Search This Blog

29.6.13

பெரியார் காட்டிய வழிமுறைகளில் அறப் போராட்டம்

கீழத்தஞ்சை தயாராகி விட்டது! நீங்கள்?


ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை)ப் போராட் டத்திற்கு நாள் குறிப்பிட்டு விட்டார் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்.

இராஜபாளையம் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு கழகத் தோழர்கள் மத்தியில் ஆர்வம் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது.

தென் மாவட்டங்களில் இரண்டு அணிப் போராட்ட விளக்கப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மதுரை நிகழ்ச்சியில் (8.7.2013) தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றுகிறார்.

இதற்கிடையே நமது போராட்டத்தின் நோக்கம் உள்ளிட்ட சகல அம்சங்களையும் உள்ளடக்கிய 32 பக்கங்களைக் கொண்ட வெளியீடு ஆவணக் காப்பமாக வெளியிடப்பட்டுள்ளது.

நன்கொடை ரூ.5 மட்டும் தான்; எல்லா மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகத் தலைவர் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப் பயணத் திலேயே ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

தந்தை பெரியார் காட்டிய வழிமுறைகளில் நமது அறப் போராட்டம் நடைபெறும்; பிரச்சாரம் விளக்கம் - வேண்டுகோள் - இவற்றைத் தொடர்ந்து களம் காணுதல் என்பதுதான் நமது போராட்ட முறை! 

போராட்டத்தை அறிவித்த இராஜபாளையம் மாநாட்டிலேயே  போராட்டத்தில் குதிக்கக் கழகத் தோழர்கள் கையொப்பமிட்டுப் பட்டியலிட்டு கழகத் தலைவரிடம் அளித்து விட்டனர். அடுத்து மதுக்கூர் மாநாட்டிலும் அளித்தனர்.

கீழத்தஞ்சை மாவட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் ஆயிரக்கணக்கில் நான் முந்தி நீ முந்தி என்று விவசாயப் பெருங்குடி மக்கள் - குறிப்பாக நமது தாய்மார்கள் போட்டி போட்டுக் கொண்டு போராட்டத்தில் குதிக்க முன்வந்த காட்சி பழைய புறநானூற்றைத் தான் நினைவூட்டும்.

நம்முடைய இயக்கம் உயிர்த் துடிப்பாக (Live Wire) இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் எடுப்பான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பிரச்சாரம் - போராட்டம் என்ற அணுகு முறைகளைக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கம் தானே திராவிடர் கழகம்?  கழகத் தலைவர் அவர்கள் கூறும் மிகப் பொருத்தமான உதாரணம் கடிகாரத்தில் பெண்டுலம் போல இரு பக்கங் களிலும் அசைந்தாடி காலத்தைக் காட்டுவது போல கழகம், பிரச்சாரம் போராட்டம் என்ற களங்களில் களமாடி தமிழர்களின் விடுதலைக் களத்தில் வெற்றிகளைக் குவித்து வருகிறது.


நமது போராட்டங்களில் எப்பொழுதுமே அரசியல் நோக்கம் இருக்காது. இன்னும் சொல்லப் போனால் பச்சைத் தமிழர் காமராசர் வாழ்க! என்று குரல் கொடுத்துக் கொண்டே ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர்கள் நாம்.

அறியாமைக்கு எதிரான போர்- இன இழிவுக்கு எதிரான போர் - சமூக அநீதிக்கு எதிரான போர் - பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போர் - தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்துப் போர் - பெண்ணுரிமைக்கான போர் - என்று நமது போராட்டம் - எல்லாம் அடிப் படையானவை - அடுத்த தேர்தலைப் பொறுத்த தல்ல - அடுத்த தலைமுறை விடியலுக்கான போராட்டம்! நமது போராட்ட நடவடிக்கைகள்தான் எதிர்கால வரலாற்றின் பக்கங்கள் ஜாதி -தீண்டாமை சட்டப்படி அதிகாரப் பூர்வமாகப் படம் எடுத்து ஆடுவது கோயில் கருவறையில்தான்.

பெரியார் கைத்தடியால் தான் அதற்கு மரணவோலை! மக்களை நாம்தயார்படுத்துவோம்; அரசின் சட்டங்கள் நொண்டி அடித்துக் கொண் டாவது பிறகு ஓடி வரும். அதில் ஒன்றும் அய்யம் வேண்டாம்.

போராட்ட வீரர்களின் பட்டியலைத் திரட்டத் தொடங்கி விட்டீர்களா? போராட்ட விளக்க வெளியீட்டினை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

கீழ்த்தஞ்சை தயாராகி விட்டது - நீங்கள்?

                        ----------------------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2013

40 comments:

தமிழ் ஓவியா said...


மார்கழி மாத கொக்கோகம்! - துரை. சந்திரசேகரன்


மார்கழி மாதம் என்றால் படுகுஷி! குமரிப் பெண்கள் ஆடுவதென்ன! பாடுவதென்ன!! பாராயணம் செய்வதென்ன!!! என்ன, என்ன, என்ன, என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவது மாதிரி சொல்லலாம்.

விஷயம் இல்லாமலா இருக்கும்? பாடுகின்ற பாடல்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா? உள்ளுக்குள்குமைந்து கிடக்கிற உணர்ச்சிகளைப் புரியும் வார்த்தைகளில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?

பக்தை என்ற பெயரில் பருவக் கொந்தளிப்பைப் பாட்டாகப் பாடி வைத்துள்ளார்கள் அல்லவா... அதை சந்தடி சாக்கில் பாடித் தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் மார்கழி மாதம் அவ்வளவுதான் - அதற்கு மேல் பூச்சுதான் பக்திப் பரவசம். பாடல்களில் ஒன்றிரண்டு தட்டி விடுகிறோம் படியுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்:
பொங்குபாற்கடல்
பள்ளிகொள்வானைப்
புணர்வதிலோ ராசை - என்
கொங்கைகள் கிளர்ந்து குமைந்து குதூகலித் தாடென் ஆவியை யாகுலஞ்செய்?

பாடலை பார்த்தீர்களா?

பக்தையின் எண்ணம் எப்படி பக்தியைப் பரப்புகிறது! சபாஷ்! முடிந்தவர்கள் மார்கழி மாத பஜனையைத் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொடுங்கள். (கையில் கிடைத்ததை எடுத்து பக்தர்களை அடித்துவிடப் போகிறார்கள்..!)

இந்த விஷயத்தில் கிளைமேக்ஸ் பயில்வான் ஆண்டாள்தான். அவள் பாட்டையும் கேட்போமே!

குத்து விளக்கெரியக் கொட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
வாய் திறவாய்
செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே!
துயிலெழாய்

நப்பின்னைக்கு எது எது எப்படி இருக்கிறது என்பதையும் நப்பின்னையின் கொங்கைமேல் எதையோ வைத்து இதமாக - சுகமாக உறங்கும் கண்ணனை எப்படி வர்ணித்திருக்கிறது திருப்பாவை!

குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய பக்தி சிவனாரைப் புகழ்ந்து ஆபாசக் களஞ்சியமாகத் திகழ்வதைப் போல், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை போன்றவை விஷ்ணுவைப் புகழ - பக்தர்களின் இச்சையை தணிக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட கொக்கோகப் பாடல்களே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்களை மார்கழி மாதத்தில் பாடினால் மாதம் மும்மாரி மழை பொழியுமாம்; வயலெல்லாம் செந்நெல் விளைந்து குலுங்குமாம்!

ஓங்கி யுலகளந்த
உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச்
சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ்செந்
நெலூடு கயலுகள
என்பது பாடல்.

கடும் வறட்சி என்றெல்லாம் சொல்லி எங்கும் காவடித் தூக்கி செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசும் பார்வையாளர்களை அனுப்ப வேண்டியதில்லை. உத்தமன் பேர் பாடினால் போதுமானது. பக்தர்கள் நம்புவார்களாக! பம்பு செட்டு எந்தப் பக்தர்களாவது வைத்திருந்தால் அதை விற்று விட்டு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மும்மாரி பொழியச் செய்வார்களாக!

தமிழ் ஓவியா said...


எவன் பிராமணன்?


ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான்ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப் பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.
- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

தமிழ் ஓவியா said...


பாவ புண்ணியம்


சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப் பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே. பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பி னராகவும், புண்ணியம் செய்த வர்கள் உயர் வகுப்பினராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக்கூட்டத்தில் நேரு

தமிழ் ஓவியா said...


வடமொழியில் சிபாரிசா?


தமிழ் தந்த சிவனார்க்கு
வடமொழியில் சிபாரிசா
சாற்றாய் என்று தமிழறி குன்றக் குடியார் ஒரு சொல்லால் ஒரு
சாட்டை
தருதல் கேட்டுச்
சிமிட்டாவை தூக்கியே
ஓடி வந்தார் பார்ப்பனர்கள்
சிரைப்பதற்கே
அமை வாகச் சங்கரரும்
தூக்கி வந்தார் அடைப்பத்தை
அடங்கார் யாரோ?

- புரட்சிக் கவிஞர்
குயில், புதுச்சேரி, 12.8.1958

தமிழ் ஓவியா said...


பணம் அல்ல - மனம் தேவை


ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் இன்றியமையாத் தேவை யாகும்.

ஆனால் நம் நாட்டில், ஏழை-எளிய மக்கள் உண்ண உணவு இன்றியும், இருக்க இடம் இன்றியும், சுகாதாரச் சீர்கேடுகளாலும் தினந்தோறும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற அவல நிலையைக் கண்கூடாகக் காண முடிகிறது.

மனிதனின் அடிப்படைத் தேவை யான மேற்கண்ட மூன்றும் கிடைக்கப் பெறாமல் பாமரமக்கள் சாலை ஓரங் களிலும், நடைபாதைகளிலும் கிடைத் ததை உண்டு, உறங்கி காலங்கழித்து வருவதை கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் அன்றாட நிகழ்ச்சி யாகவே நடைபெற்று வருகின்றன.

பாமரமக்கள் சமூக - கல்வி ரீதியாக வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை நாளும் அறிமுகப்படுத்தினாலும் அவை அனைத்தும் பாமரமக்களுக்குச் சென்ற டைகின்றனவா? அதனால் அவர்கள் பயன் பெறுகின்றனரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் அரசாங்கம் அறிமுகப் படுத்துகின்ற பல்வேறு நலத்திட் டங்களை நடைமுறைப் படுத்துகின்ற போது இடைத்தரகர்களாக சில சமூக விரோதிகள் செயல்படுவதாலும், அதற்கு ஒரு சில அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாலும் பல்வேறு துறைகளில் வெளிப்படையாகவே பல்வேறு மட்டங்களில் ஊழல் நாளும் நடைபெற்று வருகின்றன என்பதை நாளேடுகளில் நாள்தோறும் பளிச்சிடும் செய்தியாக வந்தவண்ணம் உள்ளன.

அண்மைக்காலமாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே மாறிவிட்ட அவலநிலையை நினைத்து மனிதநேயப் பண்பாளர்கள் சமூகநலனில் அக்கறை கொண்ட சமுதாய நல ஆர்வலர்கள் ஆகியோர் மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக திடுக்கிடும் தகவலாக மனித உயிர் காக்கும் மருத்துவமனைகளில் கூட குறிப்பாக அரசாங்க மருத்துவ மனைகளில் தற்போது பெருமளவில் ஊழல் மலிந்து விட்டதை எண்ணி ஏழை - எளிய மக்கள் நாளும் வருந்தி வழிதெரியாமல் கண்களை குளமாக்கி நிற்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் அங்கு பிரசவம் பார்க்க வந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பேசிய ஏளனப் பேச்சுகள், கடுஞ் சொற்கள், விரும்பத்தகாத விபரீதச் செயல்கள் ஆகியவை நாட்டு மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் ஓவியா said...

ஆம், வானமே கூரையாக எண்ணி, சேலம் நகர நடைபாதையில் வாழ்க்கையை கழித்துவந்த இளம்பெண் ஒருவர் பிரச வத்திற்காக பேருந்திலோ, ஆட்டோ விலோ செல்ல வழியின்றி சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு கண்ணீர் மல்க நடந்தே சென்றிருக்கிறார். கால்கடுக்க, மூச்சிறைக்க நடந்தே சென்ற அந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பணம் கேட்டு அங்கிருந்து செவிலியர்கள் தொந்தரவு செய்ததையும், அநாகரிக மான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியதையும், மனிதநேயமின்றி அரு வருக்கத்தக்க முறையில் அவர்கள் நடந்து கொண்ட சம்பவத்தையும் நாளேடுகளில் படித்த அனைவரும் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.

பிரசவ வலியால் போராடிக் கொண்டிருந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பணம் கொடுத்தால் தான் பிரசவம் பார்ப்போம் என்று அடாவடித் தனமாக, ஈவு இரக்கமின்றி, மனிதப்பண்பு சிறிதும் இல்லாமல், கல்நெஞ்சம் படைத்த செவிலியர்கள் அப்பெண்ணை ஏளன மாகத்தகாத வார்த்தைகளால் திட்டி மருத்துவமனையில் இருந்து விரட்டி அடித்துள்ளனர்.

அப்பெண் திக்கற்றவளாக, வழிதெரி யாமல், வேறு வழியின்றி பிரசவ வலி யோடு அருகிலிருந்த கழிப்பிட அறைக் குச் சென்று குழந்தையை ஈன்றெடுத் தாள் என்கிற வேதனை மிகுந்த செய்தி காட்டுத் தீ போன்று நாடெங்கும் பரவியது.

செவிலியர்களின் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான, அநாகரிகமான, மனிதநேயமற்ற இழிசெயலைக் கண்டித்து மகளிர் சங்கங்கள், மாதர் சங்க அமைப் பினர், சமூகநல ஆர்வலர்கள், பெண் ணுரிமைப் போராளிகள், மனிதநேய மாண்பாளர்கள், நடுநிலையாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோர் தங்களது எதிர்ப்புக்குரலை ஆங்காங்கே ஆவேச மாக எழுப்பி கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இத்தகைய வேதனை மிகுந்த தரு ணத்தில், நல்வாய்ப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இப் பிரச்சினையில் தலையிட்டு மேற்கண்ட சம்பவத்தை விசாரித்து ஊழலுக்கு உடந்தையாக இருந்த சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

தமிழ் ஓவியா said...


வேண்டும்



பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


மக்கள் அன்பு வெள்ளத்தில் தமிழர் தலைவர்

திருமண அழைப்பல்ல - போராட்டக் களத்திற்கு வாரீர்!

திருவாரூர் மாவட்ட திராவிடர் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் சங்கமத்தில் தமிழர் தலைவர்

- நமது சிறப்புச் செய்தியாளர்



சோழங்கநல்லூர் ஜூன் 28- கீழத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக விவ சாயக் குடும்பங்களின் அன்பு மழையில் பாச வெள்ளத்தில் சிக்கித் திக்குமுக்காடிய திராவிடர் கழகத் தலைவர் உங்களுக்குத் திருமண அழைப்புக் கொடுக்க வரவில்லை - போராட்டக் களத்திற்கு - சிறை செல்லு வதற்கு நேரில் அழைப்புக் கொடுக்க வந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்ட போது உணர்ச்சி அலைகளால் உந்தப்பட்ட மக்களின் கை தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று. திருவாரூர் மாவட்ட திராவிடர் விவசாய சங்க தோழர்கள் மத்தியில் சோழங்கநல்லூரில் நேற்று 27.6.2013) உரையாற்றுகையில் முக்கிய மாகக் குறிப்பிட்டதாவது:

இது எங்கள் குடும்பம்!

எங்களுக்கு மிகவும் நெருக்கமான பகுதி எது என்று கேட்டால் இந்தக் கீழத்தஞ்சை பகுதிதான் என்று உடனே சொல்லுவோம் - உங்களில் உறவினர்கள் யார் என்று கேட்டால் இந்தக் கீழத்தஞ்சை திராவிடர் விவசாயிகள்தான் என்போம்.

இந்தப் பகுதிக்கு வந்து உங்களை எல்லாம் குடும்பம் குடும்பமாகப் பார்த்து விட்டுத் திரும்புகையில் புதிய உற்சாகத் துடன் திரும்புவோம் - எங்கள் பேட்டரி ரீ சார்ஜ் செய்யப்படுகிறது.

இயக்கத் தளபதிகள்!

நமது தீரமிக்க கழகத் தளபதிகளாக இந்தப் பகுதியில் வாழ்ந்த - பணியாற்றிய வர்களின் வாரிசுகள் - குடும்பத்தினர் எங்கள் முன்னால் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பூரிக்கின்றோம். வாழையடி வாழையாக இயக்கக் குடும்பங்களாக திருக்கூட்டமாக இருந்து வருகிறீர்கள். வேறு எந்த இயக்கத்திலும் காண முடியாத காட்சி இது. இளைஞர்களையும் பெரியார் பிஞ்சுகளையும் இங்கே காண முடிகிறது! தோழர் அந்தோணிசாமி, படுகொலை செய்யப்பட்ட கொட்டாரக்குடி குருசாமி, எம்.ஆர். பொன்னுசாமி, கொட்டாரக்குடி வட்டாரத் தலைவர் இடும்பையா என்று நீண்ட பட்டியலே உண்டு. பாவா நவநீத கிருஷ்ணன், நாகை கணேசன் போன்றவர் களை எப்படி மறக்க முடியும்?

காவிரி வறண்டு போயிருக்கலாம். விவசாயம் பாதிக்கப்பட்டும் இருக்கலாம்; ஆனால் தந்தை பெரியாரின் கொள்கை ஊற்று மட்டும் இங்கே வற்றிப் போய் விடவில்லை - வளமாகக் காட்சி அளிக் கிறது என்பதற்கு அடையாளம்தான் நேற்றும் சரி, இன்று காலை முதல் இந்தப் பகுதிகளில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் போதும் சரி. நீங்கள் காட்டிய அந்த உணர்ச்சி கொட்டிய அன்பு; பாசம் திக்குமுக்காடச் செய்து விட்டது.

சுனாமி வந்தாலும் அசையாத கோட்டை

பல்வேறு ஆசை வார்த்தைகளை, சலுகை களைச் சொல்லி உங்களை எல்லாம் தத்தம் அரசியல் கட்சிக்குக் கடத்திச் செல்லப் பார்த்தார்கள் அரசியல் வாதிகள்.

சுனாமி வந்தாலும் அசையாத கொள்கைச் சிப்பாய்களாயிற்றே நீங்கள். நீங்களா அசைந்து கொடுப்பீர்கள் - ஓட ஓட விரட்டியடித்தீர்கள்! (பலத்த கரவொலி)

வறுமையில் செம்மை - கொள்கையில் உண்மை - உறுதி உள்ள உங்களை யார் என்னதான் செய்ய முடியும்?

தமிழ் ஓவியா said...


இந்த நேரத்தில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி அய்யா எஸ்.எஸ். மணியம் அவர் களின் வாழ்விணையர் அம்மா ராஜலட்சுமி மணியம் அவர்களை நினைத்துப் பார்க்கிறோம். வயல் வெளியில் மிகப் பெரிய அளவுக்கு பெண் களைக் கூட்டி மாநாடு நடத்திக் காட்டினாரே! அப்பொழுது ஒரு வேண்டுகோளை வைத்தார்.

விடுதலை சந்தா - பாதி விலை - சலுகை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் - அந்த இடத்திலேயே அதற்கு ஒப்புதல் அளித்தேன். விடுதலை தானே நமது மூச்சுக் காற்று! மக்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கும் ஆசான் விடுதலை பரவாத பகுதியே இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

திருமண அழைப்பல்ல!

இவ்வளவுக்கும் உங்களைச் சந்திக்க வந்தது - திருமண அழைப்பிதழைக் கொடுப்பது போல - போராட்டத்திற்கு வாருங்கள் என்ற அழைப் பினை கொடுக்கத்தான் இங்கே வந்துள்ளோம்.

காவிரி நீர் உரிமைப் போராட்டத்தின் போது இந்தப் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கழகத் தோழர்கள் பங்கேற்றுச் சிறைக்குச் சென்ற அந்தக் கண் கொள்ளாக் காட்சி இன்னும் என் மனக் கண்முன்னே படமாக ஓடுகிறது.



வேர்களும், விழுதுகளும்

இங்கே நமது இயக்கம் உறுதியோடு, பலத்தோடு, கொள்கை வளத்தோடு இருக்கிறது; வேர்கள் சரியாக உறுதியாக இருக்கின்றன; விழுதுகளும் பலமாக இருக்கின்றன; விழுதுகள் பலமாக இருந்தால்தான் மரமும் பலமாக இருக்க முடியும்; இந்த மரங்கள் வலுவாக இருந்தால்தான் இந்தச் சமூகத்தை நாம் செப்பனிட முடியும் - இந்த இயக்கம்தான் இந்தச் சமுதாயத்திற்கான ஆணி வேரும் விழுதுகளும் ஆகும்.

- சோழங்கநல்லூர் கூட்டத்தில் கழகத் தலைவர் 27.6.2013



திரண்டது மகளிர்ப் படை!

அப்பொழுது இந்தப் பகுதியில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் என் நண்பர் தான் - என்னோடு படித்தவர்தான். அவர் என்னிடம் கெஞ்சுவது போல ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.

இவ்வளவுப் பேர்கள் கைதாவார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை; எங்கள் கணிப்பையும் மீறி இவ்வளவுப் பேர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவுப் பேர்களையும் அழைத்துச் செல்ல எங்களிடம் வாகன வசதிகள் இல்லை.

தங்களோடு முக்கியமான கழகத் தோழர்களை மட்டும் கைது செய்கிறோம். நீங்கள் தோழர்களிடம் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

நானும் சூழ்நிலையை உணர்ந்து உங்களிடம் வேண்டுகோள் வைத்தேன், யாரும் கேட்பதாக இல்லை. உங்களை விட்டு விட்டு நாங்கள் செல்லுவதாக இல்லை. வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டோம். உற்றார் உறவினர்களிடமும் விடை பெற்று வந்து விட்டோம் - சிறைக்குள் செல்லாமல் திரும்புவதாக நாங்கள் இல்லை என்று உறுதியாகச் சொன்னீர்களே, இன்று அதனை நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.

hayyram said...

நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?
கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!
தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?
http://www.facebook.com/photo.php?fbid=172315292938600&set=a.151408498362613.1073741828.151403351696461&type=1&permPage=1

hayyram said...

46 வயதுவரை ஈ.வே. ராமசாமி கொண்ட கடவுள் நம்பிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதில குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-

‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’

இவ்வாறு துவங்கும் தலையங்கம்

‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’

என்று முடிகிறது.

மேலும் அதே குடியரசில்,

‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’

என்று இருக்கிறது.

ஈ.வே. ராமசாமி நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட, ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஆசிரியராகக் கொண்ட குடியரசு இதழ் இறைவனைப் பற்றிக் கூறுகிறதென்றால் அதில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே அர்த்தம். மேலும் தலையங்கங்கள் தன்னால் எழுத்தப்பட்டது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது குடியரசில் எழுதப்பட்ட, தலையங்கத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே பொருள்!

இந்த ஆதாரங்கள் கூட போதாது என்பவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் இதோ!

அதற்குமுன், வீரமணியின் பொய்!

வீரமணியிடம், ‘பெரியார் பிறவி நாத்திகரா? அல்லது (பின்தாங்கிய) வயது வந்தபின் நாத்திகரா?’ என்று கேள்வி கேட்டதற்கு, வீரமணி, ‘‘அய்யாவின் கூற்றுப்படி அவர்களுக்குத் தெரிந்த காலம் முதல் கடவுள் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை என்றாலும் குடியரசின் துவக்க கால இதழ்களில் கடவுள் பற்றி சில தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாலோ அவர் பிறகு நாத்திகரானார் என்று குறிப்பிட முடியாது. அப்போது உடன் இருந்தவர்கள் எழுதவும் ஒருவேளை அனுமதித்திருக்கக்கூடும்’’ என்று கூறுகிறார். (நூல்:- வீரமணியின் பதில்கள்)

வீரமணி சொல்வதுபோல வைத்துக் கொண்டாலும் நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் அப்போது அனுமதித்தார் என்றால் அவர் வழிப்படி நடக்கும் தாங்கள் உண்மை இதழிலும் விடுதலை நாளேட்டிலும் கடவுளை வேண்டுகிற, கடவுளை நம்புகிற கட்டுரைகளை எழுத அனுமதிப்பீர்களா?

ஆனால் வீரமணி சொல்கின்ற மாதிரி உண்மை அதுவல்ல. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுளை நம்பினார். அதை மறைக்க ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கரும் அவருடைய சீடர் வீரமணியும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இருப்பினும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டுவோம். இதோ! அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமி நாயக்கரே பத்திரிகாலய திறப்பு விழாவில் பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில்,

‘‘ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளைப் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டபோது கீழ்க்கண்டவாறு பேசினார்’’ என்று குறிப்பு எழுதி அதன் கீழ் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசிய பேச்சு அச்சிடப்பட்டு இருக்கிறது.

மேலும் அதில்,

‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசியிருக்கிறார்.

இதன்மூலம் நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மீது 46 வயது வரை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுதானே!

hayyram said...

மேலும் சில ஆதாரங்கள் இதோ!

பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் என்பவர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு மு. கருணாநிதி அணிந்துரையும், க. அன்பழகன் வாழ்த்துரையும், தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட இந்நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி வருபவற்றைப் பார்ப்போம்.

* வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் பெரியார் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார்.

(குடியரசு 07-06-1925)

* காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று பெரியார் எழுதினார்.
(குடியரசு 06-12-1925)

* சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதினார்.
(குடியரசு 04-07-1926)

மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையெனத் தெற்றென விளங்கும்

தமிழ் ஓவியா said...


பிற நாட்டைப் போற்றுவோர் பிறந்த நாட்டைத் திருத்தாதது ஏன்?

ஏற்றத் தாழ்வு சுவிட்சர்லாந்து
மக்களுக்குள் இல்லை என்றே
இங்குளோர் புகழ்ந்து பாடுவார் - ஆனால்

இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை
ஏற்றிப் போற்றி எத்தில் வாழும்
ஈனரெல்லாம் கூத்து ஆடுவார்.

மாற்றவிட மாட்டோ மென்று
மடமையை வளர்ப்போர் தீய
மதத்தின் பேரால் ஆட்டம் போடுவார் - பல்லவ

மன்னராண்ட காலம் முதல்
பவுத்தர் சமணர் கொல்லப்பட்ட
பகைமை யோங்க கூட்டம் கூடுவார்.

கழுவிலேற்றி சமணர்களைக்
கொன்று குவித்த கொடுமையினை
கனவில்கூட மறக்க முடியுமா? - அன்பால்

கொல்லாமையைக் கடைப்பிடித்த
பவுத்தர்களை நாட்டைவிட்டே
விரட்டியதை மறக்க முடியுமா?

உழுத அவர் நிலத்தை யெல்லாம்
வன்முறையில் கவர்ந்துகொண்ட
வஞ்சகத்தை மறக்க முடியுமா? - அந்தோ

அடிமை யாக்கி அவர்களையே
ஆதிக்க வெறிபிடித்தோர்
அடக்கியதை மறக்க முடியுமா?

ஜாதிவேற்றுமை கற்பிக்கும்
சதுர் வருணத்தைப் புகுத்தி
தமிழினத்தைப் பிளக்க வில்லையா? - கொடிய

தீண்டாமையைப் பவுத்தர்மீது
சுமத்தி அந்த தூயவரைத்
தாழ்த்தப்பட்டோர் ஆக்கவில்லையா?

வேதியர், நிலக்கிழார்கள்,
வேந்தர் ஒன்றாய்ச் சோந்துகொண்டு
உழைப்பவரை ஒடுக்கவில்லையா? - இன்றும்

ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வழிவகைகள் கண்டிடாமல்
வன்முறையைத் தொடரவில்லையா? (ஏற்றத் தாழ்வு)

வீ. இரத்தினம்,
பெங்களூரு

தமிழ் ஓவியா said...


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப் போது ஓரிருமிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இனிசுலின் ஏறி, இறங்கும்!

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உண வுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

நன்றி: இன்றைய வேளாண்மை ஜூன் 2013


தமிழ் ஓவியா said...


சூன் 21: சூரியன் ஸ்தம்பிப்பு?


நாம் வாழும் பூமி தன்னைத் தானே நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டு, நொடிக்கு 11 கி.மீ. வேகத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும்போது சூன்21 அன்று தன் அச்சில் கடகரேகையில் இருந்து திரும்புகிறது. பூமி தெற்கு நோக்கி பெயர்ந்ததால் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததைப்போல் தோற்றம் தெரிந்தது. இதையே சங்க இலக்கியங்களில் சூரியனின் வடசெலவு, தென் செலவு என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் பார்ப்பனியம் தட்சிணாயணம், உத்தராயணம் என்றது. கடக சங்கராந்தி என்றும், மகர சங்கராந்தி என்றும் சமக்கிருதத்தை முன்னிறுத்தி கோலோச்சுகிறது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் காட்சிப் பிழைகள்தான்.

நாம் உண்மையான இயங்கியல் விதியை புரிந்து கொண்டு பூமியின் தென் பெயர்ச்சியால்தான் (டிசம்பர் 21 முதல் சூன் 21 வரை) சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்ததாக சொல்லப்பட்டதை (தட்சிணாயணம்) மறுத்து பூமிதன் பெயர்ச்சி அடைந்தது எனவும் அதே போல் பூமியின் வட பெயர்ச்சியால் தான் (சூன் 21 முதல் டிசம்பர் 21 வரை) சூரியன் தெற்கு நோக்கி நகர்வ தாகவும் (உத்தராயணம்) சொல்லப் படுவதையும் மறுத்து, புறப் பொருள் களின் காட்சி மாற்றத்திற்கு அடிப் படைக் காரணமே அகப்பொருள் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே காரணம் என்பதை பகுத்தறிவோடு உணர்ந்து ஆணித்தரமாக பார்ப் பனியத்தை எதிர்ப்போம்.

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும். நாம் வாழும் பூமியைப் பற்றி போற்றி பெருமிதம் கொள்வோம். வருங்கால எழுத்தாளர்களை பார்ப்பனியத்திட மிருந்தும் சொற்குற்றம், எழுத்துக் குற்றத்தில் இருந்து விடுவிப்போம்.

சூன் 21 அன்றும் டிசம்பர் 21 அன்றும் பூமி தனது நீள் வட்டப் பாதையின் முனைகளுக்குச் சென்று திரும்புகிறது. இதையே அவர்கள் நின்று செல்வதாக (ஸ்தம்பித்து) கூறுகின்றனர். சூரியனும் வடக்கு தெற்காக நகரவில்லை. பூமியும் ஸ்தம்பிக்கவில்லை. தன் பாதையில் சுற்றி நகர்ந்து திரும்புவது பூமியே! பூமியே! பூமியே!!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்

அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து - குறள்

- செந்தமிழ் சே குவேரா
பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவை

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்



1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இரு வருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத் துக்காக தண்டனையாகத்தான் மனித குலத்துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் - 4

தமிழ் ஓவியா said...


கல்கியும் துக்ளக்க்கும்!

நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.

பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.

சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?

அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.

இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.

பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.

துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)

மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!

நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:

இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.

மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.

அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.

எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும். 29-6-2013

தமிழ் ஓவியா said...


சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சி யும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

குடந்தை கழக மாவட்டம் சுவாமிமலையில் 26.06.2013 அன்று காலை 9.30 மணியளவில் எருமைப் பட்டி வீரமுத்து மல்லிகா ஆகியோரின் மகன் மாதவன் அவர்களுக்கும் கோவிந்தகுடிஆவூர் கல் யாணசுந்தரம் இந்திரா ஆகியோரின் மகள் துர்க்கா ஆகியோரின் இல்வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் வாழ்வியல் தத்துவங் களை எடுத்து உரையாற்றி வாழ்த்து கூறி நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில், 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சுவாமிமலையின் நகர தலைவராக இருந்த நாராயணசாமி அவர் களுடைய இல்ல திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்திருந்தேன். அப்போது வரிசையாக போடப் பட்டிருந்த மர நாற்காலிகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தார்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிய பட்டு புடவைகள் நகைகளோடு வந்திருந்த பெண்கள் எல்லாம் தரையில் அமர்ந் திருந்தார்கள்.

நாற்காலியில் உட்கார இடம் இருந்தும்கூட பெண்கள் அனைவரும் கீழேதான் அமர்ந்திருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரே ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் பேசும்போது இவ்வளவு பெண்கள் தரையில் அமர்ந்துள்ளார்கள் துணிச்சலாக ஒரு பெண் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி தான் துணிச்சலாக இருக்கவேணடும் என்று அவரை பாராட்டி பேசிவிட்டு, அந்தப் பெண் உட்கார்ந்து இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த பெண்ணும் கீழே இறங்கி ஏனைய பெண்களோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பெரியார் வென்றார்

இங்கே நாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது பெரும்பாலான பெண்கள் மிகவும் வசதியாக நாற்காலியிலே அமர்ந்துள்ளார்கள். ஆண்கள் எல்லாம் பின் பக்கம் நாற்காலியில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி வந்தது? யாரல் வந்தது? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தான் பெரியார் இயக்கத்தினுடைய வெற்றி. சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்பவர்களுக்கு இது தான் பதில்.

அம்பேத்கரும் - பெரியாரும்

இது ஜாதியை மறுக்கின்ற இயக்கம். வடபுலத்திலே அண்ணல் அம்பேத்கர் ஜாதி, மதத்தை எதிர்த்துப் போராடினார். அதே நேரத்திலே தென் புலத்திலே தந்தை பெரியார் அவர்கள் அதே காரணத்திற்காக போராடினார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

கேவலமான பெயர்கள்

நம்முடைய முன்னோர்கள் நமக்கு வைத்திருந்த பெயர்கள் எல்லாம் நம்மை கேவலப்படுத்து வதாகவும், அருவறுப்பை உண்டாக்குவதாகவும் இருந்தது. தற்போது தமிழர்கள் தம் மக்களுக்கு வைத்துள்ள பெயர்கள் எல்லாம் தஸ், புஸ் என்று புரியாத மொழியாக உள்ளது. அதனால் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டோம்.

தொல்.திருமாவளவனுக்கு பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் அன்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த மோசமான பெயர் களை எல்லாம் மாற்றி நல்ல தமிழ் பெயர்களை தமது தொண்டர்களுக்கு வைத்துள்ளார் பாருங்கள் அது சாதாரண காரியம் அல்ல.

குருதிக்கொடைக்கு ஜாதியில்லை

இங்கே எங்களது கழக மாவட்டச் செயலாளர் குருசாமி அவர்கள் பலமுறை குருதிக்கொடை செய்துள்ளமைக்காக அவரது தொண்டறத்தைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவரால் கடந்த மாதம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குருதிக்கொடை செய்யும் காரியம் இருக்கின்றதே அதுவே ஒரு ஜாதி ஒழிப்பு திட்டம் தான்.

இந்த இந்த ஜாதிகாரர்களுக்கு, இந்த ஜாதியினுடைய இரத்தம் தான் செலுத்தவேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறதா? இரத்தத்திலே பிரிவுகள் உண்டு. அந்தந்த பிரிவு உள்ளவர்களுக்கு, அந்தந்த இரத்தம் தான் செலுத்த வேண்டும் எல்லா ஜாதி மக்களும் எந்த மொழி பேசினாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த பிரிவு இரத்தம் அவரவர்களுக்கு பொருந் தும் போது, இதிலே ஜாதி எங்கிருந்து வந்தது? போன்ற அறிவார்ந்த கேள்விகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

லைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல் பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகின்றன என்பதைச் சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஆனால் காங்கிரஸ் பிரசிடெண்ட் என்கிற தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப்பட்ட மக்க ளின் சுதந்திரத்திற்கு விடப் பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டுப் பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த தானத்தை அடைந்ததில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டு போய்விட்டது.

ஏனெனில் மற்ற தேர்தல்களையும், பட்டங் களையும் உத்தியோகங்களையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கிய தையை கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள்.

ஸ்ரீமான் எ.சீனி வாசய்யங்காருக்குக் காங்கிரஸ் பிரசிடெண்ட் வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சென்னை பார்ப்பனர் போய்ப் பிரசாரம் செய்யவும் ஆங் காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளில் பிரதான மாயுள்ளவர்களில் யாராவது பணங்காசு வாங்கக் கூடியவர்களாயிருந்தால் அவைகளையும் திருப்தி செய்தும், பதவி ஆசையுள்ள வர்களாயிருந்தால் அவை களையும் பற்றி பொய் வாக்குத் தத்தம் செய்தும் ஓட்டுகள் பெறப் பிரசாரம் செய்ததால் உண்மையிலேயே அதிக ஓட்டுப் பெற்றவரும் இன்னும் பெற இருந்தவருமான டாக்டர் அன்சாரி அவர்கள் இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்டு உத்தியோகம் என் போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம் பெரிய மனிதர்கள் என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச் சொல்லி விலகிக் கொண்டார்.

அடுத்தபடி அதிக ஓட்டுக் கிடைக்கப் பெற இருந்த ஜனாப் மஷருல்ஹக் என்னும் பெரியாரும் இவ்வித இழிவுப் பிரசாரத்தில் இறங்க மனமில்லாதவராகி இம்மாதிரி போட்டி போடுவதானால் எனக்கு வேண்டாம், கண் ணியமாய், வருவதானால் வரட்டும் என்றே சொல்லி போட்டியில் இருந்து அறவே விலகிவிட்டார்.

எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதானாலும் எவ்வளவு பரிசுத்தமானதானாலும் நமது பார்ப்பனர் அதில் கலந்தால் அதன் யோக்கியதை பார்ப்பனியத்திற்குத் தகுந்தபடி ஆகிவிடுகிறது என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 05.09.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்


எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.

அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம்.

மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற் சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம்.

அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் விளம்பர சபை

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் காங்கிரஸ் விளம்பர சபை என்பதாக ஒரு யோக்கியப் பொறுப் பற்ற தும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெ ளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரில் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் எழுதி வருகிறார்.

இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இவை ஒவ் வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற் கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம் என் பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம்.

அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடு வண்டியில் அகப் பட்டுத் திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22.9.1926ந் தேதி சுதேசமித்திரனில் பார்ப் பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியார் இதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்த தற்கு விரோதமாயிருந்த தாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலை பாதகம் விஷயமாய்ச் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய தானத்தையும் ஒரு மந்திரிக்குக் காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற் காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்ப் பலமாய் வாதாடியவரும் அந்த ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவரே ஆவர்.

ஆனால் அக் கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும் சில வெள்ளைக் காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந்தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளு கிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டுமென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத் தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலி ருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா?

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்ற வாசகத்தைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்! கழகக் குடும்பங்களின் சந்திப்பில் தமிழர் தலைவர்

கண்கொடுத்தவனிதம், ஜூன் 29- கடவுள் இல்லைஎன்று முதன் முதலாக தந்தை பெரியார் அவர்கள் பாடம் நடத்தி அதற்கான வாசகங்களைப் பிரகடனப்படுத்திய விடயபுரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் அய்யா பிறந்த நாளில் திறக்கப்படும் என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கண்கொடுத்தவனிதத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

43 ஆண்டுகால போராட்டம்

திராவிட விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாள்களாக ஆகின்றன என்பதற்காகவும், அதேநேரத்தில், இந்த வட்டாரத்தில் நாம் திட்ட மிட்டிருந்த செயல்கள், சரியான நடைமுறை வேண் டும் என்பதையொட்டியும், அதேபோல, நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்கிய அந்தப் போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகவேண்டும்;

அதிலே குறிப்பாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழன் கட்டிய கோவிலுக்குள்ளே மணியாட்ட வேண்டும் என்று இருப்பதை மாற்றி, மிகப்பெரிய அளவில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காக, பெரியார் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அளவிலே, ஏறத்தாழ ஒரு 43 ஆண்டுகாலம் தொடர்ந்து நாம் போராடி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்பதற்கு முயற்சிகள் எடுத்து, தனி சட்டம் ஒன்றை இயற்றி, அதனடிப்படையில், நம்முடைய மாணவர் களை 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி தேர்ந் தெடுத்தார்கள். தேர்ச்சி பெற்ற 206 மாணவர்களில் பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.

ஆகஸ்டு முதல் தேதி அறப்போராட்டம்

இவர்களுக்குப் பணி வழங்கக்கூடிய நேரத்தில், சிலர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித் தவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு முதல் தேதி அறப் போராட் டத்தை நடத்த உள்ளோம்.

நம்முடைய தாய்மார்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்களையெல்லாம் நாம் சந்திப்பது வழமையான ஒன்றுதான். இது ஒன்றும் புதுமை யல்ல.

பெண்கள் சிறைக்குச் செல்லவேண்டும்; ஆண்கள் வீட்டில் இருக்கட்டுமே!

தமிழ் ஓவியா said...


நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து அகமும், முகமும் மலர, அய்யா நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக் கின்றது பாருங்கள், அதற்கு எல்லையே இல்லை.

கண்கொடுத்தவனிதத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

நம் அறிவு ஆசான் அய்யா பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இறுதியாக நடத்தக்கூடிய அளவிற்கு, துணிந்து நாம் இறங்க வேண்டும். இதுவரையில் ஆண்களை போராட்டத் திற்கு அனுப்பிவிட்டு, பெண்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆண்கள் வேண்டுமானால் வீட்டில் இருக்கட்டும்; பெண்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வீட்டில் நீங்கள் தான் வேலை செய்கிறீர்கள்; 100 நாள் திட்டத்திலும் வேலை செய்கிறீர்கள். கொஞ்ச நாள் நீங்கள் ஓய்வெடுக்கவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி போராட்டத்தில் பங்கேற்பதுதான். சிறைச் சாலையில் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருந்தால், நீங்கள் ஓய்வாக இருக்கலாம். அப்பொழுதுதான் ஆண்களுக்கு உங்களுடைய அருமை புரியும்.

விடயபுரத்தில் நினைவுச் சின்னம்!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத் தில்தான் முதன்முறையாக சொன்னார்கள். அதற்காக வரலாற்றில் புகழ்வாய்ந்த அந்த இடத்தினை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டினை அமைத்தோம். பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையாமல் இருக்கிறது. இப்பொழுது வரும்பொழுது அந்த இடத்தினைப் பார்த்தோம்; கல்வெட்டினைச் சுற்றி காடுபோல் உள்ளது. அங்கே இருக்கின்ற தோழர்களும், பொறுப்பாளர்களும் அந்த இடத்தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்; அவர்களின் விருப்பப்படி முதலில் அந்த இடத் தினைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது!

அடுத்தபடியாக, இங்கே வரும்பொழுது பள்ளிக் கூடத்தின் கூரை சரியில்லை என்று சொன்னார்கள்; 15 ஆண்டுகளுக்கு முன்பு கூரை போட்டது; இந்தப் பகுதி அடிக்கடி மழை, வெள்ளம், புயலால் தாக்கப்படுகின்ற பகுதியாகும். ஆகவே கூரை பழுதடைந்துவிட்டது என்று சொன்னார்கள்; நம் அறக்கட்டளை பொறியாளர்களை வரவழைத்து, அந்த பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளை உடனடியாக செய்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் கட்டடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்; பெரியார் கட்டடம் சரியில்லை என்று கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆகவே, அக்கட்டடத்தினை சரி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப் படும்.

தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும்!

பருத்தியூரில் அய்யா பிறந்த நாள் விழா என்றால், மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், எடைக்கு எடை பொருள்கள் கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு நாம் போட்ட பட்ஜெட்டைவிட அதிக நிதி தேவைப் படுகிறது. தோழர்கள் பொறுப்பேற்கவேண்டும். அய்யா பிறந்த நாள் விழாவையொட்டி அந்தக் கட்டடம் திறக்கப்படும்.

கண்கொடுத்தவனிதத்தில் நடைபெற்ற சுயமரியாதைக் குடும்ப விழாவில் பங்கேற்ற கருஞ்சட்டைக் குடும்பத்தினர் (28.6.2013).

விடயபுரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி, ஸ்தூபி போன்று எழுப்பலாமா என்று பல பேரிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

இந்த இயக்கம் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் வாழும் இப்பகுதியில், கல்வி உதவி, மருத்துவ உதவி நம் இயக்கத் தோழர்களுக்கு தேவைப்பட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த இயக்கம் பின்வாங்காது, நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மேலும் பல கருத்துகளைக் கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கெட்டதிலும் - ஒரு நல்லது

உத்தரகாண்ட் வெள்ளைத்தின் சீற்றத்தினால் ஊர்களே அழிந்தன - கடவுள் குடி கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம் புதைந்து போயின.

இன்றைய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கும் பகுதிகளில் நிலத்தின் தாங்கும் திறன் குறைவாக இருப்பதால் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். மலைப் பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏழுமலையானை நம்பிப் பயனில்லை. தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என்று நம்பிக் கையைக் கட்டிக் கொண்டு அழுதால் நம் உயிர் தீர்ந்து விடும் என்ற முடிவுக்கு வந்தவரை சந்தோ ஷம்தான்! உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றம் கடவுள் நம்பிக்கைக்குச் சாவு மணி அடிக்குமேயானால் கெட்ட திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

பேயா - பிசாசா - ஆவியா?

சென்னை செங்குன்றம், நார வாரிக் குப்பம் பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய் மற்றும் உதிரிப் பூக்கள் அலுவலக நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் வைக் கப்பட்டுள்ளன. திருஷ்டி சுற்றப்பட்ட பூசனிக்காய் உடைக்கப்பட்டு, வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தின் அடியில் வைக்கப்பட்டது. ஏனிந்த தெருப்புழுதி? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலராக இருந்தவர் வெளி யூருக்கு மாற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகி விட்டனவாம். அவர் மன நிலை பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இறந்து விட்டாராம். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப் படவில்லை. சிறிது காலம் கழித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் இறந்து விட்டா ராம்.

இந்த நிலையில் இரவுப் பாது காவலர் ஒருவர் சில கதைகளைக் கிளப்பி விட்டுள்ளார். இரவு நேரத்தில் அலுவலகத்தில் யாரோ நடமாடுவது போல தெரிகிறது. பதிவேடுகள் புரட்டும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளார்.

நம் மக்களைக் கேட்க வேண் டுமா? பேய் நடமாடுகிறது! - ஆவி நடமாடுகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணியாற்று வோர்க்கு ஊர் மாற்றம் என்பதெல் லாம் சர்வ சாதாரணம்தானே. ஒரு அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் அடைவது என்ன அதிசயமான ஒன்றா?

புத்தியைச் செலுத்தாமல், புரளியைக் கண்டு அஞ்சினால் இத்தகைய மூடத்தனங்கள்தான் முளைக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்ன சொல்லு கிறார்கள்?

பேயும் இல்லை; ஆவியும் இல்லை. பேரூராட்சிப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யாகம் வளர்த்தோம் என்று சமாதானம் கூறுகின்றனர்.

இது பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்! ஒரு முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் சமாதானம் ஆகுமா?

பகுத்தறிவுச் சிந்தனை மனித னுக்கு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதாவது புரிந்தால் சரி.

தமிழ் ஓவியா said...

வில்லியநல்லூரில் நடந்ததென்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வில்லியநல்லூர் கிராமம். 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து அய்வர் மரணம் அடைந்தனர். அவ்வளவுதான். மூட நம்பிக்கை தொற்று நோய்ப் பற்றிக் கொள்ளுமே! ஆவி சேட்டைதான் காரணம் என்று எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல இந்த ஊரிலும் இருந்த வெட்டிப் பேச்சுப் பேர் வழிகள் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த மூடநம்பிக்கை தகவலை அறிந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத் தோழர்கள் தென்னவன், யாழ் திலீபன், மஞ்சை அழகரசன் ஆகியோருடன் நேரில் சென்று ஊரில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களில் ஒருவர் முதியவர்; இன்னொருவர் உரிய மருத்துவ உதவியின்றி காமாலை நோய் காரணமாக உயிரிழந்த பெண்.

ஊர் நிலைமை எப்படி? சுகாதாரச் சீர்க்கேட்டின் உச்சம். எங்குப் பார்த்தாலும் குப்பை விரிகோலம் தான்! சாக்கடை சங்கமம்தான்! விளக்கு வெளிச்சம் கூட சரியாக இல்லை. 2013ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு கிராமம்.

சுகாதாரச் சீர்கேடு காரணமாக வியாதிகள் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இங்கு உண்டு என்று கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் முதல் தேதி அவ்வூரில் மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் பிரச்சா ரத்தைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வில்லியநல்லூரில் பொதுச் செய லாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஈடுபடுவார்களாக!

தமிழ் ஓவியா said...


திருநங்கையர்களை அவமானப்படுத்துவதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 30- மூன்றாவது பாலினத்வராகிய திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.

முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender” என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆண் பெண் அல்லாத பாலினப்பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப் பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவ மானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்ட போது, இந்தப்படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய் திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆதி பராசக்தி


கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட் பார்க்குப் புத்தி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் புழக்கத்தில் இருப் பது எல்லோருக்கும் தெரி யும்.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் 12ஆவது வார்டில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மடத்தில் மாட்டியிருந்த கடவுளர் படத்தில் தேன் வடிகின்றது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.

உண்மைத் தகவல் களைவிட புரளிகளுக்குத் தானே இறக்கைகள் அதி கம். மக்கள் கூடிட ஆரம் பித்து விட்டனர்.

கருஞ்சட்டைத் தோழர் கள் களத்தில் இறங்கினர். மக்களுக்கு விளக்கம் அளித்தனர். காவல்துறைக் கும் தகவல் அறிவிக்கப்பட் டது. செய்தியாளர்களும் கூடினர்; கழகத்தின் விளக் கத்தை அனைவரும் ஏற் றனர்.

நேரில் சென்று பார்த்த போது பொய் மூட்டை என்பதும் தெளிவானது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊத்துக்கோட்டை என்.பி. சாலையில், நாகவல்லி யம்மன் கோயில் வளா கத்தில் புற்று அருகில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்தன. ஒரு அம்மன் சிலை, பால் குடித்ததாக புரளி அவிழ்த்து விடப்பட் டது - ஊரே திரண்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் (டி.எஸ்.பி.) பாலச் சந்திரன், ஆய்வாளர் நாக லிங்கம் ஆகியோர் சம்பந் தப்பட்ட கோயிலுக்குள் சென்று, ஒரு கரண்டியின் மூலம் சிலைக்குப் பால் கொடுத்துப் பார்த்தனர். பால் குடிக்கவில்லை - புரட்டு அம்பலமானது.

பூசாரியைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று பூசாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். (விடுதலை 14.8.2010).

அதுபோன்ற நேர் மையாக சட்டத்தைக் காப்பாற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தால் இந்த மூடநம்பிக்கை வியா பாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடு வார்கள்.

1990 ஆகஸ்டில் இதே மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொடர்பாக ஒரு துண்டு அறிக்கை வெளி யிடப்பட்டது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! என்ற தலைப்பிட்டு, இது ஆதி பராசக்தியிடமிருந்து வரும் கடிதம். இது போன்று 20 அல்லது 50 நகல்கள் எடுத்து தெரிந்தவர் களுக்கு அனுப்பினால் ஆதி பராசக்தியின் அருள் கிட்டும் என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மேல் மருவத்தூருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

4.8.1990 நாளிட்டு பதில் கடிதம் வந்தது. அந்தத் துண்டறிக்கை களை நம்ப வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந் ததை நினைவூட்டுகிறோம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விநாயகனிடம் மனு; சபாஷ் சரியான அய்டியா!



சென்னை - கஜவரத பெருமாள் கோயில் ஆலய மீட்புக் குழுவினர் ஒரு வேலையைச் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனராம்.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு காவல்துறையினரும் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

புஸ் என்று போனது - வந்த பக்தர்கள் வெறும் ஆறு பேர்கள் தானாம்; விநாயகரிடம் மனு கொடுத்துச் சென்று விட்டனராம்.

இது முட்டாள்தனம்தான் என்றாலும் அந்தப் பக்தர்களின் அறிவு நாணயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடவுள்மீது உண்மையிலேயே பக்தி உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பார் என்பதில் கண்டிப்பான வகையில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று துடிக்கிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் கள்கூட என்ன செய்ய வேண்டும்? சென்னை கஜவரத பெருமாள் பக்தர்கள், விநாயகரிடம் மனு கொடுத் திருப்பதுபோல ராமனிடம் மனு கொடுக்க வேண்டும்.

அதுபோல சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது - ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோஷம் போடுபவர்கள் நீதிமன்றம் சென்றி ருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறீமான் இராமச்சந்திரமூர்த்தி அவர்களே! உங்களுக்காகத் தான் நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். உங்கள் பேரால் உள்ள பாலம் இடிபடக் கூடாது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றமும் சென்றுள்ளோம்.

சென்னைவாசிகளின் நடவடிக்கை எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இனிமேல் நீதிமன்றம், அரசு மன்றம், வீதி மன்றம் என்று செல்லாமல், கொடி பிடித்துக் கோஷம் போடாமல், நேரடியாக கடவுளாகிய தங்களிடம் மனு கொடுப்பது - அதாவது கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்து விட்டோம் என்று முடிவு செய்வார்களேயானால் அவர்களின் அறிவு நாணயத்தைக் கூடப் பாராட்டலாம்.

அப்படி கடவுள் சிலைகளிடம் மனு கொடுத்துக் காரியம் ஆகவில்லையென்றால், அந்தக் கடவுள்களை என்ன செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட பக்தர்களே ஒன்றுகூடி, கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் கால கட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை அணுகலாம் - அப்பொழுது நல்லதோர் தீர்வினை, முடிவினைக் கொடுப்பதற்கு நாங்கள் தாராளமாகவே இருக்கிறோம்!

சரிதானே?

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...

முதல் கடமை

செய்தி: சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் புனரமைப்பு வேலையைச் செய்ய நாங்கள்தயார்! குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி

சிந்தனை: குஜராத் தில் ஊட்டச்சத்துக் குறைவால் செத்துக் கொண்டிருக்கும் குஜ ராத் மாநில சிசுக்களைக் காப்பாற்றும் வேலையில் குஜராத் முதல் அமைச் சர் மோடி உடனடியாக இறங்குவதுதான் மிக முக்கியம்.

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப் பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.

- (விடுதலை, 17.3.1961

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

பாராட்டத்தக்க யோசனை

மய்ய அமைச்சரவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அய்ந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்க மேற்கொண்ட முடிவு நெய்வேலித் தொழிலாளர் களை மட்டுமல்லாது, தமிழ் நாட்டு மக்களையே கவலைக்கு உள்ளாக்கியது.

அது மட்டுமல்லாது, காங்கிரசு தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மய்ய அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கங்களும் முதலில் கண்டனக்குரல் எழுப்பத் தவறவில்லை. மாநில அரசும் கண்டித்தது. ஜூலை 2-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்புவிடுத்து. நெய்வேலி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து படிப்படியான போராட்டங்களை அறிவித்து, முதலில் எதிர்ப்பு அட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்ச ராகியுள்ள சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாகவே அனைத்து இந்திய அளவில் பிற்பட்டோர் நலனின் அக்கறையுடன் செயல்படுபவர். கதர்ச்சட்டைக்குள் முற்போக்குச் சிந்தனை உடையவராகவும், சமதர்மக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராகவும் கருதப் படுபவர்.

இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துதான் பாராட்டுக்குரியது.

நெய்வேலியின் அய்ந்து சதவீதப் பங்குகளைப் பண முதலாளிக்குக்கோ, வட நாட்டவருக்கோ, வெளி நாட்டவருக்கோ விற்க வேண்டியதில்லை. தமிழக அரசே அதை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஆட்சேபனை ஏதுமில்லை.

தமிழக அரசு வாங்கவில்லையா? தொழிலாளர்களே அவற்றை வாங்கிக் கொள்ளலாம். நம் சொத்து நம்மிடையே தான் இருக்கும். வெளியில் எவருக்கும் போய் விடாது. நம்மை விட்டுப் போகாது என்றார்.

இந்த யோசனை நல்ல யோசனை மட்டுமல்ல. தமிழக நலனுக்கு உகந்த யோசனை. தமிழக அரசு போராட்டம், நடத்துவதற்குப் பதிலாக, பங்குகளை வாங்கிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஏற்கெனவே தமிழக அரசின் இரண்டு இயக்குநர்கள் நெய்வேலி நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்குவதன் வாயிலாக மூன்றாவது இயக்குநர் ஒருவரும் கிடைப்பார். நெய்வேலி நிறுவனம் மய்ய மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகும் போது தமிழக அரசின் கை ஓங்கும்.

தமிழக அரசுக்கு இந்த நானூறு கோடிப் பங்கு விலை ஒன்றும் அதிகமில்லை. எவ்வளவோ ரூபாய்களை மதுவில் சம்பாதித்துத் தமிழகத்தைச் சீரழிக்கும் அரசு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே.

தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே நெய்வேலி பங்குகள் விற்கப்பட்ட முன் மாதிரியும் அங்கே இருக் கிறது. எனவே தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து அப்பங்குகளை வாங்கினால், தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கையில் ஆதரவுக் குரல் எழும்புமே.
தமிழர் தலைவர்தான் நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி கொடுக்கும் மய்ய அரசு, நெய்வேலி நிலக் கரிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுத் தந்தவர்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நெய்வேலி மின்சாரத்தின் முழுப் பயனும் தமிழகத்திற்குக் கிடைக்கத் தாமும், தம் வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் போராட்டம் நடத்திக் கைது ஆனவர்.

எனவே, மய்ய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் இந்த அறிவிப்பும் நம் தமிழர் தலைவரின் பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் நினைவு வராமல் நெய்வேலி எந்தப் பிரச்சியும் சிந்திக்க வியலாத அளவுக்கு அவருடைய பங்கு மகத்தானது.
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


என்னே உணர்வு!


இதயம் வெளியில் தெரிவதில்லை, இதயத் துடிப்பும் வெளியில் கேட்பதில்லை. மனசாட்சி வெளியில் தெரிவதில்லை. மனசாட்சியின் குரலும் வெளியில் கேட்பதில்லை. விடுதலையும் தமிழர் தலைவரும் தமிழகத்தின் உயிரும் உடலும், வாழ்க தமிழர் தலைவர்! வளர்க விடுதலையின் யுகப் புரட்சி! ஆகஸ்ட் ஒன்றை எதிர்நோக்கியுள்ளேன்.

- த. ஆதிசிவம், பெரம்பலூர்

விடுதலைக்கு ஆறு மாத சந்தாவுக்கான காசோ லையை அனுப்பி வைத்த பெரம்பலூர் வெங்கடேச புரம் தோழர் மானமிகு ஆதிசிவம் பி.ஏ., அவர்கள் மேற்கண்ட கடிதத்தையும் எழுதி அதில் இணைத் திருந்தார்.

இதனைப் படிக்கும் தோழர்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்; யாரும் அவரைப் போய் சந்தா கேட்டு வற்புறுத்த வில்லை. தாமாகவே சந்தா பணம் அனுப்பி வைத்த தோடு அல்லாமல் தன் உணர்வுகளையும் எவ்வ ளவு அழகாக வெளிப்படுத் திக் கொண்டிருக்கிறார்.

இந்த இயக்கத்திற்கு எது பலம் என்றால், இதுபோன்ற அப்பழுக்கற்ற சிப்பாய்களான தொண்டர் களின் பலம்தான்.

இயக்கம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்க மாட்டார்கள் - இயக் கத்திற்கு நான் இன்னது செய்வேன்! என்று கூறும் இத்தகு இலட்சிய உறு திக்கு முன் துப்பாக்கி களின் ரவைகள்தான் என்ன செய்யும்?

1980ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு கடிதம் விடுதலை ஆசிரியர்கள் அவர்களுக்கு வந்தது. பாளையங்கோட்டை என்பது அவரின் ஊரோ வீடோ அல்ல! பாளையங் கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கக் கூடிய தோழரின் கடிதம் அது.

எனது பெரு மதிப் பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரி முகம்மது எழுதும் விவரம்:

வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனை யில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக் கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் நன்றி.
- அ. பக்கிரிமுகம்மது
சி.என்.ஓ. 264
மத்திய சிறை, பாளை

33 ஆண்டுகளுக்கு முன் பாளை சிறையில் இருந்த ஆயுள் தண்ட னைக் கைதியின் உணர்வு தான் சாதாரணமானதா?

தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கையும், அந்தக் கொள்கையில் தோழர்கள் கொண்ட உணர் வும் தொடர்கிறது என்று நினைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நம் தலைகள் நிமிர்கின்றன. மார்பு புடைக்கிறது - நம்மை வெற்றி கொள்ள யார் இருக்கிறார்கள்? எது இருக்கிறது? என்ற எண் ணமே மேலோங்கி நிற்கிறது. தொண்டர்களின் பலமே இந்த இயக்கத்தின் உண்மைப் பலம் என்பதி லும் அய்யம் உண்டோ!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற கொள்கை முடிவுக்குக் கண்டனம் தமிழர் தலைவர் அறிக்கை

நேற்று டீசல் மேலும் விலை உயர்த்தப்பட்டு (ஒரு லிட்டருக்கு 61 காசுகள்) ஒரு லிட்டர் ரூ.54.15 விலை என்று சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது 6ஆவது முறை உயர்த்தல் ஆகும்!

இதுபோல பெட்ரோல், இயற்கை எரிவாயு விலைகளும் திடீர் திடீரென்று இரண்டொரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்படுகிறது.

இது மக்கள் விரோதச் செயலாகும்! உலக நிலவரத்திற்கேற்ப, அந்தந்த நிறுவனங்களே அவ்வப்போது விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசு அளித்துள்ள கொள்கை முடிவு மிகவும் தவறானது.

அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் எதிர்ப்பு!

இதை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். அதுபோலவே தமிழ்நாடு முதல் அமைச்சரும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தனைக் கட்சிகளும் இந்தக் கொள்கை முடிவைக் கண்டிக்கத் தவறவில்லை. இவற்றையும் மீறி ஏழை - எளிய சாமான்ய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்யலாமா?

இயற்கை எரிவாயு, டீசல் போன்றவை இன்று விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்கு இன்றியமையாததாகி விட்டது!

பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையில், பம்புசெட் விவசாயத்திற்கு டீசல்தான் பயன்படுத்தப் படுகின்றது; அதன் விலையை இப்படி ஆறு தடவை ஒரே ஆண்டில் ஏற்றி வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம்தானா?

வேதனை, வேதனை - வெட்கமும்கூட! இதனை மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்.

இப்பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கை களையே மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசரம் அவசியம் ஆகும்!

எப்போது விடியல்?

காய்கறி விலைகள் உட்பட, சமையல், எண்ணெய் விலை உட்பட உயர்ந்துள்ள நிலையில் அடித்தள மக்களுக்கு எப்போது விடியல்?

என்னதான் விடை - பெருகும் தற்கொலைகள் தானா?

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.7.2013

தமிழ் ஓவியா said...


கல்யாணம்

மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம்.

(விடுதலை, 10.8.1968)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி யார்? ப.சிதம்பரம் படப்பிடிப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார் பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள். பொதுசிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-அய் நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்சினைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.

காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர்

மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர் நிலை தலைவர் களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது' என்றார். மோடியை எதிர்த்து எல்.கே. அத்வானி பதவி விலகியதை சிதம்பரம் இவ்வாறு குறிப் பிட்டார்.

யார் இரும்பு மனிதர்? மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009 ஆம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங் களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்று பதில ளித்தார்.

குஜராத் வளர்ச்சி ஒரு மாயை:

குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப் பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.

மோடியின் கட்டுக்கதை:

உத்தரகாண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர் களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக...

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதே துறையில் சிறந்த நீங்களும் பிரதமராக முடியு மல்லவா என்ற கேள்விக்கு, எனது குறைபாடுகள் என்ன என்பது எனக்குத் தெரியும். அதற்கு உள்பட்டுதான் நான் பணியாற்ற முடியும். எனது குறைபாடுகளால் பிரச்சினை ஏற்படும் நிலையில், எழுத்து, வாசிப்பு, பயணம் என மாறிவிடுவேன் என்றார் சிதம்பரம்.

உலக வங்கியில் கடன்: உத்தரகாண்ட் மறு நிருமாணப் பணிகளுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனுதவி கேட்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உத்தர காண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி யுள்ளார். இதில் ரூ.145 கோடி உடனடியாக அளிக்கப் பட்டுள்ளது.

மறுநிர்மாணப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் ஆகியவை அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சிதம்பரம் தெரிவித்தார். சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு என்று சிதம்பரம் கூறினார்.