Search This Blog

8.6.13

சமச்சீர் கல்வி: துடிக்கிறது ஆரியம்!

10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. ஊர் எங்கும் குதூகலம்! ஏழை, எளிய மக்கள், குக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் எல்லாம் மதிப்பெண்களைப் பெரும் அளவில் பெற்று மகிழ்ச்சித் திருவிழா நடத்தினர்.
குடிசைகளிலும் கொள்ளை மகிழ்ச்சி. நடைபாதையில் குடியிருந்த மக்களின் வீட்டுப் பிள்ளைகளும் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்குப் பெரு வெற்றி பெற்றனர். 89 விழுக்காடு வெற்றி, கடந்தாண்டைவிட இது 2.8 விழுக்காடு கூடுதல் வெற்றி! மாணவர்கள் 86, மாண விகள் 92 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ளனர்.

ஒன்பது பேர் 500_-க்கு 498 மதிப் பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள் ளனர். 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 52 பேர்! 496 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 137 பேர்கள்.
சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை யிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியான குருவித்யா 480 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவரின் வேதனைக் கண்ணீர் இதோ:

அய்ந்து வயது இருக்கும் போது வீட்டில் மிகவும் கஷ்டம். ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழி இருக்காது, நான்காவது படிக்கும்போது, படிப்பைப் பாதியில் விட்டு, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். 10 வயது இருக்கும்போது என்னைப் பள்ளியில் சேர்த்தனர். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். 480 மார்க் வாங்கியுள்ளேன். மேல் படிப்புக்கு வழியில்லை யாராவது உதவி செய்தால் படிப்பேன்.

திருச்சிராப்பள்ளியில் வீட்டு வேலை யிலிருந்து மீட்கப்பட்ட மகாலட்சுமியின் மனதை உருக வைக்கும் அவலம் இதோ:

சின்ன வயதில் அப்பா இறந்து விட்டார். தாய் கட்டட வேலை செய்கிறார். என்னுடன் பிறந்தவர்கள் 2 பேர். அப்பா இல்லாததால் மூன்று பேரும் குடும்பப் பாரத்தைத் தாங்க வேலைக்கு வந்து விட்டோம். நானும் என் தங்கை யும் வீட்டு வேலைக்குச் சென்றோம். எங்களை மீட்ட அதிகாரிகள் பள்ளியில் சேர்த்தனர். 475 மார்க்குகள் வாங்கி யுள்ளேன். மேற்படிப்பில் தொடர அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வியை செயல்படுத்தியதால் கல்வியில் மகத்தான புரட்சி ஏற்பட் டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

ஆனால் பார்ப்பனக் கூட்டம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள் கிறது! தரம் கெட்டு விட்டது என்று தகர டப்பா சத்தம் போடுகிறது.

தினமணியின் தலையங்கம் (4.6.2013) ஒன்று போதும். இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு விஜயபாரதம் வார இதழ் இரண்டாம் பட்சம்தான்.

திருவாளர் வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்த நாள் தொட்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூடாரத்துக்கு அதிகாரபூர்வமான நாளேடாக தினமணி ஆகிவிட்டது.

இவை கொடுக்கப்பட்ட மதிப்பெண் களே தவிர மதிப்பீடுகள் அல்ல; அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை! என்று எழுதி முடித்து விட்டது. ஆம், தினமணி தீர்ப்பே வழங்கி விட்டது. (தலையங்கம் தனியே காண்க).

அவாள் மட்டுமே அதிக மதிப் பெண்கள் பெற்று அவாள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போது _ கல்வி தரமாக இருந்தது. தீப் பெட்டி தொழிற்சாலையிலும், வீட்டு வேலையிலும் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் தினமணி பார்ப்பன வகையறாக்களின் பார்வையில் கல்வியின் தரம் கெட்டு விட்டதாகப் பொருள், தராசு -சாய்ந்த தராசாக ஆகி விடுகிறது.

தேர்வு எழுதாமலேயே அனை வரையும் தேர்ச்சி செய்து விடலாமே என்று அடி வயிற்றில் குத்திக் கொள்கிறது. சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கவே கூடாது என்று சாத்திரம் எழுதி வைத்து அதன்படி அரசர்களை ஆட்டி வைத்த பரம்பரையல்லவா -_ புத்திமாறி விடுமா என்ன!

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்குப் பலனில்லை என்று எட்டுப் பத்தி தலைப்பிட்டு தினமலர் தன்  குடுமியைத் தட்டி விட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகிறது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய அளவில், எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்பது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே மாநில அளவில், அனைத்து இடங்களை யும் வாரி சுருட்டினர் என்று செய்தி வெளி யிடுகிறது தினமலர் (1.6.2013 பக்கம் 2).
முதல் மூன்று இடங்களைப் பிடித்த வர்கள் அதிகம் தனியார் பள்ளிகள் தான் என்று ஆதாரம் காட்டுகிறது.

சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பும் இந்த நிலைதானே? புதிதாகக் கூறி குற்றப்படுத்துவதன் நோக்கம் என்ன?

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமலுக்குப் பின் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனவா இல்லையா என்பதுதான் முக்கியமே தவிர மாநில அளவில் அதிக மதிப் பெண்கள் பெற்றவர்கள் யார் என்ற பிரச்சினையை வேறு இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போகப் பார்ப்பது அசல் பார்ப்பனத்தனமே!

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பலன் அடையவில்லையாதலால் சமச்சீர் கல்வி திட்டத்தால் பலனில்லை என்று தினமலரும் தீர்ப்பு எழுதி விட்டது. இதில் வயிறு குலுங்க சிரிக்கும் இடம் உண்டு; அதே தினமலர்தான் அதே நாளில் 2ஆம் பக்கத்தில் தலைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அபாரம்! முதல் முறையாக 90 சதவீதத்தை கடந்து தேர்ச்சி விகிதம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. பாவம் சமச்சீர் கல்வி பார்ப்பனர்களைப் பாடாகத்தான் படுத்திக் கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்கள் இப்படிப் புலம்புவது ஒன்றே சமச்சீர் கல்விக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் என்பதற்கான அளவுகோல்.
அதிக மதிப்பெண்கள் எங்களால்தான் பெற முடியும். அதிக அளவு தேர்ச்சி எங்களால் தான் ஈட்ட முடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அக்கிரகார மமதை மனப்பான்மையில் சமச்சீர் கல்வி என்னும் இடி விழுந்து விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

சமச்சீர் கல்விப் பிரச்சினையில் தொடக்க முதலே பார்ப்பன சக்திகள் எந்த கருத்தைக் கொண்டிருந்தன என்பதைத் தெரிந்து கொண்டால் தான். சமச்சீர் கல்வியால் தேர்ச்சி விகிதம் எகிறியிருப்பதன் மீது பார்ப்பனர்கள் விழுந்து பிடுங்குவதன் இரகசியம் - _ மர்மம் புரியும்.

2006இல் ஆட்சிக்கு வந்த திமுகதான் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்தது. கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத் தது. 109 பரிந்துரைகளுடன் கூடிய சிறப்பான அறிக்கையை அந்தக் குழு அளித்தது (4.7.2006)

2010_-11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளிலும் 2011_-12 கல்வி ஆண்டில் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது (30.11.2009).

இதனைக் கடுமையாக எதிர்த்தவர் _- விமர்சித்தவர் துக்ளக் ஆசிரியர். திருவாளர் சோ ராமசாமிதான். அனைத்துக் கல்வி முறைகளையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித் திட்டம் என்று புலம்பினார். ஒரு சிலர் உயர் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படுவதாக புரண்டு புரண்டு கண்ணீர் வடித்தார் (துக்ளக் 15.6.2011) சிலர் நீதிமன்றமும் சென்றனர். இந்தச் சட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பும் கூறியது (30.4.2010) மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றமும் சென்றனர் அங்கும் தோல்வியைத் தான் கட்டித் தழுவினர்.
சமஸ்கிருதத்தை மய்யப்பாடமாகக் கொண்டு செயல்படும் ஓரியண்டல் பள்ளிகளின் நிருவாகிகள் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்று அலறினர்.

தமிழ்நாட்டில் ஓரியண்டல் பள்ளிகளின் எண்ணிக்கை 27 தான்; எங்களுக்குச் சமச்சீர் கல்வி வேண்டவே வேண்டாம் என்று  ஓரியண்டல் பள்ளி களின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் 2011இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கான காரணத்தை அவர் மறைக்கவும் இல்லை சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான கருவி; எனவே சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம் கட்டப்பட்டு விடும்; ஆகவே அந்தக் கல்வி திட்டம் கூடாது என்றார் வாசுதேவாச்சாரியார்.

ஜெயலலிதா மட்டும் இத்தகைய உணர்வில் பின்வாங்கக் கூடியவரா?

சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வராது என்று கறாராக தெரிவித்தார். முதல் வரவேற்பு இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் திருவாளர் இராம கோபாலனிடமிருந்துதான்.

ஜெயலலிதா தலைமையிலான அமைச் சரவையின் முதல் கூட்டத்திலேயே (22.5.2011) சமச்சீர் கல்வி திட்டம் நிரா கரிக்கப்பட்டது. இதற்காக அமைச்சரவை எடுத்துக் கொண்ட நேரம் முழுவதுமாக ஒரு மணி நேரம்கூட இல்லை. அவ்வளவு ஆத்திரம்! இந்த வகையில் சட்டமன்றத்தில் மசோதாவும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது (7.6.2011).

சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் பேன் குத்திக் கொண்டு இருக்கவில்லை. உயர்நீதிமன்றம் சென்றனர். விளைவு புதிய அரசின் முடிவு நிராகரிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் -_ டி.எஸ். சிவஞானம் அடங்கிய அமர்வு சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது.

அடங்கி போய் விடுமா ஆரியம்? விடயம் அடிமட்ட மக்களும் கல்வி ஏணியில் உயரே ஏறும் திட்டமாயிற்றே!

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் வேக வேகமாக மிதித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக்வர்மா பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு நறுக்குக் குட்டு வைத்தது. 25 காரணங்களை அடுக்கிக் காட்டி சமச்சீர் கல்வியைத் தொடர ஆணை வழங்கியது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்வியாளர் குழு ஒன்றினை அதிமுக அரசு நியமித்தது.

அந்தக் குழுவின் உறுப்பினர்கள் யார் _ யார் தெரியுமா? சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்; அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் _ பார்ப்பனர்களே!

1) தேவேந்திரநாத் சாரங்கி (தமிழக அரசு தலைமைச் செயலாளர்) பார்ப்பனர்.

2) ஜி. பாலசுப்பிரமணியன் (மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குநர்) பார்ப்பனர்.

3) விஜயலட்சுமி சீனிவாசன் (முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் 
மெட்ரிகுலேசன் பள்ளி சென்னை மற்றும் ஆலோசகர்) பார்ப்பனர்.

இரு கல்வியாளர்கள்:

4) சி. ஜெயதேவ் (நிறுவனர் மற்றும் செயலாளர் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் கோபாலபுரம், சென்னை) பார்ப்பனர் (குறிப்பு: இவர் பள்ளியின் நிர்வாகியே தவிர கல்வியாளர் அல்லர்).

5) திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி (இயக்குநர், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை) பார்ப்பனர்

இவர் கல்விக்கூடம் ஒன்றின் உரிமையாளரே தவிர கல்வியாளர் அல்ல. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) இரு பிரதிநிதிகள்.

6) பேராசிரியர் பி.கே. திரிபாதி (அறி வியல் மற்றும் கணிதவியல், கல்வித்துறை -_ டில்லி) பார்ப்பனர்

7) பேராசிரியர் அனில் சேத்தி (சமூக அறிவியல் துறை, புதுடில்லி, பஞ்சாபி).
8) டி. சபீதா (பள்ளிக் கல்வித்துறை செயலாளர்).

9) வசுந்தராதேவி (பள்ளிக்கல்வி இயக்குநர்) இவர்கள் இருவரும் அதி காரிகள் ஆதலால்

பார்ப்பனர்களாகப் பார்த்துப் போட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஒன்பதுபோர் கொண்ட குழுவில் ஆறு பேர் பார்ப்பனர்களாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும், மிகவும் கவனிக்கத்தக்கது.

மூவர் தனியார் பள்ளிகளை நடத்தக் கூடியவர்கள். சமச்சீர் கல்வியே கூடாது என்று அரட்டை அடிப்பவர்கள் _ ஆக நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத் தாயிற்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரி யுமா? அமைச்சரவை கூடி, சமச்சீர் கல்வியைத் தள்ளுபடி செய்வதற்கு முதல் நாளே - பழைய கல்வி திட்டப்படி பாடங் களை நடத்த புத்தகங்களை அச்சிட தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆணையை வழங்கி விட்டது. ஆகா! எவ்வளவு பெரிய வேகம்!

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் எனும் தலைப்பில் வெளிவந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பிட்டி தியாகராயர், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள் போன்றோர் பற்றிய குறிப்புகள் மட்டுமல்ல; அந்தத் தலைப்பில் உள்ள அனைத்தும் கிழிக்கப்பட்டன.

இதுதான் அண்ணா பெயரையும் திராவிடப் பெயரையும் தாங்கியுள்ள திராவிடர் கட்சியா..? வெட்கக் கேடு! சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படாத  நிலையில் பல மாதங்கள் யோகா பயிற்சி போன்றவற்றை அளித்து மாணவர்களை வெட்டிப் பொழுது கழிக்கச் செய்தனர்.
வேறு வழியின்றி சமச்சீர் கல்வி திட்டத்தைச் செயல்படுத்திய அதிமுக அரசு, ஏற்கெனவே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த திமுக ஆட்சியில் கல்வியாளர் குழுவால் தயாரிக்கப்பட்டு இருந்த பாடங்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டி பல பகுதிகளை அடித்துத் தீர்த்தது. திருவள்ளுவர் உருவமும்கூடத் தப்ப வில்லை. சூரியன் பற்றிய பாடம் கூடச் சொல்லிக் கொடுக்கப்படக் கூடா தாம்.

காரணம்  சூரியன் திமுகவின் தேர்தல் சின்னமாம். என்னே கோமாளிக் கூத்து.
இதில் இன் னொன்றை என்றைக்கும் என்றைக்கும் நினைத்து நினைத்து விலா வொடிய விலாவொடிய  சிரித்து சிரித்து மகிழலாம். ஏன், அரட்டையும்கூட அடிக்கலாம்.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பி.பி.ராவ் தெரிவித்த கருத்துக் கருவூலங்கள் தான் அந்தத் தமாஷ்!

இதோ பி.பி.ராவ் பேசுகிறார் _ உச்சநீதி மன்றத்தில் கேண்மின்! கேண்மின்!!
தமிழக அரசுக்குக் கல்வி, சட்டம் ஆகிய துறைகளில் அறிவுரை கூறுவ தற்குச் சரியான ஆட்கள் இல்லை. அத்தகைய ஆட்கள் இருந்திருந்தால், தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை என்று கால் பந்தை தன் பக்கம் அடித்துக் கோலாக்கி விட்டார் (Sameside Goal).

இந்தப் பின்னணி வரலாறுகளை, தகவல்களைத் தெரிந்து கொண்டால்தான் 2013 _ பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆண் டாண்டு காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் பகுதியிலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றதையும் அதிக மதிப்பெண்கள் குவித்ததையும் கண்டு அக்கிரகாரம் ஆத்திர அம்மண ஆட்டம் போடுவதன் சூட்சமம் சூரிய வெளிச்சமாகப் புலப்படும்.

விடுதலை விரிவாக எழுதிக் கொண்டே இருந்தது. பிரபல அரசியல் விமர்சகர் சோலை அவர்கள் நக்கீரனில் எழுதிய சிறப்புக் கட்டுரையில் (9.7.2011) பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

எதனையும் வர்க்கக் கண்ணோட்டத் தோடு பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரிய வில்லை. அய்யா, எதிர்ப்பவர்கள் வர்ணா ஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள். இது சோலைக்குத் தெரியவில்லையா? என்று ஒரு வாசகர் நமக்குக் குட்டு வைத்தார்.
சமச்சீர் கல்வி திட்ட எதிர்ப்பும், அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பின்னர்தான் நமது சிந்தனைச் சாளரம் திறந்தது. விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துகள் மண்டையில் உறைத்தன - என்று சோலை அவர்கள் எழுதினாரே!

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வி திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடை முறைப்படுத்தி விடக் கூடாது. அதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர். எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் (தமிழ்மண் -  ஜூன் 2011) எழுதியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

அது உண்மையாகி விட்டதே! குப்பன் வீட்டுப் பிள்ளையும், சுப்பன் வீட்டுப் பிள்ளையும் பார்ப்பனன் வீட்டுப் பிள்ளையும் சம மதிப்பெண் பெறும் நிலை வந்து விட்டதே என்று எண்ணும் போது அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் தினமணி தலையங்கமே தீட்டுகிறது இது கொடுக்கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்று எழுதுகிறது.

தமிழ்நாட்டில் அய்ந்து வகை கல்வி இருந்து வந்தது.

 1) மாநிலக்கல்வி வாரியம் 2) மெட்ரிகுலேசன் 3. ஆங்கிலோ - இந்தியன் கல்வி முறை 4) கீழ்த்திசைப் பாடத் திட்டம் 5) நர்சரி பள்ளிக் கல்வி முறை. 

இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு ஒரே சீரான கல்வி என்பதுதான் சமச்சீர் கல்வி. பொதுவாக சமம் என்ற சொல்லைக் கேட்டாலே குமட்டிக் கொண்டு வரும் குல்லூகப் பரம்பரைக் கூட்டத்துக்கு; சமச்சீர் கல்வியிலும் இதுதான் இழை யோடுகிறது.

பார்ப்பனர் அல்லாத மக்களை அவதூறாக நினைக்கும் துவேஷம் என்ற நெருப்பால் நெஞ்சுக்குள் சுட்டுக் கொண் டிருக்கும் பார்ப்பனர்கள் _- அவர்களின் ஊடகங்கள் தங்களின் புத்தியைச் சுத்திகரித்துக் கொள்ளப் போவதில்லை.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எழுதினார் -_ இந்தப் பிரச்சினையில் ஊடகங்களே! ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை, மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள் (விடுதலை 9.8.2011) என்று எழுதினாரே!

அவர்கள் திருந்தவில்லை திருந்த மாட்டார்கள் என்பதற்கு அடையாளம் தான் தினமணியின் தலையங்கம் _- தினமலரின் செய்தி வெளியிடும் முறை!

"சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!"
--------------------------------------- டாக்டர் டி.எம். நாயர்மதிப்பெண்கள்.. மதிப்பீடல்ல..!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யானதில்,  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சி! அவர்களே எதிர்பாராத அளவுக்கு பலரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் தேர்வில் 9 பேர் 498 மதிபெண்கள் பெற்று முதலிடம் வகித்தனர். 52 பேர் இரண்டாம் இடம். 137 பேர் மூன்றா மிடம். இதுதவிர, தமிழ்ப்பாடம் அல்லாமல் சம்ஸ்கிருதம் படித்து 499 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருபுறம். சில பெற்றோர்கள் வெளிப்படை யாகவே, "என் பையன் இந்த அளவுக்கு மதிப்பெண் பெறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை' என்று வியந்தார்கள்.
பிள்ளைகளைக் குறைத்து மதிப்பிடுவதுதான் பல பெற்றோரின் குணம். ஆனால், மாணவர்களே, தங்களுக்குள் பாராட் டிக்கொள்ளும்போது, "எப்படிடா? எனக்கே தெரியவில்லை!' என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது. வினாத்தாள் மிக எளிதாக இருந்தது என்பது ஒரு வாதம். சமச்சீர் கல்வி முறையால் தான் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைத்தது என்பது இன்னொரு வாதம். விடைத் தாள் திருத்தும் நடைமுறைகள், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கச் சொல்கின்றன என்பது ஒரு சிலருடைய வாதம்.
கடைசி ஒரு மாதத்தில், மாதிரி வினாத்தாள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்வு நடத்தியதும், மாதிரி வினாத்தாள்களில் இருந்த கேள்வி களே பொதுத்தேர்விலும் இடம் பெற்றதும் இந்த அளவுக்கு அனைத்து மாணவர்களும் மதிப்பெண் பெறக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.  இந்த வாதங்கள் அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இந்த உண்மைகள் தமிழகத்தின் நலன் கருதும் கல்வியாளர்களுக்குக் கசப்பான வையாகவே இருக்கும்.

ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் சாதனைகளால் எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை. அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப்  பொதுத்தேர்வில், இதைவிடக் கூடுதலான மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறுவார்கள். டி.வி. தொடர் நாடகத்துக்குக் கிடைக் கும் "ரேட்டிங்' போல, பொதுத் தேர்வுகளுக்கும் ஆண்டுதோறும், ஆட்சிதோறும் "ரேட்டிங்'கா தர முடியும்?

ஆண்டு நிறைவில் நடத்தப்படும் தேர்வு என்பது, ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காகவும், அடுத்த படிநிலையில் அவரை உயர்த்துவதற் காகவும்தான். ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடங்களி லும் புரிதல் கொண்டவராக இருக் கிறாரா என்பதைச் சோதிப்பதுதான் தேர்வு. ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் ஒன்று போல இருக்காது.

சில மாணவர்கள் முழுமையாகப் படித்து அறிந்திருக்கலாம். சிலர், சில பாடங்களில் சிறப்பாகவும், சில பாடங்களில் புரிதல் இல்லாமலும் இருக்கலாம். எல்லா பாடங்கள் தொடர்பாகவும் கேள்விகளைப் பல படிநிலைகளில் அமைத்து, அதன் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறனை அளவிடுவதுதான் தேர்வு. இந்த அடிப்படையில்தான் வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும்.

எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப் பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத் திறனை அறிய உதவாது.

இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.  கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள். ஒரு கணக்கை எவ்வாறு, படிப்படியாக அணுகி, மாணவனால்  விடை காணப்படுகிறது என்பது முக்கியம். சில படிகள் தாவி, விடையைச் சரியாக எழுதினாலும் அடித்து விடுவார்கள். "ஒரு சிக்கலை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் மனப்பயிற்சிதான் கணிதம். விடையைவிட, அதற்கான வழிதான் முக்கியம்' என்று மதிப்பெண் தர மறுத்த ஆசிரியர்களும் இதே தமிழ்நாட்டில் இருந்தார்கள்.

ஆங்கிலம், தமிழ் விடைத்தாள் என்றால் திருத்தல் இன்னும் கடுமையாக இருக்கும். ஆங்கிலம், தமிழ்  இரண்டாம் தாளில் கட்டுரைக்கு 10 மதிப்பெண் உண்டு. அதில் ஒரு தலைப்பின் கீழ் எழுதப்படும் கட்டுரையில் இன்னின்ன விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று 7  மதிப்பெண் வகுத்துக்கொள்வார்கள். மீதி 3 மதிப்பெண் அந்தக் கட்டு ரையில் மாணவர் கையாளும் சொந்த மொழிநடை, கருத்தை எடுத்துச் சொல்வதில் தெளிவு, எழுத்துப் பிழையில்லாமல் இருத்தல் ஆகிய வற்றுக்குத்தான்.

ஆகவே மொழிப்பாடத்தில் "நூற்றுக்கு நூறு' என்பது சாத்தியமே இல்லாமல் இருந்தது.  அறிவியல் பாடத்தில் 38,154 பேர் நூற்றுக்கு நூறு! கணிதத்தில் 29,905 பேர் நூற்றுக்கு நூறு! சமூக அறிவியலில் 19,680 பேர் நூற்றுக்கு நூறு! ஆங்கிலத்திலும்கூட பல மாண வர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். வினாத்தாள் மட்டும் எளிமையாகவில்லை, விடைத்தாள் திருத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அள்ளித் தரப்பட்ட மதிப்பெண் களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை!  கல்வி இலவசமாக இருக் கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும்.

தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந் தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத் துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர் வதாகவே தெரியவில்லை.

ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், ஆசிரி யர்களும், தமிழக அரசும் சுயமதிப்பீடு செய்தால் புரியும் - இவை கொடுக் கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்பது!
(தினமணி 4.6.2013)
 ******************************************************************
மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம். 

இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளைப் பார்த்ததும் தங்களைத்தான் பாராட்டத் தோன்றுகிறது. எங்கெல்லாம், தமிழ், தமிழ் இனம், தமிழ்ப் பிள்ளைகள், உயர்கின்றார்களோ அங்கெல்லாம் தாங்கள்தான் பின்னணியில் உள்ளீர்கள். எத்தனை லட்சம் இளைஞர்கள் தேர்ச்சி பெற்றாலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களே அதிகம் வாழும் ஜெயங்கொண்டம், வெட்டிக்காடு போன்ற ஊர்களிலிருந்து சில மாணிக்கங்களை உருவாக்கியுள்ளீர்களே, - இந்தச் சாதனை செய்தது தாங்கள் ஒருவரே!

அய்யா அவர்கள், தன் ஆயுளில் சேர்த்த ஒவ்வொரு பைசாவையும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகமாக உலகளவில் நூறு டாலருக்கு சமமாக உயர்த்திய சாதனையாளர் தாங்கள் மட்டுமே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று  பிரகடனப்படுத்தியவர்  பெயரால் நாம் பூசை செய்யும் சரஸ்வதிக் கடவுள் அயல் நாட்டுக்கு ஓடி விட்டாளே என்று பிரச்சாரம் செய்யும் நாத்திகர்கள் நடத்தும் பள்ளிகளில் நூற்றிற்கு நூறு தேர்ச்சியை செயல்படுத்தி கல்விக்கோர் கடவுள் இல்லை; தேவையுமில்லை என்பதை உலகுக்குணர்த்திய நாத்திகர் தாங்கள் மட்டுமே. உலகளாவிய நாத்திகர்கள் இந்த ஒரு சாதனைக்கே தங்களைப் பாராட்டுவர்.

ஓர் ஆலோசனை; நம் பெரியார் கல்வி வளாகங்களிலிருந்து தேர்ச்சியுற்ற 373 மாணவ மாணவியரையுமோ, அல்லது மாநில மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றவர்களையோ அவரவர் பெற்றோருடன் அழைத்து ஸ்ரீரங்கம் (அ) கும்பகோணம் போன்ற ஆரியம் வளர்க்கும் ஊரில் பாராட்டு நடத்தி நூற்றிற்கு நூறு தேர்ச்சி பெற சரஸ்வதியும் தேவையில்லை; வெங்காயமும் தேவையில்லை; இவர்களெல்லாம் தங்கள் அறிவால், திறமையால் தேர்ச்சி பெற்றார்கள் என்பதை உணர்த்தினால், பிரதோஷத்திற்கு கோயிலில் திரளும் மடையர்களில் பாதிப் பேராவது திருந்துவார்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம் எனக் கதைக்கின்ற கயவர்களுக்கும், திராவிடத்தால்தான் வாழ்ந்தோம், வாழ்கிறோம், வளருவோம் என்பதை உணர்த்த வாய்ப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

82 வயதான நெஞ்சக நோயாளியான நான் களத்தில் இறங்க இயலாது; ஆலோசனைகள்தான் கூற முடியும். மாணவரணியினரும், பகுத்தறிவாளர் கழகமும் இப்பணியில் கைகோர்க்கலாம். இனமான உழைப்பில் தாங்கள் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும் இன உயர்வுக்கே உதவுகிறது.

மீண்டும் பாராட்டுகள்!
      -------------------------------அன்பார்ந்த நாகூர் தி. சோமசுந்தரத் தேவர்
****************************************************************************
 ---------------------கலி.பூங்குன்றன் துணைத் தலைவர் திராவிடர் கழகம் அவர்கள் 8-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
 

61 comments:

தமிழ் ஓவியா said...


மக்களாட்சி முறை


சாக்ரடீஸ் மக்களாட்சி முறையைப் பார்த்துச் சிரித்தார்.

அவர் தனிச் சிலர் ஆட்சிமுறையின் நன்மைகளை வியந்து பாராட்டி பேசினார்.

ஏதென்சின் மக்களாட்சி முறையை எள்ளி நகைப்பதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. நானூறாயிரம் ஆதிக்குடி மக்களில் இருநூற்றைம்பதாயிரம் பேர், அரசியல் உரிமைகளின்றி அடிமைகளாக இருந்தனர்.

உயர் அதிகார அமைப்பான உச்சநீதி மன்றத்தில் குடி மக்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து அகர வரிசையில் தேர்வு செய்யப் பெற்ற ஓராயிரம் பேருக்கு மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். இதைவிட முட்டாள்தனமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

சாக்ரடீஸ் இதைப் பார்த்து நகைத்து ஏதென்சின் மக்களாட்சி முறையைக் குதர்க்கவாதம் செய்யும் சமுதாயத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டினார்.

மக்களாட்சிக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் சிலர் ஆட்சிக் கட்சி பொடியாகிப் போய் விட்டது.

மக்களாட்சி முறையைப் பற்றிய கருத்துக்களுக்காகவும் ஏதென்சு இளைஞர்களிடம் பல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை விதைத்துப் பரப்பியமைக்காகவும் சாக்ரடீசைத் தீர்த்தக் கட்டுவதென்று மக்களாட்சிக் கட்சி முடிவு செய்தது.

சாக்ரடீஸ் இதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும்.

ஆனால் தத்துவத்தின் தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதன் வாயிலாக, மனித மனம் வளர்ச்சியடைவதற்குச் சிந்தனை விடுதலை என்பது மக இன்றியமையாத உட்கூறு என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

(நாம் ஆராய்ந்து பாராமலே மெய்யென ஏற்றுக் கொள்ளும் பேச்சுரிமையைப் பெற்றுத் தந்த எண்ணற்ற தத்துவ ஞானிகளுக்கு நாம் உண்மையில் நன்றியுடையவர் களாவோம். பேச்சுரிமை நடைமுறையில் இல்லாத அக்காலத்தில் வால்டேர் விடா முயற்சியுடன் பேச்சுரிமையை ஆதரித்து வாதாடினார்.

ரூசோவின் இயற்கை இயல் வாதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வால்டேர் சொன்னார்:

நீங்கள் சொல்வதனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

ஆனால் அதைச் சொல்லும் உங்கள் பேச்சுரிமையை இறுதிவரை நான் உறுதியாக ஆதரிப்பேன் என்றார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைப் பரப்புரையில் தளராத உறுதியுடனும் துணிவுடனும் பெரியார் அரும்பாடுபட்டார். கீழத்தரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, பகட்டு ஆரவாரம் கொண்ட, ஆவ ணம் பிடித்த மதம் வெறுமைக்குழியில் விழுந்தது. இதனை அச்சமின்றிப் பெரியார் திறனாய்ந்தார். சாக்டீரசின் காலத்து ஏதென்சு, பல்வேறு தத்துவங்களின் வார்ப்புப் பட்டறையாக விளங்கியது.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 39ஆம் பக்கத்தில்)

- க. பழநிசாமி, கன்னிவாடி

தமிழ் ஓவியா said...


குறும்பா


தீர்ந்ததா?

குருவுக்கு...
அர்ச்சனை...!
குருக்களுக்கு
தட்சிணை....!
பக்தனுக்கு...
தீர்ந்ததா...?
பிரச்சினை...??

குறும்பா

வெறி பிடித்தோர் ஆட்டம்!
நரித் தந்திர ஆட்டம்...!
சொறி பிடித்த வெறி நாயை
ச் சூ விட்டாடும் சூதாட்டம்...!
நெறி கெட்ட
கிரிக்கெட்டால்...
கண்ட பலன்..?
நாட்டு வளம்
வீட்டு நலம்..
கெட்டதுதான்..
இலாபம்.!!

- _ கோ. கலியபெருமாள்
மன்னார்குடி_1

தமிழ் ஓவியா said...


ஞானக் கண்ணோ!


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (14.6.2013) ஒரு கட்டுரை. காஞ்சிபுரத்தில் கண் கொடுத்த வைத்தீஸ்வரன் - என்பது தலைப்பாகும்.

கேரளப் பெண் ஒருவர் தலையில் அடிபட்டுக் கண் பார்வை பாதிக்கப்பட்டா ராம். குருவாயூர் தொடங்கி கும்பகோணம் வரை க்ஷேத் திராடனம் சென்றால் கண் பார்வை வந்து விடும் என்று சொன்னார்களாம். அவ்வாறே அந்தப் பெண் சென்றாராம்; வைத்தீஸ் வரன் கோயிலில் வழிபடும் போது - எதற்கும் காஞ்சி புரம் சென்று பெரிய வாளைத் தரிசித்தால் பார்வை வரும் என்று கோயில் குருக்கள் கூறினா ராம் (எங்கெங்கெல்லாம் சங் கிலித் தொடர் பார்த்தீர் களா?) அவ்வாறே அங்கு சென்று சந்திரசேகேந்திர சரஸ்வதியைத் தரிசித் தாராம் - பழத்தட்டுக்களுடன்.

அப்பொழுது அந்தப் பெண்ணின் கணவரைப் பார்த்து சங்கராச்சாரியார் என்னைத் தெரியற தான்னு உங்க சம்சாரத் துக்கிட்டேயே கேளுங்க என்றார். அத்துடன் அருகி லிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரிய வாள். (தேஜஸ் என்பது இதுதானோ!) அந்த நேரம் அந்த பெண், குருக்கள் சொன்ன (வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன) சந்நியாசி இதோ தெரிகிறாரே என்றாராம் சத்தமாக பரவசம் பொங்க!

ஆமாம் காஞ்சி தெய் வம் அவளுக்குக் கருணை புரிந்தது. நம்பினார் கெடு வதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு என்று சும் மாவா சொல்லி வைத் தார்கள் என்று விஜயபார தம் அவிழ்த்து விட்டுள்ளது.

அற்புதத்தைச் சொல்லி தான் எந்த மதத்தையும் காப்பாற்ற வேண்டும் என் றாலும் சங்கராச்சாரியார் களைப் பொறுத்தவரை அற்புதங்களை நம்பாத வர்கள், இன்னும் சொல்லப் போனால் கடவுளை ஏற் காதவர்கள். தானே கடவு ளாக, கடவுளே தானாக இருப்பதாக ஸ்மார்த்தர் களின் சித்தாந்தம். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அப்படி இருக்கும் போது இது என்ன புதுக் கதை? விஜயபாரதத்தின் 24ஆம் பக்கக் கட்டுரைக்கு 35ஆம் பக்கத்தில் பதில் இருக்கிறது.

கேள்வி: குருடர்கள் கண் பார்வை பெறு கிறார்கள். செவிடர்கள் (காது) கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் பிரச் சாரம்பற்றி.

பதில்: ஆஹா ரொம்ப நல்லது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டாம் - டாக் டர்கள் வேண்டாம் - சி.எம்.சி. ஆஸ்பத்திரி வேண்டாம் - மெடிக்கல் ஷாப் வேண்டாம் நல்லது தானே... ஒரே ஒரு சந்தே கம் தெரசா, டி.ஜி.எஸ். தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றது ஏனோ? இதுதான் விஜயபாரத்தின் பதில்; இதே கேள்வியை சங்கராச்சாரியாரைத் தரிசித்ததால் பெண் பார்வை பெற்றார் என்பதுபற்றியும் கேட்கலாம் அல்லவா!

Tail - Piece: அந்தக் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரே - அது ஏனோ?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அய்ந்தாண்டுகள் ஆகி விட்டதால் மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கருநாடகம் சொல்லுவது சரியல்ல


கெசட்டில் வெளியான தேதியிலிருந்துதான் கணக்கிடப்பட வேண்டும்!

கருநாடகத்தின் திசை திருப்பும் நாடகம் - எச்சரிக்கை!

தமிழர் தலைவர்
விடுத்துள்ள முக்கிய அறிக்கை

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வழங்கி அய்ந் தாண்டுகள் கடந்து விட்டதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்போம் என கருநாடக அரசு கூறுவது திசை திருப்பும் நாடகம் ஆகும். தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்ட நாளி லிருந்து தான் அது கணக்கிடப்பட வேண்டும். அதுதான் சட்டப்படியான நிலையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லெணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது.
நடுவர் மன்ற தீர்ப்பை மதித்ததுண்டா?

குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!

உச்சநீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புக்களைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்) நேற்று முன்னாள் (6.6.2013) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு தெரிவிக்கப் போவது என்ன?

வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழு (தற்காலிகக் குழு)க் கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் - 5 ஆண்டு களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது

சட்டப்படியும் சரி

நியாயப்படியும் சரி

சரியான நிலைப்பாடு அல்ல.

கண் ஜாடை நடவடிக்கையா?

அதற்குரிய காரணங்கள்:

மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் - கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?

இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக்காட்டினோம்; இதனால் உருப் படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.

தமிழ் ஓவியா said...

அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சி யாகத்தான் அமைந்தது.

தேவை நிரந்தரக் குழு

உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை - கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.

அய்ந்தாண்டுகள் ஆகிவிட்டதாம்!

இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!

நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.

எதிலிருந்து கணக்கிடுவது?

1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007; அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல் தான் போட முடியும்.

2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும் நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசை திருப்பல் நாடகம் ஆகும் - இதனை ஏற்கவியலாது.
தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!

கர்நாடகத்தில் அடிக்கடி அனைத்துக் கட்சிக்கூட்டம் - ஒருமித்த முடிவு!

தமிழ்நாட்டில் - அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!

தமிழ் சமுதாயமே அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?
வேதனை! வெட்கம்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

8.6.2013சென்னை

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையும் பி.ஜே.பி.யின் பார்வையும்ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது.

பிஜேபி.யைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் இலங்கைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்றுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் சந்தித்தனர்.

இந்தப் பயணம் குறித்து பிஜேபி குழு என்ன கூறுகிறது? இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தயா ராகவே உள்ளது. ஆனால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் சரியானதாக இருக்கும். இலங்கையை இந்தியா நட்பு நாடாகத் தான் பார்க்கிறது ஆகவே அந்த நாடு சீர் குலைவதை இந்தியா அனுமதிக்காது என்று கூறியுள்ளது.

இதைச் சொல்லுவதற்குத்தான் பிஜேபி குழு இலங்கை சென்றதா? தமிழர்கள் அங்குள்ள பிரச்சினைகளை யாரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்?

தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்ற வகையில் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சிங்கள இன வெறியைத் தூண்டியும் செயல்படுகிறவர்களிடம் எந்த வகையில் தமிழர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட்டது இல்லையா? இந்தியா தலை யிட்டது இல்லையா? பாகிஸ்தான் சம்பந்தப் பட்டதுதானே வங்காள தேசப் பிரச்சினை - அதற்குத் தீர்வு எப்படி கிடைத்தது? இந்தியா வின் பங்கு அதில் கிடையாதா?

அப்படிப் பார்த்தால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்றது எப்படி? இன் றைக்கு அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் வகையில் செயல்படும் பொழுது இந்தியா அதில் தலையிட பாத்தியதை உடையது ஆகாதா?

ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது வெறும் உணவு, உடை, உறையுள் பிரச்சினை மட்டும் தானா? அதனைத் தாண்டியும் தங் களின் இனம், மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுபற்றிய கருத்தென்ன?

இந்தப் பிரச்சினையில் அந்தரங்க சுத்தியோடு பிஜேபி செயல்பட்டது கிடையாதே. இதற்கு முன்பு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை பிஜேபி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்றபோது, அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து பேசிய பிறகு, தனியே ராஜபக்சேயுடன் சுஷ்மா சுவராஜ் பேசியதுபற்றி சர்ச்சைகள் கிளம்பவில்லையா?

அதன்பின் புத்தர் விழா என்று சொல்லி ராஜ பக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்தது இதே சுஷ்மா சுவராஜ்தானே!

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரசு - ஒரு நாடு இந்தியாவிற்கான நட்பு நாடு என்று சொல்ல எப்படி மனம் வருகிறது?

தமிழர்களை மறந்து விடுங்கள் - மனித உரிமைக் கண்ணோட்டத்திலாவது இதனை அணுக வேண்டாமா?

மனித உரிமைகள் ஒரு நாட்டில் பறிக்கப் படுமேயானால், இனப்படுகொலை (Genocide) ஒரு நாட்டில் நடைபெறுமானால், அதில் தலையிட மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற நியதிகூட பிஜேபிக்குத் தெரிய வில்லையா?

இங்குள்ள சோ ராமசாமிக்கு என்ன பார்வையோ, அதே பார்வைதான் பிஜேபிக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்!புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப் பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

தமிழ் ஓவியா said...


சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல கோயில்களும்தான்


புதுக்கோட்டை டவுனில் பிருந்தா வனம் என்றொரு பகுதி உள்ளது. வடக்கு ராஜவீதியும் தஞ்சை சாலையும் இணை யும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விபத்துகள் ஏதும் நடைபெறா வண்ணம் சிக்னலும் அமைக்கப்பட்டிருக் கிறது. இன்று காலை 5-மணியளவில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்றும் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சை சாலையை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பிருந்தாவனம் முக்கத்தில் அதிவிரைவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. அதில் இரு லாரிகளின் ஓட்டுனர்களும் தங்களையும் தங்களது வாகனங்களையும் காப்பாற்ற திருப்பியும் விபத்துக்கு உள்ளானது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.

உடைந்து நொறுங்கியது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்ச நேயர் கோயில்தான். பக்தர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் ஆஞ்ச நேயரை அவர் ராம பக்தராக இருக்கின்ற காரணத்தாலும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதாலும் ஆஞ்ச நேயருக்கு மிகப் பெரிய வலிமை இருக் கிறது என்றும் வல்லமை பொருந்திய அவரை வணங்கினால் அவருக்கு உரிய சக்தியைத் தம் பக்தர்களுக்கு அருளி பாலித்து வழங்கி விடுவார் என்றும் கற்பிக்கப் பட்டு ஆங்காங்கே அதிக எண்ணிக்கையில் கட்டப் பட்டு வரும் ஆஞ்சநேயரின் சக்தி அவரது இருப் பிடத்தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது.

அந்த இடத்தில் விளக்குத்தூண் மட்டும் இல்லாதிருந்தால் அருகில் உள்ள கட்டடம் எப்படி உடைந்து சேதாரமாகி இருக்கும் என்பதைக் கற்பனையும் செய்ய இயலாத அளவிற்கு அந்த விபத்து நடந் திருக்கிறது. கோயில் உடைந்து நொறுங்கி விட்டது. இதுதான் ஆஞ்சநேயரின் பலம் என்பதை பக்தர்கள் உணரும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழரின் அடிமை விலங்கொடிக்கும் நாளாக இருக்கும். மேலும் சாலையோரங்களில இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல இது போன்ற பக்திப் போதையை வளர்க்கும் கோயில்களும் தான்.

ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


என்று தணியும் இந்த (கிரிக்கெட்) மோகம்?வாட்டர்லு சண்டையின் வெற்றி, ஈடன் விளையாட்டு மைதானத்தில் உருவெடுத்தது. [The success of Battle of waterloo lies in the sports field of Eton] என்று, விளையாட்டின் மேன் மையை, சிறப்பை உயர்த்திக் கூறும் வகையில் இதைக் கூறுவதுண்டு. ஒலிம்பிக் விளையாட்டின் அடிப் படை நோக்கமே பலவகை விளை யாட்டுகளின் சிறப்பு கூறுகளை ஊக்கப்படுத்தவும், ஒருவரின் ஆளு மைத் தன்மையை வளர்க்கவும், விளையாட்டுப்போட்டிகளை காழ்ப்பு உணர்வு அற்றதாக (Healthy competition) கருதவேண்டும் என்பதற்குத் தான் அறிக்கையும், ஆர்ப்பாட்டமும் இன்று அந்த பைத்தியம் (கிரிக் கெட்) நமது இளைஞர்கள் - மாண வர்கள் பலருக்கு பிடித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் எப்படி மது வியாபாரம் நடைபெறுகிறதோ, அதுபோல கிரிக்கெட் என்பது கொள்ளை லாப குபேரர்களின் போட் டிப் பந்தயத் தொழிலாகி விட்டது.. பான்பராக், குட்கா, மது இந்த வரிசையில் இந்த கிரிக்கெட் சூதாட்ட மோகம் மிகக்கேடானது ஆகும்.

நிலத்தையும், மனித, மிருக உயிர் களையும் தன் வயிற்றில் போட்டுக் கொள்ள பொங்கி எழுந்த சுனாமி போல், ஊழல், பணக்கொள்ளை, சூது, அவமானம், பெண் கவர்ச்சி போன்ற வற்றை விழுங்கிய சுனாமியாக அய்.பி.எல்.கிரிக்கெட் விவகாரம் இந்தியாவின் கரும் புள்ளியாக காட்சி அளிப்பதை சுட்டிக்காட்டிச் சுடச்சுட வெளிவந்த தமிழர் தலைவரின் அறிக்கையில் காணப்படும் கருத்தே மேலே உள்ளது. அறிக்கையுடன் நிறுத்தாமல் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது திராவிடர் கழகத்தின் பொதுநல நோக்கை பறைசாற்றுவதாக உள்ளது. இதன் முக்கியத்துவத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் அய்.பி.எல். கிரிக்கெட்டின் கேவலத் தன்மையை பொதுமக்கள் கருத்துக்களை எடுத்து கோலம் போட் டிருப்பதை கீழே கொடுக்கப்படுகிறது.

மக்களின் குரல்

அய்.பி.எல். ஒவ்வொருவரும் பணம் ஈட்ட வழிவகுக்கும் ஒரு வியாபார சக்கரம், கிரிக்கெட்டின் மேல் உள்ள மதியற்ற வெறித்தன ஆர்வத்தை மூலதனமாக வைத்து நடை பெறுகிறது. இந்த விளை யாட்டில் பெண்களை நடத்தும் விதம் வெறுக்கத்தக்கது. இந்த விளையாட்டை கவர்ச்சிகரமாக அமைக்க பெண்களின் உரிமையைத் தவறாக பயன்படுத்து கின்றனர்.

இந்திய பைசா லீக் மற்றும் அதன் வேறு பெயரில் உள்ளவை யாவும் சந்தே கத்தின் கீழ் செயல்படுவன. அய்.பி.எல். மதிப்புக்குரியவர் விளையாட்டு அல்ல, சினிமா நடிகர்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள் வழி நடத்தும் வியாபார பொழுது போக்குத் தன் மயது. அய்.பி.எல். ஊழல் நிறைந்த பொழுதுபோக்கு விளையாட்டு.


தமிழ் ஓவியா said...

அய்.பி.எல். ஒரு சக்தி வாய்ந்த சர்கஸ் பொழுதுபோக்கு போன்றது. (இந்த விளையாட்டு) ஈடுபாட்டுடன் ஆடக்கூடிய விளையாட்டு என்று நம்பும் முட்டாள்களல்ல மக்கள், சிலரைக் கைது செய்த நிகழ்ச்சி மூழ்கியுள்ள பனிப்பாறை யின் வெளி மூக்கே அய்.பி.எல். அலமாரியிலிருந்து மேலும் பல ஊழல்கள் வெளிவரும். பார்வையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
கிரிக்கெட்டை விரும்பும் பல மில்லியன் பேரில் நானும் ஒருவன். விளையாட்டு என்ற ஒரு முறையில், குழு அளவிலும், அலுவலக அளவிலும் நான் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அண்மையில் இந்த விளையாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் இந்த விளையாட்டின் சவப்பெட்டியின் மூடியில் அடிக்கப்பட்ட ஆணி என்பதை நிரூபித்துவிட்டது. இது என்னுடைய ஆர்வத்தையும் குலைத்துவிட்டது, ஜார்ஜ் பெர்ணார்ட்ஷாவும், குட்யார்ட் கிப்ளிங் கும் கூறியதை நினைக்கத் தோன்று கிறது. 11 மடையர்கள் ஆடுவதைத் 11,000 மடையர்கள் பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட்.

முதற்கண் திரையுலகத் தொடர்புடைய வர்களை இந்த விளையாட்டில் ஈடுபடுத்தி யிருக்கக் கூடாது. எளிய குடிமகன் புரிந்துக்கொள்ள முடியாத மர்மமாக உள்ளது. அய்.பி.எல். எல்லா சட்ட விரோதச் செயல்களுக்கும் கருப்புப் பணமே காரணம்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உகந்த வகையில், விளை யாட்டுக்காரர்களுக்கு தண்டனை இருக்க வேண்டும், குற்றவாளிகளின், வெட்கமற்ற, அசிங்கமான முகத்தை அவர்களின் ரசிகர்கள் பார்க்கும் வகை யில் அவர்கள் முகத்தை மூடக்கூடாது. (நன்றி: தி.இந்து 17,18-5-2013)

மட்டை விளையாடில் மங்கையர் ஆட்டம்

அய்.பிஎல். இன் மற்றொரு பங்களிப்பு அல்லது அன்பளிப்பு என்று சொல்லும் வகையில் பெண்ணினத்தை கவர்ச்சி காட்சிப் பொருளாகவும், கொச்சை படுத்தும் வகையில் கையாண்டிருப்பதை பச்சையாக, விளையாட்டுத்துறை பத்திரிகை எழுத்தாளர் சாரதா உக்ரா தி இந்து 16.5.2013 தேதி இதழில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ள சில செய்திகளைப் பார்ப்போம்.

அய்.பி.எல். விளையாட்டு நிகழ்ச்சியை காண்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் காகவே ஒரு பெண் குழு செயல்பட்டது. அந்த பெண்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வழங்கினர். இளம் வட்டங்களின் துள்ளாத மனமும் துள்ளும் வகையில் ஆட்டமும் பாட்டும் நடத்தினர். விளை யாட்டு அறிவிப்புக்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட இரண்டு பெண்கள் அவர்களின் விளையாட்டைப் பற்றி அறிந்ததற்காக அமர்த்தப்படாமல், அவர்களின் தோற்றத் துக்காகவே அமர்த்தப்பட்டனர். கிரிக்கெட் தொலைக்காட்சியில் பணி ஆற்ற தேர்ந் தெடுக்கும் நேர்முகத் தேர்வில், நீங்கள் எந்த கிரிக்கெட் ஆட்டக்காரருடன் உடல் இன்பம் பெற விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கும் கேவலச் செயலும் நடைபெறுகிறது.

அய்.பி.எல். 2013 நிகழ்ச்சியின் போது ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக ஒரு பக்கம் உற்சாகமூட்டும் பெண்கள் நடன ஆட்டத்திற்குப் பஞ்சமில்லை. நிகழ்ச்சி கருத்துரையின்போது (Commentary) இடைஇடையே சிலர் உதிர்த்த முத்தான மொழிகள், நாம் விபச்சார வழிமுறையை அறிந்திருக்க வேண் டும் (கபில்தேவ கூறியது) ஆட்டம் ஆடும் பெண்களிடம் பணம் இருக் கிறது, ஆனால் மதிக்கத்தக்கது இல்லை (நவ் ஜோத்சிங் சித்து), அய்.பி.எல். கிரிக்கெட் என்பதை விட ஒரு பொழுது போக்கு. வயதான ஆண்களுக்கு ஏன் ஒரு வேடிக்கை இருக்கக் கூடாது? (பிரகலாத் காக்கர்) பொழுது போக்கு என்ற முகமூடியில், பால் உணர்வைத் தூண்டும் பேச்சுகளும், இரு பொருள் ஆபாச உரைகளும் உண்டு.

விளையாட்டு வல்லுநரின் பரிந்துரை

நிற்க, கிரிக்கெட் விளையாட்டு மோகத்தால் மற்ற விளையாட்டு களுக்கு ஏற்படும் சீரழிவைத் தெளிவு படுத்தும் வகையில், அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்து விளையாட்டுத்துறை பொருளாதார நெறியாளர் (Sports Economist) ஆலன் சான்டர்சன், நம் நாடு கவனத்தில் கொள்ள வேண்டிய மதிக்கத்தக்க வலுவான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது:

இந்தியா தன்னுடைய முழு முக்கியத்துவத்தையும் ஏன் கிரிக்கெட் விளையாட்டில் காட்டுகிறது என்பதற் கான காரணம் பற்றி எனக்குத் தெரிய வில்லை. கால்பந்து விளையாட்டுக்கு சரி என்று கூறும் தலை ஆட்டுவ தோடு நின்றுவிடுகிறது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் பங்கேற் பது என்ற நிலையோடு நின்று விடுகிறது. நாட்டின் மொத்தத்திற்கு, குறிப்பாக, வளர்ந்துவரும் பள்ளி சிறுவர்களுக்கு, நன்கு அறியப்பட்ட ஆறு வகையான விளையாட்டுகளின் பக்கம் ஆர்வத்தைத் திருப்பிவிட வேண்டும். ஆனால் இந்தியா இந்த ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) போதைக்கு அடிமையாக இருப்பது ஒரு புதிராக உள்ளது. (நன்றி: (e‹¿: Times of India - 20.5.2013)

தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை வெளியூர் 17.5.2013 இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையை ஒத்து இருப்பதைக் காணும்போது, அறிஞர் களின் சிந்தனை ஒன்றாகவே இருக்கும்(Great Men Think Alike) என்பது சரியாகவே உள்ளது.

- மு.வி.சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிறப்புரிமை


வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக் கும் டாக்டர் மூஞ்சே அவர்களுக்கும் வங்காளத் திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை மேற்படி இரு கனவான் களும் வீரர்களைப் போல் மீறி நடந்தார்கள். அம்மீறுத லானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தே சித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.

அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி.ரங்காச் சாரியார் முதலிய பார்ப்பனர்கள் அரசப் பிரதிநிதி யிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வருகிறது.

ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்றுவதற்கு மற்றொரு புறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்குப் பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.

அதாவது:-

இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.

ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.

அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.

இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?


பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)
என்றும் போரே எதிலும் வெற்றியே!

1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.

எதற்கும் துணிந்து விட்டோம்;

எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;

நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;

எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;

நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.

- க.பழனிசாமி

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)

விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)சில உறுதியான உண்மைகள்

தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.

நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.

1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.

3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.

4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.

5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.

6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.

7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.

8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.

தமிழ் ஓவியா said...


மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!


மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.

நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.

அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.

அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.

அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.

திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.

ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?

கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.

பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.

அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?

மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?

உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.

அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.

சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.

ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.

மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!

மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்

புதிய விளக்கம்:

சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?

குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்

பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.

வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.

வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.

தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.

இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்


படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.

2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது

OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.

BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.

BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.

MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.

SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.

ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.

35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!

(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை புகையும் மாணவர்கள்

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் 50 சதவிகிதமாக இருந்த புகைப்பழக்கம் தற்போது 20 சதவிகித மாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 24 சதவிகித ஆண்கள் புகையிலை மற்றும் புகைப்பழக்கத்திற்குஅடிமையாகியுள்ளனர். பெண்களில் 8 சதவிகிதமும்; 11 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களில் 3 சதவிகிதமும் புகைப் பழக்கத்துக்கு அடிமை யாகியுள்ளனர். இதனைத் தடுக்கும் கடமை பெற்றோர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. எனவே, அவர்கள் குழந்தைகள்முன் புகையிலை உபயோகிக்கக் கூடாது.

குழந்தைகளிடையே புகையிலை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதனைத் தடுப்பதில் பங்கு உள்ளது என்று அடையாறு புற்றுநோய் ஆய்வு மய்யத்தின் தலைவர் வி.சாந்தா கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் தேவை


செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

கருத்து


இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.

-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.

- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்

தமிழ் ஓவியா said...

கலைஞர் - 90


இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

தமிழ் ஓவியா said...


வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடுகலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?


அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும்


கிரிக்கெட்டைத் தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை _ - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பதுதானே பொருள்?

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச்சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு _- தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கியப் புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்துவிட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் _- நெருக்கடி அவப்பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை _ நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்-காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு _- மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிகை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் கடந்த 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தியது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)

கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது; அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் _- அறப்போர் _- தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கவிதை


வேடிக்கையா?
வாடிக்கையா?

சிலைக்கும் சிலையற்றதுக்கும் வேடிக்கை
சிதறும் மனிதஉடல்கள் வாடிக்கை
கொலையும் கொலைவெறியும் மதமானது
குண்டுகள் வெடிப்பதால் நிஜமானது.

மக்காத கொடிய நச்சுக்குப்பையால்
மதமென்ற மரத்தை நட்டுவிட்டான்
மனிதக் குருதியால் நீர்பாய்ச்சி
மடமையின் உச்சத்தைத் தொட்டுவிட்டான்.

மடமை உண்டாக்கிய மதங்கள் மானுடப் பயிர்களை எரிக்கின்றது
குலத்தை ஒழிப்பது கோடாரிக்காம்புகள்
குவலயத்தை அழிப்பது கேடான வேதங்கள்.

மனநோயாளி செய்யும் குற்றத்திற்கு
மன்றத்தில் தண்டிக்கச் சட்டமில்லை
மனநோயாளி யாக்கும் மதங்களை
மண்ணைவிட்டு அகற்றத்தான் திட்டமில்லை

அய்ந்துவேளை தொழுகை நடத்துவோர்க்கும்
ஆறுகால பூசைகள் செய்வோர்க்கும்
ஆரம்ப முதலே போராட்டம்
ஆறாய் ஓடுதே குருதியோட்டம்.
மனிதன் வணங்கும் வழிபாட்டிடம்
மனித உயிர்களின் பலிபீடம்
கொலையை கலையாய் கையாளுகிறான்
தலைகொய்ய அலையாய் அலைகிறான்

கடவுளுக்குப் பலிகொடுத்துத் துதிப்பவன்
கடவுளுக்கே பலிகிடாவாக ஆகிவிட்டான்
கடவுளைக் கற்பித்தலும் பரப்புவதும்
கயவன் செய்யும் செயல்தானே.

மனித இரத்தம் குடித்தவர்கள்
மாண்புகளாய் உலா வருகிறார்கள்
புனிதன் என்று பெயரிட்டு
புவியை ஆட்சி செய்கிறார்கள்.

- மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

தமிழ் ஓவியா said...

சிந்துவெளியில் தமிழர் தொன்மை


சிந்துவெளிப் பண்பாடும், சங்கத்தமிழ் தொல் மரபுகளும் என்ற இந்த ஆய்வுரைக்கு உள்ளே செல்வதற்கு முன்னால் நான் இந்த ஆய்விற்குள் நுழைந்த விதம், ஏன் இந்த ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறேன்?

அதற்கான பின்னணியை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் மதுரையைச் சேர்ந்தவன்.

1978இல் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1980இல் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து, அதற்குப் பின்னால் ஒரு தமிழ் நாளிதழில் நான்கு ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றி-விட்டு 1984இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தேன். இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்ற தமிழ் இலக்கிய மாணவர் இதுவரையிலும் நான் -_ முதல் மாணவர் என்று சொல்லப்பட்டபோது, அப்போதெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். இதுவரையிலும் 28 ஆண்டுகளுக்குப் பின்பும் ஒரே மாணவர் என்று சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.சமீபத்தில்கூட இந்திய ஆட்சிப் பணியை எந்த மொழியில் எழுதலாம் என்ற பிரச்சினை வந்தபோது மீண்டும் இந்த வரலாற்றைச் சுட்டிக் காட்டினார்கள். இந்த 28 ஆண்டுகள் ஒருவர்தான் வரமுடிந்தது. நான் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து வடமாநிலங்களில் பணியாற்றக்-கூடிய சூழல் வந்தாலும்கூட, அப்போதும்-கூட நான் ஒரு தமிழ் மாணவன் என்பதை ஒரு முன்னுரிமையாக, ஒரு சலுகையாக வைத்து, தமிழ்நாட்டிற்கு வர வேண்டுமென்று வாய்ப்புக் கோரவில்லை. ஏனென்றால், ஒரு தமிழ் மாணவன் எந்த வகையிலும் யாரிடமும், எதற்காகவும் சலுகை கேட்கத் தேவையில்லை என்பதில் எனக்கு ஒரு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. அதற்காக நான் பின்னோக்கிப் பார்த்து மகிழ்ச்சி-யடைகிறேன். நான் இந்த மாநிலத்தை விட்டுப் போகும்போது கண்ணீர் மல்கதான் சென்றேன்.

1991இல் எழுதிய அன்புள்ள அம்மா என்ற எனது கவிதைத் தொகுப்பில் நான் தமிழ்நாட்டை விட்டு ரயில் ஏறிய கதையை தனிக் கவிதையாகவே எழுதி இருப்பேன். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் தமிழ்-நாட்டை விட்டு வந்துவிட்டோமோ என்று கவலையாக இருக்கும். அந்தச் சூழலில் நான் ஒடிசாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒருநாள் தமிலி என்ற பெயர் சூட்டப்பட்டு ஓர் ஊரினுடைய மைல் கல்லைப் பார்த்தேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரு ஜீப்தான் இருக்கும். கார் கொடுக்கப்படவில்லை. சர்வீஸினுடைய தொடக்கப் பணிக்காலம். எனது ஜீப்பிலிருந்து இறங்கி அந்தக் கிராமத்திற்குள் சென்றேன். அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் குயி எனப்படும் திராவிட மொழியைப் பேசக்கூடிய ஒரு பழங்குடியினர் என்பதைத் தெரிந்து கொண்டதற்குப் பின்னால் ஒருவேளை இந்த திராவிட மொழியைப் பேசுபவர்கள் இந்தப் பழங்குடி மக்களுடைய பெயர், ஊர்ப் பெயர் தமிலி என்பதற்கும், தொல் திராவிட வடிவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சிந்தனை எனக்குள் ஓடியது. அதற்குப் பின்னால் அந்தப் பகுதியில் பணியாற்றும்போது, கோயா, புயி உட்பட திராவிட மொழிகளைக் கற்கத் தொடங்கினேன். அதற்காக ஆசிரியர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து கற்றுத் தருவார். அப்போது நான் சுற்றுப்பயணம் செல்கின்ற நேரங்களில் அங்குள்ள பழங்குடியின கிராமங்களில் என் கண்முன்னால் விரிந்த காட்சிகளை அப்போதே நான் தமிழ்-நாட்டில் பல இடங்களில் பேசியிருக்கிறேன். அங்கு குறிஞ்சி நிலப் பின்னணியில் மக்கள் வாழ்க்கை நிலையைப் பார்க்கும்-போது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, இளைஞர்கள் எல்லாம் தங்கியிருப்பதற்காக ஒரு தனிக்கூடம், இளம்பெண்களெல்லாம் தங்கி இருப்பதற்கு ஒரு தனிக்கூடம், அந்த இளம்பெண்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு செவிலித்தாய், வயது முதிர்ந்த ஒரு பெண், பெரும்பாலும் ஒரு விதவை. இப்படிப்பட்ட அமைப்புகளைப் பார்க்கும்போது பாங்கர் கூட்டம், செவிலி மரபு, நற்றாய் மரபு என்றெல்லாம் நான் அகத்திணையிலும், சங்க இலக்கியங்களிலும் படித்த காட்சிகள் எல்லாம் என் கண்முன்னால் வரும். சங்க இலக்கியத்தில் என்னென்ன வரப்-பட்டிருக்கிறதோ, அதையெல்லாம் காட்சி வடிவங்களாய் என் கண்முன் விரிவதைப் பார்த்தவுடன் சட்டீஸ்கர் மாநிலமும், ஒடிசா மாநிலமும் ஒரு வகையில் சங்க அக இலக்கியங்களுக்கான ஓர் ஆய்வுக்கூடம் என்றே எனக்குத் தோன்றியது. இந்த வகையில்தான் எனது உறவு தொடங்கியது.

தமிழ் ஓவியா said...

அப்போதெல்லாம் கணிப்பொறிகள் பெரும்பாலும் வழக்கத்திற்கு வரவில்லை. இந்த ஊர்ப் பெயர்களினுடைய ஆய்வுத் தரவுகளை-யெல்லாம் நூல்களிலிருந்துதான் எடுக்க வேண்டும். நான் ஓர் இடத்திலிருந்து மாற்றலாகிப் போகும்போது என்னுடைய வீட்டுச் சாமான்கள் பாதியென்றால், பாதி இந்த ஊர்ப்பெயர்கள், நூல்கள். இப்படிப்-பட்ட மூட்டைகளைத்தான் எடுத்துச் செல்வேன். அதற்குப் பின்னால் _ கணிப்பொறி வந்ததற்குப் பின்னால் எனது வேலை மிகவும் சுலபமாகி விட்டது.

நான் 1997இல் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். ஆசியவியல் நிறுவனத்தின் (சென்னை _ செம்மஞ்சேரி) இதழில் டேம் தமிழ் எக்னோமிக் குரோம் என்ற பெயரில் 45, 46 பக்க அளவில் ஓர் ஆங்கிலக் கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் தமிழ் என்ற சொல் எப்படித் தோன்றியிருக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்திருந்தேன். அந்த ஆராய்ச்சியில் இருந்த-போது, மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிந்துவாரா என்ற பகுதியில் நமது மதுரை, தேனி மாவட்டங்கள், கேரள மாநிலத்தினுடைய எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய பழநி, இடுக்கி, குமுளி, தேனி போன்ற இடப்பெயர்களெல்லாம் அங்கே இருப்பதைப் பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்.

தமிழ் ஓவியா said...

முதலில் எனக்குத் தோன்றியது, இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று. நான் ஏதேச்சையாக _ ஒரே மாதிரியாகத்-தான் பெயர் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெயர்கள் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வாழ்கிற மத்தியப்பிரதேசப் பகுதிகளில் ஊர்ப் பெயர்களாய் வருவதை _ விபத்தாய் எடுத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில், இந்த ஊர்ப் பெயர்கள் பயணம் செய்திருக்கின்றன. ஊர்ப் பெயர்கள் பயணம் செய்யுமா? பயணம் செய்யும். ஒரு நாகரிக மக்கள், ஓர் இனமக்கள், ஒரு மொழி பேசும் மக்கள், ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் புலம்-பெயர்ந்து செல்லும்போது அவர்களுடன் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ அவர்கள் எளிதாக எடுத்துச் செல்வது தங்களது நினைவுகளையும், தங்களது பண்பாட்டையும், தங்களுடைய பண்பாட்டின் மீள்நினைவு-களையும்தான். நம்பிக்கைகளைத்தான் அவர்-களோடு சேர்ந்து பயணம் செய்வது ஊர்ப்பெயர்களும், புதுசா போற ஊருக்குப் போய், அந்த ஊர்ப்பெயரை வைத்து விடுவார்கள். இது உலகம் முழுவதும் நடந்து இருக்கிறது. அய்ரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றவர்கள் அய்ரோப்பாவின் பெயரை-யெல்லாம் எடுத்து வந்து அமெரிக்காவில் வைத்-தார்கள், அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கருப்பர் இனத்தவர்கள் ஆப்ரிக்கப் பெயர்களையெல்லாம் அமெரிக்கா-விற்குக் கொண்டு சென்றார்கள். கலிபோர்னி-யாவில் நைல் என்ற ஒரு சிறு ஓடை ஓடுகிறது. அதற்குப் பக்கத்தில் எகிப்து என்ற ஒரு கிராமம் இருக்கின்றது. அப்படி எடுத்துச் சென்ற பார்சி இனமக்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்குப் பெயர்களை எடுத்து வந்தார்கள். அவ்வாறு பெயர்கள் எடுத்து வரப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தப் பெயர்களையுடைய பயணம் எங்கிருந்து, எங்கு சென்றிருக்கிறது? என்ற சிந்தையோடுதான் 1990களில் நான் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதி இருந்தேன்.

தமிழ் ஓவியா said...


அதற்குப் பின்னணியில் அயிராவதம் மகாதேவன் அவர்க-ளும், இடப்பெயர் ஆராய்ச்சியை சிந்துவெளிக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டார். அது 1990களினுடைய மத்தியில். அப்போது பார்க் எனப்படுகிற ஓர் இடம் பற்றிய கட்டுரைக்காக நான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஊர்களினுடைய பெயர்களைத் தேடியபோது இந்த திராவிட தமிழ் _ தொல் தமிழ் நாகரிகம் தொடர்பான பெயர்களைத் தேடத் தொடங்கினேன். இது இந்தளவில் இருக்கட்டும். முதலில் நான் இந்த உரைக்குப் போவதற்கு முன்னால் சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஒரு சின்னப் பின்னணித் தகவலையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சிந்துவெளி நாகரிகத்-தைப் பற்றிப் பேசாததற்கு முன்னால், 1924இல் சர்ஜான் மார்சல் இல்லஸ்ட்ரேட் லண்டன் வீக்லி என்ற இதழில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய அறிவிப்பை உலகத்திற்குத் தெரிவிப்-பதற்கு முன்னால், அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்பது யாருக்குமே தெரியாது. இந்தியாவினுடைய மிகவும் மூத்த இலக்கியம் என்று கருதப்படுகின்ற வேத இலக்கியங்களிலோ அல்லது வடமொழி இலக்கியங்களிலோ சிந்துவெளி நாகரிகம் என்ற ஒன்று இருந்தது என்பதற்கான எந்த ஆவணப் பதிவும் இல்லை. ஆக, 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் புழக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட கி.மு. 2000 _ 1900 ஆண்டுகளிலேயே அழிந்துபோன ஒரு நாகரிகம், பூமிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை 1924 வரை யாருக்குமே தெரியாது. இதைப்பற்றிய ஆவணப் பதிவுகள் எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட ஆவணப் பதிவுகள் இல்லாததனால் இந்தியாவினுடைய தொல் வரலாறு _ பொதுவாக வரலாறு என்று சொல்லும்போது அசோகனுடைய கல்வெட்டி-லிருந்து வரலாறை மீட்டு எடுக்கிறார்கள். அதற்கு முந்தைய தொல் வரலாறுகள் பெரும்பாலும் தேதியற்ற நிலைமையில் (Un dated) தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவார்கள். ஏன் தேதியில்லை என்று சொன்னால், நாம் வரலாறை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கோம் என்பது, எழுதப்பட்டதே வரலாறு. இங்கே வரலாற்று ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களிடம் கேளுங்கள். What is history? - History என்று கேட்டால் அவர்கள் சொல்லுவது What is written is history. எழுதப்பட்டது வரலாறு. அப்ப எழுதப்படாதது என்பது அவர்களைப் பொறுத்தவரை வரலாறு இல்லை. ஆக எழுதப்பட்டதுதான் வரலாறு என்று வைத்துவிட்டதனால், வரலாறு எழுத்து வடிவம் என்பது ரொம்ப முக்கியமாகி விட்டது.

அப்படி என்று சொன்னால் இதுவே ஒரு கோளாறான, ஒரு பிரச்சினைக்குரிய, ஒரு அணுகுமுறை (Approach). அப்படின்னா தொல் மரபுகள் _ வாய்மொழி மரபுகள் ஓர் இலக்கியம் எழுத்து வடிவத்திற்கு முன்னாள் ஒரு நீண்டதொரு வாய்மொழி மரபுகள் இருக்கும். ஒரு வாய்மொழி என்கிறதுதான் பாணர் மரபு, பாட்டு மரபு, கூத்து மரபு, ஒரு வாய்மொழி மரபு போன்று இருக்கும். அந்த வாய்மொழி மரபுக்கு எந்தவிதமான முக்கியத்துவத்தையும் வரலாறு கொடுப்ப-தில்லை. ஆனால் எழுதி வைத்ததே வரலாறு என்கிறதனாலேயே எதை எழுதி வைத்தாலும் வரலாறு ஆயிடும். அதனால் இந்தியா பல 23ஆம் புலிகேசிகளை அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, இப்படிப்பட்ட எழுதனதெல்லாம் வரலாறு என்பது பிரச்சினைக்குரிய விஷயம். இதனால இந்தியா-விற்கு தேதியில்லாத தொல் வரலாறு இருந்தது. இரண்டாவது இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் இரண்டு புதிர்கள். அந்தப் புதிர்கள் எவை?

அடுத்த இதழில்...

(சென்னை,பெரியார் திடலில் 21.5.2013 அன்று நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டத்தில், ஒடிஷா மாநில அரசுத் துறையின் முதன்மைச் செயலாளர், ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆற்றிய ஆய்வுரையின் ஒரு பகுதி இது.)

- தொகுப்பு : அ.பிரபாகர்

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்


நூல்: இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்?

ஆசிரியர்: ஆங்கிலத்தில்: டாக்டர். வெ. கண்ணு(ப்பிள்ளை) அய்.பி.எஸ்., (ஓய்வு)

தமிழில்: மு. குமரேசன்

வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம் 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-600041

செல்பேசி: 9444244017 பக்கங்கள்: 160 விலை: ரூ.120/-

நூலிலிருந்து...

கட்டுண்டு கிடக்கும் இந்து மனம்

இந்துக்களின் சமூகப் பழக்க வழக்கங்களையும், நடத்தையையும் மதமே வழிநடத்துகிறது. மதத்தின் இந்தச் செல்வாக்கு, அடிப்படையில் மனம் சார்ந்தது. ஏனெனில், செயல்கள் எண்ணங்களின் விளைவே. இந்து மனத்தின் மீது உருவாக்கப்பட்ட முதன்மையான பாதிப்பு அடிமைத்தனம். முதலில் அது பணிய வைக்கப்பட்டது. பிறகு தன் வயமிழந்தது, இறுதியாய் அடிமையாக்கப்பட்டது. கட்டளைக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிய அது தயாராக உள்ளது. ஒரு வழிகாட்டியின் பின்னால் கண்களை மூடிக்கொண்டு எங்கும் பின்தொடர அது தயாராக உள்ளது. தனது சுதந்திரத்தை இழந்ததால் அது பார்வையையும் இழந்துவிட்டது. முன்னும் பின்னும் என்ன இருக்கிறது என்றுகூடப் பார்க்காது. அந்த மனம் முழுவதும் கற்பனையால் நிரம்பியிருக்கிறது. தனது சுற்றுப்புறம் பற்றிய எந்த உணர்வும் இல்லை. அவனுக்குக் கற்பனையும் உண்மையும் ஒன்றுதான். அவனது உலகம் முழுவதும் கற்பனையானது, உண்மை அல்ல. எதை நம்ப வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதை அவன் நம்புகிறான். கேள்வி கேட்பதில்லை, முடிவுகள் பற்றிய குழப்பமும் அவனுக்கில்லை. தானே விரும்பி அடிமைத்தனத்தை ஏற்கும் ஒருவன், அதிகபட்ச அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறான். காரண காரியங்களை அறிதல், முடிவெடுத்தல், நியாய உணர்வு, பொது அறிவு என எல்லாவற்றையும் ஏன் அறிவார்ந்த ஆண்மையையே விட்டுக் கொடுத்துவிடும் ஒருவன், விடுதலை பெறாத தென்அமெரிக்க கறுப்பின அடிமையைக் காட்டிலும் வலுவான விலங்குகளால் கட்டப்படுகிறான்.

இந்து மனதின் அப்பாவித்தனமும் அடிமைப்பண்பும் அதிகாரத் தாகம் கொண்ட தந்திரசாலிகளான பிராமணர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தன. அவர்கள் தங்கள் திறமையைக் காட்டத் தயங்கவில்லை. அவர்கள், மக்கள் தங்கள் கட்டளைகளுக்கு ஆட்டு மந்தையைப்போல் கீழ்ப்படிவதைக் கண்ணுற்றனர்.

அவர்கள் பிற இனத்தவரோடு தங்களை அய்க்கியப்படுத்திக் கொள்ளவில்லை. பிற இனத்தவர் தங்களைத் தீண்டுவதே தங்களை மாசுபடுத்துவதாகக் கருதி விலகி நின்றனர். உலக வரலாற்றில் எங்கும் காணப்படாத மிக உயர்ந்தபட்ச கொடுமை இதுவாகும் (1881 மறுபதிப்பு 1974:மிமிமி, 225_226). இந்துக்களின் மதம் சார்ந்த மனப்பான்மையை எவ்வாறு பிராமணர்கள் வர்ணாசிரம மற்றும் ஜாதிய முறைகளை நிறுவப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும், தங்கள் நாட்டின் சக மனிதர்களது அப்பாவித்தனம், அறியாமை, கல்லாமை மற்றும் அடிமை மனப்பான்மையைத் தங்கள் நலனுக்காக அவர்கள் பயன்படுத்திக் கொண்டதையும் ஷெர்ரிங் விளக்கினார்.

தமிழ் ஓவியா said...

எதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிடும் ஒரு இந்துவின் மதம் சார்ந்த மனப்பான்மை அவனுக்கு நன்னெறியை, தனது சக மனிதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைப் போதிக்கவில்லை. மதநம்பிக்கை மனிதர்களுக்குள்ளிருந்து உன்னதங்களை வெளிக்கொணரவில்லை. (குஷ்வந்த் சிங் 2002 : 50, 51). இந்தியர்களின் அடிமை மனப்பான்மையே அவர்களது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எதிரொலிக்கிறது. இந்துமதம், மரபு வழியான மூடநம்பிக்கைகளையும், பிறரைக் கொடுமைப்-படுத்தும் மனப்பான்மையையும் வளர்க்கின்றது. அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது.

மத்திய காலத்தில், அய்ரோப்பாவில், மக்கள் மத குருக்களின் பிடியில் இருந்தபோது, அங்கு அறியாமையும், சமத்துவமின்மையும் இருந்தன. தேசத்தின் அதன் மக்களின் வாழ்க்கையில், மதமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஜெர்மானிய மதச் சீர்திருத்தம், 1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி, 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி ஆகியவற்றால் அய்ரோப்பாவில் அறிவு வளர்ச்சியும் நவீனத்துவமும் வளர்ந்தன. சிறுபான்மையாகிவிட்ட மடாலயங்கள் மதநம்பிக்கையைத் திணிப்பதில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், இந்தியாவில் மக்கள்-தொகையில் (1931 கணக்கெடுப்பின்படி) 6.4 விழுக்காடேயான பிராமணர்கள், பிராமண இந்துத்துவத்தை உருமாற்றி, புத்துயிரூட்ட முடிந்தது. பொய்யான மரபு, போலிப் பண்பாடு என்னும் போர்வைகளில் வர்ணாசிரமத்தையும், ஜாதி முறையையும் திணிக்க முடிந்தது. உலகில் வேறெங்கும் பூசாரிகள் இந்த அளவுக்கு எல்லையற்ற சமூக அதிகாரங்களையும், உரிமைகளையும், மக்கள் மத்தியில் மதிப்பும் துய்க்க இயலவில்லை. இன்றைய சமத்துவ, ஜனநாயக சமூகத்திலும் இது தொடர்கிறது-. எல்லா விஷயங்களிலும், தனிநபர் சார்ந்த, சமூக மற்றும் மத விஷயங்களில் அப்பூசாரிகளது ஆலோசனை கேட்கப்படுகின்றது. அவரது கூற்றே சட்டமாகிறது, எவ்விதக் கேள்வியோ மாற்றமோ இன்றி அவரது வார்த்தை சட்டமாக ஏற்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

வடமேற்குப் பிராந்தியம் மற்றும் ஔத் பகுதியின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்பார்வை-யாளராகப் பணியாற்றிய ஜே.சி. நெஸ்ஃபில்ட் (J.C. Nesfield ICS) என்னும் அய்.சி.எஸ்., அதிகாரி, இந்தியாவின் ஜாதி முறை அமைப்புக் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை நிகழ்த்தினார். அவர் சரியாகவே சொன்னார்:_ நாம் இரு உண்மைகளை ஏற்போமானால், இந்தியாவில் ஜாதி முறை தோன்றியது எவ்வாறு என்பது பற்றிப் புரிந்து கொள்ளுவது அரிதல்ல. ஒன்று, ஜாதி என்பது தொழில் அடிப்படையில் இயற்கையான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் உருவானது, பிறப்பின் அடிப்படையிலோ அல்லது உறவின் அடிப்படையிலோ அல்ல. இரண்டாவது, பிராமணன் பிற எல்லா வகுப்பினரது மனங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தினான். அவர்கள் அறியாமை-யிலும் மூடநம்பிக்கைகளிலும் ஆழ்ந்திருந்த-தால் அவர்களுக்கு தங்கள் பூசாரிகள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியிருக்க-வில்லை. கருணையற்ற ஆக்கிரமிப்பாளரைக் காட்டிலும் அதிகப் பங்கினை மக்களை அடிமையாக்குவதில் பூசாரிகளும், மதகுருக்களும் ஆற்றியுள்ளனர். ஒரு கொடுங்கோல் அரசனை மக்கள் ஒரேநாளில் வீழ்த்தி விடலாம். ஆனால், மூடநம்பிக்கைகளால் இருண்டுவிட்ட மனம் தனது பார்வையை இழந்து விடுகிறது. இந்துக்களின் மூடநம்பிக்கை என்னும் ஆடையைப் பிராமணர்களே தயாரித்துத் தருகின்றனர்.


*****

ஜாதி உருவாக்கம் பற்றிப் பதிவுகள் ஏதும் இல்லை

ஜான் பீம்ஸ் ரிச்மாண்ட் (John Beames Richmond). இவர் இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் பணியாற்றிய நீதிபதியும் ஆட்சியரும் ஆவார். அவர் கூறுகிறார்: வடமேற்குப் பகுதிகளில் வாழும் மக்கள், துரதிருஷ்டவசமாகத் தங்கள் கடந்த கால வரலாறு பற்றிய நல்ல வழிகாட்டிகள் அல்லர். உயர் வகுப்பினரின் அலாதிப் பெருமித உணர்வும், கீழ் ஜாதியினரின் அறியாமையும் துன்பங்களும் முற்கால இந்தியாவின் வரலாற்றுப் பதிவுகளைப் பெரிதும் மாற்றி விட்டன. குறிப்பாக, முகம்மதியர் ஆட்சிக்கு முன்னர், அதுபற்றி ஆய்வு செய்பவரை அவை குழப்பவும் தவறடையவும் செய்கின்றன.

அவர் மேலும் கூறுகிறார். அப்போது ஒருங்கிணைந்த இந்தியா என்னும் உணர்வு இருக்கவில்லை. ஜாதியின் பெயரால் சமூகப் பிரிவினைகள் வளர்ந்தன. வேற்றுமைகள் உருவாக்கப்பட்டு அதிவேகமாக வளர்ந்தன. ஒவ்வொரு சிறு பிரிவு அல்லது குடும்பமும் தன்னைத் தனியொரு ஜாதியாக நிறுத்திக் கொண்டது. இதன் தொடர்ச்சியாய் மக்கள் தங்களது உண்மையான தோற்றுவாய் எதுவென்பதை மறந்து போய், தங்களைச் சுற்றியுள்ள சூழலுக்குக் காரணமாக்க, விசித்திரமான, சலிப்பூட்டும் கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர். தொலை தூரத்திலிருந்து வந்த அடுத்தடுத்த தலைமுறைகளைச் சார்ந்த அயல்நாட்டவர்க்கு இச்சூழல் தீர்க்க முடியாத சிரமங்களைத் தந்ததில் வியப்பில்லை. இத்தகு சமூகப் பிரிவினைகள் அவர்கள் நாட்டில் இல்லை. அவர் மேலும் கூறுகிறார்:_ பிராமணர்களின் அற்புதமான, கவித்துவமான மத மற்றும் தத்துவப் படைப்புகளில் ஏற்கத்தக்க வரலாற்றுத் தொடர்புகள் இல்லாத நிலையில், அவை என் போன்ற ஆராய்ச்சி-யாளர்களுக்குப் பயனற்றவையே. முஸ்லிம்கள் வந்து சேரும் வரை வரலாறு என்ற வார்த்தை அதன் உண்மையான அர்த்தத்தில் இந்தியாவில் பயன்படவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்-தான் வேண்டும் (இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய மக்களின் மரபும் பண்பாடும் என்ற நூலின் முன்னு-ரையில், 1844 பிப்ரவரி 9 VI to IX).

தமிழ் ஓவியா said...

ஜாதி பற்றிய ஏற்கவியலாத புள்ளி விவரங்கள்:

ஜான் பீம்ஸ் ரிச்மாண்ட் நீண்டகால அனுபவம் பெற்ற ஆங்கிலேய நிர்வாகி. அவர் இந்திய மக்களின் நடத்தை, நம்பிக்கைகள், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை இருபதாண்டு-களுக்கும் மேலாக அவதானித்துத் தனது கருத்துகளை 1844ஆம் ஆண்டிலேயே பதிவு செய்துள்ளார். ஜாதி பற்றிய அவரது கருத்துகள் உண்மையானவையும், மதிக்கத்தக்கவையுமாகும். மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள், அவர்கள் தங்கள் மூலத்தை மறந்துவிட்ட நிலையில், வேத காலத்திலிருந்து நெடுங்காலம் கடந்து விட்டது என்ற நிலையில், அவர்கள் தரும் தகவல் பொய்யாக இருப்பது இயல்பே. அவர்கள் தங்கள் ஜாதியின் தோற்றுவாயை மிகைப்படுத்திக் கொண்டனர். தாங்கள் கீழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள எவரும் விரும்ப-வில்லை. இலக்கியங்களிலும், மத நூல்களிலும் ஜாதி பற்றிய நம்பத்தகுந்த தகவல் ஏதுமில்லை. எனவே, சமூகக் குழுக்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தந்த, ஏற்கவியலாத, மிகைப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜாதி அமைப்பை உருவாக்கியது முற்றிலும் பொய்யானதாகும். இருந்தபோதும், ஆங்கிலேயர்கள் புள்ளி விவரச் சேகரிப்பை வலியுறுத்தினர். அவற்றை நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வகைப்படுத்தினர். ஆனால், கலாச்சாரம், மரபு, மத அனுஷ்டானங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமின்றி ஒரே மாநிலம் அல்லது மாவட்டத்திற்குள்ளேயே மாறுபட்டிருந்தன. ரிச்மாண்ட் சரியாகவே கூறினார்; ஜாதிகள் பற்றிய புள்ளி விவரச் சேகரிப்பு சமூக மோதல்களுக்கும், பொய்யான கோரிக்கைகளுக்கும் இட்டுச் சென்றது. வரலாற்று ஆவணங்கள் இல்லாத நிலையில், நம்ப முடியாத கட்டுக் கதைகளும், பிராமணர்களின் மதநூல்களும் சமூகக் குழுக்களை வகைப்படுத்தப் பயனற்றவையே. ஆனால் ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆளும் நோக்கத்துடன், புள்ளி விவரங்களைச் சேகரித்து பிராமணர்கள் தந்த ஏற்கவியலாத மதத் தகவல்களின் அடிப்படையில் சமூகக் குழுக்களைப் பிரித்து வகைப்படுத்தினர்.

வருணப் பிரிவினை குறித்த எதிர்மறை அறிவு

வருணப் பிரிவினை என்பது பிராமணர்கள் உருவாக்கிய பொய்யான கோரிக்கை. அடுக்குகளைக் குறிக்கும் வருணம் என்ற சொல் ரிக் வேத மந்திரங்களில் எங்கும் இல்லை. வருணம் என்பது ஒரு பாலிமொழிச் சொல். (பிளண்ட் அய்சிஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: 1911: 324) வேதகாலத்தில் பேச்சு மொழியாக இருந்த புராதன சமஸ்கிருத மொழியிலும் அச்சொல் இல்லை. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் அது வழக்கு மொழியாக இருந்தது. அவரது காலத்தில் எல்லா அரசு ஆவணங்களும் பாலிமொழியில் இருந்தன. வருணப் பிரிவினை பொய்யான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

சத்திரியர் என்ற வார்த்தையும் மந்திரங்களில் இல்லை. மந்திரங்களில் காணப்படும் ஜென்யா என்ற வார்த்தைக்கு சத்திரியர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒரு பாடலில் காணப்படும் ஜென்யா என்ற வார்த்தை பிற பாடல்களில் பிற வேதங்களில் எங்கும் இடம் பெறவில்லை.

அதேபோல் வைசியர் மற்றும் சூத்திரர் என்னும் வார்த்தைகளும் ஒரே ஒரு ரிக்வேதப் பாடலில் மட்டுமே உள்ளன. வேறெங்கும் இல்லை (அரவிந்த் சர்மா, 2000 135).

வருணம் என்ற சொல்லுக்கு வண்ணங்கள் என்பது பொருள் _ பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளுக்கும் அதுவே அடிப்படை. அவை வகுப்புகள். அச்சொல் எவ்வகையிலும் ஜாதிகளைக் குறிக்கவில்லை (பிளண்ட், மக்கள்தொகை அறிக்கை 1911, 324). பிராமணர்களின் நிறம் வெண்மை, சத்திரியர் சிவப்பு, வைசியர் மஞ்சள் மற்றும் சூத்திரர் கறுப்பு நிறத்தவர்[மகாபாரதத்தில் பிருகு முனிவரின் உரையாடல் குறித்த டாக்டர் முயிரின் கருத்தை மேற்கோள்காட்டி ஜான்வில்சன், 1877 (மறுபதிப்பு 1976:268)]. சூரியனின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இந்தியாவின் கடுமையான பருவ நிலை, மனிதர்களின் நிறத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதற்கும் சமூக அடையாளங்களுக்கும் தொடர்பில்லை. தென்னிந்தியாவில் பிராமணர்-களிலும் கறுப்பு நிறம் கொண்டவர்கள் இருந்தனர். வருணம் என்ற சொல்லுக்கு மனிதனின் குணத்தின் வண்ணம் என்று பொருள் என சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவன் கூறுகிறார்.

இலங்கையில் பணியாற்றிய பிரெஞ்சு தொல்பொருளியல் ஆணையாளர் ஆர்தர் மௌரிஸ் ஹோகார்ட் (Arthur Maurice Hocart) இலங்கையிலுள்ள தென்னியத் தமிழர்களிடையே நிலவிய ஜாதிய அமைப்பை ஆய்வு செய்தார். அவர் கூறுகிறார்:_ முற்காலத்தில் நான்கு வண்ணங்கள் மட்டுமே இருந்தன. வண்ணங்கள் நான்கு அடிப்படைச் சமூக மய்யங்களின் குறியீடுகளாக இருந்தன. அவை வண்ணங்கள், இனங்கள் அல்ல. கடவுள்கள் மற்றும் அரக்கர்களிடையேயான போர்தான் ரிக் வேதத்தில் விவரிக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களின் கோட்பாட்டோடு பொருந்துகிற இனக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு மற்றவை தள்ளப்படுகின்றன. பி.டி. சீனிவாச அய்யங்காரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...

நமக்குள் ஒற்றுமை


முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமையை உண்டாக்கிக் கொள்ள-வேண்டும். அதற்காகவே பாடுபடவேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டு-மானால், அதற்கு இடையூறாய் உள்ளவற்றை எல்லாம் ஒழிக்கவேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பது ஒரு தேசத்தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை, அதாவது இங்குக் கூடியுள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, ஒரு மதஸ்தர் (இந்துக்கள்) என்பவர்களுக்-குள்ளாகவே அநேக விதமான கொடுமையும், ஒற்றுமைக் குறைவும் இருந்து வருகிறது. இந்து மதத் தத்துவமே நமது நாட்டை இந்தத் தாழ்ந்த கதிக்குக் கொண்டு வந்தது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். மக்கள் அறிவையும், ஆற்றலையும், அன்பையும், மனித தர்மத்தையும், நமது மதம் என்று சொல்லுவதே அழித்துக் கொண்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...

முதலாவதாக நமது நாட்டில் மக்களைப் பிறவியிலேயே உயர்வு - தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று ஒன்று சேர விடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனாய் இருந்தாலும், ஒரு வகுப்பு தாய் வயிற்றில் பிறந்ததற்காக மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழ வேண்டியவர்கள் என்றும், ஆக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, மற்றொருவன் எவ்வளவு யோக்கியனாய் இருந்தாலும் வேறு ஒரு வகுப்புத் தாய் - தகப்பனுக்குப் பிறந்ததனாலேயே அவன் தாழ்ந்தவனென்றும், தொடக்கூடாதவன், பார்க்கக் கூடாதவன், கிட்ட வரக்கூடாதவன், அவனவன் பக்தி செலுத்தும் தெய்வத்தைக் கூடப் பார்க்கக் கூடாதவன் என்றும், பொதுத் தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும் தடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்தக் கொடுமைகள், முட்டாள்-தனமும் கொண்ட ஆணைகள் நமது நாட்டில் தான் இருக்கிறதே தவிர, வேறு நாட்டில் கண்டிப்பாய் இம்மாதிரிப் பிறவி பேதம் கற்பிப்பதே கிடையாது. இது மனிதர்களுக்கு மாத்திரமல்லாமல், கடவுள்கள் என்று சொல்லப்படுபன-வற்றுக்கும் இத்தோஷம் கற்பிக்கப்-பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டுப் பழந்தமிழ் சாத்திரங்களில் இம்மாதிரிக் கொடுமையும், மூடத்தனமும் கொண்ட விசயங்கள் மருந்துக்குக் கூடக் காணப்-படுவதில்லை. நமது நாட்டுக்கு, அயல்நாடு-களில் இருந்து வந்து குடியேறின ஒரு கூட்டத்தாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்து மதம், நம்மை இந்த இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. பிறப்பினால் உயர்வு - தாழ்வு வகுக்கும் தன்மையான வருணம், ஆச்சிரமம், தர்மம், ஜாதி, பிராமணன், சத்திரியன், சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் முதலிய வார்த்தைகள் தமிழ் மொழிகளே அல்ல. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பாகுபாடு இருந்ததும் இல்லை. தமிழ்நாட்டிற்கு இப்பேர்ப்பட்ட பாகுபாடுகள் எந்த விதத்திலும் வேண்டியதும் இல்லை. அது எந்த விதத்திலும் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் அபிப்பிராயம் கூட மறுக்க வேண்டியதாகவே இருக்கிறது. பிராமணன் என்பதாக ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ, ஒரு மனிதனோ தனியே இருக்க-வேண்டும் என்பதன் அவசியம் என்ன? ஜனசேவை செய்வது பிராமணர்களுடைய தர்மம் என்றும், அதற்காகவே அவர்கள் பிறவியிலேயே பிராமணர்களாகப் பிறந்திருக்-கிறார்கள் என்றும், மகாத்மா சொல்லுகிறார். ஜனசேவை என்பது ஒரு ஜாதிக்கோ, ஒரு மனிதனுக்கோ சொந்தமானதல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக்கு ஒருவன் உதவி, உபகாரம், சேவை முதலியவை செய்யவேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கி வைத்த நேரங்களில் எல்லாம் ஜனசேவை செய்தவனாகிறான், ஒரு மனிதன் ஒரு பொதுக் கிணறு வெட்டினால், வெட்டி வைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித்தால், சுகாதார விஷயத்தில் வீதி கூட்டினால், கூட்டு வித்தால், இன்னும் இதுபோன்ற காரியங்கள் செய்தால் ஜனசேவை செய்தவனாகிறான்.

தமிழ் ஓவியா said...

இது ஒரே வருணத்திற்கு அல்லது ஜாதிக்கு, வகுப்புக்கு என்பதாக ஏன் பிரித்து வைக்கவேண்டும். எப்படிப் பிரித்து வைக்க முடியும். மற்றவர்களுக்கு ஏன் அந்தப் பாத்தியம் அவரவர் சவுகரியப்படி செய்ய விடக்கூடாது. தவிர, நாட்டை ஆள்வது சத்திரியனுக்கு உரிய தர்மம் என்று சொல்லுவோம். ஆனால், ஒரு நாட்டை ஒரு மனிதன் தான் ஆள முடியும். ஒரு வருணமோ, ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ ஆள முடியாது. அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டிற்கு ஒரே ஒரு சத்திரியன் தான் இருக்க முடியும். நாட்டை ஆளுகிறவனுடைய ஜாதியெல்லாம் சத்திரிய ஜாதி ஆகிவிட்டால், உலகத்தில் ஆட்சி புரியாத ஜாதியே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஜாதியோ, வகுப்போ உலகம் முழுவதையுமோ அல்லது ஒரு பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டுதான் இருக்கின்றது. ஆகவே, எல்லோரையுமே சத்திரியர் வருணத்தில் தான் சேர்க்கவேண்டும். அப்படிக்கு இல்லாமல், ஒரு சமயம் மகாத்மா மைசூரில் சொன்னதுபோல், ``எளியவர்களைப் பாதுகாப்பது, சத்திரியனுடைய தர்மம் என்பதாகப் பார்த்தாலும், எளியவர்களைப் பாதுகாப்-பதற்கு ஒரு தனி வருணமோ, ஜாதியோ எதற்காக வேண்டும்? எப்படி இருக்க முடியும்? பிறவி சத்திரிய வருணத்தில் எளியவர்கள் இருக்கமாட்டார்கள்.

அன்றியும், மற்றவர்கள் எளியவர்களைக் காக்கக் கூடாதா, மனிதனானவன் அவனவன் வாழ்வில் எளியவர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு நேரமோ, செய்கையோ ஒதுக்கி வைத்துக்-கொண்டு செய்தால், அது எளியவர்களைக் காத்ததாகாதா? இப்படியே பிறவி வைசிய வருணத்திற்கு என்ன தர்மம் கட்டுப்பட்டது என்றால், வைசியர்கள் வியாபாரம் செய்தல் வைசியர்கள் தர்மம் என்று ஒரு பக்கமும், மாடு மேய்த்தல் வைசியர் தர்மம் என்று மற்றொரு பக்கத்திலும், உழவு செய்தல் வைசிய தர்மம் என்று மற்றொரு பக்கத்திலுமாக ஆரிய நூல்களில் உளறிக் கொட்டி இருக்கிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்கிறாரோ அதைப் பற்றி நமக்குக் கவலையில்லாவிட்டாலும், இந்தத் தொழிலுக்கு ஒரு தனி பிறப்பு, வருணம் எதற்காக ஒதுக்கி வைக்கவேண்டும். இவற்றை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். மற்றவர் ஏன் செய்யக் கூடாது. அதுபோலவே, சூத்திரர் என்பவர்களுக்கும் என்ன என்னமோ தர்மம் சொல்லுவதானாலும், குறிப்பாய் அடிமைத்தனத்தையும், பிராமண வருணத்தானுக்கு வைப்பாட்டி மகன் என்கிற தத்துவத்தையும் தான் சொல்லுகிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக்கொள்வதானாலும், இந்தக் காரியத்திற்கும் ஒரு தனி வருணம் எதற்கு என்றும், இந்தக் காரியங்கள் மற்றவர்கள் ஏன் செய்யக் கூடாது என்றும், மற்றவர் செய்யாமல் இருக்க முடியுமா என்றும்தான் கேட்கிறோம்.

இப்படிப்பட்ட ஆபாசங்களை நம்ம தலையில் சுமத்தி, யோக்கியன் - அயோக்கியன் அடையாளம் தெரிவதற்கு இல்லாமல், மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தி இருக்கிற மதக் கொடுமையாலே தான் நமது நாட்டிற்குச் சுபாவமாகவே விடுதலை கெட்டிருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல என்று பொருள்படும் படிக்கும் மற்றும் இதுபோலவே கடவுள், பக்தி, கோயில், சடங்கு முதலிய விசயங்களில் நம்முடைய மூடக் கொள்கைகளையும், பார்ப்பனர்கள் கொடுமையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவை ஒழிவதுதான் சுயராஜ்யம் அளிக்கவல்லது என்றும், இதுவே அரசியல் என்பது என்றும், இதைத் தவிர வேறு விசயங்களை அரசியல் என்றும், சுயராஜ்யம் என்றும், உரிமை என்றும், தேசியம் என்றும் பேசுவது எல்லாம் வீண் புரட்டு.

- (`குடிஅரசு, 28.8.1927)

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

ரோட்டோ வைரஸ்

அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், குழந்தையின் எடை குறைவதுடன் பல பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு 1.60 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் உயிரிழக்கின்றனர். குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த ரோட்டா வைரஸ் என்ற புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயோ டெக்னாலஜி துறையும், அய்தராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியைக் கண்டு-பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பாகிஸ்தானில் சரப்ஜித் சிங் மரணம் : இந்தியாவின் முன் நிற்கும் கேள்விகள்


பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கைதி சரப்ஜித் சிங், 2013 மே 20 அன்று அதிகாலை மரணமடைந்தார்.

கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்குக்கு மூளைச் சாவு ஏற்படலாம் என, லாகூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயதான சரப்ஜித் சிங், பாகிஸ்தானில் 1994 இல் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். லாகூரில் உள்ள கோட்லாக்பட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை சிறையிலிருந்த சக கைதிகள் 6 பேர், செங்கற்கள் மற்றும் சாப்பாட்டு தட்டுகளால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலையில், ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சரப்ஜித் சிங் படுகாயமடைந்து மருத்துவ-மனையில் சேர்க்கப்பட்டதால், அவரை பார்க்க, அவரது மனைவி, இரண்டு மகள்கள், சகோதரி தல்பீர் கவுர் ஆகியோருக்கு இரண்டு வார கால விசா வழங்கப்பட்டது. இவர்கள் சரப்ஜித் சிங்கை பார்த்து விட்டு, 2013 மே 19 அன்று வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினர்.

2013 மே 19 அன்று சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கவுர், உண்ணாவிரதம் மேற்கொண்டார். என் சகோதரனை காப்பாற்ற, இந்திய அரசு தவறிவிட்டது. உயிருக்கு போராடும் சகோதரனுக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நல்ல சிகிச்சையளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.

ஆனால் அதற்குள்ளாக சரப்ஜித் சிங்கின் உயிர் பிரிந்து விட்டது.

சரப்ஜித் சிங்கை தூக்குத் தண்டனையி-லிருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசும் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டிருந்தது -_ தனது நாட்டிலிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகளை முறைப்படி அறிவிப்பு கூட செய்யாமல் தூக்கிலிட்டபடி!


தமிழ் ஓவியா said...

இனியாவது, இந்தியா தான் கோரியதைத் தானே செய்யுமா? தூக்குத் தண்டனையை ரத்து செய்யுங்கள் என்று அடுத்தநாட்டுக்கு ஆலோசனை கூறும்முன், வேண்டுகோள் விடுக்கும்முன், தனது நாட்டில் தூக்குக் கொட்டடியில் நிற்போரின் தண்டனையை ரத்து செய்யுமா?

கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்-பட்டதால், அதை ஒரு வாய்ப்பாகக் கைதிகளுக்கு வழங்க முடியாது என்று கடந்த மாதம் காலிஸ்தான் போராளி புல்லர் வழக்கில் தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால் இதே பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது அதே உச்சநீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச். இப்போதாவது - இதையாவது வாய்ப்பாக வைத்துக் கொண்டு தூக்கு தண்டனை குறித்த மாற்று சிந்தனையைப் பெறுமா இந்தியா?

முறையாகக் கூட தகவல் தெரிவிக்காமல், தூக்குப் போட்டுவிட்டுத் தகவல் சொல்கிற அரசுப் பூர்வமான கொலையைத் தான் தூக்குத் தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றுகிறது இந்திய அரசு. அதிலேயே சட்டத்தைச் சரியாகக் காப்பாற்றாமல், அடிப்படை உரிமையைக் கூட கைதிக்கும், அவரது குடும்பத்துக்கும் வழங்காததை அப்சல் குரு வழக்கில் பார்த்தோம். அவரது தண்டனையே சட்டப்படி செல்லாத, ஒட்டுமொத்த மனசாட்சிப்படி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான கருணை மனுக்களை நிராகரிப்பது யார் என்பதில் போட்டி இருக்கும்போல - குடியரசுத் தலைவர்களுக்கு! அதையும் காக்க வைத்து நிராகரிப்பது, பல்லாண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இரட்டைத் தண்டனையைப் போல வழங்குவது இன்னும் கொடுமை. ஒரே குற்றத்துக்கு இரண்டு தண்டனைகளை வழங்கமுடியாது சட்டப்-படியும், நியாயப்படியும்! ஆனாலும், இந்த அதிகாரப்பூர்வமான கொலைகள் தொடர்-கின்றன இந்தியாவில்!

ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகிற நாட்டில், மனிதநேயமற்ற, உலக நாடுகள் ஒதுக்கித் தள்ளுகிற, பழிக்குப் பழி வாங்கும் கற்காலச் சிந்தனையான மரண-தண்டனை இருக்கலாமா? என்ற கேள்விக்கு எப்போது இந்தியா பதில் சொல்லப்போகிறது.

கொசுறுக் கேள்வி:

சரப்ஜித் சிங் சீக்கிய மதத்தவர். பொட்டு-வைத்தல், திலகமிடுதல், பூணூல் அணிதல் போன்ற இந்துமதத்தின் எந்த அடையாளத்-தையும் ஏற்காதவர்கள் அவர்கள். சரப்ஜித் சிங்-கின் உண்மையான படத்திலும் அவர் நெற்றியில் திலகம் இல்லை. ஆனால், ஊடகங்களில் வெளியிடப்படும் படத்தில் மட்டும் எப்படி திலகம் இடப்பட்டுள்ளது? இங்கே வளர்க்கப்-படுவது பாகிஸ்தானுக்கெதிரான இந்திய தேசிய உணர்வு அல்ல; இந்து உணர்வே என்பதை இது நிரூபிக்கிறதா இல்லையா?

- சரவணா & இளையமகன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43
E-mail Print

காவிக் கொண்டாட்டம்

செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்

சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?

தமிழ் ஓவியா said...


தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!


திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.

திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.

ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.

எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.

திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலிதுவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.

மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...


ஜெ பாராட்டுகோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்களின் கட்சிக்குள்ளேயே மோதல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் - அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச் சருமான ஜெயலலிதா அவர்கள், இன்று விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; குறிப் பாக திராவிட இயக்கத்த வர்களும், மதச் சார்பற்ற தன்மையில் மதிப்புடைய வர்களும், சிறப்பாக சிறு பான்மையினரும் கவனிக் கத்தக்கதாகும்.

நரேந்திரமோடி பிஜேபி யின் பிரச்சாரக் குழுத் தலைவராகத் தேர்வு செய் யப்பட்டதற்குத் தம் வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டு இருந்தாலும், ஏதோ சம்பிரதாயம் என்கிற கோட்டுக்குள் அடக்கி விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி அவர் சிறந்த ஆட்சியாளர் - சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத் தில் நல்லாட்சி புரிகிறார் என் றெல்லாம் சகட்டு மேனிக்கு புகழ்ந்து வார்த் தைகளைக் கொட்டியுள்ளார் - இவ் வளவையும் தெரிவித்து விட்டு, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பாதுகாப்பு வளையம் தேடுவது - ஆகா, எவ்வளவு சாமர்த்தியம்!

தனிப்பட்ட கருத்து என்றால் வெறும் வாழ்த்து களோடு நின்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி மோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ்வது - அதுவும் அவரின் ஆட் சியை வானளாவ சிலாகிப் பது என்பது எப்படி தனிப் பட்ட கருத்தாகும்? மறை முகமாக மோடியின் இந் துத்வா ஆட்சிக்குக் கொடுக்கும் சான்று பத்திரம் தானே இது! இதனை அ.இ.அ.தி.மு.க. வில் கூட்டு வைத்துள்ள முசுலிம் பிரிவினரும் (மனித நேயக் கட்சி), இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?

பி.ஜே.பி. மோடியின் குஜராத் இனப்படு கொலையை துப்பட்டிப் போட்டு மறைப்பதற்குக் கையாளும் யுக்தி - குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அதே பாணியைத் தானே நம்மூர் ஜெயலலி தாவும் செய்திருக்கிறார்? மோடி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கு இரு முறை தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா அவர்கள் சென்றதையும், ஜெயலலிதா வின் முதல் அமைச்சர் பதவிப் பிரமாணத்திற்குத் தனி அழைப்பின் பேரில் மோடி வந்து கலந்து கொண்டதையும், தனது போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து 40 வகைகளில் சிறப்பு விருந்து அளித்ததையும் நினைவு கொண்டால், மோடியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள் வது தனிப்பட்ட பிரச் சினையா? அதையும் தாண் டிய இந்துத்துவா உணர்வா என்பதை மக்கள்தான் எடை போட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

- மயிலாடன் 10-6-2013

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க....நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுகாதார கேடு உடையதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஓராண்டு தண்டனை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வுநமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ் வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத் தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!


குப்பைத் தொட்டியாகிவிட்டது ஐ.பி.எல். கிரிக்கெட், சூதாட்டக்குப் பையைக் கிளறக் கிளற அழுக்கும் துர்நாற்றமுமே வெளிவருகிறது. தரகர் கள், தொழிலதிபர்கள், சினிமாக் காரர்கள், அரசியல்வாதிகள், ஐ.பி.எல். அணி முதலாளிகள் என நீளும் தொடர்புடையோர் பட்டியல், நம் சமூகம் தொலைத்துள்ள நேர்மை, நாணயம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் தொகுப்பு. சூதாட்டத்தரகர் தொடர்புக் காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டவுடன், சூப்பர் கிங்ஸில் அவருக்கு முக்கிய பதவி ஏதும் கிடை யாது என்று பூசிமெழுகி என்.சீனி வாசன் வெளியிட்ட அறிக்கை, ஒழுக்கக் கேட்டின் உச்சம்.

தம் மருமகன் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருப்பினும், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் மூன்று பேர் குழு அமைத்து விசாரிப்பேன் என்றும் என்.சீனிவாசன் சொல்வது, அதர்மத்தின் கொடுமுடி. தம் மருமகன் இத்தகைய தவறுகளில் ஈடுபட்டிருப்பார் என்று சீனிவாசன் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தார்மீகப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்து, நேர்மையான விசாரணைக்கு வழி செய்திருக்க வேண்டும் சீனிவாசன். பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் பன்சால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டு.

ஐ.பி.எல்.லின் ஆரம்பமே தவறு. கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி, போட்டிகள் மூலம் வருமானமும் கண்டன, வெளிநாட்டு நிறுவனங்கள். அதை அப்படியே அடியொற்றி, ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு வீரர்கள், அந்த அணியில் இடம்பெறுவது போன்ற நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. அதுவும் வீரர்களை, ஏலத்தில் எடுப்பது போல் தேர்வு செய்யும் நடைமுறை உருவானபோதே, பணத்தாசை வேர் கொள்ளத் தொடங்கிவிட்டது. வீரர்கள் மேன்மேலும் தங்கள் இஷ்டப்படி பொரு ளீட்ட நல்ல, அல்ல வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிலும் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்க வேண் டும் என்ற கோரிக்கை நம் மதிப்பீடு வீழ்ச்சிக்கு சரியான உதாரணம். இத னால் விளையாட்டில் முறைகேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இங்கே விளையாட்டுக்கான உத்வேகம், ஈடு பாட்டு உணர்வு ஆகியவை செத்துப் போய்விட்டன. கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்ட தீராத ஆர்வத்தை மூலதன மாக்கி, சோரம் போன அத்தனை பேர் களுமே இதில் குற்றவாளிகள். பி.சி.சி.ஐ. விஷயத்தில் அரசு தலையிடாது என்று கபில்சிபல் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மக்கள் பணமே பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். ஆகியவற்றின் முதுகெலும்பு. இவ் வமைப்புகளைக் கேள்வி கேட்க மக்கள் மன்றம் அனைத்து உரிமையும் பெற் றுள்ளது.

மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறுவனமும், திட்டமும் சமூக விரோத மானதே. ஐ.பி.எல்.மக்களின் ஆர் வத்தைக் கொச்சைப்படுத்தியது: அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மன வேதனையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும்.
நன்றி: கல்கி 9.6.2013 (பக்கம் 7)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங் கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;

அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.

2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.


குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?

கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.

கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.

உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.

இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!
ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?

உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!

இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.

இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?

இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!10-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்


சென்னை, ஜூன் 10-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக் குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்து கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய வற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் செய்யும் போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ் வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை, தேர்ந் தெடுக்கும் முறை ஆகியவை குறிப் பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையான அறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. என்சிடிஇ நெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை.

இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட ஜாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள் ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது விசா ரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.

இவ்வாறு பேராசிரியர்கள் தெரி வித்தனர்.

தமிழ் ஓவியா said...


நோயின்றி நாம் வாழ...


இயற்கை நமக்களிக்கும்
இனிமையான பிறப்பு
புன்னகை பூத்து - இன்முகம்
சிவக்க அரியதோர் வாய்ப்பு
அழுகை ஒலியுடன் அகிலத்தில்
அடிவைத்து அரவணைக்கும்
தாயிடம் - கண்டதோ
ஆனந்தக் களிப்பு

இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.

நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!

மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்

1. சிறந்த சூரிய ஒளி
2. தூய காற்று
3. சுத்தமான நீர்
4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)
5. சத்தான உணவு
6. அமைதியான தூக்கம்

இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?

1. சிறந்த சூரிய ஒளி

நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில், காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

2. தூயக்காற்று

மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.

3. சுத்தமான நீர்

நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.

4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்
நல்லதோர் நடைப்பயிற்சி
நோயின்றிவாழும் முயற்சி
நல்லதோர் ஓட்டப்பயிற்சி
நோய்களை ஓட்டும் முயற்சி
நல்லதோர் மனப்பழக்கம்
நோயின்றி வாழ பழக்கம்
இனியும் ஏன் தயக்கம்
இன்னும் வேண்டுமோ விளக்கம்?

5. சத்தான உணவு

சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.

6. அமைதியான தூக்கம்

அமைதியான தூக்கமே அனைத்து வித
நோய்களுக்கு அருமருந்து
தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்
தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.
தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை
சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை
தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்
சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு
நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை
பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்
உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்
பிறக்கும் அனைவரும் முயன்றால்
அகிலமே சிறக்கும்.

தமிழ் ஓவியா said...


பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!


மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்

சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று

சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.

மத சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினரை பல்வேறு வகையில் கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.

அத்வானி பற்றி..

இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.

கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.

இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மோடியை தவிர்த்தார்:

தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.

ஏமாற்ற மாட்டார்

அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.

ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்

ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.

எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூன்று முறை ராஜினாமா

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பிற்போக்குத்தனம்:


திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் கூடாதாம்

இந்தூர், ஜூன் 11- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத் திற்கு முன் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக் கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ., துணைத் தலைவரும் மக்களவை எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத் தைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண் கள் செல்போன் பயன் படுத்துவதாலேயே பெரும் பாலான அச்சுறுத்தல் களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரி வித்தார். இளம்பெண் கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத் துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதி ரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித் துள்ளார். தனது இந்தக் கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரி விப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கை யின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு பா.ஜ., எம்.பி., ரகுநந் தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகி யன எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்கா லத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்தக் கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என வும் தெரிவித்துள்ளார். ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தெரி வித்ததாவது: ரகுநந் தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சி யிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில் லாமல் நிரூபணம் ஆகி உள்ளது; மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்ச வான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய்ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய் வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந் தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத் திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை நிரந்தரக் குழுவை உடனே அமைத்திடுக மதுக்கூர் மாநாட்டில் கழகத் தீர்மானம்


மதுக்கூர் மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (10.6.2013)


காவிரி டெல்டா விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும் என்பதையும், காவிரி நதிநீர் பங்கீடு சரியாகக் கிடைக்க ஒரே நிரந்தரத் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தி அதன் அளவீட்டின்படி கர்நாடகம், தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி நீரைத் தரும் வகையில் காவிரி மேலாண்மைக் குழுவினை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க மறுத்தால், மத்திய அரசே தனது நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் அணைகளை அவசரச் சட்டத்தின் மூலம் எடுத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கர்நாடகத்தைப் போல எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமைபற்றி முழங்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திட வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் இத்திராவிடர் கழக மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

- மதுக்கூரில் நேற்று (10.6.2013) நடைபெற்ற வட்டார திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


உண்மையான நாவன்மை எது?


நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.

மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.

நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம். எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:

நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.

இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.

என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.

எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்! இல்லையா?

அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!

அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.

நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!

தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!

காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!

சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!

எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!

நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்

என்ற கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!

நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!

எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.

அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?

எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

வெட்கக்கேடு!

கொலை, கொள்ளை தடுக்க காவல் நிலையத்தில் பூஜையாம்!

சென்னை, ஜூன் 11- கொலை, கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பூசணிக்காய், தேங்காய் உடைத்து திருத்தணி காவல் நிலையத்தில் திருஷ்டி கழித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டதாம்.

திருத்தணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் அடிதடி, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட வர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி திருத்தணி பொரி வியாபாரி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப் பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்தணி - திருப்பதி சாலையில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியின் வரவு கால்வாயில் கர்ப்பிணி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருத்தணி - பெரியார் நகரில் ரிக்ஷா தொழிலாளி தன்ராஜ், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது உறவினர் ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாம். காவல்நிலையம் முழு வதையும் கழுவி சுத்தப்படுத்தி அங்குள்ள சாமி படத் துக்கு மாலை போட்டு கற்பூரம் ஏற்றி காவல்நிலை யத்தின் வாசலில் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் உடைத்து திருஷ்டி கழித்தனராம்.

திருத்தணி பகுதியில் கொலை, கொள்ளை நடக்க மல் இருப்பதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாம்

பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய காவல் துறையினரே காவல் நிலையத்தில் பூஜை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடுவது சரியானதுதானா?

தமிழ் ஓவியா said...

மணமகனின் சமயோசிதமான முடிவு
தமிழர் தலைவர் பாராட்டு

வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவின்போது மணமகன் நீலகண்டன் சங்கிலி அணிவித்தபோது தலைவழியாக அந்தச் சங்கிலி நுழையவில்லை. நீலண்டன் அப்படியே கழற்றி எடுத்து விட்டு மணமகளின் சடை வழியாக சங்கிலியை மாட்டி திருப்பிக் கழுத்தில் அணிவித்தார்.

அதைக் கண்ணுற்ற தமிழர் தலைவர் அவர்கள் மீண்டும் ஒலிபெருக்கியை வாங்கி இந்த நிகழ்வைக் கவனித்துப் பார்த்தீர்களா? எம்போதுமே நம் மக்கள் மணமகளுக்கு தலையில் கொஞ்சம் அதிகமாகப் பூவைச் சுற்றி விடுவார்கள். சங்கிலி அணிவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் தாலி இல்லை. டாலர் மட்டும் இருந்தது. அதை அணிவிக்க முயன்றபோது தலை வழியாக நுழையவில்லை. மணமகன் மிகவும் சமயோசிதமாக சடைமுடி வழியாகக் கொண்டு வந்து எளிதாக அணிவித்து விட்டார். இந்த மணமக்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றார். (பேராவூரமணி மணவிழாவில்...)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தேர்வு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11- ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப் படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் தியாகராயர் நகரில் நேற்றுமுன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமை வகித்தார்.

மத்திய அரசு முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி பேசியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படை யிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் நிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்ணில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.

அதற்கான ஆணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணையை திரும்பபெற வேண்டும்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமருக்கான வேட்பாளரா? அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!


புதுடில்லி, ஜூன் 11- மோடியைப் பிரச்சாரக் குழுத் தலைவராக அறி வித்தும், அதன் பின்ன ணியில் பிரதமருக்கான வேட்பாளர் என்பதை முன்னிலைப்படுத்தியும் செயல்படும் போக்கினை பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகள் உள்பட கடும் எதிர்ப்பை தெரிவித்துள் ளனர்.

பா.ஜ., தலைமையி லான, தே.ஜ., கூட்டணி யின் பிரதமர் வேட்பா ளராக, நரேந்திர மோடியை அறிவிப்ப தற்கு, அந்த கூட்டணி யில் அங்கம் வகிக்கும், அய்க்கிய ஜனதா தளம், கடும் எதிர்ப்புத் தெரி வித்து வருகிறது. இந் நிலையில், இந்த பிரச் சினை குறித்து, பீகார் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள தலைவரு மான, நிதிஷ் குமார் கூறியதாவது:

பா.ஜ.,வுக்குள் ஏற்பட் டுள்ள குழப்பத்தை, கூர்ந்து கவனித்து வரு கிறோம். நரேந்திர மோடியை, கட்சியின், பிரச்சார குழு தலைவராக நியமித்துள்ளதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அத்வானியின் விலகலால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும், எங்கள் கட்சி நிர்வாகி கள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதைத் தொடர்ந்து, விரைவில் முடிவை அறிவிப்போம். - இவ்வாறு, நிதிஷ் குமார் கூறினார்.

அழிவுப் பாதையில் பா.ஜ., காங்கிரஸ் கருத்து: காங்., பொதுச்செய லாளர், ஜனார்த்தன் திவிவேதி கூறியதாவது:

நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டதை எதிர்த்து, அத்வானி, கட்சியின் அனைத்துப் பொறுப்பு களிலிருந்தும் விலகியுள் ளார். மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது, எங்களை பொறுத்த வரை, பெரிய விஷய மல்ல. இது, அந்த கட்சி யின் உட்கட்சி விவகா ரம். அதேநேரத்தில், மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் மூலம், பா.ஜ., அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என் பது, அத்வானியின் ராஜி னாமா மூலம், வெளிப் படையாக தெரிகிறது.

- இவ்வாறு, ஜனார்த் தன் திவிவேதி கூறினார்.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர் பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது: நரேந்திர மோடி, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமிக்கப் பட்டதற்கு, அந்த கட் சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படை யாக தெரிகிறது. உட் கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த மாநிலங்களவைத் தேர் தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.

கேரள மாநில காங்., தலைவர், ரமேஷ் சென் னிதலா கூறியதவது: நரேந்திர மோடியை, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமித்தது, நாட்டின், மதச் சார்பின் மைக்கு விடுக்கப்பட் டுள்ள அச்சுறுத்தல். நரேந்திர மோடியின் செயல்பாடுகள், ஜனநாய கத்துக்கு, மதச் சார்பின் மைக்கும், எதிரானவை யாகவே இருக்கும்.

அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும், கருத்து வேறுபாடு இருப் பது போல் தோற்ற மளித்தாலும், இரண்டு பேருமே, ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங் களை போன்றவர்கள் தான். நரேந்திர மோடி யால், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத் தலை சமாளிக்க, மதச் சார்பற்ற சக்திகள், ஓர ணியில் திரள வேண்டும். இவ்வாறு, ரமேஷ் சென் னிதலா கூறினார்.

சமாஜ்வாதி கட்சி யின் மூத்த தலைவரும், உ.பி., மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச் சருமான, ஆசம்கான் கூறுகையில், குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு கார ணமானவர், நரேந்திர மோடி. இப்படிப்பட்ட அவரை, பா.ஜ.,வின், பிரச்சார குழு தலைவ ராக நியமித்தது, எதிர்பா ராதது'' என்றார்.

திக்விஜய் சிங்

காங்., பொதுச்செய லாளர், திக்விஜய் சிங் கூறியதாவது:

நரேந்திர மோடி விவகாரதத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ் நாத்சிங் ஏமாந்து விட் டார். நரேந்திர மோடி, எப்போதுமே, தனக்கு உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்யும் வழக் கம் உள்ளவர். இவர் விஷயத்தில், ராஜ்நாத் சிங் கவனமாக இருக்க வேண்டும்.