Search This Blog

10.3.14

தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார்

இராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு

தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றிப் பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரிய மும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப் போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற் காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்டதாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண் டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத் தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம்.
அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்தபோதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முக்தியோ, மோட்சமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்த தாகவோ, வாழ முடிந்த தாகவோ பொய்க் கதைகள் கூடக் கிடையாது.

அது மாத்திர மல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத் திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்ட தாகத்தான் காண முடிகின்றது. அன்றியும், தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர் களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது.

அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப்படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்தவ அரசர்கள் ஆகிய வர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப் பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனு பவமும் காணப்படுகின்றது. உண்மையா கவே இந்நாட்டில் முகமதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்க வில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டப் படாத மக்களின் எண்ணிக்கை இன்று தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக் குக் குறையாமல் இருந்திருக்கும்.
தீண்டப் படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவ தற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் கார ணத்தாலோ இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர, மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாத வர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்ட முறைப்படியும் குறிப்பிடப் பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?

பழைய கால அரசர்கள் யோக்கி யதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம். முதன் முதலாக அரசன் கொலு மண்டபத் துக்கு வந்தவுடன் என்ன கேட்கின்றான்? மந்திரி! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலிய வைகளைச் செய்து சுகமாக வாழ்கின் றார்களா?

அவர்களுக்கு மான்யங்கள் முதலிய வைகள் தாராளமாக விடப்பட்டிருக்கின் றனவா? சூத்திரர்கள், பிராமணர் முதலிய வர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா? என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன? ஆனால் இன்றுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது, அரசர் பெருமான் என்ன சொன்னார்?

என்னுடைய பிரஜைகள் எல்லோரை யும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந் தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத் துவேன் என்று சொல்லித் திறந்து வைத்தார். அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தா பிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர் களும்  கேட்கலாம்.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக் கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலுகா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர் களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராம ராஜ் ஜியத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்னும் சில அக்கிர காரங்களில்  எச்சிலை எடுக் கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்ப கோணம் முனிசிபாலிட்டி யில் அக்ராகாரத் துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா? இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொருத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும் படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி யிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜ விசுவாசம் உபன்யாசம் செய்வதாய் தேசாபிமான வீரர்களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என் கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியா தைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக் காரர்கள், ஜமீன்தார்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிற வன் நான். உங்களைப் பொறுத்த வரை யிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத் துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட் டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மே லானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணா சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ, இவைகள் சம்பந்தப்பட்ட பழைய பழக்க வழக்கங்கள் அது சம்பந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும், அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட் டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்க ளுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப் போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியா மல் இருக்கலாம். இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக் கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.
ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார், உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று, அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும், ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும், ஒரு பொதுச் சத்திரத்தில் எல் லோரும் இருக்கலாம் என்றாலும், விபசாரத் துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும், ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும், பால் குடிக்கும் குழந்தைகளைச் சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற் குள் விடக் கூடாது என்றாலும் அவ்வாக் குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இருக்கும்போது, பழைய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற் றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதென்றால், அந்த சமதர்த ராஜ்ஜியத்துக்குக் காந்தியா ரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாசிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த வாக்குறுதி யின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும், கொடு மையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியால், தங் களுடைய சூத்திரப் பட்டம் இந்த ராமராஜ் ஜியத்தில் வருணாசிரம ராஜ்ஜியத்தில், கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும், எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப் பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள்  குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டு மென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த் தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதான, அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்கின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்ய வில்லையா என்றும், மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோத மாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப் படுகிறார்கள். கல்வியில்  சிறிது முன்ன ணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம்,  தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார் கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை.

எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தி யட்சத்திலும் மேல் நிலையில் இருக் கிறார்கள். பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்துவிட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கின்றன.
இனி அவர்களுக்கு வேண்டியதெல் லாம் அவர்களோ, அவர்களது அடிமை களோ நாட்டை ஆள வேண்டியது என் பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறுவதும், அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்ய முடையவர் களாகயிருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோ தமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களை செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச் சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமலில் நடத்தப்படாமலும் இருப்ப தற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர் களாக இருக்கிறார்கள்.

ஆதலால், அவர் களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

-----------------------------------ராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில்- தந்தை பெரியார்  29.09.1935 இல்  ஆற்றிய தலைமை உரை-" குடிஅரசு" - சொற்பொழிவு - 06.10.1935

17 comments:

தமிழ் ஓவியா said...


வெளிநடப்புச் செய்தார் ஜோஷி கட்சிக்குள் வீசுகிறது மோடி மீதான எதிர்ப்பு அலை!


புதுடில்லி, மார்ச்.9-தனது தொகுதியான வாரணா சியை நரேந்திரமோடிக்கு விட்டுக்கொடுக்க பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்குடன் வாக்குவாதம் செய்து விட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

வாரணாசி

நாடாளுமன்ற தேர்த லுக்கு பா.ஜனதாவின் பிரத மர் பதவி வேட்பாளராக குஜராத் மாநில முதல்-அமைச்சர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை நாடாளு மன்றத்தில் இடம்பெற்றது இல்லை.

டில்லி மாநிலங்களவை எம்.பி.யாக பிரதமர் பதவி வகிக்காமல், மக்களவை எம்.பி.யாக பிரதமர் பதவி வகிப்பதையே நரேந்திர மோடி விரும்புவதாக தெரி கிறது. அதற்காக அவருக்கு சாதகமான தொகுதியை தேடும் படலம் நடந்தது.

விளம்பர பலகை

மோடிக்கு நெருக்க மானவரான குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதாவின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக உள்ளார். அவர், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடுவது நல்லது என்று சமீபத்தில் கூறினார். அதையடுத்து, மோடிதான் வேட்பாளர் என்று வாரணாசியில் விளம் பரப் பலகைகள் வைக்கப் பட்டன.

இதுதொடர்பாக, பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. வாரணாசி தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர், பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவரை கான்பூர் தொகுதி யில் போட்டியிடுமாறு கட் சித்தலைமை கேட்டுக் கொள்ளும் என்றும் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த விவகாரம், பா.ஜனதாவில் விரிசலை உண்டாக்கியுள் ளது. கட்சியின் வேட் பாளர்களை தேர்வு செய்ய, கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் தலை மையில் நடைபெற்றது. அதில், தேர்தல் குழு உறுப்பினர்கள் என்ற முறை யில், நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜோஷி வெளி நடப்பு

அப்போது, மோடி முன்னிலையிலேயே, ராஜ்நாத்சிங்குடன், முரளி மனோகர் ஜோஷி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். வாரணாசியை மோடிக்கு ஒதுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே. இது பற்றி கட்சித்தலைமை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? இதுபற்றி முன்கூட்டியே ஏன் என்னிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை? கட்சித்தலைமையின் இத் தகைய செயல், கட்சியில் எதுவுமே சரியாக இல்லை என்று தவறான குறிப்பை வெளியுலகுக்கு தெரி விக்கும் என்ற ஜோஷி ஆவேசமாகக் கூறினார்.

பின்னர், அவர் தேர்தல் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

சுஷ்மா சுவராஜ் போர்க்கொடி

நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும், முரளி மனோ கர் ஜோஷிக்கு ஆதரவாக பேசினார். கட்சித்தலைமை யின் செயல்பாடு பற்றிய தவறான செய்திகள், வெளியே பரவுவது நல்லது அல்ல என்று அவர் கூறினார்.

இந்த விவாதத்தின் போது, நரேந்திரமோடி அமைதியாக அமர்ந்து இருந்தார். மேலும், சுஷ்மா சுவராஜ், நரேந்திரமோ டிக்கு எதிராக டுவிட்டர் வலைத்தளத்திலும் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்றால், அவர் பாதுகாப்பான தொகுதியை (வாரணாசி) தேடுவது ஏன்? என்று சுஷ்மா சுவராஜ் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுவும், பாரதிய ஜனதா வுக்குள் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76696.html#ixzz2vW73AFIe

தமிழ் ஓவியா said...


எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!


இன்று - மார்ச் 10ஆம் நாள் - தியாகத்தின் இலக்கணமாம்
நம் அன்னையார் தம் பிறந்த 94ஆம் ஆண்டு துவக்கம்.

அன்னையார் பிறந்த நாள், தூய தொண்டறத்தின் கதவுகள் திறந்த நாள் - சிறந்த நாள் - தொண்டுள்ளம் கொண்டோருக்கு!

இள வயதிலேயே அவர், தந்தை பெரியார் எண்ணிய புரட்சிப் பெண்ணாகும் தகுதியைப் பெற்றார்!

கொள்கை வழிப்பட்ட வாழ்வே தம், வாழ்வு என்பதை வேலூரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே முடிவெடுத்து - அய்யாவின் லட்சிய வழி நிற்கத்
திட்டமிட்டார். இது அவரை அதற்கு மேற்பட்ட ஆசிரியர் படிப்பில்கூட நாட்டத்தை ஏற்படுத்தவில்லை.

அய்யாவிடம் சரண் அடைந்து புதியதோர் விடை கண்டார் தமது கொள்கை ஏக்கத்திற்கு!

அதுதான் அய்யாவுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் கொள்கைப் பயணத்தின் வெற்றிக்கு உழைப்பது என்ற மாறாத உறுதி!

அரண்மனையை அவர் விரும்பவில்லை; கொள்கைக்கு அரணாக இருந்து அதனை (இன) எதிரிகளிடமிருந்து காப்பதே எம் ஒரே பணி என ஒரே நிலையில் பிடிவாதமாய் நின்றார்.

தூற்றுவோரும் பழி பரப்புவோரும் எத்தனை விபரீத விஷமப் பிரச்சாரத்தை வீசினாலும் அவைகளைத் தூசாகத் தட்டி தூய தொண்டறத்தின் உச்சிக்கே சென்றார். ஆம். நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் பாதுகாத்து
வாழ வைத்தார்; அதன்மூலம் இந்த மாபெரும் இயக்கத்தினைப் பாதுகாத்தார்.

அய்யாவின் பின்னும் அவ்வியக்கத்தினையும் காத்து காலத்தால் அழியாது, கடுஞ் சோதனைகளையெல்லாம்
வென்றெடுத்து, நம் அனைவர் கையிலும் அதனை பலமாக்கித் தந்து விட்டு தன் பணி முடித்த பிறகே விடை பெற்றார்!

கடந்த 35 ஆண்டுகாலமாக நாம் (அன்னையார் இல்லாத காலத்தில்)
கடந்து வந்த பாதை ஒரே பிரமிப்பு!

தொடரும் தொடரும் - நம்
தொண்டின் பயணம் தொடரும்!

அய்யா அன்னையாரின் பாதுகாப்புக்
கென தந்த சொத்தையும் தம் சொந்த சொத்தையும்
கூட மக்களுக்கே தந்து விட்டு - பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்து காவலர்களாகக் கடமை வீரர்களான கழகத்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, விட்டுத் தான் தன் கண்களை மூடினார்!

அவரது மூடிய கண்கள், பெரியார் -
மணியம்மை கல்விக் கூடங்களாக, அறச் செல்வங்களாக அவருக்குப்பின்
திறந்தன - திறந்தன- தமிழ் மக்களுக்கு,
அந்த ஒளி மிகுந்த பார்வையில், இன்று விழியின் வெளிச்சத்தைப் பெற்று தம் வாழ்வை வசந்தமாக்கிக் கொள்கின்றனர் - பல்லாயிரம் மாணவ இளைஞர்கள்
ஆதரவற்றோர் என்ற துயரநிலை
மாறி, அன்பு உள்ளங்களால் அரவணைக்கப்
பட்டோர் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் - நாகம்மை குழந்தைகள் இல்லத்தில்
கல்வி வாய்ப்புக்களை பெறும் எம் இளந்
தலைமுறையின் நன்றி மலர்ச்சியால்
அந்த ஒளி மேலும் பன்மடங்காகி
அன்னையார் மறையவில்லை
நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார் என்ற
உணர்வின் பெருக்கத்தை கொட்டும்
மழையாய், குளிர்விக்கும் தென்றலாய்,
குதூகலிக்கும் இன்ப ஊற்றாய்
மகிழ வைக்கிறது!

எம் தலைவரால் பக்குவப்பட்டு,
தலைவர் கண்ட இயக்கத்தையும் காத்த
எம் அன்னையே! உங்கள் பிறந்தநாள்
எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
10.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76720.html#ixzz2vc7iW9cN

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, மார்ச்.10- அன்னை மணியம்மையார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2014) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினை விடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய் தார் தமிழர் தலைவர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களை 95 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கொண் டாடப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையாரின் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர் - தோழியர்கள் புடை சூழ சென்று மாலை அணிவித்தனர்.

இதையடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கழகத் தோழியர் - தோழர்கள் வரிசையாக சென்று அன்னை மணியம் மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்தார். அதைத் தொடர்ந்து மகளிரணி சார் பிலும், பெரியார் மணி யம்மை மருத்துவமனை சார்பிலும், திராவிடன் நல நிதி சார்பிலும், பெரியார் திடல் பணியாளர்கள் திரா விடர் தொழிலாளர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மணி யம்மையார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் நினைவி டத்தில் தமிழர் தலைவர் தலைமையில் அனைவரும் ஒன்றுகூடி மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

95 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களை வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பெரு விழாவில், அய்யா தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவரின் மறைவிற்கு பிறகு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து கழகத்தைக் கட்டிக் காத்த அன்னை மணியம் மையாரின் இப்பிறந்த நாள் பெரு விழாவில் அய்யா அம்மா விட்டுச் சென்ற பணிகளை கட்டுப்பாட்டு டன் செய்து முடிப்போம் என உறுதி கொள்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் தோழியர் புடை சூழ உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் முன் னாள் மத்திய அமைச்சர் க. வேங்கடபதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேக ரன், வீ. அன்புராஜ், பிரச்சார செய லாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, கழகத் தலைமைச் செயற்குழ உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற்றும் மோகனா வீரமணி முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, திரா விட மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணி யம்மை, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், பேராசிரியர் மங்கள முருகேசன், பேராசிரியர் ராஜதுரை, தமயந்தி ராஜ துரை, கழக வழக்கறிஞர் அணி அமைப் பாளர் வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி துணைச் செயலாளர் கோ.வீ. ராக வன், பெரியார் திடல் மேலாளர் வி.சீதாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன் பெரி யார் மணியம்மை மருத் துவமனை ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மீனாம்பாள், மேலாளர் குணசேகரன், திராவிடன் நலநிதி தலை வர் டி.கே. நடராஜன், பொது மேலாளர் அருள் செல்வன் மற்றும் பெரியார் பணி மனை தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/76718.html#ixzz2vc8H0clF

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/76728.html#ixzz2vc8gkbMc

தமிழ் ஓவியா said...

பெண் உரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் சிலைக்கு அடிமைச்சின்னமான தாலியை அகற்றி தங்கம்

வேலூர் மாவட்டத் தலைவர் சட கோபனின் மகள் குடியாத்தம் மகளிர் பாசறையைச் சேர்ந்த ரம்யா - மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன் ஆகி யோர், பெண் உரிமைக்காகப் பாடுபட்ட பகுத்தறிவு பகலாவனாம் தந்தை பெரி யாரின் சிலைக்காக அடிமைச் சின்னமான தாலியினை அகற்றி, அதிலிருந்த தங்கத் தினை எடுத்து, உணர்ச்சிபொங்க தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Read more: http://viduthalai.in/page-8/76740.html#ixzz2vc971lxm

தமிழ் ஓவியா said...


பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்


க்ளாக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்சினையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாக கூறுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணில் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, க்ளாக்கோமா' ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒரு வித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்சினை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்சினை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக் கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் இரண்டு வகைகள் உண்டு. கண் ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந் தால் விளக்கொளியைப் பார்க்கிற போது, அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.

தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம்.

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச் சினை வரும் போது, எப்போதுமே கண் மருத்து வரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரி சோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரி சோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9VhNG3

தமிழ் ஓவியா said...


வெயிலுக்கு இதமான மண்பானைத் தண்ணீர்


வெயிலோட தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கு. அடுத்த மாதம் இன்னும் அதிக மாக வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானம், ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானதை சாப்பிட்டு கிட்டுதான் இருக்கோம்.

என்னதான் சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமாக குடிக்க வேண்டி யிருக்கு. இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது. வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக் கணும்தான் ஆசைப்படுவோம். அதனால பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீர், குளிர்ந்த வாட்டர் பாக்கெட் போன்றவற்றை குடிக்கிறோம்.

இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜில் வைத்து அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் சளி பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

இதை தவிர்க்க இயற்கையாக குளிர்ந்து இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்களில் குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9nZ9Gx

தமிழ் ஓவியா said...

கண்பார்வையை மேம்படுத்தும் பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக பயிரிடவும் படுகிறது.

இக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி ஆகியவற்றுக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9vj2Pc

தமிழ் ஓவியா said...

கோடை வெயிலால் வரும் அம்மை நோய்கள்

வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறந்தது என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய் களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன.

இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர் படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மைநோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

தடுக்க என்ன செய்யலாம்

சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர் விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்ற வற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண் காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.

வீட்டு தலை வாசல், நில வாசலில் வேப்பிலையை நிறைய சொருகி வைக்க, தோரணம் கட்டி தொங்கவிட வைரஸ் கிருமிகள் தாக்கம் குறையும். காய்ச்சல் அதிகம் இருப்பின் நிலவேம்பு இலைச்சாறு அல்லது பப்பாளி இலைச்சாறு 300 மில்லி அளவு 3 வேளை தேனில் கலந்து தரலாம்.

மலக்கட்டு இருப்பின் திரி பலா பொடியை 5 முதல் 10 கிராம் இளவெந்நீரில் கலந்து காலை, மாலை தரலாம். குளியல் பொடியாகவும் திரிபலா பொடியை பயன் படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vcA26hPe

தமிழ் ஓவியா said...


ஓய்வு வயதை உயர்த்தினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே! புள்ளி விவரங்கள் பேசுகின்றன


புதுடில்லி, மார்ச் 10- அரை க்காசு சம்பளம் என் றா லும், அது அரசாங்க சம் பளமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அந்த அரசு வேலைவாய்ப்பை எண்ணி நாள்தோறும் எதிர் பார்த்துக் கிடக்கின்ற இளை ஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

அந்த இளைஞர் களுக்கு மிகப்பெரிய ஏமாற் றத்தை அளிக்கும் வகையி லான தகவல்களில் ஒன்று தான் மத்திய அரசால் அண் மையில் வெளியிடப்பட் டது. மத்திய அரசு ஊழியர் களின் ஓய்வுபெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது என்று செய்திதான் அது.

மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதி யத் தொகையை தள்ளிப் போடவே இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து அறி விக்க உள்ளது என்ற கார ணம் கூறப்பட்டாலும் இது நாடு முழுவதும் படித்து வேலைவாய்ப்புக்காக காத் திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் நடவடிக்கை என்ற குரல்களும் கூடவே ஒலிக்க தொடங்கியுள்ளன.

லீவ் சரண்டர், கிராஜு விட்டி, கம்யூட்டேஷன், ஜிபிஎப் என்று ஒவ்வொரு ஓய்வு பெறுகின்ற மத்திய அரசு ஊழியருக்கும் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வரை மொத்தமாக வழங்க வேண்டிய கட்டாயம் அர சுக்கு உண்டு.

வரும் இரண் டாண்டுகளில் அதிகபட்ச அளவில் ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் அதற் காக பெரும் தொகை செல விட வேண்டிய நிலையில் அதனை தள்ளிப்போட இந்த வயது வரம்பு அதி கரிப்பு பயனை கொடுக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது என்கின்றனர் விபரம் அறிந் தவர்கள்.

ஆனால் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டு, நாள்தோறும் நுழைவுத் தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் எழுதி வேலைக்காக காத்திருக் கின்ற இளைஞர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். ஏற் கெனவே வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக் கின்ற மிகப்பெரிய பிரச்சி னையில் ஒன்றாக இருந்து வருகிறது.

படித்து பட்டம் பெற்றவர்கள் வெளிநாடு வேலைகளை தேடிச் செல் கின்றனர். பல்வேறு துறை களில் சிறப்பிடம் பிடித்த இளைஞர்களை இந்தியா முழுமையாக பயன்படுத் திக் கொள்கிறது என்பதை விட, சரியாக பயன்படுத் திக்கொள்ளவில்லை என் பதுதான் உண்மை.

இதன் வெளிப்பாடு உலக அள வில் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் முக்கிய இடங்களில் இந்தியர்களின் பங்களிப்பு வெளிப்படை யாக தெரிய தொடங்கியுள் ளது.

60 வயதுக்கு மேல் எந்த மாநிலமும் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை நிர்ணயம் செய்யவில்லை. படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில் ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 56 தான். ஜார்க்கண் டிலும் 56 ஓய்வுபெறும் ஊழியர்களின் வயது வரம் பாக உள்ளது. தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது.

குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களிலும் அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.

அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை மட்டும் 62 ஆக உயர்த்து வதின்மூலம் அது பிற மாநி லங்களுக்கும் மோசமான ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.

60 வயது நிரம்பியவர் களை இரண்டாண்டுகள் பணிக்காலத்தை நீட்டிக் கும் வேளையில் அடுத்த கட்ட பதவி உயர்வுடன் பணிக்கொடை உள்ளிட்ட அவர்களுக்கான நிதி செல வினங்களும் எகிறவே செய்யும். இது மறைமுக மாக மத்திய அரசுக்கு மேலும் செலவினத்தையே கொடுக்கும்.

இந்திய நாட்டில் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் ஆக உள்ளது. பாதிக்கும்மேல் 25 வய துக்கு மேற்பட்ட இளை ஞர்கள் உள்ளனர். மத்திய அரசில் தற்போது 31 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் ஆண்டுதோறும் ஓய்வுபெறுகின்றனர்.

நாட்டில் இளைஞர்களி டம் வேலைவாய்ப்பு இல் லாத நிலை கிராமங்களில் 36.6 சதவீதமும், நகரங் களில் 26.5 சதவீதம் உள்ள தாகவும், கல்வி அறிவு பெறாத இளைஞர்களில் வேலை இல்லாதவர்கள் நிலை 37 சதவீதம் உள்ள தாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பின் மூலம் ஆண்டுதோறும் 3 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வேலை வாய்ப்புகள் தள்ளிப் போகும் நிலை ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/76721.html#ixzz2vcACWf6M

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நமோ நமோ பஜனை பாட முடியாது மோடிக்கு மோகன் பகவத் எச்சரிக்கை!


டில்லி, மார்ச்.11- ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப் பின் தலைவர் மோகன் பக வத் அந்த அமைப்பின ருக்கு விடுத்துள்ள எச்சரிக் கையில் பாஜகவை ஆதரித் துப் பணியாற்றும் ஆர். எஸ்.எஸ். தன் எல்லையைக் கடந்து பணிபுரிவதாகவும், நமோ பஜனை பாடுவது அந்த அமைப்பின் பணி யல்ல என்றும் எச்சரித்துள் ளார். இதன்மூலம் பாஜகவின் கொள்கைகளை முடிவு செய்வது ஆர்.எஸ்.எஸ். என் பதும், மோடியை ஆதரித்து முழுவீச்சுடன் ஆர்.எஸ். எஸ். களமிறங்கி பணிபுரிந் துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் ஞாயி றன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதி சபாக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப் போது பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரும், பாஜகவின் பொதுச்செயலாளருமாகிய ராம்லால் ஆகியோரும் அந் தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசும் போது குறிப்பிட்டதாவது:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியலில் இல்லை. நம் முடைய வேலையும் நமோ பஜனை பாடுவது இல்லை. நமக்கான இலட்சியத்துக் காகவே நாம் பணிபுரிய வேண்டும். இடைவெளி விட்டு பணியாற்றுவது தற் போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது.

இன்றைய நாளில் அடுத்த அரசை யார் அமைக் கிறார்கள் என்பதைவிட, மிகப்பெரிய கேள்வி யார் அடுத்த அரசை அமைத்து விடக்கூடாது என்பதில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/76776.html#ixzz2vhVBHGzZ

தமிழ் ஓவியா said...


வளமா? வறட்சியா?


இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த மதுரவாயல் சம்பந்தப் பட்ட ஒரு வளர்ச்சித் திட்டம் - துறைமுகத்தி லிருந்து மதுரவாயல்வரையிலான பறக்கும் பாலமாகும். ரூ.1800 கோடி மதிப்பிலான திட்டம் இது. தி.மு.க.வின் முயற்சியால் அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்களும் இருந்தமை யால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

இந்தத் திட்டத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் உயர்நீதிமன்றம் சென்றார். அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற திட்டங்களை முடக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், அதோடவாவது தடை செய்யும் முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது இந்த அரசு.

சென்னை மதுரவாயல் பகுதி திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வேலுச்சாமி ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசின் தலையில் ஓங்கிக் குட்டி வளர்ச்சித் திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு முடக்கக்கூடாது என்று கூறிவிட்டதே!

இதற்கு முன்பே பிரதமர், அரசு செயலாளர் ஒருவரை இத்திட்டம் குறித்துப் பேச தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தத் திட் டத்தை நிறைவேற்றிட மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரிய பிறகும், அதற்கு உடன்படத் தயாராக இல்லை.

தாம்பரம் இராவணன் நிறுவனத்தின் சார்பில் மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்ட மாணவரணி தலைவர் சிவசாமி ஆகியோர் ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

மத்திய அரசு மாநில அரசு திட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றஞ் சொன்ன நிலைமை போய், மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்ற அவலம் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது.

1800 கோடி ரூபாயில் முடியவேண்டிய இந்தத் திட்டம், காலதாமதத்தால், மேலும் 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. 400 கோடி ரூபாய் என்றால், யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப் பணம்தானே வீணாகிறது.

இந்தத் திட்டத்தால் இந்த ஊரான மதுர வாயல் உலகெங்கும் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பாலம் என்ற பெருமைக்குரியது; 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகள் விரைந்து செல்லவும் - சரக்குகள் வந்து சேர வும் பெரிதும் பயன்படக்கூடியது. அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி என்பதோடு வளம் என்று கூறப் பட்டுள்ளதே - அப்படி ஒருபக்கம் கூறிவிட்டு, நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய இந்தத் திட் டத்தை முடக்குவது வளத்துக்கு அறிகுறியா? வறட்சிக்கு அறிகுறியா?

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/page-8/76766.html#ixzz2vhVPEfhu

தமிழ் ஓவியா said...


மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைபிடிக்கக் கூடியவன் எவனோ, அவனைத் தான் மனிதன் என்று கூற முடியும்.

- (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/76780.html#ixzz2vhVy5nez

தமிழ் ஓவியா said...


நலந்தானா? நலந்தானா?


தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் என்ற யூனியன் பிரதேசம் - ஆகியவைகள் உள்ள 14,227 பேர்களிடம் ஒரு உடல் நலம் பற்றிய மருத்துவ ஆய்வு சர்வே மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் என்ற அமைப்பு மேற் கொண்டது.
அதன் ஆய்வறிக்கையில் காணும் முக்கிய தகவல்கள் நம்மில் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்யக் கூடிய வைகளாக உள்ளன.

54.4 சதவிகிதத்தினர் அங்குள்ள மக்கள் தொகையில் எவ்வித உடலு ழைப்போ, உடல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டோ வாழ்வதில்லை என்று கண்டறிந்து உள்ளனராம். என்னே கொடுமை!

டாக்டர்ஆர்.என். அஞ்சனா என்பவர் தலைமையில் இந்த- சர்க்கரை நோய் ஆய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி அவர்கள் கண்டறிந்த உண்மைகள் (பெட்டி செய்தியில் காண்க). ‘Journal of Behavioural Nutrition and Physical Activity‘ என்ற ஆய்வு ஏட்டில் வெளியாகியுள்ள இத்தகவல் களில் பெரும்பாலானவர்கள் - தொலைக்காட்சி பார்ப்பதிலேயே - அமர்ந்து நல்ல உருளைக்கிழங்கு போண்டாக்கள் போல ஆகி, சர்க்கரை நோய்க்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து நோயாளிகள் என்ற மிகப் பெரிய படையில் நாளும் சேர்ந்து கொண்டே உள்ளனர்!

குறைந்தபட்சம் 20 மணித் துளிகள் கூடவா நடக்க, ஓட, உடற்பயிற்சி செய்ய ஒதுக்கிடக் கூடாது?

நோய் தாக்கிய பிறகு நாம் டாக்டர் களிடம் சென்று மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்ற வீணே காலத்தையும், பணத்தையும் செலவழித்து அவதிப்படுவதைவிட, நாம் நாளும் அரைமணி நேரம் குறைந்த பயிற்சியான - பாதுகாப்பான பயிற்சியான நடை பயிற்சியை(Walking) அல்லது சிறு வேக ஒட்ட நடைப்பயிற்சி (Jogging) செய் யலாமே! எது இவர்களுக்கு நல்லது என்ற யோசனை வேண்டாமா?

நடைப்பயிற்சியை நாளும் செய்ய என்ன கட்டணமா செலவா? ஒன்றும் தேவைப்படாதே! கிராமப்புற மக்கள் உடல் உழைப்பை நாளும் செய்வதால் அவர்கள், நகர்ப்புற மக்களைவிட (ஒப்பீட்டு அளவில்) சிறப்பாக இந்த உடல் உழைப்பு - அதனால் சுறுசுறுப் புடன் இயங்கும் - தன்மை உடைய வர்களாக உள்ளனர்!

நாளும் எழுந்து காலைக் கடன் களை முடித்து, உடன் நடைப்பயிற் சியை செய்து பிறகு அன்றாடப் பணியை நாம் மேற்கொள்ள முயலும் போது, நமது மனம் சுமையற்றதாக, பசுமையான உணர்வின் குடியிருப்பாக அமையும் வாய்ப்பிருக்கிறது!

எனவே, இருபாலரும் இந்த நடைப்பயிற்சியை ஒதுக்காதீர்கள்! ஒழுங்காகச் செய்து தேவையற்ற மருத் துவச் செலவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்!

பிறகு நாம் அடுத்தவர்களைப் பார்த்து நலந்தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று பெருமிதத்துடன் விசாரித்து நல்லதோர் வாழ்வு பெற முடியுமே!

Read more: http://viduthalai.in/page-2/76783.html#ixzz2vhWBFcua

தமிழ் ஓவியா said...

முதல் விண்வெளிப் பெண் கல்பனா சாவ்லா

1961 ஜூலை 1... அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. அரசாங்கப் பள்ளியில் படித்தார். அப்போது ஜெ.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்த கல்பனாவுக்கும் அதே ஆர்வம் வந்தது.

பள்ளிப்படிப்பு முடித்தவுடன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பில் (விமான ஊர்தியியல்) சேர்ந்தார் கல்பனா. பொறியியல் பட்டம் பெற்றவுடன் உயர் படிப்புக் காக அமெரிக்கா சென்றார்.

ஜேன் பியர் ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. 1983ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண் டனர். அடுத்த ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார் கல் பனா. அவருடைய ஆர்வமும் உழைப்பும் தீவிரமாகின. மேலும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றார்.

1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் டாக்டர் பட்டம் வாங்கினார். நாசாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் விமானம், க்ளைடர்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கவும் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். 1995இல் விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார் கல்பனா.

அடுத்த ஆண்டே அவருடைய கனவு, லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் எஸ்டிஎஸ் - 87 இல் பயணம் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழுவில் 6 விண் வெளி வீரர்கள் இருந்தனர்.

1997 நவம்பர் 19 அன்று கொலம்பியா விண்வெளி ஓடம் கிளம்பியது. 15 நாள்கள், 16 மணி நேரங்கள், 35 நிமிடங்கள் இந்தப் பயணம் நீடித்தது. டிசம்பர் 5 அன்று பத்திரமாக பூமியை வந்தடைந்தது. இந்தப் பயணத்தில் பல பரி சோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்யப் பட்டிருந்தன. கல்பனாவின் புகழ் எங்கும் பரவியது. 2003இல் கல்ப னாவுக்கு ஒரு வாய்ப்பு.

எஸ்டிஎஸ் - 107 கொலம்பியா ஓடம் ஜனவரி 16 அன்று புறப்பட்டது. இதுவும் 15 நாள்கள், 22 மணி நேரங்கள், 20 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியை நோக்கித் திரும்பியது. ஆனால்... பிப்ரவரி 1 அன்று விண் வெளி ஓடம் வெடித்துச் சிதறியதில் கல்பனாவின் உயிர் பிரிந்தது.

40 வயதில் மறைந்து போன கல்பனா, தன் வாழ் நாளில் 31 நாட்களை விண்வெளியில் செலவிட்டிருக்கிறார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYhXYlO

தமிழ் ஓவியா said...


கணினியை விஞ்சிய சகுந்தலா தேவி


அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார் சகுந்தலா!

1929 நவம்பர் 4 அன்று பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. சகுந்தலாவின் தந்தை, சர்க்கஸில் வேலை செய்தார். சீட்டுக் கட்டுகளை வைத்து அவர் பல்வேறு நினைவுத் திறன் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். மூன்றே வயதான சகுந்தலாவுக்கும் ஆர்வம் வந்தது. அப்பாவிடம் சீட்டுக் கணிதத்தைக் கற்றுக்கொண்டார்.

அவற்றைச் செயல் படுத்திக் காட்டினார். அவருடைய கணிதத் திறமையைக் கண்டு, ஊக்குவித்தார் தந்தை. 6 வயதில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறமைகளை, மைசூரு பல்கலைக்கழகத்தில் செய்து காட்டும் வாய்ப்பு கிடைத்தது. மிக வேகமாகவும் எளிதாகவும் கணிதப் புதிர்களை விடுவிக்கும் சகுந்த லாவைப் பார்த்து, எல் லோரும் வியந்து போனார்கள்.

8 வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மற்றொரு முறை தன் திறமைகளை நிகழ்த்திக் காட்டினார் சகுந்தலா. மழலை மேதை என்று கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மேடைகளில் தன்னுடைய திறமை களை உலகம் அறியச் செய்துகொண்டிருந்தார். மின்னல் வேக கணிதத்தையும், நினைவுத்திறனையும் கண்டு பிரமிக் காதவர்களே இல்லை. 1973ஆம் ஆண்டு பிபிசி தொலைக் காட்சியில் பங்கேற்றார். கணிதத்தில் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சட்டென பதில் அளித்தார்.

அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். 1977ஆம் ஆண்டு 201 என்ற எண்ணின் 23ஆவது மூலத்தை 50 நொடிகளில் கண்டறிந்தார். அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார்! இப்படி சகுந்தலா தேவிக்கும் கணினிக்குமான போட்டிகள் பல நடைபெற்றன. கணினியை விஞ்சினார் சகுந்தலா. 1982ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

கணிதம், கணிதத்தில் மேஜிக் என்று எப்பொழுதும் எண்களுடனே வாழ்ந்தார். கணிதம் தொடர்பான பல புத்தகங்களையும் எழுதினார். மனித கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி 2013 ஏப்ரல் 21 அன்று உடல்நலக் குறைவால் மறைந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYrNhzl

தமிழ் ஓவியா said...

முருகனுக்குப் பிடித்தது பஞ்சாமிர்தம் அல்ல - சாக்லெட்

ஆலப்புழா, மார்ச் 12-முருகனுக்கு பஞ்சாமிர்தம், பால், பழம் என்று பல்வேறு பொருட்கள் வைத்து வழி படுவது உண்டு. எங்காவது, முருகனுக்கு சாக்லேட்களை வைத்து வழிபடுவதை கேள் விப்பட்டிருக்கிறீர்களா?

கேரளாவின் ஆலப்புழா புறநகரில் உள்ள சுப்ரமணிய புரம். இங்கு தெக்கன் பழனி பாலசுப்ரமணியசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் விசேஷம், குழந்தை பருவத் தில் இருக்கும் பால முருக னுக்கு சாக்லேட்களை படைத்து வணங்குவதுதான். இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிறியது முதல் பெரியது வரையில் பல்வேறு வடிவங்களில் அமைந்த சாக் லேட்களை கொண்டு வந்து முருகனை வழிபடுகின்ற னர். பின்னர் அதுவே பக்தர் களுக்கு பிரசாதமாக வழங் கப்படுகிறது.

இந்த கோயிலில் எப் போது இருந்து சாக்லேட்டை முருகனுக்கு படைத்து வணங்கி வருகிறார்கள் என்பது யாருக்குமே தெரிய வில்லை. தங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே, இந்த கோயிலில் முருகனுக்கு சாக் லேட்தான் படைக்கப்படு கிறது என்று விவரம் தெரிந் தவர்கள் கூறுகின்றனர். இங் குள்ள முருகன், பால பருவத் தில் இருப்பதால் சாக்லேட்டை படைக்க ஆரம்பித்திருக் கலாம் என்று தாங்கள் நம்புவ தாகவும் அவர்கள் கூறினர்.

தேர்வுக் காலங்களில் இக்கோயிலில் மாணவர்கள் சாக்லேட்டை முருகனுக்கு படைத்து, தேர்வில் வெற்றி பெற வணங்குவார்களாம்.

Read more: http://viduthalai.in/page-8/76806.html#ixzz2vnPqDzxK