Search This Blog

1.6.13

ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா?


கேள்வி: பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்குப் பிறகும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது என்கிறாரே கலைஞர்?

பதில்: காமராஜர் காலத்துக்குப் பிறகும் ஊழல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறியிருந்தால் உள்ளபடியே இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
                            ---------------- ஆனந்தவிகடன் 8.5.2013 பக்கம் 24

பச்சைத் தமிழர் காமராசரே சொல்லி இருக்கிறார். ஊழலை யாரும் ஒழிக்க முடியாது _- ஊழல் மனிதனை ஒழித்து விடும் என்று சொல்லியிருக்கிறார்.
ஊழல் குற்றச்சாற்று காமராசர் ஆட்சிக் காலத்திலேயே கூட வந்ததுண்டு. அதுபற்றி காமராசரே கூறி இருக்கிறார்.

லஞ்சம் பெருகி விட்டது -_ ஊழல் மலிந்து விட்டது என்று கூச்சல் போடு கிறார்கள் இந்தக் கூச்சலில் மக்களி டையே உணர்ச்சியை மாற்றிட முனை கிறார்கள்.

லஞ்சம் கொடுப்பவர்களும், ஊழலுக்குக் காரணமாக இருப்பவர் களும் யார்? இந்தப் பரம்பரை ஆதிக் கக்காரர்கள்தான் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள் சமுதாயத்தில் ஊழலை வளர்ப்பவர்கள் இந்தப் பரம்பரை ஆதிக்கக்காரர்கள்தான். இவர்கள் பரம்பரையாக வசதியோடு வாழ்ந் தார்கள். அந்த வசதியைக் கொண்டு படைத்தவர்கள் அந்தப் படிப்பையும் தங்களுக்கே ஏகபோகமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று கருது கிறார்கள். காரணம், படித்தவன்தான் டாக்டராக முடியும், என்ஜினியராக முடியும்.

இப்படி எல்லாம் பகுதி களையும் அடைத்துக் கொள்வதன் மூலம் ஊழலை வளர்க்க முடியும். லஞ்சத்தை ஊக்குவிக்க முடியும். இவைகளையெல்லாம் இவர்களே நடத்தி விட்டு சுலபமாக அரசாங்கத் தின்மீது பழியைப் போட்டு விட்டு, மக்களுடைய உணர்ச்சிகளைத் திசை திருப்பிட முடியும் என்று இந்த ஆதிக் கக்காரர்களின் கூட்டம் நம்புகிறது! (நூல்: தகுதி - திறமை மோசடி!)
-இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்லர்; பச்சைத் தமிழர் காமராசர் தான்.
அந்தக் காமராசரை துணைக் கழைத்து, கலைஞரோடு மோத விடுவது ஆனந்த விகடனின் பூணூல் புத்தி. கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டுமானால் ஆனந்த விகடன் களுக்கு ஒரு காமராசர் தேவைப் படுகிறார்.

இந்தக் கூட்டம் காமராசரை எப்படி எல்லாம் விமர்சித்தது -_ கொச்சைத்தன மான சேறுகளை அள்ளி வீசியது?.

பெரிய பதவி சின்ன புத்தி என்று காமராசரை இந்தக் கூட்டம் கார்ட்டூன் போடவில்லையா?

சென்னை - கடற்கரைக் கூட்டத்தில் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று அவர்களின் ராஜகுலத்திலகம் ராஜாஜி காமராஜர் மீது ஜாடையாக வன்முறையை ஏவினாரே - அந்தத் தருணத்தில் இந்த விகடன்கள் ஆச்சாரியாரைக் கண்டித்து எழுதியதுண்டா?

திராவிடர் இயக்கம் வந்து தான் இலஞ்சத்தை வளர்த்தது என்பது போன்ற ஒரு மாயையே உருவாக் குவதுதான் அவாளின். அவாள் ஊடகங்களின் நோக்கமாகும்.

1947இல் ஆச்சாரியார் ராஜாஜி மத்திய கைத்தறித்துறை அமைச்சராக இருந்தபோது 6 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் ஆச்சாரியார் அங்கம் வகித்த துறையினர் ஊழல் என்று அம்பல மாகவில்லையா? அந்தக் கால கட்டத்தில் ஆறு கோடி ரூபாய் என்பது பெரிய தொகை தானே!

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி அப்பொழுது மத்திய அரசால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட  எஸ்.ஏ. வெங்கட்ராமன் அய்.சி.எஸ். பார்ப்பனரை ரெவ்னியூ போர்டுக்கு முதல் மெம்பராக ஆக்கினாரே - ஆச்சாரியார் இது ஊழலுக்கு துணை போனதோடு அல்லாமல் ஊழலுக்கு மகுடம் சூட்டிய ஆபாச மாயிற்றே!
நாணயக் கேட்டுக்கும் ஊழலுக்கும் சொந்தக்காரர் என்று டி.எஸ்.எஸ். ராஜனை காங்கிரஸ் கட்சி, கட்சியி லிருந்து நீக்கி வைத்த நிலையில், அதனைப் பற்றியெல்லாம் சிறிது கவலைப்படாமல் தமது அமைச் சரவையில் சேர்த்துக் கொண்டு சுகாதார இலாகாவையே தூக்கிக் கொடுத்தாரே _- இது ஊழலை விட மோசமான ஒழுக்கக் கேடுதானே?

ஆச்சாரியார் எத்தகைய பேராசைக்காரர்! கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி, தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜபவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே  அரசு இந்த ராஜ்பவன் நிலத்தைக் தனக்குக் கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அரசு நிராகரித்து விட்டது.

சொல்லப் போனால் பேராசை என்பதும் மகா ஊழல் புத்திதான்!

திராவிட இயக்கத்தை _ குறிப்பாக திமுகவைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவாளின் நோக்கம். லஞ்சத்தையே தி.மு.க.தான் கண்டு பிடித்தது போல சாதிப்பார்கள் உண்மையிலே மலைமுழுங்கி மகாதேவன்கள் இந்தப்  பார்ப்பனர்கள்தான்! இதோ ஒரு எடுத்துக்காட்டு.

சத்திய மூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே! என்று போகிற போக்கில் சிலர் சொல்லி விட்டுப் போய் விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ் சம்கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

நாள்பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்காவது பஞ்சாயத்துத் தேர்தலென்றால் அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படி சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்குக் கார்னிஜி நிதி யா வைத்திருக்கிறர்கள்? தேர்தல் தம்பட்டம் அடித்து விட்டு, நானும் என் குடும்பத்தினரும் வாயு பக்ஷணமா செய்ய முடியுமா?

லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பிளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவரிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால் இது லஞ்சமாகுமா? என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார். (பாரததேவி 8.12.1943) 

ஆனந்த விகடன்களுக்கு இதெல்லாம் தெரியாது - காரணம் அவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆயிற்றே!

ஊழல் இலஞ்சம் என்று ஊளை இடுகிறார்களே. அந்த ஊழல் - இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் கோயிலும் பக்தியும் தானே? மறுக்க முடியுமா?
காமராசரை முன்னிறுத்தியதால் அவரையே நாமும் முன்னிறுத்துவோம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் காமராசர் சுற்றுப் பயணம் செய்தபோது சீர்காழி எத்திராஜ் உங்கள் வழிபாட்டுக் கொள்கை என்ன? என்று கேட்டார்.
அதற்கு கடவுள் இருக்கார். இல்லை என்பதில் எனக்குக் கவலை இல்லை. பக்தனா இருக்கிறதைவிட, யோக்யனா இருக்கணும் ஊருக்கு நூறு சாமி, வேளைக்கு நூறு பூஜைன்னா மனுஷன் என்றைக்கு உருப்படுகிறது?
நான் தீபாவளியைக் கொண்டாடினது மில்லே எண்ணெய்த் தேய்ச்சு குளிச்சதுமில்லே, புதுத்துணி கட்டினதுமில்லே என்றார் காமராஜர்

                  ---------------(நூல்: காமராஜர் நினைவுகள்)

கடவுள் பக்தி இருப்பதைவிட யோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்பதோடு காமராசர் நிறுத்திக் கொள்ளவில்லை; ஊருக்கு நூறு சாமி (வளைக்கு நூறு பூஜைன்னா உருப் படுமா நாடு என்ற அர்த்தமிக்க வினாவையும் எழுப்பியுள்ளார்.

ஊருக்கு நூறு கோயிலும் வேளைக்கு நூறு பூஜையும் நடத் துவதன் நோக்கமும் என்ன?

காமராசர் சொல்லுவதுபோல நூறு பூஜைக்கு வேலை தான் என்ன? கடவுளுக்குக் காணிக்கை கொடுப் பது அதாவது இலஞ்சம் கொடுப்பது - அதன் மூலம் கடவுளிடமிருந்து பலனை - சாதகங்களை எதிர்பார்ப் பதுதானே?
ஒவ்வொரு கோயிலின் வாசலிலும் பட்டியல் தொங்குகிறதே தெரியுமா? (பெட்டிச் செய்தி தனியே)
 *******************************************************************************
ஆச்சாரியாரின் ஊழல் தெரியாதா?

டில்லி அசெம்பிளிக்குப் போய்வருவது தமது தேக நிலைமைக்கு சிரமமாய் இருக்கிறதென்று ஸ்ரீமுத்துரங்க முதலியார் தமது ஸ்தானத்தை ராஜினாமா செய்தார் அந்த ஸ்தானத்திற்கு ஒரு பெண் காங்கிரஸ்காரரை போடும்படி காமராஜிடம் ராஜாஜி சொன்னார் அப்படிப் போடுவதில் காமாராஜூக்கும் ஆட்சேபணை இல்லை; ஆனால் ராஜாஜி அதோடு நிற்கவில்லை; மற்றொரு வரிடம் பேசி அவரை விண்ணப்பம் அனுப்பும்படிச் செய்தார். அவருடைய பெயரைச் சொல்லவேண்டாம் அவர் பெயரை கே.ரெட்டியார் என்று வைத்துக்கொள்வோம்.

செங்கற்பட்டில் ஒரு காங்கிரஸ்காரரை அழைத்து அபேட்ச கராக அவர் நிற்பதைப் பற்றிக் காமராஜ் பேசினார். கே.ரெட்டி யாரிடமிருந்து தமக்கு வந்த கடிதத்தை அவர் காமராஜிடம் காட்டினார் தம்மை அபேட்சகராக நிற்கும்படி ராஜாஜி சொல்லியிருப்பதாகவும், தமக்குத் தேர்தலில் உதவி செய்ய வேண்டுமென்றும் கே.ரெட்டியார் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைப்பார்த்த பின்புதான் மேலே சொல்லிய பெண் அபேட்சகரை போடும்படி ராஜாஜி முதலில் சொல்லியதற்குக் காரணம் ஒரு சூழ்ச்சியோ என்று காமராஜ் சந்தேகப்பட்டார். காமராஜ் சிபாரிசு செய்து அபேட்சகரை மேலிடத்தார் அங்கீகரிக்கவிடாமல் செய்து விட்டால், காமராஜரின் மதிப்பு குறையுமல்லவா? அப்புறம் தான் ராஜாஜி சொல்லியபடி செய்யாமல் கடலூர் சீதாராமரெட்டியாரை சிபாரிசு செய்வதென்று காமாராஜ் முடிவு செய்தார்.
..ராஜாஜி சென்னைக்கு வந்து கே.ரெட்டியாரை ஒப்புக்கொள்ளும்படி காமராஜிடம் வற்புறுத்தினார். காமராஜ் ஒப்புக்கொள்ள மறுத்தார். காரியக்கமிட்டி சார்பாக கே.ரெட்டியாரை அபேட்சகராக தாம் போட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

காமராஜ் பின்வருமாறு பதில் சொன்னார்.

தமிழ்நாடு கமிட்டி சார்பாக நாங்கள் சீதாராம ரெட்டியாரை நிறுத்தி வைப்போம்; நீங்கள் நிறுத்தி வைக்கும் கே.ரெட்டியார் மீது பொப்பிலிராஜா காலத்திலேயே பொதுப் பணத்தை கையாடிய தற்காக வழக்குத் தொடர எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தும் உங்கள் (ராஜாஜி) காலத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டதை அம்பலப்படுத்துவோம் வோட்டர்கள் விருப்பப்படி நடக்கட்டும்.

-------------------- நவயுகப் பிரசுராலயத்தின் காமராஜ் என்ற புத்தகத்திலிருந்து.

ஊழலை ஒழிப்பதற்காகவே பிறந்தவர் போல நடிக்கிறார்கள். அவர்களின் கைச்சுத்தம் பற்றிய பழைய குற்றச்சாட்டு இது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் வேறு யாருமல்ல, காமராஜரின் மிகநெருங்கிய நண்பர் டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளைதான்; ஊழல் பெருச்சாளி ஒன்றைக் காப்பாற்றியவர்களா ஊழல் என்று ஊருக்கு உபதேசம் செய்வது? பார்ப் பனர்களின் ஊழல் புராணத்தில் ஒரே ஒரு செங்கல்லை உருவினால் பெரிய கட்டடமே சரிந்து விடும்! இவர்கள்தான் திராவிட இயக்கத்தால்தான் ஊழல் என்பது போல ஒரு சித்திரத்தைத் தீட்ட முயற்சிக்கிறார்கள்..

திராவிடர் இயக்கம் என்று கூறும்போது அதிமுக ஊழல் பற்றிப் பேச மாட்டார்கள் திமுகவை - கலைஞரைத்தான் குறி வைப்பார்கள் - அவர்கள் நோக்கம் அரசியலில் திமுக தானே ஆரிய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டு இருக்கிறது - அதனை வீழ்த்த வேண்டும் என்பதே!

 ************************************************************************************
வியாபார முன்னேற்றம், பிணி நீங்கல், ஆயுள் விருத்தி, ராஜயோகம், நன்மக்கள் பேறு, மரண பயம் நீங்குதல், சகல ஞானமும் கைகூடல், லட்சுமி கடாட்சம் இன்னும் இவை எல்லாம் கிடைக்க ஒவ்வொன்றுக்கும் இன் னின்ன பொருள்களை அபிஷேகத் துக்குக் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
பிரார்த்தனை என்பதுதான் என்ன? இதோ தந்தை பெரியார் கூறுகிறாரே - பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல்  விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

       ---------------(பகுத்தறிவு மலர் இதழ் 9.1935) 

என்கிறாரே தந்தை பெரியார் _ இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா?

பொது ஒழுக்கத்தை விரும்புபவர் கள், உண்மையான இலஞ்ச லாவண் யத்தை எதிர்ப்பவர்கள் இவற்றை யெல்லாம் கண்டிக்காதது ஏன்?

கண்டிக்காதது மட்டுமல்ல; இந்த ஒழுக்கக் கேட்டின் மூல ஊற்றை மூளையைக் கசக்கிக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் கூட்டம் தான் இலஞ்சத்தைப்பற்றி ஏழூர் கேட்கக் கத்துகிறது.

12 வருடம் பஞ்சமா பாதகம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால், எல்லாப் பாவங்களும் ஒரு நொடிப் பொழுதில் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால் நாட்டில் ஒழுக்கம் எப்படி உயிர் வாழும்? ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி ஏற்படுத்தும்?

அடிப்படையான ஒழுக்கக் கேட்டுக்குக் கோட்டை கட்டிக் காவல் காத்துக் கொண்டு இருப்பவர்கள் பொருளாதார இலஞ்சத்தைப் பற்றி புலிக் குட்டி போல துள்ளி எழுதுகிறார்கள்.

காஞ்சிபுரத்திலே மச்சேந்திரக் கோயிலின் குருக்கள் பார்ப்பான் தேவேந்திரன், கருவறையைக் கருவை உருவாக்கும் அறையாக மாற்றினானே _ அதைவிடவா ஒழுக்கக் கேடு உலகில் உண்டு?

லோகக் குருவே கொலைக் குற்றவாளியாக ராஜ நடைபோட்டுத் திரிகிறாரே _ ஆனந்தவிகடன் அய்யர்கள் கண்டு கொள்ளாதது ஏன்?

ஊருக்கு இளைத்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தானா? அதிலும் குறிப்பாகக் கலைஞர் தானா? அதிமுக பக்கம் போக மாட்டார்கள்_  காரணம் தெரிந்ததே!

இந்து என்றால் திருடன் என்று சொல்பவர் கலைஞர் தானே? கற்பழிக்காத கடவுள் உண்டா? என்று நாக்கைப் பிடுங்கக் கேட்பவரும் அவர்தானே? அந்த ஆத்திரத்தை வேறு வகையில் காட்டும் சூட்சமத்தை நமது சூத்திர பஞ்சம தமிழர்கள் உணர வேண்டாமா?

----------------- மின்சாரம்அவர்கள் 1-6-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

44 comments:

தமிழ் ஓவியா said...


சரியான கேள்விடாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்களின் மதமும் மூடநம்பிக்கையும் நூலில், 55ஆம் பக்கத்தில் இருப்பது:-

ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன் மாதா கோயிலை ஓவியங் களால் அழகுப்படுத்தும்போது, செருப் புப் போட்டுக்கொண்ட தேவதைகளை வரைந்தானாம்.
அந்தப்படத்தைப் பார்த்த பாதிரி யார் ஒருவர், செருப்புப் போட்டுக் கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்? என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு ஆஞ்செலோ தேவதை களை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்? என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

- தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (கி.அ)

தமிழ் ஓவியா said...


பஞ்சம் - உணவுக்கா? - அறிவுக்கா?


நானும், எனது தம்பியும் காலையில் காவிரி ஆற்றங்கரை வழியாக நடைபயிற்சி செல்லும்போது கரை ஓரமாக ஒரு வேப்ப மரத்தின் இலைகள் வெண்மையாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய தம்பியிடம் நான் விளக்கமாகக் கூறினேன். இது வேறொன்றுமல்ல, மனிதர்களில் சிலருக்கு ஏற்படுகின்ற வெண்மைத் தோல் நோய் போல் இது மாங்களிடையே தோன்றுகின்ற ஒரு வகை நோய். கல்லூரியில் தாவரவியல் படிக்கும் மாணவர்களேகூட இதனை நன்கு அறிவார்கள். மற்றபடி இதிலே ஒன்றும் தனிச் சிறப்பில்லை எனத் தெளிவுபடுத்திவிட்டு, இறுதியில் கூறினேன் இது ஏதாவது ஒரு மதவாதியின் கண்களிலோ.. பக்தனின் கண்களிலோ, பட்டு விட்டால்.. இதை வைத்தே பக்திக் கரகாட்டம் ஆடத் துவங்கி விடுவார்கள்! பக்தி வந்து விட்டால் பிறகு, புத்திக்கு அங்கென்ன வேலை? என விளக்கினேன்!...

தமிழ் ஓவியா said...

ஆறு மாத காலத்திற்குள், நான் சொன்னதே நடைபெற்றது! அந்த மரத்தடியில் ஒரு நாள் வேல் ஒன்று நடப்பட்டிருந்தது! பூ, சந்தனம், எலு மிச்சம்பழம் கிடந்தன! நாங்கள் சிரித்துக் கொண்டே.. ஆரம்பமாகிவிட்டது பக்த கே()டிகளின் திருவிளையாடல் எனக் கூறிவிட்டுச் சென்று விட்டோம்!

அடுத்து ஆறு மாதத்திற்குள் அங்கு ஒரு கோயிலே கட்டப்பட்டு வெள்ளை வேம்பு மாரியம்மாள் உருவாக்கப்பட்டு விட்டது!

உடனே, கொரநாட்டுக் கருப்பூரில் திராவிடர் கழக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, மானமிகு பெரியார் செல்வன் மானமிகு இராம. அன்பழகன் போன்றோரை அழைத்து பகுத்தறிவு பரப்புரையைத் துவக்கினோம்!

ஊதுகிற சங்கை ஊதுவோம்; விடிகிற போது விடியட்டும் என்ற நம்பிக்கையற்ற தன்மையில் அல்ல, அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்ற அய்யா தந்த மன உறுதியோடு செயலாற்றி வருவதோடு... இப்படித்தான் கடவுள் களை மனிதன் உருவாக்குகிறான் என்பதையும் அவர்களுக்கு விளக்கினோம்!.. விளக்கி வருகிறோம்!

இருந்தாலும்.. மனிதர்களை இரத் தத்திலே ஏறி, ஊறிப் போயிருக்கிற பக்திப் போதை அவ்வளவு எளிதாக வாக தெளியும்?

தமிழ் ஓவியா said...

பக்கத்திலே இருக்கிற காவிரியில் நீரில்லை! ஊரே வறண்டு கிடக்கிறது! விவசாயம் பாழடைந்துவிட்டது! வறுமை வாட்டி வதைக்கும் இந்த நேரத்திலும், அறியாமை மிகுந்த அப்பாவி மக்களிடம் வீட்டுக்கு வீடு வரி வசூல் செய்து இலட்சக்கணக்கில் செலவிட்டு, தெருவெல்லாம், ஜெனரேட்டரில் மின் குழல் விளக்கு, வாண வேடிக்கை, செண்டைமேளம், கரகம், காவடி என ஊரையே மூன்று நாட்களாக தூங்கவிடாமல் கடந்த மூன்று நாட்களாக கொட்டி முழக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஊரிலே ஒரு நல்ல நூல் நிலையம் இல்லை! மருத்துவமனை இல்லை! மாணவர்களுக்கு ஒரு பொழுது போக்கு பூங்கா இல்லை! ஒரு நல்ல படிப்பகம் இல்லை! சுகாதாரமான சிற்றூண்டி விடுதி இல்லை! பொதுக் கழிப்பறை இல்லை! ஆனால் பக்தியின் பெயரால் இலட்சக் கணக்கான ரூபாய்கள் பாழடிக்கப்பட் டிருக்கின்றன!

டாஸ்மாக் கடையில் நல்ல வியாபாரம்!.. சிறு குழந்தைகளை பலியிடுவதுபோல.. பிளக்ஸ் போர்டில் சிறு குழந்தைகளின் படத்தையும் போட்டு இந்தக் கண்றாவி நிகழ்ச்சிக்கு சிறு குழந்தைகளின் அறிவையும் பலியிடுகிறார்கள்! இதுதான் மிகப் பெரிய கொடுமை!

தாங்கள் கெடுவது போதாதென்று குழந்தைகளையுமா பக்திக்கு பலியி டுவது? எண்ணிப் பார்ப்பார்களா?

பஞ்சம்.. உணவுக்கு மட்டுமல்ல; அறிவுக்கும் கூடத்தான்!!


- நெய்வேலி க. தியாகராசன்

தமிழ் ஓவியா said...மீனாட்சி கல்யாணம்

சித்திரைத் திருவிழா
மீனாட்சி கல்யாணம்
துணைவியுடன் பார்க்கத் தவறமாட்டான்
பக்தன்!
வீட்டில் தனிமையில்
மகள்
மீனாம்பிகை
முதிர் கன்னியாய்!


ஏழையின் வயிறு

ஆறுகால பூஜை

அய்ந்து வேளை

தொழுகை

முழு இரவு

ஜெபம்!

எல்லாம்

சரிதான்

ஒரு வேளை

உணவுக்கு

என்ன வழி?

கேட்கிறது

ஏழையின் வயிறு!

- சிவகாசி மணியம், சிவகாசி மேற்கு

எல்லாம் பயம்தான்!

பெரியாருக்கு
பயந்து கொண்டு
சாமியில்லை
பூதமில்லை
என்றான்...!
ஆன்மீகத்துக்கு (கடவுளுக்கு)
பயந்து கொண்டு
சாமியுண்டு
பூதமுண்டு
என்கிறான்...
எல்லாம் பயம்தான்!!

- கோ.கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் அலோபதி மருத்துவம்


போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் கோவாவிற்கு வந்தடைந்த பின்னரே அங்கு முதன் முதலில் ராயல் எனும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின் இதன் தொடர்பாக மதச்சார்பற்ற முதல் நூலான இந்தியாவில் தாவரமும் மருந்தும் 1563இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்ப முடியாத நிலையில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கடற்கரையோர நகரங்களில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியுள்ளனர்.

அந்நிலையில் தங்களுக்கும் தங்கள் சிப்பாய்களுக்கும் மருத்துவம் புரிய கிழக் கிந்திய வணிகக்குழுமம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவமனையினை 1664இல் நிறுவியது. இதன் பின்னர் இம்மருத்துவமனை நான்கு இடங்களில் மாற்றப்பட்டு தற்பொழுது சென்னை பொது மருத்துவமனை உள்ள இடத்தில் 1772இல் இரண்டு பகுதிகளாகத் தொடங்கப்பட்டது. 1842இல் இந்தியர்களுக்கும் இங்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனருகிலேயே 1835இல் சென்னை மருத்துவப் பள்ளியும் தொடங்கப்பட்டு பிறகு 1850இல் கல்லூரியாக மலர்ந்தது.

இக்கல்லூரி மாணவர்களுக்கு எல்.எம்.எஸ். என்ற பட்டத்தை வழங்கி நாடெங்கும் அலோபதி மருத்துவம் வளர உதவியது. இக்கல்லூரியே ஆகும்.

இது ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.

பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பதிப்பாசிரியர் முனைவர் இராதா செல்லப்பன்

- தகவல்: க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இவர் தான் குடியரசு தலைவர்


பட்ஜெட் நிதி ஒதுக்கீடு - நிதி கமிஷனை நியமிக்கும் ஜனாதிபதிக்குத்தான் பட்ஜெட்டில் முதல் செலவு. ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவுகளுக்கு சுமார் ரூ. 2,25 கோடியை ஒதுக்குவார்கள். சம்பளம் - மாதம் துல்லியமாக ரூ. 1,47,728 இதுபோக, கைச்செலவுக்கு என ஆண்டுக்கு ரூ. 15 லட்சம். இது பொழுதுபோக்கு, உடை, மற்றும் இன்னபிற செலவினங்களுக்காக.

வீடு அநேகமாக உலகிலேயே மிகப்பெரிய வீட்டில் வசிக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கும். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் ராஷ்டிரபதி பவனில் சுமார் 340 அறைகள் இருக்கின்றன. பிரணாப் மத்திய அமைச்சராக ராஷ்டிரபதி பவனுக்கு வந்தபோது அங்கு உள்ள குதிரையின் பளபள பராமரிப்பைக் கண்டு அடுத்த ஜென்மத்துல ஜனாதிபதி மாளிகை குதிரையா பிறக்கணும் என்று ஆசை தெரிவித்தவர். ஜனாதிபதி குடும்பத்தினருக்கு எனப் பணிபுரிய 200 பணியாளர்கள் உண்டு.

ஜனாதிபதி பயணிக்க ரூ. 12 கோடி மதிப்பு உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரை வழங்குகிறது அரசாங்கம். குண்டு துளைக்காத, வெடி விபத்திலும் பாதிக்காத பாதுகாப்பான கார் அது. பயணச்செலவு - இது ஜனாதிபதியின் பயணங்களைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த அய்ந்து வருடங்களில் ரூ. 205 கோடிக்குப் பயணச்செலவு காண்பித்து இருக்கிறார்.

விமானங்கள் - எந்த நேரமும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்குத் தேவைப்படும் என்று ஏழு விமானங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அதில் நான்கு எம்ப்ரேர் விமானங்கள், மூன்று போயிங் விமானங்கள். இதில் எம்ப்ரேர் வகை விமானம் ஒன்றின் மதிப்பு ரூ. 140 கோடி. போயிங் விமானம் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து ரூ. 934 கோடி மதிப்பு உடையது.

_- ஆனந்தவிகடன் - 1.8.2012

தமிழ் ஓவியா said...


இனிக்கும் இரண்டு செய்திகள்


- மு.வி.சோமசுந்தரம்

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெட்டானாம் என்று ஊரார் ஒரு பழமொழியைக் கூறுவர் அதை மெய்ப்பிக்கும் வகையில், பார்ப்பன வம்சாவளி மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும், அவர்களுக்குப் பாதுகாப் பளிக்கும் புராணங்கள் படைக்கும் பிரம்மாவாக அவதாரம் எடுத்து வந்தார் திருவாளர் கே.சி.இலட்சுமிநாராயண அய்யர். அவர் எழுதத்துவங்கிய அழுகிய காவியத்துக்கு இரத்தன கம்பளம் விரித்து கொடுத்தார் துக்ளக் சோ இராமசாமி அய்யர்.

கவிஞரின் பொன்னான நேரம்

அதன் விளைவு, தந்தை பெரியார் விதைத்துச் சென்ற திராவிடச் சமுதாய எழுச்சி விதையில் பரந்து உயர்ந்து வளர்ந்துள்ள அறத்தொண்டுப் பணிகளை காலத்தோடு நேரத்தோடு போட்டிப் போட்டு முடிக்கவேண்டிய நிலையில் உள்ள கருப்பு மெழுகு வத்திகளில் ஒருவராகிய கழகத்தின் துணைத் தலைவரைத் துள்ளி எழச் செய்துவிட்டது. தன்னுடைய அரிய நேரத்தில் [Time Bound Task) பங்கு கேட்டு கதவைத் தட்டிவிட்டார் அந்தணர் வரலாறு எழுதத்துடித்த அய்யர்வாள்.

புத்தக மாளிகைக்கு மதிப்புரை

அய்யர்வாளுக்கு அவசியம் நன்றி சொல்ல வேண்டும். அவரின் துடுக்குத் தனம்தானே, 42 ஆதார நூல்களையும், 14 இதழ்களையும், 10 நாளிதழ்களையும், ஜல்லி, சிமிட்டி, வாட்டர் புரூஃப் (Water Proof) என்று சொல்லும் வகையில் அடித்தளமாக வைத்து பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி என்ற எழில்மிகு கட்டிடத்தை [Elegant Edifice] மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கட்டித்தர தூண்டிவிட்டது. தொல்லை தந்ததிலும் ஒரு நன்மையே, [A Blessing in Disguise].

வாய்க்கொழுப்புடன் பேசும் வைதீகக் கூட்டத்துக்கு வாய்ப்பூட்டாக இந்த நூல் அமைந்து விட்டது. இதைத்தான், துல்லியமாக நமது தமிழர் தலைவர், நூலுக்கு அவர் வழங்கிய மதிப்புரையில்! இந்நூல் ஓர் திராவிடர் இயக்க வரலாற்றுக் கருவூலம், ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய திராவிடர் இயக்க ஆவணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கழகத்துக்கும் கவிஞருக்கும் பாராட்டு

தமிழ் ஓவியா said...

கடலூரில் தந்தை பெரியாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. விளைவு அவரின் சிலை ஒன்று எழுந்தது. இலட்சுமி நாராயணன், இல்லாததையும் பொல் லாததையும் எழுதினார். அவர் பெற்ற பதிலடிக்குப் பாராட்டாக ஒரு லட்ச ரூபாய் பரிசாக வந்து கழகத்துக்கு பெருமை சேர்ந்ததே!

சுமை நீங்கியது

இவற்றையெல்லாம் எழுதி கூறவந்ததின் நோக்கம் என்னவென் றால், இரண்டாண்டுகளுக்கு முன், விடுதலை ஞாயிறு மலரில், தொடர்ந்து சுடச்சுட வெளிவந்த இவரின் (கவிஞர்) எழுத்தோவியங்களை (ஆசிரியரின் சொற்கள்) பாதுகாப்பாக அடுக்கி வைப்பதும், அவ்வப்போது சிலவற்றை அதனுள் தேடுவதும் என்ற நிலை இருந்தது, பதிலடி புத்தகமாக வந்தால் இதழ்களின் சுமை நீங்குமே என்று எண்ணியதுண்டு. கருத்தை ஒரு சமயத்தில் கூறியதும் உண்டு. தற்போது ஒரு கருவூல நூலாக கையில் இருப்பது, சுமையைக் குறைத்து சுகத்தைச் பெற்றதாக அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

கவிஞர் நூலின் நோக்கத்தைக் குறிப்பிடும் போது, பார்ப்பனர் அல் லாதார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ... பல்வேறு போதைகளில் சிக்கிக் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் - தெரிந்து கொள்ள வேண்டியவை பல பக்கம் 25, பக்கம் 153, 154இல் தமிழரையும் தமிழ் மொழியையும், அவர்தம் செயல்பாடு களையும், பார்ப்பன ஊடகங்கள் தங்கள் மனக்கொதிப்பை பகை உணர்வை தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றன என்பதைக் காணலாம்.

பானை சோற்றில் ஒரு சோறு

அண்மையில் பத்திரிகை உலகில் தனித்தன்மையுடன் புகழ்படைத்த தினத்தந்தி இதழின் ஆசிரியர் சிவந்தி ஆதித்தனாரின் மறைவு தமிழர் உள்ளத்தைத் தொட்டது. அவர்களும், பத்திரிகை உலகும் இன்னும் அவர் நற்பண்புகளுக்கும், தொண்டுக்கும் மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் தினத்தந்தி நிறுவனர், பார்-அட்,வா சி.பா.ஆதித்தனார் மறைவின்போது, இந்து இதழ் அந்த செய்தியை வெளி யிட்ட தன்மையை பக்கம் 158இல் படிக் கும்போது ஆரியத்தின் அலட்சியத்தை யும், அகங்காரத்தையும் காணலாம். இன்னும் பல கூறலாம். நூலின் இணைப்புப் பகுதி மேலும் வலுவைச் சேர்த்துள்ளது. இத்தனைக்கும் நூலுக்கான நன்கொடை ரூபாய் 140! உண்மை தான் நம்புங்கள்.

தமிழ் ஓவியா said...

மதவாத அவதாரங்கள்

புராணப் பிரியர்களுக்கு அவதாரங் களின் மேல் தனி மோகம். இந்துத்வா தத்துவத்தைத் தூக்கிப் பிடிப்பவர் களுக்கு, உத்தமர் காந்தியை இந்து மதத்திற்கு காவு கொடுக்கக் காரணமாக இருந்த இந்துமகாசபா அமைப்பி லிருந்து, இன்றைய பா.ஜ.க. அமைப்பு வரை எடுக்கப்பட்ட அவதாரங்களின் மீது பிடிப்பு, பற்று இருக்கவே செய்யும்.

தந்திர ஆட்சி

இந்த அடிப்படையில், ஆபாசத்துக் கும் அழிவுக்கும் ஆலவட்டம் வீசும் மதவாத அமைப்புகள், அரசியல் அரிதாரம் பூசிக்கொண்டு, ஆட்சி நாற்காலி கிடைத்தவுடன், பழிக்கு அஞ்சாத, மனித நேயத்தை மதிக்காத செயல் திட்டங்களில் ஈடுபடுவதே அதன் குறிக்கோள். குறிக்கோளுக்குத் துணையாக குரங்குப் படையும் இருக்கும். தானும் ஆட்டம் போடும். ஆட்டியும் வைக்கும். இத்தகைய ஆட்சி முறையை விளக்க அமெரிக்க அறிஞர் கூறிய கருத்தைக் கூறலாம்.

மக்களை ஆட்சி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று வேடிக்கைக் காட்டி ஏமாற்றுதல். இரண்டு வன்முறை அடக்குமுறை [There are two ways of governing men - Bambloozle and Bamboo you).

நப்பாசை

அத்தகைய வார்ப்படத்தில் வந்த பா.ஜ.க. தென்னகத்தில் கால் பதித்ததை, ஹிலாரி, டென்சிங், எவரஸ்டில் கால் பதித்ததைப் போல் நினைத்து நர்த்தனம் செய்தது. இந்த நர்த்தனத்தை இந்திய அரங்கில் குஜராத் குலக் கொழுந்தின் தலைமையில் அரங்கேற்ற நட்டுவாங்கம் பயின்றது. கருநாடகத்தில் தேர்தல் தாளம் தப்புத்தாளமாகி ஆட்சி தடம் புரண்டதைப் பார்த்தோம்.

தமிழர் தலைவரின் பாராட்டு

கருநாடகத்தில் புதிய ஆட்சி மலர்ந்த செய்தி வந்துள்ளது. மலரின் காட்சியை விட மலரில் உள்ள தேனைத்தான் பகுத்தறிவாளர்கள் சுட்டிக்காட்ட விரும்புவர், பாராட்டுவர். தமிழர் தலைவர், இது தான் தேன் என்று அவரது கருத்தில் விளக்கியுள்ளார்.

சித்தராமையா, அடித்தள ஜாதி யிலிருந்து வந்த வழக்குரைஞர்; நேர்மையானவர். அடிப்படையில் பகுத்தறிவாளரான இவர் ஒரு சமதர்மவாதி எல்லோருக்கும் இனியவர்.

பகுத்தறிவுத் தேன் எந்த மாநிலத்தில் இருந்தாலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், பெரியார் தொண்டர் களுக்கு மகிழ்ச்சியே. எல்லா மலரிலும் பகுத்தறிவுத்தேன் இருப்பதையே எதிர்பார்ப்பர், வரவேற்பர்.

திராவிடர் கழகத் தலைவர் அவர் களின் அறிக்கையை வழிமொழியும் வகையில் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் (14.5.2013) செய்தியைஅளித்துள்து.

நாத்திகராமே!

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 64 வயதுடைய தலைவர், தன்னை நாத்திகர் என்று தெரிவிக்கும் வகையில், உண்மையின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் [A self-declared atheist, the 64 years old backward class leader took oath in the name of ‘truth’.]

பா.ஜ.க.ஆட்சியில், அரசாங்க உதவித்தொகையைப் பெற்று வந்த மத அமைப்புகள் இனி அத்தகைய உதவித் தொகையைப் பெறாது.

[Religious mutts, which had benefitted during the BJP government’s rule, will not get government funding]

மாற்றான் தோட்டத்து மல்லி கைக்கும் மணம் உண்டு என்ற அண் ணாவின் பெருமொழியை நினைத்து, அந்த மணம் இங்கும் வீசட்டும் என்று விழைவோம்.

தமிழ் ஓவியா said...


பிரசவ தோஷம்


கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பகுதி. சுனாமி பற்றிய அறிவிப் பால் 144 தடை உத்தரவை உள் வாங்கிக் கொண்டிருந்தது. இந்தி ராணியின் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது.

இன்னைக்கு பிரதோஷம் சிவன் கோவிலுக்கு போகலேன்னா சோசியக்காரு சொன்னது பலிக்காமப்போயிடுமே. சுனாமியாவது பினாமியாவது இன்றைக்கு கோவிலுக்கு போனா தான் புள்ள பொறக்கும்.

பழத்தட்டு சகிதமாய் புறப்பட்டாள். சிவன் கோயிலை அடைந்தவள் வியப்புற்றாள். அங்கே அர்ச்சகரை தவிர வேறு யாருமே வரவில்லை.

என்ன சாமி யாரையும் காணோம்

கடல் பொங்கப் போவுதுன்னு டீவில சொல்லிட்டான் இல்லையா. அதான் எவனும் உயிருக்கு பயந்துகிட்டு வெளியே வரலே

சாமி கல்யாணமாகி நாலு வருஷமாச்சு பரவை சோசியரு சொன்னாரு பன்னெண்டு பிர தோஷம் விடாமல் போனா புள்ளப்பொறக்கும்னு சொன்னார்.

அதான் நான் வந்துட்டேன்

நல்லது ஆலமரத்தை சுத்தி னாலோ ஆலகால சிவனை சுத்தி னாலோ மட்டும் நீ கர்ப்பம் ஆயிட முடியாது. உனக்கு குழந்தை பொறக் குறதுக்காகத் தான் இன்னைக்கு யாரையும் கோவிலுக்கு வராம பன்னியிருக்கான் சிவன் வா பக்கத்தில

சாமி என்ன சொல்றீங்க

உனக்கு குழந்தை வேணும்னா பக்கத்தில வா

வேண்டாம் சாமி.. என் புருஷன் குடிகாரனாயிருந்தாலும் அவனுக்கு துரோகம் பண்ண மாட்டேன்

என்னடி இது. கல்லாயிருக்கிற லிங்கத்தை நம்புறீங்க. உயிருள்ள லிங்கத்தை அலட்சியப்படுத்துறீங்க நல்ல சந்தர்ப்பம் விடமாட்டேண்டி உன்னை இந்திராணியின் புடவையை பிடித்து இழுத்தார் அர்ச்சகர். பாவாடை சாக்கெட்டுடன் ஓடிக் கொண்டிருந்தாள் இந்திராணி.

இனி எனக்கு பிரசவமும் வேண்டாம் பிரதோஷமும் வேண்டாம்.

- வீரன் வயல் லி.உதயக்குமாரன்

தமிழ் ஓவியா said...


அம்மணக் கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

- கி. தளபதிராஜ்

"தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்பது போல் ஆனந்த விகடனுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரணையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசை யால் அதை வாங்கி சூதாட நினைப் பதுமே ஆனந்த விகடனின் ஆண வத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.

(குடிஅரசு -10.10.1937) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத் துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனைக் கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே கணித்த ஆனந்த விகடன் மீதான மதிப்பீடு!. ஆச்சாரியார் காலத்தில் துவக்கிய ஆரியக் கூத்தை அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்!.

1937ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வெளிவந்த ஆனந்த விகடனில், ஒரு கட்டுரை!. தலைப்போ "வாழிய செந்தமிழ்!". கட்டுரையின் உள்ள டக்கம் என்ன தெரியுமோ? ஹிந்தியை மூன்றாம் பாரம்வரை கட்டாய பாடமாக வைக்க வேண்டும். அப்படி செய் தால் சமஸ்கிருதம் சுலப மாக வந்துவிடும். தமி ழைக் கற்றுக் கொடுக்கும் போது தமிழரின் நிலை, கொள்கை ஆகியவற்றை புகுத்தக் கூடாது. இது தான் விகடனின் கட் டுரை. வாழிய செந்தமிழ் என தலைப்பிட்டு, ஹிந் திக்கு வாழைமரம் கட்டி வந்தனம் பாடியது!. சந்தடி சாக்கில் சமஸ் கிருதத்திற்கு சாமரம் வீசி வரவேற்பு பத்திரம் வாசித்தது!. தமிழினக் கலாச்சாரத்திற்கோ தடைபோட்டது!. ஆனந்த விகடனின் தமிழ்ப்பற்று இது தான்!. அண்மையில் ஆனந்த விகடன் "பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்" எனும் சொல் அகரா தியை ஆயிரக்கணக்கான பக்கங் களை உள்ளடக்கிய மூன்று தொகு திகளாக வெளி யிட்டது. அதில் வெளிவந்த ஓரிரு வார்த்தைகளின் பொருளைப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

அந்தணர்

இந்தியாவில் உள்ள நால்வர் ணங்களில் முதல் பிரிவைச்சேர்ந்தவர். வேதகாலத்தின் பிற்பகுதியிலிருந்தே புரோகிதர் சாதி இருந்து வந்துள்ளது. மற்ற பிரிவினர்களை விட இவர்கள் அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்கள் என நம்பப்பட்டது. எனவே இவர்கள் மட்டுமே மதச் சடங்குகள் செய்யத் தகுதியுடையவர் களாகவும் கருதப்பட்டனர். வேதகீதங்களின் தொகுப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்கள் வசமே விடப்பட்டது. உயர்ந்த அந்தஸ்தும் கல்விப்பாரம்பரியமும், இருந்த காரணத்தால் இந்திய அறிவாராய்ச்சியில் இவர்கள் பல நூற்றாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆன்மீகத்திலும், அறிவிலும் மேன்மையான இவர்கள் அரசியல் சக்திவாய்ந்த சத்திரிய குலத்தினர்க்கும் அறிவுரை வழங்கி வந்தனர். சட்டப் படியான அங்கீகாரம் இல்லை என்றாலும் இன்றும் இவர்களில் பலர் தங்களது மரபுச் சிறப் புரிமைகளைத் தக்க வைத்துக் கொண் டுள்ளனர். சிலவகையான தடை விலக்குகளைக் கடைபிடித்தல், சைவ உணவு உண்ணல், சில தொழில் களிலிருந்து விலகியிருத்தல் ஆகிய வற்றின் மூலம் ஆச்சாரத் தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆரியர்(கள்):

ஈரானிலும் வடக்கு இந்தியா விலும், குடியேறிய வரலாற்றுக் காலத்திற்கும் முந்தைய மக்கள். இவர் களுடைய ஆரிய மொழியி லிருந்துதான் தெற்கு ஆசியாவின் இந்தோ அய்ரோப்பிய மொழிகள் உருவாகின. ஆரிய இனம் பிற மக்கள் இனங்களைவிட உயர்ந்தது எனக்கருதப்பட்டது. இந்தக்கருத்தால் அடால்ப் ஹிட்லர் பீடிக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே யூதர்கள், நாடோடிகள்(ரோமா), ஆரியர் அல்லாதவர்கள் ஆகியோரை அழிக்க வகைசெய்த நாஸி கொள்கையை ஹிட்லர் உருவாக்கினார்.

மனு:

இந்தியப்புராணங்களின்படி உலகின் முதல் மனிதர். மனுஸ் மிருதியை ஆக்கியவர். முதல் யாகத்தை நடத்தியவர் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் அரசராகவும் அறியப்படுகிறார். இடைக்கால இந்தியாவை ஆட்சி செய்தவர்களில் பலரும் இவரைத்தான் முன்னோர் என உரிமை கொண்டாடுகிறார்கள்.பிரளயவெள்ளம் குறித்த கதையில் நோவா மற்றும் ஆதாம் ஆகிய இருவரின் இயல்பு களையும் ஒருசேரக்கொண்டவர். மீன் ஒன்றினால் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டதால் ஒரு படகை உருவாக்கினார். இவரது படகு மலையின் உச்சியை அடைந்து நின்றது. வெள்ளம் வடிந்த பிறகு பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினார். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றி னாள். இவர்கள் இருவரும் இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமா னார்கள். ஆனந்த விகடன் தகவல் களஞ்சியத்தின் யோக்கியதை இதுதான்!. பார்ப்பனப்பண்ணையம் கேட்பாரில்லை என்கிற போக்கில் தவறான தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறது.

அந்தணர் மற்ற பிரிவினர்களை விட அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்களாம். சில தொழில்களிலிருந்து விலகியி ருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனராம். மலம் அள்ளுவதும், நாற்று நடுவதும், கல்லுடைப்பதும் எமது இனத்திற்கே உரிய தொழிலா? இந்தத் தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதாக கொழுப்பெடுத்து எழுதியிருக்கிறது. ஆரிய இனம் பிற மக்கள் இனங் களைவிட உயர்ந்தது எனக் கருதப்பட்டதாக தற்பெருமை பேசுகிறது விகடன்.

தமிழ் ஓவியா said...

மனுவின் கதையோ ஆபாசத்தின் உச்சம்!. பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினானாம். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றினாளாம். இவர்கள் இருவரும் (அப்பனும் மகளும்) இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமானார்களாம். அட ஆபாசத்தின் அடித்தளமே உன் பெயர்தான் ஆரியமா? இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் இப்படி அருவறுப்பான புனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட வெட்கமாக இல்லையா உங்களுக்கு?

இப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தான் ஈழத்தமிழர் மீது இப்போது திடீர் அக்கறை முளைத்திருக்கிறது!. விகடனில் வாரந்தோறும் எது வந்தாலும் வராவிட்டாலும் ஈழம் தொடர்பான கட்டுரை வராம லிருப்பதில்லை. கலைஞரை வசை பாடவே துவக்கப்பட்ட கட்டுரைக் களம் அது. டெசோ உட்பட கலைஞர் எதைச்செய்தாலும் அதை விமர்சிக்கவேண்டும் என்ற நோக் கிலேயே விஷம் கக்குகிறது. மீண்டும் கலைஞர் ஆட்சிபீடத்தில் அமர்ந்து விடக்கூடாது என்கிற ஆற்றா மைதான் ஆனந்த விகடன்களை இப்படி அம்மணக்கூத்தாட வைக் கிறது. சில எடுபிடிகளும் இனத் துரோகிகளும் வேண்டுமானால் அவர்களுக்கு வாளாகியிருக்கலாம். எந்த ஒரு மானமுள்ள தமிழனாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1937இல் குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகளை மீண்டும் நினைவுகொள்வோம்! ஆனந்த விகடன் வகையறாக்களை புறக்கணிப்போம்!.

தமிழ் ஓவியா said...


வேதங்களறியா முருகன் - சங்கநூலறியா வினாயகன்


வீ. இரத்தினம், பெங்களூர்

வேதங்களில் தமிழ் முருகனைப் பற்றிஏன்
உரைத்திடவே இல்லை? -_ தொந்தி
வினாயகனைத் தமிழ்ச் சங்க நூல்களேன்
குறிப்பிடவே இல்லை?
மோதல் செய் ஆரியர் தமிழகம் வருமுன்
முருகனை அறிவியல்லை -_ ஆண்ட
பல்லவர்களுக்குமுன் பிள்ளையாரைப்பற்றித்
தமிழர்க்கும் தெரியவில்லை

சிவனது பிள்ளை வினாயக னென்றுஏன்
சங்கநூல் சொல்லவில்லை -_ அதிலே
சுப்பிரமணியன், கந்தன் பெயரையும்
தெரிவிக்கவே இல்லை?
எவருமே இதனை ஆய்ந்து அறிந்து
உண்மையைக் கூறவில்லை! _ இவர்
எவருக்கோ அஞ்சி வயிறு வளர்க்கவே
பொய்மையை மீறவில்லை!

திருமுருகாற்றுப் படையிலே முருகன்
ஆரியமயமானான் - பிறகுதான்
தமிழகம் வந்தபிள்ளையார் அவனுக்குத்
தமையனாகிப் போனான்!?
வருபவர்க் கடிமையாய் வாழ்வதைத் தமிழன்
பெருமையாகக் கண்டான்! _ கெட்ட
விபீடணனாக நடப்பதை இன்றைக்கும்
வழக்கமாகக் கொண்டான்!

சங்கஇலக்கியம் முருகனைப்பற்றிச்
சொல்வது பழங்கதையே! அதுபோல்
பிள்ளையார் முருகனுக் கண்ணன் என்பதும்
புனைந்திட்ட புதுக்கதையே!
இங்குள தமிழர்கள் இதனை அறியாது
இருப்பது மிக இழிவே! - இனியும்
இதுபோன்ற கதைகளைப் புனிதமென் றெண்ணிடில்
தொடர்ந்திடும் பெருமழிவே!

தமிழ் ஓவியா said...


உடல் பருமனை குறைக்கும் தேன்!மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.

இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிக் உடலுக்கு கைகொடுக்கும்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் சாகடிக்கப்பட்ட தெய்வங்கள்

தெய்வங்களைப் பற்றி ஆரியம் நமக்கு கற்பித்து வைத்திருக்கும் பாடங்களை நினைத்துப் பாருங்கள்! அவை வெறும் பயமுறுத்தல்கள். எல்லாம் சர்வ வல்லமை படைத்தவை அவை ஆக்கவும் அழிக்கவுமான பலம் பொருந்தியவை தாம் மட்டும் அழியாமல் என்றென்றும் நிலைத்து நிற்பவை தேங்களைப் போல அன்றும் இன்றும் அழியாதவை.

சரி, வேதப்பாடல்களில் பெரும்பாலும் வழிபட பெறும் இந்திரன், வருணன், அக்னி, பர்ஜள்யன், உஷா, நிஷா ஆகிய தெய்வங்களைப் பாருங்கள் இன்று இந்த தெய்வங்களை யாரேனும் வழிபடுகிறார்களா இவற்றுக்கான கோவில்கள் எங்கேனும் உண்டா இல்லையே அப்படியானால் அவையெல்லாம் செத்துப் போயிவிட்டன என்பதுதானே உண்மை என்றும் அழியாத ஒரு பொருள் இருந்ததுமில்லை இருப்பதுமில்லை. மனிதர்கள் தங்கள் தேவைக்கும் நம்பிக்கைக்கும் பார்ப்பனர்களின் பிழைப்பிற்கும் ஏற்ப உண்டாக்கியவை அவை. மனிதர்களைப் போலவே செத்துப்போய்விட்டன என்பது தான் உண்மை ஆனால் இன்றும் மழை இல்லாத காலங்களில் வருண ஜெபம் நடத்தி பார்ப்பனர்கள் பிழைப்பு தேடிக் கொள்கின்றனர்.

அது போலவே வெள்ளைச்சாமி என்ற பெயரைத் தமிழ் நாட்டில் மக்கட் பெயராக பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரும் இடுகின்றனர். மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிற தெய்வங்கள் எல்லாம் கருப்பு, கருநீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் தான் இருக்கின்றன ஆனால் வெள்ளை நிறத்தில் ஒரு தெய்வத்தை நாம் எங்கும் பார்த்ததில்லை. பார்ப்பனர்கள் கற்பித்த தெய்வங்களில் ஒன்று தான் இந்த வெள்ளைச்சாமி (ஆடீகூழஹடுடீழுலு) புராண மரபுகளின் படி இந்தத் தெய்வம் கிருஷ்ணனுக்கு அண்ணாவான கிருஷ்ணனை மட்டும் இன்று வரை வழிபடும் பார்ப்பனர்கள் வெள்ளைச்சாமியை மட்டும் ஏன் செத்துப் போகவிட்டு விட்டார்கள்?

இந்த தெய்வத்திற்கு தமிழகத்தில் எங்குமே கோவில்கள் இல்லை புராண மரபுகளின் படி இவன் ஒரு குடிகாரன். கையில் எப்போதும் மதுக்குவளையை வைத்திருப்பான். வெள்ளை நிறமுடையவன் என்பதால் இவனுக்கு வாலி என்ற பெயருமுண்டு வால் என்ற சொல்லுக்கு வெள்ளை என்று பொருள் எடுத்துக்காட்டாக வால்மிளகைப் பாருங்கள். இராமாயணத்தில் வரும் வாலி வெள்ளை நிறமுடைய குரங்கு. வெள்ளைச்சாமியுடைய கொடி பனைக்கொடி பனை திராவிட நாட்டின் பூர்வ தாவரமாகும். இவனுடைய வாகனம் உலக்கை வட மொழியில் முசலிவாகனம் என்றே இவனுக்குப் பெயர் முசலம் என்ற சொல்லுக்கு உலக்கை என்று பொருள் இவனுடைய ஆயுதம் கலப்பை உழவர்களை அடையாளங் காட்டுவதாகவும், மது குடிப்பதுமான அடையாளங்களாலும் பிற்காலப் பார்ப்பனர்களுடைய ஆசாரங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் இந்த தெய்வங்களை செத்துப் போகவிட்டுவிட்டார்கள். ஆனால் எளிய மக்கள் மட்டும் பலராமன், வெள்ளைச்சாமி, முத்துலக்கையன் ஆகிய பெயர்களோடு இந்த தெய்வத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படி செத்துப்போன தெய்வங்களின் பட்டிலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

- தொ.பரமசிவன்

தமிழ் ஓவியா said...


குற்றாலச் சாரலின் துளிகள்....!

குற்றாலத்தில் தென் மாவட் டங்களின் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

தென்காசி கழக மாவட்ட செயலாளர் அய். இராமச்சந்திரன் எங்கள் பகுதியில் கழகப் பணி களைத் தொடர்ந்து செய்து வரு கிறோம். ஆனால் அதனை நிழற்படம் எடுத்து செய்தியாக விடுதலைக்கு அனுப்புவதில்லை.
கழகத்தின் பணி என்பது தந்தை பெரியாரின் கோட்பாடு என்பது மனித நேயத்தின் அடிப்படையிலானது.

அதனால்தான் குருதிக் கொடை, விழிக்கொடை, உடற்கொடை போன்ற தொண்டறப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு வயது வளர்ந்து வரும் நிலையில் அடுத்த தலைமுறையினரையும் இந்த வகையில் வார்த்தெடுத்து வருகிறோம். கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்கள் எப்படிப் பட்ட மகத்தான பணிகளைச் செய்கிறார்கள் என்ற மதிப்பு கழகத் தோழர்களுக்கும் பொது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மாநாடுகளுக்கு குடும்பத்தோடு செல்லுகிறோம். ராஜபாளையம் மாநாட்டுக்கு கீழப்பாவூர், மேல மெய்ஞ்ஞானபுரத்திலிருந்து 120 பேர்கள் கலந்து கொண்டனர் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
மற்ற மற்ற பகுதிகளில் உள்ள கழகத் தோழர்களும் கீழப்பாவூரை யும், மேல் மெய்ஞ்ஞானபுரத்தையும் ஏன் பின்பற்றக் கூடாது?

தமிழ் ஓவியா said...

தென்காசி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டேவிட் செல்லத் துரை:

எங்கள் மாவட்டத்தில் நடக்கும் கழக நடவடிக்கைகளை விடு தலைக்கு நாங்கள் அனுப்பாததால் எங்களின் கழகப் பணிகள் வெளியில் அதிகம் தெரிவதில்லை என்று மாவட்டக் கழகச் செயலாளர் மானமிகு அய். இராமச்சந்திரன் இங்கே கூறினார்.

நாங்கள் பூவாக, காயாக வெளி யில் தெரிவதைவிட வேர்களாகவே இருக்க விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார். அடடே! கழகத் தோழர்களில் நேர்த்திதான் என்னே!

மதுரை புறநகர் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் பவுன்ராசா: இளைஞர்கள் மாணவர்கள் அதிக மாக எந்த இடத்தில் இருக்கிறார் களோ அந்த இடங்களில் எல்லாம் கழகப் பணி சுறுசுறுப்பாக இருக் கிறது. வசூல் பணியும் சிறப்பாக நடக்கிறது.

இளைஞர்கள் தொடக்கத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். கொஞ்ச காலத்தில் சோர்வு அடை கிறார்கள். அவர்களுடன் உரிய முறையில் தொடர்புகள் இருந்தால், அவர்களின் ஆற்றல் கழகத்துக்கு அதிகமாகக் கிடைக்கும் என்ற கருத்து கவனிக்கத் தகுந்ததே!

ராஜபாளையம் கழகச் செய லாளர் சிவக்குமார்: ராஜபாளையம் மாநாட்டின் வெற்றி என்பது தனிப்பட்ட எவரையும் சார்ந்ததல்ல. ஒட்டு மொத்த கூட்டு முயற்சிக்குக் கிடைத்திட்ட வெற்றி!

தந்தை பெரியார் சிலைக்கு பத்து பதினைந்து பேர் கூடி மாலையணி விப்போம் மாநாட்டின் போது ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மாலை அணிவித்தபோது நாங்கள் பெற்ற மகிழ்ச்சிக்கோர் அளவில்லை (மிகவும் உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் விட்டார்!)

எங்களுக்கு விடுதலைதான் வழிகாட்டி சென்னையில் கண்ணகி சிலை இடிக்கப்பட்டபோது என்னிடம் சிலர் கேட்டார்கள். கண்ணகி சிலை இடிக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டனர்.

இருங்கள் நாளைக்கு விடு தலையில் அதுபற்றி என்ன கருத்து சொல்லப்படுகிறது என்பதைப் படித்து விட்டுச் சொல்லுகிறேன். இடித்தது சரி என்று எழுதியி ருந்தால் சரிதான் என்பது எனது பதிலாக இருக்கும். சரியில்லை என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டு இருந்தால் ஆமாம் சரியில்லை என்று சொல்லுவேன் என்று நான் தெரி வித்தபோது அந்தத் தோழர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய விளக்கத்திற்கு எடுத்துக் காட்டு என்பது இதுதானோ!

தூத்துக்குடி மாவட்ட திராடர் கழகத் தலைவர் கனகராசு: ராஜபாளையம் மாநாட்டு வசூலுக்குச் சென்றபோது ஓர் இனிய அனுபவம் - பல் மருத்துவர் ஒருவரிடம் நன் கொடை கேட்டபோது தொடக்கத் தில் மறுத்துவிட்டார். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டுமென்றால் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிலையை மாற்றிய வர்கள் யார் தெரியுமா? என்று நாங்கள் விளக்கம் சொன்ன பொழுது 500 ரூபாய் நன்கொடை அளித்தார் என்று குறிப்பிட்டார்.

நன்கொடை திரட்டுவது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல. கொள்கைப் பிரச்சாரத்துக்கும் வகை செய்யக் கூடியதே!

துணைத் தலைவர் கலி. பூங் குன்றன்: ஒரு மாநாடோ பொதுக் கூட்டமோ சிறப்பாக நடைபெறுவது என்றால், அதன் பலன் கழகத்திற்கு வந்து சேர வேண்டும். நான்கு இளைஞர்களாவது புதிதாக கழகத்துக்குக் கிடைக்க வேண்டும். மாநாட்டுக்குமுன் பாடுபட்டது போலவே மாநாட்டுக்குப்பின் நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டின் மூலம்தான் இந்தப் பலன் கிடைக்க முடியும். ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தி முடித்த பிறகு அப்பாடா இந்த நிகழ்ச்சி இன்னும் இரண் டாண்டுகளுக்குத் தாங்கும்! என்று படுத்துவிடுவது சரியல்ல என்ற கருத்து மிகவும் சரியானதே! (கழகத் தலைவர் உரை தனியே காண்க!)

குற்றாலம் கலந்துரையாடல் தனித் துவத்துடன் நடைபெற்றது குறித்துக் கழகத் தலைவர் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு 2014இல் தூத்துக்குடியில் நடைபெறும்


மதுரை கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

குற்றாலம், ஜூன் 1- திராவிடர் கழக மாநில மாநாடு 2014இல் தூத்துக்குடியில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

குற்றாலத்தில் நேற்று (1.5.2013) தென் மாவட் டங்களின் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

ராஜபாளையம் மாநாடு கழக வரலாற்றில் இடம் பெற்ற சிறப்பான மாநாடு அதன் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

ராஜபாளையம் மாநாடு உணர்த்துவது...

ராஜபாளையம் மாநாடு ஓர் உண்மையை, புது நம்பிக்கையைக் கழகத் தோழர்களுக்கு ஏற்படுத்தி யுள்ளது. நாம் எத்தனைப் பேர் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.

நான்கு பேர் இருந்தாலும் ஒற்றுமையுடன், கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் பொது மக்கள் ஆதரவு கொடுக்க, நன்கொடைகளைத் தாராளமாக வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நமது தோழர்கள் உணர வேண்டும் முதலில் நம் தோழர்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

தென் மாவட்டங்களில் நமது பிரச்சாரம்

தென் மாவட்டங்களில் நமது பிரச்சாரம் அதிகம் நடைபெற வேண்டும். நமது கழகச் சொற் பொழிவாளர்களும், தென் மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

என்னுடைய சுற்றுப் பயணமும், பிரச்சாரமும் கூட தென் மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில்தான் இருக்கும்.

மற்ற மற்ற பகுதிகளில் கழகப் பிரச்சாரம் நடக்கும் அளவுக்கு தென் மாவட்டங்களில் நடக்கவில்லையென்றால் அதற்கு நாங்களும் பொறுப்பு என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

எங்களை வேலை வாங்குவீர்!

உங்களை நாங்கள் வேலை வாங்கும் நிலையில், நீங்களும் எங்களை வேலை வாங்க வேண்டும். அந்த ஒப்பந்தப்படி நமது பணிகள் தொடர வேண்டும்.

ராஜபாளையம் மாநாட்டில் நாம் எடுத்த முடிவின்படி நமது அடுத்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பெறுவதாகும்.

சிறைக்குச் செல்லத் தயாராவீர்!

ஆகஸ்டு முதல் தேதி கழகம் நடத்தவிருக்கும் போராட்டத்தில் 5000 முதல் 10 ஆயிரம் வரையி லான எண்ணிக்கையில் கழகத் தோழர்கள் சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

சிறீரங்கம் மாநாட்டிலேயே அறிவிப்புக் கொடுத்து விட்டோம் மயிலாடுதுறைப் பொதுக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி பேசுகின்றபோது ஒரு மணி 5 நிமிடம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையின் அவசியம் குறித்தே பேசினேன் மக்கள் அமைதியாகக் கேட்டனர் - பெரும் ஆதரவினைத் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் முத்தாய்ப்பாக ஓர் அறிவிப்பினைக் கூற விரும்புகிறேன்.

தூத்துக்குடியில் மாநில மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு 2014ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நடைபெறும் (பலத்த கரஒலி) என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1948இல் தூத்துக்குடியில்தான் திராவிடர் கழக மாநில மாநாட்டை தந்தை பெரியார் நடத்தினார். கழக வரலாற்றில் தூத்துக்குடிக்கென தனி வரலாறு உண்டு. அந்த வரலாற்று மகுடத்தில் மேலும் ஒரு முத்திரையைப் பொறிப்போம்!

தூத்துக்குடி மாநாட்டில் அன்று பெரியார் சொன்னது...

தூத்துக்குடி மாநாட்டிலும், நீடாமங்கலம் மாநாட்டிலும் தந்தை பெரியார் அவர்கள் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். இயக்கத்துக்கு வருமுன்னர் எத்தனை முறை வேண்டுமானாலும் சிந்திக்கட்டும். சேர்ந்தபின் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நாம் எடுத்துக் கொண்ட பணிகளில் வெற்றி பெறுவதற்குக் காரணம் - நமது எண்ணிக்கை பலமல்ல - இருக்கின்ற நாம், கட்டுப்பாட்டுடன் ஒன்றுபட்டுப் பணியாற்றுவது தான் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


உறவு முறையில் திருமணம் வேண்டாம்!

குழந்தைகளின் பிறவி காது கேளாமை பிரச்சினைக்கு உறவில் திருமணம் செய்வதே முக்கியக் காரணம் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்கு நரும், தலைமை காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் குழந்தைகளின் செவித் திறனை சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆய்வு முடிவுகள் தொடர்பாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

நாட்டிலேயே மிக அதிகமான குழந்தைகளிடம் (50 ஆயிரம் குழந்தைகள்) செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில், 6 குழந்தைகளுக்கு அதாவது 0.6 சதவீத குழந்தை களுக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேசிய சராசரியை (0.2 சதவீதம்) காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இது ஆறு மடங்கு அதிகமாகும்.

66 சதவீத குழந்தைகளுக்கு: ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது, காது கேளாமை பாதிப்புள்ள குழந்தைகளில் 66 சதவீத குழந்தைகளின் பாதிப்புக்கு உறவில் செய்யப்படும் திருமணமே காரணம் என்பதுதான். பேறு கால தொற்று நோய், எடைக் குறைவான குழந்தை, குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக குழந்தைக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் உறவில் திருமணமே முக்கியக் காரணியாக உள்ளது.

காக்ளியர் கருவி: பிறவிக் காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை காக்ளியர் கருவியை வெற்றி கரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளது.
செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை களுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள காக்ளியர் கருவியை இலவசமாக பொருத்த தமிழக அரசு உதவி செய்கிறது.
எனினும் உறவில் திருமணத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட செவித்திறன் குறைபாட்டைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகளில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் ஈடுபடுவது அவசியம் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
பிரபல காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) மருத்துவர் அறிவியல் பூர்வமாகச் சொன்னதற்குப் பிறகாவது பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் ஜாதிக்குள் திருமணம் (ஜாதியைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள பெரிய மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மருத்துவர் சொன்னதைக் கவனிக்க வேண்டும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்காதீர் - குருதிப் பொருத்தம் பாரீர் என்று திருமண விழாக்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வந்துள்ளதன் நியாயத்தை உண்மையான டாக்டர்கள் கூறும்போது பொருத்திப் பார்க்கட்டும்.

ஒட்டு மாம்பழம் தான் இனிக்கும் என்பதுபோல ஜாதி கலப்பு - மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாம் நோயற்றும், அறிவு சிலிர்த்துக் காணப்படுவார்கள் என்பது அறிவியல் கூறும் உண்மையாகும்? திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபடுவது மனித சமத்துவத்துக்காக மட்டுமல்ல; விஞ்ஞான பூர்வமான உண்மையை உட்கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பாதையில் மிடுக்குடன், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அடிப்படையிலும்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு! 1-6-2013

தமிழ் ஓவியா said...


2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடிசென்னை, ஜூன் 1- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 என பதிவாகியுள்ளது.

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப் புக்குப் பின் மக்கள் தொகை 97 லட்சத்து 41 ஆயிரத்து 351 அதிகரித்து ள்ளது. அதாவது கடந்த பத்தாண்டு களில் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதி மக்கள் தொகை 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரமாகவும், நகரப் பகுதி மக்கள் தொகை 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரமாகவும் பதிவாகி யுள்ளது.

2011-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த முக்கியப் புள்ளி விவரங்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய குறுந் தகட்டை பத்திரிகை தகவல் அலு வலக இணை இயக்குநர் எம்.வி.எஸ். பிரசாத் வெளியிட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக் கைகளுக்கான இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் புள்ளி விவரங்கள் குறித்து செய்தியாளர் களுக்கு விளக்கினார்.
இந்தப் புள்ளி விவரங்களின்படி மாவட்ட அடிப்படையில் மாநிலத் திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்ட மக்கள் தொகை 46 லட்சமாகவும், மிகவும் குறைவாக பெரம்பலூர் மாவட்ட மக்கள் தொகை 5 லட்சத்து 65 ஆயிரம் எனவும் பதிவாகியுள்ளது.
மக்கள் தொகை அடர்த்தி: மாநிலத்தில் ஒரு சதுர கி.மீ. பரப் பளவுக்குள் வாழும் மக்களின் எண் ணிக்கை 555 ஆக அதிகரித்துள்ளது. இது 2001-ஆம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகம். அதிகபட்சமாக சென்னை மாவட்ட மக்கள் அடர்த்தி 26 ஆயிரத்து 553 எனவும், மிகவும் குறைவாக நீலகிரி மாவட்ட மக்கள் அடர்த்தி 287 எனவும் உள்ளது.
பாலின விகிதம் அதிகரிப்பு: தமிழ்நாட்டின் ஆண் மக்கள் தொகை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 எனவும், பெண் மக்கள் தொகை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 எனவும் பதிவாகியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது ஆண் மக்கள் தொகைக்கும், பெண் மக்கள் தொகைக்கும் உள்ள இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்த ஆண் - பெண் பாலின விகிதம் 2011-ஆம் ஆண்டில் 9 புள்ளிகள் அதிகரித்து 996 எனப் பதிவாகியுள்ளது. மாநிலத் திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1042 எனவும், மிகவும் குறைவாக தருமபுரி மாவட்டத்தில் 946 எனவும் ஆண் - பெண் பாலின விகிதம் உள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை: தமிழ்நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 என பதிவாகி யுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 26 லட்சம் அதிகரித்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 10 லட் சத்து 15 ஆயிரத்து 716 தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறைந்த பட்சமாக கன்னியாகுமரி மாவட்டத் தில் 74 ஆயிரத்து 249 பேர் வசிக் கின்றனர்.

பழங்குடியின மக்கள் தொகை: பழங்குடியின மக்கள் தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 என பதிவாகியுள்ளது. பத்தாண்டுகளில் பழங்குடியினர் மக்கள் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம் அதிகரித் துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 369 பழங்குடியினர் வசிக் கின்றனர். மிகவும் குறைவாக கரூர் மாவட்டத்தில் 575 பேர் மட்டுமே உள்ளனர்.
எழுத்தறிவு: மாநிலத்தில் எழுத் தறிவு பெற்ற மக்கள் தொகை 5 கோடியே 18 லட்சமாக அதிகரித் துள்ளது. எழுத்தறிவு பெற்றோர் 80 சதவீதமாக உள்ளது. ஆண்களில் 86 சதவீதம் பேரும், பெண்களில் 73 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற் றுள்ளனர். மாநிலத்திலேயே அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட் டத்தில் 91.7 சதவீதம் பேரும், குறை வாக தருமபுரி மாவட்டத்தில் 68.5 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற் றுள்ளனர்.

கிராமங்கள் குறைந்தன: 2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிரா மங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. 2001-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற் போது புதிதாக 265 நகரங்கள் உரு வாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆகும்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு இயக்கத்திற்கு தலைமை தாங்கிய ஒரு பெண் - அன்னை மணியம்மையார்தான்!


குற்றாலம் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் பெருமிதம்

குற்றாலம், ஜூன் 1- பகுத்தறிவு இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கிய பெருமை அன்னை மணியம்மையாரையே சேரும் என்று தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் குற்றாலம் பயிற்சி முகா மில் மாணவர்கள் மத்தியில் உரையாடும் போது கு றிப்பிட்டார்.

36 ஆம் ஆண்டில் குற்றாலம் பயிற்சி முகாம்

கொள்கைப் பயிற்சிப் பட்டறையாக நடைபெற்று வரும் குற்றாலம் பயிற்சி முகாம், முப்பத்து ஆறாம் ஆண்டாக மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதனுடைய மூன்றாவது நாளில் சமூக நீதி,சுயமரியாதை இயக்க வீராங் கனைகள் என்ற தலைப்புகளில் பாடம் நடத்தினார் திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான கி.வீரமணி அவர்கள். சமூக நீதி என்ற தலைப்பில் அவர் உரையாற்றும் போது: 1916இல் தொடங்கி இட ஒதுக்கீடு வரலாற்றோடு இணைந்து-இடையில் எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் அமலுக்கு வந்த ரூபாய் 9000 ஆணையையும்,அதை திராவிடர் கழகம் எப்படி எதிர்கொண்டது என்பதனையும், இதில் மத்திய அரசின் பங்கு பற்றியும், மண்டல் கமிசனும், அதற்கான திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டங்களையும் புள்ளி விவரங்களோடு விளக்கிவிட்டு, வி.பி.சிங் மண்டல் கமிசனை நிறைவேற்றியதையும் குறிப்பிட்டுவிட்டு, குலக்கல்வித் திட்டம் தொடர்பான வரலாற்று சான்றுகளை மாணவர்களுக்கு தொகுத்துத் தந்தார்.

இந்தியாவை கலக்கிய இராவண லீலா அதே போல, மாலையில் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழர் தலைவர் தமதுரையில், 1920 களில் நடை பெற்ற கள்ளுக்கடை மறியலைப்பற்றி குறிப்பிட்டு, 90 ஆண்டுகளுக்கு முன்பு இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு பெண்கள். அவர்கள் அன்னை நாகம்மையார், பெரியாரின் தங்கை கண்ணம்மாள் என்று கூறிவிட்டு, அது எப்படிப் பட்ட காலகட்டம் என்பதையும் நினைவூட்டினார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைப்பட்டிருந்த போது, அப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தியவர்கள் அதே சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்தான் என்பதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் வரிசையில் அன்னை மணியம்மையாரைப் பற்றி குறிப்பிட்டார். அவர்தான் தந்தை பெரியாரை 95 வயது வரையிலும் வாழவைத்தவர். இயக்கத்துக்காக தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர். வடநாட்டில் நடை பெற்று வரும் ராம லீலாவுக்கெதிராக இராவண லீலா நடத்தி இந்தியாவையே கலக்கியவர். அது மட்டுமல்ல, இப்போது இருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரி, பெண்கள் பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஆகிய இவற்றிற்கெல்லாம் காரணம் அன்னை மணியம்மையாரின் தொண்டறம்தான் என்று பெருமையோடு அவரை நினைவு கூர்ந்துவிட்டு, இவைகளெல்லாம் அவருக்கு சிறப்புகளாக சொல்லப்பட்டாலும் இதனினும் சிறப்பு அவர், தந்தை பெரியாருக்குப் பிறகு ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைவராக இருந்ததுதான் என்று அவர் புகழின் உச்சியைத் தொட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ராமசாமி, லால்குடி பெரியசாமி, மணல்மேடு பெரியசாமி என்று வரிசையாக சொல்லிக்கொண்டு வந்து, இறுதியாக இதே குற்றாலம் பயிற்சி முகாமுக்கு தோன்றாத்துணையாக இருந்த தியாக அரசனைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இப்படிப்பட்ட சுயமரியாதை வீரர்கள் இந்த இயக்கத்தின் அஸ்திவாரம் போன்றவர்கள்; அவர் கள் உடலால் மறைந்தாலும் புகழால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று கூறி உணர்ச்சி மயமான வரலாற்றை மாணவர்களின் முன்வைத்து தனது வகுப்பை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, எடிசன்ராஜா, டேவிட் செல்ல துரை, அழகர்சாமி, பொறியாளர் மனோகரன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயல வத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், பிறை நுதல்செல்வி, மருத்துவர் கவுதமன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திராவிடமணி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முட்டாள்தனம் உலகம் முழுக்க சொந்தம்

தமிழ் ஓவியா said...

முன்னதாக காலையில் இரண்டாவது வகுப்பில் கழகத்தின் செயலவைத்தலைவர், அறிவியலும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் வகுப்பெடுத் தார். அதில், அச்சம்+அறியாமை = கடவுள் என்பதை விளக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து இந்து மதத்தில் மனிதப் பிறப்பு எப்படி என்பதை நால் வருண அநீதியை சொல்லி விளக்கினார்.

தொடர்ந்து யோகாவின் சிறப்பைப் பற்றிச் சொல்லி, சிந்து சமவெளி நாகரிகத்தில் உள்ள சிற்பங்களில் அந்த யோகா முத்திரை இருப்பதை எடுத்துக் காட்டி, அந்தக்கலை நமக்கு சொந்த மென்று நிறுவிவிட்டு, பின்னாளில் பதஞ்சலி அது இதென்று வந்துவிட்டதையும் பாலியல் சாமியார் நித்தியானந்தா போன்றவர்கள் குண்டலினியை எழுப்புவதாகச் சொல்லி ஏமாற்றுவதையும், அறிவியல் ரீதியாக அது எப்படிப்பட்ட முட்டாள் தனம் என்பது பற்றியும் கூறிவிட்டு தொடர்ந்து, பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருப்பதைச் சொல்லி, முட்டாள் தனம் இங்குமட்டுமல்ல அது உலகம் முழுக்க இருக்கிறது என்றார்.

மேலும் அவர் தமது உரையில், கடவுள் படைப்பு பற்றி குறிப்பிட்டுவிட்டு, கற்பனையான சர்வ சக்தியுள்ள கடவுளின் படைப்பைக் காட்டி லும், மனிதனின் படைப்பு சிறந்ததாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, கடவுள் என்பது ஒரு மூட நம்பிக்கை என்று எடுத்துரைத்தார். தொடர்ந்து பல்வேறு மூடநம்பிக்கைகள் பற்றி பேசிவிட்டு, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 51(ஹ)பிரிவின்படி அறிவியல் மனப்பாண்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

கணினிப் பயிற்சி

நேற்றைப் போலவே மதிய உணவு இடை வேளையின் போது, மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி கொடுக்கப்பட்டது. திரையிடுதல் மூலமாக ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு துவக்குவது, முகநூல் கணக்குத் துவக்குவது ஆகியவை பற்றியும், இயக்க வலைதளங்கள் பற்றியும் கற்றுத்தரப்பட்டது. இதை பெரியார் வளாக கணினி ஆசிரியர் ஜகன், பிரபாகரன் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.

தமிழ் ஓவியா said...

பிற்பகலில் திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அதில் வரிசையாக தமிழர் தலைவ ரின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

மானமிகு, தொண்டறம் என்ற இரண்டு புதிய சொற்களை அவர் தமிழுக்குத் தந்திருக்கிறார் என்பதைச் சொல்லி அந்த வார்த்தைகளின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை, ஒரு பத்திரிகையாளர் முத்தமிழறிஞரை கலைஞரைப் பார்த்து, ஒற்றை வரியில் உங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டதையும்; அதற்கு கலைஞர், மானமிகு சுய மரியாதைக்காரன் என்று பதில் சொன்ன வரலாற் றைச் சுட்டிக் காட்டி புரிய வைத்தார். பெரியாருக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், டில்லி பெரியார் மய்யம், தி.மு.க-அ.தி.மு.க. இணைப்பு முயற்சி என்று வரலாற்றின் அரிய பக்கங்களைத் புரட்டிக் காட்டினார். அதைத்தொடர்ந்து மருத்துவர் கவுதமன் நடித்தும், பாடியும், ஆடியும் பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து மருத்துவமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களை தெளிவு படுத்தினார். சுவையான பட்டிமன்றம்

இரவு உணவுக்குப் பிறகு,பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் சார்பில் குழந்தை தொழிலா ளர்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படமான கீ திரையிட்டுக் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமுதாயத்தை அதிகமாக கெடுப்பதுதிரைப்படமா? கடவுள் மதமா? என்ற தலைப்பில் மாணவர்களே பங்கு பெற்ற சுவையான பட்டிமன்றம் நடை பெற்றது. திரைப்படமே என்ற தலைப்பில் ராஜேந்திரப் பிரபு தலைவராகவும், அருண்குமார், காளி தாஸ், மிருனாளினி, மலர்விழி ஆகியோரும்; கடவுள் மதமே என்ற தலைப்பில் இளந்திரையன் தலைவராகவும் பிரவீண்குமார், மானவீரன், கவுர், மல்லிகா ஆகியோரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பான கருத்துகளை எடுத்துவைத்து உரை யாற்றினர். பட்டிமன்றத்தை ஒட்டுமொத்த வகுப்புகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கி வைத்தும் மாணவப் பேச்சாளர்களை அறிமுகம் செய்துவைத்தும் பேசினார். அதைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் மாணவப் பேச்சாளர்களுக்கு பேசுவதற்கான சில உத்திகளைச்சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பால் ராஜேந்திரம் அவர்கள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தி, கடவுளும் மதங்களும்தான் சமுதாயத்தின் முன் னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருக்கிறது என்று தீர்ப்பு அளித்தார். மாணவர்கள் இறுதிவரை இருந்து பட்டிமன்றத்தைச் சுவைத்தனர்.

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக பிராமணர் - பிராமணரல்லா தாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லா தாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால்தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடிச் செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்த சாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண் டாம் என்று சொல்லக் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட் கிறோம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

தேசபக்தன்

தேசபக்தன் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு.கோ.நடேசய்யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளிவந்த வர்த்தகமித்திரன் பத்திரிகையும் திரு.நடேசய் யரையே தன் ஆசிரியராகக் கொண்டிருந்தது. அக் காலை வர்த்தகமித்திரனில் ஒழுங்காகவும் தேச நலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளி வந்தன.

ஆனால் இப்பொழுது அதே திரு.நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்டையாகக் கூறப் புகின் தேசபக்தனும் பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க மலாய் நாட்டில் தமிழ்நேசன் என்றும் இலங்கையில் தேசபக்தன் என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ள தென்றே கூறவேண்டும்.

கருப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல் பார்ப்பனப் பக்தனாக யிருப்பவன் தேசபக்தன் என்று பெயர் பூண்டு தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வதாகும்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 08.08.1926

தமிழ் ஓவியா said...

சென்னையில் திரு.எஸ்.ஆர்.தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் அவர்களின் தாயாதி சகோதரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் அய்ம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயி ருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங் களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதி யாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரிய மடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலைமையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்த வரான ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்களை அனுப் பியதாகத் தெரிந்தோம்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் சென் னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப் பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங் காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர்.சதாசிவய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரி, ஜட்ஜுகள் குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார், எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம்தாஸ், எ.வி.இராமலிங்கய்யர், வி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.இராமசாமி அய்யர், அட்வகேட் ஜெனரல் வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.வரதாச்சாரி, கே.பாஷ்யம் அய்யங்கார் ஜி.எ.நடேசன் அய்யர் முதலிய பல பார்ப் பனர்கள் பெரிய விருந்து நடத்தி தாஸ் அவர் களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்விருந்தின் செலவின் பெரும்பாகம் திருப்பதி மகந்துவினு டையதென்று சொல்லப்படுகிறது.

இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பதி மகந்தும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர் களும் அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும் விருந்து முதலியவைகளை பகிஷ்காரம் செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும், ஒத்துழையாமை நாற்றம் தங்கள் மீது வீசப்படு கிறதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம் தாஸ், கே.பாஷ்யம் அய்யங்கார் முதலிய பாப் பனர்களும் வந்திருந்ததிலிருந்தும், அவ் விருந்தில் வாலிபப் பெண்கள் மூலமாக சங்கீதம் நடத்தி ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசை ரம்மிக்கச் செய்ததிலிருந்தும் இவ்விருந்தின் சூழ்ச்சியும் தந்திரமும் விருந்து நடத்தியவர்களின் கருத் தும் நாம் சொல்லாமலே விளங்கும்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் விருந்துக்கு திருப்பதி மகந்தைத் தருவிக்க வேண்டிய காரணம் என்ன? பெண்களை அழைத்து சங்கீதம் நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச் சில விஷயங்களை ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? சர்க் காரை பகிஷ்கரிக்கும் சுயராஜ்யக் கட்சியார் அங்கு வர வேண்டிய வேலை என்ன? ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் கவர்னருக்குக் கொடுத்த ஒரு விருந்தின் போதே அது சுய ராஜ்யக் கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர் செய்த விருந்துமல்ல என்று சொல்லித் தப்பித்துக்கொண்ட நமது சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் நிர்வாக சபை மெம்பர் என்கிற சர்க்கார் பிரதிநிதி உத்தி யோகஸ்தருக்கு, அவர் சர்க்கார் வேலை சம்பந்த மாய் வந்திருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும் விருந்திற்கு இவர்கள் எப்படிப் போகக் கூடும்? இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இந்திய அரசாங்கத்தில் நமது பார்ப்பனர்கள் இதுவரை சொல்லி வந்திருக்கும் கோள்களையும், செய்து வந்திருக்கும் சூழ்ச்சிகளையும், கெடுதிகளையும் உண்மை என்று உறுதிப்படுத்துகிறது.
- குடிஅரசு - கட்டுரை - 08.08.1926

தமிழ் ஓவியா said...

இதற்கென்ன சொல்லுவார்கள்?

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி யெனவும், மந்திரிகள் தம் நண்பர்களுக்கும் உற்றார் களுக்குமே பதவிகளை வழங்கி வருகிறார் களெனவும், சுயராஜ்யக் கட்சியார் சொல்லாத நாளே கிடையாதெனலாம். ஆனால் உண்மை என்ன? உத்தி யோக வேட்டையாடுபவர்கள் யார்? நண்பர்கட்கும் உற்றார்கட்கும் பாரபட்சமாய் இருப்பவர்கள் யார்? வேலூரில் ஜில்லா கோர்ட்டுக்குப் பப்ளிக் பிராசிகி யூட்டர் பதவிக்கு ஓர் பார்ப்பனர் சமீபத்தில் நியமிக் கப்பட்டிருக்கிறார். அவர் பெயர் திரு. நரசய்யர். ஏற்கனவே இரண்டு முறை களில் இவ்வுத்தியோகங்களிலிருந்தவர். இப்போது மூன்றாம் முறையும் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வயதே 57. வேலூரில் இவரைத் தவிர தகுதியான வேறு வக்கீல்கள் இல்லையா? இவரை மூன்றாம் முறையும் நியமிக்க வேண்டிய காரணமென்ன? தவிரவும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பப்ளிக் பிராசிகியூட்டர்களாக நியமிக்கப்படாது என்ற அரசாங்க உத்தரவுமொன்று இருக்கிற தென்று அறிகிறோம். அஃது உண்மையாயின் 57 வயதுள்ள திரு.நரசய்யர் மீண்டும் நிய மிக்கப்படுவானேன்? அந்த அய்யர் சட்ட இலாகா அங்கத்தவருக்குப் பந்து வென்று சொல்லப்படுகிறது. அதுதான் காரணமோ? பிராமணர்கள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள்கூட நியமிக்கப்படுகையில் பிராமணரல்லாதார்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? திவான் பகதூர் எம்.கோபாலசாமி முதலியாருக்கு மிகுந்த கஷ்டத்துடன் ஆறு மாதகாலம் வரைதான் உத்தியோகம் நீடிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூரிலே இப்போதுள்ள பிராமணப் பப்ளிக் பிராசிகியூட்டர் மூன்று ஆண்டுகளாய் வேலைபார்த்து வருகிறார். உத்தியோக வேட்டையாடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் உற்றார்களுக்கும் பாரபட்சமாய் நடந்துகொள் பவர்களும் யார்? நாமா அல்லது பார்ப்ப னர்களா?
- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 08.08.1926

தமிழ் ஓவியா said...


பெரியார் திடலில் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை தொடங்கியது


மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார். உடன் இந்தியப் பகுத்தறிவாளர் கழகக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், ஈட்டி கணேசன் ஆகியோர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 1.6.2013).

சென்னை, ஜூன் 1- பகுத் தறிவாளர் கழகம் - சென்னை சுதந்திர சிந்தனையாளர் பேர வையும் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை இன்று காலை சென்னை பெரியார் திடலில் தொடங்கியது.

ஜூன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாள் நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையை இந்தியப் பகுத்தறிவாளர் கழ கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் பொறுப்பேற்று நடத்துகிறார்.

முன்னதாக, சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி பட்டறையினை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகத் தின் மாநிலப் பொதுச்செய லாளர் வீ.குமரேசன் தலை மையுரையாற்றினார். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றிட வந்துள்ள தோழர்களை சுதந் திர சிந்தனையாளர் பேரவை யின் செயலாளர் டாக்டர் கணேஷ் வரவேற்றுப் பேசி னார். பட்டறை நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்து திரா விடர் கழகத்தின் பெரியார் கலை, ஊடக, அணியின் மாநில பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரி யார் பணியாற்றி வருகிறார்.

பட்டறை நிகழ்ச்சிக்கு மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நிபுணர் ஈட்டி கணே சன் உறுதுணையாக இருக் கிறார்.

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் தமதுரையில் குறிப் பிட்டதாவது:

மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி பகுத்தறிவு பிரச் சாரத்திற்கு, மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு கைக்கொள்ளப் படவேண்டிய மிகச்சிறந்த அணுகுமுறையாகும். மந் திரமா? தந்திரமா? நிகழ்ச் சியின் தாக்கம் குழந்தைகள், சிறுவர், இளைஞர்கள் மற்றும் முதியோர் என அனைத்துத் தரப்பினரிடமும் தாக்கத் தினை ஏற்படுத்தக்கூடியது. அண்மையில் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பழகுமுகாமில் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சி நடத்தப்பட் டது.

பழகு முகாம் முடிந்து வீடு திரும்பிய சிறுவர்கள் மந் திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தாக்கத்தின் காரணமாக தங் கள் வீட்டுப் பெரியவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய் யத் தொடங்கிவிட்டனர்.

இதுநாள் வரை வெறும் கல்லை, சாமி எனக் கும்பிட்டு வந்தது தவறு. சாமி என்ப தாக ஒன்றும் இல்லை என சிறுவர்கள் பிரச்சாரம் செய் ததில் இருந்து பெரியவர்கள் வியப்படைந்தது மகிழ்ச்சிக் கும், பெருமைக்கும் உரிய செய்தியாகும்.

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுள்ள தோழர்கள் மந் திரமா? தந்திரமா? நிகழ்ச்சி யின் நுணுக்கங்களை உன் னிப்பாக உள்வாங்கி, தொடர்ந்து சுய பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச் சியை நடத்துவதில் நிபுணர் களாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். பகுத்தறிவு பிரச்சாரம் பல்வேறு தரப்பு மக்களிடமும் சென்றடைய வேண்டும். மந்திரமா? தந் திரமா? பயிற்சிப் பட்டறை யைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.

-மேற்கண்டவாறு பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் உரையாற்றினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச் சியான நாளை (2.6.2013) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று உரை யாற்ற உள்ளார்.

பயிற்சிப் பட்டறையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங் கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மறக்க முடியுமா?

என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை

என் தாயார் இறந்தபோதும் இயற்க்கைதானே 95 வயதுக்கு
மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா?
இது பேராசை அல்லவா என்று கருதினேன்

10 வயதில் இலன்டனுக்கு அனுப்பிப் படிக்கவைத்த ஒரே அண்ணன் மகன் படித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்க்காகவும் பதறவில்லை சிதறவில்லை
பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது

தமிழர்களை காணும்தோறும் தமிழர்நிலையை என்னுந்தோறும் நெஞ்சம் பகிரென்கிறது

காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி தாயார் குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது தன்னலம் மறையும் போது அவர்களது மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது தமிழர்களை காணும் தோறும் நினைக்கு தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார் இது என்று மறைவது? என எதற்க்கும் கலங்கா மனம் கொண்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களே கலங்க காரணமானவர் திராவிடர் இரத்தினம்
சர்,ஏ,டி,பன்னீர்செல்வம் 1912லேயே இலண்டனில் பார் அட்லா பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்

நீதிக்கட்சியால் உந்தப்பட்டு அதர்க்கு துணையால் நின்றவர்
மதுரை தமிழ்சங்கம் அதனை தொடர்ந்த கரந்தை தமிழ்சங்கத்தில் தமிழவேள் உமாமகேஸ்வரனாரோடு வாழ்நாள் உறுப்பினராய் பணியாற்றினார் திருவையாறு அரசர் கல்லுரியில் சமஸ்கிருதம் மட்டுமே கற்ப்பிக்கப்பட்டது காரணம் அரசர் அதற்குதான் பணம் ஒதுக்கி எழுதிவைத்துள்ளார்

வடமொழியில் என பார்ப்பனர்கள் சொன்னார்கள் தமிழவேள் சாசனத்தை வடமொழி புலமைகொண்ட திருப்பாதிரிபுலியூர் ஞாணியாரிடம் காட்டினார் கல்வி நலனுக்கென எழுதப்பட்டுள்ளது என அவர் சொன்னார் தீர்மானம் தமிழக்காக பன்னீர்செல்வம் நிறைவேற்றி கல்லூரியில் தமிழுக்கு இடம் கிடைக்க செய்தார்

சமஸ்கிருத கல்லூரி என்பதை மற்றி அரசர் கல்லூரி என பெயர் சூட்டினார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரச சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளிக்க பட்டதை மாற்றி ஜாதி பாகுபாடில்லாமல் அனைவருக்கும் உணவளிக்க ஏற்ப்பாடு செய்தார்

செங்கற்பட்டு முதலாம் சயமரியாதை மாநாட்டில் {1929} பன்னீர்செல்வம் பேசிய பேச்சு இளைஞர்களுக்கு வழிகாட்டல் உரையாகும்

நாட்டு வாலிபர்கள் அரசியல் துறையில் இறங்க வேண்டாமென்று ஒரு கூட்டத்தார் அடிக்கடி அறிவித்து வருகின்றனர் அரசியல் விசயங்களை பற்றி முற்றும் வாலிபர்களுக்கு தெரிய கூடாதென்றும் கூறும் கூட்டத்தாரில் நான் ஒருவன் அல்லேன் வாலிபர்கள் விசயங்களில் மிக ஊக்கத்தைக் கொள்ளவேண்டும் ஆனால் அவர்கள் அரசியல் விசயங்களிலேயே தமது காரியங்கள் முதலியவற்றை நீக்கி முழு மனதை செலுத்திக்கொண்டிருக்க கூடாது என தெளிவாய் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்

1938 முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரும் தோழர்களும் சிறையில் வாடியபோது சட்ட மன்றத்தில் செல்வம் பேசிய பேச்சு
இந்தியின் மூலம் தமிழ் மொழி மட்டுமல்ல தமிழன் வாழ்வும் அழிந்துவிடும் என்பதை இந்த அமைச்சரவைக்கு பலமுறை எடுத்துச் சொல்லியாகிவிட்டது தமிழனுடைய தனித் தன்மையைத் தமிழனுடைய மாண்பைத் தமிழ்மொழியின் பங்கை யாராளும் அழிக்கமுடியாது" என எச்சரித்தார் மாநாட்டில் தன் தோலுக்கு இட்ட மாலையை பெரியரின் படத்திற்க்கு அணிவித்து தலைவன் தாழ்க்கிட்டு பணிகின்றேன் இந்த இனத்தின் ஒரே தலைவன் பெரியார் என அவர் முழங்கிய முழக்கம் வரலாற்று காவியம்

பல்துறை சாண்றோனாக விளங்கிய செல்வம் இந்தியா மந்திரியின் ஆலோசனையாளராக பொறுப்பேற்க 1940 பிப் 23 மேல்நாடு விமான பயணம் செய்தார் விமாணம் நடுக்கடலில் விழுந்து அனைவரும் பலியாகினர்

"பாழும் ஓமான் கடலே-நீ பலி சொன்ன எங்கள் பன்னீர் செல்வம் உடல்தானா கிடைத்தது என தமிழர்கள் கதறினர் தமிழரின் நன்மைக்காகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்த திராவிடர் மாவீரன் திராவிடர் இரத்தினம் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்த நாள் ஜீன் 1

தமிழ் ஓவியா said...

இதோ பெரியாரில் பெரியார் .....

ஒரு சமயம் விருதுநகரில் கூடிய ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஸ்யகோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியாரைக் குத்திவிட ஓடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல் அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலிசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான் இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.

- பட்டுக்கோட்டை அழகிரி , நூல்: இதோ பெரியாரில் பெரியார்

தமிழ் ஓவியா said...


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா? பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா?

பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


கலைஞர் அவர்களின் வாழ் விணையர் தயாளு அம்மாள் அவர்களை விசாரணைக்கு டில்லிக்கு அழைப்பது பற்றிய நீதிமன்றத்தின் ஆணை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கலைஞரின் வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநராக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவருக்கு எவ் வகையிலும் சம்பந்தமில்லாத 2ஜி அலைக் கற்றை வழக்கில் அவரை விசாரித்த நிலையில், அவரது முதுமை காரணமாக அவரை குற்றம் சுமத்தப்பட்டவராகச் சேர்க்க தேவையில்லை என்று முடிவு செய்தது சி.பி.அய்.

ஏற்படாத இழப்பு என்ற அனுமான இழப்பைக் காரணம் காட்டி முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவையும், அது போலவே எந்த இயக்குநர் கூட்டத்திற்கும் செல்லாத நிலையில் கவிஞர் கனிமொழி அவர்களையும் குற்றவாளிகளில் ஒருவ ராக்கி, 6 மாதங்களுக்குமேல் டில்லி சிறையில் வதியச் செய்தார்கள்.

அதுபோலவே ஆ. இராசா அவர் களுக்கு ஓராண்டு சிறை வாசத்திற்குப் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க, சாட்சியமளிக்க திருமதி தயாளு அம்மாள் டில்லிக்கு வர வேண்டும் என்று கோருகின்றனர்; அவருக்கோ உடல் நிலை கடந்த ஓராண் டாகவே சரியில்லாது, தனிக் கவனிப்பில் இருந்து வருகிறார் என்ற நிலையில் அவரை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரது தரப்பில், மருத்துவர்களின் சான்றிதழ்களோடு டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் விளக்கியிருக்கிறார். கலைஞர் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ள விவரம்:

அவரது உடல் நலம் சரியில்லை என் பது தமிழகம் முழுதும் அறிந்த செய்தி யாகும்.

அவரால் விமானத்தில்கூட பயணம் செய்ய முடியாது. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்று நீதிபதி முன்பு வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, எந்த மருத்துவ மனை என்று கேட்டறிந்து, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டது.
அதையெல்லாம் நீதிபதி குறித்துச் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது

சி.பி.அய். தரப்பிலும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களே நேரில் வந்து பரிசோதிக் கலாம் என்று ஒப்புதல் அளித்தனர். ஆனால் 2 நாள்கள் கழித்து சி.பி.அய். நீதிபதி நேரில் வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேலும், என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டால், அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப் பேற்றுக் கொள்வார்கள்? என்று கலைஞர் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மனிதநேயத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை அல்லவா இது?

முதுமை காரணமாக அவர் முன்பே அலைக்கழிக்கப்படாதபோது, இப்போது திடீரென்று இப்படி ஏன் வற்புறுத்தப்பட வேண்டும்?

சி.பி.அய். தரப்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது எப்படி? ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, இப்படி ஒரு நிலை ஏன்?

இதனால் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஒரு அவப்பெயர் பழி, அரசியல் ரீதியாக ஏற்படாதா? ஏனெனில் சி.பி.அய். பிரதமர் கீழ் உள்ள ஒரு துறையாகும். அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவு என்று நாம் சொல்ல வரவில்லை; ஆனால் இந்தநிலைக்குப் பிறகு, இதுபற்றி மறுபரிசீலனை செய்து மனிதநேயத்தோடு அவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

2.6.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


பெரியார் - அண்ணா ஊட்டிய உணர்வில் பணியாற்றுகிறேன் கவிஞர்கள் பங்கேற்ற விழாவில் கலைஞர்


தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 90 கவிஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர்களுடன் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.


சென்னை, ஜூன் 2- பெரியார், அண்ணா மற் றும் பல்வேறு கவிஞர் கள் ஊட்டிய உணர்வா லும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமி ழர்களையும் காப்பாற்ற முடியும் என்று சிந்தித் துக் கொண்டிருக்கிறேன் என்று கலைஞர் நெகிழ்ச்சி உரையாற்றி னார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 90 கவிஞர்கள் கூடி அவருக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நேற்று (1.6.2013) சென்னையில் நடந்தது. விழாவிற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

விழாவில் 90 கவிஞர் கள் தனித்தனியாக கலை ஞருக்கு நினைவுப் பரிசு, பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலை ஞர் ஏற்புரை வழங்கி னார். அவர் உரையாற்றிய தாவது:- என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து ஏற் பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமை படுத்தியுள்ளார். ஏற் புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை யிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரை கள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத் தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண் டால் தமிழ்த்தொண்டு, பொதுத் தொண்டு, சமு தாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காக வும், தமிழர்களுக்காக வும் பணியாற்ற வேண் டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை. பெரியார் - அண்ணா வழியில்...

ஏழ்மையான குடும் பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங் களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துய ரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடி யும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவி ஞர்கள் ஊட்டிய உணர் வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமிழர் களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித் துக் கொண்டு இருக்கி றேன். இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழி களில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின் றன. என்னைப் பொறுத்த வரையில் பொதுவாழ்க் கையில் அவையெல் லாம் ஒரு தூசுதான்.
தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகி றேன். என் உணர்வை யும், வலியையும் பெரி தாக்கும் அளவுக்கு காரி யங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர் களுக்கு கடமை உள் ளது. நம் காலத்தில் தமி ழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமி ழுக்கு ஏற்பட்ட கிளர்ச் சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண் டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது. நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டில்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழித் தகுதியை அளித்ததுடன், வாழ்த் துகளையும், பாராட்டு களையும் சோனியா காந்தி எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம் மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற் றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.
மொழியைக் காப்போம்!
செம்மொழித் தமிழை காப்பாற்றவும், உலகள வில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடு பட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம் மொழித் தகுதியை இழந்துவிடாமல் காப் பாற்ற என்னை அர்ப் பணிப்பதுடன், வாதாட வும், போராடவும் செய் வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்மு டைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வைப் பங் கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப் பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்நாத்திகன் என்று சொன் னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?


உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.

மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைகள்!


குலதெய்வத்தைக் கும்பிடப் போனவர் கோரப் பலி!

விருதுநகர், ஜூன் 3- குலதெய்வ கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற போது பாலத்தில் கார் மோதி நேர்ந்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் இறந்தனர். மகன், மகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ் (48). திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மளிகை மற்றும் மிட்டாய்க் கடை நடத்தி வந்தார்.

சாத்தான்குளத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக மனைவி உஷாராணி (40), மகள் சவும்யா (21), மகன் பிரபு (18) ஆகியோருடன் வாடகை காரில் செங்கத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பினார் ராஜ். காரை, ஓட்டுநர் அசன் பாட்ஷா (38) ஓட்டினார்.

விருதுநகர் மருளுத்தூர் -பட்டம்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் ராஜ், உஷா ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவும்யா, பிரபு, அசன்பாட்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தேர் எரிந்து சாம்பல்

திருப்பூர், ஜூன் 3- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பக்கூடம், நேற்று தீப்பிடித்து எரிந்ததில், தேர் சக்கரங்கள் நாசமாயின. திருப்பூர் வீராகவப் பெருமாள் கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கின்றன. புதிதாக அமைக்கப்படும் சன்னதிகளுக்கு, கல் தூண், கல்சிற்பங்கள் செய்யும் பணிக்காக, கோவில் வளாகத்தில், கொட்டகை அமைக்கப் பட்டிருந்தது.

இதில், சிற்பிகள் வேலை செய்து வந்தனர். நேற்று, விடுமுறை தினமானதால், பணிகள் நடக்கவில்லை. பிற்பகல், 3.20 மணியளவில், திடீரென, தென்னை ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததோடு, மேற்கூரையும் சரிந்து விழுந்தது. அருகிலிருந்த தேர்களின், பழைய மரச் சக்கரங் கள் எரிந்து தீக்கிரையாயின. தெற்கு மற்றும் வடக்கு தீய ணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்திற் கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

கழுதைக்கும் கழுதைக்கும் டும் டும் டும்மாம்!

கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால், ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில், தண்ணீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது.

இதற்காக மக்கள் மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே, கழுதைகளுக்குத் திருமணம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சேலம் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி அமைந் துள்ள செட்டிச்சாவடியில், இரண்டு கழுதைகளை அழைத்து வந்து, ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்தனராம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்களும், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட அய்ந்து கிராம பகுதி மக்களும் திரண்டு வந்தனராம். பூ, பழம், மேள தாளம் முழங்க, சித்தர்கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கழுதைகள், அங்குள்ள ஊரணி மாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டதாம்.

அங்கு, பூசாரி குழந்தை என்பவர் கழுதை யின் கழுத்தில் மாலையை அணிவித்தாராம். பின்னர், ஆண் கழுதை சார்பில், பெண் கழுதைக்கு தாலியைக் கட்டினா ராம். அங்கிருந்த மக்கள் அனைவரும் அக்கழுதைகள்மீது மலர்களைத் தூவினராம்.

செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கோவில் அறங்காவலர் மற்றும் அவ்வூர் முக்கிய பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டனராம். தொடர்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் சோறு போடப்பட்டதாம். இதனால் மழை பொழிந்துவிடும் என்று நம்பும் மக்கள் என்றுதான் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்புவார்களோ?

தமிழ் ஓவியா said...


சூழ்நிலைபிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

-(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


மாமனிதம் போற்றுவோம்! (1)


உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?

நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!

மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!

மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.

நட்பின் ஆழமான அடையாளம்

அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.

நல்ல தலைமையின் அடையாளம்!

எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!

இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?

இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!

தொண்டர்களின் சரியான இலக்கணம்

சிந்திப்பதற்குத் தலைமை
செயல்படுவதற்கு நாம் என்பதே!

வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?

சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!

வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!

மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!

கல்வியின் சிறப்பு

தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!

பணம் சம்பாதிப்பதன் தேவையா?

ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.

அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!

சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?

நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.

மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?

ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.

இருக்கக் கூடாதது...?

பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.

(தொடரும்)

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அரசாணை எண் - 92


மத்திய அரசின் உதவித் தொகை திட்டத் தின்கீழ் 9.1.2012 அன்று அரசாணை ஒன்று பிறப் பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளா தாரத்தில் பின் தங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு நூறு விழுக்காடு கல்விக் கட்டணம் ரத்து என்று இந்த ஆணை கூறுகிறது.

இதில் உள்ள அவலம் என்னவென்றால் இப்படி ஓர் ஆணை வெளி வந் துள்ளது என்பது வெளிச் சத்துக்கு வராமலேயே இருட்டில் தூங்குகிறது என்பதாகும்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த ஆணையினால் பலன் பெற முடியும். 2011-2012ஆம் ஆண்டு முதலே இது அமலுக்கு வந்தது விட்டது.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத் துறை இந்த ஆணையைச் சரிவர விளம்பரம் செய் யாததால், இந்த ஆணை யின்படி பயன் அடைய வேண்டிய தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்களும் பணம் கட்டி விட்டனர்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
மருத்துவம், பொறி யியல் மற்றும் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்த ஆணை பொருந்தக் கூடியதே!

கல்விக் கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரி கைகள், மருத்துவப் பரி சோதனை போன்றவற் றிற்கான கட்டணங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆணை தெரி யாமல் பணம் கட்டியவர் களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல். இந்தச் சலுகையை அறி யாத காரணத்தால் கல்லூரிகளில் சேர முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட தாழ்த்தப்பட்ட மாண வர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறைப்படி இது போன்ற ஆணைகளை அரசு, ஏடுகளில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண் டும்.

ஆட்சியின் சாதனை கள் என்று பக்கம் பக் கமாக விளம்பரங்களை அள்ளிக் கொட்டும் தமிழ் நாடு அரசு, சமூக நீதித் தொடர்பான - தாழ்த் தப்பட்ட மக்களை வாழ் விக்கும் ஒரு ஆணையை விளம்பரப்படுத்துவதில் கமுக்கமாக இருட்ட டிப்புச் செய்தது ஏன்?

இனி மேலாவது தமிழ் நாடு அரசு விளம்பரப் படுத்துமா? தாழ்த்தப் பட்ட மக்கள்தான் விழித் துக் கொள்வார்களா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அத்வானி ஏற்படுத்திய அதிர்வு....


பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.

தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.

குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில் தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.

அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.

ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!

பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.

கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது. அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.

மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல் சிதறாமல் செல்லும்.

பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.

சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும் தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.

கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!

- கருஞ்சட்டை