Search This Blog

6.6.13

கிரிக்கெட்டும் பார்ப்பனர்களும்

 
பார்ப்பன விளையாட்டான கிரிக்கெட்டை (அய்.பி.எல்) தடை செய்ய வேண்டும்  என்று வேறு வழியின்றி பார்ப்பன இதழான கல்கியே (9.6.2013 பக்கம் 7)  கூறுகிறது என்றால் - இந்த அய்.பி.எல். எவ்வளவுப் பெரிய சீர்கேட்டை - ஒழுக்கக் கேட்டை - உற்பத்தி செய்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறு வனமும் - திட்டமும் சமூக விரோதமானதே. அய்.பி.எல். மக்களின் ஆர்வத்தைக் கொச்சைப் படுத்தியது; அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மனவேதனையை ஏற்படுத்தியது அய்.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்தியக் கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும் - என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது கல்கி.

இதிலும் ஒரு சன்னமான சமாச்சாரம் நெளிகிறது; கிரிக்கெட் காப்பாற்றப்பட வேண்டும்; அதற்காக இந்த அய்.பி.எல். தடை செய்யப்பட வேண்டும் என்ற உள் நோக்கமும் இதில் மறைந்திருக்கிறது.

அய்.பி.எல். கிரிக்கெட் மட்டுமல்ல; பொதுவாக நடைபெறும் கிரிக்கெட்டில்கூட சூதாட்டம் நடந்ததுண்டே! அதன் காரணமாக இந்திய விளையாட்டுக்காரர்கள் வெளியேற்றப்பட்டதுண்டே! இங்கு மட்டுமல்ல; தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்த (Captain)  ஹான்சி குரோஞ்சி - சூதாட்டத்தில் சிக்கி வாழ் நாள் தடை விதிக்கப்பட்டதுண்டு. ஒரு நிமிடத்தில் துர்தேவதை (Devil)   எனக்குத் தவறான புத்தியைக் கொடுத்து விட்டது என்று கூறவில்லையா? பாகிஸ்தானில் முகம்மது அமீர் என்பவரும் சூதாட்டத்தில் சிக்கவில்லையா?

பொதுவாக கிரிக்கெட் என்பது கால்பந்தாட்டம் போன்றோ, கபடி போன்றோ, ஹாக்கி போன்றோ திறமைக்கும், உழைப்புக்கும் கட்டியம் கூறும் விளையாட்டல்ல.

வெள்ளைக்காரர்களின் தட்ப வெப்பத்துக்குப் பொருத்தமான விளையாட்டாகும்.

வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் தம் ஆட்சி நங்கூரத்தைப் பாய்ச்சினார்களோ, அந்த நாடுகளில் எல்லாம் தங்கள் மண்ணின் விளை யாட்டான கிரிக்கெட்டை தங்களின் மிச்ச கொச்சக் கலாச்சாரமாக பதியம் போட்டுச் சென்று விட்டனர் - அதில் தப்பியது சிங்கப்பூர், மலேசியா.
அய்.பி.எல். கிரிக்கெட் மட்டுமல்ல; பொதுவாக கிரிக்கெட்டே தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். அந்த ஆட்டமே சூது - வாது கொண்ட ஒன்றுதான்.

கபடி, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்தாட்டங்களில் இதுபோல நடந்து கொள்ள வாய்ப்பே கிடையாது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய சமாச்சாரம்தான். இதில் சூது நடப்பதற்கு எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்புகிறார். இதில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தலையங்கம் தீட்டியுள்ளார்.

சாத்தியம் என்பதற்கு ஆயிரம் ஆயிரம் நிரூபணங்கள் கிடைத்து இருக்கின்றன - அவற்றின் அடிப்படையில்தான் கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களும், அவர்களைப் பகடை காயாக்கி உருட்டும் வெளியில் உள்ள சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டி வண்டியாகத் தகவல் கள் குவிந்த பிறகு - இப்படி ஒரு சந்தேகத்தை திருவாளர் சோ எழுப்புகிறார் என்றால், அங்குதான் இருக்கிறது பூணூல் மகாத்மியம் (கிரிக்கெட் என்றாலே பெரும்பாலும் பலன் என்னும் நெருப்பில் குளிர் காய்வது பார்ப்பனர்தானே!)
அவரின் கவலை வேறு ஒரு இடத்திற்குப் பாய்ந்து சொல்லுகிறது.

"கிரிக்கெட் சூதாட்டம் என்ற சந்தடி சாக்கில் 2ஜி ஊழலிலிருந்து, நிலக்கரி ஊழல் வரை, சி.பி. அய்க்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த கண்டனம் உட்பட, காங்கிரஸ் ஆட்சியின் பல தர்ம சங்கடங்கள் எல்லோருக்கும் மறைந்தே போய் விட்டது! ஜம்பக் ஜம்பக் ஜம்பகி ஜபாங்க்! கிலி கிலியாங்!"
                        -----------------(துக்ளக் 29.5.2013 பக்கம் 5)

என்று எழுதும் சோவின் புத்தியைக் கவனிக்க வேண்டும்.

பி.ஜே.பிக்குச் சாதகமான விடயம் பறி போயிற்றே என்பதுதான் சோவின் கவலையே தவிர, கிரிக்கெட் சூதாட்டத்தைப் பற்றிய கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தச் சூதாட்டம் குறித்து சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளார். கிரிக்கெட் போதையைப்பற்றி கழகம் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபடும்!

                             ---------------------------------" விடுதலை” தலையங்கம் 6-6-201345 comments:

தமிழ் ஓவியா said...


வேண்டும்பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இதோ, இதயங் காக்கும் காவலன் பாரீர்!

மருத்துவத்துறையில் தொழில் நுட்பம் வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக வளர்ந்து, மனிதர்களின் ஆயுளையும்கூட நீண்ட காலம் வாழும் வண்ணம் செய்து வருகிறது!

இளமையைப் பாதுகாத்து முதுமையை விரட்டும் மரபு அணு ஆய்வும் மிக வெற்றிகரமாக பிரான் சிலும், இஸ்ரேலிலும் பல்வேறு கோணங்களில் போட்டியிட்டு முன்னேறுகின்றது!

ஆயுள் வளர்ந்தால் மட்டும் போதாது; முதுமை தவிர்க்கப்படல் அல்லவா முக்கியம் என்ற கண்ணோட் டத்தோடு புதுப்புது மருத்துவ தொழில் நுட்ப ஆய்வுகள் பல பல்கலைக் கழ கங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன!

Michio Kakku என்ற ஜப்பானிய - அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ஒரு நூலில், இதயத்துடிப்பின் சீர்மை, ரத்த அழுத்தம் மிகையாக ஆகிறதா? என்பன போன்றவற்றை நமது டாக் டருக்கே நேரிடையாகத் தெரிவித்து அவரை அக்கருவியே (Chips) அழைக்கும் வண்ணம் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன!

காலில் நாம் அணியும் பூட்சு களிலோ அல்லது கட்டும் டைகளிலோகூட அந்த சிப்ஸ்களை இணைத்து விட்டால் அதுவே இந்த வேலையைத் தவறாது செய்யும் என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர்!

இப்போது நேற்று அதே செய்தி வண்ணக் கதிர் (தீக்கதிர்) வார ஏட்டில் வந்துள்ளதை அப்படியே தருகிறேன்.

இதய நோயாளிகள் பயப்பட வேண்டியதே இல்லை... இனி கவலையை விடுங்கள். இதயக் கோளாறு பெரிதாகு முன் ஓர் எச்சரிக்கைக் கருவியை உடலினுள் பொருத்தி விட்டால் போதும். இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை டாக்டருக்கு உடனுக்குடன் 24 மணி நேரமும், தானாகவே தெரியப்படுத்தி விடும். உங்களுக்கு பிரச் சினை என்பதை நீங்கள் உணரும் முன்பே தேவை யான மருத்துவ ஆலோசனை உங்களைத் தேடி வந்து விடும். இதைவிட வேறென்ன வேண்டும்? இது எப்படி சாத்தியம்?

ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மூலம் இதய நோய் கண்டறியும் கருவி ஒன்று உடலில் பொருத்தப்படும். இதயத்தின் செயல்பாடு, நுரையீரலில் நீர்கோர்வை, நாடித் துடிப்பு ஆகியவற்றை இந்தக் கருவி துல்லிய மாகக் காட்டக் கூடியது. நாடித்துடிப்பு குறைந்தால் அதை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பேஸ்மேக்கராகவும், ரத்தம் உடல் முழுவதும் செல்ல செயல்படும். இதயத்தின் செயல் குறைந்தால் சரி செய்யப் பயன்படும். ரீசிங்கரனைசேசன் தெரப்பி டிவைஸ் ஆகவும், இதயத்தை செயலிழக்க வைக்கும் குறைந்த நாடித் துடிப்பையும், சீரற்ற இதயத் துடிப்பையும் சரி செய்யும் டீபிப்ரில்லேட்டர் ஆகவும் இந்தக் கருவி செயல்படுகிறது. இந்தக் கருவி தானா கவே தான் பதிவு செய்த விவரங்கள் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையில் 5 மீட்டர் தொலைவுக்குள் உள்ள செய்திக் கடத்தி கருவிக்குத் தெரி விக்கப்படும். அது சர்வரை சென்ற டைந்து மருத்துவரின் கைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சென்றடையும். அவசர நிலைமை என்றால் சிவப்பு வண்ண எச்சரிக் கையும், சீராக இருந்தால் மஞ்சள் வண்ண அறிவிப்பும் வரும். நம் நாட்டில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 லட்சம் என அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன இதயப் பிரச்சினை வருமோ என்ற பயம் நீங்கி, பயத்தால் ஏற்படும் விளைவுகள் வராமல் தடுக்கப்படு கின்றன. ஒவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 24 மணி நேரமும் மருத்துவர் பார்வையில் இருக்கிறோம். இதைவிட வேறென்ன வேண்டும் ஓர் இதய நோயாளிக்கு? விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்வோம்!
- அ. சுந்தரம்

கணினி செய்த யுகப் புரட்சி இப்படி மனிதர்களை வாழ வைக்கும் உயிர் காப்பான் தோழனாக உயர்ந்து நிற் கிறது!

என்னே புதுமை! எவ்வளவு அருமை!
------------k.veramani

தமிழ் ஓவியா said...


36ஆம் ஆண்டு குற்றாலம் பயிற்சி முகாம் சிந்தனை

- துரை. சந்திரசேகரன்

குற்றாலம் வள்ளல் வீகேயென் மாளிகையில் 36-ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் 29.5.2013 அன்று காலை 9.30 மணிக்கு தொடங் கியது. முகாமில் பங்கேற்ற பயிற்சி மாணவர்கள் அறிமுகம் முதல் நிகழ் வாக அமைந்தது. பரவலாக பல மாவட் டங்களிலிருந்தும் மாணவர்களும், இளை ஞர்களும் பங்கேற்றது

குறிப்பிடத்தக்கது. தொடக்க நிகழ்ச்சி

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மண்டல தி.க.தலை வர் பொறியாளர் சி.மனோகரன், செயலாளர் பால்ராசேந்திரம், மாவட்ட தலைவர் டேவிட் செல்லதுரை, மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப் பதி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் சீ.இளந்திரையன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி எடுத் துச் சொன்னார். கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திசேகரன் பயிற்சி முகாமின் பயன்பாடுகள் பற்றி எடுத் துரைத்து தொடக்க உரையாற்றினார்.

பெரியாரியல் வகுப்புகள்

பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் முதல் வகுப்பினை கழகத் தின் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் நடத்தினார். அடுத்து இயக்க வரலாறு எனும் தலைப்பில் சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சி வரலாற்றைத் தொகுத்து வகுப்பாக்கி நடத்தியபின் பேராசிரியர் ப.காளிமுத்து தமிழரா? திராவிடரா? பொருள்பற்றி பாடம் எடுத்தார். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, கடவுள் மறுப்பு என்பது பற்றி நகைச்சுவை ததும்ப வகுப்பு நடத்தினார். பிற்பகலில் திராவிடர் கழக வரலாறு பற்றி சு.அறிவுக்கரசு, இயக்கப் போராட்டங்கள் எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன், இதிகாசப் புரட்டுகள் எனும் வகுப்பினை முனைவர் ப.காளிமுத்து ஆகியோர் வகுப்பாக நடத்தினர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஊடகத்துறை

பெரியார் ஊடகத்துறை சார்பில் இனிவரும் உலகம் எனும் அய்யாவின் கருத்துக்களை தமிழர் தலைவர் எடுத் துரைக்கும் குறுந்தகடு ஒளிபரப்பப்பட்டது.
யோகா பயிற்சியுடன் இரண்டாம் நாள்

30.5.2013 காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகிராசா யோகப்பயிற்சியினை மாணவர்கட்கு அளித்தார். உடல் - உள்ள நலத்தை ஓம்பிட வேண்டியது ஒவ்வொரு வரின் அவசியப்பணி என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்துத்துவா மதங்களின் கதை ஆகிய தலைப்புகளில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசும், பார்ப்பனர் களின் பண்பாட்டுப்படையெடுப்பு பெரி யாருக்குப்பின் திராவிடர் கழகம் எனும் பொருள் பற்றி கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனும், இயக்க முக்கியச் செய்திகள் என்பது பற்றி கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேக ரனும், பெரியார் போற்றிய பெண்ணியம் எனும் பொருளில் டாக்டர் பிறைநுதல் செல்வியும், பெரியார் பார்வையில் இலக்கியம் எனும் பொருளில் முனைவர் ப.காளிமுத்தும் வகுப்புகள் நடத்தினர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் திரைப்படம்

இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை பெரியார் திரைப்படம் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. இளம் தலைமுறை யினர் அய்யாவைப் பற்றி தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்பானது. பேச்சுப் பயிற்சிக்குரிய பட்டிமன்ற தலைப்பு வழங்கப்பட்டு பேசும் ஆர்வமுடைய மாணவர்கள் பெயர்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

இரவு 10 மணியளவில் வீகேயென் மாளிகை வந்தடைந்த தமிழர் தலைவரை ஆடை போர்த்தி வரவேற்றார் வள்ளல் வீகேயென். கழக நிர்வாகிகளும், தோழர்களும் புடைசூழ தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. குற்றாலம் நகர தி.மு.க. செயலாளர் இராசாராம் கைத்தறி ஆடையினை அணிவித்து மகிழ்ந்தார்.

மூன்றாம் நாள் முகாம்

31.5.2013 வெள்ளி காலை யோகா பயிற்சியுடன் பயிற்சிப்பட்டறை தொடங் கியது. வேலூர் தோழர் கதிரவன் பாடல் பாடினார். பெரியாரின் இன்றைய தேவை தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் எனும் பொருளில் கவிஞர் கலி.பூங்குன்றன், அறிவியலும் மூடநம்பிக்கையும் இந்திய அரசியல் சட்டம் ஆகிய தலைப்புகளில் சு.அறிவுக் கரசு, பேய், பூதம், பிசாசு, ஆவிகள் பற்றி டாக்டர் கவுதமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி முகாமில் கழகத் துணைத் தலைவர் வகுப்பெடுக்கும் காட்சி...

தமிழர் தலைவர் தந்திட்ட பயிற்சி

சமூக நீதி என்ற தலைப்பில் கழ கத்தின் தலைவராம் தமிழர் தலைவர் வகுப்புரிமை வந்த பாதையினை, இட ஒதுக்கீட்டின் வரலாற்றை தொகுத்து இளைஞர்கள், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான முறையில் தமிழர் தலைவர் வகுப்பு நடத்திய பாங்கு போற் றுதற்குரியது. பிற்பகலில் சுயமரியாதைச் சுடரொளி கள் என்ற தலைப்பில் அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார், அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி ஆகி யோரின் அருமை பெருமை களையும், தொண்டறத்தை யும், தியாகத்தையும், குற்றா லம் பயிற்சி முகாம் தொடங் கப்பட்ட போது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிரமங் களுக்கிடையே நடத்திய சாதனையாளர்களான டி.ஏ.தியாகராசன், வழக்கறிஞர் பாண்டிவளவன் போன்றோரையும் நினைவுக்கூர்ந்து வகுப்பு எடுத்தபோது கேட்ட அனைவருக்கும் கண்கள் பனித்தன. உருக்கமாகவும், உணர்ச்சிமிக்கதாயும் தமிழர் தலைவர் இந்த வகுப்பினை நடத்தினார்.

பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்

ஈட்டி கணேசனின் மந்திரமல்ல - தந்திரமே நிகழ்ச்சி, எப்படிஎப்படியெல்லாம் மக்களை மடமையிலிருந்து மீட்கலாம் என்பதை அறிவியல்பூர்வமாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பயிற்சி அளித்தார். இரவு, பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் பேச்சுப் பயிற்சிக்காக நடத்தப்பட்டது. மண்டல தி.க.செயலாளர் பால் இராசேந்திரம் நடுவராக அமர்ந்து - மாநில மாணவரணி துணைச்செயலாளர் த.சீ.இளந்திரையன், இராசேந்திர பாலாஜி ஆகியோர் அணித்தலைவர்களாக தமிழின முன்னேற்றத்துக்குப் பெரிதும் தடையாயிருப்பது திரைப்படங்களா? கடவுள் மதமா? எனும் தலைப்பில் நடத்தப்பட்டது. இரு அணியிலும் பங்கேற்று பேசிய மாணவர்கள் சிறப்பாக தங்கள் அணிக்கான வாதங்களை முன்வைத்து பேசிய விதம் பாராட்டுக்குரியது. தோழர்கள் மல்லிகா, மிருணாளிணி, அருண்குமார், காளிதாஸ், மானவீரன், பிரவீன்குமார், கவுசல்யா, மலர்விழி ஆகியோர் பட்டிமன்ற பேச்சாளர்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி உரையாற்றும் மருத்துவர் கவுதமன்


தமிழ் ஓவியா said...

கழக கொடியேற்ற நிகழ்ச்சி

தி.மு.க.நகர செயலாளர் திரு. இராசாராம் ஒத்துழைப்பில் திராவிடர் கழக கொடியேற்று விழா உயர்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்தது. தோழர்கள் கொள்கை முழக்கத்துக்கிடையே தமிழர் தலைவர் கழகத்தின் புரட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.
வழக்கம் போல் யோகிராசாவின் யோகா பயிற்சிக் குப்பின் முதல்வகுப்பாக தமிழர் தலைவர் ஜாதி ஒழிப்பு எனும் தலைப்பில் நடத்திய வகுப்பு அமைந்தது. ஜாதி ஒழிய திராவிடர் கழகம் ஆற்றிவரும் பணிகளை இணைத்து குறிப்புரை தந்தார். தீண்டாமை - ஜாதி ஒழிப்பு சம்மந்த மாக வெளிவந்துள்ள பெரியார் களஞ்சியங்கள் நூல் வரிசையை வாங்கிப் படித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களை தூண்டினார்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி எனும் தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்திய வகுப்பு - மனித வாழ்வின் உன்னதம் பெரியாரின் கருத்தில் இருப்பதை சுட்டிக் காட்டுவதாய் அமைந்தது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார்

மூன்றாவது வகுப்பாக கேள்வியும், கிளத்தலும்! வகுப்பு மாணவர்கள் கேட்ட கேள்விகள், அய்ய வினாக்களுக்கு அற்புதமாக, மாணவர்கட்கு அகமகிழ்வு ஏற்படும் வகையில் தெளிவும், புரிதலும் ஏற்படும் வண்ணம் தமிழர் தலைவரின் பதில் அமைந்தது.

கணினிப் பயிற்சியும், ஊடகத்துறையும்

ஒவ்வொரு நாளும் நண்பகலில் மாணவர்களுக்கு கணினி பயிற்சியினை ஜெகன், பிரபாகரன் ஆகியோர் நடத்தினார்கள். ஊடகத்துறை சார்பில் தோழர் உடுமலை வடிவேல், பிரபாகரன் ஆகியோர் குறும்படம், ஆவணப்படம் ஒளிபரப்பினர்.

நிறைவு விழா - பரிசளிப்பு

பயிற்சி மாணவர்களுக்கு நினைவுப்பரிசாக வள்ளல் வீகேயென் பிளாஸ்க்குகளையும், ஈரோடு சம்பத் இயக்க நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினர். தமிழர் தலைவர், மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுரை வழங்கினார். மாணவர்கள் சார்பில் மல்லிகா, மானவீரன் ஆகியோர் தாங்கள் இந்த முகாமால் பெற்ற பயன்களை எடுத்துரைத்தனர்.

தாயினும் சாலப்பரிந்து பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற இடமும், உணவும் அளித்து மகிழ்ந்த வள்ளல் வீகேயென் அவர்களுக்கும், அவரின் பணியாளர்களுக் கும் ஆடைபோர்த்தி சிறப்பு செய்தார் தமிழர் தலைவர். முகாம் சிறக்க பாடுபட்ட சாமி திராவிடமணி, பால்ராசேந் திரம், பயிற்சியளித்த பெருமக்கள், அனைத்து உதவிகளை யும் நல்கிய எடிசன்ராசா, பொறியாளர் மனோகரன், வே.செல்வம், டேவிட் செல்லதுரை, மாநில பொதுச் செயலாளர் தஞ்சை செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் இளந்திரையன் உள்ளிட்ட தோழர்களையும் பாராட்டி ஆடைபோர்த்தினார் தமிழர் தலைவர். பிரிய மனமில்லாமல் இயக்கத்தின் லட்சியங்களை மக்களிடம் சேர்க்கும் மன மகிழ்வோடு தோழர்கள் விடைபெற்றனர். முகாம் இனிதே நிறைவுற்றது.

தமிழ் ஓவியா said...


சொல்லுவது அருந்ததிராய்!

இந்தியா சுதந்திரமடைந்த வேளையில், காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட நாட்டின் எல்லைக் குள்ளாகவே ராணுவத்தை அனுப்பி, அரசு சொந்த குடிமக்களுக்கு எதி ராக போர் நடத்தியது. இவ் வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. இந்திய அரசு உயர்ஜாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலப் பிரபுத்துவம் மீண்டும் வருகிறது. முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங் களின் பலனாக ஏற்பட்ட நலன்கள்கூட பலன் பிரயோ கித்து மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. இதற்கெதிராகப் போராடுபவர்களுக்குப் பெரியதொரு இமேஜ் இருந்தாலே வெற்றி பெற முடியும். நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மன்மோகன்சிங்கோ, நரேந்திரமோடியோ அல்ல. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழிலதிபர்கள்தாம் நாட்டை ஆளு கிறார்கள். ஆகையால்தான் முகேஷ் அம்பானிகளுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- அருந்ததி ராய், எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...


உழைப்பேன்; உழைத்துக் கொண்டே இருப்பேன்!உடன்பிறப்பே,

என்னுடைய 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தியிருக்கிறீர்கள். இரண்டு மூன்று நாட்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. என் வீட்டாரும் திரும்பத் திரும்ப அதுபற்றிக் கேட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாக என்னுடன் காலையிலும், மாலையிலும் பக்கத்திலே இருக்கின்ற பாசம் மிகுந்த என் தம்பிமார்கள் சிலர்கூட என்ன அண்ணே, தூக்கம் வரவில்லையா என்றார்கள்! தூக்கம் வராத தற்குக் காரணம் எனக்குத்தான் தெரியும்; ஆம்; வேறொன்றுமில்லை. எல்லை இல்லாத சார்பு
தமிழ் மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டு களுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக் கிறார்களே? எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே? என் உயிர் மாறன்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி! அதுவரை யாரும் எங்கள் குடும்பத்தில் பட்டதாரி கிடையாது! எங்கள் குடும்பத்திற்கு என்று எந்தப் பெருமையும் கிடையாது. ஆனால் ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்து விட்டேன். 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறைகூட தோல்வியடையாமல், தொடர்ந்து வெற்றி பெற்றி ருக்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்து வருகிறேன். தமிழ் நாட்டில் ஏழு கோடி மக்கள் இருப்பதாக அண்மையில் ஏடுகள் தெரிவித்திருந்தன. இந்த ஏழு கோடி மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு என்னை எதிரியாகக் கருதக்கூடிய வர்கள் ஒரு சிலர் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் எல்லாம் என்பால் அன்புதான் காட்டியிருக் கிறார்கள். ஒரு சில காலம் என்னை எதிர்த்தவர் கள்கூட, பின்னர் என்னிடம் அன்பு காட்டியிருக் கிறார்கள். ஏன் என்ன காரணம்? எனக்கென்று உள்ள பெருமைதான் எது? உழைப்பு ஒன்றுதான். சிறு வயது முதல் இடைவிடாமல் உழைத்திருக் கிறேன். கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுதியிருக்கிறேன், பேசியிருக் கிறேன் என்றால் சும்மாவா? என்னுடைய சுயசரிதையும், அதோடு இணைந்த கழகத்தின் வரலாற்றையும் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதியிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

நெஞ்சுக்கு நீதி -

4616 பக்கங்கள்

இதுவரை அய்ந்து பாகங்கள் நூல்களாக நெஞ்சுக்கு நீதி வெளிவந்து விட்டது. ஆறாவது பாகமும் முரசொலியில் வாரந்தோறும் தொடராக எழுதி விட்டேன். இன்னும் அது நூலாக வெளிவரவில்லை. இந்த ஆறு பாகத்தில் 1924ஆம் ஆண்டு நான் பிறந்தது முதல் 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வு களைத்தான் எழுதியிருக்கிறேன். இந்த ஆறு பாகங்களும் மட்டும் எத்தனை பக்கங்கள் தெரியுமா? 4,616 பக்கங்கள். ஆம், இந்த ஒரு நூல் மட்டுமே 6 பாகங்கள், 4,616 பக்கங்கள்.

அதுபோலவே தமிழகச் சட்டப்பேரவையில் நான் ஆற்றிய முக்கிய உரைகள் இதுவரை 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. அது எத்தனை பக்கங்கள் தெரி யுமா? 6,077 பக்கங்கள். இதுதவிர நான் எழுதிய கவிதை களை எல்லாம் தொகுத்து கவிதை மழை என்ற தலைப்பில் 1,107 பக்கங்கள்! தற்போது வெளியிடப் பட்ட சிறுகதைப் பூங்கா 670 பக்கங்கள்! ரோமாபுரிப் பாண்டியன், சரித்திர நாவல், 705 பக்கங்கள்! தென்பாண்டிச் சிங்கம் 453 பக்கங்கள்! முத்துக்குளியல் இரண்டு பாகங்களும் சேர்ந்து 1,062 பக்கங்கள்! புதையல் 380 பக்கங்கள்! சங்கத் தமிழ் 484 பக்கங்கள்! பொன்னர் சங்கர் 543 பக்கங்கள்! குறளோவியம் 648 பக்கங்கள்! குறள் உரை 285 பக்கங்கள்! தொல்காப்பிய பூங்கா (இதுவரை 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன) 551 பக்கங்கள்! நான் பேசி, எழுதி அச்சில் மட்டும் வந்திருப்பது மொத்தம் எத்தனை பக்கங்கள் தெரியுமா? 17,082 பக்கங்கள்! எனக்கே மலைப்பாகவும், பிரமிப் பாகவும் இருக்கிறது - இத்தனை பக்கங்களை எழுதி யிருக்கிறோமா என்று! நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இது மட்டுமல்ல; சிறு சிறு நூல்கள் வடிவில் 100-க்கு மேற்பட்ட புத்தகங்கள் நான் எழுதியவை வெளி வந்திருக்கின்றன. இதுதவிர, நான் முரசொலியில் எழுதிய கடிதங்கள் 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. கல்வி நிலையங்களில் நான் ஆற்றிய உரைகளைத் தொகுத்து தம்பி இள.புகழேந்தி ஒரு பெரிய நூலாக வெளியிட்டுள்ளார். எழுதியது மாத்திரமல்ல; என்னு டைய இந்த 90 வயதில் தமிழகத்திலே உள்ள பெரு நகரங்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் நான் பேசாத இடம் எதுவுமே கிடையாது. வெளியூர் களிலும், நான் வெளியூர் செல்லும் போது சாலை யோரங்களிலும், சென்னையிலும், மாநாடுகளிலும், பொதுக் கூட்டங் களிலும், ஏன் என்னுடைய இல்ல வாயிலிலும் என்று நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் சுமார் 20 ஆயிரத்தைத் தொடும்! இது மாத் திரமல்ல; தமிழ்நாட்டு அரசியலில், மாநில கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்த போதிலும், என்னை அறிந்து கொள்ளாத அகில இந்தியத் தலைவர்கள் இல்லை என்ற அளவிற்குப் பழகியிருக்கிறேன். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலந்தொட்டு, அதற்குப் பிறகு வந்த அனைத்துப் பிரதமர்களும் என்னுடன் அன்புடனே பழகியிருக்கிறார்கள். யாரும் என்னிடம் வெறுப்பு காட்டுகின்ற அளவிற்கு நான் நடந்து கொண்டதில்லை. பிரதமர்கள் மாத்திரமல்ல, மத்திய அமைச்சர்கள் மாத்திரமல்ல, மத்தியில் எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெற்ற அத்தனை தலைவர்களும் என்னை மதித்தே பாராட்டியிருக்கிறார்கள். ஏன், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் என்னை நன்கறிவார்கள். முதுகில் மிகப் பெரிய வலி வந்து, அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியில் பயணம் மேற்கொள்கிற போதும், நான் என்னுடைய பணிகள் எதையும் நிறுத்தி விடவும் இல்லை; ஒத்திப் போடவும் இல்லை. கூட்டங்களுக்குச் செல்லாமல் இல்லை, எழுதாமல் இருப்பதில்லை. என்னுடைய அரசியல் பணிகளுக்கிடையே கலைத் துறையிலும் ஈடுபட்டு இதுவரை சுமார் 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி, அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக ஓடியுள்ளன என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நான் எழுதிய உரையாடல் கள், தமிழகத்திலே உள்ள பலரால் மனப்பாடம் செய்யப் பட்டதும், உரையாடல்கள் முதன் முதலாக நூல் வடிவில் வெளிவந்ததும் உண்டு. இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்ட தில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த் தேன் என்று பேசியதில்லை.

தமிழ் ஓவியா said...


90 கவிஞர்கள் பாராட்டு

இப்படிப்பட்ட எனக்குத்தான் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. பிறந்த நாள் 3ஆம் தேதிதான் என்றாலும், 1ஆம் தேதியன்றே 90 கவிஞர்களை அழைத்து உங்களை கவுரவிக்கப்போகிறேன் என்று தம்பி கவிப்பேரரசு வைரமுத்து ஒரு மாதத்திற்கு முன்பே என்னிடம் ஒப்புதல் பெற்று விட்டார். அந்த நிகழ்ச் சியை மிக அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். ஒவ் வொன்றையும் அவரே நேரடியாக சரிபார்த்து நடத்தினார். தமிழகக் கவிஞர்கள் 90 பேரை அங்கே கொண்டு வந்து குவித்து விட்டார். மூத்த கவிஞர்கள் குலோத்துங்கன் என்ற வா.செ. குழந்தைசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான், காவியக் கவிஞர் வாலி, கல்யாண் ஜி, ஞானக் கூத்தன், மனுஷ்யபுத்திரன், கவிதைப்பித்தன், கனிமொழி, இளையபாரதி, பழனி பாரதி என்று 90 கவிஞர்கள் அங்கே ஒவ்வொருவராக என்னிடம் வந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

1ஆம் தேதியன்று காலையிலே மகளிர் அணியின் சார்பில் சகோதரி நூர்ஜகான் பேகம் தலைமையில் பிறந்த நாள் விழா கருத்தரங்கம். நூர்ஜகான் பேகம் இன்றைக்கு மகளிர் அணியின் தலைவராக இருந்த போதிலும், அந்தக் காலம் தொட்டு நான் புகை வண்டியில் மதுரைக்குச் செல்கிறேன் என்றால், திண்டுக் கல் புகைவண்டி நிலையத்தில் இருபது மகளிரோடு கூடி நின்றுகொண்டு, கலைஞர் வாழ்க என்ற குரலை அந்தப் புகைவண்டி நிலையம் முழுவதும் கேட்கக்கூடிய அளவிற்கு எதிரொலிக்கும் நாள் முதல் நான் அறிவேன். பாசக்கார தங்கை! அந்தக் கருத்தரங்கில் தம்பி துரை முருகன், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தம்பி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அருமையாக உரையாற்றினர்.
ஜூன் 2ஆம் தேதியன்று நான் எழுதிய நெஞ்சுக்கு நீதியின் 5ஆம் பாகம் நூலும், சிறுகதைப் பூங்கா நூலும் வெளியீட்டு விழா. ஒவ்வொரு ஆண்டு எனது பிறந்தநாள் விழாவிலும் முன்னின்று பங்கேற்று சிறப்பிக்கும் பொதுச் செயலாளர் பேராசிரியர், உடல் நலமின்றி இருப்பதால் நான் 2ஆம் தேதி மாலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். இந்த விழாவில் நீதியரசர் மோகன் தலைமை தாங்கி, நூல்களை வெளியிட்டு என்மீது அவருக்குள்ள பாசத்தை அங்கே குற்றால அருவியெனக் கொட்டினார். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட நமது முனைவர் நன்னன் அவர் களோ உரிமையுடனும், உணர்வுடனும் கருத்துகளைப் பொழிந்தார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோ, அந்த நூல்களின் பெருமையை அவருக்கே உள்ள சிறப்போடு வியந்து போற்றினார். மனுஷ்ய புத்திரன் அவர்களின் கருத்தினை நான் ஏடுகளின் வாயிலாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் தான் கேட்டிருக்கிறேன் என்ற போதிலும், நேரில் அன்றுதான் கேட்டேன். ஓர் ஆழமான ஆய்வுரையை நீண்ட நாள் சிந்தித்து கட்டுரையாக யாத்து, அதனைப் படித்துக் காட்டுவது போல, எந்தக் குறிப்பும் கையிலே இல்லாமல் அங்கே தொகுத்தளித்தார். வரவேற்புரை ஆற்றிய தம்பி துரைமுருகனோ, என் தம்பி என்பதை மீண்டும் ஒரு முறை அனைவரும் எழுச்சி கொள்ளும் வண்ணம் அங்கே நிரூபித்துக் காட்டினார்.

மக்கள் பெய்த அன்பு மழை!

ஜூன் 3; அன்று காலை 5 மணி முதல் அன்றிரவு 12 மணியளவில் படுக்கச் செல்கின்ற வரையில் தமிழ் மக்கள் என் மீது பெய்த அன்பு மழை இருக்கிறதே; அதற்கு நான் என்ன கைமாறு எப்படிச் செய்யப் போகிறேன்? அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்தான் பிறந்த நாளில் கழகத் தோழர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு எப்படி இவ்வளவு கூட்டம்? அண்ணா அறிவாலயத்திற்குள் நுழையும் கண்ணாடிக் கதவு தூள் தூளாகி விட்டது. முதல் நாள் இரவு அறி வாலய நண்பர்கள், கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற் காக அமைக்கிறோம் என்று அழகாக சாரம் கட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் மறுநாள் காலையில் மக்கள் கூட்டத்திற்கிடையே முறிந்து விட்டது. இடையில் ஒரு முறை கூட்டத் தினர் என் மீது சாய்ந்து விடக்கூடிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் பக்கத்தில் இருந்த அறைக்குள் அவசர அவசரமாகச் சென்று விட்டோம்! ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலே தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்! வேறு இடங்களிலே நடத்தினால் காவல் துறையினரிடம் அனுமதி பெறுவதில் சிக்கல் என்பதால் அங்கே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகப் பெரிய திடல். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி ஜெ. அன்பழகன் பற்றியும், அவரது தலைமையில் பணி யாற்றிய கழக உடன்பிறப்புக்களைப் பற்றியும் நான் அவசியம் குறிப்பிட வேண்டும். அன்று கோபாலபுரம் இன்று அண்ணா

தமிழ் ஓவியா said...

அறிவாலயம்

அந்தப் பொதுக் கூட்டத்திலேயே குறிப்பிட வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அண்ணா அறிவாலயத்தையே அப்படியே பெயர்த்து எடுத்து அங்கே கொண்டு போய் நிறுத்தி விட்டார்களோ என்று ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு செய்திருந்தார்கள். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளருக்கு என் மீது அப்படி ஒரு பக்தி! கடந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் விழா கூட்டத்தை ஏற்பாடு செய்த போது, கோபால புரத்தில் என் இல்லத்திலே நான் அமர்ந்து உரையாற்றுவதைப் போலவே ஏற்பாடு செய்திருந்தார். வெளியூர்களில் தொலைக்காட்சி மூலமாக அந்த மேடையைப் பார்த்தவர்கள், கோபாலபுரத்தில் வீட்டில் இருந்தவாறே நான் பேசுவதைப் போல உணர்ந் தார்கள். ஜெ. அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன், இப்படித் தான் மேடைகளை புதுமை குலுங்க நிர் மாணிப்பார். ஒரு முறை பழங்களைக் கொண்டே மேடையை நிர்மாணித்திருந்தார். அவருடைய செல் வன் ஜெ. அன்பழகன் தந்தையை மிஞ்சும் மகனாக இந்தப் பொதுக் கூட்ட மேடையை நிர்மாணித்து விட்டார். அறிவாலயத்திற்குள் எப்படி அறைகள் இருக்குமோ, அதுபோலவே இங்கேயும் அறைகளை அசலைப் போலவே அமைத்து, என்னுடைய அறையிலே அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தலைவர்களை யெல்லாம் அழைத்து வந்து காட்டினார். அண்ணா அறிவாலய வாசலில் இருப்பதைப் போலவே அண்ணா சிலை ஒன்றையே அங்கே கொண்டு வந்து வைத்திருந்தார். உயரமாக மேடை அமைத்து, அங்கே கூடியிருந்த மக்களை அல்ல, மக்கள் கடலைத்தான் நாங்கள் பார்த்தோம். வீட்டில் இருந்து கிளம்பி, பொதுக்கூட்ட மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். அந்தத் தூரத்தில், வரும் வழியில் ஒன்பது இடத்தில் வரவேற்பு என்ற பெயரால், ஒவ்வொரு பகுதிக் கழகத்தின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. மாலை 6.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் இரவு 8 மணிக்குத் தான் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை, அல்ல அல்ல, அங்கே உருவாக்கப்பட்டிருந்த புதிய அண்ணா அறிவாலயத்தை அடைய முடிந்தது. விழா ஏற்பாடுகளையும், அண்ணா அறிவாலய ஏற்பாடு களையும் கட்டுக்கோப்பாக

செய்து முடித்த கழகப் பொருளாளர் தம்பி தளபதி;

அண்ணா அவர்கள் இருந்த போது நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளைச் செய்த என்னைத்தான் நினைவூட்டினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி உட்பட பாராட்டு

பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தலைவர், திரா விடர் கழகத் தலைவர், என்னுடைய அருமை இளவல் வீரமணியார், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தம்பி தொல். திருமாவளவன், பேராசிரியர் காதர் மொய்தீன், அருளாளர் ஆர்.எம்.வீ., பேராசிரியர் தம்பி சுப.வீரபாண்டியன் ஆகியோரும் என்னை வாழ்த்தியும், பாராட்டியும் பேசிய கருத்துக்கள் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக் கிறது. இதற்கிடையே 2ஆம் தேதியன்று இளைஞர் அணியின் சார்பாக, முன்னாள் மேயர் தம்பி மா. சுப்பிரமணியம், காமராஜர் அரங்கத்தில் முத்தமிழ்க் கருத்தரங்கம் ஒன்றினை கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோரைக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்தினார். பேசியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய சிறப்போடு மற்றவர்களை வெல்லுகின்ற அளவில் பேசினார்கள். மா. சுப்பிரமணியம் தொடர்ந்து பல நாட்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் ஏற்பாடு செய்திருந்த அந்த முதல் நிகழ்ச்சியே, முழு நிகழ்ச்சியாக, முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாக்கள் இன்னும் முடிந்தபாடில்லை.

மாவட்டங்கள் எல்லாம் 100 நிகழ்ச்சிகள் என்றும், மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் என்றும், தொடர் நிகழ்ச்சிகள் என்றும் போட்டி போட்டுக் கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போ கிறேன் என்பது தான் இரண்டு மூன்று நாட்களாக என்னைத் தூங்க விடாமல் என் மனதிற்குள் எழுகின்ற கேள்வியாகும். இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என் மனதாலும் செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்!

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 6.6.2013)

தமிழ் ஓவியா said...

புளூடூத் - தெரிந்ததும், தெரியாததும்!

புளூடூத் பற்றித் தெரியுமா? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்று நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால் எந்த அளவுக்குத்தெரியும் என்பது கேள்விக்குறிதான். அதான் செல்பேசி இருக்குமே பாட்டு எல்லாம் பகிர்ந்து கொள்ளலாமே என்னு மளவுக்குத்தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். இதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும், இருந்தாலும் புளூடூத் என்றால் என்ன, அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம். பல்லுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்காக புளூடூத்ன்னு பெயரை வெச்சாங்க? இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம். பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்க வேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர். அதனால்தான் நமது இணைக்கும் தொழில் நுட்பத்திற்கும் அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு B தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான்.

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு செல்பேசிகளிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக்கொள்வது இந்த முறைதான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு!

PAN

PAN தெரியுமா என்றால், தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். என்பீர்கள். நல்லது! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுக்காப்பான இந்த குறுகிய நெட்வர்க்தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழுதான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், உரிமம், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச்சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்டு புரோடோகால்(Packet - Based Protocol)என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

தமிழ் ஓவியா said...


இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (Master - Slave Structure) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும். தகவல் பரிமாற்றத்துக்கான அடிப்படை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகண்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகண்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் இரட்டை எண் இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும் ஒற்றை எண் இழைகளின் வழியாக தகவல் களை பெறும். இது தான் அடிப்படை! பெரும்பாலும் இந்த பகிர்தல் ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது! சீட்டு குலுக்கிப்போடும்போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப் பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்ப சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும்!

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோ சிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் அய்ந்து மீட்டர்கள் என்னுமளவிலேயே இருக்கும்.

புளூடூத்துக்கான அடிப்படை கட்டமைப்பை 1994ஆம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.அய்.ஜியால் 1998 ஆம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0இல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு என்னுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது! அதே போல ஒளி அலைகளை கடத்த AADP (Advanced Audio Distribution Profile) எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கருவிகள் இப்படி இணைவதை பெயரிங் என்பார்கள். இதை புளூடூத்தின் பாண்டிங் நுட்பம் செயல்படுத்துகிறது. எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing) முறைதான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் குறைவான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது. செல்பேசியிலிருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு செல்பேசி தகவல் அனுப் புவது விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, தொலைக்காட்சி போன்ற மின்சாரப் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமை யான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தனி நிலா கொண்ட விண்கல் பூமியை கடந்து சென்றது

சுமார் மூன்று கிலோமீட்டர் விட்டம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு அருகே வந்து சென்றுள்ளது.

பூமியை நிலா சுற்றிவருவதுபோல இந்த விண்கல்லுக்கும் நிலவொன்று உண்டு. 1998 கியு ஈ 2 என்று பெயரிடப்படுள்ள இந்த விண்கல் பூமிக்கு அருகில் வருவதால் இது பற்றி விஞ்ஞானிகள் கூடுதலாக ஆராய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பூமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படுத்தாதபடிக்கு அறுபது லட்சம் கிலோமீட்டர் தூரத்தில்தான் இந்த விண்கல் தற்போது பூமியைக் கடந்துள்ளது.
இந்த விண்கல் எந்த கனிமத்தால் ஆனது என்றும், பிரபஞ்சத்தில் எப்படியான இடத்தில் இது உருவானது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வெறும் கண்ணால் பார்ப்பவர்களுக்கு இந்த விண்கல் தெரியாது என்றாலும் டெலெஸ்கோப் தொலைநோக்கி வைத்திருப்பவர்கள் இதனைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


காவடி அல்ல ஆவடி!

பெரியாரோடு தி.க. குளோஸ் என்று மனப்பால் குடித்துக் கிடந்தனர். அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நடத்தப்பட்டது என்றவுடன் அக்கிரகாரத்தில் எழவு விழுந்தது மாதிரியாகிவிட்டது.

அவரோடு அத்தியாயம் முடிந்துவிடாதா என்று ஆசைப்பட்டுக் கிடந்தனர்.

மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப் பேற்றார். மாவட்டத்துக்கு மாவட்டம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.

ஆத்திரத்தில் உச்சியிலே சென்ற அக்கிரகார வாசிகள் பழனியிலே மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். அதன்மூலம் பார்ப்பனர் அல்லாத மக்களின் தலைவர் - பாதுகாவலர் வீரமணிதான் என்று உலகுக்கே அறிவித்துவிட்டனர் பார்ப்பனர்கள். (பார்ப்பனர் களுக்கு முன் புத்தி ஏது?).

ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர் கள் தூக்கிச் சென்றார்களே, அது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா என்று எதிர் கேள்வி போட்டு, பார்ப்பனர்களுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மான மரியாதையை யும் கப்பல் ஏற்றினார்.

பெரியார் காலத்தில் 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தார்.

மாநில அரசு மட்டத்தில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளிலும் (மண்டல் குழு பரிந்துரை) அமல்படுத்தச் செய்தார். (அதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தினார்).

அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இடங்களைப் பெற்றனர்.

அக்கிரகாரத்தின் தலையில் இடிவிழுந்தது மாதிரி ஆயிற்று. பெரியார் பரவாயில்லையே, இந்த வீரமணிதான் மோசம் என்று எழுத, பேச ஆரம்பித்தனர்.

பெரியார் திடலுக்கே வந்து தலைவர் வீரமணி அவர்களைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யுங்கள் என்று பார்ப்பனர்களை பணிய வைத்தார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறதே என்று அங்கலாய்த்தார்கள்.

இவர் காலத்தில் இயக்கம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்முட்ட எழுந்து நிற்கின்றன. இந்தியாவின் தலைநகரிலே பெரியார் மய்யம் கொண்டுள்ளார். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழச் செய்து வருகிறார்.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்த வகையில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் இரட்டைக் குழல் துப்பாகியான தி.மு.க. அதன் வலிமை வாய்ந்த, முதிர்ச்சிமிக்க தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் 90ஆம் அகவையை எட்டும் காலகட்டத்தில்,

அந்த அரசியல் பணி தொடர, அடுத்த கட்ட இளைஞர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயம்.

இந்தக் கலைஞர் அரசியலில் இருந்தாலும், வாக்குகளைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், இடை இடையே அவரின் குரு குலமான ஈரோட்டுச் சரக்கினை வெளிப்படுத்திக் கொண்டேதானிருப்பார். ஈரோட்டு வாசனை வீசிக் கொண்டுதானிருக்கும்.

நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பார்; நான் நாத்திகன்தான் என்பார்; ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பார் - அந்த அரசியல் இவர் தலைமுறையோடு முழுக்குப் போடாதா என்று யாகம் நடத்திக் கொண்டு இருப்பவர்களின் ஆசையில் மண் விழ,

தளபதி ஒருவர் தோன்றியிருக்கிறார் - அவரை தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய இந்த வீரமணி தூக்கிப் பிடிக்கிறார் - அடையா ளம் காட்டுகிறார் என்றவுடன், ஆரிய தினமலருக்கு அடிவயிறு பற்றி எரிகிறது - ஆத்திரம் அலை மோதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கார்ட்டூன்.

இது வீரமணியார் எடுக்கும் காவடியல்ல - ஆவடி! ஆரியத்தை நோக்கி வீச வேண்டிய ஆயு தத்தைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற் சாலைகள் ஆவடியில்தான் உற்பத்தியாகின்றன.

கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குச் சென்று பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் லோகக் குருக்களுக்கு ஜால்ரா தட்டும் தர்ப்பைகளா பூர்ணகும்பம் கொடுக்கும் பூணூல்களா ஜால்ரா பற்றிப் பேசுவது?

ஒன்று தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத் துக்கு? வீரமணி எங்கு இருந்தாலும் ராஜ குரு வாகத்தான் இருப்பார்!

- கருஞ்சட்டை -6-6-2013

தமிழ் ஓவியா said...


விபச்சாரம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?

வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.

இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

தமிழ் ஓவியா said...

வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...

பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

தமிழ் ஓவியா said...


பாவ விமோசனம்


பகவானிடம் பக்தி காட்டினால் போதும். வைதீகச் சடங்குகளிலே வாயையும், வயிற்றையும் கழுவிக் கொண்டால் போதும் - எதுவும் செய்யலாம் - எப்படியும் நடந்து கொள்ளலாம் - பகவான் அருள் அட்டியின்றிக் கிடைத்துவிடும்.

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் அற்புத மார்க்கம்!

பாவம் மிகப் பெரியது - கழுவாயோ மிகச் சிறிது!

இது வேதாரண்யம் தல வரலாறு இதனை வெளியிட்டது ஸ்ரீ வேதாரண்யேஸ்வரசுவாமி தேவஸ் தானம். வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச் சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான்.

மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தா லல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கைவரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந் தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள்.

இவனைக் கண்டதும் இவன் இளமை யிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான். காமந்தலைக்கேறி, அவ் விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து-நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடியது, வெல்லுதற்கரியது என வருந்தினான்.

இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன்முன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்துகொண்டு அப் பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.

பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சக்தி பதம் பெற்றாள்.

- இதை எழுதுவதற்கேகூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரம் எழுந்தருளி இருக்கும் இத் தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலைத் தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டுபோய் வைத் திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு; இங்கு ஒரு மதம்.

இதனைக் கட்டியழச் சங்கராச்சாரிகள் என்றால் இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டு பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அம்மையாரை சிக்கலில் மாட்டும் நமது எம்.ஜி.ஆர்.ஏடு


முதுமையை முறியடிக்கிறார் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி விட்டாராம்! கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகக் கூறப்படும் நமது எம்.ஜி.ஆர். (6.6.2013, பக்கம் 18).

ஆயுளின் பெருமை என்பது வாழும் வருடங்களைப் பொறுத்ததல்ல! வாழுகிற காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பெருமை கொண்ட சேவைகளைப் பொறுத்ததே ஒருவனின் பிறப்புப் போற்றப்படுவதும், தூற்றப்படுவதும்! என்று தத்துவார்த்தம் வேறு பேசுகிறது அவ்வேடு.

90 வயதில் கலைஞர் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவில்லையா? மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களங்களில் குதித்து சிறைத் தண்டனைகளைப் பலமுறை ஏற்கவில்லையா?

அரசியலில் ஈடுபட்டு தோல்வி என்றால் என்ன வென்றே தெரியாத அளவுக்கு (12 முறை வென்று) 50 ஆண்டு சட்டமன்ற பணிகளைச் செய்த ஒரே தீரர் கலைஞர் தானே! இதே நேர்க்கோட்டில் அவர்களின் தலைவியரை வைத்துப் பேச முடியுமா?

கலைஞரின் பணிகளை அண்ணாவே பல வகைகளில் பாராட்டியது கிடையாதா? கலைஞரின் கைக்குக் கணையாழி அணிவித்தது எதற்காக? என்ற வரலாறு எல்லாம் அ.தி.மு.க. எழுத்தாள ருக்குத் தெரியுமா? கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணா வேறு - அந்த அண்ணா பார்வையில் கலைஞர் எத்தகையவர் என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும்!

திராவிட இயக்க வீராங்கனைகள் பெயரில் மகளிர் நலத் திட்டங்களைச் செய்தவர் யார்?

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் யார்?

கலைஞர் செய்த திட்டங்களைத் தாண்டி மகளிர்க்கு அ.இ.அ.தி.மு.க. அரசு சாதித்தது என்ன?

அரவாணி என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்காக நல வாரியம் அமைத்தது யார்? அந்த நலவாரியத்தை முடக்கிய அம்மையார் யார்?

ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலிந்தோர்க்கு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தது யார்? (கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உள்பட).

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் செயல்படுத்தியவர் யார்? அதனால் பொதுமக்கள் பலன் அடையவில்லையா?
20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் அம்மையார் ஆட்சி எங்கே? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த கலைஞர் ஆட்சி எங்கே?

90 வயதிலும் போராட்டக் களம் கண்டவர் கலைஞர் - 90 ஆவது வயதிலும் போர்! போர்!! போர்!!! என்று அறிவிக்கக்கூடிய திராணி படைத்தவர் கலைஞர். அதனால்தான் முதுமையை முறியடிக்கிறார் கலைஞர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நினைவாற்றல் இருப்பதால்தான் சொந்தமாகப் பேசுகிறார் - சொந்தமாக எழுதுகிறார் - அந்த உண்மையைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் எதிர்கேள்வி போட்டால் அவர்களின் தலைவரை எந்த இடத்தில் நிறுத்தி வைப்பது?

வரலாறு தெரியாத நுனிப்புல் மேய்பவர் களிடம் எழுத்தாணியைக் கொடுத்தால், எதையாவது கிறுக்கித் தள்ளி - அதன் விளைவு அக்கட்சியின் தலைவியைப் பரிதாபத்திற்குரிய இடத்தில் அல்லவா நகர்த்தும்!

ஒருக்கால் அது நடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இப்படி வலிய வம்புக்கு வருவதுபோல் காட்டிக் கொள்கிறார்களோ!

இவை எல்லாம் அம்மையாரின் கவனத்திற்குப் போகவா போகிறது என்கிற தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எதிர்விளைவை நோக்காது கிறுக்குகிறார்களோ!

அந்தோ பரிதாபம்!

- கருஞ்சட்டை- 7-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி தேர்வு முறை: இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது - ஏன்?


தந்தை பெரியார் கொள்கைக்கு விரோதமானது!

தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, ஜூன் 7- ஆசிரியர் பணிக் கான தகுதி தேர்வில் தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் - ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது - இடஒதுக்கீடு கொள்கைக்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டு தலுக்கும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கும் விரோதம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதே?

கலைஞர் :- மூன்றாவது முறையாக இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்ட தாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர் பார்ப்பதால், 15 இலட்சம் விண்ணப் பங்களை அச்சடித்து விநியோகிக்கப் போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது, இலவச மற்றும் கட் டாயக் கல்வி சட்டத்தின்படியான விதி யாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்தி லிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங் களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி யன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியன்றும் நடக்கவுள்ளன.

தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப் படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப் பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழ கத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமான தாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித் துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர் களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறை யாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் முரசொலி யில் இன்று எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


மக்களாட்சி முறை


சாக்ரடீஸ் மக்களாட்சி முறையைப் பார்த்துச் சிரித்தார்.

அவர் தனிச் சிலர் ஆட்சிமுறையின் நன்மைகளை வியந்து பாராட்டி பேசினார்.

ஏதென்சின் மக்களாட்சி முறையை எள்ளி நகைப்பதற்கு நிறையக் கார ணங்கள் இருந்தன. நானூறாயிரம் ஆதிக்குடி மக்களில் இருநூற்றைம்பதாயிரம் பேர், அரசியல் உரிமைகளின்றி அடிமைகளாக இருந்தனர்.

உயர் அதிகார அமைப்பான உச்சநீதி மன்றத்தில் குடி மக்களின் பெயர்ப் பட்டியலில் இருந்து அகர வரிசையில் தேர்வு செய்யப் பெற்ற ஓராயிரம் பேருக்கு மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். இதைவிட முட்டாள்தனமான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

சாக்ரடீஸ் இதைப் பார்த்து நகைத்து ஏதென்சின் மக்களாட்சி முறையைக் குதர்க்கவாதம் செய்யும் சமுதாயத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டினார்.

மக்களாட்சிக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் சிலர் ஆட்சிக் கட்சி பொடியாகிப் போய் விட்டது.

மக்களாட்சி முறையைப் பற்றிய கருத்துக்களுக்காகவும் ஏதென்சு இளைஞர்களிடம் பல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை விதைத்துப் பரப்பியமைக்காகவும் சாக்ரடீசைத் தீர்த்தக் கட்டுவதென்று மக்களாட்சிக் கட்சி முடிவு செய்தது.

சாக்ரடீஸ் இதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும்.

ஆனால் தத்துவத்தின் தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதன் வாயிலாக, மனித மனம் வளர்ச்சியடைவதற்குச் சிந்தனை விடுதலை என்பது மக இன்றியமையாத உட்கூறு என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

(நாம் ஆராய்ந்து பாராமலே மெய்யென ஏற்றுக் கொள்ளும் பேச்சுரிமையைப் பெற்றுத் தந்த எண்ணற்ற தத்துவ ஞானிகளுக்கு நாம் உண்மையில் நன்றியுடையவர் களாவோம். பேச்சுரிமை நடைமுறையில் இல்லாத அக்காலத்தில் வால்டேர் விடா முயற்சியுடன் பேச்சுரிமையை ஆதரித்து வாதாடினார்.

ரூசோவின் இயற்கை இயல் வாதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வால்டேர் சொன்னார்:

நீங்கள் சொல்வதனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

ஆனால் அதைச் சொல்லும் உங்கள் பேச்சுரிமையை இறுதிவரை நான் உறுதியாக ஆதரிப்பேன் என்றார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைப் பரப்புரையில் தளராத உறுதியுடனும் துணிவுடனும் பெரியார் அரும்பாடுபட்டார். கீழத்தரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, பகட்டு ஆரவாரம் கொண்ட, ஆவ ணம் பிடித்த மதம் வெறுமைக்குழியில் விழுந்தது. இதனை அச்சமின்றிப் பெரியார் திறனாய்ந்தார். சாக்டீரசின் காலத்து ஏதென்சு, பல்வேறு தத்துவங்களின் வார்ப்புப் பட்டறையாக விளங்கியது.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 39ஆம் பக்கத்தில்)

- க. பழநிசாமி, கன்னிவாடி

தமிழ் ஓவியா said...


குறும்பா


தீர்ந்ததா?

குருவுக்கு...
அர்ச்சனை...!
குருக்களுக்கு
தட்சிணை....!
பக்தனுக்கு...
தீர்ந்ததா...?
பிரச்சினை...??

குறும்பா

வெறி பிடித்தோர் ஆட்டம்!
நரித் தந்திர ஆட்டம்...!
சொறி பிடித்த வெறி நாயை
ச் சூ விட்டாடும் சூதாட்டம்...!
நெறி கெட்ட
கிரிக்கெட்டால்...
கண்ட பலன்..?
நாட்டு வளம்
வீட்டு நலம்..
கெட்டதுதான்..
இலாபம்.!!

- _ கோ. கலியபெருமாள்
மன்னார்குடி_1

தமிழ் ஓவியா said...


ஞானக் கண்ணோ!


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (14.6.2013) ஒரு கட்டுரை. காஞ்சிபுரத்தில் கண் கொடுத்த வைத்தீஸ்வரன் - என்பது தலைப்பாகும்.

கேரளப் பெண் ஒருவர் தலையில் அடிபட்டுக் கண் பார்வை பாதிக்கப்பட்டா ராம். குருவாயூர் தொடங்கி கும்பகோணம் வரை க்ஷேத் திராடனம் சென்றால் கண் பார்வை வந்து விடும் என்று சொன்னார்களாம். அவ்வாறே அந்தப் பெண் சென்றாராம்; வைத்தீஸ் வரன் கோயிலில் வழிபடும் போது - எதற்கும் காஞ்சி புரம் சென்று பெரிய வாளைத் தரிசித்தால் பார்வை வரும் என்று கோயில் குருக்கள் கூறினா ராம் (எங்கெங்கெல்லாம் சங் கிலித் தொடர் பார்த்தீர் களா?) அவ்வாறே அங்கு சென்று சந்திரசேகேந்திர சரஸ்வதியைத் தரிசித் தாராம் - பழத்தட்டுக்களுடன்.

அப்பொழுது அந்தப் பெண்ணின் கணவரைப் பார்த்து சங்கராச்சாரியார் என்னைத் தெரியற தான்னு உங்க சம்சாரத் துக்கிட்டேயே கேளுங்க என்றார். அத்துடன் அருகி லிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரிய வாள். (தேஜஸ் என்பது இதுதானோ!) அந்த நேரம் அந்த பெண், குருக்கள் சொன்ன (வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன) சந்நியாசி இதோ தெரிகிறாரே என்றாராம் சத்தமாக பரவசம் பொங்க!

ஆமாம் காஞ்சி தெய் வம் அவளுக்குக் கருணை புரிந்தது. நம்பினார் கெடு வதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு என்று சும் மாவா சொல்லி வைத் தார்கள் என்று விஜயபார தம் அவிழ்த்து விட்டுள்ளது.

அற்புதத்தைச் சொல்லி தான் எந்த மதத்தையும் காப்பாற்ற வேண்டும் என் றாலும் சங்கராச்சாரியார் களைப் பொறுத்தவரை அற்புதங்களை நம்பாத வர்கள், இன்னும் சொல்லப் போனால் கடவுளை ஏற் காதவர்கள். தானே கடவு ளாக, கடவுளே தானாக இருப்பதாக ஸ்மார்த்தர் களின் சித்தாந்தம். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அப்படி இருக்கும் போது இது என்ன புதுக் கதை? விஜயபாரதத்தின் 24ஆம் பக்கக் கட்டுரைக்கு 35ஆம் பக்கத்தில் பதில் இருக்கிறது.

கேள்வி: குருடர்கள் கண் பார்வை பெறு கிறார்கள். செவிடர்கள் (காது) கேட்கிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் பிரச் சாரம்பற்றி.

பதில்: ஆஹா ரொம்ப நல்லது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டாம் - டாக் டர்கள் வேண்டாம் - சி.எம்.சி. ஆஸ்பத்திரி வேண்டாம் - மெடிக்கல் ஷாப் வேண்டாம் நல்லது தானே... ஒரே ஒரு சந்தே கம் தெரசா, டி.ஜி.எஸ். தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றது ஏனோ? இதுதான் விஜயபாரத்தின் பதில்; இதே கேள்வியை சங்கராச்சாரியாரைத் தரிசித்ததால் பெண் பார்வை பெற்றார் என்பதுபற்றியும் கேட்கலாம் அல்லவா!

Tail - Piece: அந்தக் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரா நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரே - அது ஏனோ?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஈழப் பிரச்சினையும் பி.ஜே.பி.யின் பார்வையும்ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது.

பிஜேபி.யைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் இலங்கைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் பகுதிக்கும் சென்றுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் சந்தித்தனர்.

இந்தப் பயணம் குறித்து பிஜேபி குழு என்ன கூறுகிறது? இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா தயா ராகவே உள்ளது. ஆனால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் சரியானதாக இருக்கும். இலங்கையை இந்தியா நட்பு நாடாகத் தான் பார்க்கிறது ஆகவே அந்த நாடு சீர் குலைவதை இந்தியா அனுமதிக்காது என்று கூறியுள்ளது.

இதைச் சொல்லுவதற்குத்தான் பிஜேபி குழு இலங்கை சென்றதா? தமிழர்கள் அங்குள்ள பிரச்சினைகளை யாரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்?

தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்ற வகையில் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சிங்கள இன வெறியைத் தூண்டியும் செயல்படுகிறவர்களிடம் எந்த வகையில் தமிழர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியும்?

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிட்டது இல்லையா? இந்தியா தலை யிட்டது இல்லையா? பாகிஸ்தான் சம்பந்தப் பட்டதுதானே வங்காள தேசப் பிரச்சினை - அதற்குத் தீர்வு எப்படி கிடைத்தது? இந்தியா வின் பங்கு அதில் கிடையாதா?

அப்படிப் பார்த்தால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்றது எப்படி? இன் றைக்கு அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கும் வகையில் செயல்படும் பொழுது இந்தியா அதில் தலையிட பாத்தியதை உடையது ஆகாதா?

ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது வெறும் உணவு, உடை, உறையுள் பிரச்சினை மட்டும் தானா? அதனைத் தாண்டியும் தங் களின் இனம், மொழி, பண்பாட்டு அடை யாளங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுபற்றிய கருத்தென்ன?

இந்தப் பிரச்சினையில் அந்தரங்க சுத்தியோடு பிஜேபி செயல்பட்டது கிடையாதே. இதற்கு முன்பு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை பிஜேபி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்றபோது, அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து பேசிய பிறகு, தனியே ராஜபக்சேயுடன் சுஷ்மா சுவராஜ் பேசியதுபற்றி சர்ச்சைகள் கிளம்பவில்லையா?

அதன்பின் புத்தர் விழா என்று சொல்லி ராஜ பக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்தது இதே சுஷ்மா சுவராஜ்தானே!

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரசு - ஒரு நாடு இந்தியாவிற்கான நட்பு நாடு என்று சொல்ல எப்படி மனம் வருகிறது?

தமிழர்களை மறந்து விடுங்கள் - மனித உரிமைக் கண்ணோட்டத்திலாவது இதனை அணுக வேண்டாமா?

மனித உரிமைகள் ஒரு நாட்டில் பறிக்கப் படுமேயானால், இனப்படுகொலை (Genocide) ஒரு நாட்டில் நடைபெறுமானால், அதில் தலையிட மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற நியதிகூட பிஜேபிக்குத் தெரிய வில்லையா?

இங்குள்ள சோ ராமசாமிக்கு என்ன பார்வையோ, அதே பார்வைதான் பிஜேபிக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்!புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப் பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

தமிழ் ஓவியா said...


சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல கோயில்களும்தான்


புதுக்கோட்டை டவுனில் பிருந்தா வனம் என்றொரு பகுதி உள்ளது. வடக்கு ராஜவீதியும் தஞ்சை சாலையும் இணை யும் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த இடத்தில் விபத்துகள் ஏதும் நடைபெறா வண்ணம் சிக்னலும் அமைக்கப்பட்டிருக் கிறது. இன்று காலை 5-மணியளவில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்றும் புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சை சாலையை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பிருந்தாவனம் முக்கத்தில் அதிவிரைவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. அதில் இரு லாரிகளின் ஓட்டுனர்களும் தங்களையும் தங்களது வாகனங்களையும் காப்பாற்ற திருப்பியும் விபத்துக்கு உள்ளானது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.

உடைந்து நொறுங்கியது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்ச நேயர் கோயில்தான். பக்தர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் ஆஞ்ச நேயரை அவர் ராம பக்தராக இருக்கின்ற காரணத்தாலும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதாலும் ஆஞ்ச நேயருக்கு மிகப் பெரிய வலிமை இருக் கிறது என்றும் வல்லமை பொருந்திய அவரை வணங்கினால் அவருக்கு உரிய சக்தியைத் தம் பக்தர்களுக்கு அருளி பாலித்து வழங்கி விடுவார் என்றும் கற்பிக்கப் பட்டு ஆங்காங்கே அதிக எண்ணிக்கையில் கட்டப் பட்டு வரும் ஆஞ்சநேயரின் சக்தி அவரது இருப் பிடத்தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது.

அந்த இடத்தில் விளக்குத்தூண் மட்டும் இல்லாதிருந்தால் அருகில் உள்ள கட்டடம் எப்படி உடைந்து சேதாரமாகி இருக்கும் என்பதைக் கற்பனையும் செய்ய இயலாத அளவிற்கு அந்த விபத்து நடந் திருக்கிறது. கோயில் உடைந்து நொறுங்கி விட்டது. இதுதான் ஆஞ்சநேயரின் பலம் என்பதை பக்தர்கள் உணரும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழரின் அடிமை விலங்கொடிக்கும் நாளாக இருக்கும். மேலும் சாலையோரங்களில இருந்து அகற்றப்பட வேண்டியது மதுபானக் கடைகள் மட்டுமல்ல இது போன்ற பக்திப் போதையை வளர்க்கும் கோயில்களும் தான்.

ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிறப்புரிமை


வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக் கும் டாக்டர் மூஞ்சே அவர்களுக்கும் வங்காளத் திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை மேற்படி இரு கனவான் களும் வீரர்களைப் போல் மீறி நடந்தார்கள். அம்மீறுத லானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தே சித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.

அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி.ரங்காச் சாரியார் முதலிய பார்ப்பனர்கள் அரசப் பிரதிநிதி யிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வருகிறது.

ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்றுவதற்கு மற்றொரு புறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்குப் பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.

அதாவது:-

இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.

ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.

அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.

இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?


பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)
என்றும் போரே எதிலும் வெற்றியே!

1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.

எதற்கும் துணிந்து விட்டோம்;

எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;

நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;

எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;

நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.

- க.பழனிசாமி

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)

விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)சில உறுதியான உண்மைகள்

தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.

நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.

1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.

3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.

4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.

5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.

6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.

7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.

8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.

தமிழ் ஓவியா said...


மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!


மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.

நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.

அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.

அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.

அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.

திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.

ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?

கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.

பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.

அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?

மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?

உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.

அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.

சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.

ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.

மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!

மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்

புதிய விளக்கம்:

சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?

குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்

பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.

வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.

வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.

தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.

இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்


படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.

2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது

OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.

BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.

BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.

MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.

SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.

ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.

35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!

(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கலைஞரின் தேவை


செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

கருத்து


இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.

-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.

- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்

தமிழ் ஓவியா said...

கலைஞர் - 90


இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடுகலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?


அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43
E-mail Print

காவிக் கொண்டாட்டம்

செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்

சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?

தமிழ் ஓவியா said...


தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!


திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.

திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.

ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.

எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.

திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலிதுவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.

மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.