Search This Blog

30.3.14

ஹிட்லரும்-மோடியும்!நரோடா பாட்டியா நினைவிருக்கிறதா?

நரோடா பாட்டியா நினைவிருக்கிறதா?
பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் மோடியை நோக்கி குஜராத் கலவரம் - சிறு பான்மையினர் 2000 பேர் படு கொலைக்குப் பதில் என்ன என்ற வினாக்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறது - இந்தத் தேர்தலில் அந்தக் கணை மோடியின் கனவைப் பொய்த் துப் போகத்தான் செய்யும்!

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட் பாளரான நரேந்திர மோடி - மக்கள் மன் றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். நாலாத் திசை களிலிருந்தும் அவரை நோக்கிக் குற்றம் சாட்டும் கணைகள் கிளம்பி வருகின்றன.

2002 குஜராத் மதக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1,70,000 வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மூன்று கிறித்துவ வழிபாட்டுத்தலங்களும் தப்பவில்லை. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங் களை நெருப்பு தின்று முடித்தது.
காவல்துறையினரே தங்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத் துக் கொடுத்துக் கொளுத்துவதற்குத் துணை நின்றனர்.

இழப்பு 1800 கோடி ரூபாய். 61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளை விட்டு வெளி யேறினர். 70 ஆயிரம் முஸ்லீம் மக்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் இருந்தனர்.

மோடி ஆட்சியில்  பொடா சட்டத்தின் கீழ் 287 பேர்கள் கைது செய்யப்பட்டனர்; 286 பேர்கள் முஸ்லீம்கள் மற்றொருவர் சீக்கியர்.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் அசோக்பட்,, ஜடேஜா ஆகிய இரு குஜராத் அமைச்சர்கள் இருந்து கலவரங்களை ந;டத்தக் கட்டளையிட்டனர் என்று காவல் துறை அதிகாரி இராகவன் தலைமையில் அமைந்த விசாரணைக் குழு அளித்த அறிக்கையில் 12ஆம் பக்கத்தில் காணப் படுகிறது.
நரோடா பாட்டியா - என்னும் ஊரில் மட்டும் 97 முஸ்லீம்கள் கொன்று குவிக்கப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணின் குடலைக் கிழித்து, சிசுவை எடுத்து நெருப்பில் போட்டுக் கூத்தாடினர்.

பட்டப் பகலிலே திறந்த வீதிகளிலே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளையெல்லாம் முன்னின்று நடத்தியவர் யார் தெரியுமா? முதல் அமைச்சராகவிருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சரே அதுவும் ஒரு பெண் - அதுவும் மகப்பேறு மருத்துவர் - பெயர் மாயா கோட்னானி (55)

ஒரு கேவலத்தை இந்த இடத்தில் சொல்ல வேண்டும் தாய், தந்தையார் முன்னிலையிலே ஒரு முஸ்லீம் பெண் நிர்வாணப்படுத்தப்படுகிறார்.
தன் மகளின் மானத்தை மறைப்ப தற்காகப் பக்கத்தில் கிடந்த ஒரு செய்தித் தாளை   எடுத்துக் கொடுக்கிறார் தாய். கொலை பாதகர்கள் அந்தத் தாயையும் கொன்றனர்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தீர்ப்பும் வந்தது. படுகொலையை முன்னின்று நடத்திய பெண் அமைச்சருக்கு 28 ஆண்டுகள் சிறை - பஜ்ரங்தள் அமைப் பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

குற்றஞ் சாட்டப்பட்ட 61 பேர்களில் 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக் கப்பட்டது. 7பேர்களுக்கு 21 ஆண்டுத் தண்டனை! எஞ்சியவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை!

மோடி முதல்வராக இருந்த ராஜ் ஜியத்தில்தான் நடந்திருக்கிறது. காவல் துறையும் முதல்வர் மோடியிடம் தானி ருந்தது. இதில் முதல் அமைச்சருக்குப் பொறுப்பு இல்லையா? இல்லை என்கிறது ஹிந்துத்துவா கும்பலும் சோ போன்ற பேர்வழிகளும்.

தெகல்கா புலனாய்வு நிறுவனம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்களிடமே பேட்டி கண்டு உண்மை களை அம்பலப்படுத்தியது.
நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது, தலையிடக் கூடாது என்று ஆணையிட்டார் முதல் அமைச்சர் மோடி என்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள்  சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப் படுத்தினார்களே!

மோடியின் ஹிந்துத்வா வெறியர்களால் குரூரமான முறையில் படுகொலை செய் யப்பட்ட காங்கிரஸ் கட்சியின்  எம்.பி. சிஹ்சான் ஜாப்ரியின் மனைவி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப் பத்திரமே கொடுத்துள்ளாரே!

வதோதரா எனும் - நகரில் பெஸ்ட் பேக்கரியில் சங்பரிவார்க் கும்பல் வெறி யாட்டத்தில் உச்சக் கட்டமாக 14 முஸ்லீம் களை பேக்கரி அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற வழக்கில் 21 பேர்களையும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்த நீதிபதி எச்.யு. மகிதா என்பவருக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - இத்தியாதி இத்தியாதி இந்த வழக்கு மேல் முறையீடு செய் யப்பட்டு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது.  நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்) அரிஜித் பசாயத் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று விமர்சனம் செய்தனரே!

இதற்குப் பிறகாவது நாகரிகமான முறையில் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் - திருவாளர் சோ ராமசாமி கல்கி இதழுக்கு (30.3.2014) அளித்த பேட்டியில் என்ன கூறியுள்ளார்? இந்தக் கலவரம் குறித்து பல்வேறு நீதிமன்ற மட்டங்களில் ஏகப்பட்ட விசா ரணைகள் நடந்துவருகின்றன. எதிர்க் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்துக் காகவும் தொடர்ந்து இதுகுறித்து மோடியை விமர்சித்து வருகிறார்கள் என்று குறிப் பிட்டுள்ளார் என்றால் இவர்கள் நர வேட்டை நரேந்திர மோடியை விடக் கொடியவர்கள் அல்லவா!

ஒரு மாநிலத்தில் இவ்வளவுப் பெரிய கலவரம் நடைபெற்று  இருக்கும்போது அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் ஒரு முதல் அமைச்சர்தானே!
உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்துக்கு மாநில அரசே காரணம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது என்றவுடன் உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்று இதே பி.ஜே.பி.யினர் குரல் கொடுக்கிறார்கள்.

அதைவிட மிகப் பெரிய கொடுமை மோடியின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதற்காக முதல் அமைச்சர் மோடி பதவி விலக மாட்டாராம். இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை வருத்தம்தான்; ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல என்கிறாரே

காரில் செல்லும்போது ஒரு நாய் அடிபட்டால் வருந்துவதில்லையா? அது போலத்தான் குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எனக்கும் - அனுதாபம் இருக்கிறது என்று சொன்னால் கொடியவன் ஹிட்லர்கூட உயிரோடு இருந்தால் மோடிக்குச் சலாம் வைத்திருப் பான்!
அரியலூரில் ரயில் கவிழ்ந்து பல நூறு பேர்கள் பலியானபோது, ரயில்வே அமைச்சர் லால் பகதூர் பதவி விலகினார்; தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஓ.வி. அளகேசனும் பதவி விலகினார். அதற்குப் பெயர்தான் அரசியல் நாகரிகம் தார்மீகப் பொறுப்பு என்பது.

ஆனால் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மனுதர்ம வாதி குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை  என்று மெழுகு ஒத்தடம் கொடுக்கிறார்.

என்னதான் சோ போன்றவர்கள் வக்காலத்து வாங்கினாலும், மோடிமீது படிந்த ரத்தக் கறையை கழுவவே முடி யாது. அமெரிக்கா போன்ற நாடுகள்கூட விசா கொடுக்காத தன்காரணத்தை ஒரு முறை நினைத்துப் பார்த்தாலே போதுமே!

2002 குஜராத் கலவரத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் மோடி வெற்றி பெற்று இருக்கிறாரே - என்று பல நேரங்களிலும் சமாதானம் சொல்லுகிறார் சோ ராமசாமி.

நரோடாபாட்டியாவி 97 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் சிறையில் இருக்கிறாரே மோடி அமைச்சரவையின் சக அமைச்சர் - அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 1,85,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பதற்காக அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்திட முடியுமா? அந்தப் படுகொலைகளை மக்கள்அங்கீகரித்து விட்டனர் என்றுதான் பொருளா?

---------------------- மின்சாரம்  அவர்கள்29-03-2014 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

56 comments:

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் பொதுவுடைமை சிந்தனையாளர் தி.க.சி மறைவு


தமிழ்கூறும் நல் லுகத்தில் எழுத் தாளர் தி.க.சி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தி.க.சிவசங்கரன். தி.க.சி என இலக் கிய வட்டாரங் களில் அறியப் பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவ சங்கரன் 25ஆம் தேதி இரவு திருநெல் வேலியில் மறைந்தார்.

அவருக்கு வயது 89. கடந்த மாத இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நிலை மோச மடைந்ததையடுத்து திருநெல்வேலியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார்.

1945லிருந்து 64ஆம் ஆண்டுவரை வங்கி ஊழியராகப் பணியாற்றிய அவர், பிறகு சோவியத் கலாச்சார மய்யத்தில் பணியாற்றியபின்னர் ஓய்வுபெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக் கிய இதழான தாமரையின் ஆசிரியராக பணியாற்றியவர். இலக்கியச் செயல் பாடுகளில் பொதுவுடைமை, முற் போக்குக் கொள் கைகளை வெளிப்படுத்தி வந்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புகளைப்பற்றி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்குவித்து வந்தவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் குறித்த விமர்சனங்களையும், கருத்து களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளவர். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்பட்டுவந்தவர். தி.க.சியின் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் கொண்டு இவரது நூலுக்கு 2000-ஆம்ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த திகசிக்கு கணபதி, வண்ணதாசன் என்கிற கல்யாண சுந்தரம், சேது, ஜெயலட்சுமி, பர்வத குமாரி, கவுரி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/77757.html#ixzz2xP25oTPj

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவைக் கண் திறக்க வைத்த எட்வர்ட் சுனோடன்

அமெரிக்க உளவுத்துறையில் பணி யாற்றி ரகசியத் தகவல்களை விக்கி-லீக்சுக்குக் கசியவிட்டதான புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்டவர் எட்வர்ட் சுனோடன். அரசும், அமெரிக்க அரசியல் வாதிகளும் சுனோடனை ஒரு கிரிமினல் குற்றவாளியாகவே சித்தரித்தனர். ஆனாலும், ஓயாத சுனோடன் உடனடியாக அமெரிக்க சிவில் லிபர்ட்டி யூனியன் என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின்சார்பில் அய்ம்பது ஆயிரம் அமெரிக்க மக்களின் ஆதரவைக் கோரியிருந்தார். அமெரிக்க மக்களின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை அமெரிக்க உளவுத்துறை கண்காணித்து பதிவு செய்துவரும் தகவல் சுனோடன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அவரை ஆதரிப்போர் பட்டியல் நீண்டு வந்தது. தற்போது சுனோடனுக்கு ஆதர வானவர் பட்டியல் 10 இலட்சத்தையும் (10,10,094) தாண்டிவிட்டது.

இந்நிலையில் உளவுத்துறை செயல் பாட்டில் மாற்றம் கொண்டுவரும் திட் டத்தை ஒபாமா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனோடன் தற் போதைய ஒபாமாவின் சீர்திருத்த நட வடிக்கையை ஓர் திருப்புமுனையானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தொலைபேசி உரை யாடல்களை அமெரிக்க புலனாய்வு நிறு வனங்கள் பதிவுசெய்வதுகுறித்து அமெ ரிக்க அதிபர் ஒபாமா புதிதாக ஓர் உத்தர வைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒட்டு மொத்த தொலைபேசி உரையாடல் களையும் பதிவு செய்வதை முடிவுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக் காவின் உளவுத்துறையின்மீதான நம்பிக் கையை மக்கள் இழக்கும் அதிர்ச்சியான நிலை ஏற்பட்டுவிட்டதையும், தனி நபர் சுதந்திரத்துக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.

உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, தனி நபரை உளவு பார்ப்பதுகுறித்த திட்டத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேறு சீர்திருத்த வரைவு, அமெரிக்காவின் சுதந்திர உரிமைச் சட்டம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டி இருக்கும் என்றனர்.

சுனோடன் கூறும்போது, தேசிய பாது காப்புச் சட்டத்தின்படி ஒட்டுமொத்த அமெரிக்கக் குடிமக்களை உளவு பார்ப் பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று நான் நம்புகிறேன். நீதிமன்றம், கட்சி மற்றும் மக்களுக்காக தனி நபர் மீதான வேவு பார்ப்பது தொடரக்கூடாது. ஒபாமாவின் உளவுத்துறை சீர்திருத்த அறிவிப்பின்மூலம் அரசமைப்புக்கு விரோதமான செயல் முடிவுக்கு வந்து சமூக நீதி வென்றுள்ளது. அமெரிக்க சுதந் திர சட்டத்தில் வரலாற்றில் சீர்திருத்தம் முழுமை அடையவில்லை என்றே காங்கிரசு கருதுகிறது. ஒபாமாவின் இந்த சீர்திருத்த அறிவிப்பின்மூலம் உளவுத் துறையின் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறை பொதுமக்களிடமிருந்து வெடித்த எதிர்ப்பின் காரணமாகவே, காரணமே இல்லாத, உண்மையைக் கூற வேண்டு மானால் தேவையே இல்லாத ஒட்டு மொத்த மக்கள் கண்காணிப்பு முறை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதா யிற்று. இது ஒரு திருப்புமுனை, தேசிய உளவுத்துறையிலிருந்து உரிமைகளை மீட்டெடுக்கும் புதிய தொடக்கமாகும். இதன்மூலம், அரசிடம் பொது மக்களுக் கான சரியான இடம் மீண்டும் பெறப்பட் டுள்ளது என்று சுனோடன் தெரிவித்தார்.
சுனோடன் கருத்துக்களால் ஒபாமா வின் கண்திறந்தது. அவர் தன் தவறை உணர்ந்து, தற்போது உலகெங்கும் உள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஹேக்கில் கூடிய அனைத்து நாடுகளின் தலைவர்கள் கூடிய அணு எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுசெய்தியாளர்களுடனான பகிர்வில் ஒபாமா தெரிவித்ததாவது: வெற்றி பெற்றுள்ளோம் என்றால், முக்கியமாக சாதாரண மக்களின் உதவியால் நாம் வெற்றி பெற்றுள்ளோமே தவிர, வெறுமனே அரசால் அல்ல. அரசு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் சந்தேகப்படும் மனப்பான்மையிலிருந்து விடுபடுவது என்பது அதுவும் ஒரே இரவில் நடக்கக் கூடியது அல்ல என்றார். மேலும் அவர் கூறும்போது, தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தை நிறுத்தவும், உளவுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள சீர்திருத்தம் செயல்படுத்தக்கூடியதே என்றும் நம்பு வதாக ஒபாமா கூறினார். தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதுகுறித்தும் , அவற்றை எப்படிக் கையாள்வதுகுறித்தும் நான் உறுதியாக உள்ளேன். அதேபோல், மக்கள் கருத்து களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/77759.html#ixzz2xP2FYkUq

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு முழக்கம் - ஏன்?

பகுத்தறிவுக் களஞ்சியம் - பகுதியில் (விடுதலை, திருச்சிப் பதிப்பு 15.3.2014) சாவில் கொட்டு ஏன்? என்னும் செய்தியைப் படித்தேன். மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்வத ஒரு மூடநம்பிக்கையல்ல. சமண, பௌத்த சமயங்கள் சார்ந்த குருமார்கள் இறப்பு என்னும் வீடு பேறு அடைந்ததால், அவர்கள் உடலை கொட்டு முழங்கக் கொண்டு சென்று, நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது அச்சமயங்களின் மரபாகும்.

துறவறம் மேற்கொண்டவர்களுக்கான இம்மரபை, இச்சமயங்கள் சார்ந்த இல்லறத்தாரும் பின்பற்றலாயினர். இதன் அடையாளமாகவே மனிதன் இறந்தவுடன் கொட்டு முழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இம்மரபு இளம் வயதினர் இறப்புகளிலும், அம்மை நோய் கொண்டோர் இறப்புகளிலும், பின்பற்றப்படுவதில்லை என்பது உணரத்தக்கதாகும். அம்மை நோயால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளின்போது நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லி விடுவதில்லை. அம்மை நோய், ஒரு தொற்று நோய் என்னும் அறிவியல் அடிப்படையே இதற்குக் காரணமாகும்.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அக்காலக் கட்டத்தில், இறப்பு நிகழ்வின் அறிவிப்பாகவும், அது எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை தொலை தூரத்தி லிருந்து வருபவர்களுக்குத் தெரிவிப்பதாகவும் அமைந்ததே இறப்பில் கொட்டு முழக்கம் செய்வதாகும். இதற்குக் கட்டி விட்ட கட்டுக் கதையே உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் ஒளிந்து இருக்கும் என்பதாகும். உயர் திணைக்குரியது இறப்பு, மரணம் இழவு என்னும் சொற்களாகும். அஃறிணைக்குரியது சாவு என்னும் சொல்லாகும். எழவு - என்பது வழூஉச் சொல், அதன் திருத்தச் சொல் இழவு என்பதாகும். - தி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page2/77760.html#ixzz2xP2i0OL6

தமிழ் ஓவியா said...


மை...தா - எச்சரிக்கை

மைதாவைப் பயன்படுத்தாதீர்! குறிப்பாக முக்கிய பரோட்டா என்பது மைதா இல் லாமல் இல்லை. தொடர்ந்து சாப்பிட்டால் இதயநோய் என்றெல்லாம் எச்சரிக்கை வெளி வந்து கொண்டே இருக்கின்றது.

மைதாவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் பன்றிகளுக்கும், வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும் உணவாகக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் இதைப் பயன்படுத்தி ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிட ஆரம்பித்து விட் டனர்.

Read more: http://viduthalai.in/page2/77758.html#ixzz2xP2sNKdm

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் மதப் பிரார்த்தனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு


மேரிலாண்ட் நீதிமன்றத்தில் அமெ ரிக்க மனிதநேய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அரசும், மதமும் தனித்தே இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் நாட்டின் அரசு வாரியக் கூட்டங்களில் இயேசு கிறிஸ்து அல்லது கர்த்தர் என்று பிரார்த்தனை இடம்பெறச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதானது நாட்டின் அரசியலமைப்பின் முதல் விதியை மீறுவதாகும் என்று வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் நீதிபதி அரசு அலுவலகங்களில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்பில் அதன் வழக்கறிஞர் மோனிகா மில்லர் இதுகுறித்து கூறும்போது, அரசு அலுவலர்கள் அடிக்கடி அரசுக் கூட்டங் களில் இயேசு அல்லது கர்த்தரை அழைப் பது, சட்டத்துக்குட்பட்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடத்தப்படலாம் என் பதை சாதகமாகக் கொண்டு, அரசு அலு வலகக் கூட்டங்களில் பிரார்த்தனை நடத் துவது அரசியலமைப்பை மீறுவதாகும். கிறிஸ்துவர் அல்லாதவர்கள் இதுபோன்ற அயோக்கியத்தனமான பிரார்த்தனைக் கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டி உள்ளது. மதத்துக்கு வெளியே இருப்பவர்களாக நடத்தப்படுவது தம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாக எண்ண வேண்டியுள்ளது என்றார்.

மேரிலாண்ட் மாவட்ட நீதிபதி உத்தரவில், கேரல் கவுண்டி பகுதி அலு வலர்கள் கூட்டங்கள் நடைபெறும்போது கூட்டத் தொடக்கத்தின்போது, குறிப்பிட்ட கடவுள் பெயரைச் சொல்லி அழைப்பது, மத நம்பிக்கையின்மீதான செயல்கள், நம்பிக்கை என்று சொல்லி நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதி லிருந்தும் மற்றும் அதில் பங்கேற்பதி லிருந்தும் அரசு அலுவலர்கள் தடை செய்யப்படுகிறார்கள். தொடக்க நிகழ்வு களில் வேண்டுமானால் அயோக்கித்தன மில்லாத கடவுளை அழைத்து கூட்டத் தைத் தொடரலாம் என்று உத்தரவிட் டுள்ளார்.

அப்பிக்னானி மனிதநேய சட்ட மய் யத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் டேவிட் நியோஸ் கூறும்போது, அரசும், மதமும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் இது மிகப்பெரிய வெற்றியாகும் என்றார். பொது நிறுவனக் கூட்டங்களில் அயோக் கியத்தனமான கடவுளை அழைப்பது கூடாது என்பதை நாட்டில் அப்பட்டமாக உடைத்து மீறிக்கொண்டுள்ளார்கள் என்று கூறினார்.

கேரல் கவுன்டி அலுவலர்கள் மூவர் அலுவலகக் கூட்டங்களில் பிரார்த்தனை குறித்து கொடுத்த முறையீட்டின்பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்க மனித நேய அமைப்பு கேரல் கவுன்டி ஆணையர்களுக்கு பிரார்த்தனை குறித்த புகார்களை கடிதம்மூலம் எழுதி அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதேபோன்ற வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கிரீஸ் நகரத் திலும் இதுபோன்ற வழக்கில் கடந்த ஆண்டில் வாதங்கள் முடிவுற்றுள்ளன. இந்த நிலையில்தான், மேரிலாண்ட் நீதிபதி உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(http://americanhumanist.org/news/details/2014-03-christian-prayers-at-carroll-county-meetings-must-en)

Read more: http://viduthalai.in/page3/77762.html#ixzz2xP39IRPL

தமிழ் ஓவியா said...


தமிழக தேர்தல் களத்தில் இரண்டு திருநங்கைகள்

அரசியல் கட்சிகள் பெரும் பான்மையாக வசிக்கும் சாதியி னரின் ஓட்டை பெற திட்டமிட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்து நிறுத்தி வெற்றியை தங்கள் இலக்காக மாற்ற திட்டமிட்டுக் கொண்டு களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். இதற்கு மாற்றாக சமூக ஆர்வலர்கள் தேர்தலில் தங்களின் பங்கை வலியுறுத்தும் வகையில் வேட்பாளர்களாக களமிறங்கி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அய் ஏ எஸ் அதிகாரிகள், தொழில் நிறுவன தலைவர்கள் என பிரபலமான முகமாக தேர்தலில் இறங்குகின் றனர்.

இவர்களில் சிலரை தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வசம் இழுத்து தங்களின் வேட்பாளராக நிறுத்தி விடுகிறது உதாரணத்திற்கு நந்தன் நீலகேணி (காங்) வி.கே.சிங் (பாரதீய ஜனதா) போன்றவர் களைக்கூறலாம்.

இவர்களின் வரிசையில் தற்போது தமிழகத்தில் இரண்டு திருநங்கைகள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

திருநங்கைகள் தேர்தல் களம் என்பது புதிதல்ல, 1967- முதல்முதலாக மராட்டிய மாநிலம் தானேமாவட்டத்தில் பீவண்டி சட்ட மன்றத்தொகுதியில் திருநங்கை ஒருவர் போட்டி யிட்டார். சுயேட்சையாக போட்டி இட்ட அவருக்கு அதிக ஆதரவும் இருந்தது, இருப்பினும் காங் கிரஸ்கட்சியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தார்.

அதன் பிறகு நகர்மன்ற தேர்தலில் இந்தியாமுழுவதும் துணிச்ச லுடன் பல திருநங்கைகள் களமிறங்கினர்.

முதல் முதலாக 1987-ல் மத்திய பிரதேசம் குவாலியர் நகர்மன்றத்தேர்தலில் ஒரு திருநங்கை வெற்றிபெற்று திருநங்கைகளுக்கான அரசியல் பாதையை திறந்து வைத்தார்.

இவரின் வெற்றி நாடு முழுவதிலும் திருநங்கைகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் திருநங்கைகள் மத்திய பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், மராட்டியம், ஒரிசா, கேரளா, பிகார், போன்ற மாநிலங்களில் களமிறங்கினார்கள்.

2000-த்திற்கு பிறகு தமிழகத்திலும் திருநங்கைகள் போட்டியிட முன்வந்தார்கள், ஆனால் முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் ஆதரவு தராத நிலை யிலும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் சரிவர சென்று சேராமையாலும், பிரச் சாரத்தின் போதே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளா னார்கள்.

கல்வி மற்றும் சமூக அக்கறையின் முன்னணியில் நிற்கும் மாநிலமான தமிழகத்தில் திருநங்கைகளுக்கு அரசியல் களத்தில் வரவேற்பு இல்லாததும், கல்வி யறிவு மற்றும் பொதுநலன் சார்ந்த பார்வையில் இன்றளவும் பிற்போக்குத் தனத்தை கடைப்பிடிக்கும் பல மாநிலங்களில் திருநங்கைகள் அரசியல் களமிறங்கி வெற்றி கரமாக செயல்படுவதும் வியப்பிற்குரிய மனநிலை மாற்றங்களாகும்.

16-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுமைக் கும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவிட்டநிலையில், கடுமையான அரசியல் களப் போட்டிகளுக்கும் மத்தியில் தமிழகத்தில் இரண்டு திரு நங்கைகள் தேர்தல் களத்தில் போட்டியிட முடிவு செய் துள்ளனர். ஒருவர் பாரதி கண்ணம்மா, மற்றொருவர் சகோதரி என்ற சமூக தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக அனைவருக்கும் அறிமுகமான முகம் கல்கி சுப்பிர மணியன், கடந்த 7 வருடங்களாக இந்தியா முழுவதிலும் சென்று திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

இந்திய திருநங்கைகள் சார்பாக அயல்நாடுகளுக்கு சென்று பல பொது நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர். கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி மு க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் போட்டியிட விரும்பிய தொகுதி கூட்டணிக்கு சென்று விட்டதால் அவரால் போட்டியிட முடிய வில்லை.

இம்முறை விழுப்புரம்(தனி) தொகுதியில் சுயேட்சைவேட்பாளராக களமிறங்குகிறார்.

மதுரையில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

இவரும் திருநங் கைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்கும் பல போராட்டங்களை சமூகத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னின்று நடத்தி யுள்ளார்.

திருநங்கைகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு மற்றும் அரசு உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சராம் செய்து வருகிறார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளா தாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவி யலில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்; அவரது வாக்காளர் அட்டையில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் வேட்பு மனுவில் திருநங்கை என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தனியார் வங்கியில் பகுதி நேர ஊழியராகப் பணிபுரிந்த இவர் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதி மக்களுக்கு தன் னலமற்ற சேவை செய்வேன் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77765.html#ixzz2xP4Hhve3

தமிழ் ஓவியா said...


நினைவுத்திறனை அதிகரிக்கும் இஞ்சி


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page4/77766.html#ixzz2xP4SHpIo

தமிழ் ஓவியா said...


இந்த ஆண்டுக்கான மதச்சார்பின்மை விருது பெறுகிறார் மலாலா


அனைத்துப் பெண்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துவருபவர் பாகிஸ்தான் பள்ளிச் சிறுமியான மலாலா. இவர் பாகிஸ்தானில் பள்ளிமீது தாலிபான் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உலகுக்கே அவர் குரல் ஒலிக்குமாறு செய்தவர். இதனால், துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்தது. மலாலா குண்டுக் காயமடைந்தபோது, அவர் மதக் கருத்துக்களுக்கு எதிராக இருந்ததால்தான் சுடப்பட்டார் என்று தாலிபான்கள் தெரிவித்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் இலண்டனில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த பின்னரும் தன் கொள்கையிலிருந்து, பெண்களுக்கு கல்வியின் அவசியத்தைக் கூறுவதி லிருந்து பின்வாங்காமல் மத அடிப்படை வாதிகளுக்கு பெரும் சவாலாக இருக் கிறார்.

இதனால், 2013ஆம் ஆண்டு மலாலாவின் 16ஆம் ஆண்டு பிறந்த நாளான சூலை மாதம் 12ஆம் நாளை அய்.நா. சபை மலாலா தினம் என்றே அறிவித்தது. உலகெங்கும் மலாலா நாள் பெண்குழந்தைகள் கல்விக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. மலாலாவைக் கவுரவிக்கும் பொருட்டு, இங்கிலாந்தை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு மலாலாவை இந்த ஆண்டுக்கான மதச் சார்பின்மை விருதுக்கு உரியவராக அறிவித்து அவ் விருதை மலாலாவுக்கு அளிக்கிறது.

இதற்கான அறிவிப்பை தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருது அளிக்கப் படுவதன் மூலம் பெண்களின் கல்வி விழிப்புணர்வு, மதச் சார்பின்மைக்கான விருதின் நோக்கத்தின்படி அனைவருக் கும் கல்வி, அதிலும் குறிப்பாக பெண் களுக்கு சம அளவிலான கல்வி அளிப்பது என்பதே மதச்சார்பின்மைக்குரிய ஒன் றாகக் கூறப்பட்டு, அதன்படி அவ்விருது மலாலாவுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து பணத்தில் ஏழாயிரம் பவுண் டுக்கான தொகையினை விருதுடன் வழங்குகிறது. பெண்கள் திட்ட நிதியாக இது பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென் றால் நான் ஒரு பெண் என்கிற தலைப்பி லான பிரச்சாரம்மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும், சிறப்பாக வாழ வும், கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மலாலாவுக்கு இவ்விருதைப் பரிந் துரைத்துள்ள தேசிய மதச் சார்பின்மைக் கான அமைப்பு பெண்கள் கல்விப் பிரச் சாரத்தை ஆதரித்ததால், முரட்டுத்தனமான இசுலாமிய மதவெறி அமைப்பின் வன் முறையை எதிர்கொண்டவர் மலாலா என்கிறது.

தேசிய மதச்சார்பின்மைக்கான அமைப் பின் தலைவர் டெர்ரி சாண்டர்சன் கூறும் போது, இங்கிலாந்தின் பெண்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பிரச்சாரத்தில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, நாங்கள் இவ்விருதை வழங்க உற்சாகத்துடன் வழங்க முடிகிறது. கல்விக்காக அனைத்து தரப்பினரையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே விழித் தெழச் செய்துள்ளார். மலாலாவின் நம்ப முடியாத எழுச்சியால் முக்கியமாக கவுரப் படுத்த வேண்டும். மதச்சார்பின்மை என்பது எப்போதுமே மதத்தின் பேரால் ஆதிக்கம், அடக்குமுறைகளைக் கடந்த, மனித உரிமைகளுக்கானதாகும். உலகெங் கும் ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறு பான்மையருக்கான நம்பிக்கையை ஏற் படுத்துவதே மதச் சார்பின்மையாகும் என்றார்.

மதசார்பின்மையை ஊக்கப்படுத்த 1937ல் ஜான் என்பவரால் இவ்விருது தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இவ் விருதை அவர் மகன் டெப்பி லாங்டன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/77767.html#ixzz2xP4rwdY8

தமிழ் ஓவியா said...


வித்தியாசமான விழா

மும்பை தாராவி பகுதியில் சினேகா என்கிற அமைப்பு பெண்கள் மற்றும் குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் பழைய சேலைகள், புதிய கலை நுட்பங் களுடன் புதுப்பிக்கப்பட்டு மறு பயன் பாட்டிற்கு வைக்கப்படுகிறது. இதற்கான விழா கலா கோடா விழா 2014 என்கிற பெயரில் நடைபெறுகிறது. டில்லி மருத்துவ மாணவி நிர்பயா 2012 நினைவாக 2013இல் பத்துப் பெண் களுடன் கூடிய அமைப்புதான் சினேகா. இதை வழிநடத்துபவர் சுசி விக்கெரி. இவர் ஆடைகள் வடிவமைப்பு நிபுணர் ஆவார். இவருடன் பேஷன் டிசைனரான நிக்கா பெல்ட்மேன் இணைந்து டிசினேகா அமைப்பை வழிநடத்துகின்றார்.

பழைய சேலைகளை சேர்த்து பெண்கள்மீதான பாலியல் வன்முறை எதிர்ப்பு சொற்களுடனும், அதற்கான சின்னங்களுடனும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆடை யும் புகழ் பெற்ற கலை, கலாச்சார, சமூக மற்றும் மத நம்பிக்கை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும்வகையிலும் வடிவமைக் கப்படுகின்றது. பெண்களை முடக்காதே, பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர் களை முடக்கு என்கிறவகையிலான சொற்களுடன் சேலைகள் வடிவமைக் கப்படுகின்றன.

இது போன்ற சொற்கள் அடங்கிய மறுபயன்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், தாராவி தெருக்களில் இருப் பதை மனசி சவந்த் நிழற் படங்கள் எடுத்து தள்ளியுள்ளார். பேஷன் ஷோக்களில் இந்த ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு சொற்கள் மட்டுமே பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் செய்கின்றனர். அமைச் சர் ஒருவர் சொன்னதுபோல் வண்ணங் களைத் தீட்டிக்கொள்ளும் பொம்மை களாக இருக்க விரும்பாமல் முகமூடிகளை அணிந்து வந்த பெண்கள், சிறுவர் பாது காப்பு குறித்த கலை நுட்பங்களுடன்கூடிய சொற்கள் அடங்கிய ஆடைகளை பிரபலப்படுத்துகின்றனர்

Read more: http://viduthalai.in/page4/77768.html#ixzz2xP51m0AY

தமிழ் ஓவியா said...


சுவையான தகவல்கள்!

இறுதி மரியாதை செலுத்த முடியவில்லையா?

அயர்லாந்தில் நெருக்கமானவர் ஒருவர் உயிரிழந்தால் பல்வேறு காரணங் களால் இறுதி மரியாதை செலுத்த முடியா தவர்களுக்காக அயர்லாந்து நாட்டில் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் இறுதி மரியாதை செலுத்தவும், அடக்கம் செய்யுமிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களைக் காணவும் அதே நேரத்தில் காணும் வகையில் நேரிடையாக ஒளிபரப்பு செய்ய ஒரு தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்கு தனியே கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் காண முடியாதவர்கள் விரும்பிக் கேட்டால் தனிக்கட்டணத் துடன் அந்நிகழ்ச்சியின் பதிவை அஞ்சல் மூலம் அனுப்பவும் உத்தேசித்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இணையதளம்மூலம் நேரடி ஒளிபரப்பும், அஞ்சல்மூலமும் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நிறு வனத்தின் உரிமையாளர் ஆலன் பவுடி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப இறுதி மரியாதை செலுத்தப்படும் நிகழ்வை தொடக்கம் முதல் அடக்கம் செய்யப்படும் கடைசி நிகழ்வுவரை பதிவு செய்து இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் மட்டும் காணத்தக்கவகையில் கடவுச் சொல் அளிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். இதன்மூலம் உரியவர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியைக் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதத்திற்குப்பிறகே தெரியவந்த ஒரு மரணம்!

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாகா ணத்தைச் சேர்ந்த ஓபெருர்செல் நகரில் 66 வயது பெண்மணி அடுக்குமாடி குடியி ருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கான அஞ்சல் பெட்டியில் அவருக்கு வந்த ஏராளமான கடிதங்கள் குவிந்து அஞ்சல் பெட்டி நிரம்பி வழிந்துள்ள நிலையிலி ருந்தது.. இதைக் கண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் உரிமையாளர் இதுகுறித்து, மற்றவர்களிடம் அவரை பற்றி விசாரித்துள்ளார். அதற்கு மூதாட் டியை பார்க்க சுமார் கடந்த சில மாதங் களில் யாரும் வரவில்லை என குடி இருப் பவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேக மடைந்த உரிமையாளர் அப்பெண் மணியின் வீட்டிக்கு சென்று குரல் கொடுத் தும், அழைப்புமணியை அடித்தும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, வேறு வழியின்றி கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள்.

வீட்டினுள் நடுக்கூடத்தில் தொலைக் காட்சி ஓடிக்கொண்டேயிருக்க, நாற்காலி யின் மீது அமர்ந்தபடி, அப்பெண்மணி அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள் ளார். மேலும் அவரது அருகே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கான நிரல் இருந்தை வைத்து, அவர் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களாகவே அந்த மூதாட்டியின் வீட்டை கடந்து செல்லும் வேளையில் துர்நாற்றம் வீசியது என்றும், அதனை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77769.html#ixzz2xP5DC8Q1

தமிழ் ஓவியா said...


பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்


அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக்கி கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இறுதிவரை இருந்துள்ளது. இன்று அந்த தீண்டாமை முள்ளினை அகற்ற 206 அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு பயிற்சி முடித்தும் அவர் களுக்கு இன்று வரை பணி வழங்கப்பட வில்லை பாதிக்கப்பட்ட 206 பேரும் வேலை வேண்டி போராட சாலையின் சந்திப்புக்கு வந்துவிட்டனர்.

அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு பிரச்சினை மட்டும் அல்ல; நம் அனைவரின் உரிமை பிரச் சினை, மான பிரச்சினை, தந்தை பெரியார் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண் டிருப்பாரோ அவற்றை செய்ய திராவிடர் கழகம் உள்ளது. 40 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அதன் நோக்கம் அழிய வில்லை, அடங்கவில்லை. இன்னும் உயி ரோட்டமாகவே இருக்கிறது. அத்தகைய போராட்டத்தை தலைமையேற்று வழி நடத்திட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஜாதி இழிவை ஒழிக்க ஜாதி பாம்புக்கு கருவறையிலே கல்லறை கட்ட நாம் ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகுவோம்!

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்! என்ற முழக்கத்துடன்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு இணைந்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி அதன் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல குறுந்தகடுகளும், புத்தகங்களும் வெளியிட்டுள்ளனர். சிறப்பாக உள்ளது. அந்த போராட்டங்களில் கலந்து கொண்டு வெளியிட்ட சிறப்பு அழைப்பாளரின் கருத்துகள் முக்கியமானதை இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில்:- வேதம் ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது மட்டும் வருகிற கடவுள், நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

வழக்குரைஞர் சி.இராஜி, மனித உரிமை பாதுகாப்பு மய்யம்

பெற்றோர்களும் நாங்களும் இப் போது திகைத்துக் கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைபடுகின்றனர். இதற்கு யார் காரணம்? உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலேயே தகுதி இல்லாமலே அர்ச்சகர்களாகி சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள் முச்சந்தியிலே நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரசோ அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று தன்னைத் தானே பாராட்டிக்கொண்டிருக்கிறது. பயிற்சி பெற்ற மாணவர் திருவண்ணாமலை ஆனந்தன்

தன்னை ஒரு பூசைக்காக அழைத்து சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும்என்றார்; ஏன் என்றால் கோயில் கும்பாபிசேகத்தில் இரண்டு பார்ப்பனர் களை அழைத்து வருவதாக ஒப்பந்தம் பேசி பணம் வாங்கி விட்டாராம்.

ஓமம் ஆரம்பிக்கும்போது எனக்கும் ஒரு சரம் பான்பராக்கை கொடுத்தார். எனக்கு பழக்கமில்லை என்று சொன் னேன். அவரோ இதைப்போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன் னார்; ஆறிப்போன காபியை ஹோமத்தில் சுடவைத்துக் குடித்தார். மறுநாள் காபி வராததால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை ஹோமத்தில் சுட வைத்து காபி போட்டு குடித்தார். இதுதான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம் என்றார்.

மாணவர் சங்க பொருளாளர் சண்முகம்.

நித்யானந்தா, சங்கராச்சாரி போன்ற வர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள் தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினு டைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் அவதாரம், உத்தமன் என்று சொல்வதெல்லாம் பொய். சிவாச்சாரி யார்கள், பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயாரா? என்றார்.
குச்சனூர் ஆதீன நிர்வாகி.

காஞ்சிபுரம் தேவநாதனும், சங்கராச் சாரியாரும் சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி மிரட்டி, கோயில் கரு வறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரி யார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்திற்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று தன்னை புகழ்பாடும் சிதம்பரம் தீட்சிதர்களோ நடராசன் தங்க கொலுசையும் அம்மன் தாலியையும் விற்றவர்கள். மது, மாமிசம் என மங்கை யுடன் சல்லாபம் நடத்துகின்றவர்கள். பிறப்பில் உயர்ந்த உத்தமர்களின் யோக் கியதைக்கு எடுத்துக்காட்டாக சில சான்று கள் மட்டும் தான். காவல்துறையிடம் பிடிபடும் வரை எல்லா அயோக்கியத் தனங்களும் செய்து கொண்டுதான் கட வுளைத் தொட்டு பூசை செய்திருக் கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப் போகாத கடவுள் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் தொட்டால் ஓடிப்போய் விடுவார், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 7.4.2000 திருவண்ணாமலை பட்டினிப் போராட்டத்தில் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம் ஜாதிவெறி, ஆணாதிக் கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோயிலில் பூசை செய்யும் அர்ச்சகர்கள் நன்றியுடன் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழ் நாட்டில்தான் நடக்கிறது.

செய்தி: வினவு இணையதளம் 17.9.2010

அர்ச்சகர் பயிற்சி பெறச் சென்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். தலைமை அர்ச்சக பயிற்சியாளர் வேதம், தியான சுலோகம், காயத்தரி மந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார். ஆகமம் கற்றுத் தரும் ஆசிரியரே வரவில்லை. பாரூ குருக்கள் உங்களுக்கெல்லாம் வேதம், தியான சுலோகங்களையோ கற்றுத்தர முடியாது என்று கூறிவிட்டார். பயிற்சியில் பார்ப்பனர்களைப் போல தோற்றத்துடன் தான் வரவேண்டும். காதில் கடுக்கன், தலையில் குடுமி, முதுகில் பூணூல், மீசையில்லாமல் வரவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு பூணூல் அணியவும் தடை விதித்தார்கள்.

தமிழ் ஓவியா said...


நீங்கள் எந்த பூசையும் செய்ய வேண் டாம். சர்க்கரைப் பொங்கல் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் அதுவே போதும் என்றனர். இந்நூலில் பக்கம்19 அரசிய லமைப்பு சட்டத்தின் சரத்துக்கள் 25 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குத்தனம், ஜாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு ஜாதி என்பது என்ன? இந்து மதத்தில் ஜாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதை விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவு களை கரண்டியில் அள்ளிப்பானையில் போட்டு, பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டம், நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது. அதன் லட்சணம் தான் இன்று பல்லி ளிக்கிறது. இந்துமத பழக்கத்தின்படி லட்டு, பூந்தி கூட அவா செய்தால்தான் லோகம் சேமமா இருக்கும்ன்னு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது. (பக்கம் 22)

அர்ச்சகருக்கு படித்தாலும் ஆலயத் திற்குள் நுழையக் கூடாது என்னுமளவிற்கு மனுதர்மம் இந்தியாவை பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது.

- அறிவழகன் உயர்நீதி மன்ற வழக்குரைஞர்

கோவிலில் தமிழ் போகலாம், தமிழன் போகக்கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும்? இந்தியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம் போல் கருவறை தீண்டா மைக்கு எதிராக மக்கள் எழும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

- முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன்

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்க கலைஞர் ஆறாவது முறையாக முதலமைச்சராக வேண்டி இருக்கிறது. அப்படியிருந்தும் இன்னும் இந்தத் திட்டம் முழுமை பெற மறுப்பது தான் வேடிக்கையான வேதனை.

ஜாதியாக பிரிந்துகிடக்கும் நம் சமூகத்தில் அனைத்து ஜாதியினரையும் கோவில் கருவறை வரை கொண்டு சேர்க்கும் இந்த சட்டம். புரட்சிகரமானது தான் - அது நடைமுறைக்குவரும் போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் உண்மையாகவே அகற்றப்படும்!

- அ.தமிழ்ச்செல்வன், விடுதலை செய்தியாளர், தருமபுரி.

Read more: http://viduthalai.in/page4/77771.html#ixzz2xP5TBoua

தமிழ் ஓவியா said...




முயற்சி - வீண் முயற்சி

முயற்சி: மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடாரைச் சார்ந்த மீனவர் ஜோஸ் சல்வடோர் அல்வ ரெங்கா வயது 37 பசிபிக் கடலில் மீன் பிடிக்க சென்றபோது, வழி தவறி சுமார் 10 ஆயிரம் கி.மீ., தொலைவை சிறிய படகு மூலம் கடந்து 13 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் கரை சேர்ந்தார். இது மார்ஷல் தீவுக்கும் - மெக்ஸிகோவுக்கும் இடையே உள்ள பகுதியில் நடந்தது. வழியில் ஆமை, மீன் உள்ளிட்டவற்றை பச்சை யாகவே உண்டு தன் சிறிய படகில் மிதந்துள்ளார்.

வீண் முயற்சி: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் குமாரகோவில் - சுப்பிர மணியன் சுவாமி கோயிலில் மாவட்ட பிராமணச் சங்கத்தினர் அதிமுக கூட்டணி 40 மக்களவை தொகுதி களிலும் வெற்றி பெறவும், ஜெயலலிதா நீண்ட நாள் வாழவும் ஆதித்ய ஹநதயம் ஹோமம் நடத்தினார்களாம். காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற இதில் ஒரு லட்சம் மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை நடைபெற்ற தாம். பிராமண சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்களாம்!
- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5fpoe1

தமிழ் ஓவியா said...


எல்லாம் கடவுள் செயலா?
1. மனிதன், மான், ஆடு, மாடு, பறவைகளை அடித்துப் பச்சையாகச் சாப்பிட்டான்.
2. துணியில்லாத வாய் பேசாத மிருகமாக வாழ்ந்தான்.
3. கலவி செய்து குட்டிகள் போட்டான். 4. மலம் கழித்தான்.
5. மூத்திரமிட்டுக் குடித்தான். 6. நோய்வந்து தீர்வைக் கண்டான்.
7. கிணற்றில் தவறி விழுந்து நீச்சலடித்து மேலே வந்தான்.
8. கீழே விழுந்து கைகால் ஓடிந்து நொண்டியானான்.
9. வாழ வழி அறியாதவன், தற்கொலை செய்து கொள்ளுகிறான்.
10. கோயில் சென்று விபத்தில் சாகிறான்.
11. கொலை, கொள்ளை அடிப்பதும், பொய்யும் புரட்டும் செய்கிறான்.
12. சிலை செய்வது, கோயில் கட்டுவது, தூபம் போடுவது, படையலிட்டு ஆடு, கோழிகளைப் பலியிட்டு சாப்பிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் குளம் சென்று கோரிக்கை வைப்பது.

இவை எல்லாம் கடவுள் செயலா?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/77775.html#ixzz2xP6Q8wq1

தமிழ் ஓவியா said...


நாத்திகர்கள் மனிதாபிமானமுள்ளவர்கள்

மும்பையில் பகத்சிங் கின் மறைவுநாள் அன்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்த சுமார் 250 நாத்திகர்கள் ஒன்று சேர்ந்து மதநம்பிக்கை காரணமாக மக்களிடையே காணப் படும் சகிப்புத் தன்மை அற்ற மனநிலையை மாற்ற விழிப்புணர்வு பேரணி ஒன்றுநடத்தினர்.

இந்த பேரணியின் ஒருங் கினைப்பாளரான சஞ்சய் சாவர்க்கர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது மதச்சகிப்புத்தன்மை என்பது தற்போது குறைந்து வருகிறது. மக்களிடையே நாத் திகர்கள் என்றாலே சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் போன்ற ஒரு பார்வை மக்களிடையே எழுகிறது. நாத்திகர்கள் மனிதாபிமான அடிப்படையில் செயலாற் றுவார்கள். அவர்கள் மதங்களையோ சமூகங்களையோ பார்த்து தொண்டாற்ற மாட்டார்கள். பகத் சிங் நாத்திகர்களுக்கு ஒரு தலைசிறந்த உதாரணமாக உள்ளார். அவர் எந்த ஒரு நிமிடத்திலும் தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக அந்நிய சக்திகளிடம் அடிபணியவில்லை என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் புகழ்பெற்ற நாத்திகப் போராளி நரேந்திர தாபோல்கர் அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக் கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை காவல்துறையினர் குற்றவாளி யாரென்று கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் நாத்திகர்களின் பேரணி மராட்டிய மாநில அரசை நரேந்திர தாபோல்கர் வழக்கில் விரைந்து விசா ரணை செய்து கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத் தும் விதமாகவும் பேரணி நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதி லளித்த புகழ் பெற்ற முற் போக்குச் சிந்தனையாளர் அசுத்கோட் போலே கூறியதாவது பொது மக்கள் என்னிடம் நீங்கள் கட வுளுக்கு பயப்படுகிறீர்களா? இல்லையா? என்று கேட் கிறார்கள். நான் கூறுவ தெல்லாம், கட வுளுக்குப் பயப்படுவதும், பயப் படாததும் அவசியமற்ற ஒன்று; ஆனால் கடவுள் பெயரைச்சொல்லி திரிபவர்க ளிடம் நான் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பேன் என்று கூறினார். பேரணியில் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தின் தலைமை வடிவமைப் பாளர் அசுத் கோட்போலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய முற்போக்கு சங்கத் தின் தலைவர் நரேன் நாயக், போன்றோர் கலந்துகொண்டனர். சி.பி.அய் விசாரணை

இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நரேந்திர தாபோல்கரின் மகள் முக்தா தாபோல்கர் தன்னுடைய தந்தையின் கொலைவழக்கை சி.பி.அய் க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய மனுவில் அவர் கூறியதாவது என்னுடைய தந்தை கொலை செய்யப் பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் காவல்துறை இதுவரை குற்றவாளியை அணுகவில்லை, கொலைவழக்கின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, ஆகையால் எனது தந்தை கொலை வழக்கை சி.பி.அய்யிடம் ஒப் படைக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மராட்டியமாநில உள் துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page4/77779.html#ixzz2xP6khUJg

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வுக்கான வயது வரம்பு தளர்வு


குடிமைப் பணி தேர்வுகள் எனப் படும் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். தேர்வு களை முன்பு பொதுப் பிரிவினர் 30 வயது வரை தான் எழுத முடியும். அது போல் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தால் 4 முறை மட்டுமே இவர்களால் தேர்வு எழுத முடியும்.

தற்போது மத்திய அரசு இந்த விதிகளில் தளர்வு செய்து 32 வயது வரை பொதுப் பிரிவினர் இந்தத் தேர்வுகளை எழுதலாம். தோல்வி அடைந்தால் 6 முறை தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. இது போல் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் 33 வயது வரையிலும்? 7 முறை இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு 35 வயது வரை இவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். தோல்வி அடைந்தால் அதிகபட்சம் 9 முறை எழுத லாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டு மானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயது வரை 9 தடவை இந்தத் தேர்வினை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். அதே சமயம் எஸ்.சி.எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 47 வயது வரை எத்தனை முறை வேண்டுமா னாலும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page4/77780.html#ixzz2xP6uRb4v

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையைப் பரப்புவதா? அமிதாப்பச்சன் படத்துக்கு எதிர்ப்பு

டில்லி, மார்ச் 29- மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தின்கீழ் அமிதாப் பச்சன் நடித்துள்ள தொலைக் காட்சி விளம்பரப் படத் தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலை யத்தில் ஹேமந்த் பாட்டீல் என்பவர் புகார் கொடுத் துள்ளார்.

சிறுவர்கள் அருந்தும் ஊக்க பானத்துக்கான விளம் பரத்தில் அமிதாப்பச்சன் பேய் வேடத்தில் நடித் திருப்பதன்மீது உடனடி நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதி பதி சீதா குல்கர்னி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமிதாப் பச்சன் ஏற்கெ னவே பூட்நாத் என்கிற பேய் படத்தில் நல்லது செய்கிற பூதமாக நடித்தி ருப்பார். அதேபோல் மீண்டும் அடுத்த மாதத்தில் பூட்நாத் ரிடர்ன்ஸ் அதாவது மீண்டும் பூட்நாத் என்கிற படம் வெளியாக உள்ளது. இதனிடையே தொலைக் காட்சி விளம்பரப் படத்தில் பூதமாக நடித்துள்ளார். இது குறித்து, வழக்கு தொடுத் துள்ள பாட்டீல் கூறும் போது, இந்த விளம்பரம் பேய், ஆவி மற்றும் அவற் றின் அற்புதங்கள் என்பன வற்றை திணிப்பதாகும். மூட நம்பிக்கையையும், ஆதிக்க மனப்பான்மையை யும் பரப்பும் நோக்கில் உள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் புகாரைப் பெற மறுத்தனர். ஆகவே, நீதிமன்றத்தை நாட வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இந்த விளம்பரம் குறித்து எவ் விதத்திலும் பொறுப்பேற்காமல் தொலைக்காட்சியில் விளம் பரத்தை வணிக நோக்கில் ஊக்க பான நிறுவனம் ஒளிபரப்பி உள்ளது என்று கூறினார். இவ்வழக்கு விசார ணையை நீதிபதி சீதா குல் கர்னி அடுத்த மாதம் 18ஆம் தேதியில் வைத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77800.html#ixzz2xP89p8XV

தமிழ் ஓவியா said...

ஒப்புதல் வாக்கு மூலமோ!

நாட்டில் ஊழல் செய்யாதவர் யார்? எந்தப் பணிக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் வாங்காதவர் யார்? என்ற கேள்வியை திருவாரூர் பொதுக் கூட்டத் தில் காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல் போன்ஸ் கேட்டுள்ளார். நல்ல கேள்விதான் ஒப்புதல் வாக்கு மூலமோ!

மன்னிப்பு இல்லை

திமுகவிடம் பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இதற்கு என்ன பொருள்?

ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தமிழக மீனவர்கள் பிரச்சினை காங்கிரஸ் அர சாங்கம் நடந்து கொள்ளும் போக்கை தமிழர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்ற பொருள்! மக்களவைத் தேர்தல் கொடுக்கும் சரியான பாடத்திற்குப் பிற காவது திருந்துவார்களா என்று பார்ப்போம். குறிப்பு: ஜெனிவா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே - அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுவாரா ஞானதேசிகன்?

Read more: http://viduthalai.in/e-paper/77807.html#ixzz2xP8MYUJl

தமிழ் ஓவியா said...


இனமான பேராசிரியரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களை இன்று காலை 11.30 மணி அளவில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து, இயக்கம் அண்மையில் வெளியிட்ட நூல்களை அளித்தார். நூல்களைப் பெற்றுக் கொண்ட இனமானப் பேராசிரியர் அவர்கள் அடுத்து ஒரு நூற்றாண்டுக்குத் தேவையானதை நீங்கள் செய்து வருகிறீர்கள் என மனந் திறந்து பாராட்டினார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை - 29.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77806.html#ixzz2xP8YPtRm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் புறந்தள்ளி

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு

வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் காங்கிரஸ் தொடர்ந்து, அவர்களுக்கும் அவர்களது தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கும், உலக மனிதநேய, மனித உரிமைப் போராளிகளின் உணர்வுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக் குழு மூலம் விசாரணை ந;டத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக புறக்கணிக்கிறோம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இராஜபக்ஷே அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளது; காங்கிரசின் கை ரத்தக் கறை படிந்த கையாகவே ஆக்கிக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையா?

1. இதைவிட வேதனையும் வெட்கக் கேடானதுமான செய்தி நமக்கு வேறில்லை. கேட்டால் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகுமாம்! அப்படியானால் இதற்குமுன் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டார்களே (அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் இன்றளவும் என்ற போதிலும்) அது தலையீடு அல்லவா?

2. அந்த நாட்டிற்கு அமைதிப்படை (IPKF) என்ற பெயரால் நம் நாட்டு இராணுவத்தை அங்கே அனுப்பி, இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கை நிலைப் பாட்டிற்கே முற்றிலும் எதிரான நிலையை எடுத்து, மிகப் பெரிய அவமானத்துடன் திரும்பியதன் மூலம் நமது பெருமைமிக்க இராணுவத்திற்கு அவப் பெயர் ஏற்பட வில்லையா?

சிங்கள இராணுவக்காரன் ராஜீவ் உயிருக்குக் குறி வைக்கவில்லையா?

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட கையெழுத்திடச் சென்ற நம் நாட்டுப் பிரதமர் இராஜீவ்காந்தி (Guard of Honour) இலங்கை இராணுவ மரியாதையைப் பெற சென்றபோது விஜயமுனி விஜயந்த ரொஹன்ன டிசில்வா என்ற சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் பிரதமர் ராஜீவை அடித்துக் கொல்ல முயன்றபோது, அனிச்சையாக அவர் குனிந்ததால் தப்பித்தார் என்ற நிலையில், பிறகு அதே சிங்களவன் தேர்தலில் நிற்கவில்லையா?

இதைவிட இந்திய இறையாண்மையைக் கேவலப் படுத்திய அசிங்கம் வேறு உண்டா? அப்படிப்பட்ட சிங்கள அரசுக்குத் துணை போகலாமா?

இதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக மறந்து விட்டது போலும்!

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்தவர்களுக்கு மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்

90,000 தமிழச்சிகள் வாழ்விழந்து, விதவை நிலைக்குத் தள்ளப்பட்டனரே! பல லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையை - அது (No Fire Zone) துப்பாக்கி குண்டு பொழியாத பாதுகாப்பான பகுதி என்று அப்பாவி (ஈழ) தமிழ்க்குடிகளை நம்ப வைத்து, ஒன்று திரட்டி, ஒரே முகாமுக்குள் நிறுத்தி, கொத்துக் குண்டுகளைப் போட்டு குழந்தைகள், முதலியவர்களைக் கொன்றதை போர் நடந்தால் இப்படி அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜமே என்று முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் அம்மையார் கூறியதுபோல, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்தும் வகையில்தானே ஜெனிவாவில் வாக்களிக்க மறுக்கப்பட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலை தமிழகத்துத் தேர்தலில் ஏற்படப் போகிறது சில நாள்களில் - மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
29.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77794.html#ixzz2xP8oFgDN

தமிழ் ஓவியா said...


சொன்னது யாராம்?


தந்தை பெரியாரும், பேரறி ஞர் அண்ணாவும், எம்.ஜி. ஆரும் தமக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின்மீது அபரிமிதமான பாசமும், நம்பிக்கையும் வைத்த தலை வர்கள் அவர்களது புனித மான அந்த வழிகாட்டு தலைத்தான் நானும் பின் பற்றிக் கொண்டிருக்கிறேன்.

- முதல் அமைச்சர் புரட்சி தலைவி அம்மா (Dr. நமது எம்.ஜி.ஆர். 27.3.2014 பக்.3)

அடேயப்பா - பாருங்கய்யா! தந்தை பெரியார் கொள்கையையும், அறிஞர் அண்ணாவின் கோட்பாடு களையும் மண்சோற்றில் போட்டுப் புதைத்து விட்டு, யாக நெருப்பில் போட்டுக் கொளுத்தி விட்டு, அவர் களின் பெயர்களை உச்சரிப் பதற்கு உண்மையிலே தைரியம் தான் வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/77790.html#ixzz2xP8xvKBp

தமிழ் ஓவியா said...


அறிவு நாணயம் இல்லை

கேள்வி: அரசியல் சட்டம் 376, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க., தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே?

சோ ராமசாமி: இந்தச் சர்ச்சைக்குரிய பிரச் சினைகளைப் பற்றி பா.ஜ.க. பல முறை சொல்லி யிருக்கிறது. பா.ஜ.க., தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கை எடுப்போம் என்றும்; கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்துப் பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க. நிலைப்பாடு. (கல்கி 30.3.2014 பக்.26).

இதன்பொருள் என்ன? பெரும்பான்மை பெறுகிறதா? கூட்டணி ஆட்சி நடத்துகிறதா? என்பது அல்ல பிரச்சினை. இந்த மூன்று கொள்கைககளும் பா.ஜ.க.வின் கொள்கை என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

272 விஷன் என்று சொல்லித்தானே புறப்பட் டுள்ளனர். பெரும்பான்மை பெற வேண்டும் என்று தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத் தோடுதான் போட்டியிடுகிறார்களா?

பெரும்பான்மை பெற்றதாக வைத்துக் கொண்டாலும் அந்த வெற்றியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கும், சக்தியும் மிக முக்கியமானதுதானே!

இந்த மூன்றிலும் உடன்பாடு இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது. அந்தப் பலத்தால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது; பெற்றுக் கொண்ட பிறகு மேற்கண்ட கொள்கைகளை நிறைவேற்றுவது என்றால் இதில் அறிவு நாணயம் கொஞ்சமேனும் இருக்கிறதா? ஏமாற்றும் தந்திரம் தானே புதைந்து கிடக்கிறது!

பிஜேபி விரும்பும் இந்த மூன்றையும் கூட்டணிக் கட்சிகள் விரும்பாத நிலையில், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு விட்டு, அவர்கள் விரும் பாதவற்றை நிறைவேற்றுவது அசல் மோசடியல்லாமல் வேறு என்னவாம்?

பா.ஜ.க.வினரின் இந்தத் திட்டம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்; இப்படிப் பதில் சொல்லும் திருவாளர் சோ ராமசாமி இது பற்றி என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? இந்த மூன்றிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் பெரும்பான்மை பெற்றால் இவற்றை நிறைவேற்றத்தான் செய்வோம் - எனவே இந்த எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர்கள் மட்டும் எங்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று கூட்டணி சேருமுன் நிபந்தனையாக பிஜேபி வைக்க முன் வர வேண்டாமா? அப்படி முன் வைப்பதுதானே அறிவு நாணயமானது என்று கருத முடியும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்; பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.க.வாக இருக்கட்டும்; பா.ம.க., மதிமுக வாகட்டும் பா.ஜ.க.வின் இந்த ஏற்பாட்டை, திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஏதாவது உறுதி மொழியைத்தான் பெற்றுள் ளார்களா? பெறவில்லை என்றால் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

அப்படி செய்யவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

எங்களுக்குப் பதவி தான் முக்கியம்! கொள்கை யாவது மண்ணாங் கட்டியாவது, என்பதுதான் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரும் கட்சிகளின் நிலைப்பாடு என்பது நிர்வாணமாகத் தெரிந்து விடவில்லையா?

இப்படி ஒரு கூட்டுக் களவாணி நடைபெற்று வருவதை வாக்காளர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பி.ஜே.பி.க்கு மட்டும்தான் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருத வேண்டாம்; பிஜேபியோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை வாக்காளர்ப் பெரு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவுப் பெரிய சதியை பி.ஜே.பி.யும் அதனோடு கைகோக்கும் கட்சிகளும் மறைத்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடத் திட்டமிட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால், இந்தக் கூட்டுச் சதிகாரர்களுக்குச் சரியான பாடம் புகட்டிட நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/77814.html#ixzz2xP9JVRSD

தமிழ் ஓவியா said...


முக நூலில் எதிரொலியின் சிறப்பான ஒரு பதிவு


- எதிரொலி


நிபந்தனை விதித்து அதை ஏற்றால் காங்கிரஸை ஆதரிப்போம் என்று சொல் லும் திமுக ஒழிக!

நிபந்தனையே இல்லாமல் மோடியை ஆதரிக்கும் ஜெயலலிதா வாழ்க!!

ஏய் நானும் நடுநிலை! நானும் நடு நிலை!!

நல்லாபாத்துக்கிடுங்க,

நானும் நடுநிலையாயிட்டேன்???????

இந்திய/தமிழ்நாட்டு ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் என்பவர்கள் விசித்திரமானவர்கள். அவர் களைப் புரிந்துகொள்ளவே முடியாது.

இன்றைய நிலையில் இந்திய/தமிழ் நாட்டு ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் இரண்டு விஷயங்களில் ஏறக்குறைய ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள்.

1. இந்த தேர்தலில் காங்கிரஸ் வர லாறுகாணாத படுதோல்வி அடையப் போகிறது. கண்டிப்பாக காங்கிரஸ் தலை மையில் அடுத்த ஆட்சி அமையப் போவது இல்லை.

2. தமிழ்நாட்டில் அதிமுக தனியாக நின்றாலும் அந்த கட்சிதான் அதிக இடங்களைப் பிடிக்கும்.

இந்தஇரண்டுநிலைப்பாடுகள்,முன் முடிவுகளைத்தான் இந்திய/தமிழ்நாட்டு ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் எல்லோருமே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு வடிவங் களில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கருத்தை, முன் முடிவை எதிரொலி ஏற்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஒரு வாதத்துக்காக இந்த கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வோம். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டால், கீழ்க்கண்ட இரண்டு முடிவுகளையும்நீங்கள் ஏற்கவேண்டும்.

1. மத்தியில் அடுத்து அமையப்போகும் ஆட்சி என்பது காங்கிரஸ் அல்லாத ஆட்சியாகத்தான் அமையும்.

2. அப்படி மத்தியில் அமையப்போகும் அடுத்த ஆட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுகவுக்கு எந்த பங்களிப்பும் இருக்காது. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியை நிர்ணயிக்க கூடிய தமிழ் நாட்டின் அரசியல் கட்சி என்பது அதிமுக மட்டுமே.

அப்படியானால், இந்திய/தமிழ்நாட்டு ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் எல்லோருமே என்ன செய்யவேண்டும்? யார் மீது தமது கவனத்தை செலுத்தவேண்டும்? யாரு டைய பேச்சுக்களை, தேர்தல் பிரச் சாரத்தை அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்? மத்தியில் காங்கிரஸும், தமிழ்நாட்டில் திமுகவும் வெற்றிபெறாத அரசியல் சக்திகள் என்று முடிவுகட்டிய பிறகு இவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அரசியல் சக்திகள் எவை? மத்தியில் காங்கிரஸுக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் தேசிய கட்சியான பாஜகவும் தமிழ்நாட்டில் அதி முகவும் தானே? அவர்களின் பிரச்சாரம், அதில் இருக்கும் சாதக பாதகங்கள்: அவர்களின் வெற்றி தோல்விக்கான வாய்ப்புகள் குறித்துத் தானே இவர்க ளெல்லாம் மேலதிக கவனம்செலுத்தி பார்க்க வேண்டும்? விமர்சிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்?

அப்படியெல்லாம் செய்யாமல், தமிழ் நாட்டில் திமுக பற்றிமட்டுமே கவலைப் படுவதும்,கவனம் செலுத்துவதும் ஏன்? இவர்களின் பார்வையில் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோற்கப்போகும் கட்சியான திமுகவில் இருந்து அழகிரி போனால் அதற்கு ஒரு நாளல்ல, வாரக்கணக்கில் பிலாக்கனம். அடுத்து குஷ்பு ஏன் பிரச்சாரத்துக்கு போக வில்லை என்று அகழ்வாராய்ச்சி. அதுவும் முடிந்து, குஷ்புவும் தேர்தல் பிரச்சாரத் துக்கு போவதாக தெரிந்த பிறகு, காங் கிரஸை திமுக ஆதரிக்குமா ஆதரிக்காதா என்று ஆய்வு.


தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிராக செய்த துரோகங்களை கடுமையாக திட்டிய பிறகு அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி மனம் திருந்தி வருத்தம் தெரிவித் தால் தேர்தலுக்குபிறகு அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்கிற தொனியில் கருணாநிதி தனது முதல் பிரச்சார கூட்டத்தில் சொன்ன ஒற்றை வாசகத்தை பிடித்துக்கொண்டு, ஆஹா திமுக காங்கிரஸ் கூட்டணி வந்தே விட்டது என்று அதற்கு ஒரு எசப்பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இந்த இந்திய/தமிழக ஊடகங்கள், அரசியல் விமர் சகர்கள், அறிவுஜீவிகளையெல்லாம் பார்த்தால் எந்த வாயால் சிரிப்பது என்று தான் எதிரொலிக்குத் தெரியவில்லை. உங்கள் பார்வையில் மத்தியில் தோற்கப்போகும் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் வெற்றிபெற வாய்ப்பே இல்லாத திமுகவும் கூட்டணி அமைத் தால் என்ன? அமைக்காவிட்டால் என்ன?

உங்கள் பார்வையில் தோற்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவ்வளவு விலாவாரியாக ஆராயும் ஆய்வாளர் களே,உங்கள்கணிப்புப்படி வெற்றி பெறப் போகும் அதிமுக தலைவி ஜெயலலிதா, இந்தநாள் வரை நரேந்திரமோடியை ஏன் விமர்சிக்க மறுக்கிறாரே அது ஏன்?

அதே போல தமிழ்நாட்டு பாஜகவும் சரி, அகில இந்திய பாஜகவும் சரி ஒரே ஒரு ஆள் கூட தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவையோ, அதிமுகவையோ இதுவரை ஒரே ஒரு சொல் எதிர்த்து பேச வில்லையே அது ஏன்?

அதைப்பற்றி பாஜக கூட்டணியில் இருக்கும் மானஸ்தர்கள் ஒருவர் கூட கேள்வி கேட்கவில்லையே அது ஏன்? இது என்ன கூத்து?

அடுத்த பிரதமர் பதவிக்காக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் மோடியும், அடுத்த பிரதமர் நானே என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் இந்த நிமிடம் வரை ஒருவரை ஒருவர் விமர்சிக்கவே இல்லையே அது என்னவிதமான அரசியல்? அதை ஏன் பாஜகவுக்குள் இருக்கும் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட ஒரு அரசியல் கட்சித் தலை வர்களோ, அந்தகட்சிகளின் தொண்டர் களோ கேள்வி கேட்கவில்லை? அதே போல இந்திய/தமிழ்நாட்டு அறிவு ஜீவிகளோ, அரசியல் விமர்சகர்களோ, திறனாய்வாளர்களோ கூட பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நிலவும் இந்த ஆரோக்கியமற்ற அரசியல் ரகசிய உறவு குறித்து பேச மறுப்பது ஏன்?

அதென்ன, சீரங்கத்து செல்வியும், வாரணாசி வாலிபனும் பரஸ்பர புரிந்து ணர்வுடன் ஒருவரை பற்றி மற்றவர் விமர் சிக்காமல் இருந்தால் அது நல்ல அரசியல்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மீதான தனது விமர்சனம் என்ன என்பதை பகிரங்கமாக மேடையில் சொல்லி, அந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி முகம் கொடுத்து தன்னை திருத்திக்கொண்டு தம்மிடம் ஆதரவு கேட்டால் அப்போ தைய நிலையில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க திமுக தயார் என்று வெளிப் படையாக சொல்லிவிட்டு ஆத ரவளிக்கும் திமுகவின் செயல் கெட்ட அரசியலா?

இந்திய/தமிழ்நாட்டு அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், திறனாய் வாளர்களின் அளவுகோல்கள் தான் என்ன?

ஏற்கெனவே, இந்திய/தமிழ்நாட்டு அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள் எல்லோருமே வாரிசுஅரசியல் என்கிற வார்த்தைக்கு விசித்திரமானதொரு அளவுகோலைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது, திமுக தலைவர் மு கருணாநிதியின் இரண்டு மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள் செய்வது மட்டுமே வாரிசு அரசியல் என்பது இவர்களின் வாதம்.

ஆனால் அதிமுக நிறுவனர் எம் ஜி ராமச்சந்திரனுக்காக உடன்கட்டை ஏற நினைத்தேன் என்று பகிரங்கமாக சொன்ன ஜெயலலிதா எம் ஜி ராமச் சந்திரனின் என்னவிதமான வாரிசு என்று கேட்டால் இவர்களின் மேல் வாய் கீழ்வாய் இரண்டுமே கப்சிப்பென மூடிக்கொள்ளும்.

இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கூட கருணாநிதி கடைப்பிடிக்கும் பகிரங்க மான வெளிப்படையான அணுகுமுறை மிகப்பெரிய தவறு; அதற்கு நேர் மாறாக செல்வி ஜெயலலிதாவும், நரேந்திர மோடியும் கடைப்பிடிக்கும் கேவலமான ரகசிய உடன்பாடுகளே சரி என்று சொல்வார்களோ?

ஜாதிக்கொரு நீதி என்கிற மனு தர்மம், இன்றளவும் அழியவில்லை என்பதையே திமுக அதிமுக தொடர்பில் இந்திய/தமிழ்நாட்டு அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், திறனாய்வாளர் கடைப் பிடிக்கும் இரட்டை அளவுகோல்கள் மீண்டும் ஒருமுறை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. இல்லாவிட்டால் இவர் களின் இந்த கேடுகெட்ட இரட்டை அளவுகோல்களுக்கு வேறு என்னதான் காரணம்?

முன்பு முதுகில் இருந்த பூணூல், இன்று பலருக்கு மூளைக்குள் போய்விட்டது என்பது தான் கவலைக்குரிய விஷயம்; அதிலும் பூணூல் போடக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த வர்களின் மூளைகளுக்குள்ளும் இந்த பூணூல் புகுந்து விட்டது என்பது கூடுதல் கவலை!!

Read more: http://viduthalai.in/page-2/77819.html#ixzz2xP9W60A0

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


சென்னை, மார்ச் 29- ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/77820.html#ixzz2xP9lg9mE

தமிழ் ஓவியா said...


அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் காங்கிரசின் செயல்பாடு:

குப்புறத் தள்ளியதோடு குழியையும் பறித்து விட்டது குதிரை!
தி.மு.க. தலைவர் கலைஞர் வேதனை!


சென்னை, மார்ச் 29 - மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கத் தவறிவிட்டது; இது குதிரை குப்புற தள்ளியதோடு அல்லாமல் குழியைப் பறித்த கதையாகும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. தீர்மானம் நிறை வேறியதால் ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் நமக்கு ஓரளவு மன நிறைவு என்ற போதிலும், அந்தத் தீர்மானத் தின்போது இந்தியா கடைப் பிடித்த அணுகு முறை,

தமிழகத்திலே உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத் தையும் மீண்டும் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தி யுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, அதாவது 23-3-2014 அன்று நான் விடுத்த வேண்டுகோள் அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில், சுதந்திரமான, நம்பகத் தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டு மென் பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம். அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ள போதிலும், அது உலகத் தமிழர்களின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவேற்று கின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை வேண்டுமென் பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத் துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் தாக்கல் செய்யப் பட்டபோது, அதனை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையில் தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இப் போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப்பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கையில் தமிழ் இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின் போது, ஈழத் தமிழர்களின்பால் அக்கறையோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.


தமிழ் ஓவியா said...

திருச்சி மாநில மாநாட்டில் தீர்மானம்!

அதற்கு முன்பே, திருச்சியில் 2014, பெப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் 10வது மாநில மாநாட்டில் இலட்சோப இலட்சம் தமிழர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கையில் நடை பெற்ற தமிழினப் படுகொலை மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா, வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்பிரச்சினை யில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வதேச சமூகத் தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத் திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்ப தோடு;

சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்று வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென்றும் இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று தி.மு. கழகத்தின் நிலைப்பாட்டையும் இந்திய அரசுக்கு நாம் வைத்துள்ள கோரிக்கையையும் தெளிவு படுத்தியிருக்கிறோம். அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே 2012ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்த போது, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கொடுத்த தீவிரமான அழுத்தத்தின் காரண மாகவே இந்திய அரசு கடைசிக் கட்டத்தில் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க நேரிட்டது. ஆனால் 2013ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசோடு இணைந்து, அந்தத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப்போகச் செய்யும், தமிழ் இன விரோத நடவடிக் கையில் இந்தியா ஈடுபட்ட காரணத் தினால், திராவிட முன்னேற்றக் கழகம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. மத்திய அரசின் நடைமுறையை
தமிழக காங்கிரசாரே ஏற்கமாட்டார்கள்!

தமிழ் ஓவியா said...

நேற்றையதினம் (27-3-2014) அய்.நா மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக் கணித்திருக்கின்றன. அப்படிப் புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக சமுதாயத்தின் முன் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சம்பந்தமோ, பந்தபாசமோ இல்லாத அமெரிக்கா போன்ற ஒரு நாடு, சர்வதேச சமூகத்தின் நலன், மனித நேயம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானத்தை மூன்றாவது முறையாக முன்மொழிந்து, அந்தத் தீர்மானத்தை தமிழினத் தின் வேர்களைக் கொண்டிராத 23 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித் திருப்பதுதான் பெற்ற தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொல்வதற்குச் சமமாகும் என்பதால் நம்முடைய கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.

மேலும் சொல்ல வேண்டுமேயானால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, இலங்கையில் நடைபெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலே நேரடி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று மனிதாபிமான உணர்வோடு தெரிவித்திருக்கும் நிலையில், அய்.நா.வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா என்பவர் அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற நாட்டின் விவகாரங்களில் தலை யிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று கருத்துத் தெரிவித் திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரசாரே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பிற நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச்சினை யில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற வரலாற்றுச் சான்றுகள் அடிப் படையிலான கேள்விகளை உலகத் தமிழர்கள் எழுப்பமாட்டார்களா என்பதை மத்திய காங் கிரஸ் அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?

குப்புறத் தள்ளிய குதிரை - குழியைப் பறித்து விட்டது

26ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உரையாற்றும் நேரத்தில், காங்கிரஸ் அரசு நன்றி மறந்த போதிலும் - கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை யெல்லாம் கூடப் பொறுத்துக் கொண்டு - மதச் சார்பற்ற ஒரு அரசு இந்தியாவில் அமைக்கப்பட வேண்டுமென்ற எண் ணத்தோடு, வருங்காலத்தில் பொது மன்னிப்பு அளிக்க வேண்டிய நிலைக்குக்கூட வரலாம் என்ற ரீதியில் நான் குறிப்பிட்ட பிறகும்கூட, இந்திய காங்கிரஸ் அரசு தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரான இந்த முடிவினை எடுத்தி ருப்பது நிரந்தரமாக தமிழர்களுக்கான வாயிலையே அடைத்துக் கொண்டதாகவே கருத நேரிடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராத தோடு, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தையும் ஆதரிக் காமல் புறக்கணித்திருப்பது; குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழி பறித்த கதையாகவும் ஆகிவிட்டது. சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச் சினையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற் காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக் கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/77826.html#ixzz2xP9zOcnq

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் சார்பில் மரண பதிவு நிலையம் தொடங்கப்படும்: தமிழர் தலைவர் அறிவிப்பு


அய்யாவின் அடிச்சுவட்டில்... (பாகம் 4) கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய நோய்கள் - இரு நூல்கள் வெளியீடு

திராவிடர் கழகம் சார்பில் மரண பதிவு நிலையம் தொடங்கப்படும்: தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 29- கழகத் தோழர்கள் - பகுத்தறிவாளர்கள் மறைவுற்றால் அவர்களின் உடலை கொள்கை ரீதியாக அடக்கம் செய்வதற்கு மரண பதிவு நிலையம் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடங்கப் படும் என தமிழர்தாலைவர் அறிவித்தார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று (28.3.2014) மாலை தமிழர் தலைவர் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... (பாகம் 4) டாக்டர் பூ.பழனியப்பன், ப.சுமங்கலி ஆகியோர் எழுதிய அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள் என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மகப்பேறு மருத்துவத்தில் உலக நிபுணராக திகழ்ந்த மறைவுற்ற டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து கருத்துரை வழங்கினார்.

சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (28.3.2014) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று திரா விடர் கழக மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார். திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் அறிமுகவுரை யாற்றினார். கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தலைமை உரை நிகழத்தினார்.

முன்னதாக மறைவுற்ற மகப்பேறு மருத்துவ உலக நிபுணர் டாக்டர் பூ.பழனியப்பன் அவகளின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இதையடுத்து டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் மகன் பொறியாளர் ப.சேரலாதன் அவர்கள் தனது தந்தை குறித்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

நூல் வெளியீடு

உலக அளவில் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணராக திகழ்ந்த டாக்டர் பூ.பழனியப்பன் மற்றும் ப.சுமங்கலி ஆகியோர் எழுதிய அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய நோய்கள் என்ற நூலை, சிறுநீரக இயல்துறை நிபுணர் டாக்டர் அ.இராசசேகரன் அவர்கள் வெளியிட்டு பேசுகையில்:-

இந்தியாவில் மகப்பேறு மருத்துவ துறையில் 95 சதவீதம் பெண்களே மருத்துவராக இருந்த நிலையில் அத்துறையை தேர்ந்தெடுத்து உலக அளவில் நிபுணராக விளங்கியவர் டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள் தற்போதைய இளம் மருத்துவர்களுக்கு மகப்பேறு துறையில் முன் மாதிரியாக திகழ்ந்தவர். கடைசிவரை ஏழை -எளிய மக்களுக்காகவே சேவையாற்றியவர்கள் டாக்டர் பழனியப்பனும், டாக்டர் மதன கோபால் அவர்களும் ஆவார்கள் என புகழாரம் சூட்டினார்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில் ... (பாகம் 4) என்ற நூலை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா.நன்னன் அவர்கள் வெளியிட்டு பேசுகையில்:-

சூரியன், நிலவு எப்படி இயற்கையாக உருவானதோ அதேபோன்று உருவானது தான் திராவிடர் இயக்கம். இதை யாராலும் அழிக்க முடியாது. இந்நூலை எழுதிய ஆசிரியர் அவர்கள், இந்த இயக்கத்தோடு தோன்றி வளர்ந்தவர். நான் அறிந்த வரையில் இந்த இயக்கத்திற்கு இவர் கிடைத்திருப்பது மிகப்பேறு, வாய்ப்பாகும். அவருக்கு சிறு கவலை கூட வராமல் பார்த்துக் கொள்வது கழகத்தோழர்களின் கடமையாகும்.

திராவிடர் இயக்கத்திற்கு வீழ்ச்சி, தளர்ச்சி, தேக்கம் கிடையாது. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தை ஆசிரியார் கி.வீரமணி அவர்கள் கொண்டு செல்கிறார். திராவிடர் கழகம் இந்த நாட்டில் என்றைக்கும் இருக்கும், இருக்க வேண்டும் என முனைவர் மா.நன்னன் பேசினார்.

மரண பதிவு நிலையம் தொடங்கப்படும் தமிழர் தலைவர் அறிவிப்பு

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்து விழாவில் நிறைவாக கருத்துரை யாற்றுகையில்:-

மறைவுற்ற டாக்டர் பூ.பழனியப்பன் எழுதியுள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய நோய்கள் என்ற இந்த நூல் மிகச்சிறந்த நூலாகும்.

மகப்பேறு துறையில் டாக்டர் லட்சுமணசாமி அவர்கள் எவ்வளவு புகழ் பெற்று இருந் தாரோ, அந்த அளவிற்கு டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள் பேரும், புகழும் பெற்றிருந்தார். மருத்துவ அறிவியல் துறைக்கு தேவையான வழிகாட்டி நூலாக அவர் எழுதிய இந்நூல் திகழ்கிறது.

அந்த அளவிற்கு அவர் நடமாடும் மருத்துவ தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர். அவர் மறைவுற்றதும் அவரது குடும்பத்தார் கொள்ளை ரீதியாக அடக்கம் செய்வதற்கு உடன்பட்டனர். மறைவுற்ற டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் துணைவியார் இந்நிகழ்வில் பங்கேற்று இருப்பது வரவேற்கத்தக்கது. அவரது மகன் பொறியாளர் சேரலாதன் இவ்விழாவில் எடுத்துரைத்த கருத்தை ஏற்று கழகத் தோழர்கள் - பகுத்தறிவாளர்கள் மறைவுற்றால் அவர் களின் உடலை கொள்கை ரீதியாக அடக்கம் செய்வதற்கு மரண பதிவு நிலையம் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் தொடங்கப்படும் என்று தமிழர் தலைவர் இவ்விழாவில் அறிவித்தார்.

முன்னதாக இந்த இரு நூல்கள் வெளியிட்டவுடன் அதனை திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், டாக்டர் சி.மீனாம்பாள், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் தெ.வீரமர்த்தினி, கழக தலைமை செயற் குழு உறுப்பினர்கள் க.திருமகள், க.பார்வதி மற்றும் சென்னை மண்டலத் தலைவர் தி.ரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், தொழி லாளர் அணி பெ.செல்வராசு ஆகியோர் இந்நூல்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவில், திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீசு, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, பேராசிரியர் இராசதுரை, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, விடுதலை இராதா, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணன், பொருளாளர் மனோகரன், திராவிடன் நலநிதி தலைவர் டி.கே.நடராஜன், பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், புலவர் வீரமணி, போக்குவரத்து தொழி லாளர் அணியைச் சேர்ந்த ராசரத்தினம், ராமலிங்கம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எண்ணூர் மோகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பேராசிரியர் பு.சி.இளங் கோவன், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் சுந்தரராசுலு, புரசை அன்புச்செல்வன், மணியம்மை, மோகனபிரியா, மரகதமணி, வை.கலையரசன், மற்றும் பெரும் திரளான கழகத் தோழர் - தோழியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/77827.html#ixzz2xPAJylrQ

தமிழ் ஓவியா said...


வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் படத்திறப்பு விழாவின் போது ஆற்றிய உரை

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும், இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும், நான் நினைக்கவில்லை!

ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும் எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன்.

எனது தொண்டில் உள்ள இடையறாத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைபவங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும், சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.

நாம் பிரவாகமான எதிர்வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரைமறைவிலும் சூழ்ச்சி களுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலை கொடுக்கத் தயாராயிருங்கள்.

நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்தச் சமயத்தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(4,5-1-29 நாட்களில் ராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூட்டிய மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPF1ixu5

தமிழ் ஓவியா said...

இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்-

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறித்தவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்க வேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறி வால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம்.

உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன் னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கி யங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண்களும் படித் திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாத்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFAnlPZ

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணை யாக இனத்தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகியவர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணு கின்றவர்கள் இருக்கின்றார்கள்.

நாள் முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக்கூட கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப்பார் என்றால் நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFIn4SY

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!
மாற்று அணியல்ல, ஏமாற்று அணியே பிஜேபி!
மக்களே பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்து விடாதீர்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குத் தமிழக வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள் - இவற்றில் காங்கிரசுக்கும், பி.ஜே. பி.க்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது - உண்மைக்கு மாறான பிரச்சாரத்தைக் கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி ஒன்றுக்கு மற்றொன்று பெரிதும் மாறுபட் டவை அல்ல. ஒரே குட்டையில் ஊறிடும் மட்டைகளே!

கூர்த்த மதியோடும் நுண்ணிய பார்வையோடும் பார்க்கும் எவருக்கும் புரியும்.

சகோதரர் வைகோ அவர்களின் (மதிமுக) தேர்தல் அறிக்கை!

பதவிப் பசியால் துவண்டு, துடித்து, பா.ஜ.க., வீசிய வலையில் சிக்கி மோடி இராகம் பாடி, ராஜாவை மிஞ்சும் இராஜவிசுவாசியராக காட்சியளிக்கும் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஏதோ பா.ஜ.க. - மோடி மத்தியில் அரியணையில் அமர்ந்த தும் சூமந்திரக்காளி! என்ற மந்திரக்கோல் மூலம், மோடி வித்தை மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர் தனி ஈழம்பற்றியெல்லாம் மதிமுக தேர்தல் அறிக்கையில் பிரலாபித்துள்ளார்.

ஆனால், அது வெளி வந்த மறுநாளே, பா.ஜ.க.வின் வெங்கய்ய நாயுடு தொடங்கி, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உட்பட தனி ஈழத்தை ஒரு போதும் எங்கள் (பா.ஜ.க.) கட்சி ஏற்காது என்று திட்ட வட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறி விட்டனரே!


தமிழ் ஓவியா said...

பிஜேபிக்குத் திடீர் கரிசனமா?

ஈழப் பிரச்சினையில் (ஏதோ தமிழக மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீனவர்கள் பால் திடீர் கரிசனம் பீறிட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு; இல்லையென்றால் நண்பர் இல. கணேசன் மோடி மீன் விற்பனை நிலையத்தை பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் (Foreshore) திறந்து வைக்க முன் வருவாரா?) இந்த பா.ஜ.க. ஆட்சி முன்பு எப்படி நடந் துள்ளது என்பதை சற்று நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

கல்கியில் என். இராம் பேட்டி!

6.4.2014 நாளிட்ட கல்கி வார ஏட்டில் வெளி வந்துள்ள இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என் இராம் அவர் களின் பேட்டியில்
ஒரு கேள்விக்கு பதில் கூறுகிறார்:

கேள்வி: மோடி பிரதமராக வந்தால் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்கிறாரே வைகோ?

பதில்: நல்ல ஜோக் இது. பா.ஜ.க. ஆட்சி வந்தாலும் இலங்கையைக் குறித்த இந்திய நிலைப்பாடு மாறவே மாறாது என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தீர்ப்பும் - பிஜேபியின் நிலைப்பாடும்!

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இராஜீவ் கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட தூக்கு தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்கள் கருணை மனுவும் பல ஆண்டு கால தாமதம் மறுக்கப்பட்ட நீதி, என்பதைக் கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மாநில அரசு இவர்களது 23 ஆண்டு கால சிறை தண்டனை பற்றி மனிதநேயத்துடன் சட்டப்படி சிந்திக்கலாம் என்றும் கூறியது தான் தாமதம்! உடனே அவசர அவசரமாக - எங்கே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களோ என்ற ஆவேசத்தில் தேசீயக் கட்சிகளும் பா.ஜ.க. உட்பட அதனைக் கண்டிக்கத்தானே செய்தன? இதில் காங்கிரசிலிருந்து எவ்வகையில் பி.ஜே.பி. மாறுபட்டது? நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

ம.பி.க்கு வந்த ராஜபக்சேக்குச் சிகப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது யார்?

சகோதரர் வை.கோ மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று போர்க் குற்றவாளி இராஜபக்ஷேவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினாரே! ராஜபக்சேவை தனது மாநிலத்திலும் வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்த முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் யார்?

பா.ஜ.க. முதல் அமைச்சர் (ஆட்சி) அல்லவா! ராஜபக்சேவை இந்தியாவிற்கு வர அழைப்புக் கொடுத் தவரே எதிர்க்கட்சித் தலைவரும், துணைப் பிரதமர் ஆசையில் மிதப்பவருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் அல்லவா?

தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று வேலை!

வாஜ்பேயி பிரதமராக இருந்த நேரத்தில் ஈழத்தில் நடைபெற்ற மோதலின் போது இராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையா எடுத்தார்? நம் நாட்டில் இல்லாத புலி இயக்கத் தடை நீக்கப்பட்டதா?

காங்கிரசின் இன்றைய வெளி உறவுக் கொள்கைக்கும் பா.ஜ.க. கொள்கைக்கும் ஈழப் பிரச்சினையில் எவ்வித மாறு பாடும் இல்லையே!

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன் என்ற ஒரு பழமொழி போன்றதுதானே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு! தமிழின வாக்காளர்களை ஏமாற்ற ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தலாமா? எனவே இது மாற்று அணி அல்ல; ஏமாற்று அணி! ஈழப் பிரச்சினையில் வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

சென்னை
30.3.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77873.html#ixzz2xUqHw4Ce

தமிழ் ஓவியா said...


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி! பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை


திருச்சி, மார்ச் 30- திராவிடர் கழக பெல் ஒப் பந்த தொழிலாளர் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கை, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இது தொடர் பாக கழகம் தொடுத்த வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம், திருவெ றும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களை தீர்ப்பு நகல் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவு பிறப் பித்தார். 1,189 ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண் டுமென பெல் நிர்வாகத் திற்கு மதுரை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக திருவெறும்பூர் பெல் நிறு வனத்தில் ஒப்பந்த ஊழி யர்களாக பணியாற்றி வரும் 1,189 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் நிரு வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

மேலும் அவர்கள் இதுவரையில் ஒப்பந்த ஊழியர்களாகவே பணி யாற்றியும் வருகின்றனர், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தி.க தொழிலாளர் சங்கம் சார் பில் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்டு வந்த தோடு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.சேகர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் விசா ரணை நேற்று முன்தினம் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் களாக பணியாற்றி வரும் ஊழியர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய பெல் நிர் வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தி.க. தொழிலாளர் சங் கத்தின் நீண்டநாள் கோரிக் கையான இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என் றும் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண் டுமென மு.சேகர் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77869.html#ixzz2xUrAE2Jl

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் இனக்கலவரம் உருவாகும்: மாயாவதி


பக்ஸார், மார்ச் 30-பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று ஒரு கூட்டத்தில் பேசுகை யில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டி யிடும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடை பெற்ற இனக்கலவரத்தை போன்று இந்தியா முழுவ தும் கலவரம் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

மத்தியில் மோடி ஆட்சி செய்தால் இனக்கலவரத்தின் தூண்டுகோலாக அமையும். நாட்டில் மதக்கலவரங் களும் சிறுபான்மையின ருக்கு எதிரான குற்றங்களும் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே மக்கள் அனைவரும் வரும் தேர்தலில் மோடியை வெற்றி பெற விடக்கூடாது" என்றும் மாயாவதி கேட் டுக்கொண்டார்.

கறுப்பு பணம் பற்றி பேசிய மாயாவதி, ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவ தாக கூறிவரும் பா.ஜ.க., ஆறு ஆண்டு காலத்தில் இது குறித்து அக்கட்சி நடவ டிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வியெழுப் பினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrIyUns

தமிழ் ஓவியா said...

மகிந்தா ராஜபக்சேவிற்கு மக்களிடையே ஆதரவு குறையத் துவங்கியது

கொழும்பு மார்ச் 30-தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் இலங்கை அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந் தோட்டையில் ஆளும் அய்க் கிய மக்கள் சுதந்திர முன் னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைக் கைப்பற்றிய அய்க்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கு, இந்த முறையும் அதே இடங்கள் கிடைத் துள்ளன. ஆனால், ஆளும் கட்சி 174,687 (57.42%) வாக் குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது. இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்கு களை ஆளும்கட்சி இம் முறை இழந்துள்ளது.

எதிர்கட்சிகளான அய் தேக, ஜேவிபி, ஆகிய கட்சி களுக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. கடந்த தேர் தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 இடங் களை கைப்பற்றிய அய்தேக வுக்கு, இம்முறை, 4 இடங் கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகளை யும் அந்தக் கட்சி பெற் றுள்ளது. இதன்படி, அய்தேக வுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் போது அய்.நா மனித உரி மைக்குழு இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட் டிற்கு அரசு சரியான முறை யில் பதிலளிக்காததாலும், மனித உரிமைமீறல் பரப்பு ரைகள் பல சமூக தொண்டு ஆர்வலர்கள் முன்னெடுத் துச்செல்வதாலும் இலங்கை அதிபரின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வாய்ப்பை தொடர்ந்து நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்டால் இலங் கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் இலங்கை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrcQEDt

தமிழ் ஓவியா said...


யார் வெட்கப்பட வேண்டும்? - திக்விஜய்சிங்

புதுடில்லி, மார்ச். 31- மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'ஊழல் கறை படிந்த அசோக்சவானுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது வெட்கப்பட வேண்டிய செயல்,' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங், 'ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள எடியூரப்பாவை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், அசோக்சவான் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் யார் வெட்கப்பட வேண்டும்? என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77904.html#ixzz2xahy1Hra

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

இந்த மவுனத்தைச் சாமர்த்தியமாக ஜெயலலிதா அம்மையார் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை வேறு விதமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. பரவலாகப் பொது மக்கள் இதுகுறித்துக் கேலி செய்யும் போக்கைக் காண முடிகிறது. ஆனால், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப் பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்காது. இந்துத் துவா கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இவர்.

திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக அவர் சொல் லிக் கொள்ளலாம். அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்கலாம். ஆனால், அவை உதட்டிலிருந்து உதிரக் கூடியவைகளே தவிர, உள்ளத்தின் வேர்களிலிருந்து வெளிவரக் கூடியவையல்ல! அண்ணா நாமம் வாழ்க! என்று அம்மையார்உச்சரிப்பது - அண்ணா கொள் கைக்கு நாமம் போடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக் கையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அதற்கு அவர் என்ன காரணம் சொல்லியுள்ளார்?

தமிழ் ஓவியா said...


இராமன் பாலத்தை இடித்து ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றல்லவா உச்சநீதி மன்றத்தில் காரணம் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஹிந்துத்துவாவைக் கொண்டு வந்து திணிக்கின்றாரே! பி.ஜே.பி.யும் இதே காரணத்தைக் கூறித்தானே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

அந்த வகையில் பி.ஜே.பி.யும். அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்துத்துவா படகில் பயணம் செய்யக் கூடிய வெவ் வேறு பெயர்களில் நடமாடும் ஒரே கொள்கைக் கோட் பாட்டைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாக - அப்பட்டமாகத் தெரியவில்லையா?

இடதுசாரிகள் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இந்த ஹிந்துத்துவா மனப்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்கிறார்களே, அதுதான் மிகவும் ஆச்சரியமானது!

இடதுசாரிகள் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும்கூட செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபியைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ பேச மாட்டார்தான். இதில் இடதுசாரிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். அம்மை யாரைப் பொறுத்தவரை அவர் தெளிவாகவே இருக் கிறார். பி.ஜே.பி.யும் தெளிவாகவே இருக்கிறது. அவர் களும் அதிமுகவைப் பற்றியோ செல்வி ஜெய லலிதாவைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை.

பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் நாட்டுக் கட்சிகளுக்கும் இந்த நிலைமைகள் புரியும் என்றாலும், அவர்களும் இதனை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்புபோல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்கும் என்ன பரிதாபம் என்றால் அ.இ.அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் இவர்களின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்தே நிற்கிறது.

இந்த விசித்திர நிலையைக் கண்டு நன்கு இரசிக்கத் தான் தோன்றுகிறது. வீராதி வீரராக தோள் தட்டி, தொடை தட்டி சண்டமாருதம் செய்பவர்கள் எல்லாம் கூட, பதவி என்று வந்து விட்டால் எத்தகைய பலகீனங் களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைத்தால் ஒரு வகையிலே பரிதாபப் பட வேண்டியுள்ளது! இன்னொரு வகையில் எல்லாவற்றையும் இழந்துதான் பதவியைப் பிடிக்க வேண்டுமா? சுயமரியாதையோடு வாழக் கூடாதா? கொள்கையைச் சொல்லித் தோற்பது - கொள்கை களைப் பலி கொடுத்து வெற்றி பெறுவதைவிட சிறந்ததல்லவா!

தமிழ் ஓவியா said...


கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்


கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க மருத்து வர்கள் கூறிய ஆலோசனை வருமாறு: கோடை காலத்தில் சுற்றுப் புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச் சினைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும்.

வாந்தி, பேதி, வயிற்றுக் கடுப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ளவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakbntvk

தமிழ் ஓவியா said...

சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?

காலை வேளையில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே டைப் 2 டயபடீஸ் இருந்து, அதை சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு 200அய்த் தாண்டிவிடுகிறது.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 120தான் இருந்தது. டயட், உடற்பயிற்சி எல்லா வற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நடைப்பயிற்சி செய்கிறேன்...

சரியான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன். இருந்தும் சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்? காரணம் சொல்கிறார் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் வி.மோகன்...

காலையில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நீரிழிவு பிரச்சினையின் தன்மை, வளர்ச்சிக்கு ஏற்ப இது ஏற்படும். இதைச் சரி செய்ய, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சரியான மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

அரிதாக, சிலருக்கு நடு இரவில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். பிறகு வேகமாக அதி கரித்து காலையில் அதிக அளவாகும். அதிகாலை 3 மணிக்கு உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பாருங் கள். அளவு குறைவாக இருந்தால் இரவு நேரத்தில் குறை வான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக இருந்தால், இரவில் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதுவரை நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளாதவராக இருந்தால், அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakxEcRD

தமிழ் ஓவியா said...

உடல் தளர்ச்சிக்கு...

வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது.

இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xal5PEp5

தமிழ் ஓவியா said...


கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?


கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ மூட்டைகட்ட முடியாது.

அப்படியே போனாலும் ஒரு சில நாள்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... அனைவரும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அந்த ஆடை களின் வண்ணங்கள், வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும்.

வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தர்பூசணி, பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய நவ தானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு களை சர்க்கரை நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ள போதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalBmXBt

தமிழ் ஓவியா said...

சிறுநீரகக் கல் ஏற்படாமல் தவிர்க்க வழிமுறைகள்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.

கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடி கட்டப்படுகிறது.

கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொதிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறுநீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது.

இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.

3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

4. பிரத்தியேக உறுப்புகளின் சுத்தமும், பராமரிப்பும் முக்கியம்! தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான வாழ்க்கை முறை, அதிகமான வேலைகள், மன இறுக்கம் போன்றவை ரத்தக் கொதிப்புப் போன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக் கல்லுக்கும் ஒரு காரணம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalZc0xv

தமிழ் ஓவியா said...


எலி - தவளை - பருந்து கூட்டணி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் இவர் களிடையே இன்னொரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக முடியாது என்று தைலாபுரம் தோட் டத்தில் உடல் நலமில்லை என்று கூறிப் படுத்துக் கொண்டு விட்டார் மருத்துவர் ராமதாசு.

வானூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா பேசும்போது, பா.ம.க.,வைப் பற்றியோ, மருத்துவர் ராமதாசைப் பற்றியே டாக்டர் அன்புமணி ராம தாசைப் பற்றியோ ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையாம். பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூடச் சொல்ல வில்லையாம். இதனால் பா.ம.க.வினர் முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டனராம்.

தேர்தலில் ஆதரவு கோரி பா.ஜ.க. வினர் எங்களை முறைப்படி அணுக வில்லை என்று கூறி கோவை பா.ம.க. வினர் தேர்தல் பணி புறக்கணிப்பை அறி வித்தனர் என்பது இன்னொன்று இந்த செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.

மதிமுக கொடி மருந்துக்கும்கூட கிடையாதாம்! இப்படி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA).

எலி, தவளை - பருந்து கூட்டணி என்று நாம கரணம் சூட்டலாம் இந்த அணிக்கு.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நெடி ஏறலாம். ஒருவர் காலை இன்னொ ருவர் வாருவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொள்கையில் அப்பட்டமான முரண் பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் இந்தப் பரிதாப நிலைதான்!

Read more: http://viduthalai.in/e-paper/77933.html#ixzz2xgdoLdWC

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


எதற்குத் தெரியுமா?

சு.சாமி தலைமையில் பி.ஜே.பி. ஒரு குழுவை அமைத்துள்ளது. எதற்குத் தெரியுமா? தேர்தலின் போது இந்தக் குழு ஆலோசனை களைக் கூறுமாம். சு.சாமி எப்படிப் பட்ட யோசனைகளைச் சொல்லு வார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சேது சமுத்திரத் திட்டம் பற்றி யும், ஈழத் தமிழர் பற்றியும் இவர் உளறிக் கொட்டுவது ஒன்று போதும் - மக்கள் அள்ளிப் போடுவார்கள் மண்ணை!

குல்லாயில் துடைப்பம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் போட்டிப் போட இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம் துடைப்பம் (விளக்கமாறு) அந்தச் சின்னம் பொறிக்கப்பட் டுள்ள குல்லாய்களை அக்கட்சி யினர் அணிந்து வருகிறார்கள். நெற்றியில் திருநீறுபூசிக் கொண்டே துடைப்பம் படம் உள்ள குல்லாவை அணிந்து வருகிறார்களாம் - அது திருநீறை அவமதிக்கிறதாம்; இப்படி வருகின்றவர்களை வாரணாசி விசுவநாதன் கோயிலுக்குள் அனு மதிக்க முடியாது என்று கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கண்டிப் பாகக் கூறுகிறார்களாம். வேண்டுமா னால் சட்டையில் துடைப்பச் சின்னத்தை பொறித்துக் கொள்ள லாமாம். அப்பொழுது மட்டும் துடைப்பத்தோடு கோயிலுக்குள் சென்றால் அந்தக் கடவுளை அவமதித்தது ஆகாதா? கடவுள்தான் தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் என்கிறார்களே - துடைப்பத்தில் இருக்க மாட்டார்களா? என்கிற கேள்விகள் எல்லாம் அலை அலை யாகப் புறப்படும்; அவற்றிற்கெல் லாம் பதில் உண்டா?
தேர்தல் ஜன்னியில் எதையா வது உளறிக் கொண்டு இருப்பது என்று முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/77932.html#ixzz2xgeDW2hR

தமிழ் ஓவியா said...

இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!

சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள் என்ற இலக்கியக் கூட்டம் கடந்த ஞாயிறன்று நடை பெற் றுள்ளது.

இந்த நிகழ்வில் தென் சென்னைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளர் இல. கணேசன், இலக்கியவாதிகள் முத்துக் கண்ணன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் அவ்வை நடராசன் முதலியோர் பங்கு கொண்டுள்ளனர்.

காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்ற தலைப்பிட்டு தினமணி (31.3.2014 பக்கம் 6) 5 பத்தியில் செய்தியை வெளியிட்டது.

அது அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியக் கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த இல. கணேசன் வாள் என்ன பேசியிருக்கிறார்?

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திரமோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாக பேசியுள்ளார்.



தமிழ் ஓவியா said...

இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு தரவில்லை என ப. சிதம்பரம் கூறியிருப்பது - மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான்; தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியதுபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிகவும், பா.ம.க.வும் ஒற்றுமையாகத் தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதும் அதன் வெளிப்பாடு தான்.

உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார் - என்று பிஜேபியைச் சேர்ந்த திரு. இல. கணேசன் பேசியுள்ளார்.

நினைவு கொள்ளுங்கள், நடைபெற்ற நிகழ்ச்சியோ இலக்கியத் தொடர்புடையது;

அரசியலுக்கு அப்பாற்பட்டது. அத்தகு கூட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தாம் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தமேடையைப் பயன்படுத்திக் கொண்டது அரசியல் நாகரிகமா? அல்லது அருவருப்பின் அடையாளமா?

இந்தப் பிஜேபியினர் தார்மீகம், பண்பாடு பற்றி யெல்லாம் பலபட பரக்கப் பரக்கப் பேசக் கூடியவர்கள் தாம். இவை எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமாக இருக்குமே தவிர, தங்களுக்கென்று வருகிறபோது அவையெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்.

காரணம் இவர்கள் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் ஆயிற்றே! அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்ற ஒரு பழமொழி உண்டு.

இலக்கிய வட்டத்துக்குள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வேலை என்ன? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வேண்டுமென்றே தான் இல. கணேசன் பெயரைத் திணித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாதா இது தேர்தல் நேரம் - அரசியல்வாதிகளை அழைத்தால் இலக்கிய வட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று?

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை பொது மக்கள் பொதுவாக என்ன நினைக்கக்கூடும்? பி.ஜே.பி.யோடு சம்பந்தப்படுத்தித் தானே பார்ப்பார்கள்?

பிஜேபியைச் சேர்ந்த (அவர் ஒரு வேட்பாளரும் கூட!) இல. கணேசனுக்கு அந்த இலக்கியவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? அப்படி பதில் சொல்ல ஆரம் பித்தால் அந்த மேடையின் நிலை என்ன? ஏற்பாட்டா ளர்களின் நிலை என்னாகும்? பார்வையாளர்கள் பகுதியும் இரண்டுப்பட்டு படுமோதல் வெடிக்காதா?

அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இலக்கிய வாதிகளுக்கு இது ஓர் அனுபவமாகக்கூட இருக்கலாம்; எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் யார்? அவர்களின் தன்மை என்ன? யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் முன்ன தாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி இல்லாமல் யார் கூப்பிட்டாலும் போய் விடுவது என்ற நிலைப் பாட்டைக் கொண்டால் அவர்களுக்குத்தான் தர்ம சங்கடமும், அவப் பெயரும் ஏற்படும்.

தினமணி ஏட்டுக்காவது ஓர் இங்கிதம் இருக்க வேண்டாமா? இலக்கிய விழாவில் ஓர் அரசியல் வாதியின் பேச்சை மட்டும் அய்ந்து பத்தி தலைப்புப் போட்டு, அவர் பேச்சை மட்டுமே வெளியிட்ட தன்மைக்கு புத்திக்குப் பொருள் என்ன?

தினமணி என்பது பிஜேபிக்கு அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படும் ஒரு மேடையாக ஆகிவிட்டது என்றே மற்ற கட்சி அரசியல்வாதிகளும், பொதுவாக பொது மக்களும் தெரிந்து கொள்வார்களாக!

பார்ப்பனர்கள் பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடிப்பதில் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லையே, இதனைப் பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிஜேபியின் வெற்றி என்பது பார்ப்பனர்களின் வெற்றி, அவர்களின் ஆதிக்கத்துக்கான முழு முயற்சி என்பதை வாக்காளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வார்களா?

தமிழ் ஓவியா said...


மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா

போபால், ஏப்ரல்.1- நாட்டின் இதயப் பகுதியாகிய மத்திய பிரதேசத்தில் பாஜக வுக்கு, மோடிக்கு சவாலாக மத்தியப் பிரதேச மோர்ச்சா என்கிற அமைப்பு உருவாகி உள்ளது. பாஜகவிலிருந்து அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களால் ஒருங்கிணைக்கப் பட்ட ஓர் அமைப்பாக மத்தியப் பிரதேச மோர்ச்சா உருவாகிறது. சத்தீஸ்கர் அல்லது குஜராத் போலன்றி மோடியின் எதிர்ப் பாளர்கள் அணி மத்தியப்பிரதேசத்தில் வலிமையாக உள்ளது.

மும்முறை வெற்றிபெற்ற முதல்வ ரான சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமை யிலான ஆட்சியின்மூலம் கட்சிக்கு வலிமையும் இருப்பதாக சொல்லப்பட் டாலும், கட்சியில் அதிருப்தியாளர்கள் பிரிவு உருவாவதை தவிர்க்க முடிய வில்லை. ஜான்சி தொகுதியில் போட்டி யிட்ட உமாபாரதி, பாதுகாப்பான தொகு தியாகக் கருதி போபாலில் போட்டியிட விரும்பிய அத்வானி, அவரைத் தொடர்ந்து கட்சி மூத்தத் தலைவரான சுஷ்மாசுவராஜ் ஜான்சியில் போட்டியிட விரும்புகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள்நிலை குறித்து கூறும்போது, சவுகானுக்கு முழு ஆதரவாக இருப்பினும், மோடி எதிர்ப்புத் தோற்றம் தெரியாதவாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

சுஷ்மாசுவராஜ் துணைப்பிரதமர் என்று பேசி தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திர பட்வா அவர்மட்டுமே கட்சித் தொண்டர்களை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைப்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, விடிஷா தொகுதியில் வரலாற்றில் வாஜ்பாய், சவுகான் மற்றும் பலரும் தொடர்ந்து வெற்றிபெற்று, உயர் பதவிகளை அடைந் ததாலும், முதல்வராகவும், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்ப தால் சுஷ்மாசுவராஜ் துணைப் பிரதம ராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினேன் என்றார்.

எப்படியானாலும், கட்சியால் சுஷ்மா சுவராஜ் துணைப் பிரதமராக ஆக்கப் பட்டாலும், ஆக்கப்படா விட்டாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாத தலைவரா வார். அவர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் நன்கு செய்துள்ளார். இவை யாவும் அவருக்கு சாதகமாக உள்ளன.

அம்மாநில பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில் மோடி கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதற்கு முன்னதாக சவுகான் டிவிட்டரில் வெளியிட்ட தகவல் குறித்து தன் கருத்தை சுஷ்மாசுவராஜ் வெளியிட் டது மட்டுமே எதிராகி உள்ளது.

பாஜகவில் தங்களைத் தாங்களே தலைவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் இருக்கின்றபடியால், கட்சியைச் சேர்ந்த தொண்டர்கூட மிகவும் கவனமாகவே தேர்தலையொட்டிப் பேச வேண்டி உள்ளது. ஒன்றுபட்டு இருப்பதான தோற் றத்தையும் அளிப்பது அவசியமாகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, போபாலில் அத் வானி போட்டியிட்டிருந்தால் மகிழ்ந் திருப்போம். ஆனாலும், அத்வானி ஏன் போபாலில் போட்டியிடவில்லை என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரம் எனக்கில்லை. பாஜகவின் தேர்தல் குழு வைத்தான் இதுகுறித்து கேட்க வேண் டும் என்றார். போபால் உள்ளுர் பாஜக தலைவர் மாநிலத்தில் கட்சியினரை ஒருங்கிணைப் பதில் முனைப்பும், முயற்சியும் இல் லாததாலேயே மத்திய பிரதேச மோர்ச்சா அமைதியான வழியில் தன் பணியைத் தொடர்கிறது. அதேபோல் மோடியின் படத்தைக் காட்டிலும், போஸ்டர்களில் பெரிய அளவில் முதலமைச்சர் சவுகான், சுஷ்மா சுவராஜ் படங்கள் இடம் பெற் றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்து வதைப்போல் பிற மதங்களுக்கு எதிரான முழக்கங்கள் மத்தியப்பிரதேசத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரைப் பயன்படுத்துவதால் மாநிலத் தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போபால் நாடாளுமன்ற உறுப்பினரான கைலாஷ் ஜோஷி மூத்த தலைவரான அத்வானிக்கு பாதுகாப்பான தொகுதி போபால் என்று மாநில பாஜகவால் உருவகம் செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மோடியிடமே மனு போட்டுக் காத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதல்ல என்றார். மேலும், அத்வானி யிடம் போபாலில் போட்டியிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதையே தானும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், கட்சியின் முடிவு அத்வானி காந்திநகரில் போட்டியிடவேண்டும் என்கிறது. பாஜ வின் ஒழுங்கமைந்த தொண்டர்கள் கட்சித் தலைமையை எதிர்க்க முடியுமா? என்றார்.

- தி எகனாமிக் டைம்ஸ் டில்லி பதிப்பு 29-3-2014

Read more: http://viduthalai.in/page-2/77937.html#ixzz2xgf7iUOg

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி யோக்கியதை?


- குடந்தை கருணா



போலியோ முற்றிலுமாக இந்தி யாவில் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்தி வந்துள்ளது. ஆனால், குஜராத் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தில் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட வில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை நவ்சர்ஜன் டிரஸ்ட் என்கிற மனித உரிமை அமைப்பு, அமெரிக்க நிறு வனமான ஈஸ்ட் வெஸ்ட் நிர்வாக நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் துகளுக்கு இந்த போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை; பெரும் பாலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், துப்புரவு பணியிலும் இந்த வால்மீகி பிரிவினர்தான் பெரும் பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பு சக்தி மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், போலியோ பாதிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விழுக்காடு குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது எனும் தகவலை விக்கிபீடியா இணைய தளம், புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு, 81 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது என தகவல் தந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்றால் குஜராத் தான் என ஊர்தோறும் முழங்கி வரும் மோடி ஆளும் குஜராத்தில் என்ன நிலைமை தெரியுமா? 45 விழுக்காடு மட்டுமே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு, 19ஆம் இடத்தில் உள்ளது என விக்கி பீடியா இணைய தளம் புள்ளி விவரம் தந்துள்ளது. போலியோ இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவு செய்து வரும் நிலையில், குஜராத்தில், தலித் குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் வராத மோடி அரசு தான், வளர்ச்சிக்கு உதாரணமா?

இந்த குஜராத் வளர்ச்சியைத் தான், நம்மூர் பாஜக கம்பெனியில் சேர்ந்திருக் கும் மோடி ஏஜெண்டுகளாக திகழும் வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் வர வேற்கின்றனர். எப்படி? போலியோ ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழும் தமிழ் நாட்டை, 19-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் போல, கீழே தள்ளுவதற்கு, இந்த அணியினர் துடிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, கீழே தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/77940.html#ixzz2xgfSSc2w

தமிழ் ஓவியா said...


மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்


போச்சம்பள்ளி, ஏப். 1- கிருஷ்ணகிரி நாடாளுமன் றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அரசம்பட்டி யில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், வேலம்பட்டி யில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் காவேரிப்பட்ட ணம் பேருந்து நிலையம் அருகேயும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அரு கிலும் நடந்த தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டங்களி லும் பேராசிரியர் க.அன்பழ கன் பேசினார்.

தி.மு.க. தலைவர் கலை ஞர் ஒவ்வொருமுறை ஆட் சிக்கு வரும்போதும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவேண்டும் என்று கலைஞர் இலவச வேட்டி-சேலை திட்டத் தைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா, வங் காளம், ஒரிசா போன்ற மாநி லங்களில் இருந்து இலவச வேட்டி-சேலைகளை வாங்குகிறார்.

இதில் கமிஷன் பெறுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் நெசவாளர் மற்றும் விவ சாயிகளுக்கு சலுகையில் 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டது. இதை ஜெயலலிதா நிறுத்திவிட் டார். சென்னை கிண்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூல கத்தை பார்த்து வெளிநாட்டி னரே பாராட்டினர். ஆனால் அதையும் முடக்கிவிட்ட னர். செம்மொழி ஆராய்ச் சிப் பணியும் முடக்கப்பட் டுள்ளது. மதச்சார்புள்ள மோடியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செங் குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுக வனம் எம்.பி., தொகுதி தேர் தல் பொறுப்பாளர் பனமரத் துப்பட்டி ராஜேந்திரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/77965.html#ixzz2xggMgSuP

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

- (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77934.html#ixzz2xgiV4nWv

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.