Search This Blog

10.6.13

மகாபாரதப் போரில் அணு ஆயுதமா? 

அன்றைக்கே அணு ஆயுதம்:
சென்னையில், ஒரு திருமணமண்டபம்; மகாபாரத உபந்யாசம்! பாரதப்போரின் 10ஆவது நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளைப் பற்றி உபந்யாசார் பேசினார்; இல்லை உளறினார். அந்தக்காலத்தில், எந்தக் காலத்தில்? துவாபரயுகத்திலேயே நம் முன்னோர்கள் அணு ஆயுதம் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள்.
அவற்றைப் போரில் பயன்படுத்தினார்கள் _ என்று பேசிக்கொண்டே போனார்; பெருமிதம் அடைந்தார்; பூரிப்புக் கொண்டார்; புல்லரித்துப் போனார். இது உண்மையா? சரியா? ஆய்வு செய்வோமே!
எப்படி? எப்படி? நம்புவது எப்படி?
மகாபாரதப் போர் மிகப்பெரிய அளவில் நடந்ததற்கான தடயங்கள், சான்றுகள் இதுவரை அகழாய்வுகள் மூலம் கிடைக்கவில்லை.

இப்போர் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது 5000 ஆண்டுகளுக்கு முந்திய துவாபரயுகம் என்கிறார்கள்.
மெய்யாகவே கி.மு. 850 ஆண்டுகளுக்கு முன்தான் பாரதப்போர் நடந்ததாக வரலாற்றுப் பேரறிஞர் டி. தர்மானந்த கோசாம்பி வரலாற்று ஆய்வு நெறி நின்று ஆய்ந்து கூறியுள்ளார்.
குருசேத்திரப் போரில், கவுரவர் பக்கம் 11 அக்ரவுணி சேனைகள்; பாண்டவர் பக்கம் 7 அக்ரவுணி; ஆக, 18 அக்ரவுணி சேனைகள் போரிட்டனவாம்.
ஓர் அக்ரவுணி என்றால் 21870 தேர்கள 21870 யானைகள்; 65610 குதிரைப்படைகள்; 1,09,350 காலாட்படை வீரர்கள் இருக்க வேண்டும்.
போரில் பங்கு பெற்றவர் ஏறத்தாழ 40 லட்சம் வீரர்கள் _ 40 லட்சம் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிற்பதற்கு இடம் ஏது? எவ்வளவு இடம் வேண்டும்? எத்தனை பரப்பளவுள்ள போர்க்களம் வேண்டும்?
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் நம்மால் நம்ப முடியவில்லை; இல்லை.
இதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமது கீதையின் மறுபக்கம் நூலில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கண்ணனைத் தேடியலையும் மன்னன்:
குருசேத்திரத்தைச் சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து, 2 கல் (Mile) தொலைவில் அஸ்திபூர் என்ற ஓர் இடம் இருக்கிறது.
இங்குதான் பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன என்பது அய்தீகம். இப்போதே அந்த அஸ்திபூருக்குப் போனால் ஓர் அஸ்திக்குறியைக்கூட பார்க்க முடியாது. - (டி.கே.வி. இராஜன். நூல்: கண்ணனைத் தேடி)
எதுவும் கிடைக்கவில்லை:
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசர்களின் கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவே இல்லை. -_ என்கிறார் மய்ய அரசு தொல்பொருள் துறையின் மேனாள் இயக்குநர் _ தலைவர் (Director General) பி.பி. லால் அவர்கள். வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே நினைத்து விற்பனை செய்யாதீர் மதியை:
குருசேத்திரம் என்று சொல்லப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் - அர்ஜூனன் சிலைகள்

மகாபாரத நினைவு பற்றிய எந்தத் தடயங்களும் குருசேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியில் இருந்து  150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை.
வரலாற்று அறிஞர் ஆர்.சி. டட் (R.C. Dutt) என்பவர், மகாபாரதத்தில் உள்ள போர் நிகழ்வுகள் அனைத்தும் அப்பட்டமான கற்பனைகளே!  _ என்கிறார். இந்தப் போர் நடைபெற்றிருந்தால் நிச்சயம் ரிக் வேதத்திலோ அல்லது வேறு வேதகால இலக்கியங்களிலோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியுமா? என்பது ஆராய்ச்சியாளர்களின் கேள்வியாகும். _ என்கிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். _ (நூல் _ கீதையின் மறுபக்கம்)
குருசேத்திரப் போர் என்பது அப்பட்டமான கட்டுக்கதையே தவிர, வேறில்லை. _ என்கிறார் டி.டி. கோசாம்பி அவர்கள். (நூல் - An Introduction to the study of Indian History. Page-4)
பங்காளிச் சண்டையா? பாரதப் போரா?
குருசேத்திரப் போர் என்று அப்படியே ஏதாவது நடைபெற்றிருந்தாலும்கூட, அது ஒரு குடும்பச் சண்டையாக மட்டும்தான் இருந்திருக்க முடியுமே தவிர, மற்றபடி வேறில்லை! _ என்று வரலாற்று அறிஞர்கள்  டி.சி. சிரிக்கர் (D.C. Sirkur), எச்.டி. சங்காலி (H.D. Sankali),என்னும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டிரிக்கா - வெறும் டிரிக்கா (H.D. Sankali)
இந்நிலையில், கு-ருசேத்திர நிலப்பரப்பில் பெரிய அளவில் போர் நடந்ததற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை! என்றாலும், இப்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆயுதங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றில் அணுக்கதிர் இயக்கம் காணப்படுவதாகவும் அவை பாரதப் போரில் பயன்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இவ்வாய்வில் ஈடுபட்ட இயற்பியல் பேராசிரியர் (Physics Prof.). ஸ்வதேஷ் குமார் டிரிக்கா என்பவர்.
அய்யிரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கமெல்லாம் நெளிது
டில்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் இவர். Dean of Students Welfare  என்னும் உயர் பதவியையும் வகித்து வந்தவர்.
10 ஆண்டுகள் நானே குருசேத்திரத்தில் ஒரு மாதம் தங்கி நடத்திய ஆய்வின் முடிவுதான் இது  -_ என்கிறார் டிரிக்கா.
இவரது ஆய்வு முடிவைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

நமது புதைந்த நாகரிகம் _ என்னும் தலைப்பில் கண்காட்சிகளையும் சென்னைத் தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளையும் அளித்தவரும், கண்ணனைத் தேடி _ என்னும் நூலின் ஆசிரியருமாகிய டி.கே.பி. இராஜன் என்பவர் குருசேத்திர மண்ணில் பேராசிரியர் டிரிக்கா நடத்திய ஆராய்ச்சியினை மீண்டும் ஏன் நடத்திப் பார்க்கக் கூடாது என்று எண்ணினார்; அதற்காகத் திட்டமிட்டார்.
அணுக்கரு இயக்கத்தை அளக்க கைகர் முல்லர் கவுண்டர்  (Goiger Muller Counter) மற்றும் சின்டி லேஷன் கவுண்டர் (Scientilation Counter) ஆகிய கருவிகள் தேவை.
அணுவியலறிஞர் ஆதரவு:
கல்பாக்கம் அணு ஆற்றல் நிலைய இயக்குநர் திரு. சி.வி. சுந்தரம் அவர்களின் பரிந்துரையால் டில்லியிலுள்ள அணு ஆற்றல் நிலையத்தில் இருந்து இக்கருவிகள் கிடைத்தன. இராஜனோடு குருசேத்திரத்துக்கு வந்திருந்து, இக்கருவிகளை இயக்கி 7 இடங்களை ஆய்வு செய்து பார்த்தார் அணுவியல் அறிஞர் முனைவர். ஸெக்ஸேனா அவர்கள்.
இதற்குமுன் டி.டிரிக்கா, சுவாமி ஓமாநந்த சரஸ்வதி என்பவர்களின் ஆய்வுகள் பற்றி ஸெக்ஸேனா அறிந்து கொண்டார்.
அவர் அறிந்து கொண்டவை:
குருசேத்திரம், அதைச் சுற்றியுள்ள அமின், பிவோலா, கைத்தால், கால்யாத போன்ற மகாபாரதத்தோடு தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள மேட்டுப் பகுதிகளிலும், சில இடங்களில் தோண்டிப் பார்த்து, கதிரியக்கத்தை அளந்தார் டிரிக்கா. இங்கெல்லாம் கதிரியக்கம் மிகவும் அதிகமாக(?)  இருந்தது என, தன் அறிக்கையில் டிரிக்கா கூறியுள்ளார்.
இதைத் தவிர, டில்லிக்கு அருகே உள்ள நெருல்லா இடத்திலிருந்த தனியார் பொருட்காட்சி நிலையத்தில் குருசேத்திரப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட பானை ஓடுகள், சிலைகள், கத்திகள் (வேல்கள்) போன்றவற்றைச் சுவாமி ஓமாநந்த சரஸ்வதி என்பவர் சேமித்து வைத்திருந்தார்.
நம்ப முடியவில்லை, இல்லை!
ஜி.எம். கவுன்டர் (G.M. Counter) இதனைப் பயன்படுத்திப் பார்த்தபோது, இப்பொருளிலிருந்து அளவுக்கு மீறிய அணுக்கதிர் இயக்கம் வெளிப்படுவது தெரிகிறது என்று தன் அறிக்கையில் கூறியிருந்தார் டிரிக்கா.
இவரது ஆய்வில் நம்பகத்தன்மை இல்லை.
அவர்கள் கண்டெடுத்த கத்தி, மண்பானைகள் முதலியவை எல்லாம் மகாபாரத காலத்து _ அவர்கள் கருத்துப்படி 5000 ஆண்டுப் பொருள்கள் என்பதை அவர் மெய்ப்பிக்கவில்லை.
கார்பன் டேடா (Carbon Data) என்ற அறிவியல் ஆய்வு மூலம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டாமா அவர்?
காரணங்களின் தோரணங்கள்:
மேலும், இவரது (டிரிக்கா) ஆய்வைப் பல அறிவியலாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் நம்பத் தயாராக இல்லை.
இதற்கான முக்கியக் காரணங்கள்:
1. இதற்கான ஆராய்ச்சி விவரங்களைப் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் (Science Magazines)  டிரிக்கா வெளியிடவில்லை.
கால விக்ஞான் என்கிற சாதாரண இந்தி இதழிலேயே வெளியிட்டது அய்யப்பாட்டுக்குரியது.
2. இந்த ஆய்வுக்கு ஜி.எம். கவுன்டர் என்ற கருவியை மட்டும் பயன்படுத்தினால் போதாது.
அதைவிட ஆற்றல் வாய்ந்த (Scientilation Counter) மற்றும் மண் ஆய்வு போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அவர் இவற்றைப் பயன்படுத்தவில்லை.
பயணம் - அதனால் ஏற்பட்ட பயன்கள்:
குருசேத்திரத்திற்கு உந்து வண்டியில் (Car) பயணம் செய்யும்போது இராஜனிடம் பேரா. ஸெக்ஸேனா சொன்னார்:_ இயற்கையாகவே எல்லா இடங்களிலும் அணுக்கதிர் இயக்கம் காணப்படும்.
தோரியம் என்ற தாதுப் பொருளினால் கதிரியக்கம் அதிகமாகவே வெளிப்படும்.
சென்னை நகருக்குள் சோதனை செய்தால் இதுவே குறைவாகவே இருக்கும்.
ஆகவே, குருசேத்திரப் பகுதியில் இயற்கையாகவே காணப்படும் கதிரியக்கத்தின் அளவைத் தெரிந்து கொண்டுதான் இந்தச் சோதனைகளை நாம் நடத்த வேண்டும்.
இந்தப் பகுதியிலுள்ள கதிரியக்க அளவு ஜி.எம். கவுன்டரில் 2 துடிப்பு (Pulse) இருக்கும். இதுவே சின்டிலேஷன் கவுண்டரில் 200கு.
அவசரப்பட வேண்டாம், அய்யா!
குருசேத்திரப் பல்கலைக்கழகத்துக்கு முதலில் சென்றனர். பேராசிரியரின் இசைவைப் பெற்றுக் கொண்டு, தொல்பொருள்துறைப் பொருட்-சாலைக்குள் முதலில் நுழைந்தனர்.
மகாபாரதத்தில் பயன்பட்டதாகக் கருதப்படும் சாம்பல் நிறப் பானை ஓடுகளில் இரண்டினை எடுத்து (Index.No-1) AC DMX (32) (K.K.54) அவற்றை சின்டிலேஷன் கவுண்டருக்கு அருகில் கொண்டு போகும்போதே மீட்டரின் முள் போராட்டத்துடன் ஆடி 400 _ பல்ஸை எட்டியது.
வியப்போடு ஸெக்ஸேனாவைப் பார்த்தனர்.
அவசரப்பட வேண்டாம்! இந்த அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் தொல்பொருள்களிலிருந்து வெளிப்படும் அத்தனை கதிரியக்கமும் ஒரே சமயத்தில் இந்தக் கருவியைத் தாக்குவதால்தான் இத்தனை பல்ஸ் காண்பிக்கிறது. பொருட்காட்சிச் சாலைக்கு வெளியே இந்தப் பானை ஓடுகளைச் சோதனை செய்யலாம்! வாருங்கள்!! என்றார் அவர்.
ஓடுகளில் ஒன்றுமே இல்லை!
வெளியே இருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று அந்தப் பானை ஓடுகளில் அணுக் கதிரியக்கம் எத்தனை இருக்கும் என்று பேரார்வத்தோடு பார்த்தபோது, ஒன்றுமே இல்லை என்று தெரிந்தது. அதாவது பல்ஸ் நார்மல் (Pulse Normal).
ஆகவே, இந்தப் பானை ஓடுகள் பிரம்மாஸ்திரம் (இதுதான் அணு ஆயுதமாம்) வெடித்த பிறகு, அதாவது போர் நடந்த பல ஆண்டு ஆன பிறகு, தயாரிக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா? _ என்று கேட்டனர்.

என்னை வம்பிலே இழுத்துவிடாதீர்!
இந்த வம்பில் என்னை இழுத்து விடாதீர்! இந்தப் பானை ஓடுகளில் கதிரியக்கம் இல்லை, என்றுதான் சொல்வேன்; சொல்ல முடியும்; உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல -_ என்றார் ஸெக்ஸேனா புன்னகை மன்னனாக.
மகாபாரதப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன _ என்பதை உறுதி செய்யச் சென்ற டி.கே.பி. இராஜன் அவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றம்!
சின்னச்சின்ன ஆசை!
இருந்தாலும், மற்றோர் ஆசை, இராஜனுக்கு இருந்தது; அதையும் கண்டறிய முனைந்தார். சுவாமி ஓமாநந்தா சரஸ்வதி என்பவரால் குருசேத்திரத்திலிருந்து, தோண்டி எடுக்கப்பட்ட கத்திகள் (வேல்கள்), சிலைகள் போன்றவற்றில் எக்கச்சக்கம் ஆக வெளிப்படுவதாக பேரா.டிரிக்கா கூறியிருந்தாரல்லவா?
ஏன் அந்தப் பொருள்களையும் சோதனை இட்டால் என்ன? என்ற ஆசை அல்லது ஆர்வத்தோடு அந்தச் சாமியாரைத் தேடி டில்லியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள நெருல்லா _ சென்றார்.
ஏமாறச் சொன்னது நானா?
என்ன ஏமாற்றம்! சுவாமிஜி தனது சேகரிப்பை ரோடாக் என்னும் இடத்திலுள்ள குருகுலத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சென்றுவிட்டார் என்றும், அவர் தற்போது அங்கு இல்லை. அதனால், அவரைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை என்றும் தெரிய வந்தது. என் செய்ய? எல்லாமே தோல்வி!
ஆக, மகாபாரதப் போர் உண்மையில் நடந்ததுதானா? என்பதும், அதில் அணு ஆயுதங்கள் பயன்பட்டனவா? என்பதும் அறிவியல் முறையில் மெய்ப்பிக்க நடந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலே முடிந்து விட்டன!
போரில் அணுக் கதிரியக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்னும் ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றமே மிஞ்சியது; எஞ்சியது.
எவனாக இருந்தால் எமக்கென்ன?
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்-? அறிவியல் நடைமுறையை, அதன் ஆய்வை, ஆய்வு முடிவை எந்தக் கொம்பனும் மீற முடியுமா? முடியாது!
இதனை, இனியும் பேசிவரும் - இல்லை உளறும் பேச்சை இனி எவன் நம்புவான்? எப்படி நம்புவான்?
----------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்  --”உண்மை”ஜூன் 01-15 - 2013

25 comments:

தமிழ் ஓவியா said...


ஜெ பாராட்டுகோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்களின் கட்சிக்குள்ளேயே மோதல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் - அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச் சருமான ஜெயலலிதா அவர்கள், இன்று விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; குறிப் பாக திராவிட இயக்கத்த வர்களும், மதச் சார்பற்ற தன்மையில் மதிப்புடைய வர்களும், சிறப்பாக சிறு பான்மையினரும் கவனிக் கத்தக்கதாகும்.

நரேந்திரமோடி பிஜேபி யின் பிரச்சாரக் குழுத் தலைவராகத் தேர்வு செய் யப்பட்டதற்குத் தம் வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டு இருந்தாலும், ஏதோ சம்பிரதாயம் என்கிற கோட்டுக்குள் அடக்கி விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி அவர் சிறந்த ஆட்சியாளர் - சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத் தில் நல்லாட்சி புரிகிறார் என் றெல்லாம் சகட்டு மேனிக்கு புகழ்ந்து வார்த் தைகளைக் கொட்டியுள்ளார் - இவ் வளவையும் தெரிவித்து விட்டு, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பாதுகாப்பு வளையம் தேடுவது - ஆகா, எவ்வளவு சாமர்த்தியம்!

தனிப்பட்ட கருத்து என்றால் வெறும் வாழ்த்து களோடு நின்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி மோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ்வது - அதுவும் அவரின் ஆட் சியை வானளாவ சிலாகிப் பது என்பது எப்படி தனிப் பட்ட கருத்தாகும்? மறை முகமாக மோடியின் இந் துத்வா ஆட்சிக்குக் கொடுக்கும் சான்று பத்திரம் தானே இது! இதனை அ.இ.அ.தி.மு.க. வில் கூட்டு வைத்துள்ள முசுலிம் பிரிவினரும் (மனித நேயக் கட்சி), இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?

பி.ஜே.பி. மோடியின் குஜராத் இனப்படு கொலையை துப்பட்டிப் போட்டு மறைப்பதற்குக் கையாளும் யுக்தி - குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அதே பாணியைத் தானே நம்மூர் ஜெயலலி தாவும் செய்திருக்கிறார்? மோடி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கு இரு முறை தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா அவர்கள் சென்றதையும், ஜெயலலிதா வின் முதல் அமைச்சர் பதவிப் பிரமாணத்திற்குத் தனி அழைப்பின் பேரில் மோடி வந்து கலந்து கொண்டதையும், தனது போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து 40 வகைகளில் சிறப்பு விருந்து அளித்ததையும் நினைவு கொண்டால், மோடியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள் வது தனிப்பட்ட பிரச் சினையா? அதையும் தாண் டிய இந்துத்துவா உணர்வா என்பதை மக்கள்தான் எடை போட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

- மயிலாடன் 10-6-2013

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க....நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுகாதார கேடு உடையதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஓராண்டு தண்டனை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வுநமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ் வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத் தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!


குப்பைத் தொட்டியாகிவிட்டது ஐ.பி.எல். கிரிக்கெட், சூதாட்டக்குப் பையைக் கிளறக் கிளற அழுக்கும் துர்நாற்றமுமே வெளிவருகிறது. தரகர் கள், தொழிலதிபர்கள், சினிமாக் காரர்கள், அரசியல்வாதிகள், ஐ.பி.எல். அணி முதலாளிகள் என நீளும் தொடர்புடையோர் பட்டியல், நம் சமூகம் தொலைத்துள்ள நேர்மை, நாணயம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் தொகுப்பு. சூதாட்டத்தரகர் தொடர்புக் காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டவுடன், சூப்பர் கிங்ஸில் அவருக்கு முக்கிய பதவி ஏதும் கிடை யாது என்று பூசிமெழுகி என்.சீனி வாசன் வெளியிட்ட அறிக்கை, ஒழுக்கக் கேட்டின் உச்சம்.

தம் மருமகன் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருப்பினும், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் மூன்று பேர் குழு அமைத்து விசாரிப்பேன் என்றும் என்.சீனிவாசன் சொல்வது, அதர்மத்தின் கொடுமுடி. தம் மருமகன் இத்தகைய தவறுகளில் ஈடுபட்டிருப்பார் என்று சீனிவாசன் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தார்மீகப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்து, நேர்மையான விசாரணைக்கு வழி செய்திருக்க வேண்டும் சீனிவாசன். பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் பன்சால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டு.

ஐ.பி.எல்.லின் ஆரம்பமே தவறு. கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி, போட்டிகள் மூலம் வருமானமும் கண்டன, வெளிநாட்டு நிறுவனங்கள். அதை அப்படியே அடியொற்றி, ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு வீரர்கள், அந்த அணியில் இடம்பெறுவது போன்ற நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. அதுவும் வீரர்களை, ஏலத்தில் எடுப்பது போல் தேர்வு செய்யும் நடைமுறை உருவானபோதே, பணத்தாசை வேர் கொள்ளத் தொடங்கிவிட்டது. வீரர்கள் மேன்மேலும் தங்கள் இஷ்டப்படி பொரு ளீட்ட நல்ல, அல்ல வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிலும் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்க வேண் டும் என்ற கோரிக்கை நம் மதிப்பீடு வீழ்ச்சிக்கு சரியான உதாரணம். இத னால் விளையாட்டில் முறைகேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இங்கே விளையாட்டுக்கான உத்வேகம், ஈடு பாட்டு உணர்வு ஆகியவை செத்துப் போய்விட்டன. கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்ட தீராத ஆர்வத்தை மூலதன மாக்கி, சோரம் போன அத்தனை பேர் களுமே இதில் குற்றவாளிகள். பி.சி.சி.ஐ. விஷயத்தில் அரசு தலையிடாது என்று கபில்சிபல் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மக்கள் பணமே பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். ஆகியவற்றின் முதுகெலும்பு. இவ் வமைப்புகளைக் கேள்வி கேட்க மக்கள் மன்றம் அனைத்து உரிமையும் பெற் றுள்ளது.

மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறுவனமும், திட்டமும் சமூக விரோத மானதே. ஐ.பி.எல்.மக்களின் ஆர் வத்தைக் கொச்சைப்படுத்தியது: அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மன வேதனையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும்.
நன்றி: கல்கி 9.6.2013 (பக்கம் 7)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங் கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;

அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.

2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.


குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?

கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.

கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.

உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.

இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!
ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?

உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!

இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.

இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?

இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!10-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்


சென்னை, ஜூன் 10-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக் குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்து கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய வற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் செய்யும் போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ் வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை, தேர்ந் தெடுக்கும் முறை ஆகியவை குறிப் பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையான அறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. என்சிடிஇ நெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை.

இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட ஜாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள் ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது விசா ரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.

இவ்வாறு பேராசிரியர்கள் தெரி வித்தனர்.

தமிழ் ஓவியா said...


நோயின்றி நாம் வாழ...


இயற்கை நமக்களிக்கும்
இனிமையான பிறப்பு
புன்னகை பூத்து - இன்முகம்
சிவக்க அரியதோர் வாய்ப்பு
அழுகை ஒலியுடன் அகிலத்தில்
அடிவைத்து அரவணைக்கும்
தாயிடம் - கண்டதோ
ஆனந்தக் களிப்பு

இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.

நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!

மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்

1. சிறந்த சூரிய ஒளி
2. தூய காற்று
3. சுத்தமான நீர்
4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)
5. சத்தான உணவு
6. அமைதியான தூக்கம்

இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?

1. சிறந்த சூரிய ஒளி

நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில், காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

2. தூயக்காற்று

மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.

3. சுத்தமான நீர்

நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.

4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்
நல்லதோர் நடைப்பயிற்சி
நோயின்றிவாழும் முயற்சி
நல்லதோர் ஓட்டப்பயிற்சி
நோய்களை ஓட்டும் முயற்சி
நல்லதோர் மனப்பழக்கம்
நோயின்றி வாழ பழக்கம்
இனியும் ஏன் தயக்கம்
இன்னும் வேண்டுமோ விளக்கம்?

5. சத்தான உணவு

சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.

6. அமைதியான தூக்கம்

அமைதியான தூக்கமே அனைத்து வித
நோய்களுக்கு அருமருந்து
தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்
தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.
தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை
சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை
தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்
சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு
நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை
பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்
உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்
பிறக்கும் அனைவரும் முயன்றால்
அகிலமே சிறக்கும்.

தமிழ் ஓவியா said...


பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!


மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்

சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று

சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.

மத சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினரை பல்வேறு வகையில் கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.

அத்வானி பற்றி..

இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.

கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.

இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மோடியை தவிர்த்தார்:

தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.

ஏமாற்ற மாட்டார்

அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.

ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்

ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.

எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூன்று முறை ராஜினாமா

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பிற்போக்குத்தனம்:


திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் கூடாதாம்

இந்தூர், ஜூன் 11- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத் திற்கு முன் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக் கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ., துணைத் தலைவரும் மக்களவை எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத் தைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண் கள் செல்போன் பயன் படுத்துவதாலேயே பெரும் பாலான அச்சுறுத்தல் களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரி வித்தார். இளம்பெண் கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத் துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதி ரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித் துள்ளார். தனது இந்தக் கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரி விப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கை யின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு பா.ஜ., எம்.பி., ரகுநந் தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகி யன எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்கா லத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்தக் கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என வும் தெரிவித்துள்ளார். ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தெரி வித்ததாவது: ரகுநந் தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சி யிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில் லாமல் நிரூபணம் ஆகி உள்ளது; மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்ச வான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய்ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய் வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந் தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத் திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை நிரந்தரக் குழுவை உடனே அமைத்திடுக மதுக்கூர் மாநாட்டில் கழகத் தீர்மானம்


மதுக்கூர் மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (10.6.2013)


காவிரி டெல்டா விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும் என்பதையும், காவிரி நதிநீர் பங்கீடு சரியாகக் கிடைக்க ஒரே நிரந்தரத் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தி அதன் அளவீட்டின்படி கர்நாடகம், தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி நீரைத் தரும் வகையில் காவிரி மேலாண்மைக் குழுவினை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க மறுத்தால், மத்திய அரசே தனது நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் அணைகளை அவசரச் சட்டத்தின் மூலம் எடுத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கர்நாடகத்தைப் போல எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமைபற்றி முழங்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திட வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் இத்திராவிடர் கழக மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

- மதுக்கூரில் நேற்று (10.6.2013) நடைபெற்ற வட்டார திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


உண்மையான நாவன்மை எது?


நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.

மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.

நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம். எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:

நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.

இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.

என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.

எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்! இல்லையா?

அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!

அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.

நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!

தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!

காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!

சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!

எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!

நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்

என்ற கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!

நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!

எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.

அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?

எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

வெட்கக்கேடு!

கொலை, கொள்ளை தடுக்க காவல் நிலையத்தில் பூஜையாம்!

சென்னை, ஜூன் 11- கொலை, கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பூசணிக்காய், தேங்காய் உடைத்து திருத்தணி காவல் நிலையத்தில் திருஷ்டி கழித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டதாம்.

திருத்தணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் அடிதடி, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட வர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி திருத்தணி பொரி வியாபாரி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப் பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்தணி - திருப்பதி சாலையில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியின் வரவு கால்வாயில் கர்ப்பிணி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருத்தணி - பெரியார் நகரில் ரிக்ஷா தொழிலாளி தன்ராஜ், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது உறவினர் ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாம். காவல்நிலையம் முழு வதையும் கழுவி சுத்தப்படுத்தி அங்குள்ள சாமி படத் துக்கு மாலை போட்டு கற்பூரம் ஏற்றி காவல்நிலை யத்தின் வாசலில் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் உடைத்து திருஷ்டி கழித்தனராம்.

திருத்தணி பகுதியில் கொலை, கொள்ளை நடக்க மல் இருப்பதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாம்

பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய காவல் துறையினரே காவல் நிலையத்தில் பூஜை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடுவது சரியானதுதானா?

தமிழ் ஓவியா said...

மணமகனின் சமயோசிதமான முடிவு
தமிழர் தலைவர் பாராட்டு

வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவின்போது மணமகன் நீலகண்டன் சங்கிலி அணிவித்தபோது தலைவழியாக அந்தச் சங்கிலி நுழையவில்லை. நீலண்டன் அப்படியே கழற்றி எடுத்து விட்டு மணமகளின் சடை வழியாக சங்கிலியை மாட்டி திருப்பிக் கழுத்தில் அணிவித்தார்.

அதைக் கண்ணுற்ற தமிழர் தலைவர் அவர்கள் மீண்டும் ஒலிபெருக்கியை வாங்கி இந்த நிகழ்வைக் கவனித்துப் பார்த்தீர்களா? எம்போதுமே நம் மக்கள் மணமகளுக்கு தலையில் கொஞ்சம் அதிகமாகப் பூவைச் சுற்றி விடுவார்கள். சங்கிலி அணிவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் தாலி இல்லை. டாலர் மட்டும் இருந்தது. அதை அணிவிக்க முயன்றபோது தலை வழியாக நுழையவில்லை. மணமகன் மிகவும் சமயோசிதமாக சடைமுடி வழியாகக் கொண்டு வந்து எளிதாக அணிவித்து விட்டார். இந்த மணமக்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றார். (பேராவூரமணி மணவிழாவில்...)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தேர்வு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11- ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப் படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் தியாகராயர் நகரில் நேற்றுமுன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமை வகித்தார்.

மத்திய அரசு முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி பேசியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படை யிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் நிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்ணில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.

அதற்கான ஆணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணையை திரும்பபெற வேண்டும்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் - மறு தீர்ப்பு!

மகாராட்டிரத்தில் மாலேகான் நகரத்தில் முசுலிம் அமைப்பான சிமி அலுவலகமுன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இரு சக்கர மோட்டார் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பயங்கர செயலால் 7 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர்.

பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் _ அபிநவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், இந்நாள் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். சிறீகாந்த் பிரசாத் புரோகித் (பார்ப்பனர்) சுயம்பு சங்கராச்சாரியார் தயானந்த் பாண்டே (பார்ப்பனர்) சிவ நாராயணன் கல்சன்கரா, ஷாம்சாகு, சமர்குல்கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர்வேதி, ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தக் கும்பலுக்கும் _ பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டு-வெடிப்பு-களுக்கும் தொடர்புண்டு என்றும் கண்டறியப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெளியில் எங்கும் கிடைக்காதது _ இராணு-வத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். இதில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்கள்மூலம் இது கிடைத்திருக்கிறது. சிறுபான்மை-யினரைத் தீர்த்துக் கட்ட இராணுவ வெடிமருந்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவர் மகாராட்டிர மாநிலம் நாசிக் நகரில் இராணுவக் கல்லூரி ஒன்றையும் நடத்திக்கொண்டும் வருகிறார். இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவின் முப்படை-களிலும் ஊடுருவியுள்ளனர்.

இந்த இராணுவக் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு வன்முறைப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது முதற்கொண்டு, எப்படிக் கையாள்வது என்பதுவரை இங்குப் பயிற்சி!.

இந்தியாவை இந்து மயமாக்கு _ இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்று இந்துத்துவா கும்பல் குரல் கொடுத்துவரும் பின்னணியையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

பாரதீய ஜனதா தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது இராணுவத்திலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டனர். விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அப்பொழுதே இந்தக் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியதுண்டு.

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர் என்றால், இதன் பின்னணி எவ்வளவு ஆழமானது _ பலமானது _ பயங்கரமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!

மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திர-தாரியான இராணுவ அதிகாரி புரோகித் என்ற பார்ப்பனர் இசுரேல் நாட்டின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக இந்துத்துவா போட்டி அரசு ஒன்றை நிறுவுவதுவரை திட்ட-மிட்டி-ருந்தனர் என்றால், இவர்கள் எத்தகைய சதி-காரர்-கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்கள் கையாண்ட மடிக்கணினியில் இவையெல்லாம் பதிவாகி இருந்தன.

இந்த சதிகாரர்கள்மீது 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தயார் செய்வதில் முதன்மை வகித்தவர் ஹேமந்த் கார்கரே என்ற காவல்துறை அதிகாரி ஆவார். ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பலின் ஆணிவேர் வரை சென்று அலசி எடுத்து அறிக்-கையைத் தயாரித்த இந்த அதிகாரிதான் மும்பை தாஜ் ஓட்டல் தாக்கப்பட்ட கலவரத்தில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள்கூட காவல்துறை அதிகாரி கார்கரே கொல்லப்பட்டதன் பின்-னணியில் சதியிருக்கிறது_ அது விசாரிக்கப்பட-வேண்டும் என்று சொன்னார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் 11 பேர்கள்மீதும் மோக்கா என்னும் மகாராட்டிர அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இவர்கள்மீதான வழக்கு நாசிக் நீதிமன்றத்திலிருந்து மும்பை மோக்கா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஓர் அதிர்ச்சியான செய்தி _ மும்பை மோக்கா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக இந்தப் பதினோரு பேர்கள்மீதான குற்றப் பத்திரிகையை நிராகரித்துவிட்டது.

இந்த அதிர்ச்சி மிகுந்த ஆணையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராட்டிர தீவிரவாத தடுப்புக் காவல்படை மேல்முறையீடு செய்தது.

மோக்கா சட்டத்தின்கீழ் மாலேகான் குண்டு-வெடிப்புக் குற்றவாளிகள் மீது அரசு எடுத்த நட-வடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி _ சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியது.

சிறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இந்தக் கும்பல் மீண்டும் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட உள்ளனர்.

இந்துத்துவா காவிக் கும்பல் மிகப்பெரிய சதிப் பின்னணியோடு (வெளிநாட்டுச் சக்திகளுடன் கூடிய தொடர்-போடு) செயல்பட்டு வருகின்றன என்பது_ மாலே-கான் குண்டுவெடிப்பு மீதான விசாரணை வெளிச்-சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இராணுவத்துறை, காவல்துறை, நீதித்துறை வரை ஊடுருவியுள்ள இந்தக் கும்பலை சட்ட ரீதியாக ஒரு பக்கத்திலும், பிரச்சார ரீதியாக சமூகத்தில் இன்னொரு பக்கத்திலும் ஒடுக்க-வேண்டியது மிகவும் அவசியமாகும். ------விடுதலை -22-7-2010

தமிழ் ஓவியா said...

மோகன் பகவத்தின் முனை முறியாப் பொய்கள்!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.

காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?

பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?

இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?

இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?

இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!

சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?

தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!

(மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)

பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!

வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.

(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)

மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.

(மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)

இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!

வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா? 20-10-2010

தமிழ் ஓவியா said...அசோக் சிங்கால் பேட்டி

அசீமானந்தர், குஜராத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மதமாற்றத்தை அதிகம் தடுத்தவர். அவரை எப்படியாவது முடக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது சோனியா அரசு. அதற்கு ஏற்ப கைது செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிக்கிற விவரம் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க முடியாத அளவுக்குத் திணறுவார்கள். இன்னொரு பழமொழியும் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

பிடிச் சோற்றில் பூசனிக்காயை மறைக்கப் பார்க்கும் மோசடி இது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிடும். அதுவும் காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டாம் - அப்படி அவர் நம்புகிறாராம்.
எந்த எல்லைக்கும் சென்று புளுகுவது, உண்மைகளை திரிப்பது என்பது இந்தத் திரிநூல் கூட்டத்துக்கு கைவந்த கலையாகும்.

அந்தப் பாணியிலேயே இந்த வி.எச்.பி. முதியவரும் மனம் போன போக்கில் பிதற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர், சங்பரிவார்க் கூட்டத்தினர்கூட ஜெயேந்திர சரஸ்வதியின் கைதுக்கு சோனியாதான் காரணம் என்று சொன்னதில்லை.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்ததுகூட கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்கள் வேறு எப்படிதான் சொல்வார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

அய்தராபாத் மக்கா மஸ்ஜித் 2007 மே 17ஆம் தேதி குண்டு வெடிப்புக்கு இலக்கானது. ஒன்பது பேர் பலியாகினர்.

தொடக்கத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம், சிமி இயக்கத்தைச் சேர்ந்த முசுலிம் தீவிரவாதி கள்தான் என்று 70 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அதன்பிறகுதான் காவி தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மிக முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோஷி, அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் சங்பரிவார்க் கும்பலாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான அசீமானந்தர் என்ற சாமியார் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்தியன் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) 164ஆம் பிரிவின்கீழ் மாஜிஸ்டிரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்தச் சாமியார் உண்மைகளைக் கக்கிவிட்டார். இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

ஆனால் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகிறார் - அசீமானந்தர் ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி அவரிடம் தவறாக வாக்குமூலம் வாங்கி விட்ட தாகக் கரடி விடுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்த, மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அந்துலேயே கூறிடவில்லையா?

“Who Killed Karkare?’’ என்னும் விரிவான நூலினை மகாராட்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரப் எழுதியுள்ளாரே, இதுவரை மறுப்பு உண்டா?

தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுடப்படுவதற்குமுன்புகூட தம்மிடம் கூறியதாக திக் விஜய்சிங் அடித்துச் சொல்லியுள்ளாரே! கார்கரேயின் மனைவிக்கும் அந்த சந்தேகம் இருந்து வருகிறதே!

அஜ்மீர் தர்கா, அய்தராபாத் மெக்கா மசூதி, மகாராட்டிர மாநில மாலேகான்குண்டு வெடிப்பு - இவை மூன்றுக்கும் காரணமானவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மத்தியப் பிரதேச மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அத்தனைப் பேரும் இந்துத்துவா காவிக் கும்பல்காரர்கள் என்பதற்கான தடயங்கள் (உரையாடல்கள் உள்பட) வலுவாகக் கிடைத் துள்ளனவே.

இவற்றிற்குப் பிறகும்கூட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் காவிக் கும்பலின் கற்புக்கு உத்தரவாதம் கொடுப்பது சொல்லுபவர்களின் யோக்கிய தாம்சத்தின் முகத்திரையைத்தான் கிழித்துக் காட்டும்.

காந்தியாரைப் படுகொலை செய்தவன் இந்து அல்ல - முசுலிம்தான் என்று பிரச்சாரம் செய்த கும்பல் அல்லவா! நாதுராம்கோட்சே என்ற அந்தக் கொலைகார மராட்டிய பார்ப்பான் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கவில்லையா?

அதே ரகத்தில்தான் சிங்கால் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் பொய் முகங்களை மக்கள் அடையாளம் காண்பார்களாக! 1-2-2011

தமிழ் ஓவியா said...


கல்கி


கேள்வி: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்குப் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என்று அத்வானி கூறியி ருப்பதுபற்றி...

பதில்: சவுகானை எதற்குக் கொம்பு சீவி விடுகிறாரோ அத்வானி? ஏற்கெனவே நாடெங்கும் நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு ஆகியவை பற்றி நல்ல அபிப்ராயம் உருவாகிக் கொண்டு வரும் வேளையில் இத்தகைய பேச்சு, குழப்பத்தையே ஏற்படுத்தும். மோடியின் சில செயல்பாடுகள் குறித்து அத்வானிக்கு ஆதங்கம் உண்டு. ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையில் அத்வானியின் தனிப்பட்ட கருத்து (நியாயமிருப்பினும்) கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது. அளந்து பேசுவதே இன்றைய தேவை.

- கல்கி 16.6.2013 பக்கம் 14

பார்ப்பனர்களின் இந்தப் பார்வை சுட்டுப் போட்டாலும் நம் மக்களுக்கு வரவே வராது. எல்.கே. அத்வானி என்ன கைசூப்பும் பாப்பா குழந்தையா? எத்தனை ஆண்டு அரசி யலில் கொட்டை போட்டுப் பழம் தின்றிருப்பார்? அவருக்குப் போய் கல்கி அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

நரேந்திரமோடியின் திறமைகள், நிர்வாகத் திறன், செல்வாக்கு நாட் டில் கொடி கட்டிப் பறக் கிறதாம்!

பார்ப்பனர்களும், சங்பரிவார்க் கும்பலும் திட்டவட்டமான வகையில் நயவஞ்சகமாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருவதைக் கவனிக்க வேண்டும்.

மோடியின் திறமைகள் நிர்வாகத் திறன்களைப் பெரிது படுத்திக் காட்டி, வெளிச்சத்தை அதிகமாகக் காட்டி, வெகு மககளின் கண்களைக் கூசச் செய்து அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டைப் பையில் இருப் பதைத் திருடும் யுக்தியைக் கவனிக்கத் தவறக் கூடாது.

ஹிட்லர்கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஜெர்மனியில் கொடி கட்டிப் பறக்கவில்லையா? இடி அமீன் கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி பரிபாலனம் செய்யவில்லையா?

எட்டு லட்சம் கம்யூனிஸ் டுகளைக் கொன்று குவித்த சுகார்தோகூட 30 ஆண்டுகள் ஆட்சிக் கட் டிலில் ஏறி அட்டகாசம் செய்யவில்லையா? இவர்கள் நம்பும் மகாபாரதத்தில்கூட தாயாதி களைக் காட்டுக்கு அனுப்பி விட்டு துரியோ தனன் 14 ஆண்டுகள் ஆட்சி புரியவில்லையா?

திறமையும் நிர்வாகமும் எதற்குப் பயன்படுகிறது? குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்ப் புட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவிற்கு வரு கிறது.

இரண்டாயிரம் சிறு பான்மை மக்களைப் படு கொலை செய்வதுதான் அவாளின் அகராதியில் நிர்வாகத் திறனோ!

பார்ப்பனர்களிடம் பாடம் பயிலுங்கள் தமிழர்களே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கோயில், திருடர்களின் குகை!


விபச்சார விடுதி கோயில் என்று காந்தியார் கூறியது ஒருபுறம் இருக்கட்டும் (தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 533) கோயிலை திருடர்களின் குகை என்று சொன்னவரின் வாயில் சர்க்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் - பேரளம் பாதையில் திருநள்ளாறு என்னும் கோயில் ஒன்று இருக்கிறது.

சனி தோஷம் போக்குவதற்கு ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டி லிருந்து மட்டுமல்ல; இந்தியாவின் எல் லாப் பகுதிகளிலிருந்தும் வருவதுண்டு.

சனி என்றால் என்ன? அது ஒரு கிரகம் தானே அது எங்கே தொலை கிறது என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது; அப்படிக் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனம் - நாத்திகவாதம்.

இந்தக் கோயிலுக்குப் பணக்கார பக்தர்களைக் கூட்டி வர கோயில் புரோக்கர்கள் உண்டு.

பணக்காரர்களுக்குப் பணம் ஒரு பொருட்டா! போற கெதிக்கு நல்ல கெதி கிடைக்க வேண்டும்; பரலோகம் போக வேண்டும். என்றால் பணம் ஒரு அற்பம் தானே! இது போதாதா பார்ப்பனப் புரோக்கர்களுக்கு அந்த முட்டாள்தனத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள்.

வார இதழ் ஒன்றில் திருநள் ளாறுக்கு வரும் பக்தர்களின் பொருள்கள் திருடு போவதுபற்றி விலாவாரியாக வரிந்து தள்ளியுள்ளது. அது ஒன்றும் பகுத்தறிவு இதழும் அல்ல - திருநள்ளாறுக்கு வரும் பணக் காரப் பக்தர்கள் தங்கள் காருக்குள் பணம், நகை, டேப்ரிக்கார்டர் போன்ற பொருள்களை வைத்து விட்டு காரைப் பூட்டிவிட்டு, திருநள்ளாறு கோயிலில் உள்ள நளன் குளத்தில் குளிக்கச் செல்லும் போது காரை கள்ளச்சாவி போட்டுத் திறந்து பொருள்களைத் திருடிச் சென்று விடுகிறார்களாம்.

சனிக்கிழமைகளில் மட்டும் கிட்டத்தட்ட நூறு பவுன் திருடு போகிறதாம். சனி பகவானை தரிசித்து வரும் போது பொருள்கள் திருடு போவது குறித்துப் காவல் துறையினருக்குப் புகார் செய்வதுகூட ஒரு வகை குற்றம் - தோஷம் என்று கருதுகிறார்களாம் - இது போன்ற முட்டாள்தனம் இருக்கும் வரை திருடர்கள் பாடு கொண்டாட்டம் தானே

இது ஒருபுறம் இருக்க கோயில் அர்ச்சகர்கள் தங்களுக்கென்று தனி இணையதளம் (வெப்செட்) வைத்துக் கொண்டு தொழிலை ஜாம் ஜாமென்று நடத்துகிறார்களாம்.

கோயில் பூனைகள் என்று நாகர்கோயில் வழக்குரைஞர் சிதம் பரம் அவர்கள் நூல் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் வண்டி வண்டியாக அர்ச்சகப் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனமும், ஒழுக்கக் கேடும், திருட்டுத்தனமும் கொட்டிக் கிடக்கும்.

கோயில் சாமி திருட்டுகள், சாமி நகை திருட்டுகள் எல்லாம் அர்ச்சகர் பார்ப்பானின் தொடர்பு இல்லாமல் நடப்பதில்லை.

தமிழ்நாவலர் சரிதை எனும் ஒரு நூல் உண்டு. அதில் ஒரு தகவல்:

விஜய நகர மன்னர் ஆட்சிக் காலம், மன்னன் கிருஷ்ண தேவ ராயன், திருவாரூர் தியாகராசர் கோயிலில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளுள் இரண்டு சிலைகளை நாகராஜ நம்பி என்ற பார்ப்பான் திருடி விற்று விட்டான். இதை அரசனிடம் சொல்ல அமைச்சர்கள் பயந்தனர். ஒரு புலவர் கிளி ஒன்றுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்து, அதன் மூலம் மன்னனுக்குத் தெரியப்படுத்தினார். மன்னன் உண்மையை அறிந்து திருட்டுப் பார்ப்பானுக்குத் தண்டனை கொடுத்தான்.

அந்தப் பாடல் வருமாறு: முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார். அவரில் இந்நாள் இரண்டு பேர் ஏகினார் - கண்ணன்

நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராஜநம்பி இருக்கின்றான் கிருட்டினராயா

என்பதுதான் அந்தப் பாடல்.

ஆக, கோயில் திருடர்களின் குகை என்பது மட்டும் உறுதியாகி விட்டது கிருட்டினராயன் காலத்துத் திருவாரூர் தியாகராசன் கோயில் முதல் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் வரை.
பக்தர்களின் பொருள்களைக்கூட காப்பாற்றிக் கொடுக்க முடியாத சனீஸ்வரன்தான் பக்தர்களின் தோஷத்தைப் போக்கப் போகிறானாம்!

வாயாலயா சிரிக்க முடியும்?

இந்தத் திருநள்ளாறு கோவி லுக்குத்தான் கருநாடக முதலமைச் சராக இருந்த எடியூரப்பா குட்டி யானையை தானமாக கொடுத்தார். இன்றைக்கு அவர் அரசியலில் கண்ட பலன் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும்.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்


தி.க., தி.மு.க., மற்றும் வர்த்தக அமைப்புகள் பங்கேற்றன

தூத்துக்குடி, ஜூன் 12- தமிழர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான, தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டையே வளப்படுத்தக் கூடிய, தமிழ்நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித் தரக் கூடிய மாபெரும் திட் டம், தமிழகத்தினுடைய தொழில், வர்த்தகம் பெருகக் கூடிய அள விற்குப் பயன்படக் கூடிய திட்டம்.

கப்பல்களின் பயண தூரம், நேரம் பெரு மளவு குறையும் என்று சிலாகிக்கப்படுகின்ற திட்டம், தமிழகம் மற் றும் அண்டை மாநிலத் துறைமுகங்களின் சரக் குக் கையாளும் திறனை அதிகரிக்கும் என்கின்ற அளவிற்குப் பாராட்டப் படுகின்ற திட்டம்.

ராமேஸ்வரம் அல் லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகங்கள் உரு வாகும் என்றெல்லாம் கூறப்படுகின்ற திட்டம். கடல் சார் பொருள் வர்த் தகம் பெருகி மீனவர் களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உய ரும் என்று எல்லோரா லும் கூறப்படுகின்ற திட் டம் சேது சமுத்திர திட்டம்.
அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து நிறைவேற்றப் பட்ட திட்டமாக இது அமைந்து விடும் எனும் பொறாமை உணர்ச்சி காரணமாகவும், அரசி யல் காழ்ப்பணர்ச்சி காரணமாகவும் தான் நாட்டுக்கு நல்லது செய் யும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத் திற்குச் சென்று அந்தத் திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம் கற் பனை பாத்திரமான ராமன் பெயரை சொல்லி அது ராமர் கட்டிய பாலம் என்று சொல்கிறார்கள்.

கற்பனை பாத்திர மான ராமன் பெயரைச் சொல்லி இந்த நல்ல திட்டத்தை முடக்கு வதை கண்டித்தும், விரைவில் சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றகோரி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சி கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் என தி.மு.க. தலைவர் கலைஞர் தனது 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2013) விழா சென்னை பொதுக் கூட்டத்தில் அறிவித்தி ருந்தார்.

தூத்துக்குடியில் கடையடைப்புப் போராட்டம்

இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.க., திமுக., உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள தி.க., திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூ.,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல் வேறு வர்த்தக அமைப் புகள் இணைந்து சேது கால்வாய் திட்டத்தை ஆதரித்து, தூத்துக் குடியில் புதிதாக சேது கால்வாய் திட்ட போராட்ட குழு துவக் கப்பட்டது.

இந்த குழு முடி வின்படி, சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று (11.6.2013) கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம், போல்பேட்டை, குறிஞ்சிநகர், டபிள்யூ ஜி.சி. சாலை, பாளை சாலை, அண்ணா நகர், முத்தையாபுரம், நந்த கோபாலபுரம், எட்டை யபுரம் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி உள் ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ஒரு சில ஆட்டோ நிறுத்தங் களில் ஆட்டோக்கள் ஓடவில்லை.

அடைக்கப்பட்டிருந்த கடைகளை திறக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கடைகளைத் திறக்கு மாறு உத்தரவிட்டனர். இருப்பினும், அதை மீறியும் பல இடங்களில் கடைகள் அடைக் கப்பட்டன. சில இடங் களில் காவல்துறையினர் மற்றும் ஆளுங் கட்சியின் மிரட்டலால் 11 மணிக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட் டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி, தூத்துக்குடியில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி!


நீரிழிவு - சர்க்கரை நோயாளி களுக்கு மிக நல்ல செய்தி, நாளேடு களில் வந்துள்ளது.

இன்சுலின் என்பது நமது உடலின் கணையத்தில் சுரக்காததினால்தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக, நீரிழிவு Diabetes நோயாக மாறி - பிறகு நாளடைவில் அதுவே உயிர்க் கொல்லியாகவும் மாறி விடுகின்றது!

இன்சூலினும், குளுக்கோனும் கணையத்தில் உற்பத்தியாகின்றன.

இன்சுலினை பீட்டா செல்களும், குளுகோனை ஆஃல்பா செல்களும் உற்பத்தி செய்கின்றன.

கணையம் பாதிக்கப்பட்டாலும் அல்லது கணையத்தின் சுரக்கும் தன்மை குறைந்தாலும் சர்க்கரை நோய் ஒருவரைத் தாக்கக் கூடும்!

அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவு சர்க்கரையாக மாறி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை தான் மனிதர்களுக்கு சக்தியை (Energy) அளிக்கிறது!

எஞ்சியுள்ள சர்க்கரை உடலில் தங்கு கிறது. இந்த எஞ்சிய சர்க்கரையைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் ஹார்மோன் குளுகோன் என்ற இரண்டு சுரப்பிகள் பணியாற்றுகின்றன.

இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஹோவோர்கா கடந்த 5ஙூ ஆண்டுக ளாக முயற்சி செய்து வந்தார். தற்போது அவரது ஆராய்ச்சி வெற்றியடைந் துள்ளது!

அவர் ஒரு செயற்கை கணையத்தை உருவாக்கியிருக்கிறார்.

செயற்கை கணையத்தை முதலில் இரவு நேரங்களில் நான்கு நோயாளி களுக்குப் பொருத்திப் பார்த்தார்கள்; அது வெற்றிகரமாக, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி இயங்கியது கண்டு மெத்த மகிழ்ச்சியுற்றனர்.

அதனை மேலும் 24 பேர்களுக்கு செயற்கை கணையத்தைப் பொருத்தி யுள்ளனர்!

அதுவும் வெற்றிகரமாகி விட்டால் - பெரிதும் நீரிழிவு நோய் இல்லாமலேயே ஆகிவிடும் என்று நம்புகிறார்கள்!

இது மிகப் பெரிய மருத்துவ சாதனையாகக் கருதப்படக் கூடும்.

ஏனெனில் சர்க்கரை நோயின் கொடுமை ஒன்று இரண்டல்ல; பல வகைப்பட்டது.

எனவேதான் இதனை ஒரு சந்திப்பு நோய் Diabetes is a Junction disease) என்று சர்க்கரை நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுமேயானால், அது (Stroke) ஸ்ட்ரோக் - பக்கவாதம், கண்பார்வை இழத்தல், சிறுநீரகப் பழுது, இதய நோயான மாரடைப்பு இவை மூலம் அது உயிரைப் பறிக்கும் நோயாக ஆகி விடுகிறதே!

மருத்துவ விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் எவ்வளவு அதியற்புத சாதனைகளை அனுதினமும் படைத்து வருகின்றனவே!

நீரிழிவு நோய், புற்று நோய் - இந்த இரண்டுக்கும் வெற்றிகரமான மருந்து களும், சிகிச்சைகளும் மருத்துவத் துறையில் வந்து விட்டால், உலக மனித குலம் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு நல் வாழ்வு வாழுமே!

நண்பர்களே, இந்தக் கண்டு பிடிப்புகள் வந்து விட்டன என்பதால், சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள்!

எப்போதும் அளவோடு உண்டு

நலமோடு வாழுங்கள் -

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, இலையில் - தட்டை - விட்டுவிட்டு எழுந்து கை அலம்பி மகிழுங்கள்.

அதுவே நல்ல ஆரோக்கிய முறையாகும். veramani

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வு


நமது அரசியல் வாழ்வு என் பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திர வதைக்கு ஆளாகத்தான் நேரிடும். - (விடுதலை, 29.5.1973)