மே நாள் மேதினி போற்றும் நாள்
மே நாள் - ஆண்டுதோறும் பிறக்கும் மே
முதல் நாள் உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான ஆரவாரமும், எழுச்சியும்,
போராட்டமும் நிறைந்த நாள். மே நாள் விழா நாள் என் கொண்டாடப்படுகிறது. ஆனால்
அது பிறந்த போது அப்படியில்லை. அடிமைத்தளைகளையும், அடக்கு முறைக்
கொடுமைகளையும் உடைத்து வெளிவர உழைக்கும் வர்க்கத்திற்கு ஓடாகிப் போன
உழைக்கும் வர்க்கம் புரட்சிக் குரல் எழுப்பிய நாள். அந்த நாள் பிறந்தது
எங்கே?
உலகின் தலைசிறந்த பொது வுடைமை நாடாக
விளங்கிய, முதலாளித்துவத்திற்கு அறைகூவல் விடுத்த சோவியத் மண்ணிலா? ஆம்,
இல்லை, என்ற பதில்தான் வருகிறது. என்ன ரஷ்யாவிலே மே தினம் பிறக்கவில்லையா.
சரி, ரஷ்யா இல்லையென்றால் சீனாவில்,
அங்கேரியில், என்று வரிசையாகப் பொது உடைமை நாடுகளையெல்லாம் சொல்லிப்
பார்த்தால் எந்தப் பொதுவுடைமை நாடும் மே நாள் பிறப்பின் தாய்த்தகுதி
பெறவில்லை.
மே நாள் பிறந்தது பொதுவுடை மைப்
பூங்காக்களில் அல்ல - முதலாளித்துவ ஆதிக்க அரசுகளின் தாயகமான வல்லரசுகளில்
மாபெரும் வல்லரசான அமெரிக்காவில் எனில் உங்கள் விழிகள் விரிப்பில் -
வியப்பில் மாற்றம் பெறலாம்.
மே நாள் பிறந்தது 19ஆம் நூற்றாண்டில் 1884
ஆம் ஆண்டில் அக்டோபர் திங்கள் 7ஆம் நாளில் அமெரிக்க நாட்டில் தீர்மானம்
ஒன்று நிறைவேறுகிறது.
தீர்மானத்தை அமெரிக்கத் தொழிற்சங்க
நிறுவனம் ஆன தொழிற்சங்க சம்மேளனம், அமெரிக்க, கனடா நாட்டுத்
தொழிற்சங்கங்கள் ஆகியன ஒருங்கிணைந்து மாநாடு ஒன்றினை - அது அவர்களின்
நான்காவது மாநாடு. அம்மாநாட்டைக் கூட்டுகின்றனர். பின்னர் இதற்குப் பெயர்
அமெரிக்கத் தொழிற்சங்கக் கூட்டிணைவு merican Federation of Labour (AFL)
எனப் பெயர்.
11/886 ஆம் ஆண்டு மேத் திங்கள் முதல் நாள்
முதல், எட்டு மணிநேரம் தான் தொழிலாளரின் சட்டப்படியான வேலை நேரமாக இருக்க
வேண்டும். என அமெரிக்கத் தொழிற்சங்கக் கூட்டிணையும், அமெரிக்கா, கனடா,
தொழிற்சங்கங்களும் சேர்ந்து இந்த மாநாட்டின் பிரதிநிதிகளான நாங்கள்
தீர்மானிக்கிறோம்.
என்பது தான் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம்.
ப்பூ இது என்ன புரட்சிகரமான தீர்மானம்.
எட்டு மணிநேர வேலை தான் இருக்க வேண்டும் என்பது 36 கோரிக்கை. அதற்குப் போய்
இவ்வளவு முதன்மை நிலையா என விபரம் குறைந்தவர்கள் கேட்கலாம்.
ஆனால் 1880களில் அல்லது அதற்கு முந்தைய
ஆண்டுகளில், ஊதிய உயர்வு கேட்டோ, போனஸ் கேட்டோ, புதிய ஊதியக்குழுவை
நியமிக்க வேண்டியோ போராடவில்லை. பின் எதற்காகப் போராடினார்கள். எதற்காக
வேலை நிறுத்தம் செய்தார்கள் என்று கேட்டால் வேலை நேரத்தைக் குறை என்பது
தான் வேண்டிய கோரிக்கையாக, போராட்ட முதல் நோக்கமாக இருந்தது.
ஆம், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய அளவிற்கு மோசமான அவல நிலை தொழிற் கூடங்களில் இருந்தது.
சில தொழிற்கூடங்களில் 18 மணி நேரம், 20
மணி நேரம் என்று பாவ, புண்ணியம் பார்க்காமல், பசித்தவன் படும் துயரம்
பார்க்காமல் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டார்கள்.
தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைக் குக்
குரல் கொடுத்த வ.உ.சி.காலத்தில் சில ஆலைகளில் ரேகை பார்த்து வேலை செய்வது,
அதாவது வேலைப்பளுவினால் விரலில் ரேகை வெளியே தெரிய வேலை செய்ய வேண்டிய நிலை
இருந்தது.
அதேபோல் நிலைம அமெரிக்காவில் இருந்தது.
இதற்குச் சான்று, ஆதாரம் இருக்கிறது. தொழிலாளர்களின் வழக்கறிஞர் (Working
Men’s Advocate) எனும் ஏடு 1834ல் நியூயார்க்கில் நடந்த ரொட்டித்
தொழிலாளர்களின் பணி முடக்கத்தின் போது கண்டவற்றை எழுதியது.
ரொட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள
கூலியாட்கள் அடிமைத்தனத்தை விடவும் கேவலமான நிலையில் ஆண்டுக்கணக் கில்
அவதியுற்று வருகிறார்கள். 24 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டி யிருக்கிறது
எனவே 1830, 1840 ஆண்டுக் காலங் களில் உழைக்கும் மக்கள் போராடிய தெல்லாம் 10
மணி நேர வேலை நேரத்திற்காகத்தான். ஆம் முதலில் 8 மணி நேரம் என்று எண்ணிக்
கேட்க வில்லை 10 மணி வேலை நேரத்தைத் தான் கேட்டார்கள். ஏனென்றால் 10 மணி
நேர வேலை என்பதே வெறும் வாய்ப்பாகக் கருதினர்.
1837இல் அமெரிக்க அரசு ஊழியர் களுக்கு 10
மணி நேர வேலை தான் என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அறி வித்தார். எனினும்
தனியார் நிறுவனங் களில் மாற்றம் இல்லை.
அளவே 1880களில் தான் 8 மணி நேர வேலை என்று
போராடத் தலைப்பட்டனர் எனில் அதற்குக் காரணம் வேலை நேரக்குறைப்பு
இயக்கங்கள் உலகம் முழுவதும் பரவியதே.
ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர
வேலை, எட்டு மணி நேரப்பொழுது போக்கு, எட்டு மணி நேர உறக்கம் என ஒரு நாளை 24
மணி நேரத்தை எட்டு, எட்டு மணிநேரங் களாகப் பங்கிட்டுக் கொண்டனர். 1856இல்
அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் பிற நகரங்களில் இயலவில்லை.
இங்கே இன்னொரு கொடுமை நடந்துவிட்டதையும்
சொல்லாமல் இருக்க இயலவில்லை. 1875ஆம் ஆண்டில் பென்சில் வேனியா மாநிலத்தில்,
எட்டு மணிநேரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பத்து நிலக்கரிச்
சுரங்கத் தொழிலாளர்கள் தூக்கு மேடை ஏறினர்.
1877ஆம் ஆண்டில் அரசு, அரசு சார்பு
நிருவாகத்தவர்களை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினர். பல்வேறு
அடக்கு முறைக்கு ஆளாயினர் என்பது சொல்லாமலே விளங்கும். எனினும் Knights of
Labour எனும் ஒரு சங்கம் இந்தப் போராட்டத்தின் வலிமை யினால் இரண்டு இலட்சம்
உறுப்பினராக இருந்து எண்ணிக்கையை ஏழு லட்ச மாகப் பெருக்கியது ஒரு மாபெரும்
வெற்றிப்படி.
1886 மே முதல் நாள் அமெரிக்கா முழுவதும்
வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் தொடங்கி விட்டன. சிகாக்கோ நகர்
போராட்டத்தின் மய்யக் களமாக விளங்கியது. மே முதல் நாளுக்கு முந்திய
ஞாயிறன்று 25,000 தொழி லாளர்கள் கொண்ட ஒன்றுபட்ட அணி வகுப்பு ஒன்றினை 25000
தொழிலா ளர்கள் அணி வகுப்பு எனில் அது சாதாரணமானதல்லவே, அதனை தொழிற்சங்கக்
கூட்டிணைவு, நைட்ஸ் ஆஃபலேபர், சமதர்ம தொழிற் கட்சி ஆகியன இணைந்து நடத்தின.
மாபெரும் போராட்டம், அதற்கு முன் அத்தகைய பிரம்மாண்ட போராட்டம் நடைபெறாத
போராட்டம் வெற்றி வாயிலைத் தொட்டுவிட்டது.
முதலாளித்துவமும், அவர்களுக்கு முழுத்
துணையாய் நின்ற அரசுகளும் கையைக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு
வாளாவிருக்கவில்லை. தங்கள் வஞ்சக வலையை விரித்தனர்.
மே முதல் நாள் வேலை நிறுத்தத்தைத்
தொடர்ந்து மே மூன்றாம் நாள் ஹேஅங்காடிச் சதுக்கத்தில் (Hay Market)
மக்கார்மிக் உழுபடைக் கருவித் தொழிலாளர்கள் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள்.
காவல்துறை அவர்கள் மீது தாக்குதல்
நடத்தியது. தொழிற் சங்கம் துவக்குவதே நாட்டுக்கெதிரான குற்றமாகக் கருதப்
பட்ட காலம் அது. சூழ்ச்சி செய்தனர், சதி புரிந்தனர் என்று தொழிலாளர்
தலைவர்களைத் தூக்கில் தொங்கச்செய்தலும் நடைபெற்றது. காவல்துறையின் கண்
மூடித்தனமான முதல் நாள் தாக்குதலில் சிலர் மாண் டனர் மற்றும் பலர்
படுகாயமுற்றனர்.
இதனைக் கண்டித்து மே 4ஆம் நாள்
கண்டனக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் முடியும் வேளையில்
காவல் துறையினர் கொடுந்தாக்குதலைத் தொடர்ந்தனர். அவ்வேளையில் - எங்கிருந்தோ
ஒரு வெடிகுண்டு வந்து வீழ்ந்தது. காவல் துறை அலுவலர் - சார்ஜெண்ட் ஒருவர்
இறந்தார். பிறகு அங்கே காவல் துறையினருக்கும் தொழிலாளருக்கும் இடையில்
கடும் மோதல் ஏற்பட்டு போராட்டம் ரத்தக்களரியானது.
ஏழு காவலர்களும், நான்கு தொழி லாளர்களும்
செத்து மடிந்ததனர். ஹேஅங்காடி இரத்தச்சேற்றில் உழன்றது. பார்சன்ஸ், ஸ்பைஸ்,
பிஷக், ஏஞ்சல் ஆகியோர் மீது ஆதிக்க வர்க்கம் சதிக்குற்றம் சுமத்தித்
தூக்குக் கயிற்றில் உயிரிழக்க வைத்தது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம்
எழுச்சி பெற்று 1888 டிசம்பரில் செயிண்ட்லூயிசில் மாநாடு கூட்டியது. அந்த
மாநாட்டில் தான் 1890 மே முதல் நாள் மீண்டும் 8 மணிநேரக் கோரிக் கையை முன்
வைத்துப் போராட முடிவுச் செய்தல்.
1889 ஜூலை 14இல் பிரெஞ்சுப் புரட்சியின்
போது பாஸ்டிஸ் சிறை உடைத்த, வீழ்த்த நூற்றாண்டு விழா வினை சமதர்ம
இயக்கங்களின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பாரிஸ் நகரத்தில் கூடி
அனைத்துலகத் தொழி லாளர் கூட்டிணைவை நிறுவினார்கள்.
1890 மே முதல் நாளில் மீண்டும் ஓர் எட்டு
மணி நேர வேலை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்திருப்பதால் அதே மே நாளை,
அனைத்து நாட்டு ஆர்ப்பாட்ட நாளாக நிகழ்த்துவது என்று முடிவு செய்தனர்.
இவ்வாறுதான் மே நாள் விழா - மே நாள் ஆன வரலாறு பிறந்தது.
இந்த நாளைத் தந்தை பெரியாரும், பேரறிஞர்
அண்ணாவும் பெரிதும் போற் றிக் கொண்டாடி, இந்த மண்ணில் வாழும் உழைக்கும்
தோழர்களுக்கு உயர்புணர்வை ஊட்டினர்.
அந்த வழியில் வந்த கலைஞர் அரசு மே
மாதத்திய முதல் நாளின் சிறப்பை உணர்ந்து மே முதல் நாள் ஊதியத் துடன் கூடிய
விடுமுறை நாளாக அறிவித்துத் திராவிட இயக்கம் என் றும் உழைக்கும் மக்கள்
கூட்டத்தின் பக்கமே என்று அறிவித்தது.
---------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் -"விடுதலை” 30-4-2013
12 comments:
மே தின வாழ்த்துக்கள்
நாளை மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் உரிமையை மீட்ட உன்னதத் திருநாள்!
உழைப்பவரே உயர்வானவர் என்பதனை மறுக்கும் ஜாதி உள்ள சமுதாயத்தில், மீண்டும் ஒரு புதிய புரட்சி பூத்து, சமத்துவ சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் - நம் நாட்டில் உழைப்பே உயர்வுதரும் என்று சொன்னால் மட்டும் போதாது; உழைப்பவரையும் உயர்த்திடும் உரிமை பெற்ற புதியதோர் சமுதாயம் பூக்கட்டும்!
தந்தை பெரியார் விரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் உரிமையும், லாபத்தில் பங்கும் தந்து - முதலாளி - தொழிலாளி பேதம் மறைந்து பங்காளிகள் அனைவருமே என்ற சமத்துவம் மலரச் சங்கநாதம் செய்வோம்!
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2013
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது
சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்
30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).
தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மான எண் (2)
ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!
(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மான எண் (3)
இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு
இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.30-4-2013
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....
இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த பொறுக்கு மணிகள்:
தலைமைக் கழகம் தொடர்ந்து கிளைக் கழகம் வரை ஒரு வலைப்பின்னல் (Network).
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் களுக்குப் பொறுப்பான மாவட்டங்கள் பற்றிய இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட அறிக்கை தாக்கல்.
மாவட்டக் கழகத் தலைவர்கள் ஒன்றிய வாரியாக சுற்றுப் பயணம் மாதம் ஒரு முறை.
பிரச்சார முறையில் புதிய அணுகுமுறைகள், இணைய தளம், கணினி இவற்றையும் பயன்படுத்துதல் அவசியம். கழகச் செயல்பாடுகள், மறுப்புகள், பொதுச் பிரச்சினகளில் நமது செயல்பாடுகள் அவ்வப்போது இணையதளத்தில் இடம் பெற வேண்டும்.
கழகத்தின் செயல்பாடுகள் அதிகம். ஆனால் அவை பற்றிய விளம்பரம் குறைவு; சரி செய்யப்பட வேண்டும்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு; மாநகரங்களில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய வாரியாக நடைபெற வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சரிவர நிறைவேற்றப் பட உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் பெண்களைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழிகள் - சிந்தனைகளை விரிவாகப் பரப்புவதற்கு உரிய நேரமாக இக்கால கட்டத்தைக் கருத வேண்டும்.
ராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான போராட்டத் திட்டம் அறிவிப்பு வெளி வரும்.
ராஜபாளையம் மாநாட்டை ஏதோ இளைஞரணி மாநாடாக மட்டும் கருதாமல் அனைத்து அணியினரும் குடும்பம் குடும்ப மாகத் திரள வேண்டும்.
பயிற்சிப் பட்டறை ஆண்டு முழுவதும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட வேண்டும்.
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)
சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும்.
தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.
இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.
இவ்வளவுக்கும் 2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.
2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?
இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..
இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?
இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும்.
தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.
நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.
முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!
தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!
ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.
மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.
வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.
மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.
எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)
இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.
ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.
நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.
அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.
இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.
இது ஓர் உலக இயக்கம்;
மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!
இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!
மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!
ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!
ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!
ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!
மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;
கேட்கட்டும் ஜெயபேரிகை!
- மின்சாரம்
பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்
எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.
(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)
கேள்வியும் - பதிலும்
- சித்திரபுத்திரன்
கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.
பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.
இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.
ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
குடி அரசு - வினா விடை - 29.10.1933
பகுத்தறிவும் - சுயமரியாதையும்
மே தினத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் மானமிகு செ. குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் சுயமரியாதையும், பகுத்தறிவுமே அடிப்படை என்ற அழகான, ஆழமான கருத்தினைக் கூறியுள்ளார்.
இதனை திராவிடர் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லர், (முக்கியமாக அழுத்தமாகக் கடைபிடிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றாலும்) தமிழர்கள் அனைவரும் உணரவும், கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.
இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து உலக மானுடத்திற்கே கூடத் தேவையானதுதான்.
திருவள்ளுவரின் திருக்குறளில்கூட ஏழு சொற்கள் இடம் பெறும்; தந்தை பெரியார் அவர்கள் வடித்துக் கூறியதோ நான்கே நான்கு சொற்கள்.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு - இந்தக் கருத்தின் கருவைத் தான் கலைஞர் அவர்கள் வேறு சொற்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் அடிப்படை என்று கூறியுள்ளார்.
மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி கூறுவார். ஒரு இயந் திரத்தின்மீது மனிதன் எச்சிலை உமிழ்ந்தால் அதற்குக் கோபம் வரப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்லவே.
காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பெறாத உள்ளம்
என்பார் புரட்சிக் கவிஞர்.
தமிழர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்குக் காரணமே இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனீயம் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டில், பக்தி எனும் போதை மருந்துக்குப் பலியாகி, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பறி கொடுத்திருப்பதை மறுக்க முடியுமா?
உலகத்தில் எந்த நாட்டிலாவது கேள்விப்பட்ட துண்டா? கடவுள் தனது முக்கிய நான்கு உறுப்புகளிலிருந்து மனிதர்களை பிறவிப் பேதத்தை அடிப்படையாக வைத்துப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளதா?
அர்த்தமுள்ள இந்துமதம் என்று சொல்லும் இந்தப் பாழும் மதத்தில்தானே பிர்மா எனும் படைத்தல் கடவுள், தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத் தார், தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தார், இடுப்பிலிருந்து வைசியனைப் படைத்தார், பாதங்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தாராம்.
இந்த நான்காம் ஜாதியான சூத்திரர்கள் அடிமைத் தொண்டு செய்ய வேண்டியவர்கள், பார்ப்பனர்களின் வேசிப் புத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளனர் என்பதோடு இன்று வரை இதன் அடிப்படையில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று எழுதியதை இன்றைய உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் நாம் 2013ஆம் ஆண்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, நம் உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதே!
இன்னும் தமிழன் பக்தியின் பெயரால் செருப்படித் திருவிழா நடத்திக் கொண்டு கிடக்கின்றானே! ஒருவனுக்கொருவன் விளக்கமாற்றால் அடித்துக் கொண்டு கிடக்கிறானே!
வெட்கப்பட வேண்டாமா? விஞ்ஞானி எனும் நிலையை அடைந்தவன்கூட மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம்) குடிக்கிறானே! கோயிலுக்குள் சென்று பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கூறிக் கைகட்டி நிற்கிறானே!
பார்ப்பானை உயர் ஜாதியான் என்று ஒப்புக் கொண்டு தன் வீட்டு நிகழ்ச்சிகளை அவனை அழைத்து நடத்தி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தானே செய்கிறது!
சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாததால் தானே - பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பொழுது பொங்கி எழும் உணர்ச்சிக்கு ஆளாவ தில்லை.
நிஜம் எது, நிழல் எது என்று தெரியாமல் எதிரிகள் விரிக்கும் வலையில் தமிழன் விட்டில் பூச்சியாக விழுவதற்குக் காரணம் - தந்தை பெரியார் எடுத்துச் சொன்ன - கலைஞர் தொடுத்துச் சொன்ன அந்தவுணர்வு இல்லாது போனதுதானே!
தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தையும் இணைத்துக் கொள்வீர் தமிழர்களே! 2-5-2013
பகுத்தறிவு
மதம், மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)
மானங்கெட்ட கோயில் விழா விளக்கு மாற்று அடி பரிமாற்றம்
ஆண்டிபட்டி, மே 2- ஆண்டிபட்டி அருகே கோயில் விழாவில் மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலை வில் மறவப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூறாண்டுகள்
ஜனநாயகமா - காலி நாயகமா?
ஜனநாயகமா - காலி நாயகமா?
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 681 கோடீசுவரர்களும், 220 குற்றவாளிகளும் (13 பேர் கொலைக் குற்றவாளிகள்) போட்டியிடுகின்றனர்.
இது என்ன ஜனநாயகமா - காலி நாயகமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!
#####
செவ்வாய்க்கிரகத்தில்
குடியேற விருப்பமா?
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விளம்பரம் செய்திருந்தது. மூன்றே நாளில் 20 ஆயிரம் விண்ணப்பம் குவிந்தது. இதற்குப் பிறகாவது செவ்வாய்த்தோஷம் பற்றிப் பேசுவதை இந்துத்துவாவாதிகள் கை விடுவார்களா?
Post a Comment