Search This Blog

21.6.13

பக்தர்களே, சிந்திப்பீர்!

வடமாநிலங்களில் விளம்பரம் பெற்ற கோவில் களுக்குத் தரிசனம் செய்யச் சென்ற பக்தகோடிகள் கடும் மழை - வெள்ளம் காரணமாகப் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பதற்காக வருத்தப்படுகிறோம் - பரிதாபமும் அடைகிறோம்.

வெள்ளத்துக்கு 150 பேர் பலி என்றும், 5 ஆயிரம் பேர் கதி என்ன என்றும் அலமரும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமல்லர்; அவர்களின் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சென்றவர்களின் நிலை என்ன என்ற வினாக்குறியை எழுப்பி வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

மானசரோவர் யாத்திரை தடை செய்யப் பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள வர்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நடந்தாலும் ஓர் உண்மையைப்பற்றிப் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. பக்தர்கள் யாத்திரைக்காகச் சென்ற இடம்பற்றி அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?

சக்தி வாய்ந்த கடவுள் - அந்தக் கடவுள்கள் குடிகொண்டு இருக்கும் அந்தக் கோவில்களுக்குச் சென்றால் நல்ல வரம் கிடைக்கும்; தங்களின் வாழ்க்கைச் சுமைகள் தீரும் - வளமான எதிர்காலம் அமையும், தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்  நோய் நொடியின்றிச் சுகமாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்துத் தானே இந்தக் கோவில்களுக்குச் செல்லுகிறார்கள்.

இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பேகூட கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், அய்யப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியானது வாடிக்கையான ஒன்றுதானே!
கடவுள்கள் தங்களைக் கைவிட்டுவிட்டாரே என்று ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? கடவுளுக்கு சக்தி என்று ஒன்று இருந்தால், அவரை நம்பி வந்த மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்பதுபற்றியெல்லாம் நியாயமாகச் சிந்திக்க வேண்டாமா?

கடவுள் நம்பிக்கை என்னும் போதை அளவுக்குமீறி குடிகொண்டு இருப்பதால்தான் - அதைப்பற்றிச் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

பக்தி என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்கப்படவேண்டிய, சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாகும்.
பக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்களாவது இதைப்பற்றி எழுதவேண்டாமா?  மாறாக என்ன எழுதுகிறார்கள்? நேற்றைய  நாளேடு ஒன்றின் தலைப்பு என்ன தெரியுமா?
மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே கேதார்நாத் கோவில் மட்டும் சேதமின்றித் தப்பிய அதிசயம்! என்று தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடுகிறது.

இதன் நோக்கம் என்ன? கடவுளை நம்பி வந்தவர்கள் பலியாகிவிட்டார்களே, பல துன்பங் களுக்கு ஆளாகிவிட்டார்களே - கடவுள் சக்தி என்ன என்ற சிந்தனை இயல்பாக வந்துவிடும் அல்லவா? - அந்த நிலையைப் பக்தர்கள் அடைந்து விடக்கூடாது என்பதற்கான திசை திருப்பும் யுக்திதான் இத்தகைய செய்திகள்.

இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. கடவுள் தன்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொள்வாரா? தன்னை நாடிவந்த பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அல்லது நல்ல மனம் கடவுளுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றதே.
அய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் தீப்பற்றி எரிந்ததுண்டே! காளகஸ்தி கோவிலின் நெடுங்கோபுரம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தது உண்டே! அவற்றிற்கு என்ன பதிலாம்?

பக்தர்களே, கடவுள் என்று நம்பி கோவிலில் அடித்து வைக்கும் பொம்மைக்கு, சிலைகளுக்குச் சக்தி ஏதும் இல்லை - இல்லவே இல்லை - நம்பி ஏமாறாதீர்கள்!
                       ------------------------------"விடுதலை” தலையங்கம் 21-6-2013

42 comments:

தமிழ் ஓவியா said...

நாட்டில் வறட்சி நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!


ஒருபுறம் வெள்ளம் - மறுபகுதியில் நாட்டில் வறட்சி

நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!

மத்திய - மாநில அரசுகள் உடனே ஆவன செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வடமாநிலங்களான உத்தர காண்ட்/இமாச்சல பிரதேசங் களில் பெரும் மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மேலும் அங்குள்ள மக்களின் பாது காப்புக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாகவும், அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்!

என்னே கொடுமை!

பலியானோர்பற்றிய தகவல்கள் இன்னும் சரியானவை கிடைக்கவில்லை; உயிருடன் இருப்பவர்களை மீட்க மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.

பக்தி யாத்திரை என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லும் பக்தர்களைப் பரவசப்படுத்திட, சுற்றுலாத் துறையினர் அமோக விளம்பரம் செய்து ஈர்க்கின்றனர்!

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை!

புண்ணியம் கிட்டும் என மூடநம்பிக்கை!

கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தால் புண்ணியம் கிட்டும் என்ற மூடநம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லுகின்றனர்; சுற்றுலா வணிகர்களும் இதைப் பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த மாநிலங்களில் (மலைப் பிரதேசங்கள் ஆனபடியால்) மழை வெள்ளம் எதிர்பார்க்க வேண்டிய வைகளே என்ற நிலையில், அங்கே போதிய பாது காப்புடன் கூடிய பாதைகளும், பாலங்களும், தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு, நிரந்தரப் பாதுகாப்பு வசதி செய்யப்படாமலேயே ஆண்டுதோறும் இந்த பக்தி வியாபாரம் நடைபெறுகிறது.

நிரந்தரப் பாதுகாப்பு வசதி தேவை!

கடவுள் கருணையே வடிவானவர் என்ற புரட்டு இந்த சோகப் படலம் மூலம் அம்பலமாகி விட்டது. அதற்காக இத்தனை உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது கண்டு, நாத்திகர்களாகிய நாம் தான் அதிக வேதனை அடைகிறோம்; காரணம் மனித உயிர்கள் - அவர்கள் எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் ஆனாலும், காப்பாற்றப்பட வேண்டியவைகள் என்ற மனிதநேயக் கொள்கை உடையவர்கள் பகுத்தறிவாளர்களாகிய நாம்!

எனவே இந்த எஞ்சியோர் போதிய பாதுகாப்புடன் அவரவர் வீடு திரும்ப அனைத்து முயற்சிகளும் அவசர கதியில் - போர்க் கால அடிப்படையில் - மேற்கொள்ளப் பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படல் வேண்டும். இப்படி வடக்கே கங்கோத்ரி, யமுனோத்திரி, யமுனை நதி டெல்லிப் பட்டணத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்ற நிலை ஒருபுறம்; தென் மாநிலங் களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. மாநிலங்களிடையே மிகப் பெரிய சண்டைகளும், ஏன் யுத்தமும்கூட!

குடிநீருக்கும்கூடப் பஞ்சமோ பஞ்சம்!!

இனி எதிர் காலத்தில் வரும் யுத்தங்கள் நீர் உரிமைக்கானவையாகத்தான் இருக்கப் போகிறது என்று நீரியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்!

நிரந்தரத் தீர்வு நதிநீர் இணைப்பு

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு, நதிநீர் இணைப்பு அல்லவா?

அதுபற்றி மத்திய -மாநில அரசுகள் சிந்தித்து உடனடியாகச் செயல்பட வேண்டாமா?

எத்தனையோ விளம்பரத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் மத்திய மாநில அரசுகளும் இந்தியாவின் நதிகளை இணைத்து, வெள்ள நீர் வறட்சி மாநிலங்களுக்குக் கிடைத்தால், எல்லா மக்களும் சுகவாழ்வு வாழ்வார்களே, இந்த அறிவியல் யுகத்தில் இது என்ன சாத்தியப்படாத ஒன்றா, இல்லையே!

உச்சநீதிமன்றம் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்ப்பு தந்தும்கூட, இதுவரை தீவிர முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்கவில்லையே!

இதுபற்றி உடனடியாக நிபுணர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உலக வங்கி போன்றவை மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி - ஏன் கோயில்களில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கூட எடுத்து - கடன் பத்திரங்களை அரசு அக்கோயில்களுக்கு வழங்கி விட்டுக் கூட - செலவழித்து, இந்தியா முழுவதும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளைப் போட்டு, அவை இப்போது ஆறு வழித் தடங்களாக அகலமாகும் நிலையில், இப்படி நதிகளை இணைக்கும்பணி உடனடியாகத் துவக்கப்படல் வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ஒருமித்த குரலில் ஓங்கிக் கூற வேண்டும். தற்காலிக நிவாரணங்களைவிட நிரந்தரத் தீர்வுகளே நாட்டு மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்.

கடும் மழை வெள்ளம் ஒரு பகுதியில் - கடும் வறட்சி மறுபகுதியில் ஒரே நாட்டில் என்பது முரண்பாடு அல்லவா? அது களையப்படல் அவசர - அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
21.6.2013

தமிழ் ஓவியா said...


ஸ்ரீசாந்தைக் கொஞ்சம் பாருங்கள்!


மதமானது கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எந்தவித அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கிறது. அன்றியும் மதமானது பணச் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங் களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்ப தாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

- (குடிஅரசு 11.8.1929)

இதனை அப்படியே இப்பொழுது நடந்த நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுக்கும் பொருத்திப் பார்த்தால் தந்தை பெரியார் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் சொன்னது எந்த அளவுக்குத் துல்லியமாகப் பொருந்து கிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.

அய்.பி.எல். கிரிக்கெட்டை மறந்து விடத்தான் முடியுமா? அதை மறந்தாலும் அதில்கூட இடம் பெற்ற சந்தர்ப்பத்தைத் தான் மறக்க முடியுமா?

சூத்தாட்டத்தையே மறந்தாலும் ஸ்ரீசாந்த், ஸ்ரீசாந்த் எனப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட்காரரைத் தான் மறக்க முடியுமா?

எப்படி எப்படி எல்லாம் சூதாடினார்? விளையாட்டு மைதானத்தில் இந்த மைனர் எந்தெந்த சைகைகளைக் காட்டிப் பந்துகளை வீசினார்! அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்துக்கும் எவ்வளவுக் கோடி ரூபாய் புரண்டது?

பக்கம் பக்கமாக ஏடுகள், ஊடகங்கள் செய்திகளை அள்ளி அள்ளிக் கொட்டவில்லையா?

ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் கைப்பற்றப்பட்ட பணம் ஆவணங்கள், சி.டி.கள் இத்தியாதி.. இத்தியாதி சாட்சிகள் ஸ்ரீசாந்தை விளையாட்டுச் சூதாடி கில்லாடி என்பதை நிரூபித்ததே - ஆசாமி கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அத்தோடு முடிந்ததா? காவல்துறையினர் அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் நுழைந்தபோது அங்கு அழகிகள் இருந்தனர் என்றெல்லாம் படத்துடன் வெளி வரவில்லையா?

அதன்பின் கைது செய்யப்பட்டு சிறைக் குள் நெட்டித் தள்ளப் படவில்லையா?

இவ்வளவுப் பெரிய குற்றவாளி இப்பொ ழுது எங்கே? ஜாமீனில் வெளிவந்து அவசர அவசரமாக எங்கு சென்றார் தெரியுமா?

சபரிமலைக்குச் சென்றுள்ளார்? எதற் காகவாம்? எல்லாம் பிரார்த்தனைக்காகத் தான். என்னை அய்யப்பன் காப்பாற்றுவான் நான் குற்ற மற்றவன் என்று வெளியில் வருவேன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறாரே!

இப்பொழுது தந்தை பெரியார் கூறிய அந்தத் திருவாசகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள் பளிச்சென்று புரியும்!

பணச்செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருக்கிறது; எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருக்கிறது. என்று நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்று தந்தை பெரியார் சொன்னதுதான் எவ்வளவு துல்லியமானது! - உண்மையானது!

இது ஒன்றும் புதிதல்ல! மஸ்தான் - மஸ்தான் என்ற கடத்தல் மன்னனைக் கேள்விப்பட்டதில்லையா?

அன்றாடம் அய்ந்து வேளை தொழுபவர்தான் ஒவ்வொரு வருடமும் ரம்ஜானையொட்டி ஒரு மாதம் நோன்பு இருப்பவர்தான்! மெக்காவுக்குச் செல்ல இருந்தோம் - அதற்குள் கைது செய்துவிட்டார்கள் என்று மஸ்தான் மனைவி சொன்னாரே!

பிரபல கடத்தல் புள்ளி வரதன் முனிசாமி மும்பையில் கோளிவாடா என்னும் பகுதியில் சிவன் கோயிலையே கட்டியவர் தானே!

சிங்கம்பட்டி கொலை வழக்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்பதுபோல விஷ ஊசி கொலை வழக்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம்!

வைத்தீஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு பணக்காரர்களைக் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, பணத்தைக் கொள்ளையடித்துக் குபேரர்களாக வாழ்ந்தனரே!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாய் அந்தக் கும்பல் பிடிபட்டது.

அடித்து உதைத்துக் கேட்ட வுடன் உண்மைகளைக் கக்கினார்களே! கொள்ளை யடித்த பணத்தில் திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில் களில் உண்டியலில் போட்டது வரை கணக்குக் கொடுத்தனரே!

தந்தை பெரியார் சொன்னதை இன்னொரு முறை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். புத்தியைச் செலவழித்தால் இதற்குள்ளிருக்கும் உண்மை புலப்படும்!

கூடுதல் தகவல்: (Tail Piece:) கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் - ஜெயேந்திர சரஸ்வதியைக் கொஞ்சம் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

நாள்தோறும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார். பூஜை புனஷ்காரங்களுக்கு பஞ்சமா என்ன?

இவ்வளவையும் செய்யக் கூடிய லோகக் குரு சங்கராச்சாரியார்தான் கொலை வழக்கில் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். ஆக கடவுள், பக்தி, பிரார்த்தனை, பிராயச்சித்தம் என்றால் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!

தமிழ் ஓவியா said...


நமது பணி...



மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பாதுகாப்பிற்கான ஒரே வழி தமிழ் ஈழம்தான்


போசினியாவிற்கு உலக நீதிமன்றத்தில் வாதாடி தனிநாடு அந்தஸ்து வாங்கித் தந்த வழக்கறிஞர் கூறுகிறார்


- பேரா. பிரான்சிஸ் ஏ. பாயில்

அயல்நாட்டில் இயங்கும் தமிழ் ஈழ அரசு ஏற்பாடு செய்து பென்சில்வேனியா மாநில லேன்காஸ்டரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கொந்தளிப்பு மிகுந்த உலக அரசியல் எனும் பெருங் கடலினூடே விடுதலையை வென் றெடுத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாவது:

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல், செய்த குற்றத்துக்கு தண்டனை அளித்தல் பற்றிய உலகின் அனைத்து நாடுகள் மாநாட்டில் 1948 இல் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத் தில் விளக்கிக் கூறியுள்ளபடி சிறீலங்கா நாட்டில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளரின் இனப்படு கொலை குற்றத்திற்கு பலியாகியுள் ளனர். 1948 அனைத்துலக நாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப் படையில் 8-4-1993 மற்றும் 13-9-1993 இரண்டு நாட்களிலும், போசினிய மக்களுக்கு எதிரான இனப்படு கொலைச் செயல்களை மேற்கொள்ளா மல் இருக்குமாறு யுகோஸ்லோவே கியா நாட்டைத் தடுத்து நிறுத்தும் உலக நீதிமன்றத்தின் ஆணைகளை தன்னந்தனியாகப் போராடி நான் 8-4-1993 மற்றும் 13-9-1993 ஆகிய நாட்களில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை யினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மை ஒன்றே சர்வதேச சட்டத் தின்படி தங்களின் இறையாண்மை பற்றி சுயநிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையினை அவர்கள் பெற்றிருப் பதை உறுதிப்படுத்தி, வலுப்படுத்து கிறது. அவர்கள் விரும்பினால் தமிழ் ஈழம் என்னும் சுதந்திரமான நாட்டை உருவாக்கிக் கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று தங்களது சுதந் திரத்தை பாலஸ்தீன நாடு பிரகடனம் செய்து வெளியிட்டது என்பதையும், இந்த பாலஸ்தீன் நாட்டின் புதிய அரசுக்கு தற்காலிக அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பதையும், 2012 நவம்பர் 29 அன்று அயக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த புதிய பாலஸ்தீனிய நாடு நோக்குநர் என்ற முறையில் கலந்து கொள்ள அனுமதிக் கப்பட்டது என்பதையும், பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் என்னால் கூறமுடியும். இனப்படுகொலை என்னும் சர்வதேச குற்றத்தை இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் 2 ஆம் விதி கீழே குறிப் பிட்டுள்ளவாறு விளக்கிக் கூறுகிறது.


தமிழ் ஓவியா said...

இப்போது நடைபெறும் மாநாட்டின் தீர்மானப்படி, ஒரு தேசிய, இன அல்லது மதக் குழு மக்களின் ஒரு பகுதியி னரையோ அல்லது ஒட்டு மொத்த மாகவோ அழித்து ஒழிக்கும் நோக்கத் துடன் செய்யப்படும் கீழ்க்குறிப்பிடப்பட்ட செயல்கள் இனப்படுகொலை என்று பொருள்படும்.

அ) அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

ஆ) குழு உறுப்பினர்களுக்கு உடல் அளவிலோ அல்லது மன அளவிலோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல் களைப் புரிதல்.

இ) குழு உறுப்பினர்களின் ஒரு பகுதி யினருக்கோ அல்லது முழுமையானவர் களுக்கோ உடல் அளவிலான அழி வினைக் கொண்டு வரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட சூழ்நிலைகளை அக் குழுவினரின் மீது வேண்டும் என்றே திணிப்பது. இந்து, கிறித்துவ இலங்கைத் தமிழர் களுக்கு எதிரான இனப்படுகொலையை, புத்தமதம் தழுவிய இலங்கை சிங்கள வர்கள் 1948 முதல் செய்யத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து செய்து வருவது இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டின் 2(அ), (ஆ) மற்றும் (இ) விதிகளை நிச்சயமாக மீறுவதேயாகும்.

இந்து கிறித்து இலங்கைத் தமிழர் களின் தேசிய, இன, மொழி, மதக் குழு மக்களின் பெரும்பகுதியினரை அழித் தொழிக்கும் நோக்கத்துடன், ஓர் ஒருங்கிணைந்த, முறையான ராணுவ, அரசியல், பொருளாதார, கலாச்சார, மொழிவழிப் பிரச்சாரத்தினை கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கை சிங்கள புத்த மத மக்களும் பேரினவாத அரசும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சிங்களவர், புத்தர் மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரம் இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2 (அ) யை மீறி உடல் அள விலும், மன அளவிலும் இந்து கிறித்துவ இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெரும் தீங்கினை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2 (இ) யினை மீறி, இந்து கிறித்துவ இலங் கைத் தமிழர்களில் பெரும்பகுதியினருக்கு உடல் அளவிலான அழிவைக் கொண்டு வரும் நோக்கத்துடன், இந்த பிரச் சாரத்தை மேற்கொண்ட சிங்களர், புத்த மதத்தினரின் பேரினவாத இலங்கை அரசு வேண்டுமென்றே தமிழர்களது வாழ் வினை மோசமான சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கினர்.

தமிழ் ஓவியா said...

1983 ஆம் ஆண்டு தொடங்கி இந்த சிங்கள புத்த மதக் கூட்டணி 3 லட்சத் துக்கும் மேற்பட்ட இந்து கிறித்துவ இலங்கை தமிழர்களை அழித்தொழித் துள்ளது. என்றாலும் தமிழ் மக்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இத்தகைய கொடு மைகளை யூதர்களுக்கு எதிராக நாஜிகள் மேற்கொண்ட இனப் பேரழிவுடன் ஒப்பிட முடியாது என்பதால், இலங்கை தமிழர் களின் மீதான இந்தத் தாக்குதலை இனப்படுகொலை எனக் கூற முடியாது என்று பேரினவாத இலங்கை அரசும் சிங்கள புத்த மத வெறியர்களும் வாதாடு கின்றனர்.

உண்மையிலேயே நடைபெற்ற இனப் படுகொலையை மறைத்து முன்வைக்கப் படும் இத்தகைய அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, ஏமாறச் செய்யும், உண்மையைப் போலத் தோற்றம் அளிக்கும் பொய்யான வாதத்தை முற்றிலுமாக எதிர்த்து, மறுத்து அனைத்துலக நீதிமன்றத்தில் யுகோஸ்லேவியாவுக்கு எதிராக, போசினியா மற்றும் ஹெர்சேகோ வினா மக்களாட்சி நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலை பற்றிய வழக்கில் அந்நாடு களின் வழக்கறிஞராக வாதாடிய போது நான் வாதிட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எதிராகவும் யுகோஸ்லோ வேகியாவுக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் இஸ்ரேல் நாட்டு ஷப்தாய் ரோசன்னே என்பவர் ஆவார். தான் ஒரு யூதர் என்றும், போசினியர் களுக்கு யுகோஸ் லேவியா செய்ததை நாஜிகள் மேற்கொண்ட யூத இன அழிப்புடன் ஒப்பிடமுடியாது என்றும், இந்த நிகழ்வுகள் 1948 இனப்படு கொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் கீழ் வராது என்றும் உலக நீதி மன்றத்தில் ரோசன்னே வாதாடத் தொடங்கினார். ஓரின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒட்டு மொத் தக் கொடுமைகளை இனப்படு கொலைகள் என்று அழைக்க யூதர் களுக்கு எதிரான நாஜிகளின் இன அழிப்புடன் நீங்கள் ஒப்பிடத் தேவை யில்லை என்று ரோசன்னேயின் கூற்றினை மறுத்து நான் வாதா டினேன். 1948 இனப்படு கொலைத் தடுப்பு மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கமே, யூதர்களுக்கு எதிராக நடைபெற்ற நாஜிகளின் இனப்படு கொலை போன்ற ஒன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதேயாகும். அதனால்தான் மாநாட்டுத் தீர்மான விதி 1 தெளிவாகக் கூறியுள்ளது: இனப்படுகொலை என்பது அமைதி காலத்தில் நடந்தாலும் சரி, போர்க் காலத்தில் நடந்தாலும் சரி தடுக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அனைத்துலக சட்டப்படியான ஒரு குற்றமே என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இனப்படுகொலை என்று கூறுவதற்கு யூதர்களைப் போல 60 லட்சம் மக்கள் இறந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது.

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

சந்திரோதய நாடகம் பற்றி குடிஅரசு


தோழர் அண்ணாதுரை எம்.ஏ., அவர்களால் எழுதப் பட்டு அண்ணாதுரை அவர்கள் நடிப்பு ஆசிரியராய் இருந்து பழக்கப்பட்ட காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார் சந்திரோதயம் என்னும் நாடகத்தை 19.11.1943இல் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடத்தினார்கள்.

இதன் விவரம் சென்ற வாரம் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது.

இன்று ரஷ்ய நாடானது ஸ்டாலினது உருக்கு ஆட்சியின் கீழ் நிலைகுலையாமல் இருந்து உலகத்தைக் காப்பாற்றி வருகிறது என்றால் அது பெரிதும் ஸ்டாலினுடைய வீரமல்ல; வெற்றியல்ல; அறிவல்ல; ஆற்றலல்ல என்று மும்முறை முரசறைகிறோம்.

சிந்தனைப் பிரச்சாரம்

மற்றென்னையெனில், அங்கு அம்மக்களுக்கு தலைவர்களும் உண்மை உணர்ச்சி உள்ளவர்களும் செய்து வரும் இடையறாப் பிரசாரமேயாகும். அங்கு கடவுளைப்பற்றியும் பஜனைப் பாடினால் எட்டி உதைப்பார்கள். மோட்சத்தைப் பற்றிப் பேசினால் காரி உமிழ்வார்கள், தலைவிதியைப் பற்றிப் பேசினால் பிச்சித் தள்ளி அப்பளமாக்கி விடுவார்கள். பின்னை என்னை யெனில், மனிதனுக்கு மனிதன் கண்டவுடன், நீ யார்? உனக்கேன் சோற்றுக்கில்லை? அவனார்? அவனுக்கேன் தொப்பை வயிறு? நீ யார்? உனக்கேன் வீடில்லை? அவனார்? அவனுக்கேன் மாளிகை? நீ யார்? உனக்கேன் கோவணத்துக்கு இழுப்பும் பறிப்புமாய் இருக்கிறது? அவனார்? அவனுக்கு ஏன் பஞ்சகச்சமும் மூலைக்கு மூலை இழுத்து மடித்துச் சொருகுவதுமாய் இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

ஓ மடையனே! பகுத்தறிவற்ற பதரே!! சிந்தித்துப் பார்.

என்பதாகிய இந்த அமுத வாசகங்கள் தான் பஜனையிலும், பக்தியிலும், பாட்டிலும், சிரிப்பிலும், வேடிக்கையிலும், விகடத்திலும், குலாவுவதிலும், கல்வியிலும், கற்பிலும், கல்லாமையிலும், நந்தவன சிங்காரத்திலும், நாடக நளினத்திலும், சினிமாவிலும், கவியிலும், காவியத்திலும், கலையிலும், இலக்கியத் திலும், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும்.

காப்பிக் கடைகளிலும் இந்தக் கேள்வி களையும் பதில்களையும் கொண்ட ரேடியோ தான்; ரயில் பிரயாணத்திலும் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் இதே ரேடியோதான்; தொழிற்சாலைகள் முழுவதிலும் இதே ரேடியோதான்; தெருக்கள்தோறும் - கடைகள், மார்க் கெட்டுகள், பார்க்குகள், மக்கள் தங் கும் ஓட்டல்கள், மோட்டார்கள், ரயில் மேடை கள், சதுக்கங்கள், கச்சேரிகள், இராணுவக் கூடங்கள் இன்னும் ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பிரச் சாரமேதான் பல உருவில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தாசியின் மோசவலை

எப்படி ஒரு தாசி ஒரு மைனர் பிரபுவை வீட்டிற்குள் வைத்து அவனுக்குத் தன் வீட்டு ஞாபகமோ, வேறு சேதியோ நினைப்பதற்கே இல்லாமல் வேறு யாரையும் பார்ப்பதற்கே இல்லாமல், சதாகாலமும் இடையறாக் கேளிக்கையும், கொஞ்சுதலும், லீலையுமாய் இரண்டற கலந்திருப்பாளோ அதே போலவே இந்தப் பிரச் சாரத்தை தவிர வேறு விஷயம் மக்களுக்கு எட்டுவ தற்கும் நினைப்புக்கு வருவதற்கும் இல்லாமலே நடத்தி வருகிறார்கள். இதன் பயனாலேயேதான் அப்பேர்ப்பட்ட ஜெர்மனி அங்கு தவிடு பொடியாக்கப்பட்டு வருகிறது.

காந்தியாராகட்டும், காங்கிரசாகட்டும், பண்டித நேருவாகட்டும், சாயிபாபாவாகட்டும், ரமண ரிஷியா கட்டும், சீனிவாச சாஸ்திரியாகட்டும் - இவர்கள் எல்லாரும் இவர்களைப் பற்றிய இடையறாப் பிரச்சாரம் இல்லாவிட்டால் இவர்களைப் போன்ற சராசரி மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு புதுக்கோட்டை அம்மன் காசு கூடப் பெறுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, பிரச்சாரத்திற்கு அவ்வளவு பலம் இருக்கிறது என்பதை காட்டவே குறிப்பிட்டோம்.

அப்படிப் போலவே தான் நமக்குள் இந்துமதமும் சகலத்திலும் பரவி சதா பிரச்சாரத்தினால் நம்மை அடிமை கொண்டு விட்டது. கண்ணிலும் கருத்திலும், கவியிலும், வாக்கிலும், நாக்கிலும், எல்லாவற்றிலும் இடையறாமல் லீலை செய்து கொண்டே இருக்கிறது. இவற்றால்தான் அவைகளுக்குப் பலமிருந்து வரு கிறது. இவற்றை மாற்ற வேண்டுமானால் அவற்றிற் கேற்ற எதிர்ப்பிரச்சாரம்தான் தக்க மருந்தாகும்.

அண்ணாதுரையின் துணிவு

அப்படிப்பட்ட பிரச்சாரங்கள் நடத்துவதில் இந்த மாதிரி நாடகமும் முதன்மையானதாகும். இதைநாம் சுமார் 10, 15 வருஷகாலமாவே சிந்தித்து சிந்தித்து ஒன்றும் சரியாய் கைகூடாமல் இப்பொழுது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும் படியான நிலை ஏற்பட்டிருக் கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை.

சில நண்பர்கள் சில வருஷங்களுக்கு முன்னா லேயே திருச்சியில் முயற்சி செய்து வெளி வந்தார்கள்; என்றாலும், அது குடத்திற்குள் விளக்காய் இருக்கிறது. மற்றும் சில நண்பர்கள் பாரதிதாசன் சித்தரித்த இரண்யன் அல்லது இணையற்ற வீரன் என்ற கதையை பல இடங்களில் நடத்தினார்கள் என்றாலும் அதுவும் ஆமை ஓட்டத்தில் தான் இருந்து வருகிறது.

சென் னையில் சில தோழர்கள், முன்னேற்ற வீரன் என்ற கதையை நடத்திக் காட்டினார்கள். என்றாலும் அதுவும் ஒரே இடத்தில் தேங்கிப் போய் இருக்கிறது. தொழில் முறையில் தோழர்கள் என்.எஸ் கிருஷ்ணன், மதுரம், ராதா முதலிய அறிஞர்கள் உதவிபுரிகிறார்கள் என்ப தோடு இன்னும் சிலரும் இருக்கலாம்; அவை உற்சாகம், பொழுதுபோக்கு என்பவற்றின் பேரால் இல்லாமல் இன்னும் தைரியமாய் வெளியேறி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திக் விஜயம் செய்யட்டும்

சந்திரோதயமும் ஒரு காலத்தில் அண்ணாதுரை, சந்திரோதயம் என்னும் நாடகத்தில் நடித்தார். எங்கேயோ பார்த்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லும் நிலைமைக்கு வராமல் தமிழ்நாட்டில் அது (சந்திரோதயம்) திக் விஜயம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

உண்மையில் சந்திரோதயம் நல்ல தொண்டாற்று கிறது. இரண்டு வருஷத்தில் குறைந்தது ரூ.50000 அதற்கு சொந்தப் பொறுப்பில் சேகரம் செய்ய தமிழ் நாட்டில் தாராளமாக இடமிருக்கிறது. சமய சஞ்சீவி களுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லது படாமல் இம் மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியது மாகும் என்று தெரிவித்துக் கொண்டு, அண்ணா துரையையும், காஞ்சித் திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.

- குடிஅரசு தலையங்கம் - 27.11.1943

தமிழ் ஓவியா said...


பொருளாதாரம் சீர்பட...


மதமும், கடவுளும், அடுத்த ஜென்மும் ஒழிந்தா லொழிய, இந்தியப் பொருளாதாரத்துறை எந்நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும் நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.

- தந்தை பெரியார் - பகுத்தறிவு 1-12-1936

தமிழ் ஓவியா said...

சுப்பிரமணியனின் வேண்டுதல்!

வாரிசு இல்லை என்று வள்ளியை மணந்து கொண்டேன். அவளும் அம்போ என்று கைவிட்டாள். என் அப்பனும் (சிவன்) சிவப்பு முக்கோணத்தில் அடங்கி விட்டான். கொள்ளி வைக்க ஒரு ஆணும், குந்தி அழ ஒரு பெண்ணும் எனக்கு வேணும். நல்ல மருத்துவர் விலாசம் ஒன்று தருவீர்களா?

நாத்திகச் செல்வி, பல்லவபுரம்

தமிழ் ஓவியா said...

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருடம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர். ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர் களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதிதேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம். கேவலம் அல்லவா?

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்

தமிழ் ஓவியா said...


பிரபஞ்சம் உண்டானது எப்படி?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம்(யுனிவர்ஸ்) எப்படி தோன்றியது என்றால் பெரு வெடிப்பு கொள்கை என்று எளிதாக கூறிவிடுவோம், அதாவது பாரிய அழுத்ததால் சிதறும் அணுத்துகளின் முழுப் பரிமாணம் இந்த பிர பஞ்சம், நாம் அண்ட வெளியை நோக்கி பயணித் தோமானால் இதற்கான விடை கிடைக்கும், ஒளியின் வேகத்தில் நாம் நமது பூமியில் இருந்து பயணித்தோமென் றால், நமது சூரிய குடும்பத்தை கடக்க சுமார் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும், சூரிய குடும்பத்தை கடந்து நமது பால்வெளி மண்டலத்தின் எல்லையை கடக்க குறைந்த 200 ஆண்டுகள் வரை ஆகும். நமது பால்வெளிமண்ட லத்தை கடந்து அடுத்து உள்ள கொடுங்கதிர் மையத்தை (காஸ்மிக்) கடக்க 500 வருடங்கள் ஆகும், நமது பயணம் ஒளிவேகம் குறையாமல் தொடர்ந்தால் பால்வெளிமண்டலக் கூட்டங்களை கடந்து நீராவிக்கூட்டு திரள் மண்டலங்களை கடக்க குறைந்த பட்சம் 3000 ஆண்டுகள் வரை பயணம் செய்யவேண்டும், அங்கிருந்து 7000 ஆண்டுகள் பயணிக்க பிர பஞ்சத்தின் எல்லை நமக்கு தெரியவரும், நாம் பிரபஞ்சத்தின் எல்லையை அடையும் போது நாம் ஒளிவேகத்தை விட 400 மடங்கு அதிகம் பயணித்துக் கொண்டு இருப்போம், (அதாவது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையை சென்றடைய சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்) பிரபஞ்சத்தின் விளிம்பை கடக்கும் போது நமது வின்கலத்தின் வேகம் அறிவியல் கணக் கீட்டிற்கு எட்டாத அளவிற்கு கூடிவிடும் (இதற்கு எடுத்துக்காட்டாக அந்த வேகத்தில் நாம் மீண்டும் புறப்பட்டு வந்தால் வெறும் 120 ஆண்டுகளுக்குள் பூமிக்கு வந்து சேர்ந்து விடுவோம்) இந்த வேகத்தில் நாம் பயணித்து அண்டவெளியை (ஸ்பேஸ்) அடைந்த உடன் அங்கு ஏற்படும் அழுத்தம் நம்மை நமது வின்கலத்தோடு சேர்த்து அணுவளவு சிறிய தாக்கிவிடும், அந்த அளவிற்கு அழுத்தம் இந்த அழுததம் தான் புதிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. இங்கு ஒரு புதிய கொள்கை ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது, பிக் பாங் என்னும் பெரு வெடிப்பு கொள்கை என்பது தன்னைத்தானே ஏற்பட்ட தல்ல, அண்டவெளியில் மிகவும் அதீத அழுத்ததால் கட்டுக் கடங்காத வேகத்தில் பயணிக்கும் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி யதால் தான் புதிய ப்ரபஞ்சம் உருவா கிறது. இதை தான் சமீபத்தில் ஸ்வீசர் லாந்தில் மனித குலத்தின் மிகப்பெரிய அணுக்கரு மோதல் சோதனை மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். ஞிணீக்ஷீளீ னீணீமீக்ஷீ ணீஸீபீ நிஷீபீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் கட்டுரை. தமிழில்: சரவணா இரா

தமிழ் ஓவியா said...


கடலில் மாசுகலப்பதை நிறுத்தாவிட்டால்..!


வடதுருவப்பகுதியான ஆர்டிக் கிலும் தென்துருவமான அண்டார்டிக் காவிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையில் சுற்றுபுறச்சூழல் பாதிப்பின் காரணமாக கடுமையான மாற்றம் காணப்படுக்கிறது, முக்கியமாக துருவபகுதியில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்க விகிதம் திடீரென குறைந்துகொண்டே வருகிறது, இதற்கு முக்கிய காரணம் துருவப்பகுதியில் வாழும் உயிரினங்களின் உணவு பிரமீடில் ஏற்படும் பாதிப்பே ஆகும். இணப்பெருக்கம் விகிதம் குறைய காரணமாக இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருவப் பகுதியில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலும் தாவரங்களை உணவாக உட்கொள்பவைகள் அல்ல இந்த உயிரினங்களின் உணவு பிரமீட்டில் துருவக்கரடி கடற்சிங்கங்களை உண்ணும், கடற்சிங்கம் இறால் மீன்கள் மற்றும் பென்குவிங்களை உண்ணும், இறால் மீன்கள் கிரில்ஸ் எனப்படும் சிறு மீன்களை உண்ணும் சிறுமீன்கள் சில நுண்ணுயிர்களையும் பாசிகளையும் உண்ணும், கிரில்ஸ் மற்றும் சிறிய வகை மீன்கள் உலகம் முழுவதிலும் கடல் நீரோட்டம் வழியாக பயணிக்கிறது, இப்படி பயணிக்கும் போது மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களையும் சேர்த்து உணவாக கொள்கிறது. மனிதர்களால் கடலில் கலக்கும் மாசுக்களில் ஈயம், காரியம், பாதரசம் மற்றும் சிலவகை ஆக்ஸி னேற்றம் பெற்ற வேதிப்பொருள்கள் (ஏகா:-தாமிரம்) இவற்றை உண்ணும் மற்றும் சுவாசிக்கும் சூழ்நிலைக்கு பாசிகள், சிறுமீன்கள் ஆளாகின்றன. இந்த நச்சுப்பொருள்கள் இந்த உயிரினங்களில் செல்களில் சேமிக்கப்படு கிறது, இறுதியாக இவற்றைமட்டுமே உணவாக கொள்ளும் துருவ உயிரி னங்கள் கரடி, சீல், மற்றும் திமிங்கிலம் போன்றவற்றின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படுகிறது, விளைவு இவற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடலில் பாசிகள், நுண்ணுயிர்கள் மற்றும் இறால் மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இவற்றின் எண்ணிக்கை பெருக்கினால் கடலில் ஆக்ஸிசன் அளவு குறைந்து கடல்வெப்பநிலை கூடுகிறது.
கடல்வெப்பநிலை உயர்வடைவதால் புவிகாந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள 0.1 பாதிப்பின் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைவு, காது கேளாமை, இரத்தஓட்டத்தில் மாற்றம் மற்றும் புத்திபேதலிப்பு போன்றவை அதிகமாகியுள்ளது.. கடலில் மாசு கலப் பதை நிறுத்தாவிட்டால் கூடிய விரை வில் மனித இனத்திற்கே பேரழி வைத் தரும் நிலை விரைவில் உருவாகிவிடும். -_ சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


அதிர்ஷ்டசாலியா?


இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் மார்கரெட் ஹில்டா தாட்சர். இவர் தான் அந் நாட்டின் முதல் பெண் பிரதமரும் கூட!

சிறுவயதில் இருந்தே எல்லா வற்றிலும் முதல் மாணவி தான், தன்னம்பிக்கை அதிகம். ஒரு முறை கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தாட்சர் முதல் பரிசு பெற்றபோது அவருடைய தலைமை ஆசிரியர் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று தட்டி கொடுத்தார். தாட்சர் உடனே நான் ஒன்றும் அதிர்ஷ்ட சாலியல்ல. இந்தப் பரிசை பெற நான் தகுதியானவள் என்று வெடுக்கென்று பதில் கூறினார்
- ஆனந்த விகடன் 26.5.1949

தமிழ் ஓவியா said...


ஆபத்தோ ஆபத்து!


உலக வெப்பமயமாதலின் விளைவாக நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் 42 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியா பல்கலைக்கழகம், இயற்கை தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து நடத்திய ஆய்வில் தற்போதுள்ள உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து 2100-இல் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் வெள்ள அபாயம் 5.6 மில்லியன் முதல் 80 மில்லியன் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் உலகின் 29 முக்கிய நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் இது ஒவ்வொரு 10 முதல் 50 ஆண்டுகளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இந்தோனேசியாவில் பெண்களுக்குப் புதுச்சட்டம்


இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஆச்சே மாகாணத்தில் ரியா சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு சூதாட்டம், விபச்சாரம், பொது இடங்களில் ஆடை அணிதல் ஆகியவை குறித்து சட்ட வரம்புகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இம்மாகாண மேயர், பெண்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் காலை வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து செல்லக்கூடாது என்று கட்டுபாடு விதித்துள்ளார்.

பெண்கள் ஒரு புறமாக கால் வைத்துதான் அமர்ந்து செல்ல வேண்டும். இதுவே அவர்களுக்கு வசதியானதும் பாதுக்காப்பானதும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதத்தின் பெயரில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் மீது தலைவர்கள் வரம்பு மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கடவுளா காப்பாற்றினார்!

செய்தி: இராணுவ வீரர்கள் உதவியால் உயிர் தப்பினோம், தமிழகம் திரும்பிய கேதார்நாத் பயண குழு பேட்டி.

சிந்தனை: உண்மைதானே கேதார்நாத்தில் குடிக் கொண்டிருக்கும் கடவுள் காப்பாற்றினார் என்றா பக்தர்கள் சொல்ல முடியும்?

தமிழ் ஓவியா said...


திருமணம் கிரிமினல் குற்றம் என்ற காலம் வரும்!


சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு சி.எஸ். கர்ணன் அவர்கள் கணவன் - மனைவி தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை புரட்சிகரமானது என்று தலைப்பிட்டு விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அத்தீர்ப்பினை வரவேற்று சிறப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 20.6.2013) .

பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைப் பேசி, உடலுறவு கொண்டு அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் தேடும் ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்ப்பு அது என்பதை முற்போக்குச் சிந்தனையுடைய எவரும் ஏற்கவே செய்வார்கள்.

யதார்த்தமாகவும் பெண்களிடம் ஆசை காட்டி, மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து, புது செருப்புப் போட்டுக் கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்து கொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும் கூட அதற்குப் பொறுப்பு ஏற்க மறுத்து பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.

நீதியரசர் திரு. கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டாலும் தங்களின் ஆழ் மனத்தில் பதிந்துள்ள இந்துத்துவா குணத்துடன் அணுகிய காரணத்தால் ஆத்திரம் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விட்டனர்.

தமது தீர்ப்பின் தன்மை குறித்தும், நோக்கம் குறித்தும் நீதிபதி தெளிவாக விளக்கம் கொடுத் துள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் ணிடம் வாக்குறுதி கொடுத்து, பின்னர் உடலுறவு வையும் முடித்துவிட்டு, அந்தப் பெண்ணை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், அந்த ஆண்மீது கிரிமினல் வழக்கைச் சம்பந்தப்பட்ட பெண் தொடரலாம்; ஆனால் அந்தப் பெண் நிவாரணம் பெறுவதற்கு சிவில் நீதிமன்றங்களை அணுக முடியாது என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறி யுள்ளது மிகச் சரியானது தானே!

அதனைப் புரிந்து கொள்ளாமல் வேறு வகையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியைச் சுற்றுவது (சப்தபதி) அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை யெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றி சமுதா யத்தைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் பயன் படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்கு களையும், பின்பற்றித் திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல் லாது என்று நீதிபதி கர்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்திய உறவை மறுப்பதன் அடிப் படையில் விவாகரத்துக் கோரலாம் என்று தீர்ப்பே இருக்கிறது.

நீதியரசர் கர்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பை இதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அந்தத் தீர்ப்பின் சட்ட ரீதியான நுட்பமும் நீதியும் நியாயமாகப் புரியும்.

இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், நுனிப்புல் மேயும் தன்மையில், சடங்குகளைப்பற்றி மலினமாகச் சொல்லியிருக்கிறாரே நீதிபதி என்று கோதாவில் குதித்துள்ளனர்.

கலாச்சாரமும், சடங்கும் மாற்றங்களுக்கு ஆளானதேயில்லையா? குடும்ப அமைப்பு முறையில் மாற்றங்களும் ஏற்படவில்லையா? மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் குறுக்குச் சால் ஓட்ட மாட்டார்கள். இந்துத்துவாவாதிகள் கூறுகிறார்களே - அவர்கள் நம்பும் கலாச்சாரம் என்பதுதான் என்ன? அந்த எண் வகைத் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

அந்த எட்டில் ஒன்று பைசாசம் என்பது; ஒரு கன்னிகை தூங்கும்போதும், மது மயக்கத்தில் இருக்கும் போதும் அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதிருக்கும்போதும், அவருடைய மன சம்மதம் இல்லாமலேயே வலுவில் புணர்ச்சி செய்வதாகும்.

இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள இந்த பைசாச திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?

திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்படும் காலம் வரும் என்றும் தந்தை பெரியார் கூறியுள்ளார். அப்படியொரு காலம் வரத்தான் போகிறது.

இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போக்கு (Living Together) வந்து விட்டதே - சட்ட ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டதே!

காலத்தின் வேகத்தையும், மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் மதவாதக் கண்ணோட்டத்தோடு கருத்துச் சொல்பவர்கள் எதிர் காலத்தில் எள்ளி நகைக்கப் படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை



பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...


சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்?: சித்திரபுத்திரன்


ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார், தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜெயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிர தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படித் துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய்விட்டதால் காங்கிர பரிசுத்தமாய் போய் விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்பவரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்த வருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ., பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போது முதலே தேசத்திற் காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப் பனரல்லாதார் நன்மை யின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய் கிறீர்களா?

தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் ஆரியாவை யும், பார்ப்பனரல்லாதார் சுயமரியா தைக்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போன ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் போட வேண்டுமென்ற பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் பார்ப்பன சட்ட மெம்ப ரையும் கெஞ்சும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல் லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் சக்க ரைச் செட்டியாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பனரல்லா தார் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகங் களை யெல்லாம் பிடுங்கிப் பார்ப்பனர் கையில் கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார் சூத்திரர், பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்னும் கொள்கையை நிலைநிறுத்தப் பாடுபடும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்ப னருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

அல்லது பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதைக்கும், மனுசத் தன்மைக்கும், தேச விடு தலைக்கும் உழைக்கும் ஸ்ரீமான் வி. சக்கரை செட்டி யாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப் போடப் போகி றீர்களா? இதில்தான் உங்கள் மூளையின் தத்துவம் விளங்கப் போகிறது.

- குடிஅரசு - கட்டுரை - 26.09.1926

தமிழ் ஓவியா said...

முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளைச் சிறு பிராயம் முதற் கொண்டே நம்மைத் தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை அடி! அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களைத் தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ!

போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அவர்களுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்குப் போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய்? என்று கேட்டால், என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டு விட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா? என்கிறார்கள்.

இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமை களையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவத்து மென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும்.

நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால்கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய்க் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு, அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.09.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஓ.கே.கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ.கே. கந்தசாமி செட்டியாரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்ட கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்ககூடாது? பட்டத் தையும் விட்ட பரிசுத்த மான ஒத்துழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி இப்போது ஸ்ரீமான் அய்யங் கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக்கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார்.

சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரைவிட ஸ்ரீமான் சிலவற்றை வைத்துக்கொண்டி ருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்ப னரல்லா சமுகத்தில் செட்டியாருக்கு இது சமயம் செல் வாக்கும் குறைந்து போயிருக்கிறது.

இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதி னாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஓ.ஏ.ஓ.கே.லட்சுமணன் செட்டியாரை இவர்களே (பார்ப்பனர்கள்) போட்டதினாலேயும் நன்றாய் விளங்குகிறது.

ஆதலால் பார்ப்பனர் அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன் போட வில்லை? இது தான் போ கட்டும். சட்டசபைத் தேர்தலிலாவது இந்த பார்ப்பனர் களுக்கு நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாருக்கு ஒரு தானம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றிருந்தால் பார்ப்பனர்கள் மிகுதியுள்ளதும் கண்டிப்பாய் பார்ப்பனர் சொல்லுகிறபடி ஓட்டுக் கிடைப்பதுமான யூனிவர்சிட்டி தொகுதிக்கு ஏன் நிறுத்தக் கூடாது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி படிப்பையும் அனுபோகத்தையும்விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? இவற்றை யோசிக்கும்போது உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? என்ற பழமொழிபோல் இந்தப் பார்ப்பனர்களின் சகவாசம் என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா?

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 29.08.1926

தமிழ் ஓவியா said...

இந்து மத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர் களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக் கிடை யில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறை வேற்றப்பட்டு மலை யாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்த வர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்பு கிறோம். -

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலை யாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதையும் சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.09.1926

தமிழ் ஓவியா said...

தேவதான மசோதாவுக்கு ஆதரவு

தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும், மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படை யாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.
(பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பட்ட செய்தி)

- குடிஅரசு - செய்தி - 22.08.1926

தமிழ் ஓவியா said...


இதுதான் பாரத புண்ணிய கலாச்சாரமா?


- ஊசி மிளகாய்

பாரத நாடு பழம் பெரும் நாடு - நீர் அதன் புதல்வர் என்று பாடிய பாட்டு - புண்ணிய பூமி, ஞான பூமி, என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டுள்ள நம் நாட்டில் வாழும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மனிதர்களாக - ஏன் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக வாழுகின்றனர் என்பதற்கு நேற்றும் இன்றும் தொலைக்காட்சி, ஊடகங்கள் - ஏடுகளில் வருகின்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளாக வருவன எல்லாம் செந்தேள் கொட்டுவதாக அல்லவா இருக்கின்றன!

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்கு புண்ணிய புனித யாத்திரை கடவுள் அருள் கிட்டும்; தெய்வத் தின் கிருபையை மொத்தமாகச் சம்பாதித்து புண்ணியத்தை பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு மோட்சத்தில் முன் இடம் பிடிக்கலாம் என்று பக்தர்கள் நம் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சென்றனர். பரிதாபத் திற்குரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர்கள் என்றால் இதில் - கடும் மழை, வெள்ளம் - இமாலய சுனாமி காரணமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் சென்றோர், காணாமற் போனவர்கள் சுமார் 13 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்ற சோகச் செய்தி - நம் போன்ற நாத்திகர்கள் உட்பட அனைவரையும் நெஞ்சுருகச் செய்கிறது!

எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி, கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்று நாம் கவலைப்படுகிறோம்.

தமிழ்நாட்டின் ஒரு பெண்மணி - கவளம் சோறுகூட கிடைக்காமல் பட்டினியால் உயிர் விட்டார்; வேறு வழி இன்றி என்ற செய்தி நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வழியும்படிச் செய்துள்ளது!

நாடே - ஏன் உலகமே திரண்டு இச்சோகத் திலிருந்து பாதிக்கப்பட்ட அம்மக்களை - பக்தர்களை - காப்பாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றனர்!

ஏராளமான நிதி உதவிகளும் நிவாரணப் பணிகளுக்கு பல தரப்பிலிருந்தும் அளிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு பரிதாபச் சூழலில் அங்கிருந்து வரும் சில செய்திகள் - இப்படியும் பணத்தாசை பிடித்த மனிதத்தைக் கொன்ற - கொல்லுகின்ற மனித உரு மிருகங்களா? என்று வேதனையும் வெட்கமும் படக் கூடிய நிலை உள்ளதாக அல்லவா இருக்கிறது!
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், மீட்புக் குழுவினர் வருகைக்காகக் காத்திருக் கின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் பறி போன நிலையில், உயிரோடு திரும்பினோமே என்று அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அவர்களை தண்ணீர்த் தாகத்துடனும் கடும் பசியுடனும் ஜீவ மரணப் போராட்டம் நடத்திடும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தற்காலிகக் கடைகள் வைத்திருக்கும் சிலர்; தங்களது பேராசை விஸ்வரூபம் எடுத்து ஆடுவதுபோல,

ஒரு பரோட்டா - 250 ரூபாய்

ஒரு பாட்டில் தண்ணீர் - 200 ரூபாய்

ஒரு சிறிய சிப்ஸ் பாக்கெட் - 100 ரூபாய்

ஒரு சிறிய சப்பாத்தி - 150 ரூபாய்

ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்) - 100 ரூபாய்

ஒரு சிறிய கப் சாதம் - 40 ரூபாய்

என்று விற்பதைவிட, வெட்கப்படத் தகுந்த வேதனை வேறு உண்டா?

மனிதம் இவர்களிடத்தில் மரித்தே விட்டதோ!

இப்படி மனசாட்சியைக் கொன்று சம்பாதிக் கும் பணத்தை இவர்களுடன் சேர்த்துப் புதைக் கப் போகிறார்களா? எரிக்கப் போகிறார்களா?

பக்தி வியாபாரம் என்ற பெயரால் சுரண்டலை ஒரு புறம்; மறுபுறம் இப்படி செத்த பிணங்களைத் தான் கழுகுகள் கொத்தித் தின்கின்றன.

உயிரோடு உள்ளவர்களை - இந்தச் சுயநலப் பேராசைக் கழுகுகள் குத்திக் குத்தி உயிரையும் போக்க அனுமதிக்கலாமா? இவர்களைவிட அந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் மேலானவை அல்லவா!

பாரதக் கலாச்சாரமாம்! வெங்காயமாம்!

கடவுளுக்கு,

அவதாரங்களுக்கு

முனிபுங்கவர்களுக்கு

காவிச் சாமியார்களுக்கு

கோயில்களுக்கு பஞ்சமே இல்லை!

அன்றாடம் கோடிக்கணக்கில் வசூல்களும் கூட? கோயில் உண்டியல்களுக்குப் பஞ்சமில் லாத நாடு அல்லவோ இது! பூமியின் பொது ஒழுக்கமோ எவ்வளவு சீர்கேடடைந்து விட்டது பார்த்தீர்களா?

பக்தி வந்ததே தவிர,

மனிதநேயம் மறைந்து விட்டதே!

இது நாடா? உயிருடன் சக மனிதர்களைக் கொத்தித் தின்னும் மனிதக் கழுகுகள் உலவும் காடா?

தமிழ் ஓவியா said...


சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!


பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி

நிறுவனப் பங்குகளை எதிர்ப்புகளை மீறி தனியாருக்கு விற்பதா?

சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!

தமிழர் தலைவர் அறிக்கை

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும் மக்களுக்கு இழப்பு மட்டுமல்ல; சமூக நீதி - இடஒதுக்கீட்டுப் பறிப்பு என்ற ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி (லிக்னைட்) பழுப்பு நிலக்கரி நிறுவனம், நாட்டிலேயே லாபத்தில் இயங்கும் நவரத்தினங்கள் என்ற 9 பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று.

தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதா?

அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு மெல்ல ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதைப் போல, 5 சதவிகிதம் என்று துவங்கி (ஏற்கெனவே சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது) தனியாருக்கு விற்பதை எதிர்த்து, அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. உட்பட அத்தனைக் கட்சியினரும் குரல் கொடுத்தனர்; அதைக் கண்டு அத்திட்டத்தைத் தள்ளி வைத்தவர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழிக்கேற்ப, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி அலட்சியப்படுத்தி விட்டு, 5 சதவிகித பங்குகளை விற்க அனுமதி வழங்கிவிட்டதாம்!

திராவிடர் கழக அறப்போர் நடத்தியுள்ளதே!

ஏற்கெனவே பொன் முட்டை இடும் இந்த வாத்தைக் கொல்லாதீர்கள் என்று திராவிடர் கழகம் அறிக்கைவிட்டு அறப்போர் நடத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு (இந்த விற்பனை மூலம்) வெறும் 466 கோடி ரூபாய்தான் கிடைக்கக் கூடும். அரசுக்கு இது ஒரு பெரும் தொகையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு மிகவும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

சமூகநீதிக்கும் ஆபத்து!

ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக மாறினால், பொருளாதாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுவது என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட,

மற்றொரு முக்கிய கண்ணோட்டம் சமூகநீதி - இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவும் ஆகிவிடும்.
காரணம் தனியார் துறை என்றால் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி நியமனங்கள் செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் (இன்றைய நிலைப்படி) இல்லை; பொதுத்துறை நிறுவனத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தாக்கீதாகும்.

எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இதை மறு பரிசீலனை செய்யா விட்டால் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது (நாடாளுமன்ற தேர்தலில்) உறுதி! உறுதி!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
23.6.2013

தமிழ் ஓவியா said...


சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!


பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி

நிறுவனப் பங்குகளை எதிர்ப்புகளை மீறி தனியாருக்கு விற்பதா?

சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து!

தமிழர் தலைவர் அறிக்கை

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும் மக்களுக்கு இழப்பு மட்டுமல்ல; சமூக நீதி - இடஒதுக்கீட்டுப் பறிப்பு என்ற ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி (லிக்னைட்) பழுப்பு நிலக்கரி நிறுவனம், நாட்டிலேயே லாபத்தில் இயங்கும் நவரத்தினங்கள் என்ற 9 பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று.

தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதா?

அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு மெல்ல ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதைப் போல, 5 சதவிகிதம் என்று துவங்கி (ஏற்கெனவே சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது) தனியாருக்கு விற்பதை எதிர்த்து, அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. உட்பட அத்தனைக் கட்சியினரும் குரல் கொடுத்தனர்; அதைக் கண்டு அத்திட்டத்தைத் தள்ளி வைத்தவர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழிக்கேற்ப, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி அலட்சியப்படுத்தி விட்டு, 5 சதவிகித பங்குகளை விற்க அனுமதி வழங்கிவிட்டதாம்!

திராவிடர் கழக அறப்போர் நடத்தியுள்ளதே!

ஏற்கெனவே பொன் முட்டை இடும் இந்த வாத்தைக் கொல்லாதீர்கள் என்று திராவிடர் கழகம் அறிக்கைவிட்டு அறப்போர் நடத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு (இந்த விற்பனை மூலம்) வெறும் 466 கோடி ரூபாய்தான் கிடைக்கக் கூடும். அரசுக்கு இது ஒரு பெரும் தொகையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு மிகவும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

சமூகநீதிக்கும் ஆபத்து!

ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக மாறினால், பொருளாதாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுவது என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட,

மற்றொரு முக்கிய கண்ணோட்டம் சமூகநீதி - இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவும் ஆகிவிடும்.
காரணம் தனியார் துறை என்றால் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி நியமனங்கள் செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் (இன்றைய நிலைப்படி) இல்லை; பொதுத்துறை நிறுவனத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தாக்கீதாகும்.

எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இதை மறு பரிசீலனை செய்யா விட்டால் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது (நாடாளுமன்ற தேர்தலில்) உறுதி! உறுதி!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
23.6.2013

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

அடுத்த 20-30 ஆண்டுகளில் உலக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்; அதனால் மக்களுக்குப் பெரும் கஷ்டங்கள் சூழும். இந்தியாவில் கொல்கத்தா, மும்பைப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சியும்; உணவுப் பஞ்சமும் ஏற்படும். தெற்கு ஆசியாவில் மழை பெய்யும் முறை மாறும். சில பகுதிகளில் மின் உற்பத்தி விவசாயம், குடிநீர் இவற்றால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த தகவல்களை உலக வங்கி எடுத்துக் கூறி எச்சரித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோயில்.. குகை!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ரூ.62 கோடி செலவில் 1760 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட தேவஸ்தானம் முடிவு! சிந்தனை: கோயில் திருடர்களின் குகை என்று எங்கோ படித்த நினைவு!

தமிழ் ஓவியா said...

கடிகாரம் ரூ.27 கோடி

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் உண்மை தான். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அணிந்திருக்கும் கடிகாரத்தின் மதிப்பு ரூ.27 கோடியாம்!

தமிழ் ஓவியா said...


உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் ஆதிசங்கரரின் சமாதியும் போச்சே!


டேராடூன், ஜூன் 23- உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஆதிசங்கரரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக, அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள் ளனர்.

கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர், ஆதிகுரு சங்கராச்சார்யா என, அழைக்கப்படும், ஆதிசங்கரர். பல சமய நூல்களுக்கு விளக்க வுரை எழுதியவர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணித்து, அத்வைத பீடங்களை நிறுவியவர். இவரின் சமாதி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் பின்புறம் இருந்தது. இது, எட் டாம் நூற்றாண்டில் கட் டப்பட்டதாக கூறப்படு கிறது. சமீபத்தில், உத்தர கண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த சமாதியும், அடித் துச் செல்லப்பட்டு விட் டதாக, அங்கிருந்தவர் கள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோவிலில், அர்ச்சகர் ஒருவர் கூறிய தாவது:கடந்த ஞாயிறு இரவில், பலத்த மழை பெய்தது. இதுவரை, இப்படிப்பட்ட மழையை, நான் பார்த் தது இல்லை. நேரம் செல்ல செல்ல, மழை வலுத்தது. கோவிலின் அருகே செல்லும் மந்தா கினி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது.

கரையை கடந்து, கோவில் இருந்த பகுதிக்குள்ளும், வெள்ள நீர் புகுந்தது. மிகுந்த வேகத்துடன் வந்த வெள்ளப் பெருக்குடன், சகதியும் சேர்ந்து வந்த தால், கோவிலின் பெரும் பாலான பகுதி, சகதி யால் மூடப்பட்டது. உயிரை பாதுகாத்து கொள்வதற்காக, அங் கும், இங்கும் ஓடினோம். அங்கே, பாதுகாப்பான இடம் என்று, எதுவுமே இல்லை. கோவிலின் ஒரு பகுதியில் வெள்ள நீர் இல்லாததை பார்த்து, அங்கு ஓடினோம்.

வெள்ளச் சீற்றத்தில், எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஆதிசங் கரரின் சமாதியும் அடித் துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியின் பெரும்பாலான பகுதி களை காணவில்லை. மேலும், அங்கிருந்த ஆதி சங்கரரின் இரண்டு சிலைகள், ஸ்படிக லிங்கம், அனுமன் சிலை ஆகியவையும், வெள் ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. அந்த பகுதி முழுவதும், சகதிகளுக்குள், உடல் கள் புதைந்து கிடந்தன. அங்கிருந்த ஆசிரமமும், இருந்த இடம் தெரி யாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறக்க வேண்டுமா?


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு கருத்தைக் கூறி யிருக்கிறார். 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை முசுலிம்கள் மறந்து நரேந்திர மோடியை ஆதரிக்கவேண்டும் என்று ஒரு வேண்டு கோளை முன்வைத்துள்ளார்.

இதிலிருந்து ஓர் உண்மையை அவர்களை அறி யாமலேயே பாரதீய ஜனதா தரப்பினர் ஒப்புக் கொள்கின்றனர்.

குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் இஸ் லாமியர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர் என்பதை இதன்மூலம் பாரதீய ஜனதா ஒப்புக்கொண்டு விட்டதா இல்லையா?

இதனை ராஜ்நாத்சிங் சொல்வதைவிட நரேந்திர மோடியல்லவா முன்வந்து சொல்லவேண்டும்? இதுவரை ஒரே ஒரு வார்த்தை இந்த வகையில் வாய் திறந்து சொல்லியிருப்பாரா மோடி? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்திருப்பாரா அவர்?

பி.ஜே.பி.யின் பிரச்சாரப் பத்திரிகையான தினமலர் (27.7.2012) ஒரு தகவலை வெளியிட்டது. உருது பத்திரிகைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அளித்த பேட்டி அது.

நான் மன்னிப்புக் கோரமாட்டேன்! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின் குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அதேநேரத்தில் நான் என்ன சொன்னேன் என்பதை நீங்கள் சரி பாருங்கள்; 2004 ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். வன்முறை களுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? வன்முறைகளுக்கு என் அரசு காரணம் எனில், என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்! என்றார். இதன் பொருள் என்ன?

குஜராத்தில் கலவரம் நடந்துள்ளது. இவர்தான் முதலமைச்சர். ஆனால், அதற்கு அவர் பொறுப்பு ஏற்கமாட்டாராம். எப்படி இருக்கிறது யோக்கியதை? குறைந்த பட்சம் வருத்தம்கூடத் தெரிவிக்கமாட்டார் முதலமைச்சர். அதேநேரத்தில் குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் முசுலிம்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறார் என்றால், பி.ஜே.பி.யில் உள்ள பெருந்தலைவர்கள்வரை பொது நாகரிகம், மனிதத்தன்மை அற்றவர்கள் என்பது வெளிப்பட வில்லையா?

குஜராத்தில் முசுலிம்களுக்குச் சொந்தமான 41 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன. 295 தர்க்காக்கள், 205 மசூதிகள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் முடிக்கப்பட்டன.

குஜராத் உயர்நீதிமன்றம் இவற்றிற்கு நஷ்ட ஈடு அளிக்கவேண்டும் என்றும், அவற்றை அரசு செலவில் கட்டிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்ததே - அதன் பொருள் என்ன? இவை நாசமாக்கப்பட்டதற்குக் குஜராத் மாநில அரசுதான் பொறுப்பு என்பதுதானே பொருள்.

குஜராத் மாநில பி.ஜே.பி. அரசு பொறுப்பு என்றால், அதன் முதலமைச்சர் பொறுப்பாளியாக மாட்டாரா?

பொடா சட்டத்தின்கீழ் குஜராத் மாநிலத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள்; ஒருவர் சீக்கியர். முசுலிம்கள் என்று சொன்னால், குறி வைத்து நசுக்கப்படுவர் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

குஜராத் மாநிலத்தில் 4000 வழக்குரைஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள். அவர்களில் அரசு வழக்குரைஞர்களாக எத்தனைப் பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்று மோடி தெரிவிப்பாரா?

குஜராத் மாநிலத்தில் மெட்ரிக்குலேசன் அள வுக்குப் பள்ளிக்குச் செல்லக்கூடியவர்கள் 41 விழுக்காடு என்றால், முசுலிம்கள் வெறும் 26 சதவிகிதம்தான்.

பள்ளிக்குப் படிக்க வருவோர் மற்றவர்கள் 79 சதவிகிதம் என்றால், முசுலிம் 75 சதவிகிதம்தான். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முசுலிம்கள் வெறும் 12 விழுக்காடு - வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றவர்களோ வெறும் 2.6 சதவிகிதமே! நகர்ப் புறங்களில் முசுலிம்கள் உயர்ஜாதி இந்துக்களைவிட 800 மடங்கு வறுமை அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பி.ஜே.பி. தலைவர், குஜராத் கலவரத்தை முசுலிம்கள் மறந்துவிடவேண்டும் என்று சொல்லு கிறார்?

இதுகுறித்து முசுலிம்கள் மட்டுமல்ல. மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி


தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

புதுடில்லி ஜூன் 24- 2003-ஆம் ஆண்டிலி ருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கி யத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

சம்ஜவ்தா எக்ஸ் பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்ப வரின் உண்மையான அடையாளம் என்ன என்பதை தேசிய புல னாய்வு அமைப்பு சமீ பத்தில் தாக்கல் செய் துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிர வாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத் தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத் தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத் தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள் ளது. ஹக்லாவின் உண்மை யான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.

இமான்சு பான்சி 2006 ஏப்ரல் மாதத்தில் இந்த நந்தால் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண் டிருக்கும் போது இறந்து விட்டார். அவுரங்கா பாத்தில் உள்ள ஒரு மஸ் ஜிதை தகர்க்க அந்த வெடி குண்டு தயாரிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு நிறுவன வட்டார தகவல் படி ஹக்லாவின் குடும் பம் விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்பு டையது. மேலும், ஹக்லா வி.எச்.பி.யில் ஒரு உறுப்பினர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு அரசு ஊழியரின் மகன் ஆவார். இந்துத்துவ கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தனது 20-ஆவது வயதில் 2003-ஆம் ஆண் டில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2003-ஆம் ஆண்டில் தான் மகாராஷ்டிரா மாநிலம், பார்ப்பானி மாவட்டத்தில் இந்துத் துவ தீவிரவாத ஆசாமி களின் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கால மான இமான்சு பான்சி யும் அவரது கூட்டாளி களும் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஹக்லாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2003-இல் வீட்டை விட்டு வெளியேறி தலை மறைவான ஹக்லா 2005-ஆம் ஆண்டில் ஜம்மு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி மறைந்திருந்த இடத்தை சென்றடைந் தது, தெரியவந்துள்ளது. அதே ஆண்டில் சுனில் ஜோஷி ஹக்லாவை மத் தியப்பிரதேச மாநிலத் தில் உள்ள தேவாஸ் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார் அங்கே ஹக்லாவுக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டில் புனே நகரில் சிங்காகட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு பயிற்சி முகாமில் இந்த ஹக்லா பயிற்சி பெற்றாரா என் பதையும் தேசிய புல னாய்வு நிறுவனத்தினர் விசாரித்து வருகின்றனர். அந்த பயிற்சி முகாமில் இமான்சு பான்சி வெடி குண்டுகளை எப்படி வெடிக்கச் செய்வது என் பதையும், வெடி குண்டு களை தயாரிப்பது பற்றி யும் பயிற்சி பெற்றார்.

ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பயிற்சி முகாமில் பயிற்சியளித் ததாக சந்தேகிகப்படு கிறது. இமான்சு பான்சி தன்னை வழி நடத்துபவர் களுக்கு தெரியாமல் சில குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை, தானா கவே வெடிக்கச் செய் தார். சக்தியில்லாத அந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் எந்த சேதமும் ஏற்படாத தால் இமான்சு பான் சியை அவரது தலைவர் கள் கண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தமிழ் ஓவியா said...


வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
(விடுதலை, 23.8.1961)

தமிழ் ஓவியா said...


இமாலயச் சுனாமியில்கூட இமாலய அரசியலா?


- ஊசி மிளகாய்

உத்தரகாண்ட், இமாலச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள பத்திரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்ற பக்தர்கள் (சுமார் ஒரு லட்சம் பேரில்) 13 ஆயிரம் பேருக்கு மேல் கடும் மழை, வெள்ளம் - இவற்றில் அடித்துச் சென்றும், மலைச் சரிவுகளில் சிக்கியும் - இறந்தும், காணாமற்போயும் உள்ளது நெஞ்சுருக்கும் வேதனை! நாட்டு மக்களின் நல் இதயங்களைக் கசக்கிப் பிழிகின்றன!

இராணுவம், துணை இராணுவம், திபெத்திய எல்லைப்படை அம்மாநிலங்களின் பல்வேறு அரசு அமைப்புகள் - மத்திய அரசின் உள்துறையினர் தனித்த முயற்சிகள் இவை எல்லாம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு போர்க்கால வேகத்தில் (On a War Footing) நடைபெற்று வருகின்றன.

இன்னும் மீட்கப்பட வேண்டிய யாத்திரிகர்கள் - பலர் உள்ளனர் - இடிபாடு - மலைச்சரிவில் சிக்கியோர்களும் இருக்கக் கூடும்.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் மீட்புப் பணிகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் வேறு ஏற்பட்டு விட்டது!

இறந்தவர்கள் - ஜலசமாதியின்மூலம் போக, எஞ்சியவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து, அவரவர் மாநிலங்கள் வீடுகளுக்கு - அனுப்புவது எப்படி என்பதே பொதுக் கவலையாக உள்ள நிலையில்,

இந்த நிலையில் பா.ஜ.க., - மோடி மஸ்தான் கள் எழவு வீட்டிலும் ஏதாவது கிடைக்காதா என்ற பந்தலிலே பாவக்காய் கதை ஒப்பாரி வைத்து அழுது, தொங்கிய பாகற்காயில் கண் வைத்தழுதது போலவும்,

அத்துக்கத்தில் கவனமோடு இருந்து பதில் கூறிய சகோதரி போன்று மோடிகளுக்குப் பதில் கூறிட்ட காங்கிரசும் - விமர்சித்துக் கொள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாகும்!

இப்போது எல்லோர் கவனமும் மழை, அபாயத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றி மீட்டுக் கொணர்வது பற்றித்தான் இருக்க வேண்டுமே தவிர, இதில் விளம்பரம் தேடி அரசியல் ஆதாயம் தேடிட இது ஓர் அருமையான வாய்ப்பு என்று கருதுவதைவிட மிக மிகக் கேவலம் வேறு உண்டா?

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் தரும் விளம் பரமோ எல்லையற்ற ஒன்றாகும்!

மோடி, 25 இன்னோவா கார்களில் இத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்துச் சென்றார் என்று அவரும் ஏதோ திரைப்பட நடிகர் மாதிரி வண்ண வண்ண உடைகளை உடுத்தி, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனித்தனி பேட்டி கொடுப்பது, அரசியல் கட்சி சார்ந்த பதில்களைக் கூறுவது, ஒரு மாநில முதல்வர், மற்றொரு மாநிலத்திற்குள் சென்று (அவர்களின் அனுமதியே இன்றி) அங்கே நடப்பவைகளைக் குறை கூறுவது என்பது மிகுந்த கீழ்த்தரமான சுவை (It is in very bad Taste) அல்லவா!

தினம்தினம் பா.ஜ.க. பேச்சாளர்கள் ஆளும் காங்கிரசைக் குறை கூறுவதுதான் தொழிலாகப் போய் விட்டது!

அவர் உடனே வந்து குதித்தாரா? இவர் தோண்டினரா? இப்படி கேள்வி மேல் கேள்வி.
பெரிய வி.வி.வி. அய்ப்பிக்கள் வந்தால், வெள்ள நிவாரணப் பணிகள் அல்லவா வெகு வாகப் பாதிக்கப்படும்; அவர்கள் பாதுகாப்பு திருப்பி அனுப்பப்படுவது முதற்கொண்டு அம்மாநில முதல்வர் முதல், அதிகாரிகள் வரை அவர்கள் கவனம் இவர்கள் பாதுகாப்பில் (Security) தானே இருக்கும்? இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கமும் தேக்கமும் ஏற்படாதா?

நம் நாட்டில் எங்கும் அரசியல்! எதிலும் அரசியல் பொது ஒழுக்கச் சிதைவுக்கு ஓர் எல்லையே இல்லை!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி ஒதுங்கி உயிருக்கு மன்றாடிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து, கொள்ளையடித்து, தங்களுக்கு வருவாய் தேடியவர்களுக்கும், ஹெலிகாப்டரில் போடப்பட்ட உணவுகளை அங்குள்ள மக்களை விரட்டியடித்து விட்டு பொறுக்கி எடுத்து அதை மீண்டும் அதிக ரூபாய்க்கு விற்று காசு தேடிய ஈவிரக்கமற்ற பாதகர்களுக்கும்

இந்த நிவாரணத்தில் அரசியல் நடத்தி விளம்பரம் தேடும் மோடி வித்தைக்கார அரசியல்வா(வியா)திகளுக்கும் தத்துவத்துவத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

பாழாய்ப் போன வாக்கு வங்கி ஓட்டுக் கண்ணோட்டம் நாட்டுக் கண்ணோட்டத்தை - மக்கள் நலக் கண்ணோட்டத்தையே கொன்று நாசமாக்கி விட்டதைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே!

எப்போது முடிவு - இந்த அவல அரசியல் அலங்கோல போட்டிகளுக்கு?

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. நெய்வேலி போராட்டம்: அறவழிப் போராட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவும், வாழ்த்தும்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினை பொதுத்துறையிலிருந்து தனியார்மயமாக்கும் துவக்க முயற்சியாக 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அமைச்சரவை, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ள வற்புறுத்திடும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் அதன் அறவழி ஆதரவினை நல்குகிறது!

அனைத்துத் தொழிற்சங்கங்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடும் இம்முயற்சி வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கோரிக்கை வெல்லும் வரை அறப்போராட்டம் தொடரட்டும்!



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.6.2013

தமிழ் ஓவியா said...


எப்படி மறக்க முடியும்?

2002இல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மறந்து விட வேண்டுமாம். சொல்லுகிறார் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்.

பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனை யாளரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான ஆஷிஸ் நந்தி குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடியைச் சந்தித்து, நடத்திய நேர்முகம்பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பேட்டி முடிந்து நடுக்கத்துடன் வெளியில் வந்தேன் என்று கூறினாரே!

அனைத்துக் குணங்களும் பொருந்திய ஒரு ஃபாசிஸ்டைத் தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிந்தது. பாசிஸ்டு என்று நான் அழைத்தது ஆட்சேபகரமான சொல்லல்ல; வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான எதுவும் அந்தச் சந்திப்பில் இல்லை

சமூக வல்லுநர்கள்; நிபுணர்களின் கருத்திற் கிணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மனநிலை கொண்ட நபராக மோடி விளங்கினார்.

ஒரு கொலையாளியை, சில வேளையில் ஒரு கூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று சொன்னதுதான் எத்தகைய உண்மை!

1999 அக்டோபரில் கோஜ் நடத்திய ஆய்வில், இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றுவதற்கான தீய சக்திகளைக் காண முடிந்தது; சமூக அறிவியல் புத்தகங்களில் பாசிச விஷமத்தனங்கள் விதைக்கப்பட்டன. முஸ்லீம்களையும், கிருத்தவர்களையும், பார்சி களையும் அந்நியர்களாகச் சித்தரித்தனர். இதனைக் கம்யூனல் காம்பேக்ட் என்ற இதழ் அம்பலப்படுத்தியது; இந்தப் புத்தகங்களைப் படித்த நாடாளுமன்றக் குழு மேற்கண்ட பாடங்களை நீக்குமாறு குஜராத் மாநில அரசிடம் வற்புறுத்தியது. ஆனாலும் அதுதான் நடக்கவில்லை என்றது கோஜ்.

2002இல் குஜராத்தில் நடத்தப்பட்ட சிறு பான்மை மக்களுக்கு ஏதிரான கொடூர மனித வேட்டை ஏதோ திடீர் என்று எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை (Genocide) ஆகும்.

1991ஆம் ஆண்டிலேயே பிசினஸ் இந்தியாவில் வெளிவந்த இரு கட்டுரைகளே இதற்குப் பொருத்தமான சாட்சியங்கள் ஆகும்.

1991 ஜூலையில் குஜராத்தில் நடக்கிற வகுப்புவாத பிரிவினை நடவடிக்கை தான் எத்தகையது? விசுவ ஹிந்து பரிஷத் தயாரித்த ஒரு படம்; அதில் காவி குஜராத் - பச்சை குஜராத் என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

காவி என்பது இந்துக்கள்; பச்சை என்பது முஸ்லீம்கள் என்பது குறியீடாகும்.

இதற்கான திட்டமிடுதல்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தன. உளவியல் ரீதியாக இரு சமூகங்களையும் தனிமைப்படுத்துவதற்காக, சமூகப் பண்பாட்டு உறவுகளைத் தகர்ப்பதற்கான குறிக்கோளுடன் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வந்தன.

குஜராத் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவம் என்ற சாக்கு உருவாக்கப்பட்டு, நீண்ட நாள் திட்டம், கூர்தீட்டி செயல்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.

இதுவரை இதற்காக ஒரே ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமியர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதுகூட அவர்கள் அணிவித்த குல்லாயைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்தான் நரேந்திரமோடி.

ஒரு முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் இதுபோன்ற கலாச்சாரப் பரிவர்த்தனைகள் இயல்பாக நடப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ மன நோயாளியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் இந்து -இந்து அல்லதார் என்று உத்திப் பிரித்ததை (Polarisation) இந்தியா முழுமையும் அரங்கேற்றத் துடியாய்த் துடிக்கிறார் மோடி - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்


ஆசிரியருக்குக் கடிதம்

நீதிபதி கர்ணன் தீர்ப்பும் - தமிழர் தலைவர் அறிக்கையும்

தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! தங்களது நீதியரசர் கர்ணன் தீர்ப்பு பற்றிய அறிக்கையை 21.6.2013 (வெளியூர்) விடுதலையில் படித்தேன்.

தங்களது அறிக்கை வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் நீதியரசரின் தீர்ப்பையும் அதற்கடுத்த நாள் அவரின் விளக்கத்தையும் படித்தேன்.

இந்த தீர்ப்பைப் பாராட்டி தமிழகத்தில் வேறெந்த சமூக சீர்திருத்தவாதிகளும் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை, வேறெந்த சமூக, அரசியல் ஆர்வலர்களும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காத தருணத்தில் நீதியரசர் கர்ணன் தீர்ப்பு - பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கான அடையாளம் என்று தலையிட்டு விடுதலை முதல் பக்கத்தில் நீதியரசர் அவர் களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், பழைமைவாதி களுக்கும், இந்துசனாதன ஆதிக்கவாதிகளுக்கும் இந்துமத பழைமை கழிந்து புரட்சிகரமான பெரியாரின் எண்ணங்கள் உலகமயமாகி, சட்டமாகவே ஆகிவரும் கலாச்சார புரட்சியை பற்றி தெளிவாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

தங்களது அறிக்கையில், இந்தத் தீர்ப்பு மாறிவரும் காலமாற்றத்திற்கு எப்படி தேவையான ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு ஏற்கெனவே 1939-ஆம் ஆண்டிலி ருந்து திராவிடர் கழக மாநாடுகளில் தீர்மானங் களாக வடிவமைக்கப்பட்ட சமூக சீர்திருத்த, பெண்ணடிமை ஒழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் சட்டமாக அமுலில் இருப்பதை ஒவ்வென்றாக சுட்டிக்காட்டி இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப்போகப் போகிறது என்று தாங்கள் எடுத்துவைத்த வாதம் எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர் - கர்ணன் அவர்களுக்கே கூட வாதம் செய்ய நியாயப்படுத்த வழிசொல்லியுள்ளீர்கள்.

இறுதியாக சொல்லியுள்ளீர்கள், புராணகால கர்ணன்கள் அளித்தத்தைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புகென அருங்கொடை யாகும். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பாக நீதியரசர் கர்ணன் கூட இப்படி யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

அய்யா! தலைவர் பெரியார் கருத்துக்கள் உலகமயமாகி வருகின்ற வேளையில் தங்களது அறிக்கை உலகம் முழுவதும் வாழும் தமிழர் களுக்கும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் களுக்கும் வாய்ப்பாடாக, வழிகாட்டியாக திகழ்கிறது.

தங்களது பணி, அய்யா வாழ்ந்த வயதை தாண்டி 100 ஆண்டுகள் நிறைவு பெறவும், இறுதி வரை சமூக வழக்கறிஞராக சிறப்பாக செயல்படவும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான பெரியார் தொண்டர்கள் ஆசைப்படுகின்றோம்.

- கே.செல்வராஜ், வழக்குரைஞர் (திருப்பூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர், தாராபுரம்)

தமிழ் ஓவியா said...


தமிழ் மொழி சிறந்தது


தமிழ் புனிதத் தன்மை உடையது; சிவன் பேசியது; தேவார, திருவாசகங் களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ் மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே.

- (விடுதலை, 10.10.1960)

தமிழ் ஓவியா said...


மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டவர் சுந்தரசோழன்


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நிகழ்ச்சியில் பேரா.எஸ்.சாந்தினிபீ ஆதாரங்களுடன் விளக்கம்!




சென்னை, ஜூன் 25- சோழ அரசர்களில், சுந்தர சோழன் மனுவின் மறு அவதாரமாக எண்ணி செயல்பட்டார் என்று அலிகார் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ குறிப்பிட்டார்.

சோழர்களும் சாஸ்திரங் களும் என்ற தலைப்பில், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் 22.6.2013 சனிக்கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பேரா.தானப்பன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அழ கப்பா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. அ.இராமசாமி தலைமையேற்று சிறப்பித்தார். பேரா.பரமானந் தன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சாதனைகள்

பேரா. அ.ராமசாமி தனது தலைமையுரையில் சூஊசுகூ வெளியிட்ட சமூக வரலாற்றில், திராவிடர் இயக்கம் பற்றி தவறான பல தகவல்கள் இடம் பெற்றிருந்ததையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அந் தத் தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதையும், இன்று அப்படிப்பட்ட தவறுகள் நீக் கப்பட்டுவிட்டதாக நமக்கு கடிதம் அனுப்பியதையும் சுட்டிக்காட்டினார்.

சோழர்களும் சாஸ்திரங்களும்

அவரைத் தொடர்ந்து பேரா. சாந்தினிபீ சிறப்புரையாற் றினார். அவர் தமதுரையில்:- சோழர்கள் தங்கள் ஆட்சியை எப்படியெல்லாம் சாஸ்திரப் படி அமைத்துக் கொண்டார் கள் என்பதை பல்வேறு ஆதா ரங்களுடன் விவரித்தார். அவரது ஆய்வு கல்வெட்டுகள் பற்றியது என்றும், கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பது தமிழில் தான் அதிகம் என்றும், அதற்குக் காரணமும் பார்ப்பன சாஸ் திரங்கள்தான் என்றும் அடுக் கடுக்காக ஆதாரங்களை எடுத்து வைத்தார். அதில் சோழர்கள் காலத்தில்தான் ஆரியர், சாஸ் திரங்களின் ஆதிக்கம் மேலோங் கியதை படம் பிடித்துக் காட் டினார்.
அப்படிப் படம் பிடித்து காட்டும் போதுதான், கலிங்கத் துப்பரணியை சுட்டிக் காட்டி அதில் நால்வருணம் கெட்டு விட்டது. அதை தழைக்க வைக்க குலோத்துங்கன் வந்திருக் கிறான் என்றிருப்பதை குறிப் பிட்டார். சோழர்கள் தங்களை மனுவின் மறுபிறப்பு என்றும் தங்களை மனுகுலத்தில் வந்தவர்களாகவும், மனுதர் மத்தைக் காத்து வந்தவர்களாக வும் எண்ணி செயல்பட்டதை யும், சுந்தரசோழன் தன்னை மனுவின் அவதாரமாகவும் எண்ணி செயல்பட்டதையும் அம்பலப்படுத்தினார்.

சோழர்கள் காலம் பொற்காலம் அல்ல

அவரைத் தொடர்ந்து நன்றி யுரை ஆற்றவந்த பேரா.கரு ணானந்தன், பொற்காலம் என்று கூறப்படுகின்ற ஒன்றை, அது அப்படியில்லை என்று மிகத்தெளிவாக அம்பலப்படுத் தியிருக்கிறார் என்று சிறப்புப் பேச்சாளரை வாழ்த்திப் பேசிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக சிறப்புப் பேச்சாளரை பாராட்டிப் பேசினார் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. த.ஜானகி. அதைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளருக்கு பய னாடை அணிவித்தும் இயக்க நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட் டது.