Search This Blog

26.6.13

இந்து என்ற சொல்லுக்கு பொருள்

இந்து  என்ற சொல்லுக்குத் திருடன் என்று பொருள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி விட்டாராம். எங்களுக்கு மானம் போயிற்று என்று குதித்து வழக்கு மன்றம் சென்றுள்ளார்களாம்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்து என்று சொல்லும்போது மானம் போச்சு! என்று குதிக்க வேண்டியவர்கள் ஆத்திர அலை பாய வேண் டியவர்கள் பார்ப்பனர் அல்லாத சூத்திரர்கள் தான்.

காரணம் சூத்திரன் என்றால் ஏழு வகைப் படுவர் என்றும் அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும்  இந்து மதத்தின் மிக  முக்கிய சாஸ்திர மான மனுதர்மம் கூறு கிறதே! (மனுதர்மம் அத் தியாயம் 8 - சுலோகம் 415).

கமலபாதி திரிபாதி எழுதிய நூலிலிருந்து எடுத்துக் காட்டினார் மானமிகு கலைஞர் என்பது தான் உண்மை.

பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறு வனம் வெளியிட்டுள்ள ஞானசூரியன் நூலில் (சுவாமி சிவானந்த சரஸ் வதி) இந்து என்ற சொல் இந்தியாவில் உள்ள எந்த மொழியிலும் இல்லாத ஒன்று; அது பாரசீக மொழியைச் சார்ந்தது - அதில் நாகரிகத் தன்மையற்றவர்கள்; திருடர்கள் என்று பொருள் கூறப் பட்டுள்ளதே!
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் (12.6.1982) தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உரையாற்றுகையில் ஆதாரத்துடன் ஒரு தக வலை எடுத்துக் கூறினார்.

இந்தி சப்தசாகர் என்னும் இந்தி மொழிப் பேரகராதியை வாரணா சியில் உள்ள நாக நிலை பிரச்சார சபா என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன் ஆசிரியர்கள் இந்தி மொழிப் பண்டிதர் களான இராமச்சந்திர வர்மா, ஷியாம் சுந்தர் தாஸ் ஆகியோர் ஆவார். இந்த அகராதியில் இந்து என்ற சொல்லுக்குத் தந்துள்ள

பொருள் விளக்கம்.

1)     Black and Ugly
2)     An Uncultural Brute
3)     A decoit
4)     Anything Belonging to India

கருப்பானவன் -அருவருப்பானவன் நாகரிக மற்ற காட்டுமிராண்டி, கொள்ளைக்காரன்  என் றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இதற்குப் பதில் சொல்லுவதற்கு வக்கு இல்லாமல், எடுத்து சொல்பவர்கள்மீது காய்வது - ஏன்?
காரணம் கையில் சரக்கு இல்லாததுதானே?

          --------------------- மயிலாடன் அவர்கள் 25-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

43 comments:

தமிழ் ஓவியா said...


இமாலயச் சுனாமியில்கூட இமாலய அரசியலா?


- ஊசி மிளகாய்

உத்தரகாண்ட், இமாலச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள பத்திரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்ற பக்தர்கள் (சுமார் ஒரு லட்சம் பேரில்) 13 ஆயிரம் பேருக்கு மேல் கடும் மழை, வெள்ளம் - இவற்றில் அடித்துச் சென்றும், மலைச் சரிவுகளில் சிக்கியும் - இறந்தும், காணாமற்போயும் உள்ளது நெஞ்சுருக்கும் வேதனை! நாட்டு மக்களின் நல் இதயங்களைக் கசக்கிப் பிழிகின்றன!

இராணுவம், துணை இராணுவம், திபெத்திய எல்லைப்படை அம்மாநிலங்களின் பல்வேறு அரசு அமைப்புகள் - மத்திய அரசின் உள்துறையினர் தனித்த முயற்சிகள் இவை எல்லாம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு போர்க்கால வேகத்தில் (On a War Footing) நடைபெற்று வருகின்றன.

இன்னும் மீட்கப்பட வேண்டிய யாத்திரிகர்கள் - பலர் உள்ளனர் - இடிபாடு - மலைச்சரிவில் சிக்கியோர்களும் இருக்கக் கூடும்.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் மீட்புப் பணிகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் வேறு ஏற்பட்டு விட்டது!

இறந்தவர்கள் - ஜலசமாதியின்மூலம் போக, எஞ்சியவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து, அவரவர் மாநிலங்கள் வீடுகளுக்கு - அனுப்புவது எப்படி என்பதே பொதுக் கவலையாக உள்ள நிலையில்,

இந்த நிலையில் பா.ஜ.க., - மோடி மஸ்தான் கள் எழவு வீட்டிலும் ஏதாவது கிடைக்காதா என்ற பந்தலிலே பாவக்காய் கதை ஒப்பாரி வைத்து அழுது, தொங்கிய பாகற்காயில் கண் வைத்தழுதது போலவும்,

அத்துக்கத்தில் கவனமோடு இருந்து பதில் கூறிய சகோதரி போன்று மோடிகளுக்குப் பதில் கூறிட்ட காங்கிரசும் - விமர்சித்துக் கொள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாகும்!

இப்போது எல்லோர் கவனமும் மழை, அபாயத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றி மீட்டுக் கொணர்வது பற்றித்தான் இருக்க வேண்டுமே தவிர, இதில் விளம்பரம் தேடி அரசியல் ஆதாயம் தேடிட இது ஓர் அருமையான வாய்ப்பு என்று கருதுவதைவிட மிக மிகக் கேவலம் வேறு உண்டா?

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் தரும் விளம் பரமோ எல்லையற்ற ஒன்றாகும்!

மோடி, 25 இன்னோவா கார்களில் இத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்துச் சென்றார் என்று அவரும் ஏதோ திரைப்பட நடிகர் மாதிரி வண்ண வண்ண உடைகளை உடுத்தி, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனித்தனி பேட்டி கொடுப்பது, அரசியல் கட்சி சார்ந்த பதில்களைக் கூறுவது, ஒரு மாநில முதல்வர், மற்றொரு மாநிலத்திற்குள் சென்று (அவர்களின் அனுமதியே இன்றி) அங்கே நடப்பவைகளைக் குறை கூறுவது என்பது மிகுந்த கீழ்த்தரமான சுவை (It is in very bad Taste) அல்லவா!

தினம்தினம் பா.ஜ.க. பேச்சாளர்கள் ஆளும் காங்கிரசைக் குறை கூறுவதுதான் தொழிலாகப் போய் விட்டது!

அவர் உடனே வந்து குதித்தாரா? இவர் தோண்டினரா? இப்படி கேள்வி மேல் கேள்வி.
பெரிய வி.வி.வி. அய்ப்பிக்கள் வந்தால், வெள்ள நிவாரணப் பணிகள் அல்லவா வெகு வாகப் பாதிக்கப்படும்; அவர்கள் பாதுகாப்பு திருப்பி அனுப்பப்படுவது முதற்கொண்டு அம்மாநில முதல்வர் முதல், அதிகாரிகள் வரை அவர்கள் கவனம் இவர்கள் பாதுகாப்பில் (Security) தானே இருக்கும்? இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கமும் தேக்கமும் ஏற்படாதா?

நம் நாட்டில் எங்கும் அரசியல்! எதிலும் அரசியல் பொது ஒழுக்கச் சிதைவுக்கு ஓர் எல்லையே இல்லை!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி ஒதுங்கி உயிருக்கு மன்றாடிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து, கொள்ளையடித்து, தங்களுக்கு வருவாய் தேடியவர்களுக்கும், ஹெலிகாப்டரில் போடப்பட்ட உணவுகளை அங்குள்ள மக்களை விரட்டியடித்து விட்டு பொறுக்கி எடுத்து அதை மீண்டும் அதிக ரூபாய்க்கு விற்று காசு தேடிய ஈவிரக்கமற்ற பாதகர்களுக்கும்

இந்த நிவாரணத்தில் அரசியல் நடத்தி விளம்பரம் தேடும் மோடி வித்தைக்கார அரசியல்வா(வியா)திகளுக்கும் தத்துவத்துவத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

பாழாய்ப் போன வாக்கு வங்கி ஓட்டுக் கண்ணோட்டம் நாட்டுக் கண்ணோட்டத்தை - மக்கள் நலக் கண்ணோட்டத்தையே கொன்று நாசமாக்கி விட்டதைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே!

எப்போது முடிவு - இந்த அவல அரசியல் அலங்கோல போட்டிகளுக்கு?

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. நெய்வேலி போராட்டம்: அறவழிப் போராட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவும், வாழ்த்தும்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினை பொதுத்துறையிலிருந்து தனியார்மயமாக்கும் துவக்க முயற்சியாக 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அமைச்சரவை, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ள வற்புறுத்திடும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் அதன் அறவழி ஆதரவினை நல்குகிறது!

அனைத்துத் தொழிற்சங்கங்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடும் இம்முயற்சி வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கோரிக்கை வெல்லும் வரை அறப்போராட்டம் தொடரட்டும்!கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2013

தமிழ் ஓவியா said...

வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலை இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டுவந்த தமிழக அரசுக்குப் பாராட்டு!


சிதம்பரம் கோயிலை தி.மு.க. ஆட்சியில் மீட்டதுபோல

வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலை

இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டுவந்த தமிழக அரசுக்குப் பாராட்டு!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

வேலூர் கோட்டையில் ஜலகண்டேசு வரர் கோயிலை தனியாரிடமிருந்து இந்து அற நிலையத் துறைக்குக் கொண்டு வந்த தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வேலூருக்கு என்று - எப்போதும் சில பழமொழிகள் உண்டு. அதில் ஒன்று, கோட்டையில் கோயில் உண்டு ஆனால் அங்கே சாமி சிலை கிடையாது; தென்ன மரத் தெரு என்று இருக்கும் ஆனால் அங்கே ஒரு தென்னமரம்கூட கிடையாது என்பது போன்ற வேடிக்கைப் பழமொழிகள் உண்டு.

400 ஆண்டுகள் காணாமல் போன கடவுள் சிலை

400 ஆண்டுகளாக அங்குள்ள வேலூர் கோட்டை ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த சாமி சிலை, சத்துவாச்சாரி பக்கம் - வெளியே - பல வெளி மாநில படையெடுப்புகளுக்கு அஞ்சி அகற்றி எடுத்துச் சொல்லப்பட்டது.

அதன்பிறகு அச் சிலை வைக்கப்படாமல், அக்கோட்டை மத்திய அரசின் தொல் பொருள் துறையின் சின்னமாகத் தான் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 30, 35 ஆண்டு களாக, ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் இக்கோயிலில் சிலை வைத்து பூ செய் நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் கோரி வந்தனர். மத்திய அரசின் தொல்பொருள் துறை அனுமதிக்க வில்லை.

சட்ட விரோத ஆக்ரமிப்பு!

ஆனால் திடீரென்று ஒரு நாள் ஊர்வலமாக அதிகாலை வந்து அச்சிலையை உள்ளே வைத்து வழிபாடு நடத்த முயன்றனர்; வேலூரில் மதக் கலவரங்களை உருவாக்கிட சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராகவும் கலகம் நடத்த திட்டமிட்டே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கென்று இருந்த தொல் பொருள் துறையின் பார்ப்பன அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்து கோயிலில் ஜீரணாத்தோரண பூரண கும்பாபிஷேகம் எல்லாம் நடத்தி, சட்டம்மீறி நடந்தவர்களுக்கு உதவி அது முதல் பூசை - புனஷ்காரங்களும் நடைபெறத் தொடங்கின!

தமிழ் ஓவியா said...

பார்ப்பன அதிகாரியின் உதவி

அப்படி மார்ச் 16, 1981 முதல் இது நடந்து வரத் துவங்கியது. சேஷாத்திரி என்ற ஒரு பார்ப்பன அதிகாரி அவர் ASI என்ற மத்திய தொல் பொருள் துறை அதிகாரியாக இருந்தாலும், அவரின் மறைமுக உதவியால் தான் இந்த அத்துமீறல் நடந்தது; அது மெல்ல மெல்ல அன்றாட பூஜை, வழிபாட்டுக்குரியதாக ஆகிவிட்டது.

அன்றிருந்த அதிமுக அரசும்கூட இதைக் கண்டும் காணாததுபோல் துணை நின்றது. மிகப் பெரிய கொடுமையாகும்!

1981 முதல் இத்தனை ஆண்டுகளாக இது இந்து முன்னணியாளர்களைக் கொண்ட ஒரு தனியார் குழுவுக்குச் சொந்தமான கோயில் போலவே நடந்து வந்தது - மிகப் பெரிய சட்ட அநீதி அல்லவா?

உடனடியாக இந்து அறநிலையப் பாது காப்புத் துறை இதனை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து உண்டியல் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்திருக்க வேண்டும்; செய்யத் தவறினர்.

தியாகராயர் நகர் திடீர் பிள்ளையார்போல

தனியார் ஆதிக்கத்தின்கீழ் - வருவாய் அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல - முந்தைய தியாகராயர் நகர் திடீர்ப் பிள்ளையார் - உண்டியல் வசூல் கொள்ளை சில நாள் நடந்ததுபோல - அங்கும் 2003 வரை நடந்தது!

2003இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை இக்கோயிலைத் தன்வசம் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து அந்த இந்து (முன்னணி) குழுவினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை ஆணை (Stay) வாங்கி விட்டனர்!

வழக்கு நடந்து 2012 டிசம்பரில் இந்த ஜலகண்டேசுவரர் கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை (H.R. & E.S.) நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் - மேல் முறையீட்டில் - தீர்ப்பு அரசுத் துறைக்குச் சார்பாக வழங்கி விட்டது!

இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணை யர் திரு. தனபால் அய்.ஏ.எஸ். அவர்கள் ஆணைப்படி துணை ஆணையர் ஒருவர் கோயில் தக்காராக நியமனம் செய்யப்பட்டு, பொறுப் பேற்று கோயில் நிர்வாகத்தை துறையின் அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்துவிட்டார்.

கோயில் உண்டியலையும் கைப்பற்றி சீல் வைத்து, தனியார் உரிமையைப் பறித்து - அரசின் அறநிலையப் பாதுகாப்புக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துவிட்டனர்!

தமிழக அரசுக்குப் பாராட்டு

இதற்காக தமிழக அரசும், குறிப்பாக தமிழக முதல் அமைச்சரும் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் செயலும் பெரிதும் வரவேற்கத்தக்கவையே!
அக்கோயில் கொள்ளை இதன்மூலம் தடுக்கப் பட்டுள்ளது!

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையை நீதிக்கட்சி அரசு 1924ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய நோக்கம் இதன்மூலம் நிறைவேறியுள்ளது!

இக்கோயிலில் பக்தி வேஷம் போட்டு, மதவெறியைத் தூண்டிடும் வாய்ப்பையும், மத வெறியைப் பரப்பும் அபாயமும்கூட இந்த நிலையினால் தடுக்கப்பட்டுள்ளது.
வருவாயும் அறநிலையத் துறைக் குரியதாகி உள்ளது!

அன்று திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராசன் கோயில்

சிதம்பரம் கோயிலை தி.மு.க.ஆட்சியின் போது கையகப்படுத்தி இந்து அறநிலையத்துறையினர் வசம் கொண்டு வந்ததை எதிர்த்து, தில்லை தீட்சதர்கள் பெரிதும் ஆர்ப்பாட்டம் செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தோற்று, உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அங்கும் தடையாணை பெற முடியாமல், வழக்கு மட்டும் நடைபெறும் நிலை உள்ளது!

அதுபோன்ற மற்றொரு வரவேற்கத்தக்க முடிவு இது. பலவிடங்களில் ஆக்கிரமிப்புகளை மறைக்க கோயில் ஒன்று திடீரென்று முளைத்து, அதுவே வருவாய் வசூல் தொழிற்சாலையாக காலப் போக்கில் மாற்றப்படுவது தமிழ்நாட்டில் அநேகம்; அவற்றின்மீதுகூட இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் பார்வை - நடவடிக்கை பாய வேண்டும்.

ஆத்திக - நாத்திகப் பிரச்சினையல்ல!

இது ஆத்திக - நாத்திகப் பிரச்சினை அல்ல; பொது நலம் - மக்கள் நலப் பிரச்சினை - கொள்ளை தடுக்கப்படல் வேண்டும் என்பதே முக்கியம் என்பதால் இதுவே நமது வரவேற்புக் குக் காரணம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2013

தமிழ் ஓவியா said...


கோவையில் நடந்த கொள்கைத் திருவிழா


16.6.2013 அன்று கோவை சிவா னந்தா காலனியில் உள்ள அரிமா அரங் கம் அதிகாலை வேளை, புதுப்பொலி வுடன் திகழ்ந்தது. மைந்தரும் மகளிரும் அரிமா அரங்கத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தனர். பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையம் நடத்திவரும் மன்றல் பெருவிழா ஏற்பாடுகள் சுறு சுறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.

திரும்பிய பக்கமெல்லாம், கண்ணைக் கவரும் கழகக் கொடிகள் பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தன. அரிமா அரங்கிற்கு வழிகாட்டுவதைப் போலக் கொடிக் கம்புகள் ஊன்றப்பட்டிருந்தன. காலை 9 மணிக்கே மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் வசந்தம் கு.இராமச்சந்திரனார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையனார் கழகத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி ஆகியோர் மேடையில் வீற்றிருக்க தோழர்கள் அதிரடி அன்பழகன், இறைவி, தளபதிராஜ், பிரின்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆயத்தமாக அமர்ந்திருந்தனர். மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நல்ல நிலையில் இருப்பதை விளக்கிப் பேசி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அரசுப் பணியாளர் ஆசிரியர், பேக்கரி தொழில் செய்வோர், மருத்துவர், பொறியாளர் கணினி, ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிவோர், விசைத்தறித் தொழில் செய்வோர், நிலவியல் துறைப் பணியாளர், எழுத் தாளர், வழக்குரைஞர், உணவக மேலாளர், சாக்கு மண்டி வைத்திருப்போர், விறகுக் கடைக்காரர், செய்தியாளர், கட்டட மேற்பார்வையாளர், கூலிவேலை செய் பவர்... அடேயப்பா! வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலிருந்தும் சுய மரியாதைத் திருமண நிலையத்தை நாடி இணைதேடி வந்திருந்த மக்களை அன்று காண முடிந்தது.

மாதம் இரண்டு லட்சம் ஊதியம் ஈட்டும் தொழிலதிபர் முதல் நாள்தோறும் கூலிவேலை செய்யும் தொழிலாளி வரை அத்தனைப் பேரும் - ஜாதித் தளைகளைத் தூக்கியெறிந்து விட்டு இணைதேடி வந்த - தோழர்களை மன்றல் நிகழ்ச்சியில் கண்டபோது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக வியப்புக் குரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பார்ப்பன அம்மையார் ஒருவர், தன் தம்பிக்குப் பெண் தேடிப் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை நாடி வந்து மன்றல் நிகழ்வில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. எந்தச் ஜாதிப் பெண்ணாயினும் நாங்கள் ஏற்கத் தயார்! என்று அந்த அம்மையார் அறிவித்ததும் அரங்கம் அதிரக் கையொலி எழுந்தது! தந்தை பெரியார் நடத்திய அமைதிப்புரட்சி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள்!

கேரளத்தைச் சேர்ந்த நாயர் வகுப்பு வங்கி மேலாளர், தமிழகத்தைச் சேர்ந்த அருந்ததியர் பெண்ணை மணந்து கொண்டதும்,

என் அப்பா குசராத்தி; அம்மா தமிழச்சி; எனக்கு எந்தச் ஜாதியும் இல்லை என்று குசராத்தி இளைஞர் மழலைத் தமிழில் பேசி இணை தேடியதும், கூடியிருந்த மக்கள் திரளை மெய்சிலிர்க்க வைத்த காட்சிகள்!

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அன்பு ராஜ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் மன்றல் நிகழ்முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. மன்றல் பதிவுகளை அய்ந்து வகையாகப் பிரித்துச் சிறந்த முறையில் நடத்தியமை பெரியார் தொண்டர்களின் ஆளுமைத் திறத்தை எடுத்துக் காட்டியது. 1) ஜாதி மறுப்பாளர்; 2) ஜாதி மத மறுப்பாளர்; 3) துணையை இழந்த வர்கள்; 4) மணமுறிவு பெற்றவர்கள்; 5) மாற்றுத் திறனாளிகள் என்ற அய்வகைப் பகுப்பு முறை, மாபெரும் பணியை மிகமிக எளிமைப்படுத்திவிட்டது.

உங்கள் வாழ்விணையர் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று பிரின்சும், இறைவியும் நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கு ஒவ்வொருவரும் அளித்த பதில்கள் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டன.

எம்.சி.ஏ.படித்த ஒரு தோழியர், என் வாழ்விணையர் உண்மையும், நேர்மையும், தன்மானமும் உள்ளவராக, அய்யாவின் தொண்டராக இருக்க வேண்டும் என்றார்.

நெய்வேலியிலிருந்து வந்திருந்த எம்.எஸ்.சி.படித்த ஒரு தோழியர், என் வாழ் விணையர் முற்போக்குச் சிந்தனையாளராக இருக்க வேண்டும் என்றார்.

மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட முகமதலி என்ற தோழர், தாய் தந்தை இழந்தவராக, இருப்பினும் சரி; ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருக்க வேண்டும் என்றார்.

கட்டட மேற்பார்வையாளராகிய ஒரு தோழர் எந்தப் பிரிவுப் பெண்ணாயினும், நான் எதற்கும் சம்மதம் என்கிறார். பெண் +2 வரை படித்திருந்தால் போதும். அதற்குமேல் அவர்கள் படிக்க விரும்பினால் நானே படிக்க வைத்துக் கொள்கிறேன் என்கிறார் இன்னொரு தோழர்!

ஒரு துணையை இழந்தவரையே நான் மணக்க விரும்புகிறேன். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் மிகுந்த மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன் என்று ஒரு தோழர் சொன்னதும் கையொலி அடங்க நீண்ட நேரமாயிற்று.

தமிழ் ஓவியா said...

ஜாதியை, மதத்தை, ஊசிப்போன பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டுப் பெரியார் நெறிதேடி வந்த மக்கள் கூட்டம் அரிமா அரங்கில் நிரம்பி வழிந்தது. பிள்ளைகளுக்கு இணைதேடி வந்த பெற்றோர். தம்பிக்கு இணைதேடி வந்த அண்ணன், தங்கைக்காக வந்த அக்கா, பேத்திக்கு இணைதேடி வந்த பாட்டி, தன் மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடித்து விட்டு 46-ஆம் அகவையில் இணைதேடி வந்த தோழர்கள், மாற்றுத்திறனாளிகள், (பேச இயலாதவர், காது கேளாதவர், கால்முடம் பட்டோர், கண்பார்வையற்றோர்) என இணை தேடி மன்றலுக்கு வந்தவர்கள் எத்தனைப் பேர்! இப்படி எத்தனையெத்தனை மாந்தர்கள், இலக்கியப் படைப்பாளிகள், படத்துறையினர் தங்கள் படைப்புகளுக்கான கட்டுமானப் பொருட்களைத் தேட வேண்டிய இடம் மன்றல் நடைபெறும் இடமல்லவா! உலகியலில் இப்படி எத்தனை வகையான மாந்தர்கள் பொறுப் பைச் சுமந்து கொண்டு பொறுமையோடு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் படைப்பாளிகள் வந்து பார்க்க வேண்டும்.

நேர்காணலின் இடைவேளையில் தமிழ் நாடு மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் இராமாத்தாள் அவர் களும், டாக்டர் தவமணி அவர்களும் சிறிது நேரம் தந்தை பெரியாரைப் பற்றியும் அவர் வகுத்தளித்த சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். தந்தை பெரியாரால் தான் நாம் தலைநிமிர்ந்து நடக்கிறோம் என்பதை இருவரும் வலியுறுத்தி விளக்கியமை பயன்தரத்தக்கதாய் அமைந்தது.

வாழ்விணையரைத் தேடி வந்த ஆண்களில் பெரும்பான்மையோர், தன்னை விட நான்கு அல்லது அய்ந்து ஆண்டு குறைந்த வயதுடைய பெண்ணாயிருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததைத் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த டாக்டர் கவுதமன் பேசும்போது இதனைச் சுட்டிக் காட்டி ஆணும், பெண்ணும் ஒத்த வயது டையவராகவே நான்கைந்து ஆண்டுகள் பெண் மூத்தவராகவோ இருக்கலாம். அதனால் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடாது என்று தெரிவித்து விட்டு அதற்குத்தாமே தக்க சான்று என்றும், தம்மைவிடத் தம் வாழ்விணையர் மூன்று ஆண்டுகள் மூத்தவர் என்றும் அதனால் எங்களுக்கு எந்தக் குறையும் வந்துவிடவில்லை என்றும் தெளிவுபடுத்தி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தமிழ் ஓவியா said...

இணைதேடி வந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்தபின்னர், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் பாராட்டப் பெற்றனர்.

நண்பகல் உணவை நன்கு சமைத்துக் கொடுத்த சமையல் கலைஞர் சிவக்குமார் முதலில் பாராட்டப் பெற்றார். திருமதி சிவக் குமார் உணர்ச்சி மேலிட நன்றி தெரிவித்துக் கொண்டார். நானும் என் இணையரும் திருமணம் செய்து கொண்டபோது கடுமை யான எதிர்ப்பு இருந்தது. இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எங்கள் அருகில் இருபதுபேர் மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்குத் தேநீரும் தேங்காய் பன்னும் மட்டுமே அன்று எங்களால் கொடுக்க முடிந்தது. இன்று, எங் களுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். விலை உயர்ந்த மகிழுந்து வண்டியில் பயணம் செய்கிறோம். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தந்தை பெரியார் அவர்களே காரணமாவார். அவருடைய பொற்பாதங்களுக்கு எங்கள் நன்றியைக் காணிக்கையாக்குகிறோம் திருமதி சிவக்குமார் இவ்வாறு கூறி முடித்ததும் அவர் கண்களைப் பார்த் தோம், கண்கள் பனித்திருந்தன.

அடுத்து, கோவை மாநகர் மாமன்ற உறுப்பினர் திருமதி மீனா லோகநாதன் உரையாற்றுகையில், நான் நான்கு முறை மாமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன். இதற்குக்காரணம் நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதுதான்! அனைத்துப் பிரிவு மக்களிடமும் நாங்கள் அன்போடு பழகுகிறோம்; ஜாதி மதம் பார்ப்பதில்லை. அதனால் எவராலும் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களே காரண மாவார் என்று குறிப்பிட்ட போது அவை கையொலி எழுப்பி திருமதி மீனா லோகநாதனைப் பாராட்டியது.

டாக்டர் கவுதமன் - பிறைநுதல் செல்வி, பிரகஸ்பதி ஆகியோரும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்காகப் பாராட்டப் பெற்றனர்.

டாக்டர் கவுதமனிடம் உரையாடிக் கொண்டிருந்த போது சொன்னார்; ஜாதி மத மறுப்புத் திருமணம், இணைதேடல் என்பதையெல்லாம் தாண்டி, வாழ் விணையரை எங்கே தேடுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமூக அக்கறை கொண்ட மக்களுக்கு நாம் ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்திருக்றோம் - மன்றல் விழாவின் மூலமாக! எவ்வளவு பெரிய சமூகப் புரட்சியை நாம் அமைதி யாக நடத்திக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா! உண்மை தானே!

மன்றல் மேடையிலேயே கேரள இளைஞர் ஒருவரும் ஒரு தமிழ்ப் பெண் ணும் திருமணம் செய்து கொண்டனர். பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அய்யா தலைமை தாங்க திருமகள் அம்மா வரவேற்புரை நல்க, தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர்கள் மு. பிரகஸ்பதி, பொறியாளர் பரமசிவம், வேலுச்சாமி, திருப்பூர் ஆறுமுகம், நீலமலை கருணா கரன், இளைஞரணிச் செயலாளர் சண் முகம், கோவை விடுதலைச் செய்தியாளர் அன்பரசன், வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சியிலிருந்து வந்திருந்த பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் - மாணவர் கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப் பாகச் செய்து கொடுத்தனர்.

கோவை மண்டலச் செயலாளர் வழக்குரைஞர் பாண்டியன் அவர்கள், நிறுத்தி, நிதானமாக எவரையும் விட்டுவிடாமல் விழா வெற்றி பெற உதவிய அத்தனைப் பேருக்கும் நன்றி கூறினார். அவரது உரை, நன்றியுரைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

தமிழ் ஓவியா said...


எப்படி மறக்க முடியும்?

2002இல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மறந்து விட வேண்டுமாம். சொல்லுகிறார் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்.

பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனை யாளரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான ஆஷிஸ் நந்தி குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடியைச் சந்தித்து, நடத்திய நேர்முகம்பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பேட்டி முடிந்து நடுக்கத்துடன் வெளியில் வந்தேன் என்று கூறினாரே!

அனைத்துக் குணங்களும் பொருந்திய ஒரு ஃபாசிஸ்டைத் தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிந்தது. பாசிஸ்டு என்று நான் அழைத்தது ஆட்சேபகரமான சொல்லல்ல; வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான எதுவும் அந்தச் சந்திப்பில் இல்லை

சமூக வல்லுநர்கள்; நிபுணர்களின் கருத்திற் கிணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மனநிலை கொண்ட நபராக மோடி விளங்கினார்.

ஒரு கொலையாளியை, சில வேளையில் ஒரு கூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று சொன்னதுதான் எத்தகைய உண்மை!

1999 அக்டோபரில் கோஜ் நடத்திய ஆய்வில், இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றுவதற்கான தீய சக்திகளைக் காண முடிந்தது; சமூக அறிவியல் புத்தகங்களில் பாசிச விஷமத்தனங்கள் விதைக்கப்பட்டன. முஸ்லீம்களையும், கிருத்தவர்களையும், பார்சி களையும் அந்நியர்களாகச் சித்தரித்தனர். இதனைக் கம்யூனல் காம்பேக்ட் என்ற இதழ் அம்பலப்படுத்தியது; இந்தப் புத்தகங்களைப் படித்த நாடாளுமன்றக் குழு மேற்கண்ட பாடங்களை நீக்குமாறு குஜராத் மாநில அரசிடம் வற்புறுத்தியது. ஆனாலும் அதுதான் நடக்கவில்லை என்றது கோஜ்.

2002இல் குஜராத்தில் நடத்தப்பட்ட சிறு பான்மை மக்களுக்கு ஏதிரான கொடூர மனித வேட்டை ஏதோ திடீர் என்று எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை (Genocide) ஆகும்.

1991ஆம் ஆண்டிலேயே பிசினஸ் இந்தியாவில் வெளிவந்த இரு கட்டுரைகளே இதற்குப் பொருத்தமான சாட்சியங்கள் ஆகும்.

1991 ஜூலையில் குஜராத்தில் நடக்கிற வகுப்புவாத பிரிவினை நடவடிக்கை தான் எத்தகையது? விசுவ ஹிந்து பரிஷத் தயாரித்த ஒரு படம்; அதில் காவி குஜராத் - பச்சை குஜராத் என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

காவி என்பது இந்துக்கள்; பச்சை என்பது முஸ்லீம்கள் என்பது குறியீடாகும்.

இதற்கான திட்டமிடுதல்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தன. உளவியல் ரீதியாக இரு சமூகங்களையும் தனிமைப்படுத்துவதற்காக, சமூகப் பண்பாட்டு உறவுகளைத் தகர்ப்பதற்கான குறிக்கோளுடன் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வந்தன.

குஜராத் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவம் என்ற சாக்கு உருவாக்கப்பட்டு, நீண்ட நாள் திட்டம், கூர்தீட்டி செயல்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.

இதுவரை இதற்காக ஒரே ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமியர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதுகூட அவர்கள் அணிவித்த குல்லாயைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்தான் நரேந்திரமோடி.

ஒரு முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் இதுபோன்ற கலாச்சாரப் பரிவர்த்தனைகள் இயல்பாக நடப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ மன நோயாளியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் இந்து -இந்து அல்லதார் என்று உத்திப் பிரித்ததை (Polarisation) இந்தியா முழுமையும் அரங்கேற்றத் துடியாய்த் துடிக்கிறார் மோடி - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்


ஆசிரியருக்குக் கடிதம்

நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்

தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! தங்களது நீதியரசர் கர்ணன் தீர்ப்பு பற்றிய அறிக்கையை 21.6.2013 (வெளியூர்) விடுதலையில் படித்தேன்.

தங்களது அறிக்கை வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் நீதியரசரின் தீர்ப்பையும் அதற்கடுத்த நாள் அவரின் விளக்கத்தையும் படித்தேன்.

இந்த தீர்ப்பைப் பாராட்டி தமிழகத்தில் வேறெந்த சமூக சீர்திருத்தவாதிகளும் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை, வேறெந்த சமூக, அரசியல் ஆர்வலர்களும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காத தருணத்தில் நீதியரசர் கர்ணன் தீர்ப்பு - பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கான அடையாளம் என்று தலையிட்டு விடுதலை முதல் பக்கத்தில் நீதியரசர் அவர் களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், பழைமைவாதி களுக்கும், இந்துசனாதன ஆதிக்கவாதிகளுக்கும் இந்துமத பழைமை கழிந்து புரட்சிகரமான பெரியாரின் எண்ணங்கள் உலகமயமாகி, சட்டமாகவே ஆகிவரும் கலாச்சார புரட்சியை பற்றி தெளிவாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

தங்களது அறிக்கையில், இந்தத் தீர்ப்பு மாறிவரும் காலமாற்றத்திற்கு எப்படி தேவையான ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு ஏற்கெனவே 1939-ஆம் ஆண்டிலி ருந்து திராவிடர் கழக மாநாடுகளில் தீர்மானங் களாக வடிவமைக்கப்பட்ட சமூக சீர்திருத்த, பெண்ணடிமை ஒழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் சட்டமாக அமுலில் இருப்பதை ஒவ்வென்றாக சுட்டிக்காட்டி இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப்போகப் போகிறது என்று தாங்கள் எடுத்துவைத்த வாதம் எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர் - கர்ணன் அவர்களுக்கே கூட வாதம் செய்ய நியாயப்படுத்த வழிசொல்லியுள்ளீர்கள்.

இறுதியாக சொல்லியுள்ளீர்கள், புராணகால கர்ணன்கள் அளித்தத்தைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புகென அருங்கொடை யாகும். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பாக நீதியரசர் கர்ணன் கூட இப்படி யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

அய்யா! தலைவர் பெரியார் கருத்துக்கள் உலகமயமாகி வருகின்ற வேளையில் தங்களது அறிக்கை உலகம் முழுவதும் வாழும் தமிழர் களுக்கும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் களுக்கும் வாய்ப்பாடாக, வழிகாட்டியாக திகழ்கிறது.

தங்களது பணி, அய்யா வாழ்ந்த வயதை தாண்டி 100 ஆண்டுகள் நிறைவு பெறவும், இறுதி வரை சமூக வழக்கறிஞராக சிறப்பாக செயல்படவும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான பெரியார் தொண்டர்கள் ஆசைப்படுகின்றோம்.

- கே.செல்வராஜ், வழக்குரைஞர் (திருப்பூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர், தாராபுரம்)

தமிழ் ஓவியா said...


தமிழ் மொழி சிறந்தது


தமிழ் புனிதத் தன்மை உடையது; சிவன் பேசியது; தேவார, திருவாசகங் களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ் மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே.

- (விடுதலை, 10.10.1960)

தமிழ் ஓவியா said...


மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டவர் சுந்தரசோழன்


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நிகழ்ச்சியில் பேரா.எஸ்.சாந்தினிபீ ஆதாரங்களுடன் விளக்கம்!
சென்னை, ஜூன் 25- சோழ அரசர்களில், சுந்தர சோழன் மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டார் என்று அலிகார் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ குறிப்பிட்டார்.

சோழர்களும் சாஸ்திரங் களும் என்ற தலைப்பில், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் 22.6.2013 சனிக்கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பேரா.தானப்பன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அழ கப்பா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. அ.இராமசாமி தலைமையேற்று சிறப்பித்தார். பேரா.பரமானந் தன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சாதனைகள்

பேரா. அ.ராமசாமி தனது தலைமையுரையில் சூஊசுகூ வெளியிட்ட சமூக வரலாற்றில், திராவிடர் இயக்கம் பற்றி தவறான பல தகவல்கள் இடம் பெற்றிருந்ததையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அந் தத் தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதையும், இன்று அப்படிப்பட்ட தவறுகள் நீக் கப்பட்டுவிட்டதாக நமக்கு கடிதம் அனுப்பியதையும் சுட்டிக்காட்டினார்.

சோழர்களும் சாஸ்திரங்களும்

அவரைத் தொடர்ந்து பேரா. சாந்தினிபீ சிறப்புரையாற் றினார். அவர் தமதுரையில்:- சோழர்கள் தங்கள் ஆட்சியை எப்படியெல்லாம் சாஸ்திரப் படி அமைத்துக் கொண்டார் கள் என்பதை பல்வேறு ஆதா ரங்களுடன் விவரித்தார். அவரது ஆய்வு கல்வெட்டுகள் பற்றியது என்றும், கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பது தமிழில் தான் அதிகம் என்றும், அதற்குக் காரணமும் பார்ப்பன சாஸ் திரங்கள்தான் என்றும் அடுக் கடுக்காக ஆதாரங்களை எடுத்து வைத்தார். அதில் சோழர்கள் காலத்தில்தான் ஆரியர், சாஸ் திரங்களின் ஆதிக்கம் மேலோங் கியதை படம் பிடித்துக் காட் டினார்.
அப்படிப் படம் பிடித்து காட்டும் போதுதான், கலிங்கத் துப்பரணியை சுட்டிக் காட்டி அதில் நால்வருணம் கெட்டு விட்டது. அதை தழைக்க வைக்க குலோத்துங்கன் வந்திருக் கிறான் என்றிருப்பதை குறிப் பிட்டார். சோழர்கள் தங்களை மனுவின் மறுபிறப்பு என்றும் தங்களை மனுகுலத்தில் வந்தவர்களாகவும், மனுதர் மத்தைக் காத்து வந்தவர்களாக வும் எண்ணி செயல்பட்டதை யும், சுந்தரசோழன் தன்னை மனுவின் அவதாரமாகவும் எண்ணி செயல்பட்டதையும் அம்பலப்படுத்தினார்.

சோழர்கள் காலம் பொற்காலம் அல்ல

அவரைத் தொடர்ந்து நன்றி யுரை ஆற்றவந்த பேரா.கரு ணானந்தன், பொற்காலம் என்று கூறப்படுகின்ற ஒன்றை, அது அப்படியில்லை என்று மிகத்தெளிவாக அம்பலப்படுத் தியிருக்கிறார் என்று சிறப்புப் பேச்சாளரை வாழ்த்திப் பேசிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக சிறப்புப் பேச்சாளரை பாராட்டிப் பேசினார் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. த.ஜானகி. அதைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளருக்கு பய னாடை அணிவித்தும் இயக்க நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட் டது.

தமிழ் ஓவியா said...

வீடு பற்றி எரியும்போது பீடி பற்ற வைத்த கதை!
கேதார்நாத் வெள்ளக் கொடுமைக்கிடையே ஸ்டேட் பாங்கைக் கொள்ளையடித்தசாமியார்கள்!
இளம்பெண்களிடம் அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட கேதார்நாத் கோவில் ஊழியர்கள்

ஹரித்துவார், ஜூன் 25- உத்தரகாண்டில் கடும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி, உயிருக் குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், பாண்டா சாதுக்கள் எனப்படும் சாமியார்கள் ஸ்டேட் பாங்கில் புகுந்து பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்தனர்.

உத்தரகாண்டில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள் ளனர். இவர்களில் அதிகம் பேர் கோடைக் காலங் களில் சார்தாம் எனப்படும் யமுனோத்தரி, கங் கோத்தரி, மற்றும் கேதார்நாத் பத்ரிநாத் புனித யாத்திரைக்கு சென்றவராவார்கள்.

நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கிக்கொண்ட மக்களை ராணு வம், விமானப்படை, திபெத்திய எல்லைக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப்படை, தேசியப் பேரிடர் மேலாண்மை குழு, மற்றும் ராணுவக் காவல்படை குழுக்கள், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேச தீயணைப்புக் குழுவினர் என இணைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளையடித்த சாதுக்கள்

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்ப்பட்டு சுமார் 6 நாள்கள் ஆன நிலையில் கேதார்நாத்திற்கு தரை வழியாக தொடர்புகொண்ட இந்தோ-திபெத் எல்லைப்படையினர் 23.6.2013 அன்று காலை தங்களின் தேடுதல் பணியை மேற்கொண்டனர். பல தொலைக்காட்சி செய்தியாளர்களும் இந்த நிகழ்ச் சியை நேரடிக் காட்சியாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது கேதார்நாத் கோவிலை ஒட்டிய உயரமான மலைப் பகுதிகளில் சிலரின் நடமாட்டம் தெரிந்தது, அவர்கள் வெள்ளத் தில் சிக்கிக்கொண்ட பயணிகள் என நினைத்து காப்பாற்ற சென்ற வீரர்களுக்கு அதிர்ச்சி காத் திருந்தது. சுமார் 20 சாதுக்கள் அடங்கிய அந்த குழுவினரிடம் அவர்களின் உடைமைகளில் இருந் தும் தலைப்பாகைகளில் இருந்தும் கற்றை கற்றை யாக இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

ஸ்டேட் பாங்கை உடைத்த சாமியார்கள்

தமிழ் ஓவியா said...

இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது அது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாகவும் அதை நாங்கள் எடுத்து பாதுகாத்து வைத்திருக் கிறோம் என்று கூறினார்கள். ஆனால் ஹரித்துவார் ஸ்டேட் பாங்க் இந்தியாவை தொடர்பு கொண்ட போது கேதார்நாத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று அங்கு இருந்ததும், எந்த ஒரு இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்படாத வகையில் வடி வமைக்கப்பட்டிருந்த அந்த வங்கியின் லாக்கர், கற்கள் மற்றும் பாறைகள் கொண்டு உடைக்கப் பட்டதும் தெரியவந்தது. சாமியார்களிடம் நடத் திய தீவிர விசாரனையில் உண்மையை சொல்லி விட்டார்கள்.

நாங்கள் கேதார்நாத் சிவலிங்கத்திற்குத் தேவை யான பூசைகள் மற்றும் அதற்கான உதவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தோம். சம்பவத்தன்று அதிகாலை முதற்கால (4 மணி) பூசை நேரத்தில் அதிக மழைபெய்து கொண்டு இருந்தது, மந்தாகினி நதியின் போக்கில் மாற்றம் தெரிந்ததால் நாங்கள் அனைவரும் கோவிலின் உள்ளே சென்றுவிட்டோம் சில மணிநேரங்களில் பெரும் இரைச்சலுடன் வெள்ளம் கேதர்நாத் முழுவதையும் சூழ்ந்து கொண்டது.

கோவிலின் உள்ளே முழங்கால் வரை தண்ணீர் சூழ்ந்துவிட்டது. எங்கள் கண் முன்னே கோவில் வாயிலில் நின்றுகொண்டிருந்த பல ஆண், பெண் குழந்தைகள் என அடித்துச் செல்லப் பட்டனர். ஆனால், நாங்கள் இருந்த உள்ளறையில் தண்ணீர் அதிக அழுத்தத்தில் வரவில்லை.

சுமார் 10 மணிநேரம் தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தோம் பிறகு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் துவங்கியது. நாங்கள் மெதுவாக வெளியே சென்று பார்த்தபோது கேதர்நாத் என்ற ஒரு இடமே இல்லாமல் போனது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தங்குமிடங்கள், பூசை சாமன்கள் விற்கும் கடைகள் உணவகங்கள் என எதுவும் அங்கு இல்லை.

தமிழ் ஓவியா said...

நாங்கள் கண்டதெல்லாம் வெறும் இடிந்துபோன கட்டடங்கள் தான் அப்போது தற்செயலாக பாரத ஸ்டேட் வங்கி கண்ணில் பட்டது அந்தக் கட்டடம் முழுவதும் சிதைந்து கிடந்தது; பிணங்கள் தெருவெங்கும் கிடந்தன.

எப்படி உடைத்தார்கள்?

இந்த நிலையில் நாங்கள் சிதிலமடைந்த வங்கியில் சென்று பார்த்த போது, அங்கு பணம் வைக்கும் பெட்டகம் கவிழ்ந்து கிடந்ததும், அதன் உறுதியான கதவை நாங்கள் திறந்து பார்க்க முயன்றோம், ஆனால் அது இயலாமல் போகவே கற்களைக் கொண்டு உடைத்து திறந்து பார்த்தபோது அதில் கற்றை கற்றையாக பணம் இருந்தது. உடனே நாங்கள் பூக்கள் கொண்டுவர வைத்திருந்த பிளாஸ்டிக் மூட்டைகளிலும், இதர பைகளிலும் பணத்தைப் போட்டுக்கொண்டு இரண்டு நாள் மேலே தங்கி இருந்தோம்.

மலையிலிருந்து கிழே செல்ல ஒரு பாதை மட்டுமே உள்ளது அப்பாதை யில் நாங்கள் செல்லும்போது யாராவது பார்த்து விட்டால் பிடிபட்டுவிடுவோம்; அதனால் மலைப் பகுதியில் சில நாள்கள் தங்கி இருந்து ஒரு வாரம் கழித்து கீழே சென்றுவிடலாம் என நினைத்தோம். அதற்குள் நாங்கள் பிடிபட்டுவிட்டோம் என்றனர்.

வாழ்க்கையில் அனைத்தும் துறந்து துறவரம் பூண்ட பிறகு இப்படி பணத்தை கொள்ளையடிப் பது தவறு என்று தெரியவில்லையா? என்று தொலைக்காட்சி செய்தியாளர் கேட்டதற்கு, தற் போது அனைத்து தேவைக்கும் பணம் என்றாகி விட்டது; ஆகையால் தான் நாங்கள் பணத்தை எடுத்தோம். மேலும் நாங்கள் எடுக்காவிட்டாலும் அவை அனைத்தும் அரித்து வீணாகி போயிருக்கும் என்றனர்.

பாலியல் தொல்லைகளும்!

இதனிடையே கேதார்நாத் கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், அவர்கள் பணத்தை எடுத்து பாதுகாப்புப் படையினரிடம் கொடுப்பதற்காகத்தான் காத்திருந்தனர். ஆகையால் இவர்கள் திருடினார்கள் என்று கூறும் செய்தி பொய்யானது என்றார்.

இந்த சம்பவம் அனைத்துமே தொலைக்காட்சி யில் நேரடியாக ஒளிபரப்பாகியதால் சாமியார்களின் கொள்ளைச் சம்பவம் வெளியில் வந்தது. மேலும் வழியிலும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பயணிகளிடமும் பலர் கொள்ளை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர் என மீட்கப்பட்ட பயணிகள் கூறுகின்றனர்.

ஒரு பயணி கூறும் போது, எங்கள் குழுவினர் மலைச்சரிவில் சிக்கி இருந்த போது, சிலர் எங் களிடம் வந்து கத்தியைக் காட்டி எங்களிடம் இருந்த 5000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர். எங்கள் குழுவில் இருந்த இளம்பெண்களிடம் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர். இவர்கள் கேதார்நாத் கோவில் ஊழியர்கள்தான் என தெரிவித்தார்கள்.

தமிழ் ஓவியா said...


வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


மன்றல்


சென்னை பெரியார் திட லில் சுயமரியாதைத் திரு மண நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதில் புதுத் திருப்பம் தந்தார். அதுதான் மக்களைத் தேடிச் செல்லும் மன்றல் நிகழ்ச்சி! மன்றல் நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மய்யங்களில் நடைபெற்றுள் ளன. அடுத்து பல முக்கிய மய்யங்களில் நடத்திடத் திட்டம் கைவசம் உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் இவர் களிடையே இணை தேடும் சிறப்பு நிகழ்ச்சி இது.

ஆயிரக்கணக்கில் மண மக்களும், பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், இவற்றில் ஆர்வமுடைய இலட்சியவாதிகளும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

வாழ்க்கை இணை நலத் துக்குரிய ஆண்கள், பெண் கள் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிவிக் கப்படுகின்றன.

அறிமுகத்துக்குப் பிறகு கலந்துகொண்டவர்களுக் கிடையே கலந்துரையாடும் பரிவர்த்தனைகள் நடக்கின் றன.

மாலை நிறைவு விழாவி லேயே சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

தத்தம் ஊர்களுக்குச் சென்ற பிறகு தொலைப்பேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவது மன்றல் நிகழ்ச்சி சாதனைத் தோட் டத்தில் பூக்கும் புதுமலராகும்.

இன்று காலை சென்னை பெரியார் திடலில் ஒரு திடீர்த் திருமணம். கோவை மன்றல் நிகழ்ச்சியில் கலந்துகொண் டவர்கள் அவர்கள்.

மணமகன் கோவை மாவட்டம் வேடபட்டி சாலை - தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருவாளர்கள் முத் துக்கிருஷ்ணன் - மரகதம் ஆகியோரின் மகன் சிவ சத்திய மூர்த்தி.

மணமகள் புதுக் கோட்டை மாவட்டம் உசி லங்குளம் - திருவாளர்கள் நாகராசன் - இந்திராணி ஆகியோரின் மகள் ரேவதி - இவர் பிறவியிலேயே வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி!

இவர்களுக்குத் திரா விடர் கழகத் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன் வாழ்க்கை இணை நல ஒப் பந்தத்தை நடத்தி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் மானமிகு கோவிந்தராசன் மணமக் களைப் பாராட்டி ரூ.500 நன்கொடை நல்கினார். பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் மணமக்க ளுக்கு வாழ்த்துக் கூறினார். மாநில மாணவரணி செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - முன்னமே விதிப்பலனால், பிராப்தப்படி ஜாதகப் பொருத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற மூடக் கருத்தின் முதுகைப் பிளக்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தந்தை பெரியார்- கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் திராவிடர் கழகம் - இவற்றிற்கு இணையாகப் புரட்சி பற்றி வாய் திறக்க, மார்பு தட்ட வேறு யாரால், எந்த அமைப்பால் முடியும்?

திருமண நிலைய இயக் குநர் மானமிகு திருமகள் இறையன் அவர்களின் பணி சிறப்பானது - பயன்படுத்திக் கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுள் - மதம் - பக்தியின் ஒழுக்கம் பாரீர்!
வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும் கொள்ளையோ, கொள்ளை!
பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!

புதுடில்லி, ஜூன் 26- கேதார்நாத் வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பக்தர்களிடமிருந்து உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை வெட்டி நகைகள் களவாடப்பட்டுள்ளன; பக்தியின் ஒழுக்கம் இதுதான்!

கேதார்நாத் மழைவெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், உத்தர காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

சாமியார்கள் கொள்ளை!

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் உயிரிழந்தவர்களிடமும், உயிருக்குப் போராடிய பக்தர்களிடமும் சாமியார்கள் சிலர் கொள்ளை யடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்தப் பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் கூறியதால் மீட்புப் படையினருக் குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அந்தப் பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மீட்பு!

உடனடியாக அந்தக் கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக் கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாதப் பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப் படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விரல்களை வெட்டி நகைகளை எடுத்துள்ளனர்

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலி யான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்டியல் உடைப்பு!

கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டி யல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும்.

(விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திக்கட்டும்!


தனது கட்சிக்காரரான நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்துவதற்கும், பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட உள்ள மோடி மீது விழுந்துள்ள அழிக்கப்படவே முடியாத பாசிச - இந்துத்துவா வெறி என்னும் கறையைக் கழுவுவதற்கும் வேறு வழியே இல்லாத நிலையில்தான் குஜராத் கலவரங்களை மறந்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்.

முசுலிம்களை மறந்துவிடுமாறு சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுவிலங்காண்டித்தனமான இந்து வெறிக் கண் ணோட்டத்தோடு திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் படுகொலையை வரலாறு எப்படி மறக்கும்?

இந்தியாவைத் தாண்டி இந்துத்துவாவாதிகளின் இந்தப் பாசிசம் உலக நாடுகளில் கேவலமான நாற்றமாக மூக்கைத் துளைத்துக் கொண்டு இருக்கிறதே!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடியை எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என்று குரல் கொடுக்கின்றனவே. ஏன், இந்தியாவில்கூட டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் மோடியே திரும்பிப் போ! என்று முழக்கமிடவில்லையா?

உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மதச்சார்பற்ற இந்தியா இனி பிழைக்குமா? (Will Secular India Survive?) என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனரே! 4,400 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.800.

இந்தியாவிலும், இராமச்சந்திரகுகா போன்ற சிந்தனையாளர்களும், பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பது பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்குகளுக்குத் தெரியாதா?

பிரபல சமூகநல ஆர்வலர் அருந்ததிராயின் கருத்து என்ன?

குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான இனப் படுகொலை என்பது மத வெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனேயே நடந்ததாகும். ஏனெனில், அதற்குமுன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்தார்.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஓர் அங்கம்தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத்துக்கும் பொருந்துமா? என்ற வினாவை அருந்ததிராய் எழுப் பிடவில்லையா?

ஊடகங்கள் என்னதான் இந்துத்துவாவைத் தூக்கி நிறுத்தினாலும், மோடிக்கு முகமன் பாடினாலும், சில நேரங்களில் தங்களையும் அறியாமல் வேறு வழியின்றி உண்மைகளைக் கக்கியதுண்டு.

எடுத்துக்காட்டாக, இந்தியா டுடே (10.4.2002) எழுதியது இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

குஜராத் கலவரங்களில் 12 லட்சம் பேர் ஈடுபட்டார்கள். சகிப்புத் தன்மை என்ற வார்த்தை இந்திய அகராதியிலிருந்து மறைந்துவிட்டது. மிரண்டு போயிருக்கும் சிறுபான் மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். புதிய இந்தியனை உருவாக்கும் கனவு தரையில் சிதறிக் கிடக்கிறது. மதச்சார்பின்மை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று எழுதியதே இந்தியா டுடே!

மற்றவர்கள் எழுதுவது, சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; சங் பரிவாரம் உச்ச இடத்தில் தூக்கி வைத்து மரியாதை கொடுக்கும் ஜென்டில்மேனான - அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார்?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எந்த முகத் துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்? என்று புலம்பவில்லையா?

2009 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குக் காரணம் குஜராத் கலவரம்தான் என்று அன்றைய துணைப் பிரதமர் அத்வானியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?

இதற்கெல்லாம் சமாதானம் கூறிவிட்டல்லவா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முசுலிம்களுக்கு வேண்டுகோள் வைக்க முன்வரவேண்டும்?

கடைசியாக அவர்கள் தரப்பில் சொல்லுவது - குஜராத் கலவரத்துக்குப் பிறகுதான் மோடி இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பதாகும்.

கடந்த தேர்தலின் நிலை என்ன? அதற்கு முந்தைய மாநிலத் தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறை வாகத்தான் கிடைத்தன என்பதோடு, மோடி அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியதையெல்லாம் சாமர்த்தியமாக மறைப்பது ஏன்? ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திப்பது நல்லது! மக்கள் ஏமாளிகள் அல்லர்!

தமிழ் ஓவியா said...


மோடிபற்றிய விடுதலை தலையங்கங்களை நூலாக வெளியிடுக!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து, ஒன்று சொன்னவாறு ஊட கங்கள் பேசிவருகின்றன. வளர்ந்து விட்ட தகவல் தொடர்பு சாதனங்களில் எந்த ஒன்றையும் மறைக்க முடியாது என்ற போதிலும், மோடியின் தவறுகள் மட்டும் வெளியாவதில்லை அல்லது வலுவாகச் சொல்லப்படுவதில்லை.

இந்நிலையில் மோடிக்குப் பாரதீய ஜனதாவில் உயர் பொறுப்புக் கொடுத்த நிலையில், விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், அவரின் மொத்த உருவத்தின் தீயவை அனைத்தையும் உரித்துப் போடுவதாய் இருந்தது.

இடம், தேதி, ஆதாரம் ரீதியாக எழுதுவது நம் இயக்கத்தின் தலையாய தனித்தன்மை. ஆகவே, தொடர் தலை யங்கம் மற்றும் மேலும் பல செய்திகளை இணைத்து சிறு வெளியீடாக வெளி யிட்டால், எதிர்வரும் தேர்தல் நேரங் களில் மிகுந்த பயன்பாடாக அது அமையும்.

புதுக்கோட்டையில் பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியர் தலையங்கம் படித்து விட்டு, மோடிக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என வியந்தார். அதன் பிறகே அய்யா அவர்களுக்கு இக்கடிதம் எழுதத் தோன்றியது.

- வி.சி. வில்வம், திருவெறும்பூர்

தமிழ் ஓவியா said...


மும்மாரி?


வறட்சியால் நாடு வாடுகிறது. விவசாயம் வேண்டாத தொழிலாக ஆகிவிட்டது இந்த நிலையில் - நாட்டில் மழை பொழியவில்லை என்று அண்ணா பெயரில் உள்ள அதிமுக அரசு கோயில்களில் யாகங்களை நடத்தச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. (மக்களைத் திசை திருப்ப இதுதானே வழி?)

முதல் அமைச்சருக் கும் - இந்த அரசுக்கும் பக்தி அதிகம் - அதிலும் இந்து மதக் கடவுள்களி டத்தில் ஏகப்பட்ட பக்தி! யாகம், பூஜை, புனஷ் காரம் இவற்றில் ஏகப்பட்ட நம்பிக்கை! அதனால் இதோ ஒரு எடுத்துக் காட்டு!

விவேக சிந்தாமணி என்னும் காவியம், அதில் ஒரு பாடல் வருகிறது.

வேத மோதிய
வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர்
நெறியினுக்கோர் மழை
மாதர் கற்பிலா
மங்கையர்க்கோர் மழை
மாத மூன்று
மழையெனப்
பெய்யுமே என்பதுதான் அந்தப் பாடல். பொருள் எளி தானதே பொழிப்புரைகள் தேவைப்படாது.

இதன்படி மாதம் மும் மாரி பொழிய வேண்டும் இப்பொழுது அவ்வாறு பொழியவில்லை என்றால் என்ன காரணமாக இருக்க வேண்டும்?

அதுவும் ஆன்மீக வாதிகள் பார்வையில் பார்க்க வேண்டும் அப் படிப் பார்க்கப் போனால்...

ஒழுங்காக வேதம் ஓதும் வேதியர்கள் இந்த நாட்டில் இல்லை; நீதி யோடு ஆட்சி செய்யும் அரசு இங்கு இல்லை;

கற்புடைய மங்கை களுக்குப் பஞ்சம்! இவற் றின் காரணமாக மும் மாரிப் பொழிய வேண்டிய மழை பொய்த்து விட்டது என்று கொள்ளலாமா? வேறு வழியில்லை அப்படித்தானே பொருள் கொள்ள வேண்டும்.

பக்தி முற்றிப் போன (ப)மதைகள் சொல்லட் டும் சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சாமி யார்கள்தான் சொல்லட் டும். புராணங்களைப் பிளந்து கட்டும் புலவர்கள் தான் வாய்த் திறக்கட்டும்.

மாதம் மும்மாரி பொழியாமல் போனதற்கு இவைதான் காரணம் என்பதை ஒப்புக் கொள் கிறார்களா?

இப்பொழுது ஒன்றே ஒன்றுதான் அவர்கள் முன்னிலையில்! ஒன்று விவேக சிந்தாமணியை ஒப்புக் கொள்வதாக இருந் தால் குறிப்பிடப்பட்ட மூன்று பேர்களின் நிலை என்ன என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் விவேக சிந்தாமணிகள் கூறுவதை எல்லாம் இந்தக் காலத் தில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று நகுதல் வேலையில் இறங்க வேண்டும். எந்த இடத் தில் பக்தர்கள்? எந்த இடத்தில் இந்த அரசு?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


லண்டன், ஜூன் 27- பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட் டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலை நோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டன.

புதிதாகக் கண்டுபி டிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரிய தாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத் துடன் இருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள் கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனி தன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.

தமிழ் ஓவியா said...


பழக்க வழக்கங்கள்...


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக்கேடானவனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்கவழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சுத்தமான குடிநீர் லிட்டர் 5 பைசாவுக்கு!


நானோ தொழில்நுட்ப முறை யில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் அய்.அய். டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செல வாகும் சூழ்நிலை உள்ளது.

மனிதனின் அடிப்படை தேவை யான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, அய்ந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், வெள்ளி அயனிகள் நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண் கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்து விடும் என் பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, உயிரி பாலிமர் பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன் படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண் களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலை வாய்ப்பு அதிகரிப் பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

தமிழ் ஓவியா said...


மார்கழி மாத கொக்கோகம்! - துரை. சந்திரசேகரன்


மார்கழி மாதம் என்றால் படுகுஷி! குமரிப் பெண்கள் ஆடுவதென்ன! பாடுவதென்ன!! பாராயணம் செய்வதென்ன!!! என்ன, என்ன, என்ன, என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவது மாதிரி சொல்லலாம்.

விஷயம் இல்லாமலா இருக்கும்? பாடுகின்ற பாடல்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா? உள்ளுக்குள்குமைந்து கிடக்கிற உணர்ச்சிகளைப் புரியும் வார்த்தைகளில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?

பக்தை என்ற பெயரில் பருவக் கொந்தளிப்பைப் பாட்டாகப் பாடி வைத்துள்ளார்கள் அல்லவா... அதை சந்தடி சாக்கில் பாடித் தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் மார்கழி மாதம் அவ்வளவுதான் - அதற்கு மேல் பூச்சுதான் பக்திப் பரவசம். பாடல்களில் ஒன்றிரண்டு தட்டி விடுகிறோம் படியுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்:
பொங்குபாற்கடல்
பள்ளிகொள்வானைப்
புணர்வதிலோ ராசை - என்
கொங்கைகள் கிளர்ந்து குமைந்து குதூகலித் தாடென் ஆவியை யாகுலஞ்செய்?

பாடலை பார்த்தீர்களா?

பக்தையின் எண்ணம் எப்படி பக்தியைப் பரப்புகிறது! சபாஷ்! முடிந்தவர்கள் மார்கழி மாத பஜனையைத் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொடுங்கள். (கையில் கிடைத்ததை எடுத்து பக்தர்களை அடித்துவிடப் போகிறார்கள்..!)

இந்த விஷயத்தில் கிளைமேக்ஸ் பயில்வான் ஆண்டாள்தான். அவள் பாட்டையும் கேட்போமே!

குத்து விளக்கெரியக் கொட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
வாய் திறவாய்
செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே!
துயிலெழாய்

நப்பின்னைக்கு எது எது எப்படி இருக்கிறது என்பதையும் நப்பின்னையின் கொங்கைமேல் எதையோ வைத்து இதமாக - சுகமாக உறங்கும் கண்ணனை எப்படி வர்ணித்திருக்கிறது திருப்பாவை!

குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய பக்தி சிவனாரைப் புகழ்ந்து ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்வதைப் போல், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை போன்றவை விஷ்ணுவைப் புகழ - பக்தர்களின் இச்சையை தணிக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட கொக்கோகப் பாடல்களே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்களை மார்கழி மாதத்தில் பாடினால் மாதம் மும்மாரி மழை பொழியுமாம்; வயலெல்லாம் செந்நெல் விளைந்து குலுங்குமாம்!

ஓங்கி யுலகளந்த
உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச்
சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ்செந்
நெலூடு கயலுகள
என்பது பாடல்.

கடும் வறட்சி என்றெல்லாம் சொல்லி எங்கும் காவடித் தூக்கி செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசும் பார்வையாளர்களை அனுப்ப வேண்டியதில்லை. உத்தமன் பேர் பாடினால் போதுமானது. பக்தர்கள் நம்புவார்களாக! பம்பு செட்டு எந்தப் பக்தர்களாவது வைத்திருந்தால் அதை விற்று விட்டு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மும்மாரி பொழியச் செய்வார்களாக!

தமிழ் ஓவியா said...


எவன் பிராமணன்?


ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான்ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப் பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.
- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

தமிழ் ஓவியா said...


பாவ புண்ணியம்


சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப் பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே. பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பி னராகவும், புண்ணியம் செய்த வர்கள் உயர் வகுப்பினராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக்கூட்டத்தில் நேரு

தமிழ் ஓவியா said...


யார் காரணம்?


ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார் கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவு ளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கி யர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

தமிழ் ஓவியா said...


வேண்டும்பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


பிற நாட்டைப் போற்றுவோர் பிறந்த நாட்டைத் திருத்தாதது ஏன்?

ஏற்றத் தாழ்வு சுவிட்சர்லாந்து
மக்களுக்குள் இல்லை என்றே
இங்குளோர் புகழ்ந்து பாடுவார் - ஆனால்

இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை
ஏற்றிப் போற்றி எத்தில் வாழும்
ஈனரெல்லாம் கூத்து ஆடுவார்.

மாற்றவிட மாட்டோ மென்று
மடமையை வளர்ப்போர் தீய
மதத்தின் பேரால் ஆட்டம் போடுவார் - பல்லவ

மன்னராண்ட காலம் முதல்
பவுத்தர் சமணர் கொல்லப்பட்ட
பகைமை யோங்க கூட்டம் கூடுவார்.

கழுவிலேற்றி சமணர்களைக்
கொன்று குவித்த கொடுமையினை
கனவில்கூட மறக்க முடியுமா? - அன்பால்

கொல்லாமையைக் கடைப்பிடித்த
பவுத்தர்களை நாட்டைவிட்டே
விரட்டியதை மறக்க முடியுமா?

உழுத அவர் நிலத்தை யெல்லாம்
வன்முறையில் கவர்ந்துகொண்ட
வஞ்சகத்தை மறக்க முடியுமா? - அந்தோ

அடிமை யாக்கி அவர்களையே
ஆதிக்க வெறிபிடித்தோர்
அடக்கியதை மறக்க முடியுமா?

ஜாதிவேற்றுமை கற்பிக்கும்
சதுர் வருணத்தைப் புகுத்தி
தமிழினத்தைப் பிளக்க வில்லையா? - கொடிய

தீண்டாமையைப் பவுத்தர்மீது
சுமத்தி அந்த தூயவரைத்
தாழ்த்தப்பட்டோர் ஆக்கவில்லையா?

வேதியர், நிலக்கிழார்கள்,
வேந்தர் ஒன்றாய்ச் சோந்துகொண்டு
உழைப்பவரை ஒடுக்கவில்லையா? - இன்றும்

ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வழிவகைகள் கண்டிடாமல்
வன்முறையைத் தொடரவில்லையா? (ஏற்றத் தாழ்வு)

வீ. இரத்தினம்,
பெங்களூரு

தமிழ் ஓவியா said...


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப் போது ஓரிருமிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இனிசுலின் ஏறி, இறங்கும்!

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உண வுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

நன்றி: இன்றைய வேளாண்மை ஜூன் 2013


தமிழ் ஓவியா said...


சூன் 21: சூரியன் ஸ்தம்பிப்பு?


நாம் வாழும் பூமி தன்னைத் தானே நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டு, நொடிக்கு 11 கி.மீ. வேகத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும்போது சூன்21 அன்று தன் அச்சில் கடகரேகையில் இருந்து திரும்புகிறது. பூமி தெற்கு நோக்கி பெயர்ந்ததால் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததைப்போல் தோற்றம் தெரிந்தது. இதையே சங்க இலக்கியங்களில் சூரியனின் வடசெலவு, தென் செலவு என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் பார்ப்பனியம் தட்சிணாயணம், உத்தராயணம் என்றது. கடக சங்கராந்தி என்றும், மகர சங்கராந்தி என்றும் சமக்கிருதத்தை முன்னிறுத்தி கோலோச்சுகிறது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் காட்சிப் பிழைகள்தான்.

நாம் உண்மையான இயங்கியல் விதியை புரிந்து கொண்டு பூமியின் தென் பெயர்ச்சியால்தான் (டிசம்பர் 21 முதல் சூன் 21 வரை) சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததாக சொல்லப்பட்டதை (தட்சிணாயணம்) மறுத்து பூமிதன் பெயர்ச்சி அடைந்தது எனவும் அதே போல் பூமியின் வட பெயர்ச்சியால் தான் (சூன் 21 முதல் டிசம்பர் 21 வரை) சூரியன் தெற்கு நோக்கி நகர்வ தாகவும் (உத்தராயணம்) சொல்லப் படுவதையும் மறுத்து, புறப் பொருள் களின் காட்சி மாற்றத்திற்கு அடிப் படைக் காரணமே அகப்பொருள் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே காரணம் என்பதை பகுத்தறிவோடு உணர்ந்து ஆணித்தரமாக பார்ப் பனியத்தை எதிர்ப்போம்.

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும். நாம் வாழும் பூமியைப் பற்றி போற்றி பெருமிதம் கொள்வோம். வருங்கால எழுத்தாளர்களை பார்ப்பனியத்திட மிருந்தும் சொற்குற்றம், எழுத்துக் குற்றத்தில் இருந்து விடுவிப்போம்.

சூன் 21 அன்றும் டிசம்பர் 21 அன்றும் பூமி தனது நீள் வட்டப் பாதையின் முனைகளுக்குச் சென்று திரும்புகிறது. இதையே அவர்கள் நின்று செல்வதாக (ஸ்தம்பித்து) கூறுகின்றனர். சூரியனும் வடக்கு தெற்காக நகரவில்லை. பூமியும் ஸ்தம்பிக்கவில்லை. தன் பாதையில் சுற்றி நகர்ந்து திரும்புவது பூமியே! பூமியே! பூமியே!!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்

அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து - குறள்

- செந்தமிழ் சே குவேரா
பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவை

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இரு வருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத் துக்காக தண்டனையாகத்தான் மனித குலத்துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் - 4

தமிழ் ஓவியா said...

அரசு அனுமதி அளித்துள்ளதா?
வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்கு திருவிளக்குப் பூஜையா? சிவபெருமான் திருவள்ளுவர் என்னும் சதி: முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

திருவள்ளுவர் மதச் சார்பற்றவர் என்பதால், உலகம் அவரைப் பெரும் பாலும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிலர் அவருக்குப் பூணூல் போட முயற்சித் தனர். இன்னும் சிலர் அவர் நெற்றி யில் பட்டை தீட்டினர்; (மயிலாப்பூர் சிலையில் சில விஷமிகள் பெயிண் டில் பட்டை தீட்டினர் - தென் சென்னை மாவட்டக் கழகத்தின் முயற்சியால், அது அகற்றவும் பட்டதுண்டு)

இப்பொழுது, திருவள்ளுவரைப் புகழ்வது போல அவரை இகழும் சூழ்ச்சி ஒன்று அரங்கேற உள்ளது. அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முயற்சியால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உருவாக்கப்பட் டுள்ள வள்ளுவர் கோட்டத்தில். ஓம், அகத்தியர் துணை என்ற தொகையறாவுடன் துண்டறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

யாரோ ரெங்கராஜ தேசிக சுவாமி களாம் - அவரின் நல்லாசியுடன் நடைபெறப் போகிறதாம்.

சகல நன்மைகளைத் தரும் சிவபெருமான் திருவள்ளுவர் திருவிளக்குப் பூஜை என்ற ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், இந்த பூஜை நடைபெறுகிறதாம்!

திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜைக் குரிய அனைத்துப் பொருட்களும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப் படும் என்றும் துண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஏதோ சதித் திட்டம் இருக்கிறது! தமிழ்நாடு அரசின் அனுமதியோடுதான் இது நடைபெறுகிறதா?

யார் வேண்டுமானாலும் - அரசுக்குச் சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் புகுந்து எது வேண்டு மானாலும் செய்யலாமா?

குறளில் கோயில் இல்லை தம்பி என்றார் புரட்சிக் கவிஞர். அத் தகைய ஒரு சிந்தனையாளரை - உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலினைத் தந்த தொலைநோக்குச் சிந்தனையாள ரான திருவள்ளுவரை - மூடச் சகதிக்குள் குறிப்பிட்ட மதத்துக்குள் முடக்கும் சதி - இதன் பின்னணி யில் கண்டிப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்களே, முளையிலேயே இதனை கெல்லி எறிந்திட வேண் டாமா?

அரசாங்கம் இதில் தலையிட் டுத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் உரிய நடவடிக்கையில் நேரிடையாக இறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


கல்கியும் துக்ளக்க்கும்!

நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.

பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.

சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?

அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.

இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.

பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.

துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)

மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!

நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:

இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.

மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.

அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.

எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும். 29-6-2013

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சி யும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

குடந்தை கழக மாவட்டம் சுவாமிமலையில் 26.06.2013 அன்று காலை 9.30 மணியளவில் எருமைப் பட்டி வீரமுத்து மல்லிகா ஆகியோரின் மகன் மாதவன் அவர்களுக்கும் கோவிந்தகுடிஆவூர் கல் யாணசுந்தரம் இந்திரா ஆகியோரின் மகள் துர்க்கா ஆகியோரின் இல்வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் வாழ்வியல் தத்துவங் களை எடுத்து உரையாற்றி வாழ்த்து கூறி நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில், 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சுவாமிமலையின் நகர தலைவராக இருந்த நாராயணசாமி அவர் களுடைய இல்ல திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்திருந்தேன். அப்போது வரிசையாக போடப் பட்டிருந்த மர நாற்காலிகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிய பட்டு புடவைகள் நகைகளோடு வந்திருந்த பெண்கள் எல்லாம் தரையில் அமர்ந் திருந்தார்கள்.

நாற்காலியில் உட்கார இடம் இருந்தும்கூட பெண்கள் அனைவரும் கீழேதான் அமர்ந்திருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரே ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் பேசும்போது இவ்வளவு பெண்கள் தரையில் அமர்ந்துள்ளார்கள் துணிச்சலாக ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி தான் துணிச்சலாக இருக்கவேணடும் என்று அவரை பாராட்டி பேசிவிட்டு, அந்தப் பெண் உட்கார்ந்து இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த பெண்ணும் கீழே இறங்கி ஏனைய பெண்களோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பெரியார் வென்றார்

இங்கே நாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது பெரும்பாலான பெண்கள் மிகவும் வசதியாக நாற்காலியிலே அமர்ந்துள்ளார்கள். ஆண்கள் எல்லாம் பின் பக்கம் நாற்காலியில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி வந்தது? யாரல் வந்தது? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தான் பெரியார் இயக்கத்தினுடைய வெற்றி. சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்பவர்களுக்கு இது தான் பதில்.

அம்பேத்கரும் - பெரியாரும்

இது ஜாதியை மறுக்கின்ற இயக்கம். வடபுலத்திலே அண்ணல் அம்பேத்கர் ஜாதி, மதத்தை எதிர்த்துப் போராடினார். அதே நேரத்திலே தென் புலத்திலே தந்தை பெரியார் அவர்கள் அதே காரணத்திற்காக போராடினார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

கேவலமான பெயர்கள்

நம்முடைய முன்னோர்கள் நமக்கு வைத்திருந்த பெயர்கள் எல்லாம் நம்மை கேவலப்படுத்து வதாகவும், அருவறுப்பை உண்டாக்குவதாகவும் இருந்தது. தற்போது தமிழர்கள் தம் மக்களுக்கு வைத்துள்ள பெயர்கள் எல்லாம் தஸ், புஸ் என்று புரியாத மொழியாக உள்ளது. அதனால் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டோம்.

தொல்.திருமாவளவனுக்கு பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் அன்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த மோசமான பெயர் களை எல்லாம் மாற்றி நல்ல தமிழ் பெயர்களை தமது தொண்டர்களுக்கு வைத்துள்ளார் பாருங்கள் அது சாதாரண காரியம் அல்ல.

குருதிக்கொடைக்கு ஜாதியில்லை

இங்கே எங்களது கழக மாவட்டச் செயலாளர் குருசாமி அவர்கள் பலமுறை குருதிக்கொடை செய்துள்ளமைக்காக அவரது தொண்டறத்தைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவரால் கடந்த மாதம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குருதிக்கொடை செய்யும் காரியம் இருக்கின்றதே அதுவே ஒரு ஜாதி ஒழிப்பு திட்டம் தான்.

இந்த இந்த ஜாதிகாரர்களுக்கு, இந்த ஜாதியினுடைய இரத்தம் தான் செலுத்தவேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறதா? இரத்தத்திலே பிரிவுகள் உண்டு. அந்தந்த பிரிவு உள்ளவர்களுக்கு, அந்தந்த இரத்தம் தான் செலுத்த வேண்டும் எல்லா ஜாதி மக்களும் எந்த மொழி பேசினாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த பிரிவு இரத்தம் அவரவர்களுக்கு பொருந் தும் போது, இதிலே ஜாதி எங்கிருந்து வந்தது? போன்ற அறிவார்ந்த கேள்விகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

லைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல் பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகின்றன என்பதைச் சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஆனால் காங்கிரஸ் பிரசிடெண்ட் என்கிற தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப்பட்ட மக்க ளின் சுதந்திரத்திற்கு விடப் பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டுப் பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த தானத்தை அடைந்ததில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டு போய்விட்டது.

ஏனெனில் மற்ற தேர்தல்களையும், பட்டங் களையும் உத்தியோகங்களையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கிய தையை கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள்.

ஸ்ரீமான் எ.சீனி வாசய்யங்காருக்குக் காங்கிரஸ் பிரசிடெண்ட் வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சென்னை பார்ப்பனர் போய்ப் பிரசாரம் செய்யவும் ஆங் காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளில் பிரதான மாயுள்ளவர்களில் யாராவது பணங்காசு வாங்கக் கூடியவர்களாயிருந்தால் அவைகளையும் திருப்தி செய்தும், பதவி ஆசையுள்ள வர்களாயிருந்தால் அவை களையும் பற்றி பொய் வாக்குத் தத்தம் செய்தும் ஓட்டுகள் பெறப் பிரசாரம் செய்ததால் உண்மையிலேயே அதிக ஓட்டுப் பெற்றவரும் இன்னும் பெற இருந்தவருமான டாக்டர் அன்சாரி அவர்கள் இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்டு உத்தியோகம் என் போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம் பெரிய மனிதர்கள் என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச் சொல்லி விலகிக் கொண்டார்.

அடுத்தபடி அதிக ஓட்டுக் கிடைக்கப் பெற இருந்த ஜனாப் மஷருல்ஹக் என்னும் பெரியாரும் இவ்வித இழிவுப் பிரசாரத்தில் இறங்க மனமில்லாதவராகி இம்மாதிரி போட்டி போடுவதானால் எனக்கு வேண்டாம், கண் ணியமாய், வருவதானால் வரட்டும் என்றே சொல்லி போட்டியில் இருந்து அறவே விலகிவிட்டார்.

எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதானாலும் எவ்வளவு பரிசுத்தமானதானாலும் நமது பார்ப்பனர் அதில் கலந்தால் அதன் யோக்கியதை பார்ப்பனியத்திற்குத் தகுந்தபடி ஆகிவிடுகிறது என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 05.09.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் விளம்பர சபை

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் காங்கிரஸ் விளம்பர சபை என்பதாக ஒரு யோக்கியப் பொறுப் பற்ற தும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெ ளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரில் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் எழுதி வருகிறார்.

இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இவை ஒவ் வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற் கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம் என் பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம்.

அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடு வண்டியில் அகப் பட்டுத் திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22.9.1926ந் தேதி சுதேசமித்திரனில் பார்ப் பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியார் இதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்த தற்கு விரோதமாயிருந்த தாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலை பாதகம் விஷயமாய்ச் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய தானத்தையும் ஒரு மந்திரிக்குக் காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற் காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்ப் பலமாய் வாதாடியவரும் அந்த ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவரே ஆவர்.

ஆனால் அக் கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும் சில வெள்ளைக் காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந்தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளு கிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டுமென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத் தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலி ருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா?

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்ற வாசகத்தைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்! கழகக் குடும்பங்களின் சந்திப்பில் தமிழர் தலைவர்

கண்கொடுத்தவனிதம், ஜூன் 29- கடவுள் இல்லைஎன்று முதன் முதலாக தந்தை பெரியார் அவர்கள் பாடம் நடத்தி அதற்கான வாசகங்களைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் அய்யா பிறந்த நாளில் திறக்கப்படும் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கண்கொடுத்தவனிதத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

43 ஆண்டுகால போராட்டம்

திராவிட விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாள்களாக ஆகின்றன என்பதற்காகவும், அதேநேரத்தில், இந்த வட்டாரத்தில் நாம் திட்ட மிட்டிருந்த செயல்கள், சரியான நடைமுறை வேண் டும் என்பதையொட்டியும், அதேபோல, நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்கிய அந்தப் போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகவேண்டும்;

அதிலே குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழன் கட்டிய கோவிலுக்குள்ளே மணியாட்ட வேண்டும் என்று இருப்பதை மாற்றி, மிகப்பெரிய அளவில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காக, பெரியார் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அளவிலே, ஏறத்தாழ ஒரு 43 ஆண்டுகாலம் தொடர்ந்து நாம் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்பதற்கு முயற்சிகள் எடுத்து, தனி சட்டம் ஒன்றை இயற்றி, அதனடிப்படையில், நம்முடைய மாணவர் களை 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி தேர்ந் தெடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற 206 மாணவர்களில் பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.

ஆகஸ்டு முதல் தேதி அறப்போராட்டம்

இவர்களுக்குப் பணி வழங்கக்கூடிய நேரத்தில், சிலர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித் தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு முதல் தேதி அறப் போராட் டத்தை நடத்த உள்ளோம்.

நம்முடைய தாய்மார்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்களையெல்லாம் நாம் சந்திப்பது வழமையான ஒன்றுதான். இது ஒன்றும் புதுமை யல்ல.

பெண்கள் சிறைக்குச் செல்லவேண்டும்; ஆண்கள் வீட்டில் இருக்கட்டுமே!

தமிழ் ஓவியா said...


நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து அகமும், முகமும் மலர, அய்யா நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக் கின்றது பாருங்கள், அதற்கு எல்லையே இல்லை.

கண்கொடுத்தவனிதத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

நம் அறிவு ஆசான் அய்யா பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இறுதியாக நடத்தக்கூடிய அளவிற்கு, துணிந்து நாம் இறங்க வேண்டும். இதுவரையில் ஆண்களை போராட்டத் திற்கு அனுப்பிவிட்டு, பெண்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் வேண்டுமானால் வீட்டில் இருக்கட்டும்; பெண்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வீட்டில் நீங்கள் தான் வேலை செய்கிறீர்கள்; 100 நாள் திட்டத்திலும் வேலை செய்கிறீர்கள். கொஞ்ச நாள் நீங்கள் ஓய்வெடுக்கவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி போராட்டத்தில் பங்கேற்பதுதான். சிறைச் சாலையில் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கலாம். அப்பொழுதுதான் ஆண்களுக்கு உங்களுடைய அருமை புரியும்.

விடயபுரத்தில் நினைவுச் சின்னம்!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத் தில்தான் முதன்முறையாக சொன்னார்கள். அதற்காக வரலாற்றில் புகழ்வாய்ந்த அந்த இடத்தினை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டினை அமைத்தோம். பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையாமல் இருக்கிறது. இப்பொழுது வரும்பொழுது அந்த இடத்தினைப் பார்த்தோம்; கல்வெட்டினைச் சுற்றி காடுபோல் உள்ளது. அங்கே இருக்கின்ற தோழர்களும், பொறுப்பாளர்களும் அந்த இடத்தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்; அவர்களின் விருப்பப்படி முதலில் அந்த இடத் தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

அடுத்தபடியாக, இங்கே வரும்பொழுது பள்ளிக் கூடத்தின் கூரை சரியில்லை என்று சொன்னார்கள்; 15 ஆண்டுகளுக்கு முன்பு கூரை போட்டது; இந்தப் பகுதி அடிக்கடி மழை, வெள்ளம், புயலால் தாக்கப்படுகின்ற பகுதியாகும். ஆகவே கூரை பழுதடைந்துவிட்டது என்று சொன்னார்கள்; நம் அறக்கட்டளை பொறியாளர்களை வரவழைத்து, அந்த பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளை உடனடியாக செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் கட்டடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்; பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆகவே, அக்கட்டடத்தினை சரி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப் படும்.

தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும்!

பருத்தியூரில் அய்யா பிறந்த நாள் விழா என்றால், மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், எடைக்கு எடை பொருள்கள் கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு நாம் போட்ட பட்ஜெட்டைவிட அதிக நிதி தேவைப் படுகிறது. தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும். அய்யா பிறந்த நாள் விழாவையொட்டி அந்தக் கட்டடம் திறக்கப்படும்.

கண்கொடுத்தவனிதத்தில் நடைபெற்ற சுயமரியாதைக் குடும்ப விழாவில் பங்கேற்ற கருஞ்சட்டைக் குடும்பத்தினர் (28.6.2013).

விடயபுரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி, ஸ்தூபி போன்று எழுப்பலாமா என்று பல பேரிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

இந்த இயக்கம் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் வாழும் இப்பகுதியில், கல்வி உதவி, மருத்துவ உதவி நம் இயக்கத் தோழர்களுக்கு தேவைப்பட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த இயக்கம் பின்வாங்காது, நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மேலும் பல கருத்துகளைக் கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.