Search This Blog

6.3.14

குருக்களின் புரட்டு - பெரியார்

குருக்களின் புரட்டு

சகோதரர்களே!

இதுவரை அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் .

எந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவா கிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்ப தையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல.

ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த் தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை அவ்வார்த்தைக்கு அருகர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்கள் என்பதாகச் சொல்லி, அந்த மாதிரியான குரு சிஷ்ய பாவத்திற்கு என்னென்னமோ நிபந்தனைகள் ஏற்படுத்தி, அவைகளுக்கு நம்மை கட்டுப் படுத்தி, அவர்களை நாம் கடவுளை விட சிறந்தவர்களாக மதிக்கும்படியாகச் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

முக்கியமான கோயிலாகிய திருப்பதியில் மகந்து என்பதாக ஒருவர் எதற்காக இருக்கிறார்? அவருக்கு ஏற்பட்ட வேலை என்ன? அவரால் அக் கோயிலுக்கோ அங்கு செல்பவருக்கோ உண்டாகும் லாபம் என்ன? அவர் கோயிலுக்கு தர்மகர்த்தாவென்று சொல்லுவதானால் மற்ற தர்மகர்த் தாக்களுக்கு இல்லாத தனி மரியாதை அவருக்கு ஏன் செய்ய வேண்டும்? அவர் ஒரு அரசனின் போகபோக்கியம் அனுபவிக்க எந்த விதத்தில் உரிமை உள்ளவர்? மற்ற பெரும்பான்மையான கோவில்களுக்கில்லாத முறை திருப்பதி கோயிலுக்கு மாத்திரம் ஏன் ஏற்பட வேண்டும்? அல்லாமலும், அவர் எந்த பரம்பரையில் வந்தவர்? அவர் ஜாதி, குலம், தாய், தகப்பன் முதலியவர்களின் தொழில், யோக்கியதை முதலியவைகள் என்ன? இந்த மகந்து வேலையில் இதுவரை இருந்து வந்தவர்களின் யோக்கியதை என்ன? எத்தனை மகந்துகள் கிரிமினல் குற்றத்திற்கு தண்டனை அடைந்தவர்கள்? எத்தனை மகந்துகள் லட்சக்கணக்காக சுவாமியின் சொத்தை குடி, இழிவான காரியம், மதுபானம், மாம்சம் உண்ணல், விபசாரம் முதலியவைகளில் செலவு செய்து குற்றங்கள் சாட்டப்பட்டனர் என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்களது வழக்கமான யோக்கியதை இன்னதென்பதும், எந்த விதத்தில் இவர்கள் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் விளங்காமல் போகாது. மற்றும் இம்மகந்துகள் என்போர் சுவாமிக்கு வேண்டுதலை என்பதாக மக்கள் கொண்டுவரும் பொருள்களில் எவ்வளவு பாகம் கணக்குக்கு போகவிடாமல் திருடிக் கொள்ளுகிறார்கள் என்பதும் போய் வந்தவர்களை விசாரித்தால் யாவருக்கும் சுலபமாய் விளங்கும். ஒவ்வொரு யாத்திரைக் காரனிடமிருந்தும் வழிபறிக் கொள்ளை போல் வழி மறித்து பிடுங்கிக் கொள்ளப்படுகிறது எவ்வளவு?

அடுத்தப்படியாக லோககுரு என்னும் சங்கராச்சாரியார் என்பவர் களின் புரட்டு எவ்வளவு என்று யோசியுங்கள் . லோககுரு என்று அவருக்கு எப்படி பெயர் தகும்? அவர் யார்? யாருக்கு குரு? என்று பார்ப்போமானால் அவர் இந்தியாவுக்கு குரு அல்ல. இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர் களில் பார்ப்பனர்கள் எல்லோருக்குங் கூட குருஅல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ஸ்மார்த்தர்கள் என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்தியமுடையவர் அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப்போல் இன்னமும் நான்கு ஐந்து சங்கராச்சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தின் - அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 ல் ஒரு பாகத்தாருக்கு - குரு என்று ஏற்பட்ட ஒருவர் அக் கூட்டத்தினரின் செல்வாக்காலும், தந்திரத்தினாலும், ஏமாற்றுதலாலும், நம்மவர்களின் அறிவீனத்தினாலும், ஏமாந்த தனத்தினாலும் லோககுரு என்ப தாக அழைக்கப்பட்டு இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக்கும் குருவாகி கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வெறும் பார்ப்பனர் களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரசாரம் செய்து வருகிறார்.

ஒரு சங்கராச்சாரி என்பவர் ஒரு ஊருக்கு வருவாரானால் அந்த ஊரிலுள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர், பார்ப்பன மிராசுதார், பார்ப்பன வக்கீல் முதலிய செல்வாக்குள்ள ஆசாமிகளின் மூலம் அந்நாட்டிலுள்ள செல்வ வந்தர்களை எல்லாம் ஏமாற்றி 100, 200, 1000, 2000, 5000, 10000 என்பதாக வசூலிப்பதும், தீர்த்தபதி, nக்ஷத்திரபதி, தர்ம பூஷணம் முதலிய பட்டங்கள் கொடுப்பதாகச் சொல்லி அறிவில்லாத செல்வவந்தர்களை ஏமாற்றி 1000,2000 வாங்குவதும், பாத பூஜைக்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், தங்கப் பல்லக்கில் ஊர்கோலம் செய்ய இத்தனை ரூபாய் என்றும், வீட்டிற்கு வர இத்தனை ரூபாய் என்றும், வீட்டில் பூஜை செய்ய இத்தனை ரூபாய் என்றும், நமக்கு சொந்தமான குளத்தில் குளிக்க இத்தனை ரூபாய் என்றும், பிருதுகளுடன் வர இத்தனை ரூபாய் என்றும், வெறும் தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், வியாபார முறையில் பேசி கொள்ளை அடிக்கிறார்கள் . எந்த ஊருக்கு வந்தாலும் அந்த ஊர்களில் பிரபலமாயுள்ள கோயில்களிலேயே வந்து தங்குவதும், அக்கோயிலுக்குள்ளாகவே சங்கராச்சாரியாருக்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அதாவது கக்கூசு, ஸ்நானம், சமையல் முதலியவைகள் வைத்துக் கொள்வதோடு காலிலுள்ள மிதியடியுடனேயே சுவாமியின் மூலஸ்தானம் வரையில் போய் சாமி கும்பிடுவதுமான காரியங்களையும் செய்கிறார்கள். இம்மாதிரி உலகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டும் பாடல் பெற்ற கோயில்களில் கக்கூசு கட்டிக் கொண்டும், மிதியடியுடனும் சாமி கும்பிடவும் உரிமையுள்ளவரான இந்த சங்கராச் சாரியார்களின் கொள்கை என்ன என்று பார்ப்பீர்களானால், அவர்கள் ஒரு விதத்தில் கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாஸ்திக மதத்தைச் சேர்ந்த வர்கள் . அதாவது தன்னைத் தவிர கடவுள் என்கிற வேறொரு பொருளோ தன்மையோ கிடையாது. தாங்களே தான் கடவுள் என்கிற கொள்கை யையுடையவர்கள் . அதனால்தான் கோயிலில் கக்கூசு கட்டிக் கொள்வதிலும், மிதியடியுடன் மூலஸ்தானத்திற்கு போவதிலும் ஆட்சேபணையில்லா தவர்களாயிருக்கிறார்கள் . இந்த கொள்கையுடையதற்கு ஸ்மார்த்தம் என்று பெயர். இது சைவ மதத்திற்காவது வைணவ மதத்திற்காவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதது. கிறிஸ்தவ மதத்திற்கும் மகமதிய மதத்திற்கும் ஒன்றுக் கொன்று எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதைவிட அதிகமாக சைவ மதத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்மார்த்தாளுக்கும் சைவ கோயில்கள் கிடையாது. தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர் வேறு கோயில்களை கும்பிடுவது ஏமாற்றுவதற்கேயல்லாமல் வேறல்ல. இன்னும் இவர் சன்னியாசி வேஷம் போட்டுக் கொண்டு தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டும் அரசபோகம் அனுபவிப்பார். தனக்கெனவே யானை, குதிரை, ஒட்டகம், சிப்பாய் முதலிய படைகளும் போகிற இடங்களுக் கெல்லாம் கொண்டு போகிறார்கள் . தன்னுடைய சிஷ்யர்கள் என்போர்களா கிய நம்மவர்களிடமே இவைகளுக்கு செலவுக்கு வேண்டிய பண்டங்க ளையும் சம்பாதித்து வருகிறார்கள். இவ்வளவும் செய்தும் அவரிடமுள்ள மத சம்பந்தமான நாணயமோ மிகவும் மோசமானது. தான் மனதில் மாத்திரம் ஸ்மார்த்தராயிருந்து கொண்டு வெளியில் சைவ வேடம் போட்டுக் கொண்டு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நடவடிக்கைகளை உடையவராயிருக் கிறார்கள் .

மகந்துகள் சங்கதியும் உலக குருக்கள் சங்கதியும் இப்படியானால் மற்ற குட்டி சாமியார்கள் , ஜீயர்கள் முதலிய வைணவ மடாதிபதிகள் சங்கதி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங் கள். இது தவிர இந்த ஆச்சாரியர்களுக்கு கட்டுப்பட்ட மக்களுக்குள்ளாகவே அநேகருக்கு இந்த குருமார்கள் தவிர குலகுரு என்பதாகவும் தங்கள் ஜாதி குரு என்பதாகவும் அநேகருண்டு. அவர்களும் இது போலவே சஞ்சாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு வருஷத்திற்கு ஒரு முறை பிரயாணம் செய்து குரு காணிக்கை யென்பதாக வரி வசூலிப்பதும், வரி அல்லாமல் மடத்திற்கு கடன் அதிகமாய் விட்டது, மழை இல்லை, சாமியார் விலைக்கு வாங்க, பட்டத்தை நிலைநிறுத்த, செய்த வியாஜ்ஜியத்தில் கடன் ஏற்பட்டு விட்டது, இரண்டு பெண்டாட்டி கட்டியும் பிள்ளையில்லை, மூன்றாவது கல்யாணத்துக்கு தங்கப் பல்லக்கு செய்யப் பணம் வேண்டும், வெள்ளிப் பாத்திரம், பிறாது இவைகளுக்கு பணம் வேண்டும் என்பவைகளான பெயரினால் வசூலிக்கும் பணம் கணக்கு வழக்கில்லை. இம்மாதிரி சாமியார் வரிகள் தினம் ஒன்றுக்கு 4 அணா சம்பாதிக்கும் ஏழைக் கூலியைக்கூட விடுவதில்லை. சாமியார் இல்லாவிட்டால் தங்களுக்கு அவமானம் என்று நினைக்கும்படியாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாமியார்களின் சொந்த யோக்கியதை ஒழுக்கங்கள் என்ன என்பதைப்பற்றி சிஷ்யர்கள் யாராவது கவனிக்கிறார்களா? ஒரு சாமியாருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் அந்த இரண்டு பிள்ளைகளும் உள்ள சிஷ்யர்களை மாடு கன்றுகளைப் பிரித்துக் கொள்வது போல் ஆளுக்குப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுகிறார்கள். மேல், கடை சங்கராச்சாரியார்களும் இம் மாதிரியே ஒருவருக்கொருவர் எல்லை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஒருவர் எல்லை யில் ஒருவர் வந்ததற்காக கோர்ட்டுகளில் விவகாரமும் நடந்து வருகிறது.

இது போலவே சிறு கிராமங்களும் குடும்பங்களும் சாமியார்களுக்கு பிரிவினையாக்கப்படுகிறது. இந்த சாமியார்களில் அநேகம் பேர் தங்களு டைய சஞ்சாரத்தில் தாசிகளைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் . சில சாமி யார்கள் சஞ்சாரத்திற்கு தாங்கள் போக சவுகரியப்படாமல் தங்களுடைய தாசிகளை அனுப்பி விடுகிறார்கள் .

அந்த அம்மா சாமியார்களும் சால்வையைப் போர்த்துக் கொண்டு சிஷ்ய கோடிகளைத் தங்கள் காலில் விழச் செய்து பிரசாதம் கொடுத்து காணிக்கை வாங்கி வருகிறார்கள் . சில சாமியார்கள் வாரண்டு சேவகர்களு டன் காணிக்கை வசூல் செய்யவும், வாரண்டு கடன் தீர்க்கவும் சஞ்சாரம் செய்கிறார்கள் . எனது மைத்துனரின் சாமியார் தாசி வைத்திருப்பதால் அடிக் கடி வாரண்டில் பிடிபடுவதுண்டு. எங்கள் குலகுரு என்பவர் வருவதற்கு சாவகாசமில்லை என்கிற காரணத்தால் கண் தெரியாத தன்னுடைய 80 வயது தாயாரான விதவைக் கிழவியை அனுப்பிக் காணிக்கை வசூல் செய்யச் செய்வதும், எங்கள் குடும்பமும் அந்த குருட்டுக் கிழவிக் காலில் விழுந்து காணிக்கை கொடுப்பதும் இன்னமும் நடந்து வருகிறது. என் தகப்பனாருக்கும் தாயாருக்கும் இந்த குருடி காலில் விழுவதற்கு வெட்கப்பட்டு வேறொரு சாமியாரை ஏற்படுத்திக் கொண்டார்கள் . வேறு சாமியாரும் நல்லாஞ் சக்கிர வர்த்திகள் என்கிற ஒரே பரம்பரை என்று சொல்லிக் கொள்வதானாலும் அதற்கு வேறு இதற்கு வேறு என்பதாக இரண்டு வரி கொடுக்கப்பட்டு வருகிறது. புது சாமியார் வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்ட பழய சாமியார் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்து “ஹரி இரண்டானாலும் குரு இரண்டாகலாமா” என்பதாக கோபித்து சாபமிடுவதாகப் பயமுறுத்தி அதிகப் பணமும் வாங்கிக் கொண்டார்கள் . அந்த சாபத்தால்தான் எனக்கு குழந்தை இல்லை என்றும் நான் குருத் துரோகியாகவும் மதத் துரோகியாகவும் போய் விட்டதாகவும் குருட்டு நம்பிக்கைக் கொண்ட கிழங்கள் பேசிக் கொள்ளு கின்றன. ‘திராவிடன்’ பத்திராதிபரான ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள் குடும்பத்துக்கு குரு என்கிற ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யங்கார் பார்ப்பனர் ரிவினியூ போர்டாபீசில் மாதம் 75 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். வருஷத் துக்கு ஒரு மாதம் சர்க்காரால் கொடுக்கப்படும் பிரிவிலேஜ் லீவு என்கிற சம்பளத்துடன் உள்ள லீவை உபயோகித்துக் கொண்டு கிராமங்களுக்கு பஞ்சகச்சம் கட்டி ஒரு கிழிந்த சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து காணிக்கை வரி வசூலித்துக் கொண்டு மறுபடியும் உத்தியோகத்திற்கு போய் விடுகிறார்.

இவ்வளவு அழிம்பும் அக்கிரமமும் புரட்டும் பித்தலாட்டமும் ஏமாற்றமும் அயோக்கியத்தனமும் செய்து கொள்ளையடித்துக் கொண்டு போகிற இந்த ஆச்சாரியார், மடாதிபதி, லோககுரு, குலகுரு, சாமியார் இவர் களால் மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா என்பதை கவனித்துப் பாருங்கள். இவர்களைப் பற்றி நமது தமிழ் ஆதாரங்களில் ஏதாவது எழுதப்பட்டி ருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆரிய நூல்களில் இருந்தாலும், அது எவ்வளவு ஆபாசமாய் காணப்படுகிறது என்று பார்ப்பீர்களானால் அதன் உண்மை விளங்கும். குருபத்தினி சிஷ்யன் மேல் ஆசைப்பட்டு அவனைக் கெடுத்ததும் அதற்காக சிஷ்யன் சபிக்கப்பட்டதும் காணப்படுவதும், குருக்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் சண்டைப் போட்டுக் கொள்ளுவதும், குருபத்தினி சம்பந்தம் செய்தால் அது இன்ன பாவம் என்றும் அதற்கு இன்ன பிராயச்சித்தமென்றும், சிஷ்யனாக ஆசைப் பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தமென்றும், அந்தம்மாளாக ஆசைப்பட்டி ருந்தால் இன்ன பிராயச்சித்தம் என்றும் புராணங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்பட்டிருக்கிறதும் அனுபவத்திலும் இம்மாதிரி அக்கிரமங்கள் நடந்து பலர் பாவத்திற்கு ஆளாவது பிராயச்சித்தத்தின் மூலம் பார்ப்பனர்களுக்கு பணம் கொடுப்பதுமல்லாமல் வேறு என்ன லாபம் உண்டாகிறது? ஆத்மார்த் தத்திற்காவது வாழ்க்கைக்காவது ஏதாவது பலன் உண்டா? ஏதாவது உபதேசம் உண்டா? லோக குரு சங்கராச்சாரியார் முதலிய பணக்கார குருக்கள் மார்கள், நாம் சூத்திரனானதால் நம்மைப் பார்த்தது குற்றம், நம்முடன் பேசியது தோஷம், நமது பாஷையாகிய தமிழை உச்சரித்தது மகா பாவம் என்பதாகக் கருதுவதும் அதற்காக நம்ம பணத்தைக் கொண்டே பிராயச்சித்தம் செய்வதும், அதன் மூலம் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுப்பதும் தவிர வேறு பலன் உண்டா? குலகுரு என்கிறவனும் நமது வீட்டிற்கு வந்தால் நமது பாயின் மேல் உட்காரக் கூட அசுசிப்பட்டுக் கொண்டு தாவிக் குதித்து கீழே உட்காருகிறான். ஆனால் அதே குரு அசுசியான வீதியில் நடந்து வரும் போது காலில் என்னென்னவோ மிதித்துக் கொண்டு நடந்து வருகிறான். அவன் நடந்து வந்த அசுசியான தெருவை விட நம்ம வீட்டுப் பாய் அசுசி என்பதாக கருதுகிறான். இப்படிப் பட்டவன் காலில்தான் நாம் விட்டம் போல் விழுந்து கும்பிட்டு பணம் கொடுக்கிறோம். இந்த சமயத்தில் குரு நமக்கு உபதேசம் செய்வதென்ன, நம்முடன் பேசுவதென்ன என்பதை கவனித் தீர்களா?

குரு : சவுக்கியமா?

சிஷ்யன் : தேவரீர் அனுக்கிரகத்தால் நாயேன் சவுக்கியம்.

குரு : உனக்கு எத்தனை குழந்தைகள் ?

சிஷ்யன் : நான்கு குழந்தைகள் .

குரு : பெண் எத்தனை ஆண் எத்தனை?

சிஷ்யன் : ஒரு பெண் மூன்று ஆண்.

குரு : ஆண்களுக்கு கல்யாணம் ஆய்விட்டதா?

சிஷ்யன் : இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகிவிட்டது.

குரு :அப்படியா, இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகி விட்டதா? அப்படியானால் அது இரண்டு குடும்பம், நீ ஒரு குடும்பம் ஆக மூன்று குடும்பமாகி விட்டது. ஆகவே மூன்று தலைக்கட்டுக்கு தலைக் கட்டு ஒன்றுக்கு ஒன்றே கால் ரூபாய் வீதம் மூன்றோன் மூன்று, மூக்கால் முக்கால் ஆக மூன்றே முக்கால் ரூபாய் அல்லவா காணிக்கை கொடுக்க வேண்டும். நீ ஒன்றேகால் ரூபாய் தானே வைத்திருக்கின்றாய் இது தர்மமா?

சிஷ்யன் :சுவாமி தேவரீர் என்னை மன்னிக்க வேண்டும். குடும்பம் இன்னும் பிரிக்கப்படவில்லையாதலாலும் அதுகளால் இன்னமும் ஒரு சம்பாதனையும் இல்லை யாதலாலும் ஒரே குடும்பமாய் பாவித்து விட்டேன்.

குரு : நீ குடும்பம் பிரித்தால் என்ன, பிரிக்காவிட்டால் என்ன. அவர்கள் சம்பாதித்தால் என்ன. சம்பாதிக்காவிட்டால் என்ன. பெரிய சுவாமிகள் காலத்திலேயே உன் பெரியோர்களால் தலைக்கட்டுக்கு ஒன்றேகால் ரூபாய் கொடுப்பதாக பட்டயமிருக்கிறது. அல்லாமலும் சாஸ்திரத்திலும் தலைக்கட்டுக்குத் தனித் தனியாய் வாங்கும்படி ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள் . அந்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

சிஷ்யன் : சுவாமி! நாயேன் தெரியாத்தனத்தினால் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். மூன்றே முக்கால் ரூபா காணிக்கையும் இந்த அபசாரத்திற்காக அபராதம் ஒன்றே கால் ரூபாயும் சேர்த்து ஐந்து ரூபாயாக வைத்திருக்கிறேன். பெரிய மனது செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குரு : நிரம்ப திருப்தி. மடம் ரொம்பவும் பழுதாயிருக்கிறது. சிஷ்யர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு வந்து பார்த்து அது எப்படி செய்ய வேண்டுமோ அந்தப்படி செய்யுங்கள் . (தன்னைத்தானே) சுவாமிகள் ரம்பவும் அதனால் அசவுக்கியப்படுகிறார்கள் .

சிஷ்யன் : ஆ ஆகா. இதோ 10 நாளில் நாங்கள் எல்லோரும் மடத் திற்கு வந்து ரிபேர் செய்துவிட்டு வருகிறோம்.

இவ்வளவுதான் குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் சம்பாஷணை. இதைத் தவிர வேறு ஏதாவது நடந்ததை நான் பார்த்ததே இல்லை.

இப்படி இருந்தால் இது ஒரு பகற் கொள்ளையா அல்லவா என்று தான் கேட்கிறோம். இம்மாதிரி குருவையுடைய நாடாவது மக்களாவது சுய மரியாதை, அறிவு, விடுதலை முதலியவைகள் அடைய முடியுமா? எனவே ஒரு கூட்டத்தார் அதாவது பார்ப்பனர்கள் பிழைக்கவே அரசியல், கடவுள் , மதம், ஆச்சாரியார்கள் ஆகியவைகள் இருக்கின்றனவே அன்றி இவை களால் ஏதாவது பலன் உண்டாகிறதா?

இம்மாதிரியான ஏமாற்றத்திலிருந்து விலகி அன்பு என்கிற உண்மை யான கடவுளை அடைய சமத்துவம் என்கிற கொள்கைகளான மதத்தையும் சுயமரியாதை என்கிற குருவையும் அடைந்தால்தான் விடுதலையோ இன்பமோ மோட்சமோ அடைய முடியுமேயல்லாமல் வேறு ஒன்றினாலும் முடியாது என்பதை உணருங்கள் .

( குற்றாலத்தில் சொற்பொழிவு தொடர்ச்சி 4.9.27 குடிஅரசு, 11.9.27 குடிஅரசு. )

                ------------------------ தந்தைபெரியார் - “குடி அரசு” - சொற்பொழிவு - 25.09.1927

12 comments:

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தை கொண்டு வந்தாவது

காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நமக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கலைஞர் தலைமையில் 'டெசோ' அமைப்பு கேட்டுக்கொண்டபடி, இப்போதாவது (காலந்தாழ்ந்தாவது) இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது கட்சியை காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை - சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர் மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும்.
உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக்கொண்டபடி செய்திருக்கவேண்டும்; இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

சென்னை
5.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76399.html#ixzz2v8tXS4bT

தமிழ் ஓவியா said...

தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி


பிற இதழிலிருந்து....!

தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி

இலங்கை சுதந்திரமடைந்த காலந் தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டி ருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பேணத் தெரியாமல் எல்லாம் தமக்கே என்ற இனவாதச் சிந்தனையுடன் ஒரு சிலரும் அவர்தம் குடும்பங்களும் வாழ முற்பட்டதன் விளைவே இப்போது சர்வதேச நெருக்கடியாகச் சூழ்ந்திருக் கிறது.

இலங்கை அரசுக்கு வெளியிடங்களி லிருந்து அழுத்தங்கள் வரும்போதெல் லாம் அது தமிழர்களாலேயே நேர்கின்ற தென்று சிங்கள மக்கள் மத்தியில் பரப் புரை செய்து அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கையின் அத்தனை ஆட்சியாளர்களும் ஒரே வகையினராகவே இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கோரிக்கைகளை எல் லாம் ஆபத்தானவையாகவே சிங்கள மக்களிடையே திரித்துக்காட்டி அவற்றை முறியடிக்கத் தமக்கே வாக்களியுங்கள் என்று கூறுவது தான் சிங்களத்தின் அரசியலாகிக்கிடக்கிறது. இப்படித்தான் இவர்கள் காலமெல்லாம் செய்து வந்தி ருக்கிறார்கள். ஜெனிவாப் பிரச்சினை களுக்கும், தென், மேல் மாகாணசபை களின் தேர்தல்களுக்கும் எவ்விதத் தொடர் பும் இல்லாதபோதிலும் ஏதோ தொடர் பிருப்பதுபோலச் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டைப் பயங்கரவாதிகளின் பிடி யிலிருந்து மீட்டெடுத்த நாயகரை இழிவுபடுத்த நாம் விடுவோமா என்ற தோரணையில் சாதாரண சிங்கள மக்கள் அரசுக்குச் சார்பாக வாக்களிக்கப் போகி றார்கள். இதனைத் தமது ஆட்சிக்குக் கிடைத்த தொடர் வெற்றி என்றும் அய்க்கியதேசியக் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியென்றும் அரசு தம்பட்டம் அடிக்கப் போகிறது. இன்றும்கூட இலங் கைப் பிரச்சினை ஜெனிவா செல்வதற்குத் தமிழர்களே காரணம் என்றாற்போல்தான் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கெதிராகச் செயற் படுகிறார்கள்; அவதூறு செய்கிறார்கள், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கிறார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங் கையைப் பிளவுபடுத்த முயல்கிறது, வடக்கு மாகாணசபை போர்க்குற்ற விசா ரணையைக் கோரும் தீர்மானத்தை நிறை வேற்றியதன் மூலம் இலங்கைக்குத் தீங்கு செய்திருக்கிறது; இலங்கையின் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்திருக்கிறது; வடமாகாணசபைத் தேர்தலை நடத்திய அதிபருக்கு எதிராகவே அது செயற்படு கிறது என்றெல்லாம் நியாயங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இலங்கை அரசு நேர்மையாகச் செயற் பட்டிருந்தால் புகலிடக்கோரிக்கையாளர் என்றொருசாரார் இலங்கையை விட்டுச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டி ராது. ஆனால், அப்போதிருந்த அரசு தமி ழர்கள் தொகை இலங்கையில் குறைந் தால்போதும் என்று சந்தோசமடைந்தது.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறை வடைவதன் மூலம் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனப்பட்டுப் போவார்கள் என்று நம்பியிருந்தது. தன்னாட்டு மக் களின் ஒரு பகுதியினர் சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று வெளியேறுவது சர்வதேச அளவில் நாட்டின் கவுரவத் தைப் பாதிக்கும் என்று அரசு எண்ணவே யில்லை.

தமிழ் ஓவியா said...


அன்று அரசு விட்ட பிழையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புலம் பெயர் தமிழர்களால் நாட்டுக்கு ஆபத் தென்று புலம்பிக் கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக் குத் தமிழர்கள் அனுப்புகின்ற பணம் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

அது இலங்கையின் பொருளாதாரத் தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்து கிறது. இப்போதும்கூட அரசு புலம் பெயர் தமிழர்களை இலங்கையில் முத லீடு செய்யத்தூண்டும் கோரிக்கையை அடிக்கடி வெளிப்படுத்தி வருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பொரு ளாதார ஆற்றல்களைப் புரிந்துகொள்ள லாம்.

போய்த் தொலைந்தால் போது மென்று எந்த மக்களை அன்றிருந்த அரசு மகிழ்ச்சியுடன் நாட்டை விட்டுத் துரத் தியதோ அதே தமிழர்கள்தாம் இன்று அரசுக்குத் தலையிடியாக மாறியிருக் கிறார்கள்.

அரசின் இராஜதந்திரத்துக்குச் சவால் விட்டுக் கொண்டு வெளிநாடுகளில் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் வடக்கு, கிழக்குத் தமிழர்களும் தனக்குப் பிரச்சி னையாக இருப்பதாக அரசு எண்ணுகிறது.
அரசியல் ரீதியாக அவர்கள் செல்வாக் குப் பெற்று விடாதபடி பார்த்துக்கொள் வதில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடிமை அரசியல் செய்யச் சம்மதித்தால் மட்டுமே தமிழர் கள் வாழலாம் என்ற மனோ நிலையைத் தோற்றுவிப்பதற்கு முயன்று வருகிறது.

ஆனால், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் அரசு என்ன துன்பம் செய்தாலும் அதனை அசட்டை செய்து தமது கொள்கையில் விடாப் பிடியாக நிற்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு தங்கள் ஆதங்கத்தை அரசுக்கும், உலகுக்கும் முன்வைத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்று சிங்கள மக்களிடம் திரித்துக் கூறியே அரசு காலத்தை ஓட்டி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது தனிநாடல்ல, தனியான ஆட்சி அலகே என்பது அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந் தும் அவ்வாறு ஒன்று உருவாகி விடக் கூடாது என்பதற்காக பிழையான பரப்பு ரைகளைத் தென்னிலங்கையில் மேற் கொண்டு நிலைமையை மேலும் சிக்க லாக்கித் தமிழர்களையும், சிங்களர்களை யும் பிரித்து ஒருவர்மேல் ஒருவர் சந்தே கம் கொள்ளும்படியான ஆட்சியை செய்துவருகிறது. தலைவர் பொன்னம் பலம் சமபலப் பிரதிநிதித்துவம் கேட்ட போது, பத்து லட்சம் தமிழர்களின் பலத்தைக் குறைக்கும் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. தந்தை செல்வா இணைப்பாட்சி கேட்டபோது இனக்கலவரங்களை நடத்தி அதில் மகிழ்ச்சி கொண்டது அரசு.

இளைஞர்கள் ஆயுதமேந்தி தமிழர் தாயகம் தமிழருக்கே என்று போராடிய போது உலகஅரசியல் ஒழுங்கைச் சாதக மாக்கிக்கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நடத்தி முடித்தது இன்றைய அரசு. இந்த நிலையிலும் தமிழர்கள் சோரா திருக்கக்கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு என்றும் மீள் கட்டமைப்பு என்றும் அய்ந்து ஆண்டு களாகப் பேசிப்பேசிக் காலத்தை அரசு வீணடித்து வருகின்ற நிலையில், தமி ழர்கள் மூன்றாந்தரப்பொன்றின் மத்தி யஸ்தத்தை நாடுவதில் தவறேதும் இருப்பதாகக் கூறமுடியாது.

அறுபத்தைந்து ஆண்டு காலமாக நியாயமான ஒரு கொள்கைக்காகப் போராடிய தமிழர்களைத் தொடர்ந்தும் புறந்தள்ளிய தோடல்லாமல் முள்ளி வாய்க்கால் அவலத்தின்மூலம் தமிழர் களின் வாழ்வைச் சிதறடித்த அரசிடம் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில்தான் தமிழர்கள் சர்வதேச உதவிகளை நாடியிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழர்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படக் கிடைத்த வாய்ப்பை அரசு தானாகவே தட்டிக்கழித்திருக்கிறது. அய்.நா. பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ- மூனின் ஆலோசனைகளையும், அறிவு ரைகளையும் கேட்டு நடக்க இலங்கை அரசு விரும்பவில்லை.

அய்.நா. நிபுணர் குழு அறிக்கை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என்பன அரசால் கவனிக்கப்படாமல் கைவிடப் பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வர வேண்டுமென்றே அரசு காலங்கடத் தியது.

இரண்டு தடவைகள் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையால் விடுக்கப் பட்ட நல்எண்ணத்தீர்மானங்களை இறை யாண்மையின் பெயரால் நிராகரித்தது. இவ்வளவுக்கும் பின்னர்தான் வட மாகா ணசபை போர்க்குற்ற விசாரணை ஒன் றைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறது. இது சிலர் வியாக்கியானம் செய்வதுபோல் வெறுமனே வடமாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானமல்ல. வடக்குத் தமிழர்களின் தீர்மானமுமல்ல. வடக்கு,கிழக்குத் தமிழர்கள் அத்தனை பேரினதும் உள்ளக் குமுறல்களை வெளிப் படுத்தி நிற்கின்ற தீர்மானம். இலங்கை அரசை நம்புவதற்கான நியாயங்கள் துளிகூட கிடையாது என்று முடிவெடுத்த தமிழர்களின் தீர்மானம். இந்தத் தீர்மானம் தொடர்பாகக் குறைகூறுவதற்கு எந்தச் சிங்கள அரசியல் வாதிக்கும் தகுதி இல்லை. உதயன் தமிழ்த் தேசிய நாளிதழ்

Read more: http://viduthalai.in/page-2/76435.html#ixzz2v8tmbQJx

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/76429.html#ixzz2v8u0Parv

தமிழ் ஓவியா said...


மத்திய ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க. என்ன செய்தது?காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தி.மு.க.வை நோக்கி சில வினாக்களை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்ததே - தமிழ்நாட்டு மக்களுக்கு எதைச் சாதித்துக் கொடுத்தார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின்மீது குற்றப்பத்திரிகை படிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அதனைக் குற்றமாகவும் கருத முடியாது.

அதேநேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக தி.மு.க. மத்தியில் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், 150 ஆண்டுகளுக்குமேலாக எதிர்பார்க்கப்பட்ட அரிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

இத்திட்டத்திற்கான செலவு ரூ.2427 கோடி. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று செல்வி ஜெய லலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

பி.ஜே.பி.கூட ராமன் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, இந்தத் திட்டமே கூடாது என்று அடம்பிடிக்கிறார்! உச்ச நீதிமன்றத்திலும் வழக்கைத் தொடுத்துள்ளார். இவ் வளவுக்கும் பல தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதும் இதே ஜெயலலிதா அம்மையார்தான் - அ.இ.அ.தி.மு.க.தான்!

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் அரசியல் பலன் தி.மு.க.விற்குச் சென்றுவிடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் முதல மைச்சர் தமிழ்நாட்டுக்கு - தி.மு.க. முயற்சியால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையே செயல்படுத்தத் தடையாக இருக்கிறார் என்பதுதானே உண்மை.

இந்தக் கேள்வியை எழுப்பும்முன்பாக, சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒன்று அவர் கண் முன்னால் நின்று மிரட்டியே இருக்கும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்கவே முடியாது.

இன்னொரு முக்கிய திட்டம் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம்வரையிலான பறக்கும் பாலம் அமைப்பு என்பது.

19 கிலோ மீட்டர் நீளம் உடைய இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்துத் திசையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகக் கன ரக வாகனங் களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்ததாக இருக்கும். சென்னை துறைமுகத்திலிருந்து பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். போக்குவரத்துத் துறை மேம்பாட்டால், பொருளாதார வளர்ச்சியும் அதனூடே பயணம் செய்கிறதென்று பொருள்.

1500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இதுவரை 900 கோடி ரூபாய் செல வழிக்கவும்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத் தையும் செயல்படுத்தக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இடைக்காலத் தடையும் பெற்றார்.

ஒப்பந்தக்காரரோ நான் செலவழித்துள்ள 900 கோடி ரூபாயை நட்ட ஈடாகத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டுள்ளார்.

திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் முதல்வர்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ் நாட்டுக்குத் திட்டங்கள் வருவதை இருகரம் கூப்பி வரவேற்கவேண்டுமே தவிர, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை முடக்கலாமா? இதனைத்தானே தமிழக முதலமைச்சர் செய்துகொண்டு இருக்கிறார்.

நாட்டு நலன் முக்கியமல்ல - அரசியல் இலாபம் இன்னொரு கட்சிக்குப் போய்விடக் கூடாது என்று நினைத்துச் செயல்படுவதற்கா ஒரு முதலமைச்சர்?

தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டதற்காக ஒவ் வொன்றையும் உருக்குலைப்பு வேலையில் ஒரு முதலமைச்சர் ஈடுபடலாமா?

புதிய சட்டமன்றக் கட்டடமாக இருந்தாலும் சரி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமாக இருந்தாலும் சரி, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டமாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்பதற்காக, அவற்றை உருக்குலைக்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நினைத்தால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது அரசியலில் பாலபாடமாகும்.

அதிகாரத்தில் இருக்கும்பொழுது, பல உண்மைகள் கண்களை மறைக்கலாம் - பாடம் படித்ததற்குப் பிறகுதான் காலங்கடந்து ஞானோதயம் பிறக்கும் என்பதைத் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/76433.html#ixzz2v8uZaMS2

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு-7


- குடந்தை கருணா

குஜராத்தில் அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி (INCLUSIVE GROWTH) இருப்பது போலவும், அதன் அனுபவம் மூலம் நாட்டிற்கே அந்த அனுபவத்தை தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், மோடி விளம்பரம் தருகிறாரே; அது உண்மையா? கடந்த பத்து ஆண்டுகளில், குஜ ராத்தில், நகர்ப்புற மக்கள் தான், அர சின் திட்டங்களால் பயன் அடைந் துள்ளனர். கிராமப்புற மக்கள் வறு மையில் தான் உள்ளனர். அதனால் தான், மனித வளர்ச்சிக் குறியீட்டில், குஜராத் 11 ஆவது நிலையில் பின் தங்கி உள்ளது. 2011 ஆம் கணக் கெடுப்பின்படி, குஜராத் கிராமங் களில், பதினோரு லட்சம் வீடுகளில், ஒன்பது லட்சம் வீடுகளுக்கு இன்ன மும் மின் வசதி இல்லை; கல்வி வசதியிலும், கிராமங்கள் பின்னோக் கியே இருக்கின்றன.

இதில், தலித்துகளும், ஆதிவாசி களுமே, அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர். குஜராத்தில் பழங்குடி மக் களில் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 65 விழுக்காடு குழந் தைகள் எடை குறைந்துள்ளனர்.

இந்திய நாடு முழுமைக்குமான விகிதம் 54.5 விழுக்காடு என்றால், குஜராத்தில் 65 விழுக்காடு. அதே போன்று, பழங்குடி இன குழந்தை கள் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். நூறு நாள் வேலை திட்டத்தில், இந்தியா முழு மைக்கும், 23 சதவிகிதம் தலித்துகள் பயன் அடைகின்றனர் என்றால், குஜ ராத்தில், வெறும் 8 விழுக்காடுதான், தலித்துகள் பங்கேற்க முடிகிறது. அதனால் தான், மோடியின் வெற்றி, நகர்ப்புறங்களில் அதிகமாகவும் கிரா மங்களில் குறைவாகவும் உள்ளது.

குஜராத்தின் முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்குமான முன்னேற் றம் என்பதாக இல்லாத ஒரு விசித்திர வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி, கிரா மங்களைச் சென்றடையவில்லை என்பதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் புறக்கணிக்கக் கூடிய வளர்ச்சி என்பதும் தான், அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டும் உண்மை என்பதை, பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளரும், லண்டனில் உள்ள இந்தியக்கழகத்தில், இந்திய அரசியல், சமூகத்துறையின் பேராசி ரியருமான கிறிஸ்டப் ஜாப்ரிலெட் ஆதாரங்களுடன் கட்டுரை வடித்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என முந் தைய பாஜக ஆட்சியில் சொல்லப் பட்டதற்கும், தற்போது குஜராத் மிளிர்கிறது என மோடி புளுகுவதற் கும் பெரிய வேறுபாடு இருப்ப தாகத் தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76443.html#ixzz2v8unX2jv

தமிழ் ஓவியா said...

நீங்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும்! திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்களிடம் தமிழர் தலைவர் வேண்டுகோள்!


திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களிடையே தமிழர் தலைவர் உரையாற்றினார்.

திருச்சி, மார்ச் 5- மாண வர்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும் என திருச்சி ஜோசப் கல்லூரி மாண வர்களிடம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அய்க்கப், அடிப்ப டைக் கல்வித்துறை, இளை ஞர் செஞ்சிலுவைச் சங்கம், மாணவர்கள் குழு ஆகியோர் ஏற்பாட்டில், மாநில அள விலான இளைஞர்கள் மாநாடு, ஜோசப் கல்லூரி யின் தேசிய இளைஞர் கட் டடத்தில், 4.3.2014 அன்று மாலை 5 மணிக்கு நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சமத்துவச் சமு தாயத்திற்கான பெரியாரின் கருத்துகள் எனும் தலைப் பில் தமிழர் தலைவர் பேசிய தாவது:

பெரியாரின் மாணவர்!

ஜோசப் கல்லூரியில் பேசு வதில் மகிழ்ச்சி அடைகி றேன். காரணம், கல்வி அறிவு இல்லாத சமூகத்தை மாற்றியதில் இக்கல்லூரிக் குப் பெரும் பங்குண்டு. இதே கல்லூரியின் பொங்கல் விழாவில் (7.1.1981) புதிய தோர் உலகு செய்வோம் எனும் தலைப்பில் நான் பேசியதையும் இங்கே நினைவு கூர்கிறேன். நல்ல சிந்தனைகளுக்கு வகுப் பறைகள் மட்டும் போதாது என, இதுபோன்ற நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்துள்ளார் கள்.

திருச்சி ஜோசப் கல்லூரி நூலகத்திற்கு இயக்க நூல்களை தமிழர் தலைவர் வழங்கினார்

என்னை அறிமுகம் செய்யும் போது, பல செய்தி கள் கூறப்பட்டாலும், பெரி யாரின் மாணவர் எனச் சொன்னதில் மகிழ்கிறேன். காரணம் அதைவிட வேறொரு சிறப்பு இருக்க முடியாது. அதே நேரத்தில் கல்லூரி முதல்வர் பேசும்போது, என்னை வாழும் பெரியார் என்று கூறினார்கள். முதல் வர் அவர்கள் என்னை மன் னிக்க வேண்டும். காரணம் பணிவோடு அதை நான் மறுக்கிறேன். ஏனெனில் பெரியார் ஒருவர் தான் பெரி யார்! எந்நாளும் பெரியாரி டம் கற்கும் மாணவராகவே நான் இருக்கிறேன்.

வரலாற்றுப் பதிவு!

திருச்சி ஜோசப் கல்லூரி என்பது மிகப் பெரிய கல்வி நிலையமாகும். ஏராளமான கிராமங்களில் இருந்து இரு பால் செல்வங்கள் பயில் கிறீர்கள். நானும் எளிய குடும்பத்திலிருந்து வந்த வன்தான். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எங் களுக்குக் கல்வி தந்தது. ஆனால் உங்கள் கல்லூரி அதற்கும் முந்தைய சிறப்பு டையது. இந்தக் கல்லூரிக்கு நான் சிறப்பு விருந்தினராக வரவில்லை. மாறாக எனது பழைய பள்ளிக்குச் சென்ற தைப் போல உணர்கிறேன்.

நான் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய இசுலாமியப் பள்ளியிலும், 6 முதல் 10 முடிய கிறித்துவப் பள்ளியிலும் பயின்றவன். கிறித்துவம் இந்த நாட்டிற்கு வழங்கிய கல்வித் தொண்டு சிறந்த வரலாற்றுப் பதிவு மற்றும் நன்றிக்குரியது. நான் 11 வயதில் பெரியார் கொள்கை ஏற்றேன். சனி, ஞாயிறுகளில் பிரச்சாரம் செய்வேன்.

திங்கள்கிழமை பள்ளிக்கு வரும்போது, எங் கள் பள்ளியின் தலைமை யாசிரியர் (அருட்தந்தை) இந்த வாரம் எந்த ஊரில் பிரச்சாரம் செய்தாய்? எனக் கேட்பார். வேறு பள்ளியாக இருந்தால் இந்தக் கருத்துச் சுதந்திரம் இருந்திருக்காது.

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகும் ஜாதி!

இன்றைக்கு இளைஞர் கள் திரளாக இருக்கின்றீர் கள். உங்கள் சக்தி சிறப்பா கப் பயன் தர வேண்டும். இளைஞர்களுக்கு அறிவுரை எனத் திருச்சியில் பெரியார் பேசிய பேச்சுப் புத்தகமாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜாதிக் கொடுமைகள் எப்படி இருந்தன என்பதை நீங்கள் அறிந்தால், கூடவே பெரி யார் ஏன் தேவைப்படுகிறார் என்பதையும் அறிவீர்கள். நாடுகள் அனைத்திலும் பணக்காரர், ஏழை இருக்கி றார்கள்.

அது மாறக்கூடியது. இந்தியாவில் மட்டுமே ஜாதி இருக்கிறது. அது மாறா தது. வாழும்போது மட்டு மல்ல, வாழ்ந்த பிறகும் மாறவே மாறாது. மனிதருக் குத் துன்பங்கள் இறப்பு வரை இருக்கும். அதன் பிறகு இருக்காது. ஆனால் மனிதன் இறந்த பிறகும், ஜாதி பிரச்சினை செய்கிறது. சுடுகாட்டில் ஜாதி கேட்கி றார்கள்? பிணத்தை மாற் றிப் புதைத்தால் அது எழுந்தா வந்துவிடும் எனக் கேட் டார் பெரியார்.

நமக்குத் தெரிந்ததும், தெரியாததும்!

சட்டத்தில் ஜாதி எனும் எழுத்து 18 இடத்தில் இருக்கிறது. ஆனால் தீண் டாமை ஒழிக்கப்பட்டது என்கிறார்கள். ஒழிக்கப் பட வேண்டியது ஜாதியே எனப் பெரியார் கூறினார். தொட்டால் தீட்டு என்கி றார்கள். மின்சாரத்தைத் தொட்டால் ஆபத்து வரும், நமக்கும் தெரியும். மனித னைத் தொட்டால் என்ன ஆபத்து வரும்? நமக்குத் தெரியவில்லை.

திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (4.3.2014)

'மனிதம்' என்ற சொல்லுக்கு நேரெதிர் சொல் இந்த ஜாதி! ஜாதிகள் குறித்துப் பெரியார் நிறைய கேள்விகள் கேட்டார். ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் பலரும் கிறித்துவம், இசு லாம் போனார்கள்.

எப்ப டிப் போகலாம் எனக் கேட் டார்கள்? போகாமல் என்ன செய்வார்கள்? ஒரே மதத் தில் இருந்து கொண்டு பழக மறுத்தாய், தொட மறுத்தாய், அடிமை என்றாய், வேசி மகன் என்றாய்... இவ்வள வுக்குப் பிறகும் யார் இருப் பார்? இறுதியாகக் கிறித்த வனை அந்நியன் என்றார் கள். எங்கள் கைகளைக் குலுக்கியும், எங்களோடு பழகியும் வரும் அவர்களா எங்கள் அந்நியர்? எனத் திருப்பிக் கேட்டார். ஜாதி இந்த மண்ணில் அவ்வளவு கொடுமைகள் செய்திருக் கிறது.

சத்யாகிரகம் செய்த நாய், பன்றி, கழுதை!

தமிழ் ஓவியா said...

இதே ஜாதிதான், இந்திய இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்க ளைக் கேவலப்படுத்தியது. உத்திரப்பிரதேசத்தில் சம்பூர்ணானந்த் சிலையைத் திறக்கக் கூடாது என்றார்கள். திறந்தவுடன் கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள். உத்தரவு ஒன்று இவர் பிறப் பித்தால், முப்படைகளும் குறிப்பிட்ட இடத்தில், உரிய நேரத்தில் போய் நிற்கும். அவ்வளவு வலிமை வாய்ந்த இராணுவ அமைச்சர், ஜாதி யின் முன் சங்கடப்பட்டு நின் றார்.

அதே அமைச்சர் தமிழ கம் வந்தபோது மகிழ்ந்து போனார் கள். பெரியார் குறித்துப் பெருமையாய் பேசினார். தமிழ்நாட்டில் மட்டுமா பெரியார் ஜாதியை விரட்டினார்? கேரளா போனார். வைக்கம் மக்களுக் கும் உரிமைப் பெற்றுக் கொடுத்தார். நீங்கள் ஏன் அங்கு போக வேண்டும்? என வர்ணாஸ்ரம எண்ணம் கொண்ட மகாத்மா கேட் டார்.

தெருவில் நாய் போக லாம், பன்றி போகலாம், கழுதை போகலாம், மனிதன் மட்டும் போகக் கூடாதா? நாயும், பன்றியும், கழுதை யும் சத்யாகிரகம் செய்தா அந்த உரிமைகளைப் பெற்றது? எனப் பெரியார் கேட்டார்.

புதியதோர் உலகம் செய்யுங்கள்!

பாதிரியார் பதவிக்கும், முல்லா பதவிக்கும் அந்தந்த மதங்களில் தடைகள் ஏது மில்லை. ஆனால் இந்து மதத்தில் அர்ச்சகருக்கு அந்த வாய்ப்பு உண்டா? வேதம் படிக்கும் எவரும் கர்ப்பக் கிரகம் போய்விட முடியுமா? யாரும் செவ்வாய்க் கிரகம் போகலாம்! கர்ப்பக்கிரகம் போக முடியுமா? ஜாதி நோய் எவ்வளவு கடுமையானது, கொடுமையானது என்பதை மாணவர்கள் அறிய வேண் டும்.

அதேநேரம் ஒரு விபத் தில் ஒரு அய்யங்கார் காயம் பட்டார் என வைத்துக் கொள் வோம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இன்ன வகை இரத்தம் வேண்டும் எனக் கேட்பார்களே தவிர, அய்யங்கார் இரத்தமா தேடு வார்கள்? ஒரு ஆதிதிராவிடர் இரத்தம் கிடைத்தாலும், அதை வைத்து உயிரைக் காப்பாற்றுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஜாதிகளால் தாங்கள் வசதி பெற்றுக் கொண்டு, பிறரைப் பிளவு படுத்துவது ஆரியத் தன்மை.

இந்த ஜாதி, பாதியில் வந்தது என்றாலும், மூளை யில் அணிவிக்கப்பட்ட விலங் காக இருக்கிறது. இந்த விலங்கை உடைத்தெறியும் வலிமை, ஈரோட்டுச் சம்மட் டிக்கு மட்டுமே உண்டு என் பதை மாணவர்கள் உணர்ந்து, புதியதோர் உலகம் செய்ய வேண்டும்! எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சி

அய்க்கப், அடிப்படைக் கல்வித்துறை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், மாணவர்கள் குழு ஆகியோர் ஏற்பாட்டில், மாநில அள விலான இளைஞர்கள் மாநாடு, ஜோசப் கல்லூரியின் தேசிய இளைஞர் கட்டடத் தில், 4.3.2014 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கி.வீரமணி அவர்கள், கல்லூரி யின் செயலர் மற்றும் முதல் வர் ஆகியோர் தமிழ்நாட்டின் கல்வி நிலைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கல்லூரிக் குறிப்பேட் டில் ஆசிரியர் தம் கருத்து களைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் விமல் ஜெரால்டு வரவேற்பு வழங்கி, சிறப்பு விருந்தினர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களையும் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். பின்னர் கல்லூரியின் செயலர் எஸ். செபஸ்தியான், முதல்வர் எப்.ஆண்ட்ரே, துணை முதல்வர் இராஜன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் அவர்களுக்கு, கல் லூரிச் செயலர் பயனாடை யும், முதல்வர் அவர்கள் நினைவுப் பரிசையும் வழங் கினர். தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் ஏராளமான பெரியார் நூல்களைக் கல் லூரி நூலகத்திற்கு நன் கொடையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு கல் லூரிகளின் துறைத் தலைவர் கள், பேராசிரியர்கள், மாண வர்கள் பங்கேற்றனர். மேலும் திருச்சி பெரியார் கல்வி நிறு வனங்களின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ப.சுப்பிர மணியம், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் மு.சேகர், செயலாளர் கணேசன், கழக மண்டலத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ்,

இலால்குடி மாவட்டச் செயலாளர் ப. ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் தி.மகாலிங்கம், வழக்குரைஞர் பூவை.புலி கேசி, சின்னப்பன், செந் தமிழினியன், பெல் இளங் கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொகுப்பு: வி.சி.வில்வம்

Read more: http://viduthalai.in/page-4/76408.html#ixzz2v8v75Qrd

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா கூட்டத்தில் எழுச்சியில்லை


தினமலர் பார்வையில்....

ஜெயலலிதா கூட்டத்தில் எழுச்சியில்லை

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், உடன்பாடு ஏற்படாததை அடுத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்படுவதற்கான, வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்திருந்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், இதுவரை, தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை.

இந்த பிடிவாத நிலைக்கான பின்னணி குறித்து, ஆளுங்கட்சி வட்டாரத்தில், கூறப்படும் தகவல்கள் வருமாறு: பெரும் எதிர்பார்ப்போடு, பிரசாரத்திற்கு கிளம்பிய ஜெயலலிதாவிற்கு, பொது மக்களிடம் போதிய வரவேற்பும், எழுச்சியும் கிடைக்கவில்லை. 2011 சட்டசபை தேர்தலின் போது, தனக்கு, மக்கள் மத்தியில், மிகப்பெரிய எழுச்சி அலை உருவாகி இருந்ததை, ஜெயலலிதா, அனுபவ பூர்வமாக உணர்ந்தார்.

தற்போது, அதே போன்ற எழுச்சி, மக்கள் மத்தியில் இல்லாததை கண்கூடாக பார்த்த பிறகு, அவரது நிலையிலும், பேச்சிலும் மாற்றம் தென்படுகிறது. பிராகசாரத்தின் எந்த இடத்திலும்,' என்னை பிரதமராக்க ஆதரியுங்கள்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. '2014இல் அமைய இருக்கும், மத்திய அரசில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் என்ற அளவில் தான் பேசி வருகிறார். முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறியுள்ளதாக, இதைக் கருதலாம். மேலும், தற்போதைய பிரச்சாரத்தில், காங்கிரசையும், தி.மு.க.,வையும் விடாமல் விமர்சிக்கும் ஜெயலலிதா, மறந்தும் பா.ஜ., வை பற்றியோ, அதன் பிரதமர் வேட் பாளர் மோடியைப் பற்றியோ, விமர்சிப்பதில்லை. எனவே, அ.தி.மு.க., அணிக்கு, பா.ஜ., வரும் நிலை ஏற்படலாம். இவ்வாறு, அந்த அ.தி.மு.க.,வின் இந்த போக்கு குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியை முடிவு செய்வதில், தமிழகத்தில், மிகப் பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், தே.மு.தி.க., தான். அந்த கட்சியுடன் நடத்திய, மூன்று மாத பேச்சில், இன்னும் இழுபறி நிலை தான் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க., அணியில் இருந்து, கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பது, எங்களுக்கு சாதகமானது தான். தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, முதலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி சேருவதற்கான முயற்சி தான் மேற்கொள் ளப்பட்டது என்பதை, அனைவரும் அறிவர். அந்த முயற்சிக்கு, மீண்டும் புத்துயிர் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் கூறின. (தினமலர், 6.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76466.html#ixzz2vEYdbHLy

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும். - (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/76467.html#ixzz2vEYurI3C

தமிழ் ஓவியா said...


மன்னிப்பா?


நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்து இருந்தால், மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என அண்மையில் முஸ்லீம் மக்களி டையே உரையாற்றிய பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். காலையில் பேசிய தனது பேச்சுக்கு, அன்று மாலையே விளக்க மும் அளித்தார். அதாவது, தனது மன் னிப்பு பற்றிய பேச்சு, குஜராத் கலவ ரத்தை ஒட்டி சொல்லப்படவில்லை என்றும், பொதுவாக சொன்னதாகவும் கூறினார். ராமன் அங்கே தான் பிறந் தான் எனக் கூறி, நானூறு ஆண்டுகால பாபர் மஜ்ஜித்தை இடித்துத் தரை மட்டம் ஆக்கிவிட்டு, அதன் தொடர்ச்சி யாக நாடு முழுவதும் அப்பாவி சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத் துகள் சூறையாடப்பட்டன.

இத்தகைய கலவரத்தை பாஜகவும், சங் பரிவாரும் செய்தது தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? 2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைச் சாக்காக வைத்து, ஏறத்தாழ இரண்டா யிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற் கும், அந்த மாநிலத்தில் அவர்கள் வாழ்வதற்குப் பயந்து ஓடுவதற்கும், மோடி தலைமையிலான அரசு செய்த அரசு பயங்கரவாதம் தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? பிப்ரவரி 2007-இல் ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த சம்ஜாயுதா விரைவு ரயில், குண்டு வெடிப்புக் குள்ளாகி, நமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 68 பேர் பலி யானார்கள்.

அந்த குண்டு வெடிப்புக்கு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனச் சொல்லப்பட்டு, அதில் இராணுவ அதிகாரி பிரசாந்த் சிரீகாந்த் புரோகித் ஈடுபட்டதை, சுவாமி அசீதானந்த் வாக்குமூலமும் அளித்தாரே; இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? செப்டம்பர் 2008-இல், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் எட்டு பேர் இறந்தனர். சாத்விக்கும், ராணுவ வீரர் புரோகித்திற்கும் இதில் தொடர்பு உண்டு என்று வழக்கு நடைபெறு கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆசியுடன் தான் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றதாக சுவாமி அசீதானந்த் பேட்டி அளித்து, அது அண்மையில் கேரவான் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே. இந்த கலவரங்கள் எல்லாம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? குற்றங்களுக்குத் தீர்வு தண் டனையா அல்லது மன்னிப்பா? மன் னிப்பு தருவதற்கு, இந்திய குற்றவியல் சட்டம் தேவாலயம் அல்ல, ராஜ்நாத் சிங். அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் கூட்டணியில் சேர்த்திட நீங்கள் மெனக்கெடும், கேப்டனுக்கு மன் னிப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜ்நாத்சிங்? அவர் காதில் விழுந்தால், உங்களை மன்னிக்கவே மாட்டார்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/76478.html#ixzz2vEZVB8Gt