Search This Blog

25.6.13

எப்போது தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்?


தினமலரில்  (23.6.2013, பக்கம் 2) ஒரு செய்தி:

எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், இந்து மதத்தை நம்பி, பலர் மீண்டும் இந்து மதத்துக்கு வருவது, தாய் மதத்தின்மீது கொண்ட நம் பிக்கையை பிரதிபலிக்கிறது என, காஞ்சி சங்கர மடத்தின் அறங்காவலர் குழு உறுப் பினர், நாராயணன் பண்டிட் கூறினார்.

பல்வேறு மதங்களில் இருந்து, இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள, சங்கர மடத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த, 120-க்கும் மேற்பட்டோர், இந்து மதத் திற்குத் திரும்பினர். தாய் மதம் திரும்பியவர்களுக்கு, காஞ்சி சங்கர மடத்தின், அறங்காவலர் குழு உறுப் பினர் நாராயணன் பண்டிட், அபிஷேக நீர் தெளித்து, புதுப்பெயர் சூட்டினார்.

நிகழ்ச்சியில் நாராய ணன் பண்டிட் பேசியதாவது:

பல்வேறு மதங்களில் இருந்து, தாய் மதத்துக்கு திரும்புவது ஆரோக்கிய மானது; வீட்டை பிரிந்த குடும்ப உறுப்பினர்கள், மீண் டும் தாய் வீட்டுக்கு வந்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது. தாய் மதத்துக்கு மீண்டும், திரும்பி வந்திருக்கும் உங் களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை. இருந் தாலும், எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இந்து மதத்தை நம்பி, மீண்டும் வந்திருப்பது, தாய் மதத்தின்மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக் கிறது. இவ்வாறு அவர் பேசி யுள்ளார்.

இந்த 120 பேர்கள் என்ன காரணத்துக்காக இந்து மதத்தை விட்டுச் சென்றார்கள்? இப் பொழுது என்ன காரணத் துக்காக மறுபடியும் இந்து மதத்துக்கு வந்து சேர்ந் துள்ளனர் என்பதை விளக்கி இருந்தால், அது வரவேற்கத்தகுந்த அறிவு நாணயத்தின்பாற்பட்ட ஒன்றாக இருந்திருக்குமே!

தினமலர் சொல்வதில் அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லையே!
பல லட்சக்கணக்கான மக்களை இணைத்துக் கொண்டு பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு, நாக் பூரில் புத்த மார்க்கம் சென்றாரே - (14.10.1956) அதற்காக அவர் சொன்ன காரணங் கள், எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதி மொழிகள் அப்படியே தானே செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.
இந்து மதத்தில் ஜாதி - வருண பேதம் ஒழிந்துவிட் டதா? தீண்டாமை விடை பெற்றுச் சென்று விட்டதா?

பார்ப்பனரான காகா கலேல்கர் சொன்னாரே:

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அதைச் சமய சம்பந் தத்தினால் தான் தீர்க்க முடி யும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங் களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப் போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும் என்றாரே டாக்டர் கலேல்கர்.

அந்த நிலை ஏற்படாத வரை வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் இந்து மதத் திற்கு மீண்டும் வருவதால் என்ன பயனோ?

கடைசிக் கேள்வி (Tail Piece) வந்து சேர்ந்த வர்கள் எந்த ஜாதியாம்? ஜாதியில்லாதவன் இந்து மதக்காரனே அல்லவே! என்ன பதில்?   

 ------------------- மயிலாடன் அவர்கள் 25-6-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறக்க வேண்டுமா?


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு கருத்தைக் கூறி யிருக்கிறார். 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை முசுலிம்கள் மறந்து நரேந்திர மோடியை ஆதரிக்கவேண்டும் என்று ஒரு வேண்டு கோளை முன்வைத்துள்ளார்.

இதிலிருந்து ஓர் உண்மையை அவர்களை அறி யாமலேயே பாரதீய ஜனதா தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் இஸ் லாமியர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர் என்பதை இதன்மூலம் பாரதீய ஜனதா ஒப்புக்கொண்டு விட்டதா இல்லையா?

இதனை ராஜ்நாத்சிங் சொல்வதைவிட நரேந்திர மோடியல்லவா முன்வந்து சொல்லவேண்டும்? இதுவரை ஒரே ஒரு வார்த்தை இந்த வகையில் வாய் திறந்து சொல்லியிருப்பாரா மோடி? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்திருப்பாரா அவர்?

பி.ஜே.பி.யின் பிரச்சாரப் பத்திரிகையான தினமலர் (27.7.2012) ஒரு தகவலை வெளியிட்டது. உருது பத்திரிகைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அளித்த பேட்டி அது.

நான் மன்னிப்புக் கோரமாட்டேன்! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின் குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அதேநேரத்தில் நான் என்ன சொன்னேன் என்பதை நீங்கள் சரி பாருங்கள்; 2004 ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். வன்முறை களுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? வன்முறைகளுக்கு என் அரசு காரணம் எனில், என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்! என்றார். இதன் பொருள் என்ன?

குஜராத்தில் கலவரம் நடந்துள்ளது. இவர்தான் முதலமைச்சர். ஆனால், அதற்கு அவர் பொறுப்பு ஏற்கமாட்டாராம். எப்படி இருக்கிறது யோக்கியதை? குறைந்த பட்சம் வருத்தம்கூடத் தெரிவிக்கமாட்டார் முதலமைச்சர். அதேநேரத்தில் குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் முசுலிம்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறார் என்றால், பி.ஜே.பி.யில் உள்ள பெருந்தலைவர்கள்வரை பொது நாகரிகம், மனிதத்தன்மை அற்றவர்கள் என்பது வெளிப்பட வில்லையா?

குஜராத்தில் முசுலிம்களுக்குச் சொந்தமான 41 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன. 295 தர்க்காக்கள், 205 மசூதிகள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் முடிக்கப்பட்டன.

குஜராத் உயர்நீதிமன்றம் இவற்றிற்கு நஷ்ட ஈடு அளிக்கவேண்டும் என்றும், அவற்றை அரசு செலவில் கட்டிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்ததே - அதன் பொருள் என்ன? இவை நாசமாக்கப்பட்டதற்குக் குஜராத் மாநில அரசுதான் பொறுப்பு என்பதுதானே பொருள்.

குஜராத் மாநில பி.ஜே.பி. அரசு பொறுப்பு என்றால், அதன் முதலமைச்சர் பொறுப்பாளியாக மாட்டாரா?

பொடா சட்டத்தின்கீழ் குஜராத் மாநிலத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள்; ஒருவர் சீக்கியர். முசுலிம்கள் என்று சொன்னால், குறி வைத்து நசுக்கப்படுவர் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

குஜராத் மாநிலத்தில் 4000 வழக்குரைஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள். அவர்களில் அரசு வழக்குரைஞர்களாக எத்தனைப் பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்று மோடி தெரிவிப்பாரா?

குஜராத் மாநிலத்தில் மெட்ரிக்குலேசன் அள வுக்குப் பள்ளிக்குச் செல்லக்கூடியவர்கள் 41 விழுக்காடு என்றால், முசுலிம்கள் வெறும் 26 சதவிகிதம்தான்.

பள்ளிக்குப் படிக்க வருவோர் மற்றவர்கள் 79 சதவிகிதம் என்றால், முசுலிம் 75 சதவிகிதம்தான். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முசுலிம்கள் வெறும் 12 விழுக்காடு - வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றவர்களோ வெறும் 2.6 சதவிகிதமே! நகர்ப் புறங்களில் முசுலிம்கள் உயர்ஜாதி இந்துக்களைவிட 800 மடங்கு வறுமை அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பி.ஜே.பி. தலைவர், குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று சொல்லு கிறார்?

இதுகுறித்து முசுலிம்கள் மட்டுமல்ல. மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


ஆணையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்., அமல் செய்கிறது பா.ஜ.க.

பிற இதழிலிருந்து....

உண்மையான எஜமானர்கள் யார்? புரிந்துகொள்ளுங்கள்!

ஆணையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்., அமல் செய்கிறது பா.ஜ.க.

- அருண்நேரு

கடந்த ஒரு வாரத்தில் அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்; 2014 மக் களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

பிகார் மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தியும் மதச்சார்பற்ற கட்சி களில் முக்கியமானதும் பாரதிய ஜனதாவின் நீண்டநாள் தோழமைக் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளம் அந்தக் கூட்டணியைவிட்டு விலகிவிட்டது; இனி எதிர்காலத்திலும் பாரதிய ஜனதாவுடன் சேரும் வாய்ப்பு கிடையாது என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவித்து விட்டனர். இது பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகும்.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவால், மாநிலக் கட்சி களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. உளவியல் ரீதியாக, காங்கிரஸ் கட்சிக்கு வலு கிட்டியிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் வறட்டு ஹிந்துத்துவக் கொள்கைகளால் அந்தக் கட்சியின் கூட்டணியில் இனி சேரக்கூடிய கட்சிகள் என்று எதுவுமிருக்காது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சி நடவடிக்கைகளில் பொதுச் செயலாள ருக்கும் இணைச் செயலாளருக்குமான பொறுப்புகள் என்னென்ன என்று பிரித்து வழங்கிவிட்டது. மத்திய அமைச்சர வையிலும் அமைச்சர்களின் இலாகாக் களிலும் சில மாற்றங்கள் செய்து நிர் வாகம் மேம்பட நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த படியாக நடைபெறவுள்ள 4 மாநிலங் களின் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை மனதில் கொண்டே மேற்கொள்ளப் பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில விவகாரங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங் களுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அங்கே நிலைமை மேம்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அம்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தில்லியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இருக்கிறது. முதல்வர் ஷீலா தீட்சித் தேர்தல் பிரசாரத்துக்குத் தலைமை தாங்குவார். அவரை எதிர்ப்பது தற் கொலைக்குச் சமமாகும் என்பதை காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் விரைவில் உணருவார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மனிதாபிமானமற்ற முறை யில் மாவோயிஸ்டுகளால் கொல்லப் பட்டதால் மக்களுடைய கோபம் அரசின் மீதும், அனுதாபம் காங்கிரஸ் மீதும் திரும்பியிருக்கிறது. இந்த முறை சத்தீஸ்கரில் வாக்கு சதவீதம் முன்பை விட அதிகமாக இருக்கப்போவதுடன் ஆட்சி மாற்றமும் நிச்சயம் என்றே எழுதிவைத்துக்கொள்ளலாம். இந்த முறை பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் களத்தில் நிற்கப்போவது மாநில மக்கள்தான்.

தமிழ் ஓவியா said...

பிகாரில் பாரதிய ஜனதா மேற்கொண்ட நடவடிக்கை ஏற்கெனவே தீர்மானிக் கப்பட்டதுதான்; கடுமையான ஹிந்துத்துவக் கொள்கையை இந்த முறை தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை தீர்மானித்து விட்டது. பாரதிய ஜனதாவுடனேயே 17 ஆண்டுகள் நட்புடன் இருந்த முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு, அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. எனவே தோழமைக் கட்சியை எச்சரிக்கும் விதத்திலேயே கடந்த சில மாதங்களாக பேசிவந்தார்; அவருடைய எச்சரிக்கையை பாரதிய ஜனதா பொருள்படுத்தாததால் திடீரென எதிர் நடவடிக்கையை எடுத்தார். பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரே நாளில் கரிந்து காற்றில் கரைந்துவிட்டது.

கட்சியின் மூத்த தலைவரான லால் கிருஷ்ண அத்வானி அஞ்சியபடியே நடந்துவிட்டது. மிகவும் இக்கட்டான தருணத்தில் கட்சி தவறான நடவடிக்கையை எடுக்கக்கூடாது என்று அத்வானி மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போயின. அதற்காக அவரை இனி யாரும் குறை சொல்ல முடியாது. நரேந்திர மோடிதான் ஆர்.எஸ்.எஸ். தலைமையால் தேர்வு செய்யப்பட்டவர். பாஜக வெளியேற்றத்தைக் கண்டித்து பிகாரில் நடந்த முழு அடைப்புக் கிளர்ச்சியின்போது நடந்த வன்முறை களைப் பாருங்கள்.

பிகாரில் இனி அடுத்து நடக்கப்போகும் மக்களவை பொதுத் தேர்தலில் சரத் யாதவ் - நிதீஷ் குமார் கூட்டுத்தலைமைதான் வெற்றிகளைக் குவிக்கப்போகிறது. பாரதிய ஜனதாவுக்கு கடுமையான சோதனைக் காலம் காத்திருக்கிறது.

நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிட்டது. அந்தக் கட்சிக்கே உள்ள 118 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 4 உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் சுயேச்சைகள் சிலரும் ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. அது எதிர்பார்த்ததே. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சி தந்த ஆதரவுக்காக கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நிதீஷ் குமார்.

பாஜக - நிதீஷ்குமார் கூட்டணி முறி வுக்குப் பிறகு பிகாரில் என்ன நடக்கிறது என்று எல்லோருமே ஆர்வமாகக் கவனித்து வருகின்றனர். சரத் யாதவும் நிதீஷ் குமாரும் முதல் சுற்றில் வெற்றிபெற்றுவிட்டனர். அடுத்த சில வாரங்களில் பாரதிய ஜனதா எப்படிச்செயல்படப் போகிறது என்பது முக்கியம். வாக்களிப்பில் கலந்து கொள்ளா ததன் மூலம், 6 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை தங்களைவிட்டுப் போவதை பாரதிய ஜனதா இப்போதைக்குத் தடுத்துவிட்டது.

தமிழ் ஓவியா said...

#####

பிகாரில் என்ன நடந்தாலும் அது மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்குப் பாடமாக அமையப் போகிறது. மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணி எப்போதுமே முஸ்லிம்களுக்கு பாதுகாப் பாளராக இருந்து வந்திருக்கிறது. மம்தாவை நம்பி அவர்கள் கடந்த முறை வாக்களித்தனர். பாரதிய ஜனதாவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் கூட்டணி வைக் கிறார் என்று தெரிந்தால், முஸ்லிம்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுவிடுவார்கள். இது மம்தாவுக்கு பெருத்த சரிவை ஏற்படுத்தும்.

இமாசலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா ஆட்சியை இழந்த மாநிலம் பிகார். எதிர்காலத்தில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே தேர்தல் கூட்டணி உரு வாகாது என்றாலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைவதில் நிதீஷ்குமார் இனி முக்கியப் பங்கு வகிப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

#####

இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் 140 தொகுதிகள் முதல் 150 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும். சத்தீஸ்கர், பிகார் அரசியல் நிலைமைகளைப் பார்க்கும்போது பாரதிய ஜனதா அணிக்கு அதிகபட்சம் 120 முதல் 125 வரையில்தான் கிடைக்கும். மாநிலக் கட்சிகளுக்கு 260 முதல் 270 வரையில் கிடைக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கையிலெடுத்த ஹிந்துத்துவா கோஷத்தை ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆணைப்படி பாரதிய ஜனதா இந்தமுறை மீண்டும் முன்னிறுத்தப் போகிறது. பிரச்சாரத் தலைமை நரேந்திர மோடியிடம் விடப்பட் டுள்ளது. இந்த இரு காரணங்களாலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும்.

சிவ சேனை, அகாலி தளம் தவிர புதிதாக வேறு எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகளே இல்லை. காரணம், பாரதிய ஜனதாவின் தேர்தல் கோஷமும் உத்தியும் சிறுபான்மைச் சமூகங்களைச் சீண்டிப்பார்ப்பதாகவே இருக்கப்போகிறது. மிதவாத ஹிந்துக்களும் இதை விரும்பமாட்டார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் வெறும் 6 ஆண்டுகள்தான் ஆட்சியில் இருந் திருக்கிறது; அதற்கும் அடல் பிகாரி வாஜ்பாயின் தனிப்பட்ட அரசியல் கவர்ச்சியும், தொலைநோக்குப் பார் வையும், அணுகுமுறையும்தான் காரணம். குஜராத் கலவரத்துக்குப் பிறகு வாஜ்பாய் பிரசாரம் செய்தும்கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

பாரதிய ஜனதாவின் தலைமையைப் பிடிப்பதில் மூத்த தலைவர்களிடையே போட்டி இருந்ததால் ஆர்.எஸ்.எஸ். உள்ளே நுழைந்து, அதிகாரம் செய்ய முடிந்தது.
சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. வன்செயல்கள் தொடர்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. 1991 போல 2013 இருக்கப் போவதில்லை.

உத்தரப்பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் 50 தொகுதிகளை, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயமின் சமாஜவாதி கட்சியும் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டு விடும். அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள் உதவியுடனும் முஸ்லிம்களின் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சி 13 முதல் 18 இடங்கள் வரையில் வென்றுவிடும். பாரதிய ஜனதாவுக்கு உத்தரப்பிர தேசத்தில் இந்த முறை பெருத்த இழப்பு ஏற்படப்போகிறது. ளூளூளூ உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதம் இதுவரை வரலாறு காணாதது. அந்தச் சேதங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஏராளமான கிராமங்களும் சிறு நகரங்களும் சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. மொத்தம் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்ற ஊக மதிப்பைக்கூட இன்னும் சிறிது காலம் கழித்துத்தான் கூற முடியும். இந்தப் பகுதியில் திடீரென ஏற்படும் காட்டு வெள்ளத்தைப் பலமுறை நான் பார்த் திருக்கிறேன். கடும் சேதங்களை விளைவிக்கும் அவற்றையெல்லாம்விட இது மிகப் பெரியது. இதை "இமாலய சுனாமி' என்றே வர்ணிக்கின்றனர்.

ராணுவமும் துணை நிலை ராணுவப்படைகளும் மிகப்பெரிய அளவில் மீட்பு, உதவி நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் முழு வீச்சில் செய்துவருகின்றன. இப்பகுதி யில் உயிரிழப்புகள் நின்று சகஜ நிலைமை விரைவில் ஏற்படவேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

உத்தரகண்ட் மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப மத்திய அரசில் தனி அமைச்சரையே நியமிக்க வேண்டும். இதற்காகும் செலவுகளுக்கு நம்மாலி யன்ற பங்கைச் செலுத்த நாம் அனை வருமே தயாராக இருக்கிறோம்.

நன்றி: தினமணி, 24.6.2013,
சென்னை பதிப்பு

தமிழ் ஓவியா said...


2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி


தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

புதுடில்லி ஜூன் 24- 2003-ஆம் ஆண்டிலி ருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கி யத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

சம்ஜவ்தா எக்ஸ் பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்ப வரின் உண்மையான அடையாளம் என்ன என்பதை தேசிய புல னாய்வு அமைப்பு சமீ பத்தில் தாக்கல் செய் துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிர வாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத் தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத் தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத் தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள் ளது. ஹக்லாவின் உண்மை யான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.

இமான்சு பான்சி 2006 ஏப்ரல் மாதத்தில் இந்த நந்தால் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண் டிருக்கும் போது இறந்து விட்டார். அவுரங்கா பாத்தில் உள்ள ஒரு மஸ் ஜிதை தகர்க்க அந்த வெடி குண்டு தயாரிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு நிறுவன வட்டார தகவல் படி ஹக்லாவின் குடும் பம் விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்பு டையது. மேலும், ஹக்லா வி.எச்.பி.யில் ஒரு உறுப்பினர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு அரசு ஊழியரின் மகன் ஆவார். இந்துத்துவ கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தனது 20-ஆவது வயதில் 2003-ஆம் ஆண் டில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2003-ஆம் ஆண்டில் தான் மகாராஷ்டிரா மாநிலம், பார்ப்பானி மாவட்டத்தில் இந்துத் துவ தீவிரவாத ஆசாமி களின் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கால மான இமான்சு பான்சி யும் அவரது கூட்டாளி களும் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஹக்லாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2003-இல் வீட்டை விட்டு வெளியேறி தலை மறைவான ஹக்லா 2005-ஆம் ஆண்டில் ஜம்மு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி மறைந்திருந்த இடத்தை சென்றடைந் தது, தெரியவந்துள்ளது. அதே ஆண்டில் சுனில் ஜோஷி ஹக்லாவை மத் தியப்பிரதேச மாநிலத் தில் உள்ள தேவாஸ் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார் அங்கே ஹக்லாவுக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டில் புனே நகரில் சிங்காகட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு பயிற்சி முகாமில் இந்த ஹக்லா பயிற்சி பெற்றாரா என் பதையும் தேசிய புல னாய்வு நிறுவனத்தினர் விசாரித்து வருகின்றனர். அந்த பயிற்சி முகாமில் இமான்சு பான்சி வெடி குண்டுகளை எப்படி வெடிக்கச் செய்வது என் பதையும், வெடி குண்டு களை தயாரிப்பது பற்றி யும் பயிற்சி பெற்றார்.

ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பயிற்சி முகாமில் பயிற்சியளித் ததாக சந்தேகிகப்படு கிறது. இமான்சு பான்சி தன்னை வழி நடத்துபவர் களுக்கு தெரியாமல் சில குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை, தானா கவே வெடிக்கச் செய் தார். சக்தியில்லாத அந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் எந்த சேதமும் ஏற்படாத தால் இமான்சு பான் சியை அவரது தலைவர் கள் கண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தமிழ் ஓவியா said...


வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
(விடுதலை, 23.8.1961)

தமிழ் ஓவியா said...


போலியோ பாதிப்பை தடுக்க சொட்டு மருந்தை விட தடுப்பூசியே சிறந்தது மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சென்னை, ஜூன் 24-போலியோ சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில், தடுப்பு மருந்தின் மூலமாக ஒரு குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச் சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுக்க போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ஆம் தேதி உலக போலியோ சொட்டு மருந்து தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம் பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் 2011 ஜனவரி 13ஆம் தேதியில் இருந்து, எந்த ஒரு குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. அதனால், உலக சுகாதார நிறுவனம் 2012 பிப்ரவரி 24ஆம் தேதி போலியோ பரவும் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், டில்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப் பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தர காண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ் தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ஆம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.

அதனால், உலக போலியோ தினத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், டில்லி, சண்டிகர் மாநிலம் முழுவதும் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. மற்ற 9 வடமாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் இளங்கோ கூறியதாவது: உத்தரப்பிரதேசம், பீகார், டில்லி, சண்டிகர் உள்ளிட்ட 14 வட மாநிலங்களில் 2010ஆம் ஆண்டு இறுதி வரை போலியோ பாதிப்பு இருந்தது. அதனால், உலக போலியோ தினத்தில் அந்த மாநிலங்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து போடப்பட்டது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, எந்த குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. அதனால், உலக போலியோ சொட்டு மருந்து தினத்தில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.

இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முறையில் சொட்டு மருந்து போடப் படும் ஒரு கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள் ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலி யோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலி யோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர்.

போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளி நாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இமாலயச் சுனாமியில்கூட இமாலய அரசியலா?


- ஊசி மிளகாய்

உத்தரகாண்ட், இமாலச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள பத்திரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்ற பக்தர்கள் (சுமார் ஒரு லட்சம் பேரில்) 13 ஆயிரம் பேருக்கு மேல் கடும் மழை, வெள்ளம் - இவற்றில் அடித்துச் சென்றும், மலைச் சரிவுகளில் சிக்கியும் - இறந்தும், காணாமற்போயும் உள்ளது நெஞ்சுருக்கும் வேதனை! நாட்டு மக்களின் நல் இதயங்களைக் கசக்கிப் பிழிகின்றன!

இராணுவம், துணை இராணுவம், திபெத்திய எல்லைப்படை அம்மாநிலங்களின் பல்வேறு அரசு அமைப்புகள் - மத்திய அரசின் உள்துறையினர் தனித்த முயற்சிகள் இவை எல்லாம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு போர்க்கால வேகத்தில் (On a War Footing) நடைபெற்று வருகின்றன.

இன்னும் மீட்கப்பட வேண்டிய யாத்திரிகர்கள் - பலர் உள்ளனர் - இடிபாடு - மலைச்சரிவில் சிக்கியோர்களும் இருக்கக் கூடும்.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் மீட்புப் பணிகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் வேறு ஏற்பட்டு விட்டது!

இறந்தவர்கள் - ஜலசமாதியின்மூலம் போக, எஞ்சியவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து, அவரவர் மாநிலங்கள் வீடுகளுக்கு - அனுப்புவது எப்படி என்பதே பொதுக் கவலையாக உள்ள நிலையில்,

இந்த நிலையில் பா.ஜ.க., - மோடி மஸ்தான் கள் எழவு வீட்டிலும் ஏதாவது கிடைக்காதா என்ற பந்தலிலே பாவக்காய் கதை ஒப்பாரி வைத்து அழுது, தொங்கிய பாகற்காயில் கண் வைத்தழுதது போலவும்,

அத்துக்கத்தில் கவனமோடு இருந்து பதில் கூறிய சகோதரி போன்று மோடிகளுக்குப் பதில் கூறிட்ட காங்கிரசும் - விமர்சித்துக் கொள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாகும்!

இப்போது எல்லோர் கவனமும் மழை, அபாயத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றி மீட்டுக் கொணர்வது பற்றித்தான் இருக்க வேண்டுமே தவிர, இதில் விளம்பரம் தேடி அரசியல் ஆதாயம் தேடிட இது ஓர் அருமையான வாய்ப்பு என்று கருதுவதைவிட மிக மிகக் கேவலம் வேறு உண்டா?

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் தரும் விளம் பரமோ எல்லையற்ற ஒன்றாகும்!

மோடி, 25 இன்னோவா கார்களில் இத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்துச் சென்றார் என்று அவரும் ஏதோ திரைப்பட நடிகர் மாதிரி வண்ண வண்ண உடைகளை உடுத்தி, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனித்தனி பேட்டி கொடுப்பது, அரசியல் கட்சி சார்ந்த பதில்களைக் கூறுவது, ஒரு மாநில முதல்வர், மற்றொரு மாநிலத்திற்குள் சென்று (அவர்களின் அனுமதியே இன்றி) அங்கே நடப்பவைகளைக் குறை கூறுவது என்பது மிகுந்த கீழ்த்தரமான சுவை (It is in very bad Taste) அல்லவா!

தினம்தினம் பா.ஜ.க. பேச்சாளர்கள் ஆளும் காங்கிரசைக் குறை கூறுவதுதான் தொழிலாகப் போய் விட்டது!

அவர் உடனே வந்து குதித்தாரா? இவர் தோண்டினரா? இப்படி கேள்வி மேல் கேள்வி.
பெரிய வி.வி.வி. அய்ப்பிக்கள் வந்தால், வெள்ள நிவாரணப் பணிகள் அல்லவா வெகு வாகப் பாதிக்கப்படும்; அவர்கள் பாதுகாப்பு திருப்பி அனுப்பப்படுவது முதற்கொண்டு அம்மாநில முதல்வர் முதல், அதிகாரிகள் வரை அவர்கள் கவனம் இவர்கள் பாதுகாப்பில் (Security) தானே இருக்கும்? இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கமும் தேக்கமும் ஏற்படாதா?

நம் நாட்டில் எங்கும் அரசியல்! எதிலும் அரசியல் பொது ஒழுக்கச் சிதைவுக்கு ஓர் எல்லையே இல்லை!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி ஒதுங்கி உயிருக்கு மன்றாடிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து, கொள்ளையடித்து, தங்களுக்கு வருவாய் தேடியவர்களுக்கும், ஹெலிகாப்டரில் போடப்பட்ட உணவுகளை அங்குள்ள மக்களை விரட்டியடித்து விட்டு பொறுக்கி எடுத்து அதை மீண்டும் அதிக ரூபாய்க்கு விற்று காசு தேடிய ஈவிரக்கமற்ற பாதகர்களுக்கும்

இந்த நிவாரணத்தில் அரசியல் நடத்தி விளம்பரம் தேடும் மோடி வித்தைக்கார அரசியல்வா(வியா)திகளுக்கும் தத்துவத்துவத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

பாழாய்ப் போன வாக்கு வங்கி ஓட்டுக் கண்ணோட்டம் நாட்டுக் கண்ணோட்டத்தை - மக்கள் நலக் கண்ணோட்டத்தையே கொன்று நாசமாக்கி விட்டதைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே!

எப்போது முடிவு - இந்த அவல அரசியல் அலங்கோல போட்டிகளுக்கு?

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. நெய்வேலி போராட்டம்: அறவழிப் போராட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவும், வாழ்த்தும்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினை பொதுத்துறையிலிருந்து தனியார்மயமாக்கும் துவக்க முயற்சியாக 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அமைச்சரவை, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ள வற்புறுத்திடும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் அதன் அறவழி ஆதரவினை நல்குகிறது!

அனைத்துத் தொழிற்சங்கங்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடும் இம்முயற்சி வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கோரிக்கை வெல்லும் வரை அறப்போராட்டம் தொடரட்டும்!



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2013

தமிழ் ஓவியா said...


எப்படி மறக்க முடியும்?

2002இல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மறந்து விட வேண்டுமாம். சொல்லுகிறார் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்.

பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனை யாளரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான ஆஷிஸ் நந்தி குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடியைச் சந்தித்து, நடத்திய நேர்முகம்பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பேட்டி முடிந்து நடுக்கத்துடன் வெளியில் வந்தேன் என்று கூறினாரே!

அனைத்துக் குணங்களும் பொருந்திய ஒரு ஃபாசிஸ்டைத் தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிந்தது. பாசிஸ்டு என்று நான் அழைத்தது ஆட்சேபகரமான சொல்லல்ல; வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான எதுவும் அந்தச் சந்திப்பில் இல்லை

சமூக வல்லுநர்கள்; நிபுணர்களின் கருத்திற் கிணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மனநிலை கொண்ட நபராக மோடி விளங்கினார்.

ஒரு கொலையாளியை, சில வேளையில் ஒரு கூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று சொன்னதுதான் எத்தகைய உண்மை!

1999 அக்டோபரில் கோஜ் நடத்திய ஆய்வில், இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றுவதற்கான தீய சக்திகளைக் காண முடிந்தது; சமூக அறிவியல் புத்தகங்களில் பாசிச விஷமத்தனங்கள் விதைக்கப்பட்டன. முஸ்லீம்களையும், கிருத்தவர்களையும், பார்சி களையும் அந்நியர்களாகச் சித்தரித்தனர். இதனைக் கம்யூனல் காம்பேக்ட் என்ற இதழ் அம்பலப்படுத்தியது; இந்தப் புத்தகங்களைப் படித்த நாடாளுமன்றக் குழு மேற்கண்ட பாடங்களை நீக்குமாறு குஜராத் மாநில அரசிடம் வற்புறுத்தியது. ஆனாலும் அதுதான் நடக்கவில்லை என்றது கோஜ்.

2002இல் குஜராத்தில் நடத்தப்பட்ட சிறு பான்மை மக்களுக்கு ஏதிரான கொடூர மனித வேட்டை ஏதோ திடீர் என்று எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை (Genocide) ஆகும்.

1991ஆம் ஆண்டிலேயே பிசினஸ் இந்தியாவில் வெளிவந்த இரு கட்டுரைகளே இதற்குப் பொருத்தமான சாட்சியங்கள் ஆகும்.

1991 ஜூலையில் குஜராத்தில் நடக்கிற வகுப்புவாத பிரிவினை நடவடிக்கை தான் எத்தகையது? விசுவ ஹிந்து பரிஷத் தயாரித்த ஒரு படம்; அதில் காவி குஜராத் - பச்சை குஜராத் என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

காவி என்பது இந்துக்கள்; பச்சை என்பது முஸ்லீம்கள் என்பது குறியீடாகும்.

இதற்கான திட்டமிடுதல்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தன. உளவியல் ரீதியாக இரு சமூகங்களையும் தனிமைப்படுத்துவதற்காக, சமூகப் பண்பாட்டு உறவுகளைத் தகர்ப்பதற்கான குறிக்கோளுடன் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வந்தன.

குஜராத் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவம் என்ற சாக்கு உருவாக்கப்பட்டு, நீண்ட நாள் திட்டம், கூர்தீட்டி செயல்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.

இதுவரை இதற்காக ஒரே ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமியர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதுகூட அவர்கள் அணிவித்த குல்லாயைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்தான் நரேந்திரமோடி.

ஒரு முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் இதுபோன்ற கலாச்சாரப் பரிவர்த்தனைகள் இயல்பாக நடப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ மன நோயாளியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் இந்து -இந்து அல்லதார் என்று உத்திப் பிரித்ததை (Polarisation) இந்தியா முழுமையும் அரங்கேற்றத் துடியாய்த் துடிக்கிறார் மோடி - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்


ஆசிரியருக்குக் கடிதம்

நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்

தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! தங்களது நீதியரசர் கர்ணன் தீர்ப்பு பற்றிய அறிக்கையை 21.6.2013 (வெளியூர்) விடுதலையில் படித்தேன்.

தங்களது அறிக்கை வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் நீதியரசரின் தீர்ப்பையும் அதற்கடுத்த நாள் அவரின் விளக்கத்தையும் படித்தேன்.

இந்த தீர்ப்பைப் பாராட்டி தமிழகத்தில் வேறெந்த சமூக சீர்திருத்தவாதிகளும் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை, வேறெந்த சமூக, அரசியல் ஆர்வலர்களும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காத தருணத்தில் நீதியரசர் கர்ணன் தீர்ப்பு - பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கான அடையாளம் என்று தலையிட்டு விடுதலை முதல் பக்கத்தில் நீதியரசர் அவர் களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், பழைமைவாதி களுக்கும், இந்துசனாதன ஆதிக்கவாதிகளுக்கும் இந்துமத பழைமை கழிந்து புரட்சிகரமான பெரியாரின் எண்ணங்கள் உலகமயமாகி, சட்டமாகவே ஆகிவரும் கலாச்சார புரட்சியை பற்றி தெளிவாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

தங்களது அறிக்கையில், இந்தத் தீர்ப்பு மாறிவரும் காலமாற்றத்திற்கு எப்படி தேவையான ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு ஏற்கெனவே 1939-ஆம் ஆண்டிலி ருந்து திராவிடர் கழக மாநாடுகளில் தீர்மானங் களாக வடிவமைக்கப்பட்ட சமூக சீர்திருத்த, பெண்ணடிமை ஒழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் சட்டமாக அமுலில் இருப்பதை ஒவ்வென்றாக சுட்டிக்காட்டி இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப்போகப் போகிறது என்று தாங்கள் எடுத்துவைத்த வாதம் எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர் - கர்ணன் அவர்களுக்கே கூட வாதம் செய்ய நியாயப்படுத்த வழிசொல்லியுள்ளீர்கள்.

இறுதியாக சொல்லியுள்ளீர்கள், புராணகால கர்ணன்கள் அளித்தத்தைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புகென அருங்கொடை யாகும். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பாக நீதியரசர் கர்ணன் கூட இப்படி யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

அய்யா! தலைவர் பெரியார் கருத்துக்கள் உலகமயமாகி வருகின்ற வேளையில் தங்களது அறிக்கை உலகம் முழுவதும் வாழும் தமிழர் களுக்கும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் களுக்கும் வாய்ப்பாடாக, வழிகாட்டியாக திகழ்கிறது.

தங்களது பணி, அய்யா வாழ்ந்த வயதை தாண்டி 100 ஆண்டுகள் நிறைவு பெறவும், இறுதி வரை சமூக வழக்கறிஞராக சிறப்பாக செயல்படவும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான பெரியார் தொண்டர்கள் ஆசைப்படுகின்றோம்.

- கே.செல்வராஜ், வழக்குரைஞர் (திருப்பூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர், தாராபுரம்)

தமிழ் ஓவியா said...


தமிழ் மொழி சிறந்தது


தமிழ் புனிதத் தன்மை உடையது; சிவன் பேசியது; தேவார, திருவாசகங் களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ் மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே.

- (விடுதலை, 10.10.1960)

தமிழ் ஓவியா said...


மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டவர் சுந்தரசோழன்


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நிகழ்ச்சியில் பேரா.எஸ்.சாந்தினிபீ ஆதாரங்களுடன் விளக்கம்!




சென்னை, ஜூன் 25- சோழ அரசர்களில், சுந்தர சோழன் மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டார் என்று அலிகார் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ குறிப்பிட்டார்.

சோழர்களும் சாஸ்திரங் களும் என்ற தலைப்பில், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் 22.6.2013 சனிக்கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பேரா.தானப்பன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அழ கப்பா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. அ.இராமசாமி தலைமையேற்று சிறப்பித்தார். பேரா.பரமானந் தன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சாதனைகள்

பேரா. அ.ராமசாமி தனது தலைமையுரையில் சூஊசுகூ வெளியிட்ட சமூக வரலாற்றில், திராவிடர் இயக்கம் பற்றி தவறான பல தகவல்கள் இடம் பெற்றிருந்ததையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அந் தத் தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதையும், இன்று அப்படிப்பட்ட தவறுகள் நீக் கப்பட்டுவிட்டதாக நமக்கு கடிதம் அனுப்பியதையும் சுட்டிக்காட்டினார்.

சோழர்களும் சாஸ்திரங்களும்

அவரைத் தொடர்ந்து பேரா. சாந்தினிபீ சிறப்புரையாற் றினார். அவர் தமதுரையில்:- சோழர்கள் தங்கள் ஆட்சியை எப்படியெல்லாம் சாஸ்திரப் படி அமைத்துக் கொண்டார் கள் என்பதை பல்வேறு ஆதா ரங்களுடன் விவரித்தார். அவரது ஆய்வு கல்வெட்டுகள் பற்றியது என்றும், கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பது தமிழில் தான் அதிகம் என்றும், அதற்குக் காரணமும் பார்ப்பன சாஸ் திரங்கள்தான் என்றும் அடுக் கடுக்காக ஆதாரங்களை எடுத்து வைத்தார். அதில் சோழர்கள் காலத்தில்தான் ஆரியர், சாஸ் திரங்களின் ஆதிக்கம் மேலோங் கியதை படம் பிடித்துக் காட் டினார்.
அப்படிப் படம் பிடித்து காட்டும் போதுதான், கலிங்கத் துப்பரணியை சுட்டிக் காட்டி அதில் நால்வருணம் கெட்டு விட்டது. அதை தழைக்க வைக்க குலோத்துங்கன் வந்திருக் கிறான் என்றிருப்பதை குறிப் பிட்டார். சோழர்கள் தங்களை மனுவின் மறுபிறப்பு என்றும் தங்களை மனுகுலத்தில் வந்தவர்களாகவும், மனுதர் மத்தைக் காத்து வந்தவர்களாக வும் எண்ணி செயல்பட்டதை யும், சுந்தரசோழன் தன்னை மனுவின் அவதாரமாகவும் எண்ணி செயல்பட்டதையும் அம்பலப்படுத்தினார்.

சோழர்கள் காலம் பொற்காலம் அல்ல

அவரைத் தொடர்ந்து நன்றி யுரை ஆற்றவந்த பேரா.கரு ணானந்தன், பொற்காலம் என்று கூறப்படுகின்ற ஒன்றை, அது அப்படியில்லை என்று மிகத்தெளிவாக அம்பலப்படுத் தியிருக்கிறார் என்று சிறப்புப் பேச்சாளரை வாழ்த்திப் பேசிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக சிறப்புப் பேச்சாளரை பாராட்டிப் பேசினார் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. த.ஜானகி. அதைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளருக்கு பய னாடை அணிவித்தும் இயக்க நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட் டது.

தமிழ் ஓவியா said...


வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


மன்றல்


சென்னை பெரியார் திட லில் சுயமரியாதைத் திரு மண நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதில் புதுத் திருப்பம் தந்தார். அதுதான் மக்களைத் தேடிச் செல்லும் மன்றல் நிகழ்ச்சி! மன்றல் நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மய்யங்களில் நடைபெற்றுள் ளன. அடுத்து பல முக்கிய மய்யங்களில் நடத்திடத் திட்டம் கைவசம் உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் இவர் களிடையே இணை தேடும் சிறப்பு நிகழ்ச்சி இது.

ஆயிரக்கணக்கில் மண மக்களும், பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், இவற்றில் ஆர்வமுடைய இலட்சியவாதிகளும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

வாழ்க்கை இணை நலத் துக்குரிய ஆண்கள், பெண் கள் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிவிக் கப்படுகின்றன.

அறிமுகத்துக்குப் பிறகு கலந்துகொண்டவர்களுக் கிடையே கலந்துரையாடும் பரிவர்த்தனைகள் நடக்கின் றன.

மாலை நிறைவு விழாவி லேயே சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

தத்தம் ஊர்களுக்குச் சென்ற பிறகு தொலைப்பேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவது மன்றல் நிகழ்ச்சி சாதனைத் தோட் டத்தில் பூக்கும் புதுமலராகும்.

இன்று காலை சென்னை பெரியார் திடலில் ஒரு திடீர்த் திருமணம். கோவை மன்றல் நிகழ்ச்சியில் கலந்துகொண் டவர்கள் அவர்கள்.

மணமகன் கோவை மாவட்டம் வேடபட்டி சாலை - தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருவாளர்கள் முத் துக்கிருஷ்ணன் - மரகதம் ஆகியோரின் மகன் சிவ சத்திய மூர்த்தி.

மணமகள் புதுக் கோட்டை மாவட்டம் உசி லங்குளம் - திருவாளர்கள் நாகராசன் - இந்திராணி ஆகியோரின் மகள் ரேவதி - இவர் பிறவியிலேயே வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி!

இவர்களுக்குத் திரா விடர் கழகத் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன் வாழ்க்கை இணை நல ஒப் பந்தத்தை நடத்தி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் மானமிகு கோவிந்தராசன் மணமக் களைப் பாராட்டி ரூ.500 நன்கொடை நல்கினார். பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் மணமக்க ளுக்கு வாழ்த்துக் கூறினார். மாநில மாணவரணி செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - முன்னமே விதிப்பலனால், பிராப்தப்படி ஜாதகப் பொருத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற மூடக் கருத்தின் முதுகைப் பிளக்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தந்தை பெரியார்- கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் திராவிடர் கழகம் - இவற்றிற்கு இணையாகப் புரட்சி பற்றி வாய் திறக்க, மார்பு தட்ட வேறு யாரால், எந்த அமைப்பால் முடியும்?

திருமண நிலைய இயக் குநர் மானமிகு திருமகள் இறையன் அவர்களின் பணி சிறப்பானது - பயன்படுத்திக் கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுள் - மதம் - பக்தியின் ஒழுக்கம் பாரீர்!
வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும் கொள்ளையோ, கொள்ளை!
பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!

புதுடில்லி, ஜூன் 26- கேதார்நாத் வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பக்தர்களிடமிருந்து உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை வெட்டி நகைகள் களவாடப்பட்டுள்ளன; பக்தியின் ஒழுக்கம் இதுதான்!

கேதார்நாத் மழைவெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், உத்தர காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

சாமியார்கள் கொள்ளை!

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் உயிரிழந்தவர்களிடமும், உயிருக்குப் போராடிய பக்தர்களிடமும் சாமியார்கள் சிலர் கொள்ளை யடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்தப் பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் கூறியதால் மீட்புப் படையினருக் குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அந்தப் பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மீட்பு!

உடனடியாக அந்தக் கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக் கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாதப் பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப் படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விரல்களை வெட்டி நகைகளை எடுத்துள்ளனர்

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலி யான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்டியல் உடைப்பு!

கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டி யல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும்.

(விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திக்கட்டும்!


தனது கட்சிக்காரரான நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்துவதற்கும், பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட உள்ள மோடி மீது விழுந்துள்ள அழிக்கப்படவே முடியாத பாசிச - இந்துத்துவா வெறி என்னும் கறையைக் கழுவுவதற்கும் வேறு வழியே இல்லாத நிலையில்தான் குஜராத் கலவரங்களை மறந்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்.

முசுலிம்களை மறந்துவிடுமாறு சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுவிலங்காண்டித்தனமான இந்து வெறிக் கண் ணோட்டத்தோடு திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் படுகொலையை வரலாறு எப்படி மறக்கும்?

இந்தியாவைத் தாண்டி இந்துத்துவாவாதிகளின் இந்தப் பாசிசம் உலக நாடுகளில் கேவலமான நாற்றமாக மூக்கைத் துளைத்துக் கொண்டு இருக்கிறதே!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடியை எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என்று குரல் கொடுக்கின்றனவே. ஏன், இந்தியாவில்கூட டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் மோடியே திரும்பிப் போ! என்று முழக்கமிடவில்லையா?

உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மதச்சார்பற்ற இந்தியா இனி பிழைக்குமா? (Will Secular India Survive?) என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனரே! 4,400 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.800.

இந்தியாவிலும், இராமச்சந்திரகுகா போன்ற சிந்தனையாளர்களும், பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பது பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்குகளுக்குத் தெரியாதா?

பிரபல சமூகநல ஆர்வலர் அருந்ததிராயின் கருத்து என்ன?

குஜராத்தில் முஸ்லிம்கள்மீதான இனப் படுகொலை என்பது மத வெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனேயே நடந்ததாகும். ஏனெனில், அதற்குமுன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்தார்.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஓர் அங்கம்தானா? இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத்துக்கும் பொருந்துமா? என்ற வினாவை அருந்ததிராய் எழுப் பிடவில்லையா?

ஊடகங்கள் என்னதான் இந்துத்துவாவைத் தூக்கி நிறுத்தினாலும், மோடிக்கு முகமன் பாடினாலும், சில நேரங்களில் தங்களையும் அறியாமல் வேறு வழியின்றி உண்மைகளைக் கக்கியதுண்டு.

எடுத்துக்காட்டாக, இந்தியா டுடே (10.4.2002) எழுதியது இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

குஜராத் கலவரங்களில் 12 லட்சம் பேர் ஈடுபட்டார்கள். சகிப்புத் தன்மை என்ற வார்த்தை இந்திய அகராதியிலிருந்து மறைந்துவிட்டது. மிரண்டு போயிருக்கும் சிறுபான் மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். புதிய இந்தியனை உருவாக்கும் கனவு தரையில் சிதறிக் கிடக்கிறது. மதச்சார்பின்மை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று எழுதியதே இந்தியா டுடே!

மற்றவர்கள் எழுதுவது, சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; சங் பரிவாரம் உச்ச இடத்தில் தூக்கி வைத்து மரியாதை கொடுக்கும் ஜென்டில்மேனான - அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார்?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எந்த முகத் துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்? என்று புலம்பவில்லையா?

2009 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குக் காரணம் குஜராத் கலவரம்தான் என்று அன்றைய துணைப் பிரதமர் அத்வானியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?

இதற்கெல்லாம் சமாதானம் கூறிவிட்டல்லவா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முசுலிம்களுக்கு வேண்டுகோள் வைக்க முன்வரவேண்டும்?

கடைசியாக அவர்கள் தரப்பில் சொல்லுவது - குஜராத் கலவரத்துக்குப் பிறகுதான் மோடி இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பதாகும்.

கடந்த தேர்தலின் நிலை என்ன? அதற்கு முந்தைய மாநிலத் தேர்தலைவிட இரண்டு இடங்கள் குறை வாகத்தான் கிடைத்தன என்பதோடு, மோடி அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியதையெல்லாம் சாமர்த்தியமாக மறைப்பது ஏன்? ராஜ்நாத்சிங் நிதானமாகச் சிந்திப்பது நல்லது! மக்கள் ஏமாளிகள் அல்லர்!

தமிழ் ஓவியா said...


மோடிபற்றிய விடுதலை தலையங்கங்களை நூலாக வெளியிடுக!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து, ஒன்று சொன்னவாறு ஊட கங்கள் பேசிவருகின்றன. வளர்ந்து விட்ட தகவல் தொடர்பு சாதனங்களில் எந்த ஒன்றையும் மறைக்க முடியாது என்ற போதிலும், மோடியின் தவறுகள் மட்டும் வெளியாவதில்லை அல்லது வலுவாகச் சொல்லப்படுவதில்லை.

இந்நிலையில் மோடிக்குப் பாரதீய ஜனதாவில் உயர் பொறுப்புக் கொடுத்த நிலையில், விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், அவரின் மொத்த உருவத்தின் தீயவை அனைத்தையும் உரித்துப் போடுவதாய் இருந்தது.

இடம், தேதி, ஆதாரம் ரீதியாக எழுதுவது நம் இயக்கத்தின் தலையாய தனித்தன்மை. ஆகவே, தொடர் தலை யங்கம் மற்றும் மேலும் பல செய்திகளை இணைத்து சிறு வெளியீடாக வெளி யிட்டால், எதிர்வரும் தேர்தல் நேரங் களில் மிகுந்த பயன்பாடாக அது அமையும்.

புதுக்கோட்டையில் பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியர் தலையங்கம் படித்து விட்டு, மோடிக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என வியந்தார். அதன் பிறகே அய்யா அவர்களுக்கு இக்கடிதம் எழுதத் தோன்றியது.

- வி.சி. வில்வம், திருவெறும்பூர்

தமிழ் ஓவியா said...


பூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


லண்டன், ஜூன் 27- பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட் டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலை நோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டன.

புதிதாகக் கண்டுபி டிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரிய தாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத் துடன் இருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள் கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனி தன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.

தமிழ் ஓவியா said...


பழக்க வழக்கங்கள்...


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக்கேடானவனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்கவழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சுத்தமான குடிநீர் லிட்டர் 5 பைசாவுக்கு!


நானோ தொழில்நுட்ப முறை யில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் அய்.அய். டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செல வாகும் சூழ்நிலை உள்ளது.

மனிதனின் அடிப்படை தேவை யான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, அய்ந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், வெள்ளி அயனிகள் நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண் கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்து விடும் என் பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, உயிரி பாலிமர் பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன் படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண் களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலை வாய்ப்பு அதிகரிப் பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

தமிழ் ஓவியா said...


மார்கழி மாத கொக்கோகம்! - துரை. சந்திரசேகரன்


மார்கழி மாதம் என்றால் படுகுஷி! குமரிப் பெண்கள் ஆடுவதென்ன! பாடுவதென்ன!! பாராயணம் செய்வதென்ன!!! என்ன, என்ன, என்ன, என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவது மாதிரி சொல்லலாம்.

விஷயம் இல்லாமலா இருக்கும்? பாடுகின்ற பாடல்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா? உள்ளுக்குள்குமைந்து கிடக்கிற உணர்ச்சிகளைப் புரியும் வார்த்தைகளில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?

பக்தை என்ற பெயரில் பருவக் கொந்தளிப்பைப் பாட்டாகப் பாடி வைத்துள்ளார்கள் அல்லவா... அதை சந்தடி சாக்கில் பாடித் தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் மார்கழி மாதம் அவ்வளவுதான் - அதற்கு மேல் பூச்சுதான் பக்திப் பரவசம். பாடல்களில் ஒன்றிரண்டு தட்டி விடுகிறோம் படியுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்:
பொங்குபாற்கடல்
பள்ளிகொள்வானைப்
புணர்வதிலோ ராசை - என்
கொங்கைகள் கிளர்ந்து குமைந்து குதூகலித் தாடென் ஆவியை யாகுலஞ்செய்?

பாடலை பார்த்தீர்களா?

பக்தையின் எண்ணம் எப்படி பக்தியைப் பரப்புகிறது! சபாஷ்! முடிந்தவர்கள் மார்கழி மாத பஜனையைத் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொடுங்கள். (கையில் கிடைத்ததை எடுத்து பக்தர்களை அடித்துவிடப் போகிறார்கள்..!)

இந்த விஷயத்தில் கிளைமேக்ஸ் பயில்வான் ஆண்டாள்தான். அவள் பாட்டையும் கேட்போமே!

குத்து விளக்கெரியக் கொட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
வாய் திறவாய்
செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே!
துயிலெழாய்

நப்பின்னைக்கு எது எது எப்படி இருக்கிறது என்பதையும் நப்பின்னையின் கொங்கைமேல் எதையோ வைத்து இதமாக - சுகமாக உறங்கும் கண்ணனை எப்படி வர்ணித்திருக்கிறது திருப்பாவை!

குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய பக்தி சிவனாரைப் புகழ்ந்து ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்வதைப் போல், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை போன்றவை விஷ்ணுவைப் புகழ - பக்தர்களின் இச்சையை தணிக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட கொக்கோகப் பாடல்களே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்களை மார்கழி மாதத்தில் பாடினால் மாதம் மும்மாரி மழை பொழியுமாம்; வயலெல்லாம் செந்நெல் விளைந்து குலுங்குமாம்!

ஓங்கி யுலகளந்த
உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச்
சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ்செந்
நெலூடு கயலுகள
என்பது பாடல்.

கடும் வறட்சி என்றெல்லாம் சொல்லி எங்கும் காவடித் தூக்கி செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசும் பார்வையாளர்களை அனுப்ப வேண்டியதில்லை. உத்தமன் பேர் பாடினால் போதுமானது. பக்தர்கள் நம்புவார்களாக! பம்பு செட்டு எந்தப் பக்தர்களாவது வைத்திருந்தால் அதை விற்று விட்டு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மும்மாரி பொழியச் செய்வார்களாக!

தமிழ் ஓவியா said...


எவன் பிராமணன்?


ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான்ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப் பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.
- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

தமிழ் ஓவியா said...


பாவ புண்ணியம்


சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப் பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே. பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பி னராகவும், புண்ணியம் செய்த வர்கள் உயர் வகுப்பினராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக்கூட்டத்தில் நேரு

தமிழ் ஓவியா said...


யார் காரணம்?


ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார் கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவு ளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கி யர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

தமிழ் ஓவியா said...


வடமொழியில் சிபாரிசா?


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒரு
சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர்
குயில், புதுச்சேரி, 12.8.1958

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)