Search This Blog

8.5.13

போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?

இலங்கை: காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணி கலந்துகொள்ளமாட்டார்
போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி? தமிழர் தலைவர் அறிக்கை
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணியார் பங்கேற்க மாட்டார் என்பது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள் ளார். அறிக்கை வருமாறு:

அய்.நா. அளித்த அறிக்கை

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.

இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி யுள்ளது - இரண்டாம் முறையாக.

முன்பு, முதற்கூட்டத்தில் - நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே - அதன் வன் மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித் துள்ளன.

இலங்கையில் நடைபெறக்கூடாது என்று...

இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.

காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானாவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.

டெசோ சார்பிலும் வலியுறுத்தப்பட்டது!

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப் படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத் தினர்.

டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.

வேதனைக்குரிய செய்தி!

வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே - இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!

எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கை யில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!

அவலமான அவமானம்!

உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர் களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.

என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது!
வரவேற்கத்தக்கது!

1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணி யார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள் ளாமல் - பங்கேற்காமல் நடைபெறுவதே முதல் முறையாகும்!

ராஜ ரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.


-----------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.  சென்னை --"விடுதலை”  8.5.2013

37 comments:

தமிழ் ஓவியா said...


கருநாடகத் தேர்தல்: தமிழர் தலைவரின் கருத்து


கருநாடக மாநிலத்தில் மீண்டும் மதச் சார்பின்மைக்கு - காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைத்ததின்மூலம் - வெற்றி கிடைத்துள்ளது.

5 ஆண்டுகாலம் ஊழலுக்குமேல் ஊழல் - சுரங்கமாக இருந்த பா.ஜ.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தகுதியும் கிடைக்கவில்லை!

அத்வானி, மோடி முதலிய பல பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் - எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை என்ற நிலைதான்!

மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பது வெறும் பகற்கனவே என்பதற்கு முன்னோடி சாட்சியமே கருநாடகத் தேர்தல்.

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதன் விளைவே இம்முடிவுகள்!

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு சமத்துவ பூமி, சமூகநீதி கொடி பறக்கக்கூடிய பெரியார் மண்
தவறான பாதைக்குப் போனவர்கள் சரியான பாதைக்கு வரவேண்டும்
சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டில் தலைவர்கள் (சென்னை பெரியார் திடல், 7.5.2013)

சென்னை, மே 8- தமிழ்நாடு சமத்துவ பூமி, சமூக நீதி கொடி பறக்கக் கூடிய பெரியார் மண்; தவறான பாதைக்குப் போனவர்கள் சரியான பாதைக்கு வரவேண்டும் என சென்னையில் நடைபெற்ற சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டில் கருத்துரையாற்றினார் தமிழர் தலைவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று (7.5.2013) மாலை 5.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தலைமையேற்று, இவ்விழாவிற்கு வந்து கருத்துரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி முகமது சிக்கந்தர் ஆகியோருக் குப் பயனாடை அணிவித்தார்.

இம்மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரவிக்குமார் வரவேற்றுப் பேசினார்.

மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டில் தீர்மானத்தை வாசித்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் வருமாறு:

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று மாமல்லபுரத்தில் நடத்தப்பட்ட ஜாதிச் சங்க விழாவில் பங்கேற்க வந்தவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையருகே உள்ள மரக்காணம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தி, பலரைக் காயப்படுத்தியதுடன், வீடுகளைக் கொள்ளையடித்து பெட்ரோல் குண்டுகளை வீசி யுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

இதில் 10 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள் ளன. அவர்கள் நடத்திய தாக்குதலால் படுகாயமுற்ற வர்களில் சேட்டு என்பவர் பலியாகி இருக்கிறார். கழிக்குப்பம் கிராமத்திலும், தாழ்த்தப்பட்ட மக் களின் இரண்டு வீடுகளை எரித்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இசுலாமியர்கள் மற்றும் மீனவர் களின் கடைகளை அடித்து நொறுக்கியதுடன் இறைச்சிக்கடை ஒன்றையும் எரித்துள்ளனர். அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வண்டிகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்கள், இசுலாமியர் கள் மற்றும் பிற பொதுமக்கள் யாவருக்கும் எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. எளிய மக் களின் மீது திட்டமிட்ட வன்முறைகளைக் கட்ட விழ்த்துவிட்டதுடன், பாதிக்கப்பட்ட அம்மக்கள் மீதே வீண்பழி சுமத்திய பா.ம.க.வினரின் சமூக விரோதப் போக்கினை அம்பலப்படுத்தும் வகையில், கடந்த 29.4.2013 அன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் அளித்த விளக்க அறிக்கையை வரவேற்பதுடன், இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இதரப் பகுதி மக்களுக்கும் பெரும் ஆறுதலையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளது என்பதை இம்மாநாடு பதிவு செய்கிறது.

தன்னலத்தை மட்டுமே முன்னிறுத்தி தேர்தல் அரசியலுக்கென கடந்த சில மாதங்களாகவே வெளிப்படையாக உழைக்கும் அப்பாவி மக்களி டையே ஜாதி உணர்வுகளைத் தூண்டி தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருவதுடன், கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற வன்முறை களைத் தூண்டி, ஜாதிய மோதல்களை உருவாக்கும் ஜாதிவாத சக்திகளைப் புறக்கணிக்கவேண்டுமென அனைத்துப் பகுதி மக்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசியல் ஆதாயம் கருதி உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்குடன் வன்முறைகளைத் தூண்டுவோரின் சதிவலைக்குள் சிக்காமல், சமூக அமைதியைப் பாதுகாத்திடவும், சமூக அமைதியைப் பாதுகாத்திடவும், சமூக நல்லிணக்கத்தைப் பேணவும், மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும் முன்வரவேண்டுமென அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் தலைவர் உரை

சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு தொடக்கத்தில் தமது கருத்துரையை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமதுரையில்,

வழக்கம்போல பெரியார் திடலிலே நீங்கள் கூடி இருக்கிறீர்கள். பெரியார் திடல் உங்களுடைய இடம்; நம்முடைய இடம்; பெரியார் திடல் அனைவருடைய இடம். காரணம், அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் பெரியாரின் தத்துவம். போராட்டமே நம்முடைய நாட்டில் ஆரம்பித்தது அனைவருக்கும் அனைத்தும் இருப்பதா? இன்னாருக்கு இதுதான் என்று இருப்பதா? என்பதிலேதான் போராட்டமே தொடங்கியது.

அந்தப் போராட்டத்தின் வடிவத்தை வடபுலத் திலே செய்தவர் பாபாசாகேப் அம்பேத்கர் (கைதட்டல்). அதை தமிழகத்திலே விழிப்புணர்ச் சியை செய்து ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியை உருவாக்கியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

அப்படிப்பட்ட இந்த மண்ணிலே இந்த காலகட்டத்திலே நாம் கூடி மக்கள் ஒற்றுமைக்கான சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு போடுவது இருக்கிறதே, அது மகிழக்கூடிய ஒன்றா? வருத்தப்படக் கூடிய ஒன்றா? இதைத்தான் பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் வேதனையோடு பார்க்கிறோம்.

பொது ஒழுக்கக் கட்டுப்பாடு உள்ள தமிழக பூமியிலே தேவையில்லாமல் பொது சொத்து நாசம், பொது மக்களுக்குக் கேடு, பேருந்திலே போகிறவன் என்ன பாட்டாளி இல்லாமல் பிர்லாவுக்குச் சொந் தக்காரனா? (கைதட்டல்). இல்ல டாட்டாவுக்கு சொந்தக்காரனா? அடிபட்டவன் கதியென்ன? எண்ணிப் பார்க்கவேண்டாமா - சிந்திக்கவேண் டாமா? ஆகையால், தோழர்களே தயவு செய்து சிந்திக்கவேண்டும்.

நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் - சிறையிலே அவர்கள் இருக்கவேண் டும் - அவர்களைப் பழிவாங்கவேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.

தமிழ் ஓவியா said...

நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத் திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை என தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.

கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்று மையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

தமிழ் ஓவியா said...


பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாரு டைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரிகட்டவேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்கு வோம். இந்த மாநாடு பொதுச் சொத்தை பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவை கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!! என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

உழைக்கும் மக்களின் நச்சுமரம் ஜாதி உழைக்கும் மக்களை கூறுபோடும் தன்மைதான், பார்ப்பனியம்! இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை என்று சொன்னார்கள்.

திருமாவளவன் அவர்களே, இனிமேல் நீங்கள் நடத்தும் எந்த நிகழ்விலும் வைக்கப்படும் தலைவர் களின் படங்களுடன், அறிஞர் அண்ணாவின் படத் தையும் சேர்த்து வைக்கவேண்டும்.

சுயமரியாதைத் திருமணங்கள், சமூகநீதி திருமணங் களை நடத்தவேண்டும். ஜாதி வெறி ஒருபக்கம் இருந்தால், நம்மிடம் சமூகநீதி - சமூக நல்லிணக்கம் இருக்கட்டும்; எதிர்கால வரலாற்றில் ஜாதி வெறி தோல்வி அடையும் என்றார்.

தோழர் ஆர்.நல்லகண்ணு

தீண்டாமை எந்த உருவத்தில் வந்தாலும் அதை அனுமதிக்கக் கூடாது. தேர்தலில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தனித் தொகுதி ஒதுக் கப்பட்டு தேர்தலைச் சந்திக்க அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

ஜாதி அடிப்படையில் ராமதாஸ் தேர்தலைச் சந்திப்பாரானால், அதுவே அவருக்குத் தடை விதிக்க ஏதுவாக அமையும். அரசியல் ஆதாயத்துக்காகவே ராமதாஸ் இவ்வாறு செயல்படுகிறார். தலித் இல்லாத அரசியல் என்பது ஆபத்தானது என்பதை ராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

தென் தமிழகத்தில் ஜாதி மோதல்களால் தான் பெரிய அளவில் தொழிற்சாலைகள் வரவில்லை. இதுபோன்ற நிலை வட தமிழகத்திலும் வந்து விடக் கூடாது.

பெரியார், ஜீவானந்தம் போன்றோர் பிறந்த மண்ணில் ஜாதி மோதல் ஏற்படக்கூடாது. தமிழகத்தில் அமைதி நிலவவேண்டும். தலித்துக்களுக்கு இடது சாரிகள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றார்.

தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் ஆதாயத்துக்காகத்தான் ராமதாஸ் இவ்வாறு செயல்படுகிறார். 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்திரை திருவிழாவுக்குப் பிறகு தருமபுரி சம்பவம் நடைபெற்றது. இப்போதைய சித்திரை விழாவுக்குப் பிறகுதான் மரக்காணம் சம்பவம் நடைபெற்றுள்ளது.

2016இல் அன்புமணியை முதல்வர் ஆக்குவதுதான் இந்த விழாவின் நோக்கம் என்று சித்திரை விழாவில் குரு பேசியுள்ளார். இதன் மூலம் அரசியல் ஆதாயத் துக்காகத்தான் இவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் பா.ம.க இப்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. தலித் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.

அது நேர்மையற்ற செயல். பல இடங்களில் தலித்துகள்தான் ஒடுக்கப் பட்டுள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இது ஏற்புடையது இல்லை. தலித் மக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு செங்கொடி பாதுகாப்புக்குத் துணை நிற்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

இம்மாநாட்டில் இறுதியாக தலைமையுரை நிகழ்த்திய தொல். திருமாவளவன்:- மரக்காணத்தில் தலித் மக்கள், இசுலாமியர்கள் மற்றும் பிற பொதுமக்கள் யாவருக்கும் எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.

எளிய மக்கள் மீது திட்டமிட்ட வன்முறையை கட்டவிழ்த்து விட்டதும்; பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வீண்பழி சுமத்திய பா.ம.க.வினரின் சமூக விரோத போக்கினை அம்பலப்படுத்தும் வகையில் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அளித்த விளக்க அளிக்கையை வரவேற்கிறோம்.

இது தலித் மக்களுக்கும், இதர பகுதி மக்களுக்கும் பெரும் ஆறுதலையும், பாதுகாப்பு உணர்வினையும் அளித்துள்ளது. கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற வன்முறைகளை தூண்டி ஜாதிய மோதல்களை உருவாக்கும் ஜாதிய வாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசியல் ஆதாயம் கருதி உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்குடன் வன் முறையை தூண்டுவோரின் சதி வலைக்குள் சிக்காமல் சமூக அமைதியை பாதுகாத்திடவும், சமூக நல்லி ணக்கத்தை பேணவும், அனைத்து தரப்பு மக்களும் முன் வரவேண்டும் என்றார் தொல். திருமாவளவன். இம்மாநாட்டில் நிறைவாக முகமது யூசுப் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


சமூகநீதியாளர்கள் ஓரணியில் திரளட்டும்!

இராஜபாளையம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமுமே அதனதன் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமூகநீதி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எட்டில் ஒன்பது உள்தலைப்புகள் கொண்டவை.

இந்திய பணியாளர்த் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுதிடும் வாய்ப்பு, தாழ்த் தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) ஒட்டுமொத்தமாக அகற்றுதல், மத்திய தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுத் தொகுதியில் (Open Competition) இடம்பெறவேண்டிய பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் இட ஒதுக்கீடு பிரிவில் கொண்டு போய் வைப்பதும், அதனால் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றவர்களை வெளியேற்றுவது என்னும் சதி அரங்கேற்றப்படுவதைத் தடுத்தல், பத்தாண்டு களுக்கு ஒருமுறை தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைக்கவேண்டிய நிலையில், பல பத்தாண்டுகள் பறந்துபோன நிலையிலும், அத்தகைய ஆணையங் களை நியமனம் செய்யாமை - மண்டல் குழுப் பரிந்துரையில் கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமன்றி பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்கப்படவேண்டிய வாய்ப்புகள்பற்றி அரசு சிந்திக்காமல் இருக்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு சமூகநீதித் தொடர்பான, நியாயமான சட்ட ரீதியான பிரச்சினைகளை இராஜபாளையம் மாநாடு மிகவும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டி குறிப்பாக மத்திய அரசினை வலியுறுத்தியுள்ளது தீர்மானம்.
குறிப்பாக இட ஒதுக்கீட்டின் அளவுகோல் என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைந் துள்ள நிலையைச் சுட்டிக்காட்டுவதாகும். சமூக ரீதியாக என்பதில் ஜாதிதான் முக்கிய இடம் பெறுகிறது.

ஜாதியின் காரணமாகத்தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, ஜாதியின் அளவுகோல் என்பது முற்றிலும் சரியானதே! இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து குதித்தது? அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கோ, குழு உறுப்பினர்களுக்கோ தெரியாத விடயமா?

அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலாவது பொருளாதார அளவுகோல் பற்றிப் பேசப்பட்டுள் ளதா? இட ஒதுக்கீடு இத்தனை சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தானடித்த மூப்பாக இவற்றைத் திணித்தது சட்டப்படி சரியானதுதானா?

இவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவேண்டும். இதனை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முழுமையாக மிகவும் துல்லியமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்பட வைத்ததற்கும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு) ஒழிக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை பெறச் செய்வதற்கான வழிமுறை களைச் சொல்லி அ.இ.அ.தி.மு.க. அரசைச் செயல்பட வைத்ததற்கும் முழு முதற்காரணம் திராவிடர் கழகம் அல்லவா!

அந்த நிலையில்தான் சமூக நீதியில் இன்னும் எட்டப்படவேண்டியவை குறித்து துறை வாரியாகச் சுட்டிக்காட்டி மாநில - மத்திய அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட இராஜபாளையம் மாநில இளை ஞரணி மாநாட்டுத் தீர்மானங்கள் என்றென்றும் பேசப்படக்கூடியவை.

தீர்மானத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற, சமூகநீதி சக்திகளை இந்திய அளவில் ஒன்று திரட்டித் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செயல்படுவார். சமூகநீதியாளர்கள் கட்சிகளை மறந்து அணி திரளட்டும்!

தமிழ் ஓவியா said...


புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!


அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வுகள்: இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை! தமிழக அரசு கவனிக்குமா?


தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங் களின்படி, பிற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு தனி மதிப்பெண்களை நிர்ணயம் செய்து தேர்வு நடத்தியுள்ளன.

குறிப்பாக ஆந்திராவில் OC 60%, OBC 50%, SC/PH 40%, என நிர்ண யித்துள்ளது ஆனால் தமிழ்நாட் டில் பொதுப்போட்டிக்கு நிர்ண யம் செய்யப்பட்ட 60 விழுக்காடு மதிப்பெண்களை, அனைத்துப் பிரி வினரும், மாற்றுத் திறனாளிகள் உள்பட பெறவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும், (TNTET) சமூகநீதி முறை அடிப்படையிலான தனித்த தகுதி மதிப்பெண்கள் முறை பின்பற்றப்படவில்லை.

கணவரை இழந்தோர், கலப்பு திருமணம் செய்துகொண்டோர், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர்,முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை வழங்கப்பட்டுவந்தது.தற்பொழுது இவை எல்லாம் புறக்கணிக்கப்பட் டுள்ளன..

இடஒதுக்கீட்டு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.

உடனடியாக NCTE விதிப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனை வருக்கும் உரிய தகுதி மதிப்பெண் களை தமிழக அரசு அறிவித்து, அதன்படி முன்பு நடந்த இரு தகுதித் தேர்வுகளுக்குமான புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழகத்தில் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும், சமூகநீதியின்பால் உண்மையான அக் கறை கொண்டவர்களும் தொடர்ந்து இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

10.5.2013 அன்று தமிழக சட்டசபை யில் நடைபெற இருக்கும் கல்வி மானிய கோரிக்கையின்போது தமி ழக முதலமைச்சர் ஆந்திராவில் உள்ளது போல் தாழ்த்தப்பட்ட பிற் படுத்தப்பட் மக்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சத வீதத்தை குறைத்து வெளியிடு வாரா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல மைச்சர் ஆவன செய்வாரா?

- தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, 22.6.191973

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றத்தில் பெரியார் வேன் பஞ்சரானபோது நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் சிறப்புரை


சென்னை மே. 8 - கும் மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கொள்கை விளக் கப் பொதுக்கூட்டம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் 7.5.2013 அன்று இரவு 7 மணிக்கு துவங் கியது. நிகழ்ச்சிக்கு புழல் ஏழுமலை, இரா.சோமு, இருதயராஜ், நா.கஜேந் திரன், ப.சக்ரவர்த்தி, தாம்பொழிலன், சண் முகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் த.ஆனந்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் செ.உதயகுமார் வரவேற் புரை ஆற்ற, ஓவியர் சனா திபதி தொடக்கவுரை நிகழ்த்தினார். சென்னை மண்டல செயலாளர் நெய்வேலி வெ.ஞான சேகரன், திருவள்ளூர் திமுக மாவட்ட செய லாளர் எஸ்.சுதர்சனம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் எழுச்சியுரையாற்றி னார். நகர இளைஞரணி செ.சுகுமார் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவ ருக்கு புழலில் ஏராள மான கழகத் தோழர்கள் கழகக் கொடியோடு கழ கக் கொள்கை முழக்க மிட்டு அன்போடு வர வேற்றனர்.


தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (புழல், 7.5.2013)

இந்நிகழ்ச்சி யில் திமுகவைச் சேர்ந்த மா.துரைசாமி, ஜி.இரா ஜேந்திரன், இரா.ஏ.பாபு, என்.சந்திரசேகர், எம். ஜெயபால், வி.திருமால், நா.ஜெகதீசன், கா.கு. இலக்கியன், எம்.நாரா யணன், விப்ரநாராய ணன், ஏ.திராவிடமணி, கோ.பொன்னிவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கு.க. கதிர்நிலவன், செ.பொற் கொடி, சுடர்மாவள வன், து.செந்தில்குமார், கா.கு.தாஸ், புயல் பிரசாத் மற்றும் தோழர்களும் திராவிடர் இயக்க தமி ழர் இயக்கத்தைச் சேர்ந்த வீரவளவன், கா.சூர்யா, ராஜூ, திராவிடர் கழகத் தைச் சேர்ந்த செயல்வீ ரர்கள் தொழில் உலகம் விஜயகுமார், தென் சென்னை மாவட்ட தலை வர் இரா.வில்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிட மணி, விஜயரத்தினம், பழனி பன்னீர்செல்வம், மலர்மன்னன், ராஜ் குமார், இரமேசு, ரவி, செ.பாஸ்கரன், வே. அருள், மு.சுதாகர், சரவ ணன், கே.மூர்த்தி, முரு கன், மு.ராமு, கா.குமார், ஆ.இரவி, மு.பாபு, செந் துறை ராஜேந்திரன், தெய்வசிகாமணி, அருணகிரி, இரணியன், சிவானந்தம், ஏமந்த குமார், ஆசைத்தம்பி, சங்கர், குப்பன் மற்றும் ஏராளமானோர் பங் கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

செங்குன்றத்தில் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் தமது உறையில் குறிப்பிட்ட தாவது. நீண்ட இடை வெளிக்கு பிறகு இந்த பகுதியிலே பேசக் கூடிய அரிய வாய்ப்பை தோழர் கள் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். நான் இன்று மாலையில் கலந்து கொள்ள கூடிய 4ஆவது நிகழ்ச்சியாகும். திரா விடர் கழக தோழர்க ளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடிய தி.மு.க. தோழர்களுக்கு மன மார்ந்த நன்றியை காணிக் கையாக்குகின்றோம். இவ்வளவு போக்குவ ரத்து நெரிசல் அப்போது கிடையாது. 1958லே கான்பூருக்கு தந்தை பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டு அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அய்யா அவர்கள் அவருடைய வேனிலேயே பயணமா னார்கள்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் னாலே சென்றார்கள். அந்த காலகட்டத்திலே அய்யா அவர்கள் இங்கே செங்குன்றம் வந்த போது அவர்களின் வேன் டயர் பஞ்சராகிவிட்டது. நானும் புலவர் இமயவ ரம்பனும் தான் செயலா ளர்கள். தோழர்கள் டயர் பஞ்சர் பார்ப்ப தற்கு சென்றதும் அய்யா அவர்கள் வண்டியிலேயே உட்கார்ந்திருந்தார்கள். அம்மா மணியம்மை யார் அவர்களும் இருக் கிறார்கள், மற்றவர்க ளெல்லாம் இன்னொரு வண்டியிலே அமர்ந் திருக்கிறார்கள் - அய் யாவை இறங்கி உட்கார சொன்னபோது இல்லை வேண்டாம் அய்யா மட்டும் உட்கார்ந்து இருக்கட்டும் என்று சொன்னபோது அய்யா வேனிலேயே இருந்தார் கள்.

பஞ்சர் ஒட்ட பக்கத் திலே ஒரு வல்கனைசிங் சென்டருக்கு சென்று விட்டனர். நான் அய்யா அருகிலேயே நின்று கொண்டு இருந்தேன் அப்போது இந்த ஊரைச் சேர்ந்த திமுக சகோதரர் பட்டாணி கடை வைத்திருந்தார் வடசேரியை சார்ந்தவர். கணபதி தேவர் அவர் அடிக்கடி வருவார். வட சேரியை சேர்ந்தவர்கள் இந்தியாவில் எங்கே போனாலும் பட்டா ணிக் கடை வைத்திருப் பார்கள்.

அவர் அய்யா விடம் வந்து டீ சாப்பி டுங்க அய்யா என கூறி பழங்கள் எல்லாம் வாங்கி வந்து கொடுத்து அய்யா நீங்க இறங்கி உட்கார லாமே என்றார். அய்யா அவர்கள் இருக்கட்டும் என்று சொல்லி நீங்கள் எந்த ஊரில் என்ன செய் யறீங்க என விசாரித்தர். அவர் பட்டாணி கடை வைத்திருக்கிறேன் என சொன்னார். நீங்க வட சேரியா என கேட்டார். அவ்வளவு தூரம் மிகுந்த பழக்கம் பிறகு வாக னத்தை சரிபடுத்தி பய ணத்தை தொடர்ந்தோம். அய்யா சொல்லி கொண்டு வந்தார். நான் செங்குன்றம் பகுதிகளுக் கெல்லாம் காங்கிரஸ் காலத்திலே தான் வந் திருக்கிறேனே தவிர அதிகமாக இங்கே வந்த தில்லை.

ஒரு முறை இயக் கத்துக்காக வந்ததா நினைவு இருக்கிறது என சொல்லி கொண்டு வந் தார்கள். அப்போது இவ் வளவு வீடு, ஜனத்தொகை கிடையாது. அதற்கு பிறகு பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிக்கு வந் தோம். பெரியார் பேரு ரையாளர் இறையனா ரால் பாடியநல்லூரில் பகுத்தறிவாளர் கழகம் அமைக்கப்பட்டு இருந் தது. அந்த பகுதியிலே ஒரு நல்ல பிரச்சாரம் தொடர்ந்தது. இன்றைக்கு நல்ல சிறப்பான ஏற்பாட்டை இயக்க தோழர்கள் இங்கே செய்திருப்பது பாராட்டதக்கது என மேலும் பல்வேறு கருத் துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார் பழகு முகாம் இரண்டாம் நாள் அசத்திய குட்டிப் படைப்பாளிகள் பாடம் நடத்திய ஓவிய ஆசிரியர் பாராட்டு மழை!

தஞ்சை, மே 8- இயற்கை பொருட்களிலிருந்து உருவங்கள் உருவாக்குவது எப்படி என்று கற்றுக் கொடுத்த ஓவிய ஆசிரியரிடமே பாராட்டுக்களைப் பெற்று அசத்தினர் குட்டிப்படைப்பாளிகள்.

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் இரண்டாவது நாளான நேற்று (7.5.2013) குழந்தைகள் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, சொர்ணா ரங்கநாதன் விடுதியிலிருந்து, உள்விளையாட்ட ரங்கம் வரையிலும் நடைப்பயிற்சி மேற்கொண் டனர். புள்ளினங்களுக்குப் போட்டியாக, ஓசை தோன்றும் வண்ணம் உற்சாகமாக பேசியபடியே உள்விளையாட்டரங்கம் வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிலம்பம், கராத்தே கற்றுத் தரப் பட்டது.

கதைகளும் - நீதிகளும்

காலை உணவு முடிந்தவுடன், அய்ன்ஸ்டீன் அரங்கம், பலூன்களை ஊதி மேலே பறக்க விடும் விளையாட்டு நடைபெற்றது. தன்னுடைய பலூனை மேலே பறக்க வைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், காட்டிய ஆர்வமும், ஆசையும், அரங்கமே உற்சாகப் புயலில் சிக்கியது போலிருந்தது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் ஹேமலதா ஒருங் கிணைத்தார். அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் கதை சொல்ல வந்தார். குழந்தைகள் பலூனை பறக்க விட்டதைக் காட்டிலும், உற்சாகம் அடைந்து விட் டனர். துணைத் தலைவரின் வருகையை கைதட் டியே வரவேற்று மகிழ்ந்தனர்.

முதலில், தெனாலிராமன், பார்ப்பனர்களுக்கு வயிற்றில் சூடு வைத்த கதையைச் சொன்னார். பார்ப்பனர்கள் கிருஷ்ண தேவராயரை ஏமாற்றி தங்க மாம்பழம் வாங்கியதையும், அதே முறையில், தெனாலிராமன் நடந்து கொண்டதையும், பார்ப் பனர்கள் மன்னனிடம் புகார் கூறியதையும், விசாரித் தறிந்த கிருஷ்ண தேவராயர், தெனாலி ராமனை பாராட்டியதையும் கூறி, பார்ப்பனர்கள் எப்படி தங்கள் பேராசைகளுக்காக மன்னர்களை ஏமாற்றி னார்கள் என்பதைச் சொன்னார்.

பேராசை பிடித்த நாய்

துணைத் தலைவர் ஒன்றைச் சொல்லிவிட்டு, அடுத்ததை குழந்தைகளை சொல்லச் சொல்வார். அவர்களும் அதற்காக காத்துக் கொண்டிருப் பார்கள். ம்... அடுத்தது நீங்க வந்து கதை சொல் லுங்க என்று சொன்னவுடன், முதலில், சென் னையைச் சேர்ந்த ச.அன்பு வேகமாக வந்து, வாயில் எலும்பைக் கவ்விய ஒரு நாய், தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்து, இன்னொரு நாய், வேறொரு எலும்பைக் கவ்விக் கொண்டுள்ளது என்றெண்ணி குலைத்ததையும், இருந்த எலும்பும் தண்ணீரில் விழுந்து காணாமல் போனதையும் கூறி, பேராசை கூடாது என்று முடித்தான். அதைத் தொடர்ந்து, திருப்பூரைச் சேர்ந்த அபிநயா திரைப்பட பாடல் ஒன்றைப் பாடினார். இடையிடையே விடுகதைகள் கதைகள் என நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.

தமிழ் ஓவியா said...

ஏன்? எதற்கு? எப்படி?

அதைத் தொடர்ந்து, ஆனந்தமான மனநிலையில் குழந்தைகள் இருக்கும்போதே துணைத் தலைவர் பெரியார் பற்றி கேள்வி கேட்டு நல்ல, நல்ல பதில்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போதுதான், கடவுளுக்கு வைக்கும் நெய்வேத்தியத்தை கடவுள் சாப்பிடுகிறதா என்ற கேள்வியை எழுப்பி, இன்னமும் சுலபமாக விளக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலியை சுட்டி, இந்த நாற்காலியின் முன் இட்லியை வைத்தால் சாப்பிடுமா? என்று கேட்க, சாப்பிடாது சாப்பிடாது என்று, உடனே பதில் வந்தது. ஏன்னா, இது நாற்காலி, அது வெறும் கல்லு அவ்வளவுதான் என்று கூறிவிட்டு, பக்தியின் பெயரால் நடக்கும் பிழைப்பு இது என்பதைச் சொல்லி, பெரியார் பேசியது மெய்! பக்தர்கள் பேசியது பொய் என்றார்.

தொடர்ந்து அவர், பெரியார் தலையெழுத்தை, கேள்விக்குள்ளாக்கியதை, ஏன்? எதற்கு எப்படி? எவ்வாறு என்று கேள்வி கேட்கப் பழகவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அசத்திய பெரியார் பிஞ்சுகள்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு, பெரியார் செல்வன் இருவரும் கடவுள் மறுப்பு (ஆத்மா மறுப்பு) சொல்லி அசத்தினர். அதைத் தொடர்ந்து, முதல் நாளில் புதுவையைச் சேர்ந்த அமுத சத்யபாரதி, அடுத்த நாள் பழகு முகாமோடு ஒன்றிப் போய் வேக வேக மாக மேடையேறி, அச்சமில்லை அச்சமில்லை அச் சம் என்பது இல்லையே - என்ற பாடலைப் பாடி அசத்தினார். அதுமட்டுமல்ல, தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பலூனில், பொம்மை வரைந்து காட்டி உற்சாகத்தில் திளைத்தார். இடைவேளையில், பெரியார் பிஞ்சுகளுக்கு இளநீர் கொடுக்கப்பட்டது.

சுலபமாக கணக்கிடுவது எப்படி?

பெரும்பாலான குழந்தைகளுக்கு கணக்கில்தான் சிக்கல் வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் சுலபமான, எளிய முறையில் கணக்கிடுவதைப் பற்றிய ஒளி ஒலி காட்சியுடன் சொல்லித்தரப்பட்டது. சிறீராம், யாழ்மொழி, இளவரசன் ஆகியோர் மேடையேறி, தாங்கள் கற்றுக் கொண்டதை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக கணக்கியல் துறைச் சேர்ந்த பேராசிரியர் நீலாம்பரி ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.

மதிய உணவுக்குப் பிறகு, கோளரங்கம், கணினி பயிற்சி முடிந்தபிறகு, புதுவையைச் சேர்ந்தவரும் அரசுப் பள்ளியில் ஓவியராக பணியாற்றுபவருமான உமாபதி, குழந்தைகளுக்கு இயற்கைப் பொருட்களி லிருந்து அருமையான வடிவங்களைச் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து, காய்ந்த தேங்காய் மட்டை, பன்னாடை, சவுக்குக் காய், நுங்கு கொட்டை, வாழை இலை, மரப் பட்டை, தேங்காய் பூ, தென்னை மரத்தின் குறும்பை போன்றவற்றையும் இவற்றை தங்கள் கற்பனைக் கேற்றபடி ஒட்டிக் கொள்வதற்கு பெவிகால் பசையும் கொடுக்கப்பட்டது.

கற்பனை சிறகு விரித்த பெரியார் பிஞ்சுகள்

முதலில், சற்றுத் தடுமாறினாலும், அடுத்து தங்கள் தங்கள் படைப்புகளில் ஒன்றிப்போன குழந்தைகள், சற்று நேரத்துக்குள்ளாக, தங்கள் படைப்பின் தன்மை இன்னதென்று உறுதிப்படுத்தி விட்டு, அதற்கான பொருட்களை தாங்களே தேடிச் சென்று எடுத்தும், கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்தும் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.

உருவங்கள் ஒரு வடிவத்திற்கு வரத் தொடங்கியதும். அவர்களது உற்சாகம் எல்லை மீறியது. சில உருவங்களை, அதை கற்றுக்கொடுத்த ஆசிரியர் உமாபதியே எதிர்பார்த்திருக்கவில்லை. நான் வெறுமனே தொட்டுத்தான் காட்டினேன். ஆனால், இவர்களின் கற்பனையும் , செயல்திறனும் வியக்க வைக்கிறது என்று வாய்விட்டுச் சொன்னார்.

படைப்பாளிகளுக்குப் பாராட்டு

தாங்கள் தங்கள் படைப்புகளின் மூலம் தன்னம் பிக்கையின் சிகரங்களாக மாறிவிட்ட பெரியார் பிஞ்சுகளை, அவர்களின் படைப்புகளோடு நிழற் படங்கள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, துணைவேந்தர் வருகைதந்து, அவர்களின் படைப் புகளை கண்டு வியந்து, அனைவரையும் பாராட் டினார். குழந்தைகளோடு உரையாடி அவர்களை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்தார்.

சிலர், தங்கள் படைப்புகளை துணைவேந்தரி டமே விலை பேசியது வெடிச் சிரிப்பை உண்டாக் கியது. மற்றொரு சிறுவன், துணைவேந்தரிடம் கேள்வி கேட்டான். துணைவேந்தர், நீ எந்த ஊர்? என்று கேட்க, அவன் ஈரோடு என்று பதில் சொல்ல, இவர், அப்படியானால் கேள்வி கேட்க வேண்டியதுதான் என்று சொல்ல, அந்த இடமே கலகலப்பானது.

இறுதியில், ஓவிய ஆசிரியர் உமாபதி கொண்டு வந்திருந்த கலைப் பொருட்களை குழுவுக்கு ஒன்றா கவும் புதுவை பா.வீரமணி, பிரின்சு, உடுமலை ஆகி யோருக்கும் அளித்து துணைவேந்தர் சிறப்பித்தார். இந்நிகழ்வில், துணைவேந்தருடன், பேரா.பர்வீன், ச. அருணாச்சலம், தஞ்சை வழக்குரைஞர் ச.உமாசுதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிற்றுண்டிக்குப் பிறகு, முத்தமிழ் அரங்கத்தில் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. செம்மொழி யான தமிழ் மொழியாம், தொண்டு செய்த பழுத்த பழம், தோழா வா தோழா - ஆகிய பாடல்களின் வரிகளை சுவரில் பெரிதாக திரையிட்டுக் காட்டி, குழந்தைகள் அனைவரும் ஒலிபெருக்கியுடன் சேர்ந்து பாடி குதூகலித்தனர். அடுத்து பெரியார் திரைப்படம் ஒளிபரப்பாகப் போகிறது என்றவுடன் அவர்களின் குதூகலம் இரட்டிப்பானது.

முழு திரைப்படத்தையும் பார்ப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தாலும், நேரம், இடம் தராததால் இரவு உணவுக்கான இடைவெளி விடப்பட்டது. ஆனாலும், உணவு முடிந்தபிறகு, மீண்டும் பெரியார் படத்தை பார்த்தே தீரு வோம் என்று அனைவரும் கேட்டதற்குப் பிறகு, மீண் டும் சிறிது நேரம் திரை யிடப்பட்டு நிறுத்தப்பட் டது. மாலை நிகழ்ச்சிகளை பிரின்சு என்னாரெசு பெரி யார் ஒருங்கிணைத்தார்.

அறைக்குச் சென்ற பிறகும் தங்கள் கையேடுக ளில் இன்றைய பழகுமுகா மில் கற்றதை, பெற்றதை, கண்டதை, உண்டதைப் பற்றிய கருத்துகளை பதிவு செய்துவிட்டு, நாளைய நிகழ்ச்சிகள் குறித்து எதிர்ப் பார்ப்போடு உறங்க முற் பட்டனர். முன்னதாக, உரி யவர்களால் வருகைப் பதி வேடு சரிபார்க்கப்பட்டது.
இப்படியாக, பழகுமுகா மின் இரண்டாவது நாள் ஒருநாழிகையைப் போல கரைந்து போனது.

தமிழ் ஓவியா said...


கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க ஆட்சியே!
+2 தேர்வில் பெருவாரியாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் - வாய்ப்புத் தந்தால் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெறுவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

ஜாதிக் கலவரத்தில் ஈடுபடாமல் வட மாவட்ட மாணவர்கள் தென் மாவட்டங்களைப் பார்த்து சாதனை படைக்க வேண்டும்! தமிழர் தலைவரின் அறிக்கை

+2 தேர்வில் வெளிவந்த முடிவுகளை ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக் கையில், தென் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்; வட மாவட்டத்தில் உள்ளவர்கள் ஜாதிக் கலவரங்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

சுமார் எட்டரை லட்சம் மாணவ - மாணவிகள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மிகச் சிறப்பான வகையில் மதிப்பெண்களை எடுத்து, தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி தொடக்கிய கல்விப் புரட்சி, தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் ஏற்றமிகு வீச்சின் காரணமாக காமராசர் ஆட்சி, தொடங்கி அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, இன்றைய அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா ஆட்சி வரை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!

குலக்கல்வித் திட்ட ஒழிப்பு?

1952-53 ராஜாகோபாலாச்சாரியாரின் குலதர்மக் கல்வித் திட்டம் தந்தை பெரியார் இயக்கத்தின் பேரெதிர்ப்பால் ஒழித்துக் கட்டப்பட்டு, புதரின் புற்றரவங்களை அழித்து, பூங்காக்களை உருவாக் கியதுபோல, இன்று நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து ஓடிய வண்ணம் உள்ளது!

சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகக் கொண்ட மதத்தினர் பெரும்பாலோர் உள்ள நாட்டில், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக சரஸ்வதி மூடநம் பிக்கை - வாழும் சரஸ்வதிகளைக் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக ஆக்காத நிலையில், திராவிடர் இயக்கம் தான் குறுகிய 85 ஆண்டு காலங்களில் வாதாடியும், போராடியும், புதிய அரசுகளின் இடஒதுக்கீடுகள், சமூக நீதிக்கான ஆணைகள், சட்டங்கள் மூலம் இந்த கல்விப் புரட்சியை அறிவுப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக மலரச் செய்து மகத்தான சரித்திரம் படைத்துள்ளது.

கல்வி வளர்ச்சி!

பஞ்சாயத்து யூனியன்கள் சுமார் 455; ஆனால் அந்த எண்ணிக்கையையும் தாண்டி பொறியியல் கல்லூரிகள் 556 முதல் புதியவை இணைந்தால் 575 உள்ளன!

பல ஆயிரம் காலி இடங்கள். (பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்குத் தயாராக அடிக்கட்டுமான வசதிகளுடன்!)

ஏறத்தாழ மாவட்டந்தோறும் தி.மு.க. - கலைஞர் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் - இப்படிப் பல.

விவசாயத் தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள், கால்நடைக்கான பல்கலைக் கழகங்கள் - எல்லாத்துறைகளிலும் வளர்ச்சி. தனிச் சிறப்போடு இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் நாட்டில் 2500 பல்கலைக் கழகங்களே தேவை என்பது அறிவு சார் குழுவின் கருத்து.

இத்தகைய கல்விப் புரட்சி. ஏராளமான பள்ளிகள் - தனியார் துறைக்குப் பதிலாக அரசே நடத்த வேண்டும் என்பது சமதர்மம் முழுமையாக அமலானால் தான் சாத்தியமாகும். அதுவரை தனியார் பங்களிப்பு இன்றேல், இவ்வளவு பெரும் வளர்ச்சியைக் காண முடியாது. கல்வித்துறை முன்புபோல பற்றாக் குறையில்தான் இருக்க வேண்டியிருந்திருக்கும்! தேர்வு முடிவுகள் வந்துள்ளதில் ஒரு புதுமை - புரட்சி!

உள் மாவட்ட மாணவர்களின் சாதனைகள்!

பெரும் நகர்ப்புறப் பள்ளிகளிலிருந்து முதலாவது, இரண்டாவது (மாநில அளவில்) மாணவ, மாணவிகள் வரவில்லை.

நாமக்கல், ஓசூர் போன்ற உள் மாவட்டங்கள் கிராமாந்திரப் பள்ளிகள் தான் சாதித்துள்ளன!

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்!

சென்னை - மேட்டிமை வகுப்பு Elite - பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வழக்கம்போல் பெண்கள் - மாணவிகள் 91 விழுக்காடு தாண்டி விட்டனர்!

ஆண்கள் - மாணவர்கள் 84 விழுக்காடுதான் வெற்றி பெற்றுள்ளனர்!

பெண் கல்வி பரவுவதையும், வாய்ப்புத் தந்தால் நமது மகளிரின் ஆற்றல் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதையும் காட்டியுள்ளது!

தென் மாவட்டங்களைப் பாரீர்!

தென் மாவட்டங்கள் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கின்றன; வட மாவட்டங்களின் பெயர்கள் ஜாதிக் கலவரங்களில் அடிபடாமல், இப்படியாக ஆரோக்கிய போட்டியில் இனியாவது கவனம் செலுத்தினால் அது மிகவும் சிறப்பாக அமையும்.

சென்னை
10.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் சேமிப்பு வங்கி - மனித குல தொண்டறத்தில் புதிய பரிமாணம்!


நேற்று (9.5.2013) மாலை கலைஞர் தொலைக்காட்சி, செய்தியில் ஒரு புதுமையான அறிவியல் - மருத்துவ இயல் சாதனை சீனாவில் நிகழ்ந்துள் ளதைக் கூறினார்கள்.

மனித குலத்தின் வருங்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட வேண்டிய அற்புதமான சாதனை - அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற கற்பனைக் கதைகளைத்தான் நாம் இதுவரைக் கேட்டு வந்தோம்!

அறிவியல் தொழில்நுட்பம் - மருத் துவத் துறையில் மிக அற்புதமான, வளர்ச்சிக்குரிய புதுயுக சாதனை களைச் செய்து நாளும் புதுமை சேர்த்து வருகிறது!

ஆதி மனிதனுக்கு வேட்டையாடத் தான் தெரியும்; மிருகங்கள் தாக்கிய போது அவன் ரத்தம் சிந்தி மரண மடையும் நிலைதான் - துவக்கத்தில்.

ஆனால் மனித ரத்தம் இப்படி, பயனற்று சிந்தப்படுவதும் உண்டு. (இன்றும் வன்முறை வெறியாட்டங் களில் சிந்தும் ரத்தமும் - ஜாதிக் கலவரம், மதக் கலவரம் - ஜாதிக்கலவரங்கள், பயங் கரவாதக் கலகங்கள் மூலம் சிந்தப்படும் ரத்தமும் - மிக அதிகம் தான்).

என்றாலும் மருத்துவத் துறையில் தொழில் நுட்பம் புகுந்ததின் விளைவாக, ரத்ததானம், ரத்த சேமிப்பு வங்கி கண்டுபிடிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்ததானம் - குருதிக் கொடை - மூலம் தரப்படுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றும் அரிய தொண்டறம் அல்லவா இது!

அதன்பிறகு மனித உறுப்புக்களைக் கொடையாக வழங்கும் - கண்தானம் பரவலாக ஏற்பட்டு வருகிறது!
செத்தவர் இதன்மூலம் வாழுபவராக வாழ்கிறார் என்பதில்தான் எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

இதற்கென கண்கள் சேமிப்பு வங்கிகள் (Eye-Bank) உருவாக்கப்பட் டுள்ளன.

சிறிய மருத்துவமனைகளில் இவை போன்றவைகளைச் சேகரித்து வைக்க முடியா விட்டாலும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் ரத்த வங்கி, கண் வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின் றனர்.

உடலுறுப்புக் கொடையும் அண்மை யில் தாராளமாக, ஏராளமாக மக்களின் இதயங்களில் அன்பு நதிகள் ஓடுகின்ற காரணத்தில், மகிழ்ச்சியும் அளித்து மன நிறைவு கொள்ளுகின்றனர்!

தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் பொதுக் கூட்டம் 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அப்போது வேனில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அய்யா அவர்களின் அந்நாளில் வந்த Illustrated Weekly of India-வில் ஒரு புதுமையான செய்தியை படித்துக் காட்டினேன்.

மனிதனின் விந்துவைச் சேகரித்துப் பிறகு பயன்படுத்தும் வகையில் (Seman Bank) விந்து வங்கியை ஏற்படுத்தி, பாதுகாப்பாக வைக்கும் முறை செயல்படத் துவங்கியுள்ளது - அறிவியலின் மற் றொரு அற்புதமான மருத்துவ தொழில் நுட்பச் சாதனை என்பதைக் கேட்ட தந்தை பெரியார் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்!

ஒருவன் விபத்துக்குள்ளான போதி லும் கூட மரணமுற்றாலும்கூட - அவ னது விந்துவை இன்செக்ஷன் செய்து, அவனுக்கே குழந்தை அவன் மனைவி மூலமோ, அல்லது வாடகைத் தாய் மூலமோ பிறக்க வைக்க முடியும்; இதை 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்ற குறிப்பும் இருந்தது!

இதைப்பற்றி அவரது தியாகராயர் நகர் பேருரையில் குறிப்பிட்டு மகிழ்ந் தார்கள்!

தாய்ப்பால் தான் குழந்தைகளின் ஊட்டத்திற்கு மிகவும் அவசியம். பல குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து இல்லாததால் நலிவுற்ற நிலையில் சீனாவில் இருப்பதை அறிந்து அங் குள்ள அரசு - சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் செலவில், தாய்ப் பால் சேகரிப்பு வங்கி ஒன்றை நிறுவியுள்ளார்களாம்!

ஒரு தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு போத்தலில் தூய்மையாக லாவகமாக கைபடாமல் கறந்து சேமித்து பாதுகாத்து, ஊட்டமில்லாத குழந்தைகளுக்குத் தரும் ஏற்பாடாம்!

என்னே அறிவியலின் விந்தை - மனித குல வரலாற்றில் இது மாபெரும் கண்டுபிடிப்பு, ஏற்பாடு மட்டுமல்ல - தலைசிறந்த தொண்டறமும் ஆகும்!

சுரந்த பாலை வீணாக்காமல், தாயும் நலத்துடன் வாழ இது உதவிடக் கூடும். இம்முயற்சியின் மூலம் மற்ற நாடுகளுக்கு சீனா வழிகாட்டியுள்ளது!

கறந்த பால் முலைபுகா
கடைந்தவெண்ணெய் மோர்புகா

- என்று சித்தர்கள் பாடினார்கள்.

தாயின் முலைப்பால் பல குழந்தை களைக் காப்பாற்றிடப் பயன்படும்போது தாய்மையே தனிச் சிறப்பல்லவா பெறுகிறது?
--கி.வீரமணி -10-5-13

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து பேராவூரணி - சேதுபாவாசத்திரத்தில் இணையதளம் வலைப்பூ தொடக்கம்


பேராவூரணி, மே 10- திராவிடர் கழக இளை ஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவ ரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண் டும். அதனடிப்படை யில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச் சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும், நமது இயக்க நடவடிக் கைகள், முக்கிய உரை கள், தீர்மானங்கள் பற் றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுது வது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல்படு வது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம் என்று ஆசிரியர் 7.5.2013 விடு தலையில் இறுதிப் பக் கத்தில் அறிவிப்பு விடுத் துள்ளார்.

5 ஆகஸ்ட் 2012 அன்று பேராவூரணி-சேதுபா வாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பாக இணையதளம் தொடங்கபட்டு செயல் பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

இணையதள முகவரி: http://dkperavurani. blogspot.in/

டிவிட்டர் முகவரி : https://twitter.com/dkperavurani

இரண்டு ஒன்றியங்க ளின் சார்பாக நடை பெறும் பிரச்சாரங்கள், தோழர்கள் கலந்து கொள் ளும் பிரச்சாரங்கள், புதி யவர்களுக்கான விஷயங் கள் என நிறைய தகவல் களைக் கொடுத்துள் ளோம். தொடர்ந்து இணையதளம் சிறப் பாக செயல்படும் என்று பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீல கண்டன் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜவகர்லால் நேரு

வடநாட்டுப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த - மறைவெய்திய ஜவகர்லால் நேரு தமது புகழ்பெற்ற இந்தியாவைக் கண்டுணர்தல் எனும் நூலில், இந்து மதம் என்பது யாது? எனத் தாமே கேள்வி எழுப்பிக் கொண்டு தந்துள்ள விடை அருமையானது.

இந்து எனும் சொல் நமது பழைமையான இலக்கியங் களில் காணப்பெறவேயில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது; ஒழுங்கான உருவமைப்புப் பெறாதது; பல்வகைத் தோற்றக் கூறுகள் உடையது;

எல்லா மக்களுக்கும் எல்லாச் செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது - வழக்கிலுள்ள கருத்தின் படி - ஒரு மதமா, இல்லையா என மெய்யாகவே உறுதிமொழிவதோ இயலும் செயலன்று.

“what is Hinduism? The word Hindu does not occur in all our ancient literature...Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. It is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word” (Discovery of India : page 108).

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே?

ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார். நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப் படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆதாரம்:

(வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!


(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச் சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர் களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர். - இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


சிவன்கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!


சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல் லிக்கொள்ளும் சுமார்த்தப் பிரா மணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால் நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவ தாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் ஜாதி அடிப்படையில் அல்லாமல், பிரம் மத்தை உணர்ந்தவன் என்ற அடிப் படையில் தான் வழங்கப்பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி, தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சப்தகல்பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டு ஜீவிப்போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப் பட்டுள்ளது. வாழ்க் அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் ஜாதியின் பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து.

பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பரங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தீங்கு உலகுக்காம் என்றதேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும், சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப்பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமானுடைய அய்ந்து முகங் களிலிருந்து தோன்றி, சிவபிரானையே வழிபடுகிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களிலிருந்து தோன்றிய பிர மத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவசிருஷ்டியின் பாற்பட்ட சிவப் பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன்றி சுமார்த்தப் பிராமணர் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே, சிவாலயங்களில் பரார்த்த பூசை ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக்கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக்கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதிசைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதிசைவர். ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர்.

இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம் மணோத்தமர் சர்வ காரியங்களிலும் சிவயாகத்திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதிசைவர்களே அதிகாரமுடையவர். ஏனையோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு பக்கம் 31-32)

- மகராசன் குழு அறிக்கை, பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார்

நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் திருக் கண்டேசுவரத்தைச் சேர்ந்தவர் ஜம்புலிங்க முதலியார். இவர் கடலூர் நகராட்சித் தலைவர், ரெயில்வே வாரியத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது சிறப்பு மிக்க பொது நலப்பணிகளைப் பாராட்டி அப்போதைய ஆங்கில அரசு, ராவ் பகதூர் என்ற சிறப்புமிக்க விருதினை வழங்கிக் கவுரவித்தது.

மிகப்பெரிய நிலக்கிழாரான இவர், தனக்கு சொந்தமான வயலில், 1934ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது கறுப்பு நிற பொருள் தண்ணீருடன் கலந்து வெளியேறு வதைக் கண்டறிந்து அத்தகவலை அப்போதைய ஆங்கில அரசின் மண்ணியல் துறைக்கு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஆங்கில அரசு, சுரங்கப் பொறியாளர் களையும், மண்ணியல் நிபுணர்களையும் நெய்வேலிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அப்பகுதியின் அடியில் இருக்கும் தனிமம் நிலக்கரி குடும்பத்தின் ஒரு வகையைச் சேர்ந்த பழுப்பு நிலக்கரி என்று கண்டறியப்பட்டது.

ஜம்புலிங்க முதலியார் சுரங்கம் வெட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கிய துடன் அவரது சீரிய முயற்சியின் மூலம் அப்போதைய சென்னை மாகாண முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் மூலம், 1953ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசின் தொழிற் துறையால் நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்டது.

பின்னர் இந்த நிறுவனத்தை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணர்ந்து, 14.11.1956ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனம் உதயமானது. பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வால் 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இன்று, என்.எல்.சி. நிறுவனம் ஆண்டிற்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து, ஒரு மணி நேரத்தில் சுமார் 27லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு பன்மடங்காக வளர்ச்சி பெற்றுள்ளது. நவரத்னா தகுதி பெற்றுள்ள இந்த நிறுவனம் உருவாக வித்திட்ட ஜம்புலிங்க முதலியாரை கவுரவப்படுத்தும் வகையில் நெய்வேலி நகரியத்தில் உள்ள ஒரு பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.

அவருக்கு மேலும் புகழாரம் செலுத் தும் வகையில் நெய்வேலி நகரியத்தில், நான்கு வட்டங்கள் சந்திக்கும் மிக முக்கிய பகுதியான இரட்டை பால சதுக்கத்தில் ஜம்புலிங்க முதலியாரின் முழு உருவ வெண்கலச் சிலை ரூ. 9 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ளது. அவரது சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலி யாரின் பேரன் அமரன், பேத்தி ரஞ்சிதம் மற்றும் அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நெய்வேலி நகரியத்தின் 22-ஆவது வட்டத்தில், ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள நவ ரத்னா பூங்காவை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ள இப்பூங்காவில் சிறுவர் களுக்கான விளையாட்டு வசதிகள் மட்டுமல்லாது 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் இங்கு விரைவில் அமைக் கப்பட உள்ளது. 54 வகை அரிய வகை மூலிகைப் பண்ணை இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சிகளில் என்.எல்.சி.இயக்குநர்கள் உயர் அதி காரிகள், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எல்லாம் சரிதான்; அவர் நீதிக்கட்சிப் பிரமுகர் என்பதை இருட்டடித்தது - ஏன்?

தமிழ் ஓவியா said...


மாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு!


நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கிலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஸ்டீபன்சன் என்ற கிருத்தவர் நீங்கள் மோட்டார் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஹென்றிபோர்டு என்ற கிருத்தவர்.

நீங்கள் கேமிராவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். அதனால் திரைப் படம் பார்க்காதீர்கள் நீங்கள் கிராமபோனை பயன்படுத்தாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிருத்தவர்.

நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிருத்தவர். நீங்கள் அச்சுப்பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக்ஸடன் என்ற கிருத்ததவர். நீங்கள் பவுண்டன் பேனாவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மென் என்னும் கிருத்தவர்.

நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிருத்தவர். நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிருத்தவர் நீங்கள் தையல் மிஷன் என்ற கருவியைப் பயன் படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தின்மானியர் என்ற கிருத்தவர்.

நீங்கள் டைப்ரைட்டரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிருத்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி யாகிறது. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில், அது முஸ்லீம் நாடு இந்துக்களே! உங்கள் கால் கை உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள் ளாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிருத்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்த கிருத்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டு பிடித்ததும், கடைப்பிடிப்பதும் இந்து மதம்தான்.

தமிழ் ஓவியா said...


பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்


பதிப்பாசிரியர் : முனைவர் இராதா செல்லப்பன்
தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சிராப்பள்ளி -_ 620 024
பதிப்பு ஆண்டு: 2008
76ஆம் பக்கத்தில் இருப்பது:

நல்வாழ்வின் புள்ளி விவர அளவுகோல்கள்

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (infant Mortality Rate, IMR) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under Five Mortality Rate, UMR) என்பவை ஒரு நாட்டின் சுகாதாரப் பணிகளின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

50 வருடங்களுக்கு முன்பு, பிறந்த 1000 குழந்தைகளில் 200 முதல் 250 குழந்தைகள் ஒரு வயதிற்குள் இறந்து போயின.

வயிற்றுப்போக்கு, சத்துணவுக் குறைபாடு, நுரையீரல் தொற்று (Diarrohea, Malnutrition, Respiratory Infection)
ஆகியவை குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணங்கள்.

ஆனால், தற்போது பல அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த இறப்புகள் மிகவும் குறைந்துவிட்டன.

தற்போது இந்தியாவில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு (IMR) 1000-க்கு 67.

தமிழ்நாட்டில் 1000-க்கு 53, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 1000-க்கு 14,
உத்தரபிரதேசத்தில் 1000க்கு 110, இந்தியாவில் 1IMR 1000க்கு 30க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிக்கோள்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1960-இல் 1000-க்கு 242 ஆக இருந்தது.

இது மிகவும் குறைந்து தற்போது 91ஆக குறைந்துள்ளது.

இவை நமது தற்போதைய மருத்துவ வளர்ச்சியின் வெற்றிப்படிகள்.

தொற்று நோய்கள் (Infectious Diseases), வயிற்றுப்போக்கு நோய்கள் மூலம் இறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

கொள்ளை நோய் என்று அழைக்கப்பட்ட பெரியம்மை (Small Pox), 1977ல் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

அம்மை நோய் தடுப்பு ஊசியின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

தகவல்: க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


சூத்திரமேட்டுத் தெரு!


ஆபரேட்டர் கோவிந்த ராசன் என்று கழகத் தோழர்களாலும், பொது மக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்ட பெரியார் பெருந் தொண்டர் திருவை யாறு நகர திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் விளம் பரப் பிரிவில் ஆப்ரேட்டராகப் பணியாற்றியவர்.

அரசு பணியில் இருந்த போதும், கருஞ்சட்டை அணிந்து இயக்கப் பணி களில் தீவிரமாக ஈடுபட்ட அழுத்தமான பகுத்தறிவுக் கொள்கைக்குச் சொந்தக் காரர்!

அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு நேரடியாகக் கழகப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறைச் சாலைக்கும் சென்றவர்.

தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்களையும் உடலையும் (தஞ்சை மருத் துவக் கல்லூரிக்கு) கொடை யாக அளிக்க முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து வைத் திருந்தார். அதன் படியே கொடையும் அளிக்கப்பட்டது.

தான், வாழ்ந்தபோது மாத்திரம் அல்ல; மரணத் திற்குப் பிறகும், தாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைக்குச் சேதாரம் எந்த வகையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் செயல்படுத்தும் இந்தத் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு உலகத் தில் ஈடு இணை ஏது?

நேற்று திருவையாற்றில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி - பொதுக் கூட்டமாக - பிரச்சார நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரி வித்த தகவலும் - கருத்தும் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மானமிகு ஆப்ரேட்டர் ப. கோவிந்தராசன் அவர்கள் வாழ்ந்து வந்த அந்தத் தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா? சூத்திர மேட்டுத் தெரு என்பதாகும்.

சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று பொருள். இப்படி ஒரு பெயர் பச்சையாக வைக்கப்பட்டு இருந்தது.

பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் கோவிந்த ராசன் போன்ற பெரியார் தொண்டர்கள் போராடி ஊராட்சி மன்றத்தில் தீர் மானம் நிறைவேறச் செய்து அதனைத் தமிழர் மேட்டுத் தெரு என்று மாற்றினார்கள் என்பது சாதாரண தகவலா?

திராவிடர் கழகம் என்ன செய்தது என்று கேட்கும் செவிட்டுத் தமிழர்களுக்கு இதனைக் காணிக்கையாக் குகிறோம். திருவையாறில் இன்னொரு தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா?

பிராமண மேட்டுத் தெரு என்பதாகும் - இன்றும் அதே பெயர்தான்! பார்ப்பனர் அல்லாதாரே, தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்


சென்னை, மே 11- இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தி.மு.க. தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப் பதாவது:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர் களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன் வெல்த் மாநாட்டினை இலங்கை யிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டு மென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரிய வில்லை. டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற் கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அதற்கு முன்பே, 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங் கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக் காரணம் கொண்டும் அங்கு நடத் திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் காமன்வெல்த் மாநாட் டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

பல்வேறு மனித உரிமை அமைப் புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்தி ரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் நாடுகளின் கூட்ட மைப்பு என்று ஒன்று உருவாக்கப் பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக் கணித்திருப்பது என்பது முக்கிய மான தகவலாகும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலி யாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்தி ரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காமல்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப் பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண் டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மா னத்தில். காமன் வெல்த் அமைப் பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்;

தொடர்ந்து இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத் துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று அய்.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக் கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன் றாகவே உள்ளது. இனப் படு கொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி யுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கை யுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென டெசோ தொடர்ந்து கோரி வருகிறது.

காமன்வெல்த் மாநாடு இலங்கை யில் நடைபெற்றால், அதன் காரண மாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமை யான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. இந்த நிலையில் இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயா னால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.

எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத் தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு;

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கை


மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

(விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...


தேவை விழிப்பு!


19.4.2013 விடுதலை வெளியூர் இதழில் மயிலாடன் அவர்கள். ஒற்றைப்பத்தி பகுதியில் எழுதிய பலே விவாஹம் என்ற செய்தியினைப் படித்துப் பார்த்தேன்.

என் நினைவு 65 ஆண்டுகட்கு முன்பு - அன்றைய விடுதலை இதழில் படித்த செய்தியை நோக்கிப்பறந்தது. அன்றும் இதே கூத்து - அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விவாகம் செய்து வைக்கப் பட்ட - பத்திரிகையை அப்படியே வெளி யிடப்பட்டிருந்தது. அரசப்பனுக்கும் - வேம்பு அம்மனுக்கும் என்ற பெயருடன் பத் திரிகைச் செய்தி - அதைப்பற்றிய குத் தூசியில் பலமான கிண்டலுடன் கூடிய கண்டனம்.

பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றவர்களின் அற்புத பணியும் ஆசிரியர் போன்றவரின் கடுமையான உழைப்பும் இந்த தமிழ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தும் இது போன்ற மடமை நிகழ்வுகள் நடப்பது கேலிக் கூத்தாகவே உள்ளது. நம் அனைவரின் உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. ஒரு பக்கத்தில் நம்முடைய படை செல்லும் - பயணமும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் திட்டமிட்டே இது போன்ற மூட செயல்களை ஊதிப் பெருக்கும் ஊடகங்களும் இருப்பது குறித்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பதை திருமண அழைப்பிதழ் - மன்றல் அழைப்பிதழ். வாழ்விணையர் அழைப்பிதழ் என்றெல்லாம் - வளர்ந்து வருகின்ற கால கட்டம். நம்பிக்கையோடு இருக்கும் வேளையில் - பத்தாம் பசலியும் - புறம் தாங்கி வீடணர்களும் செய்யும் சேட் டைகள் குறித்தும் விழிப்பாக செயல்வட வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் நமக்கு ஏற்படுகிறது.

காரிருளால் கதிரவனை மறைக்கபோமோ?

கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

என்று மனதை தேற்றித் கொள்வதேன்

- வேலை பொற்கோவன்
வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில்
தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் சுபா குற்றச்சாட்டு

சென்னை, மே 11- தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் - அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும், இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு பின்பற்றாததால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்தில் நேற்று (10.5.2013) பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் ஆர்.சுபா குற்றச்சாட்டை கூறினார்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-

தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது. அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பேசியது:-

பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.

ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கு வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழ் ஓவியா said...


பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்


திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).

திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்:

1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன?

மானமிகு கோவிந்தராசன் பெரும் பதவியில் இருந்தவரா? பெரும் பணம் படைத்தவரா?

இல்லை, பின் ஏன் இவ்வளவுப் பெரிய மரியாதை கடைசி மூச்சு அடங்கும்வரை கொள்கையில் விடாப்பிடியாக வாழ்ந்து காட்டிய இலட்சிய வீரர் - கருப்புச் சட்டைக்காரர் என்பதுதான் இந்த மரியாதைக்கு முக்கிய காரணம்.

2. தனது மரணத்துக்குப் பிறகும் தமது கண்களைக் கொடையாக அளித்தவர்; மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தமது உடலையே கொடையாக அளித்த மனிதநேயர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சோதனைக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. நம் நாட்டு மதச் சம்பிரதாயம் மரணத்திற்குப் பின் உடலை எரிக்கவேண்டும்; சாம்பலைக் கரைக்கவேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதால், மருத்துவக் கல்லூரிக்கு உடல்கள் கிடைப்பதில்லை. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் போன்ற பெரியார் பெருந்தொண்டர்கள் செத்த பிறகும் கூட தமது உடல் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று நினைப்பது எத்தகைய சிறப்பு!

திராவிடர் கழகம் உடற்கொடைக் கழகம் என்ற பிரிவையே வைத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

3. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று வருகிறான். இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதிபற்றிப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது வெட்கக் கேடு!

ஜாதிக்காக ரத்தம் சிந்துகிறான் வீதிகளிலே - இன்னொரு மனிதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்த ரத்தத்தைக் கொடையாக அளிக்கக்கூடாதா?
ரத்தத்தில் ஜாதிப் பிரிவு உண்டா? நாடார் ரத்தம், நாயக்கர் ரத்தம், அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், வன்னியர் ரத்தம் என்று இருக்கிறதா?

மனிதர்களை ஒன்றுபடுத்த நாம் இருக்கிறோம். சிலர் ஜாதியைக் காட்டிப் பிளவுபடுத்தத் துடிக்கிறார்கள். ஜாதிக்காக அரிவாளைத் தூக்குகிறார்கள். தந்தை பெரியார் தொண்டர்களோ ஜாதியை ஒழிக்க அறிவாயு தத்தைத் தூக்குகிறோம்.

4. இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஆப்ரேட்டர் கோவிந்தராசன் குடும்பம் தாழ்ந்து போய்விட்டதா? இந்த அழைப்பிதழைப் பாருங்கள்
எம்.ஏ.,

பி.ஏ.,எல்.எல்.பி.,

எம்.ஏ.,எம்.எல். (மாவட்ட முன்ஷிப்),

எம்.ஏ., பி.எட்., எம்.ஈ.,

ஒரு குடும்பத்தில் இவ்வளவு பட்டதாரிகள்.

பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன சாதித்தனர் என்பதற்கு இந்தப் பட்டியல் போதாதா? நூறு ஆண்டு களுக்குமுன் இது சாத்தியமா?

அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 96 பேர் வெற்றி பெற்றது எப்படி? சத்திய சாயிபாபா கையசைப்பிலா வந்தது?

சரஸ்வதி பூஜை கொண்டாடி வந்தோமே - எத்தனை எத்தனை ஆண்டுகளாக? நமது பாட்டி சரஸ்வதிக்கே, சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியாதே!

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியாரும் - அவரின் இயக்கமும்தானே கல்வி உரிமையை உத்தியோ வாய்ப்பைப் பெற்றுத் தந்தது மறுக்க முடியுமா?

5. இவற்றை வன்முறையாலா பெரியார் சாதித்தார்? போராட்டத்திலும்கூட பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த தலைவர் அல்லவா தந்தை பெரியார். பேருந்தை உடைப்பது - எரிப்பது என்றால் - அவை யார் வீட்டுப் பணம்; மக்கள் வரிப்பணம்தானே பாழாகிறது?

கலவரத்தைத் தூண்டி விடுவது சுலபம் - அதனை அடக்க முடியாதவர்கள் போராட்டம் நடத்திடத் தகுதி யில்லாதவர்கள்.

தமிழ் ஓவியா said...

1942 இல் காந்தியார் நடத்திய போராட்டத்தின்போது தந்திக் கம்பிகளை அறுத்தபோதும், தண்டவாளத்தைப் பெயர்த்தபோதும் காந்தியாரையே கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தின் கீழா வெள்ளைக்காரன் சுதந்திரத்தைப் புதைத்து வைத்துள்ளான் என்று கேட்ட தலைவர் பெரியார்.

6. அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அறிவியலுக்கு முன் ஜாதி எடுபடுமா? ஜாதி என்பது புரட்டு - மூளையில் மாட்டப்பட்ட விலங்கு.

வைதிகர்களாக இருந்தால் இந்த நிகழ்ச்சிபற்றி எப்படி பத்திரிகை அடித்திருப்பார்கள் - உத்திரகிரியைப் பத்திரிகை என்று போட்டு அட்டையின் ஓரத்தில் கறுப்பு இருக்கும்.

படிப்பறிவு இல்லாத காலத்தில் துக்க காரியம் என்பதற்காக பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வதற்காக அப்படி செய்தார்கள்.

இப்பொழுதுதான் கல்வி அறிவு வந்துவிட்டதே இன்றைக்கும் எதற்கு பத்திரிகையில் கருப்பு அடையாளம்?

தமிழ் ஓவியா said...

செத்தவர் சைவராக இருந்தால் சிவலோக பதவி அடைந்தார் என்றும், வைணவராக இருந்தால் வைகுந்த பதவி அடைந்தார் என்றும் போடுவார்கள்.

செத்த பிறகும்கூட பதவி ஆசை மனிதனை விட்டுப் போகவில்லை என்பதுதானே இதன் பொருள்.

இன்னும் சில பேர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

ஆத்மா என்றால் என்ன?

அது எங்கு இருக்கிறது?

இது கீதையின் பித்தலாட்டம்.

ஜாதியைப் பாதுகாக்கும் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தக் காலத்திலே தீப்பெட்டி இல்லை. சிக்கிமுக்கிக் காலம். சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும்போது, பிணத்தை எரிக்கவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்தே தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவார்கள். இப்பொழுது என்ன வந்தது?

மின்சார சுடுக்காட்டுக்குச் செல்லும்பொழுதுகூட தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவது - எத்தகைய முட்டாள்தனம்?

காரண காரியம் தெரிவதில்லை. ஆட்டு மந்தை மாதிரி முன்னோர்கள் செய்தார்கள். அது தொடர்கிறது- அவ்வளவுதானே!

7. அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே. இப்பொழுது ஆண்களுக்கு 68; பெண்களுக்கு 71 என்று வளர்ந்தது எப்படி? அறிவு வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சிதானே - இந்த வளர்ச்சிக்குக் காரணம்?

மரபணு ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால், பிறந்த மனிதன் இறக்கமாட்டான் என்ற காலம் வரப் போவதாக மருத்துவ உலகம் கூறுகிறதே! ஆயுள் நீண்டால் மட்டும் போதாது; முதுமை தடுக்கப்படவேண்டும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8. படிப்பு ஒரு பக்கம் வளர்ந்தாலும், பகுத்தறிவு வளரவில்லை என்பது வெட்கக்கேடு.

மறைந்த கருஞ்சட்டை வீரர் கோவிந்தராசன் பட்டதாரி அல்ல. ஆனால், அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் பட்டதாரிகள் முன்வந்தாலும் பதில் சொல்ல முடியாதே! காரணம் அவர் பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளிக் கூடத்தில் படித்துத் தேர்ந்தவர்.

9. நெருக்கடியான நேரத்தில் மெய்க்காப்பாளர் போல செயல்படுபவர். ஓர் இயக்கத்தில் கட்டுப்பாட்டுடன் கொள்கை உரத்துடன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசு ஒரு முன்னுதாரணம்.

உலகில் முதல் பகுத்தறிவுவாதி கவுதம புத்தர். (அதனால்தான் தன் மகனுக்குக் கவுதமன் என்று பெயர் சூட்டியுள்ளார் ஆப்ரேட்டர்).

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்றார் புத்தர்.

அதற்கு விளக்கம் சொன்னவர் பெரியார்.

உன் தலைவனுக்குக் கட்டுப்பட்டு இரு. ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இரு. ஸ்தாபனத்திற்கு உண்மையாக இரு என்பதுதான் இதன் தத்துவம் என்றார் தந்தை பெரியார்.

இதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெரியார் பெருந்தொண்டர்தான் நமது கோவிந்தராசன்.

இவரின் நினைவைப் போற்றும் வண்ணம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பூங்காவிற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசன் பெயர் சூட்டப்படும் (பலத்த கரவொலி!).

தமிழ் ஓவியா said...

10. இவ்வளவு கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக்கூறிய தமிழர் தலைவர், இந்த வட்டாரத்தில் அரும்பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவு கூர்ந்தார். (இது எப்பொழுதுமே தமிழர் தலைவருக்கே உரிய தனித்தன்மை!).

திருவையாறு ஒன்றிய தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி (எப்பொழுது வந்தா லும் திருவையாறு அல்வாவை மறக்காமல் கொடுப்பவர்) புலவர் சுபாஷ்சந்திரன், புலவர் முருகானந்தம், தஞ்சை இரா.இராசகோபால், வரகூர் நடராசன், தங்கையா, கண் டியூர் கணபதி, கந்தசாமி என்று நீண்ட பட்டியல் உண்டே!

11. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்களின் துணை வியாரைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கைக்கு ஈடுகொடுத்து அருந்துணையாக இருந்த அம்மையாரைப் பாராட்டவேண்டும். வீட்டுக்கு விருந்தினர் திடீரென்று வந்தால், தன் சாப்பாட்டைத் தியாகம் செய்து வந்தவர் களை உபசரிப்பது நம் வீட்டுப் பெண்கள்தானே!

பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராசன் மறைந் தார் என்றாலும், அவர்தம் தொண்டால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அவரது மகன் கவுதமன், தம் தந்தையாரைத் தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன் என்று கூறி முடித்தார்.
45 நிமிட நேர உரையில் இந்த ஆழமான விலை மதிக்க முடியாத கருத்து முத்துகளை வாரி இறைத்தார் தமிழர் தலைவர்.

கூட்ட நிகழ்ச்சி

10.5.2013 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு திருவையாறு தேரடி திடலில் பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் அவர்களின் படத்திறப்பு விழா - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கத்தில் தோழியர் ஜெயமணிகுமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவருக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்!

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் ஸ்டாலின், தஞ்சை இரா.இரத்தினகிரி, மதுரை மாநகர் வாசகர் வட்ட தலைவர் அ.முருகானந்தம், தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றிய பிறகு, கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். கோ.ரமேஷ் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்து ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்கள் இல்லத்தில் கழகத் தலைவர் மற்றும் பொறுப் பாளர்களுக்கு உணவளித்து உபசரிக்கப்பட்டது.

புலவர் முருகானந்தம் இல்லத்தில்...

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் முருகானந்தம் அவர்களின் இல்லத்திற்குக் கழகத் தலைவர் சென்று விசாரித்தார். விடுதலை சந்தாவினை புலவர் முருகானந்தம் அவர்களின் இணையர் அளித்தார்.

நல்லாசிரியர் அப்பாசாமி இல்லத்தில்...

காந்தி நடுநிலைப்பள்ளி நிறுவனர், நல்லாசிரியர் அப்பாசாமி (மறைவு) அவர்கள் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


ஒரு சேதி


(திருவாரூர் திருத்தியாகராஜனின் திருத்தேர் தீக்கிரையாயிற்று)

தியாகராஜ பெருமானின் தேரானது 09.06.1926ந் தேதி தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக் கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப்பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும், 5000த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்களும் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப் பாட்டம் எதற்கு? இதை நினைக்கும் போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது,
ஒரு குருவுக்கு நான்குசிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக் கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளை யிட்டார்.

அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளை யிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப்போனால் கோபித்துக் கொள் ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்து சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள்.

குரு கோபித்துக் கொண்டு, உங்களுக் குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லை யென்று சொல்லி வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரே யல்லாமல் கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் தோஷம், தோஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும் என்று சொல்லி நினைத் ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண் டார்கள்.

அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை.தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் உற்சவத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தொழி லாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்களுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதம் புரிந்துவர பிரயோஜனப்படுத்த லாகாதோ? - குடிஅரசு துணைத் தலையங்கம் - 13.06.1926