Search This Blog

24.3.14

பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டபோது பெரியார் எழுதியது என்ன?

இன்று பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் அன்று குடிஅரசில் தந்தை பெரியார் எழுதியது என்ன? இதோ!

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை.  அவரைத் தூக்கிலிட்ட காரியத் திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை.  அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களைவும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.

இவை ஒரு புறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜபிரதிநிதி திரு.இர்வின் பிரபுவை பாராட்டுவதும், அவ ரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு.காந்தியவர்களைப் புகழ்வதும் பகத்சிங்கை தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடு அல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றி யாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடை பெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள்  திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவதும் திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தி அவர்களை ஒரு பெரிய மகான் என்றும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் வெள்ளைக்காரர் அறிய விளம்பரம் செய் வதுமான காரியங்களும் நடைபெற்றன.

ஆனால், இப்போது வெகுசீக்கிரத்தில் அதே மக்களால் காந்தியம் வீழ்க, காங் கிரஸ் அழிக, காந்தி ஒழிக என்கின்ற கூச்சல் களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன.

இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல், விஷயமாய் பொது ஜனங் களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவதொரு கொள்கை யாருக் காவது உண்டா? என்று சந்தேகிக்க வேண் டியதாகவும் இருக்கின்றது.  எது எப்படி யிருந்த போதிலும் திரு. காந்தி அவர்களின் உப்புச்சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடு அல்லாமல்.
தேசத்தின் முற்போக்குக்கும் கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும், எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம்.  நாம் மாத்திரம் அல்லாமல் திரு. காந்தி அவர்களே இக்கிளர்ச்சி ஆரம் பிப்பதற்குக் காரணமே பதக்சிங் போன்ற வர்கள் காரியங்களை கெடுப்பதற்கும் ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் இருக்கின்றார்.

போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களின் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார் களும் திரு. காந்தி அவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார். சமதர்மக் கொள்கைகள் ஒழிக்கவே இக்காரியங்களை செய்கின்றார்.  திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஆகாயம் முட்ட கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார் கள்.
ஆனால், நமது தேசிய வீரர்கள் தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலா பலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயம் கூறிக் கொண்டு பாறையில்  முட்டிக் கொள்வது போலவும். தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடினார்கள்.  அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் வாகைமாலை சூடி திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள்.

பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்படுவதைப் பார்த்து விட்டு காந்தியம் வீழ்க காங்கிரஸ் அழிக காந்தி ஒழிக என்று கூப்பாடு போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பகத்சிங் அவர்கள் இந்தமாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும், பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதும் என்கின்ற சுயநலமக் களும் உள்ள நாட்டில் வெகுகாலம் உயிருடன் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர் களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர்தம் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது. பகத்சிங் கிற்கு மெத்த சாந்தி என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கட மையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல.  ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்தவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும்  பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றேச் சொல்லுவோம்.  ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்ற முடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம்.  அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர் கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்து இருக்க வேண்டிய தென்று நாம் சொல்லு வதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடி யாது என்றும் சொல்லுவோம்.

ஆதலால் இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியா வுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மை யாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும்.  ஏனெனில் நாமறிந்த வரை திரு. பகத்சிங் கிற்கு சமதர்மமும், பொது உடைமையும் தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க் கண்ட வாக்கியம் காணப்படுகிறது.

அதாவது : பொது உடைமைகட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுத னிருக்கும்; எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது, அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும் என்று குறிப்பிட்டிருக் கிறார்.  அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்ப திலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக் கையுடைவர்  என்றும் கருதிக் கொண்டி ருக்கின்றோம்.

ஆகவே இந்தக் கொள்கை யானது எந்தச் சட்டத்தின்படியும் குற்ற மாக்கக் கூடியது அல்லவென்றும் ஆவதா யிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண் டியதில்லையென்றும் சொல்லுவோம்.  ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின் றோம்.

அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது தனி தேசத்தானிட மாவது துவேஷம் இல்லாமலும், எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும், துன்பம் உண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள் கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்.

ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ. பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.  இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியி ருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதிலும் அடங்கியிருகின்றது. தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதான் ஆக வேண்டுமோ.  அதுபோலவேத்தான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாய் இருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத்தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும்.

ஆகவே இந்த தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை பொது உடைமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்த கொள்கைகள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாய மானவை என்றும் அவசியமானவை என் றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தியம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே யில்லை.  ஆனால் அந்தக் கொள்கைக் காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே. என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாய் இருக்கின்றது.

திரு. காந்தி அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணா சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத் திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம்.  ஆனால், அந்த உண்மை இன்றுதான் மக் களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும், துணிவையும் அடைந்திருக்கின்றார்கள்.  இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும்.

திரு. பகத்சிங் தூக்கி லிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந் திருக்காது. அன்றியும் பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத் திற்கும், இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவோ நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது.

சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்!  பாராட்டு கின்றோம்!! பாராட்டுகின்றோம்!!!  இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடைய வர்களாகப் பார்த்து மாகா ணத்திற்கு 4-பேர் வீதமாவது தூக்கி லிட வேண்டுமென்று மனமார வேண்டுகிறோம்.

-------------------- தந்தை பெரியார் -"குடிஅரசு" - தலையங்கம் - 29.03.1931

37 comments:

தமிழ் ஓவியா said...

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தி.மு.க.
சாதித்தது என்ன என்று கேட்கும் முதல் அமைச்சரின் கவனத்துக்கு!
மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. சாதித்தது என்ன என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறிவரும் குற்றச்சாற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தது திமுகவே என்று ஆணித்தரமாக ஆதாரப் பூர்வமாக பதில் அளித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல் அமைச்சருமான அம்மையார் அவர்கள் தி.மு.க. - மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த போது என்ன பெரிய சாதனை செய்தது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேட்டதோடு, தி.மு.க.வின் 100 அம்சங்களைக் கொண்ட தேர்தலில் கதாநாயகன் என்று பலராலும் வர்ணிக்கப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் துறைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பல பதவிகளில் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, மீண்டும் மத்திய ஆட்சியில் அதனை முழுமை அடையச் செய்ய வற்புறுத்துவோம் என்று கூறியதை சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது (புரிந்து கொண்டிருந்தாலும்) தேர்தல் லாபத்திற்காக குழப்பி விடலாம், ஒன்றும் புரியாத அப்பாவிகளை என்று எண்ணி பிரச்சாரம் செய்துள்ளார்.

இதற்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தெளிவான விரிவான பதிலை எழுதியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறை - தி.மு.க. ஆட்சியில்தான்

இந்தியாவின் மாநில அமைச்சரவைகளிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டவருக்கான துறை என்ற ஒரு துறையை தனியே ஏற்படுத்தி, அதற்கென தனியே அமைச்சரையும் நியமித்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் கலைஞர் அவர்கள் (1970-71களில்)

பிறகு, தமிழ்நாட்டில் 1989-இல்தான் 50 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்டவர் என்பதில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் (B.C., MBC) என்று பிரித்து, வாய்ப்பற்ற பல வகுப்பினர் (வன்னியர் உட்பட) பயன் பெற்றனர்.

இது போல மத்திய அரசிலும்கூட அனைத்திந்தியா முழுவ திலும் தற்போதுள்ள OBC என்பதில் MBC என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவையும் பிரித்து, சமூக நீதியை வாய்ப்பற்ற வகுப்பினர்களுக்கும் அளிக்க சட்டத் தடை ஏதும் இல்லாத நிலையில், (மண்டல் தீர்ப்பில் இதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்ட நிலையில்) அப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை - எந்தக் கட்சியும் கூறாத கருத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


இதை முதல் அமைச்சர் தெளிவாகப் புரிந்து கொள் ளுதல் நல்லது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு!

மற்றொரு முக்கிய சரித்திர சாதனை! தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அமைத்து மத்திய அரசில் சமூக நீதிக் களத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல; அனைத்து (இந்திய) மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மத்தியக் கல்வி நிலையங்கள் (Central Educational Institutions like Central Universities IIT, IIMS ) போன்ற இதற்குமுன் கதவுகள் திறக்கப்படாத நிலை 1951 முதல் 2005 வரை 55 ஆண்டு கால சமூக அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், 15(4) என்று முதலாவது அரசமைப்புச் சட்ட திருத்தத்தில் தந்தை பெரியார் தம் போராட்டத்தால் நேரு பிரதமராக அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மத்திய கல்வி நிலையங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கும் (தாழ்த்தப்பட் டோருக்கும்) திறக்கப்படவே இல்லை.

அதை மாற்றி, அர்ஜூன் சிங் அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 93ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை 2005-இல் கொண்டு வந்து நிறைவேற்றி 20.1.2006இல் நடைமுறைக்கு அது வந்தது. இது 2004 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் 40-க்கு 40 என்று வாக்களித்து, மத்தியில் தி.மு.க. பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததால் தான் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியுமா?

தி.மு.க. தொடர்ந்து வற்புறுத்தியதால் அதுவரை திறக்காத அய்.அய்.டி. அய்.அய்.எம் (IIT, IIM) போன்ற மத்திய பல்கலைக் கழகத்திலும் இடஒதுக்கீடு சட்டப்படி உரிமை ஆயிற்று - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு!

புதிய சட்டத் திருத்தம் 15(5)

இந்திய அரசியல் சட்டம் 15(4) என்பது 1951இல் தந்தை பெரியார் அவர்களால், திராவிடர் கழகம் மற்றும் தமிழ் மக்களின் வகுப்புரிமை கிளர்ச்சியால் ஏற்பட்டது.

இந்த 2005-இல் நிறைவேற்றப்பட்ட 93ஆவது அரசியல் சட்ட திருத்தச் சட்டம் 15(5) என்ற ஒரு புதுப்பிரிவு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

புதிதாகச் சேர்க்கப்பட்டது இதோ:

[5. Nothing in this article or in sub-clause (g) of clause (1) of article 19 shall prevent the State from making any special provision, by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.]

தனியார்க் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு

இதன்படி வேலை வாய்ப்பில் எப்படி மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு கட்டாயமோ, அதுபோலவே மத்திய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும், (தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட) பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கு 50 சதவிகித பங்கை கடைப்பிடிப்பது சட்டக் கட்டாயம் ஆகும்!

உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பார்ப்பனர்களும், முன்னேறிய ஜாதிக்காரர்களும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும் தகுதி, திறமை கூச்சல் போட்டும் இது நிறைவேறியது என்றால் அதற்கு மூல, முக்கிய காரணம் தி.மு.க.வின் 40 இடங்களில் வெற்றி என்ற (2004படி) பலம் அல்லவா?

இரட்டைக் குழல் துப்பாக்கி

தி.மு.க. அப்படிச் செயல்படக் காரணம் இரட்டைக் குழலான தாய்க் கழகமான திராவிடர் கழகம் என்பதும் வரலாற்றில் மறைக்கப்பட முடியாத உண்மை அல்லவா!
அதுபோலவே 2005-ஆம் ஆண்டில் செய்த மற்றொரு பெரிய சமூகப் புரட்சி பெண்களுக்கு சமச் சொத்துரிமை! நாளை அதுபற்றி எழுதுவோம்.

சென்னை
23.3.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77476.html#ixzz2wpcU3aA5

தமிழ் ஓவியா said...


நடக்கப் போவது அழகுப் போட்டியா!


அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்?

செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம்.

அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை.

எண்ணார்!

புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ!

Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சார பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை மனித உரிமை ஆணையம் உத்தரவு


புதுடில்லி, மார்ச் 23- மக் களவைத் தேர்தல் பிரச்சார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், வாக்குசேக ரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட் சியினரும், வேட்பாளர் களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநி யோகம், முழக்கமிடுவது போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின் றனர்.

சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட் சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர் தல் பிரச்சாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரச்சாரங்களில் பயன்படுத் திக் கொள்வது சர்வசாதா ரணமாக நடக்கிறது.

படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய் தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர் களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத் திடம் புகார் ஒன்றை அளித் தார். இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண் டும். இது தொடர்பாக என் னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவ னேஸ்வரில் அளித்த பேட்டியில், சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரச் சார பணிகளில் ஈடுபடுத்து கின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப் பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரி யது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/77472.html#ixzz2wpd4wLXe

தமிழ் ஓவியா said...


கூடா நட்பு கேடா முடியும்!


பி.ஜே.பி. அணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வும் - பா.ம.க வும் எப்படி இடம் பெறமுடியும் என்ற கேள்வி எல்லாத் தரப்பிலும் கேட்கப்பட்டது; அப்படியே இடம் பெற்றாலும் அவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும் என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கு வெகு நாட்கள் கூடத்தேவைப் படவில்லை. இடைப்பட்ட இரண்டே நாளில் உடைசல் ஏற்பட்டு விட்டது. பா.ம.க வின் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்ட சேலம், கல்லக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களும், தொண்டர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அத் தொகுதிகள் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன.

கொந்தளித்து விட்டனர் பா.ம.க தோழர்கள்.

அதன் விளைவு எந்த உச்சத்தில் உஷ்ண மூச்சு வெளியேறுகிறது தெரியுமா?

மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களின் குமுறலைத் தாங்க முடியாமல், கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தைலாபுரம் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார்.

புதுச்சேரியிலும் பிரச்சினை! என்.ஆர். காங்கிரசிற்கு அத்தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் (பி.ஜே.பி) ஒதுக்கப்பட்டா யிற்று. பா.ம.க வும் அங்கு வேட்பாளரை அறிவித்து விட்டது.

கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் - புதுச்சேரி வேறு மாநிலம் - அது இங்கு செல்லாது என்று மீசை முறுக்கி எழுந்து விட்டனர் பாட்டாளிகள்.

எந்த விலை கொடுத்தேனும், கட்சிக்கு சேதாரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கூட் டணி பலத்துடன் தருமபுரியில் போட்டியிட்டு, தான் மட்டுமாவது பெற்றிபெற்று மத்தியில் அமைச்சராகியே தீருவேன் என்பதில் எரி மலையாகத் தகித்து நிற்கிறார் - டாக்டர் அய்யா வின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

விஜயகாந்த் - டாக்டர் அன்புமணி ராமதாசு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி நிற்கும் படத்தைப் பார்த்து புழுங்குகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒட்டுமா(ங்)கனி? என்று இரு பொருளில் தலைப்பைக் கொடுத்து தினமணி மூக்கைச் சொரிந்துவிடுகிற நிலைமை!

தேமுதிக தலைவர் - விஜயகாந்த் பற்றி பா.ம.க வினர் செய்த விமர்சனம் விண்ணையும் தாண்டி வெடி மருந்து வீச்சாக அல்லவா நெடி ஏறியது!

டாக்டர் ராமதாஸ் ஆனந்தவிகடனுக்கு (1.8.2012) அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?

சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சினு ஒரு கட்சி. ஆனா அந்தக்கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான பொறுப்பும் கிடையாது, அந்த தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கை யுமே இல்லாத கட்சி அது.

இருபத்தி நாலு மணிநேரமும் ஏதோ ஒரு மெதப்பிலயே இருக்கிற ஒருத்தர் ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா அப்புறம் அது விளங்குமா? என்று தேமுதிக தலைவரின் தனிப்பட்ட பழக்கத் தைக்கூட சுட்டிக்காட்டி சூடான வார்த்தை களைப் பரிமாறினார் மருத்துவர்.

இந்த நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருந்தால் எப்படி விளங்கும்? ஒருவர் காலை இன்னொருவர் வாருவார் என்பது தான் நடக்கப் போகிறது.

இது என்ன... இன்னும் இருக்குது - வேடிக் கையெல்லாம் - பார்க்கத்தானே போகிறோம்!

Read more: http://viduthalai.in/page-8/77453.html#ixzz2wpeUAmLp

Massy spl France. said...

காந்தி ஒரு அகில இந்திய பெரும் சீக்காளி என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த ஆளு பேரை சொல்லி அகில இந்தியாவையும் முக்கியமாக ஏழைகள் மற்றும் பாழாயப்போன இந்து மதம் வடித்த 'தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்' அனைவரையும் மேலும் குழிக்குள் தள்ளி அழித்தனர் ஆதிக்க இந்து மத மடையர்கள்.

தமிழ் ஓவியா said...


பரிதாபத்திற்குரிய வைகோ


பரிதாபத்திற்குரிய வைகோ

பி.ஜே.பியுடன் ஏன் கூட்டு என்றால் ஈழம் பெறு வதற்காக என்றார் வைகோ- பி.ஜே.பி.யின் முக்கிய தலை வரான வெங்கையா நாயு டுவோ - தனியீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக்கு வந்தே கூறி விட்டார்.

மதிமுக தேர்தல் அறிக் கையில் இந்திய அய்க்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக பி.ஜே.பி. தலை வர் பொன். ராதாகிருஷ் ணன் அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அப்படி மாற்றம் விரும்பி னால் பாரதம் என்றுதான் மாற்ற வேண்டும் என்று கூறி விட்டாரே! இதற்குப் பெயர் தான் வேற்றுமையுள் ஒற் றுமையோ!

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpmyHT1

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp

தமிழ் ஓவியா said...

மோடியின் ஆட்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு

குஜராத்தில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. 2011ஆம் ஆண்டில் 6382 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டில் தற்கொலைகள் 7110 ஆக அதாவது 11.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் பதிவுகள் வாரியம் இந்தியாவில் விபத்து மரணங் களும், தற்கொலைகளும் - 2012 என்ற தலைப்பிடப் பட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அகமதாபாத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அது சுட்டிக்காட்டுகிறது. குஜராத்தின் வளர்ச்சி விகிதமும் இதுதான் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில் 470 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது கவலை தரும் விஷயமாகும். ராஜ்கோட் நகரம் தற் கொலைகளின் தலைநகரமாக திகழ்கிறது. இந்தியா வில் தற்கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அங்கு நடந்த மரணங்களில் 30.5 விழுக்காடு தற்கொலை மரணங்களாகும்.குஜராத்தில் தற் கொலை செய்து கொண்டவர்களில் நாற்பது விழுக் காட்டினர் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். இங்கும் அகமதாபாத் முன்னுக்கு நிற்கிறது. அங்கு 44 விழுக்காடு தற்கொலை மரணங்கள் இளை ஞர்கள் மத்தியில் நடந்தவை.

Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvq62poi

தமிழ் ஓவியா said...

குஜராத் - மோடி ஆட்சியில்

விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு!

தானே.மார்ச்.24- குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத் துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை யும் காவல்துறை தேடி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvqEA8PS

தமிழ் ஓவியா said...


உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள்


சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார்.

கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது.

அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc

தமிழ் ஓவியா said...


கலைஞர் மாடல் என்பதே சரி!

சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது.

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும்.

பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும்.

கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்!

அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது

எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது.

சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா?

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம்.

முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125.

கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது!

மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77494.html#ixzz2wvr5Hgog

தமிழ் ஓவியா said...


தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அவசியம்நேற்று 23.3.2014 வெளியான தீக்கதிர் நாளேட்டின் இணைப்பாக வரும் வண்ணக்கதிரில் வெளிவந்த ஒரு சிறப்பான செய்தியை வாசக நேயர்களுக்காக அப்படியே தருகி றோம்:

அவுரங்காபாத்தில் மகாத்மா காந்தி மிஷன் அறக்கட்டளை மருத்துவ மனையில் ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர் (41, வயது) சர்தார் சஞ்சித் சிங். 2014 பிப்ரவரி 2ஆம் தேதி, பணியில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி, மயக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்பட்டது. பரிசோதித்தபோது அவ ருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளும் கொடுக்கப் பட்டன.

அவசரப் பிரிவில் சேர்க்கப் படும்பொழுது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மிகவும் குறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இதயம் துடிப்பதும், நாடி துடிப்பும் நின்று விட்டது. இசிஜி திரையில் இதயம் செயலற்று விட்டதற்கான நேர் கோடு சமிக்ஞையே வந்தது. உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியாக பேசர் நுழைக்கப்பட்டது. அப்பொழுதும் இதயம் துடிக்காததால் செயற்கையான முறையை கையாண்டனர். மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 100 முறைக்கு செயற்கையான முயற்சிவிட்டு விட்டு மேற்கொள்ளப்பட்டது. 11/2 மணி நேர முயற்சிக்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 4 நாள் களில் அவருக்கு முழு நினைவு திரும்பி யது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. மூளையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிசயிக்கும் வகையில் விரைவாக முழு குணம் அடைந்தார்.

மருத்துவப்படி 90 நிமிடம் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தது எப்படி?

அவருடைய இளம் வயதும் அவருக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக கருதப் படுகிறது. அதைவிடவும் மருத்துவர்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற் கொண்டதும் இந்த அரிய நிகழ்வுக்கு மற்றொரு காரணமாகும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பழக்கங்களைப் பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கிய மானது என்பதையும் விடா முயற்சியுள்ள மருத்துவர்கள் அமைவது எவ்வளவு அருமையானது என்பதையுமே இது காட்டுகிறது.

இதிலிருந்து மனிதர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன அல்லவா!

நம் வாழ்வில் நாம் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகக் கூடாது.

சில நல்ல நண்பர்கள்கூட நண்பர் களின் சகவாசதோஷத்தின் காரணமாக, புகைப்பிடித்தல், மது குடித்தல் - இதை ஒரு வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பழக்கம் என்று தவறான பழக்கத்தில் ஈடுபடுதல், மகளிரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளுதல், அதைப் பெருமையாகப் பேசி தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட் டால், பின்னால் அது நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகும்போது உதவி செய்யக்கூட வாய்ப்பிருக்காது என்ப தால் உங்கள் வாழ்வைப் பாதுகாக்கவா வது தனி மனித ஒழுக்கம் தேவை! தேவை!!

தீய பழக்கங்களைப் புறந்தள்ளுவீர்!

Read more: http://viduthalai.in/page-2/77501.html#ixzz2wvrEaNqP

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது.

இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm

தமிழ் ஓவியா said...


அந்தோ! டாக்டர் பூ.பழனியப்பன் மறைந்தாரே!


நாட்டின் தலைசிறந்த மகப் பேறு மருத்துவரும், சீரிய பகுத்தறிவாளரும், சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுடையவருமான பேராசிரியர் டாக்டர் பூ.பழனி யப்பன் (வயது 84) அவர்கள் நேற்று (23.3.2014) இரவு 8 மணி யளவில் சென்னை -அண்ணா நகர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, நம்மை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

பரம்பரையான சுயமரியாதைக் குடும்பமான பதி வாளர் நளம்புத்தூர் (கொள்ளிடம் கரையில் உள்ள பழைய தென்னாற்காடு மாவட்டம்) பூவராகன் அவர்களது மூன்றாவது மகன் ஆவார்.

மறைந்த நிலவு பூ.கணேசன் எம்.ஏ., என்று அறியப்பட்ட செய்தித் துறை, குடும்ப நலத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் இவரது மூத்த அண்ணன். விடுதலையில் தொண்டாற்றியவர்.

அடுத்த சகோதரர் வேளாண்துறை அதிகாரியாக இருந்த திரு.பூ.சோலையப்பன் அவர்கள் ஆவார்கள்.

பெரியார் பெருந்தொண்டரான பதிவாளர் பூவ ராகன் அவர்கள் வழியிலேயே இம்மூவரும் சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்தவர்கள்.

டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள், முன்பு மருத் துவப் படிப்புத் துறைக்கு தி.மு.க. அரசால் தேர்வுக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்தபோது, சமூக நீதிக் கண்ணோட்டத்தில், வாய்ப்பற்ற முதல் தலை முறைக் குடும்பத்து ஒடுக்கப்பட்ட சமூக மாணவ - மாணவிகள் பலருக்கும் வாய்ப்பு தந்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தியவர்.

டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் (1997). எஃப்.ஆர்.சி.எஸ். பட்டமும் பெற்று, மகப்பேறு மருத்துவத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவராகவும் விளங்கி யவர்.

மருத்துவ மாணவர்களாலும், சக மருத்துவர்களா லும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்; நிறைய படித்து பொதுத் தகவல் களஞ்சிய மாகத் திகழ்ந்த பண்பாளர்.

முதுமையினால் வீட்டில் இருந்த அவரை சில மாதங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்து, கவிஞரும், நானும் நலம் விசாரித்துத் திரும்பினோம்.

வரும் 28 ஆம் தேதி அவர் எழுதி, முதல் பதிப்புடன் நின்று போன பல முக்கிய நோய்கள்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு நூலை, நாம் அவரு டைய அனுமதியோடு மறுபதிப்பிட்டு, சென்னை பெரியார் திடலில் (28.3.2014), மறு அறிமுக வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து, அதில் அவரைப் பெருமைப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்; அதற்கு அவரின் ஒப்புதலும் பெற்றோம்.

இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள். அது இங்கே நடந்துவிட்டது.

அவரை இழந்துவாடும் அவரது வாழ்விணையர், மகன் சேரலாதன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
24.3.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கழகத் தலைவர் மரியாதை

மறைந்த டாக்டர் பூ.பழனியப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டாக்டரின் துணைவியார், மகன் சேர லாதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திருமகள் மற்றும் மு.ந.மதியழன், விடுதலை ராதா, சி.வெற்றிச்செல்வி, திராவிடன் நலநிதி இயக்குநர் த.க.நடராசன் ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/77509.html#ixzz2wvtK0C8B

தமிழ் ஓவியா said...


உடலைப் பாதுகாக்க சில வழிமுறைகள்


நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். சோற்றுக்கற்றா ழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது. பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.

சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.

கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும்.

காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும். புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும். சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது.

Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtexqvC

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட தாழம்பூ

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியு டையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

பசியை தூண்ட: என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகின்றேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இவர் கள் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப் படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

வயிற்றுப் பெருமல் நீங்க: உணவின் மாறுபாட் டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெரு மலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்..

ரத்த சோகை நீங்க: ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறு சுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். இந்தக் குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும்.

உடல்சூடு தணிய : உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtnPgLH

தமிழ் ஓவியா said...


வயிற்றுப்பூச்சிகளை அகற்றும் மிளகு


அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை. சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி அத்தகைய சிறப்புடையவை மிளகு.

அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். அல்சர் பிரச்சினை உள்ள வர்களுக்கு காரத்துக்கு மிளகு சேர்க்க அறிவுறுத்தப் படுவதன் பின்னணி இதுதான். மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும்.

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும். முன்பு குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சிகள் அழிய கை மருந்துகள் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இன்று அதைப் பற்றி யெல்லாம் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

பூச்சி மருந்து கொடுப்பதை மெனக்கெட்டு செய்ய நேரமில்லா தவர்கள், மிளகு அதிகம் சேர்த்த சூப் வைத்துக் கொடுத் தாலே, வயிற்றுப்பூச்சிகள் செத்துவிடும். இதைப் பெரியவர் களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். அடிபட்டு, ரத்தம் கசிந்தால், அந்த இடத் தில் சிறிது மிளகுப்பொடி வைத்து அழுத்தினால் கசிவு உடனே நிற்கும்.

மிளகில் வெள்ளை மிளகு, கருப்பு மிளகு என இரண்டு வகை உண்டு. துரித உணவு போன்ற சில உணவுகளுக்கு வெள்ளை மிளகு உபயோகிக்கிறோம். உணவின் நிறம் மாறாமலிருக்க வேண்டும் என்பதே காரணம். வெள்ளை மிளகு என்பது தோல் நீக்கப்பட்டது... அவ்வளவுதான்!

உண்மையான சுவை மற்றும் ஆரோக்கியம் எதில்? அவ்வப்போது தேவைக்கேற்ப கரகரப்பாகப் பொடித்து உபயோகிக்கிற கருப்பு மிளகில்தான்! அந்தந்த வேளைத் தேவைக்கு கொஞ்சமாக இடித்து உபயோகித்தால், அதன் மணமும் பலனும் முழுமையாகக் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvtx21Cj

தமிழ் ஓவியா said...

இதய ஆரோக்கியம் மிகவும் அவசியம்

இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம் செய்து முடிக்கிறோம்..நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டி ருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம்.

இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

மனஅழுத்தம்: உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மவுனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது.

முறையற்ற உணவுப் பழக்கம்: முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.

இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தரு கின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.

தோல் நீக்கிய சிக்கன் போன்ற வற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவை யான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..

Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvu6ghol

தமிழ் ஓவியா said...


ஒரே கல்லால் இரு காய்கள்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாவை நோக்கி எண்டிசையி லிருந்தும் ஓர் கணை ஏவப்படுகிறது.

எல்லோரையும் சகட்டுமேனிக்கு, தரக் குறைவாக - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கும் அம்மை யார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடியைப்பற்றியோ ஒரே ஒரு வரி கூட மருந்துக்காகவாவது விமர்சிக்காதது ஏன்? என்ற வினாக்கணைகள்தான் அவை.

திராவிடர் கழகத் தலைவரோ, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களோ வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கடைசி நேரம் வரை கூட்டணிக்காக அளவு கடந்த சகிப்புத் தன்மை யுடன் நடந்து கொண்ட இடதுசாரிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில் அவர்களும் இந்த வினாவை எழுப்பி வருகிறார்கள்!

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன், இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு)யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வினாக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இவற்றிற்குப் பிறகும்கூட அம்மையார் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்பதன் பொருள் என்ன? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்றுதான் பொருள்.

இந்த நிலையைக் கணக்கில் கொண்டால் வாக்காளர் கள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை மதவாதத்தை எதிர்ப்பது என்பது மட்டும் தான். அப்படிச் சொல்லும் பொழுது ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்து வதுபோல மதவாத எதிர்ப்பு என்று சொன்னாலே அது பி.ஜே.பி. அணிக்கும் பொருந்தும் அ.இ.அ.தி.மு.க.வுக் கும் பொருந்தும்.

ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரே பிரச்சினை - எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது- மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கமே போதுமானதாகும். பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இதில் பிரித்து பார்ப்பதற்கு இடம் இல்லை.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்து பேசியவர் (23.11.1992) தானே இவர். இந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்டுள் ளதே. ஃப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்டுள்ளதே. டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறி இருக்கிறதே!

அப்பொழுது மறுக்காமல் இப்பொழுது மறுப்பது அசல் சந்தர்ப்பவாதம் தானே! மக்களுக்கு இதை நினை வூட்டுவதுதான் நமது கடமை.

அதோடு விட்டாரா? அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்ன சொன்னார்? ஆமாம்; ஆதரிக்கிறேன் இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால், வேறு எங்கே கட்ட முடியும்? (29.7.2003) என்று பதில் சொன்னவர் தானே?

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர் பார்க்கும் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியிலும் பங்கேற்ற திமுக முயற்சியின் காரணமாக, கப்பல் துறை அமைச்சராகவிருந்த ஆற்றல்மிகு செயல் வீரர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் இருந்த நிலையில் (ரூ.2427 கோடித்திட்டம்) அத்திட்டத்தில் பெரும் பகுதி முடிந்து , இந்நாளில் கப்பல் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா, என்ன காரணம் சொல்லித் தடுத்துள்ளார்? ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன? ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் - ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லும் பி.ஜே.பி.க்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு?

இந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் (Secular State) காப்பாற்றும் வகையில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 120 கோடி எண்ணிக் கையில் வாழும் இந்திய மக்கள் நல்லிணக்கத்துடன், சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் நல்வாழ்வு வாழ வகை செய்யும் - மதச்சார்பின்மையை வீழ்த்தத் துடிக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியான பி.ஜே.பி. அணி, அ.இ.அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர் வாக்காளர்ப் பெரு மக்களே!

Read more: http://viduthalai.in/page-2/77541.html#ixzz2x1jmbPUL

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA

தமிழ் ஓவியா said...


என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்!


ராமன் கோவில் கட்டியே தீருவோம்

கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்!

புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது.

பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1kXWdQq

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்!

சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன?

திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்?

அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம்.

1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை...

2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்..

3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு ..

4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்...

இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்!

கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது.

கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே!

- ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM

தமிழ் ஓவியா said...


என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்!

ராமன் கோவில் கட்டியே தீருவோம்

கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்!

புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது.

பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1l7Ua00

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள்


புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார்.

ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை.

வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம்.

வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார்.

- (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்)

Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn

தமிழ் ஓவியா said...


நடப்பது எமர்ஜன்சியா?

இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது.

இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங்.

ஊடகங்களின் போக்கு

அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன.

- தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014)

கருப்புக்கொடி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர்.

இனம் இனத்தோடு...

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது..

தயார்! தயார்!!

தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj

தமிழ் ஓவியா said...


பாஜகவை நோக்கிப் பாயும் அம்புகள்

ஜஸ்வந்த்சிங் தாக்கு

பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அவர் விரும்பிய படி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படா தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து இந் நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ் வந்த்சிங் வேட்பு மனு தாக்கல் செய் துள்ளார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் முன் னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங். செய்தியாளர் களிடம் கூறியதாவது;

சித்தாந்தங்களுக்கு பெயர் போன தனது கட்சி, இப்போது போலிகளின் வசம் போய் விட்டதாக விமர்சித்தார்.இபோது பாரதீய ஜனதா இரண்டு வகையாக உள்ளது ஒன்று உண்மையானது மற்றொன்று போலியானது என்று கூறினார்.

இது ஒரு நமோ நாடகம் என்றும் இது பாஜகவை அழிவு பாதையில் இட்டு செல்லும் என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எந்த தலைவரும் ஏன் கட்சியில் இருந்து விலகி உள்ளீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லை என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி மக்களிடம் தொடர்புகள் வைத்து கொள்ளவில்லை அது ஒரு பகுதியாகதான் உள்ளது என்று ஐஸ்வந்த் சிங் கூறினார்.

பிருந்தா காரத் தொடுப்பு

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி, உண்மையில் தோல்வி அச்சத்தின் உச்சத்தில் நிற்கிறது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

பாஜகவின் தோல்விபயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதன் நடவடிக்கை களில் இருந்தே பளிச்சென தெரிய வருகிறது. அக்கட்சி தனது சொந்த மூத்த தலைவர்களை ஏமாற்றி தெருவில் நிற்கச் செய்கிறது. ஆனால் முசாபர் நகரில் முஸ்லிம் மக்க ளை கொன்றுகுவிக்க காரணமான வன்முறைக் குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறது;

குஜ ராத்தில் போலி என்கவுண்ட்டர் படு கொலை வழக்கில் குற்றவாளியான அமித் ஷாவையும், மங்களூரில் பெண் களை இழிவுபடுத்தி வெறித்தாக்குதல் நடத்திய மதவெறியன் பிரமோத் முத்தலிக் போன்றவர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்கிறது என்று பிருந்தா காரத் கடுமையாக சாடினார்.

குறிப்பாக பாஜகவின் மதவெறி நடவடிக்கைகள் குறித்தும், குஜராத் மாநிலத்தில் மோடி முன்வைக்கும் வளர்ச்சி யாருக்கானது என்பது குறித்தும் ஏராளமான உண்மை விவரங்களோடு உருவாகியுள்ள இந்த பிரசுரங் களை திங்களன்று கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சி யின்போது கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அருண்மேத்தாவும் கலந்து கொண்டு செய்தியாளர் களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறு கையில், மோடியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பிரச்சாரம் செய்கிற குஜராத் மாடல் என்பது ஏழைத் தொழிலாளர்களை அப்பட்டமாகச் சுரண்டுகிற கொடூரமான மாடல்; குஜராத் உழைப்பாளி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக செலவு செய்கிற தொகை மிகமிகக்குறைவாக மாறியிருக்கிறது;

ஊட்டச்சத்தின்மை நாட்டிலேயே அதிகமாக நிலவுகிற மாநிலம் குஜராத்; பள்ளிகளிலிருந்து குழந்தைகள் மிக அதிகமாக இடைநின்றி யிருக்கும் மாநிலமும் குஜ ராத்; நாட்டிலேயே கல்விக்கும் சுகாதாரத்திற்கும் குறைவான தொகை யை செலவழித் திருப்பதும் மோடியின் குஜராத் என்று அம்பலப்படுத் தினார்.

முன்னதாக பிரசுரங்களை வெளியிட்டுப் பேசிய பிருந்தா காரத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இந்த சிறு நூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் புள்ளிவிபரங் களும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங் களே என்று தெளிவு படுத்தினார்.

மோடியின் குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது மட்டுமேயன்றி எளிய மக்களுக்கானது அல்ல என்றும் பிருந்தா காரத் விமர்சித்தார்.

ஒமர் அப்துல்லா

பிஜேபி மேலிடம் ஜஸ்வந்த் சிங் போன்ற, ஜென்டில்மேன்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் குண்டர்கள், ஊழல் பேர்வழிகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது எந்த மாதிரியான அரசியல் என்று எனக்குப் புரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-8/77580.html#ixzz2x1mT0BBI

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம்: மோடி பொறுப்பாளியல்லவாம்!


புதுடில்லி, மார்ச் 26- 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்ப வங்களுக்காக வருத்தப்படு கிறேன். ஆனால் அந்த சம்ப வங்களுக்கு நான் பொறுப் பாளி அல்ல என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குஜராத் முதல்வரும், பிரத மர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி: ஓர் அரசியல் வாழ்க்கை வர லாறு தலைப்பில் பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஆண்டி மரீனோ எழுதிய நூலை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நூல் குறித்து செய் தியாளர்களிடம் ஆண்டி மரீனோ செவ் வாய்க் கிழமை கூறியதாவது: 310 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் குஜராத் கலவரச் சம்பவம் குறித்து இதுவரை வெளிவராத, அதி காரப்பூர்வமான தகவல்கள் ஏராளமாக இடம் பெற்றுள் ளன.

மோடி அரசியல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ஹெலிகாப்டரில் செல்லும் போது அவருடன் பல வாரங் களாகத் தொடர்ந்து சென்று அந்தத் தகவல்களைப் பதிவு செய்தேன்.

பேட்டியின்போது ஒரு முறை, குஜராத் கலவரச் சம்பவத்துக்குப் பிறகு முதல் வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எனக்கு விருப்ப மில்லை. என்னைக் காரணம் காட்டி எனது மாநில மக்கள் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அப்படியொரு முடிவை எடுத்தேன்.

இருப்பினும், எனது கட்சி (பாஜக) அதற்கு இட மளிக்காததால் (நான்) பதவி யில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனது பதவி வில கலையும் மக்களும் விரும் பவில்லை.

இந்தத் தகவலை முதன் முறையாக பதிவு செய்த நிகழ்வாக இது (பேட்டி) இருக்கும் என பாஜகவின் ஜாம்பவானாகக் கருதப் படும் மோடியே வெளிப்ப டையாகக் கூறினார் என்று ஆண்டி மரீனோ தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/77604.html#ixzz2x7YLeaau

தமிழ் ஓவியா said...


பல்நோக்கு மருத்துவமனை எப்படி இருக்கிறது? கலைஞர் பதில்சென்னை, மார்ச் 26- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சி யில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட் டுள்ள பல்நோக்கு மருத்து வமனை எப்படி இருக்கி றது என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித் துள்ள பதில் வருமாறு:

கேள்வி: சென்னையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பல் நோக்கு மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது?

கலைஞர்: ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதல மைச்சர் ஜெயலலிதா மூன் றாண்டு காலம் அதனை மூடி வைத்தார்.

தலைமைச் செயலகமும், சட்டப்பேர வையும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில் தான் காலம் தள்ளுகிறார் கள். முதலமைச்சர் அறை யைத் தவிர மற்ற அமைச் சர்களுக்கும் நெருக்கடி தான். ஆனால், ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளி கையில், பல்நோக்கு மருத் துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார். 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாக கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும். தற்போது ஜெய லலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவம னையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத் தனை ஆயிரம் பேர் தெரி யுமா? பல்நோக்கு மருத்து வமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப் பட்டார்களாம்!

அறிவிப்பு ஒன்றுதான் அதிமுக ஆட்சியின் இரண்டாண்டுகால சாதனை!

கேள்வி: தொலை நோக்குத் திட்டம் பற்றி முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறாரே?

கலைஞர்: அதைப் பற்றி அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியைக் கூறுகிறேன். 2012-2013 இல் தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலை நோக்குத் திட்ட ஆவணத்தில் 104 அணைகளைப் புனரமைக் கப் போவதாக அறிவித் தார்கள். இந்தத் திட்டத்திற் கான மதிப்பீடு 745 கோடி ரூபாய். இதில் 80 சதவிகிதம் உலக வங்கி கடனாகவும் 20 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக் குமென உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்டப் பணிகளை 2012 இல் துவங்கி, 2018 க்குள் நிறைவேற்றப்போவதாகச் சொன்னார்கள். பணிகளில், பல்வேறு துறைகளின் பங் களிப்புகளை ஒருங்கி ணைக்க தலைமைச் செய லாளரின் தலைமையில் மாநிலத்திட்ட மேலாண் மைக்குழுவும் உருவாக்கப் பட்டது. முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்தக் குழு ஒப்புதல் அளித்த தோடு சரி மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவ மழை பொய்த்ததால், பெரும்பா லான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில் சுலபமாக அணை களை மேம்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் தற்போது வரை திட்டப் பணிகள் துவங்கவில்லை. 2012 இல் வெளியிடப்பட்ட தொலை நோக்குத்திட்ட ஆவணத் தில் இந்தத் திட்டத்திற்காக 745 கோடி ரூபாய் செல வாகும் என தெரிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண் டாவது ஆவணத்தில் 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றுதான் அதி முக ஆட்சியின் இரண் டாண்டு காலச்சாதனை!

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77608.html#ixzz2x7YVA8W4

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

காப்புத் தொகை?

2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர்.

தேவை நட்சத்திர சின்னம்

தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

விதிமீறல்

சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம்.

சரண்!

கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார்.

பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

தலைகீழ் கட்டை விரல்

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மீதிப் பணம் எங்கே?

திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார்.

ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல்பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம்.

சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக:

i.e. General Public Vs Jayalalitha

மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . .

என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே!

- ரம்யா சீனிவாசன்

Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi

தமிழ் ஓவியா said...


இரட்டை இலை நீக்கம், மு.க. அழகிரி நீக்கம் பற்றி கலைஞர்


சென்னை, மார்ச் 26- இரட்டை இலை நீக்கம், மு.க.அழகிரி நீக்கம் பற்றி செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (நேற்று) குறிப்பிட்டதாவது:

செய்தியாளர் :- இரட்டைஇலை சின்னங்கள் சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டு மென்றுபொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

கலைஞர் :- தேர்தல்ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள்கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாகதேர்தல்ஆணையம் ஜனநாயகரீதியில் நடைபெறுகிறதுஎன்பதற்குஅடையாளமாக, ஏற்கெனவே இந்த இரட்டைஇலை சின்னங்களைமறைக்க வேண்டு மென்றுகூறியிருந்தது. அந்தத் தீர்ப்பைமதித்து, கட்சிசின்னங் களை, அரசுசார்புடையஎந்தநிகழ்விலும் அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாதுஎன்பதைநானும் கண்டிப் பாகஎடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

செய்தியாளர் :- தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்றகட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துகட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே?

கலைஞர்:- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் பட்டதற்குப் பிறகுஉரியவிளக்கங்களை அதற்கு அளிக் காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்ப தாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவ தாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத் திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்துபேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவேநீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்.

செய்தியாளர் :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றசொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தி ருக்கிறது. பத்திரிகைகள்என்றால், அனைத்துப் பத்திரிகை களிலும் அல்ல. முரசொலியில்வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றபத்திரிகைகள்இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில்இருட்டடிப்பு செய் திருக்கின்றன. ஏறத்தாழநான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாகநேற்றைய தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்அரசுவழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையி லிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலைஏடுகள் என்றுதங் களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாத தின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம்தான் என்ன?

இவ்வாறு கலைஞர் அவர்கள்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77613.html#ixzz2x7Zj2yid

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை!


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத் திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம்.

அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசிய மாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும்.

இலங்கை அரசு, எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்? என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு குருட்டுத் தைரியம்தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 27.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77655.html#ixzz2xDDm5Ce2

தமிழ் ஓவியா said...


சொத்துக் குவிப்பு


ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம், வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77670.html#ixzz2xDJd8xEl

தமிழ் ஓவியா said...


நம் கடமை


நாளைய ஆட்சியாளர்களாக மாறத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா கா(லி)விக் கும்பலின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தாலே போதும். நாட்டை இவர்களிடம் ஒப்படைத்தால் என்ன நடக்குமென்று.

போன வாரத்தில் பீகாரில் சத்ருகன் சின்கா என்னும் இந்தித்திரைப்பட நடிகர் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை நையப்புடைத்து மிதிமிதியென்று மிதித்து எறிந்ததை பாஜக ஆதரவு செய்தித் தாள் கள் கூட மறைக்க முடியாமல் அந்தக் கொடுமையை நிழற்படமாக வெளியிட்டன.

இதே போல் வாரணாசியில் நரேந்திர மோ(ச)டியை எதிர்த்துபோட்டியிட முடிவு செய்து வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த கெஜ்ரிவால் அவர்களை இதே காவி ஆதரவுக்கூட்டம் அழுகிய முட்டைகளையும், கறுப்பு மய்யையும் வீசி தங்களது வழக்கமான இயல்பை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்கள், நம்முடைய கொள் கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் மதிக்க கற்றிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே மசூதியை இடிப் பதற்கும் மதக்கலவரங்களை தூண்டி நடத் துவதற்கு காரணமானவர்களாக இருக்கும் பொழுது அவர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் தொண்டர்கள் எப்படியிருப் பார்கள்?

காவி வேடதாரிகளின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்டத் தலைவர்கள் செய்தி ஊடகங் களின் விவாத அரங்குகளில் பங்கேற்கும் பொழுது மாற்றுக்கருத்து கொண்டவர்களை பேசவிடாமல் தாங்களே ஆக்கிரமித்து கொண்டு கத்துவதும் மற்றவர்கள் மதிக்கும் தலைவர்களை, சிந்தனையாளர்களைப் பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாதவர்களோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

தங்களை எதிர்த்து யாரும், எதுவும் சொல்லக்கூடாது, செய்யக்கூடாது, அப்படிச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் செய் வது கடைந்தெடுத்த பாசிசம் அல்லவா?

எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆட்சி அதிகாரத்தை இவர்களிடம் ஒப் படைத்தால் நாடு என்னென்ன அவலங் களைச் சந்திக்க நேரிடும் என்பதை வாக் காளர்கள் நன்கு உணர்ந்து தங்களின் தேர்தல் கடமையை ஆற்றிடவேண்டும். தங்களிடம் உள்ள வலிமையான வாக்குச் சீட்டை வீண் ஆடம்பரங்களுக்கும், விளம் பரங்களுக்கும், மெய்போல் தோன்றிடும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கும் மதவெறியைத் தூண்டும் வீண் உணர்ச்சி களுக்கும் மயங்கித் தவறாகப் பயன் படுத்தாமல், நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு உறுதுணையாக சமூகநீதியை, உண்மை யான மதச்சார்பின்மையை கட்டிக்காப் பாற்றும் அணிக்கு ஆதரவாக தவறாது பயன்படுத்துங்கள்.

- இசையின்பன்,
சென்னை

Read more: http://viduthalai.in/page-2/77669.html#ixzz2xDJwMGLI

தமிழ் ஓவியா said...


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஒருநாள்


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை பட்டியல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், அய்ந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால், பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

* காலை 6 மணி: நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். (அதாவது அய்.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.

* காலை 7 மணி: உடல் நலம் பேணல், காலை உணவு, பல் துலக்குதல். பற்பசையால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

* காலை 7.30 மணி: கான்பெரன்ஸ் அய்.எஸ்.எஸ் இல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக் கான கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சி னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர் களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப் படுகின்றன.

* காலை 8 மணி: பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள்.

இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள். இப்படி தினமும் இரவு 10 மணி வரையில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/77686.html#ixzz2xDL7az79