Search This Blog

4.6.13

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்பட வைக்க போர்! போர்!! போர்!!!

போர்! போர்!! போர்!!!

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று நாடு தழுவிய அளவில் மிகுந்த உணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டுள்ளது.

குருதிக் கொடை - ஏழை - எளிய மக்களுக்கு நல உதவிகள் என்று பயனுள்ள வகையிலும் விழா நடைபெற்றுள்ளது.

நேற்று சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் எழிலோடும், வலிவோடும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தேனாம்பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இடம் பெயரச் செய்து விட்டார்களோ என்று யாரும் மலைக்கும் அளவுக்கு விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

மானமிகு கலைஞர் அவர்களின் பன்முகங்களைப் பற்றி பலரும் எடுத்துக் கூறினர். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி - கலைஞரின் பொது வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது இருப்பது தந்தை பெரியார் அவர்களிடத்தில் அவர் பெற்ற பயிற்சியும், சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கையும் தான் என்று எடுத்துக் கூறி - கழகம் கட்டுப்பாடு கவசத்தைக் கைவிடாமல் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் எதிரிகளின் வியூகங்களை கலைஞர் அவர்கள் தூள் தூளாக்கி விடுவார் என்று சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன், தேவையற்ற சந்தேகப் புயலின் வாக்கியத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார் - அரசியலில் கலைஞர் அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை அய்யந்திரிபற வெளிப்படுத்தினார்.

ஏற்புரை வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞர் தமது பிறந்த நாள் செய்தியாக வெளியிட்ட கருத்து வியந்து வியந்து பாராட்டத் தகுந்ததும், பெருமைக்கும் உரியதாகும்.

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான சிறந்த திட்டங்களை அ.இ.அ.தி.மு.க. அரசு புறந்தள்ளிய தவறான போக்கைப் பட்டியலிட்டுக் காட்டியது மிகவும் சரியானதே!

தேர்தலில் வெற்றி பெறும் ஒரு கட்சி கடந்த ஆட்சியின் தொடர்ச்சி என்பதைப் புரிந்து கொண்டு செயல்படாத ஆட்சி, மக்கள் நல ஆட்சியாக இருக்க முடியாது.
முக்கியமாக தமது பிறந்த நாள் செய்தியாக போராட்டத்தை கலைஞர்  அறிவித்தார். தமிழர்களின் நீண்ட கால திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த விடாமல் அ.இ.அ.தி.மு.க. அரசு - அதன் முதல் அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் முடக்கி இருப்பதை பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் கடல்முன் அம்பலப்படுத்தியது சரியான செயல்பாடே!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயற்படுத்தினால் கடல் பயண நேரத்தில் 36 மணி நேரமும், 555 கி.மீ., தூரமும் மிச்சப்படும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி விரைவாக வந்து சேரும். தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 கோடி மிச்சப்படும். ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.700 கோடி மிச்சப்படும்.
நாட்டின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்ற நிலை ஏற்படும். சென்னை, தூத்துக்குடி, புதுச்சேரி, நாகப்பட்டினம், தொண்டி, கோடியக்கரை, இராமேசுவரம், தனுஷ்கோடி, குளச்சல் முதலிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் விரிவாக்கமடையும். இவற்றை எல்லாம் கடந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து நிறை வேற்றப்பட்ட திட்டமாக இது அமைந்து விடுமே எனும் பொறாமை உணர்ச்சி  காரணமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்தான் நாட்டுக்கு நல்லது செய்யும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டமே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இவ்வளவுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இரண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது அ.இ.அ.தி.மு.க. இன்றைக்கு அந்த நிலையிலிருந்து பிறழ்வதற்குக் காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே!

இந்த நிலையில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் போராட்டம் நடைபெறும் என்று, தம் பிறந்த நாள் செய்தியாக கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். அதனைத்தான் போர்! போர்!! போர்!!! என்று மூன்று முறை அழுத்தி உச்சரித்தார். பிறந்த நாள் விழாவை நாட்டு நலனுக்கான போராட்டத் திட்ட அறிவிப்பு மேடையாக மாற்றியது தனிச் சிறப்பிற்குரியது.

இதுவொரு கட்சிப் பிரச்சினையல்ல. ஒட்டு மொத்த மான தமிழ்நாட்டுப் பிரச்சினை - இதில் ஒன்றுபட்டுப் போராடி சேது சமுத்திரத் திட்டத்தை செயல்பட வைக்க உறுதி எடுத்துக் கொள்வோமாக!
                       ----------------------"விடுதலை” தலையங்கம் 4-6-2013

37 comments:

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து விடுமா?


மாணவர்களின் அறிவார்ந்த கேள்விக்கு தமிழர் தலைவர் விளக்கம்!

பயிற்சி முகாமில் மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் தமிழர் தலைவர் (குற்றாலம், 1.6.2013)

குற்றாலம், ஜூன் 4- குற்றாலம் பயிற்சி முகாமின் நிறைவு நாளில் கேள்வியும் கிளத்தலும் நிகழ்ச்சியில், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அதை படிப்படியாக அதிகரித்தால், ஜாதியும் படிப்படியாக ஒழிந்துவிடும் என்று பதில் கூறினார். பயிற்சிமுகாமின் நிறைவு நாளான (1-6-13) அன்று தமிழர் தலைவர், துணைத்தலைவர் இருவரும் மாணவர் களுக்கு முறையே ஜாதி ஒழிப்பு, கேள்வியும் கிளத்தலும், பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர்.

எதுவரையிலும் இடஒதுக்கீடு!

இடஒதுக்கீடு என்பது, பழு தடைந்த பாலத்தை சரி செய்யும் வரையில் போடப்பட்ட மாற்றுப் பாதையாகும். அந்த மாற்றுப் பாதை யில் எத்தனை நாளுக்கு பயணம் செய்வது என்று கேட்டால், பாலம் சரி செய்யப்படும் வரையில் மாற்றுப் பாதையில்தான் செல்ல முடியும். அதாவது, ஒடுக்கப்பட்ட மக்கள் நிலை சரியாகும் வரை இடஒதுக்கீடு இருக்கும் என்று தமிழர் தலைவர் ஜாதிஒழிப்பு என்னும் தலைப்பில் வகுப்பு எடுக்கும் போது கூறினார்.

கேள்வியும் கிளத்தலும்!

நிறைவு விழாவுக்கு முன்னதாக, மாணவர்கள் எதிர்பார்த்திருந்த தமிழர் தலைவரிடம் கேள்வி கேட்கும் வகுப்பு வந்தது. பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன் கூட்டியே மாணவர்களிடம் இதைப் பற்றி அறிவிப்பு செய்திருந்தார். அதன் படியே மாணவர்கள் கேள்விகள் எழுதிக் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு கேள்வியாக பொதுச் செயலாளர் படிக்க தமிழர் தலைவர் பதில் கூறினார். அப்படி வந்த ஒரு கேள்விக்குத்தான், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து, அதை படிப்படியாக உயர்த்திக் கொண்டே வந்தால் நாளடைவில் ஜாதி ஒழிந்துவிடும் என்று பதில் கூறினார். முன்னதாக மாணவர்களின் சார்பில் கீழப்பாவூர் மானவீரன், மாணவி களின் சார்பில் செந்துறையைச் சேர்ந்த மல்லிகா ஆகியோர் பயிற்சி முகாமின் சிறப்புகளை பற்றி சுருக்கமாகப் பேசினர். அதில் மானவீரன் மிகவும் உணர்ச்சிகரமாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, சிறப்பாக பாடங்களைக் கேட்டு குறிப்புகள் எழுதிய தமிழ்ச் செல்வன், அகில், தாமரை ஆகியோ ருக்கு இயக்க நூல்கள் பரிசாக வழங் கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒரு வாழ்க்கை நெறி!

முன்னதாக பெரியார் கொள்கை களைப் பற்றி தனித்தனியாக பேசியி ருந்தாலும், அனைத்தையும் சேர்த்து பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என் னும் தலைப்பில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வகுப்பு எடுத்தார்.ஆண் பெண் சமத்துவம், ஆணுக்கு நிகராக பெண் என்று எந்த வகையிலும் இரு பாலருக்கும் வேறுபாடு தெரியக் கூடாது என்பது பெரியாரின் வாழ்க்கை நெறிகளில் ஒன்று என்று கூறிவிட்டு, திருமணத்தைப் பற்றி சொல்லும்போது, மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்ளும் போது மூன்றாவது நபர் தலையிடுவது அநாகரிகம் என்று பெரியார் சொன் னதாக சொன்ன துணைத்தலைவர், திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கு, தனி மனிதனின் பத்து அல்லது பதினைந்து நாள் வருமானம் எவ்வளவோ அவ்வளவுதான் செலவு செய்யவேண்டும் என்று பெரியார் கூறியதைக் குறிப்பிட்டார். இப்படி தொடர்ந்து வாழ்க்கையின் பல்வேறு கூறுகளில் பெரியாரின் பார்வை பற்றி சொல்லிவிட்டு, பெரியாரின் வாழ்க்கை நெறியை கடைப்பிடித்தால் நிச்சயம் நமக்கு வெற்றிதான் என்று கூறி முடித்தார்.

நிறைவு விழா

மிகவும் எழுச்சிகரமாக நான்கு நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகா மின் நிறைவு விழா தொடங்கியது. பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தமது உரையில் மன நிறைவைக் கொடுத்த பயிற்சி முகாமாக இருந்தது என்று குறிப் பிட்டார். வள்ளல் விகேயென் அவர் களின் தொண்டினை மனம் திறந்து பாராட்டிப் பேசினார். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் நிறை வுரையாற்றினார். அவர் தமது நிறைவுரையில்:

தமக்கும் இந்த முகாம், மிகுந்த மனநிறைவை கொடுத்தது என்று கூறியவர், இந்த முகாமை வெற்றிகர மாக்கிய இயக்கத் தோழர்களின் பணியைப் பாராட்டும் விதமாக அவர்கள் பொறுக்கு மணிகளாக இருப்பதையும், குறிப்பாக, கவிஞர், செயலவைத்தலைவர், பொதுச் செய லாளர்கள் துரை.சந்திரசேகரன், ஜெயக் குமார், முனைவர் காளிமுத்து, திரா விடமணி, மதுரை செல்வம், டேவிட் செல்லதுரை, பால் ராஜேந்திரம், இல. திருப்பதி மற்றும் கழகத் தோழர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற முனைவருமான தொ.பரமசிவம் அவர்கள்

நிறைவு விழாவுக்கு வருகை தந்ததை யடுத்து, அவரை வரவேற்று அவரு டைய சிறப்புகளைப் பட்டியலிட்டு, பகுத்தறிவுப் பேராசிரியர் வெள்ளை யன் பெயரால் வழங்கப்படும் விரு துக்கு இந்த ஆண்டு தொ.பரமசிவம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார்.

மேலும் அவர் விகேயென் அவர் களைப் பற்றி பேசுகையில் நன்றிக்கு உதாரணம் விகேயென் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறினார்.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

-(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (1)


உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?

நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!

மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!

மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.

நட்பின் ஆழமான அடையாளம்

அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.

நல்ல தலைமையின் அடையாளம்!

எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!

இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?

இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!

தொண்டர்களின் சரியான இலக்கணம்

சிந்திப்பதற்குத் தலைமை
செயல்படுவதற்கு நாம் என்பதே!

வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?

சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!

வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!

மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!

கல்வியின் சிறப்பு

தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!

பணம் சம்பாதிப்பதன் தேவையா?

ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.

அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!

சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?

நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.

மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?

ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.

இருக்கக் கூடாதது...?

பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.

(தொடரும்)

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அரசாணை எண் - 92


மத்திய அரசின் உதவித் தொகை திட்டத் தின்கீழ் 9.1.2012 அன்று அரசாணை ஒன்று பிறப் பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளா தாரத்தில் பின் தங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு நூறு விழுக்காடு கல்விக் கட்டணம் ரத்து என்று இந்த ஆணை கூறுகிறது.

இதில் உள்ள அவலம் என்னவென்றால் இப்படி ஓர் ஆணை வெளி வந் துள்ளது என்பது வெளிச் சத்துக்கு வராமலேயே இருட்டில் தூங்குகிறது என்பதாகும்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த ஆணையினால் பலன் பெற முடியும். 2011-2012ஆம் ஆண்டு முதலே இது அமலுக்கு வந்தது விட்டது.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத் துறை இந்த ஆணையைச் சரிவர விளம்பரம் செய் யாததால், இந்த ஆணை யின்படி பயன் அடைய வேண்டிய தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்களும் பணம் கட்டி விட்டனர்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
மருத்துவம், பொறி யியல் மற்றும் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்த ஆணை பொருந்தக் கூடியதே!

கல்விக் கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரி கைகள், மருத்துவப் பரி சோதனை போன்றவற் றிற்கான கட்டணங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆணை தெரி யாமல் பணம் கட்டியவர் களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல். இந்தச் சலுகையை அறி யாத காரணத்தால் கல்லூரிகளில் சேர முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட தாழ்த்தப்பட்ட மாண வர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறைப்படி இது போன்ற ஆணைகளை அரசு, ஏடுகளில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண் டும்.

ஆட்சியின் சாதனை கள் என்று பக்கம் பக் கமாக விளம்பரங்களை அள்ளிக் கொட்டும் தமிழ் நாடு அரசு, சமூக நீதித் தொடர்பான - தாழ்த் தப்பட்ட மக்களை வாழ் விக்கும் ஒரு ஆணையை விளம்பரப்படுத்துவதில் கமுக்கமாக இருட்ட டிப்புச் செய்தது ஏன்?

இனி மேலாவது தமிழ் நாடு அரசு விளம்பரப் படுத்துமா? தாழ்த்தப் பட்ட மக்கள்தான் விழித் துக் கொள்வார்களா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அத்வானி ஏற்படுத்திய அதிர்வு....


பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.

தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.

குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில் தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.

ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!

பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.

கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது. அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல் சிதறாமல் செல்லும்.

பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.

சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும் தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.

கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டை வாழ வைக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வைக்க போர்! போர்!! போர்!!! - கலைஞர் சங்கநாதம்


சென்னை, ஜூன் 4- தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வைக்க தோழமைக் கட்சிகளின் துணையுடன் போராட் டத்தை நடத்துவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (3.6.2013) மாலை இராயப்பேட்டை - ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது.

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் என்னுடைய 90ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத் தினுடைய தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி ஜெ.அன்பழகன் அவர்களே! பாராட்டுரை வழங்கியுள்ள தமிழர் தலைவர், திராவிடர் கழகத்தின் தலைவர் என்னுடைய அருமை இளவல் வீரமணியார் அவர்களே! தம்பி தொல்.திருமாவளவன் அவர்களே! பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களே! அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களே! பேராசிரியர் தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களே! வரவேற்புரை ஆற்றிய மதன்மோகன், காமராஜ் ஆகிய தம்பிமார்களே! நன்றியுரை ஆற்ற இருக்கின்ற தம்பி அன்புதுரை அவர்களே! வருகை தந்துள்ள கழகத்தி னுடைய பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் அவர்களே! தலைமைக் கழகத்தினுடைய முதன் மைச் செயலாளர் அருமை நண்பர் ஆர்க்காட்டார் அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்கள் அன்புத் தம்பி துரைமுருகன் அவர்களே! திருமதி சற்குணபாண்டியன் அவர்களே! வி.பி. துரைசாமி அவர்களே, அமைப்புச் செயலாளர் தம்பி டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, மற்றும் தலைமைக் கழகத் தினுடைய செயலாளர்களே, கழக நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர்.பாலு அவர்களே! கழகச் செயல்வீரர்களே! தாய்மார்களே! பெரி யோர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே!

தமிழ் ஓவியா said...


பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக்கின்ற இந்தப் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டத்தில் உங்களை யெல்லாம் சந்திப்பதிலே பெருமகிழ்ச்சியடைவ தோடு, என்பால் நீங்கள் கொண்டுள்ள அன்புக்கும் நீங்கள் வழங்குகின்ற ஆதரவுக் கும் என்னுடைய நன்றியறிதலை உங்க ளுடைய காலடிகளிலே சமர்ப்பித்து என்னுடைய பேச்சைத் தொடங்குகிறேன்.

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், தம்பி தொல். திருமாவளவன் அவர்களும், பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களும், அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களும், பேராசிரியர் தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களும் இங்கே இந்தப் பிறந்த நாள் விழா பற்றி மிக அருமையான விளக்கங்களை, அரிய பல கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்கள்.

கழகம் ஏற்படுத்தும் அணிவகுப்பிலே போர் வீரர்களாகின்ற கடமைக்கு ஆட்பட வேண்டும்!

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல தூக்கமே இல்லாத இரவுகள் - மூன்று இரவுகள் கழிந்து இன்றைக்கு நான் உங்களை யெல்லாம் சந்திக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே என்னுடைய பேச்சில் தூங்கி வழிகின்ற கருத்துக்கள் ஏதாவது இருக்குமேயானால் அவைகளை யெல்லாம் விலக்கி விட்டு உங்களை வேகப்படுத்துகிற கருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, உங்களை கழகம் ஏற்படுத்தியிருக்கின்ற அணிவகுப்பிலே போர் வீரர்களாக நிறுத்துகின்ற அந்தக் கடமைக்கு நீங்களெல்லாம் ஆட்பட வேண்டும், உட்பட வேண்டும் என்று முதலிலேயே மிகுந்த பணிவன்போடு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்ணா காலத்தில் நான் பொருளாளர்!
இன்றைக்கு மு.க.ஸ்டாலின் பொருளாளர்!

திராவிட முன்னேற்றக் கழகம் சாதா ரண, சாமான்ய மக்களால், சாமான்யத் தோழர்களால் நிர்வகிக்கப்பட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் என்பதை நான் புதிதாகச் சொல்ல வேண் டிய அவசியம் இல்லை. அந்த இயக்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற விழாக்கள், இந்த இயக்கம் கலந்து கொள்ள வேண்டிய, ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய தேர்தல்கள் இவைகளிலே நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், செயல்கள், அதற்கு இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

நமக்குத் தேவைப்படுகின்ற சாதனங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நாம் யாரும் சிந்திக்காமல் இருக்க முடியாது. எங்களைப் போலவே மாவட்டக் கழகங்களை நடத்துகின்ற வர்கள், ஒன்றியக் கழகங் களை நடத்துகின்றவர்கள், ஏற்கனவே பல தேர்தல் களிலே ஈடுபட்டு பணி யாற்றிய வர்கள், விரைவிலே தேர்தல் வருமேயானால் அதை எதிர்கொள்ள வேண் டிய உணர்வு நமக்கு இருந்தாலும் அந்த உணர்வின் அடிப்படையிலே எப்படிப்பட்ட உழைப்பைத் தருவது என்று நம்முடைய கழகத்தினுடைய பொதுக்குழு, செயற்குழு, தலைமைக் கழகத்தின் குழு ஆகிய குழுக்களெல்லாம் கூடி ஆலோசித்து வழி அமைத் துக் கொடுத்தாலும் அதற்குத் தேவையான நிதி வேண்டுமே என்பதற்காக பல்வேறு முயற்சிகளிலே நாம் ஈடுபடு கிறோம்.

உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு தம்பி ஸ்டாலின் பொருளாளர். அண்ணா காலத்தில் நான் கழகத்தின் பொருளாளர். அதிலே இருக்கின்ற ஒற்றுமையைப் பாருங்கள் என்பதற்காகச் சொல்ல வில்லை. இந்த இரண்டு பொருளாளர்களும் எப்படி உழைக்க வேண்டி யிருக்கிறது, உழைத்திருக் கிறோம் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காகத் தான் இந்தச் சில கருத்துக் களை, சில செய்திகளை உங்கள் முன்னால் வைக்க விரும்புகின்றேன்.

குவிந்த தொகை
இன்றைய தினம் நடைபெற்ற என்னுடைய பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் வழக்கம்போல் உண்டியல் வைக்கப்பட்டது. அந்த உண்டியலில் எவ்வளவு பணம் திரண்டிருக்கிறது என்று பார்த் தால், காலையிலே நம்முடைய தோழர்கள், தொண் டர்கள், கழக உடன்பிறப்புக்கள் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை யொருவர் தள்ளி அடித்துக் கொண்டு, அவர்கள் என் கையிலும், கழகத் தினுடைய செயல்வீரர்கள் கையிலும், நிர்வாகிகள் கையிலும், பொருளாளர் கையிலும் வழங்கியிருக் கின்ற தொகை எவ்வளவு என்று கூட்டிப் பார்த்தால், அந்தக் கணக்கை நான் உங்களுக்குச் சொல்லாமல் இருந்தால், நம்முடைய இயக்கம், என் தலைமை யிலே இருக்கின்ற இயக்கம் ஜனநாயக இயக்கம் என்பதற்கு பொருள் இல்லாமல் போய் விடும். ஆகவே அந்த வரவு செலவுக் கணக்கை உங்கள் முன்னால் வைக்க விரும்புகின்றேன்.

மாவட்டந்தோறும் மாவட்டக் கழகச் செயலாளர்களும், அந்த மாவட்டத்திலே இருக் கின்ற நம்முடைய கழக நிர்வாகிகளும், தேர்தல் நிதி வசூலிக்க வேண்டும் என்று ஏற்கனவே வெளியிடப் பட்ட அறிக்கைகள் மூலமாக அந்தக் காரியம் ஒருபுறத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு ஒரு நாள் மட்டும்; என்னுடைய பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உண்டியல் பெட்டி ஒன்று பெரிதாக வைக்கப்பட்டு, அதிலே சேர்ந்த தொகை மாலையிலே நம்முடைய கழக நிர்வாகிகள் எல்லாம் சூழ அமர்ந்து எண்ணிப் பார்த்து மொத்தம் கூட்டி என்னிடத்திலே அறிவித்திருக்கின்ற தொகை 1 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 ரூபாய். நீங்கள் கொடுத்த இந்தத் தொகையை பத்திரமாக வைத்திருக்கின்றோம். ஒன்றிரண்டு காசோலைகளாக வந்திருக்கின்றன. அவைகளும் நிச்சயமாக பணமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்தக் காசோலை களையும் சேர்த்து 1 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 ரூபாய் இன்றைய வசூல். நாம் மகிழ, நாம் புன்னகை புரிய, நாம் ஒருவரைப் பார்த்து ஒருவர் தலை நிமிர்த்த, நெஞ்சுயர்த்திக் கொள்ள, அதே நேரத்திலே எதிரிகள் வாட்ட முற, பகை வர்கள் பொறாமைப்பட இந்தத் தொகை இன்றைக் குச் சேர்ந்திருக்கின்றது. இந்தத் தொகை தேர்தல் நேரத்திலே நியாயமான காரியங்களுக்காகச் செலவழிக்கப்படும் என்று உறுதியை நான் உங்களுக் குத் தெரிவித்துக் கொள்வதற்குக் காரணம், தொடர்ந்து இதைப்போல நிதிகளை நீங்கள் வசூலித்துத் தர வேண்டும் என்பதற்காகத்தான்.

1967இல் கடந்த காலத்திலே நான் பொருளாள ராக இருந்தபோது நான் பொதுத் தேர்தலுக்காக வசூலித்துக் கொடுத்த பெருந்தொகை 11 லட்சம். அந்த 11 லட்சத் தைப் பெற்றுக் கொண்ட நம் முடைய உயிரனைய அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள், விருகம்பாக் கம் மாநாட்டிலே பேசும்போது சொன்னார், ஒவ் வொரு தொகுதிக்கும் யார் யார் என்று வேட்பாளர்களை அறிவித்து விட்டு, சைதாப்பேட்டையிலே மிஸ்டர் பதினோரு லட்சம் போட்டியிடுகிறார் என்று என்னைக் குறிப்பிட்டார். இன்றைக்கு பதினொரு லட்சம் அல்ல. அப்போது பதினொரு லட்சம். இப்போது ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய். இப்படிப்பட்ட அளவுக்கு பணத்தினுடைய மதிப்பு மாறியிருக்கிறது.

முடிந்தால் ஆட்சி அமைப்போம்; இல்லையேல் ஆட்சியாளர்களை வழி நடத்துவோம்! பணத்தின் மதிப்பு மாறிய காரணத்தால் இன்றைக்கு இவ்வளவு பெரிய வசூல் நடந்திருக் கிறதா என்று விழி களை அகல விரித்துப் பார்க்க வேண்டிய அளவிற்கு இந்தத் தொகை நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு தேர்தலிலே பகையைச் சந்திப் போம். தேர்தலிலே வெற்றி வாகை சூடுவோம். தேர்தலிலே கடந்த காலத்திலே பெற்ற இடங்களைப் போலல்லாமல் நிரம்ப இடங்களைப் பெறுவோம். நிரம்ப இடங் களைப் பெறுவது ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, முடிந்தால் ஆட்சி அமைப்போம், இல்லையேல் ஆட்சியாளர்களை நடத்திச் செல்ல வழி நடத்துகின்ற அந்த எஜமானர் களாக இருப்போம் என்பதை எடுத்துக்காட்டு கின்ற வகை யிலேதான் நான் இந்தத் தேர்தல் நிதியைக் கருதுகின்றேன்.

தேர்தலில் நிற்பது ஏன்?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எத் தனையோ திட்டங்கள். தேர்தலுக்காக மட்டும் தொடங்கப்பட்ட கட்சி அல்ல இது. ஏன் தேர்தலுக்கு நிற்கிறோம் என்றால், தமிழகத்தை வளப்படுத்த, தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது முதன்மையான மாநிலமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறோம். அதிலே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைப் பெற நாம் இந்தத் தேர்தலிலே - பெரியார் அவர்கள் தேர்தலில் நிற்கவே தேவையில்லை என்ற கருத்துக் கொண்டவராக இருந் தாலும் கூட அவரையும் நம்முடைய வழிக்குக் கொண்டு வந்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு, தமிழகத்திலே இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர் களுக்கு, பாட்டாளிகளுக்கு, வணிகர் களுக்கு, சாதாரண சாமான்ய மக்களுக்கு சமுதாய முன் னேற்றத்திற்கு இன்னின்ன காரியங்களைச் செய்வோம், சமதர்மம் மணங்கமழச் செய்வோம், ஜாதிப்பூசல்களை ஒழிப்போம் என்ற இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே நிற்கிறது என்று அறிவித்து, நாம் பெரும்பான்மையான இடங் களைப் பெற்றோம்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடை அண்ணா அறிவாலயம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவாலயத்திற்குள்ளே சென்று சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். அங்கே தி.மு.க. தலைவர் கலைஞரின் அறை போன்றே அமைக்கப்பட்டிருந்ததை சிறப்பு விருந்தினர்கள் பார்த்து வியப்படைந்தனர் (சென்னை, 3.6.2013).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடை அண்ணா அறிவாலயம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவாலயத்திற்குள்ளே சென்று சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். அங்கே தி.மு.க. தலைவர் கலைஞரின் அறை போன்றே அமைக்கப்பட்டிருந்ததை சிறப்பு விருந்தினர்கள் பார்த்து வியப்படைந்தனர் (சென்னை, 3.6.2013).

தமிழ் ஓவியா said...

மறுக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் 1957 ஆம் ஆண்டிலே இருந்து இதுவரையிலே 12 சட்டமன்றத் தேர்தல்களில் நின்று இருக்கின்றேன். ஒரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை. எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றேன். அதைப்போல, வெற்றி பெற்றாலும் பெறா விட்டாலும் நாம் மக்களுக்காக உழைப்போம் என்ற அந்த உறுதியில் இருந்து எந்தப் பின்னடைவும் நமக்கு ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையிலே நாம் மக்களைச் சந்தித்து, மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அவைகளை நிறைவேற்றித் தருகின்ற வழி, வகை, கூறு இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து பெரும் பயனை தமிழகத்திற்கு நாம் விளைத்துத் தந்திருக்கின்றோம்.

கழக ஆட்சியின் திட்டங்கள் - அ.தி.மு.க.

ஆட்சியில் காழ்ப்புணர்வோடு முடக்கப்பட்டன!

உங்களுக்கு நினைவிற்குச் சொல்கின்றேன்; கழக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறை வேற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்குக் காழ்ப்புணர் வோடு முடக்கப்பட்டு விட்டன என்ற பட்டியலை உங்களுக்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
ஓமந்தூரார் வளாகத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்க காலை முதல் மாலை வரையில், ஏன் மாலைக்குப் பிறகும் நள்ளிரவு வரையிலே கூட அந்தக் கட்டிடப் பணிகளை துரிதமாக ஆக்க, விரை வில் அங்கே நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற துரித உணர்ச்சி யோடு, வேக வேகமாக அந்தக் கட்டிடப் பணிகளை யெல்லாம் முடித்தோம். புராண காலத்திலே சொல்வார்கள், அந்த ஆயிரங் கால் மண்டபத்தை பூதங்கள் எல்லாம் கூடி கட்டி முடித்தன என்று. அதைப்போல இந்த அருமையான தலைமைச் செயலகத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே சட்டமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல, அமைச்சர்கள், அமைச்சர்கள் மாத்திரமல்ல, முதல மைச்சராகிய நானே கூட நேரிலே கண்காணித்து, அதிகாரிகளை வைத்துக் கொண்டு வெகு விரைவிலே 600 கோடி ரூபாய் செலவிலே அந்த ஓமந்தூரார் வளாகத் திலே தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது. என்ன ஆயிற்று? ஒவ்வொன்றாகச் சொல்கின்றேன், நீங்கள் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக!

அது மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான காரியங்கள் வேக வேகமாக நடைபெற்று, அந்த ஓமந்தூரார் வளாகத் திலே கட்டப்பட்ட அருமையான கட்டிடம் இன் றைக்கு பாழ டிக்கப் பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


பாவேந்தர் பெயரால் செம்மொழித் தமிழாய்வு நூலகம் ஒன்றை அமைத்தோம். முதலில் இந்தச் செம்மொழியைப் பற்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். உலகத்தில் ஐந்து ஆறு மொழிகளுக்குத்தான் செம்மொழித் தகுதி இருக்கிறது. அந்தச் செம்மொழித் தகுதியை தமிழும் பெற வேண்டும் என்பதற்காக இன்று நேற்றல்ல, சூரியநாராயண சாஸ்திரியார் என்கின்ற தமிழறிஞர் நூறாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்து, அவருடைய குரலுக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்பதற்காக, கழக ஆட்சியிலே நான் டெல்லி சென்று திருமதி சோனியா காந்தி அம்மையாரை ஒருமுறைக்கு இருமுறை சந்தித்து, இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை - அன்றைக்கு அவர் நிதியமைச்ச ராக இருந்தார் என்று கருதுகிறேன். அவருடைய உள்ளத்திலும் இந்த எண்ணத்தை உருவாக்கி இறுதியாக சோனியா காந்தி அம்மையார் அவர்கள் தமிழுக்குச் செம் மொழித் தகுதி தரப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தது மாத்திரமல்ல, இன்றைக்கும் அந்தக் கடிதம் என்னுடைய கையிலே இருக்கிறது. அந்தக் கடிதத்தில், தமிழுக்கு செம்மொழித் தகுதி பெறப்பட்டு விட்டது. ஆனால், ஒன்று. தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டும் என்று நீங்கள் அமைத்த குழுவிலே யாருக் கும் இல்லாத அளவிற்கு கவுரவம், உரிமை உங்களுக்கு மாத்திரம்தான் இருக்கிறது. நீங்கள்தான் அதைச் செய்து முடித்திரு க்கிறீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டு கிறேன் என்று சோனியா காந்தி அம்மையார் எனக்கு அன்றைக்கு எழுதினார்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட அளவிலே வெற்றி பெற்ற அந்தத் தமிழ்; செம்மொழித் தகுதியைப் பெற்ற தமிழுக்கு மேலும் நாம் உற்சாகமூட்டக்கூடிய அளவிலே தான் செம்மொழிப் பாடம், மேலும் உற்சாக மூட்டக் கூடிய அளவிலேதான் கோயமுத்தூரில் செம்மொழி மாநாடு இவ்வளவும் நடத்திய பிறகு நாம் ஆட்சியை இழந்தோம். தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் தமிழர்கள் உட்பட, தமிழ்ப் புலவர்கள் உட்பட, தமிழ் அறிஞர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்தலிலே தோற்கடித்ததன் காரணமாக, செம்மொழி என்கின்ற அந்த அந்தஸ்தைப் பெற்ற தமிழ், இன் றைக்குத் தன் மதிப்பை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்ச் செம்மொழி என்பதைப் பயன்படுத்தி செம்மொழிப் பூங்கா ஒன்று நிறு வினோம். செம்மொழி என்ற பெயரே அம்மையாருக் குப் பிடிக்காத காரணத்தால் அந்தத் திட்டத்தையே அவர்கள் தொடர்ந்து நிறைவேற்ற முன்வரவில்லை.

தமிழ் ஓவியா said...

செம்மொழியை ஏற்றுக் கொள்ளாதவர்கள்

இன்றைக்கு தமிழறிஞர்களுடைய பெயரால் ஏதேதோ செய்கிறார்கள். ஆனால், செம்மொழியை மாத்திரம் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. என்ன காரணம் என்றால், இது கருணாநிதி போராடி வெற்றி பெற்றுக் கொண்டு வந்த திட்டம். ஆகவே அதை நிறைவேற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, செம்மொழியை இன்றைக்கு அங்கீகரிக்காமல், அமல்படுத்தாமல் அதை அழிக்கின்ற முயற்சியிலே, அவரும் அவரைச் சார்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்படித்தான் சமச்சீர் கல்வித் திட்டத்தை அழிக்க முற்பட்டார்கள். நல்லவேளையாக நீதிமன்றங்கள் தலையிட்டு, நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் காரணமாக சமச்சீர் கல்வித் திட்டம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

சென்னைக்கு அருகே உள்ள மதுரவாயலில் இருந்து சென்னைத் துறைமுகம் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் - 1400 கோடி ரூபாய் செலவிலே நிறைவேற்றப் பட வேண்டிய திட்டம், அந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற முற்படவில்லை. காரணம், அது நான் முயற்சித்துக் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதையும் நிறைவேற்றாமல் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் ஒன்று - இன்று காலையிலே கூட, அந்த இடத்தை நானும் தம்பி துரைமுருகனும் நண்பர்களும் பார்த்து விட்டு வந்தோம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே அந்த ஆணையர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறப்பு விழாவே நடைபெற வில்லை. திறப்பு விழா நடந்தால் அடிக்கல் நாட்டிய வர்களின் பெயர்களைப் போட வேண்டுமே என்பதற் காக திறப்பு விழாவே நடத்தா மல் அப்படியே கிடக் கிறது, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம். 300 கோடி ரூபாய் செலவிலே கட்டப்பட்ட அலுவலகம். அதைப் பற்றி இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மூடிக் கிடந்தால் கிடக்கட்டும் என்று மூடியே போட்டு விட்டார்கள். சேது சமுத்திர திட்டம் அது மாத்திரமல்ல, தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய, தமிழ்நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித் தரக்கூடிய மாபெரும் திட்டம், தமிழகத்தினுடைய தொழில், வர்த்தகம் பெருகக் கூடிய அளவிற்குப் பயன் படக்கூடிய திட்டம், கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும் என்று சிலாகிக்கப் படுகின்ற திட்டம், தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறனை அதிகரிக்கும் என்கின்ற அளவிற்குப் பாராட்டப்படுகின்ற திட்டம். ராமேஸ்வரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகங்கள் உருவாகும் என்றெல்லாம் கூறப்படுகின்ற திட்டம். கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளா தாரம், வாழ்க்கைத் தரம் உயரும் என்று எல்லோராலும் கூறப்படு கின்ற திட்டம் சேது சமுத்திரத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற நம்முடைய தம்பி டி.ஆர். பாலு, மத்தியிலே அமைச்சராக இருந்த போது முயற்சி எடுக்கப்பட்டு, அந்தத் திட்டத்தை இந்தப் பெயரில் நிறைவேற்றக் கூடாது என்று மறுக்கப்பட்டு அதுவும் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது.

அந்தத் திட்டத்தை கிடப்பிலே போட்டது மாத்திர மல்ல, ஒரு பெரிய ஆபத்தான, வயிறு எரியக் கூடிய, தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய நன்மையைப் புறக்கணிக்கக் கூடிய ஒரு காரியமாக, அந்தத் திட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பிலே போட்டது மாத்திரமல்ல, உச்ச நீதி மன்றத்திற்குச் சென்று அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவிக்கை செய்திருக் கிறோம் என்று சொல்கிறார்கள். நான் உங்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். சேது சமுத்திரத் திட்டத்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய இலாபம் எவ்வளவு? புதிய வாழ்வு எத்தனை தமிழர்களுக்கு கிடைக்கும்? வேலை வாய்ப்பு கிடைக்கும்? கடலின் குறுக்கே அந்தப் பாலம் அமைவதால், எவ்வளவு துரம் பயண நேரம் குறையும்? எவ்வளவு பயணச் செலவு மிச்சமாகும்? எந்த அளவிற்கு உலகத்தோடு அந்தத் திட்டத்தினால் தொடர்புகள் ஏற்படும் என்று இவ்வளவையும் திருப்பிச் சொல்லி, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஏறத்தாழ 14 குழுக்கள் போடப்பட்டு, அந்த 14 குழுக்களுக்கும் பிறகு, சர் ஏ. ராமசாமி முதலியார் தலைமையிலே ஒரு குழு அமைக் கப்பட்டு, அவர்கள் செய் சிபாரிசையும் இணைத்து இன்றைக்கு அந்தத் திட்டத்தை நிறை வேற்றினால் தமிழ்நாட்டிலே உள்ள தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடுமே என்ற எரிச்சலின் காரணமாக, ஆத்திரத்தின் காரணமாக அதை நிறை வேற்றாமலே போட்டு விடப் பார்க்கிறார்கள்.

.

தமிழ் ஓவியா said...

ராமர் பாலமாம்!

உச்ச நீதி மன்றத்திற்குச் சென்று அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று சொல் கிறார்கள். அதற்குச் சொல்லப் படுகின்ற காரணம் என்னவென்றால், அது ராமர் கட்டிய பாலம் என்கிறார்கள். ராமர் பாலத்தை சேது சமுத்திரத் திட்டம் என்று அழைப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள்.

எங்களுக்குத் திட்டம் தான் தேவை. அந்தத் திட்டத் தினால் ஏற்படக் கூடிய இலாபம்தான் தேவை. அந்தத் திட்டத் தினால் ஏற்படக்கூடிய தமிழனு டைய புது வாழ்வு தேவை. அந்தத் திட்டத்தினால் ஏற்படக் கூடிய பழைய காலத்தில் ரோமாபுரி வரை சென்று வாணிபம் செய்தானே தமிழன், அத்தகைய வரலாறு மீண்டும் திரும்ப, அந்தத் திட்டம்தான் தேவை என்று சொல்லுகிறோம். ஆனால் அதை ராமர் பாலம், அதை நாங்கள் காப்பாற்றியே தீருவோம், கருணா நிதி சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம், கருணாநிதி நாத்திகன், ராமரை ஏற்றுக் கொள்ளாத வன், ஆகவே அந்தத் திட்டத்தை நாங்கள் நிறை வேற்றத் தயாராக இல்லை என்று இல்லாத கற் பனைகளை யெல்லாம் செய்து, உச்ச நீதி மன்றத் திலே சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முறையிட்டு அது விசாரணையிலே இருக்கிறது, விரைவில் அந்த விசா ரணை முடிந்து அந்தத் திட்டம் கேள்விக்குறியாக மாறி தமிழனு டைய எதிர்காலம், தமிழகத்தின் எதிர் காலம், தமிழக வாணிபத்தின் எதிர்காலம் வினாக்குறியாக தொங் கப் போகிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

ராமர் பாலம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது என்றால், சரி; வைத்துக் கொள்ளுங்கள். நான் இன்னும் கூட கொஞ்சம் இறங்கி வந்து சொல்கிறேன். நீங்கள் சேது சமுத்திரத்திட்டத்தை சாட்சாத் ராமச்சந்திர மூர்த்தித் திட்டம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எங்களுக்குப் போதும். அந்தத் திட்டம் வந்தால் தமிழகம் செல்வத்தால் கொழிக்கும், வாணிபத்தால் வளரும், வளம் குலுங்கும், அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவை, அதற்கு எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

பெயர்களை மாற்றுவது ஒன்றும் பெரிய காரிய மல்ல. எங்களுக்கு பெயர் மாறுகிறதோ இல் லையோ, அந்தத் திட்டம் தேவை, அதற்கு இன்றைய அரசு ஆவன செய்யுமா என்பது தான் என்னுடைய கேள்வி. செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். செய்யாவிட்டால், இந்த பிறந்த நாள் விழாவிலே இந்த மாபெரும் மக்கள் கடலில், அறிவிக்கின்றேன். விரைவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவையோ, செயற்குழுவையோ கூட்டச் செய்து, கழகத்தின் தோழமைக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று, யார் யார் தமிழ்நாடு வாழ வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, அந்த உண்மை யான இதயங்களை யெல்லாம் ஒன்று திரட்டி, அவர் களுடைய உதவியோடு, சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வாருங்கள், அதைக் கிடப்பிலே போடாதீர் கள் என்ற கோஷத்தோடு ஒரு போராட்டத்தை, திராவிட முன்னேற்றக் கழகம், தோழமைக் கட்சிகளின் துணை யோடு நிச்சயமாக தொடங்கும் என்ற அந்த அறிவிப்பை, அந்தப் போராட்ட அறிவிப்பை இந்தப் பொதுக்கூட் டத்தில், என்னுடைய பிறந்த நாள் விழாச் செய்தியாக, 90வது பிறந்த நாள் செய்தியாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

போர்! போர்!! போர்!!!

நம்முடைய தளபதி, தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தன்னுடைய கையொலி மூலமாக ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். திருமாவளவன் ஏற்கனவே தெரி வித்து விட்டார். நம்முடைய தோழமைக் கட்சிகள் அத்தனை பேரும், எங்களோடு இணைந்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும், செயல் படுத்த முன் வர வேண்டும், செயல்படுத்த முன் வரா விட்டால், போர், போர், போர் நடந்தே தீரும் என்பதை இங்கேயிருக்கிற அரசுக்கும் மத்திய அரசுக்கும் தெரிவித்து இது தான் என்னுடைய பிறந்த நாள் விழா செய்தி என அறிவிக்கிறேன். காலையிலே பத்திரிகை நிருபர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு, பிறந்த நாள் செய்தி என்ன என்று கேட்டார்கள்; மாலையிலே கூட்டத்திலே வந்து கேளுங்கள் என்று சொன்னேன். அவர்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்லி, என்னுடைய உரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரைப்போல உழைக்கும் கலைஞரை நூறாண்டு வாழ வைக்கக் கூடியது-
கட்டுப்பாடு! கட்டுப்பாடு!! கட்டுப்பாடே!!!
கலைஞர் விழாவில் தமிழர் தலைவரின் கருத்துரை

சென்னை, ஜூன் 4- கலைஞர் அவர்கள் நூறாண்டு வாழ வேண்டுமானால், கழகத் தோழர்கள் கட்டுப்பாடு காக்கவேண்டும் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று (3.6.2013) நடைபெற்ற கலைஞர் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது:-

90 வயது என்ற ஒரு அகவையில் அடியெடுத்து வைக்கக்கூடிய நேரத்தில், பன்னூறு ஆண்டு களுடைய வரலாற்றுப் புரட்டுகளையெல்லாம் புரட்டிப் போட்ட வரலாறாக வாழ்ந்துகொண்டி ருக்கக் கூடிய எங்கள் குலத் தலைவர், ஈடற்ற, இணையற்ற திராவிட சமுதாயத்தினுடைய ஒப் பற்ற தலைவராக இருக்கக் கூடிய அன்புத் தலைவர், பெரியாரின் துணிவு, அண்ணாவின் பணிவு, கனிவு என்பவற்றை சிறப்பாகக் கொண்டிருக்கக்கூடிய எங்கள் தலைவர் கலைஞர் அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கலைஞரை வாழ்த்திய அருமைத் தலைவர்கள் அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் தமிழகத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களே,

எங்கேயும் நான் போய்விடவில்லை, எப் பொழுதும் அவருடன்தான் நான் இருக்கிறேன் இது உறுதி என்று உங்களுக்குத் தெரிவித்து, மகிழ்ச்சி யான நேரத்தில், சிலருக்கு துக்கத்தை உருவாக்கி இருக்கிற என்னுடைய அருமை நண்பர் அருமை சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இந்த சிறப்பானதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நாமெல்லாம் அண்ணா அறிவாலயத்திற்கு முன்னாலேயே, கலைஞருடைய உழைப்பால் உரு வாகிய அந்த அறிவாலயம், அவருடைய தொண்டர் களாலும் இனி உருவாக்கப்படக்கூடிய அளவிற்கு, அவரின் தொண்டர்கள் தயராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருக்கக் கூடிய, இந்தக் கூட்டத்தின் தலைவரும், தென்சென்னை மாவட்டத் தலைவருமாக இருக்கக் கூடிய அருமை சகோதரர் அன்பழகன் அவர்களே,

படை நடுவே தளபதி!

இவ்வளவு சிறப்பான படைகள், இங்கே தலை வர்கள் முன்னிலையே மற்றவர்கள் பாராட்டுகின்ற நேரத்தில், வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங் கொள்கூட்டம் உள்ளத்தால் ஒருவரே, உட லினால் பலராய் காண்பர் என்பதற்கு அடையாள மாக, வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய இந்தக் கூட் டம், அதிலே மிகப்பெரும்பாலானோர்கள் திராவிட இயக்கத்தினுடைய போர் வீரர்களாகத் தங்களை இணைத்துக் கொள்வதற்காக இருக்கக் கூடிய முன்னணியினர் என்பதை முன்னாலே அமர்த்தி,

அதேநேரத்தில், மேடையிலே அமராமல், தலைவர் ஆணையிடுவார், தளபதியாக நான் அதை செய்து காட்டுவதற்காகத்தான் படைகளுக்கு மத்தியிலே இருக்கிறேன் என்று, அமர்ந்திருக்கின்ற ஆற்றல் வாய்ந்த படைகளின் தளபதி, ஒப்பற்ற தளபதி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்ற அருமைத் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தமிழ் ஓவியா said...

94 வயதிலும் தந்தை பெரியார் உழைக்கவில்லையா?

இந்த நேரத்திலே நாம் மகிழ்ச்சியினுடைய உச்சத்தில் இருக்கிறோம். தலைவர் அவர்களுடைய 90 ஆண்டு என்பது இருக்கிறதே, அவர்களைப் பொருத்தவரையிலே, உழைப்பின் உருவமாக இருக்கிற அவர்களைப் பொருத்தவரையிலே, எப் பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கக்கூடிய வர். இது ஒரு சாதாரணமான நிகழ்ச்சி என்று அவர்கள் கருதுகிறார்கள்.

90 வயது - வியப்படைகிறோம் நாமெல்லாம். 90 வயது எத்தனையோ பேருக்கு இருக்கிறது. ஆனால், 90 வயதுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள்? இவரைப் பொருத்தவரையிலே இவரை வீழ்த்திவிட வேண்டும் என்று நினைக்கின்ற எதிரிகள் ஏராளம்; இன எதிரிகள் ஏராளம். அன்றாடம் அவர்கள் வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவரோ, அதனைப்பற்றி கவலைப் படாமல், 90 வயது என்று சொன்னால் என்ன? என்னுடைய வயது 90 என்பது பிறந்த நாளைப் பொருத்ததே தவிர, என்னுடைய உணர்வுகள் என்பது இருக்கிறதே, அது எப்பொழுதும் நான் இளைஞன், இளைஞன், இளைஞன் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கக் கூடிய அந்த நிலையில் இருக்கிறது என்று செயல்படக் கூடியவர்.

தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் பிறந்த நாளினையொட்டி நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் தலைவர்கள் பங்கேற்ற பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் திரண்டிருந்தோர் (சென்னை, 3.6.2013)

விடுதலை நாளிதழ் இன்றைக்கு ஒரு சிறப்பு மலரை வெளியிட்டிருக்கிறது. அந்த சிறப்பு மலர் வெளியிடுகிற நேரத்திலே, விடுதலையின் சார்பாக நாங்கள் 33 கேள்விகளை தயாரித்து, எங்களுடைய நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள், தலைவர் கலைஞரிடத்திலே கேட்டு, விடை யைப் பெற்று, இந்த மலரிலே சிறப்பாக வெளி யிடப்பட்டுள்ளது.

இந்த மலர் ஒரு அற்புதமான கருத்துப் பெட்ட கம். இதில், 33 கேள்விகளுக்கும் அருமையாக தலைவர் கலைஞர் பதிலளித்துள்ளார்.

இந்த வயதிலும் தங்களால் எப்படி கடுமையாக உழைக்க முடி கிறது? என்ற கேள்விக்கு கலைஞர் அவர்கள் பதிலளிக்கிறார்.

எங்கள் கேள்விக்குத்தான் பதில் கிடையாது!

எப்பொழுதுமே ஈரோட்டுக் குருகுலத்திலே இருந்தவர்களுக்கு எந்த சிக்கலான கேள்விகள் கூட சாதாரணமா னவையே! எந்தக் கேள்வியை எவர் கேட்டாலும் நாங்கள் பதிலளித்திருக்கிறோம். ஆனால், எங்கள் கேள்விக்குத் தான் இந்த நாடு பதில் சொல்வது கிடையாது. அதுதான் மிக முக்கியம்.

அந்தக் கேள்விக்கு கலைஞர் பதில் சொல் கிறார், மிக அனாயசமாக,

கலைஞர் திருப்பிக் கேட்கிறார், இந்த வயதிலும் என்றால்; எனக்கு 90 தானே ஆகிறது; இதைவிட சிறப்பான ஒரு சான்று; நான் சொல் வதைவிட அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், அவருடைய சிறப்பான வாக்குமூலம்
இளைஞர்களே, சோர்ந்து போயிருக்கின்ற இளைஞர்களே, தோல்வி என்பது எங்கோ ஒரு மூலையில் வந்தபோது துவண்டு போகின்ற இளைஞர்களே, இந்த இயக்கம் இருக்குமா? இந்த இயக்கம் மீட்சி பெறுமா? இந்த இயக்கத்தின் பயணம் தொடருமா? என்ற சந்தேகம் இருக்கின்ற இளைஞர்களே, நீங்கள் இந்தப் பதிலிலே இருக் கின்ற ஆழமான கருத்தினைப் புரிந்துகொள் ளுங்கள்.

அடுத்த வாக்கியத்திலே சொல்கிறார் கலைஞர்,

தமிழ் ஓவியா said...

னக்கு 90 தானே ஆகிறது; தந்தை பெரியார் 94 வயது வரை ஓயாமல் உழைக்கவில்லையா?

அவர்கள் எங்கே தன்னுடைய பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். எனவே, பெரியாரின் தத்துவம், அண்ணாவின் பக்குவம் அவரை ஆளுமைக்கு ஆளாக்கியிருக்கிறது. எனவே, அவருக்கு ஆட்சி ஒரு பொருட்டல்ல; பல பேர் அவர் மகுடம் தரிக்க வேண்டும் என்கிறார்கள்; மகுடம் தரித்தால் மக்களுக்கு நல்லது; மகுடம் தரித்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கும். மகுடம் போனால், ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்குக் கிடைக்கும். இதுதானே இன்றைய நிலை. யாராவது இதனை மறுக்க முடியுமா? எனவே, அது இரண் டாம் பட்சம் எங்களைப் பொருத்தவரையிலே!

மானமிகு சுயமரியாதைக்காரர்!

என்னுடைய சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே உரையாற்றும்போது ஒன்றைச் சுட்டிக்காட்டினார் அல்லவா, அவர் ஒரு சுயமரியாதைக் காரர் என்று. அதிலே கூட ஒரு சிறிய திருத்தம். ஒரே வரியில் சொல்லுங்கள் என்று கலைஞரிடம் கேட்டபொழுது, மானமிகு சுயமரியாதைக்காரன் அதுதான் மிக முக்கியம்.

இந்த மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற தன்னுடைய சீடர் எப்படிப்பட்டவர் என்று, அவரை உருவாக்கிய தலைவர்கள், தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும், தெரியப்படுத்தி யுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றில் மட்டும்தான் உண்டு

தந்தை பெரியார் அவர்கள் எப்படி வாழ்த்தி இருக்கிறார்கள்? அவரிடத்திலே இவர்கள் தொண் டாற்றியவர்கள்; அவரிடத்திலே தயாரானவர்கள்; அவர் ஆட்சி பீடத்திற்கு வருகிறார்; ஆட்சியிலே அமருகிறார்; அது காட்சியல்ல; இனத்தின் மீட்சி. அதுதான் மிக முக்கியம். எனவே, அப்படி வருகின்ற நேரத்திலே, அதனைப் பார்த்து பெரியார் பூரிக்கிறார்.

இது எந்தத் தலைவருக்கும், தொண்டருக்கும் வரலாற்றில் கிடைக்காத வாய்ப்பு; உலக வரலாற் றிலேயே ஒரு தலைவர் - அவருடைய தத்துவங்கள் - அவர் காலத்திலேயே அவர் கண் எதிரிலேயே அவருடைய தொண்டர்களால் சட்டங்களாக நிறை வேற்றப்பட்டது என்பது - திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றில் மட்டும்தான் உண்டு.

பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, கலைஞர் காலத்தில், சுயமரியாதைத் திருமணச் சட்டமாக இருந்தாலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லக்கூடிய சட்டமாக இருந்தாலும், அவை நடைமுறைப்படுத் தப்பட்டதற்கு இதுதான் அடித்தளம். இந்த நேரத்திலே அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாக, ஏனென்றால், மூன்று நாள் களுக்கு மேலாக, அவர்கள் மேடையிலே பல மணிநேரம் அமர்ந்திருக்கிறார்கள்.

காலையிலே, லட்சோப லட்சம் தொண்டர்கள் வாழ்த்தைத் தெரிவிப்பதற்காக, அவரை எவ்வளவு வருத்தி இருக்கிறார்கள். ஆனால், தொண்டர்களுக்காக அவருடைய வருத்தம், சங்கடங்கள், எவ்வளவு பெரிய உடல் வலிகள் இருந்தாலும், அதனைப் பொறுத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல், இந்தத் தலைவருக்கு உண்டு. கடைகோடியிலே அமர்ந்து பார்க்கக் கூடிய ஒரு தொண்டனுக்குக்கூட அவருடைய உள்ளத்திலே இடமுண்டு.

தமிழ் ஓவியா said...


மேடையிலே அமர்ந்திருப்பார், முன்வரிசை யிலே அமர்ந்திருப்பவர்கள் மட்டுமல்ல, கடைசி வரிசையிலே அமர்ந்திருப்பவர்கள் யார், யார்? அவர்கள் எந்தெந்த ஊரிலே இருந்து வந்திருப் பார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இதனைத் தெரிந்த காரணத்தினாலேதான், அவர்கள் 90 வயதிலும் மக்களாலே, தொண்டர் களாலே விரும்பப்படுகின்ற தொண்டர் நாதன்; அதுதான் அவருடைய தூய தொண்டறம்.

தந்தை பெரியார் பாராட்டு

அவரை பெரியார் பாராட்டுகிறார்:

தன்னுடைய தொண்டர் உயர்ந்த நிலையில வருகிறபொழுது, பெரியார் பாராட்டி சொன்ன ஒரு கருத்தினை மட்டும் சொல்லி, பெரியார் - அண்ணா சொன்ன ஒரு கருத்தினை மட்டும் சொல்லி என்னு டைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். அதுதான் மிக முக்கியம் இந்த நேரத்தில்!

நாம் பேசுவதைவிட, நமக்கு அவர் சொல்ல வேண்டிய அறிவுரையும், அவர் இந்த இனத்திற்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய நிலையிலே, இந்த இனத்தினுடைய மீட்சிக்காக இன்றைக்கு தரப் போகின்ற ஆணைகளும் மிகமிக முக்கியமானது. படை தயாராக இருக்கிறது; தளபதி தயாராக இருக்கிறார். தலைவன் ஆணையிட வேண்டும். அதுவும் இந்தப் படை கட்டுப்பாடு மிகுந்த படையாக இருக்கும் என்ற உறுதியோடு, திட சித்தத்தோடு திரும்பிச் செல்லவேண்டிய படை. அதுதான் மிக முக்கியம்.

அவரை உருவாக்கியவர் பெரியாரும், அண்ணா வும் அவரைப் பாராட்டுகிறார்கள்; விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள கலைஞர் 90 மலரிலே வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் பகுதியை மாத்திரம் இங்கே சுருக்கமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49 ஆவது வயதிலே கொடுத்த வாழ்த்து, 90 ஆவது வயதிலும் பொருந்தக்கூடியது. அதுதான் மிக முக்கியம். பெரியாரின் பெருமை அங்கேதான் இருக்கிறது. காலத்தை வென்றவர், தொலைநோக்காளர். அந்த அடிப்படையிலே,

தந்தை பெரியார் அவர்கள் கலைஞரை வாழ்த்தும்போது,

மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சிய டைகிறேன்.

டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்று வதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படி யான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.

தமிழ் ஓவியா said...

இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். கார ணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப் பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத் துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக் கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பி களினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத் தான் தீரும்.

கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படு கிறேன். என்று தந்தை பெரியார் வாழ்த்துகிறார்.

இதைவிட சிறந்து வாழ்த்து, பெரியாரின் வாழ்த்தில் நாம் இணைந்துகொள்வதைவிட வேறு வாய்ப்பு இருக்குமா?

அண்ணாவின் கணிப்பு!

அண்ணா அவர்கள் வாழ்த்துகிறார்:

என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத்தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு.

நான் கவலையோடு இருக்கிறேன் என்றால், முதன்முதல் கண்டுபிடிக்கக்கூடியவர் கருணாநிதி தான். கோபமாக இருக்கிறேன் என்றால், முதன் முதல் கண்டுபிடிக்கக்கூடியவர் கருணாநிதிதான். நான் கோபமாக இருப்பது தெரியாமல் என் னிடத்திலே ஏதாவது பேசி நான் கோபமாக நாலு வார்த்தை சொன்ன பிறகு அண்ணா கோபமாக இருக்கிறார் என்று சொல்பவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.

கலைக்கு இருக்கும் ஒரு விசேடம் அது. கவலைப்பட்டு நடிக்கிறானென்றால், மற்றவர்களும் அதை உணர்ந்து அல்லது அந்தக் கணமே அறிந்து மற்றவர்களைக் கவலைப்பட வைப்பதுதான் கலை ஞனுடைய திறமை. அதைப்போல என்னுடைய கோபதாபங்களை, என்னுடைய கவலைகளை உடனுக்குடன் நொடிப்பொழுதில் அறிந்து அதை மாற்ற வேண்டும் என்று அக்கறையோடு நல்ல முறையில் துணை புரிவதில் கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்.

தமிழ் ஓவியா said...

அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பலமடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டியதிருக்கிறது என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

கலைஞரை நூறாண்டு வாழ வைப்பது எப்படி?

எனவே, நண்பர்களே, இந்தத் தொண்ணூறு வயதில், அவர்கள் பன்னூறு ஆண்டு வரலாற்றினை மாற்றிக் காட்டுகின்ற இந்த நேரத்திலே, நாம் அவருக்கு வெறும் பொன்னாடை அணிவித்தால் போதுமா? அவரை வாழ்த்தினால் மட்டும் போதுமா? உள்ளங்குளிர்ந்து, அய்யா நாங்கள் உங்களிடத்திலே இருக்கிறோம். ஆட்சியிலே நீங்கள் இல்லாதபோதுதான் இப்படி பல்லாயிரக்கணக் கான மக்கள் வந்திருக்கிறோம்.

ஓரிருமுறை தவிர, அவருடைய பிறந்த நாள் விழாக்களிலே ஒரு பவள விழா அல்லது ஒரு பொன்விழா இவைகளைத்தவிர, அவர் ஆட்சியில் இல்லாதபொழுது தான் எல்லா விழாக்களும் நடைபெற்று இருக் கின்றன என்று சொன்னால், அவர் எப்பொழுதும் மக்களாட்சியின் தலைவராகவே, மக்கள் உள்ளத்திலே இருக்கக் கூடியவரே என்பதற்கு இதைவிட ஒரு நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

எனவேதான், கழகத் தோழர்களே, அவரை நூறாண்டு வாழ வைப்பது என்பது கடினமான விஷயமல்ல. அவர் உழைப்பார்; அவருக்கு முதுமை ஒரு புதுமை. அதுதான் அருமை. இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், முதுமை மற்றவர்களுக்குத் தள்ளாடக்கூடிய நிலை; ஆனால், தலைவருக்கு முதுமை என்பது முதிர்ச்சி. கனிந்த அனுபவம், அவருடைய ஒவ்வொரு செய லிலும், அனுபவம் மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே போகும். எனவேதான், அவரை உற்சாகத்தோடு வாழ வைக்கவேண்டும். அது யாருடைய கையில் இருக்கிறது? நம்முடைய கையிலே இருக்கிறது தோழர்களே!

தாய்க்கழகத்தின் ஒரு தொண்டன் என்ற முறையிலே உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்

இன்னுங்கேட்டால், இயக்கத் தோழர்களே, உங்களை அன்போடு தாய்க்கழகத்தின் ஒரு தொண் டன் என்ற முறையிலே, உங்களிடத்திலே வேண்டிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு எத்தனை ஆடைகள் போர்த்திகிறோம் என்பது முக்கியமல்ல நண்பர்களே, கட்டுப்பாட்டை அவ ருக்கு ஆடையாகப் போர்த்துங்கள்; அவர் அடை யாளம் கண்ட தளபதி இருக்கிறார்; அவர் ஆணை யிடுகிறார் என்றால், அவருக்குப் பின்னாலே திரளு வோம்; சிறைக்குச் செல்லவேண்டுமா? அண்ணா அவர்கள் சொன்னார், கோட்டையும் ஒன்றுதான், பாளையங்கோட்டையும் அவருக்கு ஒன்றுதான் என்று.

அந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் தேவை. நேற்றுகூட அவர்கள் சொன்னார்கள், நாம் ஒற்று மையாக இருக்கவேண்டும்; எதிரிகள் நமக்குப் பொருட்டல்ல; அதனைத் தலைவர் பார்த்துக் கொள்வார்; தலைவர் சிந்திக்கிறார்; தொண்டர்கள் செயலாற்றவேண்டும். தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கத்தைப் பொருத்தவரையிலே யாருக்குப் பெருமை?

அறிவாலயம் இங்கு வந்தது!

மாவட்டத் தலைவர் அன்பழகன் அவர்கள் இன்றைக்கு அண்ணா அறிவலாயத்தையே இங்கே உருவாக்கி இருக்கிறார். நாங்கள் திகைத்துப் போனோம். உள்ளே போனால், அச்சு அப்படியே இருக்கிறது. ஒரு டெசோ கூட்டத்தையே நடத்தி வந்திருக்கிறோம் நாங்கள். அப்படிப்பட்ட அள விற்கு, அந்த அறைகள் அண்ணா அறிவாலயத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உருவாக்கி இருக் கிறார்கள். ஆற்றல் வாய்ந்தத் தொண்டர்களையும், தோழர்களையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்கு இதைவிட அடையாளம் வேறு கிடையாது.

நாம் வெல்வோம் என்பது உறுதி!

அண்ணா அறிவாலயத்திற்குமுன் உள்ள பூங்காக் களைக்கூட பறிக்கத் திட்டமிட்டார்கள். ஆனால், நீங்கள் எதைப் பறித்தாலும், அது மீண்டும் உரு வாகும் பல இடங்களில் அதற்கு தொண்டர்கள், தோழர்கள் தயாராக இருக்கிறோம் என்று காட்டு வதற்கு அச்சாரம்போல இதனைச் செய்திருக்கி றார்கள். இவ்வளவும் உங்களுடைய ஆற்றலின் பிரதிபலிப்பு. எனவே, அது தனிப்பட்ட அன்பழக னுக்குப் பெருமையல்ல; தலைவருக்குப் பெருமை;

தி.மு.க.விற்குப் பெருமையல்ல; இந்த கொள்கையின் ஏற்றத்திற்குப் பெருமை. எனவே, தயவு செய்து யாராவது தனிப்பட்டவருக்குப் பெருமை என்றால், அது அவருக்கு வந்த பெருமை என்று நினைத்து சங்கடப்படாதீர்கள்; அதற்குப் பதிலாக தலை வருக்குப் பெருமை; இந்த இயக்கத்திற்குப் பெருமை என்று எல்லோரும் நினையுங்கள். எனவேதான் தோழர்களே, நாம் வெல்வோம் என்பது உறுதி! அதை நாம் தலைவருக்குக் காட்டவேண்டும். கட்டுப் பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு என்பதைக் காட்டு வோம்.

நாங்கள் யாரும் தனித்தவர்கள் கிடையாது; உள்ளத்தால் ஒருவரே; தலைவரின் ஆணை எங்களை வழிநடத்தும்; தளபதியின் செயலாக்கம் எங்களை உற்சாகப்படுத்தும். கோடானகோடி தொண்டர்கள் எல்லாவற்றையும் தர இருக்கிறோம். ஆட்சி முக்கியமல்ல; இந்த இனத்தின் மீட்சிதான் முக்கியம் என்று சொல்லி, மானமீட்பராக நூற்றாண்டு விழா நாயகரை காணுவோம் காணுவோம் என்று சொல்லி, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார், வளர்க கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு முடிக்கிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


வாழ்வியல் சிந்தனை - விருது பெற்றுத் தந்தது!




கடந்த சில நாள்களுக்குமுன், பல நூற்றுக்கணக் கான ரயில் பயணிகளைக் காப்பாற்ற மனோகரன் என்ற ரயில் ஓட்டுநர், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை அருகில் வண்டியை ஓட்டி வரும்போது, இதயவலி ஏற் பட்டு, சங்கடப்பட்ட நிலையில், ரயிலை நிறுத்தி, பிறகு கீழே இறங்கி சுருண்டு விழுந்த நிலையில், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.

அவரது கடமை உணர்வு, பொறுப்புணர்வைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் அவருக்கு விருது வழங்கவேண்டுமென்று வாழ்வியல் சிந்தனையில் எழுதினோம். ரயில்வே நிலைக் குழுத் தலைவரான தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவர் உடனே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதைக் கூறினார். கைமேல் பலன் கிடைத்தது!

இன்றைய ஏடுகளில் மனோகரன் மறைந்த நிலையிலும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்கள்! -------------விடுதலை” 5-6-2013

தமிழ் ஓவியா said...


தொழிலாளர்களின் புத்தி இப்படியா?


தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி தூக்குவார்கள். கோரிக்கை கள் நிறைவேறும்வரை கோடிக் கைகளை உயர்த்துவார்கள். நீதிமன்றமும் செல் வதுண்டு. அவைதான் சரியான வழி முறையும்கூட.

புதுச்சேரியில் என்ன நடந்திருக்கிறது? முதலியார்பேட்டையில் ஏ.எஃப்.பி. (ரோடியர் மில்) துணி நெய்யும் தொழிற்சாலை.

நலிந்த தொழிற்சாலையாகி இழுத்து மூடப்பட்டது (3.2.2013). தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது. 13 மாத சம்பளப் பாக்கியும் நிலுவையில் உள்ளது - என்னே கொடுமை!

அதைவிட இன்னொரு கொடுமை - தொழிலாளர்கள் தரப்பில்,

ஜூன் 2 ஆம் தேதி காலை 9.30 மணி. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்த் தோழர் கள் தொழிற்சாலை முன் கூடினர்.

குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார் சிலை போன்ற கட்-அவுட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த அய்யனாருக்கு எலு மிச்சை மாலை, பூ மாலைகளைச் சூட்டினர். அய்யனாருக்கு மிகவும் பிடித்தமானதாகக் கதைக்கிறார்களே - சேவல், சாராயம் (அதுவும் புதுச்சேரி - கேட்கவேண்டுமா?) போன்றவற்றை களேபரமாகப் படைத்தனர். பிறகு உருமி அடித்தனர்.

10 மணி... அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத் திற்குள் அமைந்திருக்கும் கலிதீர்த்த அய்ய னார் கோவிலை வந்தடைந்தது ஊர்வலம்.

உருமி அடிக்கப்பட்டது - சிலர் சாமி வந்து(?) ஆடினார்களாம்.

அய்யனாருக்கு விசேடமாகப் பூஜைகள் செய்யப்பட்டனவாம் - கோரிக்கைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டினை குதிரைமீது வீற்றிருந்த அய்யனார் பொம்மைக் கையில் உள்ள கத்தியில் வைத்தனராம்.

வேடிக்கை பார்க்க மக்கள் கூடினார் களாம் - எப்படி இருக்கிறது? விவரம் தெரியாதவர்களா இந்தத் தொழிலாளர்கள்? விவரம் தெரியாதவர்களா இவர்களை வழிநடத்தும் தொழிலாளர்த் தலைவர்கள்?

அய்யனாருக்கு அவ்வளவு பெரிய சக்தி இருந்தால், தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்? அப் பொழுது அய்யனார் நினைவு வர வில்லையா?

தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் புகாவிடின், அதன் விளைவு இப்படிக் கீழ்த்தரத்தில்தான் சென்று முடியும்.

தந்தை பெரியார் கூறுகிறார்:

இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்கிற ஸ்தாப னங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோவில் குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவெல்லாம் சொல்லுகிறார்கள். அந்தப்படி இருப்ப தனால் தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோவில், குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் பலியாவானே தவிர, சேர்த்த பொருளை மீட்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ வாழ்க்கைத் தரத்தை சரிக் கட்டிக் கொள்ளவோ முடி யாதவனாக ஆகிவிடு கிறான் (விடுதலை, 22.3.1952) என்று தந்தை பெரியார் சொன் னதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை வெளிச்சமாய்த் தெரியும்.

கான்பூரிலே செருப்புத் தொழிற் சாலைகளில் ஒருமுறை வேலை நிறுத்தம்; வன்முறைகள் தலைதூக்கின - தீ வைப்பு முதற் கொண்டு அரங்கேறின. காவல் துறையாலும் அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிற்சாலை முதலாளி ஒரு தந்திரம் செய்தார். தம் குடும்பப் புரோகி தனைக் களத்தில் இறக்கிவிட்டார்.

அவன் கையிலே ஒரு தட்டு, அதில் கொஞ்சம் கோவில் பிரசாதம்!

இந்தச் சகிதமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தான் புரோகிதன்! அவ்வளவுதான்! ஆர்ப்பரித்த வாய்கள் அடங்கின. பொங்கி எழுந்த தோள்களும் அழுந்தின!

புரோகிதப் பார்ப்பானிடமிருந்து பிரசாதம் பெற தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

தொழிலாளியின் எரிமலைக் குழம்பை ஒரு திருநீறும், குங்குமமும் அணைத்து விட்டதே!

எந்தப் பிரச்சினைக்கும் பெரியார் மருந்து - மூலிகை தேவைப்படுகிறது!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (2)



மனிதர்களிடம் பின்பற்றத் தகுந்த பெரியவை எவை?

எண்ணியவைகளையே, சிந்தித்தவைகளையே பேசுவது,
பேசுவதையே செயல்படுத்துவது
என்பது எல்லாம் ஒன்றாக அமையும்
வாழ்க்கை நெறியே!
காரணம், மனிதரில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பேசுவதன் படிகூட நடவாது அதனின்றும் மாறுபட்ட செயல் வகையில் ஈடுபடுவதுமான மூவகை வாழ்வு (இரட்டை வாழ்வு கூட அல்ல) வாழுகின்ற அன்றாட அவலம் நமது கண்முன்னே காணும் காட்சியாகும்!

தவிர்க்கப்படவேண்டியவை எவை?

மற்றவர்களைத் துன்புறுத்தி - அது கேலி, கிண்டல், நக்கல் போன்றவைகள்மூலமும், இதர கேவல முறைகளாலும்கூட அமையலாம் - அதில் இன்பங்காணும் இழிதகைமை.

பின்பற்ற வேண்டிய பெருநெறி எது?

எந்த நிலையிலும் தன்னை விற்றுக் கொள்ளாத அல்லது சுயமரியாதையை விலை பேசாத உயர்நெறியான வாழ்க்கை.

புகழ் வேட்டையாடுதல் பற்றி...?

போதைகளிலேயே மிகப்பெரிய போதை இந்தப் புகழ் போதைதான்.

அதற்காக மனிதர்கள் உண்மை மனிதர் களாக இராமல், நிலை தாழ்ந்து, வீழ்ந்து, ஒப்பனை மனிதர்களாகி உயர நினைக்கும் பேதமை!

இயல்பாக வரும் புகழ் நல்ல இரத்த ஓட்டம்; திணிக்கப்பட்ட அல்லது யாசிக்கப்பட்ட புகழ் இரத்தக் கொதிப்பு போன்றது!

இரத்த ஓட்டம் - ஆரோக்கியமானது; இரத்தக் கொதிப்பு எந்த நேரத்திலும் பல நோய்களுக்கு அடிப்படை - ஆரோக்கியத்தின் வைரியாகும்!

பதவி ஆசை, பதவி வெறி இவைகள்

சர்க்கரை நோயைவிட கொடுமையானது; ஒருமுறை உடலுள் நுழைந்தால், இறுதி மூச்சடங்கும் வரை அது உடலை விட்டு அகலாது; முயன்றால் சிலர் கட்டுக்குள் அதை வைக்கலாமே தவிர, அறவே நீக்கி அதனின்றும் விடுதலை பெற்றுவிட முடியாது; முடியவே முடியாது!

அதுபோலத்தான் பதவி ஆசையாக முதலில் தொடங்கி, பதவி வெறியாக அது தீவிரமாக மய்யங்கொண்டு, பலருக்குப் புதை பூமியாகவும் ஆகிவிடுகிறது!

ஒருமுறை ஆட்பட்டுவிட்டால் அது பிடித்தவர் களை விட்டு அகலாது.

அறிவு நாணயம் என்பது...?

உள்ளதை எக்காரணம் கொண்டும் ஒளிக்காது, மறைக்காது கூறுவதோடு, சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது,
எமை நத்துவாய் என எதிரிகள்
கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற வைராக்கிய நெஞ்சத்தோடு,
வறுமையின் உச்சத்திலும்
நெறிபிறழாத வாழ்வின் சிறப்பியல்புகளில் முக்கியமான ஒன்று!

உறவுகளில் உயர்ந்தது எது?

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிடினும் ஒரு கொள்கை வயப்பட்ட நிலையில் அதற்காக, அதைப் பின்பற்றியவருக்காக, உயிரையும் விட எதனையும் ஏற்கத் தயாராகும் உறவே உயர்ந்த உறவு!

தியாகத்தில் சிறந்தது எது?

திணிக்கப்பட்டோ, விபத்தினாலோ வந்து விழும் தியாகம் உண்மை தியாகம் ஆகாது.

தெரிந்தே உயிர் விடுதல் செய்த சாக்ரட்டீஸ், பகத்சிங் போன்றவர்களின் தியாகம்.

அல்லாது கொண்ட கொள்கைக்காக வாழ்வை இழந்து வரலாறாக வாழும் வ.உ.சி. போன்றவர் களின் தியாகம் முதல் தரம்.

- கி.வீரமணி

- (தொடரலாம்)

தமிழ் ஓவியா said...


கலைஞர் என்றாலே வியப்பு - பிரமிப்பு காரணம் அவரின் கடுமையான உழைப்பு - தலைவர்கள் புகழாரம்


சென்னை, ஜூன் 5- கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தோழமைக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் 3.6.2013 அன்று மாலை சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது.

இப்பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:-

தொல்.திருமாவளவன்

கலைஞர் என்றாலே ஒரு வியப்பு - பிரமிப்பு, அதற்கு காரணம் அவரின் கடுமை யான உழைப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவு ஆற்றல் பெற்ற ஒரே தலைவர் கலை ஞர்தான். அவருக்கு போட்டி போடுவதற்கு தகுதி யான தலைவர்கள் யாரும் கிடை யாது. புவி ஈர்ப்பு விசையை போன்று அரசியல் விசையாக கலைஞர் திகழ்கிறார். ஈழம் வென்றெடுக்க தமிழர்கள் வாழ்வுரிமையை மீட் டெடுக்க கலைஞர் அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது என கலைஞர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்திப் பேசினார்.

காதர் மொய்தீன்

கலைஞர் அவர்களின் வாழ் கின்ற காலம் நமக்கு பெருமை. கலைஞருடைய வரலாறு எத்தனை மேடு - பள்ளங்களை யும், காட்டாறுகளையும் கடந்து வந்திருக்கிறது. கலைஞரின் சிந்தனைகளையும், சாதனைகளை யும், எழுத்துக்களையும் தமிழ் அறிஞர்கள் தொகுத்து அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கச் செய்தவர் கலைஞர் அவருக்கு முஸ்லிம் சமுதாயம் என்றும் கடமைப் பட்டுள்ளதாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்துரை வழங்கினார்.

சுப.வீரபாண்டியன்

சமூக அரசியலில் 90 வயதிலும் கலைஞர் செய்து இருக்கின்ற சலிப்பில்லாத பணி பேராற்றல் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் வராது. கலைஞரின் கடந்த 70 ஆண்டு வரலாறு நீண்ட நெடிய வரலாறு. அவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானது. அடங்காத பல அரசியல் குதி ரைகளை அடக்கிய அரசியல் அலெக்சாண்டர் நீங்கள்! என்றைக்கும் எந்த நெருக்கடி காலத்திலும் தளராத நெப்போ லியன் நீங்கள்!

ஆட்சியை உயிர் மூச்சாக கருதாமல், மக்கள் பணி செய்கின்ற படைகலனாக கருதுபவர் கலைஞர் அவரை போன்று துணிச்சல், போராட்ட குணம் யாருக்கும் வராது என கலைஞருக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலைஞரை வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவின் இறுதியாக 90ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் கலைஞர் அவர்கள் ஏற்புரை நிகழ்த் தினார். முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

90-ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன், பேராசிரியர் காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன் ஜெ.அன்பழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

இவ்விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் எஸ்.மதன்மோகன் வரவேற்றார். ஏ.ஆர்.பி.எம். காமராஜ் வழி மொழிந்தார். மா.பா.அன்புதுரை நன்றி கூறினார். விழாவின் தொடக்கத்தில் மக்கள் இசை கலைஞர்கள் முனைவர் புஷ்பவனம் குப்பு சாமி, முனைவர் அனிதா இணையர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாமேடை அண்ணா அறிவாலய தோற் றத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அமைக் கப்பட்டிருந்தது. இதை விழா நாயகர் கலைஞர் மற்றும் தோழமைத் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், ஆற்காடு நா.வீராசாமி, எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன், சற்குண பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் மற்றும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆருக்கு... கருஞ்சட்டையிடம் விளையாட வேண்டாம்


பருவம் பாராது, மானம் பாராது தொண்டறம் புரிபவர் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களைப் பாராட்டிவிட்டாராம் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் பறக்கவிட்டுக் கொண்டு பூணூலுக்கும், திருநீறுக்கும் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டு இருக்கும் அக்கிரகார ஆன்மீக ஏடாகவே ஆட்டம் போடும் அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு. அத்திரிபாட்சா கொழுக் கட்டை என்று சாக்கடை எழுத்துக்களை சந்தனமாகக் கருதி உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை பூசிக் கொண்டுள்ளது (5.6.2013).

இந்த ஏட்டுக்கு அனா ஆவன்னா சொல் லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

பருவம் பாராது தொண்டாற்றக் கூடியவர் கலைஞர் என்பதில் என்ன தவறு? இந்தத் தொண்ணூறு வயதிலும் உழைக்கிறார். அன்றாடம், தானே கட்டுரை எழுதுகிறார் - தானே பேசுகிறார் (மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதையல்ல) செய்தியாளர்களைச் சந்திக்கிறார் - அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் - இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் - சுயமரியாதைத் திருமணங் களை நடத்தி வைக்கிறார்.

பொதுத் தொண்டாற்றி மறைந்த பெரு மக்களின் உடலுக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறார் - போராட்டங்களை அறிவிக்கிறார் - தானே அந்தக் களத்திலும் போய் நிற்கிறார் - இவ்வளவும் இந்தத் தொண்ணூறு வயதில் - இதற்குப் பெயர்தான் பருவம் பாராத தொண்டு என்பது.

அதேபோல மானம் பாராத தொண்டு என்று கழகத் தலைவர் பாராட்டியிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் - தன்மான இயக்கத்தின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

தனி வாழ்வில் மானம் பார்க்கலாம்; பொது வாழ்வில் மானம் பாராது தொண்டாற்ற வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)

- என்ற குறள், தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறளாகும்.

இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவும், பொது அறிவும் தேவைப்படும்.

கலைஞரின் மானம் பாராத பொதுத் தொண்டு என்பதற்கு உதாரணம் வெகு தூரம் போய்த் தேட வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஏடு அவதூறுகளையும், ஆபாசச் சொற்களை யும், அநாகரிகச் சகதிகளையும் அவர்மீது வீசு கிறதே - அவற்றையெல்லாம் அனாயாசமாகப் புறந்தள்ளி, பொதுத் தொண்டில் 90 வயதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே - இந்த ஒன்று போதாதா?

திராவிடர் கழகம் - அதன் தலைவர் யாரை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது கொள்கை அடிப்படையில் தான் இருக்கும் என்பது ஊருக்கும், உலகுக் குமே தெரியும். அதற்குப் பெயர் ஜால்ராவாம்.

கர்ப்பிணிப் பெண்களைக் கூட அவர்கள் முசுலீம்கள் என்றால் அவர்களின் குடலைக் கிழித்தெறிந்த மோடிகளுக்கெல்லாம் ஜால்ரா போடுபவர்கள் யார் என்று தெரியாதா?

எழுதுகோலை எதிர்த்துப் பிடிக்க ஆரம்பித்தால் நமது எம்.ஜி.ஆர். தாங்காது - கருஞ்சட்டையிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இதோ, இதயங் காக்கும் காவலன் பாரீர்!

மருத்துவத்துறையில் தொழில் நுட்பம் வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக வளர்ந்து, மனிதர்களின் ஆயுளையும்கூட நீண்ட காலம் வாழும் வண்ணம் செய்து வருகிறது!

இளமையைப் பாதுகாத்து முதுமையை விரட்டும் மரபு அணு ஆய்வும் மிக வெற்றிகரமாக பிரான் சிலும், இஸ்ரேலிலும் பல்வேறு கோணங்களில் போட்டியிட்டு முன்னேறுகின்றது!

ஆயுள் வளர்ந்தால் மட்டும் போதாது; முதுமை தவிர்க்கப்படல் அல்லவா முக்கியம் என்ற கண்ணோட் டத்தோடு புதுப்புது மருத்துவ தொழில் நுட்ப ஆய்வுகள் பல பல்கலைக் கழ கங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன!

Michio Kakku என்ற ஜப்பானிய - அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஒரு நூலில், இதயத்துடிப்பின் சீர்மை, ரத்த அழுத்தம் மிகையாக ஆகிறதா? என்பன போன்றவற்றை நமது டாக் டருக்கே நேரிடையாகத் தெரிவித்து அவரை அக்கருவியே (Chips) அழைக்கும் வண்ணம் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன!

காலில் நாம் அணியும் பூட்சு களிலோ அல்லது கட்டும் டைகளிலோகூட அந்த சிப்ஸ்களை இணைத்து விட்டால் அதுவே இந்த வேலையைத் தவறாது செய்யும் என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர்!

இப்போது நேற்று அதே செய்தி வண்ணக் கதிர் (தீக்கதிர்) வார ஏட்டில் வந்துள்ளதை அப்படியே தருகிறேன்.

இதய நோயாளிகள் பயப்பட வேண்டியதே இல்லை... இனி கவலையை விடுங்கள். இதயக் கோளாறு பெரிதாகு முன் ஓர் எச்சரிக்கைக் கருவியை உடலினுள் பொருத்தி விட்டால் போதும். இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை டாக்டருக்கு உடனுக்குடன் 24 மணி நேரமும், தானாகவே தெரியப்படுத்தி விடும். உங்களுக்கு பிரச் சினை என்பதை நீங்கள் உணரும் முன்பே தேவை யான மருத்துவ ஆலோசனை உங்களைத் தேடி வந்து விடும். இதைவிட வேறென்ன வேண்டும்? இது எப்படி சாத்தியம்?

ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மூலம் இதய நோய் கண்டறியும் கருவி ஒன்று உடலில் பொருத்தப்படும். இதயத்தின் செயல்பாடு, நுரையீரலில் நீர்கோர்வை, நாடித் துடிப்பு ஆகியவற்றை இந்தக் கருவி துல்லிய மாகக் காட்டக் கூடியது. நாடித்துடிப்பு குறைந்தால் அதை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பேஸ்மேக்கராகவும், ரத்தம் உடல் முழுவதும் செல்ல செயல்படும். இதயத்தின் செயல் குறைந்தால் சரி செய்யப் பயன்படும். ரீசிங்கரனைசேசன் தெரப்பி டிவைஸ் ஆகவும், இதயத்தை செயலிழக்க வைக்கும் குறைந்த நாடித் துடிப்பையும், சீரற்ற இதயத் துடிப்பையும் சரி செய்யும் டீபிப்ரில்லேட்டர் ஆகவும் இந்தக் கருவி செயல்படுகிறது. இந்தக் கருவி தானா கவே தான் பதிவு செய்த விவரங்கள் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையில் 5 மீட்டர் தொலைவுக்குள் உள்ள செய்திக் கடத்தி கருவிக்குத் தெரி விக்கப்படும். அது சர்வரை சென்ற டைந்து மருத்துவரின் கைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சென்றடையும். அவசர நிலைமை என்றால் சிவப்பு வண்ண எச்சரிக் கையும், சீராக இருந்தால் மஞ்சள் வண்ண அறிவிப்பும் வரும். நம் நாட்டில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 லட்சம் என அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன இதயப் பிரச்சினை வருமோ என்ற பயம் நீங்கி, பயத்தால் ஏற்படும் விளைவுகள் வராமல் தடுக்கப்படு கின்றன. ஒவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 24 மணி நேரமும் மருத்துவர் பார்வையில் இருக்கிறோம். இதைவிட வேறென்ன வேண்டும் ஓர் இதய நோயாளிக்கு? விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்வோம்!
- அ. சுந்தரம்

கணினி செய்த யுகப் புரட்சி இப்படி மனிதர்களை வாழ வைக்கும் உயிர் காப்பான் தோழனாக உயர்ந்து நிற் கிறது!

என்னே புதுமை! எவ்வளவு அருமை!
------------k.veramani

தமிழ் ஓவியா said...


சொல்லுவது அருந்ததிராய்!

இந்தியா சுதந்திரமடைந்த வேளையில், காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட நாட்டின் எல்லைக் குள்ளாகவே ராணுவத்தை அனுப்பி, அரசு சொந்த குடிமக்களுக்கு எதி ராக போர் நடத்தியது. இவ் வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. இந்திய அரசு உயர்ஜாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலப் பிரபுத்துவம் மீண்டும் வருகிறது. முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங் களின் பலனாக ஏற்பட்ட நலன்கள்கூட பலன் பிரயோ கித்து மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. இதற்கெதிராகப் போராடுபவர்களுக்குப் பெரியதொரு இமேஜ் இருந்தாலே வெற்றி பெற முடியும். நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மன்மோகன்சிங்கோ, நரேந்திரமோடியோ அல்ல. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழிலதிபர்கள்தாம் நாட்டை ஆளு கிறார்கள். ஆகையால்தான் முகேஷ் அம்பானிகளுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- அருந்ததி ராய், எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...


காவடி அல்ல ஆவடி!

பெரியாரோடு தி.க. குளோஸ் என்று மனப்பால் குடித்துக் கிடந்தனர். அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நடத்தப்பட்டது என்றவுடன் அக்கிரகாரத்தில் எழவு விழுந்தது மாதிரியாகிவிட்டது.

அவரோடு அத்தியாயம் முடிந்துவிடாதா என்று ஆசைப்பட்டுக் கிடந்தனர்.

மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப் பேற்றார். மாவட்டத்துக்கு மாவட்டம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.

ஆத்திரத்தில் உச்சியிலே சென்ற அக்கிரகார வாசிகள் பழனியிலே மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். அதன்மூலம் பார்ப்பனர் அல்லாத மக்களின் தலைவர் - பாதுகாவலர் வீரமணிதான் என்று உலகுக்கே அறிவித்துவிட்டனர் பார்ப்பனர்கள். (பார்ப்பனர் களுக்கு முன் புத்தி ஏது?).

ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர் கள் தூக்கிச் சென்றார்களே, அது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா என்று எதிர் கேள்வி போட்டு, பார்ப்பனர்களுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மான மரியாதையை யும் கப்பல் ஏற்றினார்.

பெரியார் காலத்தில் 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தார்.

மாநில அரசு மட்டத்தில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளிலும் (மண்டல் குழு பரிந்துரை) அமல்படுத்தச் செய்தார். (அதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தினார்).

அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இடங்களைப் பெற்றனர்.

அக்கிரகாரத்தின் தலையில் இடிவிழுந்தது மாதிரி ஆயிற்று. பெரியார் பரவாயில்லையே, இந்த வீரமணிதான் மோசம் என்று எழுத, பேச ஆரம்பித்தனர்.

பெரியார் திடலுக்கே வந்து தலைவர் வீரமணி அவர்களைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யுங்கள் என்று பார்ப்பனர்களை பணிய வைத்தார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறதே என்று அங்கலாய்த்தார்கள்.

இவர் காலத்தில் இயக்கம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்முட்ட எழுந்து நிற்கின்றன. இந்தியாவின் தலைநகரிலே பெரியார் மய்யம் கொண்டுள்ளார். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழச் செய்து வருகிறார்.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்த வகையில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் இரட்டைக் குழல் துப்பாகியான தி.மு.க. அதன் வலிமை வாய்ந்த, முதிர்ச்சிமிக்க தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் 90ஆம் அகவையை எட்டும் காலகட்டத்தில்,

அந்த அரசியல் பணி தொடர, அடுத்த கட்ட இளைஞர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயம்.

இந்தக் கலைஞர் அரசியலில் இருந்தாலும், வாக்குகளைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், இடை இடையே அவரின் குரு குலமான ஈரோட்டுச் சரக்கினை வெளிப்படுத்திக் கொண்டேதானிருப்பார். ஈரோட்டு வாசனை வீசிக் கொண்டுதானிருக்கும்.

நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பார்; நான் நாத்திகன்தான் என்பார்; ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பார் - அந்த அரசியல் இவர் தலைமுறையோடு முழுக்குப் போடாதா என்று யாகம் நடத்திக் கொண்டு இருப்பவர்களின் ஆசையில் மண் விழ,

தளபதி ஒருவர் தோன்றியிருக்கிறார் - அவரை தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய இந்த வீரமணி தூக்கிப் பிடிக்கிறார் - அடையா ளம் காட்டுகிறார் என்றவுடன், ஆரிய தினமலருக்கு அடிவயிறு பற்றி எரிகிறது - ஆத்திரம் அலை மோதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கார்ட்டூன்.

இது வீரமணியார் எடுக்கும் காவடியல்ல - ஆவடி! ஆரியத்தை நோக்கி வீச வேண்டிய ஆயு தத்தைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற் சாலைகள் ஆவடியில்தான் உற்பத்தியாகின்றன.

கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குச் சென்று பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் லோகக் குருக்களுக்கு ஜால்ரா தட்டும் தர்ப்பைகளா பூர்ணகும்பம் கொடுக்கும் பூணூல்களா ஜால்ரா பற்றிப் பேசுவது?

ஒன்று தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத் துக்கு? வீரமணி எங்கு இருந்தாலும் ராஜ குரு வாகத்தான் இருப்பார்!

- கருஞ்சட்டை -6-6-2013

தமிழ் ஓவியா said...


விபச்சாரம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?

வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.

இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

தமிழ் ஓவியா said...

வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...

பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

தமிழ் ஓவியா said...


பாவ விமோசனம்


பகவானிடம் பக்தி காட்டினால் போதும். வைதீகச் சடங்குகளிலே வாயையும், வயிற்றையும் கழுவிக் கொண்டால் போதும் - எதுவும் செய்யலாம் - எப்படியும் நடந்து கொள்ளலாம் - பகவான் அருள் அட்டியின்றிக் கிடைத்துவிடும்.

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் அற்புத மார்க்கம்!

பாவம் மிகப் பெரியது - கழுவாயோ மிகச் சிறிது!

இது வேதாரண்யம் தல வரலாறு இதனை வெளியிட்டது ஸ்ரீ வேதாரண்யேஸ்வரசுவாமி தேவஸ் தானம். வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச் சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான்.

மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தா லல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கைவரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந் தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள்.

இவனைக் கண்டதும் இவன் இளமை யிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான். காமந்தலைக்கேறி, அவ் விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து-நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடியது, வெல்லுதற்கரியது என வருந்தினான்.

இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன்முன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்துகொண்டு அப் பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.

பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சக்தி பதம் பெற்றாள்.

- இதை எழுதுவதற்கேகூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரம் எழுந்தருளி இருக்கும் இத் தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலைத் தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டுபோய் வைத் திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு; இங்கு ஒரு மதம்.

இதனைக் கட்டியழச் சங்கராச்சாரிகள் என்றால் இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டு பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அம்மையாரை சிக்கலில் மாட்டும் நமது எம்.ஜி.ஆர்.ஏடு


முதுமையை முறியடிக்கிறார் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி விட்டாராம்! கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகக் கூறப்படும் நமது எம்.ஜி.ஆர். (6.6.2013, பக்கம் 18).

ஆயுளின் பெருமை என்பது வாழும் வருடங்களைப் பொறுத்ததல்ல! வாழுகிற காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பெருமை கொண்ட சேவைகளைப் பொறுத்ததே ஒருவனின் பிறப்புப் போற்றப்படுவதும், தூற்றப்படுவதும்! என்று தத்துவார்த்தம் வேறு பேசுகிறது அவ்வேடு.

90 வயதில் கலைஞர் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவில்லையா? மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களங்களில் குதித்து சிறைத் தண்டனைகளைப் பலமுறை ஏற்கவில்லையா?

அரசியலில் ஈடுபட்டு தோல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அளவுக்கு (12 முறை வென்று) 50 ஆண்டு சட்டமன்ற பணிகளைச் செய்த ஒரே தீரர் கலைஞர் தானே! இதே நேர்க்கோட்டில் அவர்களின் தலைவியரை வைத்துப் பேச முடியுமா?

கலைஞரின் பணிகளை அண்ணாவே பல வகைகளில் பாராட்டியது கிடையாதா? கலைஞரின் கைக்குக் கணையாழி அணிவித்தது எதற்காக? என்ற வரலாறு எல்லாம் அ.தி.மு.க. எழுத்தாள ருக்குத் தெரியுமா? கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணா வேறு - அந்த அண்ணா பார்வையில் கலைஞர் எத்தகையவர் என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும்!

திராவிட இயக்க வீராங்கனைகள் பெயரில் மகளிர் நலத் திட்டங்களைச் செய்தவர் யார்?

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் யார்?

கலைஞர் செய்த திட்டங்களைத் தாண்டி மகளிர்க்கு அ.இ.அ.தி.மு.க. அரசு சாதித்தது என்ன?

அரவாணி என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்காக நல வாரியம் அமைத்தது யார்? அந்த நலவாரியத்தை முடக்கிய அம்மையார் யார்?

ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலிந்தோர்க்கு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தது யார்? (கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உள்பட).

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் செயல்படுத்தியவர் யார்? அதனால் பொதுமக்கள் பலன் அடையவில்லையா?
20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் அம்மையார் ஆட்சி எங்கே? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த கலைஞர் ஆட்சி எங்கே?

90 வயதிலும் போராட்டக் களம் கண்டவர் கலைஞர் - 90 ஆவது வயதிலும் போர்! போர்!! போர்!!! என்று அறிவிக்கக்கூடிய திராணி படைத்தவர் கலைஞர். அதனால்தான் முதுமையை முறியடிக்கிறார் கலைஞர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நினைவாற்றல் இருப்பதால்தான் சொந்தமாகப் பேசுகிறார் - சொந்தமாக எழுதுகிறார் - அந்த உண்மையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் எதிர்கேள்வி போட்டால் அவர்களின் தலைவரை எந்த இடத்தில் நிறுத்தி வைப்பது?

வரலாறு தெரியாத நுனிப்புல் மேய்பவர் களிடம் எழுத்தாணியைக் கொடுத்தால், எதையாவது கிறுக்கித் தள்ளி - அதன் விளைவு அக்கட்சியின் தலைவியைப் பரிதாபத்திற்குரிய இடத்தில் அல்லவா நகர்த்தும்!

ஒருக்கால் அது நடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இப்படி வலிய வம்புக்கு வருவதுபோல் காட்டிக் கொள்கிறார்களோ!

இவை எல்லாம் அம்மையாரின் கவனத்திற்குப் போகவா போகிறது என்கிற தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எதிர்விளைவை நோக்காது கிறுக்குகிறார்களோ!

அந்தோ பரிதாபம்!

- கருஞ்சட்டை- 7-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி தேர்வு முறை: இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது - ஏன்?


தந்தை பெரியார் கொள்கைக்கு விரோதமானது!

தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, ஜூன் 7- ஆசிரியர் பணிக் கான தகுதி தேர்வில் தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் - ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது - இடஒதுக்கீடு கொள்கைக்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டு தலுக்கும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கும் விரோதம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?

கலைஞர் :- மூன்றாவது முறையாக இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்ட தாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர் பார்ப்பதால், 15 இலட்சம் விண்ணப் பங்களை அச்சடித்து விநியோகிக்கப் போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட் டாயக் கல்வி சட்டத்தின்படியான விதி யாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தி லிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங் களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி யன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப் பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழ கத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமான தாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித் துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர் களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறை யாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் முரசொலி யில் இன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)