Search This Blog

23.3.14

ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யும் - அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளே!

ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யும் - அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளே!

ஹிந்து ராஜ்ஜியத்தை அமைத்தே தீருவோம் - இது பி.ஜே.பி.யின் குரல்! ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம்- இதுவும் சங்பரிவார்களின் குரல்தான்!
இது ஊருக்கும் உலகத்திற்கும் தெரிந்த ஒன்றே! இத்தகைய சக்தியை ஆட்சியில் அமர வைத்தால் நாடு என்னாவது? அதிகாரத்தை இந்தக் குரங்குகளின் கை களில் கொடுத்தால் சிறுபான்மை மக்களான பூமாலைகளின் கெதி என்னாவது? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைதான் என்ன?

கூடாது  - கூடாது - இந்தியா மதச் சார் பற்ற ஆட்சியாயிற்றே! இந்திய அரசமைப் புச் சட்டத்தின் தொடக்கமே (Preamble) )  மதச் சார்பின்மையை (Secular) உறுதி படுத்துகிறது. அப்படி இருக்கும்போது இந்தப் பிஜேபி வகையறாக்கள் ஹிந்து ராஜ்ஜியம் பேசுகிறார்களே என்ற கேள்விக் கணைகள்  வெடித்துக் கிளம்புகின்றன.

தேர்தல் நேரத்தில் அவர்கள் சமாளிக்கப் பார்த்தாலும் அவர்களின் ஆசான குரு பீடமான ஆர்.எஸ்.எஸோ ஆமாம் - ஹிந்துத்துவா தான் எங்கள் உயிர், உணர்வு - ஓட்டம் எல்லாமே! இதிலென்ன சந்தேகம் என்று சத்தம் போட்டே சொல்லுகிறது!

அதன் விளைவு தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பயங்கரம்! அதைக் குற்றம் என்றோ தவறு என்றோ இன்று வரை அவர்கள் சொல்லத் தயாராக இல்லை.
இன்னும் சொல்லப் போனால் அது இடிக்கப்பட்ட பொழுது எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார் அத்வானி என்று பிசினஸ் இந்தியா ஏட்டின் பிரபல பெண் செய்தியாளர் ருச்சிராகுப்தா லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியமே கூறினார்.

அவர்கள் அப்பட்டமான ஆரிய குலத் தத்துவமான ஹிந்துத்துவாவில் கட்டுண்டு போனவர்கள் - அவர்கள் கண் விழிப்பது முதல் கடைசி நிமிடம் தூங்கும் வரை அதே நினைப்புதான் - அதே காரியம்தான்.

அந்த அமைப்புடன் மறைமுகக் கூட்டு மறைமுகக் கூட்டு என்ற ஒரு கருத்து உலா வருகின்றதே - அந்த மறைமுகக் கூட்டு என்பது அ.இ.அ.தி.மு.க., தான் - அம்மை யார் ஜெயலலிதாதான்!

அ.தி.மு.க.வுடன் வைத்திருப்பது தான் இயல்பான கூட்டு என்றுகூட வால்கிஷன் அத்வானி சொன்ன துண்டே! 2009 மக் களவைத் தேர்தலின்போது அப்பொழுது பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் எல்.கே. அத்வானி டில்லியில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேர்த லுக்குப் பிறகு அதிமுக எங்களை ஆதரிக்கும் என்றார். (தினகரன் 13.4.2009 பக்.1) அதே நிலைதானே இன்றும்!

அதிலென்ன சந்தேகம்?  அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெய லலிதா அவர்களின் நெஞ்சில் நிறைந்து புனலாக பாய்ந்தோடுவதெல்லாம் அந்த ஹிந்துத்துவாதான் ஆம் ஹிந்துத்துவா தான்! சட்டப் பேரவையில் நான் பாப்பாத்தி! பாப்பாத்திதான்!! என்று பரப்புரை செய்தவராயிற்றே!

அப்பொழுது அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்; இந்தியாவின் தலைநகர மான புதுடில்லியில் தேசிய ஒருமைப்பாடு மாநாடு - ஆட்சியோ வாஜ்பேயி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

அக்கூட்டத்தில் (23.11.1992) கலந்து கொண்ட தமிழக முதல் அமைச்சர் மாண்பு மிகு ஜெ, ஜெயலலிதா என்ன பேசினார்?

விடுதலை சொன்னால் வேறுவிதமாக விமர்சிப்பார்கள்! அவாளின் தினமணி ஏடே (24.11.1992) முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வெளியிட்டதே! கரசேவையை ஜெய லலிதா வற்புறுத்துவார் என்று தலைப்பிட்டு தினமணி வெளியிட்ட செய்தி இதோ:

அரசியல் சட்டத்தின்படி, பெரும் பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூகஅமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிறுத்திச் செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான் மையினரைப் போல் அனுபவிக்க அனும திக்க வேண்டும்.  அயோத்திப் பிரச் சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி, கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.   உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ளஆணைகளும்,  உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவித மான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன்.  இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில், கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக் கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட் டுள்ளது.  அந்த இடத்தில் கட்டுமானத்துக் குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ளசட்டச் சிக்கல் களை அகற்றத் தேவையான நடவடிக் கைகளை மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். கரசேவை நடைபெறுவதற்கு பொருத்த மான சூழ்நிலையை உருவாக்கத் தேவை யான முடிவை இந்த தேசிய ஒருமைப்பாட் டுக்குழு  எடுக்க வேண்டியுள்ளது.  கர சேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங் களைஅணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.   மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டு கோளைத் தெரிவிக்கிறேன்.  உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பது தினமணி வெளியிட்ட செய்தி. இது தமிழ் நாளேடு.

இன்னொன்று ஆங்கில இதழ் - அது வும் அவாள் இதழே  - இந்துக் குடும்பத்துப் பிள்ளைதான் அது.

ஃப்ரண்ட் லைன் (1.1.1993) வெளியிட் டது என்ன?

“I am aware that the Supreme Court directions to the Uttar Pradesh Government and the pendency of the cases in the High Court  have created  a legal situation  making it difficult for the KarSewa”  v‹W«;  “This august body will, therefore, have to take a decision on creating a congenial atmosphere  for the conduct of the KarSewa.   All steps will have to be taken to move the Courts  to permit KarSewa”

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு (3.12.1992) உத்தரப்பிரதேச மாநில விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் குலாப்சிங் பரிகார் அளித்த பேட்டி இதோ!

முதற் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. வினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். மேலும் கரசேவைக்குரிய பல உதவிகளை செய்வதாக உறுதியும் அளித்தார் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே!

இப்பொழுது இந்தப் பிரச்சினை பொது மேடைகளில் வெடித்துக் கிளம்பும் போது, பிரச்சினை பேருரு எடுக்கும் நிலையில் பூனைபோல ஞாவ்! ஞாவ் என்று கீச்சிடுவதால் பயன் இல்லை.

அது உண்மையில்லையென்றால் அப்பொழுதேயல்லவா மறுத்திருக்க வேண் டும்? ஏன் மறுக்கவில்லை? சொன்னது உண்மை - அதுவும் உள்ளத்தின் வேரிலி ருந்து வெளிப்பட்ட உவப்பான கருத்தா யிற்றே - இப்பொழுது அது வலி கொடுக் கிறது என்றவுடன் சமாளிக்கப் பார்க்கிறார்! அதற்கான வாய்ப்பே இல்லை - காரணம் கெட்டியாக சான்றுகள் அல்லவா கட்டிப் பிடிக்கின்றன.

அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அம்மையார் அளித்த பேட்டி (29.7.2003) என்ன தெரியுமா?

கேள்வி; அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?

முதல் அமைச்சர் ஜெயலலிதா: ஆமாம் ஆதரிக்கிறேன். இந்தியாவில் ஒரு ராமர் கோயிலைக் கட்ட முடியவில்லை யென்றால் வேறு எங்கே கட்ட முடியும்? என்றாரே - இத்தகையவர் ஹிந்துத்துவா வாதியல்லாமல் வேறு என்னவாம்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கனவுத் திட்டம்! திராவிட இயக்கம் தீவிரமாகக் குரல் கொடுத்து வந் திருக்கிறது அய்யா, அண்ணா, எம்.ஜி.ஆர். மட்டுமல்ல காங்கிரஸ்காரரான கோசல்ராம் போன்றவர்கள் குரல் கொடுத்த பெருந்திட்டம்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வாராது வந்த மாமணியாக வந்த தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள். கப்பல்துறை அமைச்சராக வந்த நிலையில் ரூ.2427 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது.

1999 செப்டம்பர் நாடாளுமன்ற தேர்தல், 2001 மே 10இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல், 2004 மே 10 நாடாளுமன்ற தேர்தல்களில் அண்ணா திமுகவின் மூன்று தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டம் வந்தே தீர வேண்டும் என்று வாய் நீளம் காட்டியவர் இப்பொழுது கவிழ்த்து விட்டாரே!
எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துவதுதான் உண்மையான மதச் சார்பின்மை; ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தருகிறது. ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்

(Dr. நமது எம்.ஜி.ஆர். நாள்; 23.10.2008) என்று தட்டைத் திருப்பிப் போட்டாரே!
மதச் சார்பின்மை என்றால் அரசுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தானே பொருளே தவிர, எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தும் அரசியல் பூசாரி வேலை அல்ல!

முதலில் ராமர் பாலத்தை இடிக்க லாமா? இந்துக்களின் மனதை  புண்படுத்த லாமா? (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். 26.7.2008) என்று கூறி உச்சநீதிமன்றம் சென்று தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டத்தை முடக்கிய துரோகத்தை என்ன சொல்ல! ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார் (28.3.2012).

ராமன் பாலம் என்று பிஜேபி சொல்லு வதையே எதிரொலிக்கும் இவர் பிஜேபி என்னும் ஹிந்துத்துவாவின் இன்னொரு குழல் துப்பாக்கி தானே!
தலையை சுவரில் முட்டிக் கொள்ள வேண்டிய கொடுமை என்னவென்றால் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம் பெற்றுள்ள காலமெல்லாம் இராமனையும், இராமாயணத்தையும் தோலுரித்துத் தொங்க விட்ட தூய இனவுணர்வுத் தலைவரான அண்ணாவை இதைவிட வேறு வகையில் எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

அ.தி.மு.க.வின் கட்சிக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவம் காற்றில் பறப்பது வெறும் உருவமல்ல - அண்ணாவின் கொள்கை காற்றில் பறப்பதாகத் தான் பொருள்!

ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எப்படி எப்படியெல்லாம் வாதாடுவார்களோ அதே சொற்கள் சுத்தமாக, அட்சரம் பிறழாமல் பேசும் பிரபல பெண் பிரசாரகர் ஆகி விட்டார் ஜெயலலிதா.

தான் உருவாக்கிய ராமர் பாலத்தை ராமபிரான் தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. ராமபிரானைப் பற்றிய அனைத்து அம்சங் களையும் மக்கள் நம்பலாம். ஆனால் ராமர் பாலம் மட்டும் நம்பிக்கைகளுக்கு அப்பாற் பட்டதா? (கம்பராமாயணம் யுத்தகண்டம் 171ஆவது பாடல் மரக்கல என்று தொடங் கும் பாடலில் ராமன் பாலத்தை இடித்தான் என்று உள்ளதே!)

காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத்தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள் மீட்கப்பட் டது போன்றும், வின்ஸ்கோட் திரைப்படம் கிறிஸ்துவர்களின் மனதைப் புண்படுத்து கிறது எனத் தடை செய்யப்பட்டது போன் றும், ராமர் பாலம் நம்பிக்கையையும், நம்ப வேண்டும்.

இறைத் தூதர் முகம்மது நபிகளின் புனித பொருள் மதிப்புக்குரியது என்றும், கிறிஸ் துவப் பெரு மக்களின் விசுவாச விஷயங் களை மதித்துப் போற்றுவது போன்றே இந்துக்களின் இறை நம்பிக்கையையும், புராதனச் சின்னங்களையும் மதிக்கிறேன்.

ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தருகின்றது. ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங் கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்  (ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர். நாள்: 26.7.2008).
இப்படி சொல்லுவது இந்து முன்னணி ராம. கோபாலனோ, விசுவ ஹிந்து பரிஷத் பிரவின் தொகாடியாவோ அல்ல! சாட்சாத் அண்ணா பெயரை சொல்லும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாதான்!

அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட தத்துவ இனச்சுட்டு முகமூடியையும் அணிந்து கொண்டு ஆரியம் உள்ளே புகுந்து விட்டதன் உறுமல் சத்தம் இங்கு கேட்கவில்லையா?

அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேட்டில் பூணூலின் தத்துவம் பற்றி பூரிப்புடன் எழுதப்படுகிறதே! -  மனு தர்மத்தின் மாண்பு குறித்து மார் தட்டப் படுகிறதே!  (நமது எம்.ஜி.ஆர். 13.3.2012 பக்.7) அதுவும் பார்ப்பன வாலிபன் ஒருவன் பூணூலைக் கையில் ஆணவத்துடன் பிடிப்பது போல காட்டிக் கொக்கரிக்கிறதே அந்த அண்ணா திமுக ஏடு!

கருணாநிதியின் ஆட்சியை அகற்ற சித்ரா பவுர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று தம் கட்சியினருக்கு தோழர்களுக்கு அறிக்கை வெளியிடுவது (ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர். 9.11.2008) அரசியலா - அரசியலின் பெயரில் ஊடுருவிய ஆரியமா - ஹிந்துத்துவமா?

குஜராத்தில் பி.ஜே.பி. மோடி முதல் அமைச்சர் பதவி பிரமாணம் எடுத்தால் இங்கிருந்து ஜெயலலிதா அம்மையார் தனி விமானம் மூலம் பறந்து செல்கிறார் - இங்கே ஜெயலலிதா பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டால் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி தனி விமானத்தில் பறந்து வருகிறாரே - அது எப்படி?

போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து நாற்பது வகை உணவால் உபசரிக்கிறார் - உங்கள் வெற்றி ஹிந்து இந்தியாவின் வெற்றி! என்று (உணர்வு 25.6.2008) பேரிகைகொட்டி அழைக்கிறாரே - இந்த உணர்வுக்கு என்ன பெயர்? இப்பொழுது கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள் - அர்த்தம் புரியும்!


முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு:
ஜெயலலிதாவின் கருத்தென்ன?
இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் மட்டுமல்ல; கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமுகத்தினர் அந்த சலுகைகளை யெல்லாம் அனுபவிக்கவில்லை என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ் லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது நச்சுக் கருத்தை வெளியிட்டார் ஜெயலலிதா. (தீக்கதிர் 23.7.2004). இது ஆர்.எஸ். எஸின் அப்பட்டமான குரல் அல்லவா!

சோ  அடையாளம் காட்டுகிறார்
திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில், ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். அந்த ஒரு பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப்பட்டதோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். கோயில், அர்ச்சனை, பிரசாதம் இவற்றில் நம்பிக்கையானவர் (துக்ளக் 21.9.2005)
இதன் மூலம் தெரிவது என்ன? ஜெயலலிதா திராவிடர் இயக்கத்துக்குச் சம்பந்தமற்றவர் அதற்கு நேர் எதிரான பார்ப்பன சமூகச் சிந்தனையும் நம்பிக்கையும் உள்ளவர் என்று இன்னொரு பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமி நற்சான்று கூறுகிறார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பி.ஜே.பி. என்னும் ஹிந்துத்துவாவுக்குப் பொருத்தமானவர் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா இல்லையா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------ மின்சாரம் அவர்கள் 22-03-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/77354.html#ixzz2wjvggbP7

62 comments:

தமிழ் ஓவியா said...


மாவீரர்கள் நடராசன் - தாளமுத்து


(சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (எம்.எம்.டி.ஏ.) புதிய அலு வலகக் கட்டடமான தாளமுத்து - நடராசன் மாளிகை திறப்பு விழா 14.4.89 அன்று இரவு 7 மணியளவில் சென்னை எழும்பூர் காந்தி - இர்வின் சாலையில் நடக்கும். முதல்வர் கலைஞர் இந்த மாளி கையைத் திறந்து வைப்பார். அமைச்சர்கள் எஸ்.தங்கவேலு, பொன்முடி முதலியோர் பங்கேற்கும் விழா இது. இந்த மாபெரும் கட்டடத்திற்கு மாவீரர்கள் தாளமுத்து - நட ராசன் பெயர் சூட்டப்படுவதையொட்டி பேராசிரியர் இறையனார் எழுதிய சுயமரியாதைச் சுடரொளிகள் நூலிலிருந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.)

தமிழ் ஓவியா said...


இயக்க வரலாற்றில் இனமானங் காக்கும் கொள்கைக்காகத் தங்கள் உயிரையே ஈந்து வழிவழித் தலைமுறை யினர்க்கு எழுச்சியூட்டவல்ல களச்சாவுப் பட்டியலைத் தொடங்கி வைத்த முதல் வீரர்களே நடராசன் அவர்களும், தாள முத்து அவர்களும்.

ஆச்சாரியார் ஆட்சிக்காலத்தில் முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் நடத்த, தமிழர் தலைவரும், அவரின் தானை முதல்வர்களும் தீர்மானித்ததும் அழைப்பு விடப்பட்டது. தமிழா! என்ன செய்யப் போகிறாய்? இந்தி வந்துவிட்டது. பார்ப் பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி - தமிழனின் தன்மானத்தை அழித்து, தமிழனை ஆரிய ருக்கு என்றென்றும் நிலையான அடிமை யாக்க, இந்தி கட்டாயப் படிப்பாக ஏற் படுத்தப்பட்டாய் விட்டது. தலைவணங்கி வரவேற்கப் போகிறாயா? என்ற கேள்வி வடிவத்தில்! நாடெங்கிலுமிருந்து படை மறவர்களின் பெயர்கள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. இந்தி எதிர்ப்புத் தலைமை நிலை யம் அழைப்புக் கொடுத் தது இப்படி: இந்தி எதிர்ப்புச் சத்யாக் கிரகம் செய்ய ஒப்புக் கொண்டு, விடுதலையில் பெயர்களை வெளியிட்ட தொண்டர்களில் தங்கள் சொந் தச் செலவில் உடுப்புக் களோடு, ரயில் சார்ஜும் கொடுத்து வரக்கூடிய வசதி யுள்ளவர்கள் உடனே புறப் பட்டுச் சென்னைக்கு வந்து சேர வேண்டியது. நம் இயக்கத்தின் தனிச் சிறப்பே கூலிக்கு ஆள் பிடித்துப் போலிப் போர் நடத்தாத பாசறை என்பது தானே!

குடந்தையிலிருந்து குமுறும் உணர்ச்சி யோடு சென்னை வந்து 13.9.1938 காலை இந்து தியாலாஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு மறியலில் கலந்தார் தாளமுத்து.

தமிழ் ஓவியா said...

கட்டாய இந்தி ஒழிக! ஆரிய இந்தி ஒழிக! தமிழர் வாழ்க! என்று முழக்க மிட்டார். கைது செய்யப்பட்டு ஜியார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட் நீதிபதி மாதவ ராவ் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இப்படியே விட்டுவிட்டால் ஊருக்குப் போய் விடுகிறீர்களா? என்று நடுவர் கேட்டு மூச்சு இழுப்பதற்குள் விடை வந்தது தாளமுத்துவின் திருவாயிலிருந்து - இல்லை முடியாது என்பதாக! நாலு மாதம் கடினக் காவல் தண்டனை விதிக் கிறேன் - தீர்ப்பளித்தார் நடுவர், தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! தண்டனையை ஏற்றுக்கொண்ட தாளமுத்து மட்டுமல்ல, திருச்சியிலிருந்து வழிநடையாக வந்து சேர்ந்த படையினரும் இணைந்தும் ஒலி முழக்கம் செய்தார்கள்.

சென்னையில் பண் ணக்கார ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த, நடராசன் தன் பெற்றோரிடம் நான் இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட விரும்புகிறேன், தமிழர்களின் பின் சந்ததி யர்க்காகச் சிறை செல்ல நான் பின்னடையப் போவதில்லை என்ற போது முழு மனத் தோடு 5.12.1938 அன்று மறியல் களம் சென்று போரில் பங்கு பெற்றுக் கைதாகி, 6 மாதக் கடுங்காவலும், 50 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 6 வாரக்கடுங்காவலும் மாகாண மாஜிஸ் ரேட் அபாஸ் அலியால் தண்டனை விதிக்கப்ட்டுச் சிறை சென்றார்.

தமிழ் ஓவியா said...


கடுங்காவல் சுமையினால் காய்ச்சல் கண்டவரைச் சிறை மருத்துவர்கள் 30-12-38 அன்று அரசினர் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் அவர் நிலை முன்னேறாமல் கவலைக் கிடமாகியது. சிறையதிகாரிகள் இவரை மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறும் படி எவ்வளவோ வேண்டினர், வற்புறுத் தினர் ஆனாலும் செத்தாலும் சிறையிலே சாவேனேயொழிய மன்னிப்பு என்ற பேச்சே கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். அந்தப்படியே இவர் மன்னிப்பு என்பதற்கே வாய்ப்பில்லாமல் 15.1.1939 அன்று தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 10,000 மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.

இரங்கல் கூட்டத்தில் அண்ணா, இந்தப் பதினாயிரக்கணக்கான ஆண், பெண் மக்களிடையே கிடத்தியிருக்கும். தமிழ் வீரனின் செய்கை பொன்னெழுத் துக்களிலே உலக சரித்திரத்தில் எழுதப் படும் என்று புகழுரை வழங்கினார். (அய்யா அப்போது சிறையில்)

நடராசனின் தந்தை, என் மகன் இறந்து போனாலும் ஒவ்வொரு தமிழனின் உயிருடனும் கலந்து தமிழ்நாடு தமிழருக்கு உரிமையாகும் வரை தமிழர்கள் ஊக்கம் கொண்டு உழைக்குமாறு தூண்டும் எனப் பெருமிதப்பட்டார்.

ஆனால் சட்டமன்றத்தில் ஆச்சாரி யாரோ தமக்கேயுரிய ஆணவத்துடன், நடராசனுக்குத் தாய்மொழியிலோ அல் லது இதர மொழிகளிலோ எழுதப் படிக்கத் தெரியாது. கல்வியறிவில்லாததால் இப்பை யன் மறியலில் ஈடுபட நேர்ந்தது என்று ஏழு கிணறு மலையப்பன் தெரு மாநக ராட்சிப் பள்ளியில் படித்து மிக அழகாக எழுதப் பயின்றிருந்த நடராசனைப் பற்றி பொய் புகன்று கிண்டல் செய்தார்.

இந்த நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரொலிகளை உண்டாக் கின. கணக்கற்ற கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. நடராசனுக்கு முன்னர் சிறை வாழ்க்கையேற்ற தாளமுத்து கடுமையான வயிற்று உளைவு காரணமாக 10.3.1939 அன்று சென்னை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டவர் மறுநாள் உயிரிழந்தார். அவரை மட்டுமே ஈன்றிருந்த முதுமையுற்ற பெற் றோர்கட்கும், இளமையுள்ள துணைவி யாருக்கும் இறந்த பிறகே சிறையதிகாரிகள் செய்தியறிவித்தனர். குடும்பத்தினர் வந்த பிறகுதான் சென்னையிலிருந்த இயக்கத் தலைவர்கட்கு நடந்ததே தெரிந்தது! பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வல மாகத் தாளமுத்துவை எடுத்துச்சென்று நடராசன் இடப்பட்டிருந்த இடத்தை யடுத்தே அடக்கம் செய்தனர்.

அப்போதே அங்கேயே நடந்த இரங் கல் கூட்டத்தில், காங்கிரசின் மூன்றாண்டு சத்தியாகிரகத்தில் எந்தத் தொண்டனாவது இறந்தானா? மிகவும் வெட்ககரமான நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். தமிழராட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படும். வருங்காலத்தில் பெரியார் உருவத்தை நடுவில் வைத்து தாளமுத்து, நடராசன் உருவங்களை இருபக்கங்களி லும் எழுப்ப வேண்டும்! என்று அண்ணா வீர வணக்கவுரையாற்றினார்.

தமிழர்களே, இனி என்ன செய்யப் போகிறீர்கள்! என்று விடுதலை வினா எழுப்பியது. தமிழினம் முழுமைக்கும் இருவர் நினைவும் இக்கேள்வியை இப் போதும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது!

வாழ்க நடராசன் - தாளமுத்து

Read more: http://viduthalai.in/page2/77355.html#ixzz2wjxMwk7x

தமிழ் ஓவியா said...


அமெரிக்க நாத்திகர் சங்கத்தின் பார்வையில்..... அவர்கள் எதை நம்புகிறார்கள்?

மத நிறுவனங்களுக்கு வரிவிலக்குகூடாது: சிலர் சர்ச்சுக்கு (கோவிலுக்கு) செல்வதால் வரிச்சுமையை மற்றவர்களும் சுமக்கக் கூடாது. சர்ச்சுகளுக்கு மானி யம் வழங்குவது என்பது அரசிலமைப்பை மீறும் செயலாகும். அரசும், சர்ச்சும் பிரித்தே பார்க்கப்பட வேண் டும். குழந்தைகள் புறக் கணிப்பு, குழந்தைகள் பாதிப்பு, கருக் கலைப்பு உள்ளிட்டவைகளுக்கும் மதமே பொறுப்பாகும்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைக்கு விரோதமான திட்டமிட்ட செயலை மதம் செய்கிறது. இதனால், குழந்தைகள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் இதனால் ஏற்படுகிறது.

இணைந்து வாழும் முறையை மதம் எதிர்க்கக் கூடாது: திருமணம், திருமண முறிவு ஆகிய உறவுகளின்மீதான சட்டங் கள் தனிநபர் விருப்பங்களைப் பொறுத்தே அமைய வேண்டும். மதமோ, அரசோ தனிப்பட்டவர்கள் உரிமைகளை நிர்ணயிக்க கூடாது. தனி நபர் தனித்த சுதந் திரம் என்பது அதுதான்.

மதம் பெண்ணிய சிந்தனைக்கு எதி ரானது : சம உரிமைக்கு முதன்மையான எதிர்ப்பே மதம், மதவாதிகளிடமிருந்து தான் வருகிறது. பெண்ணாக இருப்பவர் ஆணுக்கு கீழ்ப்படிபவராக இருக்க வேண்டும். சமத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன் மதத்துக்கு கட்டுப்பட வேண்டும். எந்த மத அமைப்பாக இருந் தாலும் பெண் நிலை ஆணுக்குக் கீழே தான் உள்ளது.

மதம் அறிவியலுக்கு எதிரானது: மதக்கருத்துக்கள் அறிவியல் முறையில் சரிபார்க் கக் கூடாது. ஆகவே, அறிவியல் மதத்துக்கு எதிரானது. கிருத் துவம் சொல்வதுபோல் பூமி ஆறாயிரம் ஆண்டுகள் காலத் தியது இல்லை என்று அறிவியல் நிரூபித்துள்ளது. கன்னித்தன்மை மாறாமல் பிறப்பு மற்றும் சாத்தியமில்லை. சர்ச் பரப்பிய வற்றால் ஏற்படும் விளைவுகளுக்கும், மனிதனின் கேள்விகளுக்கு அதிகமான விளக்கங்கள் சொல்லவும், அனை வரையும் அறிவியல் பாதைக்கு மீட்டு வரவேண்டும்.

மதம் வாழ்வுக்கு எதிரானது : எல்லாவற்றையும்விட மிகவும் முக்கிய மானது உங்கள் வாழ்க்கைக்கு எதிரான கருத்துக்களை மதத்தின்மூலம் மோசமாக திணித்துவிட்டது. வாழ்வு முக்கியமானது அன்று என சர்ச் கூறுகிறது. வாழ்வுக்குப் பின் என்பதை முதன்மையாக, மதிப் புக்கு உரியதாக்கிவிடுகிறது. உலகும், நம் வாழ்வும் குறைத்து மதிப்பிடப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. நம் முயற்சிகள் அனைத்தும் முடிவில்லாத ஏதோ ஒன்றைத் தாங்குவதாகவே அமைந்து விடுகிறது.

நாத்திகம் மட்டுமே உண்மை விடுதலையை வழங்கும்: வாழ்வென்று நாம் தெரிந்திருப்பது நம்மிடமுள்ள எல்லாம் கடைசிவரை நம்பிக்கையில் தள்ளப்பட்டுள்ளது. இந்த வாழ்வானது அற்புதமானது, முழுமையாக வாழ வேண்டியது என்று தெரிந்து கொண்டீர் களானால், நீங்கள் எங்களில் ஒருவராவீர். சமூகத்தைப்பற்றிய படப்பிடிப்பில் 22.5மில்லியன் நபர்கள் அமெரிக்க அய்க்கியத்தில் நாத்திகர்களாக உள்ளனர். இறப்பின் அச்சத்தில் வாழ்வை செல விடுபவர்களாக இல்லாதவர்கள் யாரோ அவர்களே உண்மையான விடுதலையை அடைபவர்களாவார்கள். அதுவே, மனதின் விடுதலை.

ஆதாரம்: (http://atheismexposed.tripod.com/atheist_agenda.htm)

Read more: http://viduthalai.in/page3/77358.html#ixzz2wjy8zv13

தமிழ் ஓவியா said...


கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையில்....


குஜராத் அனைத்து துறைகளிலும் ஒரு வளர்ச்சியடைந்த மாநிலம் என்றும், ஊழலற்ற நிர்வாகம் கொண்டது என்றும் அம்மாநில முதலமைச்சரும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறிவரும் நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக, தனது ட்விட்டர் தளத்தில் சூடு பறக்கும்17 கேள்விகளை எழுப்பி, மோடி அரசை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

அவர் எழுப்பி உள்ள கேள்விகளின் தொகுப்பு கீழே...

1) மத்திய அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையின் இயற்கை எரிவாயு விலையை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 என்று உயர்த்த உள்ளதா? நீங்கள் பிரதமர் ஆனால் அதே அளவுக்கு விலை எற்றுவீர்களோ?

2) ஒப்பந்த புள்ளிகள் கோராமல் குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 13 ரூபாய் கொடுத்து வாங்குகிறதா? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் ரூ.7.5 மற்றும் ரூ.5.5க்கு ஒப் பந்த புள்ளிகளின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது?


தமிழ் ஓவியா said...

3) குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11 சதவிகிதம் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களுடைய அரசாங்கத் துறை கள் தரும் குறிப்புகளின்படியே 2006-07ல் விவசாய உற்பத்தி 27,815 கோடிகள் என் றும், ஆறு ஆண்டுகள் இடைவெளியில் 2012-13ல் 25,908 கோடிகளாகவும் விவசாய உற்பத்தி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் உங் களுடைய ஆட்சிக்காலத்தில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. பின்னர் எப்படி 11% வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்?

4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய ஊரான மெஹ்சனாவிலேயே 187 சிறு தொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங் கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படிப் பட்ட சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக் கான மாதிரி என்று எதை முன்னிறுத்து கிறீர்கள்? இதுதான் உங்களின் மாதிரி என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை மூடி விட்டு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களிடம் இந்தியாவின் தொழில்களை ஒப்படைத்து விடுவீர்களா?

5) குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது நீங்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிகொள்ளும் வாசகம். நாங்கள் நேரில் மக்களைப் பார்த்து பேசிய பொழுது பல்வேறு சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் இருக் கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் என்று எதை வாங்க வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என் கிறார்கள். அப்புறம் எப்படி ஊழலற்ற மாநிலம் குஜராத் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறீர்கள்?

6) நிதி மோசடிகளில் உங்கள் அமைச் சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர் கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றசாட்டப்பட்டு இருக்கிறது. ஆறு கோடி குஜராத மக்களில் அமைச்சரவை யில் சேர்க்க நேர்மையான ஆட்களே கிடைக்கவில்லையா?

7) உங்களுக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குமான தொடர்பினைப் பற்றி விளக்க முடியுமா?

8) குஜராத் அரசின் 1,500 ஜூனியர் லெவல் வேலைகளுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் . இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் கம்பீரமாக பறைசாற்றிக்கொள்கிறீர்கள்?

9) உங்கள் அரசின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300. ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரூ.5,300ல் வாழ முடியுமா?

தமிழ் ஓவியா said...


10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடந்த சில நாட் களில் குஜராத்தின் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் பயணம் போனபோது, குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை கண்கூடாக கண்டோம். சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்விச் சூழலை வைத்துக் கொண்டு, இந்தியாவை எப்படி முன்னேற்றுவீர்கள்?

11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஏற்றுக் கொள் வீர்கள் இல்லையா? குஜராத் அரசின் மருத் துவ சேவைகள் முடமாகிக்கிடக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து போயிருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப் பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற் பட்ட இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. பணியில் இருக்கும் ஆட் களும் ஒழுங்காக் சுகாதார நிலையத்துக்கு வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் என் மாநில மருத்துவ சேவை பிரமாதம் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது அதிருப் தியில் இருக்கிறார்கள். அவர்கள் விவ சாயத்துக்கு செய்யும் செலவைவிட குறைந்த விலையையே உங்களின் அரசின் அலட்சியத்தால் அவர்களின் உற்பத்தி பொருள்களுக்கு பெறுகிறார்கள். விவ சாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்படி 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள்?

13) நாடெங்கும் பேசுகிற இடங்களில் குஜராத்தில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தேன் என்று அறிவித்து கொள்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், குஜராத்தில் நான்கு லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்து இன்னமும் இணைப்பு கிடைக்காமல் காத்துக்கொண்டு இருக் கிறார்கள். இணைப்பே தராமல் மின்சாரம் போய் சேர்ந்து விட்டதாக சொல்வது எந்த வகையான சாமர்த்தியமோ?

14) உங்களுடைய ஆட்சியில் விவ சாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு மிகக்குறைவான விலையில் உங்களுக்கு சாதகமான பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் அது மார்க்கெட் விலையை விட குறைவாகவே இருக் கிறது. அடானி, அம்பானி நிறுவனங் களுக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு

கொடுப்பது ஏனோ? ஏன் விவசாயி களிடம் உங்கள் அரசு இதயமே இல் லாமல் நடந்துகொள்கிறது?

15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப்பாசன தேவைகளுக்காக 2005ல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட் டத்தில் இருக்கும் மக்களுக்கு சொட்டுத் தண்ணீர் கூட எட்டவே இல்லை. உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு அந்த நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கட்ச் மக்களிடம் ஏன் இப்படி ஒரு பாரபட்சம்?

16) பஞ்சாபில் உரையாற்றுகிறபோது சீக்கியர்களின் நிலங்களை கட்ச் பகுதியில் பிடுங்கமாட்டோம் என்று சூளுரைத்தீர் கள். உண்மையில்சீக்கியர்களின் நிலங் களை பிடுங்க கோர்ட் வாசல்படி ஏறி இருக்கிறது உங்கள் அரசு. அந்த வழக்கை திரும்பப் பெறுவீர்களா?

17) நீங்கள் தனியார் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதைபோல எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உங்களிடத்தில் இருக் கின்றன? யாருக்கு சொந்தமானவை அவை? நீங்கள் தான் இவற்றுக்கு பணம் செலுத்துகிறீர்களா? அப்படி இல்லை யென்றால் யார் இந்த செலவினை உங் களுக்காக ஏற்கிறார்கள்? ஏன் உங்களின் விமான போக்குவரத்து செலவுகளை பகி ரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது?

- வி.சி. வில்வம்

Read more: http://viduthalai.in/page4/77359.html#ixzz2wjySZIOi

தமிழ் ஓவியா said...


பெரியார் கைத்தடி


பாம்பையும்
பார்ப்பானையும்
கண்டால்..
பாம்பை விட்டு விடு
பார்ப்பானை அடி..!
பேசியது பெரியார்
கைத்தடி!!

- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77360.html#ixzz2wjyknvVq

தமிழ் ஓவியா said...


ஆப்பிள் ஏன் விழுந்தது? - நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி!

நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்!

நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா?

நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன்.

நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா?

நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது.

நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது கடவுள் செயலா?

நியூட்டன்: கடவுள் செயலல்ல, கெப்ளர் செயல்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கோள்களைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புதான், ஆப்பிள் எப்படி நேராக என் கையில் வந்து விழுந்தது என்பதை எனக்குப் புரிய வைத்தது. கோள்களின் சுற்றுப்பாதை சூரியனை மையம் கொண்டு எப்படி ஒரு நீள்வட்டமாக அமைகிறது என்பதை அவர்தான் புரியவைத்தார்.

நிருபர்: கிரகங்களின் சுழற்சி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?

நியூட்டன்: மேலும் அவர் சொன்னது, “சூரியனிலிருந்து ஒரு விசை வெளிவந்து கோளங்களைப் பற்றிக்கொள்கிறது.” அதிலிருந்து நான் சொல்வது, “பூமி தன் புலப்படாத கைகளால் ஆப்பிளைப் பற்றிக்கொள்கிறது.”

நிருபர்: ஆப்பிளைப் பற்றியது உங்கள் கைதானே?

நியூட்டன்: சூரியனிலிருந்து வெளிவரும் விசைபோல் பூமியிலிருந்து ஒரு விசை வெளி வந்து அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிக்கொள்கிறது என்பதைத்தான் நான் அப்படிச் சொன்னேன். கோள்கள், விண்மீன் திரள், ஆப்பிள், நீங்கள், நான் அனைத்தும் அசைவது ஒரு விதியின் கீழ்தான். அதுதான் ‘நியூட்டனின் ஈர்ப்பு விதி’.

நிருபர்: சூரியனைச் சுற்றும் சனி அல்லது புதனைப் போல் ஆப்பிள் ஒன்றும் பூமியைச் சுற்றவில்லையே?

நியூட்டன்: ஆப்பிளால் சுற்ற முடியும்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மிகமிகப் பலத்துடன், அதாவது பூமியின் ஈர்ப்பு விசையை அது சமாளிக்கக் கூடிய அளவு பலத்துடன் வீசியெறிந்தால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்து, தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.

நிருபர்: ஆ… புரிகிறது, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களைப் போல…

தமிழ் ஓவியா said...


நியூட்டன்: என் கணக்குப்படி ஆப்பிளை ஒரு நொடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஆப்பிள் விடுபட்டுவிடும். அதையே நொடிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு அண்டவெளியில் சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கிவிடும், இன்னொரு கோளின் அல்லது இன்னொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு வலையில் விழும்வரை.

நிருபர்: ஆகையால் உங்கள் புகழ்பெற்ற ஈர்ப்பு விதி ஆப்பிளிலிருந்துதான் வந்தது.

நியூட்டன்: ஆமாம். நிறையுள்ள பொருள்கள் எல்லாமே ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன. ஆகையால் மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணையப் படைக்கப்பட்டவர்கள்.

நிருபர்: ஆப்பிளைச் சாப்பிடாமல் ஏன் அதைப் பார்த்தபடியே நிற்கிறீர்கள்?

நியூட்டன்: ஆப்பிளின் சிவப்பு நிறத்தைக் கவனித்தீர்களா?

நிருபர்: அதில் என்ன இருக்கிறது?

நியூட்டன்: சூரியனின் ஒளி ஆப்பிளின் தோல்மீது எதிரொலிப்பதால் ஆப்பிள் நம் கண்களுக்குத் தெரிகிறது.

நிருபர்: இதில் என்ன விஷயம்?

நியூட்டன்: சூரியனின் ஒளி வெண்மையாக இருக்க, அது எப்படி சிவப்பாகப் பிரதிபலிக்கிறது?

நிருபர்: ஆப்பிளின் தோல், ஒளியின் நிறத்தை மாற்றிவிடுகிறது.

நியூட்டன்: இல்லை இல்லை. சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சூரிய ஒளியை ஒரு முப்பட்டகம் (ப்ரிஸம்) வழியே செலுத்தினேன். அது வானவில்லாக வெளிவந்தது.

நிருபர்: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.

நியூட்டன்: வெண்மை என்பது ஒரு நிறமல்ல, அது அனைத்து நிறங்களின் கூட்டல்.

நிருபர்: ஓ, எல்லா நிறங்களின் தொகுப்பு என்று சொல்லவருகிறீர்களா?

நியூட்டன்: அந்தத் தொகுப்பை முப்பட்டகம் முழுமையாகப் பிரித்துவிடுகிறது. ஆப்பிளோ அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக்கொண்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது.

தமிழ் ஓவியா said...

நிருபர்: இதைச் சரி என்று எப்படி நிரூபிப்பது?

நியூட்டன்: நீல நிற வெளிச்சத்தில் இந்த ஆப்பிள் உங்கள் கண்களுக்குத் தெரியாது.அது எதையும் பிரதிபலிக்காமல் கருநிறத்தில் தெரியும்.

நிருபர்: அந்த ஆப்பிளைக் கொடுங்கள், நான் பரிசோதித்துப் பார்க்கிறேன்.

நியூட்டன்: ஐயோ, எனது ஆப்பிள்…?

நிருபர்: இயக்கம் குறித்த விதிகளை எனக்குப் புரியும்படி விளக்குங்கள். உங்கள் ஆப்பிளைத் தந்துவிடுகிறேன்.

நியூட்டன்: சரி, சொல்கிறேன். ஒரு பொருளின் அசைவுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதுதான் எனது மூன்று இயக்க விதிகள். நீங்கள் ஒரு காரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நேராகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கார் எந்தவொரு மாற்றமுமின்றி நேராகச் செல்லும். அப்படிச் செல்லும் காரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

நிருபர்: காரை ஓட்டும் நான் வேகத்தைக் குறைத்துவிட்டேன் அல்லது கூட்டிவிட்டேன்.

நியூட்டன்: அல்லது…

நிருபர்: ஸ்டீயரிங்கை வலது அல்லது இடது பக்கம் திருப்பிவிட்டேன்.

நியூட்டன்: இதுதான் என் இயக்க விதிகளின் மூலக்கரு. எந்தவொரு பொருளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்தப் பொருளின் மீது ஏதோவொரு விசை செயல்படுகிறது என்று அர்த்தம்.

நிருபர்: ஓ! திடீரென்று ஸ்டீயரிங்கைத் திருப்பியதுபோல்…

நியூட்டன்: ஆம்! இந்தத் திடீர் மாற்றத்தின் விளைவு உங்கள் காரின் வேகத்தில் அல்லது செல்லும் திசையில் தெரியும்.

நிருபர்: வேக மாற்றமும் விசையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே நீங்கள் கண்டறிந்த உண்மை. இதை அனைவரும் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.

நியூட்டன்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை நான் பார்க்கும்போது கடலோரம் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தெரிகிறேன். அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக ஒரு அழகான கிளிஞ்சலைக் கண்டெடுத்தது. ஆனால், அந்தக் குழந்தையின் முன் பரந்த பெருங்கடலாக அறியப்படாத உண்மைகள் விரிந்துகிடக்கின்றன என்பதுதான் உண்மை.

குறிப்பு:

நியூட்டன் பிறந்தபோது வழக்கத்தில் இருந்தது ஜூலியன் நாட்காட்டி முறை.

இதன்படி நியூட்டனின் பிறப்பு: 25-12-1642, இறப்பு: 20-03-1727.

புதிய நாட்காட்டி முறைப்படி (கிரிகோரியன் நாட்காட்டி) பிறப்பு: 04-01-1643, இறப்பு: 31-03-1727

புதிய நாட்காட்டி முறைப்படி (கிரிகோரியன் நாட்காட்டி) பிறப்பு: 04-01-1643, இறப்பு: 31-03-1727
- குமரன் வளவன், நாடகக் கலைஞர், இயற்பியலாளர், பிரெஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளர்

- நன்றி: தி இந்து 20.3.2014

Read more: http://viduthalai.in/page4/77361.html#ixzz2wjz3R6zH

தமிழ் ஓவியா said...


அரசு விடுதியிலிருந்து பைபிள் அகற்றம்


அரசு பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டிருந்த கிடியான் பைபிளை அகற்ற அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: அயோவா உட்பட 20ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மதத்திலிருந்து விடுதலை என்கிற அமைப்பு மதக்கருத்துகள் மக் களிடம் திணிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
அரசு விடுதியில் பைபிளா?

அயோவா அரசு பல்கலைக்கழகம் நடத்திவரும் மெமோரியல் யூனியன் கெஸ்ட் விடுதியில் உள்ள அறைகளில் பைபிள் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது குறித்து அந்த அமைப்பின் சார்பில் பாட் ரிக் சி.எலியோட் விடுதி இயக்குநருக்கு மெயில்மூலம்எச்சரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. புகாரில் அரசியலமைப்புக்கு (முதல் ஷரத்தில் கூறப்பட்டுள்ள அரசும், மதமும் பிரிந்து இருக்க வேண்டும்) விரோதமாக அரசு விடுதியில் பைபிள் புத்தகத்தை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

அவ்விடுதியில் வாடிக்கையாளர்களாக 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கை அற்றவர்களாகவும், 27 விழுக்காட்டினர் கிறித்துவம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாகவும், கிடியான் பைபிள் புத்தகத்தை அறையில் வைப்பதன்மூலம் அவர்களிடம் (கிறித்து வத்தை) மதத்தைத் திணிப்பதாகும். இதேபோல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் லோயல் கெஸ்ட் விடுதியிலி ருந்தும் இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆகவே, எழுத்து மூலம் அரசமைப்புக்கு விரோதமாக உள்ள இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை எதிர்பார்க்கிறோம் என்று மெயிலில் தெரிவித்திருந்தார்.

அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அனி லவுரி கெய்லர் அம்மையார் ஊடகங் களில் இப்பிரச்சினை குறித்த வினாக் களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விடுதி இயக்குநர் ரிச்சர்ட் எஸ். ரெனால்ட்ஸ் அவ் விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலி ருந்தும் பைபிள் புத்தகங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77363.html#ixzz2wjzSfYgh

தமிழ் ஓவியா said...


ஏழுமலையான் கருணை

பக்தி ஸ்தலம் திருமலையில் தொடர்ந்து 6ஆம் நாளாக காட்டுத் தீயாம். செம் மரங்கள், சந்தன மரங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து விட்டனவாம். தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடுகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானத் தால் அரக்கோணம் அய்.என்.எஸ். இராஜாளி கடற்படை மற்றும் விசாகப் பட்டினம் கடற்படை வீரர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றனர். பக்தர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால் நமக்கு ஒன்று புரியவில்லை. திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதி என்ன ஆனார்? தம் பக்தர்களுக்கு சோத னையாக உள்ள அந்த நெருப்பை அணைப் பதற்கு அவர் ஏன் முயற்சி செய்யாம லிருக்கிறார்? இந்த மாதிரி நாம் கேள்வி கேட்டால் இப்படி சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். அதாவது பகவான் ஏதோ குறையைக் கண்டுபிடித்திருக்கிறார், அதனால்தான் தன் உக்கிரத்தைக் காட்ட அக்னியை ஏவி விட்டிருக்கிறார் என்று.

அப்படியானால் கடவுளின் உக்கிரம் தணியும் வரை எரியவிட வேண்டியது தானே. அதை கஷ்டப்பட்டு அணைக்கப் போய் லார்ட் வெங்கியின் கோபத்திற்கு ஆளாவானேன்? சிறிது நாட்களுக்கு முன் னால் சிறுத்தை புலியை நடமாடவிட்டு பக்தர்களை பயம் காட்டி வைத்தார். இப்பொழுது தீயை மலைப் பகுதி முழு வதும் கொழுந்து விட்டு எரியச் செய் கிறார். ஒரு வேளை பக்தர்கள் தன்னைத் தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்க வில்லையோ என்னவோ?

செம்மரங்களும், சந்தன மரங்களும் விலை மதிப்பில்லாதவை. அவை அழிந்து கொண்டிருக்கின்றன. காட்டில் உள்ள உயிரினங்கள் எல்லாம் பற்றி எரிகின்ற நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை. ஆனால் நாம் குடும்பத்தோடு காசு பணத்தை கடன் வாங்கி சென்று மொட்டையடித்து ஏழுமலையான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஏழுமலையானே! உன்னை தாங்கும் மலைகள் எரிந்து கொண்டிருக் கிறது அப்பனே! பக்தர்களை மொட்டை யடிப்பது பத்தாதென்று மலைகளையும் மொட்டையாக்குகிறாயே!

ஏழுமலையானே! உன் கருணையே கருணை!

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page4/77367.html#ixzz2wk0INMKz

தமிழ் ஓவியா said...


ஏசு - மோடி


நாட்டு மக்களைக் காப்பாற்ற நரேந்திர மோடி ஏசுவால் அனுப்பி வைக் கப்பட்ட ரட்சகர் என்று பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவரும் அதிகாரப் பூர்வப் பேச்சாளருமான வெங்கையா நாயுடு அய்த ராபாத்தில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார். (மாலைமலர் 17.3.2014 பக்கம்7).

அடேயப்பா கிறிஸ்த வர்கள்மீதும், இயேசுவின் மீதும் இந்த பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு என்னே தீவிரமான பற்று பொத்துக் கொண்டு கிளம் பியிருக்கிறது.

இவர்களின் குருநாதர் கோல்வால்கரால் எழுதப் பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் எனும் நூலில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதை யும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறா மல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத் தல் வேண்டும் - என்று சொல்லியுள்ளாரே - இது தானே கிறித்தவர் உள் ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான பி.ஜே.பி. ஆர். எஸ்.எஸின் நிலைப்பாடு! - கிறிஸ்தவர்களின் அந்த ஏசு வேறு - வெங்கையா நாயுடு கூறும் இந்த ஏசு வேறோ?

குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மீது தாக் குதல் தொடுக்கப்பட்டது.

ஒரு வார காலம் ஒரு படையெடுப்பே நடத்தப் பட்டது. தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. பிரதமராக இருந்த வாஜ்பேயி அங்கு பார்வையிட்டு திருவாய் மலர்ந்ததென்ன? விசா ரணை நடத்தப்பட வேண் டும் என்று சொன்னாரா? ஒரு புடலங்காயும் இல்லை.

மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் தேவை! என் றாரே பார்க்கலாம்! (மத மாற்றம் நடத்தப்பட்டதால் தான் இந்தக் கலவரம் என்று சொல்லாமல் சொன் னார் பிரதமராக இருந்த ஒருவர் -என்னே ஹிந்து யிசம் பாசிசம்!

1999 மார்ச்சு 6ஆம் நாள் மனிதம் தலை குனி யத்தக்க கேவலம் ஒன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்தது. ஹிந்து வெறியர்கள் புதைக்கப் பட்ட கிறிஸ்தவர் ஒருவரின் சடலத்தைத் தோண்டி எடுத்து வெறியாட்டம் போட்ட கேவலம்தான் அது!

வெங்கைய நாயுடு இப்பொழுது சொல்லு கிறாரே - ஏசுவால் அனுப் பப்பட்டவர் நரேந்திர மோடி என்று - அவர் தான் அப்பொழுது அம்மாநில முதல் அமைச்சர்.

அவர்கள் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சறிந்தே வஞ்சகம் பேசும் நாகங்கள்தான் போலும்!

நன்றாகத்தான் சொன்னார் மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதி பாசு அநாகரிகமான காட்டுமிராண்டிகள்! (Uncivilised Brute Force) என்று சொன்னார்! அது தான் இப்பொழுது நினை விற்கு வந்து தொலைக்கிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77378.html#ixzz2wk0g2mek

தமிழ் ஓவியா said...

ஊழல்பற்றி பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடிக்க காவிகளின் திட்டம் - வாக்காளர்களே ஏமாறாதீர்!


எடியூரப்பாக்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் பற்றிப் பேசலாமா!?

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைஊழல்பற்றிப் பிரச்சாரம் செய்து காவிகள் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர் - அதற்கு வாக்காளர்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண் ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி - எந்த பொதுக் கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.

அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடு வோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!

திமுக ஊழல் - காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.

எடியூரப்பாக்கள் பரிசுத்த யோவான்களா?

1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்பு களுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே - உண்மைகள் இவர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறதே - அதைக் கவனித்தார்களா?

சவப்பெட்டி ஊழல் மறந்து போயிற்றா?

2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (NDA) கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே - அது மறந்து விட்டதா?

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!

3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சும ணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்து போய் விட்டதா?

இலஞ்சம் வாங்கிய பிஜேபி எம்.பி.க்கள்!

4.அய்க்கிய முற்போக்குக் கூட்டணிஆட்சிமீது நம் பிக்கை இல்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!

5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத் தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் - ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:

அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள் ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே - இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?

தமிழ் ஓவியா said...

ஊழல் புகழ் கேத்தன் தேசாய் விவகாரம் என்ன?

6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலை வராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை - குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட் டணப் பிரவேசம் செய்ய வழி வகை செய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!

ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளைகள்!

ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையேமீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய் தானே மருத்துவ ஆலோசகர் - வழிகாட்டியாக இருப்பார்?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?

தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?

இடத்தை விட்டுக் கொடுக்க ஒரு கோடி ரூபாய்

7. நேற்று ஒரு செய்தி - பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!

லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தி யுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலை குனியும் நிலை உண்டா?

தேர்தல் செலவு கணக்கு?

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டு பவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

2ஜி ஊழல் என்னும் கூக்குரல்!

2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப திமுகமீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்து கிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் (Zero Loss) என்று கூறவில்லையா?

இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் திமுகவை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி,.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகி விடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.

அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார் களேயாயின் அதே பதில் - லாஜிக் - தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய் யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா - விசாரணை அமைப்புகள்?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் - உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?

சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே!

இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?

மேலே காட்டப்பட்டுள்ளப்படி மற்றவர்களை குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?

காவியைக் கொண்டுவரும் கங்காணிகள் - எச்சரிக்கை!

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் - சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் - வெகு மக்கள் வாக்குச் சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
22.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77379.html#ixzz2wk0sKwyE

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்புதான் - ஒப்புதல் வாக்குமூலம்


- ஊசி மிளகாய்

ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வெளி யிடும் தேர்தல் கணிப்புகள்பற்றி நாம் நீண்ட கால மாகவே, கூறி வருவது அவை உண்மையான மக்களின் கருத்துக் கணிப்புகள் அல்ல; மாறாக, கருத்துத் திணிப்புகள் தான் என்பதாகும்!

இது ஒரு நல்ல மோசடி வியாபாரமாக மாறி விட்டது! சார்பு நிலை எடுத்து வெளியிடும் ஏடுகள், தொலைக்காட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டித் தருகின்றன என்பதை கல்கி வார ஏட்டின் (23 மார்ச் 2014) 33-ஆம் பக்கத்தில் - கருத்துத் திணிப்புக்கள் என்ற தலைப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவலைக் கீழே தருகிறோம்:

கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவையா என்று ஏற்கெனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் அம்பலமாகி விட்டன. பணத்துக்காக முடிவுகளை மாற்றிக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் சொல்லுவோம் என்று பதினோரு நிறுவனங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன.

இதில், இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்தும் சி - ஓட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த சி - ஓட்டர் நிறுவனம் மூன்றிலிருந்து அய்ந்து சதவிகிதம் வரை புள்ளி விவர முடிவை மாற்றிச் சொல்லி, குறிப்பிட்ட கட்சிக்குக் கூடுதல் இடம் கிடைக்கும் என்று காட்டத் தயார் என்று ஒப்புக் கொண்டதாம். இது கருத்துக் கணிப்பா? திணிப்பா?

இதே போல் தான் 2ஜி அலைக்கற்றைப் பிரச் சினையை (திட்டமிட்டே) திமுகவுக்கு எதிராக கிளப்பின சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்; ராசா, ஏகபோக கொள்ளை லாபக் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்காமல், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைத் தொடர்பு வசதியைச் செய்ய முன் வந்த கம்பெனிகளுக்கெல்லாம் பிரித்துத் தந்து, பெரிய திமிங்கலங்களைப் பாதிப்பு அடையச் செய்தார்,

அதனால் தொலைக்காட்சியில் பயங்கர ஊழல் பலூனை ஏராளமாகக் காற்றடைத்துப் பறக்க விட்டு, இன்றளவும் தேர்தல் முதலீடாக பல கட்சிகள் கொண்டுள்ளன!

காரிருள் சூரியனை மறைத்ததுபோல் உண்மை களை மறைக்க இந்த பிரச்சார உத்தியை சுயலாபங் களுக்காகப் பயன்படுத்துகின்றன - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/77380.html#ixzz2wk168mNo

தமிழ் ஓவியா said...


பிடி - வாதம்!

பிடி - வாதம்!

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம..க.வும் இருக்கிறது - புதுச்சேரி என்.ஆர். காங் கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டது. ஆனால் பா.ம.க.வும், புதுச்சேரியில் போட்டிப் போடுகிறது. கேட்டால் பிஜேபி தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குத் தான் - புதுவைக்குச் செல் லாது என்று கறாராக - பிடிவாதமாகக் கூறி விட் டார் மருத்துவர் ராமதாசு.

தாடிக்கொரு சீயக்காய் - தலைக்கொரு சீயக்காயோ!

பிடிவாதம் என்கிறது தினமணி. பிடி எனக்கு வாதம் உனக்கு என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கே பெப்பே! கொடுத்து விட் டதே! பா.ம.க.வாழ்க அண்ணா நாமம்!

லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆனால், வேலூர் மாநகர, மாவட்ட மாணவர் கள் 2000 பேர் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட சபதம்! வாழ்க அண்ணா நாமம்!

ஓ, திருப்பதி ஏழுமலை யானே நாமக் கடவுள்தானே!


தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்

அதிமுக ஆட்சியில் அவதிப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை தஞ்சை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் வருமாறு:

1) பூமிநாதன் - மயிலாடுதுறை
2) ராஜாங்கம் - கீவளூர்
3) செல்வராஜ் - கீழையூர்
4) சக்ரவர்த்தி - பூலமேடு
5) அப்துல் ரகீம் - திருத்துறைப்பூண்டி
6) சிறீதர் - அபிவிருத்தீஸ்வரம்
7) கோபாலகிருஷ்ணன் - கொற்கை
8) முருகையன் - மாப்படுகை
9) செல்வராஜ் - மஹிலி
10) சாமியப்பன் - நாகூர்
11) சக்திவேல் - கடம்பங்குடி
12) இடும்பையன் - பிராந்தியன் கரை
13) சீனிவாசன் - குரும்பல்.
வாகன சோதனை

தமிழகத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத் தும் வகையில், ரயில் மற் றும் இரு சக்கர வாகனங் களிலும் பறக்கும் படை யினர், துணை ராணுவப் படை உதவியுடன் சோதனை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திக் கூறினார்.


அந்தமானில் நிலநடுக்கம்

புதுடில்லி, மார்ச் 22- அந்தமான் மற்றும் நிக் கோபர் தீவுகளில், நேற்று மாலை, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவானது. "இந்த நில நடுக்கத்தால், "சுனாமி' ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், கடலோர பகுதி களில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77381.html#ixzz2wk1GJWpz

தமிழ் ஓவியா said...

அதிமுகவிற்கு அருகதை கிடையாது


இந்தியத் துணைக் கண்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன என்றாலும் சமூகநீதி என்பதில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கு ஈடு இணையாகக் குறிப்பிட ஏதும் இல்லை.

இந்த உண்மை கையில் முத்தெனத் தெளிவாகத் தெரிந்திருந்தும், தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா வாய்ப்புளித் ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற போக்கில் மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஒன்றுமே செய்யவில்லை என்று கைச் சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்.

மத்திய அரசில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு துறை இருப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கான தனித்துறை ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று இருபிரிவுகளை ஏற்படுத்தி, தனித்தனியே விகிதாசாரம் கல்வி வேலை வாய்ப்புகளில் கொடுத்த சாதனைக்கு உரியவர் மானமிகு மாண்புமிகு கலைஞர்.

இதே போல மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவுகள் ஏற்படுத்த வலியுறுத்தப்படும் என்கிறது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. மத்திய அரசு துறைகளில் மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு சதவிகிதத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தனித்த சிந்தனை ஒளி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மட்டுமே காணக் கிடைக்கும் அரிய கருவூலமாகும்.

இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அந்தந்த மாநிலங்களே இடஒதுக்கீடு விகிதாசாரத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பது தி.மு.க. உருவாக்கிய தேர்தல் அறிக்கையில்தான்.

தமிழ் ஓவியா said...


கிரீமிலேயர் என்னும் இடஒதுக்கீடுக்குப் பொருந் தாத பொருளாதார அளவுகோல் நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்கும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் என்பதைத் தெரிந்து கொண்டால், தி.மு.க.வின் சமூக நீதிப் பார்வை என்பது எல்லைகளைக் கடந்த மனிதநேயத் தன்மை உடைய தாகும்! மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம், எய்ம்ஸ் போன்ற உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கிடைத்திட சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது மறக்காமல் இடம் பெறச் செய்யப் பட்டுள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் உயர் தட்டு மக்களே மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள்! இந்த இரும்புத் திரையைக் கிழிக்கும் கிழக்குச் சூரிய வெளிச்சமாக ஒளிர்கிறது - தேர்தல் அறிக்கையில்

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது என்று டில்லி எய்ம்ஸ் மருத் துவமனை டாக்டர்களும், மாணவர்களும், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதை இந்த இடத்தில் நினைவு கூர்தல் பொருத்தமானதாகும். தி.மு.க. - இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கவனம் செலுத்தியி ருப்பது சமூக நீதியில் இயற்கையாக ரத்த ஓட்டமாக அதனிடத்தில் குடி கொண்டிருக்கும் உணர்வின் வெளிப்பாடாகும்! மிக மிக என்று எத்தனை மிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் - வேலை வாய்ப்பில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையின் 17,18ஆம் பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருப்பதாகும்.

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் தனியார்த் துறைகளுக்குக் கைமாறிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்று கோருவது காலத்தின் கட்டாயமாகும்.

நம் நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள் வெளிநாடு களில் தொழில் தொடங்கினால் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முன் வருகிறார்கள். ஆனால், அதே தொழிலதிபர்கள் உள்நாட்டில், இந்தியாவுக்குள் தொழில் தொடங்கினால் இங்கு இடஒதுக்கீடு அளிக்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மட்டும்தான் இதுபற்றிப் பொறுப்பாகச் சிந்தித்து தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற முழக்கத் தைக் கொடுத்துள்ளது; கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனை உணர்ந்தால்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தின் அருமைப் பெருமை புரியும்.

இன்றைய நிலை என்ன? இந்தியாவில் உள்ள தனியார்த் துறைகளில் இயக்குநர்களின் எண்ணிக்கை 83,787; இதில் முன்னேறிய பார்ப்பனர் மட்டும் 92.6 சதவிகிதம். தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டால்தான் இந்த ஆதிக்க நிலை தவிடுப் பொடியாகும். இந்த ஒன்றிற்காவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தி.மு.க. அணியை வரும் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவற்றைப்பற்றி எல்லாம் சிந்திக்க மனம் இல்லாத அதிமுக பொதுச் செயலாளர் சமூக நீதிபற்றி திமுகவைக் குறை கூறுவது பொருத்தமில்லாதது மட்டுமல்ல அதற்கான அருகதையும் அவர்களுக்குக் கிடையாது - கிடையவே கிடையாது!

Read more: http://viduthalai.in/page-2/77383.html#ixzz2wk1Uf3tl

தமிழ் ஓவியா said...


மற்ற மக்கள்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


ஜனசக்தி (சி.பி.அய்) அம்பலப்படுத்துகிறது!


உறவை முறித்தது யார்? ஏன்?

- இரா.முத்தரசன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச் சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்றும், இது வெற்றிக் கூட்டணி என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தேவை இல்லை என்றும் கூறியதை இன்று வரை அதிகாரப் பூர்வமாக வெளிப்படையாக மறுக்கவில்லை, என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! இதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.

அ.இ.அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி என்பது திடீர் என்று ஏற்பட்டதல்ல. அய்ந்தாண்டு காலமாகத் தொடரும் கூட்டணி ஆகும். கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி சார்பில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற் றது. பா.ம.க. 7 இடங்களில் போட்டியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ம.தி.மு.க. 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி தலா மூன்று இடங்களில் போட்டியிட்டு, தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள் விலகிவிட்டன. தே.மு.தி.க., புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அ.தி.மு.க. அணியில் சேர்ந்தன.

கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடுப் பேச்சு வார்த்தை நடைபெற்று தொகுதிப் பங்கீடு முடியாத நிலையில் அ.இ.அ.தி.மு.க. தன்னிச்சையாக 234 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அவ்வாறு வெளியிட்டது தலைமைக்கே தெரியாது - யாரோ - எவரோ செய்த சதிச் செயல் என்றெல்லாம் ஏடுகளில் செய்திகள் வந்தன. இவைகளையெல்லாம் கடந்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு நாடு கட்சி ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டு தொகுதி பங்கீடுகளும் நிறைவு பெற்று பலமான கூட்டணி அமைந்தது.

தி.மு.க. -காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பா.ம.க ஆகிய கட்சிகள் அணி அமைத்து பலமான கூட்டணி அமைத்த போதும், அ.தி.மு.க. தலைமையிலான அணி தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெற்று, ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்தது. தேர்தலுக்குப் பின்னரும் இக்கூட்டணி தொடர்ந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முறையான உடன்பாட்டை எட்ட முடியாத நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும்கூட, எதிர் அணியில் சென்று சேர்ந்திடாமல், தனித்தே நின்று தங்களால் இயன்ற வெற்றிகளைப் பெற்றார்கள்.


தமிழ் ஓவியா said...

உறுப்பினர்கள் தேர்வு முடிந்த பின்னர் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தோழமைக்கட்சிகளை பொருட்படுத்த வில்லை என்றாலும், மாநிலஅளவில் உறவுகள் இல்லை என்றாலும், மாவட்ட அளவில் சில இடங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவி செய்வது என்ற நிலையை ஒரு சில அமைச்சர்கள் மேற் கொண்டனர். புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அங்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் முத்துக்குமரனை வேட்பாளராக களம் காணச் செய்து வெற்றியும் பெற்று, குறுகிய காலத்தில் சிறப்பாக பணியும் ஆற்றி, தமிழக திரும்பிப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு வராக செயல்பட்ட முத்துக்குமரன் விபத்தில் பலியானது, ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

தமிழகமே அஞ்சலி செலுத்தியது, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். மகனை இழந்த தாயின் நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு. புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் ஆதரவளிக்கத் தயார் என்று பகிரங்கமாக அறிக்கைகள் வெளியிட்டன.

இந்நிலையில் அதிமுக தலைமை தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கேட்டது. உணர்ச்சிக்கும் கோபத்திற் கும் ஆளாகி தவறான அரசியல் நிலை எடுக்காமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிமுகவிற்கு அளித்தது.

மாநிலங்களவைத் தேர்தல், ஆறு இடங்களுக்கான தேர்தல் வந்தது. ஆறில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜாவின் பதவிக் காலம் முடிந்ததால் ஏற்பட்ட காலி இடம் ஒன்றாகும். அதிமுக அய்ந்து இடங்களுக்கு வேட்பாளரை அறவித்தாலும், பின்னர் ஒருவரை திரும்பப் பெற்றுக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜாவிற்கு ஆதரவு அளித்து வெற்றி பெற உதவினார்கள். அதே போன்று அடுத்த சிலமாதங்களில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜனுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர்.

இவைகள் அனைத்தும் ஓரிரு நாட்களில், ஓரிரு மாதங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் அல்ல; ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வருகின்றது. அதிமுக வோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ உறவு முறிந்தது என்று எங்கேயும் எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்திற்கான 16ஆவது பொதுத் தேர்தல் வருகின்றது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் அழைப்பின் பேரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் தோழர் ஏ.பி.பரதன், மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் ஆகிய மூவரும் 2.2.2014 அன்று போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். இவர்களது சந்திப்பை பகிரங்கமாக தெரிவித்து, அண்ணா திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டி யிடும்; இது வெற்றிக் கூட்டணி என்று முதலமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 3.2.2014 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் சந்திப்பு நடைபெற்றது. அதிமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடும்; இது வெற்றிக் கூட்டணி என்று முதலமைச்சர் அறிவித்தார்.

தொடர்ந்து 5.2.2014 முதல் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், அ.இ.அ.தி.மு.க.வின் நால்வர் அணி இவற்றிடையே தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டன. தற்போது நமது அணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. இல்லை. 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. இல்லை. அத்தகைய தொகுதிகளையும் அதிமுகவே எடுத்துக் கொள்ளட்டும். தங்களுக்கு தலா மூன்று இடங்கள் என்பதில் குறைவின்றி வழங்க வேண்டும் என்று ஒவ்வொருமுறை சந்திப்பிலும் கோரி வந்தன. அதிமுக சார்பில் பேசக் கூடிய நால்வர் அணியில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய நால்வரும் ஒவ்வொரு முறையும் சொல்வார்கள். திரும்ப, திரும்ப சொல்வார்கள், நீங்கள் கூறியதை அம்மாவிடம் சொல்கிறோம் என்றே சொல்லி வந்தார்கள்.

பிப்ரவரி 24- முதலமைச்சரின் பிறந்தநாள், அவர்களை பொருத்தளவில் நல்லநாள், அந்த நல்லநாளில் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்கள்.

தமிழ் ஓவியா said...


வெளியிட்டதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடனும், மார்க்சிஸ்ட் கட்சியுடனும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. உடன்பாடு காணப்பட்ட பின்னர், அவர்களுக்கு ஒதுக் கப்பட்ட தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.

பிப்ரவரி 25ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். பத்திரிகை யாளர்களின் கேள்விக்கு எங்கள் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. வேறு கட்சிகள் எங்களுக்கு தேவை இல்லை, இதுவே போதுமானது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அதிமுகவிடம் இருந்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வரும், சுமுகமாக பேசி முடிக்கலாம் என்று நம்பிக்கை யோடு - பொறுப்பாகவும் பொறுமையாகவும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைமையும் இருந்தன.

காங்கிரஸ் - பாஜக அணிகள் தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்று உயரிய அரசியல் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற பொறுப் புணர்வை உணர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் காத்திருந்தன.

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மார்ச் 3 முதல் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்கு கிறார் என்ற அறிவிப்பு வந்தது மட்டுமல்ல; தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்டும் வருகின்றார்.

தான் அழைத்து நமக்குள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்று அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்த வித தகவலும் இல்லாமல் இவைகள் நடைபெறுகின்றன.

மார்ச் 3ஆம் தேதி இரவு அதிமுகவின் நால்வர் அணியினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து, மகிழ்ச்சியோடு சேர்ந்தோம் - மகிழ்ச்சியோடு பிரிவோம் என விடை கூறி புறப்பட்டு விட்டனர். பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

மாறாக உங்களிடம் கூறியதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர், தங்களது கட்சியின் நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் கூறுவதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை. இந்நிலை யில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுபட்டு, தேர்தல் களத்தை அரசியல் போராட்டத்தை வெற்றி கொள்ள ஆயத்தமாகி விட்டன என்பது ஒருபுறம் இருக்க, அய்ந்தாண்டு கால அரசியல் உறவை, அதிமுக துண்டித் துக் கொண்டது ஏன்? அதிமுகவின் பொதுச் செயலாளரை கேட்கவில்லை.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, எம்ஜிஆரின் பற்றாள னாக அதிமுகவின் தொண்டனாக உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களை தோழமை உணர்வோடு கேட்கின் றோம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அதிமுக உறவை முறித்தது சரியா? உறவை முறிக்க உண்மையான காரணம் என்ன?

ஒவ்வொரு முறையும் அதிமுகவால் ஆத்திரமூட்டும் நிலை ஏற்படும் போதும், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொறுமை காத்தது குற்றமா? உள்ளாட்சி தேர்தலில் பொறுமை காத்தது குற்றமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்காக சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை ஏற்றது குற்றமா? ஜெய லலிதா பிரதமர் ஆவதற்கு வாய்ப்புள்ளது என்று இடது சாரிகள் கூறியது குற்றமா?

நாற்பது தொகுதிகளுக்கும் தன்னிச்சையாக வேட் பாளர் அறிவித்த போதும், பொறுமை காட்டியது குற்றமா?

இடதுசாரி கட்சிகள் பெருமுயற்சி எடுத்து காங்கிரஸ் - பா.ஜ.க.விற்கு மாற்றாக அணி அமைத்திட டில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு அதிமுகவை கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தது குற்றமா?

அழைப்பை ஏற்று முதலமைச்சர் சார்பில் நாடாளு மன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை கலந்து கொண்டு, முதலமைச்சரின் உரையை அம்மாநாட்டில் படித்தது குற்றமா?

பிப்ரவரி 5ஆம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது, காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டத்திற்கு இடதுசாரிகள் அதிமுகவை அழைத்தது குற்றமா?

அழைப்பை ஏற்று முதலமைச்சர் அறிவுரைப்படி மு.தம்பிதுரை கலந்து கொண்டது குற்றமா?

கடந்த அய்ந்தாண்டு காலமாக காங்கிரஸ் - பா.ஜ.க. விற்கு எதிராக குரல் கொடுத்த முதலமைச்சர் தற்போது பிரச்சாரத்தில் பா.ஜ.க. குறித்து மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறவை துண்டிக்கச் செய்த சக்தி எது? தமிழக உளவுத் துறையா? ஜோசியம் கூறும் புண்ணியவான்களா?

நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டவர் இன்று மத்திய ஆட்சியில் அங்கம் பெறுவோம் என்று கூறுவது ஏன்?
நாட்டு மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் உண்மையை தலைமை சொல்ல வேண்டாமா?

அதிமுக தொண்டர்களே! எம்.ஜி.ஆரின் விசுவாசிகளே! எது குற்றம்? யார் செய்தது குற்றம்? உறவை முறித்தது யார்?

பலம் பொருந்திய, வெற்றிக் கூட்டணியை சிதைத்தது யார்? சிதைப்பதால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

அதிமுக தொண்டர்களே! இரத்தத்தின் இரத்தமான எம்.ஜி.ஆரின் உடன் பிறப்புகளே! தொண்டர்களே வழங்கிடுவீர் நல்ல தீர்ப்பை!

(நன்றி: ஜனசக்தி, 18.3.2014)

Read more: http://viduthalai.in/page-3/77392.html#ixzz2wk2H7oWY

தமிழ் ஓவியா said...


இந்துமத தத்துவம்

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர் களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண் டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்து சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம். இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3EsPv5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி யொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3MqBpO

தமிழ் ஓவியா said...


திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட் படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3Tqfus

தமிழ் ஓவியா said...

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற் கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங்களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கின தைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மன வருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவை களுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரி களின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டிருப்ப தாகவும் தெரியவருகின்றது. ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரை களும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்க மிருக்கிறதா? தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில் வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர் களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக் காவது தொழிலாளர் களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரி யாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3auQIo

தமிழ் ஓவியா said...


இட ஒதுக்கீடு: ஜெயலலிதா குற்றச்சாற்றுக்குக் கலைஞர் பதிலடி!


ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசட்டும், இட ஒதுக்கீடுப் பிரச்சினை எப்போதும் அவருக்குக் கைகொடுக்காது!

சென்னை, மார்ச் 22- இட ஒதுக்கீடு தொடர் பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கூறிவரும் குற்றச் சாற்றுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

முரசொலியில் கலைஞர் கேள்வி - பதில்கள் தெரிவித்துள்ள செய்தி வருமாறு:

கேள்வி: சங்கரன்கோவிலில் பேசிய முதல மைச்சர் ஜெயலலிதா, தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் இன்று வரை பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இதைத் தீர்க்க தி.மு. கழகம் மத்திய அரசை வலியுறுத் தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., இதுபற்றி மத்திய அரசை ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

கலைஞர்: இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமானது. சமூக நீதியின் ஓர் அடிப்படைக் கூறுதான் இட ஒதுக்கீடு. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் 12.5.1989 அன்று நான் முதலமைச் சராக இருந்த போது, கழக ஆட்சியில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5.2.1990 அன்று நான் டில்லி சென்றிருந்தபோது, துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர் களைச் சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரை களை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டேன். 26.5.1990 அன்று தஞ்சை மாநகரில் சமூகநீதி மாநாடு நடை பெற்றது. (திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மாநாடு). அதில் என்னோடு, ஜெயில்சிங் அவர்களும், தமிழர் தலைவர் வீரமணி அவர் களும் கலந்து கொண்டார்கள். 12.6.1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அனைத்து மாநில முதல மைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரை கள் பற்றி கருத்துகளைக் கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப்பற்றி பின்னர் பிரதமர் வி.பி. சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப் பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்று பாராட்டினார். அதையும் எண்ணிப் பாருங்கள்! தற்போது மீனவர் பிரச்சினைக்காக பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்திற்கு ஆறு மாதங்கள் கழித்து பதில் எழுதிய இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! அப்போது திரு. வி.பி. சிங் அவர்கள் பிரதம ராகப் பொறுப்பேற்ற பின், நம்முடைய வலி யுறுத்தலின் பேரில்தான், 7.8.1990 அன்று மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறு வனங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக கழக ஆட்சியில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 20.8.1990 அன்று நிறை வேற்றப்பட்டது. வட மாநிலங்களில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும் கிளர்ச்சி நடந்தது. டில்லி உயர்நீதிமன்றத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று 21.9.1990 இல் தீர்ப்புக் கூறப் பட்டது. ஆனால் 16.11.1992 இல் உச்சநீதிமன்றம் மண்டல் பரிந்துரை வழக்கில் கிரீமிலேயர் என்னும் கோட்பாட்டை உறுதி செய்துவிட்டது.


தமிழ் ஓவியா said...

1993-1994 ஆம் கல்வியாண்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு பின்பற்றக்கூடாது என்று ஒரு வழக்குத் தொடரப்பட்டபோது, 50 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதாக ஜெயலலிதா தலைமை யிலான அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் 22.11.1993 அன்று எழுத்து மூலமாகவே எழுதிக் கொடுத்தது. இதை எதிர்த்து 29.6.1994 அன்று அண்ணா அறிவால யத்தில் என் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பெற்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் அகில இந்திய அளவில் உள்ள 18 அரசியல் கட்சித் தலைவர் களுக்கு வேண்டுகோள் கடிதமும் நான் எழுதி னேன். அந்த ஆண்டு செய்தியாளர்களிடம் நான் கூறும்போது, மண்டல் கமிஷன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் கிரீமிலேயர் என்ற ஒன்றை வைத்தும், கேரி பார்வர்டு முறையில் கை வைத்தும் ஒரு தீர்ப்பளிக்கிறது. அதை தி.மு.க. ஒப்புக் கொள்ளவில்லை. எனவே உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்காத அளவுக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறினேன்.

தமிழ் ஓவியா said...

21.8.1994 அன்று நான் விடுத்த அறிக்கையில், மத்திய அரசு மேலும் காலம் தாழ்த்தினால், சமூக நீதிக்காகப் போராடுகிற அணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கெனவே எடுத் துள்ள முடிவின்படி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டேன். 22.8.1994 அன்று மாநிலங்களவையில் தி.மு. கழகத்தின் சார்பில் பேசிய விடுதலை விரும்பி, என்னுடைய அறிக் கையை எடுத்துக்காட்டி, தமிழகச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கு அரசுத் தரப்பில் திட்டவட்டமான உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றார்.

2006ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் பொறுப்பிலே அய்ந்தாவது முறையாக நான் அமர்ந்தவுடன், அனைத்து மாநில முதல்வர் களுக்கும் இந்தப் பிரச்சினை குறித்து விரிவாகக் கடிதம் எழுதினேன். அந்த ஆண்டு உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று 10.4.2008 அன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இட ஒதுக்கீடு செல் லும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நண்பர் அர்ஜுன் சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடை முறைப்படுத்த இந்த அளவிற்கு தொடர்ந்து பாடுபட்டு வந்த, போராடி வந்த என்னைப் பார்த்து ஜெயலலிதா, மத்திய அரசை ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கேட்டிருப்பது விந்தை யான ஒன்றல்லவா?

என்னைக் கேள்வி கேட்கும் ஜெயலலிதாவுக்கு இந்தப் பிரச்சினை யிலே எவ்வளவு அக்கறை உண்டு என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து மறைந்த நண்பர் வாழப்பாடி ராம மூர்த்தி அவர்கள் விடுத்த கண்டன அறிக்கை யில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் போது மான ஈடுபாடோ அல்லது நம்பிக்கையோ இல்லாத காரணத்தால் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிட்டார். கடந்த 1929 ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் அனுபவித்து வந்த இந்த இட ஒதுக் கீடு, ஜெயலலிதாவின் பொறுப்பற்ற செயல் காரணமாக இப்போது இழக்க வேண்டி வந்துள்ளது.

ஜெயலலிதா இட ஒதுக்கீடுபற்றி உதட்டளவில் பேசி வந்தாரே ஒழிய அதனைப் பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இட ஒதுக்கீடு 50 சதவிகிதத் துக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்க ஜெயலலிதா வழி செய்து கொடுத்து விட்டார். எனவே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என்றார்.

இட ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண் டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட் டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்ததை தமிழ்நாடே நன்கறியும். மேலும் அந்தப் பேட்டியில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். எனவே பிற்படுத்தப் பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்யவேண்டும். அப்போதுதான் அதைச் சமூகநீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூடப் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்வது தவறில்லை என்றெல் லாம் கூறியவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசட்டும், இட ஒதுக்கீடுப் பிரச்சினை எப் போதும் அவருக்குக் கைகொடுக்காது!

- முரசொலி, 22.3.2014

Read more: http://viduthalai.in/page-5/77410.html#ixzz2wk3oPAee

தமிழ் ஓவியா said...


தேர்தல் வினோதங்கள்


சுயேச்சையாகப் போட்டியிடும் மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் தன் கணவர் கதிர் ரானாவை எதிர்த்து அவரின் மனைவி ஷாகிதா பேகம் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறார்.

விசாரணை நாடகம்!

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச் சர் சம்பத் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாற் றின்மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஓர் அமைச்சரை ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் உண்மையின் அடிப்படை யில் அந்த அறிக்கைதான் இருக்குமா?
இது ஒரு விசாரணை நாடகமே!

துடைப்பம்

மும்பையில் சாலையைத் துடைப்பத் தால் சுத்தப்படுத்தினார்கள். துடைப்பத் தைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மீராசன்யால்.

ஆளுநராகத் தயாராவீர்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமரானால், இங்குள்ள அனைவரும் ஆளுநராக பல்வேறு மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார் கள்.

- பாலகங்கா, முன்னாள் எம்.பி., அ.இ.அ.தி.மு.க.
(தினமணி, 21.3.2014, பக்கம் 7)

வெற்றிக்காக ஜோசியம் கேட்கும் வேட்பாளர்கள்

பெர்ஹாம்பூர், மார்ச் 22-வெற்றிக்காக ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்கும் வேட்பாளர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிகமாகிவிட்டனர். இதில் கட்சி வேறு பாடு இல்லாமல் வரிசையில் நிற்பதால், ஜோசியர்கள் அனைவரும் ஆலோசனை கூறுவதில் மிகவும் பிசியாக உள்ளனர்.

பெர்ஹாம்பூர் தொகுதி, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சியாப்ட்நாயக் கூறும் போது, எனக்கு எப்போதும் வெள்ளிக் கிழமைதான் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்று ஜோசியர் கூறியுள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள் ளேன். கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

எல்லாம் ஜோசியர்களின் ஆலோசனைப் படியே செய்து வருகிறேன். இப்போதும், அவர்களது ஆலோசனைப்படி வெள்ளிக் கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, கஞ்சம் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் பாக்பன் கந்தாயத் கூறும்போது, ஜோசியரின் ஆலோசனைப்படி, அவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கோபால்பூர் தொகுதி யின் வேட்பாளராக கந்தாயத்தை காங் கிரஸ் அறிவித்துள்ளது. கோபால்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிப்ஹுதி ஜெனாவும், தேர்தல் தொடர் பாக ஜோசியர்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார். அவர்கள் கூறியபடி, தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளரான அலி கிசோர் பட்நாயக் மட்டும் முற்றிலும் மாறாக உள்ளார். அவர் கூறும்போது, நான் எப்போதும் ஜோசி யத்தை நம்புவது இல்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு நல்ல நாள்தான். நான் எனது வேட்பு மனுவை பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியோ தேர்தல் நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் ஜோசியர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/page-5/77413.html#ixzz2wk43vIyN

தமிழ் ஓவியா said...


நடக்கப் போவது அழகுப் போட்டியா!


அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்?

செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம்.

அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை.

எண்ணார்!

புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ!

Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனை எத்தனை திருவிளையாடல்களோ!


வாரணாசி தான் என் தொகுதி அங்கு நின்று தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன் - அதனை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளிமனோகர் ஜோஷி சொன்னால், முடியாது - உமக்கு வாரணாசி தொகுதி கிடையவே கிடையாது. அது பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்குத் தான். நீ வேறு தொகுதிக்கு நடையைக் கட்டு - கான்பூருக்கு மூட்டையைக் கட்டு என்று ஆர்.எஸ்.எஸ். உத்தர விடுகிறது.

காந்திநகர் தொகுதி எனக்கு வேண்டாம்! போபாலில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று சொன்னால். அதெல்லாம் கிடையாது - நீ மரியாதையாக ஏற்கெனவே நீ போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியிலே நின்றுதான் தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணை பிறப்பிக்கிறது. அதிலும் அந்த மூத்த தலைவர் 2009 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றாலும் முதல் பொதுப் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை.

ஜஸ்வந்த் சிங் பி.ஜே.பி. ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்பொழுது மேற்கு வங்காளம் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இப்பொழுது தனது சொந்த மாகாணமான ராஜஸ்தானில் சொந்த ஊர் அடங்கிய பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

என்ன வேடிக்கை என்றால் அவர் போட்டியிட எந்தத் தொகுதியுமே ஒதுக்கப்படவில்லை. ஆசாமி மிகவும் ஆத்திரத்திற்கு ஆளாகி தாம் மிகப் பெரிய அளவில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி கட்சிக்கே முழுக்குப் போட முடிவு செய்து விட்டார்.

பி.ஜே.பி.யின் தலைவராக இருக்கக் கூடிய ராஜ்நாத் சிங் தான் எம்.பி.யாக இப்போதுள்ள காசியாபாத்தை விட்டு லக்னோவுக்கு மாறுகிறார் அதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டது ஆர்.எஸ்.எஸ்.

ஆக ஆர்.எஸ்.எஸ். ஆதிக்க சுனாமி கிளம்பி பெரிசுகளை தண்ணிக்காட்டி வருகிறது.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஜஸ்வந்த் சிங் - இவர்கள் ஒரு அணியாகவும் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, நரேந்திரமோடி என்பவர்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து பிளந்து நிற்கிறார்கள். இதற்கிடையில் மகாராட்டிர மாநிலத்தில் சிவ சேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே அத்வானியின் சகாப்தம் முடிந்து விடவில்லை! என்று குரல் கொடுத்துள்ளார் பி.ஜே.பி.யில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கூட்டணிக் கட்சிகள் வரை புரையோடி விட்டது!

தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதே இந்தக் கூத்து, நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன திருவிளையாடல்களோ - யார் கண்டது!

Read more: http://viduthalai.in/e-paper/77471.html#ixzz2wpctEEsr

தமிழ் ஓவியா said...


அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை!


சென்னை, மார்ச் 23- தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலு வலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ள தாக அரசுத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன.

அரசுத் துறை களின் பல்வேறு அலுவல கங்கள் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை சேப்பாக் கம் எழிலகம் ஆகிய வற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கணினி களுடன் இணையதள வசதி யும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள வசதி யைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகி றார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அம லுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலு வலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.

அரசுத் துறைகளின் அனைத்து கணினிகளிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங் களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்ய தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் துறை அதி காரிகள் கூறியது: அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவர் கள் கருத்துகளைத் தெரிவிப் பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின்போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/77444.html#ixzz2wpdcdNaU

தமிழ் ஓவியா said...


கூடா நட்பு கேடா முடியும்!


பி.ஜே.பி. அணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வும் - பா.ம.க வும் எப்படி இடம் பெறமுடியும் என்ற கேள்வி எல்லாத் தரப்பிலும் கேட்கப்பட்டது; அப்படியே இடம் பெற்றாலும் அவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும் என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கு வெகு நாட்கள் கூடத்தேவைப் படவில்லை. இடைப்பட்ட இரண்டே நாளில் உடைசல் ஏற்பட்டு விட்டது. பா.ம.க வின் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்ட சேலம், கல்லக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களும், தொண்டர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அத் தொகுதிகள் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன.

கொந்தளித்து விட்டனர் பா.ம.க தோழர்கள்.

அதன் விளைவு எந்த உச்சத்தில் உஷ்ண மூச்சு வெளியேறுகிறது தெரியுமா?

மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களின் குமுறலைத் தாங்க முடியாமல், கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தைலாபுரம் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார்.

புதுச்சேரியிலும் பிரச்சினை! என்.ஆர். காங்கிரசிற்கு அத்தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் (பி.ஜே.பி) ஒதுக்கப்பட்டா யிற்று. பா.ம.க வும் அங்கு வேட்பாளரை அறிவித்து விட்டது.

கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் - புதுச்சேரி வேறு மாநிலம் - அது இங்கு செல்லாது என்று மீசை முறுக்கி எழுந்து விட்டனர் பாட்டாளிகள்.

எந்த விலை கொடுத்தேனும், கட்சிக்கு சேதாரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கூட் டணி பலத்துடன் தருமபுரியில் போட்டியிட்டு, தான் மட்டுமாவது பெற்றிபெற்று மத்தியில் அமைச்சராகியே தீருவேன் என்பதில் எரி மலையாகத் தகித்து நிற்கிறார் - டாக்டர் அய்யா வின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

விஜயகாந்த் - டாக்டர் அன்புமணி ராமதாசு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி நிற்கும் படத்தைப் பார்த்து புழுங்குகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒட்டுமா(ங்)கனி? என்று இரு பொருளில் தலைப்பைக் கொடுத்து தினமணி மூக்கைச் சொரிந்துவிடுகிற நிலைமை!

தேமுதிக தலைவர் - விஜயகாந்த் பற்றி பா.ம.க வினர் செய்த விமர்சனம் விண்ணையும் தாண்டி வெடி மருந்து வீச்சாக அல்லவா நெடி ஏறியது!

டாக்டர் ராமதாஸ் ஆனந்தவிகடனுக்கு (1.8.2012) அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?

சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சினு ஒரு கட்சி. ஆனா அந்தக்கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான பொறுப்பும் கிடையாது, அந்த தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கை யுமே இல்லாத கட்சி அது.

இருபத்தி நாலு மணிநேரமும் ஏதோ ஒரு மெதப்பிலயே இருக்கிற ஒருத்தர் ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா அப்புறம் அது விளங்குமா? என்று தேமுதிக தலைவரின் தனிப்பட்ட பழக்கத் தைக்கூட சுட்டிக்காட்டி சூடான வார்த்தை களைப் பரிமாறினார் மருத்துவர்.

இந்த நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருந்தால் எப்படி விளங்கும்? ஒருவர் காலை இன்னொருவர் வாருவார் என்பது தான் நடக்கப் போகிறது.

இது என்ன... இன்னும் இருக்குது - வேடிக் கையெல்லாம் - பார்க்கத்தானே போகிறோம்!

Read more: http://viduthalai.in/page-8/77453.html#ixzz2wpeUAmLp

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம் - ஜெயலலிதாவின் முரண்பாடு


கலைஞர் அம்பலப்படுத்துகிறார்

சென்னை, மார்ச் 24- திமுகவிற்கு ஒரு கொள் கையும் கிடையாது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் பேசிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு சேது சமுத்திரத் திட்டம் என்பதில் அவர் எப்படியெல்லாம் முரண் பட்டு நிற்கிறார் என்பதை விளக்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகி றேன். 2001 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில், சேது சமுத் திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடை யும். வாணிபமும் தொழி லும் பெருகும். அந்நிய முத லீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமா கும். ஏற்றுமதி, இறக்குமதி அதி கரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக் களின் வாழ்க்கைத்தரம் மேம் படும்.

வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அள வில் விரிவடையும். சுற் றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத் தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக் காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத் திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதி யைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொன் னார்கள்.

அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப் பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை யில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக் கும் சேது சமுத்திரத் திட் டத்தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற் குப் போதிய நிதியினை உட னடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலி யுறுத்தும் என்று சொன் னார்கள். தற்போது வெளி யிட்டுள்ள அ.தி.மு.க. அறிக் கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறி விப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப் பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக் குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா!

அன்று செழிக்க வைக்கும் திட்ட மாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா?

Read more: http://viduthalai.in/e-paper/77488.html#ixzz2wvqMlYqD

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது


பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி

செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது

மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுவது அவசியம்

தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!

பெண்களுக்குச் சொத்துரிமை - இந்து சாஸ்திர எதிர்ப்பு - அண்ணல் அம்பேத்கர் முயற்சி தோல்வி - 1929இல் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் மத்திய ஆட்சியில் தி.மு.க.வின் முயற்சியில் நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்துமதத் தர்மப்படி, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் துவக்கத்தில் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்கள் தந்தையர்க்கு பிண்டம் பிடித்துப் போடும் உரிமை இல்லாதவர்கள் என்பதால்தான்!

ஆண் பிள்ளைகள் மட்டுமே அதனை சாஸ்திர சடங்காச்சாரப்படி செய்ய முடியும் என்பது இந்து தர்மம்!

முன் நிபந்தனையோடு அன்று ஒரு சட்டம்

எனவே இந்துக் கூட்டுக் குடும்பத்தில் (அவிபக்த குடும்பம்) என்பதில் உள்ள பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில், மகனுக்குள்ளதைப் போல மகள் உரிமை கொண்டாட வழியில்லாமல் இருந்தது.

ஏன் கணவன் சொத்தில், கணவன் முன்பே இறந்து மனைவி விதவையான பிறகுகூட அந்த சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லாமல் முன்பு இருந்தது;

பிறகு சற்று மாற்றம் வந்தது - அநேகமாக 1937 வாக்கில்; ஆனால் அதற்கொரு முன் நிபந்தனை வைக்கப்பட்டு விதவைக்கு இறந்த கணவனின் சொத்துரிமை கிடைத்தது.

அந்த முன் நிபந்தனை அந்த விதவை கற்பு இழக்காத வராக இருக்க வேண்டும்! Ramnad Case கற்பிழந்த விதவை வழக்கு Widow’s Case என்பது பிரபலமான வழக்காகும். இதுபடிப்படியாக பல கட்டங்களில் மாறுதல் அடைந்தது.

அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் - எதிர்ப்பினால் பதவி விலகிய கொடுமை!

இது ஒருபுறமிருக்க, மகளிருக்குச் சொத்துரிமை ஏற்படுத்த இந்து சட்டத்தை திருத்தி, ஆண்களைப் போல் (மகன்களுக்குள்ள உரிமை மகள்களுக்கும்) பெண்களுக் கும் வரவே இந்து சட்டத் திருத்த மசோதா (Hindu Code Bill) என்ற பெரும் சீர்திருத்த மசோதாவை அண்ணல் அம் பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது கொணர்ந்தார்.

சில சில பகுதிகளைப் பிரித்து சட்டமாக்கினர்; இந்த மகளுக்கு சொத்துரிமை - ஹிந்து தர்மத்தின் அடிப் படையைக் குலைக்கிறது என்று காரணம் காட்டி, ஹிந்து சனாதனிகள் கடும் எதிர்ப்பை, முதல் குடியரசுத் தலைவ ரான பாபு இராஜேந்திர பிரசாத் மூலம் காட்டி, அம்பேத்கரின் முயற்சி வெற்றி பெறாமல் தடுத்தார்கள்.
அதன் காரணமாகவே டாக்டர் அம்பேத்கர் பதவி விலகி வெளியேறினார். அவரது முயற்சி பிறகு தி.மு.க. பங்கு பெற்ற பிறகு நிறைவேற்றியதே!

தி.மு.க. செய்த புரட்சி

ஆனால் தி.மு.க. இடம் பெற்று 2004 தேர்தலுக்குப் பிறகு அமைந்த அய்க்கிய முற்போக்கு முன்னணி அமைச்சரவை 2005-இல் மகளுக்குச் சொத்துரிமைக்கு இருந்த தடையை நீக்கி ஏற்கெனவே இருந்த 1956ஆம் ஆண்டு சட்டத் திருத்தமாக நிறைவேற்றி 2006 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அதை அமலாக்கி வைத்து வரலாறு படைத்தது.

இதைவிட மகளிருக்கான சமூகப் புரட்சி வேறு உண்டா?

1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட் டின் தீர்மானம் இது! கலைஞர் தலைமையில் அமைந்த இயக்கம், மத்தியில் மக்களாதரவுடன் வெற்றி பெற்ற, நிகழ்த்திய சாதனை, பன்னூறு ஆண்டானாலும் வரலாற்றில் அழிக்கப்படாத மிகப் பெரிய அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி சாதனை அல்லவா?

மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்!

இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, திசை திருப்புவோர் தம் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழிப்பது இப்போதைய தேவை அல்லவா?


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77482.html#ixzz2wvqVg3WA

தமிழ் ஓவியா said...


உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள்


சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார்.

கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது.

அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc

தமிழ் ஓவியா said...


கலைஞர் மாடல் என்பதே சரி!

சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது.

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும்.

பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும்.

கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்!

அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது

எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது.

சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா?

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம்.

முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125.

கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது!

மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR

தமிழ் ஓவியா said...


தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அவசியம்நேற்று 23.3.2014 வெளியான தீக்கதிர் நாளேட்டின் இணைப்பாக வரும் வண்ணக்கதிரில் வெளிவந்த ஒரு சிறப்பான செய்தியை வாசக நேயர்களுக்காக அப்படியே தருகி றோம்:

அவுரங்காபாத்தில் மகாத்மா காந்தி மிஷன் அறக்கட்டளை மருத்துவ மனையில் ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர் (41, வயது) சர்தார் சஞ்சித் சிங். 2014 பிப்ரவரி 2ஆம் தேதி, பணியில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி, மயக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்பட்டது. பரிசோதித்தபோது அவ ருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளும் கொடுக்கப் பட்டன.

அவசரப் பிரிவில் சேர்க்கப் படும்பொழுது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மிகவும் குறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இதயம் துடிப்பதும், நாடி துடிப்பும் நின்று விட்டது. இசிஜி திரையில் இதயம் செயலற்று விட்டதற்கான நேர் கோடு சமிக்ஞையே வந்தது. உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியாக பேசர் நுழைக்கப்பட்டது. அப்பொழுதும் இதயம் துடிக்காததால் செயற்கையான முறையை கையாண்டனர். மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 100 முறைக்கு செயற்கையான முயற்சிவிட்டு விட்டு மேற்கொள்ளப்பட்டது. 11/2 மணி நேர முயற்சிக்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 4 நாள் களில் அவருக்கு முழு நினைவு திரும்பி யது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. மூளையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிசயிக்கும் வகையில் விரைவாக முழு குணம் அடைந்தார்.

மருத்துவப்படி 90 நிமிடம் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தது எப்படி?

அவருடைய இளம் வயதும் அவருக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக கருதப் படுகிறது. அதைவிடவும் மருத்துவர்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற் கொண்டதும் இந்த அரிய நிகழ்வுக்கு மற்றொரு காரணமாகும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பழக்கங்களைப் பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கிய மானது என்பதையும் விடா முயற்சியுள்ள மருத்துவர்கள் அமைவது எவ்வளவு அருமையானது என்பதையுமே இது காட்டுகிறது.

இதிலிருந்து மனிதர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன அல்லவா!

நம் வாழ்வில் நாம் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகக் கூடாது.

சில நல்ல நண்பர்கள்கூட நண்பர் களின் சகவாசதோஷத்தின் காரணமாக, புகைப்பிடித்தல், மது குடித்தல் - இதை ஒரு வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பழக்கம் என்று தவறான பழக்கத்தில் ஈடுபடுதல், மகளிரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளுதல், அதைப் பெருமையாகப் பேசி தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட் டால், பின்னால் அது நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகும்போது உதவி செய்யக்கூட வாய்ப்பிருக்காது என்ப தால் உங்கள் வாழ்வைப் பாதுகாக்கவா வது தனி மனித ஒழுக்கம் தேவை! தேவை!!

தீய பழக்கங்களைப் புறந்தள்ளுவீர்!

Read more: http://viduthalai.in/page-2/77501.html#ixzz2wvrEaNqP

தமிழ் ஓவியா said...


கூட்டணி அல்ல; சீட்டணிநேற்று சென்னையில் பேசிய, பாஜகவின் மூத்த தலைவர் வெங் கையா, தனி ஈழம் என்பதை பாஜக ஏற்கவில்லை; ஒன்றுபட்ட இலங்கை யில் தமிழ் மக்களுக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள 13-ஆவது திருத்தத்தின்படி, நடவ டிக்கை பாஜக வற்புறுத்தும் என ஓங்கி ஒலித்து விட்டார். கூடங்குளம் மின் உலையை மூடுவதற்கு பாஜக ஆதரவு இல்லை என்றும் சொல்லி விட்டார். இதற்கு முதல் நாள் தான், மதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் ஈழம் மலர வற்புறுத்துவோம் எனக் கூறப்பட்டுள் ளது. வைகோவை பொறுத்தவரை, தமிழ் ஈழப் பிரச்சினையை முன்னி றுத்தி அரசியல் நடத்துகிறார்.

அதன் அடிப்படையில் தான் காங்கிரசையும், திமுகவையும் விமர்சிக்கிறார். அண் மையில் புதுடில்லியில் மோடி பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கையிலும் ஈழத் தமிழர்களின் பிரச் சினையைப் பற்றி பேசினார்.

ஆனால், மோடி அது குறித்து ஒன்றும் பதில் தரவில்லை என்பது வேறு செய்தி. தங்கள் கட்சியில் முதன்மை விஷயமாகக் கருதப்படும், தமிழ் ஈழம் என்பதை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்வதற்கு, வைகோவிற்கு எது தடையாக இருக்கிறது? பாஜக தமிழ் ஈழப்பிரச்சினையில், காங்கிரசு என்ன நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தான், பாஜகவிற்கும். அய்.நா. மன்றத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத் தில், திமுக கோரிக்கை வைத்து வாதாடிய போது, பாஜகவின் சார்பில் யஸ்வந்த் சின்கா என்ன சொன்னார்? அப்படி எல்லாம் ஒரு நாட்டிற்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர முடியாது என நெத்தியில் அடித்தாற்போல் சொன்னாரே?

இப்போது, பாஜக கூட்டணி, மோடி பிரதமர் என குதூகலமிடும், வைகோ, தனது முதன்மைப் பிரச் சினையாகக் கருதும் ஈழப் பிரச்சினை யில், காங்கிரசின் அதே நிலைப் பாட்டைக் கொண்டுள்ள பாஜகவிடம், ஈழப் பிரச்சினையில் ஆதரவு தந்தால் தான் கூட்டு சேருவோம் என சொல் லியிருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல், பாஜக வந்தால் ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று சொல்வது, யாரை ஏமாற்ற? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் சொன்னது போல், இவர்கள் அணி, கூட்டணி அல்ல; வெறும் சீட் டணி தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, தக்க பாடம் அளிப்பார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77507.html#ixzz2wvrdRefj

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது.

இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm

தமிழ் ஓவியா said...


அந்தோ! டாக்டர் பூ.பழனியப்பன் மறைந்தாரே!


நாட்டின் தலைசிறந்த மகப் பேறு மருத்துவரும், சீரிய பகுத்தறிவாளரும், சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுடையவருமான பேராசிரியர் டாக்டர் பூ.பழனி யப்பன் (வயது 84) அவர்கள் நேற்று (23.3.2014) இரவு 8 மணி யளவில் சென்னை -அண்ணா நகர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, நம்மை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

பரம்பரையான சுயமரியாதைக் குடும்பமான பதி வாளர் நளம்புத்தூர் (கொள்ளிடம் கரையில் உள்ள பழைய தென்னாற்காடு மாவட்டம்) பூவராகன் அவர்களது மூன்றாவது மகன் ஆவார்.

மறைந்த நிலவு பூ.கணேசன் எம்.ஏ., என்று அறியப்பட்ட செய்தித் துறை, குடும்ப நலத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் இவரது மூத்த அண்ணன். விடுதலையில் தொண்டாற்றியவர்.

அடுத்த சகோதரர் வேளாண்துறை அதிகாரியாக இருந்த திரு.பூ.சோலையப்பன் அவர்கள் ஆவார்கள்.

பெரியார் பெருந்தொண்டரான பதிவாளர் பூவ ராகன் அவர்கள் வழியிலேயே இம்மூவரும் சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்தவர்கள்.

டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள், முன்பு மருத் துவப் படிப்புத் துறைக்கு தி.மு.க. அரசால் தேர்வுக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்தபோது, சமூக நீதிக் கண்ணோட்டத்தில், வாய்ப்பற்ற முதல் தலை முறைக் குடும்பத்து ஒடுக்கப்பட்ட சமூக மாணவ - மாணவிகள் பலருக்கும் வாய்ப்பு தந்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தியவர்.

டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் (1997). எஃப்.ஆர்.சி.எஸ். பட்டமும் பெற்று, மகப்பேறு மருத்துவத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவராகவும் விளங்கி யவர்.

மருத்துவ மாணவர்களாலும், சக மருத்துவர்களா லும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்; நிறைய படித்து பொதுத் தகவல் களஞ்சிய மாகத் திகழ்ந்த பண்பாளர்.

முதுமையினால் வீட்டில் இருந்த அவரை சில மாதங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்து, கவிஞரும், நானும் நலம் விசாரித்துத் திரும்பினோம்.

வரும் 28 ஆம் தேதி அவர் எழுதி, முதல் பதிப்புடன் நின்று போன பல முக்கிய நோய்கள்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு நூலை, நாம் அவரு டைய அனுமதியோடு மறுபதிப்பிட்டு, சென்னை பெரியார் திடலில் (28.3.2014), மறு அறிமுக வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து, அதில் அவரைப் பெருமைப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்; அதற்கு அவரின் ஒப்புதலும் பெற்றோம்.

இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள். அது இங்கே நடந்துவிட்டது.

அவரை இழந்துவாடும் அவரது வாழ்விணையர், மகன் சேரலாதன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
24.3.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கழகத் தலைவர் மரியாதை

மறைந்த டாக்டர் பூ.பழனியப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டாக்டரின் துணைவியார், மகன் சேர லாதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திருமகள் மற்றும் மு.ந.மதியழன், விடுதலை ராதா, சி.வெற்றிச்செல்வி, திராவிடன் நலநிதி இயக்குநர் த.க.நடராசன் ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/77509.html#ixzz2wvtK0C8B

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட தாழம்பூ

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியு டையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

பசியை தூண்ட: என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகின்றேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இவர் கள் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப் படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

வயிற்றுப் பெருமல் நீங்க: உணவின் மாறுபாட் டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெரு மலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்..

ரத்த சோகை நீங்க: ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறு சுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். இந்தக் குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும்.

உடல்சூடு தணிய : உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtnPgLH

தமிழ் ஓவியா said...


வயிற்றுப்பூச்சிகளை அகற்றும் மிளகு


அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை. சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி அத்தகைய சிறப்புடையவை மிளகு.

அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். அல்சர் பிரச்சினை உள்ள வர்களுக்கு காரத்துக்கு மிளகு சேர்க்க அறிவுறுத்தப் படுவதன் பின்னணி இதுதான். மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும்.

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும். முன்பு குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சிகள் அழிய கை மருந்துகள் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இன்று அதைப் பற்றி யெல்லாம் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

பூச்சி மருந்து கொடுப்பதை மெனக்கெட்டு செய்ய நேரமில்லா தவர்கள், மிளகு அதிகம் சேர்த்த சூப் வைத்துக் கொடுத் தாலே, வயிற்றுப்பூச்சிகள் செத்துவிடும். இதைப் பெரியவர் களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். அடிபட்டு, ரத்தம் கசிந்தால், அந்த இடத் தில் சிறிது மிளகுப்பொடி வைத்து அழுத்தினால் கசிவு உடனே நிற்கும்.

மிளகில் வெள்ளை மிளகு, கருப்பு மிளகு என இரண்டு வகை உண்டு. துரித உணவு போன்ற சில உணவுகளுக்கு வெள்ளை மிளகு உபயோகிக்கிறோம். உணவின் நிறம் மாறாமலிருக்க வேண்டும் என்பதே காரணம். வெள்ளை மிளகு என்பது தோல் நீக்கப்பட்டது... அவ்வளவுதான்!

உண்மையான சுவை மற்றும் ஆரோக்கியம் எதில்? அவ்வப்போது தேவைக்கேற்ப கரகரப்பாகப் பொடித்து உபயோகிக்கிற கருப்பு மிளகில்தான்! அந்தந்த வேளைத் தேவைக்கு கொஞ்சமாக இடித்து உபயோகித்தால், அதன் மணமும் பலனும் முழுமையாகக் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvtx21Cj

தமிழ் ஓவியா said...

இதய ஆரோக்கியம் மிகவும் அவசியம்

இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம் செய்து முடிக்கிறோம்..நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டி ருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம்.

இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

மனஅழுத்தம்: உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மவுனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது.

முறையற்ற உணவுப் பழக்கம்: முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.

இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தரு கின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.

தோல் நீக்கிய சிக்கன் போன்ற வற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவை யான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..

Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvu6ghol

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்!

சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன?

திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்?

அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம்.

1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை...

2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்..

3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு ..

4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்...

இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்!

கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது.

கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே!

- ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு


ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு

பாஞ்ச் ஜன்யா என்கிற அரசியல் செய்தித்தாளை, ஆர்.எஸ்.எஸ். புதுடில்லி யில் மீண்டும் துவக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். நேரிடை யாக இந்தத் தேர்தலை மோடியை வைத்து நடத்து கிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொள் ளட்டும்.


வெற்றி யார் கையில்?

எல்லோரும் தேர்தல் வெற்றிபற்றி பேசிக் கொண்டு இருக்கையில் சினிமா ரசிகர்களுக்கோ வேறு கவலை.

ரஜினியின் கோச்சடையான் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர் கள் திருப்பதிக்குப் பாத யாத்திரையாம்! படத்தின் வெற்றி அதன் சிறப்புகளால் அல்ல; ஏழு மலையான் அருள் பாலித்தால்தான் வெற்றியாம்! ரஜினியின் திறமையை இப்படியா அவமதிக்க வேண்டும்?


மூன்று வழக்குகள்

ஆளும் அ.இ.அ.தி. மு.க.வின் மீது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று முதல் அமைச்சர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மின் கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடியதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/77546.html#ixzz2x1kpju85

தமிழ் ஓவியா said...


என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்!

ராமன் கோவில் கட்டியே தீருவோம்

கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்!

புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது.

பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1l7Ua00

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள்


புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார்.

ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை.

வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம்.

வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார்.

- (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்)

Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn

தமிழ் ஓவியா said...


நடப்பது எமர்ஜன்சியா?

இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது.

இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங்.

ஊடகங்களின் போக்கு

அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன.

- தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014)

கருப்புக்கொடி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர்.

இனம் இனத்தோடு...

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது..

தயார்! தயார்!!

தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம்: மோடி பொறுப்பாளியல்லவாம்!


புதுடில்லி, மார்ச் 26- 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்ப வங்களுக்காக வருத்தப்படு கிறேன். ஆனால் அந்த சம்ப வங்களுக்கு நான் பொறுப் பாளி அல்ல என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குஜராத் முதல்வரும், பிரத மர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி: ஓர் அரசியல் வாழ்க்கை வர லாறு தலைப்பில் பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஆண்டி மரீனோ எழுதிய நூலை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நூல் குறித்து செய் தியாளர்களிடம் ஆண்டி மரீனோ செவ் வாய்க் கிழமை கூறியதாவது: 310 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் குஜராத் கலவரச் சம்பவம் குறித்து இதுவரை வெளிவராத, அதி காரப்பூர்வமான தகவல்கள் ஏராளமாக இடம் பெற்றுள் ளன.

மோடி அரசியல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ஹெலிகாப்டரில் செல்லும் போது அவருடன் பல வாரங் களாகத் தொடர்ந்து சென்று அந்தத் தகவல்களைப் பதிவு செய்தேன்.

பேட்டியின்போது ஒரு முறை, குஜராத் கலவரச் சம்பவத்துக்குப் பிறகு முதல் வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எனக்கு விருப்ப மில்லை. என்னைக் காரணம் காட்டி எனது மாநில மக்கள் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அப்படியொரு முடிவை எடுத்தேன்.

இருப்பினும், எனது கட்சி (பாஜக) அதற்கு இட மளிக்காததால் (நான்) பதவி யில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனது பதவி வில கலையும் மக்களும் விரும் பவில்லை.

இந்தத் தகவலை முதன் முறையாக பதிவு செய்த நிகழ்வாக இது (பேட்டி) இருக்கும் என பாஜகவின் ஜாம்பவானாகக் கருதப் படும் மோடியே வெளிப்ப டையாகக் கூறினார் என்று ஆண்டி மரீனோ தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/77604.html#ixzz2x7YLeaau

தமிழ் ஓவியா said...


பல்நோக்கு மருத்துவமனை எப்படி இருக்கிறது? கலைஞர் பதில்சென்னை, மார்ச் 26- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சி யில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட் டுள்ள பல்நோக்கு மருத்து வமனை எப்படி இருக்கி றது என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித் துள்ள பதில் வருமாறு:

கேள்வி: சென்னையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பல் நோக்கு மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது?

கலைஞர்: ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதல மைச்சர் ஜெயலலிதா மூன் றாண்டு காலம் அதனை மூடி வைத்தார்.

தலைமைச் செயலகமும், சட்டப்பேர வையும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில் தான் காலம் தள்ளுகிறார் கள். முதலமைச்சர் அறை யைத் தவிர மற்ற அமைச் சர்களுக்கும் நெருக்கடி தான். ஆனால், ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளி கையில், பல்நோக்கு மருத் துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார். 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாக கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும். தற்போது ஜெய லலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவம னையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத் தனை ஆயிரம் பேர் தெரி யுமா? பல்நோக்கு மருத்து வமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப் பட்டார்களாம்!

அறிவிப்பு ஒன்றுதான் அதிமுக ஆட்சியின் இரண்டாண்டுகால சாதனை!

கேள்வி: தொலை நோக்குத் திட்டம் பற்றி முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறாரே?

கலைஞர்: அதைப் பற்றி அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியைக் கூறுகிறேன். 2012-2013 இல் தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலை நோக்குத் திட்ட ஆவணத்தில் 104 அணைகளைப் புனரமைக் கப் போவதாக அறிவித் தார்கள். இந்தத் திட்டத்திற் கான மதிப்பீடு 745 கோடி ரூபாய். இதில் 80 சதவிகிதம் உலக வங்கி கடனாகவும் 20 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக் குமென உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்டப் பணிகளை 2012 இல் துவங்கி, 2018 க்குள் நிறைவேற்றப்போவதாகச் சொன்னார்கள். பணிகளில், பல்வேறு துறைகளின் பங் களிப்புகளை ஒருங்கி ணைக்க தலைமைச் செய லாளரின் தலைமையில் மாநிலத்திட்ட மேலாண் மைக்குழுவும் உருவாக்கப் பட்டது. முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்தக் குழு ஒப்புதல் அளித்த தோடு சரி மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவ மழை பொய்த்ததால், பெரும்பா லான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில் சுலபமாக அணை களை மேம்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் தற்போது வரை திட்டப் பணிகள் துவங்கவில்லை. 2012 இல் வெளியிடப்பட்ட தொலை நோக்குத்திட்ட ஆவணத் தில் இந்தத் திட்டத்திற்காக 745 கோடி ரூபாய் செல வாகும் என தெரிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண் டாவது ஆவணத்தில் 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றுதான் அதி முக ஆட்சியின் இரண் டாண்டு காலச்சாதனை!

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77608.html#ixzz2x7YVA8W4

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

காப்புத் தொகை?

2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர்.

தேவை நட்சத்திர சின்னம்

தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

விதிமீறல்

சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம்.

சரண்!

கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார்.

பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

தலைகீழ் கட்டை விரல்

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மீதிப் பணம் எங்கே?

திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார்.

ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல்பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம்.

சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக:

i.e. General Public Vs Jayalalitha

மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . .

என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே!

- ரம்யா சீனிவாசன்

Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!

வழி நெடுகிலும் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு

வாரணாசி, மார்ச் 26- வார ணாசியில் ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கெஜ்ரி வால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறி விப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்ற போது பாஜகவினர் கேவல மாக நடந்து கொண்டனர்.

டில்லியில் இருந்து புறப் படும் முன் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற் காக மோடியுடம், ராகுலும் தோற்கடிக்கப்பட வேண் டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான் என்றார்.

டில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சிவ கங்கா விரைவு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந் தார் கெஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலை வர் மணீஷ் சிசோதியா, கட் சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர்.

கங்கையில் நீராடிய கெஜ் ரிவால் அங் குள்ள காலபை ரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கத் மோட்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.

பாஜகவினர் கேவலம்

அவருக்கு வழிநெடுகி லும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ் ரிவால் ஒழிக,கெஜ்ரிவாலே திரும்பி போ என முழங் கினர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கெஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதி லிருந்து நூலிழையில் தப்பி னார் கெஜ்ரிவால். கெஜ்ரி வாலுக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

வாரணாசியின் முஸ்லிம் தலைவர்களையும் கெஜ்ரி வால் சந்தித்தது, அந்த சமு தாயத்தினரின் வாக்குகளை யும் அவர் குறி வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட் டம் ஒன்றில், கெஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித் தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவு கிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை.

ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கெஜ்ரிவால்

ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப் பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.

வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிடுவதை அறிவிக்கும் வகை யில், இங்குள்ள ராஜ்நாரா யண் பூங்கா மைதானத்தில் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர் களுக்கு மிக மலிவான விலை யில் கொடுத்து வருகிறார் மோடி.

விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த பல மானி யங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 5,874 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக் கான சிறுதொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின் றன. இதைத்தான் வாரணாசி யிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங் கிரசை, பாஜகவும் ஆதரிக் கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்றார் கெஜ்ரிவால். கெஜ்ரி வால் தனது உரையில் சமாஜ் வாதி கட்சி பற்றியோ, பகு ஜன் சமாஜ் கட்சி பற்றி எது வுமே குறிப்பிடவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/77642.html#ixzz2x7aCMH2Y