையில் சிக்கி மோடி இராகம் பாடி, ராஜாவை மிஞ்சும் இராஜவிசுவாசியராக காட்சியளிக்கும் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஏதோ பா.ஜ.க. - மோடி மத்தியில் அரியணையில் அமர்ந்த தும் சூமந்திரக்காளி! என்ற மந்திரக்கோல் மூலம், மோடி வித்தை மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர் தனி ஈழம்பற்றியெல்லாம் மதிமுக தேர்தல் அறிக்கையில் பிரலாபித்துள்ளார்.

ஆனால், அது வெளி வந்த மறுநாளே, பா.ஜ.க.வின் வெங்கய்ய நாயுடு தொடங்கி, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உட்பட தனி ஈழத்தை ஒரு போதும் எங்கள் (பா.ஜ.க.) கட்சி ஏற்காது என்று திட்ட வட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறி விட்டனரே!

பிஜேபிக்குத் திடீர் கரிசனமா?

ஈழப் பிரச்சினையில் (ஏதோ தமிழக மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீனவர்கள் பால் திடீர் கரிசனம் பீறிட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு; இல்லையென்றால் நண்பர் இல. கணேசன் மோடி மீன் விற்பனை நிலையத்தை பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் (Foreshore) திறந்து வைக்க முன் வருவாரா?) இந்த பா.ஜ.க. ஆட்சி முன்பு எப்படி நடந் துள்ளது என்பதை சற்று நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

தமிழ் ஓவியா said...


கல்கியில் என். இராம் பேட்டி!

6.4.2014 நாளிட்ட கல்கி வார ஏட்டில் வெளி வந்துள்ள இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என் இராம் அவர் களின் பேட்டியில்
ஒரு கேள்விக்கு பதில் கூறுகிறார்:

கேள்வி: மோடி பிரதமராக வந்தால் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்கிறாரே வைகோ?

பதில்: நல்ல ஜோக் இது. பா.ஜ.க. ஆட்சி வந்தாலும் இலங்கையைக் குறித்த இந்திய நிலைப்பாடு மாறவே மாறாது என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தீர்ப்பும் - பிஜேபியின் நிலைப்பாடும்!

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இராஜீவ் கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட தூக்கு தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்கள் கருணை மனுவும் பல ஆண்டு கால தாமதம் மறுக்கப்பட்ட நீதி, என்பதைக் கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மாநில அரசு இவர்களது 23 ஆண்டு கால சிறை தண்டனை பற்றி மனிதநேயத்துடன் சட்டப்படி சிந்திக்கலாம் என்றும் கூறியது தான் தாமதம்! உடனே அவசர அவசரமாக - எங்கே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களோ என்ற ஆவேசத்தில் தேசீயக் கட்சிகளும் பா.ஜ.க. உட்பட அதனைக் கண்டிக்கத்தானே செய்தன? இதில் காங்கிரசிலிருந்து எவ்வகையில் பி.ஜே.பி. மாறுபட்டது? நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

ம.பி.க்கு வந்த ராஜபக்சேக்குச் சிகப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது யார்?

சகோதரர் வை.கோ மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று போர்க் குற்றவாளி இராஜபக்ஷேவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினாரே! ராஜபக்சேவை தனது மாநிலத்திலும் வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்த முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் யார்?

பா.ஜ.க. முதல் அமைச்சர் (ஆட்சி) அல்லவா! ராஜபக்சேவை இந்தியாவிற்கு வர அழைப்புக் கொடுத் தவரே எதிர்க்கட்சித் தலைவரும், துணைப் பிரதமர் ஆசையில் மிதப்பவருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் அல்லவா?

தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று வேலை!

வாஜ்பேயி பிரதமராக இருந்த நேரத்தில் ஈழத்தில் நடைபெற்ற மோதலின் போது இராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையா எடுத்தார்? நம் நாட்டில் இல்லாத புலி இயக்கத் தடை நீக்கப்பட்டதா?

காங்கிரசின் இன்றைய வெளி உறவுக் கொள்கைக்கும் பா.ஜ.க. கொள்கைக்கும் ஈழப் பிரச்சினையில் எவ்வித மாறு பாடும் இல்லையே!

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன் என்ற ஒரு பழமொழி போன்றதுதானே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு! தமிழின வாக்காளர்களை ஏமாற்ற ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தலாமா? எனவே இது மாற்று அணி அல்ல; ஏமாற்று அணி! ஈழப் பிரச்சினையில் வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

சென்னை
30.3.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77873.html#ixzz2xUqHw4Ce

தமிழ் ஓவியா said...


தந்தையை சிறையிலிட்ட அவுரங்கசீப்பைப் போல் செயல்படும் மோடி காங்கிரஸ் கண்டனம்!


அகமதாபாத், மார்ச் 30- பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அரசியல் அனுகுமுறைகள் மொகலாய மன்னர்கள் பாணியில் உள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது:- பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத் வானியை கையாலாகாதவர் ஆக்கி, அவர் விரும்பிய போபால் தொகுதிக்கு பதிலாக காந்திநகர் தொகுதி யில் போட்டியிடும் நிலைக்கு மோடி தள்ளிவிட்டார்.

இதேபோல், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவ தில் பிடிவாதமாக இருந்த முரளி மனோகர் ஜோஷிக்கு கான்பூர் தொகுதி தான் ஒதுக்கப்பட்டது. மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் மறுப்பு, கேசுபாய் பட்டேல், காஷிராம் ராணா, சுரேஷ் மேத்தா, ஏ.கே.பட்டேல் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியது,

சஞ்சய் ஜோஷிக்கு எதிராக 'சி.டி.' தயாரித்து அவரை ஓரம் கட்டியது உள்ளிட்ட கட்சி யின் மூத்த தலைவர்களை அடக்கி, ஒடுக்கும் வேலை களில் ஈடுபடும் மோடியின் செயல்பாடுகள், இந்திய கலாச்சாரத்துக்கு உகந்ததாக இல்லை. மொகலாயர் ஆட்சிக் காலத்து சுல்தானைப் போல் அவர் செயல் படுகிறார்.

பெற்ற தந்தையையே சிறையில் போட்ட மொகலாய மன்னர் அவுரங்கசீப்பைப் போல் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடம் மோடி நடந்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் குஜராத் மாடல் முழக்கம் தோல்வி அடையும்: ராகுல்

சத்னா, மார்ச் 30- தனிநபர் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜ விரும்புகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் சிங்கை ஆதரித்து சத்னாவில் ராகுல் பேசியதாவது: மோடியின் ஜம்மு பிரச்சார பேச்சை கேட்கும் போது பாஜ தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது.

காங்கிரசை பொறுத்த அளவில் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது. லட்சக்கணக் கான காவலாளிகள் இந்த நாட்டை காக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுதான் எங்களுக் கும் பாஜவுக்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு ராகுல் பேசினார்.குஜராத் மாநிலத்தை போல மாடல் என்ற மோடியின் முழக்கத்தையும் ராகுல் தாக்கி பேசினார். இதுகுறித்து ராகுல் கூறுகையில், கடந்த தேர்தலின் போது இந்தியா ஒளிர்கிறது என்று பேசினர். தற்போது குஜராத் மாடல் என்று பேசி வருகின்றனர்.

இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் தோல்வி அடைந் ததை போலவே குஜராத் மாடல் முழக்கமும் மக்கள் மத்தியில் எடுபடாது, தோல்வி அடையும் என்றார்.

மோடிக்கு அசோக்சவான் கேள்வி

மும்பை, மார்ச் 30- பா.ஜ., வேட்பாளர் நரேந்திர மோடி எங்கு வேண்டும் என்றாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், அவர் மகாராஷ்டிரா மாநில வளர்ச்சி குறித்து கவலைப்பட தேவை யில்லை. ஏனெனில், அதன் வளர்ச்சி நன்றாகவே உள்ளது என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.,வில் மீண்டும் எடியூரப்பாவை சேர்த்துக் கொண்டுள்ளது பற்றி, மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77872.html#ixzz2xUr16py2

தமிழ் ஓவியா said...

மகிந்தா ராஜபக்சேவிற்கு மக்களிடையே ஆதரவு குறையத் துவங்கியது

கொழும்பு மார்ச் 30-தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் இலங்கை அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந் தோட்டையில் ஆளும் அய்க் கிய மக்கள் சுதந்திர முன் னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைக் கைப்பற்றிய அய்க்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கு, இந்த முறையும் அதே இடங்கள் கிடைத் துள்ளன. ஆனால், ஆளும் கட்சி 174,687 (57.42%) வாக் குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது. இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்கு களை ஆளும்கட்சி இம் முறை இழந்துள்ளது.

எதிர்கட்சிகளான அய் தேக, ஜேவிபி, ஆகிய கட்சி களுக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. கடந்த தேர் தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 இடங் களை கைப்பற்றிய அய்தேக வுக்கு, இம்முறை, 4 இடங் கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகளை யும் அந்தக் கட்சி பெற் றுள்ளது. இதன்படி, அய்தேக வுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் போது அய்.நா மனித உரி மைக்குழு இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட் டிற்கு அரசு சரியான முறை யில் பதிலளிக்காததாலும், மனித உரிமைமீறல் பரப்பு ரைகள் பல சமூக தொண்டு ஆர்வலர்கள் முன்னெடுத் துச்செல்வதாலும் இலங்கை அதிபரின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வாய்ப்பை தொடர்ந்து நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்டால் இலங் கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் இலங்கை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrcQEDt

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? கலைஞர் கேள்வி


சென்னை, மார்ச் 30- இலங்கை தமிழர்களுக்காக முதல்-அமைச்சர் ஜெய லலிதா சிறை சென்றது உண் டா? என்று கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலை வர் கலைஞர் வெளியிட் டுள்ள கேள்வி-பதில் அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:-இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கூட தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்ற கருணா நிதிக்கு துணிவில்லை, இந்த பயத்துக்கு காரணம் தன்ன லம் என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக் கிறாரே?

பதில்:-இலங்கை தமிழர் களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29-1-1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந் தவனே நான்தான்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப்பொறுப் பிலே இருந்த போது 23-8-1990 அன்று சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச் சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றியிருக்கிறேன். அதை காரணமாக காட்டித்தான் 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி இரண்டாவது முறையாக கலைக்கப்பட்டது.

23-4-2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன் மொழிந்து நிறைவேற்றிட செய்தேன். 12-11-2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

என்னை கேள்வி கேட்ட முதல்-அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியை திருப்பிக்கேட் கிறேன். நீங்கள்(ஜெயலலிதா) இலங்கை தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய் யப்பட்டு சிறையிலே இருந் தீர்கள்? இலங்கை தமிழர் களுக்காக நீங்கள் ஏற்றுக் கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்த பட்சம் உங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவி யையாவது ராஜினாமா செய்திருக்கிறீர் களா?.

கேள்வி:- மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, யாரும் கவலைப்பட வேண் டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழ கம் திகழும் என்று உறுதி கொடுத்திருக்கிறாரே?

பதில்:- கடந்த மூன் றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்ப திரும் பச்சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சினையில் இந்த ஆட்சி யினர் தொடர்ந்து மூன் றாண்டு காலமாக கவலை வேண்டாம், மின் வெட்டே இல்லாத மாநிலமாக விரை வில் தமிழகம் ஆகும், மின் மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப்பிடித்துத் தருவ தாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்கு றுதிகளைக்கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக் காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலி கள், இவருடைய பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் இனி யும் ஏமாறமாட் டார்கள்.

இவ்வாறு தி.மு.க. தலை வர் கலைஞர் தெரிவித்துள் ளார்.

Read more: http://viduthalai.in/page-3/77836.html#ixzz2xUsAce8C

தமிழ் ஓவியா said...


யார் வெட்கப்பட வேண்டும்? - திக்விஜய்சிங்

புதுடில்லி, மார்ச். 31- மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'ஊழல் கறை படிந்த அசோக்சவானுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது வெட்கப்பட வேண்டிய செயல்,' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங், 'ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள எடியூரப்பாவை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், அசோக்சவான் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் யார் வெட்கப்பட வேண்டும்? என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77904.html#ixzz2xahy1Hra

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்

நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர். - (விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/77892.html#ixzz2xai8LLPa

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

தமிழ் ஓவியா said...

இந்த மவுனத்தைச் சாமர்த்தியமாக ஜெயலலிதா அம்மையார் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை வேறு விதமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. பரவலாகப் பொது மக்கள் இதுகுறித்துக் கேலி செய்யும் போக்கைக் காண முடிகிறது. ஆனால், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப் பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்காது. இந்துத் துவா கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இவர்.

திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக அவர் சொல் லிக் கொள்ளலாம். அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்கலாம். ஆனால், அவை உதட்டிலிருந்து உதிரக் கூடியவைகளே தவிர, உள்ளத்தின் வேர்களிலிருந்து வெளிவரக் கூடியவையல்ல! அண்ணா நாமம் வாழ்க! என்று அம்மையார்உச்சரிப்பது - அண்ணா கொள் கைக்கு நாமம் போடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக் கையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அதற்கு அவர் என்ன காரணம் சொல்லியுள்ளார்?

இராமன் பாலத்தை இடித்து ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றல்லவா உச்சநீதி மன்றத்தில் காரணம் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஹிந்துத்துவாவைக் கொண்டு வந்து திணிக்கின்றாரே! பி.ஜே.பி.யும் இதே காரணத்தைக் கூறித்தானே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

அந்த வகையில் பி.ஜே.பி.யும். அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்துத்துவா படகில் பயணம் செய்யக் கூடிய வெவ் வேறு பெயர்களில் நடமாடும் ஒரே கொள்கைக் கோட் பாட்டைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாக - அப்பட்டமாகத் தெரியவில்லையா?

இடதுசாரிகள் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இந்த ஹிந்துத்துவா மனப்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்கிறார்களே, அதுதான் மிகவும் ஆச்சரியமானது!

இடதுசாரிகள் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும்கூட செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபியைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ பேச மாட்டார்தான். இதில் இடதுசாரிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். அம்மை யாரைப் பொறுத்தவரை அவர் தெளிவாகவே இருக் கிறார். பி.ஜே.பி.யும் தெளிவாகவே இருக்கிறது. அவர் களும் அதிமுகவைப் பற்றியோ செல்வி ஜெய லலிதாவைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை.

பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் நாட்டுக் கட்சிகளுக்கும் இந்த நிலைமைகள் புரியும் என்றாலும், அவர்களும் இதனை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்புபோல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்கும் என்ன பரிதாபம் என்றால் அ.இ.அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் இவர்களின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்தே நிற்கிறது.

இந்த விசித்திர நிலையைக் கண்டு நன்கு இரசிக்கத் தான் தோன்றுகிறது. வீராதி வீரராக தோள் தட்டி, தொடை தட்டி சண்டமாருதம் செய்பவர்கள் எல்லாம் கூட, பதவி என்று வந்து விட்டால் எத்தகைய பலகீனங் களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைத்தால் ஒரு வகையிலே பரிதாபப் பட வேண்டியுள்ளது! இன்னொரு வகையில் எல்லாவற்றையும் இழந்துதான் பதவியைப் பிடிக்க வேண்டுமா? சுயமரியாதையோடு வாழக் கூடாதா? கொள்கையைச் சொல்லித் தோற்பது - கொள்கை களைப் பலி கொடுத்து வெற்றி பெறுவதைவிட சிறந்ததல்லவா!

தமிழ் ஓவியா said...


கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்


கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க மருத்து வர்கள் கூறிய ஆலோசனை வருமாறு: கோடை காலத்தில் சுற்றுப் புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச் சினைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும்.

வாந்தி, பேதி, வயிற்றுக் கடுப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ளவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakbntvk

தமிழ் ஓவியா said...

உடல் தளர்ச்சிக்கு...

வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது.

இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xal5PEp5

தமிழ் ஓவியா said...


கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?


கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ மூட்டைகட்ட முடியாது.

அப்படியே போனாலும் ஒரு சில நாள்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... அனைவரும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அந்த ஆடை களின் வண்ணங்கள், வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும்.

வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தர்பூசணி, பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய நவ தானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு களை சர்க்கரை நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ள போதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalBmXBt

தமிழ் ஓவியா said...

சிறுநீரகக் கல் ஏற்படாமல் தவிர்க்க வழிமுறைகள்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.

கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடி கட்டப்படுகிறது.

கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொதிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறுநீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது.

இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.

3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

4. பிரத்தியேக உறுப்புகளின் சுத்தமும், பராமரிப்பும் முக்கியம்! தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான வாழ்க்கை முறை, அதிகமான வேலைகள், மன இறுக்கம் போன்றவை ரத்தக் கொதிப்புப் போன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக் கல்லுக்கும் ஒரு காரணம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalZc0xv