Search This Blog

13.6.13

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! -4

          மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (4)
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி எத்தகைய அருவருக்கத்தக்க மனப்பான்மை கொண்டவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை காரணமாக 61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளை விட்டே ஓடும் நிலை! 70 ஆயிரம் சிறுபான்மை மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்த கொடுமை! (ஒரு வகையில் ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலை நினைவுக்கு வந்தால் அது குற்றமல்ல!)

அந்தச் சூழலில் குஜராத் முதலமைச்சர் மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அந்த யாத்திரையில் பொறுப்பான முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் மோடியின் திருவாய் மலர்ந்தது என்ன?

நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசியது ஒரு முதலமைச்சர் என்பதை எண்ணிப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

பாபர் மசூதியை சங்பரிவார் கும்பல் ஒரு பட்டப் பகலில் இடித்தபோதுகூட இதே மோடி இந்தத் தரத்தில்தான் கருத்தினை உமிழ்ந்தார். பி.ஜே.பி. அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி! என்று சொன்னவர்தான் இந்தப் பெரிய மனிதர்(?).
மோடி ஆட்சியில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியது கவனிக்கத்தக்க தாகும். மோடி மட்டும் முதலமைச்சராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம்கள்மீது வெடிகுண்டுகளை வீசி யிருப்பார் என்றாரே பார்க்கலாம்.

பி.ஜே.பி. கோத்ரா சட்டப்பேரவை உறுப்பினர் ஒன்றைச் சொன்னார், தெகல்காவிடம்: குஜராத்தில் பட்டாசுக் கடைகள் எல்லாம் வெடிகுண்டு கடைகளாக மாறிவிட்டன! ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரே இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிறகு வேறு என்ன ஆதாரம் தேவை?
மோடியின் பாசிச ராஜ்ஜியம் ஒரு பக்கம் இப்படி நடந்து கொண்டிருந்த நிலையில், சங் பரிவார்க் கும்பல் கையில் சட்டத்தை எடுத்துக் கொண்டு சதுராட்டம் போட்டன.

மக்களிடத்தில் கலவரத்தைத் தூண்டும் துண்டறிக் கைகளை வழங்கிக் கொண்டிருந்தன. அந்தத் துண் டறிக்கைகளின் வாசகங்களை அவுட்லுக் இதழ் வெளியிட்டது.

உங்கள் உயிருக்கு ஆபத்து! நீங்கள் எந்த இடத்திலும் கொல்லப்படலாம்; கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர் களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே! என்று.
தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பு அறையிலோ கொல்லுவார்கள். போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றபவர்கள். வந்தே மாதரம்! பாரத் மாதாக்கீ ஜே! என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது?

எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள்; ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும் என்று இனப் படுகொலையை ஓர் அரசு திட்டமிட்ட வகையில் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் பெரும்பான்மையினரான இந்து மக்கள் மத்தியில் இத்தகைய வெறியூட்டும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்வார்களானால், அதன் விளைவு என்னாகும்? அதுதான் குஜராத்தில் நடந்தது!

குஜராத்தில் ஒரு கிராமத்துக்குள் நுழையும்போது, நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழைகிறீர்கள்! என்ற அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.
இன்றைக்குப் பிரதமருக்கான வேட்பாளர் என்றும், பி.ஜே.பி.யின் பிரச்சாரக் குழுவின் தலைவர் என்றும் நரேந்திர மோடி அறிவிக்கப்படுகிறாரே, அதே கோவா வைச் சம்பந்தப்படுத்திய முக்கிய தகவல் ஒன்றுண்டு.

என் நாடும், என் வாழ்க்கையும் என்று எல்.கே.அத்வானி நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்: குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி விலகவேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். அதற்கு நரேந்திரமோடி கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார் என்று அத்வானி அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். சொன்னபடி அவர் நடந்துகொள்ளவில்லையென்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த நிலையில், உள்ள ஒருவர்தான் அதே கோவாவில் நடைபெற்ற செயற்குழுவில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மதச் சார்பின்மைக் கொள்கையைப் பறைசாற்றும் இந்தியாவிற்கு மோடிதான் பிரதமர் என்றால், அதைவிட தற்கொலை வேறு ஒன்று உண்டா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
                     -------------------------------------"விடுதலை” தலையங்கம் 13-6-2013

27 comments:

தமிழ் ஓவியா said...


ஆடு - ஆடு!


2011 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னார்.

பிள்ளைகளைப் பள் ளிக்கு அனுப்ப வேண்டும் ஆடு மாடுகள் மேய்த்த நம் வீட்டுப் பிள்ளைகளை மறுபடியும் ஆடு மாடுகளை மேய்க்க வைக்க ஏற்பாடா? என்ற வினாவையும் தொடுத்தார்.

அது ஏதோ அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல.

கழிந்த தலைமுறை எப்படியோ போய்த் தொலையட்டும் - நிகழ்கால வருங்கால பஞ்சம - சூத்திரத் தலைமுறைகள் கல்விக்கண் பெறவேண்டாமா? என்ற அக்கறையில் - தந்தை பெரியார் பார்வை யில் சொல்லப்பட்ட கருத்து அது.

தமிழர் தலைவர் தொலைநோக்கோடு சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அதிமுக ஆட்சிக்கு அரணாக இருக்கும் தினமலர் ஏட்டிலேயே இன்று வெளிவந்த தகவல் அது.

குழந்தைத் தொழிலாளர் தினம் பற்றிய கருத் தரங்கு திருப்பூர் பள்ளியில் நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கத் தில் அனுப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்த அந்தத் தகவல் முக்கியமானது.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில், என் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

ஒரு குடும்பத்தில், கணவன், மனைவி இரு வரும் வேலைக்குச் செல்லுவதால் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மகனை 5ஆம் வகுப்பிலி ருந்து நிறுத்திவிட்டு, ஆடு மேய்க்கச் சொல்லி விட்டனர்.

அவனும் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்க்கத் துவங்கினான். அம்மா திட்டத்தால் ஒருவனுக்குப் படிப்புப் பாழாக வேண்டுமா? என எனக்குக் கவலை வாட்டியது. தொடர்ந்து 20 நாட்கள் நடையாய் நடந்து அறி வுறுத்தியும், அவர்கள் கேட்கவில்லை. வேறு வழி யில்லாமல், பள்ளிக்குச் செல்லாவிட்டால், நான்கு ஆடுகளையும், அரசு திரும்பி வாங்கிக் கொள்ளும்? என்று கூறி, மீண் டும் மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது (தினமலர் 14.6.2013 பக்கம் 8).

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். இதனை வேறு வழியில் செய்ததால் தான் தமிழர் தலைவர் அன்று எச்சரித்தார். இதோ இப் பொழுது நம் முன்னே! இன்னும் வெளிச்சத்துக்கு வராத எத்தனை அனுப் பட்டிகளோ!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இதுதான் மதத்தின் குணமா? நாத்திகச் சிறுவனைக் கொன்ற கொடூரம்


இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன்.

சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில் துப் பாக்கி குண்டு காயங்களுடனும் அந்தச் சிறுவன் காணப்பட்டான். மனித உரிமைக்களைக் கண்காணிக் கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு அந்த சிறுவன் யாருடனோ கடவுள் இருக் கிறாரா என்று வாதத்தில் ஈடுபட்டு இருந்தான். அப்பொழுது முகமது நபியே திரும்பி வந்தால்கூட, நான் கடவுள் நம்பிக்கையுடையவனாக மாற மாட்டேன் என்று அவன் கூறியதை சிலர் கேட்டுள்ளனர்.

ஆனால் வேறு சிலர், அவன் சொன்னது சரியாகக் கேட்கப்பட வில்லை. அந்தப் பையன் ஒரு வாடிக்கையாளரிடம் இலவச காஃபி கேட்டதற்கு முகமது நபியே திரும்ப வந்தாலும் கூட நான் உனக்கு இலவச காஃபி கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். இதுபற்றி, பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

அல்கொய்தா இயக்கம் அந்தப் பையனைக் கடத்திக் கொண்டு போய் 24 மணி நேரம் சித்திரவதை செய்து உள்ளது. பிறகு, பொது மக்கள் கூடியுள்ள வீதியின் மத்தியில் அவன் இழுத்து வரப்பட்டு அவன் தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்டான். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அக்கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள் சிரியர்களாகத் தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், உணவைத் தேடி அலைந்த இரண்டு 10,16 வயதுப் பையன்கள் தாலிபான்களால் வெட்டிக் கொல் லப்பட்டனர்.

அபுசக்கார் என்ற சிரிய போராளித் தலைவர் ஒரு ராணுவ வீரரின் இதயம் துண்டாக்கப்பட்டு உண்பதை வீடியோ படம் பிடித்துள்ளார். இந்த அபுசாக கரின் இதயத்தை உண்ணும் வீடியோ படம் அயல் நாட்டு அலுவலகத்திட மிருந்து பெறப்பட்டுள்ளது.

நாத்திகம் பேசியதற்காக சிறுவன் கொல்லப்பட்டதைப்பற்றி பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு மேலும் விளக் கமாக தகவல் கொடுத்துள்ளது. அதன்படி,

அந்தப் பையனைச் சுற்றி கூட்டம் கூடிற்று. போர் அணியைச் சேர்ந்த ஒருவன் அலெப்போ நகரத்து இரக்க முள்ள குடி மக்களே, கடவுளை நம்பாததும் பல கடவுட் கொள்கை பற்றிப் பேசுவதும் - முகமது நபியைக் குற்றம் சாட்டு தலாகும், யார் அவ்விதம் நபியைக் குறை சொல் கிறார்களோ, அவர்கள் இவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் பிறகு அவன் இரண்டு குண்டு களை, பொது மக்கள், சிறுவனின் தாய் தந்தையர் கண் முன்னிலையிலேயே தானியங்கி துப்பாக்கியிலிருந்து சுட்டான். பின் ஒரு காரில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

ராமி அப்துல் ரகுமான் என்பவர், பிரிட்டிஷ் கண்காணிப்பு அமைப்பு இந்தக் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது. கண்டிக்காவிட்டால் இது புரட்சியின் எதிரிகளுக்கும், மனிதா பிமான எதிரிகளுக்கும் வசதியாகப் போய் விடும் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுள் தூங்கினால்..

செய்தி: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளிமஞ்சம் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் அளிப்பு.

சிந்தனை: மஞ்சத்தில் படுத்துக் கடவுள் தூங்குவதும் உண்டோ? அப்படி தூங்கும் நேரத்தில் இந்த லோகத்தை வேறு யார் காப்பாற்றுவார்களாம்?

தமிழ் ஓவியா said...


பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வது தான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வது தான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


டேப்லெட் கணினிகள் நல்லதா, கெட்டதா?


டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக் கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந் தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அவை எதிர்மறை யாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

கற்றலை பாதிக்கின்றன

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக் கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்.

அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

இரு ஆலோசனைகள்

இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.

முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடு திரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.

இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்து கிறார்கள்.

தமிழ் ஓவியா said...தகுதி மிக்க தலைவர் வீரமணி

மரியாதைக்குரிய அய்யா,

வணக்கம். தாங்கள் எழுதிய புத்தகங்களை சமீப காலமாக அதிகமாக படித்து வருகின்றேன். மிகவும் அற்புதமான ஆய்வு நூல்கள் அவை மனித குல விடுதலைக்கான கருத்துக்கள் ஆகும். அவைகளை படிக்கும் போதெல்லாம் என்னுள் ஒரு நெருடல் இருந்து வருகின்றது. இது போன்ற மனிதகுல விடுதலைக்கான கருத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு சில மனிதர்களிடத்தில் மட்டுமே முடங்கிக் கிடக்கின்றன.

அறிவுத் தேடலில் ஈடுபடும் மனிதர்களுக்கு மட்டும் சந்தர்ப்ப வசத்தால் மட்டுமே இதுபோன்ற முற்போக்கு சிந்தனைகள் கிடைக்கின்றன. அவர்களும் அவைகளை தாம் ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர். தான் சார்ந்திருக்கும் மக்களிடம், தன் குடும்பத்தவர் களிடம் கூட அவைகளை பகிர்ந்துக் கொள்வதில்லை. தமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வந்து விடாது என்ற சாதகமான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே. தாம் இதுபோன்ற உயர்ந்த கருத்துக்களை கொண்டவர் என்று பெருமிதமாகக் காட்டிக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே இக்கருத்துக்களை பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்கின்றனர். தாம் பெற்ற கருத்துக்கள் அந்த மனித சமுதாயத்திற்குச் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற வேட்கை அவர்களிடத்தில் காணப்படுதில்லை.

ஆனால் பிற்போக்குச் சக்திகளாகிய மதவாதிகள், தங்கள் கருத்துக்களை எல்லாவகையான ஊடகங் களையும் பயன்படுத்தி மாறிவரும் நவீன விஞ்ஞான கருத்துக்களுக்கு ஏற்ப அவைகளை மெருகூட்டிப் பரப்பி வருகின்றனர்.

எல்லா வகைப்பட்ட மக்களுக்கும் ஏற்ப, அந்தந்த மக்களுக்கு உரிய அமைப்புகளை தோற்றுவித்து அம்மக் களின் நலன்களைப் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அவர்களை பிற்போக்குத் தனத்தில் இருந்து விடுபடாமல் வைத்திருப்பதற்குரிய அனைத்துப் பணிகளையும் செய்து வருகின்றனர். உணர்வு ரீதியாக பிற்போக்கு கருத்துக் களில் திளைத்து இருக்கும் மக்கள் அவைகளை சுலபமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களின் அடிமைத்தனம் தாம் கொண்டிருக்கும் கருத்துக்களிலும் தாம் சார்ந்திருக்கும் அமைப்பு முறைகளிலும் இருக்கிறது என்பதை உணராமல் இருந்து வருகின்றனர்.

இவைகளை மாற்றி தமிழ்நாட்டு மக்களும், இந்திய மக்களும் தாங்களை விடுதலைப் பெற்ற மக்களாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பகுத்தறி வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் தங்களை முழுமையாக அந்த பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவுக்கருத்துக்களும், முற்போக்கு சிந்தனை களும் மக்களின் உணர்வாகவும் அவர்களது வாழ்விய லாகவும் அமைய வேண்டும்.

பிற்போக்குக் கருத்துக்களும், மதவாதச் சக்திகளும், மேலோங்கும் போது மக்கள் அவைகளை இயல்பாகவே ஒவ்வாமையுடன் எதிர்க்கின்ற அளவிற்கு உணர்வூட்டப் பட வேண்டும்.

அதற்கு வெவ்வேறு அமைப்புகள் மக்களின் நிலைகளுக்கு ஏற்ப ஆட்படுத்தப்பட்டு அம்மாக்களின் வாழ்க்கையோடு கலந்து மார்க்சிய. பெரியாரிய. அம்பேத்காரிய கருத்துக்களை பரப்ப வேண்டும். அதற்கான தலைமைபீடமாக திராவிடர் கழகமும் தத்துவத் தந்தையாக தாங்களும் இருந்து செயல்பட வேண்டும்.

இந்த ஈடு இணையற்ற பணியை மேற்கொள்வதற்குரிய தகுதியும், அறிவும். மற்ற எல்லா வகையான ஆற்றலும் பெற்ற மனிதர் தாங்கள் தான். அதற்கான எல்லா விதமான தகவலைமப்புகளையும் தாங்கள் தான் பெற்றுள்ளீர்கள்.

அந்த உன்னத தியாகத்திற்கு நானும் என்னைச் சார்ந்தவர்களும் அர்ப்பணித்துக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.

தாங்கள் 21ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த தத்துவஞானியாகவும், சிறந்த சமூக புரட்சியாளராகவும், திகழ்ந்து இந்திய சமூகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு அவர்கள் முழு விடுதலை பெற்ற சமூகமாக மாறுவதற்கு தாங்கள் உழைக்க வேண்டும் என்பதோடு வரலாற்றில் தாங்கள் 21-ஆம் நூற்றாண்டின் தலைவர்களிலேயே மிகவும் உயர்ந்தவர் என்ற பெருமை பெற வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

- கே.சுப்ரமணியன் வழக்குரைஞர் (தாழந்தொண்டி, நாகப்பட்டினம்)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வும்- விடுதலையின் பாராட்டத்தக்க பணியும்

திராவிடர் கழகத் தலைவர் அய்யா அவர்களுக்கு எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கழக நாளிதழான விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் 24.4.2013 முதல் 31.4.2013 வரை விடுதலை நாளிதழில் வெளியான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக தகுதித் தேர்வில் மோசடி நடந்துள்ள தையும் அதைத் தொடர்ந்து சமூக நீதிக்கு எதிரான இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் செய்தி ஆசிரியர். இதனை எங்கள் சங்கம் மனதார பாராட்டி வரவேற்கிறது. தகுதித் தேர்வில் நடந்த குளறுபடிகளை மிகத் தெளிவாக சரியான நேரத்தில் வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அறிவித்துள்ள தகுதி தேர்வை ரத்து செய்து அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களையும் மாநில வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப் படையில் நியமனம் செய்ய எங்களுக்காக தமிழக அரசை வலியுறுத்த வேண்டு மாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- கே. சற்குணம், (மாவட்டத் தலைவர்)
- ஏற்காடு ஜெ. பாலு (மாவட்டச் செயலாளர்)
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

தமிழ் ஓவியா said...

கடவுள் பாகம் (1) புரட்டிப் போட்டது

கடவுள் பாகம் (1) என்ற தங்களது வெளியீட்டை வாசித்தேன் மிக மிக அற்புதம். தந்தை பெரியார் அவர்களின் வைரம் பாய்ந்த சிந்தனை என்னை மேன் மேலும் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக புதுப்பித்திருக்கிறது.

தலை துவண்டு வாடிய கன்றாக ஒற்றையில் நின்ற என்னை இயற்கையின் நியதியால் அய்யாவின் மண்டைச்சுரப்பு வழிந்த ஓரிருதுளி என்மீதும் விழ தலை நிமிர்ந்து வளிமண்டலங்களைக் கிழித்துக் கொண்டு என்னை விண்ணை நோக்கி என் வளர்ச்சி பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, தங்களின் பகுத்தறிவுப் பணியில் தானும் பங்கு கொள்ள விருப்பம் தான். மக்கள் மத்தியில் கடவுள் இல்லை என்று கூறினால் இவன் ஒரு பயித்தியகார னென்று பட்டம் சூட்டப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

உலகம் இந்த உண்மையை புரிந்துக் கொள்ளும் நாள், எந்நாளோ என்ற ஏக்கம் என்னுள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் அச்சத்திற்கு காரணம் சரியா தவறா என்ற தீர்வுக்கான சமாதானம் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- ஆர். சிவசண்முகமூர்த்தி, கடலூர்

தமிழ் ஓவியா said...


சேவை என்பது...சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.
பெரியார்-(குடிஅரசு, 17.11.1940)

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு ஒன்று அழைக்கிறது!கடந்த 15.6.2013 சனியன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் மிகவும் அவசியமானவை - தேவை யானவை அவை என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பொதுவாக மற்ற கட்சிகள், அமைப்புகள் நிறை வேற்றும் தீர்மானங்களுக்கும், திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு.

மேம்போக்கானவைகளாக இல்லாமல் ஆழ மாகவும், சமுதாயத்தின் ஆணிவேர் வரை ஊடுருவும் தொலைநோக்குடையதாகவும் கழகத்தின் தீர் மானங்கள் இருக்கும்.

திண்டுக்கல் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல புதுக்கோட்டையில் (9.10.1987) நிறைவேற்றப்பட்ட தொலைநோக்குத் தீர்மானம் தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்குக் கை கொடுப்பதாகப் பிற்காலத்தில் அமைந்திருந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின் கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி, நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறும் தீர்மானம் புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நேரத்தில் புதுக்கோட்டை தீர்மானத்தை நினைவூட்டி திராவிடர் கழகத் தலைவர் அஞ்சற்க - இதிலிருந்து மீள சட்ட ரீதியாகவே வழி இருக்கிறது! என்று கூறி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (5.11.1993).

வெளியிட்டது மட்டுமல்ல - மாதிரி மசோதாவையே தயாரித்து அளித்தார். அதன்படி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்ற அனுமதியும் பெறப்பட்டதே (24,25.8.1994).

1928இல் சென்னையில் நடைபெற்ற தென் னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலும், 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்குச் சொத்துரிமை தீர்மானம் மானமிகு கலைஞர் தலைமையிலான ஆட்சியில் 1989இல் நிறைவேற்றப்பட்டது - அதன் பிறகு நாடாளுமன்றத் திலும் சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியா முழு மைக்கும் அந்தச் சட்டம் அமலுக்கு வந்து விட்டதே!

நமது இன்றைய தீர்மானம் என்பது நாளைய சட்டம் என்பதுதான் இயக்கத்தின் வரலாறு மட்டுமல்ல; நாட்டின் வரலாறும்தான்.

அந்த வகையிலே திண்டுக்கல்லில் நிறை வேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாளைய வரலாற்றின் திறவுகோலாகும்.

குறிப்பாக ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போர் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) தொடர்பாக மூன்று தீர்மானங்கள் ஒன்றையொன்று தழுவி நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜாதியும், தீண்டாமையும் நிலவும் நாடு எப்படி சுதந்திர நாடாகும்? ஒரு சுதந்திர நாட்டில் ஜாதிக்கும், தீண்டாமைக்கும் இடம் இருக்கலாமா?

இந்தக் கேள்வியை இந்தியத் துணைக் கண்டத் திலேயே எழுப்பிய ஒரே தலைவர் தந்தை பெரியார், ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

இன்றைக்குத் தீண்டாமை, ஜாதி ஆணவம் என்பது அதிகார பூர்வமாக சாஸ்திர ரீதியாக சட்ட ரீதியாக குடி கொண்டு கோலோச்சுவது இந்துக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்தில்தானே!

அதே இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒருவர் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகத் தடை விதிப்பது எந்த வகையில் சரி?

1970இல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் கடந்த 43 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

திண்டுக்கல் பொதுக்குழு இதற்கான போராட்டக் களத்தை அறிவித்து விட்டது. அதன் முதற் கட்டமாகப் பிரச்சாரப் பயணம் வகுக்கப்பட்டுள்ளது.

சுவர் எல்லாம் இந்தப் போராட்டத்தைப் பேசட்டும், தெருமுனைக் கூட்டங்கள் நடக்கட்டும் நடக்கட்டும்!

இந்தப் போராட்டம் ஏன் என்பதுபற்றியும் சிறு வெளியீடு (ரூபாய்2) வருகிறது இலட்சக்கணக்கில் பொது மக்களைச் சென்றடைய வேண்டும்.

கழகத் தலைவர் கூறிவிட்டார், சால்வை வேண்டாம் - போராட்ட வீரர்களின் பட்டியலைத் தாரீர்! தாரீர்!! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடையில் 40 நாட்களே - எழுவீர் கருஞ்சட்டைத் தோழர்களே - குடும்பம் குடும்பமாக!

தந்தை பெரியார் தொடங்கிய போரை அவரது தலைசிறந்த மாணவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலே வெற்றி கரமாக முடித்துக் காட்டுவோம்! காட்டுவோம்!!

ஆயத்தப் பணிகள் நடக்கட்டும்! நடக்கட்டும்!! 17-6-2013

தமிழ் ஓவியா said...


சூதாட்டச் சுரண்டல்


- சிவகாசி மணியம்


சூதாட்டம், சூழ்ச்சி, சூனியம், சுரண்டல் என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும், எந்த உருவில் தலை தூக்கினாலும் அதனை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்தெறிய தந்தை பெரியாரின் பேரியக்கம் திராவிடர் கழகம் தயங்கியதே இல்லை. இது நாடறிந்த செய்தி.

கடவுளின் பெயரைச் சொல்லிச் சுரண்டல், மதத்தைக் காட்டி சுரண்டல்; சாதியிலும் ஏற்றத்தாழ்வைச் சொல்லி சுரண்டல். அரசியலிலோ சொல்லவே வேண்டாம். இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம், சுரண்டல்! எல்லா துறைகளிலும் உள்ளே புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி கோடிகளில் திளைக்க, பலர் கைப்பொருள் இழந்து விளிம்பு நிலை மனிதர்களாக மாறிவிடுகின்றனர். நல்ல மனிதர்களை இச்சமுதாயம் தேடிக் கொண்டிருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நல்லதம்பி படத்தில் இந்திர சபா எனும் கூத்தில் மனித முகங்களை ஒரே வரியில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுவார். அவர் எதைச் சொன்னாலும் அதில் சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் பகுத்தறிவும் பளிச்சிடும்.

டி.ஏ.மதுரத்தைப் பார்த்து பெண்னே நீ சொர்க்க லோகத்துக்குப் போ. ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுங்க தான் இருப்பாங்க. நரகத்துல ரொம்பப் பேரு இருப்பாங்க. நானும் அங்கே போயி (மது விலக்கு) பிரச்சாரத்தை பண்ணிட்டு சீக்கிரமா வந்து சேருகிறேன் என்பார். இல்லாத சொர்க்கம் நரகத்தை நையாண்டி செய்யும் வேடிக்கை வித்தகம் மட்டுமா இதில் இருக்கிறது? மனிதர்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள், தவறு செய்யத் தயங்காதவர்கள், கொடியவர்கள், பொய்யர்கள் என்பதை நாசூக்காக, சாமர்த்தியமாகச் சொல்லுகிறார். எவ்வளவு பெரிய உண்மையை உலகுக்குச் சொல்கிறார் பாருங்கள். கோடானு கோடி மக்களில் மிகச்சிலரே நல்லவர்கள் என்பதை போட்டுடைக்க வேறு எவரால் முடியும்!

கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆர். வாயசைப்புக்காக எழுதிய திரைப்படப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. கலைவாணரின் அரிய கருத்தை அப் படியே வழிமொழிவதாக அமைந் திருப்பதை எண்ணி வியக்க வேண் டியுள்ளது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. என்று தொடங்கும் பாடலில் உலகத்தில் திருடர்கள் சரிபாதி. ஊமைகள் குருடர்கள் அதில் பாதி என்பார். நம் கண் முன்னாலேயே அது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, போர்த் தளவாடங்கள், ரயில்வே காண்ட்ராக்ட் என ஊழல்கள் பல்கிப் பெருகி நாடாளு மன்றமே திணறிக் கொண்டிருக்கிறது.

அனைத்து மட்டத்திலும் லஞ்சம், ஊழல், சூது, சுரண்டல்! நேர்மைத் திறனின்றி மக்களை வஞ்சிப்பது வாழ்க்கை ஆகிவிட்டது. இப்போது கிரிக்கெட் சூதாட்டம்! நாளிதழ்களை விரித்தால் இதுதான் தலைப்புச் செய்தி. ஊடகங் களுக்கு செமதீனி!

பக்தி மூடநம்பிக்கைகளில் கண்ணி ருந்தும் குருடராய் கைக்காசையும், அறிவையும் இழக்கும் பக்த கே()டிகள் ஒரு பக்கம்! கிரிக்கெட் போதையில் கிறு கிறுத்துப்போய் பொருளையும், பொன் னான நேரத்தையும் இழந்து திரியும் பழுத்த அறிவிலிகள் இன்னொரு பக்கம்.

நாடு, பொருள் மட்டுமல்ல, பெண்டாட்டியையும் சூதில் இழந்த மகாபாரதக் கதை இங்கேதானே பிறந்தது. இந்த நாடு எப்படி உருப்படும்?

மே 24-ஆம் நாள் தமிழகமெங்கும் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் எத்தகைய அர்த்தமுள்ளது! அறிவு சார்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

தமிழ் ஓவியா said...


அன்று அண்ணா சொன்னது


ஒருமுறை தில்லி மாநிலங்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி அண்ணா மிக உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் குறுக்கிட்டு, நீங்கள் ஏன் வேறு நாட்டு பிரச்சினையை இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறீர்கள்? இது பிறநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாதா? என்று கேட்டார்.

அதற்கு அண்ணா, அடுத்த வீட்டில் கணவன் - _மனைவி நெருக்கமாக இருக்கும்போது எட்டி பார்ப்பது தவறுதான். ஆனால் அந்த மனைவியை கொடுமைக்கார கணவன் கழுத்தை நெரித்துக் கொல்ல முயலும்போது, அவள் கத்துவதைக் கேட்டு ஓடி உதவுவது எப்படி தவறாகும்? அதிலும் அந்தப் பெண் எனக்குத் தங்கையாக இருக்கும்போது என்றார். இதை கேட்டதும் அமைச்சர் மௌனமாகி விட்டார்.

தமிழ் ஓவியா said...


கொய்யா சாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட்டை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் தமிழர் தலைவர் பேட்டிதிண்டுக்கல், ஜூன் 15- அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 பேர்களுக்கும் பணி நியமனம் வழங்கக் கோரி ஆகஸ்ட் 1இல் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பங்கேற்க பட்டியல் கொடுத்துள்ளனர் என செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் இன்று (15.6.2013) பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:-

இன்றுவரை 5 ஆயிரம் பேர் பங்கேற்க பட்டியல் கொடுத்துள்ளனர்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி திட்டத்தின்படி பயிற்சியை முடித்த 206 பேர்களுக்கும் பணி நியமனம் வழங்கக்கோரி, திராவிடர் கழகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி (1.8.2013) சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவிருக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்க இதுவரையில் 5 ஆயிரம் தோழர்கள் பெயர் பட்டியலை கொடுத்துள்ளனர்.

அய்.பி.எல். போட்டியை ஒழிக்கவேண்டும்

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் என்னும் போதையில் உழன்று வருகின்றனர். கொத்தடிமைகளை மீட்கவேண்டும் என்று சொல்வார்களே, அதுபோல் கிரிக்கெட் போதையில் உள்ள இளைஞர்களை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். கிரிக்கெட் என்பது மேல்ஜாதியினர், பணக்காரர்களுடைய விளையாட்டு என்பது ஊரறிந்த விஷயம்.

மாணவர்கள் கல்வியை மறந்துவிட்டு வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வு நடைபெறும் நேரங்களில் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் கறுப்புப் பணம் வெகுவாகவே புழங்குகிறது. முதற்கட்டமாக அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒழிக்கவேண்டும்; பிறகு கிரிக்கெட்டை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


பிராமணியத்தை ஒழித்தவர்கள் - II

பார்ப்பனரல்லாதார் வைதீகச் சடங்குகள் என்ற பெயர் வைத்துக்கொண்டு தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம் என்றோ சிரார்த்தம் என்றோ, தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்தமாகச் செய்யும் காரியத்தை, முன்னோர் களை மோட்சத்திற்கு அனுப்பச் செய்யப்படும் கிரிகை என்ற மூட நம்பிக்கையால், அக்காரியத்திற்கு பிராமணர்களை அழைத்துஅதை அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போ டொட்டிய அழுக்குபோல் தங்கள் மனத்தில் படியப் பெற்று, ஒரு பார்ப்பனனைக் கூட்டி வந்து பலவகைத் தான சன்மானங்களை அப்பார்ப்பானுக்கு அளித்து, அவன் சொல்லும் பிரகாரமெல்லாம் சொல்லி, அவன் காலில் விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமகாரம் செய்து வருவதும், அதேபோன்று கலியாணம் முதலிய சுபகாரியங்களுக்கும் பார்ப்பனனை அழைத்து மணமக்களுக்கு ஆயுள் விருத்தியையும் புத்திர சம்பத்தையும் அப்பார்ப்பனன் இரட்சா பந்தனமளித்து வருவதாக பிரேமைக்குள்ளாகி அப்பார்ப்பனனைக் கொண்டு செய்து வருவதும் - வீண் அர்த்தமற்ற - பொருளற்ற - சுயமரியாதையை இழக்கச் செய்யத்தக்க - ஒரு கூட்டத்தார் தங்கள் பிழைப்பைக் கருதி செய்து வைத்து ஏமாற்றிவரும் காரியமாகும்.

இவ்வுண்மையைத் தெரிந்த பலர் சின்னாட்களாக அவ்வித மூடநம்பிக்கைக்குள்ளாகாமல் விழித்துக் கொண்டனர் - விழித்து வருகின்றனர். இவ்வாறு தங்கள் சுபா சுபகாரியங்களுக்குள் பிராமணியம் வந்து நுழையாமல் விரட்டியவர்களுள் 14 கனவான்களின் பெயரை சென்ற இதழில் இதே தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தோம். இவ்விதழிலும் பிராமணியத்தை ஒழித்தவர்களுள் சில கனவான்களின் பெயரைக் கீழே வெளியிட்டுள்ளோம். இனியும் அவ்வாறு சடங்குகள் செய்வதில் நம்பிக்கையில் லாதவர்கள் பெயரைத் தெரியப்படுத்தினால் வாரந்தோறும் பத்திரிகையில் பிரசுரித்து வரப்பெறும்.

மேற்கூறிய பிரகாரம் பிராமணியத்தை விரட்டிய மற்ற கனவான்களின் பெயர்களாவன:-

15. எ.எ.கே.கலியப்பெருமாள் நாயுடு, ஆஞ்சிநேய வார்ப்படத் தொழிற்சாலை, திருச்சி.
16. ச.ப.சி.பரமசிவன் செட்டியார், கதர் டெப்போ, திருச்சி.
17. அ.சிவப்பிரகாசம் பிள்ளை, தலைமைத் தமிழாசிரியர், அர்ச் சூசையப்பர் கலாசாலை, திருச்சி.
18. தி.திரவியம் பிள்ளை, முனிசிபல் கவுன்சிலர், திருச்சி.
19. பி.ஏ.சுப்பிரமணிய பிள்ளை, இராகவ செட்டித் தெருவு திருச்சி.
20. ஈ.என்.வெங்கடப் பெருமாள் நாயுடு, பி.ஏ., பென்ஷன் தாசில்தார், ஈரோடு.
21. கு. வீராசாமி நாயுடு, ஈரோடு.
22. சி.கந்தசாமி, திருநெல்வேலி கதர் நெசவுச் சாலை, சாவடியகம், திசையன் விளை.

- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...

முறியடிக்கப்பட்டவர்களுக்கு மித்திரனின் நற்சாட்சிப் பத்திரம்

சென்னைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப் பற்றி மித்திரன் தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில் சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றியல்லவென்றும், ஜஸ்டிஸ் அபேட்சகர்களான கனவான்கள் அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச் செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும் சொல்லுகிறான். இதிலிருந்தே பார்ப்பனக் கட்சியான சுயராஜ்யக் கட்சியாரின் சார்பாய் நிறுத்தப் பட்ட அபேட்சகர்களை ஓட்டர்கள் மதிக்கவில்லை என்றும், இவர்கள் நன்மை செய்வார் கள் என்று ஓட்டர்கள் நினைக்கவில்லை என்றும் ஏற்படுகிறது. இதைப் பார்க்கும்போது, அய்யோ பாவம்! நமது ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள் பழைய குரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்தெந்த விதத்தில் கெடுத்து விட்டார்கள் - கெடுத்து வரு கிறார்கள் என்பதை நினைக்கும் போது செட்டியார் பேரில் அளவு கடந்த பரிதாபமேற் படுகிறது.

ஸ்ரீமான் செட்டியாரின் மான நஷ்ட வழக்கில் செட்டியார் மானம் ஒத்தக்காசுதான் பெறும் என்று தீர்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் தனது பேராசையினிமித்தம் தனது பட்டத்தையும் விட்டு ஏமாறினார் என்கிற பெயர் வாங்கிக் கொடுத்து, பட்டத்தையும் பிடுங்கி விட்டார்கள். போதாக் குறைக்கு சென்னைத் தேர்தலில் ஸ்ரீமான் செட்டியார் தோல்வி யுற்றதற்குக் காரணம் ஓட்டர்களுக்கு செட்டியாரிடத்தில், தங்களுக்கு நன்மை செய்வார்கள் என்கிற நம்பிக்கை யில்லாததால்தான் ஓட்டுக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் வெற்றி பெற்றிருந்தால் அது செட்டியாரின் நல்ல குணத்திற்கு அல்ல வென்றும் சுயராஜ்யக் கட்சியாரிடத்தில் ஜனங்களுக்குள்ள மதிப்பு என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள். ஸ்ரீமான் செட்டியார் தோற்றதால் அது சுயராஜ்யக் கட்சிக்கு ஜனங்களிடத்தில் உள்ள வெறுப்பும் அவநம்பிக்கையும் அல்லவென்றும் செட்டியாரிடத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாத தால்தான் என்றும் சொல்லிவிட்டார்கள். நாளைக்கு சென்னை சட்டசபைத் தேர்தலில் செட்டியார் அவர்கள் அநேகமாய்த் தோற்றுப் போகலாம். அப்போது செட்டியாரைப் பற்றி என்ன சொல்லுவதற்குத் தயாராயிருக்கிறார்களோ தெரியவில்லை.

எப்படியாவது நமது ஸ்ரீமான் செட்டியாருக்கு நாள் கழிந்தால் போதும்; யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை போல் இருக்கிறது. செட்டியாரின் பரிதாப நிலைக்கு நாம் மிகுதியும் இரங்கு கிறோம்!
- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...

இதுவும் ஒரு நன்மைக்கே

காங்கிர தலைவர் பதவி

அஸ்ஸாம் காங்கிர தலைவர் பதவிக்கு இவ்வரு ஷம் ஒரு மகமதிய கனவானையே தெரிந்தெடுக்க வேண்டுமென்பது தற் காலம் தேசத்திலுள்ள எல்லா தேசிய சபைகளினுடையவும் தேசியவாதிகளி னுடையவும் ஒரே கருத்தாயிருந்து வரு கிறது. ஏனெனில் வட நாட்டில் உள்ள இந்து முஸ்லீம் கலவரங்களுக்கும் தென் நாட்டில் உள்ள பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் கலவரத்திற்கும் தக்க உபாயம் சொல்லக் கூடியவர்களும் பொது ஜன நம்பிக்கைக்குப் பாத்திரமான வகுப்பார்களுமே இருந்தால் தான் அந்தக் காங்கிரசையும் அதன் உப தேசத்தையும் பொது ஜனங்கள் மதிக்கக் கூடும். அப்படிக்கில் லாமல் யாரும் பின் பற்று வோரில்லாத ஒரு தனிப்பட்ட நபர், அதுவும் தேசத்தாரின் அவநம்பிக்கைக்கும் வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் ஆளான வகுப்பைச் சேர்ந்தவரும் சுய நன்மையையும் மூர்த்தியையுமே பிரதானமாய்க் கருதிய வரும் ராஜ்ய வாழ்வில் நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவருமாய் இருக்கும் ஒருவர் போட்டிபோட ஆரம்பித் தால் யோக்கியர்கள் கட்டாயம் விலகியே விடுவார்கள். அது மாத்திரமல் லாமல் காங்கிரஸ் தலைவர், தேர்தலில் தான் வெற்றி பெற சூழ்ச்சிகளும் ஒழுங்கீனமான பிரசாரங்களும் நடந்து வருமேயானால் கண்டிப்பாய் பொறுப்பும் யோக்கியதையும் உள்ளவர்கள் அந்த தானத்தை விரும்ப வேமாட்டார்கள்.

சென்னைப் பார்ப்பனர்கள் தேர்தல் களில் செய்யும் சூழ்ச்சியை உலகம் அறி யாததல்ல உதாரணமாக, திருப்பூர் மா காணக் கான்பரன்சுக்கு டாக்டர் வரதரா ஜுலு நாயுடு காரை தெரிந்தெடுக்காமல் இருப்பதற்குப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியும், காஞ்சீபுரம் மகாநாட்டுக்கு ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலி யாரைத் தேர்ந்தெடுக்காமல் செய்து ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் தலை வராவதற்குப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியும் புரட்டும் பொய்யும் எவ்வளவு என்பதும் தமிழ்நாடு வாசிகள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள்.

நிற்க, இரண்டு பொறுப்புள்ள மகம்மதிய கனவான்கள் இந்த தானத்தின் அபேட்சக தானத்தில் இருந்து விலகக் காரணம் என்ன? ஒருவர் தன்னை விடப் பெரியார் இந்த தானத்தை வகிக்க வேண்டும் என்கிறார்; மற்றொருவர் போட்டியில்லாம லிருந்தால்தான் சம்மதிப்பேன் என்கிறார். இந்த இரண்டு கனவான்களுக்கும் பதில் சொல்லாமல் ஸ்ரீமான் எ. சீனிவாசய் யங்கார் வாயை மூடிக்கொண்டு தனக் காகப் பிரசாரம் செய்கிறார். இதன் கருத் தென்ன? ஸ்ரீமான் டாக்டர் அன்சாரி யைவிட இவர் பெரியவர் என்பதா? அல்லது ஸ்ரீமான் மஷ்ருல் ஹக் அவர்களைவிட தான் போட்டிக்குப் பயப்படவில்லை என்பதா? உண்மையாய் தேசாபிமானமும் மனுஷத்தன்மையும் சுயநலமின்மையும் இவருக்கும் இருந்திருந்தால் இம்மாதிரி பெருந் தன்மையாய்ப் பேசிய மகமதிய கனவான்கள் இருவரில் ஒருவருக்குச் சமாதானம் சொல்லி யாரையாவது ஒருவரைத் தலைவராக்க வேண்டியது அவர் கடமையாகும். அப்படிக் கில்லாமல் மச்சான் இறந்தால் நல்லதாச்சு, அவருடைய கம்பளி நமக்காச்சு என்கிற பழமொழிப்படி, யார் விலகிக் கொண்டாலும் நமக்கு அக்கறையில்லை தேசத்தார் அபிப்பிராயத்தைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை ; எப்படியாவது நமக்கு அந்தப் பதவி கிடைத்தால் போதும் என்று சொல்லுவது எவ்வளவு மனுஷத்தன்மை அற்ற காரியம் என்பது வாசகர்கள்தான் உணர வேண்டும்.

காங்கிரசுக்கு ஏதாவது நல்ல காலம் வருவதாயிருந்தாலல்லவா நல்ல புத்தி தோன்றும். அதற்கு அந்திய காலம் வரப்போவதால், அது யாருடைய கைக்குப் போனால் முடிவு பெறுமோ அவர்கள் கைக்குப் போனால் தானே அது ஒழிய அனுகூலமாயிருக்கும். இதுவும் ஒரு நன்மைக்கே!
- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926

தமிழ் ஓவியா said...


தமிழ்மொழியின் தயவால் சமஸ்கிருதம் செம்மொழி ஆனது! திருவெறும்பூரில் தமிழர் தலைவர்


திருவெறும்பூர், ஜூன் 15- தமிழ்மொழியின் தயவால் சமஸ் கிருதம் செம்மொழி ஆனது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். தமிழின முன்னேற்றத் திற்குப் பெரிதும் தடையாக இருப்பது அகப்பகையே, புறப் பகையே எனும் தலைப்பில் திருவெறும்பூரில் பட்டிமன்றம் நேற்று (14.6.2013) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அடையாளம் முக்கியம்!

பெருமையோடு வாழ்ந்த தமிழினம், தனது அடையா ளத்தை மறந்ததால் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எந்த இனமும் தனது அடையாளங்களை மறக்கக் கூடாது. வளர்ச்சி பெற்ற நாடுகளில், எழுச்சிப் பெற்ற இனங்கள் தங்கள் அடையாளங் களைப் பேணுவதில் முதன்மையாக இருக்கிறார்கள். ஆப் பிரிக்க நாடுகளில் கூட தங்கள் அடையாளங்களைப் பாது காத்துப் பெருமை கொள்கிறார்கள். அடையாளம் என்பது வேர்களுக்குச் சமமானது. வேர்கள் பழுதானால் கிளைகளும், இலைகளும் இருக்காது. வேர்கள் வெளிப்படையாகத் தெரி வதில்லை. ஆனால் அதுதான் முக்கியமானது. கட்டடங்களின் அஸ்திவாரம் கூட வெளியே தெரியாது, ஆழத்தில் பதிந் திருக்கும். ஆனால் அதுவே கட்டடங்களின் அடையாளம். தமிழ் குவியல்! சமஸ்கிருதம் அவியல்!
தமிழ் உருவான காலத்தில், சமஸ்கிருதம் தோன்றவே இல்லை. இந்த வரலாறு பலருக்குத் தெரியாது. பல காய்கறிகள் கொண்ட சமையலுக்கு அவியல் என்று பெயர். சமஸ்கிருதம் கூட பல மொழிகளால் சேர்த்துச் சமைக்கப்பட்ட ஒரு மொழி. அது ஒரு கலவை. அதற்கென்று தனித்தன்மை கிடையாது. பேராசிரியர்களாக இருந்த பார்ப்பனர்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் அப்படி கிடையாது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திலேயே தமிழ் தனித்தன்மையோடு விளங்கியது.
தமிழின் தயவில் சமஸ்கிருதம்!

தனித்தன்மையோடு விளங்கும் தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் வழங்க முடிவு செய்தார்கள். உடனே பார்ப்பனர் கள் சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி வேண்டும் என்றார்கள். செம்மொழி அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதில் எல்லாவற்றிலும் தமிழுக்கு முதலிடம் உண்டு. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு அந்தத் தகுதி இல்லை. எனினும் நிபந்தனைகளைத் தளர்த்தி, தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்த நேரத்தில், அதைப் பயன்படுத்தி அவர்களும் செம்மொழித் தகுதியைப் பெற்று விட்டார்கள். சுனித்குமார் சட்டர்ஜி எனும் ஆய்வாளர் கூறுவதுபோல, நிறைய தமிழ்ச் சொற்களைக் கொண்டதுதான் சமஸ்கிருதம். முனைவர் தொ.பரமசிவன் எனும் தமிழ் ஆய்வாளர் இதுகுறித்து நிறைய எழுதியுள்ளார். பூ செய் என்பதைப் பூஜை என்றார்கள், ரசம் என்பதை ரஜம் என்றார்கள், வேட்டி என்பதை வேஷ்டி என்றார்கள். பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். என்பவர் மொழி ஆய்வில் தனி உலக வரைபடமே தயாரித்துள்ளார். தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ, எகிப்து போன்ற பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர் நிரூபிக்கிறார். இந்த வரலாறுகளை நாம் அறிய வேண்டும்.

துரோகத்தின் தொடக்கம்!

நம் இதிகாசம், நம் புராணம் எனப் பார்ப்பனர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அவற்றை வெள்ளையர்கள் கெடுத்துவிட்ட தாகவும் சொல்வார்கள். என்ன உன் புராணம் என்றால் கண்ணகியைக் காட்டுவார்கள். தீக்குளித்ததைப் பெருமை யாகப் பேசுவார்கள். எங்கே, இப்போது யாரையாவது தீக் குளிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். உன் மீது எனக்கும் சந்தேகம் இருக்கிறது, நீ தீக்குளி என்பார்கள் இன்றைய புரட்சிப் பெண்கள். அதேபோல இராமாயணம். முதன்முதலில் காட்டிக் கொடுத்த வேலையைச் செய்தவன் விபீஷணன். அவனுக்கு ஆழ்வார் பட்டம் வேறு. துரோகம் தொடங்கிய இடமே இராமாயணம்தான். அன்று தொடங்கிய அந்தத் துரோகம் இன்று ஈழத்துக் கருணாவிடம் வந்து நிற்கிறது.

இலங்கையில் தமிழர்களைச் சிறுபான்மையினம் என்று அழைத்து வந்தார்கள். இனி அதற்கும் வழியற்று, 13-ஏ எனும் புதுச் சட்டத்தின் மூலம், தமிழர்களின் ஒட்டு மொத்த அடை யாளங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள். இதற்கான ஏற் பாட்டை சிங்கள அதிகாரி ஒருவர் செய்கிறார். அவர் யாரென் றால், ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது, துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜீவை தாக்கியவர். அவர் இன்றைக்கு அங்கு நல்ல நிலையில் இருக்கிறார். எப்படி தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, கருணா பதவி சுகத்தோடு இருக்கிறாரோ அப்படி. ஆக வெளிப்படையான புறப்பகையை விட, துரோகம் செய்யும் அகப்பகை மிகவும் ஆபத்தானது. எனவே இந்த இருபகை களிலும் நாம் கவனமாக இருந்து, நம் வரலாற்று அடையா ளங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

தமிழ் ஓவியா said...

அரசுக்கு நமது வேண்டுகோள்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது அ.இ.அ.தி.மு.க. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் (2001-2006) 69 சதவீத அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும் என்று அன்றைய தினம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான். அதனை நிறைவேற்றும் பொறுப்பு முதல் அமைச்சருக்கு இருக்கிறது. இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும், நோக்கமும் அறவே கிடையாது.

போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தினால் அதனை நாங்கள் வரவேற்போம் - மகிழ்ச்சி அடைவோம் - ஏன், பாராட்டவும் செய்வோம் எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்!

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 15.6.2013

தமிழ் ஓவியா said...


பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம்


நாம் நடத்தும் பெரியார் பிஞ்சு - குழந்தைகள் பழகு முகாம் பற்றி இங்கே குறிப்பிட்டனர். நான் சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றேன். இப்பொழுது அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவரின் வீட்டுத் திருமணம். நான் அங்கு சென்றபோது அன்புடன் வரவேற்றனர். அப்பொழுது அவர் பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். இவர் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா என்று கேட்டார். தெரியவில்லையே என்றேன்.

இவர் வல்லத்தில் தாங்கள் நடத்திய குழந்தைகள் முகாமிலே பயிற்சி பெற்றவர். இப்பொழுது பொறியாளர் மிகப் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார் என்று சொன்னார். அதனைக் கேட்ட பொழுது எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் பையனுடைய தாயார் குறுக்கிட்டுச் சொன்னார் குழந்தைகள் முகாமில் நீங்கள் விதைத்த விதை இன்றுவரை நன்கு வேலை செய்கிறது. இவன் பகுத்தறிவுவாதியாகவே இருக்கிறான் என்று தாயார் சொன்னபோது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நம் வீட்டுக் குழந்தைகளை பெரியார் பிஞ்சு முகாமுக்கும், வளர்ந்தவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றாக வேண்டும். இணையதளத்தின் மூலம் நம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். காலம் மாறி வருகிறது. அதற்கேற்ற வழிமுறைகளையும் நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் 15.6.2013

தமிழ் ஓவியா said...

காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?

குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புகளைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்) 6.6.2013 அன்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழுக் (தற்காலிகக் குழு) கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் _- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது

சட்டப்படியும் சரி
நியாயப்படியும் சரி
சரியான நிலைப்பாடு அல்ல.
கண் ஜாடை நடவடிக்கையா?

அதற்குரிய காரணங்கள்:

மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் _- கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?

இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டினோம்; இதனால் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.

அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சியாகத்தான் அமைந்தது.

உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை _- கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.

இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!

நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.

1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007; அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல்தான் போட முடியும்.

2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும், நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசைத் திருப்பல் நாடகம் ஆகும் _ -இதனை ஏற்கவியலாது. தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!

தமிழ்நாட்டில் -_ அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!

தமிழ்ச் சமுதாயமே, அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?

வேதனை! வெட்கம்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூழ் முட்டைகள்மகள் : தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ?

அப்பா : ஆம்லேட் எதுல இருந்து வந்தது ?

மகள் : முட்டையில் இருந்து...

அப்பா : இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம்.

- ஓவியன், தாம்பரம்

தமிழ் ஓவியா said...

தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது?தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. ``சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க வேண்டும். அனைவரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பிற நாட்டவரின் அறிவியல் தொழில் நுட்பங்களைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் போதிக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலக் கல்வி முறையை ஊக்குவிப்பது இல்லை. இன்று நடைமுறையில் பார்த்தோமானால், மெட்ரிக் பள்ளி களில் படித்த பெரும் பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகுகூட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை அற்றவர்களாகவே உள்ளனர் என்பது நடைமுறை உண்மை. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதுகூட பரவாயில்லை. இவர்களில் எத்தனை நபர்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்திருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நான் இளங்கலை வரையில் தமிழ் வழியில்தான் படித்தேன். முதுகலையில் ஆங்கிலவழிக் கல்வி மட்டும்தான் என்ற நிர்ப்பந்தத்தால் அனைத்துப் பாடங்களையும் தமிழில் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுத பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டேன். இன்றுகூட என்னுடைய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தால், நான் என் சொந்த நடையில்தான் எழுதியிருப்பேன். தமிழ்வழிக் கல்வியால் தாழ்வு மனப்பான்மை என்று ஏதேதோ சொல்கிறார்கள். ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் பேசுவதைப் பார்க்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை வரும் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலம் என்பது ஒரு மொழி, முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற சொல் நம் அகராதியில் இருக்காது.

இனிமேலும் தாமதம் செய்யாது நாம் முதலில் மொழிபெயர்ப்பினைத் தொடங்குவோம். பிறகு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்போம்.

- கணேஷ் ஏழுமலை

தமிழ் ஓவியா said...

கலகலக்கும் கடவுள்

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடுவோர், யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? என்று விடுதலையில் வெளிவந்த செய்தியைப் பார்த்து மதவாதிகள் சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இறை நம்பிக்கையாளர்கள் 6% குறைந்தால் கடவுள் நம்பிக்கையற்றோரில் 6% கூடியிருக்க வேண்டாமா? என்பது அவர்கள் கேள்வி. இந்தக் கணக்கெடுப்பு ஒன்றும் முழுமையான ஒன்றோ, இதை வைத்து போட்டி போடுவதற்கான ஒன்றோ, எண்ணிக்கை விளையாட்டு விளையாடத் தேவையான ஒன்றோ அல்ல என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. அது என்னவெனில், மதநம்பிக்கையற்றோர் என்றொரு வகையும் இதில் உள்ளது. அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 13% பேர் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கை என்ற கருத்திலிருந்து கடவுள் மறுப்பு என்ற சிந்தனைப் போக்குக்கு வரும் வழியான ஒரு இடைநிலைப் பகுதியே மத நம்பிக்கையற்றோர் என்பதாகும். கடவுள் கருத்து கலகலத்துப் போயிருக்கிறது. அதன் அடிப்படையிலான மத நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டவர்களாக 13% பேர் இருக்கின்றனர் என்பது, இவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. -_லிருந்து +க்குப் போவதற்கு நடுவில் 0 என்ற இடத்தைத் தாண்டித்தானே ஆகவேண்டும். இந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவர் என்பதே இக்கணக்கெடுப்பு கூறும் உண்மை.

- அன்பன்

தமிழ் ஓவியா said...கடல்லயே இல்லையாம்!

(இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்)

உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா... அடப் பாவிகளா...

வஞ்சர மீன் இருக்குன்றான்... வால மீன் இருக்குன்றான்...

கெண்டை மீன் இருக்குன்றான்... கெளுத்தி மீன் இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் சுறா மீன் கூட இருக்குன்றான்... ஆனா... ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான்...

கடல்லயே இல்லையாம்..னு வடிவேலு படத்தில வர்ற மாதிரி...

பாகிஸ்தான்ல இருக்குன்றான்... பங்களாதேஷ்ல இருக்குன்றான்...

இலங்கைல இருக்குன்றான்... இந்தோனேசியால இருக்குன்றான்...

மியன்மார்ல இருக்குன்றான்... மாலத்தீவுல இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் நேபாளத்திலகூட இருக்குன்றான்... ஆனா... இந்தியாவுல மட்டும் இல்லைங்கிறான்...

ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு, இந்தியா ஒலிம்பிக்-லயே இல்லையாம்..னு சொல்றாய்ங்க...

அதிர்ச்சி ஆகாதீங்க.. இது பழைய செய்தி! கடந்த ஆண்டு டிசம்பர்லயே இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தடை பண்ணிருச்சாம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி! இங்க ஒரே ஊழல், அரசின் தலையீடு, முறைகேடு, உறுப்பினர்கள் பலர் மேல கிரிமினல் வழக்குகள் அப்படியிப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லித் தடை பண்ணிட்டாங்க... துப்பாக்கிச் சுடும் போட்டியில பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாதிரி ஆட்கள் நேரில போய் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை 5 மாதம் கழிச்சுச் சந்திச்சு (கடந்த மே மாதத்தில) தடையை நீக்கக் கேட்டிருக்காங்க... முறையா தேர்தல் நடத்துங்க... அப்புறம் தடையை ரத்து பண்றோம்னு சொல்லிட்டாங்க... நம்மாளுகளும் நம்பிக்கை தெரிவிச்சுட்டு வந்துட்டாங்க...

இதைப் பத்தி எவனுக்காவது தெரியுமா? கிரிக்கெட் - ஒரு விளையாட்டுன்னு அதைக் கட்டிக்கிட்டு அழுது, அதுலயும் சூதாடி, ஊழல் செஞ்சு, அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கானுக...

இங்க என்னடான்னா, உருப்படியா விளையாட வேண்டிய விளையாட்டுகளுக்கே ஆப்பு வந்திடுச்சு! முழுமையான உடல் தகுதியும், விளையாட்டுத் திறமையும் இருக்கிற, இந்த நாட்டோட மூலை முடுக்குகள்லயும், கிராமங்கள்லயும், மலைப் பகுதியிலயும் இருக்கிற வீரர்கள், வீராங்கனைகளைக் கண்டுக்காம, அவங்களை வளர்த்தெடுக்காம, பணம் - சிபாரிசுன்னு உருப்படாத சாம்பார்களைத் தேர்ந்தெடுக்கிறது - கிரிக்கெட் மாதிரி மொக்கை விளையாட்டுகளுக்கு விளம்பரம், வசதி கொடுக்கிற ஊடகங்கள், அரசுகள் எல்லாம் உருப்படியான விளையாட்டுகளுக்கு வசதி தராம தட்டிக் கழிக்கிறதுன்னு இருந்தா... வௌங்கும் இந்த நாட்டு விளையாட்டு!

கிரிக்கெட் இந்த நாட்டுல மத்த உண்மையான விளையாட்டுகளை எப்படி ஒழிச்சதுன்னு ரொம்பப் பேரு கேட்கிறாங்க... ஒலிம்பிக்-ல நம்ம இல்லைங்கிறதயே தெரியாம வச்சிருக்கே... இதை விடவா ஒரு எடுத்துக்காட்டு வேணும்... அந்த மட்டையைப் புடுங்கி அடுப்புல போட்டாத் தான் நாடு உருப்படும்.

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானிக்கும் . . .


பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.

அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.

அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.

- சந்திரன் வீராசாமி