Search This Blog

26.3.14

பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அருத்தெறியட்டும் தாலியை!

விருதுநகரில், உண்மைச் சுயமரியாதை திருமணம்

தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையா யிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.

நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரிய தென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்கு கிடைக்கக் கூடியதென்றும் கருதி இருக்கிறோம். அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சை யெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.

நம்மை மகாராஜனாகவும் ஷேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் யோக்கிய முடையதும் உண்மை யுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மி டம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்த மற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகி விடாது. வேண்டு மானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம். ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்னவென்றால் ஆசைப்படுகின்றவனது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.

அவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்கமுடியும் என்பது எனக்கே தெரிய வில்லை. ஆனால் எனது நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஆகையால் இந்த சமையத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாது ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள் வீட்டாரையும் பாராட்டி மணமக்களுக்கு ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்லுவேன். என்னவெனில் இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிக்க துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க் கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர் களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறி யாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அருத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டி ருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரண மாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டி ருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின் றன. ஆதலால் அப்பேர்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற் றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன், பாராட்டுகிறேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அருத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். 

நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 - பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்னவென்றால் அவர்கள் தயவுசெய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் ஐந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளை யும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபை யோருக்கும் வெறுப்புத் தோன்றும்படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவை களுக்கு ஒழுங்கும் அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத் துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன் மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனை யோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரியமில்லாத கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப் போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும்.

தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமண மாகி விடாது.பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போ லவே பெண் களுக்கும் சொத்துரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர் களாவார்கள்? ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானி யாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும்.
---------------------------------------10.07.1930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-”குடி அரசு” - சொற்பொழிவு - 13.07.1930

51 comments:

தமிழ் ஓவியா said...


ஒரே கல்லால் இரு காய்கள்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாவை நோக்கி எண்டிசையி லிருந்தும் ஓர் கணை ஏவப்படுகிறது.

எல்லோரையும் சகட்டுமேனிக்கு, தரக் குறைவாக - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கும் அம்மை யார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடியைப்பற்றியோ ஒரே ஒரு வரி கூட மருந்துக்காகவாவது விமர்சிக்காதது ஏன்? என்ற வினாக்கணைகள்தான் அவை.

திராவிடர் கழகத் தலைவரோ, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களோ வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கடைசி நேரம் வரை கூட்டணிக்காக அளவு கடந்த சகிப்புத் தன்மை யுடன் நடந்து கொண்ட இடதுசாரிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில் அவர்களும் இந்த வினாவை எழுப்பி வருகிறார்கள்!

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன், இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு)யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வினாக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இவற்றிற்குப் பிறகும்கூட அம்மையார் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்பதன் பொருள் என்ன? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்றுதான் பொருள்.

இந்த நிலையைக் கணக்கில் கொண்டால் வாக்காளர் கள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை மதவாதத்தை எதிர்ப்பது என்பது மட்டும் தான். அப்படிச் சொல்லும் பொழுது ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்து வதுபோல மதவாத எதிர்ப்பு என்று சொன்னாலே அது பி.ஜே.பி. அணிக்கும் பொருந்தும் அ.இ.அ.தி.மு.க.வுக் கும் பொருந்தும்.

ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரே பிரச்சினை - எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது- மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கமே போதுமானதாகும். பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இதில் பிரித்து பார்ப்பதற்கு இடம் இல்லை.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்து பேசியவர் (23.11.1992) தானே இவர். இந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்டுள் ளதே. ஃப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்டுள்ளதே. டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறி இருக்கிறதே!

அப்பொழுது மறுக்காமல் இப்பொழுது மறுப்பது அசல் சந்தர்ப்பவாதம் தானே! மக்களுக்கு இதை நினை வூட்டுவதுதான் நமது கடமை.

அதோடு விட்டாரா? அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்ன சொன்னார்? ஆமாம்; ஆதரிக்கிறேன் இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால், வேறு எங்கே கட்ட முடியும்? (29.7.2003) என்று பதில் சொன்னவர் தானே?

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர் பார்க்கும் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியிலும் பங்கேற்ற திமுக முயற்சியின் காரணமாக, கப்பல் துறை அமைச்சராகவிருந்த ஆற்றல்மிகு செயல் வீரர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் இருந்த நிலையில் (ரூ.2427 கோடித்திட்டம்) அத்திட்டத்தில் பெரும் பகுதி முடிந்து , இந்நாளில் கப்பல் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா, என்ன காரணம் சொல்லித் தடுத்துள்ளார்? ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன? ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் - ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லும் பி.ஜே.பி.க்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு?

இந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் (Secular State) காப்பாற்றும் வகையில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 120 கோடி எண்ணிக் கையில் வாழும் இந்திய மக்கள் நல்லிணக்கத்துடன், சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் நல்வாழ்வு வாழ வகை செய்யும் - மதச்சார்பின்மையை வீழ்த்தத் துடிக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியான பி.ஜே.பி. அணி, அ.இ.அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர் வாக்காளர்ப் பெரு மக்களே!

Read more: http://viduthalai.in/page-2/77541.html#ixzz2x1jmbPUL

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA

தமிழ் ஓவியா said...


வினையூக்கியாய் நமது தலைவர்

- நீரோடை

இந்தியா என்பது படித்த வகுப்பி னரும் பட்டினங்களும் அல்ல. ஏழு இலட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமே யாவர்.சுயராஜ்யம் படித்த வகுப்பினருக்கு மட்டுமல்ல, உத்தியோகங்களை இந்திய மயமாக்குவதும் சுயராஜ்யமாகாது. வறு மைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும், அகால மரணத்திற்கும் ஆளாகி, எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நன்னிலையடைந்து, உண்ண உணவிற்கும், உடுக்கத் துணிக் கும், வாடி நிற்காமல் நிமிர்ந்த தலை யினராய், ஏறுபோல் நடையினராய், வாழ்ந்து இன்பம் நுகரச்செய்வதே சுய ராஜ்யமாகும். (நமது அரசியல் நிலைமை, 'குடி அரசு' தொகுதி 1 - பக்கம் 21, 1925). தந்தை பெரியார் நடத்திய குடிஅரசு பத் திரிகையில் 90 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த கட்டுரை இது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்றும் கிராமவாசிகள் நன்னிலை அடைய வில்லை, உண்ண உணவிற்கும், உடுக்கத் துணிக்கும், வாடி நிற்கும் கொடுமைதான் இருக்கின்றது. இதனை மாற்ற என்ன வழி என்னும் கேள்வி எழுகின்றது.

மார்ச் 18- தி இந்து ஆங்கிலப் பத்திரிகை, வறுமையிலிருந்து மீட்கப் பட்ட கிராமம் ( Puttung a village out of poverty) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. சட்டீஸ்கர் மாநிலத் தில் உள்ள சிந்த்பாரி என்னும் பழங் குடியினர் அதிகமாக (95%) வாழும் கிராமம் எப்படி வறுமையிலிருந்து மீட்கப்பட்ட கிராமமாக தமிழகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு.அலெக்ஸ் பால் மேனன் அவர்களால் ஆக்கப்பட்டது என்பதைப் பற்றிய கட்டுரை. மனந் திறந்து பாராட்டப்பட வேண்டிய பணி. மலை வாழ் மக்கள் வாழும் அந்தப் பகுதி எப்படி பாலைவனமாக இருந்தது என்பதையும் , திரு.அலெக்ஸ் பால் மேனனால் எப்படி அந்தப் பகுதி பசுஞ்சோலையாக மாறியது என்பதையும் விவரிக்கும் கட்டுரை அது. 75 குடும்பங்கள் உள்ள அந்தக் கிராமம் எப்படி தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையானது அளிக்கப்பட்டு, முன்னேற் றப்பட்டார்கள் என்னும் விவரிப்பாக அந்தக் கட்டுரை உள்ளது.

கிராமவாசிகளுக்கான எண்ணற்ற திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் செயல்முறை என்று வருகின்றபொழுது , பயனைக் காணோம். காலம் காலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களா கிய இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் வசிக்கும் இடங்களாகக் கிராமங்கள் இருக்கின்றன. சில சினிமாக்காரர்கள் கிராமத்தில் இருக்கும் பசுமை வயல் களையும், மலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் ஜாதி மனப்பான்மையும், ஜாதித்திமிரும் கோலோச்சும் இடங்களாக கிராமங்கள் இருக்கின்றன. பார்ப்பான் எப்படி தனக்கு கீழே உள்ளவர்களை யெல்லாம் சுரண்டி, கடவுள் என்னும் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கின்றானோ அப்படி கிராமத்துக்காரனை நகரத்துக் காரன் சுரண்டிப்பிழைக்கின்றான் என்றார் தந்தை பெரியார். கிராமங்கள் ஒழிய வேண்டும், பல கிராமங்கள் ஒன்றிணைக் கப்பட்டு நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த நகரங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்றார் பெரியார்.

தந்தை பெரியாரைப் போலவே தமது விரிந்த தொலைநோக்கால் ஆக்கபூர்வ மான பணிகளுக்கு அடித்தளமிட்டு நிறைவேற்றி முடிக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களால் பெரியார் புரா என்னும் திட்டம் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகத்தில் 2003-இல் ஆரம்பிக்கப்பட் டது. PURA- Providing Urban Amenities to Rural Areas என்பதன் சுருக்கமே புரா. நகரத்தில் கிடைக்கும் வசதிகளை கிராமப் பகுதிக்கு அளிப்பது. பெரியார் புரா திட்டத்தின் கீழ் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள, சுமார் 22 கி.மீ தூரத்திற்குள் உள்ள 67 கிராமங்கள் இணைக்கப் பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


அறிவியல் ரீதியான, திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான வழிகாட்டுதலும் வசதி செய்தலும் கிராமத்தின் முன்னேற்றத் திற்கு அடிப்படைத் தேவை. அதோடு அரசின் மூலமாக கிடைக்கும் திட்டங்கள் என்ன? அதைப் பெறுவதற்கு என்ன தகுதி, ஒரு கிராமத்தைச்சுற்றி கிடைக்கும் பொருள்கள் என்ன? அந்த கிராமத்தில் கிடைக்கும் பொருளினால் என்ன வகை யான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தலாம்? மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அந்தத் தொழில் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் திட்டம்.

அச்சம்பட்டி பகுதியில் தென்னைமரம் சார்ந்த தொழில்கள், பூதலூர் பகுதியில் கட்டட வேலைக்குப் பயன்படும் மாற்றுப் பொருள்கள், பாளைபட்டி பகுதியில் மூலிகைப்பொருட்கள் தயாரிப்பு சம்பந் தப்பட்ட பொருட்கள் என தொழிலவளம் மிக்க பகுதியாக அந்தப் பகுதி மாற்றப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் கிராமங்களின் மறுமலர்ச்சிக்கு பயன்படும் திட்டமாகவும், எடுத்துக்காட்டு திட்ட மாகவும் பயன்படுகின்றது, பயன் அளிக்கின்றது. அதனால் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் செல்லும் இடமெல்லாம் தனது உரையில் குறிப்பிடப்படும் திட்டம் பெரியார் புரா திட்டமாக இருக்கின்றது, ஒரு மனிதனுக்கு மீனைக் கொடுப் பதை விட, மீனைப் பிடிப்பதற்கு கற்றுக் கொடு, அவன் பிழைத்துக்கொள்வான் என்பதனைப் போல, கிராம மக்களுக்கு மீனைப் பிடிப்பதற்கு கற்றுக் கொடுக்கும் திட்டம் பெரியார் புரா திட்டம். அறியா மையில் இருக்கும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது, அந்த விழிப்புணர்வைத் தருகின்ற பணியை பெரியார் புரா செய்கின்றது. கிராமத் திற்குச் சென்று விழிப்புணர்வு கொடுப்பது, படித்தவர்களை பல்கலைக் கழகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது, தொழில் சார்ந்த பல்வேறு தொழில் நுணுக்கங்களை கிராம மக் களுக்கு - படித்தவர்கள் -படிக்காதவர் களுக்கு அளிப்பது என்னும் வகையில் பெரியார்- மணியம்மை பல்கலைக் கழகம்- பெரியார் புரா திட்டத்தின் மூலம் செயல்படுத்துகின்றது.

தமிழ் ஓவியா said...

திரு. அலெக்ஸ் பால் மேனன் அய்.ஏ.எஸ் அவர்கள் தனது அனுபவத்தை விவரிக்கும் போது. நான் கிராமத்தில் இத்தனை பேர் என்று டேட்டா எடுப்பதற்குப் பதிலாக, இந்தந்த நபர்கள் என்ற அடிப் படையில் கணக்கு எடுத்தேன் என்று குறிப்பிடுகின்றார். எண்களுக்குப் பதிலாக மனிதர்களைப் பயன்படுத்துதல். ஒரு கிராமத்தில் 100 பேர் ஒரு திட்டத்தால் பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுவது வேறு, இந்த 100 பேர் என்று பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் தேவை இது, இந்தத் தேவைகள் நிறை வேற்றப்பட்டன என்று குறிப்பிடுவது வேறு. இன்றைய உலகம் கணினி யுகம். டேட்டாபேஸ் என்று சொல்லப்படும் தகவல் அடிப்படையில் அமைந்த உலகம்.

தமிழ் ஓவியா said...

இதில் ஒரு கிராமத்தில் உள்ள மொத் தக் குடும்பங்கள், அந்தக் குடும்பங்களின் உறுப்பினர்கள், கல்வித்தகுதி, குடும்ப வருமானம், தனி நபர் வருமானம். அவர்களின் தேவை அல்லது மீதம் போன்ற பல்வேறு தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். அவ்வப்போது அதனை மாற்றம் செய்ய இயலும் கிராஸ் செக் என்று சொல்லப் படும் தகவல் சரிபார்ப்பை எளிதாக கணினி மூலம் செய்ய முடியும். வெறும் எண்ணிக்கையிலான, சடங்குத்தனமான தகவல்களுக்குப் பதிலாக உயிரோட்ட முள்ள தகவல்களால் கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற இயலும் .அதற்குத் தேவை கிரா மத்தை, கிராமத்தில் உள்ள உழைக்கும் மக்களை - தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற் படுத்தப்பட்ட், சிறுபான்மை இனமக்களை நேசிப்பது, அவர்களின் துயர்போக்கும் வழிமுறைகளைப் பற்றி யோசிப்பது, நவீன அறிவியலால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது எப்படி எனத் திட்டங்களைத் தீட்டுவது, அதனை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுத்துவது, அதனைத் தான் பெரியார் புரா திட்டத்தின் மூலமாக திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செயல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நமது பரம்பரை எதிரிகள் இதற்கு மாறான நினைப்பைக் கொண்டிருக்கின் றார்கள். எது நடந்தாலும் அது இறைவன் என்பவனால் நடப்பது. அவனவன் தலைவிதிப்படிதான் நடக்கும். அவனவன் தலையில் ஆண்டவன் எழுதியிருக் கிறான் (எந்த மொழியில் எழுதியிருக் கிறான் என்று கேட்டால் நம்மை முறைக் கின்றார்கள்). இதையெல்லாம் மாற்ற முடியாது என்ற எண்ணம் கொண்டிருப்ப வர்கள். வாழ்க்கையில் எது நடந்தாலும் அது ஜாதகத்தின் படி,கிரகத்தின்படிதான் நடக்கும் என்று எண்ணும் பல லட்சம் முட்டாள்களின் நாடாகத்தான் இந்த நாடு இருக்கின்றது, தந்தை பெரியார் தன்னு டைய வாழ் நாளெல்லாம் இந்த முட்டாள் தனத்தை மாற்றத்தான் யோசித்தார். பாடுபட்டார் . தன்னையே பலியாக்கிக் கொண்டு அடுத்தவர்கள் வாழ உதவும் மழை நீர் போல மக்களுக்காகப் பாடுபட்டார்.

தந்தை பெரியார் வழி செல்லும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் புரா திட்டத்திற்கு நவீன கருவிகள் அனைத் தையும் பயன்படுத்த வழி காட்டியி ருக்கின்றார். கணினி, இணையதளம் தொழில் நுட்பம் மூலமாகக் கிராமங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கின் றன. மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. நவீனத் தொழில் நுட்பங்கள் அனைத்தும் மனித வள மேம்பாடு என்னும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. இதனைப் போல தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேற்ற இயலும். தேவை, பத்தாம்பசலித்தனமான எண் ணங்களைக் கைவிடுதல், சரியான தகவல்களைத் தேர்ந்தெடுத்தல், அந்த தகவல்கள் மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் பொருட்களின் மூலதனத்தை யும், மனிதர்களின் மூலதனத்தையும் இணைத்தல், இணைந்த பணி மூலம் பொருளாதார அளவில், கல்வி அளவில், சுகாதார அளவில், பெண்களின் உரிமை அளவில் மேம்படுத்துதல், அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய வாழ்வை, புதிய வாய்ப்பை ஏற்படுத்துதல். அதனைத் தான் பெரியார் புரா செய்து கொண் டிருக் கின்றது. எத்தனை கூட்டணிகள் தேர்தல் களத்தில் இருந்தாலும் வெற்றிக் கூட் டணியை அடையாளம் காட்டும் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாடு நலம் பெற , ஒடுக்கப் பட்டவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெற தமிழனத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த கூட்டணி அமைய அச்சாணியாக இருந்த தமிழர் தலைவர் கி. வீரமணி , இந்த அணிதான் நமது வாழ்வை மாற்றுவதற் கான அணி. பெரியார் புரா போல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் அணி. மாற்றத்திற்கான வழிகளை அறிந்த அணி.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர் களாக இருந்த மக்களை ஆக்கபூர்வமான பணிகளால், செயல்திட்டங்களால் மாற் றும் அணி என்பதனை அறிந்து, வாக்குச் சேகரியுங்கள், வெற்றி பெறச்செய்யுங்கள் என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

அணி திரளுங்கள் தோழர்களே, களப்பணி ஆற்றுங்கள் தோழர்களே. நாம் தேர்தலில் நிற்பதில்லை. ஆனால் தேர்தல் முடிவு எப்படி இருந்தால் மக்கள் நலமாக இருப்பார்கள், வளமாக இருப் பார்கள் என்பதனைச் சுட்டும் தலைவரின் கீழ் இருக்கின்றோம். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டும் திசையில் தோழமைக்கட்சித் தோழர்களை இணை யுங்கள். வேதியியலில் சொல்லப்படும் வினையூக்கியாய் நமது தலைவர். நமது தலைவர் மாறுவதில்லை, ஆனால் மாற்றத்தை ஏற்படுத்துபவர். அவர் சுட்டும் திசையில் அணி திரள்வோம்.

Read more: http://viduthalai.in/page-2/77543.html#ixzz2x1kDZSti

தமிழ் ஓவியா said...


என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்!


ராமன் கோவில் கட்டியே தீருவோம்

கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்!

புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது.

பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1kXWdQq

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்!

சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன?

திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்?

அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம்.

1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை...

2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்..

3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு ..

4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்...

இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்!

கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது.

கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே!

- ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு

பாஞ்ச் ஜன்யா என்கிற அரசியல் செய்தித்தாளை, ஆர்.எஸ்.எஸ். புதுடில்லி யில் மீண்டும் துவக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். நேரிடை யாக இந்தத் தேர்தலை மோடியை வைத்து நடத்து கிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொள் ளட்டும்.


வெற்றி யார் கையில்?

எல்லோரும் தேர்தல் வெற்றிபற்றி பேசிக் கொண்டு இருக்கையில் சினிமா ரசிகர்களுக்கோ வேறு கவலை.

ரஜினியின் கோச்சடையான் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர் கள் திருப்பதிக்குப் பாத யாத்திரையாம்! படத்தின் வெற்றி அதன் சிறப்புகளால் அல்ல; ஏழு மலையான் அருள் பாலித்தால்தான் வெற்றியாம்! ரஜினியின் திறமையை இப்படியா அவமதிக்க வேண்டும்?


மூன்று வழக்குகள்

ஆளும் அ.இ.அ.தி. மு.க.வின் மீது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று முதல் அமைச்சர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மின் கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடியதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/77546.html#ixzz2x1kpju85

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள்


புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார்.

ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை.

வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம்.

வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார்.

- (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்)

Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn

தமிழ் ஓவியா said...


நடப்பது எமர்ஜன்சியா?

இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது.

இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங்.

ஊடகங்களின் போக்கு

அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன.

- தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014)

கருப்புக்கொடி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர்.

இனம் இனத்தோடு...

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது..

தயார்! தயார்!!

தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம்: மோடி பொறுப்பாளியல்லவாம்!


புதுடில்லி, மார்ச் 26- 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்ப வங்களுக்காக வருத்தப்படு கிறேன். ஆனால் அந்த சம்ப வங்களுக்கு நான் பொறுப் பாளி அல்ல என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குஜராத் முதல்வரும், பிரத மர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி: ஓர் அரசியல் வாழ்க்கை வர லாறு தலைப்பில் பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஆண்டி மரீனோ எழுதிய நூலை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நூல் குறித்து செய் தியாளர்களிடம் ஆண்டி மரீனோ செவ் வாய்க் கிழமை கூறியதாவது: 310 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் குஜராத் கலவரச் சம்பவம் குறித்து இதுவரை வெளிவராத, அதி காரப்பூர்வமான தகவல்கள் ஏராளமாக இடம் பெற்றுள் ளன.

மோடி அரசியல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ஹெலிகாப்டரில் செல்லும் போது அவருடன் பல வாரங் களாகத் தொடர்ந்து சென்று அந்தத் தகவல்களைப் பதிவு செய்தேன்.

பேட்டியின்போது ஒரு முறை, குஜராத் கலவரச் சம்பவத்துக்குப் பிறகு முதல் வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எனக்கு விருப்ப மில்லை. என்னைக் காரணம் காட்டி எனது மாநில மக்கள் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அப்படியொரு முடிவை எடுத்தேன்.

இருப்பினும், எனது கட்சி (பாஜக) அதற்கு இட மளிக்காததால் (நான்) பதவி யில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனது பதவி வில கலையும் மக்களும் விரும் பவில்லை.

இந்தத் தகவலை முதன் முறையாக பதிவு செய்த நிகழ்வாக இது (பேட்டி) இருக்கும் என பாஜகவின் ஜாம்பவானாகக் கருதப் படும் மோடியே வெளிப்ப டையாகக் கூறினார் என்று ஆண்டி மரீனோ தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/77604.html#ixzz2x7YLeaau

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

காப்புத் தொகை?

2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர்.

தேவை நட்சத்திர சின்னம்

தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

விதிமீறல்

சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம்.

சரண்!

கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார்.

பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

தலைகீழ் கட்டை விரல்

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மீதிப் பணம் எங்கே?

திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார்.

ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k

தமிழ் ஓவியா said...


இதுதான் பாஜக சொல்லும் மாற்றம்?


பாஜக சார்பில் விளம்பரம் வெளி யிட்டுள்ளார்கள். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அது பாஜகவிற் கான நேரம்; மோடிக்கான நேரம் என விளம்பரம் வந்துள்ளது.

நாமும் ஏதோ பெரிய மாற்றம் வருகிறது எனப் பார்த்தால், மாற்றம் வந்துள்ளது. எப்படி? மோடியை வளர்த்த அத்வானிக்கு மூக்குடைப்பு; மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்குக் கல்தா; நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் கருத்தைக் கேட்காமல் புறக்கணிப்பு. சரி, இது அவர்கள் உட்கட்சி விஷயம். எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

பிரமோத் முத்தாலிக் என்பவர் கருநாடகாவில் ராம் சேனா என்கிற அமைப்பின் செயலாளர். சங் பரி வாரத்தின் ஒரு அமைப்பு. 2009 இல் மங்களூரில், இந்து கலாச்சார பாது காப்பு என்கிற பெயரில், விடுதியில் இருந்த பெண்களை, கேளிக்கையில் ஈடுபட்டார்கள் என்று கூறி, சாலை யில் விரட்டி அடித்த கொடுமைக்குச் சொந்தக்காரர். அவர் மீது பல வழக் குகள் உள்ளன.

அவர் பிஜேபியில் காலையில் சேர்க்கப்பட்டார். பிஜேபி ஆட்சி செய்யும் கோவா முதல்வர் மனோகர் பரிகார், முத்தாலிக் சேர்க் கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப் பைத் தெரிவித்தார். கோவாவில் பாஜகவிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக் காது எனக் கூறியதும், அன்று மாலையே, முத்தாலிக், பாஜகவி லிருந்து விலக்கப்பட்டார். பிரமோத் முத்தாலிக் போன்ற ரவுடிகளைச் சேர்க்கும் நிலையில் இன்று பாஜக இருப்பது நல்ல மாற்றம் தானே? இது மட்டுமா?

உ.பி.யில், முசாபர்நகரில் 2013 ஆகஸ்டில் கலவரம் ஏற்பட்டு, சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட னர்; வீட்டை விட்டு விரட்டப்பட்டு, இன்றுவரை, ஏறத்தாழ 360 குடும் பங்கள் முகாம்களில் இருக்கின்றனர். அந்த கலவரத்தின் போது, பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இத்தனையும் செய்தது, சங் பரிவார் கும்பல் தான். அந்த கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சாட் டப்பட்ட பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஹீக்கும் சிங், சஞ்சீவ் பலியான் இருவரையும், பாஜக நாடா ளுமன்ற வேட்பாளராக அறிவித் துள்ளது. அதுவும், கலவரம் நடந்த முசாபர் நகர் மற்றும் கைரானா தொகுதிகளுக்கு.

உ.பி. கலவரத்தில் ஈடுபட்ட கிரி மினல்கள், வேட்பாளர்களாக அறி விப்பு; குஜராத் கலவரத்தின்போது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர்.

இதைத்தான் மாற்றம் என பாஜக கூறுகிறது.

நம்மூரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள வைகோவும், மற்ற தலைவர்களும், மோடி தலைமை யில் இந்தியா முழுவதும் இந்த மாற் றம் கொண்டுவர ஆசைப்படுகிறார் கள்.

ஆனால், தமிழகம் பெரியார் பிறந்த மண்; அது மட்டுமல்ல; பெரி யாரால் பண்படுத்தப்பட்ட மண். மக்கள், தகுந்த பாடத்தை பாஜகவிற் கும், அதற்குத் துணை போவோருக் கும் தருவார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/e-paper/77601.html#ixzz2x7Z97Zeh

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல்பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம்.

சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக:

i.e. General Public Vs Jayalalitha

மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . .

என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே!

- ரம்யா சீனிவாசன்

Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi

தமிழ் ஓவியா said...


இரட்டை இலை நீக்கம், மு.க. அழகிரி நீக்கம் பற்றி கலைஞர்


சென்னை, மார்ச் 26- இரட்டை இலை நீக்கம், மு.க.அழகிரி நீக்கம் பற்றி செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (நேற்று) குறிப்பிட்டதாவது:

செய்தியாளர் :- இரட்டைஇலை சின்னங்கள் சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டு மென்றுபொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

கலைஞர் :- தேர்தல்ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள்கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாகதேர்தல்ஆணையம் ஜனநாயகரீதியில் நடைபெறுகிறதுஎன்பதற்குஅடையாளமாக, ஏற்கெனவே இந்த இரட்டைஇலை சின்னங்களைமறைக்க வேண்டு மென்றுகூறியிருந்தது. அந்தத் தீர்ப்பைமதித்து, கட்சிசின்னங் களை, அரசுசார்புடையஎந்தநிகழ்விலும் அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாதுஎன்பதைநானும் கண்டிப் பாகஎடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

செய்தியாளர் :- தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்றகட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துகட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே?

கலைஞர்:- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் பட்டதற்குப் பிறகுஉரியவிளக்கங்களை அதற்கு அளிக் காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்ப தாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவ தாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத் திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்துபேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவேநீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்.

செய்தியாளர் :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றசொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தி ருக்கிறது. பத்திரிகைகள்என்றால், அனைத்துப் பத்திரிகை களிலும் அல்ல. முரசொலியில்வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றபத்திரிகைகள்இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில்இருட்டடிப்பு செய் திருக்கின்றன. ஏறத்தாழநான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாகநேற்றைய தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்அரசுவழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையி லிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலைஏடுகள் என்றுதங் களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாத தின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம்தான் என்ன?

இவ்வாறு கலைஞர் அவர்கள்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77613.html#ixzz2x7Zj2yid

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!

வழி நெடுகிலும் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு

வாரணாசி, மார்ச் 26- வார ணாசியில் ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கெஜ்ரி வால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறி விப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்ற போது பாஜகவினர் கேவல மாக நடந்து கொண்டனர்.

டில்லியில் இருந்து புறப் படும் முன் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற் காக மோடியுடம், ராகுலும் தோற்கடிக்கப்பட வேண் டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான் என்றார்.

டில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சிவ கங்கா விரைவு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந் தார் கெஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலை வர் மணீஷ் சிசோதியா, கட் சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர்.

கங்கையில் நீராடிய கெஜ் ரிவால் அங் குள்ள காலபை ரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கத் மோட்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.

பாஜகவினர் கேவலம்

அவருக்கு வழிநெடுகி லும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ் ரிவால் ஒழிக,கெஜ்ரிவாலே திரும்பி போ என முழங் கினர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கெஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதி லிருந்து நூலிழையில் தப்பி னார் கெஜ்ரிவால். கெஜ்ரி வாலுக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

வாரணாசியின் முஸ்லிம் தலைவர்களையும் கெஜ்ரி வால் சந்தித்தது, அந்த சமு தாயத்தினரின் வாக்குகளை யும் அவர் குறி வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட் டம் ஒன்றில், கெஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித் தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவு கிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை.

ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கெஜ்ரிவால்

ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப் பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.

வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிடுவதை அறிவிக்கும் வகை யில், இங்குள்ள ராஜ்நாரா யண் பூங்கா மைதானத்தில் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர் களுக்கு மிக மலிவான விலை யில் கொடுத்து வருகிறார் மோடி.

விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த பல மானி யங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 5,874 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக் கான சிறுதொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின் றன. இதைத்தான் வாரணாசி யிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங் கிரசை, பாஜகவும் ஆதரிக் கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்றார் கெஜ்ரிவால். கெஜ்ரி வால் தனது உரையில் சமாஜ் வாதி கட்சி பற்றியோ, பகு ஜன் சமாஜ் கட்சி பற்றி எது வுமே குறிப்பிடவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/77642.html#ixzz2x7aCMH2Y

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை!


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத் திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம்.

அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசிய மாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும்.

இலங்கை அரசு, எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்? என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு குருட்டுத் தைரியம்தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 27.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77655.html#ixzz2xDDm5Ce2

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!


ஆள் தெரியாமல்...

திருநெல்வேலியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய முசுலிம் பிரமுகர் ஒரு வர் மோடி மீது தாக்குதல் தொடுத்த நிலை யில், எல்லோருக்கும் அதிர்ச்சி!

கலைவாணர் ஒரு திரைப்படத்தில் கூறியதுபோல, ஆள் தெரியாமல் கூப்பிட்டு வந்துவிட் டோமே என்று ஒருவர் முகத்தை இன் னொருவர் பார்த்துக் கொண்டனராம்.

முகத்தைக் கண்ணாடியில் பார்க்கக்கூடாதா?

ஊழல் பேர்வழிகளுக்குக் காங்கிரஸ், தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்துள் ளது; ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவானுக்கும், ரயில்வே ஊழலில் சிக்கிய பவன்குமார் பன்சாலுக்கும் காங்கிரஸ் வாய்ப்புக் கொடுத் துள்ளது என்று பி.ஜே.பி. யின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றம் சொல்லி இருக்கிறார்.

அது சரி, கருநாடகா வின் எடியூரப்பா வுக்கும், சுரங்க ஊழல் புகார் சிறீரா முலு வுக்கும் பி.ஜே.பி. டிக் கெட் கொடுத்துள் ளதே - அது எப்படியாம்? அம்மையார் தம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்!

ஆரம்பமாகிவிட்டது

காஞ்சிபுரத்தில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. நிற் கிறது - தே.மு.தி.க. தலைவர் காஞ்சிபுரத்துக்கு இன்று பிரச்சாரம் செய்வ தாகத் திட்டம். அதற்குள் காஞ்சிபுரம் பி.ஜே.பி.யினர் எங்கள் கட்சித் தலைமை யில் தானே கூட்டணி - எங்களிடம் அனு மதி பெற்றுதான் தொகுதிக்கு வரவேண் டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.

ஆரம்பமாகிவிட்டது, ஆரம்பத்தி லேயே கூட்டணி இடியாப்பச் சிக்கல்.

எலியும் - தவளையும் கூட்டுச் சேர்ந் தால் அப்படித்தான்!

காம்ரேடு கேட்கிறார்

மனித உரிமை மீறப் பட்ட விஷயத்தில் இலங் கைக்கும் - குஜராத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை மோடியோடு கைகோக்கும் வைகோ சொல்லவேண்டும்.

குஜராத்தில் அரசே திட்டமிட்டு கலவரத் தைத் தூண்டியது. கலவரத்தில் அப்பாவி கள் கொல்லப்பட்டனர். 32 அய்.ஏ.எஸ். அதி காரிகள் சிறையில் உள்ளனர்.

- இப்படிக்கு ஏ.சவுந்தரராசன், சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர்

காலை வாரும் பி.ஜே.பி.

பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலை வரும், சிவகங்கைத் தொகுதியில் அக் கட்சி வேட்பாளருமான எச்.ராஜா என்ப வர், மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

அந்தோ பரிதாபம்! பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாநிலக் கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளுக்கு நமது அனுதாபங்கள்! தொடக்கத்திலேயே இப்படி காலை வார ஆரம்பித்துவிட்டனர் (சேம்சைடு கோல்) போகப்போக காலை வாரும் சர்க்கஸ் காட்சிகளை நாடு பார்க்கத் தானே போகிறது!

சட்டம் ஒழுங்கென்று ஒன்று இருக்கிறதா?

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் பட்டப்பக லில் வாலிபர் தமிழ்ச்செல்வன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது போலவே, சென்னை திரு.வி.க. நகரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பவுன் நகைகளும் கொள்ளை அடிக் கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடக்கும் கொலை கொலைக்கா முந்திரிக்கா இது!

தேர்தல் நெருங்கினால் சாலை வசதிகள் குதிக்கும்

சென்னை செனாய் நகர்ப் பகுதியில் அவசர அவசரமாக சாலைகள் போடப்படு கின்றன.

சாலை போட்டு முடிந்த மறுநாளே அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க அந்தப் பகுதிக் குச் செல்கின்றனர்.

தேர்தல் வந்தால்தான் சாலை வசதி களா? தேர்தல் ஆணையத்தின் கண்கள் ஆளும் கட்சி என்றால் மூடிக் கொள்ளுமா?

பொதுமக்கள் கேட்கும் கேள்வி இது.

Read more: http://viduthalai.in/e-paper/77664.html#ixzz2xDDwa1qU

தமிழ் ஓவியா said...


ஆட்சியின் சீர்திருத்தம்


ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதி யின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.
_ (விடுதலை, 24.1.1969)

Read more: http://viduthalai.in/page-2/77665.html#ixzz2xDJIwasP

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. தலைமையில் கூட்டணியும் - தினமணியும்!

21.3.2014 நாளிட்ட தினமணி ஏட்டில், மாற்று அல்ல, மாற்றமும்கூட! என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

1962 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்தல்வரை தமிழ்நாட்டில் தேர்தலில் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கவில்லை; இப்பொழுதுதான் தேசியக் கட்சி யான பி.ஜே.பி. தலைமையில் ஓர் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

தேசியக் கட்சி தமிழ்நாட்டில் தலைமை தாங்காததால் தான் காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச் சினைகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாற்றையும் தினமணி வைத்துள்ளது.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்; தமிழ்நாட்டில் இப்பொழுதைய தேர்தலில் பி.ஜே.பி. என்ற தேசியக் கட்சி தலைமை தாங்குவதாக தினமணி கூறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

ஒரு கட்சி தலைமை தாங்குகிறது என்றால், அந்தக் கட்சிதான் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதாக இருக்கவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? முதல் இடத்தில் தே.மு.தி.க. என்ற மாநிலக் கட்சிதான் இருக் கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தேசிய கட்சியான பி.ஜே.பி. என்ன பாடுபட்டது - மாநிலக் கட்சிகளின் தயவுக்காக எப்படியெல்லாம் ஊசி முனையில் தவம் இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை! இதனைத் தினமணி திரையிட்டு மறைக்கும் தந்திரத்தை ரசிக்க முடிகிறது.

தேசியக் கட்சி தலைமை தாங்கவில்லை என்று சொல் லுவதற்குமுன் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஏன் தலை யெடுக்கவில்லை என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாமா?

தமிழ், தமிழன், தமிழ்நாட்டு உரிமை இவற்றில் பற்று வைப்பது - இவற்றுக்காகப் பாடுபடுவது - இந்தப் பிரச்சினைகளுக்குக் குந்தகம் ஏற்படும்பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது, போராடுவது - தேசியத்துக்கு விரோதமானது என்ற சிந்தனை இருக்குமட்டும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல - எந்தத் தேசியக் கட்சியும் கால் ஊன்ற முடியாது. காரணம், தமிழ் மண் தந்தை பெரி யார் அவர்களாலும், திராவிட இயக்கத்தாலும் மேலே கூறப் பட்டுள்ள உணர்வுகளால் செழுமைப்படுத்தப்பட்ட மண்!

இப்பொழுதுகூட பி.ஜே.பி. என்ற தேசிய கட்சி - தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும்கூட - இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும்.

ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ம.தி.மு.க. பொதுச்செய லாளர் ஒன்று கூறுகிறார் என்றால், மறுநாளே பி.ஜே.பி. சார்பில் உடனே மறுக்கப்படுகிறது - இந்த நிலையில் உள்ள வர்கள் எத்தனை நாள்களுக்கு கைகோத்து நிற்பார்கள்? தவளை - எலி கால்களைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்த கதைதானே!

காங்கிரசின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஏன் விலக நேரிட்டது? ஈழத் தமிழர்ப் பிரச்சி னையில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் எதிர்மறையான அணுகுமுறைதானே அதற்குக் காரணம்!

இன்னொன்றையும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்று; தேசியக் கட்சிகள் என்பவை மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு அணுகுமுறை - வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் மாறுபட்ட அணுகுமுறை கொண் டவை என்பதைத் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது எந்த வகை நேர்மையைச் சார்ந்தது?

இந்தத் தன்மையில் உள்ள தேசியக் கட்சிகள் மாநிலத் தில் தலைமை தாங்கவேண்டும் என்று கூறுவது நல்லெண் ணத்தின் அடிப்படையில் இல்லை என்பது நிதர்சனமாகும்.

சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது என்பதுபோல தினமணி தலையங்கம் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் கூறுகிறது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்து, அது தொடர்ந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாத பி.ஜே.பி.,க்குப் பலன் கொடுக்கும் என்ற தந்திரத்தில் கூறப்பட்ட கருத்து இது.

பல நேரங்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்த தமிழ்நாட்டுக் கட்சிகள், அடுத்த கட்டத்தில் அதனால் பலன் இல்லை என்று கைவிடப்பட்டதுண்டு; அதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டி யிட்ட அத்தனை இடங்களிலும் கட்டிய பணத்தைக்கூட (டெபாசிட்) திரும்பப் பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், தினமணி எழுதிய தலையங்கத்தின் தந்திரமும், உள்நோக்கமும் என்ன என்பது எளிதில் விளங்கிவிடுமே!

Read more: http://viduthalai.in/page-2/77666.html#ixzz2xDJSKYZ9

தமிழ் ஓவியா said...


சொத்துக் குவிப்பு


ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம், வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77670.html#ixzz2xDJd8xEl

தமிழ் ஓவியா said...


அவசியம்

மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/77716.html#ixzz2xIzcNjzj

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துளிகள்!

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

- தந்தை பெரியார்

கருத்து வேற்றுமை என்றால் பகைமை என்று அர்த்தமல்ல. அது பகைமை என்றால் நானும் என் மனைவியும் பெரும் பகைவர்களாகி விடுவோம். உலகத்தில் அபிப்பிராய பேதமில்லாத இரண்டு மனிதர் களைப் பார்த்ததில்லை. என்னோடு கருத்து வேற்றுமை கொண்டவர்களை என் நெருங்கிய நண்பர்களைப் போல் பாவிக்கின்றேன்; இனியும் அப்படியே செய்ய முயற்சிக் கிறேன். ஏன், அதுதானே நியாயம்!

தமிழ்நாட்டின் உண்மையான நலனைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன். வடக்கத்தியவர்களை விட தென் நாட்டினர் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் நடந்து கொள்ளும் பண்பாடு உடையவர்கள்.

- காமராஜ் (28.8.1954இல் பொதுக் கூட்டத்தில்(மதுரை) புரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் அக்கறை இல்லை; அவர்கள் பிதற்றட்டும். ஜாதி என்பது சமூக ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. அந்த ஸ்தாபனம் தன்னுடைய வேலையைச் செய்த பின்னர் இப்போது அழுகி நாறுகிறது. இந்தியாவின் ஆகாய ஒளியால் அந்த நாற்றம் நாறிக்கொண்டே இருக்கிறது.

- விவேகானந்தர்

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

வாழ்நாள் துன்பம்

விழித்தவனுக்கு இரவு நீடித்திருக்கும்; அயர்ந்த வனுக்குப் பிரயாணம் சலிப்பாக இருக்கும். அதுபோல உண்மை உணர்ச்சி இல்லாத அறிவீனனுக்கு வாழ்நாள் துன்பமாக இருக்கும்.

- புத்தர்

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1EmYpr

தமிழ் ஓவியா said...

மதத்தீக்கு பலியான நாத்திக வீரன் கியடானோ புருனோ

பிப்ரவரி 17ஆம் தேதி 1600ஆம் ஆண்டு சோகம் தோய்ந்த இரவு. அன்று தான் இத்தாலியின் தலை சிறந்த தத்துவஞானியான புருனோ மதக் கிறுக்கர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். காம்ப் டீ பியோரி என்ற நாற்சந்தி வாடிகன் நகரிலுள்ளது.

இந்த இடத்தில் புருனோ உயிரோடு துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்டான். போப்பின் ரோம் நாட்டு நீதிமன்றம் புருனோ ஒரு மத விரோதி; அவன் நாத்திகன் என்று கூறி இந்தக் கடுமையான தண்டனையை அந்த மாவீரனுக்கு வழங்கியது.

அண்டம் நுண்ணிய பல அழிக்க முடியாத அணுக்களால் ஆனது. இதற்கு எல்லைகள் கிடையாது. கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் வெவ்வேறு புது அணுக்களாக உருவெடுக்கின்றன. பொருளும், அசைவு சக்தியும் அண்டத்தில் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை அன்றே கண்டறிந்து கூறினார் புருனோ.

பைபிளை எக்காரணத்தாலும் விஞ்ஞான நூல் என்று கருதமுடியாது. வால் நட்சத்திரங்கள் மனித இனத்தின் மேலுள்ள கோபத்தை வெளிப்படுத்த கடவுளின் ஆயுதங்களில் ஒன்று என்று கூறிய மத குருமார்களின் கருத்து மூடநம்பிக்கை என்று கூறி மக்களிடையே விளக்கினார். இயற்கையின் உண்மைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்வதால் ஏற்படுவது தான் உண்மையான அறிவு என்றார் அவர்.

இயேசுநாதரின் உடலும் இரத்தமும் தண்ணீரிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதும் மோட்சம், நரகம் உண்டு என்பதும் பொய் என்று புருனோ கூறுகிறார். இது கடவுளுக்கு விரோதமானது என்பதுதான் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

மன்னிப்புக் கேட்டு கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்து, இறுதிவரை நாத்திகராக இருந்து, நாத்திக கொள்கை களுக்காக உயிர்த் தியாகம் செய்த புருனோவை நாத்திக உலகம் என்றும் நினைவில் கொண்டிருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1Nb4oD

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

உலகம் வெள்ளத்தோடு கூடவே ஓடிக்கொண்டு போக வேண்டியதுதான். அந்த வெள்ளம் அதை எங்கோ கொண்டு போய் விட்டாலும் சரியே. உடை, கல்வி, விவாகம், உணவு எந்த விஷயத்திலும் பார்த்தாலும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள். வெள்ளத்துக்கு எதிர் திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை என்ற கற்பனை அவர்களுக்குப் புரிவது கூட இல்லை.

மனிதர்கள் கிழவர்கள் ஆகி விட்டால் வேதாந்தத்தை விரும்புகிறார்கள். வேசியும், கிழவி ஆகிவிட்டால் வேதாந்தத்தைப் பற்றி பேச ஆவல் வருகிறது.

நாணயம், ஒழுக்கம், அன்பு, பக்தி, மனுஷத்தனம் இவை யாவும் புத்தகத்திலுள்ள சொற்கள். வாழ்க்கையில் இவை யாருடைய அநுபவத்திற்கும் வருவதில்லை.

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1UMnoa

தமிழ் ஓவியா said...

கேரளாவில் ஒரு ஆணை

கேரளாவில் அச்சுத மேனன் முதல்வராக இருந்த பொழுது (அக்டோபர் 74) கீழ்க்காணும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதினால் வகுப்பு கலவரங்களுக்கு வித்திடக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.எனவே, இந்த மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த உத்திரவு அரசாங்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும்

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1nMBZ3

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் பொதுவுடைமை சிந்தனையாளர் தி.க.சி மறைவு


தமிழ்கூறும் நல் லுகத்தில் எழுத் தாளர் தி.க.சி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தி.க.சிவசங்கரன். தி.க.சி என இலக் கிய வட்டாரங் களில் அறியப் பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவ சங்கரன் 25ஆம் தேதி இரவு திருநெல் வேலியில் மறைந்தார்.

அவருக்கு வயது 89. கடந்த மாத இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நிலை மோச மடைந்ததையடுத்து திருநெல்வேலியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார்.

1945லிருந்து 64ஆம் ஆண்டுவரை வங்கி ஊழியராகப் பணியாற்றிய அவர், பிறகு சோவியத் கலாச்சார மய்யத்தில் பணியாற்றியபின்னர் ஓய்வுபெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக் கிய இதழான தாமரையின் ஆசிரியராக பணியாற்றியவர். இலக்கியச் செயல் பாடுகளில் பொதுவுடைமை, முற் போக்குக் கொள் கைகளை வெளிப்படுத்தி வந்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புகளைப்பற்றி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்குவித்து வந்தவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் குறித்த விமர்சனங்களையும், கருத்து களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளவர். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்பட்டுவந்தவர். தி.க.சியின் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் கொண்டு இவரது நூலுக்கு 2000-ஆம்ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த திகசிக்கு கணபதி, வண்ணதாசன் என்கிற கல்யாண சுந்தரம், சேது, ஜெயலட்சுமி, பர்வத குமாரி, கவுரி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/77757.html#ixzz2xP25oTPj

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவைக் கண் திறக்க வைத்த எட்வர்ட் சுனோடன்

அமெரிக்க உளவுத்துறையில் பணி யாற்றி ரகசியத் தகவல்களை விக்கி-லீக்சுக்குக் கசியவிட்டதான புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்டவர் எட்வர்ட் சுனோடன். அரசும், அமெரிக்க அரசியல் வாதிகளும் சுனோடனை ஒரு கிரிமினல் குற்றவாளியாகவே சித்தரித்தனர். ஆனாலும், ஓயாத சுனோடன் உடனடியாக அமெரிக்க சிவில் லிபர்ட்டி யூனியன் என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின்சார்பில் அய்ம்பது ஆயிரம் அமெரிக்க மக்களின் ஆதரவைக் கோரியிருந்தார். அமெரிக்க மக்களின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை அமெரிக்க உளவுத்துறை கண்காணித்து பதிவு செய்துவரும் தகவல் சுனோடன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அவரை ஆதரிப்போர் பட்டியல் நீண்டு வந்தது. தற்போது சுனோடனுக்கு ஆதர வானவர் பட்டியல் 10 இலட்சத்தையும் (10,10,094) தாண்டிவிட்டது.

இந்நிலையில் உளவுத்துறை செயல் பாட்டில் மாற்றம் கொண்டுவரும் திட் டத்தை ஒபாமா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனோடன் தற் போதைய ஒபாமாவின் சீர்திருத்த நட வடிக்கையை ஓர் திருப்புமுனையானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தொலைபேசி உரை யாடல்களை அமெரிக்க புலனாய்வு நிறு வனங்கள் பதிவுசெய்வதுகுறித்து அமெ ரிக்க அதிபர் ஒபாமா புதிதாக ஓர் உத்தர வைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒட்டு மொத்த தொலைபேசி உரையாடல் களையும் பதிவு செய்வதை முடிவுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக் காவின் உளவுத்துறையின்மீதான நம்பிக் கையை மக்கள் இழக்கும் அதிர்ச்சியான நிலை ஏற்பட்டுவிட்டதையும், தனி நபர் சுதந்திரத்துக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.

உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, தனி நபரை உளவு பார்ப்பதுகுறித்த திட்டத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேறு சீர்திருத்த வரைவு, அமெரிக்காவின் சுதந்திர உரிமைச் சட்டம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டி இருக்கும் என்றனர்.

சுனோடன் கூறும்போது, தேசிய பாது காப்புச் சட்டத்தின்படி ஒட்டுமொத்த அமெரிக்கக் குடிமக்களை உளவு பார்ப் பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று நான் நம்புகிறேன். நீதிமன்றம், கட்சி மற்றும் மக்களுக்காக தனி நபர் மீதான வேவு பார்ப்பது தொடரக்கூடாது. ஒபாமாவின் உளவுத்துறை சீர்திருத்த அறிவிப்பின்மூலம் அரசமைப்புக்கு விரோதமான செயல் முடிவுக்கு வந்து சமூக நீதி வென்றுள்ளது. அமெரிக்க சுதந் திர சட்டத்தில் வரலாற்றில் சீர்திருத்தம் முழுமை அடையவில்லை என்றே காங்கிரசு கருதுகிறது. ஒபாமாவின் இந்த சீர்திருத்த அறிவிப்பின்மூலம் உளவுத் துறையின் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறை பொதுமக்களிடமிருந்து வெடித்த எதிர்ப்பின் காரணமாகவே, காரணமே இல்லாத, உண்மையைக் கூற வேண்டு மானால் தேவையே இல்லாத ஒட்டு மொத்த மக்கள் கண்காணிப்பு முறை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதா யிற்று. இது ஒரு திருப்புமுனை, தேசிய உளவுத்துறையிலிருந்து உரிமைகளை மீட்டெடுக்கும் புதிய தொடக்கமாகும். இதன்மூலம், அரசிடம் பொது மக்களுக் கான சரியான இடம் மீண்டும் பெறப்பட் டுள்ளது என்று சுனோடன் தெரிவித்தார்.
சுனோடன் கருத்துக்களால் ஒபாமா வின் கண்திறந்தது. அவர் தன் தவறை உணர்ந்து, தற்போது உலகெங்கும் உள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஹேக்கில் கூடிய அனைத்து நாடுகளின் தலைவர்கள் கூடிய அணு எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுசெய்தியாளர்களுடனான பகிர்வில் ஒபாமா தெரிவித்ததாவது: வெற்றி பெற்றுள்ளோம் என்றால், முக்கியமாக சாதாரண மக்களின் உதவியால் நாம் வெற்றி பெற்றுள்ளோமே தவிர, வெறுமனே அரசால் அல்ல. அரசு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் சந்தேகப்படும் மனப்பான்மையிலிருந்து விடுபடுவது என்பது அதுவும் ஒரே இரவில் நடக்கக் கூடியது அல்ல என்றார். மேலும் அவர் கூறும்போது, தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தை நிறுத்தவும், உளவுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள சீர்திருத்தம் செயல்படுத்தக்கூடியதே என்றும் நம்பு வதாக ஒபாமா கூறினார். தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதுகுறித்தும் , அவற்றை எப்படிக் கையாள்வதுகுறித்தும் நான் உறுதியாக உள்ளேன். அதேபோல், மக்கள் கருத்து களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/77759.html#ixzz2xP2FYkUq

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு முழக்கம் - ஏன்?

பகுத்தறிவுக் களஞ்சியம் - பகுதியில் (விடுதலை, திருச்சிப் பதிப்பு 15.3.2014) சாவில் கொட்டு ஏன்? என்னும் செய்தியைப் படித்தேன். மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்வத ஒரு மூடநம்பிக்கையல்ல. சமண, பௌத்த சமயங்கள் சார்ந்த குருமார்கள் இறப்பு என்னும் வீடு பேறு அடைந்ததால், அவர்கள் உடலை கொட்டு முழங்கக் கொண்டு சென்று, நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது அச்சமயங்களின் மரபாகும்.

துறவறம் மேற்கொண்டவர்களுக்கான இம்மரபை, இச்சமயங்கள் சார்ந்த இல்லறத்தாரும் பின்பற்றலாயினர். இதன் அடையாளமாகவே மனிதன் இறந்தவுடன் கொட்டு முழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இம்மரபு இளம் வயதினர் இறப்புகளிலும், அம்மை நோய் கொண்டோர் இறப்புகளிலும், பின்பற்றப்படுவதில்லை என்பது உணரத்தக்கதாகும். அம்மை நோயால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளின்போது நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லி விடுவதில்லை. அம்மை நோய், ஒரு தொற்று நோய் என்னும் அறிவியல் அடிப்படையே இதற்குக் காரணமாகும்.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அக்காலக் கட்டத்தில், இறப்பு நிகழ்வின் அறிவிப்பாகவும், அது எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை தொலை தூரத்தி லிருந்து வருபவர்களுக்குத் தெரிவிப்பதாகவும் அமைந்ததே இறப்பில் கொட்டு முழக்கம் செய்வதாகும். இதற்குக் கட்டி விட்ட கட்டுக் கதையே உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் ஒளிந்து இருக்கும் என்பதாகும். உயர் திணைக்குரியது இறப்பு, மரணம் இழவு என்னும் சொற்களாகும். அஃறிணைக்குரியது சாவு என்னும் சொல்லாகும். எழவு - என்பது வழூஉச் சொல், அதன் திருத்தச் சொல் இழவு என்பதாகும். - தி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page2/77760.html#ixzz2xP2i0OL6

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் மதப் பிரார்த்தனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு


மேரிலாண்ட் நீதிமன்றத்தில் அமெ ரிக்க மனிதநேய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அரசும், மதமும் தனித்தே இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் நாட்டின் அரசு வாரியக் கூட்டங்களில் இயேசு கிறிஸ்து அல்லது கர்த்தர் என்று பிரார்த்தனை இடம்பெறச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதானது நாட்டின் அரசியலமைப்பின் முதல் விதியை மீறுவதாகும் என்று வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் நீதிபதி அரசு அலுவலகங்களில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்பில் அதன் வழக்கறிஞர் மோனிகா மில்லர் இதுகுறித்து கூறும்போது, அரசு அலுவலர்கள் அடிக்கடி அரசுக் கூட்டங் களில் இயேசு அல்லது கர்த்தரை அழைப் பது, சட்டத்துக்குட்பட்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடத்தப்படலாம் என் பதை சாதகமாகக் கொண்டு, அரசு அலு வலகக் கூட்டங்களில் பிரார்த்தனை நடத் துவது அரசியலமைப்பை மீறுவதாகும். கிறிஸ்துவர் அல்லாதவர்கள் இதுபோன்ற அயோக்கியத்தனமான பிரார்த்தனைக் கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டி உள்ளது. மதத்துக்கு வெளியே இருப்பவர்களாக நடத்தப்படுவது தம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாக எண்ண வேண்டியுள்ளது என்றார்.

மேரிலாண்ட் மாவட்ட நீதிபதி உத்தரவில், கேரல் கவுண்டி பகுதி அலு வலர்கள் கூட்டங்கள் நடைபெறும்போது கூட்டத் தொடக்கத்தின்போது, குறிப்பிட்ட கடவுள் பெயரைச் சொல்லி அழைப்பது, மத நம்பிக்கையின்மீதான செயல்கள், நம்பிக்கை என்று சொல்லி நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதி லிருந்தும் மற்றும் அதில் பங்கேற்பதி லிருந்தும் அரசு அலுவலர்கள் தடை செய்யப்படுகிறார்கள். தொடக்க நிகழ்வு களில் வேண்டுமானால் அயோக்கித்தன மில்லாத கடவுளை அழைத்து கூட்டத் தைத் தொடரலாம் என்று உத்தரவிட் டுள்ளார்.

அப்பிக்னானி மனிதநேய சட்ட மய் யத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் டேவிட் நியோஸ் கூறும்போது, அரசும், மதமும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் இது மிகப்பெரிய வெற்றியாகும் என்றார். பொது நிறுவனக் கூட்டங்களில் அயோக் கியத்தனமான கடவுளை அழைப்பது கூடாது என்பதை நாட்டில் அப்பட்டமாக உடைத்து மீறிக்கொண்டுள்ளார்கள் என்று கூறினார்.

கேரல் கவுன்டி அலுவலர்கள் மூவர் அலுவலகக் கூட்டங்களில் பிரார்த்தனை குறித்து கொடுத்த முறையீட்டின்பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்க மனித நேய அமைப்பு கேரல் கவுன்டி ஆணையர்களுக்கு பிரார்த்தனை குறித்த புகார்களை கடிதம்மூலம் எழுதி அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதேபோன்ற வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கிரீஸ் நகரத் திலும் இதுபோன்ற வழக்கில் கடந்த ஆண்டில் வாதங்கள் முடிவுற்றுள்ளன. இந்த நிலையில்தான், மேரிலாண்ட் நீதிபதி உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(http://americanhumanist.org/news/details/2014-03-christian-prayers-at-carroll-county-meetings-must-en)

Read more: http://viduthalai.in/page3/77762.html#ixzz2xP39IRPL

தமிழ் ஓவியா said...


73ஆம் இடத்தில் இந்தியா!இண்டர் - நாடாளுமன்ற யூனியன் மற்றும் அய்.நா. பெண்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண் கள் பங்கு குறித்த ஆய்வு மேற் கொண்டனர். அதில், இந்தியாவுக்கு 73ஆவது இடம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் அல்லது அமைச்சர்களாக 9.9 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் இருந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் மத்திய அரசில் 43 கேபின்ட் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் அமைச்சர்களாக இருக் கின்றனர். தர வரிசை பட்டியலில் கெய்தி, ருவாண்டா, காங்கோ, ஜாம்பியா ஆகிய நாடுகளைவிட இந்தியா கீழ் மட்டத்தில் உள்ளது.

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தான் நாடாளுமன்றம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 17 கேபினட் அமைச்சர்களில் பெண் ஒருவர்கூட இல்லை. அதே போன்று சவுதி அரேபியா மற்றும் லெபனானிலும் பெண் அமைச்சர்கள் கிடையாது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் 20 சதவீதமும் அமெரிக்காவில் 40 சத வீதமும் பெண் அமைச்சர்கள் உள் ளனர்.

Read more: http://viduthalai.in/page3/77763.html#ixzz2xP3WUQbd

தமிழ் ஓவியா said...


எம் குலக் கொழுந்து நீ

நாளொன்பது ஆண்டுகட்கு முன் - அந்த
நாளென்பது எதிரிகளின் காலம் நீ அன்று
அம்மாவிடம் பெற்றது பொறுப்பு அல்ல பெரு நெருப்பு . அது
அணைந்து போகாமல் இருப்பது கொள்கையோடு நீ
இணைந்து போவதால் தான் - எதிரிகள்
அணைத்து விடாமலிருக்க
அனைத்து தமிழரையும்
ஒன்றிணைத்து அவர்தம் நலம்
ஒன்றினையே நினைக்கிறாய் !

உனக்கு
இரண்டகம் செய்தவர்களும்
இரண்டு-அகம் கொண்டவர்களும்
பிழைத்துக் கொண்டார்கள் - ஆனால்
நிலைத்து நிற்கவில்லை !

உன்னை
ஒழிக்க நினைப்பவனும் ஒலிக்கச் சொல்லுவான்
தமிழர் தலைவர்
நீதானென்று !

ஆத்திரங் கொண்டு இருப்பவர் கூட உன்
சூத்திரங் கண்டு சுருங்கி போவார்கள்
உண்மை உணர்ந்து நெருங்குவார் - பின்னர்
உன்-மை எழுதும் சாசனம் தான்
தமிழர் உயர்ந்தமரும் ஆசனம் என்றுணருவார்.

தவறுகள் நடந்தால்
இடித்துரைக்கும் உன்னிடம்
படித்துறையின் ஆனைத் தலைமுதல்
படித்த-துரையின் ஆணையர் தலை வரை
உருளுமென்பது உண்மை.

அன்று
பெஞ்சில் ஏறிநின்று பேசி - இன்றெங்கள்
நெஞ்சில் நிறைந்தவன்.

பெரியவர் முதல்
வறியவர் வரை யாரையும்
எழுந்து வணங்கும் - எம்குல
கொழுந்து நீ !

தமிழர்மேல் நீ
தொடர்-பற்று வைத்ததால்தான்
தொடர்பற்று இருந்தோரெல்லாம்
திரும்பி உன்னிடம்
விரும்பி வருகிறாரகள் !

கழகத்தின்
விலாசம் கேட்டால் - நீ
விசாலமாய் எழுப்பிய கொள்கை
வளாகங்கள் கை காட்டும் !

அதற்காக நீ பட்ட கடனை
அடைத்து விட்டாய் ! உனக்கு
நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது !
உன் பாதை எமக்கு பெருமை
உன் உழைப்புக்கு முன்
எல்லாமே வெறுமை !

- பொறியாளர் த.சண்முக வடிவேல் பி.இ., தஞ்சாவூர்

Read more: http://viduthalai.in/page4/77764.html#ixzz2xP3wz9jO

தமிழ் ஓவியா said...


நினைவுத்திறனை அதிகரிக்கும் இஞ்சி


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page4/77766.html#ixzz2xP4SHpIo

தமிழ் ஓவியா said...


இந்த ஆண்டுக்கான மதச்சார்பின்மை விருது பெறுகிறார் மலாலா


அனைத்துப் பெண்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துவருபவர் பாகிஸ்தான் பள்ளிச் சிறுமியான மலாலா. இவர் பாகிஸ்தானில் பள்ளிமீது தாலிபான் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உலகுக்கே அவர் குரல் ஒலிக்குமாறு செய்தவர். இதனால், துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்தது. மலாலா குண்டுக் காயமடைந்தபோது, அவர் மதக் கருத்துக்களுக்கு எதிராக இருந்ததால்தான் சுடப்பட்டார் என்று தாலிபான்கள் தெரிவித்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் இலண்டனில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த பின்னரும் தன் கொள்கையிலிருந்து, பெண்களுக்கு கல்வியின் அவசியத்தைக் கூறுவதி லிருந்து பின்வாங்காமல் மத அடிப்படை வாதிகளுக்கு பெரும் சவாலாக இருக் கிறார்.

இதனால், 2013ஆம் ஆண்டு மலாலாவின் 16ஆம் ஆண்டு பிறந்த நாளான சூலை மாதம் 12ஆம் நாளை அய்.நா. சபை மலாலா தினம் என்றே அறிவித்தது. உலகெங்கும் மலாலா நாள் பெண்குழந்தைகள் கல்விக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. மலாலாவைக் கவுரவிக்கும் பொருட்டு, இங்கிலாந்தை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு மலாலாவை இந்த ஆண்டுக்கான மதச் சார்பின்மை விருதுக்கு உரியவராக அறிவித்து அவ் விருதை மலாலாவுக்கு அளிக்கிறது.

இதற்கான அறிவிப்பை தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருது அளிக்கப் படுவதன் மூலம் பெண்களின் கல்வி விழிப்புணர்வு, மதச் சார்பின்மைக்கான விருதின் நோக்கத்தின்படி அனைவருக் கும் கல்வி, அதிலும் குறிப்பாக பெண் களுக்கு சம அளவிலான கல்வி அளிப்பது என்பதே மதச்சார்பின்மைக்குரிய ஒன் றாகக் கூறப்பட்டு, அதன்படி அவ்விருது மலாலாவுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து பணத்தில் ஏழாயிரம் பவுண் டுக்கான தொகையினை விருதுடன் வழங்குகிறது. பெண்கள் திட்ட நிதியாக இது பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென் றால் நான் ஒரு பெண் என்கிற தலைப்பி லான பிரச்சாரம்மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும், சிறப்பாக வாழ வும், கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மலாலாவுக்கு இவ்விருதைப் பரிந் துரைத்துள்ள தேசிய மதச் சார்பின்மைக் கான அமைப்பு பெண்கள் கல்விப் பிரச் சாரத்தை ஆதரித்ததால், முரட்டுத்தனமான இசுலாமிய மதவெறி அமைப்பின் வன் முறையை எதிர்கொண்டவர் மலாலா என்கிறது.

தேசிய மதச்சார்பின்மைக்கான அமைப் பின் தலைவர் டெர்ரி சாண்டர்சன் கூறும் போது, இங்கிலாந்தின் பெண்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பிரச்சாரத்தில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, நாங்கள் இவ்விருதை வழங்க உற்சாகத்துடன் வழங்க முடிகிறது. கல்விக்காக அனைத்து தரப்பினரையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே விழித் தெழச் செய்துள்ளார். மலாலாவின் நம்ப முடியாத எழுச்சியால் முக்கியமாக கவுரப் படுத்த வேண்டும். மதச்சார்பின்மை என்பது எப்போதுமே மதத்தின் பேரால் ஆதிக்கம், அடக்குமுறைகளைக் கடந்த, மனித உரிமைகளுக்கானதாகும். உலகெங் கும் ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறு பான்மையருக்கான நம்பிக்கையை ஏற் படுத்துவதே மதச் சார்பின்மையாகும் என்றார்.

மதசார்பின்மையை ஊக்கப்படுத்த 1937ல் ஜான் என்பவரால் இவ்விருது தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இவ் விருதை அவர் மகன் டெப்பி லாங்டன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/77767.html#ixzz2xP4rwdY8

தமிழ் ஓவியா said...


சுவையான தகவல்கள்!

இறுதி மரியாதை செலுத்த முடியவில்லையா?

அயர்லாந்தில் நெருக்கமானவர் ஒருவர் உயிரிழந்தால் பல்வேறு காரணங் களால் இறுதி மரியாதை செலுத்த முடியா தவர்களுக்காக அயர்லாந்து நாட்டில் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் இறுதி மரியாதை செலுத்தவும், அடக்கம் செய்யுமிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களைக் காணவும் அதே நேரத்தில் காணும் வகையில் நேரிடையாக ஒளிபரப்பு செய்ய ஒரு தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்கு தனியே கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் காண முடியாதவர்கள் விரும்பிக் கேட்டால் தனிக்கட்டணத் துடன் அந்நிகழ்ச்சியின் பதிவை அஞ்சல் மூலம் அனுப்பவும் உத்தேசித்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இணையதளம்மூலம் நேரடி ஒளிபரப்பும், அஞ்சல்மூலமும் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நிறு வனத்தின் உரிமையாளர் ஆலன் பவுடி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப இறுதி மரியாதை செலுத்தப்படும் நிகழ்வை தொடக்கம் முதல் அடக்கம் செய்யப்படும் கடைசி நிகழ்வுவரை பதிவு செய்து இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் மட்டும் காணத்தக்கவகையில் கடவுச் சொல் அளிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். இதன்மூலம் உரியவர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியைக் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதத்திற்குப்பிறகே தெரியவந்த ஒரு மரணம்!

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாகா ணத்தைச் சேர்ந்த ஓபெருர்செல் நகரில் 66 வயது பெண்மணி அடுக்குமாடி குடியி ருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கான அஞ்சல் பெட்டியில் அவருக்கு வந்த ஏராளமான கடிதங்கள் குவிந்து அஞ்சல் பெட்டி நிரம்பி வழிந்துள்ள நிலையிலி ருந்தது.. இதைக் கண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் உரிமையாளர் இதுகுறித்து, மற்றவர்களிடம் அவரை பற்றி விசாரித்துள்ளார். அதற்கு மூதாட் டியை பார்க்க சுமார் கடந்த சில மாதங் களில் யாரும் வரவில்லை என குடி இருப் பவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேக மடைந்த உரிமையாளர் அப்பெண் மணியின் வீட்டிக்கு சென்று குரல் கொடுத் தும், அழைப்புமணியை அடித்தும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, வேறு வழியின்றி கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள்.

வீட்டினுள் நடுக்கூடத்தில் தொலைக் காட்சி ஓடிக்கொண்டேயிருக்க, நாற்காலி யின் மீது அமர்ந்தபடி, அப்பெண்மணி அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள் ளார். மேலும் அவரது அருகே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கான நிரல் இருந்தை வைத்து, அவர் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களாகவே அந்த மூதாட்டியின் வீட்டை கடந்து செல்லும் வேளையில் துர்நாற்றம் வீசியது என்றும், அதனை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77769.html#ixzz2xP5DC8Q1

தமிழ் ஓவியா said...

ஓர் ஆய்வாளர் பார்வையில்....

கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் நுழைந்த ஆரியம் இன்று வரை தலை விரித்தாடுகின்றது.

இடையில் பெரியார் வந்தார். சீர்தி ருத்தங்கள் செய்தார். ஆரியத்திற்குத் தொய்வு. அவர் மறைந்துவிட்டார். தமிழர்கள் திருந்தவில்லை. இனி இந்தியா என்று உருப்படுமோ?

எல்லாவற்றையும் மனு அடிப்படையிலே பார்க்கின்றனர். நீதிமன்ற மாகட்டும், அரசு அலுவலகங்களா கட்டும். ஆரியக் கூத்து ஓய்ந்த பாடில்லை. என்றுதான் நல்ல காலம் விடியுமோ?

- பேரா. பிச்சை தமிழியல்துறை
காந்தி கிராமம், திண்டுக்கல்

பி.கு: முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான (26.2.2014) கலந் துரையாடலின்போது கூறக் கேட்டவர்.

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5udqzQ

தமிழ் ஓவியா said...


தனி பாலினம்

வாக்காளர்ப் பட்டியலில் திரு நங்கைகள் தங்களைத் தனிபாலினம் என்று குறிப்பிட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP64ZYbk

தமிழ் ஓவியா said...


குறும்பா

கடவுளைத்
திட்டினால்....
மனிதனுக்கேன்
பொத்துக் கிட்டு
வருதுகோபம்?
கடவுளையே..
உருவாக்கியவன்
மனிதன் என்பதால்!
நாமனைவரும்
கடவுளின்
குழந்தைகளில்லை!
கடவுள்கள் தான்...
மனிதனின் குழந்தைகள்

***
இல்லாத தொன்றை (கடவுள்)
இருக்குன்னு சொன்னால்
ஒத்துக் கொள்வான்...
ஆன்மிகவாதி...!
அது பெரியவர் சொன்னால்
பெருமாள் சொன்ன மாதிரியாம்
சரி...!
இல்லாத ஒன்றை
இல்லையென்றே சொன்னால்...?
ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே
அதுவும் பெரியவர் (பெரியார்)
சொன்னால் பெருமாள்
சொன்ன மாதிரிதானே??!

***
மனிதனுக்கே...
வயதாக ஆக..
சக்தி குறையுது...!
கல்லுக் கடவுளுக்கு
காலங் காலமாய்
சக்தி எப்படியிருக்கும்
நிரந்தரமாய்??
- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77772.html#ixzz2xP6EnLfz

தமிழ் ஓவியா said...


எல்லாம் கடவுள் செயலா?
1. மனிதன், மான், ஆடு, மாடு, பறவைகளை அடித்துப் பச்சையாகச் சாப்பிட்டான்.
2. துணியில்லாத வாய் பேசாத மிருகமாக வாழ்ந்தான்.
3. கலவி செய்து குட்டிகள் போட்டான். 4. மலம் கழித்தான்.
5. மூத்திரமிட்டுக் குடித்தான். 6. நோய்வந்து தீர்வைக் கண்டான்.
7. கிணற்றில் தவறி விழுந்து நீச்சலடித்து மேலே வந்தான்.
8. கீழே விழுந்து கைகால் ஓடிந்து நொண்டியானான்.
9. வாழ வழி அறியாதவன், தற்கொலை செய்து கொள்ளுகிறான்.
10. கோயில் சென்று விபத்தில் சாகிறான்.
11. கொலை, கொள்ளை அடிப்பதும், பொய்யும் புரட்டும் செய்கிறான்.
12. சிலை செய்வது, கோயில் கட்டுவது, தூபம் போடுவது, படையலிட்டு ஆடு, கோழிகளைப் பலியிட்டு சாப்பிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் குளம் சென்று கோரிக்கை வைப்பது.

இவை எல்லாம் கடவுள் செயலா?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/77775.html#ixzz2xP6Q8wq1

தமிழ் ஓவியா said...


நாத்திகர்கள் மனிதாபிமானமுள்ளவர்கள்

மும்பையில் பகத்சிங் கின் மறைவுநாள் அன்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்த சுமார் 250 நாத்திகர்கள் ஒன்று சேர்ந்து மதநம்பிக்கை காரணமாக மக்களிடையே காணப் படும் சகிப்புத் தன்மை அற்ற மனநிலையை மாற்ற விழிப்புணர்வு பேரணி ஒன்றுநடத்தினர்.

இந்த பேரணியின் ஒருங் கினைப்பாளரான சஞ்சய் சாவர்க்கர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது மதச்சகிப்புத்தன்மை என்பது தற்போது குறைந்து வருகிறது. மக்களிடையே நாத் திகர்கள் என்றாலே சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் போன்ற ஒரு பார்வை மக்களிடையே எழுகிறது. நாத்திகர்கள் மனிதாபிமான அடிப்படையில் செயலாற் றுவார்கள். அவர்கள் மதங்களையோ சமூகங்களையோ பார்த்து தொண்டாற்ற மாட்டார்கள். பகத் சிங் நாத்திகர்களுக்கு ஒரு தலைசிறந்த உதாரணமாக உள்ளார். அவர் எந்த ஒரு நிமிடத்திலும் தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக அந்நிய சக்திகளிடம் அடிபணியவில்லை என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் புகழ்பெற்ற நாத்திகப் போராளி நரேந்திர தாபோல்கர் அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக் கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை காவல்துறையினர் குற்றவாளி யாரென்று கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் நாத்திகர்களின் பேரணி மராட்டிய மாநில அரசை நரேந்திர தாபோல்கர் வழக்கில் விரைந்து விசா ரணை செய்து கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத் தும் விதமாகவும் பேரணி நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதி லளித்த புகழ் பெற்ற முற் போக்குச் சிந்தனையாளர் அசுத்கோட் போலே கூறியதாவது பொது மக்கள் என்னிடம் நீங்கள் கட வுளுக்கு பயப்படுகிறீர்களா? இல்லையா? என்று கேட் கிறார்கள். நான் கூறுவ தெல்லாம், கட வுளுக்குப் பயப்படுவதும், பயப் படாததும் அவசியமற்ற ஒன்று; ஆனால் கடவுள் பெயரைச்சொல்லி திரிபவர்க ளிடம் நான் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பேன் என்று கூறினார். பேரணியில் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தின் தலைமை வடிவமைப் பாளர் அசுத் கோட்போலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய முற்போக்கு சங்கத் தின் தலைவர் நரேன் நாயக், போன்றோர் கலந்துகொண்டனர். சி.பி.அய் விசாரணை

இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நரேந்திர தாபோல்கரின் மகள் முக்தா தாபோல்கர் தன்னுடைய தந்தையின் கொலைவழக்கை சி.பி.அய் க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய மனுவில் அவர் கூறியதாவது என்னுடைய தந்தை கொலை செய்யப் பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் காவல்துறை இதுவரை குற்றவாளியை அணுகவில்லை, கொலைவழக்கின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, ஆகையால் எனது தந்தை கொலை வழக்கை சி.பி.அய்யிடம் ஒப் படைக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மராட்டியமாநில உள் துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page4/77779.html#ixzz2xP6khUJg

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வுக்கான வயது வரம்பு தளர்வு


குடிமைப் பணி தேர்வுகள் எனப் படும் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். தேர்வு களை முன்பு பொதுப் பிரிவினர் 30 வயது வரை தான் எழுத முடியும். அது போல் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தால் 4 முறை மட்டுமே இவர்களால் தேர்வு எழுத முடியும்.

தற்போது மத்திய அரசு இந்த விதிகளில் தளர்வு செய்து 32 வயது வரை பொதுப் பிரிவினர் இந்தத் தேர்வுகளை எழுதலாம். தோல்வி அடைந்தால் 6 முறை தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. இது போல் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் 33 வயது வரையிலும்? 7 முறை இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு 35 வயது வரை இவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். தோல்வி அடைந்தால் அதிகபட்சம் 9 முறை எழுத லாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டு மானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயது வரை 9 தடவை இந்தத் தேர்வினை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். அதே சமயம் எஸ்.சி.எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 47 வயது வரை எத்தனை முறை வேண்டுமா னாலும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page4/77780.html#ixzz2xP6uRb4v

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையைப் பரப்புவதா? அமிதாப்பச்சன் படத்துக்கு எதிர்ப்பு

டில்லி, மார்ச் 29- மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தின்கீழ் அமிதாப் பச்சன் நடித்துள்ள தொலைக் காட்சி விளம்பரப் படத் தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலை யத்தில் ஹேமந்த் பாட்டீல் என்பவர் புகார் கொடுத் துள்ளார்.

சிறுவர்கள் அருந்தும் ஊக்க பானத்துக்கான விளம் பரத்தில் அமிதாப்பச்சன் பேய் வேடத்தில் நடித் திருப்பதன்மீது உடனடி நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதி பதி சீதா குல்கர்னி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமிதாப் பச்சன் ஏற்கெ னவே பூட்நாத் என்கிற பேய் படத்தில் நல்லது செய்கிற பூதமாக நடித்தி ருப்பார். அதேபோல் மீண்டும் அடுத்த மாதத்தில் பூட்நாத் ரிடர்ன்ஸ் அதாவது மீண்டும் பூட்நாத் என்கிற படம் வெளியாக உள்ளது. இதனிடையே தொலைக் காட்சி விளம்பரப் படத்தில் பூதமாக நடித்துள்ளார். இது குறித்து, வழக்கு தொடுத் துள்ள பாட்டீல் கூறும் போது, இந்த விளம்பரம் பேய், ஆவி மற்றும் அவற் றின் அற்புதங்கள் என்பன வற்றை திணிப்பதாகும். மூட நம்பிக்கையையும், ஆதிக்க மனப்பான்மையை யும் பரப்பும் நோக்கில் உள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் புகாரைப் பெற மறுத்தனர். ஆகவே, நீதிமன்றத்தை நாட வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இந்த விளம்பரம் குறித்து எவ் விதத்திலும் பொறுப்பேற்காமல் தொலைக்காட்சியில் விளம் பரத்தை வணிக நோக்கில் ஊக்க பான நிறுவனம் ஒளிபரப்பி உள்ளது என்று கூறினார். இவ்வழக்கு விசார ணையை நீதிபதி சீதா குல் கர்னி அடுத்த மாதம் 18ஆம் தேதியில் வைத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77800.html#ixzz2xP89p8XV

தமிழ் ஓவியா said...

ஒப்புதல் வாக்கு மூலமோ!

நாட்டில் ஊழல் செய்யாதவர் யார்? எந்தப் பணிக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் வாங்காதவர் யார்? என்ற கேள்வியை திருவாரூர் பொதுக் கூட்டத் தில் காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல் போன்ஸ் கேட்டுள்ளார். நல்ல கேள்விதான் ஒப்புதல் வாக்கு மூலமோ!

மன்னிப்பு இல்லை

திமுகவிடம் பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இதற்கு என்ன பொருள்?

ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தமிழக மீனவர்கள் பிரச்சினை காங்கிரஸ் அர சாங்கம் நடந்து கொள்ளும் போக்கை தமிழர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்ற பொருள்! மக்களவைத் தேர்தல் கொடுக்கும் சரியான பாடத்திற்குப் பிற காவது திருந்துவார்களா என்று பார்ப்போம். குறிப்பு: ஜெனிவா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே - அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுவாரா ஞானதேசிகன்?

Read more: http://viduthalai.in/e-paper/77807.html#ixzz2xP8MYUJl

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் புறந்தள்ளி

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு

வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் காங்கிரஸ் தொடர்ந்து, அவர்களுக்கும் அவர்களது தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கும், உலக மனிதநேய, மனித உரிமைப் போராளிகளின் உணர்வுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக் குழு மூலம் விசாரணை ந;டத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக புறக்கணிக்கிறோம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இராஜபக்ஷே அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளது; காங்கிரசின் கை ரத்தக் கறை படிந்த கையாகவே ஆக்கிக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையா?

1. இதைவிட வேதனையும் வெட்கக் கேடானதுமான செய்தி நமக்கு வேறில்லை. கேட்டால் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகுமாம்! அப்படியானால் இதற்குமுன் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டார்களே (அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் இன்றளவும் என்ற போதிலும்) அது தலையீடு அல்லவா?

2. அந்த நாட்டிற்கு அமைதிப்படை (IPKF) என்ற பெயரால் நம் நாட்டு இராணுவத்தை அங்கே அனுப்பி, இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கை நிலைப் பாட்டிற்கே முற்றிலும் எதிரான நிலையை எடுத்து, மிகப் பெரிய அவமானத்துடன் திரும்பியதன் மூலம் நமது பெருமைமிக்க இராணுவத்திற்கு அவப் பெயர் ஏற்பட வில்லையா?

சிங்கள இராணுவக்காரன் ராஜீவ் உயிருக்குக் குறி வைக்கவில்லையா?

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட கையெழுத்திடச் சென்ற நம் நாட்டுப் பிரதமர் இராஜீவ்காந்தி (Guard of Honour) இலங்கை இராணுவ மரியாதையைப் பெற சென்றபோது விஜயமுனி விஜயந்த ரொஹன்ன டிசில்வா என்ற சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் பிரதமர் ராஜீவை அடித்துக் கொல்ல முயன்றபோது, அனிச்சையாக அவர் குனிந்ததால் தப்பித்தார் என்ற நிலையில், பிறகு அதே சிங்களவன் தேர்தலில் நிற்கவில்லையா?

இதைவிட இந்திய இறையாண்மையைக் கேவலப் படுத்திய அசிங்கம் வேறு உண்டா? அப்படிப்பட்ட சிங்கள அரசுக்குத் துணை போகலாமா?

இதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக மறந்து விட்டது போலும்!

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்தவர்களுக்கு மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்

90,000 தமிழச்சிகள் வாழ்விழந்து, விதவை நிலைக்குத் தள்ளப்பட்டனரே! பல லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையை - அது (No Fire Zone) துப்பாக்கி குண்டு பொழியாத பாதுகாப்பான பகுதி என்று அப்பாவி (ஈழ) தமிழ்க்குடிகளை நம்ப வைத்து, ஒன்று திரட்டி, ஒரே முகாமுக்குள் நிறுத்தி, கொத்துக் குண்டுகளைப் போட்டு குழந்தைகள், முதலியவர்களைக் கொன்றதை போர் நடந்தால் இப்படி அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜமே என்று முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் அம்மையார் கூறியதுபோல, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்தும் வகையில்தானே ஜெனிவாவில் வாக்களிக்க மறுக்கப்பட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலை தமிழகத்துத் தேர்தலில் ஏற்படப் போகிறது சில நாள்களில் - மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்சென்னை
29.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77794.html#ixzz2xP8oFgDN

தமிழ் ஓவியா said...


சொன்னது யாராம்?


தந்தை பெரியாரும், பேரறி ஞர் அண்ணாவும், எம்.ஜி. ஆரும் தமக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின்மீது அபரிமிதமான பாசமும், நம்பிக்கையும் வைத்த தலை வர்கள் அவர்களது புனித மான அந்த வழிகாட்டு தலைத்தான் நானும் பின் பற்றிக் கொண்டிருக்கிறேன்.

- முதல் அமைச்சர் புரட்சி தலைவி அம்மா (Dr. நமது எம்.ஜி.ஆர். 27.3.2014 பக்.3)

அடேயப்பா - பாருங்கய்யா! தந்தை பெரியார் கொள்கையையும், அறிஞர் அண்ணாவின் கோட்பாடு களையும் மண்சோற்றில் போட்டுப் புதைத்து விட்டு, யாக நெருப்பில் போட்டுக் கொளுத்தி விட்டு, அவர் களின் பெயர்களை உச்சரிப் பதற்கு உண்மையிலே தைரியம் தான் வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/77790.html#ixzz2xP8xvKBp

தமிழ் ஓவியா said...


அறிவு நாணயம் இல்லை

கேள்வி: அரசியல் சட்டம் 376, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க., தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே?

சோ ராமசாமி: இந்தச் சர்ச்சைக்குரிய பிரச் சினைகளைப் பற்றி பா.ஜ.க. பல முறை சொல்லி யிருக்கிறது. பா.ஜ.க., தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கை எடுப்போம் என்றும்; கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்துப் பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க. நிலைப்பாடு. (கல்கி 30.3.2014 பக்.26).

இதன்பொருள் என்ன? பெரும்பான்மை பெறுகிறதா? கூட்டணி ஆட்சி நடத்துகிறதா? என்பது அல்ல பிரச்சினை. இந்த மூன்று கொள்கைககளும் பா.ஜ.க.வின் கொள்கை என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

272 விஷன் என்று சொல்லித்தானே புறப்பட் டுள்ளனர். பெரும்பான்மை பெற வேண்டும் என்று தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத் தோடுதான் போட்டியிடுகிறார்களா?

பெரும்பான்மை பெற்றதாக வைத்துக் கொண்டாலும் அந்த வெற்றியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கும், சக்தியும் மிக முக்கியமானதுதானே!

இந்த மூன்றிலும் உடன்பாடு இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது. அந்தப் பலத்தால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது; பெற்றுக் கொண்ட பிறகு மேற்கண்ட கொள்கைகளை நிறைவேற்றுவது என்றால் இதில் அறிவு நாணயம் கொஞ்சமேனும் இருக்கிறதா? ஏமாற்றும் தந்திரம் தானே புதைந்து கிடக்கிறது!

பிஜேபி விரும்பும் இந்த மூன்றையும் கூட்டணிக் கட்சிகள் விரும்பாத நிலையில், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு விட்டு, அவர்கள் விரும் பாதவற்றை நிறைவேற்றுவது அசல் மோசடியல்லாமல் வேறு என்னவாம்?

பா.ஜ.க.வினரின் இந்தத் திட்டம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்; இப்படிப் பதில் சொல்லும் திருவாளர் சோ ராமசாமி இது பற்றி என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? இந்த மூன்றிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் பெரும்பான்மை பெற்றால் இவற்றை நிறைவேற்றத்தான் செய்வோம் - எனவே இந்த எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர்கள் மட்டும் எங்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று கூட்டணி சேருமுன் நிபந்தனையாக பிஜேபி வைக்க முன் வர வேண்டாமா? அப்படி முன் வைப்பதுதானே அறிவு நாணயமானது என்று கருத முடியும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்; பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.க.வாக இருக்கட்டும்; பா.ம.க., மதிமுக வாகட்டும் பா.ஜ.க.வின் இந்த ஏற்பாட்டை, திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஏதாவது உறுதி மொழியைத்தான் பெற்றுள் ளார்களா? பெறவில்லை என்றால் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

அப்படி செய்யவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

எங்களுக்குப் பதவி தான் முக்கியம்! கொள்கை யாவது மண்ணாங் கட்டியாவது, என்பதுதான் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரும் கட்சிகளின் நிலைப்பாடு என்பது நிர்வாணமாகத் தெரிந்து விடவில்லையா?

இப்படி ஒரு கூட்டுக் களவாணி நடைபெற்று வருவதை வாக்காளர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பி.ஜே.பி.க்கு மட்டும்தான் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருத வேண்டாம்; பிஜேபியோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை வாக்காளர்ப் பெரு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவுப் பெரிய சதியை பி.ஜே.பி.யும் அதனோடு கைகோக்கும் கட்சிகளும் மறைத்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடத் திட்டமிட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால், இந்தக் கூட்டுச் சதிகாரர்களுக்குச் சரியான பாடம் புகட்டிட நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/77814.html#ixzz2xP9JVRSD

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


சென்னை, மார்ச் 29- ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/77820.html#ixzz2xP9lg9mE

தமிழ் ஓவியா said...

இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்-

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறித்தவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்க வேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறி வால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம்.

உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன் னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கி யங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண்களும் படித் திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாத்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFAnlPZ

தமிழ் ஓவியா said...


சந்தேகம்


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங் களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத் தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலு கின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத் தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்ப னர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனிய மானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக் களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கிட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப் பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக் கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்த வர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFS55VJ

தமிழ் ஓவியா said...

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாடு

மகாநாட்டைத் திறந்து வைத்து சில வார்த்தைகள்:-

சகோதரி சகோதரர்களே, நமது நண்பரும் சகோதரரு மான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்தப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.

எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல்நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும்.

உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந் திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதை யும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது.

எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசியத் தலைவனோ மதத்தலைவனோ பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மை யான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக் கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப் பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக் கின்றது.

கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால் தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தி யப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப் பூர்வமாக நம்பி இருக்கின்றேன்.

அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகுசீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFh1Wok