மோடியின் இனப்படுகொலையை - ரத்தம் தோய்ந்த அவரது கைகளை மறைத்துக் காட்டுவதற்கு காவி இந்துத்துவா கூட்டமும், பார்ப்பனர்களும், உயர் ஜாதி ஊடகங்களும் கடைபிடிக்கும் தந்திரம் தான் - திசை திருப்பும் யுக்திதான் மோடி பிரதமர் ஆனால் இந்தி யாவைக் குஜராத் மாநிலம் போல முன்னுக்குக் கொண்டு வருவார் என்று ஒரு திட்டவட்டமான பிரச்சாரத்தை ஊதி ஊதி வானத்தில் பறக்க விடுவதாகும்.
ஆனால் உண்மை நிலை என்ன? மோடி முதல்
அமைச்சர் ஆனபிறகு குஜராத் வளர்ச்சி பெற்று விட்டதா? அதற்கான நிரூபணங்கள்
உண்டா என்ற கேள்விக்கு நேர்மையான பதில் ஏதுமில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் மோடி குஜராத்
முதல்வராக வருவதற்கு முன்பே இந்தியாவில் குஜராத் பொதுவாகப் பொருளாதார
வளர்ச்சி பெற்றிருந்த மாநிலம் தான் - இவர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்ற
பிறகு, அம்மாநில வளர்ச்சிக்காகச் செய்து கிழித்தது என்ன என்பதுதான் மிக
முக்கியம்.
2011ஆம் ஆண்டின் மத்திய திட்டக் குழுவின்
அறிக்கை என்ன கூறுகிறது? ஊட்டச்சத்து குறை பாட்டில் இன்னொரு சோமாலியா தான்
குஜராத் மாநிலம் என்று சொல்லவில்லையா?
அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44.6
சதவீதத்தினர் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்படுகின்றனர்
என்பதும், அந்த வகையில் குஜராத் இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்ட 17
மாநிலங்களில் 13ஆம் இடத்தில் இருப்பதாகவும் அதிகாரப் பூர்வமான அறிக்கை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதே - இதற்கு என்ன பதில்? அந்நிய முதலீடு
குவிகிறது குவிகிறது என்கிறார் களே, அதில்கூட முதல் இடத்தில் இருப்பது
மகாராட்டிர மாநிலம் தான், ஆறாவது இடத்தில்தான் குஜராத் இருக் கிறது.
குஜராத்தில் ஆயிரம் கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம்- அரசு அறிவிப்பு
(தினமலர் 27.3.2013).
கடந்த 15 ஆண்டுகளில் பெண் குழந்தைகளின்
பிறப்பு விகிதம் அரியானா, பஞ்சாபை விட குஜராத்தில் வெகுவாகக்
குறைந்துள்ளது. வைரத்தொழில் என்பது குஜராத்தில் முக்கியமான ஒன்று; அது
முற்றிலுமாக நலிவடைந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகள் நடு வீதியில் நிற்கும்
அவலம்!
இந்தியாவில் மனித வளர்ச்சி அட்டவணைப்படி
குஜராத் இருப்பது 20 ஆவதுஇடம், வருமான அடிப் படையில் 6ஆவது இடம்; பாலின
விகிதத்தில் 22ஆவது இடம், கல்வி வளர்ச்சியில் 14ஆவது இடம், தடுப்புக்
குறித்த விழிப்புணர்வு தகவல் அறிவோர் விகித அடிப் படையில் ஆண்கள் 12ஆம்
இடத்திலும், பெண்கள் 15ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.
தொலைக்காட்சி உரிமையாளர் என்னும் வகையில்
11ஆம் இடம், மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடம், மின் நிலைய
நிர்மாணத்தில் 2ஆம் இடம், சராசரி வாழ்நாள் அளவில் 10ஆம் இடத்திலும்தான்
குஜராத் மாநிலம் இருந்து வருகிறது.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம் தான்
இந்தியாவில் முதல் இடத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாம்! இந்தச்
சாதனைக்குரிய மிகப் பெரிய திறமைசாலி நரேந்திர பாய் தாமோதரதாஸ் மோடியாம்.
மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று முத
லாளிகள் கொடி பிடிப்பதற்குக் காரணம் அவர்களின் வளர்ச்சிக்கு மோடி பச்சைக்
கொடி காட்டுவார் என்பதற்காகத்தான்.
மேல் தட்டு மக்களின் மடியில் கொஞ்சக்
கூடிய ஒருவர்தான் 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் உழலும் ஒரு
நாட்டுக்கு பிரதமராக வர வேண்டுமா?
வசீகரமான பிரச்சார மயக்கத்திற்கு மக்கள்
பலியாவதை எந்த விலை கொடுத்தும் தடுத்தே தீர வேண்டும். ஊழல் பற்றியும்
பேசப்படுகிறது; இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி (ஊஹழு)
பகிரங்க மான ஒரு குற்றச்சாற்றைப் பதிவு செய்துள்ளாரே - குஜராத் மாநிலம்
பெட்ரோல் நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால் 5000
கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளதே.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் லோக்
அயுக்தா அமைப்பை உண்டாக்கி இருக்கும் போது அந்த அமைப்பை உருவாக்குவதிலும்,
நீதிபதியை நியமிப்பதிலும் மோடிக்கு ஏன் தயக்கம்? கடைசியில் ஆளுநர் அல்லவா
நீதிபதிகளை நியமிக்கும் நிலை ஏற்பட்டது?
மோடி ஒரு சர்வாதிகாரி என்ற
குற்றச்சாற்றும் உண்டு - அவரிடம் கேள்வி கேட்டால் பிடிக்கவே பிடிக்காது
தகவல் அறியும் சட்டப்படி 14 ஆயிரம் கேள்விகளுக்குப் பதில்கிடையாது.
இப்படிப்பட்டவர்தான் இந்தியாவுக்கான பிரதமர் குஜராத் சம்பவம் தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட களங்கமே என்று உத்தரப்பிரதேசம் காசியா
பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போதுசொன்னார் அன்றைய துணைப் பிரதமர்
எல்.கே. அத்வானி (8.3.2004).
அந்தக் களங்கத்துக்குக் காரணமானவர்தான் இந்தியாவிற்கான பிரதமரா?
மக்களை மதவாரியாகப் பிரித்து
(Polarisation) கூறு போடுவதுதான் - இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்
தும் மதச் சார்பின்மையைக் காக்கும் இலட்சணமா?
இந்தியாவிலே குஜராத் போல மதக் கலவரம் நடக்க வேண்டுமா? இரத்த ஆறு ஓட வேண்டுமா?
பிராமணர்கள்தான் இந்தியாவின்
கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர் என்றாரே பார்க்கலாம் என்று கூறும்(Daily
News and Analysis 27.4.2012) மோடியை பார்ப்பனர்கள் தூக்கி
நிறுத்துகிறார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!
(நிறைவு)
---------------------- ”விடுதலை” தலையங்கம் 15-6-2013
---------------------- ”விடுதலை” தலையங்கம் 15-6-2013
27 comments:
மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?
- ஊசி மிளகாய்
ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).
ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.
பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)
...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!
...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.
அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -
பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!
தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!
சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?
க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.
அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார் இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.
சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!
அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.
அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.
டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?
ஹம் தெரியாதா - ஆசனத்தில்....
டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?
புலித்தோல்மீது...!
பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?
நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.
இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.
சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.
அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்
எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?
'' பேராசைக்காரனடா பார்ப்பான்!
பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"
- பார்ப்பன பாரதியார்
திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!
ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!
சென்னை, ஜூன் 18- திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.
1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.
இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.
கையொப்பமே ஆதாரம்
இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.
ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
நீதியரசர் கர்ணன்
இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.
இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.
இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.
பாலியல் உறவு முக்கியம்
ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.
ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.
சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.
அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.
தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல
தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.
அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.
பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்
ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :
எழுத்துரு அளவு Larger Font
சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:
கோயில்களில், சிலைகளின் அழகைப் பார்க்காமல் குங்குமமும், விபூதியும் அவற்றில் கொட்டிப் பாழாக்குகிறோமே என்றார்.
ஈரோடு பெரியார் நினைவகத்திற்கு அம்பேத்கர் பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் வருகை
பெரியார் பணிகளை சிறப்பாக நினைவு கூர்ந்தார்
ஈரோடு-17-06-2013 திங்கள் காலை 11. மணி யளவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களது பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் ஈரோடு வந்தார். பன்னீர் செல் வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன்பின்னர் பெரி யார் வீதியில் உள்ள பெரியர்-அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அங்குள்ள தந்தைபெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங் குள்ள தந்தை பெரியார் பயன்படுத்திய பொருள் கள், புகைப்படக் காட் சியைப் பார்வையிட் டார் பட விளக்கங் களை முனைவர் பேரா சிரியர் ப.காளிமுத்து அவர்கள் விளக்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கர் அவர் களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக மிகவும் பாடுபட்டவர் கள், இடஒதுக்கீடு இன் னும் எத்தனை ஆண்டு களுக்கு நீடிக்கவேண் டும்? என்றகேள்விக்கு, ஜாதி இருக்கின்ற வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றார், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஜாதிய வன்கொடுமை நடைபெற்று வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா? என்று எண்ணத் தோன்று கிறது. இதற்கு தந்தை பெரியார்- டாக்டர் அம்பேத்கர் அவர் களது கருத்தை தீவிர மாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு விடு தலைசிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் என்.விநாயகமூர்த்தி, ஆதி தமிழர் பேர வையை சார்ந்த வீர கோபால், பழனிச்சாமி, மாநகர தி.க.தலைவர் கு.சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் கோ.பால கிருட்டிணன், மண்டல தி.க.செயலாளர் த.சண் முகம் ஆகியோர் உடனி ருந்தனர், முன்னதாக திராவிடர் கழகத்தின் சார்பில் ஆனந்தராஜ் அம்பேத்கருக்கு ஆசிரியர் எழுதிய ஆங் கிலப் புத்தகம் வழங்கப் பட்டது.
தனிச் சலுகை
ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும்.
(விடுதலை, 8.12.1967)
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!
திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.
தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).
அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.
அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).
அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).
அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!
இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.
நன்றி மறவா நாயகர்கள் இதோ! (1)
கி.வீரமணி
விடுதலை நாளேட்டினால் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்றவர்கள் அதனுடைய 78 ஆண்டு கால வரலாற்றில் பன்னூறாயிரம் பேர்கள்.
சமூகம் ஒட்டு மொத்தமாக பெற்ற விழுமிய பயன்களை கணக்கெடுத்து எண்ணிக்கைப்படுத்தப்படுவது எனில் (Quantity) முடியாத ஒன்று!
அவற்றை எல்லாம் தொகுத்தால் பல பாகங்கள் வரும் புத்தகத் தொகுப்புகளாகவே ஆகிவிடும்!
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரிய ரான மானமிகு பெரியவர் இராமசாமி அவர்கள், மதுரை ஹார்வி நகர்ப் பகுதி குடியிருப்பில் வாழுபவர்.
நாளும் (அவர் பதவியில் இருந்த காலம், முதற்கொண்டு) அவர் விடுதலை நாளேட்டைப் படிக்கத் தவறாத வாசகர் ஆவார்.
இன்று ஓய்வு பெற்று உறவினர்கள் உதவியுடன் நிம்மதியான - அமைதி யாக வாழும் அவர்கள், பெரியார் மருத்துவ உதவி நிதிக்கென - யாரும் கேட்காமலேயே அவராகவே முன் வந்து ஒரு லட்ச ரூபாய் காசோலை அனுப்பி வைத்து உதவினார்கள்.
பேராசிரியர்கள் நம். சீனுவாசன் அவர்களும் அவரது வாழ்விணையர் திருமதி ஜோதியவர்களும் சிறப்பாகக் மதுரை திருநகர் பகுதியில் கட்டியுள்ள புது இல்லத்திற்கு எங்களை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்து அழைத்திருந்தார்கள்.
அந்த திருநகர் செல்லும் வழியில்தான் ஆசிரியர் அய்யா இராமசாமி அவர்களும் இருக்கிறார் என அறிந்து, நானே அவர்களைப் பார்த்து அளவளாவி, மகிழ்ச்சியுடன் கலந்த அவர்தம் தொண்டறத்திற்கு நன்றியை நேரில் தெரிவித்து, இதுவரை நம் கண் ணுக்குத் தெரியாத அந்த பெரியார் பெருந்தொண்டரான முதியவரை நாம் நேரில் பார்க்கும், அரிய வாய்ப்பும் நமக்கு கிட்டும் என்பதற்காக நேரில் சென்றோம். கண்டோம். எல்லையற்ற மகிழ்ச்சி இரு சாராருக்கும்! எனது வாழ்விணையரும் வந்திருந்தார்கள்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில், அவர் ஒரு கடிதத்தையும், விடுதலை வளர்ச்சி நிதிக்காக காசோலை ஒன்றையும், (இருபத்தி அய்யாயிரத்திற்கு) அளித்து மகிழ்ந்தார்கள்.
அவர்தம் பெரு உள்ளம் - நன்றிக் குரிய நாயகனாக அவர் உயர்ந்து தொண் டறச் செம்மலாக உள்ள அவர்கள் தந்த கடிதம் ஒரு அருமையான பெட்டகமாகும்.
மிகப் பெரிய வசதி படைத்தவர் அல்ல அவர்; ஓய்வூதியம் பெற்று (அரசு பள்ளியில் பணியாற்றியமை யால்) வாழும் எளிய ஆடம்பரமற்ற ஒருவர்;
ஆனால் அவர் உள்ளம் பல வசதி படைத்தவர்களுக் கெல்லாம் இல்லாத பெரு உள்ளம்; தொண்டுள்ளம்; தூய உள்ளம்!
அய்யா நம் அறிவு ஆசானும் அவர்தம் அறிவாயுதமான விடுதலையின் தொடர் பணியும் இல்லாவிடில் நம் நிலை - மானமும் அறிவும் பெற்ற நிலை - என்னவாகியிருக்கும்? என்று உணர்ந்தே அவர் தம் எண்ணங்களை வடித்தெடுத்து, விடுதலையை ஊக்கப்படுத்தியுள் ளார்கள்.
திருப்பதிக்கு ஒரு நாள் வசூல் ரூ.3 கோடி - அதுவும் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து உண்டியலில் போட்டது!
சத்திய சாயிபாபா மறைந்த பின்னரும் - அங்கு நடைபெற்ற சொத்துப் பிரச்சினை அம்பலத்தில் அலசப்பட்ட பிறகும்கூட இப்போது அதற்குப்பின் உலக முழுவதிலி ருந்தும் வந்து சேர்ந்தது 1444 கோடி ரூபாய்களாம்!
பக்தி - மதம் - கடவுள் - அவதாரம் என்றால் அங்கே பாமரர்கள் - படித்த பாமரர்கள், பணக்கார, பதவிப் பாமரர்கள் கூட கொண்டு சென்று கொட்டுகின்றனர்!
எவ்வித கைம்மாறும் எதிர்பாராது தனது சொந்த சொத்தையும் - மக்கள் அவருக்கென தந்த சொத்தையும் - பாதுகாத்துப் பெருக்கி, இன்று அறக் கட்டளைகளாக்கி, பல்கலைக் கழகம் முதல் பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை - மருத்துவமனைகள் நூலகங்கள் வளர எத்தனையோ தொண்டறப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு வரும் நன்கொடைகளே அபூர்வம்! அபூர்வம்!! கழகப் புரவலர் தலைமை ஆசிரியரான திரு. இராமசாமி அவர்களின் கடிதம் இதோ:
ஹார்விபட்டி
16.06.2013
மதுரை ஹார்விபட்டி கதவு எண் 471-இல் வாழ்ந்துவரும், எம் ஊரில் விடுதலை நாளிதழின் முதல் வாசகரும் எனக்கு விடுதலை நாளிதழை அளித்து அறிமுகம் செய்தவருமான சு. அய்யாசாமி அவர் களின் நினைவாக விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்காக ரூபாய் 25,000/- (ரூபாய் இருபத்தையாயிரம் மட்டும்) மதிப்புக் கொண்ட 242329 எண்ணுள்ள (பாரத ஸ்டேட் வங்கியின் மதுரைக் கிளை) காசோலையை, ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகளாக இன்றுவரை விடுதலை நாளிதழுக்கும் நன்கொடையாளராக இருந்து கொண்டு (நன்கொடை யாளர் எண்: 1178) இன்றைய விடுதலை நாளிதழ் வளர்ச்சியையும், வண்ணப் படங்களுடன் வெளியிடப் பட்டு வந்து கொண்டிருக்கும் மாட்சி யினைக் கண்டு மகிழ்ந்து,
கீழ்க்கண்ட முகவரியில் வாழ்ந்து வரும் (கோ. இராமசாமி, கதவு எண்: 413, ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் அஞ்சல் அலுவலகம், மதுரை - 625005) நாள்: 16.6.2013-இல் நடைபெறவிருக்கின்ற படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் விடுதலை நாளிதழ் - ஆசிரியர் மானமிகு திரு. கி. வீரமணி அவர்களிடம் அளிக் கின்றேன்.
நீங்கள் கட்டுப்பாடு உடைய மக்களாக, பண்புடைய மக்களாக மாற வேண்டுமானால் அவசியம் விடுதலை போன்ற முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட பத்திரிகைகள் வாங்கிப் படிக்க வேண்டும்
விடுதலை நாளிதழ் - புதிய பணிமனையைத் திறந்து வைத்தபோது தவத்திரு குன்றக்குடி அடிகளார் 31.10.1965 இல் பேசினார். விடுதலை - வெளியூர் 3.11.1965இல் வெளி யிடப்பட்டது.
மதுரை-14
16.6.2013
அன்புடன்
கோ. இராமசாமி
நன்றி என்பது பயனடைந்தோர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்ப்பார்ப்பது சிறுமைக்குணம் என்றார் 1934ல் தந்தை பெரியார் அவர்கள்!
அன்று முதல் நாளது வரையில் நன்றியை எதிர்பாராத தொண்டே நம் பணி என்ற அறிவு ஆசானின் வெளிச்சம்தான் விடுதலையின் பாதையும் - பயணமும்!
(தொடரும்)
தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட உயிரையும் கொடுக்கத் தயார்!
தி.மு.க. தலைவர் கலைஞர் எழுச்சியுரை
சென்னை, ஜூன் 18- தமிழர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பட வைக்க உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று (17-6-2013) சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க.
நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:-
நான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்ற நிலையில், இன்றைய நிர்வாகக் குழு நடைபெற்று தீர்மானங்களையும் நீங்கள் நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றீர்கள். ஏன் பல ஆண்டு களாக எதிர்பார்த்த நிலை என்று சொன்னேன் என்றால், எப்போதுமே நம்முடைய செயற்குழு, பொதுக் குழு, நிர்வாகக்குழு இவைகளில், தீர்மானம் என்பது ஏதோ ஒரு துணைச் சடங்காகத்தான் கருதப்பட்டு, எல்லோரும் பேசி முடித்த பிறகு, ஒருவர் எழுந்து தீர்மானங்களைப் படித்து இதை யெல்லாம் நிறைவேற்றியதாக எடுத்துக் கொள் கிறோம் என்று சொல்வதுதான் சர்வ சாதாரணமாக நடைபெற் றிருக்கின்றது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் முற்றிலும் மாறுபாடாக, ஒவ்வொரு தீர்மானத்தையும் தீர்மானக் குழு ஏற்கனவே கலந்து பேசி, எழுதி, உங்கள் முன்னால் வைத்து நிறை வேற்றி, முடிவுரைக்கு என்னிடத்திலே வழங்கியிருக் கிறார்கள் என்பதை எண்ணும்போது, இப்படித் தான் நம்முடைய செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு இனிமேல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற அந்த எண்ணத்தை நான் கொள்ளுகின்றேன்.
இதை நீங்களும் கடைப்பிடித்ததற்கு இந்த நாள் ஒரு வழிகாட்டும் நாளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
வாய்க்கால் பிரச்சினையல்ல வாழ்வாதாரப் பிரச்சினை
தீர்மானங்களில் மிக முக்கியமாக நாட்டுப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே ஆய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன, வெளியிடப் பட்டிருக்கின்றன, உங்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றன. இந்த தீர்மானங்களில் மிக முக்கியமானது, சேதுக் கடல் பிரச்சினையாகும். நான் ஏன் இதை சேதுக் கடல் என்று சொன்னேன் என்றால், நம்முடைய நண்பர்கள் சிலர் இதை சேதுக் கால்வாய் என்று கூறியதன் காரணத்தால், நமக்கே இது சிறு கால்வாய் பிரச்சினை போலும், இந்தக் கால்வாய் பிரச்சினையை ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார் கள் என்று நினைக்கத் தோன்றும். இது வெறும் கால்வாய் பிரச்சினை அல்ல, வாய்க்கால் பிரச்சினை அல்ல, இது நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை. வருங்கால தமிழகத்தினுடைய பிரச்சினை. இன்றைக்கு இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டால், கால்வாய்தானே, வாய்க்கால் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டால், இது பெரிய சமுத்திரப் பிரச்சினை என்பதை கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏன் ஏற்பட் டிருக்கிற தென்றால், நம்முடைய பெருந் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் கண்ட கனவுகளில் ஒன்றாக கருதியது, கடைசி வரையிலே நிறைவேறும் என்று எதிர் பார்த்தது, அதற்காக வாதாடியது, போராடிய தெல்லாம் இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காகத் தான். அந்தத் திட்டத்தை சீர்குலைக்கின்ற முயற்சி நாம் எதிர்பாராத விதமாக இன்றைக்கு நடை பெறுகின்ற இந்த அரசின் சார்பிலேயே நடை பெறுவதை காணும் போது, வேதனைப்படுகிறோம். நாடு பாலைவனமாகும்!
எனக்கு இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சியின் மீது வேறு பல குறைகள் இருந்தாலும், வேறு பல ஆத்திரங்கள் இருந்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்கின்ற ஆதங்கம் இருந் தாலுங்கூட, மிக மிக கோபத்தை, ஆத்திரத்தை, எதிர் காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வைப் பாழாக்குகின்ற வகையில் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சியை ஒருக்காலும் நாம் அனுமதிக்க முடியாது. இன்றைக்கு அனுமதித்தால், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்ற செல்வி ஜெயலலிதா வின் அந்தக் கூற்றை உச்ச நீதி மன்றத்திலே கொண்டு போய் வழக்காக ஆக்கியிருக்கிறார்களே, அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால், நம்முடைய வாழ்க்கை - நம்முடைய என்றால், நம் தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிடும், பாலை வனமாக ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது இந்தத் தீர்மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இந்த ஆட் சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல இது. இது நம்மையே வருத்திக் கொள்கிற ஒரு பிரச்சினை. நம்முடைய எதிர் காலத்தை அழிக்கின்ற ஒரு பிரச்சினை. நம்முடைய எதிர்காலத்தில் வருகின்ற சந்ததியினருக்கு, நம்முடைய குழந்தைகுட்டி களுக்கு, பேரன் பேத்தி களுக்கு அவர்களுடைய வாழ் வாதாரங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடும் என்பதற்காகத்தான் இந்த நிலை. ஒரு நாடு தலை சிறந்த நாடாக விளங்க வேண்டுமானால், பொருளாதாரத் துறையில், சமுதாயத் துறையில், வாணிபத் துறையில் மற்றும் கலாச்சாரத் துறையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டுமேயானால், அதற்கு போக்குவரத்து என்பது மிக மிக முக்கிய மானது. அந்தப் போக்குவரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய தமிழகத்தை வளப்படுத்த, தமிழ் நிலத் தைச் செழிப்பாக வைத்துக் கொள்ள என்றைக்கும் தமிழகத்திலே பஞ்சம், பசி, பட்டினி என்ற அந்தக் கொடுமைகள் நேராமலிருக்க ஒரு நிரந்தரமான வழிவகை என்றால், அது சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாபெரும் திட்டங்கள்தான்.
அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக கை விட்டு, தமிழகத்தைப் பாலை நிலமாக ஆக்கி விட நாம் இன்றைக்கு அனுமதித்தால், எதிர் காலம் நம்மை சபிக்கும். அதை நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதிபட எடுத்துச் சொல்ல வேண்டும்.
சிறப்புப்பாயிரம்!
போராட்டம் என்று இன்றைக்கு நாம் அறிவிக் கின்ற நிலை பல கட்டங் களாக நடைபெற வேண் டிய ஒன்று. அதிலே ஒரு கட்டம் தான், இன்றைக்கு இந்த நிர்வாகக் குழுவிலே நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானம். அந்தத் தீர்மானத்தை சிறப்புப் பாயிரம் என்றே வைத்துக் கொள்ளலாம். இந்தத் தொடக்கக் கட்டத்திலே நாம் எடுக்கின்ற முடிவுகள், இறுதிக் கட்டத்திலே வெற்றிகரமாக நடைபெற்றது என்ற அந்த முடிவை நோக்கிச் செல்கிற போராட்டமாக இருக்க வேண்டும். ஏதோ ஆர்ப்பாட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் 100 பேர், 200 பேர் கையிலே கொடிகளைத் தாங்கி, அட்டை களைத் தாங்கி, அரசைக் குறை கூறி, கண்டித்து ஒலி எழுப்புவது மாத்திரமல்ல.
அந்த ஒலி எழுப்புவதற்கு முன்னால் மறைந்திருக்கின்ற நம்முடைய உணர்வுகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும். அந்த வகையிலே வரும் ஜூலை 8ஆம் தேதியன்று நம்முடைய தொடக்கக் கட்டப் போராட்டம். அதை எந்தெந்த வகையிலே நடத்துவது என்பதை அடுத்தடுத்து நாம் வெளியிடுகின்ற அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்தவிருக்கிறோம். ஜூலை 8, தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்லி யிருக்கிறோம். முதல் கட்டப்போராட்டம் என்று கூடச் சொல்லவில்லை. தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்கிறோம். தொடங்கி விட்டால், அந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நாம் வெற்றி பெறுகிற வரையிலே நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதற்காகத்தான், இதை முதற்கட்டம் என்று போட்டால், இரண்டாம் கட்டம், மூன்றாவது கட்டம் என்றெல்லாம் சலித்துப் போய் விடும் என்பதற்காகத் தான் தொடக்கக் கட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தத் தொடக்கக் கட்டப் போராட்டத்தில் நீங்கள் காட்டுகின்ற உணர்வும், நீங்கள் கட்டிக் காக்கின்ற ஒற்றுமையின் விளைவும் எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தை மாத்திரமல்ல, தமிழகத்தையே வாழ வைக்கக்கூடிய அளவிற்கு இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிர்வாகக் குழுவிலே நான் என்னுடைய உரையில் மிக மிக மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரையே இழக்கத் தயார்!
வெற்றி தோல்விகள் அல்ல - நாம் எதிர்பார்ப்பது. நாம் அடைய இருக்கின்ற ஒரேயொரு வெற்றி, விரும்புகிற ஒரேயொரு வெற்றி, தமிழ் நாட்டு மக்களை நம்முடைய காலத்திலே வாழ வைப்ப தற்கான பாதுகாப்பைச் செய்து விட்டுப் போனோம் என்ற அந்த வெற்றியைத்தான் நான் பெரும் வெற்றியாகக் கருதுகிறேன். அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு, எதிர்காலத் தமிழகம் இருண்ட நாடாக ஆகி விடாமல் இருக்க, பொருளா தாரத்திலே பொலிவு பெற்ற நாடாக இருக்க, வளங்களிலே எந்த நாட்டிற்கும் வளையாத, நிமிர்ந்த நாடாக விளங்க இது போன்ற திட்டங்கள் தேவை, அந்தத் திட்டங்களை வேண்டாமென்று சொல் வதே, அந்தத் திட்டத்தை அழிக்க நினைப்பதே - ஜெயலலிதா அல்ல, வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்களாக ஆக மாட்டார்கள், தீமை செய்தவர்களாகத் தான் ஆவார்கள். எனவே அந்தப் பழிக்கு அவர்கள் ஆளாக வேண்டாம் என்று நான் உங்கள் மூலமாக, இந்த நிர்வாகக் குழுவிலே கேட்டுக் கொண்டு, நாம் தொடங்குகின்ற போராட்டம் தொடங்கட்டும், அந்தப் போராட்டத்திற்கு முதல் கட்டம் எது, இரண்டாவது கட்டம் எது என்பதையெல்லாம் அவ்வப்போது தீர்மானித்து ஏடுகள் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவிப்பேன். கடைசி கட்டமாக, நாம் நம்முடைய உயிரையே இழக்கத் தயார் என்றாலும், அதற்கும் நாம் தயார் என்ற அளவிலே இந்தப் போராட்டத்திலே வெற்றியைக் குவிப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.
மோடியால் முண்டா தட்டும் சர்ச்சைகள்! நிதீஷ் குமார் சாடல்!
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு இல்லை; அவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர் என்று அய்க்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறி யுள்ளார்.
பாஜகவில் புதிதாகத் தலையெடுப் பவர்களுடன் (நரேந்திர மோடி) ஒத் துப்போக முடியாததே கூட்டணியில் இருந்து விலகக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிகார் மாநில பாஜகவினர் தங்கள் மீது சாட்டியுள்ள நம்பிக்கைத் துரோ கக் குற்றச்சாட்டையும் நிதீஷ் குமார் நிராகரித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அய்க்கிய ஜனதா தளம் கட்சி ஞாயிற் றுக்கிழமை வெளியேறியது. இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகள் நீடித்த கூட்டணி முறிந்தது. பிகார் மாநில அரசில் இருந்து 11 பாஜக அமைச் சர்கள் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து நிதீஷ் குமார், திங்கள்கிழமை கூறியது:
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஓரம் கட்டப் பட்டுள்ளனர். கட்சியில் மூத்தவர் களான வாஜ்பாய், அத்வானி போன்ற வர்களை அவர்கள் மறந்துவிட்டனர். மூத்தவர்களை மதிப்பதே இந்திய கலாசாரம். ஆனால், அவர்களை ஒதுக்கித் தள்ளுவது பாஜகவின் கலா சாரமாகவுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியது, அவசர கதியில் எடுக்கப் பட்ட முடிவு அல்ல. முழுமையாக பரிசீலித்து சரியான நேரத்தில் எடுக் கப்பட்ட முடிவு. பாஜக தலைவர்கள் எந்த உறுதிமொழியும் கொடுக்கத் தயாராக இல்லை. எங்கள் முடிவை ஒத்திப்போட வேண்டும் என்று மட் டுமே வலியுறுத்தி வந்தனர். கட்டா யத்தின் பேரில் கூட்டணியில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பாஜகவின் அணுகுமுறையின் தோல்வி காரணமாகவே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி னோம். மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமென்று ஒரு கட்சி விரும் பினால், பிற கட்சிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.
பாஜகவில் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் காலம் முடிந்துவிட்டது. இப்போது தலையெடுத்துள்ள புதிய வர்களுடன் எங்களால் ஒத்துப்போக முடியவில்லை. மாநில அளவில் பாஜகவினருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும் மத்தியில் உள்ள தலைவர்கள் மாநில பாஜகவினரின் நடவடிக்கைகளில் குறிக்கிடுவது அதிகரித்துள்ளது என்றார்.
பிகாரில் 11 பாஜக அமைச்சர்களை நீக்கியதை நியாயப்படுத்தி பேசிய நிதீஷ் குமார், "மாநிலத்தில் கூட் டணியை சுமுகமாக நடத்தவே முயற்சி மேற்கொண்டோம். இதற்காக மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு பாஜ கவினருக்கு அழைப்புவிடுக்கப்பட் டது. ஆனால் அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். எனவேதான் அவர்களை நீக்க வேண்டியிருந்தது.
இத்தனைக்குப் பின்னும் நாங்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்ட தாக குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை யில் துரோகம் செய்தது பாஜகவினர் தான். தங்கள் கட்சியின் மூத்த தலை வர்களுக்கு பாஜகவினர் துரோகம் செய்துள்ளனர் என்றார்.
அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்பு இதேபோலதான் நிதீஷ் குமா ரால் ஓரம்கட்டப்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், "சில ஏமாற்றுக்காரர்கள் கட்சியின் அதி காரபூர்வ வேட்பாளருக்கு எதிராக மாற்று வேட்பாளரை நிறுத்த ஜார்ஜ் பெர்னாண்டஸை அப்போது தூண் டினார்கள்.
இதன் பின்னர் அவருக்கு உரிய மரியாதை அளித்து மாநிலங்களவை எம்.பி. ஆக்கினோம். ஜார்ஜ் பெர் னாண்டஸ் மீது இப்போதும், எப்போ தும் எனக்கு மரியாதை உண்டு. மூத்த தலைவர்களை நாங்கள் மதித்து வருகிறோம் என்று பதிலளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியி லிருந்து அய்க்கிய ஜனதா தளம் விலகி யுள்ள நிலையில், பிகார் அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (தொலைத் தொடர்புத் துறை) அஜய் மக்கான் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிகார் அரசியல் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நீண்டகால அடிப்படையில் தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
அய்க்கிய ஜனதா தளத்துடன் காங் கிரஸ் கூட்டணி வைத்துக் கொள் ளுமா என்பது குறித்த கேள்விக்கு மக் கான் நேரடியாக பதில் அளிக்க வில்லை.
எனினும், எதிர்காலத்தில் பிகார் அரசியலில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும். நாட்டில் கூட்டணி அரசி யல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எனவே, ஒத்த கருத்துடைய, மதச்சார்பற்ற கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என மக்கான் தெரிவித்தார்.
அதேநேரம், கூட்டணி விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஏ.கே. அந் தோணி தலைமையிலான குழுதான் முடிவு செய்யும் என்றும் மக்கான் தெரிவித்தார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கி வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலை யில், பாஜக கூட்டணியிலிருந்து அய்க்கிய ஜனதா தளம் வெளியேறி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியிருப்பது குறிப் பிடத்தக்கது.
ஒரு புறம் ராகுல் காந்தியின் முயற் சியால் காங்கிரஸ் கட்சி படிப்படியாக முன்னேறி வருகிறது. மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுருங்கி வரு கிறது. வரும் மக்களவைத் தேர்தல் ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இடையிலான போட்டியாக அமை யும் என்ற கருத்து தவறானது.
காங்கிரஸ் சிந்தாந்தத்தை அடிப் படையாகக் கொண்ட கட்சி. எனவே, வரும் தேர்தலை குறிப்பிட்ட இருவ ருக்கு இடையிலான போட்டியாகக் கருதக் கூடாது என்று மக்கான் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போடுவதற்கு முன்பு, மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை திரட்டட்டும். குறிப்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என மக்கான் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அனைத்து பதவி களையும் ராஜிநாமா செய்வதாக அறி வித்தார். பின்னர் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து ராஜி நாமாவை திரும்பப் பெற்றார். ராஜிநாமா கடிதத்தில் மோடிக்கு உயர் பதவி வழங்கியது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தி என்றால் ஒழுக்கக் கேடே!
கடவுள் பக்தர்கள் இருக்கட்டும். இவர்கள் கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் இடத்திலாவது ஒழுக்கத்தை வைத்து இருக்கிறார்களா? ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்களா? என்பதுதான் அடிப்படையான கேள்வி.
தாருகாவனத்தில் இருந்த ரிஷி பத்தினிப் பெண்களைக் கற்பழித்தான் என்பதுதான் இவர்களின் முழுமுதற் கடவுளாகிய சிவனின் பிரசித்திப் பெற்ற சாதனை!
படைத்தல் - கடவுள் என்று இலாகா பிரித்து வைத்திருக்கும் பிர்மாவின் பெருஞ்செயல் என்ன தெரியுமா? தான் பெற்ற பெண்ணாகிய சரசுவதியின் கற்பைச் சூறையாடி கழிபேருவகை அடைந்தான் என்பதுதான்.
இந்தக் காலித்தனத்தைச் செய்ததோடு மட்டுமல்லாமல் புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, மகள், பிள்ளை-யாரோடாயினும் கூடலாம் என்கிற தர்ம வாக்கியத்தைக் கீர்த்தியுடன் புகன்று வேறு சென்று இருக்கின்றான்.
இவர்களின் மும்மூர்த்திகளுள் இன்னொரு கடவுளும் இருக்கின்றான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா காத் தலாம்!
இவன் காமக் களியாட்டங்களுக்காகவே - ஓர் அவதாரமே (கிருஷ்ணாவதாரம்) எடுத்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஆட்டம் போட்டவன்! சின்ன வயதில் வெண்ணைய் திருடி பெரிய வயதில் பெண்ணைத் திருடியவன் என்று பக்த சிரோன்மணிகள் எச்சில் ஒழுக ஒழுகப் பேசும்போது பார்க்க வேண்டுமே!
இப்படிக் கடவுளைப் படைத்துக் கொண்டவர்கள் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலைப்படுவார்கள் என்று எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனமே!
இந்து மதத்தின் அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பதே தப்பித் தவறிக் கூட மனிதன் ஒழுக்கமாக வாழ்ந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையான அஸ்திவாரத்தின் மீதுதான்!
எவ்வளவு பெரிய பாவங்களுக்கும், - ஏன் - பஞ்சமா பாதகங்களுக்கும் சுலபமான பிராயச்சித்தங்களை ஏற்படுத்தி வைத்திருப்பவர்களாயிற்றே இவர்கள்!
பெரிய பாவங்கள், சிறிய கழுவாய்கள் - இதுதான் இந்துமதம். பன்னிரெண்டு வருடம் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்திருந்தாலும் கும்பகோணம் மகாமகத்தன்று அந்தக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் சகலவிதமான பாவ மூட்டைகளும் அக்கணமே கரைந்து ஓடி மோட்சக்கதவு முந்தித் திறந்து மேளவாத்தியங்களுடன் கூப்பிடும் என்றால், பாவம் செய்யப் பயப்படுகின்றவன் பைத்தியக்காரனாகத் தானே இருக்க முடியும்?
விஷ ஊசி போட்டுக் கொன்று பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்தவன் திருப்பதி உண்டியலிலே ஒரு சிறு காணிக்கையைக் கொடுத்தான் என்றால் அதில் அவனுக்கென்ன கஷ்டம், நஷ்டம்? பாப விமோசனம் கமிசன் அடிப்படையில் சுலபமாகக் கிடைத்துவிடுகிறதே!
விபசாரவிடுதி நடத்திப் பல கொள்கைகளைத் தொடர்ந்து செய்த ஆட்டோ சங்கர் திருவான்மியூரிலே கோயில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடத்திக் கொடுத்திருக்கின்றான் என்றால் அது இந்துமதம் காட்டிய வழிதானே?
திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் எந்தப் பாதையைக் காட்டுகின்றது! (40-ஆவது பாடலைக் காண்க).
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனச் சிறுவன், பசுவுக்கு அருகம்புல் போட்டு, கோயில் திருக்குளத் தீர்த்தத்திலே குளித்து எழுந்த மாத்திரத்திலேயே அம்மையுடன் அப்பனும் தோன்றி, மோட்ச சாம்ராஜ்யத்திற்கு அழைத்துக் கொண்டனர் என்றால் ஒழுக்கத்திற்கும் உதார குணங்களுக்கும், சங்கராச்சாரியார்களும் அவர்களின் இந்து மதமும் வைத்திருக்கிற கட்டளைக்கல் என்னவென்று தெரியவில்லையா?
பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்
அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜைனர்களையும், பவுத்தர்களையும் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்ற கொலை பாதகங்களைத் திருவத்திபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் இன்றைக்கும் சிற்பங்களாகக் காணலாமே!
யதாஹிசவ்ர;
ஸ்யத தயாஹி புத்த;
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி
என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறதே - இதற்குப் பொருளென்ன?
திருடனும் புத்தனும் ஒன்றாவான். அவன் நாத்திகன் என்று இந்துமதத்தின் இதிகாசம் கூறி இருக்கிறதே. இந்த நிலையில் மாஜி சங்கராச்சாரியார் புத்தரின் நாத்திகவாதத்தையும், ஜைனர்களின் நாத்திகத் தத்துவத்தையும் போற்றிப் புது அகவல் பாடுகின்றார் என்றால், பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதப் பாசாங்குத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பவுத்தர்களையும், ஜைனர்களையும் வாதில் வெல்ல யோக்கியதை இல்லாத திருஞான சம்பந்தப் பார்ப்பனர் - சூழ்ச்சி வலைகளைப் பின்னி, சூதாக அவர்களைக் கொன்றொழித்த கதை எல்லாம் வரலாற்றில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன என்று சங்கர மடங்கள் மனப்பால் குடிக்கின்றனவா?
கையில் சரக்கு இருந்திருந்தால் உட்கார்ந்து மணிக்கணக்கில் பவுத்தர்கள், ஜைனர்களுடன் விவாதப் போர் நடத்தி இருக்கலாம்.
கையாலாகாத் திருஞான சம்பந்தரோ கடவுளிடம் போய் அல்லவா மன்றாடுகின்றார், மடிப்பிச்சைக் கேட்கின்றார்.
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லிய மணோடு தேரரை
வாதில் வென்றழிக்கத்
திருவுள்ளமே.
இவர்களோடு வாதில் வெல்லக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று மன்றாடுவதிலிருந்து இவர்களின் கோழைத்தனம் புரியவில்லையா?
வாதில் வெல்ல மட்டுமா ஆண்டவனிடம் அடிபணிந்து கிடக்கின்றார்? ஜைன பவுத்தர்களின் அழகிய பெண்களின் கற்பினை அழிக்கவும் கடவுளிடம் வரம் கேட்கின்றார் திருஞான சம்பந்தர்.
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே
என்று பாடுகின்றார் என்றால், பர்ப்பனீய வேதமதக் கொடுங்கோலர்களின் கேவலப் புத்தி எந்த எல்லை வரை தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பக்தியின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவும் செய்துவிட்டு, இன்றைய தினம் ஆரியம் மாஜி சங்கராச்சாரியார் உருவில் பவுத்த, ஜைன நாத்திக வாதங்கள் பற்றிக் கசிந்துருகுகிறது என்றால்-இது எவ்வளவு நீலித்தனம்! போலித்தனம்!! போக்கிரித்தனம்!!!
பவுத்தர்களும், ஜைனர்களும், புனல்வாதம், அனல்வாதம், புத்திவாதம் எல்லாம் செய்தனர் என்று மாஜி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
பவுத்தர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்க முடியாமல் விழி பிதுங்கினார்கள்.
யாகத்தில் கொல்லப்படுகின்ற பசு சொர்க்கத்தை அடைவது உண்மையானால் யாகம் செய்கிறவன் தன் தந்தையைக் கொன்று சொர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைத்துக் கொல்லப்படுகின்ற பசுவைக் கட்டி வைக்கின்ற தூண்) உண்டுபண்ணிப் பசுக்களைக் கொன்று ரத்தச் சேற்றை உண்டுபண்ணுபவன் சொர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்?
என்பதுபோன்ற அறிவு பொருந்திய ஆற்றல் கணைகளை அடுக்கடுக்காக ஆரியத்தை நோக்கிப் பவுத்தம் விடுத்தது.
தீர்மானம்
அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக்காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.
(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)
பகுத்தறிவு
பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும்.
இன்று எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணு கிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் என தள்ளப்படும்.
நாம் கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளி விடவில்லையா?
-குடிஅரசு, தொகுதி 32, பக்கம் 22
சு...தந்திரம்
நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)
ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.
இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!
இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.
தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.
இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?
- மயிலாடன்
செய்தியும் சிந்தனையும்
சந்தி... சிரிக்கிறது!
செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.
சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?
அரசு என்ன செய்ய உத்தேசமோ!
திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.
தீர்மானம் வருமாறு:
ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.
இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.
அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.
இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.
அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!
தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?
பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?
நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)
சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.
எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.
அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!
சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.
திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.
தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.
இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.
அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.
சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!
விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.
பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.
அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.
இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.
தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.
இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .
- கி.வீரமணி
தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்
சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.
குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.
சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.
உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.
சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.
ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.
இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.
மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?
இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.
தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?
இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.
ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?
சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?
எங்கே பார்ப்போம்? 20-06-2013
மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்
பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:
தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.
- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.
எருமை போவதுபோல்...
எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)
Post a Comment