ஹிந்துத்துவா ஆட்சிக்கு வந்தால்...
16 ஆவது மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஹிந்துத்துவா கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்று வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் கூறிவிட்டார் (தினமணி, 22.7.2013).
அப்படி ஓர் இந்து ராஜ்ஜியம்
அமைந்துவிட்டால், அது எப்படி இருக்கும் என்பதை இந்தியத் துணைக் கண்டத்தி
லுள்ள 124 கோடி மக்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ள னர். குறிப்பாக, இந்த
நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத
மக்களும், சிறுபான்மை மக்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். குதிரை
காணாமற் போவதற்குமுன் இலாயத்தை இழுத்துப் பூட்டுபவர்கள்தான் புத்திசாலிகள்.
அதனால்தான் திராவிடர் கழகம் எச்சரிக்கையுடன் அப்பட்டமான உண்மைகளை
நிர்வாணமாகக் கூறவேண்டியுள்ளது.
2013 டிசம்பர் 20 இல் வாரணாசியில் பேசிய
பி.ஜே.பி. யின் பிரதமருக்கான வேட்பாளர் என்ன சொன்னார்? நீங்கள் ஒரு சரியான
ஆட்சியை மத்தியில் உரு வாக்குவீர்களேயானால், அந்தக் கணமே ராமராஜ் ஜியம்
உருவாகும் என்றாரே!
ராமராஜ்ஜியம் என்றால் என்ன என்பது கிளிப்
பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல தந்தை பெரியார் அவர்கள் ஊர்
ஊராகச் சென்று படித்துப் படித்து ஆதாரங்களுடன் சொல்லிக் கொடுத்துச்
சென்றுள்ளாரே!
சம்பூகன் என்பவன் சூத்திரன் - அவன் தவம்
செய்தான் என்பதற்காக ராமன் அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே - காரணம்
தாழ்ந்த ஜாதிக்காரன் தவம் இருக்கக் கூடாது- கடவுளை நேராகக் கும்பிடக்கூடாது
என்பதே!
ஆகக் கடவுளைக் கும்பிடுவதற்குக்கூட சூத்திரனுக்கு உரிமை இல்லை. காரணம், சூத்திரர்களுக்குக் கடவுள் பிராமணனே!
வாரணாசியில் மோடி சொன்ன ராமராஜ்ஜியம் இத்தகையதுதான். ஹிந்துத்துவாபற்றித் தெரிந்துகொள் வதற்கு இன்னும் இருக்கிறது.
அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர்
அடல்பிகாரி வாஜ்பேயி பேசியது என்ன? எங்களுக்குப் பெரும் பான்மை கிடைத்தால்,
அயோத்தியில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று சொன்னாரா - இல்லையா?
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்க
னைசரில் ‘‘Sang My Soul’’ (ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா!) என்ற தலைப்பில்
கட்டுரை ஒன்று இடம்பெற்றது. அதற்குரியர் ஏ.பி.வாஜ்பேயிதான். அதில் அவர்
என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக்கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? விவரித்துள்ளார் ஏ.பி.வாஜ்பேயி.
1. இந்துக்களை அணி திரட்டவேண்டும் (Organising)
2. முஸ்லிம்களை உட்கொள்வது; (Assimilation) இதன் பொருள்
முஸ்லிம்களுக்குரிய அடையாளங்களை அழித்து, அவர்களை இந்துவாக்குவது.
அப்படி முஸ்லிம்களை உட்கொள்வதற்கான மூன்று வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார் அக்கட்டுரையில்:
1. முஸ்லிம்கள் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டு மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிடவேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2. முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகை கள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3. முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்றினுள், மூன்றாம் வழிமுறைதான் நம் வழி என்று அக்கட்டுரையில் எழுதியுள்ளார் வாஜ்பேயி.
சரி, இவர்களின் குருநாதரான கோல்வால்கர் ஆர்.எஸ். எஸின் வேத நூல் என்று சொல்லப்படும் ‘‘Bunch of Thoughts’’ நூலில் என்ன கூறுகிறார்?
வர்ணவியாஸ்தா என்று சொல்லுவதையே - நமது
மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக
ஏற்றத் தாழ்வல்ல; பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது.
பிரித்தாளும் சூழ்ச்சியை விரும்பிய பிரிட்டீஷார்தான் இப்படிப் பிரச்சாரம்
செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளில் அவரவர்கள் - சக்திக்கேற்ற கடமைகளை
செய்வதன்மூலம் கடவுளை வணங்கலாம் என்பதுதான் இதன் தத்துவம். பிராமணர்கள்
தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள். சத்திரியர்கள் எதிரிகளை
அழிப்பதில் வல்லவர்கள், வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள்
தொழிலைச் செய்வதன்மூலம் சமூகத்துக்குச் சேவை செய்பவர்கள் சூத்திரர்கள்.
இந்த நான்குப் பிரிவுகளிலும் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக
அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்குக்
காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் ((Bunch of Thoughts- 8 ஆவது
அத்தியாயம், பக்கம் 107, 108).
இவர் சொல்கிறபடி பார்த்தால், அறிவுத்
திறத்தால் உயர்ந்தவர்கள் பிராமணர்களாம் - அந்த அறிவுத் திறன் உள்ள ஒருவர்
தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அவரைப் பிராமணராக அழைத்ததுண்டா? அண்ணல்
அம்பேத்கரை எப்பொழுதாவது பிராமணர் என்று இந்தக் கூட்டம் சொன்னதுண்டா?
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சன் என்ன சொல்லுகிறார்?
ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன்
ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக்கொண்டிருக் கிறது
என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கூறினாரே! (ஆதாரம்: தினமணி,
16.10.2000).
ஹிந்துத்துவா முன்னிறுத்தும் இவர்களின்
ஆட்சி முறைதான் இது - இந்தியத் துணைக் கண்டத்து வாக்காளர் கள் இதனை ஏற்கப்
போகிறார்களா? இல்லை எனின் தேர்தல் நாளன்று இந்தப் பிற்போக்குக் கூட்டத்தை
ஒட்டு மொத்தமாக தோல்வி அடையச் செய்யும் வகையில் வாக்களிக்கவேண்டாமா?
சிந்திப்பீர்!
----------------------------------------”விடுதலை” தலையங்கம் 19-3-2014
62 comments:
கழகத்தின் பொறுப்பை ஏற்று இன்றோடு 36 ஆண்டுகள்: மலை போன்ற சோதனைகளைப் பனி போல் விரட்டினோம்!
கழகத்தின் பொறுப்பை ஏற்று இன்றோடு 36 ஆண்டுகள்:
மலை போன்ற சோதனைகளைப் பனி போல் விரட்டினோம்!
கழகத் தோழர்களின் கட்டுப்பாடும், உழைப்புமே இதற்குக் காரணம் - நன்றி! நன்றி!!
பெரியார் தொலைக் காட்சியையும் தொடங்குவோம்!
கழகத் தலைவரின் உருக்கமிகு அறிக்கை
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு, இயக்கத்தையும், விடுதலையை யும் நடத்தும் பெரும் பொறுப்பும் ஏற்று 36 ஆண்டு கள் முடிந்து, 37 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் (19.3.1978) வெற்றிகரமாகக் கழகத்தை நடத்தி வருவதற்குக் காரணமான கட்டுப் பாடு காத்து உழைக்கும் கழகத் தோழர்கள் தாங் களாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டி வரும் மதி உரைஞர்கள், சட்டத்துறையினர், புரவலர்கள் அனை வருக்கும் நன்றி தெரிவித்தும், பெரியார் தொலைக் காட்சியை எப்படியும் தொடங்குவோம் என்று உறுதி கூறியும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்னை மணியம்மையாரின் மறைவிற்குப் பின் (16.3.1978) அவர்கள் ஆணைப்படியும், கழகக் குடும்பத்தி னரின் ஒருமனதான கட்டளைக்கிணங்கவும், நான் நமது அறக்கட்டளைகளின் முழுப் பொறுப்பேற்று நடத்தவும் விடுதலை நாளேட்டின் அதிகாரபூர்வ ஆசிரியர் பொறுப்பையும், கழகத்தின் முன்னோடிப் பொறுப்பையும் ஏற்ற நாள் 18.3.1978 ஆகும்.
இந்த சிறிய குருவித் தலையில் அவ்வளவுப் பெரிய பனங்காயை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்களே, நம் அய்யாவும், அம்மாவும் என்ற அச்ச உணர்வு, எந்த முடிவு எடுப்பதிலும் ஆழ்ந்த கவலை, எந்தத் தவறும் நம்மை மீறிக் கூட நடந்துவிடக்கூடாதே என்ற கவலை இவை - இந்தப் பொறுப்புகளை நடத்திட வேறு வழியின்றி முன்வந்தபோது இருந்தன!
இயக்கத் தோழர்களின் ஒத்துழைப்பும் - கட்டுப்பாடும்!
தந்தை பெரியாரின் இயக்கத் தோழர்கள் எப்போதுமே கட்டுப்பாடு காத்து நிற்கும் ஒற்றைத் தனி மனித இராணுவம் என்ற காரணத்தால், நம்மால், இதை சுமக்க முடியும்; காரணம், நாம் தந்தை பெரியார் தம் தத்துவத் தோளில் அமர்ந்துள்ளோம்; அதையும் தமது உறுதிமிக்க தோளில் நமது கருஞ்சட்டைத் தோழர்கள் சுமந்துள்ளனர் - நிற் கின்றனர். அவர்களது கால்கள் என்றுமே உறுதிமிக்கவை ஆகும்.
எனவே, அச்சத்தைப் புறந்தள்ளி கடமையாற்ற ஆயத்தமாவோம் என்ற துணிவு, தானே பிறக்கும்!
சுயநலமின்மை, புகழ் போதைக்கு ஆளாகாத பணி, தன்முனைப்பைப் புறந்தள்ளி, இயக்கமும், கொள்கையும், இயக்கக் குடும்பங்களுமே கல்விக் குடும்பங்களும் நமக்கு எல்லாமுமே! என்ற உறவு உணர்வு, நம்மை எதிர்நோக்கிய அறைகூவல்களையெல்லாம் சந்திக்க வைத்து வெற்றி யைத் தேடித் தந்தன.
மலைபோல் வந்த சோதனைகள் - பனிபோல் விரட்டிய சாதனைகள்!
அறக்கட்டளைகளின் வருமான வரிப் பாக்கி என்ற பெருஞ்சுமை, அறக்கட்டளை என்னும் தகுதியே தரக்கூடாது என்ற சூதும், சூழ்ச்சியும் படர்ந்திருந்த நிலை; அய்யாவின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துதல், இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் களும் அவர்களுக்குத் துணையாக வெளியேறியவர்களும் தொடுத்த உயர்நீதிமன்ற அடுக்கடுக்கான வழக்குகள் - இப்படி எண்ணற்ற சோதனைகள்!
இவை யாவும் மலைபோல் வந்தன; அவைகளைப் பனிபோல் விரட்டினோம் என்றால், அது எப்படி முடிந்தது?
தனி நபர்களாகிய பொறுப்பாளர்களாகிய எங்களால் மட்டும் அல்ல. கட்டுப்பாடு காத்து, எங்களை மகிழ்ச்சி யோடு சுமந்து சுமந்து பல வெற்றிக் கனிகளை (எங்கள் உயரம் குறைவு என்ற போதிலும்) பறிக்க உதவியவர்கள் கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களாகிய நம் தோழர் களும், தோழியர்களும், நேரிடையாக என்றும் இல்லாது, பெரியார் தொண்டும், லட்சியப் பயணமும் தொடர வேண்டும் என்ற பெரு விருப்பத்தின் அடிப்படையில் நமக்குத் தேவையான நல்ல உதவிகளை, ஓடோடி செய்த மதி உரைஞர்கள் - நிதி, சட்டத் துறை வல்லுநர்கள், புரவலர்கள், நம் இயக்க நல் விரும்பிகள் ஆகியவர்களும் தான் காரணமாவார்கள்.
தலை தாழ்ந்த நன்றி!
இந்த 37 ஆவது ஆண்டு தொடக்கத்தில் அவர்கள் அனைவருக்கும் தலைதாழ்த்தி, நன்றியைக் காணிக்கை யாக்குகிறேன்!
விருப்பங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெறு வதற்குக் கடும் உழைப்புத் தேவை அல்லவா?
கல்வி நிலையங்கள், கொள்கைப் பிரச்சார ஏடுகள், இயக்க அமைப்புகள் ஆகிய அனைத்தும் அய்யா காலத் தைவிட வலிவோடும், பொலிவோடும் திகழ்கின்றன! அய்யா - அம்மா ஆகியவர்கள் அமைத்த கட்டடம் அசைக்க முடியாதது என்று அகிலம் அறியும் வாய்ப்பைத் தந்துள்ளன.
தலைவருக்குப் பின்னும் வலிவோடு தொடரும் இயக்கம்!
ஒரு தலைவரின் இயக்கம் அவரோடு முடிந்துவிட்டது என்று ஒருபோதும் ஆகக்கூடாது; அவருக்குப் பின் அவரது சீடர்கள் அருமையான சீலர்களாக, நல்ல தொண் டர்களாக உருவாகி, அடிக்கட்டுமான பலத்தை அறிந்து, அதன்மீது பல மாடிகளை அமைத்தார்கள் அப்படி அமைக்க உழைப்பவர்களின், பலமான அடித்தளம் - அஸ்திவாரமிட்டவர்களின் ஆற்றலைக் கண்டு அல்லவா உலகம் வியக்கிறது!
வளர்ச்சித் திட்டங்களில் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம் என்பதும், அதை அடுத்து, மிகப் பெரும் திட்டமான பெரியார் உலகம் அய்யாவின் பேசு சுயமரியாதை உலகினை இன்றைய, தலைமுறை இனிவரும் தலைமுறைக்கு, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் 135 அடி உயரத்தில் கம்பீரமாக (95 அடி உயரச் சிலை, 40 அடி பீடம்) அறிவு ஆசானின் பெருஉருவச் சிலை - பெரியார் செய்த சமூகப் புரட்சியின் பல்வேறு அம்சங்கள் - இவைகளை உள்ளடக்கிய திட்டம் - பணிகளை ஆர்வத்துடன் நடத்திட, நமது பல்கலைக் கழகத் துணைவேந்தர்முதல் பேராசிரியர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் இதில் ஈடுபாடுகாட்டி, புதுமைத் தொழில் நுட்பத்துடன் பல உத்திகளை ஆய்வு செய்து வந்து செயலில் இறங்க ஆயத்தமாகிறார்கள்!
பெரியார் தொலைக்காட்சி வரும்!
மற்றொரு அவசியத் திட்டம்; நம் கொள்கைகளையும், பொது ஒழுக்கம், பண்புகள், பகுத்தறிவு, மனிதநேயம் இவை களைப் பரப்பிட பிரச்சாரம் செய்ய தனியே பெரியார் தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் நிலுவையில் உள்ளது.
இவைகளைச் செய்து முடிக்க இயலுமா என்று அச்சப் படாமல், முடியும், முடியும் என்ற மகத்தான உறுதிப்பாட் டோடு,
உழைப்பின்வாரா உறுதிகள் உளவோ என்று எண்ணி, செயல் வடிவம் தர நாம் முனையவேண்டும்.
மற்ற திட்டங்களை நாம் செயல் வடிவத்தில் கண்டு மகிழ்வதைப்போல, இவைகளுக்கு துணை நில்லுங்கள் என்னரும் - எண்ணரும் தோழர்களே, கொள்கை உறவுகளே!
இதுதான் எனது அன்பு வேண்டுகோள்! நல்ல இளைஞர் பட்டாளம் நாளும் பெருகுகிறது என்பது வெற்றிக்கான வெள்ளி முளைத்துவிட்டது என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது.
ஒத்துழைப்பை வேண்டுகிறேன்!
எம் அறிவு ஆசானும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்த இறுதி மூச்சடங்கும் வரை உழைப்பேன் என்ற உறுதியுடன் நின்று, அய்யா தந்த கொள்கை வயப்பட்ட அகிலத்தை உருவாக்க உழைப்பேன் என்ற உறுதியை நன்றியுடன் உங்களுக்கு வழங்கி, எம் பணியைத் தொடர உதவுங்கள் - அனைவரின் ஒத்துழைப்பையும் கனிவுடன் வேண்டு கிறேன்.
என்றும் உங்கள் தோழன், தொண்டன்,
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
19.3.2014
Read more: http://viduthalai.in/e-paper/77176.html#ixzz2wSARNG00
கல்கியின் பார்வையில் அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியோ, வளர்ச்சி!
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011 இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2013 இல் இதன் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துவிட்டது.
வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012 இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2009 இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2013 இல் பதினைந்தாக உயர்ந்துவிட்டது..
சரி... பொருளாதாரத்துக்கு வருவோம்.
விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்டக் கமிஷன் கூறுகிறது.
தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது14 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
- கல்கி 16.3.2014, பக்கம் 11
- தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை எடுத்துக்காட்டிப் பேசினார், 16.3.2014).
Read more: http://viduthalai.in/e-paper/77179.html#ixzz2wSAdgoSO
தேர்தல் கோண(ங்)ல்கள்
பயன்படுத்திக் கொள்ளலாம்!
இந்தியா முழுமையும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 1593; அதில் தமிழ்நாட்டில் மட்டும் 138 கட்சிகளாம். வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக் கிக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற வழி தெரிகிறது!
வைகோவின் சரி! சரி!
சென்னையில் நடைபெற்ற மதி முக கட்சிக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் சிந்திய முத்துக்கள். பி.ஜே.பி. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அதில் ம.தி.மு.க. வும் இடம்பெறும். (மாண்புமிகு வைகோ என்று அழைக்கப்பட்டால், மகிழ்ச்சிதான் - நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!).
ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒன்பது தொகுதிகள் கேட்டோம்! அவர் களும் தருவதாகச் சொன்னார்கள். திடீரென்று எட்டு தொகுதிதான் தர முடியும் என்றார்கள். சரி! என்றேன். பின்னர் ஒரு நாள் ராம்ஜெத்மலானி போன் செய்து என்னிடம் நீங்கள் ஒரு தொகுதியை விட்டுத் தரவேண்டும் மோடியே இதை உங்களிடம் சொல் லச் சொன்னார் என்றார்.
மோடியே சொல்கிறாரா, சரி! சரி! என்றேன்.
இப்பொழுது ஏழு தொகுதிகள் உறுதியாகிவிட்டன.
சரி!, சரி! எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
மோடியே நேராகத் தொடர்பு கொண்டு பேசினால், மேலும் இடங் களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி!
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்படி சரி என்று சொல்லியிருந் தால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கலாமே! அ.இ. அ.தி.மு.க.வு டன் சேர்ந்து அநியாயத்துக்குத் தோல்வி கண்டதுதான் மிச்சம்! சரி! சரி! என்று இப்படி 2011 தேர்தலில் தேர்தலுக்கே முழுக்குப் போடவேண்டிய நிலையும் ஏற் பட்டு இருக்காதே!
இந்துத்துவாவின் காந்தத்துக்கு வைகோவைப் பொறுத்தவரையில்
சக்தி அதிகம்தான். அது சரி, நமக்கு ஏன் வீண்வம்பு?
ரூ.50 ஆயிரம் ரூ.50 லட்சம் ஆனது!
2009 இல் நடக்கவிருந்த மக்கள வைத் தேர்தலில் கல்லக்குறிச்சிக்குப் பிரச்சாரம் செய்ய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சென்றபோது, ஹெலிகாப்டர் இறங்க ஹெலி பேடுக்கு ரூ.50 ஆயிரம் செலவாம் - இந்த முறை அதே ஊருக்கு அவர் சென்றபோது ஆகியுள்ள செலவு ரூ.50 லட்சமாம்.
வேட்பாளர் மனு தாக்கல் செய் யும்வரை ஆகும் செலவெல்லாம் கட்சியைச் சேர்ந்ததாம் - அதற்குப் பிறகு ஆகும் செலவு வேட்பாளரைச் சார்ந்ததாம்.
அதற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை இதனால்தான் அவசர அவசரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
சிக்கியது...
பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங் கிரசில் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உறவினரான கருணா சுக்லாவின் வாக்குமூலம்: மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தனி நபர் களின் பிடியில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார். எல்லோருடைய சிண்டும் ஆர்.எஸ்.எஸிடம் சிக்கி இருக்கிறது என்பது அதைவிட உண்மையாயிற்றே!
இந்தி - ஓட்டா?
வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி போடுவது இந்தி மொழி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெறு வதற்கே என்று கூறியுள்ளார் பி.ஜே. பி.யின் தேசிய பொதுச்செயலாளர் அனந்த்குமார்.
அப்படி என்றால், இந்தியை ஏற்றுக்கொள்ளாத தென் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக மோடிக்கு பட்டை நாமம் சாத்து வார்கள் என்று பொருள்.
மண் சோறு மகாத்மியம்!
திருச்சிராப்பள்ளியில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதற்குப் பிறகு, ரயில்வே ஜங்சன் வழிவிடு முருகா (டிராபிக் போலீசோ?) கோவிலுக்கு முன் மண் சோறு சாப்பிட்டுவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்களாம் - இதற்குப் பெயர்தான் இரட்டை வேடம் என்பது!
பெரியார் சிலைக்கு மாலை போட்டதால், வழிவிடு முருகனுக்குச் சக்தியிருந்தால் அ.தி.மு.க. வேட்பா ளரைத் தோற்கடித்துவிட மாட்டாரா?
அண்ணன் என்னடா - தம்பி என்னடா?
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் சார்பில் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து அவர் தம்பி பவன்கல்யாண் (இவரும் நடிகரே!) அவசர அவசரமாக ஒரு கட்சியைத் தொடங்கி, பி.ஜே.பி. அணியுடன் கூட் டணி சேர்ந்து, அண்ணனை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அண்ணன் என்னடா - தம்பி என் னடா - இந்த அரசியல் கும்ப மேளாவில்!
பதில் இல்லையே - ஏன்?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அவர்கள் பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிப்பதில்லையே, ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. (தோழர் தா.பாண்டியன்கூட குறிப்பிட்டுள் ளார்) இதுவரை ஜெயலலிதா இதற் குப் பதில் அளிக்காதது ஏன்? மவுனம் காப்பது ஏன்?
மவுனம் சம்மதத்துக்கு அடை யாளம் - பி.ஜே.பி.யோடு ரகசிய கூட்டு இருக்கிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் ரகசியம்!
Read more: http://viduthalai.in/e-paper/77177.html#ixzz2wSApk2Bz
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ, அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.
_ (குடிஅரசு, 21.5.1949)
Read more: http://viduthalai.in/page-2/77189.html#ixzz2wSB3jOrP
குஜராத் கலவரத்தின்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணம், காணாமற்போனதாம்!
அகமதாபாத் மார்ச் 19- பத்தாண்டுக்கும் மேலாகிவிட்ட 2002 குஜராத் கலவரத் தின்போது மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதால் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அந்த ஆவணம் மறைக்கப்பட்டுள்ள தான தகவலைத் தேசிய சிறுபான்மை யருக்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேசிய சிறுபான்மையருக்கான ஆணையத்தின் செயலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சரிதா ஜே.தாஸ். குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் 2002 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி பரிந்துரைத்திருந்தார்.
இவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆவ ணம் மாயமாகிவிட்ட தகவலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தான் பரிந்துரை செய்த அந்த அறிக்கையினை மாற்றிவிட்டு, முக்கிய மான குற்றச்சாட்டுகளையும் நீக்கி உள்ள னர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறு பான்மை யருக்கான ஆணையம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் கள் அரைகுறையாக இருப்பதாகக் கருதி, தற்போது காணாமற்போன ஆவணத்தை யும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்து தொலைக் காட்சி செய்திகளில் மோடி தன் இதயமே நொறுங்கிவிட்டதாகக் கூறியதைக் கேட்ட போது ஆச்சரியமானேன். என் கடமையை சரிவர செய்யவில்லையோ என வேதனைக் குள்ளானேன் என்று கூறினார். சரிதா ஜே.தாஸ் அளித்த குஜராத் கலவரம் குறித்த விமரிசன அறிக்கை ஆவணங்களிலிருந்து மாயமானது மீண்டும் முறையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆணை யத்தை அணுகினேன் என்றார்.
கடந்த சூலை மாதத்தில் மோராய்ட் டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், எந்த இடத்தில் தவறானவை நடந்தாலும், இயற்கையாகவே வருத்தம் தான் ஏற்படும். இந்திய உச்சநீதிமன்றம் இன்று உலகிலேயே நல்ல நீதிமன்றமாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த சிறப் புப் புலனாய்வுக்குழு மிக உயர்ந்த, மிகச் சிறப்பான அலுவலர்களைக் கொண்டு இயங்கியது. அந்தபுலனாய்வுக் குழு அறிக்கையும் வந்தது. அந்த அறிக்கையில் நான் பரிசுத்தமானவன் என்று இருந்தது. நாம் ஓட்டுநராக, அல்லது பின் இருக்கை யில் உட்கார்ந்து இருக்கும்போது, நாய்க் குட்டி சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் வருத்தப்படுவோமா இல்லையா? அது போல்தான் இதுவும். நான் முதலமைச்ச ராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் ஒரு மனிதத்தன்மை உள்ளவன். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், இயற் கையாகவே வருத்தப்படுவேன் -இவ் வாறு ராய்ட்டர் செய்தி நிறுவனத் திடம் மோடி கூறினார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்றைய ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபிபுல் லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு சரிதா ஜே.தாஸ் எழுப்பும் பிரச்சினை வந்துள்ளது. ஆவணங்கள் தொடக்கத்தில் கண்டறியப்பட வில்லை. அப்படியே கிடைத்தாலும், அதில் சரிதா ஜே.தாஸ் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தர்லோச்சன் சிங் ஆவணம் இருந்தது. சரிதா ஜே.தாஸ் சமர்ப்பித்ததில் முழுமையாக திருத்தப்பட்டு இருந்தது. அதில் மாயமான தகவல்கள்குறித்து நான் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என் கிறார் ஹபிபுல்லாஹ். தேசிய சிறுபான் மையர் ஆணையத்தில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை துணைத்தலைவராக இருந்தார். தேசிய ஜனநாயக முன்னணி 2004 இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஆணையத்தின் தலைவராக தர்லோச்சன் நியமிக்கப்ட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதரவுடன் அரியானாவுக்கான மாநிலங்களவை உறுப்பினரானார். இவர் கோத்ரா சம்ப வம் தானாகவே நிகழ்ந்த சம்பவமாகக் கூறுகிறார். குஜராத் அரசே தானாகவே சிறுபான்மை ஆணையத்தின்மூலம் உண்மைஅறியும் குழுவை அமைத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 137பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் அகமதாபாத் நகரில் அதி காலையிலேயே வன்முறை ஏற்பட்டது என்று தர்லோச்சன் சிங் தெரிவித்தார். 2014 இல் மோடி பிரதமராக வருவார் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான இடங்களைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரசுக் கட்சி மத்தியில் நிலையான, மதசார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது.
நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட், புதுடில்லி, 14.3.2014
Read more: http://viduthalai.in/page-2/77192.html#ixzz2wSBRHY1E
WHOM DO YOU VOTE FOR? யாருக்கு உங்கள் வாக்கு?
Rights of individuals had been completely suppressed during the Emergency Period of 1975-76, the darkest period in the Independent India.
DMK strongly opposed Emergency and for doing that, its government was dismissed by the Central Government. Its leaders including M.K.Stalin, the present Treasurer of DMK, were arrested under MISA.
AIADMK did not oppose Emergency for fear of arrest and supported Emergency.
Please think, who will guard our rights? DMK who sacrificed it’s government in safeguarding our rights or AIADMK, that supported emergency.
VOTE FOR DMK ALLIANCE.
சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமாக கருதப்படும் அவசர கால சட்டம் 1975-1976 இல் இருந்த நேரத் தில், தனி மனித உரிமை முற்றிலுமாக தடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், தமிழகத் தில் ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான திமுக, அவசர நிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், அதிமுக, கைது பயத்தின் காரணமாக அவசர நிலைப் பிரகட னத்தை எதிர்க்கவில்லை; ஆதரித்தது.
யார் நமது உரிமையை பாது காப்பார்கள்? ஆட்சியே போனாலும் பரவா யில்லை; மக்களின் உரிமைகள் முக்கி யம் என நினைத்த திமுகவா? அல்லது நமது உரிமை போனாலும் பரவாயில்லை என சட்டத்தை ஆதரித்த அதிமுகவா? நமது உரிமையைப் பாதுகாத் திட்ட திமுக அணிக்கு வாக்களிப்பீர்.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/77194.html#ixzz2wSBamWmD
மோடிக்கு இடியாப்பச் சிக்கல்கள்
மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: அச்சுதானந்தன்
திருவனந்தபுரம், மார்ச். 19-கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் சார்பில் திரு வனந்தபுரம் தொகுதியில் ஜெனட் ஆபிரகாம் போட்டி யிடுகிறார்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்ட மும் தேர்தல் வெற்றிக்கான ஆலோசனை கூட்டமும் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முகவரி இல்லாமல் போய்விடும். 3வது அணி வெற்றி பெறுவது உறுதி. அதே போல் மதவாத கட்சியான பாரதிய ஜனதாவும் காணா மல் போய்விடும். மோடியின் பிரதமர் கனவும் பலிக் காது. மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவர்.
தற்போது தேர்தலுக்காக அவர் சந்தர்ப்பவாதமாக பேசுகிறார். மக்கள் அவர் பேச்சை ஏற்க மாட்டார்கள். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள். குஜராத்தில் நடந்த கலவரம் மக்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. நமது கட்சி வேட்பாளர் வெற்றிக்கு தொண்டர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். -இவ்வாறு அவர் பேசினார்.
மோடி ஒரு நர்சரி பள்ளி மாணவர்: குர்ஷித்
புதுடில்லி, மார்ச் 19- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடந்த சில தினங்களாக கடுமையாக தாக்கி வருகிறார். தற்போது, 'மோடி ஒரு நர்சரி பள்ளி மாணவர். ஆனால் அவர், தன்னை ஒரு பி.எச்.டி., முடித்தவர் போல் காட்டிக் கொள்கிறார்,' என கூறி, மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளார்.
குஜராத் கலவரம்: மோடிக்கு எதிராக வழக்கு
அகமதாபாத், மார்ச் 19- குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத் திற்கும் அம்மாநில முதல்வர் மோடிக்கும் எவ்வித தொடர் பும் இல்லையென்று சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரித்து அறிக்கை அளித்தது. அதனை உறுதி செய்த அகமதாபாத் பெருநகர நீதிமன்றம், மோடி குற்றமற்றவர் என்று தீர்ப் பளித்தது.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலை யில், குஜராத் கலவரம் குறித்து மோடியின் மீது அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இவ்வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று இக்கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவியான ஜாகியா ஜாப்ரி குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்து உள்ளார். பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் டீஸ்டா, நரேந்திர மோடியை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த பெருநகர நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இப்போது மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கலவர வழக்கில் மோடி மற்றும் 59 பேரை குற்றவாளி களாக சேர்க்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இம்மனு மீது நாளை (20ஆம் தேதி) விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், புலனாய்வுப் பிரிவின் முடிவை எதிர்த்து பெருநகர நீதிமன்றத்தில் ஜாகியா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அம்மனு நிராகரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
மதச்சார்பின்மையை அழிக்கும் பா.ஜ.க.வின் கொள்கை: ராகுல்
ஹபோலி, மார்ச் 19- நாட்டின் மதச்சார்பின்மை அழிவதற்கு, பா.ஜ.க.வின் பிரிவினை கொள்கைதான் காரணம் என அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
அருணாச்சலப் பிரதேசம் லோயர் சுபான்சிரி மாவட்டம் ஹபோலி பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
எதிர்க்கட்சியான பா.ஜ, மக்களை அரசியல் ரீதியாக, மத ரீதியாக பிரிக்க விரும்புகிறது. ஆனால், நாங்கள் மதபேத மின்றி அனைத்து மக்களையும் அமைதி மற்றும் செழிப்பான வழியில் கொண்டு செல்ல விரும்புகிறோம். காவி கட்சியின் மத அடிப்படையிலான கொள்கை, நாட்டின் மதச் சார்பின்மையை பாதிக்கிறது. இதன் விளைவாகத்தான் வடகிழக்கு மாநிலம் மற்றும் பிறபகுதி மக்களிடையே இன பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அருணாச்சல மாணவர் நிடோ டானியா டில்லியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காரணம் வடகிழக்கு மக்களுக்கு எதிராக மோசமான உணர்வுகளை மற்ற மக்களிடம் வளர்த்ததுதான்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி. இங்குள்ள மக்களுக்கு, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் திலும் வசிக்க சம உரிமை உள்ளது. இன பாகுபாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் பாடுபடும். அருணாச்சலப்பிரதேசத்தில் வளர்ச்சியை ஏற் படுத்தவும், இங்குள்ள வளமான சமூக, பாரம்பரியமுள்ள கலாச்சாரங்களையும், அமைதியை விரும்பும் பழங்குடியின மக்களையும் காக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும். இவ்வாறு ராகுல் பேசினார்.
மோடியை தோற்கடிப்பதே குறிக்கோள்: அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி, மார்ச் 19- புதுதில்லியில் செவ்வாய்க் கிழமை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மை யினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது: சில பத்திரிகைகளி லும், ஊடகங்களிலும் நான் மோடியை எதிர்த்துப் போட் டியிட தயாராக இருப்பது விளம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் என்பது போல் செய்திகள் வெளி யிடப்பட்டுள்ளன.
உண்மையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதற்காக மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதாக நான் சொல்ல வில்லை. பதவிக்காகவோ அல்லது பணம் சம்பாதிப்ப தற்காகவோ நான் அப்படிச் சொல்லவில்லை. நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவது என்பது சாதாரண காரியமல்ல; அது மிகப்பெரும் சவால் நிறைந்தது என்பது எனக்குத் தெரியும். எனது ஒரே குறிக்கோள் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.
எத்தனைப் பேரை தோற்கடிக்கிறோம் என்பது முக்கிய மல்ல, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளின் முக் கியத் தலைவர்களைத் தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் தோல்வியுற வேண் டும்.
நரேந்திர மோடிக்கு வாக்களித்தால் நிலையான ஆட்சி தருவார் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. அப்படிப்பார்த்தால் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளாக நிலையாகத்தானே இருந்தார்.
ஆட்சி நிலையானதா இல்லையா என்பது முக்கியமல்ல; மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு தரும், நீதி கிடைக்கச் செய்யும் ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்றார் அவர்.
Read more: http://viduthalai.in/page-8/77225.html#ixzz2wSCoWFO3
பி.ஜே.பி. - தீண்டாமை!
பிகார் முசாபர்பூரில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார மேடையில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் இருப் பதா என்று நான்கு பூமி கார் உயர் ஜாதியினரும், பா.ஜ.க.வின் பார்ப்பனத் தலைவர்களும் மேடையில் ஏறாமல் புறக்கணித்துள்ளனர் என்கிற விவரம் வெளியே வந்துள்ளது. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட் டத்தில் மோடி பேசும்போது தாழ்த்தப்பட்ட தலைவர் களே பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கள் என்று பெருமைப்படக் கூறினர்.
ஆனால், நடை முறையில் பா.ஜ.க.வினரின் செயல்பாடுகள் ஜாதி ஆதிக்க வெறியிலிருந்து அவர்கள் மீளவில்லை என் பதையே உணர்த்துகிறது.
மோடி பங்கேற்ற முதல் கூட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் பங்கேற்கிறார் என்றதுமே ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் நோக்கில் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணித் துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவர் சி.பி.தாக்கூர் கூறும்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வர முடியாமல் இருந்திருக்கலாம் என் கிறார். பிகார் மாநிலத் துணை அவைத் தலைவர் அமரேந்திர பிசாத் சிங், கிரிராஜ்சிங், அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் தெளிவாகவே பா.ஜ.க. ராம் விலாஸ் பஸ்வானு டனான கூட்டணியை எதிர்த்துப் போராடுகிறோம் என்கிறார்கள்.
ஏன் இந்த நிலை? பி.ஜே.பி. என்ற கட்சி ஓர் இந்துமதவாதக் கட்சி. அது வர்ணாசிரமத்தை ஜாதியை - தீண்டாமையை ஆதரிக் கக் கூடிய கட்சி அவர் களின் காஞ்சி பெரிய வாளான - மறைந்த சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மிக வும் வெளிப்படையாக தீண் டாமை க்ஷேமகரமா னது என்று சொன்னவர் (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங் கள் - இரண்டாம் பாகம்).
அதே சங்கராச்சாரியார் 16.10.1927 அன்று பாலக்காட் டில் மாட்டுக் கொட்டகை யில் காந்தியாரை வைத்துச் சந்தித்தார் அப்பொழுது அந்த மூத்த பெரியவாள் என்ன சொன்னார்? ஹரி ஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும் பழைய வழக் கங்களையும் நம்பி இருப் பவர்கள் நாட்டில் பெரும் பாலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியி ருக்கிறது என்றும் ஸ்வா மிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் (தமிழ்நாட் டில் காந்தி - பக்கம் 575, 576).
அங்குக்கூடப் போக வேண்டாம். இதே நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் தில் என்ன நடக்கிறது? போலியோ சொட்டு மருந்து அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக் குழந்தைகள் அறவே புறக்கணிக்கப்படுகின்றனர்.
ஒரு கிராமத்துத் தண் ணீர்த் தொட்டியில் எழுதப் பட்ட வாசகம் என்ன தெரியுமா? ஜாதிவாரியாக நேரம்.காலை 9 மணி முதல் 10 மணி வரை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதி படேல் இனத்தவர் மட்டும்.
காலை 10 மணி முதல் 12 மணி (மதியம்) வரை பர் வாதா வங்கிரிஸ் மற்றும் குறும்பர். நண்பகல் 12 (மதியம்) முதல் ஒரு மணி வரை தலித் இனத்தவர். மோடி கூறும் ஹிந்து ராஜ்யம் வந் தால் இதுதான் நிலைமை!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/77247.html#ixzz2wYDp6P00
பா.ஜ.க.வுக்கு தடையாக உள்ள தென்னிந்தியா! டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு!
சென்னை.மார்ச்.20- தேசிய ஜனநாயகக் கூட் டணி வெற்றி பெறுவற்கு தென்னிந்தியாவின் பங் களிப்பு வேண்டும் என்று தடையாக உள்ள தென் னகம் என்கிற தலைப் பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் தீட்டி உள்ளது. (18.3.2014)
நாடாளுமன்றத் தேர் தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மானம் காக் கப்பட வேண்டுமானால், தென்னிந்தியாவில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பாஜக அளவுகடந்து மோடியை முன்னிறுத்தி இருந்தாலும், தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கம் ஏதும் ஏற்படவில்லை. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர் நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு 129 உறுப்பினர்கள் செல்கின்ற னர். 2009இல் கர்நாடகாவில் 19 இடங் களை பெற்றதைத் தவிர தென்னிந்தியாவில் தனக்கான இடத்தைப் பதிவு செய்யத் தவறி உள்ளது. பாஜக காலூன்ற முடியாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பில் உள்ளது.
1998, 1999 தேர்தல்களில் கர்நாடகா, ஆந்திரப்பிரதே சம், தமிழ்நாடு ஆகிய மாநி லங்களிலிருந்து மொத்த மாக 18 இடங்களையே பெற்றதை பாஜக நினை வில் கொள்ள வேண்டும். பிறகு, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரு பெரிய மாநிலங்களில் சக்தி வாய்ந்த கூட்டணி அமைத் ததால் 81 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற் றது. அதேபோல் திரும்ப வும் 2014ஆம் ஆண்டிலும் பாஜக எதிர்பார்க்கிறது. இருந்தாலும், ஆர்வத்துடன் திறனுள்ள கூட்டணியை பாஜக அண்மைக் காலத்தில் அமைத்ததாகத் தெரிய வில்லை. கேரளாவில் உறுதி யான எதிர்ப்புள்ள இரு அணிகளிடையே உடைத் துக்கொண்டு வருவது பா.ஜ.க.வால் முடியாத ஒன்றாகும். அதேபோல் தமிழக அரசியலில் போற் றிப் பின்பற்றப்படக் கூடிய மாநிலக்கட்சிகள் போல, ஆந்திராவும் அதேநிலையை அடைந்துவருகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளிடம் சில இடங்களில் போட்டி அதிகமாக இருக்கக்கூடிய அளவிலான கூட்டணியை உருவாக்க முயன்றுள்ளது எனலாம். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி யின் அங்கத்தினர்களாக வைகோவின் மதிமுக , எஸ்.ராமதாசின் பாமக முன் கூட்டியே இருந்தாலும், நடி கர் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியை கூட்டணிக்குள் பா.ஜ.க., இழுத்துவந்துள் ளது. எப்படி இருந்தாலும், பல அணிகள் மோதுவதால் தமிழ்நாட்டிலிருந்து பாஜக வுக்கு இறுதிமுடிவு பற்றி யார் வேண்டுமானாலும் கணித்துவிடலாம். எல்லைகளைக் கடந்து ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் கட்சி, டிஆர்எஸ் ஆகியோர் நேருக் குநேர் ஆந்திரப்பிரிவினைப் பிரச்சினையில் சந்தித்துக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். அக்கட்சியினரி டையே பாஜக தன்னை சரிப்படுத்திக்கொண்டு, கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களி லும், பாஜக தனக்கான போதிய இடங்களைப் பெற முடியாது.
பாஜக விரும்புவது என்னவென்றால், சிக்கலான நேரத்தில் அதிகமான நாடா ளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளவர்களை நண் பர்களாகக் கொள்வது என் பதுதான். தமிழ்நாட்டில் பாஜக வுக்கு பெரிய நம்பிக்கை எப்படிப்பார்த்தாலும் அதி முக தலைமையிலான ஜெய லலிதாதான்.
இடதுசாரிகளிடம் அவர் ஆடிய ஆட்டம், தற்போது அவரை மட்டுமே சார்ந்து வெற்றிபெறமுடியும் என் பதுதான். ஜெயலலிதா, தன் தேர்தல் பிரச்சாரத்தில் காங் கிரசு மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்து தாக் குகிறார். ஆனால், பாஜக வையோ, பாஜகவின் மறை முக பிரதமர் வேட்பாளர் மோடியையோ விமர்சிப் பது இல்லை.
தெலுகு தேசம், டிஆர் எஸ் உடனிருந்து, தமிழகக் கூட்டணி கைக்கொடுத்தால் மட்டுமே தேசிய ஜனநாய கக் கூட்டணியால் தென்னிந் தியாவில் உள்ள அதற்கான தடைகளை அகற்ற முடியும்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் 18-3-2014
Read more: http://viduthalai.in/e-paper/77248.html#ixzz2wYE1D9x2
மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!
27.2.2002 புதன் அன்று காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!
முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.
நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!
கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,
ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?
இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?
இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?
சிந்தியுங்கள் வாக்காளர்களே!
- சர்ச்லைட்
Read more: http://viduthalai.in/e-paper/77249.html#ixzz2wYEBCAaq
அம்மா உணவகத்தில் ஆபத்தான அம்...மாவு!
100 டன் கோதுமை மாவு அழிக்கப்படுகிறது!
சென்னை, மார்ச்.20- அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் மலிவு உணவால் ஆபத்து என்ற தகவல் வெளி வந்துள்ளது.
ஆய்வின் முடிவில் 100 டன் கோதுமை மாவு அழிக்கப் படுகிறதாம்....
தமிழக அரசின்சார்பில் நடத்தப்படும் அம்மா உண வகங்களில் சப்பாத்தி மாலை 6 மணி முதல் 9 மணிவரை ரூ.3க்கு இரு சப்பாத்திகள் பருப்புக் கடை சலுடன் வழங்கப்படு கின்றன . 203 அம்மா உண வகங்களில் ஓர் உணவ கத்தில் சப்பாத்தி விற்பனை இரண்டாயிரம் வரை ஆனது. தற்போது மளமளவென விற்பனை சரிந்துள்ளது.
திருவொற்றியூர், மாதவ ரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 30ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை யிலிருந்து 20ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆகியுள்ளது.
விற்பனைக் குறைவால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வரும் பொதுமக்கள் சப்பாத்திகள் கசப்பது குறித்து உணவ கங்களில் பணிபுரியும் பெண்களிடம் தொடர்ச்சி யாக புகார்களைத் தெரி வித்தவண்ணம் உள்ளனர்.
கோதுமைமாவே அப்படித் தான் எங்களுக்கு வழங்கப் படுகிறது என்றுதான் ஊழி யர்களால் பொதுமக்களி டம் கூற முடிந்தது.
ஆனா லும், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
சப்பாத்திகள் கசப்பதற்கான காரணம் குறித்து அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சப் பாத்தி மிகவும் கசப்பாக இருந்ததால் பொதுமக்கள் சப்பாத்திகளை வாங்குவ தில்லை என்று தெரிய வந்தது.
உணவுப்பொருள் வழங்கு துறைமூலம் பெறப்படும் கோதுமையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே கோதுமை மாவாக அரைத்ததால் சப்பாத்தி களில் கசப்புத்தன்மை ஏற் பட்டதாக தெரிய வருகிறது.
சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் சப்பாத்திக்கு பயன் படுத்தப்பட்ட கோதுமை மாவை பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வில் அம் மாவுப்பொருள் உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற தாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் சான்று அளிக் கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் கிலோ கோதுமை மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து 100 டன் கோதுமை மாவை அழிக்க உத்தர விட்டுள்ளனர்.
குறிப்பு: பல நாடு களில் மைதா தடை செய் யப்பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/e-paper/77251.html#ixzz2wYEQZfOj
உருக்கம், உறுதி , உழைப்பு!
நேற்றைய விடுதலையில் மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவரின் உருக்கமான நன்றி அறிக்கை நம்மில் பலரை நெகிழ வைத்துள்ளது. நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தமிழ் உணர்வாளர்களின் சார்பில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.
அய்யா! உங்களின் நன்றி எதிர் பார்க்காத, அயராத, கடுமையான உழைப்பை அருகில் இருந்து கண்டோர் மயக்கமடைகின்றோம். உங்கள் உடலை நீங்கள் இவ்வளவு வருத்திக் கொள்வது எங்களில் பலரை வேதனை அடையவும், எங்களில் பலருக்கு அதில் ஒரு பங்குகூட நாம் உழைப்பைத் தர முடியவில்லையே என்ற ஏக்கத்தையுந் தருகின்றது.
வெளியிலிருந்து பார்ப்போருக்கு உங்கள் வேன் (பயண ஊர்தி) பெரிதாகத் தெரியும். அதிலே உங்க ளுடன் பயணம் செய்தவர்களுக்குத் தான் தெரியும், அதன் குலுக்கலிலும், உலுக்கலிலும் நீங்கள் எப்படித் தான் உறங்குவீர்களோ, எழுதுவீர்களோ, ஆங்காங்கே நிறுத்தி உண்பதும், அந்தச் சின்னக் கழிவறையிலே நீங்கள் உள்ளே சென்று வெளியில் வரும் வரை விழுந்து அடிபட்டுவிடக் கூடாதே என்ற பரிதவிப்பும்.
எத்தனையோ சோதனைகளையும், எங்களை யெல்லாம் உலுக்கும் வேதனைகளையுந் துரோகங் களையும் தாங்கள் அமைதியுடனும் நெஞ்சுறுதி யுடனும் கையாள்வதைப் பார்த்து வியந்துள்ளோம். எல்லாம் பெரியாரின் சிந்தனைகளும், மூளையும் என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள்.
கல்வி நிறுவனங்களும்,மருத்துவ மனைகளும், மற்ற தொண்டு நிறுவனங்களும் மற்றவர்களுக்குப் பெரியவையாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்கு அவை தீராத தலைவலிகள். கையில் பணமே இல்லாமல் தொண்டர்களின் நம்பிகையையே மூல தனமாகக் கொண்டு அவை உருவானவை என்பது உலகத்தார்க்குத் தெரியாது.நம்பிப் பணம் கொடுத்த வங்கிகட்கு ஒரு தவணை கூடத் தவறாது திருப்பி செலுத்தியுள்ள வேறு அறக்கட்டளை இருக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன்.
ஒரு மணித் துளியையும் வீணாக்காது நமது அறிவு ஆசான் அய்யா போலவே படிப்பதும், எழுதுவதும், பேசுவதுமே உங்கள் வாழ்க்கை! அய்யா அவர்கள் மரத்தடியில் அமர்ந்து எழுதினார், நீங்கள் ஓடும் வேனில் எழுதுகின்றீர்கள் !
தங்களிடம் எப்படியாவது குறை கண்டு விட வேண்டும் என்று அலைவோர்க்குத் தான் ஏமாற்றம்! இப்படி அப்பழுக்கற்ற பொது வாழ்வு தந்தை பெரியாரைத் தாங்கள் உள் வாங்கியுள்ள ஆழமே !
உங்களின் கடுமையான உழைப்பிற்கும், விரைவில் சிந்தித்துச் செயல் படும் திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல், ஆனால் உங்களுக்காகவே உழைக்க உறுதி கொண்டுள்ள கருஞ்சட்டைப் படை உண்மை யிலேயே உலகில் வேறு எங்கும் காண முடியாத விந்தை தான். எள் என்றால் எண்ணெயாகத் துடிப் புடன் செயல்படுவோர் அவர்களின் திறமை முழு வதையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் உழைப்பே உங்கள் பலம். அந்த பலத்திற்கு ஈடோ, இணையோ கிடையாது.அது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும், அந்த மகிழ்ச்சிக்கு இணை வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதைப் பல முறை சொல்லியிருக்கின்றீர்கள். பணமோ, பதவியோ எதுவுமே அதற்கு ஈடாகாது.
கழகத் தோழர்களின் இன்ப துன்பங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வதே மனித நேயத்தின் மாண்பு. அதில் நாங்கள் அடையும் மகிழ்ச்சியும், ஆறுதலும் வெளிப் படுத்த இயலாதது. தங்களைக் கண் இமை போல காத்து, தனது வாழ்வின் இன்பங்களைத் தங்களைத் துணை யாக ஏற்றுக் கொண்ட நாள் முதல் துறந்து,செல்வத்தில் வளர்ந்ததை மறந்து இன்று உங்களுடன் இரவு பகலாக அலையும் அண்ணியார்க்கு எவ்வாறு நன்றி சொல்ல முடியும் ?
கொள்கையில் சில நேரம் ஒத்துக் கொள்ளாத வர்கள் கூட உங்கள் குணத்தையும், எளிமையையும், அடக்கத்தையும், சிந்தனைத் திறத்தையும் போற்றிப் பாராட்டியுள்ளமை அனைவரும் அறிந்ததே.
தந்தை பெரியாரின் உழைப்பில், தங்கள் உழைப் பில் வாழ்வு பெற்றோர், வெற்றி பெற்றோர் தமிழி னத்திற்குத் தாங்கள் ஆற்றும் பணியைப் பாராட்டி மகிழ்கின்றார்கள். அடுத்த நூற்றான்டு பெரியார் நூற்றாண்டு, அதற்கு ஆவன செய்வோம். வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !
- சோம.இளங்கோவன்
Read more: http://viduthalai.in/e-paper/77259.html#ixzz2wYEZdDuj
ஆனந்தவிகடன் பார்வையில்...
நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதில் தனக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் எல்.கே. அத்வானி. பா.ஜ.க. ஒன் மேன் ஷோவை நடத்துகிறது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாக கட்சிக் கூட்டத்திலே குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒரு தனி மனிதரை மட்டுமே ஏன் முன்னிறுத்த வேண்டும்? மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை பிரச்சாரத் தில் ஏன் முன்னிறுத்தவில்லை? என்று சீறியிருக்கிறார். வழக்கம்போல் அத்வானியின் கேள்விகளுக்கு பாஸ் சொல்லி விட்டுக் கலைந்திருக்கிறது பா.ஜ.க. தலைவர் கள் கூட்டம். ஏன்னா, இப்போ பாஸ் அவர் இல்லையே!
- ஆனந்தவிகடன் 19.3.2014 பக்.37
Read more: http://viduthalai.in/e-paper/77260.html#ixzz2wYFXXsBM
காரணம்
வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)
Read more: http://viduthalai.in/page-2/77261.html#ixzz2wYFkRu1B
அற்பங்களா நம் வாழ்வை இழக்கச் செய்வது?
அண்மையில் செய்தி ஊடகங் களில் வெளி வந்த இரண்டு நிகழ்வுகள், நம் நெஞ்சை மிகவும் உலுக்கின. இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய நிலையில், மக்கள் அவற்றை அனுப வித்து மகிழும் வாய்ப்புள்ள ஒரு புதிய கால கட்டம்!
ஆனால் பல நேரங்களில், மனி தர்கள் தங்களுக்குள்ள ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைப் பயன் படுத்தி, சிந்தித்து வாழாமல், மனிதத்தை அற்பங்களுக்காக தங்களை இழந்து விடும் பரிதாபத்திற்கு ஆளாகிறார்களே என்ற வேதனை - சமூக நல் வாழ்வை விரும்பும் நம்மைப் போன்றவர்களை வேதனையடையச் செய்கிறது.
பெங்களூருவில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்துத் திருமணம்; நிச்சயிக்கப் பட்டு நடைபெற வேண்டிய முதல் நாள் ஒரு ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பெண் வீட்டுக் காரர்கள். அழைப்பாளர்கள் உட்பட பலரும் வந்திருந்த நிலையில், அவ் விருந்தில் கோழிப் புலவு - சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
உடனே மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்து ஆட்டுக் கறி புலவு - (மட்டன் பிரியாணி) தான் பரிமாற வேண்டும்; காரணம் இந்த கோழிப் புலவு விலை குறைந்தது - மலிவானது. என்று கூச்சலிட்டு ரகளை செய்தனர்; மணமகள் வீட்டாரோ அய்யா எங்கள் சக்திக்கு இதைத் தான் செய்ய இயலும்; அதிக செலவாகும் - மட்டன் பிரியாணியை ஆட்டிறைச்சி புலவைப் போட முடியாது என்று கெஞ்சிப் பார்த்தனராம். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஒப்பவில்லை; வந்த விருந்தினர் எவ்வளவோ சமாதானம் கூறி ஒரு சுமூக நிலையை ஏற்படுத்த முயன் றனராம். அது வெற்றியடையாமல் நிச்சயிக் கப்பட்ட திருமணமே நின்று போனதாம்!
அப்பெண்ணின் மன நிலை, பெற் றோர்களின் துன்பம் எப்படி இருந் திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க விடவில்லை அர்த்தமில்லா வீண் ஆடம் பர வளர்ச்சி. என்னே கொடுமை!
படாடோபம், வறட்டுக் கவுரவம் என்பதற்காக ஒரு திருமணமே நின்று போவதா? அற்பங்களாக வாழ்விணை யர்களின் வாழ்வு நீர்மேல் எழுதிய எழுத்தாகி விட்டதே!
திருமணமே நின்று போனதே!
இதுஒருபுறம், இதைவிட அற்பமான மற்றொரு நிகழ்வு; ஒரு மாணவியின் உயிரையே பறித்து விட்டது!
தேர்வு நேரத்தில் ஏனம்மா இப்படி தொலைக்காட்சி (டி.வி.) யைப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டுள்ளாய்? படியம்மா என்று பெற்றோர்கள் கூறினார் களாம்; தொலைக்காட்சி பெட்டியை மூடி விட்டார்களாம்!
உடனே ஆத்திரம் கொண்ட அந்த மாணவி உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்!
என்னே கொடுமை! என்னே அறி யாமை! மனித உயிர்களும், உறவுகளும் எவ்வளவு அற்பத்திலும் அற்பமான காரணங்களுக்காக இழக்கப்படுகின்றன.
எண்ணிப் பாருங்கள்! அறிவு ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில், உணர்ச்சி கள் மேலோங்கியதன் தீய விளைவு அல்லவா இவை?
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)
ஒருவன் தன் மனத்தை அதுசெல்லக் கருதிய இடத்திற்கெல்லாம் செல்ல விடாமல், அதனைத் தீய வழியினின்றும் நீக்கி, நல் வழியின் பால் செலுத்துவதே அறிவுடைமையாகும்.
அறிவைக்கூட அது செல்லும் போக்கில் செல்ல விடாமல் கடிவாளம் போட்டு, சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்கிறபோது
வெறும் உணர்ச்சிகளின் வெள்ளத் தால் அற்பத்திலும் அற்ப - சொற்ப - காரணங்களால், உயிரும், வாழ்வில் திருப்பங்களைத் தரக் கூடிய திருமணம் போன்றவையும் நின்று போகலாமா?
படித்தால் மட்டும் போதுமா? பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? பண்புகளை வளர்க்க வேண்டாமா?
எண்ணுங்கள் மனதில் விடை எழுதுங்கள்.
--------------veramani
Read more: http://viduthalai.in/page-2/77264.html#ixzz2wYFtMJin
தந்தை பெரியாரைப்போல தொண்டு செய்து பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர்: பேராசிரியர் க.அன்பழகன்
தாம்பரம், மார்ச் 20- தமிழக மக்களுக்கு தொண்டு செய்து தந்தை பெரியாரை போல பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர் என தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பெரும்புதூர் நாடா ளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
தி.மு.க தமிழக மக்க ளுக்கு வரலாற்றில் இடம் பெறும் வகையில் தொண் டாற்றி வருகிறது. அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் தலைமையிலான காலம் வரை 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.
ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் குறை தீர்க்க, ஏழைகளின் கண்ணீரை துடைக்க, விலைவாசி ஏற் றத்தைக் குறைக்க, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண் டிய திட்டங்களை தொடங்கி நிறைவேற்றிட சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க இந்த நாட்டில் ஆட்சி நடத்தியது.
இந்தியாவிலேயே கலை ஞர் மூத்த அரசியல்வாதி. தொண்டு செய்வதற்கே பிறந் தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தந்தை பெரி யாரை சொல்வதை போல தொண்டு செய்து பழுத்த பழ மாக இருப்பவர் கலைஞர்.
தமிழகத்திற்குப் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். ஆட்சி நிர்வாகத்தில் சிறப் பாக செயல்பட்டவர். ஆனால் ஜெயலலிதா, தமி ழக திட்டங்களை நிறை வேற்ற விடாமல் இடையூறு செய்து வருகிறார்.
தமிழ கத்தில் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற விடா மல் தடுத்து வருகிறார். சென்னை துறைமுக பறக் கும் சாலை திட்டத்தை எதிர்க் கிறார். இப்படி எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை செயல்பட விடாமல் ஆட்சி நடத்துகிறார்.
கலைஞரின் கை ஓங்க தி.மு.க வெற்றி பெற திருப் பெரும்புதூர் தொகுதியில் ஜெகத்ரட்சகனை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற செய்யுங் கள். - இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் பேசினார்.
Read more: http://viduthalai.in/page-5/77243.html#ixzz2wYH9Zwww
உலகின் ஆழமான கடல் பகுதி எது?
உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் வடக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ள மரியானா அகழி ஆகும்.
எவ்வளவு ஆழம் ?
31,614 அடிகள் அதாவது 9,636 மீட்டர் என்று 1872-1876 இல் சேலஞ்சர் ஆய்வுப்பயணத்தின் போது அறிவிக்கப்பட்டது. பின்னர் சேலஞ்சர் இரண்டாவது பயணத்தின்போது எதிரிலொலி மானியை பயன்படுத்தி துல்லியமாக அளந்து 10,900 மீட்டர்கள், 35,760 அடிகள் என அறிவிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் வித்தியாசு எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
ஜப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த விவரங்கள் இதுவரை மனிதன் அறிவுக்கு உட்பட்டு கண்டுபிடித்ததே ஆகும்.
கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனாலோ, அவன் கண்டுபிடித்த உபகரணங்களாலோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் குறைவதாலும் ஏற்படும் பாதிப்புக்களை களைய இன்னும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHUL5J0
உங்களுக்கு தெரியுமா?
தண்ணீர் அருந்தாமல் அதிகநாள்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !
பண்டகா பிக்மா என்ற வகை மீன் தான் மனிதன் உலகில் கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.
ஆறு விநாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ் நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.
Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHaPqrC
வந்தாரய்யா விஜயகாந்த்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்றவுட னேயே அன்றாடம் நகைச்சுவைத் துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமே - வயிறு குலுங்கச் சிரிக்கலாமே என்று பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இன்று முதல் இலவசமாக அவை கிடைக்கும் என்கிற வகையில் அவரின் திருவாய் உதிர்த்த சமாச் சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
பா.ஜ.க. அணி மதச்சார்புள்ளது போலவும், தி.மு.க. அணிதான் மதச்சார் பற்ற அணி போலவும் பேசி வருகின்ற னர். உண்மையில் மதச்சார்பு, மதச்சார் பற்றது என்பது குறித்தெல்லாம் எனக்குச் சரியாக விளக்கம் புரியவில்லை. இருந் தாலும், முஸ்லிம் அமைப்புகளைக் கூடவே வைத்துக்கொண்டு, தி.மு.க. எப்படி மதச் சார்புபற்றி பேசுகிறது? என்ற கேள்வியை யும் எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் அமைப்புகள் நாங்கள் ஒரு முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கப் போகி றோம் என்று சொல்லவில்லை; ஆனால், விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ள பி.ஜே.பி. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் (வாரணாசியில் நரேந்திர மோடி, 20.12.2013) என்று பேசியுள்ளாரே - இதற்குப் பெயர்தான் மதச்சார்பு என்று பெயர்.
ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகி யோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பி.ஜே.பி.யின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசினாரே - இதற்குப் பெயர்தான் மதவாதம் என்று பெயர்.
இந்த அரிச்சுவடியைக்கூட நாம் கற்றுக் கொடுக்கவேண்டியள்ளது.
சரி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இதே விஜயகாந்த் என்ன சொன்னார்?
கேள்வி: அயோத்தியில் பாபர் மசூ தியை இடித்ததுபற்றி என்ன நினைக்கிறீங்க?
விஜயகாந்த்: காட்டுமிராண்டித்தனம் - அநாகரிகமான செயல். டாக்டர் கலைஞர் சொன்னது மாதிரி... ஆதிகாலத்துக்கு திரும்பிப் போயிட்டது போல் இருக்கு!
நம் நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சி னைகள் இருக்கு சார். அதையெல்லாம் தீர்க்கிறதை விட்டுவிட்டு, அவசர அவசர மாக தகராறு பண்ணி ராமர் கோவில் கட்டுவதுதான் முக்கியமா?
உதாரணத்துக்கு பாருங்க, வடநாட்டில் வெள்ளம், தென்னாட்டில் தண்ணீர் பஞ்சம்; இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாரதீய ஜனதா கட்சிக்காரங்க பாடுபட்டி ருந்தா பாராட்டலாம். வடக்கே ஓடுற கங்கையை கடலில் வீணாக கலக்கிற தண்ணியை தெற்கே திருப்பி விடுறதுக்கு ஒரு கரசேவா நடத்தியிருந்தாங்கன்னா அது நியாயம்.
எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதுக்கு ஒரு கரசேவை நடத்தியிருந்தாங் கன்னா அது நியாயம்.
எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சி னைகள் இருக்கு - அதுக்கு ஒரு கரசேவா செஞ்சிருந்தா உத்தமம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு ராமர் கோவில் கட்டினா, வெள்ளச் சேதத்தை தடுத்திட முடியுமா?
தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமா? இல்லே... நாட்டுக்குத்தான் சுபீட்சம் வந்திடுமா?
என்று சொன்னவர்தான் விஜயகாந்த். பி.ஜே.பி.யின் மதவாதத்தைக் கண்டித்தவர்தான்.
எந்தப் பத்திரிகையில்?
அவர் சம்பந்தப்பட்ட சினிமா இதழ்தான் - அதன் பெயர் ஹீரோ (1993, ஜனவரி).
அதில்தான் இப்படி பேட்டி கொடுத்துள் ளார். அந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் பா.ஜ.க. அணி மதச் சார்புள்ளது போல வும், தி.மு.க. அணிதான் மதச்சார்பற்ற அணி போலவும் பேசி வருகின்றன என்று குறிப் பிட்டுள்ளார்.
இதற்குப் பெயர்தான் சந்தர்ப்பவாதம் என்பது...
Read more: http://viduthalai.in/page-5/77253.html#ixzz2wYIIm3gy
மோடியாவது - பிரதமராவது! மொய்லி மொத்து
பெங்களூரு, மார்ச் 20- நடைபெற இருக்கும் நாடா ளுமன்ற மக்களவைத் தேர் தலில் பா.ஜ. கட்சி பெரிதாக நம்பியிருக்கும் நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சிக்க பல்லாபூர் தொகுதியில் 2 ஆம் முறையாக காங்கிரஸ் சார்பாக வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார். பெங் களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:
நரேந்திர மோடி பிரதம ராக வருவார் என்று பா.ஜ.க. நம்புகிறதே என கேட்கிறீர்கள். நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது. வாஜ்பாய் காலத் தில் 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் பாஜக கூட் டணி வைத்திருந்தது.
அப் போது உடன் இருந்த முக்கிய கட்சிகள் தற்போது பா.ஜ.க.வை புறக்கணித்து விட்டன. அங்கு நிதிஷ் குமாரோ, மம்தா பானர் ஜியோ இல்லை. தமிழகத் திலும் பா.ஜ.க. கூட்ட ணியை ஜெயலலிதா புறக் கணித்துவிட்டார்.
ஒரு இடம் கூட கிடைக்காது
நரேந்திர மோடி ஒரு தரப்பினரின் அடையாள மாக பா.ஜ.க.வால் காட் டப்படுகிறார். அவர் வாஜ் பாயை போல் வரமுடி யாது. அவர்களுக்கு கேர ளாவில் ஒரு இடம்கூட கிடைக் கப் போவதில்லை.
ஆந்திராவில் அவர்கள் கூட் டணி அமைத்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்டம் கண் டுள்ளது. கர்நாடகாவிலோ 4 இடங்களுக்கு மேல் பெறவே முடியாது. அவர் களுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று வீரப்ப மொய்லி கூறினார்.
Read more: http://viduthalai.in/page-5/77250.html#ixzz2wYIWnYAv
பத்திரிகையாளர்களைத் தாக்குவதா? விடுதலை ஆசிரியர் கண்டனம்!
காஞ்சிபுரத்தில் 19.3.2014 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையை மறைத்து போக்குவரத்தையே திருப்பிவிட ஆணையிட்ட நிலையில், அதை உடனே செய்யாமல் தாமதித்த தால் ஆத்திரம் கொண்ட டாக்டர் மைத்திரேயன் எம்.பி., ஒரு நாற்காலியைப்போட்டு நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளை செய்ததை படம் எடுத்த தினமணி புகைப்படக் கலைஞர், கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட அ.தி.மு.க.வின்மீது புகார்கள் கொடுக்கப்பட்ட பின்பும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் தத்தம் கடமையைச் செய்கையில், அதற்காக ஆத்திரப் படுவது, அவர்களைத் தாக்குவது என்பது ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல; சர்வாதிகாரிகள், பாசிஸ்ட் ஆட்சியில்தான் அப்படி நடைபெறும். கண்டும் காணாததுபோல் அரசோ, காவல்துறையோ இருக்கக் கூடாது.
உடனே இதற்குப் பரிகாரம் தேடிட, நடவடிக்கை எடுக்க அனைத்துப் பத்திரிகையாளர்களும், ஊடகங் களும் குரல் கொடுத்து, தவறு செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.
கி.வீரமணி
ஆசிரியர்
விடுதலை
சென்னை
21.3.2014
Read more: http://viduthalai.in/e-paper/77321.html#ixzz2we3kE01Q
குஷ்வந்த்சிங் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!
பிரபல ஆங்கில எழுத் தாளரும் பத்திரிகையாளரு மான குஷ்வந்த்சிங் அவர்கள் தனது 99ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகப் பெரிய இழப்பாகும்! நிறை வாழ்வு வாழ்ந்த அவர் 100 ஆண்டை எட்டாமல் போய் விட்டாரே!
நம் நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்; நகைச்சுவை கலந்த எழுத்தாளர். ஏராளமான ஆங்கில புத்தகங்களை 2013 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 2013இல் தனது சுய சரிதையை எழுதியவர். அவரே ஒரு திறந்த புத்தகம். எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும்திறந்த உள்ளத்தவர். மதச் சார்பற்ற அரசு (Secular) நடைபெற வேண்டும் என்று விரும்பியவர். தன்னை ஒரு கடவுளைப்பற்றிய கவலைப்படாத வன் (Agnostic) என்று பிரகடனப்படுத்தியவர்!
2003ல் - 2004 பொதுத் தேர்தலுக்குமுன்பு, குஜராத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா, மதவெறியின் ஓங்கிய குரல் - இவை கண்டு மனம் வெதும்பி, (‘The end of India’)
இனிமேல் இந்தியா இருக்காது;
இந்தியா எனும் நாட்டையே காணாமற் போகக் கூடிய அளவில் நாட்டின் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மத வெறி அமைப்புகள் செயல்பட்டன; குஜராத் 2002-இல் இன அழிப்பு சிறுபான்மை இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சிறந்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்
சென்னை
21.3.2014
Read more: http://viduthalai.in/e-paper/77314.html#ixzz2we3tSsnt
பரிதாபமே காரணம்
இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கிற உணர்ச்சிக்கோ, பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே!
(குடிஅரசு, 8.9.1940)
Read more: http://viduthalai.in/page-2/77297.html#ixzz2we4KL638
முதல் அமைச்சரின் பொருந்தாக் குற்றச்சாற்று!
மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த குரல் கொடுக்காதது ஏன்? - என்ற வினாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் படித்து வருகிறார் தமிழ்நாடு முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரு மான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.
பெரியார் பிறந்த மண் என்பதால் சமூகநீதியை -இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தந்திரத்தில் அம்மையார் பேசி இருக்கிறார்.
சமூக நீதிப் பிரச்சினையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே எந்தக் கட்சிக்கு இதில் அக்கறை அதிகம் என்பது வெகு எளிதாகவே புரிந்து விடும். அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 20,21) சமூக நீதி என்னும் தலைப்பில் ஒப்புக்குச் சப்பாணியாக வெறும் 15 வரிகள் சம்பிரதாயமான முறையில் அச்சிடப்பட்டுள்ளன.
இன்றைக்கு 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையான அளவில் செய்யப்படாததற்கு தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அம்மையார் பேசி வருகிறாரே - உண்மையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு இதில் அக்கறை இருக்குமேயானால் தனது தேர்தல் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிட்டு 27 சதவீதம் முழுமையாகக் கிடைத்திட நாங்கள் பாடுபடுவோம் என்று குறிப்பிடாதது ஏன்?
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 24ஆம் பக்கத்தில் 16ஆவது வரிசையில், பிற்படுத்தப்பட்டோ ருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமை யாக அமல்படுத்துதல் என்னும் தலைப்பின்கீழ் 27 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் ஏ.பி.சி.டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரியதாகும் என்று குறிப்பிட்டு 27 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்பப்படாத பின்னடைவுப் பணிகளை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளதை - தி.மு.க.வின் அக்கறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர 27 சதவிகிதம் கிடைத்திட ஏன் குரல் கொடுக்கவில்லைஎன்று குற்றம் சுமத்துவது பிரச்சனையைத் திசை திருப்புவது ஆகும்.
இன்னொரு கேள்வியை அவரை நோக்கித் திருப்பிக் கேட்க முடியுமே! அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் கவன ஈர்ப்பைக் கொண்டு வந்ததுண்டா? இதற்காகக் குரல் கொடுத்ததுண்டா - கருத்துத் தெரி வித்ததுண்டா? பிரதமரைச் சந்தித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் எழுத்துப் பூர்வமாக வலியுறுத்தியதுண்டா என்று திருப்பிக் கேள்வி கேட்டால் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மற்ற மாநிலங் களில் எல்லாம் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்குத் தனித் தனியே மதிப்பெண்களில் தளர்வு அளிக்கப்பட்டு இருந்தும், மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டும் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தும், அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி ஏறிந்து விட்டு, உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயித்து, காலம் காலமாக இந்தப் பெரியார் மண் பின்பற்றி வந்த சமூக நீதியின் ஆணி வேரை வெட்டும் பார்ப்பன வேலையில் இறங்கியது யார்!?
கடுமையான அறிக்கைகள், கூட்டங்கள் போராட் டங்களை நடத்திய பிறகு தகுதி மதிப்பெண்களில் அய்ந்தை மட்டும் குறைத்து அதுவும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்க்கு மட்டும் பொருந்தும்; 2012இல் எழுதியவருக்குப் பொருந்தாது என்று ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து அப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சமூக நீதியைப் பற்றி வாய்த் திறக்கலாமா?
அதே போல சென்னை அரசினர்த் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டப் பேரவைக் கட்டடத்தை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையைத் தொடங்குவதாகக் கூறி, 83 பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று அறிவித்தது எந்த ஆட்சி? இதற்குமுன் எந்த ஆட்சி யிலும் இப்படி இட ஒதுக்கீடு கிடையவே கிடையாது என்று அறிவித்து அரசு விளம்பரம் வெளியிட்ட துண்டா?
கடுமையான எதிர்ப்புக்கு பிறகு, போராட்டத்திற்குப் பிறகு தானே அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இறங்கி வந்தது?
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் என்று கூறப்பட்டுள்ளதே - இதைவிட இடஒதுக்கீடுத் தத்துவத் தின் ஆணி வேரிலேயே வெடிகுண்டு வீசும் வேலை வேறு உண்டா?
எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல் அமைச்சர் அம்மையார் தி.மு.க.வை நோக்கி சமூக நீதிபற்றி விரல் நீட்டுகிறார்?
கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிய ஆசைப்பட வேண்டாமே!
Read more: http://viduthalai.in/page-2/77298.html#ixzz2we4UlP6y
Time to Make a Difference? - மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?
Time to Make a Difference?
மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?
- குடந்தை கருணா
TIme to Make a Difference?
If there is so called ‘Modi wave’, why then Modi contests from two constituencies?
Modi is contesting from Vadodara of Gujarat. Fine. Only last week, BJP tipped his name for Varanasi and pushed out Murali Manohar Joshi, from that constituency against his wishes.
I have questions to Modi. But, Modi never dares to answer others’ questions so far. Hence my questions are directed to BJP.
1. You had been claiming and boasting all through these days, that there is Modi wave across the globe (not alone in India), why then you had fielded Modi for two constituencies?
2. If incidentally or accidentally, Modi wins from both constituencies, which constituency he will prefer to hold, Varanasi or Vadodara?
3. If people of these two con stituencies direct this question to Modi, what will be his honest reply?
4. Will BJP or Modi can boldly inform in advance about this?
5. Suppose, Modi prefers to hold Vadodara and resign from Varanasi, why then Joshi should be pushed to Kanpur? Joshi could have contested from Varanasi or instead Modi can contest from Kanpur also, because, even if he wins, he is going to resign?
Hope BJP will provide a honest reply. Yes, it is time to make a difference.
மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்? மோடி அலை என்பது உண்மையா னால், மோடி எதற்காக இரண்டு தொகு திகளில் போட்டியிட வேண்டும்?
குஜராத் வதோதரா தொகுதியிலி ருந்து மோடி போட்டியிடுவார் என பிஜேபி அறிவித்துள்ளது. நல்லது. போன வாரம், பிஜேபி வெளியிட்ட பட்டியலில் மோடி உத்தர பிரதேசம் வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவித்தது.
அந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூருக்குத் தள்ளிவிட்டு, மோடியை அறிவித்தது. மோடிக்கு ஒரு கேள்வி. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஆகவே பாஜகவிற்கு நமது கேள்வி.
1. மோடி அலை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீசுவதாக இத்தனை நாள்களும் பிதற்றிக்கொண்டிருந்தீர்களே, பின் ஏன் மோடியை இரண்டு தொகுதிக ளில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்?
2. எதேச்சையாகவோ, விபரீத மாகவோ, மோடி இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்? வதோதராவா அல்லது வாரணாசியா?
3. அந்த இரண்டு தொகுதிகளின் மக்களும், மோடியிடம் இந்தக் கேள் வியைக் கேட்டால், மோடியின் நாணய மான பதில் என்னவாக இருக்கும்?
4. இதற்கான பதிலை, மக்களிடம் தைரியமாக பாஜக சொல்லுமா? அல்லது மோடிதான் சொல்வாரா?
5. தனது மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியைத் தக்க வைத் துக் கொள்ள மோடி முடிவெடுத்து, வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டால், பின் எதற்காக, ஜோஷியை ஏன் கான்பூர் தொகுதிக்கு விரட்டி விட்டு, மோடியை நிறுத்த வேண்டும்? பேசாமல், ஜோஷியை, வாரணாசி தொகுதியில் நிறுத்தி, மோடியை கான்பூர் தொகுதி யில் நிறுத்தியிருக்கலாமே? வெற்றி பெற்றால் கூட, பதவி விலகல் செய் வது என்றால் எந்த தொகுதியாக இருந்தால் என்ன?
பாஜகவிடமிருந்து நேர்மையான பதில் வரும் என எதிர்பார்ப்போம். ஆம், மாற்றத்தை உருவாக்குவ தற்கான தருணமல்லவா?
Read more: http://viduthalai.in/page-2/77311.html#ixzz2we52R5sq
நாணயத்தில் மதச் சின்னங்கள்: ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுடில்லி, மார்ச் 21- மத்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் மதச் சின் னங்களை பொறிக்கப்பட் டிருப்பது குறித்து விளக்க மளிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாண யத்தில் தஞ்சை பெரிய கோவில் படம் பொறிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாண யங்களில் வைஷ்ணவி தேவி சிலை பொறிக்கப்பட் டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி நீதிமன் றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்யப்பட்டது.
அதில், நாணயங்களில் மதச் சின்னங்களை பொறிப்பது மதச் சார்பின்மைக்கு எதி ரானது. எனவே, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கமளிக்கும்படி இந் திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட் டுள்ளது.
Read more: http://viduthalai.in/page-8/77308.html#ixzz2we64P7La
ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னது என்ன?
தர்மசாலா, மார்ச் 21-ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக்கம் என கூறிய படேலுக்கு, மோடி சிலை வைப்பதன் மூலம் அவர் படேலின் வரலாறு மற்றும் கருத்துக்களை படிக்கவில்லை எனத் தெரிகிறது என இமாச்சலப் பிரதேசத்தில் ராகுல் பேசினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தர்ம சாலாவில் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக் கம், அது நாட்டை அழித்துவிடும் எனக் கூறினார் சர்தார் வல்லபாய் படேல். அவ ருக்கு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் வளர்ந்த பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிலை அமைப்பதுதான் வேடிக்கை. இதிலிருந்து படேலின் வரலாறு மற்றும் கருத்துகளை மோடி படிக்கவில்லை எனத் தெரிகிறது.
மத, ஜாதி மற்றும் பகுதி ரீதியாக மக்களை பிரித்து விரோத அரசியலை பா.ஜ நடத்துகிறது.
நம்நாட்டில் மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போராட்டமாக உள்ளது. ஏழைகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர் களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என எதிர்கட்சி நினைக்கிறது. அவர்களி டம் ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை.
- இவ்வாறு ராகுல் பேசினார்.
Read more: http://viduthalai.in/page-8/77309.html#ixzz2we6Dobxa
உதிர்ந்த மலர்கள்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.
கடவுள் ஒருவர் உண்டு. அவர் உலகத்தையும் அதில் உள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி, அவற்றின் நடவடிக் கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன்னிச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங் களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு, பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்டதாகும். புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி என்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை என்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.
வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்குப் பெரும் விரோதிகளாவார்கள்.
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.
நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து, நானும் சுயமரியாதைக்காரன்தான்; என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது;
புராணங்கள் எல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாச மென்றும் பேசி, மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் புராண பிரச்சாரத்தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.
ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால், பண்டிதர்களைக் கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6XH5tC
மூடநம்பிக்கை பலவிதம்!
மழைக் கடவுள் இந்திரனைத் திருப்தி செய்து மழை பெய்ய வைப்பதற்காக, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பல்லியா ஜில்லாவில் சில கிராமங்களில் வறண்ட நிலங்களில் பெண்கள் நிர்வாணமாக ஏர் பிடித்து உழுதனர்.
ஆண்கள் சிவனுக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். முஸ்லிம் பெண்கள் கூட தங்கள் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு மழைக்காகப் பிரார்த்தித்தனர். ஆனால், ஒன்றும் பலிக்கவில்லை. இதுவரை மழை பெய்யாமல் வறட்சியே நீடிக்கிறது.
ஜப்பான் பிரதமர் டாகியோ பகுடா. இவர் வீட்டின் வெளியே இரண்டு சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. எபிஸூ, டைகோகு என்று இந்தச் சிலைகளுக்குப் பெயர். இவைகளினால் தனக்கு எப்போதும் அதிர்ஷ்டம் என்று எண்ணுகிறார்.
பார்சிகள் அக்கினியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். இதனால் தான் அவர்கள் பிணத்தைக் கொளுத்துவது இல்லை.
மொராக்கோவில் காபிலிஸ் என்ற இனத்தவர் இருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு விநோதமான பழக்கம், திருமணத்தன்று மணப்பெண்ணின் தொடையில் இலேசாகக் கத்தியால் கீறி இரத்தம் சிந்தச் செய்கிறார்கள். கணவனுக்காக இரத்தம் சிந்தவும் தயார் என்பதை காட்டவே இந்தச் சடங்கு.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், திருமண விருந்தில் உணவு உண்ணும் போது, உடம்பில் சட்டையோ, துண்டோ போட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஒரு மூடநம்பிக்கை!
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், சாபர்மதி, குஜராத் மாநிலம்.
Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6iHN1P
சிந்தனைத் துளிகள்!
மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்
- மண்டெய்ன்
எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.
- ஹென்றிஜேம்ஸ்
மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம் நாமே தேடிக் கொள்ளும் வறுமை.
- சாக்ரட்டீஸ்
Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6rXVez
அண்ணாவுரை
அயல்நாட்டான் கண்டு பிடித்தான் அச்சு இயந்திரம்; அதன் உதவியால் நீ பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாய். அவன் கண்டுபிடித்தான் ரயில் வண்டி; அதில் ஏறிக் கொண்டு உனது புரட்டு அற்புதம் நடைபெற்ற ஸ்தலங்களுக்கு செல்கிறாய்!
அவன் கண்டுபிடித்தான் வானொலி; அதிலே உன் பஜனையைப் பாட வைத்து மகிழ்கிறாய்! இவ்வளவு பூஜை செய்யும் நீ எதையாவது புதிய பொருள்களைப் பயனுள்ள வகையில் கண்டுபிடித்தாயா? யோசித்து பார்.
Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7d5FeA
அய்யாவுரை
ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும், வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை.
பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.
பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.
Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7lPyrO
காண்டேகர் பேசுகிறார்!
மனிதன் கல்லால் ஆன தெய்வமும் அல்ல: இயற்கைக்கு அப்பால் ஓர் அடி கூட எடுத்து வைக்காத மிருகமும் அல்ல.
கண்ணுக்குத் தெரியாத தெய்வத்துக்கோ, உப தேசத்துக்கு எளிதாகவும், நடைமுறைக்குக் கடினமாகவும் உள்ள உயிரில்லாத தத்துவ ஞானத்துக்கோ, தன் கனவிலே உதித்த கற்பனைகளைப் பிறர் மண்டையிலே ஏற்றி பளுவை உண்டாக்கும் மகாத்துமாவுக்கோ, பண்டி தனுக்கோ, புத்தகத்துக்கோ அல்லது வேறு எவருக்கோ அவன் அடிமை அல்ல.
தகவல்: காட்டூர் தம்பு
Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7rsreu
புத்தரின் குறிக்கோள்
மனிதர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுவது புத்தருடைய முதல் குறிக்கோளாக இருந்தது.
அவன் உண்மையை கண்டறிய - சுதந்திர உணர்ச்சி யோடு செல்லச் செய்ய வேண்டும் என்பது அவருடைய இரண்டாவது குறிக்கோளாக இருந்தது.
எதையும் பகுத் தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொல்லக் கூடிய மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பது புத்தருடைய மூன்றாவது குறிக் கோளாக இருந்தது.
- புத்தா தம்மா என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர்.
Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7yzkTl
ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!
என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட் களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.
இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.
போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.
ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.
- மாக்ஸிம் கார்க்கி
Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we86Q7HR
அமெரிக்க நாத்திகர் சங்கத்தின் பார்வையில்..... அவர்கள் எதை நம்புகிறார்கள்?
மத நிறுவனங்களுக்கு வரிவிலக்குகூடாது: சிலர் சர்ச்சுக்கு (கோவிலுக்கு) செல்வதால் வரிச்சுமையை மற்றவர்களும் சுமக்கக் கூடாது. சர்ச்சுகளுக்கு மானி யம் வழங்குவது என்பது அரசிலமைப்பை மீறும் செயலாகும். அரசும், சர்ச்சும் பிரித்தே பார்க்கப்பட வேண் டும். குழந்தைகள் புறக் கணிப்பு, குழந்தைகள் பாதிப்பு, கருக் கலைப்பு உள்ளிட்டவைகளுக்கும் மதமே பொறுப்பாகும்.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைக்கு விரோதமான திட்டமிட்ட செயலை மதம் செய்கிறது. இதனால், குழந்தைகள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் இதனால் ஏற்படுகிறது.
இணைந்து வாழும் முறையை மதம் எதிர்க்கக் கூடாது: திருமணம், திருமண முறிவு ஆகிய உறவுகளின்மீதான சட்டங் கள் தனிநபர் விருப்பங்களைப் பொறுத்தே அமைய வேண்டும். மதமோ, அரசோ தனிப்பட்டவர்கள் உரிமைகளை நிர்ணயிக்க கூடாது. தனி நபர் தனித்த சுதந் திரம் என்பது அதுதான்.
மதம் பெண்ணிய சிந்தனைக்கு எதி ரானது : சம உரிமைக்கு முதன்மையான எதிர்ப்பே மதம், மதவாதிகளிடமிருந்து தான் வருகிறது. பெண்ணாக இருப்பவர் ஆணுக்கு கீழ்ப்படிபவராக இருக்க வேண்டும். சமத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன் மதத்துக்கு கட்டுப்பட வேண்டும். எந்த மத அமைப்பாக இருந் தாலும் பெண் நிலை ஆணுக்குக் கீழே தான் உள்ளது.
மதம் அறிவியலுக்கு எதிரானது: மதக்கருத்துக்கள் அறிவியல் முறையில் சரிபார்க் கக் கூடாது. ஆகவே, அறிவியல் மதத்துக்கு எதிரானது. கிருத் துவம் சொல்வதுபோல் பூமி ஆறாயிரம் ஆண்டுகள் காலத் தியது இல்லை என்று அறிவியல் நிரூபித்துள்ளது. கன்னித்தன்மை மாறாமல் பிறப்பு மற்றும் சாத்தியமில்லை. சர்ச் பரப்பிய வற்றால் ஏற்படும் விளைவுகளுக்கும், மனிதனின் கேள்விகளுக்கு அதிகமான விளக்கங்கள் சொல்லவும், அனை வரையும் அறிவியல் பாதைக்கு மீட்டு வரவேண்டும்.
மதம் வாழ்வுக்கு எதிரானது : எல்லாவற்றையும்விட மிகவும் முக்கிய மானது உங்கள் வாழ்க்கைக்கு எதிரான கருத்துக்களை மதத்தின்மூலம் மோசமாக திணித்துவிட்டது. வாழ்வு முக்கியமானது அன்று என சர்ச் கூறுகிறது. வாழ்வுக்குப் பின் என்பதை முதன்மையாக, மதிப் புக்கு உரியதாக்கிவிடுகிறது. உலகும், நம் வாழ்வும் குறைத்து மதிப்பிடப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. நம் முயற்சிகள் அனைத்தும் முடிவில்லாத ஏதோ ஒன்றைத் தாங்குவதாகவே அமைந்து விடுகிறது.
நாத்திகம் மட்டுமே உண்மை விடுதலையை வழங்கும்: வாழ்வென்று நாம் தெரிந்திருப்பது நம்மிடமுள்ள எல்லாம் கடைசிவரை நம்பிக்கையில் தள்ளப்பட்டுள்ளது. இந்த வாழ்வானது அற்புதமானது, முழுமையாக வாழ வேண்டியது என்று தெரிந்து கொண்டீர் களானால், நீங்கள் எங்களில் ஒருவராவீர். சமூகத்தைப்பற்றிய படப்பிடிப்பில் 22.5மில்லியன் நபர்கள் அமெரிக்க அய்க்கியத்தில் நாத்திகர்களாக உள்ளனர். இறப்பின் அச்சத்தில் வாழ்வை செல விடுபவர்களாக இல்லாதவர்கள் யாரோ அவர்களே உண்மையான விடுதலையை அடைபவர்களாவார்கள். அதுவே, மனதின் விடுதலை.
ஆதாரம்: (http://atheismexposed.tripod.com/atheist_agenda.htm)
Read more: http://viduthalai.in/page3/77358.html#ixzz2wjy8zv13
பெரியார் கைத்தடி
பாம்பையும்
பார்ப்பானையும்
கண்டால்..
பாம்பை விட்டு விடு
பார்ப்பானை அடி..!
பேசியது பெரியார்
கைத்தடி!!
- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி
Read more: http://viduthalai.in/page4/77360.html#ixzz2wjyknvVq
மூத்த பத்திரிகையாளர், பகுத்தறிவாளர் குஷ்வந்த் சிங் மறைந்தார்?
99 வயதான மூத்த எழுத்தாளரும் பகுத்தறிவாதி யுமான குஷ்வந்த் சிங் காலமானார். பத்திரிகை உலகிலும், எழுத்து உலகிலும் தனக்கென நிரந்தரமான இடத்தைப் பெற்றிருந்தவர் குஷ்வந்த் சிங் (வயது 99). டெல்லியில் வசித்து வந்த இவர் சமீப காலமாக வயோதிகத்தின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை (20.3.2014) மதியம் மரணம் அடைந்தார். இதை அவரது மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் அறிவித்தார். அவருக்கு மறைந்த குஷ்வந்த் சிங், தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹதாலி என்ற இடத்தில் 1915-ம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி பிறந்தார். டெல்லி மாடர்ன் பள்ளியில் பள்ளிப்படிப்பு, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு படித்தார்.
ஆரம்ப காலத்தில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் செய்தார். 1947-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பத்திரிகை துறையில் கால் பதித்தார். சொந்தமாக யோஜனா என்ற பத்திரிகை நடத்திய அவர் பின்னாளில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் ஆசிரியராக உயர்ந்தார்.
ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள் அவருக்கு பெயரைப் பெற்றுத்தந்தன. மரணத்தை தழுவுவதற்கு முன்பு கடந்த மாதம் வரை பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு, (1980-1986 ஆண்டுகளில்) பதவி வகித்தார். 1974-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆனால் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வெளியேற்ற மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்ததை ஆட்சேபித்து, பத்மபூஷண் விருதை திரும்ப அளித்து விட்டார். 2007-ம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த குஷ்வந்த் சிங்கின் மனைவி கவால் மாலிக் 2001-ல் மரணம் அடைந்தார். குஷ்வந்த் சிங்குக்கு ராகுல் சிங் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர்.
Read more: http://viduthalai.in/page4/77362.html#ixzz2wjzFNM6V
அரசு விடுதியிலிருந்து பைபிள் அகற்றம்
அரசு பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டிருந்த கிடியான் பைபிளை அகற்ற அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: அயோவா உட்பட 20ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மதத்திலிருந்து விடுதலை என்கிற அமைப்பு மதக்கருத்துகள் மக் களிடம் திணிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
அரசு விடுதியில் பைபிளா?
அயோவா அரசு பல்கலைக்கழகம் நடத்திவரும் மெமோரியல் யூனியன் கெஸ்ட் விடுதியில் உள்ள அறைகளில் பைபிள் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது குறித்து அந்த அமைப்பின் சார்பில் பாட் ரிக் சி.எலியோட் விடுதி இயக்குநருக்கு மெயில்மூலம்எச்சரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. புகாரில் அரசியலமைப்புக்கு (முதல் ஷரத்தில் கூறப்பட்டுள்ள அரசும், மதமும் பிரிந்து இருக்க வேண்டும்) விரோதமாக அரசு விடுதியில் பைபிள் புத்தகத்தை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
அவ்விடுதியில் வாடிக்கையாளர்களாக 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கை அற்றவர்களாகவும், 27 விழுக்காட்டினர் கிறித்துவம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாகவும், கிடியான் பைபிள் புத்தகத்தை அறையில் வைப்பதன்மூலம் அவர்களிடம் (கிறித்து வத்தை) மதத்தைத் திணிப்பதாகும். இதேபோல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் லோயல் கெஸ்ட் விடுதியிலி ருந்தும் இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆகவே, எழுத்து மூலம் அரசமைப்புக்கு விரோதமாக உள்ள இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை எதிர்பார்க்கிறோம் என்று மெயிலில் தெரிவித்திருந்தார்.
அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அனி லவுரி கெய்லர் அம்மையார் ஊடகங் களில் இப்பிரச்சினை குறித்த வினாக் களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விடுதி இயக்குநர் ரிச்சர்ட் எஸ். ரெனால்ட்ஸ் அவ் விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலி ருந்தும் பைபிள் புத்தகங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
Read more: http://viduthalai.in/page4/77363.html#ixzz2wjzSfYgh
ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க
இலங்கையை இந்தியாவோடு இணைக் கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண் டும். சு.சாமி (1-5-2000)
தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி ( 3-5-2000)
சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே கிருஷ்ணமூர்த்தி (பாஜக, துணைத் தலைவர்) தில்லியில் (6-5-2000)
திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சி களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிரமோத் மகாஜன் ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)
அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் (22-5-2000)
இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப் படும் ராமதாஸ் (2-6-2000)
நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச் சினையை தீர்க்க உதவி புரியும். திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், (2-6-2000)
இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். சு.சாமி (2-6-2000)
செக்கோஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் (4-6-2000)
இந்திய அரசு தன்னுடைய நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. (5-6-2000) பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரி யாது. அப்படியே, கோரிக்கை வைக்கப் பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. - வெங்கையா நாயுடு (11-5-2000)
புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டி ருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)
அவர்கள் தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப் பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)
நான் இந்துத்வ சக்திகளை எதிர்க் கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல் வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங் கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச் சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004) 8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌ காத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...
"புலிகளைத் தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மய்ய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."
யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகை யிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச் சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது
இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்
ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...
காவிகளுக்குக் காவி சாமரம் வீசிக் கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழம் பற்றி பேசுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்.
- மகிழ்நன் பா.ம
Read more: http://viduthalai.in/page4/77365.html#ixzz2wjzmFr6X
ஏழுமலையான் கருணை
பக்தி ஸ்தலம் திருமலையில் தொடர்ந்து 6ஆம் நாளாக காட்டுத் தீயாம். செம் மரங்கள், சந்தன மரங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து விட்டனவாம். தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடுகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானத் தால் அரக்கோணம் அய்.என்.எஸ். இராஜாளி கடற்படை மற்றும் விசாகப் பட்டினம் கடற்படை வீரர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றனர். பக்தர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் சரிதான். ஆனால் நமக்கு ஒன்று புரியவில்லை. திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதி என்ன ஆனார்? தம் பக்தர்களுக்கு சோத னையாக உள்ள அந்த நெருப்பை அணைப் பதற்கு அவர் ஏன் முயற்சி செய்யாம லிருக்கிறார்? இந்த மாதிரி நாம் கேள்வி கேட்டால் இப்படி சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். அதாவது பகவான் ஏதோ குறையைக் கண்டுபிடித்திருக்கிறார், அதனால்தான் தன் உக்கிரத்தைக் காட்ட அக்னியை ஏவி விட்டிருக்கிறார் என்று.
அப்படியானால் கடவுளின் உக்கிரம் தணியும் வரை எரியவிட வேண்டியது தானே. அதை கஷ்டப்பட்டு அணைக்கப் போய் லார்ட் வெங்கியின் கோபத்திற்கு ஆளாவானேன்? சிறிது நாட்களுக்கு முன் னால் சிறுத்தை புலியை நடமாடவிட்டு பக்தர்களை பயம் காட்டி வைத்தார். இப்பொழுது தீயை மலைப் பகுதி முழு வதும் கொழுந்து விட்டு எரியச் செய் கிறார். ஒரு வேளை பக்தர்கள் தன்னைத் தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்க வில்லையோ என்னவோ?
செம்மரங்களும், சந்தன மரங்களும் விலை மதிப்பில்லாதவை. அவை அழிந்து கொண்டிருக்கின்றன. காட்டில் உள்ள உயிரினங்கள் எல்லாம் பற்றி எரிகின்ற நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை. ஆனால் நாம் குடும்பத்தோடு காசு பணத்தை கடன் வாங்கி சென்று மொட்டையடித்து ஏழுமலையான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஏழுமலையானே! உன்னை தாங்கும் மலைகள் எரிந்து கொண்டிருக் கிறது அப்பனே! பக்தர்களை மொட்டை யடிப்பது பத்தாதென்று மலைகளையும் மொட்டையாக்குகிறாயே!
ஏழுமலையானே! உன் கருணையே கருணை!
- இசையின்பன்
Read more: http://viduthalai.in/page4/77367.html#ixzz2wk0INMKz
கடவுளை வணங்குபவர்கள் யார்? காட்டுமிராண்டிகள்! - தந்தை பெரியார்
கமுதி- ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா வில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத் தாண்டி வேட மணிந்து, புதன் கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர் (படம்).
அதிகாலையில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள சகதியை அள்ளி எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். பின்னர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்று வலம் வருகின்றனர். சுமார் 2 மணி நேரம் சகதி பூசிய நிலையில் வலம் வந்து இந்த விசித்திர சேத்தாண்டி வேடம் என்ற நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அம்மை உள்ளிட்ட தோல் நோய்கள் விரைவில் குணமடைய வேண்டி பக்தர்கள் இந்த விசித்திர சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
உடம்பில் சகதி பூசி சுமார் 2 மணி நேரம் வலம் வரும்போது, உடலில் உள்ள கெட்ட நீர் உறிஞ்சப்பட்டு, உடல் நலம் பெறுவதோடு, குளிர்ச்சியும் பெறுகிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப் படுகிறது.
Read more: http://viduthalai.in/page4/77368.html#ixzz2wk0Qkvi2
ஏசு - மோடி
நாட்டு மக்களைக் காப்பாற்ற நரேந்திர மோடி ஏசுவால் அனுப்பி வைக் கப்பட்ட ரட்சகர் என்று பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவரும் அதிகாரப் பூர்வப் பேச்சாளருமான வெங்கையா நாயுடு அய்த ராபாத்தில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார். (மாலைமலர் 17.3.2014 பக்கம்7).
அடேயப்பா கிறிஸ்த வர்கள்மீதும், இயேசுவின் மீதும் இந்த பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு என்னே தீவிரமான பற்று பொத்துக் கொண்டு கிளம் பியிருக்கிறது.
இவர்களின் குருநாதர் கோல்வால்கரால் எழுதப் பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் எனும் நூலில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது?
இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எதை யும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறா மல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத் தல் வேண்டும் - என்று சொல்லியுள்ளாரே - இது தானே கிறித்தவர் உள் ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான பி.ஜே.பி. ஆர். எஸ்.எஸின் நிலைப்பாடு! - கிறிஸ்தவர்களின் அந்த ஏசு வேறு - வெங்கையா நாயுடு கூறும் இந்த ஏசு வேறோ?
குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மீது தாக் குதல் தொடுக்கப்பட்டது.
ஒரு வார காலம் ஒரு படையெடுப்பே நடத்தப் பட்டது. தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. பிரதமராக இருந்த வாஜ்பேயி அங்கு பார்வையிட்டு திருவாய் மலர்ந்ததென்ன? விசா ரணை நடத்தப்பட வேண் டும் என்று சொன்னாரா? ஒரு புடலங்காயும் இல்லை.
மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் தேவை! என் றாரே பார்க்கலாம்! (மத மாற்றம் நடத்தப்பட்டதால் தான் இந்தக் கலவரம் என்று சொல்லாமல் சொன் னார் பிரதமராக இருந்த ஒருவர் -என்னே ஹிந்து யிசம் பாசிசம்!
1999 மார்ச்சு 6ஆம் நாள் மனிதம் தலை குனி யத்தக்க கேவலம் ஒன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்தது. ஹிந்து வெறியர்கள் புதைக்கப் பட்ட கிறிஸ்தவர் ஒருவரின் சடலத்தைத் தோண்டி எடுத்து வெறியாட்டம் போட்ட கேவலம்தான் அது!
வெங்கைய நாயுடு இப்பொழுது சொல்லு கிறாரே - ஏசுவால் அனுப் பப்பட்டவர் நரேந்திர மோடி என்று - அவர் தான் அப்பொழுது அம்மாநில முதல் அமைச்சர்.
அவர்கள் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சறிந்தே வஞ்சகம் பேசும் நாகங்கள்தான் போலும்!
நன்றாகத்தான் சொன்னார் மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதி பாசு அநாகரிகமான காட்டுமிராண்டிகள்! (Uncivilised Brute Force) என்று சொன்னார்! அது தான் இப்பொழுது நினை விற்கு வந்து தொலைக்கிறது.
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/77378.html#ixzz2wk0g2mek
கருத்துத் திணிப்புதான் - ஒப்புதல் வாக்குமூலம்
- ஊசி மிளகாய்
ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வெளி யிடும் தேர்தல் கணிப்புகள்பற்றி நாம் நீண்ட கால மாகவே, கூறி வருவது அவை உண்மையான மக்களின் கருத்துக் கணிப்புகள் அல்ல; மாறாக, கருத்துத் திணிப்புகள் தான் என்பதாகும்!
இது ஒரு நல்ல மோசடி வியாபாரமாக மாறி விட்டது! சார்பு நிலை எடுத்து வெளியிடும் ஏடுகள், தொலைக்காட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டித் தருகின்றன என்பதை கல்கி வார ஏட்டின் (23 மார்ச் 2014) 33-ஆம் பக்கத்தில் - கருத்துத் திணிப்புக்கள் என்ற தலைப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவலைக் கீழே தருகிறோம்:
கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவையா என்று ஏற்கெனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் அம்பலமாகி விட்டன. பணத்துக்காக முடிவுகளை மாற்றிக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் சொல்லுவோம் என்று பதினோரு நிறுவனங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன.
இதில், இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்தும் சி - ஓட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த சி - ஓட்டர் நிறுவனம் மூன்றிலிருந்து அய்ந்து சதவிகிதம் வரை புள்ளி விவர முடிவை மாற்றிச் சொல்லி, குறிப்பிட்ட கட்சிக்குக் கூடுதல் இடம் கிடைக்கும் என்று காட்டத் தயார் என்று ஒப்புக் கொண்டதாம். இது கருத்துக் கணிப்பா? திணிப்பா?
இதே போல் தான் 2ஜி அலைக்கற்றைப் பிரச் சினையை (திட்டமிட்டே) திமுகவுக்கு எதிராக கிளப்பின சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்; ராசா, ஏகபோக கொள்ளை லாபக் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்காமல், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைத் தொடர்பு வசதியைச் செய்ய முன் வந்த கம்பெனிகளுக்கெல்லாம் பிரித்துத் தந்து, பெரிய திமிங்கலங்களைப் பாதிப்பு அடையச் செய்தார்,
அதனால் தொலைக்காட்சியில் பயங்கர ஊழல் பலூனை ஏராளமாகக் காற்றடைத்துப் பறக்க விட்டு, இன்றளவும் தேர்தல் முதலீடாக பல கட்சிகள் கொண்டுள்ளன!
காரிருள் சூரியனை மறைத்ததுபோல் உண்மை களை மறைக்க இந்த பிரச்சார உத்தியை சுயலாபங் களுக்காகப் பயன்படுத்துகின்றன - எச்சரிக்கை!
Read more: http://viduthalai.in/e-paper/77380.html#ixzz2wk168mNo
பிடி - வாதம்!
பிடி - வாதம்!
பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம..க.வும் இருக்கிறது - புதுச்சேரி என்.ஆர். காங் கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டது. ஆனால் பா.ம.க.வும், புதுச்சேரியில் போட்டிப் போடுகிறது. கேட்டால் பிஜேபி தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குத் தான் - புதுவைக்குச் செல் லாது என்று கறாராக - பிடிவாதமாகக் கூறி விட் டார் மருத்துவர் ராமதாசு.
தாடிக்கொரு சீயக்காய் - தலைக்கொரு சீயக்காயோ!
பிடிவாதம் என்கிறது தினமணி. பிடி எனக்கு வாதம் உனக்கு என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கே பெப்பே! கொடுத்து விட் டதே! பா.ம.க.
வாழ்க அண்ணா நாமம்!
லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆனால், வேலூர் மாநகர, மாவட்ட மாணவர் கள் 2000 பேர் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட சபதம்! வாழ்க அண்ணா நாமம்!
ஓ, திருப்பதி ஏழுமலை யானே நாமக் கடவுள்தானே!
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்
அதிமுக ஆட்சியில் அவதிப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை தஞ்சை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் வருமாறு:
1) பூமிநாதன் - மயிலாடுதுறை
2) ராஜாங்கம் - கீவளூர்
3) செல்வராஜ் - கீழையூர்
4) சக்ரவர்த்தி - பூலமேடு
5) அப்துல் ரகீம் - திருத்துறைப்பூண்டி
6) சிறீதர் - அபிவிருத்தீஸ்வரம்
7) கோபாலகிருஷ்ணன் - கொற்கை
8) முருகையன் - மாப்படுகை
9) செல்வராஜ் - மஹிலி
10) சாமியப்பன் - நாகூர்
11) சக்திவேல் - கடம்பங்குடி
12) இடும்பையன் - பிராந்தியன் கரை
13) சீனிவாசன் - குரும்பல்.
வாகன சோதனை
தமிழகத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத் தும் வகையில், ரயில் மற் றும் இரு சக்கர வாகனங் களிலும் பறக்கும் படை யினர், துணை ராணுவப் படை உதவியுடன் சோதனை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திக் கூறினார்.
அந்தமானில் நிலநடுக்கம்
புதுடில்லி, மார்ச் 22- அந்தமான் மற்றும் நிக் கோபர் தீவுகளில், நேற்று மாலை, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவானது. "இந்த நில நடுக்கத்தால், "சுனாமி' ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், கடலோர பகுதி களில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Read more: http://viduthalai.in/e-paper/77381.html#ixzz2wk1GJWpz
சந்தர்ப்பவாத கூட்டணியா? கொள்கைக் கூட்டணியா?
- குடந்தை கருணா
தமிழ் நாட்டில், பாஜக அணியில், மதிமுக, பாமக, தேதிமுக, கொமுக தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ராஜ் நாத் சிங் அறிவித் துள்ளார். தமிழ் நாட்டில், இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் சேர்ந்துள்ள தேதி முக, பாமக இரண்டும், கூட்டணியில் சேர்வதற்கு முதல் நிமிடம் வரை, ஒருவரை ஒருவர் சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரே அணியில் சேர்த்திடும் ஒரே புள்ளி; ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஆசை யைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.
இவையெல்லாம் மக்கள் கருத வாய்ப்பில்லை என இரு கட்சியும் நினைக்கின்றன.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அதுவும் பாஜக அணி; அதன் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் பட்டுள்ளார். பாஜக அணியில் உள்ள பாமகவும் புதுச்சேரியில் வேட் பாளரை நிறுத்த என்ன கொள்கை இதில் இருக்கிறது என்றெல்லாம் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையா?
பாஜக தனது தேர்தல் அறிக்கைக் காக மக்களின் கருத்துக்களை கேட்பதாகக்கூறி, ஒரு இணைய தளத் தையும் உருவாக்கியது. அக்டோபர் 2013-இல் பாஜக வெளியிட்ட செய்தி யில், மக்கள் கருத்துக்களையும் பரி சீலித்து, தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்திடுவோம் என அறிவித்தது. அத்துடன் இன்னொரு செய்தியும் பாஜக கூறியது. அதாவது தங்களின் அடிப்படைக் கொள்கையான, ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டுவது, காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு தகுதி தரும் 370 பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் தகுதி போன்ற கொள்கைகள், எந்த சூழ் நிலையிலும் பாஜக கைவிடாது என பாஜக அறிவித்துள்ளது. (தி இந்து 19.10.2013).
இப்போது தமிழ் நாட்டில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சி களுக்கு ஏதேனும் பொதுத் திட்டம் உண்டா?
பாஜக கூறிய அவர்களின் அடிப்படைக் கொள்கையான ராமர் கோவில், 370 பிரிவு ரத்து, பொது சிவில் சட்டம் இதை ஏற்றுக் கொள் கிறார்களா?
நாணயமான பதிலை, விஜய காந்த், ராமதாஸ், வைகோ இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
Read more: http://viduthalai.in/page-2/77385.html#ixzz2wk1f0jcA
இன்று (மார்ச்.22) உலக தண்ணீர் தினம்
அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.
கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.
நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
Read more: http://viduthalai.in/page-2/77386.html#ixzz2wk1njbd8
மற்ற மக்கள்
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)
இந்துமத தத்துவம்
இந்துமத தத்துவம்
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.
மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர் களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.
இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண் டது என்று கேட்கின்றோம்.
செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்து சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.
வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம். இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.08.1928
Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3EsPv5
தந்தை பெரியார் பொன்மொழி
சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி யொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும்.
Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3MqBpO
திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்
திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.
நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட் படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928
Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3Tqfus
தொழிலாளர் தூது
பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற் கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.
தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங்களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கின தைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மன வருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவை களுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.
போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரி களின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டிருப்ப தாகவும் தெரியவருகின்றது. ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரை களும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்க மிருக்கிறதா? தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில் வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர் களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக் காவது தொழிலாளர் களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரி யாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.
- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928
Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3auQIo
தேர்தல் வினோதங்கள்
சுயேச்சையாகப் போட்டியிடும் மனைவி!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் தன் கணவர் கதிர் ரானாவை எதிர்த்து அவரின் மனைவி ஷாகிதா பேகம் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறார்.
விசாரணை நாடகம்!
தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச் சர் சம்பத் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாற் றின்மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
ஓர் அமைச்சரை ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் உண்மையின் அடிப்படை யில் அந்த அறிக்கைதான் இருக்குமா?
இது ஒரு விசாரணை நாடகமே!
துடைப்பம்
மும்பையில் சாலையைத் துடைப்பத் தால் சுத்தப்படுத்தினார்கள். துடைப்பத் தைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மீராசன்யால்.
ஆளுநராகத் தயாராவீர்!
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமரானால், இங்குள்ள அனைவரும் ஆளுநராக பல்வேறு மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார் கள்.
- பாலகங்கா, முன்னாள் எம்.பி., அ.இ.அ.தி.மு.க.
(தினமணி, 21.3.2014, பக்கம் 7)
வெற்றிக்காக ஜோசியம் கேட்கும் வேட்பாளர்கள்
பெர்ஹாம்பூர், மார்ச் 22-வெற்றிக்காக ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்கும் வேட்பாளர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிகமாகிவிட்டனர். இதில் கட்சி வேறு பாடு இல்லாமல் வரிசையில் நிற்பதால், ஜோசியர்கள் அனைவரும் ஆலோசனை கூறுவதில் மிகவும் பிசியாக உள்ளனர்.
பெர்ஹாம்பூர் தொகுதி, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சியாப்ட்நாயக் கூறும் போது, எனக்கு எப்போதும் வெள்ளிக் கிழமைதான் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்று ஜோசியர் கூறியுள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள் ளேன். கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
எல்லாம் ஜோசியர்களின் ஆலோசனைப் படியே செய்து வருகிறேன். இப்போதும், அவர்களது ஆலோசனைப்படி வெள்ளிக் கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல, கஞ்சம் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் பாக்பன் கந்தாயத் கூறும்போது, ஜோசியரின் ஆலோசனைப்படி, அவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கோபால்பூர் தொகுதி யின் வேட்பாளராக கந்தாயத்தை காங் கிரஸ் அறிவித்துள்ளது. கோபால்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிப்ஹுதி ஜெனாவும், தேர்தல் தொடர் பாக ஜோசியர்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார். அவர்கள் கூறியபடி, தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளரான அலி கிசோர் பட்நாயக் மட்டும் முற்றிலும் மாறாக உள்ளார். அவர் கூறும்போது, நான் எப்போதும் ஜோசி யத்தை நம்புவது இல்லை.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு நல்ல நாள்தான். நான் எனது வேட்பு மனுவை பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியோ தேர்தல் நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் ஜோசியர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாம்.
Read more: http://viduthalai.in/page-5/77413.html#ixzz2wk43vIyN
கல்கியின் சாதுர்யம்!
கேள்வி: கூட்டணியிலிருந்து பிரிந்து விட்ட கம்யூனிஸ்டுகள்பற்றி ஜெ. ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே?
பதில்: அ.தி.மு.க. தலைமை இது குறித்து பேசாதிருப்பதே இத்தனை ஆண்டுகள் கொண்டிருந்த நட்புக்கு அழகு. காரணம், சொல்லப் புகுந்தால், வீண் வருத்தங்களே அதிகரிக்கும். கூட்டணி முறிவுபற்றி கம்யூ னிஸ்டுகளும் அதிகம் வார்த்தைகள் உதிர்க் காமல், கண்ணியம் காப்பது மெச்சத் தகுந்தது.
(கல்கி, 23.3.2014, பக்கம் 38)
கல்கியின் இந்தப் பதிலில் ஜெவைக் காப்பாற்றும் இனவாதம் இருக்கிறதே தவிர, நாணயமான அரசியல் இல்லை.
அகில இந்திய இடதுசாரித் தலைவர்கள் சென்னை வந்து ஜெ அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தும், முதல்வரைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டது எத்தகைய அரசியல் மற்றும் மனிதப் பண்பு? கல்கிக்கே வெளிச்சம்!
அந்த மூத்த தலைவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏற்றிருக்கும் தியாகத் தழும்புகள் - அனுபவங்களுக்குமுன் செல்வி ஜெயலலிதா எம்மாத்திரம்!
இரண்டாவதாக இடதுசாரிகளின் மூத்த தலைவர்களான ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, பிரகாஷ் காரத் ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெ அவர்களைச் சந்தித்து, கூட்டணி பற்றி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக செல்வி ஜெயலலிதா கையொப்பமிட்டு அறிவித் தாரே - அதன்படி நாணயமாக நடந்துகொண்டாரா? இவ்வளவும் நடந்த பிறகு, சி.பி.எம். அலுவல கத்துக்கு அ.இ. அ.தி.மு.க.வின் தூதராகச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நண்பர்களாகப் பிரிவோம் என்று சொன்னதும், சி.பி.அய்.க்கோ தொலைப் பேசி மூலமாக இதே கருத்தைச் சொன்னதும் தான் கல்கி கூறும் ஜெயலலிதா கடைப்பிடித்த அழகா?
கூட்டணி ஏன் வைத்தோம் - ஏன் பிரிந் தோம்? என்று வெளிப்படையாகக் கூறுவது தானே அறிவு நாணயமான அரசியல்? இது என்ன இரு நபர்களுக்கிடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளா?
ஜெயின் பக்கத்தில் எது தவறோ அதையே அழகாகக் காட்ட முயற்சிக்கும் கல்கியின் ரத்த பாசம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு மேலும் விளக்கம் தேவைப்படாது.
இடதுசாரிகளைப்பற்றி ஜெ அம்மையார் பேசாத பேச்சா? தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறும் அளவுக்குச் சென் றவர்தானே ஜெயலலிதா! இப்பொழுதென்ன அழகு வந்து குதித்துவிட்டது?
கண்ணியம் காத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கல்கி புகழாரம் சூட்டுகிறது. சூடாக அவர்கள் கிளப்பாமல் விட்டார்களே அதுவரை ஜெக்கு இலாபம் என்கிற ஆசையோடு கல்கியால் சொல்லப்பட்டது இது.
அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண் டியன் அரசியல் ரீதியாகவே ஜெமீது பாணத்தை ஏவியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குமுன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா, முன் னெடுத்த நிலைக்கு மாறாக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப் பாட்டிலிருந்து தடம் புரண்டிருக்கிறார். எந்தக் கூட்டத்திலும் பா.ஜ.க.வைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று தோழர் தா.பா. கூறியள்ளார்.
இதே கருத்தை வேறு சொற்களில் உச்சரித் துள்ளார் சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன்.
நமக்கு ஆச்சரியம் என்னவென்றால், இந்த இடதுசாரிகள் ஜெவைப்பற்றி இப்பொழுதுதான் புதிதாகப் புரிந்துகொண்டுள்ளார்களா?
எப்பொழுது ஜெ மதச்சார்பற்றவராக இருந் திருக்கிறார்? 1000 அ.தி.மு.க.வினர் அயோத்தி யில் முகாம் என்று, பெட்டிச் செய்தி போட்டதே தீக்கதிர் (7.12.1992) மறந்து போய்விட்டதா?
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத் தினால் இந்துக்களின் மனம் புண்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்து இருப்பதையும் இடது சாரிகள் அறியமாட்டார்களா?
Read more: http://viduthalai.in/page-5/77411.html#ixzz2wk4FOfql
நடக்கப் போவது அழகுப் போட்டியா!
அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்?
செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம்.
அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை.
எண்ணார்!
புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ!
Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv
இன்னும் எத்தனை எத்தனை திருவிளையாடல்களோ!
வாரணாசி தான் என் தொகுதி அங்கு நின்று தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன் - அதனை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளிமனோகர் ஜோஷி சொன்னால், முடியாது - உமக்கு வாரணாசி தொகுதி கிடையவே கிடையாது. அது பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்குத் தான். நீ வேறு தொகுதிக்கு நடையைக் கட்டு - கான்பூருக்கு மூட்டையைக் கட்டு என்று ஆர்.எஸ்.எஸ். உத்தர விடுகிறது.
காந்திநகர் தொகுதி எனக்கு வேண்டாம்! போபாலில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று சொன்னால். அதெல்லாம் கிடையாது - நீ மரியாதையாக ஏற்கெனவே நீ போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியிலே நின்றுதான் தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணை பிறப்பிக்கிறது. அதிலும் அந்த மூத்த தலைவர் 2009 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றாலும் முதல் பொதுப் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை.
ஜஸ்வந்த் சிங் பி.ஜே.பி. ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்பொழுது மேற்கு வங்காளம் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இப்பொழுது தனது சொந்த மாகாணமான ராஜஸ்தானில் சொந்த ஊர் அடங்கிய பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.
என்ன வேடிக்கை என்றால் அவர் போட்டியிட எந்தத் தொகுதியுமே ஒதுக்கப்படவில்லை. ஆசாமி மிகவும் ஆத்திரத்திற்கு ஆளாகி தாம் மிகப் பெரிய அளவில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி கட்சிக்கே முழுக்குப் போட முடிவு செய்து விட்டார்.
பி.ஜே.பி.யின் தலைவராக இருக்கக் கூடிய ராஜ்நாத் சிங் தான் எம்.பி.யாக இப்போதுள்ள காசியாபாத்தை விட்டு லக்னோவுக்கு மாறுகிறார் அதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டது ஆர்.எஸ்.எஸ்.
ஆக ஆர்.எஸ்.எஸ். ஆதிக்க சுனாமி கிளம்பி பெரிசுகளை தண்ணிக்காட்டி வருகிறது.
அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஜஸ்வந்த் சிங் - இவர்கள் ஒரு அணியாகவும் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, நரேந்திரமோடி என்பவர்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து பிளந்து நிற்கிறார்கள். இதற்கிடையில் மகாராட்டிர மாநிலத்தில் சிவ சேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே அத்வானியின் சகாப்தம் முடிந்து விடவில்லை! என்று குரல் கொடுத்துள்ளார் பி.ஜே.பி.யில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கூட்டணிக் கட்சிகள் வரை புரையோடி விட்டது!
தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதே இந்தக் கூத்து, நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன திருவிளையாடல்களோ - யார் கண்டது!
Read more: http://viduthalai.in/e-paper/77471.html#ixzz2wpctEEsr
தேர்தல் பிரச்சார பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை மனித உரிமை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 23- மக் களவைத் தேர்தல் பிரச்சார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், வாக்குசேக ரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட் சியினரும், வேட்பாளர் களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநி யோகம், முழக்கமிடுவது போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின் றனர்.
சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட் சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர் தல் பிரச்சாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரச்சாரங்களில் பயன்படுத் திக் கொள்வது சர்வசாதா ரணமாக நடக்கிறது.
படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய் தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர் களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத் திடம் புகார் ஒன்றை அளித் தார். இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது:
தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண் டும். இது தொடர்பாக என் னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவ னேஸ்வரில் அளித்த பேட்டியில், சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரச் சார பணிகளில் ஈடுபடுத்து கின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப் பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரி யது என்றார்.
Read more: http://viduthalai.in/e-paper/77472.html#ixzz2wpd4wLXe
அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை!
சென்னை, மார்ச் 23- தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலு வலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ள தாக அரசுத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன.
அரசுத் துறை களின் பல்வேறு அலுவல கங்கள் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை சேப்பாக் கம் எழிலகம் ஆகிய வற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கணினி களுடன் இணையதள வசதி யும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதள வசதி யைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகி றார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அம லுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலு வலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
அரசுத் துறைகளின் அனைத்து கணினிகளிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங் களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்ய தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் துறை அதி காரிகள் கூறியது: அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சமூக ஊடகங்களில் அவர் கள் கருத்துகளைத் தெரிவிப் பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின்போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றனர்.
Read more: http://viduthalai.in/page-3/77444.html#ixzz2wpdcdNaU
கூடா நட்பு கேடா முடியும்!
பி.ஜே.பி. அணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வும் - பா.ம.க வும் எப்படி இடம் பெறமுடியும் என்ற கேள்வி எல்லாத் தரப்பிலும் கேட்கப்பட்டது; அப்படியே இடம் பெற்றாலும் அவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும் என்ற கேள்வியும் உள்ளது.
இதற்கு வெகு நாட்கள் கூடத்தேவைப் படவில்லை. இடைப்பட்ட இரண்டே நாளில் உடைசல் ஏற்பட்டு விட்டது. பா.ம.க வின் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்ட சேலம், கல்லக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களும், தொண்டர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அத் தொகுதிகள் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன.
கொந்தளித்து விட்டனர் பா.ம.க தோழர்கள்.
அதன் விளைவு எந்த உச்சத்தில் உஷ்ண மூச்சு வெளியேறுகிறது தெரியுமா?
மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களின் குமுறலைத் தாங்க முடியாமல், கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தைலாபுரம் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார்.
புதுச்சேரியிலும் பிரச்சினை! என்.ஆர். காங்கிரசிற்கு அத்தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் (பி.ஜே.பி) ஒதுக்கப்பட்டா யிற்று. பா.ம.க வும் அங்கு வேட்பாளரை அறிவித்து விட்டது.
கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் - புதுச்சேரி வேறு மாநிலம் - அது இங்கு செல்லாது என்று மீசை முறுக்கி எழுந்து விட்டனர் பாட்டாளிகள்.
எந்த விலை கொடுத்தேனும், கட்சிக்கு சேதாரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கூட் டணி பலத்துடன் தருமபுரியில் போட்டியிட்டு, தான் மட்டுமாவது பெற்றிபெற்று மத்தியில் அமைச்சராகியே தீருவேன் என்பதில் எரி மலையாகத் தகித்து நிற்கிறார் - டாக்டர் அய்யா வின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
விஜயகாந்த் - டாக்டர் அன்புமணி ராமதாசு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி நிற்கும் படத்தைப் பார்த்து புழுங்குகிறது பாட்டாளி வர்க்கம்.
ஒட்டுமா(ங்)கனி? என்று இரு பொருளில் தலைப்பைக் கொடுத்து தினமணி மூக்கைச் சொரிந்துவிடுகிற நிலைமை!
தேமுதிக தலைவர் - விஜயகாந்த் பற்றி பா.ம.க வினர் செய்த விமர்சனம் விண்ணையும் தாண்டி வெடி மருந்து வீச்சாக அல்லவா நெடி ஏறியது!
டாக்டர் ராமதாஸ் ஆனந்தவிகடனுக்கு (1.8.2012) அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?
சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சினு ஒரு கட்சி. ஆனா அந்தக்கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான பொறுப்பும் கிடையாது, அந்த தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கை யுமே இல்லாத கட்சி அது.
இருபத்தி நாலு மணிநேரமும் ஏதோ ஒரு மெதப்பிலயே இருக்கிற ஒருத்தர் ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா அப்புறம் அது விளங்குமா? என்று தேமுதிக தலைவரின் தனிப்பட்ட பழக்கத் தைக்கூட சுட்டிக்காட்டி சூடான வார்த்தை களைப் பரிமாறினார் மருத்துவர்.
இந்த நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருந்தால் எப்படி விளங்கும்? ஒருவர் காலை இன்னொருவர் வாருவார் என்பது தான் நடக்கப் போகிறது.
இது என்ன... இன்னும் இருக்குது - வேடிக் கையெல்லாம் - பார்க்கத்தானே போகிறோம்!
Read more: http://viduthalai.in/page-8/77453.html#ixzz2wpeUAmLp
Post a Comment