Search This Blog

30.6.13

பக்தர்கள் பதறாமல் சிந்திப்பார்களா? சிலை வணக்கம் என்பதுபுத்தி குறைந்தவர்களுக்குத்தான்!


ஆண்டவனைத் தரிசிக்கப் போனவர்கள் அலறினார்கள்! கடவுள் கடாட்சத் துக்காக வேண்டி ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டிப் பயணம் செய்த பக்தர்கள் பதறினார்கள்.

யாத்திரை சென்றவர்கள் பல லட்சம்; பலியானவர்கள் பல்லாயிரம் என்னும் கொடுஞ் செய்தி மண்ணையே உலுக்குகிறது.

பிணங்கள்ஆற்றில் அடித்துச் செல்லுவதை நேரில் பார்த்தோம். எங்களைச் சுற்றி எங்கும் பிணங்கள்! பிணங்கள்!!. பிணங்கள் மீதே படுத்துக் கிடந்தோம்! எங்கள் உடைமைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து இழுத்துக் கொண்டே போயின!

பிணங்கள்மீது இருந்த துணிமணிகளைப் பறித்து நாங்கள் உடுத்திக் கொண்டோம்!

குருதியை உறையச் செய்யும் செய்திகள் கொத்துக் கொத்தாக! ஒவ்வொரு நாளும் வடக்கே கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்றவர்களின் நிலைதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக ஏடுகளைப் புரட் டினாலும், தொலைக்காட்சிப் பெட்டி களைத் திருகினாலும் அலை அலையாக இந்த அவலச் செய்திகள்தான்.
சிவனின் சடையிலிருக்கும் கங்கை நதியே கரை புரண்டு மக்களைக் காலி செய்து விட்டது -_ ஏன் சிவன் கோயில் களையே மண்மூடச் செய்துவிட்டது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளுக்கு மக்கள் பக்தர்கள் தலை வைத்துப் படுக்க முடியாதாம்.

ஏனிந்த நிலை? வானிலை அறிக்கைகள் முன் கூட்டியே அறிவிக்கப்ப டவில்லையா? இதற்குமுன் எந்தக் கால கட்டத்திலும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் மொழியில் ருத்ரதாண்டவம் நடைபெற்றது ஏன்?

சுற்றுச்சூழல் பாதிப்புதான் இதற்குக் காரணம் என்று அறிவியலாளர் சொல்லுகிறார்கள். காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் புதிது புதிதாகக் கட்டப்படுகின்றன. மலைகளை உடைத்து மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தியாதி _- இத்தியாதி இயற்கை அழிப்பால் ஏற்பட்ட இழப்பு என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானம் பகர்கிறது.

இதற்கிடையே பக்தி வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பதற்றம் _ பகீர் என்று கலக்கம்.

யாத்திரை சென்ற இடங்களில் உள்ள பகவான்கள் பற்றிக் கட்டுக்கட்டாக பிர தாபங்கள் அள்ளிவிடப்பட்டுள்ளனவே. அவற்றை நம்பித்தானே பக்தர்கள் படையெடுக்கின்றனர். கிழடுகள் கூட அல்லவா கிளம்பி விட்டனர்.
பாவங்களை - எல்லாம் கரையேற்ற பகவானைத் தேடியல்லவா சென்றுள்ளனர். பகவான் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தம்மை நாடி வந்த பக்தர்களையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை.
மக்கள் உயிர் இப்படி மலிவாகப் பறி போனது கண்டு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் பதைபதைக்கின்றனர்.
இல்லாத கடவுளை நம்பி இன்னு யிரை இழந்து விட்டனரே என்ற எண் ணம் நம் நெஞ்சங்களை அழுத்துகிறது.

தன் காலை முதலை கவ்வியபோது ஆதிமூலமே! என்று கஜராஜனாகிய யானை அலறியபோது, பறந்தோடி வந்து சங்கு சக்கரத்தை ஏவி முதலையைக் கொன்று தன் பக்தனான யானையைக் காப்பாற்றினான் விஷ்ணு என்றெல்லாம் எழுதி வைத்துள்ளனரே

துரோபதையின் மானத்தைக் காப்பாற்ற பீஸ்பீஸாகத் துணிகளை வழங்கிய கிருஷ்ண பகவான் உத்தரகாண்டில் ஆடைகளை இழந்து அம்மணமாக நின்றவர்களுக்கு ஆடைகளை வழங்கிட ஓடி வரவில்லையே ஏன்?

எத்தனை எத்தனை அவதாரம் எடுத்து தன் பக்தர்களை எல்லாம் பகவான் காப்பாற்றினார் என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து வைத்துள் ளனரே _- அந்தப் பகவானின் பாதார விந்தங்களைத் தேடிப் பக்திப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் எல்லாம் பதறப் பதற மாண்டு மடிந்துள்ளனரே -_ அந்த மகேசுவரன்கள் எல்லாம் உதவிக் கரம் நீட்டவில்லையே! இராணுவ வீரர்கள் தானே தங்கள் உயிரையும் பணையம் வைத்து உதவிக்கு ஓடோடி வந்து பல்லாயிரக்கணக்கான பகத்ர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த நிலையில் உயிருக்கு இறுதி கெடு வந்த நேரத்தில் எத்தனை எத்தனைக் கடவுள்களை அழைத்திருப்பார்கள்? எத்தனைக் கோவிந்தாப் போட்டு இருப்பார்கள்.

எத்தனை சிவசிவா குரல் கொடுத் திருப்பார்கள்? கேதார்நாத்தில் குடிகொண் டிருந்த கடவுள் கேளாக் காதினனாக இருந்தது ஏன்? பத்தரிநாத் பகவான் பார்வை பக்தர்கள் பக்கம் பாய மறந் ததேன்? கங்கோத்ரி கடவுள் தன் கடாட் சத்தைக் கொட்டாமல் எங்கே போனான்? யமன் வந்து தன் பக்தர்களைப் பாசக் கயிறு போட்டு இழுத்தபோது யமு னோத்ரி ஈசன் எங்கு சென்றான்? எங்கு சென்றான்? இந்தக் கேள்விகளைப் பகுத்தறிவுவாதி எழுப்புவது எதையும் குத்திக் காட்டி ஆனந்தமாய்த் துள்ளிக் குதிக்கவல்ல.

பக்தி என்னும் பெயரால் பகுத்தறிவை இழந்ததால் இப்படிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதாபமாக மாண்டு போனார்களே, -இவற்றைப் பார்த்த பிறகா வது நம் மக்களுக்கு நல்ல புத்தி வராதா? வரக் கூடாதா? என்ற நல்லெண்ணத்தின் உந்துதலால் தான் எழுதுகிறோம் - நிகழ்வுகள் தரும் நெற்றியடிப் பாடங் களைப் படிக்கத் தவறினால், இன்னும் என்னென்ன இழப்புகளை எதிர்காலத்தில் சந்திக்க நேருமோ என்ற தொலை நோக்கோடு எழுதப்படுபவைதான் இவை.

கொண்டாட்டத்தோடு அல்ல  - குமுறும் நெஞ்ச அலைகளின் துயரக் குரல் இவை.

இதற்கு முன்பும் கூட இதுபோன்ற இழப்புகள் துயரங்கள், விபத்துகள் நடந் திருக்கின்றன.

அவற்றிற்குப் பிறகும்கூட இந்தப் பக்திப் பிடியில் சிக்கிய மக்கள் திருந்திய பாடில்லையே என்று தீராத வேதனையின் வெளிப்பாடுதான் இவை.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை இப்பொழுதாவது உணர வேண்டாமா என்ற வேண்டுகோள்தான் இந்த எழுத்துகளுக்கு அடிப்படை!
சர்வசக்தி என்பதும் சர்வப் பொய்; தயாபரன் என்பதும் தரை மட்டமான பொய்; கடவுளை நம்பினால் கைவிட மாட் டான் என்பது கடைந்தெடுத்த பொய் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட் டினாலாவது சுதாரித்துக் கொள்ள மாட் டார்களா? என்ற நல்லெண்ணத்தோடு கூறப்படுவதுதான் இது.

சிலைகளை வணங்குவது சீலமா?

திக்குவாய் குறைதீர திருப்பந்துறை முருகப் பெருமான். (மதுரை மணி 10.11.2007).

கணித அறிவை மேம்படுத்த இன்னம்பூர் இறைவன். (குங்குமம் 3.5.2007).
குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி (நெல்லையில்).

திருமணம் கைகூட திருவீழிமிழலை  அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) (தினத்தந்தி இலவச இணைப்பு - 27.7.2010).

வழக்குகளில் வெற்றி பெற சொல்லங்கு வெட் டுடையார் காளிகோயில் சிவகங்கை. (ராணி 16.5.2010).

வீடு கட்ட உதவும் கடவுள் -_ திருப்புகழூர்.

அக்னீஸ்வரர் (குங்குமம் 16.7.2009).

இழந்த பொருளைப் பெற - தஞ்சபுரீஸ்வரர் கோயில் _ திருவையாறு 

                                     -------------------------(தினத்தந்தி ஆன்மீக மலர் 26.2.2010).

இப்படியெல்லாம் ஏடுகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன; ஆன்மீக சிறப்பு இதழ்களில் வண்டி வண்டியாக எழுதித் தள்ளு கிறார்களே இவையெல்லாம் உண்மைதானா?

கடன் தீர்ப்பதிலிருந்து கல் யாணம் ஆவது வரை குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று கும்பிடு தண்டம் போடுவதன்மூலம் நிறை வேறும் என்றால் மனித முயற்சிக்கு இடம் உண்டா? அரசுகளின் தேவைதான் என்ன?

இப்படி எல்லாம் நம்பி கோயில் கோயி லாகச் சென்று கண்ட பலன் என்ன? உத்தரக் காண்டில் உள்ள கோயில்களுக்குச் சென் றவர்களும் இவை களுக்கு மேலான எதிர் பார்ப்புப் பேராசை களுடன் தானே?

பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது பக்திக்கும், அனுப வத்துக்கும் ஒவ்வாததை ஒருக்காலும் நம்பிப் பின்பற்ற மாட்டான். கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அனேகமாய் பேராசையினாலும், பயத்தினாலும் ஏற்படுகிறதேயல்லாமல் உண்மையைக் கொண்டதன்று
என்று கூறும் தந்தை பெரியாரின் சிந்தனை இந்த விடயத்தில் துல்லியமானதே!
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத் துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்ப மாட்டான் (விடுதலை 17.10.1962) என்றும் தந்தை பெரியார் கூறினார்.

கோயில் கோயிலாக திரிபவர்கள் நேர்த்திக் கடன்களைக் கழிப்பவர்கள் மனத்தில் இருப்பதெல்லாம் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்; மக்கள் எல்லாம் சுபீட்சமாக வாழ வேண்டும் என்றா வேண்டுதல் செய்கிறார்கள்? மாறாக தான் தனது குடும்பம் இவற்றின் நலன் எனும் பேராசையைத் தாண்டி இருப்பதில்லையே! இதனைத் தான் தந்தை பெரியார் மிகக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கோயிலுக்குச் செல்லுவது -_ சிலை களைக் கும்பிடுவதில் கூட ஆன்மீகத் துக்குள்ளேயே பல்வேறு கருத்துகள் உண்டு.

உத்தர கீதை

அக்நிரதேலோத் விஜாதீநாம்
முநிநாம் ஹிருதிதைவதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸமதர்சிந

பொருள்: துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம். 

ஸ்கந்தபுராணம்
ஞானயோக காண்டம்
நாடி சத்திராத்தியம்
தீரத்தே தாதையக்ஞே
காஷ்டே பாஷாணகேபதா
சிவம் பஸ்யதி
மூடாத்மாசி லோதே ஹெபர் திஷ்டித
மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும் தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும் கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக்கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக்கிறார்.
சாகதபலசன சுலோகா
அபஸுதேலாப நீஷநாம்
காஷ்டலோஷ்ட்டேஷீ மூடாராம்
யுக்தஸ் யாத்மநி தேலதா
சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில்; சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில்; முட்டாள்களுக்குத் தெய்வம் கல்லிலும், கட்டையிலும்; யோகி களுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே
மகா நிர்வாணா
எவம்குணா நுஸாரேண ரூபாணி
வவிதாநி சக்ல பிதாநி
ஹிதார்த்தாய பக்தாநி
அல்பமே தஸாம்
இவ்வித குணங்களை யனுசரித்துப் பலவித உருவங்கள் அற்ப புத்தியுடை யவர்களுக்காகக் கற்பிக்கப்பட்டன.
வால்மீகர் சூத்திரஞானம்
தாளென்ற உலகத்தில் சிறிதுபேர்கள் சடைப்புலித்தோல் காஷாயம் தாவடம்பூண்டு
ஊளென்ற சிவபூசை தீட்சையென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோமென்பார்
கானென்ற காட்டுக்குள்ளே அலைவார்கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே
நில்லென்ற பெரியோர்கள் பாஷையாலே
நீடுலகம் தனக்குள் நாலுவேதம்
வல்லமையாம் சாஸ்திரங்கள் இருமூன்றாக
வயிறு பிழைக்கப் புராணங்கள் பதினெட்டாகக்
கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந்தங்கள்
காட்டினர் அவரவர் பாஷையாலே
தொல்லுலகில் நாற் சாதி
அநேகஞ்சாதி தொகுத்தார்கள்
அவரவர்கள் பிழைக்கத்தானே

சிலை வணக்கம் என்பதுபுத்தி குறைந்தவர்களுக்குத்தான் என்று ஆன்மீக சாத்திரங்களே கூறு கின்றனவே!

உத்தரகாண்டுக்கும் இமய மலையின் அடிவாரத்துக்கும் செல்லுவது - கேதார்நாத் பத்ரிநாத் என்று யாத்திரை சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ள கோயில் களில் உள்ள சிலைகளைக் கும்பிடுவது எல்லாம் அற்பப் புத்தியுடையது என்று கூறப் பட்டுள்ளதே இதற்கு என்ன பதில்?
இந்த சாத்திரங்கள் சமாச்சாரங்கள் எல்லாம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் எழுதி வைத்தது இல்லையே! ஆன்மீக கொழுந்துகள் தானே எழுதி வைத்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் துவிஜாதி என்று கூறப்படும் பூணூல் மேனிகளான பார்ப்பனர்களுக்குக் கட வுள்கள் அக்னிதானே - அப்படி இருக்கும் போது இவர்கள் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை தேவை!

பக்தர்களைப் பகவான் காப்பாற்றுகிறானா?

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலியாவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவ்வப்போது நடப்பதுதான்.

அந்த நேரத்தில் கொஞ்சம் சலசலப்பு அதற்குப்பின் - வழக்கத்தால் மாடுகளும் செக்குச் சுற்றும் எனும் தன்மையில் பக்த யாத்திரை கிளம்பி விடுவார்கள்.
இவ்வளவு அமளிகள் -_ அவலங்கள் நடத்தும் பத்ரிநாத் பனிலிங்கத்தைச் சேவிக் கப் பக்தர்கள் பயணம் என்று சேதி வரு கிறதே -_ எங்குப் போய் முட்டிக் கொள்ள?

எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பட்டியல்:

இந்தியாவில் நடந்த பெரிய நெரிசல்கள்!

ஏப்ரல் 14, 1986 : அரித்வார் பாலத்தில் நெரிசல்: 46 பேர் சாவு.
நவம்பர் 9, 1986 : அயோத்திராமன் கோயில் நெரிசல்; 32 பேர் சாவு.
பிப்ரவரி 18, 1992 : கும்பகோணம் மகாமக விபத்து; 60 பேர் சாவு.
ஜூலை 15, 1996 : உஜ்ஜெய்னி மற்றும் அரித்வார் நெரிசல்; 60 பக்தர்கள் பலி.
ஜுன் 1997 : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கின் போது யாகத் தீப்பற்றி பந்தல் எரிந்து 42 பேர் பரிதாப மரணம்.
1999 : மகர ஜோதியின் போது கூட்ட நெரிசலில் 53 பக்தர்கள் பலி!
ஆகஸ்டு 27, 2003 : நாசிக் கோதாவரி கும்பமேளா நெரிசல்; 41 பேர் சாவு, 150 பேர் காயம்.
சனவரி 2004 : சிறீரங்கம் புரோகிதத் திருமணத்தில் தீப்பற்றி மணமகன் உட்பட 52 பேர் மரணம்.
ஜனவரி 25, 2005 : மராட்டிய மாநிலம் சதாராவிலுள்ள குலபாய் கோவில் நெரிசல்; 340 பேர் சாவு.
நவம்பர் 4, 2006 : பூரி ஜெகந்நாத் கோவில் விழா நெரிசல்: 4 பேர் பலி, 24 பேர் காயம்.
ஆகஸ்டு 13, 2007 : ஜார்கண்ட் வைத்தியநாத் கோவில் நெரிசல்: 11 பேர் சாவு, 30 பேர் காயம்.
அக்டோபர் 14, 2007 : வதோதரா அருகே மாகாளி கோவில் நெரிசல் , 6 பேர் சாவு, 12 பேர் காயம்.
ஜனவரி 3, 2008 : விஜயவாடா அருகே கனக துர்க்கா கோவில் நெரிசல்,  6 பேர் சாவு, 12 பேர் காயம்.
மார்ச் 27, 2008 : மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் கோவில் விழாவில் நெரிசல்: 9 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஜூலை 4, 2008 : பூரி ரத யாத்திரை நெரிசல்; 6 பேர் சாவு, 10 பேர் காயம்.
ஆகஸ்டு 3, 2008 : இமாச்சலப் பிரதேசம் - பிலாஸ்பூர் - மலைக்கோயில் விழா நெரிசல்; 150 பேர் சாவு.

இதற்கெல்லாம் என்ன பதில்?

தன்னை நாடி வந்த பக்தர்களையே காக்க முடியாத கடவுள்மீது சக்தியை ஏற்றி வாய் கிழியப் பேசுவதில் பொருள் இருக்க முடியுமா?

பக்தியின் சாயமும், கடவுள் சக்தியின் நிறமும் வெளுக்க ஆரம்பித்தவுடன் என்ன செய்வார்கள் தெரியுமா?

ஏதோ கடவுள் குற்றம் நடந்திருக் கிறது? இரவில் பக்தர்கள் அந்தக் கோயில்களில் தங்கியதால் கடவுளுக்குக் கோபம் என்று திசை திருப்புவார்கள்?

கடவுளுக்குக் கோபம் வரும்; - தம் பக்தர்களைப் பலி கொள்ளும் என்றால் அதற்குப் பெயர்தான் கடவுளா? என்ற கேள்வி எழும். கருணையே உருவான வன் கடவுள் என்ற கதையெல்லாம் கந்தையாகி விடாதா?

காளஸ்தி கோயில் கோபுரம் நெடுஞ் சாண்  கிடையாக விழுந்தது என்றவுடன், மக்கள் பகவான் சக்தியைக் கேலி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து, அதற்கொரு புதுக்கதை ஜோடித்து விடுவார்கள்.

சாந்தி கழிக்க வேண்டும் என்று கிளப்பி விடுகிறார்கள்; ஏதோ நடக்கப் போகிறது _ அதற்கான அறிகுறி இது என்று கதை கட்டுவார்கள். அதிலும் பார்ப்பனப் புரோகிதக் கும்பலுக்குதான் கொண்டாட்டம் வருமானம்.

கோயில் இருந்தாலும் லாபம், இடிந்தாலும் கொள்ளை லாபம்! இப்படி ஒரு சுரண்டல் தந்திரத்தை உலகில் வேறு எங்கு காண முடியும்?

சிறீரங்கத்தில் வைதீகக் கல்யாணத் தின்போது ஓம குண்டத்தில் தீயால் பந்தல் தீப்பிடித்து மணமகன் உட்பட 52 பேர் பலியானார்கள் என்றவுடன், பார்ப்பனச் சுரண்டல் தொழிலான வைதிகக் கல் யாணக் கடையை இழுத்து மூட வேண் டிய நிலை  ஏற்பட்டால் என்னாவது? மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற அச்சம் உலுக்க, காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் - செய்தார் தெரியுமா?

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயி லில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தில் மோட்ச விளக்கை ஏற்றச் சொன்னார்.

புரிகிறதா? ஓம குண்டத் தீப்பற்றி கருகிச் செத்தவர்களை மோட்சத்துக்கு அனுப்புகிறார்களாம். இந்தச் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

தீயிலேயே மோசமான தீ பக்தீயா யிற்றே. அந்தப் பலகீனத்தைப் பயன்படுத்தி பக்தர்களை மேலும் மேலும் முட்டாள் களாக்கி  சுரண்டல் தொழிலை ஜாம் ஜாம் மென்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.

உலகம் போற்றும் உத்தமராகக் கருதப்பட்ட காந்தியார் அவர்களை நாதுராம் கோட்சே என்னும் இந்து வெறிக் கொடியவன் படுகொலை செய்த நேரத்தில், அந்தக் கோபம் இந்து மதத்தின் மீதும் பார்ப்பனர்கள்மீதும் திரும்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் என்ன செய்தார் அன்றைய காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி தெரியுமா?

எல்லாப் பாவங்களுக்கும் தோஷம் கழிப்பது ஸ்நானம் செய்வதன் மூலமாகத் தான்! இந்துக்கள் அனைவரும் அதனைச் செய்யுங்கள் என்று சொன் னாரே பார்க்கலாம்.

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டு மானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம் தான் கடவுள், மதம், கெட்ட இடமாகும் (விடுதலை 24.4.1967) என்றாரே தந்தை பெரியார் - எண்ணிப் பாருங்கள்  - பொருத்திப் பாருங்கள் - புத்திக்குப் புரியும்.

கூட்டிக் கழித்துப் பாருங்கள் வைதி கத்தின் வண்டவாளம் புரியும். பகுத்தறி வின் பரிமாணமும் பளிச்சிடும்!

பக்திக்கொள்ளை!
உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் பக்தர்கள். அந்த நேரத்தில்கூட சாமியார்கள் என்ன செய்தார்களாம் -  பொருள்களை கொள்ளையடித்துள்ளனர்.

வங்கியில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். செத்துப் போன பக்தர்களின் உடல்களை வெட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்திருக்கின்றனர். பெண்களிடம் பூசாரிகள் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார்கள் - பக்தியின் ஒழுக்கம் இதுதான்.
 *************************************************************************************
கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?
கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _  அப்படி இருக்கும்போது ஆண்டவனிடம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டுவது - _ ஏன்?

அவன்தான் எல்லாம் அறிந்தவனாயிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப்பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதிகப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்

கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?

இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!
கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?
-  வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல.

கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி.
அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)

சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!
பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?
********************************************************************************
---------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 29-6-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் கண்ட சுயமரியாதைத் திருமணமும் - அதன் வெற்றியும்


- சரவணா இராசேந்திரன்

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் ஒரு தலைசிறந்த மனித நேயப் பற்றாளர், மனிதருள் பேதமற்ற பெருவாழ்வே நிலைக்கவேண்டும் என்று கருதினார்.மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்வது தன் மானக்குறைபாடு அந்தக்குறை பாட்டை நீக்கிவிடின் அவனுக்குள் சமூகம் பற்றிய அக்கறை வரும் எனவே தான் அவர் தன்மான இயக் கமான சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார்.

சுயமரியாதையை இழந்து வாழ்வது, விலங்குகளாய் வாழ்வது போன்றதாகும், மனிதர்க்குள் பேதங் களை உருவாக்கும் முதல் சங்கிலி, திருமணங்களில் இருந்து தான் தோன்றுகிறது, வாழ்வில் இருவர் இணையும் போது அங்கு பழைய முடைநாற்றமெடுக்கும் சாத்திரங்கள், மற்றும் மூடநம்பிக்கையின் மூலம் திருமணமாகும் இணைகளுக்கு மட்டுமல்ல அங்கு வந்திருக்கும் உறவினர்களின் உள்ளங்களிலும் பார்ப்பன அடிமைச்சாசனம் எழுதப் படுகிறது, அதன் படியே அவன் தலைமுறைக்கும் தொடர்கிறது.

இந்த சங்கிலியை உடைத்தெறிந்தாலே சுயமரியாதை போராட்டத்தில் 50 விழுக்காடு வெற்றிகிடைத்துவிடும் இதை தந்தை பெரியார் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவ னின் பார்வையில் கண்டார், வெற்றியும் அடைந்தார்.

அதிலிருந்து உதித்தது தான் சுயமரியாதைத்திருமணம், புரட்சிச் சிந்தனையாளர் தந்தை பெரியார் தொலைநோக்குப்பார்வையில் தன் னுடைய அனைத்து சிந்தனை களையும் நீண்டகாலம் மக்களுக்கு பயன்படும் வாழ்க்கைத் தத்துவத்தை கூறிவந்தார். அன்று கருவாக உரு வாகி, தவழ்ந்து பல எதிர்ப்புக்களை யும் மீறி ஆயிரக்கணக்கானோர் மனதில் நிலை நிறுத்தப்பட்டுவிட்ட சுயமரியாதைத்திருமணம் ஆரம்பகாலத்திலேயே சோதனையில் சிக்கியது.

சுயமரியாதைத் திருமணமே செல்லாது என்று 1953-இல் நீதிபதி ராசகோபாலன், நீதிபதி சத்யநாரா யணராவ் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப் பட்டது. மனித உரிமைக்கு எதிராக தரும சாத்திரத்தை மனதில் கொண்டு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறினார்கள், சுயமரியாதைத் திரு மணம் சாத்திரப்படி நடைபெற வில்லை, புரோகிதர் இல்லை, ஹோமம் இல்லை, இதர அம்மி, அருந்ததி போன்ற சடங்குகள் இல்லை, மேலும் சுயமரியாதைத் திருமணம் என்று கூறியிருக்கும் இத்திருமணமுறை வழமையான ஒன்றா என்றால் அதுவும் கிடையாது, யாரோ சிலர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இத்திருமணத்தை நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

தமிழ் ஓவியா said...

ஆகையால் சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளை சட்டவிரோத வைப்பாட்டியின் பிள்ளைகள் என்று தான் கருதவேண்டும் என்று கிஞ்சித் தும் சிந்தனை இல்லாமல் சாஸ்திர சாம்பிரதாயம் என்னும் மடமை இருளில் மூழ்கி நீதி நியாயம் மற்றும் தொலைதூர சிந்தனைகளை மறைத்துவிட்டதன் காரணமாக இவர்களாகவே தாங்கள் தலை முறைகள் உழைப்பில்லாமல் அடுத்த வரை சுரண்டி அடிமைப்படுத்தி சுகபோக வாழ்வு வாழ எழுதிவைத்த மனுதர்மவிதிகளின்படி பார்ப் பனர்களைத் தவிர மற்ற எவருக்கும் திருமண உரிமை இல்லை என்றும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சட்டப்படி பிறந்ததாக கொள்ள முடியாது என்றும், இந்துமத தரும விதிகளின்படி சூத்திரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் வைப் பாட்டி குழந்தைகளாகவே கருதப் படுவார்கள் என்றும் வைப்பாட்டி குழந்தைகளுக்கான சட்டவிதியில் என்ன சொத்துரிமை உள்ளதோ அதன்படி உரிமைகொண்டாடட்டும் என்று தீர்ப்பளித்தார்கள்,

பார்ப்பன நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி சுயமரியாதைத்திருமணம் சட்ட பூர்வமானது அல்ல, அத்தகைய திரு மணத்தின் மூலம் பிறக்கும் குழந் தைகள் சட்டபூர்வமான உரிமைகள் கொண்டவர்கள் அல்ல என்பதாகும். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத்தை கண்டு சீற்றமடைந்தவர்களின் தீர்ப்பாகும், ஆனால் தந்தை பெரியார் இதுகுறித்து கவலைப்படவில்லை, சுயமரியாதைத்திருமணத்தினால் விளையும் நன்மையை கருதி அதனை மக்களிடம் முனைப்போடு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினார்.

தமிழ் ஓவியா said...


பிற நாட்டைப் போற்றுவோர் பிறந்த நாட்டைத் திருத்தாதது ஏன்?

ஏற்றத் தாழ்வு சுவிட்சர்லாந்து
மக்களுக்குள் இல்லை என்றே
இங்குளோர் புகழ்ந்து பாடுவார் - ஆனால்

இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை
ஏற்றிப் போற்றி எத்தில் வாழும்
ஈனரெல்லாம் கூத்து ஆடுவார்.

மாற்றவிட மாட்டோ மென்று
மடமையை வளர்ப்போர் தீய
மதத்தின் பேரால் ஆட்டம் போடுவார் - பல்லவ

மன்னராண்ட காலம் முதல்
பவுத்தர் சமணர் கொல்லப்பட்ட
பகைமை யோங்க கூட்டம் கூடுவார்.

கழுவிலேற்றி சமணர்களைக்
கொன்று குவித்த கொடுமையினை
கனவில்கூட மறக்க முடியுமா? - அன்பால்

கொல்லாமையைக் கடைப்பிடித்த
பவுத்தர்களை நாட்டைவிட்டே
விரட்டியதை மறக்க முடியுமா?

உழுத அவர் நிலத்தை யெல்லாம்
வன்முறையில் கவர்ந்துகொண்ட
வஞ்சகத்தை மறக்க முடியுமா? - அந்தோ

அடிமை யாக்கி அவர்களையே
ஆதிக்க வெறிபிடித்தோர்
அடக்கியதை மறக்க முடியுமா?

ஜாதிவேற்றுமை கற்பிக்கும்
சதுர் வருணத்தைப் புகுத்தி
தமிழினத்தைப் பிளக்க வில்லையா? - கொடிய

தீண்டாமையைப் பவுத்தர்மீது
சுமத்தி அந்த தூயவரைத்
தாழ்த்தப்பட்டோர் ஆக்கவில்லையா?

வேதியர், நிலக்கிழார்கள்,
வேந்தர் ஒன்றாய்ச் சோந்துகொண்டு
உழைப்பவரை ஒடுக்கவில்லையா? - இன்றும்

ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வழிவகைகள் கண்டிடாமல்
வன்முறையைத் தொடரவில்லையா? (ஏற்றத் தாழ்வு)

வீ. இரத்தினம்,
பெங்களூரு

தமிழ் ஓவியா said...


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப் போது ஓரிருமிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இனிசுலின் ஏறி, இறங்கும்!

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உண வுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

நன்றி: இன்றைய வேளாண்மை ஜூன் 2013


தமிழ் ஓவியா said...


சூன் 21: சூரியன் ஸ்தம்பிப்பு?


நாம் வாழும் பூமி தன்னைத் தானே நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டு, நொடிக்கு 11 கி.மீ. வேகத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும்போது சூன்21 அன்று தன் அச்சில் கடகரேகையில் இருந்து திரும்புகிறது. பூமி தெற்கு நோக்கி பெயர்ந்ததால் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததைப்போல் தோற்றம் தெரிந்தது. இதையே சங்க இலக்கியங்களில் சூரியனின் வடசெலவு, தென் செலவு என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் பார்ப்பனியம் தட்சிணாயணம், உத்தராயணம் என்றது. கடக சங்கராந்தி என்றும், மகர சங்கராந்தி என்றும் சமக்கிருதத்தை முன்னிறுத்தி கோலோச்சுகிறது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் காட்சிப் பிழைகள்தான்.

நாம் உண்மையான இயங்கியல் விதியை புரிந்து கொண்டு பூமியின் தென் பெயர்ச்சியால்தான் (டிசம்பர் 21 முதல் சூன் 21 வரை) சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததாக சொல்லப்பட்டதை (தட்சிணாயணம்) மறுத்து பூமிதன் பெயர்ச்சி அடைந்தது எனவும் அதே போல் பூமியின் வட பெயர்ச்சியால் தான் (சூன் 21 முதல் டிசம்பர் 21 வரை) சூரியன் தெற்கு நோக்கி நகர்வ தாகவும் (உத்தராயணம்) சொல்லப் படுவதையும் மறுத்து, புறப் பொருள் களின் காட்சி மாற்றத்திற்கு அடிப் படைக் காரணமே அகப்பொருள் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே காரணம் என்பதை பகுத்தறிவோடு உணர்ந்து ஆணித்தரமாக பார்ப் பனியத்தை எதிர்ப்போம்.

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும். நாம் வாழும் பூமியைப் பற்றி போற்றி பெருமிதம் கொள்வோம். வருங்கால எழுத்தாளர்களை பார்ப்பனியத்திட மிருந்தும் சொற்குற்றம், எழுத்துக் குற்றத்தில் இருந்து விடுவிப்போம்.

சூன் 21 அன்றும் டிசம்பர் 21 அன்றும் பூமி தனது நீள் வட்டப் பாதையின் முனைகளுக்குச் சென்று திரும்புகிறது. இதையே அவர்கள் நின்று செல்வதாக (ஸ்தம்பித்து) கூறுகின்றனர். சூரியனும் வடக்கு தெற்காக நகரவில்லை. பூமியும் ஸ்தம்பிக்கவில்லை. தன் பாதையில் சுற்றி நகர்ந்து திரும்புவது பூமியே! பூமியே! பூமியே!!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்

அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து - குறள்

- செந்தமிழ் சே குவேரா
பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவை

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இரு வருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத் துக்காக தண்டனையாகத்தான் மனித குலத்துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் - 4

தமிழ் ஓவியா said...

அரசு அனுமதி அளித்துள்ளதா?
வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்கு திருவிளக்குப் பூஜையா? சிவபெருமான் திருவள்ளுவர் என்னும் சதி: முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

திருவள்ளுவர் மதச் சார்பற்றவர் என்பதால், உலகம் அவரைப் பெரும் பாலும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிலர் அவருக்குப் பூணூல் போட முயற்சித் தனர். இன்னும் சிலர் அவர் நெற்றி யில் பட்டை தீட்டினர்; (மயிலாப்பூர் சிலையில் சில விஷமிகள் பெயிண் டில் பட்டை தீட்டினர் - தென் சென்னை மாவட்டக் கழகத்தின் முயற்சியால், அது அகற்றவும் பட்டதுண்டு)

இப்பொழுது, திருவள்ளுவரைப் புகழ்வது போல அவரை இகழும் சூழ்ச்சி ஒன்று அரங்கேற உள்ளது. அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முயற்சியால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உருவாக்கப்பட் டுள்ள வள்ளுவர் கோட்டத்தில். ஓம், அகத்தியர் துணை என்ற தொகையறாவுடன் துண்டறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

யாரோ ரெங்கராஜ தேசிக சுவாமி களாம் - அவரின் நல்லாசியுடன் நடைபெறப் போகிறதாம்.

சகல நன்மைகளைத் தரும் சிவபெருமான் திருவள்ளுவர் திருவிளக்குப் பூஜை என்ற ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், இந்த பூஜை நடைபெறுகிறதாம்!

திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜைக் குரிய அனைத்துப் பொருட்களும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப் படும் என்றும் துண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஏதோ சதித் திட்டம் இருக்கிறது! தமிழ்நாடு அரசின் அனுமதியோடுதான் இது நடைபெறுகிறதா?

யார் வேண்டுமானாலும் - அரசுக்குச் சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் புகுந்து எது வேண்டு மானாலும் செய்யலாமா?

குறளில் கோயில் இல்லை தம்பி என்றார் புரட்சிக் கவிஞர். அத் தகைய ஒரு சிந்தனையாளரை - உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலினைத் தந்த தொலைநோக்குச் சிந்தனையாள ரான திருவள்ளுவரை - மூடச் சகதிக்குள் குறிப்பிட்ட மதத்துக்குள் முடக்கும் சதி - இதன் பின்னணி யில் கண்டிப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்களே, முளையிலேயே இதனை கெல்லி எறிந்திட வேண் டாமா?

அரசாங்கம் இதில் தலையிட் டுத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் உரிய நடவடிக்கையில் நேரிடையாக இறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...

மோடியின் இமாலய மோசடி வித்தைகள்! டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு

சென்னை, ஜூன் 29- குஜராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடி எத்தகைய மோசடிப் பேர்வழி ஏமாற்று வித்தை கற்றவர் என் பதை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) தோலுரித்துக் காட்டியுள்ளது. அதன் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.

ஜூன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பேரழிவுகளும் அதிர்ச்சி அளித்து நாட்டையே குலுக்கிக் கொண்டு இருந்தன. குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி, திடீ ரென்று கை தேர்ந்த அதிகாரிகளுடன் டே ராடூன் நகருக்கு வந்து இறங்கினார்.

ஞாயிற் றுக்கிழமைக்குள் அவர், உத்தரகாண்ட்ப் பகுதி களில் சிக்கிக் கொண்டி ருந்த 15,000 குஜராத்தி களை அழிவிலிருந்து காப்பாற்றி நன்றி நிறைந்த அந்த மக் களைத் திரும்பவும் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தார் என்று அறி விக்கப்பட்டது.

இந்த மந்திர வித்தை பற்றி ஊடகங்கள் பறை சாற்றின. ஆனால் இந்த சாதனை எப்படி அடைய முடிந்தது? இந்திய காட்டில் முழு ராணுவ அமைப்புகளும் போராடியும் 10 நாட் களுக்கு சுமார் 40,000 மக்களைத்தானே மீட்க முடிந்திருக்கிறது?

மோடி, 80 இன் னோவா கார்களைக் களத்தில் இறக்கி விட் டதாக செய்திகள் கூறு கின்றன. இந்த கார்கள் கேதார்நாத் போன்ற இடங்களை, வீதிகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலை யில், போவதற்குண்டான வழிகளில் எல்லாம் நிலச் சரிவுகள் மிகுந்துள்ள நிலையில், அங்கே கார்கள் போவதற்கான பாதையை எப்படிப் பெற்றிருக்க முடியும்?

கொஞ்சம் கற்பனை!

மோடியின் இன் னோவா கார்கள், இறக் கைகள் கொண்டனவாக வும் ஹெலிகாப்டர் இயந் திரங்கள் பொருத்தப் பட்டுள்ளனவாக சற்று கற்பனை செய்து கொள் வோம். ஓட்டுநரையும் சேர்ந்து ஒரு இன் னோவா 7பேரைச் சுமந்து செல்வனவாக வடிவமைக்கப்பட்டி ருக்கிறது.

கடுமையான நிலைமைகளில் நீங்கள், ஒவ்வொரு காரிலும் பய ணிகளை அடைக்க லாம். அந்த அடிப் படையில் ஒரு 80 கார்களைக் கொண்ட ஒரு ஊர்தித் தொடர் டேராடூனிலிருந்து மலைப் பகுதிகளுக்கு ஒரு முறையில் 720 பேர்களைத்தான் கொண்டு செல்ல முடி யும். 15,000 மனிதர்களை மலைப் பகுதிகளிலி ருந்து கீழே கொண்டு வர, போதலும் வருத லும் சேர்ந்து 21 முறை பயணிக்க வேண்டும்.,

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர்களைக் கொண் டதாகும். ஆகவே 21 முறை போக்குவரத்துக்கு என்றால், ஒவ்வொரு இன்னோவாவும் சுமார் 9,300 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.

சமதளத்தை விட மலைப் பகுதிகளில் பயணம் செய்வதற்கு அதிக தூரம் நேரமும் பிடிக்கும். ஆகவே சரா சரி மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்று வைத் துக் கொண்டால்கூட, அந்தப் பணி 233 மணி நேர ஓட்டு வித்தலை பெற்றிருக்க வேண்டும்.

அப்படியானால் அது ஓய்வற்ற ஓட்டுவித்தலாக ஒரு வினாடிகூட ஓய்வில் லாததாக, குஜராத்தி களை மட்டும் அடை யாளம் கண்டு காப் பாற்றப்படுவதுடன், மற்ற அவதிக்குள்ளான மக்கள் அப்படியே அம்போ என்று சூழ் வெள்ளத்தில் பரிதவிக்க விட்டு விடுவது எந்த நேரத்திலும் கார்களில் பயணிகளே ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமாக உள்ள வீரமிகுந்த அந்த காப்பாற்றுபவர்கள் நேரம் தான் என்பதை மறந்து விடுங்கள்.

பத்து நாள் பணியை ஒரே நாளில் முடித்தாரா?

அவை 10 நாட்களுக்குரிய ஆச்சரியமூட்டும் பணி. ஆனால் மோடியோ அதை ஒரு நாளில் முடித்து விடுகிறார்!

உண்மையில் ஒரு நாளுக்குள்ளாகவே ஓய்வறியா ஊடகங்கள் சனிக்கிழமை, 25 சொகுசு பேருந்துகள் டில்லிக்குத் திரும்பவும் ஒரு குஜராத்திக் கூட்டத்தை அழைத்து வந்ததாகவும், வேறு சில காரணங் களுக்காக 4 போயிங் விமானங்கள், ஒரு தெரிவிக்கப் படாத இடத்தில் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. எப்போதும் அடக்கமானவரான மோடி, ஒரே நாளில் அவரே 15,000 குஜராத்திகளை இமாலய அழிவிலிருந்து காப்பாற்றியதாகக் கூறவில்லை.

தமிழ் ஓவியா said...

அது அமெரிக்க அமைப்பான உலக ளாவிய அப்கோ (Apco World Wide) என்ற ஒரு பொதுத் தொடர்பு நிறுவனத்தின் எதையும் ஏற்கும் ஊடகங்களுக்குத் தூக்கி எறியப்பட்ட செய்தி களாகும். 2007இல் அப்கோ மாதம் 25,000 டாலர் சம்பளத்தில் எழுச்சியுறும் குஜராத் மாநாடுகளை (Vibreent Gujarat Summits) உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்டது.

அது உண்மையில் மோடி பற்றிய ஒரு தோற்றத்தை விளம்பரம் செய் தது. மோடி ஒரு நல்ல தோழமையுடன் தான் இருக்கிறார். கசகஸ்தான் சர்வாதிகாரி நூர் சுல்தான் நாசர் பேவிற்கும், மலேசிய, இஸ்ரேல் அரசுகளுக் காகவும், அமெரிக்கப் புகையிலை வர்த்தகத்தின் வியாபார விளம்பரத் தொடர்பாளர்களாகவும் அப்கோ நிறுவனம் பணிபுரிந்துள்ளது.

பிறகு புகையிலையினால் புற்றுநோய் வருகிறது என்பதற்கு எதிரான குப்பைக்கருத்துக்களை முன்னிறுத்தி அது ஒரு நிறுவனம் உண்டாக்கியது. அப்கோ மேலும், அஜர் பெய்ஜான், துர்க்மெனிஸ் தான் ஆகிய மோசமான அரசுகளுக்கும், சானி அபாச்சா என்ற நைஜீரிய வன்கொடுமையாள னுக்கும் பணி புரிந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு முறையின் உயர் நிலை அதிகாரியான டோரோன் பெர்காபெஸ்ட் எய்லான் (Doron Berga Best - Eilon) தவிர முன்னாள் இஸ்ரேல் அரசு தூதுவர்கள் இடாமர் ராவினேவிச், ஹிமான் ஸ்டெய்ன் உட்பட பெரிய வல்லமை படைத்த ஆலோசனைக் குழுவைக் கொண்டது, அப்கோ.

மோடி அமெரிக்கா செல்ல..

மோடியின் மறைமுகமான பிரச்சாரங்களுக்கும் கூட அப்கோ உதவியுள்ளது. அப்கோ பணிய மர்த்தப்படுவதற்கு முன்பு எழுச்சியுறும் குஜராத் ஒரு சலித்துப் போன விஷயமாய் இருந்தது.

முதல் மூன்று மாநாடுகளின் பொது முதலீடு களுக்கான வாக்குறுதிகள் 14 பில்லியன் டாலர்களி லிருந்து 150 பில்லியன் டாலர்கள் வரை இருந்தது. அப்கோ வந்த பிறகு 2009லும், 2011 ஆண்டுகளில், அவை 253 பில்லியன் டாலர்களி லிருந்து 450 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

அப்கோ அமெரிக்காவில் இருந்து முதலீட்டு ஆர்வங்களைக் கொண்டு வருவதற்கு ஓய்வின்றி உழைத்தது. மோடி அமெரிக்கா செல்வதற்கு இருந்த தடையை நீக்கவும், வாஷிங்டன்னில் உள்ள அரசியல்வாதிகளுடன் அப்கோ பொது உறவுப்பணி மேற்கொண்டது. 2002ஆம் ஆண்டில் மோடி முதல் வராய் இருந்த போது ஏராளமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதால், இந்த தடை விதிக்கப் பட்டது. இதுவரை அப்கோவினால் மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தர முடியவில்லை.

எழுச்சியுறும் குஜராத் முயற்சியில் பெறப்பட்ட வாக்குறுதிகள் காற்றோடு போய்விட்டன. மோடியின் வாழ்க்கை சரித்திரத்தை எழுதும் கிங்ஷக் நாக் என்பவர் 2009இல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 3.2 விழுக்காடும், 2011க்கான தொகையில் வெறும் 0.5 விழுக்காடும் உண்மையில் பெறப்பட்டதாகக் கூறியுள்ளார். மோடிக்காக, அப்கோ பொய் சொல்லத் தேவையில்லை.

2005இல் அவர், மாநிலத்தின் தொழிலகமான குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷன் (ஜிஎஸ்பிசி) இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ள தாக அறிவித்தார். அது, ஆந்திர மாநில கடல் பகுதியில், 20 டிரில்லியன் அடிஆழத்தில் இருப்ப தாகவும், 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்பு உள்ளதாகவும் அறிவித்தார்.

அதே பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளதை விட இது 40 விழுக்காடு அதிகம். மேலும் மோடி, எகிப்து, யேமன், மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தையும் மாநில நிறுவனம் கைக் கொள்ளும் என்று சொன்னார்.

மோடியின் எரிவாயுத் திட்டம்

மோடியின் எரிவாயு பற்றிய அறிவிப்பு உண்மையைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

2012ஆம் ஆண்டு சமயத்தில் நடுவண் அரசின் எண்ணெய் எரிவாயு வளம் போன்றவற்றை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் நிறுவனம், (Directorate General of hydorcarbans) மோடி சொல்லியிருப்பதில் பத்தில் ஒரு பங்குத்தான் உண்மையிருப்பதாகக் கூறியுள்ளது.

2 கியுபிக் அடி எரிவாயு மட்டுமே, அதுவும் துறப்பணம் செய்வதற்கும் கடினமான இடத்தில் இருப்பதாகச் சொல்லியுள்ளது. இதற்கிடையில் மோடியின் தலைமையினால், குஜராத்தின் எண்ணெய் நிறுவனம் (ஜிஎஸ்பிசி) 2 பில்லியன் டாலர் பணத்தை 20 கியுபிக் அடி எரிவாயு இருப்பதாக சொல்லப்பட்டதை நம்பி கொட்டியது, எரிவாயுவும் வரவில்லை; நிறுவனத் திற்கு இழப்புதான்.

அதைக்காப்பாற்று வதற்காக, நகர வாயு பகிர்ந்தளிப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்யச் சொல்லியுள்ளனர். இந்த வணிகங்களின் பெரும் பிரச்சினைகள் முளைத் துள்ளதை அதிலும், பார்படாஸ் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்டுள்ள வணிகத் தொடர்பு மிகமிக அய்யத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

மோடி விடும் கதைகள்

எல்லாத்துறைகளிலும் மோடி விடும் கதைகள் பொய்யும் புனை சுருட்டும் மிகுந்தவை. அவருடைய இமாலய ஜாலங்கள் ஒரு முழுமையான அப்பட்டமான பொய்!

தமிழ் ஓவியா said...

59 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் தமிழர் நீதியரசர் சதாசிவம்!

டில்லி, ஜூன் 29- உச்ச நீதி மன்றத்தின் 40ஆவது தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட் டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்பேது அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூலை 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, கடப்பனல்லூர் கிராமத்தில் விவசாயக் குடும் பத்தில் 1949 ஏப்ரல் 27இல் பிறந்தவர் சதாசிவம். 1973ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 1996ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று உள்ளார். 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா கிறார்.

நீதிபதி சதாசிவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 19ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இவர் 27.04.2014 வரை இந்தப் பதவியில் இருப்பார்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: நாகை அறப்போரில் கலைஞர் பங்கேற்பு


சென்னை, ஜூன் 29- சேது சமுத்திரத் திட் டத்தைச் செயல்படுத்தக் கோரி தி.மு.க. அறிவித் திருக்கும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் நாகப்பட் டினத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜெய லலிதாவின் அ.தி.மு.க. அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தினை திரும்பப் பெறக் கோரியும், மேலும் தாமதம் செய்யாமல் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாகநிறைவேற்ற வேண்டு மென்று மத்திய அரசை வலியுறுத்தியும் முதற்கட்ட அறப்போராட்டம் நடைபெறுகிறது.

மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் இந்த முதற்கட்ட அறப் போராட்டத்திற்குத் தலைமை யேற்போர் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் நடைபெறும் அறப் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களே தலைமையேற்கிறார்கள்.

இதுகுறித்த தலைமை தி.மு.க. கழக அறிவிப்பு வருமாறு: கழகத் தலைவர் விடுத்த அந்த அறைகூவலின் அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தினை திரும்பப் பெறக் கோரியும், மேலும் தாமதம் செய்யாமல் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தியும், அறப்போராட்டத்தின் தொடக்கக்கட்டமாக 8-7-2013 அன்று அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென இந்த நிர்வாகக் குழு தீர்மானிக்கின்றது.

- என தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 17-6-2013 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க; பின்வரும் மாவட்டத் தலைநகரங்களில் தலைமையேற்போர் பட்டியல் :-

நாகப்பட்டினம் - தலைவர் கலைஞர்

தூத்துக்குடி - கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்

இராமநாதபுரம் - கழக துணைப் பொதுச்செயலாளர் துரை. முருகன்

கன்னியாகுமரி - டி.ஆர்.பாலு, எம்.பி.,

திருநெல்வேலி - கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்பி. சற்குணபாண்டியன்

சிவகங்கை - கழக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி

கடலூர் - கனிமொழி, எம்.பி.,

புதுச்சேரி - டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி.,

காரைக்கால் - திருச்சி என்.சிவா

புதுக்கோட்டை - ஆ. இராசா, எம்.பி.,

விடுபட்ட மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அறப்போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவ் வறிக்கையில் தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித் துள்ளது.

தமிழ் ஓவியா said...

மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் யாகமாம் உடனே பெய்தது மழையாம்


மதுரை, ஜூன் 25- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்ச கர்கள் மழை வேண்டி யாகம் நடத்திய சில நிமிடங்களிலேயே மழை கொட் டியதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மழை வேண்டி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதை யடுத்து பெருமளவிலான பக்தர்கள் கோவில் தெப்பக் குளத்தில் திரண் டனர். அர்ச்சகர்களும் யாகத்தை தொடங்கினர். யாகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மழை கொட்டத் தொடங் கியதாம். இதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் வருண பகவானுக்கு நன்றியும் தெரிவித்து வணங்கினராம்.

மரியாதைக்குரிய தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு, ஒன்இந்தியா என்ற இணைய தமிழ் பத்திரிகையில் மதுரையில் அர்ச்சகர்கள் மழை பொழிய வேண்டி செய்த யாகத்தின் பலனாக உடனே மழை பொழிந்ததாக செய்தி வெளியிட்டு இருந்தனர்.

இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு தேவை என் கிறான் பழம்பெரும் புலவன் வள் ளுவன். அவர் வாக்கின்படியே இரு புனலும் வாய்ந்த மலையும் தமிழகத்தில் இருந்தாலும், நாட்டில் வாழும் மக் களுக்கு தேவையான புனல் கிடைக்க வில்லை என்பது வருத்தத்திற்கு உரிய உண்மையாகும்.

தமிழகம் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. காவிரி நீர், முல்லைபெரியார், பாலாறு போன்ற தமிழ் நாட்டுக்கு குடிநீர் வழங்கும் ஆறுகளில் இருந்து நமக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினையில் உங்களின் சீரிய முயற் சிக்கு பின்னரும் கருநாடக அரசு தமிழகத்திற்கான பங்கை தர மறுக்கிறது. முல்லைப்பெரியாரும் நமக்கு கை கொடுக்க வில்லை.

தமிழ் ஓவியா said...

நிலத்தடி நீர் அளவும் குறைந்து கொண்டே வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் மழை பொழியுமா அல்லது பொய்த்து போகுமா என விவசாயிகள் வானம் பார்த்து கழுத்தே ஒடிந்து போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் ஓடும் ஆறுகளிலும் நீர் வரத்து குறைந்து கொண்டே போகிறது. நதிநீர் இணைப்பு என்ற தேசிய அளவிலான கொள்கை எப்போது நடைமுறைபடுத்தப்படும் என தெரியவில்லை.

கடல் நீரை குடி நீராக்கும் திட்டமும் இன்னும் முழுமை யான அளவில் செயல்பட ஆரம்பிக்கவில்லை. ஆககோடிக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி அவதிபடுகின்றனர். விவசா யிகளோ உங்களது அரசாங்கம் தரும் வறட்சி நிவாரண நிதியை மட்டுமே நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். வீராணம், தெலுங்கு கங்கை திட்டம் போன்ற திட்டங்கள் உங்கள் அரசாங் கத்தால் நல்ல முறையில் செயல்படுத்த பட்டாலும், தண்ணீர் பிரச்சினை தீர வில்லை.

மேற்கண்ட சங்கடங்களை நினைந்து கொண்டே இருக்கையில், நான் இந்த பத்திரிக்கை செய்தியை படிக்க நேர்ந்தது. உடனே அளவில்லா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். அதன் பின்னர் இதை ஏன் நமது முதல் அமைச்சர் அவர்களுக்கு தெரியபடுத்த கூடாது என நான் எண்ணி, உங்களுக்கு கடிதம் எழுத முனைந்தேன்.

உங்களால் ஆரம்பிக்கப்பட்ட மலிவு விலை உணவகம், மலிவு விலை காய்கறி சந்தை போன்ற திட்டங்கள் ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என கூறினால் மிகை யாகாது.

மேற்கூறிய திட்டங்களை போலவே, மலிவு விலை மழை என்று ஒரு திட்டம் ஆரம்பித்து மதுரையில் யாகம் செய்து மழை பொழிய வைத்த அர்ச் சகர்களை அரசாங்க பணியில் சேர்த்து, அவர்களை தமிழ்நாடு முழுவதும் யாகம் செய்ய பணித்து, ஒவ்வொரு பஞ்சாயத்தை சேர்ந்த பகுதிகளுக்கும் மாதம் மும்மாரி பொழிய வைக்கும் ஏற்பாட்டை பண்ண லாம் என்ற யோசனை எனக்கு உதிர்த் தது.

அவ்வாறு மாதம் மும்மாரி பெய்யும் போது, உங்களது அரசாங்கம் தொடங்க இருக்கும் 10 ரூபாய் குடிநீர் போத்தல் திட்டத்தை இன்னும் குறைந்த விலையில் கொடுக்க முடியும். புரட்சி தலைவர் ஆரம்பித்த சத்துணவு திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவே அமைந்த மாதிரி, இந்த திட்டமும் உன்னத திட்டமாக போற்றப்படும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு என்பது வள்ளுவன் வாக்கு. வள்ளுவன் சொல்படி ஒரு நாடு, அதுவும் விவசாய பெருங்குடி மக்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியாம் தமிழ்நாடு, விளைச்சல் அதிகமாகவும், பொருள் வளம் நிறைந்ததாகவும், குறையாத உற்பத்தியைத் தரும் நாடாக மாற தடையாக இருப்பது மழை பொழியாமல் இருப்பது என நான் கருதுகிறேன்.

அவ்வாறு வளமான தமிழ்நாட்டை உருவாக்க உங்களது அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் வெளியிட்ட விசன் 2023 போன்ற நீண்ட கால திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மழை மிக அவசியம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

பலம் பொருந்திய உங்களது அர சாங்கத்திற்கு இந்த அர்ச்சகர் களையும், செய்தி வெளியிட்ட பத்திரிகையையும் தொடர்பு கொள்வது மிக எளிது என நான் நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் வெளியிட்ட செய்தி பொய்யென தெரியும் வேளையில், தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த எளியவனின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என நம்பும்

ஒரு சாதாரண குடிமகன் சு.விஜயபாஸ்கர் ஜூன் 25 2013

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சி யும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

குடந்தை கழக மாவட்டம் சுவாமிமலையில் 26.06.2013 அன்று காலை 9.30 மணியளவில் எருமைப் பட்டி வீரமுத்து மல்லிகா ஆகியோரின் மகன் மாதவன் அவர்களுக்கும் கோவிந்தகுடிஆவூர் கல் யாணசுந்தரம் இந்திரா ஆகியோரின் மகள் துர்க்கா ஆகியோரின் இல்வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் வாழ்வியல் தத்துவங் களை எடுத்து உரையாற்றி வாழ்த்து கூறி நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில், 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சுவாமிமலையின் நகர தலைவராக இருந்த நாராயணசாமி அவர் களுடைய இல்ல திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்திருந்தேன். அப்போது வரிசையாக போடப் பட்டிருந்த மர நாற்காலிகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிய பட்டு புடவைகள் நகைகளோடு வந்திருந்த பெண்கள் எல்லாம் தரையில் அமர்ந் திருந்தார்கள்.

நாற்காலியில் உட்கார இடம் இருந்தும்கூட பெண்கள் அனைவரும் கீழேதான் அமர்ந்திருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரே ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் பேசும்போது இவ்வளவு பெண்கள் தரையில் அமர்ந்துள்ளார்கள் துணிச்சலாக ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி தான் துணிச்சலாக இருக்கவேணடும் என்று அவரை பாராட்டி பேசிவிட்டு, அந்தப் பெண் உட்கார்ந்து இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த பெண்ணும் கீழே இறங்கி ஏனைய பெண்களோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பெரியார் வென்றார்

இங்கே நாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது பெரும்பாலான பெண்கள் மிகவும் வசதியாக நாற்காலியிலே அமர்ந்துள்ளார்கள். ஆண்கள் எல்லாம் பின் பக்கம் நாற்காலியில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி வந்தது? யாரல் வந்தது? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தான் பெரியார் இயக்கத்தினுடைய வெற்றி. சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்பவர்களுக்கு இது தான் பதில்.

அம்பேத்கரும் - பெரியாரும்

இது ஜாதியை மறுக்கின்ற இயக்கம். வடபுலத்திலே அண்ணல் அம்பேத்கர் ஜாதி, மதத்தை எதிர்த்துப் போராடினார். அதே நேரத்திலே தென் புலத்திலே தந்தை பெரியார் அவர்கள் அதே காரணத்திற்காக போராடினார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

கேவலமான பெயர்கள்

நம்முடைய முன்னோர்கள் நமக்கு வைத்திருந்த பெயர்கள் எல்லாம் நம்மை கேவலப்படுத்து வதாகவும், அருவறுப்பை உண்டாக்குவதாகவும் இருந்தது. தற்போது தமிழர்கள் தம் மக்களுக்கு வைத்துள்ள பெயர்கள் எல்லாம் தஸ், புஸ் என்று புரியாத மொழியாக உள்ளது. அதனால் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டோம்.

தொல்.திருமாவளவனுக்கு பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் அன்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த மோசமான பெயர் களை எல்லாம் மாற்றி நல்ல தமிழ் பெயர்களை தமது தொண்டர்களுக்கு வைத்துள்ளார் பாருங்கள் அது சாதாரண காரியம் அல்ல.

குருதிக்கொடைக்கு ஜாதியில்லை

இங்கே எங்களது கழக மாவட்டச் செயலாளர் குருசாமி அவர்கள் பலமுறை குருதிக்கொடை செய்துள்ளமைக்காக அவரது தொண்டறத்தைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவரால் கடந்த மாதம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குருதிக்கொடை செய்யும் காரியம் இருக்கின்றதே அதுவே ஒரு ஜாதி ஒழிப்பு திட்டம் தான்.

இந்த இந்த ஜாதிகாரர்களுக்கு, இந்த ஜாதியினுடைய இரத்தம் தான் செலுத்தவேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறதா? இரத்தத்திலே பிரிவுகள் உண்டு. அந்தந்த பிரிவு உள்ளவர்களுக்கு, அந்தந்த இரத்தம் தான் செலுத்த வேண்டும் எல்லா ஜாதி மக்களும் எந்த மொழி பேசினாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த பிரிவு இரத்தம் அவரவர்களுக்கு பொருந் தும் போது, இதிலே ஜாதி எங்கிருந்து வந்தது? போன்ற அறிவார்ந்த கேள்விகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

லைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல் பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகின்றன என்பதைச் சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஆனால் காங்கிரஸ் பிரசிடெண்ட் என்கிற தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப்பட்ட மக்க ளின் சுதந்திரத்திற்கு விடப் பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டுப் பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த தானத்தை அடைந்ததில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டு போய்விட்டது.

ஏனெனில் மற்ற தேர்தல்களையும், பட்டங் களையும் உத்தியோகங்களையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கிய தையை கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள்.

ஸ்ரீமான் எ.சீனி வாசய்யங்காருக்குக் காங்கிரஸ் பிரசிடெண்ட் வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சென்னை பார்ப்பனர் போய்ப் பிரசாரம் செய்யவும் ஆங் காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளில் பிரதான மாயுள்ளவர்களில் யாராவது பணங்காசு வாங்கக் கூடியவர்களாயிருந்தால் அவைகளையும் திருப்தி செய்தும், பதவி ஆசையுள்ள வர்களாயிருந்தால் அவை களையும் பற்றி பொய் வாக்குத் தத்தம் செய்தும் ஓட்டுகள் பெறப் பிரசாரம் செய்ததால் உண்மையிலேயே அதிக ஓட்டுப் பெற்றவரும் இன்னும் பெற இருந்தவருமான டாக்டர் அன்சாரி அவர்கள் இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்டு உத்தியோகம் என் போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம் பெரிய மனிதர்கள் என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச் சொல்லி விலகிக் கொண்டார்.

அடுத்தபடி அதிக ஓட்டுக் கிடைக்கப் பெற இருந்த ஜனாப் மஷருல்ஹக் என்னும் பெரியாரும் இவ்வித இழிவுப் பிரசாரத்தில் இறங்க மனமில்லாதவராகி இம்மாதிரி போட்டி போடுவதானால் எனக்கு வேண்டாம், கண் ணியமாய், வருவதானால் வரட்டும் என்றே சொல்லி போட்டியில் இருந்து அறவே விலகிவிட்டார்.

எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதானாலும் எவ்வளவு பரிசுத்தமானதானாலும் நமது பார்ப்பனர் அதில் கலந்தால் அதன் யோக்கியதை பார்ப்பனியத்திற்குத் தகுந்தபடி ஆகிவிடுகிறது என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 05.09.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்


எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.

அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம்.

மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற் சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம்.

அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் விளம்பர சபை

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் காங்கிரஸ் விளம்பர சபை என்பதாக ஒரு யோக்கியப் பொறுப் பற்ற தும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெ ளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரில் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் எழுதி வருகிறார்.

இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இவை ஒவ் வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற் கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம் என் பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம்.

அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடு வண்டியில் அகப் பட்டுத் திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22.9.1926ந் தேதி சுதேசமித்திரனில் பார்ப் பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியார் இதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்த தற்கு விரோதமாயிருந்த தாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலை பாதகம் விஷயமாய்ச் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய தானத்தையும் ஒரு மந்திரிக்குக் காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற் காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்ப் பலமாய் வாதாடியவரும் அந்த ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவரே ஆவர்.

ஆனால் அக் கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும் சில வெள்ளைக் காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந்தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளு கிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டுமென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத் தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலி ருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா?

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...


பக்தியால் பார்வை பறிபோன பரிதாபம்!


கோவை, ஜூன் 29- உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் கண்களை அவரது மனைவி குத்திக் காயப் படுத்தியதில் அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட் டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த விவசாயியின் பார்வையை மீட்க மருத் துவர்கள் முயன்றும் பலனில்லாமல் போய் விட்டது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்தவர் மல்லப்பன் (40). விவ சாயி. இவரது மனைவி காளியம்மாள். இவர் களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந் நிலை யில், இத் தம்பதி மட்டும் புதன்கிழமை வீட்டில் இருந்துள்ளனர்.

அப் போது, மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் விரல்களால் குத்திய தாகக் கூறப்படுகிறது. இதனால், மல்லப்பனின் கண்களில் காயம் ஏற் பட்டது. இதையடுத்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். இரு கண்களும் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட நிலையில் அனு மதிக்கப்பட்ட அவ ருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதும், கண்களின் கருவிழிகள் கடுமையாகச் சேதம் அடைந்ததால் மருத்து வர்கள் தீவிரமாக முயன் றும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. கணவன், மனைவி இரு வரும் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் புதன் கிழமை வரை வீட்டை விட்டு வெளியே வரவில் லையாம். இருவரும் வீட்டின் கதவை தாழிட் டுக் கொண்டு பூஜை செய்து வந்தனராம்.

இரு நாள்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டபோது புதன் கிழமை நள்ளிரவு நேரத் தில் திடீரென மல்லப் பனின் கண்களை அவ ரது மனைவி காளியம் மாள் குத்தியதாக பாதிக் கப்பட்டவரின் உறவினர் கள் தெரிவித்தனர். மேலும், மல்லப் பனின் மனைவி காளி யம்மாள் சற்று மன நிலை பாதிப்புக்கு உள் ளானவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கவில்லை. இருந்தபோதும், கோவை அரசு பொது மருத்துவமனை காவல்துறையினர் சம்பவம் குறித்துக் கேட்டறிந்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடுமலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்ற வாசகத்தைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்! கழகக் குடும்பங்களின் சந்திப்பில் தமிழர் தலைவர்

கண்கொடுத்தவனிதம், ஜூன் 29- கடவுள் இல்லைஎன்று முதன் முதலாக தந்தை பெரியார் அவர்கள் பாடம் நடத்தி அதற்கான வாசகங்களைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் அய்யா பிறந்த நாளில் திறக்கப்படும் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கண்கொடுத்தவனிதத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

43 ஆண்டுகால போராட்டம்

திராவிட விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாள்களாக ஆகின்றன என்பதற்காகவும், அதேநேரத்தில், இந்த வட்டாரத்தில் நாம் திட்ட மிட்டிருந்த செயல்கள், சரியான நடைமுறை வேண் டும் என்பதையொட்டியும், அதேபோல, நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்கிய அந்தப் போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகவேண்டும்;

அதிலே குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழன் கட்டிய கோவிலுக்குள்ளே மணியாட்ட வேண்டும் என்று இருப்பதை மாற்றி, மிகப்பெரிய அளவில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காக, பெரியார் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அளவிலே, ஏறத்தாழ ஒரு 43 ஆண்டுகாலம் தொடர்ந்து நாம் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்பதற்கு முயற்சிகள் எடுத்து, தனி சட்டம் ஒன்றை இயற்றி, அதனடிப்படையில், நம்முடைய மாணவர் களை 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி தேர்ந் தெடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற 206 மாணவர்களில் பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.

ஆகஸ்டு முதல் தேதி அறப்போராட்டம்

இவர்களுக்குப் பணி வழங்கக்கூடிய நேரத்தில், சிலர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித் தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு முதல் தேதி அறப் போராட் டத்தை நடத்த உள்ளோம்.

நம்முடைய தாய்மார்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்களையெல்லாம் நாம் சந்திப்பது வழமையான ஒன்றுதான். இது ஒன்றும் புதுமை யல்ல.

தமிழ் ஓவியா said...


பெண்கள் சிறைக்குச் செல்லவேண்டும்; ஆண்கள் வீட்டில் இருக்கட்டுமே!

நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து அகமும், முகமும் மலர, அய்யா நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக் கின்றது பாருங்கள், அதற்கு எல்லையே இல்லை.

கண்கொடுத்தவனிதத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

நம் அறிவு ஆசான் அய்யா பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இறுதியாக நடத்தக்கூடிய அளவிற்கு, துணிந்து நாம் இறங்க வேண்டும். இதுவரையில் ஆண்களை போராட்டத் திற்கு அனுப்பிவிட்டு, பெண்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் வேண்டுமானால் வீட்டில் இருக்கட்டும்; பெண்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வீட்டில் நீங்கள் தான் வேலை செய்கிறீர்கள்; 100 நாள் திட்டத்திலும் வேலை செய்கிறீர்கள். கொஞ்ச நாள் நீங்கள் ஓய்வெடுக்கவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி போராட்டத்தில் பங்கேற்பதுதான். சிறைச் சாலையில் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கலாம். அப்பொழுதுதான் ஆண்களுக்கு உங்களுடைய அருமை புரியும்.

விடயபுரத்தில் நினைவுச் சின்னம்!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத் தில்தான் முதன்முறையாக சொன்னார்கள். அதற்காக வரலாற்றில் புகழ்வாய்ந்த அந்த இடத்தினை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டினை அமைத்தோம். பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையாமல் இருக்கிறது. இப்பொழுது வரும்பொழுது அந்த இடத்தினைப் பார்த்தோம்; கல்வெட்டினைச் சுற்றி காடுபோல் உள்ளது. அங்கே இருக்கின்ற தோழர்களும், பொறுப்பாளர்களும் அந்த இடத்தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்; அவர்களின் விருப்பப்படி முதலில் அந்த இடத் தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

அடுத்தபடியாக, இங்கே வரும்பொழுது பள்ளிக் கூடத்தின் கூரை சரியில்லை என்று சொன்னார்கள்; 15 ஆண்டுகளுக்கு முன்பு கூரை போட்டது; இந்தப் பகுதி அடிக்கடி மழை, வெள்ளம், புயலால் தாக்கப்படுகின்ற பகுதியாகும். ஆகவே கூரை பழுதடைந்துவிட்டது என்று சொன்னார்கள்; நம் அறக்கட்டளை பொறியாளர்களை வரவழைத்து, அந்த பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளை உடனடியாக செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் கட்டடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்; பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆகவே, அக்கட்டடத்தினை சரி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப் படும்.

தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும்!

பருத்தியூரில் அய்யா பிறந்த நாள் விழா என்றால், மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், எடைக்கு எடை பொருள்கள் கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு நாம் போட்ட பட்ஜெட்டைவிட அதிக நிதி தேவைப் படுகிறது. தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும். அய்யா பிறந்த நாள் விழாவையொட்டி அந்தக் கட்டடம் திறக்கப்படும்.

கண்கொடுத்தவனிதத்தில் நடைபெற்ற சுயமரியாதைக் குடும்ப விழாவில் பங்கேற்ற கருஞ்சட்டைக் குடும்பத்தினர் (28.6.2013).

விடயபுரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி, ஸ்தூபி போன்று எழுப்பலாமா என்று பல பேரிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

இந்த இயக்கம் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் வாழும் இப்பகுதியில், கல்வி உதவி, மருத்துவ உதவி நம் இயக்கத் தோழர்களுக்கு தேவைப்பட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த இயக்கம் பின்வாங்காது, நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மேலும் பல கருத்துகளைக் கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கெட்டதிலும் - ஒரு நல்லது

உத்தரகாண்ட் வெள்ளைத்தின் சீற்றத்தினால் ஊர்களே அழிந்தன - கடவுள் குடி கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம் புதைந்து போயின.

இன்றைய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கும் பகுதிகளில் நிலத்தின் தாங்கும் திறன் குறைவாக இருப்பதால் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். மலைப் பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏழுமலையானை நம்பிப் பயனில்லை. தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என்று நம்பிக் கையைக் கட்டிக் கொண்டு அழுதால் நம் உயிர் தீர்ந்து விடும் என்ற முடிவுக்கு வந்தவரை சந்தோ ஷம்தான்! உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றம் கடவுள் நம்பிக்கைக்குச் சாவு மணி அடிக்குமேயானால் கெட்ட திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

பேயா - பிசாசா - ஆவியா?

சென்னை செங்குன்றம், நார வாரிக் குப்பம் பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய் மற்றும் உதிரிப் பூக்கள் அலுவலக நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் வைக் கப்பட்டுள்ளன. திருஷ்டி சுற்றப்பட்ட பூசனிக்காய் உடைக்கப்பட்டு, வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தின் அடியில் வைக்கப்பட்டது. ஏனிந்த தெருப்புழுதி? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலராக இருந்தவர் வெளி யூருக்கு மாற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகி விட்டனவாம். அவர் மன நிலை பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இறந்து விட்டாராம். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப் படவில்லை. சிறிது காலம் கழித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் இறந்து விட்டா ராம்.

இந்த நிலையில் இரவுப் பாது காவலர் ஒருவர் சில கதைகளைக் கிளப்பி விட்டுள்ளார். இரவு நேரத்தில் அலுவலகத்தில் யாரோ நடமாடுவது போல தெரிகிறது. பதிவேடுகள் புரட்டும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளார்.

நம் மக்களைக் கேட்க வேண் டுமா? பேய் நடமாடுகிறது! - ஆவி நடமாடுகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணியாற்று வோர்க்கு ஊர் மாற்றம் என்பதெல் லாம் சர்வ சாதாரணம்தானே. ஒரு அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் அடைவது என்ன அதிசயமான ஒன்றா?

புத்தியைச் செலுத்தாமல், புரளியைக் கண்டு அஞ்சினால் இத்தகைய மூடத்தனங்கள்தான் முளைக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்ன சொல்லு கிறார்கள்?

பேயும் இல்லை; ஆவியும் இல்லை. பேரூராட்சிப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யாகம் வளர்த்தோம் என்று சமாதானம் கூறுகின்றனர்.

இது பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்! ஒரு முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் சமாதானம் ஆகுமா?

பகுத்தறிவுச் சிந்தனை மனித னுக்கு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதாவது புரிந்தால் சரி.

தமிழ் ஓவியா said...

வில்லியநல்லூரில் நடந்ததென்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வில்லியநல்லூர் கிராமம். 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து அய்வர் மரணம் அடைந்தனர். அவ்வளவுதான். மூட நம்பிக்கை தொற்று நோய்ப் பற்றிக் கொள்ளுமே! ஆவி சேட்டைதான் காரணம் என்று எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல இந்த ஊரிலும் இருந்த வெட்டிப் பேச்சுப் பேர் வழிகள் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த மூடநம்பிக்கை தகவலை அறிந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத் தோழர்கள் தென்னவன், யாழ் திலீபன், மஞ்சை அழகரசன் ஆகியோருடன் நேரில் சென்று ஊரில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களில் ஒருவர் முதியவர்; இன்னொருவர் உரிய மருத்துவ உதவியின்றி காமாலை நோய் காரணமாக உயிரிழந்த பெண்.

ஊர் நிலைமை எப்படி? சுகாதாரச் சீர்க்கேட்டின் உச்சம். எங்குப் பார்த்தாலும் குப்பை விரிகோலம் தான்! சாக்கடை சங்கமம்தான்! விளக்கு வெளிச்சம் கூட சரியாக இல்லை. 2013ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு கிராமம்.

சுகாதாரச் சீர்கேடு காரணமாக வியாதிகள் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இங்கு உண்டு என்று கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் முதல் தேதி அவ்வூரில் மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் பிரச்சா ரத்தைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வில்லியநல்லூரில் பொதுச் செய லாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஈடுபடுவார்களாக!

தமிழ் ஓவியா said...


ஆதி பராசக்தி


கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட் பார்க்குப் புத்தி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் புழக்கத்தில் இருப் பது எல்லோருக்கும் தெரி யும்.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் 12ஆவது வார்டில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மடத்தில் மாட்டியிருந்த கடவுளர் படத்தில் தேன் வடிகின்றது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.

உண்மைத் தகவல் களைவிட புரளிகளுக்குத் தானே இறக்கைகள் அதி கம். மக்கள் கூடிட ஆரம் பித்து விட்டனர்.

கருஞ்சட்டைத் தோழர் கள் களத்தில் இறங்கினர். மக்களுக்கு விளக்கம் அளித்தனர். காவல்துறைக் கும் தகவல் அறிவிக்கப்பட் டது. செய்தியாளர்களும் கூடினர்; கழகத்தின் விளக் கத்தை அனைவரும் ஏற் றனர்.

நேரில் சென்று பார்த்த போது பொய் மூட்டை என்பதும் தெளிவானது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊத்துக்கோட்டை என்.பி. சாலையில், நாகவல்லி யம்மன் கோயில் வளா கத்தில் புற்று அருகில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்தன. ஒரு அம்மன் சிலை, பால் குடித்ததாக புரளி அவிழ்த்து விடப்பட் டது - ஊரே திரண்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் (டி.எஸ்.பி.) பாலச் சந்திரன், ஆய்வாளர் நாக லிங்கம் ஆகியோர் சம்பந் தப்பட்ட கோயிலுக்குள் சென்று, ஒரு கரண்டியின் மூலம் சிலைக்குப் பால் கொடுத்துப் பார்த்தனர். பால் குடிக்கவில்லை - புரட்டு அம்பலமானது.

பூசாரியைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று பூசாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். (விடுதலை 14.8.2010).

அதுபோன்ற நேர் மையாக சட்டத்தைக் காப்பாற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தால் இந்த மூடநம்பிக்கை வியா பாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடு வார்கள்.

1990 ஆகஸ்டில் இதே மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொடர்பாக ஒரு துண்டு அறிக்கை வெளி யிடப்பட்டது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! என்ற தலைப்பிட்டு, இது ஆதி பராசக்தியிடமிருந்து வரும் கடிதம். இது போன்று 20 அல்லது 50 நகல்கள் எடுத்து தெரிந்தவர் களுக்கு அனுப்பினால் ஆதி பராசக்தியின் அருள் கிட்டும் என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மேல் மருவத்தூருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

4.8.1990 நாளிட்டு பதில் கடிதம் வந்தது. அந்தத் துண்டறிக்கை களை நம்ப வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந் ததை நினைவூட்டுகிறோம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விநாயகனிடம் மனு; சபாஷ் சரியான அய்டியா!சென்னை - கஜவரத பெருமாள் கோயில் ஆலய மீட்புக் குழுவினர் ஒரு வேலையைச் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனராம்.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு காவல்துறையினரும் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

புஸ் என்று போனது - வந்த பக்தர்கள் வெறும் ஆறு பேர்கள் தானாம்; விநாயகரிடம் மனு கொடுத்துச் சென்று விட்டனராம்.

இது முட்டாள்தனம்தான் என்றாலும் அந்தப் பக்தர்களின் அறிவு நாணயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடவுள்மீது உண்மையிலேயே பக்தி உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பார் என்பதில் கண்டிப்பான வகையில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று துடிக்கிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் கள்கூட என்ன செய்ய வேண்டும்? சென்னை கஜவரத பெருமாள் பக்தர்கள், விநாயகரிடம் மனு கொடுத் திருப்பதுபோல ராமனிடம் மனு கொடுக்க வேண்டும்.

அதுபோல சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது - ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோஷம் போடுபவர்கள் நீதிமன்றம் சென்றி ருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறீமான் இராமச்சந்திரமூர்த்தி அவர்களே! உங்களுக்காகத் தான் நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். உங்கள் பேரால் உள்ள பாலம் இடிபடக் கூடாது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றமும் சென்றுள்ளோம்.

சென்னைவாசிகளின் நடவடிக்கை எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இனிமேல் நீதிமன்றம், அரசு மன்றம், வீதி மன்றம் என்று செல்லாமல், கொடி பிடித்துக் கோஷம் போடாமல், நேரடியாக கடவுளாகிய தங்களிடம் மனு கொடுப்பது - அதாவது கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்து விட்டோம் என்று முடிவு செய்வார்களேயானால் அவர்களின் அறிவு நாணயத்தைக் கூடப் பாராட்டலாம்.

அப்படி கடவுள் சிலைகளிடம் மனு கொடுத்துக் காரியம் ஆகவில்லையென்றால், அந்தக் கடவுள்களை என்ன செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட பக்தர்களே ஒன்றுகூடி, கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் கால கட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை அணுகலாம் - அப்பொழுது நல்லதோர் தீர்வினை, முடிவினைக் கொடுப்பதற்கு நாங்கள் தாராளமாகவே இருக்கிறோம்!

சரிதானே?

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...

முதல் கடமை

செய்தி: சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் புனரமைப்பு வேலையைச் செய்ய நாங்கள்தயார்! குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி

சிந்தனை: குஜராத் தில் ஊட்டச்சத்துக் குறைவால் செத்துக் கொண்டிருக்கும் குஜ ராத் மாநில சிசுக்களைக் காப்பாற்றும் வேலையில் குஜராத் முதல் அமைச் சர் மோடி உடனடியாக இறங்குவதுதான் மிக முக்கியம்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

பாராட்டத்தக்க யோசனை

மய்ய அமைச்சரவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அய்ந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்க மேற்கொண்ட முடிவு நெய்வேலித் தொழிலாளர் களை மட்டுமல்லாது, தமிழ் நாட்டு மக்களையே கவலைக்கு உள்ளாக்கியது.

அது மட்டுமல்லாது, காங்கிரசு தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மய்ய அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கங்களும் முதலில் கண்டனக்குரல் எழுப்பத் தவறவில்லை. மாநில அரசும் கண்டித்தது. ஜூலை 2-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்புவிடுத்து. நெய்வேலி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து படிப்படியான போராட்டங்களை அறிவித்து, முதலில் எதிர்ப்பு அட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்ச ராகியுள்ள சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாகவே அனைத்து இந்திய அளவில் பிற்பட்டோர் நலனின் அக்கறையுடன் செயல்படுபவர். கதர்ச்சட்டைக்குள் முற்போக்குச் சிந்தனை உடையவராகவும், சமதர்மக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராகவும் கருதப் படுபவர்.

இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துதான் பாராட்டுக்குரியது.

நெய்வேலியின் அய்ந்து சதவீதப் பங்குகளைப் பண முதலாளிக்குக்கோ, வட நாட்டவருக்கோ, வெளி நாட்டவருக்கோ விற்க வேண்டியதில்லை. தமிழக அரசே அதை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஆட்சேபனை ஏதுமில்லை.

தமிழக அரசு வாங்கவில்லையா? தொழிலாளர்களே அவற்றை வாங்கிக் கொள்ளலாம். நம் சொத்து நம்மிடையே தான் இருக்கும். வெளியில் எவருக்கும் போய் விடாது. நம்மை விட்டுப் போகாது என்றார்.

இந்த யோசனை நல்ல யோசனை மட்டுமல்ல. தமிழக நலனுக்கு உகந்த யோசனை. தமிழக அரசு போராட்டம், நடத்துவதற்குப் பதிலாக, பங்குகளை வாங்கிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஏற்கெனவே தமிழக அரசின் இரண்டு இயக்குநர்கள் நெய்வேலி நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்குவதன் வாயிலாக மூன்றாவது இயக்குநர் ஒருவரும் கிடைப்பார். நெய்வேலி நிறுவனம் மய்ய மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகும் போது தமிழக அரசின் கை ஓங்கும்.

தமிழக அரசுக்கு இந்த நானூறு கோடிப் பங்கு விலை ஒன்றும் அதிகமில்லை. எவ்வளவோ ரூபாய்களை மதுவில் சம்பாதித்துத் தமிழகத்தைச் சீரழிக்கும் அரசு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே.

தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே நெய்வேலி பங்குகள் விற்கப்பட்ட முன் மாதிரியும் அங்கே இருக் கிறது. எனவே தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து அப்பங்குகளை வாங்கினால், தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கையில் ஆதரவுக் குரல் எழும்புமே.
தமிழர் தலைவர்தான் நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி கொடுக்கும் மய்ய அரசு, நெய்வேலி நிலக் கரிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுத் தந்தவர்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நெய்வேலி மின்சாரத்தின் முழுப் பயனும் தமிழகத்திற்குக் கிடைக்கத் தாமும், தம் வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் போராட்டம் நடத்திக் கைது ஆனவர்.

எனவே, மய்ய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் இந்த அறிவிப்பும் நம் தமிழர் தலைவரின் பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் நினைவு வராமல் நெய்வேலி எந்தப் பிரச்சியும் சிந்திக்க வியலாத அளவுக்கு அவருடைய பங்கு மகத்தானது.
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


என்னே உணர்வு!


இதயம் வெளியில் தெரிவதில்லை, இதயத் துடிப்பும் வெளியில் கேட்பதில்லை. மனசாட்சி வெளியில் தெரிவதில்லை. மனசாட்சியின் குரலும் வெளியில் கேட்பதில்லை. விடுதலையும் தமிழர் தலைவரும் தமிழகத்தின் உயிரும் உடலும், வாழ்க தமிழர் தலைவர்! வளர்க விடுதலையின் யுகப் புரட்சி! ஆகஸ்ட் ஒன்றை எதிர்நோக்கியுள்ளேன்.

- த. ஆதிசிவம், பெரம்பலூர்

விடுதலைக்கு ஆறு மாத சந்தாவுக்கான காசோ லையை அனுப்பி வைத்த பெரம்பலூர் வெங்கடேச புரம் தோழர் மானமிகு ஆதிசிவம் பி.ஏ., அவர்கள் மேற்கண்ட கடிதத்தையும் எழுதி அதில் இணைத் திருந்தார்.

இதனைப் படிக்கும் தோழர்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்; யாரும் அவரைப் போய் சந்தா கேட்டு வற்புறுத்த வில்லை. தாமாகவே சந்தா பணம் அனுப்பி வைத்த தோடு அல்லாமல் தன் உணர்வுகளையும் எவ்வ ளவு அழகாக வெளிப்படுத் திக் கொண்டிருக்கிறார்.

இந்த இயக்கத்திற்கு எது பலம் என்றால், இதுபோன்ற அப்பழுக்கற்ற சிப்பாய்களான தொண்டர் களின் பலம்தான்.

இயக்கம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்க மாட்டார்கள் - இயக் கத்திற்கு நான் இன்னது செய்வேன்! என்று கூறும் இத்தகு இலட்சிய உறு திக்கு முன் துப்பாக்கி களின் ரவைகள்தான் என்ன செய்யும்?

1980ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு கடிதம் விடுதலை ஆசிரியர்கள் அவர்களுக்கு வந்தது. பாளையங்கோட்டை என்பது அவரின் ஊரோ வீடோ அல்ல! பாளையங் கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கக் கூடிய தோழரின் கடிதம் அது.

எனது பெரு மதிப் பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரி முகம்மது எழுதும் விவரம்:

வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனை யில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக் கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் நன்றி.
- அ. பக்கிரிமுகம்மது
சி.என்.ஓ. 264
மத்திய சிறை, பாளை

33 ஆண்டுகளுக்கு முன் பாளை சிறையில் இருந்த ஆயுள் தண்ட னைக் கைதியின் உணர்வு தான் சாதாரணமானதா?

தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கையும், அந்தக் கொள்கையில் தோழர்கள் கொண்ட உணர் வும் தொடர்கிறது என்று நினைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நம் தலைகள் நிமிர்கின்றன. மார்பு புடைக்கிறது - நம்மை வெற்றி கொள்ள யார் இருக்கிறார்கள்? எது இருக்கிறது? என்ற எண் ணமே மேலோங்கி நிற்கிறது. தொண்டர்களின் பலமே இந்த இயக்கத்தின் உண்மைப் பலம் என்பதி லும் அய்யம் உண்டோ!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற கொள்கை முடிவுக்குக் கண்டனம் தமிழர் தலைவர் அறிக்கை

நேற்று டீசல் மேலும் விலை உயர்த்தப்பட்டு (ஒரு லிட்டருக்கு 61 காசுகள்) ஒரு லிட்டர் ரூ.54.15 விலை என்று சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது 6ஆவது முறை உயர்த்தல் ஆகும்!

இதுபோல பெட்ரோல், இயற்கை எரிவாயு விலைகளும் திடீர் திடீரென்று இரண்டொரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்படுகிறது.

இது மக்கள் விரோதச் செயலாகும்! உலக நிலவரத்திற்கேற்ப, அந்தந்த நிறுவனங்களே அவ்வப்போது விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசு அளித்துள்ள கொள்கை முடிவு மிகவும் தவறானது.

அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் எதிர்ப்பு!

இதை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். அதுபோலவே தமிழ்நாடு முதல் அமைச்சரும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தனைக் கட்சிகளும் இந்தக் கொள்கை முடிவைக் கண்டிக்கத் தவறவில்லை. இவற்றையும் மீறி ஏழை - எளிய சாமான்ய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்யலாமா?

இயற்கை எரிவாயு, டீசல் போன்றவை இன்று விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்கு இன்றியமையாததாகி விட்டது!

பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையில், பம்புசெட் விவசாயத்திற்கு டீசல்தான் பயன்படுத்தப் படுகின்றது; அதன் விலையை இப்படி ஆறு தடவை ஒரே ஆண்டில் ஏற்றி வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம்தானா?

வேதனை, வேதனை - வெட்கமும்கூட! இதனை மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்.

இப்பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கை களையே மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசரம் அவசியம் ஆகும்!

எப்போது விடியல்?

காய்கறி விலைகள் உட்பட, சமையல், எண்ணெய் விலை உட்பட உயர்ந்துள்ள நிலையில் அடித்தள மக்களுக்கு எப்போது விடியல்?

என்னதான் விடை - பெருகும் தற்கொலைகள் தானா?

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.7.2013

தமிழ் ஓவியா said...


கல்யாணம்

மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம்.

(விடுதலை, 10.8.1968)